pm logo

கேள்வித் தீ (குறுநாவல்)
சு. சமுத்திரம்‌


kElvit tI (short novel)
by cu. camuttiram
In tamil script, unicode/utf-8 format



Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

கேள்வித் தீ‌ (குறுநாவல்)
சு. சமுத்திரம்‌


Source:
புதிய திரிபுரங்கள்‌
சு. சமுத்திரம்‌
கங்கை புத்தக நிலையம்,
13, தீனதயாளு தெரு, தியாகராய நகர்‌, சென்னை 600 017
கங்கை முதற்‌ பதிப்பு: செப்டம்பர்‌ 1997
உரிமை : ஆசிரியருக்கு
விலை ரூ, 25-00

Title . PUDHIYA THIRIPURANGAL
Subject : Novel
Language : Tamil
Author: SU. SAMUTHIRAM
Edition : First Edition September, 1997
Pages : 156
Price : Rs. 25-00
Published by : GANGA! PUTHAKA NILAYAM
13, Deenadayalu Street, Thiyagarayanagar, Chennai-600 017
நேரு அச்சகம்‌, 43, அம்மையப்பன்‌ தெரு, சென்னை--600 014
----------------
பதிப்புரை

திரிபுரம்‌ எரித்த விரிசடைக்‌ கடவுளான சிவபெருமானின்‌ நடராஜ தாண்டவத்தைப்‌ பார்த்து சு. சமுத்திரத்திற்கு ஒரு பொறி தட்டிற்று போலும்‌.

கொடியவனும்‌, அரக்சுனுமான முயலகனைக்‌ காலால்‌ மிதித்து, கையிலே இச்சட்டி ஏந்தி உக்கரத்தோடு நடனமிடும்‌ நடராஜப்‌ பெருமானின்‌ திருக்கோலம்‌, சமுத்திரத்திற்கு ஒரு இவிரவாதக்‌ கதை உருவாகக்‌ காரணமாகிறது.

கொடியவர்களாகவும்‌ கொலை பாதகர்‌களாகவும்‌ உள்ள ஒரு கட்டுமானக்‌ காண்ட்ராக்ட்‌ நிறுவனத்தன்‌ முறைகேடான செயல்களை எதிர்த்துப்‌ போராட ஒரு இளைஞல்‌ 26 வாறான்‌. தொழிலாளர்களின்‌ உழைப்பால்‌ கொழுத்து வாழும்‌ 'காண்ட்ராக்டர்‌”களின்‌ கொடுமைகளைத்‌ தட்டிக்‌ கேட்கப்‌ புறப்படும்‌. அந்து இளைஞன்‌, ஈஸ்வர சன்னதியில்‌ சாமியாரால்‌ ஆர்வதிக்கப்பட்டுக்‌ காரியத்தில்‌ இறங்குகிறான்‌.

பல்வேறு கருத்துக்களால்‌ சிதைந்து கிடக்கும்‌ தொழிலாளர்களை ஒன்றுபடுத்தி, தொழிற்‌ சங்கம்‌ அமைத்து, உரிமைகளுக்காகப்‌ போராட்டம்‌ நடத்த முனையும்போது, அவனுக்கும்‌, அவன்‌ காதலிக்கும்‌ காண்ட்ராக்டர்களால்‌ இழைக்கப்‌பட்ட கொடுமையைக்‌ கண்டு ஈஸ்வர பூஜை செய்துகொண்டிருந்த சாமியாரே கொதித்தெழுகிறார்‌.

காவியடையைக்‌ களைந்துவிட்டு காக்கியுடை. அணிந்து, புதிய திரிபுரங்களை அழித்து, ஆட்‌கொள்ளப்‌ புறப்படுகிறார்‌.

இதில்‌ இடம்பெறும்‌ இன்னொரு நாவலான “கேள்வித்‌ தீ' எனும்‌ குறுநாவலும்‌ ஒரு குருதிப்‌ புனல்தான்‌.

கல்விக்கூடத்தை தநிர்வகிப்பவன்‌ ஒருவனின்‌ கயமைத்தனத்தையும்‌, பகலுணவுக்கு : வரும்‌ உணவுப்‌ பொருள்களை விற்றுவிட்டு ஆட்டம்‌ போடும்‌ அயோக்கியத்தனத்தையும்‌, அதற்கு உடந்தையாக இருக்கும்‌ அதிகாரியையும்‌, இவர்‌களின்‌ கூட்டுச்‌ சதியை தட்டிக்‌ கேட்கும்‌ ஆசிரியர்‌ களை வேலைநீக்கம்‌ செய்யும்‌ அராஜகத்தையும்‌, எதிர்த்துப்‌ போராடும்‌ ஆசிரியர்களின்‌ போராட்‌டங்களையும்‌ ஆ௫ரியர்‌ சமுத்திரம்‌ அவர்கள்‌ வேசமாகவும்‌ கோபமாகவும்‌ எழுதிக்‌ காட்டுகிறார்‌. படிக்கும்‌ வாசகர்களையும்‌ கொதிக்க வைக்‌கிறார்‌. புதிய திரிபுரங்களும்‌' 'கேள்வித்‌ தீவும்‌” வாசகர்களின்‌ மனதில்‌ ஒரு கோபத்‌ தீயை மூட்டிவிடும்‌ என்பது நிச்சயம்‌,

கங்கை புத்தக நிலையத்தார்‌
--------------

கேள்வித் தீ
அத்தியாயம் 1

கனைக்காதது எப்படி கழுதையாகாதோ, அப்படி அந்த வீட்டுக்குள் போய் நாற்காலியில் உட்கார்ந்தோ அல்லது உரசிக்கொண்டு நின்றோ, வெற்றிலை பாக்கு போட்டு வெளியே வந்து கனைத்துக்கொண்டே துப்பி விட்டுப் போகாதவர்கள், ஊர்ப் பிரமுகர்களாக மாட்டார்கள். அன்றைக்குக் கொஞ்சம் வெத்தடி... வில்லடி செய்ய வேண்டியது இருந்ததால், பிரமுகர்களின் சென்ஸ்ஸை அந்த வீட்டுக்குள்ளேயே எ டு த் து க் கொள்ளலாம். சொல்லக்கூடிய கூட்டந்தான் என்றாலும், சொல்ல முடியாத, சுற்றி வளைத்த பேச்சுக்களிலேயே பிரமுகர்கள், சுற்றிச் சுற்றி நாக்காடினார்கள்.

அந்த வீடு ஒரு அரண்மனை மாதிரி. அந்தக் காலத்தில் இருந்தே காரை வீடு' என்று அழைக்கப்படுவது. நான்கு விக்கத்து மதில் சுவர்களுக்கு மத் தியில் நடுநாயகமாக இருந்த அந்த வீடு, சமதரையில் இருந்து மூன்றடி உய சமதளத்திற்கு மேலே, கிட்டத்தட்ட தாஜ்மஹால் மாதிரியே தோன்றும். அந்த வீட்டுக்குள் போகிறவர்கள் முன்னேறலாம் என்று சொல்லாமல் சொல்வதுபோல், நான்கைந்து படிக்கட்டுகளில் ஏறித்தான் போகவேண்டும்.

காம்பவுண்ட் சுவருக்கு அருகே, பூவரசு மரக் கட்டையை பொன்னையா கோடரியால் விறகுகளாகக் கீறிக் கொண்டிருந்தார். முந்தாநாள் நடந்த அம்மன் 'குடையில் சுடலை மாடசாமியாக, சல்லடங்குல்லாய் தரித்து, வெட்டரிவாளை வைத்துக்கொண்டு, முறுக்குத் தடியைப் பிடித்துக்கொண்டு, வேட்டைக்குப் புறப்பட்ட போது, அதோ அந்த முகப்பறையில் கூடியிருக்கும் பிரமுகர்கள் அனைவரும் இவரை விழுந்து கும்பிட்டு விபூதி வாங்கினார்கள். இப்போதோ இவர் விழுந்து விழுந்து வெட்டுவதைப் பார்த்து, தத்தம் முகங்களை அலட்சியமாக வெட்டிக்கொள்வதுபோல் தோன்றியது.

இந்தச் சாமியாடிக்கும் ஊர்ப்பிரமுகர்கள் தன்னைக் கும்பிட்டதுதான் ஞாபகம் வருகிறதே தவிர, இதர ஏழை பாழைகள் கும்பிட்டது. நினைத்துப் பார்த்தால்கூட வராது போலிருக்கிறது. அன்று வந்த ஜனம் மெச்ச' ஆடியவர் இப்போது வயிறு மெச்சுவதற்காக கோடரியை .ைத்துக்கொண்டு மேலும் கீழுமாக ஆடுகிறார்கிட்டத்தட்ட கோவிலில் ஆடியது மா கிரியே. அன்றைக் காவது, வாழைப்பழம், புண்ணாக்கு முதலியவற்றை சாமியின் பெயரில் சாப்பிட முடிந்தது. இன்றைக்கு அதுவும் இல்லை. அண்ணாச்சி... இன்னைக்கி ஒரு முக்கியமான விஷயம் நடககப் போவுது. கொஞ்சம்... கொஞ்ச நேரந்தான் விறகு கீறணும் வருவியளா...' என்று வீட்டுக்காரி ரா ச ம் மா சொன்னபோதே பொன்னையா புரிந்துகொண்டார். கூலி கிடையாது. போனஸ் வெட்டு. தொலைவில் ஒரு மூட்டைக் கோதுமை மாவை கொட்டி விட்டு, அதைக் கையால் தளம் முழுக்கப் பரப்பிக் சொண்டிருந்த மனைவியைப் பார்த்து, "கொஞ்சம் தண்ணி கொண்டு வான்னு எத்தன தடவழா சொல்றது? எருது நோவு காக்கைக்கு தெரியாததுமாதுரி, என் தாகம் ஒனக்குத் தெரியல பாரு' என்று பொன்னையா சீறினார். அவளும் பதிலுக்குச் சீறியிருப்பாள் காலங் காத்தாலயே தலமறவா போயிடுமுன்னு சொன்னேனே, கேட்டீரா...நல்லா படும். ஒம்மா புத்தி தான ஒமக்கும் இருக்கும்’ என்று நெஞ்சுக்குள் இருந்ததை வாய்க்குக் கொண்டு வரத்தான் போனாள்... ஆனால் பிரமுகர்களைப் பார்தததும், சொல்ல வந்ததை விழுங்கிக் கொண்டாள். 'வீட்டுக்கு வரட்டும்...'

வீட்டுக்கு மூத்த 'பிள்ளையான தங்கப்பாண்டி சுவரோடு ஒட்டிப் போட்டிருந்த தேக்குக் கட்டிலில் உட் கார்ந்துகொண்டு, தொங்கப் போட்டிருந்த கால்களை ஆட்டிக்கொண்டு, கட்டில் காலின் உருண்டு திரண்ட மேல் பாதியை, வலது கையால் தேங்காயை திருவுவது மாதிரி திருவிக் கொண்டிருந்தார். நாற்பத்தெட்டு வய திருக்கும். கழுத்தில் 'எட்டு பவுன் தங்கச் செயின் தொங் கியது. புலி நகம் போட்ட செயின். மேஜை இல்லாமலே, ஒரு நோட்டுப் புத்தகத்தை வசதியாக வைத்து எழுது மளவிற்கு, வயிறு பருத்தும் பெருத்தும் வசதியாக இருந்தது. அவருடன் கிராம முன்ஸிப் மாடக்கண்ணு நெருங்கி உட்கார்ந்திருந்தார். அவருக்கு அருகே, தங்கப் பாண்டிக்குப் பெண் கொடுத்த மாமனாரான எழுபது வயதுக் கிழவர் ஆறுமுகம், ஜரிகைவேஷ்டி கட்டி, கழுத்தில் மேரியல் போட்டு, சாவும்போது வசதியுள்ள வர்களை சிங்காரிப்பார்களே, அப்படிப்பட்ட சிங்காரத் தில் இருந்தார். அவரையடுத்து, சில பண்ணையார்கள் குறுக்கும் நெடுக்குமாக உட்கார்ந்திருந்தார்கள். கட்டி லுக்கு எதிர்த்தாற்போல் போட்டிருந்த நாற்காலிகளில் முதல் நாற்காலியில் இளைய பிள்ளை' ராஜலிங்கம் பேண்ட் சிலாக்கோடு உட்கார்ந்திருந்தார். போனதடவை ஊருக்கு வந்திருக்கும்போது, வெள்ளவெளேரென்று தெரிந்த தலைப் பகுதி, இப்போது 'கரு கருப்பாய்' இருப்பதற்கான காரணம் புரியாமல் பல கிழவர்கள் வியங்கினார்கள், ஒரு சிலருக்கு தங்களுக்கு 'கண் கெட்டுப் போயிருக்குமோ என்று சந்தேகம். இன்னும் ஒரு சிலருக்கு கண்ணாடி போட்டதால், தங்களின் 'வெள்ளெழுத்து’ நோய் போய்விட்ட திருப்தி. ராஜலிங்கத்திற்கு அருகே, கர்ணம், மளிகைக் கடையில் கருப்பட்டியைச் சுற்றிக் கொடுக்க வைத்திருக்கும் அசிங்கமான தாள்கள் மாதிரி, ஒரு கட்டுக் குப்பைக் காகிதங்களை கசக்கிப் பிடித்து வைத்துக்கொண்டிருந்தார். அடிக்கடி, அதைப் பிரித்துப் பிரித்துப் படித்துக்கொண்டார். அடங்கல் பட் டாவாம்'. இங்கேயும் கர்ணம் முன்வnப்புக்கு எதிரே தான் இருந்தார். அவரையடுத்து, ராஜலிங்கத்தின் மாமனார் சுருட்டைப் பிடித்துக் கொண்டு ஒரு காலைத் துரக்கி நாற்காலிச் சட்டத்தில் போட்டுக் கொண்டிருந்தார். அவரை யடுத்து, 'மற்றும் பலர்".

தங்கப்பாண்டியின் மனைவி ராசம்மா, அங்குமிங்கு மாகச் சுற்றிக் கொண்டிருந்தாள். ராஜலிங்கத்தின் மனைவி மேரி புஷ்பம், ஒரு பொய்க் கொண்டையில் இலை தழையோடு கூடிய ஏதோ ஒருவித பூ மொந்தையை வைத்துக்கொண்டு, நரசிம்ம அவதாரம் மாதிரி, வாசல் படியில் கதவைப் பிடித்துக்கொண்டு நின்றாள். இந்த ராஜலிங்கம் திருநெல்வேலியில் கலெக்டர் ஆபீஸில் சேர்ந்தவுடனேயே அந்தக் காலத்தில் பத்திர காளியம்ம னாக சாமியாடிய தாத்தாவின் சம்மதத்துடனேயே, ஜோசப் டேவிட்டாக மாறி, குலதெய்வமான சுடலை மாடசாமி கோவிலில் மணமகள் வீட்டாருக்குத் தெரி யாமலே பூஜையும் போட்டுவிட்டு, அப்புறம் பணக்கார வம்சத்தைச் சேர்ந்த மேரி புஷ்பத்தை சர்ச்சில் பிடித்தார். முதல் பிள்ளை நான்கு வயதில் சற்று இழுத்து இழுத்து நடந்ததால், சுடலை மாட சாமியின் கோபத்தைத்' தணிக்கும் வகையில் 'கொடைக் கு' 'வரி கொடுத்ததோடு, சாமிக்கு வேட்டிகூட எடுத்துக் கட்டினார். சர்ச்சுக்குப் போவதைக் குறைத்தார். என்றாலும், இரண்டாவதாகப் பிறந்த பெண்ணும் மூளைக்கோளாறு உள்ளவள்போல் தோன்றியதும், பாதிரியாரிடம் போய் பாவமன்னிப்பு'ப் பெற்றார். அப்படியும் மூன்றாவது பிறந்த பையன் ஒரு வருடத்திற்குள் 'துள்ளத் துடிக்க இறந்ததும் மீண்டும் சுடலை மாடசாமியிடம் வந்தார். இப்போது சர்ச்சுக்கு ஜோஸப் டேவிட்டாகவும், சுடலைமாடனுக்கு ராஜலிங்க மாகவும் அவரால் நட மாட முடிகிறது.

பேச்சை எப்படித் துவக்குவது என்று ஒவ்வொருவரும் யோசித்துக் கொண்டிருந்தபோது, மேரி புஷ்பம் தன் எட்டு வயதுப் பையன் ஜாய்ஸ்லினைப் பார்த்து, 'இவங்களுக்கு ஒரு பாட்டுப் பாடிக் காட்டுடா' என்றாள். அந்த எட்டு வயதுப் பொடியன் டிவிங்கில்... டிவிங்கில் லிட்டில் ஸ்டார்' என்று சொல்லிக்கொண்டு கைகளை மேல்நோக்கிக் குவித்து, கால்களை ஆட்டினான். உடனே தரையில் பால் டப்பாவை எடுத்து வைத்துக் கொண்டு மேளம் அடித்துக் கொண்டிருந்த தன் பெரிய மைத்துனர் தங்கப்பாண்டியின் மகன் குமாரை, ஓரக் கண்ணால் பார்த்துக்கொண்டே 'ஜாய்ஸ்லின், இந்த குமாருக்கு ஒரு மாசந்தான் சின்னவன். ஒரு மாசமா... ரெண்டு மாசமா... ஆமாம்... ஒரு மாசந்தான். இவன் ஜூன். அவன் ஜூலை...' என்றாள் மேரி புஷ்பம்.

ஒரு மாதம் முன்னால் பிறந்த குமாரால், இப்படிப் பாட முடியுமா என்பதுபோல் அவன் முகத்தை பாவமாக" வைத்துக் கொண்டபோது, பொன்னையாவிடம் அந்தா கிடக்கே... வாதமசக்கி... ஆயும்... கொஞ்சம் கீறுனா போதும்', என்று சொல்வதற்காக படியிறங்கிய ராசமமா, அங்கேயே நின்றாள். அவளையும் பார்க்கப் பாவமாகத் தான் இருந்தது. குமார் பயலோ, எதுவும் நடக்காதது போல் பல்லைக் கடித்துக்கொண்டே டின்னை அடித்தான்.

"டிவிங்கிலை முடித்துவிட்ட ஜாய்ஸிலின், அம்மாக் காரி மேரி புஷ்பத்தைப் பார்த்தான். உடனே அவள் 'டிராட்...டிராட், பாடு' என்றாள். பேபி கோஸ் டு ஸ்கூல்...டிராட்...டிராட்" என்று துவங்கும் ஆங்கிலப் பாடலை கிட் டாம்பட்டி ஆக்ஸன்னோடு பையன் பாடிக் கொண்டிருநதான். அவன் கையை ஆட்டிய விதமும், காலைத் து க் கி ய லாகவமும், கவர்ச்சியாகத்தான் இருந்தது பிரமுகர்கள் மகிழ்ந்து போனார்கள்.

'பலே...நீதாண்டா ஒங்க தாத்தா பேர எடுத்தால் எடுக்கணும்' என்றார் முன்வnப். அப்போது ராஜலிங்க மும், தங்கப்பாண்டியும், அவரைப் பார்த்து லேசாக முறைத்தார்கள்.

"அவரு இ வ னு க் கு எம்மாத்திரம்வே? நம்ம முன்ஸீப்புக்கு இக்கன்னா போடத்தான் தெரியும்... யார் யார் எப்படி ன்னு சொல்லத் தெரியாது... நம்ம குமார் கலெக்டரா வரப்போறான் பாருங்க...' என்றார் கர்ணம், கையில் இருந்த அடங்கல் பட்டாவை ஆட்டிக் கொண்டே !
"எல்லாம் வளப்புல இருக்குவே... இவன் மேரி புஷ்பத்தோட மகனாச்சே...' என்றார் இன்னொரு கிழவர்.
ஜாய்ஸ்லின் பயலுக்கு எப்படியோ, மேரி புஷ்பத்திற்கு பெருமை பிடிபடவில்லை. 'ஜாய்ஸ்...ஒல்ட் விச் ஸ்டோரியச் சொல்லு பார்க்கலாம்' என்றாள். அந்தப் பயல் இப்போது 'ஒல்ட் விச்" கதையைச் சொல்லாமல், இன்னமும் மேளம் அடித்துக் கொண்டிருந்த பெரியப்பா மகன் குமாரைப் பார்த்து 'காலையில் உதச்சியே, இப்போ பைட்டுக்கு வாரீயாடா... பேஸ்ட ரீட் தேவடியா பிள்ளா’’ என்று சவாலிட்டு குமாரின் கையைப் பிடிக்கப் போனதுடன், பிரபல பத்திரிகைகளில் கூடப் பிரசுரிக்க முடியாத கெட்ட வார்த்தைகளை, மேற்கொண்டும் பேசிக் கொண்டே போனான்.

எல்லோரும் அசந்துவிட்டார்கள். எல்லாம் வளப்புல இருக்குவே" என்று சொன்ன அதே கிழவர், மேரி புஷ்பத்தை வேறு விதமாக வெறித்துப் பார்த்தார். இன்னும் படியிலேயே நின்ற ராசம்மா மேரிபுஷ்பத்தை நோட்டம் விட்டுக்கொண்டே ஏய்1.குமார்..."நீராருங் கடலுடுத்த பாடிக் காட்டுடா... இவனுக்குக் கெட்ட வார்த்தை சொல்லிக் கொடுத்தாலும் வராது' என்றாள், அவற்றைச் சொல்லிக் கொடுத்துத் தோற்றவள்போல.

மேரி புஷ்பமும் போரில் தோற்ற ராவணன் ஜானகி நகுவாள்' என்று வருத்தப்பட்டதுபோல், பிரமுகர்களைப் பற்றிக் கவலைப்படாமல் ராசம்மா பாடுவாள்' என்று நாணினாள். இருந்தாலும், தேக்குத் துரண் அருகே, ஒரு நீளமான குச்சியில், அதைவிட சின்னக் குச்சியை குறுக்காக வைத்து, மத்தியில் ஒரு நூலை வைத்துக் கட்டிக்கொண் டிருந்த ஏழுவயது மகன் ஜெய்மிெயைப் பெருமையாகப் பார்த்துக்கொண்டே 'ஜாய்ஸ்லின் சில சமயம் இப்படித் தான் லூசாயிடுவான்...ஆனால் அவள் அப்படி இல்ல... ரொம்ப ரிலிஜியஸ். இப்பக்கூட சிலுவை செய்யுறத பாருங்க...' என்றாள். எல்லோரும் ஜெய்ஸியைப் பார்த்தபோது, அந்தச் சிறுமியோ "இது ஒண்ணும் சிலுவை இல்ல ஏரோப்பிளேன்' என்றாள் வெடுக் கென்று.

சுவரில் மாட்டியிருந்த ரிவெக்ஸ் கடிகாரம் பன்னி ரெண்டு தடவை அடித்தது. உடனே கர்ணம் 'சரி, மணியடிக்குது. நல்ல நேரம் பேச்ச ஆரம்பிப்போமா?’’ என்றார்.
'ஏன்வே பட்டையில போட்ட நண்டு மாதுரி பறக்கியரு...?' என்றார் முன்ஸீப்.

'இது நீரு பிரிச்ச வரியை கஜானாவுல கட்டாதது மாதிரி நிதானமாக நடக்கிற விவகாரம் இல்ல. இப்பவே முடியப் போறது...என்ன சின்னையா... நான் சொல் லுறது...' என்றார் கர்ணம்.

முன்ஸீப்பிற்கு சின்னையாவான கந்தசாமிக் கிழவர் 'இதுல என்னப்பா சொல்றதுக்கு இருக்கு ராமன், லட்சுமணன் மாதிரி இருக்கிறவங்க...சும்மா...நாம பேச வேண்டியது உலக முறைக்கித்தான். சரி. சத்திரப் பட்டை பாசனத்துல எவ்வளவு இருக்கு...? நாலரைக் கோட்டை விதப்பாடா?' என்றார்.

கர்ணம் இடைமறித்தார். 'நாலரைக் கோட்டையும் ஒருவர்பேர்ல இல்ல. சர்க்கார்ல இந்தக் கூறுகெட்ட குப்பங்க நிலச் சீர்திருத்தமுன்னு கொண்டுவரும்போது இவங்கய்யா என் காத கடிச்சாரு. இப்போ, பலர் பேர்ல பட்டா இருக்கு. ’’

முன்ஸீப் பதிலளித்தார். 'என்னவே, ஜமாபந்தில உளறுறது மாதிரியே உளறுறியரு? பட்டாவா இப்ப முக்கியம்? அகத்தான் எப்படி வேணும்னாலும் பண்ணிக் கலாமே. மொதல்ல நிலத்தப் பிரிச்சிப் பாப்போம்...'
கந்தசாமிக் கிழவர் தலையிட்டார். சரி. ஒங்க சண்டய கச்சேரில வச்சுக்கங்க. எப்பா, ராஜலிங்கம்! தங்கப்பாண்டி! சத்திரப்பட்டை குளத்துல நாலரைக் கோட்டையும், சீமப்பேரில இருக்கிற மூணு கோட்டை யும், சரியா இருக்கும் ஏன்னா மேப்பேரிலே...எல்லாப் பயிரும் போடலாம் பாரு...யார் யாரு, எத எத எடுத்து க் கிடுறிய? சீக்கிரமாச் சொல்லுங்க, நாழியாவுது...'

ராஜலிங்கம் குழைந்தார்...'அண்ணன் எத வேணு முன்னாலும் எடுக்கட்டும். அவன் எடுத்ததுபோக மிச்சம் இருந்தால் தரட்டும்...'

தங்கப்பாண்டி, தம்பியை பாசத்தோடு பார்த்துச் சொன்னார். அதெப்படிடா... நீ வெளியூர் ல இருக்கவன் நானாவது இங்க இருந்து எல்லாத்தையும் கவனிக்கிறவன். அதனால ஒனக்குப் பிடிச்சத எடுததுக்கிட்டு பிடிக்காதத தா. வாங்கிக்கிறேன்...'

'எங்க இருந்தாலும் நீதான் என் வயலையும் கவனிக் கப்போற ஒன் இஷ்டம் எத வேணுமுன்னாலும் தாங்க”

'சரி மாமா... தம்பிக்கு சீமப்பேரி பாசன த்தை கொடுத்திடுங்க. சத்திரப்பட்டையில சில சமயம் கமலை' அடிக்கணும். அது இவனுக்கு தோதுப்படாது.'

முன்ஸீப், கையாட்டிக்கொண்டே பேசினார் "அப்டி பங்கு வைக்கது தப்பு. ஒவ்வொரு பாசனத்தையும் செண்டு ரெண்டா போடணும்... அப்பத்தான் ஒருவன் வயல இன்னொருவன் பார்த்துக்கலாம்.'

கர்ணம் விடுவாரா? அதுவும் முன்வnப் பேசும்போது. "வே...பேசத் தெரிஞ்சா பேசும்...இல்லன்னா சும்மாக் கெடயும். போனவாரம் இப்படித்தான தாசில்தார்கிட்ட எடக்குமடக்கா பேசி மாட்டிக்கிட்டியரு...ஒரு பாசனத்த ரெண்டா பிரிச்சா...பம்பு ஸெட்ட எப்படிவே பிரிப்பியரு? டிராக்டர எப்படிவே பிரிப்பியரு? பிரிவினன்னு வந்த பிறவு, அவன் பாப்பான் இவன் பாப்பான்னு சொல்லுததுல அர்த்தம் இருக்காவே? படுகளத்துல ஒப்பாரிவச்சு என்னவே அர்த்தம்...'

கந்தசாமிக் கிழவர், அவர்களை கையமர்த்திவிட் டுப் பேசினார். "சரிப்பா. சத்திரப்பட்ட பாசனம் மூத்த வனுக்கு சீவலப்பேரி இளையவனுக்கு! அப்புறம் கடையப பாசனத்துல இருக்கிற மூணு கோட்ட விதப்பாட்ட எப்படிப் பிரிக்கிறது...?’’

'தம்பிக்கிட்ட கொடுத்திடலாம்... அவன் திருநெல் வேலியில இருந்து பஸ்ல வந்து நிலத்தைப் பார்த்துட்டுப் போவ வசதியா இருக்கும். நான் அதுக்குப் பதிலா பேச்சியம்மன் குளத்துல மூணு கோட்டை புஞ்சைய எடுத்துக்கிடுறேன்...'

'நீ ரொம்ப விட்டுக் கொடுக்க அண்ணாச்சி...புஞ்சை யும் நஞ்சையும் ஒண்ணாகுமா? அதோட அந்த நிலத்துக்கு அப்பாவுக்குத் தெரியாமலே அட்வான்ஸ் கொடுத்தது நீதான்...நான் மட்டும வச்சிக்கிட்டா நியாயம் இல்ல...'

முன்ஸீப் கர்ணத்தைப் பார்த்து கண்ணடித்துப் பேசினார்: "பாத்தியராவே... அண்ணன் தமபின்னா இப்டில்லா இருக்கணும்... நீரு ஒம்ம தம்பிகிட்ட இப்டி நடந்திருந்தா இப்போ கோர்ட்டுக்கு அலைய வேண்டியது மிச்சமில்லா...'

கர்ணம் தோற்றதற்கு அடையாளமாகக் கோபப் பட்டார். 'வே...நான் அப்புறம் கிளறுனே முன்னா, நீரு அசல் குப்பையா ஆயிடுவீரு...'

கந்தசாமிக் கிழவர் மீண்டும் அவர்களை கையமர்த்த வில்லை. சரி...கடையம் வயல பாதிப் பாதியா பிரிச் சுடலாம். அண்ணன் தம்பிங்க எங்கயாவது ஒரு இடத்துல சந்திக்கணுமில்லியா...அப்புறம் வீட்டுக்கு வருவோமா...' என்று சொல்லிக்கொண்டே, கிராம முன்வnப்பையும் கர்ணத்தையும் அலட்சியப்படுத்தினார். இதற்குள் பள்ளி ஆசிரியை சரஸ்வதி காபி டம்ளர்கள் கொண்ட ஒரு தட்டோடு தோன்றினாள். வீட்டுக்குள்ளே இன்னொரு ஆசிரியை பார்வதி, அடுப்பிற்கு மேலிருந்த வாணலியில், கடலைமாவை, உருட்டி உருட்டிப் போட்டுக்கொண்டிருந் தாள். வாணலியில் இருந்து 'ஸ்.ஷ்...' என்று கிளம்பிய ஒசை இனிமேல் விவகாரமே இல்லை என்பது போலவும், இனிமேல்தான் இருக்கிறது என்பது போலவும் சொல்லாமல் சொன்னது. இதற்குள் தலைமை ஆசிரியர் தங்கசாமி வெளியே இருந்து ஒரு 'சிவப்பு வெற்றிலைக் கட்டுடன் உள்ளே வந்தார்.

பிரமுகர்கள், காபியை குடித்துக்கொண்டே, பிரிவினையை ஏறக்குறைய தீர்த்துவிட்டார்கள். அண்ணன் தம்பி இருவரும், யார் கர்ணன் என்பதை தெளிவாக்குவதற்காக விடு' என்று சொல்லுமுன் னாலேயே விட்டுக் கொடுத்ததால், சில பிரமுகர்களுக்குக் குறிப்பாக கந்தசாமிக் கிழவருக்கு, ஏன் வந்தோம் என்பது போலிருந்தது. மாந்தோப்பு பெரியவருக்கும், தென்னந் தோப்பு சின்னவருக்கும் கொடுக்கப்பட்டன. டிராக்டர், பெரியவர்க்கு...அதற்குப் பிரதியாக திருநெல்வேலியில் ஒடும் 'டாக்ஸி சின்னவருக்கு...ஊருக்குச் சற்று ஒதுங்கிய இடத்தில் வந்த விலைக்கு வாங்கிப் போட்டிருந்த ஒரு சின்ன வீடே தனக்குப் போதும் என்று சொல்லிவிட்டார் சின்னவர். நீ அதிகாரியாய் இருக்கறவன். நாலுபேர கூட்டிக்கிட்டு வாரவன். ஒனக்கு இந்த வீடுதாண்டா லாயக்கு. நான் வாத்தியார், எதுல வேணுமுன்னாலும் இருந்துக்குவேன்!' என்று மூத்தவர் சொன்னபோது, இளையவர், தன் மனைவியை தெரியாத்தனமாக எதிர்த்துப் பேசிவிட்டவர்போல் பதை பதைத்து, 'இல்ல அண்ணாச்சி... நான் எப்பவாவது எட்டிப் பாத்துட்டு வந்த வேகத்துலேயே ஒடிப் போறவன்...நீ பிள்ள குட்டிக் காரன். ஒனக்குத்தான் இந்த வீடு...' என்று ஒரேயடி யாகச் சொல்லிவிட்டார்.
கர்ணத்தால் மேலும் பேசாமல் இருக்க முடியவில்லை. ‘'எதுக்கும் ஒரு செட்டில்மென்ட் பத்திரம் போட் டுடுவோம். அப்படியே திருஷ்டி சுத்திப் போடுங்க. இந்த மாதுரி சுமுகமா, எந்த வீட்லயும் பாகம் பிரிச்சது கிடையாது' என்றார்.

