pm logo

அருணாசலக் கவிராயரால் எழுதப்பெற்ற
திருக்குறள் வசனம் -பாகம் 1

tirukkuRaL vacanam
by aruNacalak kavirAyar
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2025.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

அருணாசலக் கவிராயரால் எழுதப்பெற்ற
தமிழ் வேதமாகிய திருக்குறள் வசனம் - பாகம் 1

Source:
தமிழ் வேதமாகிய திருக்குறள் வசனம்.
இது மதுரைத் தமிழ்ச்சங்க வித்துவான்
மு. ரா. அருணாசலக் கவிராயரால் எழுதப்பெற்று
மதுரை : விவேகபாநு அச்சியந்திரசாலையில்
பதிப்பிடப்பெற்றது.
1913
காப்பிரைட்.
விலை ருபா (1-4-O)
------------
பொருளடக்கம்

1. முகவுரை. 6. திருவள்ளுவர் பெருமையும், திருக்குறட் பெருமையும்
2. திருவள்ளுவர் பெயர்கள். 7. திருக்குறள் வசனம்.
3. திருக்குறட் பெயர்கள். 8. அதிகார அகராதி.
4. அபிப்பிராயங்கள். 9. விஷய அகராதி
5. உரிமையுரை. 10. பிழை திருத்தம்.
---------
விளம்பரம்.


யான் எழுதிய இக்குறள் வசனத்தையேனும், இதனை வேறு பாஷையில் மொழிபெயர்த்து அம்மொழி பெயர்ப்பையேனும், என் அநுமதியின்றி யாராவது வெளிப் படுத்தினால் அதனால் எனக்கு நேரிடும் சகல நஷ்டங்களும் அவரிடம் வசூலிக்கப்படும் என்பதை இதன் மூலம் எல்லாருக்கும் தெரிவிக்கலாயிற்று.
        இங்ஙனம்.
        மு. ரா. அருணாசலக்கவிராயர்.
------------
திருக்குறள் வசன முகவுரை


கடவுள் துணை.
தமிழ் வேதமாகிய திருக்குறளிலுள்ள ஆயிரத்து முந்நூற்று முப்பது குறள் வெண்பாக்களும், சிறிய கண்ணாடியானது பெரிய மலை முதலிய பொருள்களைத் தன்னுள்ளடக்கிக் காட்டுதல் போல, உலகத்திலுள்ள எல்லா நூற்பெரும் பொருள்களையும் தம்முள் அடக்கிக் காட்டிக் கொண்டிருத்தலை அறிந்து முற்றக் கற்ற கூரிய மதிநுட்பமுள்ள உரையாசிரியர்கள் பலரும் பதவுரை கருத்துரை விசேடவுரைகளெழுதி வைத்தனர். ஆயினும், அவ்வுரைகளெல்லாம் இலக்கிய இலக்கண வரம்பு கண்டவரே அன்றி ஏனையோர் எளிதிலுணர்ந்து தருமார்த்த காமமோக்ஷம் அடைதற்கு மார்க்கமில்லாம லிருக்கின்றனவென்பது அறிஞர்கள் பலரும் அறிந்த விஷயமே.

ஆதலால், இந்நூற் பொருளைத் தமிழ்ப்பாஷையை யெழுதப் படிக்கத் தெரிந்த சிறுவரும் பெண்களும் பிறரும் இலேசாகத் தெரிந்து அவற்றின் பயன்களை அடையும் பொருட்டுச் சாதாரண வசன நடையிலெழுதி உலகோபகாரமாக வெளிப்படுத்த வேண்டு மென்று நீண்ட நாளாக நினைத்துக் கொண்டிருந்தேன். என்னைப் போலவே யெண்ணியிருந்த எனது நண்பர்கள் பலரும் இந்த வேலையை விரைந்து செய்து முடிக்க வேண்டுமென்று பலமுறை யென்னை ஏவுவித்தனர். அவரது ஏவலையும் என்னுடைய நினைப்பையும் மறுக்கமுடியாமல் நூற்கருத்தையும் ஆசிரியர் பரிமேலழகர் உரைக் கருத்தையும் தழுவிக்கொண்டே என் கருத்துக்கு எட்டிய மட்டும் எளிய வசன நடையிலெழுதி மு டித்தேன். இதை எழுதி வரும்போது மதுரைக் கீழ ஆவணி மூலவீதியில் வைத்தியசாலை வைத்திருக்கும் யாழ்ப்பாணம் மகா - ள -- ஸ்ரீ ஆறுமுகம் பிள்ளையவர்கள் இடையிடையே என்னைச் சந்தித்து வசன நடையை வாசித்துப் பார்த்து இவ்வசனம் எல்லார்க்கும் மிக்க பிரயோசனமுள்ளதா மென்று மிகவும் ஊக்கமூட்டி வந்தார்கள். அவர்கள் அங்ஙனம் செய்தற்குக் காரணம் தமிழில் வைத்திருக்கும் அபிமானமும் சகல ஜனங்களிடத்தும் வைத்திருக்கும் தண்ணளியுமே ஆம்.

அரிய நூல்களைக் கற்றுக் குற்றமற்றவரிடத்திலும் அறியாமை யில்லாதிருக்க முடியாதாகலால் யானெழுதிய இவ்வசனத்தில் எத்தனையோ பிழைகளிருக்கு மென்பதில் சந்தேகமில்லை. தன் பிழை தனக்குத் தோன்றுதல் யாவருக்குமில்லை. ஆதலால் இவ்வசன முழுவதும் வாசித்துப் பிழைகளின்னவையென்று கண்டெடுத்துச் சீர்திருத்தஞ்செய்து அறிஞர்களெனக்குக் காட்டுவார்களானால் அவர்களிடத்து நன்றி பாராட்டி அவற்றை இரண்டாம் பதிப்பிலே பதிப்பிக்கும் எண்ணமுடையவனாக இருக்கின்றேன்.

இங்ஙனம்,         மு. ரா. அருணாசலக்கவிராயர்.
        மதுரைத் தமிழ்ச்சங்க வித்துவான்.
-------------------

திருவள்ளுவர் பெயர்கள். திருக்குறட் பெயர்கள்.
தேவர். முப்பால்.
முதற்பாவலர். பொய்யா மொழி.
பொய்யில் புலவர். திருவள்ளுவப் பயன்.
மாதாநு பங்கி. வாயுறை வாழ்த்து.
தெய்வப்புலவர். உத்தர வேதம்.
செந்நாப்போதார். தெய்வ நூல்.
பெருநாவலர். பொருளுரை.
நான் முகர். வள்ளுவனார் வைப்பு,
புலவர். திருவள்ளுவர் தமிழ்மறை.
நாயனார். பொதுமறை. முதுமொழி.
--------------------
அபிப்பிராயங்கள்.


சென்னை பிரஸிடென்ஸி காலேஜ் தமிழ்ப் பண்டிதர் மகாமகோபாத்தியாயர் பிரஹ்மஸ்ரீ உ. வே. சாமிநாதையரவர்கள் எழுதியது.

மகா- ள - ஸ்ரீ மு. ரா. அருணாசலக் கவிராயரவர்கள் எழுதிய திருக்குறள் வசனம் மிகப் பாராட்டற்பாலது. திருக்குறளையும் அதனுரைபையும் ஊன்றிப் படித்துச் சிரமப் படாதபடி இக்காலத்திற்கு ஏற்ப அவற்றைத் தழுவி யாவர்க்கும் பயன்படும்படி எளிய நடையில் இயற்றி வெளிப்படுத்திய இவர்களுடைய உழைப்பு மறக் கற்பாலதன்று. தமிழ்ப்பாஷையில் நல்ல பயிற்சியும் ஊக்கமும் உள்ள இவர்களுடைய ஆராய்ச்சியைப் பற்றி நான் ஏதேனும் எழுதுதல் மிகையென்று எண்ணி இதனை இம்மட்டோடே நிறுத்துகின்றேன்.
        இங்ஙனம்
        வே. சாமிநாதையன்.
---------
சென்னை பென்ஷன் ஐக்கோர்ட் ஜட்ஜும், பிரஹ்மக்ஞான சபையின் உப அக்கிராசநாதிபதியுமாகிய ஆனரபில் டாக்டர் சர். எஸ். சுப்பிரமணிய ஐயரவர்கள் எழுதியது.

தாங்களனுப்பிய திருக்குறள் வசன நடைப்புத்தகங் கிடைத்தது. நாயனாருடைய ஒப்பற்ற நீதி அபிப்பிராயங்களை எல்லோரும் எளிதில் அறிந்துகொள்ளக்கூடிய விதமாய் தங்களுடைய கிரந்தம் எழுதப்பட்டிருக்கிறது. யாவரும் அதைப் படித்து நன்மை யடைவார்களென்று நம்புகிறேன்.

பீச்சவுஸ், மைலாப்பூர்.         தங்கள் உண்மையுள்ள,
6- 6 -13.         சுப்பிரமணியன்.
--------------

இராமநாதபுரம் சேது சம்ஸ்தான வித்துவான். ஸ்ரீமத் ரா. இராகவையங்காரவர்கள் எழுதியது.

என் அன்புள்ள ஸ்ரீமான் கவிராயரவர்கட்கு மங்களாசீர்வாத பூர்வக விஞ்ஞாபனம். உபயத்ர க்ஷேமோபரி.

தாங்களெழுதிய திருக்குறள் வசனத்தைச் சிற்சில இடங்களிற் படித்துப் பார்த்தேன். பரிமேலழகர் உரைநடையையே பெரும்பாலும் தழுவிச் செல்வது கண்டு மகிழ் கூர்ந்தேன். அரிய பெரிய நீதிநூற் கருத்தைச் சிறிது கற்றாரும் எளிதிலுணருமாறு புரிந்தது தமிழ் மக்களால் பாராட்டுந் தகைத்தென்று நம்புகின்றேன். ஆங்கிலக் கல்விச் சாலைகளில் தமிழ் பயிலும் மாணாக்கருக்கு இவ்வசன நூல் பெரும்பயன் விளைக்குமென் றெண்ணுகின்றேன்.
        இங்ஙனம் தங்களன்புள்ள,
        ரா. இராகவையங்கார்.
        ஸேதுஸம்ஸ்தான வித்துவான்.
---------

தமிழகராதிக் கமிட்டிப் பண்டிதர் ஸ்ரீ மு. இராகவையங்காரவர்கள் எழுதியது.

தமிழ்ப்பாஷையின் அருமை பெருமைகளை நம்நாடுமட்டுமன்றி அந்நிய நாடுகளும் அறிந்து பாராட்டுதற்குரிய தமிழ்ப் பெருநூலாகச் சிறந்து விளங்குவது தெய்வப்புலமைத் திருவள்ளுவனார் அருளிச் செய்த திருக்குறள் என்பது பலரு மறிவர். முற்காலத்தே நாகரீகச் சிறப்பு வாய்ந்திருந்த தேசங்களில் தமிழ்நாடும் ஒன்றென்பதையும், பழைய தமிழ் மக்களது மனோபாவங்களின் மாட்சி இத்தகைய தென்பதையும் விளக்குதற்கு இத்திருக்குறளினுஞ் சிறந்த கருவி தமிழில் வேறில்லை யென்னலாம். இந்நூலுக்கு ஒருரையன்றி ஒன்பதுரை முன்னோரால் செய்யப்பட்டிருந்தன என்பதொன்றே இதனருமை பெருமைகளை நன்கு விளக்கவல்லது.

இவ்வொன்ப துரைகளினும், இறுதியிலெழுந்ததும் திருவள்ளுவரது உள்ளக்-கிடக்கைகளை வெள்ளிடைமலைபோல் விளக்கி நிற்பதுமாய் இன்றுவரை நின்று நிலவுவது ஆசிரியர் பரிமேலழகர் அருளிய உரையேயென்பது அறிஞர்க்கெல்லாம் ஒத்தது. திருவள்ளுவர்க்கு ஆசிரியர் பரிமேலழகர் இயற்றியவுரையானது தமிழ்ப்பாஷையையே அலங்கரிக்கின்ற அற்புதம் வாய்ந்ததாயினும், தமிழ்மொழியிற் சீரிய பயிற்சியும் கூரிய அறிவும் உடையார்க்கன்றி ஏனையோர்க்கு அத்துணைப் பயன்றருவது அருமையாம். அதனால் திருக்குறட் பொருள் நுட்பங்களைக் கற்றாரே அன்றி மற்றாரும் அறிந்துகொள்ளக் கூடாமற் போகின்றது.

இக்காலத்து அறிஞர்கள் சிலர் பரிமேலழகர் உரைக்கு விளக்கமாக எழுதி வெளியிட்டுள்ள புத்தகங்களால் ஒருவித நன்மையே உண்டாயிருப்பினும் தமிழறிவு மிகவும் சுருங்கிவரும் இக்காலத்தே தமிழினருமை பெருமைகளை எளிதில் உணர்த்துதற்குரிய சிறந்த வழியாவது தமிழ் நூல்களிற் பொதிந்த பொருணுட்பங்களை இனிய எளிய வசனநடையில் விரித்தெழுதிப் பிரசுரிப்பதேயாகும். அதிலும் திருக்குறள் போன்ற அரும்பெறல்களை அங்ஙனம் எளிதாக்கி வெளியிடுதல் இன்றியமை-யாததன்றோ ?

இதனை யுள்ளபடியுணர்ந்த சேற்றூர்ச் சமஸ்தான வித்துவானும் மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவருளொருவருமாகிய ஸ்ரீமத் மு.ரா. அருணாசலக் கவிராயரவர்கள் திருவள்ளுவர் பரிமேலழகர் உரைக் கருத்துக்களை வசனநடையிலெழுதிப் பிரசுரித்த நூலின் பிரதியொன்று அவர்களால் சமீபத்தில் கிடைக்கப்பெற்று மகிழ்வுற்றேன். இவர்கள் திருவள்ளுவர் குறள்களைப் பரிமேலழகருரை யோடும் தெளிய ஆராய்ந்து அவற்றிற்கண்ட பொருணுட்பங்களை இனிய தமிழ் நடையில் யாவருமறிந்து கொள்ளுமாறு விளக்கி யிருக்கின்றார்கள். இவர்கள் வசன நூல் திருக்குறள் அதிகாரப்படியே அமைந்து பரிமேலழகர் கொண்ட முறையே பாடல்களை அவதாரி கைகளுடன் விளக்கிச் செல்கின்றது. நுணுகி ஆராய்ச்சி செய்யத் தக்க பரிமேலழகர் உரை நுட்பங்களைக் கவிராயரவர்கள் போராய்ச்சி காட்டி உரைக்குரைபோலவே விளக்கிக் காட்டுதலால் திருக்குறளை உரையுடன் கற்க விரும்பும் தமிழ் மக்கட்கும் இவ்வசன நூல் சிறந்த உதவியாகும் என்பதில் ஐயமில்லை. திருக்குறளின் காமப் பகுதியையும் முற்கூறிய முறையே இவர்கள் வசன நடைப்படுத்தி யிருப்பதானது, பெரும்பாலும் படிக்கப் பெறாததும் ஆனால் பெரிதும் இன்பமளிக்கக்கூடியதுமான அப்பகுதியில் பலர்க்கும் ஒருவகை ருசியை ஊட்டவல்லதாம்.

