| அரசன் பெயர் | கல்வெட்டுக் காலம் | சேக்கிழார் குடியினர் | 1. இராசராசன் II (கி.பி. 1116-1173) | கி. பி..1162 | சயங்கொண்ட சோழ மண்டலத்துக் குலோத்துங்க சோழ வளநாடான புலியூர்க் கோட்டத்துக் குன்றத்தூர் நாட்டுக் குன்றத்தூர்ச் சேக்கிழான் மாதேவடிகள் ராமதேவன் என்ற உத்தமசோழப் பல்லவராயன். |
| 2. " | கி.பி. 1164 | குன்றத்தூர் சேக்கிழான் பாலறாவாயன் களப்பாளராயன். |
| 3. குலோத்துங்கன் III (கி.பி 1178-1218) | கி.பி. 1179 | குன்றத்தூர்ச் சேக்கிழான் பாலறா வாயன் களப்பாள ராயன். |
| 4. " | கி.பி. 1181 | குன்றத்தூர்ச் சேக்கிழான் அம்மையப்பன் பராந்தகதேவன் என்ற கரிகால சோழப் பல்லவராயன். |
| 5. " | " | குன்றத்தூர்ச் சேக்கிழான் புவனப் பெருமாள் என்ற துண்டக நாடு உடையன். |
| 6. இராசராசன் III ( கி.பி. 1216-1246) | கி.பி. 1225 | குன்றத்தூர்ச் சேக்கிழான் பட்டியதேவன் ஆட்கொண்டான். |
| 7. இராசராசன் III (கி.பி.1216-1246). | கி.பி. 1226 | குன்றத்தூர்ச் சேக்கிழான் அரையன் ஆட்கொண்ட தேவன் என்ற முனையதரையன். |
| 8. " | கி.பி. 1240 | குன்றத்தூர்ச் சேக்கிழான், வரந்தரு பெருமான் என்ற திருவூரகப் பெருமாள். |
| 9. மாறவர்கள் குலசேகர பாண்டியன் (கி.பி. 1270-1305) | கி.பி. 1300 | குன்றத்தூர்ச் சேக்கிழான் ஆடவல்லான். |
| மக்கள் பெயர் | நாயன்மார் பெயர் |
| 1. மானி | இது மங்கயர்க்கரசியாரது இயற் பெயர் |
| 2. தண்டி | தண்டியடிகள் |
| 3. கலிப்பகை | திலகவதியார் கணவன் பெயர். |
| 4. புகழ்த்துணை வரிசையரசன் | புகழ்த்துணை நாயனார். |
| 5. நம்பி | நம்பி ஆரூரர். |
| 6. கம்பன் | கலிக் கம்ப(ன்) நாயனார் |
| 7. கலிமூர்க்க இளவரையன் மூர்க்க நாயனார் | கலிக் கம்ப நாயனார். |
| 8. சடையன் பள்ளி | சடையனார் (சுந்தரர் தந்தையர்) |
| 9. சிறு நங்கை, பெருநங்கை, போற்றிநங்கை | நங்கை பரவையார். வெண்காட்டு நங்கை (சிறுத் தொண்டர் மனைவி) |
| 10. பூதி கண்டன் | அப்பூதி அடிகள், |
| 11. நந்தி நிறைமதி | நமி நந்தி அடிகள் |
| 12. பாதிரிகிழார் சிங்கன் | கழற்சிங்கன் |
| 13. குறும்ப கோளரி | பரசமய கோளரி (சம்பந்தர் பெயர்) |
| 14. கஞ்சாறன் அமர்நீதி | மானக் கஞ்சாற நாயனார், அமர்நீதி நாயனார் |
| 15. சக்திப் பல்லவன் | சக்தி நாயனார். |
| மக்கள் பெயர் | நாயன்மார் பெயர் |
| 1. மூர்க்கன் ஐயாறன் | முர்க்க நாயனார் |
| 2. நங்கை வரகுணப் பெருமானார், நக்கன் பரவையார் | நங்கை பரவையார் |
| 3. திருவெண்காட்டு நங்கை | வெண்காட்டு நங்கை |
| 4. நீல கங்கன், புலியூர் நக்கன் | நீல நக்கன் |
| 5. பூதி மாதேவடிகள் | அப்பூதியடிகள் |
| 6. புகழ்த்துணை அடிகள் | புகழ்த்துணை நாயனார் |
| 7. ஏனாதி கிழான் | ஏனாதிநாத நாயனார் |
| 8. காரி வேளார் | காரி நாயனார் |
| 9. இராச நாராயண முனையதரையன் | நரசிங்க முனையரையர் |
| 10. அமரபுயங்கனான கோட்புலி | கோட்புலி நாயனார் |
| 11. ஐ(யாற்று) அடிகள் | ஐயடிகள் காடவர்கோன் |
| 12. கலிச் சிங்கன் | கழற் சிங்கன் |
| 13. காமன் தாயன் | அரிவாள் தாயன் |
| 14. நாவலூர் உடையான் ஆரூரன். நம்பி ஆருரன், உடைய நம்பி. தம்பிரான் தோழன் ஆலால சுந்தரன் | இவை அனைத்தும் சுந்தரர் பெயர்கள் |
| 15. குமர நந்தி | நமி நந்தி அடிகள் |
| 16. அதிகாரி திருநீலகண்டன் | திருநீலகண்ட நாயனார் |
| 17. இளையான்குடி கிழவன் | இளையான்குடி மாறன் |
| 18. கலியான் மன்றாடி | கலிய நாயனார் |
| 19. திருஞான சம்பந்தர் | திருஞான சம்பந்தர் |
| 20. கலயன் மாணிக்கம் | குங்கிலியக் கலயன் |
| செய்யுள் முதல் வரி | சருக்கத்தின் பெயர் |
| 1. தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் | தில்லை வாழ் அந்தணர் சருக்கம் |
| 2. இலைமலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்-கடியேன் | இலைமலிந்த சருக்கம் |
| 3. மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன் | மும்மையால் உலகாண்ட சருக்கம் |
| 4. திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட | திருநின்ற சருக்கம் |
| 5. வம்புறா வரிவண்டு மணம் நாற மலரும் | வம்புறா வரிவண்டுச் சருக்கம் |
| 6. வார்கொண்டவன | வார்கொண்ட வன சருக்கம் |
| 7. பொய்யடிமை யில்லாத புலவர்க்கும் அடியேன் | பொய்யடிமை இல்லாத புலவர் சருக்கம் |
| 8. கறைக்கண்டன் கழலடியே | கறைக்கண்டன் சருக்கம் |
| 9. கடல் சூழ்ந்த உலகெல்லாம் | கடல் சூழ்ந்த சருக்கம் |
| 10. பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன் | பத்தராய்ப் பணிவார் சருக்கம் |
| 11. மன்னியசிர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல் | மன்னியசிர்ச் சருக்கம் |