தொடர் எண் | பக்க எண் |
1. Introduction (Prof.T.P. Meenakshisundaranar ) iii | |
2. முன்னுரை ... 1 | |
3. உரையில் எடுத்தாண்ட நூல்கள் ... 6 | |
4. உரைநலம் (திரு.க. வெள்ளைவாரணனார் ) ... 7 | |
5. பாடிய சான்றோர் வரலாறு ... 22 | |
6. பதிற்றுப்பத்தும் பதிகங்களும் (திரு.T.V. சதாசிவப் பண்டாரததார்) ... 35 | |
7. சேரர் மரபு முறை ... 42 | |
8. கடவுள் வாழ்த்து ... 1 | |
9. இரண்டாம் பத்து ... 4 | |
10. மூன்றாம் பத்து ... 67 | |
11. நான்காம் பத்து ... 138 | |
12. ஐந்தாம் பத்து ... 187 | |
13. ஆறாம் பத்து ... 243 | |
14. ஏழாம் பத்து ... 267 | |
15. எட்டாம் பத்து ... 355 | |
16. ஒன்பதாம் பத்து ... 368 | |
17. பதிகங்களின் பழைய உரைக்குறிப்பு ... 455 | |
18. இடம் விளங்காத பதிற்றுப்பத்துப் பாட்டுக்கள் ... 457 | |
19. செய்யுள் முதற்குறிப்பு ... 459 | |
20. அருஞ்சொல்லகராதி ... 469 | |
21. உரையில் எடுத்தாளப்பட்ட நூல்களின் குறுக்க அட்டவனை ... 510 |
வரைமருள் புணரி வான்பிசி ருடைய வளிபாய்ந் தட்ட துளங்கிருங் கமஞ்சூல் நளியிரும் பரம்பின் மாக்கடன் முன்னி அணங்குடை யவுண ரேமம் புணர்க்குஞ்1 சூருடை முழுமுத றடிந்த பேரிசைக் | 5 |
கடுஞ்சின விறல்வேள் களிறூர்ந் தாங்குச் செவ்வா யெஃகம் விலங்குந* ரறுப்ப வருநிறந் திறந்த புண்ணுமிழ் குருதியின் மணிநிற விருங்கழி நீர்நிறம்2 பெயர்ந்து மனாலக் கலவை போல வரண்3 கொன்று | 10 |
முரண்மிகு சிறப்பி னுயர்ந்த வூக்கலை பலர்மொசிந் தோம்பிய வலர்பூங் கடம்பின்4 கடியுடை முழுமுத றுமிய வேஎய்5 வென்றெறி முழங்குபணை செய்த வெல்போர் நாரரி நறவி னார மார்பிற் | 15 |
போராடு தானைச்6 சேர லாத மார்புமலி பைந்தா ரோடையொடு விளங்கும் வலனுயர் மருப்பிற் பழிதீர் யானைப் பொலனணி யெருத்த மேல்கொண்டு பொலிந்தநின் பலர்புகழ் செல்வ மினி துகண் டிகுமே | 20 |
கவிர்ததை சிலம்பிற் றுஞ்சுங் கவரி பரந்திலங் கருவியொடு நரந்தங் கனவும் ஆரியர் துவன்றிய பேரிசை யிமயம் தென்னங் குமரியொ டாயிடை மன்மீக் கூறுநர் மறந்தபக் கடந்தே7 | 25 |
வயவர் வீழ வாளரின் மயக்கி இடங்கவர் கடும்பி னரசுதலை பனிப்பக் கடம்புமுத றடிந்த கடுஞ்சின வேந்தே தாரணி யெருத்தின் வாரல் வள்ளுகிர் அரிமான் வழங்குஞ் சாரற் பிறமான்* தோடுகொ ளினநிரை நெஞ்சதிர்ந் தாங்கு | 5 |
முரசுமுழங்கு நெடுநக ரரசுதுயி லீயாது மாதிரம் பனிக்கு மறம்வீங்கு பல்புகழ் கேட்டற் கினிதுநின் செல்வங் கேட்டோறும் காண்டல் விருப்பொடு கமழுங் குளவி | 10 |
வாடாப் பைம்மயி ரிளைய வாடுநடை 1 அண்ணன் மழகளி றரிஞிமி றோப்புங் கன்றுபுணர் பிடிய குன்றுபல நீந்தி வந்தவ ணிறுத்த விரும்பே ரொக்கல் தொல்பசி யுழந்த பழங்கண் வீழ | 15 |