இவ்வாறு தெய்வப்புலவர் திருவாய் மலர்ந்த திருக்குறள் முப்பால்களையும் தெள்ளிய வசன நடையில் அமைத்து யாவரும் எளிதிற் படித்தறியுமாறு செய்து உதவிய கவிராயரவர்கட்கு, தமிழ் மக்களாயுள்ளார் பெரிதும் நன்றியறிதற் கடப்பாடுடையர். தமிழில் வசன நூல்கள் கிடையா என்று குறை கூறப்படும் இக்கால நிலைக்கு இத்திருக்குறள் வசன நூல் ஒரு நல்விருந்தாமென்றே எண்ணுகின்றேன். இத்தகைய புத்தகங்கள் ஆங்கில கலாசாலை மாணவரது தற்காலக கல்வி முறைக்கும் ஒழுக்க நிலைக்கும் ஊன்று கோல் போலப் பெரிதும் உபகாரமாகக் கூடியனவாதலால், கனந்தங்கிய நம் சர்வ கலா சங்கத்தாரும் இதனைக் கவனித்துக் கெளரவிப்பார்-களென்பது திண்ணம். தமிழ்நாட்டார்க்கு இவ்வித உபகாரத்தைச் செய்து உதவிய கவிராயரவர்களது பெருந்தன்மையை நான் மிகவும் பாராட்டுதலுடன் அன்போடு என்பார்வைக்கும் அதன் பிரதியனுப்பிய அவர்கள் அபிமானத்திற்கு நான் மிகவும் நன்றி கூறுகின்றேன்.

        இங்ஙனம்,
1-4-13. மதுரை.         மு. இராகவையங்கார்.
--------------
சென்னை தோட்டக்காடு ராவ் சாஹிப். ஸ்ரீமத். T. இராமகிருஷ்ணபிள்ளை யவர்கள் எழுதியது.

ஐயா! தாங்களன்புடன் என் பார்வைக்கு அனுப்பிய திருக்குறள் வசனப் பிரதி கிடைக்கப்பெற்று மகிழ்ந்தேன். தங்கள் நூலில் முக்கியமான இடங்களைக் கவனித்த அளவில் திருக்குறளைப் பரிமேலழகர் உரைக் கருத்துக்களுடன் கற்றவரேயன்றி மாணாக்கரும் எளிதின் அறிந்து கொள்வதற்கு இந்த நூல் ஏற்றதொரு கருவியாகவே தோற்றுகின்றது.

ஆழ்ந்த கருத்துக்கள் நிரம்பிய திருக்குறளை யாவர்க்கும் பயன்படும்படி எளிதாக்கி வெளியிட்ட தங்கள் முயற்சித் திறத்தை மிகவும் பாராட்டுகின்றேன். இத்தகைய வசன கிரந்தங்களே இக்காலத்தார்க்கு மிகவும் உபயோகம் அளிக்கக்கூடியன. தாங்களன்புடன் என் பார்வைக்குப் பிரதியனுப்பியதற்கு நன்றி கூறுகின்றேன்.

        இங்ஙனம் தங்கள் ,
13-6-13. கோடைக்கானல்,         தோ. இராமகிருஷ்ணபிள்ளை.
---------
சென்னை ஸ்ரீ மாந்.. எஸ். அநவரத விநாயகம் பிள்ளையவர்கள் எழுதியது.

Coonoor,
9-6-13.
Dear Sir,
Many thanks to you for sending me an advance copy of your Tamil Tirukkural in Prose. I have seen another prose version of the same great work but this is decidedly an improvement on that. Your arrangement of the Kurals under several headings is quite good. In this as well as your prose-rendering you have closely followed Parimelalakar, the well-known Commentator. Occasionally I find you have appended explanatory notes from the same source. As you have thus put in simple prose whatever is worth learning in Parimelalakar's commentary, you have obviated for the less cultured the necessity of plodding over the classical prose of that commentator, and those who wish to acquaint themselves with the commentary itself will benefit greatly if they approach it after a study of your book I would gladly recommend it to students of Tamil composition as they will find therein not only model prose but abundant matter for essays that they may have to write.

        Yours sincerely,
        S. ANAVARATAVINAYAKAM.
------------
சென்னை ஸ்ரீமாந் எஸ். அநவரத விநாயகம்பிள்ளையவர்கள் எம். ஏ. எழுதிய ஆங்கிலத்தின் மொழி பெயர்ப்பு.

        குன்னூர் (முகாம்)
        9- 6- 13
அன்புள்ள ஐயா!
தாங்கள் வசன நடையிலியற்றிய தமிழ்த் திருக்குறள் புஸ்தகத்தின் காப்பி ஒன்று எனக்கனுப்பியதற்கு அநேக வந்தனம். இப பெரிய நூலுக்கு இன்னொரு வசனநடையும் நான் பார்த்திருக்கிறேன். ஆனால் அதைப் பார்க்கிலும் இது மேன்மையானது. குறள்களைப் பல பிரிவுகளாகத் தாங்கள் ஒழுங்குபடுத்தியிருப்பது அதிக நன்றா யிருக்கிறது. இவ்வொழுங்கும் நீங்கள் செய்திருக்கும் வசன நடையும் அந்நூலுக்குச் சிறந்த உரையெழுதிய பரிமேலழகர் கருத்தையே முற்றிலும் அனுசரித்திருக்கின்றன. ஆங்காங்கு முக்கியமான விஷயங்களுக்கு அதிலிருந்தே விவரக் குறிப்புக்களும் எழுதியிருக் கின்றீர்கள். பரிமேலழகர் உரையில் அறியவேண்டிய பெரிய விஷயங்களைத் தாங்கள் இவ்வாறு எளிய நடையில் எழுதியிருப்பதால் சாதாரண ஜனங்களும் அவ்வுரையாசிரியரின் கடினமான உரையை வாசித்துத்தானாக வேண்டுமென்ற அவசியமில்லாமலும் பரிமேலழகர் உரையையே வாசிக்க ஆசைப்படுவோர்களுக்குத் தாங்களியற்றிய இப்புத்தகம் வாசிப்பது அதிக உபகாரமாகவும் தாங்கள் செய்திருக்கிறீர்கள். இப்புத்தகத்தில் தமிழ்நடைக்குச் சிறந்த மாதிரிகளும் வியாசம் எழுதுவதற்கு வேண்டிய மேற்கோள்களும் அடங்கி யிருப்பதால் தமிழ் வியாசம் எழுதவேண்டிய மாணாக்கர்களுக்கு இப்புத்தகம் இன்றியமை-யாததென்று எடுத்துக்காட்ட நான் சித்த மாய் இருக்கின்றேன்.

        எஸ். அநவரத விநாயகம்பிள்ளை , எம்.ஏ.
------------
சோழவந்தான் வித்துவான் ஸ்ரீமத். அ. சண்முகம் பிள்ளையவர்கள் எழுதியது.

கணபதி துணை.
எனது நண்பராகிய ஸ்ரீமத் மு.ரா. அருணாசலக் கவிராயரவர்கள், எல்லாப் பொருளும் இதன்பாலும் இதன்பால், இல்லாத எப்பொருளும் இல்லை என்றபடி அற முதலிய நாற்பொருளும் குறைவின்றி நிரம்பித் தினைத்துணைச் சொல்லிற் பனைத்துணைப் பொருளைக் காட்டி முருகக்கடவுள் அமிசாவதாரமாகிய உருத்திர சன்மர் முதலாய பல நல்லிசைப் புலவரால் பெரிதும் வியந்து பாராட்டிக் கொண்டாடப் பெற்ற தமிழ் வேதமாகிய திருக்குறட்குப் பரிமேலழகர் உரைக்கருத்தைத் தழுவிப் பொழிப்புத் திரட்டிக் கற்பார்க்கே அன்றிக் கற்றார்க்கும் இனிது பயன்படுமாறு வசன நடையாக்கி அச்சிட்டு வெளிப்படுத்தி எனக்கொரு பிரதியனுப்பினார்கள்.

அதனைப்பார்த்து அளவற்ற மகிழ்ச்சியுற்று என்னுள்ளத்தே தோன்றிய உண்மைக் கருத்தை மீண்டும் வெளியிடுகின்றேன்.

திருக்குறளியற்றிய திருவள்ளுவதேவர் பிரமதேவர் அமிதமென்பதும், திருக்குறள் வடமொழி வேதத்தினும் மாண்புடைத் தென்று பெரியோர் பலராலும் பாராட்டப்பட்ட தென்மொழி வேத மென்பதும், இந்நூற் பெருமை நோக்கியே தமிழ்மக்களே யன்றிப் பிறமொழி மக்களும் நூற்றுக்கணக்காகிய பிறமொழிகளில் மொழி பெயர்த்துக் கொண்டாடுகின்றன ரென்பதும் எல்லாரும் அறிந்தனவே.

இத்தகைய பெருமைவாய்ந்த இத்திருக்குறள் தருமர் முதலிய பதின்மருள்ளுஞ் சிறந்த பரிமேலழகர் உரையுடன் பயின்று வழங்கப்படினும் அதிமதிநுட்ப நூலோடுடைய கற்றார் சிலர்க்கேயன்றி மற்றார்க்குப் பயன்படாமையால் இதுவரை மலைச்சிகரத்து விடரகத் துற்ற [#]சாவா மருந்தாகிய கரு நெல்லிக்கனியென விளங்கிற்று. இது பொழுது பாடசாலை மாணாக்கருக்கும் பெண்களுக்கும் விளங்கத் தக்க எளிய நடையில் வசன வடிவாகி இந்நூல் வெளிவந்தமையால் இனி, பயன்மரம் ஊர் நடுவே பழுத்தாற்போலுமென நான் உறுதியாக நம்புகின்றேன்.

இத்திருக்குறளை இலக்கிய இலக்கணம் கற்றுத் தாமே ஆராய் வார்க்கும் உரைவகை கொண்டு கற்றும், கேட்டும் செல்வார்க்கும் கல்வி ஆற்றலிற் பேதங்காணப்படினும் பயன்வகையிற் பேதமின்மை தேற்றமாதலின், இவ்வசன நூல் திருக்குறள் மூலமும் உரையும் கற்றார்க்குத் தாமறிந்த பொருளோ டொப்புநோக்கற்கும், பாடசாலை மாணாக்கர் கற்றுப் பொருளறிதற்கும், இல்லத்துள்ள பெண்கள் தாமாகப் படித்தோ தங்கள் கணவர் படிக்கக் கேட்டோ பயனடை தற்கும், நூலிற்பயில அவகாசமில்லாத பிறரும் சிறு பொழுதிற் பேருணர்ச்சி கொள்ளற்கும் ஏற்ற சிறப்பினதென்பது என் துணிபு.
        இங்ஙனம்,
        அ. சண்முகன்.
----
[#] சாவாமருந்து கருநெல்லிக்கனி யென்பதை அதிகனென்ற வள்ளலிடம் ஒளவைப் பிராட்டியார் பெற்றுண்டு சிரஞ்சீவியாயிருந்த வரலாற்றால் அறிக. (புறநானூறு - 9.)
-------

யாழ்ப்பாணம், சுன்னாகம் வித்துவான் ஸ்ரீமத். அ. குமாரசுவாமிப் பிள்ளையவர்கள் சாட்சி வாக்கியம்.

மதுரைத் தமிழ்ச்சங்கத்து வித்துவான்களுள் ஒருவரும் நமது நண்பருமாகிய ஸ்ரீமான் மு.ரா. அருணாசலக் கவிராயரவர்களால் எழுதப்பட்ட ”திருக்குறள் வசனம்" என்னும் புத்தகம் எம்மால் ஆராய்ந்து வாசிக்கப்பட்டது. வாக்கியங்களெல்லாம் அண்மையும், தகுதியும், அவாய் நிலையும் பெற்றுச் சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல், நவின்றோர்க்கினிமை முதலிய அழகுடையனவாய் விளங்குகின்றன. கவிகளின் கருத்தும், பொருளும் இலகுவிற் புலப்படும் வண்ணம் எழுதப்பட்டிருக்கின்றன. பரிமேலழகருரையையும் இது நன்கு விளக்கும். இதனைத் தமிழ்நாட்டிலேயுள்ள பாடசாலைகளி லெல்லாம் ஒரு பாடமாக நியமித்துக் கற்பித்து வருதல் பெரிதும் நன்மை பயக்கும்.

இது, மாணவகக்கன்றி உபாத்தியாயர்களுக்கும் இலகுவிற் பயன் கொடுக்கும். மற்றுத் திருக்குறள் படிப்போர்க்கும் இலகுவிற் பயன் கொடுக்கும். ஆதலால் தமிழ்க் கல்வியில் விருப்புடையார் யாவரும் இதனை விருப்பொடும் வாங்கிக் கற்றுணர்வாரென்பது எமது கருத்து.
        இங்ஙனம்.
சுன்னாகம்.         அ. குமாரசுவாமிப்பிள்ளை,
-------

மகிபாலன்பட்டி வித்துவான் ஸ்ரீமத் மு. கதிரேசச் செட்டியாரவர்களெழுதியது.

கணபதி துணை.
மதுரைத் தமிழ்ச்சங்க வித்துவான் ஸ்ரீ மு.ரா. அருணாசலக் கவிராயரவர்கள் எழுதிய "திருக்குறள் வசனம்" என்னும் நூலை அவ்வாக்கியோராற் பெற்றுப் படித்து மகிழ்ந்தேன். தமிழ்ப் பெரு நாவலராகிய திருவள்ளுவதேவர் திருவாய் மலர்ந்தருளிய திருக்குறளென்னுந் தெய்வத் தமிழ்மறையானது, சொற்சுருக்கமும் பொருட் பெருக்கமும் தன் பாற்செறியத் தான்றோற்றிப் பல்லாயிரம் யாண்டு செல்லினும் உலகியல் மறையியல்களைப் பற்றி நினைப்பார் கருத்து வகைகளனைத்தும் அவ்வப்பொழுது அநுபவத்திற் கண்டு கூறுவது போலப் பொருள்களை அறிவுறுத்தும் ஆற்றல் பெரிதுடைய தென்பது யாவரு முணர்வர். இம்மாட்சி நோக்கியன்றே, மேனாட்டுப் பெரும்புலவர்களும் பிற தேயத்துப் பண்டிதர்களும், நிலவுலகத்து வழங்கும் பல பாஷைகளினும் இது போல் உறுதிப் பொருள்களை நடுநிலை பிறழாதெடுத்துத் திட்பமுறப் போதிக்குஞ் சிறந்த நூல் ஒன்றுமின்றெனத் துணிந்து தத்தம்பாஷைகளிற் செய்யுளுருவமாகவும் வசனவுருவமாகவும் மொழிபெயர்த்துப் படித்தின் புறுவராயினர். கிடைத்தற்கரிய திருமணி போன்ற இப்பெருநூல், தமிழிலக்கண இலக்கியங்களைச் செவ்வனே கற்று அறிவு முதிரப்பெற்ற புலவர்களாலே பொருளுணர்தற்குரிய தென்பதும், இதற்குப்பல ரியற்றிய உரைகளெல்லா-வற்றினுஞ் சிறந்து மூலத்தைப்போற் சொற் சுருக்கமும் பொருட் பெருக்கமும் பெற்றுத் திகழ்வது பரிமேலழக ருரையேயென்பதும், அவ்வுரையும் இலக்கண இலக்கிய வல்லுநராற் படித்துணர்தற்குரியதா மென்பதும் யாவரும் அறிந்தனவாம்.

மிகவும் மேலான அரும்பொருள்களைப் பண்டிதரேயன்றிச் சிறிய துகற்றாரும் உணர்ந்தின்புறுவராயின், அது நந்நாட்டின் நாகரிக வளர்ச்சிக்கு மிகச் சிறந்த சாதனமாகுமென்பதிலையமின்று. சிறப்பக் கற்றார் சிலரும் சிறிது கற்றார் பலருமாதலின் அப்பலரும் உணர்ந்து மகிழ நுண் பொருள்களை விளக்கியீதல் சிறந்தவுபகாரமாகுமன்றோ ? இவ்வுபகாரச் செயலால் வரும் பெரும் புண்ணியத்தை ஸ்ரீ கவிராய ரவர்கள் பிறர்க்கின்றித் தாமே கவர்ந்தனரென்னலாம்.

அபிப்பிராயங்கள். அரிய பெரிய விஷயங்களெல்லாம் வசன வுருவ நூலாக அமையப்பெற்ற ஆங்கில மொழி யாண்டும் பரவிய இக்காலத்தில் உள்ளார் பெரும்பாலாரும் நம் தேய மொழியிலும் அங்ஙனமே வசன நூல்களைக்கற்க விரும்புகின்றனரென்ப துண்மையாதலால் இது, காலங்காதிய அறச்செய்கையும் ஆயிற்று.

