சேலம் சுந்தர முதலியாரவர்கள் இயற்றிய 
பதிகத்திரட்டு
patikat tiraTTu
by cElam cuntara mutaliyAr
In Tamil script, unicode/utf-8 format
 
 
 Acknowledgements: 
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
We thank Dr. Meenakshi Balaganesh, Bangalore, India for her assistance in the preparation 
of this work. 
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
 © Project Madurai, 1998-2023.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
 
 
 பதிகத்திரட்டு 
சேலம் சுந்தர முதலியாரவர்கள் இயற்றியது
 Source:  
					
பதிகத்திரட்டு 
இஃது சேலம் ஜில்லா ஹஜூர்  மேஜிஸ்திரேட் குமாஸ்தாவாகிய 
ம-கா- சேலம் -சுந்தர முதலியாரவர்கள் இயற்றியது. 
புரசை-அஷ்டாவதானம் ம- கா சபாபதி முதலியாரவர்களாற் 
பார்வையிடப்பட்டு 
சென்னப்பட்டணம் லோஜிசியன் பிரசில் அச்சிற் பதிப்பிக்கப்பட்டது. 
குரோதன ஐப்பசிமீ 
------------
பதிகத்திரட்டு 
வேலுமயிலுந்துணை. 
சாற்றுகவிகள். 
					      ~~~~~~
	புரசை-அஷ்டாவதானம் சபாபதிமுதலியாரவர்க ளியற்றிய 
				எண்சீர்க்கழிநெடில் விருத்தம். 
		திருப்போரூர் தணிகை சிவமலைபரங் குன்றோங்குந் 
          தென்பழனி செந்தில் சென்னிமலை வட்டமலைமாத்
		தருப்பாண்செய் விராலிமலை பணிகிரிச் செங்கோடு 
          தம்பேராற் பதிகமயி லடைக்கலச் சொற்பதிகம் 
		பொருப்பார் சேலத்துறை குமாரசா மிப்பேர்ப்
          புரவலனாந் தந்தந்தை காந்தமிசைத் தமிழால்
		விருப்பாக வுரைத்தன னென்றவன்றரு சுந்தரமால்
          வேலோன்சீர்ப் புகழை யியற்றமிழில் விளம்பினனே
					~~~~~~~~~~~~~
			சென்னை இராஜதானி வித்தியாசாலைத் தமிழ்ப்புலவர் 
	புரசைப்பாக்கம்- பொன்னம்பல முதலியாரவர்க ளியற்றியது 
				கட்டளைக்கலித்துறை. 
		கன்றைப் புரக்கும் பசுப்போல மன்னுயிர் காத்தளிக்குங் 
		குன்றைத் தலமா வுறைகும ரேசனுக் குப்பதிகங் 
		குன்றைப் பதியிற் புரிசைகி ழார்தங் குடியுதித்தி 
		டென்றைப் பொருவுறு சுந்தரன் செய்திங்க ணீந்தனனே
				~~~~~~~~~~~~~~~~~~~~~~~
 		இந்நூலியற்றியவரதுமாணாக்கராகிய செவ்வாய்ப்பேட்டை 
		உபாத்தியாயர் - கந்தசாமிபிள்ளையவர்க ளியற்றிய 
				கட்டளைக்கலித்துறை. 
		விற்பலதேவர் வணங்கக்கிரிதொறு மேவியென்றும் 
		நற்பலனீயு முருகோன்மிசைநன் னயம்பெறவே
		பற்பலசித்திர மாகப்பதிகம் பகர்ந்தன்றண்
		உற்பலமாலை யணிபுயசுந்தர வுத்தமனே 
			~~~~~~~~~~~~~~~~~~~~~~~
செவ்வாய்ப்பேட்டை நா. நீலகண்டசெட்டியார் குமாரரும் மேற்படி வக்கீல் 
அப்பாசாமி பிள்ளையவர்கள் மாணாக்கரும் இந்நூலியற்றியவரது நேசரும் 
இராமாயணபாரதப்ரசங்கியுமாகிய  இராமலிங்கசெட்டியாரவர்க ளியற்றிய 
				ஆசிரியவிருத்தம். 
	கொந்தலர்பொழில்சூழ் போரூர்தணிகை குளஞ்செறி சிவமலைநீள் 
          கொடிகொள்பரங்கிரி பணிகிரியென்றுங் கூறுறுசெங்கோடொண்  
	சந்தமணங்கமழ் பழனிதிருச்செந் தூர்தகு சென்னிமலை 
          தகைபெறு வட்டமலைத் தலமெனுமித் தானங்களில்வளருங் 
	கந்தன்மிசைப்பல பதிகமியற்றிக் கனிவொடு தந்தனனக் 
          கதிர்வேலற்பணி முதிர்ஞானத் தவர்கழன் மலர்பணியன்பன்  
	நந்தடர்பணைமிடை சேலப்பதியி னயம்பெற வாழ்சுகுணன் 
          நனியுயர் மந்தரநிகர் புயசுந்தர நற்கவிநாவலனே 
		~~~~~~~~~~~~~~~~~~~~~~~
		செவ்வாய்ப்பேட்டை வையாபுரிசெட்டியாரவர்கள் குமாரர் 
			குழந்தைசெட்டியாரவர்க ளியற்றிய 
					நேரிசைவெண்பா. 
		போரூர்முத லாப்புகல் செங்கோ டீறாக 
   		சேர்குமரன் மேற்பதிகஞ் செப்பினனால் - தார்பொலியுஞ் 
		சோலைசெறி சேலமதிற்றூய் மையுடனோங் குகவிச் 
		சீலனெனுஞ் சுந்தரவேள் தேர்ந்து. 
					******
					உ - ஷண்முகன்றுணை. - ஹர 
 1.     திருப்போரூர்ப்பதிகம்.  
					காப்பு. 
				நேரிசைவெண்பா. 
		சீரூர்தென் போரூர்வாழ் செய்யதிருச் சண்முகன்மேல் 
		ஏரூர்பதிக மியம் பவே- தாரூரும் 
		நிம்பநிழற் கட்பெரியோர் நின்றுதுதிக்கப் பொலிநீள் 
		கம்பமதக் கைக்களிறே காப்பு.
 
			அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம். 
	தங்குரமி லங்குமறை யுங்குயில ருங்குழகு தழைநின் றாளைக் 
	கங்குல்பக லுங்குவியு ளங்குளிர விங்குதுதி கனிவெற் கீவாய்
	கொங்கும துபங்குயி லினங்குண மியங்குமி சைகூறத் தோகை	
	பொங்குபு நுடங்குவ னமெங்கு மையொ துங்குதிருப் போரூரானே  		(1) 
	சேட்டுவிழிக் கோட்டுமுலை பேட்டுநடை காட்டுமிகை செறிந்த மின்னார் 
	வாட்டுமதி கேட்டுழல லோட்டுதிற லூட்டுபுநல் வரந்தந் தாள்வாய்
	தோட்டுநறை கூட்டுமளி பாட்டுமுரல் வேட்டுமதத் தோன்றல் வில்லிற் 
	பூட்டுகழை நாட்டுவரி நீட்டுவள மீட்டுதிருப் போரூ ரானே 			(2) 
	வஞ்சமிகு நெஞ்சர்தமை யெஞ்சலொடு கெஞ்சவெனை வகுக்கா துன்றன் 
	செஞ்சரண கஞ்சமதி றைஞ்சநய மிஞ்சவரு டேக்கிக் காப்பாய் 	
	தஞ்சமுறு பிஞ்சநிறை யஞ்சநிக ரஞ்சரசு தனிலா டிப்பூப் 
	புஞ்சமெனு மஞ்சமிசை கொஞ்சவமை யுஞ்சவிகொள் போரூ ரானே 		(3)
	ஊண்டவறின் மீண்டதலும் வீண்டசைகொள் பாண்டமெனு முடன்மெய் யென்னத் 
	தூண்டல்புரி காண்டமரு ளீண்டறவென் மாண்டன்மதி துலக்கி யாள்வாய் 
	
ஏண்டகுவர் சேண்டதைமெய் கீண்டமர ராண்டகையி னிடர்தீர்த் தோயெற் 
	பூண்டகதிர் தாண்டநனி வேண்டவர ணீண்டதிருப் போரூ ரானே  		(4) 
	பல்லகடு செல்லவிடு தொல்லவினை யல்லலறப் பணித்தெற் காற்றல் 
	ஒல்லமருள் வெல்லவழி சொல்லவிது நல்லததி யுயர்ந்தோய் சங்கக் 
	கில்லநெடு வில்லநுதன் மெல்லடிகொள் சில்லர்மகள் கேள்வ முன்னா 
	புல்லமண மல்லலடர் தில்லமட வல்லதிருப் போரூ ரானே 			(5) 
	சூதமுலை மாதர்மய லோதமதி லேதமொடு துவளு நாயேன் 	
	கேதமற மேதகநன் மோதபிர சாதமருள் கெழுமி யோங்குஞ் 
	சீதசும பாதசதுர் வேதமெய் விநோதஜெய சீலா மல்கும் 
	போதமுறு நீதர்நவில் கீதமக லாததிருப் போரூ ரானே 				(6)
	துன்னலைக ளென்னவரு பன்னரிய புன்னடலை தோயுநா யேன்
	றன்னகமு மன்னமிகு நன்னயமு மின்னவரு டருவாய் கங்கை 
	சின்னவிது வன்னவகி பின்னலணி தொன்னகவிற் றிறலோன் பாலா
	பொன்னணவி முன்னணிசெய் வின்னகரை யன்னதிருப் போரூ ரானே 	(7)
	கோபமொழி தூபவிழி பாபநடை லோபர்கடை குறுகாச் சீருஞ் 
	சோபமற வேபணியு னீபப்பத ஞாபகமுந் துலங்க நேர்வாய் 
	மீபடர்ம காபலக லாபமதி லேபடிவர் மெச்சத் தோன்றும் 
	பூபகுண தீபவதி ரூபபிர தாபதிருப் போரூ ரானே 				(8) 
 