மேரி புஷ்பம், படிதாண்டி வெளியே வந்து, கந்த சாமிக் கிழவரைப் பார்த்துக் கேட்டாள். 'அப்புறம், ஸ்கூல் யாருக்குன்னு பேசிட்டியளா... இனிமேல்தான் பேசனுமா...?’’

கர்ணம் எழுதப் போவதை உற்றுப் பார்த்துக்கொண் டிருந்த தங்கப்பாண்டி திடுக்கிட்டார். கண்டுக்காதது மாதிரி 'உம்...சீக்கிரமா எழுதும்...' என்று சொல்லி விட்டு ஒரக்கண்ணால் தம்பியின் மனைவியைப் பார்த் தார். அவள் மீண்டும் கேட்டாள்: ஸ்கூல் எங்களுக்குத் தானே?’’

தங்கப்பாண்டி, கர்ணத்தோடு சேர்ந்து தலை நிமிர்ந் தார். தம்பி, 'அமுக்கடி கள்ளன்’ மாதிரி மேலே ஒடிய மின்விசிறியைப் பார்த்தபோது, அவர் கந்தசாமிக் கிழவரைப் பார்த்துக் கண்களால் கெஞ்சினார். கிழவரும் தன் தங்கச்சி மகன்’ விஷயத்தை நினைத்துக் கொண்டும், ரெண்டுபடப் போகும் வீட்டில் தனக்கு தொக்கு" கிடைத்த திருப்தியிலும் அமைதியாகப் பேசினார். "இருபது இருபத்திரண்டு வருஷமா, அவன்தான் ஸ்கூல கட்டி அழுவுறான்...வச்சிட்டுப் போறான்...'

மேரிபுஷ்பம் அனாவசியமாகப் பதிலளித்தாள்: 'அதனாலதான் கேக்கோம்... அவரு இருபத்திரண்டு வருஷமா அனுபவிச்சுட்டாரு...நாங்களும் கொஞ்ச காலத் துக்கு வச்சிட்டுப் போறோம்!'

கந்தசாமிக் கிழவர் அதட்டினார். 'நீ சும்மா இரு அம்மாளு. பள்ளிக்கூடம்-பொல்லாத பள்ளிககூடம்... இன்னைக்கோ நாளைக்கோன்னு சுவருவ நிக்குது. இருக் கதுல்லாம் ஒட்டப் பெஞ்சு...கட்டடம் ரெண்டாயிரம் ரூபாய்க்குப் பொறாது. இது வந்துதானா ஒனக்கு நிறையப் போவுது? கணக்கப்பிள்ள...நீ ஏய்யா எழுதாம முழிக்கே...எழுது. ஸ்கூலு தங்கப்பாண்டிக்குன்னு ஒரு வரி எழுதிடு...'

மேரி புஷ்பம், ரோஷத்தோடு பேசினாள்: 'கர்ணம் கொஞ்ச நேரம் சும்மா இரும்... சித்தப்பா, நீங்க இப்படி பேசுறது தப்பு. ஒரு கண்ணுல சுண்ணாம்பும் இன்னொரு கண்ணுல வெண்ணெயும் வைக்கது தப்பு. ஒரம் சாய்ந்து வழக்குப் பேசுறவரோட குடி ஒரேயடியாய் போயிடும். ஒங்களுக்கு ரெண்டுபேரும் ஒரேமாதிரி தெரியணும் என்கிறது தெரியல...'

கந்தசாமிக் கிழவரின் உதடுகள் துடித்தன: "அப்படின்னா...நாங்க ஒரம் சாஞ்சி பேசறோமுன்னு சொல்றியா? என் குடி கெட்டுப் போகுமுன்னு சாபம் போடுறியா? நீ மவராசியா ஒன் மச்சானோட பேசி முடிச்சுக்க வாங்கடா நாம போவலாம். இனும தமக்கு இங்க வே ைஇல்ல... எந்திரிங்கப்பா...'

"இனுமதான் வேலை இருக்கு' என்பதுபோல் எல்லோரும் உட்கார்ந்திருந்தார்கள். எழுந்து நின்ற கந்கசாமியை, ராஜலிங்கத்தின் மாமனார் உட்காரும்வே" என்று ஒப்புக்கு கையைப் பிடித்தபோது, அந்தக் கிழவரும் சடங்கென்று' ஒரேயடியாய் உட்காருபவர்போல் உட்கார்ந்தார். இதற்குள் ராசம்மாவும் அங்கே வந்து கொண்டிருந்தாள். வந்துகொண்டே பேசினான்: "தலயே போனாலுஞ் சரி...பள்ளிக்கூடத்த குடுக்க முடியாது...'

"அப்டிப் பேசாதக்கா...பள்ளிக்கூடம் ஒப்பா வீட்ல இருந்து நீ கொண்டு வரல.'
"ஆமா...நீதான் ஒய்யா வீட்ல இருந்து இவ்வளவு பெரிய பள்ளிக்கூடத்த கொண்டு வந்தியாக்கும்...'

தடித்த அந்த இரண்டு பெனகளின் வார்த்தைகளும் இப்போது தடிப்பதுபோல் தெரிந்ததால், தங்கப்பாண்டி, தம்பியை நேராகப் பார்த்துக் கேட்டார்: "ஒன் பெண் டாட்டி பேசுறதுல, ஒனக்கு சம்மதமாடா'

'சம்மதமில்லாட்டா இந்நேரம் அவள தடுத்திருப் பேனே...எனக்கும இந்த ஊர்ல ஒரு பிடிப்பு இருக்க ண் டாமா? நிலத்தை குத்தகைக்கு அடச்சிடலாம். ஊருக்கு வராமலே நெல்ல வாங்கிக்கலாம். ஸ்கூல் எனக்குன்னா, நான் அடிக்கடி வரலாம். பிறந்த மண்ண மறக்க மாட்டேன்.'

'ஒனக்கு, ஒன்கூட பிறந்தவனவிட, மண்ணு பெரிசா யிட்டு'

'ஒனக்கு, நான் இந்த ஊருக்கு வரப்படாதுன்னு ஒரு எண்ணம் வந்துட்டு. ’’

'ஏய்... பள்ளிக்கூடம் யார் பேருக்கு இருந்தா என்ன டா?'

''அப்படீன்னா, என் பேருக்கே இருக்கட்டுமே."

இதுவரை பேசாமல், சும்மா வெறும் வாயை மென்று கொண்டிருந்த கீழத்தெரு மணிமுத்து ஆவேசமாய் பேசினார். அவருடைய அய்யா கூடப் பிறந்த அத்தையைத் தான் பள்ளிக்கூடத்தை ஏற்படுத்திய சுடலைமாடனுக்கு கொடுத்திருந்தது. அத்தைக்காரியை, மாடன் அப்புறம் தள்ளிவைத்து விட்டாலும். மணிமுத்து, தன்னை அந்த வீட்டுக்குள் அடிக்கடி தள்ளிக்கொண்டு வருபவர், உணர்ச்சிப் பிழம்பாகப் பேசினார். இவ்வளவுக்கும் அண்ணன்-தம்பி இருவரு ம் சுடலைமாட னின் "இளையோடியாள் பிள்ளைகள். அவர் அத்தை பிள்ளை பெறுவதற்கு, சுடலைமாடன் வாய்ப்பே கொடுக்காமல் தள்ளி வைத்து விட்டார்.

"பூனைங்க ரொட்டிக்கு சண்டைபோட்டு, குரங்கு கிட்ட போன கதை மாதுரி பண்ணிப்படாதிங்கடா...எங்க அத்த புருஷன் அஞ்சி படிச்சிட்டு, அப்புறம் எதையோ ஒன்னப் படிச்சிட்டு, திண்ணயில பள்ளிக்கூடம் ஆரம் பிச்சது இன்னும் ஞாபகமா நெஞ்சில இருக்குடா... அவரு, 'காலேரைக்கால் துட்டுக்கு நாலேரைக்கா வாழைக்காய், நாலேரைக்கா துட்டுக்கு எத்தன வாழைக்கான்னு இப்ப தான் கேக்கறதுமாதிரி இருக்கு மாகாணி வாய்ப்பாட்டச் சொல்லலன்னு என் முதுகில அடிச்சத நினைச்சா இப்பகூட வலிக்குது. தழும்புகூட இன்னும் மறையல... வீடு வீடா போயி, நாயி மாதுரி காத்துக் கிடந்து, பிள்ளியளக் கொண்டு வந்து ஆரம்பிச்ச பள்ளிக்கூடண்டா இது... இப்ப காட்டாப்பு வரைக்கும் வந்து, இன்னும் பத்தாப்பு வரைக்கும் வரவேண்டிய பள்ளிக்கூடண்டா இது...வெண்ண திரளும்போது தாழிய உடை ச்சிடாதி யடா. இந்தப் பள்ளிக்கூடம் வந்த பிறவுதான், இந்த வீட்ட கட்டுனாரு. இது வந்த பிறவுதான் சத்திரப் பட்டையில நாலரைக் கோட்ட நிலமும் கடயத்துல மூணு கோட்ட நிலமும் வாங்க முடிஞ்சுது. அதுக்கு முன்னால, எங்க மாமன் வெறும் ஒட்டாண்டிதான். என் நிலமயில தான் இருந்தாரு அப்படி கட்டிக் காப்பாத்துன பள்ளிக் கூடத்த ஒண்னு கிடக்க ஒண்ணு பண்ணிப்பிடாதிங்கடா. இது கற்பகத்தருடா...ஒங்களுக்கு வீடுவாசலையும் பால் பவுடரையும் கொடுத்த காமதேனுப் பசுடா.'

தங்கப்பாண்டி அவரை நீதிபதியாக நினைத்து வாதாடினார். 'இ ந் த ப் பள்ளிக்கூடத்த கட்டிக் காப்பாத்த என்ன பாடுபட்டேன்னு ஒமக்கே தெரியும். கவாலிப் பயலுவ என்ன கேள்வில்லாம் கேட்டாங்க... வாத்தியாருங்ககூட பதினைஞ்சு வருஷத்துக்கு முன்னால எப்டி செட்டு சேர்ந்தாங்க... 'வடக்கூர்ல வேதப் பள்ளிக்கூடம் போட்டியா வந்தபொறவு, பிள்ளிங்க எண்ணிக்கை குறைஞ்சுது... நான் நம்ம ஊர் ஆளுங்க காலுல கையில விழுந்து எப்படிச் சேர்த்தேன். நாயே பேயேன்னு பேசுன டி.இ.ஒ. கிட்ட கூடல்லாம் எப்டி எப்டி குழஞ்சேன்...இன்னையோடு அந்தப் பள்ளிக் கூடத்துல என் கால்பட்டு இருபத்தோறு வருஷம் ஆவுது தம்பி...அந்தக் காலை ஒதைக்கப் பார்க்கது நியாயமா? பள்ளிக்கூடமே பழின்னு கிடக்கிற என்கிட்ட இருந்து அத பிடுங்கினால் நான் இருக்கதுல அர்த்தமில்ல. இந்த சனியன் பிடிச்ச பள்ளிக்கூடத்துக்கா வ என்ன பாடெல் லாம் பட்டிருக்கேன்.'

மேரி புஷ்பம், கணவனைப் பார்த்துக் கேட்டாள்: ஏன் பேசாமல் இருக்கீங்க? நீங்க மட்டும் கலெக்டர் ஆபிஸ்ல இல்லாட்டா, இவரு...டெப்டி இன்ஸ்பெக்டர அடிச்சதுக்கு...ஜெயிலுக்கு போகாம இருக்க முடியுமா? வாத்தியாருங்க கொடுத்த மனுவால குளோஸாகப் போன பள்ளிக்கூடத்த, நீங்க மட்டும் இல்லாட்டா திறந்திருக்க முடியுமா? பணம் வாங்கிக்கிட்டு மத்தியானச் சாப்பாடு போடாததுக்கு, பீ. டி. ஒ. ரிப்போர்ட் பண்ணினார். நீங்க அவருகிட்ட போய் பேசாட்டா பள்ளிக்கூடம் இருந்திருக்குமா? வாத்தியாருங்க எழுதிப் போட்ட மொட்ட மனுக்காக டி.இ.ஒ. ஆபிஸ்ல போய்ப் பார்த்து, அந்த மனுக்களயே இவருகிட்ட கொண்டுவந்து காட்டாட்டா...இவருதான் மொட்ட மனு வாத்தியா ருங்கள, அடையாளம் கண்டு அவங்கள நீக்கி இருக்க முடியுமா? அவங்க தா ன் அடங்கியிருப்பாங்களா? இதுக்காக ஒங்க கைல இருந்து எவ்வளவு காசு செலவாகி இருக்கம்? சொல்லுங்க”

ராசம்மா வாயைத் திறந்தபோதே, ஆவி வெளி யேறியது. 'சும்மா அப்பாவி வாத்தியானை ஏமாத்திப் பிடலாமுன்னு பாக்கியளோ...அதுதான் நடக்காது...எதக் கொடுத்தாலும் கொடுப்போம்...பள்ளிக்கூடத்த மட்டும் கொடுக்க முடியாது...'

'ஒனக்கு கஷ்டமாத்தான் இருக்கும். பாடஞ் சொல்லிக் கொடுக்க வேணடிய வாத்திமார்களை வீட்டு வேலைக்கு ஏவ முடியாது பாரு...கோதுமையைக் காயப் போட முடியாது பாரு...எண்ணை டின்கள, அடுக்கடுக்கா அடுக்க முடியாது பாரு... இதுக்குமேல வளையல் பண்ண முடியாது பாரு..கஸ்டமாத்தான் இருக்கும். ஒன் வீட்டுக்கு வந்து ரெண்டு நாளாச்சு. ஒரு நல்ல சாப்பாடு உண்டா? நேத்து வச்ச குழம்ப இன்னைக்கு ஊத்துற. பள்ளிக் கூட த்துக்கு வார கோதுமையில ஒரு படியாவது கொடுத் திருக்கியா? பள்ளிக்கூடம் எங்களுக்குத்தான் வேனும்

கர்ணம் வாயைத் திறந்தார்: "நான் ஒண்னு சொல்றேன். ந - க்க முடியுறதத்தான் சொல்லப் போறேன்!'

"நீரு திருஷ்டி சுத்தணுமுன்னு சொன்னவுடனேயே எல்லாம் நடந்தாச்சு. இனும் என்னத்தவே பேசறதுக்கு இருக்கு?' என்றார் சமயம் பார்த்திருந்த முன்சீப்.

கர்ணம், அழுத்தந் திருத்தமாகப் பேசினார்: ‘'எதுக்கு வீனா அடிச்சிக்கிடுறிய. பேசாம மேனேஜ்மெண்ட் கமிட்டி போட்டுறலாம். இவங்க ரெண்டுபேரோட நான், நம்ம முன்சீப்பு, இவரு கந்தசாமி மச்சான், இன்னும் ரெண்டுபேர்னு போட்டுட்டா வம்பில்ல. அதோட பள்ளிக்கூட இடம் பட்டா நிலம் இல்ல. நத்தம் புறம் போக்குத்தான் .'

கிராம முன்சீப், கர்ணத்தை முதல் தடவையாக குளிர்ச்சியாகப் பார்த்தபோது, ராஜலிங்கத்தின் மாமனார், மருமகன் சார்பில் 'எவ்வளவு மொய் வேணு முன்னாலும் வாங்கிக்கட்டும். பள்ளிக்கூடத்த தந்தி டனும்' என்றார்.

உடனே தங்கப்பாண்டியின் மாமனார், 'நான் இப்பவே இந்த இடத்துலயே ரூபாய் தாரேன். பஞ்சா யத்துல எவ்வளவு சொல்றாவுளோ, அவ்வளவையும் தாரேன். ஆனால் பள்ளிக்கூடம் இவருக்குத்தான்' என்றார்.

'ஒருக்காலும் தரமுடியாது. நீங்க தலைகீழ நின்னா லும் தரமுடியாது' என்றார் தங்கப்பாண்டி. ராஜலிங்கத் திற்கும் கோபம் வந்தது. "உடன் பிறப்பை உற்றுப் பார்ததார்.

'அந்தக் காலத்துலயே, நான் காலேஜ் படிக்கையில், எங்கண்ணன் இவனை எப்படிப் படிக்க வைக்கலாம். என்னை எஸ் எஸ். எல்.சில விட்டுட்டு இவனுக்கு மட்டும் காலேஜா'ன்னு கேட்டவன். அப்போ இருந்த பொறாமப் புத்தி இன்னும் போகல! இவன் வாத்தியா னுக்கு மானேஜர் அந்தஸ்து வேணுமுன்னு நினைச்சால், நான் ஆபிஸர் கேட் சுறதுல என்ன தப்பு?’’

கந்தசாமிக் கிழவர் கிட்டத்தட்ட சாபமிட்டார். தங்கச்சி மகன் விவகாரம், சாபத்தின் குரலை வலுவாக்கியது.

'ஏ ராஜலிங்கம்! காலேஜ்ல பணம் கட்ட, வாத் தியாருங்க வாயில அடிச்சு, அந்தப் பணத்த, காலேஜுக்குக் கொண்டுக்கிட்டு வந்தவண்டா ஒங்கண்ணன்! அப்படிப் பட்ட உத்தமனை பொறா ைமக்காரன்னு வாய்க்கு வந்தபடி பேசா தடா சொந்த அண்ணண்டா. வச்சிட்டுப் போட்டுண்டா...'
"பூனைக்கதை சொன்ன மணிமுத்து மீண்டும் பேசினார். ' எங்க அத்தய தள்ளிவச்ச பாபம், இப்படி வந்து நிக்குதுன்னு நெனக்கேன். ஏய் சொல்றதக் கேளுங்க்டா. திருவுளச்சீட்டு போட்டுப் பார்க்கலாம் '
'அதெல்லாம் முடியாது. என்னைக் கொன்னுட்டு வேணுமுன்னா அவன் ஸ்கூல எடுத்துக்கட்டும்.’’
மணிமுத்து இறுதியாகப் பேசினார். "சரி...இதுக்கு ஒரே வழிதான். பேசாம ஏலம் போடறேன். ஏலுறவன் எடுத்துக்கட்டும்.'

”சீச்சி. ..ஏலமா?'

' 'இதுல என்ன முன்சீப் தப்பு: குளத்துல இருக்கிற விறால் மீனை ஏலம் போடுறோம். கோயிலுல போட்ட பந்தல் 'கம்பு கணியள ஏலம் போடுறோம். மானத்த தவிர எத வேணுமுன்னாலும் ஏலம் போடலாம். சரி யப்பா கேளுங்க...'

மணிமுத்து மார்பை நிமிர்த்திக் கொண்டார்.

'ஐயாயிரம் ரூபாய்' என்றார் தங்கப்பாண்டியின் மாமனார்.

'பத்தாயிரம்' என்றார் ராஜலிங்கம் மாமனார்.

பதினையாயிரம்.'

'இருபதாயிரம்!'

" 'இருபத்தையாயிரம்'

”இருபத்தையாயிரம் ஒரு தரம் இருபத்தையாயிரம் ரெண்டு தரம்! இருபத்தையாயிரம்...'

'இருபத்தெட்டு!'

'இருபத்தெட்டு!...ஒரு தரம் இருபத்தெட்டு!...தங்கப் பாண்டி கேக்கணுமுன்னா கேளு...அப்புறம் வருத்தப்படப் படாது...இருபத்தெட்டு...!"

'முப்பாதாயிரம்'
'முப்பதாயிரம்...ஒரு தரம் முப்பதாயிரம்...ராஜலிங் கம்...கேக்கனுமுன்னா கேளு! ஒரு தரம் முப்பதாயிரம். ரெண்டாந்தரம் முப்பதாயிரம்...'

ராஜலிங்கம் மேற்கொண்டு கேட்கப் போனார். உடனே மேரி புஷ்பம், அவரது வாயை பகிரங்கமாகப் பொத்திக் கொண்டாள். குசேலர் அவலை, கிருஷ்ணன் தின்னும்போது, ருக்மணியோ லட்சுமியோ தலையிட்டது போல...

'விட்டுடுங்க... அவரு மவராசனா வச்சுக்கட்டும்...'

ராசம்மா பதிலளித்தாள். 'மவராசனா வச்சிக்கல... முப்பதாயிரம் ரூபா பேசி வச்சிக்கிடுறோம்!'

ராஜலிங்கம் மனைவியின் கையை வாயிலிருந்து வலுக்கட்டாயமாக நீக்கிக் கொண்டு மேற்கொண்டு கேட்கப் போனார். அங்குமிங்குமாக முண்டினார். ஆனால் அவள் கை அவர் வாயிலிருந்து அகலவில்லை.

மணிமுத்து மூணாந்தரம் பள்ளிக்கூடம் தங்கப் பாண்டிக்கு' என்று முடித்தார்.

செட்டில்மெண்ட் பத்திரம் எழுதப்பட்டது, மானேஜ் மெண்ட் ஏலத்தை எழுதினால் தப்பு வரும் என்பதால், மொட்டையாக மானேஜ்மெண்ட்டும் அது சம்பந்தமான சொத்தும் இப்போது இருப்பது போலவே தங்கப்பாண்டி யிடம் இருக்கும் என்று எழுதப்பட்டது தங்கப்பாண்டி வீட்டுக்குள்ளும் வெளியேயும் போய், அரைமணி நேரங் கழித்து வந்து, தம்பியிடம் பத்தாயிரம் ரூபாயை நீட்டி னார். 'tதிய அப்புறமா தாரேன். நம்பிக்கை இருக்கா இல்லியா...?' என்று அவர் கேட்டபோது, மேரி புஷ்பம் 'இன்னையோட உறவு முறிக்கதுக்கு நீங்கதான் பாக்கிங்க. தாங்க அப்படி நினைக்கல...' என்றாள். எல்லாம் முடிந்தது. சில இனிப்பு வகையறாக்களையும், கார வகையறாக்களையும் சாப்பிட்டுவிட்டு, எல்லோரும் போய்விட்டார்கள்.

சிறிது நேரத்தில், தென்காசிக்கு வாடகைக்குப் போயிருந்த டாக்சி வந்தது. ராஜலிங்கம், மனைவி மக்க ளோடும், மாமனாரோடும் காரில் ஏறிக் கொண்டார். ராசம்மா எட்டிப் பார்க்கவில்லை. தங்கபாண்டி வந்தார். அவரும் ஒப்புக்கு வந்தவர்போல் அவர்களைப் பார்க் காமல், தொலைவில் தெரிந்த பள்ளிக்கூடத்தைப் பார்த் தார்-ஏலத்தில் கேட்ட பணத்தை அங்கே புதைத்து வைத்திருப்பவர்போல.

கார் போய்விட்டது. அதன் சத்தம் சன்னமாகி, பிறகு அடியோடு இல்லாமல் போனபிறகு, ராசம்மா அடியெடுத்து வந்தாள். தங்கப்பாண்டி கன்னத்தைக் கைகளால் பிதுக்கிக்கொண்டு சிந்தனையில் ஆழ்ந்திருந் தார். அவரருகே ராசம்மா வந்து 'முப்பதாயிரம் ரூபா... எப்படிச் சரிக்கட்டவோ...' என்று சொன்னாள். தங்கப் பாண்டி பதிலே பேசவில்லை.

ராசம்மா, காம்பவுண்ட் சுவர்க்கருகே வந்தாள். ஆசிரியை சரஸ்வதி, இன்னும் விறகு கீறிக்கொண்டிருந்த தன் தந்தை பொன்னையாவுக்கு காபி டம்ளரை நீட்டிக் கொண்டிருந்தாள் ராசம்மாவைப் பார்த்ததும் 'தாகமா இருக்குதுன்னார். அதனால்தான்...' என்று குற்றவுணர் வில் இழுத்ததை, ராசம்மா கவனிக்காமல், இன்னொரு மரத்துண்டு கிடப்பதையும் கவனித்தாள். வாகை மரத்தின் 'துரர். மணி பகல் இரண்டு. பொன்னையா காபி குடிப்பது வரைக்கும் காத்திருந்தாள். அது அவர் தொண்டைக்குள் போனதும், தனது தொண்டையைக் கனைத்துக்கொண்டே 'அண்ணாச்சி...இந்தத் துண்டயும் ரெண்டு கீறு கீறுங்க... ரெண்டே ரெண்டு கீறு கீறினா போதும்...' என்றாள்.

பொன்னையா, மூன்று ரூபாய் கூலி போய்விட்டதே என்று மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல், கோடாரியைத் தூக்கியபோது, ராசம்மா, முப்பதாயிரம் ரூபாயை நினைத்தபடி வீட்டுக்குள் போனாள். சரஸ்வதி யும் இன்னொரு ஆசிரியையான பார்வதியும் வெற்றிலைக் கட்டோடு வந்து வெறும் வயிற்றோடு நின்ற தலைமை ஆசிரியர் தங்கச்சாமியும் பள்ளிக்கூடத்தைப் பார்த்துப் போனார்கள்! சரஸ்வதி ம ட் டு ம், கலையரங்கம் போலிருந்த அந்த வீட்டின் முகப்பறையை திரும்பத் திரும்பப் பார்த்துக்கொண்டே போனாள். அங்கே "சீன்ஸெட்' இல்லாமலே ஒரு நாடகம் நடந்து முடிந்தது போல் அவளுக்குத் தோன்றியது.
-----

2. கேள்வித் தீ - அத்தியாயம் 2

உலகிலேயே மக்கள் தொகையின் அடர்த்தி அதிக மாக உள்ள இடம் எது என்ற கேள்விக்கு எந்த நகரத்தின் பெயரையாவது விடையாகச் சொல்பவர்களை இந்த கிட்டாம்பட்டியில் உள்ள இந்து உயர்தர ஆரம்பப் பாடசாலைக்குக் கூட்டிவர வேண்டும். மண்ணடர்த்தி இல்லாத மண் சுவர்களுக்கு மத்தியில் இருக்கும் வகுப் புக்களை வந்து அவர்கள் பார்க்கட்டும். யார் யார் எங் கெங்கே இருக்கிறார்கள் கான்பதை வகுத்துப் பார்க்க முடியாத அளவிற்கும் ஒவ்வொரு வகுப்பிலும் மாணவ மாணவியர் முண்டியடித்து உட்கார்த்திருந்தார்கள்.

சிறு வயதிலேயே பிள்ளைகள் ஒருவரோடொருவர் நெருக்கமாக இருக்க வேண்டும் என்ற லட்சியத்தில் அந்தக் கட்டிடம் கட்டப்பட்டிருக்கலாம்.

இரண்டு கிழட்டு மாடுகள் சேர்ந்தாற்போல் படுத்தி ருப்பது மாதிரி தோன்றும் அந்தக் கட்டிடம் இரண்டு பிரிவுகளாக, தனித்தனி கட்டிடங்களாக உள்ளன. அந்த இரண்டுக்கும் நடுவில் உள்ள இடுக்கில் பழைய பாத்திரங் களும், கிழிசல் குவியல்களும் போடப்பட்டிருந்தன .ந்த இடுக்கிற்கு, சொல்லக்கூடாத, ஒரு சரித்திரமும் உண்டு. ஒரு கட்டிடம் யானைமார்க்' ஒடு போட்டது. இன் னொன்றின் மேல் ஒலைப் பாய்தார் காற்றில் ஆடிக் கொண்டிருந்தன. அப்பப்போ சில செங்கற்கள் விழுந் தாலும், இதுவரை யிருக்கு ஆபத்து ஏற்பட்டதில்லை.

உருப்படியாகக் கட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் "நான்கடி’ வாணம் வெட்டப்பட்டு காரை, சுண்ணாம்பு, கருங்கல் முதலியவற்றோடு துவக்கப்பட்ட கட்டிடந்தான் இது இருபது ஆண்டுகளுக்கு முன்பு, வடக்கு ஊரில்" கிறிஸ்தவ மிஷின் பள்ளிக்கூடம் ஒன்று துவக்கப்பட்டதும் தெக்கூர் காரர்களான இ ந் த ப் பகுதி மக்கள், தாங்களாகவே பணங் கொடுத்து. சுடலை மாடனை கட்டிடம் கட்ட ச் சொன்னார்கள். அதற்கு முன்பு, நான்கு திண்ணையில்தான் வகுப்புகள் நடந்தன. மாடன், கட்டிடத்திற்கு கால் போட்டபோது, அவரது தந்தை இசக்கி, "எனக்கு ஊருக்குப் பக்கத்திலேயே ஒரு சமாதி கட்ட ஒனும்' என்றார். அந்தக் காலத்தில், வசதியுள்ள வயதானவர்களுக்கு உயிரோடு இருக்கும்போதே, குழி வெட்டப்பட்டு சுற்றிலும் சுவரெழுப்பி நினைவுச் சின்னம் எழுப்பி வந்தார்கள். தந்தைக்கேற்ற மகனான சுடலைமாடன், பள்ளிக்கூடம் கட்ட வைத்திருந்த கருங் கல்லையும், காரையையும் எடுத்து, அப்பனுக்குச் சமாதி கட்டிவிட்டார் பள்ளிக்கூடத்தை வெறும் மண்ணை வைத்து எப்படியோ, ஒப்பேத்தி விட்டார். இப்படி எடுத்த எடுப்பிலேயே சமாதி தானம்' செய்த பெருமை, அந்தக் கட்டிடத்திற்கு உண்டு இன்னும் பெரிய அளவில் இதே மாதிரியான தானத்தை வழங்குவதற்கும் அது தயாராக இருப்பதுபோல் தோன்றுகிறது. எப்படியோ, மண்ணாய் போனவர் காரைக் கட்டிடத்திலும், மாணவ மாணவியராய் போனவர்கள், இந்தக் கிழட்டுக் கட்டிடத் திலும் இருக்கிறார்கள்.

ஆறாவது வகுப்பும், ஐந்தாவது வகுப்பும், அவற்றின் 'பி செக்ஷன்களும கூரைக் கட்டிடத்தில் பாதியிட த்தை ஆக்ரமித்திருந்தன. ஆறாவது வகுப்பின் இரண்டு செக்ஷன்களும், ஒரே செக்ஷனாக்கப்பட்டிருந்தது. காரணம், ஏ. செக்ஷனின் ஆசிரியர் கோவிந்தன், தங்கப் பாண்டியனின் மச்சான். ராசம்மாவின் அண்ணன். அடிக்கடி டவுனில் ‘ஏ’ படம் பார்க்கப் போகிறவர். எப்போது வருவார், அப்படியே வந்தாலும், வகுப்புக்கு வருவாரா என்பதைச் சொல்ல முடியாது. இன்றைக்குச் சம்பள தினம். நிச்சயம் வருவார். மானேஜர் அறைக்கா வது வருவார். இந்த செக்ஷன்களை ஹரிஜனப் பெண்ணான மாரியம்மாள் கவனிக்கிறாள். 'பி' செக்ஷன் ஆசிரியை வடிவு 'மெட்டர்னிட்டி' வீவில் போய்விட்ட தால், லீவ் வேகன்சியில் வந்திருப்பவள் சமீபத்தில்தான் அவள் டீச்சர் ட்ரெயினிங்கை முடித் திருந்த ஸ் தான் கற்ற 'பேசிக் டிரெயினிங்படி நிற்பவள்போல், பாடம் நடத்தினாள்.

பருத்தி எங்கே விளையும் என்று ஒரு கேள்வி யைப் போட்டுவிட்டு, அதை மாணவர்கள் வாயி லிருந்து பறிப்பதற்காகக் காத்திருந்தாள் பருத்தி, எந்த மண்ணில் ஏன் விளைகிறது என்று சொல்லி ’பூகோளத்தையும் விளைந்த பருத்தியை எப்படிப் பிரித்து நூற்கிறார்கள் என்று கேட்டு விஞ்ஞானத'தையும், இந்தப் பருத்தியானது பண்டைக் காலத்தில் எப்போது, எங்கெங்கே விளைவிக்கப்பட்டது, என்ன மாதிரி ஆடை களாக அணியப்பட்டது என்பதைச் சொல்லி சரித்திரத் தையும் பாரி மகளிர் கொடுத்த நீலச் சிற்றாடையை, ஒளவையார் எதனுடன் ஒப்பிட்டார் என்று கேட்டு விளக்கி 'தமிழையும் ஒரு ஏக்கரில் எவ்வளவு பருத்தி விளையும் என்று சொல்லி கணக்கையும் பருத்தியின் ஆங்கில வார்த்தையைக் கேட்டு ஆங்கிலத்தையும்' சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பது அவள் திட்டம். திட்டத்தை அவள் செயல்படுத்த கேள்வியாக்கியபோது, ஒரு சிறுமி 'டீச்சர்...இவன் என் முதுகைக் கடிக்கான்' என்றாள். அந்தச் சிறுமிக்குப் பின்னாலிருந்த பயலோ 'நான் கடிக்கல டீச்சர். முகத்த வேறுபக்கமா வைக்க இடமில்ல டீச்சர். இவளை "கூன்' போட்டு உட்காராண் 1.ாமுன்னு சொல்லுங்க டீச்சர்' என்று டீச்சருக்கே உபதேசம் செய்தான். மாரியம்மாள் தன் பருத்தி ஆடை முந்தானையைச் சரிப்படுத்திக் கொண்டு, பிள்ளைகளை எட்படி எப்படி இடம் மாற்றி உட்கார வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

'ஐந்தாறு வகுப்புகளைத் தாண்டி, ஏழாவது வகுப்பு. ஐந்தாவது வகுப்பு ஆசிரியரான ஐம்பத்தைந்து வயது சீனிவாசன் க ங் ச எழுத்துக்களை பதினெட்டு தடவ எழுதுங்கடா என்று உத்தரவிட்டார். பிள்ளைகள் 'சிலேட்டில் எழுதிக்கொண்டிருந்தார்கள். ஓரிருவர் எழுதி முடித்துவிட்டு, எழுதியதை அவரிடம் காட்டிய போது, அவர் அந்த எழுத்துக்களை அழித்துவிட்டு, 'இன்னொரு தடவ எழுதுங்கடா என்றார். இதனால் வேகமாக எழுதிக் கொண்டிருந்த சில பயல்கள், மெதுவாக எழுதினார்கள். இன்னும் எழுதாமலேயே இருந்தவர்கள், அப்படியே இருந்தார்கள். கேட்டால் 'இப்பத்தான் அழிச்சேன்' என்று சொல்லலாம். பாவம், சீனிவாசன் கவலை சீனிவாசனுக்கு. தங்கப்பாண்டி இன்னைக்கு சம்பளத்துல எவ்வளவு பிடிக்கப் போறானோ? வாயும் வயிறுமாக வந்து, இப்போது பிள்ளையும் கையுமாக உள்ள மகளை நாளைக்கு புருஷன் வீட்டுக்கு அனுப்பி வைக்கணும். அவனுக்கு சென்னையில் வேலை.