எஃகுபோழ்ந் தறுத்த வானிணக் கொழுங்குறை மையூன் பெய்த வெண்ணெல் வெண்சோறு நனையமை கள்ளின் றேறலொடு மாந்தி நீர்ப்படு பருந்தி னீர்ஞ்சிற கன்ன நிலந்தின் சிதாஅர் களைந்த பின்றை | 20 |
நூலாக் கலிங்கம் வாலரைக் கொளீஇ வணரிருங் கதுப்பின் வாங்கமை மென்றோள் வசையின் மகளிர் வயங்கிழை யணிய அமர்புமெய் யார்த்த சுற்றமொடு நுகர்தற் கினிதுநின் பெருங்கலி மகிழ்வே. | 25 |
தொறுத்தவய1 லாரல்பிறழ்நவும் ஏறுபொருதசெறு வுழா துவித்துநவும் கரும்பின் பாத்திப் பூத்த நெய்தல் இருங்க ணெருமையி னிரைதடுக் குநவும் கலிகெழு துணங்கை யாடிய மருங்கின் | 5 |
வளைதலை மூதா வாம்ப லார்நவும் ஒலிதெங்கி னிமிழ்மருதிற் புனல்வாயிற் பூம்பொய்கைப் பாடல்சான்ற பயங்கெழு வைப்பின் நாடுகவி னழிய நாமந் தோற்றிக் | 10 |
கூற்றடூஉ நின்ற யாக்கை போல நீசிவந் திறுத்த நீரழி பாக்கம் விரிபூங் கரும்பின் கழனி புல்லெனத் திரிகாய் விடத்தரொடு காருடை போகிக் கவைத்தலைப் பேய்மகள் கழுதூர்ந் தியங்க | 15 |
வூரிய2 நெருஞ்சி நீறாடு பறந்தலைத் தாதெரு மறுத்த கலியழி மன்றத்து உள்ள மழிய வூக்குநர் மிடறபுத்(து) உள்ளுநர் பனிக்கும் பாழா யினவே காடே கடவுண் மேன புறவே | 20 |
ஒள்ளிழை மகளிரொடு மள்ளர் மேன ஆறே யவ்வனைத் தன்றியு ஞாலத்துக் கூலம் பகர்நர் குடிபுறந் தராஅக்3 குடிபுறந் தருநர் பார மோம்பி அழல்சென்ற மருங்கின் வெள்ளி யோடா(து) | 25 |
மழைவேண்டு புலத்து மாரி நிற்ப நோயொடு பசியிகந் தொரீஇப் பூத்தன்று பெருமகநீ காத்த நாடே. |
நிலநீர் வளிவிசும் பென்ற நான்கின் அளப்பரியையே நாள்கோ டிங்கண் ஞாயிறு கனையழல் ஐந்தொருங்கு1 புணர்ந்த விளக்கத் தனையை போர்தலை மிகுத்த வீரைம் பதின்மரொடு | 5 |
துப்புத் துறைபோகிய துணிவுடை யாண்மை அக்குர னனைய கைவண் மையையே அமர்கடந்து மலைந்த தும்பைப் பகைவர் போர்பீ டழித்த செருப்புகன் முன்ப கூற்று வெகுண்டுவரினு மாற்று2மாற் றலையே | 10 |
எழுமுடி கெழீஇய திருஞெம ரகலத்து நோன்புரித் தடக்கைச் சான்றோர் மெய்ம்மறை3 வானுறை மகளிர் நலனிகல் கொள்ளும் வயங்கிழை கரந்த வண்டுபடு கதுப்பின்4 ஒடுங்கீ ரோதிக் கொடுங்குழை கணவ | 15 |
பல்களிற்றுத் தொழுதியொடு வெல்கொடி நுடங்கும் படையே ருழவ பாடினி வேந்தே இலங்குமணி மிடைந்த பொலங்கலத் திகிரிக் கடலக வரைப்பினிப் பொழின்முழு தாண்டநின் முன்றிணை முதல்வர் போல நின்றுநீ | 20 |
கெடாஅ நல்லிசை நிலைஇத் தவாஅலிய ரோவிவ் வுலகமோ டுடனே. |
யாண்டுதலைப் பெயர வேண்டுபுலத் திறுத்து முனையெரி பரப்பிய துன்னருஞ் சீற்றமொடு மழைதவழ்பு தலைஇய மதின்மர முருக்கி நிரைகளி றொழுகிய நிரைய வெள்ளம் பரந்தாடு கழங்கழி1 மன்மருங் கறுப்பக் | 5 |