	குன்றுபுலன் வென்றுமருள் கொன்றுணர்வை யொன்றுதவர் குழாத்து ணாயேன் 
	சென்றுநெறி நின்றுனடி யின்றுதுதிந வின்றுகதி சேரச்செய் வாய் 
	தொன்றுமறை தன்றுறையை யன்றுமுனி வன்றுணியச் சொற்றோய் தீமைப் 
	புன்றுகள கன்றுவெகு நன்றுபுகழ் துன்றுதிருப் போரூ ரானே 			(9) 
	கார்த்தடைகள் சேர்த்ததென மூர்த்தமுறு தூர்த்தவடற் காலனென் பால் 
	வேர்த்தணுகு சூர்த்ததியி லேர்த்தழைவிள் சீர்த்தமயின் மிசைவந் தாள்வாய் 	
வார்த்தவர்கொள் பார்த்தனுறை தேர்த்தலைமை யார்த்தவரி மருகா சால்பு 
	பூர்த்தமுறு தீர்த்தர்புடை போர்த்தவெகு நீர்த்ததிருப் போரூ ரானே (10) 
				திருப்போரூர்ப்பதிகமுற்றும். 
						*************
 2. திருத்தணிகை நிரோஷ்டபதிகம். 
 
						காப்பு. 
					நேரிசை வெண்பா. 
		திங்களணி சென்னித்திருத் தணிகைச் சையத்திற் 
		றங்கியகந் தற்கலங்கல் சாற்றுதற்குச்- சங்கரனார் 
		ஈன்றகண நாதனிணை யடியைத்தெண் டனிட்டேன் 
		சான்றநயந் தந்தரு ளத்தான் 
				எண்சீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்.  
		
			நீரார்ந்த நதிதனைச் செஞ்சடி லஞ்சேர்த்த 
          	நித்தனிடச் சத்திகரத் தெடுத்து நித்தஞ் 
			சீரார்ந்த தனக்கல சந்தரு சேயேநின் 
          	றிருத்தா ளைக்கருத்தா றச்சிந்தை செய்தேற் 
			கேரார்ந்த நலனளித் துக்காத் தாணீங்கா 
          	திணங்கிய திக்கணங் கள்கிளத்தி றையேநீலத் 
			தாரார்ந்த நறுந்தடத்தி லெகினச் சாலந் 
          	தயங்கிநனி யியங்குதிருத் தணிகை யானே 	(1)
			அண்டர்க ளாலளந் தறியாநின் க்யாதத்தை 
          	அசத்தனே னிசைத்தலெங் ஙனையா நாளுந் 
			தெண்டனி ழையடியா ரைக்காக் குஞானச் 
          	சீரியனே யாரியனே செங்காந் தட்கைக் 
			கண்டனை யகரைச் சில்லக் கன்னிசேருங் 
          	காந்தநய சேந்தத கைக்கந் தாநீண்ட 
			தண்டலை யினளிகா னஞ்செயச் சிகண்டி 
          	தாண்டியியன் றீண்டுதிருத் தணிகை யானே 	(2)
			எண்ணரி தாய்க்கட லலையென்ற டருந்தீதார் 
          	இன்னலி டைநின்னடி யேனிளைக் காதின்னே 
			நண்ணரி யநலந்தரு தியத்தி னிக்கின் 
          	னாயகனே தாயகனே நாதனென் னக் 
			கண்ணக னண்டத்திரை யந்தரர்க ளேத்துங் 
          	காரணனே யாரணனே கழனி தன்னிற் 
			றண்ணரு கியருந்தி நித்திலத் தையீனுஞ் 
          	சங்குகளி லங்குதிருத் தணிகை யானே 		(3) 
			அன்னை தந்தையா ரியனகாரி நீயென் 
          	றடியேனின் னடிநீழ லடுத்தேன் கண்டாய்  
			நின்னை யன்றியீண் டெனக்கார்கதி நிகழ்த்தாய் 
          	நிச்சயனே யச்சயனே நிலைய யன்றன் 
			சென்னிதனி லடித்தரிய தளைக ளார்த்துச் 
          	சிறையிலிடு கறையயில் சேர்செங் கையானே 
			தன்னிக ரிலாதடர்ந் தாசினியைத் தீண்டுஞ் 
          	சருத்திதனைத் தரித்ததிருத் தணிகை யானே 	(4)
		
			சித்தசன் றன்கணையை யடர்கண் ணாராசைத்  
          	தீங்கதனி லேங்கசடச் சிறியே னின்சீர் 
			இத்தகைய தென்றறியே னிறைஞ்சே னெங்ஙன் 
          	இணையில் கதியணுகி டல்யானே ழையேனே
			அத்தனுக் கன்றாரணத் தினருத்தந் தன்னை
          	அளித்துநனி களித்திடச் செய்யன காகான 
			தத்தைநிக ரிசைநளினக் கிழத்தி யாக்கஞ்
          	சார்ந்தணிக ளார்ந்ததிருத் தணிகை யானே	(5)
			அகங்கரைய நினைநினைந் தார்க்கடல் சேர்காலன்
          	அல்லல ணங்கில்லை யெனலடி யேன்கண்ணே
			நிகந்தர நீகாட்டி லதுசத்தி யந்தான் 
          	நெடுங்கிரி யையடுந் திறலாய் நிகிலசால 
			திகந்தநடு நடுங்கிடத் தன்சிறை யடித்துத் 
          	திடந்தரு நன்னடஞ் செயெழிற்சி கியாயிந்த 
			சகந்தனிலிங் கிதற்கிணை யின்றென்றாய்ந் தோர்கள்
          	சாற்றுகிரு தாற்றுதிருத் தணிகை யானே		(6) 
			ஈன்றதாய் தன்னிடத்தி லென்னைக் காத்தி  
          	யென்றருஞ் சேய்நின்ற ரற்றாதாயி னுந்தான் 
			ஆன்றதயை யாற்காத் தல்கட னேயாகி 
          	யளித்த லெனக்களித் தெனைநீய ளித்தல்செய்தாள் 
			கான்றழை யேரரத்த நறுந்தா ராய்நாதக் 
          	கழலணி யுங்கழலி ணையாய் கார்த்திகேயா 
			சான்றகலை நன்கறிந் தநல்லோ ரீட்ட 
          	தழைத்தழ குசெழித்ததிருத் தணிகை யானே 	(7)
			கஞ்சநிகர் நின்கழல் சார்ந்தா நந்திக்கக் 
          	கருதியணி தருதியென்ற கடையேன் றன்னை
			எஞ்சலெனத் தள்ளற்க நிலைசே ராக்கத் 
          தேலடியர் சாலத்தி லெனையி ருத்தி 
			அஞ்சலெனக் கையடை தந்தாத ரித்தாள் 
          	ஆட்சியனே காட்சியனே யடைந்தார் கட்குத் 
			தஞ்செனத் தண்ணிழல ளித்துநறை தந்தார்நந் 
          	தனங்கள்செறி கனஞ்செய்திருத் தணிகை யானே (8) 
			தீதர்களின் களனகன்று நெறிதேர் ஞானத் 
          	தேசடியா ராசிடை யிற்சேர்ந் துநாயேன் 
			காதலியன் றலரலங்க லார்த்து நின்றன் 
          	கழலிணையைத் தொழுதிறைஞ்சக் கருணை செய்தாள் 
			ஆதிநடு கடையிஃ தென்றளக் கலாகா 
          	தறைசுரு தியுறையி றையேய ரியநீலத் 
			தாதனைய கண்ணியர் களாடச் சத்தந் 
          	தாங்கியங் களேங்குதிருத் தணிகை யானே 	(9)
 
			சிறியன கந்தனை யினியதளி யதாக்கிச் 
          	சிந்தைத னையந்த நிறையாச னஞ்செய் 
			தறிதரநீ யதிலிருந்தெஞ் ஞான்று நீங்கா 
          	தருக்கனெனத் திருக்கருணைக் கிரணந் தந்தாள் 
			நெறியடர் சீரியரிலகு நெஞ்ச கத்தை 
          	நிலையாக் கொள்கலையா நன்னீதி யானே 
			தறையினி டைநிகரின் றித்தனக் குத்தானே 
          தானெனநீ யானதிருத் தணிகை யானே. 		(10)
				திருத்தணிகைப்பதிகமுற்றும். 
 					~~~~~~~~~~~~~
  3. சிவமலைப்பதிகம். 
 
					காப்பு. 
					விருத்தம். 
 
