pm logo

தங்கமுத்துதாஸ்‌ இயற்றிய
இன்பரச ஒப்பாரி


inparaca oppAri of tangkamuttutAs
In tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

தங்கமுத்துதாஸ்‌ இயற்றிய
இன்பரச ஒப்பாரி

Source:
ஜெகமெங்கும்‌ புகழ்பெற்ற இன்பமான கீதமணி திருசிறபுரம்‌
ஸ்ரீமான்‌ R.T. தங்கமுத்துதாஸ்‌ அவர்கள்‌ இயற்றிய "இன்பரச ஒப்பாரி"
V. Press, Madras
------------

கடவுள்‌ துணை
வெண்பா.

அம்பிகையான்‌ மனமகிழும்‌
ஆதி புதல்வா இத்ததி
இன்பரச ஓப்பாரி இயம்புதற்கு
தும்பிமுகனே துணைபுரிவாய்‌
நின்பதமே நம்பினேன்‌ எனதருள்பு வாய்‌

சாமிசக்குமுழங்கும்‌ என்னைப்பெற்ற அப்பா
நான்வாமும்வாசலிலே சக்திசன்ஒளிவீசும்‌
அந்தசந்திரன்‌ வெளிச்சத்திலே
இங்கேஜாதிமல்லிபூ பூர்க்கும்‌
அந்தஜாதிமல்லி பூவெடுத்து நீபெற்றபெண்ணாள்‌
நான்சரந்தொடுத்து மாலைகட்டி
உனக்கு சரடுகம்மல்‌ மாட்டிவிட்டு
நான் ஜாதிவர்ணப் பட்டுடுத்தி
உனக்குசந்தண நிரக்கோடி
சரணமிட்டு நானெடுத்து
குங்கும நிறக்கோடி
குளித்துகையில்‌ நானெடுத்து
இஞ்சிவர்ணக்கோடி. என்னைப்பெற்ற அப்பா
எடுத்துகையிலே பிடித்து
இன்னைக்கி ஐயகண்ட ஓசையீட
சகலஜனம்‌ கூடிவர
உன்னுடையசவமிருக்கும்‌ வாசலுக்கு
என்னைக்கொண்டச ந்திரரும் நானும்‌ :
சட்டெனவே வந்தாலும்‌ உன்‌னுடையசவம்‌
பார்க்கு கிட்டலியே நான்பாவி
உனக்குக்‌ கொண்டுவந்த சந்தண நிறக்கோடி
உன்னுடைய சவத்துக்கு போத்தலியே
அம்மன்‌ சங்குமுழங்க என்னைபெற்ற அப்பா
நான்வாமும்‌ வாசலிலே ஆகாயம்‌ஒளிவீச
அந்தஆகாய வெளிச்சத்திலே
ஒருஅடுக்குமல்லிபூ பூர்க்கும்‌
நான் அடுக்குமாலை பூவெடுத்து
அடியாரொரு மாலைகட்டி
ஐந்து வர்ணப்ப்பட்டுடுத்தி நீபெற்றபெண்ணாள்‌
அரக்குவர்ணக்கோடி அன்பாக நானெடுத்து
மஞ்சவர்ணக்கோடி என்னைப்பெற்ற அப்பா
மதிப்பாக நானெடுத்து
பஞ்சவர்ணக்‌கொடி என்னைப்பெற்ற அப்பா
பக்குவமாய்‌ நானெடுத்து
அலரிதம்பூர்‌ ஒசையிட
அநேகஜனங்கூடிவர உன்‌ அங்கமிருக்கும்வாசல்‌
என்னைக்கொண்ட அர்ச்சுனரும்‌ நானும்‌
அவசரமாய்‌ வந்தாலும்‌
உன்னுடைய அங்கம்‌ பார்க்கக்கிட்டலியே
என்னை எடுத்துவளர்த்த இன்பமுள்ள அப்பா
நான்பாவி கொண்டுவந்த
அரக்குவர்ணக்கோடி என்‌ அருமை அப்பா
உன்அங்கத்துக்கு போத்தலியே
கள்ளர்மலைதாண்டி. கழுகுமலை சந்திலே
கந்தனிருக்குமிடம்‌ கானவள்ஸி தூங்குமிடம்‌