கொடிவிடு குரூஉப்புகை பிசிரக் கால்பொர அழல்கவர் மருங்தி னுருவறக் கெடுத்துத் தொல்கவி னழிந்த2 கண்ணகன் வைப்பின் வெண்பூ வேளையொடு பைஞ்சுரை கலித்துப் பீரிவர்பு பரந்த3 நீரறு நிறைமுதற் | 10 |
சிவந்த காந்தண் முதல்சிதை மூதிற் புலவுவில் லுழவிற் புல்லாள் வழங்கும் புல்லிலை வைப்பிற் புலஞ்சிதை யரம்பின் அறியா மையான் மறந்துதுப் பெதிர்ந்தநின் பகைவர் நாடுங் கண்டுவந் திசினே | 15 |
கடலவுங் கல்லவும் யாற்றவும் பிறவும் வளம்பல நிகழ்தறா நனந்தலை நன்னாட்டு விழவறு பறியா முழவிமிழ் மூதூர்க் கொடிநிழற் பட்ட பொன்னுடை நியமத்துச் சீர்பெறு கலிமகி ழியம்பு முரசின் | 20 |
வயவர் வேந்தே பரிசிலர் வெறுக்கை தாரணிந் தெழிலிய தொடிசிதை மருப்பின் போர்வல் யானைச் சேர லாத நீவா ழியரிவ் வுலகத் தோர்க்கென உண்டுரை மாறிய மழலை நாவின் | 25 |
மென்சொற் கலப்பையர் திருந்துதொடை வாழ்த்த வெய்துற வறியாது நந்திய வாழ்க்கைச் செய்த மேவ4 லமர்ந்த சுற்றமோடு ஒன்றுமொழிந் தடங்கிய கொள்கை யென்றும் பதிபிழைப் பறியாது துய்த்த லெய்தி | 30 |
நிரைய மொரீஇய வேட்கைப் புரையோர் மேயின ருறையும் பலர்புகழ் பண்பின் நீபுறந் தருதலி னோயிகந் தொரீஇய யாணர்நன் னாடுங் கண்டுமதி மருண்டனென் மண்ணுடை ஞாலத்து மன்னுயிர்க் கெஞ்சா | 35 |
தீத்துக்கை தண்டாக் கைகடுந் துப்பிற் புரைவயிற் புரைவயிற் பெரிய நல்கி ஏம மாகிய சீர்கெழு விழவின் நெடியோ னன்ன நல்லிசை ஒடியோ மைந்தநின் பண்புபல நயந்தே. | 40 |
கோடுறழ்ந் தெடுத்த கொடுங்க ணிஞ்சி நாடுகண் டன்ன கணை துஞ்சு விலங்கல் துஞ்சு மரக்குழாந் துவன்றிப் புனிற்றுமகள் பூணா வையவி தூக்கிய மதில நல்லெழி னெடும்புதவு முருக்கிக் கொல்லுபு | 5 |
ஏன மாகிய நுனைமுரி மருப்பின் கடாஅம் வார்ந்து கடுஞ்சினம் பொத்தி மரங்கொன் மழகளிறு முழங்கும் பாசறை நீடினை யாகலிற் காண்குவந் திசினே ஆறிய கற்பி னடங்கிய சாயல் | 10 |
ஊடினு மினிய கூறு மின்னகை அமிர்துபொதி துவர்வா யமர்த்த நோக்கிற் சுடர்நுத லசைநடை யுள்ளலு முரியள் பாய லுய்யுமோ தோன்ற றாவின்று திருமணி பொருத திகழ்விடு பசும்பொன் | 15 |
வயங்குகதிர் வயிரமோ டுறழ்ந்துபூண் சுடர்வர எழுமுடி கெழீஇய திருஞெம ரகலத்துப் புரையோ ருண்கட் டுயிலின் பாயல் பாலும் கொளாலும் வல்லோய்நின் சாயன் மார்பு நனியலைத் தன்றே. | 20 |
புரைவது நினைப்பிற் புரைவதோ வின்றே பெரிய தப்புந ராயினும் பகைவர் பணிந்துதிறை பகரக் கொள்ளுநை யாதலின் துளங்குபிசி ருடைய மாக்கட னீக்கிக் கடம்பறுத் தியற்றிய வலம்படு வியன்பணை | 5 |