இனி, ஸ்ரீ கவிராயரவர்கள், ஒவ்வொரு திருக்குறளையும் பரிமேலழகருரையை நன்றுதழீஇ, அவதாரிகை, அதிகார இயைபு, ஒவ்வோரதிகாரத்தினும் ஓரினப்பட்ட ஒன்று முதற் பல குறள்களின் திரண்ட கருத்துப் பொருள் இவைகளை நன்கு விளக்கியும், இன் றியமையா இடங்கடோறும் விசேடவுரையில் வேண்டுவன தந்தும், இலக்கண நெறி தழீஇய மிக அழகிய எளிய சொற்களால் வசனவுரு வாக்கிச் சிறிது கற்ற ஆண் பெண் இருபாலாரும் அறிந்து கொள்ளும் வண்ணம், இருப்புக் கருவூலத்துள்ள இரத்திருக் குவியல்களைத் திற வுகோல் கொண்டு திறந்து பெற அறியார்க்கு மெல்லிய ஆடையின் முடிந்து ஈந்தாங்குத் தந்திருக்கின்றனர். கற்றுணர்ந்த புலவரும் இதனைப் படிப்பாராயின், சிலவிடத்துள்ள ஐயமொழியு மென்பதி லையமின்று. இதற்குமுன் பலர் இவ்வரு நூலை இலகுப்படுத்தப் பல வாறு முயன்று செய்துளாரெனினும் அவையெல்லாவற்றுள்ளும் இதுவே சிறந்ததென்று கூறுவதன் மிகையாகாது.

ஸ்ரீ கவிராயரவர்கள் நல்ல தமிழாராய்ச்சியும், கவித்துவ சக்தியும், வசனம் எழுதும் ஆற்றலும், ஒழுக்கமும் நிரம்பப் பெற்றவர்கள் ளென்பது யாவருமுணர்வர். இன்னும் இவர்களெழுதிய "திருக்குற்றாலத் தலபுராண வசனம்" முதலிய வசன நூல்களும் நம்மவர் க்கு மிகவும் உபயோகமானவை.

நந்நாட்டுப் புலவரொவ்வொருவரும் இதுபோல், காலவியல்பறிந்து கல்வி பரவுதற்குரிய வுபகாரச் செயலை மேற்கொள்ளுவராயின் நம் மக்கள் விரைவில் பேரறிவுடையராய் விளங்குவரென்ப தொருதலை.

இப்பேருபகாரத்தைச் செய்த ஸ்ரீ கவிராயரவர்களுக்கு நாம் செய்யக்கிடப்பதாகிய கைம்மாறு வேறொன்றுமின்றெனினும், நம்மவரோவ்வொருவரும் "திருக்குறள் வசன" புத்தகத்தில் ஒவ்வொரு பிரதி வாங்கிப் படித்தின் புறுதலோடு, இன்னும் பல நன்னூல்களை யிதுபோல், தமிழ்மக்கள் எளிதிற் கற்குமாறுள்ள பெருமுயற்சியை இவர்கள் மேற்கொண்டு முடிக்கும் வண்ணம் இறைவன் திருவருள் பாவிக்கவென வாழ்த்துதலே நாம் செயற்பாலதாம்.

21-6-13
மகிபாலன்பட்டி,         இங்ஙனம்,
        மு. கதிரேசன்.
------------
உரிமை உரை.


திருவள்ளுவ நாயனரருளிச் செய்த தமிழ் வேதமாகிய திருக்குறள் மூலத்தையும் பரிமேழலக ரெழுதிய உரையையுந் தழுவி யானெழுதிய திருக்குறள் வசனத்தை, பாண்டி நாட்டிலுள்ள இராமநாதபுரம் சமஸ்தானத்தைச் சேர்ந்த நயினார் கோயிலை அடுத்த மும்முடிகாத்தான் கிராம வாசிகளாகிய கார்காத்த வேளாளர் மரபில் ''தோன்றிற் புகழொடு தோன்றுக'' என்னுந் திருக்குறட்கு இலக்கியமாகத் தோன்றித் தமிழ்க் கல்வியை நிரம்பக் கற்றதோடு உத்தியோகத்தினிமித்தம் ஆங்கில பாஷையையுங் கற்றுத் தெளிந்து சிவநேசப் பெருஞ் செல்வம் வாய்ந்து அகவிருளை யோட்டுதற்காகுங் கருவியாகிய வித்தியா தானத்தை மேற்கொண்டொழுகுதல் போலப் புறவிருளை யோட்டுங் கருவியெனச் சில சிவ க்ஷேத்திரங்களிலே திருவிளக்குப் பணிவிடையும் பிற தருமங்களும் நாடோறுஞ் செய்து கொழும்புப் பட்டணத்தை யடுத்த குருநாகல்லில் இஞ்சினீர் உத்தியோகத்திலமர்ந்திருக்கும் ஸ்ரீமாந் வ. சிதம்பரப் பிள்ளையவர்களது நற்குண நற்செய்கைகளுக்கு அறிகுறியாக உரிமை யாக்குகின்றேன். அவர்களிதை யங்கீகரித்துக் கொண்டு நித்தியானந்த செல்வச் சிரஞ்சீவியாக நீடூழி காலம் வாழ்வார்களாக. சுபம், சுபம், சுபம்.

27-6 -- 13 இங்ஙனம்.
மதுரை         மு. ரா. அருணாசலக் கவிராயர்.
        மதுரைத் தமிழ்ச்சங்க வித்துவான்.
--------------------

THIS BOOK,
as a token of highest esteem, is most respectfully dedicated to
M. R. Ry. V. Sithampara Pillai Avergal, Engineer, Kurunegala, Ceylon, who belongs to an illustrious and highly respectable Karkatha Vellala family of Naiynar Covil, in Mummudi Kathan in the Ramnad District of Pandy Nadu, South India,

By
        M. R. Arunahcala Kavirayar, Avergal,
        Pundit Tamil Sangam (Council of Learning) , Madura.
-------------

திருவள்ளுவர் பெருமையும், திருக்குறட் பெருமையும்

கடவுள் துணை.

திருவள்ளுவரென்பவர் செந்தமிழ்நாடு செய்தவப் பயனால் [#]யாளிதத்தரென்னும் பிராமண முனிவரது அருமைப் புத்திரராய் [§] ஆறு சகோதரருடன் அவதரித்தவர். இல்லற ஒழுக்கத்துக்கு ஏற்ற நற்குண நற்செய்கைகளெல்லாம் இயைந்த வாசுகி யென்னும் மனைவி யாருடன் அவ்வில்லற நிலையிலே வழுவாது நின்றவர்; இவர் இருக்கு முதலிய நான்கு வேதங்களிலும் இலைமறை காய்போலப் பால இடங்களிலும் சிதறிக்கிடந்த உண்மைப் பொருள்க ளெல்லாவற்றையும் திரட்டி வெள்ளிடை மலை போல் விளங்கும்படி திருக்குற ளென்னும் தமிழ் வேதத்தைச் செய்து கடைச்சங்கத்தில் அரங்கேற்றும்போது வந்திருந்து கேட்ட நாமகள் திருவள்ளுவமாலை (2) ஆவது கவியில், படைப்புக் காலத்தில் பிரமதேவரது நாவிலிருந்து இருக்கு முதலிய நான்கு வேதங்களையுஞ் சொல்லி மத்திய காலத்தில் பாரதமாகிய வேதத்தைச் சொல்லி அதற்குப் பிற்காலத்தில் திருக்குறளாகிய வேதத்தைச் சொல்லி என் வாக்குத் திருவள்ளுவர் வாயினிடத்து உள்ளதென்று கூறினள்.
-------
[#] யாளி தத்தர் புத்திர ரென்பதை ஞானாமிர்த நூலில் 33 ஆவது அகவலிற் காண்க.
[§] ஆறு சகோதரராவார் - கபிலர், அதிகமான், வள்ளி, முறுவை, ஒளவை, உப்பையென்பவர். இதை மேற்கூறிய 33 ஆவது அகவலுரையிற் காண்க.
----

நாமகள் வாக்குத் திருவள்ளுவர் வாயினிடத்துள்ளதால் அவர் திரிமூர்த்திகளி லொருவராகிய பிரமதேவரது அமிசமாகத் திருவவதாரஞ் செய்தன ரென்பதும், திருக்குறள் அரங்கேற்றத் தொடங்கியபோது அவரோடு சங்கப்பலகையில் ஒப்ப இருந்து கேட்டற்குத் தகுதியுடையார் எவரென்று பலரும் எண்ணமுற்று நின்ற இடத்து எங்கு நிறைந்த அசரீரியாகிய முதற்றெய்வம் முருகக் கடவுள் அம்சமாகிய உருத்திரசன்மரே என்று அருளிச்செய்ததுடன் வள்ளுவரைத் தெய்வத் திருவள்ளுவரென்று அருளிச்செய்ததால் திருவள்ளுவர் பெருமையும் திருக்குறட் பெருமையும். திருவள்ளுவர் ஒரு தெய்வமே என்பது தெளிவாக விளங்குகின்றன. இவ்வுண்மையுணர்ந்தன்றே (8) ஆவது கவியில் மாமூலனார் அறம் பொருள் இன்பம் வீடு என்னும் அவ்வேதப் பொருள்களாகிய நான்கினது கூறுபாட்டையும் தெரிந்து உலகத்தார்க்குச் சொல்லியருளிய தெய்வத்தை மறந்தானாலும் மனிதனென்றாவது இழிந்த சாதியானென்றாவது உட்கொண்டு வள்ளுவனென்று சொல்லுதற்கு ஒருவனிருந்தால் அவன் அறிவில்லாதவனாவன்; அவன் வாயிற் பிறந்த சொல்லை அறிவுடையார் கொள்ளாரென்றுங் கூறினர். மறந்து சொன்னாலும் அறிவில்லாதவ-னென்றால் நினைப்புடன் சொல்லுவான் அறிவில்லாதவனினும் அறிவில்லானென்ப-தாயிற்று. (முழுமூடனெ ன்றபடி) அசரீரிவாககை முதலாவது கவியிற் காண்க.

இனி, உக்கிரப் பெருவழுதியார் (4) ஆவது கவியில் நான்கு வேதங்களின் மெய்ப்பொருளை அறம் பொருள் இன்பமென்னும் முப்பொருளாக நான்கு முகத்தையுடைய பிரமதேவர் தமது திருவுருவத்தை மறைத்துத் திருவள்ளுவரா யவதரித்துச் சொல்லிய திருக்குறள் நூலெனக் கூறுதலாலும் (28) ஆவது கவியில் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் தாமரைப்பூ மேலிருக்கின்ற பிரம தேவர் திருவள்ளுவராகி எனக் கூறுதலாலும் பிரமதேவரே திருவள்ளுவரென்பதும் திருக்குறள் வேதப் பொருளடங்கிய நூலென்பதும் யாவராலும் மறுக்கப்படாதனவாம். இன்னும் தன்னிகரில்லா மன்னர் பெருமானாகிய அவ்வுக்கிரப் பெருவழுதியார் ஒன்றற்கொன்று மாறுகொளக் கூறலாகிய எனை நூற்பொருள்கள் போல்வதன் றெனத் தோன்ற நான்கு வேதங்களின் மெய்ப் பொருளைக கூறிய திருக்குறளெழுதிய புத்தகத்தை வந்தித்து வாழ்த்திச் சிந்தித்துக் கேட்கவேண்டுமென்று ஆணை தந்தமையால் ''மன்னனெப்-படியோ மன்னுயிரப்படி'' என்னும் பழமொழிப்படி நாமெல்லாரும் அங்கனஞ்செய்து வரல் வேண்டுவது நியதியாயிற்றென்பது காண்க.

மேற்கூறிய அசரீரி, நாமகள், உக்கிரப் பெருவழுதியார் ஆகிய மூவர் திருவாக்கி-னின்றும் வந்த வாக்கியங்களால் எல்லாராலும் திருக்குறள் தமிழ்வேதமென்று தெளிதற்பாலதாயிற்று. இனி, வேதம் அநாதியாதலின், ஒரு காலத்துங் கெடாதென்பது தோன்ற இறையனாராகிய சோமசுந்தரக் கடவுள் (3) ஆவது கவியில் புலவர்க் கரசனாகிய திருவள்ளுவன் வாயிற் பிறந்த திருக்குறளானது எக்காலத்துக் தனது அழகு கெடாமல் நீடூழி சென்றாலும் நிலை நின்று இம்மை மறுமைப் பயன்களை விளைவிக்கும் குணமுடையதாய் விளங்கு மாதலால் குறைவுபடாத செய்யதளிர்-களையுடைய கற்பகத்தின் தெய்வத்தன்மை பொருந்திய மலர்போலுமென ஆசீர்வதித்தருளினர்.

இனி, திருக்குறளரங் கேற்றும்போது கேட்டுத் தெளிந்த சங்கப் புலவர்களொவ்-வொருவரும் ஒவ்வொரு வெண்பாவாற் கூறிய அபிப்பிராயங்கள் வருமாறு:

(5) ஆவது கவியில் கபிலர் - வீடுதோறும் வளர்க்கப்படுகின்ற கிளி முதலிய பெண்பறவைகள் பெண்கள் பொற்சுண்ணப்பொடி பிடிக்கும்போது பாடும் உலக்கைப் பாட்டால் நித்திரை செய்கின்ற வளந்தங்கிய நாட்டையுடைய பாண்டியனே! திருவள்ளுவரால் அருளிச் செய்யப்பட்ட மிகச்சிறிய இக்குறள் வெண்பா மிகப் பெரிய பொருளைத் தன்னுள்ளடக்கிக் காட்டுதலானது தினையரிசி யின்ளவுக்கும் ஒவ்வாத சிறிய புல்லினது நுனியிடத்துள்ள பனிநீர் உயர்ந்த பனைமரத்தினது நிழலைத் தன்னுளடக்கிக் காட்டுங்குணம்போலும் எனக்கூறினர். இதனால், சுருங்கச் சொல்லல் விளங்கவைத்த லென்னும் அழகுடையது திருக்குறளென்பதும், அரங்கேற்றுஞ் சபையில் தலைவனாயிருந்தவன் பாண்டிய னென்பதும் தெரிகின்றன. பாண்டியன் தலைவனா யிருந்தானென்பது இதனாலன்றியும் (2) ஆவ து கவியில் நாமகளும் (14) ஆவது கவியில் பொன்முடியாரும் (19) ஆவது கவியில் கீரந்தையாரும் (32) ஆவது கவியில் பெருஞ் சித்திரனாரும் (50) ஆவது கவியில் கொடிஞாழல்மாணி பூதனாரும் கூறியதனாலுங் காண்க.

(6) ஆவது கவியில் பரணர் - திருமாலும் குறளாய் சிறுவடிவமாய்ப் பிறந்து வளர்ந்து தன்னிரண்டு பெரிய அடிகளால் உலகமுழுவதையும் விரும்பி அளந்தான். மெய்யறிவினையுடைய திருவள்ளுவரும் தம்மிடத்திலுண்டாகிய நிலையிலே நிற்கின்ற குறள் வெண்பாவின் இரண்டு சிறிய அடிகளால் உலகமெல்லாவற்றிலும் உள்ளோரால் நினைக்கப்பட்ட எல்லாப் பொருள்களையும் ஆராய்ந்து அளந்த திருவள்ளுவர் பெருமையும் திருக்குறட் பெருமையும் தார் என்றனர். திருமால் போலத் தாமே குறளாதலும், ஆகிய அந்நிலை நில்லாது வளர்தலும், பெரிய 2 அடிகளால் உலகத்தை அளத்தலும் இல்லாமல் தம்மிடத்திலுண்டாக்கப்பட்ட அந்நிலையிலே நிற்கும் குறளின் சிறிய 12 அடிகளால் உலகத்தாரது அளவுபடாத நினைப் பின் விஷயங்க-ளெல்லாவற்றையும் அளந்தறிதலால் திருவள்ளுவர் பெருமை இவ்வளவென்று அளவிட்டுச் சொல்லமுடியுமோ? முடியாது.

