pm logo

தமிழ் பழமொழிகள் தொகுப்பும்
ஆங்கில மொழிபெயர்ப்பும்
ஆசிரியர் பெர்சிவால், பாகம் 2 (3001-6000)

Tamil Proverbs Collection (over 6000)
with Their EnglishTranslation - part 2 (second 3000)
by Rev. P. Percival
In tamil script, unicode/utf-8 format




Acknowledgements: Our Sincere thanks go to the Tamil Virtual Academy for providing a PDF of this work.
The e-text has been generated using Google OCR online tool.
Sincere thanks also go to Ms. Priya Kulandaivelu for her help in proof-reading of this work.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
This file was put online on 12 July 2019.
This file presents the source proverbs in Tamil in Unicode/utf-8 format

© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

தமிழ் பழமொழிகள் தொகுப்பும்
ஆங்கில மொழிபெயர்ப்பும், ஆசிரியர் பெர்சிவால், பாகம் 2 (3001- 6000)
Tamil Proverbs with Their Translation
by Rev. P. Percival . part 2 (second 3000)

Source:
Tamil Proverbs with their English Translation
containing upwards of Six thousand proverbs
By The Rev. P. Percival,
Chaplain, Madras Military Female Orphan Asylum:
Author of the "Land of the Veda" etc.
Second Edition, 1874
Madras: Printed and Published at the Dinavartamani Press,
Little Bourne, Mylapore
--------------

தமிழ் பழமொழிகள் தொகுப்பும் ஆங்கில மொழிபெயர்ப்பும்
ஆசிரியர் பெர்சிவால், பாகம் 2 (3001- 6000)
Tamil Proverbs with Their Translation by Rev. Percival

3001. கோணிக் கோணிக் கோடி கொடுப்பதிலும் கோணாமற் காணிகொடுப்பது நல்லது.
It is better to bestow a small gift freely than lacs with a wry face.

3002. கோத்திரம் அறிந்து பெண் கொடு, பாத்திரம் அறிந்து பிச்சை இடு.
Having ascertained the character of the family give your daughter
in marriage, and knowing the worthiness of the applicant give alms.

3003. கோத்திரவீனன் சாத்திரம் பார்ப்பான்.
One of low birth consults a fortune-teller.

3004. கோபம் இல்லாத துரையும் சம்பளம் இல்லாத சேவகனும்.
A master without anger, a servant without wages.

3005. கோபம் பாபம், நித்திரைச் சத்துரு.
Anger is sin, sleep is an enemy.

3006. கோபம் சண்டாளம்.
Anger ends in cruelty.

3007. கோபம் அற்றாற் குரோதம் அறும்.
When anger ceases, revenge ceases.

3008. கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு.
Where there is anger, there may be excellent qualities.

3009. கோபி குதிரைமேல் கடிவாளம் இல்லான்.
The irascible is like a man on horseback without a bridle.

3010. கோபுரம் தாங்கிபோல் நடக்கிறான்.
He walks as if supporting a tower.

3011. கோபுரம் தாங்கிய பூதம் போல் சுமக்கிறான்.
He carries like a goblin that bears a tower.

3012. கோமுட்டிப் புத்திக்கு மோசம் இல்லை.
The foresight of a komutti-merchant-never fails.

3013. கோயிலையும் குளத்தையும் அடுத்து இருக்கவேண்டும்.
One should reside near a temple and a tank.

3014. கோயில் இல்லா ஊரிலே குடியிருக்கலாமா?
May one dwell in a village in which there is no temple?

3015. கோயில் மணியம் என்று கூப்பிட்டால் போதும்.
It is enough to be called the manager of the temple.

3016. கோயிற் பூனை தேவருக்கு அஞ்சுமா?
Will the temple cat reverence the deity ?

3017. கோயிற் பூனைக்குப் பயம் ஏன்?
Why should a temple cat fear ?

3018. கோரக்கர் வைத்தியம் குணத்துக்கு ஏற்குமா?
Will the medical work by Korakkar assist one to find out the symptoms of disease ?

3019. கோரை குடியைக் கெடுக்கும்.
Course grass is ruinous to the cultivator.

3020. கோரைக் கிழங்கு ஒரு வேளைக்கு உதவும்.
Even the root of the korai grass will be of use sometime or other.

3021. கோல் ஆடக் குரங்கு ஆடும், அதுபோல மனம் ஆடும்.
As the staff moves the monkey moves, in like manner the mind moves.

3022. கோல் இழந்த குருடன் போல.
Like a blind man who has lost his staff.

3023. கோல் எடுத்த பிள்ளை குருட்டுப்பிள்ளை.
The child that handles a stick is in danger of becoming blind.

3024. கோவுக்கு அழகு செங்கோல் முறைமை.
A sceptre of justice is the beauty of royalty.

3025. கோழி அடிக்கிறதற்குக் குறுந்தடி வேண்டுமா?
Is a club needed to kill a fowl?

3026. கோழி களவுபோக ஆடு வெட்டிப் பொங்கல் இடுகிறதா?
Do you attempt to recover a stolen fowl by sacrificial offerings?

3027. கோழி கூவி விடிகிறதா நாய் குலைத்து விடிகிறதா?
Does the day dawn at the crowing of a cock, or at the barking of a dog?

3028. கோழிக்குஞ்சுக்குப் பால் கொடுத்தது போல.
As one fed a chicken with milk.

3029. கோழிக் காய்ச்சலும் குண்டலினி காய்ச்சலும் விடாது.
The fever of fowls and the jealousy of a spiteful woman have no remedy.

3030. கோழிக்கறி என்றதும் கொண்டாடிக் கொண்டதும்
கீரைத்தண்டாணம் அடா சுப்பா கீரைத்தண்டாணம் அடா.
All that ado about the fowl curry, Subba, ends in a mess of greens.

3031. கோழி சிறகால் குஞ்சுகளைக் காப்பதுபோல.
As a hen keeps her chickens under her wings.

3032. கோழி திருடியும் கூட அழுகிறாள்.
Having herself stolen the fowl she weeps with the owner on account of its loss.

3033. கோழி தின்ற கள்ளனும் கூட நின்று உலாவுகிறான்.
The thief who has stolen the fowl, walks about with the owner in search of it.

3034. கோழி போனதும் அல்லாமல் குரலும் போச்சுது.
Not only is the fowl gone, but her voice also is gone by calling it.

3035. கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகுமா?
Will a chicken become lame if the mother hen treads on it?

3036. கோழி முடத்துக்குக் கடா வெட்டிப் பலி இட்டது போல்.
Like sacrificing a sheep for the recovery of a lame fowl.

3037. கோழி முட்டையில் மயிர் பிடுங்கலாமா?
Can hair be plucked off a hen's egg?

3038. கோழியைக் கேட்டோ ஆணம் காய்ச்சுகிறது ?
Is the fowl to be consulted when it is to be prepared for the table?

3039. கோளுக்கு முந்தேன் கூழுக்குப் பிந்தேன்.
Be not first at slander nor last at meals.

3040. கோளும் சொல்லிக் கும்பிடுவானேன்?
Why professions of respect regarding one about whom you are always telling tales ?

3041. கௌசிகத்து ஒளியில் எவர்க்கும் ஒளிரும்.
Near the candle-stick it will be clear to all.

3042. கெளவை உடையார் காலைத் தொடு.
Touch the feet of those with whom you have aught to do.

3043. கெளவை கருதேன்.
Be mindful of your business.

3044. கெளவைச் சொல்லில் எவர்க்கும் பகை.
Abusive words will create enmity.

3045. கௌவைப்பட்டால் காயத்தில் ஒரு முழம் நீளுமா?
Can anxiety add length to one's body?

3046. கெளவையதில்லான் திவ்விய சொல்லான்.
He who has no concern will not say any thing favourable.

3047. ஙப்பன் பிறந்தது வெள்ளிமலை , ஙாயி பிறந்தது பொன்மலை.
My father was born in a silver mountain, and my mother was born in a golden mountain.

3048. ஙப் போல் வளை.
Bend yourself like the letter ங-be humble.

3049. சகதியிலே கல்லை விட்டு எறிந்தால் தன் துணி என்றும் அசலார் துணி என்றும் பாராது .
If one throws stones into mud, his own cloth and those of other will be spattered.

3050. சகலன் உறவில் சாண் கொடி பஞ்சமா?
Is there such a dearth of span-long-creepers that you are obliged to stay at your sister's husband's house?

3051. சகலமும் கற்றவன்றன்னைச் சார்ந்திரு.
Associate with a person who is versed in every thing.

3052. சகல தேசத்து வார்த்தையும் கற்றுக்கொள்ளுகிறதே யாவருக்கும் நல்லது.
To study the different dialects of each country is useful to all.

3053. சகோதரன் உள்ளவன் படைக்கு அஞ்சான்.
He who has a brother does not fear to fight.

3054. சக்குச் சக்கு என்று பாக்குத் தின்பான் சபைமெச்ச,
வீட்டிலே வந்து கடைவாயை நக்குவான் பெண்டுகள் மெய்ச்ச.
When out he chews betel to attract public notice, when he returns home he licks the corners of his mouth to secure the admirationof women.

3055. சங்கனும் புங்கனும் சந்நியாசிக்கு உதவியா?
Are fools and blockheads of service to the religious mendicant ?

3056. சங்கிலே வார்த்தால் தீர்த்தம், சட்டியிலே வார்த்தால் தண்ணீர்.
If poured into a conch, water becomes sacred, if into a chatty,it is what it is.

3057. சங்கு ஆயிரம் கொண்டு காசிக்கிப் போனாலும் தன் பாவம் தன்னோடே.
Though one carries a thousand conchs to Benares, his sin sticks to him.

3058. சங்கு வாயும் ஆண்டி வாயும்.
The mouth of the conch, the mouth of the religious mendicant.

3059. சங்கோசம் விட்டால் சங்கையும் இல்லை.
When deprived of modesty, there will be no sense of honour.

3060. சடைத் தம்பிரான் சாற்றுக்கு அழுகிறானாம், லிங்கம் பஞ்ச அமிர்தத்திற்கு அழுகிறதாம்.
It is said that the religious mendicant with matted hair cries for pepper water, and the linga he worships cries for the five delicacies, viz., milk, curds, ghee, sugar and
honey.

3061. சடைத் தம்பிரான் சாதம் என்கிறபோது மொட்டைத் தம்பிரானுக்கு மோர் எங்கே கிடைக்கும்.
When a religious mendicant with matted hair finds it difficult to obtain rice, where will the bald headed obtain butter milk.

3062. சடைத் தம்பிரான் தவிட்டுக்கு அழுகிறபோது லிங்கம் பரமானந்தத்துக்கு அழுகிறதா?
When a religious mendicant is crying for bran, will the linga ask for delicacies?

3063. சடையைப் பிடித்து இழுத்தால் சந்நியாசி கிட்ட வருவான்.
If dragged by his matted hair, the religious mendicant may be brought near one.

3064. சட்டி சுட்டதும் கை விட்டதும்.
The chatty burnt, the hand left it.

3065. சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
Can a ladle appreciate the flavour of curry?

3066. சணப்பன் வீட்டுக் கோழி, தானே விலங்கு பூட்டிக் கொண்டது போல.
As a flax-dresser's fowl fettered itself.

3067. சணம் பித்தம் சணம் வாதம்.
One moment he is bilious and the next rheumatic.

3068. சண்டமாருதத்திற்கு எதிர்ப்பட்ட சருகுபோல.
Like dry leaves before a strong wind.

3069. சண்டிக்கு ஏற்ற மிண்டன்.
A stubborn person well suited to the self-willed.

3070. சண்டை முகத்திலே உறவா?
Is relationship recognised in a battle field ?

3071. சண்ணி அண்ணாமலை என்று பெயர் இடுவாள்.
She will call him Annamalai the gormandizer.

3072. சதகோடி சங்கத்திலே மொட்டைத் தாதனைக் கண்டாயா என்கிறது போல.
Like asking one in a crowd, if the bald headed devotee has been seen.

3073. சதுரக்கள்ளியில் அகில் உண்டாகும்.
The eaglewood-acquilla grows with the prickly pear.

3074. சதைக் கண்டு கத்தி நாடவேண்டும்.
The surgeon's knife must be judiciously applied.

3075. சதை இல்லாமற் கத்தி நாடுமா?
Will the knife operate where there is no flesh ?

3076. சதை உள்ள இடத்திலே கத்தி நாடும்.
The surgeon's knife seeks the fleshy parts.

3077. சத்த மேகங்களும் கூடி நெருப்பு மழை பெய்தாற்போல.
As if seven clouds simultaneously rained fire.

3078. சத்திரத்துக் கூழுக்கு நாயக்கர் அப்பணையா?
Is the order of the Naidu required in order to procure gruel at the choultry?

3079. சத்திரத்துப் பாட்டுக்குத் திருப்பாட்டு மேலா?
Is a divine hymn superior to that sung in a choultry?

3080. சத்திரத்திலே போசனம், மடத்திலே நித்திரை.
Eating in a choultry and sleeping in a monastery.

3081. சத்தியத்திலே சாமி சாட்சி என்கிற சத்தியம் பெரிது.
To say God is the witness of what one testifies, is the highest of all forms of oath.

3082. சத்தியத்திற்கு இல்லாத பிள்ளை துக்கப்பட்டப்போது அழப் போகிறதா ?
Will the child that has no regard for truth go to weep with one when in sorrow?

3083. சத்தியம் நன்னிலை , சாவைத் தினம் நினை.
Truthfulness is the best condition, daily think of death.

3084. சத்தியமே வெல்லும் அசத்தியமே கொல்லும்.
Truth prevails, falsehood kills.

3085. சத்தியமே கொல்லும் சத்தியமே வெல்லும்.
Truth kills falsehood, truth prevails.

3086. சத்திய வாசகன் சமஸ்த சற்குணன்.
The truthful man has all other virtues.

3087. சத்திரத்துச் சாப்பாட்டுக்குத் தலத்து ஐயங்கார் அப்பணையோ?
To eat rice at the choultry, is the permission of the head brahman necessary?

3088. சத்துக்கள் ஓடு சத்துக்கள் சேர்வார், சந்தனத்தோடு கருப்பூரம் சேரும்.
The powerful associate with the powerful, sandal paste mixes with camphor.

3089. சத்துருக்களையும் சித்தமாய் நேசி.
Love even your enemies heartily.

3090. சத்துரு பொறாமை தனக்கே தண்டனை.
An enemy's envy is his own punishment.

3091. சந்திரனைப்பார்த்து நாய் குலைத்தாற்போல.
As a dog barked at the moon.

3092.சந்திரன் சண்டாளன் வீட்டிலும் பிரகாசிக்கிறான்.
The moon shines even in the house of the outcast.

3093. சந்தையில் அடிபட்டவனுக்குச் சாட்சி ஆர்?
Who is the witness of him that has been flogged in the bazaar?

3094. சந்தைக் கூட்டம் பொம்மல் ஆட்டம்.
A crowd of people in a market-place is like a puppet-show.

3095. சந்தைக்கு வந்தவர்கள் துணை ஆவாரா?
Will those who frequent the same market aid as friends?

3096. சந்நியாசி வீடு திண்ணையிலே.
The pial-open verandah-is the home of the ascetic.

3097. சந்நியாசி பயணம் திண்ணை விட்டுக் குதிப்பதுதான்.
The pilgrimage of the mendicant is to jump off a pial.

3098. சந்நியாசிக்குப் பழைய குணம் போகாது.
The old temper of the ascetic will not leave him.

3099. சந்நியாசி கோவணத்துக்கு இச்சித்துச் சமுசாரம் மேலிட்டது.
As an ascetic became a householder when he coveted a cloth.

3100. சந்நியாசியைக் கடித்த நாய்க்குப் பின்னாலே நரகமாம் சந்நியாசிக்கு முன்னாலே மரணம்.
They say that the dog that bites an ascetic will go to hell eventually, the ascetic will die before.

3101. சந்நியாசியை நிந்தித்தவனுக்குப் பின்னாலே நரகமாம்.
It is said that hell awaits him who reproaches an ascetic.

3102. சந்நியாசிக்கும் சாதிமானம் போகாது.
Even an ascetic feels proud of his caste.

3103. சபைக்கோழை ஆகாது.
Timidity before an assembly is bad.

3104. சபையிலே நக்கீரன் அரசிலே விற்சேரன்.
In the assembly of the learned he is a nakkiran-a sage-in a royal council a cheran-a king skilled in archery.

3105. சப்பாணிக்கு நொண்டி சண்டப்பிரசண்டம்.
A lame man is a hero before a cripple.

3106. சமண சந்நியாசிக்கும் வண்ணானுக்கும் சம்பந்தம் என்ன ?
What has a naked mendicant to do with a washerman?

3107. சமயம் வாய்த்தால் நமனையும் பலகாரம் செய்வான்.
When opportunity offers he may eat even Yama as a cake.

3108. சமயம் வாய்த்தால் களவு செய்வான்.
He will steal if opportunity offer.

3109. சமர்த்தனுக்கு ஏதும் பெரிதல்ல.
Nothing is too great for a clever man.

3110. சமர்த்திலே குண்டு பாயுமா?
Do cannon balls fly with intelligent force?

3111. சமர்த்தி என்ன பெற்றாள் சட்டிச் சோறு தின்னப் பெற்றாள்.
What did the clever matron get, she got rice in chatty fulls.

3112. சமர்த்துள்ள சேவகனுக்குப் புல்லும் ஆயுதமாம்.
Even a blade of grass is a weapon in the hands of a skilful warrior.

3113. சமர்த்துள்ள சேவகனுக்கு வாள் பழுதானாலும் கேடு இல்லை.
Though his sword is injured, the skilful soldier suffers no loss.

3114. சமர்த்துக்குச் சனியன்.
In power, equal to Saturn.

3115. சமிக்கை அறியாதவன் சதுரன் அல்ல.
He who cannot comprehend a sign is not clever.

3116. சமிக்கை காட்டிச் சண்டைக்கு அழைக்கிறான்.
He is inciting to fight by showing signs.

3117. சமுசாரக்குட்டு வெளி இட்டால் நஷ்டம்.
It is a loss for family broils to get abroad.

3118. சமுத்திரமும் சாக்கடையும் சரியா?
Are the ocean and a ditch alike?

3119. சமுத்திரத்திலே ஏற்றம் போட்டது போல் இருக்கிறது.
Like planting a picotta on the sea-side.

3120. சமுத்திரத்திற்கும் சாண் குண்டுக்கும் எம்மாத்திரம்?
How vast the difference between the ocean and a span-wide ditch?

3121. சமுத்திர வன்கணன் சண்டாளன்.
A deep treacherous fellow is a wretch.

3122. சமையல் வீட்டிலே நாய் நுழைந்தாற்போல.
As a dog crept into the cooking room.

3123. சமையல் வீட்டிலே முயல் தானே வந்ததுபோல.
As a hare of its own accord came into the cook room.

3124. சம்பத்தும் விபத்தும் கூடவே இருக்கிறது.
Abundance and straitness are closely allied.

3125. சம்பளம் அரைப்பணமானாலும் சலுகை இருக்கவேண்டும்.
Though one's income is only half a fanam, an air of respectability must be preserved.

3126. சம்பளம் அரைப்பணமானாலும் நம்பினவரைக் காக்க வேண்டும்.
Though one's hire is but half a fanam dependents must be protected.

3127. சம்பன்ன கிரகஸ்தன் வந்தான், செம்பு தவலையை உள்ளே வை.
Our rich and honest neighbour is come, remove the copper vessels out of sight.

3128. சயினன் கையில் அகப்பட்ட சீலைப்பேன் போல்.
Like lice in a cloth that had been in the hands of a Jaina mendicant.

3129. சரக்குக் கண்ட இடத்திலே பிள்ளை பெறுகிறது.
Bringing forth a child where the required conveniences are found.

3130. சரக்குக் கண்ட இடத்திலே பிள்ளைக்கு அவிழ்தம் கொடுக்க நினைக்கிறது போல.
Like intending to give medicine to her child where conveniences are found.

3131. சருகு அரிக்க நேரம் அன்றி குளிர் காய நேரம் இல்லை.
He has only just time to collect dry leaves; he has not time to warm himself.

3132. சருக்கரை என்றால் தித்திக்குமோ?
Is the word sugar sweet?

3133. சருக்கரைப் பந்தலிலே தேன்மாரி பெய்ததுபோல்.
A honey-fall in a sugar pandal-an open shed.

3134. சருக்கரையும் மணலும் சரியா?
Are sugar and sand alike?

3135. சருக்கரையும் மாவும் சரியா?
Are sugar and flour alike ?

3136. சருக்கரை தின்று பித்தம் போனால், கைப்பு மருந்து ஏன் தின்னவேண்டும்.
If bile can be removed by taking sugar, why take bitter medicine.

3137. சலம் நுழையாத இடத்தில் எண்ணெயும், எண்ணெய் நுழையாத இடத்தில் புகையும் நுழையும்.
Oil gets in where water cannot, and smoke enters where oil cannot.

3138. சல்லிய சாரத்தியம் செய்யாதே.
Drive not the coach by magic.

3139. சவாதிலே மயிர் வாங்கினது போல.
Like pulling out hair from civet.

3140. சளி பிடித்ததோ சனியன் பிடித்ததோ?
Are you suffering from catarrh, or has Saturn seized you?

3141. சளுக்கன் தனக்குச் சத்துரு, சவளிக்காரனுக்கு மித்துரு.
The fop is his own enemy, but a friend of the cloth merchant.

3142. சற்சனர் உறவு சர்க்கரைப் பாகு போல.
The friendship of the good is agreeable as molases of sugar.

3143. சனத்தோடு சனம் சேரும் சந்தனத்தோடு கர்ப்பூரம் சேரும்.
Men associate with men, camphor and sandal paste blend together.

3144. சனப் பலம் இருந்தால் மனப் பலம் வரும்.
When a man has a strong party he will act with decision.

3145. சனி நீராடு.
Bathe on Saturdays.
This proverb is regarded by the people among whom I have live as equivalent to a command, and is obeyed as such, by observing Saturday as a bathing day.
Some interpreters put another construction upon it, making the word, usually translated Saturday, a verb, meaning to spring as water, and render it, bathe in springing, fresh, cool water. In some parts of the country, men bathe on Saturday, while women bathe on Fridayor Monday. To bathe on Tuesday is regarded as fatal if
repeated again and again.

3146. சனி பிடித்ததோ சனியன் பிடித்ததோ?
Has Saturn seized, or one possessed by him, seized ?

3147. சனிப் பிணம் தனிப்போகாது.
A Saturday corpse goes not alone.
To avert evil as far as possible, it is not uncommon, with reference to the prevailing opinion expressed in this proverb, for Hindus to bury a fowl when a death happens on Saturday. A Native friend informed me that he saw a chicken put into the coffin of a deceased Native Christian. I have been informed that on some occasions the fowl is carried alive to the place of incremation or burial, the people scattering various kinds of grain on the way. In this case the fowl is killed near the corpse and its blood is sprinkled upon it.

3148. சனியனை விலைக்கு வாங்கினதுபோல.
Like procuring Saturn at a price.

3149. சனியன் பிடித்தவளுக்குச் சந்தையிலும் கந்தை அகப்படாது.
A woman seized by Saturn will not find a rag even in the market.

3150. சனியன் பிடித்தவளுக்குச் சந்தையிற் போனாலும் புருஷன் அகப்படமாட்டான்.
A woman seized by Saturn will not obtain a husband though she may go to the
market.

3151. சன்னதம் குலைந்தால் வீறாப்பு எங்கே?
If oracular power has failed, whence the ground of exultation ?

3152. சாகத் திரிகிறான் சண்டாளன் சாப்பிட்டுத் திரிகிறான் பெண்டாளன்.
The vicious wanders about famished; the householder is in the enjoyment of plenty.

3153. சாகத் துணிந்தவனுக்குச் சமுத்திரம் நீச்சு.
The sea is but swimming depth to one that braves death.

3154. சாகப் பொழுதன்றி வேகப் பொழுது இல்லை.
There is time to die, but none to be consumed by fire.

3155. சாகிறவரையில் வைத்தியன் விடான், செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன்.
A physician will not leave one till death, an astrologer will not leave even then.

3156. சாகிறவரையில் மருந்து கொடுக்கவேண்டும்.
Medicine must be given to the very last.

3157. சாகிறது போல் இருந்து வியாதி தீருகிறதும் உண்டு.
They who were apparently dying have recovered.

3158. சாகிறவனுக்குச் சமுத்திரம் முழங்கால் ஆழம்.
The ocean is but knee-deep to him who is dying.

3159. சாகிறவன் சனியனுக்குப் பயப்படுவானா?
Will one who is dying be afraid of Saturn ?

3160. சாகிற வரைக்கும் சஞ்சலமானால் போகிறது எந்தக் காலமோ?
If anxieties attend us till death, when will they be removed ?

3161. சாகிறவரைகும் சங்கடமானால் வாழுகிறது எக்காலம்?
If we are to be troubled till death, when shall we enjoy prosperity?

3162. சாகிற நாய் வீரத்தைக் காட்டினாற்போல.
As a dying dog showed courage.

3163. சாகிற நாய் வீட்டின் மேல் ஏறினாற்போல.
As a dog about to die ascended the house top.
For a dog to get on the roof of a house is regarded as an omen of some great calamity, and therefore the dog should be destroyed.

3164. சாக்கடைச் சேறு என்றாலும் சக்களத்தி என்றாலும் சரி.
The mud of a ditch and a rival wife are alike.

3165. சாக்கடைப் புழு என்றாலும் சக்களத்தியை வெல்லப்போகாது.
Though despicable as a worm in a ditch, it is difficult to overcome a rival wife.

3166. சாக்கடைப் புழுவிற்குப் போக்கிடம் எங்கே ?
Where shall the worm that was born and bred in the ditch go?

3167. சாக்கும் போக்கும் ஏற்காது ஐயன் முன்.
Excuses are of no avail before God.

3168. சாக்கோ நோக்கோ அம்மையார் வாக்கோ?
Is it the result of excuse, planetary influence or the matron’s word ?

3169. சாடிக்கு மூடி வாய்த்தது போல.
As a lid fitted to a jar.

3170. சாட்சிக்காரன் காலில் விழுவதிலும் சண்டைக்காரன் காலில் விழலாம்.
Better to fall at the feet of an opponent than at the feet of witnesses.

3171. சாட்டு இல்லாமற் சாவு இல்லை.
No death occurs without an ostensible cause.

3172. சாட்டை இல்லாப் பம்பரம் ஆட்டிவைக்க வல்லவன்.
He is able to spin a top without a string.

3173. சாட்டை இல்லாப் பம்பரம் ஆடுமா?
Will a top spin without a string?

3174. சாணான் எச்சில் கருப்புக்கட்டி, சர்க்கரை வெல்லம் உழவன் எச்சில்.
Course sugar is defiled by a chanan's-tree climber-saliva, and sugar by that of a
ploughman.

3175. சாணிக் குழியும் சமுத்திரமும் சரியாய் நினைக்கலாமா ?
Can you imagine the ocean and a dung-pit to be of equal magnitude?

3176. சாணிச் சட்டியும் சருவச்சட்டியும் சரியாமா?
Can you compare a cow-dung chatty with a brass pan?

3177. சாணியும் சவாதும் சரியாகுமா?
Are dung and civet alike?

3178. சாணுக்குச் சாண் வித்தியாசம்.
It differs at every span-length.

3179. சாணோ வயிறு சரீரம் எல்லாம் வயிறோ?
Is your stomach a span-long, or are you all stomach?

3180. சாண் ஏற முழம் சறுக்குகிறது.
To advance a span, and slide back a cubit.

3181. சாண் கற் கழுவினால் முழச்சேறு.
In every span of pavement I wash, there is a cubit of deep mud.

3182. சாண் குருவிக்கு முழ வாலாம்.
It is said that a span-long bird has a cubit-long tail.

3183. சாண் சடைக்கு முழக் கயிறா?
What, a cubit of string for a span of matted hair ?

3184. சாண் செடியிலே முழத் தடி வெட்டலாமா?
Can a stick a cubit long be cut in a span-long copse?

3185. சாண் பறைக்கு முழத் தடி.
A cubit stick for a span drum.

3186. சாண் பாம்பானாலும் முழத் தடி வேண்டும்.
Although the snake may be only a span-long, a stick a cubit long is required to kill it.

3187. சாண் பிள்ளையோ ஆண்பிள்ளையோ?
Is it a span-long child or a bold man?

3188. சாதி அந்த புத்தி குலம் அந்த ஆசாரம்.
Ideas suited to caste, manners suited to rank.

3189. சாதிமானமும் சமயமானமும் சந்நியாசிக்கு உண்டு.
Caste and religious distinctions obtain even among religious mendicants.

3190. சாது மிரண்டாற் காடு இடம் கொள்ளாது.
When the meek are enraged, even a forest will not hold-their wrath.

3191. சாதுரியப் பூனை மீன் இருக்கப் புளியங்காயைக் கொண்டு போய்விட்டது.
The cunning cat left the fish, and carried off the tamarind fruit.

3192. சாதுரியப் பூனை தயிர் இருக்கச் சட்டியை நக்கிற்று.
The artful cat left the curds, and licked the chatty.

3193. சாத்தானி குடுமிக்கும் சந்நியாசி பூணூலுக்கும் முடி போடுகிறாய்.
Thou art tying the knot of Sattani's hair to the sacred thread of the religious
mendicant.

3194. சாஸ்திரம் பொய் என்றால் கிரகணத்தைப் பார்.
If the shasters are false, look at the eclipse.

3195. சாஸ்திரம் பார்த்துப் பெண்ணைக் கொள் கோத்திரம் பார்த்துப் பெண்ணைக் கொடு.
Take a wife after consulting the shasters and give a daughter in marriage after ascertaining the character of the family intowhich she is going.

3196. சாஸ்திரம் பாராத வீடு சமுத்திரம், பார்த்த வீடு தரித்திரம்.
The family that regards not the shasters has an ocean of wealth, whilst the one that regards them is in poverty.

3197. சாஸ்திரம் கற்றவன் தானே காசு.
He who is learned in the shasters is himself money.

3198. சாந்துப்பெட்டி பாம்புப்பெட்டி ஆயிற்று.
The scent box has become a box of snakes.

3199. சாப்பிள்ளை பெற்றுத் தாலாட்டவா?
Can you dandle a still-born child?

3200. சாப்பிள்ளை பெறுவதிலும் தான் சாவது நலம்.
Better die than bear a still-born child.

3201. சாப்பிள்ளை பெற்றவளுக்குச் சந்தோஷம் வருமா?
Will she have joy who has borne a still-born child?

3202. சாப்பிள்ளை பெற்றாலும் மருத்துவிச்சிகூலி தப்பாது.
Though a still-born child is brought forth, there is no escape from the midwife's fee.

3203. சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி இடம் கொடுக்கமாட்டான்.
Though God may bestow the gift, the priest will not suffer you to enjoy it.

3204 சாமைப்பயிரும் சக்கிலியப் பெண்ணும் சமைந்தால் தெரியும்.
Sami rice when boiled, and a girl of the shoe-maker class when matured, appear to advantage.

3205. சாம்பலைக் கிண்டிக் கோழி தானே விலங்கு இட்டுக்கொண்டதுபோல.
As a hen fettered herself whilst scratching a rubbish heap.

3206.சாம்பலைத் தின்று வெண்ணெய்யைப் பூசினது போல.
Like rubbing the mouth with butter after having eaten ashes.

3207. சாராயத்தை வார்த்துப் பூராயத்தைக் கேளு.
Pour in liquor and draw out the secret.

3208. சாலாய் வனைந்தால் என்ன சட்டியாய் வனைந்தால் என்ன?
What matters it whether the potter makes a large or a small chatty?

3209. சாலோடே தண்ணீர் சாய்த்துக் குடித்தாலும் தாய் வார்க்கும் தண்ணீர் தாகம் தெளியும்.
Though one may drink water out of a large pot, the water that one's mother pours out allays one's thirst.

3210. சாவாமற் கற்பதே கல்வி, பிறர் இடத்தில் ஏகாமல் உண்பதே ஊண்.
That is learning which teaches us to escape death, and that is food which is obtained
without dependence on others.

3211. சான்றோர் இல்லாச் சபை குறவர் சேரி.
A community without learned men is a hamlet of mountaineers.

3212. சிங்கம் பசித்தால் தேரையைப் பிடிக்குமா?
When hungry will a lion prey on frogs?

3213. சிங்கம் பசிக்கு ஆனையையே தேடிக் கொல்லும்; அதுபோல், பெரியோர் அக்கறைப்பட்டால் பெரிய காரியத்தையே செய்வார்கள்.
When lions are hungry they go in search of elephants to prey on, in like manner, when the great are reduced to poverty they achieve great things-to relieve their wants.

3214. சிங்கத்துக்குப் பங்கம் இல்லை.
A lion knows no danger.

3215. சிட்டுக்குருவிமேல் பனங்காய் வைத்தது போல்.
As a palmyra fruit was placed on a small bird.

3216. சிட்டுக்குருவிமேல் பிரம்மாஸ்திரம் தொடுக்கலாமா?
Do you discharge heavy arrows at small birds ?

3217. சிணுக்கு எல்லாம் பிணக்குக்கு இடம்.
Hesitancy and delay lead to disagreeables.

3218. சிதம்பரத்திலே பிறந்த பிள்ளைக்குத் திருவெம்பாவை கற்றுக் கொடுக்க வேண்டுமா?
Is it necessary to teach venba-holy verses-to a child born and brought up at
Chidambaram?

3219. சிதம்பர சக்கரத்தைப் போய் பார்ப்பதுபோல.
As a demon looks at the circle of Chidambaram.
This proverb refers most likely to magical diagrams generally.

3220. சித்தன் போக்குச் சிவன் போக்கு ஆண்டி போக்கு அதே போக்கு.
The manner of Chittan is like the manner of Siva, the manner religious mendicant is
like itself.

3221.சித்திரை மாதத்திற் செல்வன் பிறந்தால் சீரும் சிறப்பும் கெடும்.
If a son is born in Chittirai-April-the state and reputation of the family will be ruined.

3222. சித்திரை மாதத்திற் பிறந்த சீர் கேடனும் இல்லை, ஐப்பசி மாதத்திற் பிறந்த அதிஷ்டவானும் இல்லை.
None born in Chittirai-April-is unfortunate, none born in Aipasi- October-is fortunate.

3223. சித்தி பெறாத மருந்தும் மருந்தோ பெற்றுப் படையாத பிள்ளையும் பிள்ளையோ?
Is that medicine which does not take effect, is that which a woman has not brought forth and reared, her child?

3224. சித்திராங்கி பொம்மா சின்ன வெங்கிட்டம்மா.
Little Vengadamma is a hypocritical lady.

3225. சிநேகம் செய்யுமுன் ஆராய்தல் செய், செய்தபின் ஐயப்படாதே.
Form friendships after due deliberation, having done so do not giveplace to doubt.

3226. சிநேகம் செய்தபின் சோதி தெளிந்தபின் நம்பு.
On forming friendship try it, and on being convinced of its sincerity, rely on it.

3227. சிந்த அறுந்து போகிற மூக்கு எந்த மட்டும் இருக்கும்?
How long will the nose last that breaks off on blowing ?


3228. சிப்பியிலே விழுந்த மழைத்துளி முத்தாகும்; அதுபோல, நல்லவர்க்குச் செய்த உதவி நிலை நிற்கும்.
A rain drop that falls on an oyster-shell will become a pearl, so a benefit conferred on the virtuous will endure.

3229. சிம்பிலே வளையாதது தடித்தால் வளையப்போகிறதா?
If when it is a twig it cannot be bent, will it bend when it has become a large tree?

3230. சிரைத்தால் மொட்டை வைத்தாற் குடுமி.
If shaven-bald, if kept, kudumi.

3231. சிரைத்தால் கூலி சேவித்தாற் சம்பளம்.
If you shave, hire, if you serve, wages.

3232. சில்வானக் கள்ளி செலவு அறிவாளா?
Is a woman who pilfers aware what expense means?

3233. சிவபூசை வேளையில் கரடி புகுந்தது போல்.
As a bear entered at the time of Siva puja.

3234. சிவபூசை வேளையிலே கரடியை விட்டு ஆட்டுகிறதா?
Is a dancing bear produced at the time of Siva puja?

3235. சிவலிங்கத்தின் மேல் எலி.
A rat, on Siva linga.

3236. சிவியானுக்கு அடிமைப்பட்டால் காவவும் வேண்டும் சுமக்கவும் வேண்டும்.
If subject to a palanquin bearer, one must bear both palanquins and burdens.

3237. சிறகிலும் மெல்லிசாய்ப் பொன் அடிப்பான்.
He will beat out gold even thinner than a feather.

3238. சிறகு இல்லாப் பறவைபோல.
Like a bird without wings.

3239. சிறகு பறிகொடுத்த பறவைபோல.
Like a bird deprived of its wings.

3240. சிறியாரோடு இணங்காதே சேம்புக்குப் புளி விட்டு மசியாதே.
Do not associate with the mean, do not macerate chambu greens with acid.

3241. சிறியார்க்கு இனியதைக் காட்டாதே சேம்புக்குப் புளி விட்டு ஆக்காதே.
Do not offer sweets to children, nor mix acid with chambu greens.

3242. சிறியோர் செய்த சிறு பிழை எல்லாம் பெரியோர் ஆனவர் பொறுப்பது கடனே.
It is the duty of the great to forgive the faults of inferiors.

3243. சிறியோர் எல்லாம் சிறியர் அல்ல.
All that are little are not inferiors.

3244. சிறுகச் சிறுகத் தின்றால் மலையையும் தின்னலாம்.
If you eat little by little, you may consume a mountain.

3245. சிறுகக் கட்டிப் பெருக வாழு.
Build a small house, and live thriftily.

3246. சிறுக விதைத்தவன் சிறுக அறுப்பான்.
He that sows little will reap little.

3247. சிறு குழிகள் கொஞ்சம் தண்ணீரால் நிரம்பும்.
But little water is required to fill a small hole.

3248. சிறு குழந்தை இல்லாத வீடும் வீடு அல்ல, சீரகம் இட்டு ஆக்காத கறியும் கறி அல்ல.
A house without an infant is not a house, nor is a curry without seerakam-cummin-a real curry.

3249. சிறுக்கி சின்னப் பணம், சிறுக்கி கொண்டை மூன்று பணம்.
The young lady is worth a small fanam, and she requires three fanams to adorn her
tresses.

3250. சிறு துரும்பும் பல்லுக் குத்த உதவும்.
Even a small fibre may serve as a tooth-pick.

3251. சிறுத்திருக்கையில் வளையாதது பருத்திருக்கையில் வளையுமா?
Will that which did not bend when small, do so when it becomes large?

3252. சிறு பிள்ளை செய்த வேளாண்மை விளைந்தாலும் வீடு வந்து சேராது.
The harvest of little children will never be housed.

3253. சிறு பெண் கட்டின சிற்றாடையா?
Is it a small cloth worn by a little girl?

3254. சிறுபோது படியாத கல்வி அழுக்குச் சேலையில் சாயம் ஏற்றினது போல்.
Learning not acquired in early life is like a cloth dyed when dirty.

3255. சிறு மீன் எல்லாம் பெரு மீனுக்கு இரை.
Little fish are the prey of great fish.

3256. சிறுமையும் பெருமையும் தான் தர வரும்.
The lower and higher stations in society, are the result of each one's exertions.

3257. சிறு ரூபத்தை உடைய பேரும் அரும்பொருளைச் செய்வார்: அதுபோல, சிறு விதை ஆகிய ஆலமரம் பெரு நிழலைக் கொடுக்கும்.
Those who are of inferior stature may accomplish difficult things: the seed of the banyan is small, but the tree affords a large shade.

3258. சிறு வயதில் கல்வி சிலையில் எழுத்து.
Learning acquired in youth, is an inscription on stone.

3259. சிறைச்சாலைக்கு அறை இல்லை , தேவடியாளுக்கு முறை இல்லை.
A prison has no apartments, a temple girl observes no relationships.

3260. சிற்றாள் எட்டு ஆளுக்குச் சரி.
A young hireling is equal to eight grown up servants.

3261. சிற்றாத்தை பிள்ளையும் பிள்ளையோ செத்தையிற் பல்லியும் பல்லியோ ?
Is the child of a maternal aunt a child? Is a lizard on the rubbish heapa lizard?
This refers to a species whose chirp is not regarded in augury.

3262. சிற்றின்பம் எண்ணார் மற்றின்பம் கண்டவர்.
Those who have tasted real happiness, will not regard inferior pleasures.

3263. சிற்றுணர்வோர் என்றும் சிலுசிலுப்பர்.
Persons of little learning are always talkative.

3264. சிற்றூரிலே பாரக்கூத்தா?
Will an extended comedy be performed in a mere hamlet?

3265. சிற்றூண் இனிது.
Moderate refection is sweet.

3266. சிற்றெறும்பைச் சிற்றெறும்பும் கட்டெறும்பைக் கட்டெறும்பும் தேடும்.
Little antsseek small ants; bigants seek great ones.

3267. சினத்தால் அறுத்த மூக்குச் சிரித்தால் வருமா?
Will the nosecut off in anger, be restored by laughing?

3268. சினத்தாலும் சீர் அழியப் பேசாதே.
Do not speak reproachfully though provoked.

3269. சின்ன சின்னப் பேச்சுச் சிங்காரப்பேச்சு வன்னவன்னப் பேச்சு மெத்த வழக்கமான பேச்சு.
Short expressions, beautiful expressions; florid expressions, colloqual(?) expressions.

3270. சீ என்ற வீட்டிலே பேயும் நுழையாது.
Even a demon will not enter a house that has pooh-poohed him.

3271. சீ என்ற காட்டிலே செந்நாய் சேருமா?
Will a dog enter a jungle that is looked down upon?

3272. சீக்கிர புத்தி பல ஈனம்.
A hasty mind is feeble.

3273. சீட்டாளுக்கு ஒரு முட்டாள் செருப்புத் தூக்கிக்கு ஒரு அடப்பக்காரனா?
Does a letter-carrier, require a helper, or a shoeboy employ one to carry his betel pouch?

3274. சீதை பிறக்கவும் இலங்கை அழியவும்.
The birth of Sita was the ruin of Lanka.

3275. சீபுரத்துப் பள்ளி செத்தும் கெட்டான் இருந்தும் கெட்டான்.
A Palli of Sipuram is ruined when dead, as well as when alive.

3276. சீப்பு எடுத்து ஒளித்தால் கலியாணம் நிற்குமா?
If the comb be concealed, will the marriage ceremony be delayed?

3277. சீரங்கத்துக் காகமானாலும் கோவிந்தம் பாடுமா?
Though hatched at Shrirangam, will a crow sing the praises ofGovinda?

3278. சீரங்கத்துக்குப் போகிறவன், வழியிலே பாரியைப் பறிகொடுத்ததுபோல.
As a man lost his wife on his way to Shrirangam.

3279. சீரங்கத்தில் உலக்கை கொடுத்தது போல.
As a pestle was given at Shrirangam.

3280. சீரங்கத்துக்குப் போகிறவன் ஓரியை மாராப்புப் போட்டது போல.
As ons going to the shrine ofShrirangamconcealed an old jackal inhisbosom.

3281. சீர் அற்றார் கையிற் செம்பொன் விலை பெறா.
Fine gold in the hands of the unthrifty is of no value.

3282. சீரியர் கெட்டாலும் சீரியரே.
Though reduced to poverty, the virtuous are still virtuous.

3283. சீரியர்க்கு அன்பு செய்.
Be kind to the virtuous.

3284. சீலைப்பாய் ஈழம் போய்ச் சீனி சருக்கரை கட்டுமா?
Will a ragged cloth go to Ceylon to tie up sugar ?

3285. சீவனம் செய்ய நாவினை விற்கேல்.
Do not make merchandise of your tongue for a livelihood.

3286. சீவன் போனால் கீர்த்தியும் போமா?
Will fame go when life goes ?

3287. சீனி என்று எழுதி நக்கினால் இனிக்குமா?
If you write the word sugar and lick it, will it taste sweet?

3288. சுக துக்கம் சுழல் சக்கரம்.
Grief and joy are a revolving wheel.

3289. சுகத்துக்குப் பின் துக்கம் துக்கத்துக்குப் பின் சுகம்.
After joy grief, after grief joy.

3290. சுகத்தையாவது பெறவேண்டும் தவத்தையாவது பெறவேண்டும்.
We must either enjoy happiness or practise austerities.

3291. சுகத்தைப் பெற்றதும் அல்ல தவத்தைப் பெற்றதும் அல்ல.
He has neither obtained happiness nor the fruit of austerities.

3292. சுகம் வந்தால் சந்தோஷப்பட்டுத் துன்பம் வந்தால் பின்வாங்குவானேன்?
If when prosperous you rejoiced, why draw back when adversity supervenes?

3293. சுகவாசி உடம்பு கழுதைப் பிறப்பு.
A man of luxurious habits is an ass.

3294. சுக்கிர உதயத்தில் தாலி கட்டி, சூரிய உதயத்திற்குள் அறுத்தாள்.
She who was married when Venus rose, was denuded of her marriage symbol at
sunrise.

3295. சுக்கிரீவ ஆக்கினையாய் இருக்கிறது.
It is the infliction of Sugriva.
Sugriva,a monkey, the ally of Ramachandra.

3296. சுக்கு அறியாத கஷாயம் உண்டா ?
Is there any decoction without dried ginger ?

3297. சுக்குத் தின்று முக்கிப் பெற்றால் தெரியும் பிள்ளை அருமை.
The preciousness of children is known to her who has eaten dried ginger and borne one.
It is common when a woman is confined, to give her a preparation of dried ginger and other spices.

3298. சுக்குக் கண்ட இடத்திலே முக்கிப் பிள்ளை பெறுவாளா?
Will she bring forth as soon as she sees the dried ginger ?

3299. சுக்குக் கண்ட இடத்தில் பிள்ளை பெற்றுச் சூரிய நாராயணன் என்று பெயர் இடுவாள்.
As soon as she sees the dried ginger, she will bring forth a child, and call it
Suryanarayana.
The name being the expression of her joy.

3300. சுக்கும் பாக்கும் வெட்டித் தாறேன் சுள்சுள் என்று வெயில்எறி.
Shine out brilliantly, I will give you dried ginger and arica-nut.

3301. சுங்கம் மாறினால் சுண்ணாம்பும் கிடையாது.
If taxes are heavy, even chunambu cannot be had.

3302. சுங்கமும் கூழும் இருக்கத் தடிக்கும்.
Taxes and gruel become heavier by being kept.

3303. சுடர் விளக்காயினும் தூண்டு கோல் ஒன்று வேணும்.
Though it may be a bright burning lamp, a splinter is required for raising the wick.

3304. சுடலை ஞானம் திரும்பி வருமட்டும்.
The solemn thoughts occasioned by the funeral pyre, last till each one returns home.

3305. சுடுகாடு போன பிணம் திரும்பாது.
The corpse that has gone to the place of incremation will not return

3306. சுடுகாட்டுப் புகையைப் பார்க்கும் கொம்பேறி மூக்கன்.
The tree snake looks anxiously for the smoke of the funeral pyre.
It is said that snakes enjoy the odour of a burning body.

3307. சுடு கெண்டைக்காக ஏரியை உடைக்கலாமா?
May one burst the bund of a tank in order to get fried fish?

3308. சுட்ட கரியை நாய் புரட்டுகிறாப்போல.
As a dog rolls burning charcoal.

3309. சுட்ட சட்டி அறியுமா அப்பத்தின் சுவையை?
Does the baking pan appreciate the flavour of a cake?

3310. சுட்ட சட்டியும் சட்டுவமும் கறிச் சுவை அறியுமா?
Do the chatty and ladle know the flavour of curry?

3311. சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டுமா?
Will burnt and moist earth unite ?

3312. சுண்டைக்காய் காற் பணம் சுமைகூலி முக்காற் பணம்.
The price of the chundakai is a quarter of a fanam, its carriage three quarters of a fanam.

3313. சுண்டைக்காய் அளவிலே, சாப்பிடுகிறது பாதியா, வைக்கிறது பாதியா?
Of the food about the size of a chundaikkai, am I to eat half and leave half?

3314. சுண்ணாம்பில் இருக்கிறது சூக்ஷம்.
The speciality or charm ofarica-nut and betel-is in the chunambu.

3315. சுத்த விலங்கோடு சுத்த விலங்குதான் சேரும்.
A clean beast will join a clean beast.

3316. சுத்த வீரனுக்கு உயிர் துரும்பு.
To the real hero life is a mere straw.

3317. சுமைதாங்கி சுங்கம் இருப்பது இல்லை.
No toll at a resting block.

3318. சும்மா அறுக்கிறாய் என்னடா சொத்தைக் களாக்காயை?
Why waste your time in cutting the rotten kalakkai ?

3319. சும்மா கிடக்கிற தாரையை ஊதிக் கெடுத்தான் அம்மான்.
By blowing the unused trumpet my uncle spoiled it.

3320. சும்மா கலம் சுமக்கமாட்டான் நனைந்து முக்கலம் சுமப்பான்.
In fair weather he will not carry one kalam of grain, in foul weather, when drenched with rain, he carries three.

3321. சும்மா போகிறவனைப் பிடிப்பானேன், இராத்திரி எல்லாம் கிடந்து பிதற்றுவான் ஏன் ?
Why seize one going along, and lie groaning all the night?

3322. சும்மா இருந்தால் சோறு ஆமா வாடா சித்தா கால் ஆட்ட.
Will boiled rice come of itself? Come along Chitta, let us shake our legs.

3323. சும்மா இருந்த அம்மையாருக்கு அரைப் பணத்துத் தாலி போதாதா ?
Is not a marriage symbol worth half a fanam, a gain to the matron who is worth nothing?

3324. சும்மா கிடைக்குமா சோணாசலன் பாதம் ?
Can one approach the feet of Chonachalan without effort ?

3325. சுய காரிய துரந்தரன் சுவாமி காரியம் வழவழ.
He who is intent about his own affairs will not mind the things of God.

3326. சுய காரிய துரந்தரன் பரகாரிய பராமுகன்.
Intent about his own affairs, he turns from others.

3327. சுரிகுழல் மனது சரி நடப்பது ஆர்?
Who can act so as to please a woman ?

3328. சுருட்டை சோறு இடும் பம்பை பால் வார்க்கும்.
Curly hair will give rice, dishevelled hair will pour out milk.

3329. சுருதி சுகானுபோகம் இரண்டும் ஒத்தால் முத்தி.
When religious precepts and physical enjoyment are in harmony, happiness is the
resultant.

3330. சுருதி குரு சுகானுபவம் மூன்றும் ஒத்தது மெய்ப்பொருளாம்.
When the vedas, the priest and enjoyment meet together, there is real wealth.

3331. சுரைப் பூவுக்கும் பறைப் பாட்டுக்கும் மணம் இல்லை.
The flower of a bottle-gourd is not fragrant, the song of a pariah is not chaste.

3332. சுவருக்கும் காதுகள் உண்டு.
Even a wall may have ears.

3333. சுவரை வைத்துக்கொண்டு அல்லவோ சித்திரம் எழுத வேண்டும் ?
You must first build the wall, must you not, and then adorn it with figures ?

3334. சுவர்க்கத்திலே தோட்டியும் சரி தொண்டைமானும் சரி.
In the paradise of Indra a scavenger and a Vellala of the Tondai country are equal.

3335. சுவர்க்கத்துக்குப் போகிற போது கக்கத்திலே மூட்டை ஆமா ?
When on your way to heaven, do you carry a bundle under your arm?

3336. சுவர்க்கத்திலே போகிறபொழுது கக்கத்திலே ராட்டினமா?
When on your way to heaven, do you carry a spinning-wheel under your arm?

3337. சுவர்க்கத்திற்குப் போகிற போது பக்கத்திலே ஒரு கூத்தியாரா?
Is one expected to take his concubine along with him to the paradise of Indra ?

3338. சுவாமி வரம் கொடுத்தாலும் முன்னடியான் வரம் கொடான்.
Though God may grant a boon, the devotee in his presence will not.

3339. சுள்ளாப்பு எல்லாம் பொல்லாப்பு.
Every bitter sneer leads to evil.

3340. சுள்ளைச் சுட்டுக்கொண்டு கள்ளைக் குடிக்கிறது.
To grill dried fish and drink toddy.

3341. சுற்றத் துணியும் இல்லை நக்கத் தவிடும் இல்லை.
No cloth to wear, no bran to lick.

3342. சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்.
It is the beauty of friendship to be surrounded-by friends.

3343. சுற்றத்தமரைப் பற்றி இரு.
Live close by your relations.

3344. சூடு கண்ட பூனை அடுப்படியிற் செல்லாது.
A burnt cat shuns the fire-place.

3345. சூடு மிதிக்கிற மாட்டின் வாயைக் கட்டலாமா?
Is it proper to tie the mouth of the ox that treads out the corn?

3346. சூட்சத்திலே இருக்கிறது மோட்சம்.
Important ends are attained by comparatively insignificant means.

3347. சூட்சாதி சூட்சத் துல்லிபன்.
The great contriver who is inscrutable.

3348. சூதபலத்தைச் சுகமுகத்தினால் அறி.
Know the efficacy of mercury by the glow of health on the cheeks.

3349.சூதனுக்கு நீதி இல்லை.
The cheat is void of justice.

3350. சூதன் கொல்லையிலேதான் மாடு மேயும்.
The ox will graze in the field of the intriguing.

3351. சூதானத்துக்கு அழிவு இல்லை.
Circumspection leads not to ruin.

3352. சூதினால் வெல்வது எளிது.
It is easy to overcome an enemy by intrigue.

3353. சூதும் வாதும் வேதனை செய்யும்.
Gambling and boasting end in sorrow.

3354. சூது விரும்பேல்.
Desire not gambling.

3355. சூத்திரவேதன் சாஸ்திரம் பார்ப்பான்.
A stringed brahman observes the shasters.

3336. சூத்திரப் பாவைபோல நடிக்கிறான்.
He dances like a puppet.

3357. சூரியன்கீழே தோன்றினது எல்லாம் மாயை.
All under the sun is vanity.

3358. சூரியனைக் கையால் மறைத்ததுபோல.
Like hiding the sun with the hand.

3359. சூரியனைக் கண்ட இருள்போல்.
Like darkness that has seen the sun.

3360. சூரியனைக் கண்ட பனிபோலே நீங்கும்.
It will vanish as the dew before the sun.

3361. சூரியனுக்கு முன் மின்னாம்பூச்சிபோல்.
Like a fire-fly before the sun.

3362. சூரியனைக் கண்டு உலகம் விளங்கும்.
The earth is illumined by the sun.

3363. சூரியனைக் கிரகணம் பிடித்தது போல் உன்னைச் சனி பிடித்தது.
Saturn has seized thee as the eclipse seizes the sun.

3364. சூரியன் எழுமுன் காரியம் ஆடு.
Form your plans before sunrise.

3365. சூரியனுடைய பிரகாசத்துக்கு முன்னே மின்மினி விளங்க மாட்டாது.
Fire-flies do not shine in the presence of the sun.

3366. சூரியனைப் பார்த்து நாய் குலைத்தது போல.
As the dog barked at the sun.

3367. சூரியனைக் கல்லால் அடித்தது போல.
Like striking the sun with a stone.

3368. சூலாகு மீன்கள் ஒன்றை ஒன்று மோந்து கொள்ளும்.
Like chula fish kissing each other.

3369. சூலி சூலி என்று சோற்றைத் தின்று மலடிவாயில் மண்ணைப் போடுகிறதா?
Do you eat up the rice yourself on the plea of pregnancy, and put earth into the
mouth of the barren ?

3370. சூழ ஓடியும் வாயிலாலே.
Though you run round, you will have to enter by the gate.

3371. செக்கு உலக்கையை விழுங்கினவனுக்குச் சுக்குக் கஷாயம் மருந்தாமா?
Is a decoction of dried ginger a specific for him who has swallowed the pestle of an
oil press ?

3372. செங்கோலுக்கு முன்னே சங்கேதமா?
Willconspiracy against a just administration avail?

3373. செங்கோல் ஓங்குவன் திரித்துவ தேவன்.
He who holds the sceptre is the triune God.

3374. செங்கோல் கோண எங்கும் கோணும்.
If the sceptre turn aside, its effect will be felt every where.

3375. செடியிலே வணங்காத்தா மரத்திலே வணங்கும் ?
If it would not bend as a sapling, will it bend as a tree?

3376. செட்டிக்கும் மாட்டிக்கும் சென்மப் பகை.
The merchant and the farmer cherish innate hatred towards each other.

3377. செட்டிக்கு வேளாண்மை சென்மப் பகை.
The merchant has a natural aversion to agriculture.

3378. செட்டி கூடிக் கெட்டான் சேணியன் பிரிந்து கெட்டான்.
The Chetty was ruined by taking a partner, the weaver by separating from one.

3379. செட்டி போன இடம் எல்லாம் வட்டம் காற் பணம்.
Wherever the merchant goes there is a discount of a quarter fanam.

3380. செட்டி பணத்தைக் குறைத்தான், சேணியன் காலைக் குறைத்தான்.
The merchant reduced the money, the weaver lessened the width of the cloth.

3381. செட்டி படை வெல்லுமா, சேற்றுத் தவளை கடிக்குமா?
Can merchants disperse an army, can a toad inflict a wound?

3382. செட்டி சிங்காரிக்கிறதுக்குள்ளே பட்டணம் பறிபோகிறது
While the Chetty is adorning himself, the city is besieged.

3383. செட்டியாரே செட்டியாரே என்றால், சீரகம் பண எடை முக்காற் பணம் என்கிறார்.
When I respectfully call him Chettiyar, he says that a fanam weight of cumin is sold for three fourths of a fanam.

3384. செட்டி வீட்டிற் பணம் இருக்கிறது, ஆலமரத்தில் பேய் இருக்கிறது.
Wealth is in the houses of merchants, demons are in banyan trees.

3385. செட்டிகள் மாடு மலை ஏறி மேயுமா?
Will the oxen of Chetties ascend and graze on the mountains?

3386. செட்டியாரே வாரும் சந்தையை ஒப்புக்கொள்ளும்.
Chettiyar, come and take charge of the bazaar.

3387. செட்டியை நீலி தொடர்ந்ததுபோல.
As Nili-a cruel woman-followed the Chetty.

3388. செட்டிக்கு இறுத்துப் பைக்கும் இறுத்தேன்.
I paid the Chetty and also his bag.

3389. செட்டுக்கு ஒரு தட்டு, சேவகனுக்கு ஒரு வெட்டு.
A slap for the merchant, a sword cut for the warrior.