ஆடுநர் பெயர்ந்துவந் தரும்பலி தூஉய்க் கடிப்புக் கண்ணுறூஉந் தொடித்தோ ளியவர் அரணங் காணாது மாதிரந் துழைஇய நனந்தலைப் பைஞ்ஞிலம் வருகவிந் நிழலென ஞாயிறு புகன்ற தீதுதீர் சிறப்பின் | 10 |
அமிழ்துதிகழ் கருவிய கணமழை தலைஇக் கடுங்கால் கொட்கு நன்பெரும் பரப்பின் விசும்புதோய் வெண்குடை நுவலும் பசும்பூண் மார்ப பாடினி வேந்தே. |
உண்மின் கள்ளே யடுமின் சோறே எறிக திற்றி யேற்றுமின் புழுக்கே வருநர்க்கு வரையாது பொலங்கலந் தெளிர்ப்ப இருள்வண ரொலிவரும் புரியவி ழைம்பால் ஏந்துகோட் டல்குன் முகிழ்நகை மடவரல் | 5 |
கூந்தல் விறலியர் வழங்குக வடுப்பே பெற்ற துதவுமின் றப்பின்று பின்னும் மன்னுயி ரழிய யாண்டுபல துளக்கி மண்ணுடை ஞாலம் புரவெதிர் கொண்ட தண்ணிய லெழிலி தலையாது மாறி | 10 |
மாரி பொய்க்குவ தாயினும் சேர லாதன் பொய்யல னசையே. |
கொள்ளை வல்சிக் கவர்காற் கூளியர் கல்லுடை நெடுநெறி போழ்ந்து சுரனறுப்ப ஒண்பொறிக் கழற்கால் மாறா வயவர் திண்பிணி யெஃகம் புலியுறை கழிப்ப செங்கள விருப்பொடு கூல முற்றிய | 5 |
உருவச் செந்தினை குருதியொடு தூஉய் மண்ணுறு முரசங் கண்பெயர்த் தியவர் கடிப்புடை வலத்தர் தொடித்தோ ளோச்ச வம்புகளை வறியாச் சுற்றமொ டம்புதெரிந்து அவ்வினை மேவலை யாகலின் | 10 |
எல்லும் நனியிருந் தெல்லிப் பெற்ற அரிதுபெறு பாயற் சிறுமகி ழானும் கனவினு ளுறையும் பெருஞ்சால் பொடுங்கிய நாணுமலி யாக்கை வாணுத லரிவைக் கியார்கொ லளியை | 15 |
இனந்தோ டகல வூருட னெழுந்து நிலங்கண் வாட நாஞ்சில் கடிந்துநீ வாழ்த லீயா வளனறு பைதிரம் அன்ன வாயின பழனந் தோறும் அழன்மலி தாமரை யாம்பலொடு மலர்ந்து | 20 |
நெல்லின் செறுவி னெய்தல் பூப்ப அரிநர் கொய்வாண் மடங்க வறைநர் தீம்பிழி யெந்திரம் பத்தல் வருந்த இன்றோ வன்றோ தொன்றோர் காலை நல்லம னளிய தாமெனச் சொல்லிக் | 25 |
காணுநர் கைபுடைத் திரங்க மாணா மாட்சிய மாண்டன பலவே. |
நுங்கோ யாரென வினவி னெங்கோ இருமுந்நீர்த் துருத்தியுள் முரணியோர்த் தலைச்சென்று கடம்புமுத றடிந்த கடுஞ்சின முன்பின் நெடுஞ்சேர லாதன் வாழ்கவவன் கண்ணி | 5 |
வாய்ப்பறி யலனே வெயிற்றுக ளனைத்தும் மாற்றோர் தேஎத்து மாறிய வினையே கண்ணி னுவந்து நெஞ்சவிழ் பறியா நண்ணார் தேஎத்தும் பொய்ப்பறி யலனே கனவினும், | 10 |
ஒன்னார் தேய வோங்கி நடந்து படியோர்த் தேய்த்து வடிமணி யிரட்டும் கடாஅ யானைக் கணநிரை யலற வியலிரும் பரப்பின் மாநிலங் கடந்து புலவ ரேத்த வோங்குபுகழ் நிறீஇ | 15 |
விரியுளை மாவுங் களிறுந் தேரும் வயிரியர் கண்ணுளர்க் கோம்பாது வீசிக் கடிமிளைக் குண்டு கிடங்கின் நெடுமதி னிலைஞாயில் அம்புடை யாரெயி லுள்ளழித் துண்ட | 20 |
