pm logo

நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி
(பாகம் 1 / பிரபந்த பாசுரம் 2791 - 3342)
கௌசல்யா ஹார்ட் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்புடன்


tiruvAimozi of nammAlvAr -part 1 (pAcurams 2791-3342)
English Translation by Kausalya Hart



Acknowledgement:
Our Sincere thanks go to Dr. Kausalya Hart and Prof. George Hart of the Univ. of California, Berkeley, CA, USA for providing a soft copy of this work and for her permission to release the work as part of
Project Madurai collections.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
This file was last updated on 20 Sept. 2015

© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

நம்மாழ்வார் அருளிய திருவாய் மொழி (பாகம் 1)
கௌசல்யா ஹார்ட் அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்புடன்

திருச்சிற்றம்பலம்

நம்மாழ்வார் அருளிய திருவாய் மொழி - முதல் பத்து
Divyaprabhandam -Thiruvaymozhi - Mutal Pathu (2791 - 2901)

திருவாய் மொழி - முதல் பத்து (முதல் திருமொழி, 2791-2801)
- ஆத்ம உபதேசம்

2791 உயர்வு அற உயர் நலம் உடையவன் எவன்? அவன்
மயர்வு அற மதி நலம் அருளினன் எவன்? அவன்
அயர்வு அறும் அமரர்கள் அதிபதி எவன்? அவன்
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே (1)
2791. O my heart!
He is a matchless god.
He has unlimited goodness.
He gave me abundant knowledge to remove my ignorance.
He is the god of the gods in the sky
and he never grows tired of protecting the world.
Worship his shining feet that take away all sorrows.

2792 மனன் அகம் மலம் அற மலர்மிசை எழுதரும்
மனன் உணர்வு அளவு இலன் பொறி உணர்வு அவை இலன்
இனன் உணர் முழு நலம் எதிர் நிகழ் கழிவினும்
இனன் இலன் எனன் உயிர் மிகுநரை இலனே (2)
2792. He removes the faults in your mind.
He keeps Brahma on the lotus on his chest.
There is no limit to what he can think.
He is not attracted by any feelings of the senses.
Whatever happens does not bother him.
He is in my soul and he is ageless.

2793 இலன் அது உடையன் இது என நினைவு அரியவன்
நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்
புலனொடு புலன் அலன் ஒழிவு இலன் பரந்த அந்
நலன் உடை ஒருவனை நணுகினம் நாமே (3)
2793. No one knows
what he has and what he does not have.
The earth and sky are his forms.
He is formless.
He is the senses and he is not the senses.
He is endless.
He is omnipresent.
He is all goodness. He is unique.
I approached and joined him.

2794 நாம் அவன் இவன் உவன் அவள் இவள் உவள் எவள்
தாம் அவர் இவர் உவர் அது இது உது எது
வீம் அவை இவை உவை அவை நலம் தீங்கு அவை
ஆம் அவை ஆயவை ஆய்நின்ற அவரே (4)
2794. He is us.
He is this man, that man and the man over there.
He is this woman, that woman and the woman over there.
Who is he?
He is our own. He is this one, He is that one.
He is this and he is that.
He is the thing over there, and he is what.
He is these, those and those over there.
He is good and evil.
He is omnipresent and he is those things and these things.

2795 அவரவர் தமதமது அறிவு அறி வகைவகை
அவரவர் இறையவர் என அடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவு இலர் இறையவர்
அவரவர் விதிவழி அடைய நின்றனரே (5)
2795. People think as they wish,
"This one is my god and that one is my god."
They will reach the feet of the god they choose.
The god they worship
will give them all things that they want.
They will reach the gods according to their fate.

2796 நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்
நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்
என்றும் ஓர் இயல்வினர் என நினைவு அரியவர்
என்றும் ஓர் இயல்வொடு நின்ற எம் திடரே (6)
2796. He stands, sits, lies and wanders.
He does not stand, does not sit, does not lie and does not wander.
No one knows what his nature is
but he has only one nature and he is the mighty god.

2797 திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவைமிசைப்
படர் பொருள் முழுவதும் ஆய் அவைஅவைதொறும்
உடல்மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
சுடர் மிகு சுருதியுள் இவை உண்ட சுரனே (7)
2797. He is in the wide sky, the strong wind, water and earth
and he is in all the things in the world.
He hides himself in the bodies and lives of all creatures
and he is spread everywhere.
He is the shining god of the world and he is the Vedas,
and he swallowed all the worlds.

2798 சுரர் அறிவு அரு நிலை விண் முதல் முழுவதும்
வரன் முதலாய் அவை முழுது உண்ட பரபரன்
புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து
அரன் அயன் என உலகு அழித்து அமைத்து உளனே (8)
2798. He is the highest lord
and he swallowed all the worlds
and the sky where the gods are.
He burned the three forts of his enemies.
Gods wonder about his nature.
He is Shiva and Brahma
and he creates and destroys the world.

2799 உளன் எனில் உளன் அவன் உருவம் இவ் உருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ் அருவுகள்
உளன் என இலன் என இவை குணம் உடைமையில்
உளன் இரு தகைமையொடு ஒழிவு இலன் பரந்தே (9)
2799. If one believes he exists, he exists.
If one believes he has a form, he does.
If one believes he has no form, he has none.
He has both natures, "he is and he is not," and he is omnipresent.

2800 பரந்த தண் பரவையுள் நீர்தொறும் பரந்துளன்
பரந்த அண்டம் இது என நிலம் விசும்பு ஒழிவு அறக்
கரந்த சில் இடந்தொறும் இடம் திகழ் பொருள்தொறும்
கரந்து எங்கும் பரந்துளன் இவை உண்ட கரனே (10)
2800. He pervades the water of the cool wide ocean.
He pervades all the worlds.
He pervades the vast sky.
He is in places no one knows.
He is hidden in everything that shines,
the sun, moon and stars.
He swallowed all of them and spit them out.

2801 கர விசும்பு எரி வளி நீர் நிலம் இவைமிசை
வரன் நவில் திறல் வலி அளி பொறை ஆய்நின்ற
பரன் அடிமேல் குருகூர்ச் சடகோபன் சொல்
நிரல் நிறை ஆயிரத்து இவை பத்தும் வீடே (11)
2801. Saḍagopan of Thirukuruhur
composed a thousand pasurams worshiping the feet of the god
who is the sky, the strong wind, water, earth,
the rainbow and the everlasting mountains.
If devotees learn and recite these ten pasurams
they will reach moksha.
------------

திருவாய் மொழி - முதல் பத்து (இரண்டாம் திருமொழி, 2802-2812)
-உலகிற்கு உபதேசம்

2802 வீடுமின் முற்றவும்
வீடு செய்து உம் உயிர்
வீடு உடையானிடை
வீடு செய்ம்மினே (1)
2802. Give up all the desires
that you have for earthly things.
Surrender your life to the god, the lord of moksha
and that will take you to moksha.

2803 மின்னின் நிலை இல
மன் உயிர் ஆக்கைகள்
என்னும் இடத்து இறை
உன்னுமின் நீரே (2)
2803. Our earthly bodies will go away
from the earth one day.
They are like lightning
and they come and go in a second.
If you know this
you will only think of the everlasting god.

2804 நீர் நுமது என்று இவை
வேர்முதல் மாய்த்து இறை
சேர்மின் உயிர்க்கு அதன்
நேர் நிறை இல்லே (3)
2804. Give up utterly any desire
that is for yourself or the things you own.
Join the god and worship him.
There is nothing equal or higher than the god in life.

2805 இல்லதும் உள்ளதும்
அல்லது அவன் உரு
எல்லை இல் அந் நலம்
புல்கு பற்று அற்றே (4)
2805. The things that are in the world
and the things that are not in the world are all his forms..
Give up your desires,
grasp the wonderful, matchless form of the god
and worship him.

2806 அற்றது பற்று எனில்
உற்றது வீடு உயிர்
செற்ற அது மன் உறில்
அற்று இறை பற்றே (5)
2806. If one gives up desire for worldly things
he will go to moksha.
The only help to reach moksha
is the desire to join and be one with the god.

2807 பற்று இலன் ஈசனும்
முற்றவும் நின்றனன்
பற்று இலையாய் அவன்
முற்றில் அடங்கே (6)
2807. The god has no desire
and he is in all things in the world.
There is nothing without him.
O my soul! give up all your desires,
approach him and become one with him.

2808 அடங்கு எழில் சம்பத்து
அடங்கக் கண்டு ஈசன்
அடங்கு எழில் அஃது என்று
அடங்குக உள்ளே (7)
2808. You should understand
that all the things in the world are contained in the god.
Realize that you yourself are of those things
and join the god yourself also.

2809 உள்ளம் உரை செயல்
உள்ள இம் மூன்றையும்
உள்ளிக் கெடுத்து இறை
உள்ளில் ஒடுங்கே (8)
2809. Remove any desire from your mind.
Remove any desire that you want to say something.
Remove any desire that you want to do something.
Join the god and become one with him.

2810 ஒடுங்க அவன்கண்
ஒடுங்கலும் எல்லாம்
விடும் பின்னும் ஆக்கை
விடும்பொழுது எண்ணே (9)
2810. If you only think of god always in this world,
all your desires will leave you.
You should live in this world
thinking only of the time you will join him
and the time your body will leave this world.

2811 எண் பெருக்கு அந் நலத்து
ஒண் பொருள் ஈறு இல
வண் புகழ் நாரணன்
திண் கழல் சேரே (10)
2811. Souls are countless.
Their knowledge has no limit.
They shine as part of the god.
They will join the strong feet
of the famous god Naraṇan.

2812 சேர்த்தடத் தென் குரு
கூர்ச் சடகோபன் சொல்
சீர்த் தொடை ஆயிரத்து
ஓர்த்த இப் பத்தே (11)
2812. Saḍagopan of southern Thirukuruhur
surrounded by beautiful ponds filled with water
composed a thousand pasurams.
These are ten wonderful pasurams among those thousand.
--------

திருவாய் மொழி - முதல் பத்து (மூன்றாம் திருமொழி, 2813-2823)
- அடியவர்க்கு எளியவன்

2813 பத்து உடை அடியவர்க்கு எளியவன்
        பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும் நம்
        அரும்பெறல் அடிகள்
மத்து உறு கடை வெண்ணெய் களவினில்
        உரவிடை யாப்புண்டு
எத்திறம் உரலினோடு இணைந்திருந்து
       ஏங்கிய எளியவே (1)
2813. He is easy for his devotees to reach.
He is a clever god and he is hard to reach for others.
He is our dear god and the beloved of Lakshmi
who stays on a lotus.
He stole butter that was churned by a churning stick.
He is so simple that he allowed Yashoda to punish him
by tying him to a mortar.

2814 எளிவரும் இயல்வினன் நிலை வரம்பு
       இல பல பிறப்பாய்
ஒளிவரும் முழு நலம் முதல் இல
        கேடு இல வீடு ஆம்
தெளிதரும் நிலைமையது ஒழிவு இலன்
       முழுவதும் இறையோன்
அளிவரும் அருளினோடு அகத்தனன்
புறத்தனன் அமைந்தே (2)
2814. He is easy for his devotee to reach.
He has no births.
He is the ancient light and he is all goodness.
He is faultless.
He is faultless moksha.
He removes delusions.
He is everlasting.
He is the only god.
He is the compassionate one in all hearts.
He is the outside and inside of all.

2815 அமைவு உடை அறநெறி முழுவதும்
       உயர்வு அற உயர்ந்து
அமைவு உடை முதல் கெடல் ஒடிவு இடை
       அற நிலம் அது ஆம்
அமைவு உடை அமரரும் யாவையும்
        யாவரும் தான் ஆம்
அமைவு உடை நாரணன் மாயையை
அறிபவர் யாரே? (3)
2815. He is the entire dharmic path.
He is the highest of all.
He is the creator and the destroyer of all time.
He is all the gods in the sky.
He is all things and all creatures.
Who knows the maaya of Naraṇan whose nature is excellent?

2816 யாரும் ஓர் நிலைமையன் என அறிவு
       அரிய எம் பெருமான்
யாரும் ஓர் நிலைமையன் என அறிவு
       எளிய எம் பெருமான்
பேரும் ஓர் ஆயிரம் பிற பல
       உடைய எம் பெருமான்
பேரும் ஓர் உருவமும் உளது இல்லை
       இலது இல்லை பிணக்கே (4)
2816. No one knows who our god is.
No one knows what his nature is.
He is the light of knowledge.
He has a thousand names
and any name that is conceivable,
yet he has no name or form.
Is he not a mystery!

2817 பிணக்கு அற அறு வகைச் சமயமும்
       நெறி உள்ளி உரைத்த
கணக்கு அறு நலத்தனன் அந்தம் இல்
       ஆதி அம் பகவன்
வணக்கு உடைத் தவநெறி வழிநின்று
       புறநெறி களைகட்டு
உணக்குமின் பசை அற அவனுடை
       உணர்வுகொண்டு உணர்ந்தே (5)
2817. He is described by all the six schools of religion,
and they all agree that he is faultless.
He has no beginning or end.
O devotees, you must follow the path of penance
and leave all worldly desires.
Have only the feeling that he is god
and remove all the feelings of your senses.

2818 உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து உரு
       வியந்த இந் நிலைமை
உணர்ந்து உணர்ந்து உணரிலும் இறைநிலை
       உணர்வு அரிது உயிர்காள்
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து அரி அயன்
       அரன் என்னும் இவரை
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின்
       மனப்பட்டது ஒன்றே (6)
2818. O devotees, leave your worldly desires
and have only the highest feeling of god.
Even if you reach the state of having no desire,
you cannot know who god is.
Worship the gods Hari, Brahma and Shiva
and learn to recite their names many times.
You will come to know and your mind will understand
that there is only one god.

2819 ஒன்று எனப் பல என அறிவு அரும்
       வடிவினுள் நின்ற
நன்று எழில் நாரணன் நான்முகன்
       அரன் என்னும் இவரை
ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும்
       இரு பசை அறுத்து
நன்று என நலம் செய்வது அவனிடை
       நம்முடை நாளே (7)
2819. People say that the beautiful gods
Naraṇan, Nanmuhan and Shiva have one or many forms.
Worship them in your mind and meditate on them
and you will come to know that Nanmuhan and Shiva
are Naraṇan himself and you will do good deeds.
Worship Naraṇan in your mind
and the day when you come to know that he is the only god
will be the best of all your days.

2820 நாளும் நின்று அடு நம பழமை அம்
       கொடுவினை உடனே
மாளும் ஓர் குறைவு இல்லை மனன் அகம்
       மலம் அறக் கழுவி
நாளும் நம் திரு உடை அடிகள் தம்
       நலம் கழல் வணங்கி
மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு
       மாள்வது வலமே (8)
2820. The bad karma that you have collected will leave you
and you will become faultless.
All the faults in your mind will go away.
Even when you leave this world
it is good to worship the divine feet of the god.
Keep worshiping him until the end of your life.

2821 வலத்தனன் திரிபுரம் எரித்தவன்
       இடம்பெறத் துந்தித்
தலத்து எழு திசைமுகன் படைத்த நல்
       உலகமும் தானும்
புலப்பட பின்னும் தன் உலகத்தில்
       அகத்தனன் தானே
சொலப் புகில் இவை பின்னும் வயிற்று உள
       இவை அவன் துயக்கே (9)
2821. Shiva who burned the three forts
stays on the left side of the god.
Nanmuhan, the creator of the world
who has heads in all directions
stays on a lotus on the navel of the god.
If you search for him,
he is in this world and inside your mind.
If you would describe him,
the entire world is in his stomach—
this is how he loves to confuse you.

2822 துயக்கு அறு மதியில் நல் ஞானத்துள்
       அமரரைத் துயக்கும்
மயக்கு உடை மாயைகள் வானிலும்
       பெரியன வல்லன்
புயல் கரு நிறத்தனன் பெரு நிலங்
       கடந்த நல் அடிப் போது
அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன்
       வணங்குவன் அமர்ந்தே (10)
2822. He has faultless knowledge.
His maayas make even the wise gods confused.
He is bigger than the sky.
He is mighty.
He has the dark color of a cloud.
He did not grow tired when he measured the earth and the sky.
I will praise him without growing weary.
I will embrace him and bow to him.

2823 அமரர்கள் தொழுது எழ அலை கடல்
       கடைந்தவன் தன்னை
அமர் பொழில் வளங் குருகூர்ச்
       சடகோபன் குற்றேவல்கள்
அமர் சுவை ஆயிரத்து அவற்றினுள்
       இவை பத்தும் வல்லார்
அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம்
       பிறவி அம் சிறையே (11)
2823. Saḍagopan of Thirukuruhur
that flourishes with beautiful groves
composed a thousand pasurams
about the god who churned the milky ocean with roaring waves
as the other gods worshiped him.
If devotees learn and recite these ten pasurams
they will not be born again
and they will go to heaven and stay with the gods.
--------------

திருவாய் மொழி - முதல் பத்து ( நான்காம் திருமொழி, 2824 -2834)
- தலைமகள் தூதுவிடல்

2824 அம் சிறைய மட நாராய் அளியத்தாய் நீயும் நின்
அம் சிறைய சேவலுமாய் ஆஆ என்று எனக்கு அருளி
வெம் சிறைப் புள் உயர்த்தார்க்கு என் விடு தூதாய்ச் சென்றக்கால்
வன் சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செயுமோ? (1)
2824. O crane with lovely wings,
be kind to me.
If you and your mate with beautiful wings
feel sorry for me and say, "Oh, oh!"
and go as my messengers to the god
who rides a strong-winged eagle,
do you worry that he might put you in a terrible cage
and you could do nothing?


2825 என் செய்ய தாமரைக்கண் பெருமானார்க்கு என் தூதாய்
என் செய்யும் உரைத்தக்கால்? இனக் குயில்காள் நீர் அலிரே?
முன் செய்த முழுவினையால் திருவடிக்கீழ்க் குற்றேவல்
முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ? விதியினமே (2)
2825. O cuckoo birds,
what will happen to you
if you go as my messenger and tell of my love sickness
to the beautiful lotus-eyed god?
I cannot serve under his divine feet
because I did not do good karma in my previous births.
Is it right that I should not be able to join him in this birth
because I did not try in my last birth?
Is that my fate?

2826 விதியினால் பெடை மணக்கும் மென்நடைய அன்னங்காள்
மதியினால் குறள் மாணாய் உலகு இரந்த கள்வர்க்கு
மதியிலேன் வல் வினையே மாளாதோ? என்று ஒருத்தி
மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே (3)
2826. O swans,
you walk softly with your beloveds
because your fate is good.
He went as a dwarf, begged Mahabali at his sacrifice
and cheated him by taking the earth from him.
Isn't he a thief?
Go and tell him, "There is an ignorant girl.
She feels that she must have done much bad karma.
Her mind is confused and she is fascinated with you."

2827 என் நீர்மை கண்டு இரங்கி இது தகாது என்னாத
என் நீல முகில் வண்ணற்கு என் சொல்லி யான் சொல்லுகேனோ?
நன் நீர்மை இனி அவர்கண் தங்காது என்று ஒரு வாய்ச்சொல்
நன் நீல மகன்றில்காள் நல்குதிரோ? நல்கீரோ? (4)
2827. O andril birds, you have a lovely blue color.
The dark cloud-colored god
doesn’t know how I suffer for his love
and doesn’t come to me and tell me,
"Don’t worry."
What can I say to describe my love to him?
Go and tell him whose nature is so wonderful and sweet
that she will not survive
if she has to be apart from him any more.
O andril birds, will you help me or not?

2828 நல்கித் தான் காத்து அளிக்கும் பொழில் ஏழும் வினையேற்கே
நல்கத் தான் ஆகாதோ? நாரணனைக் கண்டக்கால்
மல்கு நீர்ப் புனல் படப்பை இரை தேர் வண் சிறு குருகே
மல்கு நீர்க் கண்ணேற்கு ஓர் வாசகம் கொண்டு அருளாயே (5)
2828. O beautiful small kurugu birds,
you search for food in the fields filled with water where fish swim.
Naraṇan has created all the seven worlds and protects them.
Won't he give me his grace and protect me also?
Won’t you go see him and tell him of my love
and show kindness by returning
and telling me what he said?
I will wait, my eyes filled with tears,
until you return and tell me what he said.

2829 அருளாத நீர் அருளி அவர் ஆவி துவராமுன்
அருள் ஆழிப் புட்கடவீர் அவர் வீதி ஒருநாள் என்று
அருள் ஆழி அம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
அருள் ஆழி வரி வண்டே யாமும் என் பிழைத்தோமே? (6)
2829. O bees, your bodies are beautiful with lines.
Give me your grace.
He is a generous god and he carries a discus.
Go, see him and tell him, "She loves you
but you do not give your grace to her.
Come just one day on her street riding on your eagle
before she loses her life."
What have I done wrong
that he does not want to give me his grace?

2830 என்பு இழை கோப்பது போலப் பனி வாடை ஈர்கின்றது
என் பிழையே நினைந்தருளி அருளாத திருமாலார்க்கு
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு என்று ஒரு வாய்ச்சொல்
என்பிழைக்கும்? இளங் கிளியே யான் வளர்த்த நீ அலையே? (7)
2830. O young parrot, go to Nedumaal as my messenger.
I suffer like someone trembling in a cold wind
that makes your bones hurt.
Thirumaal does not give his grace
and he doesn’t understand that I haven’t done anything wrong.
Go to him and say, "What mistake has she done?
Why can she not come and join your divine feet?"
What would be wrong if you told him that?
Aren't you the bird that I have raised?
You are young and you should help me.

2831 நீ அலையே? சிறு பூவாய் நெடுமாலார்க்கு என் தூதாய்
நோய் எனது நுவல் என்ன நுவலாதே இருந்தொழிந்தாய்
சாயலொடு மணி மாமை தளர்ந்தேன் நான் இனி உனது
வாய் அலகில் இன் அடிசில் வைப்பாரை நாடாயே (8)
2831. O small puvai bird!
I told you to go as a messenger
and tell Neḍumaal of my love sickness,
but you didn’t tell him and my body has grown weak
and lost its shining color and beauty.
Go now and find someone who can feed you,
putting sweet food in your mouth as I used to do.

2832 நாடாத மலர் நாடி நாள்தோறும் நாரணன் தன்
வாடாத மலர் அடிக்கீழ் வைக்கவே வகுக்கின்று
வீடாடி வீற்றிருத்தல் வினை அற்றது என் செய்வதோ?
ஊடாடு பனி வாடாய் உரைத்து ஈராய் எனது உடலே (9)
2832. O cool wind that passes over the dew!
The god created people to bring flowers that do not wither
and place them at his flower-like feet.
Why does he make me suffer and be separated from him?
I don’t know what to do.
Did I do bad karma?
Is this right?
Go and tell him how I suffer.

2833 உடல் ஆழிப் பிறப்பு வீடு உயிர் முதலா முற்றுமாய்க்
கடல் ஆழி நீர் தோற்றி அதனுள்ளே கண்வளரும்
அடல் ஆழி அம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
விடல் ஆழி மட நெஞ்சே வினையோம் ஒன்றாம் அளவே (10)
2833. She says,
“O ignorant heart, our dear one has a discus in his hands
and rests on a snake bed on the ocean.
He creates births, bodies, people, moksha and water in the ocean.
If you see him, tell him, ‘We have done karma
but everyone else has also.’”

2834 அளவு இயன்ற ஏழ் உலகத்தவர் பெருமான் கண்ணனை
வள வயல் சூழ் வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்து உரைத்த
அளவு இயன்ற அந்தாதி ஆயிரத்துள் இப் பத்தின்
வள உரையால் பெறலாகும் வான் ஓங்கு பெரு வளமே (11)
2834. Saḍagopan of Thirukuruhur
surrounded with flourishing fields swarming with bees
composed a thousand andadi poems
praising our god Kaṇṇan, the lord of the seven worlds.
If devotees learn and recite these ten pasurams
they will have the good fortune of going to heaven and joining the gods.
------------

திருவாய் மொழி - முதல் பத்து (ஐந்தாம் திருமொழி, 2835-2845)
- மாறனை மால் சீலகுணத்தால் சேர்த்தல்

2835 வள ஏழ் உலகின் முதலாய
       வானோர் இறையை அருவினையேன்
களவேழ் வெண்ணெய் தொடு உண்ட
       கள்வா என்பன் பின்னையும்
தளவு ஏழ் முறுவல் பின்னைக்கு ஆய்
       வல் ஆன் ஆயர் தலைவனாய்
இள ஏறு ஏழும் தழுவிய
       எந்தாய் என்பன் நினைந்து நைந்தே (1)
2835. He is the god of the gods in the sky.
He is the most ancient in all the seven rich worlds.
I have done much bad karma and I call to you, saying,
"O thief! You stole butter and ate it all!"
and I praise you, saying,
"You are my father, the heroic chief of the cowherds
and you conquered the seven young bulls
to marry Nappinnai whose smile is like blooming jasmine."
I think of you and suffer and suffer.

2836 நினைந்து நைந்து உள் கரைந்து உருகி
       இமையோர் பலரும் முனிவரும்
புனைந்த கண்ணி நீர் சாந்தம்
       புகையோடு ஏந்தி வணங்கினால்
நினைந்த எல்லாப் பொருள்கட்கும்
       வித்துஆய் முதலில் சிதையாமே
மனம் செய் ஞானத்து உன் பெருமை
       மாசூணாதோ? மாயோனே (2)
2836. You are Maayon.
The gods in the sky think of you, melt in their hearts
and worship you with garlands, water,
sandal paste and fragrant incense.
You are the seed of all things in the world.
You are the great god
and can be reached only through wisdom.
Won’t your greatness be spoiled
if the gods use only earthly things to worship you?

2837 மா யோனிகளாய் நடை கற்ற
       வானோர் பலரும் முனிவரும்
நீ யோனிகளைப் படை என்று
       நிறை நான்முகனைப் படைத்தவன்
சேயோன் எல்லா அறிவுக்கும்
       திசைகள் எல்லாம் திருவடியால்
தாயோன் எல்லா எவ் உயிர்க்கும்
       தாயோன் தான் ஓர் உருவனே (3)
2837. He created the great Nanmuhan and told him,
"You should create all the gods in the sky,
all with their own duties,
the sages and all creatures in the world."
He is so far away that all knowledge
and all the directions cannot reach him.
He measured the world and the sky with his divine feet.
He is the mother of all lives but no one knows his form.

2838 தான் ஓர் உருவே தனி வித்து ஆய்
       தன்னின் மூவர் முதலாய
வானோர் பலரும் முனிவரும்
       மற்றும் மற்றும் முற்றும் ஆய்
தான் ஓர் பெருநீர் தன்னுள்ளே
       தோற்றி அதனுள் கண்வளரும்
வானோர் பெருமான் மா மாயன்
       வைகுந்தன் எம் பெருமானே (4)
2838. He has a unique form.
He is the seed of the three gods, Shiva, Brahma, Indra,
all the gods in the sky, sages and all other creatures.
He, the god of the gods, is the creator of the large ocean
and he sleeps on Adishesha.
He is the Maayan and the god of Vaikuṇṭam.

2839 மான் ஏய் நோக்கி மடவாளை
       மார்பில் கொண்டாய் மாதவா
கூனே சிதைய உண்டை வில்
       நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா
வான் ஆர் சோதி மணிவண்ணா
       மதுசூதா நீ அருளாய் உன்
தேனே மலரும் திருப்பாதம்
       சேருமாறு வினையேனே (5)
2839. O Madhava, on your chest you embrace
the innocent doe-eyed Lakshmi.
O Govinda, you shot a stone from your bow
and hurt the hunched back of Manthara.
You have a sapphire color
and you are a bright light for the gods in the sky.
I have done bad karma.
O Madhusudana, give me your grace
so that I will be able to join your divine feet
like the flowers that drip with honey.

2840 வினையேன் வினை தீர் மருந்து ஆனாய்
       விண்ணோர் தலைவா கேசவா
மனை சேர் ஆயர் குல முதலே
       மா மாயனே மாதவா
சினை ஏய் தழைய மராமரங்கள்
       ஏழும் எய்தாய் சிரீதரா
இனையாய் இனைய பெயரினாய்
       என்று நைவன் அடியேனே (6)
2840. You are the remedy for the fruits of my bad karma.
O Kesava, you are the lord of the gods in the sky.
You are the chief of the cowherd clan
and you have lived in their houses.
You are the great Maayavan.
O Madhava, you destroyed the seven mara trees flourishing with branches.
O Sridhara, I am your slave and I melt with devotion
and long to reach you, saying,
"Your nature is wonderful. You have thousands of names."

2841 அடியேன் சிறிய ஞானத்தன்
       அறிதல் ஆர்க்கும் அரியானை
கடி சேர் தண் அம் துழாய்க் கண்ணி
       புனைந்தான் தன்னை கண்ணனை
செடி ஆர் ஆக்கை அடியாரைச்
       சேர்தல் தீர்க்கும் திருமாலை
அடியேன் காண்பான் அலற்றுவன்
       இதனின் மிக்கு ஓர் அயர்வு உண்டே? (7)
2841. I am not very wise.
He is hard even for the wise to know.
He is adorned with fragrant cool thulasi garlands.
He is Kaṇṇan.
He is the god Thirumal and he removes the troubles
of the devotees who reach him.
I am his slave.
I cry out and cry out that I want to see him.
Is there anything I could do more than only thinking of him?

2842 உண்டாய் உலகு ஏழ் முன்னமே
       உமிழ்ந்து மாயையால் புக்கு
உண்டாய் வெண்ணெய் சிறு மனிசர்
       உவலை ஆக்கை நிலை எய்தி
மண் தான் சோர்ந்தது உண்டேலும்
       மனிசர்க்கு ஆகும் பீர் சிறிதும்
அண்டாவண்ணம் மண் கரைய
       நெய் ஊண் மருந்தோ? மாயோனே (8)
2842. You swallowed the seven worlds in ancient times,
and spit them out.
You took the form of a small child
and ate butter in a house where ordinary people lived.
O Maayon, do you think that butter can cure your stomach
that is upset because you ate mud?

2843 மாயோம் தீய அலவலைப்
       பெரு மா வஞ்சப் பேய் வீயத்
தூய குழவியாய் விடப் பால்
       அமுதா அமுது செய்திட்ட
மாயன் வானோர் தனித் தலைவன்
       மலராள் மைந்தன் எவ் உயிர்க்கும்
தாயோன் தம்மான் என் அம்மான்
       அம்மா மூர்த்தியைச் சார்ந்தே (9)
2843. Putana wanted to kill you
and came in the form of a mother to feed you milk,
but you changed her poisonous milk into nectar and drank it.
You are Maayan.
You are the matchless chief of the gods in the sky.
You are the beloved of Lakshmi who stays on a lotus.
You are the mother of all the lives of the world.
My dear god is the lord of all.
I have joined him and I will not be separated from him.

2844 சார்ந்த இரு வல் வினைகளும்
       சரித்து மாயப் பற்று அறுத்து
தீர்ந்து தன்பால் மனம் வைக்கத்
       திருத்தி வீடு திருத்துவான்
ஆர்ந்த ஞானச் சுடர் ஆகி
       அகலம் கீழ் மேல் அளவு இறந்து
நேர்ந்த உருவாய் அருவாகும்
       இவற்றின் உயிராம் நெடுமாலே (10)
2844. My god Neḍumaal destroyed my good and bad karma.
He destroyed my desire for this illusory world.
He makes my mind think only of him.
He will give me moksha.
He is the light of high knowledge.
He is the inner soul of all life.
He stays in the sky and in the underworld.
He has a form and he is formless.
He, Neḍumaal, is the life of all creatures.

2845 மாலே மாயப் பெருமானே
       மா மாயவனே என்று என்று
மாலே ஏறி மால் அருளால்
       மன்னு குருகூர்ச் சடகோபன்
பால் ஏய் தமிழர் இசைகாரர்
       பத்தர் பரவும் ஆயிரத்தின்
பாலே பட்ட இவை பத்தும்
       வல்லார்க்கு இல்லை பரிவதே (11)
2845. Saḍagopan of everlasting Thirukuruhur
praised the god, saying,
"You are the dark-colored one! You are the god Maayan!
You are the wonderful Maayavan!"
He composed a thousand poems
that Tamil scholars and singers learn to praise the god.
If devotees learn and recite these ten pasurams well
they will not have any trouble in their lives.
-----------

திருவாய் மொழி - முதல் பத்து (ஆறாம் திருமொழி, 2846-2856)
- ஆராதனைக்கு எளியவன்

2846 பரிவது இல் ஈசனைப் பாடி
விரிவது மேவல் உறுவீர்
பிரிவகை இன்றி நல் நீர் தூய்
புரிவதுவும் புகை பூவே (1)
2846. O devotees,
you praise the god with love
and want to join him in moksha.
Bath him with pure water, show him frankincense,
sprinkle flowers on his feet and worship him.
This is the path to think of him always
and not be separated from him.

2847 மதுவார் தண் அம் துழாயான்
முது வேத முதலவனுக்கு
எது ஏது என் பணி என்னாது
அதுவே ஆள் செய்யும் ஈடே (2)
2847. He is the ancient god of the Vedas.
He wears a beautiful cool thulasi garland
that drips with honey.
Do not wonder what service you can do for the god,
just do what you can.
That will be the best service that you can do for him.

2848 ஈடும் எடுப்பும் இல் ஈசன்
மாடு விடாது என் மனனே
பாடும் என் நா அவன் பாடல்
ஆடும் என் அங்கம் அணங்கே (3)
2848. The highest god does not think
one person is high and another is low.
He accepts all.
My mind does not leave him ever.
My mouth praises him with songs.
My body dances for him
like those who are in frenzy.

2849 அணங்கு என ஆடும் என் அங்கம்
வணங்கி வழிபடும் ஈசன்
பிணங்கி அமரர் பிதற்றும்
குணங்கெழு கொள்கையினானே (4)
2849. The gods in the sky worship and praise him
raving about his superior nature.
My body dances like those who dance in a frenzy.
I bow to him and worship him.

2850 கொள்கை கொளாமை இலாதான்
எள்கல் இராகம் இலாதான்
விள்கை விள்ளாமை விரும்பி
உள் கலந்தார்க்கு ஓர் அமுதே (5)
2850. He does not think anyone is good or bad
but gives his grace to all.
He does not hate anyone or like anyone.
He helps all whether they expect something from him or not.
He is nectar for those who keep him in their minds.

2851 அமுதம் அமரர்கட்கு ஈந்த
நிமிர் சுடர் ஆழி நெடுமால்
அமுதிலும் ஆற்ற இனியன்
நிமிர் திரை நீள் கடலானே (6)
2851. Our god Neḍumaal carries a shining discus
and he gave nectar to the gods.
He is sweeter than nectar.
He sleeps on the large ocean with roaring waves.

2852 நீள் கடல் சூழ் இலங்கைக் கோன்
தோள்கள் தலை துணிசெய்தான்
தாள்கள் தலையில் வணங்கி
நாள்கள் தலைக்கழிமின்னே (7)
2852. He cut the heads and the arms of Ravana
the king of Lanka surrounded by the wide ocean.
Bow your head at his feet
and cross over the ocean that is your remaining days.

2853 கழிமின் தொண்டீர்கள் கழித்துத்
தொழுமின் அவனை தொழுதால்
வழி நின்ற வல்வினை மாள்வித்து
அழிவின்றி ஆக்கம் தருமே (8)
2853. O devotees,
leave the desires of the world and worship him.
If you worship him, he will destroy your bad karma
and give you undiminished wealth on this earth.

2854 தரும அரும் பயன் ஆய
திருமகளார் தனிக் கேள்வன்
பெருமை உடைய பிரானார்
இருமை வினை கடிவாரே (9)
2854. He is the beloved of beautiful Lakshmi
who is the result of all the dharma of the world.
He, the famous god, will remove your bad and good karma.

2855 கடிவார் தீய வினைகள்
நொடியாரும் அளவைக்கண்
கொடியா அடு புள் உயர்த்த
வடிவு ஆர் மாதவனாரே (10)
2855. He will destroy your bad karma.
He will remove your karma in a moment.
Our lord the beautiful Madhavan carries high
his banner of a cruel eagle that destroys his enemies.

2856 மாதவன்பால் சடகோபன்
தீது அவம் இன்றி உரைத்த
ஏதம் இல் ஆயிரத்து இப் பத்து
ஓத வல்லார் பிறவாரே (11)
2856. Saḍagopan composed a thousand faultless poems
to the god Madhavan.
If devotees learn and recite these ten poems
they will not be born again on this earth.
---------------

திருவாய் மொழி - முதல் பத்து (ஏழாம் திருமொழி, 2857-2867)
- ஆராதிப்பார்க்கு மிக இனியன்

2857 பிறவித்துயர் அற ஞானத்துள் நின்று
துறவிச் சுடர் விளக்கம் தலைப்பெய்வார்
அறவனை ஆழிப்படை அந்தணனை
மறவியை இன்றி மனத்து வைப்பாரே (1)
2857. Sages who do not want to be born again
follow the bright path of wisdom.
Their god is pure and he carries a discus. He is dharma.
They keep him in their minds and never forget him.

2858 வைப்பு ஆம் மருந்து ஆம் அடியரை வல்வினைத்
துப்பு ஆம் புலன் ஐந்தும் துஞ்சக்கொடான் அவன்
எப்பால் எவர்க்கும் நலத்தால் உயர்ந்து உயர்ந்து
அப்பாலவன் எங்கள் ஆயர் கொழுந்தே (2)
2858. He is a treasure.
He is the remedy for all sicknesses.
He removes the bad karma of his devotees.
He saves his devotees from the desires of the five senses.
He is the dear one of the cowherds.
He is higher in goodness than anyone or anything.

2859 ஆயர் கொழுந்தாய் அவரால் புடையுண்ணும்
மாயப் பிரானை என் மாணிக்கச் சோதியை
தூய அமுதைப் பருகிப் பருகி என்
மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே (3)
2859. He was born as a tender child of the cowherds.
He was punished by Yashoda because he stole butter.
Maayan my god is a bright diamond.
He is pure nectar.
I drank and drank his grace
and all my delusion went away.

2860 மயர்வு அற என் மனத்தே மன்னினான் தன்னை
உயர்வினையே தரும் ஒண் சுடர்க் கற்றையை
அயர்வு இல் அமரர்கள் ஆதிக் கொழுந்தை என்
இசைவினை என் சொல்லி யான் விடுவேனோ? (4)
2860. He entered my mind and took away all my delusions.
He, a shining light, gives me only excellence in life.
He is lovely like a tender shoot
and he is the ancient god of the gods.
He never grows tired.
He is my love.
How could I allow him to leave me?

2861 விடுவேனோ என் விளக்கை என் ஆவியை
நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை
தொடுவே செய்து இள ஆய்ச்சியர் கண்ணினுள்
விடவே செய்து விழிக்கும் பிரானையே? (5)
2861. He is my soul and I will not leave him,
He is the bright light that guides me.
He is my chief and he came into my life and saved me.
He bound me to him.
The young cowherd girls love to see him.
He fascinates them all.

2862 பிரா அன் பெரு நிலம் கீண்டவன் பின்னும்
விரா அய் மலர்த் துழாய் வேய்ந்த முடியன்
மராமரம் எய்த மாயவன் என்னுள்
இரான் எனில் பின்னை யான் ஒட்டுவேனோ? (6)
2862. As a boar the lord split open the earth.
He is adorned with flower garlands mixed with thulasi.
He is Maayavan and he destroyed the seven mara trees.
If he refuses to stay in my heart, I will not accept it.

2863 யான் ஒட்டி என்னுள் இருத்துவன் என்றிலன்
தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து
ஊன் ஒட்டி நின்று என் உயிரில் கலந்து இயல்
வான் ஒட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே? (7)
2863. I was worried that I might not be able to make him stay in my mind,
but he entered my mind, attracted me and stayed there.
He stayed in my body and mingled with my soul.
He stays in my heart and if he says he will leave me,
how can I accept that?

2864 என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நன் நெஞ்சம்
தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் இனி
பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடு உடை
முன்னை அமரர் முழுமுதல் தானே (8)
2864. Even if he thinks of leaving me,
he cannot leave my faultless heart.
He is the highest god of the gods in the sky
and the beloved of Nappinnai
whose arms are as lovely as bamboo.

2865 அமரர் முழுமுதல் ஆகிய ஆதியை
அமரர்க்கு அமுது ஈந்த ஆயர் கொழுந்தை
அமர அழும்பத் துழாவி என் ஆவி
அமரத் தழுவிற்று இனி அகலும்மோ? (9)
2865. He is the ancient one and the highest of the gods.
He is the tender child of the cowherds
and he gave nectar to the gods.
He entered my heart and embraced my soul.
Surely he will not have the heart to leave me.

2866 அகலில் அகலும் அணுகில் அணுகும்
புகலும் அரியன் பொரு அல்லன் எம்மான்
நிகர் இல் அவன் புகழ் பாடி இளைப்பு இலம்
பகலும் இரவும் படிந்து குடைந்தே (10)
2866. If you do not think of him, he will leave you.
If you approach him, he will approach you.
He is hard to describe.
No one can fight with him and conquer him.
We will praise and sing his fame
and we never grow tired.
We will plunge ourselves into contemplating him
night and day and we will live.

2867 குடைந்து வண்டு உண்ணும் துழாய் முடியானை
அடைந்த தென் குருகூர்ச் சடகோபன்
மிடைந்த சொல் தொடை ஆயிரத்து இப் பத்து
உடைந்து நோய்களை ஓடுவிக்குமே (11)
2867. Saḍagopan of southern Thirukuruhur
composed a thousand poems on the god
adorned with a thulasi garland
where bees swarm and drink honey.
If devotees learn and recite these poems
any sickness they have will go away.
---------

திருவாய் மொழி - முதல் பத்து (எட்டாம் திருமொழி, 2868-2878)
ஈஸ்வரன் ஆர்ஜவ குணமுடையவன்

2868 ஓடும் புள் ஏறி
சூடும் தண் துழாய்
நீடு நின்றவை
ஆடும் அம்மானே (1)
2868. He rides on an eagle.
He is adorned with a beautiful thulasi garland.
He rules all things. He dances on the heads of Kalingan.

2869 அம்மானாய்ப் பின்னும்
எம் மாண்பும் ஆனான்
வெம் மா வாய் கீண்ட
செம் மா கண்ணனே (2)
2869. He is our father and he is everything on earth.
He is the wonderful god Kaṇṇan.
He split open the mouth of the Rakshasan Kesi
when he came in the form of a cruel bird.

2870 கண் ஆவான் என்றும்
மண்ணோர் விண்ணோர்க்கு
தண் ஆர் வேங்கட
விண்ணோர் வெற்பனே (3)
2870. He is the god of cool Thiruvenkaṭam
where the hills touch the sky.
He is as precious as eyes to the people of the world
and the gods in the sky.