3390. செத்த நாய் திரும்பக் கடியாது.
The dead dog will bite no more.

3391. செத்தவன் வீட்டிற் கெட்டவன் ஆர்?
Who was ever ruined in a house whose owner was dead?

3392. செத்தவன் வாயிலே மண், இருந்தவன் வாயிலே சோறு.
Earth in the mouth of the dead, and rice in the mouth of the living.

3393. செத்த மாடு புல்லுத் தின்னுமா?
Can a dead cow eat grass ?

3394. செத்தவன் கண் செந்தாமரைக் கண், இருந்தவன் கண் நொள்ளைக் கண்.
The eye of the dead is a red lotus, that of the living a sightless orb.

3395. செத்தபின் எப்படிப் போனாலும் என்ன ?
No matter what becomes of one after his death?

3396. செத்தவன் தலை கிழக்கே இருந்தால் என்ன மேற்கே இருந்தால் என்ன ?
What matters it whether the head of a corpse be towards the east, or west ?
Most Hindus, and some Native Christians even, are very particularabout the position in which they lie down to sleep. The head shouldbe towards the south. The north is the region of Yama. The west is avoided because the person so lying down may not rise again.

3397. செத்த பிணத்தில் கடை உற்றார்க்கு உதவாதவன்.
He that does not help his friends or relations is worse than a corpse.

3398. செத்த ஆடு காற்பணம் சுமைகூலி முக்காற் பணம்.
The dead sheep is worth a quarter of a fanam, and three fourths of a fanam are required to remove it.

3399. செத்த பிணத்தைச் சுற்றித் திரிந்தாற்போல.
As they walk round a corpse.
This may refer to the custom of a relative going round a corpse three times at the place of incremation.

3400. செத்தவன் பெண்சாதியை இருந்தவன் கைக்கொண்டாற் போல.
As the surviver took the wife of the deceased.

3401. செத்த பாம்பை ஆட்டுகிறான்.
He is charming a dead snake.

3402. செத்தவன் கையிலே வெற்றிலை பாக்குக் கொடுத்த சம்பந்தம்.
Like putting betel and arica-nut into the hand of the dead.
The giving of betel and nut is one of the marriage ceremonies.

3403. செத்த மாட்டை அறுக்காத கத்தி சொத்தைக் கத்தரிக்காயை அறுக்கும்.
A knife that will not cut a dead cow, will cuta blighted brinjal.

3404. செத்த பாம்பு சுற்ற வருகிறதே அத்தை நான் மாட்டேன் என்றாற்போல.
As if one should say, aunt, I will not, the dead snake comes to coil round my leg.

3405. செத்த பிணத்துக்கு அருகே இனிச் சாகும் பிணம் அழுகிறது.
Those who will hereafter die weep by the body of the deceased.

3406. செத்த பிணத்துக்குக் கண் ஏன், சிவசிவ ஆண்டிக்குப் பெண் ஏன் ?
Why an eye to the corpse, why a wife to the Saiva mendicant?

3407. செத்தால் தெரியும் செட்டியார் வாழ்வு.
The wealth of the Chetty will be known after death.

3408. செப்படி வித்தை எப்படிச் செய்கிறான்?
How dexterously he juggles?

3409. செப்பில்லாக் குடிக்கு அப்பாப் பட்டமா?
Is the title of Appa suited to a family that possesses no brass utensils?

3410. செப்பும் பந்தும் போல.
Like a box and a ball.

3411. செம்பரம்பாக்கத்தான் பெயர் பெற்றான் மாங்காட்டான் நீர் பெற்றான்.
Men at Champerempakum get a name, those at Mangadoo get water.

3412. செம்பால் அடித்த காசும் கொடான்.
He will not give even a copper coin.

3413. செம்பாலைக்குக் கரும்பு ஆலை வலிது.
Black wood is stronger than red.

3414. செம்பு நடமாடக் குயவன் குடிபோகிறான்.
Copper utensils being introduced, the potter removes.

3415. செம்மறி ஆடு வெளியே ஓடத் திருட்டு ஓனாய் உள்ளே.
The sheep iswithout, the thievish wolf is within.

3416. செயமுள்ள மட்டும் பயம் இல்லை.
While successful he knows no fear.

3417. செய்த வினை செய்தவர்க்கு எய்திடும்.
Every man's actions will cleave to him.

3418. செய்தார்க்குச் செய்வது செத்தபிறகோ ?
Is it after death that benefits are to be requited?

3419. செய்யும் தொழில் எல்லாம் சீர்தூக்கிப் பார்க்கில் நெய்யும்தொழிலுக்கு நிகர் இல்லை.
When all occupations are duly weighed, that of weaving will appear unequalled.

3420. செய்வினை திருந்தச் செய்.
Do well, what you have to do.

3421. செருப்பால் அடித்துக் குதிரைக் கொடை கொடுத்தாற்போல.
Like giving a horse in compensation, to one who has been slippered.

3422. செருப்புக்கு அச்சாரம் துரும்பு.
The earnest paid for shoes is a straw.

3423. செருப்பின் அருமை வெயிலில் தெரியும் நெருப்பின் அருமை குளிரில் தெரியும்.
The value of shoes is appreciated when the sun is hot, the value of fire is known
when the weather is cold.

3424. செருப்புக்காகக் காலைத் தறிக்கிறதா?
Is the foot to be cut off to try on the shoe?

3425. செருப்புக் கொள்ளுகிறது காலுக்கோ தலைக்கோ?
Is it for the feet or head, that one buys shoes?

3426. செலவிற் குறைந்த வரவானால் சேமப்படுகிறது எப்படி?
If expenses exceed income how can one thrive ?

3427. செலவு அதிகம் வரவு போதாது.
Expenses exceed the income.

3428. செய்யும் எனச்சே எனக்கு இரண்டு என்கிறது.
On my saying do it, he replies give me two.

3429. செலவு இல்லாத சிங்காரம் போல.
Like ornamentation that costs nothing.
3430. செலவோடு செலவு கந்தப் பொடிக்குக் காற் பணம்.
A quarter fanam for sweet scented powder, over and above the expenses already incurred.

3431. செல்லம் சொல்லுக்கு அஞ்சுமா?
Will a spoiled child fear rebuke?

3432. செல்லம் சறுக்குதா வாசற்படி வழுக்குதா?
Does indulgence cause you to slip, or are the door-steps slippery?

3433. செல்லப் பிள்ளை சீலை உடாதாம் பிள்ளை பெறுமட்டும்.
A spoiled child will not pot on clothes till it becomes a mother.

3434. செல்லாத காசு என்றைக்கும் செல்லாது.
A coin not current is always so.

3435. செல்லும் காசுக்கு வட்டம் உண்டா ?
What discount for current cash?

3436. செல்லும் செல்லாத்துக்குச் செட்டியார் இருக்கிறார்.
There is a Chetty who can say whether the coin is current or not.

3437. செல்வம் பரமண்டலம் செல்லாது, எல்லா மண்டலத்தும் செல்லும்.
Wealth goes anywhither but to heaven.

3438. செல்வம் உண்டாகும் காலம், செய்கை உண்டு, வல்லமை உண்டு.
In time of prosperity there is exertion and power.

3439. செல்வம் செருக்குகின்றது காசுக்கு வழி இல்லை.
He is proud of his wealth though he has not means to obtain a cash.

3440.செல்வப்பொருள் கொடுத்தால் குறையும், கல்விப் பொருள் குறையுமோ?
On giving, wealth diminishes, will learning also so diminish ?

3441. செல்வம் செருக்குகின்றது வாசற்படி வழுக்குகின்றது.
Wealth makes one proud, the door-steps are slippery.

3442. செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல்.
It is an honor to the wealthy to protect their relatives.

3443. செல்வன் சொல்லுக்கு அஞ்சான், வீரன் போருக்கு அஞ்சான்.
The wealthy fear no orders, the hero is not afraid of war.

3444. செல்வம் நிலையில், சேட்டன் கீழ் இரு.
Wealth is impermanent, live in subjection to a superior.

3445. செவிடன் காதில் சங்கு ஊதினதுபோல.
Like blowing a conch in the ear of the deaf.

3446. செவிடனும் குருடனும் கூத்துப் பார்த்தாற்போல.
As the deaf and the blin attended a comedy.

3447. செவிடன் பாட்டுக் கேட்ட சம்பந்தம்.
As the deaf listened to a song.

3448. செவிடு இருந்தால் ஊமை இல்லையா?
If oneis deaf is he not dumb, also ?

3449. சென்மக் குருடனுக்குக் கண் கிடைத்தது போல்.
As one born blind obtained his sight.

3450. சென்ற காரியத்தைப் பார்த்து வரும் காரியத்தை அறி.
Learn the future by looking at things past.

3451. சென்ற இடம் எல்லாம் சிறப்பே கல்வி.
Learning distinguishes one whithersoever he goes.

3452. சேத நினைவிற்குப் பூதம் சிரிக்கும்.
A demon laughs at malevolent thoughts.

3453. சேம்பு கொய்யச் சிற்றரிவாள் ஏன்?
Why a small sickle to gather chembu greens?

3454. சேர இருந்தால் செடியும் பகை, தூர இருந்தால் தோட்டியும் உறவு.
If too near even a shrub-a worthless fellow-is an enemy, if distant even a scavenger is a friend.

3455. சேரிடம் அறிந்து சேர்.
Associate with the agreeable.

3456. சேரியும் ஊரும் செல்வமும் கல்வியும்.
A hamlet, a country, wealth and learning.

3457. சேர்க்கை வாசனையா இயற்கை வாசனையா?
Is the habit natural or acquired?

3458. சேர்ந்தவர் என்பது கூர்ந்து அறிந்தபின்.
Regard those as friends whose sincerity has been carefully tested.

3459. சேலைமேற் சேலை கட்டித் தேவரம்பை ஆடினாலும், ஓலைமேல் எழுத்தாணி ஊன்றும் பெண் ஆகாது.
Though one wear cloth upon cloth, and is able to dance like a celestial, she is not to be desired if she can press a style on a palm leaf, i. e., if she can write.
A strong dissuasive against female education. The proverb is nevertheless in harmony with the sentiments of the majority of Hindus who have received high education in English.

3460. சேற்றிலே புதைந்த ஆனையைக் காகமும் குட்டும்.
Even a crow will peck an elephant when it is in the mud.

3461.சேற்றிலே செங்கழுநீர் பூத்தாற்போல.
As the water-lily blossoms in mud.

3462. சேற்றிலே நாட்டிய கம்பம் போல.
Like a pole set up in mud.

3463. சேற்றிலே கிடக்கிற எருமையைத் தூக்குவான் ஏன்?
Why lift up the buffalo that wallows in the mire?

3464. சேற்றால் எடுத்த சுவர்.
A wall of mud.

3465. சேனைக்குப் பட்டமோ சேனாபதிக்குப் பட்டமோ?
Are honorary distinctions bestowed on an army, or on its leader ?

3466. சைகை அறியார் சற்றும் அறியார்.
Those who cannot take a hint know nothing.

3467. சைவ முத்தையா முதலியார்க்குச் சமைத்துப்போட வள்ளுவப் பண்டாரம்.
The cook of the vegetarian Muttaiya of the Modelly caste, is a pariah mendicant.

3468. சொக்கனுக்குச் சட்டி அளவு.
The size of the chatty is enough for the Chetty's attendant.

3469. சொக்கட்டான் விளையாட்டுப் பொல்லாத சூது.
The game of draughts is ruinous.

3470. சொட்டைவாளைக் குட்டி போல.
Like the young of a chottai valai fish.

3471. சொருகிக் கிடந்த அகப்பையும் சோறு அள்ளப் புறப்பட்டது.
Even the ladle that had been cast aside as useless, is again serving out rice.

3472. சொல்லச் சொல்லப் பட்டி பெண்ணைப் பெண்ணைப் பெற்றாள்.
Though again and again forbidden, Patti-a strumpet-brought forth only daughters.

3473. சொல்லச் சொல்ல மாட்டி மண்ணைத் தின்கிறான்.
Though frequently forbidden, Matti-a fool-eats earth.

3474. சொல்லாமல் இருக்கிறவனே பண்டிதன்.
He who is of few words is a pundit.

3475. சொல்லிச் செய்வார் சிறியோர், சொல்லாமற் செய்வார் பெரியோர், சொல்லியும் செய்யார் கயவர்.
Inferiors may keep their word, the great do a thing without promising, but the wicked act not even after making a promise.

3476. சொல்லிக் கொடுத்த சொல்லும் கட்டிக் கொடுத்த சோறும் எதுவரையில்?
How long will the words put into one's mouth, and the rice tied up for a journey avail us?

3477. சொல்லுகிறது ஒன்று செய்கிறது ஒன்று.
Saying one thing, and doing another.

3478. சொல்லுக்கும் பொருளுக்கும் எட்டாதான் சோதிக்கும் சாதிக்கும் நடுவானான்.
He whom neither language nor wealth can influence, has come between God andman.

3479. சொல்லும் சொல் ஆக்கமும் கேடும் தரும்.
A word uttered may bring wealth as well as ruin.

3480. சொல்லும் பொருளும் தோன்றும் கல்வி.
Learning is conversant with words and things.

3481. சொல் வல்லனை வெல்லல் அரிது.
It is difficult to overcome the eloquent.

3482. சொல்வளம் இல்லா நற்கதை சொல்லில் அதுவே துர்க்கதை.
A good story badly told, soon loses its effect.

3483. சொல்வது யார்க்கும் எளிது, அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்.
Saying is easy, but doing is difficult.

3484. சொல்வது இலேசு செய்வது அல்லவா பிரயாசம்?
It is easy to profess, but difficult to perform, is it not?

3485. சொல்வார் சொன்னாலும் கேட்பாருக்கு மதி இல்லையா?
No matter what others say, have not those who hear, sense to judge for themselves?

3486. சொறிந்து தேயாத எண்ணெயும் பரிந்து இடாத சோறும் பாழ்.
Oil applied without rubbing the head, and boiled rice given with ill-will, are useless.

3487. சொறியாந் தவளையும் வேட்டை ஆடுகிறதாம்.
It is said that even toads go a hunting.

3488. சொற்பேச்சையும் கேளான் சுயபுத்தியும் இல்லை.
He has no sense, he will not listen to advice.

3489. சொற்றிறம் கூறல் கற்றவர்க்கு அழகு.
It becomes the learned to explain the force of words.

3490. சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை.
The parrot will utter what it is taught.

3491. சொன்னதைச் சொல்லடி சுணைகெட்ட மூளி.
Say what you are told, you senseless, deformed wretch.

3492. சொன்னது இருக்கச் சுரை பிடுங்குகிறாய்.
Neglecting what you were told to do, you pull up the beans.

3493. சொன்னபடி கேட்காவிட்டால் மண்ணை வெட்டி மாப் படைப்பேன்.
If you do not do as I say, I will make an offering of earth.
Addressed to a demon when driving him out.

3494. சொன்னால் வெட்கம் அழுதால் துக்கம்.
It is shameful to tell it, and painful to weep over it.

3495. சொன்னாற் பெரும்பிழை சோறென்றாற் பட்டினி.
As regards rice, he is famishing, but it would be a fault to say so.

3496. சோம்பல் இல்லாத் தொழில் சோதனை இல்லாத் துணை.
Untiring service is reliable help.

3497. சோம்பலுக்குத் தொடர்ச்சி வறுமை, சும்மா இருத்தலுக்குச் தொடர்ச்சி மூடம்.
Indolence leads to poverty, inaction to ignorance.

3498. சோம்பலே சோறு இன்மைக்குப் பிதா.
Indolence is the parent of want.

3499. சோம்பேறிக்கு வாழைப்பழம் தோலோடே.
The sluggard eats his plantain, skin and all.

3500. சோழமண்டலமோ சூதுமண்டலமோ ?
Is it the realm of Chola, or the realm of deceit?

3501. சோளியைப் பிடுங்கிக் கொண்டா பிச்சை போடுகிறது?
Is it after snatching away his bag one gives alms to a beggar ?

3502. சோறு என்ன செய்யும் சொன்னவண்ணம் செய்யும்.
What can rice effect? whatever you like.

3503. சோறு சிந்தினால் பொறுக்கலாம், சுணை சிந்தினால் பொறுக்கலாமா?
If rice be spilt it may be picked up; but if one loses his sense of honour can he recover that?

3504. சோறு சிந்தினால் பொறுக்கலாம் நீர் சிந்தினால் பொறுக்கலாமா?
If rice be spilt it may be picked up, can water?

3505. சோற்றிலே கிடக்கிற கல் எடுக்கமாட்டாதவன் முகனைக்கல் எடுப்பானா?
Can he who would not pick a stone out of the rice, lift up the stone lintel of a temple gateway?

3506. சோற்றில் இருந்த கல் எடாதவன் சேற்றில் கிடக்கிற எருமையைத் தூக்குவானா?
Can he who will not pick a stone out of his rice, lift a buffalo out of the mud ?

3507. சோற்றுக்கு வீங்கின நாயே மாட்டுப் பொங்கலுக்கு வாயே,
Thou dog, greedy of boiled rice, come to the January ox-festival.

3508. சோற்றுக்கு இல்லாத பூசணிக்காய் பந்தலிலே கட்டி ஆட்டவோ ?
Of what use is a pumpkin which will not be available for food, is it to be suspended to a pandal swing?

3509. சோற்றுச் சுவையோடு தொத்தி வந்த நொள்ளை.
The blind that came drawn by the smell of rice.

3510. சோற்றுக்குக் கேடும் பூமிக்குப் பாரமுமாய் இருக்கிறான்.
He is a waste of rice, he is a burden to the earth.

3511. சோற்றைக் கொடுத்துக் கழுத்தை அறுக்கிறதா ?
What, to cut one's throat after giving rice ?

3512. செளரியம் பேசேல்.
Boast not of your strength.

3513. ஞாபகம் இல்லை என்று எவனும் சொல்வான், ஞானம் இல்லை என்று எவனும் சொல்லான்.
Any may say I have forgotten, none says I have no sense.

3514. ஞாயப் பிரமாணம் இல்லாத குருக்கள் வீண்.
Teachers without moral rules are vain.

3515. ஞானமும் கல்வியும் நாழி அரிசியிலே.
Wisdom and learning are contained in a measure of rice.

3516. ஞானம் எல்லாம் ஒரு மூட்டை , உலகம் எல்லாம் ஒரு கோட்டை.
Collective wisdom is a bundle, and the whole world a fort.

3517. ஞானம் இல்லாச் சேயர்கள் ஆவின் கன்றிலும் அதிகமல்ல.
Ignorant children, are not better than calves.

3518. ஞானம் தனத்தையும் கனத்தையும் கொடுக்கும்.
Wisdom gives wealth and honour.

3519 ஞானிக்கு இல்லை இன்பமும் துன்பமும்.
The wise are not affected by pleasure and pain.

3520. ஞானிக்கும் மூடனுக்கும் சங்காத்தம் இல்லை.
A wise man and a fool do not associate.

3521. தகப்பன் வெட்டின கிணறென்று தலைகீழாய் விழுவார்களா?
Will they fall headlong into the well because their father dug it ?

3522. தகப்பனுக்கு இட்டது தலைச்சனுக்கு.
What was given to the father, will be entailed on his first-born.

3523. தகப்பனுக்குக் கட்டக் கோவணத்துக்கு வழி இல்லை, மகன்தஞ்சாவூர் மட்டும் நடைப்பாவாடை போடச் சொன்னானாம்.
Whilst the father is without waist-cloth, his son, it is said, asked him to spread cloth on the ground to walk on as far as Tanjore.

3524. தகப்பனைக் கொன்ற பாவம் மாமியார் வீட்டில் ஆறு மாசம் இருந்தால் போகும்.
The murder of a father may be expiated by residing for six months in the house of one's mother-in-law.
The Hindus account it disgraceful in a son-in-law to live in the house of a mother-in-law at her expense. Bharata when enumerating the various sins he would be guilty of, if he coveted the throne of his elder brother Rama, mentions this as one.

3525. தகப்பன் பட்டம் பிள்ளைக்கு அல்லவா?
The title of the father descends to the son, does it not ?

3526. தகப்பன் தேடக் கர்த்தன், பிள்ளை அழிக்கக் கர்த்தன்.
The father acquires wealth, the son destroys it.

3527. தகப்பன் பட்டத்தைப் பிள்ளைக்குக் கட்டினால் தகப்பன் சாஷ்டாங்கதண்டம் செய்யவேண்டும் அல்லவோ?
If the title of the father descend to the son, the father must prostrate himself before him, must he not?

3528. தக்கோன் எனத் திரி.
So live as to be reputed a deserving man.

3529. தங்கமுடி சூட்டினாலும் தங்கள் குணம் விடார் கசடர்.
Though crowned with gold, the base will not abandon their natural dispositions.

3530. தங்கச் சூரிக்கத்தியென்று அறுத்துக் கொள்ளலாமா?
May one cut himself with a knife because it is made of gold?

3531. தங்கத்தைக் குவிக்கிறேன் என்றாலும், தன் புத்தி விடுகிறது இல்லை.
Though I promised to give a heap of gold, he persisted in his own ideas.

3532. தங்கத்தூள் அகப்பட்டாலும் செங்கற்றூள் அகப்படாது.
Though gold-dust is procurable, brick-dust is not.

3533. தங்கத்தை உருக்கி விட்டது போல.
As fine gold was melted and poured out.

3534. தங்கம் தரையிலே தவிடு பானையிலே.
Gold scattered on the ground, bran in an earthen vessel.

3535. தங்கம் புடத்தில் வைக்கப்பட்டாலும் தன் நிறம் போகாது.
Though gold is put into the fire to be refined, its hue is not lost.

3536. தங்கம் தரையிலே, ஒரு காசு நாரத்தங்காய் உறியிலே.
Gold scattered on the ground, and a cash-worth of lemons placed on the swinging tray.

3537. தங்கம் எல்லாம் தவிட்டுக்கு மாறுகிறது.
To exchange all his gold for bran.

3538. தங்கைச்சி பிள்ளை தன் பிள்ளை ஆனால் தவத்துக்குப் போவான் ஏன்?
If the child of his sister be his, why go to perform penance?

3539. தசை கண்டு கத்தி நாட வேண்டும்.
The knife should be applied where there is flesh.

3540. தச்சன் பெண்சாதி தரையிலே, கொல்லன் பெண்சாதி கொம்பிலே.
The wife of the carpenter is on the floor, and the wife of the smith is on the branch of a tree.

3541. தச்சன் பெண்சாதி அறுத்தால் என்ன, கொல்லன் பெண்சாதி கூலிக்கு அறுத்தால் என்ன?
What if the wife of the carpenter is bereaved of her husband ?
what if the wife of the smith is deprived of her hire?

3542. தச்சன் வீட்டிலே தயிரும் எச்சன் வீட்டிலே சோறும் எப்படிச்சேரும்?
Will curds be found in the house of a carpenter, or boiled rice in that of a niggard ?

3543. தச்சன் வீட்டில் பாற்சோற்றை நத்தாதே வெள்ளாளர்.
O! Vellala do not long for the rice and milk in a carpenter's house.

3544. தச்சன் அடித்த தலைவாசல் எல்லாம் உச்சியில் இடிக்க உலாவித் திரிந்தேன்.
I walked about in all the entrances where the carpenter had put up lintels, knocking my head against them.

3545. தஞ்சம் என்று வந்தவனை வஞ்சிக்கல் ஆகாது.
To cheat one that has come for protection is bad.

3546. தடவிப் பிடிக்க மயிர் இல்லை அவள் பெயர் கூந்தலழகி.
Not a hair to be felt; yet her name is the tressed beauty.

3547. தடவிப் பிடிக்கக் கை இல்லை அவன் பெயர் செளரியப் பெருமாள்.
He has no hand to feel and seize any thing, his name is the notoriously strong.

3548. தடி எடுத்தால் எல்லாம் வேட்டைக்காரர்.
All are huntsmen who take up sticks.

3549. தடிக்கு மிஞ்சின மிடா.
A water pot too strong to be broken by a stick.

3550. தடிக்கு அஞ்சிக் குரங்கு ஆடினதுபோல.
Like a monkey dancing for fear of the stick.

3551. தடிக்கு மிகுந்த மிடாவானால் என்ன செய்யலாம்?
If the pot is too strong for the stick, what can be done?

3552. தட்டான் தாய்ப் பொன்னிலும் மாப்பொன் எடுப்பான்.
A goldsmith will pilfer the gold-dust even of his mother.

3553. தட்டானும் செட்டியும் கண் சட்டியும் பானையும் மண்.
The goldsmith and the Chetty have each two eyes, the chatty and the pot are of earth.

3554. தட்டானும் செட்டியும் போல.
Like the goldsmith and the merchant.

3555. தட்டானைச் சேர்ந்த தறுதலை.
The fool-hardy who associated with the goldsmith.

3556. தட்டான் தாழப் பறந்தால் தப்பாமல் மழை வரும்.
If a butterfly flies low, it is sure to rain.

3557. தட்டாரச் சித்து தறிச்சித்து வண்ணாரச் சித்துக்கு வராது.
The tricks of a goldsmith and of a weaver, are not equal to those of a washerman.

3558. தட்டானிடத்தில் இருக்கிறது, அல்லது கும்பிடுசட்டியில் இருக்கிறது.
It is either in the possession of the goldsmith, or in his vessel.

3559. தட்டிப் பேசுவார் இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்.
When there is none to contradict tambi is very fierce.
Tambi, a younger brother, is often used in a friendly way, when addressing a junior.

3560. தணிந்த வில்லுத்தான் தைக்கும்.
It is the bent bow that will shoot.

3561. தண்டிலே போனால் இரண்டில் ஒன்று.
When you go into the army, one of two-life or death.

3562. தண்டிற் போனால் இரட்டிப்புச் சம்பளம்.
Double remuneration to those who go into the army.

3563. தண்டு ஒன்று இலை மூன்று ஆரை அடா மந்திரி.
The arai plant, O minister, has one stalk and three leaves.

3564. தண்ணீரில் இருக்கிற தவளை குடித்ததைக் கண்ட தார் குடியாததைக் கண்டத்தார்?
Who knows whether the frog in the water drinks, or that it does not drink?

3565. தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அவிக்கும்.
Although cold water be heated, it will quench fire.

3566. தண்ணீரிலே விளைந்த உப்புத் தண்ணீரிலே கரைய வேண்டும்.
Salt produced from water, must be dissolved in water.

3567. தண்ணீரில் அமுங்கின முட்டை உப்புப் போடக் கிளம்பும்.
An egg submerged in water will float, if salt be put upon it,

3568. தண்ணீரும் மூன்று பிழை பொறுக்கும்.
Even water will forgive a fault three times.
Referring to a person who rises to the surface three times after having fallen into deep water.

3569. தண்ணீர் குடித்த வயிறும் தென்னோலை இட்ட காதும் சரி.
The belly that has taken in water, and the aperture in the ear that
has received a circlet of ola, are alike-each enlarges as pressed.

3570. தண்ணீரையும் தாயையும் பழிக்கலாமா?
May one abuse water, or one's mother?

3571. தண்ணீரில் இறங்கினால் தவளை கடிக்கும் என்கிறான்.
He says that the frog will bite him, if he descends into the water.

3572. தண்ணீரில் இருக்கிற தவளையைத் தரையில் எடுத்து விட்டது போல.
Like turning out, on dry land, a frog that lives in the water.

3573. தண்ணீரில் இறந்தவரிலும் சாராயத்தில் இறந்தவர் அதிகம்.
The number drowned in alcohol, is in excess of those drowned in water.

3574. தண்ணீரும் கோபமும் தாழ்ந்த இடத்திலே.
Water and anger seek low-persons or places.

3575. தத்துவம் அறிந்தவன் தவசி.
He is an ascetic who understands the philosophy of nature.

3576. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.
There is no mantra superior to one's father's advice.

3577. தப்பில் ஆனவனை உப்பிலே போடு.
Put the illegitimate in salt.

3578. தப்பை அடித்தவன் தாதன், சங்கு ஊதினவன் ஆண்டி.
A Vaishnava mendicant beats a drum, and a Saiva mendicant blowsa conch.

3579. தமிழுக்கு இருவர் தவத்துக்கு ஒருவர் ஆகும்.
In learning two, in austerities one.

3580. தம் இனம் தம்மைக் காக்கும் வேலி பயிரைக் காக்கும்.
One's own kin will preserve one, a hedge will guard a crop.

3581. தம்பி கால் நடையிலே பேச்சுப் பல்லக்கிலே.
My younger brother is on foot, and his talk is in a palanquin.
See proverb 3559.

3582. தம்பி பேச்சைத் தண்ணீரிலே எழுதவேண்டும்.
The sayings of the young man must be written on water.

3583. தம்பி பிடித்த முயலுக்கு மூன்றே கால்.
The hare my younger brother caught, has only three legs.

3584. தம்பி மொண்டது சமுத்திரம் போல.
The water my younger brother drew, is like a sea.

3585. தம்பி உழுவான் மேழி எட்டாது.
My younger brother can plough, but he cannot reach the handle of the plough.

3586. தம்பி பிறக்கத் தரைமட்டம் ஆயிற்று.
As soon as my younger brother was born, the house was levelled to the earth.

3587. தம்பி சமர்த்தன் உப்பில்லாக் கஞ்சி கலம் குடிப்பான்.
My younger brother is very clever, he can drink a kalam of kanjiwithout salt.

3588. தம்பி சோற்றுக்குச் சூறாவளி வேலைக்கு வாராவழி.
My brother is like a whirlwind, as a rice consumer, but very tardy at work.

3589. தயிருக்குச் சட்டி ஆதாரம் சட்டிக்குத் தயிர் ஆதாரம்.
The chattysupports the curds, and the curds the chatty.

3590. தயிர்ப் பானையை உடைத்துக் காகத்துக்கு அமுது இட்டால் போல.
Like breaking the vessel that contained the curds, and feeding the crows.

3591. தரத்தர வாங்கிக் கொள்ளுகிறாயா, தலையை முழுகிப்போட்டு போகட்டுமா ?
Will you receive by little and little what I owe, or shall I bathe my head and begone ?

3592. தருமத்தைப் பாபம் வெல்லாது.
Vice will not conquer virtue.

3593. தருமம் தலை காக்கும் தலையை மயிர் காக்கும்.
Charity preserves the head, and the head the hair.

3594. தர்மமே தலைகாக்கும்.
Charity guards the head.

3595. தலை அளவும் வேண்டாம் அடி அளவும் வேண்டாம் குறுக்கே அள அடா படியை.
The measure of the head or foot is not wanted, you fellow, measure the cloth across.

3596. தலை இருக்கிற இடத்தில் கழுத்து வரட்டும் பார்த்துக் கொள்வோம்.
We will attend to the matter when the neck takes the place of the head.

3597. தலை இருக்க வால் ஆடுமா?
Will the tail wag as long as the head exists?

3598. தலை இடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்.
When overcome by them, one learns what head-ache and fever at.

3599. தலை இடியும் சங்கடமும் தனக்கு வந்தபின் தெரியும்.
Head-ache and trouble are understood when actually experienced.

3600. தலை எழுத்துத் தலையைச் சிரைத்தாற் போகுமா?
Can you efface the letters of destiny, written on the skull, by shaving the head ?

3601. தலை எழுத்தை அரியென்று சொல்லுவார் அதல்ல.
They call the writing on the head, Ari-Vishnu-it is not that.

3602. தலை கீழாய் இருந்து தபசு செய்தாலும் கூடுகிற காலந்தான் வந்து கூட வேண்டும்.
Though one perform severe austerities, standing on the head, a thing cannot be attained before the destined time.


3603. தலைக்கு மேற்பட்ட தண்ணீர் சாண் ஓடி என்ன முழம் ஓடி என்ன ?
When the water flows over your head, what matters it whether it is a span or a cubit?
In either case death is inevitable without help.

3604. தலைக்குத் தலை பெரியதனம் உலைக்கு அரிசி இல்லை.
One is greater than the other, there is no rice to cook.

3605. தலைக்குத் தலை நாயகம்.
Each aims to be the head.

3606. தலைக்கு முடியோ காலுக்கு முடியோ?
Is it the head or the foot that is crowned?

3607. தலைக்கு ஏறினால் தனக்குத் தெரியும்.
If it ascend to the head, he will feel it.

3608. தலை சொறியக் கொள்ளி தானே தேடிக்கொண்டாய்.
You yourself have procured a firebrand to scratch your head.

3609. தலைச்சன் பிள்ளைக்காரிக்கு இடைச்சன் பிள்ளைக்காரி மருத்து விச்சி.
The mother of a second child is midwife to the mother of a first child.

3610. தலைச்சன் பிள்ளைக்காரி இடைச்சன் பிள்ளைக்காரிக்குப் புத்தி சொன்னாளாம்.
It is said that the mother of a first childgave advice to the mother of a second child.

3611. தலைமாட்டிற்குக் கொள்ளி தானே தேடிக்கொண்டாய்.
You yourself have procured a firebrand for the head of your bed.

3612. தலைமுறை தலைமுறையாய் மொட்டை , அவள் பெயர் கூந்தலழகி.
Bald from generation to generation, and yet called the matron of beautiful tresses.

3613. தலை மேலே அம்பு பறந்தாலும் நிலையிற் பிரியல் ஆகாது.
It is not good to move when arrows are flying, though overhead.

3614. தலை மேலே தலை இருக்கிறதா ?
Does a head exist above the head?

3615. தலை மேலே இடித்தாலும் தான் குனியான்.
Though his head strikes the lintel, he will not stoop.

3616. தலையாலே மலை பிளப்பான்.
He can split a mountain with a blow of his head.

3617. தலையில் எழுதி இருக்கத் தந்திரத்தால் வெல்லலாமா?
When destiny is written on the skull, can you avert it by artifice?
Writing on the head is another form of expression for destiny or fate, which is supposed to be written on the skull of every individuals born into the world. Hence the Sanscrit proverb, Kapala, Kapale Kapala mola. "The skull, the skull, the skull is the root of all." Kapala in Sanscrit means skull. The mundane history of all is
determined by the actions of a former state of existence. This is one of the most prevalent doctrines of the Hindus. A man eats the fruit of his doings, not in our sense as the same individuated being, but as the same responsible agent who has previously been on the stage."Actions done, whether good or bad, must of necessity be eaten;if not, they will not, wear away in millions of ages." Smriti.
The preordinations of Brahma, as supposed to be written on the skull, are regulated by the actions of former births. An elaborate shaster on this subject was published in Calcutta upwards of fortyyears ago by a Native gentleman, a Rajah of greatlearning.

3618. தலையில் வரும் மயக்கம் சருவ மயக்கம்.
When the head is crazed, all is wrong.

3619. தலையில் இடித்தால் தாழக் குனிவான்.
He will learn to stoop when the lintel strikes his head.

3620. தலையும் தலையும் பொருந்தினால் மலையும் வந்து பொறுக்கும்.
When one head fights with another, the mountains will come to bear them up.

3621. தலையை நனைத்து ஆச்சுது, கத்தியும் வைத்து ஆச்சுது.
The head has been already wet, the razor has been already applied.

3622. தலையோடு போகிறது தலைப்பாகையோடு போயிற்று.
That which would have gone with the head has gone with the turban.

3623. தலைவன் நிற்கத் தண்டு நிற்கும், தலைவன் மயங்கச் சர்வமும் மயங்கும்.
While the general isfirm his army is so, but if the chief is perplexed all are so.

3624. தலை வலிக்குத் தலை அணையைத் தானே மாற்றிப் போட்டாற் போல.
As if one changed his pillow to cure head-ache.

3625. தலைவன் சொற் கேள், நன்னெறி தவறேல்.
Obey your superior, deviate not from the path of rectitude.

3626. தலை வெட்டிச் சமுத்திரமேற் போடலாமா?
May the head be severed and put on the sea?

3627. தவசே அணிகலன், தாழ்மையே மேன்மை.
Austerity is an ornament, humility is honourable.

3628. தவளை தாமரைக்குச் சமீபமாக இருந்தும் அதின் தேனை உண்ணாது. அதுபோல, அறிவீனர் கிட்ட இருந்தாலும் கற்றுக் கொள்ளார்கள்.
The toad living near the lotus drinks not its honey, the illiterate though they live near the learned remain ignorant.

3629. தவளை தன் வாயாற் கெடும்.
The frog perishes by its own mouth.

3630. தவிடு தின்பவனை அமுது தின்னச் சொன்னாற்போல.
Like requesting one who eats bran to feed on ambrosia.

3631. தவிடு தின்பவனை எக்காளம் ஊதச் சொன்னாற்போல்.
Like telling one who is eating bran to blow a trumpet.

3632. தவிட்டை நம்பிப் போகச் சம்பா அரிசியை நாய் கொண்டு போயிற்று.
When she went out in expectation of fetching bran, her samba rica was carried off by a dog.

3633. தவிட்டுக்கு வந்த கை தனத்துக்கும் வரும்.
The band that is ready to steal bran will be ready to steal money also.

3634. தழைத்த மரத்துக்கு நிழல் உண்டு, பிள்ளை பெற்றவளுக்குப் பால் உண்டு.
A flourishing tree has shade, a woman who has recently borne a child, has milk.

3635. தள்ளத் தள்ளத் தாழ்ப்பாளை, மெள்ள மெள்ள திறப்பான் ஏன் ?
Why open it gently again and again, when I am trying to bolt that door?

3636. தனக்குப் பிறந்த பிள்ளை தவிட்டுக்கு அழுகிறதாம் ஊரார் பிள்ளைக்குக் கூட்டுக் கலியாணம் செய்கிறானாம்.
While his own child cries for bran, he is conducting the nuptials of his neighbour's child.

3637. தனக்குச் சந்தேகம் அடைப்பைக்காரனுக்கு இரட்டைப் படியாம்.
When uncertain regarding his means, he promises a double allowance to his betel-pouch bearer.

3638. தனக்கு அழகு மொட்டை பிறர்க்கு அழகு கொண்டை.
Touching one's own comfort a bald head, in respect to others luxuriant hair, is preferable.

3639. தனக்கு மிஞ்சினது தர்மம்.
That whichis left belongs to charity.

3640. தனக்கு என்னவென்று இருக்கல் ஆகாது நாய்க்குச் சோறு இல்லையாயின்.
One must not be unconcerned, when there is no rice for his dog.

3641. தனக்கென்னச் சொன்னால் நாய் வெடுக்கென்னப் பாயும்.
If one speaks to a dog, it will jump expecting to get something.

3642. தனக்கு மூக்குப் போனாலும் எதிரிக்குச் சகுனப்பிழை வேண்டும்.
He is so intent on producing an ominous sign against his enemy that he is ready to give up his own nose. He is willing to cat his own nose to spite an enemy: to meet one without a nose is a bad omen.

3643. தனக்கு என்றால் பிள்ளையும் களை வெட்டும்.
If his own crop, even a child may weed it.

3644. தனக்குத் தகாத காரியத்திற் பிரவேசிக்கிறவன் குரங்கு பட்ட பாடு படுவான்.
He who undertakes a matter not suited to him, will suffer as didthe monkey.

3645. தனக்கு என்றால் புழுக்கை கலம் கழுவி உண்ணாது.
If for his own use a slave will not wash his plate before eating.

3646. தனக்குத் தகாத காரியம் செய்தால் ஆருக்கும் பிராண சேதத்துக்கு வரும்.
Whoever undertakes an affair unsuited to him will endanger his life.

3647. தனக்கு ஆகாத பானை உடைந்தால் என்ன இருந்தால் என்ன?
What matters it whether an earthen vessel not required is broken ornot?

3648. தனக்குப் பின்னால் அகம் இருந்து என்ன கவிழ்ந்து என்ன ?
What matters it whether one's house stands or falls after his death?

3649. தனக்கு என்று ஒருத்தி இருந்தால் தலைமாட்டில் இருந்து அழுவாள்.
If he has a wife she will weep at the bed's head-at his funeral.

3650. தனக்குத் தவிடு இடிக்கத் தள்ளாது ஊருக்கு இரும்பு அடிக்கத் தள்ளும்.
He is unable to pound rice for himself, but he can beat iron for his neighbours.

3651. தனக்கு என்று அடுப்பு மூட்டித் தான் வாழும் காலத்தில் வயிறும் சிறுக்கும் மதியும் பெருகும்.
When the time comes for one to make his own fire and prepare
his meals, then his stomach will become small and the judgment developed.

3652. தனி வழியே போனவளைத் தாரமென்று எண்ணாதே.
Do not regard her as your wife who goes out unattended.

3653. தன் இச்சையை அடக்காவிட்டால் அது தன்னையே வருத்தும்.
He who does not control his desires will thereby come to grief.

3654. தன் உயிரைப்போல மன் உயிர்க்கு இரங்கு.
Feel for others as you feel for yourself.

3655. தன் உயிரைத் தான் தின்கிறான்.
He himself consumes his own life.

3656. தன் ஊருக்கு அன்னம் பிற ஊருக்குக் காகம்.
A swan in his own village, a crow in the next.

3657. தன் ஊர்ச் சுடுகாட்டுக்கும் அயல் ஊர் ஆற்றுக்கும் அஞ்ச வேண்டும்.
In his own village one should fear the place of incremation, in an adjacent country, a river.

3658. தன் ஊருக்கு ஆனை அயல் ஊருக்குப் பூனை.
At home an elephant, abroad a cat.

3659. தன் ஊருக்குக் காளை அயல் ஊருக்குப் பூனை.
A bullock at home, a cat abroad.

3660. தன் காரியதுரந்தரன் பிறர் காரியம் வழவழவென்று விடுகிறவன்.
He who attends to his own affairs is indifferent about the things of others.

3661. தன் காரியம் என்றால் தன் சீலையும் பதைக்கும்.
If it is his own concern, even the folds of his garment will flutter.

3662. தன் காரியம் பாராதவன் சதைக்கு ஒரு புழு புழுப்பான்.
He who does not attend to his own affairs, will be tormented by worms at every pore.

3663. தன் காரியப் புலி.
In his own affairs resolute as a tiger.

3664. தன் கீர்த்தியை விரும்பாதவளைத் தள்ளிவிடு.
Abandon her who is careless of her own reputation.

3665. தன் குற்றம் பார்ப்பவர் இங்கு இல்லை.
No one on earth sees his own faults.

3666. தன் குற்றம் இருக்கப் பிறர் குற்றம் பார்க்கிறதா?
Do you condemn others when guilty yourself ?

3667. தன் குஞ்சென்று வளர்க்குமாம் குயிற் குஞ்சைக் காகம்.
It is said that the crow nourishes the young of a cuckoo, under the impression that it is her own.

3668. தன் சோறு தின்று தன் புடைவை கட்டி வீண் சொல் கேட்க விதியா?
Am I destined to be unlawfully abused while eating my own rice and wearing my own cloth ?

3669. தன் நிலத்தில் இருந்தால் முயல் தந்தியிலும் வலிது.
When in his own place a hare is stronger than a tusker-an elephant.

3670. தன் நோய்க்குத் தானே மருந்து.
The remedy of his disease is with himself.

3671. தன் பலம் கண்டு அம்பலம் ஏறவேண்டும்.
Having ascertained your own ability, display it in the assembly.

3672. தன் பணம் செல்லா விட்டால் தாதனைக் கட்டி அடிக்கிறது.
When his own coin will not pass, he ties up and beats the Vaishnav mendicant.

3673. தன் பல்லைப் பிடுங்கிப் பிறர் வாயில் வைக்கலாமா?
Can one take out his own teeth, and put them in another's mouth?

3674. தன் பல்லைக் குத்திப் பிறர் மூக்கில் வாசம் காட்டுகிறதுபோல.
Like picking the teeth and holding the tooth-pick to the nose of another.

3675. தன் பிள்ளைக்குப் பதைக்காதவள் சக்களத்தி பிள்ளைக்குப் பதைப்பாளா?
Can she who does not feel for her own child, feel for the child of her rival?

3676. தன் பிள்ளையைத் தான் அடிக்கத் தலையாரியைச் சீட்டுக் கேட்கிறதுபோல.
Like applying to the village officer for permission to punish his own child.

3677. தன் வாயாலே தான் கெட்டான்.
His own mouth ruined him.

3678. தன் வாயாலே தான் கெட்டதாம் ஆமை.
It is said that the tortoise perished by its own mouth.

3679. தன் வாய்ச் சீதேவி முன்வாயிலே.
The presence of the goddess of prosperity, will be evinced in thespeech.

3680. தன் வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடும்.
His own actions will burn him, a false cake will burn the house.

3681. தன் வீட்டுக் கதவைப் பிடுங்கி அயல் வீட்டுக்கு வைத்தாற் போல.
As if one took down his door, and placed it in the house of his neighbour.

3682. தன் வீட்டு விளக்கென்று முத்தம் இட்டாற் சுடாதா ?
If one kiss his lamp because it belongs to his own house, will it therefore not burn him?

3683. தன் வீடு தவிர அயல் வீட்டுக்கு மேட்டுவரி என்கிறான்.
He asserts that all houses are taxed but his own.

3684. தன் வீட்டுக் கதவைப் பிடுங்கி அயல் வீட்டுக்கு வைத்து விட்டு விடிகிற மட்டும் நாய் ஓட்டினதுபோல.
Like driving away dogs till break of day, because he had lent his door to a neighbour.

3685. தன்னாலே தான் கெட்டால் அண்ணாவியார் என்ன செய்வார்?
If a disciple is intent on his own ruin, what can his master do ?

3686. தன்னைப் புகழாத கம்மாளனும் இல்லை.
There is no artificer who does not praise himself.

3687. தன்னை அறிந்தவன் தானே தலைவன்.
He who has studied himself is his own master.

3688. தன்னை அறியாத சன்னதம் இல்லை.
No excitement will make one forget himself.

3689. தன்னை அறிந்தவன் தலைவனை அறிவான்.
He who knows himself may know his maker.

3690. தன்னைக் காக்கிற் கோபத்தைக் காக்கவேண்டும்.
He who would keep himself must restrain anger.

3691. தன்னைக் கொல்ல வருகிற பசுவையும் கொல்.
You may kill even a cow that aims to kill you.

3692. தன்னைச் சிரிப்பாரைத் தான் அறியான்.
He knows not who laugh at him.

3693. தன்னைப் பெற்றவள் கொடும் பாவி, பெண்ணைப் பெற்றவள் மகராசி.
Despising his own mother as worthless, whilst holding his mother in-law in high estimation.

3694. தன்னை அறிந்து பின்னைப் பேசு.
Know yourself before you begin to speak of others.

3695. தன்னைச் சிரிப்பது அறியாதாம் பல்லாவரத்துக் குரங்கு.
It is said that the monkey of Palaveram does not know that he is laughed at.

3696. தன்னைத் தானே தான் பழிக்குமாம் தென்னமரத்திலே குரங்கு இருந்து.
It is said that the monkey that mocks at the top of the cocoanut tree mocks itself.

3697. தாங்கித் தாங்கிப் பார்த்தால் தலைமேலே ஏறுகிறான்.
He mounts on the head by reason of continued indulgence.

3698. தாசரி தப்பு தண்டவாளத்துக்குச் சரி.
The tabret of the Vaishnava mendicant is like cast-iron.

3699. தாடிக்குப் பூச் சூடலாமா?
Can you wear a garland round your beard?

3700. தாடி பற்றி எரியும் போது சுருட்டுப் பற்றவைக்க நெருப்புக்கேட்டது போல்.
As one asked for fire to light his cigar when his beard was on fire.

3701. தாட்சிணியம் தன நாசம்.
Kindness leads to loss of wealth.

3702. தாட்டோட்டக்காரனுக்குத் தயிரும் சோறும், விசுவாசக்காரனுக்கு வெந்நீரும் பருக்கையும்.
The deceitful feasts on rice and curds, while the faithful feeds on warm rice and water.

3703. தாட்டோட்டக்காரரைக் கூடுவதிலும் தனியே இருப்பது நலம்.
It is better to be alone than to associate with the fraudulent.

3704. தாட்டோட்டக்காரனுக்குத் தயிரும் சோறும் கூட்டாட்டக் காரனுக்குக் கூழும் தண்ணீரும்.
The fraudulent enjoys curds and rice, while the honest man gets only gruel and water.

3705.தாதனும் பறையனும்போல.
Like a Vaishnava mendicant and a pariah.

3706. தாதன் கரத்தில் அகப்பட்ட குரங்கைப்போல் அலைகிறான்.
He moves about like a monkey in the hands of a juggler.

3707. தாது அறியாதான் பேதை வைத்தியன்.
He who does not know how to feel one's pulse is an empiric.

3708. தாதும் இல்லைப் பிராதும் இல்லை.
No cause, no complaint.

3709. தாபரம் இல்லா இளங்கொடிபோல.
As a tender creeper without a prop.

3710. தாமதம் தாழ்வுக்கு ஏது.
Delay will lead to ruin.

3711. தாமரை இலைத் தண்ணீர் போல் ததும்புகிறான்.
He trembles like a drop of water on a lotus leaf.

3712. தாம்பு அறுதல் தோண்டியும் பொத்தல்.
The cord is rotten and the water pot is fractured.

3713. தாயும் தகப்பனும் தள்ளிவிட்ட காலத்தில் வா என்று அழைத்த வங்காரவாசி.
A herb that welcomed a child cast off by its parents.

3714. தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேறே.
Though they are mother and child their mouths and bellies are diverse.

3715. தாயைக் கொன்றவனுக்கு ஊரிலே வாதி.
The prosecutor of a matricide is in his own village.

3716. தாயைச் சேர்ந்த உறவு ஆனாலும் அறுத்துத்தான் உறவு ஆட வேண்டும்.
Though related on the side of one's mother he must be treated as a relation after
thoroughly ascertaining his connections.

3717. தாயைப்பார்த்துப் பெண்ணைக் கொள்ளு பாலைப் பார்த்துப் பசுவைக் கொள்ளு.
Before taking a woman in marriage ascertain the character of her mother, beforebuying a cow ascertain the quantity of its milk.

3718. தாயைப்போற் பிள்ளை நூலைப்போற் சீலை.
As is the mother such is the child, as is the yarn such is the cloth.

3719. தாயைப் பழித்து மகள் அபசாரி ஆடுகிறாள்.
The daughter reproached her mother and went astray.

3720. தாயைப் பார்த்து மகளைக் கொள்.
Look at the mother before you take her daughter in marriage.

3721. தாய் அறியாச் சூல் உண்டோ ?
Is there any conception unknown to the mother?

3722. தாய் இல்லாப் பிள்ளையைத் தலையிலே தட்டலாமா?
Is it right to strike a motherless child on the head?

3723. தாய் உறவோ நாய் உறவோ .
A mother's attachment, a dogs attachment.

3724. தாய் ஏழடி பாய்ந்தால் மகள் எட்டு அடி பாய்வாள்.
If the mother leaps seven feet, the daughter leaps eight.

3725. தாய் ஒரு பாக்கு, தான் கமுகந்தோப்பு என்கிறாள்.
She says that her mother is only a nut, while she herself is a grove of arica-nut trees.

3726. தாய் கேட்டுப்பட்டி தகப்பன் காவடிப்பட்டி தங்கை மோருப்பட்டி தமக்கை சாத்தப்பட்டி.
The mother is wicked, the father vain, the younger sister a consumer of butter milk, and the elder sister a consumer of rice.

3727. தாய் கையில் இருக்கிற தனத்தைப் பார்க்கிலும் தன் கைத் தவிடே மேல்.
The bran in one's own hand is preferable to the wealth in the hand of his mother.

3728. தாய்க்கு உள்ளது மகளுக்கு.
That which is the mother's, is the daughter's.
This may refer to prosperity, temper, &c.

3729. தாய்க்குப்பின் தாரம்.
Next to one's mother, is his wife.

3730. தாய்க்கு ஒளித்த சூலும் உண்டோ ?
Can the conception of an unmarried daughter be concealed from her mother?

3731. தாய்க்கு விளைந்தாலும் தனக்கும் விளையவேண்டும்.
It is not enough for one's mother's field to bear a crop, one's own field must also be fruitful.

3732. தாய்க்குச் சோறு இடுகிறது ஊருக்குப் புகழ்ச்சியா?
Does one acquire fame in a country because he feeds his mother?

3733. தாய்க்கு மூத்துத் தகப்பனுக்கு விளக்குப் பிடிக்கிறான்.
He carries a torch at his father's second marriage where the bride is younger than himself.

3734. தாய் செத்தால் மணம் மகள் செத்தால் பிணம்.
If the mother die, a marriage, if the daughter die, a corpse.
The wife is here called mother with reference to her children. In
the event of her death the husband may marry again.

3735. தாய் செத்தாள், மகள் திக்கற்றாள்.
The mother is dead, the daughter is destitute.

3736. தாய் சொல் துறந்தால் வாசகம் இல்லை.
When one rejects the advice of his mother, no precept can reform him.

3737. தாய் தவிட்டுக்கு அழுகையில் பிள்ளை இஞ்சிப் பச்சடி கேட்கின்றது.
While the mother is crying for bran, the child is crying for ginger chutny.

3738. தாய் தனக்கு ஆகாத மகள் ஆர்தனக்கு நல்லவள் ஆவாள்?
Who will approve of a daughter that is undutiful to her own mother?

3739. தாய் தூற்றினால் ஊர் தூற்றும், கொண்டவன் தூற்றினால் கண்டவன் தூற்றுவான்.
If a mother should spread evil reports, the village also will do so; if a husband should defame his wife, a stranger will.

3740. தாய் முகம் காணாத பிள்ளையும் மழை முகம் காணாத பயிரும் செவ்வைப்படமாட்டாது.
The child that has not seen the face of its mother, and the growing crop that has not seen rain, will not do well.

3741. தாய் முலைப்பாலுக்குப் பால் மாறினது போல.
As one complained that his mother's milk was insipid.

3742. தாய் வார்த்தை கேளாத பிள்ளை நாய் வாயிற் சீலை.
A child disobedient to her mother, is like a cloth in the mouth of a dog.

3743. தாரமும் குருவும் தலையில் விதி.
A wife and a Guru are preordained.

3744. தாராப் பெட்டை போல.
Like a duck.

3745. தாராளந்தான் நெய், தண்ணீர் பந்தலில், நீர்ச்சோற்றுத் தண்ணீர் நெய்பட்ட பாடு.
Ghee is plentiful in his feasts, while cold rice water in the charity pandal is as scarce as ghee.

3746. தாலி அறுத்தவளுக்கு மருத்துவிச்சி தயவு ஏன் ?
Of what use is the favour of a midwife to a widow?

3747. தாலி அறுத்தவள் ஏன் இருக்கிறாள்? தாரம் தப்பினவனுக்குப் பொங்கியிட.
Why does the widow survive her husband? that she may cook rice for a widower.

3748. தாவத் தஞ்சம் இல்லா இளங்கொடி போல் தவிக்கிறான்.
He languishes like a tender creeper without a prop.

3749. தாழிபோல் வயிறும் ஊசிபோல் மிடறும்.
Pot-bellied and needle-throated.

3750. தாழ் குலத்திற் பிறந்தாலும் புத்தியினால் அலரிப்பூவைப்போல் பிரயோசனப்படுவார்.
Though low-born, they may by their good sense prove useful as an oleander flower.

3751. தாழ்ந்து நின்றால் வாழ்ந்து நிற்பாய்.
If humble thou shalt prosper.

3752. தாழ்ந்தது தங்கம் உயர்ந்தது பித்தளை.
Gold has become low in estimation, and brass high.

3753. தாழ்ந்து பணிதலே தலைமை ஆகும்.
The humble and obedient shall rise to eminence.

3754. தாழ்மை இல்லாத வாலிபன் வீண்.
An unsubmissive youth is useless.

3755. தாழ்விலே பெருமையும் வாழ்விலே தாழ்மையும் வேண்டும்.
In adversity, manly bearing; in prosperity, humility.

3756. தானத்தனத்தான் சகல சம்பத்தன்.
He is the wealthiest in the place, and possesses all in abundance.

3757. தானமது விரும்பு.
Desire to be charitable.

3758. தானாக வந்த சீதேவியைக் காலால் உதைத்துத் தள்ளலாமா?
When the goddess of prosperity unsought visits you, is it right tokick her out?

3759. தானும் உண்ணான் பிறருக்கும் கொடான் .
He will neither eat himself, nor give to others.

3760. தானே கனியாத பழத்தைத் தடிகொண்டு அடித்தால் கனியுமா?
Can you mature a fruit by beating it with a stick when it does not ripen of itself?

3761. தானே தான் குருக்கள் என்பார் தனங்கள் வாங்கச் சதாசிவன் பேர் பூசை செய்வார்.
To get money they call themselves gurus, and perform pujas in honour of Sadasiva.

3762. தானே வளர்ந்து தவத்தால் கொடி எடுத்தவன்.
He has grown great and distinguished by his penance.

3763. தானே வாழவேண்டும் தலைமகளே அறுக்கவேண்டும் என்கிறாள்.
She herself desires to prosper, and wishes that her first-born daughter may become a widow.

3764. தான் அடங்கத் தன் குலம் அடங்கும்.
If he himself be under restraint, his race will be so.

3765. தான் அறியாச் சிங்களம் தன் பிடரிக்குச் சேதம்.
An attempt to speak a language not understood may lead to one's own hurt.

3766. தான் உள்ளபோது உலகம்.
While one lives, the world subserves him.

3767. தான் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும்.
If he thinks one thing, Deity thinks another.

3768. தான் கள்வன் பிறரை நம்பான்.
Himself a thief, he trusts not others.

3769. தான் கற்ற ஒன்றைத் தரிக்க உரை.
What you have learnt, teach to others impressively.

3770. தான் கெடுத்தது பாதி, தம்பிரான் கெடுத்தது பாதி.
Half was spoiled by himself, and half by his superior.

3771. தான் சம்பாதித்தால் தனக்கு உதவும், ஊர் சம்பாதித்தால் உதவமாட்டாது.
That which one acquires will be available, that which the country acquires will not be so.

3772.தான் சாக மருந்து உண்பார் இல்லை.
No one takes medicine with a view to death.

3773. தான் செத்தபின் உலகம் கவிழ்ந்து என்ன நிமிர்ந்து என்ன?
When one is dead, what matters it-whether the world be overturned or not?

3774.தான் தளம்பல் பிறருக்கு ஊன்றுகோல்.
His tripping is as a staff to others.

3775. தான் திருடி அயல் வீட்டை நம்பாள்.
Being herself a thief, she trusts not her neighbours.

3776.தான் தின்கிற நஞ்சு தன்னைத்தான் கொல்லும்.
He who takes poison will destroy himself.

3777. தான் தின்னத் தவிடு இல்லை. வாரத்துக்குப் பன்றிக் குட்டியா?
He has no bran to eat, why seek a young pig to rear for hire ?