(7) ஆவது கவியில் நக்கீரனார் - தாமே வேதப்பொருள் முழுவதையும் அறிந்து குளிர்ந்த தமிழ்ப் பாஷையின் குறள் வெண்பாக்களால் ஒருவரும் விட்டு நீங்கப்படாத அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கு பொருள்களையும் அவற்றை அறியாதவர்களுக்கு இலேசாகத் தெரிந்துகொள்ளும் விதம் கிரமமாகச் சொல்லி அருளிய திருவள்ளுவருக்கும், மதுரமிக்க நீரைச்சொரிந்து உதவிய மேகத்துக்கும் இவ்வுலகத்தார் பிரதியுபகாரமாகச் செய்யும்படி யிருந்தது ஒன்றுமில்லை. திருவள்ளுவரும் மேகமும் வாழ்கவென்று வேண்டிக் கோடற்பொருளாக வாழ்த்தினர். தாமே முழுதும் அறியதல் எவ்வாறெனில், ஒருவர் உபாத்தியாயராயிருந்து அறிவிக்க அறியும் நம் போன்ற மனிதவுருப் பெற்றிருந்தாலும் திருவள்ளுவர் தெய்வமாதலாலென்க.

(8) ஆவது கவியில் மாமூலனார் - கூறிய அபிப்பிராயம் (3) ஆவ து கவியின் அபிப்பிராயத்துக்கு ஒரு சான்றாக அதன்பின்னர் எழுதப்பட்டது கண்டுகொள்க.

(9) ஆவது கவியில் கல்லாடனார் - ஆறுவகை மதத்தாருள் ஒரு மதத்தார் தமது நூலில் உலகமும் உயிரும் கடவுளுமாகிய பொருள்கள் ஒன்றேயென்று நிலை நிறுத்துவாராயின், மற்றொரு மதத்தார் அதை மறுத்துத் தமது நூலிலே வேறாமென்று நிலை நிறுத்துவர். அவர் கூறியபடியே வேறென்று ஒரு மதத்தார் நிலை நிறுத்துவாராயின், பின்னொரு மதத்தார் அதனை இல்லையென்று மறுப்பர். ஆதலால், சமய நூல்களெல்லாம் இவ்விதம் மறுக்கப்படுகின்றன; அவை போலாது திருவள்ளுவராலே அறத்துப்பால் பொருட்பால் காமத்துப்பால் என மூன்று வகுப்பாகச் சொல்லப்பட்ட திருக்குறள் நூலைப் பலவகைப்பட்ட சமயத்தாரும் சாதி பாரும் தேசத்தாரும் காலத்தா திருவள்ளுவர் பெருமையும் திருக்குறட் பெருமையும். ஒருவரும் ஒரு விரோதமுமில்லாமல் அங்கீகரிப்பார் என்றனர். இதற்குச் சாட்சியாக இக்காலத்தில் எல்லா மதத்தாரும் எல்லாச் சாதியாரும் அவரவர் பாஷைகளிலே யெழுதிவைத்துப் படித்து வருதலைக் கண்டறிக. இதனால், வேதம் பொதுவெனக் கூறுதல் திருக்குறள் நூலுக்கே சேருமென்பதாயிற்று. இவ்வுண்மையை (23) ஆவது கவியில் வெள்ளிவீதியார் இந்த நூலுக்கு உரியவரல்லாதாரில்லை யென்வெளிப்படையாக விளக்கினார். ஆறுவகை மதமாவன: வியாசமதம், சைமினி மதம், பதஞ்சலி மதம், கபில மதம், கணாத மதம், அக்ஷபாத மதமாம். இவையன்றிச் சைவம் வைணவம் முதலியனவுமாம்.

(10) ஆவது கவியில் சீத்தலைச் சாத்தனார் - திருவள்ளுவரது பாட்டுக்களின் முன்பின் முறை தெரிதற்கிடனாகிய திருக்குறளானது தமிழ்நாட்டு மூவேந்தராகிய சேர சோழ பாண்டியர்கள் தங்கள் தங்கள் பெரிய முடிகளின் மேலுங் கொள்ளப்பட்ட மாலையல்லவா? என்றனர். இதனால், திருக்குறள் அரங்கேற்றிய காலம் சேரசோழ பாண்டியர் ஒருங்கு கூடித் தமிழ்நாட்டை அரசாண்டு வந்த காலமென்பது விளங்குகின்றது. சீத்தலைச் சாத்தனார் இதுவரை சங்கத்தில் அரங்கேற்றப்பட்ட நூல்களுள் திருக்குறளொன்றே பிழையில்லாத நூலென மதித்தனர். இதனை மருத்துவன்றாமோதரனார் (11) ஆவது கவியிலே கூறியுள்ளார். தமிழரசர் மூவர் முடிமேலுங் கொள்ளப் பட்டது என்றதனால், திருக்குறள் தமிழ் நூல்களிலெல்லாம் உயர்ந்த தென்பது ஒருவர் சொல்லித் தெரியவேண்டுவதில்லை.

(11) ஆவது கவியில் மருத்துவன்றாமோதரனார் - சீந்தி நீர்ச் சருக்கரையும் சுக்குப்பொடியும் தேனொடு கலந்து பிசைந்து மோந்தபின் தலைக்குத்து உடைய எல்லாருக்கும் அத்தலைக்குத்து நீங்கி விடும். திருவள்ளுவரருளிச்செய்த அறமுதலியப் பாலினால் சீத்தலைச் சாத்தனாருக்குத் தலைக்குத்து இல்லையாயிற்று என்றனர். அஃதாவது: மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் திருக்குறளுக்கு முன் கேட்கப்பட்ட நூல்களிலெல்லாம் பல சொற்பிழைகளும் பொருட் பிழைகளும் கண்டு இப்பிழைகளைக் கேட்கலாயிற்றே யென்று மனம் வருந்தித் தலையிலே அறைந்து கொள்வர். அதனாலே அவர் தலையிலே சீ ஓடிக்கொண்டே யிருத்தலுடன் புண்பட்டு மண்டைக்குத்து உண்டாயிருந்தது. அக்குத்து. திருக்குறள் கேட்கும்போது ஒரு பிழையும் காணப்படாமையால் அது கேட்டவுடன் நீங்கிற்றென்பதாம். இயற்கையாயுண்டாகிய தலைக்குத்துக்குச்சீந்தி நீர்ச் சருக்கரை முதலவிய மூன்றும் மருந்தானாற்போலச் செயற்கையாகிய சீத்தலைச்சாத்தனார் தலைக்குத்துக்கு அறத்துப்பால் முதலிய மூன்று பாலும் மருந்தாயின. குற்றமற்று விளங்குதல் தெய்வமாதலின், அதுபோலக் குற்றமற்று விளங்குந் திருக்குறளும் தெய்வத்தன்மையுடைய தென்றறிக. பிழை - குற்றம்.

(12) ஆவது கவியில் நாகன்றேவனார் - குளிர்ச்சி, இன்சுவை, நல்ல மண முதலியவற்றால் சிறந்த ஒரு தாமரைக் குளத்தினிடத்தே மூழ்குவோர் மேற்கூறியவாறு சிறத்தலில்லாத வேறு தண்ணீரை விரும்பார். அதுபோல், அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நாற்பொருளடங்கிய முப்பால்களுடைய திருக்குறளில் மூழ்குவோர் (கருத்து அழுந்திப் படிப்பவர்) மேற்கூறியவாறு பொருளடக்கம் பெறாத வேறு நூல்களை வீணாகப் படிக்க விரும்புவாரோ? ஆதலால், இவ்விரண்டும் ஆச்சரியமன்று என்றனர்.

(13) ஆவது கவியில் அரிசில்கிழார் - வேதத்தில் ஒன்றோ டொன்று மயங்கி நின்ற அற முதலிய நால்வகைப் பொருள்களையும் இப்பூமியிலுள்ளார் அறியும் பொருட்டு வேறாகப் பிரித்து அந்தந்தப் பொருள் அந்தந்த வகையோடு சேரும்படிக்குச் சுருங்கிய சொல்லால் பொருள் விளங்க விரியும்படி சொல்லுதல் வல்லவர் திருவள்ளு வரல்லது வேறில்லை என்றனர். இதனால், சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல் முதலிய அழகுகள் எப்படி இவரால் அமைக்கப்பட்ட டனவோ? அப்படிப் பிறரால் அமைக்கப்படுதல் கூடாதென்பதோடு நூலுக்கும் நூலாசிரியருக்கும் உள்ள தகுதி (உயர்ச்சி)யுங் காணப் பட்டது.

(14) ஆவது கவியில் பொன்முடியார் - முற்காலத்துக் காசிப முனிவராலே தரப்பட்ட திருமாலவதாரமாகி வந்து மாபலிச்சக்கிர வர்த்தியினிடத்து யாசித்த குறளை மண்ணிடத்தே நின்று உலகத்தை அளந்த குறளென்று சொல்லுவர். தாம் இங்கே எழுந்தருளித் திருவள்ளுவராலே தரப்பட்ட குறள், நூலின் ஒழுங்கோடு கூடி விண்ணிடத்தே நின்றும் மண்ணிடத்தே நின்றும் உலகத்துப் பொரு
திருவள்ளுவர் பெருமையும் திருக்குறட் பெருமையும். எல்லாவற்றையும் அளந்தது என்றனர். விண்ணிடத்தே நிற்றல் ஒலிவடிவாலென்றும் மண்ணிடத்தே நிற்றல் வரிவடிவாலென்றுங் கொள்க. இந்தக் குறளுக்கு நூலின் ஒழுங்கோடு கூடலும் விண் ணித்து நிற்றலும் அதிகமாம். (6) ஆவது கவியில் திருமாலுக்கும் திருவள்ளுவருக்கும் ஒப்புமை குறித்துச் சொன்னதுபோல இங்கே திருமாலவதாரத்துக்கும் திருக்குறளுக்கும் ஒப்புமை குறித்துச்சொல்லிய வேறுபாடு கண்டுகொள்க.

(15) ஆவது கவியில் கோதமனார் - அந்தணர்கள் நான்கு வேதங்களையும் ஏட்டில் எழுதிப் படித்தால் உதாத்தம் அது தாத்தம் சுவாதம் என்னும் ஓசை வழுப்பட எல்லாராலும் ஓதப்பட்டு வலிமை குறையுமென்று நினைத்து வாய்ப்பாடமாகப் படித்துக் காப்பாற்றி ஏட்டினிடத்து எழுதாராயினர். திருவள்ளுவரது திருக்குறளாகிய வேதத்தை ஏட்டினிடத்தெழுதிவைத்து வலிமையுடைய வரும் வலிமையில்லாதவரும் ஓதினாலும் வலிமை குறைதலில்லை என்றனர். எதனாலெனின், மேற்கூறிய சுரபேதங்கள் இதற்கில்லாமையாலென்க. எனவே, சொல்லாற் சிறந்தது நான்கு வேதம். பொருளாற் சிறந்தது திருக்குறள் வேதமென்றதாயிற்று.

(16) ஆவது கவியில் நத்தத்தனார் - பாயிரமாகிய நாற்பது குறளோடு சேர்ந்து ஆயிரத்து முந்நூற்று முப்பதாகிய அரிய குறள் வெண்பாக்களையும் ஓதியுணர்ந்த பின்னர் வேறிடத்துச் சென்று ஒருவர் வாயாலே சொல்லக் கேட்டறிதற்கு நூல்களிருக்கின்றனவோ? இல்லை. நிலைபெற்ற தமிழிலே தாம் புலமை நிறைந்தவராகிப் பிறர் தம்மிடத்தில் வந்து எல்லாப் பொருள்களையுங் கேட்டறியும்படி உயர்வாகிய ஆசனத்திலிருக்கலாகும் என்றனர். எனவே, புலமை நிரம்புதற்கு இந்நூலொன்றே போதுமென்பதும் இதனுள் எல்லா நூற்பொருள்களும் அடங்கியுள்ளன வென்பதுங் காண்க.

(17) ஆவது கவியில் முகையலூர்ச் சிறுகருந்தும்பியார் - திருவள்ளுவரது திருக்குறளின் மேற்பட்ட நூலொன்று இருக்கிற தென்று சொல்லவல்லவர் எவ்வகைப்பட்ட புலவருள்ளும் இல்லை. ஆதலால், நாம் திருக்குறளைக் குறித்துச் செய்யக்கடவன யாவையெனில், இதன் பொருளைச் சிந்தித்தலும், சிந்தித்ததைப் பிறருக்குச் சொல்லுதலும், பிறராலே சொல்லப்பட்டதனைத் தெளிதலும் அல் லவா? என்றனர். எனவே, இந்நூற்பயிற்சி செய்து நடக்குமாறு இவையென்பதாயிற்று.

(18) ஆவது கவியில் ஆசிரியர் நல்லந்துவனார் - உயர்ந்தோ சால் சொல்லப்பட்ட பல நூல்களாலும், தவறுதலில்லாத அரிய வேதத்தினாலும் காப்பாற்றிவைத்திருந்து உலகத்தாருக்குச் சொல்லப்பட்ட பொருள்களெல்லாம் தம்மிடத்தே காட்டும்படி திருக்குறளை அருளிச்செய்த திருவள்ளுவருக்குச் சமானமானவர் எவ்வகைப்பட்ட வித்துவான்களுள்ளும் இல்லை என்றனர்.

(19) ஆவது கவியில் கீரந்தையார் - திருவள்ளுவர் தமக்கு ஆட்சியாகிய பாடற்றொழிலால் முதற்பாவாகிய குறள் வெண்பாவால் அறமுதலிய மூன்று பாலிலும் தருமார்த்த காமமோக்ஷமென்ற ' நான்கு பொருளையுங் கூறினர் என்றனர். இங்கே திருவள்ளுவருக்குப் பாடற்றொழில் ஆட்சி யென்றதனால், திருக்குறளன்றி வேறு பல நூல்களுஞ் செய்திருப்பாரென்பது ஆராயத்தக்கதாம்.

(20) ஆவது கவியில் சிறுமேதாவியார் - திருக்குறள் (கங்க) அதிகாரத்துள் பிற்காலத்தில் முறை பிறழ்ந்து வழங்காதிருக்கும் படி திருவள்ளுவர் கூறிய முறையறிந்து பாயிரம் நான்கு அறம் முப்பத்து மூன்று ஊழ் ஒன்று பொருள் எழுபது இன்பம் இருபத் தைந்து என்று கூறினர்.

(21) ஆவ து கவியில் நல்கூர்வேள்வியார் - அறிஞர் வட பக்கத்தை நோக்கி வடம துரைக்கு உபகேசியாகிய பின்னைப் பிராட்டியை மணந்த கண்ணபிரானை ஆதாரமென்று சொல்லுவர். இந்தப் பக்கமாகிய நீர் வளந்தங்கிய தென்மதுரைக்கு, தாய் பிள்ளை பினிடத் தன்பு செய்வது போல உலகத்தாருக்கு அருள் செய்யும், குற்றமற்ற புலமையாகிய தேனைச் சொரிகின்ற நாவையுடைய திருவள்ளுவரை ஆதாரமென்று சொல்லுவர் என்றனர். ஆதாரம்: தாங்குதல்; அஃதா வது: அடுத்தவரை நல்வழி நடக்கச் செய்து உய்வித்தல்.