2871 வெற்பை ஒன்று எடுத்து
ஒற்கம் இன்றியே
நிற்கும் அம்மான் சீர்
கற்பன் வைகலே (4)
2871. Every day I will praise
the greatness of the god, my father.
He carried Govardhana mountain
and did not grow tired.

2872 வைகலும் வெண்ணெய்
கைகலந்து உண்டான்
பொய் கலவாது என்
மெய் கலந்தானே (5)
2872. He stole butter every day
and ate it with his hands.
That god entered my heart as he promised
and he did not lie.

2873 கலந்து என் ஆவி
நலம் கொள் நாதன்
புலன் கொள் மாணாய்
நிலம் கொண்டானே (6)
2873. The god who entered my heart and saved me
went to Mahabali as an attractive dwarf
and took over the earth and the sky.

2874 கொண்டான் ஏழ் விடை
உண்டான் ஏழ் வையம்
தண் தாமம் செய்து என்
எண் தான் ஆனானே (7)
2874. He defeated the seven bulls and killed them.
He swallowed the seven worlds.
He heard my request and granted my wish
and all my thoughts are only for him.

2875 ஆனான் ஆன் ஆயன்
மீனோடு ஏனமும்
தான் ஆனான் என்னில்
தான் ஆய சங்கே (8)
2875. He was raised as a cowherd,
he carries a conch,
he took the form of a fish and a boar—
all because he loves his devotees like me.

2876 சங்கு சக்கரம்
அங்கையில் கொண்டான்
எங்கும் தானாய
நங்கள் நாதனே (9)
2876. He carries a conch and discus
in his beautiful hands.
He is our lord and he is omnipresent.

2877 நாதன் ஞாலம் கொள்
பாதன் என் அம்மான்
ஓதம் போல் கிளர்
வேத நீரனே (10)
2877. He is the god of all.
He, my father, measured the world with his feet.
The Vedas that contain an ocean of divine sastras
describe his wonderful nature.

2878 நீர்புரை வண்ணன்
சீர் சடகோபன்
நேர்தல் ஆயிரத்து
ஓர்தல் இவையே (11)
2878. The famous Sadagopan
composed a thousand pasurams
praising the ocean-colored god.
If devotees learn and recite these ten poems
they will become matchless devotees.
------------

திருவாய் மொழி - முதல் பத்து (ஒன்பதாம் திருமொழி, 2879-2889)
ஆழ்வாரோடு எம்பெருமான் கலந்த வகை

2879 இவையும் அவையும் உவையும்
       இவரும் அவரும் உவரும்
எவையும் எவரும் தன்னுளே
       ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனிமுதல் எம்மான்
       கண்ண பிரான் என் அமுதம்
சுவையன் திருவின் மணாளன்
       என்னுடைச் சூழல் உளானே (1)
2879. My dear father creates and protects
these things, those things and all things in between.
He creates and protects these people, those people
and all in between and they are in him.
Our lord is the unique cause in all those things.
He, the matchless dear god is in all of them.
He is Kaṇṇan. He is my nectar.
He is sweet. He is the beloved of the goddess Lakshmi.
He is with me wherever I am.

2880 சூழல் பலபல வல்லான்
       தொல்லை அம் காலத்து உலகைக்
கேழல் ஒன்று ஆகி இடந்த
       கேசவன் என்னுடை அம்மான்
வேழ மருப்பை ஒசித்தான்
       விண்ணவர்க்கு எண்ணல் அரியான்
ஆழ நெடுங் கடல் சேர்ந்தான்
       அவன் என் அருகவிலானே (2)

2880. Kesavan, the strong god, took many forms.
He took the form of a boar
and split open the earth in ancient times.
He, my dear god, broke the tusks of the elephant.
Even the gods do not know who he is.
He sleeps on the vast ocean but he is near me.

2881 அருகல் இலாய பெரும் சீர்
       அமரர்கள் ஆதி முதல்வன்
கருகிய நீல நன் மேனி
       வண்ணன் செந்தாமரைக் கண்ணன்
பொரு சிறைப் புள் உவந்து ஏறும்
       பூமகளார் தனிக் கேள்வன்
ஒருகதியின் சுவை தந்திட்டு
       ஒழிவு இலன் என்னோடு உடனே (3)
2881. Among all the gods he is the ancient one
and he is the reason for all their good deeds.
He has a dark beautiful body.
He has lovely lotus eyes.
He rides an eagle.
He is the beloved of the goddess Lakshmi who stays on a lotus.
He gives me himself CHECK
and stays with me without leaving me.

2882 உடன் அமர் காதல் மகளிர்
       திருமகள் மண்மகள் ஆயர்
மட மகள் என்று இவர் மூவர்
       ஆளும் உலகமும் மூன்றே
உடன் அவை ஒக்க விழுங்கி
       ஆல் இலைச் சேர்ந்தவன் எம்மான்
கடல் மலி மாயப் பெருமான்
       கண்ணன் என் ஒக்கலையானே (4)
2882. He stays with his three beloved wives
Lakshmi, the Earth goddess,
and the beautiful cowherd girl Nappinnai.
He swallowed all the three worlds that he rules
and sleeps on a banyan leaf.
The wonderful qualities of Maayaperuman
are larger than the ocean.
He is always near me.

2883 ஒக்கலை வைத்து முலைப் பால்
       உண் என்று தந்திட வாங்கிச்
செக்கம் செக அன்று அவள்பால்
       உயிர் செக உண்ட பெருமான்
நக்க பிரானோடு அயனும்
       இந்திரனும் முதலாக
ஒக்கவும் தோற்றிய ஈசன்
       மாயன் என் நெஞ்சின் உளானே (5)
2883. When Putana came to kill him
he drank her poisonous milk and killed her.
He, our god, created Shiva, Brahma, Indra
and all other gods.
That Maayan is near me and he is in my heart.

2884 மாயன் என் நெஞ்சின் உள்ளான்
       மற்றும் எவர்க்கும் அதுவே
காயமும் சீவனும் தானே
       காலும் எரியும் அவனே
சேயன் அணியன் எவர்க்கும்
       சிந்தைக்கும் கோசரம் அல்லன்
தூயன் துயக்கன் மயக்கன்
       என்னுடைத் தோளிணையானே (6)
2884. That Maayan is not only in my heart,
he is in the hearts of all.
He is body and life.
He is wind and fire.
He is far and he is near.
He cannot be comprehended by anyone’s thoughts.
He is pure. He is simple.
He fascinates all.
I have his signs the conch and the discus on my two arms.

2885 தோள் இணை மேலும் நன் மார்பின்
       மேலும் சுடர் முடி மேலும்
தாள் இணை மேலும் புனைந்த
       தண் அம் துழாய் உடை அம்மான்
கேள் இணை ஒன்றும் இலாதான்
       கிளரும் சுடர் ஒளி மூர்த்தி
நாள் அணைந்து ஒன்றும் அகலான்
       என்னுடை நாவின் உளானே (7)
2885. He wears a cool thulasi garland
on his arms, chest, his shining crown and his feet.
He is matchless.
He shines like a bright light.
He embraces me and he will not leave me.
He is on my tongue.

2886 நாவினுள் நின்று மலரும்
       ஞானக் கலைகளுக்கு எல்லாம்
ஆவியும் ஆக்கையும் தானே
       அழிப்போடு அளிப்பவன் தானே
பூ இயல் நால் தடம் தோளன்
       பொரு படை ஆழி சங்கு ஏந்தும்
காவி நன் மேனிக் கமலக்
       கண்ணன் என் கண்ணின் உளானே (8)
2886. He stays on my tongue
He is the soul and body of all wisdom and the arts.
He creates all and destroys all.
He has four beautiful strong arms.
He carries a discus and a conch that he blows on the battlefield.
His body has a beautiful dark color like a kaavi flower.
The lotus-eyed god stays in my eyes.

2887 கமலக் கண்ணன் என் கண்ணின் உள்ளான்
       காண்பன் அவன் கண்களாலே
அமலங்கள் ஆக விழிக்கும்
       ஐம்புலனும் அவன் மூர்த்தி
கமலத்து அயன் நம்பி தன்னைக்
       கண்ணுதலானொடும் தோற்றி
அமலத் தெய்வத்தொடு உலகம்
       ஆக்கி என் நெற்றி உளானே (9)
2887. The lotus-eyed god stays in my eyes
and I see everything through his eyes.
He controls the five senses that trouble me.
He created Shiva with an eye in his forehead,
Brahma who stays on a lotus,
and all the other faultless gods and the world.
That god stays on my forehead.


2888 நெற்றியுள் நின்று என்னை ஆளும்
       நிரை மலர்ப் பாதங்கள் சூடிக்
கற்றைத் துழாய் முடிக் கோலக்
       கண்ண பிரானைத் தொழுவார்
ஒற்றைப் பிறை அணிந்தானும்
       நான்முகனும் இந்திரனும்
மற்றை அமரரும் எல்லாம்
       வந்து எனது உச்சியுளானே (10)
2888. He is adorned with a thulasi garland.
He stays on the top of my forehead and rules me.
Shiva who has the crescent moon on his jata,
Nanmuhan, Indra and all the other gods
come and worship the lotus feet of Kaṇṇan and bow to his feet.

2889 உச்சியுள்ளே நிற்கும் தேவ
       தேவற்குக் கண்ண பிரானுக்கு
இச்சையுள் செல்ல உணர்த்தி
       வண் குருகூர்ச் சடகோபன்
இச் சொன்ன ஆயிரத்துள்ளே
       இவையும் ஓர் பத்து எம்பிராற்கு
நிச்சலும் விண்ணப்பம் செய்ய
       நீள் கழல் சென்னி பொருமே (11)
2889. Saḍagopan of flourishing Thirukuruhur
composed a thousand pasurams
on the god of gods Kaṇṇan who stays in his mind
to show how much the poet loves him.
If devotees learn and recite these ten pasurams,
the god will keep them under his divine feet
adorned with anklets.
------------------

திருவாய் மொழி - முதல் பத்து (பத்தாம் திருமொழி, 2890-2900)
ஈஸ்வரன் காரணமின்றிச் செய்யும் உபகாரம்

2890 பொரு மா நீள் படை ஆழி சங்கத்தொடு
திரு மா நீள் கழல் ஏழ் உலகும் தொழ
ஒரு மாணிக் குறள் ஆகி நிமிர்ந்த அக்
கரு மாணிக்கம் என் கண்ணுளது ஆகுமே (1)
2890. He took the form of a dwarf,
went to Mahabali and grew up to the sky,
carrying a conch and a discus in his hands
as all the seven worlds worshiped his divine feet.
That dark jewel-like god stays in my eyes.

2891 கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில்
எண்ணிலும் வரும் என் இனி வேண்டுவம்
மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும்
விண்ணும் ஆய் விரியும் எம் பிரானையே? (2)
2891. Our father is earth, water, fire, the good wind and the sky.
He stays in my eyes.
He will come to me if I think of him
and call him with love.
What do I need more than seeing him?

2892 எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும்
தம்பிரானை தண் தாமரைக் கண்ணனை
கொம்பு அராவு நுண் நேர் இடை மார்பனை
எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே (3)
2892. Lakshmi the goddess has a waist that is as thin as a vine
and she stays on his chest.
His eyes are as beautiful as lotuses.
He is the god of me, my father, my grandfather and his father.
O ignorant mind! Worship him.

2893 நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால்
என் செய்யோம்? இனி என்ன குறைவினம்?
மைந்தனை மலராள் மணவாளனைத்
துஞ்சும்போதும் விடாது தொடர்கண்டாய் (4)
2893. O heart, you are good, you are good.
What can we not achieve if we receive him in our heart?
He is our lord, the beloved of Lakshmi who stays on a lotus.
See, even in sleep you think unceasingly of him, the young god.

2894 கண்டாயே நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்று ஓர்
எண் தானும் இன்றியே வந்து இயலுமாறு
உண்டானை உலகு ஏழும் ஓர் மூவடி
கொண்டானைக் கண்டுகொண்டனை நீயுமே (5)
2894. O heart,
our god swallowed all the worlds
and measured the earth and the sky in two steps.
He took the form of a boar and split open the earth.
You have found him.
You will get whatever you want
without even having to think about it.

2895 நீயும் நானும் இந் நேர்நிற்கில் மேல் மற்றோர்
நோயும் சார்கொடான் நெஞ்சமே சொன்னேன்
தாயும் தந்தையும் ஆய் இவ் உலகினில்
வாயும் ஈசன் மணிவண்ணன் எந்தையே (6)
2895. O heart, the sapphire-colored god
is the father and mother of this world—that I tell you.
O heart, if you and I agree and worship the god
he will save us from all sickness.

2896 எந்தையே என்றும் எம் பெருமான் என்றும்
சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன்
எந்தை எம் பெருமான் என்று வானவர்
சிந்தையுள் வைத்துச் சொல்லும் செல்வனையே (7)
2896. The gods in the sky keep you, the precious one,
in their minds and praise you saying,
"You are our father, you are our dear god."
I am a worthless person but I praise you, saying,
"O my father, you are my dear god.
I will keep you in my heart."

2897 செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும்
மல்கும் கண் பனி நாடுவன் மாயமே
அல்லும் நன் பகலும் இடைவீடு இன்றி
நல்கி என்னை விடான் நம்பி நம்பியே (8)
2897. As soon as I hear the words, "Precious Naraṇan,"
my eyes fill with tears.
I search for him. Is he an illusion?
Nambi trusts me and loves me
and he will not leave me night or day.
He is always with me.

2898 நம்பியை தென் குறுங்குடி நின்ற அச்
செம்பொனே திகழும் திரு மூர்த்தியை
உம்பர் வானவர் ஆதி அம் சோதியை
எம் பிரானை என் சொல்லி மறப்பனோ? (9)
2898. Nambi, the divine god of southern Thirukurunguḍi,
shines like pure gold.
He is the ancient god
and a bright light for the gods in the sky.
How could I describe my dear god or forget him?

2899 மறப்பும் ஞானமும் நான் ஒன்று உணர்ந்திலன்
மறக்கும் என்று செந்தாமரைக் கண்ணொடு
மறப்பு அற என் உள்ளே மன்னினான் தன்னை
மறப்பனோ இனி யான் என் மணியையே? (10)
2899. I know nothing of forgetting or remembering.
The lovely lotus-eyed god does not want me to forget him.
He has entered my heart and stays there.
He shines like a diamond—
how could I ever forget him?

2900 மணியை வானவர் கண்ணனை தன்னது ஓர்
அணியை தென் குருகூர்ச் சடகோபன் சொல்
பணிசெய் ஆயிரத்துள் இவை பத்துடன்
தணிவிலர் கற்பரேல் கல்வி வாயுமே (11)
2900. Saḍagopan of southern Thirukuruhur
composed a thousand pasurams on the god
who is precious as a jewel,
the dear Kaṇṇan, god of the gods in the sky.
If devotees learn and recite these ten pasurams
they will become good scholars.
--------------

நம்மாழ்வார் திருவாய் மொழி -இரண்டாம் பத்து (2901-3012)
Divyaprabhandam - Thiruvaymozhi : Iraṇḍaam Pathu 2901 - 3012

திருவாய் மொழி - இரண்டாம் பத்து ( முதல் திருமொழி, 2901-2911)
பிரிவாற்றாமைக்கு வருந்தல்

2901 வாயும் திரை உகளும் கானல் மட நாராய்
ஆயும் அமர் உலகும் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
நோயும் பயலைமையும் மீது ஊர எம்மேபோல்
நீயும் திருமாலால் நெஞ்சம் கோள் பட்டாயே? (1)
2901. "O beautiful naarai bird! you live on the sea-shore
where abundant waves dash on the banks of the ocean.
Even if my mother and all the gods in the sky sleep you do not sleep.
Does your heart suffer like me with love sickness
and your body become pale?
Does Thirumaal give this suffering to you as he does to me?

2902 கோள் பட்ட சிந்தையையாய்க் கூர்வாய அன்றிலே
சேண் பட்ட யாமங்கள் சேராது இரங்குதியால்
ஆள் பட்ட எம்மேபோல் நீயும் அரவு அணையான்
தாள் பட்ட தண் துழாய்த் தாமம் காமுற்றாயே? (2)
2902. O sharp-beaked andril bird,
do you plunge into deep thought like me?
Do you not sleep many nights just like me?
Did you fall in love with the one who sleeps on the snake bed?
Do you also love the long cool thulasi garland
that decorates his chest and that touches his feet.

2903 காமுற்ற கையறவோடு எல்லே இராப்பகல்
நீ முற்றக் கண்துயிலாய் நெஞ்சு உருகி ஏங்குதியால்
தீ முற்றத் தென் இலங்கை ஊட்டினான் தாள் நயந்த
யாம் உற்றது உற்றாயோ? வாழி கனை கடலே (3)
2903. O roaring ocean,
you do not sleep all night and day,
melting in your heart and pining with love for him.
Do you have the pain that I have
because I long to worship the feet of him
who burnt Lanka in the south?

2904 கடலும் மலையும் விசும்பும் துழாய் எம்போல்
சுடர் கொள் இராப்பகல் துஞ்சாயால் தண் வாடாய்
அடல் கொள் படை ஆழி அம்மானைக் காண்பான் நீ
உடலம் நோய் உற்றாயோ ஊழிதோறு ஊழியே? (4)
2904. O cool wind, you blow,
touching the ocean, mountain and the sky
and like me you never sleep during the bright day or night.
Are you sick because you want to see him
who carries the discus that conquers his enemies?
Are you doing this eon after eon?

2905 ஊழிதோறு ஊழி உலகுக்கு நீர்கொண்டு
தோழியரும் யாமும் போல் நீராய் நெகிழ்கின்ற
வாழிய வானமே நீயும் மதுசூதன்
பாழிமையில் பட்டு அவன்கண் பாசத்தால் நைவாயே? (5)
2905. O clouds, may you prosper!
You take the water from the ocean, rise up,
become cold and pour rain.
Will you do this until the end of the world?
Do you suffer like me who fell in love with Madhusudan?

2906 நைவாய எம்மேபோல் நாள் மதியே நீ இந் நாள்
மை வான் இருள் அகற்றாய் மாழாந்து தேம்புதியால்
ஐ வாய் அரவு அணைமேல் ஆழிப் பெருமானார்
மெய் வாசகம் கேட்டு உன் மெய்ந்நீர்மை தோற்றாயே? (6)
2906. O beautiful moon!
He carries a discus and sleeps on five-headed Adishesha.
Today, you do not remove the deep darkness.
You aren’t bright and don’t give light.
Do you suffer, your brightness lost, like me
because you trusted the false words of the lord?

2907 தோற்றோம் மட நெஞ்சம் எம் பெருமான் நாரணற்கு எம்
ஆற்றாமை சொல்லி அழுவோமை நீ நடுவே
வேற்றோர் வகையில் கொடிதாய் எனை ஊழி
மாற்றாண்மை நிற்றியோ? வாழி கனை இருளே (7)
2907. We have lost our hearts in love for our god Naraṇan.
We worry because we are weak and cry.
O deep darkness! May you prosper.
You make us suffer by making the world dark.
Are you going to do this until the end of the world?
Won't you change and be good to us?

2908 இருளின் திணி வண்ணம் மா நீர்க் கழியே போய்
மருளுற்று இராப்பகல் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
உருளும் சகடம் உதைத்த பெருமானார்
அருளின் பெரு நசையால் ஆழாந்து நொந்தாயே? (8)
2908. O salt backwater!
You are dark like the deep darkness.
Even when everyone sleeps at night, you do not sleep.
He kicked Sakatasuran when he came in the form of a cart.
Do you suffer like me
because you hope that the heroic one
will give his grace to you?

2909 நொந்து ஆராக் காதல் நோய் மெல் ஆவி உள் உலர்த்த
நந்தா விளக்கமே நீயும் அளியத்தாய்
செந்தாமரைத் தடங்கண் செங்கனி வாய் எம் பெருமான்
அம் தாமம் தண் துழாய் ஆசையால் வேவாயே? (9)
2909. O light that does not diminish,
do you suffer because love sickness afflicts you
and hurts your soft soul?
You are pitiful!
Are you burning because of the desire
that you have for the dear god
decorated with cool thulasi garlands?
His red mouth is as sweet as a fruit
and his large lotus eyes are beautiful.

2910 வேவு ஆரா வேட்கை நோய் மெல் ஆவி உள் உலர்த்த
ஓவாது இராப்பகல் உன்பாலே வீழ்த்து ஒழிந்தாய்
மா வாய் பிளந்து மருதிடை போய் மண் அளந்த
மூவா முதல்வா இனி எம்மைச் சோரேலே (10)
2910. You are an everlasting ancient god,
you split open the mouth of the Asuran
who came in the form of a horse,
destroyed the Asurans who came as Marudam trees
and measured the world and the sky at the sacrifice of Mahabali.
You made me fall in love with you.
I suffer night and day unceasingly
and my body and my life are withering away.
Do not make me suffer any more from my love.

2911 சோராத எப் பொருட்கும் ஆதியாம் சோதிக்கே
ஆராத காதல் குருகூர்ச் சடகோபன்
ஓராயிரம் சொன்ன அவற்றுள் இவை பத்தும்
சோரார் விடார் கண்டீர் வைகுந்தம் திண்ணனவே (11)
2911. Sadagopan of Thirukuruhur
has unlimited love for the ancient god.
He composed a thousand pasurams on the god,
the bright light and origin of all things.
If devotees learn these ten pasurams and do not forget them
they will surely reach the heaven of Vaikuṇṭam.
----------

திருவாய் மொழி - இரண்டாம் பத்து (இரண்டாம் திருமொழி, 2912-2922)
திருமால் பரத்துவத்தை அவதாரத்திலே எடுத்துக்காட்டல்
2912 திண்ணன் வீடு முதல் முழுதும் ஆய்
எண்ணின் மீதியன் எம் பெருமான்
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம்
கண்ணன் கண் அல்லது இல்லை ஓர் கண்ணே (1)
2912. He is moksha. He is the ancient god.
His good qualities are limitless.
The highest god swallowed earth and the sky.
He is the protector of the world.
We have no other eyes but his to see.

2913 ஏ பாவம் பரமே ஏழ் உலகும்
ஈ பாவம் செய்து அருளால் அளிப்பார் ஆர்
மா பாவம் விட அரற்குப் பிச்சை பெய்
கோபால கோளரிஏறு அன்றியே? (2)
2913. He is the highest.
Gopalan took the form of a man-lion.
He gave alms to Shiva to remove his curse.
If he does not help us, who will give his grace
to save the people of the world and the gods
from their sins?

2914 ஏறனை பூவனை பூமகள் தன்னை
வேறுஇன்றி விண் தொழத் தன்னுள் வைத்து
மேல் தன்னை மீதிட நிமிர்ந்து மண் கொண்ட
மால் தனின் மிக்கும் ஓர் தேவும் உளதே? (3)
2914. Shiva rides on a bull,
Brahma was born on a lotus
and Lakshmi stays on a lotus
and the divine god keeps them all on his body.
He grew to the sky and measured the world.
Is there any higher god than he?

2915 தேவும் எப் பொருளும் படைக்கப்
பூவில் நான்முகனைப் படைத்த
தேவன் எம் பெருமானுக்கு அல்லால்
பூவும் பூசனையும் தகுமே? (4)
2915. He created Brahma to create all the gods
and all the creatures in the world.
Should anyone adorn other gods with flowers
and worship them?
Is that something that is right to do?

2916 தகும் சீர்த் தன் தனி முதலினுள்ளே
மிகும் தேவும் எப் பொருளும் படைக்கத்
தகும் கோலத் தாமரைக் கண்ணன் எம்மான்
மிகும் சோதி மேல் அறிவார் எவரே? (5)
2916. He is the unique famous god and the ancient one.
His eyes are beautiful like lotuses and his form is majestic.
He shines like a bright light.
Does anyone know any other
who is higher than our dear god?

2917 எவரும் யாவையும் எல்லாப் பொருளும்
கவர்வு இன்றித் தன்னுள் ஒடுங்க நின்ற
பவர் கொள் ஞான வெள்ளச் சுடர் மூர்த்தி
அவர் எம் ஆழி அம் பள்ளியாரே (6)
2917. He swallowed all people and all things
and keeps them in his stomach.
He is the shining flood of knowledge
and his rule spreads over all the world.
He carries a discus and sleeps beautifully on the ocean.

2918 பள்ளி ஆல் இலை ஏழ் உலகும் கொள்ளும்
வள்ளல் வல் வயிற்றுப் பெருமான்
உள் உள் ஆர் அறிவார் அவன் தன்
கள்ள மாய மனக்கருத்தே? (7)
2918. He is generous and the almighty.
He swallowed all the seven worlds
and sleeps on a banyan leaf.
Who knows what is within him?
Who knows the thief Maayan’s thoughts?

2919 கருத்தில் தேவும் எல்லாப் பொருளும்
வருத்தித்த மாயப் பிரான் அன்றி யாரே
திருத்தித் திண் நிலை மூவுலகும் தம்முள்
இருத்திக் காக்கும் இயல்வினரே? (8)
2919. The Maayan created all the gods
and everything in the world.
He creates the three worlds,
keeps them inside himself and protects them.
Is there anyone like him who could do that?

2920 காக்கும் இயல்வினன் கண்ண பெருமான்
சேர்க்கை செய்து தன் உந்தியுள்ளே
வாய்த்த திசைமுகன் இந்திரன் வானவர்
ஆக்கினான் தெய்வ உலகுகளே (9)
2920. Kaṇṇapiran protects the world.
When the time came for the world to be destroyed
he swallowed all creatures into his stomach.
He created Naanmuhan who has faces in all directions,
Indra and the other gods and all the divine worlds in the sky.

2921 கள்வா எம்மையும் ஏழ் உலகும் நின்
உள்ளே தோற்றிய இறைவ என்று br> வெள் ஏறன் நான்முகன் இந்திரன் வானவர்
புள் ஊர்தி கழல் பணிந்து ஏத்துவரே (10)
2921. Shiva who rides on a white bull,
Nanmuhan, Indra and the other gods in the sky
bow to him who rides an eagle,
worship his feet ornamented with anklets
and praise him saying,
"You are a thief. O lord, you created us
and all the seven worlds are from you."

2922 ஏத்த ஏழ் உலகும் கொண்ட கோலக்
கூத்தனைக் குருகூர்ச் சடகோபன் சொல்
வாய்த்த ஆயிரத்துள் இவை பத்துடன்
ஏத்த வல்லவர்க்கு இல்லை ஓர் ஊனமே (11)
2922. Sadagopan of Thirukuruhur
composed a thousand pasurams on the beautiful dancer Kannan
who created the seven worlds.
If devotees learn these ten pasurams and recite them
they will not have any trouble in their life.
----------

இரண்டாம் பத்து- மூன்றாம் திருமொழி, (2923-2933)
அடியார் குழாத்தைக் கூடும் ஆசையுற்று உரைத்தல்

2923 ஊனில் வாழ் உயிரே நல்லை போ உன்னைப் பெற்று
வான் உளார் பெருமான் மதுசூதன் என் அம்மான்
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்தொழிந்தோம்
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே (1)
2923. O soul that stays in my body, you are good.
I and you joined Madhusudanan.
He is the god of the gods in the sky.
We will be like honey, milk, butter
and sugarcane juice all mixed together.

2924 ஒத்தார் மிக்காரை இலையாய மா மாய
ஒத்தாய் எப் பொருட்கும் உயிர் ஆய் என்னைப் பெற்ற
அத் தாய் ஆய் தந்தை ஆய் அறியாதன அறிவித்து
அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே (2)
2924. O great Maaya!,
There is no one equal to you or higher than you.
You give your grace to all lives good and bad.
You are my mother and you gave birth to me.
You are my father and you taught me everything.
O my lord, you made me understand all things that I do not understand.
I, your slave, cannot describe all that you did for me.

2925 அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து
அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால்
அறியாமைக் குறள் ஆய் நிலம் மாவலி மூவடி என்று
அறியாமை வஞ்சித்தாய் எனது ஆவியுள் கலந்தே (3)
2925. You made me your slave and gave me your love
even when I was an innocent child.
You kept me, your slave, in this illusory world.
You went to Mahabali as an innocent dwarf,
cheated him and measured the world with three footsteps.
You entered my heart and made me love you.

2926 எனது ஆவியுள் கலந்த பெரு நல் உதவிக் கைம்மாறு
எனது ஆவி தந்தொழிந்தேன் இனி மீள்வது என்பது உண்டே?
எனது ஆவி ஆவியும் நீ பொழில் ஏழும் உண்ட எந்தாய்
எனது ஆவி யார்? யான் ஆர்? தந்த நீ கொண்டாக்கினையே (4)
2926. You entered my heart
and in return I gave my life to you.
It is not possible for me to leave you.
You are my father and you swallowed the seven worlds.
What is my life? What am I?
You gave me life and you took it as your own.

2927 இனி யார் ஞானங்களால் எடுக்கல் எழாத எந்தாய்
கனிவார் வீட்டு இன்பமே என் கடல் படா அமுதே
தனியேன் வாழ் முதலே பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய்
நுனி ஆர் கோட்டில் வைத்தாய் நுன பாதம் சேர்ந்தேனே (5)
2927. You are my father.
Even the wise ones do not know who you are.
You give the bliss of moksha to those who love you.
You are nectar that did not come from the ocean.
You are the cause of life for me so I am not alone.
You took the form of a boar
and lifted up all the seven worlds
holding them on your tusk.
I came and joined your feet.

2928 சேர்ந்தார் தீவினைகட்கு அரு நஞ்சை திண் மதியை
தீர்ந்தார் தம் மனத்துப் பிரியாது அவர் உயிரைச்
சோர்ந்தே புகல் கொடாச் சுடரை அரக்கியை மூக்கு
ஈர்ந்தாயை அடியேன் அடைந்தேன் முதல் முன்னமே (6)
2928. You, the bright moon
remove the bad karma of your devotees
when they approach you.
You stay in the hearts of the devotees
who keep you in their minds and do not leave you.
You are a light and give them protection.
You cut off the nose of the Raksasi Surpanaha.
I received you into my life as soon as I was born.

2929 முன் நல் யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் சுவையே
பல் நலார் பயிலும் பரனே பவித்திரனே
கன்னலே அமுதே கார் முகிலே என் கண்ணா
நின் அலால் இலேன்காண் என்னை நீ குறிக்கொள்ளே (7)
2929. You are like the sweet sound of a fine, well-used yazh.
You are the highest lord, praised by the gods in heaven.
You are pure.
You are sweet as sugarcane. You are my nectar.
You have the color of a dark cloud.
You are my Kaṇṇan.
I do not have anyone except you as my refuge. Take care of me.

2930 குறிக்கொள் ஞானங்களால் எனை ஊழி செய் தவமும்
கிறிக்கொண்டு இப் பிறப்பே சில நாளில் எய்தினன் யான்
உறிக்கொண்ட வெண்ணெய் பால் ஒளித்து உண்ணும் அம்மான் பின்
நெறிக்கொண்ட நெஞ்சனாய்ப் பிறவித் துயர் கடிந்தே (8)
2930. I was born in this world because of my devotion
and the tapas that I practiced for many ages.
I came to this world that gives only pleasure
and stayed here for a time.
As a child the lord stole butter from the uri, hid it and ate it.
I have worshiped my father in my mind and will not be born again.
I have done much yoga and tapas
and have achieved moksha in this birth.

2931 கடி வார் தண் அம் துழாய்க் கண்ணன் விண்ணவர் பெருமான்
படி வானம் இறந்த பரமன் பவித்திரன் சீர்
செடி ஆர் நோய்கள் கெட படிந்து குடைந்து ஆடி
அடியேன் வாய்மடுத்துப் பருகிக் களித்தேனே (9)
2931. Kaṇṇan, the god of gods,
is adorned with a fragrant cool thulasi garland.
He is matchless and pure.
My terrible sicknesses and troubles are all gone.
I, his slave, worshiped him and danced praising him.
My troubles are gone as I blissfully praise him.

2932 களிப்பும் கவர்வும் அற்று பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று
ஒளிக்கொண்ட சோதியுமாய் உடன்கூடுவது என்று கொலோ
துளிக்கின்ற வான் இந் நிலம் சுடர் ஆழி சங்கு ஏந்தி
அளிக்கின்ற மாயப் பிரான் அடியார்கள் குழாங்களையே? (10)
2932. When will the day come when I join him,
become a bright light that is one with him,
and am removed from the pleasures of the world
and from sickness, old age, birth and death?
The Maayapiran carries a shining discus and a conch
and gives his grace to his devotees
and makes this world flourish.
When will the day come when I join the god?

2933 குழாம் கொள் பேர் அரக்கன் குலம் வீய முனிந்தவனை
குழாம் கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்து உரைத்த
குழாம் கொள் ஆயிரத்துள் இவை பத்தும் உடன் பாடி
குழாங்களாய் அடியீர் உடன்கூடிநின்று ஆடுமினே (11)
2933. Sadagopan of southern Thirukuruhur,
which is filled with devotees,
composed a thousand pasurams
on the magical one who grew angry with Ravaṇan
and destroyed his Raksasha clan.
O devotees, learn these ten pasurams,
sing them and dance with the group of devotees
and you will be happy.
--------------

திருவாய் மொழி - இரண்டாம் பத்து ( நான்காம் திருமொழி, 2934-2944)
தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறுதல்

2934 ஆடி ஆடி அகம் கரைந்து இசை
பாடிப் பாடிக் கண்ணீர் மல்கி எங்கும்
நாடி நாடி நரசிங்கா என்று
வாடி வாடும் இவ் வாள் நுதலே (1)
2934. Her mother says,
"My daughter who has a bright forehead
dances and dances singing his praise.
Her eyes are filled with tears.
She searches and searches for the highest one,
saying, ‘Narasinga!’
She withers away with love for him."

2935 வாள் நுதல் இம் மடவரல் உம்மைக்
காணும் ஆசையுள் நைகின்றாள் விறல்
வாணன் ஆயிரம் தோள் துணித்தீர் உம்மைக்
காண நீர் இரக்கம் இலீரே (2)
2935. Her mother says,
"My daughter has a bright forehead and lovely nature
and suffers wanting to see you.
You cut off the thousand arms of the strong Asuran Vaanan
and saved the world.
She wants to see you,
but you are not compassionate
and do not show yourself to her."

2936 இரக்க மனத்தோடு எரி அணை
அரக்கும் மெழுகும் ஒக்கும் இவள்
இரக்கம் எழீர் இதற்கு என் செய்கேன்
அரக்கன் இலங்கை செற்றீருக்கே? (3)
2936. Her mother says,
"Her love for you makes her suffer
and she melts like arakku and wax in a fire.
You do not have any compassion.
What should I do?
You burned Lanka, the country of the Rakshasa Ravana."

2937 இலங்கை செற்றவனே என்னும் பின்னும்
வலம் கொள் புள் உயர்த்தாய் என்னும் உள்ளம்
மலங்க வெவ் உயிர்க்கும் கண்ணீர் மிகக்
கலங்கிக் கைதொழும் நின்று இவளே (4)
2937. Her mother says,
"She says ‘You destroyed Lanka.
You raised your eagle banner in victory.’
She sheds many tears.
She is confused in her mind.
Her sighs are like burning fire.
She folds her hands and worships you."

2938 இவள் இராப்பகல் வாய்வெரீ இத் தன
குவளை ஒண் கண்ண நீர் கொண்டாள் வண்டு
திவளும் தண் அம் துழாய் கொடீர் என
தவள வண்ணர் தகவுகளே? (5)
2938. Her mother says,
"She thinks of you day and night
and her eyes, lovely as water lilies, are filled with tears.
She says, ‘Won't you give me
your cool beautiful thulasi garland that swarms with bees?’
You have the color of pearls.
How can I believe your devotees
when they say you are kind?"

2939 தகவு உடையவனே என்னும் பின்னும்
மிக விரும்பும் பிரான் என்னும் எனது
அக உயிர்க்கு அமுதே என்னும் உள்ளம்
உக உருகிநின்று உள் உளே (6)
2939. Her mother says,
"She says, ‘You are kind.
I love you more and more.
You are the nectar of my life.
You are in my heart!’
and she melts and melts for you."

2940 உள் உள் ஆவி உலர்ந்து உலர்ந்து என
வள்ளலே கண்ணனே என்னும் பின்னும்
வெள்ள நீர்க் கிடந்தாய் என்னும் என
கள்வி தான் பட்ட வஞ்சனையே (7)
2940. Her mother says,
"My daughter is hurt because you cheated her
and she says, ‘You are generous, you are my Kaṇṇan
and you sleep on the milky ocean.’
She hides her love from me
and does not tell me how you cheated her."

2941 வஞ்சனே என்னும் கைதொழும் தன
நெஞ்சம் வேவ நெடிது உயிர்க்கும் விறல்
கஞ்சனை வஞ்சனை செய்தீர் உம்மைத்
தஞ்சம் என்று இவள் பட்டனவே (8)
2941. Her mother says,
"She says, ‘You cheated me.’
She worships him.
Her heart suffers and she sighs.
She says, ‘You cheated Kamsan and killed him.’
She has come to you for refuge.
It is wrong to cheat her."

2942 பட்ட போது எழு போது அறியாள் விரை
மட்டு அலர் தண் துழாய் என்னும் சுடர்
வட்ட வாய் நுதி நேமியீர் நுமது
இட்டம் என்கொல் இவ் ஏழைக்கே? (9)
2942. Her mother says,
"She doesn’t know when the sun rises or when it sets.
She says, ‘I long for his cool fragrant thulasi garland
with its flowers that drip honey.’
You have a sharp round bright discus.
What can you do for my poor daughter?"

2943 ஏழை பேதை இராப்பகல் தன
கேழ் இல் ஒண் கண்ண நீர் கொண்டாள் கிளர்
வாழ்வை வேவ இலங்கை செற்றீர் இவள்
மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மினே (10)
2943. Her mother says,
"She is a poor girl. She is innocent.
She doesn’t know whether it is night or day.
Her faultless lovely eyes are filled with tears.
You burned Lanka and destroyed all the creatures there.
She has innocent eyes like a doe’s.
Do not make this girl suffer."

2944 வாட்டம் இல் புகழ் வாமனனை இசை
கூட்டி வண் சடகோபன் சொல் அமை
பாட்டு ஓர் ஆயிரத்து இப் பத்தால் அடி
சூட்டலாகும் அம் தாமமே (11)
2944. Saḍagopan composed a thousand pasurams
praising the faultless famous Vaamanan
who made a girl fall in love with him,
describing how her mother worries for her.
If devotees learn these ten pasurams with music
they will join the feet of the god decorated with garlands.
----------

திருவாய் மொழி - இரண்டாம் பத்து ( ஐந்தாம் திருமொழி, 2945-2955)
இறைவன் ஆபரணாதிகளுடன் வந்து கலக்க ஆழ்வார் மகிழ்தல்

2945 அம் தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் அம்மானுக்கு
அம் தாமம் வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரம் உள
செந்தாமரைத்தடம் கண் செங்கனி வாய் செங்கமலம்
செந்தாமரை அடிகள் செம்பொன் திரு உடம்பே (1)
2945. He is adorned with garlands, ornaments and a sacred thread.
He carries a conch and a discus.
His large eyes are beautiful like lotuses.
His mouth is sweet as a fruit and red as a lotus .
His feet are as lovely as lotuses.
His divine body is like pure gold.
He came here and entered my heart and gave his love to me.

2946 திரு உடம்பு வான் சுடர் செந்தாமரை கண் கை கமலம்
திரு இடமே மார்வம் அயன் இடமே கொப்பூழ்
ஒருவு இடமும் எந்தை பெருமாற்கு அரனே ஓ
ஒருவு இடம் ஒன்று இன்றி என்னுள் கலந்தானுக்கே (2)
2946. His divine body shines like the sun in the sky.
His lovely eyes and hands are like beautiful lotuses.
The goddess Lakshmi stays on his chest,
Brahma stays on his navel
and Shiva stays everywhere else on his body.
I do not have a place on his body
but he has entered my heart.

2947 என்னுள் கலந்தவன் செங்கனி வாய் செங்கமலம்
மின்னும் சுடர் மலைக்குக் கண் பாதம் கை கமலம்
மன்னும் முழு ஏழ் உலகும் வயிற்றின் உள
தன்னுள் கலவாதது எப் பொருளும் தான் இலையே (3)
2947. He entered my heart.
His mouth is as sweet as a fruit and beautiful as a red lotus.
He shines like a bright hill.
His eyes, feet and hands are like beautiful lotuses.
All the everlasting seven worlds are in his stomach.
There is nothing anywhere that is not in his body.

2948 எப் பொருளும் தான் ஆய் மரகதக் குன்றம் ஒக்கும்
அப்பொழுதைத் தாமரைப்பூக் கண் பாதம் கை கமலம்
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழிதொறும்
அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆரா அமுதமே (4)
2948. He is in all things.
He is like an emerald hill.
His eyes, hands and feet are like fresh lotuses.
He is a sweet nectar that will never become bitter
on any day, any month, any year
or any time until the end of the world.

2949 ஆரா அமுதமாய் அல் ஆவியுள் கலந்த
கார் ஆர் கருமுகில் போல் என் அம்மான் கண்ணனுக்கு
நேரா வாய் செம்பவளம் கண் பாதம் கை கமலம்
பேர் ஆரம் நீள் முடி நாண் பின்னும் இழை பலவே (5)
2949. He is the nectar that will always be sweet.
He is a dark cloud that entered my heart.
He is my dear Kaṇṇan.
Even red coral cannot compete with his lovely red mouth.
His eyes, feet and hands are like lotuses.
He wears a long garland, a tall crown,
an oṭṭiyaaṇam for his waist and many other ornaments.

2950 பலபலவே ஆபரணம் பேரும் பலபலவே
பலபலவே சோதி வடிவு பண்பு எண்ணில்
பலபல கண்டு உண்டு கேட்டு உற்று மோந்து இன்பம்
பலபலவே ஞானமும் பாம்பு அணை மேலாற்கேயோ (6)
2950. He is adorned with many ornaments.
He has many, many names and many bright forms.
His qualities are too many to conceive.
He is the joy of seeing, tasting, hearing, touching and smelling.
He has great knowledge and he sleeps on the snake bed.

2951 பாம்பு அணைமேல் பாற்கடலுள் பள்ளி அமர்ந்ததுவும்
காம்பு அணை தோள் பின்னைக்கு ஆய் ஏறு உடன் ஏழ் செற்றதுவும்
தேம் பணைய சோலை மராமரம் ஏழ் எய்ததுவும்
பூம் பிணைய தண் துழாய்ப் பொன் முடி அம் போர் ஏறே (7)
2951. He sleeps on the snake bed on the milky ocean.
He destroyed seven bulls to marry Nappinnai
whose beautiful arms are like bamboo.
He destroyed the seven mara trees
that were in groves where honey drips.
He is decorated with a cool thulasi garland
tied with flowers on his golden crown.