காரைக் கட்டிடத்தில் எட்டாவது வகுப்பும், அதன் செக்ஷன்களும், இன்னும் சில வகுப்புகளும் இருந்தன. "ஏ" செக்ஷன் ஆசிரியை இந்திரா, மானேஜர் அறையில் தான் இருப்பாள். தலைமை ஆசிரியர் தங்கச்சாமி தான் அவளுக்கும் சேர்த்து 'அழ’ வேண்டும். வெளியூர்க் காரரான இந்த ஐம்பது வயது ஆசாமியால் இ.க்கு மடக்கு செய்ய முடியாது என்று தான், தங்கப்பாண்டி இவர் தலையில் ஆசிரியர்களை வைத்திருக்கிறார். வாயில்லா ஜீவன்.

பள்ளிக்கூடத்தில், மொத்தம் பதினாறு ஆசிரியர்கள்; பிள்ளைகள் வருகைப் பதிவேட்டின்படி முன்னுாற்றுக்கு மேலே. வருவதோ...வேண்டாம். வெளியில் சொல்லப் படாது.

தலைமை ஆசிரியர் தங்கச்சாமிக்கு, அன்று கடுமை யான கோபம். மானேஜர் சொல்படி, வெற்றிலைக் கட்டை வாங்கி வந்த அவசரத்தில் சாப்பாடு கொண்டுவர மறந்து விட்டார். தங்கப்பாண்டி வீட்டில் பலகாரங்கள் தின்னப்பட்டபோது, இவர், பள்ளிக்கு ஒரு காரியமாக ஓடிவந்துவிட் டு, வந்த வேகத்துலேயே தி ரு ம் பி ப் போனார் . எல்லாவற்றையும் தின்றுவிட்டு, பத்தாதது போல், அவரையே தின்பவர்கள்போல், பிரமுகர்கள் அவரைப் பார்த்தார்கள். ஆகையால் 'நன்றி ஒருவர்க்குதெரியாதவங்கெல்லாம் எழுந்திருங்கடா என்றார், கையில் பிரம்பைத் தயாராக வைத்துக் கொண்டு. மானேஜர் மகனோடு, மொத்தம் பத்துப்பேர் கம்பீரமாக எழுந்தார்கள்! தங்கசாமி தலையை தாழ்த்திக்கொண்டு பிரம்பை மேஜையில் வைத்தார். ஒருவனால் ஒன்பது பேருக்கு லாபம்!

ஆறாவது 'பீரியட்' முடிந்து ஏழாவது பீரியட் துவங்கியது. சில வகுப்புகளுக்கு விளையாட்டு 'பீரியட். ஒரு சில ஆசிரிய-ஆசிரியைகள் மைதானத்தில் பிள்ளை களை மேய்த்துக்கொண்டே, பேசிக்கொண் டு நின்றார்கள்.

தங்கப்பாண்டி வீட்டில், கோதுமை ரவையும், பஜ்ஜியும் செய்த ஆசிரியை பார்வதி, மாரியம்மாளின் கையைப் பிடித்துக் கொண்டே கேட்டாள்: ‘'என்ன மாரி, நாளையோட ஒன்னோட வீல் வேகன்ஸி முடியப் போவுதே, என்ன செய்யப்போறே?'

'அதுதான் எனக்குத் தெரியல...'

"மானேஜர்கிட்ட கேட்டுப் பாத்தியா?”

நான் கேட்டா அவரு இன்னொன்ன கேப்பாரு போலுக்கு...' மாரியம்மாள், கண் கலங்க தலை கவிழ்ந் தாள். இருபது வயதிருக்கும். கறுப்புக்கு அழகுண்டு என்பதைக் காட்டுவதற்காகப் பிறந்தவள் போல் தோன்றி னாள். கையில், கண்ணாடி வளையல்கள். காதுகளில் 'எட்டனா கம்மல்கள்.

மைதானத்தில் தனியாக நின்ற ஆசிரியை இந்திரா போய்விட்டாள். முப்பது வயதுக்காரி. அவள், காது கேட்க முடியாத துரத்திற்குப் போய்விட்டாள் என்பதை குதிகாலை நிமிர்த்தி எட்டிப் பார்த்து அனுமானித்துக் கொண்டே நான்காவது வகுப்பு ஆசிரியை கனகம் கிசுகிசுத்தாள். 'ஒனக்கு கொஞ்சங்கூட மூளையில்ல மாரி, இதே பே.:றாளே...இவள் சரியான கள்ளி...மேனேஜர் கிட்ட நீ சொன்னதைச் சொல்லப் போறாள் பாரு. ’’

'சொன்னால் சொல்லட்டும்!'

'நீ என்ன செய்யப் போற?'
'அதுதான் எனக்கும் தெரியலே. தம்பி தறுதலையா சுத்துறான் அப்பாவுக்கு உடம்பு முடியல. அம்மாவால வயல் வேலைக்குப் போக முடியல இந்த ரெண்டு மாசமா நான் அனுப்புன பணத்துல ஏதோ பட்டினி கிடக்காம யாவது இருக்காங்க... என்ன பண்ணுறதுன்னு புரியல...'

"மானேஜர் கிட்ட பக்குவமா கேட்டுப் பாரேன்.' 'பக்குவமான்னா என்ன அர்த்தம்?' '

இதற்குள் ‘க ங் ச' எழுதச் சொன்ன முதிய ஆசிரியர் சீனிவாசனும் சத்தம் போட்டு பாடம் நடததும் வேலா யுதமும் அங்கே வந்ததால், ஆசிரியைகள் பேச்சை முடிக்க முடியாமலும், தொடர முடியாமலும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தார்கள். சீனிவாசன், தன்முகத்தைத் தானே பார்ப்பவர்போல் அண்ணாந்து பார்த்துக்கொண்டேநின்றார். வேலாயுதம் மட்டும் மாரியம்மாளை ஒரு தினுசாக’ப் பார்த்தான். இதற்குள் பொன்னையா மகள் சரஸ்வதியும் அங்கே வந்துவிட்டாள். அவள் இடுப்பு நனைந்திருந்தது. ஆடையை பிழிந்துவிட்டுக் கொண் டாள்.

"என்னம்மா, மானேஜ்மெண்ட் யாருக்குப் போச்சுது?

'தங்கப்பாண்டி மாமாவுக்குத் தான். ஏலத்துல எடுத்தாரு முப்பதாயிரம் ரூபாய் ஏலம். சீ...நினைச்சிப் பார்க்கவே கேவலமா இருக்கு. ஏலம் போட்டாலும் பள்ளிக்கூடத்தயா ஏலம் போடுறது?’’

'இதவிட இவனுவ பொண்டாட்டிவள ஏலம் போடலாம் '

அதுக்குத் தான் நம்ம இந்திரா இருக்காளே! முப்ப தாயிரத்துக்கு ஏலத்துல எடுத்தவன், நம்மள எப்படில்லாம் ஏலம் போடப்போறானோ? இன்னைக்கு சம்பளம் தரப்போறானோ இல்லியோ? அடேயப்பா முப்பதாயிரம ரூபாய்க்கா போச்சுது'

சரஸ்வதி, தான் கண்டுபிடித்ததைச் சொன்னாள். தங்கப்பாண்டி மாமா கவலப்படுறது மாதுரி தெரியல...'

கனகம், அதன் காரணத்தை விளக்கினாள். அவன் ஊரு தாலிய அறுக்கிறவன்; அவன் ஏன் கவலப்படினும்? நாமல்லா கவலப்படனும் இருநூறு பிள்ளிங்களுக்கு பகலுணவு போட றதா பேப்பர்ல காட்டுறான் கொடுக்கிற கோதுமையையும், எண்ணெயையும் வழி யிலயே வித்துப்புடறான். நம்ம சம்பளத்துல வேற கமிஷன் பிடிக்கான். மொத்தத்துல, ஏலத்துல எடுத்தவன் அவன்; கொடுக்கப் போறது நாம்,'

வேலாயுதம், பாடம் நடத்துவதுபோல் சத்தம் போட்டான். 'இன்னைக்கு சம்பளம் கிடைக்காதுன்னு கேள்விப்பட்டேன். இப்போ...நம்ம சண்முகம் இருந்திருந் தால் ரகளை நடக்கும்.'

பார்வதி, இடைமறித்தாள். 'அப்படில்லாம் நடக் காது. ஏன்னா...தங்கப்பாண்டி மகள் ஊமப் பிசாச சண்முகததுக்குக் கொடுக்கப்போறதா ஒரு பேச்சு அடிப்படுத.'

சரஸ்வதி, இப்போது கொஞ்சம் இன்ட்ரஸ்ட்” காட்டினாள்: 'சண்முகம் ஸார் அவள விரும்புறாரா?' என்று வாய்த்தவறாமல் கேட்டபோது, அனுபவஸ்தரான சீனிவாசன் லேசாகச் சிரித்துக் கொண்டார்.

மாரியம்மாள் ஆச்சரியத்தோடு கேட்டாள். 'அப்ப டி ன்னா இந்த ஸ்கூல்ல மிட்டேய் மீல்ஸ் திட்டம் இருக்கா?’’

'மெள்ள பேசும்மா. இந்திராவுக்கு பாம்புக் காது. பேப்பர்ல சோறு பொங்கி, பேப்பர்லயே கஞ்சி காச்சி ஊத்தறாங்க. இந்த அதியாயத்த யாரு கேக்கப் போறாங்களோ"

"ஓ! அதனாலதான் ஏலம் போட்டாங்களா?' '

'ஆயிரந்தான் இருந்தாலும், ஒரு பள்ளிக்கூடத்த ஏலம் போடுறது என்கிறது சரஸ்வதி தேவியையே போடுறது மாதிரி...'

சீனிவாசன் விளக்கினார்: "பணம் பண்ணணுமுன்னு ஒருவனுக்கு ஆசை வந்துட்டா, பெத்த தாயைக்கூட ஏலம் போடு வான். பள்ளிக்கூடம் எம்மாத்திரம்? இப்போ நாட்டோட போக்கே புரியல. மானேஜ்மென்ட் ஏலம்! எம்.பி.பி.எஸ். சீட்டு ஏலம்! மாப்பிள்ளை ஏலம்! இதனால் தான் டாக்டருங்க நோயாளிங்கள ஏலம் போடறாங்க.

அரசியல்வாதிங்க நாட்டை ஏலம் போடறாங்க. எல்லாமே ஏலமயமாயிட்டு. நம்ம நாட்டுப் பாடலுல ஏலேலோ ஐலஸா'ன்னு ஒரு பாட்டுவரும் பாருங்க... அந்தப் பாட்டை எல்லோரும் வேற மாதிரி புரிஞ்சிக் கிட்டது மாதிரி தோணுது. வசதியுள்ள வங்கெல்லாம், வசதியப் பெருக்கிக்க ஏலம் போடுறதுனால, ஏழைங்க தங்களோட வயித்த ஏலம் போட வேண்டிய காலமா போயிட்டுது. இந்தப் பொன்னையா இப்பத்தான் வந்து புலம்பிட்டுப் போறான். நாலு மணிநேரம் விறகு வெட் டுனானாம். மூனுபைசாகூடக் கொடுக்கலியாம். சரஸ்வதி தினமும் மாட்டுத் தண்ணி எடுத்து ஊத்துறாளாம். ஒரு ஏழப் பொண்ணுக்கு வேலை போட்டு கொடுத்ததுக்காக இப்படியா கொத்தடிமையா நடத்துறது? சரஸ்வதி... நான் ஒன்னோட வயசுல பெரியவன். என் மகளவிட வயசில சின்னவள் நீ. நான் சொல்லுததை தப்பா நினைக்க மாட்டியே?’’

'உங்க வாயில தப்பித் தவறி தப்பு வந் தாக்கூட அந்த தப்புகூட தன்னச் சரிக்கட்டிக்கிட்டு நல்லதா வரும். சும்மாச் சொல்லுங்க.'

"எப்படிச் சொல்றதுன்னு புரியல. சரி...எப்படியும் சொல்லித்தான் ஆகணும். ஒப்பன் வேணுமுன்னா விறகு கீறட்டும் ஒம்மா வேணுமுன்னா கோதுமை புடைக் கட்டும ஒன் தம்பி வேணுமுன்னா மாட்டக் கட்டட்டும், ஆனால் நீ தங்கப்பாண்டி வீட்டுக்குப் போகக்கூடாது. ஊர்ல நாலுபேரு நாலு விதமாச் சொல்லு தாங்க. '

'என்ன சார் நீங்க தராதரம் தெரியாம...அவரு எனக்கு அப்பா மாதிரி...'

தராதரம் தெரிஞ்சதாலத்தான் சொல்லுறேன். இன்னொருத்தின்னா சொல்லமாட்டேன். தங்கப் பாண்டிய...நீ அப்பா மாதிரி நினைக்கலாம். அதனாலயே அவன் உன்னை மகள் மாதிரி நினைக்கணுமுன்னு எதிர்பார்க்கக் கூடாது. அப்படியே அவன் நினைச்சாலும் ஊரு நம்பாது. இந்தப் பள்ளிக்கூடத்தில் வேலை பார்க்கிற எல்லா வாத்திச்சிகளையும் ஒரு மாதிரி பார்க்கிற ஊர்க்காரனுவ...அவன் வீட்டுக்குப் போற ஒன்னை, வாயில போடாம விட்டு வைப்பாங்களா?

பார்வதி, மானேஜர் வீட்டு வாணலியில் கொதிக்க வைத்த எண்ணெய் மாதிரி கொதித்தாள். 'புறம் பேசற துக்கு ஊர்க்காரனுவளுக்கு என்ன யோக்கியதை இருக்கு? எவ்வளவோ அநியாயம் நடக்கு... அதப் பாத்துட்டு இருக்கிற இவங்களுக்கு நல்ல வார்த்தை பேசறதுக்குக் கூட யோக்கியத கிடையாது.

.' நான்தான் சொல்லிட் டேனே காலத்தோட கோளா றுன்னு. கழுதய விடு. ஊர்க்காரங்களுக்கு யோக்கியதை இருக்கோ இல்லியோ, அவுங்க பேசுற வார்த்தைக்கு சரஸ்வதியோட கல்யாணத்த நிறுத்தற சக்தி இருக்கு. அப்படியே அவளுக்குக் கல்யாண ம் நடந்துட்டாலும், அவள் புருஷன் அவளை தள்ளி வைக்கதுக்கு சந்தர்ப்பம் கொடுக்கிற சக்தி அவங்க வாயில இருக்கு நான் சொல்றத அவள் கேட்டாக் கேட்கட்டும்! விட்டா விடட்டும்.'

இதற்குள் இந்திரா அங்கே வந்துவிட்டாள். உடம்பு முழுவதையும் குலுக்காமல், தனி நடையாக நடப்பவள். மாநிறம் என்றாலும், நல்ல முகவெட்டு. சினிமாக்காரர் கள் எப்படி இவளை விட்டு வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

சீனிவாசன் இப்போது வேறுவிதமான வாய்பாட்டுக்கு வந்தார். நமக்கு நல்ல காலம், மானேஜ்மென்ட் ஆண்டவன் அருளால், தம்ம தங்கப்பாண்டிக்கு வந்துட்டு. ராஜலிங்கத்துக்குப் போயிருந்தா பள்ளிக்கூடத்துல கழுத மேயும். அல்லி ஆட்சிதான் நடக்கும். மேரிபுஷ்பம் அந்த

ரெண்டு வார்தைக்கும் எதிர் அர்த்தமுள்ளவள். தங்கப் பாண்டி வழி வருமா? பாவம், முப்பதாயிரம் ரூபாய்க்கு என்ன பண்ணப்போறானோ? கடவுள்தான் வழி காட்டனும்!'"

சரஸ்வதிக்கு, சற்று நேரத்திற்கு முன்புவரை, தக்க சமயத்தில் வழிகாட்டியவர்போலத் தோன்றிய அந்தக் கிழவர்மீது இப்போது வெறுப்பு ஏற்பட்டது. ஒரே நாக்கு...ஒரே சமயத்துல எப்படில்லாம் பேசுது. இந்தக் கிழவனவிட, அந்த இந்திரா எவ்வளவோ மேலு. இவரு, என்னைப்பற்றி ஊர்ல தப்பா பேசுறதா சொன்னது கூட தப்பாத்தான் இருக்கும்.'

ஹரிஜனப் பெண் மாரியம்மாள் யோசித்தாள். இந்திராவிடம் மன்றாடி வேலையை மேற்கொண்டு தொடர முடியுமா என்று நினைத்தாள். பிறகு தேவடியா கிட்ட யாசகம் கேட்கிறது, தேலடியாளா மாறுறதுக்கு பேஸிக் பயிற்சி பெறுவது மாதிரி' என்று நினைத்துக் கொண்டவள் போல், இந்திராவை அலட்சியமாகப் பார்த் துக்கொண்டு நின்றாள்.

"எப்படியோ ஒரு வழியா முடிஞ்சுது...' என்ற குரலைக் கேட்டதும், எல்லோரும் நிமிர்நது பார்த்தார் கள் தங்கப்பாண்டி வருவது தெரிந்தது. ஊர்க்காரர் ஒரிரு வரின் கேள்விக்கு, அவர்களை லட்சியப்படுத்தாமலே பதிலளித்துக் கொண்டு, காரைக் கட்டிடத்திற்குள் அவர் நுழைந்தபோது, இந்திரா தவிர, மீதி எல்லோரும் அலறி அடிததுக்கொண்டு, விளையாடிக் கொண்டிருந்த பிள்ளை கள் பக்கமாகப் போனார்கள்.

தங்கப்பாண்டி, தனது நிர்வாக அறைக்குள் வந்து சுழல் நாற்காலியில் உட்கார்ந்து லேசாக ஆடிக் கொண் டார். அந்த அறையின் வாசல்பக்கம் தயாராக இருந்த பதினெட்டு வயதுப் பெருமர்ள், மின்சார விசிறியை தட்டிவிட்டான். மானேஜரின் லதர் பேக்கை பெளவிய மாக வாங்கி, ரேக்கில் வைத்தான். இவன், அந்தப் பள்ளிக் கூடத்தில் பார்ட் டைம்" தையல் ஆசிரியன்; ஒன்பதாம் வகுப்பு பெயில்; சட்டையில் காசா போடத் தெரிந்தவன். 'லதர் பேக்கை' மானேஜர், தன்னிடம் கொடுத்ததில் இருந்து, அந்தப் பைக்குள் பணம் இல்லை என்பதும். ஆசிரியர்களுக்கு பைகள் கணக்காது என்பதையும் கணக்கெடுத்துக் கொண்டான். உடனே ஒடிப்போய் சீனிவாச ஆசிரியரிடம் விண்டுரைக்க நினைத்தவனைப் பார்த்து ஒரு தலவலி மாத்திர வாங்கியாடா' என்றார் தங்கப்பாண்டி.

தலைமை ஆசிரியர் தங்கச்சாமி, தங்கப்பாண் டிக்கு எதிரே வந்து நின்று, அவர் கண்களை மறைக்கும்படி, அவர் கண்ணளவிற்குக் குனிந்து, கைகளைத் தூக்கி கும்பிடு போட்டுவிட்டு நின்றார். மானேஜர் உட்காரச் சொல்லவில்லை. தலைமைக்கு உட்காரப் பயம். ஒரு தடவை இப்படி உட்காரப் போனபோது, 'இப்ப என்ன ராமாயணமா நடத்தப் போறோம். அப்படியே நின்று விஷயத்தக் கேட்டுப்புட்டு போகாம...' என்று "கட் அண்ட் ரைட்டாக தங்கப்பாண்டி சொல்லி விட்டார். தலைமை ஆசிரியர் மாணி.ஆகையால் உட்கார வில்லை.

வீட்டில் பரமசாது மாதிரி, பதுங்கி உட்கார்ந்து இருந்த தங்கப்பாண்டி இப்போது சிங்கம் மாதிரி நிமிர்ந்து பார்த்தார். அது என்னமோ தெரியவில்லை...இந்த சுழல் நாற்காலியில் உட்கார்ந்ததும், அதுவும் இந்த தலைமை ஆசிரியரைப் பார்த்ததும் மானேஜருக்கு ஒரு மிடுக்கு வந்து விடும். போலீஸ்காரர் யூனிபாரத்தை போட்டதும் துள்ளுவாரே அப்படி. பேப்பர் வெயிட்டை எடுத்து, தன் கன்னத்தில் அழுத்திக் கொண்டே, தங்கப்பாண்டி தலைவலி மாத்திரையை எதிர்பார்த்து இருந்தபோது, தலைமை ஆசிரியர் இழுத்தார்:

'சம்பளம் எப்.டி...?

'எல்லாரும் கையெழுத்துப் போட்டுட்டாங்களா?'
'இனுமதான்.'

" மொதல்ல அதைச் செய்யுங்க சார்.'

ஏற்கெனவே ஸ்டாம்ப் வைத்து, எழுதப்பட்டிருந்த சம்பளப் பட்டியலை எடுத்து தலைமை ஆசிரியர் புரட்டிப் பார்த்தபோது, தையல் ஆசிரியப் பையன் பெருமாள், தலைவலி மாத்திரையோடு வந்துவிட்டான். தலைமை ஆசிரியர், அந்த மாத்திரையை வாங்கிக்கொண்டு அவனிடம் சம்பளப் பட்டியல் ரிஜிஸ்டரை நீட்டினார்... வாயால் சொல்லவேண்டிய அவசியமில்லாதபடி அவன் ஆசிரியர்களிடம் கையெழுத்து வாங்கப் போனபோது, தலைமை ஆசிரியர் தங்கசாமி, பிளாஸ்கில் இருந்த காபியை கண்ணாடி டம்ளருக்குக் கொண்டு வந்துவிட்டு, அதை மாத்திரையோடு மானேஜரிடம் நீட்டினார். தங்கப் பாண்டி முகத்தைச் சுழித்துக்கொண்டு, மாத்திரையையும் காப்பியையும் விழுங்கிவிட்டு, கடிகாரத்தைச் சுற்றிய தங்கச் செயினில் தெரித்த காபி துளிகளை, மேஜையில் கிடந்த டஸ்டரால் துடைத்துக் கொண்டிருந்தபோது, கந்தசாமிக் கிழவர் செருமிக்கொண்டே வந்தார்.

தங்கப்பாண்டி, தலைமை ஆசிரியரைப் பார்த்து 'நோட்ஸ் ஆப் லெசன்ஸை எல்லாம் போய் செக்கப் பண்ணுங்க ளார்' என்றதும், அதன் நோட்டத்தைப் புரிந்துகொண்ட தலைமை ஆசிரியர் வெளியேறினார்.

கந்தசாமிக் கிழவர், எதிர் நாற்காலியில் உட்காரப் போனார். தங்கப்பாண்டி, அவரை "சைட் நாற்காலியில் உட்காரச் சொன்னார். முக்கியமான புள்ளிகளும், புள்ளி போட வேண்டிய முக்கிய ஆசாமிகளும் உட்காரும் நாற்காலி அது.

கிழவர் செறுமிக்கொண்டே பேசினார். 'எனக்கு இன்னும் மனசு கேக்க மாட்டக்குப்பா... நீயும் மானேஜ் மெண்டை தரமுடியாதுன்னு ஒத்தக் காலுலயே நினுை ருக்கணும். நான் பாட்டுக்கு ஒனக்காவ... கரடி மாதிரி கத்துறேன். இந்த மணியமோ, கர்ணமோ ஒப்புக்காவ கூட சப்போர்ட் பண்ணல பாரு... எத்தன தடவ ஒன் கிட்ட கோதும மாவ வாங்கியிருக்காங்க. அவங்க பொண்ணுங்களுக்கும் வேல போட்டு வேற கொடுத் திருக்கே. ஒரு நன்றி இல்ல பாரு... இந்தமாதிரி ஆளுங் களுக்குத்தான் நீ உதவுவ...'
"நீரு என்ன கேட்டு, நான் என்ன செய்யல...? நேத்துகூட அத்தகிட்ட மூனுபடி கோதும மாவு...'

"நான் அதச் சொல்லலடே... என் தங்கச்சி மவனுக்கு ஒரு வேல போட்டு கொடுடான்னு கரடியா கத்துறேன். ஆறு மாசமா என் தங்கச்சி வீட்டுக்கு நடையா நடக்கா. நீ நினைச்சா முடியாதா? சவத்துப் பயலுக்கு வாத்தியார் வேல கிடச்சிட்டா என் மவள கட்டி வச்சிருவோமில்ல

"கொஞ்சம் பொறும். இப்போதைக்கு வேல எதுவும் காலியா இல்ல. மூணு வாத்திச்சிங்க கல்யாணம் ஆக ம இருக்காளுவ. எவளாவது ஒருத்திக்குக் கல்யாணம் ஆவட்டும். காரியத்த முடிச்சிடலாம்.'

"எவளுக்குக் கல்யாணம் முடிஞ்சுது? இந்த பறப்பய மொவள வேலையில சேர்த்த...'

தங்கப்பாண்டிக்குக் கோபம் வந்தது. கந்தசாமிக் கிழவரை, மானசிகமாக வாசலுக்கு வெளியே கழுத்தைப் பிடித்துத் தள்ளினார். மானசிகமாகத்தான்! என்ன

பண்றது? கெஜட்டட் ஆபீஸரா இருக்கிற தம்பி ராஜலிங்கம் இனிமேல் உதவுவது சந்தேகந்தான். பள்ளிக் கூடத்துல எதாவது பிரச்னை வந்தால் இந்தக் கிழவன் தேவை. இவனோட கொழுந்தியா பகன் இன்னொரு மாவட்டத்தில் கல்வி அதிகாரியாய் இருக்கான்.

கந்தசாமிக் கிழவர், 'என்னடே பேசமாட்டக்கே. அவனும் மெட்ராஸ்ல வேல பாத்துட்டு, வேல பிடிக்க லேன்னு வந்துட்டான். ஒரு வருஷமா ஊரச் சுத்துறான். நீ ஒரு வேல போட்டுக் கொடுத்தால், என் மகளை ஒப்ப டைச்சிடுவேன். ஒனக்கு என்னடான்னா, அந்த பறப்பய மவள், உசத்தியாப் போயிட்டு...' என்றார்.

தங்கப்பாண்டி , சற்று காரமாகவே பதிலளித்தார். 'விஷயம் தெரியாமப் பேசப்படாது மாமா! என்னோட சரிக்கு சமமா உட்கார்ந்திட்டால் ஒமக்கு விஷயம் தெரிஞ்சதா ஆயிடாது.' "

"சரி. தெரியாதவனுக்குத்தான் சொல்லிக் கொடேன்.'

'அப்படிக் கேளும்... இப்போ சர்க்கார்ல ஒரு ரூல் போட்டிருக்காங்க. அதன்படி ஒரு பள்ளிக்கூடத்துல, ஒரு வேல காலியிருந்தால், முதல்ல ஹரிஜனங்கள்ல ஒருத்தருக்கு அந்த வேலய கொடுக்கணும். வேற யாருக்கும் கொடுக்கக் கூடாது. ரெண்டாவதா வேலை வந்தால் பேக்வேர்ட் -. அதாவது நம்மள மாதுரி பிற்பட்ட ஜாதியச் சேர்ந்த ஒருவருக்குக் கொடுக்கணும். மூணாவதா வேல வந்தால், எந்தச் சாதிய சேர்ந்தவருக்கும் தகுதிப்படி வேல கொடுக் கலாம்.'"

'இழவுல இவ்வளவு சிக்கல் இருக்கா?'

'கரெக்டா சொல்லிட்டீங்க... இது கிட்டத்தட்ட இழவு மாதிரிதான். இருந்தாலும், சர்க்கார் கோலத்துல பாஞ்சால், நாங்க குதிருக்குள்ள பாயிறவங்க.'

'புரியும்படியாச் சொல்லு.'

'அதாவது, முதல் வேலய ஹரிஜனத்துக்குக் கொடுக் கணுமுன்னு சட்டம் சொல்லுது. இதுக்காக என்ன பண்ணுறோம் தெரியுமா? யாரையாவது ஒரு ஆசிரியரை ரெண்டுமாசம் லீவுல போகச் சொல்லுறது. இருபத்தோறு நாளைக்கு மேல ஒருத்தர் வீவுல போனாலே, இன்னொரு வாத்தியார போடலாமுன்னு ரூல் இருக்கு. லிவுல போற. வாத்தியாருக்குப் பதிலா ஹரிஜன வாத்தியாரப் போடு வோம். லீவுல போன வாத்தியார் டுட்டில சேர்ந்ததும் ஒரு ஹரிஜன ஆசாமியோட வேல ரத்தாயிடும். அப்புறம் யாருக்காவது கல்யாணம் நடந்தோ இல் ல கருமாந்திரம் நடந்தோ ஒரு வேகன்ஸி வருதுன்னு வச்சுக்குவோம், அதுல பிற்படுத்தப்பட்ட ஜாதில இருந்து ஒருவர போட்டு டலாம். இப்ப எல்லாருமே இப்பிடி வீவ் வேகன்ளtல ஹரிஜன போட்டுட்டு, பெர்மனன்ட் வேகன்ஸில, வேண்டிய ஆளப் போடுறாங்க. கவர்மெண்ட் எங்கள ஒண்ணும் ஆட்ட முடியாது. சர்க்காருக்கும் இது தெரியும். அவங்க அடிக்கது மாதிரி அடிக்கிறாங்க... நாங்க அழுகிறது மாதிரி அழுகிறோம்... அவ்வளவுதான்.'

கந்தசாமிக் கிழவர் கிட்டத்தட்ட எம்பி எம்பிக் குதித்துப் பேசினார். 'தங்கப்பாண்டி... நீ எலெக்ஷன்ல நிற்க வேண்டிய ஆளுப்பா. இந்த பரட்டத்தலைக்குள்ள எவ்வளவு பெரிய மூளப்பா? நான் சரியான கூமுட்டை... இது தெரியாம ஒன்னத் தப்பா நினைச்சுட்டேன். சரி... இந்தப் பறப்பய மவளுக்கு வேல எப்ப முடியுது?’’

'இன்னையோட சரி.'
'அப்போ நம்ம பயலுக்கு?’’

"கொஞ்சம் பொறும். இந்த சரஸ்வதிப் பொண் னுக்கு ஒரு மாப்பிள்ள பார்த்திருக்கேன். மாப்பிள்ளைக்கி செங்கல்பட்டு ஜில்லாவுல வேலை. அநேகமாக குதிரும் .

அவளுக்குக் கல்யாணம் செய்து, புருஷனோட அனுப்பி வச்சிடலாம். அந்த இடத்துக்கு நம்ம பயலைப் போட்டுடலாம். **

'ஆண்டவன் புண்ணியத்துல நீதான் அந்தப் பொண்ண கரையேத்தணும். பாவம் ஏழப் பொண்ணு. கல்யாணம் இந்த வைகாசில முடிஞ்சிடுமா?’’

அநேகமா பழந்தான். அப்புறம் ஒம்ம பயல் எம்ப்ளாய்மெண்ட் ஆபீஸ்ல பதிஞ்சிருக்கானா?"

'அப்படித்தான் சொன்னான்.'"

"அப்படின்னா கவல இல்ல. இருந்தாலும் ஒரு சிக்கல். அவன் பேரு விஸ்ட்ல இல்லாட்டா கஷ்டம்.'

'இல்லாட்டா ஒண்ணும் பண்ண முடியாதோ?’’

"பண்ணலாம். எம்ப்ளாய்மெண்ட். லிஸ்ட்படி வந்த வங்க சரியில்லன்னு, லிஸ்ட திருபபி அனுப்பலாம். இப்படி ரெண்டு மூணு தடவ புதுசு புதுசா லிஸ்ட் வாங்கி, நம்ம பயல உள்ள தள்ளிடலாம். ஆனால் கொஞ்சம் செலவாகும்.'

