pm logo

தங்கமுத்துதாஸ்‌ இயற்றிய
அரிவையர் புலம்பும் "அமிர்த ஒப்பாரி"


amirta oppAri
of tangkamuttutAs
In tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

தங்கமுத்துதாஸ்‌ இயற்றிய
மங்கையர்க் குகந்த மனோன்மணி ஒப்பாரி

Source:

புவி எங்கும் புகழ்பெற்ற சோகரஸ திலகம்
திருசிரபுரம் - ஸ்ரீமான். R. T. சுடலைமுத்துதாஸ் அவர்கள் இயற்றிய
அரிவையர் புலம்பும் "அமிர்த ஒப்பாரி"

கடவுள் துணை.
விருத்தம்

அரிவையர்கள் புலம்பும் அமிர்த ஒப்பாரி
பரிமளித்து ஓங்கவென்று
சிறியவன் தெண்டனிட்டேன்
கரிமுகனின் கழலே காப்பு.

தந்தையாருக்குப் புலம்பல்.

பச்சை கடுதாசி என்னை பெற்ற அப்பா
உனக்கு பட்டணத்து மைக்கூடு
நீங்கள் பரமலோகம் போரேனென்று
நீபெற்ற பாவிக்கு பாங்குடனே எழுதிவிட்டால்
உங்ககடுதாசி கண்டவுடன்
என்னை கொண்ட பாண்டியரும்
நான் பாங்குடனே வந்து
பவளத்தேர் செய்து
அந்த பவளத்தேர்க்குள்ளே நீபெற்ற
பாவி நான்பதரி அழுதுவிட்டால்
நீங்கள் போகும் பரமலோகம் மோட்சந்தான்
சிகப்புகடுதாசி என்னைபெற்ற அப்பா
உனக்கு சீரங்கத்து மைக்கூடு
நீங்கள் சிவலோகம் போரேனென்று
நான் வாழும் சீமைக்கு
சீக்கிரம் எழுதிவிட்டால்
உங்ககடுதாசி கண்டவுடன்
சீரகச்சேம்பா வாக்கரிசி
சீக்கிரமாய் நானெடுத்து
தென்னைமரமேரி தினுசுக்கொரு காயிறக்கி
மாங்காமரமேரி மனசுக்கொரு காயிறக்கி
செந்தாமரப்பூதேர்கட்டி சீக்கிரமாய் வந்தாலும்
உன்னுடையதிரேகம் பார்க்கக்கிட்டலியே
நீங்கள் போகும் தெய்வலோகம் சம்மதமோ.

மதுரைக்கு நேர்கிழக்கே மாரியம்மன் கோவிலுக்கு
என்னைப்பெற்ற அப்பா
உங்கள் கண்ணுள்ள நாளையிலே
நீங்கள் ஒரு மணிவிளக்கு போட்டீர்களே
அந்த மணிவிளக்கு போட்டதோஷம்
உங்கள் கண்ணு மறைந்தவுடன்
நீங்கள் பெற்றமகள் மேலேசாய்ந்ததையா
-----------

தாயாருக்குப் புலம்பல்.

சிகப்புரயிலுவண்டி என்னை பெற்ற தாயே
நான் பிறந்த சேலத்திற்கு போகும்வண்டி
சிகப்புரயிலேரி சேலத்திற்குபோயிரங்கி
நீர்பெற்ற செல்வகிளி வாய்திரந்து
சேலைவேணுமென்று சொன்னால்
எனக்கு சேலையெடுத்திடுவாய்
சிறுநகையும் செய்திடுவாய்
சீறுவகைகளையும் சிறப்பாக செய்திடுவாய்
நான் சீலையும் மடிச்சுடுத்தி
சிறுநகையும் மேல்பூட்டி
சீறுகளை முன்னடத்தி சேலத்து
வீதிசிறப்பாக வந்தாலும்
சேலத்திலே பெய்யுமழை எனக்கு
சேலைகனையாது சிறுநகையும் மங்காது
சீறுகளும் நனையாது உங்கள் கண்ணும்
மறைந்தவுடனே சேலைகனைத்திடுச்சே
சிறுநகையும் மங்கிடுச்சே சீறுகளும் நனைந்திடுச்சே
என்னை பெற்றதாயே நீங்கள் போகும்
சிவலோகம் சம்மதமோ.

