pm logo

திருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான்
திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்
"பிரபந்தத்திரட்டு" - பகுதி 15 (1709 - 1810)
திருத்தில்லையமகவந்தாதி.

Tiricirapuram makAvitvAn mInATci cuntaram piLLaiyin
pirapantat tiraTTu - part 15 (verses 1709 - 1810)
tiruttillaiyamakantAti
In tamil script, unicode/utf-8 format




Acknowledgements:
Our Sincere thanks go to the following persons for their assistance in the preparation of this work.
Thanks go to Dr. Thomas Malten of the Univ. of Koeln, Germany for providing us with a photocopy of the work.
This etext was produced through Distributed Proof-reading approach.
We thank the following persons in the preparation and proof-reading of the etext:
S. Karthikeyan, Rathna, V, Devarajan, Vijayalakshmi Periapoilan and S. Anbumani
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
This file was put online first on 15 December 2006.
© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.


திருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான்
திரிசிபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்
"பிரபந்தத்திரட்டு" - பகுதி 15
திருத்தில்லையமகவந்தாதி.


உ - கணபதிதுணை.
திருச்சிற்றம்பலம்.

கற்பகவிநாயகர் துதி.
1709
கற்பகப்பாவடிவாரணம்பாற்கடந்தோன்செந்தமிழ்க்
கற்பகப்பாவடிவாரணங்கண்டவர்கோனருள்வி
கற்பகப்பாவடிவாரணங்கார்மலர்க்காமொய்தில்லைக்
கற்பகப்பாவடிவாரணம்யான்பெறக்காட்டிடுமே.      
நூல்.

1710
திருவம்பலவமருந்தடையுந்தபச்சேர்தரும்பி
திருவம்பலவமருந்தநெஞ்சேசிவஞானத்தின்மு
திருவம்பலவமருந்தடஞ்சோலைதிகழுந்தில்லைத்
திருவம்பலவமருந்தனையாற்றுதிசெய்தினமே.       1

1711
தினந்தினமேவரியாரம்பலஞ்சிந்தியோஞ்செழுமுத்
தினந்தினமேவரியாரம்பணைத்தில்லைசேர்ந்திலம்பத்
தினந்தினமேவரியாரம்படாமுலைசேர்விருப்பத்
தினந்தினமேவரியாரம்பனீயென்றுதேர்வரின்றே.       2

1712
இன்னம்பரம்பரனேகதங்காவதத்தீசர்தில்லை
இன்னம்பரம்பரனேர்விழிபாகரென்பார்க்கிறையே
இன்னம்பரம்பரனேபிறைதோணிகொலென்னமுடி
இன்னம்பரம்பரனேதுயராதருளின்னருளே.       3

1713
அருகாதவத்தலைவாதில்லையம்பலத்தாடியடி
அருகாதவத்தலைவாரொடுறாதருள்வாயெனக்கும்
அருகாதவத்தலைவாசிகையாயென்றறைவல்புத்தா
அருகாதவத்தலைவாவென்பிரேலுமையாட்டுவனே.       4

1714
வனசங்குவளையலர்பணைசூழ்தில்லைவாணவென்செய்
வனசங்குவளையலர்படராவகைமாற்றுங்கழல்
வனசங்குவளையலர்பயிலேநலம்வாடுறப்பாய்
வனசங்குவளையலர்படுவீரையும்வாய்விடுமே.       5

1715
வாய்ப்பணியாகமஞ்சாரருணெக்குமனநனிநை
வாய்ப்பணியாகமஞ்சாற்றியவாசெய்வர்மாண்பினரை
வாய்ப்பணியாகமஞ்சார்பொழில்சூழ்தில்லைவாணநின்றாள்
வாய்ப்பணியாகமஞ்சாலாச்சிலர்கருவன்றலையே.      6

1716
தலைமாலையாவம்பதிதில்லையாய்வளியைத்தழன்மு
தலைமாலையாவம்பயிலேச்செய்தாய்சந்தக்கால்கொடுமு
தலைமாலையாவம்பலர்மொழியாதழலம்புவிம்மு
தலைமாலையாவம்பலையென்றுநீங்குமென்றார்க்குழலே      7

1717
தாராதரிக்குமழும்விழுஞ்சோருந்தனிமதிதண்
தாராதரிக்குமழுவமுஞ்சீறுந்தமியுணர்போர்த்
தாராதரிக்குமழுங்கச்செயுமெங்கடையலைக்கே
தாராதரிக்குமழுவாவருடில்லைத்தற்பரனே.       8

1718
பரமாதவர்பணிநாடர்பொன்னாடர்பதுமர்பொன்னம்
பரமாதவர்பணிநாதபொல்லார்கரும்பாரிடையம்
பரமாதவர்பணிநாவடையாவகைபாலிப்பதோர்
பரமாதவர்பணிநாகமென்பாதில்லைப்பண்ணவனே.       9

1719
வனவலங்கற்புயமாயோனெஞ்ஞான்றும்வணங்குதில்லை
வனவலங்கற்புயர்மாதுறையாதிடம்வைத்தவயவ்
வனவலங்கற்புயனேர்குழற்பேதைக்குமன்மதன்செய்
வனவலங்கற்புயங்கத்துயிர்ப்பாய்த்தென்வளிநந்துமே.       10

1720
நந்தாதரத்தகரவித்தையோசெயுநாடகத்தால்
நந்தாதரத்தகரவித்தையற்கஞர்நன்கருள்வாய்
நந்தாதரத்தகரவித்தையார்கணயக்கவென்றா
நந்தாதரத்தகரவித்தைமன்றுணடிப்பவனே.       11

1721
பவளங்கருமையனேரெனுமேனிப்பயல்வரையுற்
பவளங்கருமையனேயெனநல்குபண்பாமகளென்
பவளங்கருமையனேயகறில்லைப்பதிநிகரின்
பவளங்கருமையனேகங்கொன்றாலும்பயத்தலின்றே.       12

1722
இன்றாதரங்கம்புரைபவமுற்றதினுமொழிந்தது
இன்றாதரங்கம்புரைபடையம்பவிரும்பொழிற்பூவ்
இன்றாதரங்கம்புரைவானதிச்செயுமேர்கொடில்லை
இன்றாதரங்கம்புரைதீர்மன்றாவருளெற்கடிக்கே.       13