'ஏண்டே மூடி மூடிப் பேசுற ஒன் ரேட்டுத்தான் எவ்வளவு?'

'இந்த சர்க்காரே சுத்த மோசம் மாமா. கிறிஸ்டியன் பள்ளிக்கூடம் மைனாரிட்டிங்க நடத்துற ஸ்கூலாம். அத னால அதுக்கு எம்ப்ளாய்மெண்ட் ஆபீசுக்கு போக வேண் டாமாம் அவங்களே யார வேணும்னாலும் போட்டுக்க லாமாம். ஆனால் நான் போகணுமாம் இதனால என்ன ஆகுது தெரியுமா? அவங்க இஷ்டப்படி யார வேணும் னாலும் போட்டுக்கிடலாம். அதுக்கு பத்தாயிரம் ரூபாய் வாங்குறாங்க. நான் எம்ப்ளாய்மெண்ட் ஆபீஸ் சரிகட்ட, தாயா அலையுறேன். இவ்வளவுக்கும் ஐயாயிரந்தான் வாங்குறேன்.'

கந்தசாமிக் கிழவரும், தங்கப்பாண்டியும் சம்பந்தப் பட்ட விவகாரத்தைப் பேசிவிட்டு, சம்பந்தமில்லாத விவ காரங்களைப் பேசப்போனபோது, மணி நாலரை. நான்கு இருபதுக்கு மணியடித்து, பிள்ளைகள் போய்விட்டார்கள். ஆசிரிய-ஆசிரியைகள் காத்து இருந்தார்கள். ஒரு சில ஆசிரியர்கள் இடுக்கில் நின்றபடியே உள்ளே, எட்டிப் பார்த்தார்கள். சிலர் தண்ணிர் குடிக்க வருகிற சாக்கில் அந்தப் பக்கமாக வந்து, தலையைக் காட்டினார்கள். இந்திரா வாசல் பக்கமாக வந்து, தங்கப்பாண்டி யை விநோதமாகப் பார்த்தாள். உடனே அவர் 'சரி மாமா, மீதி விஷயத்தை நாளைக்குப் பேசிக்கிடலாம்' என்று சொல்லிவிட்டு நாற்காலியை விட்டு எழுந்தாலும், கிழவர் எழவில்லை. ஆகையால் தங்கப்பாண்டியே வெளியே வந்தார்.
இடுக்குக்குள் நின்றுகொண்டிருந்த ஆசிரியர்களைப் பார்த்து நேராகப் போனார். அவர்கள் சிலிர்த்து நின்றார் கள் தங்களைக் கூப்பிடாமல், அவரே வந்ததன் ஆபத் தைப் புரிந்துகொண்டார்கள்.

தங்கப்பாண்டி, அவர்களை சிங்கம்போலப் பார்த்து விட்டு கம்பீரமாகப் பேசினார்: 'இன்னும் ஒரு வாரம் பொறுத்துக்கங்க. அடுத்தவாரம் தந்துடுறேன்.'

சொல்லிவிட் டு திரும்பப்போன தங்கப்பாண்டியின் காதுகளில் விழும்படி, சீனிவாசன் பெளவியமாகக் கேட் டார்:

'நாளைக்கி என் மகள அனுப்பணும். மாரியம்மாள் வேற நாளைக்கி ஊருக்குப் போவணும். இல்லன்னா ஒங்ககிட்ட இருந்தா என்ன எங்ககிட்ட இருந்தா என்ன? பாதிப் பணத்தையாவது...'

தங்கப்பாண்டி, அவர்களை தன் தம்பி ராஜலிங்கத் தின் கூறுகளாக நினைத்துக்கொண்டு, கூர்மையாகப் பேசினார்: "ஒரு வாரம் பொறுத்துக்கப்படாதா?

ஊரவிட்டு ஒடியா போறேன்? ஒங்களுக்கெல்லாம் ராஜ லிங்கம்தான் லாயக்கு. கசக்கிப் பிழிஞ்சி எடுத்திருப்பான். ஏதோ ஒரே குடும்பமா இருந்து தொலைச்சிட்டமேன்னு, முப்பதாயிரம் ரூபாய் ஏலத்துல எடுத்திருக்கேன். அவசரத்துக்கு உங்க பணத்தை கொடுத்திட்டேன் ஒரு வாரம் பொறுக்கப்படாதா? நியாயமாப் பாத்தால், இந்த மாசம் ஒங்களுக்கு சம்பளமே கொடுக்கப்படாது. ஏன்னா, என்னோட சேர்த்து, நீங்களும் ராஜலிங்கத்துகிட்ட சிக்காம இருக்கதுக்கு முப்பதாயிரம் ரூபாய் செலவளிச் சிருக்கேன். இந்தக் காலத்துல நல்லது செய்தாக்கூட கெட்டதாத்தான் முடியுது. சரி ஒரு வாரம் பொறுத்துக் கங்க. சீனிவாசன் ஸார், என் பசங்களுக்கு ஸ்பெஷல் கோச்சிங் கொடுத்திட்டுப் போங்க.'

தங்கப்பாண்டி போய்விட்டார். இந்திரா இருந்ததால் எதுவும் பேச முடியாமல் அங்கே இருந்த ஆசிரியா கள் அத்தனை பேரும் விக்கித்து நின்றார்கள். இறுதியில் ஒவ்வொருவராக நகர்வது தெரியாமலே நகர்ந்தார்கள்.

சீனிவாசன் மட்டும், அடைபட்டுக் கிடந்த நான் காவது வகுப்பு மாணவர்களிடம் வந்தார். 'வீட்டுக்கு எந்த முகத்தோடு போவது? உண்பதற்கே நெல் இல்லை, விற்பதற்கு ஏது? மருமகப் பிள்ளையோ கறார் பேர் வழி. நாளைக்கு எப்படியும் மகளை அனுப்பியாக வேண்டும். சென்னைக்கு டிக்கட் முப்பது ரூபாய். கூடப் போகும் மனைவிக்கு முப்பது. அவள் திரும்பி வர முப்பது. செலவுக்கு ஐம்பது. பேரனுக்கு கால் பவுன் மோதிரம் போட இருநூறு மொத்தம்...'

சீனிவாசன் சுக்கு நூறாக உடைந்து போய், வீட்டை விட, வகுப்பறையே தேவலை என்பதுபோல் பையன் களிடம் போனார். இந்தப் பிள்ளைகளுக்கு அபிஷியல்’ ஆசிரியர் தங்கப்பாண்டி. அவர் வகுப்புக்கு வநததே கிடையாது. ஒவ்வொரு ஆசிரியரும் ஒரு வாரம் முழுவதும் சாயங்காலம் குறைந்தது ஒரு மணி நேரமாவது இவர்க்ச்ளுக்கு ஸ்பெஷல் கோச்சிங்' நடத்த வேண்டும். இதே போல் இவர் மச்சான், கோவிந்தன் வகுப்புக்கும். சில ஆசிரியர்கள் ஆசிரியப் பணி அல்லாத தங்கப்பாண்டியின் காரியங்களுக்கு அனுப்பப்படும்போதும், அவர்கள் வகுப்பு களுக்கும் கோச்சிங் எடுக்க வேண்டும்.

சீனிவாசன், ஒரு கழித்தல் கணக்கைப் போட்டுவிட்டு வகுப்பதிரக் கேட்டார்.

'சைபருக்கு ஒன்பது போகுமாடா?'

'போகாது ஸார்...' '

போகாட்டா என்ன பண்ணனும்?'

'இரண்டாவது ஸ்தானத்துல கடன் கேட்கணும்.'

'எப்படிக் கேட்கணும்? புண்ணாக்குக் கழுதைகளா! சொல்லிக் கொடுத்தது மறந்துபோச்சா? சொல்லுங்கடா. எப்படிச் சொல்லணும் ஒ...இரண்டாவது...'

பிள்ளைகள் திருப்பிச் சொன்னார்கள்: ஏ...இரண் டாவது ஸ்தானத்துல இருக்கிற இரண்டே! ஒரு பத்தை கடன் தா...ஒரு பத்தை கட ன் தா...'

'என்ன தா...?

'ஒரு பத்தைக் கடன் தா...ஒரு பத்தைக் கடன் தா...' சீனிவாசனுக்கு திடீரென்று கோபம் வந்தது.

'ஏ கடன்காரப் பசங்களா! இனிமேல் கடன் தா, கடன்தான்னு சொல்லப்படாது. நான் சொல்றது மாதிரி சொல்லணும். நல்லா கவனிங்க. ஏ. இரண்டாவது ஸ்தானத்துல இருக்கிற இரண்டே...ஒன்கிட்ட இருந்து, ஒரு பத்தைப் பறிக்கப் போறேன். எதைப் பறிக்கப் போறேன்? சொல்லுங்கடா...'

சிறுவர்-சிறுமியர் உற்சாகமாகக் கத்தினார்கள். 'ஒரு பத்தைப் பறிக்கப் போறேன்...ஒரு பத்தைப் பறிக்கப் போறேன்...'
----------

2. கேள்வித் தீ - அத்தியாயம் 3

பஞ்சாயத்துக் கிணற்றின் வட்டமான சுவரைச் சுற்றி ஒரே பெண்கள் கூட்டம். முப்பதடி ஆழமுள்ள அந்த கிணற்றுக்குள், நான்கடி உயரத்திற்கு தண்ணிர் நின்றது. பஞ்சாயத்து போட்ட குழாய்கள், வழக்கம் போல் பழுதடைந்து இருந்ததால், மின்விளக்கு வீட் டில் மெழுகுவர்த்தி இருப்பதுபோல், தோண்டிப்பட்டை" வைததிருந்த பெண்கள் கூட்டம், கிணற்றை மொய்த்தது. கிட்டத்தட்ட இருபது பெண்கள், உடலின் பாதிப் பகுதியை, சுவரோடு சேர்த்துக் கவிழ்த்து, கயிற்றை கிணத்துக்குள் விட்டு நீர் மொண்டு கொண்டிருந்தார்கள். எல்லாப் பெண்களும் இப்படி ஒரே சமயத்தில் குனிந்தது, தாமரை மலர்போல் தோன்றியது. இதற்குள் சில சுறுசுறுப்பான இளம் பெண்கள், சீக்கிரமாக நீரை மொண்டு, முதுகை நிமிர்த்தி, கிணற்றுச் சுவரை ஒட்டி யிருந்த பானைகளில் நீரை ஊற்றிவிட்டு, மீண்டும் குணிவதும், அவர்கள் இப்படி குனியும்போது, சில நடுத்தரப் பெண்கள் நிமிர்வதையும் பார்த்தால், ஒரு ரம்மியான கும்மியாட்டம் அங்கே நடப்பதுபோல் தோன்றியது. சில நாவிதப் பெண்களும் சலவைத் தொழிலாளப் பெண்களும், தத்தம் வெற்றுக் குடங்களைக் காட்டிக் கொண்டு, சீக்கிரமா தண்ணி ஊத்துங்கம்மா' என்று குடங்களுக்கருகே இருந்த பெண்களைக் கேட்டுக் கொண்டே இருந்தார்கள். இது பஞ்சாயத்துக் கிணறு தான் என்றாலும், இங்கே அந்தப் பெண்கள் தோண்டிப் பட்டையைப் போட்டு நீரிறைக்க முடியாது.

சரஸ்வதி பால் பவுடர் டின்னை வைத்து, தண்ணிர் மொண்டு கொண்டிருந்தாள். மானேஜர் வீட்டு மாட்டுத் தொட்டியில் இதுவரை பத்துக் குடங்களை ஊற்றியாகி விட்டது. இன்னும் பத்துக் குடங்கள் ஊற்றியாக வேண்டும். மாலையில் பள்ளிக்கூடம் விட்டதும், வீட்டுக்குப் போய் தலையைக் காட்டிவிட்டு, மானேஜர் வீட்டிற்குப் போய் குடங்களை எடுத்துக்கொண்டு வந்து விட்டாள். பள்ளிக்கூடத்தில் கத்திக் கத்தி தொண்டை வலித்தது. இப்போது அந்த வலியை, வளைந்து வளைந்து நிமிர்ந்ததால் ஏற்பட்ட முதுகுவலி விழுங்கியது. அருகே இருந்த பெண்ணிடம் முதுகுவலி தீரும்வரை பேசுவது என்று, எதையோ அவள் பேசிக் கொண்டிருந்தபோது, கீழத் தெரு சுப்பையா வீட்டில் நடந்த சடங்குக்குப்’ போய்க் கொண்டிருந்த மானேஜரின் மனைவி ராசம்மா, 'ஏய் சரசு சீக்கிரமா வேலய முடியேண்டி. எவ்வளவு நேரமா தண்ணி எடுக்கப்போறே கொஞ்சம்கூட இது இல்லையே' என்று நின்று நிதானமாகச் சொல்லிவிட்டு நடந்தாள். பிறகு திரும்பி நடந்து வந்து "ஏய் மங்காத்தா! ஒன்னு கடனை அடைக்கனும், இல்லன்னா வட்டி கட்டணும். ரெண்டும் பண்ணாட்டா எப்டி? சோறுதான திங்ற?' என்று சொல்லிவிட்டுப் போனாள். மங்காத்தா திரும்பிப்போன ராசம்மாவின் முதுகைக் குத்துவதுபோல் கையை ஓங்கிக் கொண்டாள். சரஸ்வதிக்கு என்னவோ போலிருந்தது. பெற்ற தாய் கூட நான்குபேர் முன்னிலையில் இப்படிப் பேசமாட்டாள். பக்கத்தில் நின்ற ஒரு பெண், அவளை உசுப்பினாள். எல்லாப் பெண்களும், சரஸ்வதியை ஒட்டுமொத்தமாகப் பார்த்தார்கள். மங்காத்தாவை, ராசம்மா இப்படிக் கேட்பது வழக்கம். அவள் இப்போது 'அசிங்கமாக'த் திட்டினாள். கேட்பவர்களையும் திட்டுவாள். ஆகையால் அவளை விட்டுவிட்டு, சரஸ்வதியைச் சாடினார்கள்!

'ஏன் சரசு, வாத்தி வேலயில் முந்நூறு ரூபாயாவது கிடைக்கும். இன்னுமா கூலிக்கு தண்ணி எடுக்கணும்? 'இவள் கூலிக்கு தண்ணி பிடிக்கலடி அந்தப் பள்ளிக் கூடத்தில வேல கிடைச்சதுக்கு லஞ்சமா தண்ணி எடுக்காள். இவளால ஐயாயிரம் கொடுக்க முடியாது பாரு. அத...தண்ணியா தீர்த்துக் கட்டுறாள்.' 'சர்க்கார் பணத்தத்தான் சம்பளமா வாங்குகிறாள். இதுக்கு எதுக்கு தண்ணி எடுக்கணும்?' 'ராசம்மாவோட திமிரப் பாரேன்? நாம மெய்க் கணுமுன்னு"...இவள அதட்டிட்டுப் போறாள். அதாவது படிச்ச பெண்ணு தன் கிட்ட வேலக்காரியா இருக்கத காட்டிக்கிறாளாம்.' 'எல்லாம் இவளால. இவள் எதுக்கு இன்னும் பழைய வேலைக்காரியா நடந்துக்கணும்? தலயயா வாங்கிடு வாங்க? ஊசி...இடங்கொடுக்காமே, நூல் நுழையுமா? கொடுப்பாரக் கண்டால் பய பிசாசு கொனச்சி கொனச்சி ஆடுமாம்.'" 'மேயுற மாட்டக் கெடுக்குமாம், நக்குற மாடு. ஒனக்கென்ன அம்மாளு...இவா பாடு, அவா பாடு." ஒவ்வொரு தடவையும், கயிற்றை கிணற்றுக்குள் விடும்போதும் தானே அந்தக் கிணற்றுக்குள் விழுவது போல், சரஸ்வதி தவித்தாள். முன்பு லேசாகத் தெர்ந்த அந்த டின், இப்போது தூக்க முடியாத சுமையாகத் தெரிந்தது இந்தப் பெண்கள் சொல்வதுபோல், ராசம்மா தன்னை அதட்டிவிட்டுப் போனது அவளுக்கு அடிமைத் தனமாகத் தெரிந்தது. இவ்வளவுக்கும், மானேஜர் மற்ற வர்கள் சம்பளத்தில் ஐம்பது ரூபாய் பிடித்தால், தன் சம்பளத்தில் நூறு ரூபாய் பிடிப்பதும், அப்போது

அவளுக்கு மாபெரும் கொடுமையாகத் தெரிந்தது. மடமடவென்று நான்கைந்து குடங்களை நிரப்பிவிட்டு தன் வீட்டுக்குப் போனாள். சரஸ்வதி அந்த ஒலைவீட்டின் முற்றத்திற்கு வந்த போது குடிசைக்குள் பொன்னையாவும் அம்மாவும், தன்னைப்பற்றி பேசுவது கேட்டதால், அவள் அங்கேயே நின்றாள். "ஒமக்கு மூளையே கிடையாது. மிஞ்சி மிஞ்சி இருந் தால், அவளுக்கு இப்போ இருபது இருக்கும். இன்னும் ரெண்டு வருஷம் கழியட்டுமே. நாம இப்பதான் ஏதோ சாப்பிடறோம்.' 'அப்படி இல்ல பிள்ள. மாப்பிள்ளைக்கி செங்கல் பட்டு பக்கத்துல, ஒரு மில்லுல பெரிய வேலையாம். பூர்வீகம் குட்டாம்பட்டியாம். எழுநூறு ரூபாய் வாங்கு றானாம். கல்யாணம் ஆன ரெண்டு வருஷத்துல பெண் டாட்டி இறந்துட்டாளாம்... ஏழு வயசில ஒரு பையன் மட்டும் இருக்கானாம். இவ்வளவுக்கும் வயது முப்பதாறு தானாம்.' "நான் உயிர விட்டாலும் விடுவேனே தவிர. என் மவள ரெண்டாந்தாரமா அதுவும் பாதிக் கிழவனுக்கு" கொடுக்க மாட்டேன்.' 'ஏமுழா வீம்பு பிடிக்கே? நம்ம தங்கப்பாண்டி பாத்த மாப்பிள்ளை நாம தட்ட முடியுமா? வாக்கு கொடுத்துட்டேன்னு வேறே சொல்லுதான்.' 'அவனுக்குத்தான் ஒரு மகள் இருக்காளே. அவள கொடுக்கச் சொல்லும்.' பொறிகலங்கிப் போனவள்போல், சரஸ்வதி திடுக் கிட்டாள். அப்படியானால், அவள் இந்த ஊரை விட்டு

விட்டுப் போய்த்தான் ஆக வேண்டுமா? அதுவும் அம்மா சொன்னதுமாதிரி ஒரு பாதிக் கிழவனுக்கு... முடியாது... என்ன ஆனாலும் முடியாது... இந்தத் தங்கப்பாண டி மாமாவுக்கு நான் என்ன கொடுமை செய்தேன்? அப்பா ஏன் அவர் வாக்கை தேவ வாக்கா எடுக்கார்? இந்த தங்கப்பாண்டியை மட்டம் தட்டுறதுக்காவது நான் மாட்டேன்... மாட்டேன்...' திடீரென்று, அவள் நினைக்காமலே, சண்முகம் அவள் நெஞ்சுள் வந்து நின்றான். உடம்பின் ஒவ்வொரு அணுவிலும், அவன் ஊடுருவி நிற்பது போன்ற பிரமை. அப்பா... அம்மா பேசுவதை அவன் அசரீரியாக நின்று கேட்டுக்கொண்டிருப்பது போலவும், தக்க சமயத்தில் தலையிடுவான் என்பது போன்றும் ஒரு எண்ணம். ஒரு கற்பனை... ஒரு நப்பாசை. இதுவரைக்கும் அவள் அவனிடம் தனியாகப் பேசியதில்லை. சரசு’ என்று சொல்லமாட்டாரா என்று ஏங்கும் அவளை, இன்றுவரை "டீச்சர்' என்றுதான் கூப்பிடுகிறான். படித்த கர்வம் இல்லாமல், உளளுர் டீக்கடைகளில் மற்ற ஏழைகளோடு அமர்ந்து, மசால் வடையைத் தின்றுகொண்டே, அவர் களோடு வாயால் மல்லாடுவதும், பாமர மக்களுக்கு கடிதங்கள் எழுதுவதும், சில சமயம் அவர்களை அதியா யங்களில் இருந்து மீட்பதும், ஆதரவு கொடுப்பதும் அவனுக்குப் பொழுதுபோக்கு... பொழுதுபோக்கல்லஒரு விசுவாசமான தொண்டு. ஊரில் எல்லா பிரமுகர் களுக்கும் அவன் கவாலி'. இது ஒன்றே போதும், அவன் நல்லவன் என்பதற்கு. அவரு இல்லாத பள்ளிக்கூடம், 'களை இல்லாம போயிட் டு...! எப்டி கலகலப்பா பேசுவாரு. எப்டி வெட்டு ஒண்னு துண்டு ரெண்டுன்னு பேசுவாரு. இவ்வளவுக்கும் எனக்கு ஜூனியர். வேலையில சேர்ந்து மூணு மாதந்தான் ஆகுது. மானேஜர இப்படியே விடப்

படாது. கொஞ்சங் கொஞ்சமா எதிர்த்துப் பேசணுமுன்னு எப்படிச் சத்தம் போட்டு கத்துவாரு. அதுவும் இந்திரா இருக்கும் போதுகூட. அவரப் பார்த்ததும பிள்ளிங்ககூட 'ஸார்... கதை சொல்லுங்க லார்னு எப்டி மொய்க்கு துங்க. அடிக்காமலே அவங்கள வசியப்படுத்துற வேலய எங்க கத்துக்கிட்டாரு? அவங்கள மட்டுமா 'வசக்கி வைத் திருக்காரு? ஒவ்வொரு ஆசிரிய ஆசிரியைக்கும் வக்கனை' வச்சிருக்க... இந்த பிள்ளிங்ககூட அவருக்கு... வக்கணையே வைக்கலியே. தங்கப்பாண்டி, தொந்திப் பாண்டியாம் கனகம் உச்சர், தார்க்குச்சியாம். தங்கச்சாமி... பிள்ளப் பூச்சியாம். வேலாயுதம், கரும்பனையாம். நான் , மேல கண்ணியாம். ஆனால சண்முகத்துக்கு மட்டும் வக்கனை கிடையாதாம்! எல்லோரையும் அதட்டுற மானேஜர் மாமா கூட, அவரப் பார்த்துச் சிரிக்காரே. ஒருவே ள இவரும் அவரு மகள விரும்புறாரோ? அதனாலதான் அவரப் பார்த்ததும் தானாச் சிரிக்கிற என்னை "டிச்சர் டீச்சர்னு சொல்லுதாரோ? 'ஸெட் கணக்குல டிரெ யினிங் எடுக்க மதுரைக்குப் பேrனவரு... எப்போ வரப் போறாரோ... பார்த்து எவ்வளவு நாளாச்சு? பாவி மனுஷன் ஒரு தடவ வந்தா என்ன? நான் இவரை நினைச்சி, அந்த நெனப்புலயே சுகத்த அனுபவிக்கையில மாப்பிள்ள பாக்காங்களாம் மாப்பிள்ள. பாத்துப் புடலாம். வீட்டுக்குள் சத்தம் வலுத்துக் கேட்டது. சரஸ்வதி, ஒரே தாவாகத் தாவி தந்தை முன்னால் போய் நின்றாள். 'எப்பா! நான் என்ன ஒங்க தலையிலயா உட்கார்ந்திருக்கேன்...? சுமக்க முடியாம கஷ்டப்படுநீங்க. எனக்கு இப்போ 'அது' ஒண்னும் வேண்டாம்.' பொன்னையா, மகளை ஆழமாகவும், அகலமாகவும் பார்ததார்! 'ஒரு வயதுப பெண் , தன் கல்யாணத்தைப் பற்றிப் பேசுவதா... அதுவும் பெத்த அப்பனிடம். இந்த விஷயத்தில் தலையிட இந்தப் பய மவளுக்கு என்ன ரைட் இருக்கு? எல்லாம் இந்த கழுத முண்ட கொடுக்கிற

செல்லம். பொன்னையா கத்தினார். 'பாத்தியாடி... ஒன் மவள் பேசுற பேச்ச? வர வர அவளுக்கு நான் அப்பனா தெரியாமப் போச்சுப் பாத்தியா? ஏன பேச மாட்டாள்? இருநூற்று ஐம்பது ரூபாய் சம் பாதிக்கால்லா. இந்த மரம் வெட்டி கண்ணுக்குத் தெரியுமா?" சரஸ்வதி, முதலில் சாந்தமாகத் தான் பேசினாள். "ஒம்ம மனசு நோவக்கூடாதுன்னு ரெண்டு வருஷமா மானேஜர் வீட்ல தினமும் தண்ணி எடுத்து ஊத்தறேன். சில சமயத்துல பாத்திரத்த தேக்கிறேன். தண்ணிக் கிணத்துல கேவலமாப் பேசுறாளு வ. ராசம்மா அத்த வேற, நாலுபேரு முன்னால அதட்டிட்டுப் போனாள். ஊர்ல. கசாமுசான்னு பேசுறாங்களாம். வாத்திச்சி வேல பாக்கற ஒவ்வொருத்தியும், ராணிமாதிரி இருக்கையில, நான்... இன்னும் நாயிலயும் கேவலமா வேல பாக்கேன். எல்லாம் ஒம்ம மனசு நோவக்கூடாது என்கிறதுக்காக. அப்படியும் நான் ஒமக்குப் பிடிக்கல. செங்கல்பட்டு கிணத்துல தள்ளப்பாக்கீங்க.' சரஸ்வதி விம்மினாள். சுவரில் தலையை வைத்துக் கொண்டு கேவிக் கேவி அழுதாள். பொன்னையா எழுநதார் மகளை அடிக்கப் போகிறாரோ என்று மனைவிக்காரி படபடப்போடு எழுந்தாள் ஆனால்-பொன்னையா, சரஸ்வதியின் இரண்டு கை களையும் பிடித்துக்கொண்டு நின்றார். மகள்... உள்ளு ரப்பட்ட வேதனை, மரம் வெட்டி மரம் வெட்டி மரமாகப் போன அவருக்கு, இப்போதுதான் உறைத்திருக்க வேண்டும், "ஏம்மா அழுவுற ஒன் இஷ்டத்த மீறி எதையும் செய்யமாட்டேன். இனிமேல் நீ தங்கப்பாண்டி வீட்டுக்கு மட்டுமல்ல, நம்ம வீட்டுக்கும் தண்ணி எடுக்கப் போகாண்டாம்-என்ன ஆனாலும் சரி
-----------

2. கேள்வித் தீ - அத்தியாயம் 4

மானேஜரின் அறையில் பாதிக்கதவு மூடப்பட்டு, tதிப் பாகத்தை தையல் ஆசிரியன் பெருமாள், தன் முதுகை வைத்து மறைத்துக்கொண்டிருந்தான் என்றால், உளளே தங்கப்பாண்டிக்கும் இந்திராவுக்கும் அந்தரங்க மான ஆலோசனை நடப்பதாக அர்த்தப. மானேஜரைப் பார்த்துவிட்டு, ஜி.பி.எப். பணத்துக்கு விண்ணப்பம் கொடுக்கப்போன கனகம், பாதி வாசலை மறைத்த பெருமாளைப் பார்த்துவிட்டுத் திரும்பி வந்துவிட்டாள். அவளுக்கு உள்ளுற உதறல். நேற்று 'ஏலத்துல பணம் கொடுக்கணுமுன்னா, பேங்க்ல போட்டிருக்கிற பணத்தை எடுத்து கொடுக்கது நம்ப சம்பளத்தானா கிடைச்சுது?" என்று இந்திரா காதுபடச் சொல்லிவிட்டாள். இந்நேரம், அவளோ, தங்கப்பாண்டியின் காதில், வாய்ப்பட சொல் விக்கொண்டிருப்பாள். ஜி.பி.எப். கடன் கிடைச்சது மாதிரிதான்... வயித்துக் கட்டியை ஆபரேஷன் பண்ணுனது மாதிரித்தான். அவள் நினைத்தது உண்மை என்பது மாதிரி உள்ளே உரையாடல் நடந்தது. தங்கப்பாண்டி கோபமாகக் கேட்டார். 'அப்படியா... அந்தத் தார்க்குச்சி சொன் னாள்...?’’ வரவர நான் சொல்றத நீங்க நம்பமாட்டேங் தெரியும். ஒங்க 'ஒய்ப் ஒரு தடவ இங்க வந்து என்னைத் திட்டிட்டுப் போனாள். இப்போ சரஸ்வதிய வீட்டுக் குள்ள கூப்பிடுறாள். ஒங்க புத்தி தெரியாம... உ.ம்... என்னைத் திட்டுன பாவம் அவள சும்மா விடுமா?"

'சரி, அதெல்லாம் பேச இப்ப டயம் இல்ல. அட்புறம் வேற ஏதாவது விஷயம் உண்டா?’’ 'இந்த மாரிக்கு எக்ஸ்டன்ஷன் கொடுக்கிறது தப்புன்னு தோணுது.' ஏன்?" "சீனிவாசன் கூட எப்பப் பார்த்தாலும் கிசுகிசுன்னு பேசிக்கிட்டு இருக்காள். வேலாயுதம் மேல ஒரு கண்ணு போடுறாள். அவனும் பல்லக் காட்டுறான். சீனிவாசனும் சகுனிமாதிரி லீவ் வேகன்ஸி’க்கு ஹரிஜன்... பெர்மனன்ட் வேகன்ஸிக்கு பேக்வேர்ட்... இல்லன்னா பார்வர்டுன் னு அவள் கிட்ட சொல்லுக்குச் சொல்லு சொல்லிக்கிட்டு இருக்கார்.' தங்கப்பாண்டி எதுவுமே பேசவில்லை; லேசாகச் சிரித்துக்கொண்டார். இதற்குள், இரண்டாவது பீரியடுக் கான மணியடித்தது. இந்திரா, வெளியே வந்தாள். அவளைப் பார்த்ததும் கும்பல் கும்பலாக நின்று பேசிக கொண்டிருந்த ஆசிரிய-ஆசிரியைகள், வகுப்புக்களைப் பார்த்து ஓடினார்கள். தார்க்குச்சிமாதிரி ஒல்லியாக இருந்த ஜி பி.எப். ஆசிரியை கனகம் மட்டும், இந்திரா வைப் பார்த்து, 'இந்த சேலை... ஒனக்குன்னே நெய்தது மாதிரி இருக்கும்மா... இன்னும் சேலய... உடம்போட சேர்த்து இறுக்கிக் கட்டினால், ஒனக்கு எடுப்பா இருக்கும். இப்படி... தொளதொள ன்னு சேலைய வைக்காத" என்றாள். அப்படிச் சொல்லிவிட்டதால், தனது ஜி.பி. - ப் காய், பழுத்துவிடும் என்று நினைத்துக்கொண்டாள். இந்திரா முகத்தை ஒரு வெட்டு வெட்டிக்கொண்டு, தன் வகுப்புக்குப் போனாள். போனவுடனேயே கண்ணகியை ஏன் கற்புக்கரசின்னு சொல்கிறோம்?' என்று கேள்வி கேட்டதும், பயல்கள் அமுக்கலாகச் சிரித்தார்கள். இரண்டு கட்டிடங்களுக்கும் மத்தியில் இருந்த இடுக்கை’ப் பார்த்து, கண்ணடித்துக் கொண்டார்கள்.

சீனிவாசன், மானேஜர் அறைக்குப் போகப் புறப் பட்டார். அவர் மகள போக வேண்டிய ரயிலுககு இன்னும் நேரமிருக்கு. இப்போ கூட தங்கப்பாண்டிகிட்ட கேட்டுப் பார்க்கலாம். அவர் புறப்படப்போனபோது, எதிரும் புதிருமான உள்ளுர் அரசியல்வாதிகள், மானேஜ ரைப் பார்க்க வந்துவிட்டார்கள். ரயில் போவதற்குமுன்பு, அவர்கள போவார்களா என்பது சந்தேகம், இந்தச் சமயத்தில் இங்கிதம் பார்ப்பது இங்கிதமல்ல... சீனிவாசன், மானேஜர் அறைக்குள் நுழையப் போன போது, பார்ட் டைம் தையல் ஆசிரியப் பையன், தன் உடம்பெல்லாம் பார்ட் பார்ட்டாக ஆட 'அப்புறமா வந்து பாரும். இப்போ எப்டி பார்க்க முடியும்?' என்று நிஜமாகவே அதட்டிப் பேசினான். சீனிவாசன், வகுப்பிற்குள் போகாமலும், அங்கே நிற்காமலும், 'இடுக்கில் வந்து நின்றுகொண்டார். ஒரு தடவை இப்படி இடுக்கில் நின்றபோது, எட்டாவது வகுப்புப் பயல்கள், அவரையும் பார்த்துச் சிரித்தார்கள். அரசியல் வாதிகள் போவதாகத் தெரியவில்லை. தென் காசிக்கு வேட்பாளர் தேர்வுக் குழுக்கள் வருகிறதாம். சர்வ கட்சிகளிலும் அங்கம் வகிக்கும் தங்கப்பாண்டி தேர்தல் குழுக்களிடம் போய், இவர் இவரை சிபாரிசு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள். தங்கப் பாண்டி, தேவடியாள் சிரிப்பு ஒன்றை, உதடு முழுவதும் உலவ விட்டுக்கொண்டிருந்தார். எப்படியோ அரசியல் வாதிகள் போய்விட்டார்கள. சீனிவாசன் மானேஜர் அறைக்குள் நுழைந்தார். 'இப்ப... கொஞ்சம் பிஸி... என்ன விஷயம்?' என்றார் தங்கப்பாண்டி. 'இன்னைக்கு, என் மகள வண்டியேத்தணும்... கொஞ்சம் பணம் இருந்தால்...'