பச்சைரயிலுவண்டி என்னைபெற்றதாயே
நான் பிறந்தசிமை பட்டணம் போகும் வண்டி
பச்சைரயிலேரி பட்டணம் போயிறங்கி
நீபெற்ற பச்சை கிளியால் வாய்திறந்து
பாவி நான்பட்டுவேணும் என்றுசொன்னால்
நீபட்டுஎடுத்திடுவாய் பவுன் நகையும் செய்திடுவாய்
நான்பட்டு மடிச்சுடுத்தி பவுன் நகையும் மேல்பூட்டி
பட்டணம் வீதியும் பலவீதி நான் வந்தால்
அந்தபட்டணத்தில் பெய்யுமழை
எனக்குப்பட்டு நனையாது பவுன் நகையும் மங்காது
உங்கள் கண்ணும் மறைந்தவுடனே எ
னக்கு பட்டுநனைந்திடுச்சி பவுன் நகையும் மங்கிடுச்சே
என்னைபெற்றதாயே நீங்கள்
போகும் பரமலோதழ் சம்மதமோ.

பொட்டிரபிலுவண்டி என்னைப் பெற்றதாயே
நான் பிறந்த சிமை புதுக்கோட்டை போகும்வண்டி
பொட்டிரயிலேறி புதுக்கோட்டை போயிறங்கி
பெற்ற பொன்னுக்கிளி வாய் திறந்து
புடவைவேண்டு மென்றுசொன்னால்
நீபுடவை எடுத்திடுவாய்
போன்னாபரணம் செய்திடுவாய்

நான் புடவைமடிச்சுடுத்தி பொன்னாபரணம்மேல்
அந்த புதுக்கோட்டை வீதியிலே பூட்டி
நான்பொன்னாவழி நடந்தால்
அந்த புதுக்கோட்டையில் பெய்யுமழை
எனக்குபுடவை நனையாது
பொன்னாபரணம் மங்காது
உங்கள் கண்ணும் மறைந்தவுடனே
புடவை நனைந்திடுச்சே
பொன்னாபரணம் மங்கிடுச்சே
என்னைப்பெற்றதாயே நீங்கள்
போகிறபொன்னுலகம் சம்மதமோ.
----------

பிள்ளை வரம்

கும்பகோணத்திலே மாமாங்ககுளத்திலே
என்னைக்கொண்ட கோமானும் நானும்
குளித்துத் தலை முழுகி கும்பேஸ்வர கோவிலிலே
நாங்கள் இருபேரும்
ஒருகுழந்தைவரம் கேழ்க்கையிலே
அந்த கும்பேசுர ஈஸ்வரரும்
இந்தகோதை முகம்பார்த்து
ஒருகுழந்தையை கைகொடுத்தார்
அந்தகுழந்தையுடதோஷமில்லோ
என்னைக்கொண்ட கோமானைக்
கொள்ளையிட்டேன்.

திருச்சிக்கு நேர்வடக்கே
திருவானக் காவலின்
ஜெம்புலிங்க நாதரிடம்
என்னைக்கொண்ட சீமானும் நானும்
ஒருசெல்வன் வரம்கேழ்க்கையிலே
அந்த ஜெம்புலிங்கநாதரும்
இந்ததேவி முகம்பார்த்து
ஒரு செல்வனைக் கைகொடுத்தார்
அந்தசெல்வனுட தோஷமல்லோ
என்னைக்கொண்ட
சீமானைக்கொள்ளையிட்டேன்,
--------

புருஷனுக்குப் புலம்பல்.