1723
கடவாரணங்கடையார்ப்பமண்ணாள்வரொண்கட்டிரும
கடவாரணங்கடையார்பின்கலப்பர்கதிபரியாக்
கடவாரணங்கடையார்புரந்தீத்தகணைமெய்முலைக்
கடவாரணங்கடையார்ச்சடையார்தில்லைகண்டவரே.       14

1724
கண்டங்கரியன்றுவர்மேனியன்றில்லைக்கட்பொலிவோன்
கண்டங்கரியன்றுசாராதபாதன்கரிசறுத்தென்
கண்டங்கரியன்றுதிவெற்பர்பொய்த்தனர்கட்டுரைய
கண்டங்கரியன்றுகொல்லோவித்தெய்வமுங்கார்க்குழலே.       15

1725
காக்கைக்குளவிடைமாறின்றிவருங்கதியெனவங்
காக்கைக்குளவிடைமாறும்பவமன்றுகைதொழின்மண்
காக்கைக்குளவிடைமாவாய்கழுமலங்காசிகச்சி
காக்கைக்குளவிடைமாமருதூருங்கலந்தவனே.       16

1726
கலங்காமரிக்குமயற்குமெட்டான்கொன்றைகண்ணுறினி
கலங்காமரிக்குமயற்குணநிற்குங்கரத்துவளைக்
கலங்காமரிக்குமயற்குலப்பேச்சுங்கழியுமயங்
கலங்காமரிக்குமயற்குதவிற்றில்லைக்காரிகையே.       17

1727
காரிகையாதவவியாக்கியதில்லைக்கண்ணிருவி
காரிகையாதவன்பல்லுகநீட்டியைக்காமுற்றெங்கள்
காரிகையாதவநோமேயுயிர்த்தென்னைக்காய்வதுசங்
காரிகையாதவமோவென்றுவேண்முன்கரைதருமே.      18

1728
கரவரைக்கொன்றடியார்க்கருடில்லைக்கடவுட்குநீள்
கரவரைக்கொன்றடியாரதள்போர்வையொண்காம்பினைநி
கரவரைக்கொன்றடியார்நகத்தோலுடைகண்டுமா
கரவரைக்கொன்றடியாவுலேர்மகள்காமுறுமே.       19

1729
காமாவடுவனவம்பகத்தாள்பங்கன்கஞ்சம்வில
காமாவடுவனவம்பகலற்கருங்கண்ணிதருங்
காமாவடுவனவம்பகமன்றணுகாரின்மயங்
காமாவடுவனவம்பகலாயிக்கடையைவிட்டே.       20

1730
கடையாவஞ்சாவரும்பப்புரிவாரிகரியவன்வென்
கடையாவஞ்சாவருமேவானைக்காலிற்கடுங்கண்டகங்
கடையாவஞ்சாவருந்தாவுழல்வேன்மன்றிற்கண்டுதொழேன்
கடையாவஞ்சாவருகென்றுவெங்கூற்றங்கடுகுமுன்னே.       21

1731
கடுகத்தனையன்புரிகடும்போர்கணிறைத்திடவ
கடுகத்தனையன்புலையேன்விண்ணோர்கழியாதயின்றான்
கடுகத்தனையன்புலியூரன்குஞ்சிதக்கான்மலர்க்குக்
கடுகத்தனையன்புமில்லேனெவ்வாறுகதியுறலே.       22

1732
கதங்காமநந்தியங்காமம்மர்தீர்ந்தருட்காப்பிடையே
கதங்காமநந்தியங்காதுமுண்டோவினைகாலைச்சுற்றங்
கதங்காமநந்தியங்காவறடாதுமெய்காட்டொழியங்
கதங்காமநந்தியங்காவிமன்றாகறைக்கண்டத்தனே.       23

1733
தனக்கோங்கரும்புமடவார்முயக்கிற்றலைப்பட்டுநந்
தனக்கோங்கரும்புவிலானிலென்பீரத்தருக்கதெனுந்
தனக்கொங்கரும்புகர்தீர்வதென்றோசிற்சபைநடிப்பான்
தனக்கோங்கரும்புகழ்வாசிகையாற்குச்சரண்புகுமே.       24

1734
சரம்பலவாணன்றென்றிக்கிறையென்னவெய்தார்வெஞ்சித்த
சரம்பலவாணன்றென்கார்தாங்குகூடற்றலைவனுயிர்ச்
சரம்பலவாணன்றென்கான்முழவாபடைகங்களம
சரம்பலவாணன்றென்றேத்துபொற்பாதன்றரான்கொன்றையே.       25

1735
தரையாவிரதந்தடவரையாதவர்தாபதமா
தரையாவிரதந்தபுத்ததென்பாவணிதாரெனும்பந்
தரையாவிரதந்தவிர்முத்தர்வம்மின்சபைக்கென்றுகந்
தரையாவிரதந்தரநடிப்பாய்மகடற்கிரங்கே.       26

1736
இரங்காதமரவடியார்பணிசெய்திலமென்றொராய்
இரங்காதமரவடியார்கொலென்னவெங்குந்திரிந்தெய்த்து
இரங்காதமரவடியார்மலர்தருமீர்ந்தில்லைசேர்ந்து
இரங்காதமரவடியார்வெஞ்சூலவென்னேமென்னிரே.       27

1737
ஏதாயினுமினியாயறநல்கென்றிரப்பநல்க
ஏதாயினுமினியாயமென்பாரிலையென்பரிறை
ஏதாயினுமினியாயம்புயலிவரிற்றில்லையைய்
ஏதாயினுமினியாயகற்றப்புல்லிணக்கமதே.       28

1738
தேவாரமாதிருவாசகமாயைசெறேனடைந்தேன்
தேவாரமாதிருவாசகமாசெயுஞ்செய்யுள்குயத்
தேவாரமாதிருவாசகமாறெழுந்தில்லையமு
தேவாரமாதிருவாசகமாற்றிச்சிற்றம்பலத்தே.       29

1739
அம்பலவவம்பலவாகதிர்க்கழித்தாயெனுநேய்
அம்பலவாவம்பலவாகுளிரெனுமாய்மணமீது
அம்பலவாவம்பலவாவெனவிண்ணறைபொழில்சூழ்
அம்பலவாவம்பலவாவெனுமெம்மருமணியே.       30

1740
மணக்கோலஞ்செய்யதிருமேனியார்செய்யவந்திலர்வேண்
மணக்கோலஞ்செய்யவருமேபவமெனுமைக்குழம்பு
மணக்கோலஞ்செய்யமருமனஞ்சூழ்தில்லைவாழ்த்திலராய்
மணக்கோலஞ்செய்யநல்கூர்ந்திருப்பாரின்மதித்தெனையே.      31