		திருமகள ணிசேர்செய்ய சிவமலைக் காங்கே யன்றன்
		மருவணி கமலத்தா ளில்வளர் பதிகத்தார் சூட்டப் 
		பொருவறு விகடகும்பப் புகர்முகக் கரடத் திண்கைக் 
		கருணை செய்சிறு கட்டுங்கக் கரிமுகற்ப ணிதல்செய்வாம்
			மடக்கு - அறுசீர்க்கழிநெடில்விருத்தம். 
கனத்தானைக் கதமயில்வா கனத்தானைக் கருதினரைக் காக்குஞ் சீர்சான் 
மனத்தானை மலர்க்க ணைக்கா மனத்தானை மதுபமுரன்ம ருவம்போஜா 
சனத்தானைத் தகைந்திடுசா சனத்தானைத் தகைச்சிவ பூதரத் தில்வாழ்சோ 
பனத்தானைப் பலகலைவிற் பனத்தானைப் பணிந்து வருபவங் கடீர்ப்பாம் 	(1)
பலத்தானைப் பகர்பொன்னம் பலத்தானைப் பதிகமவை பாடிக் காட்டும் 
புலத்தானைப் புகறருவி புலத்தானைப் பொருசூரைப் பொடித்தந் நாள்சேர் 
வலத்தானை வழங்கிடுகே வலத்தானை வருமென்வினை மறன்மேற் கொள்ளுஞ் 
சலத்தானைச் சரதசிவா சலத்தானைத் தாழ்ந்தடர் யாதனையை வெல்வாம் 	(2) 
வரத்தானை மருவினர்தா வரத்தானை வாகையொடு வயங்கும் வைவேற் 
கரத்தானைக் கதிர்விடுசே கரத்தானைக் கடவுளர்மாக்கணங்கள்போற்றுந் 
திரத்தானைத் திருவருணேத் திரத்தானைச் சிவமலை யிற்றிக ழுநீப 
சரத்தானைச் சாற்றவகோ சரத்தானைச் சந்தத மஞ்சலி செய்வேனே		(3)
சுகத்தானைத் துசமெனுமா சுகத்தானைத் தோடகம்போற் றுலங்கு நற்சண் 
முகத்தானை முனிபணிச முகத்தானை மூவுலகு முயங்கி டும்வ்யா 
பகத்தானைப் பனிமலர்க்கற் பகத்தானைப் பண்புறு பொற்பதி வைக்கும்வா 
சகத்தானைச் சராசரநீள் சகத்தானைத் தகவொடு வந்தனஞ் செய்வாமால்  	(4)
சயத்தானைத் தகுநிரதி சயத்தானைத் தடவரை போற்றதை யீராறு 
புயத்தானைப் புனிதபதாம் புயத்தானைப் புகலரிய பொருளென் றேத்தும் 
வியத்தானை மிளிர்பலகா வியத்தானை விண்மணி நேர்விளங் குந்தேக 
மயத்தானை வளர்சிவசி மயத்தானை மனந்தனி யான்வணங் குவேனே  	(5) 
கதித்தானைக் கனிந்துதரு கதியானைக் கடையே னைக்காத் தல்செய்ய 
மதித்தானை வதனகலா மதியானை வளம்பெறு நான்மறை யுந்தேடித் 
துதித்தானைத் தூர்த்தர்மனத் துதியானைத் துணையடியைத் தொழவென் னுள்ளிற்
 பதித்தானைப் பணிசிவகோப் பதியானைப் பரவிநனி பழிச்சு வாமால் 	(6) 
படித்தானைப் பரரிடத்திற் படியானைப் பகர்சேவற் பதாகை தன்னைப் 
பிடித்தானைப் பிடியிடையொண் பிடியானைப் பெருகவுணப் பெருவெள் ளத்தை 
முடித்தானை முடங்குமதி முடியானை முகன்றுணையை முன்னாண் மீன்பால் 
குடித்தானைக் குளிர்சிவகோக் குடியானைக் குறுகுபு மீக்கூறு வாமால்  	(7)
படைத்தானைப் பாரிடமாப் படையானைப் படிறுறு திண்பாத வத்தைப் 
புடைத்தானைப் புலவர்நிறை புடையானைப் பூதமது பொலிபொ ருப்பை 
யுடைத்தானை யுணர்வுநனி யுடையானை யுயர்ந்த சிவவோங் கன்மீது 
கிடைத்தானைக் கேளினருட் கிடையானைக் கேதமறக் கிளத்து வாமால் 	(8) 
கந்தனை மெய்க்கனிவுடனாக் கந்தனையி கைத்திடு நற்கரு ணையென்னுஞ் 
சிந்தனை நித்தியமடரென் சிந்தனையைத் தீர்த்தரு ளுந்திறல் சேருஞ்சம் 
பந்தனை முற்பவவினையாம் பந்தனையைப் படுத்துவ ரம்பாலிக் குஞ்சீர்ச் 
சந்தனை மற்சமனெனுமச் சந்தனையே தவிர்த்த சிவாசலனைத் தாழ்வாம் 	(9) 
சீரியனைச் சீரியனைச் சேவலனைச் சேவலனைச் சிவவெற் போங்கும் 
ஆரியனை யாரியனை யம்பரனை யம்பரனை யாற்று மூன்று 
காரியனைக் காரியனைக் காத்தவனைக் காத்தவனைக் கற்பிக் கும்மெய்ச் 
சூரியனைச் சூரியனைச் சுந்தரனைச் சுந்தரனைச் சொலினாற் சொல்வாம் 	(10)
				சிவமலைப்பதிகமுற்றும். 
				^^^^^^^^^^^^^^^^^^^^^^^
 4. திருப்பரங்கிரிப்பதிகம். 3> 
காப்பு. 
நேரிசைவெண்பா. 
பூமலியுஞ் சோலை புடைசூழ்ப ரங்கிரிவாழ் 
தேமலிபைந் தார்க்குமர தேசிகன்மேற்- பாமலிதென் 
சொற்பதி கஞ்சொல்லத் துணைசெயுமன் பர்க்கின்பங் 
கற்பகம்போ லீயுங் களிறு.  
			கட்டளைக்கலிப்பா. 
வேதனந்தந்த மேவுமைராவதன் 
               விமலைபாதியன் மென்மலர்ப்பொன்னுயிர்
நாதனந்தந்தவிண்ணவ ரீட்டங்கன் 
                 நாடிவாழ்த்தெடுத் தன்புடனே நறும்
போதனந்தந்தகையொடு தூஉய்நிதம் 
                    போற்றுநின்புகழ் பாடவெனக்குயர் 
சேதனந்தந்தளித்தல்செய் சோலைசூழ் 
                  திருப்பரங்கிரி வாழ்குமரேசனே  		(1)
மாகரஞ்சிதயந்திடங் கொண்டுலாய் 
                  வாழ்த்தமற்பெறு சூர்தனைவாட்டியே 
பாகரஞ்சிதமார்ச்சி மங்கலம் 
                  பரவுநாணைப் புரந்தவைவேலவா
யோகரஞ்சிதபத்தி யோடேத்துமெய் 
                   யோகனே தமியேற் கருள்கூருவாய்
சீகரஞ்சிதறுந் தரளத்தடத்
                     திருப்பரங்கிரி வாழ்குமரேசனே			(2)
கோலமுண்டகநேரு நின்றாண்மலர்க் 
        குளிருநீழலடைந்தின்ப மோங்கநற் 
காலமுண்டகமே வருந்தேலெனக் 
        கழறினும்பயங்கொள்கின்றதென்னெஞ்சே
நீலமுண்டக வந்தங்களாடமுன்  
        நெட்டிலைச்சுடர்வே றொடுசேவகா.
சேலமுண்டகனத்தை யெழுந்தடர்
        திருப்பரங்கிரி வாழ்குமரேசனே 			(3)
	பூங்கரும்புகவின்றனு வாக்கொளும் 
        	போர்மதன்கணையுங் கதிர்வாளுநீள் 
	ஞாங்கரும்புகலாத வஞ்சந்தரு
        	நயனமாதர்கண்மாலை வெறுத்தென்றும் 
	நீங்கரும்புகழிற்பொலி நின்னையான் 
        	நினைத்துப்போற்றவரந்தரல் வேண்டுமால் 
	தேங்கரும்புகளெங்கு மலர்பொழிற்
        	றிருப்பரங்கிரி வாழ்குமரேசனே 			(4)
	மாயவஞ்சகமானிடர் கேண்மையை
        மறந்துமங்கையர் பற்றைமுனிந்தனோர்
		பேயவஞ்சகவாழ்க்கை யென்றுன்னியிப் 
        பேதையேனுனைச் சேருவதென்றுகொல்
	பாயவஞ்சகமார் பொறிநீத்தவர்  
        	பரவுயோக புராதனகாரணா 
	சேயவஞ்சகடைக்குழு வேங்கிடுந் 
        திருப்பரங்கிரிவாழ் குமரேசனே 			 (5)
	அத்தனங்கடதும்ப நடிக்குமா 
        	ரணங்கனார் மயலாற்பொருடேடவே 
	அத்தனங்கடகப்புரத் தாரைநேர் 
        அசடரைப்புகழா வரமெற்கருள் 
	சித்தனங்கடவுட் குகனென்றணித் 
        தேவர்சொல்பவனே பெடைதன்னைநே 
		சித்தனங்கடழைத்திடு தண்பணைத் 
        திருப்பரங்கிரிவாழ் குமரேசனே 			(6)
		போதகந்தரமாவை யடக்கல்போற் 
        	போதனைச்சிறையுய்த் தரனாருக்கப்
		போதகந்தரளஞ் சொரிதாமரை
        	போலலர்ந்திட மெய்பொருள்சொற்றவா
		சீதகந்தரமே விலம்பாட்டினைச் 
        	செறுத்தல்போற்பவத்துன் பொழித்தென்னையாள் 
		 சீதகந்தரமார்பொழில் சூழ்தருந் 
        	திருப்பரங்கிரிவாழ் குமரேசனே			(7)
		வரத்தரங்கலையார் மதிசெங்கதிர் 
        	வானகம்புவியாவு முன்னாடுயல்  
		வரத்தரங்கலை யேழுங்கலங்குற 
        	மகிழ்வுடன்விளை யாடியசீலமா 
		திரத்தரங்கலையா மனமாதவர் 
        	சேவிக்கும்பரனே யருள்கூர்மறைத் 
		திரத்தரங்கலைவாணர் வழுத்திடுந் 
        	திருப்பரங்கிரிவாழ் குமரேசனே 			(8)
		ஐயவம்பரசா மதன்றன்னையான் 
        	அடமெய்ப்போதமெனும் படைதந்தருள் 
		ஐயவம்பரதேவியின் பாலுணும் 
        	அறுகுணப்புதல் வாவடல்சேர்புலிச் 
		செய்யவம்பரனன் பொடெடுத்துலாந் 
        	தேவதேவவரிக் கடையுண்டிசை
		செய்யவம்பர விந்தமளித்திடுந்
        	திருப்பரங்கிரிவாழ் குமரேசனே			(9)
		தித்தணங்குதி மித்தியென்றோடஞ் 
        	செய்யுமொய்ம் புறுமாமயிறன்னைம 
		தித்தணங்குதிரையென வேறுமற்
        	சேவகாமுனி சொற்படியம்பில்வா
		தித்தணங்குதிரப்புனல் சோர்ந்துகச் 
        	செகுத்தமான்மருகாபன் மணிகளேந் 
		தித்தணங்குதிசாரல் கொள்சுந்தரத்
        	திருப்பரங்கிரிவாழ் குமரேசனே  			(10)
				திருப்பரங்கிரிப்பதிக முற்றும்.
					~~~~~~~~~	
  5. பணிகிரிப்பதிகம். 
					காப்பு. 
				நேரிசைவெண்பா. 
		பூங்கழனி சூழும்புகழ்ப் பணிகிரிப் பதியின் 
		பாங்கரு றையுங்குக னைப்பாடவே- ஓங்கு 
		ஒருவட்டத் துள்ளே யுயர்நட னஞ்செய்யு 
		திருவட்டத் தந்திதருஞ் சீர். 
			எழுசீர்க்கழி நெடிலாசிரியவிருத்தம்
		உலகமுழு வதுமுதவி யுறுதிதிசெய் திறுதிதனி
        	லொழியவகி லமுமழிய வே 
		அலகில்தொழி லவைபுரியு மவருமின தெனவறிவ 
        	தருமையெனி லுனதரியசீ ர் 
		வலமைதனை யறைவலெனு மதியிலியை யுணர்வுமலி 
        	வலவர்மிக நகுவரல வோ 
		பலமகிமை யொடுவளமை படிகனக வரையைநிகர் 
        	பணிகிரியில் வளர்முருக னே 				(1) 
		அறையுமரு மறைமுடியி லலருமுன திணையடியை 
        	யவசமுற மனதி லெணியே 
		நிறைகனிவொ டகமுருகி நெகிழமொழி குழறநனி 
        	நிதமினிது பணியவருள் வாய் 
		பொறையணவு தவவிரத புனிதருள மிசைநிலவு 
        	பொழியுநவி லரியசுட ரே 
		பறையினொலி யிசையினொலி பரவையொலி யுடனிகல்செய் 
        	பணிகிரியில் வளர்முருக னே 				(2)
		குவளைவிழி குயிலின்மொழி கொடியினிடை பிடியினடை
        	கொளுமகளிர் மயன்முழுகி யே 
		தவநெறியை யொருவியயர் தமியன்வினை கெடநினது 
        	தயைபுரிய நினைகுதி கொலோ  
		கவளமத கடவிகட கரடதடக் கரிவதன 
        	கணபதியுண் மகிழ்துணைவ னே
		பவளவடி யெகினநளி படருமலர கணிபொலி 
        	பணிகிரியில் வளர்முருக னே 				(3)
		இடமுடை யபடிநடலை யினின்மறுகி வறிதுழலு
        	மெனதிதய விதனமற நீ 
		திடனருளி யுணர்வினொடு திகழ்பரம சுகமுதவு 
        	திசைவரைகொள் கரிகளுக நீள் 
		அடலுலகு கிடுகிடென வதிரவரை நொடியில்வல 
        	மதுவருமெய் யனகமயி லோய் 
		படலமுகில் கிழியவிரு படநிமிரு மதிவிஜய 
        	பணிகிரியில் வளர்முருக னே 				(4) 
		வசைகொள்பொரு ணசையுமட வனிதையர்த மயலும்வியன்
        	மகிவிழைவு மடர்சுமட னேன் 
		இசைநளின மனையநின திணையடியை யடையவர 
        	மினிதுதவி யருள்புரிதி யோ 
		தசைநுகரு நிசிசரர்க டதையுடலை வதைசெயொளி 
        	தவழ்நெடிய முனைகொளயி லோய்
		பசைநறவ முணுமளிகள் பகர்துடவை புடையின்மிடை 
        	பணிகிரியில் வளர்முருக னே 				(5) 
		சதிபடிறு பெறுபதகர் தமைவிலகி யறிவுநிறை 
        	தருவிபுதர் களனணுகி யே
		நிதியனைய தமிழ்கொடுனை நிதமுமகிழ் வொடுபரசு 
        	நிலைமைதனை யருள்புரிகு வாய் 
		நதியறுகு கிரணவிது நறையிதழி யணிபரமர் 
        	நயனமிகு களிகொண்மத லாய் 
		பதுமமுக வனிதையர்கள் பரதவழி நடனமிடு 
        	பணிகிரியில் வளர்முருக னே 				(6)
		உடலுமலை பொறிபுலனு முலகமது மெனதெனுமிவ் 
        	வுணர்விலியை மருள்பெறும கா  
		கொடியபவ வினைகளுறு குணமிலியை யபயமொடு 
        	குறைவிலருள் புரியநினை வாய்
		வடிமதுர மொழிவிமலை வனமுலையி னொழுகமுது 
        	வழியநுகர் தருகுழக னே
		படுதவள மணிகள்சொரி பணிலமிளிர் பணைகள்செறி 
        	பணிகிரியில் வளர்முருக னே 				(7)
		அருள்கிளரு முனதுபழ வடியர்தமை யமதரும 
        	னடர்வதிலை யெனுமொழிய தே 
		பெருகவென திடையுறுதி பெறநிறுவி லஃததிக 
        	ப்ரபலமுறு சரதமொழி யே 
		குரவுகமழ் புயசயில குமரகுரு பரவமல 
        	குகசுகுண வருள்தியென வே
		பரவிமலர் கொடுசுரர்கள் பணிவினொடு புகழ்சமுக
        	பணிகிரியில் வளர்முருக னே 				(8) 
		உருவிலியை நிகரெழிலு முனகருணை பொழிவிழியு 
        	முயர்பனிரு புயவரையு மா 
		அருள்பெருகு குறுநகையு மணிகொள்பரி புரவடியு 
        	மடியனிரு விழிகளெதி ரே 
		தெரிதரநல் விபவமொடு தெரிசனம தருள்செய்கன 
        	ஜெயவரதன் மகிழ்மருக னே 
		பருமணிகள் சிதறநளிர் படியருவி யொழுகமிர்த 
        	பணிகிரியில் வளர்முருக னே 				(9) 
		அனுதினமு நினதுபுக ழறைகுபுத ணருளெனுமெய் 
        	யலையுததி யிடைகுடைவ தே
		எனதுதொழி லெனவுதவி யினியபர சுகமெனுமவ் 
        	விணையில்கரை யடையவருள் வாய்
		வனமகளு மகபதியின் மகளுமிரு புடைமருவி 
        	வருமுகம னதுபுகல வே 
		பனிமதுவ முகுகமுகு பழனவரு கினினிழல்செய் 
        	பணிகிரியில் வளர்முருக னே 			(10)
				***	***	***
				பணிகிரிப்பதிகமுற்றும். 
		[திருச்செங்கோட்டுக்குப் பணிகிரியென்றும்பெயர்] 
					~~~~~~~~~~~~~~~~~~
  6. திருப்பழனி வண்ணக்கொச்சகப் பதிகம்.  
					  காப்பு. 
					கொச்சகம். 
 	செய்யபுகழ்த் தென்பழனிச் சேந்தன்மிசை யன்புட னே
	துய்யகொச்ச கப்பதிகஞ் சொல்லுதற்கு வாரிசம்போ ற்
	கையைந்து நால்வாயுங் கண்மூன்றுந் தாளிரண்டு ம்
	மெய்யொன்றும் பெற்றதனி மெய்யனை யாம்போற்றுது மே 
			 	வண்ணக்கொச்சகக்கலிப்பா. 
			    இராகம் - ஆநந்தபைரவி-ஆதிதாளம். 
	கொங்கார மேதரித்த லங்காரமா முடித் ...த 
        		குழன்மாதர்கள்கொங்கையில்வங்கண முடனாடிமுயங்கிவயங்க லை 
	தங்கார வாரமொய்த்த பொங்காழி போலடுத்த சம்பவமுற்றுழல்வேனோ   
	மங்காதமேருவெற்பு டன் சேடனார்பனிப்	... ப 
        		வளமேவு கயங்கண்மயங்கிட மதர்மீறிநடங்கடொடங்கி …டு 
	சிங்காரமாமயிற்று ரங்காமகாசெழித்த தென்பழனிக்கிரியோ  னே 	(1)
		விற்புருவத்தை வளைத்து விழிக்கணை யதையே       வி
        	வெப்பமளித்து நடுக்க முறச்சம ரிடுமாத 	      ர்
		அற்பசுகத்தை மனத்தினி னைத்தனு தினம்வா            டி
        	அற்றமதுற்ற வெனக்கு னிணைக்கழ லருள்வா      யே
		கற்பகமுற் றுயர்பொற் பதியைத்திற லிடியா 	      ன 
        	கத்திகை பெற்றவனுக் கருளற்புத கனதீ 	      ரா 
		விற்பன மொய்த்த துலத்தமிழ்கற்றவர் கவிபா 	      டி
        	மெய்ப்புகழ் சொற்றிடு நற்பழனிக்கிரி முருகோ       னே (2)
		மீனக்கொடி வேணடுக்கங் கொளவெதிரா 	      ய்
        	வேகத்துடனே மருட்டும் பிணைவிழியா 	      ர்
		ஈனக்கொடு மாயையிற்சந் ததமுழல் 		      நா
        	யேனுக்குயர்சீரளித்தொண் கதிதருவா 	      ய்
		ஞானக்குரு வாகியத்தன் செவிதனி 		      லே
        	நாதப்பொரு ளேவிரிக்குந் தனிமுத			...லே
		தேனுற்றணி மேவுபொற்பங் கயவயல்சூ 		      ழ்
        	சீலப்பழனா புரிச்சம் ப்ரமமணி 		      யே (3)
		கமலத்தெழில் வதனமே மினுக்கிநே 		      ர்
        	கபடப்பெரு மையுடனே குலுக்குவோ 	      ர்
		தமமொத்துநிறை நசைமால் வலைக்கு 		      ளே
        	தளர்வுற்றடி யனயராத ளித்தியா 		      ல்
		குமரிக்கினிய மகவான நித்த 			      னே
        	குலிசப்படை யன்மருகா வெனத்தொழா	      அ
		அமலத்தவர் கள்பணி வாகிமெச்ச 			      மா
        	வணிபெற் றியல்பழனி மேவுகத்த 		      னே (4)
		கோவைப்பழம் பொருவுமிதழை யருத்தி 		      யே
        			கோலக்குயங் களுறவிறுக வணைத்த 	      வா
		மேவக்கலந்த ணைவனிதையர் மயக்கமா 		      ல் 
        	வேலைக்குளுந் தெனிருளகல வமைத்தியா       ல்
		தேவர்க்குகந்த விறைமகளும் வனத்துளா 		      ர்
        	சீருற்றபைந் தொடியுமருகி லிருக்க.... 	      வே
		காவித்தடங்கள் செறிபழனிம லைக்கண்வா 	      ழ்
        	கானக்கதம்பமல ரணிபுயநித்த 			...னே (5)
		கண்டார்மொ ழிச்சியர்க ளெழிலதை …		      யே
        	கண்டாதரத்தி னொடுதமிழ் நனிசே... 	      ர்
		பண்டானுரைப் பதனையொரு வுபுயா ... 		      ன்
        	பண்டாமுனைப் புகழுமதி யருள்வா ... 	      ய்
		தண்டாமரைக்கி ணைசெய்கர மிசைநீ ... 		      ள்
        	தண்டாயுதப் படைகொ ளதிசய ... 			...னே
		வண்டார்துளித் தமதுநுகர் தருதே ... 		      ன்
        	வண்டார்பொ ழிற்பழனி வளர்குக ... 		...னே (6)
	மேருப்பொருப்பை யொத்துவாரைத் தரித்துமிக் 		      க
        விரதப்புனிதத்தவசித் தரும்விரகத்தினி லுட்கமயக்கி       டு	
	பாரத்தனத்தர்வெப்பவாரிக் குளிச்சைவைத்த-  
                 பாவி தனையாள்வாயோ 	
	
