Narrinai
English Translation by A Dakshinamurthy
part 3, verses 201-300
நற்றிணை - ஆங்கில மொழிபெயர்ப்பு
பாகம் 3, பாடல்கள் 201-300,
ஆசிரியர்: அ. தட்சிணாமூர்த்தி
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
We thank Mr. R. Navaneethakrishnan for his assistance in proof-reading of the text.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
Narrinai English Translation
by A Dakshinamurthy, part 3, verses 202-300
Source:
THE NARRINAI FOUR HUNDRED
Translated by Dr. A. Dakshinamurthy
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
International Institute of Tamil Studies
C.P.T. Campus, Tharamani, Chennai - 600 113
2001, 830 pages
------------------
நற்றிணை நானூறு
201. குறிஞ்சி
மலை உறை குறவன் காதல் மட மகள்,
பெறல் அருங்குரையள், அருங் கடிக் காப்பினள்;
சொல் எதிர் கொள்ளாள்; இளையள்; அனையோள்
உள்ளல் கூடாது' என்றோய்! மற்றும்,
செவ் வேர்ப் பலவின் பயம் கெழு கொல்லித்
தெய்வம் காக்கும் தீது தீர் நெடுங் கோட்டு,
அவ் வெள் அருவிக் குட வரையகத்து,
கால் பொருது இடிப்பினும், கதழ் உறை கடுகினும்,
உரும் உடன்று எறியினும், ஊறு பல தோன்றினும்,
பெரு நிலம் கிளரினும், திரு நல உருவின்
மாயா இயற்கைப் பாவையின்,
போதல் ஒல்லாள் என் நெஞ்சத்தாளே.
கழறிய பாங்கற்குத் தலைமகன் சொல்லியது.
--பரணர்
201. KURINCI
(The hero speaks to his friend who advised him to forget his beloved)
O my friend!
You say that this lass, the daughter of the hillsman
Is too precious to attain;
You also say that she is ever under the strict vigil of her elders
And that she will not be moved by my appeals.
You advise that I should forget her altogether!
But how?
She is enthroned in mine heart for ever!
She will remain there, unaffected,
Like the image of eternal beauty carved out by a deity,
In the western slope of uberous Kolli*,
Which is rich in jack trees with ruddy roots,
And protected by holy spirits, and from whose flawless peaks
Flow beautiful and silvery streams.
The God-made image remains unaffected,
Even when violent hurricane lashes out,
Forceful rains pour down,
Terrible thunder rumbles aloud,
Earth itself turns boisterous
And many such dangers betide it!
--Paranar.
Kolli is a hill in the western range of hills, Õri, the expert archer was its chief. The image spoken in this verse goes by the name Kollippavai and it is very often referred to in the ancient classics.
This image is now a legend.
------------------
202. பாலை
புலி பொரச் சிவந்த புலால்அம் செங் கோட்டு
ஒலி பல் முத்தம் ஆர்ப்ப, வலி சிறந்து,
வன் சுவல் பராரை முருக்கி, கன்றொடு
மடப் பிடி தழீஇய தடக் கை வேழம்,
தேன் செய் பொருங் கிளை இரிய, வேங்கைப்
பொன் புரை கவளம் புறந்தருபு ஊட்டும்
மா மலை விடரகம் கவைஇ, காண்வர,
கண்டிசின் -- வாழியோ, குறுமகள்!-- நுந்தை,
அறுமீன் பயந்த அறம் செய் திங்கள்
செல் சுடர் நெடுங் கொடி போல,
பல் பூங் கோங்கம் அணிந்த காடே
உடன் போகாநின்ற தலைமகன் தலைவிக்குச் சொல்லியது.
--பாலை பாடிய பெருங்கடுங்கோ.
202. PĀLAI
(The hero speaks to his beloved during elopement)
Darling! May you prosper!
Behold this forest of your father!
See, the Könku trees
Around the clefts of this huge hill!
They glow with many clusters of flowers,
Like so many rows of lamps
Lit on the Kārtikai* festival, a day,
Favourable to perform virtuous deeds.
A long-trunked tusker that had killed
A tiger, gets its tusks stained with blood
And then charges with all its strength,
The swelled bottom of a Venkai tree,
Causing the pearls inside its well-ripe tusks
Fall down with tinkling sound!
It then feeds its mate and calf,
With the golden bunches of flowers,
Causing the hives of bees wing away scared!
--Palaipatiya Perunkatunko
*Kartikai:
The constellation of Pegasus. This is part of Mēta rāci and Itapa rāci. The festival mentioned here is held on the full-moon day in the month of Kartikai when every house is beautifully lit with lamps.
------------------
203. நெய்தல்
முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர்,
தடந் தாட் டாழை முள்ளுடை நெடுந் தோட்டு
அக மடல் பொதுளிய முகை முதிர் வான் பூங்
கோடு வார்ந்தன்ன, வெண் பூத் தாழை
எறி திரை உதைத்தலின், பொங்கித் தாது சோர்பு,
சிறுகுடிப் பாக்கத்து மறுகு புலா மறுக்கும்
மணம் கமழ் கானல், இயைந்த நம் கேண்மை
ஒரு நாள் பிரியினும் உய்வு அரிது என்னாது,
கதழ் பரி நெடுந் தேர் வரவு ஆண்டு அழுங்கச்
செய்த தன் தப்பல் அன்றியும்,
உயவுப் புணர்ந்தன்று, இவ் அழுங்கல் ஊரே.
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி சொல்லி வரைவு கடாயது.
- உலோச்சனார்.
203. NEYTAL
(The companion of the heroine speaks to be overheard by the hero who stands
near the fence)
Our kinship with our lover bloomed in the fragrant grove
Of our hamlet, thick with bent-trunked Tälai bushes,
Which are ever battered by the waves.
The white flowers, that shine from amidst the thorny blades
Fairly resemble the long conch-shells.
These bushes grow in the sand,
Thrown ashore by the sea-waves,
And the flowers with their pollen
Remove the foul smell from our street.
Should this kinship made
With our lover is interrupted :
Even for a single day,
We will instantly give up our ghost.
All unaware of this,
This village is agog with slander which is
Caused by the advent of a chariot here..
Our lover's chariot drawn by swift horses Is no more seen here,
Owing to the unkind gossip of our folk.
--Uloccanār.
Latent Meaning :
Shaken by the waves, the Tālai flowers shed their pol len which in turn remove the stink from the streets. This suggests that the hero, induced by his desire, will bring immense wealth as bride-price and wed the hero ine and put an end to the village gossip.
-------------------
204. குறிஞ்சி
'தளிர் சேர் தண் தழை தைஇ, நுந்தை
குளிர் வாய் வியன் புனத்து எல் பட வருகோ?
குறுஞ் சுனைக் குவளை அடைச்சி, நாம் புணரிய
நறுந் தண் சாரல் ஆடுகம் வருகோ,
இன் சொல் மேவலைப்பட்ட என் நெஞ்சு உணக்
கூறு இனி; மடந்தை! நின் கூர் எயிறு உண்கு' என,
யான் தன் மொழிதலின், மொழி எதிர் வந்து,
தான் செய் குறி நிலை இனிய கூறி,
ஏறு பிரி மடப் பிணை கடுப்ப வேறுபட்டு,
உறு கழை நிவப்பின் சிறுகுடிப் பெயரும்
கொடிச்சி செல்புறம் நோக்கி,
விடுத்த நெஞ்சம்! விடல் ஒல்லாதே?
பின்னின்ற தலைமகன் ஆற்றானாய், தோழி கேட்பத் தன்
நெஞ்சிற்குச் சொல்லியது.
-- மள்ளனார்.
204. KURIÑCI
(The hero speaks to his heart to be overheard by the confidante of the heroine)
"Young lass!
Shall I meet you at dawn,
When you guard the vast field
Of your father, your kuļir[*] in hand,
And decked with a garment
Woven of flowers and tender shoots?
Or shall we meet and sport In the same place, in the slope,
Cool and fragrant, where we met last,
And sported, wearing the wreaths
Woven of Kuvalai blooms of the small spring?
Tell me a word that will offer solace
To my craving heart. Let me taste
The nectar that issues from your lustrous teeth!"
As I so spoke to her,
She came before me, as if to concede my request,
Took me to the meeting place,
Spoke sweet words and left for her hamlet
Thick with lofty bamboos.
As she left me, she looked like a doe
That got separated from its mate!
Alas, my heart that gave her leave and stood gazing at her back,
Now does not cease to think of her!
--- Ammallanār.
[*] An instrument to drive away the birds.
------------------
205. பாலை
அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து,
ஆளி நன் மான், வேட்டு எழு கோள் உகிர்ப்
பூம் பெறி உழுவை தொலைச்சிய, வைத் நுதி
ஏந்து வெண் கோட்டு, வயக் களிறு இழுக்கும்
துன் அருங் கானம் என்னாய், நீயே
குவளை உண்கண் இவள் ஈண்டு ஒழிய,
ஆள்வினைக்கு அகறி ஆயின், இன்றொடு
போயின்றுகொல்லோ தானே- படப்பைக்
கொடு முள் ஈங்கை நெடு மா அம் தளிர்
நீர் மலி கதழ் பெயல் தலைஇய
ஆய் நிறம் புரையும் இவள் மாமைக் கவினே!
தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லி, செலவு அழுங்கியது. தோழி செலவு
அழுங்கச் சொல்லியதூஉம் ஆம்.
--இளநாகனார்.
205. PĀLAI
(The hero speaks to his heart and gives up his idea of parting)
It is a lofty mountain with its slopes
Where dinsome cascades fall down
And where a mighty Āļi goes ahunting
And drags the dead body of a strong tusker
Of sharp-tipped and up-curved tusks;
It is the elephant which was already felled
By a tiger, beautifully striped
And endowed with murderous claws.
It is a forest full of dangers
And so none dares to pass through it.
Notwithstanding the perilous nature
Of this forest, if you intend to brave it,
Determined to get your endeavour accomplished,
And leave this girl alone,
Then, is this that fateful day
When her dusky complexion
With all its charm will perish once for all,
The complexion which glitters
Like the long, lovely shoots of the Inkai tree
Endowed with bent thorns, After a heavy shower of rain?
--Iļanākanār
Latent Meaning:
The dead body of an elephant which was murdered by a tiger is then consumed by an Ali. This suggests that the feminine charm of the heroine was enjoyed by the hero and her beauty was eaten by pallor.
---------------
206. குறிஞ்சி
'துய்த் தலைப் புனிற்றுக் குரல் பால் வார்பு இறைஞ்சி,
தோடு அலைக் கொண்டன ஏனல் என்று,
துறு கல் மீமிசைக் குறுவன குழீஇ,
செவ் வாய்ப் பாசினம் கவரும்' என்று, அவ் வாய்த்
தட்டையும் புடைத்தனை, கவணையும் தொடுக்க' என
எந்தை வந்து உரைத்தனனாக, அன்னையும்,
'நல் நாள் வேங்கையும் மலர்கமா, இனி' என
என் முகம் நோக்கினள்; எவன்கொல்?- தோழி! -
செல்வாள் என்றுகொல்? 'செறிப்பல்' என்று கொல்?
கல் கெழு நாடன் கேண்மை
அறிந்தனள்கொல்? அஃது அறிகலென் யானே!
தலைமகன் சிறைப்புறத்தானகத் தோழி சொல்லியது.
--ஐயூர் முடவனார்
206. KURINCI
(The confidante of the heroine speaks to be overheard by the hero)
“The tender and fluffy ears of millet are ripe and juicy;
They are drooping their heads down
And their blades rustle, assailed by wind;
The ruddy-beaked parrots assemble
On the boulders and are ready to plunder the grains.
Go to the field, with your Tattai* and sling!"
Thus bade us, our father.
While our mother very much-wished
That the Vēnkai should bloom,**
As harbinger of the wedding season,
The while looking at my face.
What could be her intent, my friend?
Does it mean that she intends to send me to the field?
Or, does it mean that she plans to confine me to our home?
Or has she come to know of our kinship with our lover,
The chief of a hilly domain?
I do not know.
--Aiyūr Mutavanār.
*Tattai is an instrument wrought of bamboo stem to drive away the birds from the field.
** The blossoming of the Venkai indicates the harvest season as well as the season appropriate for wedding.
-----------------
207. நெய்தல்
கண்டல் வேலிக் கழி சூழ் படப்பை
முண்டகம் வேய்ந்த குறியிறை குரம்பைக்
கொழு மீன் கொள்பவர் பாக்கம் கல்லென,
நெடுந் தேர் பண்ணிவரல் ஆனாதே;
குன்றத்து அன்ன குவவு மணல் நீத்தி
வந்தனர், பெயர்வர்கொல் தாமே? அல்கல்,
இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇ,
கோட் சுறா எறிந்தென, சுருங்கிய நாம்பின்
முடி முதிர் பரதவர் மட மொழிக் குறுமகள்,
வலையும் தூண்டிலும் பற்றி, பெருங் கால்
திரை எழு பௌவம் முன்னிய
கொலை வெஞ் சிறாஅர் பாற்பட்டனளே.
நொதுமலர் வரைவுழி, தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது.
207. NEYTAL
(The companion of the heroine speaks to the foster mother)
Mother!
The chief's chariot ceases not visiting
Our village, causing it resound with noise!
In our village, our folk, hunting fat fishes
Live in low-roofed huts, thatched with Muntakam plants;
These huts are amidst gardens,
Which are fenced with Kantal trees
And encircled by dusky creeks.
He came here, crossing many a hill-like sand-dune!
I fear he will return disappointed!
Alas, it is certain, that this young girl
Will fall into the hands of the murderous youngsters
Who go to the wavy sea, tossed by wind,
Armed with nets and fishing rods!
She is the bashful daughter of the fisherfolk,
Who, at night collect together
And mend their nets,
Damaged by killer-sharks,
Using nerve-like strong threads!
--Anonymous
Latent Meaning :
By pointing out that the hero visits in his chariot, the friend indicates that the hero is of a higher status. She also indicates that the new comers who seek the heroine's hand are far lower in social standing. They are mentioned as mere boys who employ fishing rods and fishing nets.
-----------------
208. பாலை
விறல் சால் விளங்கு இழை நெகிழ, விம்மி,
அறல் போல் தெள் மணி இடை முலை நனைப்ப,
விளிவு இல கலுழும் கண்ணோடு, பெரிது அழிந்து,
எவன் இனைபு வாடுதி? -- சுடர் நுதற் குறுமகள்!—
செல்வார் அல்லர் நம் காதலர்; செலினும்,
நோன்மார் அல்லர், நோயே; மற்று அவர்
கொன்னும் நம்புங் குரையர் தாமே;
சிறந்த அன்பினர்; சாயலும் உரியர்;
பிரிந்த நம்மினும் இரங்கி, அரும் பொருள்
முடியாது ஆயினும் வருவர்; அதன்தலை
இன் துணைப் பிரிந்தோர் நாடித்
தருவது போலும், இப் பெரு மழைக் குரலே?
செலவுற்றாரது குறிப்பு அறிந்து ஆற்றாளாய தலைமகள் உரைப்ப,
தோழி சொல்லியது.
--நொச்சி நியமங் கிழார்.
208. PĀLAI
(The companion of the heroine consoles the heroine who fears that
her lover will part from her)
O young lass of glowing forehead!
Your strong and shining jewels slip,
As your body has emaciated.
Ceaseless tears dampen your breasts.
Why do you grieve so much?
Our lover will not desert you.
In case he parts from you,
He cannot bear the pangs of separation.
He has boundless love for you.
His nature being delicate,
His agony will be greater than ours!
He will be back here,
Even should he fail to secure
The sought-after wealth!
Above all, see, the rainclouds
Make noise, as if they would restore
The lovers of lonely women.
--Nocci Niyamankilār.
--------------------
209. குறிஞ்சி
மலை இடம்படுத்துக் கோட்டிய கொல்லைத்
தளி பதம் பெற்ற கான் உழு குறவர்
சில வித்து அகல இட்டென, பல விளைந்து,
இறங்குகுரல் பிறங்கிய ஏனல் உள்ளாள்,
மழலை அம் குறுமகள், மிழலைஅம் தீம் குரல்
கிளியும் தாம் அறிபவ்வே;
எனக்கே படும்கால் பையுள் தீரும்; படாஅது
தவிரும் காலை ஆயின், என்
உயிரோடு எல்லாம் உடன் வாங்கும்மே!
குறை மறுக்கப்பட்டுப் பின்னின்ற தலைமகன் ஆற்றனாய், நெஞ்சிற்குச் சொல்லுவானாய்ச் சொல்லியது; தோழி கேட்டுக் குறை முடிப்பது பயன்.
--நொச்சி நியமங்கிழார்.
209. KURIÑCI
(The lover speaks to himself when he stands behind the heroine
seeking her favour)
The hill-folk awaited for rain-fall
And reclaimed the forest on the slopes
And made vast gardens
In which were broadcast a few seeds
But, the few seeds have yielded
Manifold grains; the millet ears
Now bend their heads down.
The field is guarded by my beloved
Who lisps sweetly words like a child.
Even the parrots can understand her lispiing words.
When these words fall in my ears,
I am relieved of all my pain.
In their absence,
I am deprived of everything dear to me,
Including my life!
--Nocci Niyamankilār.
----------------
210. மருதம்
அரிகால் மாறிய அம் கண் அகல் வயல்
மறு கால் உழுத ஈரச் செறுவின்,
வித்தொடு சென்ற வட்டி பற்பல
மீனொடு பெயரும் யாணர் ஊர!
நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்
செல்வம் அன்று; தன் செய் வினைப் பயனே;
சான்றோர் செல்வம் என்பது, சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென் கட் செல்வம் செல்வம் என்பதுவே.
தோழி தலைமகனை நெருங்கிச் சொல்லுவாளாய்,
வாயில் நேர்ந்தது.
--மிளைகிழான் நல்வேட்டனார்.
210. MARUTAM
(The companion of the heroine allows entry to the hero)
O chief of a fertile plain!
In your domain, the tillers take
Baskets full of seeds, to sow
In the vast fields, ploughed again
After a harvest, for raising a second crop;
Their sowing done,
They return home, with the same baskets
Filled with many a kind of fishes.
You must know, chief,
That to be honoured by the crown with titles
And travelling in speeding vehicles
Are never the marks of prosperity.
What the wise deem as genuine wealth
Is compassion - the melting of heart
That makes one to rush
To wipe the tears of the dependants
Who seek one's support.
--Miļai kilān Nalvēttanār.
Latent Meaning:
The basket filled with seeds and taken to the field, is now carried home filled with fish. This implies that the panan who fetched a harlot for the use of the hero extracts the intended gift from the hero.
--------------------
211. நெய்தல்
யார்க்கு நொந்து உரைக்கோ யானே - ஊர் கடல்
ஓதம் சென்ற உப்புடைச் செறுவில்,
கொடுங் கழி மருங்கின், இரை வேட்டு எழுந்த
கருங் கால் குருகின் கோள் உய்ந்து போகிய
முடங்கு புற இறவின் மோவாய் ஏற்றை,
எறி திரை தொகுத்த எக்கர் நெடுங் கோட்டுத்
துறு கடற் றலைய தோடு பொதி தாழை
வண்டு படு வான் போது வெரூஉம்
துறை கெழு கொண்கன் துறந்தனன் எனவே?
வரைவு நீட ஒருதலை ஆற்றாளாம் என்ற தோழி சிறைப்புறமாகத்
தன்னுள்ளே சொல்லியது.
--கோட்டியூர் நல்லந்தையார்.
211. NEYTAL
(The friend of the heroine speaks to herself to be overheard by the hero,
when the heroine is sore with the delay in her wedding)
He is the chief of a littoral domain
Where there are encircling marshy creeks,
Into which flows the sea-water
And turns into flaked salt;
Here, a male shrimp of bent back
And peaked mouth escapes
From the grip of a dusky-legged crane
That came there seeking its prey,
And thereafter dreads a white flower,
Buzzed by a swarm of bees,
Of a Tālai bush, whose blades bend their heads
Towards the long sand dunes,
Formed by the waves from the deep-watered sea.
To whom shall I go with my tearful eyes
And complain that he had forsaken me?
--Kottiyūr Nallantaiyār.
Latent Meaning:
The shrimp which escaped from a prey-seeking crane
dreads the Tālai flower,
The heroine hears the gossip of the village women and thereafter dreads her mother, suspecting that she might have known of her secret affairs.
------------------
212. பாலை
பார்வை வேட்டுவன் படு வலை வெரீஇ,
நெடுங் கால் கண்ந்துள் அம் புலம்பு கொள் தெள் விளி
சுரம் செல் கோடியர் கதுமென இசைக்கும்
நரம்பொடு கொள்ளும் அத்தத்து ஆங்கண்,
கடுங் குரற் பம்பைக் கத நாய் வடுகர்
நெடும் பெருங் குன்றம் நீந்தி, நம் வயின்
வந்தனர்; வாழி - தோழி! -- கையதை
செம் பொன் கழல்தொடி நோக்கி, மா மகன்
கவவுக் கொள் இன் குரல் கேட்டொறும்.
அவவுக் கொள் மனத்தேம் ஆகிய நமக்கே.
பொருள் முடித்துத் தலைமகனோடு வந்த வாயில்கள் வாய் வரவு கேட்ட தோழி
தலை மகட்குச் சொல்லியது.
--குடவாயிற் கீரத்தனார்.
212. PĀLAI
(The confidante speaks to the heroine, knowing that the hero is on his way home)
O friend!
Our lover who parted from us,
Travelled through an extensive barren land.
Here, a hunter, employing a decoy-bird
Casts his net noticing which,
A long-legged Kanantuļ bird is scared
And moves away and cries painfully.
This painful cry mingles
With the Yāl-melody of the dancers
That move along the jungle-path.