1741
மதியாதவனங்கிவாள்விழியாய்நல்வழிச்செலச்சம்
மதியாதவனங்கிநீயங்கம்யானெனும்வாய்மையையுண்
மதியாதவனங்கிரிக்கீழுறமன்றவாணவருண்
மதியாதவனங்கிளர்மறையோன்றெழுமாநடனே.      32

1742
மானநந்தாதவிரகர்கள்வாழ்தில்லைவாணவிழி
மானநந்தாதவிரகவிதழ்க்குழல்வாமவிலா
மானநந்தாதவிரகருண்மேயமன்னாகுழைச்சு
மானநந்தாதவிரகம்பிரமவழியெனக்கே.       33

1743
என்றாமதியாதவன்சுடக்காரணமெற்குநலம்
என்றாமதியாதவன்மதன்பூங்கணையீருமினி
என்றாமதியாதவன்மணிகண்டனிங்கெய்தத்தடை
என்றாமதியாதவன்றாழ்மன்றன்னளிரங்குறுமே.       34

1744
இரங்கத்தனித்தனியாயமென்னோவென்னிடத்தினும்வய்
இரங்கத்தனித்தனியாயதன்முற்குறிலேய்பவனுய்
இரங்கத்தனித்தனியாயமன்றெண்ணலரிற்பதியாய்
இரங்கத்தனித்தனியாயமிலான்பின்மினேகினளே.       35

1745
நள்ளாறுதிக்குமகிழ்பதியார்தில்லைநாடகமால்
நள்ளாறுதிக்குமயிர்மாலைத்துத்தநகைமுத்தநீர்
நள்ளாறுதிக்குமறல்குழல்வேல்கணகுநலத்தி
நள்ளாறுதிக்குமரிக்கோடுகொங்கைநண்பாநங்கைக்கே.       36

1746
நங்கைக்கரியவரமார்பன்றாழ்தில்லைநன்னகர்ம
நங்கைக்கரியவரதனம்போலுநடநவில்வோன்
நங்கைக்கரியவரநேர்கட்கொங்கைநன்றென்றுவந்தூர்
நங்கைக்கரியவரஞ்செய்யுமாலையுநன்குதந்தே.       37

1747
தந்தவரைவரையாருமையைச்செய்தகுமறைவி
தந்தவரைவரையானனர்வாரித்தடஞ்சிலைமி
தந்தவரைவரையாதாண்டவர்தில்லைத்தாண்டவர்தோந்
தந்தவரைவரையாம்வெலநல்குவர்தாம்வரமே.       38

1748
வரநகரம்பதம்வன்னிமப்பூதம்வயிறுவநல்
வரநகரம்பதம்பூண்டோள்சிதுடிவதனமிந்தீ
வரநகரம்பதம்பாலிக்குந்தில்லைவண்கைமுடிய
வரநகரம்பதம்போல்வானில்லான்மன்றவாணனுக்கே.       39

1749
வாளாவிருந்தவர்தூற்றுவராமுண்மடலுமுடை
வாளாவிருந்தவர்வாங்குவனாமதன்வைதுமுனி
வாளாவிருந்தவர்கேட்பவுமன்னைநின்மாலைமணி
வாளாவிருந்தவர்காளெனுந்தில்லைமன்னாதரினே.       40

1750
தருக்கம்பலவிடவாய்கொடுபேசுவந்தாழ்குழன்மா
தருக்கம்பலவிடவாண்மைவிழியென்றுசாற்றுவமுத்
தருக்கம்பலவிடவார்முலையாய்மறைதன்முடியில்
தருக்கம்பலவிடவாவெங்ஙனேகதிசாருதுமே.       41

1751
சாரம்பலமுறைநூலுமிதேயெனச்சாற்றுமென்வி
சாரம்பலமுறைவேடரிற்கூடித்தளர்மனமா
சாரம்பலமுறையார்சிவகங்கைத்தடம்படிதி
சாரம்பலமுறைசாங்காறுங்கூத்துத்தரிசித்திடே.       42

1752
சிற்றம்பலங்கண்டுபோற்றேன்மின்னார்கள்செவ்வாய்தருமெச்
சிற்றம்பலங்கண்டுபோலக்கொள்வேன்சிந்தையுந்திகைத்தெஞ்
சிற்றம்பலங்கண்டுமுன்னாண்டுகோடிசிலைச்சிலைக்கோர்
சிற்றம்பலங்கண்டுயர்படையாற்செய்தசேவகனே.       43

1753
கனக்கந்தரத்தனமலைபங்காளன்களிமயில்வா
கனக்கந்தரத்தனமலைக்குநீர்த்தில்லைக்கண்விடைப்பா
கனக்கந்தரத்தனமலைநதியற்கைத்தார்புனன்மு
கனக்கந்தரத்தனமலைபுன்காடிக்கலைபவரே.       44

1754
கலையாவனவளவாத்தில்லையாய்கமழ்குங்குலியக்
கலையாவனவளவாழ்மனைச்செல்கைதொடுவெனப்பு
கலையாவனவளவாவுதியாகைதவாவிடவுள்
கலையாவனவளவானினைச்சார்ந்தெனைக்காத்தருளே.       45

1755
காதரங்காதரமாயமின்னார்கண்புரியமயங்
காதரங்காதரமாதர்கள்சூழ்தில்லைக்கண்டிசைமு
காதரங்காதரமாநிலமாக்குதிகாவென்வளைக்
காதரங்காதரமாய்நமையாள்வர்கருதுநெஞ்சே.       46

1756
கருமங்கருமங்கணம்பரமாககழியக்கழுவுங்
கருமங்கருமங்கணம்பரமாகடிந்தாண்முகினி
கருமங்கருமங்கணம்பரமாகலைமான்றிசைமு
கருமங்கருமங்கணம்பரமாகம்பலக்கனியே.       47

1757
கனியக்கனியமனந்துதியாங்கைதொழாமெங்ஙன்றீக்
கனியக்கனியமனந்தும்பதன்றில்லைக்கண்ணமர்நக்
கனியக்கனியமனந்துயிர்யாவையுங்காமரிடக்
கனியக்கனியமனந்துடியான்கடுங்கோதெமக்கே.       48