(22) ஆவது கவியில் தொடித்தலை விழுத்தண்டினார் - அறப் பாலின் உட்பிரிவுகள் நான்கு. பொருட்பாலின் உட்பிரிவுகள் ஏழு, காமப்பாலின் உட்பிரிவுகள் மூன்று எனப்பகுப்புச் செய்து தருமாத்த காமமோக்ஷங்களைக் கூறிய பெருநாவலராகிய திருவள்ளுவரே திருக்குறளில் இல்லாத பொருள் உளதாயின் அறிவர் என்றனர். உளதாயின் எனவே, இல்லை என்பதே உறுதியாயிற்று. நான்காவன : பாயிரம், இல்லறம், துறவறம், ஊழ் என்பன. ஏழாவன : அரசு அமைச்சு, அரண், கூழ், படை நட்பு, ஒழிபு என்பன. மூன்றாவன : ஆண்பாற்கூற்று, பெண்பாற் கூற்று, அவ்விருபாற் கூற்று என்பன.

(23) ஆவது கவியில் வெள்ளிவீதியார் - ஒருவராலே செய்யப்படாமல் அநாதியேயுள்ள வேதத்துக்கும், தன்வழிநடப்பார்க்குப் பயன் உண்டாதல் பொய்யாத திருவள்ளுவராலருளிச் செய்யப்பட்ட திருக்குறளுசகும் பாஷை முதலிய வேறுபாடுகள் உடை யனவாயினும், நுட்ப அறிவால் நோக்குவார்க்குப் பொருள் வேறு பாடில்லை. அவ்வேதம் ஓதுதற்கு உரியவர் அந்தணரே. திருக்குறள் ஒதுதற்கு உரியவர் எல்லாச் சாதியாருமே என்றனர். இவ் விரண்டும் வேறுபாடாம்.

(24) ஆவது கவியில் மாங்குடி மருதனார் திருவள்ளுவராலரு ளிச் செய்யப்பட்ட திருக்குறளின் குணம் ஒதப்படுவதற்கு எளிய சொற்களை யுடையதாகியும் அறியப்படுதற்கு அரிய பொருள்களை உடையதாகியும் வேதமெனப்படுகின்ற பொருளாகியும் அந்த வேதத்தைப் பார்க்கினும் மிகப் பிரகாசித்து நுண்ணறிவுடையோர் நினைக்குந்தோறும் நினைக்குந்தோறும் முன் காணப்பட்டதற்குப் பின் காணப்பட்டது சிறந்ததாகத் தோன்றி, நினைப்பவர் மனத்தை உருகச் செய்யும் என்றனர். எனவே, வேதம் ஓதுவார் மனத்தை உருகச் செய்பதென்பதாயிற்று. 'வேதமோதில் விழி நீர் பெருக்கி நெஞ்ச நெக்குருகி நிற்பவர்க் காண்கிலம்" என்றார் பிறரும்.

(25) ஆவது கவியில் எறிச்சலூர்மலாடனார் – திருவள்ளுவ நாயனார் வேதத்தின் பலவகைப்பட்ட கருத்துக்களை ஆராய்ந்து தம்மாலே செய்யப்பட்ட திருக்குறளில் இவையே உரியவை யென்று பாயிரத்துக்கு அதிகாரம் நான்கும் இல்லறத்துக்கு இருபத்தும் மூன்றும் துறவறத்துக்குப் பதின்மூன்றும் ஊழுக்கு ஒன்றுமாக
திருவள்ளுவர் பெருமையும் திருக்குறட் பெருமையும். வரையறைப்படுத்தி நான்கு பகுப்புச் செய்து கூறினர் என்றனர். இவர் கூறிய அதிகாரத்தொகை அறத்துப் பாலுக்கு மட்டுமே யாம். இவர் கூறியது போலவே,

(26) ஆவது கவியில் போக்கியாரும் (27) ஆவது கவியில் மோசிகீரனாரும் (28) ஆவது கவியில் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனாரும் (37) ஆவது கவியில் மதுரைப் பெருமருதனாரும் திருக்குறளில் வகுத்திருக்கிற பால் இயல் அதிகாரத் தொகைகளை இத்தனை இத்தனை யென்று கணக்கிட்டுக் கூறினர். ஒருவரோடமையாது பலரும் இங்ஙனம் கூறுதல் முறை பிறழாதிருத்தலை வற்புறுத்துதற் கென்க.

(29) ஆவது கவியில் மதுரைத் தமிழ்நாகனார் - முதல் வழி சார்பு என மூன்று பிரிவுடைய அற நூல் பொருள் நூல் இன்ப நூல் வீட்டு நூல் என்னும் நான்கனுள் அடங்கியிருக்கின்ற செம்பொருள் ஆக்கப் பொருள் குறிப்புப்பொருள் என்னப்பட்ட காட்சிப் பொருள் கருத்துப் பொருள்களாகிய எல்லாப் பொருள்களும் இதனிடத்தில் அடங்கியிருக்கின்றன. இதனிடத்திலில்லாத யாதொரு பொருளும் வேறெந்த நூல்களிடத்தும் இல்லை. ஆதலால், பதினாயிரம் நூறாயிரக்கணக்காகச் சொல் விரிந்த கிரந்தங்களுள்ள நூல்களால் பிரயோசனம் யாது திருவள்ளுவ நாயனாராலருளிச் செய்யப்பட்ட திருக்குறளாகிய இந்நூலொன்றே சில்வாழ்நாட் சிற்றறி வுடைய மனிதருக்கு விதி விலக்குகளை மாறுபாடின்றி உள்ளங்கை நெல்லிக் கனிபோலத் தெரிந்து உய்வதற்குத் துணையா மென்றனர்.

(30) ஆவது கவியில் பாரதம் பாடிய பெருந்தேவனார் – கதா ரூபமாயிருக்கும் பாரதம் சீராம் கதையினையும் விதி ரூபமாயிருக்கும் மனுமிருதி பழைய வேதத்தையும் ஒப்பாயிருக்கும். அறிதற்கரிய வேதாந்தப் பொருளையும் உயர்குலத்தவரன்றித் தாழ்ந்த குலத்தவரும் ஐயம் திரிபில்லாமல் அறியும்படி திருவள்ளுவர் வாக்காலுண்டாகிய திருக்குறளுக்கு உவமானமாகிய நூலொன்று இல்லை என்று கூறினர்.

(31) ஆவது கவியில் உருத்திரசன்மகண்ணர் – மணலைத் தோண்டுதோறும் நீர் பெருகுதல் போலவும் பிள்ளைகள் வாய்வைத்து உண்ணுந்தோறும் தாயினது முலையிடத்துப் பால் பெருகுதல் போலவும் சாதிசமயம் பற்றி ஒருவரும் எந்த விதத்திலும் கலகஞ் செய்தற்கு இடமில்லாத உண்மை மொழியையுடைய திருவள்ளுவரது திருக்குறளை ஆராயுந்தோறும் அறிவுடைய வித்வான்களுக்கு மேன் மேலும் அறிவு வளரும் என்றனர்.

(32) ஆவது கவியில் பெருஞ்சித்திரனார் - எதிரிகளால் மறுக்கப் படுங் குற்றமில்லாத திருவள்ளுவர் நான்கு வேதங்களாலுஞ் சொல் லப்பட்ட பொருள்களெல்லாவற்றையும் படிப்பார்க்கு வருத்தமில்லா திருக்க இனிய குறள் வெண்பாக்களால் சொல்லியதனால் பாண்டிய னே! இக்குறள் வெண்பாக்களோ? முதனூலாய் நின்று அப்பொருள்களைச் சொல்லிய வேதங்களோ? மேம்பாட்டுக்குரியன. நீ சொல்வாயாக என்றனர். மேம்பாடு - மேன்மை. சிறிதாயிருந்து படிப்பார்க்கு வருத்தம் விளையாதென்று திருக்குறளைச் சொன்னதால், பெரிதாபிருந்து படிப்பார்க்கு வருத்தம் விளைக்கும் வேதமென்ற-தாயிற்று.

(33) ஆவது கவி பில் நரிவெரூஉத்தலையார் - அற முதலிய நான்கு பொருள்களும் அக்காலத்திலுள்ள மனிதர்களுக்குத் தெரியும்படி கூறிய பழைய வேதமானது இக்காலத்திலுள்ள மனிதர்களுக்குப் படித்தற்கு அரிதென்று அப்பொருள்களை எளிதிலறியும்படி திருக்குறளைத் திருவள்ளுவர் அருளிச் செய்தனர் என்றனர். இதனால், அக்காலத்திலுள்ளவர் ஆயுள் வளர்ச்சியும் அறிவு நீட்சியும் உடையாரென்பதும் இக்காலத்தார் அவ்விரண்டுஞ் சுருங்குதலுடை யாரென்பதும் விளங்குகின்றன.

(34) ஆவது கவியில் மதுரைத் தமிழாசிரியர் செங்குன்றூர்க்கிழார் - இப்பூமியினிடத்துப் பலவேறு வகைப்பட்ட நூலுணர்ச்சிகளை யெல்லாம் ஒருங்கே கொண்ட திருவள்ளுவரை அன்றி, அவ்வுணர்ச்சி யில்லாத வேறு சிலரையும் புலவரென்று சொல்லுதல் நிலவாற் பிரகாசிக்கும் அந்தி நேரத்துக்கன்றி, இருளாற் சூழப்பட்ட அந்தி நேரத்துக்கும் மாலை யென்று சொல்லுதல் போலும் என்றனர். ஆதலால், திருவள்ளுவர் மெய்ஞ்ஞான ஒளியுடையாரென்பதும் வேறு சிலர் அஃதில்லாரென்பதும் குறிப்பித்தவாறு காண்க.

(35) வது கவியில் மதுரை அறுவைவாணிகன் இளவேட்டனார்- பின்வரக் கடவனவாகிய இன்பத்தின் காரணங்களை இன்னது செய்யெனக் கூறப்பட்ட விதிக்குறளாலும், துன்பத்தின் காரணங்களை இன்னது செய்பாதே யெனக்கூறும் விலக்குக்குறளாலும் முன்னே ஆராய்ந்தறியவும், தம்மிடத்தில் அன்பு நீங்காமல் மனங்களிக்கவும் மக்கட் கட்டத்துக்கெல்லாம் யாரும் புகழப்படும் சீர்த்தியுமடைய திருவள்ளுவர் வாயுறை வாழ்த்தாகத் திருக்குறளை அருளிச் செய்தனர் என்றனர்.

முன்னே அறிதலின் பயன் நல்லதைச் செய்தலும் பகைச் செய்யாதிருத்தலுமேயாம்.
('' ஆவ து கவிபில் கவிசாகரப் பெருந்தேவனார் - மலர்களுக்குள் 3 -மரை மலரும் பொன்களுக்குள்ளே சாம்புனதப் பொன்னும் | ஈந்ந நக்குள்ளே காமதேனுவும் யானைகளுக்குள்ளே அபிராவதழ நர்களுக்குள்ளே திருமாலும் போல, பாட்டுகளுக்குள்ளே திருவள்ளுவரது திருக்குறள் வெண்பா சிறந்ததென்று அறிவுரையோர் சொல்லுவர் என்றனர். சாம்புனதம்: நால்வகைப் பொன்களில் லொன்று. நால்வகையாவன : ஆடகம், கிளிச்சிறை, சாதரூபம், சாம்புனதம் என்பன. காமதேனு : வசிட்ட முனிவரிடத்துள்ள பசு. அபிராவதம்: இந்திரனுடைய வெள்ளையானை.

(37) ஆவது கவிப்பொருள் (26) ஆவது கவிப்பொருளோடு சேர்க்கப்பட்டது.

(38) ஆவது கவியில் கோவூர் கிழார் - தருமமுதலிய நான்கு பொருள்களையும் மண்ணுலகத்தார் வகைப்பட ஆராய்ந்து தெளியும்படி- குறள் வெண்பாக்களாலே பாடிய திருவள்ளுவ நாயனாரது முப்பால்களையுடைய புத்தகத்துக்கு வடமொழி தென்மொழி பிறமொழிகளிலே வல்ல முனிவரும் புலவருமாகிய பெரியோர் சொல்லப்பட்டத நால் முதலிய நூல்கள் சமானமாக மாட்டா என்றனர்.

(39) ஆவது கவியில் உறையூர் முதுகூற்றனார் – தெய்வத் தன்மையிற் சிறந்த திருவள்ளுவரது குறள் வெண்பாவோடு சேர்ந்து சிறந்து விளங்கும் அறத்துப்பால் முதலிய மூன்று பால்களையும் பாடியாதவருடைய நாவிற்கு இனிய வார்த்தைகள் பேசி வாழ்தல் உண்டாகாது. மனத்திற்கு இனிய சொற்சுவை உண்டாகாது. காயத்துக்கு நல்ல செய்றை உண்டாகாது என்று நினைப்பாளாகிய இலக்குமி அவரைச் சேரமாட்டாள் என்றனர். இலக்குமி படியாதாரைச் சேரமாட்டாளெனவே, படித்தவரைச் சேர்ந்திருப்பா ளென்பதாம். சேர்ந்திருத்தலாவது: மனம் வாக்கு காயங்கள் முறையே தீயவை நினைத்தாலும் சொல்லலும் செய்தலுமாகிய முக்குற்றங்கள் நீங்கச் செல்வம் பெருகி யிருத்தலாம். தீயவையாவன: வாக்கின் குற்றமாகிய கடுஞ்சொல், பொய், கோள், பயனில் கூறுதலும் மனத்தின் குற்றமாகிப பிறன் மனைவியை விரும்புதல், பிறர் பொருளை விரும்புதல், பிறன் பொருட்குக் கேடெண்ணல், பிறவுயிருக்குக் கேடெண்ணலும் காயத்தின் குற்றமாகிய பிறன் மனைவியைச் சேருதல், பிறர் பொருளை அபகரித்தல், உயிர்க் கொலை செய்தல், ஊனுண்ணுதலும் முதலியனவாம்.

(40) ஆவது கவிபில் இழிகட் பெருங்கண்ணார் - இமமைப் பயன் மறுமைப்பயனாகிய இரண்டையும் வினைப்பயன் தொடர்தற்குரிய எழுபிறப்புக்கும் ஆதம்படி ஒழுங்கான வழி பால் யாவரும் தெரிந்து கொள்ளவும் அறம் பொருள் இன்பம் என்னு முப்பால்களுள் அம் முப்பாற் பொருள்களோடு வீடுமாகிய நாற்பாற் பொருள்களது விதிகளும் நடைபெறவும் திருவள்ளுவ நாயனார் இனிய திருக்குறள் வெண்பாவைப் பாடி அருளிச் செய்தன என்றனர். வீட்டு விதி துறவறத்திற் காண்க.

(41) ஆவது கவியில் செயிர்க் காவிரியார் மகனார் சாத்தனார் - இன்பத்தைத் தருவனவாகிய ஆவனவும், துன்பத்தைத் தருவனவாகிய ஆகாதனவும் மனிதர்களுக்கு இனி, திருக்குறளிலிருந்து எடுத்துச் சொல்ல யாவரும் வல்லவராவா. தேவராகிய திருவள்ளுவர் இதிற் சொல்லியவற்றையே ஒப்பில்லாத ஒழுக்கம் பூண்டவர் செய்வார் என்றனர். திருக்குறளில் எடுத்துச் சொல்ல யாவரும் வல்லவராவ ரெனவே, வேதத்தினின் றெடுத்துச் சொல்ல அம் வுடையவரும் வல்லவராகா ரென்றதாயிற்று. ஏனெனில், வேதத்தில் அற முதலிய நான்கையும் வகைப்படுத்தி ஒழுங்குப்படக் கூறமையா லென்க.

(42) ஆவது கவியில் செய்யலூர்க் கொடுஞ்செங்கண்ணனார். வேதப் பொருளை உலகத்தார் ஓதியறியும்படி தந்திரத்தால் விரித்துத் தமிழ்ச் சொல்லாற் சொன்னார். ஆதலால், நினைப்பார் நினைக்கும் பொருள்களெல்லாம் திருவள்ளுவரது திருக்குறளினிடத்து உண்டென்று அறிவுடையோர் சொல்லுவர். தந்திரமாவது : சுருங்கிய சொல்லால் கற்பார் அறிவினளவுக்குத் தக்கவாறு பொருள் விரியும் படி சொல்லுதல்.