2952 பொன் முடி அம் போர் ஏற்றை எம்மானை நால் தடம் தோள்
தன் முடிவு ஒன்று இல்லாத தண் துழாய் மாலையனை
என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை
சொல்முடிவு காணேன் நான் சொல்லுவது என்? சொல்லீரே (8)
2952. He is strong as a bull and wears a golden crown.
He has four strong arms.
He is the omnipresent god and he wears a cool thulasi garland.
He entered my heart forgiving my faults.
I do not have words to praise him.
How could I describe him? You tell me.

2953 சொல்லீர் என் அம்மானை என் ஆவி ஆவிதனை
எல்லை இல் சீர் என் கருமாணிக்கச் சுடரை
நல்ல அமுதம் பெறற்கு அரிய வீடும் ஆய்
அல்லி மலர் விரை ஒத்து ஆண் அல்லன் பெண் அலனே (9)
2953. He is the soul inside my soul.
He is bright like a dark diamond
and he has endless fame.
He is sweet nectar.
He is moksha that is hard to attain.
He is the fragrance of alli flowers.
He is neither male nor female.

2954 ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா அலியும் அல்லன்
காணலும் ஆகான் உளன் அல்லன் இல்லை அல்லன்
பேணுங்கால் பேணும் உரு ஆகும் அல்லனும் ஆம்
கோணை பெரிது உடைத்து எம் பெம்மானைக் கூறுதலே (10)
2954. He is not a male, not a female,
and he is not an ali, who is neither.
No one can see him.
He neither is, nor is not.
When a devotee wishes to see him
he will appear in the form that the devotee wishes
or he may not be there.
To describe the dear lord is very hard.

2955 கூறுதல் ஒன்று ஆராக் குடக் கூத்த அம்மானைக்
கூறுதலே மேவிக் குருகூர்ச் சடகோபன்
கூறின அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
கூறுதல் வல்லார் உளரேல் கூடுவர் வைகுந்தமே (11)
2955 Sadagopan of Thirukuruhur
composed a thousand andaadi pasurams on the god,
our father who danced the wonderful kudakuthu dance—
no one can describe him.
If devotees learn these ten pasurams and recite them well
they will reach Vaikuṇṭam.
---------

திருவாய் மொழி - இரண்டாம் பத்து (ஆறாம் திருமொழி, 2956-2966)
ஆழ்வார் இறைவனைச் சிக்கெனப் பிடித்தல்

2956 வைகுந்தா மணிவண்ணனே என் பொல்லாத்
       திருக்குறளா என்னுள் மன்னி
வைகும் வைகல் தோறும் அமுது ஆய வான் ஏறே
       செய் குந்தா அரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து
அசுரர்க்குத் தீமைகள்
       செய் குந்தா உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கெனவே. (1)
2956. O lord of Vaikuṇṭam,
you have the color of blue sapphire.
You are a naughty divine dwarf.
You are nectar that has entered my heart and stays there always.
You are a strong bull worshiped by the gods.
You remove the troubles of your devotees.
You destroy the Asurans.
You are the god of Vaikuṇṭam.
I have caught hold of you firmly.

2957 சிக்கெனச் சிறிது ஓர் இடமும் புறப்படாத்
       தன்னுள்ளே உலகுகள்
ஒக்கவே விழுங்கிப் புகுந்தான் புகுந்ததற்பின்
       மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்குஆய் துளக்கு
அற்று அமுதம் ஆய் எங்கும்
       பக்கம் நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணனே (2)
2957. He swallowed all the worlds
leaving nothing behind
and he keeps them in his stomach.
He entered my heart.
He is a flood of knowledge.
He is a faultless bright light.
He is nectar for all and is changeless.
There is no place on this earth
that is not seen by lotus eyes of Kaṇṇan.

2958 தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை
       துழாய் விரைப்
பூ மருவு கண்ணி எம் பிரானை பொன்மலையை
       நாம் மருவி நன்கு ஏத்தி உள்ளி வணங்கி நாம்
மகிழ்ந்து ஆட நாவு அலர்
       பா மருவி நிற்கத் தந்த பான்மையே வள்ளலே (3)
2958. His eyes are beautiful like lotuses.
He is the lord of the gods and they worship him.
He, the dear one, is decorated with fragrant flower garlands.
He shines like a golden mountain.
He gave me the fortune of approaching him and worshiping him.
I dance happily thinking of him always.
He, the generous one, gave me his grace
to sing beautiful pasurams that praise him.

2959 வள்ளலே மதுசூதனா என் மரகத மலையே
       உனை நினைந்து
எள்கல் தந்த எந்தாய் உன்னை எங்ஙனம் விடுகேன்
       வெள்ளமே புரை நின் புகழ் குடைந்து ஆடிப்
பாடிக் களித்து உகந்து உகந்து
       உள்ள நோய்கள் எல்லாம் துரந்து உய்ந்து போந்திருந்தே? (4)
2959. You are Madhusudanan, the generous god.
You are my emerald hill.
You are my father and you gave me the good fortune
of thinking only of you.
How could I leave you?
I praised your fame that is like a flood,
danced and sang with joy
and all my sickness and troubles went away.

2960 உய்ந்து போந்து என் உலப்பு இலாத வெம் தீவினைகளை
       நாசம் செய்து உனது
அந்தம் இல் அடிமை அடைந்தேன் விடுவேனோ
       ஐந்து பைந்தலை ஆடு அரவு அணை மேவிப் பாற்கடல்
யோக நித்திரை
       சிந்தை செய்த எந்தாய் உன்னைச் சிந்தை செய்து செய்தே? (5)
2960. O my father,
you sleep on five-headed Adishesha,
the snake bed on the milky ocean
in yogic contemplation.
I escaped my troubles
and you destroyed all my cruel karma.
I have become your slave forever—
how could I ever want anything else?

2961 உன்னைச் சிந்தை செய்து செய்து உன் நெடு மா மொழி இசை
       பாடி ஆடி என்
முன்னைத் தீவினைகள் முழு வேர் அரிந்தனன் யான்
       உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த இரணியன் அகல்
மார்வம் கீண்ட என்
       முன்னைக் கோளரியே முடியாதது என் எனக்கே? (6)
2961. I thought and thought of you
and praised you in songs and danced.
All the bad karma of my older births is removed.
You took the form of a man-lion
and you split open the chest of Hiraṇyan
when he disgraced you.
I am your slave. There is nothing that I cannot do.

2962 முடியாதது என் எனக்கேல் இனி? முழு ஏழ் உலகும்
       உண்டான் உகந்து வந்து
அடியேன் உட்புகுந்தான் அகல்வானும் அல்லன் இனி
       செடி ஆர் நோய்கள் எல்லாம் துரந்து எமர் கீழ்
மேல் எழு பிறப்பும்
       விடியா வெம் நரகத்து என்றும் சேர்தல் மாறினரே (7)
2962. What is there that I cannot do?
He swallowed all the seven worlds.
He came and joyfully entered the heart of me, his slave,
and will not leave me.
The terrible troubles that I have will go away.
He protected me and saved me
and I will not go to cruel hell
in all my seven births.

2963 மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து அடியை அடைந்து
       உள்ளம் தேறி
ஈறு இல் இன்பத்து இரு வெள்ளம் யான் மூழ்கினன்
       பாறிப் பாறி அசுரர் தம் பல் குழாங்கள் நீறு எழ
பாய் பறவை ஒன்று
       ஏறி வீற்றிருந்தாய் உன்னை என்னுள் நீக்கேல் எந்தாய் (8)
2963. I was born for many births again and again.
I reached your feet and my heart was happy
as if it had plunged into a great flood of bliss.
O father, you ride on a flying eagle
and you fought many Asurans,
conquered them and destroyed them.
O dear god, do not go away from me.

2964 எந்தாய் தண் திருவேங்கடத்துள் நின்றாய் இலங்கை
       செற்றாய் மராமரம்
பைந்தாள் ஏழ் உருவ ஒரு வாளி கோத்த வில்லா <
       கொந்து ஆர் தண் அம் துழாயினாய் அமுதே உன்னை
என்னுள்ளே குழைத்த எம்
       மைந்தா வான் ஏறே இனி எங்குப் போகின்றதே? (9)
2964. O my father,
you stay in the rich Thiruvenkaṭam hills.
You destroyed Lanka.
You shot one arrow and destroyed all the seven maramara trees.
You are decorated with bunches of beautiful cool thulasi garlands.
You are nectar. O young one, you entered my heart.
You are a strong bull among the gods .
Where will I go now?

2965 போகின்ற காலங்கள் போய காலங்கள் போகு காலங்கள்
       தாய் தந்தை உயிர்
ஆகின்றாய் உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ?
       பாகின்ற தொல் புகழ் மூவுலகுக்கும் நாதனே
பரமா தண் வேங்கடம்
       மேகின்றாய் தண் துழாய் விரை நாறு கண்ணியனே (10)
2965. You were my father and mother in the past,
you are my father and mother now
and you will be my father and mother in the future.
I have reached you and will not leave you.
You are the lord of the three worlds
that praise your ancient fame.
O highest one, you stay in the cool Venkaṭam hills.
You are adorned with fragrant thulasi garlands.

2966 கண்ணித் தண் அம் துழாய் முடிக் கமலத் தடம் பெருங்
       கண்ணனைப் புகழ்
நண்ணி தென் குருகூர்ச் சடகோபன் மாறன் சொன்ன
       எண்ணில் சோர்வு இல் அந்தாதி ஆயிரத்துள் இவையும்
ஓர் பத்து இசையொடும்
       பண்ணில் பாட வல்லார் அவர் கேசவன் தமரே (11)
2966. Saḍagopan of famous southern Thirukuruhur
composed a thousand andadi pasurams
praising the wonderful lotus-eyed Kaṇṇan
who wears beautiful thulasi garlands on his head.
If devotees learn these ten pasurams and sing them
they will be the devotees of Kesavan.
-------------

திருவாய் மொழி - இரண்டாம் பத்து (ஏழாம் திருமொழி, 2967-2977)
பன்னிரு நாமப் பாட்டு

2967 கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழ் எழு பிறப்பும்
மா சதிர் இது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா!
ஈசன் என் கருமாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் விண்ணோர்
நாயகன் எம் பிரான் எம்மான் நாராயணனாலே (1)
2967. He is a dark diamond.
The god Kaṇṇan has a beautiful form.
He is the lord of the gods in the sky.
Whether they are rich or poor,
Kesavan gives his devotees
faultless lives for all their seven births.
Everything happens on his earth
because of our lord, our father Narayanan.

2968 நாரணன் முழு ஏழ் உலகுக்கும் நாதன் வேத மயன்
காரணம் கிரிசை கருமம் இவை முதல்வன் எந்தை
சீர் அணங்கு அமரர் பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று
வாரணத்தை மருப்பு ஒசித்த பிரான் என் மாதவனே (2)
2968. Naraṇan is the lord of the seven worlds.
He is the creator of the Vedas.
He is the cause, action and karma of the world.
He is my father. Our god Madhavan
broke the tusks of the elephant Kuvalayabeedam.
He is beautiful and all gods worship him.

2969 மாதவன் என்றதே கொண்டு என்னை இனி இப்பால் பட்டது
யாது அவங்களும் சேர்கொடேன் என்று என்னுள் புகுந்து இருந்து
தீது அவம் கெடுக்கும் அமுதம் செந்தாமரைக் கண் குன்றம்
கோது அவம் இல் என் கன்னல் கட்டி எம்மான் என் கோவிந்தனே (3)
2969. As soon as I said the word Madhavan
he came and entered my heart.
He gave me his grace
so that no trouble will come to me.
He is the nectar that destroys all evil.
The lotus-eyed lord is strong as a hill
and sweet as faultless sugar.
Govindan is my father.

2970 கோவிந்தன் குடக் கூத்தன் கோவலன் என்று என்றே குனித்துத்
தேவும் தன்னையும் பாடி ஆடத் திருத்தி என்னைக் கொண்டு என்
பாவம் தன்னையும் பாறக் கைத்து எமர் ஏழ் எழு பிறப்பும்
மேவும் தன்மையம் ஆக்கினான் வல்லன் எம்பிரான் விட்டுவே (4)
2970. He is my dear Govindan.
He dances on a pot saying, "I am Gopalan!"
He makes the gods sing and dance with him.
He accepted me and removed all my faults and my karma.
My father, the strong lord gave his grace to me
and to all my friends and relatives
and made us join him for all our seven births.

2971 விட்டு இலங்கு செஞ்சோதித் தாமரை பாதம் கைகள் கண்கள்
விட்டு இலங்கு கருஞ்சுடர் மலையே திரு உடம்பு
விட்டு இலங்கு மதியம் சீர் சங்கு சக்கரம் பரிதி
விட்டு இலங்கு முடி அம்மான் மதுசூதனன் தனக்கே (5)
2971. Our father Madhusudanan is adorned
with a shining crown that spreads light everywhere.
His eyes, feet and hands are beautiful like lotuses.
His divine body is like a dark shining mountain.
His conch is bright like the moon. and his discus shines like the sun.

2972 மதுசூதனை அன்றி மற்று இலேன் என்று எத்தாலும் கருமம் இன்றி
துதி சூழ்ந்த பாடல்கள் பாடி ஆட நின்று ஊழி ஊழிதொறும்
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய
விதி சூழ்ந்ததால் எனக்கேல் அம்மான் திரிவிக்கிரமனையே (6)
2972. I do not have anyone as my refuge except Madhusudanan.
I do not do anything except to praise the lord,
sing songs and dance for eon after eon.
He comes before me in all my births
and gives me his grace and through my good fate.
I have joined my father Thirivikraman.

2973 திரிவிக்கிரமன் செந்தாமரைக் கண் எம்மான் என் செங்கனி வாய்
உருவில் பொலிந்த வெள்ளைப் பளிங்கு நிறத்தனன் என்று என்று உள்ளி
பரவிப் பணிந்து பல் ஊழி ஊழி நின் பாத பங்கயமே
மருவித் தொழும் மனமே தந்தாய் வல்லைகாண் என் வாமனனே (7)
2973. Praising you, I say, "You are Thirivikraman, my father.
You have beautiful lotus eyes, a red mouth
sweet as a fruit and teeth white as marble."
I worship your lotus feet in all eons.
You granted me a mind that worships you always.
You are a dwarf and you are strong.

2974 வாமனன் என் மரகத வண்ணன் தாமரைக் கண்ணினன்
காமனைப் பயந்தாய் என்று என்று உன் கழல் பாடியே பணிந்து
தூ மனத்தனனாய்ப் பிறவித் துழதி நீங்க என்னைத்
தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன்? என் சிரீதரனே (8)
2974. I praise your feet and worship you saying,
"You are a dwarf.
You have the color of emerald.
Your eyes are beautiful as lotuses.
You are the father of Kama."
You gave me a pure mind,
removed the troubles of birth
and destroyed the evil thoughts in my mind.
O Sridhara! What can I give you in return?

2975 சிரீதரன் செய்ய தாமரைக் கண்ணன் என்று என்று இராப்பகல் வாய்
வெரீஇ அலமந்து கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து
மரீஇய தீவினை மாள இன்பம் வளர வைகல் வைகல்
இரீஇ உன்னை என்னுள் வைத்தனை என் இருடீகேசனே (9)
2975. I praised you saying,
"You, Sridharan, have beautiful lotus eyes."
I was anxious and frightened day and night.
My eyes were filled with water,
I sighed and sighed,
and you entered my heart
taking away my bad karma.
O my Rishikesa! every day I will keep you in my mind
and my joy will increase more and more.

2976 இருடீகேசன் எம் பிரான் இலங்கை அரக்கர் குலம்
முருடு தீர்த்த பிரான் எம்மான் அமரர் பெம்மான் என்று என்று
தெருடியாகில் நெஞ்சே வணங்கு திண்ணம் அறி அறிந்து
மருடியேலும் விடேல் கண்டாய் நம்பி பற்பநாபனையே (10)
2976. He is my dear Rishikesan.
He destroyed the Rakshasa clan in Lanka.
He is the lord of the gods in the sky.
O heart, bow to him
and know surely that he is the almighty.
Even if you are confused
keep Padmanabhan firmly in your heart.

2977 பற்பநாபன் உயர்வு அற உயரும் பெரும் திறலோன்
எற்பரன் என்னை ஆக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த
கற்பகம் என் அமுதம் கார் முகில் போலும் வேங்கட நல்
வெற்பன் விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே (11)

2977. The lord Padmanabhan has more strength and greatness
than all the gods and the creatures of the world.
He is my highest god.
He is as generous as the Karpaga tree.
He took me and gave himself to me.
He is my nectar.
He has the color of a dark cloud.
Our majestic god stays in the Thiruvenkatam hills.
Our father Damodharan is the lord of the gods in the sky.

2978 தாமோதரனை தனி முதல்வனை ஞாலம் உண்டவனை
ஆமோ தரம் அறிய ஒருவர்க்கு? என்றே தொழும் அவர்கள்
தாமோதரன் உரு ஆகிய சிவற்கும் திசைமுகற்கும்
ஆமோ தரம் அறிய எம்மானை என் ஆழி வண்ணனையே? (12)
2978. His devotees worship him saying,
"He is our ancient lord.
He swallowed the earth.
Is it possible for someone to know Damodharan, our lord?
Even Shiva and Nanmuhan who has heads on all directions
were not able to reach the feet or head of the ocean-colored lord."

2979 வண்ண மா மணிச் சோதியை அமரர் தலைமகனை
கண்ணனை நெடுமாலைத் தென் குருகூர்ச் சடகோபன்
பண்ணிய தமிழ் மாலை ஆயிரத்துள் இவை பன்னிரண்டும்
பண்ணில் பன்னிரு நாமப் பாட்டு அண்ணல் தாள் அணைவிக்குமே (13)
2979. Sadagopan of southern Thirukuruhur
composed a garland of a thousand Tamil pasurams
on Kaṇṇan, the precious stone and a bright light,
Nedumaal, the lord of the gods in the sky.
If devotees learn and sing these twelve pasurams
they will reach the feet of the highest god.
---------

திருவாய் மொழி - இரண்டாம் பத்து (எட்டாம் திருமொழி, 2980-2990)
எம்பெருமானது மோக்ஷம் அளிக்கும் தன்மை

2980 அணைவது அரவு அணைமேல் பூம்பாவை ஆகம்
புணர்வது இருவர் அவர் முதலும் தானே
இணைவன் ஆம் எப் பொருட்கும் வீடு முதல் ஆம்
புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே (1)
2980. He sleeps on a snake bed.
On his chest he embraces Lakshmi who stays on the lotus.
He created Shiva and Nanmuhan.
He is a friend of all creatures.
He gives moksha to all his devotees.
He is the boat for those who would cross the ocean of birth.

2981 நீந்தும் துயர்ப் பிறவி உட்பட மற்று எவ் எவையும்
நீந்தும் துயர் இல்லா வீடு முதல் ஆம்
பூந் தண் புனல் பொய்கை யானை இடர் கடிந்த
பூந் தண் துழாய் என் தனி நாயகன் புணர்ப்பே (2)
2981. He removes the ocean of sorrowful births for his devotees.
He removes all the troubles of life for them.
and grants them moksha, a dwelling that has no sorrow.
He saved the elephant Gajendra
when he was caught by a crocodile in a cool blooming pond.
The difficulties of his devotees will go away
when they join the matchless god adorned with a thulasi garland.

2982 புணர்க்கும் அயன் ஆம் அழிக்கும் அரன் ஆம்
புணர்த்த தன் உந்தியொடு ஆகத்து மன்னி
புணர்த்த திருஆகித் தன் மார்வில் தான் சேர்
புணர்ப்பன் பெரும் புணர்ப்பு எங்கும் புலனே (3)
2982. He keeps Brahma, the creator of the world, on his navel.
He keeps Shiva, the destroyer of the world,
on the left part of his body.
He keeps lovely Lakshmi on his chest and embraces her.
He exists everywhere and in everything you see in the world.

2983 புலன் ஐந்து மேயும் பொறி ஐந்தும் நீங்கி
நலம் அந்தம் இல்லது ஓர் நாடு புகுவீர்
அலமந்து வீய அசுரரைச் செற்றான்
பலம் முந்து சீரில் படிமின் ஒவாதே (4)
2983. O devotees, if you control your five senses
and the pleasures that they give
you will enter endless moksha that is pure goodness.
He is strong and he killed the Asurans.
You praise his divine qualities and stay with him always.

2984 ஓவாத் துயர்ப் பிறவி உட்பட மற்று எவ் எவையும்
மூவாத் தனி முதலாய் மூவுலகும் காவலோன்
மா ஆகி ஆமை ஆய் மீன் ஆகி மானிடம் ஆம்
தேவாதி தேவ பெருமான் என் தீர்த்தனே (5)
2984. He is matchless and ancient.
He protects his devotees of all the three worlds
from the sorrowful births that come ceaselessly
and from all trouble in their lives.
The everlasting god of the gods, the pure one,
took the forms of a horse, turtle, fish
and human to protect this world from evil.

2985 தீர்த்தன் உலகு அளந்த சேவடிமேல் பூந்தாமம்
சேர்த்தி அவையே சிவன் முடிமேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்தொழிந்த பைந்துழாயான் பெருமை
பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே? (6)
2985. He is pure.
Arjuna worshipped Shiva,
adorning him with flower garlands.
When he saw the same garlands
on the feet of the pure god who measured the world,
he realized that Kaṇṇan is the real god.
Who can praise the greatness of him,
adorned with beautiful thulasi garlands?

2986 கிடந்து இருந்து நின்று அளந்து கேழல் ஆய் கீழ்ப் புக்கு
இடந்திடும் தன்னுள் கரக்கும் உமிழும்
தடம் பெருந் தோள் ஆரத் தழுவும் பார் என்னும்
மடந்தையை மால் செய்கின்ற மால் ஆர் காண்பாரே? (7)
2986. He sleeps on the ocean.
He measured the world and the sky with his two feet .
He split open the earth and went to the underworld
in the form of a boar and raised the earth goddess.
He swallowed the earth and spat it out.
He embraced the earth goddess with his wide arms.
Who can understand the things
that he does out of love for the earth goddess?

2987 காண்பார் ஆர் எம் ஈசன் கண்ணனை? என் காணுமாறு?
ஊண் பேசில் எல்லா உலகும் ஓர் துற்று ஆற்றா
சேண் பால வீடோ உயிரோ மற்று எப் பொருட்கும்
ஏண் பாலும் சோரான் பரந்து உளன் ஆம் எங்குமே (8)
2987. Who can see our Esan?
Is there any way someone could see our dear Kaṇṇan?
Even though he swallowed the whole world
it will not be enough for him.
His heaven contains all the worlds.
He is the soul of all the creatures on the earth.
He is omnipresent and there is no place where he is not.

2988 எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து
இங்கு இல்லையால் என்று இரணியன் தூண் புடைப்ப
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என்
சிங்கப் பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே? (9)
2988. Prahaladan the son of Hiraṇyan said,
"Kaṇṇan is everywhere,"
and his father opposed him saying,
"See, he will not be here in this pillar,"
but the moment he broke the pillar
Maal came out as a man-lion and killed him.
Who can understand the power of him
who took the form of a lion?

2989 சீர்மை கொள் வீடு சுவர்க்கம் நரகு ஈறா
ஈர்மை கொள் தேவர் நடுவா மற்று எப் பொருட்கும்
வேர் முதல் ஆய் வித்து ஆய் பரந்து தனி நின்ற
கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே (10)
2989. He is the lord of the divine world of the gods,
of moksha and of hell.
He, the lord of the gods, stays in the middle world also.
He is the root and seed of all things.
He is spread everywhere but also stands alone.
I saw the dark cloud-colored Kaṇṇan.

2990 கண் தலங்கள் செய்ய கரு மேனி அம்மானை
வண்டு அலம்பும் சோலை வழுதி வள நாடன்
பண் தலையில் சொன்ன தமிழ் ஆயிரத்து இப் பத்தும் வலார்
விண் தலையில் வீற்றிருந்து ஆள்வர் எம் மா வீடே (11)
2990. Sadagopan from the flourishing Pandya country
filled with groves where bees swarm
composed a thousand Tamil pasurams with music
to the dear god who has a dark body and bright eyes.
If devotees learn these ten pasurams and recite them well
they will reach moksha in the sky.
---------

திருவாய் மொழி - இரண்டாம் பத்து (ஒன்பதாம் திருமொழி, 2991-3001)
புருஷார்த்த நிர்ணயம்

2991 எம் மா வீட்டுத் திறமும் செப்பம் நின்
செம் மா பாட பற்புத் தலை சேர்த்து ஒல்லை
கைம்மா துன்பம் கடிந்த பிரானே
அம்மா அடியேன் வேண்டுவது ஈதே (1)
2991. You removed the suffering of Gajendra the elephant
and saved him from the crocodile.
I do not wish to ask about wonderful moksha.
I only want you to put your divine lotus feet on my head.
You are my mother—
this is the only thing I, your devotee, want.

2992 ஈதே யான் உன்னைக் கொள்வது எஞ்ஞான்றும் என்
மை தோய் சோதி மணிவண்ண எந்தாய்
எய்தா நின் கழல் யான் எய்த ஞானக்
கை தா காலக் கழிவு செய்யேலே (2)
2992. This is the only thing I always want from you.
You are a bright light!
You have the color of a diamond.
O my father, I want to reach your feet that no one can approach.
Give me wisdom so that I may attain you.
Do not wait long.

2993 செய்யேல் தீவினை என்று அருள் செய்யும் என்
கை ஆர் சக்கரக் கண்ண பிரானே
ஐ ஆர் கண்டம் அடைக்கிலும் நின் கழல்
எய்யாது ஏத்த அருள்செய் எனக்கே (3)
2993. O Kannan!
You carry a discus in your hand.
Give me your grace so I will not do evil.
Even when I die and phlegm fills my throat
give me your grace so that
I will praise you without forgetting you.

2994 எனக்கே ஆட்செய் எக் காலத்தும் என்று என்
மனக்கே வந்து இடைவீடு இன்றி மன்னி
தனக்கே ஆக எனைக் கொள்ளும் ஈதே
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே (4)
2994. Give me your grace saying,
"Be my devotee always."
Enter my mind making me yourself
and staying there without leaving ever.
I receive Kaṇṇan and make him mine
and that is the most wonderful thing I could ever have.

2995 சிறப்பில் வீடு சுவர்க்கம் நரகம்
இறப்பில் எய்துக எய்தற்க யானும்
பிறப்பு இல் பல் பிறவிப் பெருமானை
மறப்பு ஒன்று இன்றி என்றும் மகிழ்வனே (5)
2995. I do not mind
whether I reach moksha, the heaven of the gods, or hell
when my life leaves my body.
I will worship the dear unborn god
who takes many births in this world
only to give his devotees his grace.
I will not forget him ever and I will be happy.

2996 மகிழ் கொள் தெய்வம் உலோகம் அலோகம்
மகிழ் கொள் சோதி மலர்ந்த அம்மானே
மகிழ் கொள் சிந்தை சொல் செய்கை கொண்டு என்றும்
மகிழ்வுற்று உன்னை வணங்க வாராயே (6)
2996. You created the gods and make them happy.
You are the knowledge and ignorance of the world.
You are the light that gives joy to all.
You are like a blooming flower.
I want to worship you happily with my mind,
my words and my deeds always.
Come joyfully to me so I may worship you.

2997 வாராய் உன் திருப் பாத மலர்க்கீழ்ப்
பேராதே யான் வந்து அடையும்படி
தாராதாய் உன்னை என்னுள் வைப்பில் என்றும்
ஆராதாய் எனக்கு என்றும் எக்காலே (7)
2997. Come! I want to stay beneath your divine lotus feet
never moving from there.
You have not granted me your grace so I may reach your feet.
You have not entered my heart.
Come and stay in my heart always and in all situations.

2998 எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் மற்று
எக் காலத்திலும் யாதொன்றும் வேண்டேன்
மிக்கார் வேத விமலர் விழுங்கும் என்
அக்காரக் கனியே உன்னை யானே (8)
2998. You are sweet like a fruit made of jaggery.
You are worshiped by faultless sages, the scholars of the Vedas.
If you will always be my father
and stay in my heart,
I will not ask you for anything else.

2999 யானே என்னை அறியகிலாதே
யானே என் தனதே என்று இருந்தேன்
யானே நீ என் உடைமையும் நீயே
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே (9)
2999. I do not understand myself.
I thought only of myself and my possessions,
but now I know that I am you
and all that I own is yours.
You are a bull among the gods in the sky.
All the gods in the sky praise you.

3000 ஏறேல் ஏழும் வென்று ஏர் கொள் இலங்கையை
நீறே செய்த நெடுஞ் சுடர்ச் சோதி
தேறேல் என்னை உன் பொன் அடி சேர்த்து ஒல்லை
வேறே போக எஞ்ஞான்றும் விடலே (10)
3000. You conquered the seven bulls.
You are a bright light
that burned and destroyed the famous Lanka.
Do not rely on my efforts
but make me join your golden feet soon.
Do not make me go anywhere else.

3001 விடல் இல் சக்கரத்து அண்ணலை மேவல்
விடல் இல் வண் குருகூர்ச் சடகோபன்
கெடல் இல் ஆயிரத்துள் இவை பத்தும்
கெடல் இல் வீடு செய்யும் கிளர்வார்க்கே (11)
3001. Saḍagopan of Thirukuruhur
composed a thousand faultless poems
on the highest god who carries a heroic discus.
If devotees learn and recite these ten faultless pasurams
they will reach moksha where there is no suffering.
------------

திருவாய் மொழி - இரண்டாம் பத்து (பத்தாம் திருமொழி, 3002-3012)
திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக

3002 கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்
வளர் ஒளி மாயோன் மருவிய கோயில்
வளர் இளம் பொழில் சூழ் மாலிருஞ்சோலை
தளர்வு இலர் ஆகிச் சார்வது சதிரே (1)
3002. Before you become old and your youth goes away
it is good to go to the temple
where Maayon shines in Thirumalirunjolai
surrounded by fresh flourishing groves.
To go there without holding back,
to dance and worship him is what you should do

3003 சதிர் இள மடவார் தாழ்ச்சியை மதியாது
அதிர் குரல் சங்கத்து அழகர் தம் கோயில்
மதி தவழ் குடுமி மாலிருஞ்சோலைப்
பதியது ஏத்தி எழுவது பயனே (2)
3003. The roaring sound of the conches
in the temple of the beautiful god in Thirumalirunjolai
is louder than the music of the dances
of beautiful young women.
The purpose of your life
is to go to that temple and worship him
in Thirumalirunjolai hills
where the moon shines on the top of the peaks.

3004 பயன் அல்ல செய்து பயன் இல்லை நெஞ்சே
புயல் மழை வண்ணர் புரிந்து உறை கோயில்
மயல் மிகு பொழில் சூழ் மாலிருஞ்சோலை
அயல்மலை அடைவது அது கருமமே (3)
3004. O heart! Doing useless things is not fruitful.
He has the color of a cloud.
He stays in the temple in Thirumalirunjolai
surrounded by beautiful groves.
The purpose of your life is to go to that divine hill
and worship him.

3005 கரும வன் பாசம் கழித்து உழன்று உய்யவே
பெருமலை எடுத்தான் பீடு உறை கோயில்
வரு மழை தவழும் மாலிருஞ்சோலைத்
திருமலை அதுவே அடைவது திறமே (4)
3005. He removes the bad karma of all people
and protects them from trouble.
He carried Govardhana mountain.
The right thing is to go to divine Thirumalirunjolai
where clouds that drop rain move around the famous hills
and worship the lord.

3006 திறம் உடை வலத்தால் தீவினை பெருக்காது
அறம் முயல் ஆழிப் படையவன் கோயில்
மறு இல் வண் சுனை சூழ் மாலிருஞ்சோலைப்
புறமலை சாரப் போவது கிறியே (5)
3006. Do not increase your karma
doing bad things in your life.
He carries a discus that establishes dharma
and stays in the temple in Thirumalirunjolai
surrounded by pure beautiful springs.
To go to that mountain and worship him
is the path you should take.

3007 கிறி என நினைமின் கீழ்மை செய்யாதே
உறி அமர் வெண்ணெய் உண்டவன் கோயில்
மறியொடு பிணை சேர் மாலிருஞ்சோலை
நெறி பட அதுவே நினைவது நலமே (6)
3007. Do not do bad deeds.
Think of doing good deeds.
He stole butter from the pot kept in the uri
and stays in the temple in Thirumalirunjolai
where does play with their fawns.
It is good to think him and worship him with devotion.

3008 நலம் என நினைமின் நரகு அழுந்தாதே
நிலம் முனம் இடந்தான் நீடு உறை கோயில்
மலம் அறு மதி சேர் மாலிருஞ்சோலை
வலம் முறை எய்தி மருவுதல் வலமே (7)
3008. Think only of doing good deeds and you will not go to hell.
The god took the form of a boar and split open the earth.
He stays in the temple in Thirumalirunjolai
where the faultless bright moon shines.
If you circle that hill,
goodness will abound in your life.

3009 வலஞ்செய்து வைகல் வலம் கழியாதே
வலஞ்செய்யும் ஆய மாயவன் கோயில்
வலஞ்செய்யும் வானோர் மாலிருஞ்சோலை
வலஞ்செய்து நாளும் மருவுதல் வழக்கே (8)
3009. Do not do bad things and spend your life in vain.
Circle the temple of Maayavan every day
where the gods come and circle the hills of Thirumalirunjolai.
Get into the habit of circling that hill
and it will bring you good fortune.

3010 வழக்கு என நினைமின் வல்வினை மூழ்காது
அழக்கொடி அட்டான் அமர் பெருங்கோயில்
மழக் களிற்று இனம் சேர் மாலிருஞ்சோலை
தொழக் கருதுவதே துணிவது சூதே (9)
3010. Do not think it is just a custom to circle the temple.
If you circle the temple in Thirumalirunjolai
bad karma will not come to you.
He killed Putana. Worship him.
He stays in the temple in Thirumalirunjolai
where strong male elephants live together in groups.
This will give you victory in what you want to do

3011 சூது என்று களவும் சூதும் செய்யாதே
வேதம் முன் விரித்தான் விரும்பிய கோயில்
மாது உறு மயில் சேர் மாலிருஞ்சோலைப்
போது அவிழ் மலையே புகுவது பொருளே (10)
3011. Do not steal and gamble thinking you will gain something.
He taught the Vedas to the sages.
He stays in the temple in Thirumalirunjolai
where beautiful peacocks dance.
Going to that mountain where beautiful flowers bloom
should be the object of your life.

3012 பொருள் என்று இவ் உலகம் படைத்தவன் புகழ்மேல்
மருள் இல் வண் குருகூர் வண் சடகோபன்
தெருள் கொள்ளச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்து
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே (11)
3012. Saḍagopan, the generous one of Thirukuruhur
composed a thousand good pasurams
about the famous god whose purpose was to create this world.
The lord gives his grace to all.
If devotees learn and recite these ten poems
they will reach the feet of the god.
---------


நம்மாழ்வார் திருவாய் மொழி - மூன்றாம் பத்து (3013-3122)
Divyaprabandam - Thiruvaymozhi - Muundraam Pathu (3013 -3122)

திருவாய் மொழி - மூன்றாம் பத்து (முதல் திருமொழி, 3013-3023)
திருமாலிருஞ்சோலை அழகரது வடிவழகில் ஈடுபடல்

3013 முடிச் சோதியாய் உனது முகச் சோதி மலர்ந்ததுவோ?
அடிச் சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ?
படிச் சோதி ஆடையொடும் பல் கலனாய் நின் பைம் பொன்
கடிச் சோதி கலந்ததுவோ? திருமாலே கட்டுரையே (1)
3013. Does your bright face makes your crown shine?
Does the bright light of your feet bloom like a lotus?
Does the brightness of your golden waist give light
to your clothes and your precious ornaments?
Tell me, O Thirumaal.

3014 கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை ஒவ்வா
சுட்டு உரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது
ஒட்டு உரைத்து இவ் உலகு உன்னைப் புகழ்வு எல்லாம் பெரும்பாலும்
பட்டுரையாய் புற்கு என்றே காட்டுமால் பரஞ்சோதீ (2)

3014. You are the highest shining lord.
A lotus cannot be compared
to the beauty of your eyes and feet.
Pure gold cannot be compared to the brightness
of your divine body.
You are the highest light.
All the praises of you that this world utters
are merely meaningless.

3015 பரஞ்சோதி நீ பரமாய் நின் இகழ்ந்து பின் மற்று ஓர்
பரம் சோதி இன்மையின் படி ஓவி நிகழ்கின்ற
பரஞ்சோதி நின்னுள்ளே படர் உலகம் படைத்த எம்
பரஞ்சோதி கோவிந்தா பண்பு உரைக்கமாட்டேனே (3)
3015. You are the highest light.
There is no other bright light that can be compared with you,
you are a unique bright light.
You are the highest light and you created this world,
swallowed it and keep it inside you.
O Govinda! I do not have the ability to praise you.

3016 மாட்டாதே ஆகிலும் இம் மலர் தலை மா ஞாலம் நின்
மாட்டு ஆய மலர் புரையும் திருவுருவம் மனம் வைக்க
மாட்டாத பல சமய மதி கொடுத்தாய் மலர்த் துழாய்
மாட்டே நீ மனம் வைத்தாய் மா ஞாலம் வருந்தாதே? (4)
3016. The people of this world do not know
how to worship your beautiful lotus form.
You created many religions
for the people of the world to follow,
but you are interested only in the thulasi garland that you wear.
Don't you think this great world will suffer without you
if you do not save its people and take care of them?

3017 வருந்தாத அரும் தவத்த மலர் கதிரின் சுடர் உடம்பு ஆய்
வருந்தாத ஞானம் ஆய் வரம்பு இன்றி முழுது இயன்றாய்
வரும் காலம் நிகழ் காலம் கழி காலம் ஆய் உலகை
ஒருங்காக அளிப்பாய் சீர் எங்கு உலக்க ஓதுவனே? (5)
3017. Your bright body is like a beautiful flower
and you do not need to do any tapas to get it.
You are yourself a great knowledge.
No boundary can include all the places where you are.
You are the past, present and future.
You give your grace in all ages to the world.
How could I describe your power?

3018 ஓதுவார் ஓத்து எல்லாம் எவ் உலகத்து எவ் எவையும்
சாதுவாய் நின் புகழின் தகை அல்லால் பிறிது இல்லை
போது வாழ் புனம் துழாய் முடியினாய் பூவின்மேல்
மாது வாழ் மார்பினாய் என் சொல்லி யான் வாழ்த்துவனே? (6)
3018. You are decorated with a fresh thulasi garland
and flowers in your hair.
Lakshmi stays on a lotus on your chest.
All the Vedas and the sastras that are recited by the sages
and everything in all the worlds
have been created only by your grace.
What can I say to praise you?

3019 வாழ்த்துவார் பலர் ஆக நின்னுள்ளே நான்முகனை
மூழ்த்த நீர் உலகு எல்லாம் படை என்று முதல் படைத்தாய்
கேழ்த்த சீர் அரன் முதலாக் கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து
சூழ்த்து அமரர் துதித்தால் உன் தொல் புகழ் மாசூணாதே? (7)
3019. Many devotees praise you.
You created Nanmuhan from your navel and told him,
"Create the world surrounded with oceans."
Even if famous Shiva and the other shining gods praise you
it cannot do justice to your great fame
that has been since ancient times.

3020 மாசூணாச் சுடர் உடம்புஆய் மலராது குவியாது
மாசூணா ஞானம் ஆய் முழுதும் ஆய் முழுது இயன்றாய்
மாசூணா வான் கோலத்து அமரர் கோன் வழிப்பட்டால்
மாசூணா உன பாதமலர்ச் சோதி மழுங்காதே? (8)
3020. You have a faultless body.
You are wise and your knowledge does not diminish or grow.
You are whole and you are not whole.
If Indra the king of the gods worships your feet
won’t the brightness of your lotus feet grow dull
because he does not have enough words to praise you?

3021 மழுங்காத வைந் நுதிய சக்கர நல் வலத்தையாய்
தொழும் காதல் களிறு அளிப்பான் புள் ஊர்ந்து தோன்றினையே
மழுங்காத ஞானமே படை ஆக மலர் உலகில்
தொழும்பாயார்க்கு அளித்தால் உன் சுடர்ச் சோதி மறையாதே? (9)
3021. Riding on Garuḍa, you appeared
carrying a sharp-edged discus in your right hand
to save the elephant Gajendra from the crocodile
when he called you for help.
Your devotees worship you with their faultless knowledge.
Do you think that if you give your grace to them
in this wide world your brightness will diminish?

3022 மறை ஆய நால் வேதத்துள் நின்ற மலர்ச் சுடரே
முறையால் இவ் உலகு எல்லாம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தாய்
பிறை ஏறு சடையானும் நான்முகனும் இந்திரனும்
இறை ஆதல் அறிந்து ஏத்த வீற்றிருத்தல் இது வியப்பே? (10)
3022. You are a bright light and a blooming flower.
You are the inner meaning of the four Vedas.
You create this world, swallow it and spit it out
and you measured this world for Mahabali.
Shiva, Nanmuhan and Indra know
that you are the lord and praise you.
Is this not a wonder?

3023 வியப்பு ஆய வியப்பு இல்லா மெய்ஞ் ஞான வேதியனைச்
சயப் புகழார் பலர் வாழும் தடம் குருகூர்ச் சடகோபன்
துயக்கு இன்றித் தொழுது உரைத்த ஆயிரத்துள் இப் பத்தும்
உயக்கொண்டு பிறப்பு அறுக்கும் ஒலி முந்நீர் ஞாலத்தே (11)
3023. Saḍagopan of flourishing Thirukuruhur
where many famous and victorious people live
composed a thousand faultless poems,
and worshiped and praised the lord.
He is a wonder and yet is not a wonder
because no one knows him.
He is true wisdom and he gave the Vedas to the sages.
If devotees learn and recite these ten poems
they will not be born again in this world surrounded by roaring oceans.
--------

திருவாய் மொழி - மூன்றாம் பத்து (இரண்டாம் திருமொழி, 3024-3034)
அழகரை முற்றும் அனுபவிக்க ஏலாது ஆழ்வார் கலங்க எம்பெருமான் அவரது கலக்கத்தைத் தீர்த்தல்

3024 முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே
அந் நாள் நீ தந்த ஆக்கையின்வழி உழல்வேன்
வெம் நாள் நோய் வீய வினைகளை வேர் அறப் பாய்ந்து
எந் நாள் யான் உன்னை இனி வந்து கூடுவனே? (1)
3024. You have the color of a cloud.
You created the world surrounded by the oceans.
I wander with the body that you have given me.
When will the troubles that are the results of my karma leave me?
When will I come and join you?