1758
கோவாகுளத்துமுழுமுதலேபொறிக்கூட்டநலங்
கோவாகுளத்துமுழுவயற்சோற்றுங்குழையுமைய
கோவாகுளத்துமுழுவலன்பீந்துகைக்கொண்டருள்வேட்
கோவாகுளத்துமுழுகென்றதில்லைக்குணமலையே.       49

1759
மலையானிலங்கம்பலவுடைப்பாம்பின்வருமெவரோ
மலையானிலங்கம்பலராயென்றேவினர்வாடும்வெண்க
மலையானிலங்கம்பலமில்படையான்வணங்கிடத்த
மலையானிலங்கம்பலநடங்கண்டமடமயிலே.       50

1760
மடங்கலையாதரியாநிறப்பூண்பன்றிவன்கொம்புக
மடங்கலையாதரியாப்புலித்தோலிடமன்றுகண்டு
மடங்கலையாதரியானானைமேவுவள்வன்னியின்மும்
மடங்கலையாதரியாதேகுமோமதன்வாளிகளே.       51

1761
வாளம்பரவையகிலம்பணிமன்றவள்ளுகிர்தோல்
வாளம்பரவையகிலம்படாதுவன்றொண்டர்முனி
வாளம்பரவையகிலம்படாமுலைவாழ்வித்தவா
வாளம்பரவையகிலம்பராவுமெய்வாழ்வருளே.       52

1762
அருத்தமருத்தமென்றேயுழல்வேந்துப்பொரைம்பொறிக்கும்
அருத்தமருத்தமென்றேரிற்புரியுமென்னாமுதனூல்
அருத்தமருத்தமென்றேங்குழல்பாகரடியர்க்கெளிய
அருத்தமருத்தமென்றேய்மன்றிற்கூத்தென்றருளுவரே.       53

1763
வருந்தவருந்தநமன்செறுமென்னமலத்துவெய்ய
வருந்தவருந்தநமன்றதுவாமுன்மண்ணீர்கொண்மின்றே
வருந்தவருந்தநமன்றோழமன்றும்வட்காருயிர்க
வருந்தவருந்தநமன்னாப்பொன்னாவெனெம்மான்றுணையே.       54

1764
மானம்பரம்பரமென்றொழிப்பார்கண்மருங்குன்முலை
மானம்பரம்பரவோங்கலொப்பார்பொதுமாதரில்வா
மானம்பரம்பரவாயொருவாதுறைமாட்சியினம்
மானம்பரம்பரன்வான்றில்லையோவவர்தம்மதிக்கே.       55

1765
தமனியமன்றமலரோன்முனோர்தொழத்தானிற்குமுத்
தமனியமன்றமர்வ்ந்தெனைப்பற்றத்தடுத்திவன
தமனியமன்றமச்செய்கையிலாளில்ற்றாழையுமங்க
தமனியமன்றமற்றென்னாதுதான்செயும்பேரருளே.       56

1766
பேரம்பலம்பலகாற்சூழ்தரேம்பித்தடிமையென்றும்
பேரம்பலம்பலங்கோதியிவணின்றுபேரெனினும்
பேரம்பலம்பலமாவிச்சித்தேமுதற்பின்னடைநாப்
பேரம்பலம்பலவீன்பொழிலூர்தில்லைபெற்றபொன்னே.       57

1767
பொன்னம்பலவன்மலக்கருங்குன்றைப்பொடித்திநிறப்
பொன்னம்பலவன்மலர்கதிராழிப்புவியிரத
பொன்னம்பலவன்மலர்க்குழல்பாகவென்னாம்புலியூர்ப்
பொன்னம்பலவன்மலங்கொழித்தீயுங்கொல்பொற்பதமே.       58

1768
பதஞ்சலியாதவனேர்விளங்கும்புலிப்பாதர்தொழப்
பதஞ்சலியாதவனேநடித்தற்குன்பதமென்றுவாய்ப்
பதஞ்சலியாதவனேராக்கைதீயதுபாழ்மனமென்
பதஞ்சலியாதவனேசிப்பவென்றுகண்பார்த்தருளே.       59

1769
பாரத்தனமலைபாகனசொற்கமையாசைபற்றென்
பாரத்தனமலைபாகனல்லேன்முதற்பாற்சுவடை
பாரத்தனமலைபாகனடாவுடபரியிரதப்
பாரத்தனமலைபாகனமன்றன்பரிவதென்றே.       60

1770
பரவரியக்கவணங்கேமுகில்கற்பறையரியம்
பரவரியக்கவணங்கேசெயலெழும்பற்றுடைப்பொற்
பரவரியக்கவணங்கேள்வரெய்தப்பகழிகலம்
பரவரியக்கவணங்கேடின்மன்றற்பரவுதுமே.       61

1771
பரமானந்தத்தையனாக்கொண்டெல்லாம்படைப்பானுமற்றம்
பரமானந்தத்தையநடுக்கட்சொற்றிருப்பண்பனுந்தா
பரமானந்தத்தையயர்வானென்பானும்பற்றாவெனக்கும்
பரமானந்தத்தையருள்வானுந்தில்லைப்பதிப்பரனே.       62

1772
பரவம்பரவத்தவரோடுறவும்பண்ணேங்கடுவெப்
பரவம்பரவத்தவறடைவார்ப்பற்றுவாமன்றநம்
பரவம்பரவத்தவத்தலைவாவம்பலவபொன்னம்
பரவம்பரவத்தவர்சிலையாயென்றும்பாடிலமே.       63

1773
பாடகந்தண்டையலையுணவென்னுட்பதிபதம்பூண்
பாடகந்தண்டையலைவாமம்வைத்தவன்பல்புலவோர்
பாடகந்தண்டையலைமோதிண்டைத்தடம்பாவுதில்லைப்
பாடகந்தண்டையலைநமன்றோன்றுமுன்பற்றினனே.       64

1774
பற்றினகரனுக்குத்தகரப்புரிபண்பற்குமான்
பற்றினகரனுக்குத்தகரய்யனப்பற்குத்தில்லைப்
பற்றினகரனுக்குத்தகரக்குழல்பாகற்கெனம்
பற்றினகரனுக்குத்தகரற்கிதப்பட்டனனே.       65

1775
பட்டவம்போருகந்தானங்கொடில்லைப்பரமநுதற்
பட்டவம்போருகந்தானடக்காக்கயம்பைத்தவிழும்
பட்டவம்போருகந்தானடல்வேளென்படுமயிலூர்
பட்டவம்போருகந்தானறைந்தாலும்படுதலின்றே.       66