	சூரைத்துளைத் தரக்கர்வேரைப் பறித்தடர்த் 		      த
        சுடர்நெட்டயிலைக்கரம்வைத்தொளிர் சுரர்பத்தியொடுற்றுவழுத்திடு 
	சீரைப்படைத்துமெத்தவாரத்தையுற்றுவெற் 		      றி
        சேர்பழனிவாழ்வோ 					      னே (7)
மாரனுடம்பைநிக ரிடைமானா 	      	      ர்
	        மாலழல்கொண்டுடல மயரா       	      மே
		சீரடருன்கழலி னிழல்யா 		      	      னே
        	தேடியடைந்துபணி வரமீவா       	      ய் 
		நாரணனின்பமுறு மருகோ 		      	      னே
        	நாவலர்நின்றுநவில் புகழோ       	      னே
		வீரமுடன்பழனி மலைமீ 		      	      தே
        	மேவிவிளங்குமயின் முருகோ       	      னே (8)
		அராப்பணத்தையுறழ்ந் திடுகுறியா		            ர்	 
        	அவாக்கடற்குள்விழுந் துழறமியே 	            ன் 
		குராத்தழைத்திடுமுன் பதமெனும் 		            வா
        	குவாய்த்து மொய்த்ததடங் குறுகுவ             னோ
		இராப்பகற்பொழுதொன் றறமரு 		            ளே
        	இலாத்தலத்தைவழங் கிடுமுதல் 	            வா
		வராற்பணைக்குளெழும் பழனியில்வா 	            ழ் 
        மனோக்யமுற்றவரந் தருகுக 	            னே (9)
		அனிச்சமலரடி மங்கையர்மே 		            ல்
        	அநித்யமயல்கொடு நெஞ்சலை 	            யா
		தினித்தாயனரு ளுன்புகழ்யா 		            ன்
        	இசைக்கவரமது நன்கருள்வா 	            ய்
		தனித்தமுதலென வெங்கணு 		            நீ
        	தழைத்துநிறைபர வின்புரு 		            வே
		வனப்பின் மிகுமணி தங்குபுசூ 		            ழ்
        	வயற்பழனியுறை சுந்தர 		            னே (10)
			திருப்பழனிவண்ணக்கொச்சகப்பதிகமுற்றும்.
				~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
7.  திருச்செந்திற்பதிகம். 
					காப்பு. 
				கலிச்சந்தவிருத்தம் 
		திரையாழியி னலைவந்தடர் செந்தூர் வளர்கந்த 	      	ன்
		உரையாலுயர் பதிகந்தனை யோதத் தெருணீ 	      	தா
		பரையோர் புறமுதிரன் பொடுபயிலும் வடகயி 	      	லை
		வரையார் முனமுதவுந் திருமகனே கரிமுக 	      	னே
					~~~~~~~~~~~~~~~~
		கிரணக்கதிர் வேலோய்கிண் கிணி நூபுரமணிநி 	      	ன்
		சரணத்தைவ ழுத்தெற்கரு டந்தாதரிகந் 		      	தா
		புரண்மற்றிரை யாங்கைக்கொடு பூரித்தலைவாரி       	த்	
		திரண்முத்தினை வீசிப்பணி செந்திற்பதியா 	      	னே(1)
		அகமிக்குவ ருந்திப்புவி யலையாவகைநிலையா 	      	ஞ்
		சுகமெற்கருள் புரிவாய்கன துங்காவகளங்	 		... 	கா
		இகலற்றிடுகட லார்திசை யெட்டும்படிகொட்டு 	      	ந்
		திகழ்கோட்ப றையொலிசூழ்தரு செந்திற்பதியா 	      	னே (2)
		தாக்குந்துய ரானெஞ்சு சலித்தோடிமலைத் 	      	தே
		ஊக்கந்தருகின் றாளணு குற்றேன்குறைசொற்றே       	ன்
		நோக்கங்கயலிணை நேர்நுளைச் சியராகியமயிலா       	ர்
		தேக்குஞ் செவ்வழிபாடுறு செந்திற்பதியா 		... 	னே (3)
		வாரார்முலை யவர்மாயையின் மட்காதறிவுட் 	      	தே
		தேரார்திறனது தந்தரு ளின்னேசுரர்மன் 		      	னே
		காராரளகத்தார் மொழிகாட்டும் படிமீட்டு 		... 	ஞ்
		சீரார்விளரியி	னோசைகொள் செந்திற்பதியா 	      	னே (4)
		அயலானெனவெண் ணாதினியன்பா லடியன்பா       	ல்
		நயமேதர வருவாய்குரு நாதாநிறைபோ 		      	தா
		பயில்வேள்பல மலர்கைக்கொடு பரவித்துதிபுரியு       	ஞ்
		செயல்போற்பு னைவனநீடிய செந்திற்பதியா 	      	னே (5)
		மல்லார்வினை மலவெவ்விருண் மாறச்சுகமீ		... 	ற
		எல்லார்ம யின்மிசைவந்தரு ளீசாபவநா 		      	சா
		நல்லாருயர் நடனஞ்செய நாகங்களநேக 		      	ஞ் 
		செல்லாமுகி லெதிர்சென்றலர் செந்திற்பதியா 	      	னே (6)
		பொருசூரனை வாட்டித்திகழ் போராரயில்வீ 	      	ரா
		கருமீதெனை யுய்க்காதருள் கதியேகுணநிதி 	      	யே 
		உருவான்மயல்பூண்டாரென வோங்கும்பல கோங்கி	... 	ன் 
		றெருளேர் முலைமுகைகாட்டுறு செந்திற்பதியா 	      	னே (7)
		மதமுற்றிடு கொடியார்களன் மருவாநெறி தருவா       	ய்
		அதிர்குக்குட முயர்கேதன வமலாவதிநிம 			... 	லா
		இதழுக்கிகலென்றே மடவியரங் கெடுத்தெறிய 	      	ச்
		சிதறித்துகிர் கரையிற்பொலி செந்திற்பதியா 	      	னே
		தருமற்புதனே யுன்னிரு தாளேயிந்நா		      	ளே 
		மருவுந்தமியே னுக்கருள் வரமேயுறைபர 		      	மே
		கருவிற்புருவப் பேதையர்களநே ரெனவளமா 	      	த்
		திருகும்புரிபுடை யிற்றவழ் செந்திற்பதியா		... 	னே
		பாரக்கொடுமற லோன்றிசை பாராவருடாரா 	      	ய்
		ஆரத்தொடு நீபம்புனை யழகார்சிறுகுழ 		      	கா 
		மாரற்கொரு கொடியாமெனும் வலியான்மிகு பொலிவாய் 	த்
		தீரச்சுற வுலவிக்கிளர் செந்திற்பதியா 		      	னே
				திருச்செந்திற்பதிகமுற்றும். 
				~~~~~~~~~~~~~~~~~~~~
  8. விராலிமலைப்பதிகம். 
 