3778. தான் தின்னித் தம்பிரானாய் இருக்கிறான்.
In eating he has a monopoly.

3779. தான் தின்னி பிள்ளை வளர்க்காள் , தவிடு தின்னி கோழி வளர்க்காள்.
A gluttonous mother willnot feed her child, nor will one who feeds on bran keep
fowls.

3780. தான்திருட்டுக் கொடுத்ததும் அல்லாமல் பயித்தியக்காரப் பட்டமும் கேட்டான்.
Besides suffering the loss of the property stolen, he acquires the title of a fool.

3781. தான் தேடாப் பொன்னுக்கு மாற்றும் இல்லை உரையும் இல்லை.
Gold not acquired by one's own exertions, has neither standard nor touch.

3782. தான் பத்தினி ஆனால் தேவடியாள் தெருவிலும் குடி இருக்கலாம்.
If a woman be chaste she may live in the street of the harlets.

3783. தான் பிடித்த முசலுக்கு மூன்றே கால் என்கிறான்.
He says that the hare he caught had three legs.

3784. தான் போனால் தாகத்துக்குக் கிடையாது, எழுதடா ஓலை நூறுகுடம் தயிருக்கு என்கிறான்.
He says that if he go himself he cannot get water to quench his
thirst, but if he sends written olas he can obtain a hundred pots of curds.

3785. தான் போகிற காரியத்துக்கு ஆட்போனால் ஒரு சொட்டு.
Faults will happen if another be deputed to do one's business.

3786. தான் போய் மோர் இல்லாமல் வந்தவன் தயிருக்குச் சீட்டு எழுதினானாம்.
It is said that he who went in person and could not obtain even butter-milk, sent a written order for curds.

3787. தான் போக வழியைக் காணாத மூஞ்சூறு விளக்கு, மாற்றையும் கவ்விக்கொண்டு போனதாம்.
It is said that a musk-rat that was not able to find its way out, carried away the broom.

3788. தான்றிக் காயில் சனியன் புகுந்தது போல.
As if Saturn entered into the tanri fruit-Terminalia Bellerica.

3789. திகம்பர சந்நியாசிக்கு வண்ணான் உறவு ஏன் ?
What has a naked mendicant to do with the friendship of a washer- man?

3790. திகைப்பூடு மிதித்தவன் போல் அலைகிறான்.
He wanders about like one who has trodden on the tigai plant.
A plant whose touch is supposed to create aberration of mind and numbness.

3791. திக்கு அற்றவனுக்குத் தெய்வம் துணை.
God in the help of the destitute.

3792. திக்கு விஜயம் கொள்பவனுக்கு ஜெயம் அபஜெயகாலம் தெரியாது.
A successful conqueror does not regard times whether relating to victory or defeat.

3793. திங்களும் சனியும் தெற்கே நோக்க வேண்டும்.
Look south on Monday and Saturday if leaving home.
The direction given in this proverb is intended to convey a caution to those setting out on a journey on Monday or Saturday. It is based on the belief contained in a stanza of which the following is a translation. Sangara, Siva, as the author of good, plants his trident on the earthin certain directions on particular days and at stated hours. On Monday and Saturday in the east for eight naligais*.On Thursday, in the south for twenty naligais. On Friday and Sunday in the west, twelve naligais. On Tuesday and Wednesday in the north, twelve naligais.
* Indian hour of twenty-four minutes.

3794. திடமனப்படு தீம்பர்க்கருகில்.
Preserve your self-possession in the presence of enemies.

3795. திண்ணைக்குத் தேள் கொட்டிற்று தண்ணீர் மிடாவுக்கு நெறி கட்டிற்று என்றாற்போல.
As if one should say that the pial was stung by a scorpion, and the water pot standing on it became inflamed.

3796. திண்ணைக்கு விடிந்தால் வீட்டுக்கும் விடியும்.
If the sun rise on the pial, it will rise on the house also.

3797. திரவியத்தில் அழுத்தமானவன் செத்தாலும் கொடான்.
The miserly will not give though threatened with immediate death.

3798. திரள் எலி வளை எடாது.
Rats in large numbers do not burrow.

3799. திரித்தவரையிற் கயிறு திரியாதவரையிற் பழுதை.
As far as twisted it is a rope, that not twisted is mere fibre.

3800. திரி மூர்த்திகளும் தேவரும் காணார்.
Neither the triad nor the thirty-three crores of supernals, are comparable to him.

3801. திரு உண்டானால் திறமை உண்டாகும்.
When there is wealth, there is power.

3802. திருகாணிக்கு வலுவும் பழஞ்சாணிக்குப் புழுவும் உண்டு.
A screw is strong, old cow-dung breeds worms.

3803. திருக் கண்ட கண்ணுக்குத் தீங்கும் காணலாயிற்றே.
Even those who have seen the holy one are not exempt from evil.

3804. திருக் கண்ட கண்ணுக்குத் தீங்கு இல்லை.
Those that have seen the holy one experience no evil.

3805. திருக்காவணப் பந்தலுக்கு நிழல் உதவி வேண்டுமா?
Does a marriage pandal require shading?

3806. திருடனைத் தேள் கொட்டினது போல.
As a scorpion stung the thief.

3807. திருடன் பெண் சாதி என்றைக்கும் கைம்பெண்சாதி.
The wife of the thief is always a widow.

3808. திருடனுக்குத் தெய்வமே சாட்சி.
The Deity is witness against the thief.

3809. திருட்டுப் பயலுக்குத் திரட்டுப்பாலும் சோறும் விசுவாசக்காரனுக்கு வெந்நீரும் பருக்கையும்.
A rogue is fed with thick milk and rice, while the honest get nothing but warm water and rice.

3810. திருட்டு நாய்க்குச் சலங்கை கட்டினாற் போல.
Like tying a string of bells round the neck of a thievish dog.

3811. திருட்டுப் பயல் கலியாணத்தில் முடிச்சு அவிழ்க்கிற பயல் பெரியதனம்.
At the marriage of a thief, the pickpocket is the chief guest. Literally, the thievish
fellow who unties a knot. Money or other valuables being often carried in the corner of the cloth worn as dress, or in the corner of a handkerchief.

3812. திருட்டுப் பூனைக்குப் போடு திரட்டுப் பாலும் சோறும்.
Put thick milk and rice before a thievish cat.

3813. திருத்தி இல்லாத எசமான் வீண்.
A master whom it is hard to please is useless.

3814. திருநாளும் முடிந்தது எடுபிடியும் கழிந்தது.
The festival is over, the bustle has ceased.

3815. திருநாளுக்கு போகிறையோ தின்னுதலுக்குப் போகிறையோ?
Do you go to celebrate the holy day, or for the sake of food?

3816. திருநீற்றிலே ஒட்டாது கழற்சிக்காய்.
Holy ashes will not adhere to a killachi-kai.

3817. திருந்த ஓதத் திரு உண்டாமே.
The correct utterance of mantras secures the divine favoar.

3818. திருப்பதிக்குப் போனாலும் துடைப்பம் ஒரு காசு.
Though taken to Tripati, a broom will fetch only a cash.

3819. திருப்பதியில் மொட்டை அடித்ததும் பற்றாதா, ஸ்ரீரங்கத்தில் சிரிப்பாய்ச் சிரித்ததும் பற்றாதா?
Is it not enough to have been shaven bald at Tirupati and disgraced at Shrirangam?

3820. திருப்பதியில் மொட்டைத் தாதனைக் கண்டாயா?
Did you see the baldheaded Vaishnava mendicant at Tripati ?

3821. திருவன் கண்ட பச்சையாய்ப் போயிற்று.
It has become an emerald discovered by the king's jester.

3822. திரு வாசல் ஆண்டியும் ஒரு வேளைக்கு உதவுவான்.
Even a religious mendicant at the temple gate will be of some use at times.

3823. திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்.
Those who are unaffected by Tiruvasakam will not be moved by any other composition.

3824. திருவாக்குக்கு எதிர் வாக்கு உண்டோ ?
Do the words of the great admit of contradiction ?

3825. திருவிளக்கு இல்லா வீட்டில் பேய் குடியிருக்கும்.
Demons dwell in the house that is not illumined by a sacred lamp.
To smear a room with cow-dung, especially on Friday, and to keep a lamp burning through the night, ale observances pleasing to the goddess of prosperity.

3826. திருவிளக்கு இட்டாரைத் தெய்வம் அறியும், நெய்வார்த்து உண்டாரை நெஞ்சு அறியும்.
The Deity knows those who place sacred lamps, and the mind knows who eats ghee and rice.

3827. திரை கடல் ஓடியும் திரவியம் தேடு.
Acquire wealth though compelled to cross the stormyocean.

3828. தில்லுமுல்லும் திரியா வரமும்.
Lies and tricks.

3829. திறந்த கதவுக்கு திறவுகோல் தேடுவானேன்?
Why seek the key of an open door ?

3830. திறந்த வீட்டிலே நாய் நுழைந்தாற்போல்.
As if a dog entered an open house.

3831. தினத்தவ நிலையில் மனத்தை நிறுத்து,
Daily fix your mind on divine things.

3832. தினவுக்குச் சொறிதல் இதம்.
Scratching is agreeable where itching exists.

3833. தினவு எடுத்தவன் சொறிந்து கொள்ள வேண்டும்.
He whose skin itches will scratch.

3834. தினைப்பயறும் பாலும் தின்னாதிருந்தும், வினைப்பயனை வெல்லுவது அரிது.
Though one may abstain from eating millet-pulse and milk, he cannot escape from the effect of his evil actions.

3835. தினை விதைத்தவன் தினை அறுப்பான் வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
He who sows millet, reaps millet, he who sows evil deeds, must reap the same.

3836. தின்கிறதைத் தின்றும் தேவாங்குபோல் இருக்கிறான்.
Though well fed he is as lean as a sloth.

3837. தின்பது கொஞ்சம் சீவனம் நிலை இல்லை.
What one eats is little, human life is uncertain.

3838. தின்ற மண்ணுக்குத் தக்க சோகை.
Chogai jaundice proportioned to the earth eaten.
It is the opinion of some that jaundice is occasioned by eating sand or earth, a thing not uncommon.

3839. தின்ற நஞ்சு கொல்லும் தின்னாத நஞ்சு கொல்லுமா?
Poison taken kills; will the poison not taken, kill?

3840. தின்று கொழுத்தால் சும்மா இருக்க ஒட்டாது.
He who has grown fat will be inclined to mischief.

3841. தின்று உமிழ்ந்த தம்பலத்தைத் தின்ன நினைப்பார்களா?
Does any one desire to chew his betel over again?

3842. தின்னத் தின்னத் கேட்குமாம் பிள்ளைப்பெற்ற வயிறு.
A mother who is nursing a b by has a good appetite.

3843. தின்னத் தெரியாமல் தின்பானேன்?
Why eat, seeing that you know not how to eat with moderation?

3844. தின்னா வீட்டில் தின்னி.
One who takes food in a house in which he ought not.

3845. தீக் காய்ந்தாற்போல் இருக்கவேண்டும்.
Act as one who warms himself-do not burn yourself.

3846. தீக்குக் காற்று உதவியானதுபோல.
As the wind assists fire.

3847. தீங்கரும்பனுக்கு மாங்குயிற் கிளவி.
The notes of the kuyil bird to the sugar-cane-bowed Cupid.

3848. தீட்டின் மரத்தில் கூர்பார்க்கிறதா ?
Is the sharpness of the sword to be tried on the whetting board ?

3849. தீதுறும் பாவச் செய்கை அற்றவன் தேவன்.
He who abstains from evil deeds is God.

3850. தீபத்தில் ஏற்றிய தீவட்டி.
A torch lit at a lamp.

3851. தீப்பட்ட வீட்டிலே கரிக்கட்டை பஞ்சமா?
Is there a lack of charred wood in a house on fire ?

3852. தீப்புண் ஆறும் வாய்ப்புண் ஆறாது.
A burn is curable, but a wound occasioned by slander is not.

3853. தீ மிஞ்ச வைத்தாலும் பகை மிஞ்ச வைக்கலாகாது.
Though fire may be in excess, hatred may not.

3854. தீமையை மெச்சுகிறவன் தீமையாளிதான்.
He who approves evil is guilty of it.

3855. தீயாரைச் சேர்ந்து ஒழுகல் தீது, தீயார் பண் செய்வனவும் தீது.
To associate with the wicked is bad, to serve the wicked is also bad.

3856. தீயோரை விடுதலை ஆக்குகிறவன் நல்லோருக்கு நஷ்டம் செய்வான்.
He who liberates the wicked injures the innocent.

3857. தீரக் கற்றவன் தேசிகன் ஆவான்.
The thoroughly learned may become a religious guide.

3858. தீராக் கோபம் பாடாய் முடியும்.
Unrestrained anger will end in mischief.

3859. தீராக் கோபம் போராய் முடியும்.
Unrestrained anger ends in strife.

3860. தீராச் சந்தேகம் போருக்கு எத்தனம்.
Continued uncertainty leads to war.

3861. தீராச் செய்கை சீராகாது.
An unsettled affair is bad.

3862. தீராத நெஞ்சுக்குத் தெய்வமே சாட்சி.
God himself is the witness of the unquiet mind.

3863. தீரா வழக்குக்குத் தெய்வமே சாட்சி.
God is the witness in an undecided cause.

3864. தீரா வழக்கு நேராகாது.
An intricate case will never end satisfactorily.

3865. தீவினை செய்யில் பேய்வினை செய்யும்.
A demon does evil to him who does evil to others.

3866. துக்கம் உள்ள மனதிற்குத் துன்பம் ஏன் வேறு ?
Why additional pain to a mind already in grief?

3867. துஞ்சி நின்றான் மிஞ்சி உண்ணான்.
He that is addicted to sleep loses his appetite.

3868. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு.
Unsympathizing wives are like fire in the bosom.

3869. துடுப்பு இருக்கக் கை வேவானேன்?
Why should the hand be burnt when there is a ladle ?

3870. துடைப்பக் கட்டைக்குப் பட்டுக்குஞ்சம் கட்டினதுபோல.
Like tying a silk tassel to a broomstick.

3871. துஷ்ட நிக்கிரகம் சிஷ்ட பரிபாலனம்.
To the wicked, punishment, to the good, protection.

3872. துஷ்டப் பிள்ளைக்கு ஊரார் புத்தி சொல்வார்கள்.
The people of the village will reprove a wicked child.

3873. துட்டுக்கு ஒரு குட்டி விற்றாலும் துலுக்கக்குட்டி மாத்திரம் ஆகாது.
Though girls may be had at a pie a head, a Muhammadan girl is undesirable.

3874. துணிகிறவளுக்கு வெட்கம் இல்லை, அழுகிறவளுக்குத் துக்கம் இல்லை.
An impudent woman has no shame, a weeping woman has nosorrow.

3875. துணிந்தார்க்குத் துக்கம் உண்டா பணிந்தார்க்குப் பாடுஉண்டா ?
Do the adventurous experience grief, or the humble, distress?

3876. துணிந்தவனுக்குத் துக்கம் இல்லை , அழுதவனுக்கு அகங்காரம் இல்லை.
The adventurous know not sorrow, the sorrowful know not anger.

3877. துணைபோனாலும் பிணைபோகாதே.
Though you may bear one company, do not become his security.

3878. துணையோடல்லது வழிபோகாதே.
Do not go on a journey without a companion.

3879. துப்பாக்கி வயிற்றில் பீரங்கி பிறந்ததுபோல.
As a cannon was born of a musket.

3880. தும்பர் அம்பலம்.
The wicked will be abandoned.

3881. துயரப்பட்டால் ஆறுதல் உண்டு , துன்பப்பட்டால் தேறுதல் உண்டு.
Grief leads to comfort, suffering to patience.

3882. துரியோதனன் குடிக்குச் சகுனிபோல.
Like Saguni to the family of Duryodhana.
Saguni was the maternal uncle of Duriyodhana, and had, like the latter, ninety-nine brothers. Duriyodhana was one of the kings whose exploits are narrated in the Epic Mahabharata. He imprisoned Saguni and his ninety-nine brothers to prevent their combination against him, feeding them on gruel which was doled out from day to day. They all died of inanition excepting Saguni, who managed to secure sufficient nourishment to preserve his life. He afterwards became the counsellor of Duriyodhana and from sinister motives gavesuch advice as led to the ruin of his royal master, who lost his kingdom and also his ninety-nine brothers.

3883. துருக்க தெருவிலே திருவெம்பாவையா ஓதுகிறது?
Is it in a Muhammadan street that one should recite Tiruvemba?

3884. துரும்பும் கலத்தண்ணீர் தேக்கும்.
Even a fibre may help to fill up a kalam with water.

3885. துரும்பு நுழைய இடம் இருந்தால் ஆனையைக் கட்டுவான்.
If he find room for the insertion of a straw, he will tie an elephant.

3886. துரும்பு முற்றின கோபம் விசும்பு முட்டத் தீரும்.
Anger occasioned by a trifle may extend to the sky before it ceases.

3887. துரும்பு தூண் ஆனால் தூண் எவ்வளவு ஆகவேண்டும்?
If a straw become a pillar, how great the pillar must be ?

3888. துரும்பைத் தூணாக்குகிறதா?
What, do you make a pillar of a straw?

3889. துரை சித்தம் கன சித்தம்.
The will of the ruler is weighty.

3890.துரோகத்தால் கொண்ட துரைத்தனம், குடிகளை வருத்தும் கொடுங்கோல்.
Power obtained by high treason, a sceptre that oppresses the subject.

3891. துரோபதயைத் துகில் உரிந்தது போல.
Like stripping off the cloth of Draupati.
Draupati was the common wife of the five sons of Pandu. When in captivity after the humiliation of the Pandavas, an attempt was made by Duriyodhana to strip off her cloth, as a punishment for laughing at him when he stumbled, she was however saved from dishonour, for as they drew away her cloth it was lengthned by divine interposition.

3892. துர்ச்சனனைக் கண்டால் தூர நில்.
Stand at a distance from the wicked.

3893. துலக்காத ஆயுதம் துருப் பிடிக்கும்.
A weapon not kept polished, will become rusty.

3894. துலாத்தில் வெள்ளி இருப்பதினால் உலாவிப் பெய்யும் மழை.
Venus being in Libra, there will be rain throughout the country.

3895. துலுக்க தெருவிலே தேவாரம் ஓதினதுபோல.
Like singing Devaram in a Muhammadan street.

3896. துவி நாக்கு இடறும்.
A double tongue will slip.

3897. துழாவிக் காய்ச்சாதது கஞ்சியும் அல்ல, வினாவிக் கட்டாதது கலியாணமும் அல்ல.
Kanji requires continued stirring while boiling, and marriage requires careful consideration before being entered on.

3898. துளசிக்கு வாசமும் முள்ளுக்குக் கூர்மையும் முளைக்கிறபோதே உண்டு.
The fragrance of the Tulasi and the point of a thorn are in the bud.

3899. துள்ளாதே துள்ளாதே குள்ளா, பக்கத்திலே பள்ளம் அடா.
Dwarf, do not jump, there is a ditch close by.

3900. துள்ளாதே துள்ளாதே ஆட்டுக்குட்டி என் கையில் இருக்கிறது சூரிக்கத்தி.
Do not leap about O lamb, the butcher's knife is in my hand.

3901. துள்ளின மாடு பொதி சுமக்கும்.
The restive or unruly bullockwill carry its load.

3902. துள்ளித் துள்ளிக் குதித்தாலும் வெள்ளிப்பணமும் கிடையாக் காலத்தில் கிடையாது.
Though one may exert himself to the utmost, he cannot procure even a silver fanam when fortune does not smile.

3903. துள்ளித் துள்ளித் தொப்பென்று விழுகிறாய்.
By restlessness thou wilt throw thyself headlong.

3904. துள்ளுமான் குட்டி துரவில் விழுந்தது.
The springing young deer fell into a well.

3905. துறட்டுக்கு எட்டாதது கைக்கு எட்டுமா?
Can that which is not reached by a long pole be seized by the hand?

3906. துறவறம் இல்லறம் மனதிலே.
Ascetic and domestic virtues originate in the heart.

3907. துறவிக்கு வேந்தன் துரும்பு.
A king is but a strawbefore an ascetic.

3908. துன்பம் தருகிற காக்கையினது சத்தத்தினால் அதை விரட்டுவார்கள், இன்பம் தருகின்ற குயிலை விரட்டார்கள்.
Men scare away crows because their cries are a nuisance, but cuckoos they do not scare away.

3909. துன்பத்திற்கு இடம் கொடேல்.
Take care to keep off sickness.

3910. துன்பம் முந்தி இன்பம் பிந்தி.
Pain precedes, pleasure follows.

3911. தூக்கணங்குருவி குரங்கிற்குப் புத்தி சொன்னாற்போல்.
As the hanging-nest bird gave advice to the monkey.
The story referred to is graphically told in, I think, Panchatantra. It is as follows : On a cold rainy day a monkey chilled by the inclemency of the weather approached a tree on the branches of which were hanging numerous nests of this ingenious bird. One of the inmates addressed his simian denizen of the forest expressing surprise that a creature endowed with limbs so well fitted for the purpose did not fabricate a suitable place of shelter. The monkey felt the reflection implied in the admonition, and unable to restrain his indignation, jumped into the tree and destroyed the residence of his innocent friend.
In my journeys on foot in various parts of this country I have frequently seen the nests of the pendulous bird. On a tree not many miles from Trincomalie on the eastern coast of Ceylon I once saw perhaps thirty or forty nests hanging from onetree not twenty feet high: they resembled large pears.

3912. தூக்கி நினைத்து நோக்கிப் பேசு.
Speak after deliberation and circumspection.

3913. தூக்கி வளர்த்த பிள்ளையும் துடையில் வைத்துத் தைத்த இலையும் உருப்படாது.
Achild brought up in the arms, and a leaf plate stitched whenspread on the lap, will not be properly formed.

3914. தூக்கி நிறுத்தடா பிணக்காடாய் வெட்டுகிறேன்.
Lift me up you fellow, I will cut them down and convert the placeinto a burningground.

3915. தூக்கி வினைசெய்.
Do a thing after due deliberation.

3916.தூக்கு உண்டானால் நோக்கு உண்டு.
Gravity inspires respect.

3917. தூங்காதவனே நீங்காதவன்.
The sleepless is the abiding one.

3918. தூங்காதவனுக்குச் சுகம் இல்லை.
He who does not sleep is not healthy.

3919. தூங்கினவனது கடாக்குட்டி, விழித்திருந்தவனது ஊட்டுக் குட்டி.
The weaned he-goat belongs to him who slept, the suckling to him who was awake.

3920. தூங்கினவன் கன்று கடாக்கன்று.
The calf of him who slept is a bull calf.

3921. தூங்கினவன் சாகிறதில்லை, வீங்கினவன் பிழைக்கிறதில்லை.
A patient who sleeps well will not soon die, one whose body is swollen will not live.

3922. தூண்டிற்காரனுக்குக் கண் எங்கே மிதப்பில் அல்லவோ?
Where is the eye of the angler? on the float, is it not?

3923. தூமத் தீயைப் பார்க்கிலும் காமத் தீ கொடிது.
The fire of lust is more fierce than a smoking fire.

3924. தூர இருந்தால் சேர உறவு.
Distance promotes close friendship.

3925. தூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளிர்ச்சி.
Green in the distance is cooling to the eye.

3926. தூரத்துப் பார்வைக்கு மலை மழமழப்பு, கிட்டப்போனால் கல்லும் கறடும்.
A mountain in the distance appears smooth, but as we approach it, the surface becomes rugged.

3927. தூரத்துத் தண்ணீர் ஆபத்துக்கு உதவாது.
Water at a distance is not available in an emergency.

3928. தூரப் போகவேண்டுமோ கீரைப் பாத்தியில் கை வைக்க?
Must I go away that you may lay your hands on the bed of greens ?

3929. தூர்ந்த கிணற்றைத் துரவாக்காதே.
Do not empty a well that has been filled up.

3930. தூறான குடி நீறாகும்.
A profligate family will be reduced to ashes.

3931. தூற்றர் என்போர் சொல் எழுத்து உணரார்.
The slanderous are ignorant of letters.

3932. தூற்றித் திரியேல்.
Do not go about slandering.

3933. தூற்றும் பெண்டீர் கூற்று எனத் தகும்.
A reproachful wife may fitly be called Yama.

3934. தெண்டத்துக்குப் பணமும் திவசத்திற்குக் கறியும் அகப்படும்.
Money for fines, and greens for the anniversaries of the dead, are readily available.

3935. தெய்வ சித்தம் இருந்தால் செத்தவனும் எழும்புவான்.
God being willing, even the dead may rise.

3936. தெய்வப் புலவனுக்கு நா உணரும் சித்திர ஓடாவிக்குக் கை உணரும்.
To a heaven-inspired poet, the tongue, to an artist, the hand are skilful.

3937. தெய்வம் துணைக்கோள் தேகம் அநித்தியம்.
Secure divine help,- the body is transient.

3938. தெரியாத் திணையே பிரியாத் துணை நீ.
Ouņconscicous earth, thou art my inseparable help.

3939. தெருளா மனதுக்கு இருளே இல்லை.
An unenlightened mind has no sense of darkeness.

3940. தெவிட்டாக் கனி பிள்ளை , தெவிட்டாப் பானம் தண்ணீர்.
A child is a fruit that does not nauseate, and water is a beveragethat never cloys.

3941.தெளிந்த தண்ணீர் நீர் குடித்தீர் சேற்றைக் கலக்கி விட்டீர்.
Having drunk the clear water, thou hast stirred the mud.

3942.தெளிவுறும் பரதேவ தேசிகன்.
The illustrious, holy, divine teacher.

3943. தெள்ளிய திருமணி திருட்டுக்கு நவமணி.
In thieving he is a precious stone- one of the nine gems.

3944.தெறிக்க அடித்த தட்டானைப் போலே.
Like the goldsmith who beats off the gold inpieces.

3945. தெற்கத்தைக் குருவியை வடக்கத்தைக் குருவி தெற்றி அழைத்ததாம் சீகம்பழம் தின்னப் போக.
A northern bird induced a southern bird to feed on Sigampalam- a fruit.

3946. தெற்கே அடித்த காற்றுத் திரும்பி அடியாதா?
Will not the south wind blow again?

3947. தென் காசி ஆசாரம் திருநெல்வேலி உபசாரம்.
The manners of Tenkasi, and the ceremoniousness of Tinnevelly.

3948. தென்றல் முற்றிப் பெரும் காற்று ஆச்சுது.
The gentle southern breeze has increased to a gale.

3949. தென்னமரத்திற் பாதி என்னை வளர்த்தாள் பாவி .
I am half the height of a cocoanut tree, she who brought me up is a sinner.

3950. தென்னமரத்திலே தேள் கொட்டப் பனைமரத்திலே நெறி கட்டினது போல.
As when the scorpion stung the cocoanut tree, the palmyra treehad a glandular swelling.

3951. தென்னாலிராமன் பூனை வளர்த்தது போல.
As Tennaluraman reared acat.

3952. தேங்காய் தின்றவன் தின்னக் கோம்பை சூப்பினவன் தெண்டம் இறுக்கிறதா ?
While he who ate the kernal of the cocoanut escapes with impunity, is he who sucked the fibre to pay the fine?

3953. தேசங்கள் தோறும் பாஷைகள் வேறு.
As countries differ, their languages-differ also.

3954. தேடப்போன மூலிகை காலடியில் அகப்பட்டார் போல.
As if a medicinal root he had gone to seek, was obtained at his foot.

3955. தேடித் திருவிளக்கு வை.
Prepare to place a sacred lamp.

3956. தேடித் தின்றவர் தெய்வத்தோடு ஒத்தவர்.
He who earns his own bread is like god.

3957. தேடிப் புதைத்துத் தெருவில் இரக்கிறதா?
What! begging in the street, after having acquired wealth andburied it?

3958. தேடிய பொருள் காலிலே தட்டினதுபோல.
As the thing one is in search of hits the foot.

3959. தேடின பூண்டு காலிலே மிதிபட்டது.
The plant one was looking for was being trodden under foot.

3960. தேடுவார் அற்ற பிணம் தெருவோடே.
No one being interested in its burial, the corpse lies in the road.

3961. தேம்படு பனையின் திரள் பழத்தொரு விரை.
A selected nut from a number of sweet palmirah fruit.

3962. தேய்ந்தாலும் சந்தனக்கட்டை மணம் போகாது.
Though worn by attrition, the sandal wood loses not its fragrance.

3963. தேய்ந்து மூஞ்சூறு ஆனீரோ கொம்புகள் உதிர்த்தீரோ?
Art thou worn out and become a musk-rat, hast thou cast thy horns?

3964. தேராச் செய்கை தீராச் சஞ்சலம்.
A thoughtless act occasions endless trouble.

3965. தேரை மோர்ந்த தேங்காய் போல்.
Like the cocoanut smelt by a toad-a blighted cocoanut.

3966. தேரோடே நின்று தெருவோடே அலைகிறான்.
He wanders along the street with the temple car.

3967. தேர்ந்தவன் என்பது கூர்ந்து அறிவதனால்.
He is called intelligent because of his nice discrimination.

3968. தேவடியாள் தெரு கொள்ளை போகிறதா ?
Is robbery committed in a street of harlots ?

3969. தேவடியாள் சிங்காரிக்கு முன்னே தேர் ஓடித் தெருவில் நின்றது.
Before the dancing girl had adorned herself, the car moved and came to a stand on
the road.

3970. தேவடியாள் மகன் திவசம் செய்ததுபோல.
As the son of a harlot commemorated the death of his father.

3971. தேவடியாள் செத்தால் பிணம், தேவடியாள் தாய் செத்தால் மணம்.
When a harlot dies the body is a mere corpse, when her mother died funeral rites are observed.

3972. தேவரைக் காட்டிப் பூதம் பணி கொள்ளும்.
Under pretence that gods require it, goblins exact service from men.
Goblins or ghosts of the kind referred to, are employed by magicians. They are supposed to haunt grave yards, places of incremation, buried treasure &c.Companies of them attendSiva, Ganesa &c.

3973. தேவர்கள் பணிவிடை செய்யு மேலவன் கர்த்தா.
He is the Lord whom the celestials serve.

3974. தேள் கொட்டப் பாம்புக்கு மந்திரிக்கிறதா?
When stung by a scorpion do you recite incantations as for a snakebite?

3975. தேள் நெருப்பில் விழுந்தால் எடுத்துவிட்டவனைக் கொட்டும்.
The scorpion, stings him who helps it out of the fire.

3976. தேனில் விழுந்த ஈ போலத் தவிக்கிறான்.
He flutters as a fly that has fallen, into honey.

3977. தேனுக்கு ஈயைத் தேடி விடுவார் ஆர்?
Who cares to supply flies for honey?

3978. தேனும் தினைமாவும் தேவருக்கு அர்ப்பிதம்.
Honey mixed with tinai flour is offered to the gods.

3979. தேனும் பாலும் போல் இருக்கவேண்டும்.
Live in harmony, as honey and milk.

3980.தேனும் பாலும் போல் இருந்து கழுத்தை அறுத்தான்.
Pretending friendship as sweet as honey and milk, he cut my throat.

3981. தேனேபோலும் செந்தமிழ்க் கல்வி.
Mellifluous classical Tamil.

3982. தேனைத் தொட்டியோ நீரைத் தொட்டியோ?
Did you touch honey, or did you touch water?

3983. தேன் உண்டானால் ஈ தேடிவரும்.
Where there is honey there are flies.

3984. தேன் உள்ள இடத்தில் ஈ மொய்க்கும்.
Flies swarm where there is honey.

3985. தேன் எடுத்தவனுக்கு ஒரு சொட்டு , மாமன் மனையில் இருந்தவனுக்கு ஒரு சொட்டு.
A cuff for him who steals honey, a cuff for him who lives in the house
of his father-in-law.

3986. தேன் ஒழுகப்பேசித் தெருக் கடக்க வழிவிடுவான்.
He speaks to him mellifluously, and accompanies him across the street-in order to get rid of him.

3987. தேன் ஒழுகப் பேசுவான்.
He speaks mellifluously.

3988. தேன் கூட்டிலே கல்லைவிட்டு எறியலாமா?
May you throw stones at a bee-hive?

3989. தேன் தொட்டார் கை நக்காரோ?
Will those who have touched honey not lick their fingers ?

3990. தேன் தொட்டவன் புறங்கை நக்காமற் போவானா?
When one has touched honey, will he not lick the back of his hand?

3991. தேன் வார்த்து வளர்த்தாலும் காஞ்சிரம் தெங்கு ஆகுமோ?
Will the gall-nut become as sweet as acocoanut though watered with honey?

3992. தை ஈனாப் புல்லும் இல்லை , மாசி ஈனா மரமும் இல்லை.
There is no grass that does notgrow in January, nor tree that does not sprout in February.

3993. தைத்த வாயிலும் இருக்கத் தாணித்த வாயிலும் இருக்க எங்காலே போனீர் உப்பனாரே?
Whilst one gate is blocked up, and the other defended by artillery, O Uppanar howdid you find your way in?

3994. தை பிறந்தால் வழி பிறக்கும்.
If January come, roads come.

3995. தைப்புக்குத் தைப்பு மரம் பிடித்தாற்போல்.
Like holdingthe lath as each nailis fastened.

3996. தையலும் இல்லான் மையலும் இல்லான்.
One who has neither wife, nor desire to marry.

3997. தையும் மாசியும் வையகத்து உறங்கு.
In January and February sleep under thatch.
Because dew is then excessive.

3998. தொட்டால் தோழன் விட்டால் மாற்றான்.
When together friends, if separated enemies.

3999. தொட்டிலிற் பிள்ளைக்கு நடக்கிற பிள்ளை நமன்.
A child that can walk, is as Yama to a child in the cradle.

4000. தொட்டியப் பேய் சுடுகாடு மட்டும்.
The demon of a wizard pursues oneto the burring ground.

4001. தொட்டிலும் ஆட்டிப் பிள்ளையும் கிள்ளுவாள்.
Sherocks the cradle and pinches the child.

4002. தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்.
Habits contracted in the cradle cleave to one till he goes to the burning ground.

4003. தொட்டுக் காட்டாத வித்தை சொட்டுப் போட்டாலும் வராது.
Without a preceptor an art cannot be attained.

4004. தொண்டர்கள் அன்பன் துணைக்கு நிற்பவன்.
He is the friend of his servants who helps them.

4005. தொண்டெனப்படேல்.
Be not called a slave.



Please verify the Note underneath translation of Proverb 4584
Edited file received from Priya Kulandaivelu on 11 Sept 2019

the prowess of the deceased are diveltion(?).
wrap the body in a common mud(?)


Tamil proverbs translation by Percival
Part 3 (third 2000 proverbs)

4006. தொண்ணூறு கடனோடே துவரம்பருப்புக் காற் பணம்.
With ninety debts, beans for a quarter of a fanam.

4007. தொண்ணூறு பொன்னோடே துவரம்பருப்பு ஒரு பணம்.
With ninety gold fanams, one for beans.

4008. தொத்துக்குத் தொத்துச் சாட்சி துவரம்பருப்புக்கு மத்தே சாட்சி.
A slave is a witness for a slave, a churn-staff is a witness for beans-cytisus cajan.

4009. தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது.
The food earned by the plough is sweeter than that obtained by serving others.

4010. தொழுவம் புகுந்த ஆடு புழுக்கை இடாமற் போமா?
When sheep are penned, will not dung be found in the fold?

4011. தொன்மை நாடி நன்மை விடாதே.
In your zeal for old forms neglectnot what is really useful.

4012. தொன்மை மறவேல்.
Forget not your former condition.

4013. தொன்னிலம் முழுதும் தோன்றிய கல்வி.
Learning which is conspicuous to the whole world.

4014. தோட்டக்காரன் வாழ்வு காற்று அடித்தால் போயிற்று.
The prospects of a gardener are destroyed by a gale.

4015. தோட்டத்தில் அந்தம்.
It ends in the garden.

4016. தோட்டத்து நரி கூட்டத்தில் வருமா?
Will the jackal of the garden come into the assembly?

4017. தோட்டம் முச்சாண் சுரைக்காய் அறுசாண்.
The garden is three spans square, the gourd in it is six spans long.

4018. தோட்டம் நிலைத்தல்லவோ தென்னம்பிள்ளை வைக்கவேண்டும்.
It is after laying out the garden plot, is it not, that cocoanut trees are planted.

4019. தோட்டிபோல் உழைத்தால் துரைபோலச் சாப்பிடலாம்.
If you work like a scavenger, you may eat like your master.

4020. தோணி போகும் துறை கிடக்கும்.
The ship goes, the port remains.

4021. தோண்டக் குறுணி தூர்க்க முக்குறுணி.
One kuruni for digging, three for filling up.

4022. தோல் இருக்கச் சுளை விழுங்கி.
He who can swallow the pulp while the peel remains intact.

4023. தோழனாவது துலங்கிய கல்வி.
Distinguished learning is a real companion.

4024. தோழனோடும் ஏழைமை பேசேல்.
Disclose not your defects even to a friend.

2025. தோளில் இருந்து செவியைக் கடிக்கிறதா ?
What! seated on the shoulder and biting the ear?

4026. தோற்பது கொண்டு சபை ஏறுகிறதா?
Do you enter the assembly when sure of defeat ?

4027. தோற்றிள யாவும் தோற்றம் அற்று ஒழியும்.
All things that exist will vanish away.

4028. தெளவித் திரியேல்.
Do not romp about.

4029. தெளவையின் மனதுக்கு ஒவ்வுதல் இல்லை.
Nothing gives satisfaction to the goddess of misfortune.

4030. நகத்தாலே கிள்ளுவதைக் கோடரி கொண்டு வெட்டுகிறதா?
Do you use a hatchet when the nails would suffice ?

4031. நகமும் சதையும் போலே வாழுகிறான்.
United like the nails and the flesh.

4032. நகரைக்குப் பெத்தை வழிகாட்டுகிறதோ?
Is a pettai-a small fish a guide to a nagarai fish?

4033. நகைக்கு மகிழ்ச்சி நட்புக்கு நஞ்சு.
Merriment is the poison of friendship.

4034. நகைச்சொல் தருதல் பகைக்கு ஏதுவாகும்.
Reproachful words lead to enmity.

4033. நகைத்து இகழ்வோனை நாயென நினை.
Regard him as a dog who laughs you to scorn.

4036. நக்குகிற நாய்க்குச் செக்கு என்றும் சிவலிங்கம் என்றும் தெரியுமா?
Does a dog addicted to licking, distinguish between an oil-press and a Siva linga ?
The linga, the symbol of the Saiva worship, is anointed with oil.

4037. நக்குகிறபொழுது நாவு எழும்புமா?
Does the tongue rise when licking ?
When eating the food of another reproachful language is not used.

4038. நக்கு உண்டார் நாவு எழார்.
Those who lick do not raise the tongue.
Those who have eaten the food of another man will not reproach him.

4039. நச்சு மரம் ஆனாலும் நட்டவர்கள் வெட்டுவார்களா?
Though a poisonous tree, will those who planted it cut it down?

4040. நஞ்சுக்குள் இருந்தாலும் நாகமணி மாணிக்கமே, குப்பைக்குள் இருந்தாலும் குன்றிமணி குன்றிமணியே.
Though associated with poison, the stone on a cobra's head is a gem; though it may be found in a dunghill, a kunrimani is still the same.

4041. நஞ்சு நாற்கலம் வேண்டுமா?
Are four kalams of poison required?

4042. நடக்க அறியாதவனுக்கு நடுவீதி காதவழி.
Toa person unaccustomed to walk, the middle of his house is ten miles off.

4043. நடக்கிறது நடக்கட்டும் தெய்வம் இருக்கிறது.
Let things take their course ; there is a God.

4044. நடக்கும் கால் தவறுவதிலும் நா தவறுதல் கெட்டது.
A slip of the tongue is worse than that of the foot.

4045. நடந்த பிள்ளை தவறுதாம் தாயார் செய்த தவத்தால்.
It is said to be owing to the penance of the mother that the child that could walk has begun to crawl.

4046. நடந்தவன் காலிலே சீதேவி, இருந்தவன் காலிலே மூதேவி.
The goddess of fortune dwells in the feet of the industrious, the goddess of misfortune dwells in the feet of the sluggard.

The goddess of prosperity or fortune, and the goddess of adversity or misfortune, two sisters, mentioned in this proverb, exercise a mysterious influence over the minds of the vulgar. These remarkable beings are said to have been produced when the celestials, in search of ambrosia, churned the milky ocean. The opinion expressed in the proverb is also contained in a stanza of Nitinerivillakkam a poem on moral subjects, justly admired by the learned, for the terseness and beauty of its composition, as well as for the general purity of its moral sentiments. The poet says:-
“When the goddess of prosperity finds that her favours are not appreciated, she introduces her elder sister, the goddess of adversity, to the sluggard, and then takes her departure."
The goddess of fortune, whose presence is a guarantee for happiness andprosperity, is said to dwell in the face of a horse of superior caste, -with the wise and good,-in all fragrant flowers,-in the tree of paradise that bestows whatever it's votaries may desire,-in the beauty ofa good and obedient wife, -in the ocean,-in the portal of a house where a marriage is being celebrated,-in a well governed country,-in grain in brilliant lamps and flaming torches,-in the words of the great,-with truth-speaking men,-in the arrows of Cupid, -and in vessels of milk.
The goddess of misfortune is said to have her habitation with the glutton.-the irascible, - with liars and other abandoned characters, - with those clothed in rags,-with vicious women,-in a flock of sheep, and in the face of the dead.

4047. நடந்தால் நாடு எல்லாம் உறவு, படுத்தால் பாயும் பகை.
The whole country is friendly to one who is active, his own mat is at enmity with the sluggard.

4048. நடபடி உண்டானால் மிதியடி பொன்னாலே.
If allowance for a journey is provided, gold sandals will be used.

4049. நடவுக்குத் தெளி நாலத்தொன்று.
The yield of rice is a fourth part of that planted.

4050.நடு உழவிலே நந்தை தெறித்தது போல.
Like the snapping of the yoke tie when the plough has done half its work.

4051. நடு ஊரில் நச்சுமரம் பழுத்து என்ன?
Of what use is the ripening of the fruit of a poisonous tree in the middle of a village ?

4052. நடுக்கடற் போனாலும் மறுப்படாமல் வரக்கடவீர்.
Though you go to the middle of the sea, return uninjured.

4053. நடுத்தெருப் பிச்சைக்கு நாணயம் பார்க்கலாமா?
Can one retain self-respect who receives alms in the middle of the road?

4054. நடுத்தரமானவருடைய தாங்கல் பொன்னின் பிளவு போலப் பற்றவைத்தால் மாறும்.
A fracture in gold vanishes when exposed to the fire; in like manner the anger of the good passes away.

4055. நடுவு நிலைமை உடையவர்க்குச் செய்த உபகாரம் கொஞ்சக்காலத்திற்குநிற்கும்; அதுபோல, தாமரையில் விழுந்த மழைத்துளி நிற்காமல் மறையும்.
A benefit conferred on the indifferent is remembered for a short time, so a drop of rain on a lotus leaf vanishes soon.

4056. நடை சிறிதாகில் நாள் ஏறும், படை சிறிதாகிற் பயம் ஏறும்.
If one's pace be slow he will be long on the way, if an army be small, its anxiety will be great.

4057. நஷ்டத்துக்குப் பலர் நயத்துக்கு ஒருவனோ?
Is one to have the gain, and many to share the loss ?

4058. நஷ்டத்துக்கு ஒருவன் நயத்துக்கு ஒருவன்.
One loses, one gains.

4059. நட்டாற்றிலே கைவிடுகிறது நன்மையா?
Is it kind to abandon one in the middle of a river?

4060. நட்டுவன் பிள்ளைக்கு முட்டடிக்கத் தெரியாதா?
Does not the child of a drummer know how to drum?

4061. நட்டுவன் பிள்ளைக்குக் கொட்டிக் காட்டவேண்டுமா?
Does the child of a drummer require a preceptor?

4062. நண்டுக் குடுவையை நடுத்தெருவில் உடைத்தது போல.
Like breaking in the middle of the street a pot containing crabs.

4063. நண்டு கொழுத்தால் வளையில் இராது.
The crab will not remain in its hole when it becomes fat.

4064. நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத்தது போல.
Like setting a jackal to watch a roasted crab.

4065. நண்பொருள் கொடுத்து, நன்றாய் ஓது.
Pay the teachers fee, and learn well.

4066. நத்த வாழையிலை நித்தம் காற்பணம்.
A village plantain leaf always costs a quarter fanam.

4067. நத்தை வயிற்றில் முத்துப் பிறந்தது.
Pearls are produced in the bellyof an oyster or snail.

4068. நந்த வனத்து ஆண்டிக்கும் முயல் வேட்டைக்கும் எத்தனை தூரம்.
How distant are the occupations of the mendicant of the grove, and of the hare - hunter.

4069. நபாப் அத்தனை ஏழை புலி அத்தனை சாது.
Poor as a Nabob, and gentle as a tiger.

4070. நமது தலைமயிர் அவன் கையில் அகப்பட்டுக்கொண்டது.
The hair of the head is seized by his hand.

4071. நமனுக்கு நாலு பிள்ளை கொடுத்தாலும், உற்றாருக்கு ஒரு பிள்ளைகொடுக்கமாட்டான்.
Though he may give four children to Yama, he will not give one to his relatives.

4072. நமன் எடுத்துக்கொண்டு போகும் பொழுது நழுவி விழுந்தவன்.
He slipped and fell when Yama was carrying himoff.

4073. நமன் அறியாத உயிரும் நாரை அறியாத குளமும் உண்டோ?
Is there a soul that Yama knows not, is there a tank unknown to the crane?

4074. நம்ப வைத்துக் கழுத்து அறுக்கலாமா?
May you cut a man's throat after ingratiating yourself in hisconfidence?

4075. நம்பின பேரை நடு ஆற்றில் விடலாமா?
May you leave in the middle of the river, those who have confided themselves to your care ?

4076.நரி ஊரைவிட்டுப் புலி ஊருக்குப் போனேன் புலி ஊரும் நரி ஊராயிற்று.
Leaving the region of jackals I went to that of the tigers, and that became a region of jackals.

4077. நரி ஒரு சாலுக்கு உழப்போனது.
The jackalis gone to plough.

4078. நரி கூப்பிட்டுக் கடல் முட்டுமா?
Will the howling of the fox reach the sea ?

4079. நரி கூப்பிடு கடல் முட்டிப்போகும்.
The howling of the jackal will reach the ocean.

4080. நரி கொழுத்தால் வளையில் இராது.
If the jackal becomes fat it will not remain in its hole.

4081. நரி கொழுத்து என்ன காஞ்சிரம் பழுத்து என்ன ?
What if the jackal becomes fat, or, the gall-nut ripen?

4082. நரிக்குட்டிக்கு ஊளை பழக்க வேண்டுமா?
Is the young jackal to be trained to howl?

4083. நரிக்குப் பெரியதனம் கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்கும்.
If the jackal gains the mastery, he will demand two sheep from every flock.

4084. நரி நாலு கால் திருடன் இடையன் இரண்டு கால் திருடன்.
The jackal is a quadraped thief, the shepherd is a biped thief.

4085. நரி முன்னே நண்டு கரணம் போட்டது போல.
As the crab made somersaults before a jackal.

4086. நரியின் கையிலே குடல் கழுவக் கொடுக்கிறதா ?
Are viscera to be given into the hands of a jackal to be washed ?

4087. நரிவாலைக் கொண்டு கடல் ஆழம் பார்க்கிறது போல.
Like measuring the depth of the ocean with the tail of a jackal.

4088. நரை திரை இல்லை, நமனும் அங்கு இல்லை.
He is not grey nor wrinkled ; Yama is not there.

4089. நல் இணக்கமல்லது அல்லற் படுத்தும்.
Evil communications will bring distress.

4090. நல் இனத்தில் நட்பு வலிது.
Friendship is stronger than close relationship.

4091. நல்ல உயிர் நாற்பது நாள் இருக்கும்.
A good man's life may continue forty days.

4092. நல்ல எழுத்து நடுவே இருக்கக் கோணல் எழுத்துக் குறுக்கே போட்டது என்ன?
A good letter-destiny-being in the middle, how were the crooked letters put in ?

4093. நல்ல அமைச்சு இல்லாத அரசு விழி இன்றி வழிச் செல்வோன் போலாம்.
A king without a good counsellor, is like a wayfaring man who is blind.

4094. நல்லது கெட்டால் நாய்க்கும் வழங்காது.
When the good becomes bad, even a dog will not use it.

4095. நல்லதுக்கு ஒரு பொல்லாதது, பொல்லாத்துக்கு ஒரு நல்லது.
A good husband may have a bad wife, and a bad husband may have a good wife.

4096. நல்ல குடிக்கு நாலத்தொரு பங்காளி.
One who holds a fourth share in a prosperous family.

4097. நல்லது செய்து நடுவழியே போனால் பொல்லாது போகிறவழியே போகிறது.
If you do good and walk in the middle of the road, the evil will find its own way.

4098. நல்லது நாற்கலம், ஊத்தை ஒன்பது கலம்.
Of the good only four kalams, of the bad nine kalams.

4099. நல்ல நாளையில் நாழிப் பால் கறவாதது கன்று செத்துக் கலப்பால் கறக்குமோ ?
In its best days the cow gave scarcely a measure of milk, will it yield a kalam after its calf is dead?
This proverb may refer to the fact that milch, cows in this part of India and in Ceylon refuse to give their milk in the absence of the calf. The cow when going to a neighbouring house to be milked, is accompanied by its calf which is often muzzled like a dog. When the milkman is about to draw the milk he allows the calf to suck for a few moments and then tying it to the fore leg of the mother, he draws the milk, while she stands quiet licking her offspring. Cows do sometimes allow their milk to be taken when the calf is absent but it not infrequently happens that the cow refuses to give her milk, and the calf is fetched from the homestead to encourage the mother.
If a calf die, its skin may be dried and stuffed. The cow deceived by the device licks the effigy of her calf and yields her milk.

4100. நல்ல நினைவை அனுசரித்தலே கெட்ட நினைவை நீக்கல்.
Entertaining good thoughts, is in fact leaving evil thoughts.

4101. நல்ல பாம்பு ஆடியது கண்டு நாகப்பூச்சி ஆடியதுபோல.
As the earth-worm imitated the graceful movements of the cobra.

4102. நல்ல மரம் நச்சுக் கனியைத் தராது, நச்சு மரத்திலே நல்ல கனியும் வராது.
A good tree yields not poisonous fruit, nor a poisonous tree good fruit.

4103. நல்ல மரத்தில் முளைத்த புல்லுருவிபோல.
Like a mistletoe growing on a good tree.

4104. நல்ல மாடு ஆனால் உள்ளூரில் விலை ஆகாதா?
If the cow be a good one, will it not find a purchaser in its own village?

4105. நல்ல மாட்டிற்கு ஒரு அடி , நல்ல பெண்ணுக்கு ஒரு சொல்.
A good bullock requires but one blow, and a good woman only one word.

4106. நல்லவர் கண்ணில் நாகம் பட்டாலும் கொல்லார்.
Though it is before them the virtuous will not kill even a cobra.

4107. நல்லவன் என்று பெயர் எடுக்க நாட் செல்லும்.
Time must elapse before one can get a good name.

4108. நல்லவர்கள் ஒரு நாள் செய்த உபகாரத்தை மறவார்; அதுபோல, பனை ஒரு நாள் விதைத்துத் தண்ணீர் விட்டவனுக்கு பலன் கொடுக்கும்.
The good never forget a benefit; in like manner a palmyrah tree yields its produce to him who planted and watered it.

4109. நல்லவன் ஒருவன் நடுவே நின்றால் அறாத வழக்கும் அறும்.
If there be but one good man present in a suit, the greatest difficulties will be solved.

4110. நல்ல வார்த்தை சொல்லி நாடியைத் தாங்கினான்.
He spoke conciliatory words, and touched my chin cringingly.

4111. நல்ல இளங்கன்றே துள்ளாதே.
My good young-calf, don’t be frisky.

4112. நல்லறம் உள்ளது இல்லறம்.
Domestic virtue is excellent.

4113. நல்ல வேலைக்காரன் ஆற்றோடே போகிறான்.
He is a good servant, but the river carries him away.

4114. நல்ல உடலுக்கு இளைப்பாற்றி கொடாவிட்டாலும் நாவிற்கும்கொடு.
Though you may not give rest to your body, give rest to your tongue.

4115. நல்லவர்கள் சங்காத்தம் நல்ல மணலில் விழுந்த நீர்போல உதவும்.
The friendship of the good will prove useful like water falling on good soil.

4116. நல்லாரைக் கண்டால் நாய்போல, பொல்லாரைக் கண்டால் பூனைபோல.
If he sees the good, a dog, if he sees the wicked, a cat.

4117. நல்லாரை நாவு அழியப் பேசினால் பல்லாலே பதக்குப் புழுச்சொரியும்.
If one abuses his tongue by slandering the virtuous, maggots will drop from his teeth.

4118. நல்லாரும் நல்ல பாம்பைப் போலத் தங்கள் வலிமையை அடக்கிமறைந்திருப்பார்சில வேளை.
The good, like the cobra, sometimes restrain their power and conceal themselves.

4119. நல்லாரை நாவில் உரை, பொன்னைக் கல்லில் உரை.
Test the good by the words of the tongue, andgold on a touch-stone.

4120. நல்லார் பொல்லாரை நடக்கையால் அறியலாம்.
The good and the bad may be known by their conduct.

4121. நல்லோர் ஒருவருக்குப் பெய்யும் மழை எல்லாருக்கும் ஆம்.
The rain that falls on account of one virtuous person, is beneficial to all.

4122. நல்லோர் நடக்கை தீயோருக்குத் திகில்.
The acts of the virtuous are a terror to the wicked.

4123. நல்லோன் என வளர், நாட்கள் பாரேல்.
Grow up virtuous, observe not days.

4124. நற்குணமே நல்ல ஆஸ்தி.
A good disposition is the best treasure.

4125. நற்பெண்டீர் நல்லதைக் கண்டால் நமது நாயகனுக்கு என்பார்.
When a faithful wife finds a good thing, she will keep it for her husband.

4126. நனைத்துச் சுமக்கலாமா?
Would you wet your burden?

4127. நனைந்த கிழவன் வந்தால் உலர்ந்த விறகுக்குச் சேதம்.
If the old man arrive wet, there will be a consumption of dry fire wood.

4128. நன்மை செய்தார் நன்மை பெறுவார் , தீமை செய்தார் தீமை பெறுவார்.
Those who do good, obtain good; and those who do evil receive evil.

4129. நன்மை செய்யத் தீமை விளையாது.
Evil will not spring from well-doing.

4130. நன்மையானதைக் கெடுத்தால் நஷ்டத்திலும் நஷ்டம்.
It is the greatest loss to destroy that which is good.

4131. நன்மையும் தீமையும் இம்மையிலே தெரியும்.
Good and evil are apparent in the present state.

4132. நன்மையைப் பெருக்கித் தீமையைக் குறைத்தல் நன்னெறி.
To promote good and to diminish evil is the right way.

4133. நன்மை கடைப்பிடி.
Persevere in that which is good.

4134. நன்றாய் இருந்ததாம் நல்லிசுட்ட பணிகாரம்.
The cakes prepared by Nalli are said to be excellent.

4135. நன்றி மறவேல்.
Forget not a benefit.

4136. நன்றி செய்த கீரிப்பிள்ளையைக் கொன்ற கதை போல.
Like the story of killing a mungoose that had done well.
The tale is-a mungoose seeing a deadly snake approach a sleeping infant, killed it. When the mother returned from the well she saw blood on the animal, and imagining that it had bitten her child she killed it.

4137. நா அசைய நாடு அசையும்.
When the tongue moves, the whole country moves.
The allusion is to a despotic ruler whose word is law.

4138. நா என்னும் அட்சரம் நாதன் இருப்பிடம்.
The letter ந is the seat of God.

4139. நாக்குக்கு எலும்பு இல்லை எப்படிப் புரட்டினாலும் அப்படிப் புரளும்.
The tongue having no bone will turn any way.

4140. நாக்குப் புரட்டர் போக்குப் புகல்வர்.
Promise-breakers make excuses.

4141. நாங்களும் கங்கணம் கட்டினது உண்டு கழுத்துக்குக் கங்கணம்கட்டினது இல்லை.
We too tied coloured cords about our arms, but not a halter on tho neck.

4142. நாச்சியாரும் ஒன்றைப்பற்றி வார்க்கிறாள் நானும் ஒன்றைப்பற்றிக் குடிக்கிறேன்.
The mistress pours it out with one design, and I drink it with another.

4143. நாச்சியாரைக் காணாத இடத்திலே முறுமுறுப்பதுபோல.
Like murmuring in the absence of the mistress.

4144. நாடிய வரம் எல்லாம் நல்கும் நாயகன்.
A master who bestows all desired blessings.

4145. நாடு அறிந்த பார்ப்பானுக்குப் பூணூல் வேண்டுமோ?
Is a sacred thread necessary for a brahman, who is known throughout the country?

4146. நாடு எங்கும் வாழந்தால் கேடு ஒன்றும் இல்லை.
If the whole country prospers, no evil will happen.

4147. நாடு ஏர்ப்பன செய்.
Do what is agreeable to the community.

4148. நாடு காடாயிற்று காடு கழனி ஆயிற்று.
The country has become a jungle, and the jungle has become a fruitful field.

4149. நாட் சென்ற கொடை நடைகூலி ஆகும்.
A delayed gift becomes the hire for walking to receive it.

4150. நாட்டாள் பெற்ற குட்டி நாகரீகம் பேச வல்ல குட்டி.
The child of the peasant is able to speak elegantly.

4151. நாட்டாளுக்கு ஒரு நீட்டாளோ?
Does a boor require a page?

4152. நாட்டுக்கு நல்ல துரை வந்தாலும் தோட்டிக்குப் புல் சுமை போகாது.
Though the country has a good ruler, the scavenger is not relieve of his burden of grass.

4153. நாட்டுக்கு ஒரு மழை நமக்கு இரண்டு மழை.
The country has received one downpour of rain, we have received two i.e., too much.

4154. நாணமும் இல்லை மானமும் இல்லை.
No shame, no sense of honour.

4155. நாணம் இல்லாத வாத்திக்கு நாலு திக்கும் கூத்தி.
Concubines on all sides to a shameless teacher.

4156. நாணம் இல்லாத கூத்திக்கு நாலு திக்கும் வாசல்.
A shameless harlot has entrances on four sides.