1776
தலத்ததிகம்பரஞானமயசிற்சபையென்றுநு
தலத்ததிகம்பரவூண்படைபள்ளியன்றாழுங்கண்ணு
தலத்ததிகம்பரவோரேனுயவிவ்வுயிர்தழற்பா
தலத்ததிகம்பரமில்லதென்றாளத்தகுநினக்கே.       67

1777
தகரானனந்தக்கனுக்கியைத்தான்கலர்தம்மலக்கல்
தகரானனந்தக்கவின்மன்றன்வெற்பிற்றவர்கழைப்பா
தகரானனந்தக்கடுமாவழங்குந்தனிவழிப்போ
தகரானனந்தக்கவர்வருவாரென்கொல்சாற்றுவதே.       68

1778
சாதனமாயவைநன்றினிலேனைச்சமனடவஞ்
சாதனமாயவைவேல்விழியார்மயற்றாழ்தருநெஞ்
சாதனமாயவைதாநரகென்னுமுனஞ்சத்தியோ
சாதனமாயவைதென்புலியூரநின்றண்ணருளே.       69

1779
தண்டாதரித்தநமனென்னையாண்முன்றடவரைக்கோ
தண்டாதரித்தநமப்பவுண்ணென்றளித்தாய்வெள்ளிவே
தண்டாதரித்தநமன்பணைசூழ்தில்லைச்சங்கரவோ
தண்டாதரித்தநமக்களைந்தாளுகைதக்கதுவே.       70

1780
வேதப்பரியவிலங்கஞ்சப்பாகன்விடுவையஞ்சு
வேதப்பரியவிலங்கஞ்சப்பாகஞ்சொன்மின்விடைத்தே
வேதப்பரியவிலங்கஞ்சப்பாகண்டபுண்ணிலருள்
வேதப்பரியவிலங்கஞ்சப்பாகஞ்செய்மன்றத்தனே.       71

1781
மன்றலங்காரப்புரிசடையாரிமவான்மகளை
மன்றலங்காரப்புரிபரனாரிருண்மாய்தரவ
மன்றலங்காரப்புரிதில்லையாரெனைவைப்பரிய
மன்றலங்காரப்புரிதலந்தீர்த்தருள்வான்றலமே.       72

1782
வானம்பவனந்தனஞ்சயனீர்குவலயமுமா
வானம்பவனந்தனஞ்சயன்மான்மடியாமலயில்
வானம்பவனந்தனஞ்சயஞ்சூழ்தில்லைமன்னிவளர்
வானம்பவனந்தனஞ்சயற்போய்வைப்பன்மன்னருளே.       73

1783
மனம்பாலனையமடமொழியாரிடைமாழ்குறக்கா
மனம்பாலனையமடங்காத்துயரின்மன்னாமலிய
மனம்பாலனையமடங்கலிற்சீறிவருமுனைங்கை
மனம்பாலனையமடற்கொன்றையாயென்பமன்றஞ்சென்றே.       74

1784
மனம்பாவரியம்புயங்கநின்றாளிற்பொன்மாதரிற்க
மனம்பாவரியம்புயங்கறைகேட்பமுய்வாங்கொல்பொறி
மனம்பாவரியம்புயங்கடுக்கைப்பரமன்றப்பெரு
மனம்பாவரியம்புயங்கலந்தாற்கருமாமணியே.       75

1785
மாதங்கமடங்கல்சேர்வழிநள்ளிருள்வாய்ப்பொறைமண்
மாதங்கமடங்கல்வாயரவொப்பர்வருவர்கொல்பூ
மாதங்கமடங்கல்விச்சாலையார்தில்லைமன்சுரர்த
மாதங்கமடங்கல்பூண்பவன்காளத்திமால்வரைக்கே.       76

1786
வரைவனஞ்செய்யுந்தடமுஞ்சுலாங்கமலைவன்குற
வரைவனஞ்செய்யுந்தடங்கழுக்குன்றுறைமன்றுடையான்
வரைவனஞ்செய்யுந்தடவுவில்லாயினிமாழ்கவுனை
வரைவனஞ்செய்யுந்தடக்கெனையுவ்வுமொய்வார்முரசே.       77

1787
வாரிக்குவளையும்வண்ணம்பயின்றுமதன்பன்மலர்
வாரிக்குவளையும்வண்ணம்படப்பெய்வதுசொல்வரு
வாரிக்குவளையும்வண்ணம்பதமென்வன்மூரியருள்
வாரிக்குவளையும்வண்ணம்பயின்மறைமன்றடைந்தே.       78

1788
அடையம்புயங்கலந்தானச்சுதற்குமரியநின்றாள்
அடையம்புயங்கலந்தானரவாய்பவவாரழல்வாய்
அடையம்புயங்கலந்தானஞ்சலென்றருளையநின்கை
அடையம்புயங்கலந்தானங்கொளிங்கென்றருண்மன்றனே.       79

1789
அரும்பாவருந்தனமாகமுளைத்திலவம்பன்முல்லை
அரும்பாவருந்தனமாகண்டிலாளயலான்பின்புதீய்
அரும்பாவருந்தனமாகக்கொள்ளாமன்றத்தாடியமர்
அரும்பாவருந்தனமாகவினூரடைந்தாள்சுரத்தே.       80

1790
தேயம்பலதிரியாக்கவன்றாட்டியர்சேற்கணரந்
தேயம்பலதிரியாக்கடிவேலென்றுதேடிப்புனைந்
தேயம்பலதிரியாக்கடையேஞ்செல்லற்செல்வமமு
தேயம்பலதிரியக்கவைதோங்கோறிருத்துவையே.       81

1791
திருத்தாதடிமைதவத்தேம்புதலுந்திருவருளோ
திருத்தாதடிமைதவச்சிரஞ்சூட்டுசிறப்புறுமெய்த்
திருத்தாதடிமைதவமாக்குதிசிவகங்கையெனுந்
திருத்தாதடிமைதவழ்மாடத்தில்லைச்சிவக்கொழுந்தே.       82

1792
சிவசிவசங்கரவைம்முகவென்றன்பர்சேர்தில்லைவ
சிவசிவசங்கரவைம்பொறியாமுருடீரக்கொல்வ
சிவசிவசங்கரவைப்பூணியததுசேர்தரநே
சிவசிவசங்கரவையவென்முன்னாந்தெளிமனமே.      83