(43) ஆவது கவியில் வணக்கஞ் சாத்தனார் - வடமொழியும் தென்மொழியும் ஆராய்ந்து இதைக் காட்டிலும் இது சிறந்ததென்று ஒன்றை இனி, சொல்லமுடியாது. வடமொழி வேதமுடையது. தென்மொழி திருவள்ளுவரது திருக்குறளுடையது என்றனர். இத னால், தென்மொழியாகிய தமிழுக்கு வேதமில்லை யென்று சொல் லும், பழைய குறையைத் திருவள்ளுவநாயனார் திருக்குறளாகிய வேதத்தைச் செய்துவைத்து நீக்கினாரென்பது புலப்படுகின்றது.

(44) ஆவது கவியில் களத்தூர் கிழார் - இருக்கு, யசுர், சாமம், அதர்வணம், பாரதமென்னும் ஐந்து வேதங்களும் அவ்வேதத்தின் வழிப்பட்ட ஆறுவகைச் சமய நூல்களும் நம்முடைய திருவள்ளுவரால் உலகத்திலுள்ள ஆண்பாலார் பெண்பாலார்க்குப் புத்தியாகச் சொல்லப்பட்ட திருக்குறளில் அடங்கும். ஆதலால், ஒருவர் ஒரு விகற்பமும் இருவிகற்பமும் ஆகிய இருவகைக் குறள்களையுமே அறமுதலிய முப்பால்களில் ஓதி அறியப்படுகின்ற தருமார்த்த காமமோஷங்களே அவருக்குப்போதும் என்றனர். எனவே, தருமமுதலிய நான்கினுஞ் சிறந்த பொருளில்லை யென்பதாயிற்று. நம்முடைய திருவள்ளுவ ரென்றது, நம்மை நல்வழிப் படுத்த வந்த பரமாசாரிய ரென்றபடி.

(45) ஆவது கவியில் நச்சுமனார் - பாட்டுகளுக்கு அங்கமாகிய எழுத்து, அசை, சீர், அடி, சொல், பொருள், யாப்பு, அழகு, அலங்காரம், வண்ணம் என்பனவற்றில் குறைபாடில்லாமல் எக்காலத்து எவரால் எவை செய்யப்பட்டனவோ? அவையெல்லாம் இக்காலத்துத் திருவள்ளுவராலே செய்யப்பட்ட திருக்குறள் வெண்பாக்களிலே சொல்லப்பட்டன என்றனர். இதனால், ஒவ்வொரு காலத்து ஒவ்வொரு பாவலர் சிற்சில சிறந்து விளங்கச் செய்த நூல்கள் போலாது இக்காலத்தில் திருவள்ளுவரால் செய்யப்பட்ட திருக்குறளில் எல்லாஞ் சிறந்து விளங்குகின்றன என்றாயிற்று.

(46) ஆவது கவியில் அக்காரக்கனி நச்சுமனார் - சந்திரனும் திருக்குறளும் கலை நிரம்புதலால் காண்டற்கு. இனியதாகிக் கண்ணினிலையில் நிரம்புகின்ற நீர்மையுடையன என்றாலும், ஆகாயத்தில் அலைந்து திரிகின்ற சந்திரனிடத்து, திருக்குறள் நயத்தால் விளையும் இம்மை மறுமை வீட்டின்பங்கள் உண்டோ ? இல்லை யென்றனர். சந்திரனுக்குச் சொல்லுங்கால், கலை - தன் உடற்கூறாகிய பதினாறு கலை. காண்டல் - பார்த்தல். கண்ணினிலை - முகக்கண்ணினிலை. நீர்மை - குளிர்ச்சி. திருக்குறளுக்குச் சொல்லுங்கால், கலை - அறுபத்துநான்கு நூல். காண்டல் - ஆராய்ச்சி செய்தல். கண்ணினிலை - அகக்கண்ணினிலை. நீர்மை - குணம் எனப் பொருள் கொள்க.

(47) ஆவது கவியில் நப்பாலத்தனார் - தருமம் அகலும், பொருள் திரியும், காமம் நெய்யும், சொல் நெருப்பும், குறட்பா விளக்குத்தண்டும் ஆக, திருவள்ளுவநாயனார் உலகத்தில் வாழ்வாரது உள்ளிருளைக் கெடுப்பதாகிய விளக்கேற்றினர் என்றனர். வீட்டி னிடத்து ஏற்றப்படும் விளக்கினும் நாயனாரா லேற்றப்படும் விளக்கே சிறந்தது. எப்படியெனில், வீட்டினிடத்து ஏற்றப்படும் விளக்கு கட்புலப்பட்ட புற இருளையொட்டி அவ்வீட்டிலுள்ளார்க்கே பயன் படும். நாயனாரால் ஏற்றப்பட்ட விளக்கு கட்புலப்படாத உள்ளிருளை போட்டி உலகத்திலுள்ளார்க் கெல்லாம் பயன்படுத்தலா லென்க.

(49) ஆவது கவியில் குலபதி நாயனார் - மனமாகிய தாமரை மல ரச்செய்து, அம்மனத்தில் வேறொன்றால் போக்கப்படாத அஞ்ஞானி இருளைப் போக்குதலால் திருவள்ளுவநாயனாரது திருக்குறளும் புற த்துத்தாமரைமலரச் செய்து புற இருளைப் போக்குகின்ற சூரியனும் அச் செய்கைகளால் சமானமாகுமென்று அங்கீகரிக்கத் தக்கதாம் என்றனர். உலகுக்கெல்லாம் பேரொளியாகிய சூரியனும் செய்கை களால் சமானமாமெனவே, மற்றவைகளால் ஆகாதென்பதறிந்து கொள்க.

(49) ஆவது கவி 1ல் தேனீக்குடிக்கீரனார் - தெய்வத்தன்மை யுடைய திருவள்ளுவ நாயனார் அறத்துப்பால் முதலிய மூன்று பாலிற் சொல்லிய குறள் வெண்பாக்களைக் கேட்டறிதலால் உலகத்தில் வாழ்வாரது மனத்தில் பொய்யின் பகுப்பிலுண்டாகியவை களெல்லாம் பொய்யாகிக் கழிந்தன. மெய்யின் பகுப்பில் உண்டாகிய வைகளெல்லாம் மெய்யாகி விளங்கின என்றார். இதனால், திருக்கும் ளுக்கு முன்னுள்ள நூல்களால் பொய் மெய்யாகக்கொள்ளப்பட்டும் மெய் பொய்யாகத் தள்ளப்பட்டும் மாறுபட்டுக் கிடந்தனவென்பதும், அம்மாறுபாட்டை நீக்கி உண்மை அறியப்படும் நூல் திருக்குறளென்று தும் பெற்றாம்.

(50) ஆவது கவியில் கொடி ஞாழன் மாணி பூதனார் - திருவள் நவரது திருவாக்கால் பிறரொருவர் வேறு நூல்களிலிருந்தெடுத் துச் சொல்லக் கேளாதவைகளெல்லாங் கேட்டு, அறம் பொருளின்பம் வீடு என்னும் நான்கின்வகைகளெல்லாம் தெளிந்தே மென்று சொல் லினர். ஆதலால், யாதொன்றாலும் இனி , குறைபாடில்லை யென்ப தும், திருக்குறளிலிருக்கின்ற பல விஷயம் வேறு நூல்களிலில்லை யென்ப துங் கிடைத்தன.

(51) ஆவது கவியில் கவுணி பனார் - பலவகைச் சமயத்தாரது கற்பனை வழக்கால் மறைக்கப்பட்டுக் கிடந்த அநாதியாயுள்ள நல்வழி களை நாமறியும்படி திருவள்ளுவர் தமது புலமை நிறைந்த நாவால் சொல்லப்பட்ட இனிய குறள் வெண்பாக்கள் நினைத்தால் மனத்துக் கும் கேட்டால் காதுக்கும் ஓதினால் வாய்க்கும் இனிமையுடையன. அன்றி, விடாது தொடர்ந்து வந்த நல்வினை தீவினை யென்னும் வியாதிகளுக்கு மருந்துகளும் ஆம் என்றார். நல்வினையும் பிறப்புக்குக் காரணமாதலால், அதையும் வியாதி என்றார். நல்வினை தீவினை யொழிந்தால் பிறவி அடையாமல் வீடு கூடுதல் நிச்சயமாம். ஆகவே, வீடுபெறுதற்கு இந்நூல் சாதனமாதலறிக. வீடு - மோக்ஷம்.

(52) ஆவது கவியில் மதுரைப் பாலாசிரியனார் - சுக்கிரன் வியாழன் சூரியன் சந்திரன் புறத்திருள்களை விரைவிலே போக்கும் ஒளிகளாம். எல்லாங்கற்ற திருவள்ளுவ நாயனாரது இனிய குறள் வெண்பா உலகத்தாரது -அகவிருளைப் போக்கும் ஒளியாம் என்றார். எனவே, புறத்திருளைப் போக்குதற்கு அவைகள் பல உள்ளன. அக த்திருளைப் போக்குதற்கு இஃதொன்றே உளதென்றதாயிற்று. புறத் திருளைப் போக்கும் அவைகள் பலவற்றாலும் நீக்கப்படாத அகத்திரு ளைப்போக்குதலால், திருச்குறளொன்றே பேரொளியென்பது கண்டு கொள்க.

(53) வது கவியில் ஆலங்குடி வங்கனார் - திருவள்ளுவரது திரு 5றளின் தித்திப்பான சுவைபைச் சொல்லுமிடத்து உண்ணப் படுகின்ற தெளிந்த அமுதத்தின் இனிய சுவையும் ஒப்பாகாது. அந்தத் தெளிந்த அமுதத்தை உண்டு சுவை அறிபவர் தேவர்கள். வள ந்தங்கிய தமிழினிடத்தாகிப முப்பாலென்னும் மூன்று பங்கு அவ் வமுதத்தினுஞ் சிறந்த பாலை எல்லா உலகத்தாரும் உண்டு சுவை யறிந்து மகிழ்ச்சியடைவர் என்றார். இதனால், ஒரு உலகத்தார்க்கு மட்டும் பயன்படுவதன் 19 எல்லா உலகத்தார்க்கும் பயன்படுவதே சிறந்ததென்பதாம். எல்லா உலகத்தார்க்கும் பயன்படுவது எவ்வா றெனில், எல்லா உலகத்தாரும் கருமபூமிபாகிய கில உலகத்துட்பிற நது மெய்ப பொருளுணர்ந்து வீட்டின்பம் பெறுகலென்க. எனவே, அம் மெய்ப் பொருளுணர்த்து நூல்களில் இந்நூல் சிறந்த தொன்றாதல் காண்க.

இவரையும் கூறியவாற்றால் திருவள்ளுவரைப் போலொரு லவ நம் திருக்குறளை போலொரு நூலும் தேடித் தேடிப்பார்க்கி னுங் கிடைத்தல் அரிதெனக் கற்றவர்க்குங் கல்லாதவர்க்குரு தெளிவாக விளங்கு மென்பதில் சிறிதுஞ் சந்தேகம் இல்லை. கடைச்சங் கத்திற் றோன்றிய பல நூல்களுள் இந்த நூலைப்போல, வேறெந்த நூலை பாவது வியந்து சங்கப்புலவருளொருவரேனும் சொல்லினா ரல்லர். அதற்குக் காரணம் ஒவ்வொரு நூலும் சிற்சில குறைபாடு உடையதேயாம். இதற்குச் சான்று சீத்தலைச் சாத்தனார் சரித மொன்றே போதும். பல தேசங்களிலுமிருந்து இப்போது மதுரைத் தமிழ்ச் சங்கத்துக்குக் கிடைத்த திருக்குறள் ஏட்டுச் சுவடிகளை ஆராயும் போது மகா வித்துவான் சரவணப் பெருமாளையகால் உரைவரையப் பெறாத சிற்சில பாடல்கள் திருவள்ளுவ மாலையில் காணப்படுகின்றன. அப்பாடல்களும் மிகவும்அருமையுடையன வாயினும், இரண்டு பாடல்களைத் தவிர எனைய பாடல்கள் பாடினார் (பெயரொடுவரையப்படவில்லை. அப்பாடல்களின் பொருள்களை பெருகப்புகின் விரியுமென்று விட்டுவிட்டேன்.

இனி, பிற்காலத்தில் உமாபதி சிவாசாரியா தமிழ் மொழியில் வழங்கும் உயர்ந்த நூலைக் கணக்கிட்டு ஆறென்று கண்ட இடத்து அவ்வாறனுள்ளுந் தலைமையாயநு வள்ளுவர் (திருவள்ளுவர்) என்று அருளிச் செய்தனர். இதை, ''வள்ளுவர்சீ ரன்பர்மொழி" என்னும் அவர் திருவாக்காற் கூறிய பாடலால் அறியலாம். இவருக்குப் பிற் பட்ட திருவாவடுதுறை ஆதீனத்துச் சுவாமிநாத தேசிகர் எந்த நூலைப் பார்த்துத் தெரியாதவை உண்டானால் தொல்காப்பியத்திலும் திருவள்ளுவரிலு மிகத் தெளிவாக விளங்குமென அருளிச்செய்த னர். இதை அவர் பாடிய இலக்கணக் கொத்தென்னு நூலிற் பாயிரத்தில் 'பல்காற் பழகினுந் தெரியா வுளவேற், றொல்காப் பியந்திரு வள்ளுவர் கோவையார், மூன்றினு முழங்கும் என்ற சூத்திரத்தா லறிக. இதனால், திருக்குறளுண்டாகிய காலத்தில் இலக்கணம் தொல்காப்பியமென்பதும் அதைத் தழுவிய இலக்கியம் திருக்குற ளென்பதும் நன்கு விளங்கும். இதற்குச் சான்றாகத் திருவள்ளுவ நாயனார்தொல் காப்பியப் பொருளதிகாரத்திற் கூறப்பட்ட(88ஆவது) 'கொடிநிலை கந்தழி வள்ளி யென்ற, வடுநீங்கு சிறப்பின் முதல் முன்றும், கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே'' என்ற சூத்திர விதிப்படி திருக்குறட்பாயிரத்தில் கடவுள் வாழ்த்தொடு சேர்த்து, கொடிநிலை, கந்தழி வள்ளி என்பனவாகிய வான்சிறப்பும், நீத்தா பெருமையும், அறன் வலியுறுத்தலும் கூறப்பட்டிருத்தல் காண்க. கொடிநிலை, கந்தழி, வள்ளி என்பதே வான்சிறப்பும், நீத்தார் பெரு மையும், அறன் வலியுறுத்தலும் என்ப தெங்ங்ன மெனில் ? மதுரை வித்தியாபாநுப் பத்திரிகை (4) ஆவது தொகுதி (11) ஆவது பகுதியில் (350) ஆவது பக்கத்தில் திருக்குறட்பாயிர ஆராய்ச்சியில் மு. ராகவையுங்ரவர்கள் நன்கு விளக்கி யெழுதியுள்ளார்கள். ஆங்குக் காண்க. திருவள்ளுவர் பெருமையும் திருக்குறட்பெருமை யும் இன்னும் எத்தனை புலவர்கள் எத்தனை விதமாகச் சொன்னாலும் சொல்வதற்கெல்லாம் இடங்கொடுத்துக் கொண்டே ஒரு முடிவு பெறாமலிருத்தலால் இவ்விரண்டையும் பற்றி எழுதலை இம்மட்டில் கிறுத்துகின்றேன். இவ்விரண்டும் நீடூழி வாழ்க. சுபம்! சுபம்!சுபம்!

        இங்ஙனம்,
        மு. ரா. அருணாசலக்கவிராயர்.
        மதுரைத் தமிழ்ச்சங்க வித்துவான்.
--------------

தமிழ் வேதமாகிய திருக்குறள் வசனம்.
முதலாவது – அறத்துப்பால் [#].