3025 வன் மா வையம் அளந்த எம் வாமனா நின்
பல் மா மாயப் பல் பிறவியில் படிகின்ற யான்
தொல் மா வல்வினைத் தொடர்களை முதல் அரிந்து
நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்றுகொலோ? (2)
3025. You took the form of a dwarf
and measured the wide world.
I suffer in many births because of your many maayas.
When will the time come
when I join your wonderful divine feet
and am without my old karma.

3026 கொல்லா மாக்கோல் கொலைசெய்து பாரதப் போர்
எல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்த எந்தாய்
பொல்லா ஆக்கையின் புணர்வினை அறுக்கல் அறா
சொல்லாய் யான் உன்னைச் சார்வது ஓர் சூழ்ச்சியே (3)
3026. O father, you drove the chariot for Arjuna
and destroyed all the armies on the battlefield.
Tell me the path to remove the bad karma
that I have collected in many births
and show me the path to reach you.

3027 சூழ்ச்சி ஞானச் சுடர் ஒளி ஆகி என்றும்
ஏழ்ச்சி கேடு இன்றி எங்கணும் நிறைந்த எந்தாய்
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாள் இணைக்கீழ்
வாழ்ச்சி யான் சேரும் வகை அருளாய் வந்தே (4)

3027. You are the bright light of wisdom
that spreads everywhere, in both good and bad places.
O my father! I want to be freed from bad deeds,
join your feet and have the good life of serving you.
Give me your grace so I may achieve my goal.

3028 வந்தாய் போலே வந்தும் என் மனத்தினை நீ
சிந்தாமல் செய்யாய் இதுவே இது ஆகில்
கொந்து ஆர் காயாவின் கொழு மலர்த் திரு நிறத்த
எந்தாய் யான் உன்னை எங்கு வந்து அணுகிற்பனே? (5)
3028. You are my father.
You have the beautiful color of a kaayam blossom.
Even though it seems you entered my heart,
you have not helped the confusion of my mind.
If this is what you do
how can I come and join you?

3029 கிற்பன் கில்லேன் என்று இலன் முனம் நாளால்
அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்றொழிந்தேன்
பற்பல் ஆயிரம் உயிர் செய்த பரமா நின்
நற் பொன் சோதித்தாள் நணுகுவது எஞ்ஞான்றே? (6)
3029. I have not thought of what is good or bad to do.
I did things that are wrong and enjoyed them.
I did not think of you ever.
O highest one,
you created thousands and thousands of lives.
When will the time come when I can attain
your golden shining feet?

3030 எஞ்ஞான்றும் நாம் இருந்து இருந்து இரங்கி நெஞ்சே
மெய்ஞ்ஞானம் இன்றி வினை இயல் பிறப்பு அழுந்தி
எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவு அற நிறைந்து நின்ற
மெய்ஞ் ஞானச் சோதிக் கண்ணனை மேவுதுமே (7)
3030. O heart!
We lived on this earth and did not know what true wisdom is.
We collected bad karma and plunged into births.
Kaṇṇan is the true wisdom.
When can we reach the god,
the bright light that spreads everywhere and always?

3031 மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன்
ஓவுதல் இன்றி உன் கழல் வணங்கிற்றிலேன்
பாவு தொல் சீர்க் கண்ணா என் பரஞ்சுடரே
கூவுகின்றேன் காண்பான் எங்கு எய்தக் கூவுவனே? (8)
3031. I have not stopped doing bad things.
I have not constantly worshiped your feet
that are ornamented with anklets.
You are Kaṇṇan, praised from ancient time.
You are my bright divine light.
I am calling you to see you.
Where are you?
I will come there and call you.

3032 கூவிக் கூவிக் கொடுவினைத் தூற்றுள் நின்று
பாவியேன் பல காலம் வழி திகைத்து அலமர்கின்றேன்
மேவி அன்று ஆ நிரை காத்தவன் உலகம் எல்லாம்
தாவிய அம்மானை எங்கு இனித் தலைப்பெய்வனே? (9)
3032. I am a sinner and I continue doing bad karma.
For many ages I have not known the good paths of life
and I am confused.
You grazed the cows and protected them.
You measured the world at Mahabali’s sacrifice.
I have been calling and calling you.
When will I see you, my father?

3033 தலைப்பெய் காலம் நமன்தமர் பாசம் விட்டால்
அலைப்பூண் உண்ணும் அவ் அல்லல் எல்லாம் அகல
கலைப் பல் ஞானத்து என் கண்ணனைக் கண்டுகொண்டு
நிலைப் பெற்று என் நெஞ்சம் பெற்றது நீடு உயிரே (10)
3033. When the messengers of Yama come
and throw their snares,
I will find and worship the god.
He is known to all through the wise sastras.
He will come and remove all the suffering
that Yama’s messengers bring.
I will see Kaṇṇan, the knowledge of all arts.
I will be saved and my life will join its real soul, the god.

3034 உயிர்கள் எல்லா உலகமும் உடையவனைக்
குயில் கொள் சோலைத் தென் குருகூர்ச் சடகோபன்
செயிர் இல் சொல் இசை மாலை ஆயிரத்துள் இப் பத்தும்
உயிரின்மேல் ஆக்கை ஊனிடை ஒழிவிக்குமே (11)
3034. Saḍagopan of southern Thirukuruhur
where cuckoo birds sing in the groves
composed a thousand faultless musical poems
on the god who contains all the souls of the world inside him.
If devotees learn and recite these ten poems
they will not suffer from the desires of their senses
because reciting these poems will cut the connection
between their bodies and souls.
-----------

திருவாய் மொழி - மூன்றாம் பத்து (மூன்றாம் திருமொழி, 3035-3045)
திருவேங்கடமுடையானுக்கு அடிமை செய்யவேண்டும்

3035 ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு இலா அடிமை செய்யவேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திருவேங்கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே (1)
3035. We should join the father of the father of my father
and do faultless service for him as slaves as long as we live.
He is the bright beautiful light
that stays in the Thiruvenkaṭam hills
where resounding waterfalls descend.

3036 எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும்
முந்தை வானவர் வானவர் கோனொடும்
சிந்து பூ மகிழும் திருவேங்கடத்து
அந்தம் இல் புகழ்க் கார் எழில் அண்ணலே (2)
3036. He is the lord for all seven generations of my family.
He has everlasting fame
and he has the color of a dark cloud.
He stays in Thiruvenkaṭam
where beautiful flowers bloom.
The gods in the sky and Indra the god of gods
come and worship him in the Thiruvenkaṭam hills.

3037 அண்ணல் மாயன் அணி கொள் செந்தாமரைக்
கண்ணன் செங்கனி வாய்க் கருமாணிக்கம்
தெள் நிறை சுனை நீர்த் திருவேங்கடத்து
எண் இல் தொல் புகழ் வானவர் ஈசனே (3)
3037. Maayan is our highest god.
He has beautiful lotus eyes.
His mouth is red like a sweet fruit.
He shines like a dark jewel.
He is the ancient god and has limitless fame.
He is the god of the gods in the sky.
He stays in the Thiruvenkaṭam hills
where springs are filled with clear water.

3038 ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது
தேசமோ திருவேங்கடத்தானுக்கு?
நீசனேன் நிறைவு ஒன்றும் இலேன் என்கண்
பாசம் வைத்த பரம் சுடர்ச் சோதிக்கே (4)
3038. If I say he is the god of the gods in the sky
it is not great praise for him, the lord of Thiruvenkaṭam.
I am a mean person, without goodness.
He gave his love to me
and I have not given anything back to him, the divine shining light.

3039 சோதி ஆகி எல்லா உலகும் தொழும்
ஆதிமூர்த்தி என்றால் அளவு ஆகுமோ
வேதியர் முழு வேதத்து அமுதத்தை
தீது இல் சீர்த் திருவேங்கடத்தானையே? (5)
3039. Is it enough praise for him
if I say he is a bright light
and an ancient god worshiped by all the worlds?
He is the creator of the Vedas
and nectar for Brahmins, the scholars of the Vedas.
He stays in the Thiruvenkaṭam hills that have faultless fame.

3040 வேம் கடங்கள் மெய்மேல் வினை முற்றவும்
தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்
வேங்கடத்து உறைவார்க்கு நம என்னல்
ஆம் கடமைஅது சுமந்தார்கட்கே (6)
3040. The devotees who live in the Thiruvenkaṭam hills
do only good to others
even if they suffer in their lives because of their bad karma.
It is our duty to worship them
because they do service to the devotees of our lord.

3041 சுமந்து மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு
அமர்ந்து வானவர் வானவர் கோனொடும்
நமன்று எழும் திருவேங்கடம் நங்கட்குச்
சமன் கொள் வீடு தரும் தடங் குன்றமே (7)
3041. The gods in the sky and Indra the king of gods
go to the Thiruvenkatam hills with beautiful flowers,
water, lamps and incense to worship the lord.
If we go there, that majestic hill will give us moksha.

3042 குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன்
அன்று ஞாலம் அளந்த பிரான் பரன்
சென்று சேர் திருவேங்கட மா மலை
ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே (8)
3042. He carried Govardhana mountain
and protected the cows from the cold storm.
The mighty lord, the highest god, measured the world.
If we go to the divine Thiruvenkaṭam hills
and worship him, that one thing
will remove our karma.

3043 ஓயும் மூப்புப் பிறப்பு இறப்பு:பிணி
வீயுமாறு செய்வான் திருவேங்கடத்து
ஆயன் நாள் மலர் ஆம் அடித்தாமரை
வாயுள்ளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கே (9)
3043. The lord of the divine Thiruvenkatam,
the cowherd, destroys old age
when someone grows weary and sick.
He removes future births for the devotees
who worship his lotus feet,
keeping him in their minds
and praising him with their tongues.

3044 வைத்த நாள் வரை எல்லை குறுகிச் சென்று
எய்த்து இளைப்பதன் முன்னம் அடைமினோ
பைத்த பாம்பு அணையான் திருவேங்கடம்
மொய்த்த சோலை மொய் பூந் தடந் தாழ்வரே (10)
3044. Before you become old and weak
and the end of your days comes,
go to Thiruvenkaṭam, precious as gold,
surrounded with groves
blooming with flowers that swarm with bees.
The lord sleeps on a snake bed.
See him and worship his divine feet.

3045 தாள் பரப்பி மண் தாவிய ஈசனை
நீள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல்
கேழ் இல் ஆயிரத்து இப் பத்தும் வல்லவர்
வாழ்வர் வாழ்வு எய்தி ஞாலம் புகழவே (11)
3045. Saḍagopan of Thirukuruhur
surrounded by flourishing groves
composed a thousand faultless poems
praising the lord who measured the earth with his feet.
If devotees learn and recite these ten poems
they will live with fame on this earth
and the world will praise them.
-------

திருவாய் மொழி - மூன்றாம் பத்து ( நான்காம் திருமொழி, 3046-3056)
ஆத்மாக்கள் அனைத்தும் அவனே

3046 புகழும் நல் ஒருவன் என்கோ?
       பொரு இல் சீர்ப் பூமி என்கோ?
திகழும் தண் பரவை என்கோ?
       தீ என்கோ? வாயு என்கோ?
நிகழும் ஆகாசம் என்கோ?
       நீள் சுடர் இரண்டும் என்கோ?
இகழ்வு இல் இவ் அனைத்தும் என்கோ?
       கண்ணனைக் கூவும் ஆறே (1)
3046. Should I say you have matchless fame?
Should I say you are the beautiful one unequalled on the earth?
Should I say you shine in the cool ocean?
Should I say you are hot fire?
Should I say you are wind?
Should I say you are the sky that covers the earth?
Should I say you are the sun and the moon?
Should I say you are the everlasting one?
What can I call you?

3047 கூவும் ஆறு அறியமாட்டேன்
       குன்றங்கள் அனைத்தும் என்கோ?
மேவு சீர் மாரி என்கோ?
       விளங்கு தாரகைகள் என்கோ?
நா இயல் கலைகள் என்கோ?
       ஞான நல் ஆவி என்கோ?
பாவு சீர்க் கண்ணன் எம்மான்
       பங்கயக் கண்ணனையே (2)
3047. I do not know what to call you.
Should I say you are a mountain?
Should I say you are rain that nourishes the world?
Should I say you are the shining stars?
Should I say you are the arts?
Should I say you are wisdom?
You are the lotus-eyed Kaṇṇan praised by the whole world.

3048 பங்கயக் கண்ணன் என்கோ?
       பவளச் செவ்வாயன் என்கோ?
அம் கதிர் அடியன் என்கோ?
       அஞ்சன வண்ணன் என்கோ?
செங்கதிர் முடியன் என்கோ?
       திரு மறு மார்பன் என்கோ?
சங்கு சக்கரத்தன் என்கோ?
       சாதி மாணிக்கத்தையே (3)
3048. Should I say you are the lotus-eyed god?
Should I say you have a mouth red as coral?
Should I say you are the shining sun?
Should I say you have the dark color of kohl?
Should I say you embrace Lakshmi on your chest?
Should I say you carry a conch and a discus in your hands?
You are a precious diamond.

3049 சாதி மாணிக்கம் என்கோ?
       சவி கொள் பொன் முத்தம் என்கோ?
சாதி நல் வயிரம் என்கோ?
       தவிவு இல் சீர் விளக்கம் என்கோ?
ஆதி அம் சோதி என்கோ?
       ஆதி அம் புருடன் என்கோ?
ஆதும் இல் காலத்து எந்தை
       அச்சுதன் அமலனையே (4)
3049. Should I say you are a precious ruby?
Should I say you are pure gold?
Should I say you are the best pearl from the ocean?
Should I say you are a faultless diamond?
Should I say you are a faultless beautiful lamp?
Should I say you are ancient brightness?
Should I say you are the most ancient one of the world?
You are my everlasting father.
You are the Achudan, the pure one.

3050 அச்சுதன் அமலன் என்கோ?
       அடியவர் வினை கெடுக்கும்
நச்சும் மா மருந்தம் என்கோ?
       நலங் கடல் அமுதம் என்கோ?
அச் சுவைக் கட்டி என்கோ?
       அறுசுவை அடிசில் என்கோ?
நெய்ச் சுவைத் தேறல் என்கோ?
       கனி என்கோ? பால் என்கேனோ? (5)
3050. Should I say you are Achudan, the pure one?
Should I say you are the remedy that destroys the karma of your devotees.
Should I say you are the nectar that came from the milky ocean?
Should I say you are sweet jaggery?
Should I say you are food with its six tastes?
Should I say you are the taste of ghee?
Are you the taste of honey?
Are you the taste of fruit or milk?

3051 பால் என்கோ? நான்கு வேதப்
       பயன் என்கோ? சமய நீதி
நூல் என்கோ? நுடங்கு கேள்வி
       இசை என்கோ? இவற்றுள் நல்ல
மேல் என்கோ? வினையின் மிக்க
       பயன் என்கோ? கண்ணன் என்கோ?
மால் என்கோ? மாயன் என்கோ?
       வானவர் ஆதியையே (6)
3051. Should I say you are milk?
Should I say you are the fruit of the Vedas?
Should I say you are the moral and religious books?
Should I say you are the music that I love to hear?
Should I say you are a precious thing above all these?
Should I say you are the result of karma?
Should I say you are Kaṇṇan?
Should I say you are Maal?
Should I say you are Maayan? You are the ancient god.

3052 வானவர் ஆதி என்கோ?
       வானவர் தெய்வம் என்கோ?
வானவர் போகம் என்கோ?
       வானவர் முற்றும் என்கோ?
ஊனம் இல் செல்வம் என்கோ?
       ஊனம் இல் சுவர்க்கம் என்கோ?
ஊனம் இல் மோக்கம் என்கோ?
       ஒளி மணி வண்ணனையே (7)
3052. Should I say you are the chief of the gods?
Should I say you are the lord of the gods in the sky?
Should I say you are the joy of the gods in the sky?
Should I say you yourself are all the gods?
Should I say you are faultless wealth?
Should I say you are faultless heaven?
Should I say you are faultless moksha?
You have the color of a bright sapphire.

3053 ஒளி மணி வண்ணன் என்கோ?
       ஒருவன் என்று ஏத்த நின்ற
நளிர் மதிச் சடையன் என்கோ?
       நான்முகக் கடவுள் என்கோ?
அளி மகிழ்ந்து உலகம் எல்லாம்
       படைத்து அவை ஏத்த நின்ற
களி மலர்த் துளவன் எம்மான்
       கண்ணனை மாயனையே (8)
3053. Should I say you have the color of bright sapphire?
Should I say you are Shiva
who has the shining moon in his Jata
and is praised by his devotees as the unique god?
Should I say you are Nanmuhan?
You are my father decorated with flowers and thulasi garlands.
You are Kaṇṇan and Maayan.
You created all the worlds through your grace
and the world praises you.

3054 கண்ணனை மாயன் தன்னை
       கடல் கடைந்து அமுதம் கொண்ட
அண்ணலை அச்சுதனை
       அனந்தனை அனந்தன் தன்மேல்
நண்ணி நன்கு உறைகின்றானை
       ஞாலம் உண்டு உமிழ்ந்த மாலை
எண்ணும் ஆறு அறியமாட்டேன்
       யாவையும் எவரும் தானே (9)
3054. He is Kaṇṇan.
He is Maayan.
The great god churned the milky ocean
and took the nectar from it.
He has no end.
He sleeps on Adishesha peacefully.
Our Maal swallowed the world and spit it out.
I do not know how to worship him.
He is all things and he is everyone in the world.

3055 யாவையும் எவரும் தானாய்
       அவரவர் சமயம் தோறும்
தோய்வு இலன் புலன் ஐந்துக்கும்
       சொலப்படான் உணர்வின் மூர்த்தி
ஆவி சேர் உயிரின் உள்ளால்
       ஆதும் ஓர் பற்று இலாத
பாவனை அதனைக் கூடில்
       அவனையும் கூடலாமே (10)
3055. He is all things and he is all people.
He is with everyone whenever they are in need.
He is never weary.
All the five senses do not know him.
He is the god of all feeling.
The soul has no desires
and if someone understands his own soul,
he will join the god because the lord himself is the soul.

3056 கூடி வண்டு அறையும் தண் தார்க்
       கொண்டல் போல் வண்ணன் தன்னை
மாடு அலர் பொழில் குருகூர்
       வண் சடகோபன் சொன்ன
பாடல் ஓர் ஆயிரத்துள்
       இவையும் ஓர் பத்தும் வல்லார்
வீடு இல போகம் எய்தி
       விரும்புவர் அமரர் மொய்த்தே (11)
3056. Saḍagopan the generous poet of Thirukuruhur
composed a thousand poems on the cloud-colored god
who is adorned with cool garlands that swarm with bees.
If devotees learn and recite these ten poems
they will enjoy the pleasures of moksha as the gods surround them.
-----------

திருவாய் மொழி - மூன்றாம் பத்து ( ஐந்தாம் திருமொழி, 3057-3067)
திருமாலுக்கு அன்பு செய்பவரை ஆதரித்தலும் அன்பிலாரை நிந்தித்தலும்

3057 மொய்ம் மாம் பூம் பொழில் பொய்கை
       முதலைச் சிறைப்பட்டு நின்ற
கைம்மாவுக்கு அருள் செய்த
       கார் முகில் போல் வண்ணன் கண்ணன்
எம்மானைச் சொல்லிப் பாடி
       எழுந்தும் பறந்தும் துள்ளாதார்
தம்மாம் கருமம் என்? சொல்லீர்
       தண் கடல் வட்டத்து உள்ளீரே (1)
3057. The dark cloud-colored Kaṇṇan
gave his grace to the elephant Gajendra
when it was caught by a crocodile in a pond
by a grove blooming with flowers that swarmed with bees.
What is the use of those who do not get up, dance, jump,
praise and sing the greatness of our lord?
O devotees, who live in the world surrounded by the cool ocean, tell me.

3058 தண் கடல் வட்டத்து உள்ளாரைத்
       தமக்கு இரையாத் தடிந்து உண்ணும்
திண் கழல் கால் அசுரர்க்குத்
       தீங்கு இழைக்கும் திருமாலைப்
பண்கள் தலைக்கொள்ளப் பாடி
       பறந்தும் குனித்தும் உழலாதார்
மண் கொள் உலகில் பிறப்பார்
       வல்வினை மோத மலைந்தே (2)
3058. Thirumaal destroyed the strong Asurans,
ornamented with heroic anklets on their feet
who killed the people of the world
surrounded by oceans and ate them.
If you do not bathe, sing, dance, and praise Thirumaal,
you will be born on the earth again
and suffer because you have collected bad karma.

3059 மலையை எடுத்து கல் மாரி
       காத்து பசுநிரை தன்னைத்
தொலைவு தவிர்த்த பிரானைச்
       சொல்லிச் சொல்லி நின்று எப்போதும்
தலையினோடு ஆதனம் தட்டத்
       தடுகுட்டமாய்ப் பறவாதார்
அலை கொள் நரகத்து அழுந்திக்
       கிடந்து உழைக்கின்ற வம்பரே (3)
3059. He carried Govardhana mountain
and protected the cows from their affliction.
Those who do not jump and dance,
rolling on the ground,
and praise always the dear lord
will go to hell and suffer.

3060 வம்பு அவிழ் கோதைபொருட்டா
       மால் விடை ஏழும் அடர்த்த
செம்பவளத் திரள் வாயன்
       சிரீதரன் தொல் புகழ் பாடி
கும்பிடு நட்டம் இட்டு ஆடி
       கோகு உகட்டுண்டு உழலாதார்
தம் பிறப்பால் பயன் என்னே
       சாது சனங்களிடையே? (4)
3060. The god Sridharan has a beautiful pearl-like mouth.
He killed seven strong bulls to marry Nappinnai
whose hair was adorned with fragrant flowers.
What is the use of those who are born as sages
if they do not sing, dance, kneel, bow their heads
and wander and do not praise the lord?

3061 சாது சனத்தை நலியும்
       கஞ்சனைச் சாதிப்பதற்கு
ஆதி அம் சோதி உருவை
       அங்கு வைத்து இங்குப் பிறந்த
வேத முதல்வனைப் பாடி
       வீதிகள் தோறும் துள்ளாதார்
ஓதி உணர்ந்தவர் முன்னா
       என் சவிப்பார் மனிசரே? (5)
3061. The ancient beautiful shining god
left his divine form in heaven and was born on the earth
to defeat Kamsan who troubled the sages.
What can those who do not sing, praise, dance and worship him
do before sages who worship him, knowing all the sastras?

3062 மனிசரும் மற்றும் முற்றும் ஆய்
       மாயப் பிறவி பிறந்த
தனியன் பிறப்பிலி தன்னை
       தடங் கடல் சேர்ந்த பிரானை
கனியை கரும்பின் இன் சாற்றை
       கட்டியை தேனை அமுதை
முனிவு இன்றி ஏத்திக் குனிப்பார்
       முழுது உணர் நீர்மையினாரே (6)
3062. People have been born in various forms—
human, animal and others.
The matchless god does not have birth
and he was born on this earth to save his devotees.
He sleeps on the wide ocean.
He is sweet as a fruit, sugarcane juice, jaggery, honey and nectar.
If devotees praise him with songs and dance without ever growing tired
they will receive the wisdom of understanding all things.

3063 நீர்மை இல் நூற்றுவர் வீய
       ஐவர்க்கு அருள்செய்து நின்று
பார் மல்கு சேனை அவித்த
       பரஞ்சுடரை நினைந்து ஆடி
நீர் மல்கு கண்ணினர் ஆகி
       நெஞ்சம் குழைந்து நையாதே
ஊன் மல்கி மோடு பருப்பார்
       உத்தமர்கட்கு என் செய்வாரே? (7)
3063, He gave his grace to the five Pandavas
and destroyed the hundred evil Kauravas.
What is the use of people who merely eat well and get fat
without thinking of the god?
What could they do to the good devotees
who are filled with tears,
melting in their hearts with devotion for the god?

3064 வார் புனல் அம் தண் அருவி
       வட திருவேங்கடத்து எந்தை
பேர் பல சொல்லிப் பிதற்றி
       பித்தர் என்றே பிறர் கூற
ஊர் பல புக்கும் புகாதும்
       உலோகர் சிரிக்க நின்று ஆடி
ஆர்வம் பெருகிக் குனிப்பார்
       அமரர் தொழப்படுவாரே (8)
3064. Our father stays in northern Thiruvenkaṭam hills
where flourishing cool waterfalls descend with abundant water.
Devotees who repeat his many names
and wander everywhere and dance
while the people of the world mock them
and laugh at them saying that they are crazy
will be worshiped by the gods in the sky.

3065 அமரர் தொழப்படுவானை
       அனைத்து உலகுக்கும் பிரானை
அமர மனத்தினுள் யோகு புணர்ந்து
       அவன் தன்னோடு ஒன்று ஆக
அமரத் துணிய வல்லார்கள்
       ஒழிய அல்லாதவர் எல்லாம்
அமர நினைந்து எழுந்து ஆடி
       அலற்றுவதே கருமமே (9)
3065. The gods in the sky worship him.
He is the highest lord of the whole world.
Devotees who do yoga and think in their minds
that their soul and he are the same
will not be able to join him.
The devotees who think only of him
without expecting any benefit,
sing, dance and prattle his names will join him.

3066 கருமமும் கரும பலனும்
       ஆகிய காரணன் தன்னை
திரு மணி வண்ணனை செங்கண்
       மாலினை தேவபிரானை
ஒருமை மனத்தினுள் வைத்து
       உள்ளம் குழைந்து எழுந்து ஆடி
பெருமையும் நாணும் தவிர்ந்து
       பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே (10)
3066. He is our actions and the result of our actions.
He is the reason for everything.
He has a beautiful sapphire color.
He, Maal, has beautiful eyes.
He is the lord of the gods.
O devotees, think of him only in your minds
and keep him there.
Melt in your hearts, dance,
be rid of your pride and reticence,
prattle and praise him without being ignorant.

3067 தீர்ந்த அடியவர் தம்மைத்
       திருத்திப் பணிகொள்ள வல்ல
ஆர்ந்த புகழ் அச்சுதனை
       அமரர் பிரானை எம்மானை
வாய்ந்த வள வயல் சூழ் தண்
       வளங் குருகூர்ச் சடகோபன்
நேர்ந்த ஓர் ஆயிரத்து இப் பத்து
       அருவினை நீறு செய்யுமே (11)
3067. Saḍagopan from cool flourishing Thirukuruhur
surrounded with good fields
composed a thousand pasurams praising the famous lord Achudan,
the father of the gods in the sky.
The lord takes away the bad nature of his devotees,
removes their desires and makes them serve him.
If devotees learn these ten pasurams and recite them,
their bad karma will go away.
-----------

திருவாய் மொழி - மூன்றாம் பத்து (ஆறாம் திருமொழி, 3068-3078)
அர்ச்சாவதாரமே எளிது என்று அருளிச்செய்தல்

3068 செய்ய தாமரைக் கண்ணன் ஆய் உலகு
       ஏழும் உண்ட அவன் கண்டீர்
வையம் வானம் மனிசர் தெய்வம்
       மற்றும் மற்றும் மற்றும் முற்றும் ஆய்
செய்ய சூழ் சுடர் ஞானம் ஆய் வெளிப்
       பட்டு இவை படைத்தான் பின்னும்
மொய் கொள் சோதியோடு ஆயினான் ஒரு
       மூவர் ஆகிய மூர்த்தியே (1)
3068. Kaṇṇan has beautiful lotus eyes.
He swallowed all the seven worlds
and then spit out the earth, sky, people, gods
and all other things, creating this world again.
He is shining wisdom and is surrounded with bright light.
He himself is the three gods, Brahma, Shiva and Indra.

3069 மூவர் ஆகிய மூர்த்தியை முதல்
       மூவர்க்கும் முதல்வன் தன்னை
சாவம் உள்ளன நீக்குவானை
       தடங் கடல் கிடந்தான் தன்னை
தேவ தேவனை தென் இலங்கை
       எரி எழச் செற்ற வில்லியை
பாவ நாசனை பங்கயத் தடங்
       கண்ணனைப் பரவுமினோ (2)
3069. He himself is the three gods Shiva, Brahma and Indra.
He is the ancient one for all those three gods.
He removes any curse placed on anyone.
He sleeps on the great ocean.
He is the lord of the gods.
As Rama he carried a victorious bow
and burned Lanka in the south and destroyed the Rakshasas.
He is the destroyer of sins.
Worship the lotus-eyed Kaṇṇan.

3070 பரவி வானவர் ஏத்த நின்ற
       பரமனை பரஞ்சோதியை
குரவை கோத்த குழகனை மணி
       வண்ணனை குடக் கூத்தனை
அரவம் ஏறி அலை கடல்
       அமரும் துயில்கொண்ட அண்ணலை
இரவும் நன் பகலும் விடாது என்றும்
       ஏத்துதல் மனம் வைம்மினோ (3)
3070. He, the highest, the divine light
is praised by the gods in the sky.
He is young and he has the color of a sapphire.
Our beautiful god danced the kuravai dance.
He danced on a pot.
He, the highest one, sleeps on Adishesha on the ocean.
Praise him in your mind night and day without ceasing.

3071 வைம்மின் நும் மனத்து என்று யான்
       உரைக்கின்ற மாயவன் சீர்மையை
எம்மனோர்கள் உரைப்பது என்? அது நிற்க
       நாள்தொறும் வானவர்
தம்மை ஆளும் அவனும் நான்முகனும்
       சடைமுடி அண்ணலும்
செம்மையால் அவன் பாத பங்கயம்
       சிந்தித்து ஏத்தித் திரிவரே (4)
3071. I and others like me tell you,
"Keep Maayavan and his grace in your mind and worship him."
How can we describe his greatness?
Even Indra the king of the gods,
Nanmuhan and Shiva the great one who has jata
think of his lotus feet, praise and wander, worshiping him always.

3072 திரியும் காற்றோடு அகல் விசும்பு
       திணிந்த மண் கிடந்த கடல்
எரியும் தீயோடு இரு சுடர் தெய்வம்
       மற்றும் மற்றும் முற்றும் ஆய்
கரிய மேனியன் செய்ய தாமரைக்
       கண்ணன் கண்ணன் விண்ணோர் இறை
சுரியும் பல் கருங் குஞ்சி எங்கள்
       சுடர் முடி அண்ணல் தோற்றமே (5)
3072. He is the wind that blows, the wide sky,
the strong earth, the oceans that surround the earth,
fire that burns, the sun and moon and all creatures of the world.
Our god Kaṇṇan has a dark body, beautiful lotus eyes and curly hair.
He is the god of the gods and he wears a shining crown.

3073 தோற்றம் கேடு அவை இல்லவன் உடையான்
       அவன் ஒரு மூர்த்தியாய்
சீற்றத்தோடு அருள் பெற்றவன் அடிக்
       கீழ்ப் புக நின்ற செங்கண்மால்
நாற்றம் தோற்றம் சுவை ஒலி உறல்
       ஆகி நின்ற எம் வானவர்
ஏற்றையே அன்றி மற்றொருவரை
       யான் இலேன் எழுமைக்குமே (6)
3073. He has no beginning or end
and he owns everything that has a beginning and end.
He came in the angry form of a man-lion,
destroyed Hiraṇyan and gave his grace to his son Prahaladan
who worshiped his feet.
The god Maal has beautiful eyes
and he is the smell, form, taste, touch and sound of the world.
He is a bull among the gods in the sky.
I will not have any other as my refuge
for all my seven births except him.

3074 எழுமைக்கும் எனது ஆவிக்கு இன்
       அமுதத்தினை எனது ஆர் உயிர்
கெழுமிய கதிர்ச் சோதியை மணி
       வண்ணனை குடக் கூத்தனை
விழுமிய அமரர் முனிவர்
       விழுங்கும் கன்னல் கனியினை
தொழுமின் தூய மனத்தர் ஆய்
       இறையும் நில்லா துயரங்களே (7)
3074. He is the refuge for my soul for my seven births.
He is sweet nectar for me.
He is the shining light that embraces my dear life.
He has the color of sapphire.
He dances the Kuḍakuthu.
He is the sweet fruit tasted by the gods and sages.
Worship him with a pure heart
and your troubles will not be with you even for a moment.

3075 துயரமே தரு துன்ப இன்ப
       வினைகள் ஆய் அவை அல்லன் ஆய்
உயர நின்றது ஓர் சோதி ஆய் உலகு
       ஏழும் உண்டு உமிழ்ந்தான் தன்னை
அயர வாங்கும் நமன் தமர்க்கு அரு
       நஞ்சினை அச்சுதன் தன்னை
தயரதற்கு மகன் தன்னை அன்றி
       மற்று இலேன் தஞ்சமாகவே (8)
3075. He is the karma that gives pleasures and sorrows to people
and he is neither pleasure nor sorrow.
He is the light that remains high.
He swallowed all the seven worlds and spit them out.
He is poison for the messengers of Yama
who come to take people’s lives.
He is imperishable.
I have no refuge except the son of Dasaratha.

3076 தஞ்சம் ஆகிய தந்தை தாயொடு
       தானும் ஆய் அவை அல்லன் ஆய்
எஞ்சல் இல் அமரர் குலமுதல்
       மூவர் தம்முள்ளும் ஆதியை
       அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள்
       அவன் இவன் என்று கூழேன்மின்
நெஞ்சினால் நினைப்பான் எவன் அவன்
       ஆகும் நீள் கடல் வண்ணனே (9)
3076. He is my father and mother and my refuge.
He is everything and yet he is not everything.
He is the ancient one for the three gods Indra, Nanmuhan and Shiva.
O people of the world, do not be afraid and worry, saying,
"He is this one or he is that one."
The ocean-colored god will take whatever form you think of
when you contemplate him in your heart.

3077 கடல் வண்ணன் கண்ணன் விண்ணவர்
       கருமாணிக்கம் எனது ஆர் உயிர்
பட அரவின் அணைக்கிடந்த
       பரஞ்சுடர் பண்டு நூற்றுவர்
       அட வரும் படை மங்க ஐவர்கட்கு
       ஆகி வெம் சமத்து அன்று தேர்
கடவிய பெருமான் கனை கழல்
       காண்பது என்றுகொல் கண்களே (10)
3077. Our ocean colored-god Kaṇṇan
is a diamond for the gods in the sky.
He is my dear life.
He is the highest light that sleeps on a snake bed.
When the Pandavas could not fight in the terrible war
he became the charioteer of Arjuna.
When will my eyes see the dear god’s feet
decorated with sounding anklets?

3078 கண்கள் காண்டற்கு அரியன்
       ஆய் கருத்துக்கு நன்றும் எளியன் ஆய்
மண் கொள் ஞாலத்து உயிர்க்கு எல்லாம்
       அருள் செய்யும் வானவர் ஈசனை
பண் கொள் சோலை வழுதி நாடன்
       குருகைக்கோன் சடகோபன் சொல்
பண் கொள் ஆயிரத்து இப் பத்தால்
       பத்தர் ஆகக் கூடும் பயிலுமினே (11)
3078. Saḍagopan, the chief of Thirukuruhur
that belongs to the fertile country of the Pandiyan king
surrounded with groves that swarm with bees
composed a thousand pasurams with music
to the god of gods in the sky.
He is hard for the eyes to see
and is easy for the mind to understand.
He gives grace to all creatures of the world.
If devotees learn these ten pasurams and recite them
they will become the devotees of Kaṇṇan.
------------

திருவாய் மொழி - மூன்றாம் பத்து (ஏழாம் திருமொழி, 3079-3089)
அடியார்களின் அடியார்களுக்குத் தாம் அடியவர் எனல்

3079 பயிலும் சுடர் ஒளி மூர்த்தியை பங்கயக் கண்ணனை
பயில இனிய நம் பாற்கடல் சேர்ந்த பரமனை
பயிலும் திரு உடையார் எவரேலும் அவர் கண்டீர்
பயிலும் பிறப்பிடை தோறு எம்மை ஆளும் பரமரே (1)
3079. He has the form of a shining bright light.
His eyes are beautiful like lotuses.
He is the highest god.
He sleeps on the sweet milky ocean.
See, those who have the fortune of being his devotees
will be my lords in all my births
and they will rule me.

3080 ஆளும் பரமனை கண்ணனை ஆழிப் பிரான் தன்னை
தோளும் ஓர் நான்கு உடைத் தூ மணி வண்ணன் எம்மான் தன்னை
தாளும் தடக் கையும் கூப்பிப் பணியும் அவர் கண்டீர்
நாளும் பிறப்பிடைதோறு எம்மை ஆளுடை நாதரே (2)
3080. He, Kaṇṇan, the highest, rules all.
He is the lord of the world.
Our father has four arms
and his body has the color of pure sapphire.
See, the devotees who worship
folding their hands before my dear lord's feet
are my masters and I will serve them in all my births.

3081 நாதனை ஞாலமும் வானமும் ஏத்தும் நறும் துழாய்ப்
போதனை பொன் நெடும் சக்கரத்து எந்தை பிரான் தன்னை
பாதம் பணிய வல்லாரைப் பணியும் அவர் கண்டீர்
ஓதும் பிறப்பிடைதோறு எம்மை ஆளுடையார்களே (3)
3081. He is adorned with fragrant thulasi garlands
and praised by the world and the sky.
He, my dear father, is wise and carries a golden discus.
See, the devotees who worship the feet of the lord
are my masters and I will serve them in all my births.

3082 உடை ஆர்ந்த ஆடையன் கண்டிகையன் உடை நாணினன்
புடை ஆர் பொன் நூலினன் பொன் முடியன் மற்றும் பல்கலன்
நடையா உடைத் திருநாரணன் தொண்டர் தொண்டர் கண்டீர்
இடை ஆர் பிறப்பிடைதோறு எமக்கு எம் பெருமக்களே (4)
3082. He wears beautiful garments.
On his neck is a lovely necklace.
His waist is ornamented with a golden thread.
He has a golden crown on his head
and many ornaments decorate his body.
See, the devotees of the devotees of divine Narayaṇan
are the great ones for me in all my births.

3083 பெருமக்கள் உள்ளவர் தம் பெருமானை அமரர்கட்கு
அருமை ஒழிய அன்று ஆர் அமுது ஊட்டிய அப்பனை
பெருமை பிதற்ற வல்லாரைப் பிதற்றும் அவர் கண்டீர்
வருமையும் இம்மையும் நம்மை அளிக்கும் பிராக்களே (5)
3083. He is the lord of good devotees. He is our father.
He gave nectar to the gods so their troubles would be removed.
The god’s devotees prattle praising other devotees
who prattle praising him.
Those devotees will protect us in this birth
and in all the future births.

3084 அளிக்கும் பரமனை கண்ணனை ஆழிப் பிரான் தன்னை
துளிக்கும் நறும் கண்ணித் தூ மணி வண்ணன் எம்மான் தன்னை
ஒளிக் கொண்ட சோதியை உள்ளத்துக் கொள்ளும் அவர் கண்டீர்
சலிப்பு இன்றி ஆண்டு எம்மைச் சன்ம சன்மாந்தரம் காப்பரே (6)
3084. Our god Kaṇṇan is the highest of all the gods.
and he gives us his grace.
He has the color of pure sapphire,
he carries a discus
and he is adorned with a fragrant thulasi garland.
He is our father and he shines like a bright light.
See, those devotees who worship him in their hearts
will take care of us without ever tiring
and protect us in this birth and in all our future births.

3085 சன்ம சன்மாந்தரம் காத்து அடியார்களைக் கொண்டுபோய்
தன்மை பெறுத்தித் தன் தாளிணைக்கீழ்க் கொள்ளும் அப்பனை
தொன்மை பிதற்ற வல்லாரைப் பிதற்றும் அவர் கண்டீர்
நன்மை பெறுத்து எம்மை நாள் உய்யக்கொள்கின்ற நம்பரே (7)
3085. Our father gives his grace to his devotees
so that they will not be born again and takes them to moksha.
He keeps them under his feet and makes them worship him.
I worship the devotees who praise the devotees of the god.
They are my friends and they will protect me
and forgive all my faults.

3086 நம்பனை ஞாலம் படைத்தவனை திரு மார்பனை
உம்பர் உலகினில் யார்க்கும் உணர்வு அரியான் தன்னை
கும்பி நரகர்கள் ஏத்துவரேலும் அவர் கண்டீர்
எம் பல் பிறப்பிடைதோறு எம் தொழுகுலம் தாங்களே (8)
3086. The god, our friend, created the world.
He embraces Lakshmi on his chest.
Even the gods in the sky do not understand the lord.
In all our births, we will worship even those
who stay in the most sinful hell if they praise the god.

3087 குலம் தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து எத்தனை
நலம் தான் இலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்
வலம் தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ணற்கு ஆள் என்று உள்
கலந்தார் அடியார் தம் அடியார் எம் அடிகளே (9)
3087. Even those who were born in castes lower than the four varnas,
those who are Chandalas without the respect of others
are gods for me if they are the devotees of his devotees
and if they keep in their hearts the highest sapphire-colored god
who carries a discus in his right hand.

3088 அடி ஆர்ந்த வையம் உண்டு ஆல் இலை அன்னவசம் செய்யும்
படி யாதும் இல் குழவிப்படி எந்தை பிரான் தனக்கு
அடியார் அடியார் தம் அடியார் அடியார் தமக்கு
அடியார் அடியார் தம் அடியார் அடியோங்களே (10)
3088. Our father, the faultless god,
swallowed the world as a dear child and slept on a banyan leaf.
As a dwarf he measured the world.
We are the devotees of the devotees of the devotees
of the devotees of his devotees.

3089 அடி ஓங்கு நூற்றுவர் வீய அன்று ஐவர்க்கு அருள்செய்த
நெடியோனைத் தென் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அடி ஆர்ந்த ஆயிரத்துள் இவை பத்து அவன் தொண்டர்மேல்
முடிவு ஆரக் கற்கிற்கில் சன்மம் செய்யாமை முடியுமே (11)
3089. Saḍagopan of southern Thirukuruhur
composed a thousand pasurams on the high god
who destroyed the hundred Kauravas
and gave his grace to the five Pandavas.
If you learn these ten poems that praise the devotees of the god
and worship them, you will not be born again.
-----------

திருவாய் மொழி - மூன்றாம் பத்து (எட்டாம் திருமொழி, 3090-3100)
கரணங்களும் தாமும் பெருவிடாய்ப்பட்டுப் பேசுதல்

3090 முடியானே மூவுலகும் தொழுது ஏத்தும் சீர்
அடியானே ஆழ் கடலைக் கடைந்தாய் புள் ஊர்
கொடியானே கொண்டல் வண்ணா அண்டத்து உம்பரில்
நெடியானே என்று கிடக்கும் என் நெஞ்சமே (1)
3090. My heart always praises you saying,
"You wear a crown.
All the three worlds worship you
and praise the fame of your feet that measured the world.
You churned the deep milky ocean.
You ride on an eagle and carry an eagle banner.
You have the color of a cloud.
You are the tallest among all the gods in heaven."