1793
நம்பனையன்றினகரன்பல்வீழ்த்தகைநாயகன்வா
நம்பனையன்ரினரூரெரித்தானடமன்றிற்கண்டாள்
நம்பனையன்றினல்லார்கள்பல்லோரலர்நாட்டுறத்தி
நம்பனையன்றினகக்கூவவாடுமிந்நன்னுதலே.       84

1794
> தலையரியக்கவலார் தனக்கில்லவன்றாம்பெறும
தலையரியக்கவலார்கோன்மன்றன்சரம்பூண்பொன்முடித்
தலையரியக்கவலார்புனலாற்கிணர்த்தாழ்குழல்கா
தலையரியக்கவலார்முலையாய்சென்றுசாற்றுகவே.       85

1795
கவியமகந்திரிவாப்பிறவாக்கழறாநரர்பாற்
கவியமகந்திரிவாச்சிறுதெய்வங்கருதமுழங்
கவியமகந்திரிவாரழலார்புகைகாண்மயில
கவியமகந்திரிவான்பொழிற்றில்லைமன்காதலமே.       86

1796
காதற்பரவையகம்படிவேமறங்காய்ந்திலநீங்
காதற்பரவையகம்பயில்வேமெங்ஙன்கார்க்குழல்பங்
காதற்பரவையகம்பணிதில்லைக்கண்மேயகுழைக்
காதற்பரவையகம்பங்கொல்வேங்கடுங்காலன்முன்னே.      87

1797
முனிவருமானந்தக்கூத்தம்பலத்தன்புமுற்றுமிரு
முனிவருமானந்தக்கூப்பிக்கையேத்தச்செய்முத்தகுழை
முனிவருமானந்தக்கூர்விழிபாகமொய்க்கூற்றமெனை
முனிவருமானந்தக்கூடன்றியாவர்க்குமூத்தவனே.       88

1798
மூவாயிரவருந்தானவன்வாழ்முடியாய்முன்கைசேர்
மூவாயிரவருந்தாழ்வில்சொற்பேசச்செய்மொய்யன்புக்கொண்
மூவாயிரவருந்தாவுணவீரென்முதல்வமன்றுண்
மூவாயிரவருந்தாழநின்றாயருண்முத்தியின்பே.       89

1799
முத்தரும்பாவருமந்தண்டுறைத்தில்லைமுன்னவபன்
முத்தரும்பாவருமந்தநிற்கொப்புமுளரிமின்வாய்
முத்தரும்பாவருமந்தமினாவருமோமுந்தவி
முத்தரும்பாவருமந்தருங்கூறார்முனி்ந்தொப்பென்றே.       90

1800
முதலைப்பரவைத்திருக்காழியார்சொன்முதல்வர்செவ்வாய்
முதலைப்பரவைத்திருக்காமுறன்பர்சொன்மொய்த்ததில்லை
முதலைப்பரவைத்திருக்காற்றுந்தாளவென்பாமுழுவிம்
முதலைப்பரவைத்திருக்காற்றைமாயமுருக்குவமே.       91

1801
குவலையவம்பரமானந்தவாதவர்கோவரவா
குவலையவம்பரமானந்தவாதவர்கோமன்றகட்
குவலையவம்பரமானந்தவாதவர்கோள்புரிதீங்
குவலையவம்பரமானந்தவாதவர்கோவத்தனே.       92

1802
அத்தவெற்பாதவர்வெள்ளிவெற்பாவிலயனரிகாய்
அத்தவெற்பாதவர்சொல்பூணெனுமிரப்பார்க்கருள்சீல்
அத்தவெற்பாதவர்தேவர்மன்றார்தம்மகலத்துநேய்
அத்தவெற்பாதவர்தாமவரேயெனுமாயிழையே.       93

1803
ஆயங்கவலவருந்துபுயானுமலறவென்னள்
ஆயங்கவலவருந்துயராற்றியடையுமின்கான்
ஆயங்கவலவருந்துறவோரும்பனப்பனுள்ளென்
ஆயங்கவலவருந்துமன்றம்பணியாரினைந்தே.       94

1804
ஆரம்பரவியவானந்தமர்துறையம்பலவம்பு
ஆரம்பரவியவானந்தவைக்குமமரவெண்டிக்கு
ஆரம்பரவியவானந்தமாதுக்களித்திநின்மார்பு
ஆரம்பரவியவானந்தமாமணியார்க்குமுன்னே.       95

1805
ஆரம்பரந்தடிவாள்விழியாய்நென்னலாரிரவென்
ஆரம்பரந்தடிவாய்முலைமேற்கைவைத்தாரொருவர்
ஆரம்பரந்தடிவாய்ப்புலித்தோலரருட்புலியூர்
ஆரம்பரந்தடிவார்சடையாரென்பராயெனக்கே.       96

1806
என்னத்தனையடிதேடவிட்டானையிருண்மவொடும்
என்னத்தனையடியாய்திருவம்பலத்தெம்மிறையே
என்னத்தனையடியென்றன்பருக்கெளிதாத்தெரிக்கும்
என்னத்தனையடியேன்மறப்பேன்கொலெழுமையுமே.       97

1807
மையலங்காரகலம்மதியென்னுமதிவிளங்க
மையலங்காரகலமாக்கொள்கண்ணியர்மாலறச்செம்
மையலங்காரகலப்பரவம்பலவாதடிதி
மையலங்காரகலப்புகழாயருமாணிக்கமே. <       98

1808
மாணிக்கவாசகர்காணவைத்தீந்தனைமாலைமுன்வின்
மாணிக்கவாசகர்தெவ்வேயளபொன்றில்வாய்ந்தமுன்பின்
மாணிக்கவாசகர்சூழ்தில்லையாயென்சொன்மாலையுங்கொண்
மாணிக்கவாசகர்வாய்மலர்கோவைவரைந்தவனே.       99

1809
அவலங்களைவம்பலர்நீர்ப்புலியூரணைவமுரிய்
அவலங்களைவம்பரும்புரியாதடர்ப்பாமழுமேய்
அவலங்களைவம்பலர்முலைவாமனருள்பெறுவாம்
அவலங்களைவம்பணிந்தெழுவாந்திருவம்பலமே.       100

திருத்தில்லையமகவந்தாதி முற்றிற்று.



சிவமயம்.
சிறப்புப்பாயிரம்.

இந்நூலாசிரியர் மாணாக்கராகிய சோடசாவதானம்
சுப்பராயசெட்டியாரவர்களியற்றிய நேரிசையாசிரியப்பா.