Such an one has now arrived here
After travelling through the paths,
Running across a lofty and extending mountain,
In the domain of the Vatukās
Who go ahunting with their angry setters
And harsh-toned kettle-drums.
He has come to make us happy,
Whose hearts swell with love
On hearing the sweet voice
Of our precious son, who embraces us
And asks, why our golden bangles
Do not stay on our wrists.
--Kuțavāyil Kirattanār.
Suggestion (Iraicci)
The crying noise of the Kanantul mingles with the yāl melody. This implies that the heroine will live with her lover and her glory will extend everywhere.
--------------
213. குறிஞ்சி
அருவி ஆர்க்கும் பெரு வரை நண்ணி,
'கன்று கால்யாத்த மன்றப் பலவின்
வேர்க் கொண்டு தூங்கும் கொழுஞ் சுளைப் பெரும் பழம்
குழவிச் சேதா மாந்தி, அயலது
வேய் பயில் இறும்பின் ஆம் அறல் பருகும்
பெருங் கல் வேலிச் சிறுகுடி யாது?' என,
சொல்லவும் சொல்லீர்; ஆயின், கல்லெனக்
கருவி மா மழைவீழ்ந்தென, எழுந்த
செங் கேழ் ஆய செழுங் குரற் சிறு தினைச்
கொய் புனம் காவலும் நுமதோ?--
கோடு ஏந்து அல்கும், நீள் தோளீரே!
மதி உடன்படுக்கும் தலைமகன் சொல்லியது.
--கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்.
213. KURINCI
(The how speaks to the heroine and her friend who are together
during the courting period)
O girls of raised forelaps and supple shoulders!
You are reluctant to tell anything
About your hamlet which is protected by a lofty mountain
Whence flows a dinsome cataract.
Here in a foreyard thrives, a jack tree
With heavy bunches of fruits
Hanging from its roots; the drupes
Of these fruits are fleshy and juicy.
To this tree is tethered young calves
And the mother of one such calf
Eats these fruits to its fill
And drinks the cold water
That flows down a slope,
Thick with bamboo clusters.
If you do not tell me
Anything about your village,
Can you at least tell me,
If this millet-field is yours
The field, where the crops grew well
By the copious rains which poured,
Accompanied by thunder and lightning,
And whose ruddy and heavy ears
Are ready for harvest!
--Kaccippēttupperuntaccanár.
Suggestion :
The mother-cow eats the jack fruit nearby and drinks the stream water. The hero who enjoyed secret union with the heroine already, will hereafter enjoy her company dur ing the trysts by day and night.
-------------------
214. பாலை
‘இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும்
அசையுநர் இருந்தோர்க்கு அரும் புணர்வு இன்பம்' என,
வினைவயின்பிரிந்த வேறுபடு கொள்கை,
‘அரும்பு அவிழ் அலரிச் சுரும்பு உண் பல் போது
அணிய வருதும், நின் மணி இருங் கதுப்பு' என,
எஞ்சா வஞ்சினம் நெஞ்சு உணக் கூறி,
மை சூழ் வெற்பின் மலை பல இறந்து,
செய் பொருட்கு அகன்ற செயிர் தீர் காதலர்
கேளார்கொல்லோ-தோழி!- தோள
இலங்கு வளை நெகிழ்த்த கலங்கு அஞர் எள்ளி
நகுவது போல, மின்னி
ஆர்ப்பது போலும் இக் கார்ப் பெயற் குரலே?
உலகியலால் பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகன் குறித்த பருவம் கண்டு தலைமகள் சொல்லியது.
--கருவூர்க் கோசனார்.
214. PĀLAI
(The heroine speaks to her friend at the advent of the rainy season)
My friend!
“Securing fame, enjoying the pleasures of life,
And a life of philanthropy are not things,
Attained even remotely,
By folk who indulge in indolence!”
With these words, our lover went away,
Our unwillingness notwithstanding.
He solemnly affirmed to come back here,
To adorn my gem-like dark hair
With blooms, buzzed by bees.
Alas, he trod through paths
Running across many a cloud-clad hill.
Won't he, our blemishless lover,
Hear the noise of the rain,
That pours with frequent lightning flashes
And terrible rumbling of thunder!
The clouds flash out, as if to laugh at my grief
That has caused me lose my bracelets,
And rumble, as if they would
Take delight in my grief!
--Karuvūrkkocanār
--------------
215. நெய்தல்
குண கடல் இவர்ந்து, குரூஉக் கதிர் பரப்பி,
பகல் கெழு செல்வன் குடமலை மறைய,
புலம்பு வந்து இறுத்த புன்கண் மாலை,
இலங்கு வளை மகளிர் வியல் நகர் அயர,
மீன் நிணம் தொகுத்த ஊன் நெய் ஒண் சுடர்
நீல் நிறப் பரப்பில் தயங்கு திரை உதைப்ப,
கரை சேர்பு இருந்த கல்லென் பாக்கத்து,
இன்று நீ இவணை ஆகி, எம்மொடு
தங்கின் எவனோதெய்ய? செங் கோல்
கொடு முடி அவ் வலை பரியப் போகிய
கோட் சுறாக் குறித்த முன்பொடு
வேட்டம் வாயாது எமர் வாரலரே.
பகற் குறி வந்து மீள்வானை அவள் ஆற்றும் தன்மையள் அல்லள்; நீயிர் இங்குத் தங்கற் பாலீர்; எமரும் இன்னது ஒரு தவற்றினர்' எனத் தோழி தலைமகற்குச் சொல்லியது. இரவுக் குறி மறுத்து வரைவு கடாயதூஉம் ஆம்.
--மதுரைச் சுள்ளம் போதனார்.
215. NEYTAL
(The companion of the heroine speaks to the hero during the tryst by day)
The sun, which emerged from the eastern sea
Shone bright all through the day
And now it has sunk beneath the western hill;
The painful evening, fully armed with loneliness
Has set in; this is the hour,
When bangled women accord welcome
To the evening time with the lighting
Of lamps, which are fed, by the melted fish-fat!
In the blue expanse of the sea,
The waves rise and fall;
The village resounds with bustle;
What harm will betide you, chief,
If you condescend to stay here today?
Our kin will not come ashore,
Unless they net again,
The killer-shark that escaped them,
Damaging their nets of curved knots and ruddy threads.
--Maturai Cullampūtanār.
------------------
216. மருதம்
துனிதீர் கூட்டமொடு துன்னார் ஆயினும்,
இனிதே, காணுநர்க் காண்புழி வாழ்தல்;
கண்ணுறு விழுமம் கை போல் உதவி,
நம் உறு துயரம் களையார் ஆயினும்,
இன்னாது அன்றே, அவர் இல் ஊரே;
எரி மருள் வேங்கைக் கடவுள் காக்கும்
குருகு ஆர் கழனியின் இதணத்து ஆங்கண்,
ஏதிலாளன் கவலை கவற்ற,
ஒரு முலை அறுத்த திருமாவுண்ணிக்
கேட்டோர் அனையர் ஆயினும்,
வேட்டோர் அல்லது, பிறர் இன்னாரே.
தலைமகட்குப் பாங்காயினார் கேட்பத் தலைமகன் தலைநின்று ஒழுகப் படாநின்ற பரத்தை, பாணற்கு ஆயினும் விறலிக்கு ஆயினும் சொல்லுவாளாய், நெருங்கிச் சொல்லியது.
--மதுரை மருதன் இளநாகனார்
216. MARUTAM
(The hetaira speaks to either a pāņan or a virali, to be overheard
by the kin of the heroine)
Our lover does not offer me conjugal pleasure
After having chased away my mood of sulking.
Yet, how sweet it is,
To live in a place, where we can see each other,
Though he does not rush to rid us of our suffering,
Like unto the hand that hastens
o relieve the eye of its distress.
How painful it is,
To live in the place,
Where he is not to be seen!
Near the paddy field, full of herons
And on the loft, built atop a Vēnkai tree
Thick with fiery blooms, the abode of a deity,
A lad, devoid of virtue,
Consumed the feminine charm
Of one Tirumavuņni and then turned untrue;
Unable to bear the intense grief,
The poor girl plucked one of her breasts
And proved her chastity,
Before the assembly of elders.
Whatever be the disposition
Of all those who heard her case,
She could not live with a person
Whom she did not love!
--Maturai Marutan Iļanakanār.
Note:- The speaker is a hetaira whom her lover had deserted. Her love for the man is sincere and she feels wretched in his ab sence. She compares herself to Tirumavunni who proved her chastity and lived happily with her lover, (though he initially tried to cheat her), at the intervention of the elders. A section of Tamil scholars hold that this episode of Tirumāvunni is the basis for the story of Kannaki the heroine of Cilappatikāram.
----------------------
217. குறிஞ்சி
இசை பட வாழ்பவர் செல்வம் போலக்
காண் தொறும் பொலியும், கதழ் வாய் வேழம்,
இருங் கேழ் வயப் புலி வெரீஇ, அயலது
கருங் கால் வேங்கை ஊறுபட மறலி,
பெருஞ் சினம்தணியும் குன்றநாடன்
நனி பெரிது இனியன் ஆயினும், துனி படர்ந்து
ஊடல் உறுவேன் - தோழி!- நீடு
புலம்பு சேண் அகல நீக்கி,
புலவி உணர்த்தல் வன்மையானே.
தலைமகள் வாயில் மறுத்தது.
--கபிலர்.
217. KURIÑCI
(The heroine refuses entry to her spouse)
Our lover is the chief of a hilly domain
Where a fleet-footed elephant,
That glows with enhanced beauty,
Like the increasing wealth
Of a generous folk, fells a dark-trunked Venkai tree
And gets its anger quenched,
As a puissant tiger of dark thick skin
Had escaped from its attack.
Though he is immensely sweet,
I sulk; It is because,
He is the one who tries to change
My mood of sulking,
By his excessive acts of love and sweet words
And causes all my pain leave me!
(I just pretend to be sulking!)
--Kapilar.
Latent Meaning
The tusker gets its anger quenched by felling a Venkai tree, after the tiger escapes its attack and runs away. Likewise, the hero gets away, dreading the sulk ing of his spouse; As a result, she gets her anger abated by abusing the hetaira.
---------------
218. நெய்தல்
ஞாயிறு ஞான்று கதிர் மழுங்கின்றே;
எல்லியும், பூ வீ கொடியின் புலம்பு அடைந்தன்றே;
வாவலும் வயின்தொறும் பறக்கும்; சேவலும்
நகை வாய்க் கொளீஇ நகுதொறும் விளிக்கும்;
ஆயாக் காதலொடு அதர்ப் படத் தெளித்தோர்
கூறிய பருவம் கழிந்தன்று; பாரிய
பராரை வேம்பின் படு சினை இருந்த
குராஅற் கூகையும் இராஅ இசைக்கும்;
ஆனா நோய் அட வருந்தி, இன்னும்
தமியேன் கேட்குவென் கொல்லோ,
பரியரைப் பெண்ணை அன்றிற் குரலே?
வரைவிடை மெலிந்த தலைமகள் வன்புறை எதிர்மொழிந்தது.
--கிடங்கில் காவிதிக் கீரங்கண்ண னார்.
218. NEYTAL
(The heroine speaks to her companion)
O my friend!
The sun, its radiance abated,
Has sunk in the west;
Night has fallen with all its loneliness;
It is desolate like a vine denuded of its foliage;
Bats are seen floating everywhere;
The male owl hoots aloud
As if it would laugh;
Our lover of limitless love
Consoled me saying
That he would be back here soon!
But see, the season marked by him is already past;
The owl, perched on a huge branch
Of the neem tree of swelled trunk
And dotted shade, hoots aloud
All through the night.
I have suffered enough of loneliness
And assailing grief, all these days.
Do I still have any strength,
To hear the anguished cry
Of the Anril bird that abides
On the palmyra tree of broad base?
--Kitankil Kaviti Kirankannanār.
------------------
219. நெய்தல்
கண்ணும் தோளும் தண் நறுங் கதுப்பும்
பழ நலம் இழந்து பசலை பாய,
இன் உயிர் பெரும்பிறிது ஆயினும், என்னதூஉம்
புலவேன் வாழி தோழி!-- சிறு கால்
அலவனொடு பெயரும் புலவுத் திரை நளி கடல்
பெரு மீன் கொள்ளும் சிறுகுடிப் பரதவர்
கங்குல் மாட்டிய கனை கதிர் ஒண் சுடர்
முதிரா ஞாயிற்று எதிர் ஒளி கடுக்கும்
கானல்அம் பெருந் துறைச் சேர்ப்பன்--
தானே யானே புணர்ந்தமாறே.
வரைவிடை வைத்துப் பிரிய ஆற்றாளாய தலைமகள்
தோழிக்குச் சொல்லியது.
--தாயங்கண்ணனார்.
219. NEYTAL
(The heroine speaks to her friend, when the hero parts from her
to earn the wealth needed for their wedding)
Friend,
My eyes, shoulders and cool fragrant tresses
May lose their former charm!
Pervaded by pallor, even my sweet life
May desert my body!
I will not sulk even in the least
With our lover, in whose littoral domain, fisherfolk abiding in
hamlets, to net huge fishes,
Sail on the deep-watered sea of stinking waves,
Which carry with them
The slender-legged crabs,
When they withdraw from the shore.
When they thus sail at night in their boats,
They carry with them lamps,
Which glow like the reflected light
Of the morning sun.
I do not sulk with him because,
I know that he is the same man,
Who came here on his own
And showered his love on me!
--Tāyankannanār.
Latent Meaning:
The boat lamps glow like the reflected light of the morn ing sun. This suggests that the solemn affirmations of the hero ever remains in her heart.
-------------
220. குறிஞ்சி
சிறு மணி தொடர்ந்து, பெருங் கச்சு நிறீஇ,
குறு முகிழ் எருக்கங் கண்ணி சூடி,
உண்ணா நல் மாப் பண்ணி, எம்முடன்
மறுகுடன் திரிதரும் சிறு குறுமாக்கள்,
பெரிதும் சான்றோர் மன்ற --விசிபிணி
முழவுக் கண் புலரா விழவுடை ஆங்கண்,
'ஊரேம்' என்னும் இப் பேர் ஏமுறுநர்
தாமே ஒப்புரவு அறியின், 'தேமொழிக்
கயல் ஏர் உண்கண் குறுமகட்கு
அயலோர் ஆகல்' என்று எம்மொடு படலே!
குறை நேர்ந்த தோழி தலைமகளை முகம் புக்கது. பின்னின்ற தலைமகன் தோழி கேட்பத் தலைமகளை ஓம்படுத்த தூஉம் ஆம். தான் ஆற்றனாய்ச் சொல்லியதூஉம் ஆம்.
--குண்டுகட்பாலியாதனார்.
220. KURINCI
(The hero speaks to be heard by the friends of the heroine)
I am now mounted on a horse
Wrought of palmyra stems,
Which needs no feeding by us
And which is decked with a wreath
Made of small bells and a piece of cloth.
I am wearing a garland of the converging
Clusters of the tiny blooms of the madar,
The young boys, who are ready
To follow me through the streets
Of this festive town, where drums,
Taut with leather thongs, never cease to sound,
Are indeed very wise!
They say that they belong to this town.
They are full of worldly wisdom,
For, they reflect my own thinking!
They also accept that these girls,
Who are close to the heroine,
Who is young, whose words are sweet
And whose eyes are kayal-like and fed with khol
Are very unfriendly!
--Kuntukatpāliyātanar.
--------------
221. முல்லை
மணி கண்டன்ன மா நிறக் கருவிளை
ஒண் பூந் தோன்றியொடு தண் புதல் அணிய,
பொன் தொடர்ந்தன்ன தகைய நன் மலர்க்
கொன்றை ஒள் இணர் கோடுதொறும் தூங்க,
வம்பு விரிதன்ன செம் புலப் புறவில்,
நீர் அணிப் பெரு வழி நீள் இடைப் போழ,
செல்க- பாக!-- நின் செய்வினை நெடுந் தேர்;
விருந்து விருப்புறூஉம் பெருந் தோட் குறுமகள்,
மின் ஒளிர் அவிர் இழை நல் நகர் விளங்க,
நடை நாட் செய்த நவிலாச் சீறடிப்
பூங் கட் புதல்வன் உறங்குவயின் ஒல்கி,
'வந்தீக, எந்தை!' என்னும்
அம் தீம் கினவி கேட்கம் நாமே.
வினை முற்றி மறுத்தராநின்ற தலைமகன் பாகற்குச் சொல்லியது.
--இடைக்காடனார்
221. MULLAI
(The hero speaks to his charioteer)
My little son with flowery eyes
Learns to walk, with his little and unsteady feet;
Our beautiful house glows with greater charm
By the radiance of his effulgent ornaments.
My young beloved with her wide shoulders,
Who ever delights in entertaining guests
Moves towards the cradle
That lulls my son, causing her slender body
Grieve while walking, and says,
"Come to me our lord!"
I must hasten to hear those words.
So, charioteer, drive fast your chariot,
Artful and lofty,
Through the watery path of the woods!
Let the chariot splash through the route,
Leaving behind, the imprint of its wheels!
Behold! Every cool bush of the wood.
Glows bright with the glittering blooms
Of Tõnri and the blue-gem-like flowers of Karuvilai!
--Iļavēttanār.
Latent Meanings:
1. The bards walk along the rocky path levelled by the hooves of the horses of the suppliants who return after receiving gifts. If the chari oteer drives fast the chariot, the hero will meet his beloved and get delighted.
2. The bees fetch nectar from the flowers in the Kolli mountain and store in the rills. The wisdom of the hero gets into his own heart and carries it to his beloved.
-----------------
222. குறிஞ்சி
கருங்கால் வேங்கைச் செவ் வீ வாங்கு சினை
வடுக் கொளப் பிணித்த விடுபுரி முரற்சிக்
கை புனை சிறு நெறி வாங்கி, பையென,
விசும்பு ஆடு ஆய் மயில் கடுப்ப, யான் இன்று,
பசுங் காழ் அல்குல் பற்றுவனன் ஊக்கிச்
செலவுடன் விடுகோ- தோழி!- பலவுடன்
வாழை ஒங்கிய வழை அமை சிலம்பில்,
துஞ்சு பிடி மருங்கின் மஞ்சு பட, காணாது,
பெருங் களிறு பிளிறும் சோலை அவர்
சேண் நெடுங் குன்றம் காணிய நீயே?
தோழி தலைமகன் வரவு உணர்ந்து, சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇ
வரைவு கடாயது.
--கபிலர்.
222. KURIÑCI
(The confidante speaks to the heroine to be overheard by the hero
who stands near the fence)
Our lover is the chief of a lofty and extensive mountain,
Rich in banana, Valai and jack trees;
Here, a cow-elephant at slumber
Is besieged by murky rain-clouds
To the utter dismay of its mate
Which trumpets, unable to bear loneliness.
Shall I pull your pearl-string
Worn around your waist and thus
Set in motion the swing,
Wrought of ropes and tied skilfully
To the bent branch, laden with ruddy flowers
Of the dark-trunked Venkai tree?
Shall I move the swing
With force, causing it to make wounds
On the bark of the tree,
And enable you to have a look
At our lover's mountain,
Your form resembling a beautiful peafowl
That flies in the air?
--Kapilar
Latent Meaning :
The cow-elephant is hidden by the clouds at which its mate grieves
of separation.
The hero will grieve unable to meet his beloved in the trysting place
as she is confined to her home.
---------------
223. நெய்தல்
இவள்தன், காமம் பெருமையின், காலை என்னாள்; நின்
அன்பு பெரிது உடைமையின், அளித்தல் வேண்டி,
பகலும் வருதி, பல் பூங் கானல்;
இன்னீர் ஆகலோ இனிதால் எனின், இவள்
அலரின் அருங் கடிப் படுகுவள்; அதனால்
எல்லி வம்மோ !-- மெல்லம் புலம்ப!
சுறவினம் கலித்த நிறை இரும் பரப்பின்
துறையினும் துஞ்சாக் கண்ணர்
பெண்டிரும் உடைத்து, இவ் அம்பல் ஊரே.
பகற்குறி வந்து மீள்வானைத் தோழி இரவுக்குறி நேர்வாள் போன்று,
அதுவும் மறுத்து, வரைவு கடாயது.
--உலோச்சனார்.
223. NEYTAL
(The confidante speaks to the hero who visits by day, to persuade him to
wed her friend betimes)
Chief!
Knowing well that this girl's heart
Overflows with love for you,
You visit this multiflowered seaside grove,
Even during day-time,
Notwithstanding your knowing
That the morn is not an opportune hour
For clandestine meeting.
It is so sweet that both of you
Are in such love united.
Yet, if this secret kinship comes to light;
It is certain that she will be confined
To her house; so, sir, may you visit by night!
Chief of a littoral domain!
This seaside hamlet resounds
With base slander; this slander is
Louder than the bustle of the flooded sea-ford
Abounding in sharks!
Beware, chief, that this hamlet has women
Who never close their eyes in sleep
Even during the night!
--Uloccanār.
Implied Meaning:
The sea is full of sharks. The village is full of slanderous tongues.
--------------
224. பாலை
அன்பினர், மன்னும் பெரியர்; அதன்தலை,
‘பின்பனி அமையம் வரும்' என, முன்பனிக்
கொழுந்து முந்துறீஇக் குரவு அரும்பினவே;
‘புணர்ந்தீர் புணர்மினோ' என, இணர்மிசைச்
செங் கண் இருங் குயில் எதிர் குரல் பயிற்றும்
இன்ப வேனிலும் வந்தன்று; நம்வயின்,
'பிரியலம்' என்று, தெளித்தோர் தேஎத்து,
இனி எவன் மொழிகோ, யானே - கயன் அறக்
கண் அழிந்து உலறிய பல் மர நெடு நெறி
வில் மூசு கவலை விலங்கிய
வெம் முனை அருஞ் சுரம் முன்னியோர்க்கே?