						காப்பு. 
					     கலிவிருத்தம். 
		விந்தைமதி தோய்தரு விராலிம லைவாழு …      ங்
		கந்தரிசை மேவுபதி கஞ்சொலு வல்யா             னே 
		முந்தைமறை யோதுதனி மூலமுத லாகு             ந்
		தந்திமுக நாதரிரு தாண்மலர் பணிந்             தே
				~~~~~~~~~~~~~~~~~~~~~~
		பண்ணிசைமி குத்ததமிழ் பாடியடி யேனு             ன்
		றண்ணடி வழுத்தவரு டந்தெனை யளிப்பா …      ய்
		புண்ணிய மகத்வபரி பூரணதயா 	             ளா
		விண்ணவர் வழுத்திடும் விராலி மலையா …      னே		(1)
		உன்றனடி யன்றியிவ ணோர்புக லுநாயே …      ற் 
		கின்றென வறிந்துமன தேனுரு கிடாதா	...       ல் 
		துன்றமரி லன்றுவரு சூருடற டிந்தோ             ய் 
		மின்றவழ் விசும்படர் விராலி மலையா             னே. 	(2)
		முசித்திடமுயக்குமொரு மும்மலமுமின்             றே
		நசித்திடுதிறத்தொடரு ணல்கியெனையாள்வா	... ய்
		ஒசித்தவுணரைக்கொலைசெய் தோங்குகதிர்வே      லா
		விசித்தியர்வசித்திடும் விராலிமலையா 	... 	... னே		(3)
		வண்மணி யுறழ்ந்தநகை மாதரைவெறுத்தெ       ன்
		கண்மணி யியங்குமுன காட்சிகொளவைப்பா       ய்
		தண்மணி மிலைந்ததன சங்கரிகுமா 	      ரா
		விண்மணிவலஞ்செயும் விராலிமலையா		...னே		(4) 
		சோதியெனு நின்னடிமை தொல்வினை கள்பூண்டி ங்
		கேதமுறு துன்பினிடை யெய்த்திட னலன்கொ       ல் 
		சீதமலர் நீபமணி திண்புய விசா			...லா
		வேதியர் தழைந்திடும் விராலி மலையா 	      னே		(5)
		புல்லர்தமை நாடியவர் புந்திவழிசெல் 	      லா
		தெல்லையற நின்பணி யியற்றவருள்செய்வா       ய்
		வல்லிதனை யொத்தவிடை வள்ளிமணவா       ளா 
		வில்லெயில் பிறங்கிடும் விராலிமலையா 		...னே 		(6)
		மாமயிலில் வந்தெனது வன்றுயரகற்றி 	      க்
		காமர்தரு மின்பருள் காடாக்ஷகுருநா 	      தா
		சேமநிதியே யடியர் சிந்தையுறைதே 	      வே
		வீமலர் தடஞ்செறி விராலிமலையா 		...னே		(7)
		அற்பமய லின்கணடி யேனயர் வுறாது 		...ன்
		பொற்பத மடைந்தணி பொருந்திட நினைப்பா       ய்
		கற்பனை கடந்துலவு காரண விநோ 	      தா
		விற்பனர் நெருங்கிடும் விராலி மலையா 		...னே		(8)
		புராண கலையிற்பொலி புராதனசுசீ 		...லா
		பராபர வெனத்துதி பராவவருளீ 			...சா
		நிராகுலசுலட்சண நிராமயசொரூ 			...பா
		விராவுபுகழ்பெற்றுயர் விராலிமலையா 		...னே		(9)
		ஆயபுகழ் பாடுமுன தன்பரொடுகூ		       டி
		நேயமக லாதுநெறி நின்றிடுவரந் 		      தா
		தூயமுக சுந்தரசு கோதயவிலா 		      சா
		மேயவள மன்னிய விராலிமலையா 		...னே 		(10)
			விராலிமலைப்பதிகம் முற்றும். 
				~~~~~~~~~~~~~~~
 9. சென்னிமலைப்பதிகம். 
 