4157. நாணம் இல்லாத பெண் நகைப்புக்கு இடம் வைப்பாள்.
An impudent woman gives occasion to be laughed at.

4158. நாணும் கால் கோணும் நடக்கும் கால் இடறும்.
The foot of diffidence deviates, that of activity stumbles.

4159. நாதமும் கீதமும் ஒத்திருப்பது போல, வேதமும் போதமும் ஒத்திருக்க வேண்டும்.
As a melody and a song are in harmony, so must instruction be in harmony with the Veda.

4160. நாம் ஒருவருக்குக் கொடுத்தால் நமக்கு ஒருவர் கொடுப்பார்.
If we give to others, some one will give to us.

4161. நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கிறது.
When we think of one thing, the deity designs another.

4162. நாய் அறியுமா ஒரு சந்திப் பானை ?
Does a dog know which are sacred vessels?

4163. நாயின் பீயை மிதிப்பான் ஏன், நல்ல தண்ணீர் வார்த்துக் கழுவுவான் ஏன்?
Why tread on the dung of a dog, and waste good water to wash it off?

4164. நாயும் களிச்சட்டியும் போல.
Like a dog with a chatty of thick gruel.

4165. நாயும் சரி நாவியும் சரி உனக்கு.
A dog and a civet cat are both alike to you.

4166. நாயும் தன் நிலத்துக்கு ராஜா.
Even a dog is king in his own place.

4167. நாயும் பூனையும் போல.
Like dogs and cats.

4168. நாயும் வளர்த்து நரகலும் வாருவானேன்?
Why keep a dog and clean up its filth?

4169. நாயேன் சொல் அம்பலத்துக்கு ஏறுமோ?
I am but a dog, will my word reach the assembly?

4170. நாயை அடிப்பான் ஏன் பல் இழிவு பார்ப்பான் ஏன்?
Why beat a dog, why make it grin?

4171. நாயை அடிப்பானேன் பீயைச் சுமப்பானேன்?
Why boat a dog and carry away his filth?

4172. நாயை ஏவ, நாய் வாலை ஏவுகிறது.
When you command a dog, he commands his tail.

4173. நாயைக் கண்டால் கல்லைக் காணோம், கல்லைக் கண்டால் நாயை காணோம்.
If we see a dog, there is no stone, and if we see a stone, there is no dog.

4174. நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தால் வாலைக் குழைத்துக்கொண்டு பீ தின்னப் போகும்.
If you wash a dog and place him in the middle of the house, he will wag his tail and go out to eat filth.

4175. நாயைக் கொஞ்சினால் வாயை நக்கும்.
If you caress a dog, he will lick your mouth.

4176. நாயைக் கொழுக்கட்டையால் எறிந்தது போல.
Like pelting a dog with cakes.

4177. நாய் இருக்கிற இடத்தில் சண்டை உண்டு.
Where there are dogs, there is quarreling.

4178. நாய் ஒரு சிறு எலும்புக்குச் சந்தோஷிக்கும்; அது போல, சிறியோர் சொற்ப காரியத்தை முடித்தாலும் சந்தோஷம் அடைவார்.
A dog is pleased with a bone, in like manner the low are pleased with their own little acts.

4179. நாய் கடித்ததற்கும் செருப்பால் அடித்ததற்கும் சரி.
The biting of a dog and the slippering of the wound to effect a cure are alike, painful.

4180. நாய் குலைத்து நத்தம் பாழ் ஆகுமா?
Will the village be ruined by the barking of a dog?

4181. நாய் குலைத்து விடியுமா, கோழி கூப்பிட்டு விடியுமா?
Does the day dawn because the dog barks, or because the cock crows?

4182. நாய் கெட்ட கேட்டுக்கு மாமரத்து நிழல், அது கெட்ட கேட்டுக்குப் புளியிட்ட கறி.
Mean as the dog is, he has the shade of a mango tree, his curry is flavoured with acid.

4183. நாய் கெட்ட கேட்டுக்குத் தேங்காய்ப்பாலும் சோறுமா?
Is a miserable dog to be fed with cocoanut milk and rice?

4184. நாய் கொண்டுபோன பானையை ஆர் கொண்டுபோனால் என்ன?
What matters it who takes away the vessel that the dog had carried off?

4185. நாய் கோவிலுக்கு போவான் ஏன் கோயில் காத்தவன் தெண்டம் இருப்பான் ஏன்?
Why should a dog go to a temple, or why the keeper of a temple pay a fine?

4186. நாய்க்குக் கடிவாளம் பூட்டினாற்போல.
Like putting a bridle in the mouth of a dog.

4187. நாய்க்குத் தெரியுமா கொக்குப் பிடிக்க?
Does a dog know how to catch a crane?

4188. நாய்க்குத் தெரியுமோ தோல் தேங்காய் ?
Does a dog appreciate an unhusked cocoanut ?

4189. நாய்க்கு நறுநெய் இணங்காது.
Good cow ghee is not agreeable to a dog's stomach.

4190. நாய்க்கு இரும்புக்கடையில் அலுவல் என்ன?
What business has a dog in an iron bazaar?

4191. நாய்க்கு முழுத் தேங்காய் தாக்குமா?
Will a whole cocoanut suit a dog?

4192. நாய்க்கு வேலையும் இல்லை, இருக்க நேரமும் இல்லை.
A dog has nothing to do, and no time to rest.

4193. நாய்க்கு மூத்தால் தாய்க்கும் ஈயாள்.
If she becomes older than a dog, she will not be kind even to her mother.

4194. நாய்க்கு ஏன் தேங்காய், நடுவீட்டுக்குள் போட்டு உருட்டவோ?
Why give a whole cocoanut to a dog, that he may roll it about the house?

4195. நாய்க்குப் பெயர் முத்துமாலை, அதற்கு ஆக்கிப் படைக்கிறது வரகந்தவிடு.
The name of the dog is garland, its food is bran.

4196. நாய் சந்தைக்குப் போனது போல.
As a dog went to the market.

4197. நாய் சமுத்திரத்திலே போனாலும் நக்குத் தண்ணீர்.
Although a dog may go to the sea, the water must be lapped.

4198. நாய் சிங்கத்துக்குப் பட்டம் கட்டுமா?
Can a dog invest a lion with a title?

4199. நாய் நக்கிச் சமுத்திரம் குறையுமா?
Will the ocean be diminished by the lapping of a dog?

4200. நாய் பட்ட பாடு தடிக்கொம்புக்குத் தெரியுமா?
Are the sufferings of a dog known to the stick, with which he was beaten?

4201. நாய் வாய்ப்பட்ட தேன் நல்லது ஆகுமா?
Is the honey, defiled by a dog, fit for use?

4202. நாய் வாலிலே தேன் வைத்தால் ஆருக்குக் கூடும்?
Who will benefit by the honey placed on the tail of a dog?

4203. நாய் வாசலைக் காத்து என்ன , கை இல்லாதவன் பணக்காரனைக் காத்து என்ன?
What avails the waiting of a dog at the door, or the expectations of one who, having no hands, waits on the rich?

4204. நாய் வாலைக் குணக்கு எடுக்கலாமா?
Can you change the shape of a dog's tail?

4205. நாய் வாலைப் பற்றி ஆற்றில் இறங்கலாமா?
May you descend into a river holding on by a dog's tail?

4206. நாய் வாழ்ந்து என்ன, பூனை தாலி அறுத்து என்ன?
What though a dog prosper, or a cat be bereft of her tali?

4207. நாய் வேஷம் போட்டால் குலைக்கவேண்டும்.
If you assume the guise of a dog, you must bark.

4208. நார் அற்றாற் கூடும் நரம்பு அற்றாற் கூடுமா?
If a fibre snap it may be united, if a tendon break can it be united?

4209. நாலாம் தலைமுறையைப் பார்த்தால் நாவிதனும் சிற்றப்பனாவான்.
If relationship be traced to the fourth generation, even a barber may become an uncle.

4210. நாலாவது பெண் நாதாங்கி முளைக்கும் திக்கு இல்லை.
A fourth born girl will not afford means even to procure a staple for a bolt.

4211. நாலு ஆறு கூடி ஒரு பாலாறு ஆயிற்று.
If four rivers unite, the stream will be equal to the Palar.

4212. நாலு பிள்ளை பெற்றவளுக்கு நடுத் தெருவிலே சோறு.
A woman who has borne four children, eats her rice in the middle of the street.

4213. நாலு பேர் கூடினது சபை.
The meeting of four persons is an assembly.

4214. நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி, ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி.
Naladiyar and the distichs of Valluvar are terse in construction, the twigs of the banian tree and the Acacia are good for the teeth.
The tender fibre of the banian and Acacia are said to cure a gumboil, and therefore they are used for cleaning the teeth.

4215. நால்வரோ தேவரோ?
Are they the four, or are they celestials?

4216. நால்வர் வாக்குத் தேவர் வாக்கு.
The testimony of four persons has the authority of a divine oracle.

4217. நாவில் பிறக்கும் நன்மையும் தீமையும்.
The tongue produces good and evil.

4218. நாவுக்கு இசைந்தால் பாவுக்கு இசையும்.
If agreeable to the tongue, it will be metrical.

4219. நாழி அரிசி சோறு உண்டவன் நமனுக்கு உயிர் கொடான்.
He that can eat a measure of rice may defy even the regent of the dead.

4220. நாழி நெல்லுக்கு ஒரு புடைவை விற்றாலும் நாயின் அரை நிருவாணம்.
Though a cloth is sold for a measure of rice, the dog goes naked.

4221. நாழி பணம் கொடுத்தாலும் மூளிப் பட்டம் போகாது.
Though one give a measure of fanams, his ill fame will not be removed.

4222. நாழி முகவாது நானாழி.
One measure cannot contain four measures.

4223. நாள் ஆற்றுகிறது நல்லார் ஆற்றார்.
Time effects that which the virtuous cannot achieve.

4224. நாளைக்குத் தின்கிற பலாப்பழத்திலும் இன்றைக்குத் தின்கிற களாப்பழம் நல்லது.
Better is the kala berry eaten to day, than the jack fruit in prospect for to-morrow.

4225. நாறத் தூற்றல் நரிக்குக் கொண்டாட்டம்.
The jackal is pleased with drizzling rain.

4226. நாறல் மீனைப் பூனைப் பார்ப்பது போல.
As the cat looks at the fish which has become putrid.

4227. நாறல் சாணியை மிதிப்பான் ஏன் நல்ல தண்ணீர் வார்த்துக் கழுவுவான் ஏன்?
Why tread on filth and waste good water in washing it off?

4228. நாறற் சோற்றுக்குப் பதம் பார்ப்பான் ஏன்?
Why inquire if the rice is properly boiled, seeing that it is unfit for food?

4229. நாறற் சடலம் நலம் இல்லா மட்பாண்டம்.
A fetid body, a useless earthen vessel.

4230. நாற்கலக் கூழுக்கு நானே அதிகாரி.
I have the command of four kalams of gruel.

4231. நாற்பது சென்றால் நாய்க்குச் சரி.
Like a dog, if over forty.

4232. நானிலம் தன்னில் நாயகம் கல்வி.
Learning is a gem when compared to the four kinds of soil.
They are the hilly,-forest,-agricultural and maritime tracts of a country.

4233. நானும் நரைத்து நரைமண்டை ஆனேன் காடு நடக்கக் கண்டது புதினம்.
I have lived long and become grey-headed, but I have not seen a moving jungle.

4234. நானும் அறியேன் அவளும் பொய் சொல்லாள்.
I indeed do not know; nor will she tell a lie.

4235. நான் இட்ட மருந்தும் போக ஒட்டாது நன்னாரி வேரும்
சாக ஒட்டாது.
The medicine I gave, as a charm, will not allow him to go; the sarasparilla, aningredient, will not suffer him to die.
The proverb relates to charms, in which, as in magical arts generally, the Hindus in every part of India and Ceylon, have great faith. Servants have recourse to thisdevice, and lovers also, for the purpose of influencing the affections and will of those whose favour or compliance they desiderate.
The usual method, as indicated in the proverb, is to administer the food of the party the ingredients that are fitted for the purpose contemplated; of course the preparation is surreptitiously added to the food of which it is known the individual is about to partake.
A gentleman of my acquaintance recently dismissed all his servant and took into his service a person in whom he appeared to place the greatest confidence. The neighbours and the discarded servant believe that the gentleman acted under a charm.
Some of the things used for certain purposes as charms, may not be mentioned here. The brain of a male child &c., are considered very(?) potent.
Professional magicians are employed when stolen property or buried treasure is sought. The magician uses a black preparation, a small quantity of which is placed on a betel leaf and put into the hands of an attendent boy, who is directed to look steadily at it, aided by the light of a lamp, while the magician invokes the presence and aid of certain deities. When the boy announces a phenomenon, say a tree, monkey or a dog or a goblin, he is told to do obeisance to(?) to encourage further discoveries. The earth may cleave as under(?) and reveal the thing wanted, or a scene, including a house and certain persons going and coming, water &c., may appear, when the boy proceeds to describe the objects before him, as an earthen pot, or bangle &e., &c., as the case may be.
To discover a thief among suspected persons sometimes dry grain as rice may be given to be eaten. The person whoso mouth secretes no moisture for mastication is supposed to be the thief.

4236. நான் ஒன்றை எண்ண விதி ஒன்றை எண்ணிற்று.
While I expectedone thing, destiny ordained another.

4237. நான் நட்டேன் நாதன் பயிர் ஆக்கினான்.
I planted; god caused it grow.

4238. நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்.
The hare that I caught had three legs.

4239. நிசம் ஒன்று பல தீங்கு நீக்கும்.
One thing ascertained will remove many evils.

4240. நிசாம் அல்லி தண்டில் நிசார்க்காரனைக் கண்டது உண்டா?
Was any trousered sepoy seen in the army of Nizam Aly?

4241. நிஷ்டூரன் கண்ணைத் தெய்வம் கெடுக்கும், நீதிமான் கண்ணைப் பரிதானம் கெடுக்கும்.
God will destroy the eyes of an oppressor, and a bribe will destroy the eye of an upright man.

4242. நித்தம் சாவார்க்கு அழுவார் உண்டா ?
Do any weep when deaths are of daily occurrence ?

4243. நித்தம் போனால் முற்றம் சலிக்கும்.
If you continually go thither, even the court-yard will be weary of you.

4244. நித்தியக் கண்டம் தீர்க்க ஆயுசு.
Constant trouble, long life.

4245. நித்தியம் கிடைக்குமா அமாவாசைச் சோறு ?
May new moon fare be expected daily ?
The proverb refers to the ceremonies which are performed, at the period of the new moon, in honour of deceased ancestors. On these occasions the household eat only once during the day, but the food is of a superior kind and prepared with great care in cooking utensils that are kept for sacred purposes. If a brahman be present he offers oblations of sesamum grain and water to the manes of the dead, naming each in order as far back as the third generation. In some parts of India ceremonies supposed to affect the state of the dead are performed no less than ninety-six times every year. The ceremonies of the Ancient Romans of like kind are hinted at by Virgil and Horace as is known to the classical student.

4246. நித்திரை சத்துரு.
Sleep is an enemy.

4247. நித்திரை சுகம் அறியாது.
Sleep is unconscious of enjoyment.

4248. நிந்தனை சொல்லேல், நீதி கைப்பிடி.
Speak no reproachful words, do justice.

4249. நிமிஷநேரம் நிற்கும் இன்பம் சிற்றின்பம்.
Momentary pleasure is inferior pleasure.

4250. நிமிஷ நேரம் நீடிய இன்பம்.
A pleasure that lasts but a moment.

4251. நிமித்தம் பார்க்கிறவன் இரண்டகக்காரி மகன், பொருத்தம் பார்க்கிறவன் பொல்லாங்கன் புத்திரன்.
He who consults omens is the son of a deceitful woman, he who enquires into the fitness of persons for marriage is the son of a vicious man.

4252. நிமிர்ந்து போட்டது என்ன குனிந்து எடுத்தது என்ன?
What is lost by an erect posture, and what gained by stooping?

4253. நிமைப் பொழுதேனும் இல்லை நீச உடல்.
The vile body will not endure even for the twinkling of an eye.

4254. நிருவாண தேசத்தில் நீர்ச்சீலை கட்டினவன் பைத்தியகாரன்.
It were an act of folly to wear clothes in a country where all go naked.

4255. நிலத்தில் எழுந்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும்.
Plants decay on the ground from which they sprung.

4256. நிலத்திற்குத் தகுந்த கனியும் குலத்திற்குத் தகுந்த குணமும்.
Fruit appropriate to the soil, and quality agreeable, to one's rank.

4257. நிலம் கடக்கப் பாயலாமா?
Can you clear the earth at a leap ?

4258. நிலவுக்கு ஒளித்துப் பரதேசம் போனது போல.
Like going to another country to escape from moonlight.

4259. நிலை இல்லான் வார்த்தை நீர் மேல் எழுத்து.
The words of the unstable are letters on water.

4260. நிலையிற் பிரியேல்.
Swerve not from rectitude.

4261. நிலையை விட்டால் நீச்சு.
When out of your depth, swimming.

4262. நில்லாத காலடி நெடும் தூரம் போகும்.
Ceaseless walking accomplishes great distances.

4263. நில்லாது ஏதும் நிலையே கல்வி.
Learning alone is enduring, all else is evanescent.

4264. நிழலுக்கும் களவுக்கும் ஒத்தது ஆக்கை.
The body may be compared to a shadow, and to theft.

4265. நிழல் அருமை வெயிலில் தெரியும்.
The salubrity of shade is realized in sunshine.

4266. நிழல் நல்லது முசிறு பொல்லாதது.
The shade is good, the ants are bad.

4267. நிறைந்த ஆற்றிலே பெருங்காயம் கரைத்ததுபோல.
Like dissolving assafoetida in a flooded river.

4268. நிறை பொதியிலே கழுதை வாய் வைத்தாற்போல.
As an ass put its mouth into a full sack.

4269. நிறையக் குறுணி வேண்டாம் தலை தடவிக் குறுணி கொடு.
I do not want a kuruni heaped up, give me a kuruni of grain level with the brim.

4270. நினைக்கு முன் வருவான் நினைப்பதும் தருவான்.
He will come before you think of him, he will give what you in-tend applying for.

4271. நினைத்த நேரம் நெடு மழை பெய்யுமா?
Will heavy rain fall as we may wish?

4272. நினைத்தது இருக்க நினையாதது எய்தும், நினைத்தது வந்தாலும் வந்து நேரும்.
When one thing is expected another may come, and that which is thought of may possibly come.

4273. நின்ற மரத்தில் நெடு மரம் போனால் நிற்கும் மரமே நெடு மரம்.
When the lofty trees are felled, the remaining trees look tall.

4274. நின்ற வெள்ளத்தையும் வந்த வெள்ளம் கொண்டுபோயிற்று.
The flood that was, has been swept away by the flood that followed.

4275. நின்றால் நெடு மரம் விழுந்தால் பனை மரம்.
When standing, a tall tree, when fallen, a palmyrah tree.

4276. நின்றாற்போல் விழுந்தால் தலை உடையும்.
If you fall as you stand, your head will be broken.

4277. நீசரானவர் நிலைபெறக் கல்லார்.
The base do not persevere in study.

4278. நீட்டு வித்தை ஏறாது.
Boasted learning will not avail.

4279. நீண்ட கை நெருப்பு அள்ளும்.
The stretched hand vill lade out fire.

4280. நீண்ட தச்சும் குறுகிய கொல்லும்.
Length to the carpenter, shortness to the smith.
The former can easily shorten wood by cutting,-the smith canlengthen iron by heating.

4281. நீண்ட புல் நிற்க நிழலாமா?
Will long grass afford a shade?
A ready affirmation would answer this in central Africa.

4282. நீதி அற்ற பட்டணத்தில் நிறைமழை பெய்யுமா?
Will sufficient rain fall in a city where justice cannot be obtained ?

4283. நீதி கேளாமல் தலை வெட்டுவார்களா?
Will they cut off the head without judicial proceedings?

4284. நீதிமான் தீவினை செய்யிற் பிழைப்பானா, நீதி இல்லாதவன் நீதி புரிந்தால் மரிப்பானா?
Will a virtuous man escape death if he do evil, will the unjust die if he do justice?

4285. நீ நீராலே விலகினாய் நான் நெருப்பாலே விலகினேன்.
You have escaped an accident by water, I have escaped one by fire.

4286. நீந்தமாட்டாதவனை ஆறு கொண்டுபோகிறது.
The river carries away him who cannot swim.

4287. நீ பிறர்க்கு உதவி செய்தால் தெய்வம் உனக்கு உதவி செய்யும்.
If you help others, God will help you.

4288. நீரகம் பொருந்திய ஊரகத்திரு.
Live in a village where there is a good supply of water.

4282 நீரில் எழுத்தாகும் ஆக்கை.
The body is an inscription on water.

4290. நீரிற் குமிழி சரீரம்.
The body is a bubble on water.

4291. நீரும் கொல்லும் நெருப்பும் கொல்லும்.
Water kills, and fire also kills.

4292. நீரை அடித்தால் வேறாமா?
Can water be divided by a stroke ?

4293. நீரைச் சிந்தினையோ சீரைச் சிந்தினையோ?
Did you spill water, or did you spill your character?

4294. நீர் ஆழம் காணலாம் நெஞ்சு ஆழம் காணப்படாது.
The depth of water may be ascertained, but not the depth of the heart.

4295. நீர் உயர நெல் உயரும்.
As the water rises, the rice plant rises.

4296. நீர் உள்ள மட்டும் மீன் குஞ்சு துள்ளும்.
The young fish will sport as long as the water lasts.

4297. நீர் என்று சொன்னால் நெருப்பு அவியுமா?
Can fire be quenched by pronouncing the word water?

4298. நீர் என்று சொல்ல நெருப்பாய் முடிந்தது.
When it was said to be water, it turned out to be fire.

4299. நீர்க்குட் பாசிபோல் வேர்க்கொள்ளாது.
As moss in water, it will not take root.

4300. நீர் போனால் மீன் துள்ளுமா?
When the water goes, will the fish leap about?

4301. நீர்மேற் குமிழிபோல் நிலை இல்லாக் காயம்.
The body is unstable as a bubble on water.

4302. நீர் விளையாடேல்.
Do not play in water.

4303. நீலத்துக்குக் கறுப்பு ஊட்டவேண்டுமா?
Is black dyed in blue?

4304. நீலம் கட்டுப்படப் பேசுகிறது.
To speak so as to confine the blue dye to the skirts of the cloth.

4305. நீலிக்குக் கண்ணீர் நிமையிலே.
A termagant has her tears in the eyelids.

4306. நுட்ப புத்திமான் திட்ப சித்திவான்.
The shrewed are successful.

4307. நுண்ணிய ஞானம் உரைப்பார்கள் சொன்னதில் ஒன்றும் நடவார்கள்.
They give wise counsels, but they themselves walk not according to any one of them.

4308. நுண்ணிய கருமமும் எண்ணித் துணி.
Although a small thing, do it after due thought.

4309. நுண்பொருள் கொடுத்து நுண்ணியராவர்.
They become possessed of discrimination by imparting instruction on abstruse subjects.

4310. நுண்மை நுகரேல்.
Be not particular in food.

4311. நுரை ஒத்ததுவே தரையிற் பவுஷு.
The affluence of this world is as froth.

4312. நுரையைத் தின்றால் பசி போகாது.
Hunger cannot be satisfied by eating froth.

4313. நுழை விட்டு செய் நூல் கற்று அடங்கு.
Build a house with an entrance, acquire learning and be humble.

4314. நுளையன் அறிவானா ரத்தினத்தின் பெருமை?
Does a fisherman understand the value of gems?

4315. நுளையன் பேச்சு அம்பலம் ஏறாது.
The words of a fisherman will not reach the assembly.

4316. நுனிக்கொம்பில் ஏறி அடிக்கொம்பு வெட்டுவார்களா?
Having ascended to the extremity of the bough, will they sever it from the tree?

4317. நூல் இல்லாமல் மாலை கோத்ததுபோல.
Like making a garland of flowers without a string.

4318. நூல் கற்றவனே மேலவன் ஆவான்.
The learned only will gain eminence.

4319. நூறு ஆண்டு ஆகிலும் கல்வியை நோக்கு.
Though a hundred years old, diligently acquire knowledge.

4320. நூறு குற்றம் ஆறு பிழை கொண்டு பொறுக்கவேண்டும்.
A hundred offences must be forgiven as if only six faults.

4321. நாறுநாள் ஓதி ஆறுநாள் விடத் தீரும்.
The learning acquired in a hundred days, will be lost by six days neglect.

4322. நாறோடு நாறு ஆகிறது நெய்யிலே சுட்டி பணிகாரம்.
Though the debt may increase to another hundred, bake the cake in ghee.

4323. நூற்றுக்கு இருந்தாலும் கூற்றுக்கு அரிகீரை.
Though a hundred years old, he is only a young plant to the regent(?) of the dead.

4324. நூற்றுக்கு இருப்பார் ஐம்பதில் சாகார்.
Those who will live to be a hundred, will not die at fifty.

4325. நூற்றுக்கு மேல் ஊற்று, ஆயிரத்துக்குமேல் ஆற்றுப்பெருக்கு.
After a hundred a spring, after a thousand a flooded river.

4326. நூற்றுக்கு ஒரு பேச்சு ஆயிரத்துக்கு ஒரு தலை அசைப்பு.
When he is worth a hundred, a word, when a thousand, a mere nod.

4327. நூற்றைக் கெடுத்தது குறுணி.
One measure of chaff spoiled a hundred of grain.

4328. நூன்முறை தெரிந்து சீலத்தொழுகு.
Ascertaining the rules of the Veda, live virtuously.

4329. நெஞ்சு அறியப் பொய் சொல்லலாமோ?
May one tell a lie knowingly?

4330. நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை.
There is no deceit which can be concealed from the mind.

4331. நெடியார் குறியாரை ஆற்றிலே தெரியும்.
It will be known in the river, who is tall and who is short.

4332. நெடும் கடல் ஓடியும் நிலையே கல்வி.
Though you may cross the broad sea your learning will remain with you.

4333. நெடும் பகலுக்கும் அஸ்தமனம் உண்டு.
Even a long day has a sunset.

4334. நெய்கிறவனுக்கு ஏன் குரங்குக் குட்டி?
What has a weaver to do with a young monkey?

4335. நெய்க்குடத்தில் எறும்பு மொய்த்தது போல.
As the ants swarm on a ghee pot.

4336. நெய்க்குடம் உடைந்தால் நாய்க்கு விருந்து.
If the ghee pot is broken, the dog has a feast.

4337. நெய்க்குடம் உடைந்தது நாய்க்கு வேட்டை.
The breaking of the ghee pot, is a hunting excursion to the dog.

4338. நெய்யை உருக்கித் தயிரைப் பெருக்கிச் சாப்பிட வேண்டும்.
Use ghee after melting, and curds diluted.

4339. நெருஞ்சி முள் தைத்தாலும் குனிந்து அல்லவோ பிடுங்க வேண்டும்?
Though it be but a thistle that has entered your foot, you must sit down, must you not, to pull it out?

4340.நெருப்பில் ஈ மொய்க்குமா ?
Will flies swarm in fire ?

4341. நெருப்பினும் பொல்லாது கரிப்பின் வாதை.
The distress of famine is worse than that of fire.

4342. நெருப்பிலும் பொல்லாச் செருப்பு.
Shoes worse than fire.

4343. நெருப்பிலே புழுப் பற்றுமா?
Will worms breed in fire?

4344. நெருப்பு ஆறும் மயிர்ப் பாலமும்.
A river of fire, and a bridge of hair.

4345, நெருப்பு இல்லாமற் புகை புகையுமா ?
Will there be smoke where there is no fire ?

4346. நெருப்பு நின்ற காட்டிலே ஏதாவது நின்றாலும் நிற்கும், நீர் நின்ற காட்டில் ஒன்றும் நிற்காது.
Something may possibly remain in a forest after a fire, but nothing remains after a flood.

4347. நெருப்பு என்றால் வாய் வேகுமா?
By pronouncing the word fire, will the mouth be burnt ?

4348. நெருப்பைக் கண்டு மிதித்தாலும் சுடும், காணாமல் மிதித்தாலும் சுடும்.
Whether you tread on fire wittingly or unawares, it will burn you.

4349. நெருப்பைச் சேர்ந்த யாவும் அதன் நிறமாகும் ; அதுபோல, பெரியோரைச் சேர்ந்தவரும் ஆவார்.
Things put into fire partake of its colour, in like manner will it happen to those who join the great.

4350. நெருப்புச் சிறிது என்று முன்றானையில் முடியலாமா?
May you tie fire in the skirt of your cloth because a mere spark ?

4351. நெருப்பைத் தலை கீழாய்ப் பிடித்தாலும் அதின் சுவாலை கீழாகுமா?
Although you carry fire head downwards, will the flame burn in that direction?

4352. நெல் எடுக்கவும் புல் எடுக்கவும் ஆச்சோ ?
Am I destined to carry both paddy and grass ?

4353. நெல்லும் உப்பும் பிசைந்து உண்ணக் கூடுமா?
Will a mixture of paddy and salt be agreeable to the palate?

4354. நெல்லு வகை எண்ணினாலும் பள்ள வகை எண்ணக் கூடாது.
Though one may enumerate the various kinds of rice, he cannot enumerate the varieties of the palla caste.

4355. நெல் விளைந்த பூமியும் அறியாய், நிலா எறித்த இடமும் அறியாய்.
You do not know a rice crop, nor a moonlight space.

4356. நெறி தப்புவார்க்கு அறிவிப்பது வீண்.
It is useless to teach those who diviate from rectitude.

4357. நெற்பயிர் விளை.
Cultivate rice.

4358. நேத்திர மணியே சூத்திர அணியே.
The apple of the eye, is an ingenious piece of mechanism.

4339. நேயமே நிற்கும்.
Love alone will abide.

4360. நேரா நோன்பு சீர் ஆகாது.
Fasting without a vow is not good.

4361. நேர்ந்து நேர்ந்து சொன்னாலும், நீசக் கசடர் வசம் ஆகார்.
Though repeatedly told, the base take no heed.

4362. நேர்பட ஒழுகு.
Behave evenly or agreeably.

4363. நேற்று வந்த மொட்டைச்சி நெய் வார்த்து உண்ணச் சிணுங்குகிறாள்.
The bald headed woman who came but yesterday, is whining for ghee to eat with her rice.

4364. நேற்று வந்தானாம் குடி அவன் தலையில் விழுந்ததாம் இடி.
It is said that he took up his abode only yesterday, and he has beca struck by lightning.

4365. நைஷதம் புலவர்க்கு ஒளஷதம்.
Naishadha is a cordial to poets.

4366. நைபவர் எனினும் நொய்ய உரையேல்.
Speak not roughly even to a beggar.

4367. நையக் கற்றினும் நொய்ய நன்கு உரை.
Though mollified by learning, speak effectively.

4368. நைவினை நணுகேல்.
Go not near that which is pernicious.

4369. நொடிப்போதும் வீணிடேல்.
Lose not even a moment of time.

4370. நொண்டி நொண்டி நடப்பானேன் கண்டதற்கு எல்லாம் படைப்பானேன்?
Why walk limping, and why offer oblations, to every god you see ?

4371. நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு.
To slip is the excuse of the lame horse.

4372. நொந்த கண் இருக்க நோகாக் கண்ணுக்கு மருந்து.
Applying medicine to the sound eye, instead of to the one diseased.

4373. நொந்து அறியாதவர் செந்தமிழ் கற்றோர்.
Those who are well versed in classical Tamil know not want.

4374. நொய் யரிசி கொதி பொறுக்குமா?
Will bruised rice bear boiling ?

4375. நொறுங்கத் தின்றார்க்கு நூறு வயது.
Those who masticate their food, live a hundred years.

4376. நோகாது உணர்வோர் கல்வியை நோற்பார்.
Those who study unmindful of the pains attending it are devoted to learning.

4377. நோகாமல் அடிக்கிறேன் ஓயாமல் அழு.
I will beat you without giving pain, set up an unceasing cry.

4378. நோக்கத் தொதுங்கு.
Be careful to secure your object.

4379. நோக்க நோக்குவ நோக்காமுன் நோக்குவன்.
He whom we seek to see, has already seen us.

4380. நோயற்ற வாழ்வே வாழ்வு குறைவற்ற செல்வமே செல்வம்.
Freedom from sickness is true happiness, and competence is true riches.

4381. நோயாளிக்கு ஆசை வார்த்தை சொன்னாற்போல.
Like uttering soothing words to a sick person.

4382. நோயாளி விதியாளி ஆனால் பரிகாரி பேராளி ஆவான்.
If destiny favours the patient, his doctor will obtain fame.

4383. நோயாளிக்குத் தெரியும் நோயின் வருத்தம்.
The sick person knows the intensity of his suffering.

4384. நோய் கொண்டார் பேய்கொண்டார்.
The sick are like those possessed of demons.

4385. நோய்ஞ்சற் பூனை மத்தை நக்குமாபோலே.
As a lean cat licks the churnstaff.

4386. நோய்த்த புலி ஆகிலும் மாட்டுக்கு வலிது.
Though the chetah is sick, it is stronger than on ox.

4387. நோலாமையினால் மேலானதுபோம்.
By neglecting religious austerities supreme good will be lost.

4388. நோவு ஒரு பக்கம் இருக்கச் சூடு ஒரு பக்கம் போட்டார் போல.
Like branding the side that is not affected by disease.

4389. நோன்பு என்பது கொன்று தின்னாமை.
Not to take life for the purpose of eating, is to fast.

4390. நெளவித் தொழில் நலம்.
Youthful education will prove beneficial.

4391. நௌவியிற்றானே தெய்வறிவைக் கல்.
Know God when you are young.

4392. நௌவியும் முதுமையும் நடுவு மற்றவன்.
He who is without youth, old age, or manhood.

4393. நௌவியும் வாழ்க்கையும் அழகல்ல, நற்குணம் ஒன்றே அழகு.
Youth and affluence do not form one's beauty, goodness alone does.

4394. பகலிற் பக்கம் பார்த்துப் பேசு , அர்த்தராத்திரியில் அது தானும்
பேசாதே.
By day, look round and speak, at midnight do not utter a word.

4395. பகலிற் பசு தெரியவில்லை இரவில் எருமை தெரியுமா ?
Not being able to distinguish a cow by day, how can he distinguish a buffalo by night?

4396. பகிடிக்குப் பத்துக் காசு திருப்பாட்டுக்கு ஒரு காசு.
Ten cash for a comedy, one cash for a sacred song.

4397. பகிடியைப் பாம்பு கடித்தது போல.
As the snake bit the jester.

4398. பகுத்தல் இல்லாத துணிவு பாரம் இல்லாத கப்பல்.
Daring without prudence, is as a ship without ballast.

4399. பகுத்து அறியாமல் துணியாதே படபடப்பாகச் செய்யாதே.
Attempt nothing without consideration, and do nothing hastily.

4400. பகைக்கச் செய்யேல் மறு ஜெனனப்படு.
Do not create enemies, act discreetly.

4401. பகையாளி குடியை உறவாடிக் கொடுக்கவேண்டும்.
You must ruin the family of your enemy by feigned friendship.

4402. பகைவர் உறவு புகை எழு நெருப்பு.
The friendship of foes is like fire concealed in smoke.

4403. பங்காளி குடி கெடுக்க வெங்காயம் குளிபோடச் சொன்னது போல.
Like advising his partner to plant onions in order to effect his ruin.

4404. பங்காளி வீடு வேகிறது சுங்கான் கொண்டு தண்ணீர் விடு.
The house of my partner is on fire, pour water with a pipe.

4405. பங்காளியும் பனங்காயும் பதம் பார்த்து வெட்ட வேண்டும்.
Observe the proper time for cutting a partner and palmyrah fruit.

4406. பங்குனி என்று பருப்பதும் இல்லை, சித்திரை என்று சிறுப்பதும் இல்லை.
It wont grow larger because it is Panguni,-March-nor smaller because it is Chittarai-April.

4407. பங்குனி மாதம் பகல் வழி நடந்தவன் பெரும்பாவி.
He that goes abroad in the day time in March, is a great sinner.

4408. பசி இல்லாதவனுக்குக் கரிப்பு மயிர் மாத்திரம்.
He who is not hungry cares not a hair about famine.

4409. பசி ஏப்பக்காரனும் புளி ஏப்பக்காரனும் கூட்டுப்பயிர் இட்டது போல.
As two men, one belching through hunger, and the other by indigestion, were associated in joint tillage.

4410. பசு ஏறுவாலும் எருது கூழைவாலும்.
A cow with a long tail, an ox with a short one.

4411. பசிக்குக் கறி வேண்டாம், தூக்கத்துக்குப் பாய் வேண்டாம்.
When hungry curry is not needed, nor a mat when sleepy.

4412. பசிக்குப் பனம் பழம் தின்றால் பித்தம் பட்ட பாடு படட்டும்
Eat palmyrah fruit to satisfy hunger, no matter about the biles.
Palmyrah fruit is believed to be very bilious.

4413. பசி தீர்ந்ததானால் பாட்டு இன்பமாம்.
Songs are pleasant after refection.

4414. பசித்த பறையனும் குளித்த சைவனும் சாப்பிடாது இரார்.
A hungry pariah and a shiva that has bathed, must have eaten first.

4415. பசித்தவன் தின்னாததும் இல்லை, பகைத்தவன் சொல்லாததும் இல்லை
There is nothing edible which the hungry will not eat, there is no reproach which the malevolent has not uttered.

4416. பசித்தவன்மேல் நம்பிக்கை வைக்கலாமா?
Can confidence be placed in a hungry person?

4417. பசித்த செட்டி பாக்குத் தின்றானாம்.
It is said that a hungry merchant chewed betel and arica-nut.

4418. பசித்தவன் பயற்றை விதைக்கட்டும்.
Let the hungry sow peas.

4419. பசித்தவன் பழம் கணக்கைப் பார்ப்பதுபோல்.
As a hungry man looks at his old accounts.

4420. பசித்தார் பொழுதும் போம் பாலுடன் அன்னம் புசித்தார் பொழுதும் போம்.
The sun goes down on the hungry, and also on those who eat their rice and milk.

4421. பசியாமல் மருந்து கொடுக்கிறேன் பழையது இருந்தால் போடு என்பது போல.
Like saying put before me some old rice if there be any, and I will give you medicine that will prevent your hungering again.

4422. பசி ருசி அறியுமா நித்திரை சுகம் அறியுமா?
Does hunger appreciate flavours, or sleep enjoyment?

4423. பசி ருசி அறியாது, நித்திரை சுகம் அறியாது.
Hunger is ignorant of flavours, sleep is ignorant of enjoyment.

4424. பசி வந்திடில் பத்தும் பறந்து போம்.
Hunger dissipates the ten.
The ten, arethe five senses and their organs.

4425. பசுகறுப்பென்று பாலும் கறுப்பா?
Because the cow is black, is her milk also black?

4426. பசுச் சாதும் பார்ப்பான் ஏழையும் உண்டா ?
Are there any gentle cows, or poor brahmans ?

4427. பசுத் தோல் போர்த்துப் புலிப் பாய்ச்சல் பாய்கிறது.
To wear a cow skin, and spring like a tiger.

4428. பசுப்போலே இருந்து புலிப்போலே பாய்கிறாய்.
Gentle as a cow, you spring as a tiger.

4429. பசு மரத்தில் தைத்த ஆணிபோல.
Like a nail driven into a green tree.

4430. பசு விழுந்தது புலிக்குத் தாயம்.
The falling of the cow, is a gain to the tiger.

4431. பசுவுக்கு இரை கொடுத்தால் மதுரமான பால் கொடுக்கும். அதுபோல, நல்லவர்களுக்குச் செய்கிற உபகாரம் பலம் அளிக்கும்.
When a cow is fed she yields sweet milk, so the favours shown to the good will bring a reward.

4432. பசுவைக் கொன்றால் கன்று பிழைக்குமா?
If you slaughter a cow, will its calf live?

4433. பசுவைக் கொன்று செருப்புத் தானம் செய்தது போல.
Like killing the cow and giving shoes made of its hide.

4434. பசுவை அடித்துப் புலிக்குத் தானம் கொடுக்கிறதா?
Do you kill a cow, and make an offering of it to a tiger?

4435. பசுவை விற்றாற் கன்றுக்கு வழக்கா?
Having sold the cow, is there a dispute about the calf?

4436. பச்சடி கண்டால் ஒட்டடிமகளே.
Daughter, if you find him rich, cling to hire.

4437. பச்சிலையும் கிள்ளப்படுமோ பராபரமே!
O God, is a tender plant also to be cut off !

4438. பச்சை கொடுத்தால் பாவம் தீரும் வெள்ளை கொடுத்தால் வினை தீரும்.
If raw provisions are given, the sins of the present birth will be removed, if white cloths are given, the sins of former births will be cancelled.

4439. பச்சைச் சிரிப்புப் பல்லுக்குக் கேடு தூவு பருக்கை வயிற்றுக்குக் கேடு.
Feigned laughter is bad for the teeth, and scattered grains of boiled rice are bad for the stomach.

4440. பச்சை நெல்லுக்குப் பறையனிடத்திற் சேவிக்கலாம்.
You may serve a pariah for paddy.

4441. பச்சை மண்ணும் சுட்ட மண்ணும் ஒட்டுமா?
Will moist and burnt clay unite?

4442. பச்சை மரம் படப் பார்ப்பான்.
He can stare so as to make a green tree decay.

4443. பச்சை மரத்திற்கு இத்தனை என்றாற் பட்டமரத்திற்கு எத்தனை?
If so much to the green tree, how much to the dry?

4444. பஞ்சம் இல்லாக் காலத்தில் பசி பறக்கும்.
In the absence of famine hunger flies away.

4445. பஞ்சம் போம் பஞ்சத்திற் பட்ட வசை போகாது.
The famine will end, but a scar then made will not pass away.

4446. பஞ்சானும் குஞ்சும் பறக்கத் தவிக்கிறது.
The little ones starve excessively.

4447. பஞ்சாங்கம் போனாலும் நட்சத்திரம் போகாது.
Though astrological calculations prove false, the stars will not.

4448. பஞ்சு படிந்த பழம் சித்திரம்.
An old picture covered with dust.

4449. பஞ்சுப் பொதியில் நெருப்புப் பட்டது போல.
Like fire touching a bale of cotton.

4450. பஞ்சுப் பொதியிற் பட்ட அம்பு போல.
Like an arrow striking a bale of cotton.

4451. பஞ்சும் நெருப்பும் ஒன்றாய்க் கிடக்குமோ?
Can cotton and fire be placed together?

4452. பஞ்சும் நெருப்பும் போலே.
Like cotton and fire.

4453. பஞ்சை பணிகாரம் சுட்டதும், வீங்கல் விசாரப்பட்டதும்.
The poor baked the cakes, the greedy longed for them.

4454. படி ஆள்வார் நீதி தப்பிற் குடி ஆர் இருப்பவர் குவலயத்தில்.
If rulers err, who can abide on the earth ?

4455. படிக்கு ஆசான் இருந்தால் குடிக்குச் சேதம் இல்லை.
If the giver of the daily allowance be alive, no loss to the family.

4456. படிக்கிறது திருவாய்மொழி, இடிக்கிறது பெருமாள் கோவில்
To read Thiruvaaymoli, and to break down the temple of Vishnu.

4457. படிக்கிற பிள்ளை பாக்குப் போட்டால் நாக்குத் தடிப்பாய் போம்.
If a school boy chew betel, his pronunciation will be spoilt.

4458. படித்து முட்டாளாய் இருக்கிறான்.
He is a learned fool.

4459. படித்தவனுக்கும் படியாதவனுக்கும், கொக்குக்கும் அன்னத்துக்கும் வித்தியாசம்போல.
The difference between the learned and the unlearned, is as great as that of a crane and a swan.

4460. படுகளப்பட்ட பன்னாடை.
A palm network driven in a battle-field.

4461. படுகளத்தில் ஒப்பாரியா?
Do they sing elegies in a battle-field?

4462. படுக்கைச் சுகம் மெத்தை அறியாது.
The comfort of the bed is not experienced by the mattress.

4463. படுவது பட்டும் பட்டத்துக்கு இருக்கவேண்டும்.
Whatever hardships he may have to endure, he must have the rank to which he is entitled.

4464. படை கெட்டு ஓடுகையில் நரை மயிர் பிடுங்குகிறதோ?
When an army is routed, are grey hairs pulled out ?

4465. படைக்கு ஒருவன் கொடைக்கு ஒருவன்.
One to fight, and one to give.

4466. படை மிகுத்தால் அரண் இல்லை.
If an army be large, a fortress is not required.

4467. படை முகத்திலும் அறிமுகம் வேண்டும்.
An acquaintance is necessary even in a battle field.

4468. படையாது படைத்த மருமகளே உன்னைப் பறையன் அறுக்கக் கனாக் கண்டேன்.
O, my daughter-in-law, who art - entertaining me sumptuously, I dreamt that thou wast being dissected by a pariah.

4469. பட்சி பசித்தாலும் எட்டிக்கனியைத் தின்னாது.
Though a bird is hungry, it will not eat poisonous berries.

4470. பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும்.
It will hit the foot already injured, the decayed family will be ruined.

4471. பட்டணத்தாள் பெற்ற குட்டி பணம் பறிக்க வல்ல குட்டி.
A young one born of a city mother is clever at thieving.

4472. பட்டணத்து வாசலைப் படலாலே மூடுகிறதோ?
Can you cover up a city gate with a hurdle?

4473. பட்டணத்து வாசலைப் பட்டாலே மூடி இருக்கிறதா?
Is the gate of the city veiled with silk?

4474. பட்டடை வாய்த்தால் பணி வாய்க்கும்.
If the anvil is good, the work will be good.

4475. பட்டவர்க்கு உண்டு பலன்.
Those who have taken pains will enjoy the gains.

4476. பட்டவளுக்கு பதவி உண்டு.
She who suffered will attain advantage.

4477. பட்டால் அறிவான் சண்டாளன், மழை பெய்தால் அறிவான் வெள்ளாளன்.
A rogue is wise when punished, the farmer when it rains.

4478. பட்டினத்து நரியைப் பனங்காட்டு நரி ஏய்த்ததாம்.
It is said that the jackal of the palmyrah grove cheated the city fox.

4479. பட்டிக் காட்டுக்குச் சிவப்புத் துப்பட்டிப் பீதாம்பரம்.
In a common village, a red garment is regarded as a sumptuous garment.

4480. பட்டு அறி கெட்டு அறி பத்து எட்டு இறுத்து அறி.
Be wise by suffering, by poverty, and by paying ten and eight fines.

4481. பட்டு குலைந்தால் பொட்டு.
When silk thread is untwisted, it becomes useless.

4482. பட்டுக் கத்தரித்தது போலப் பேச வேண்டும்.
You must speak carefully as silk is cut by the scissors.

4483. பட்டுக் கோட்டைக்கு வழி எங்கே என்றால், கொட்டைப்பாக்கு விலை நூற்றைம்பது என்கிறான்.
When he was asked which was the way to Pattucotta, he said the price of arica-nuts is a hundred and fifty fanams.

4484. பட்டுக்கு அழுவார் பணிக்கு அழுவார் வையகத்தில் பாக்குக்கு அழுத பாரதத்தைக் கண்டது இல்லை.
There are who cry for a silk cloth, and there are who cry for ornaments; I never saw any one in the world cry for betel nut.

4485. பட்டுப் புடைவை இரவல் கொடுத்து மணை எடுத்துக்கொண்டு திரிவது போல.
Like lending a silk cloth to another, and wandering about carrying a seat with her.

4486. பட்டும் பட்டாவளியும் பெட்டியில் இருக்கும் காற் காசுக் கந்தை ஓடி உலாவும்.
The silk and the velvet are kept in a box, while a rag not worth cash walks about the street.

4487. பட்டைக்குத் தக்க பழம் கயிறு.
An old rope suited to the well-bucket.

4488. பணக்கள்ளி பாயில் படாள்.
A niggardly woman will not lie on a mat.

4489. பணக்காரன் பின்னும் பத்துப் பேர், பயித்தியக்காரன் பின்னும் பத்துப் பேர்.
Ten follow after a moneyed man, and ten after a fool.

4490. பணத்துக்குப் பெயர் ஆட்கொல்லி.
Money is called a man-slayer.

4491. பணத்துக்கு ஒரு அம்பு கொண்டு பாழில் எய்கிறது போல.
Like buying arrows at a fanam each, and wasting them.

4492. பணத்தைக் கொடுத்துப் பணிகாரத்தை வாங்கிப் பற்றைக்குள்ளே இருந்து தின்கவேண்டுமோ?
Is it necessary for you to bide yourself in a bush, and eat the cakes for which you have paid?

4493. பணம் இருந்தால் பாஷா, பணம் இல்லாவிட்டால் பக்கிரி.
If I have money, Pachcha; if not money, Pakkiri.

4494. பணம் இல்லாதவன் பிணம்.
He who has no money is a corpse.

4495. பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்.
If the word money be uttered, even a corpse will open its mouth.

4496. பணம் என்ன செய்யும் பத்து விதம் செய்யும்.
What can money effect? it can do ten kinds of things.

4497. பணம் என்ன பாஷாணம், குணம் ஒன்றே போதும்.
Why money ? it is poison ; a good disposition is enough.

4498. பணம் குலம் ஆகும், பசி கறி ஆகும்.
Money, is rank; hunger, is curry.

4499. பணம் பந்தியிலே குலம் குப்பையிலே.
Money at the festive board, and rank on the dunghill.

4500. பணிகாரமோ சிலுசிலுப்போ ?
Is the sound that of baking cakes, or is it mere frizzle?

4501. பண்டாரம் பிண்டத்துக்கு அழுகிறான், லிங்கம் பால் சோற்றுக்கு அழுகிறது.
The religious mendicant is crying for a mouthfull of food, the linga he worships, for rice and milk.

4502. பண்டை பட்ட பாட்டைப் பழங்கிடுகில் போட்டுவிட்டுச் சம்பா நெல் குத்திப் பொங்கல் இடுகிறாள்.
Having put aside her former troubles on an old cadjan, she husked chamba rice and boiled it.

4503. பண்ணப் பண்ணப் பல விதம் ஆகும்,
The more he makes, the more varied the forms.

4504. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்.
A man's merit may be seen in the grain he grows.

4505. பதறாத காரியம் சிதறாது.
A thing done without haste never fails.

4506. பதறிச் செய்கிற காரியம் சிதறிக் கெட்டுப்போகும்.
A hasty proceeding will go to ruin.

4507. பதினாறும் பெற்றுப் பெருவாழ்வும் வாழ வேண்டும்.
May you bear sixteen children, and live very prosperously.

4508. பத்தி கொள்பவன் முத்தி உள்ளவன்.
The devout attain heaven.

4509. பத்தியத்துக்கு முருங்கைக்காய் கொண்டு வரச் சொன்னால் பால் தெளிக்க அகத்திக் கீரை கொண்டு வருவான்.
When requested to bring murunga fruit for diet, he brings coronilla grandiflora leaves for the milk-sprinkling ceremony. See note under proverb 4584.

4510. பத்தி இல்லாப் பூனை பரமண்டலத்துக்கு ஏறுமா?
Will an ungodly cat ascend to heaven?

4511. பத்தி இல்லாத புத்தி அசேதனம்.
Reason without devotion is folly.

4512. பத்தி உண்டானால் முத்தி உண்டாம்.
If there be piety, there will be final happiness.

4513. பத்தியோடே பாகற்காய் சட்டியோடே தீயுது.
Pagal fruits in clusters are being charred in the chatty.

4514. பத்திலே விழுந்த பாம்பும் சாவாது.
Even a snake that has fallen among ten, will not die.

4515. பத்திலே பசலை இருபதிலே இடும்பு.
At ten childishness, at twenty arrogance.

4516. பத்தினியைத் தொட்டதும் துரியோதனன் பட்டதும்.
By touching the virtuous woman, Dropati, Duriyodhana was ruined.

4517. பத்து இறுத்த பின் பாரச் சந்தேகம் தீர்ந்தது.
After I paid a fine of ten, doubt was removed.

4518. பத்து அரிசியும் வேகவில்லை, பாவி பிராணணும் போகவில்லை .
Ten grains of rice wont boil, the life of the wretch wont go.

4519. பத்துக்கு மேலே ஒரு பறையனுக்கும் தள்ளவேண்டும்.
After ten years of age, a girl should be affianced if even to a pariah.

4520. பத்துப் பணம் கொடுத்தாலும் இத்தனை பதைப்பு ஆகாது.
Though you give ten fanams, such haste is bad.

4521. பத்துப் பேரிலே பதினொராம் பேராய் இருக்கவேண்டும்.
Of the ten, you must pass as the eleventh.

4522, பத்து வராகன்இறுத்தோம், என்றாலும் சந்தேகம் நிவிர்த்தி ஆயிற்றே.
We were fined ten pagodas, however our doubts were removed.

4523. பத்து விதத்திலும் பறையனை நம்பலாம் பார்ப்பானை நம்பக்கூடாது.
In ten ways a Pariah is trustworthy, but a brahman is not.

4524. பத்து ஏர் வைத்துப் படைமரமும் தோற்றேன் எத்தனை ஏர் வைத்துக் கோவணமும் தோற்றாய்?
Possessed of ten yoke of oxen I lost the plough share ; how many yoke did you possess before you lose your waist cloth?

4525. பந்தம் சொன்னார் படைக்காகார்.
Those who regard relationships are unfit for military service.

4526. பந்திக்கு முந்தவேண்டும் படைக்குப் பிந்தவேண்டும்.
Be first at a feast, and last at the fight.

4527. பந்தியிலே வேண்டாம் என்றால் இலை பொத்தல் என்கிறாய்.
When rejected at the feast, thou sayest that the leaf is torn.

4528. பயணக்காரன் பயித்தியக்காரன்.
A man about to set out on a journey, is a fool.

4529. பயித்தியமோ பண்டாரமோ வென்றால் இப்போதுதான் தொடருகிறது என்றான். When I ask him whether he is mad or a mendicant, he says, it is just following.

4530. பயித்தியம் மாறிப்போச்சு உலக்கைத்தடி கொண்டுவா கோவணம் கட்ட.
My madness is gone, bring me a pestle to tie round my waist.

4531. பரணி அடுப்புப் பாழ் போகாது.
A fireplace made on the second lunar day will not be deserted.

4532. பரம்பரை ஆண்டியோ பஞ்சத்துக்கு ஆண்டியோ?
Is he a hereditary mendicant, or a mendicant, because of the famine?

4533. பரிகாரி உறவு தெருவாசல் மட்டும்.
The friendship of the doctor ends at the threshold.

4534. பரியத்துக்கு அஞ்சிக் குருட்டுக் கண்ணியைக் கொண்டது போல.
Like marrying a blind woman to avoid paying the nuptial present.

4535. பரிவு இல்லாப் போசனத்திற் பட்டினி நன்று, பிரியம் இல்லாப் பெண்டிற் பேய் நன்று.
Hunger is preferrable to eating food given without good feeling, a demoness is better than an unkind wife.

4536. பருத்திக் கடையிலே நாய்க்கு அலுவல் என்ன ?
What can a dog have to do in a cotton bazaar?

4537. பருத்திக்காடு உழுகிறதற்கு முன்னே பொம்மனுக்கு ஏழு முழம் திம்மனுக்கு ஏழுமுழம்.
Ere the cotton fields are ploughed, Pomman asks for a cloth of seven cubits, and Timman wants one of the same length.

4538. பருத்தி புடைவையாய்க் காய்த்தது.
The cotton tree produced cloth.

4539. பருத்திப் பொதிக்கு ஒரு நெருப்புப் பொறிபோல.
As a single spark to a bale of cotton.

4540. பருப்பிலே நெய் விட்டது போல.
As ghee was poured on beans.

4541. பருமரத்தை அண்டிய பல்லியும் சாகாது.
If sheltered near a large tree even a lizard will not die.

4542. பல உமி தின்றால் ஒரு அவிழ் தட்டும்.
If one consume plenty of husks, a grain may turn up.

4543. பல சரக்குக்காரனைப் பயித்தியம் பிடித்தது போல.
As the vendor of curry stuff was seized with madness.

4544. பல தீட்டுக்கு ஒரு முழுக்கு.
One ablution for many defilements.

4545. பல துளி பெரு வெள்ளம்.
Many drops make great flood.

4546. பருவத்தே பயிர் செய்.
Cultivate in due time.

4547. பரோபகாரமே பெரிது.
Benevolence is indeed great.

4548. பலத்தவனுக்கு மருந்து சொன்னாற் பிடுங்கிக் கொடுத்துத் தீர வேண்டும்.
If you prescribe medicine for the strong, you must procure the medicinal plants yourself.

4549. பலத்தவன் கைக்கு இளைத்தவன் துரும்பு.
The feeble is a straw in the hands of the powerful.

4550. பல நாளைத் திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான்.
An old thief will one day be caught..

4551. பல பாவம் தீர ஒரு புண்ணியம் ஆகிலும் பண்ண வேண்டும்.
One virtuous deed at least, is required to expiate numerous sins.

4552. பல மரம் கண்ட தச்சன் ஒரு மரம் வெட்டமாட்டான்.
The carpenter who is acquainted with various sorts of wood, is not able to fell a tree.

4553. பல முயற்சி செய்யினும் பகவன் மேல் சிந்தை வை.
After making every effort, fix your mind on God.

4554. பல வீட்டுப் பிச்சை ஆறாய்ப் பெருகும்.
The alms of many houses may flow as a river.

4555. பலன் இல்லாப் பல நாளிலும், அறம் செய் ஒரு நாள் பெரிது.
One day spent in alms giving is greater than many spent in doing nothing.

4556. பலா உத்தமம், மா மத்திபம், பாதிரி அதமம்.
The jack tree is the best, the mango is good, the pathri tree is indifferent.

4557. பல் ஆடப் பசி ஆறும்.
As the teeth move hunger is appeased.

4558. பல்லக்கு ஏற யோகம் உண்டு உன்னி ஏறச் சீவன் இல்லை.
He has a palanquin, but is not able to mount it.

4559. பல்லக்குக்கு மேல் மூடி இல்லாதவனுக்கும், காலுக்குச் செருப்பு இல்லாதவனுக்கும் விசாரம் ஒன்றே.
He whose palanquin has no top, and he who bas no shoes for his feet are equal.

4560. பல்லு விழுந்த புடையன்.
A snake without fangs.

4561. பல்லு விழுந்த புடையனுக்கு கிருதா ?
Is the rage of a fangless snake dangerous?