கதம்பமலருமிடம்‌ என்னைப்பெற்ற அப்பா
ஒருகதலி பழுத்திருக்கும்‌
கந்தனிடத்திலே நீங்கள்‌ கைலாயம்போன
காரணத்தைச்சொல்லி நீபெற்றசெல்லி
நான்கதரி அழுதேனென்றால்‌ இன்னக்கி
கதலிபழம்‌ தின்கவரும்‌
கருங்குருலி பட்சியெல்லாசம்‌
நான்கதரும்‌ குறைகேட்டு
கதலிபழம்‌ தின்னாமல்‌ என்னைப்‌ பெற்ற அப்பா
இப்போகண்ணீர்‌ விடுகுதையா
ஆனைமலைதாண்டி, அழகுமலைசந்திலே
ஐவரிருக்குமிடம்‌ ௮ம்பாளிறக்குமிடம்‌
அரும்பு மலருமிடம்‌ ஒருத்தி பழுக்குமிடம்‌
அந்தஜவரிட.த்திலே என்னைப்பெற்ற அப்பா
நீங்கள்‌ அறனுகுபோற
அவதிதனைச்‌ சொல்லிவிட்டால்‌
அத்திப்பழம் தின்னவந்த அன்னம்புறாபட்சியெல்லாம்‌
நான்‌ அலரும்‌ குறைகேட்டு
அத்திபழம்தின்னாமல்‌ என்னைப்பெற்ற அப்பா
இப்போ அழுது புலம்புதையா


தாயாருக்குப்‌ புலம்பல்

நாலுகடலிலே நடுக்கடலின்‌ மத்தியிலே
அங்க நன்றாய்‌ விளைச்திருக்கும்‌
என்னைப்பெற்ற தாயே
நான் நல்லமுத்து வேண்டுமென்றால்‌
நம்ம நாட்டிலுன்ள காவலரால் நல்ல முத்துதேடி
நீபெற்ற நங்கைக்‌ கனுப்பிடுவாப்‌
உங்கள்கண்ணு மறைந்தவுடனே
என்னைப்பெற்ற அம்மா
நல்லமுத்து கிட்டலியே
நான் பாவி நங்கைபுலம்புரது
நீபோகும்‌ நமலுலகு சம்மதமோ
ஐந்துகடலிலே அலைகடலின்‌ மத்தியிலே
என்னைப்பெற்ற தாயே அங்கே
அழகாய்‌ விளைந்திருக்கும்‌
அணிமுத்‌து வேண்டுமென்றால்‌
நீ ஆளை அனுப்பி ஆணிமுத்துதேடி.
நீபெற்ற அல்லிக்‌ கனுப்பிடுவாய்‌
உங்கள்‌ கண்‌ மறைந்தவுடனே
என்னைப் பெற்றதாயே
எனக்கு ஆணிமுத்து கிட்டலியே
நான்‌ அழுது புலம்புரது நீபோகும்‌
அறனுலகு சம்மதமோ
சித்திர மாதத்தில்‌ என்னைப்பெற்றதாயே
நாண்‌ உங்௧ வாசல்வந்து
சீறுவேண்டுமென்‌று சொன்னால்‌
சிங்கப்பூர்சீட்டியிலே சில தினுசுவந்திரக்கும்‌
வங்காளம் சீட்டி, என்னைப்பெற்ற அம்மா
வகைவகையாய்‌ வந்திரங்கும்‌
பம்பாய்பட்டு சீட்டியிலே பலதினுசுவந்திரங்கும்‌
உங்கள்கண்‌ மறைந்தவுடனே
சீறுகளை நானிழந்தேன்‌
சீட்டிகளை நான்மறந்தேன்‌
உங்கள் வாசல்‌ வந்து நின்று
என்னைப்பெற்றதாயே நான்‌சிதரிமயங்குரேனே
வைகாசிமாதத்திலே என்னைப்பெற்றதாயே
நான் உன்னுடைய வாசல்வச்து
நான்‌ வரிசைவேண்டு மென்றுசொன்னால்‌
வடகாடபெட்டு வகைவகையாய்‌ வந்திறங்கும்‌
தென்காசிபட்டு தினுசுக்கொன்றாய்‌ வந்திறங்கும்‌
கல்கத்தாபட்டு கணக்காக வந்திறக்கும்‌
உக்கள்கண்ணு மறைந்தவுடனே
வடகாசிபட்டு வரிசைகளை நானிழச்து
நான்‌ பாவிஇப்போ வயிரெறிந்து நிற்கிறேனே