					காப்பு. 
				     கலிநிலைத்துறை. 
		வேதமுமின் னந்தேடுறு தண்டைமிளிர் பாத       ன்
		மாதகைதங் குஞ்சீர்தரு சென்னிமலை வேல       ன்
		ஆதரமொன் றின்பார்பதி கத்திற்களி சூழை       ம்
		போதலர்செங் கைப்போதக மெய்த்தாள் புகலா       மே
					~~~~~~~~~~~~
	பொன்னியனின் றாள்போற்றுறு தமியேன் பொறையுள்ள      ந்
	தன்னிடைவந் தென்றுங்குடி கொள்வாய் தகைசாலொ             ண்
	கன்னியர்நீ  டன்பான்முக மன்சொல்கண வாமா             ன்
	மன்னியபன் னிதுன்னிய சென்னிம லையா 	      	...னே 	(1)
	ஏவடர்கண் ணாராவலை யெண்ணா தெளியேன்மெய்             த்
	தேவெனுநின் னைக்காவென முன்னத்தெ ருளீவா            ய்
	கூவலருந்தண் பாவலரும் பண்கொடு போற்று 	            ம்
	மாவளமின் னிப்பூவவிழ் சென்னிம லையா 	      	...னே (2)
	வஞ்சகமோங்கு நெஞ்சரை நீங்கிமருள் விட்டு	            த்
	தஞ்சமெனச் சீர்விஞ்சையரைச்சேர்தர மீவா 	            ய்
	கஞ்சனை நோக்கி வெஞ்சிறை நீக்குங்கதிர் வேலோ             ய்
	மஞ்சுக ணண்ணித் துஞ்சிடு சென்னிம லையா 	      	...னே (3)
	ஊழ்வினை தன்னான் மாழ்குறு துன்புற்றுக் கமீ 	            தே
	தாழ்வினை யெய்திப் பாழ்படலா மோதமி யே 	      	...னே
	ஆழ்கட றன்னைப் போழ்தர வீசுமயி லோய் 	            மா
	வாழ்பொழி லெங்குஞ் சூழ்தரு சென்னிம லையா       	...னே (4)
			
	கந்தாநின் னைக்கைதொழு ஞானங்க டையேற்கு             த்
	தந்தாள்வே றேயோர்பொ ருள்வெஃகேன் றரைமீ             தே 
	கொந்தார்நீ பக்கோவை விளங்குங் குளிர்மார் 		...       பா
	மந்தாரக்கானம் பொலிசென்னிமலையா 		            னே (5)
	உடல்பொரு ளாவிமூன் றுந்நினதேயு னையல்லா             ல்
	அடல்வினை தீர்த்தென் றுன்பமகற்று மவர்யார்கொ             ல்
	கடலுறுநஞ்ச மயின்றோன் மைந்தா கமழ்தா 	            ழை
	மடல்விரி பூகந்தெங்கடர் சென்னிம லையா 	            னே (6)
	என்னைப் போலோர்பாவி யுமுண்டோ விறையோயா 	...       ன்
	நின்னைப் பேணாவிட்டா லெங்ஙனெறி தேர்வே             ன்
	பன்னற்கே லாப்பண்புறு செல்வாபடர் கானி 	            ல்
	வன்னக்கிள் ளைகொஞ்சு றுசென்னிம லையா	            னே (7)
	பொய்யுறுபந் தம்போக்கு புநித்தம்பு கர்செய்யெ 	            ன்
	பையுளகற்றாவிடினின் பாற்றேபழியந் 		            தோ
	மெய்யுறுயோகருள்ளச் சுடராய்மிளிர்வோய்நீ 	            ள்
	வையகம் வானம் போற்றுறு சென்னிமலையா 	            னே	(8)
	உந்தனையன்றி வேறொரு புகலெற்கு ளதோவெ             ன்
	சிந்தனைமுற் றுமுன்னடி தன்னிற்செல விட்டே 	            ன்
	சந்ததமின்பத் தொண்டர் குவிந்தேத கையன்பா	            ல்
	வந்தனைசெய் யும்விந்தை கொள்சென்னிம லையா             னே	(9)
 
	தோகைச்சிகி	மீதேறிய டுத்துத்து யர்நீத்தெ 	            ற்
	கோகைச்சுக மேதந்தருள் செய்தியு யர்கோ 	            வே
	ஏகப்பொரு ளேமெய்ச் சுந்தரனே யெனமுன்	            னே
	மாகத்தவர் நின்றேத்திடு சென்னிம லையா 	            னே	(10)
				சென்னிமலைப்பதிகமுற்றும்.
				~~~~~~~~~~~~~~~~~~~~~~
  10. வட்டமலைப்பதிகம். 
 