தோழியால் பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகள் பெயர்த்தும் சொல்
கடாவப்பட்டு, அறிவிலாதேம் என்னை சொல்லியும், பிரியார் ஆகாரோ?”
என்று சொல்லியது.
--பாலை பாடிய பெருங்கடுங்கோ .
224. PĀLAI
(The heroine speaks to her friend)
Friend,
Our lover is great, and his love for us is limitless;
As a harbinger of the late misty season,
The early dewy season has caused
The Kuravam trees to let out fresh shoots and buds!
The dark koels of ruddy eyes which are
Perched on the twigs full of flower-bunches,
Call each other; on the mango trees,
They seem to advise the lovers
To get united in inseparable union!
Now has set in the joyful spring!
Henceforth, what can I tell our lover
Who consoled us saying that he would never part from us?
Alas, our lover decided to cross
Well-nigh impassable forests and villages
In the alien lands, with branched paths,
Infested with crowded brigands
Wielding bows.
It is an extending path
Parched to the core,
Where the branches of trees are dry
And denuded of foliage!
--Pālaipātiya Perunkatunko
-------------------
225. குறிஞ்சி
முருகு உறழ் முன்பொடு கடுஞ் சினம் செருக்கிப்
பொருத யானை வெண் கோடு கடுப்ப,
வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகை,
மெல் இயல் மகளிர் ஓதி அன்ன
பூவொடு, துயல் வரும் மால் வரை நாடனை
இரந்தோர் உளர்கொல் - தோழி!-- திருந்து இழைத்
தொய்யில் வன முலை வரி வனப்பு இழப்பப்
பயந்து எழு பருவரல் தீர,
நயந்தோர்க்கு உதவா நார் இல் மார்பே?
வன்புறை எதிர் அழிந்தது; பரத்தை தலைமகட்குப் பாங்காயின
வாயில் கேட்பச் சொல்லியதூஉம் ஆம்.
--கபிலர்.
225. MARUTAM
(The heroine speaks in reply to her friend who consoled her)
Our lover is the chief of a lofty hill
Rich in bananas; their young buds,
Fleshy and sharp-tipped resemble
The blood-stained tusks of a wrathful tusker
Which had engaged its boe in a fierce battle,
With its enormous puissance
That matches Lord Murukan's
These buds swey together with the ripe flowers
Of the banana trees, resembling
The tresses, made into buns,
Of the soft-miened women.
Such is the domain of our lover!
Did anyone beseech him
To offer his loveless chest,
To get ourselves relieved
Of our grief?
His chest is of no use
To us, though we very much long for it!
Did we ever request him
To offer it, though pallor pervades our body
Spoiling all our charm which was enhanced
By the shapely jewels and comely Toyyil?*
--Kapilar.
*Toyyil = An ancient practice of adorning the bosom and arms of women with painting.
--------------
226. பாலை
மரம் சா மருந்தும் கொள்ளார், மாந்தர்;
உரம் சாச் செய்யார், உயர்தவம்; வளம் கெடப்
பொன்னும் கொள்ளார், மன்னர் - நன்னுதல்!—
நாம் தம் உண்மையின் உளமே; அதனால்
தாம் செய்பொருள் அளவு அறியார்; தாம் கசிந்து,
என்றூழ் நிறுப்ப, நீள் இடை ஒழிய,
சென்றோர் மன்ற நம் காதலர்; என்றும்
இன்ன நிலைமைத்து என்ப;
என்னோரும் அறிப, இவ் உலகத்தானே.
பிரிவிடை மெலிந்த தலைமகள் வன்புறை எதிர்மொழிந்தது.
--கணி புன்குன்றனார்
226. PALAI
(The heroine speaks unable to bear the pangs of separation)
The wise do not cut parts of trees for medicine,
At the expense of their life.
Men will not take to so severe tapas,
To the point of losing all their strength.
So too, the wise monarchs never extract their dues
Rendering their subjects indigent.
O girl of comely forehead!
We have no life but for the kinship with our lover.
But our lover has crossed
An extending wilderness where drought reigns supreme
And where no life can move about.
It is because of his excessive desire for wealth.
Alas, he does not realise,
The triviality of riches, he wishes to secure!
The world knows well
That this is always
The nature of men!
--Kanipūnkunranar
--------------
227. நெய்தல்
அறிந்தோர் 'அறன் இலர்' என்றலின், சிறந்த
இன் உயிர் கழியினும் நனி இன்னாதே;
புன்னை அம் கானல் புணர் குறி வாய்த்த
மின் ஈர் ஓதி என் தோழிக்கு, அன்னோ!
படு மணி யானைப் பசும்பூட் சோழர்
கொடி நுடங்கு மறுகின் ஆர்க்காட்டு ஆங்கண்,
கள்ளுடைத் தடவில் புள் ஒலித்து ஓவாத்
தேர் வழங்கு தெருவின் அன்ன,
கௌவை ஆகின்றது ஐய! -- நின் அருளே.
வரையாது நெடுங்காலம் வந்து ஒழுக, தோழி தலைமகனை
வரைவு முடுகச் சொல்லியது.
-- தேவனார்.
227. NEYTAL
(The companion of the heroine importunes the hero
to wed the heroine eftsoon)
Chieftain,
You showered your love, on my friend
Endowed with cool and plaited tresses
When she met you in the comely grove
Of Punnai trees in the beach!
Alas, now this village of ours is agog
With scandal as a sequel of this kinship with you.
The scandal is as loud as the din
Created by the fleeting chariots of the opulent,
Who entertain strangers with abundant liquor,
In the streets with poles, atop which flutter flags
In the town of Ārkkātu,
In the realm of the Cola monarch
Bedecked with ornaments of fresh gold,
Possessing elephants adorned with bells that tinkle in
alternate succession!
Alas, people in our village say,
“Not all those who call themselves learned,
Are virtuous ones! But for my friend,
This slander will cause pain
Even after her sweet life deserts her body!
--Tēvanar
------------------
228. குறிஞ்சி
என் எனப்படுமோ --தோழி! -- மின்னு வசிபு
அதிர் குரல் எழிலி, முதிர் கடன் தீர,
கண் தூர்பு விரிந்த கனை இருள் நடு நாள்,
பண்பு இல் ஆர் இடை வரூஉம் நம் திறத்து.
அருளான்கொல்லோ தானே -- கானவன்
சிறு புறம் கடுக்கும் பெருங் கை வேழம்,
வெறி கொள் சாபத்து எறி கணை வெரீஇ,
அழுந்துபட விடரகத்து இயம்பும்
எழுந்து வீழ் அருவிய மலை கிழவோனே?
தோழி, சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்,
தலைமகன் கேட்பச் சொல்லியது.
--முடத்திருமாறனார்.
228. KURIÑCI
(The companion of the heroine speaks to the heroine to be overheard by the hero)
O my friend,
Our lover, the chief of a montane region,
Where cascades leap and flow
And where a tusker of huge trunk
Resembling a hunter's nape
Gets scared by an arrow
Shot with force from a dreadful bow
And trumpets in pain,
Causing echo in the interior
Of mountain-clefts;
Our lover would come here
To shower his love on us.
He would come here, braving the dangerous path
During densely dark night,
That marred the eyesight of men
When the thundering clouds in motion
Flashed out very often!
Alas, such an one has not turned up now.
What reason shall we ascribe to it?
--Mutattirumāranār.
--------------
229. பாலை
'சேறும், சேறும்' என்றலின், பல புலந்து,
'சென்மின்' என்றல் யான் அஞ்சுவலே;
'செல்லாதீம்' எனச் செப்பின், பல்லோர்
நிறத்து எறி புன் சொலின்திறத்து அஞ்சுவலே;
அதனால், சென்மின்; சென்று வினை முடிமின்; சென்றாங்கு,
அவண் நீடாதல் ஓம்புமின்; யாமத்து,
இழை அணி ஆகம் வடுக் கொள முயங்கி,
உழையிராகவும் பனிப்போள் தமியே
குழைவான், கண்ணிடத்து ஈண்டித் தண்ணென,
ஆடிய இள மழைப் பின்றை ,
வாடையும் கண்டிரோ, வந்து நின்றதுவே?
தலைமகனால் பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைமகளை ஆற்றுவித்துச்
செல்ல உடன் பட்டது; செலவு அழுங்குவித்ததூஉம் ஆம்.
229. PĀLAI
(The confidante urges the hero to part after consoling his beloved)
O chief,
You very often tell me
Of your intention to part from us.
But I fear to speak against your wishes
And so say, “You may go”,
In a mood of resentment
I may prevent your going;
But I fear the arrow-like words
Of derision of many a folk!
So chief,
I permit you to go wherever you like.
But avoid staying in the place of your visit
For an unduly long period.
Remember, your beloved is a lass
Who would shake with fear
Even when you are beside her
And hold her in your tight embrace,
Leaving imprints of her jewels on her bosom.
The clouds, after having spread
All over the vast space
And poured heavily, have now turned white
And move about, causing chillness.
The benumbing northerly has almost set.
How can your beloved bear your parting at this hour?
--Anonymous
-----------------
230. மருதம்
முயப் பிடிச் செவியின் அன்ன பாசடை,
கயக் கணக் கொக்கின் அன்ன கூம்பு முகை,
கணைக் கால், ஆம்பல் அமிழ்து நாறு தண் போது,
குணக்குத் தோன்று வெள்ளியின், இருள் கெட விரியும்
கயற்கணம் கலித்த பொய்கை ஊர!
முனிவு இல் பரத்தையை எற் றுறந்து அருளாய்;
நனி புலம்பு அலைத்த எல்லை நீங்க,
புது வறம்கூர்ந்த செறுவில் தண்ணென
மலி புனல் பரத்தந்தா அங்கு,
இனிதே தெய்ய, நிற் காணுங்காலே.
தோழி வாயில் மறுத்தது.
-- ஆலங்குடி வங்கனார்
230. MARUTAM
(The friend of the heroine refuses entry to the amorous hero)
Chief of a watery plain!
Your pools are rich in kayal fish
And wide leaves, resembling the ears
Of strong cow-elephants;
Their folded buds are very like
The beaks of white herons
Seen in huge crowds in the tanks;
Their cool and nectarine flowers
Unfold and drive out gloom,
Even like the Venus that emerges out from the east.
I beseech you sir go away
And rush to your hetairas
And shower your grace on them.
They do not resent your amorous nature.
(But we are women who resent your nature;
We do not deserve your love!)
Your very presence here
Is enough for us to feel happy!
We are like the newly fissured land
That gets cooled by the abundant flow of freshes
After having suffered
The horrors of the summer heat!
--Ālankuți Vankanār.
----------------
231. நெய்தல்
மை அற விளங்கிய மணி நிற விசும்பில்
கைதொழும் மரபின் எழு மீன் போல,
பெருங் கடற் பரப்பின் இரும் புறம் தோய,
சிறு வெண் காக்கை புலவுடன் ஆடும்
துறை புலம்பு உடைத்தே தோழி! -- பண்டும்,
உள் ஊர்க் குரீஇக் கரு உடைத்தன்ன,
பெரும் போது அவிழ்ந்த கருந் தாட் புன்னைக்
கானல்அம் கொண்கன் தந்த
காதல் நம்மொடு நீங்காமாறே.
சிறைப்புறமாகத் தோழி சொல்லி, வரைவு கடாயது.
--இளநாகனார்
231. NEYTAL
(The confidante of the heroine urges the hero to wed her friend soon)
Our lover is the chief of a littoral land
Which abounds in groves
Of dark-trunked Punnai trees
Whose unfolded flowers look
Like the broken egg-shells
Of the house-sparrows!
As the love bestowed on us by him
Is lingering with us,
This ford, where the crowded small sea-gulls sport,
Their dark backs drenched
In the expanse of the sweet sea,
Resemble the worshipful constellation of seven stars of the azure sky,
Is so desolate to our eyes in his absence!
--Ilanakanār.
-------------------
232. குறிஞ்சி
சிறுகண் யானைப்பெருங் கை ஈர்- இனம்
குளவித் தண் கயம் குழையத் தீண்டி,
சோலை வாழை முணைஇ, அயலது
வேரல் வேலிச் சிறுகுடி அலற,
செங்காற் பலவின் தீம் பழம் மிசையும்
மா மலை நாட!- காமம் நல்கென
வேண்டுதும் வாழிய! எந்தை, வேங்கை
வீ உக விரிந்த முன்றில்,
கல் கெழு பாக்கத்து அல்கினை செலினே.
பகல் வருவானை இரவு வா எனத் தோழி சொல்லியது.
--முதுவெங்கண்ணனார்.
232. KURINCI
(The companion of the heroine requests the hero to visit during night)
O mountain-chief!
You are from a land, where an elephant-pair,
Tiny-eyed and huge-trunked
Enjoys passionate union, on the bank
Of a spring, when the Kuļavi plants growing there get crushed;
Then they get satiated
With eating the banana in the slopes
And get into a village enclosed by a fence of bamboos
And eat the sweet-juiced jack fruit,
To the great horror of the villagers.
O chief, may you live long!
Why don't you consent to stay tonight
In our father's village amidst rocks,
The foreyards of whose houses
Are strewn with Vēnkai flowers?
If you are pleased to stay,
We will have the opportunity
To entertain you as our guest!
--Mutuvenkannanār.
Latent Meaning : The elephant--The hero and the heroine
Their passionate --The clandestine union of the lovers union
Getting satiated with eating banana --Resenting secret union
The village shouting out of fear--The gossips become silent;
Eating Jack fruit--wedding the heroine and enjoying domestic life.
---------------
233. குறிஞ்சி
கல்லாக் கடவன் நடுங்க, முள் எயிற்று
மட மா மந்தி மாணா வன் பறழ்,
கோடு உயர் அடுக்கத்து, ஆடு மழை ஒளிக்கும்
பெருங் கல் நாடனை அருளினை ஆயின்,
இனி என கொள்ளலைமன்னே; கொன் ஒன்று
கூறுவென் வாழி--தோழி!--முன்னுற
நாருடை நெஞ்சத்து ஈரம் பொத்தி,
ஆன்றோர் செல் நெறி வழா அச்
சான்றோன் ஆதல் நற்கு அறிந்தனை தெளிமே.
வரையாது நெடுங்காலம் வந்து ஒழுக, இவள் ஆற்றாள் என்பது உணர்ந்து,
சிறைப்புறமாகத் தலைமகட்குத் தோழி சொல்லியது.
--அஞ்சில் ஆந்தையார்
233. KURINCI
(The companion of the heroine speaks to the heroine to be overheard
by the hero, who postpones the wedding for a long time)
O my friend!
Our lover is the chief of a high-peaked mountain,
Where a dark-faced and sharp-toothed she-monkey,
The mother of an immature, but strong cub,
Hides amidst the dark clouds that crawl over the peaks
To the immense grief of its mate, endowed with natural skills!
If you have love for him,
You may not take my words of advice!
Yet I venture to tell you a word,
Though you may deem it useless!
When you meet him next,
Just conceal within you,
Your love for him
And assess for yourself,
If he is one who lives a virtuous life
Emulating great ones!
--Ancilantaiyar.
Suggestion: The she-monkey and its cub hide amidst the clouds.
The heroine and her confidante intend to hide themselves so that the hero
will get bewildered.
------------------
234. குறிஞ்சி
சான்றோர் வருந்திய வருத்தமும், நுமது
வான் தோய்வன்ன குடிமையும், நோக்கி,
திருமணி வரன்றும் குன்றம் கொண்டு, இவள்
வருமுலை ஆகம் வழங்கினோ நன்றே;
அஃதான்று, அடைபொருள் கருதுவிர் ஆயின், குடையொடு
கழுமலம் தந்த நல் தேர்ச் செம்பியன்
பங்குனி விழவின் உறந்தையொடு
உள்ளி விழவின் வஞ்சியும் சிறிதே.
செவிலியால் அறத்தொடு நிற்கப்பட்ட நற்றாய் தந்தை முதலியோர்க்கு
அறத்தொடு நின்றது.
234. KURINCI
(The mother of the heroine importunes the male members
of her family to give her daughter's hand to the hero who seeks
their favour through his messengers)
It is proper to give our girl's hand
To the mountain-chief who has sent
Elderly men as his messengers
To give due consideration to the pain
Taken by those elders who have come here
On his behalf and also the greatness of his clan!
We may accept the gift of his hill,
With cascades that flow down,
Carrying with them comely gems.
Instead, if you value more
The bride-price that could be extracted from him,
Even the city of Vañci which is famed
For its Ulli festival and also
The city of Urantai, which is famed
For the festival of Pankuni Uttiram
And which is the principal city
Of the great Colās,
Who captured Kalumalam
Of the Cēra monarch
Together with his white parasol,
Will prove to be
Too small a bride-price!
--Anonymous
Note - 1:The payment of bride-price to the family of the bride by the hero is well attested in this poem. This practice was wide-spread in many ancient societies all over the world, The ancient Tamil classics have many references to this practice.
Note - 2:This poem is not found in any of the Narriņai manuscripts according to the editors. Anyhow, the present verse is found in the commentary., of Iraiyanār Kaļaviyal.
--------------
235. நெய்தல்
உரவுத் திரை பொருத பிணர் படு தடவு முதல்,
அரவு வாள் வாய முள் இலைத் தாழை
பொன் நேர் தாதின் புன்னையொடு கமழும்
பல் பூங் கானல் பகற்குறி வந்து, நம்
மெய் கவின் சிதையப் பெயர்ந்தனன் ஆயினும்,
குன்றின் தோன்றும் குவவு மணல் ஏறி,
கண்டனம் வருகம் சென்மோ--தோழி!–
தண் தார் அகலம் வண்டு இமிர்வு ஊத,
படு மணிக் கலி மாக் கடைஇ,
நெடு நீர்ச் சேர்ப்பன் வரூஉமாறே.
வரைவுநீட ஆற்றாளாய காலத்துத் தோழி வரைவு மலிந்தது.
--வெள்ளிவீதியார்
235. NEYTAL
(The companion announces to the heroine of the coming of
the hero for the wedding)
Our lover met us during day-time,
In our many-flowered beach, rich in Punnai trees
Of golden pollen and fragrant screwpine bushes
With their broad and scaly trunks
Which are battered by the spreading waves,
And which have file-like blades and ripened and scented blossoms!
Now, our lover has parted from us,
Causing our body to get pervaded by sickly pallor.
Yet, shall we get to the top of the hill-like sand-dune
And have a look at the path,
Through which he comes here
Riding his sturdy horse bedecked with tinkling bells,
And adorning his chest
With cool garlands, buzzed by a swarm of bees?
--Vellivitiyar
Latent Meaning :
Even like the beach that smells sweet by the Punnai flowers and the Tālai blooms, the hero and the heroine will add to the beauty of the village after their wedding.
---------------
236. குறிஞ்சி
நோயும் கைம்மிகப் பெரிதே; மெய்யும்
தீ உமிழ் தெறலின் வெய்தாகின்றே –
ஒய்யெனச் சிறிது ஆங்கு உயிரியர், 'பையென
முன்றில் கொளினே நந்துவள் பெரிது' என,
நிரைய நெஞ்சத்து அன்னைக்கு உய்த்து ஆண்டு
உரை, இனி -- வாழி, தோழி!-- புரை இல்
நுண் நேர் எல் வளை நெகிழ்த்தோன் குன்றத்து
அண்ணல் நெடு வரை ஆடி, தண்ணென
வியல் அறை மூழ்கிய வளி என்
பயலை ஆகம் தீண்டிய, சிறிதே.
தலைமகன் சிறைப்புறமாக, வற்புறுக்கும் தோழிக்குத்
தலைமகள் சொல்லியது.
--நம்பி குட்டுவானர்.
236. KURINCI
(The heroine speaks to her friend to be overheard by the hero
who waits near the fence)
O my friend!
My love has swelled beyond all limit;
My body is hotter than the heat of a blazing fire;
May you, my friend, tell our mother,
Whose heart is worse than hell at once,
That I will be greatly relieved of my anguish,
Should I be allowed to rest
For a while on the raised pial in our foreyard.'
There is nothing wrong in it.
May you prosper!
Let the wind that blows through
The cool and wide rock,
From the high peak of the tall hill
Of our lover who caused my well-crafted
And shining bracelets to fall off,
Caress my bosom which is pervaded by pallor!
--Nampi Kuttuvan.
Latent Meaning:
Like the wind that blows and besieges the peak,
the heroine's bosom will move and besiege the shoulders of the hero.
--------------------
237. பாலை
நனி மிகப் பசந்து, தோளும் சாஅய்,
பனி மலி கண்ணும் பண்டு போலா;
இன் உயிர் அன்ன பிரிவு அருங் காதலர்
நீத்து நீடினர் என்னும் புலவி
உட்கொண்டு ஊடின்றும் இலையோ?--மடந்தை!--
உவக்காண் தோன்றுவ, ஒங்கி--வியப்புடை
இரவலர் வரூஉம் அளவை, அண்டிரன்
புரவு எதிர்ந்து தொகுத்த யானை போல,
உலகம் உவப்ப, ஒது அரும்
வேறு பல் உருவின் ஏர்தரும் மழையே!
தோழி உரை மாறுபட்டது.
--காரிக்கண்ணனார்.
237. PĀLAI
(The confidante of the heroine speaks to the heroine at the advent of the rainy season)
O my young friend!
Your body is besieged by a too-sickly pallor;
Your shoulders have drooped;
Your eyes are tear-bedewed and have lost their former splendour;
Our lover, who is indispensable
For us even like our sweet life, alas,
Stays far away, for an unduly long period!
It is a wonder indeed,
That you do not desire to sulk.
Behold yonder!
The dark clouds gather together
Assuming very many shapes on high,
To the delight of all lives! They look like the herds of elephants,
Collected in advance by Antiran,
Expecting the advent of bards of wondrous wisdom!
--Karikkannanār.