"ஆமா... ஒம்ம் வகுப்புல ஒரு பெஞ்சி உடஞ்சி கிடக்கே... , ன்?' 'அதுவா? நேத்து... முழுக்கள்' என்றால் என்னன்னு ஒரு கேள்வியைப் போட்டேன். பதில் சொல்லாத பயலுவள பெஞ்சி மேலே ஏத்துனேன். அந்தப் பெஞ்சி ஏற்கனவே இத்துப் போனது. சடசடன்னு உடைஞ் சிட்டு...' ‘'வேணுமுன்னே உடைச்சிருப்பாங்க. இனிமேல் எவனையும் பெஞ்சி மேலே ஏத்தாதிங்க தெரியாத கேள்விகள ஏன் கேட்கிறிய...? எனக்கே இதுக்கு பதில் தெரியாது ' 'ஆனால் நிறைய பயலுவ பதில் சொன்னாங்க. ஒங்கள மாதிரி, கொஞ்சம் பேருக்குத்தான் தெரியாது. இப்போ உள்ள சிலபஸ்படி... 'முழுக்கள் ... மிகை எண். குறை எண், கணங்கள் இந்தமாதிரி டெர்ம்ஸ் இக்கு அர்த்தம் தெரிஞ்சாத்தான், மேல்கொண்டு பாடம் நடத்த முடியும்.' 'சரி போகட்டும்; என்ன விஷயம்?" 'அதுதான் சொன்னேமில்லா... என் மகளை... இன் னைக்கி அனுப்பியாகணும். கையில சத்தியமாக் காசு இல்ல...' "'என்ன ஸார் நீங்க? ஒரு அவசரத்துக்கு பணத்த ஒரு வாரம் வச்சிக்கப்படாதா? ஒடியா போகப் போறேன். ஒங்களுக்காக எப்படில்லாம் வளைஞ்சி கொடுக்கேன். இருநூறு பிள்ளிங்களை... முந்நூறுக்கு மேல காட்டுறேன். முப்பது பேருக்குக் கீழே இருந்தால் ஒரு செக்ஷன்தான். நான் இருபத்தஞ்சு பிள்ளிங்களை வச்சிக்கிட்டு, ரெண்டு செக்ஷனா காட்டுறேன். ஒரு வகுப்ப மட்டுமா காட்டு றேன்...? எல்லாம் யாருக்காக? என் பாட்டுக்கு இருக்கிற

பிள்ளிங்களை மட்டும் காட்டினால் ஆறு பேரோட வேல போயிடும். ஓங்களுக்கு உபகாரம் செய்தாலும், உபத்திரந்தான் சாமி... சரி. சரி... போங்க சீனிவாசன் தன்னை சிறுகச் சிறுக நகர்த்தி தலையைத் திரும்பத் திரும்பத் திருப்பி வெளியே வந்தார். அவர் போனதும்,ம ானேஜர் மோவாயை பன்றி ஆட்டுவது மாதிரி ஆ.டிக்கொண்டார். ச ர ஸ் வ தி வந்தாள். கூப்பிட்டிங்களா ஸார்?' 'ஒனக்கென்ன கேடுகாலம்... மாமா ன்னு கூப்பிடு றவள், ஸார்னு சொல்ற? இந்திரா தன்னிடம் சரஸ்வதியைப் பற்றி காலையில் பேசியதில் இருந்து, அவருக்கும் ஒரு "கிக்". சரஸ்வதி எதுவும் பேசவில்லை; மெளனமாக உதட்டைக் கடித்துக் கொண்டிருந்தாள். அவளையே சிறிதுநேரம் பார்த்துக் கொண்டிருந்தவர், பிறகு 'சரி வீட்ல ஏதோ வேல இருக்காம், அந்த வரச் சொன்னாள் போ. ஒன் வகுப் பயும் சீனிவாசனை சேர்த்துக் கவனிச்சுக்கச் சொல்லு' என்று சொல்லிவிட்டு, அவளைப் பார்ப்பதற்கு, அவர் தலையை நிமிர்த்து முன்னாலேயே, சரஸ்வதி வெளியேறி விட்டாள். வெளியே நின்றுகொண்டிருந்த மாரியம்மாள், உள்ளே வந்தாள். விடுப்பில் போயிருந்த ஆசிரியை வடிவு, இன்று வேலையில் சேர்ந்து விட்டாள். இன்றை யோடு அவளுக்கும் அந்தப் பள்ளிக்கூடத்திற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. மாரியம்மாளைப் பார் த் த து ம், தங்கப்பாண்டி 'இன்னும் நீ ஊருக்குக் கிளம்பலியா?' என்றார். மாரி திக்கித் திணறிக் கேட்டாள். 'ஸார், நீங்க மனசு வச்சால்...'

நான் மட்டும் மனசு வச்கால் எப்படி? நீயும் மனசு வைககாண்டாமா? ஒனக்கு ஹெல்ப் பண்ணணு முன் னால், னக்கும் ஒரு இன்ட்ரஸ்ட் வேண்டாமா? சரி சரி. சாயங்காலமா ரோட்டுப் பக்கமா இருக்கிற வீட்டுக்கு வா, பேச வேண்டியதைப் பேசிக்கலாம. ஏதாவது ஒரு வழி பண்ணப் பாக்கேன்.' அங்கே பேசுறத இங்கேயே பேசலாமே. நீங்க எனக்கு அப்பா, மாதிரி. சொந்த மகள மாதிரி கேக்கேன் . இன்னும் ஒரு மாதம் வேலையில் இருந்தால், வீட்டுப் பிரச்னையை குறைக்கலாம். மெழுகாகக் குழைந்த தங்கப்பாண்டி, இப்போது மின் ரக் கம்பம்மாதிரி நிமிர்ந்து கொண்டார். ரப்பர் மாதிரி இருந்த முகத்தை, இரும்புமாதிரி ஆக்கிக்கொண் டார் அப்பாவாம்... அப்பா... அடேயப்பா. ” லீவ் வேகன்ஸி முடிஞ்சுட்டுதுன்னா, நான் என் னம்மா பண்ண முடியும்? இப்போ யாரும் லீவுல போகல. யாரையும் நான் போகச் சொல்லவும் மாட்டேன். அவங்களா போனால் ஏதாவது செய்யலாம்.' தங்கப்பாண்டி பேச்சை முடிக்கும் முன்னாலயே சரஸ்வதி அங்கே நுழைந்தாள். 'எனக்கு மூணு மாசம் வீவு இருக்கு, மாரிக்காக நான் வேணுமுன்னால் ரெண்டு மாசம் லீவுல போறேன்.' தங்கப்பாண்டி, கோபப் பாண்டியானார். சரஸ்வதி யைப் பார்த்து திரும்பிய திரும்பலில் சுழல் நாற்காலி கிரீச் சிட்டது. அதன் கால்கள் பின்னால் நகர்ந்தன. மேஜை முன்னால் நகர்ந்தது. பல்லைக் கடித்துக்கொண்டே கேட்டார்:

'நீ இன்னும் வீட்டுக்குப் போகலியா? அத்தை ஆளனுப்பி அரைமணி நேரமாவுது, இன்னுமா போகல? ஒஹோ... அம்மா தியாகம் செய்ய வந்திருக்கியளோ? ஒங்களுக்கு ஒரு சிலை வச்சுட வேண்டியதுதான். மூஞ்சை யும் முகரக் கட்டையையும் பாரு. இரும்பு அடிக்கிற இடத்துல ஈய்க்கு என்ன வேலன்னேன். சீக்கிரமா வீட்டுக்குப் போ. மாட்டுக்குப் புண்ணாக்கு கலக்கணு மாம் இன்னுமா நிக்கே?' சரஸ்வதி, அவரைப் பார்த்து ஏதோ சொல்லப் போனாள். முகத்தாட்சண்யமோ, அல்லது தாத்தா காலத்தில் இருந்து கொத்தடிமையாக வேலை பார்த்த தால் ஏற்பட்ட வேர்வையே ரத்தவோட்டமாக மாறி விட்டதாலோ என்னவோ, அவளால் பேச நினைத்தும் பேச முடியவில்லை. மாரியம்மாளை ஒரு தடவையும், தன்னைத்தானே இரு தட வையும் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டு, வெளியேறினாள். மானேஜரின் வீட்டுக்குப் போகாமல் நேராக வகுப்புக்குப் போனாள். தங்கப்பாண்டி, மாரியம்மாளை கம்பீரமாகப் பார்த்துப் பேசினார்: "சரிம்மா, சீக்கிரமா ஊர்ப் போய்ச் சேருங்க. எனக்கும் வேல இருக்கு.' 'என் சம்பளத்த இன்னும் கொடுக்கலியே?' 'எந்தச் சம்பளம்? போன மாதச் சம்பளம்.' 'தெரியாமத்தான் கேக்கேன், சண்டை போடணு முன்னே வந்திருக்கியா?' 'எனக்குச் சணடையில அடிபட்டுத்தான் பழக்கமே தவிர, அடிச்ச்ப் பழக்கமில்ல ஸார். வேலை பார்த்ததுக்கு சம்பளம் கேக்குறேன், அவ்வளவுதான்.'

'ஒன்னோட பெரிய தொணதொணப்பா போயிட்டு. ரெண்டு மாதச் சம்பளத்துல, ஒரு மாதம் உனக்கு, இன் னொரு மாதம் எனக்குன்னு பேசித்தான் ஒன்னை நியமிச்சது. இது தா ன், ஒன்னை கூட்டிக்கிட்டு வந்தானே... ஒன் அக்கா புருஷனோ... அத்த புருஷனோ... ராமசாமி... அவன்கிட்ட பேசி, முடிவு பண்ணுன விவகாரம். போய் அவனைக் கூட்டிக்கிட்டு வா." 'ஸார், தொண்டை கட்டும்படி பாடம் நடத்துனது நான். ராமசாமி இல்ல.' 'இப்போ என்ன செய்யனுங்கற?" 'சட்டப்படி சேர வேண்டிய சம்பளத்த தர ச் சொல்றேன்.' 'சட்டப்படி ஒனக்குத் தரவேண்டியதில்ல நீ கையெழுத்துப் போட்டுக் கொடுத்தாச்சு, 'ஸார், நீங்க சம்பளம் தராம நான் போகமாட்டேன். போக முடியாது.' 'என்னடி நினைச்சிக்கிட்டே, பறமுண்ட ஊருக்கு ஒழுங்கா போய்ச் சேரனுமுன்னு நினைக்கியா, இல்ல வழியிலயே யாரையாவது விட்டு தூக்கிட்டுப் போகச் சொல்லணுமா? தப்பு என் மேலத்தாண்டி. முதல் மாதமே சம்பளத்த எடுத்திருக்கணும். முள்ளங்கிபத்த மாதிரி முழுசா தந்தேன் பாரு...நீ ஏன் பேசமாட்டே? ஒன் பறப்புத்திய காட்டிட்டல்லா...' எதிர்பாராத 'அடிப் பேச்சால், மாரியம்மாள் அதிர்ந்துவிட்டாள். உடம்பு முழுவதும், அக்கினிக் குழம்பானதுபோல் எரிந்தது. இவன், இவ்வளவு மட்டமான மனுஷனா? இவன், நான் சம்பளம் கேட்ட துக்காக இப்படிப் பேசல. அவன் மறைமுகமாக் கேட்டத கொடுக்காததுக்காக இப்படிப் பேசுறான். இவனை என்ன செய்யலாம்? என்ன செய்தாலும் தகும். என்ன செய்ய

முடியும்? இந்த ஏழப் பெண்ணால என்ன செய்ய முடியும்? அழலாம். ஆண்டவன் கிட்ட முறையிடலாம்...வேறு யார் கிட்ட முறையிடலாம்? யார் இருக்கா? கடவுளே ...அடி என்று சொன்ன இவன் ஒடம்புல ஒவ்வொரு அடியும் புழுத்துப் போகனும், பற முண்டன்னு கேட்ட இவன யாராவது கைவேறு, கால்வேறா வெட் டிப் போடணும். எனக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேனும். பக்கத்துல இருக்கிற சேரியில என்னோட ஜனங்களோடு என்னை ஐக்கியப்படுத்திக் கொள்ளாமல், இந்தக் கிராமத்துல தனியா வீடுயெடுத்து, தனிச் சா இன்னு காட்டிக்கிட்ட என் புத்திய செருப்பால அடிக்கணும்." மாரியம்மாள், விக்கித்து நின்றாள். விம்மலை அடக்க முடியாமல் அடக்கினாள். சுவரைப் பிடித்துக்கொண் டாள் இன்னொரு கையால் சுக்கு நூறாகப் போவது போல் துடித்த தலையைப் பிடித்துக் கொண்டாள். தங்கப் பாண்டியை எரித்துவிடுபவள் மாதிரி பார்த்தாள். பிறகு எரிக்கப் போகிறவள் போல பார்த்தாள் ஏதோ ஒரு வைராக்கியம் நெஞ்சில் நெருப்பாகி, இமையில் முட்டிய கண்ணிர் எரிமலைக் குழம்பாக வடிய, வெளியே வந்தாள். ‘என்ன ஆச்சு' என்று கேட்டுக் கொண்டு, அவளை எதிர்கொண்டழைப்பவள்போல வந்த சரஸ்வதியின் மார்பில் சாய்ந்தாள். கழுத்தைக் கட்டிக்கொண்டு, விம்மல்கள் வெடிப்புக்களாக, கண்ணிர் வெள்ளமாக, உள்ளத்தில் ஏற்பட்ட கதறல், உதடு வழியாக சன்னமான ஒலமாக, ஒப்பாரியாகக் கேட்டது. எல்லா ஆசிரியஆசிரியைகளும் அவளைச் சுற்றி வந்து நின்று கொண்டார் கள் சரஸ்வதி, அவள் முதுகை ஆதரவாகத் தட்டிவிட்டு, பிறகு அவள் முகத்தை நிமிர்த்தினாள். என்ன நடந்தது என்று எல்லோரும் கண்களாலேயே கேட்டார்கள் . காரைக் கட்டிடத்தில் இருந்த வேலாயுதம் படபடப்போடு வந்தான்.

மாரியம்மாள் விக்கிக்கொண்டே 'நான் பறமுண்ட யாம், ஆளவச்சி தூக்கிட்டுப் போகச் சொல்லுவானாம்' என்று சொன்னபோது, எல்லோரும் சப்த நாடிகளும் அடங்கி, அடங்கியவை ஆக்ரோஷமாக எழுந்ததுபோல் மானேஜர் அறையைப் பார்த்தார்கள். தங்கப்பாண் டி. சாவகாசமாக வெளியே போய்க் கொண்டிருந்தார். தையல் ஆசிரியன், தோல் பையைத் தூக்கிக்கொண்டு, அவர் பின்னால் ஒடிக் கொண்டிருந்தான். மாரியம்மாள், கண்ணிரைத் துடைத்துக்கொண் டாள், சோகத்தால் கீறப்பட்ட முகத்தோடு, 'நான் போறேன்' என்று சொல்லிக் கொண்டு, நான்கடி நட, ந்து விட்டு மீண்டும் திரும்பி வந்து, சரஸ்வதியின் கழுததைக் கட்டிக்கொண்டு, மீண்டும் கேவிக்கேவி அழுதாள். 'எனக்குப் பயமா இருக்கு. வழில...அவன் சொன்னது மாதிரி...சொன்னது மாதிரி...' என்று சொல்லிவிட்டு, எல்லோரையும் அவள் பரிதாபமாகப் பார்த்தாள். உடம்பின் எங்கோ ஓரிடத்தில் முளைத்திருந்த வீரம், சரஸ்வதியின் வாய்க்கும் கண்களுக்கும் தாவியது: "நீ கவலப்படாத மாரி. எந்தப் பய வரான்னு பார்த்துப் புடுவோம். மொதல்ல என் வீட்டுக்கு வா. சாயங்காலமா எங்கப்பா மரம் வெட்டிட்டு வருவாரு. அவர...ஒன்ளை ஒன் வீட்லயே கொண்டுவிடச் சொல்றேன். வழில... எவனாவது வந்தாமுன்னா, கோடாரியாலயே விறகக் கீறுறது மாதிரி கீறிப்பிடுவாரு. வா...எங்க வீட்டுக்குப் போகலாம்...' சரஸ்வதி, மாரியை தோளோடு சேர்த்து அனைத்துக் கொண்டாள். இந்திராவும் தங்கப்பாண்டியின் ஆசிரிய மச்சான்' கோவிந்தனும், இன்னும் ஒரு ஆசிரியரும், பல்லைக் கடித்துக் கொண்டார்கள். சீனிவாசன், முக்கியப் பிரச்சினைபற்றிக் கேட் டார். 'நேற்றே கையில காசு இல்லன்னு சொன்னியே? பஸ்ஸுக்கு காசு வச்சிருக்கியா?”

மாரியம்மாள் வெறுமையோடு பார்த்தாள். தன் மானத்திற்கும், பிரத்யட்ச நிலைக்குமிடையே தவித்துக் கொண்டு அவரைப் பரிதாபமாகப் பார்த்தாள். உடனே, பெரும்பாலான ஆசிரியர்கள் தங்களிடம் இருந்த எட்ட ணா, ஒரு ரூபாய் சொத்துக்களைப் பிரித்தார்கள். ஏழரை ரூபாய் தேறியது மாரியம்மாள், கூனிக் குறுகக் கூடாது என்பதற்காக, சீனிவாசன், வசூலித்த பணத்தை சரஸ்வதியிடம் கொடுத்தார். சரஸ்வதியின் அணைப்போடு போறேன், போறேன். ஒங்கள இனிமேல் எந்தக் கா லத் து ல பார்க்கப் போறேனோ என்று அழுதழுது சொல்லிவிட்டு, மாரியம்மாள் விம்மினாள். சீனிவாசன் கண்களைத் துடைத்துக் கொண்டார். தலைமை ஆசிரியர் தங்கச்சாமி, காரைக் கட்டிடத்தின் வாசலில் நின்றுகொண்டே, அழப்போவதுபோல் பார்த்தார். கனகம் ஒடிப்போய், மாரியின் கழுத்தைக் கட்டிக்கொண்டே விம்மினாள். இந்திராவிற்குக்கூட கண் கலங்கியது. கண் கலங்கி நின்ற வேலாயுதம், போகப் போகிறவளை, கண்களால் வழி மறிப்பதுபோல் பார்த்தான். அந்தக் கட்டிடமே அவனுக்குச் சமாதியாகத் தெரிந்தது. 'மாரி நீயாவது உயிரோ. போற. இனிமேல் நான்...இங்கே...உயிரில் லாமல் தான் இருப்பேன் மாரி...' மனதில் லேசாக வந்துபார்க்கும் வேலாயுதத்தை, மாரியம்மாளும் தனிப்படுத்தி’ப் பார்த்தாள். தங்கப் பாண்டியின் பேச்சால், இதுவரை, தனக்கும் ஒரு நேசன் இருந்தான் என்பதை தற்காலிகமாக மறந்துபோன பெண், அவனை நினைவுபடுத்திக்கொண்டு பார்த்தாள். ஏதோ ஒன்றை-விடக்கூடாத ஒன்றை-அங்கேவிட்டு விட்டுப் போவதுபோல் துடித்தாள். இருப்பது வரைக்கும் பெரிதாகத் தெரியாத ஒன்று இழக்கப்படும்போது, அவளை இழுத்துப் பிடித்தது. கண்களை கைகளால் மூடிக்கொள்ளச் செய்தது.
----------

2. கேள்வித் தீ - அத்தியாயம் 5

பள்ளிக்கூடம் மாறிவிட்டதா அல்லது, தான் மாறி விட்டோமா என்று யோசித்துக் கொண்டே, சரஸ்வதி, மறுநாள் பள்ளிக்கூடத்திற்குள் நுழைந்தாள். ஆசிரியஆசிரியைகள், கும்பல் கும்பலாக நின்று பேசிக்கொண்டு நின்றார்கள். இன்னும் 'பிரேயர்' மணி அடிக்கவில்லை. மாரியம்மாளின் ஆறாவது வகுப்பு மாணவ-மாணவிகள் எதையோ பறிகொடுத்தவர்கள் மாதிரி பேந்தப் பேந்த விழித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு சிறுமி, சரஸ்வதி யிடம் வந்து டீச்சர்...எங்க டீச்சர் இனிமேல் வரவே மாட்டாங்களா என்று சொன்னபோது, சரஸ்வதிக்கு கண்கள் நிறைந்தன. இழப்பின் ஆற்றாமையில் அல்லாடிக் கொண்டிருந்தவள், சீனிவாசன் ஆசிரியரிடம் எதையோ விவாதித்துக் கொண்டு நிற்கும் இளைஞனைப் பார்த் தாள். அவள் மனம் மறக்க நினைத்தாலும், மறக்க முடியாத சண்முகம், எல்லோருடைய ஆடைகளையும் மறைக்கும்படியும், மறக்கும்படியுமான பளிச்சென்ற’ ஆடையில் தோன்றினான். 'அப்பாடா பார்த்து எவ்வளவு நாளாச்சு...ரொம்ப ஸ்டைலாதான் இருக்கார். கிராப்பக் கூட மாத்திக்கிட்டார் போலுக்கு. மதுரையில வைகை ஆறு, ஆசாமிய தளதளன்னு மாத்திட்டு.' சரஸ்வதி, பத்தடி இடைவெளியை, மூன்றே எட்டில் முடித்துவிட்டு, சீனிவாசன் அருகே போய் நின்றாள். அவனைப் பார்க்காதது மாதிரியான 'பாவலா கண்க ளுடன், அவன் வருகை தன்னை ஒன்றும் பாதிக்கவில்லை என்பதுபோல நின்றாள். அவரே பேசட்டுமே..."

அவளை அப்போதுதான் கவனித்த சண்முகம் 'உச்சர் ஒங்களுக்கு வயசு நூறு...' என்றான். சரஸ்வதி குறும்பாகக் கேட்டாள்: ‘'இப்பவா? பிறகா?' 'இப்பன்னுகூட சொல்லலாம். ஏன்னா... ஒங்க குடும்பத்துக்கும், மானேஜர் குடும்பத்துக்கும் இருந்த ஆண்டான்-அடிமை உறவைப் பார்த்தால் ஒங்களுக்கு நூறு வயது வருவது வரைக்கும் அடிமைப் புத்தியில இருந்து மாறமாட்டிங்கன்னு நினைச்சேன். நீங்க என்னடான்னா, ஒரு நொடில மாறிக் காட்டிட்டீங்க. ' அவள் அவனைப் பொய்க் கோபத்துடன் பார்த்தாள். பிறகு அப்பா ஒங்கள திருநெல்வேலியில பார்த்தா ராமே' என்றாள். அப்பா என்ற வார்த்தையை ஒங்க மாமனார்' என்று மனதுக்குள்ளேயே சொல்லிக்கொண் டாள் சீனிவாசன் துளைத்து எடுத்தார்: "அப்புறம் சொல்லுடே....மாரியம்மாள மாவட்டக் கல்வி அதிகாரிகிட்ட கூட்டிக்கிட்டுப் போனே... அப்புறம்?’’ 'அவர்கிட்ட நடந்த விஷயத்த விளக்கினேன். மாரியம்மாளை ஒரு கம்ப்ளெயின்ட் எழுதிக் கொடுக்கச் சொன்னார். அதே சமயத்தில், சம்பளப் பட்டியலுல, அவள் கையெழுத்து போட்டிருக்கதுனாலே, மானேஜர், மான நஷ்ட வழக்குப் போட்டால், தான் ஜவாப்புல்லன் லும் எச்சரித்தார் 'ஏதேது, இந்த ஆசாமியே தங்கப்பாண்டிக்கு சொல்லிக் கொடுப்பான் போலுக்கு...' 'அவர் மாரியம்மாளோட மனுவ வாங்கிக்கிட்டார். "ஆவன செய்யுறேன்’னு சொன்னார். இதுக்கெல்லாம் அவங்களை எதிர்பார்க்கப்படாது. கோளாறு நம்மகிட்ட தான் இருக்கு.'

சரஸ்வதியால் பேசாமல் இருக்க முடியவில்லை. மனதுள் பயமாகத் தோன்றிய சந்தேகத்தை, வாய்விட்டே கேட்டாள். 'மாரியம்மாளுக்கு ஆறுதல் சொன்னிங்களா? எங்கப்பாவை போகச் சொல்லிட்டு, நீங்க அவளை ஊர்ல கொண்டு விட்டுவிடுறதாய் சொன்னீங்களாம்.' "ஆமாம்...நான்தான் வீட் ல கொண்டுவிட்டேன். அவங்க குடும்ப நிலைமை ரொம்ப மோசமாக இருக்கு, இந்தப் பொண்ணு வேலைக்கு வந்த பிறகுதான், அந்த வீட் ல ராத்திரி தீ மூட்டி இருக்காங்க.’’ "மாரியோட பtrவம் மானேஜரை சும்மா விடாது. ’’ 'பாவ புண்ணியத்தைப் பேசிப் பேசியே நாம் அழிஞ்சி போயிட்டோம். பாவம்... அது பாட்டுக்கு பாவம் கிடக்கட்டும். நாம ஏதாவது செய்யனும்...' 'மதுரை டிரெயினிங் ஒங்கள ரொம்பத்தான் மாத்தி யிருக்கு 5 p. 'உண்மைதான். டிரெயினிங்குன்னு பார்த்தா, அது சரியான குப்பை, ஆனால், அங்க பல்வேறு வகையான ஆசிரியர்களை பார்க்க முடிஞ்சுது. நம்ப மானேஜ்மெண்ட் சங்கதியக் கேட்டுட்டு, நம்பளத்தான் குற்றம் சொல் றாங்க. பல இடங்கள்ல இநத மாதிரி அக்கிரமங்கள் நடந்ததை எதிர்த்து, ஆசிரியர்கள் போராடி ஜெயிச்சு கிட்டு வாராங்களாம். ஆசிரியர்களை எம்ப்ளாய்மெண் ட் ஆபீஸ் மூலந்தான் நியமிக்கணுமுன்னு சட்டம் வந்ததே, ஆாம்பப்பள்ளி ஆசிரியர்களோட போராட்டத்தாலத் தான். பெடரேஷன் செகரட்டரியப் பார்த்தேன். நடக்கிற அநியாயத்தெல்லாம் சொன்னேன். எல்லாத் தையும் பொறுமையாக் கேட்டுட்டு, கடை சில ஒங்களத் தாய்யா மொதல்ல உதைக்கணு"முன்னார். சம்பளத்துல கமிஷன் கொடுக்கதுக்கு வெட்கப்படாண்டாமான்னு கேட்டார். 'மதிய உணவு பொய்க்கணக்கு எழுதறது

மானமுள்ள ஆசிரியர் செய்யுற வேலையா'ன்னு கேட்டார். நான் ரெண்டும் இல்லாதவன் மாதிரி தலை யைக் குனிஞ்சேன். சரிசரி... மொதல்ல சங்கத்துல சேருங்க, எல்லாம் சரியாயிடும்’ என்றார்.' இந்தாங்க... உறுப்பினர் பாரம். பில்லப் பண்ணித தாங்க. சீனிவாசன் சலிப்போடு சொன்னார்: "இந்த சங்கம் கிங்கமுன்னு பேசா தீங்க. எல்லாம் அசிங்கம். நான் முன்னால ஒரு சங்கத்துல இருந்தேன். அதன் முக்கியஸ் தரில் ஒருத்தன், கார் பங்களா வாங்கிட்டானாம். இன்னும் கணக்கே கொடுக்கலியாம்.' 'குழந்தை பிறக்கும்போது, கொடி சுற்றித்தான் பிறக்குது. கொடியை அறுத்துட்டு குழந்தய பிரிக்கலியா? இதுமாதிரிதான், நல்லது செய்யும்போது கெட்டது கூடவே வரும். நல்லதைப் பிரித்து காப்பாத் தாண்டாமா? இந்த பெடரேஷனுக்கு ஒரு திட்டவட்டமான பொருளா தாரக் கொள்கை இருக்கு. பழைய சங்கக் காரியதரிசி, எல்லா ஜாதியையும் மதிச்சவரு. இந்த சங்கத்துக் க ரிய தரிசி, எல்லா ஜாதியையும் மிதிக்கவரு. என்ன யாருமே பாரத்த வாங்க மாட்டே ங்கறீங்க? ஒங்கள யாராலும் காப்பாத்த முடியாது சாமி. கடவுளாலயும் முடியாது. தங்கப்பாண்டி பிறக்கல... நீங்கதான் பிறக்க வச் சிருக்கீங்க.' சரஸ்வதிக்கு, அவன் பேசப் பேச, ஏதோ புயாத ஒன்று, புதிரான மாயையை விலக்கிக்கொண்டு, விஸ்வ ரூபத்துடன் நிற்பதுபோல் தோன்றியது. சண்முகத் தையே, விழியசையாது பார்த்த ோது, சீனிவாசன் மன்றாடினார். "கொஞ்சம் விட்டுப் பிடிப்போம். இவன் கிட்ட இருக்கிற பிடியை மொதல்ல எடுத்துக்குவோம். ஆனால் நான் கொடுத்திருக்கிற பிடி, அசல் மரணப் பிடி.'