					   காப்பு. 
					கலிவிருத்தம். 
		மணிசெறி கோபுர நீள்வட்ட மலைச்செவ்வே             ள்
		அணிசெறி பதிகத்தை யறையத் துணைசெயுமா             ல்
		பணிசெறி மார்புந் திண்பவளத் தனுவுங்கி             ண்
		கிணிசெறி பதமலருங் கிளர்கரு ணைக்களி             றே
					~~~~~~~~~~~~~~
		நாதமறைப் பொருளே நல்லோர் பெறுதெரு             ளே
		நீதயை செய்தின்னே நிருமலநி லையருள்வா             ய்
		சீதமதிச் சடையார் சேயேநன் னெறிதே 	            ர்
		மாதவர் தொழுதேத் தும்வட்ட மலைக்கர	            சே 	(1)
		பொய்யாம்வி னைநீக்கிப் புன்மல விருள்போக்             கி
		மெய்யாமின் பத்தை மேவவரந் தருவா 	            ய்
		பையாடர வணையோன் பகர்மா மருகாவா             ன்
		மையார் பொழில் புடைசூழ் வட்டமலைக்கர            சே 	(2)
		புடவியின் மருளாலே புகர்கொடு மேன்மே             லே
		இடர்படு தமியேனுக் கிங்கார்கதி சொல்வா       	...ய் 
		சுடர்வடி நெடுவேலா சுகுணா கரசீ 	            லா
		மடல்வன சத்தடமார் வட்டம லைக்கர 	            சே 	(3)	
		தெரிவைய ரெழில்கண்டு சிந்தையுண் மயல்கொண்       டு
		எரிபடு புழுவெனநா யேனய ரத்தகு 	            மோ
		கிரிமகள் தருகுழகா கெழுமிய வடிவழ 	            கா
		வரிவளை தவழ்பணைசூழ் வட்டமலைக்கர             சே	(4)
		சல்லா நாயேனைக் கபடப் பேயேனை 	            ப்
		பொல்லா னெனமுன்னிப் புறந்தள் ளாதருள்வா       	...ய்
		வில்லா ரறுமுகனே வேண்டத் தருசுக 	            னே
		வல்லார் தொழு தேத்தும் வட்டமலைக்கர             சே	(5)
 
		இன்றருள் புரியாயே லெளியேனிப் புவிமே             லே
		என்றுயரது நீங்கி யென்றுய ரின்படைவே      	...ன் 
		குன்றவள் மணவாளா கோகன கத்தா 	            ளா
		வன்றிறல் வயமா நீள் வட்டமலைக்கர 	            சே	(6)
 
		என்னக மெனவோது மிறுகிய சிலைமீ 	            து 
		பொன்னவி ருனதிருதாட் புட்பம லர்ந்திடு            மோ 
		மின்னடர் மயிலேறும் வித்தக நனிவீறு 	            ம்
		மன்னவர் குழுநி றையும் வட்டமலைக்கர 	            சே	(7)
		நன்னய குணநோக்கா நமனுக் காளாக் 	            கா
		தென்னையு னடிமையென வின்னேகொண் டருள்வா      ய் 
		கன்னன்மொ ழிப்பிடிசேர் கணவா நலமிகுசீ             ர்
		வன்னம லர்த்திரு வாழ் வட்டமலைக்கர 	            சே	(8)
		அடியேனுக் குனையே யல்லா லாரனை 	            யே
		கடையே னிடர்கண்டாற் கல்லும் முருகிடு             மே
		கடிமேவி யநீபா கருதலர் தளகோ 		            பா
		மடைவா ளைகள் பாயும் வட்டமலைக்கர 	            சே (9)
		எளியவ னிடமெய்தி யின்னரு ளதுசெய் 	            தி
		அளவறு சுபமகிமை யமைவுறு சுந்தர 	            னே
		தெளிபவ ரடைகாவே தேவர்கள் பணிதே 	            வே
		வளமலி நதியரு கார் வட்டமலைக்கர 	            சே (10)
				வட்டமலைப்பதிகமுற்றும். 
				~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
  11.  திருச்செங்கோட்டுப்பதிகம். 
 
					   காப்பு. 
					கலிவிருத்தம். 
		சீர்பொ ருந்துசெங் கோட்டு விசாகனா             ர் 
		தார்பொ ருந்தவ தாரப்ப திகத்தை 	            ப்
		பார்பொ ருந்துத மிழிற் பணிப்பத 	            ற்
		கேர்பொ ருந்துக ளிற்றை யிறைஞ்சுவா             ம் 
				~~~~~~~~~~~~~~~
		வெள்ளி மால்வரை மேவும் விமலன்பா             ல்
		உள்ள தேவர்கள் யாவரு மோங்கி 	            யே 
		துள்ளு சூரன் கொடுமையைச் சொற்றிட             த் 
		தெள்ளு நெற்றிக் கண்ணைத் திறந்தான             ரோ		(1)
 