----------------
238. முல்லை
வறம் கொல வீந்த கானத்து, குறும் பூங்
கோதை மகளிர் குழூஉ நிரை கடுப்ப,
வண்டு வாய் திறப்ப விண்ட பிடவம்,
மாலை அந்தி, மால் அதர் நண்ணிய
பருவம் செய்த கருவி மா மழை!
'அவர் நிலை அறியுமோ, ஈங்கு' என வருதல்
சான்றோர்ப் புரைவதோ அன்றே; மான்று உடன்
உர உரும் உரறும் நீரின், பரந்த
பாம்பு பை மழுங்கல் அன்றியும், மாண்ட
கனியா நெஞ்சத்தானும்,
இனிய அல்ல, நின் இடி நவில் குரலே.
தலைமகள் பருவம் கண்டு அழிந்தது.
– கந்தரத்தனார்
238. MULLAI
(The heroine speaks at the advent of the rainy season)
In this forest which had suffered
The aestival heat, the Pitavam trees
Are in full bloom;
Their buds open, kindled by the bees
That suck the nectar from them.
The unfolded blooms resemble,
Groups of young women
Bedecked with small wreaths of flowers.
During this evening, O murky clouds,
Winged with lightning and thunder!
You have augured the rainy season,
Intending to agonise me!
It is not becoming of you, O clouds!
You, by your behaviour, seem to say to me,
“O girl! Know your lover's plight through me!"
Darkening the entire space,
You rumble terribly, causing
The roaming snakes to get scared
And lose the charm of their hoods!
But your rumblings have made
No impact on our lover!
They have failed to mellow
The stony heart of our lover!
You are not friendly to me either!
--Karuvur Kantarattan
-------------
239. நெய்தல்
ஞான்ற ஞாயிறு குடமலை மறைய,
மான்ற மாலை மகிழ்ந்த பரதவர்
இனிது பெறு பெரு மீன் எளிதினின் மாறி
அலவன் ஆடிய புலவு மணல் முன்றிற்
காமர் சிறுகுடிச் செல்நெறி வழியின்,
ஆய் மணி பொதி அவிழ்ந்தாங்கு, நெய்தற்
புல் இதழ் பொதிந்த பூத் தப மிதிக்கும்
மல்லல் இருங் கழி மலி நீர்ச் சேர்ப்பற்கு
அமைந்து தொழில் கேட்டன்றோ இலமே; 'முன்கை
வார் கோல் எல் வளை உடைய வாங்கி,
முயங்கு' எனக் கலுழ்ந்த இவ் ஊர்
எற்று ஆவதுகொல், யாம் மற்றொன்று செயினே?
தோழி தலைமகன் சிறைப்புறமாகச் சொல்லியது.
--குன்றியனார்
239. NEYTAL
(The confidante speaks to the heroine to be overheard by the hero
who stands beside the fence)
The sinking sun retires to the western hill
When the fisherfolk, at the gloomy eventide
Get inebriated with toddy, and sell easily their catches,
The huge fishes they netted during broad day with ease.
The hamlet girt with groves
Has tiny houses, with foreyards strewn with stinking sand;
Along the path leading to the hamlet
Are seen Neytal blooms, densely petalled,
Which resemble comely blue-gems;
These flowers get crushed
Under the feet of the folk who move about.
Such is the beach girt with flooded creeks!
Never did we subserve him as per his wishes!
But, alas, this village folk wields their slanderous tongues
Against us! The village says that we embraced his chest
Causing our rounded and well-crafted bracelets to get crushed!
I do not know how it will react
If we do something serious!
--Kunriyanar.
Latent Meaning :
The intoxicated fisherfolk barter the huge fish they caught and go trampling under their feet, the Neytal flowers.
This suggests that the hero under the influence of excessive love is expected to pay the bride-price, get the heroine's hand and take her to his village ignoring the village gossip.
---------------
240. பாலை
ஐதே கம்ம, இவ் உலகு படைத்தோனே
வை ஏர் வால் எயிற்று ஒள் நுதற் குறுமகள்
கை கவர் முக்கம் மெய் உறத் திருகி,
ஏங்கு உயிர்ப்பட்ட வீங்கு முலை ஆகம்
துயில் இடைப்படூஉம் தன்மையது ஆயினும்
வெயில் வெய்துற்ற பரல் அவல் ஒதுக்கில்,
கணிச்சியில் குழித்த கூவல் நண்ணி,
ஆன் வழிப் படுநர் தோண்டிய பத்தல்
யானை இன நிரை வௌவும்
கானம் திண்ணிய மலை போன்றிசினே.
பிரிவிடை மெலிந்த தலைமகள் சொல்லியது; நெஞ்சினால் பொருள் வலிக்கப்பட்டு
ஆற்றானாய தலைமகன் சொல்லியதூஉம் ஆம்.
--நப்பாலத்தனார்.
240. PĀLAI
(The heroine speaks unable to bear the pangs of separation)
O my friend endowed with sharp and white teeth and glowing forehead!
Our lover would hold me close to his chest
His fingers running around my body.
Our bodies would get entwined
As if they were glued into each other.
The embrace would cause my breasts
To swell and heave deep sighs.
As he has left for distant lands,
I have to lose sleep and grieve all alone in the bed!
Yet my heart gets filled with fear
When I think of the path which our lover now treads.
It appears to me as a huge mountain!
In this wilderness, there is a well,
Dug in a corner of a pit
Full of fuming pebbles.
It is the well,
Dug using pickaxes by the cowherds
To feed their cattle.
The water, meant for the cattle
Is drunk away by a row of wild elephants.
May the creator of such a world
Feel its horrible nature,
By slowly walking through it!
--Nappālātanār.
----------------
241. பாலை
உள்ளார் கொல்லோ --தோழி!--கொடுஞ் சிறைப்
புள் அடி பொறித்த வரியுடைத் தலைய
நீர் அழி மருங்கின் ஈர் அயிர் தோன்ற
வளரா வாடை உளர்வு நனி தீண்டலின்,
வேழ வெண் பூ விரிவன பலவுடன்,
வேந்து வீசு கவரியின், பூம் புதல் அணிய,
மழை கழி விசும்பின் மாறி ஞாயிறு
விழித்து இமைப்பது போல் விளங்குபு மறைய,
எல்லை போகிய பொழுதின் எல் உற,
பனிக்கால் கொண்ட பையுள் யாமத்து,
பல் இதழ் உண்கண் கலுழ,
நில்லாப் பொருட்பிணிப் பிரிந்திசினோரே?
தலைமகள் வன்புறை எதிர் அழிந்தது.
--மதுரைப் பெருமருதனார்
241. PĀLAI
(The grieving heroine speaks to her friend when the hero is away
in a distant land)
Friend!
This is the cold dewy season.
Now the sun plays hide and seek;
It shines intermittently
And seems to wink its eyes!
The sterile white clouds, after having emptied their stock
Now get scattered all through the sky;
A layer of fine cool sands appear
On the foot-prints of water-birds
In every pond which had gone dry.
The gentle northerly opens the silvern buds
Of the Velam plants growing amidst the bushes.
The bushes now glow with greater beauty.
These opened flowers resemble so many wisks
Waved before the rulers.
During this dolorous midnight, our khol-fed eyes,
Resembling the densely-petalled Kuvalai blooms
Are streaming with tears.
Won't our lover who went in search of the transient wealth
Think of our plight and return here?
--Maturai Perumarutanār.
------------------
242. முல்லை
இலை இல பிடவம் ஈர் மலர் அரும்ப,
புதல் இவர் தளவம் பூங் கொடி அவிழ,
பொன் எனக் கொன்றை மலர, மணி எனப்
பல் மலர் காயாங் குறுஞ் சினை கஞல,
கார் தொடங்கின்றே காலை; வல் விரைந்து
செல்க --பாக!--நின் தேரே; உவக்காண்
கழிப் பெயர் களரில் போகிய மட மான்
விழிக் கட் பேதையொடு இனன் இரிந்து ஓட
காமர் நெஞ்சமொடு அகலா,
தேடூஉ நின்ற இரலை ஏறே.
வினைமுற்றி மறுத்தராநின்ற தலைமகன் கார் கண்டு
பாகற்குச் சொல்லியது.
--விழிக் கட்பேதைப் பெருங்கண்ணனார்.
242. MULLAI
(The hero speaks to his charioteer)
O charioteer!
The clouds have started to pour
Even during these early hours
And the leafless Pitavam trees have started.
To put forth their cool buds;
The beautiful vines of Talavam are in full bloom
And they are entwining the bushes;
Golden rows of flowers
Dangle from the Konrai trees;
The slender branches of the multi-flowered Kāya
Are glowing bright with their gem-like flowers!
Goad the horses, charioteer!
Behold there, a buck, with its heart brimming with love
Goes in search of its loving mate
Which deserted its kin in the barren land
Together with its tender calf of perplexed eyes!
--Vilikkan Pētai Perunkaņñanār.
----------------
243. பாலை
தேம் படு சிலம்பில் தெள் அறல் தழீஇய
துறுகல் அயல தூ மணல் அடைகரை,
அலங்கு சினை பொதுளிய நறு வடி மாஅத்துப்
பொதும்புதோறு அல்கும் பூங் கண் இருங் குயில்,
'கவறு பெயர்த்தன்ன நில்லா வாழ்க்கை இட்டு
அகறல் ஓம்புமின், அறிவுடையீர்!' என,
கையறத் துறப்போர்க் கழறுவ போல,
மெய் உற இருந்து மேவா நுவல,
இன்னாது ஆகிய காலை, பொருள்வயிற்
பிரியல் ஆடவர்க்கு இயல்பு எனின்,
அரிது மன்றம்ம, அறத்தினும் பொருளே?
பிரிவிடை மெலிந்த தலைமகள் சொல்லியது.
--காமக்கணிப் பசலையார்
243. PĀLAI
(The heroine speaks to her friend in the absence of the hero)
This is the spring season.
The dark koels with charming eyes
Sit in pairs, their bodies close to one another,
On the swaying branches of the mango trees
Full of fragrant and tender clusters of fruits,
In every grove on the shore,
Filled with pure sand and close by a boulder
Surrounded by clean water,
In the hill-side abounding in honey.
The Koels call in their sweet voice
As if they would condemn those men
Who leave their beloved wives
To untold suffering and loneliness
And go in quest of riches.
They seem to advise them thus:
"If you are wise, O men,
Do not part from your loving mates
For the sake of wealth
Which is as transient
As the rolling dice!"
If it is in the mature of men
To go seeking wealth, even during such a season,
Then it seems wealth is indeed
More precious than virtue !
--Kāmakkani Nappacalaiyar.
---------------
244. குறிஞ்சி
விழுந்த மாரிப் பெருந் தண் சாரல்,
கூதிர்க் கூதளத்து அலரி நாறும்
மாதர் வண்டின் நயவரும் தீம் குரல்
மணம் நாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும்
உயர் மலை நாடற்கு உரைத்தல் ஒன்றோ
துயர் மருங்கு அறியா அன்னைக்கு, "இந் நோய்
தணியுமாறு இது' என உரைத்தல் ஒன்றோ –-
செய்யாய்; ஆதலின் கொடியை--தோழி!--
மணி கெழு நெடு வரை அணி பெற நிவந்த
செயலை அம் தளிர் அன்ன, என்
மதன் இல் மா மெய்ப் பசலையும் கண்டே .
அறத்தொடுநிலை வலித்த தோழியைத் தலைவி முகம் புக்கது.
--கூற்றங்குமரனார்
244. KURIÑCI
(The heroine speaks to her companion)
O my friend!
Our lover is the chief of a lofty mountain
Where from a fragrant cleft,
An Acunam* listens with interest,
To the sweet humming of the comely bees
Which smell fragrant with the pollen
Of the Kūtaļam plant of the winter season,
In the immensely cool slope,
Which had received heavy rains.
You have failed to report to him
Of my plight, in spite of your knowing
That pallor has consumed
My great charm which once shone
Like the shoots of the Acõku tree
That flourishes in the extensive hill-range.
Nor have you advised our mother
Who is ignorant of the cause
Of my agony, on the right measures
To be taken to abate
The intensity of my grief!
You are cruel indeed, my friend!
--Kūrrankumaranár.
* Acunam --A rare bird/animal which is spoken as a lover of music.
Any harsh sound will cause its instant death.
Latent Meanings :
The Acuņam listens to the humming of the bees which smell fragrant with the pollen of flowers as they spring upon them and suck honey.
This suggests that the hero embraces the heroine and the change in her body is suspected by her mother for the making of Lord Murukan.
--------------
245. நெய்தல்
நகையாகின்றே --தோழி!--‘தகைய
அணி மலர் முண்டகத்து ஆய் பூங்கோதை
மணி மருள் ஐம்பால் வண்டு படத் தைஇய,
துணி நீர்ப் பௌவம் துணையோடு ஆடி,
ஒழுகு நுண் நுசுப்பின், அகன்ற அல்குல்,
தெளி தீம் கிளவி! யாரையோ, என்
அரிது புணர் இன் உயிர் வவ்விய நீ?' என,
பூண் மலி நெடுந் தேர்ப் புரவி தாங்கி,
தான் நம் அணங்குதல் அறியான், நம்மின்
தான் அணங்குற்றமை கூறி, கானல்
சுரும்பு இமிர் சுடர் நுதல் நோக்கி,
பெருங் கடற் சேர்ப்பன் தொழுது நின்றதுவே
குறை நேர்ந்த தோழி தலைமகளை முகம் புக்கது.
--அல்லங்கீரனார்
245. NEYTAL
(The confidante tries to know of the disposition of the heroine)
My friend!
It is quite amusing to think of this incident indeed!
The chief of an extensive littoral domain
Stopped his tall and ornate chariot,
Fixed his eyes on your lustrous forehead
Which was buzzed by a swarm of bees
And spoke thus:
"Girl! You have dark tresses that are verily blue-gems;
You have adorned them with a wreath,
Woven of the select blooms of the charming Muntakam.
You are standing here,
After having sported in the sea,
With your mates; your words are clear and sweet;
Your waist is shapely and narrow
And your forelap is wide!
You have plundered my precious life!
May I know who you are?”
Alas, quite unaware of the fact
That we are grieving greatly
On account of our love for him,
He was complaining how he suffered on account of us!
(It makes me only laugh whenever I think of this).
--Allankiranār.
--------------
246. பாலை
இடூஉ ஊங்கண் இனிய படூஉம்;
நெடுஞ் சுவர்ப் பல்லியும் பாங்கில் தேற்றும்;
மனை மா நொச்சி மீமிசை மாச் சினை,
வினை மாண் இருங் குயில் பயிற்றலும் பயிற்றும்;
உரம் புரி உள்ளமொடு சுரம் பல நீந்தி,
செய்பொருட்கு அகன்றனர் ஆயினும் பொய்யலர்,
வருவர் வாழி தோழி!- புறவின்
பொன் வீக் கொன்றையொடு பிடவுத் தளை அவிழ,
இன் இசை வானம் இரங்கும்; அவர்,
‘வருதும்' என்ற பருவமோ இதுவே?
பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறீஇயது.
--காப்பியஞ் சேந்தனார்
246. PĀLAI
(The friend of the heroine consoles the grieving heroine)
Auspicious signs appear from places favourable;
The clicking of the lizards
That crawl on our high walls
Is encouraging; the koels call in their sweet voice,
Perched comfortably on the branches of the mango trees
That grow high and above the Nocci plants
That thrive close to our house;
Though our lover parted from us
With a strong will to come by wealth
And trod many a barren domain,
He will not fail to arrive here soon.
See how sweetly rumble the clouds!
The showers are sure to cause
The Konrai trees to glow
With their golden rows of blooms!
They will cause the Pitavam buds
To open.
This is the season
Which our lover marked for his return.
--Kāppiyancēntanār.
------------
247. குறிஞ்சி
தொன்று படு துப்பொடு முரண் மிகச் சினை இக்
கொன்ற யானைச் செங்கோடு கழாஅ,
அழி துளி பொழிந்த இன் குரல் எழிலி,
எஃகுறு பஞ்சிற்று ஆகி, வைகறைக்
கோடு உயர் நெடு வரை ஆடும் நாட! நீ
நல்காய் ஆயினும், நயன் இல செய்யினும்,
நின் வழிப்படூஉம் என் தோழி நல் நுதல்
விருந்து இறைகூடிய பசலைக்கு
மருந்து பிறிது இன்மை நற்கு அறிந்தனை சென்மே!
‘நீட்டியாமை வரை' எனத் தோழி சொல்லியது.
– பரணர்
247. KURIÑCI
(The companion of the heroine speaks to the hero)
O chief!
In your high-peaked hill, the clouds pour
Heavy rains with the sweet rumbling of thunder
During the night when an elephant
Of immense strength and fierce wrath
Gets its blood-stained tusks cleansed
With the rain water, after having killed
Its foe, a huge tiger.
The clouds, after emptying water turn white like the cotton,
Struck with a bow and then crawl
Over the peaks during the next morning.
Even if you do not bestow your grace
On my friend, and act contrary to honour,
It is your grace that sustains her life.
So, if you wish to part from her,
Know it for certain
That there is medicine none,
To cure her of the pallor
That pervades her forehead!
--Paranar.
Latent Meaning :
The clouds poured so heavily that the elephant that had killed a tiger now cleanses its bloodstained tusks. Those clouds turned white and moved over the peaks of the mountain.
This implies that the heroine who gave pleasure to the hero who had defeated his foe then turns pale as the hero forsook her.
----------------
248. முல்லை
‘சிறு வீ முல்லைத் தேம் கமழ் பசு வீ,
பொறி வரி நல் மான் புகர் முகம் கடுப்ப,
தண் புதல் அணிபெற மலர, வண் பெயல்
கார் வரு பருவம்' என்றனர்மன்--இனி,
பேர் அஞர் உள்ளம் நடுங்கல் காணியர்,
அன்பு இன்மையின் பண்பு இல பயிற்றும்
பொய் இடி அதிர் குரல் வாய் செத்து ஆலும்
இன மயில் மடக் கணம் போல,
நினை மருள்வேனோ? வாழியர், மழையே!
பருவம் கண்டு ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி மழை மேல்
வைத்துப் பருவம் மறுத்தது.
--காசிபன் கீரனார்.
248. MULLAI
(The companion of the heroine speaks to the rain-clouds to
console the pining heroine)
Our lover promised to be here
During the season when the clouds would pour
Heavy rains, causing every cool bush
To glow charmingly like the speckled faces
Of elephants, in the pasture
That smells sweet with the fragrance
Of the Mullai flowers, tiny and nectarine.
O nimbi! It is far unbecoming
Of your greatness, that you make
So much din with your pseudo thunder!
As you have no sympathy for us,
You roar so terribly, wishing to see
Me shivering owing to intense grief.
Remember, O clouds, we will not be bewildered,
Like these gullible herds of peafowls
That call aloud in glee,
Mistaking your rumblings for the seasonal ones!
May you prosper!
--Kācipan Kiranār.
-------------
249. நெய்தல்
இரும்பின் அன்ன கருங் கோட்டுப் புன்னை
நீலத்து அன்ன பாசிலை அகம்தொறும்,
வெள்ளி அன்ன விளங்கு இணர் நாப்பண்
பொன்னின் அன்ன நறுந் தாது உதிர,
புலிப் பொறிக் கொண்ட பூ நாறு குரூஉச் சுவல்
வரி வண்டு ஊதலின், புலி செத்து வெரீஇ,
பரியுடை வயங்கு தாள் பந்தின் தாவத்
தாங்கவும் தகை வரை நில்லா ஆங்கண்,
மல்லல்அம் சேரி கல்லெனத் தோன்றி,
அம்பல் மூதூர் அலர் எழ,
சென்றது அன்றோ; கொண்கன் தேரே?
வரைவிடை மெலிந்தது
–உலோச்சனார்.
249. NEYTAL
(The heroine speaks to her friend in her mood of grief, as the hero
post pones the wedding)
O my friend!
Our beach is rich in Punnai trees
Whose branches are dark
As if wrought of steel; amidst their leaves,
Shining like blue-gems,
There are flower-clusters, effulgent
Like silver, whose pollen are golden in hue!
These pollen grains buzzed by bees of comely stripes fell down
And covered the sand dunes
Causing them to resemble tigers of striped skin.
When our lover visited here last,
His swift-footed horses, yoked to the chariot
Mistook the sand dunes for tigers and bolted away scared.
They galloped, even like the beaten balls
And rushed through the streets
Of our ancient hamlet,
Creating great bustle of gossip!
Did they not, my friend?
--Ulóccanār.
-------------
250. மருதம்
நகுகம் வராராய் – பாண!-- பகுவாய்
அரி பெய் கிண்கிணி ஆர்ப்ப, தெருவில்
தேர் நடைபயிற்றும் மேமொழிப் புதல்வன்
பூ நாறு செவ் வாய் சிதைத்த சாந்தமொடு
காமர் நெஞ்சம் துரப்ப, யாம் தன்
முயங்கல் விருப்பொடு குறுகினேமாக,
பிறை வனப்பு உற்ற மாசு அறு திரு நுதல்
நாறு இருங் கதுப்பின் எம் காதலி வேறு உணர்ந்து,
வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ,
'யாரையோ?” என்று இகந்து நின்றதுவே!
புதல்வனொடு புக்க தலைமகன் ஆற்றானாய்ப் பாணற்கு உரைத்தது.
--மதுரை ஓலைச் கடையத்தார் நல்வெள்ளையார்.
250. MARUTAM
(The hero speaks to the Pānan)
O Pana!
My beloved son of whose lisping is sweet,
Sported in the mid-street
Pulling his toy-chariot!
His anklets, inlaid with grains
Made sweet tinkling!
I took him in my arms
When his ruby lips, smelling sweet
Like flowers, pressed against my chest,
Bedaubed with sandal cream,
And disfigured the coat of sandal
With his flowing saliva!
Love-impelled,
I neared her to embrace.