1810
திருவளர் செங்கேழ்க் குருமணி கொழிக்கும்
பொருதிரை யுடுத்த விருநில வரைப்பிற்
றாவாத் துன்பந் தருபவ மறவொழித்
தோவா வின்பத் துறுதலை வேட்கு
மன்னிய வுயிர்காள் பன்னெறிச் செல்குவ       5

தொருவுமின் பெருமான் றிருநடங் காண
வுள்ளகத் தன்பொடு பொள்ளென வம்மி
னெனவிளித் திடல்போற் கனகத் தியன்று
மணிகால் யாத்த லணிகிளர் மாடத்
தும்பர்த் தயங்கு செம்பொற் கேதன       10

மாடுறுந் தெய்வப் பீடுசான் றோங்குந்
தொல்லைமா வளஞ்சேர் தில்லைமா நகரி
லிரசத வரைபிராற் கிடமா யெவரும்
பரசிடப் பெறுபெரும் பயனை நினைந்து
தானுமப் பயன்பெறத் தமனியக் குன்றம்       15

வானுயர் முடியொடு வந்தது மானக்
களங்கமற வோங்கி விளங்குபொற் பொதுவிற்
கலைமக டீம்பா லலைமகள் வணங்குந்
தலைமக ளென்னு மலைமக ளாய
வுலகுபல பயந்த வொருதா யொழியா       20

திலகருள் சுரக்கு மிருவிழி களிப்ப
வண்டுழு துழக்குந் தண்டுழா யலங்கற்
றிண்டடம் புயத்துக் கொண்டல் வண்ணனு
முதுமறை தெரிந்த சதுமுகக் கிழவனுங்
கற்பக நீழலிற் பொற்புறு கோவு       25

மற்றவிண் ணவரும் பொற்றமண் ணவருங்
கரஞ்சிரங் குவியக் கண்ணருவி பொழிய
மெய்ம்மயிர் பொடிப்ப விதிர்விதாப் பெய்தி
யரகர வெனுமொலி பரவையை விழுங்க
வின்புறப் புரிபே ரன்புரு வாய      30

பொருவரு முனிவர ரிருவரும் பொங்கித்
ததும்பு மானந்தச் சலதியுள் எழுந்த
முயலகன் வெரிநிடை யியலநின் றருளித்
துயர்பழுத் தனைய வவிர்சடை யாடத்
தழைதிருச் செவியிற் குழையசைந் தாட       35

வருள்விழிக் கடையுமை தெருண்முகத் துலவ
வுறுதிரு வாயிற் குறுநகை யரும்ப
வடவரை குழைத்த தடநெடும் புயத்திற்
பாம்பொடு கடுக்கைத் தேம்பினை மயங்கத்
திருவிடை யிற்புலி தருமுடை தயங்கத்       40

தாமரை மருட்டிய காமர்சே வடியிற்
செம்பொற் சிலம்பு பம்பிப் புலம்பத்
துடிமுத லாக நொடியுமைந் திடத்துந்
தோற்றமுன் னாகச் சாற்றுமைந் தொழிலும்
வயங்குற வென்றுந் தயங்குமா னந்தத்       45

தாண்டவம் புரிந்தரு ளாண்டவன் கழற்கண்
ணுலகிடை யுதித்து நிலவுபல் லுயிர்க்குந்
தந்தையே யன்றித் தாயு மாவா
னிவனே யென்றிப் புவனியோர்ந் துய்ய
நலமலி வணிகக் குலமகள் பொறையுயிர்த்       50

திலகுறு மளவும் விலகுற லின்றி
யன்னையா யளித்த மன்னுறு மப்ப
னெழுந்தரு ளப்பெறு செழும்புகழ் நிறைந்த
வொள்ளிய திரிசிராப் பள்ளிக் கேபினும்
பெரும்பொரு ளுளார்க்கே யரும்பொரு ளுறல்போ       55

லீண்டுபுகழ் செறிய வாண்டுவரு பெரியோன்
பிறைமுடிப் பெருமா னுறைதரப் பெற்ற
நறையூர் பொழில்சூ ழுறையூர்ப் புராணமுஞ்
சுரும்புபடிந் துண்ண வரும்புக டோறு
மட்டவிழ் குறுக்கைவீ ரட்டப் புராணமு       60

முற்ற பவஞ்சப் பற்றகன் றவர்பலர்
துற்றொளிர் வாளொளி புற்றூர்ப் புராணமு
முடைத்தெழும் வயன்மடை யடைத்திடக் கருப்புக்
கட்டி யிடும்விளத் தொட்டிப் புராணமுஞ்
சேற்றூர் வளைவய லாற்றூர்ப் புராணமு       65

மெயிலை யுடுத்தொளிர் மயிலைப் புராணமுங்
கமலைத் தியாக ரமல லீலையு
மூழியும் பெயராக் காழிக் கோவையு
மெருதூர் பரனிடை மருதூ ருலாவு
மேவு புகழானைக் காவி னிடத்தருள்       70

பூண்டமர்ந் தருளகி லாண்டநா யகிக்கு
முருத்தவத் துறைதெறுந் திருத்தவத் துறைவளர்
கருப்புகல் கடிபெருந் திருப்பிராட் டிக்கு
முன்னவி லுறையூர் மன்னிய வடியவ
ரேந்திமதி யமைக்குங் காந்திமதி யுமைக்குந்       75

தருப்பெரு மணந்தரு திருப்பெரு மணத்துறை
போற்றுவார்க் கருடிரு நீற்றுமை யவட்கும்
பெருவிடைப் பரனரு டிருவிடைக் கழியமர்
தருமரு கனுக்கு மொருமுரு கனுக்குங்
காவடுத் துறைதிரு வாவடு துறையி       80

னம்பல மாக நயந்தெழுந் தருளு
மம்பல வாண வருட்குரு பரற்கும்
பெருநயந் துவன்றிய பிள்ளைத் தமிழு
மரதனா சலத்துறை வரதனுக் கும்மேற்
சொன்ன குருபரற்கும் பன்னு கலம்பகமும்       85

விற்குடி கொளுமுடிக் கற்குடிப் பரற்கு
மிதம்புகல் கலசைச் சிதம்பரேச் சுரற்குஞ்
சொற்றவா னைக்கா வுற்றவன் னைக்குந்
தருமையில் வளர்தருஞ் சச்சிதா னந்த
குருபர னுக்குமேர் தருதமிழ் மாலையு       90