4562. பவுசு கெட்ட பாக்கட்டிக்கு இரண்டு பக்கமும் தீவட்டியாம்.
A torch on either side of a lump of worthless sugar.

4563. பழக பழகப் பாலும் புளிக்கும்.
By constant use even milk will taste sour.

4564. பழங்கால் தூர்க்கவேண்டாம் புதுக்கால் வெட்ட வேண்டாம்.
Do not fill up an old channel; do not cut a new one.

4565. பழத்திலே பழம் மிளகாய்ப்பழம்.
The chief of berries is the chilli.

4566. பழத்தேங்காயிலே தான் எண்ணெய்,
Old cocoanuts yield oil.

4567. பழம் நழுவிப் பாலில் விழுந்ததுபோல.
Like fruit slipping and falling into milk.

4568. பழம் புண்ணாளி பாதிவைத்தியன்.
He who has an old sore is half a doctor.

4569. பழிக்கு ஆனோர் சிலர் பழி படுவோர் சிலர்.
One hasty commits the crime, and another suffers the penalty.

4570. பழிப்பான கல்வி பாவத்தின் ஊற்று.
Despicable learning is a fountain of sin.

4571. பழிப்பன பகரேல்.
Utter no reproach.

4572. பழுது செய்ததை அறிக்கை இடல் பாதி நிவிர்த்தி.
The confession of a fault removes half its guilt.

4573. பழுத்த ஓலையைப் பார்த்துக் குருத்து ஓலை சிரிக்கிறதாம்.
It is said that the young palm leaf is laughing at the dry leaf because it is falling off.

4574. பழுத்த பழம் கொம்பில் இராது.
Ripe fruit does not remain on the branch.

4575. பழைய கறுப்பன் கறுப்பனே பழைய மண்கிண்ணி மண்கின்ணியே.
My name old Karuppan is still my name, and my earthen basin in still my eating dish.

4576. பழைய குருடி கதவை திறவடி.
O thou blind old woman, open the door.

4577. பழையது மீந்த இடம் காணியாட்சி.
The place where one gets plenty of cold rice is the right one.

4578. பள்ளம் இறைத்தவன் பங்கு கொண்டு போகிறான்.
He who irrigated the low ground takes bis share of the produce.

4579. பள்ளம் உள்ள இடத்திலே தண்ணீர் நிற்கும்.
Water will stand in a hollow.

4580. பள்ளிக் கணக்குப் புள்ளிக்கு உதவாது.
Accounts learnt at school will not be practically useful.

4581. பள்ளிக் குப்பத்துக்கு அம்பட்ட வாத்தியார்.
A barber school master for a village inhabited by Pallis.

4582. பள்ளி பாக்குத் தின்றால் பத்து விரலும் சுண்ணாம்பு.
If a Palli chewsbetel, his ten fingers will be smeared with chunam.

4583. பள்ளிப் பிள்ளை என்றால் செல்வம் குறையுமா?
If you admit that you are a school boy, will your wealth decrease?

4584. பள்ளிக்கு வைக்காமற் கொள்ளிக்குக் குறைத்து வைத்தார்.
My father not only neglected to put me to school, but left me to bear the expenses of the fire brand.
Under this proverb a general note on funeral rites may not be out of place. The particulars given relate to Hindu families generally, not to brahmans.
When a person dies, the grief of the females in the family bursts out into loud lamentations. On its being made known by a conch blower that a death has occurred, the neighboring females go to the house, add the expression of their sympathy, and all unite in one general wail. Frequently one of the company, the mother, or it may be a professional person, breaks out into an ascription of praise regarding the deceaseduttering a sort of elegy in measured cadence. In this case when a climax is reached, all join in a chorus of grief, and some may smite their breasts and tear their hair. In such elegies, which are often of a touching kind, the personal beauty, the talents, the learning and the prowess of the deceased are diveltion(?).
The body being taken out is bathed and dressed as in life. In the case of females the gold and pearls and precious stones, if she possessed them, will be put on. The sectarial marks will be added. The charpoy on which the corpse bas been laid out is then carried into the house. Again the females seat themselves around it and pour forth a torrent of grief, or at any rate make a loud noise. All kinsman whose business it is to attend to the customary observance spreads a cloth on the charpoy to hold rice, called,-rice for the mouth. The females of the family take a little of the grain and put it on the corpse near the mouth. The same ceremony is performedby the male members of the family at the place of cremation. The family barber appropriates the remaining rice. At the burning ground the kinsman who conducts the ceremonies carries a pot of water round the pyre and the conch-blower follows him and makes an incision on the pot with his conch, when the barber puts four bits of sandal or other wood into the hands of the kinsman and points out the places in the pyre where they are to be inserted. The leaking pot is the taken by the barber to be broken near the head of the corpse. The kinsman hastens away that he may not hear the noise of the pot when broken, nor see the burning pyre. Then the barber receive permission to break the put and to ignite the pyre.
On the next or on an early day the male friends of the deceased assemble at the place of cremation. The skull, the breast-bone and the bones of the hands having been abstracted from the ashes deposited in a convenient place covered with a plantain leaf, and the nearest of kin smeared with oil, ghee and honey and covered in flowers, whilst a priest recites appropriate incantations in the presence of the relatives. A pot of milk havingbeen provided for this ceremony, therelatives take a sprig of coronilla grandiflora and having dippedit, in the milky sprinkle the relics, which are then putinto an unburnt earthen vessel, covered with cloth to be cast into the sacred stream or bestowed on the ocean wave. Of course these elaborate rites are dispensed withby thepoor.
I have seen Hindus, not by any means in abject circumstances convey a corpse to the seaside, where a grave had been hastily dug and take off the clothand ornaments, wrap the body in a common mud(?) and bury it with the burial of a dog. In the year 1830 when travelling in Bengal I saw, on the bank of the Damooda, a sorrowing brahmanical father with two or three attendants dispose of a corpse with but little ceremony. The father himself who was much affected ignited the pyre.

4585. பள்ளி ஒளித்திரான் பார்ப்பான் குளித்திரான்.
A palli does not like to be secluded, nor does a brahman fast after bathing.

4586. பறக்கிற பறவைக்கு எது தூரம் ?
What is distancetoabird on the wing?

4587. பறக்கும் காகம் இருக்கும் கொம்பு அறியாதது போல.
As a crow on the wing knows not on what branch itwill alight.

4588. பறக்கும் குருவிக்கு இருக்கும் கொம்புதெரியாது, பரதேசிக்குத் தங்கும் இடம் தெரியாது.
A bird on the wing knows not the branch on which it may alight,a stranger knows not his halting place.

4589. பறந்து போகிற எச்சிற் கல்லை மேல் கல்லைத் தூக்கி வைத்தாற்போல.
Like one placing a stone an a flying leaf that has been used for a rice-plate.

4590.பறப்பான் பயிர் இழந்தான். அறக்காஞ்சி பெண்டுஇழந்தான்.
A hasty man loses the produce of this field, and the jealous man his wife.

4591. பறித்த காட்டுக்குப் பயம் இல்லை.
No further fear in a jungle, where one has been already robbed.

4592. பறைச்சி பிள்ளையைப் பள்ளிக்கு வைத்தாலும் பேச்சிலே அய்யே என்னுமாம்.
Though a pariah child be sent to school, he will still call his father ayye.

4593. பறை தட்டினாற்போல.
Like striking grain to the level of the measure.

4594. பறைத் தெருவிலே வில்வம் முளைத்ததுபோல.
As a vilva tree sprang up in a pariah street.

4595. பறைப்பாட்டுக்கும் பறைப் பேச்சுக்கும் சுரைப்பூவிற்கும் மனம் இல்லை
A pariah's song, his dialect, and a surai flower, have no fragrance in them.

4596. பறையனும் பார்ப்பானும் போல.
Like a pariah and a brahman.

4597. பறையன் பொங்கல் இட்டால் பகவானுக்கு ஏறாதோ?
If a pariah boil rice as an offering to God, will it not be accepted?

4598. பறையை பள்ளிக்கு வைத்தாலும் துறைப் பேச்சுப் போமா?
Though a pariah is schooled, will his vulgar brogue be altered?

4599. பறைவேலை அரைவேலை.
The work of a pariah is only half done.

4600. பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா?
Will the jackal of the palmyrah grove tremble at the rustling of leaves?

4601. பனிக்கண் திறந்தால் மழைக்கண் திறக்கும்.
If there be dew, there will be no rain.

4602. பனி பெய்து கடல் நிறையுமா ?
Will the sea be filled by the falling dew?

4603. பனி பெய்து குளம் நிரம்புமா?
Will the falling dew fill the tank?

4604. பனி பெய்தால் மழை இல்லை, பழம் இருந்தால் பூ இல்லை.
When there is dew there is no rain, when fruit is ripe there is no blossom.

4605. பனிப் பெருக்கிலே கப்பல் ஓட்டலாமா ?
Can you sail a ship in heavy dew?

4606. பனியை நம்பி ஏர்ப்பூட்டினது போல.
Like beginning to plough depending on the dew.

4607. பனை ஏறியும் பாளை தொடாது இறங்கினாற்போல.
Like descending from a palmyrah tree without touching the flower spathe.

4608. பனை ஏறி விழுந்தவனைக் கடா ஏறி மிதித்தது போல.
Like a buffalo trampling on a person who has fallen from a palmyrah tree.

4609. பனை மரத்தின் கீழே பாலைக் குடித்தாலும் கள் என்று நினைப்பார்.
Though what you drink in a palmyrah grove be milk, every one will believe it to be toddy.

4610. பனைமரத்திற்கு நிழல் இல்லை பறையனுக்கு முறை இல்லை.
A palmyrah tree casts no shade, a pariah has no rules.

4611. பனை மரம் ஏறுகிறவனை எதுவரையும் தாங்கலாம்?
How far can you support a man who is climbing a palmyrah tree?

4612. பனையின் நிழலும் நிழலோ பகைவர் உறவும் உறவோ?
Is the shadow of a palmyrah tree a shade, is the acquaintance of an enemy friendship?

4613. பனையில் இருந்து விழுந்தவனைப் பாம்பு கடித்தது போல்.
Like a snake biting one who has fallen from a palmyrah tree.

4614. பனை வெட்டின இடத்திலே கழுதை வட்டம் போட்டது போல.
Like an ass going round a place where a palmyrah tree had been felled.

4515. பன்றிக்குட்டிக்கு ஒருசந்தி ஏது?
Does a young pig observe fasts?

4516. பன்றிக்குட்டி ஆனை ஆமா?
Will the young pig become an elephant?

4617.பன்றி பட்டால் அவனோடே, காட்டானை பட்டால் பங்கு.
If a hog be shot he takes the whole, if an elephant be shot I shall have a share.

4618. பன்றி பல குட்டி, சிங்கம் ஒரு குட்டி.
The sow has many young ones at a time, the lioness only one.

4619. பன்றி பல குட்டி போட்டு என்ன?
What, if a sow has a numerous litter?

4620. பன்றியோடு கூடிய கன்றும் மலம் தின்னும்.
A calf that goes with a pig will eat excrement.

4621. பன்னக்காரன் பெண்டில் பணியக் கிடந்து செத்தாளாம்.
It is said that the wife of a mat-maker died on the bare ground.

4622. பன்னிப் பன்னிப் பழங்கதை படியாதே.
Do not tell old stories with affectation.

4623. பாகற் கொட்டை புதைக்கச் சுரைக் கொட்டை முளைக்குமா?
Willa bottle gourd spring from a pagal seed ?

4624. பாசம் அற்றவன் பரதேசி.
He who has no ties is like a foreigner.

4625. பாடகக்காலி வாழ்ந்தால் பத்து எட்டுச் சனம் பிழைக்கும்.
If the foot-ringed lady prosper, eight or ten people may be supported thereby.

4626. பாடம் ஏறினும் ஏடு கைவிடேல்.
Though you have learnt your lesson, do not throw away your book.

4627. பாடிப் பாடிக் குத்தினாலும் பதரில் அரிசி இல்லை.
Though pounded with a song, chaff will not yield rice.

4628. பாடு என்றால் பாணனும் பாடான்.
When pressed to sing, even the professional singer refuses.

4629. பாடு படாமற் போனால் பலன் இல்லாமற் போகும்.
Where there is no labour, there is no profit.

4630. பாடும் புலவர் கையிற் பட்டோலை ஆனேனே.
I am become an ola in the band of a poet.

4631. பாடை ஏறினும் ஓடு கைவிடேல்.
Though you may ascend the bier, forsake not your alms-dish.

4632. பாணம் தொடுத்தாற் போலப் பேசுகிறான்.
He speaks as if arrows were darting forth.

4633. பாதகர் பழக்கம் பாம்பொடு பழகல் போல.
Friendship with the wicked, is like playing with snakes.

4634. பாதிச் சுரைக்காய் கறிக்கும் பாதிச் சுரைக்காய் விதைக்குமா?
Can you take half a churaikay for curry, and use the other half as seed?

4635. பாத்திரம் அறிந்து பிச்சை இடு, கோத்திரம் அறிந்து பெண் கொடு.
Give alms to the worthy, and your daughter to one of a good family.

4636. பாப்புக்கு மூப்பு இல்லை.
Brahmans have no chiefs.

4637. பாமணி ஆற்றிலே பல்லை விளக்கு, முல்லை ஆற்றிலே முகம் கழுவு.
Begin to clean your teeth atPamani river, wash your face in Mullai river.

4638. பாம்பாட்டி பாம்பிலே , கள்ளன் களவிலே.
A snake charmer understands snakes, a thief understands thieving.

4639. பாம்பிலும் பாம்புக்குட்டி விஷம் அதிகம் வீரியமும் அதிகம்.
A young snake is more poisonous and vigorous than an old one.

4640. பாம்பின் குட்டி பாம்பு அதன் குட்டி நட்டுவாக்காலி.
The young one of a snake is a snake, and its young one is a scorpion.

4641. பாம்பின் வாய்த் தேரைபோல.
Like a toad in the jaws of a snake.

4642. பாம்புக்கு மூப்பு இல்லை.
Snakes have no chiefs.

4643. பாம்பு கடிக்கத் தேளுக்குப் பார்க்கிறதோ?
When bitten by a snake, will the incantations suited to scorpion bites avail aught?

4644. பாம்புக்கு இராசா மூங்கில் தடி.
A bambu stick is king to a snake.

4645. பாம்புக்குச் சத்துரு பஞ்சமா?
Are the enemies of snakes few?

4646. பாம்புக்குத் தலையைக் காட்டி மீனுக்கு வாலைக் காட்டி.
Showing the head to snakes, and the tail to fish.
Spoken of a two-faced person, in allusion to an eel that shows its serpent-like head to snakes, and its fish-like tail to fish.

4647. பாம்புக்குப் பால் வார்த்து வளர்த்தாலும் விஷத்தைக் கொடுக்கும்.
Though you feed a snake with milk, it will yield poison.

4648. பாம்புக்குப் பால் வார்த்தது போல.
Like pouring out milk to a snake.

4649. பாம்பும் கீரியும் போல.
Lik a snake and a mungoose.

4650. பாம்பும் கீரியும் போலப் பல காலம் வாழ்ந்தேன்.
I lived a long time with him or her as a snake with a mungoose.

4651. பாம்பு தன் பசியை நினைக்கும் தேரை தன் விதியை நினைக்கும்.
The snake has regard to its hunger, the frog thinks of its fate.

4652. பாம்பு பசிக்கில் தேரையைப் பிடிக்கும். அதுபோல, சிறியோர் சிறிய காரியங்களையே செய்வார்.
When a snake is hungry it will catch a frog, so the vile perform only mean acts.

4653. பாம்பு தின்கிற ஊரிலே போனால் நடு முறி நமக்கு என்று இருக்கவேண்டும்.
If we go to a country of snake eaters, we must be prepared for the middle bit.

4654. பாம்பு பகையும் தோல் உறவுமா?
Is the snake hostile, and its skin friendly?

4655. பாம்புக்குப் பகை கருடன்.
The hawk is inimical to the snake.

4656. பாம்பும் நோவாமற் பாம்பு அடித்த கோலும் நோவாமல் இருக்கவேண்டும்.
So strike that neither the snake, nor the staff with which you strike, shall be hurt or injured.

4657. பாம்பு என்றால் படையும் நடுங்கும்.
Even an army will tremble at the word snake.

4658. பாம்பொடு பழகேல்.
Have nothing to do with snakes.

4659. பாய்கிற மாட்டுக்கு முன்னே வேதம் சொன்னாற்போல.
Like reciting a portion of the vedas, to a cow about to gore you.

4660. பாய்மரம் சேர்ந்த காகம் போல் ஆனேன்.
I have become like a crow on the top of a mast.

4661. பாய்மரம் இல்லா மரக்கலம் போல.
Like a vessel without a mast.

4662. பாரபுத்தி உள்ள பறவை பதரால் பிடிக்கப்பட்டது.
A wise bird has been caught with chaff.

4663. பாராத உடைமை பாழ்.
Property not looked after perishes.

4664. பாறைக்கு ஊடாடாப் பாறை பசுமரத்தின் வேருக்கு ஊடாடி விடும்.
The rock that resists a crowbar, gives way to the roots of a tender plant.

4665. பார் ஆளலாமென்று பால் குடிக்கிறாய்.
Thou drinkest milk, hoping to govern the world.

4666. பார்க்கக் கொடுத்த பணத்துக்கு வெள்ளிக்கிழமையா?
Is Friday a sufficient excuse for not returning the coin given you to look at?
It is believed by many that, though it is fortunate to receive money on Friday, it is unfortunate to pay it.

4667. பார்க்கிற கண்ணுக்குக் கேட்கிற செவி பொல்லாது.
A listening ear, is worse than a seeing eye.

4668. பார்த்த கண்ணும் பூத்துப் பகலும் இரவு ஆயிற்று.
The eyes have failed by looking too long, and night has followed the day.

4669. பார்த்த முகம் எல்லாம் வேற்று முகம்.
All the faces we see are diverse from one another.

4670. பார்த்தாற் பசுப்போல, பாய்ந்தால் புலிப்போல.
In appearance like a cow, in action like a tiger.

4671. பார்த்திருக்கத் தின்று விழித்திருக்கக் கை கழுவுவான்.
Gazed at-by starving beggars-he eats and washes his hands.

4672. பார்த்திருந்தவள் பச்சை குத்தினாள், கேட்டிருந்தவள் வறுத்துக் குத்தினாள்.
She who had seen the process pounded it undried, she who be heard of it pounded roasted.

4673. பார்ப்பதற்கு அரிய பரப் பிரமம்.
It is impossible to comprehend the supreme Brahma.

4874. பார்ப்பாத்தி அம்மா மாடு வந்தது.
Brahman matron, the cow has come.

4675. பார்ப்பாத்தி உப்புக்கண்டம் போக்கடித்தது போல.
As a brahman woman lost her salted mutton.

4676. பார்ப்பார் சேவகமும் வெள்ளைக் குதிரைச் சேவகமும் ஆகாது.
The service of a brahman, and the cate of a white horse are bad.

4677. பார்ப்பானுக்கு வாய்போக்காதே ஆண்டிக்கு அதுதானும் சொல்லாதே.
Do not waste your breath on a brahman, nor converse with a mendicant.

4678. பார்ப்பான் கறுப்பும் பறையன் சிவப்பும் ஆகாது.
A black brahman, and a fair pariah are not trustworthy.

4679. பார்ப்பான் ஏழையோ பசு ஏழையோ?
Which is the more helpless, a brahman or a cow?

4680. பாலருக்குப் பலம் அழுகை, மட்சத்துக்குப் பலம் உதகம்.
The strength of a child is crying, and that of fish is water.

4681. பாலர் மொழி கேளாதார் குழல் இனிது யாழ் இனிது என்பார்.
Those who have not heard the lisping of their own children say, that the flute is sweet, the stringed instrument is sweet.

4682. பாலான நெஞ்சு எல்லாம் பகை ஆக்கினான்.
He has made enemies of all whose hearts are pure as milk.

4683. பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்.
He is the guard of the milk, and also the friend of the cat.

4684. பாலுக்கு வந்த பூனை மோரைக் குடிக்குமா ?
Will the cat that has come for new milk, drink buttermilk?

4685. பாலுக்குச் சீனி இல்லை என்றோர்க்கும் கூழுக்குக் கறி இல்லை என்றோர்க்கும் விசாரம் ஒன்றே.
The care of those who want sugar with milk, and of those who want curry for their rice, are the same.

4686. பாலுமாம் மருந்துமாம்.
It is of use both as milk and medicine.

4687. பாலும் பதக்கு, மோரும் பதக்கோ ?
Is the rate of fresh milk that of buttermilk?

4688. பாலும் வெள்ளை மோரும் வெள்ளை.
Milk is white and buttermilk is also white.

4689. பாலை ஊட்டுவார்கள் பாக்கியத்தை ஊட்டுவார்களா?
They may feed him with milk; can they feed him with good fortune?

4690. பாலைக்குடித்தவனுக்குப் பால் ஏப்பம் வரும், கள்ளைக் குடித்துவனுக்குக் கள் ஏப்பம் வரும்.
He who has drank milk will belch milk, and he who has drank a toddy will belch toddy.

4691. பாலைப் பார்க்கிறதா பானையைப் பார்க்கிறதா?
Do you examine the milk or the vessel containing it?

4692. பாலொடு கலந்த நீரும் பாலாகும்.
Water mixed with milk looks like milk.

4693. பாலோடாயினும் காலம் அறிந்து உண்.
Though with milk, take your meals at the proper time.

4694. பால் ஆரியனுக்கு, பசு ராமநாதசுவாமிக்கு.
Milk to an Aryan, and a cow for Ramanadaswami.

4695. பால் இருக்கிறது பாக்கியம் இருக்கிறது, பாலிலே போட்டு குடிக்கப் பத்துப் பருக்கைக்கு வழி இல்லை.
There is milk and money, but no means for procuring ten grains of rice.

4696. பால் தொட்டுப் பால் கறக்கவேண்டும்.
One must draw milk after moistening the fingers with milk.

4697. பால் நக்காத பூனையும் பரிதானம் வாங்காத பிராமணனும் உண்டா?
Is there a cat that will not lap milk, or a brahman that will refuse
a bribe?

4698. பால் பசுவைக் கன்றிலே தெரியும், பாக்கியவான் பிள்ளையை முகத்திலே தெரியும்.
The milch cow is known by its calf, and the child of the wealthy by its face.

4699. பால் வார்த்து முழுகுவான்.
He will bathe after applying milk to the head.
Intimating that a person inimical has been got rid of.

4700. பாவட்டம் பூப்போல நரைத்தும் புத்தி இல்லை.
Though as grey as a pavattam flower, he has no sense.

4701. பாவத்திற்கு இடம் கொடாதவன் பாவத்தைச் செயங்கொள்வான்.
He who does not give place to sin, will conquer it.

4702. பாவம் செய்யாதிரு, மனமே!
O my heart, do not sin !

4703. பாவலர் அருமை நாவலர் அறிவார்.
The ability of a poet is best known to the learned.

4704. பாவியார் போன இடம் எல்லாம் பள்ளமும் திட்டியும்.
Whithersoever the simple go, they meet with ups and downs.

4705. பாவியைப் பிடித்துப் பாம்பு ஆட்டுகிறது.
Seizing a simpleton and making him dance like a snake.

4706. பாவில் இருக்கிறது பார்த்தும் இருக்கிறது.
That which is described in poetry is also seen in nature.

4707. பாழாய்ப் போகிறது பசுவின் வாயிலே.
That which is spoiled is put in the mouth of a cow.

4708. பாழ் ஊருக்கு நரி ராஜா.
The jackal is king in a deserted village.

4709. பானையில் உண்டானால் அகப்பையில் வரும்.
If in the pot, it will come into the spoon.

4710. பானையிலே பதக்கு நெல் இருந்தால் மூலையிலே முக்குறுளி தெய்வம் கூத்தாடும்.
If there be a pathaku of rice in the pot, three kurunies of gods will dance in the corner.

4711. பிசினி தன்னை வசனிப்பது வீண்.
It is useless to extol a miser.

4712. பிச்சன் வாழைத் தோட்டத்திலே புகுந்தது போல.
As a madman entered the plantain grove.

4713. பிச்சைக்காரனுக்குப் பயப்பட்டு அடுப்பு மூட்டாமல் விடுகிறதா?
Through fear of beggars do you refrain from lighting your fire?

4714. பிச்சைக்காரனை அடித்தானாம் சோளியைப் போட்டு உடைத்தானாம்.
It is said that he beat the mendicant and broke his alms-dish.

4715. பிச்சைக்காரன் சோற்றிலே சனீச்சுரன் புகுந்தது போல.
As Saturn entered into the rice of the mendicant.

4716. பிச்சைச் சோற்றிலும் எச்சிற் சோறா?
What! scrupulous about leavings in rice got by begging?

4717. பிச்சைக்காரன் மேலே பிரமாஸ்திரம் தொடுக்கிறதா?
Is an enchanted arrow discharged at a mendicant?

4718. பிச்சைக்கு வந்தவன் பெண்ணுக்கு மாப்பிள்ளையா?
Do you propose giving your daughter in marriage to one who came to ask alms?

4719. பிச்சைக்கு மூத்தது கச்சவடம்.
Merchandize is a little better than begging.

4720. பிச்சைச் சோற்றிலும் குழைந்த சோறா?
Is rice offered in charity refused because it is overboiled?

4721. பிச்சைச் சோற்றிற்குப் பஞ்சம் உண்டா ?
Is rice given in charity ever scarce?

4722. பிச்சை போட்டது போதும் நாயைக் கட்டு.
The alms given are sufficient; tie up the dog.

4723. பிச்சை புகினும் கற்கை நன்றே.
Learning is good even when one is reduced to begging.

4724. பிச்சை இட்டுக் கெட்டவனும் உண்டா ?
Has any one been ruined by giving alms ?

4725. பிச்சை இட்டுக் கெட்டவனும் இல்லை, பிள்ளை பெற்றுக் கெட்டவனும் இல்லை. None is ruined by giving alms; none is ruined because he has a family.

4726. பிச்சை எடுத்தும் சத்துருவின் குடி கெடு.
Though you have to beg, destroy the family of your enemy.

4727. பிடாரம் பெரிதென்று புற்றிலே கை வைக்கலாமா?
Relying on the efficacy of the prescribed remedy, will you put your hand in a snake hole?

4728. பிடாரனுக்கு அஞ்சிப் பாம்பு எலிக்கு உறவு ஆச்சுதாம்.
It is said that a snake afraid of the charmer, sought the friendship of a rat.

4729. பிடாரியாரே கடா வந்தது.
O, demon, the bull has come.

4730. பிடாரி வரம் கொடுத்தாலும் ஓச்சன் வரம் கொடுக்கிறது அரிது.
Though a pidari may grant a favour, it will be difficult to obtain it through the priest.

4731. பிடி அழகி புகுந்தால் பெண் அழகி ஆவாள்.
If a woman ornamented with jewels enter, she will be regarded a a beautiful woman.

4732. பிடிக்குப்பிடி நமசிவாயமா.
Are incantations to be used again and again.

4733. பிடித்த கொம்பும் விட்டேன் மிதித்த கொம்பும் விட்டேன்.
I have left the branch I had seized, and also the one on which I was standing.

4734. பிடித்த கொம்பும் ஒடிந்து மிதித்த கொம்பும் முறிந்தாற்போல் ஆனேன்.
I have become as helpless as if the branch I seized, and the one I stood upon, both broke at the same time.

4735. பிடித்தாற் கற்றை, விட்டாற் கூளம்.
If tied, a bundle; if loose, bits of straw.

4736. பிக்ஷாபதியோ லக்ஷாபதியோ?
Is he the prince of beggars, or the first as possessing lace?

4737. பிணத்தை மூடி மணத்தைச் செய்.
Bury the corpse, and then celebrate the marriage.

4738. பிணம் போகிற இடத்தே துக்கமும் போகிறது.
Sorrow goes away to the place whither the corpse has gone.

4739. பிணைப்பட்டுக் கொள்ளாதே பெரும்பவத்தை உத்தரிப்பாய்.
Do not stand security, it will lead to endless evils.

4740. பிண்டத்துக்குக் கிடையாதது தெண்டத்துக்கு அகப்படும்.
That which cannot be obtained for sustenance, will be found to pay a fine.

4741. பித்தம் பத்து விதம்.
Madness is of ten kinds i. e., many kinds.

4742. பித்தளை நாற்றம் அறியாது.
Brass is innocent of its own odour.

4743. பித்தர்க்குச் சில புத்திகள் சொன்னால் பேச்சைக் கேட்பாரா?
If advice be given to fools will they listen to it?

4744. பித்தனுக்குத் தன் குணம் நூலினும் செவ்வை.
The madman thinks his own character straighter than a line.

4745. பிரமசாரி ஓடம் கவிழ்த்தது போல.
As the brahmachari upset the boat.

4746. பிரமா நினைத்தால் ஆயுசுக்குக் குறையா?
If Brahma wills it, is there any chance of your life being short ?

4747. பிழைக்கப்போன இடத்திலே பிழைமோசம் வந்ததுபோல.
As a grave occurrence befell one in the place to which he had gone for a livelihood.

4748. பிள்ளைக்காரன் பிள்ளைக்கு அழுகிறான் பணி செய்வோன் காசுக்கு அழுகிறான்.
The parent weeps on account of his child, the servant weeps for his hire.

4749. பிள்ளைக்கு விளையாட்டுச் சுண்டெலிக்குப் பிராண சங்கடம்.
That which is sport to the child, is death to the mouse.

4750. பிள்ளை பதினாறு பெறுவாளென்று எழுதி இருந்தாலும், புருஷன் இல்லாமல் எப்படிப் பெறுவாள்?
Though it were written in the horoscope that she would have sixteen children, how could that be without a husband?

4751. பிள்ளை பெற்றவனுக்கும் மாடு படைத்தவனுக்கும் வெட்கம் இல்லை .
A parent and a cowherd know no shame.

4752.பிள்ளை பெற்றவளைப் பார்த்துப் பெருமூச்சு விட்டு ஆவதுஎன்ன ?
What if you look at her who has borne a child, and sigh?

4753. பிள்ளை அருமை மலடி அறிவாளா?
Does a barren woman understand the endearments of a child?

4754. பிள்ளையாருக்குப் பெண் கொள்வது போல.
Like obtaining a wife for Ganesha.

4755. பிள்ளையாரைப் பிடித்த சனி அரசமரத்தையும் பிடித்ததுபோல.
As Saturn who had seized Ganesha seized also the tree-ficus Indica.

4756. பிள்ளையார் கோவிலில் திருடன் இருப்பான், சொன்னாலும் கோள்.
The thief has taken refuge in the temple of Pillaiyar, it would how-ever be a slander to mention it.

4757. பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது.
The attempt to form an image of Ganesha, ended in the formation of a monkey.

4758.பிள்ளை இல்லா வீட்டில் கிழவன் துள்ளி விளையாடுகிறானாம்.
It is said that in the house in which there are no children, an old man plays likea child.

4759. பிள்ளையும் புழுக்கையும் சரி, பிள்ளைக்கும் புழுக்கைக்கும் இடம் கொடாதே.
A child and a slave are alike, be not indulgent to a child or a slave.

4760. பிள்ளையும் கிள்ளித் தொட்டிலும் ஆட்டுகிறதா?
Do you rock the cradle, while pinching the child?

4761. பிள்ளையைச் சாக்கிட்டுப் பூதம் விழுங்குகிறது.
Pretending to feed the child, the goblin swallows it.

4762. பிள்ளை வரத்திற்குப் போய் புருஷனைப் பறிகொடுத்தது போல.
Like losing her husband, when she went to ask the gift of offspring.

4763. பிள்ளை வருத்தம் பெற்றவளுக்குத் தெரியும் மற்றவளுக்குத் தெரியுமா?
A mother knows the pain of travail, is it known to others?

4764. பிள்ளை வீட்டுக்காரர் சம்மதித்தால் பாதி விவாகம் முடிந்தது போல.
If the family of the bridegroom consent, half the ceremony of marriage is over.

4765. பிறக்கிறபொழுதே முடம் ஆனால் பேய்க்கு இட்டுப் படைத்தால் தீருமா?
If a person be a cripple from his birth, can he be cured by offerings made to demons?

4766. பிறந்த பிள்ளை பிடி சோற்றிற்கு அழுகிறது, பிறக்கப்போகிற பிள்ளைக்குத் தண்டை சதங்கை தேடுகிறார்களாம்.
It is said that they are making silver bells for the child about to be born, while the child on the lap is crying for a handful of rice.

4767. பிறந்தவன் இறப்பதே நிசம்.
It is certain that he who is born will die.

4768. பிறந்தன இறக்கும் தோன்றின மறையும்.
Those who are born will die, what is visible will vanish.

4769. பிறந்த அன்றே இறக்கவேண்டும்.
The day of birth leads to death.

4770. பிறந்த ஊருக்குச் சேலை வேண்டாம், பெண்டு இருந்த ஊருக்குத் தாலி வேண்டாம்.
A sumptuous cloth is not required in one's native village, nor a tali where one is known as a wife.

4771. பிறர் பொருளை இச்சிப்பான் தன் பொருளை இழப்பான்.
He who covets the property of others, will lose his own.

4772. பிறர்மனைத் துரும்பு கொள்ளான் பிராமணன் தண்டு கொண்டான்.
He who would not carry off a rush belonging to another's roof, robbed a brahman his master of his staff.

4773. பிறவிச் செவிடனுக்குப் பேசத் திறமுண்டா ?
Are there any clever of speech who were born deaf?

4774. பிறவிக் குருடனுக்குக் கண் கிடைத்தது போல.
As one born blind received sight.

4775. பிறன் மனை புகாமை அறம் எனத் தகும்.
Not going to another man's house, deserves to be called virtue.

4776. பின்னாலே வரும் பலாக்காயினும் முன்னாலே வரும் களாக்காய் நலம்.
A kalakkay is better in hand, than a jack fruit in prospect.

4777. பின்னை என்பதும் பேசாதிருப்பதும், இல்லை என்பதற்கு அடையாளம்.
By and by, and silence, are tantamount to a refusal.

4778. பீரம் பேணி பாரம் தாங்கு.
Preserve your strength and bear the burden.

4779. பீறின புடைவை பெருநாள் இராது.
A ragged cloth will not wear long.

4780. பீற்றற் பட்டைக்கு அறுதற்கொடி.
A broken cord, and a ragged basket (well-bucket.)

4781. புகழ்ச்சியானுக்கு ஈந்தது பூதக்கண்ணாடி.
That which was given to the praise-worthy, is a microscope.

4782. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்.
Defend those who acknowledge your merit.

4783. புகைக்கினும் காரகில் பொல்லாங்கு எழாது.
Though eaglewood produces smoke, it will do no harm.

4784. புங்கப்புகழே தங்கத்திகழே.
The contempt of riches is the highest praise.

4785. புண்ணியத்துக்குக் கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டது போல.
As a demon came out of a well that had been dug as an act of religious merit.

4786. புண்ணியத்துக்கு உழுத மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்த்ததுபோல.
Like looking at the teeth of a bullock that is ploughing for nothing.

4787. புண்ணியம் பார்க்கப் போய்ப் பாவம் பின்னே வந்ததாம்.
It is said that evil followed the man who attempted a kind act.

4788. புண்ணியம் இல்லாத வழிகாட்டி வீண்.
A leader not virtuous is worthless.

4789. புண்ணிலே கோல் இட்டது போல.
Like thrusting a stick into a wound.

4790. புண்ணிலே புளி பட்டதுபோலே.
As if a sore had become acidified.

4791. புண்ணுக்கோ மருந்துக்கோ வீசம்?
Whether calls for immediate action, the sore or its remedy?

4792. புதிய காரியங்களிற் புதிய யோசனை வேண்டும்.
New things require fresh consideration.

4793. புதிய வண்ணானும் பழைய அம்பட்டனும் தேட வேண்டும்.
Employ a new washerman, but an old barber.

4794. புதிய வண்ணான் பொந்துகட்டி வெளுப்பான்.
A new washerman will wash with great care.

4795. புதியாரை நம்பிப் பழையாரைக் கைவிடலாமா?
Is it right to forsake old friends in reliance un pew ones?

4796. புதுக் குடத்திலே வார்த்த தண்ணீர்.
Water poured into a new pot.

4797. புதுப் பானைக்கு ஈ சேராது.
Flies do not swarm on anewpot.

4798. புதுப் பெண்ணே புதுப் பெண்ணே நெருப்பு எடுத்துவா, உனக்குப் பின்னாலே இருக்கிறது செருப்பு அடி.
O bride, O bride bring some fire, what awaits you is slippering.

4799.புதுமையான காரியம் தான் இந்தக் கலியுகத்தில்.
Certainlyit is a strange occurrence in kaliyuga.

4800. புதுமைக்கு வண்ணான் பறை தட்டி வெளுத்தான்.
The washerman inaugurated his washing by beat of tomtom.

4801. புதையல் எடுத்தவனைப்போலே.
Like one that has discovered buried treasure.

4802.புத்தி கெட்ட ராஜாவுக்கு மதி கெட்ட மந்திரி.
A foolish king and an ignorant minister.

4803. புத்தி அற்றோரும் தூங்கினர், புத்தி உற்றோரும் தூங்கினர்.
Both the foolish and the wise slept.

4804. புத்திமான் பலவான்.
An intelligent man is strong.

4805. புத்தி முற்றினவர்க்குச் சித்தியாதது ஒன்றும் இல்லை.
There is nothing in which the mature in judgment fail.

4806. புத்தி உறப் புகழ்.
As soundness of judgment increases, praise will follow.

4807. புத்தி அற்றவர்கள் பத்தியாய்ச் செய்வதும் விபரீதமாம்.
Even that which foolsperform earnestly is wrong.

4808. புத்தி ஈனர்கள் குளிக்கப் போய்ச் சேற்றைப் பூசிக்கொள்வார்கள்.
When the foolish go to wash, they will daub themselves with mud.

4809. புரட்டிப் புரட்டிப் உதைக்கிறபோதும், மீசையில் மண் படவில்லை என்கிறான்.
Even when kicked about and rolling in the dust, he affirms that his mustache did not touch the earth.

4810. புருஷன் அடிக்கக் கொழுந்தன் கோபித்தது போல.
Like the younger brother of the husband, rebuking him for beating his wife.

4811. புருஷனுக்கு ஏற்ற மாராப்பு.
The cloth covering the breast suited to the rank of her husband.

4812. புருவத்திற் பட்டால் கரிக்குமோ கண்ணில் பட்டால் கரிக்குமோ ?
When does acid cause smarting, when it is applied to the eye-brow or the eyes?

4813. புலி அடிக்கு முன்னே கிலி அடிக்கும்.
Struck with fear before struck by the tiger.

4814. புலிக்குப் பிறந்து நகம் இல்லாமற் போகுமா?
Being born a tiger, will it be without claws?

4815. புலிக்குத் தன் காடு என்ன வேற்றுக்காடு என்ன?
What matters it to the tiger whither he is in his native jungle or another?

4816. புலிக்குப் பிறந்து பூனையாய்ப் போகுமா?
Being born a tiger, will it become a cat ?

4817. புலிக் கூட்டத்தில் மான் அகப்பட்டது போல.
As the deer was caught among tigers.

4818. புவி செவி திருகிய மத களிறு.
An elephant in rut whose ears were wrung offbya tiger.

4819. புலி நகம் படாவிட்டாலும், அதன் மீசை குத்தினாலும் விஷம்,
Though one may escape the claws of the tiger, even the pricking of its whiskers will prove malignant.

4820. புலி பசித்தால் புல்லுத் தின்னுமா?
When the tiger is hungry, will he eat grass?

4821. புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு இடம்.
The crouching of the tiger is the prelude to a spring.

4822. புலிப் பால் குடித்தவன் போல் இருக்கிறான்.
He is like one fed on tiger's milk.

4823. புலியைப் பார்த்து நரி சூடு இட்டுக்கொண்டதுபோல.
As the jackal branded itself in imitation of the stripes of a tiger.

4824. புலையனுக்கு வாக்குச் சுத்தியும் ஆணையும் இல்லை.
The base do not talk decently, nor do they heed oaths.

4825. புலையும் கொலையும் களவும் தவிர்.
Avoid lies, murder and theft.

4826. புல் உள்ள இடத்தில் மாட்டை ஆட்டை மேய ஒட்டாது.
It will not allow either sheep or cows to graze where there is grass.

4827. புல்லும் பூமியும் உள்ளமட்டும்.
As long as vegetation and the earth exist.

4828. புல்லும் பூமியும் கல்லும் காவேரியும் உள்ள மட்டும்.
As long as vegetation, earth, rocks and the Cauvery exist.

4829. புல்லு விற்கிற கடையிலே பூ விற்கிறது.
Selling flowers in a grass market.

4830. புல்லைத் தின்னும் மாடுபோலப் புலியைத் தின்னும் செந்நாய் உதவுமா?
Will the red dog that eats tiger’s flesh prove as useful as the cow that eats grass ?

4831. புழுக்கை கலம் கழுவித் தின்னாது.
The low-born doos not eat from a washed plate.

4832. புழுக்கை ஒழுக்கம் அறியுமா பிண்ணாக்குச் சட்டி பதம் அறியுமா?
Does the low-born appreciate good manners, does the oil cake pan know when the cake is baked?

4833. புழுக்கை ஒழுக்கம் அறியாது பித்தளை நாற்றம் அறியாது.
Menials are ignorant of manners, brass is unconscious of its ill odour.

4834. புழுக்கைக்குப் புத்தி பிடரியிலே.
The sensibility of menials is in the neck.

4835. புழுங்கிப் புழுங்கிப் மா இடித்தாலும் புழுக்கைச்சிக்கு ஒரு கொழுக்கட்டை.
Though the slave girl who pounds rice laboursso as to perspire, her share is only a cake.

4836. புழுத்த சரக்குக்குக் கொழுத்த பணம்.
Fat money for rotten articles.

4837. புளியமரத்தில் ஏறினவன் பல் கூசினால் இறங்குவான்.
He who has climbed a tamarind tree will come down when his tooth are set on edge.

4838. புளியம் பழத்துக்குப் புளிப்புப் புகுதவிட வருகிறாயோ?
Do you come to infuse acidity into the tamarind fruit?

4839. புளுகினாலும் பொருந்தப் புளுகவேண்டும்.
Even when boasting do it so as to secure belief.

4840. புள்ளிக் கணக்கன் பள்ளிக்கு ஆவானா?
Is a practical arithmetician fit to teach the theory of arithmetic ?

4841. புறக்கடை மருந்து கவைக்கு உதவாது.
The medicinal plant in the backyard will not avail in an emergency.

4842. புறக்குடத்துத் தண்ணீர்போல.
Like water on the outside of a pot.

4843. புற்றிலே ஆந்தை விழிப்பது போல.
Blinking like an owl on an ant-hill.

4844. புற்றிலே ஈசல் புறப்பட்டது போல.
Coming forth like a swarm of winged white ants from an ant-hill.

4845. புற்றிலே கிடந்த புடையன் எழுப்பினதுபோல.
Rushing as a beaver snake from its hole.

4846. புற்றிலே ஈசல் புறப்பட்டாலும், மண்ணிலே கறையான் கூடினாலும் மழை வரவே வரும்.
When winged white ants issue out of a hole, and white ants swarm it will certainly rain.

4847. பூ அரசு இருக்கப் பொன்னுக்கு அழுவானேன்?
Why weep for gold while you have the tulip tree?

4848. பூசணிக்காய் அத்தனை முத்துக் காதில் ஏற்றுகிறதா மூக்கில் ஏற்றுகிறதா?
If a pearl be as large as a pumpkin, where is it to be worn, in the ear or in the nose?

4849. பூசணிக்காய் எடுத்தவனைத் தோளிலே காணலாம்.
If one has taken a pumpkin, its mark may be seen on his shoulder.

4850. பூசணிக்காய் அழுகினதுபோல.
Like a decayed pumpkin.

4851. பூசப் பூசப் பொன் நிறம்.
The more you gild it, the more like gold will it appear.

4852. பூசாரி பூ முடிக்கப் போனானாம், பூ ஆலங்காடு பலாக் காடாய்ப் போச்சுதாம்.
The priest began to wear flowers, and the flower garden became a grove of jack trees.

4853. பூசை முகத்திலே கரடியை விட்டு ஓட்டினது போல.
Like driving a bear among those engaged in worship.

4854. பூச்சி மரிக்கிறதில்லை, புழுவும் சாகிறதில்லை.
Insects do not perish, nor do worms die.

4855. பூட்டிப் புசிக்காமற் புதைப்பார் ஈயைப்போல் ஈட்டி இழப்பார்.
Those who lock up their treasure and refuse to enjoy it will be deprived of it, as bees are deprived of their honey.

4856. பூட்டும் திறப்பும் போல.
As a lock and its key.

4857. பூதலம் யாவும் போற்று முச்சுடர்.
The three lights which the whole world extol.

4858. பூத்தானமான பிள்ளை ஆத்தாளைத் தாலி கட்டிற்றாம்.
It is said that an indulged child tied a tali on his mother.

4859. பூத்துச் சொரியப் பொறுப்பார்கள் பூட்டிக் கட்டக் கலங்குவார்கள்.
They can endure seeing their tree shedding its blossoms, but will be disquieted at seeing others string and wear there.

4860. பூமி அதிர நடவாத புண்ணியவான்.
A virtuous person under whose footsteps the earth trembles not.

4861. பூமி திருத்தி உண்.
Till the soil, and enjoy its produce.

4862. பூராடக்காரனோடு போராட முடியாது.
One cannot strive with one born under the star puradam.

4863. பூரியோர்க்கு இல்லைச் சீரிய ஒழுக்கம்.
The base are void of good manners.

4864. பூர்வோத்தரம் மேரு காத்திரம் போல் இருக்கிறது.
His pedigree is weighty as mount Meru.

4865. பூலோகமுதலியார் பட்டம், புகுந்து பார்த்தால் பொட்டல்.
His title is lord of the world, but when examined he is found empty.

4866. பூ விற்கும் கடையில் புல் விற்பதுபோல.
A grass is sold in a flower market.

4867. பூ விற்ற கடையில் புல் விற்கலாமா?
May grass be sold in the flower market?

4868. பூ விற்ற காசு மணக்குமா புலால் விற்ற காசு நாறுமா?
Is the money obtained from the sale of flowers fragrant, does that obtained from the sale of flesh stink?

4869. பூ விற்றவனைப் பொன் விற்கப்பண்ணுவேன்.
I will enable him who sold flowers to sell gold.

4870. பூவுடன் கூடி நாரும் மணம் பெற்றது போல.
As a fibre used for stringing flowers partook of their fragrance.

4871. பூவுள் மங்கையாம் பொற்கொடியாம் போன இடம் எல்லாம் செருப்படியாம்.
It is said that she is Lackshmi residing in flowers, and she is a golden creeper, yet whithersoever she goes she is slippered.

4872. பூனை உள்ள இடத்திலே எலி பேரன் பேத்தி எடுக்கிறது.
The rat lives to see its grand-sons and grand-daughters in a place where there is a cat.

4873. பூனை கட்டும் தொழுவத்தில் ஆனை கட்டலாமா?
Can you tether an elephant in a place suited for tying up a cat?

4874. பூனைக்கு இல்லை தானமும் தவமும்.
Alms-giving andpenance are not prescribed to cats.

4875. பூனைக்குக் கொண்டாட்டம் எலிக்குத் திண்டாட்டம்.
Amusement to the cat, and agony to the rat.

4876. பூனைக்குச் சிமாளம் வந்தால் பீற்றற்பாயில் புரளுமாம்.
It is said that if a cat be merry, she will roll about on an old mat.

4877. பூனை பால் குடிக்கிறது போல.
As a cat drinks milk.

4878. பூனை போல் அடங்கினான் புலிபோல் பாய்ந்தான்.
He was quiet as a cat, and sprang like a tiger.

4879. பூனையைக் கண்ட கிளிபோலப் புலம்பி அழுகிறான்.
He cries as a parrot encountered by a cat.

4880. பூனையைத்தான் வீட்டுப் புலியென்றும், எலி அரசனென்றும்
சொல்வார்கள்.
A cat is called a domestic tiger, and the king of rats.

4881. பெட்டியிற் பாம்புபோல் அடங்கினான்.
He was as quiet as a snake in a box.

4882. பெட்டி பீற்றல் வாய்க் கட்டுத் திறம்.
The basket is torn, but the rim is strong.

4883. பெட்டைக் கோழி கூவியோ விடிகிறது?
Does the day break at the crowing of a hen?

4884. பெட்டைக் கோழி தட்டிக் கூவுமா?
Can a hen flap her wings and crow like a cock?

4885. பெண் என்றால் பேயும் இரங்கும்.
Even a demon will pity a woman.

4886. பெண்ணாசை ஒரு பக்கம் மண்ணாசை ஒரு பக்கம்.
Love of women on the one hand, and love of property on the other.

4887. பெண்சாதி இல்லாதவன் பேயைக் கட்டித் தழுவினதுபோல,
As the man who had no wife embraced a demoness.

4888. பெண்சாதியைத் தாய் வீட்டில் விட்டவனுக்கு ஒரு சொட்டு.
A cuff for the man who left his wife at her mother's.

4889. பெண்சாதி காற்கட்டு, பிள்ளை வாய்க்கட்டு.
Fettered with a wife, and muzzled with a child.

4890. பெண்டாட்டி கொண்டதும் திண்டாட்டம் பட்டதும் போதும்.
Enough of taking a wife and suffering the consequences.

4891. பெண்டிர்க்கு அழகு போசாதிருத்தல்.
Not to remonstrate with her husband is an ornament in a woman.

4892. பெண்டுகள் சூத்துக்குப் புரிமணை.
A straw twist for women to squat on.

4893. பெண்டுகளுக்குப் பெற்றார் இடத்திலும் பிள்ளைகள் இடத்திலும் மூப்பு இல்லை.
Women have no influence over parents and children.

4894. பெண்டுகள் சோற்றுக்குத் தண்டம் இல்லை.
Women are not in danger of forfeiting their rice.

4895. பெண்ணரம்பைக் கூத்துக்குப் போய்ப் பேய்க் கூத்து ஆச்சுதே.
The going to a dance of celestials ended as a dance of devils.

4896. பெண்ணின் குணம் அறிவேன் சம்பந்தி வாய் அறிவேன்.
I know the character of the bride, and the boisterousness of her mother-in-law.

4897. பெண்ணுக்குப் பொன் இட்டுப்பார் , சுவருக்கு மண் இட்டுக்
பார்.
Look at a woman after adorning her with jewels, and at a wall when you have plastered it with mud.

4898. பெண்ணுக்கும் பொன்னுக்கும் தோற்பு உண்டா?
Is any one ever tired of women and wealth?

4899. பெண்ணுக்குப் போய்ப் பொன்னுக்குப் பின்வாங்கலாமா?
Having gone to take a wife, can you turn back because marriage is expensive?

4900. பெண்ணுக்கு மாமியாரும், பிள்ளைக்கு வாத்தியாரும்.
For a wife, a mother-in-law, for a boy, a tutor.

4901. பெண்ணைக் கொடுத்தவளோ கண்ணைக் கொடுத்தவளோ?
Did she give one a wife, or did she give one her eye ?

4902. பெண்ணைப் பிழை பொறுக்கப் பெற்ற தாய் வேண்டாமோ?
Are you content to lose your mother in order to pardon your wife?

4903. பெண்ணைக் கொண்டு பையன் பேயானான், பிள்ளை பெற்றுச் சிறுக்கி நாயானாள்.
Having married a wife the boy has become a fool, having given birth to a child the damsel has become mean in appearance.

4904. பெண்ணை வேண்டும் என்றால் இளியற் கண்ணை நக்கு.
If you want the woman, lick her bleared eyes.

4905. பெண் புத்தி கேட்கிறவன் பேய்.
He who listens to the advice of women is a fool.

4906. பெண் புத்தி பின் புத்தி.
The thoughts of women are after-thoughts.

4907. பெண் வளர்த்தி பீர்க்கங்கொடி.
The growing of women is that of a gourd creeper.

4908. பெரியாரைத் துணைக்கொள்.
Secure the good will of the great.

4909. பெரியோர் எல்லாம் பெரியாரும் அல்லர்.
All who are high in stature are not great.

4910. பெரியோர் முன் தாழ்ந்து பேசில், நாணலைப்போல் நிமிர்ந்து கொள்வார்கள்.
When speaking submissively to the great, they preserve an erect posture like a reed.

4911. பெரியோர் முன் எதிர்த்துப்பேசில், வெள்ளத்திற்கு முன் மரங்களைப்போல் வீழ்வார்கள்.
If they should contradict the great, they will fall like trees before a flood.

4912. பெருங் கயிறு முடி அழுந்தாது.
A tight knot cannot be formed in a thick rope.

4913. பெருங்காயம் இருந்த பாண்டம்.
An earthen pot in which assafoetida was kept.

4914. பெருங் காற்றில் பீளைப்பஞ்சு பறக்கிறதுபோல.
Flying like cotton before a gale of wind.

4915. பெருங் குலத்தில் பிறந்தாலும் புத்தி அற்றவன் கரும்புப் பூப் போல.
Though born in a high family, a fool is like a sugar-cane flower.

4916. பெருங் கொடை பிச்சைக்காரருக்குத் துணிவு.
Beggars presume on large gifts.

4917. பெரு நெருப்புக்கு ஈரம் உண்டா ?
Will moisture affect a great fire?

4918. பெரு மரத்தைச் சுற்றிய வள்ளிக்கொடிபோல.
Like a creeping plant-Dioscorea sativa-round a large tree.

4919. பெரு மழை விழுந்தாற் குளிராது.
No feeling of cold in a heavy fall of rain.

4920. பெருமாள் இருக்கிற வரையில் திருநாள் உண்டு.
As long as Perumal exists, holy days will be observed.

4921. பெருமாள் என்கிற பெயரை மாற்றப் பெரிய பெருமாள் ஆச்சுது.
The name Perumal being changed has become great Perumal.

4922. பெருமானைச் சேர்ந்தோர்க்குப் பிறப்பு இல்லை, பிச்சைச்சோற்றிற்கு எச்சில் இல்லை.
Those who have attained union with God are not subject to future births, rice given in alms is not refused because it is refuse.

4923. பெருமான் நினைத்தால் வாழ்வு குறைவா, பிரமா நினைத்தால் ஆயுசு குறைவா?
If God is pleased, will there be any lack of prosperity, if Brahma favour, will one's life be short?

4924. பெருமைதான் அருமையை குலைக்கும்.
Pride will diminish one's worth.

4925. பெருமையான தரித்திரன் வீண்.
Pride in a poor man is vain.

4926. பெருமை ஒரு முறம் புடைத்து எடுத்தால் ஒன்றும் இல்லை.
When a sieve, full of pride, is sifted, nothing remains.

4927. பெருமையும் சிறுமையும் வாயால் வரும்.
The great and the little come from the mouth.

4928. பெருமைக்கு ஆட்டை அடித்துப் பிள்ளை கையில் காதைச் சுட்டுக் கொடுத்தான்.
He killed a sheep to show his greatness, and gave the ear to his child after roasting it.

4929. பெரு ரூபத்தை உடையவரும் பிரயோசனமாய் இருக்கமாட்டார். அதுபோல, பனை விதை பெரிதாய் இருந்தும் நிழல் கொடுக்கமாட்டாது.
The great are not always helpful, the lofty palmyrah casts no shade.

4930. பெரு வயிறு கொண்டது அறியாமல் சீமந்தத்திற்கு நாள் இட்டுக்கொண்டான்.
Not knowing that his wife is affected with dropsy, he has fixed upon a day for the performance of her simantham ceremony.
A ceremony relating to the first pregnancy, including bathing, the parting of the hair in the middle of the forehead, putting jewels, &c., &c

4931. பெற்ற தாய் இடத்திலோ கற்ற வித்தை காட்டுகிறாய்?
Do you practise your arts on your mother ?

4932. பெற்ற தாய் செத்தால் பெற்ற அப்பன் சிற்றப்பன்.
If a mother dies, the father becomes uncle.

4933. பெற்ற தாய் பசித்திருக்கப் பிராமண போஜனம் செய்தது போல.
Like feeding brahmans when one's mother is starving.

4934. பெற்றது எல்லாம் பிள்ளையா இட்டது எல்லாம் பயிரா?
Are all that are brought forth children, is all that is sown available for use?

4935. பெற்றது எல்லாம் பிள்ளையோ வனைந்தது எல்லாம் குசக்கலமோ ?
Are all that are brought forth children, is all earthen ware prefix that is fashioned by a potter?

4936. பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு.
The mother's heart is soft, that of her child is as a stone.

4937. பெற்றோர்க்கு இல்லைச் சுற்றமும் சினமும்.
The wise are not moved by relationship or anger.

4938. பேசப் பேச எந்தப் பாஷையும் வரும்.
Any language may be learnt by continual speaking.

4939. பேசாதிருந்தால் பிழை ஒன்றும் இல்லை.
No fault arises if nothing is spoken.

4940. பேசில் அபலம் பேசாக்கால் ஊமை.
When he speaks it is to no purpose, when he does not speak he is accounted dumb.

4941. பேச்சுக் கற்ற நாய் வேட்டைக்கு ஆகாது.
A noisy dog is not fit for hunting.

4942. பேச்சுக்கு இராவணன் பின்பு கும்பகர்ணன்.
In speech he is Ravana, but he turns out to be Kumbhakarnaan.

4943. பேச்சுக்குப் பேச்சுச் சிங்காரமா?
Is contradiction becoming?

4914. பேச்சை விற்றுக் காய்ச்சிக் குடிக்கிறான்.
He sells his words, and cooks and drinks.

4945. பேடி கையில் இருந்த ஆயுதம் போல.
Like a weapon in the hands of a hermaphrodite.

4946.பேடி கையில் வாள்போலே.
Like a sword in the hands of a hermaphrodite.

4947. பேதம் அற்றவர் நீதம் உற்றவர்.
He who is impartial is just.

4948. பேதைகள் வெள்ளத்திலே நின்றும் தாகத்திற்குத் தண்ணீருக்கு அலைவார்கள்.
Fools in the midst of a flood will wander about for water to drink.

4949. பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்.
Simplicity is the ornament of a woman.

4950. பேயானாலும் தாய், நீரானாலும் மோர்.
Though like a demon she is a mother, though mere slop, it is butter-milk.

4951. பேயும் சிலது ஞாயம் பகரும்.
Even a demon will have some reason to assign.

4952. பேய் ஆடிய கம்பம் போல .
Like a pole on which a demon dances.

4953. பேய் கொண்டாலும் பெண் கொள்ளல் ஆகாது.
One may take a demon, but not take a wife.