At this, my beloved, with her crescent-like and flawless fore head,
And dark fragrant tresses
Resented my approach, stood away
Like a scared doe
And interrogated me thus: “Who are you, sir?"
Come, let us rejoice at this!
--Maturai Õlaikkatayattar Nalvellaiyar.
---------------
251. குறிஞ்சி
நெடு நீர் அருவிய கடும் பாட்டு ஆங்கண்,
பிணி முதல் அரைய பெருங் கல் வாழைக்
கொழு முதல் ஆய் கனி மந்தி கவரும்
நல் மலை நாடனை நயவா, யாம், அவன்
நனி பேர் அன்பின், நின் குரல் ஒப்பி,
நிற் புறங்காத்தலும் காண்போய், நீ? என்
தளிர் ஏர் மேனித் தொல் கவின் அழிய,
பலி பெறு கடவுட் பேணி, கலி சிறந்து,
நுடங்கு நிலைப் பறவை உடங்கு பீள் கவரும்;
தோடு இடம் கோடாய், கிளர்ந்து,
நீடினை விளைமோ; வாழிய, தினையே!
சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇயது.
--மதுரைப் பெருமருதிள நாகனார்
251. KURIÑCI
(The confidante speaks to the heroine to be overheard by the hero)
O millet-crops!
You are well aware that we protect you
For a long time from the plundering birds.
We, in our sweet voice sing songs,
In praise of the hill-chief
Who has great love for us!
He is the chief of a goodly hill
With many a cascade flowing down.
Its slopes are watery
And rich in well-grown banana trees,
Whose fleshy fruits are plundered
By the she-monkeys.
Our complexion glows
Like the fresh mango shoots.
If our kin notice the change in our hue,
And confine us to our house,
Intending to conduct a sacrifice
For the deities fond of offerings,
Then, your ears will be eaten away
By many a flock of birds!
So, I beseech you O millet crops,
Don't be in a hurry to ripen!
Stand erect with your straight blades
And be slow to
--Maturaipperumarutan llanākaņār.
Latent Meaning:
The she-monkey steals away the plantain fruits from a
place where falls down a dinsome cascade. This implies that the hero
will come to their village in spite of the fren zied dance conducted
by the Velan and enjoy his beloved's charm.
---------------
252. பாலை
'உலவை ஒமை ஒல்கு நிலை ஒடுங்கி,
சிள்வீடு கறங்கும் சேய் நாட்டு அத்தம்,
திறம் புரி கொள்கையொடு இறந்து செயின் அல்லது,
அரும் பொருட் கூட்டம் இருந்தோர்க்கு இல்' என,
வலியா நெஞ்சம் வலிப்ப, சூழ்ந்த
வினை இடைவிலங்கல போலும் –புனை சுவர்ப்
பாவை அன்ன பழி தீர் காட்சி,
ஐது ஏய்ந்து அகன்ற அல்குல், மை கூர்ந்து
மலர் பிணைத்தன்ன மா இதழ் மழைக் கண்,
முயல் வேட்டு எழுந்த முடுகு விசைக் கத நாய்
நல் நாப் புரையும் சீறடி,
பொம்மல் ஓதி, புனை இழை குணனே!
'பொருள்வயிற் பிரியும்' எனக் கவன்ற தலைமகட்குத் தோழி சொல்லியது.
--அம்மெய்யன் நாகனார்
252. PĀLAI
(The thought of the companion when the hero decides to part from his beloved)
My friend spotlessly glows like an artful image
On the wall; she has a soft and wide forelap;
Her khol-fed eyes are cool and dark
And resemble a pair of juxtaposed flowers;
Her tender feet resemble in hue the delicate tongue
Of a wrathful setter which would
Swiftly run after hare;
Her tresses are dense and dark;
This charm of my bejewelled friend
Has failed to prevent the hero from his parting!
The chief went to a distant land
Goaded by his heart which was initially reluctant
To part from her;
He was convinced that to come by riches,
So rare to earn was not possible,
For those who indolently stay at home;
He was also convinced that it was
Possible to none but such men
Who with well-thought out plans,
Suffer treading the paths in distant land
Which are full of dry and branched
Omai trees from which ciccadas sound endlessly.
--Ammeyyanakanār.
------------
253. குறிஞ்சி
புள்ளுப் பதி சேரினும், புணர்ந்தோர்க் காணினும்,
பள்ளி யானையின் வெய்ய உயிரினை,
கழிபட வருந்திய எவ்வமொடு பெரிது அழிந்து
எனவ கேளாய், நினையினை, நீ நனி;
உள்ளினும் பனிக்கும் –ஒள் இழைக் குறுமகள்,
பேர் இசை உருமொடு மாரி முற்றிய,
பல்குடைக் கள்ளின் வண் மகிழ்ப் பாரி,
பலவு உறு குன்றம் போல,
பெருங் கவின் எய்திய அருங் காப்பினளே.
செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது.
–கபிலர்
253. KURIÑCI
(The friend of the heroine insists that the hero should wed
her friend soon)
Whenever birds rush towards their nests
And lovers go together, you grow sad.
Despair overtakes you and you heave
Deep sighs; the sighs sound like
The breath of a sleeping elephant.
You do not listen to my words.
You plunge into deep contemplation.
Know that your beloved of glittering jewels,
Who is attractive like the Parampu
Of Pāri which is rich in jack trees,
And where clouds pour heavy rains
With lightning and thunder,
And where the folk take toddy
Using cups made of palmyra leaves –
Is under the strict vigil of her parents
And she shakes with fear
Even when she just thinks of your clandestine kinship with her!
--Kapilar
----------------
254. நெய்தல்
வண்டல் தைஇயும், வரு திரை உதைத்தும்,
குன்று ஒங்கு வெண் மணற் கொடி அடும்பு கொய்தும்,
துனி இல் நல்மொழி இனிய கூறியும்,
சொல் எதிர் பெறாஅய் உயங்கி, மெல்லச்
செலீஇய செல்லும் ஒலி இரும் பரப்ப!
உமணர் தந்த உப்பு நொடை நெல்லின்
அயினி மா இன்று அருந்த, நீலக்
கணம் நாறு பெருந் தொடை புரளும் மார்பின்
துணை இலை தமியை சேக்குவை அல்லை --
நேர் கண் சிறு தடி நீரின் மாற்றி,
வானம் வேண்டா உழவின் எம்
கானல்அம் சிறு குடிச் சேந்தனை செலினே.
தோழி படைத்து மொழிந்தது.
–உலோச்சனார்.
254. NEYTAL
(The heroine's friend tries to console the hero who returns disappointed.)
Chief,
You spent the whole day in our company;
You built toy-houses with sand,
Sported in the battering waves,
Plucked for us the Atumpu flowers
From the hill-like sand-dune,
And delighted us with your sweet words
Even then, you are resolved to leave from here,
Receiving no response from us.
We are daughters of fishers,
Who produce salt on the shore.
Our kin are peasants
Who depend not on rain-clouds.
They live in hamlets, rich in groves.
They fill the levelled salt-pans with sea-water
And produce salt.
If you consent to be our guest this night,
Your horses will be fed with pabulam
Prepared with the rice, got in exchange for salt.
You whose chest smells sweet
Of the wreaths you wear,
Will not be left alone,
Lacking company. (you can enjoy the company of my friend!)
--Uloccanār.
--------------
255. குறிஞ்சி
கழுது கால் கிளர ஊர் மடிந்தன்றே;
உரு கெழு மரபின் குறிஞ்சி பாடி,
கடியுடை வியல் நகர்க் கானவர் துஞ்சார்;
வயக் களிறு பொருத வாள் வரி உழுவை
கல் முகைச் சிலம்பில் குழுமும்; அன்னோ!—
மென் தோள் நெகிழ்ந்து நாம் வருந்தினும், இன்று அவர்
வாரார் ஆயினோ நன்றுமன்தில்ல –
உயர் வரை அடுக்கத்து ஒளிறுபு மின்னிப்
பெயல் கால்மயங்கிய பொழுது கழி பானாள்,
திருமணி அரவுத் தேர்ந்து உழல,
உருமுச் சிவந்து எறியும் ஓங்கு வரை ஆறே!
ஆறு பார்த்து உற்றது.
–ஆலம்பேரி சாத்தனார்
255. KURIÑCI
(The confidante speaks to the heroine)
Now, the ghouls roam about at will
And the village entire is in deep slumber steeped;
The foresters never shut their eyes;
They guard this vast town,
Striking terror in the hearers
With their fearsome Kuriñci melody.
A tiger of shining stripes
Growls from a cleft full of boulders,
After having slaughtered a strong tusker.
Such is the midnight!
It will spell good for us,
If our lover does not visit us at this hour,
When the lofty hill-range is lit
By the flashing of lightning,
And clouds pour heavily
Accompanied by claps of thunder
That cause the snakes spit out
Their gems and grieve.
It is good that he stays away though
His absence will cause our arms wilting.
--Ālampēri Cattanár.
--------------
256. பாலை
நீயே, பாடல் சான்ற பழி தபு சீறடி,
அல்கு பெரு நலத்து, அமர்த்த கண்ணை ;
காடே, நிழல் கவின் இழந்த அழல் கவர் மரத்த,
புலம்பு வீற்றிருந்து நலம் சிதைத்தனவே;
இந் நிலை தவிர்ந்தனம் செலவே; வைந் நுதிக்
களவுடன் கமழ, பிடவுத் தளை அவிழ,
கார் பெயல் செய்த காமர் காலை,
மடப் பிணை தழீஇய மா எருத்து இரலை
காழ் கொள் வேலத்து ஆழ் சினை பயந்த
கண் கவர் வரி நிழல் வதியும்
தண் படு கானமும் தவிர்ந்தனம் செலவே.
‘பொருள் வயிற் பிரிந்தான்' என்று ஆற்றாளாகிய தலைமகளைத்
தலைமகன் ஆற்றியது.
--பாலைபாடிய பெருங்கடுங்கோ
256. PĀLAI
(The hero consoles the heroine)
Your pretty little feet are blameless
And they deserve the praise of poets.
Your battling eyes are charming and large.
I have resolved not to take you with me,
Through the jungle now, for, the trees
No more cast their sweet shades.
The wild fire has charred them to the core.
Loneliness reigns supreme here.
Neither will I part from you,
During the rainy season
When the forest will be cool. .
It is the season when
Kaļavu will glow
With sharp-tipped flowers
And when the Pitavam will blossom forth
And exude their sweet fragrance.
It is also the season
When the dark-naped bucks
Will embrace their mates
And abide in the beautifully speckled shades,
Cast by the low-hanging branches
Of the hardy Velam trees.
--Pālaipātiya Perunkatunko.
-------------
257. குறிஞ்சி
விளிவு இல் அரவமொடு தளி சிறந்து உரை இ,
மழை எழுந்து இறுத்த நளிர் தூங்கு சிலம்பின்,
கழை அமல்பு நீடிய வான் உயர் நெடுங் கோட்டு
இலங்கு வெள் அருவி வியன் மலைக் கவாஅன் –
அரும்பு வாய் அவிழ்ந்த கருங் கால் வேங்கைப்
பொன் மருள் நறு வீ கல்மிசைத் தாஅம்
நல் மலை நாட! --நயந்தனை அருளாய்,
இயங்குநர் மடிந்த அயம் திகழ் சிறு நெறிக்
கடு மா வழங்குதல் அறிந்தும்,
நடு நாள் வருதி; நோகோ யானே.
தோழி தலைமகனது ஏதம் சொல்லி வரைவு கடாயது.
--வண்ணக்கன் சோரு மருங்குமரனார்.
257. KURIÑCI
(The friend of the heroine importunes the hero to wed the heroine betimes)
O lord of a goodly mountain
Where the odorous and golden blooms
Of the dark trunked Venkai trees
Are seen amidst the rocks!
Having no compassion for us,
You dare to visit us
During dead of night, notwithstanding
Your knowing well, the nature of the path.
The path is narrow, desolate and watery;
It runs through the lofty hill-range,
Whence flow shining cascades
From the peak sky-high;
It is rich in tall-growing bamboos
Here, thundering clouds cease not
To pour rains, rendering cool
The entire hill-range.
Sir, your nightly visits cause me grief!
- Vannakkan Corumarunkumaranāt
Latent Meaning:
The odorous Venkai blooms are shed on the rock,
unheeded by anyone. As the hero has not wedded the
heroine in time, her great beauty is wasted.
--------------
258. நெய்தல்
பல் பூங் கானல் பகற்குறி மரீஇச்
செல்வல் –கொண்க! –செறித்தனள் யாயே –
கதிர் கால் வெம்பக் கல்காய் ஞாயிற்றுத்
திருவுடை வியல் நகர் வரு விருந்து அயர்மார்,
பொற்றொடி மகளிர் புறங்கடை உகுத்த
கொக்கு உகிர் நிமிரல் மாந்தி, எல் பட,
அகல் அங்காடி அசை நிழல் குவித்த
பச்சிறாக் கவர்ந்த பசுங் கட் காக்கை
தூங்கல் வங்கத்துக் கூம்பில் சேக்கும்
மருங்கூர்ப் பட்டினத்து அன்ன, இவள்
நெருங்கு ஏர் எல்வளை ஓடுவ கண்டே
தோழி செறிப்பு அறிவுறீஇயது.
--நக்கீரர்
258. NEYTAL
(The confidante of the heroine tells the hero that the heroine
is under strict vigil)
In Marurnkūrppatinam, women of golden bracelets
Are busy preparing food
To entertain their guests who arrive during noon
When the fierce sun-rays scorch the feet of travellers.
The scatter in the backyards of their prosperous houses,
Balls of cooked rice as offering
To the fresh-eyed crows;
They eat to their fill,
The big morsels of rice resembling the claws of cranes
And then steal away the fresh shrimps,
That are brought ashore and heaped
Beneath the rich shades of trees
With swaying branches in the wide market-place
At the advent of eventide.
The crows then perch on the mast
Of the rocking boats that lie idle.
My friend is as charming as that Marunkūrppattinam..
I now take leave of you
After having met you in this multi-flowered grove
During broad day.
Remember, chief, that our mother has tightened her vigii
Over my friend, beholding her serried bracelets
Slipping away from her wrists!
--Nakkirar.
Latent Meaning :
The crow eats the food offering of women, and then steals away the shrimp heaped in the bazaar and stays on the mast of the bark.
The hero enjoys the charm of the heroine aided by the confidante. Then he enjoys union with her with the help of his friend. At last he goes to his village and stays there.
----------------
259. குறிஞ்சி
யாங்குச் செய்வாம்கொல் - தோழி!- பொன் வீ
வேங்கை ஓங்கிய தேம் கமழ் சாரல்,
பெருங் கல் நாடனொடு இரும் புனத்து அல்கி,
செவ் வாய்ப் பைங் கிளி ஒப்பி, அவ் வாய்ப்
பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி,
சாரல் ஆரம் வண்டு பட நீவி,
பெரிது அமர்ந்து இயைந்த கேண்மை சிறு நனி
அரிய போலக் காண்பேன்-விரி திரைக்
கடல் பெயர்ந்தனைய ஆகி,
புலர் பதம் கொண்டன ஏனற் குரலே?
தோழி தலைமகளைச் செறிப்பு அறிவுறீஇ, வரைவு கடாயது.
--கொற்றங் கொற்றனார்.
259. KURIÑCI
(The friend of the heroine importunes the hero to
wed her friend eftsoon)
My friend!
We spent our time during day-time
With our lover, the chief of a honeyed range
Where grow tall, the Venkai trees
With their golden flowers.
We stayed with him in the vast millet-field
And chased away the red-beaked green parrots.
We sported in the stream
That flows from the dark hill-range.
We adorned ourselves with the fragrant cream of sandal
That grew in the hill,
Buzzed by swarms of bees.
Our kinship with him was indeed very great!
Alas, such a great kinship now seems,
To grow weak and become nothing in the days to come!
What shall we do, my friend?
--Korrankorranār.
----------------
260. மருதம்
கழுநீர் மேய்ந்த கருந் தாள் எருமை
பழனத் தாமரைப் பனிமலர் முணைஇ,
தண்டு சேர் மள்ளரின் இயலி, அயலது
குன்று சேர் வெண் மணல் துஞ்சும் ஊர!
வெய்யை போல முயங்குதி; முனை எழத்
தெவ்வர்த் தேய்த்த செவ் வேல் வயவன்
மலி புனல் வாயில் இருப்பை அன்ன, என்
ஒலி பல் கூந்தல் நலம் பெறப் புனைந்த
முனை அவிழ் கோதை வாட்டிய
பகைவன்மன்? யான் மறந்து அமைகலனே!
ஊடல் மறுத்த தலைமகள் சொல்லியது.
–பரணர்
260. MARUTAM
(The heroine speaks to her husband)
O chief of a fertile plain!
In your domain, a black-legged buffalo
Eats Kalunīr flowers,
Gets satiated with grazing
The cool field-lotus flowers
And walks away pridefully
Like the club-bearing warriors
And enjoys sweet sleep
On the hill-like white sand-dune, hard by.
You embrace me pretending
To nurture great love for me.
But I am well aware
That you are my bitter enemy
Who deserted me
Whose charm is equal
Only to the town of Iruppai
Near Punalvāyil of valorous Virān
Who got his spears stained with the blood
Of his enemies,
Who came to fight with him,
And thus caused the wreaths to fade away –
The wreaths which adorned my well-grown and dense hair.
I will not forget it! (Get away from here!)
--Paranar.
Latent Meaning :
The buffalo quits eating the lotus flowers, grazes the Kaluñir flowers and slumbers on the sand dune. The hero having enjoyed his wife, companies with his concubine and deserts her too to sleep at last in the house of a base bawd.
-----------------
261. குறிஞ்சி
அருளிலர்வாழிதோழி!-- மின்னு வசிபு
இருள் தூங்கு விசும்பின் அதிரும் ஏறொடு
வெஞ் சுடர் சுரந்த கமஞ் சூல் வானம்,
நெடும் பல் குன்றத்துக் குறும் பல மறுகி,
தா இல் பெரும் பெயல் தலைஇய யாமத்து,
களிறு அகப்படுத்த பெருஞ் சின மாசுணம்
வெளிறு இல் காழ் மரம் பிணித்து நனி மிளிர்க்கும்
சாந்தம் போகிய தேம் கமழ் விடர் முகை,
எருவை நறும் பூ நீடிய
பெரு வரைச் சிறுநெறி வருதலானே.
சிறைப்புறமாகத் தோழி இரவுக்குறி விலக்கி வரைவு கடாயது;
தலைமகள் இயற்பட மொழிந்ததூஉம் ஆம்.
--சேந்தன் பூதனார்.
261. KURINCI
(The companion of the heroine importunes the hero
to wed her friend eftsoon)
Hail to you my friend!
Our lover comes to meet us through a narrow mountain-passage
Where the fragrant Eruvai plant thrives well
Beside a clefted boulder.
The cleft abounds In fragrant sandal trees.
Here, a wrathful python
Of monstrouse size, entwines an elephant-bull
During dead of night and binds it
To a fully seasoned tree and coils around it.
The pregnant dark clouds move in many small groups
And screen the burning sun.
They crawl over the mountain,
Tall and extending, and pour heavy but harmless rains
Accompanied by flashes of lightning and rumbling thunder.
He has concern none for us,
As he thus treads this path!
--Cēntan Putanār,
----------------
262. பாலை
தண் புனக் கருவிளைக் கண் போல் மா மலர்,
ஆடு மயிற் பீலியின், வாடையொடு துயல்வர,
உறை மயக்குற்ற ஊர் துஞ்சு யாமத்து,
நடுங்கு பிணி நலிய நல் எழில் சாஅய
துனி கூர் மனத்தள், முனி படர் உழக்கும்
பணைத் தோள், அரும்பிய சுணங்கின், கணைக் கால்,
குவளை நாறும் கூந்தல், தேமொழி
இவளின் தீர்ந்தும், ஆள்வினை வலிப்ப,
‘பிரிவல்' நெஞ்சு, என்னும் ஆயின்,
அரிது மன்றம்ம, இன்மையது இளிவே.
தலைமகள் ஆற்றாக் குறிப்பு அறிந்து, பிரிவிடை விலக்கியது.
--பெருந்தலைச் சாத்தனார்.
262. PĀLAI
(The hero speaks on knowing the state of his beloved)
This is dead of night;
Every one is fast asleep;
There is ceaseless drizzling of rain;
The northern wind blows and causes
The eye-like Kuvaļai flowers sway
Like the feathers of dancing peacocks;
At this hour, my sweet-armed beloved
With budding yellow spots on her skin
And fragrant tresses, is assailed
By terrible grief even like
The fleshy-stalked Kuvaļai blooms.
Her charm is gone; with her heart,
Laden with anguish, she hates herself;
If my heart, which is goaded by, a desire for wealth
Should decide to part from such a lass,
Then poverty is certainly disgraceful beyond measure!
--Peruntalaiccattanār
--------------
263. நெய்தல்
பிறை வளப்பு இழந்த நுதலும், யாழ நின்
இறை வரை நில்லா வளையும், மறையாது
ஊர் அலர் தூற்றும் கௌவையும், நாண் விட்டு
உரை அவற்கு உரையாம் ஆயினும், இரை வேட்டு,
கடுஞ் சூல் வயவொடு கானல் எய்தாது,
கழனி ஒழிந்த கொடு வாய்ப் பேடைக்கு,
முட முதிர் நாரை கடல் மீன் ஒய்யும்
மெல்லம் புலம்பற் கண்டு, நிலைசெல்லாக்
கரப்பவும் கரப்பவும் கைம்மிக்கு,
உரைத்த --தோழி! --உண்கண் நீரே.
சிறைப்புறமாகத் தோழி தலைமகளை வரைவு கடாயது.
–இளவெயினனார்
263. NEYTAL
(The friend of the heroine speaks to the heroine to be overheard
by the hero).