கடவுள் துணை.
[#] அறமாவது:- இல்லறம், துறவறமென இருவகைப்படும். இவ்விடத்து அறமென்பது - சிறப்புடைய ஒழுக்கமாம்.

பாயிரம். முதல் அதிகாரம் - கடவுள் வாழ்த்து.


அஃதாவது:- தெய்வத்தை வாழ்த்துதல்.

1. முதற்கடவுளது உண்மை.
(1) எழுத்துக்களுக்கெல்லாம் அகரம் முதலாயிருப்பது போல உலகங்களுக்கெல்லாம் கடவுள் முதலாயிருக்கின்றார்.

2. கடவுளது திருவடிகளைத் தொழாதவர் படித்ததனாலே பயனில்லை.
(2) கடவுளுடைய திருவடிகளை வணங்காராகில் அவர் சாஸ்திரங்களைப் படித்ததனாலே யொரு பிரயோசனமு மில்லை.

3. கடவுளை நினைத்தலும், வாழ்த்தலும், அவர்வழி நிற்றலுஞ் செய்தார் மோக்ஷம் பெறுவர்.
(3) அன்பரது இருதய தாமரை மலரிலே சென்ற கடவுளுடைய பெருமை பொருந்திய பாதங்களைச் சார்ந்திருப்பவர் எல்லா உலகத்துக்கு மேலாகிய மோக்ஷவுலகத்தில் அழியாமல் வாழ்ந்திருப்பர்.

(4) யாதொரு பொருளிடத்தும் ஆசையும் வெறுப்பு மில்லாதவராகிய கடவுளது திருவடியைச் சேர்ந்தவர்க்கு எந்தக் காலத்தும் பிறவித் துன்பங்களில்லை.

(5) கடவுளுடைய மெய்ம்மை சேர்ந்த கீர்த்தியை விரும்பினவரிடத்து மயக்கத்தைப்பற்றி வருகின்ற நல்வினை தீவினைகள் சேரமாட்டாவாம்.

(6) மெய், வாய், கண், மூக்கு, செவி யென்கின்ற பஞ்சேந்திரியங்களை வழிகளாக வுடைய பரிசம், ரசம், ரூபம், கந்தம், சத்தம் என்னும் ஐந்தினிடத்துஞ் செல்லுகின்ற ஐந்தாசைகளையுங் கெடுத்த அக்கடவுளுடைய மெய்யாகிய ஒழுக்கவழி (அவராற் சொல்லப்பட்ட வேத மார்க்கத்தில்) தவறாது நின்றவர் எக்காலத்தும் பிறப்பில்லாமல் வாழ்ந்திருப்பர்.

4. கடவுளை நினைத்தாலும் வாழ்த்தலும் வணங்கலும் செய்யாத வழி உண்டாகும் குற்றம்.
(7) எந்த விதத்தாலும் தனக்குச் சமானமில்லாத கடவுளுடைய பாதங்களை யடைந்தவர்க்கன்றி மற்றவர்க்கு மனத்திலே யுண்டாகும் துன்பங்களைப் போக்குதல் கூடாது.

(8) தருமக் கடலாகிய அழகிய கருணையுடைய கடவுளது திருவடியை யடைந்தவர்க்கன்றிப் பிறருக்குப் பொருளு மின்பமுமாகிய சமுத்திரத்தைக் கடத்தல் முடியாது.

(9) [§] எட்டு வகைப்பட்ட குணங்களையுடைய கடவுளது பாதங்களை வணங்காத தலைகள், காட்சியில்லாத கண், ஓசை கேளாத காது, வாசனையறியாத மூக்கு முதலிய அவயவங்களைப்போல ஒரு பயனை யடையாவாம்.
----
[§] எட்டுக் குணங்களாவன:- ஒருவர் ஏவப்படும் வசமாகாமல் தாமே சுதந்திரமா யிருத்தல், பரிசுத்தமாகிய திருமேனி யுடையரா யிருத்தல், தாமே யறியும் அறிவுடையரா யிருத்தல், எல்லா முணரும் உணர்ச்சி யுடை யராயிருத்தல், இயற்கையிலே பாசமில்லாதவரா யிருத்தல், மிகுந்த கருணை யுடையரா யிருத்தல், கெடாத வலிமை யுடையராயிருத்தல், அளவில்லாத ஆனந்த முடையராயிருத்தல்.

5. கடவுளடியையே நினைப்பார்க்குப் பிறவியறுதலும், அவ்வாறன்றி வேறு நினைப்பார்க்குப் பிறவி அறாமையும் ஆம்.
(10) இறைவனுடைய சீபாதங்களை யடைந்தவர் சன்னமாகிய பெரிய கடலைத் தாண்டிச் செல்லுவர். அடையாதவர் தாண்டிச் செல்லமாட்டார்.
----------

2- ஆம் அதிகாரம். வான் சிறப்பு

அஃதாவது:- கடவுளுடைய ஆணையால் உலகமும் அதற்கு உறுதியாகிய அறம், பொருள், இன்பங்களும் நிலைபெறுதற்குக் காரணமாகிய மழையின் சிறப்புச் சொல்லுதல்.

1. உலகம் நடத்தற்குக் காரணம் மழை.
(1) மழையானது இடைவிடாமற் பெய்து நிற்க உயிர்கள் நிலைபெற்றுச் சீவித்திருக்கையினாலே அம்மழை யுயிர்களுக்கு அமிழ்தமென்று அறியப்படுந்தன்மை யுடையது.

(2) உண்பவருக்கு நன்மையாகிய உணவுகளை யுண்டாக்கித் தானும் அவ்வுணவுப் பொருள்களோடு உணவாக நிற்கின்றதும் அம்மழையே யாம்.

(3) அம் மழை பெய்ய வேண்டுங் காலத்திற் பெய்யாம லிருந்துவிட்டால் கடலால் சூழப்பட்ட பெரிய வுலகத்திலுள்ள உயிர்களது வயிற்றினுள்ளே பசியானது நின்று வருத்தப்படுத்தும்.

(4) மழையாகிய வரவின் வளங் குறைந்தால் உழவர்கள் உழுதொழிலைச் செய்ய மாட்டார்கள்.

(5) ஒருவரைப் பெய்யாது நின்று கெடுத்து விடுவதும் அவ்விதம் கெட்டவரைப் பெய்து கைதூக்கி விடுவதும் ஆகிய எல்லா வல்லமையுமுடையதும் மழையாம்.

(6) மேகத்தினின்றும் மழைத் துளி பூமியில் விழுந்தாலன்றிப் பசிய புல்லினது தலையையுங் காணுதலில்லையாகும்.
(7) தன்னிடத்திலுள்ள தண்ணீரை முகந்து மேகமானது தன்னிடத்திலே திரும்பப் பெய்யாவிட்டால் நீண்ட சமுத்திரமுந் தன்வளம் குறைந்து விடும்.

2. அறம் பொருளின்பம் நடத்தற்குக் காரணமும் மழையே.
(8) மழை பெய்யாதிருந்துவிட்டால் கடவுளருக்குத் திருவிழா முதலிய சிறப்புடனே பூசை நடக்கமாட்டாது.

(9) மழை பெய்யாதாகில் பெரிய வுலகத்திலே கொடையுந் தவமுமாகிய இரண்டு தருமங்களும் இராமற் போய்விடும்.

(10) எவ்வகை மேன்மை யுடையவருக்குத் தண்ணீரில்லாமல் உலகியலாகிய பொருளின்பம் நடவாது; அது போல அந்நீரினது [$] இடையறாத நடத்தல் மழை யில்லாமற் பொருந்தாதென்பதாம்.
-------
[$] இடையறாது நடத்தல் - தண்ணீர் ஊற்றெடுத் தோடிக்கொண்டிருத்தல்.
-------

3-ஆம் அதிகாரம். நீத்தார் பெருமை.

அஃதாவது:- முற்றத்துறந்த முனிவரது பெருமையைச் சொல்லுதல்.

1. துறந்தார் பெருமை யெல்லாப் பெருமையினும் உயர்ந்தது.
(1) நூல்களினுடைய நிச்சயமானது, தங்கள் தங்கள் வருணாச்சிரம தருமங்களிலே நின்று யான் எனதென்னுஞ் செருக்கைத் துறந்தவர் மகிமையை மேலானதென்று விரும்பும்.

(2) அவ்விதந் துறந்தவரது மகிமைக்கு அளவு சொல்லப் புகுந்தால் இவ்வுலகத்திலே பிறந்திருந்தவரை யிவ்வளவு பேரென்று எண்ணிக் கொண்டாற் போலும். எனவே இறந்தவரைக் கணக்கிட முடியாதது போலவே துறந்த முனிவருடைய மகிமையையுங் கணக்கிட முடியா தென்பதாயிற்று.

(3) பிறப்பினது துன்பமும் மோக்ஷத்தினது இன்பமுமாகிய பகுப்புக்களை யாராய்ந்து அப்பிறப்பை நீக்குதற்கு இந்தச் சன்மத்திலே துறவறத்தைக் கொண்டவரது பெருமையே இவ்வுலகத்தி லுயர்ந்து விளங்கியது.
------
2. துறந்தார் பெருமைக்குக் காரணம் பஞ்சேந்திரியங்களைக் கெடுத்தலும் யோகப்பயிற்சியும் தத்துவ வுணர்ச்சியுமாம்.
(4) அறிவென்னும் [@]அங்குசத்தினாலே மெய், வாய், கண், மூக்கு, செவி யென்கிற ஐந்து யானைகளையும் அதனதன் விடயங்களாகிய பரிசம், ரசம், ரூபம், கந்தம், சத்தங்களிலே செல்ல வொட்டாமல் நிறுத்திய முனிவர் எல்லா வுலகங்களின் முயர்ந்த தென்று சொல்லப்படுகிற மோக்ஷநிலத்திலே போய்த் தோன்றும் விதையாவர்.

(5) இத்தன்மையராகிய ஐந்தாசைகளையும் அட க்கிய முனிவரது வல்லமைக்கு விரிந்த தேவருலகத்திலுள்ளவர்க் கரசனாகிய தேவேந்திரனே போதுமான சாட்சியாக இருக்கிறான். அஃதாவது: ஐந்தாசையும் அடக்காமையால் அவற்றை யடக்கிய கெளதம முனிவரிட்ட சாபத்தை இந்திரன் பெற்ற சரித்திரங் கூறும் கம்பராமாயணம் அகலிகை சாபந்தீர்த்த படலத் தாலுணர்க. முனிவராற் சாபம் பெற்றார் பலரிருக்க இந்திரனைச் சாட்சியாகக் கூறிய தென்னையெனில் அவனிடத்துச் சாபமும் அநுக்கிரகமும் ஒன்றாயிருத்தலா லென்க.
அஃதாவது:- உடம்பெல்லாம் இந்திரன் பார்க்கும் போது சாபத்தாலாகிய ஆயிரம் பெண்குறிகளும், மற்றவர் பார்க்கும்போது அநுக்கிரகத்தாலாகிய ஆயிரங்கண்களுமா-யிருத்தல்.
--------
[@] அங்குசம் - யானையைப் பாகன் தன் வசப்படுத்தும் தோட்டி.
--
(6) சமானமுள்ள பிறப்பினராகிய மனிதருக்குள்ளே பெரியோ ரென்பவர் உயர்ந்த செய்கைகளைச் செய்பவர்; அச்செய்கைகளைச் செய்யமாட்டாதவர் சிறியவ ரெனப்படுவர். உயர்ந்த செய்கையாவது : [$]இயமம் நியம் முதலிய யோகங்களைச் செய்து மோக்ஷமடைதல்.

(7) சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் பஞ்ச தன்மாத் திரைகளிற் றோன்றிய பஞ்ச பூதங்களும், அவற்றின் கூறாகிய ஞானேந்திரியங்கள் ஐந்தும், கன்மேந்திரியங்கள் ஐந்தும் ஆராய்ந்தவரிடத்திலே யுலக முள்ளது. பஞ்சபூதங்களாவன: நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம். ஞானேந்திரியமைந்தாவன: மெய், வாய், கண், மூக்கு, செவி ; கன்மேந்திரிய மைந்தாவன: வாக்கு, பாதம்,
[§]பாணி, [£]பாயுரு, உபத்தம் என்பனவாம்.
--------
[$] இயம நியமங்களி னிலக்கணங்களை யோகநூலிற் காண்க.
[§] பாணி - கை. [£]பாயுரு - மலத்துவாரம்.
-------
3. துறந்தாரது [##]ஆணை.
(8) [$]பயனிறைந்த சொல்லையுடைய முனிவரது மகிமையை இந்நிலவுலகத்தில் அம்முனிவர் ஆணையாகச் சொல்லிய மந்திரங்களே காண்பிக்கும்.
(9) துறவு, மெய்யறிவு, வெறுப்பு முதலிய நற்குணங்களாகிய மலை மேலேறித் தடுமாறாது நின்ற முனிவரது கோபமானது க்ஷணப்பொழுதாயினுங் கோபிக்கப் பட்டவராலே தடுத்தல் கூடாது.
---------
[##] ஆணை - சாபம்.
[$] பயனிறைந்த சொல்- குணத்தாலாவது கோபத்தாலாவது கூறுஞ் சொல், இவ்விரண்டு சொற்களும் அவ்வப் பயன்களைத் தந்தேவிடுதலா லிவை பயனிறைந்த சொல்லெனப்பட்டன.

4. மேற்கூறிய ஆணையுடையராயினும் உயிர்களிடத்து அருளுடையராவர்.
(10) எல்லா வுயிர்களிடத்துஞ் செவ்வையான கருணையை வைத்து நடத்தலால் அந்தணரென்று சொல்லப்படுவோர் முனிவர்களே யாவர்.
------

4 - ஆம் அதிகாரம். அறன் வலியுறுத்தல்

அஃதாவது - அம்முனிவரால் அறிவிக்கப்பட்ட அறம், பொருள், இன்பமென்னு மூன்றினுள் அறமானது பொருளும் இன்பழம் போலாகாமல் இம்மை, மறுமை, மோக்ஷம் என்கிற மூன்றையுங் கொடுத்தலால் அவ்விரண்டினும் உறுதியுடையதென்று சொல்லுதல்.

1. அறத்தின் மிக்க உறுதியில்லை.
(1) தருமமானது மோக்ஷத்தையுஞ் சுவர்க்கலோக முதலிய செல்வத்தையுங் கொடுக்கும், ஆதலால் மனிதருக்குத் தருமத்தின் மேலாகிய பெருக்கம் யாதிருக்கிறது?

2. அறஞ் செய்யாதவழிக் கேடு வருதல்.
(2) ஒருவனுக்குத் தருமஞ் செய்வதைப் பார்க்கினு மேலாகிய பெருக்கமும், அத்தருமத்தை மறந்து விடுவதைப் பார்க்கினு மேலாகிய கேடு மில்லையாம்.

3. அறஞ் செய்யும் வழி.
(3) தங்கள் தங்களுக்குக் கூடும் விதத்தால் தருமமாகிய நல்வினையை இடைவிடாமல் செல்லுமிடங்களி- லெல்லாம் ஒவ்வொருவருஞ் செய்யவேண்டும். கூடும் விதமாவது : இல்லறம் பொருளளவுக்கு ஏற்கவும், துறவறம் சரீர நிலைக்கு ஏற்கவுஞ் செய்தலாம். செல்லு மிடங்களாவன : மனம், வாக்கு, காயம் ஆம்; இம்மூன்றி னாலுஞ் செய்யப்படும் தருமங்களாவன: நல்ல சிந்தையும், நல்ல சொல்லும், நல்ல செய்கையுமாம்.