அடாஅ வடுபுகை யட்டுமலர் மார்பன் எமர்க்கும் பிறர்க்கும் யாவ ராயினும் பரிசின் மாக்கள் வல்லா ராயினும் கொடைக்கட னமர்ந்த கோடா நெஞ்சினன் மன்னுயி ரழிய யாண்டுபல மாறித் | 25 |
தண்ணிய லெழிலி தலையா தாயினும் வயிறுபசி கூர வீயலன் வயிறுமா சிலீஇயரவ னீன்ற தாயே. |
சொற்பெயர் நாட்டங் கேள்வி நெஞ்சமென் றைந்துடன் போற்றி யவை துணையாக எவ்வஞ் சூழாது விளங்கிய கொள்கைக் காலை யன்ன சீர்சால் வாய்மொழி உருகெழு மரபிற் கடவுட் பேணியர் | 5 |
கொண்ட தீயின் சுடரெழு தோறும் விரும்புமெய் பரந்த பெரும்பெய ராவுதி வருநர் வரையார் வார வேண்டி விருந்துகண் மாறா துணீஇய பாசவர் ஊனத் தழித்த வானிணக் கொழுங்குறை | 10 |
குய்யிடு தோறு மாறா தார்ப்பக் கடலொலி கொண்டு செழுநகர் நடுவண் அடுமை யெழுந்த வடுநெய் யாவுதி இரண்டுடன் கமழு நாற்றமொடு வானத்து நிலைபெறு கடவுளும் விழைதகப் பேணி | 15 |
ஆர்வளம் பழுநிய வையந்தீர் சிறப்பின் மாரியங் கள்ளின் போர்வல் யானைப் போர்ப்புறு முரசங் கறங்க வார்ப்புச்சிறந்து நன்கலந் தரூஉ மண்படு மார்ப முல்லைக் கண்ணிப் பல்லான் கோவலர் | 20 |
புல்லுடை வியன்புலம் பல்லா பரப்பிக் கல்லுயர் கடத்திடைக் கதிர்மணி பெறூஉம் மிதியற் செருப்பிற் பூழியர் கோவே குவியற் கண்ணி மழவர் மெய்ம்மறை பல்பயந் தழீஇய பயங்கெழு நெடுங்கோட்டு | 25 |
நீரறன் மருங்கு வழிப்படாப் பாகுடிப் பார்வற் கொக்கின் பரிவேட் பஞ்சாச் சீருடை தேஎத்த முனைகெட விலங்கிய நேருயர் நெடுவரை யயிரைப் பொருந யாண்டுபிழைப் பறியாது பயமழை சுரந்து | 30 |
நோயின் மாந்தர்க் கூழி யாக மண்ணா வாயின் மணங்கமழ் கொண்டு கார்மலர் கமழுந் தாழிருங் கூந்தல் ஒரீஇயன போல விரவுமலர் நின்று திருமுகத் தலமரும் பெருமதர் மழைக்கண் | 35 |
அலங்கிய காந்த ளிலங்குநீ ரழுவத்து வேயுறழ் பணைத்தோ ளிவளோ டாயிர வெள்ளம் வாழிய பலவே. |
சினனே காமங் கழிகண் ணோட்டம் அச்சம் பொய்ச்சொ லன்புமிக வுடைமை தெறல் கடுமையொடு பிறவு மிவ்வுலகத் தறந்தெரி திகிரிக்கு வழியடை யாகுந் தீதுசே ணிகந்து நன்றுமிகப் புரிந்து | 5 |
கடலுங் கானமும் பலபய முதவப் பிறர்பிறர் நலியாது வேற்றுப்பொருள் வெஃகாது மையி லறிவினர் செவ்விதி னடந்துதம் அமர்துணைப் பிரியாது பாத்துண்டு மாக்கள் மூத்த யாக்கையொடு பிணியின்று கழிய | 10 |
ஊழி யுய்த்த வுரவோ ரும்பல் பொன்செய் கணிச்சித் திண்பிணி யுடைத்துச் 1சிரறுசில வூறிய நீர்வாய்ப் பத்தற் கயிறுகுறு முகவை மூயின மொய்க்கும் ஆகெழு கொங்கர் நாடகப் படுத்த | 15 |
வேல்கெழு தானை வெருவரு தோன்றல் உளைப் பொலிந்த மா இழைப் பொலிந்த களிறு வம்பு பரந்த தேர் அமர்க் கெதிர்த்த புகன் மறவரொடு | 20 |