O my friend,
Our lover is the chief of a littoral domain
Where a male lame stork
Fetches a sea-fish to feed Its bent-beaked and hungry mate
That stays in the corn-field
Avoiding a visit to the shore,
By reason of its advanced pregnancy.
Your crescent-like forehead is no more charming;
Your bracelets desert your forearms;
The village women wield their slanderous tongues;
We, out of our womanly bashfulness,
Conceal all these from him;
Yet our collyrium-fed eyes betray us!
They are out of bounds,
Notwithstanding our sustained efforts
To conceal our grief!
--Ilaveyinanar.
Latent Meaning:
The male stork fetches prey and feeds its mate in the field. The hero will wed the heroine and go abroad seeking wealth and
make her happy.
--------------
264 பாலை
பாம்பு அளைச் செறிய முழங்கி, வலன் ஏர்பு,
வான் தளி பொழிந்த காண்பு இன் காலை,
அணி கிளர் கலாவம் ஐது விரித்து இயலும்
மணி புரை எருத்தின் மஞ்ஞை போல, நின்
வீ பெய் கூந்தல் வீசு வளி உளர
ஏகுதி --மடந்தை!--எல்லின்று பொழுதே;
வேய் பயில் இறும்பில் கோவலர் யாத்த
ஆ பூண் தெண் மணி இயம்பும்,
உதுக்காண் தோன்றும், எம் சிறு நல் ஊரே.
உடன் போகாநின்ற தலைமகன் தலைமகளை வற்புறீஇயது; உடன்போய் மறுத்தரா நின்றான் ஊர்காட்டி, வற்புறீஇயதும் ஆம்.
--ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்
264. PĀLAI
(The hero speaks encouraging by to the heroine during elopement)
Young lass,
Now the sun, having lost its usual lustre
Is about to set; walk ahead,
Causing your flower-decked tresses
Float in the air, like the fantail
Of a peacock with a blue-gem-like neck,
That dances in the morning,
When the clouds shoot up and pour amain
Accompanied by lightning and thunder,
Causing the scared snakes to hide inside their holes.
Look there! Our small but sweet hamlet
Is in sight!
The sweet tinkling
Of the bells tied to the necks
Of the cattle is heard
From the small hill, rich in bamboo clusters!
--Avūrkkāviti Cātēvanār.
--------------------
265. குறிஞ்சி
இறுகு புனம் மேய்ந்த அறு கோட்டு முற்றல்
அள்ளல் ஆடிய புள்ளி வரிக் கலை
வீளை அம்பின் வில்லோர் பெருமகன்,
பூந் தோள் யாப்பின் மிஞிலி காக்கும்
பாரத்து அன்ன--ஆர மார்பின்
சிறு கோற் சென்னி ஆரேற்றன்ன –
மாரி வண் மகிழ் ஓரி கொல்லிக்
கலி மயில் கலாவத்து அன்ன, இவள்
ஒலி மென் கூந்தல் நம் வயினானே.
பின்னின்ற தலைமகன் நெஞ்சிற்கு உரைத்தது.
--பரணர்
265. KURIÑCI
(The heroine speaks to his heart, while standing behind the confidante seeking her favour for securing the heroine)
O my heart!
Our beloved is as beautiful as the town of Pāram
Of Minili with his well-armoured shoulders
Who is the lord of expert archers
Whose darts splash through the air whizzing
And who hunt the bucks with withered antlers.
These bucks are dotted and striped
And their bodies are stained with mud.
Her charm can be compared
To the charm of Arēsu in the realm of Cenni, who is
The ruler of a small territory
And who wears a wreath of Ātti flowers.
Her tresses are soft and well-grown
And resemble the fan-tails of gleeful peacocks
In the Kolli hill in the realm of Ori,
The lover of toddy, whose generosity
Is only equal to that of the clouds!
Is she not within our reach? (Why do you worry?)
--Paranar.
---------------
266. முல்லை
கொல்லைக் கோவலர் குறும்புனம் சேர்ந்த
குறுங் காற் குரவின் குவி இணர் வான் பூ
ஆடுடை இடைமகன் சூடப் பூக்கும்
அகலுள் ஆங்கண் சீறூரேமே;
அதுவே சாலும் காமம்; அன்றியும்,
எம் விட்டு அகறிர் ஆயின், கொன் ஒன்று
கூறுவல் –வாழியர், ஐய! –வேறுபட்டு
இரீஇய காலை இரியின்,
பெரிய அல்லவோ, பெரியவர் நிலையே?
தலைமகளைச் செலவுடன்பட்டது; கடிநகர் வரைப்பில் கண்டு மகிழ்ந்த
தலைமகற்குத் தோழி 'நும்மாலே ஆயிற்று' என்று
சொல்லியதூஉம் ஆம்.
--கச்சிப்பேட்டு இளந்தச்சனார்.
266. MULLAI
(The heroine agrees to the parting of the hero)
Chief,
We are now living in the small village
With wide landscape; here, the short-trunked Kurā trees
Grow thick in the fields of cowherds.
They glow with silvery and converging clusters of blooms,
To be plucked and woven into wreaths
And worn by the cowherds.
This is the life that suits our tastes.
I would like to say a few words,
Though you may not deem them useful.
If you decide to part from us,
And advise us to await your return here,
There is no option but to abide by your words.
Instead, If we grieve after your leaving,
It will be deemed a stain on our lofty clan!
--Kaccippēttu llantaccanar.
-----------------
267. நெய்தல்
‘நொச்சி மா அரும்பு அன்ன கண்ண
எக்கர் ஞெண்டின் இருங் கிளைத் தொழுதி,
இலங்கு எயிற்று ஏஎர் இன் நகை மகளிர்
உணங்கு தினை துழவும் கை போல், ஞாழல்
மணம் கமழ் நறு வீ வரிக்கும் துறைவன் –
தன்னொடு புணர்த்த இன் அமர் கானல்,
தனியே வருதல் நனி புலம்பு உடைத்து' என,
வாரேன்மன் யான், வந்தனென் தெய்ய;
சிறு நா ஒண் மணித் தெள் இசை கடுப்ப,
இன மீன் ஆர்கை ஈண்டு புள் ஒலிக்குரல்,
'இவை மகன்' என்னா அளவை,
வய மான் தோன்றல் வந்து நின்றனனே.
தோழி காப்புக் கைம்மிக்குக் காமம் பெருகிய காலத்துச் சிறைப்புறமாகச்
சொல்லியது; வரைவு கடாயதூஉம் ஆம்.
–கபிலர்
267. NEYTAL
(The companion of the heroine speaks of the hero)
Our lover is the chief of a littoral region
Where the crabs with their eyes resembling
The dusky Nocci buds
Plough the Ñālal flowers that lie scattered
On the sand; their legs leave beautiful stripes
On the sandy beach and these stripes
Resemble very much the ones made
By the young ladies of sweet smile
And glowing teeth while spreading
With their fingers, the millet grains
Which dry in the hot sun.
I felt painful to visit alone, the grove,
Lovely and sweet, which bound you
With the chief and so very much avoided
Visiting it; when I visited that grove
One day, I could hear the chirping
Of birds which had flocked there,
To prey upon the heap of fishes.
It sounded very much like the tinkling
Of the small-tongued and shining bells.
When I was about to say
That it was the tinkling of the bells
Of our lover's chariot.
It was then that he just plunged me
Into great wonder by his sudden appearance
On his sturdy horse!
--Kapilar.
Latent Meaning
The crabs plough the scattered Nālal flowers.
The heroine who was separated from the hero and con fined to her house is caused to suffer by the unkind village women
268. குறிஞ்சி
சூருடை நனந் தலைச் சுனை நீர் மல்க,
மால் பெயல் தலைஇய மன் நெடுங் குன்றத்து,
கருங் காற் குறிஞ்சி மதன் இல் வான் பூ,
ஓவுக் கண்டன்ன இல்வரை இழைத்த
நாறு கொள் பிரசம் ஊறு நாடற்குக்
காதல் செய்தவும் காதல் அன்மை
யாதனிற்கொல்லோ ?—தோழி! –-வினவுகம்,
பெய்ம் மணல் முற்றம் கடி கொண்டு
மெய்ம் மலி கழங்கின் வேலற் றந்தே
தலைமகட்குச் சொல்லியது; தலைமகன் வந்தொழுகவும வேறுபாடு கண்டான்,
'அவன் வருவானாகவும் நீ வேறுபட்டாய், வெறி எடுத்துக் கொள்ளும்
வகையான்' என்றதூஉம் ஆம்.
--வெறி பாடிய காமக்கண்ணியார்
268. KURINCI
(The companion of the heroine speaks to the heroine)
Friend,
Our lover is a hill-chief;
In his domain, the seasonal rains pour
And so the springs in the fearsome places are full to their brim
And the hill looks beautiful;
The huge branches of the dark-twigged Kuriñci plants
Glow with white flowers delicate;
The honey of these flowers oozes out
From the fragrant rills wrought by bees
In the painting-like comely houses.
Even though we have immense love for him,
We are not in turn loved by him.
What could be the reason, my friend?
Shall we fill our foreyard with fresh sand,
And decorate it with lamps,
And get the soothsaying Vēlan
And beseech him to tell the truth?
--Veripatiya Kamakkaniyār.
-----------------
269. பாலை
குரும்பை மணிப் பூண் பெருங் செங் கிண்கிணிப்
பால் ஆர் துவர் வாய்ப் பைம் பூட் புதல்வன்,
மாலைக் கட்டில், மார்பு ஊர்பு இழிய,
அவ் எயிறு ஒழுகிய அவ்வாய் மாண் நகைச்
செயிர் தீர் கொள்கை நம் உயிர் வெங் காதலி
திருமுகத்து அலமரும் கண் இனைந்து அல்கலும்,
பெரும! வள்ளியின் பிணிக்கும் என்னார்,
சிறு பல் குன்றம் இறப்போர்;
அறிவார் யார், அவர் முன்னியவ்வே?
தோழி வாயில் மறுத்தது; செலவு அழுங்குவித்ததூஉம் ஆம்.
--எயினந்தை மகன் இளங்கீரனார்.
269. PĀLAI
(The friend of the heroine refuses entry to the hero)
Our son wears jewels wrought of gold;
His Kinkinies* is are big and to them are attached
Small bells shaped like tender coconut ;
His coral-red mouth drips with milk;
He used to crawl and play
On the chest of his father, adorned with garlands;
This sight created joy in my friend's heart;
Sweet smiles appeared in her shining rows of teeth
In her coral-hued mouth.
Our lover keeps on going to distant lands,
Crossing many a small hill.
He does not think, “Our beloved of spotless chastity
Is dear to us even like our soul.
Her charming eyes that move about
In her comely face will grieve sorely.
They will bind us every day,
Even like the Valli creeper
That entwines a huge tree.”
Who can discover what he has in his mind?
--Eyinentai Makan Iļańkiranār.
* Kinkiņi: An ornament worn on the ankle of children.
They were ones like the cilampu worn by the women.
----------------
270. நெய்தல்
தடந் தாட் டாழைக் குடம்பை, நோனாத்
தண்டலை கமழும் வண்டு படு நாற்றத்து
இருள் புரை கூந்தல் பொங்கு துகள் ஆடி,
உருள் பொறி போல எம் முனை வருதல்,
அணித் தகை அல்லது பிணித்தல் தேற்றாப்
பெருந் தோட் செல்வத்து இவளினும் –எல்லா!—
எற் பெரிது அளித்தனை, நீயே; பொற்புடை
விரி உளைப் பொலிந்த பரியுடை நன் மான்
வேந்தர் ஒட்டிய ஏந்து வேல் நன்னன்
கூந்தல் முரற்சியின் கொடிதே;
மறப்பல் மாதோ, நின் விறற் றகைமையே.
தோழி வாயில் நேர்கின்றாள் தலைமகனை நெருங்கிச் சொல்லி, வாயில்
எதிர்கொண்டது, உடனிலைக் கிளவி வகையால்.
--பரணர்
270. NEYTAL
(The friend of the heroine speaks to the hero allowing entry to him)
O Chief,
As you left her alone and went away,
This lass, in our house thatched with the blades
Of the broad-based screwpine, moves before me,
Even like a machine; her tresses are bathed in the pollen
Of flowers and so smell sweetly
Like a garden thick with flowers; .
Her arms are wide and supple;
Yet she is ignorant of the art
Of binding her spouse with her;
You have great love for me; the love is
Greater than the love my friend has for me;
At times, you have gained victory.
But remember, this, your triumph,
Is far more wicked than the victory
Of Nannan, the wielder of spear,
Who subdued his foes, whose fleet-footed horses
Had charming manes; Nannan captured
The widows of his foes, clipped their hair,
Made cords out of them, and tethered
The captured elephants with them.
Let me forget this, your great victory.
--Paranar.
----------------
271. பாலை
இரும் புனிற்று எருமைப் பெருஞ் செவிக் குழவி
பைந் தாது எருவின் வைகு துயில் மடியும்
செழுந் தண் மனையோடு எம் இவண் ஒழிய,
செல் பெருங் காளை பொய்ம் மருண்டு, சேய் நாட்டுச்
சுவைக் காய் நெல்லிப் போக்கு அரும் பொங்கர்
வீழ் கடைத் திரள் காய் ஒருங்குடன் தின்று,
வீ சுனைச் சிறு நீர் குடியினள், கழிந்த
குவளை உண்கண் என் மகள் ஓரன்ன,
செய் போழ் வெட்டிய பொய்தல் ஆயம்,
மாலை விரி நிலவில் பெயர்பு புறங்காண்டற்கு,
மா இருந் தாழி கவிப்ப,
தா இன்று கழிக, எற் கொள்ளாக் கூற்றே.
மனை மருண்டு சொல்லியது
271. PĀLAI
(The mother laments over her daughter's elopement with her lover)
Leaving me here, in this cool and opulent house,
In whose stall slumber
The large-eared calves, newly born,
To dark-hued buffaloes,
On the dung covered with flower-pollen,
My beloved daughter, her khol-fed eyes
Resembling Kuvaļai blooms, eloped
To a far-off land, with her lover,
Alas, deluded by his false affirmations!
On her way, I fear, she will taste
The sweet, rounded Nelli berries
Of the groves, hard to pass through,
And drink the scanty water
From the dry springs.
I grieve here all alone, like an unlucky peasant,
Who, in anguish heaves hot sighs,
As his foes had played havoc with his fields
And went away with the booty.
May Death be deprived of all His strength
And die, to be covered with a wide
Earthen vessel and buried
For His sin of leaving me alive still!
--Anonymous.
Latent Meaning:
The young calves sleep on the bed of flower-pollen.
This suggests that the heroine should enjoy sleep on the chest of the hero.
---------------
272. நெய்தல்
கடல்அம் காக்கைச் செவ் வாய்ச் சேவல்,
படிவ மகளிர் கொடி கொய்து அழித்த
பொம்மல் அடும்பின் வெண் மணல் ஒரு சிறை,
கடுஞ் சூல் வதிந்த காமர் பேடைக்கு,
இருஞ் சேற்று அயிரை தேரிய, தெண் கழிப்
பூவுடைக் குட்டம் துழவும் துறைவன்
நல்காமையின், நசை பழுதாக,
பெருங் கையற்ற என் சிறுமை, பலர் வாய்
அம்பல் மூதூர் அலர்ந்து,
நோய் ஆகின்று; அது நோயினும் பெரிதே.
வரையாது நெடுங்காலம் வந்தொழுக ஆற்றாளாய தலைமகள் சொல்லியது;
தோழி தலைமகளுக்குச் சொல்லுவாளாய், தலைமகன் கேட்பச் சொல்லியதூஉம் ஆம்.
-- முக்கல் ஆசான் நல்வெள்ளையார்.
272. NEYTAL
(The heroine expresses her feeling to her confidante, when the hero pro long the clandestine period)
O my friend,
A male sea-gull, its mouth ruddy,
Searches for Ayirai fish
In the creek which is deep, clear-watered,
Dark-mired and rich in flowers,
To feed its lovely mate
That undergoes ordeals owing to its first pregnancy,
In the corner of a white sand-dune
Where the well-grown Atumpu vines
Were removed to make room for austre women
To observe their penance.
Such is the realm
Of our chief!
All my anxious waiting
For his arrival bore no fruit,
As he failed to come and shower his grace on me.
No doubt it is painful.
But the pain, caused by the slander
Of women in our hoary village
Is far more intense than the former one!
--Mukkal Ācan Nalvelliyār
Latent Meaning :
The male sea-gull searching for fishes to feed its preg nant mate-- The hero should wed the heroine and go abroad to earn riches and return and lead a happy do mestic life.
----------------
273. குறிஞ்சி
இஃது எவன்கொல்லோ - தோழி!-- மெய் பரந்து
எவ்வம் கூர்ந்த ஏமுறு துயரம்
வெம்மையின் தான் வருத்துறீஇ, நம் வயின்
அறியாது அயர்ந்த அன்னைக்கு, 'வெறி' என,
வேலன் உரைக்கும் என்ப; ஆகலின்,
வண்ணம் மிகுந்த அண்ணல் யானை
நீர் கொள் நெடுஞ் சுனை அமைந்து, வார்ந்து உறைந்து, என்
கண் போல் நீலம் தண் கமழ் சிறக்கும்
குன்ற நாடனை உள்ளுதொறும்,
நெஞ்சு நடுக்குறூஉம், அவன் பண்பு தரு படரே?
தோழி தலைமகனது வரவு உணர்ந்து தலைமகட்கு உரைப்பாளாய்,
‘நின் வேறுபாடு தாயக்குப் புலனாக, அவள் வேலனைக் கூவி வெறி அயரும்' என்பது படச் சொல்லியது.
--மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்.
273. KURIÑCI
(The confidente addresses the heroine)
O my friend!
In our lover's cool mountain,
There are wide streams
Where densely dark elephants drink water
And where long-petalled blue-lilies
Issue forth their sweet fragrance.
Whenever I think of him, it causes my heart to tremble!
The bewildering grief has pervaded
Your entire body; out of her love for us,
Our mother too is grief-laden!
Growing anxious to know of the cause
Of our grief, it is said, she plans
To invite the Vēlan to our home.
Should the Vēlan declare
That our grief is the work of the Lord,
Alas, what will betide us, my friend?
--Maturai Iļampālāciriyan Centankuttanār.
Ullurai (Suggestion)
The elephant -- The hero ; The stream --The clan of the heroine The water --The heroine The elephant drinking the water --The hero wedding the heroine
The unfolding of blue lilies --The parents feeling happy.
-------------
274. பாலை
நெடு வான் மின்னி, குறுந் துளி தலைஇ,
படு மழை பொழிந்த பகுவாய்க் குன்றத்து,
உழை படு மான் பிணை தீண்டலின், இழை மகள்
பொன் செய் காசின், ஒண் பழம் தாஅம்
குமிழ் தலைமயங்கிய குறும் பல் அத்தம்,
'எம்மொடு வருதியோ, பொம்மல் ஓதி?” எனக்
கூறின்றும் உடையரோ மற்றே –வேறுபட்டு
இரும் புலி வழங்கும் சோலை,
பெருங் கல் வைப்பின் சுரன் இறந்தோரே?
தோழி பருவம் மாறுபட்டது.
–காவன் முல்லைப் பூதனார்
274. PĀLAI
(The Confidante speaks to the heroine)
O my friend!
Our lover has gone through a wilderness
Of high hill where huge and dark tigers of fierce anger
Roam about!
Is he not the very same one
Who had in the past told you thus:
“O lass endowed with well-grown hair!
The paths are many and narrow;
They are rich in many kinds of trees;
The Kumil trees grow thick here,
Whose yellow fruits fall down
And resemble the golden coins
In the ornaments of bejewelled women,
When the comely does brush their bodies
Against their trunks;
These are does that live in the clefted hill,
Where the flashing rain-clouds
Started to drizzle and subsequently
Poured heavy showers.
Can you follow me
Through such paths?”
(So do not worry yourself with the thought of the pains of
the paths).
--Kāvan Mullaipputanār.
--------------
275. நெய்தல்
செந்நெல் அரிநர் கூர் வாட் புண்ணுறக்
காணார் முதலொடு போந்தென, பூவே
படையொடும் கதிரொடும் மயங்கிய படுக்கைத்
தன்னுறு விழுமம் அறியா, மென்மெல,
தெறு கதிர் இன் துயில் பசு வாய் திறக்கும்
பேதை நெய்தற் பெரு நீர்ச் சேர்ப்பற்கு
யான் நினைந்து இரங்கேனாக, நோய் இகந்து,
அறனிலாளன் புகழ, என்
பெறினும், வல்லேன்மன் --தோழி!--யானே.
சிறைப்புறமாகத் தலைமகனது வரவுணர்ந்து வற்புறுப்பு, வன்புறை
எதிர்மொழிந்தது.
--அம்மூவனார்
275. NEYTAL
(The heroine answers her friend which is overheard by the hero)
Friend,
The farm hands while harvesting
The well-ripe paddy stalks inadvertantly cut down
A young Neytal plant; the cut pieces of the Neytal
Go unnoticed by the workers and they lie
In the threshing ground
Together with the paddy-sheaves;
The innocent buds of Neytal
Are quite unaware of their pitiable plight
And so open their fresh petals,
While in sweet slumber,
At the touch of the rays of the fierce sun!
Such is the place of our lover,
The chief of a littoral domain!
In spite of my intense grief,
I do not think of him,
Nor do I nurture any odium for him!
Instead, if that virtueless man comes to me again
And praises my qualities,
I can forget all the pain he caused to me
And remain calm!
--Ammūvanār
-----------------
276. குறிஞ்சி
"கோடு துவையா, கோள் வாய் நாயொடு
காடு தேர்ந்து அசைஇய வய மான் வேட்டு
வயவர் மகளிர்' என்றி ஆயின்,
குறவர் மகளிரேம்; குன்று கெழு கொடிச்சியேம்;
சேணோன் இழைத்த நெடுங் காற் கழுதில்
கான மஞ்ஞை கட்சிச் சேக்கும்
கல் அகத்தது எம் ஊரே; செல்லாது
சேந்தனை, சென்மதி நீயே --பெரு மலை
வாங்கு அமைப் பழுநிய நறவு உண்டு.