		திறந்த கண்ணின்று மூவிரு தீப்பொ             றி
		பறந்து தாவவி றைவன் பணிப்ப 	            டி
		நிறைந்த காற்றும் நெருப்புங் கொண்டேகிநீ       ர்
		உறைந்த தண்கங்கை தன்னி லுய்த்தார             ரோ		(2)
		உய்த்த தீயை யெடுத்துய ரும்பர்க 	            ள்
		சுத்த மான சரவண மென்சு 		            னை
		வைத்த பின்னர்க் குழந்தை வடிவமா             ய
		அத்த னாறுரு வாயின னங்ங 	            னே 		(3) 
		ஆறுபிள்ளை களரயம் மடுவினி 	            ல்
		வீறுடன் விளையாடிய மெய்யுரு 	            க்
		கூறுபாடின் றியெங்குங் குழவியா 	            ய்
		மீறியோர்கணப் போழ்தினின் மேவிற்             றே 		(4)
		ஒன்று சென்று மறைவுற் றொளித்திடு             ம்
		ஒன்று தேடுமற் றொன்று நடித்திடு             ம்
		ஒன்று விம்மிடு மொன்று நகைத்திடு             ம்
		ஒன்று கூவிடு மொன்று களிக்குமா             ல்  		(5)
		இப்படிப் பல்லுரு வமெடுத்த	            தை 
		மெய்ப்புறுந் திறல் விண்ணவர் நோக்கி             யே 
		தப்பிலாத பராபரந் தானிதெ 	            ன்
		றொப்பிவீழ்ந்து பணிந்து ரைத்தார்க             ளே		(6)
		பணிசெய் காலையி லீசன் பனிம 	            லை
		மணியொடங்கெய்தி மங்கையை நோக்கிநி       ன்
		அணிகொண்மைந்தனைத் தாவெனவன்னவ       ள்
		துணிவுகொண்டொன்ற தாச்சேர்த்துத்தூக்கினா      ள் 		(7)
		தூக்கியாறு முகங்க ளீராறுதோ 	            ள்
		ஆக்கிமார்பி லணைத்து முகந்துத 	            ன்
		மாக்கலச மளித்து மகிழ்ந்தி 		            ட
		நீக்கமின்றி நிருபன் விளங்கினா 	            ன்		(8)
		விளங்குந் தோன்ற றனக்கு விமலனா             ர்
		துளங்கு கந்தனெ னப்பெயர் சூட்டிட             க்
		களங்க மற்றவைந் தாண்டினிற் காதல             ன்
		வளம்பெ றும்பொரு சூரனை வாட்டினா             ன்		(9)
		வாட்ட நீக்கியத் தேவர்க்கு வாழ்வுத             ந்
		தீட்டு மன்பர்கட் காகவிரங் கிச்செ             ங்
		கோட்டில் வந்த குமரனைச் சுந்தர 	            ன்
		பாட்டினாற் புகழ்ந் தார்க்கில் லைப்பாவ             மே		(10)
			திருச்செங்கோட்டுப்பதிகமுற்றும். 
  12. மயிற்பதிகம். 
						காப்பு 
					நேரிசைவெண்பா. 
		பாகைமறை போற்றும் பணிகிரிவே ளூர்ந்துவரு             ந்
		தோகைமயின் மேற்பதிகஞ் சொல்லவே- யோகாநெஞ்சி…      ற்
		பூரணமா யோங்கிப் புகலருண் மதம்பொழியு                   ங்
		காரணமா வேழமுகன் காப் 			                  பு
				எழுசீர்க்கழிநெடில்விருத்தம். 
கடலலை நிகர்த்த கவலையி லுழலுங் கடையனே னிடும்பையைத் தவிர்ப்பா	ன் 
திடமுல வியசீர்ப் பணிகிரி வேளைத் திகழ்முது கினிற்கொடு வருவா       	ய்
அடலுறு கரிகண் டுங்குறப் புவியுமண் டமுமதிர் தரக்க திர்சூ 	      	ழ்
வடவரை குலுங்கச் சிறைதனைப் புடைக்கும் வாகைசேர் தோகைமா மயி 	லே 	(1) 
இருவினைக் கயிற்றி னூசலின் மறுகி யிடர்ப்படு மெளிய னேற்றடுத்து… 	த்
திருவருள் புரிவான் பணிகிரி வேளைத் திறலொடு சுமந்திவ ணடைவா …	ய்
பொருதிசை யகிவாய் விடக்கரு மணியும் புனைதரும நந்தனீண் முடியி ... 	ன் 
மருவில்செம் மணியுஞ் சிதறிட வுதறும் வாகைசேர் தோகை மாமயி       	லே 	(2) 
மும்மல விருளினறை யினுட்டவிக்கு மூங்கனேற் குணர்வெனும் விளக்கொன் 
றிம்மை யினுதவப் பணிகிரி வேளையி னிதுடன் பரித்தி வண்வருவா             ய் 
பொம்மல் கூர்கருணைப் பீலியை விரித்துப் புலவராங் கிண்கிணி கலிப் ...       ப 
மம்மரி லடியார் முகிலெதிர் நடிக்கும் வாகைசேர் தோகை மாமயி             லே 	(3)
சஞ்சலத் திரைகள லைத்திடப் பிறவிச் சாகரத் தலமரு மெனையி             ன்
றஞ்சலென் றளிப்பான் பணிகிரி வேளையன் பொடுகொ ணர்தி யிவ்வே       ளை
எஞ்சலின் மகவான் முதற்சுர கணத்தோ ரிதயங்கள் களித்திடத் தனு             ச
வஞ்சகர் மனங்கள் பதைத் திடக்கூவும் வாகைசேர் தோகை மாமயி       	 …லே  (4)
மூன்றெனு நசைவெங் கோடையில் வெதும்பு மூடனேற் கருட்கு ளிர்நீழ      ல் 
ஆன்றிவண் வழங்கப் பணிகிரி வேளை யகமுவந் தெடுத்து நீவருவா             ய்
தோன்று மூவுலகு மோர்கணப் பொழுதிற் சூழ்வலம் வந்து முன்பு விமே       ல் 
வான்றொடு  பசிய வரையென விறங்கும் வாகைசேர் தோகைமா மயி ...        லே 	(5) 
நங்கையர் மயலாங் கடுநுகர்ந் தயரு நாயினேற் கறிவெனு மமுத             ஞ்
சங்கை யற்றூட்டப் பணிகிரி வேளைத் தாங்குபு தேங்கியிங் கணைவா…      ய் 
கொங்கல ரவிழுங் கற்பக நாட்டுக் கோதையர் வேண்டவன் னவர்க்கு …      ன்
மங்கள மருவு சாயலைப் பயிற்றும் வாகைசேர் தோகைமா மயி 	      லே 	(6) 
நிதம்வினைப் பிணியில் வருந்துறு மெனக்கு நிறைசுக மென்னுமா மருந்       தை 
யுதவுபண் டிதனாம் பணிகிரி வேளை யுவகையிற் பொறுத்துநீ வருவா       ய்
கதமொடு தொனிக்கும் விருது செஞ்சூட்டுக் கனக வாரணத் துடனுன       து
மதமிகு வலியின் பெருமையை விலும் வாகைசேர் தோகைமா மயி 	      லே (7) 
நடுநதிக் கோரைப் புல்லென மயங்கு நாயினேற் குறுதி யைப்புகன்            று 
கொடுதுயர் மாற்றும் பணிகிரி வேளைக் குனிந்தெடுத் திவ்வுழி வருவா       ய் 
அடுபகை யசுரப் பாந்தளின் குலங்க ளஞ்சிடப் பதங்களில் வனைந்             த 
வடுவறு வீரக் கழலொலி காட்டும் வாகைசேர் தோகைமா மயி 	      லே (8) 
சந்தத முனையான் மறக்கிலே னின்று தமியன்மேற் கருணைகூர்ந் தன்பாய்       ச் 
சிந்தையு ளுவந்து பணிகிரி வேளைச் சீர்தரு சுவன்மிசைக் கொணர்வா       ய் 
விந்தை கொள்பரம னணிகளை மறைக்க விமலமா லணைத னைச்சுருட்       ட 
மந்தர மலைபோ லவர்முனஞ் செல்லும் வாகைசேர் தோகைமா மயி             லே (9) 
என்முறைக் கிரங்கிப் பணிகிரி வேளை யிவ்வயின் விடுத்தியே லதனா       ற்
றன்மமு மதிக தகைமையு முனக்காந் தமியனும் பிழைத்தின் பமடைவே       ன் 
வின்மலி கதிரு மதியுமெம் பகையை வீட்டுதி யெனத் தொழும்பரி             சா
வன்மணிப் பதத்திற் சிலம்பிரண் டணியும் வாகைசேர் தோகைமா மயி	... லே (10) 
				மயிற்பதிகமுற்றும். 
  13. அடைக்கலப்பதிகம். 
 
					காப்பு. 
				கட்டளைக்கலித்துறை. 
	செய்யாள் வளர்திருச் செங்கோட்டு வேலன் றிருவடியி 		... ன் 	
	மெய்யார டைக்கலச் சொற்பதி கத்தை விளம்புதற்கு 	      ப்
	பொய்யாம் வினையிருள் போக்கிப் புரக்கும் பொருவிலைந்	... து 
	கையார் கரிமுகன் பொற்றாண் மலரைக் கருதுவ 	      னே 
				~~~~~~~~~~~~~~~~~
	வாதமும் பித்தமு மோயச்சி லேத்துமம் வந்தடரு 		      ம்
	போதென துள்ளம் வருந்தா துன்றாளிற் பொருந்தும்வர       ம் 
	நீதரல் வேண்டுமென் றின்றே செங்கோட்டு நிருபநி 	      னை
	ஆதரங் கொண்டடைந் தேனடி யேனுன் னடைக்கல 	      மே 	(1)
	பொறியு மொடுங்கப் புலனு மவியப் பொதிகரண 	      த் 
	துறையு முயிரகன் றேகுறும் போழ்தென துள்ளநின்பா            ற் 
	செறிய வருள்தியென் றின்றே செங்கோட்டுச் சிவகுகயா	... ன் 
	அறையும் படியடைந் தேனடியே னுன்ன டைக்கல 	      மே (2)
	உண்டியும்பானமு மற்றனவென்றுற வோர்குழுமி 	      ப்
	பண்டிதற்கூவுதி ரென்னாதெற்காத்துன் பதமலரி 	      ல்
	 வண்டினென்னுள்ளத்தைச் சேர்க்கச்செங்கோட்டு வரதவின்      றே 
	அண்டிமுறைபுகன் றேனடியேனுன் னடைக்கல 		      மே (3)
	வாயிடைப் பெய்யு மருந்தென் றொருவரு மற்றொருவ 	      ர்
	நோயிது தீர்வதன் றென்றுஞ் சொலாதெனு வன்முடிவி 		... ல்
	ஏயெனு முன்வந்து காக்கச் செங்கோட்டி லிறைவநி 	      னை
	ஆயென வந்தடைந் தேனடி யேனுன்ன டைக்கல 	      மே (4) 
	மண்ணினு மங்கையர் மீதினுந் தேடிய மாடையினு 	      ம் 
	நண்ணுபு நெஞ்ச மயராதப் போதென்ற னாட்டமுற்று 	      ம் 
	எண்ணுநின் றாளிணை சேரச் செங்கோட வியற்றுதியெ       ன்
	றண்ணி யின்னேயிசைத் தேனடியே னுன்ன டைக்கல 	      மே (5)
	இப்படி தன்னையு மீண்டுள பொய்ப்பொருள் யாவையும       ன்
	றெப்படி நீப்பதென் றுன்னா தறிவொ டியைந்தெனது 	      ன்
	மெய்ப்பர மோன வெளியிற் செங்கோட விளங்கவரு             ள்
	அப்பனென் றின்றடைந் தேனடி யேனுன் னடைக்கல 	      மே (6)
	சகமுடல் யானென தென்று நினைந்த சதிவழக்கா 	      ல்
	உகுமுடி வின்கணு மங்ங னெண்ணாம லுணர்ந்தனைத்து       ம்
	புகரிலு னதென வெண்ணச் செங்கோட புரிகுதியெ 	      ன்
	றகமுரு கிப்புகன் றேனடியே னுன்ன டைக்கல 		      மே (7)
	சிறிதும் பயத்தை யணுகாம லெங்கணுஞ் சின்மய		...மா
	நிறையு முணர்வி லுணர்ந்தவ் வுணர்வை நினதடிக்கீழ் 		... ப் 
	பொறை யுடனுய்க்க வருள்தி செங்கோட்டுப் புரவலவெ	...ன் 	
	றறையும் வகையடைந் தேனடியே னுன்ன டைக்கல 	      மே  (8)
	வஞ்சக மாயைமய மாமகில மறைய வென்னு 		      ள் 
	எஞ்சலி றூய பரஞ்சோதி யாகி யிலகிடு 				...நீ
	விஞ்சுபு தோன்றிடச் செங்கோட வின்று விளக்குதியெ 	      ன் 
	றஞ்சலி செய்தடைந் தேனடி யேனுன் னடைக்கல 	      மே (9)
	முடிவுறு காலையி லாநந்த வெள்ளத்தின் மூழ்கியுன்ற 	      ன்
	கடிகமழ் தாளிணை சேர்ந்து பிறவி கடக்கவர 			... ம் 
	படியிலளித்திடல் வேண்டுஞ்செங்கோட்டுப் பரமவெ	      ன் 
	அடிமை நவின்றுவைத் தேனடி யேனுன்ன டைக்கல 	      மே (10)
				அடைக்கலப்பதிகமுற்றும். 
  பதிகத்திரட்டு முற்றும்  
				     வேலுமயிலுந்துணை. 
~~~~~~~~~~~~~~~~~~
This file was last updated on 12 April 2023. 
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)