4954. பேய்க்குக் கள் வார்த்தது போல.
Like pouring out toddy to a demon.

4955. பேய்க்கு வேப்பிலை போலே.
As margosa leaves before a demon.

4956. பேய்க்கு வேலை இட்டது போல.
Like setting a demon to work.

4957. பேய்க்கூத்தும் ஆமணக்கும் ஆள்போனால் ஆள் தெரியாது.
A devil dance is a garden of castor oil plants, if one gets in he is not seen again.

4958. பேய் சிரித்தாலும் ஆகாது அழுதாலும் ஆகாது.
If a demon smiles it is bad, and if he weep that too is inauspicious.

4959. பேய் பிடிக்கவும் பிள்ளை பிழைக்கவுமா?
Will a child struck by a demon survive ?

4960. பேய் போய்ப் புளியமரத்தில் ஏறினதுபோல.
As a demon ascended a tamarind tree.

4961. பேராசைக்காரனைப் பெரும்புளுகால் வெல்ல வேண்டும்.
The avaricious must be overcome by notorious lies.

4962. பேராசை பெரிய நஷ்டம்.
Avarice ends in loss.

4963. பேர் இல்லாச் சன்னிதி பாழ், பிள்ளை இல்லாச் செல்வம் பாழ்.
The presence of one without reputation does no good, wealth with out a child is useless.

4964. பைசாசைப் பணியேல்.
Yield not to a demon.

4965. பைந்தமிழ்ப் புலவோர் பாட்டுக்கு ஏற்றவன்.
He is worthy to be sung by poets.

4966. பையச் சென்றால் வையம் தாங்கும்.
If you walk gently, the earth will bear you.

4967. பைய மிதித்தது வேடன் அடி , பதறி மிதித்தது பன்றி அடி.
The light footstep is that of the hunter, the firm footstep is that of the hog.

4968. பைய மென்றால் பனையையும் மெல்லலாம்.
If masticated slowly even a palmyrah tree may be chewed.

4969. பையிற் கட்டிவைத்த பொருள் பறிகொடுக்கப்பட்டது.
The wealth tied up in a bag was lost.

4970. பொக்கவாய்ச்சி மெச்சினாளாம் பொரிமாவை.
It is said that a toothless dame appreciated the rice flour.

4971. பொங்கும் காலம் புளி பூக்கும், மங்கும் காலம் மா பூக்கும்.
In times of plenty the tamarind tree blossoms, in times of scarcity the mango bears in abundance.

4972. பொதி அளக்கிறதற்குமுன்னே சத்தத்திற்கு அளக்கிறதா?
Am I to measure out the hire, before measuring out the load?

4973. பொதியை வைத்து விட்டுப் பிச்சைக்குப் போனான், அதையும் வைத்து விட்டுச் செத்துக் கிடந்தான்.
Having loaded his bullock, he went abegging; the product he put on one side, and died.

4974. பொதி வைக்கிறதற்கு முன்னே சத்தத்திற்கு அளக்கிறதா?
Am I to measure out the hire before adjusting the load?

4975. பொத்தைச் சுரைக்காய் போலே.
Like a fleshy gourd.

4976. பொய் இருந்து புலம்பும் மெய் இருந்து விழிக்கும்.
Falsehood will never cease to weep, truth will ever be conspicuous.

4977. பொய் உடை ஒருவன் சொல் வன்மையினால் மெய்போலும்மேமெய்போலும்மே.
The falsehood of a liar by reason of its force, may appear like truth, may appear like truth.

4978. பொய் சொன்ன வாய்க்குப் போசனம் கிடையாது.
The mouth accustomed to lies will be deprived of food.

4979. பொய் சொன்ன வாய்க்குப் பொரியும் கிடையாது.
The mouth accustomed to lies will be deprived of oven parched corn.

4980. பொய் சொல்லி வாழ்ந்தவனும் இல்லை, மெய் சொல்லிக் கெட்டவனும் இல்லை.
No one ever prospered by telling lies, no onewas ever reduced to poverty byspeaking truth.

4981. பொய் மெய்யை வெல்லுமா?
Will falsehood conquer truth ?

4982. பொய்யான பொருளாசை மெய்யான அருளாசையை விலக்குகிறது.
The false love of money, will take away the real love of divine grace.

4983. பொய்யும் ஒரு பக்கம் பொறாமையும் ஒரு பக்கம்.
Falsehood on one side, and envy on the other.

4984. பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்லவேண்டும்.
Though you tell lies, do so consistently.

4985. பொருடனைப் போற்றி வாழ்.
Preserve your substance and live.

4986. பொருளாசையும் மனச்சாட்சியும் பொருந்துமா?
Will covetous desires and conscience agree?

4987. பொருளும் கொடுத்துப் பழியும் தேட.
Giving one's wealth and incurring censure.

4988. பொருளும் போகமும் கூட வராது புண்ணியமே கூட வரும்.
Wealth and pleasure will be separated from us, but virtue will abide.

4989. பொருள் போன வழியே துக்கம் போம்.
Whithersoever wealth goos, sorrow follows in the same path.

4990. பொல்லாத மனம் கேளாது.
The wicked heart resists reproof.

4991. பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர்.
Avoid whatever is evil.

4992. பொல்லாத காலம் சொல்லாமல் வந்தது.
Inauspicious times come without giving notice.

4993. பொல்லாதவர்கள் சின்னப்பட்டால் கல்லின் பிளவுபோல ராசியாகமாட்டார்கள்.
The anger of the wicked is like a fracture in a stone, they are not easily reconciled.

4994. பொல்லாத குணத்துக்கு மருந்து உண்டா?
Is there any medicine for a bad temper?

4995.பொல்லாதவர்கள் சங்காத்தம் உப்பு மணலில் வீழ்ந்த நீர் போல.
The friendship of the wicked is as bitter as water in brackish soil.

4996. பொல்லாப் பிள்ளையில் இல்லாப் பிள்ளை.
A bad child is worse than none.

4997. பொழுது பட்ட இடம் விடுதி விட்ட இடம்.
Halting where the sun sets.

4998. பொழுது விடிந்தது பாவம் தொலைந்தது.
The day has dawned, sin is ended.

4999. பொறி வென்றவனே அறிவின் குருவாம்.
He alone who conquers his senses is a teacher of wisdom.

5000. பொறுதி என்பது கடலினும் பெரிது.
Forbearance is greater than the ocean.

5001. பொறுத்தல் கசப்பாய் இருந்தாலும் பொறுக்கப் பொறுக்கத் தித்திப்பு.
Although suffering may be bitter, continued endurance will make it sweet.

5002. பொறுத்தார் பூமி ஆள்வார்.
Those who put up with injuries may rule the earth.

5003. பொறுத்தார் அரசாள்வார் பொங்கினார் காடாள்வார்.
They who endure will reign as kings; the irascible will wander through the jungles.

5004. பொறுமை புண்ணியத்திற்கு வேர் பொருளாசை பாவத்திற்கு வேர்.
Patient endurance is the root of religious merit, avarice is the root of sin.

5005. பொற் கலம் ஒலிக்காது வெண் கலம் ஒலிக்கும்.
A gold vessel does not sound, a brass one does.

5006. பொற் காப்புக்கு ஆசைப்பட்டுப் புலியின் கையில் அகப்பட்பதுபோல.
Like one whose desire for a gold bracelet, hurried him into the claws of a tiger.

5007. பொற் பூவின் வாசனையும் முருக்கம் பூவின் வாசனையும் சரி.
The smell of a flower of gold and that of the murukku flower are alike.

5008. பொற் பூ வாசிக்குமா?
Does a golden flower diffuse fragrance?

5009. பொன் ஆபரணத்தைப் பார்க்கிலும் புகழ் ஆபரணமே பெரிது.
The ornament of reputation is greater than ornaments of gold.

5010. பொன் இரவல் உண்டு, பூ இரவல் உண்டா?
Gold may be lent, can flowers?.

5011. பொன் என்றால் பிணமும் வாய் திறக்கும்.
If the word gold be uttered, even a corpse will open its mouth.

5012. பொன் கத்தி என்று கழுத்து அறுத்துக்கொள்ளலாமா?
May one cut his throat with a knife because it is made of gold?

5013. பொன் காத்த பூதம் போலே.
Like the demon that guarded treasure.

5014. பொன் செருப்பு ஆனாலும் காலுக்குத்தான் போடவேண்டும்
Though golden slippers, they must be put on the feet.

5015. பொன்மணி அற்றவளை அம்மணி என்பானேன்?
Why should a woman who has no gold beads be called Ammani?

5016. பொன்முடி அல்லது சடை முடி வேண்டும்.
One should wear either a gold crown, or matted hair.

5017 பொன்னம்பலம் உண்டானால் என்ன அம்பலம் கிடையாது ?
If one has a golden house, what house can he not get ?

5018. பொன்னம்பலத்துக்கும் புவனகிரிப் பட்டணத்துக்கும் என்றைக்கும் உண்டான இழவு.
The golden hall of-Chilambaram, and the town Puvanagiri, are always in trouble.

5019. பொன்னாங்காணிக்குப் புளி விட்டு ஆக்கினால் உண்ணாக்கு எல்லாம் தித்திக்கும்.
If acid be mixed with ponnankani-illecebrum sessile-its flavour will be agreeable to the whole palate.

5020. பொன்னாங்காணிக்குப் புளி விட்டு ஆக்கினால் உண்ணாப் பெண்ணும் ஒரு உழக்கு உண்ணும்.
The compound of ponnankani greens-illecebrun-and tamarind, will enable a girl who has lost her appetite to eat an ulak of rice.

5021. பொன்னான மனதைப் புண்ணாக்குகிறான்.
He ulcerates the golden mind.

5022. பொன்னாலே கலம் உண்டானாலும் மண்ணாலே சுவர் வேண்டும்.
Though one may possess vessels of gold, the wall of his house must be of mud.

5023. பொன்னாலே மருமகளானாலும் மண்ணாலே ஒரு மாமி வேண்டும்.
Though the daughter-in-law is made of gold, she must have a mother-in-law made of earth.

5024. பொன்னின் கலப்பை வரகுக்கு உழப் போனதாம் வரகு சேருக்கு வரகு பட்டதாம். Golden ploughs were used for the cultivation of the millet, and the crop was less than the seed-corn.

5025. பொன்னின் குடத்திற்குப் பொட்டு இட்டுப் பார்க்க வேண்டுமா?
Must a royal mark be inscribed on a golden pot, that it may appear the more beautiful?

5026. பொன்னின் குடம் உடைந்தால் பொன் ஆகும் என்ன ஆகும் மண்ணின் குடம் உடைந்தாக்கால் ?
Though broken to pieces a golden pot will still be gold, of what use is an earthen pot when broken?

5027. பொன்னை வைக்கிற கோயிலிலே பூவையாவது வைக்கவேன்டும்.
Flowers, at least, must be offered in a temple in which gold is offered.

5028. பொன்னை எறிந்தாலும் பொடிக் கீரையை எறியலாமா?
Although you may throw away gold, you may not throw away edible herbs?

5029. போகா ஊருக்கு வழி கேள்..
Inquire the way to the village whither you are not going.

5030. போகாத இடத்திலே போனால் வராத சொட்டு வரும்.
If you go where you ought not, you will receive a cuff that might have been avoided.

5031. போக்கணம் கெட்டவன் ராஜாவிலும் பெரியவன்.
An impudent person is greater than a king.

5032. போக்கு அற்ற நாய்க்கு போனது எல்லாம் வழி.
A hungry dog finds a way wherever he goes.

5033. போசனம் சிறுத்தாலும் ஆசனம் பெருக்க வேண்டும்.
Though one's food be slight, the dish must be large.

5034. போதகர் சொல்லைத் தட்டாதே, பாதகர் இல்லைக் கிட்டாதே.
Obey your religious teacher, approach not the house of the wicked.

5035. போதகருக்கே சோதனை மிஞ்சும்.
A religious teacher meets with many temptations.

5036. போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.
A contented mind is a specific for making gold.

5037. போரில் ஊசி தேடின சம்பந்தம்.
Akin to seeking a needle in a heap of straw.

5038. போரைக் கட்டிவைத்துப் போட்டுப் பிச்சைக்குப் போவானேன்?
Having stacked your corn, why go abegging?

5039. போரோடு தின்கிற மாட்டுக்குப் பிடுங்கிப் போட்டுக் கட்டுமா?
When an ox is accustomed to eat at a heap, will it be satisfied with a handful?

5040. போர்த்தொழில் புரியேல்.
Do not practise the art of war.

5041. போர் பிடுங்குகிறவர்கள் பூரக்களம் சாடுகிறவர்களை மாட்டுகிறார்களாம்.
It is said that those who steal from a corn-stack, will frighten those who glean stealthily.

5042. போலைக்கு ஒரு பொன்மணி கிடைத்ததாம், அதைத் தூக்கக் கண்ணில் தொட்டுத் தொட்டுப் பார்த்ததாம்.
It is said that the hollow-headed woman obtained a gold bead, and that she examined it when she was sleepy.

5043. போலை பொறுக்கப் போச்சாம் பூனை குறுக்கே போச்சாம்.
It is said that the destitute went out to gather orts, and a cat went across the path.

5044. போனகம் என்பது தான் உழைத்து உண்டல்.
That which one eats as the fruit of his own labour, is properly called food.

5045. போன சுரத்தைப் புளி இட்டு அழைத்ததுபோல.
Like inviting a fever that has subsided, by giving acids.

5046. போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன்.
He lacks sense who broods over the past.

5047. போன மாட்டைத் தேடுவாரும் இல்லை, மேய்த்த கூலி கொடுப்பாரும் இல்லை.
There is no one to seek the lost cow, none to pay the hire of the cowherd.

5048. பௌவத்து எழில்கோள்.
Be graceful as the moon.

5049. பெளவப் பெருமை தெய்வச் செயலே.
The greatness of the ocean shows the work of God.

5050. பெளவம் உற்றது ஆக்கை, செவ்வை அற்றது வாழ்க்கை .
The body is like a bubble, one's present existence is not lasting.

5051. மகதேவர் ஆடு இடித்துப் பேயும் ஆடுகிறது.
When butted by a ram of Mahadevar, even the demon shakes its head.

5052. மகளுக்குப் புத்தி சொல்லித் தாய் அவசாரி போனாளாம்.
The mother, having given advice to her daughter, played the harlot.

5053. மகள் செத்தாள் தாய் திக்கு அற்றாள்.
The daughter is dead, the mother is become destitute.

5054. மகள் செத்தாற் பிணம் மகன் செத்தாற் சவம்.
If the daughter die her remains are regarded as a pinam; if the son, his corpse is a savam.

5055. மகன் செத்தாலும் சாகட்டும் மருமகள் கொட்டம் அடங்கினாற் போதும்.
No matter if my son should die, it will suffice if the arrogance of my daughter-in-law is checked.

5056. மகாமகம் பன்னிரண்டு வருஷத்திற்கு ஒரு விசை.
Mahamaham festival is celebrated every twelfth year.

5057. மகா மேருவைச் சேர்ந்த காகமும் பொன்னிறமாம்.
Even a crow if it arrive at Mahameru is said to assume a golden hue.

5058. மகா ராஜாவின் கலியாணத்தில் நீராகாரம் நெய் பட்ட பாடு.
At the marriage feast of the Maha Rajah, even cold rice water is rare as ghee.

5059. மகா லட்சுமி பரதேசம் போனது போல.
As Maha Lakshmi went on a pilgrimage.

5060. மகிமை சுந்தரி கதவை ஒஞ்சரி.
Illustrious beauty, leave the door ajar.

5061. மகிமைக்கு அஞ்சிய மருமகனே எருமைக் கன்றைக் கொல்லாதே.
Thou modest son-in-law, do not kill the young buffaloa.
This was said to a man by his mother-in-law. Wishing to appear to her a small eater he stinted himself at his ordinary meals, and yet appeared to flourish. Casting about for a solution of the mystery her attention was called to the ill condition of a young buffaloa. Suspecting that her son-in-law was the cause of this, she resolved to watch his movements. The following night she saw him emerge from his room and proceed to the buffaloa, whose milk he exhausted, and returned to his own quarters. On the morrow when he took his food she addressed him in the language of the proverb.

5062. மகிமைப்பட்டவனுக்கு மரணம், மாட்டுக்காரப்பையனுக்குச் சரணம்.
Death to the distinguished, homage to the cowherd.

5063. மகிமையிலே ஒரு பெண் குவளையிலே வாழுகிறாள், அதில் ஒரு பெண் அறுத்துவிட்டு அழுகிறாள்.
one matro flourishes in the water-lily, and one weeps bereft of her marriage symbol.

5064. மக்கள் களவும் வரகு பதரும் சரி.
The dishonest tricks of children, and the husks of varagu are alike.

5065. மக்கள் சோறு தின்றால் மகிமை குறையும்.
To be fed by children is a disgrace to parents.

5066. மக்காவுக்குப் போய்க் கொக்குப் பிடித்தது போல.
Like going on a pilgrimage to Mecca, and catching a crane.

5067. மங்கமாரி வந்தார் தங்க மழை பெய்தது.
Montgomery came, and it rained fine gold.

5068. மங்கும் காலம் மாங்காய் பொங்கும் காலம் புளியங்காய்.
In time of scarcity, mangoes, and in a season of plenty, tamarind fruit, are abundant.

5069. மங்கை தீட்டானால் கங்கையிலே முழுகுவாள் கங்கை தீட்டானால் எங்கே முழுகுவாள்?
If the damsel is polluted she may be cleansed by the ganges, but if the ganges be polluted whither can she go?

5070. மச்சத்தின் குஞ்சுக்கு இப்படி என்றால், மாதாவுக்கு எப்படியோ?
If such be the condition of the young fish, what will be that of the mother?

5071. மச்சானைப் பார்க்க உறவும் இல்லை, மயிரைப் பார்க்கக் கறுப்பும் இல்லை .
No friendship superior to that of a cousin, nothing blacker than hair.
The word மச்சான் is used for a brother-in-law, and also for a maternal uncle's son.

5072. மச்சான் செத்தால் மயிர் போச்சு கம்பளி மெத்தை நமக்கு ஆச்சு .
If my brother-in-law die I care not a hair, his cumbly mattress will be mine.

5073. மச்சை அழித்தால் குச்சுக்கும் ஆகாது.
If the roof be destroyed, the house will not answer for a hut.

5074. மஞ்சனமும் மலரும் கொண்டு துதிக்காவிட்டாலும் நெஞ்சகத்தில் நினைப்பதே போதகம்.
Though one may not worship god by bathing him, and scattering flowers on him, we are taught to keep him in mind.

5075. மடக்கிழவனிலும் புத்தி உள்ள வாலிபன் அதிகம்.
A prudent youth is superior to a stupid old man.

5076. மடக் கேழ்விக்கு மாறுத்தரம் இல்லை.
A stupid question needs no answer.

5077. மடப் பெருமையே தவிர நீராகாரத்துக்கும் வழி இல்லை.
Besides a choultry, there is nothing - not even water.

5078. மடம் பிடுங்கிக் கொண்டு போகும்போது நந்தவனத்துக்குவழி எங்கே என்கிறான்.
After the choultry has been destroyed, he asks the way to the flower garden.

5079. மடி மாங்காய் போட்டுத் தலை வெட்டலாமா?
Are you about to behead one upon whom you have forced mango fruit?

5080. மடியிலே கனம் இருந்தால் வழியிலே பயம்.
If you have money in your waist-cloth, you may be afraid on the way.

5081. மடியைப் பிடித்துக் கள்ளை வார்த்து மயிரைப் பிடித்துக் காசு வேண்டுகிறதா?
Having forced one to take toddy, do you seize him by the hair and demand payment?

5082. மட்டான போசனம் மனதிற்கு மகிழ்ச்சி.
Moderation in eating exhilerates the mind.

5083. மட்டி எருக்கலை மடல் மடலாய்ப் பூத்தாலும், மருக்கொழுந்து வாசனை வருமா?
Though the erukkalai bears bunches of flowers, has it the fragrance of southern-wood-artemisia austriaca ?

5084. மட்டு இல்லாமற் கொடுத்தாலும் திட்டுக் கேட்கல் ஆகாது.
Though he gives liberally, it is not right to hear his abuse.

5085. மட்டைக் கரியையும் மடப்பள்ளியாரையும் நம்பப்படாது.
Palm-stem charcoal and Madappallis are not to be trusted.

5086. மணலின் மேல் விழுந்த மழைத்துளி உடனே மறையும்; அது போல, பொல்லாதவர்களுக்குச் செய்த உபகாரம் மறைந்து போம்.
Drops of rain falling on sand will instantly disappear, in like manner favours shown to the wicked will be soon forgotten.


5087. மணற் சோற்றில் கல் ஆய்வது போல.
Like picking out stones when eating a dish of sand.

5088. மணி நா அசையாமல் இராச்சிய பாரம் பண்ணுகிறது.
So to govern a kingdom as not to move even the tongue of a bell.

5089. மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா?
May one descend into a river relying on a mud horse ?

5090. மண்டைக்குத் தகுந்த கொண்டை போட வேண்டும்.
The knot of hair must be proportioned to the size of the head.

5091. மண்டையில் எழுதி மயிரால் மறைத்தது போல.
Like writing on the skull and covering it with the hair.

5092. மண்டை உள்ளவரையில் சளி போகாது.
As long as the head remains phlegm will abide.

5093. மண்ணாயினும் மனை ஆயினும் காப்பாற்றினவர்களுக்கு உண்டு.
They may have house and grounds who know how to take care of them.

5094. மண்ணாங்கட்டி மாப்பிள்ளைக்கு எருமுட்டைப் பணிகாரம்.
Dried cow-dung is the proper form of wedding cake, when the bridegroom is made of sand.

5095. மண்ணால் ஆனாய் மண்ணாய் இருக்கிறாய்.
Made of earth, thou art earthy.

5096. மண்ணின்மேல் நின்று பெண் ஓரம் சொல்லாதே.
Whilst on earth pervert not judgment, in the case of a woman.

5097. மண்ணைத் தின்றாலும் மறையத் தின்.
Though what you may eat be sand, eat it in a secluded place.

5098. மண்ணோடே பிறக்கலாம் உன்னோடே பிறந்ததில்.
It were better to be born of the earth, than to be your brother.

5099. மண் பறித்து உண்ணேல்.
Do not live by extortion.

5100. மண் பிள்ளை ஆனாலும் தன் பிள்ளை.
Though earthen, one's own child is precious.

5101. மண் பூனை ஆனாலும் எலிப் பிடித்தால் சரி.
Though the cat is made of mud, if it catch rats, it is enough.

5102. மண்வெட்டி கூதல் அறியுமா?
Is a hoe sensible of cold?

5103. மண்வேலையோ புண்வேலையோ?
Are you engaged in making earthen ware, or sores ?

5104. மதலைக்கு இல்லைக் கீதமும் அறிவும்.
A child has neither the power of singing nor discretion.

5105. மதன மலைக்கு ஒப்பிடலாம்.
He is comparable to Mathana mountain.

5106. மதாபிமானம் சுசாதிமானம் தேசாபிமானம்.
Love of father, caste, and country.

5107. மதியாத வாசலில் மிதியாதிருப்பதே உத்தமம்.
It is not well to tread even on the threshold of a house in which you are not respected.

5108. மதியும் உமது விதியும் உமது.
Thy purpose and thy destiny.
The settled judgment, and the decrees of God, are in harmony.

5109. மதியை மீன் சூழ்ந்தது போல.
As the stars surround the moon.

5110. மதில் மேல் இருக்கிற பூனை போல் இருக்கிறான்.
He is like a cat on a wall.
Spoken of one who makes the most of his position.

5111. மது பிந்து கலகம் போல் இருக்கிறது.
Like the uproar of a honey drop.

5112. மதுரைக்கு வழி வாயில் இருக்கிறது.
The way to Madura is in the mouth.

5113. மந்திரம் கால் மதி முக்கால்.
The incantation is one fourth, and common sense three fourths.

5114. மந்திரத்தில் மாங்காய் விழுமா?
Will mangoes fall by a charm ?

5115. மந்திரம் இல்லான் பூசை அந்தி படுமளவும்.
Religious ceremonies not regulated by a form, will continue till sun-set.

5116. மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல்.
It is the attribute of a minister to foretell things likely to occur.

5117. மந்திரி இல்லா யோசனையும் ஆயுதம் இல்லாச் சேனையும் கெடும்.
Decisions without councillors, and troops without arms, will perish

5118. மந்தையிலும் பால் வீட்டிலும் தயிரா?
Do you expect milk in tħe fold, and curds at home?

5119. மயிர் உள்ள சீமாட்டி வாரி முடிக்கிறாள்.
The damsel who has a fine head of hair, combs and dresses it.

5120. மயிர் ஊடாடாதார் நட்புச் சிறிது பொருள் ஊடாடக் கெடும்.
Friendship so close that a hair cannot be intruded between the parties, will be destroyed if money matters interpose.

5121. மயிர் சுட்டுக் கரியாகிறதா?
Can charcoal be formed by burning hair?

5122. மயிர் பிளக்க வகைதேடினாற்போல.
Like seeking means to split a hair.

5123. மயிலாப்பூர் ஏரி உடைத்துப்போகிறது என்றால், வருகிற கமிட்டிக்கு ஆகட்டும் என்றாற்போல.
Like saying it may be deferred to the next committee, on hearing that the Mylapore tank has given way.

5124. மயிலே மயிலே என்றால் இறகு கொடுக்குமா?
If you exclaim O peacock, O peacock, will it give you its feather?

5125. மயிற் கண்ணிக்கு மசக்கை, மாப்பிள்ளைக்கு அவஸ்தை.
The peacock-eyed bride is phrensied, her bridegroom is in anguish.

5126. மரணத்திலும் கெட்ட மார்க்கத்துக்குப் பயப்படு.
Be more afraid of a vicious course than of death.

5127. மரணத்திற்கு வழி மட்டில்லை.
There are endless ways that lead to death.

5128. மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு மிதித்தது போல.
As an ox trampled under foot a man that bad fallen from a tree.

5129. மரத்துப் பழம் மரத்து அடியிலே விழும்.
The fruit of a tree will fall at its foot.

5130. மரத்தை இலை காக்கும் மானத்தைப் பணம் காக்கும்.
Leaves cover a tree, money covers one's nakedness.

5131. மரநாயிலே புழுகு வழிக்கலாமா?
Can you obtain musk from a polecat?

5132. மரம் தன்னை வெட்டுகிறவனுக்கு நிழல் கொடுக்கும்.
The tree affords shade to the man who is felling it.

5133. மரம் வெட்டுகிறவனுக்கு நிழலும், மண் தோண்டுகிறவனுக்கு இடமும்கொடுக்கும்.
The tree affords shade to him who fells it, the earth supportshim who digs it.

5134. மரம் ஏறிக் கை விட்டவனும், கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டான். He who let go his hold after climbing a tree, and he who borrowed money to lend, came to grief.

5135. மரம் வைத்தவன் தண்ணீர் வார்ப்பான்.
He who planted the tree will water it.

5136. மரியாதை இல்லாதான் மகிமை அற்றான்.
He who was not respectful lost his reputation.

5137. மரியாள் குடித்தனம் சரியாய்ப் போச்சு.
Mary's domestic life has come to an end.

5138. மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
To a gloomy eye all obscure things are demons.

5139. மருத்து மாவுக்குச் சயிக்கினை, மடங்காக் குதிரைக்குச் சவுக்கடி.
A sign to a fleet horse, whipping to an obstinate one.

5140. மருந்து கால் மதி முக்கால்.
Medicine one fourth, Common sense three fourths.

5141. மருந்தும் விருந்தும் மூன்று நாள்.
Three days for testing a medicine, and for a feast.

5142. மருந்தே ஆயினும் விருந்தோடு உண்.
Though the quantity be little, like medicine, distribute before eating it.

5143. மருமகனுக்கென்று சமைத்ததை மகனுக்கு இட்டு வயிறு எரிந்தாளாம்.
It is said that what she cooked for her son-in-law she gave to her son, and was distressed about it.

5144. மருவில் நின்ற சாப்பாட்டை லங்கணத்தில் நினைத்துக்கொண்டது போல.
Like remembering, when hungry, the food of the marriage feast.

5145. மலடிக்குத் தெரியுமா பிள்ளையைப் பெற்ற அருமை?
Does the barren woman understand the pains of parturition ?

5146. மலடி அறிவாளா பிள்ளை அருமை?
Does the barren woman know the endearments of children?

5147. மலடியைப் பிள்ளை பெறச் சொன்னால் பெறுவாளா?
If the barren woman be asked to bring forth a child, will she do so?

5148. மலரில் மணமும், எள்ளில் எண்ணெயும், உடலில் உயிரும் கலந்தது போல.
All pervading, like fragrance in a flower, oil in sesamum seed, and life in the body.

5149. மலிந்த பண்டம் கடையிலே வரும்.
When commodities are abundant, they come to market.

5150.மலை அத்தனை சுவாமிக்குத் தினை அத்தனை புஷ்பம்.
A flower, as small as a millet-seed, is dedicated to an idol as large as a mountain.

5151. மலை அத்தனை சுவாமிக்கு மலை அத்தனை புஷ்பம் போடுகிறார்களா?
Do they dedicate flowers as large as mountains, to idols as large a mountains?

5152. மலை இலக்கானால் குருடனும் எய்வான்.
If a mountain be the target, even a blind man may shoot.

5153. மலை உச்சியில் கல் ஏற்றுதல் அரிது.
It is difficult to roll a stone to the top of a hill.

5154. மலை ஏறினாலும் மைத்துனனைக் கை விடாதே.
Though you ascend the mountains, do not leave behind your brother-in-law, or the son of your maternal uncle.

5155. மலைத்தேன் முடவனுக்கு வருமா?
Will mountain honey come to the lameman?

5156. மலை நெல்லிக்காய்க்கும் கடல் உப்புக்கும் உறவு செய்தவர் ஆர்?
Who created the affinity between the mountain nelli, fruit, and sea-salt ?

5157. மலைபோலப் பிராமணன் போகிறானாம், பின் குடுமிக்குஅழுகிறாளாம்.
It is said that when a brahman who was equal to a mountain was dying, his wife was weeping for his tuft of hair.

5158. மலை போல வந்ததெல்லாம் பனிபோல நீங்கும்.
All that has come upon thee like mountains, shall pass away as dew.

5159. மலை முழங்கிச் சுண்டெலி பெற்றதுபோல.
As a mountain amidst thunder brought-forth a mouse.

5160. மலைமேல் இருப்பாரைப் பன்றி பாய்வது உண்டா?
Can the wild hog rush on thesewho are on the mountain top?

5161. மலையில் விளைந்தாலும் உரலில் மசியவேண்டும்.
Although produced on the mountains, the rice must be prepared for use in a mortar.

5162. மலையே மண்ணாங்கட்டி ஆகிறபோது, மண்ணாங்கட்டி எப்படிஆகும்?
When a mountain becomes a sod, what will the sod be like ?

5163. மலையே விழுந்தாலும் தலையே தாங்கவேண்டும்.
Should a mountain fall, the head must bear it.

5164. மலையைக் கல்லி எலி பிடித்தது போல.
Like excavating a mountain and catching a rat.

5165. மலையைச் சுற்றி அடித்தவனைச் செடியைச் சுற்றி அடியேனா?
After having chased and beaten him round a mountain, will it be difficult to do so round a bush?

5166. மலையைத் துளைக்கச் சிற்றுளி போதாதா?
Is not asmall chisel sufficient to perforate a rock?

5167. மலையைத் துளைக்க வாச்சி உளி வந்தாற்போல.
As if an adze and chisel came to perforate the rock.

5168. மலையைப் பார்த்து நாய் குலைத்தால் மலைக்குக் கேடோ நாய்க்குக் கேடோ?
If a dog bark at a mountain, will the mountain be injured or the dog?

5169. மலையை மலை தாங்கும் மண்ணாங்கட்டி தாங்குமா?
A rock supports a rock, can a sod do so ?

5170. மலை விழுங்கி அம்மையாருக்குக் கதவு சுண்டாங்கியா?
Will a door be a difficulty to my aunt who has swallowed a mountain?

5171. மலை விழுங்குதற்கு மண்ணாங்கட்டி பச்சடியா?
Is a sod used as a chutney, to swallow a mountain ?

5172. மல்லாந்து உமிழ்ந்தால் மார்மேலே.
When one spits lying on his back, the spittle will fall on his breast.

5173. மவுனம் மலையைச் சாதிக்கும்.
Silence may defy a mountain.

5174. மவ் இடப் பவ் ஆயிற்று.
ம being elided, ப has appeared.

5175. மழைக்கால் இருட்டானாலும் மந்தி கொம்பு இழந்து பாயுமா?
Even in the darkness of the rainy season, will a monkey when leaping, miss the branch?

5176. மழைக்குத் தண்ணீர் மொண்டு வார்ப்பவர் ஆர்?
Who draws and pours water into the clouds?

5177. மழைக்குப் படல் கட்டிச் சார்த்தலாமா?
Can you put up a hurdle to keep out the rain ?

5178. மழைக்கோ படல், இடிக்கோ படல்?
Is the hurdle to keep out rain, or the thunderbolt ?

5179. மழை பெய்து நிறையாதது மொண்டு வார்த்தால் நிறையுமா?
Can that be filled with a watering pot which cannot be filled by the rain?

5180. மழை முகம் காணாத பயிரும், தாய் முகம் காணாத பிள்ளையும்.
Vegetation without rain, a child without a mother.

5181. மழையும் பிள்ளைப்பேறும் மகா தேவருக்கும் தெரியாது.
Even Mahadeva does not know when it will rain, nor when a child will be born.

5182. மழை விட்டும் தூவானம் விட இல்லை.
Though the rain has ceased, the drizzling has not.

5183. மறந்த உடைமை மக்களுக்கும் ஆகாது.
An article forgotten is not good even for one's children.

5184. மறந்து செத்தேன் பிராணன் வா என்றால் வருமா?
If one say, I died through forgetfulness, will life return ?

5185. மனக்கசடு அற மாயை நாடேல்.
Seek not empty pleasures to purify the heart.

5186. மனக் கவலை பலக் குறைவு.
Mental anxiety will diminish one's strength.

5187. மனச்சாட்சி குற்று மேல் மறு சாட்சி வேண்டாம்.
If the conscience condemn, other evidence is unnecessary.

5188. மனதிலே பகை உதட்டிலே உறவு.
Enmity at heart, friendship on the lips.

5189. மனதில் இருக்கும் ரகசியம் மதிகேடனுக்கு வாக்கிலே.
A secret that should be concealed in the mind is uttered by a fool.

5190. மனதிற்கு மனதே சாட்சி, மற்றதற்குத் தெய்வம் சாட்சி.
The heart is its own witness, God is the witness of the rest.

5191. மனது அறியாப் பொய் உண்டா ?
Can a mind be ignorant of its own falsehood?

5192. மனத்துயர் அற்றோன் தினச்செபம் உற்றோன்.
He who utters prayers daily has no anxiety of mind.

5193. மனம் கொண்டது மாளிகை.
That which is agreeable to the mind is a palace.

5194. மனம் தடுமாறேல்.
Be not confused.

5195. மனம் இருந்தும் சற்று வகை அற்றுப் போவான்.
Although willing he will lack means.

5196. மனிதர் காணும் பொழுது மவுனம், இராத பொழுதில் உருத்தி ராஷப்பூனை.
Silent in the presence of man, in their absence a beaded cat.

5197. மனிதன் மறப்பான், குறைபடுவான், மாறுவான், போவாள்.
Man forgets, is reduced in circumstances, changes and vanishes.

5198. மனுஷன் தலையை மான் தலை ஆக்குகிறான் மான் தலையை மனுஷன் தலை ஆக்குகிறான்.
He can transform a man's head into the head of a deer, and he can make a man's head out of a deer's head.

5199. மனையாள் விடியுமுன் எழுந்து வீட்டுப் பண் செய்வாள்.
A wife gets up before day-break and looks after her domestic affairs.

5200. மனையாளுக்கு உற்றது ஒன்றும் சொல்லவேண்டாம், மாற்றனை ஒரு நாளும் நம்ப வேண்டாம்.
Do not disclose your secrets to your wife, nor trust an enemy at any time.

5201. மனோ வியாதிக்கு மருந்து உண்டா ?
Is there any remedy for mental sickness?

5202. மன்னவர்கள் செத்தார்கள், மந்திரிகள் செத்தார்கள் முன் இருந்தோர் எல்லாம் முடிந்தார்கள்.
Kings have perished, their prime ministers have perished, and all who lived before, are dead.

5203. மன்னவர்கள் ஆண்டது எல்லாம் மந்திரிகள் ஆண்மை
The government of kings depends on the vigor of their councillors.

5204. மன்னவர்க்கு அழகு செங்கோன் முறைமை.
A sceptre of justice is the beauty of a king.

5205. மா இருக்கிற மணத்தைப் போல் அல்லவோ கூழ் இருக்கிறகுணம்.
As is the flour so is the gruel.

5206. மா உண்டானால் பணிகாரம் சுடலாம்.
If there be flour, cakes may be baked.

5207. மா ஏற மலை ஏறும்.
The accretion of a particle to a mountain increases its size.

5208. மாடு திருப்பினவன் அர்ச்சுனன்.
He who drove back the cows was Arjuna.

5209. மாடு தின்னிக்கு வாக்குச் சுத்தம் உண்டா ?
Is a beef-eater accustomed to decent words?

5210. மாடு முக்கிவர வீடு நக்கிவரும்.
When cows return fatigued the household will suffer want.

5211. மாடு மேய்க்காமற் கெட்டது, பயிர் பார்க்காமற் கெட்டது.
Without pasture cows die; without care vegetation perishes.

5212. மாட்டின் வாழ்க்கை மூட்டையிலே.
A bull's term of existence is in his sack.

5213. மாட்டுக்குப் பெயர் பெரிய கடா என்று.
A cow is otherwise called a large he-goat.

5214. மாட்டைப் புல் உள்ள தலத்திலும், மனுஷனைச் சோறு உள்ளதலத்திலும் இருக்க ஒட்டாது.
It will not allow the cow to be content in its pasture, nor a man with his boiled rice.

5215. மாட்டை மேய்த்தானாம் கோலைப் போட்டானாம்.
It is said that he tended the cows and threw away the goad.

5216. மாணிக்கக் காலுக்கு மாற்றுக்கால் இருக்கிறது.
There is a spare leg, for the one made of a ruby.

5217. மாதம் காதவழி மானாகத் துள்ளுவான்.
He will leap like a deer, ten miles in a month.

5218. மாதா செய்தது மக்களுக்கு.
The faults of a mother are visited on her children.

5219. மாதா மனம் எரிய வாழாள் ஒரு நாளும்.
Whilst her mother's heart is wounded, she will not prosper even for a day.

5220. மாத்திரை தப்ப மிதித்தால், கோத்திரம் கூறப்படும்.
If one exceed his limit, his ancestry will be exposed.

5221. மாப் புளிக்கிறது எல்லாம் பணிகாரத்துக்கு நலம்.
The more the flour is leavened the better for the cakes.

5222. மாப் பொன் இருக்க மக்களைச் சாவக் கொடுப்பேனா?
Whilst I possess a particle of gold, will I allow my children to die?

5223. மா மறந்த கூழுக்கு உப்பு ஒரு கேடா?
Does the absence of salt spoil gruel made without flour?

5224. மாமி ஒட்டினாலும் பானை ஒட்டாது.
Though a mother-in-law may be reconciled, the broken pieces of any earthen pot cannot be reunited.

5225. மாமியார் உடை குலைந்தால் வாயாலும் சொல்லக்கூடாது, கையாலும் காட்டக்கூடாது.
If the dress of a mother-in-law be out of order, it must not be spoken of, or pointed at by the hand.

5226. மாமியார் உடைத்தால் மண்கலம், மருமகள் உடைத்தால் பொன்கலம்.
If broken by the mother-in-law it is an earthen vessel, if by the daughter-in-law, it is a golden vessel.

5227. மாமியாரைக் கண்டு மருமகன் நாணுகிறதுபோல.
As the son-in-law is embarrassed in the presence of his mother in-law.

5228. மாமியார் செத்த ஆறாம் மாதம் மருமகள் கண்ணில் கண்ணீர் வந்ததாம்.
It is said that six months after the death of the mother-in-law, a tear came into the eye of the daughter-in-law.

5229. மாமியார் செத்து மருமகள் அழுகிறது போல.
Like the wailing of a daughter-in-law, on account of the death of her mother-in-law.

5230. மாமியாரும் சாகாளோ மனக்கவலையும் தீராதோ?
Will my mother-in-law never die, will my sorrows never end?

5231. மாமியார் வீடு மகா செளக்கியம்.
The house of the mother-in-law is very comfortable.

5232. மாயக்காரர் எல்லாம் பாதகர், மாறுபாட்டுக்காரர் எல்லாம் சாதகர்.
All impostors are perfidious villains, all double-dealers are practically so.

5233. மாயக்காரன் போயிற் கடையே.
A hypocrite is worse than a demon.

5234. மாரி அல்லது காரியம் இல்லை.
Without rain nothing can be effected.

5235. மாரி காலத்தில் பதின் கல மோரும், கோடை காலத்தில் ஒருபடி நீரும் சரி.
Ten kalams of buttermilk in the wet season, are worth one measure of water in the hot season.

5236. மார் அடித்த கூலி மடிமேலே.
The hire for beating their breasts is at once on the lap.

5237. மார்பு சரிந்தால் வயிறு தாங்க வேண்டும்.
If the breasts be pendent, they must be supported by the stomach.

5238 மார்பைத் தட்டி மனதிலே வை.
Touch your breast, and keep it in your mind.

5239. மாலை குளித்து மனையில் புகும், தன் மனையில் ஆரையும் சேர்காது.
In the evening a crow bathes before it goes to its nest, and will not admit a stranger.
Many Natives attribute to the crow five peculiarities of which that indicated in this proverb is one. The peculiarities, or habits are as follows :- (a) Going forth very early of a morning. (b) Never being seen to pair. (c) Eating together. (d) Bathing before going to their west. (e) Warning their companions of apparent danger.

5240. மாலை சுற்றிப் பெண் பிறந்தால் மாமனுக்கு ஆகாது.
For a girl to be born with a garland round her neck is ominous to her maternal uncle.
This மாலை may be either the navel-string or a thin membrane that covers the head, and which, sometimes decends like a ring, to the neck, it is then called மாலை, if otherwise முகமூடி a veil.

5241. மாலை சுற்றிப் பிறந்த பிள்ளை மாமனுக்கு ஆகாது.
If a child be born with its navel string round its neck, it is ominous to its uncle.

5242. மாவிலும் ஒட்டலாம் மாங்காயிலும் ஒட்டலாம்.
A share in the dough, a share in the mangos.

5243. மாவுக்கு தக்க பணிகாரம்.
Cakes proportioned to the flour.

5244. மாவைத் தின்றால் அப்பம் இல்லை.
If you eat the dough you will not get your share of cake.

5245. மாற்றிலே வளைவது மரத்திலே வளையுமா?
Will the tree be pliable because the sapling was so?

5246. மாற்றானுக்கு இடம் கொடேல்.
Yield not to a foe.

5247. மானத்தின் மேலே கண்ணும் மாப்பிள்ளை மேலே சிந்தையும்.
The eye is on the heavens, the mind is on the bridegroom.

5248. மானத்தை வில்லாய் வளைப்பான் மணலைக் கயிறாய்த் திரிப்பான்.
He is able to bend the sky as a bow, and he can twist ropes of sand.

5249. மானம் அழியில் உயிர் காவலா?
When honour is perishing, is life worth preservation?

5250. மானம் பெரிதோ , சீவன் பெரிதோ?
Is honour great, or is life ?

5251. மானிலம் சிலரைத் தாங்கேன் என்னுமோ?
Does the spacious earth refuse to uphold any one?

5252. மானுக்கு ஒரு புள்ளி ஏறி என்ன, குறைந்து என்ன?
What matters it whether the deer has more or fewer spots ?

5253. மானுஷியம் இல்லாதவன் மனுஷப் பதர்.
Among mankind one destitute of humanity is as chaff.

5254. மான் கண்ணிலும் அழகு விரைவிலும் விரைவு.
More beautiful than the eye of a deer, more rapid than its speed.

5255.மான் கூட்டத்தில் புலி புகுந்ததுபோல,
As the tiger sprang on a herd of deer.

5256. மிகுதி ஆசை அதிக நஷ்டம்.
The greater the inordinate deșire, the greater the loss.

5257. மிகுதி உள்ளவனுக்கும் வஞ்சனைக்காரனுக்கும் பகை, வேதக்காரனுக்கும் உலகத்திற்கும் பகை.
Enmity exists between the wealthy and the hypocrite, and between a religious man and the world.

5258. மிகுந்தும் குறைந்தும் நோய் செய்யும்.
Both, excess and want, lead to disease.

5259. மிகைபடச் சொல்லேல்.
Do not exaggerate.

5260. மிஞ்சினது கொண்டு மேற்கே போகல் ஆகாது.
It is not good for one to go westward carrying refuse.

5261. மிஞ்சிய கருமம் அஞ்சச் செய்யும்.
A thing done through inadvertence may produce fear.

5262. மிடி இதயங்கொள் மீளாக் கதி தொடர்.
Be humble, and seek unfailing bliss.

5263. மிடிமையிலும் படிமை நன்று.
The habiliments of an ascetic are to be preferred before poverty.

5264. மிடுக்கன் சரக்கு இருக்க விலைப்படும்.
The haughty sells his goods sitting.

5265. மிதித்தாரைக் கடியாத பாம்பு உண்டா ?
Are there any snakes that will not bite those who tread on them?

5266. மிருகங்களில் ஆனை பெரிது, அதிலும் சிங்கம் வலிது.
Among beasts an elephant is the biggest, and a lion the strongest.

5267. மினுக்கு உள்ள அம்பு துன்பம் செய்யும். அதுபோல, அந்தம் உள்ளவர்களும் துன்பத்தைத் தருவார்கள்.
A shining arrow will occasion pain, in like manner, those who are handsome in person may produce pain.

5268. மினைக்கெட்ட அம்பட்டன் பூனையைச் சிரைத்தானாம்.
It is said that a barber who had nothing to do, shaved a cat.

5269. மின்மினிப்பூச்சி வெளிச்சத்துக்கு இருள்போமோ?
Does a fire fly dispel darkness ?

5270. மின்னலைப்போல் பல்லை விளக்கானும், மினுக்கிக் கொள்வானும் பதர்.
He who will not clean his teeth so as to shine like lightning, and he who is fond of show, are chaff.

5271. மின்னாமல் இடி விழுமா?
Does the thunder-bolt fall without previous lightning ?

5272. மின்னாமல் மழை பெய்யுமா?
Does it rain without previous lightning?

5273. மின்னாமல் முழங்காமல் இடி விழுந்தது போல.
As a thunder-bolt fell without lightning and thunder.

5274. மின்னுவதெல்லாம் பொன் அல்ல.
All that glitters is not gold.

5275. மின்னுக்கு எல்லாம் பின்னே மழை.
Lightning is always followed by rain.

5276. மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது.
An unpiloted vessel will not sail.

5277. மீதூண் விரும்பேல்.
Be not gluttonous.

5278. மீந்த சுண்ணாம்பையும் மெலிந்த ராஜாவையும் கைவிடல் ஆகாது.
The remains of chunambu, and an enfeebled king, should not be renounced.

5279. மீனை மீன் விழுங்கினாற்போல்.
Like a fish swallowing a fish.

5280. மீன் குஞ்சுக்கு நீச்சுப் பழக்குகிறதா?
Are young fish taught to swim?

5281. மீன் குழம்போ தேன் குழம்போ?
Fish curry or honey curry?

5282. முகக் கோணலுக்குக் கண்ணாடி பார்த்தால் தீருமா?
Will the distortion of the countenance be removed by looking into a mirror?

5283. முகத்துக்கு முகம் கண்ணாடி.
One face is a mirror to another face.

5284. முகத்துக்கு அஞ்சி மூத்தாரோடு போனால் குலத்துக்கு எல்லாம் ஈனமாம்.
If a woman elope with her husband's elder brother out of personal regard for him, itwill be a disgrace to the whole family.

5285. முகம் ஆகாதிருந்தால் கண்ணாடி என்ன செய்யும்?
If the face be ugly, what can the mirror do ?

5286. முகம் சந்திர பிம்பம் , அகம் பாம்பின் விஷம்.
A face like the moon, a mind of deadly poison.

5287. முக்காட்டுக்குள் சமுதாடா?
What! a dagger under a veil?

5288. முக்காட்டுக்குள்ளே கைக்காட்டா?
What, is it to make signs under a veil?

5289. முக்காதம் சுமந்தாலும் முசல் கைத்தூக்குத்தான்.
Though carried thirty miles, a hare is carried in the hand.

5290. முக்காலம் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்கு ஆகாது.
Though a crow bathe three times a day, it will not thereby become a white crane.

5291. முக்காலம் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்கு ஆகுமா?
Will a crow by bathing three times a day become a crane?

5292. முக்கூட்டுச் சிக்கு அறாது.
A triparty business is always involved.

5293. முசலை எழுப்பி விட்டு, நாய் பதுங்கினதுபோல.
Like a dog crouching after starting a hare.

5294. முடப்புல் முக்கல நீரைத் தடுக்கும்.
Crooked grass prevents the flow of six kalams of water.

5295. முடவனுக்கு நொண்டி சண்டப்பிரசண்டன்.
Alame man is very boisterous before a cripple.

5296.முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டதுபோல.
As a lame man longed for the honey that hung from a branch.

5297. முடவன் சந்தைக்குப் போனாற்போல.
Like a lame man going to market.

5298. முடிக்காதவனே படிக்காதவன்.
He who does not accomplish his object lacks training.

5299. முடிச்சுப் போனதும் அல்லாமல் இளித்தவாய்ப்பட்டமும் கூடக் கிடைத்தது.
You have not only lost the bundle of money, but also incurred a reproachful name.

5300. முடிய முடியநட்டால் கோட்டை கோட்டையாய் விளையுமா?
If you plant bundles, will heaps be produced?

5301. முடியும் வகை யோசியாமல் முயற்சி கொள்ளாதே.
Never undertake a matter without due consideration as to how it is to be accomplished.

5302. முடி வைத்த தலைக்குச் சுழிசுத்தம் பார்க்கிறது, கொண்டு குலம் பேசுகிறது போல் இருக்கிறது.
Examining the circlets of hair in a crowned head, is like discussing the tribe of a girl after marrying her.

5303. முட்ட நனைந்தவனுக்கு ஈரம் இல்லை, முழுதும் கெட்டவனுக்குத் துக்கம் இல்லை.
When completely drenched one does not feel wet, when entirely ruined one feels no sorrow.

5304. முட்டரோடாடிய நட்புக் கருங்காலிக் கட்டை ஊடாடிய கால்.
Friendship with the rude is like the foot of a traveller among stumps of ebony.

5305. முட்டற்ற பெண்ணுக்கு இரட்டைப் பரியமா?
What double dower to a worthless woman?

5306. முட்டாளுக்கு இரண்டு ஆள்.
Two persons for one fool.

5307. முட்டாளுக்குக் கோபம் மூக்கின் மேலே.
The wrath of a fool is on his nose.

5308. முட்டிகைபோல முனியாது வைகலும், கொட்டி உண்பாரும் குறடுபோற் கைவிடுவார்.
Even those who like a pair of pincers uphold their dependants and daily feed them, will leave them like a pair of tongs.

5309. முட்டி ஊட்டின கன்று முதர்க் கன்று.
A calf that drains the udder is almost weaned.

5310. முட்டுக்கு முட்டல்ல மூடக் கதவும் அல்ல, சன்னிதிவாசலுக்குச் சார்த்தக் கதவும்அல்ல.
It is neither an obstruction, nor a door to shut, nor even mani screen to the temple gateway.

5311. முட்டுப்பட்டும் ஜெயம் வருமானால் குட்டுப்பட்டாற் குறை என்ன ?
If victory comes by being pressed with want, what matters a cuff on the head?

5312. முதலில் எடுத்துச் செலவிடாதே.
Do not spend on your capital.

5313. முதலிலே கெட்டிக்காரன் முடிவிலே சோம்பேறி.
Clever at the beginning, indolent at the end.

5314. முதலுக்கு மோசமாக இருக்கிறது இலாபத்துக்குச் சண்டை போடுகிறதா?
When the principal is in danger, do you quarrel about the interest?

5315. முதலே துர்ப்பலை அதிலே கர்ப்பிணி.
Already weak, and withal pregnant.

5316. முதலைக்கு இல்லை நீச்சும் நிலையும்.
A crocodile cares not whether the water is deep or shallow.

5317. முதலை தன் இடத்து, மலை ஒத்த ஆனையையும் இழுத்துச் செல்லும்.
In his own element, the alligator will carry off an elephant as big as a mountain.

5318. முதலை வைத்துப் பெருக்காத வணிகரைப்போல.
Like merchants who do not increase the capital they invest.

5319. முதல் இல்லார்க்கு ஊதியம் இல்லை, மதலையாம் சார்பில்லார்க்கு நிலை இல்லை.
Those who have no capital have no gain, those who have no sons to lean on, have no support.

5320. முதல் இல்லார்க்கு ஊதியம் இல்லை.
Those not possessed of capital, have no gains.

5321. முதல் எடுக்கும் போதே தப்பட்டைக்காரன் செத்தான்.
When the funeral procession was moving forward, the tomtom beater died.

5322. முதல் எழுத்திலே வெள்ளெழுத்தா?
What, dim-sighted at the beginning of the Alphabet?

5323. முதல் கோணல் முற்றும் கோணல்.
If crooked at first, it will be so throughout.

5324. முதுகிலே புண் உண்டானால் செடியிலே நுழையப் பயம்.
If one has a wound on his back, he will fear to pass under a bush.

5325. முத்தால் நத்தை பெருமைப்படும், மூடர் எத்தாலும் பெருமைப்படார்.
As snail is precious by reason of its pearl, fools have naught where with to attain greatness.

5326.முத்திலும் சொத்தை உண்டு , பவழத்திலும் பழுது உண்டு.
Flaws may be found in pearls and also in coral.

5327. முந்தி வந்த செவியைப் பிந்தி வந்த கொம்பு மறைத்ததாம்.
It is said that the ears which came first, were covered by the hornswhich sprung up afterwards.

5328. முந்தினோர் பிந்தினோர் ஆவர் பிந்தினோர் முந்தினோர் ஆவர்.
The first shall be last, and the last first.

5329. முந்தின சோத்தைத் தட்டினால் பிந்தின சோறு பீயும் சோறும்.
If the first food be rejected, worse may be offered.

5330. முந்நாழி கறக்கிற பசுவானாலும் இறப்பைப் பிடுங்குகிற பசு ஆகாது.
Though a cow yields three measures of milk, it is not desirable it pulls down the roof.

5331. முப்பதிலே மூர்க்கம், நாற்பதிலே நாகரீகம்.
Obstinacy at thirty, civility at forty.

5332. முப்பது பணம் கொடுத்தாலும் மூளிப்பட்டம் போகாது.
Thoughone may give thirty fanams, the nickname, crop-eared, willnot be removed.

5333. முப்பதிலே வாழ்ந்தவன் மூடன், முன்னும் பின்னும் தெரியாதவன் குருடன்.
He is a fool who prospered at thirty, he is blind who does not see before and behind.

5334. முப்பணி இட்ட பெண்ணுக்குக் கொப்பு ஒன்றுதான் குறை.
To the woman adorned with three jewels, the ear ornament is the only want.

5335. முப்பது வருஷம் வாழ்ந்தவனும் இல்லை, முப்பது வருஷம் தாழ்ந்தவனும் இல்லை.
None ever continued to prosper or decay for thirty years.

5336. முப்பொருள் ஆதி மூலமானவன்.
He is the triad who is the first and the last of all.

5337. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.
The industrious will never be put to shame.

5338. முரட்டுப் பெண்ணும் சுருட்டுப் பாயும்.
A stubborn wife, a mat rolled up.

5339. முருக்குப் பருத்து என்ன தூணாகப் போகிறதா?
What if the murukku tree grow large, will it do for a pillar?

5340. முருங்கைக்காய் என்றால் பத்தியம் முறியுமா?
Will the mention of the murungai fruit affect a prescribed diet?

5341. முலை கொடுத்து வளர்த்தவள் மூதேவி, முன்றானை போட்டவள்சீதேவி.
The one that nursed and brought up the child is Mudevi, the wife is Shridevi.

5342. முலைக் குத்துச் சவலைப் பிள்ளைக்குத் தெரியுமா?
Is the pain in the breast of the nurse, known to the suckling ?

5343. முழங்கையிற் பட்ட சுகம்போல.
Like the pleasure experienced when the elbow is struck.

5344. முழுகி முப்பது நாளாச்சு , இறங்கி உப்பு அள்ளக்கூட இல்லை என்கிறான்.
It is thirty days since he bathed, and he says that he is so clean that touching salt would defile him.

5345. முழுக் கட்டி பெயர்க்கிற பன்றிக்குக் கொழுக் கட்டி விட்டது போல.
Like arming a hog in the snout with a ploughshare, that can tare up the ground without it.

5346. முழுச் சோம்பேறி முள்ளு உள்ள வேலி.
A perfect sluggard is like a hedge of thorns.

5347. முழுப் பங்குக்காரனுக்கு முந்திரிப் பங்குக்காரன் மிண்டன்.
He whose share is only one three hundred and twentieth part, is more persistent than he who has a whole onė.

5348. முழுப் பூசணிக்காயைச் சோற்றிலே மறைக்கிறாப்போல.
Like attempting to conceal a whole pumpkin in a plate of rice.

5349. முழு மணிப் பூணுக்குப் பூண் வேண்டுமோ?
Does a gemmed ferrule require an ornamental rim ?

5350. முளைத்த மயிர் மூன்று அதிலும் இரண்டு புழுவெட்டு.
His beard consists of three hairs, of which two are rotten at the root.

5351. முளையில் கிள்ளாததை முற்றினால் கோடரி கொண்டு வெட்ட வேண்டும்.
That which was not nipped in the bud will have to be felled with an axe when matured.

5352. முள்ளாலே முள்ளை எடுக்கவேண்டும்.
Thorns are extracted by thorns.

5353. முள்ளுக்குக் கூர்மையும் துளசிக்கு வாசனையும் இயற்கை.
By nature the thorn is sharp, and the tulasi fragrant.

5354. முள்ளுக்கு முனை சீவி விடுவார்களா?
Who sharpens the point of a thorn?