3091 நெஞ்சமே நீள் நகர் ஆக இருந்த என்
தஞ்சனே தண் இலங்கைக்கு இறையைச் செற்ற
நஞ்சனே ஞாலம் கொள்வான் குறள் ஆகிய
வஞ்சனே என்னும் எப்போதும் என் வாசகமே (2)
3091. You are my refuge and you stay in my heart.
You are the poison that burned cool Lanka.
You cheated Mahabali when you came as a dwarf
and took the earth from him.
My lips always wish to praise you.

3092 வாசகமே ஏத்த அருள் செய்யும் வானவர் தம்
நாயகனே நாள் இளம் திங்களைக் கோள் விடுத்து
வேய் அகம் பால் வெண்ணெய் தொடு உண்ட ஆன் ஆயர்
தாயவனே என்று தடவும் என் கைகளே (3)
3092. You are the lord of the gods in the sky.
You are praised by the sastras.
You removed the curse of the crescent moon.
You are the sweet child of a cowherd.
You stole butter from the huts of the cowherds.
My arms want to embrace you.

3093 கைகளால் ஆரத் தொழுது தொழுது உன்னை
வைகலும் மாத்திரைப் போதும் ஓர் வீடு இன்றி
பை கொள் பாம்பு ஏறி உறை பரனே உன்னை
மெய்கொள்ளக் காண விரும்பும் என் கண்களே (4)
3093. You are the highest god.
You sleep on the snake Adishesha.
I want to worship you every day and embrace you
with my arms without leaving you.
My eyes want to see you truly.

3094 கண்களால் காண வருங்கொல் என்று ஆசையால்
மண் கொண்ட வாமனன் ஏற மகிழ்ந்து செல்
பண் கொண்ட புள்ளின் சிறகு ஒலி பாவித்து
திண் கொள்ள ஓர்க்கும் கிடந்து என் செவிகளே (5)
3094. My eyes want to see him as he was
when he went as a dwarf to Mahabali to take over the earth
riding on Garuda, the eagle.
My ears want to hear the noise of the wings
of Garuḍa that sound like the singing of the Sama Veda.

3095 செவிகளால் ஆர நின் கீர்த்திக் கனி என்னும்
கவிகளே காலப் பண் தேன் உறைப்பத் துற்று
புவியின்மேல் பொன் நெடும் சக்கரத்து உன்னையே
அவிவு இன்றி ஆதரிக்கும் எனது ஆவியே (6)
3095. O lord, you carry a discus.
I want to recite the poems that are sweet as fruit and honey
which I composed to praise your fame.
You carry a golden discus and stay in the world
and my heart praises you.
Give me your grace on this earth.

3096 ஆவியே ஆர் அமுதே என்னை ஆளுடைத்
தூவி அம் புள் உடையாய் சுடர் நேமியாய்
பாவியேன் நெஞ்சம் புலம்பப் பலகாலும்
கூவியும் காணப்பெறேன் உன கோலமே (7)
3096. You are my soul.
You are sweet nectar.
You are my ruler and you ride on Garuda, the eagle.
You carry a shining discus.
I am a sinner.
Even though I have called for you a long time,
saying that I want see you, lonely in my heart,
I cannot see your form.

3097 கோலமே தாமரைக் கண்ணது ஓர் அஞ்சன
நீலமே நின்று எனது ஆவியை ஈர்கின்ற
சீலமே சென்று செல்லாதன முன் நிலாம்
காலமே உன்னை எந் நாள் கண்டுகொள்வனே? (8)
3097. You have a beautiful form.
You have lotus eyes.
Your body is the color of kohl.
You have a beautiful nature that attracts my soul.
You are the past, present and future.
When will the day come that I see you?

3098 கொள்வன் நான் மாவலி மூவடி தா என்ற
கள்வனே கஞ்சனை வஞ்சித்து வாணனை
உள் வன்மை தீர ஓர் ஆயிரம் தோள் துணித்த
புள் வல்லாய் உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே? (9)
3098. You, a thief, went to Mahabali
in the form of a dwarf and asked him,
"O Mahabali, give me three feet of your land
and I will take it," and you cheated him.
You deceived Kamsan.
You destroyed the valor of Vaaṇasuran and cut his thousand arms.
You are strong and you ride on an eagle.
When will the time come that I join with you?

3099 பொருந்திய மா மருதின் இடை போய எம்
பெருந்தகாய் உன் கழல் காணிய பேதுற்று
வருந்தி நான் வாசகமாலை கொண்டு உன்னையே
இருந்து இருந்து எத்தனை காலம் புலம்புவனே? (10)
3099. O great god,
when two Asurans came as large marudam trees,
you went between them and destroyed them.
I long to see your feet decorated with anklets.
How long can I sing your praise,
prattling with my garlands of words
and staying forever in this world?

3100 புலம்பு சீர்ப் பூமி அளந்த பெருமானை
நலம் கொள் சீர் நன் குருகூர்ச் சடகோபன்சொல்
வலம் கொண்ட ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து
இலங்கு வான் யாவரும் ஏறுவர் சொன்னாலே (11)
3100. Saḍagopan of flourishing Thirukuruhur
composed a thousand poems on the lord.
The god measured the world
and all creatures prattle in their desire to see him.
If devotees learn and recite these ten poems
they will reach the highest heaven.
---------

திருவாய் மொழி - மூன்றாம் பத்து (ஒன்பதாம் திருமொழி, 3101-3111)
மானிடரைப் பாடாது மாதவனை ஏத்தும் எனல்

3101 சொன்னால் விரோதம் இது ஆகிலும் சொல்லுவான் கேண்மினோ
என் நாவில் இன் கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்
தென்னா தெனா என்று வண்டு முரல் திருவேங்கடத்து
என் ஆனை என் அப்பன் எம் பெருமான் உளனாகவே (1)
3101. If I say this it may be a mistake,
but I will still say it, listen.
I won’t give anyone any sweet poems
that I composed myself for the lord.
In my poems I will only praise my dear father
of Srirangam where the bees sing, "tenna, tenna."
This I promise.

3102 உளனாகவே எண்ணி தன்னை ஒன்றாக தன் செல்வத்தை
வளனா மதிக்கும் இம் மானிடத்தைக் கவி பாடி என்
குளன் ஆர் கழனி சூழ் கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே
உளனாய எந்தையை எந்தை பெம்மானை ஒழியவே? (2)
3102. My father stays in Thirukurungudi
abundant with ponds and flourishing with fields.
What is the benefit of composing poems on people
who think that wealth is the only important thing in life
and wealth is the only thing that they need?
They don’t understand that our dear god, our father,
is the only true thing in the world.

3103 ஒழிவு ஒன்று இல்லாத பல் ஊழிதோறு ஊழி நிலாவப்போம்
வழியைத் தரும் நங்கள் வானவர் ஈசனை நிற்கப் போய்
கழிய மிக நல்லவான் கவி கொண்டு புலவீர்காள்
இழியக் கருதி ஓர் மானிடம் பாடல் என் ஆவதே? (3)
3103. O poets,
why do you compose wonderful poems on common people
and make yourself cheap?
He is the lord of the sky
and shows you the way to reach moksha
age after age unceasingly.

3104 என் ஆவது எத்தனை நாளைக்குப் போதும் புலவீர்காள்
மன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பெரும் பொருள்?
மின் ஆர் மணி முடி விண்ணவர் தாதையைப் பாடினால்
தன்னாகவே கொண்டு சன்மம் செய்யாமையும் கொள்ளுமே (4)
3104. O poets, think!
People do not live forever.
How long will the wealth last that you receive
composing poems praising them?
He is ornamented with a shining diamond crown.
If you praise and sing the greatness
of the father of the gods in the sky
he will accept you as his devotee
and give you his grace so you will not be born again.

3105 கொள்ளும் பயன் இல்லை குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை
வள்ளல் புகழ்ந்து நும் வாய்மை இழக்கும் புலவீர்காள்
கொள்ளக் குறைவு இலன் வேண்டிற்று எல்லாம் தரும் கோது இல் என்
வள்ளல் மணிவண்ணன் தன்னைக் கவி சொல்ல வம்மினோ (5)
3105. O poets,
you praise wicked people to get their corrupt wealth
and lose your sincerity. This is a useless thing to do.
God is generous and however much wealth he gives,
it will never become less.
He will give whatever you want.
He is faultless. He has the color of sapphire.
Come, compose poems praising the generous god.

3106 வம்மின் புலவீர் நும் மெய் வருத்திக் கைசெய்து உய்ம்மினோ
இம் மன் உலகினில் செல்வர் இப்போது இல்லை நோக்கினோம்
நும் இன் கவி கொண்டு நும் நும் இட்டா தெய்வம் ஏத்தினால்
செம் மின் சுடர் முடி என் திருமாலுக்குச் சேருமே (6)
3106. O poets, come.
You work hard and live.
You know, the rich will not be rich always.
If you compose wonderful poems on the gods you like,
still they will go to Thirumaal,
ornamented with a shining beautiful crown.

3107 சேரும் கொடை புகழ் எல்லை இலானை ஓர் ஆயிரம்
பேரும் உடைய பிரானை அல்லால் மற்று யான் கிலேன்
மாரி அனைய கை மால் வரை ஒக்கும் திண் தோள் என்று
பாரில் ஓர் பற்றையைப் பச்சைப் பசும் பொய்கள் பேசவே (7)
3107. There is no limit to his generosity and fame.
He is praised with a thousand names.
I will not praise anyone but him.
If anyone in this world praises a miser saying,
"You are as generous as the rain
and your arms are strong as mountains,"
that is just a lie.

3108 வேயின் மலிபுரை தோளி பின்னைக்கு மணாளனை
ஆய பெரும் புகழ் எல்லை இலாதன பாடிப்போய்
காயம் கழித்து அவன் தாள் இணைக்கீழ்ப் புகும் காதலன்
மாய மனிசரை என் சொல்ல வல்லேன் என் வாய்கொண்டே? (8)
3108. Nappinnai has beautiful bamboo-like arms
and he is her beloved.
He has boundless fame.
I want to sing his praise and worship his feet
until I leave this world.
My mouth will never praise the deceiving people of this world.

3109 வாய்கொண்டு மானிடம் பாட வந்த கவியேன் அல்லேன்
ஆய்கொண்ட சீர் வள்ளல் ஆழிப் பிரான் எனக்கே உளன்
சாய் கொண்ட இம்மையும் சாதித்து வானவர் நாட்டையும்
நீ கண்டுகொள் என்று வீடும் தரும் நின்றுநின்றே (9)
3109. I do not want to praise people in my poems.
He is a generous lord and he carries a discus.
He grazes the cows and he alone belongs to me.
He says, "I will give you a happy life in this world
and you will attain moksha," and he grants me moksha.

3110 நின்றுநின்று பல நாள் உய்க்கும் இவ் உடல் நீங்கிப்போய்
சென்று சென்று ஆகிலும் கண்டு சன்மம் கழிப்பான் எண்ணி
ஒன்றிஒன்றி உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு
என்றும் என்றும் இனி மற்றொருவர் கவி ஏற்குமே? (10)
3110. This body stays in the world for many days
and after it leaves it returns to the world, taking many births.
I want only to praise him and compose poems about him
and he will not accept poems composed by anyone but me.

3111 ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் தனக்கு
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து
ஏற்கும் பெரும் புகழ் சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே (11)
3111. Saḍagopan of Thirukuruhur is praised by all.
He composed a thousand pasurams on the lord
who is praised by all the gods in the sky.
If devotees learn these ten famous poems
and know them well they will not be born again in this world.
------------

திருவாய் மொழி - மூன்றாம் பத்து (பத்தாம் திருமொழி, 3112-3122)
திருமால் சீர் பரவப்பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை எனல்

3112 சன்மம் பலபல செய்து வெளிப்பட்டு
       சங்கொடு சக்கரம் வில்
ஒண்மை உடைய உலக்கை ஒள் வாள்
       தண்டு கொண்டு புள் ஊர்ந்து உலகில்
வன்மை உடைய அரக்கர் அசுரரை
       மாளப் படை பொருத
நன்மை உடையவன் சீர் பரவப் பெற்ற
       நான் ஓர் குறைவு இலனே (1)
3112. He came to the earth in many forms.
He carries a conch, discus, bow, shining sword and a strong club.
He rides on an eagle.
He fought with the strong Asurans, killed them in battle
and saved the earth from its trials.
I am his devotee and I praise him
and I will not have any difficulty in my life.

3113 குறைவு இல் தடங் கடல் கோள் அரவு ஏறி தன்
       கோலச் செந்தாமரைக்கண்
உறைபவன் போல ஓர் யோகு புணர்ந்த ஒளி மணி
       வண்ணன் கண்ணன்
கறை அணி மூக்கு உடைப் புள்ளைக் கடாவி அசுரரைக்
       காய்ந்த அம்மான்
நிறை புகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும்
       யான் ஒரு முட்டு இலனே (2)
3113. Kaṇṇan, the shining sapphire-colored god
sleeps closing his beautiful lotus eyes
as if he were performing yoga
on the snake Adishesha on the faultless wide ocean.
He conquered the Asurans
riding on Garuda whose beautiful beak is dark.
I praise his great fame and sing and dance
and I will have no trouble in my life.

3114 முட்டு இல் பல் போகத்து ஒரு தனி நாயகன்
       மூவுலகுக்கு உரிய
கட்டியை தேனை அமுதை நன்பாலை
       கனியை கரும்பு தன்னை
மட்டு அவிழ் தண் அம் துழாய் முடியானை
       வணங்கி அவன் திறத்துப்
பட்ட பின்னை இறையாகிலும் யான் என்
       மனத்துப் பரிவு இலனே (3)
3114. He is endless joy.
No one is better than he or equal to him.
He is as sweet as jaggery, honey, nectar, good milk,
fruit and sugarcane.
In his hair he wears a beautiful cool thulasi garland
that drips with honey.
Since I became his slave my mind has never been apart from him.

3115 பரிவு இன்றி வாணனைக் காத்தும் என்று அன்று
       படையொடும் வந்து எதிர்ந்த
திரிபுரம் செற்றவனும் மகனும் பின்னும்
       அங்கியும் போர் தொலைய
பொரு சிறைப் புள்ளைக் கடாவிய மாயனை
       ஆயனை பொன் சக்கரத்து
அரியினை அச்சுதனைப் பற்றி யான்
       இறையேனும் இடர் இலனே (4)
3115. Along with Shiva, the destroyer of three forts,
his son Karthikeya and Agni,
Vaṇasuran came to fight with him and they all lost and fled,
but Maayavan gave protection to Vaṇasuran.
The lord carries a golden discus and rides on Garuḍa
who fights with his wings.
I embraced the cowherd, the lion, Achudan
and I will have no trouble in my life.

3116 இடர் இன்றியே ஒரு நாள் ஒரு போழ்தில் எல்லா
       உலகும் கழிய
படர் புகழ்ப் பார்த்தனும் வைதிகனும் உடன் ஏற
       திண் தேர் கடவி
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில்
       வைதிகன் பிள்ளைகளை
உடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி
       ஒன்றும் துயர் இலனே (5)
3116. He drove the chariot and went to heaven
without any difficulties, crossing all the worlds with famous Arjuna
and a Brahmin who had lost his children.
He brought the Brahmin’s children back to earth in one day.
He shines like a bright light and I am his slave.
No trouble will come to me in this world.

3117 துயர் இல் சுடர் ஒளி தன்னுடைச் சோதி
       நின்ற வண்ணம் நிற்கவே
துயரில் மலியும் மனிசர் பிறவியில்
       தோன்றி கண் காண வந்து
துயரங்கள் செய்து தன் தெய்வநிலை உலகில்
       புக உய்க்கும் அம்மான்
துயரம் இல் சீர்க் கண்ணன் மாயன் புகழ் துற்ற
       யான் ஓர் துன்பம் இலனே (6)
3117. He shines like a bright light that never dims.
He came to the earth in the form of a man
and experienced great sorrow.
Like a mother he gave his divine grace to the earth.
The Maayan, the superior god, has no sorrow, only excellence.
I worship him and I will never know trouble.

3118 துன்பமும் இன்பமும் ஆகிய செய்வினை
       ஆய் உலகங்களும் ஆய்
இன்பம் இல் வெம் நரகு ஆகி இனிய நல் வான்
       சுவர்க்கங்களும் ஆய்
மன் பல் உயிர்களும் ஆகி பலபல
       மாய மயக்குக்களால்
இன்புறும் இவ் விளையாட்டு உடையானைப் பெற்று
       ஏதும் அல்லல் இலனே (7)
3118. He is sorrow and happiness.
He gives us all karma.
He is all the worlds,
the cruel hell that has no joy
and sweet moksha in the sky.
He is all the creatures that survive on this earth.
He plays with this whole illusory world and enjoys himself.
I am his devotee and I will never know trouble.

3119 அல்லல் இல் இன்பம் அளவு இறந்து எங்கும்
       அழகு அமர் சூழ் ஒளியன்
அல்லி மலர் மகள் போக மயக்குக்கள்
       ஆகியும் நிற்கும் அம்மான்
எல்லை இல் ஞானத்தன் ஞானம் அஃதே கொண்டு
       எல்லாக் கருமங்களும் செய்
எல்லை இல் மாயனை கண்ணனைத் தாள் பற்றி
       யான் ஓர் துக்கம் இலனே (8)
3119. He is joy without any sorrow.
He is unlimited beauty and a bright light.
Lakshmi on a lotus is with him.
He is our mother and he is an illusion.
He has limitless wisdom.
He does all the actions in the world.
He is Maayan and Kaṇṇan.
I worship his feet and will never know trouble.

3120 துக்கம் இல் ஞானச் சுடர் ஒளி மூர்த்தி
       துழாய் அலங்கல் பெருமான்
மிக்க பல் மாயங்களால் விகிர்தம் செய்து
       வேண்டும் உருவு கொண்டு
நக்க பிரானோடு அயன் முதலாக எல்லாரும்
       எவையும் தன்னுள்
ஒக்க ஒடுங்க விழுங்க வல்லானைப் பெற்று
       ஒன்றும் தளர்வு இலனே (9)
3120. He has no sorrow.
He is the bright shining form of wisdom.
My dear god is decorated with a thulasi garland.
He took many forms and did many magical deeds.
A strong one, he swallowed and keeps in his body
Shiva who laughs, Brahma,
all the other gods and people and all creatures.
I am his slave and I will have no difficulty in my life.

3121 தளர்வு இன்றியே என்றும் எங்கும் பரந்த
       தனிமுதல் ஞானம் ஒன்றாய்
அளவு உடை ஐம்புலன்கள் அறியாவகையால்
       அருவு ஆகி நிற்கும்
வளர் ஒளி ஈசனை மூர்த்தியை பூதங்கள்
       ஐந்தை இரு சுடரை
கிளர் ஒளி மாயனை கண்ணனைத் தாள் பற்றி
       யான் என்றும் கேடு இலனே (10)
3121. He, the unique omnipresent god is wise and tireless.
He is formless and the five senses do not know him.
He is a light that spreads everywhere.
He is the five elements of earth, water, fire, sky and wind.
He is the moon and sun.
He is shining Maayan and Kaṇṇan.
I worship his feet and I will never have trouble.

3122 கேடு இல் விழுப் புகழ்க் கேசவனை
       குருகூர்ச் சடகோபன் சொன்ன
பாடல் ஓர் ஆயிரத்துள் இவை ஒரு பத்தும்
       பயிற்ற வல்லார்கட்கு அவன்
நாடும் நகரமும் நன்குடன் காண
       நலனிடை ஊர்தி பண்ணி
வீடும் பெறுத்தித் தன் மூவுலகுக்கும்
       தரும் ஒரு நாயகமே (11)
3122. Saḍagopan of Thirukuruhur
composed a thousand poems on Kesavan,
the famous faultless god.
O devotees, learn and recite these ten poems
and he will give you cities, countries, chariots and moksha
and make you the kings of all the three worlds.
--------

நம்மாழ்வார் திருவாய் மொழி - நான்காம் பத்து (3123-3232)
Divyaprabandham - Thiruvaymozhi -Naangaam Pathu.

திருவாய் மொழி - நான்காம் பத்து ( முதல் திருமொழி, 3123-3133)
செல்வம் நிலையாமையும் திருமாலடிமையின் நிலைபேறும்

3123 ஒரு நாயகமாய் ஓட உலகு உடன் ஆண்டவர்
கரு நாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்
திருநாரணன் தாள் காலம்பெறச் சிந்தித்து உய்ம்மினோ (1)
3123. The matchless kings who ruled this world
will become beggars
if they lose in a war with their enemies.
When they beg for food
wicked dogs will grab their begging pots.
Think of the feet of the divine Narayaṇan.
That is the only way to escape
the troubles of this world.

3124 உய்ம்மின் திறைகொணர்ந்து என்று உலகு ஆண்டவர் இம்மையே
தம் இன்சுவை மடவாரைப் பிறர் கொள்ளத் தாம் விட்டு
வெம் மின் ஒளி வெயில் கானகம் போய்க் குமைதின்பர்கள்
செம்மின் முடித் திருமாலை விரைந்து அடி சேர்மினோ (2)
3124. The rich kings who ruled this earth
and ordered their chieftains,
"Give tribute and live!"
will leave the women they enjoyed
if their enemies take their land.
They will go to a hot forest, hide there and suffer.
You should at once worship the feet of Thirumaal
adorned with shining beautiful crowns and live.
That is the only way to escape the troubles of this world.

3125 அடி சேர் முடியினர் ஆகி அரசர்கள் தாம் தொழ
இடி சேர் முரசங்கள் முற்றத்து இயம்ப இருந்தவர்
பொடி சேர் துகளாய்ப் போவர்கள் ஆதலில் நொக்கெனக்
கடி சேர் துழாய் முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ (3)
3125. There are kings that their chieftains bow to,
touching their feet, kings whose drums
resting in their courtyards sound like thunder—
yet they may lose everything and become like dust.
At once, you should think of the feet of Kaṇṇan,
adorned with a fragrant thulasi garland and live.
That is the only way to escape the troubles of this world.

3126 நினைப்பான் புகில் கடல் எக்கலின் நுண்மணலில் பலர்
எனைத்தோர் உகங்களும் இவ் உலகு ஆண்டு கழிந்தவர்
மனைப்பால் மருங்கு அற மாய்தல் அல்லால் மற்றுக் கண்டிலம்
பனைத் தாள் மத களிறு அட்டவன் பாதம் பணிமினோ (4)
3126. We know that even kings
who ruled this world for many years and yugas
and are more than the grains of sand on the seashore
are brought low and have no house to live in.
He killed the rutting elephant
that had legs as strong as palm trees.
Worship his feet and you will be saved.

3127 பணிமின் திருவருள் என்னும் அம் சீதப் பைம் பூம் பள்ளி
அணி மென் குழலார் இன்பக் கலவி அமுது உண்டார்
துணி முன்பு நால பல் ஏழையர் தாம் இழிப்ப செல்வர்
மணி மின்னு மேனி நம் மாயவன் பேர் சொல்லி வாழ்மினோ (5)
3127. Even kings who enjoy women with soft beautiful hair
lying on lovely, cool beds and begging them,
"Give us your grace!"
may lose all their wealth and their clothes
and wander as women shame them because they are poor.
Praise the names of Maayavan
the shining sapphire-colored god and live.
That is the only way to escape the troubles of this world.

3128 வாழ்ந்தார்கள் வாழ்ந்தது மா மழை மொக்குளின் மாய்ந்து மாய்ந்து
ஆழ்ந்தார் என்று அல்லால் அன்று முதல் இன்று அறுதியா
வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர் என்பது இல்லை நிற்குறில்
ஆழ்ந்து ஆர் கடற்பள்ளி அண்ணல் அடியவர் ஆமினோ (6)
3128. We all know that we do not live forever on this earth
and die like the bubbles
that arise when rain falls on the earth.
No one can say that for all their life
they were strong, without problems or sickness.
The highest god sleeps on the ocean.
If you want to survive, become his devotee.

3129 ஆம் இன் சுவை அவை ஆறோடு அடிசில் உண்டு ஆர்ந்தபின்
தூ மென் மொழி மடவார் இரக்கப் பின்னும் துற்றுவார்
ஈமின் எமக்கு ஒரு துற்று என்று இடறுவர் ஆதலின்
கோமின் துழாய் முடி ஆதி அம் சோதி குணங்களே (7)
3129. The rich may eat food with all the six tastes
and then eat more when their beloved beautiful women
ask them with lovely soft words.
They may even become poor and beg those women saying,
"Give me some food!"
If you want to be saved
praise the excellence of the ancient shining god
whose head wears a thulasi garland.

3130 குணம் கொள் நிறை புகழ் மன்னர் கொடைக்கடன் பூண்டிருந்து
இணங்கி உலகு உடன் ஆக்கிலும் ஆங்கு அவனை இல்லார்
மணம் கொண்ட போகத்து மன்னியும் மீள்வர்கள் மீள்வு இல்லை
பணம் கொள் அரவு அணையான் திருநாமம் படிமினோ (8)
3130. There are generous kings
that rule the world happily as people praise them abundantly.
If they do not think of the lord,
they will lose all their wealth and kingdoms.
The lord sleeps on the snake bed on the ocean.
Praise his divine names—
that is the only way to escape the troubles of this world.

3131 படி மன்னு பல் கலன் பற்றோடு அறுத்து ஐம்புலன் வென்று
செடி மன்னு காயம் செற்றார்களும் ஆங்கு அவனை இல்லார்
குடி மன்னும் இன் சுவர்க்கம் எய்தியும் மீள்வர்கள் மீள்வு இல்லை
கொடி மன்னு புள் உடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ (9)
3131. Even those who have renounced
the desires of this world and the wealth of the earth,
controlling the desires of their five senses
and doing tapas ignoring their bodies,
even if they go to heaven
will be born on the earth if they do not think of the god.
The highest god carries the eagle banner.
Worship the feet of the highest god
if you do not want to be born again
and would reach Vaikuṇṭam, the heaven of the god.

3132 குறுக மிக உணர்வத்தொடு நோக்கி எல்லாம் விட்ட
இறுகல் இறப்பு என்னும் ஞானிக்கும் அப் பயன் இல்லையேல்
சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம் பின்னும் வீடு இல்லை
மறுகல் இல் ஈசனைப் பற்றி விடாவிடில் வீடு அஃதே (10)
3132. Sages may control all their desires for the world
and think only of moksha,
but they will not attain Vaikuṇṭam
unless they worship the faultless god and hold on to him.
They may think of the god with love
but that will not give them his grace
or let them not be born again.
Moksha is to approach the faultless god
and grasp him without leaving him.

3133 அஃதே உய்யப் புகும் ஆறு என்று கண்ணன் கழல்கள் மேல்
கொய் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்
செய் கோலத்து ஆயிரம் சீர்த் தொடைப் பாடல் இவை பத்தும்
அஃகாமல் கற்பவர் ஆழ் துயர் போய் உய்யற்பாலரே (11)
3133. Saḍagopan of Thirukuruhur
surrounded by blooming clusters of flowers
composed a thousand beautiful poems
proclaiming that worshiping the feet of Kaṇṇan
is the best path to reach Vaikuṇṭam.
If devotees learn and recite these ten songs
they will have no troubles and will survive on this earth.
---------

திருவாய் மொழி - நான்காம் பத்து ( இரண்டாம் திருமொழி, 3134-3144)
காதல் கைகூடாது வருந்தும் தலைமகள் நிலைகண்டு தாய் இரங்கல்

3134 பாலன் ஆய் ஏழ் உலகு உண்டு பரிவு இன்றி
ஆல் இலை அன்னவசம் செய்யும் அண்ணலார்
தாள் இணைமேல் அணி தண் அம் துழாய் என்றே
மாலுமால் வல்வினையேன் மட வல்லியே (1)
3134. Her mother says,
"He swallowed all the seven worlds
and slept on a banyan leaf without any worry
when he was a baby.
My innocent vine-like daughter
is fascinated with the thulasi garland
that adorns the two feet of the god and wants it.
How can she get that thulasi garland?
Surely, I must have bad karma—
what can I do to make my daughter happy?"

3135 வல்லி சேர் நுண் இடை ஆய்ச்சியர் தம்மொடும்
கொல்லைமை செய்து குரவை பிணைந்தவர்
நல் அடிமேல் அணி நாறு துழாய் என்றே
சொல்லுமால் சூழ் வினையாட்டியேன் பாவையே (2)
3135. Her mother says,
"The lord dances the kuravai dance
with cowherd girls with thin vine-like waists
and plays mischievously with them.
My beautiful doll-like daughter
says that she wants the fragrant pretty thulasi garland
that adorns his divine feet.
I have done bad karma
and do not realize that he is god
and his garland is not easy to get.
What can I do?"

3136 பா இயல் வேத நல் மாலை பல கொண்டு
தேவர்கள் மா முனிவர் இறைஞ்ச நின்ற
சேவடிமேல் அணி செம் பொன் துழாய் என்றே
கூவுமால் கோள் வினையாட்டியேன் கோதையே (3)
3136. Her mother says,
"He measured the world with his feet
as the gods and the great sages worshiped him,
chanting the Vedas and adorning him with many fresh garlands.
My daughter, wearing a garland in her hair,
worries and says, ‘Get me the pure thulasi garland
precious as gold that adorns the divine feet of the highest lord.’
I have done bad karma to see my daughter worry like this.
What can I do?"

3137 கோது இல வண் புகழ் கொண்டு சமயிகள்
பேதங்கள் சொல்லிப் பிதற்றும் பிரான் பரன்
பாதங்கள் மேல் அணி பைம் பொன் துழாய் என்றே
ஓதுமால் ஊழ்வினையேன் தடந் தோளியே (4)
3137. Her mother says,
"My daughter has beautiful round arms.
She says always,
‘Bring me the fresh thulasi garland
precious as gold on the feet of the highest lord
whose devotees praise his faultless wonderful fame,
prattling on about the many differences that other religions have.’
I have done bad karma. What can I do?"

3138 தோளி சேர் பின்னை பொருட்டு எருது ஏழ் தழீஇக்
கோளியார் கோவலனார் குடக் கூத்தனார்
தாள் இணைமேல் அணி தண் அம் துழாய் என்றே
நாளும் நாள் நைகின்றதால் என் தன் மாதரே (5)
3138. Her mother says,
"My lovely daughter worries every day and says,
‘He fought and conquered seven bulls
for the sake of embracing the arms of Nappinnai.
He grazes the cows.
He dances the Kudakuthu dance.
Bring me the beautiful fresh thulasi garland
on the feet of the lord.’"

3139 மாதர் மா மண்மடந்தைபொருட்டு ஏனம் ஆய்
ஆதி அம் காலத்து அகல் இடம் கீண்டவர்
பாதங்கள்மேல் அணி பைம் பொன் துழாய் என்றே
ஓதும் மால் எய்தினள் என் தன் மடந்தையே (6)
3139. Her mother says,
"My lovely daughter has fallen in love with the god
and says always,
‘When an Asuran took the beautiful earth goddess,
the lord in ancient times
took the form of a boar, split open the wide earth
and brought her back.
Bring me the fresh thulasi garland precious as gold
on the feet of the lord.’"

3140 மடந்தையை வண் கமலத் திருமாதினை
தடம் கொள் தார் மார்பினில் வைத்தவர் தாளின்மேல்
வடம் கொள் பூம் தண் அம் துழாய் மலர்க்கே இவள்
மடங்குமால் வாள் நுதலீர்! என் மடக்கொம்பே (7)
3140. Her mother says,
"The lord keeps beautiful Lakshmi on a lovely lotus
on his wide chest that is decorated with thulasi garland.
My daughter lovely as a vine is fascinated with the lord
and longs for the fresh thulasi garland on his feet.
O girls! You have shining foreheads!
See my beautiful daughter."

3141 கொம்பு போல் சீதைபொருட்டு இலங்கை நகர்
அம்பு எரி உய்த்தவர் தாள் இணைமேல் அணி
வம்பு அவிழ் தண் அம் துழாய் மலர்க்கே இவள்
நம்புமால் நான் இதற்கு என் செய்கேன் நங்கைமீர்? (8)
3141. Her mother says,
"My daughter longs for the fresh beautiful thulasi garland
that spreads fragrance and adorns his feet.
He shot his arrows and burnt Lanka
for his wife Sita, beautiful as a vine.
O lovely girls, I am worried.
What can I do?"

3142 நங்கைமீர் நீரும் ஓர் பெண் பெற்று நல்கினீர்
எங்ஙனே சொல்லுகேன் யான் பெற்ற ஏழையை?
சங்கு என்னும் சக்கரம் என்னும் துழாய் என்னும்
இங்ஙனே சொல்லும் இராப் பகல் என்செய்கேன்? (9)
3142. Her mother says,
"O friends, you have also have given birth to daughters.
What can I say about the innocent one that I gave birth to?
Night and day, she says, ‘Conch, discus, thulasi garland….’
This is all she says—what can I do?"

3143 என் செய்கேன்? என்னுடைப் பேதை என் கோமளம்
என் சொல்லும் என் வசமும் அல்லள் நங்கைமீர்
மின் செய் பூண் மார்பினன் கண்ணன் கழல் துழாய்
பொன் செய் பூண் மென் முலைக்கு என்று மெலியுமே (10)
3143. Her mother says,
"What can I do?
She is my innocent daughter, my precious jewel.
Whatever I say, she doesn’t listen.
She doesn’t come near me either.
O friends, she says,
‘He is adorned with shining ornaments.
I want the thulasi garland on the feet of Kannan
to adorn my soft breasts ornamented with golden jewels.’"

3144 மெலியும் நோய் தீர்க்கும் நம் கண்ணன் கழல்கள்மேல்
மலி புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஒலி புகழ் ஆயிரத்து இப் பத்தும் வல்லவர்
மலி புகழ் வானவர்க்கு ஆவர் நல் கோவையே (11)
3144. Saḍagopan of famous and rich Thirukuruhur
composed a thousand musical poems praising Kaṇṇan’s feet
that remove the sicknesses that afflict people.
If devotees learn and recite these ten poems
they will join the group of gods in the sky.
---------

திருவாய் மொழி - நான்காம் பத்து ( மூன்றாம் திருமொழி, 3145-3155)
எம்பெருமானது சேர்க்கையால் பெற்ற இன்பம்

3145 கோவை வாயாள்பொருட்டு ஏற்றின்
       எருத்தம் இறுத்தாய் மதிள் இலங்கைக்
கோவை வீயச் சிலை குனித்தாய்
       குல நல் யானை மருப்பு ஒசித்தாய்
பூவை வீயா நீர் தூவிப்
       போதால் வணங்கேனேலும் நின்
பூவை வீயாம் மேனிக்குப்
       பூசும் சாந்து என் நெஞ்சமே (1)
3145. You fought with seven bulls
to marry Nappinnai whose mouth is red as a kovai fruit.
You shot your bow to destroy the king Ravana of Lanka
surrounded with strong forts.
You broke the tusks of the strong elephant Kuvalayabeeḍam.
Even though I do not sprinkle flowers and water
on your feet and worship you
my heart is the sandal paste
that I smear on your soft flower-like body.

3146 பூசும் சாந்து என் நெஞ்சமே
       புனையும் கண்ணி எனதுடைய
வாசகம் செய் மாலையே
       வான் பட்டு ஆடையும் அஃதே
தேசம் ஆன அணிகலனும்
       என் கைகூப்புச் செய்கையே
ஈசன் ஞாலம் உண்டு உமிழ்ந்த
       எந்தை ஏக மூர்த்திக்கே (2)
3146. The sandal paste that I smear on you is my heart.
The garland with which I decorate you is made only of my words
and the silk clothes for you are only my poems.
The shining ornaments for you
are the way I fold my hands and worship you.
You are the lord, the matchless god
and you swallowed the earth and spit it out.

3147 ஏக மூர்த்தி இரு மூர்த்தி
       மூன்று மூர்த்தி பல மூர்த்தி
ஆகி ஐந்து பூதம் ஆய்
       இரண்டு சுடர் ஆய் அருவு ஆகி
நாகம் ஏறி நடுக் கடலுள்
       துயின்ற நாராயணனே உன்
ஆகம் முற்றும் அகத்து அடக்கி
       ஆவி அல்லல் மாய்த்ததே (3)
3147. O Narayaṇa!
You are the only god.
You are the two gods—the sun and the moon.
You are the three gods—Shiva, Vishnu and Brahma
and you are all the gods.
You are the five elements—water, fire, wind, earth and sky.
You are formless.
You climbed on the heads of Kalingan and danced.
You sleep on the middle of the ocean.
I kept you in my heart and all my troubles went away.

3148 மாய்த்தல் எண்ணி வாய் முலை
       தந்த மாயப் பேய் உயிர்
மாய்த்த ஆய மாயனே வாமனனே மாதவா
பூத் தண் மாலை கொண்டு உன்னைப்
       போதால் வணங்கேனேலும் நின்
பூத் தண் மாலை நெடு முடிக்குப்
       புனையும் கண்ணி எனது உயிரே (4)
3148. You are the Maayan.
You drank the devil Putana’s milk and killed her.
You are Vamanan. You are Madhavan.
Even if I do not worship you with cool flower garlands,
my life is the cool beautiful garland
that I give you to adorn your tall crown.

3149 கண்ணி எனது உயிர் காதல்
       கனகச் சோதி முடி முதலா
எண் இல் பல் கலன்களும்
       ஏலும் ஆடையும் அஃதே
நண்ணி மூவுலகும்
       நவிற்றும் கீர்த்தியும் அஃதே
கண்ணன் எம் பிரான் எம்மான்
       கால சக்கரத்தானுக்கே (5)
3149. My life is the garland that adorns you.
My love is a golden light for you.
Your crown, countless ornaments, beautiful clothes
are all only my love.
The praises that all the people of the three worlds utter
are my love for you.
You are our dear god Kaṇṇan and you carry a discus in your hands.
Give your grace to the world.

3150 கால சக்கரத்தொடு வெண்
       சங்கம் கை ஏந்தினாய்
ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த
       நாராயணனே என்று என்று
ஓலம் இட்டு நான் அழைத்தால்
       ஒன்றும் வாராயாகிலும்
கோலம் ஆம் என் சென்னிக்கு உன்
       கமலம் அன்ன குரைகழலே (6)
3150. Even though you do not come when I shout out,
calling you and saying,
"O Narayana! You carry a discus
and a white conch in your hands.
You swallowed the world and spit it out,"
I keep your beautiful sounding anklets
that you wear on your lotus feet
as an ornament on my head.

3151 குரை கழல்கள் நீட்டி மண்
       கொண்ட கோல வாமனா
குரை கழல் கைகூப்புவார்கள்
       கூட நின்ற மாயனே
விரை கொள் பூவும் நீரும் கொண்டு
       ஏத்தமாட்டேனேலும் உன்
உரை கொள் சோதித் திரு உருவம்
       என்னது ஆவி மேலதே (7)
3151. You are the beautiful dwarf
and you measured the worlds with your long strides.
You are the Maayavan.
When devotees fold their hands
and worship your feet ornamented with sounding anklets
you stay with them.
Even though I do not worship you with water and fragrant flowers,
your divine shining form that is praised by the Vedas is in my heart.

3152 என்னது ஆவி மேலையாய்
       ஏர் கொள் ஏழ் உலகமும்
துன்னி முற்றும் ஆகி நின்ற
       சோதி ஞான மூர்த்தியாய்
உன்னது என்னது ஆவியும்
       என்னது உன்னது ஆவியும்
இன்ன வண்ணமே நின்றாய்
       என்று உரைக்க வல்லேனே? (8)
3152. You love my soul.
You are the wise form that is the bright light
that shines over all the seven glorious worlds.
My soul is yours and your soul is mine.
How can I describe you and tell what your nature is?

3153 உரைக்க வல்லேன் அல்லேன் உன்
       உலப்பு இல் கீர்த்தி வெள்ளத்தின்
கரைக்கண் என்று செல்வன் நான்?
       காதல் மையல் ஏறினேன்
புரைப்பு இலாத பரம்பரனே
       பொய் இலாத பரஞ்சுடரே
இரைத்து நல்ல மேன்மக்கள்
       ஏத்த யானும் ஏத்தினேன் (9)
3153. I cannot describe you.
When will I reach the bank of the flood of your unlimited fame?
I am filled with love for you.
You are the faultless highest god.
You are the divine light that has no falsehood.
All good devotees praise you loudly and I also praise you.

3154 யானும் ஏத்தி ஏழ் உலகும்
       முற்றும் ஏத்தி பின்னையும்
தானும் ஏத்திலும் தன்னை
       ஏத்த ஏத்த எங்கு எய்தும்?
தேனும் பாலும் கன்னலும்
       அமுதும் ஆகித் தித்திப்ப
யானும் எம் பிரானையே
       ஏத்தினேன் யான் உய்வானே (10)
3154. I praise him and all the seven worlds praise him,
yet even if all praise him
they do not utter enough words to praise his limitless fame.
I praise him because he is as sweet as honey,
milk, jaggery, and nectar for me. I will be saved.

3155 உய்வு உபாயம் மற்று இன்மை தேறி
       கண்ணன் ஒண் கழல்கள் மேல்
செய்ய தாமரைப் பழனத்
       தென்னன் குருகூர்ச் சடகோபன்
பொய் இல் பாடல் ஆயிரத்துள்
       இவையும் பத்தும் வல்லார்கள்
வையம் மன்னி வீற்றிருந்து
       விண்ணும் ஆள்வர் மண்ணூடே (11)
3155. Saḍagopan of Thirukuruhur of the southern kingdom
surrounded by fields blooming with beautiful lotuses
composed a thousand faultless poems
praising the feet of the god decorated with shining anklets.
Worshiping his feet is the way to be saved.
If devotees learn and recite these ten poems
they will stay in this world happily and also rule heaven.
-------

திருவாய் மொழி - நான்காம் பத்து (நான்காம் திருமொழி, 3156-3166)
பிரிவு ஆற்றாது போலிப் பொருள்களைக் கண்டு வருந்தும் தலைவியின் நிலையைத் தாய் உரைத்தல்

3156 மண்ணை இருந்து துழாவி
       வாமனன் மண் இது என்னும்
விண்ணைத் தொழுது அவன் மேவு
       வைகுந்தம் என்று கை காட்டும்
கண்ணை உள்நீர் மல்க நின்று
       கடல்வண்ணன் என்னும் அன்னே என்
பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு
       என் செய்கேன் பெய் வளையீரே? (1)
3156. My daughter fell in love with the lord.
She touches the earth and says,
"This earth was measured by Vamanan."
She points her finger at the sky and says,
"That is Vaikuṇṭam."
She thinks of Kaṇṇan and her eyes fill with tears.
She says, "He has the color of the ocean."
O lord! You have fascinated my daughter.
O girls ornamented with bangles! What can I do?