வேங்கை முன்றில் குரவையும் கண்டே.
பகற்குறி வந்து பெயரும் தலைமகனை உலகியல் சொல்லியது.
--தொல் கபிலர்
276. KURINCI
(The confidante of the heroine addresses the hero who is ready to leave
after having met his beloved)
O chief!
You address us as the daughters
Of the hunters who are wont to blow
Their horns and hunt the mighty deer
While searching for game in the jungle,
Aided by seasoned setters. But know
That we are no daughters of hunters
But the girls of the hillsmen!
Here is our hamlet amidst rocks
Where the lofts, built on high poles
By millet-guards are inhabited
By wild pea-fowls.
Pray do not leave from here,
But consent to stay.
You may go to your land
After having imbibed the liquor
Which fermented inside the bent pipes
Of bamboos which were cut
From the swaying bamboos growing
In our huge mountain,
And after witnessing the Kuravai dance
Enacted by our folk in the foreyard
With Venkai trees
--Tolkapilar
Latent Meaning
The wild pea-fowls stay in the loft in the garden. This suggests that the hero should stay in their house.
It also implies that unless he weds the heroine, he can not stay with her.
----------------
277. பாலை
கொடியை; வாழி –-தும்பி!—இந் நோய்
படுகதில் அம்ம, யான் நினக்கு உரைத்தென;
மெய்யே கருமை அன்றியும், செவ்வன்
அறிவும் கரிதோ –அறனிலோய்! –நினக்கே?
மனை உறக் காக்கும் மாண் பெருங் கிடக்கை
நுண் முள் வேலித் தாதொடு பொதுளி
நாறு படு பீரம் ஊதி, வேறுபட
நாற்றம் இன்மையின், பசலை ஊதாய்;
சிறு குறும் பறவைக்கு ஓடி, விரைவுடன்
நெஞ்சு நெகிழ் செய்ததன் பயனோ? அன்பு இலர்,
வெம் மலை அருஞ் சுரம் இறந்தோர்க்கு
என் நிலை உரையாய், சென்று, அவண் வரவே.
பட்ட பின்றை வரையாது, கிழவோன் நெட்டிடைக் கழிந்து
பொருள்வயிற் பிரிய, ஆற்றாளாகிய தலைமகள் தும்பிக்குச் சொல்லியது.
--தும்பி சேர் கீரனார்
277. PĀLAI
(The heroine addresses a beetle unable to endure separation)
O beetle! Hail to you!
You are wicked indeed!
May I die of this disease,
For my blunder of having complained
To you of my agony!
You chose to buzz the pollen-filled flowers
Of the Piram creeper
That spreads over the strong fence
Of sharp thorns, that encloses our home,
But refuse to buzz my body
(Which is also a Piram blossom in hue).
Is it because it has no fragrance?
Or, is it because you were in a hurry
To please your tiny and young beloved
By your embraces? Or, is it the reason
Why you had not rushed toward my loveless lover
Who now treads a hazardous path
Through the dangerous hilly region
And caused him to return here,
After having reported to him of my present plight?
I wonder if your intellect too is dark
Even like your body!
--Tumpicēr Kiranār.
---------------
278. நெய்தல்
படு காழ் நாறிய பராஅரைப் புன்னை ,
அடு மரல் மொக்குளின், அரும்பு வாய் அவிழ,
பொன்னின் அன்ன தாது படு பல் மலர்
சூடுநர் தொடுத்த மிச்சில் கோடுதொறும்
நெய் கனி பசுங் காய் தூங்கும் துறைவனை
இனி, அறிந்திசினே கொண்கன் ஆகுதல் –
கழிச் சேறு ஆடிய கணைக் கால் அத்திரி
குளம்பினும் சேயிறா ஒடுங்கின;
கோதையும் எல்லாம் ஊதை வெண் மணலே.
தோழி தலைமகட்கு வரைவு மலிந்தது.
–உலோச்சனார்.
278. NEYTAL
(The friend of the heroine happily announces that the hero
has come with wedding proposal)
The Punnai trees with swelled and hardy trunks
Have buds which are verily Maral buds.
These golden and pollen-filled buds blow
And the flowers are plucked by the folk
For making wreaths and the left-out ones
Grow into fruits, rich in oil
And are now beheld hanging from the branches.
Such is the domain of our lover!
He has now arrived here, in his chariot
Pulled by mules. The fleshy legs of these animals
Are stained with the mire of the marshy creek.
The ruddy shrimps got trampled by the hooves of the mules
and his garlands
Got stained with a layer of the silvery sand
Which the sea-breeze carried with it!
Now I have well realised
That he deserves very much
To be hailed as the worthy chief
Of a seashore domain.
--Uloccanār.
Latent Meaning :
The left out Punnai flowers grow into fruits rich in oil and dangle from the tree.
The heroine will be freed from the gossip of the village woman and hearafter her heart will be filled with joy of a high order.
---------------
279. பாலை
வேம்பின் ஒண் பழம் முணைஇ, இருப்பைத்
தேம் பால் செற்ற தீம் பழம் நசைஇ,
வைகு பனி உழந்த வாவல், சினைதொறும்,
நெய்தோய் திரியின் தண் சிதர் உறைப்ப,
நாட் சுரம் உழந்த வாள் கேழ் ஏற்றையொடு
பொருத யானைப் புட் டாள் ஏய்ப்ப,
பசிப் பிடி உதைத்த ஓமைச் செவ் அரை
வெயில் காய் அமையத்து இமைக்கும் அத்தத்து,
அதர் உழந்து அசையினகொல்லோ –ததர்வாய்ச்
சிலம்பு கழீஇய செல்வம்
பிறருழைக் கழிந்த என் ஆயிழை அடியே?
மகட் போக்கிய தாய் சொல்லியது.
--கயமனார்
279. PĀLAI
(The mother laments over the elopement of her daughter)
Alas, my daughter has gone with her lover,
Treading a flaming forest;
Here, a cow-elephant, to quell its hunger,
Peels off the bark from the trunk
Of an Omai tree, by kicking at it
With its foot; the barkless trunk now glows
Bright, touched by the radiant sun-rays
And resembles the wounded foot of a tusker
That had just fought a tiger
With sword-like glowing stripes,
At the small hours of the day,
A time when bats wing in the air
Seeking the fruits, honeyed,
Of the Iruppai trees, whose milky juice
Had gone dry; these are the bats
Which are tired of tasting the bright neem fruits;
As they fly, heavy drops of dew
Fall on them, like so many drops
That fall from the oil-soaked wicks.
Did the dainty feet of my beloved daughter
Richly adorned with jewels, grieve sorely,
While crossing the wilderness?
Did she offer the great joy
Of witnessing the ritual of removing
Her anklets with close-set mouths
To total strangers?
(It is a pity that I, her mother is deprived of that joy.)
- Kayamanār.
Latent Meaning :
The bat dislikes the neem fruit and goes seeking the Iruppai fruits when cold dew-dropse fall on it. This implies that the heroine forsook her father's wealth and eloped with her lover, desiring to enjoy this wealth. The mother worries how her daughter will live peace fully with strangers in her new house.
----------------
280. மருதம்
"கொக்கினுக்கு ஒழிந்த தீம் பழம், கொக்கின்
கூம்பு நிலை அன்ன முகைய ஆம்பற்
றூங்கு நீர்க் குட்டத்து, துடுமென வீழும்
தண் துறை ஊரன் தண்டாப் பரத்தமை
புலவாய்' என்றி - தோழி!- புலவேன்—
பழன யாமைப் பாசடைப் புறத்து,
கழனி காவலர் கரி நந்து உடைக்கும்,
தொன்று முதிர் வேளிர், குன்னூர் அன்ன என்
நல் மனை நனி விருந்து அயரும்
கைதூவின்மையின் எய்தாமாறே.
வாயில் வேண்டிச் சென்ற தோழிக்குத் தலைமகள் மறுத்து மொழிந்தது. தலைமகனை ஏற்றுக் கொண்டு வழிபட்டாளைப் புகழ்ந்து புக்க தோழிக்குத் தலைமகன் சொல்லியதூ உம்.
--பரணர்
280. MARUTAM
(The heroine speaks to her friend)
O my friend!
Our lover is the lord of a fertile plain
Full of cool fords; here, from a mango tree,
A sweet fruit falls down suddenly,
Disturbed by the sitting of a crane,
And plunges into the deep-watered pond
Below the tree; the pond is rich In
Ampal buds, all resembling white herons,
Their wings folded;
You condemn me for not sulking with our lover
For his insatiable lust for public women.
(But how?) As I am busy entertaining.
The ceaseless stream of guests
In our prosperous house, which is
Like Kunrur of the ancient Vēļir
Where the field-guards break the oysters,
Roasted in fire, on the green back
Of the land tortoise, which very much resembles
A piece of stone,
I have no time to sulk.
--Paranar.
Latent Meaning :
The mango fruit falls down suddenly, disturbed by a crane.
By this, the heroine implies that the hero comes to her, aided by her friend as his hetaira had forsaken him.
The farmers break the oyster shells on the back of the turtle and eat the flesh.
The hero causes grief to his high-born wife and enjoys the base company of a low-born prostitute.
-------------
281. பாலை
மாசு இல் மரத்த பலி உண் காக்கை
வளி பொரு நெடுஞ் சினை தளியொடு தூங்கி,
வெல் போர்ச் சோழர் கழாஅர்க் கொள்ளும்
நல் வகை மிகு பலிக் கொடையோடு உகுக்கும்
அடங்காச் சொன்றி, அம் பல் யாணர்
விடக்குடைப் பெருஞ் சோறு, உள்ளுவன இருப்ப,
மழை அமைந்து உற்ற மால் இருள் நடு நாள்,
தாம் நம் உழையராகவும், நாம் நம்
பனிக் கடுமையின், நனி பெரிது அழுங்கி,
துஞ்சாம் ஆகலும் அறிவோர்
அன்பிலர் --தோழி!--நம் காதலோரே.
வன்பொறை எதிர் அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது; 'ஆற்றாள் எனக் கவன்ற தோழி தலைமகட்கு உரைத்ததூஉம் ஆம்.
--கழார்க் கீரன் எயிற்றியார்.
281. PĀLAI
(The heroine speaks to her consoling companion)
My friend,
It is the midnight of heavy downpour
And confusing gloom; now, a crow
That lives on a flawless tree and which is fond of eating
The food-offering of the folk Is perched on a tall branch
That sways greatly, lifted by swift wind.
It gets its body dampened
By the rain-drops; it sits there,
All the while contemplating
The innumerable and rich balls of rice
Scattered by the people of Kalár,
In the realm of the victorious Colar;
It also dreams of the sumptuous food
Mixed with many a piece of fresh meat.
We are girls who were sleepless,
Tossed greatly by the benumbing cold
Even while he was beside us,
During such night!
He who is well aware of our, this nature,
Has turned loveless, and has decided to go!
--Kalārkiran Eyirriyār.
Latent Meaning: The crow contemplates meat-mixed food even while it
grieves dampened with the pouring rain.
This implies that the heroine holds on to her life with the desire to enjoy his company once again even though she is assailed now by dew-fall and cold.
-------------
282. குறிஞ்சி
தோடு அமை செறிப்பின் இலங்கு வளை ஞெகிழ,
கோடு ஏந்து அல்குல் அவ் வரி வாட,
நல் நுதல் சாய, படர் மலி அரு நோய்
காதலன் தந்தமை அறியாது, உணர்த்த,
அணங்குறு கழங்கின் முது வாய் வேலன்
கிளவியின் தணியின், நன்றுமன்–சாரல்
அகில் சுடு கானவன் உவல் சுடு கமழ் புகை,
ஆடு மழை மங்குலின், மறைக்கும்
நாடு கெழு வெற்பனொடு அமைந்த, நம் தொடர்பே?
சிறைப்புறமாகத் தோழி செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது.
--நல்லூர்ச் சிறு மேதாவியார்.
282. KURIÑCI
(The friend of the heroine speaks to the heroine to be overheard
by the hero, by way of importuning him to wed her friend eftsoon)
O my friend!
Our serried and tightly worn bracelets
Have now loosened; the beautiful folds
On our forelap, with fleshy sides
Have greatly faded; pallor pervades
Our charming forehead;
An irremovable grief overtakes us;
Should our mother, out of her ignorance,
Take it that Lord Murukan
Has caused it and invites
The Vēlan of hoary wisdom
And succeeds in relieving us
Of our grief, it will spell good to us!
Alas, it seems that our kinship
With that chief of the mountain
Will cease.
In his domain, the foresters
In the hill-slopes burn the Akil wood,
Using dry leaves for fuel,
And the fragrant smoke from the fire
Spreads into the village and mantles it.
--Nallūr Cirumētāviyār.
Latent Meaning:
The smoke produced by the burning of Akil wood ap pears like
cloud and conceals the hill.
The idea is that the love-life should remain secret.
------------------
283. நெய்தல்
ஒள் நுதல் மகளிர் ஒங்கு கழிக் குற்ற
கண் நேர் ஒப்பின கமழ் நறு நெய்தல்
அகல் வரிச் சிறு மனை அணியும் துறைவ!—
வல்லோர் ஆய்ந்த தொல் கவின் தொலைய,
இன்னை ஆகுதல் தகுமோ--ஒங்கு திரை
முந்நீர் மீமிசைப் பலர் தொழத் தோன்றி,
ஏமுற விளங்கிய சுடரினம்,
வாய்மை சான்ற நின் சொல் நயந்தோர்க்கே?
பகற்குறி வந்த தலைமகனைத் தோழி வரைவு கடாயது; கடிநகர் புக்க தோழி பிற்றை ஞான்று, - "வேறுபடாது ஆற்றினாய்' என்று சொல்லியதூஉம் ஆம்.
--மதுரை மருதன் இளநாகனார்.
283. NEYTAL
(The friend of the heroine importunes the hero to wed
her friend eftsoon)
O chief of a littoral domain
Where girls of lustrous foreheads
Build beautiful sand-homes and adorn them
With the eye-like flowers of Neytal,
From the creeks wide.
We, (poor girls) took your words of affirmation
To be more truthful than the sun
That emerges out on the sea of rising waves
To the delight of every life
To be adored by all!
Is it becoming of your honour
To behave like this and cause us
To lose our great beauty?
Alas, it is the beauty
Which was born with us and grew with us!
It was the beauty which was hailed by the well-informed folk.
--Maturai Marutan Iļanākanār.
Latent Meaning:
The flowers plucked by the girls adorn their small toy houses.
This suggests that the hero should get the heroine in marriage, take her home and add to the charm of his house. ---------------------
284. பாலை
'புறம் தாழ்பு இருண்ட கூந்தல், போதின்
நிறம் பெறும் ஈர் இதழ்ப் பொலிந்த உண்கண்,
உள்ளம் பிணிக்கொண்டோள்வயின்'. நெஞ்சம்,
'செல்லல் தீர்கம்; செல்வாம்' என்னும்:
'செய்வினை முடியாது எவ்வம் செய்தல்
எய்யாமையோடு இளிவு தலைத்தரும்' என,
உறுதி தூக்காத் தூங்கி, அறிவே,
சிறிது நனி விரையல்' என்னும்: ஆயிடை,
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு மாறு பற்றிய
தேய்புரிப் பழங் கயிறு போல,
வீவதுகொல் என் வருந்திய உடம்பே?
பொருள் முடியாநின்ற தலைமகன் ஆற்றானாகிச் சொல்லியது.
--தேய்புரிப் பழங்கயிற்றினார்.
284. PĀLAI
(The hero speaks to himself when he was in a foreign land
in quest of riches)
My beloved is the one
Who won my heart for her!
She has dark tresses which hang low
On her back; her eyes, adorned with collyrium,
Glow like a pair of Neytal blooms;
They have cool brows;
My heart goads me to rush towards my home
And relieve her of her pangs of separation
While my intellect urges me thus:
"To leave unaccomplished
An endeavour undertaken,
Is ignorance, besides being
Cause for disgrace!
May you weigh the relative merits
And act accordingly!
Do not act in a haste!"
Alas, what will betide my poor body?
Is it destined to perish
Even like an old rope
Of worn-out strands
Whose ends are pulled
From opposite directions
By two elephants of upturned and glittering tusks?
--Têy puri Palankayirrinār.
Note:
The composer of this beautiful poem got the present name on the basis of the comparison of the old rope, he introduced in this poem.
---------------------
285. குறிஞ்சி
அரவு இரை தேரும் ஆர் இருள் நடு நாள்
இரவின் வருதல் அன்றியும் –உரவுக் கணை
வன் கைக் கானவன் வெஞ் சிலை வணக்கி,
உளமிசைத்தவிர்த்த முளவுமான் ஏற்றையொடு,
மனைவாய் ஞமலி ஒருங்கு புடை ஆட,
வேட்டு வலம் படுத்த உவகையன், காட்ட
நடு காற் குரம்பைத் தன் குடிவயிற் பெயரும்
குன்ற நாடன் கேண்மை நமக்கே
நன்றால் வாழி –தோழி!--என்றும்,
அயலோர் அம்பலின் அகலான்,
பகலின் வரூஉம், எறி புனத்தானே.
தோழி சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய், தலைமகன் கேட்ப, ‘அம்பலும் அலரும் ஆயிற்று' என்று சொல்லியது.
--மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்.
285. KURIÑCI
(The friend of the heroine speaks to the heroine to be overheard
by the hero)
Hail to you my friend!
A strong-handed forester bends his mighty bow
And splits the chest of a porcupine
With his dart and takes home its body
His heart overflowing with the joy of triumph!
As he reaches his hut, supported
By poles, all his pet-dogs
Greefully bark and surround him.
Such is the realm of our lover.
He visits us, druing gloomy midnight,
Difficult for men to move about.
It is the hour when snakes roam about in search of their prey.
He does not mind the gossip of the folk.
He also visits during broad day
The millet-field which was made fit
For cultivation, by burning down the trees!
Will his kinship with us
Prove good to us? (It is harmful indeed!)
--Maturaikkollan Vennakanār.
Latent Meaning:
As the forester arrives at his house with the hunted porcupine his dogs surround him with great joy,
The hero who had secret relationship with the heroine, should elope with her during night and reach his village to the joy of his kinsmen and wed her.
-------------
286. பாலை
'ஊசல் ஒண் குழை உடை வாய்த்தன்ன,
அத்தக் குமிழின் ஆய் இதழ் அலரி
கல் அறை வரிக்கும் புல்லென் குன்றம்
சென்றோர்மன்ற; செலீஇயர் என் உயிர்' என,
புனை இழை நெகிழ விம்மி, நொந்து நொந்து
இனைதல் ஆன்றிசின் --ஆயிழை!-- நினையின்
நட்டோர் ஆக்கம் வேண்டியும், ஒட்டிய
நின் தோள் அணி பெற வரற்கும்
அன்றோ --தோழி! -- அவர் சென்ற திறமே?
பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தது.
--துறைக்குறுமாவிற் பாலன் கொற்றனார்.
286. PĀLAI
(The companion of the heroine consoles her friend)
"O my friend of choicest ornaments!
Our lover trod a mountain region,
Desolate and thick with Utai trees;
The paths are strewn with the blooms
Of the Kumil tree that resemble
The swaying ear-jewels of women!
May my soul desert my body!"
Saying so, you weep endlessly;
Your grief has caused your jewels to slip;
You are greatly anguished!
Relax yourself and think! If we think for a while,
We will realise that our lover
Parted from us, only for the good
Of our near kin and also for adorning your arms with jewels!
--Turaikkurumāvirpalan korranār.
--------------
287. நெய்தல்
'விசும்பு உறழ் புரிசை வெம்ப முற்றி,
பைங் கண் யானை வேந்து புறத்து இறுத்த;
- நல் எயிலுடை யோர் உடையம்' என்னும்
பெருந் தகை மறவன் போல --கொடுங் கழிப்
பாசடை நெய்தற் பனி நீர்ச் சேர்ப்பன்,
நாம முதலை நடுங்கு பகை அஞ்சான்,
காமம் பெருமையின், வந்த ஞான்றை --
அருகாது ஆகி அவன்கண் நெஞ்சம்
நள்ளென் கங்குல் புள் ஒலி கேடடொறும்,
"தேர் மணித் தெள் இசைகொல்?” என,
ஊர் மடி கங்குலும் துயில் மறந்ததுவே.
காப்பு மிகுதிக்கண் ஆற்றாளாகிய தலைமகள் சொல்லியது.
--உலோச்சனார்
287. NEYTAL
(The heroine speaks unable to bear the strict vigil of her parents)
Like a petty chief who feels secure,
Confident of the support from a crowned King
With well-guarded fortress,
At a time when his walled fort is besieged
By a foe's army of fresh-eyed tuskers,
I was quite fearless; my heart
Was full of courage, when our lover,
The chief of a cool domain
With bent creeks, rich in green-leaved Neytal plants
Visited us, during midnight,
Unmindful of fearsome crocodiles on his path.
He came, his heart overflowing with love for us.
Alas, the same heart which was so courageous,
Now refuses to sleep, mistaking
The chirping of birds,
For the tinkling of his chariot-bells,
Even during dead of night
When the whole village is absorbed In deep slumber!
--Uloccanár.