'பிடிபடாமல் ஏன் சார் பேசு நீங்க? 'எப்படிடே சொல்லுதது ?" ஆசிரியை பார்வதி குறுக்கிட்டாள். 'ஒங்க சங்கதி தெரியும் ஸார். அஞ்சு வருஷத்துக்கு முன்னால, ஆக்டிங் ஹெட்மாஸ்டராய் இருக்கையில, மானேஜர் தூண்டு தலால் ஒண்ணுமே படிக்காத மேலத்தெரு’ அருணா சலததுக்கு. எட்டு படிச்சதா பொய் சர்டிபிக்கட் கொடுத்தீங்க. அதத்தான சொல்ல வாlங்க?' அதேதான். ஏதோ பியூன் வேல கிடைக்கப் போகு துன்னான். தங்கப்பாண்டியும் கொடுன்னான். சரி... நம்மளால ஒருவனுக்கு வேல கிடைக்கப் போகுதுன்னா, 'இடுலார் பிச்சை கொடுவார் கெடுப்பார்' என்கிற மாதுரி ஆகக்கூடாதுன்னு கொடுத்தேன்.' ஒண்ணும் படிக்காதவனுக்குக் கொடுக்கலாமா?’’ 'இந்த ஸ்கூல்ல, எட்டு படித்தவனுக்கு மட்டும் என்ன தெரியும? தங்கப்பாண்டிக்கு முழுக்கள் னா என்னன்னா தெரியல சரி...விடு கழுதய சரி...கொடு ததேனா, கொடுத் தேன் அப்புறம் விசாரிச்சுப் பார்த்தால் தங்கப்பாண்டி அவன் கிட்ட நூறு ரூபாய் வாங்கியிருக்கான். எனக்கு பைசா தரல. அப்படிப் பாக்காதடே. சரி..போவட்டும். ஒரு நாள்..."ஒரு நாளைக்காவது மத்தியானச் சாப்பாடு போடாண்டாமா'ன்னு கேட்டேன் அவ்வளவுதான்... தங்கப் பாண்டி யாரையோ விட்டு நான் பொய் சர்டிபிக்கட் கொடுத்ததாய் ஒரு கம்ப்ளெயிண்ட் எழுதச் சொல்லி என்கிட்ட விளக்கம் கேட்டான். கதையை எப்படித் திருப்பிட்டான் பாரு? சஸ்பெண்ட் பண்ணுவேன் னான் அவன் காலு கையில விழுந்து ஒரு மன்னிப்பு லட்டர் எழுதிக் கொடுத்தேன். அஞ்சு வருஷத்துக்கு முன்ன எழுதிக் கொடுத்த த இன்னும் அப்படியே வச்சிருக் கான். இவ்வளவுக்கும் தென்காசில பிரிண்டா ன

'டி.ஸி பாரத்தை தந்ததே அவன்தான். நேற்றுகூட, ஒரு "கீறல் பயலுக்கு ஆறு படிச்சதா கொடுத்தான். ஆனால் ரேட்ட கூட்டியிருப்பான். விலைவாசி கூடிட்டுப் பாரு. எல்லாம் தலைவி தி. என்னை மாதுரி சொத்து பத்தோ, சொந்த பந்தமோ இல்லாதவன் கதை ஆப்பசைத்த குரங்கு மாதிரித்தான். செய்தாலும் குற்றம், செய்யாட்டாலும் குற்றம்.' சண்முகம் அமைதியாகப் பதிலளித்தான். 'நான் சொன்ன பெடரேஷன் ஒமக்கு சொத்து மாதிரி; சொந்த பந்தம் மாதிரி.’’ "சரியான ஆளுப்பா நீ. பேச்சில மடக்கிப் போட்டே. இருந்தாலும்...' சரஸ்வதி, பொறுமை இழந்தாள். 'சண்முகம் ஸார், என்கிட்ட ஒரு பாரம் தாங்க. நான் ஒங்களோட சேரத் தயார். ஸாரி...பெடரேஷன் ல சேரத் தயார். நம்ம சீனிவாசன் ஸாருக்கு பையங்களுக்கு மட்டும் ஏ ரெண்டே, ஒன்கிட்ட ஒண்ணப் பிடுங்கப் போறேன்னு' சொல்லத் தெரியும். வேற வழியில்லாமல் செய்கிற தப்பு தப்பாகாதுன்னு அவரு புரியமாட்டாரு. இவ்வளவுக்கும் அவர் மகளை நேற்று புருஷன் வீட்டுக்கு அனுப்ப முடியல. கொடுங்க ஸார் பாரத்த." சண்முகம், சரஸ்வதியிடம் நீட்டிய பாரத்தை, இனிவாசன் பலாத்காரமாகப் பிடுங்கிக் கொண்டார். இதற்குள், காரைக் கட்டிடத்தில் இருந்து வந்த ஆசிரியை கனகம், "நான் மானேஜர் ரூமுக்கு தற்செயலாப் போனேன். ஆறு பேர், ஆறு மாதத்துக்கு முன்ன போட்ட ஜி.பி எப். லோன் அப்ளிகேஷன் எல்லாம், அவரோட ரேக்குல கிழிஞ்சி போய்க் கிடக்கு அவங்க என்னடான்னா லோன் இன்னைக்கு வரும், நாளைக்கு வருமுன்னு,

எதிர்பார்த்துக்கிட்டு இருக்காங்க...இந்த லட்சணத்துல நான் வேற லோன் போடப் போனேன்' என்றாள் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் பதறினார்கள். சண்முகம், சிரித்துக் கொண்டான். அவன் சிரித்ததால், தன்னையறியாமலே தானும் சிரித்த சரஸ்வதி 'ஏன் ஸார், அவங்க சொல்றது ஒங்களுக்கு சிரிப்பா இருக்கா?’’ என்றாள் சண்முகம் மேலும் சிரித்துக்கொண்டே விளக்கினான்: 'நம்ம அடிப்படைச் சம்பளத்துல ஆறு சதவிகிதத்தை மானேஜ்மெண்ட் பிடிச்சு, போஸ்ட் ஆபிஸ்ல போடணும். இதற்கான பாஸ் புக் சட்டப்படி நம்மகிட்ட இருக்கணும். இங்க நடக்கது என்ன? ரெண்டு வருஷமா நம்ம மானேஜர் நம்ம சம்பளத்துல பிடிச்சி, பணத்த போஸ்ட் ஆபீஸ்ல போடல. அதனால விண்ணப் பங்கள அனுப்பல.'" 'இந்த அநியாயத்த கேக்கவே முடியாதா?’’ 'ஏன் முடியாது? அதுக்கு, ஆரம்பந்தான் நாம சங்கத்துல சேருறது. அதோட நாம படுற கஷ்டத்த ஊர்க்காரங்ககிட்ட சொல்லணும். பொதுமக்களை ஈடுபடுத்தாத எந்தப் போராட்டமும் ஜெயிக்காது.' 'ஊருக்காரங்களா? சரியான தின் னிமாடங்கப்பா!' "அப்படிச் சொல்லாதீங்க ஸார். ஜவகர்லால் நேரு, இந்தியாவைப்பற்றி சொன்னது ஞாபகம் இருக்கா? இந்தியா யானை. அது படுத்துக் கிடந்தால் பரமசாது. எழுந்துட்டா எதிரே எதுவும் நிற்க முடியாதுன்னார். இது ஏழைகளுக்குப் பொருந்தும். அவங்கள நாம் எழுப்பி விட்டுட்டோ முன்னால், அப்புறம் நம்மாலகூட உட்கார வைக்க முடியாது." சரஸ்வதி, சண்முகத்தை ஒயிலாகப் பார்த்துக் கொண்டு நீங்க சொன்னதும் சரிதான் சார். நேற்று மாரியோடு சேரிக்குப் போனேன். அந்த ஜனங்களுக்கும்

நாம் அவர்கள நடத்துற விதம் பிடிக்கல ஸார். ஒதுக்கி வச்சிருக்கதுக்கு அவங்களும் உள்ளுர கோபப்பட்டுக்கிட்டு இருக்காங்க. ஊர்ல மொதலாளின்னு" சொல்ற பெரிய மனுஷங்கள சேரில, கெட்ட கெட்ட வார்த்தையில திட்டுறாங்க. நான் இவ்வளவு நாளும், நாம ஒதுக்கி, ஊர்க் கோடியில வைத்திருக்கதை அவங்க தப்பா நினைக்கல்லன்னு நினைச்சிருந்தேன். செல்லாக் கோபம் பொறுமை என்கிறது மாதிரி, சொத்து பத்து இல்லாம, மேல் ஜாதி நிலத்தை நம்பியிருக்கதுனால, அவங்க கட்டாந்தரை மாதிரி பார்க்கதுக்கு தோணுது. ஆனால் உள்ள பூகம்பம் இருக்கு இப்போ நம்ம சேரிகூட மாறிகிட்டு வருது வேணு முன்னா பாரு.ஸ்ாரி, பாருங்க, சாயங்காலமா சேரிக்குப் போய் மாரியம்மாள் மானேஜர் பறமுண் டன்னு சொன்னத டமாரம் போடப் போறேன். மாரி அவங்ககிட்ட சொல்லலியா?’’ 'சொல்லல...இதுவரைக்கும் அங்கே எட்டிப் பார்க் காமல் இருந்துட்டு...அப்புறம் சொல்றது தப்புன்னு நினைச்சாள்.' 'அதுவும் சரிதான்... பாரத்த வாங்குறீங்களா இல்லியா?' பெரும்பாலான ஆசிரியர்கள், பாரங்களை வாங்கிய போது, காரைக் கட்டிடத்தில் இருந்து திடீரென்று தோன்றிய தலைமை ஆசிரியர் தங்கச்சாமி, 'இப்டி மொட்டக் கூட்டம் போட்டா எப்டி? பிரேயர் மணி அடியுங்க' என்றார். சண்முகம், திருப்பிக் கொடுத்தான். 'இது மொட்டக் கூட்டம் இல்ல ஸார், முதல் கூட்டம். எங்கள அதட்டு lங்களே, தங்கப்பாண்டி என்ன தான் மானேஜர் என்றா லும், காலையில் ஒன்பதரை மணியில் இருந்து சாயங்காலம் 4-20 வரைக்கும் ஆசிரியர், ஒங்களோட சபார்டினேட்.

எப்பவாவது அவரை வகுப்புக்குப் போகச் சொல்லி இருக்கீங்களா? கந்தசாமிக் கிழவரோட மெட்ராஸ் போயிருக்காராம். வர ஒரு வாரம் ஆகுமாம். தேதி போடாத ஒரு நாள் விடுப்பு லட்டர எழுதி, ஒங்கட்ட கொடுத்துட்டுப் போயிருப்பாரு. ஒங்களால ஆக்ஷன் எடுக்க முடியுமா? சரி. வந்து நீங்களும் இந்த பாரத்துல கையெழுத்துப் போடுங்க." தங்கச்சாமி, சண்முகத்தை ஒரு மாதிரியாகப் பார்த்துக் கொண்டே, காரைக் கட்டிடத்திற்குள் ஓடிவிட்டார். நடப்பதையும், பேசப்படுவதையும், 'இடுக்கில் நின்று ஒட்டுக் கேட்டுக்கொண்டிருந்த இந்திரா, அந்தப் பக்க மாக வந்தபோது, ஆசிரியை கனகம், "நீயும் சங்கத்துல உறுப்பினராச் சேரும்மா’’ என்றாள். ‘'எதுக்கும் "அவரு'கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக் கிறேன்' என்றாள் இந்திரா. 'ஒன் புருஷன்கிட்டயா' என்று தெரியாதது மாதிரி கனகம் கேட்டதும், இந்திரா தெரிந்தவள் மாதிரி, காரைக் கட்டிடத்திற்குள் ஒடிவிட்ட ாள். சம வயதில் உள்ள சண்முகத்தைப் பார்க்கும்போது, கொஞ்சம் காம்ப் ளெக்ஸ்ாகும் வேலாயுதம், இப்போது அவன் தலைமையை ஏற்றுக் கொண்டதுபோல் பாரத்தை வாங்கிக் கொண் i- s1 & . பள்ளிப் பிரச்னைகள், தமிழ்த் தாயையும் சற்று காக்க வைத்துவிட்டன. பிரேயர் மணி சற்று தாமதமாக அடிக்கப்பட்டது உண்மைதான். இண்டர்வெல் சமயத்தில், மானேஜர் மனைவி ராசம்மா, அங்கே வந்தாள். மானேஜர் ஊரில் இல்லாத போது, ராஜ்ய பரிபாலனம் செய்வதற்கு, அவள் வருவ துண்டு. அதோடு, இந்திராவிடம் நான் எப்பவோ என்

புருஷன தண்ணி தெளிச்சி விட்டது உண்மைதான் ஒனக்கும், அவருக்கும் ஆயிரம் இருக்கதும் உண்மைதான் ஆனாலும் நான்தாண்டி பட்டத்தரசி' என்று ஒரு வருடத்திற்கு முன்பு, அவளைப் பள்ளிக்கூடத்திலேயே பலர்முன்னிலையில் சொன்னவள், இப்போது சொன்னதை சொல்லாமல் சொல்லவும், தங்கப்பாண்டி இல்லாத சமயத்தில் அடிக்கடி வருவாள். அவளைப் பார்த்ததும், மாராப்புச் சேலைகளை சீராக்கிக் கொண்டு வகுப்புகளைப் பார்த்து நகரும் எழுத்தறிவிப்போர், இ. ப் பே ா து கண் எடுக்காமல் நிற்பதில், அவளுக்கு ஆங்காரம் அதிகமாகியது. மாரி விலகாரம் அவர்களை மாற்றிவிட்டது. சண்முகம் பேசியது. அவர்கள் கோபத்தை சராசரிக்கு மேலே கொண்டு போய்விட்டது. ராசம்மா கத்தினாள். "பிள்ளிய கத்துதுல்ல! போய்ப் பாடம் நடத்துனா என்ன?' என்றாள். எல்லோரும், அவள் அருகே இல்லாதது மாதிரி தங்கள் பாட்டுக்குப் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆங்காரம் ஆத்திரமாக, ராசம்மா 'நெல்லு காயப் போடணும். அந்த வகுப்ப காலி பண்ணிக் கொடுங்க. வெளில மழை வரப்போகுது' என்றாள் உள்ளே தோன்றிய இடியை அறியாதவளாய். சண்முகம் சிரித்துக்கொண்டே பதிலளித்தான். இது நெல்லுக்கான இடமில்ல, கல்விக்கான இடம்,' ராசம்மா, அதிர்ந்து போனாள். "தெருவில் பார்க்கும் போதெல்லாம், 'அத்தை' என்ற வார்த்தைக்கு அடுத்த வார்த்த சொல்லாத இந்தப் பையன் என்ன பேச்சு பேசிட் டான்! இந்த சரஸ்வதிகூட குறுஞ்சிரிப்பா சிரிக்கா பாரேன். அவள் சிரிக்கணுமுன்னு இவன் சொல்லியிருக் கான். இவன் இன்னும் சொல்லணுமுன்னு அவள்

சிரிக்காள். வந்தட்டிப்பய மவளுக்குச் சிரிப்பப் பாரு இரப்பாளி பய மவளுக்கு வந்த வாழ்வப் பாரு. முள்ள முள் ளால எடுத்துக் காட்டுறேன் பாருடி!" ராசம்மா, கோபத்தை அடக்கிக் கொண்டு குத்தலாகக் கேட்டாள். 'ஏய் சரசு, நேற்று ஆள் அனுப்பியும் ஏண்டி தண்ணி எடுக்க வரல? தொட்டி காலியாக் கிடக்கு. இன்னைக்கு சீக்கிரமா வந்துடு. கொஞ்சம் பாத்திரத்தை யும் தேய்க்க வேண்டிய திருக்கு! என்ன சொல்லுதது காதுல விழுதா பழையத மறந்துடா தடி. பத்தாவது வயசில இருந்தே என் வீட்டில தண்ணி எடுத்தத மறந்துட.ாதடி .' சரஸ்வதி, சண்முகத்தைப் பரிதாபமாகப் பார்த்தாள். அவன் ‘யாமிருக்கப் பயமேன்' என்பது மாதிரி சிரித்தான். அவ்வளவுதான், எங்கிருந்துதான் அப்படிக் குரல் வந்ததோ, சரியாகக் காது கேளாத தலைமை ஆசிரியரே வெளியே வரும்படிக் கத்தினாள். '"நான் பத்து வயசில தண்ணி எடுத்ததையும் மறக்கல. அப்படி எடுத்தத கேவல மாயும் நினைக்கல. ஒங்கள ஒரு சமயம் கேவலமான நிலையில கையுங் களவுமாகப் பார்த்ததையும் மறக்கல. போறியளா, இன்னும் விவரமா சொல்லணுமா?’’ ராசம்மாவுக்கு முகம் வெளுத்தது. நாக்கு உள் நோக்கிப் போனது. நானே அந்த லிங்கராஜாவ மறந் துட்டேன். இந்த பாவி மொட்ட அத மறக்கலே பாரேன். ராசம்மா, சிறிதுநேரம் பெருவிரலால் தலையில் வட்டம் போடுவதுபோல் சுற்றினாள். நடந்ததை நம்ப முடியவில்லை. நாகப்பாம்பாக வந்தவள் பெட்டிப் பாம்பாக போய்க்கொண்டிருந்தாள். அவள் போவதை, * இடுக்கில் நின்று பார்த்த இந்திராவுக்கு இதமாக"

இருந்தது. குலுங்காமல் நடப்பவள், இப்போது குலுங்கிக் குலுங்கி, சண்முகத்திடம் வந்தாள் 'ஸார், நானும் பெடரேஷன்ல சேருறேன். ஒரு பாரம் கொடுங்க லார், என்ன லார் அப்படிப் பார்க்கறிங்க?" 'ஒண்ணுமில்ல! இந்த அக்காளோட நிலைமையை நினைச்சுப் பார்க்கேன். அழுவுறதா, சிரிக்குறதான்னு தெரியல...' இந்திராவின் குரல் தழுதழுத்தது. சண்முகத்தின் கைகளைப் பிடித்துக்கொண்டாள். சொல்லும்பேர்தே விம்மல் வந்தது 'நீ அக்கான்னு சொன்னதால, சொல்லுதேன் தம்பி. என்னோட நிலைமை அப்படி. நான் அதனாலதான்... அதனாலதான் அப்போ... மட்டும் ஒன்னை மாதிரி ஒரு தம்பி இருந்திருந்தால்...' இந்திராவை எதுவும் பேச வேண்டாம் என்று கையால் சைகை செய்துவிட்டு சண்முகம் விழி பிதுங்க அவளைப் பார்த்தான். பாவம் செய்தவள் அல்ல இவள். பாவமாக்கப்பட்ட வள். பத்து வருடங்களுக்கு முன்னால், இந்த ராசம்மா, இப்போது சரஸ்வதியை எப்படிக் கேட்டாளோ, அப்படிக் கேட்டிருக்கலாம். இவள் அவளைப் பழிவாங்க நினைத்திருந்தால் அது இயற்கை. ராசம்மாவை எந்த வழியிலும் வெல்ல முடியாமல், கடைசியில் இந்த வழியில் வெல்லப் பார்த்திருக்கலாம். ஒரு தப்பை நியாயமாக்க, பல தப்புகள் செய்திருக்கலாம். மனித மனமே விசித்திரமானது... ரோஷம் அதிகமாகும் போது அது தன்னைத்தானே தின்று கொள்கிறது. இயல்பிலேயே ரோஷக்காரியான இந்த அக்காள், ராசம்மா விட ம் தன் ரோஷத்தைக் காட்ட, தங்கப்பாண்டியிடம் ரோஷத்தை இழந்ததுபோல, இவளைச் சொல்லிக் குற்ற மில்லை. ஏழ்மையும், இயலாமையும், சோதனையும், இன்னும் சொல்லப்போனால் தன்மானமும் ஒருசேர வந்தால், கண்ணகிகூட கற்பிழந்திருப்பாள்.'

சிந்தனையிலிருந்து மீண்ட சண்முகம், இந்திராவிடம் அவளை மீட்டவன்போல், 'பாரத்தை நீட்டினான். இந்திரா, அதை வாங்கிக்கொண்டு, வேகவேகமாக நடந்து மானேஜர் அறைக்கு முன்னால் ஏதேச்சையாக நின்றுகொண்டு, கண்களைத் துடைத்துக்கொண்டே “பாரம்" தீர்ந்தவள் போல், அந்தப் பாரத்தைப் பார்த்தாள். -----------

2. கேள்வித் தீ - அத்தியாயம் 6

கணவனுக்குத் தெரிந்தும், அவனுடைய அனுமதி யோடும் சோரம் போகிறவள். நான்குபேர் முன்னிலையில், கணவனிடம் மிகப் பெளவியமாக நடந்துகொள்வாள் என்பார்கள். இதுபோல் சகல சங்கதிகளையும் தெரிந்து வைத்திருக்கும் பள்ளிக்கூட டெப்டி இன்ஸ்பெக்டரின் வருகைக்காக, ஒவ்வொரு வகுப்பும் கிட்டத்தட்ட விழாக் கோலம் பூண்டிருந்தது. இந்தத் தடவை, ஆசிரியர்கள் யாரும் அதிகமாக அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. என்றாலும், ஒரு நிறுவனத்தைக் காட்டிக் கொடுக்கக் கூடாது என்று நினைத்தோ என்னவோ, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் தத்தம் வகுப்புகளில், கரும்பலகையை சுத்த மாகத் துடைத்துவிட்டு, மாணவரின் எண்ணிக்கை, வருகை, வகுப்பு, செக்ஷன் ஆகிய விவரங்களை, கலர் சாக்பீஸ்களால் எழுதிவைத் திருந்தார்கள். பிள்ளைகள் கூட, அன்று தலையில் எண்ணெய் வைத்து, அழுக்கு அதிக மாக இல்லாத ஆ ைட க ேள ா டு இருந்தார்கள். சுண்ணாம்பை, ஐந்தாண்டு காலமாகப் பார்த்தறியாத அழுக்கடைந்த சுவர்களில் சுத்தம் சோறு போடும் கல்வி கண்ணாகும். ஆசானே நடமாடும் தெய்வம்’ என்பன போன்ற வாக்கியங்கள் எப்படியோ கண்ணில் படும்படி

எழுதப்பட்டிருந்தன. கடைசி வாக்கியத்தை தன் வகுப்புச் சுவரில் எழுதிய தங்கப்பாண்டியின் ஆசிரிய-மச்சான் கோவிந்தன், காகிதப் பூக்களை ஒரு சில பகுதிகளில் குறுக்கும் நெடுக்குமாகக் கட்டியிருந்தார். பல வகுப்புகளில் பல புது முகங்கள் வேதப் பள்ளிக்கூடத்தில் இருந்து வந் கிருக்கிறார்கள் இல்லாத மாடக்கண்ணுக்கு, ஜோஸ்ப். ஒடிப்போன உதிரமாடனுக்கு, டேவிட்; பூமாரிக்கு, ரோஸ்மேரி. இப்படிப் பல பெயர் மாறாட்டங்கள்.' டெ ப்டி இன்ஸ்பெக்டர் வேதப் பள்ளிக்கூடத்திற்குப் போகும்போது, இங்கே உள்ள மாடக்கண்ணு வகை யறாக்கள், அங்கே விரட்டப்பட்டு 'தாஸாகவும் ஜெய சீலியாகவும் மாறுவார்கள். இல்லாத செக்ஷன்களை உருவாக்குவதில், இரண்டு பள்ளிகளும் கூட்டணி வைத் துக்கொண்டன. இதில் இளம் பிள்ளைகள் திருட்டணி யாக பயன்படுத்தப்படுவது வழக்கம். சென்னையில் சாராயத்திற்கு சின்னப் பையன்கள் பயன்படுத்தப்படுவது போல! ஒருவார காலமாக சென்னை, மதுரை என்று எங்கெல்லாமோ சுற்றிவிட்டு, தங்கப்பாண்டியும் அன்று தான் ஊருக்குத் திரும்பி வந்தார். மனிதர் எப்போதுமே ஒரே கட்சி... அதாவது ஆளுங்கட்சி. ஜனாதிபதி ஆட்சி நடந்ததால், எப்படி ஆடையணிவது என்று தெரியாமல் குழம்பி, இறுதியில், கதர்வேட்டி, கதர்ச் சட்டையை அணிந்துகொண்டு தோளில் கறுப்பு-சிவப்புத் துண்டை யும் போட்டு டுர் கிளம்பியவர். வீட்டுக்கு வந்து மனைவி மூலமும், மச்சான் மூலமும் நடந்த விஷயங்களைக் கேட்டு விட்டு, நேராக பள்ளிக்கூடத்திற்கு வந்துவிட்டார். பலர் பலவிதமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். எம்.பி.பி.எஸ் சீட்டுக்கு இப்பவே ஆள் பிடிக்கப் போனதாக ஒரு பேச்சு. பள்ளிக்கூடத்தில் ஏதோ ஒரு சிக்கல் இருப்பதாகவும், அதைத் தீர்ப்பதற்காக கந்தசாமிக் கிழவருடன், அவருடைய கொழுந்தியா மகனைப் பார்க்கப் போன தாகவும் இன்னொரு பேச்சு. எ திரும் புதிருமாக உள்ள இரண்டு அரசியல் கட்சிகளின் வேட்பாளர்- 'அறிமுக

விழாக்களில் கலந்துகொள்ளப் போனதாக வேறொரு பேச்சு. இரண்டு பையன்களுக்கு வேலைக்கு சிபாரிசு செய்வதற்காக ஊரான் பணத்தில் போனதாகப் பேச்சு. இதில் ஏதாவது ஒன்றிற்காகவோ அல்லது எல்லாவற்றிற்கு மாகவோ, அவர் போயிருக்கலாம். ஆசாமி, நடந்த விஷயங்களைக் கேள்விப்பட்டதில், லேசாகக் குழம்பியிருந்தாலும், கலங்கியவர் மாதிரி தெரிய வில்லை சம்பளம் கிடைக்காததால், ஆசிரியர்கள் வயிற்று வலியில் ஏதோ பேசியிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு, தலைக்கு ஐம்பது ரூபாய் கமிஷனை எடுத்துக் கொண்டு, மீதிப் பணத்தை, தையல் ஆசிரியப் பையன் மூலமாக அந்தந்த ஆசிரியர்கள் வீட்டிலேயே பட்டுவாடா செய்துவிட்டார். சண்முகத்திற்கு மட்டும் சம்பளம் இல்லை. ஆன்டுடியில் பயிற்சிக்குப் போனவன்; இனி மேல்தான் பேபில் எழுத வேண்டும். சம்பளம் கொடுத்து விட்டதால் ஆசிரியர்கள் சரிபாயிருப்பார்கள் என்று அவர் நினைத்தபோது, சண்முகம் சொன்னபடி சங்கத்தில் சேர்ந்ததால்தான் தங்கபபாண்டி சரியாகி இருக்கான் என்று ஆசிரியர்கள் நினைத்துக்கொண்டார்கள். என்றாலும், எவரை மன்னித்தாலும், சரஸ்வதியை மன்னிக்க அவர் தயாராக இல்லை. அவளுக்கு, குறி போட்டு விட்டவர்போல், கண்களை மூடிக்கொண்டு, தலைகளை ஆட்டிக்கொண்டார். எல்லாவற்றிற்கும் காரணமான சண்முகம்மீது அவருக்கு வருத்தம் ஏற்பட் டதே தவிர, இன்னும் கோபம் வரவில்லை. உள்ளுரில் ஒரளவு வசதியான பையனான அவனுக்கு, எஸ் எஸ்.எல். சியில் தள்ளோ தள்ளென்று தள்ளியும், தேற முடியாமல் போன தன் ஒரே மகள் அகிலாவை, கட்டி வைத்துவிட வேண்டும் என்பது அவர் திட்டம், அதனால்தான், போன வருஷம் அவனை பள்ளியில் நியமித்தபோது, வழக்கமாக வாங்கும் ஐயாயிரத்தை அவர் வாங்கவில்லை. பெண்

ஆசிரியைகளை நியமித்தால் அவர்கள் கல்யாணத்தோடு புருஷன் வீட்டுக்குப் போகும்போது, ஒரு வேகன் ஸி' வரும். அதில் மேற்கொண்டும், ஐயாயிரம் தேறும். ஒவ்வொரு ஆசிரியைக்கும் இப்படித் திருமணமாகும் போது, இவருக்கும். வரதட்சினை மாதிரி பணம் வரும். ஆண்களை நியமித்தால், அவர்கள் கல்யாணம் செய்து விட்டு, தங்கள் மனைவிகளுக்கும் உத்தியோகம் கொடுக்கச் சொல்வார்கள். இதனால் பெண்களை மட்டுமே நியமிக்கும் தங்கப்பாண்டி, தன் ஒரே பெண்ணிற்காக, அந்த ஆணை நியமித்தார். ஐயாயிரம் ரூபாய் கமிஷனை வரதட்சணையில் பததாயிரமாகக் கழித்துககொள்ளலாம் என்று அவர் கழித்துக்கொண்டிருந்தபோது, சண்முகம் இப்படிச் செய்திருக்கிறான். இருந்தாலும் அவன்மீது வெறுப்பு ஏற்படவில்லை. ஒரு மாமனாருக்குரிய பொறுமையைக் கடைபிடித்தார். மகளைக் கட்டியவுடன், அவன் சரியாகிவிடுவான் என்பது அவர் எண்ணம். இப்படிப் பலர் ஆகியிருப்பதை அவர் பார்த்திருக்கிறார். 'ஆனால் இந்த சரஸ்வதி இரு... இரு... ஒப்பனமாதிரி ஒன்னையும் மரம் வெட்டப் போக வைக்கேன்." இந்திரா, இன்னும் தன் அறைக்கு வராதது அவருக்கு ஏமாறறமாக இருந்தது. ஒரு வாரமாச்சுது, ஏன் வரல? டெப்டி இன்ஸ்பெக்டர் வாரதுனால வகுப்புல இருப்பாள். இப்போ இருக்கட்டும். சுழல் நாற்காலியைப் போல், சிந்தனையையும் சுற்ற விட்ட தங்கப்பாண்டி, திடீரென்று எழுந்து வெளியே ஒடினார். டெப் டி-இன்ஸ்பெக்டர் வந்துகொண்டிருந் தார். அவரை எதிர்கொண்டழைத்து, சுழல் நாற்காலியில் உட்கார வைத்தார். காபியையோ, கலரையோ அல்லது இரண்டையுமோ குடித்துவிட்டு, இருவரும் ஒவ்வொரு வகுப்பாகப் பார்வையிட்டார்கள். தொட்டால் சுருங்கி"

போல் முகஞ் சுருங்கி, உடம்பு ஒடுங்கியிருந்த மூக்குக் கண்ணாடி-டெப்டி இன்ஸ்பெக்டர், வகுப்பு வகுப்பாக, மாணவர் வருகைப் பதிவேட்டைப் பார்த்தார். ஒவ்வொரு வகுப்பிலும் ஏதேதோ கேள்விகள் கேட்டார். மாணவர்கள் அவற்றிற்குத் தயாராக வைத்திருந்த பதில் களைச் சொன்னபோது அவர் தங்கப்பாண்டியிடம் பேசிக் கொண்டிருந்தார். 'இடுக்கில் இப்போது தயாராகும் மதிய உணவைப் பார்வையிட்டுவிட்டு, மானேஜரும், டெபுடியும் ஆறாவது வகுப்பிற்குள் வந்தார்கள். சரஸ்வதி, நாற்காலியில் இருந்து எழுந்து கை கூப்பினாள். அதற்குப் பதிலாக ஒரு கையை லேசாகத் துரக்கிய டெபுடி இன்ஸ்பெக்டர், அவளை, 'கலாபூர்வமாக'ப் பார்த்தார். மற்ற வகுப்பு களில் நின்றுகொண்டே பார்வையிட்டவர், சரஸ்வதியின் நாற்காலியில் உட்கார்ந்தார். எழுந்திருக்கப் போகாதவர் போல் அழுத்தமாக உட்கார்ந்தார். அவளை இம்ப்ரஸ்' செய்ய வேண்டும்போல் அவருக்குத் தோன்றியது. அதட் டலாகக் கேட்டார்: 'சரி... மதிய உணவுப் பதிவேட்டையும், எல்லா வகுப்பு வருகைப் பதிவேடுகளையும், இருப்புப் பதிவேட் டையும் இங்கேயே கொண்டு வாங்க...செக் பண்ணனும் ' அந்தப் பக்கமாக வந்த தலைமை ஆசிரியர் தங்கச்சாமி, திடீரென்று மாயமாக மறைந்து, ஐந்து நிமிடத்தில் சம்பந்தப்பட்ட பதிவேடுகளோடு வந்தார். பிறகு அவற்றை டெப்டியிடம் குனிந்து கொடுத்தார். மதிய உணவுப் பதிவேட்டைப் பார்வையிட்ட டெப்டி, "என்ன இது? ஒரு வ ரமா மதிய உணவு போடலியா?" என்றார் அதடடலாக. பிறகு 'என்ன... ஹெச். எம். ஒங்களத தான்... ஏன் ஒரு வாரமா சோறு போடல?' என்றார் கோபமாக.

தங்கசாமி சரஸ்வதி நீதானம்மா கணக்கு எழுதற! சொலலும்மா' என்றார். அவள் தயக்கமில்லாமல் 'சோறு போடல, அதனால எழுதல' என்றாள். தங்கப் பாண்டி, அனிச்சையாக அடிக்கத் தூக்கிய கையை, கீழே போட்டுக்கொண்டார். டெப்டி-இன் ஸ்பெக்டர், அங்கே இருந்தவர்களை ஒரக்கண்ணால் பார்த்துக்கொண்டே, மதிய உணவுப் பதிவேட்டையும், மாணவர்களை வகுப்புக்களில் கனக் கெடுக்கும் வருகைப் பதிவேடுகளையும் ஒப்பிட்டார். சில குறிப்புகளை எடுத்துக்கொண்டார். பிறகு அதட்டினார் 'ஒங்க பேரு என்னம்மா?' "சரஸ்வதி ஸார்.' நீங்கதான் மதிய உணவு பதிவேட்ல எழுதுனவங்க?" "ஆமாம் ஸார்.' 'ஒங்களுக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருக் காம்மா? வருகைப் பதிவேட்ல, ஆப்ளெண்டான மாணவன், மதிய உணவுப் பதிவேட்ல பிரசண்டாகி இருக்கான் இந்தா பாருங்க, மூணாவது வகுப்பு மூக்கன். இந்த தேதி வரல, சீதேவி வரல, இவங்க மதிய உணவு பதிவேடுப்படி சாப்பிட்டிருக்காங்க. வகுப்புக்கே வராத வங்க எப்படி சாப்பிட முடியும்? கவர் மென்ட், தலைக்கு பத்து பைசா வீதம் கொடுக்கிற பணத்துக்கு கணக்கு எழுதற லட்சணமா இது? மிஸ் அப்ரோபிரியட் பண்ணலாமா? இது கையாடுன குற்றம்... நம்பிக்கை மோசடி, நான் யாரையும் விடப்போறதில்லை. இந்த ரிக்கார்ட்ஸ் எல்லாம் என்கிட்டய இருக்கட்டும்.' தங்கப்பாண்டி குழைந்தார். 'ஏன் டீச்சர், ஒங்க கிட்ட கொடுத்த காரியத்த பொறுப்போட செய் யாண்டாமா? சாப்பிடுறவங்கள சரியா எண்ணிப் பார்க் காண்டாமா? வழக்கமா சோறு போடுவதை சூபர்வைஸ் செய்யுற ஒங்களுக்கு ஏன் இது தெரியல?"