துஞ்சுமரந் துவன்றிய மலரகன் பறந்தலை ஓங்குநிலை வாயில் தூங்குபு தகைத்த வில்லிசை மாட்டிய விழுச்சீ ரையவிக் கடிமிளைக் குண்டு கிடங்கின் நெடுமதில் நிரைப் பதணத் | 25 |
தண்ணலம் பெருங்கோட் டகப்பா வெறிந்த பொன்புனை யுழிஞை வெல்போர்க் குட்டுவ போர்த்தெறிந்த பறையாற் புனல்செறுக் குநரும் நீர்த்தரு பூச லினம்பழிக் குநரும் ஒலித்தலை விழவின் மலியும் யாணர் | 30 |
நாடுகெழு தண்பணை சீறினை யாதலின் குடதிசை மாய்ந்து குணமுதற் றோன்றிப் பாயிரு ளகற்றும் பயங்கெழு பண்பின் ஞாயிறு கோடா நன்பக லமையத்து கவலை வெண்ணரி கூஉமுறை பயிற்றிக் | 35 |
கழல்கட் கூகை குழறுகுரற் பாணிக் கருங்கட் பேய்மகள் வழங்கும் பெரும்பா ழாகுமன் னளிய தாமே. |
அலந்தலை யுன்னத் தங்கவடு பொருந்திச் சிதடி கரையப் பெருவறங் கூர்ந்து நிலம் பைதற்ற புலங்கெடு காலையும் வாங்குபு தகைத்த கலப்பைய ராங்கண் மன்றம் போந்து மறுகுசிறை பாடும் | 5 |
வயிரிய மாக்கள் கடும்பசி நீங்கப் பொன்செய் புனையிழை யொலிப்பப் பெரிதுவந்து நெஞ்சுமலி யுவகைய ருண்டுமலிந் தாடச் சிறுமகி ழானும் பெருங்கலம் வீசும் போரடு தானைப் பொலந்தார்க் குட்டுவ | 10 |
நின்னயந்து வருவேங் கண்டனம் புன்மிக்கு வழங்குந ரற்றென மருங்குகெடத் தூர்ந்து பெருங்கவி னழிந்த வாற்ற வேறுபுணர்ந் தண்ணன் மரையா வமர்ந்தினி துறையும் விண்ணுயர் வைப்பின காடா யினநின் | 15 |
மைந்துமலி பெரும்புக ழறியார் மலைந்த போரெதிர் வேந்தர் தாரழிந் தொராலின் மருதிமிழ்ந் தோங்கிய நளியிரும் பரப்பின் மணன்மலி பெருந்துறைத் ததைந்த காஞ்சியொடு முருக்குத்தாழ் பெழிலிய நெருப்புற ழடைகரை | 20 |
நந்து நாரையொடு செவ்வரி யுகளும் கழனி வாயிற் பழனப் படப்பை அழன்மருள் பூவின் றாமரை வளைமகள் குறாஅது மலர்ந்த வாம்பல் அறாஅயா ணரவ ரகன்றலை நாடே. | 5 |
துறை: வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம்: ஒழுகுவண்ணம். தூக்கு: செந்தூக்கு. பெயர்: ததைந்த காஞ்சி. |
நெடுவயி னொளிறு மின்னுப் பரந்தாங்குப் புலியுறை கழித்த புலவுவா யெஃகம் ஏவ லாடவர் வலனுயர்த் தேந்தி ஆரரண் கடந்த தாரருந் தகைப்பிற் பீடுகொண் மாலைப் பெரும்படைத் தலைவ | 5 |
ஒதல் வேட்ட லவைபிறர்ச் செய்தல் ஈத லேற்றலென் றாறுபுரிந் தொழுகும் அறம்புரி யந்தணர் வழிமொழிந் தொழுகி ஞால நின்வழி யொழுகப் பாடல்சான்று நாடுடன் விளங்கு நாடா நல்லிசைத் | 10 |
திருந்திய வியன்மொழித் திருந்திழை கணவ குலையிழி பறியாச் சாபத்து வயவர் அம்புகளை வறியாத் தூங்குதுளங் கிருக்கை இடாஅ வேணி யியலறைக் குருசில் நீர்நிலந் தீவளி விசும்போ டைந்தும் | 15 |