5355. முள்ளு மேல் சீலை போட்டால் மெள்ள மெள்ள வாங்கவேண்டும்.
If a cloth be spread on a thorn bush, it must be taken off with great care.

5356. முறத்தடி பட்டாலும் முகத்தடி படலாகாது.
Though one may endure being struck with a sieve, he cannot endure being brow-beaten.

5357. முற்பகல் செய்யிற் பிற்பகல் விளையும்.
What is done in the forenoon will result in good or evil in the afternoon.

5358. முற்றும் நனைந்தவர்களுக்கு ஈரம் ஏது?
Do those who are drenched complain of being wet?

5359. முனைமுகத்து நில்லேல்.
Do not stand in the face of a battle.

5360. முன் அளந்த நாழி பின் அளக்கும்.
The same measure that was used before, must be used afterwards.

5361. முன் ஒன்று ஓதிப் பின் ஒன்று ஆடேல்.
Do not say one thing and do another.

5362. முன் கை நீண்டால் முழங்கை நீளும்.
If the fore-arm be stretched, the elbow will be so also.

5363. முன் கோபம் பின் இரக்கம்.
Anger first, and pity afterwards.

5364. முன் விட்டுப் பின் நின்று கழுத்து அறுக்கலாமா?
Having given one the lead, will you follow and cut his throat?

5365. முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?
If the eternal be with you, will anything be impossible ?

5366. முன்னே போனால் கடிக்கிறது பின்னே போனால் உதைக்கிறது.
Biting before, and kicking behind.

5367. முன்னே பார் பின்னே பார் உன்னைப் பார் என்னைப் பார்.
Look before, look behind, look at yourself, look at me.

5368. முன்னே போனால் சிசுவத்தி பின்னே போனால் பிரமத்தி.
When you go before you are guilty of infanticide, when you follow you are guilty of brahmanicide.

5369. முன்னேரம் கப்பற்காரன் பின்னேரம் பிச்சைக்காரன்.
In the forenoon a ship owner, in the afternoon a beggar.

5370. முன்னே வந்த காதைப்பார்க்கிலும் பின்னே வந்த கொம்பு பலம்.
The horn that came after, is stronger than the ear that came before.

5371. மூக்கிலிக்குக் கண்ணாடி காட்டினதுபோல.
Like showing a noseless man a mirror.

5372. மூக்கறையனுக்கு வாழ்க்கைப்பட்டால் முன்னும் போகவிடார் பின்னும் போகவிடான்.
If a woman is married to one whose nose is rent, he will not allow her to go before or after him.

5373. மூக்கு அறுபட்ட கழுதை தூவானத்திற்கு அஞ்சாது.
A crop-nosed ass does not fear driving rain.

5374. மூக்குப் புண்ணாளி அல்லவோ தாசரி ஆகவேண்டும்?
A man with a sore nose ought to become a Vaishnava mendicant, ought he not?

5375. மூக்கு மயிர் பிடுங்கினதுபோல வருத்தம் வரும்.
The pain will be felt as keenly as when the hair in the nose is plucked out.

5376. மூக்கு மயிர் பிடுங்கினால் ஆட் பாரம் குறையுமா?
Will a person's weight be diminished by pulling the hair out of his nose ?

5377. மூக்கைப் பிடித்தால் சீவன் போகிறது.
If the nostrils be closed, life will depart.

5378. மூக்கைப் பிடித்தால் வாய் ஆ வென்னத் தெரியாது?
He knows not how to open his mouth when one closes his nostrils?

5379. மூங்கிற் பாயும் முரட்டுப் பெண்டாட்டியும்.
A bamboo mat, and an obstinate wife.

5380. மூங்கில் இலை மேலே தூங்கு பனி நீரே.
Thou art a dew drop depending from the leaf of a bamboo.

5381. மூடரோடு ஆடிய நட்புக் கடுவழியிற் கட்டை ஊடாடிய கால்.
The friendship of fools is as the feet that have travelled by a jungle path covered with stumps of trees.

5382. மூடர் முன்பு மூர்க்கம் பேசாதே.
Speak not harshly before fools.

5383. மூடர்கள் சேர்க்கையால் தப்பாமல் கெடுதி வரும்.
The companionship of fools invariably leads to loss.

5384. மூடர் கூட்டு உறவு முழுதும் அபாயம்.
Danger attends the friendship of fools.

5385. மூடனாய் இருக்கிற பிள்ளையினாலே எப்போதும் நஷ்டமே வரும்.
One always sustains loss if he has a stupid child.

5386. மூடனுடைய பங்கு தரித்திரமும் இகழ்ச்சியும்.
Adversity and disgrace form the lot of fools.

5387.மூடன் சண்டை மூட்டுப் பிரிக்கும், மோர்க்கடன் வீட்டைத் தொடும்.
The quarreling of fools will break friendship, debt on account of buttermilk will affect one's house.

5388. மூடின முத்து மூன்று லோகம் பெறும், மூடாத முத்து முக்காற் காசும் பெறாது.
A pearl concealed is worth the three worlds, one that is uncovered wont fetch three quarters of a cash.

5389. மூட்டைக்காரனுக்கு முழங்காலிலே புத்தி.
A porter's sense is is his knees.

5390. மூத்தது மோழை இளையது காளை.
The first-born is a hornless animal, the younger is a bull.

5391. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்.
The utterances of elderly persons are ambrosia.

5392. மூப்பிலும் தருமம் செய்தல் முயற்சிதான்.
The charitably disposed exert themselves even in old age.

5393. மூப்பு ஏன் பிடிப்பது, மூதேவி வாசத்துக்கு அடையாளம்.
Why does, one grow old ? it is a sign that he is under the influence of the goddess of misfortune.

5394. மூர்க்க னும் முதலையும் சரி.
The stubborn and crocodiles are alike.

5395. மூர்க்கன் முகத்தில் மூதேவி குடி இருப்பாள்.
The goddess of misfortune dwells in the face of the stubborn.

5396. மூர்க்கனைச் சேர்ந்தவன் வாழான், மூடனைச் சேர்ந்தவன் படியான்.
He who associates with the angry will not prosper, and he who associates with fools will not learn.

5397. மூர்க்கம் உள்ள ராஜாவும் மூட மந்திரியும் அழிவார்கள்.
A king that is easily provoked, and a prime minister wanting discretion, will come to ruin.

5398. மூர்க்கரோடு இணங்கேல்.
Associate not with the angry.

5399. மூலிகை அறிந்தால் மூன்று உலகமும் ஆளலாம்.
He who is acquainted with botany may govern the three worlds.

5400. மூன்றாம் கட்டு அவிழ்த்தால் தெரியும்.
It will be clear if you loose the third knot.

5401. மூன்று முழமும் ஒரு சுற்று, முப்பது முழமும் ஒரு சுற்று.
A cloth of thirty cubits is put on with as much ease as one of three cubits.

5402. மூன்று வீட்டுக்கு முக்காலி நாலு வீட்டுக்கு நாற்காலி.
A three legged seat to three houses, and four legged seat, to four houses.

5403. மூன்று பெயர் வழிக்குத் துணை, இரண்டு பெயர் பிணையல் மாடு, ஒருவன் போனால் பரதேசி.
Three may help one another on the way, two are like a yoke of oxen, one is like a pilgrim.

5404. மூன்று பொருளையும் தேடு முதிர்வயதில் ஊன்றுகோல் ஆகும்.
Secure the three things virtue, wealth and happiness, they will serve as a staff in old age.

5405. மூன்றே முக்கால் நாழிகைக்குள் முத்து மழை பெய்தது, வாரி எடுக்குமுன்னே மண்மாரி பெய்தது.
It rained pearls for three and three fourths of a naligai, but before they could be gathered it rained earth.

5406. மெத்தப் படித்தவருக்குச் சோறு வெல்லம்.
To the profoundly learned rice is sugar.

5407. மெத்தப் படித்தவன் பையித்தியக்காரன்.
He who is very learned, is a fool.

5408. மெத்தப் பரிவாம் உள்ளே எரிவாம்.
Externally sympathising, internally envying.

5409. மெத்தெனப் படுத்தல் நித்திரைக்கு அழகு.
A soft bed is favourable to sleep.

5410. மெய்கொண்டு விழிக்கிறது பொய்கொண்டு பொரிகிறது.
Shining with truth, burning with lies.

5411. மெய் சொல்லி வாழாதான் பொய் சொல்லி வாழ்வானா?
Will he who cannot prosper by truth, prosper by falsehood?

5412. மெய்த் தொழில் என்றும் மெய் பயக்கும்.
Honest occupation always secures substantial results.

5413. மெய்ப்பொருள் கல்வியே கைப்பொருள்.
Learning is real wealth.

5414. மெய் மூன்றாம் பிறை, பொய் பூரண சந்திரன்.
Truth is the crescentof the third day, falsehood is the full moon.

5415. மெய்மை சாற்ற வையம் ஏற்றும்.
When you speak truth, the world will honour you.

5416. மெய்யது நன்றி இடும்.
Truth is beneficial.

5417. மெய்யான சத்தியன் வேத வாசகன்.
He is the truthful man who knows the vedas.

5418. மெய்யுடை ஒருவன் சொல்லமாட்டாமையால் பொய்போலும்மேபொய்போலும்மே.
Truth in one who cannot speak easily, may appear like falsehood.

5419. மெலிந்தவளுக்கு மெத்தப் பெலன், மேனி மினுக்கு இட்டவளுக்கு மெத்தக் கசம்.
A lean woman is strong, a gaudy woman is consumptive.

5420. மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் குழியப் பாயும்.
Gently flowing water will hollow even a rock.

5421. மெல்லியாடோள் சேர்.
Live with your wife.

5422. மெழுகின வீட்டிலே நாய் புகுந்தது போல.
As a dog entered a house whose floor was smeared with cow-dung.

5423. மேட்டிமைக்காரருக்கு எதிர்த்து நிற்கவேண்டும், மெத்தனக் காரருக் கிருபை அளிக்கவேண்டும்.
Submit not to the haughty, and to the humble show pity.

5424. மேட்டுக்காகப் பயமாம், வீதி வழியில் திகிலாம்.
It is said that he is afraid, of the hill, and alarmed at the high road.

5425. மேயப் போகிற மாடு கொம்பிலே புல்லைக் கட்டிக்கொண்டு போகிறதா?
Do cattle going to graze, carry grass tied to their horns?

5426. மேய்கிற மாட்டை நக்குகிற மாடு கெடுத்தாற்போல.
As the cow that grazes is interrupted by the one that licks it.

5427. மேய்கிற கழுதையைக் கூவுகிற கழுதை கெடுத்ததாம்.
It is said that the braying ass interrupted the ass that was grazing.

5428. மேய்க்கும் மேய்ப்பனை வியக்கும் வாயன்.
He who praises the cowherd.

5429. மேய்த்தால் மைத்துனியை மேய்ப்பேன் இல்லாவிட்டாற் பரதேசம் போவேன்.
If I am to rule I must rule over my sister-in-law, otherwise I shall go on a pilgrimage.

5430. மேய்த்தாற் கழுதை மேய்ப்பேன் இல்லாவிட்டால் பரதேசம் போவேன்.
I will tend the donkeys, or go on a pilgrimage.

5431. மேலாம் மினுக்கியைக் கொண்டவன் கெட்டான், மேட்டிலே பயிரிட்டவன் கெட்டான்.
He who marries a woman of great beauty will be ruined, he who sows on hilly ground, will be impoverished.

5432. மேலைக்கு வாழ்க்கைப்படுகிறேன் கழுத்தே சும்மா இரு.
I will marry some time hence; be still till then, my neck.

5433. மேலைக்கு உழுவார் கூழுக்கு அழுவார்.
Those who plough late will cry for want of food.

5434. மேழிச் செல்வம் கோழைபடாது.
The wealth of the plough is unfailing.

5435. மேனி ஒறுப்பே ஞானி நினைப்பு.
Sages are intent upon self-denial.

5436. மேன்மக்கள் சொற் கேள்.
Listen to the words of the great.

5437. மேன்மையின் மேன்மையன் மேலாம் பதவியன்.
The most excellent is the possessor of the highest state of bliss.

5438. மை கரையாமல் முதுகு ஆட்டு.
Rub your back without spoiling the paint.

5439. மைவிழியாடனைக் கையகன்றொழுகு.
Live far removed from prostitutes who paint their eye-lids.

5440. மைவிழியார் மனையகல்.
Avoid the house of a prostitute.

5441. மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடி இட்டதுபோல.
Like joining a bald head and the knee, by tying a knot of hair.
An impossibility.

5442. மொட்டைத் தலையில் பட்டம் கட்டி ஆள வந்தானோ?
Has he come to reign with a crown on his bald head?

5443. மொட்டைத் தலையில் பேன் சேருமா?
Will lice attach themselves to a bald head?

5444. மொட்டைத் தலையிற் பேய் வருமா?
Will a demon come on a bald head?

5445. மொட்டைத் தலையிற் பேன் போல.
Like a louse on a bald head.

5446. மொட்டைத் தலையன் போருக்கு அஞ்சான்.
A bald-headed man fears not to fight.

5447. மொட்டைத் தலைக்கு ஒரு கொட்டுக் கூடை, மோழைத் தலைக்கு ஒரு தாற்றுக் கூடை.
To a bald head, a cup-shaped basket, to a hornless head, a basket of goads.

5448. மொட்டைத் தலையன் முழு மோசக்காரன்.
A bald-headed man is a perfect cheat.

5449. மொட்டைச்சிக்குத் தகுந்த மூக்கறையன்.
A noseless man, fit for a bald woman.

5450. மொண்டு ஆளுகிற வீட்டில் கொண்டு ஆண்டால் நிறையுமா?
Will an affluent household be content to live from hand to mouth?

5451. மொத்தைச் சோற்றுக்கு மேளம் அடிக்கிறான்.
He beats a tomtom to get a mouthful of rice.

5452. மொழி தப்பினவன் வழி தப்பினவன்.
A promise breaker is in the wrong way.

5453. மொழி தவறாதான் வழி தவறாதான்.
He who is true to his word, swerves not from rectitude.

5454. மொழிவது மறுக்கின், அழிவது கருமம்.
If one break his promise, his undertaking will fail.

5455. மொழிவது அற மொழி.
Speak decisively.

5456. மோகத்தை முனி.
Renounce lust.

5457. மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள்.
Lust continues thirty days, desire sixty days.

5458. மோகனக் கல் ஆனாலும் பளு ஏறினால் உடையாதா?
Will not even a door-step break under excessive pressure?

5459. மோசம் பாய் போட்டுத் தூங்குகிறது.
Danger slumbers on a mat.

5460. மோந்துகொள்வது போல் கடிக்கிறது.
To bite when apparently kissing.

5461. மோருக்குப் போகிறவருக்கு முட்டி பிறகாலேயோ?
When going for buttermilk why carry the pot concealed behind you?

5462. மோருக்குப் போய் மொந்தையை ஒளிப்பான் ஏன் ?
Why conceal the vessel when going for buttermilk?

5463. மோரோ என்கிறவன் கழுத்தில் லிங்கம் கட்டினது போல.
As a linga was tied to the neck of a buttermilk seller.

5464. மோனம் என்பது ஞானவரம்பு.
Silence is the bulwark of wisdom.

5465. மெளனம் கலக நாசம்.
Silence puts an end to quarrels.

5466. மெளனி குடியைக் கெடுப்பாள்.
A reserved woman will destroy her family.

5467. யாதி முற்றினால் வியாதி.
Matured meditation ends in disease.

5468. யானை கறுத்தால் ஆயிரம் பொன் பெறும், பூனை கறுத்தால் என்ன பெறும்?
A black elephant is worth a thousand gold peices, what will a black cat fetch?

5469. யானைக்கு அறுபது அடி , அருங் குள்ளனுக்கு எழுபது அடி.
Sixty feet from an elephant, Seventy from a dwarf.

5470. யானை தன் தலையிலே மண்ணை வாரிக் கொட்டிக்கொள்கிறதுபோல.
As an elephant throws sand on its head.

5471. யானை தின்ற விளாங்கனிபோல.
Like a blighted wood-apple.

5472. யானை மிதிக்கப் பிழைப்பார்களா?
Will they survive who have been trampled on by an elephant?

5473. யானைமுன்னே முயல் முக்கினது போல.
As a hare strained itself before at elephant.

5474. யானைமுதலான பெரிய ஜெந்துக்கள் தாழ விழுந்தால் பிழைக்கா; அதுபோல, பெரியோர் கீழே விழுந்தால் தேறமாட்டார்.
Large beasts such as elephants &c., when they fall down from a high place, live not, so are the great.

5475. யானையை ஆயிரம் பொன்னுக்கு வாங்கி இருப்பு அங்குசத்திற்கு ஏமாந்து நிற்பான் ஏன்?
Having bought an elephant for a hundred pieces of gold, why hesitate to buy its iron goad?

5476. யானையைத் தேடக் குடத்துக்குட் கை வைத்தது போல.
As one put his hand into a jar when he was seeking an elephant.

5477. யுகமுடிய மழை பெய்தாலும் ஓட்டாங்கிளிஞ்சில் கரையுமா?
Suppose it rain to the end of the Yuga, will a potsherd be thereby dissolved?

5478. ரண்டாட்டில் ஊட்டின் குட்டியாய்த் தீர்ந்தது.
It turned out to be a kid that had sucked two dams.

5479. லங்கணம் பரம ஒளஷதம்.
Abstinence is the best medicine.

5480. லோபிக்கு இரு செலவு.
Double expense to the niggard.

5481. வங்கணக்காரன் புளுகு வாசற்படி மட்டும்.
The lies of a paramour reach as far as the door.

5482. வங்கம் தின்றால் தங்கம், வங்கம் கெட்டால் பங்கம்.
When lead is eaten it becomes gold; when it is spoiled it becomes useless.

5483. வங்கிஷம் வார்த்தைக்கு அஞ்சும், புழுக்கை உதைக்கு அஞ்சும்.
The high-born are afraid of reproach, a menial is afraid of kicks.

5484. வசனம் பண்ண உபாயம் காரணம்.
In framing rules tact is required.

5485. வச்ச நாபியிலே புழுத்த புழு.
A worm produced in poison.

5486. வச்ச நாபியை உப்புப் பார்க்கலாமா ?
Is arsenic to be tasted to ascertain its flavour?

5487. வச்சத்துக்கு மேலே வழி இல்லை, பிச்சைக்குப் போகச் சுரைக் குடுக்கை இல்லை.
There is no way beyond Vachham, there is no gourd-shell to beg alms.

5488. வஞ்சகர்க்கு என்ன நேசம் காட்டினாலும் நெஞ்சு நேசம் கொள்ளார்.
No matter what love is shown to the deceitful, it will not affect the mind.

5489. வஞ்சர் உறவை வழுவி விலகு.
Relinquish intercourse with the deceitful.

5490. வஞ்சர் பால் ஊட்டினாலும் நஞ்சாய்விடும்.
Even milk given by the deceitful becomes poison.

5491. வஞ்சித்து நெடும் காலம் வாழ்தலில் மரணம் அடைவதே நலம்.
It is better to die than to live long in a deceitful course.

5492. வடகாற்று அடிக்க வந்தது மழையே.
As the wind veered to the north, it began to rain.
Thịs is generally true as regards Madras.

5493. வடக்கத்தியானையும் வயிற்று வலியையும் நம்பல் ஆகாது.
You must not be heedless of a northman, or of the belly-ache.

5494. வடக்கே கறுத்தால் மழை வரும்.
Darkening in the north betokens rain.

5495. வடக்குப் பார்த்த மச்சுவீட்டைப் பார்க்கிலும் தெற்குப் பார்த்த தெருத் திண்ணை நல்லது.
A pyal facing south is preferable to a terraced house with a northern aspect.
The following rules relating to the building of a house will illustrate this proverb.
Having selected a site, the frontage must be divided into nine equal parts, five being assigned to the right, and three to the left, the fourth division being reserved for the door-way. The enumeration begins on the left, and thus the fourth section is in the mansion of Mercury. The occupant of such a house may become as wealthy as Kuberar.
A person born under Gemini, Cancer or Leo must build his house on a line stretching east and west, the entrance being placed easterly.
A person bornunder Virgo, Libra or Scorpio, must build ona line running north and south, the door - waybeing southerly.
One born under Sagittarius, Capricorn or Aquarius must build west and east placing the entrance westerly. If born under Pices(?), Aries or the Twins, he must build south and north the door being placed northerly. A family occupying house built contrary to these rules will be ruined.

5496. வடலியை வெட்டி ஆள், எருமையைக் கட்டி ஆள்.
Trim the young palmyrah, and tie up the buffalua.

5497. வடலி வளர்த்துக் கள்ளைக் குடிக்கிறதா ?
Is it in expectation of today that youplant a palmyrah tree?

5498. வடுகனும் தமிழனும் கூட்டுப் பயிர் இட்ட கதை
The story of a Telugu man and a Tamil man, cultivating jointly.

5499. வடுகன் தமிழ் அறியான் வைக்கோலைக் கசு என்பான்.
A Telugu man does not understand Tamil, he will call vaikol kasu.

5500. வடுகு கொழுத்தால் வறை ஓட்டிற்கும் ஆகாது.
If a Telugu man prosper, he is of no use to anyone.

5501. வடுகு பொடுகாச்சு வைக்கோற் போர் நெல் ஆச்சு.
The slave has become small, the corn-stack is thrashed into paddy.

5502. வடையைத் தின்னச் சொன்னாளா துளையை எண்ணச் சொன்னாளா?
Did she tell you to eat the cakes, or to count the holes in them?

5503. வட்டம் சுற்றியும் வழிக்கு வரவேண்டும்.
Although you go round, you must come in by the entrance.

5504. வட்டி ஆசை முதலைக் கெடுத்தது.
Excessive desire after interest, destroyed the capital.

5505. வட்டிக்கு வட்டி எதிர் வட்டியா?
Is compound interest uncommon?

5506. வட்டி ஓட்டம் விழ ஓட்டத்திலும் அதிகம்.
The speedat which interest accumulates is greater than that of a car.

5507. வட்டுவத்தின் மேல் சொட்டுப் போட்டால் வட்டுவத்திற்கு மாத்திரமா படும்?
Will a slap on a betel-pouch, affect the pouch only?

5508. வணங்கின வில் தீங்கை விளைக்கும்.
A bent bow wil do mischief.

5509. வணங்கின முள் தைக்காது.
A pliant thorn will not penetrate.

5510. வணிகர்க்கு அழகு வாணிபம் செய்தல்.
To trade is the beauty of merchants.

5511. வண்டி ஓடத்தின் பெயரில் ஓடம் வண்டியின் பெயரில்.
A cart may be seen on a boat, and a boat on a cart.

5512. வண்டு தூரத்திலே பூவின் வாசனையை அறியும்; அதுபோல, கற்றோர் தூரத்திலேயே ஒருவன் நடத்தையை அறிந்து கொள்வார்கள்.
As beetles smell at a distance the fragrance of flowers, so the learned understand one's character when he is at a distance.

5513. வண்டு ஏறாத மரம் இல்லை.
There is no tree that cannot be bored by a beetle.

5514. வண்ணத்துக்குக் கிண்ணம் பாடுகிறான்.
He sings an unmelodious tune.

5515. வண்ணானுக்கு நோய் வந்தால் கல்லோடே.
If a washerman is sick, he gets better at the washing stone.

5516. வண்ணானுக்கும் நிருவாணிக்கும் உறவு என்ன?
What friendship has a washerman with one who wears no clothes?

5517. வண்ணானுக்கு வண்ணாத்திமேல் ஆசை, வண்ணாத்திக்குக் கழுதை மேல் ஆசை.
The washerman longs for the washer-woman, and the washer woman's desire is fixed on her donkey.

5518. வண்ணான் கையில் மாற்றுச் சும்மா .
A change of garments in the hands of the washerman.

5519. வண்ணான் கையில் சேவையைப் போட்டுக் கொக்கின் பின்னே போகிறதா ?
Having put your clothes to the washerman, do you chase the crane?

5520. வண்ணான் பிள்ளை செத்தால் அம்பட்டனுக்கு மயிர் போயிற்று.
If the washermen's child die, the barber cares not a hair.

5521. வண்ணான் துறையில் முயல்போல.
Like a hare at the washerman’s washing place.

5522. வண்ணானுக்குப் போனான் வண்ணாத்திக்கு வந்தான்.
To the washerman, his name was "gone;' to the washer - woman, "come.”.
This proverb is explained as follows:a washerman engaged a servant who gave his name as Ponan, he is gone. In the absence of her husband he told the washer-woman that his name is Vandan, he is come.
The washerman wanting the man called him by name, -Ponan. At the same moment the wife called the man by his other name Vandan.The washerman thereupon concluded that the servant had gone to his wife. Again be called as before, and his wife also called. As the servant did not come to him, the washerman became angry and went to his wife when an altercation took place. The matter being explained, they suspected that something was wrong, and soon found that the manhad made off with their savings, and that he had given the two names to serve his secret purpose.

5523.வதுவை செய்து வாழ்.
Get married and live prosperously.

5524. வஸ்திராபரணம் விசேஷமோ, அன்னம் விசேஷமோ?
Which is more important, dress or food?

5525. வந்த காலோடு பந்தற் காலைக் கட்டிக்கொண்டு இருக்கிறாய்.
Thou standest embracing the pillar of the pandal, having walked a long way.

5526. வந்த சண்டையை விடுவதும் இல்லை வலியச் சண்டைக்குப் போவதும் இல்லை.
The quarrel that has ensued is not relinquished, nor is another causelessly sought.

5527. வந்தவர் எல்லாம் சந்தையில் குடியா?
Do all that come to market reside there?

5528. வந்த வினை போகாது வாரா வினை வாராது.
The evil that has betided one will not go, that which has not, will not come.

5529. வந்த அளவிலே சிறுக்கி பந்தடித்தாள், வரவரச் சிறுக்கி சோர்ந்து போனாள்.
The damsel played at ball as soon as she came, in the course of time she became indolent.

5530. வந்தாரை வாழ வைக்கும், மண்ணில் பிறந்தாரைத் தூங்க வைக்கும்.
It will cause strangers to flourish, and natives to decay and sink.

5531. வந்தாலும் சரி, போனாலும் சரி.
It is all the same whether he comes or goes.

5532. வந்தாற் சும்மா வரும் வராமற்போனால் ஒன்றும் வராது.
When good things come, they do so unsolicited; when they do not come, not one of them appears.

5533. வம்பான வார்த்தை மனதுக்கு அருவருப்பு.
Bad words are an abomination to the mind.

5534. வம்புத் துரைத்தனத்தாரைக் கும்பிடத்தகுமோ?
Is it proper to make obeisance to a government, that rules with severity?

5535. வயதுக்கோ நரைத்தது மயிருக்கோ நரைத்தது.
Does the becoming grey arise from age or from the hair.

5536. வயல் முயற்சியில் தானியம் உண்டாம்.
The labour of the field brings grain.

5537. வயித்தியன் தலைமாட்டில் இருந்து அழுததுபோல.
As the physician wept at the head of the bed.

5538. வயித்தியன் கையைப் பார்த்து வாக்கிட்டது போல.
As the physician, after feeling the pulse, gave his opinion.

5539. வயித்தியன் கைவிட்டது போல.
As given up by a physician.

5540. வயித்தியனுக்கு மோக்ஷம் இல்லை, உவாத்திக்கு மோக்ஷ வழி உண்டு.
A physician does notattain heaven, a teacher may.

5541. வயிராக்கியத்துக்கு அம்பட்டக் கத்தியை விழுங்குகிறதா?
Will enthusiasm induce one to swallow a razor?

5542. வயிறாரப் போசனமும் அரையாறப் புடைவையும் இல்லை.
No food for the stomach, nor cloth to for the waist.

5543. வயிறு நிரம்பினால் பானை மூடாள்.
She will not cover the rice-pot if her belly is full.

5544. வயிற்றைக் கீறிக் காண்பித்தாலும் மா இந்திர ஜாலம் என்பார்.
If one should cut open his bellyto prove his innocence, even then they would attribute it to jugglery.

5545. வயிற்றுச் சோற்றுக்காக வயித்தீசுவரன் கோவில் மட்டும் நடப்பான்.
He will walk as far as Vaidiswaran kovil, if he can get a meal.

5546. வயிற்றுக் குடலைக் காட்டினாலும் வாழை நார் என்கிறான்.
Although the entrails be shown to him, he says they are only the fibre of the plantain tree.

5547. வயிற்றுப் பிள்ளையை நம்பி மாடு மேய்க்கிற பிள்ளையைப் பறி கொடுத்தாற்போல.
As if one suffered herself to be deprived of her son, who was tending cattle, in anticipation of a child in the womb.

5548. வயிற்றுப் பாம்புக்குக் கடுகும், வளைப் பாம்புக்கு வெந்நீரும் இடு.
Take mustard to kill the maw-worm, and pour hot water to kill a snake in a hole.

5549. வரப்போ தலைக்கு அணை வாய்க்காலோ பஞ்சு மெத்தை.
The ridge of the field, his pillow; the channel, his cotton mattress.

5550.வரம்பு உயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயரக்குடி உயரும், குடி உயர முடி உயரும்.
As the ridges rise the water will rise; as the water rises the paddy will grow, as paddy flourishes, the population will increase; as that increases the crown will rise.

5551. வரம்பு உயர்ந்தால் நெல் உயரும், நெல் உயர்ந்தால் சொல் உயரும்.
When the fields are full of water, paddy will rise, when paddy rises the farmer's authority will rise.

5552. வரவர மாமியார் கழுதைபோல் ஆனாள்.
In the course of time the mother-in-law became a donkey.

5553. வரவுக்குத் தகுந்த செலவு.
Expense according to one's income.

5554. வரவு கொஞ்சம் வலிப்பு மெத்த.
The income small, the labour great.

5555. வரி போடேல் கேட்டைத் தேடேல்.
Do not impose taxes, do not cause evil.

5556. வரிசையும் இல்லை, அரிசியும் இல்லை.
Neither respect nor rice.

5557. வருகிற போது எல்லாம் வலியும், வரும், வந்தபின் போகிறபோது எல்லாம் போம்.
When coming all comes unsought, and having come, all goes at once.

5558. வருணன் சிலரை வகுத்துப் பெய்யுமோ?
Will clouds shower on a select few?

5559. வருந்தினால் வராதது ஒன்று இல்லை.
Nothing is unattainable when steadily pursued.

5560. வருந்தி வருந்திப் பார்த்தாலும் வருகிற பொழுதுதான் வரும்.
Though one labours never so hard, the desired good will only be obtained in its time.

5561. வருமுன் காப்பவன் சொன்ன புத்தியை வந்தபின் காப்பவன் தள்ளினதுபோல.
As the after-wise, rejected the advice of the fore-sighted.

5562. வருவது சொன்னேன் படுவது படு.
I predicted the consequence, suffer what you have to suffer.

5563. வருவது வந்தது என்றால் படுவது பட வேண்டும்.
If that which was to come is come, endurance is necessary.

5564. வருவான் குருடன் விழுவான் கிணற்றிலே.
The blind man will come and he will fall into the well.

5565. வலிமைக்கு வழக்கு இல்லை.
Power admits of no disputes.

5566. வலியப் பெண் கொடுக்கிறோம் என்றால் குலம் என்ன கோத்திரம் என்ன என்பார்கள்.
If a girl be offered in marriage unsolicited, they will enquire after her family and after her tribe.

5667. வலிய வந்த சீதேவியைக் காலால் உதைத்துத் தள்ளலாமா?
Should the goddess of prosperity who came to you spontaneously, be kicked and turned out ?

5568. வலியவன் எடுத்தது வழி.
The strong man's way is the way.

5569. வலிய உறவாடி வாசலிலே வந்தாலும், பொய் உறவாடிப் போய் வா என்று சொல்லுகிறான்.
When I go to his door in a friendly way, he feigns friendship, but bids me go away.

5570. வலியவன் வெட்டினதே வாய்க்கால் .
That is the channel which was cut by the strongman.

5571. வலையில் சிக்கிக்கொண்ட மான்.
An ensnared deer.

5372. வல்லடி வழக்கைச் சொல்லடி மாமி.
Mother-in-law, give an account of the violent quarrel.

5573. வல்லவன் ஆட்டிய பம்பரம் மணலிலும் ஆடும்.
The top thrown by the strong will spin even in sand.

5574. வல்லமை பேசேல்.
Boast not of thy power.

5575. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.
Even a blade of grass is a weapon to the strong.

5576. வல்லவனுக்குப் புல் ஆயுதம்.
Grass is a weapon to the strong man.

5577. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.
Every powerful man in the world has his rival.

5578. வல்லார் இளைத்தால் வந்து இளைப்பாறும் என்று சொல்லாதிரார்கள் சுத்த வீரர்கள்.
When the powerful fail, the brave will surely welcome them.

5579. வல்லார் கொள்ளை வாழைப்பழம் ஆகும்.
The spoils of the strong will soon go to waste as a plantain.

5580. வல்விலைக் கூறையும் மெல்விலைக் காளையும் ஆகாது.
A dear-bought cloth, and a low-priced bull are useless.

5581. வவ்வால் வீட்டுக்கு வவ்வால் வந்தால் நீயும் தொங்கு நானும் தொங்கு.
When one bat visits another, the host will say, you hang, and I will do the same.

5582. வழிகட்டிப் பறிக்கிறவன் திருடன், வரதராஜலு ஏறுகிறதே கருடன்.
He who waylays and plunders is a thief, the vehicle of Vishnu is the hawk.

5583. வழிநடை வார்த்தை வாகனம் போல.
Conversation on a journey is equal to a conveyance.

5584. வழியிலே கண்ட குதிரைக்கு வைக்கோற் பழுதை கடிவாளம்.
A straw rope is the bridle for a stray horse.

5585. வழியிலே கிடக்கிற கோடாலியை எடுத்துக் காலின் மேல் போட்டுக்கொள்வானேன்?
Why should a man meddle with a hatchet lying in the road and cut his foot?

5586. வழியே ஏறுக வழியே மீளுக.
Go by the way, and return by the way.

5587. வழியே போய் வழியே வந்தால் அதிகாரி செங்கோல் என்ன செய்யும்?
If a man go and come by the highway, what can the sceptre of the chief do to him?

5588.வழியே போகிற சனியனை வாரத்துக்கு வாங்கினாற்போல.
Like hiring Saturn whom one met on his way.

5589.வழி வழியாய்ப் போகும்போது விதி விதியாய் வருகிறது.
As each goes on his way, destiny accompanies him.

5590.வழுக்கி விழாத குதிரை வளமான குதிரை.
The horse that does not stumble is the best horse.

5591.வழுவழுத்த உறவைப் பார்க்கிலும் வைரம் பற்றிய பகை நன்று.
Inveterate hatred is better than fickle friendship.

5592. வளரும் காய் பிஞ்சிலே தெரியும்.
The future fruit may be known when it nits.

5593. வளர்த்த கடா மார்பிற் பாய்ந்தது போல.
As the trained ram flew at the breast.

5594. வளர்த்த நாய் முகத்தைப் பார்க்கிறது போல்
As a trained dog looks at the face.

5595. வளர்ப்பு வக்கணை அறியாது.
A hanger on does not understand politeness.

5596. வளவன் ஆயினும் அளவு அறிந்து அளித்து உண்.
Though possessed of abundant wealth, be moderate in giving and eating.

5597. வளைந்த மூங்கில் அரசன் முடிமேல், வளையாத மூங்கில் கழைக் கூத்தர் காலின் கீழ்.
A bent bamboo above the king's crown, a straight one under the feet of pole-dancers.

5598. வறியோர்க்கு அழகு வறுமையிற் கேண்மை.
Decency in adversity is commendable in the indigent.

5599. வறுத்த பயறு முளைக்குமா?
Will parched peas germinate?

5600. வறுமை கண்டவர் வையத்தில் அநேகர்.
There are many in the world who are accustomed to poverty.

5601. வறுமை வந்தால் பத்தும் பறந்து போம்.
When poverty comes, the ten vital airs will fly off.

5602. வறுமைக்கு மூதேவியும் செல்வத்திற்குச் சீதேவியும்.
Adversity is attended by the goddess of misfortune, prosperity by the goddess of fortune.

5603. வனாந்தரத்து நுழைநரிகள் இடையர்களின் தீர்க்க விரோதிகள்.
The sly jackals of the wilds, are inveterate enemies to shepherds.

5604. வன்சொல் வணக்கத்திலும் இன்சொல் வணங்காமை நலம்.
Better is gentle resistance, than submission with rough words.

5605. வாகனம் உள்ளவன் நடைக்கு அஞ்சான், பால் உண்டான் பந்திக்கு அஞ்சான்.
He who has a conveyance will not be afraid of moving, he who is fed on milk will not care to attend a feast.

5606. வாகை இளம்பிஞ்சு கண்டவர்கள் இல்லை, வாகான தென்னம்பிள்ளை கண்டவர்கள் இல்லை.
None ever saw the tender fruit of the Mimosa flexuosa, nor a straight young cocoanut tree.

5607. வாகை இளம் பிஞ்சு கண்டவர்கள் உண்டோ ?
Has any one seen the tender fruit of the Mimosa ?

5608. வாக்கினால் கெட்ட கழுதையைப் போக்கிலே விடுங்கள்.
Let the ass go that brought evil on itself by braying.

5609. வாங்கின கடனைக் கொடாத வல்லாளகண்டன்.
A mighty cheat who never pays his debts.

5610. வாசற்படி இட்டு விடிகிறதோ மகாதேவர் இட்டு விடிகிறதோ?
Does the sun rise by the permission of the threshold, or by the permission Mahadeva?

5611. வாணாளுக்கு ஏற்ற வயிற்று எரிச்சல்.
Sorrow suited to the present life.

5612. வாணாள் உடையான் வலுப்பட்டுச் சாகான்.
He who is destined to live long, is not liable to die by accident.

5613. வாணிபம் செய்யிற் காணியும் குறி.
In matters of trade, note down the smallest fraction.

5614. வாணியக்கட்டை வயிரக் கட்டை தேயத்தேயத் துடைப்பக் கட்டை.
The pestle of an oil-press is tough, when worn away it may become a broom-stick.

5615. வாணியன் ஆசை கோணியும் கொள்ளாது.
A gunny bag will not hold the excessive desires of the oil merchant.

5616. வாணியர்கள் ஆடும் செக்கை வளைய வரும் எருதுகள் போல.
Like the oxen that go round the oil-man's press.

5617. வாதத்து இயல்பு எடேல்.
Do not indulge in rheumatic humour.

5618. வாதம் கெடுத்தது பாதி வண்ணான் கெடுத்தது பாதி.
It was destroyed partly by the wind, and partly by the washerman.

5619. வாதம் ஊதி அறி, வேதம் ஓதி அறி.
Learn alchemy by experiment, and the vedas by recitation.

5620. வாதி கண்ணுக்கு மட்டம் எட்டு மாற்று.
To the eye of an alchemist, common gold appears as standard gold.

5621. வாதுக்கு ஆடின தேவடியாள் வயது சென்றால் கழுதை மேய்ப்பாள்.
When a distinguished dancing girl becomes old, she may tend asses.

5622. வாதுமுற் கூறேல்.
Do not begin a quarrel.

5623. வாயாடி வார்த்தை மட்டில்லா ரவை.
The words of a babbler are fine dust.

5624. வாயாலே தின்று வாயாலே கக்கும் வெளவாலைப்போல்
Like a bat that feeds and ejects by the mouth.

5625. வாயாலே கேட்டால் வாழைக்காய்ப் பிஞ்சும் கொடான், தாய்புருஷன் வந்தால் தாரோடே கொண்டு போவான்.
Though you entreat, he will not give even an unripe plantain, but if thekeeperof his mothercomes, he will produce a whole bunch.

5626. வாயாலே கேட்டால் வாழைப்பிஞ்சும் கொடான் தண்டித்துத் கேட்டால் தாரோடே கொடுப்பான்.
When entreated he will not give an unripe plantain, but when punished he will give a whole bunch.

5627. வாயிலே உறவு மனதிலே பகை.
Friendship in the mouth, and hatred in the mind.

5628. வாயிலே உண்டு வழி.
The way is in one's mouth.

5629. வாயைப் பார்த்து ஆளை ஏய்த்தான்.
Seeing the man's inability to speak, he cheated him.

5630. வாய் இருந்தால் வங்காளம் போகலாம்.
If possessed of a mouth, one may find his way to Bengal.

5831. வாய் இல்லா விட்டால் நாய் கொண்டு போய்விடும்.
If you hadno mouth, a dog would carry you away.

5632. வாய் இல்லாவிட்டால் நாய்கூடச் சட்டை செய்யாது.
If not possessedof a mouth, even a dog will not take notice of him.

5633. வாய் இருந்தால் பிள்ளை பிழைக்கும்.
If the child have a mouth, it will live.

5634. வாய் உள்ள பெட்டிக்குத் தூர் இல்லை.
The box that has a mouth, has no bottom.

5635. வாய் காய்ந்த புலி ஆள் மேலே விழுந்தது போல.
As a hungry tiger fell on a man.

5636. வாய்க்கொழுப்புச் சீலையில் வடிகிறது.
His arrogance oozes through his cloth.

5637. வாய்க்கு உண்டோ வாதம்?
Does rheumatism affect one's mouth?.

5638. வாய் சர்க்கரை கை கொக்கரை.
Sugarin his mouth, and the very opposite in the hand.

5639. வாய் சொல்லும் பிடரி கும்பிடும்.
The mouth will resist, the nape of the neck will worship.

5640. வாய்தான் இருக்கின்றது வாய்க்கு அரிசிக்கு வழி இல்லை.
He has a mouth, but no means of procuring rice for it.

5641. வாய் திறக்கப் பொய் திறக்கும்.
When the mouth opens, lies come forth.

5642. வாய்த் தவிடும் போய் அடுப்பு நெருப்பும் போனது போல.
Like losing bran from the mouth, and fire from the hearth.

5643. வாய் நல்லதானால் ஊர் நல்லது.
When the mouth is good, the village is good.

5644. வாய் பார்த்தவள் வாழ்வு இழந்தாள் அம்பலம் பார்த்தவன் பெண்டு இழந்தான்.
She who was looking at the mouth, became a widow : and he who watched the house, lost his wife.

5645. வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ?
Which is sour, the mouth or the mango?

5646. வாய் மதத்தால் வழக்கு இழந்தான்.
He lost his suit by the haughty words of his mouth.

5647. வாய் மதத்தால் வாழ்வை இழந்தான்.
He lost his fortune by the arrogance of his mouth.

5648. வாய் வாழைப்பழம் கை கருணைக்கிழங்கு.
Plantain fruit in the mouth, and karanai roots in the hands.

5649. வார்த்தை இருந்து போம், வழி தூர்ந்துபோம்.
Words will endure, ways will fall into disuse.

5650. வாலிபத்திலே முதிர்ந்த புத்தி குறுகின வயதுக்கு அடையாளம்.
Premature genius foretokens a short life.

5651. வால் நீண்ட கரிக்குருவி வலம் இருந்து இடம் போனால், கால் நடையாய்ப்போனவர்கள் கனக தண்டிகை ஏறுவார்கள்.
If a long tailed blackbird fly from right to left, those who were on foot will, on their return, mount palanquins wrought with gold.

5652. வால் போனாலும் போகிறது எனக்குத் தோல் வேண்டும்.
It does not matter if the tail is lost, I want the skin.

5653. வாழாத பெண்ணுக்கு மை ஏண்டி, பொட்டு ஏண்டி, மஞ்சள் குளி ஏண்டி?
Of what use are paint, the marriage symbol and turmeric water, to a woman who refuses to become a wife?

5654. வாழுகிற வீட்டில் மரநாய் கட்டினதுபோல.
As a polecat was tied up in a house occupied by a prosperous family.

5655. வாழும் பிள்ளையை விளையாட்டிலே தெரியும்.
The future prosperity of a person may be known when he is playing as a child.

5656. வாழை அடி வாழை.
The sucker of a plantain tree becomes another tree.

5657. வாழைப்பழத்தில் ஊசி ஏறுவது போல.
Like a needle penetrating a plantain.

5658. வாழைப்பழம் தின்னாத குரங்கு இல்லை.
There are no monkeys that will not eat plantain fruit.

5659. வாழைப்பழம் கொண்டுபோனவள் வாசலில் இருந்தாள், வாய்கொண்டுபோனவள் நடு வீட்டில் இருந்தாள்.
She that took the plantains sat at the entrance, she that took her mouth, seated herself in the middle of the house.
The one who trusted her power of address obtained a better place than the one who sought recognition by a gift.

5660. வாழை வடக்கு ஈனும் வான் கமுகு தெற்கு ஈனும்.
Plantain trees put forth their bunches to the north, and arica-nut trees, on the south.

5661. வாழ்கிற பெண்ணைத் தாயார் கெடுத்தது போல.
As a mother ruined a girl that was settled in life.

5662. வாழ்கிற வீட்டில் வன்குரங்கு வைத்தது போல.
Like placing a monkey in a family.

5663. வாழ்கிற வீட்டுக்கு இது ஒரு வன்குரங்கு.
He is as a monkey in a house.

5664. வாழ்கிற வீட்டுக்கு வாழை வைத்துப்பார்.
Ascertain the future of a family by putting down plantain trees.
It is said that plantains naturally put forth their bunches to the north. Should the fruit appear otherwise, it is considered ominous to the homestead.

5665. வாழ்க்கை கொடுத்தவன் கையில் வாணாளும்.
Length of days is in the hands of him who gave prosperity.

5666. வாழ்ந்தது கெட்டால் வறு ஓட்டுக்கும் ஆகாது.
When that which flourished decays, it is not worth even a potsherd.

5667. வாழ்ந்தவன் வறியவனானால் வறை ஓட்டிற்கும் ஆகான்.
If a prosperous person-suffer reverses, he will not be worth a blackpotsherd.

5668. வாழ்ந்த மக்கள் வந்தால் வண்ணத் தடுக்குஇடு, கெட்டமகள் வந்தால் கிழிந்த தடுக்கு இடு.
When the daughter who lives in affluencepays a visit, let her be seated on a fine mạt; when she who is reduced to poverty comes seat her on an old mat.

5669. வாழ்வாருக்குச் சீதேவி வாயிலே.
The goddess of fortune is in the mouth of the prosperous.

5670. வாழ்வும் சிலது காலம் தாழ்வும் சிலது காலம்.
Prosperity fora time, and adversity for a time.

5671. வாளுக்கு ஆயிரம் தோளுக்கு ஆயிரம் சம்பாதித்தாலும் மடடாய்ச் செலவிடு. Though you may acquire thousands of wealth by dexterity, and physical strength, be frugal.

5672. வாளுக்கு ஆயிரம் தோளுக்கு ஆயிரம்.
A thousand by his sword, a thousand by his arm.

5673. வானத்துக்குக் கீழ் இருந்து மழைக்குப் பயப்படலாமா?
Living under the conopy of heaven, may we be afraid of rain?

5674. வானமும் பூமியும் கொள்ளாதான் மரத்திலும் கல்லிலும் இருப்பானா?
Will he whom heaven and earth cannot contain,dwell in wood and stone?

5675. வானமே ஈன்றது பூமியே தாங்கிற்று.
The heavens produced, and the earth sustained.

5676. வானம் பார்க்கப் போயும் இடைஞ்சலா?
When you go to gaze at the heavens, do you find any impediment?

5677. வானம் சுரக்கத் தானம் சிறக்கும்.
When it rains abundantly, liberality will abound.

5678. வானம் சுருங்கிற் றானம் சுருங்கும்.
When drought prevails charity fails.

5679. வான் செய்த உதவிக்கு வையகம் என்ன செய்யும்?
What can the world do in return for the favours of heaven?

5680. விசும்பிற் றுளி வீழினல்லால் பசும்புற் றலை காண்பது அரிது.
If the sky withholds rain, not a blade of grass can be seen.

5681. விசுவாசக் கொக்கு நடமாடிச் செத்ததாம்.
It is said that a devout crane died from wandering about.

5682. விசுவாசம் இருந்தால் வேசியும் பிழைப்பாள், நிசம் இருந்தால் நீசனும் தழைப்பான்.
If she be faithful, even a harlot will prosper; if he be honest, even the low-born will flourish.

5683. விசுவாசப் பூனை கருவாட்டைத் தூக்கிக்கொண்டு போகிறதாம்.
It is said that a devout cat carried away the dried fish.

5684. விஷத்தைக் குடிக்கப் பாலாமா ?
Will poison when drunk turn into milk?

5685. விஷத்தின் மேல் விஷம், விஷம் போக்கும்.
Poison is the medicine of poison.

5686. விஷம் தின்றால் கொல்லும்.
If poison be swallowed, it will kill.

5687. விஷம் குடித்தவன் மிளகு நீர் குடிக்க வேண்டும்.
He who has swallowed poison must take pepper water.

5688. விஷம் குடித்தாலும் சாகார் விசுவாசிகள்.
Though they may take poison, the faithful will not die.

5689. விஷம் பெரிதோ பாவம் பெரிதோ?
Which is the more destructive, poison or sin?

5690. விஷம் தீர வைத்தியன் வேண்டும், பாவம் தீரத் தெய்வம் வேண்டும்.
A physician is necessary to counteract poison, and God, to remove sin.

5691. விஷ்ணு பெரியவர் என்று ஸ்ரீரங்கத்தில் பார்க்கவேண்டும்.
You must go to Srirangam to understand that Vishnu is great.

5692. விஷ்ணுவைப் பெரிது என்பார் ஸ்ரீரங்கத்தில், சிவனைப் பெரிது என்பார் அருணாசலத்தில்.
The inhabitants of Srirangam say that Vishnu is great, those of Arunasalam, say that Siva is great.

5693. விஷ்ணுவே சமஸ்தம் என்பார் சிலர், சிவனே பெரிது என்பார் சிலர்.
Some profess that Vishnu is all in all, while others maintain that Siva is the greater of the two.

5694. விடாச்சுரத்துக்கு விஷ்ணுகரந்தை.
Vishnukarantai-Sphoeranthus Indicus-is a specific remedy for fever.

5695. விடாத மழை பெய்தால் படாத பாடு பட வேண்டும்.
Should it rain unceasingly, intolerable suffering would follow.

5696. விடாத மழையால் இல்லி ஒழுக்கு அடைபடும்.
Unceasing rain stops leaks.

5697. விடிந்தால் தெரியும் மாப்பிள்ளை குருடும் பெண் குருடும்.
It will be known at day-break whether the bridegroom or the bride is blind.

5698. விடிந்தும் பெண்ணுக்கு முட்டாக்கோ?
Does the woman require a veil even after sunrise?

5699. விடிய விடியக் கதை கேட்டு இராமனுக்குச் சீதை என்ன வேண்டுமென்று கேட்டது போல.
As one asked what relationship existed between Rama and Sita after listening to their history till day-break.

5700. விடியற்காலம் கலியாணம், பிடி அடா தாம்பூலம்.
The marriage will take place at dawn, thou fellow, take betel.

5701. விடியா மூஞ்சிக்கு வேலை அகப்பட்டாலும் கூலி அகப்படாது.
Though the unfortunate may find work, he will not get his hire.

5702. விடியுமட்டும் இறைத்தவனும் விடிந்தபின்பு சாலை உடைத்தவனும் சரி.
He that draws water till day-break, and he that breaks his bucket at day-break, are on an equality.

5703. விடியுமட்டும் மழை பெய்தாலும் ஓட்டாங்கிளிஞ்சில் முளைக்காது.
Though it may rain till day-break, a potsherd will not germinate.

5704. விட்டிற்பூச்சியைப்போல் பறந்து திரிகிறான்.
He flits about like a grass-hopper.

5705. விட்டு விட்டுப் பெய்கிற மழையிலும் விடாமற் பெய்கிற துவானம் நல்லது.
Unceasing driving rain is preferable to intermitted showers.

5706. விட்டுதடா ஆசை விளாம் பழத்து ஓட்டோடே.
The pleasure of the wood-apple ceases with the shell.

5707. விண் காட்டப் போனவன் கண் காட்ட வந்தானாம்.
It is said that he who went to point out the heavens, returned to shew his eyes.

5708. விண்ணாணம் எங்கே, கின்னரம் எங்கே?
What is become of your ostentation, and where is your guitar?

5709. விண்ணுமாலைக்குக் கலியாணம் விழுந்து கொட்டடா சாம்புவா.
O, thou tomtom beater, Vinumal is to be married, fall down and beat your tomtom.

5710. விண்ணேறு தப்பினாலும் கண்ணேறு தப்பாது.
One may escape a thunderbolt, but he cannot escape the effects of an evil eye.

5711. விண்தொடு கொடி மூடி மேருவும் வீறளி தென்திசைக் கிரியும்.
Meru whose summit reaches to heaven, and the merit giving mountain on the south.

5712. விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.
If the sky fail, the earth will fail.

5713. விண் வலிதோ மண் வலிதோ?
Which is the more powerful heaven or earth ?

5714. விதி போகிற வழியே மதி போகும்.
The mind will follow destiny.

5715. விதி முடிந்தவனைப் பாம்பு கடிக்கும்.
A viper will bite him whose prescribed term of life is at an end.

5716. விதியை மதியால் தடுக்கலாமா?
Can destiny be averted by prescience?

5717. விஸ்தாரக்காரன் செத்தால் பிழைக்கான்.
A boaster if he die, cannot return to life.

5718. வித்து இல்லாச் சம்பிரதாயம் மேலும் இல்லைக் கீழும் இல்லை.
Out of nothing, nothing comes, whether above or below.

5719. வித்துவானுக்கு எது பரதேசம்?
What country is foreign to a man of learning?

5720. வித்துவான்களுக்கு எது பெரிது?
What is difficult to the learned?

5721. வித்தைக் கள்ளி மாமியார் விறகு ஒடிக்கப் போனாளாம் கற்றாழை முள் வந்துகொத்தோடே தைத்ததாம்.
The sapient old mother-in-law is said to have got foul of the thorny cactus, when she went to gather firewood.

5722. வித்தை அற்றவன் அழகு வாசனை இல்லா முருக்கம் பூப்போல.
The beauty of the unlettered, is like the inodorous Muruku flower.

5723. வித்தை விரும்பு.
Desire learning.

5724. வித்தைக் கள்ளி, விளையாட்டுக் கள்ளி, பாகற்காய் விற்ற பழங்கள்ளி.
She is a hypocrite, and idle; she is that old thief that sold pagal fruit.

5725. வித்தையடி மாமி விக்குதடி பணிகாரம்.
O thou pretending mother-in-law, cakes stick in my throat.

5726. வித்தையில் எளியது சூனியம், பன்னத்திலே எளியது நீற்றுப் பெட்டி.
Of arts sorcery is the easiest, of textures the pastry boiling basket.

5727. வித்தை அடிக்கிற கோழிக்கு விலாவில் இருக்கிறதாம் பித்து.
It is said that an hypercritical hen has its bile in its chest.

5728. வித்தையுள்ளவன் பெரியவன்.
He who is learned, is truly great.

5729. விநாசகாலே விபரீத புத்தி.
Bent on destruction by a strange fatality.

5730. வியாச்சியம் சேற்றில் நட்ட கம்பம்.
Litigation is a pole planted in mud.

5731. வியாதிக்கு மருந்து உண்டு விதிக்கு மருந்து உண்டா ?
Medicine may be had for a disease, --is there any for destiny?

5732. வியாதியிலும் மருந்து கொடிது.
The medicine is worse than the disease.

5733. விரதத்திலும் பெரிதோ ஒரு சந்தி?
Is fasting more meritorious than penance?

5734. விரதம் கெட்டாலும் சுகம் தக்கவேண்டும்.
Though the penance may prove ineffectual, one must have regard to his comfort.

5735. விரலுக்குத் தக்க வீக்கம்.
The swelling will be proportioned to the size of the finger.

5736. விரல் உதவி விருந்தினர் உதவார்.
Guests are not as serviceable, as are one's fingers.

5737. விரல் உரல் ஆனால் உடல் என்ன ஆகும்?
If the finger swell to the size of a rice mortar, how large will the mortar be when that swells?

5738. விரல் போகாத இடத்தில் உரல் போமா?
Can a mortar pass through an opening which is not large enough to admit a finger?

5739. விரிந்த உலகில் தெரிந்தவர் சிலர்.
There are few on the face of the wide world who are wise.

5740. விருது கூறி வந்து செடியில் நுழையலாமா?
Anxious for fame, may one crawl under bushes?

5741. விருதுக்கோ வேட்டை ஆடுகிறது?
What, hunting, to acquire fame?

5742. விருத்தாசலம் போனால் திரட் பாவம் போகும்.
Pilgrimage to Viruttachalam will expiate great sins.

5743. விருந்து இட்டுப் பகை தேடுகிறது.
Seeking enemies by means of hospitality.

5744. விருந்திலோர்க்கு இல்லைப் பொருந்திய ஒழுக்கம்.
The inhospitable are destitute of agreeable manners.

5745. விருந்து இல்லாச் சோறு மருந்து.
Food without hospitality is medicine.

5746. விருந்தைப் பண்ணிப் பொருந்தப் பண்ணு.
Win your enemy by hospitality.

5747. விருந்தும் மருந்தும் மூன்று பொழுது.
Hospitality and medicine must be confined to three days.

5748. விருப்பத்தினால் ஆகாதது வீம்பினால் ஆகுமா?
Can that which is unattainable by ambition, be attained by mere boasting?

5749. விரை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா?
Will the bottle gourd spring up when a different seed is sown?

5750. விலக்கக் கூடாத துன்பத்திற்கு விசனப்படாதே.
Do not fret about disagreeables that cannot be averted.

5751. விலங்கை விட்டுத் தொழுவில் மாட்டிக்கொண்டது போல.
Likebeing put in the stocks after liberation from chains.

5752. விலை மகட்கு அழகு தன் மேனி மினுக்குதல்.
It befits a harlot to make her person shine.

5753. வில் அடியால் சாகாத்து கல் அடியால் சாகுமா?
Will that which resisted the stroke of a bow, die by the pelting of stones?

5754. வில் இல்லாதவன் அம்பு தேடுவான் ஏன்?
Why should a man without a bow seek arrows?

5755. வில்லம்போ சொல்லம்போ?
Is it an arrow or sarcasm?

5756. வில்லுக் குனியாது எய்தால், விலகாது எதிர்த்த பகை.
If you shoot an arrow when the bow is not sufficiently bent, the enemy will not retreat.

5757. வில்லுக்கு விஜயன் பரிக்கு நகுலன்.
In archery Vijaya, in horsemanship Nakula.

5758 வில் வளைந்தால் மோசம் தரும்.
The bending of a bow is dangerous.