டெபுடி குதித்தார்: 'இதெல்லாம் இர்ரெஸ்பான்ஸி பில், அட்டி ரூட் எஸ்.எஸ்.எல்.சி. படிச்சிட்டு, ரெண்டு வருஷம் டிரெயினிங் வேற அழுதுருக்கீங்க. இதுகூடத் தெரியல. ஹெச். எம்! இனிமேல் இவங்கள கணக்குப் பாடத்த எடுக்கச் சொல்லாதீங்க. மதிய உணவுத் திட்டத் தையும் வேற பொறுப்பான ஆசிரியர்கிட்ட கொடுங்க. அண்டர்ஸ்டாண்ட்?" 'அண்டாஸ்டாண்ட் ஸார்' என்றார் ஹெச். எம். சரஸ்வதிக்கு ஒன்றுமே ஒடவில்லை. சாப்பாடே போடவில்லை... எப் பாதுமே போடவில்லை' என்று சொன்னால், அப்படின்னா எப்படி பொய்க் கணக்கு எழுதலாம்?... எழுதமாட்டேன்னு சொல்ல வேண்டியது தானேன்னு' அவர் திருப்பிக் கேட்கலாம்... கடைசியில் தங்கப்பாண்டியின் தப்புக்கு, டெப்டி எனக்குத் தண்டனை கொடுத்திருக்கிறார்." டெப்டி-இன் ஸ்பெக்டர் ஏழாவது வகுப்பிற்குள் வந்தார். சண்முகம், தன் பிள்ளைகளுக்கு அன்று மகாத்மா காந்தியைப் பற்றி கதை' சொல்வதாக வாக்களித்திருந் தான். நேற்று சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங் ஆகியோரைப்பற்றிச் சொன்னான். காந்தி சுதையைச் சொல்ல முடியாமல் செய்த டெப்டி-இன் ஸ்பெக்டரை, பிள்ளைகள் கோட்ஸேவாக நினைத்தார்கள். "த... நீங்கதான்... லெட் தயாரிக்காக டிரெயினிங் போனது?' என்று சண்முகத்தைக் கேட்டார் டெப்டி "ஆமாம் ஸார்.' "சரி, ஒரு கணக்குப் போட்டுக் காட்டுங்க." சண்முகம் பிள்ளைகளைப் பார்த்து ஆனந்தமாக ஆரம்பித்தான்: "ஒருவருக்கு, ஒரு நாளைக்க நூறு கிராம் கோதுமை மாவுன்னா, இருநூறு பேருக்கு எவ்வளவு வரும்?

'இருபாதாயிரம் கிராம்.' "எத்தன கிலோ?' 'இருபது கிலோ.' 'ஒரு நாளைக்கு பதுங்குறது இருபது கிலோன்னா, இருபது நாளைக்கு எவ்வளவு பதுங்கும்?' 'நானூறு கிலோ.' 'ஒரு கிலோ கோதுமை மாவு இரண்டு ரூபாய் என்றால், நானுறு கிலோ எவ்வளவு தேறும்?' சிறிது மவுனம். பிறகு பதில்கள் 'எண்ணுறு ரூபாய்.' 'ஒருவனுக்கு நாலு கிராம் எண்ணைன்னா, இரு நூறு பேருக்கு? "எண்ணுறு கிராம்.' "இருபது நாளைக்கு?' "பதினாறாயிரம் கிராம்.' எத்தன கிலோ? பதினாறு கிலோ.' "ஒரு கிலோ எண்ணைக்கு!' சண்முகத்தைப் பார்த்துத் திமிறிய தங்கப்பாண்டியை, டெப்டி-இன்ஸ்பெக்டர் "தடுத்தா ட்கொண் டு, 'போதும்... நிறுத்துங்க... ஐ...ஸே ஸ்டாப் திஸ் ரப்பீஸ்...' என்று கத்தினார். சண்முகம் அமைதியாகச் சொன்னான்: 'இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கு ஸார். ஒருவர்கிட்ட ஐம்பது கிராம் கமிஷன்னா பதினைந்து பேர்கிட்ட எவ்வளவு தேறுமுன்னு கேட்கணும்?' 'கணங்கள் போட்டு கணக்குச் சொல்லிக் கொடுக் காமல், தத்துப் பித்துன்னு உளறுனால் என்னய்யா அர்த்தம்?

'மதிய உணவு போடலன்னு தெரிந்தும், ஒரு ஆசிரியையை மேலதிகாரி அதட்டுறார்னால், இருப்புப் பதிவேட்ல எவ்வளவு கோதுமை மாவு இருக்குன்னு அவருக்குக் கேட்கத் தோணலன்னா, ஸ்டாக்கைப் பார்க் கணுமுன்னு அவருக்குத் தோணலன்னா, அந்த மேலதிகாரி யும் ஒரு ஊழல் பேர்வழின்னு அர்த்தம். இந்தப் பிள்ளை களைப் பார்த்து எத்தன நாளு மத்தியான உணவச் சாப்பீட்டிங்கன்னு கேளுமய்யா! இதோ... இங்க இருக் கிறதுல கால்வாசிப் பேர் வடக்கூர்’ பள்ளிக்கூட மாணவ -ம ணவிங்க. அவங்கள எழுந்திருக்கச் சொல்லட்டுமா? ஒரு வாரத்துக்கு முன்னால், இந்த ஆசிரியர் கோவிந்தன், கோதுமை மாவையும், எண்ணெய் டின்னையும் வண்டியில் ஏற்றிக்கிட்டுப் போய், தென்காசில வித்தாரு. ஆதாரத்தோட நிரூபிக்கிறேன். ஒங்கால ஆக்ஷன் எடுக்க முடியுமா? ஏதோ நாடகம் போடுறிங்க. அதுக்கு நாங்க தானா பாத்திரங்களா ஆகணும்? வந்துட்டார் பெரிசா, எல்லாக் கஷ்டத்தையும் நீக்கப் போறவர் மாதிரி. 'பெரிய அதிகாரியையா அவமானப்படுத்துற? இரு... இரு' என்று சொல்லிக்கொண்டு, தங்கப்பாண்டி, டெப்டி யைக் கைத்தாங்கலாக அனைத்துக்கொண்டே வெளியே போனார். மானேஜர் அறைக்குப் போகாமலும், வேதப்" பள்ளிக்கூடத்திற்குப் போகாமலும் பஸ் நிலையத்தைப் பார்ததுப் போனார்கள். சீனிவாசன், ஒரளவு வேர்த்துப் போயிருந்த சண்முகத் திற்கு, தன் வேட்டி மடிப்பை வைத்து வீசிக்கொண்டே 'எல்லாத்தையும் போட்டு ஒடச்சது சாதான். ஆனால்... வேதப் பள்ளிக்கூட பையங்க வந்திருப்பதை சொல்லி யிருக்கப்படாது. செக்ஷன்களை குளோஸ் பண்ணிட்டா, நம்மள்ல நாலுபேரு குளோஸ் ஆயிடுவாங்க' என்றார். சண்முகம் அவரை, தங்கப்பாண்டியைப் பார்ப்பது மாதிரி பார்த்துப் பேசினான்: 'நாம் வெறும் சம்பளத்துக்

காகப் போராட ப்படாது. ஒரு லட்சியத்துக்காகப் போரா டனும். நீதியை நிலைநாட்டுவதற்காகத்தான் சம்பளத் தைப்பற்றிப் பேசணுமே தவிர, சம்பளத்திற்காக நீதியைப் பற்றிப் பேசக்கூடாது. இன்றைய உரிமைப் போராட்டங் களை பொதுமக்கள் அலட்சியப்படுத்துவதற்கு இந்த குழப்படி தான் காரணம். இந்தப் பள்ளிக்கூடத்துல நடக்கிற அநீதியை, சமுதாய அநீதிகளோடு இணைத்து எல்லாவற்றையும் கொளுத்தப் பார்க்கணும். அதுதான் உன்னதமான குறிக்கோள். அந்தக் குறிக்கோளை நோக்கிப் போவதற்கு முன்னால், நம்முடைய பலவீனங் களையும் நாம் உதறனும், தூக்கி எறியனும். பல பள்ளிக்கூடத்துல ஒன்று முதல் ஐந்தாவது வகுப்பு வரைக்கும் இரண்டு ஆசிரியர்கள் இருக்காங்க பல ஒராசிரியர் பள்ளிக்கூடங்கள் இருக்கு. இந்த நிலைமை யிலே, இல்லாத செக்ஷன்களை போட்டுக்கிட்டு, அவற்றில் நம்மை ஆசிரியர்களாகக் காட்டிக்கிட்டால், நமக்கு மனுஷனாய் இருக்கவே யோக்கியதை கிடையாது. அப்புறம் மனுஷங்களை உருவாக்கிற பிள்ளைகளுக்கு, ஆசிரியராய் இருக்க நமக்கு என்ன யோக்கியதை இருக்கு?’’ எல்லோரும் தத்தம் வகுப்புகளுக்குப் போய்விட் டா கள். சரஸ்வதி தன் வகுப்பிலிருந்து அவள் வகுப் புக்குப் புறப்பட்டாள். 'நன்றி சொல்லணும்... மனதத் இறந்து இன்னொன்றையும் சொல்லிடனும். இதுக்கு மேல பொறுக்க முடியாது...' நடந்து வந்தவள், முன் நெற்றி சுருங்க, கண்கள் கோவைப் பழங்களாக, மேஜையில் ஊன்றிய முழங்கை களில், முகத்தை வைத்துக்கொண்டு. எதையோ தொலை நோக்காகப் பார்த்த அவனைக் கலைக்கப் பயந்தாள். அந்த மோனத்தில் தொற்றிக்கொண்டவள் போல், அதற்குப் பயந்தவள்போல், பக்தி செலுத்துபவள் போல், அவள் திரும்பிவிட்டாள்.
-----------

2. கேள்வித் தீ - அத்தியாயம் 7

அடுத்த நாள், ஞாயிற்றுக்கிழமை. தங்கப்பாண்டி தோல்பையைத் தூக்கிக்கொண்டு தென்காசிக்கோ, திருநெல்வேலிக்கோ போய்விட்டார். சிலரை வீடுகளில் போய் பார்த்தால்தான், அவர்களை செளகரியப்படுத்தி தானும் செளகரியமாக முடியும் என்பதை அனுபவத்தால் அறிந்திருந்த அவர், புதிய அனுபவத்தின் பொருளறிய மாட்டாதவராய் பையில் பொருளோடு போய் விட்டார். கணவன் சொல்லாமலே நடந்த விஷயங்களைக் கேள்விப்பட்ட ரா சம்மா, பஞ்சாயத்துக் கிணற்றுப் பக்க மாகப் போகும்போது 'எச்சிக்கல நாயுவளுக்கும், இரப்பாளி பய மக்களுக்கும் வாழ்வு வந்திருக்கத பாரு. வேலையில சேருறதுக்கு கை கால பிடிக்கது அப்புறம் அடுத்துக் கெடுக்கது. வாய்க்கரிசி இல்லாத முண்டைவளும், கலாவியா சுத்திக்கிட்டிருந்த பயலுவளும் வாத்தியாரா வந்தா, ஊரு உருப்பட்டாலதான்' என்று ஒவ்வொரு பேச்சுக்கும் முற்றுப்புள்ளி போலவோ அல்லது 'கமா' போலவோ 'து' என்று சொல்லிக்கொண்டே துப்பிக் கொணடு, அவள் பேசியபோது, கிணற்றில் தண்ணிர் எடுத்துக்கொண்டிருந்த சண்முகத்தின் தாய்மாமா பெண் டாட்டி, அவளை மேற்கொண்டும் பேச விட வில்லை. போகவும் விடவில்லை. "சர்க்கார் கொடுக்கிற கோதும மாவ தின்ன கொளுப்புலயாடி பேசுற? ஊர்ச் சோத்த தின்ன பன்னியே! தைரியம் இருந்தா நேருக்கு நேரா பேசேண்டி! ஏண்டி...ஜாடையில பேசுற" என்று சொல்லிவிட்டு தோண்டிப் பட்டை கயிற்றை அவள் கிணற்றில் இருந்து வெளியே இழுத்தபோது, அது எமனுடைய “பாசக்கயிறு மாதிரி ராசம்மாவுக்கு பட்டது.

வாய்க்கரிசி இல்லாத முண்டன்னா, அது தன் மகளைத் தான் என்பதை எளிதாகப் புரிந்துகொண்ட சரஸ்வதியின் அம்மாக்காரி 'இனிமேல், வாய்க்கு அரிசி இல்லாமல் செத்தாலும் சாவோமே தவிர, ஒன் ஊத்த வாய இனி மேலும் பேசவிட மாட்டோம். என்னதான் நினைச்சு கிட்ட?' என்று கத்த, இப்போது எல்லோரும் கத்தினார் கள். அந்தப் பக்கமாக வந்த சில ஆண்கள் தத்தம் மனைவி களை அடக்காமல், ரசித்துக் கொண்டிருந்தார்கள். நேற்று தன் வகுப்புப் பிள்ளைகளிடமும் எட்டாவது வகுப்புப் பிள்ளைகளிடமும் 'ஒங்களுக்குக் கொடுக்க வேண்டிய கோதுமை ரவை, தென்காசில விற்பனை யாவுது. சட்டப்படி தினமும் ஒங்களுக்குச் சாப்பாடு போடணும். எவனாவது எவளாவது ஒங்க வீட்ல இதச் சொல்லியிருக்கீங்களா?...மகாத்மா காந்தி இந்தமாதிரி அநியாயத்தை பொறுத்துக்கிட்டு இருந்திருப்பாரா? பகத்சிங் இப்படிப் பார்த்துகிட்டு இருந்திருப்பானா?" என்று சன முகம் சொல்லியிருந்தான். அதை தந்திரமாக அவன் சொல்லவில்லை. தானாக வந்தது. ஒரு வேளை எஸ்.ஐ.இ.டி கல்லூரி நிகழ்ச்சிகளைப் பத்திரிகைகளில் படித்ததன் தாக்கமாக இருக்கும். அவன் அப்படிச் சொன்னதை வீட்டுக் கணக்காக எடுத்துக்கொண்ட பிள்ளைகளில் ஒரு சிலர் தங்களை காந்தியாகவும், பலர் பகத்சிங்காகவும் நினைத்துக்கொண்டு, தத்தம் வீடுகளில் நடந்ததைச் .ெ ச ல் லி, நடப்பதற்கு அஸ்திவாரம போட்டார்கள். அன்று-திங்கட்கிழமை வந்தது. ஒலித்த பள்ளிக்கூட மணி, தங்கப்பாண்டிக்கும், ஆசிரியர்களுக்கும் வேறு வேறு மாதிரியாகக் கேட்டது. ரயில் தண்டவாளம் மாதிரி, ஒரடி நீளத்தில் விட்டத்தில் கட்டிய கயிற்றில் தொங்கிக் கொண் டிருந்த இரும்புத்துண்டை, சிலேட்டுக் குச்சி மாதிரி இருந்த ஒரு இரும்பால் எக்கி எக்கித் தாக்கி மணியடித்துக்

கொண்டிருந்த ஒரு பயல்கூட, நெடு நேரமாக அடித்தான். கல்யாணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கு தன் வீடே வித்தியாசமாகத் தெரிவதுபோல, ஆண்டுக்கணக்காக பழக்கப்பட்ட அந்தப் பள்ளிக்கூடம் எல்லோருககும் வித் தியாசமாகத் தெரிந்ததால், ஒருவரை ஒருவர் வித்தியாசமாகப் பார்த்துக் கொண்டார்கள். தங்கப் பாண்டி, வகுப்புகளுக்குப் போகும் ஆசிரியர்களைப் புதிதாகப் பார்ப்பதுபோல பார்த்தார். எப்போதும், கலக்குபவர் போல் காணப்படும் அவர், அன்று கலங்கியவர்போல் காணப்பட்டார். ஆரம்பத்தில், சண்முகம், டெப்டி இன்ஸ்பெக்டரிடம் நடந்துகொண்ட விதத்தை அவர் சாதகமாகவே எடுத்துக் கொண்டார். அவன்மீது ஆக்ஷன் எடுத்தபிறகு, அந்த ஆக்ஷனுக்கு டெப்டி-இன்ஸ்பெக்டர் மூலம், மாவட்ட கல்வி அதிகாரி யின் 'கன்கரன்ஸ்' கிடைத்துவிடும் என்றுதான் நினைத் தார். ஆனால் டெப்டி வேறுவிதமாக ரியாக்ஷ னைக் காட்டிவிட்டார். எனக்கு. குழி வெட்டுறாங்க ஸார்' என்று, பஸ் நிலையத்தில் தங்கப்பாண்டி சொன்னபோது, 'ஒங்களுக்கு வெட்டுற குழில நான் விழ முடியுமா?’’ என்று டெப்டி சொல்லிவிட்டார். "சரி, இந்த டெப்டி இல்லாட்டா...அவன் அப்பன்..." என்றுதான் தங்கப்பாண்டி நினைத்தார். அதற்காகத்தான் மாவட்ட தலைநகருக்குப் போயிருந்தார். ஆனால் அங்கே கிடைத்த தகவல் அவரைக் கலக்கிவிட்டது. மாரியம்மாள், தங்கப்பாண்டி தன்னை ஜாதியைச் சொல்லித் திட்டிய துடன், சம்பளத்தையும் மோசடி செய்ததாக எழுதிய மனுவின் நகலை, ஆசிரியர் சங்கம், கவர்னருக்கு அனுப்பி வைத்திருக்கிறதாம். கவர்னரின் உத்தரவுப்படி மாவட்ட கல்வி அதிகாரி, நேரடி விசாரணைக்கு வரப்போகிறா ராம். சொந்தத் தம்பியான ராஜலிங்கமே, சொந்தமில்லா தவன்போல நடந்து கொள்கிறானாம். ஒருநாள்

மாவட்ட கல்வி அலுவலகத்திற்கே வந்து, 'அந்த ஸ்கூல இழுத்து மூடுனால்தான், பிள்ளிங்க உருப்பட முடியும்' என்று கல்வி அதிகாரியான தன் நண்பரிடம் சொல்லி விட்டானாம். இதுவரை நல்லது கெட்டதுகளை' சரிக்கட்டிக் கொண்டிருந்த தம்பியுடைய அவர், ஆசிரியப் படைக்கு அஞ்சியது இல்லை. ஆனால் இப்போது நிலைமை வேறு. அடே...ராஜலிங்கம்...ஒன்னை இடுப்பில எடுத்தவண்டா...நான்...' "எடுத்தவண்டா' என்று நினைத்தபோது, தான் எடுத்துக்கொண்ட மானேஜ்மெண்டும், அவருக்கு நினைவுக்கு வந்தது. முப்பதாயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தவர், முதல்நாள் தம்பியிடம் பத்தாயிரத்தை கொடுத்த பிறகு, ஒரு மாதம் கழித்து ஐயாயிரத்தைக் கொடுத்தார் மீதி பதினையாயிரத்தை எப்பண்ணாச்சி தரப் போlய?’ என்று தம்பி பாசத்தோடு கேட்டபோது, 'இனிமேல் ஒனக்கு எதுக்குத் தரணும்? பொதுச் சொத்து ஏலம் போனது முப்பதாயிரத்துக்கு. அதுல எனக்குப் பாதி... ஒனக்குப் பாதி... சரியாய் போயிட்டு' என்று சொன்னது, பலத்த வாக்குவாதத்தை ஏற்படுத்தியது. கடைசியில் மேரிபுஷ்பம் 'நீங்க ஸ்கூல் நடத்து றத பாத்துடுறோம்... வீட்ட விட்டு வெளில போங்க... இல்லன்னா... கழுத்தப்பிடித்து...' என்று சொல்லி விட்டாள். தங்கப்பாண்டி, சுழல் நாற்காலியோடு அங்குமிங்கு மாக ஆடிக்கொண்டார். ஆட்டிக்கொண்டார். ஊர்ல வேற, தோளுல கிடக்கிற துண்டை எடுத்து கையில போட்டுக்கிட்டு பேசுற பயலுவக்கூட தங்கப்பாண்டி, நீயும் கொஞ்சம் பாத்து நடக்கணும்; தினமும் போடாட் டாலும் ஒருநாள் விட்டாவது ஒருநாள் பிள்ளிங்களுக்கு சோறு போடாண்டாமா? அதுங்க ஒன் பிள்ளிய மாதுரி. சாப்புடாம...வயிறு "காஞ்சி கிடக்கிற பிள்ளிய...பாத்து

நடப்பான்னு காலையில உபதேசம் செய்யுறாங்க. முன்வnப் வேற கொஞ்ச நேரத்துக்கு முன்னால வீட்டுக்கு வந்து, மொதலாளி, எங்க ஜாதிப் பொண்ண பறமுண் டன்னு தங்கப்பாண்டி சொல்லிட்டாராம். நீங்க கேட்டு’ தாறியளா? நாங்களே கேட்கனுமான்னு சேரிக்காரங்க சொல்லு:தாங்கப்பா. விவேகியான நீ இப்டி நடந்துக்கிட லாமான்னு' கேட்கிறான். யாரு? வரிப்பணத்த ரசீதுல காட்டாம, வாயில காட்டுற இந்த முன்ஸிiப். இந்த சண்முகம் பயல் ஊர்முழுக்க பிரச்சாரம் செய்திருக்கான். தலைமை ஆசிரியர், சமயம் தெரியாமல் உள்ளே வந்தார். தங்கப்பாண்டி சீறி விழுந்தார். 'என்ன லார் நீங்க சரஸ்வதி ஒரு வாரம் கணக்கு எழுதாமல் விட்டி ருக்காள். நீங்க செக் பண்ணாண்டாமா? நீங்க வந்த பிறவுதான் இந்தப் பள்ளிக்கூடம் உருப்படியில்லாமப் போயிட்டுது.' தங்கச்சாமிக்கு இன்றைக்குத்தான் கோபம் வந்தது. ஆகையால் அதிகமாக வந்தது. 'சோறு போடாமல போட்டதா எழுதுனதே பெரிய காரியம். அவள் கிட்ட கேட்டுட்டு, எதையாவது வாங்கிக் கட்டிக்கச் சொல்றி யளா?' ' தலைமை ஆசிரியர் மாதிரி நடந்துக்கமாட்டேங் கிறிய, முன்னால இருந்தவரு ஒவ்வொருவர் கண்ணுலயும் விரலை விட்டு ஆட்டுவாரு. ஒங்க கடமையைக்கூட மறந் துடுறிய. எந்த ஆசிரியராவது ஒங்கள மதிக்காங் 35ςη Ι 2 " " தங்கச்சாமி, தங்கப்பாண்டியின் கண்ணில் விரல் விடுவதுபோல் பேசினார். "நீங்க மதிச்சால்லா, அவங்க மதிக்கதுக்கு ஹெட்மாஸ்டரா...ஒங்ககிட்ட மாரடிக்கத வி...நாலு எரும மாட்ட மேய்க்கலாம். எனக்கா கடமை யைப் பற்றி சொல்றீங்க? அப்படிப் பார்த்தால், ஒங்களைக்

கூட நான் வகுப்புக்குப் போகச் சொல்லணும். ஏதோ என் தலவிதி. அப்போ தாலுகா ஆபீஸ்ல கிளார்க்கா சேர்ந் திருந்தால், இந்நேரம் டெப்டி கலெக்டரா ஆகியிருப்பேன். கொள்ளைக்காரன்கிட்ட மாட்டிக்கிட்டேன். எல்லாம் தலவிதி.' தங்கப்பாண்டி, வெளியே வாசல் காப்போனாய் நின்ற தையல்-ஆசிரியன் பெருமாளை, இந்திராவை கூட்டிக் கொண்டுவர கூரைக் கட்டிடத்திற்கு அனுப் பினார். அரை மணி நேரம் கழித்து இந்திரா வந்தாள். எதிரே கிடக்கும் நாற்காலியிலும், சிலசமயம், அவர் உட்கார்ந்திருக்கும் சுழல் நாற்காலிச் சட்டத்திலும், அவர் சொல்லாமலே உட்காரும் இந்திரா, அவர் முன்னால் வந்து 'எதுக்கு ஸார் கூப்பிட்டீங்க?' என்றாள். தங்கப்பாண்டி அசந்துவிட்டார். பிறகு, தன்னை சமாதானப் படுத்திக்கொண்டே 'நீ ஏன்...கவலப்படுற? இத்தப் பயலுவ எம மாத்திரம்?' என்று சொன்னபோது, இந்திரா நீங்க மட்டும் எம்மாத்திரம்?' என்பது மாதிரி அவரைப் பார்த்தாள். அதை ஏக்கப் பார்வையாக நினைத் துக்கொண்டு, தங்கப்பாண்டி. அவள் தோளைத் தொடுவ தற்காக எழுந்தபோது, இந்திரா வாசல் பக்கமாகப் போய் நின்றுகொண்டாள். பிறகு அமைதியாகப் பேசினாள் 'ஸார் இனிமேல் நான் மானத்தோட வாழனுமுன்னு நினைக்கேன். ஒருத்தருக்கு ஒரு தடவ மானம் போயிட்டாலும், அப்புறம் அவருக்கு மானமே இல்லன்னு ஆயிடாதுன்னு சண்முகம் தம்பி. தெய்வம் மாதிரி தெரிய லச்சிட்டான். பழகுன தோஷத்துல நீங்சளும் திருந்தணுமுன்னு ஆசப்படுறேன். சரி...நான் வாரேன் ஸ்ார்...' இந்திரா போய்விட்டாள். தங்கப்பாண்டி, முண்டமாக விரும்பாதவர்போல், தலையைப் பிடித்துக் கொண்டார். வகுப்புக்களில் கூட்டு எண்களின் பெருக்குத் தொகை,

குறுக்கு எண்களின் பெருக்குத் தொகைக்குச் சமம்...' என்று சரஸ்வதி சொல்வதும், "ஏ... பத்தே... ஒன்னை பிடுங்காமல் விடமாட்டேன்' என்று சீனிவாசன் வகுப்புப் பையன்கள் கத்துவதும், அவர் காதுகளைக் குத்தின. 'அம்பிகாபதி-அமராவதி காதல் தோற்கக் காரண மென்ன" என்று வேலாயுதம் சத்தம் போட்டுச் சொல் வதும் அவருக்கு உறைத்தது. இண்டர்வெல் மணி அடித்தது. கூரைக் கட்டிடத்தை எட்டிப் பார்த்தார் சரஸ்வதியும், சண்முகமும் சிரித்துப் பேசிக்கொண்டிருக் கிறார்கள். இந்திரா, அந்த ஜோடியையும், அவர்கள் பேச்சையும் ரசிப்பதுபோல், உதடு பிரிய, முகம் குழைய நிற்கிறாள். தங்கப்பாண்டி, நேற்று 'டவுனுக்கு’ப் போய்க் கொண்டுவந்திருந்த காகிதத்தை லதர் பேக்கில் இருந்து எடுத்தார். இரு தடவை படித்துக்கொண்டார். பிறகு, தையல் ஆசிரியன் மூலம் சண்முகத்தைக் கூப்பிட்டனுப்பி னார். சண்முகம் வந்தான். சாந்தமாகவே வந்தான் "உட்காருங்க சண்முகம்.' 'பரவாயில்ல... சொல்லுங்க ஸார்.' 'ஒங்ககிட்ட இருக்குற எஸ்.எஸ்.எல்.சி. சர் டிபிக்கட் பொய் சர்டிபிக்கட்டாம். டி.இ ஒ.வுக்கு எவனோ எழுதிப் போட்டிருக்கான். இதை விசாரிக்கும்படி டெப்டி-இன்ஸ் பெக்டர் எனக்கு அனுப்பி இருக்கார், ஒங்க எஸ்.எஸ். எல்.சி. சர்டிபிக்கட்டை கொண்டு வந்து காட்டுறீங்களா? தொந்தரவுக்கு மன்னிக்கணும்.' அந்தப் பள்ளிக்கூடத்தில் வேலை பார்க்கும், எல்லா ஆசிரியர்களுடைய சர்டிபிக்கேட்டுகளும் தங்கப்பாண்டி யிடம் உள்ளன. வேலையில் சேரும்போதே, அவர்களின 'சர்டிபிக்கேட் பற்களை பிடுங்கி வைத்திருப்பவர் அவர் . வேலையில் சேரும்போது சராசரி இளைஞனுக்குரிய

அப்பாவித்தனத்தில் இருந்த சண்முகம், 'மாமா செக் பண்ணுவதற்காக எஸ்.எஸ்.எல்.சி. சர்டிபிக்கட்டையும் டி.எஸ் எல் சி. சர்டிபிகேட்டையும் கொடுத்தான். பிறகு அவர் கொடுக்கவில்லை. ஒரு தடவை அவன் கேட்ட போது 'ஒங்ககிட்ட இருந்தான்ன, என்கிட்ட இருந் தான்ன? இன்கிரிமென்ட், அது இதுன்னு ஆயிரம் வரும். உடனேயே டெ ப்டி-இன்ஸ்பெக்டர்கிட்ட காட்டணும். அதுக்குத்தான் வச்சிருக்கேன். மாப்பிள்ளைக்கு நம்பிக்கை இல்ல போலுக்கு. ஏல... பெருமாளு... வீட்ல போயி’’ என்று அவர் சொன்னபோது 'பரவாயில்ல மாமா...' என்று சண்முகம் திருப்பிச் சொல்லிவிட்டான். தங்கப்பாண்டி இப்போது கிண்டலாகப் பேசினார். 'என்ன சண்முகம் ஸார்... சர்டிபிக்கட்டை கொண்டு வாlங்களா? நான் டெப்டி இன்ஸ்பெக்டருக்கு இன்னைக்கே இதை அனுப்பி வைக்கணும்.' சண்முகம், இன்னும் அவரையே பார்த்தான். தங்கப் பாண்டி, மினுக்காகச் சிரித்து, தளுக்காகப் பேசினார். 'இப்போகூட ஒங்களுக்கு சான்ஸ் கொடுக்கேன் என் வம்புக்கு வரமாட்டேன்னு ஒரு வாக்கு கொடுத்திங்கன்னா போதும் சண்முகம், அவர்மீது கண்களை ஊடுருவ விட்டான். 'டவுனில் ஆசிரியர் தலைவர் மொதல்ல ஒங்கள உதைக் கணும்யா என்று சொன்ன வார்த்தை, நெஞ்சில் உதைத்தது. பிள்ளைகளுக்கு தனிப்பட்ட முறையில் சொன்ன லெனின், அவன் எதிரே நின்று சிரித்தார் மாணவர்களுக்கு அவன் சொல்லிக் கொடுத்த பகத்சிங் முன்னால் வந்து நிறைான். பல்லைக் கடித்துக்கொண்டு கைகளை அடக்கிக்கொண்டான். பிறகு ஒரு முடிவுக்கு வந்தவன்போல், 'நானும் அதைத்தான் சொல்றேன் இப்போகூட ஒங்களுக்கு சான்ஸ் கொடுக்கோம். நீங்க திருந்துறதாய் இருந்தால்...' என்றான்.

'திருந்துறதுன்னா... நான் என்ன திருடனா? 'ஆசிரியர்கள் சம்பளத்துல கமிஷன் பிடிக்க றதும், அப்பாய்மெண்டுக்கு ஐயாயிரம் ரூபாய் வாங்குறதும், சேமிப்பு நிதிப் பணத்தை இரண்டு வருஷமா போஸ்ட் ஆபீஸ்ல போடாமல் இருக்கதும், மாணவர்கள் வயித்துல அடிக்கிறதும் திருடன் செய்யுற காரியமில்ல...திருடன் மனுஷன் , ' தங்கப்பாண்டி விறைப்பாக உட்கார்ந்தார். சரி... ஒங்க எஸ் எஸ்.எல்.சி. சர்டிபிக்கேட்டை எடுத்துட்டு வாரீங்களா... நான் இன்னைக்கே இதை அனுப்பணும்.' 'யார்... யாரை அனுப்பப் போறாங்க என்கிறது. முடிவாகிற காலம் நெருங்கிக்கிட்டு இருக்கு.' தங்கப்பாண்டி எழுத்து நின்று ஆவேசமாகப் பேசினார். இந்தா பாரு... சண்முகம்... என் சர்வீஸும், ஒன் வயசும் ஒண்ணு. ஒன்னை மாதிரி எத்தனை பேர பாத்திருப்பேன். நீ எம்மாத்திரம்? பதினைஞ்சி வருஷத் துக்கு முன்னால, ஒன்னை மாதிரி ஒருவன் சட்டம் பேசி ஊர் ல ஆள் திரட்டினான். ஊாக்காரங்களும் அவன் பேச்சைக் கேட்டு போட்டிப் பள்ளிக்கூடம் ஆரம்பிச் சாங்க. நான் போலீஸை ஊருக்குக் கொண்டு வந்தேன். இருபது இருபத்தைஞ்சு பேர போலீஸ் மூலம் பைண்ட் ஒவர்ல" போட்டேன். வாராவாரம் போலீஸ் ஸ்டேஷன்ல போய் ரிப்போர்ட் பண்ணுறதுக்காக நடந்த நடையில, ஒவ்வொருவனும் கடைசியில் என் காலுல வந்து விழுந்தான். நீங்க என்ன செய்தாலும் சரின்னு காலுல விமுத்தாங்க. இது நீ சின்னப் பிள்ளையாய் இருக்கும் போது நடந்த சங்கதி. கேள்விப்பட்டிருப்பே இன் னொண்ணு தெரியுமா? எவன்... ஊர் ஜனங்கள தூண்டி விட்டானோ அவனே அப்புறம் ப ஞ் சா ய த் து த் தலைவராகி, இப்போ மச்சான்... யூனியன் எலெக்ஷன்ல நிக்கப் போறேன். ஒங்க ஆதரவு வேணுமுன்னு’ என் வீட்டுக்கு நடையாய் நடக்கான்.'