அளந்துகடை யறியினு மளப்பருங் குரையைநின் வளம்வீங்கு பெருக்க மினிதுகண் டிகுமே உண்மருந் தின்மரும் வரைகோ ளறியாது குரைத்தொடி மழுகிய வுலக்கை வயின்றோ றடைச்சேம் பெழுந்த வாடுறு மடாவின் | 20 |
எஃகுறச் சிவந்த வூனத் தியாவரும் கண்டுமதி மருளும் வாடாச் சொன்றி வயங்குகதிர் விரிந்து வானகஞ் சுடர்வர வறிதுவடக் கிறைஞ்சிய சீர்சால் வெள்ளி பயங்கெழு பொழுதோ டாநிய நிற்பக் | 25 |
கலிழுங் கருவியொடு கையுற வணங்கி மன்னுயிர் புரைஇய வலனேர் பிரங்கும் கொண்டற் றண்டளிக் கமஞ்சூன் மாமழை காரெதிர் பருவ மறப்பினும் பேரா யாணர்த்தால் வாழ்கநின் வளனே. | 30 |
மாவா டியபுல நாஞ்சி லாடா கடாஅஞ் சென்னிய கடுங்கண் யானை இனம்பரந்த புலம் வளப்பரப் பறியா நின்படைஞர், சேர்ந்த மன்றங் கழுதை போகி நீ, உடன்றோர் மன்னெயில் தோட்டி வையா | 5 |
கடுங்கா லொற்றலிற் சுடர்சிறந் துருத்துப் பசும்பிசி ரொள்ளழ லாடிய மருங்கின் ஆண்டலை வழங்குங் கானுணங்கு கடுநெறி முனையகன் பெரும்பா ழாக மன்னிய உருமுழற் பிரங்கு முரசிற் பெருமலை | 10 |
வரையிழி யருவியி னொளிறுகொடி நுடங்கக் கடும்பரிக் கதழ்சிற ககைப்பநீ நெடுந்தே ரோட்டியபிற ரகன்றலை நாடே |
தேஎர் பரந்தபுல மேஎர் பரவா களி றாடியபுல நாஞ்சி லாடா மத்து ரறியமனை இன்னிய மிமிழா ஆங்குப், பண்டுநற் கறியுநர் செழுவள நினைப்பின் நோகோ யானே நோதக வருமே | 5 |
பெயன்மழை புரவின் றாகிவெய் துற்று. வலமின் றம்ம காலையது பண்பெனக் கண்பனி மலிர்நிறை தாங்கிக் கைபுடையூ மெலிவுடை நெஞ்சினர் சிறுமைகூரப் பீரிவர் வேலிப் பாழ்மனை நெருஞ்சிக் | 10 |
காடுறு கடுநெறி யாக மன்னிய முருகுடன்று கறுத்த கலியழி மூதூர் உரும்பில் கூற்றத் தன்னநின் திருந்துதொழில் வயவர் சீறிய நாடே. |
சிதைந்தது மன்றநீ சிவந்தனை நோக்கலின் தொடர்ந்த குவளைத் தூநெறி யடைச்சி அலர்ந்த வாம்ப லகமடி வையர் சுரியலஞ் சென்னிப் பூஞ்செய் கண்ணி அரிய லார்கைய ரினிதுகூ டியவர் | 5 |
துறைநணி மருத மேறித் தெறுமார் எல்வளை மகளிர் தெள்விளி யிசைப்பிற் பழனக் காவிற் பசுமயி லாலும் பொய்கை வாயிற் புனல்பொரு புதவின் நெய்தன் மரபி னிரைகட் செறுவின் | 10 |
வல்வா யுருளி கதுமென மண்ட அள்ளற் பட்டுத் துள்ளுபு துரப்ப நல்லெருது முயலு மளறுபோகு விழுமத்து சாகாட் டாளர் கம்பலை யல்லது பூச லறியா நன்னாட் | 15 |
டியாண ரறாஅக் காமரு கவினே. |
திருவுடைத் தம்ம பெருவிறற் பகைவர் பைங்கண் யானைப் புணர்நிரை துமிய உரந்துரந் தெறிந்த கறையடிக் கழற்காற் கடுமா மறவர் கதழ்தொடை மறப்ப இளையினிது தந்து விளைவுமுட் டுறாது | 5 |
புலம்பா வுறையு ணீதொழி லாற்றலின் விடுநிலக் கரம்பை விடரளை நிறையக் கோடை நீடக் குன்றம் புல்லென அருவி யற்ற பெருவிறற் காலையும் நிவந்துகரை யிழிதரு நனந்தலைப் பேரியாற்றுச் | 10 |