புருஷனுக்குப்‌ புலம்பல்‌.

பத்துசுத்து கல்கோட்டை என்னைதேடியசாமி
ஒருபவளமணி மண்டபமே
அந்த பவளமணி மண்டபத்தில்‌
ஒருபவுனிழைத்த ஊஞ்சலிட்டு நம்பயிருபேரும்‌
பக்குவமாய்குந்தி பாசிவிளையாடையிரே
அந்தப்பட்டணத்து தேவடியாள்‌
என்னைதேடிய மன்னவரே
பார்த்து அழைத்தாளோ பதில்‌லட்டர்‌ தந்தானோ
பதில்லட்டர்‌ கண்டவுடன்‌
பட்டிணத்ததாசிவீடு பக்குவமாய்‌ போனீர்களோ
அந்தப்பட்டிணத்து தாசியோடே என்னைத்தேடியசாமி
நீங்கள்‌ படுத்துறங்கும்‌ வேளையிலே
அந்தப்‌ படுபாவி வேசியரை
ஒருபாம்பு யிருந்கு திண்டாதோ
அவள்‌ பரமமலாகம்‌ சேராளோ
என்னைச்கொண்ட மன்னவரே
நான்பாவி வாசலுக்கு நீங்கள்‌
படுத்துறங்க வாரதெப்போ
ஐந்துசுத்துக் கல்கோட்டை நம்வாசலிலே
என்னை தேடியசாமி
ஒரு அழகுமணி மண்டபமே

அந்த அழகுமணி மண்டபத்தில்‌
ஒருஅரும்பவுன்‌ ஊஞ்சலிட்டு நம்பயிருபேரும்
அழகான சொக்கட்டானாடி விளையாடையிலே
உங்களை அரந்தாங்கி தேவடியாள்‌
அன்போடழைத்தாளோ
அவள்‌ அட்ரஸும்‌ தந்தானளோ
அந்த அட்ரஸைக்‌ கண்டவுடன்‌
அரந்தாங்கி தாசிவீடு அவசரமாய்‌ போனீர்களோ
அந்த அரந்தாங்கி தாசியோடு
ஆடி விளையாடையிலே அந்த ஆகாதவேசியரை
ஒரு அரவமங்கே தீண்டாதோ
நான்‌ பாபிவாசல்‌ நீங்கள்‌
அன்னம்போல வாரதெப்போ
சன்னத்துக்‌ கல்கோட்டை
என்னைத் தேடி மன்னவரே நம்மவரசல்‌
ஒருசலங்கைமணி மண்டபமே
அந்த சலங்கைமணி மண்டபத்தில்‌
ஒருஜாதிமல்லி ஊஞ்சலிட்டு
நம்மிருபேரும்‌ சதுரங்க மாடையிலே
உங்களை சமயபுரம்‌ தேவடியாள்‌
ஜாடையாய்‌ அழைத்தாளோ
சரசலட்டர்‌ தந்தாளோ
அந்த சரசலட்டர்‌ கண்டவுடன்‌
சமயபுரம் ‌தாசிவிடு நீங்கள்‌ சைக்கலில்‌ போயிரங்கி
நீங்களிருபேரும்‌ ஜலத்தில்‌ வினையாடையிலே
அந்தசதிகாரி வேசியரை
ஒருசர்ப்பம்‌ அங்கே திண்டாதோ
அவள்சாமி பதம்சேராளோ