சண்முகம் நிதானமாகப் பதிலளித்தான். "தனி மனிதன் நடையைவிட சரித்திரத்தோட நடை தனிநடை ஸ்ார். அது எவரையும் சாராமல் தனக்குத்தானே நடை போடும். அப்படி நடைபோடுவதற்கான பாகையை அமைக்க, அந்த சரித்திரமே தக்க சமயத்தில் தக்க ஆட்கள தேர்ந்தெடுக்கும்; இதை மறந்துடாதீங்க." 'சரி சண்முகம் ஸார்! ஒங்க சரித்திரத்த இந்த சின்னப் பள்ளிக்கூடம் தாங்காது. சர்டிபிக்கட்ட கொண்டு வாlங்களா... ஏதோ இந்த சின்ன இடத்தில சரித்திரம் துவங்குறதாய் நினைப்பு இல்லாம சீக்கிரமாய் கொண்டு வாங்க. சரித்திரம், பொல்லாத சரித்திரம்.' 'ஒங்கள மாதுரி ஆசாமிக்கு சரித்திரம் பொல்லாதது தான் ஸார் . வீட்ல துவங்குற சரித்திரம் உலகத்துல படர்வதும், உலகத்துல துவங்குகிற சரித்திரம் வீட்டில முடியறதும் இயற்கை. இதுக்கு நீங்களோ, நானோ தப்ப முடியாது...' 'யாரு தப்ப முடியாதுங்கறது பாத்துடலாம். சரி... சர்டிபிக்கேட் கொண்டு வரப் போlங்களா இல்லையா?" 'அந்த புகார் மனுவை என்கிட்ட கொடுங்க. சும்மா கொடுங்க. நான் பேப்பர கிழிக்கிற ஆளுல்ல. அதுலயே என் பதிலையும் எழுதிடுவேன்.' தங்கப்பாண்டி, சந்தேகத்துடன்தான் புகார் மனுவை அவனிடம் நீட்டினார். அவன், அதை கிழிக்கப்போனால் தடுக்க வேண்டும் என்பதற்காக இரண்டு கைகளையும் படகோட்டி மாதிரி வைத்துக்கொண்டார். சண்முகம் அவருக்கு எதிரே கால்மேல் கால்போட்டு உட்கார்ந்து கொண்டு, மடமடவென்று எழுதினான். என்ன எழுத வேண்டும் என்று ஏற்கெனவே மனதில் வரித்திருந்ததால், வரிக்குவரி யோசிக்காமலே எழுதினான். எழுதிவிட்டு

கையெழுத்தையும், தேதியையும் போட்டுவிட்டு, தங்கப் பாண்டியை நோக்கி, பெருவிரலை வில்லாகவும், ஆள் காட்டி விரலை அம்பாகவும் வைத்து, மனுவை அலட்சிய மாக சுண்டிவிட்டுவிட்டு, வெளியேறிவிட்டான் கூரைக் கட்டிடம் அதிரும்படி ஹிட்லர் கேட்டால்லா, இந்த ஆளு கேக்கதுக்கு' என்ற வார்த்தை, தங்கப்பாண்டிக்கு நன்றாகக் கேட்டது. அவன் எழுதியதைப் பார்த்தார். கொஞ்சம் அசந்துவிட்டார். டெப்டி-இன்ஸ்பெக்டரின் ஆதரவோடு இந்த புகார் மனு வந்திருப்பதாக தான் சந்தேகிப்பதாகவும், தன் சர்டி பிக்கேட் மானேஜரிடமே இருப்பதாகவும், இப்போது நம்பிக்கை மோசடி செய்யும் மானேஜர்மீது போலீஸில் புகார் செய்யுவும், சட்டப்படி இதர நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மாவட்ட கல்வி அதிகாரி தனக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும், இதற்கிடையில் சர் டிபிக்கட்டைப்பற்றி அறிய வேண்டுமானால், தான் படித்த உயர்நிலைப்பள்ளியில் போய் விசாரித்துக் கொள்ளும்படி "பணிவன்புடன் கேட்டுக் கொள்வ தாகவும் அவன் எழுதியிருந்தான். தங்கப்பாண்டி, தன்னம்பிக்கையோடு சிரித்துக்கொண் டார். 'பள்ளிப்படிப்பு புள்ளிக்கு உதவாது என்கிறதை நிருபிச்சுட்டான். அனுபவத்துக்கு, அறிவு ஈடாகாது என்பதைக் காட்டிட்டான். டெபுடி-இன்ஸ்பெக்டரையும் சேர்த்து இழுத்திருப்பதால், மேலதிகாரிகள் டிபார்ட் மெண்ட் விவகாரமாய் எடுத்துக்கொள்வார்கள். அவர்கள் நியாயத்தை விட்டுக் கொடுத்தாலும் கொடுப்பார்களே தவிர, டிபார்ட்மெண்டை விட்டுக் கொடுக்கமாட்டார் கள். மாட்டிக்கிட்டான். இசகு பிசகா மாட்டிக் கிட்டான். தங்கப்பாண்டி தையல்-ஆசிரியனைக் கூப்பிட்டு, இடையிலே கார்பன் வைத்த இரண்டு பேப்பர் "லெட் டை" ரெடி பண்ணச் சொன்னார். அந்தப் பையன்

சாவகாசமாக பேப்பரைத் தேடியபோது, "அதோ பேப்பர் இருக்கது தெரியல எருமமாடு. ஒன்னைப்போய் தையல் வாத்தியனாய் போட்டேன் பாரு. சீக்கிரமா ரெடி பண்ணு' என்றார். அவன் 'ரெடி செய்ததும் 'கதவ மூடிட்டு வெளிலயே நில்லு. எவனையும் உள்ளேவிடாதே' என்றார். 'பல தையல்களை ஏற்பாடு செய்யும் அந்த ஆசிரியன், ஒன்றும் புரியாமல் கதவை மூடினான். கூரைக் கட்டிடத்தில் இருந்த ஆசிரியர்களும், காரைக் கட்டிட ஆசிரியர்களும், சண்முகத்தை மொய்த்துக் கொண்டார்கள். அவர்களிடம், அவன் நடந்ததை விளக்கி னான் சீனிவாசன், 'இவனை விடப்படாது.டா. சண்டாளப் பய! காலா காலத்துல சம்பளத்த தராததுனால என் மகளை அனுப்ப முடியாமப் போய் கடைசில, அவளைக் கட்டுன காவாலிப்'பயல் இனிமேல் ஒப்பன் வீட்லயே இருந்துக்க. ஒருவேள்ை ஊர்ல, வேற இன்ட்ரஸ்ட் ஏதா வது இருக்கு'முன்னு பொடி வச்சி எழுதியிருக்கான். என் மகள் நல்லாச் சாப்பிட்டு நாலு நாளு ஆவுது. இந்தப் பயல பொடிப்பொடியாய் ஆக்காமல் விடப்படாது' என்றார். சரஸ்வதி, சண்முகத்தை பயத்தோடும், பரிதாபத்தோடும் பார்த்தாள். என்ன நடக்குமோ...ஏது நடக்குமோ... திடீரென்று ஆறாவது வகுப்பில் சரஸ்வதி அழும் சத்தங் கேட்டது. பிள்ளைகளின் கூச்சலையும் மீறி அவள் கூப்பாடு போட்டாள். அய்யோ, நேத்துதான் எங்கப்பாவை இவ்வளவு நாளும் மரம் வெட்டுனது போதும், இனிமேல் நான் சம்பளம் வாங்குநத நினைக்காமல் வேலைக்குப் போனிங் கன்னா, நான் வேலைக்குப் போகமாட்டே'ன்னு சொன் னேன். சொன்னபடியே ஆயிட்டுதே...ஆயிட்டுதே...'

என்று அரற்றினாள். அவள் கையில் இருந்த காகிதத்தில் கண்ணிர்த் துளிகள் தெறித்துச் சிதறின. சண்முகம் அந்தக் காகிதத்தை வாங்கிப் படித்தான். "ஆசிரியை சரஸ்வதிக்கு, தங்களின் பதவி விலகல் கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. குடும்ப சூழ்நிலையின் காரணமாக, பதவி விலகுவதாக தாங்கள் குறிப்பிட்ட காரணம், நன்கு ஆய்வு செய்யப்பட்டு, தங்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டாகிவிட்டது. ஆகை யால் நாளையிலிருந்து தாங்கள் வேலைக்கு வரவேண்டிய தில்லை. உங்களின் சேவைக்கு, பள்ளி நிர்வர்கம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது' என்று உத்தரவு கூறியது. எல்லா ஆசிரியர்களும் பிரமித்து நின்றார்கள். ஒவ் வொருவரும், தங்களுக்கும் சிறிது நேரத்தில் இதே மாதிரி யான ஒலை வரலாம் என்று தங்கப்பாசண்டியின் அறை யைத் திரும்பித் திரும்பிப் பார்த்தார்கள். சரஸ்வதி அழுகையை நிறுத்தவில்லை. சண்முகம் அசந்துவிட்டான். அவள் அழுகைக்கு தானும் ஒரு காரணம் என்பதுபோல் உதட்டைக் கடித்துக்கொண்டான். ஒருநிமிட நேரந்தான். சரஸ்வதி, ஆசிரியை கனகத்தின் தோளில் சாய்ந்துகொண் டாள். மயங்கி விழுந்துவிடுவாளோ என்று சொல்லும் அளவிற்கு, அவள் கண்கள் நிலைகுத்தி நிற்பவைபோல வெறித்து நின்றன. கை கால்கள், பக்கவாத நோயாளி மாதிரி ஆடின படித்த படிப்பு. பெற்ற பயிற்சி, வாங்கிய சம்பளம், அனைத்தும் இனிமேல் நீர்மேல் எழுத்தாய் போனதுபோல், அவள் கன்னங்களில் நீர் பெருக்கெடுத்து, மோவாயில் வந்து சங்கமமாயின. இனிமேல் எப்போது வேலை கிடைக்கும் என்று நினைப்பவள் போல் மோவாயை நிமிர்த்தியவள், எப்பவுமே கிடைக்காது என்பதுபோல் தலையை, அங்குமிங்குமாக ஆட்டினாள். சண்முகத்தைப் பார்த்து, 'அ ந் த க் காகிதத்தைக் கொடுங்க. நான் ஆசிரியையா வேலை பார்க்கத் தகுதி

யுள்ளவள் என்கிறதுக்கு அதுதான் எனக்கு சர்டிபிக்கட். அந்தப் பாவி என் சர்டிபிக்கட்ட தரமாட்டான்' என்று கத்திக்கொண்டே, அவள் சண்முகத்திடமிருந்த காகிதத் தைப் பற்றப்போனாள். இதற்குள், சரஸ்வதியின் சித்தி மகன்-எட்டாவது வகுப்பு படிக்கும் ஒரு பையன் பெரியம்மா மகள் அழுவ தற்கான காரணத்தை யூகித்துக்கொண்டு, வெளியே ஒடினான். ஆசிரியர் சீனிவாசனும், கிட்டத்தட்ட ஒப்பாரி வைத்தார். 'வேலையில் சேரும்போதே ராஜினாமா லட்டர் வாங்கி வச்சுக்கிட்டான். நான் கூட மூணு தடவ ராஜினாமா லட்டர் கொடுத்திருக்கேன். மொதல்ல எழுதுன பேப்பர் கசங்கி பழுக்கும்போது ரெண்டாவதா வாங்கிக்குவான். இங்க இருக்கிற எல்லார் கிட்டயுமே ராஜினாமா லட்டர்கள வாங்கி வச்சிருக்கான். யார் யாருக்கெல்லாம் எப்பப்போ ஒல வரப்போவுதோ?' அழுவதற்கு ஆயத்தம் செய்கிறவள் போல் நின்ற ஆசிரியை கனகம் அரற்றினாள். நர்சிங் ஹோமுல சேர்ந்து வயித்துக் கட்டிய ஆபரேஷன் பண்ணணுமுன்னு நினைச்சேன். இந்த எழவெடுப்பான் அதுக்குள்ள வயிததுல அடிப்பான் போலுக்கே.' சண்முகம், சரஸ்வதியின் கரங்கள் இரண்டையும் அனிச்சையாகப் பற்றிக்கொண்டு ஏன் அழகுற? அவன் போயிடுன்னா போவதற்கு நாம் என்ன கிள்ளுக் கீரையா? அழா தம்மா! நாங்க இந்தப் பள்ளிக்கூடத்துல இருக்கது வரைக்கும் நீயும் இருக்கப்போறே!' என்று சொன்ன போது, சரஸ்வதி ஒரளவு நம்பிக்கைப் பட்டவள் போல கண்ணிரைத் துடைத்துக்கொண்டு, இழந்ததாக நினைத்தது இழப்பாக ஆகாது என்று நினைத்தவளாய் அழவும் முடியாமல், அனைவரையும் பார்த்துவிட்டு, பிறகு சண்முகத்தை சோகமாகப் புன்னகைத்துக் கொண்டே பார்த்த போது

ஏட்டளவில் தையல் ஆசிரியனாக வேலை பார்க்கும் பையன், இன்னொரு கடிதத்தைக் கொண்டு வந்து, சண்முகத்திடம் கொடுத்தான். சண்முகம், அவன் கொண்டு வந்த ரிஜிஸ்டரில் கையெழுத்துப் போட்டு கடிதததை வாங்கிவிட்டு, கடித உறையில் இருந்து கடிதத்தைப் பி ரி த் து எல்லோருக்கும் கேட்கும்படி படித்த ன்: 'நீங்கள், தக்க காரணத்திற்காகக் கேட்கப்பட்ட எஸ் எஸ்.எல்.சி. சர்டிபிக்கட்டை காட்ட மறுத்ததுடன், மேலதிகாரியையும் நிர்வாகியையும், சம்பந்தமில்லாமல், சம்பந்தப்படுத்தியிருப்பதால், உங்கள் சர்டிபிக்கட்டில் வில்லங்கம் இருப்பதால் தான் நீங்கள் அதைக் காட்டாமல் மழுபபுகிறீர்கள் என்று அனுமானிக்கப் படுகிறது. ஆகையால் முழு விசாரணை முடியும் வரை, உங்களைத் தாற்காலிக பதவி நீக்கம் செய்யப் பட்டிருக்கிறது. விசாரணை முடிவது வரைக்கும், இந்த ஊரிலேயே இருக்கும்படிக் கேட்டுக் கொள்ளப்படுகிறது ' எல்லோரும், அவனால் காக்கப்படுபவர்கள் போல வும், அவனைக் காக்கப் போகிறவர்கள் போலவும் பார்த் தார்கள் சண்முகம் சிரித்துக் கொண்டான். தலையை முன்னும் பின்னுமாக ஆட்டிக் கொண்டான். ' இனிமேல் நாம் பொறுத்தால், நமக்கு இந்த பிள்ளங்களுக்கு மகாத்மா காந்தியைப் பற்றியோ, பகத்சிங்கைப் பற்றியோ சொலலிக் கொடுக்க அருகதை கிடையாது' என்றான். 'வாங்க, அவன் கையக் கால ஒடிக்கலாம். நானே ஒடிக்கேன்' என்றான் வேலாயுதம். 'வாங்க பாத்துப்புடலாம்' என்றார் சீனிவாசன். நானும் வாரேன் என்றார் தலைமை ஆசிரியர்.

பதினாறு ஆசிரியர்களில் ஆசிரிய-மச்சான் கோவிந் தனைத் தவிர, தலைமை ஆசிரியர் உட்பட எல்லோரும், மானேஜர் அறையைப் பார்த்துப் போகப் போனார்கள். கோவிந்தன் ஏதோ பேசப் போனார். வேலாயுதம் அவர் சட்டையைப் பிடித்து உலுக்கியதில், அப்படியே உட்கார்ந்துவிட்டார். அப்போது, சரஸ்வதியின் அப்பா பொன்னையாவும், அவள் அம்மாவும், மானேஜர் அறைக்குள் நுழைந்தார்கள். அவர்கள் பேசி முடியட்டும் அல்லது முடிக்கட்டும் என்பதுபோல, ஆசிரியர்கள் புறப் பட்ட இடத்திலேயே நின்றார்கள். பொன்னையாவும் அவர் மனைவியும் மாறி மாறி மன்றாடுவது, ஆசிரியர் களுக்கு நன்றாகக் கேட்டது. 'தங்கப்பாண்டி, ஒன் தாத்தா காலத்துல இருந்தே ஒங்க வீட்ல நாயா உழைச்சவன் நான். ஒன்னை இடுப்புல எடுத்தவன். சின்னப் பய மவள் , சின்னத்தனமா நடந்து கிட்டா, நீயே அவள கன்னத்துல ரெண்டு போட்டிருக் கலாம். ஆனால் இப்படிப் பண்ணலாமா ராஜா? நம்பி எழுதிக் கொடுத்த காகிதத்துல, நம்பிக்கை மோசடி பண்ணலாமா? அப்படி பண்ணுறதாய் இருந்தால், நான் எத்தன தடவ பண்ணியிருக்கலாம்? ஒரு தடவ ஒன் வீட்டு பீரோவுல கத்தை கத்தையா ரூபா நோட்டு மின்னிச்சுது. ராத்திரி வேள. ராசம்மா பீரோவ பூட்ட மறந்துட்டுப் போயிட்டா. நான், அவ வாரது வரைக்கும் நாய் மாதுரி காவலுக்கு இருந்தவன். ஒனக்கு பள்ளிக்கூடத்துக்கு எத்தன தடவ சோறு சுமந்துகிட்டு வந்திருப்பேன். என் சோற்றுல மண்ண அள்ளிப் போடலாமா மவராசா? தங்கப்பாண்டி அலட்சியமாகப் பேசினார். 'நீங்களும் கூட்டுக் கள்ளங்க யாரக் கேட்டு மாரியம்மாளை கொண்டுவிடப் போனியரு? என் வீட்டுக்கு தண்ணி எடுக்க வர முடியாத அளவுக்கு ஒம்ம மகள் பெரியவளா ஆயிட்டா என்ன? என் பெண்டாட்டிய எதிர்த்துப் பேசுற அளவுக்கு, நீங்க தயாராகிக்கிட்டீங்க. நான் சொல்லுற

மாப்பிள்ளையை உதறுற அளவுக்கு திமிறு வந்துட்டு என்ன? பே ச | ம போங்க. இது முடிஞ்சிபோன சமாச்சாரம்.' 'தங்கப்பாண்டி! அப்படில்லாம் பேசப்படாது. ஒன் கா லுல வேணுமுன்னாலும்...' ஆசிரியர்களோடு நின்ற சரஸ்வதியால், மேற் கொண்டு நடக்கப்போவதை கற்பனை செய்துகொண்டு அங்கேயே நிற்க முடியவில்லை. மானேஜர் அறையை நோக்கிப் போனாள். வாசலுக்கு வெளியே நின்று கொண்டே கத்தினாள். அப்பா...எவன் காலுலயும் விழாண்டாம். அவன் ஒம்ம காலுல விழப்போற காலம் வந்துட்டு. நீங்க வீட்டுக்குப் போங்க. மொதல்ல வெளிய வாங்க. வாங்கப்பா...வாம்மா..." தங்கப்பாண்டி கொஞ்சம் வார்த்தையை விட்டுட் டார். 'பாத்தியா, அவன் இவன்னு பேசுறத? தேவடியா முண்டைக்கு வாயப் பாத்தியனா' - 'அவன்' என்று சொன்னதுக்காக, மகளை அடிக்கப் புறப்பட்ட பொன்னையாவுக்கு யாரை அடிக்கிறோம் என்று தெரியவில்லை. எத்தனையோ பனைமரங்களை ஒரே ஒரு கோடாரியால், தன்னந் தனியாகச் சாய்த்த அந்த மனிதர், தனக்கு எதுவும் தெரியாமலே, தங்கப் பாண்டியின் கழுத்தைப் பிடித்துத் தூக்கி, மேஜையில் போட்டார். குப்புறப் புரண்ட தங்கப்பாண்டி தலையை நிமிர்த்தியபோது, அதை முடியோடு சேர்த்துப் பிடித்து மேஜையில் மோதினார். தங்கப்பாண்டி 'அய்யோ... அய்யோ' என்று கத்தினார். மனைவிக்காரி புருஷனைப் பிடித்து இழுத்தாள். தப்பை உணர்ந்தவர்போல், பொன்னையா தங்கப்பாண்டியை விட்டுவிட்டு, தன்னை நம்பாதவர்போல் சிறிது விலகி நின்றுகொண்டு 'யாரப் பாத்துல தேவடியா முண்டன்ன? ஒன் வீட்டு சங்கதிய நான் சொல்லட்டுமாடா? செத்தாலும் சொல்ல

மாட்டேன். ஒரு வீட்ல அந்யோன்யமாய் பழகிட்டு அந்த வீட்ல நடக்கிற விஷயங்கள வெளில சொல்லுத அயோக்யத்தனத்த எப்பவும் செய்யாதவன். என் மவளப் பாத்தா தேவடியா முண்டங்கற? இதவிட நீ... ஒன் அம்மாவச் சொல்லியிருக்கலாம்...’’ என்று இரைந்த போது, ஆசிரிய-ஆசிரியைகளும், அத்தனை பிள்ளைகளும் அங்கே வந்துவிட்டார்கள். சரஸ்வதி, அப்பாவைப் போய்ப் பிடித்துக்கொண்டாள். சண்முகம், சத்தம் போட்டுச் சொன்னது அந்த அமளி யில் லேசாகத்தான் கேட்டது. 'பொன்னையா மாமா, நீங்களும், அத்தையும் மொதல்ல வெளியே போங்க உம் போங்க...' பொன்னையாவும், அவர் மனைவியும் வெளியே போய், மைதானத்தில் நின்றுகொண்டார்கள். சண்முகம் தங்கப்பாண்டியைப் பார்த்து கர்ஜித்தான். 'தங்கப் பாண்டி லார், ஒங்க காலம் முடிஞ்சு எங்க காலம் துவங் கிட்டுது. எங்களோட சர்டிபிக்கட்டுங்களையும் கொடுத் துட்டு, எங்களுக்கு கொடுத்த லட்டரையும் வாபஸ் வாங்கிட்டு, இதர ஊழல் சமாசாரத்துக்கும் நீங்க பிராய சித்தம் செய்யும் முன்னால், ஒங்கள...சீ...ஒனக்கெதுக்கு மரியாதை? ஒன்னை...இந்த அறையை விட்டு வெளில விடப்போறதுல்ல அப்படிப் போவதாய் இருந்தால், எங்கள பிணமாக்கிட்டுத்தான் நீ போக முடியும்...' எல்லா ஆசிரியர்களும், மானேஜர் அறையின் வாசலை மறைத்துக் கொண்டார்கள். நிலைப்படியில் நினறு கொண்டு, குறுக்கும் நெடுக்குமாக வேயப்பட்ட வேலிக் கம்புகள் மாதிரி நின்றார்கள். அந்த மனித வேலி வாசல் முழுவதையும் அடைத்தது. ஒவ்வொருவர் அடிவயிற்றிலும் பற்றிக் கொண்டிருந்த நெருப்பு. நெஞ்சிலே தணலாகி, கண்ணிலே ஒளியாகி, "ஒன்னை விடமாட்டோம்விடமாட்டோம்” என்ற ஒலியாகி, தங்கப்பாண்டியைச்

கட்டது. அவர் கண்களை மூடவைத்தது. காதுகளை நேராக வைத்தது. என்ன நடந்தது என்பதை முழுவதும் யூகிக்க முடியவில்லையானாலும், ஆசிரியர்கள் இப்படி நடக்கவேண்டுமானால், மானேஜர் எப்படியோ நடந் திருப்பார் என்பதை உணர்ந்ததுபோல, பன்னிரெண்டு வயதுக்கு மேற்பட்ட மாணவ-மாணவியர், வேலியில் படர்ந்த செடி கொடிகள் மாதிரி ஆசிரியர்களை நெருங்கி நின்று கொண்டார்கள். சிலர், தேர்தல் காலத்தில் பாதிப்புக்கு உட்பட்டவர்களாய், 'மானேஜர் ஒழிக... ஆசிரியர்கள் வாழ்க...' என்றுகூட தம்பமுடியாதபடி முழக்க மிட்டார்கள். இன்னும் சில பிள்ளைகள், தத்தம் வீடுகளுக்கு ஒடினார்கள்-பெற்றோரிடம் நடந்ததைச் சொல்லி மானேஜரை கொல்லும்படி சொல்ல வேண்டும் என்று நினைத்தவர்களாய், சிலர் தங்கப்பாண்டியை ஆஷ் துரையாகவும், சண்முகத்தை வாஞ்சிநாதனாகவும் கற்பனை செய்தனர். 'ஏன்...ஸ்ார்...சட் டுன்னு சுட மாட்டங்கார்...' எவ்வளவு பெரியவனையும் முதலில் ஒரு போடு' போட்டுவிட்டால், அவன் அவுட்டு' என்பதற்கு.விளக்கம் போல் ஏற்கெனவே பொன்னையா கொடுத்த அடியில், அதிர்ந்துபோன தங்கப்பாண்டி , சுழல்நாற்காலியில் அப் படியே உட்கார்ந்திருந்தார். அந்த நாற்காலி இப்போது ஆட வில்லை, அசையவில்லை. தனித்தனியாகக் கிடக்கும் ஆசிரியக் குச்சிகளை ஒவ்வொன்றாக எடுத்து ஒடித்து விடலாம் என்று நினைத்தவர், இப்போது அந்தக் குச்சி கள், ஒன்றோடு ஒன்றாகி, தோழமைப் பத்தமென்ற கயிற் றால் ஒடிக்க முடியாத விறகுக்கட்டாக மாறிவிட்டதைப் புரிந்துகொண்டவர் போல் பார்த்தார். தானே தனியொரு குச்சியாகப் போனவர்போல் தவித்தார். உயிரோடயே சமாதியானது போல், அந்த அறையை அங்குமிங்குமாகப் பார்த்தார். ஒருவேளை நமக்குள் பைத்தியம் பிடித்திருக் குமோ? அ த ண | ல தா ன் கண்ணுக்கு இப்படித்

தெரியுதோ?' என்று நினைப்பவர்போல் வழிமறித்து நின்ற வழிகாட்டிகளை நம்பாதது போல் பார்த்தார். இருந்தாலும் அவருக்கு ஒரு நப்பாசை. பங்காளிகள் வரலாம். எவராவது போலீஸுக்குச் சொல்லலாம். அவரது எண்ணத்தை யூகித்தது போல், சண்முகம் மீண்டும் கர்ஜித்தான்: 'பழைய காலமில்ல ஸார்! ஒங்களுக்கு ஆதரவாய் யார் வந்தாலும் சரி, எங்களை வீழ்த்திட்டுத்தான் ஒங்கள மீட்கலாம். நீங்க எங்க கோரிக்கைக்கு இணங்குமுன்னால, ஒங்கள விடப்போற துல்ல. என்ன நடந்தாலும் சரி...எப்படி நடந்தாலும் சரி... ஒங்களுக்கு அதிகாரிங்கன்னா, எங்களுக்கு ஆசிரியர் கூட்டணி இருக்கு ஊர் இருக்கு." புலியைச் சுற்றி வளைத்து வீழ்த்தும் காட்டு நாய் கூட்டம் மாதிரி, ஆசிரியர்கள் வழியடைத்து நின்றார்கள். தாங்கள் சொல்லிக் கொடுத்த வரலாற்றுப் பாடங்களுக் குத் தாங்களே பரீட்சை எழுதத் தீர்மானித்தவர்களாய்த் தோன்றினார்கள். அக்கிரமக்காரனுக்கு, முடிவும் அக் கிரம ரூபத்தில்தான் வரும் என்று ஹிட்லரையும், முசோலினியையும், உதாரணமாகக் காட்டி, மாணவர் களுக்கு பாடம் போதித்தவர்கள், உள்ளூர் பருத்தியின் மூலம் உலகச் சமாச்சாரங்களைச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற பேஸிக் பயிற்சியை நினைத்தவர் களாய், அந்த ஆசிரியர்கள் இப்போது உள்ளுர்’ தங்கப் பாண்டியைக் காட்டி, உலகதல விரோதிகளை அடை யாளம் காட்ட விரும்பியவர்கள்போல், அசையாது நின்றார்கள். இந்திரா மட்டும் சிறிது விலகி நின்றான். தங்கப்பாண்டியை அடிக்கப் போன வேலாயுதத்தை சண்முகம் பிடித்துக் கொண்டான். ஊரிலிருந்து, ஆண்களும், பெண்களுமாகத் திரண்டு கொண்டிருந்தார்கள். சண்முகத்திற்காகச் சிலர். சரஸ்வதிக்காகச் சிலர். சாப்பாடு போடவில்லை என்று

சிலர். ராஜலிங்கத்தின் தூண்டுதலால் சிலர். ராசம்மாவின் திமிரால் சிலர். சேரியில் இருந்த சிலர். இப்படிச் சிலர் சிலராய் கூடியவர் பலப்பலராயினர். பலவகையான பேச்சு. பாக்கை வெட்டுவது போன்ற பேச்சு. 'அந்தப் பொண்ணு, அவன் வீட்ல வேலைக்காரி மாதிரி வேலை பார்த்தாள். அவளுக்கா சீட்டக் கிழிக்கது? யாரு, நம்ம சண்முகத்துக்கா ஒலை கொடுத்திருக்கான்? நாம அம்மங்குடை கணக்கை எப்படி ஒழுங்கா எழுது றோம். அதுமாதிரி இந்த தங்கப்பாண்டியும் ஒழுங்கா இருந்திருந்தா, இப்படி நடக்குமா? என்னவோ, அவனுக்கு வால் பிடிக்கியரு...தெனமும் பிள்ளியளுக்கு சாப்பாடு போடணும். இவன் போடுறானா? இவனுக்கு இன்னைக்கு நல்ல சாப்பாடு போடணும். "தர்ம அடி கொடுக் கணும்வே.' உள்ளே சிறை வைக்கப்பட்ட தங்கப்பாண்டியின் உடம்பு, வேர்வையால் குளிர்ந்து கொண்டிருந்தபோது, ஆசிரியர்களின் மேனி கொதித்துக் கொண்டிருந்தது. வெளியே இரைச்சல், பேரிரைச்சல். வீட் டில் இருந்து துள்ளிக் குதித்து வந்த ராசம்ம வை 'வாடி! சீக்கிரம் வா. ஒன் பனங்கா மூஞ்சிய கொத்திப் போட்டு அவிக்கோம்' என்று பெண்களில் ஒருத்தி சவாலிட்டபோது, ராசம்மா பாதி வழி யி லே யே நின்றாள். அநியாயக்காரன் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்காமல், அவன் ஒவ்வொரு செயலையும் ஏன் என்று கேட்டு, தாங்கள் பார் என்பதையும் கேட்டுக் கொண்டால், அதில் பிறக்கும் கேள்வித்தி, ஆயிரம் வேள்வித் தீயைவிட பிரகாசமாக விளங்கும். மனதிலே கிளம்பும் கேள்விப்பொறி, ஐம்பொறிகளிலும் தாவி, அண்டை அயலாரையும் பற்றி, ஊழித்தீயாக மாறும் என்பது நிரூபணம் ஆகிக் கொண்டிருந்தது.

தங்கப்பாண்டி, தனக்கு முன்னால், ஆசிரிய உருவத் தில், ஒரு பெருந்தீ உருவாகி இருப்பதையும், அந்த தீய்க்கு ஊரே எண்ணெயாகி இருப்பதையும், அந்த தீயை ஊடுருவ முடியாது என்பதையும் புரிந்தவர்போல், நாற்காலியில் உட்கார்ந்தபடி மேஜையில், குப்புறத் தலைவைத்து விழிபிதுங்கப் பார்த்தார். அவர் விரித்துப் போட்டிருந்த கைகள், ஆசிரியர்களின் கால்களை நோக்கி, மேஜை விளிம்பில் தொங்கின. பள்ளிக்கூடத்திற்கு சற்று தொலைவில் உள்ள ஒரு 'தனி' வீட்டில் வசிக்கும் சலவைத் தொழிலாளி ஒருவர், நான்கைந்து முரட்டுத் துணிகளைத் தேய்ப்பதற்காக நிலக்கரியில், கொஞ்சம் சீம எண்ணெய் ஊற்றி நெருப் பிட்டார். நிலக்கரி, கண்ணிர் விடுவதுபோல் புகைந்த போது, அவரும் தன் கண்களைக் கசக்கிக் கொண்டே ஊதினார். கண்ணிராய் கசிந்த நிலக்கரி, இப்போது நெருப்புத் துண்டங்களாய் மாறிவிட்டதால் அவை அணையாது என்பதை அறிந்துகொண்டு அவற்றை ஒட்டு மொத்தமாக எடுத்து, இஸ்திரிப் பெட்டியில் போட்டு விட்டு, வெளியே கேட்ட சத்தத்தின் சாரத்தை அறிய மைதானத்திற்கு விரைந்தார்.
--------

This file was last updated on 26 June 2021.
Feel free to send the corrections to the webmaster.