சீருடை வியன்புலம் வாய்பரந்து மிகீஇயர் உவலை சூடி யுருத்துவரு மலிர்நிறைச் செந்நீர்ப் பூச லல்லது வெம்மை யரிதுநின் னகன்றலை நாடே. |
அவலெறிந்த வுலக்கை வாழைச் சேர்த்தி வளைக்கை மகளிர் வள்ளை கொய்யும் முடந்தை நெல்லின் விளைவயற் பரந்த தடந்தா ணாரை யிரிய வயிரைக் கொழுமீ னார்கைய மரந்தொறுங் குழாஅலின் | 5 |
வெண்கை மகளிர் வெண்குரு கோப்பும் அழியா விழவி னிழியாத் திவவின் வயிரிய மாக்கள் பண்ணமைத் தெழீஇ மன்ற நண்ணி மறுகுசிறை பாடும் அதன்கண் வைப்பி னாடும னளிய | 10 |
விரவுவேறு கோலமொடு குருதி வேட்ட மயிர்புதை மாக்கண் கடிய கழற அமர்கோ ணேரிகந் தாரெயில் கடக்கும் பெரும்பல் யானைக் குட்டுவன் வரம்பி றானை பரவா வூங்கே. | 15 |
மணிக்கலத் தன்ன மாயிதழ் நெய்தற் பாசடைப் பனிக்கழி துழைஇப் புன்னை வாலிணர்ப் படுசினைக் குருகிறை கொள்ளும் அல்குறு கான லோங்குமண லடைகரை | 5 |
தாழடும்பு மலைந்த புணரிவளை ஞரல இலங்குநீர் முத்தமொடு வார்துகி ரெடுக்கும் தண்கடற் படப்பை மென்பா லனவும் காந்தளங் கண்ணிக் கொலைவில் வேட்டுவர் செங்கோட் டாமா னூனொடு காட்ட | 10 |
மதனுடை வேழத்து வெண்கோடு கொண்டு பொன்னுடை நியமத்துப் பிழிநொடை கொடுக்கும் குன்றுதலை மணந்த புன்புல வைப்பும் கால மன்றியுங் கரும்பறுத் தொழியா தரிகா லவித்துப் பலபூ விழவிற் | 15 |
றேம்பாய் மருத முதல்படக் கொன்று வெண்டலைச் செம்புனல் பரந்துவாய் மிகுக்கும் பலசூழ் பதப்பர் பரியவெள் ளத்துச் சிறைகொள் பூசலிற் புகன்ற வாயம் முழவிமிழ் மூதூர் விழவுக்காணூஉப் பெயரும் | 20 |
செழும்பல் வைப்பிற் பழனப் பாலும் ஏன லுழவர் வரகுமீ திட்ட கான்மிகு குளவிய வன்புசே ரிருக்கை மென்றினை நுவணை முறைமுறை பகுக்கும் புன்புலந் தழீஇய புறவணி வைப்பும் | 25 |
பல்பூஞ் செம்மற் காடுபய மாறி அரக்கத் தன்ன நுண்மணற் கோடுகொண் டொண்ணுதன் மகளிர் கழலொடு மறுகும் விண்ணுயர்ந் தோங்கிய கடற்றவும் பிறவும் பணைகெழு வேந்தரும் வேளிரு மொன்றுமொழிந்து | 30 |
கடலவுங் காட்டவு மரண்வலியார் நடுங்க முரண்மிகு கடுங்குரல் விசும்படை பதிரக் கடுஞ்சினங் கடாஅய் முழங்கு மந்திரத் தருந்திறன் மரபிற் கடவுட் பேணியர் உயர்ந்தோ னேந்திய வரும்பெறற் பிண்டம் | 35 |
கருங்கட் பேய்மகள் கைபுடையூஉ நடுங்க நெய்த்தோர் தூஉய நிறைமகி ழிரும்பலி எறும்பு மூசா விறும்பூது மரபிற் கடுங்கட் காக்கையொடு பருந்திருந் தார ஓடாப் பூட்கை யொண்பொறிக் கழற்காற் | 40 |
பெருஞ்சமந் ததைந்த செருப்புகன் மறவர் உருமுநில னதிர்க்குங் குரலொடு கொளைபுணர்ந்து பெருஞ்சோ றுகுத்தற் கெறியும் கடுஞ்சின வேந்தேநின் றழங்குகுரன் முரசே. |