-------------------
288. குறிஞ்சி
அருவி ஆர்க்கும் அணங்குடை நெடுங் கோட்டு
ஞாங்கர், இள வெயில் உணீஇய, ஒங்கு சினைப்
பீலி மஞ்ஞை பெடையோடு ஆலும்
குன்ற நாடன் பிரிவின் சென்று,
நல் நுதல் புரந்த பசலை கண்டு, அன்னை
செம் முது பெண்டிரோடு நெல் முன் நிறீஇ,
கட்டின் கேட்கும் ஆயின், வெற்பில்
ஏனற் செந் தினைப் பால் ஆர் கொழுங் குரற்
சிறு கிளி கடிகம் சென்றும், 'இந்
நெடு வேள் அணங்கிற்று' என்னும்கொல், அதுவே.
தோழி சிறைப்புறமாகத் தலைமகட்கு உரைப்பாளாய்,
வெறி அறிவுறீஇ வரைவு கடாயது.
---குளம்பனார்.
288. KURIÑCI
(The friend of the heroine speaks to the heroine,
to be overheard by the hero)
A peacock with comely plumage
Sports with its mate and bathes
In the tender morning sun,
Atop the tree thriving
Beside a peak, high and spirit-haunted,
From which drops down many a cascade.
Such is the realm of our lover!
Pallor pervades your forehead
As he parted from us!
Should our mother notice it,
She may invite to our home
The elderly oracular women.
I fear that those women
Will cause us to stand
In our foreyard and spread paddy grains
Before us; they will proclaim
That our anguish is
The work of Lord Murukan,
While in fact we had gone
To the field to drive off
The parrots that plundered
The juicy and heavy ears,
Of the red millet crops
Thriving on our hill.
--Kulampanār.
Note: She suggests that the heroine met the hero there and hence her anguish.
Suggestion:
The peacock goes to the high peak and bathes in the morn ing sun in the company of its mate.
This suggests that the hero, to enjoy domestic life, should take the heroine with him and wed her.
--------------------
289. முல்லை
அம்ம வாழி, தோழி!–காதலர்,
நிலம் புடைபெயர்வதாயினும், கூறிய
சொல் புடைபெயர்தலோ இலரே; வானம்
நளி கடல் முகந்து, செறிதக இருளி,
கனை பெயல் பொழிந்து, கடுங் குரல் பயிற்றி,
கார் செய்து, என் உழையதுவே; ஆயிடை,
கொல்லைக் கோவலர் எல்லி மாட்டிய
பெரு மர ஒடியல் போல,
அருள் இலேன் அம்ம; அளியேன் யானே.
பிரிவிடைப் பருவம் கண்டு சொல்லியது.
--மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன்குமரனார்
289. MULLAI
(The lonely heroine speaks at the advent of the rainy season)
O my friend!
I wish you long life!
Listen to my words!
Our lover will not go against his plighted word,
Even if the earth turns upside down.
The clouds, having scooped water
From the abundant sea, turned densely dark,
Poured amain with boisterous claps
Of thunder and have inaugurated the rainy season.
They seem to have my life as their target.
I am pitiable indeed!
I am now like unto the bottom of the root
Of a huge tree which is set on fire
At night by the cowherds.
Our lover has no mercy for us!
--Marunkūrppattinattuc Centan Kumaraņār.
Note:
The girl means that she will be fully consumed by the fire of love, even like the root which is consumed by the fire. ---------------
290. மருதம்
வயல் வெள் ஆம்பல் சூடு தரு புதுப் பூக்
கன்றுடைப் பனிற்றா தின்ற மிச்சில்
ஓய்நடை முது பகடு ஆரும் ஊரன்
தொடர்பு நீ வெஃகினை ஆயின், என் சொல்
கொள்ளல்மாதோ, முள் எயிற்றோயே!
நீயே பெரு நலத்தையே; அவனே,
‘நெடு நீர்ப் பொய்கை நடு நாள் எய்தி,
தண் கமழ் புது மலர் ஊதும்
வண்டு' என மொழிப; ‘மகன்' என்னாரே.
பரத்தை விறலிமேல் வைத்துத் தலைமகளை நெருங்கிச் சொல்லியது; பரத்தையிற் பிரிய, வாயிலாய்ப் புக்க பாணன் கேட்ப, தோழி சொல்லியதூஉம் ஆம்.
--மதுரை மருதன் இளநாகனார்.
290. MARUTAM
(The concubine speaks to the heroine as if she addresses a woman dancer (Virali).
Our lover is the chief of a fertile land;
In his domain, the farmers cut down
The fresh white lilies together with the paddy stalks
Which a cow that had recently calved.
Grazes and what is left over is
Subsequently eaten by an ox
Which is weary after its toil in the field.
If you really wish to have his lasting kinship,
Listen to my words!
As you are so young and charming,
Sulking with him will tarnish your honour.
It is common talk
That our lover is not a man
But a bee that visits during night,
A deep-watered tank and sucks honey
From the flowers, cool, fresh and fragrant!
--Maturai Marutan llanakanār.
Suggestion :
The cow that had recently calved eats the Ampal flowers and what is left over is eaten by a bull, which is tired after its toil in the field.
This implies that the heroine need not worry too much, for, the other women enjoyed her husband only after she had lived with him for a long time and bore children for him.
--------------
291. நெய்தல்
நீர் பெயர்த்து மாறிய செறி சேற்று அள்ளல்
நெய்த் தலைக் கொழு மீன் அருந்த, இனக் குருகு
குப்பை வெண் மணல் ஏறி, அரைசர்
ஒண் படைத் தொகுதியின் இலங்கித் தோன்றும்,
தண் பெரும் பௌவ நீர்த் துறைவற்கு, நீயும்,
கண்டாங்கு உரையாய்; கொண்மோ --பாண!--
மா இரு முள்ளூர் மன்னன் மா ஊர்ந்து,
எல்லித் தரீஇய இன நிரைப்
பல் ஆன் கிழவரின் அழிந்த இவள் நலனே?
வாயிலாகப் புக்க பாணற்குத் தோழி தலைமகளது குறிப்பு அறிந்து,
நெருங்கிச் சொல்லியது.
--கபிலர்.
291. NEYTAL
(The friend of the heroine speaks to the Pānan who came
as the messenger of the hero)
Our lover is the chief of a littoral region;
In this beach of the cool and vast sea,
Flocks of herons gather on the milk-white sand dunes
And appear like the armies of monarchs
Fully armed with glittering weapons.
The herons flock there to eat
The succulent fishes whose heads contain
Abundant fat, from the creek
With dense mire, whose water had gone dry.
O pana! you have not appraised him
Of our true plight. Does it befit you?
This girl's charm has perished
Like the owners of the cattle
Which were abacted at night,
By Kari*, the expert horse-rider
And renowned lord of Mullur.
--Kapilar.
* Kāri: One of the seven celebrated patrons of the ancient period. He was a
member of the Malayar clan.
------------------
292. குறிஞ்சி
நெடுந் தண் ஆரத்து அலங்கு சினை வலந்த
பசுங் கேழ் இலைய நறுங் கொடித் தமாலம்
தீம் தேன் கொள்பவர் வாங்குபு பரியும்,
யாணர் வைப்பின், கானல் என்னாய்;
களிறு பொரக் கரைந்த கயவாய்க் குண்டு கரை
ஒளிறு வான் பளிங்கொடு செம் பொன் மின்னும்
கருங் கற் கான்யாற்று அருஞ் சுழி வழங்கும்
கராஅம் பேணாய்; இரவரின்,
வாழேன் --ஐய!--மை கூர் பனியே!
இரவுக்குறி மறுத்தது.
--நல்வேட்டனார்
292. KURIÑCI
(The companion of the heroine refuses to arrange meeting by night)
This is a jungle of endless foison
Where the honey-collectors cut and take away
The Tamalam creepers that entwine
The swaying branches of the sandal trees long noded!
You do not mind
Passing through this forest, full of deep pits
Which get filled as wild elephants
Had fought on their banks;
Along these banks ruined, are found
Shining marble stones and ruddy gold;
A wild stream courses through dark rocks;
The stream has dangerous eddies,
Hard to swim across; It also abounds in crocodiles.
If you visit here, unmindful of all these,
I will cease to hold breathe.!
I cannot stay alive, bearing the pain of the densely dark night
With freezing dew-fall!
--Nalvęttanár.
Note:
Though the companion says that she cannot stay alive, her reference is to her friend only.
Latent Meaning:
The Kuravas cut down the creepers to collect honey.
The hero should avoid nightly visits and wed her in marriage so that she will be free from grief.
--------------
293. பாலை
மணிக் குரல் நொச்சித் தெரியல் சூடி,
பலிக் கள் ஆர் கைப் பார் முது குயவன்
இடு பலி நுவலு அகன்தலை மன்றத்து,
விழவுத் தலைக்கொண்ட பழ விறல் மூதூர்ப்
பூங் கண் ஆயம் காண்தொறும், எம்போல்,
பெரு விதுப்புறுகமாதோ--எம் இல்
பொம்மல் ஒதியைத் தன் மொழிக் கொளீஇ,
கொண்டு உடன்போக வலித்த
வன்கண் காளையை ஈன்ற தாயே.
தாய் மனை மருண்டு சொல்லியது; அவரிடத்தாரைக்
கண்டு சொல்லியதூஉம் ஆம்.
--கயமனார்.
293. PĀLAI
(The mother speaks after the elopement of her daughter)
Adorning his head with a wreath
Of sapphire-like Nocci blooms,
The aged and hefty potter who is wont
To imbibe the liquor, given as offering
To deities, summons the crows as well as the spirits
In the wide commonyard of this hoary and famed village,
Where the folk celebrate their festival!
My body shakes with grief, on the sight of girls
Of flowery eyes who are at play.
May the mother of the cruel youth
Also greatly shake like me,
The youth who took away my dense-haired daughter,
Alluring her with his honeyed words!
--Kayamanār.
----------------
294. குறிஞ்சி
தீயும் வளியும் விசும்பு பயந்தாங்கு,
நோயும் இன்பமும் ஆகின்றுமாதோ;
மாயம் அன்று--தோழி!--வேய் பயின்று,
எருவை நீடிய பெரு வரையகம் தொறும்,
தொன்று உறை துப்பொடு முரண் மிகச் சினை இக்
கொன்ற யானைக் கோடு கண்டன்ன,
செம் புடைக் கொழு முகை அவிழ்ந்த காந்தள்
சிலம்புடன் கமழும் சாரல்
இலங்கு மலை நாடன் மலர்ந்த மார்பே!
மணமனையுள் புக்க தோழி தலைமகளது கவின் கண்டு சொல்லியது.
--புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர் கிழான்
294. KURINCI
(The friend of the heroine on visiting the newly married
heroine's house speaks)
Our lover is the chief of a shining mountain
Whose range abounds in Eruvai plants
And bamboo clusters; it is also rich in Kāntal plants;
Their fertile buds have red outer petals;
They resemble the blood-stained tusks
Of an elephant which had slaughtered
A huge wrathful tiger of immense puissance.
Our lover's broad chest is
At once the source of pleasure and pain
Even like the sky where are born
Both fire and wind. It is no a figment of imagination
But a reality.
--Putukkayattu Vannakan Kampūr Kilar.
Latent Meaning:
The Kāntal flowers issue forth their sweet fragrance throughout the hill-range. This implies that the love of the hero gives joy to all the members of the family.
-----------------
295. நெய்தல்
முரிந்த சிலம்பின் நெறிந்த வள்ளியின்,
புறன் அழிந்து ஒலிவரும் தாழ் இருங் கூந்தல்
ஆயமும் அழுங்கின்று; யாயும் அஃது அறிந்தனள்,
அருங் கடி அயர்ந்தனள், காப்பே; எந்தை,
வேறு பல் நாட்டுக் கால் தர வந்த,
பல வினை நாவாய் தோன்றும் பெருந் துறை,
கலி மடைக் கள்ளின் சாடி அன்ன, எம்
இள நலம் இற்கடை ஒழியச்
சேறும்; வாழியோ! முதிர்கம் யாமே.
தோழி செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது; சிறைப்புறமும் ஆம்.
--ஔவையார்
295. NEYTAL
(The confidante importunes the hero to wed the heroine betimes
by way of addressing the heroine)
Our playmates are much anguished;
Their dense, dark and low-hanging hair
Now resembles the charred Valli vine
Of a fissured mountain.
Our mother is well aware of our secret affairs.
So she has mounted strict vigil.
Let us lose all our strength
And abide in our house and grow old here itself
Losing all our youth and beauty!
Our beauty is very like the jar
In which our father has stored,
With pride liquor, in the harbour,
Where are seen anchored
Huge vessels, wrought with great workmanship –
The vessels which reached here
From many a land
Aided by wind! May you prosper!
--Avvaiyar.
--------------
296. பாலை
என் ஆவதுகொல்? தோழி!-- மன்னர்
வினை வல் யானைப் புகர் முகத்து அணிந்த
பொன் செய் ஒடைப் புனை நலம் கடுப்ப,
புழற் காய்க் கொன்றைக் கோடு அணி கொடி இணர்
ஏ கல் மீமிசை மேதகு மலரும்,
பிரிந்தோர் இரங்கும் அரும் பெறல் காலையும்,
வினையே நினைந்த உள்ளமொடு துனை இச்
செல்ப என்ப, காதலர்;
ஒழிதும் என்ப நாம், வருந்து படர் உழந்தே.
தோழியால் பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகள் சொல்லியது.
--குதிரைத் தறியனார்
296. PĀLAI
(The heroine speaks on hearing of the plan of the hero to part from her)
This is the rainy season when at the peaks of the lofty mountain,
Clusters of flowers burgeon on
Konrai trees and sway like vines.
Their hollow pods hang low from every branch,
Resembling the golden caparison
On the speckled face of martial-tuskers
Of crowned monarchs.
This is the season that causes agony
To the separated lovers.
Our lover is so hard-hearted
That he will rush through the jungle,
His mind fixed firmly on his duty!
Let us stay here, ever tormented by grief!
Alas, what will betide us, my friend?
--Kutiraittariyanār.
Latent Meaning:
The Konrai blossoms of the rainy season resemble the ornamental caparison on the speckled face of war elephants.
This suggests that the heroine was happy in her home as the wedded wife of her lover. But, like the flowers which wither away at the close of the rainy season, she also will die, unable to bear the pangs of separation.
-------------
297. குறிஞ்சி
பொன் செய் வள்ளத்துப் பால் கிழக்கு இருப்ப,
நின் ஒளி எறியச் சேவடி ஒதுங்காய்;
பல் மாண் சேக்கைப் பகை கொள நினைஇ,
மகிழா நோக்கம் மகிழ்ந்தனை போன்றனை;
'எவன்கொல்?' என்று நினைக்கலும் நினைத்திலை;
நின்னுள் தோன்றும் குறிப்பு நனி பெரிதே;
சிதர் நனை முணைஇய சிதர் கால் வாரணம்
முதிர் கறி யாப்பின் துஞ்சும் நாடன்
மெல்ல வந்து, நல் அகம் பெற்றமை
மையல் உறுகுவள், அன்னை ;
ஐயம் இன்றிக் கடுங் கவவினளே.
தோழி சிறைப்புறமாகத் தலைமகட்கு உரைப்பாளாய்,
தலைமகன் கேட்பச் சொல்லியது; தோழி தலைமகளை அறத்தொடுநிலை வலிப்பித்ததூஉம் ஆம்.
--மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்
297. KURIÑCI
(The friend of the heroine speaks to the heroine to be overheard
by the hero)
My friend!
The milk-filled golden cup lies
On the floor uncared for;
Your once lustrous body,
Now has changed a lot;
Neither do your roseate feet move about as of old;
You have no taste for bed,
So luxurious; even without taking liquor,
Your eyes seem misty;
Nor do you seem to feel for your present plight;
The thought in your heart is certainly serious!
Our mother has understood, for certain,
That our lover --the chief of a mountain,
Where a wild cock with slender legs
Sleeps amidst the entangled and ripened vines
Of pepper, satiated with eating
The ripe buds buzzed by a swarm of bees-,
Had come here and enjoyed union with you.
See how our mother calls you In so a harsh and unkind voice!
--Maturai Aļakkar Ñālalār Makanār Mallanār.
Latent Meaning:
The wild cock resents flowers and sleeps amidst pepper vines
This suggests that the hero has forsaken the heroine and stays in his village.
--------------------
298. பாலை
வம்ப மாக்கள் வரு திறம் நோக்கி,
செங் கணை தொடுத்த செயிர் நோக்கு ஆடவர்
மடி வாய்த் தண்ணுமைத் தழங்கு குரல் கேட்ட
எருவைச் சேவல் கிளைவயிற் பெயரும்
அருஞ் சுரக் கவலை, அஞ்சுவரு நனந்தலைப்
பெரும் பல் குன்றம் உள்ளியும், மற்று--இவள்
கரும்புடைப் பணைத் தோள் நோக்கியும், ஒரு திறம்
பற்றாய் வாழி, எம் நெஞ்சே!--நல் தார்ப்
பொற்றேர்ச் செழியன் கூடல் ஆங்கண்,
ஒருமை செப்பிய அருமை, வான் முகை
இரும் போது கமழும் கூந்தல்,
பெரு மலை தழீஇயும், நோக்கு இயையுமோமற்றே?
தோழியால் பொருள் வலிப்பித்துதலைமகளை எய்தி ஆற்றாதாய நெஞ்சினை நெருங்கிச் சொல்லி, தலைமகன் செலவு அழுங்கியது.
--விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்.
298. PĀLAI
(The hero gives up the idea of parting from his beloved)
Hail to you my heart!
On one side you consider the highly hilly region,
Extensive with fearsome and branched paths,
Where the brigands, with fierce looks,
Shoot their straight arrows
At the strangers, for whose arrival
They had been waiting;
They sound their drums, whose faces
Are covered with folded leather.
Scared by the roaring sound of these drums,
The male eagles wing away to join their brood,
On the other side,
You think of the swelled arms
Adorned with the drawing of a sugarcane
Of this lass! You are reluctant
To take a firm decision!
At Maturai, the city of the Pāntiyan
With chariots, bedecked with golden garlands,
My beloved's confidante, with her sweet words,
Gave her consent to me to go
In quest of riches!
These words of hers,
Brought me to these paths,
Coursing through huge mountains.
Could it be possible to me
To see my beloved, endowed
With tresses, fragrant with big flowers?
--Virtūrru Vaņakkan Tattanār.
Latent Meaning :
The male eagle dreads the sound of the drum and wings away.
This implies that the hero will decide to return home considering the grief of his beloved though he now parts from her for the purpose of earning riches.
--------------
299. நெய்தல்
உரு கெழு யானை உடை கோடு அன்ன,
ததர் பிணி அவிழ்ந்த தாழை வான் பூ,
தயங்கு இருங் கோடை தூக்கலின், நுண் தாது
வயங்கு இழை மகளிர் வண்டல் தாஅம்
காமர் சிறுகுடி புலம்பினும், அவர்காண்;
நாம் இலம் ஆகுதல் அறிதும் மன்னோ –
வில் எறி பஞ்சி போல, மல்கு திரை
வளி பொரு வயங்கு பிசிர் பொங்கும்
நளி கடற் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கே.
தோழி தலைமகன் சிறைப்புறமாகச் சொல்லியது.
--வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்.
299. NEYTAL
(The friend of the heroine speaks to the heroine to be
overheard by the hero)
In our hamlet, attractive and situate on the seashore,
The big Talai bushes are aglow
With their burgeoned flowers;
These flowers very much resemble the broken tusks
Of fearful elephants.
The fine pollen of these flowers fall,
Assailed by the west wind,
On the toy-houses,
Built by the bright-jewelled girls;
Let this hamlet be angry with me!
(I do not bother!)
The chief of a littoral land is my man
In whose domain, the flooding waves,
Battered by the rushing wind
Threw off their glittering spray,
Resembling the particles of cotton
That fly in the air
When beaten by the bow-string.*
We do not feel that we live
When we do not enjoy the joyful company
Of that chief!
--Vatama Vannakkan Peri Cāttanār.
*The ancient Tamils used a bow to separate the cotton seeds.
----------------
300. மருதம்
சுடர்த் தொடிக் கோமகள் சினந்தென, அதன் எதிர்
மடத் தகை ஆயம்கைதொழுதா அங்கு
உறு கால் ஒற்ற ஒல்கி, ஆம்பல்
தாமரைக்கு இறைஞ்சும் தண் துறை ஊரன் –
சிறு வளை விலை எனப் பெருந் தேர் பண்ணி, எம்
முன் கடை நிறீஇச் சென்றிசினோனே!
நீயும், தேரொடு வந்து பேர்தல் செல்லாது,
நெய் வார்ந்தன்ன துய் அடங்கு நரம்பின்
இரும் பாண் ஒக்கல் தலைவன் ! பெரும் புண்
ஏஎர் தழும்பன் ஊணூர் ஆங்கண்,
பிச்சை சூழ் பெருங் களிறு போல, எம்
அட்டில் ஓலை தொட்டனை நின்மே.
வாயில் மறுத்தது; வரைவு கடாயதூஉம் ஆம், மாற்றோர்
நொதுமலாளர் வரைவின் மேலிட்டு.
--பரணர்
300. MARUTAM
(The Viralai (woman dancer) addresses the pāņan who went to a
concubine as the messenger of the hero)
He is the lord of a land full of cool fords;
In his realm, the Ampal flowers
Bow before the lotus blooms,
Assailed by the strong wind.
They remind the young maids,
That in supplication bow their heads
Before the angry princess decked with bright bangles.
The chief parked in our frontyard,
His tall chariot, lofty and richly jewelled,
As bride-price for this girl,
With tiny bracelets, and went away.
You who accompanied his chariot
Stay back here, without following him,
And stand touching the roof
Of our kitchen, just like the elephant
That goes round begging in the streets
Of Uņūr in the realm of Ērtalumpan*
Who was grievously wounded in a battle-field
And who was the generous patron
Of bards with their yals, fitted
With strings resembling flowing oil!
--Paranar.
*Ertalumpan: The chief who has glorious scars of wounds received in the battle-fields. His proper name is unknown.
This file was last edited on 23 Jan. 2023
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)