என்னைத்தேடியசாமி நான்‌ பாவிவாசல்‌
நீங்கள்‌ சந்தோஷமாய்‌ வாரதெப்போ
சின்னகுத்துக்‌ கல்கோட்டை
ஒருசிகப்பிழைத்த மண்டபத்தில்‌
அந்தச்‌ சிகெப்பிழைத்த மண்டபத்தில்‌
என்னைத்தேடியசாமி ஒருசிவந்தியப்பூ ஊஞ்சலிட்டு
நம்பளிருபேரும்‌ சிரித்து விளையாடையிலே
சீரங்கம்‌ தேவடியாள்‌
உங்களைசிமிட்டி அழைத்தாளோ
சேதிலட்டர்‌ தந்தாளோ
அந்த சேதிலட்டர்‌ கண்டவுடன்‌
சீரங்கம்‌ தாசிவீடு சீக்கரமாப்‌ போனீர்களோ
அந்த ஜெகஜால தாசியோடு
நீங்கள்‌ சீட்டு வீளையாடையிலே
அந்தசீரங்கம்‌ வேசியரை
ஒரு சிறு நாகம்‌ தீண்டாதோ
அவள்‌ சிவன்பதம்‌ சேராளோ நான்பாவிவாசல்‌
சீக்கிரமாய்‌ வாரதெப்போ
சிகப்பு யிரும்புபெட்டி, நான்பாகி
சீலைவைக்கும்‌ ட்ரங்குபெட்டி
நான் சிறுவயதில் அறுத்தவள்‌ சீமானைத் தோற்றவள்‌
வயதில்‌ அறுத்தவள்‌ என்னைக்கொண்ட
வல்லவரை தோற்றவள்‌
சிகப்புயிரும்பு பெட்டியிடம்‌
சேலைவைக்கும்‌ ட்ரங்கினிடம்‌
நான்பாவி செல்லிகுறை சொல்லிவிட்டால்‌
இன்றைக்குசேலை அழுகலாச்சோ
இப்போ சிகப்புயிரும்பு மங்கலாச்சோ
பச்சை யிரும்புபெட்டி என்னைத்தேடியசாமி
நான்பாவி பவுனுலைக்கும்‌ ட்ரங்குபெட்டி
நான்பாவி யறுத்தவள்‌ என்னைக்கொண்ட
பாண்டியரை தோத்தவள்‌ தாலியறுத்தவள்‌
என்னுடைய தருமரைத்‌ தோற்றவள்‌
பச்சையிரும்பு பெட்டியிடம்‌
பவுனைவைக்கும்‌ ட்ரங்கினிடம்‌
நான்பாவிகுறை சொல்லிவிட்டால்
இப்போபவுனு அழுகலாச்சோ
பச்சையிரும்பு மங்கலாச்சோ

சகோதரருக்குப்‌ புலம்பல்‌

தங்ககுடைபிடித்துதகுந்த கம்பிவேஷ்டி கட்டி
நான்பாவி வாசல்‌ நீதைமாதம்வந்தாலும்‌
என்னுடையதம்பி வாரானென்று
தாவியழைத்திடுவேன்‌ என்னைக்கொண்ட
தருமருகுச்‌ சொல்லிடுவேன்‌
இப்போ தம்பியைச்‌ காணாமல்‌
தவித்த புலம்பலாச்சே
என்‌னுடையதருமர்மனம்‌ நோகலாச்சோ
பென்னாலும்‌ குடைபிடித்து என்னுடன்பிறந்ததம்பி
நீபுதுக்கம்பிவேஷ்டிகட்டி நான்பாவிவாசல்‌
புரட்டாசி மாதம்‌ வந்தால்‌
என்னுடையபிறப்பு வாறானென்று
நான்போற்றி யழைத்திடுவேன்‌
என்னுடைய புண்ணியற்கே சொல்லிடுவேன்‌
என்னுடைய பிறப்பையிப்‌போ காணாமல்‌
நான்புலம்பி யழுகலாச்சே
என்னுடைய புண்ணியரும்‌ நோகலாச்சே

இன்பரச ஒப்பாரி முற்றிற்று


This file was last updated on 19 April 2022.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)