3157 பெய்வளைக் கைகளைக் கூப்பி
       பிரான் கிடக்கும் கடல் என்னும்
செய்யது ஓர் ஞாயிற்றைக் காட்டி
       சிரீதரன் மூர்த்தி ஈது என்னும்
நையும் கண்ணீர் மல்க நின்று
       நாரணன் என்னும் அன்னே என்
தெய்வ உருவில் சிறுமான்
       செய்கின்றது ஒன்று அறியேனே (2)
3157. My daughter folds her hands ornamented with bangles
and says, "He, the dear god, sleeps on the ocean."
She points to the red sun and says,
"This is a form of Sridharan."
She stands sorrowfully, her eyes filled with tears
and says, "Naraṇan!"
O lord, she looks divine.
She is soft like a small doe.
I don’t know what to do.

3158 அறியும் செந்தீயைத் தழுவி
       அச்சுதன் என்னும் மெய் வேவாள்
எறியும் தண் காற்றைத் தழுவி
       என்னுடைக் கோவிந்தன் என்னும்
வெறி கொள் துழாய் மலர் நாறும்
       வினையுடையாட்டியேன் பெற்ற
செறி வளை முன் கைச் சிறுமான்
       செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே? (3)
3158. My daughter looks at the red fire
and says, "He is indestructible."
She embraces the wind that blows strongly
and says, "This is my Govindan."
She has the fragrance of a thulasi garland.
I have done bad karma.
My little doe-like bangled girl
does so many things,
but I can’t understand even one of them.

3159 ஒன்றிய திங்களைக் காட்டி
       ஒளி மணி வண்ணனே என்னும்
நின்ற குன்றத்தினை நோக்கி
       நெடுமாலே வா என்று கூவும்
நன்று பெய்யும் மழை காணில்
       நாரணன் வந்தான் என்று ஆலும்
என்று இன மையல்கள் செய்தான்
       என்னுடைக் கோமளத்தையே? (4)
3159. My daughter points to the shining moon and says,
"That is the bright sapphire-colored god."
She looks at the tall hills and calls out loudly,
"O Neḍumaal, come!"
If the rain pours down, she says,
"O Naraṇan come!" and dances.
In so many ways he has fascinated
my beautiful daughter, as precious as a jewel.

3160 கோமள வான் கன்றைப் புல்கி
       கோவிந்தன் மேய்த்தன என்னும்
போம் இள நாகத்தின் பின் போய்
       அவன் கிடக்கை ஈது என்னும்
ஆம் அளவு ஒன்றும் அறியேன்
       அருவினையாட்டியேன் பெற்ற
கோமள வல்லியை மாயோன்
       மால் செய்து செய்கின்ற கூத்தே (5)
3160. My daughter embraces calves
and says that Govindan grazes them.
She runs behind a slithering snake and says,
"This is his bed."
I don’t know when this trouble will end.
I have done bad karma.
The mischievous Maayon has fascinated my beautiful daughter—
what can I do?

3161 கூத்தர் குடம் எடுத்து ஆடில்
       கோவிந்தன் ஆம் எனா ஓடும்
வாய்த்த குழல் ஓசை கேட்கில்
       மாயவன் என்று மையாக்கும்
ஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில்
       அவன் உண்ட வெண்ணெய் ஈது என்னும்
பேய்ச்சி முலை சுவைத்தாற்கு
       என் பெண்கொடி ஏறிய பித்தே (6)
3161. If a dancer carries a pot,
my daughter runs and says, "Govindan is there."
If she hears the beautiful sound of flute,
she is fascinated and says, "Maayavan is playing the flute."
If she sees butter that the cowherd women have churned,
she says, "This is the butter that he has eaten."
He drank the milk from the devil Putana.
How could my lovely vine-like daughter be so crazy about him?

3162 ஏறிய பித்தினோடு எல்லா
       உலகும் கண்ணன் படைப்பு என்னும்
நீறு செவ்வே இடக் காணில்
       நெடுமால் அடியார் என்று ஓடும்
நாறு துழாய் மலர் காணில்
       நாரணன் கண்ணி ஈது என்னும்
தேறியும் தேறாதும் மாயோன்
       திறத்தனளே இத் திருவே (7)
3162. Like a crazy person, my daughter says,
"All the worlds are created by Kaṇṇan."
If she sees people wearing a naamam,
she runs near them and says,
"Here are the devotees of Neḍumaal."
If she sees a fragrant thulasi garland with flowers,
she says, "These are the garlands of Naraṇan."
Whether she is in a state of knowing everything,
or in a state of knowing nothing,
my precious girl loves the ornamented feet of Maayon.

3163 திரு உடை மன்னரைக் காணில்
       திருமாலைக் கண்டேனே என்னும்
உரு உடை வண்ணங்கள் காணில்
       உலகு அளந்தான் என்று துள்ளும்
கரு உடைத் தேவு இல்கள் எல்லாம்
       கடல் வண்ணன் கோயிலே என்னும்
வெருவிலும் வீழ்விலும் ஓவாள்
       கண்ணன் கழல்கள் விரும்புமே (8)
3163. If she sees great kings,
my daughter says, "I have seen Thirumaal."
If she sees something blue, she jumps and says,
"Here is my god. He is Thirumal and he measured the world."
If she sees temples she says these are the temples
of the ocean-colored god.
Whether she is afraid of something or just stricken with love
she wants the anklet-adorned feet of the god Kaṇṇan.

3164 விரும்பிப் பகவரைக் காணில்
       வியல் இடம் உண்டானே என்னும்
கரும் பெரு மேகங்கள் காணில்
       கண்ணன் என்று ஏறப் பறக்கும்
பெரும் புல ஆ நிரை காணில்
       பிரான் உளன் என்று பின் செல்லும்
அரும் பெறல் பெண்ணினை மாயோன்
       அலற்றி அயர்ப்பிக்கின்றானே (9)
3164. If my daughter sees sages
she says that they are forms of the god
who swallowed all the worlds.
If she sees large dark clouds she jumps and says,
"They are Kaṇṇan!" and feels very happy.
If she sees a herd of cows grazing on the land,
she goes behind them and says,
"The dear god is here!"
Maayon has made my precious daughter crazy
and weary with fascination and love for him.

3165 அயர்க்கும் சுற்றும் பற்றி நோக்கி
       அகலவே நீள் நோக்குக் கொள்ளும்
வியர்க்கும் மழைக்கண் துளும்ப
       வெவ்வுயிர் கொள்ளும் மெய் சோரும்
பெயர்த்தும் கண்ணா என்று பேசும்
       பெருமானே வா என்று கூவும்
மயல் பெருங் காதல் என் பேதைக்கு
       என்செய்கேன் வல்வினையேனே? (10)
3165. My daughter is fascinated with him.
She looks in every direction for him.
She looks into long distances to see whether he is coming.
Thinking of him she sweats and she sighs
and her eyes are filled with tears.
She feels tired and says, "O Kaṇṇan!"
She calls him and says, "O dear lord, come!"
I have done bad karma.
What can I do for my innocent daughter?
She is stricken with such ardent love?

3166 வல்வினை தீர்க்கும் கண்ணனை
       வண் குருகூர்ச் சடகோபன்
சொல் வினையால் சொன்ன பாடல்
       ஆயிரத்துள் இவை பத்தும்
நல் வினை என்று கற்பார்கள்
       நலனிடை வைகுந்தம் நண்ணி
தொல்வினை தீர எல்லாரும்
       தொழுது எழ வீற்றிருப்பாரே (11)
3166. Saḍagopan of rich Thirukuruhur
composed a thousand songs on Kaṇṇan
who removes evil karma.
If devotees learn and recite these ten songs,
they will get good karma and go to Vaikuṇṭam
and all in the sky will worship them.
----------

திருவாய் மொழி - நான்காம் பத்து (ஐந்தாம் திருமொழி, 3167-3177)
எம்பெருமானது இருப்பைக் கண்டு மகிழ்தல்

3167 வீற்றிருந்து ஏழ் உலகும் தனிக்கோல் செல்ல வீவு இல் சீர்
ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை வெம் மா பிளந்தான் தன்னை
போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது சொல் மாலைகள்
ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே? (1)
3167. He rules all the seven worlds with his unique scepter.
He is strong and he loves me like my mother.
The Asuran Kesi came in the form of a horse
and the god split open his mouth.
I worship him saying, "I praise you! I praise you!"
I decorate him with garlands of songs
and there are no troubles for me in all my seven births.

3168 மைய கண்ணாள் மலர் மேல் உறைவாள் உறை மார்பினன்
செய்ய கோலத் தடங் கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
மொய்ய சொல்லால் இசைமாலைகள் ஏத்தி உள்ளப்பெற்றேன்
வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீயவே (2)
3168. He, the god of the gods in the sky,
has large dark eyes and a beautiful form.
On his chest he embraces Lakshmi.
I keep him in my mind,
decorate him with garlands of songs
and worship him.
All the terrible sicknesses in this world
will not come to me.

3169 வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன்
வீவு இல் சீரன் மலர்க் கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
வீவு இல் காலம் இசைமாலைகள் ஏத்தி மேவப்பெற்றேன்
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே (3)
3169. He is the god Achudan.
He gives endless happiness to all.
He has beautiful lotus eyes and faultless qualities.
and he is the god of the gods.
I have praised him for endless ages
with garlands of song
and received endless joy worshiping him.

3170 மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் பிரான்
தூவி அம் புள் உடையான் அடல் ஆழி அம்மான் தன்னை
நா இயலால் இசைமாலைகள் ஏத்தி நண்ணப் பெற்றேன்
ஆவி என் ஆவியை யான் அறியேன் செய்த ஆற்றையே (4)
3170. If devotees approach and worship him,
our dear god removes their karma.
He rides on a beautiful eagle that has soft weathers.
He, my father, sleeps on the wide ocean.
I praised him with garlands of songs with my tongue
and reached him.
I do not know my soul, my dear soul
that guides me in this right path.

3171 ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை அமரர் தம்
ஏற்றை எல்லாப் பொருளும் விரித்தானை எம்மான் தன்னை
மாற்ற மாலைப் புனைந்து ஏத்தி நாளும் மகிழ்வு எய்தினேன்
காற்றின் முன்னம் கடுகி வினை நோய்கள் கரியவே (5)
3171. He, my mother, showed me many good paths.
He is a bull among the gods in the sky.
He, our father, taught the Vedas to the sages.
I have obtained joy praising my dear god with garlands of poems
and all my karma will be destroyed faster than a swift wind.

3172 கரிய மேனிமிசை வெளிய நீறு சிறிதே இடும்
பெரிய கோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
உரிய சொல்லால் இசைமாலைகள் ஏத்தி உள்ளப்பெற்றேற்கு
அரியது உண்டோ எனக்கு இன்று தொட்டும் இனி என்றுமே (6)
3172. The god of the gods in the sky has a dark body
and he has a white naamam on his forehead.
He has large beautiful eyes.
I worship him with garlands of songs with good words.
Is there anything I could ever get that is better
than receiving him in my heart?

3173 என்றும் ஒன்று ஆகி ஒத்தாரும் மிக்கார்களும் தன் தனக்கு
இன்றி நின்றானை எல்லா உலகும் உடையான் தன்னை
குன்றம் ஒன்றால் மழை காத்த பிரானை சொல் மாலைகள்
நன்று சூட்டும் விதி எய்தினம் என்ன குறை நமக்கே? (7)
3173. He is the only one god on the earth.
There has never been anyone equal to or better than he.
He rules all the worlds.
He protected the cows from the storm,
carrying Govardhana mountain as an umbrella.
I have the fortune of praising him with garlands of poems.
There is nothing I do not have.

3174 நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை ஞாலத்தார்
தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானை தண் தாமரை
சுமக்கும் பாதப் பெருமானை சொல்மாலைகள் சொல்லுமாறு
அமைக்க வல்லேற்கு இனி யாவர் நிகர் அகல் வானத்தே? (8)
3174. He is god of me, of the people of the world
and of the gods in the sky.
He is a joy for Lakshmi on a lotus.
His feet are adorned with cool lotuses.
I have the fortune of composing garlands of poems to him.
Who, even in the wide sky, could be my equal?

3175 வானத்தும் வானத்துள் உம்பரும் மண்ணுள்ளும் மண்ணின்கீழ்த்
தானத்தும் எண் திசையும் தவிராது நின்றான் தன்னை
கூனல் சங்கத் தடக்கையவனை குடம் ஆடியை
வானக் கோனை கவி சொல்ல வல்லேற்கு இனி மாறுஉண்டே? (9)
3175. He stays in the sky.
He is with the gods in the sky.
He is on the earth.
He is in the underworld.
He is in all the eight directions.
He never leaves those places.
He carries a curved conch in his beautiful left hand.
He danced on a pot and he is the king of the sky.
I compose poems to praise the lord
and I will not have any trouble.

3176 உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் தன்னை
வண் தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே (10)
3176. He swallowed the earth and spit it out.
He measured the world.
He split open the ground
and brought the earth from the underworld.
He sleeps on the ocean.
He shows his form to the gods in the sky.
He married Nappinnai.
He has the power to rule all the worlds.
I have the good fortune of composing beautiful Tamil poems
that are a flood of pleasure for his devotees.

3177 மாரி மாறாத தண் அம் மலை வேங்கடத்து அண்ணலை
வாரி மாறாத பைம் பூம் பொழில் சூழ் குருகூர் நகர்க்
காரி மாறன் சடகோபன் சொல் ஆயிரத்து இப் பத்தால்
வேரி மாறாத பூமேல் இருப்பாள் வினை தீர்க்குமே 11
3177. Sadagopan, the son of Kaari Maaran,
composed a thousand poems on the great god
of the beautiful cool Thiruvenkaṭam hills
where the rain never fails to pour.
If devotees worship the goddess Lakshmi
who stays on a fragrant lotus flower
their karma will go away.
----------

திருவாய் மொழி - நான்காம் பத்து (ஆறாம் திருமொழி, 3178-3188)
வெறி விலக்கு

3178 தீர்ப்பாரை யாம் இனி எங்ஙனம் நாடுதும் அன்னைமீர்!
ஓர்ப்பால் இவ் ஒள் நுதல் உற்ற நல் நோய் இது தேறினோம்
போர்ப்பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாயப்போர்த்
தேர்ப்பாகனார்க்கு இவள் சிந்தை துழாய்த் திசைக்கின்றதே? (1)
3178. Her friends say,
"O mothers,
Our beautiful friend has a shining forehead.
Where can we find someone to cure her sickness?
We have just found out what is troubling her—
she is fascinated with him
who drove Arjuna’s chariot
and gained victory for the five Pandavas,
conquering the Kauravas in battle."

3179 திசைக்கின்றதே இவள் நோய் இது மிக்க பெருந் தெய்வம்
இசைப்பு இன்றி நீர் அணங்கு ஆடும் இளந் தெய்வம் அன்று இது
திசைப்பு இன்றியே சங்கு சக்கரம் என்று இவள் கேட்க நீர்
இசைக்கிற்றிராகில் நன்றே இல் பெறும் இது காண்மினே (2)
3179. Her friends say,
" O mother, you are confused without knowing
the reason for her sickness.
Her suffering is not caused by some small goddess, like Anangu.
When she played in the water she fell in love with the god
without knowing it.
She suffers because of the great god.
If you say, ‘conch, discus’
so she can hear it clearly, her sickness will go away
and she will get better just today itself.
This is the best medicine for her."

3180 இது காண்மின் அன்னைமீர் இக் கட்டுவிச்சி சொல் கொண்டு நீர்
எதுவானும் செய்து அங்கு ஓர் கள்ளும் இறைச்சியும் தூவேன் மின்
மது வார் துழாய் முடி மாயப் பிரான் கழல் வாழ்த்தினால்
அதுவே இவள் உற்ற நோய்க்கும் அரு மருந்து ஆகுமே (3)
3180. Her friends say,
"O mother, Listen to what I say:
‘The female priest said that if we worship the Anangu
her sickness will go away.
Don’t listen to her.
Don’t do this or that ritual, don’t offer meat and toddy.
If you praise the feet, ornamented with anklets, of Maaya Piraan
whose head is garlanded with thulasi,
that will be the best remedy for her sickness.’"

3181 மருந்து ஆகும் என்று அங்கு ஓர் மாய வலவை சொல் கொண்டு நீர்
கருஞ் சோறும் மற்றைச் செஞ் சோறும் களன் இழைத்து என் பயன்?
ஒருங்காகவே உலகு ஏழும் விழுங்கி உமிழ்ந்திட்ட
பெருந்தேவன் பேர் சொல்லகிற்கில் இவளைப் பெறுதிரே (4)
3181. Her friends say,
"O Mother, the priest woman says,
‘The cure for your daughter’s sickness is to offer different kinds
of rice to the gods,’ and you listen to her
and offer black rice and red rice to the Anangu.
What is the use of that?
If you say the name of the great god
who swallowed all the seven worlds and spit them out,
you will cure her sickness."

3182 இவளைப் பெறும் பரிசு இவ் அணங்கு ஆடுதல் அன்று அந்தோ
குவளைத் தடங் கண்ணும் கோவைச் செவ்வாயும் பயந்தனள்
கவளக் கடாக் களிறு அட்ட பிரான் திருநாமத்தால்
தவளப் பொடிக் கொண்டு நீர் இட்டிடுமின் தணியுமே (5)
3182. Her friends say,
"To cure her sickness don’t dance with the Anangu.
She has large eyes like kuvalai flowers
and a red mouth like a kovvai fruit and her body is pale.
Say the divine name of him
who killed the angry rutting elephant kuvalayabeedam.
Put on her forehead the divine red powder of the god
and her sickness will go away."

3183 தணியும் பொழுது இல்லை நீர் அணங்கு ஆடுதிர் அன்னைமீர்
பிணியும் ஒழிகின்றது இல்லை பெருகும் இது அல்லால்
மணியின் அணி நிற மாயன் தமர் அடி நீறு கொண்டு
அணிய முயலின் மற்று இல்லை கண்டீர் இவ் அணங்குக்கே (6)
3183. Her friends say,
"O mothers!
Don’t worship the Anangu and dance all day.
That won’t cure her sickness,
it will only make it worse.
Bring the dust of the feet of the devotees
of the sapphire-colored god and put it on her.
Try this. It is the only cure for your daughter,
nothing else will help her."

3184 அணங்குக்கு அரு மருந்து என்று அங்கு ஓர் ஆடும் கள்ளும் பராய்
துணங்கை எறிந்து நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்
உணங்கல் கெடக் கழுதை உதடு ஆட்டம் கண்டு என் பயன்?
வணங்கீர்கள் மாயப் பிரான் தமர் வேதம் வல்லாரையே (7)
3184. Her friends say,
"O mothers, you offer goats and liquor
to the Anangu and worship her thinking
that will cure your beautiful daughter,
and you dance the Thunagai dance until your arms hurt.
What is the use of seeing a donkey eating his food
and seeing his lips when you are hungry?
Bow to the devotees of the Mayappiran
who recite the Vedas well."

3185 வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்
பாதம் பணிந்து இவள் நோய் இது தீர்த்துக் கொள்ளாது போய்
ஏதம் பறைந்து அல்ல செய்து கள் ஊடு கலாய்த் தூய்
கீதம் முழவு இட்டு நீர் அணங்கு ஆடுதல் கீழ்மையே (8)
3185. Her friends say,
"O mothers, go to those who know the Vedas well
and ask for their advice.
Worship the divine feet of the god of gods as they tell you.
You are not doing that to cure her sickness.
It is wrong to say and do bad things.
Drinking liquor, dancing the Anangu dance with loud music
beating drums is wrong and shows you are not decent."

3186 கீழ்மையினால் அங்கு ஓர் கீழ்மகன் இட்ட முழவின் கீழ்
நாழ்மை பல சொல்லி நீர் அணங்கு ஆடும் பொய் காண்கிலேன்
ஏழ்மைப் பிறப்புக்கும் சேமம் இந் நோய்க்கும் ஈதே மருந்து
ஊழ்மையில் கண்ண பிரான் கழல் வாழ்த்துமின் உன்னித்தே (9)
3186. Her friends say,
"O mothers, you say many bad mean things
and dance the Anangu dance
as a man from a low family beats the drum,
but I know all this is a false way of trying to cure her sickness.
Think of the lord Kannan and bow to his anklet-ornamented feet
and that will cure her sickness.
It will also protect you in all your future births."

3187 உன்னித்து மற்று ஒரு தெய்வம் தொழாஅள் அவனை அல்லால்
நும் இச்சை சொல்லி நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்
மன்னப்படும் மறைவாணனை வண் துவராபதி
மன்னனை ஏத்துமின் ஏத்துதலும் தொழுது ஆடுமே (10)
3187. Her friends say,
"O mothers,
your daughter doesn’t think of any god except Kaṇṇan,
but you say whatever you want
and dance until your arms hurt.
Praise the everlasting king of flourishing Dwarapati
who is praised by all the Vedas.
Praise him, bow to him and dance."

3188 தொழுது ஆடி தூ மணி வண்ணனுக்கு ஆட்செய்து நோய் தீர்ந்த
வழுவாத தொல் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
வழுவாத ஆயிரத்துள் இவை பத்து வெறிகளும்
தொழுது ஆடிப் பாட வல்லார் துக்க சீலம் இலர்களே (11)
3188. Sadagopan of rich Thirukuruhur
who has ancient faultless fame
composed a thousand poems on the pure sapphire-colored god.
If devotees learn and recite these ten poems
sing, dance and worship the lord
they will not have any trouble in their lives.
---------

திருவாய் மொழி - நான்காம் பத்து (ஏழாம் திருமொழி, 3189-3199)
திருமாலை வந்தருளுமாறு தம் குறைகூறி வருந்தி அழைத்தல்

3189 சீலம் இல்லாச் சிறியனேலும் செய்வினையோ பெரிதால்
ஞாலம் உண்டாய் ஞான மூர்த்தி நாராயணா என்று என்று
காலந்தோறும் யான் இருந்து கைதலைபூசல் இட்டால்
கோல மேனி காண வாராய் கூவியும் கொள்ளாயே (1)
3189. Even though I have no goodness,
whatever I do is important.
If all the time I live, I raise my hands above my head
and call you loudly, saying,
"O lord, you swallowed the earth.
You are lord of wisdom.
You are Narayanan,"
won't you come to me
so I can see your beautiful body?
Call me and give me your grace.

3190 கொள்ள மாளா இன்ப வெள்ளம் கோது இல தந்திடும் என்
வள்ளலேயோ வையம் கொண்ட வாமனாவோ என்று என்று
நள் இராவும் நன் பகலும் நான் இருந்து ஓலம் இட்டால்
கள்ள மாயா உன்னை என் கண் காண வந்து ஈயாயே (2)
3190. You are a Mayan and a thief.
If I shout night and day and call to you, saying,
"You are the generous one
You give a faultless, endless flood of joy to all.
You took the form of a dwarf and measured the world,"
won't you come, show yourself to me
and give me your grace?

3191 ஈவு இலாத தீவினைகள் எத்தனை செய்தனன்கொல்?
தாவி வையம் கொண்ட எந்தாய் தாமோதரா என்று என்று
கூவிக் கூவி நெஞ்சு உருகி கண்பனி சோர நின்றால்
பாவி நீ என்று ஒன்று சொல்லாய் பாவியேன் காண வந்தே (3)
3191. I have done so many bad deeds
that their results will not ever be exhausted.
Even though I melt in my heart
and call and call you loudly, saying,
"O my father, you measured the whole world,
You are Damodharan,"
you don’t come to me so I can see you.
You don’t say even one word to me,
even, "You are a sinner!"

3192 காண வந்து என் கண்முகப்பே தாமரைக்கண் பிறழ
ஆணி செம்பொன் மேனி எந்தாய் நின்று அருளாய் என்று என்று
நாணம் இல்லாச் சிறு தகையேன் நான் இங்கு அலற்றுவது என்
பேணி வானோர் காணமாட்டாப் பீடு உடை அப்பனையே? (4)
3192. I call you and prattle, saying,
"O my father, you have a pure, beautiful golden body.
Come and stand before me with your twinkling lotus eyes.
I am shameless and have no pride.
What is the use of my prattling
and calling you, most famous one?
Even the god of gods in the sky cannot see you.

3193 அப்பனே அடல் ஆழியானே ஆழ் கடலைக் கடைந்த
துப்பனே உன் தோள்கள் நான்கும் கண்டிடக்கூடுங்கொல்? என்று
எப்பொழுதும் கண்ண நீர் கொண்டு ஆவி துவர்ந்து துவர்ந்து
இப்பொழுதே வந்திடாய் என்று ஏழையேன் நோக்குவனே (5)
3193. I say "O my father, you carry a strong discus.
You, the powerful one churned the deep milky ocean.
Could I ever see all your four arms?"
My eyes are filled with tears.
My soul becomes sorrowful.
Pitiful, I long for you and call you saying,
"Come at once!"

3194 நோக்கி நோக்கி உன்னைக் காண்பான் யான் எனது ஆவியுள்ளே
நாக்கு நீள்வன் ஞானம் இல்லை நாள்தோறும் என்னுடைய
ஆக்கையுள்ளும் ஆவியுள்ளும் அல்ல புறத்தினுள்ளும்
நீக்கம் இன்றி எங்கும் நின்றாய் நின்னை அறிந்து அறிந்தே (6)
3194. You are in my body and soul,
and in everything outside me.
There is nothing without you
and you abide pervading everything.
I know well that I have no wisdom,
but I look and look for your presence
and long to see you, praise you
and ask you to come to me.
Is this because I am foolish
and my tongue does not know what to say?

3195 அறிந்து அறிந்து தேறித் தேறி யான் எனது ஆவியுள்ளே
நிறைந்த ஞான மூர்த்தியாயை நின்மலமாக வைத்து
பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன்
நறுந் துழாயின் கண்ணி அம்மா நான் உன்னைக் கண்டுகொண்டே (7)
3195. You are adorned with fragrant thulasi garlands.
I understand you and you understand me. CHECK
I become stronger and stronger knowing you.
You are the faultless one, full of wisdom.
I keep you in my mind.
I ceased my ignorant thinking
that made me be born again and again.
I found you.

3196 கண்டுகொண்டு என் கைகள் ஆர நின் திருப்பாதங்கள்மேல்
எண் திசையும் உள்ள பூக் கொண்டு ஏத்தி உகந்து உகந்து
தொண்டரோங்கள் பாடி ஆட சூழ் கடல் ஞாலத்துள்ளே
வண் துழாயின் கண்ணி வேந்தே வந்திடகில்லாயே (8)
3196. O king , you are adorned with beautiful thulasi garlands.
We are your devotees.
We carry flowers that bloom in all the eight directions
sing, dance and praise you happily.
Come so that we may fold our hands
and worship your divine feet.
Come so that I may see you.

3197 இடகிலேன் ஒன்று அட்ட கில்லேன் ஐம்புலன் வெல்ல கில்லேன்
கடவன் ஆகி காலந்தோறும் பூப் பறித்து ஏத்த கில்லேன்
மட வல் நெஞ்சம் காதல் கூர வல்வினையேன் அயர்ப்பாய்த்
தடவுகின்றேன் எங்குக் காண்பன் சக்கரத்து அண்ணலையே? (9)
3197. I have not fed those who are hungry.
I have not given water to those who are thirsty.
I have not controlled my five senses.
I have not plucked flowers at the right times to worship you
as devotees are supposed to.
My ignorant heart loves you.
I have bad karma and I am tired of it.
I am searching for you—
where can I find you who carry a discus?

3198 சக்கரத்து அண்ணலே என்று தாழ்ந்து கண்ணீர் ததும்ப
பக்கம் நோக்கி நின்று அலந்தேன் பாவியேன் காண்கின்றிலேன்
மிக்க ஞான மூர்த்தி ஆய வேத விளக்கினை என்
தக்க ஞானக் கண்களாலே கண்டு தழுவுவனே (10)
3198. O highest god,
you carry a discus in your hand.
I bow to you and my eyes are filled with tears.
I search for you and suffer.
I am a sinner and have not found you.
You are the form of wisdom.
You are the bright light of the Vedas.
I want to see you with my eye of knowledge and embrace you.

3199 தழுவிநின்ற காதல் தன்னால் தாமரைக் கண்ணன் தன்னை
குழுவு மாடத் தென் குருகூர் மாறன் சடகோபன் சொல்
வழுவு இலாத ஒண் தமிழ்கள் ஆயிரத்துள் இப் பத்தும்
தழுவப் பாடி ஆட வல்லார் வைகுந்தம் ஏறுவரே (11)
3199. Maaṛan Saḍagopan of southern Thirukuruhur
lovingly composed a thousand faultless Tamil poems
praising the lotus-eyed god.
If devotees learn and recite these poems,
dance and sing and worship the lord,
they will go to Vaikuṇṭam.
----------

திருவாய் மொழி - நான்காம் பத்து (எட்டாம் திருமொழி, 3200-3210)
எம்பெருமான் விரும்பாதவைகளால் தமக்குப் பயன் இல்லை என்று தலைவி கூற்றாகப் பேசுதல்

3200 ஏறு ஆளும் இறையோனும் திசைமுகனும் திருமகளும்
கூறு ஆளும் தனி உடம்பன் குலம் குலமா அசுரர்களை
நீறு ஆகும்படியாக நிருமித்து படை தொட்ட
மாறாளன் கவராத மணி மாமை குறைவு இலமே (1)
3200. She says, "On his incomparable body
he bears Shiva who rides on a bull
and Brahma whose four heads face the four directions,
while the goddess Lakshmi stays on his chest.
He used many weapons and destroyed
many clans of his Raksasa enemies.
The beautiful pallor of my body is useless
if it does not attract him."

3201 மணி மாமை குறைவு இல்லா மலர்மாதர் உறை மார்பன்
அணி மானத் தட வரைத்தோள் அடல் ஆழித் தடக்கையன்
பணி மானம் பிழையாமே அடியேனைப் பணிகொண்ட
மணிமாயன் கவராத மட நெஞ்சால் குறைவு இலமே (2)
3201. She says, "The lovely gold-colored Lakshmi
shining like a diamond stays on a lotus on his chest.
He carries a discus in his strong hands
that destroys the powerful weapons of his enemies, the Asurans.
He accepts me as his devotee and makes me do his service.
The beautiful Maayan attracted my innocent heart
and it will be free of trouble."

3202 மட நெஞ்சால் குறைவு இல்லா மகள்தாய்செய்து ஒரு பேய்ச்சி
விட நஞ்ச முலை சுவைத்த மிகு ஞானச் சிறு குழவி
பட நாகத்து அணைக் கிடந்த பரு வரைத் தோள் பரம்புருடன்
நெடுமாயன் கவராத நிறையினால் குறைவு இலமே (3)
3202. She says, "Putana the ignorant devil took the form of a mother,
gave her poisonous milk to Kaṇṇan the small wise child
and he drank her milk and killed her.
The tall Maayan, the highest god
has strong mountain-like arms
and he sleeps on the snake bed.
If he does not love me what is the use
of my being a chaste woman?"

3203 நிறையினால் குறைவு இல்லா நெடும் பணைத் தோள் மடப் பின்னை
பொறையினால் முலை அணைவான் பொரு விடை ஏழ் அடர்த்து உகந்த
கறையினார் துவர் உடுக்கை கடை ஆவின் கழி கோல் கைச்
சறையினார் கவராத தளிர் நிறத்தால் குறைவு இலமே (4)
3203. She says, "Wanting to embrace the bamboo-like arms
of beautiful, chaste Nappinnai,
Kaṇṇan fought with seven bulls and killed them to marry her.
When he was born as a cowherd
he carried a flute and a grazing stick
and wore an orange dress with bells tied on his waist.
What is the use of my tender pale shoot-like body
if Kaṇṇan does not love me?"

3204 தளிர் நிறத்தால் குறைவு இல்லாத் தனிச் சிறையில் விளப்பு உற்ற
கிளிமொழியாள் காரணமாக் கிளர் அரக்கன் நகர் எரித்த
களி மலர்த் துழாய் அலங்கல் கமழ் முடியன் கடல் ஞாலத்து
அளிமிக்கான் கவராத அறிவினால் குறைவு இலமே (5)
3204. She says, "His wife Sita had a voice as sweet as a parrot’s
and her body was the color of a tender shoot,
She was imprisoned in Lanka by Ravaṇa
and the god as Rama went to Lanka,
burnt the Rakshasas’ Lanka and brought her back.
What is the use of my being intelligent
when the lord adorned with a fragrant blooming thulasi garland
gives his abundant grace to the people of the world
surrounded by the ocean but does not love me?"

3205 அறிவினால் குறைவு இல்லா அகல் ஞாலத்தவர் அறிய
நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒருமூர்த்தி
குறிய மாண் உரு ஆகி கொடுங் கோளால் நிலம் கொண்ட
கிறி அம்மான் கவராத கிளர் ஒளியால் குறைவு இலமே (6)
3205. She says, "The wise god Maal
taught all the Vedas to the faultless sages.
He went to Mahabali as a small dwarf
and like a thief took over all his lands.
What is the use of my lovely shining body
if it does not attract the naughty Kaṇṇan?"

3206 கிளர் ஒளியால் குறைவு இல்லா அரி உருவாய்க் கிளர்ந்து எழுந்து
கிளர் ஒளிய இரணியனது அகல் மார்பம் கிழித்து உகந்த
வளர் ஒளிய கனல் ஆழி வலம்புரியன் மணி நீல
வளர் ஒளியான் கவராத வரி வளையால் குறைவு இலமே (7)
3206. She says, "He took the faultless form of a bright lion,
angrily split open the broad chest of Hiranyan and felt joy.
He carries a conch and a discus that shines like fire
and he has a shining sapphire-colored body.
The god who shines forever does not love me.
What is the use of my curved bangles?"

3207 வரி வளையால் குறைவு இல்லாப் பெரு முழக்கால் அடங்காரை
எரி அழலம் புக ஊதி இரு நிலம் முன் துயர் தவிர்த்த
தெரிவு அரிய சிவன் பிரமன் அமரர் கோன் பணிந்து ஏத்தும்
விரி புகழான் கவராத மேகலையால் குறைவு இலமே (8)
3207. She says, "He blew his loud, curved conch.
If his enemies did not obey him, he fought with them,
burned their lands, conquered them
and relieved the distress of the people of the world.
He is praised by Shiva
who is beyond the understanding of people,
Brahma and Indra the king of gods.
If he is not attracted by my mekalai ornament
what is the use of my wearing it?"

3208 மேகலையால் குறைவு இல்லா மெலிவு உற்ற அகல் அல்குல்
போகமகள் புகழ்த் தந்தை விறல் வாணன் புயம் துணித்து
நாகமிசைத் துயில்வான்போல் உலகு எல்லாம் நன்கு ஒடுங்க
யோகு அணைவான் கவராத உடம்பினால் குறைவு இலமே (9)
3207. She says, "He blew his loud, curved conch.
If his enemies did not obey him, he fought with them,
burned their lands, conquered them
and relieved the distress of the people of the world.
He is praised by Shiva
who is beyond the understanding of people,
Brahma and Indra the king of gods.
If he is not attracted by my mekalai ornament
what is the use of my wearing it?"

3209 உடம்பினால் குறைவு இல்லா உயிர் பிரிந்த மலைத்துண்டம்
கிடந்தனபோல் துணி பலவா அசுரர் குழாம் துணித்து உகந்த
தடம் புனல சடைமுடியன் தனி ஒருகூறு அமர்ந்து உறையும்
உடம்பு உடையான் கவராத உயிரினால் குறைவு இலமே (10)
3209. She says, "On his body he has Shiva
in whose jata the Ganges flows.
He destroyed the strong Asurans
rending their bodies into pieces
as if they were debris fallen from a mountain
and then felt joy.
What is the use of my body
if he does not desire it?"

3210 உயிரினால் குறைவு இல்லா உலகு ஏழ் தன்னுள் ஒடுக்கி
தயிர் வெண்ணெய் உண்டானைத் தடம் குருகூர்ச் சடகோபன்
செயிர் இல் சொல் இசைமாலை ஆயிரத்துள் இப் பத்தால்
வயிரம் சேர் பிறப்பு அறுத்து வைகுந்தம் நண்ணுவரே (11)
3210. Sadagopan of broad Thirukuruhur
composed a garland of a thousand faultless poems with music
about the god who ate yogurt and butter
and swallowed all the seven worlds
where many creatures live.
If devotees learn and recite these ten poems
they will be saved from their terrible births
and attain Vaikuṇṭam.
----------

திருவாய் மொழி - நான்காம் பத்து (ஒன்பதாம் திருமொழி, 3211-3221)
உலக இயற்கையில் வெறுப்புற்ற ஆழ்வார் திருவடி சேர்க்குமாறு எம்பெருமானைப் பிரார்த்தித்தல்


3211 நண்ணாதார் முறுவலிப்ப நல் உற்றார் கரைந்து ஏங்க
எண் ஆராத் துயர் விளைக்கும் இவை என்ன உலகு இயற்கை
கண்ணாளா கடல் கடைந்தாய் உன கழற்கே வரும் பரிசு
தண்ணாவாது அடியேனைப் பணி கண்டாய் சாமாறே (1)
3211. What a pity.
It is the nature of the world that our enemies should be happy
and our relatives should suffer and be distressed.
O god, you are compassionate.
You churned the milky ocean.
I worship your feet ornamented with anklets.
Give me your grace
and take me to your place so I may serve you.

3212 சாம் ஆறும் கெடும் ஆறும் தமர் உற்றார் தலைத்தலைப்பெய்து
ஏமாறிக் கிடந்து அலற்றும் இவை என்ன உலகு இயற்கை
ஆம் ஆறு ஒன்று அறியேன் நான் அரவு அணையாய் அம்மானே
கூமாறே விரைகண்டாய் அடியேனை குறிக்கொண்டே (2)
3212. What a pity!
It is the nature of the world that people lose their wealth
and when they die
their relatives fall on their bodies and cry.
I do not know how to escape the suffering of this world.
O father, you sleep on a snake bed.
I cry out to you.
Think of me and come to me, your devotee, quickly,
and take me to your world and let me join your feet.

3213 கொண்டாட்டும் குலம் புனைவும் தமர் உற்றார் விழு நிதியும்
வண்டு ஆர் பூங் குழலாளும் மனை ஒழிய உயிர் மாய்தல்
கண்டு ஆற்றேன் உலகு இயற்கை! கடல்வண்ணா அடியேனைப்
பண்டேபோல் கருதாது உன் அடிக்கே கூய்ப் பணிக்கொள்ளே (3)
3213. People die leaving their fame, families, friends,
relatives, their wealth and their lovely wives
whose hair is garlanded with flowers swarming with bees.
I see the terrible nature of the world and cannot bear it.
O god, you have the color of the ocean.
Do not think of me as you did before.
Call me and make me join your feet
so I may serve you.

3214 கொள் என்று கிளர்ந்து எழுந்த பெரும் செல்வம் நெருப்பு ஆக
கொள் என்று தமம் மூடும் இவை என்ன உலகு இயற்கை
வள்ளலே மணிவண்ணா உன கழற்கே வரும்பரிசு
வள்ளல் செய்து அடியேனை உனது அருளால் வாங்காயே (4)
3214. The world’s nature is a terrible thing.
Even if someone does not want it,
great wealth may come to him, urging him to take it,
and then destroy him like fire.
O generous sapphire-colored god,
give me your grace so I may come to you
and worship your feet that are adorned with anklets.

3215 வாங்கு நீர் மலர் உலகில் நிற்பனவும் திரிவனவும்
ஆங்கு உயிர்கள் பிறப்பு இறப்புப் பிணி மூப்பால் தகர்ப்புண்ணும்
ஈங்கு இதன்மேல் வெம் நரகம் இவை என்ன உலகு இயற்கை
வாங்கு எனை நீ மணிவண்ணா அடியேனை மறுக்கேலே (5)
3215. All creatures that are born, live and wander
in this world surrounded by the water-filled oceans
get sick, grow old and die only to be born again and suffer.
Is there any hell worse than this?
What is this terrible nature of the earth?
O sapphire-colored god, give me your grace
and take me to you. Do not refuse me.

3216 மறுக்கி வல் வலைப்படுத்தி குமைத்திட்டு கொன்று உண்பர்
அறப்பொருளை அறிந்து ஓரார் இவை என்ன உலகு இயற்கை
வெறித் துளவ முடியானே வினையேனை உனக்கு அடிமை
அறக்கொண்டாய் இனி என் ஆர் அமுதே கூயருளாயே (6)
3216. The world’s nature is a terrible thing.
People fight with each other, imprison others, hurt them
and even kill them.
They do not think it is not right or dharmic to do such deeds.
On your head, you wear fragrant thulasi.
I have done bad karma.
Make me your slave.
You are sweet nectar to me.
Call me to you and give me your grace.

3217 ஆயே இவ் உலகத்து நிற்பனவும் திரிவனவும்
நீயே மற்று ஒரு பொருளும் இன்றி நீ நின்றமையால்
நோயே மூப்பு இறப்பு பிறப்பு பிணியே என்று இவை ஒழிய
கூயேகொள் அடியேனை கொடு உலகம் காட்டேலே (7)
3217. You are my mother.
In the world, all the things that do not move
and those that move are you,
yet you are not any of those things and you stand alone.
Do not make me stay in this cruel world.
It gives sickness, old age, birth, death and many sorrows.
Don’t keep me in this cruel world.
Call me, your slave, to your place
and keep me with you.

3218 காட்டி நீ கரந்து உமிழும் நிலம் நீர் தீ விசும்பு கால்
ஈட்டி நீ வைத்து அமைத்த இமையோர் வாழ் தனி முட்டைக்
கோட்டையினில் கழித்து என்னை உன் கொழும் சோதி உயரத்துக்
கூட்டு அரிய திருவடிக்கள் எஞ்ஞான்று கூட்டுதியே? (8)
3218. You created this world, swallowed it
and spit out the earth, water, fire, sky and wind,
and in that way you created the world again.
Now you make me stay in this world where the gods live.
When will you take me from here?
Bring me to your shining world
and make me join you
so that I may worship your divine feet.

3219 கூட்டுதி நின் குரை கழல்கள் இமையோரும் தொழாவகைசெய்து
ஆட்டுதி நீ அரவு அணையாய் அடியேனும் அஃது அறிவன்
வேட்கை எல்லாம் விடுத்து என்னை உன் திருவடியே சுமந்து உழலக்
கூட்டு அரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனே (9)
3219. You bring the devotees who worship you
and let them live beneath your feet
that are adorned with sounding anklets.
If the gods do not do what is right,
you make them not to worship you in the sky
and make them live on the earth.
I, your slave, know that.
O god you sleep on a snake bed.
You made me give up my desires
and worship your divine feet that others cannot find.
I see you now.