5759. வில்வப்பழம் தின்பார் பித்தம் போக, பனம்பழம் தின்பார் பசி போக.
They eat vilvam fruit to remove biliousness, and palmyrah fruit to appease hunger.

5760. விவேகத்தின் மேன்மை அவிவேகத்தை ஒழித்தல்.
It is the excellence of discretion to avoid indiscretion.

5761. விழலுக்கு இறைத்த நீர்.
Water drawn for coarse grass.

5762. விழித்தவன் கன்று நாகுகன்று தூங்கினவன் கன்று கடாக்கன்று .
The calf of the man who watched is a female; that of him who slept is a male.

5763. விழுகிற சுவரிலே கை வைப்பான் ஏன்?
Why put your hand on a tottering wall ?

5764. விழுங்கின ரசம் வயிற்றில் இராது.
Swallowed mercury will not remain in the stomach.

5765. விழுந்த பிள்ளையை எடுக்க நேரம் இல்லை.
No time to lift up the child that has fallen down.

5766. விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிறான்.
Though he has fallen down, he says that his mustache is not soiled with dust.

5767. விளக்குமாற்றுக்குப் பட்டுக் குஞ்சமா?
What, a silk tassel for a broom?

5768. விளக்கெண்ணெய்க்குக் கேடே தவிரப் பிள்ளை பிழைப்பது இல்லை.
The child did not survive, — it was only waste of oil.

5769. விளக்கெண்ணெயைத் தடவிக்கொண்டு ஆற்று மணலில் புரண்டாலும் ஒட்டுகிறது தான் ஒட்டும்.
Though one roll himself in sand, after applying oil to his body, he cannot make a larger quantity of sand adhere to his body.

5770. விளக்கெண்ணெயாம் தலைக்கு எண்ணெய்.
It is said that what he uses for the head is lamp-oil.

5771. விளக்கைப் பிடித்துக்கொண்டு கிணற்றில் விழுகிறதா?
What, falling into a well with a lighted lamp in the hand?

5772. விளக்கைக் கொளுத்திக் கீழே வைப்பார் உண்டோ ?
Does any one place a lighted lamp on the floor?

5773. விளக்கை வைத்துக்கொண்டு நெருப்புக்கு அலைகிறது போல.
Like wandering abroad for fire, while there is a lighted lamp in the house.

5774. விளக்கு ஒளிக்கு ஆசைப்பட்ட விட்டில் போல.
Like a grass-hopper fascinated by a lighted lamp.

5775. விளங்கா மடையன் விறகுக்குப் போனால் விறகு கிடைத்தாலும் கொடி கிடையாது.
If a simpleton go for firewood, though it be found, a creeper to bind it into a bundle will not be found.

5776. விளையாட்டுப் பிள்ளை விஷத்துக்கு அஞ்சாது.
A playful child will not fear venomous reptiles.

5777. விளையாட்டாய் இருந்தது வினையாய் முடிந்தது.
Originating in playfulness it ended seriously.

5778. விளையாட்டுப் பண்டம் வீடு வந்து சேராது.
Things prepared by playful children never come home.

5779. விளையும் பயிர் முளையிலே தெரியும்.
The future crop is known in the germ.

5780. விறகு கட்டுக்காரனுக்கு நாரை வலம் ஆனால் ஒரு பணம் விற்கிறது ஒன்றே காற்பணம் விற்கும்.
If a crane cross a firewood man from left to right, what he sells ordinarily for a fanam, will fetch a fanam and a quarter.
If a crow fly on the right of one going out of his house, he is sure to meet with success. If on the left, he will not obtain what be seeks.

5781. விறகு கோணலானாலும் நெருப்புப் பற்றாதா?
Will firewood not ignite, because crooked?

5782. விற்ற குண்டைக்குப் புல் போடுவான் ஏன் ?
Why feed a bullock after it is sold?

5783. வினைக்காலம் வரும் காலம், மனை வழியும் தெரியாது.
When times are inauspicious, one does not know his way home.

5784. வினை விதைத்தவன் வினை அறுப்பான் தினை விதைத்தவன் தினை அறுப்பான்.
He who sows actions will reap actions, he that sows millet will reap millet.

5785. வீக்கமோ தூக்கமோ?
Is it the effect of swelling or of sleep?

5786. வீக்கம் கண்டால் தூக்கமாம்.
Swelling is followed by languor.

5787. வீங்கலுக்கு விஷம் அதிகம்.
Looking at the swelling, the inflammation is excessive.

5788. வீசம் இறுத்த குடி நாசம்.
The payment of a sixteenth is a loss to a family.

5789. வீசி நடந்தால் வெள்ளி வீசம் குறையும்.
Silver ornaments are injured by swinging the arms when walking.

5790. வீச்சு என்றாலும் விடுவேனா, வீர புத்திர அம்பலகாரா?
Thou son of the violent Ambalakaran, shall I let thee go because thou squeakest?

5791. வீடு அசையாமல் தின்னும் யானை அசைந்து தின்னும்.
A house consumes standing still, an elephant when moving.

5792. வீடு எல்லாம் குருடு, வாசல் எல்லாம் கிணறு.
The inmates of the house are all blind, and there are wells all over the yard.

5793. வீடு கட்டுகிறது அரிது, வீடு அழிக்கிறது எளிது.
To build a house is difficult, to destroy one is easy.

5794. வீடு கட்டுமுன்னம் கிணறு வெட்ட வேண்டும்.
Before building a house dig a well.
In a Sanscrit work on architecture I saw some years ago, the advice here expressed is given as the first thing to be attended to, when selecting a site for a house.

5795. வீடு தருவோன் மேலும் தருவோன்.
He who gives a house may give more than that.

5796. வீடு நிறைந்த விளக்குமாறு.
A house full of brooms.

5797. வீடு போ என்கிறது, காடு வா என்கிறது.
The homestead says go, the place of cremation says come.

5798. வீடு வெறு வீடு வேலூர் அதிகாரம்.
His house is empty, but he acts as if he were the chief of Vellore.
One of the Nabob's palaces was at Vellore.

5799. வீடு வெறுவீடாய் இருந்தாலும் மணியம் ஏழு ஊர்.
Although his house is empty, he is the manager of seven villages.

5800. வீட்டில் அழகு வேம்பு அடியாகும்.
The shade of a margosa tree is good for a house.

5801. வீட்டில் அடங்காதவன் ஊரில் அடங்குவான்.
He who is not obedient in the house will obey in the village.

5802. வீட்டுக்கருமம் நாட்டுக்கு உரையேல்.
Do not make known abroad the affairs of the homestead.

5803. வீட்டுக்கு இருந்தால் வெண்கலப் பெண்டாட்டி, வீட்டுக்கு இல்லாமற் போனால் தூங்கற் பெண்டாட்டி.
If in the house she is bell-metal wife, if she goes abroad, she is a slumbering wife.

5804. வீட்டுக்கு அலங்காரம் பெரிய குடி.
A large family gives beauty to a house.

5805. வீட்டுக்குச் சோற்றுக்கு இல்லை சிவன் அறிவான், நாட்டுக்குச் செல்வப்பிள்ளை நான் அல்லவோ?
Siva knows that I have no rice at home, yet am I not regarded abroad asa wealthy person?

5806. வீட்டுக்கு அலங்காரம் விளக்கு.
A lighted lamp gives beauty to a house.

5807. வீட்டுக்கு வீடு மண் அடுப்புத்தான்.
An earthen hearth is the rule in all houses.

5808. வீட்டுக்கு அலங்காரம் மனையாள்.
A wife gives beauty to a house.

5809. வீட்டுக்கு அலங்காரம் வேளாண்மை.
Grain gives beauty to a house.

5810. வீட்டுச் செல்வம் மாடு, தோட்டச் செல்வம் முருங்கைக்காய்.
A cow is house-wealth, and murungai fruit is garden-wealth.

5811. வீட்டுச் சோற்றைத் தின்று வீண் சண்டைக்குப் போவானேன்?
Why go and quarrel causelessly when eating your own rice?

5812. வீட்டுச் சோற்றைப் போட்டு வீண் பேச்சுக் கேட்பானேன்?
Having given his own rice why should one hear abuse?

5813. வீட்டுப் பாம்பு காட்டுக்குப் போனால் அதுவும் காட்டுப் பாம்பு ஆகும்.
If a tamed snake go to the jungle, it will become a wild one.

5814. வீட்டு வேலை வெளி வேலை பார்த்துக் காட்டு வேலைக்குக் கட்டோடே போகலாம்.
After finishing house work and out door work, one should go to that of the jungle with due preparation.

5815. வீட்டுப் பிள்ளையும் வெளிப் பிள்ளையும் வித்தியாசம் அறியாது.
Children in one's own house and strange children make no difference.

5816. வீட்டு மூதேவியும் காட்டு மூதேவியும் கூடி உலாவுகிறது.
The house-goddess of misfortune, and one of the wilds are walking together.

5817. வீட்டுக்குப் புகழ்ச்சியோ நாட்டுக்குப் புகழ்ச்சியோ?
Is itfame to a family or to the country?

5818. வீட்டுக்காரியம் பாராதவன் நாட்டுக் காரியம் பார்ப்பானா?
Will he who cannot manage his own household affairs, attend to the management of a country?

5819. வீட்டுக்காரி என்று பெண்சாதிக்குப் பெயர்.
Another name for a wife is the mistress of the house.

5820. வீட்டுக்கு வீரன் காட்டுக்குக் கள்ளன்.
At home, a hero, abroad, a coward.

5821. வீட்டுக்கு வீடு எதிர் வீடு ஆகாது.
The door-ways of opposite houses must not be over against each other.

5822. வீட்டுக்கு ஏற்றின விளக்கு விருந்துக்கும் ஆகும்.
A lamp lit in a house for the inmates may answer for a feast.

5823. வீட்டுக்கு வாய்த்தது எருமை, மேட்டுக்கு வாய்த்தது போர்.
A buffaloa makes a house prosper, a corn-stack makes high ground conspicuous.

5824. வீட்டுக்கு ஒரு வாசற்படி, பூட்டுக்கு ஒரு திறவுகோல்.
One step as an entrance to the house, and one key to a lock.

5825. வீட்டுப் பெண்சாதி வேம்பும் காட்டுப் பெண்சாதி கரும்பும்.
The wife is a margosa tree, the mistress sugar-cane.

5826. வீட்டைக் கட்டிக் குரங்கைக் குடி வைத்தது போல.
Like building a house, and allowing a monkey to dwell there in.

5827. வீட்டைக் காத்து அருள், பாட்டைப் பார்த்து அருள்.
Watch your house, and manage your affairs.

5828. வீட்டைக் கட்டிப் பார், கலியாணம் செய்து பார்.
Enjoy the convenience of a house after building it, and the happiness of the conjugal state, after marrying a wife.

5829. வீட்டைப் பிடுங்கி விறகாய் எரித்தாலும் வீணாதிவீணனுக்கு ஐந்து பணம் எப்படி வரும்?
Although he may pull down his house and use it for firewood, the notorious idler can never get five fanams?

5830. வீட்டைக் காத்த நாயும், காட்டைக் காத்த நரியும், வீண் போகாது.
The expectations of a dog in a house, and a fox in the jungle are not vain.

5831. வீட்டைக் கட்டி ஓட்டைப் போடு.
Build the house, and then tile it.

5832. வீட்டைக் கட்டு, அல்லது காட்டை அழி.
Either build the house, or destroy the jungle.

5833. வீட்டை ஏன் இடித்தாய் மூட்டைப்பூச்சிக்குப் பயந்து?
Why pull down the house, for fear of bugs ?

5834. வீட்டை எல்லாம் வெல்லத்திற்கு மாறினான்.
He gave the whole house in exchange for sugar.

5835. வீணருக்குச் செய்தது எல்லாம் வீணாம், கடற்கரையில் காணும் மணல்மேல் எழுத்துக்காண்.
Favours shewn to the worthless are vain, they are like writing on the sand of the sea-shore.

5836. வீணாய் உடைந்த சட்டி வேண்டியது உண்டு என் தலையிற் பூணாரம் பூண்ட புதுமைதனைக் கண்டது இல்லை.
There are plenty of pans uselessly broken, I have scarcely ever seen my head adorned with jewels.

5837. வீணுக்கு உழைக்கிறவன் வீணன்.
He who labours for no purpose is a fool.

5838. வீண் இழவுக்கு மார் அடிக்கிறதா?
Am I to smite my breast on account of the death of a stranger?

5839. வீண் இழவுக்கு வீட்டைக் கட்டிப் பார இழவிற்குப் பந்தல் போடு.
Build a house for the use of a stranger, and put up a pandal for the same purpose.

5840. வீண் விபரீதத்தால் பேதையர் வீண் செலவு செய்ய உடன் படுவார்கள்.
Fools are extravagant through mere perverseness.

5841. வீம்புக் குப்பையில் விளையும் வீண் செடி.
A useless shrub growing on a rubbish-heapof ostentation.

5842. வீம்புக்கு வேடம் கொள்ளாதே.
Do not assume a garb for mere show.

5843. வீம்பு பேசுகிறவன் அழிவான், வீரியம் பேசுகிறவன் விழுவான்.
A boaster will be ruined, he who talks as a hero will fall.

5844. வீரம் பேசிக்கொண்டு எழுந்த சேவகன் வெட்டும் களம் கண்டு முதுகிடலாமா?
May a soldier who defiantly rose to the combat, retreat in sight of the battle field?

5845. வீரன் கேண்மை கூர் அம்பாகும்.
The friendship of a hero, is a sharp arrow.

5846. வீரியம் பெரிதோ காரியம் பெரிதோ?
Which is the greater boasting or acting?

5847. வெங்கண்ணை வாங்கும் உன் கண்ணைக் கொடுத்து.
Give your eyes in exchange for white-eyed fish.

5848. வெகுஜன வாக்கியம் கர்த்தவ்வியம்.
The sayings of the many involve duty.

5849. வெச்சேனவுக்கு அன்றி வெண்ணெய் உருகுமா ?
Can butter be melted without heat?

5850. வெட்கம் கெட்டாலும் கெடட்டும், தொப்பையில் இட்டால் போதும்.
It matters little if his honour is at stake, it is enough if his paunch be filled.

5851. வேட்கத்தால் ஒல்காதவள் குலஸ்திரிக்குப் போகாது.
She who is not restrained by modesty, is not a woman of superiorbirth.

5852. வெட்கம் அற்ற பெண்பிள்ளை வீண்.
A woman without shame is worthless.

5853. வெட்கப்படுகிற வேசியும் வெட்கம் கெட்ட சமுசாரியும் உதவாதவர்கள்.
Shame in a prostitute, and want of modesty in a wife, are equally out of place.

5854. வெட்கமே கெட்டு வெளிப்பட்ட முண்டைக்கு முக்காடு ஏது?
What signifies a veil to a widow who goes about without shame?

5855. வெட்கத்துக்கு அஞ்சினவன் சச்சரவு செய்வானா?
Will he who is afraid of disgrace quarrel?

5856. வெட்கத்துக்கு அஞ்சினவன் கடனுக்கு அஞ்சுவான்.
He that is afraid of disgrace is afraid of running into debt.

5857. வெட்கத்தை விற்றுக் கக்கத்திலே கொண்டு போகிறான்.
Having sold his sense of shame, he carries its price under his arm.

5858. வெட்கம் கெட்டவனுக்கு மேனி எல்லாம் அழுக்குத்தான்.
The whole body of the shameless, is dirty.

5859. வெட்டப் பலம் இல்லை வெட்டிக்குப் போக மனம் இல்லை.
He is too weak to cut, and unwilling to go out.

5860. வெட்ட வெளியிலே வையாளி விடுகிறதா?
Would you let loose a frisky calf in an open plain?

5861. வெட்டிக்கு இறைத்து விழலுக்குத் தண்ணீர் கட்டினது போல.
Like irrigating for no purpose.

5862. வெட்டிக் கொண்டுவா என்றாற் குத்திக் கொண்டுவருகிறான்.
When he is told to reap and bring, he pounds and brings.

5863. வெட்டிவேரில் விசிறியும், விலாமிச்சை வேரில் தட்டியும் பண்ணு .
Make a fan of the cuscus root, and a tat of sweet scented grass root.

5864. வெட்டின இடத்தில் சலம் ஊறும், வீடு கட்டின இடத்தில் நடை ஏறும்.
Where the ground is dug water will spring, where a house is built there will be an entrance.

5865. வெட்டி எல்லாம் தண்ணீர், மண் கட்டி எல்லாம் புல் நாற்று
There is water all over the path, young grass all over the sod.

5866. வெட்டி வெட்டிப் பார்த்தாலும் முட்டக் கரிக்காசுதான் அகப்படும்.
Though you may examine by continued digging, you will get only coin of coal in abundance.

5867. வெட்டிக்குப் பெற்று வேலியில் எறிந்தார்களா?
Did they give birth to me in vain, and throw me at a hedge?

5868. வெட்டியானும் பிணழும் கட்டிக்கொண்டு அழட்டும்.
Let the Vettiyan and the corpse embrace each other, and weep.

5869. வெட்டின் குளத்திலும் தண்ணீர் குடியாது கட்டின வேலியும் தாண்டமாட்டாது.
It neither drinks in an artificial reservoir, nor leaps an artificial hedge.

5870. வெட்டினவனுக்கு ஒரு கேணி வீணாதி வீணனுக்குப் பல கேணி.
He that has sunk a public well has only one, a notorious idler has many.

5871. வெட்டு ஒன்று கண்டம் இரண்டு.
One cut, two slices.

5872. வெட்டென உரையே துட்டர்கள் அறைவர்.
The wicked speak harshly.

5873. வெட்டெனப் பேசேல்.
Do not speak harshly.

5874. வெண்கலக் கடையில் யானை புகுந்தது போல.
As an elephant entered a brass vessel bazaar.

5875. வெண்டலைக் கருடன் வந்திடுமானால் எவர் கைப்பொருளும் தன் பொருள் ஆகும்.
When a brahmany kite crosses one from right to left, he may become possessed of the wealth of all.

5876. வெண்ணெய்யை வைத்துக்கொண்டு நெய்க்கு அழலாமா?
Having butter, would you weep for ghee?

5877. வெண்ணெய் திரளுகிறபோது தாழி உடைந்தாற்போல.
As the churn broke just as the butter was forming.

5878. வெண்ணெய் உருக்குகிறதற்குள்ளே பெண்ணை ஆற்றிலே தண்ணீர் வருகிறது.
Ere butter can melt, freshesappear in the Pennar.

5879. வெந்த சோற்றைத் தின்று வந்தது எல்லாம் பிதற்றுகிறான்.
He eats his rice, and talks at random.

5880. வெந்த சோற்றைத் தின்று விதி வந்தால் சாகிறது.
Eating one's rice, and dying when the time comes.

5881. வெந்தது போதும் முன்றானையிலே கொட்டு.
It is boiled enough, put it into the end of my cloths.

5882. வெந்ததைப் போடு முன்றானையிலே.
Put what is boiled into my cloth.

5883. வெந்த புண் வினை செய்யாது.
No evil consequences can arise from a burn.

5884. வெந்தயம் இட்ட கறிக்கு சந்தேகம் இல்லை.
A curry with vendayam in it needs not be questioned.

5885. வெந்தயம் போடாத கறியும் கறி அல்ல, சந்தை இல்லாத ஊரும் ஊர் அல்ல.
A curry made without vendayam-Trigonella Foenum Groecum-is not a curry, a village without a market is not a village.

5886. வெந்தால் தெரியும் வெங்காயம் மணப்பு.
The flavour of an onion will be known after it is boiled.

5887. வெந்நீரிலே வீடு வேகுமா?
Can a house be burnt down with hot water?

5888. வெய்யிலிலே போட்டாலும் உலரான், தண்ணீரிலே போட்டாலும் நனையான்.
He will not dry in the Sunshine, nor dissolve in water.

5889. வெய்யோன் வெயில் முன் எரி தீபம் போல.
Like a burning lamp in sunshine.

5890. வெல்லப் படை இல்லை, தின்னப் படை உண்டு.
No army to conquer, though there are enough to consume.

5891. வெல்லப் பானையை எறும்பு மொய்த்தது போல.
As the ants swarmed on a pot of sugar.

5892. வெல்லப் பானையை ஈக்கள் மொய்த்துக்கொண்டது போல.
As the flies swarmed on a pot of sugar.

5893. வெல்லம் சாப்பிடுகிறவன் ஒருவன் விரலைச் சூப்புகிறவன் ஒருவன்.
One eats the sugar, another links his fingers.

5894. வெல்லப் போனான் ஒரு செல்லப்பிள்ளை மெல்லப் போனான் ஒரு அமுங்குத் தலையன்.
A pet child went to conquer, a flat-headed fellow followed him slowly.

5895. வெல்லாது உங்கள் படை செல்லாது பாண்டியன் முன்.
Your army will not conquer, nor even oppose Pandya.

5896. வெளிச்சம் இருள் ஆனால் இருள் என்னவாம், மெய்ஞ்ஞானி துர்மார்க்கனானால் அஞ்ஞானி எப்படி ஆவான்?
If light become darkness, what will the darkness be; if a wise man becomes wicked, what a great fool he will be?

5897. வெளிச்சீர் உட்சீரைக் காட்டும் கண்ணாடி.
The exterior is the mirror of the interior.

5898. வெளுத்தது எல்லாம் பால் கறுத்தது எல்லாம் தண்ணீர்.
Every thing white is milk, and every thing black is water.

5899. வெளுத்து விட்டாலும் சரி சும்மா விட்டாலும் சரி.
It will be all the same whether he is punishedor let go.

5900. வெள்ளம் பள்ளத்தை நாடும் விதி புத்தியை நாடும்.
The flood inclines to a hollow, fate follows the intention.

5901. வெள்ளம் வருவதற்குமுன் அணை கோலிக் கொள்ள வேண்டும்.
One should raise the dam before the flood comes.

5902. வெள்ளரிக்காய் விற்ற பட்டணம்.
The city where cucumbers were sold.

5903. வெள்ளாடு நனைகிறது என்று வேங்கைப்புலி விழுந்து விழுந்து அழுகிறதாம்.
It is said that the tiger is fallen down and crying for grief because the goat was wet.

5904. வெள்ளாடு குழை தின்றது போல்.
As the goat crops leaves.

5905. வெள்ளாட்டிக்குச் சன்னதம் வந்தால் விழுந்து விழுந்து கும்பிட வேண்டும்.
If a servant girl, be possessed of a devil, all must fall down before her.

5906. வெள்ளாட்டி பெற்ற பிள்ளை விடியற்காலம் செத்துப் போயிற்று.
The child brought forth by a servant girl, died at sunrise.

5907. வெள்ளாட்டியும் பெண்டாட்டியும் சரியா?
Are a maid servant and a wife, on an equality?

5908. வெள்ளாளன் மரபே மரபு கள்ளர் திருட்டே திருட்டு.
Of all ranks that of the Vellala is foremost, of thefts that of the Kallar is notorious.

5909. வெள்ளாளன் கெடுக்காவிட்டாலும் வெள்ளோலை கெடுக்கும்.
If the Vellala did not procure your ruin, his white olas will destroy you.

5910. வெள்ளாளன் மினுக்குப் பண்ணிக் கெட்டான், வேசிசளுக்குப் பண்ணிக் கெட்டாள்.
The Vellala was ruined by adornment, the harlot by finery.

5911. வெள்ளாளன் கிரந்தமும் பார்ப்பான் தமிழும் விழல் விழலே.
The Sanscrit of a Vellala, and the Tamil of a brahman, are equally faulty.

5912. வெள்ளாளர் செய்யாத வேளாண்மை வேளாண்மை அல்ல.
Agriculture not performed by Vellalas, is no agriculture.

5913. வெள்ளாளர் குடிக்கு ஒரு கள்ளாளர் குடி.
A Kallala family in a Vellala house.

5914. வெள்ளிக்கு எதிரே போனாலும், வெள்ளாளனுக்கு எதிரே போகலாகாது.
One may go before an evil star, but not before a Vellalan.

5915. வெள்ளிக்குப் போட்டதும் கொள்ளிக்குப் போட்டதும் சரி.
Money laid out on silver ornaments, and that spent for firewood are equally a loss.

5916. வெள்ளி போட்ட காலுக்கு வெறுங்கால் அடிமையா?
Is a naked foot, the slave of a foot wearing silver ornaments?

5917. வெள்ளி வட்டிலும் வேண்டும் விளிம்பிலே பொன்னும் வேணடும்.
I must have a silver platter with a rim of gold.

5918. வெள்ளெருக்குக்கும் வெள்ளாட்டுப் பாலுக்கும் கள்ளக் கரு மேகம் காணாமற் போம்.
The disease which blackens the skin, will be thoroughly cured by the white species of erukku and goats milk.

5919. வெள்ளை கொடுக்க வினை தீரும்.
One's sins will be expiated by giving cloth to the destitute.

5920. வெள்ளைக்குக் கள்ளம் இல்லை.
White is faultless.

5921. வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை .
The out-spoken are free from deceit.

5922. வெறுங்கைத் தட்டான் இரும்பு ஊதிச் செத்தான்.
A money-less goldsmith died by blowing iron.

5923. வெறிகாரன் குடியை விட்டான் வீண் புத்திக்காரன் பாவத்துக்கு அஞ்சான்.
A drunkard will not forsake drinking, a fool is not afraid of evil deeds.

5924. வெறிகொண்ட யானை மிதந்து திரிகிறாப்போலே.
As an elephant in rut wanders about unrestrained.

5925. வெறிக்கிட்டு அழியேல்.
Squander not by drinking.

5926. வெறு நாய் சந்தைக்குப் போனால் வெள்ளிக்கோலால் அடிபட்டு வரும்.
A dog which goes alone to the market, will be beaten with the steel - yard.

5927. வெறும் கை முழம் போடுமா?
Can the arm measure a cubit, when there is nothing to be measured?

5928. வெறும் சட்டி தாளிக்கிறான்.
He flavours an empty chatty.

5929. வெறும் புளி தின்றால் பற் கூசும்.
Tamarinds if eaten alone, will set the teeth on edge.

5930. வெறும் பானையில் ஈ புகுந்ததுபோல.
As flies entered an empty pot.

5931. வெறும் பல்லுக்கு ஏற்ற வீறாப்பு.
Arrogance suited to one's worthlessness.

5932. வெறும்பிலுக்கு வண்ணான் மாற்று.
Finery borrowed from a washerman.

5933. வெறுவாய்க்கு இலைகெட்டவன் விறகுக்குப் போனால் விறகு கிடைத்தாற் கொடி கிடையாது கொடி கிடைத்தால் விறகு கிடையாது.
If a worthless fool go out to gather firewood, he cannot procure a creeper, when he gets a creeper, he can find no firewood.

5934. வெறுவாய் மெல்லுகிற அம்மையாருக்கு நாழி அவல் அகப்பட்டது போல.
As a measure of bruised dried rice given to an old dame, who had nothing to chew but an empty mouth.

5935. வெறு வாயைத் தின்றவனுக்கு வெள்ளை அவல் கிடைத்தது போல.
As one who had nothing to eat but an empty mouth obtained bruised rice.

5936. வெற்றி பெற்றவன் சுத்த வீரன்.
He who has conquered is a perfect hero.

5937. வெற்றிலைக்குத் தண்ணீரும் வேசைக்கு மஞ்சளும் போல.
Like water to the betel creeper, and saffron to a prostitute.

5938. வெற்றிலை போல் இருக்கும் மிகுந்த மரம் ஆகி விடும் புத்தி உள்ள பூமரத்துக்குப் பூவிரண்டு வக்கணையாம்.
Its leaf is like betel leaf, it grows to a large tree, this intelligent tree has two flowers.

5939. வேகத்தில் நாலு விதம் உண்டு.
Of speed there are four kinds.

5940. வேகப் பொறுத்தது ஆறப் பொறுக்கக் கூடாதா?
Having been patient till the food was boiled, can you not wait till it cools?

5941. வேகாத வீட்டில் வேகும் கட்டை காமம்.
Lust is a burning block of wood in a house, not on fire.

5942. வேகாத சோற்றுக்கு விருந்தாளிகள் இரண்டு பெயர்.
There are two guests for the insufficiently boiled rice.

5943. வேகிற வீட்டில் பிடுங்குகிறது லாபம்.
Whatever is snatched from a burning house is an advantage.

5944. வேகிற வீட்டுக்கு வெட்டுகிற கிணறு.
To dig a well to put out a house on fire.

5945. வேகிற வீட்டிற்குக் கணக்குப் பார்ப்பார் உண்டோ?
Are there any who waste time in casting up the cost of a house when it is on fire?

5946. வேகிற வீட்டை அவிக்காமல் இருப்பார் உண்டோ?
Will not men extinguish the fire, when a house is on a blaze?

5947. வேசி உறவு காசிலும் பணத்திலுந்தான்.
The friendship of a prostitute is in the money she gets.

5948. வேசி காசு பறிப்பாள்.
A prostitute knows how to deprive one of his money.

5949. வேசியரும் நாயும் விதி நூல் வைத்தியரும் பாசம் அற்று நிற்பது கண்பார்.
See how harlots, dogs, and physicians, are at variance.

5950. வேடக்காரனுக்கும் ஆடக்காரனுக்கும் பகை, வேசிக்கும் தாசிக்கும் பகை.
Enmity exists among dancing masters and among harlots.

5951. வேடக்காரா வேடம் விடடா, ஓடக்காரா ஓடம் விடடா.
Thou hypocrite, quit thine hypocrisy, thou boatman, steer the boat.

5952. வேடத்தில் நாலு விதம் உண்டு.
Of disguises there are four kinds.

5953. வேடத்தினால் என்ன, வெண்ணீற்றினால் என்ன?
What avail special forms, what avails white ashes?

5954. வேடமோ தவவேடம் மனதிலோ அவவேடம்.
In appearance an ascetic, at heart a cheat.

5955. வேடம் மூன்று வகை.
There are three forms of disguise.

5956. வேடம் அழிந்துபோம்.
Disguises will perish.

5957. வேடம் கூட்டமும் கொள்ளாது.
His pretence is such that a room cannot contain it.

5938. வேடருக்கு அருமையான வேட்டை முசல் வேட்டை.
Foresters' favourite sport is hare hunting.

5959. வேடருக்கு தேன் பஞ்சமா, மூடருக்கு அடி பஞ்சமா?
Is honey rare among foresters, or chastisement to fools?

5960. வேடர் இல்லா ஊரில் யாவும் குடி இருக்கும்.
In a village where there are no hunters, all kinds of beasts may be found.

5961. வேடர்களில் மலைவேடர் விசேஷம்.
Of hunters those that inhabit hill tracts, are the most distinguished.

5962. வேடர் கையில் அகப்பட்ட தேன் கூண்டுபோல்.
As a bee-hive in the hands a forester.

5963. வேட்டை ஆடிச் சிங்கம் தின்னும்.
The lion lives by hunting.

5964. வேட்டையில் பெரிய வேட்டை பன்றி வேட்டை.
Hog-hunting is the most exciting of sports.

5965. வேட்டையில் பிரியமான வேட்டை சிக்காரி வேட்டை.
The most favourite of sports is that of the huntsman.

5966. வேண்டாத பெண்டாட்டியின் கைபட்டாற் குற்றம் கால் பட்டாற் குற்றம்.
A wife not liked offends, whether she touches with the hand, or with the foot.

5967. வேண்டாத பேருக்கு ஈந்து என்ன , வேலையில் ஆற்றுத்தண்ணீர் விழுந்து என்ன?
What is the good of giving to those who are not in want, and what is the good of a river flowing where work is being done?

5968. வேண்டி வினை செயேல்.
Do not act from selfish motives.

5969. வேண்டி வேண்டிக் கொடுத்தாலும் வேண்டாம் என்றாற்போல.
Like refusing to accept a thing when requested again and again.

5970. வேண்டுமென்றால் வீடு வேண்டாம் என்றால் காடு.
Domestic or ascetic life just as he pleases.

5971. வேண்டும் என்று நூற்றால் வெண்ணெய்க் கொடிபோல.
If one spins for her own benefit, the thread is as smooth as butter.

5972. வேதத்தில் நாலு விதம் உண்டு.
Of Vedas there are four kinds.

5973. வேதத்திற்கும் விக்கிரகபத்திக்கும் பகை.
The Vedas are opposed to idolatry.

5974. வேதத்தை அறியாத கிழவன் வீண்.
The old man that knows not the Vedas; is worthless.

5975. வேதத்திற்கு உலகம் பகை உலகத்திற்கு ஞானம் பகை.
The world is at enmity with the Vedas, and wisdom with the world.

5976. வேதம் ஆய்ந்து ஓதல் போதகர் முறைமை.
It is the duty of religious teachers to study the Vedas before teaching them.

5977. வேதம் பொய்த்தாலும் வியாழம் பொய்யாது.
Though the Vedas may fail, Jupiter will never fail.

5978. வேதம் கேட்டவரை வேதம் கேட்டவர் என்பான் ஏன்?
Why call those Vediar, who have heard the Vedas ?

5979. வேதம் ஏன் நாதம் ஏன் விஸ்தாரக் கள்ளருக்கு?
What need has a widely known hypocrite of the Vedas or the special forms of worship?

5980. வேதம் ஒத்த மித்திரன்.
A friend whose conduct is consistent with the precepts of the Vedas.

5981. வேதம் ஓதிய வேதியர்க்கு ஓர் மழை.
One rain (in a month) for the brahmans that expound the Vedas.

5982. வேதாரணியத்தில் பாம்பு கடிக்கிறதும் இல்லை, வேதாரணியத்தில் பாம்பு குறைகிறதும் இல்லை.
At Vedaranyam snakes do not bite, nor do they cease to abound.

5983. வேதியர்க்கு அழகு வேதமும் ஒழுக்கமும்.
The Vedas and virtue, form the beauty of the brahmans.

5984. வேதியர்க்கு அழகு வேதம் ஓதுதல்.
It is the office of brahmans to expound the Vedas.

5985. வேந்தனும் பாம்பும் சரி.
A king and a snake are alike.

5986. வேந்தன் சீறில் ஆந்துணை இல்லை.
No help if the king is angry.

5987. வேப்பெண்ணெயும் ஆபத்துக்கு உதவும்.
Even margosa oil will avail on an emergency.

5988. வேப்பெண்ணெய் விற்ற காசு கசக்குமா?
Will the money obtained by the sale of margosa oil be bitter?

5989. வேப்பெண்ணெய் விருந்து எண்ணெய் அல்ல, மருந்து எண்ணெய்.
Margosa oil is not used in entertainments; it is medicinal.

5990. வேம்பில் தேனை விட்டால் கசப்பு நீங்குமா?
Will the bitterness of margosa be removed by infusing honey into it?

5991. வேம்பும் கரும்பாச்சே வெற்றிலையும் நஞ்சாச்சே.
The margosa has become sugar-cane, and betel has become poison.

5992. வேம்புக்குப் பல் அழகு, வேலுக்குப் பல் இறுகும்.
When cleaned with a margosa stick the teeth look beautiful, when cleaned with a vel stick-Acacia arabica-they are made firm.

5993. வேம்பும் சரி வேந்தனும் சரி.
The margosa and a king are alikę.

5994. வேம்பும் சரி பாம்பும் சரி.
A margosa tree and a snake are alike.

5995. வேம்பை விரும்ப விரும்பக் கரும்பு.
Constant use makes even margosa sweet.

5996. வேரைக் கல்லி வெந்நீர் வார்த்த கதை.
The story of digging up a root; and pouring out hot water.

5997. வேர் களைந்த மரம் பிழைப்பது எங்கே?
How can a tree deprived of its roots live?

5998. வேர் நின்றால் மரம் நிற்கும், வியாபாரம் நின்றால் செட்டி நிற்பான்.
Trees endure as long as their roots are undecayed, merchants will maintain their social position if their trade continues.

5999. வேர் மூலிகை, மரமூலிகை , காய் மூலிகை.
Roots, wood, and fruit are all drugs.

6000. வேலமரத்து முள்ளும் ஆலமரத்துக் கனியும் ஆனேன்.
I am become a thorn of the vel, -Acacia arabica-and a fruit of the banyan.

6001. வேலமரத்திற்கு நிழல் இல்லை, வெள்ளாளனுக்கு உறவு இல்லை.
The vel tree casts no shade, the Vellala has no friendships.

6002. வேலம் பட்டை மேகத்தை நீக்கும், ஆலம் பட்டை பித்தத்தை அடிக்கும்.
The bark of the vel cures venereal heat, that of the banyan remove bile.

6003. வேலி ஒன்றுக்குப் பன்னிரண்டு கலம் விரைப்பாடு.
Twelve kalams of seed corn for one veli of land.
A veli is nearly equal to five acres.

6004. வேலி ஒன்றுக்குப் ஈரணை மாடும், இரண்டு ஆளும் வேண்டும்.
For every veli two yokes of oxen and two ploughmen are required.

6005. வேலிக்கு ஓணான் சாட்சி, வெந்ததுக்குச் சொக்கன் சாட்சி.
The chamelion is the witness of the hedge, the cook boy will testify to the food being well boiled.

6006. வேலிக்குப் போட்ட முள் காலுக்கு வினையாச்சுது.
The thorns collected for a hedge, have proved injurious to the feet.

6007. வேலி பயிரை மேய்ந்தால் விளைவது எப்படி?
If the hedge consume the crop, how is the harvest to be obtained?

6008. வேலிலும் நாலு பலன் உண்டு.
Even a vel tree is useful in four ways.

6009. வேலிவைத்துக் காப்பாற்றாத கன்றும் ஆலைவைத்து ஆட்டாத வாணியனும் சரி அல்ல.
Plants not protected by a hedge, and an oil-monger who does not work a press, are out of place.

6010. வேலை அற்ற அம்பட்டன் பூனையைப் பிடித்துச் சிரைத்தானாம்.
It is said that a barber who had nothing to do, got hold of a cat and shaved it.

6011. வேலை அதிகம் சம்பளம் கொஞ்சம்.
The labour is excessive, the pay little.

6012. வேலை இல்லா ஊருக்கு ராஜா ஏன், பாம்பு இல்லா ஊருக்குக் கீரிப்பிள்ளை ஏன்?
What need is there of a king in a country where there is no work, or of a mongoose where there are no snakes?

6013. வேலை இல்லாதவனுக்குச் சாப்பாடு என்னத்திற்கு, எச்சிசோற்ற்றுக் காரனுக்கு டம்பம் என்னத்திற்கு?
Why food to him who does no work, why display to him who lives on offal?

6014. வேலை இல்லாத அம்பட்டன் ஆட்டைச் சிரைத்தானாம்.
It is said that a barber who had no work, shaved a sheep.

6015. வேலை ஏன், பிள்ளை ஏன், வேலை இல்லாருக்குச் சாப்பாடு ஏன்?
Why work, why child, why food to those who are destitute of energy?

6016. வேலைக்கள்ளிக்குப் பிள்ளை மேல் சாக்கு, வெட்கம் கெட்ட நாறிக்கு அகமுடையான் மேலே சாக்கு.
An idle woman pleads her child in excuse for her faults, a shameless woman, her husband.

6017. வேலைக்கள்ளிக்கு வேளைக்குக் காற் படி , வீண் கட்டைக்கு வேளைக்கு அரைப் படி.
Toa shuffling woman a quarter measure for a meal, to a worthless block half a measure.

6018. வேலைக்கள்ளிக்குப் பிள்ளை மேலே சாக்கு.
A lazy woman neglects her work, and lays the blame on her child.

6019. வேலைக்காரியாய் வந்தவள் வீட்டுக்காரியானால் அவள் அதிஷ்டம்.
If a maid servant becomes the mistress of a house, it is her fortune.

6020. வேலைக்காரி என்று வேண்டிய பேர்கள் கேட்டார்கள், குடித்துனக்காரி என்று கொடுக்கமாட்டோம் என்றார்கள்.
Many asked her in marriage thinking that she was skilful in domestic affairs, but they refused on the plea that she was married girl.

6021. வேலைக்குத் தக்க கூலி, விருப்பத்துக்குத் தக்க கூர்மை.
Hire suited to the work, sharpness equal to the desires.

6022. வேலைக்கோ சம்பளம், ஆளுக்கோ சம்பளம்?
Is the hire for the labour, or the labourer?

6023. வேலை செய்தாற் கூலி, வேஷம் போட்டாற் காசு.
If the work be completed, hire; if the character has been sustained a fee.

6024. வேலை செய்யாத பிள்ளையைக் கையில் வை , வேலை செய்கிற பிள்ளையைக் காலில் வை.
Carry in arms, the child that does nowork, and the child which works, place on your legs.

6025. வேலை மினக்கெட்ட அம்பட்டன் பெண்டாட்டி தலையைச் சிரைத்தானாம். Being without work, thebarber is said to have shaved his wife’s head.

6026. வேலை மினக்கெட்டு அம்பட்டன் பூனைக்குட்டியைச் சிரைத்தானாம்.
It is said that a barber wasted his time by shaving a kitten.

6027. வேலை முத்தோ பிள்ளை முத்தோ ?
Is the work a pearl, or the child a pearl?

6028. வேலையைப் பார்த்துக் கூலி கொடு.
Look at the work before you pay the hire.

6029. வேலையைப் பார்த்துப் பெண்ணை எடு, சாலையைப் பார்த்து ஊருக்கு நட.
After ascertaining her domestic skill take a girl in marriage, proceed to your village taking care not to miss the road.

6030. வேல் வைத்துப் பயிர் ஆக்குவோர் இல்லை.
No one cultivates the vel-Acacia arabica-tree.

6031. வேழத்தை ஒத்த வினை வந்தால் தீர்வது எப்படி?
When a monstrous evil betides one, how can it be removed?

6032. வேழத்திற்குச் சிறிதும் பெரிதாய்த் தோன்றும்.
To an elephant small objects appear great.

6033. வேழம் முழங்கினாற்போல்.
Like the thundering of an elephant:

6034. வேளை அறிந்து பேசு, நாளை அறிந்து பயணம் பண்ணு.
Speak opportunely, set out on a journey on an auspicious day.

6035. வேளைக்கு அரைக் காசு ஆயிரம் பொன் ஆகும்.
Half acash at a time will, in the long run, amount to thousands of gold.

6036. வேளைக்கு உதவாத பிள்ளை தாழங்காய்க்குச் சரி.
A child who does not help in an emergency is like the fruit of the screw-pine.

6037. வேளையோ அவவேளை வீட்டிலோ அன்னம் இல்லை.
The time is unfavourable, at home there is no rice.

6038. வேறே வினை தேவை இல்லை, வினையாத்தாள்கோவிலுக்குப்போக வேண்டியதில்லை.
There is no need of another evil, it is not necessary to go to the temple of the goddess of misfortune.

6039. வேனலுக்குக் கன மழை வரும், வேந்தனுக்குக் கன சனம் சேரும்.
Excess of heat foretokens a heavy fall of rain, the presence of an king attracts a multitude of people.

6040. வேனிற் காலத்திற்கு விசிறி ஆன காலத்திற்கு ஆச்சாவும் தேக்கும்.
In the hot season a fan is useful, in prosperous times acha-ebony and teak wood.

6041. வை என்ற எழுத்தே பெயரும் வினையும் ஆகும்.
The letter வை is both a noun and a verb.

6042. வைகறைத் துயில் எழு.
Rise at dawn.

6043. வைகாசி மாதம் ஆற்றில் தண்ணீர்.
The river is in flood in May.

6044. வைகுண்டம் என்பது திரு மா நகரம்.
That which is called Vaikundam is a very great city.

6945. வைகை ஆற்றுத் தண்ணீர் வேகம் அதிகம்.
The current in the Vaigai is great.

6046. வைகை ஆற்று வெள்ளத்தில் பாலம் நிலைக்கிறது இல்லை.
When the Vaigai is in flood, its bridges do not escape uninjured.

6047. வைகை ஆறு தாமிரபருணிக்கு மத்திமம்.
The Vaigai issmaller than the Tamravarni.

6048. வைக்கத் தெரியாமல் வைக்கோற் போரிலே வைத்தானாம்.
It is said that he unwittingly placed it in a stack of straw.

6049. வைக்கத் தெரியாமல் வைத்துவிட்டு வந்தவரை எல்லாம் கேட்கலாமா?
Having inserted it by mistake, may be ask every one that comes by to help him out of the straits?

6050. வைக்கோற்கட்டுக்காரனை ஒப்புக்குக் கட்டி அழுதாப்போல.
As one embraced a straw carrier and pretended to weep.

6051. வைக்கோற்பட்டடையில் கட்டின நாய்.
A dog tied by a stack of straw.

6052. வைக்கோல் பஞ்சமா வறட் பசு பஞ்சமா?
Which is the more scarce, straw or a barren cow?

6053. வைக்கோல் தின்னும் குதிரை வீட்டுக் கூரையையும் பிடுங்கும்.
A horse which eats straw will also pull down thethatch of the house.

6054. வைக்கோல் தின்கிற மாட்டுக்குப் பால் கொஞ்சம், மதுரம் அதிகம்.
The cow that eats straw gives a small quantity of milk but it is very sweet.

6055. வைக்கோல் தின்கிற குதிரைக்கு வேகம் அதிகமா?
Is the horse that feeds on straw uncommonly fleet?

6056. வைக்கோற் கூரையிலும் விழற் கூரை வெகு நாள் இருக்கும்.
A reed roof lasts longer than a straw roof.

6057. வைக்கோற் கூளமும் ஒரு வேளைக்கு உதவும்.
Even old straw may be of use sometime or other.

6058. வைசியரும் சூத்திரரும் இருந்து அல்லோ பிராமணரும் க்ஷத்திரியரும் வருவார்கள்.
It is from Vaisyas and Sudras who must have existed previously, is it not, that Brahmans and Kshatris must have come.

6059. வைசியர்களில் பூவைசியர் சிரேஷ்டம்.
Of the Vaisyas the agriculturists are the chief.

6060. வைசூரி வந்தவர்கள் அம்மா என்று கூப்பிட வேண்டும்.
Those who are attacked with small-pox must call it the goddess.

6061. வைதாரை வாழவைக்கும் வாழ்ந்தாரைத் தாழவைக்கும்.
It will confer on calumniaters prosperity, and reduce to affluent to poverty.

6062. வைதீகர் என்றால் பார்ப்பாருக்கு பெயர்.
The term vaidikar is another name for brahmans.

6063. வைதீகம் லௌகிகம் இரண்டும் வேண்டும்.
The sacred and the secular are both indispensable.

6064. வைதீகம் என்றால் தெய்வ சமயம்.
Vaidikam means the divine religion.

6065. வைதீகம் ஆய்ந்து அறி.
Arrive at a knowledge of religion by studious investigation.

6066. வைத்தது உண்டானால் கெட்டதும் உண்டாம்.
If its being put there be true, its being lost may also be true.

6067. வைத்தது கண்டது சொல்லாதே.
Tell not what has been kept or what you saw.

6068. வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை.
If the hair is left to grow, kudumi, if shaved, bald.

6069. வைத்தியன் பெரிதோ வாத்தி பெரிதோ?
Which is greater, a physician or a schoolmaster?

6070. வைத்தியனுக்கும் வாத்திக்கும் பேதம் இல்லை.
A physician and a-schoolmaster never disagree.

6071. வைத்தியன் எல்லாருக்கும் பொது.
A physician is common to all.

6072. வைத்தியம் வேண்டாதார் உலகில் இல்லை.
There is no one on earth who does not require the services of a physician.

6073. வைத்தியம் வாயாடிக்குப் பலிக்கும்.
A loquacious doctor is successful.

6074. வைத்தியம் எல்லாம் நம்பிக்கையாற் பலிக்கும்.
Faith in medicine makes it effectual.

6075. வைத்தியனுக்கும் அஞ்சவேண்டும், வம்பனுக்கும் அஞ்சவேண்டும்.
One must fear a doctor as well as a traitor.

6076. வைத்தியமோ பைத்தியமோ?
Is it medical skill or madness?

6077. வைத்தியன் சொன்னது எல்லாம் மருந்து.
Whatever a physician prescribes is a remedy.

6078. வைத்தியனுக்குத் தன் அவிழ்தம் பலிக்காதாம்.
It is said that a physician cannot cure himself.

6079. வைத்தியன் தகப்பன் போல.
A physician is like a father.

6080. வைத்தியனே பெரிது என்பார் சிலர், வாத்தியே பெரிது என்பார் சிலர்.
Some will say that a physician is greater than a schoolmaster, and others, that a teacher is greater than a physician.

6081. வைத்தியன் பாராத நோய் தீருமா?
Can a disease be cured without treatment?

6082. வைத்தியன் பிள்ளை நோயினால் அல்ல, மருந்தினால் சாகும்.
A doctor's child dies, not by disease, but by medicine.

6083. வைத்தியனுக்கு ஊரார் யாவரும் சினேகிதர்.
The whole town is friendly to a physician.

6084. வைத்தியத்தில் இரண வைத்தியமும், வயதில் எவ்வனமும்நல்லது.
As regards medical science, surgery - in regard to age, youth are preferable.

6085. வைத்தியனே உன்னையே குணமாக்கு.
Physician, heal thyself.

6086. வைத்தியம் செய்தவன் எல்லாம் வைத்தியன்.
Every medical practitioner is a physician.

6087. வைத்தியம் கொஞ்சமாகிலும் தெரியாத பேர்கள் இல்லை.
There is none that does not know, at least, a little of medicine.

6088. வைத்தியன் மருந்திலும் கைமருந்தே நலம்.
Domestic medicine is preferable to that of a physician.

6089. வைத்தியன் பெரிதோ மருந்து பெரிதோ?
Which is greater, a physician or his medicine?

6090. வைத்தியன் பேச்சு நாலில் ஒரு பங்கு.
But a fourth part of a quack's pretensions proves to be true.

6091. வைத்தியனுக்கு வந்தது அவன் தலையோடே.
The malady of a physician cleaves to him till death.

6092. வைத்திய சாஸ்திரம் சாஸ்திரங்களில் விசேஷம்.
Medical science is the most important of all sciences.

6093. வைத்தீசுரன் கோவிலுக்குப் போயும் வயிற்று வலி தீர இல்லை.
His belly-ache is not cured even after going on a pilgrimage to Vaidisvaran's temple.

6094. வையகத்து உற்றவன் மெய்யகம் உற்றவன்.
In all the world, he who is sincere is a friend.

6095. வையகத்துக்குத் துணை வரதன் கழல் இணை.
At the ankled feet of the giver of all good is found the refuge of the world.

6096. வையகம் ஒழியும் வான் ஒழியும் வல்லவர் வசனம் ஒழியாது.
Earth and heaven, will perish, but the words of the mighty will endure.

6097. வையகத்தில் எல்லோரும் ஒரு போக்கு அல்ல.
All the world do not follow the same course.

6098. வையகத்தில் பொய் சொல்லாதவன் இல்லை.
There is no one in the world, who has not uttered a falsehood.

6099. வையத்துள் நீதி செய்யத்தக்கது.
It is proper to do justice in the world.

6100. வையத்தில் உயர்ந்தோர் சிலர் தாழ்ந்தோர் பலர்.
In the world some are high, and many are low.

6101. வையத்தில் உயர்ந்தோர்க்கு இரை தாழ்ந்தோர்.
In the world the low are the victims of the high.

6102. வையத்தில் உப்புக்கு ஏமாறின பேர் உடம்புக்கும் ஏமாறுவார்கள்.
On earth those who are disappointed of salt will meet with disappointment as regards their body also.

6103. வையத்தில் உப்பில்லாத பேர்க்கு உடம்பு இல்லை.
Op earth. those who have no salt have no body.

6104. வையத்தில் உடம்பு இல்லாத பேர்க்கு உப்பு வேண்டாம்.
Those on earth, who have not a body, have no occasion for salt.

6105. வையத்தில் உப்பும் வேண்டும் உடலும் வேண்டும்.
While on earth salt, and a body, are indispensable.

6106. வையத்தில் உடம்பு இல்லாவிட்டாலும் உடை வேண்டும், பணம் இல்லாவிட்டாலும் கனம் வேண்டும்.
Though destitute of personal beauty, clothing is needful, though destitute of money reputation is necessary.

6107. வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவன் தெய்வத்துள் வைக்கப்படும்.
He who lives as he ought in this world, will be ranked with the gods.

6108. வையத்தில் மேலான பேர்க்குத் தாழ்மையான மனது இருக்க வேண்டும்.
The great in the world must be distinguished by a humble mind.

6109. வையத்தில் நல்லோர் ஒருவரைக் கண்டது இல்லை.
In all the world none really good, has been seen.

6110. வையத்தில் நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் பாயும்.
Water drawn for the rice crop, benefits the grass also.

6111. வையத்தில் நெல் அரிசி வேண்டாதாரும் உண்டு, புல் அரிசி சிக்காதாரும் உண்டு.
In the world there are those who do not care for rice, as well as those who can scarcely procure even the reeds of grass.

6112. வையத்தில் சைவனுக்குச் சைவன்மேல்.
As a rule one saiva regards himself superior to another.

6113. வையத்தில் வைஷ்ணவனுக்கு வைஷ்ணவன் மேல்.
One vaishnava thinks himself superior to another vaishnava.

6114. வையத்தில் தந்தையிலும் தாய் விசேஷம்.
On earth a mother is more serviceable than a father.

6115. வையத்தில் தெவிட்டாத பொருள் அன்னமும் தண்ணீரும்.
While on earth the things which do not cloy, are rice and water.

6116. வையத்தில் நல் வினையால் ஆகாதது தீவினையால் ஆகுமா?
May that which cannot be accomplished by good deeds, be accomplished by evil deeds ?

6117. வையத்து மனிதர் நாலு வகை.
There are four kinds of men in the world.

6118. வையம் தோறும் தெய்வம் தொழு.
Worship God through all the world.

6119. வையம் ஏற்றின் ஐயம் இல்லை.
When the whole world applauds one, his merit is unquestionable.

6120. வையம் ஒத்தால் ஐயம் இல்லை.
If the world agree, there is no question about the matter.

6121. வையம் புகழ்ந்தால் ஐயம் இல்லை.
When the whole world praise one, his character is unimpeachable.

6122. வையம் பெரிதானாலும் வளம் உள்ள இடம் கொஞ்சம்.
Though the earth is of vast extent, the space adapted to the wants of man is limited.

6123. வையம் பெரிது அதில் வருத்தமும் பெரிது.
The world is great, and itsanxieties are also great.

6124. வையம் கெட்டால் ஐயம் இல்லை.
If the world be destroyed, almsgiving will cease.

6125. வைய வைய வைரக்கல், திட்டத் திட்டத் திண்டுக்கல்.
The more abused the more durable, the more despised the more hardened.

6126. வைரத்தை வைரம் கொண்டே அறுக்க வேண்டும்.
A diamond must be cut with a diamond.

6127. வைரம் மனதில் வையாதே.
Harbour not malice.

6128. வைரம் கொண்டவன் வைரப்பொடி தின்று சாகிறான்.
He who purchases diamonds will die by swallowing the particles.

6129. வைராக்கிய சதகம் சதகங்களில் விசேஷம்.
The most distinguished of satakams is that on self control.
A satakan is a poem of a hundred stanzas.

6130. வைராக்கியம் பகை முதலிய துர்க்குணங்களில் விசேஷம்.
Malice is of all forms of hatred the most pernicious.

6131. வைவார்க்கு இன்பம் இல்லை, பொறுத்தார்க்குத் துன்பம் இல்லை.
The abusive have no happiness the forbearing, have no misery.

6132. வைராவி துறவிகளில் விசேஷம்.
Among ascetics the vairavi is the most distinguished.

6133. வெளவாலுக்கு ஒரு கனிக்கு நூறு கனி நஷ்டம்.
For every fruit consumed by a bat, a hundred are spoiled.

6134. வெளவாலுக்கு மரமே கதி, அதன் குஞ்சுக்கு அதுவே கதி.
Trees are the asylum of bats; bats are the refuge of their young.

6135. வெளவாலுக்கு எது தூரம்?
What place is too remote for a bat ?

6136. வெளவாலுக்கு இரவில் கண் தெரியும்.
Bats can see in the dark.

6137. வெளவாலுக்கு நீளவும் தெரியும் குறுகவும் தெரியும்.
Bats know how to extend or contract the body.

6138. வெளவாலைத் தின்றாலும் அணிலைத் தின்னல் ஆகாது.
Though one may feed on bats, he may not feed on squirrels.

6139. வெளவாலைக் கொன்றாலும் பிடியை விடாது.
A bat will not let go its hold though killed.

6140. வெளவாலைப் பட்சி என்னலாமா?
May a bat be called a bird?

6141. வெளவாலோடு அணிற்பிள்ளை சேருமா?
Do squirrels mix themselves with bats?

6142. வெளவாலோ சிறிது அதன் அடியோ வலிது.
Small as the bat is, its stroke is powerful.

6143. வெளவால் அடித்துத் தின்னும், அணில் கடித்துத் தின்னும்.
Bats devour by striking, squirrels by nibbling.

6144. வெளவால் அடிக்குப் பயப்படலாமா?
May one fear the stroke of a bat?

6145. வெளவால் கூட்டம் கூட்டமாக இருக்கும்.
Bats are found in companies.

6146. வெளவால் தலை நரித் தலைபோல்.
The head of a bat resembles that of a jackal.

6147. வெளவால் தின்னாத பழம் இல்லை.
There is no fruit that a bat does not eat.

6148. வெளவால் போலத் தொங்குகிறான்.
He hangs like a bat.

6149. வெளவால் அடித்த பழமும் அணில் கடித்த பழமும் தள்ளுபடி ஆகுமா?
Is fruit knocked off by bats, or nibbled by squirrels, rejected ?

6150. வெளவால் அடைகிற வீட்டில் குடி இருப்பது எப்படி ?
How can one dwell in a house frequented by bats ?
Some suppose that bats in a house foretoken the speedy removal of
the resident family.

6151. வெளவி அணில் தொத்துகிறது போல.
As a squirrel ascends by clinging.

6152. வெள்விச் சேர்த்த போக்குப் பொருள் உண்டு.
They have wealth who amassed it by plunder.

6153. வெளவில் குடி இருக்கலாமா?
May one continue to dwell among those whom he robs?

6154. வெளவி வெளவிச் சேர்த்தாலும் மற்றவர்க்கு வைத்து ஒழிவான்.
Though he may have amassed wealth by continued rapine, he will leave it for others when he dies.

6155. வெளவின பேர்க்கு முடிவது சுருக்கு.
The rapacious end their days in the halter.

6156. வெளவிய கருமம் எண்ணித் துணி.
Carefully persevere in what you undertake.
---------------

End of the collection of proverbs

This webpage was last revised on 16 September 2021.
Feel free to send the corrections by email to the webmaster (pmadurai@gmail.com).