மறைதுறை சையுமரு ணிறைசிராப் பள்ளியு
மமரம லற்குநல் யமகவந் தாதியு
நீலி வனத்துறை நிமலனுக் கும்முரற்
காலிப வனத்துமுக் கட்பரஞ் சுடர்க்கும்
விரிபொருள் கிடந்த திரிபந் தாதியுஞ்       95

சீருறை பூவா ளூருறை யரற்கு
நாருறை யூறை நண்ணிய பரற்குந்
தண்டபா ணிக்கும் வண்டமிழ் மதுரை
ஞானசம் பந்த நற்றே சிகற்கு
முத்தமப் பதிற்றுப் பத்தந் தாதியு       100

நறும்பலாச் சோலை யெறும்பி யூரின்
மேவுசோ திக்குவெண் பாவந் தாதியு
நவின்றமா மதுரையிற் கவின்றருண் ஞானசம்
பந்த தேசிகற்கா னந்தக் களிப்பு
மொருகவி யேனு மொழிதர லின்றி       105

யிருளகன் றொளிரு மெல்லாக் கவிகளுஞ்
சொன்னலம் பொருணலஞ் சுவைமிகு பத்திமை
நன்னலம் பல்லணி நலங்கள் செறிந்து
முழங்குற வெளிதின் மொழிந்தபெரு நாவலன்
குலத்திற் குடியிற் குணத்திற் குறையா       110

நலத்தின் மாண்பி னகுசிவ பத்தியெல்
வாய்மையிற் பொறையின் மலிதரு நிறையிற்
றூய்மையிற் கொடையிற் றுகளரு நீதியின்
மயங்குறு பிறப்பி லுயங்கெனை யாண்ட
தயங்குபே ரருளிற் றலைமைபெற் றுயர்ந்தோன்       115

சந்த மலிந்த செந்தமிழ்க் கரசாய்
வந்த மீனாட்சி சுந்தர வாரியன்
புல்லிய வென்னாற் சொல்லி யடங்கா
நன்னல மமைத்துப் பன்னிப் புனைந்த
வமலமலி தில்லை யமகவந் தாதியைக்       120

கதித்திடு மச்சிற் பதித்துத் தருகென
நல்லோர் பல்லோர் நயந்துறை யிடனெனத்
தொல்லொர் சொல்லிய தொண்டைமண் டலத்தி
லுலமலி திண்டோ ளுபேந்திர னாய
கலமலி கொங்கைக் கமலைவாழ் மார்பன்       125

றன்னுறு காவலின் மன்னுறு முல்லையிற்
கோதார் தராத சேதா வினங்களைச்
சேர்ந்துற வைத்ததை யோர்ந்து நின்றே
யன்னோன் முன்னோ னாகிய விந்திரன்
மின்னுதன் காவலிற் றுன்னு நிலத்திற்       130

பயிலுற வைத்த செயலே மானக்
கவையடிக் கயவாய்க் காரா வினங்கள்
செவையுறு மிடனெலாஞ் சேர்ந்துகிடந் துறங்கும்
பெருவளஞ் சிறந்த மருதஞ் சூழ்ந்து
மருவுபூ விருந்த வல்லிநன் னாட       135

னுருவிற் பொலிந்த திருவினுஞ் சிறந்த
சிறுகிய மருங்குற் பெருமுலை மடவா
ராடகத் தியன்ற மாடத் தும்பர்க்
குழுமி யிருந்து செழுமலர்க் கரத்தா
னகைமுக மதியொடு பகையுறு மதியினைப்       140

பிடித்துப் பிடித்து விடுத்தெறி தரல்போற்
றரளங் குயிற்றிய திரண்மணி யம்மனை
யாடன் மலிந்த பீடமர் செல்வ
மோவாப்பம்ம லூராள் செம்மல்
வலம்புரி யுதித்த நலம்புரி முத்தென       145

மிளிர்தர் புகழுயர் துளுவவே ளாளர்
குலத்தி லுதித்த நலத்தின் மிக்கோன்
வாகா ரறஞ்சே ரேகாம் பரவேள்
செய்தவந் தெரிக்கு மெய்யுறு சீலன்
புண்ணியம் பழுத்த தண்ணளித் தாரு       150

வொற்கமில் சத்துவ நற்குண வாரிதி
யிரப்பவர்க் கின்பஞ் சுரக்குமா நிதியம்
புல்வரம் பகன்ற கல்வியின் மேரு
வுவமை யிலாப்பா சிவனடி யருச்சனை
பத்தியிற் புரியு முத்தம குணத்தோன்       155

பொங்குசீர் விசய ரங்கபூ பால
னுளந்தழை விழைவொடு விளம்பின னாக
வள்ளலிற் சிறந்த வள்ளலிவ னாதலிற்
றலங்களிற் சிறந்தமா தலமாந் தில்லையுட்
டேவரிற் சிறந்தமா தேவன் றாளிற்       160

புலவரிற் சிறந்த புலவனா விளங்கிய
நம்மா சிரிய னவின்றணி யமகவந்
தாதியுட் சிறந்தவந் தாதியை யோர்ந்துநின்
றேவுத னன்றுநன் றென்றுள முவந்து
மதித்திட யாரும் பதித்து முடித்தனன்       165

மன்னுறு மிந்நூல் சொன்னபெரி யோன்பா
லென்னொடு கற்ற துன்னுறு மறிஞன்
கவ்கை* நீர் சூழ்ந்த கண்ணகன் ஞாலத்
திடம்படு மன்பதை மடங்கெடப் பன்னூல்
விரித்துரை புலப்படத் தெரித்திடும் வல்லோன்       170

கனியினு மமுதினுங் கண்டினும் பாகினு
மினியதமிழ்க் கவிதை யியம்பத் தெரிந்தோன்
பவமறுத் தின்பப் பயனளித் தருளுஞ்
சிவபிரா னடிக்கீழ்ச் சிந்தைவைத் திருப்போன்
சுதந்தவிர் பெருஞ்சீர்ச் சிதம்பர மகிபன்       175

பண்ணிய தவத்தாற் பயந்தசூ ளாமணி
நண்ணிய புலமை நலஞ்சேர்ந் தொளிரு
மேசுத லில்லா வெவரும்
பேசுபுகழ்த் தியாக ராசநா வலனே.

சிறப்புப்பாயிரம் முற்றிற்று.

This file was last revised on 29 October 2021.
Feel free to send corrections and suggestions to the webmaster (pmadurai AT gmail.com).