3220 கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவி
கண்ட இன்பம் தெரிவு அரிய அளவு இல்லாச் சிற்றின்பம்
ஒண் தொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்ப
கண்ட சதிர் கண்டொழிந்தேன் அடைந்தேன் உன் திருவடியே (10)
3220. I have realized that the five mean pleasures that the senses give—
seeing, hearing, touching, smelling, and eating—are not good.
I have seen how you and the goddess Lakshmi,
lovely with her shining bracelets,
have joined together and given me your grace.
I became your slave and reached your divine feet.

3221 திருவடியை நாரணனை கேசவனை பரஞ்சுடரை
திருவடி சேர்வது கருதி செழுங் குருகூர்ச் சடகோபன்
திருவடிமேல் உரைத்த தமிழ் ஆயிரத்துள் இப் பத்தும்
திருவடியே அடைவிக்கும் திருவடி சேர்ந்து ஒன்றுமினே (11)
3221. Sadagopan of flourishing Thirukuruhur
composed a thousand Tamil pasurams on the god
describing how devotees could join the feet
of the god Naraṇan, Kesavan, the highest light.
O devotees, learn these ten poems
and you will join his divine feet.
---------

திருவாய் மொழி - நான்காம் பத்து (பத்தாம் திருமொழி, 3222-3232)
எம்பெருமான் எல்லாத் தேவதைகளுக்கும் மேற்பட்டவன் (திருக்குருகூர்)

3222 ஒன்றும் தேவும் உலகும் உயிரும்
       மற்றும் யாதும் இல்லா
அன்று நான்முகன் தன்னொடு தேவர்
       உலகோடு உயிர் படைத்தான்
குன்றம் போல் மணி மாடம் நீடு
       திருக்குருகூர் அதனுள்
நின்ற ஆதிப்பிரான் நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே? (1)
3222. When there was nothing,
he created Nanmuhan, the gods, the world of the gods,
the world and all the creatures in the world.
Our ancient god stays in rich Thirukuruhur
filled with palaces as large as mountains
and patios studded with diamonds.
Why do you search for other gods?

3223 நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும்
       முன் படைத்தான்
வீடு இல் சீர்ப் புகழ் ஆதிப்பிரான் அவன்
       மேவி உறை கோயில்
மாட மாளிகை சூழ்ந்து அழகு ஆய
       திருக்குருகூர் அதனைப்
பாடி ஆடி பரவிச் செல்மின்கள்
       பல் உலகீர் பரந்தே (2)
3223. Our god created all the gods that you worship and you.
Our lord has matchless fame and he abides with love
in the temple of beautiful Thirukuruhur
filled with patios and palaces.
O devotees! You come from all parts of the world,
Go to Thirukuruhur, sing and dance and praise the god.

3224 பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து அன்று
       உடனே விழுங்கி
கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது
       கண்டும் தெளியகில்லீர்
சிரங்களால் அமரர் வணங்கும்
       திருக்குருகூர் அதனுள்
பரன் திறம் அன்றி பல் உலகீர் தெய்வம்
       மற்று இல்லை பேசுமினே (3)
3224. He created all the gods, many worlds,
swallowed it all and spit it out.
He measured the world at the sacrifice of Mahabali,
and he brought the earth from the underworld as a boar.
O people of the world!
Even though you know all this
you do not understand his power.
There is no other god equal to the highest god.
He stays in Thirukuruhur
and all the other gods bow down their heads to him.
Come and praise our lord.

3225 பேச நின்ற சிவனுக்கும் பிரமன்
       தனக்கும் பிறர்க்கும்
நாயகன் அவனே கபால நல் மோக்கத்துக்
       கண்டுகொண்மின்
தேச மா மதிள் சூழ்ந்து அழகு ஆய
       திருக்குருகூர் அதனுள்
ஈசன்பால் ஓர் அவம் பறைதல் என் ஆவது
       இலிங்கியர்க்கே? (4)
3225. He is the lord of famous Shiva praised by all,
Brahma and all other gods.
You know this because he made the head of Brahma
fall from Shiva’s hand and released Shiva from his curse.
He is the lord of Thirukuruhur
surrounded with large beautiful walls.
The Lingayats say wrong things about our highest god.
What do they get by doing that?

3226 இலிங்கத்து இட்ட புராணத்தீரும்
       சமணரும் சாக்கியரும்
வலிந்து வாது செய்வீர்களும் மற்றும் நும்
       தெய்வமும் ஆகி நின்றான்
மலிந்து செந்நெல் கவரி வீசும்
       திருக்குருகூர் அதனுள்
பொலிந்து நின்ற பிரான் கண்டீர் ஒன்றும்
       பொய் இல்லை போற்றுமினே (5)
3226. O Lingayats, Jains, Buddhists, Sakyas,
and others praised in the Puranas!
You argue strongly about your religions and worship your gods.
He is in your souls and in all your gods.
Dear god, you stay and shine in Thirukuruhur
where abundant good paddy blows in the wind as if fanned.
He is the shining god of all religions. This is no lie.
Praise him.

3227 போற்றி மற்று ஓர் தெய்வம் பேணப்
       புறத்திட்டு உம்மை இன்னே
தேற்றி வைத்தது எல்லீரும் வீடு பெற்றால்
       உலகு இல்லை என்றே
சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு
       திருக்குருகூர் அதனுள்
ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அது
       அறிந்து அறிந்து ஓடுமினே (6)
3227. Even though you praise other gods
he protects you without the concern that you are praising them.
He takes only his devotees
because if all get to reach moksha,
there will be no one left in the world.
This is the maaya of the powerful lord.
He stays in Thirukuruhur
where good paddy and lotuses grow from the earth.
Understand this and find out the right way to live.

3228 ஓடி ஓடி பல பிறப்பும் பிறந்து
       மற்று ஓர் தெய்வம்
பாடி ஆடிப் பணிந்து பல்படிகால்
       வழி ஏறிக் கண்டீர்
கூடி வானவர் ஏத்த நின்ற
       திருக்குருகூர் அதனுள்
ஆடு புள் கொடி ஆதி மூர்த்திக்கு
       அடிமைபுகுவதுவே (7)
3228. O devotees, you have been born in many births.
You have looked for other gods, sung their praise,
danced and worshiped them in all the ways described in the sastras
but you have not found success.
Our ancient lord carries an eagle flag
and stays in Thirukuruhur
where the gods in the sky gather and praise him.
Go and be his slave.

3229 புக்கு அடிமையினால் தன்னைக் கண்ட
       மார்க்கண்டேயன் அவனை
நக்க பிரானும் அன்று உய்யக்கொண்டது
       நாராயணன் அருளே
கொக்கு அலர் தடம் தாழை வேலித்
       திருக்குருகூர் அதனுள்
மிக்க ஆதிப்பிரான் நிற்க மற்றைத்
       தெய்வம் விளம்புதிரே (8)
3229. The grace of Narayaṇan
is what made the dancing god Shiva save Markandeya
when he came and asked him to rescue him from Yama.
The ancient lord Naraṇan stays in Thirukuruhur
surrounded with fences where the taalai flowers bloom
like white herons in large ponds.
Why do you go to other places and search for other gods?

3230 விளம்பும் ஆறு சமயமும் அவைஆகியும்
       மற்றும் தன்பால்
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய
       ஆதிப்பிரான் அமரும்
       வளம் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய
       திருக்குருகூர் அதனை
உளம் கொள் ஞானத்து வைம்மின் உம்மை
       உய்யக்கொண்டு போகுறிலே (9)
3230. None of the six religions
or any other religious texts know who god is.
Our ancient god of beautiful Thirukurukur
surrounded with flourishing fields
has entered your heart and stays there.
Keep him in your heart—that is the path that will save you.

3231 உறுவது ஆவது எத் தேவும் எவ் உலகங்களும்
       மற்றும் தன்பால்
மறு இல் மூர்த்தியோடு ஒத்து இத்தனையும்
       நின்றவண்ணம் நிற்கவே
செறுவில் செந்நெல் கரும்பொடு ஓங்கு
       திருக்குருகூர் அதனுள்
குறிய மாண் உரு ஆகிய நீள் குடக்
       கூத்தனுக்கு ஆள் செய்வதே (10)
3231. The faultless lord contains in himself
all that there is and all that will be,
all the worlds, all the gods and everything else.
He stays in Thirukuruhur
surrounded by flourishing paddy and sugarcane fields.
He took the form of a dwarf
and he dances the divine kudakuthu dance.
Let us serve him.

3232 ஆள் செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன்
       வண் குருகூர்நகரான்
நாள் கமழ் மகிழ் மாலை மார்பினன்
       மாறன் சடகோபன்
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள்
       இப் பத்தும் வல்லார்
மீட்சி இன்றி வைகுந்த மாநகர்
       மற்றது கையதுவே (11)
3232. Maran Sadagopan of rich Thirukuruhur
is adorned with a fresh garland
of fragrant makizham flowers on his chest.
He, the devotee of the god,
lovingly composed a thousand poems
for the god who carries a discus.
If devotees learn and recite these poems
and know them well they will surely reach Vaikuṇṭam.
----------

நம்மாழ்வார் திருவாய் மொழி - ஐந்தாம் பத்து (3233-3342)
Divyaprabandham - Thiruvaymozhi - Aindaam Pathu

திருவாய் மொழி - ஐந்தாம் பத்து (முதல் திருமொழி, 3233-3243)
உண்மையான பக்தி இல்லாத நிலையிலும் சிறந்த பேற்றை
அருளும் எம்பெருமானது கருணைத்திறம்

3233 கை ஆர் சக்கரத்து என் கருமாணிக்கமே என்று என்று
பொய்யே கைம்மை சொல்லி புறமே புறமே ஆடி
மெய்யே பெற்றொழிந்தேன் விதி வாய்க்கின்று காப்பார் ஆர்?
ஐயோ கண்ண பிரான் அறையோ இனிப் போனாலே (1)
3233. I lied, praising you and saying,
"You are a precious blue sapphire. You carry a discus."
I wandered and wandered
and you thought I was truly praising you
and gave me your grace.
If it is my fate to receive your grace,
no one can prevent it, O my lord Kaṇṇan!
Tell me. Tell me please.

3234 போனாய் மா மருதின் நடுவே என் பொல்லா மணியே
தேனே இன் அமுதே என்று என்றே சில கூத்துச் சொல்ல
தானேல் எம் பெருமான் அவன் என் ஆகி ஒழிந்தான்
வானே மா நிலமே மற்றும் முற்றும் என் உள்ளனவே (2)
3234. He is a faultless jewel.
He went between the two marudam trees.
I praised him saying, "You are honey and sweet nectar."
I just said a few things praising him like that
and my dear lord entered my heart and became one with me.
Now, the sky and this great earth are all mine.

3235 உள்ளன மற்று உளவா புறமே சில மாயம் சொல்லி
வள்ளல் மணிவண்ணனே என்று என்றே உன்னையும் வஞ்சிக்கும்
கள்ள மனம் தவிர்ந்தே உன்னைக் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேன்
வெள்ளத்து அணைக்கிடந்தாய் இனி உன்னை விட்டு என் கொள்வனே? (3)
3235. I wanted to be involved in the pleasures of the world
but I praised you with false words and said,
"You are the generous lord. You have the color of sapphire."
Now I don’t want to cheat you.
My devious mind knew you and I am saved.
You sleep on the flood of water.
I will not leave you. What is there for me except you?

3236 என் கொள்வன் உன்னை விட்டு? என்னும் வாசகங்கள் சொல்லியும்
வன் கள்வனேன் மனத்தை வலித்து கண்ண நீர் கரந்து
நின்கண் நெருங்கவைத்தே எனது ஆவியை நீக்ககில்லேன்
என்கண் மலினம் அறுத்து என்னைக் கூவி அருளாய் கண்ணனே (4)
3236. What should I do?
Even though I said, "I will not leave you,"
I was a thief and could not stop my mind
from enjoying the pleasures of this world.
I didn’t think of you.
I can’t approach you making my hard heart soft and shedding tears.
I can’t leave this life on the earth.
O Kaṇṇan, take away my sins,
call me and give me your grace.

3237 கண்ண பிரானை விண்ணோர் கருமாணிக்கத்தை அமுதை
நண்ணியும் நண்ணகில்லேன் நடுவே ஓர் உடம்பில் இட்டு
திண்ணம் அழுந்தக் கட்டிப் பல செய்வினை வன் கயிற்றால்
புண்ணை மறைய வரிந்து என்னைப் போர வைத்தாய் புறமே (5)
3237. My dear lord Kannan
is sweet as nectar, the precious jewel of the gods in the sky.
I can’t approach my dear lord Kaṇṇan.
He put life in my body and tied it tightly
with the ropes of ignorance and karma.
I am covered with a body that is a skin-covered wound.
Who can release me from this body?
O lord, you are the only one. Save me.

3238 புறம் அறக் கட்டிக்கொண்டு இரு வல்வினையார் குமைக்கும்
முறை முறை யாக்கை புகல் ஒழியக் கண்டு கொண்டொழிந்தேன்
நிறம் உடை நால் தடம் தோள் செய்ய வாய் செய்ய தாமரைக்கண்
அறம் முயல் ஆழி அங்கைக் கருமேனி அம்மான் தன்னையே (6)
3238. His body shines like a dark jewel
and he carries a discus in his beautiful hand that establishes dharma.
My lord has beautiful lotus eyes,
a red mouth and four strong arms.
When I saw him the evil and good karma
that troubled me went away.

3239 அம்மான் ஆழிப்பிரான் அவன் எவ் இடத்தான்? யான் ஆர்?
எம் மா பாவியர்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்கும் கண்டீர்
கைம்மா துன்பு ஒழித்தாய் என்று கைதலைபூசல் இட்டே
மெய்ம் மால் ஆயொழிந்தேன் எம்பிரானும் என் மேலானே (7)
3239. The lord carries a discus and he is dear to me.
Where is he? Who am I?
If any sinner has a good fate,
the lord gives his grace to him.
I folded my hands above my head
and worshiped him crying,
"O lord, you took away the suffering of the elephant Gajendra,"
and I became a true devotee of him, the highest god.
He joined me with him.

3240 மேலாத் தேவர்களும் நிலத் தேவரும் மேவித் தொழும்
மாலார் வந்து இனநாள் அடியேன் மனத்தே மன்னினார்
சேல் ஏய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன்மக்களும்
மேலாத் தாய் தந்தையும் அவரே இனி ஆவாரே (8)
3240. Maal, whom the gods in the sky
and the sages on earth worship,
has come and entered this slave’s mind
and now stays there firmly.
From now on for me he is father, mother, good children,
great wealth and lovely fish-eyed women.
No one else is dear to me anymore.

3241 ஆவார் ஆர் துணை? என்று அலை நீர்க் கடலுள் அழுந்தும்
நாவாய் போல் பிறவிக்கடலுள் நின்று நான் துளங்க
தேவு ஆர் கோலத்தொடும் திருச் சக்கரம் சங்கினொடும்
ஆஆ என்று அருள்செய்து அடியேனொடும் ஆனானே (9)
3241. I shivered on the ocean of birth
like a boat that was sinking.
When I was worried how could I get help,
the wonderful lord came in a beautiful form
with a divine discus and a conch in his hands,
gave his grace to me,
said,"I will protect my devotee!"
and became one with me.

3242 ஆனான் ஆளுடையான் என்று அஃதே கொண்டு உகந்து வந்து
தானே இன் அருள் செய்து என்னை முற்றவும் தான் ஆனான்
மீன் ஆய் ஆமையும் ஆய் நரசிங்கமும் ஆய் குறள் ஆய்
கான் ஆர் ஏனமும் ஆய் கற்கி ஆம் இன்னம் கார் வண்ணனே (10)
3242. The cloud-colored lord
took the form of a fish, turtle, man-lion, dwarf,
of a boar in the forest and of Kalki.
When I said, "O lord, you rule me,"
he was happy and gave me his sweet grace
and became one with me, his slave.

3243 கார் வண்ணன் கண்ண பிரான் கமலத்தடங்கண்ணன் தன்னை
ஏர் வள ஒண் கழனிக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
சீர் வண்ணம் ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப் பத்தும்
ஆர்வண்ணத்தால் உரைப்பார் அடிக்கீழ்ப் புகுவார் பொலிந்தே (11)
3243. Sadagopan of Thirukuruhur
surrounded by beautiful flourishing fields
composed a thousand lovely Tamil poems on our dark lotus-eyed Kannan.
If devotees learn and recite these ten lovely poems
they will shine and reach the feet of the lord.
----------

திருவாய் மொழி - ஐந்தாம் பத்து (இரண்டாம் திருமொழி, 3244-3254)
அடியார்திருக்கூட்டத்தைக் கண்டு வாழ்த்தல்

3244 பொலிக பொலிக பொலிக
       போயிற்று வல் உயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த
       நமனுக்கு இங்கு யாது ஒன்றும் இல்லை
கலியும் கெடும் கண்டுகொண்மின்
       கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்
மலியப் புகுந்து இசை பாடி
       ஆடி உழிதரக் கண்டோம் (1)
3244. Let the world flourish! Let the world flourish!
Let the world flourish!
The bad curses of all creatures are destroyed.
There is nothing for Yama who gives suffering and hell to people.
See, the poverty of everyone will disappear.
We the devotees of the ocean-colored god
gather together, sing and dance.

3245 கண்டோம் கண்டோம் கண்டோம்
       கண்ணுக்கு இனியன கண்டோம்
தொண்டீர் எல்லீரும் வாரீர்
       தொழுது தொழுது நின்று ஆர்த்தும்
வண்டு ஆர் தண் அம் துழாயான்
       மாதவன் பூதங்கள் மண்மேல்
பண் தான் பாடி நின்று ஆடி
       பரந்து திரிகின்றனவே (2)
3245. The devotees sing songs and dance
praising the god Madhavan,
adorned with lovely cool garlands swarming with bees.
They jump around and shout, saying,
"We saw, we saw, we saw things are sweet to the eyes.
O devotees, come, all of you. Worship, worship!"

3246 திரியும் கலியுகம் நீங்கி
       தேவர்கள் தாமும் புகுந்து
பெரிய கிதயுகம் பற்றி
       பேரின்ப வெள்ளம் பெருக
கரிய முகில்வண்ணன் எம்மான்
       கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்
இரியப் புகுந்து இசை பாடி
       எங்கும் இடம் கொண்டனவே (3)
3246. The evil Kaliyuga has passed and Krtayugam has begun.
All the gods and devotees come to the earth.
Their hearts are filled with floods of abundant joy.
The devotees of our dear ocean-colored, cloud-colored god
sing and praise him and wander all over the earth.

3247 இடம் கொள் சமயத்தை எல்லாம்
       எடுத்துக் களைவன போலே
தடம் கடல் பள்ளிப் பெருமான்
       தன்னுடைப் பூதங்களே ஆய்
கிடந்தும் இருந்தும் எழுந்தும்
       கீதம் பலபல பாடி
நடந்தும் பறந்தும் குனித்தும்
       நாடகம் செய்கின்றனவே (4)
3247. The lord sleeps on the wide ocean
and his devotees wander about
as if they had ignored all other religions
except Vaishnavism everywhere on the earth.
They roll on the floor, sit, stand, walk, bend,
fly, sing many songs, dance and act as if they were in a play.

3248 செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே
       ஒக்கின்றது இவ் உலகத்து
வைகுந்தன் பூதங்களே ஆய்
       மாயத்தினால் எங்கும் மன்னி
ஐயம் ஒன்று இல்லை அரக்கர்
       அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்
உய்யும் வகை இல்லை தொண்டீர்
       ஊழி பெயர்த்திடும் கொன்றே (5)
3248. O creatures of the world!
If you have been born as Asurans or Raksasas,
there is no way you can survive
even if eons and eons pass.
There is only one thing I know
that you must do in this world.
You must become devotees
of the lord Vaikundan and remain in his maaya.

3249 கொன்று உயிர் உண்ணும் விசாதி
       பகை பசி தீயன எல்லாம்
நின்று இவ் உலகில் கடிவான்
       நேமிப் பிரான் தமர் போந்தார்
நன்று இசை பாடியும் துள்ளி
       ஆடியும் ஞாலம் பரந்தார்
சென்று தொழுது உய்ம்மின் தொண்டீர்!
       சிந்தையைச் செந்நிறுத்தியே (6)
3249. The lord carrying a discus came to the earth
to remove the diseases that kill people,
and enmity, hunger and all other evil things.
The devotees of the god wander all over the world,
sing good songs, dance and jump.
Keep your mind in devotion,
go and worship those devotees and you will be saved.

3250 நிறுத்தி நும் உள்ளத்துக் கொள்ளும்
       தெய்வங்கள் உம்மை உய்யக்கொள்
மறுத்தும் அவனோடே கண்டீர்
       மார்க்கண்டேயனும் கரியே
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா
       கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை
இறுப்பது எல்லாம் அவன் மூர்த்தி
       யாயவர்க்கே இறுமினே (7)
3250. The other gods that you worship in your heart
will not be able to protect you,
and even if they do,
it is because of the grace of lord Kaṇṇan.
See, Mankadeya, the witness, was saved by Shiva
and that is because of the grace of our god.
You should not doubt this.
There is no other god but Kaṇṇan.

3251 இறுக்கும் இறை இறுத்து உண்ண
       எவ் உலகுக்கும் தன் மூர்த்தி
நிறுத்தினான் தெய்வங்கள் ஆக
       அத் தெய்வ நாயகன் தானே
மறுத் திரு மார்வன் அவன் தன்
       பூதங்கள் கீதங்கள் பாடி
வெறுப்பு இன்றி ஞாலத்து மிக்கார்
       மேவித் தொழுது உய்ம்மின் நீரே (8)
3251. Our god embraces Lakshmi on his chest.
The divine lord, the chief of the gods,
gives many duties to other gods.
People praise those gods and live on this earth.
O devotees! Do not hate anyone in this world,
but worship good people,
sing songs and praise the devotees of the lord, and you will be saved.

3252 மேவித் தொழுது உய்ம்மின் நீர்கள்
       வேதப் புனித இருக்கை
நாவில் கொண்டு அச்சுதன் தன்னை
       ஞானவிதி பிழையாமே
பூவில் புகையும் விளக்கும்
       சாந்தமும் நீரும் மலிந்து
மேவித் தொழும் அடியாரும்
       பகவரும் மிக்கது உலகே (9)
3252. Many sages and devotees in this world
worship the god Achudan
with flowers, fragrances, lamps, sandal paste
and abundant water,
reciting the Vedas according to the sastras.
Go and worship those devotees and you will be saved.

3253 மிக்க உலகுகள் தோறும்
       மேவி கண்ணன் திருமூர்த்தி
நக்க பிரானோடு அயனும்
       இந்திரனும் முதலாகத்
தொக்க அமரர் குழாங்கள்
       எங்கும் பரந்தன தொண்டீர்
ஒக்கத் தொழ கிற்றிராகில்
       கலியுகம் ஒன்றும் இல்லையே (10)
3253. The three gods, Shiva who laughs, Nanmuhan and Indra
and all other gods come to the world, join together
and worship the divine god Kaṇṇan.
O devotees, you are everywhere in the world.
If you all together worship the god
there will be no suffering in this Kaliyuga.

3254 கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன்
       அடியார்க்கு அருள்செய்யும்
மலியும் சுடர் ஒளி மூர்த்தி
       மாயப் பிரான் கண்ணன் தன்னை
கலி வயல் தென் நன் குருகூர்க்
       காரிமாறன் சடகோபன்
ஒலி புகழ் ஆயிரத்து இப் பத்து
       உள்ளத்தை மாசு அறுக்குமே (11)
3254. Sadagopan, Kari Maaran of southern Thirukuruhur
of Pandiyan country that flourishes with fields,
composed a thousand famous poems
on Maayapiran Kaṇṇan.
The shining lord gives his grace to his devotees
and protects them from the troubles of Kaliyuga.
If devotees learn and recite these ten poems,
the faults in their minds will go away.
----------

திருவாய் மொழி - ஐந்தாம் பத்து (மூன்றாம் திருமொழி, 3255-3265)
பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடலூரத் துணிதல்

3255 மாசு அறு சோதி என் செய்ய வாய் மணிக்குன்றத்தை
ஆசு அறு சீலனை ஆதி மூர்த்தியை நாடியே
பாசறவு எய்தி அறிவு இழந்து எனை நாளையம்?
ஏசு அறும் ஊரவர் கவ்வை தோழீ என் செய்யுமே? (1)
3255. She says, "O my friend,
he is a faultless light. His mouth is red
and he shines like a beautiful sapphire.
I love the ancient god and he has a faultless nature.
I have lost my mind to him. How long I can suffer like this?
The village will gossip about my love soon.
O friend, what can I do?"

3256 என் செய்யும் ஊரவர் கவ்வை தோழீ இனி நம்மை?
என் செய்ய தாமரைக் கண்ணன் என்னை நிறை கொண்டான்
முன் செய்ய மாமை இழந்து மேனி மெலிவு எய்தி
என் செய்ய வாயும் கருங் கண்ணும் பயப்பு ஊர்ந்தவே (2)
3256. She says, "O friend,
what can the gossip of the village do to me?
I have lost myself to the love
of my dear beautiful lotus-eyed Kaṇṇan.
My body has lost its beautiful color, I am weak,
and my red mouth and dark eyes have become pale."

3257 ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தன் பேய்முலை
சார்ந்து சுவைத்த செவ்வாயன் என்னை நிறை கொண்டான்
பேர்ந்தும் பெயர்ந்தும் அவனோடு அன்றி ஓர் சொல் இலேன்
தீர்ந்த என் தோழீ என் செய்யும் ஊரவர் கவ்வையே? (3)
3257. She says,
"O friend, he kicked Sakataasuran
when he came in the form of a cart.
He drank the milk of the devil Putana.
I have lost my chastity to my love for him.
Wherever I go or wander I talk only of him
and no other words come from my mouth.
You are my only dear friend.
What can the gossip of the village do to me?"

3258 ஊரவர் கவ்வை எரு இட்டு அன்னை சொல் நீர் படுத்து
ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ் செய்யுள்
பேர் அமர் காதல் கடல் புரைய விளைவித்த
கார் அமர் மேனி நம் கண்ணன் தோழீ கடியனே (4)
3258. She says, "O friend,
the village gossip is like food for the plant of my love,
and mother’s words are like water poured on it to make it thrive.
O friend, our Kaṇṇan has a dark cloud-like body.
The abundant love that he gave in my heart
grows as large as the sea and he is cruel."

3259 கடியன் கொடியன் நெடிய மால் உலகம் கொண்ட
அடியன் அறிவு அரு மேனி மாயத்தன் ஆகிலும்
கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் எல்லே
துடி கொள் இடை மடத் தோழீ அன்னை என் செய்யுமே? (5)
3259. She says, "O friend,
he is the tall Nedumaal, Maayan,
and he measured the world with his feet.
Even though he is hard and cruel
and hard to know
my useless heart thinks only of him. Alas!
O beautiful friend with a waist as thin as a tuṭi drum,
what do you think our mother will do
if she knows about my love?"

3260 அன்னை என் செய்யில் என்? ஊர் என் சொல்லில் என்? தோழிமீர்
என்னை இனி உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன்
முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி
மன்னன் மணிவண்ணன் வாசுதேவன் வலையுளே (6)
3260. She says,
"O friends, what if mother does whatever she wants?
What if the village gossips as it wants?
Why should it bother me?
I am caught in the love net of the sapphire-colored Vasudevan,
the king of rich Dwarapuri, the ancient god of gods."

3261 வலையுள் அகப்படுத்து என்னை நல் நெஞ்சம் கூவிக்கொண்டு
அலை கடல் பள்ளி அம்மானை ஆழிப்பிரான் தன்னை
கலை கொள் அகல் அல்குல் தோழீ நம் கண்களால் கண்டு
தலையில் வணங்கவும் ஆம் கொலோ தையலார் முன்பே? (7)
3261. She says, "O beautiful friend! You have wide hips.
The lord carries a discus in his hands
and sleeps on the ocean with rolling waves.
My good heart is caught in the love net of the lord.
I want to see him and bow at his feet bending my head.
If I could worship him like that I would not wo

3262 பேய் முலை உண்டு சகடம் பாய்ந்து மருது இடை
போய் முதல் சாய்த்து புள் வாய் பிளந்து களிறு அட்ட
தூ முறுவல் தொண்டைவாய்ப் பிரானை எந் நாள்கொலோ
யாம் உறுகின்றது தோழீ அன்னையர் நாணவே? (8)
3262. She says, "O friend,
our dear lord drank milk from the breasts of the devil Putana.
Sakatasuran came as a cart
and our god kicked the cart and destroyed him.
An Asuran came as a bird
and the god split open his mouth.
He killed the elephant Kuvalayabeedam.
He smiles beautifully with his red mouth that is like a thondai fruit.
O friend, when will we join him
and make our mother ashamed?"

3263 நாணும் நிறையும் கவர்ந்து என்னை நல் நெஞ்சம் கூவிக்கொண்டு
சேண் உயர் வானத்து இருக்கும் தேவ பிரான் தன்னை
ஆணை என் தோழீ உலகுதோறு அலர் தூற்றி ஆம்
கோணைகள் செய்து குதிரியாய் மடல் ஊர்துமே (9)
3263. She says, "O friend,
the god of the gods took my shyness and chastity
and my heart went to him in the distant sky.
O friend, this is my promise.
I will tell all the world the mischievous deeds that he did
and let everyone gossip about us.
I will not worry like other girls
and I will ride on a madal, the palm-tree horse."

3264 யாம் மடல் ஊர்ந்தும் எம் ஆழி அங்கைப் பிரான் உடை
தூ மடல் தண் அம் துழாய் மலர் கொண்டு சூடுவோம்
ஆம் மடம் இன்றி தெருவுதோறு அயல் தையலார்
நா மடங்காப் பழி தூற்றி நாடும் இரைக்கவே (10)
3264. She says, "I will ride on a madal
and wear the cool thulasi garland with its pure petals
of the dear god who has a discus in his lovely hands.
The women on our streets may say
that I have no shame and gossip loudly about me."

3265 இரைக்கும் கருங் கடல் வண்ணன் கண்ண பிரான் தன்னை
விரைக் கொள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொன்ன
நிரைக் கொள் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
உரைக்க வல்லார்க்கு வைகுந்தம் ஆகும் தம் ஊர் எல்லாம் (11)
3265. Sadagopan of Thirukuruhur,
surrounded with fragrant groves,
composed a thousand andaadi poems
praising the dark god Kaṇṇan colored like the roaring ocean.
If devotees learn and recite these ten poems
they will truly reach divine Vaikuṇṭam.
-------------

திருவாய் மொழி - ஐந்தாம் பத்து (நான்காம் திருமொழி, 3266-3276)
தலைவி இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல்

3266 ஊர் எல்லாம் துஞ்சி உலகு எல்லாம் நள் இருள் ஆய்
நீர் எல்லாம் தேறி ஓர் நீள் இரவு ஆய் நீண்டதால்
பார் எல்லாம் உண்ட நம் பாம்பு அணையான் வாரானால்
ஆர் எல்லே வல்வினையேன் ஆவி காப்பார் இனியே? (1)
3266. She says, "The whole village is sleeping.
The entire world is covered with deep darkness.
All the creatures in the ponds have grown calm.
The night grows long.
He swallowed all the worlds. He sleeps on a snake bed,
but that powerful one has not come to see me.
I have done bad karma.
Who will come and save me from the sorrow of love?"

3267 ஆவி காப்பார் இனி யார்? ஆழ் கடல் மண் விண் மூடி
மா விகாரம் ஆய் ஓர் வல் இரவு ஆய் நீண்டதால்
காவி சேர் வண்ணன் என் கண்ணனும் வாரானால்
பாவியேன் நெஞ்சமே நீயும் பாங்கு அல்லையே. (2)
3267. She says, "Who is there to come and save me?
Darkness covers the deep ocean, the earth, and sky.
It is unremitting and terrible.
My Kaṇṇan, colored like a kaavi flower, has not come
and I am pitiful.
O my heart, you don’t help me either."

3268 நீயும் பாங்கு அல்லைகாண் நெஞ்சமே நீள் இரவும்
ஓயும் பொழுது இன்றி ஊழி ஆய் நீண்டதால்
காயும் கடும் சிலை என் காகுத்தன் வாரானால்
மாயும் வகை அறியேன் வல்வினையேன் பெண் பிறந்தே (3)
3268. She says, "O heart, see, you are no help.
The long night grows longer, like an eon,
and dawn does not come.
My god Kahusthan carries a strong bow,
fights with his enemies and destroys them.
He has not come.
I have done bad karma
and have been born a woman.
I do not even know how to die."

3269 பெண் பிறந்தார் எய்தும் பெரும் துயர் காண்கிலேன் என்று
ஒண் சுடரோன் வாராது ஒளித்தான் இம் மண் அளந்த
கண் பெரிய செவ்வாய் எம் கார் ஏறு வாரானால்
எண் பெரிய சிந்தை நோய் தீர்ப்பார் ஆர் என்னையே? (4)
3269. She says, "The shining sun does not want to rise,
thinking, ‘I don’t want to see the suffering
of women, born on this earth.’
Our god has a red mouth and large eyes.
He is strong as a dark bull and measured the world.
That beautiful one has not come.
Who can take the sorrow and love sickness from my mind?"

3270 ஆர் என்னை ஆராய்வார்? அன்னையரும் தோழியரும்
நீர் என்னே என்னாதே நீள் இரவும் துஞ்சுவரால்
கார் அன்ன மேனி நம் கண்ணனும் வாரானால்
பேர் என்னை மாயாதால் வல்வினையேன் பின் நின்றே (5)
3270. She says, "Who is there to help me?
My mothers and friends do not think of my suffering
and sleep through the long night.
The cloud-colored Kaṇṇan has not come.
I have done bad karma.
People may remember my name to gossip about me."

3271 பின்நின்று காதல் நோய் நெஞ்சம் பெரிது அடுமால்
முன்நின்று இரா ஊழி கண் புதைய மூடிற்றால்
மன் நின்ற சக்கரத்து எம் மாயவனும் வாரானால்
இந் நின்ற நீள் ஆவி காப்பார் ஆர் இவ் இடத்தே? (6)
3271. She says, "The love I have for the god
gives terrible pain to my heart.
This night that seems like an eon doesn’t let me close my eyes.
The eternal god Mayan
has not come carrying a discus in his hands.
Who can save my life here where the night is so long?"

3272 காப்பார் ஆர் இவ் இடத்து? கங்கு இருளின் நுண் துளி ஆய்
சேண் பாலது ஊழி ஆய் செல்கின்ற கங்குல்வாய்த்
தூப் பால வெண் சங்கு சக்கரத்தன் தோன்றானால்
தீப் பால வல்வினையேன் தெய்வங்காள் என் செய்கேனோ? (7)
3272. She says, "Who will save me now?
The dark night passes slowly like an eon, drop by drop.
The god Kaṇṇan carries a pure white conch and a discus
and he has not appeared.
I have done bad karma. O gods, what can I do?"

3273 தெய்வங்காள் என் செய்கேன்? ஓர் இரவு ஏழ் ஊழி ஆய்
மெய் வந்து நின்று எனது ஆவி மெலிவிக்கும்
கைவந்த சக்கரத்து என் கண்ணனும் வாரானால்
தைவந்த தண் தென்றல் வெம் சுடரில் தான் அடுமே (8)
3273. She says, "O gods, what can I do?
The dark night comes truly like seven eons
and makes my life weak.
My dear god Kaṇṇan who carries a discus in his hand
has not come.
The cool breeze blows burning me like the hot sun."

3274 வெம் சுடரில் தான் அடுமால் வீங்கு இருளின் நுண் துளி ஆய்
அம் சுடர வெய்யோன் அணி நெடும் தேர் தோன்றாதால்
செஞ் சுடர்த் தாமரைக்கண் செல்வனும் வாரானால்
நெஞ்சு இடர் தீர்ப்பார் இனி யார்? நின்று உருகுகின்றேனே (9)
3274. She says, "O gods, what can I do?
The long night moves slowly and burns me like hot fire.
The sun on his beautiful tall chariot
with his hot rays has not yet appeared.
Our precious lotus-eyed god has not come.
Who will remove the sorrow of my heart?
I am melting away with the sickness of love."

3275 நின்று உருகுகின்றேனே போல நெடு வானம்
சென்று உருகி நுண் துளி ஆய் செல்கின்ற கங்குல்வாய்
அன்று ஒருகால் வையம் அளந்த பிரான் வாரான் என்று
ஒன்று ஒருகால் சொல்லாது உலகோ உறங்குமே (10)
3275. She says, "I am melting away with the pain of my love.
Like me, the darkness in the wide sky
melts away, drop by drop.
The dear god who once measured the world has not come,
yet the world sleeps, saying nothing at all about him."

3276 உறங்குவான் போல் யோகுசெய்த பெருமானை
சிறந்த பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
நிறம் கிளர்ந்த அந்தாதி ஆயிரத்துள் இப் பத்தால்
இறந்து போய் வைகுந்தம் சேராவாறு எங்ஙனேயோ? (11)
3276. Sadagopan of Thirukuruhur
surrounded with lovely groves
composed a thousand andaadi poems
praising the great lord
who meditates, pretending to sleep on the milky ocean.
If devotees learn and recite these ten pasurams,
how could they not be able to reach Vaikuṇṭam?
----------

திருவாய் மொழி - ஐந்தாம் பத்து (ஐந்தாம் திருமொழி, 3277-3287)
உருவெளிப்பாடு கண்ட தலைவி தாயரை மறுத்துரைத்தல் (திருக்குறுங்குடி)

3277 எங்ஙனேயோ அன்னைமீர்காள்
       என்னை முனிவது நீர்?
நங்கள் கோலத் திருக்குறுங்குடி
       நம்பியை நான் கண்டபின்
சங்கினோடும் நேமியோடும்
       தாமரைக் கண்களோடும்
செங்கனி வாய் ஒன்றினோடும்
       செல்கின்றது என் நெஞ்சமே (1)
3277. She says, "O my mother,
why are you upset with me?
Ever since I saw Nambi, the god of Thirukurungudi,
my heart thinks only of his conch,
discus, lotus eyes and his sweet red fruit-like mouth."

3278 என் நெஞ்சினால் நோக்கிக் காணீர்
       என்னை முனியாதே
தென் நன் சோலைத் திருக்குறுங்குடி
       நம்பியை நான் கண்டபின்
மின்னு நூலும் குண்டலமும்
       மார்பில் திருமறுவும்
மன்னு பூணும் நான்கு தோளும்
       வந்து எங்கும் நின்றிடுமே (2)
3278. She says, "O mothers, don’t be upset with me.
Try to understand what I think.
Ever since I saw Nambi, the god of Thirikurungudi
in the southern land surrounded with beautiful groves,
my heart thinks only of the shining thread on his chest,
his earrings, Lakshmi on his chest,
his lovely ornaments and his four arms,
and I see only them everywhere."

3279 நின்றிடும் திசைக்கும் நையும் என்று
       அன்னையரும் முனிதிர்
குன்ற மாடத் திருக்குறுங்குடி
       நம்பியை நான் கண்டபின்
வென்றி வில்லும் தண்டும் வாளும்
       சக்கரமும் சங்கமும்
நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா
       நெஞ்சுள்ளும் நீங்காவே (3)
3279. She says, "O mothers, you are upset with me and say,
‘You stand around not knowing what to do.
You get confused sometimes.
You worry a lot about something.’
Ever since I saw Nambi of Thirukurungudi
surrounded with mountain-like palaces,
his victorious bow, club, sword, discus and conch
appear before my eyes and don’t disappear,
and they stay in my heart and don’t go away."

3280 நீங்க நில்லா கண்ண நீர்கள் என்று
       அன்னையரும் முனிதிர்
தேன் கொள் சோலைத் திருக்குறுங்குடி
       நம்பியை நான் கண்டபின்
பூந் தண் மாலைத் தண் துழாயும்
       பொன் முடியும் வடிவும்
பாங்கு தோன்றும் பட்டும் நாணும்
       பாவியேன் பக்கத்தவே (4)
3280. She says, "O mothers, you all get upset
because my eyes don’t stop shedding tears.
Ever since I saw Nambi of Thirukurungudi
surrounded with groves that drip with honey,
his cool thulasi garland, his golden crown, his lovely form,
his matchless silk clothes and the sacred thread on his chest
are always before me. I am pitiful."

3281 பக்கம் நோக்கி நிற்கும் நையும் என்று
       அன்னையரும் முனிதிர்
தக்க கீர்த்தித் திருக்குறுங்குடி
       நம்பியை நான் கண்டபின்
தொக்க சோதித் தொண்டை வாயும்
       நீண்ட புருவங்களும்
தக்க தாமரைக் கண்ணும் பாவியேன்
       ஆவியின் மேலனவே (5)
3281. She says, "O mothers, you say to me
‘You look everywhere for him and are worried and upset.’
Ever since I saw the marvelous and famous Nambi of Thirukurungudi,
his bright form, his sweet mouth that is like a thondai fruit,
his long eyebrows and his perfect lotus eyes, have taken over my life.
I am a pitiful indeed."

3282 மேலும் வன் பழி நம் குடிக்கு இவள் என்று
       அன்னை காணக்கொடாள்
சோலை சூழ் தண் திருக்குறுங்குடி
       நம்பியை நான் கண்டபின்
கோல நீள் கொடி மூக்கும் தாமரைக்
       கண்ணும் கனி வாயும்
நீல மேனியும் நான்கு தோளும்
       என் நெஞ்சம் நிறைந்தனவே (6)
3282. She says, "My mother thinks,
‘This girl will bring disgrace to our family’
and doesn’t let me go see him.
Ever since I saw Nambi of Thirukurungudi
surrounded with groves,
his lovely long nose, lotus eyes, sweet fruit-like mouth,
his blue body and four arms have filled my heart with love."

3283 நிறைந்த வன் பழி நம் குடிக்கு இவள் என்று
       அன்னை காணக்கொடாள்
சிறந்த கீர்த்தித் திருக்குறுங்குடி
       நம்பியை நான் கண்டபின்
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த
       நீண்ட பொன் மேனியொடும்
நிறைந்து என் உள்ளே நின்றொழிந்தான்
       நேமி அங்கை உளதே (7)
3283. She says, "Mother thinks,
‘My daughter will bring disgrace to our family’
and doesn’t allow me to go and see him.
Ever since I saw Nambi of famous Thirukurungudi
he, with a discus in his hands,
has entered my heart with his tall golden body
shining like a flood of light."

3284 கையுள் நன் முகம் வைக்கும் நையும் என்று
       அன்னையரும் முனிதிர்
மை கொள் மாடத் திருக்குறுங்குடி
       நம்பியை நான் கண்டபின்
செய்ய தாமரைக் கண்ணும் அல்குலும்
       சிற்றிடையும் வடிவும்
மொய்ய நீள் குழல் தாழ்ந்த தோள்களும்
       பாவியேன் முன் நிற்குமே (8)
3284. She says, "O mothers, you are upset
thinking that I am suffering
as I cover my lovely face with my hands.
Ever since I saw Nambi of Thirukurungudi
filled with palaces on which the clouds float,
his beautiful lotus eyes, his small waist, his lovely form,
his thick long hair and his long arms appear in front of me. I am pitiful."