சிகப்பிழைத்த மோட்டாராம்
என்னைக்கொண்ட சீமானும்
ஏறுமோட்டார் நீங்கள்
சிகப்பிழைத்த மோட்டாரேறி
சீரங்கம் போயிரங்கி
அந்த சீரங்கத்து தாசியோடே
நீங்கள் சீட்டு விளையாடையிலே
அந்தசீரங்கத்து தாசியை
ஒருசெந்தேளு கொட்டாதா
அவள் சிவலோகம் சேராளோ
என் பாவி வாசலுக்கு
நீங்கள் சீக்கிரமாய் வாரதெப்போ ..

கல்லிழைத்த மோட்டாரேறி
என்னைக்கொண்ட கருணைராஜா
ஏறும் மோட்டார்
நீங்கள் கல்லிழைத்த மோட்டாரேறி
காரைக்குடி போயிரங்கி
அந்தகாரைக்குடி தாசியோடே
நீங்கள் கலந்து விளையாடையிலே
அந்தகாரைக்குடி தாசியை
ஒருகருநாகம் தீண்டாதோ
அவள்கைலாசம் சேராளோ
என்னைக்கொண்ட மன்னவரே
என்பாவி வாசலுக்கு
நீங்கள் காலமே வாரதெப்போ.

பவுன் இழைத்த மோட்டாராம்
என்னைக்கொண்ட பாண்டியர்
ஏறும் மோட்டார்
நீங்கள் பவுன் இழைத்த மோட்டாரேறி
பழனிமலை போயிரங்கி
அந்தபழனிமலை தாசியோடே
படுத்துரங்கும் வேளையிலே
அந்தபழனிமலை தாசியை
ஒருபாம்பிருந்து தீண்டாதா
அவள் பரமலோகம் சேராளா
என்னைக்கொண்ட பாண்டியபே என்பாவி வாசலுக்கு
நீங்கள் படுத்துரங்க வாரதெப்போ
---------------

சகோதரனுக்குப் புலம்பல்.

பூங்காவனச் சோலைகளும்
பொற்றாமறைக் குளம்
என்கூட பிறந்ததம்பி
நான்வாழும்வாசலிலே
போலீசு காவல்களும்
அந்த பொற்றாமரைக்குளத்தில் பொண்ணாத் தலைமுழுகி
போலீசைமுன் அனுப்பி
பொண்ணா வழி நடந்து
நீவாழும் சீமை புதுக்கோட்டை
வாரேனென்று பொழுதோடே
தந்தி சொல்லி விட்டால்
தந்தியைக் கண்டவுடன் நான் காதவழி தூரம்
எக்காலம் ஊதிவர
எட்டௌநீர் கண் திறந்து
என் கூடபிறந்த தம்பி என்னைக்காப்பாற்ற வாரதெப்போ.

செண்பக சோலைகளும்
செந்தாமரைக் குளமும்
என் கூடபிறந்த தம்பி
நான் வாழும் வாசலிலே சிப்பாய்கள் காவல்களும்
அந்தசெந்தாமரைக் குளத்தில்
செல்லித் தலை முழுகி
சிப்பாய்களை முன் அனுப்பி
செல்லி வழிநடத்து
நீவவாழும்சீமை சேலத்திற்கு
வாரேனென்று சீக்கிரமாய்
தந்தி சொன்னாள்
தந்தியை கண்டவுடன்
குதிரையின் மேல் மேளம்வைத்து
கோலாகாலா வேளமடிக்க பட்டத்துயானையின் மேல் மேளம்வைத்து
பரப்பரப்பாய் அடித்துவர
பந்து இளநீர் கண்திறந்து என்கூடபிறந்த தம்பி
எனக்கு நீபசியாற்ற வாரதெப்போ

அமிர்த ஒப்பாரி முற்றிற்று
---------------------

This file was last updated on 24 April 2022.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)