3285 முன் நின்றாய் என்று தோழிமார்களும்
       அன்னையரும் முனிதிர்
மன்னு மாடத் திருக்குறுங்குடி
       நம்பியை நான் கண்டபின்
சென்னி நீள் முடி ஆதி ஆய
       உலப்பு இல் அணிகலத்தன்
கன்னல் பால் அமுது ஆகி வந்து என்
       நெஞ்சம் கழியானே (9)
3285. She says, "O friends and mothers,
you are upset with me
and say that I don’t listen to you and do as I want.
Ever since I saw Nambi of Thirukurungudi
filled with everlasting palaces,
that ancient lord decorated with a tall crown on his head
and adorned with ornaments with precious jewels
has entered my heart as if he were sugarcane juice,
milk and nectar and doesn’t leave."

3286 கழிய மிக்கது ஓர் காதலள் இவள் என்று
       அன்னை காணக்கொடாள்
வழு இல் கீர்த்தித் திருக்குறுங்குடி
       நம்பியை நான் கண்டபின்
குழுமித் தேவர் குழாங்கள் கைதொழச்
       சோதி வெள்ளத்தினுள்ளே
எழுவது ஓர் உரு என் நெஞ்சுள் எழும்
       ஆர்க்கும் அறிவு அரிதே (10)

3286. She says, "Mother thinks,
‘My daughter is utterly in love with him’
and doesn’t allow me to go see my beloved.
The Nambi of Thirukurungudi has faultless fame.
He shines like a bright light.
As soon as I saw him, he entered my heart,
surrounded by a flood-like crowd of gods worshipping him.
I don’t know how it happened—my heart rejoices."

3287 அறிவு அரிய பிரானை
       ஆழி அங்கையனையே அலற்றி
நறிய நன் மலர் நாடி
       நன் குருகூர்ச் சடகோபன் சொன்ன
குறி கொள் ஆயிரத்துள் இவை பத்தும்
       திருக்குறுங்குடி அதன்மேல்
அறியக் கற்று வல்லார்
       வைட்டவர் ஆழ் கடல் ஞாலத்துள்ளே (11)
3287. Sadagopan of rich Thirukurungur,
composed a thousand pasurams on the lord
whom no one has seen
and worshiped him with fresh fragrant flowers,
prattling and telling his praises.
He carries a discus in his divine hand.
If devotees learn and recite these ten poems
they will be true Vaishnavas
in this world surrounded by deep oceans.
-------------

திருவாய் மொழி - ஐந்தாம் பத்து (ஆறாம் திருமொழி, 3288-3298)
தலைவன் தன்மைகளைத் தன்னதாகக்கொண்டு பேசும் தலைவியின் நிலைகண்ட தாய் ‘ஆவேசமோ என்று நொந்து கூறல்

3288 கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்
       கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும்
கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும்
       கடல் ஞாலம் கீண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும்
       கடல் ஞாலம் ஈசன் வந்து ஏறக்கொலோ?
கடல் ஞாலத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்
       கடல் ஞாலத்து என் மகள் கற்கின்றவே? (1)
3288. My daughter says,
"I am the creator of the world surrounded with oceans.
I am the world surrounded by oceans.
I am the ruler of the world surrounded by oceans.
I split open the world surrounded by oceans.
I swallowed all the worlds."
Has the lord of the world
surrounded by oceans entered her body?
What can I tell to the people of this world
surrounded by oceans?
I do not understand all that she learnt in this world.

3289 கற்கும் கல்விக்கு எல்லை இலனே என்னும்
       கற்கும் கல்வி ஆவேனும் யானே என்னும்
கற்கும் கல்விச் செய்வேனும் யானே என்னும்
       கற்கும் கல்வி தீர்ப்பேனும் யானே என்னும்
கற்கும் கல்விச் சாரமும் யானே என்னும்
       கற்கும் கல்வி நாதன் வந்து ஏறக்கொலோ?
கற்கும் கல்வியீர்க்கு இவை என் சொல்லுகேன்
       கற்கும் கல்வி என் மகள் காண்கின்றவே? (2)
3289. My daughter says,
"There is no limit to what I have learned.
Whatever people learn is from me.
I have created learning for people.
I am the results of learning.
I am the meaning of learning."
I am worried that the lord of learning has entered her heart
and that is why she is saying all these things.
What can I tell the learned ones
about all these things my daughter says of learning?

3290 காண்கின்ற நிலம் எல்லாம் யானே என்னும்
       காண்கின்ற விசும்பு எல்லாம் யானே என்னும்
காண்கின்ற வெம் தீ எல்லாம் யானே என்னும்
       காண்கின்ற இக் காற்று எல்லாம் யானே என்னும்
காண்கின்ற கடல் எல்லாம் யானே என்னும்
       காண்கின்ற கடல்வண்ணன் ஏறக்கொலோ?
காண்கின்ற உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்
       காண்கின்ற என் காரிகை செய்கின்றவே? (3)
3290. My daughter says,
"I am all the lands that can be seen.
I am the wide sky that people see.
I am the fire that people feel.
I am the wind that all feel.
I am the oceans that people see."
Has the ocean-colored god
entered my daughter’s heart?
What can I tell the people of the world
if they ask me why she is saying these things?
What my daughter says is strange."

3291 செய்கின்ற கிதி எல்லாம் யானே என்னும்
       செய்வான் நின்றனகளும் யானே என்னும்
செய்து முன் இறந்தவும் யானே என்னும்
       செய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும்
       செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும்
       செய்ய கமலக்கண்ணன் ஏறக்கொலோ?
செய்ய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்
       செய்ய கனி வாய் இள மான் திறத்தே? (4)
3291. My daughter says,
"I am all the acts that happen now.
I am the acts that will happen in the future.
I am the acts that have been done and are in the past.
I myself experience the results of my acts.
I create the people who act.
I am worried that the lotus-eyed Kaṇṇan
has entered her heart and that is why she says these things.
Her mouth is sweet as a fruit and she is as gentle as a young doe.
What can I tell the good people of this world
about my daughter?

3292 திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே என்னும்
       திறம்பாமல் மலை எடுத்தேனே என்னும்
திறம்பாமல் அசுரரைக் கொன்றேனே என்னும்
       திறம் காட்டி அன்று ஐவரைக் காத்தேனே என்னும்
திறம்பாமல் கடல் கடைந்தேனே என்னும்
       திறம்பாத கடல்வண்ணன் ஏறக்கொலோ?
திறம்பாத உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்
       திறம்பாது என் திருமகள் எய்தினவே? (5)
3292. My daughter says,
"I am protecting everyone and keep them on the right path.
I carried Govardhana mountain without effort.
I killed all the Asurans without exception.
I saved the Pandavas using all my cleverness.
I didn’t grow tired churning the ocean of milk."
Has the ocean-colored lord entered her heart?
What can I tell the people of this world about my daughter?
How can I tell all these things that my daughter tells me?

3293 இன வேய் மலை ஏந்தினேன் யானே என்னும்
       இன ஏறுகள் செற்றேனும் யானே என்னும்
இன ஆன் கன்று மேய்த்தேனும் யானே என்னும்
       இன ஆ நிரை காத்தேனும் யானே என்னும்
இன ஆயர் தலைவனும் யானே என்னும்
       இனத் தேவர் தலைவன் வந்து ஏறக்கொலோ?
இன வேல் கண் நல்லீர்க்கு இவை என் சொல்லுகேன்
       இன வேல் கண்ணி என் மகள் உற்றனவே? (6)
3293. My daughter says,
"I carried bamboo-covered Govardhana mountain.
I conquered seven bulls.
I graze the calves and milk-giving cows.
I protect the herd of cows.
I am the chief of the cowherds."
I am worried that the god of gods has entered her heart.
What can I tell her friends whose eyes are as sharp as spears
about my young daughter?

3294 உற்றார்கள் எனக்கு இல்லை யாரும் என்னும்
       உற்றார்கள் எனக்கு இங்கு எல்லாரும் என்னும்
உற்றார்களைச் செய்வேனும் யானே என்னும்
       உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும்
உற்றார்களுக்கு உற்றேனும் யானே என்னும்
       உற்றார் இலி மாயன் வந்து ஏறக்கொலோ?
உற்றீர்கட்கு என் சொல்லிச் சொல்லுகேன் யான்
       உற்று என்னுடைப் பேதை உரைக்கின்றவே? (7)
3294. My daughter says,
"I have no relatives.
All in this world are my relatives.
I create relationships.
I destroy relationships.
I am the relative of relatives."
I am worried that Maayan who has no relative
has entered my daughter’s heart.
What can I tell our relatives
about what my innocent daughter says?

3295 உரைக்கின்ற முக்கண் பிரான் யானே என்னும்
       உரைக்கின்ற திசைமுகன் யானே என்னும்
உரைக்கின்ற அமரரும் யானே என்னும்
       உரைக்கின்ற அமரர் கோன் யானே என்னும்
உரைக்கின்ற முனிவரும் யானே என்னும்
       உரைக்கின்ற முகில்வண்ணன் ஏறக்கொலோ?
உரைக்கின்ற உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்
       உரைக்கின்ற என் கோமள ஒண் கொடிக்கே? (8)
3295. My daughter says,
"I am the three-eyed lord and all the sastras praise me.
I am the four-headed Nanmuhan and I am praised by all.
I am the king of the gods and all praise me.
I am the sages and they all praise me."
I am worried that the cloud-colored god
praised by all has entered my daughter’s heart.
What can I tell this world that says these things,
gossiping about my beautiful vine-like daughter?

3296 கொடிய வினை யாதும் இலனே என்னும்
       கொடிய வினை ஆவேனும் யானே என்னும்
கொடிய வினை செய்வேனும் யானே என்னும்
       கொடிய வினை தீர்ப்பேனும் யானே என்னும்
கொடியான் இலங்கை செற்றேனே என்னும்
       கொடிய புள் உடையவன் ஏறக்கொலோ?
கொடிய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்
       கொடியேன் கொடி என் மகள் கோலங்களே? (9)
3296. My daughter says,
"I have no bad karma.
I myself am bad karma.
I give bad karma to all.
I remove bad karma also.
I destroyed the cruel Raksasa Ravana in Lanka."
I am worried that the god who carries the heroic Garuda flag
has entered my daughter’s heart.
I am a pitiful mother.
What can I tell the gossiping people of this world
about my beautiful vine-like daughter?

3297 கோலம் கொள் சுவர்க்கமும் யானே என்னும்
       கோலம் இல் நரகமும் யானே என்னும்
கோலம் திகழ் மோக்கமும் யானே என்னும்
       கோலம் கொள் உயிர்களும் யானே என்னும்
கோலம் கொள் தனிமுதல் யானே என்னும்
       கோலம் கொள் முகில்வண்ணன் ஏறக்கொலோ?
கோலம் கொள் உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்
       கோலம் திகழ் கோதை என் கூந்தலுக்கே? (10)
3297. My daughter says,
"I am beautiful paradise.
I am evil hell.
I am the highest shining heaven.
I am the flourishing lives on this earth.
I am the only ancient beautiful one."
I am worried that the dark cloud-colored god
has entered my daughter’s heart.
My daughter has beautiful hair decorated with flowers.
What can I tell the people who adorn themselves with jewels
and come and gossip?

3298 கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்
       குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை
வாய்ந்த வழுதி வள நாடன் மன்னு
       குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து
ஆய்ந்த தமிழ் மாலை ஆயிரத்துள்
       இவையும் ஓர் பத்தும் வல்லார் உலகில்
ஏந்து பெரும் செல்வத்தராய்த் திருமால்
       அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே (11)
3298. Sadagopan of Thirukuruhur
of the flourishing famous Pandian country
composed a thousand pasurams on the beloved of Lakshmi,
the earth goddess on a lotus,
and Nappinnai, the dear gentle girl of the cowherd clan.
If devotees learn and recite these ten pasurams
they will obtain much wealth in this world
and they will be the devotees of Thirumaal
and have the fortune of worshiping his feet.
-------------

திருவாய் மொழி - ஐந்தாம் பத்து (ஏழாம் திருமொழி, 3299-3309)
வானமாமலைப் பெருமானது அருளை வேண்டல் (சிரீவரமங்கலம்)

3299 நோற்ற நோன்பு இலேன் நுண் அறிவு இலேன் ஆகிலும்
       இனி உன்னை விட்டு ஒன்றும்
ஆற்ற கிற்கின்றிலேன் அரவின் அணை அம்மானே
சேற்றுத் தாமரை செந்நெல் ஊடு மலர்
       சிரீவரமங்கல நகர்
வீற்றிருந்த எந்தாய் உனக்கு மிகை அல்லேன் அங்கே (1)
3299. However much tapas I may have done,
I am not wise and will never be able
to do anything without your grace.
My father, our god, sleeps on a snake bed
and he stays in auspicious Srivaramangalam
where lotuses grow in the mud among the good paddy.
O lord, you are the highest god
and there is no god higher than you.

3300 அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் உன்னைக்
       காணும் அவாவில் வீழ்ந்து நான்
எங்குற்றேனும் அல்லேன் இலங்கை செற்ற அம்மானே
திங்கள் சேர் மணி மாடம் நீடு
       சிரீவரமங்கலநகர் உறை
சங்கு சக்கரத்தாய் தமியேனுக்கு அருளாயே (2)
3300. I can do nothing there,
I can do nothing here.
My only desire is to see you,
but there is nowhere I can have that.
My father, you destroyed Lanka.
You stay in Srivaramangalam
where tall palaces studded with jewels touch the moon.
You carry a conch and a discus.
I am lonely. Give me your grace.

3301 கருளப் புள் கொடி சக்கரப் படை வான நாட என்
       கார்முகில் வண்ணா
பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி அடிமைகொண்டாய்
தெருள் கொள் நான்மறை வல்லவர் பலர் வாழ்
       சிரீவரமங்கலநகர்க்கு
அருள்செய்து அங்கு இருந்தாய் அறியேன் ஒரு கைம்மாறே (3)
3301. You are the dark cloud-colored god of the sky.
You carry an eagle flag and a discus.
You abide giving your grace
in Srivaramangalam where many Brahmins live
who know well all the four Vedas that give wisdom.
I was useless and you made me valuable and your slave.
I do not know what I can give to repay you.

3302 மாறு சேர் படை நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்கு ஆய் அன்று
       மாயப்போர் பண்ணி
நீறு செய்த எந்தாய் நிலம் கீண்ட அம்மானே
தேறு ஞானத்தர் வேத வேள்வி அறாச்
       சிரீவரமங்கலநகர்
ஏறி வீற்றிருந்தாய் உன்னை எங்கு எய்தக் கூவுவனே? (4)
3302. You, my father fought a magical war with the hundred Kauravas
when they opposed the Pandavas and you destroyed them.
You split open the earth and brought forth the earth goddess.
You abide in Srivaramangalam
where wise men know the Vedas well
and recite them always and perform sacrifices.
I want to reach you. How can I call you to come?

3303 எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு? எவ்வ
       தெவ்வத்துள் ஆயுமாய் நின்று
கைதவங்கள் செய்யும் கரு மேனி அம்மானே
செய்த வேள்வியர் வையத்தேவர் அறாச்
       சிரீவரமங்கலநகர்
கைதொழ இருந்தாய் அது நானும் கண்டேனே (5)
3303. You have a dark-colored body.
You enter among all your enemies as one of them
and perform many tricks to conquer them.
Your devotees fold their hands and worship you
in Srivaramangalam where Brahmins always perform sacrifices—
that is something I myself have seen.
How can I call and reach you?

3304 ஏனம் ஆய் நிலம் கீண்ட என் அப்பனே கண்ணா என்றும்
       என்னை ஆளுடை
வான நாயகனே மணி மாணிக்கச்சுடரே
தேன மாம்பொழில் தண் சிரீவரமங்கலத்தவர்
       கைதொழ உறை
வானமாமலையே அடியேன் தொழ வந்தருளே (6)
3304. O my father, you took the form of a boar
and split open the earth.
O Kaṇṇan, you are my lord of the sky and you rule me always.
You are a jewel that shines like a diamond.
You are Vanamamalai and you abide in cool Srivaramanagalam
surrounded by mango groves dripping with honey
where your devotees fold their hands and worship you.
Come and give your grace to me, your slave,
so I may worship you.

3305 வந்தருளி என் நெஞ்சு இடம் கொண்ட வானவர்
       கொழுந்தே உலகுக்கு ஓர்
முந்தைத் தாய் தந்தையே முழு ஏழ் உலகும் உண்டாய்
செந்தொழிலவர் வேத வேள்வி அறாச்
       சிரீவரமங்கலநகர்
அந்தம் இல் புகழாய் அடியேனை அகற்றேலே (7)
3305. You are the tender shoot of the gods in the sky
and you came and entered my heart and gave me your grace.
You are the first father and mother of this world.
You swallowed all the seven worlds.
You abide in Srivaramanagam
where Brahmins whose work is pure
recite the Vedas and perform unceasing sacrifices.
You have endless fame. Do not leave me.

3306 அகற்ற நீ வைத்த மாய வல் ஐம்புலன்களாம் அவை
       நன்கு அறிந்தனன்
அகற்றி என்னையும் நீ அரும் சேற்றில் வீழ்த்திகண்டாய்
பகல் கதிர் மணி மாடம் நீடு சிரீவரமங்கை
       வாணனே என்றும்
புகற்கு அரிய எந்தாய் புள்ளின் வாய் பிளந்தானே (8)
3306. I know well
that you have created the five illusionary senses
that keep people away from you.
I am worried that you will keep me away from you
and make me fall into a happiness
that is only the unclean mud that the five senses give.
You are the god Vaaṇan and abide in Srivaramangalam
where the sun shines on the palaces studded with shining jewels.
O father, no one can tell who you are, ever.
When an Asuran came in the form of a bird
you split open his mouth.

3307 புள்ளின் வாய் பிளந்தாய் மருது இடை போயினாய்
       எருது ஏழ் அடர்த்த என்
கள்ள மாயவனே கருமாணிக்கச் சுடரே
தெள்ளியார் திரு நான்மறைகள் வல்லார் மலி
       தண் சிரீவரமங்கை
யுள் இருந்த எந்தாய் அருளாய் உய்யுமாறு எனக்கே (9)
3307. You split open the mouth of the Asuran.
You entered between the two marudam trees
and destroyed the Asurans.
You are a thief and you conquered the seven bulls.
You shine like a dark diamond.
My father, you abide in Srivaramangalam
where wise Brahmins live,
knowing well and reciting the divine four Vedas.
Give me your grace so I may survive.

3308 ஆறு எனக்கு நின் பாதமே சரண் ஆகத் தந்தொழிந்தாய்
       உனக்கு ஓர்கைம்
மாறு நான் ஒன்று இலேன் எனது ஆவியும் உனதே
சேறு கொள் கரும்பும் பெரும் செந்நெலும் மலி
       தண் சிரீவரமங்கை
நாறு பூந் தண் துழாய் முடியாய் தெய்வ நாயகனே (10)
3308. Whom do I have except you?
You gave me your feet as refuge
but I have nothing to give back to you.
My life is yours.
You are adorned with a fresh fragrant thulasi garland
and stay in flourishing Srivaramangai
where abundant good paddy and sugarcane grow in the earth.
You are the divine lord of the gods.

3309 தெய்வ நாயகன் நாரணன்
       திரிவிக்கிரமன் அடி இணைமிசை
கொய் கொள் பூம் பொழில்
       சூழ் குருகூர்ச் சடகோபன்
செய்த ஆயிரத்துள் இவை தண்
       சிரீவரமங்கை மேய பத்துடன்
வைகல் பாட வல்லார்
       வானோர்க்கு ஆரா அமுதே (11)
3309. Sadagopan of Thirukuruhur
surrounded by groves blossoming with bunches of flowers
composed a thousand poems
worshiping the feet of the divine god of the gods,
Thirivikraman, Naraṇan.
If devotees recite these ten pasurams every day
they will become sweet nectar for the gods in the sky.
-----------

திருவாய் மொழி - ஐந்தாம் பத்து (எட்டாம் திருமொழி, 3310-3320)
ஆராவமுதாழ்வார் பேறுகளைத் தாராமையால் ஆழ்வார் தீராத
ஆசையுடன் ஆற்றாமைபேசி அலமருதல் (திருக்குடந்தை)

3310 ஆரா அமுதே அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே
சீர் ஆர் செந்நெல் கவரி வீசும் செழு நீர்த் திருக்குடந்தை
ஏர் ஆர் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே (1)
3310. You are my sweet nectar.
O Neḍumaal, this slave’s body dissolves, melts
and becomes water with love for you.
You shine and sleep beautifully on the water in Thirukuḍandai
surrounded by the ocean with rolling waves,
where rich paddy plants blow in the wind like fans.
O my father, I saw you there.

3311 எம்மானே என் வெள்ளை மூர்த்தி என்னை ஆள்வானே
எம் மா உருவும் வேண்டும் ஆற்றால் ஆவாய் எழில் ஏறே
செம் மா கமலம் செழு நீர்மிசைக்கண் மலரும் திருக்குடந்தை
அம் மா மலர்க்கண் வளர்கின்றானே என் நான் செய்கேனே (2)
3311. You are my lord.
Your form is pure. You rule me.
You take any form you please.
You are a beautiful bull.
You close your beautiful lotus eyes
and sleep in divine Kuḍandai
where lovely red lotuses bloom on fertile water.
What should I do?

3312 என் நான் செய்கேன்? யாரே களைகண்? என்னை என் செய்கின்றாய்?
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கன் ஆர் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அரு வாழ்நாள்
செல் நாள் எந் நாள்? அந் நாள் உன தாள் பிடித்தே செலக்காணே (3)
3312. What can I do in this life?
Who is my refuge?
What do you want to do with me?
I will not go to anyone to tell my troubles except you.
You sleep in Thirukuḍandai surrounded by strong walls.
Give me your grace so that I, your slave,
may spend all the days of my life worshiping your feet.

3313 செலக் காண்கிற்பார் காணும் அளவும் செல்லும் கீர்த்தியாய்
உலப்பு இலானே எல்லா உலகும் உடைய ஒரு மூர்த்தி
நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய் உன்னைக் காண்பான் நான்
அலப்பு ஆய் ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே (4)
3313. No one can describe you.
You have fame that no one can measure.
There is no end for you.
O god, you are the lord and you own all the world.
You sleep on the water in Kuḍandai
where many good people live.
Yearning to see you, I look at the sky, cry and worship you.

3314 அழுவன் தொழுவன் ஆடிக் காண்பான் பாடி அலற்றுவன்
தழு வல்வினையால் பக்கம் நோக்கி நாணிக் கவிழ்ந்திருப்பன்
செழு ஒண் பழனக் குடந்தைக் கிடந்தாய் செந்தாமரைக் கண்ணா
தொழுவனேனை உன தாள் சேரும்வகையே சூழ்கண்டாய் (5)
3314. I cry for you. I worship you.
I dance for you, prattle and sing.
I look for you and want to embrace you.
I feel shy and lower my head.
O lord, you have lovely lotus eyes
and you sleep on the water in Kuḍandai
surrounded by beautiful flourishing fields.
Show me how I, your slave, can join your feet.

3315 சூழ்கண்டாய் என் தொல்லை வினையை அறுத்து உன் அடிசேரும்
ஊழ் கண்டிருந்தே தூராக்குழி தூர்த்து எனை நாள் அகன்று இருப்பன்?
வாழ் தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய் வானோர் கோமானே
யாழின் இசையே அமுதே அறிவின் பயனே அரிஏறே (6)
3315. Even though I know how to remove
the fruits of my bad karma
I am still involved in the enjoyment of my five senses.
How long can I live like this away from you?
O god, you are the king of the gods in the sky.
You sleep on the water in ancient, famed Kuḍandai.
You are the sweet music of the yazh. You are nectar.
You are the fruit of knowledge.
You are the lion.

3316 அரிஏறே என் அம் பொன் சுடரே செங்கண் கரு முகிலே
எரி ஏய் பவளக் குன்றே நால் தோள் எந்தாய் உனது அருளே
பிரியா அடிமை என்னைக் கொண்டாய் குடந்தைத் திருமாலே
தரியேன் இனி உன் சரணம் தந்து என் சன்மம் களையாயே (7)
3316. You are a lion king.
You are a shining golden light.
You are a dark cloud that has lovely eyes.
You are a coral mountain as bright as fire.
O my father, you have four arms.
You accepted me as your slave.
I do not want to be apart from you ever.
You are Thirumaal of divine Kuḍandai.
I cannot stay in this world anymore.
Give me your grace so I will not be born again on this earth.

3317 களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களைகண் மற்று இலேன்
வளை வாய் நேமிப் படையாய் குடந்தைக் கிடந்த மா மாயா
தளரா உடலம் எனது ஆவி சரிந்து போம்போது
இளையாது உன தாள் ஒருங்கப் பிடித்துப் போத இசை நீயே (8)
3317. I do not know whether you wish
to remove my sorrow or not,
but I have no refuge except you.
You carry a round discus.
You, the wonderful Maayan sleep on the water in Kuḍandai.
When my body grows weak and life leaves my body,
give me your grace so I may hold to your feet strongly,
not leaving them and joining you.

3318 இசைவித்து என்னை உன் தாள் இணைக்கீழ் இருத்தும் அம்மானே
அசைவு இல் அமரர் தலைவர் தலைவா ஆதிப் பெரு மூர்த்தி
திசை வில் வீசும் செழு மா மணிகள் சேரும் திருக்குடந்தை
அசைவு இல் உலகம் பரவக் கிடந்தாய் காண வாராயே (9)
3318. O my father,
you make me accept you and keep me beneath your feet.
You are the lord of the everlasting gods.
You are the great ancient god.
You sleep on the water in divine Kuḍandai
where the waves bring precious diamonds
and leave them on the banks of the river.
You sleep as the everlasting world praises you.
Come to me, I yearn to see you.

3319 வாரா அருவாய் வரும் என் மாயா மாயா மூர்த்தியாய்
ஆரா அமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய் திருக்குடந்தை
ஊராய் உனக்கு ஆள் பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ? (10)
3319. You are my Maayan.
You are formless and Maayan. Come to me.
You are divine nectar.
I am your slave and you live sweetly in my mind.
You have removed my karma
that seemed impossible to remove and you rule me.
You are the god of divine Kuḍandai.
You made me your devotee.
How can I suffer anymore in this world?

3320 உழலை என்பில் பேய்ச்சி முலையூடு அவளை உயிர் உண்டான்
கழல்கள் அவையே சரண் ஆகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்
குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
மழலை தீர வல்லார் காமர் மான் ஏய் நோக்கியர்க்கே (11)
3320. Sadagopan of Kuruhur
took refuge in the feet of the lord
and composed a thousand pasurams
sweeter than the music of the flute
to the god who drank milk from the devil Putana and killed her.
If devotees learn and recite these ten pasurams
they will be like Kama, the god of love,
for women with lovely doe-like eyes.
---------

திருவாய் மொழி - ஐந்தாம் பத்து (ஒன்பதாம் திருமொழி, 3321-3331)
திருவல்லவாழ் செல்லுதலைத் தடுக்கும் தோழியர்க்குத் தலைவி கூறுதல் (திருவல்லவாழ்)

3321 மான் ஏய் நோக்கு நல்லீர் வைகலும் வினையேன் மெலிய
வான் ஆர் வண் கமுகும் மது மல்லிகை கமழும்
தேன் ஆர் சோலைகள் சூழ் திருவல்லவாழ் உறையும்
கோனாரை அடியேன் அடிகூடுவது என்றுகொலோ? (1)
3321. She says, "O friends, you have beautiful doe-like eyes.
The god, our king, stays in Thiruvallam
surrounded by groves where the fragrance of jasmine spreads
and kamugu trees grow tall and touch the sky,
flourishing and dripping with honey.
Every day I suffer with my bad karma.
When will the day come when this slave of the god can join him?"

3322 என்று கொல் தோழிமீர்காள் எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ?
பொன்திகழ் புன்னை மகிழ் புது மாதவி மீது அணவி
தென்றல் மணம் கமழும் திருவல்லவாழ் நகருள்
நின்ற பிரான் அடிநீறு அடியோம் கொண்டு சூடுவதே? (2)

3322. She says, "O friends, what do you get by making me suffer?
He is our dear lord of Thiruvallam
where the breeze blows through fresh madhavi plants,
mahizham flowers and punnai trees
that bloom with golden blossoms and spread their fragrance.
When will the day come when I, a slave of the lord,
can worship the feet of the dear lord?"

3323 சூடு மலர்க்குழலீர் துயராட்டியேன் மெலிய
பாடும் நல் வேத ஒலி பரவைத் திரை போல் முழங்க
மாடு உயர்ந்து ஓமப் புகை கமழும் தண் திருவல்லவாழ்
நீடு உறைகின்ற பிரான் கழல் காண்டும்கொல் நிச்சலுமே? (3)
3323. She says, "O friends, you wear flowers in your hair.
He is our dear lord of flourishing Thiruvallam
where the divine sound of the Vedas
spreads like the roaring of the waves of the ocean
and the smoke of sacrifices rises above the palaces.
When will I be able to see every day
the feet ornamented with anklets of the dear god?
I grow weak longing to see him."

3324 நிச்சலும் தோழிமீர்காள் எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ?
பச்சிலை நீள் கமுகும் பலவும் தெங்கும் வாழைகளும்
மச்சு அணி மாடங்கள் மீது அணவும் தண் திருவல்லவாழ்
நச்சு அரவின் அணைமேல் நம்பிரானது நல் நலமே (4)
3324. She says, "O friends, why do you make me worry every day?
What do you get from that?
My god sleeps on the river on the snake bed
in Thiruvallam where tall kamugu trees with long green leaves,
jack trees, coconut trees and banana trees
grow tall and touch the tops of the palaces with porches.
My life is with that dear god."

3325 நல் நலத் தோழிமீர்காள் நல்ல அந்தணர் வேள்விப் புகை
மைந் நலம் கொண்டு உயர் விண் மறைக்கும் தண் திருவல்லவாழ்
கன்னல் அம் கட்டி தன்னை கனியை இன் அமுதம் தன்னை
என் நலம் கொள் சுடரை என்றுகொல் கண்கள் காண்பதுவே? (5)
3325. She says, "O friends,
you are my dear friends and you worry about me.
He is the god of Thiruvallam where the dark smoke of the sacrifices
that the good Brahmins perform rises up and hides the sky.
Our god is sweet as jaggery, fruit and nectar
and shines like a bright light. He has made me sick with love.
When will my eyes see him?"

3326 காண்பது எஞ்ஞான்றுகொலோ வினையேன் கனிவாய் மடவீர்
பாண் குரல் வண்டினொடு பசுந் தென்றலும் ஆகி எங்கும்
சேண் சினை ஓங்கு மரச் செழுங் கானல் திருவல்லவாழ்
மாண் குறள் கோலப் பிரான் மலர்த் தாமரைப் பாதங்களே? (6)
3326. She says, "O lovely friends, your mouths are as sweet as fruits.
I have done bad karma.
When will I see the lotus feet of the god?
He took the divine form of a beautiful dwarf,
went to Mahbali’s sacrifice and measured the world and the sky.
He is the god of Thiruvallam
where flourishing trees with branches that touch the sky
grow on the rich seashore
and bees swarm singing with lovely voices
and cool breezes blow everywhere."

3327 பாதங்கள்மேல் அணி பூந் தொழக் கூடுங்கொல் பாவை நல்லீர்
ஓத நெடுந் தடத்துள் உயர் தாமரை செங்கழுநீர்
மாதர்கள் வாள் முகமும் கண்ணும் ஏந்தும் திருவல்லவாழ்
நாதன் இஞ் ஞாலம் உண்ட நம் பிரான் தன்னை நாள்தொறுமே? (7)
3327. She says, "O friends, you are as lovely as dolls.
Our god swallowed the world.
He is the god of Thiruvallam
where lovely lotuses and sengazhuneer flowers
blooming on the wide rippling pond
look like the shining faces and eyes of women.
When will I join the beautiful ornamented lotus feet
of the dear god?"

3328 நாள்தொறும் வீடு இன்றியே தொழக் கூடுங்கொல் நல் நுதலீர்
ஆடு உறு தீங் கரும்பும் விளை செந்நெலும் ஆகி எங்கும்
மாடு உறு பூந் தடம் சேர் வயல் சூழ் தண் திருவல்லவாழ்
நீடு உறைகின்ற பிரான் நிலம் தாவிய நீள் கழலே? (8)
3328. She says, "O friends, you have beautiful foreheads.
When will I worship every day
the ornamented feet that measured the world
without ever leaving them?
He stays always in rich Thiruvallam
surrounded by fields, rich flowering ponds,
good paddy plants and sweet sugarcane
that grow everywhere and wave in the breeze."

3329 கழல் வளை பூரிப்ப யாம் கண்டு கைதொழக் கூடுங்கொலோ
குழல் என்ன யாழும் என்ன குளிர் சோலையுள் தேன் அருந்தி
மழலை வரி வண்டுகள் இசை பாடும் திருவல்லவாழ்
சுழலின் மலி சக்கரப் பெருமானது தொல் அருளே? (9)
3329. She says, "O friends, when will the day come
when I see and worship the god of Thiruvallam
where lined bees drink honey and sing like babies,
sounding like the music of the yaazh and flute in the cool groves?
When will I receive the divine grace
of the god with a discus in his hands
and join him and be happy
so that my bangles stay on my arms?"

3330 தொல் அருள் நல் வினையால் சொலக் கூடுங்கொல் தோழிமீர்காள்
தொல் அருள் மண்ணும் விண்ணும் தொழ நின்ற திருநகரம்
நல் அருள் ஆயிரவர் நலன் ஏந்தும் திருவல்லவாழ்
நல் அருள் நம் பெருமான் நாராயணன் நாமங்களே? (10)
3330. She says, "O friends,
When will I have good karma and join the god?
He is the lord of beautiful Thiruvallam
where the earth and the sky
worship him to receive his divine grace.
A thousand good Brahmins live there
and praise the names of our dear god Narayaṇan.
He gives his good grace to all."

3331 நாமங்கள் ஆயிரம் உடைய நம் பெருமான் அடிமேல்
சேமம் கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்து உரைத்த
நாமங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் திருவல்லவாழ்
சேமம் கொள் தென் நகர்மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே (11)
3331. Sadagopan of southern Thirukuruhur
that gives good life to all, composed a thousand poems
praising the feet of our divine god praised with thousand names.
If the devotees of Thiruvallam
learn and recite these ten pasurams,
if they are born in this world they will have a happy life.
------------

திருவாய் மொழி - ஐந்தாம் பத்து (பத்தாம் திருமொழி, 3321-3331)
ஆழ்வார் தாம் சேர்ந்து அனுபவிக்கும் நிலையைச் செய் என எம்பெருமானை வேண்டுதல்

3332 பிறந்த ஆறும் வளர்ந்த ஆறும் பெரிய பாரதம்
       கைசெய்து ஐவர்க்குத்
திறங்கள் காட்டியிட்டுச் செய்து போன மாயங்களும்
நிறம் தன் ஊடு புக்கு எனது ஆவியை நின்று நின்று
       உருக்கி உண்கின்ற இச்
சிறந்த வான் சுடரே உன்னை என்றுகொல் சேர்வதுவே? (1)
3332. O god, you are the best and you shine in the sky.
Your birth is magic and you were raised as a man.
You did many tricks in the Bharatha war for the Pandavas
and you helped them conquer the Kauravas.
All that magic and all those tricks enter my heart
and make me melt.
You are the bright light that did all those tricks. When will I join you?

3333 வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும் மாய மாவினை
       வாய் பிளந்ததும்
மதுவை வார் குழலார் குரவை பிணைந்த குழகும்
அது இது உது என்னலாவன அல்ல என்னை உன்
       செய்கை நைவிக்கும்
முது வைய முதல்வா உன்னை என்று தலைப்பெய்வனே? (2)
3333. You conquered the seven bulls to marry Nappinnai.
When the Asuran Kesi came in the form of an illusionary horse
you split open his mouth.
You danced the kuravai kuthu with girls
whose long hair is decorated with lovely flowers
dripping with honey.
No one can say whether your actions are this,
that or something in between,
but whatever they are, they hurt me.
You are the ancient lord!
When will I come and join you?

3334 பெய்யும் பூங் குழல் பேய் முலை உண்ட பிள்ளைத் தேற்றமும்
       பேர்ந்து ஓர் சாடு இறச்
செய்ய பாதம் ஒன்றால் செய்த நின் சிறுச் சேவகமும்
நெய் உண் வார்த்தையுள் அன்னை கோல் கொள்ள நீ உன்
       தாமரைக் கண்கள் நீர் மல்க
பையவே நிலையும் வந்து என் நெஞ்சை உருக்குங்களே (3)
3334. O god, when you were a child you drank
the poisonous milk from the breasts of the devil Puthana
when she came wearing flowers in her lovely hair.
You killed Sakatasuran, kicking him
when he came in the form of a cart.
When you stole the butter and ate it,
your mother Yashoda hit you with a stick
and you stood in front of her as your lotus eyes filled with tears.
When I think how you stood and cried, it hurts my heart.

3335 கள்ள வேடத்தைக் கொண்டு போய் புரம் புக்க ஆறும்
       கலந்து அசுரரை
உள்ளம் பேதம் செய்திட்டு உயிர் உண்ட உபாயங்களும்
வெள்ள நீர்ச் சடையானும் நின்னிடை வேறு அலாமை
       விளங்க நின்றதும்
உள்ளம் உள் குடைந்து என் உயிரை உருக்கி உண்ணுமே (4)
3335. You disguised yourself with many different forms
and entered the places of your enemies and conquered them.
You made the Asurans fight each other with your tricks
and killed them.
Shiva, in whose hair the Ganges flows with rolling waves,
is not different from you.
When I think of all your actions
they enter my heart and make my life melt.

3336 உண்ண வானவர் கோனுக்கு ஆயர் ஒருப்படுத்த
       அடிசில் உண்டதும்
வண்ண மால் வரையை எடுத்து மழை காத்தலும்
மண்ணை முன் படைத்து உண்டு உமிழ்ந்து கடந்து இடந்து
       மணந்த மாயங்கள்
எண்ணும்தோறும் என் நெஞ்சு எரிவாய் மெழுகு ஒக்கும் நின்றே (5)
3336. You ate the food that the cowherds served
for Indra the king of the gods.
You carried large, beautiful Govardhana mountain
as an umbrella and protected the cows from a storm.
You swallowed the earth and spit it out.
When I think of all your magical deeds
my heart melts like wax in fire.

3337 நின்ற ஆறும் இருந்த ஆறும் கிடந்த ஆறும்
       நினைப்பு அரியன
ஒன்று அலா உருவு ஆய் அருவு ஆய நின் மாயங்கள்
நின்று நின்று நினைக்கின்றேன் உன்னை எங்ஙனம்
       நினைகிற்பன்? பாவியேற்கு
ஒன்று நன்கு உரையாய் உலகம் உண்ட ஒண் சுடரே (6)
3337. Your standing, sitting and lying forms
are hard for me even to imagine.
You have a form yet you are formless.
I think of all your magical deeds again and again.
In which form can I think of you?
You are the shining light who swallowed the earth.
Tell this sinner how to think of you.

3338 ஒண் சுடரோடு இருளுமாய் நின்ற ஆறும் உண்மையோடு
       இன்மையாய் வந்து என்
கண் கொளாவகை நீ கரந்து என்னைச் செய்கின்றன
எண் கொள் சிந்தையுள் நைகின்றேன் என் கரிய
       மாணிக்கமே என் கண்கட்குத்
திண் கொள்ள ஒரு நாள் அருளாய் உன் திரு உருவே (7)
3338. You came to me as a shining light,
as darkness, as truth and as the false.
You hide and do not show me who you are.
You are a dark diamond.
I suffer in my mind yearning to see you.
Come and show me your divine form one day
so my eyes may see you and find joy.

3339 திரு உருவு கிடந்த ஆறும் கொப்பூழ்ச்
       செந்தாமரைமேல் திசைமுகன்
கருவுள் வீற்றிருந்து படைத்திட்ட கருமங்களும்
பொரு இல் உன் தனி நாயகம் அவை கேட்கும்தோறும்
       என் நெஞ்சம் நின்று நெக்கு
அருவி சோரும் கண்ணீர் என் செய்கேன் அடியேனே? (8)
3339. You sleep on the ocean in a divine reclining form.
Nanmuhan staying on a beautiful lotus on your navel
creates the world and its creatures through your grace.
When I hear of all your supreme matchless deeds,
my heart melts and my eyes shed tears like a waterfall.
What can this slave do?

3340 அடியை மூன்றை இரந்த ஆறும் அங்கே நின்று ஆழ் கடலும்
       மண்ணும் விண்ணும்
முடிய ஈர் அடியால் முடித்துக்கொண்ட முக்கியமும்
நொடியுமாறு அவை கேட்கும்தோறும் என் நெஞ்சம்
       நின் தனக்கே கரைந்து உகும்
கொடிய வல்வினையேன் உன்னை என்றுகொல் கூடுவதே? (9)
3340. You went to Mahabali’s sacrifice,
begged for two feet of land
and took the sky and the earth with two steps.
When I hear these great deeds of yours my heart melts.
I have done bad karma.
When can I reach you?

3341 கூடி நீரைக் கடைந்த ஆறும் அமுதம் தேவர்
       உண்ண அசுரரை
வீடும் வண்ணங்களே செய்து போன வித்தகமும்
ஊடு புக்கு எனது ஆவியை உருக்கி
       உண்டிடுகின்ற நின் தன்னை
நாடும் வண்ணம் சொல்லாய் நச்சு நாகு அணையானே (10)
3341. You joined with the gods and churned the milky ocean.
Disguised as Mohini you cheated the Asurans
so they would not get the nectar,
and you distributed the nectar to the gods.
O lord you sleep on a snake bed.
You entered my heart and melted my soul.
Tell me how can I come and join you?

3342 நாகு அணைமிசை நம் பிரான் சரணே சரண்
       நமக்கு என்று நாள்தொறும்
ஏக சிந்தையனாய்க் குருகூர்ச்
       சடகோபன் மாறன்
ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள்
       இவையும் ஓர் பத்தும் வல்லார்
மாக வைகுந்தத்து
       மகிழ்வு எய்துவர் வைகலுமே (11)
3342. Sadagopan Maaran of Thirukuruhur,
worshiping the god every day
and thinking that his only refuge is the lord
who sleeps on a snake bed,
composed a thousand poems praising the god.
If devotees learn and recite these ten pasurams well
they will reach Vaikuṇṭam and be happy always.
-----------
continued in part 2
-----------

Feel free to send corrections to the webmaster.