4. அறத்தி னியல்பு.
(4) மேற்கூறியபடி தருமஞ் செய்பவன் தனது மனத்திலனிடத்துக் குற்றமில்லாத-வனாயிருத்தல் வேண்டும், அவ்வளவே தருமமாவது; அது நீங்கிய சொல்லும் வேடமும் தரும் மென்று சொல்லப்படா. வேறென்னையெனில்? பிறர் அறியவேண்டிச் செய்யப்படும் ஆரவார குணமுடையனலாம். ஆரவாரம் - பெருமுழக்கம். மனத்தினிடத்துக் குற்றமாவது : தீயவை சிந்தித்தல். இதனால் மனம் பரிசுத்தமில்லா-தவனுக்கு வாக்காற் கூறுஞ்சொல்லும், காயத்திலே தரித்துக்கொள்ளும் வேடமும் பிரயோசனமில்லை யென்பதா யிற்று.

(5) பிறருடைய செல்வத்தைக்கண்டு பொறாமை யடைதலும், பஞ்சேந்திரியங்களி னாசையும் இவ்விரண்டுங் காரணமாகப் பிறர்மேலுண்டாகும் கோபமும், அதுபற்றி வருகிற கொடிய வார்த்தையுமாகிய நான்கையும் நீக்கிச் செய்யப்பட்டதே தருமம்.

5. அறத்தினை நிலையில்லாத வுடம்பு நிலைத்திருக்கிறபோதே செய்யவேண்டும்.
(6) நாமிப்போது சிறு வயதுடையரா யிருக்கின்றோம். இறக்கும்போது செய்வோமென்று நினையாமல் தருமத்தைத் தினந்தோறும் ஒவ்வொருவருஞ் செய்ய வேண்டும். அப்படிச் செய்யப் பட்ட தருமமானது உடம்பினின்று உயிர் போகும் காலத்து அவ் வுயிர்க்கு அழியாத துணையாகும்.

6. கெடாத துணையாவது.
(7) தருமத்தின் பயனிதுவென்று சாத்திரத்தா லறிவிக்க வேண்டியதில்லை. பல்லக்குச் சுமப்பவனிடத்தும் அதையேறி நட த்துகிறவனிடத்தும் அறியலாகும். இவ்விருவரு மனிதராயிருந்தும் ஒருவர் சுமப்பவரும் ஒருவர் ஏறுபவருமாதலைப் புண்ணியத்தின் பயனில்லாமையும், அப்பயனுண்டாயிருத்தலும் அறிவிக்கின்றன.

7. அறம் மோக்ஷந் தரும்.
(8) ஒருவன் தருமத்தைச் செய்யாமற் கழியுநாள் உண்டாகாமற் செய்வானாகில் அச்செய்கையானது அவனுடைய பிறவி வரும் வழியை வராம லடைக்குங் கல்லாகும்.

8. அறஞ் செய்வாரே யிம்மை யின்பமும் புகழு மெய்துவர்.
(9) தருமத்தோடு கூடிவரு மின்பமே யின்பமாகும்; அத் தருமத்தோடு சேராமல் பாவத்தோடு கூடிவரு மின்பந் துன்பமாகும். அம்மட்டோ புகழுங் கிடையாது. தருமத்தோடு கூடிவரு மின்பம் தன் மனைவியை யநுபவித்தலால் வருஞ்சுகம். பாவத்தோடு கூடிவரு மின்பம் பிறர் மனைவியை யநுபவித்தலால் வருஞ் சுகம்.

9. செய்வதும் நீக்குவதும் இஃது இஃதென்பது.
(10) ஒருவனுக்குச் செய்யத்தக்கது தருமமாகிய நல்வினை. நீக்கத்தக்கது பாவமாகிய தீவினையே.
பாயிரம் முற்றிற்று.
--------------

முதலாவது - இல்லற இயல்.
5-ஆம் அதிகாரம். இல்வாழ்க்கை.

அஃதாவது:- இல் வாழ்க்கை நிலைக்குச் சொல்லப்படுகிற வழியிலே நின்று அதற்குத் துணையாகிய கற்புடைய மனைவியோடு கூடிச் செய்யப் படுவதாம்.

1. இல்லறத்தின் நிலை எல்லாவுபகாரத்திற்கு முரிமையுடையது.
(1) இல்லறத்தோடு கூடி வாழ்பவனென்று சொல்லப்படுவான் துறவறத்தின் தன்மையுடைய பிரமசாரியும், வானப்பிரத்தனும், சந்நியாசியுமாகிய மூவருக்கும் அவர்களுடைய நல்லொழுக்க வழிகளில் நிலைபெற்று நின்ற துணையாவான். பிரமசாரி : -குருவினிடத்தே ஓதி விரதங்காக்கிறவன்.
வானப்பிரத்தன்: காட்டினிடத்தே மனைவியுடன் போய்த் தவஞ்செய்கிறவன்.
சந்நியாசி : எல்லாப் பற்றுக்களையும் விட்டவன்.
துணையாவ தெப்படியென்றால் மேற்சொல்லப்பட்ட மூவருக்கும் பசி, நோய், குளிர் முதலியவற்றால் இடையூறு வராமல் உணவு, மருந்து, ஆடை முதலியவை கொடுத்து அவரவரொழுக்கங்கள் தவறாமல் நடக்கச் செய்தல்.

(2) பொருளிருந்தும் அதை விட்டு நீங்கிய முனிவருக்கும், பொருளில்லாமல் தரித்திரப் பட்டவருக்கும், ஒருவருமில்லாமல் வந்து மரணமடைந்தவருக்கும் உணவுமுதலிய பொருள்கள் கொடுத்தலாலும் நீர்க்கடன் முதலானவைகள் செய்து நல்லகதியை யடைவித்தலாலும் இல்வாழ் வானென்று சொல்லப்படுவோனே துணையாவான்.

2. இல்லறத்தின் நிலை நின்றார் அறஞ்செய்யும் விதம்.
(3) பிதிரரும், தேவரும், விருந்தினரும், சுற்றத்தாரும், தானும் என்று சொல்லப்பட்ட ஐந்திடத்துஞ் செய்யப்படுகின்ற தருமவழியை வழுவாமற்செய்தல் இல்வாழ்வானுக்குச் சிறப்புடைய தருமமாம்; ஆதலால் இல்வாழ்வான் தன்னுடைய வரவுப்பொருளை ஐந்து பங்கிட்டுத் தானொருபங்கை யநுபவிக்க வேண்டுமென்பதா யிற்று. ஐந்து பங்கும் அரசனுக்குக் கொடுக்கவேண்டிய ஒரு பங்கு போக மீந்தவைகளே. இந்த முறை பற்றியே யரசன் ஆறிலொரு கடமை கொண்டு உலகத்தை யாளுதல் கண்டு கொள்க.

(4) பாவத்துக்குப் பயப்பட்டுச் சம்பாதித்த பொருளை முன்னே சொல்லப்பட்ட [#]பத்துப் பேர்களுக்கும் பங்கிட்டுக் கொடுத்துத் தான் உண்ணுதலை யொருவன் வாழ்க்கை யுடையதானால் அவனது சந்ததி யெந்தக் காலத்துக் குறைதலில்லை. எனவே, பாவத்தால் வந்த பொருளை யொருவன் மேற்கூறியபடி பங்கிட்டுக் கொடுத்து உண்டானாயினும் தருமமானது பொருளுடையானையும் பாவமானது தன்னையும் மடையப் புத்திரப் பேறில்லாமற் போய்விடுமென்பதாயிற்று.

(5) ஒருவனுடைய இல்வாழ்க்கையானது தன் மனையாளிடத்துச் செய்யத்தகு மன்பினையும் பிறர்க்குப் பங்கிட்டுக் கொடுத்தலாகிய தருமத்தினையு முடையதானால் அவ்வுடைமை யவ்வில்வாழ்க்கைக்குக் குணமும் பிரயோசனமுமாம். மனையாளுக்குங் கணவனுக்கு மனவொற்றுமை யில்லாவிட்டால் இல்லறம் நடவாதாகையால் அன்புடைமை குணமும் அருளுடைமை பிரயோசனமுமாதல் காண்க.
-----
[#]பத்துப்பேர் - பிரமசாரி, வானப்பிரத்தன், சந்நியாசி, துறந்தார், தரித்திரர், ஆதரவின்றி வந்து செத்தவர், தென்புலத்தார், தெய்வம், புதிதாய் வந்தவர், சுற்றத்தார்.
-----

3. இல்லறத்தினது நிலையே பயனுடையதென்னுஞ் சிறப்பு.
(6) ஒருவன் இல்லற வாழ்க்கையைத் தருமவழியிலே செலுத்துவானாகில் மனைவியை விட்டு வனத்திலே சென்று தவஞ் செய்து அடையும் பயன் எது இருக்கிறது. இங்கே யெல்லாப்பயனு மடையலாம். அத்தரும வழியாவது : பழிபாவத்துக்குப் பயந்து தேடிய பொருளை முன் சொன்னபடி பங்கிட்டுக் கொடுத்தலும் அன்புடைமையுமாம்.

(7) இல்லற வாழ்க்கையிலே நின்று அதற்குரிய இயற்கையோடு கூடி வாழ்பவன் ஐம்புல இன்பங்களை விட்டுத் தவஞ்செய்ய முயற்சி செய்வாருளெல்லாம் உயர்ந்தவனாவான்.

(8) தவஞ் செய்வோரையும் பசி முதலிய இடர் தீர்த்துத் தமது வழியிலே நடத்தித் தானுந்தன்னுடைய தருமத்தினின்றுந் தவறாத இல்வாழ்க்கையானது அத்தவஞ் செய்வாரது நிலையைப் பார்க்கினும் பொறுமை யுடையதாம். பொறுமையாவது: பிறருக்கு வந்த நோய் முதலிய இடையூறு தீர்த்தல்.

(9) இல்லறம் துறவறமென்னு மிரண்டறங்களுள்ளே நூல்களால் அறமென்று சிறப்பித்துச் சொல்லப் பட்டது இல்வாழ்க்கையே. மற்றைத் துறவறமோ என்றால் பிறரால் நிந்திக்கப்படுங் கூடாவொழுக்க மில்லாதிருந்தால் அதுவும் நன்மையாம். கூடாவொழுக்கம் : மாதர் போகம்.

4. இல்லறத்தின் மறுமைப் பயன்.
(10) இல்லறத்தோடு கூடி வாழு முறைப்படி இவ்வுலகத்திலே வாழ்பவன் இவ்வுலகத்திலிருப்பவ- னாயினும் விண்ணுலகத்தி லிருக்கிற தேவருள் ளொருவனாக வைத்து மதிக்கப்படுவான். இல்லறத்தை வழுவாது நடத்துகிறவன் பின்னே தேவனாய்ப் பிறப்பா னென்பது நிச்சயம்.
--------

6-ஆம் அதிகாரம். வாழ்க்கைத் துணைநலம்.

அஃதாவது:- அவ்வில்வாழ்க்கைக்குத் துணையாகிய மனையாளது நன்மையாம்.

1. நற்குண நற்செய்கைகளும் வரவுக்குத் தக்க செலவு செய்தலுஞ் சிறந்தன.
(1) இல்லறத்துக்குத் தக்க நற்குண நற்செய்கைகளை யுடையலளாகித் தன்னை விவாகஞ் செய்த கணவனது வரவுக்குத்தக்க வாழ்க்கையுடையவள் அவ்வில்லறத்துக்குத் துணையாவள். நற் குணங்களாவன: துறந்தவரை யுபசரித்தலும், வறியவரிடத்தே யருளுடமையு முதலானவையாம். நற்செய்கைகளாவன: வாழ்க்கைக்கு வேண்டும் பொருள்களரிந்து காப்பாற்றி வைத்தாலும், உணவு சமைத்தல் வல்லமையு முதலியவையாம். வரவுக்குத் தக்க வாழ்க்கையாவது கிடைத்த பொருளுக்குத் தக்கபடி செலவு செய்தலாம்.

2. இல்வாழ்க்கைக்கு வேண்டுவது மனையாளது குணமே யன்றி வேறில்லை.
(2) இல்லறத்துக்குத் தகுந்த நற்குண நற்செய்கைகள் மனையாளிடத் தில்லையானால் அவ்வில்வாழ்க்கை யெவ்வளவு பெருமை யுடையதாயினும் அப்பெருமை யுடையதில்லை.

(3) ஒருவனுக்கு மனையாள் நற்குண நற்செய்கையுடையவளா யிருந்தால் இல்லாத தொன்று மில்லை. அம்மனையாள், மேலே சொல்லிய குணங்களில்லாதவளானால் எல்லாமிருந்தாலும் இருந்ததாகப் பயன்படுவ தொன்றுமில்லை.

3. கற்பின் சிறப்பு.
(4) கற்பென்னுங் கலங்கா நிலைமை யுண்டாயிருக்கப்பெற்ற மனையாளைப் பார்க்கினும் ஒருவன் பெறுதற்குரிய பொருள்களுள் உயர்வாகிய பொருள்களெவை யிருக்கின்றன. ஒன்றுமில்லை.

4. கற்புடையவள் வலிமை.
(5) பிற தெய்வத்தை வணங்காதவளாகித் தன் தெய்வமாகிய கணவனை நித்திரை யிட்டெழுந்து வணங்குபவள் பெய்யென்று சொல்ல மழை பெய்யும்.

5. கற்புடையவளது தற்புகழ்ச்சி.
(6) கற்பினின்றும் வழுவாமல் தன்னைக் காப்பாற்றிக் கொண்டு தன் கணவனையும் உண்டி முதலியவற்றா லுபசரித்துத் தம் மிருவரிடத்தும் நன்மை யமைந்த புகழை நீங்காமற் காப்பாற்றி முன் சொல்லப்பட்ட நற்குண நற்செய்கைகளிலும் மறதி யில்லாதவளே மனையாளாவள்.

6. தற்காத்தற் சிறப்பு.
(7) பெண்களைச் சிறையினாலே கணவர் காக்குங் காவல் என்ன பிரயோசனத்தைச் செய்யும். அப்பெண்கள் தங்களுடைய கற்பாகிய காவலாலே காக்குங் காவலே முதன்மையான காவலாம். சிறை: மதிற்காவலும், வாயிற்காவலுமாம்.

7. கணவனைப் பேணிய பெண்கள் தேவர்களாற் பேணப் படுவர்.
(8) பெண்கள் தம்மைக் கொண்ட கணவரைப் பூசித்தல் பெறுவாரானால் தேவர்கள் வாழும் உலகத்திலே அத்தேவராற் செய்யப்படுஞ் சிறப்பினை யடைவர்.

8. தகுதி மிக்க புகழ் நீங்காமற் காவாதவழி யுண்டாகுங் குற்றம்.
(9) கீர்த்தியை விரும்பிய மனையாள் இல்லாதவர்க்குத் தம்மை யிகழ்ந்து பேசும் பகைவருக்கெதிரே ஆண் சிங்கம் போலே நடக்கும் பெருமித நடையில்லை.

9. வாழ்க்கைத்துணைக் காவதோர் அணிகலம்.
(10) மனையாளது நற்குண நற்செய்கைகள் ஒருவனுக்கு, நன்மையாமென்று அறிந்தோர் சொல்லுவர். நல்ல புதல்வரைப் பெறுதல் அந் நற்குண நற்செய்கைகளுக்கு நல்ல ஆபரண மென்று சொல்லுவர்.
---------

7-ஆம் அதிகாரம். புதல்வரைப் பெறுதல்.

அஃதாவது:- முனிவர் கடன் கேள்வியாலும், தேவர்கடன் வேள்வி யாலும், தென்புலத்தார் கடன் புதல்வரைப் பெறுதலாலும் அல்லது செலுத்தக்கூடாமையால் அக்கடன் செலுத்தற் பொருட்டு நல்ல மக்களைப் பெறுதலாம். கடனென்பது: கடமை; செய்யத்தக்கது.

1. புதல்வரைப் பெறுதலின் சிறப்பு -
(1) ஒருவன் பெறும் பேறுகளுள்ளே யறிய வேண்டிய வைகளை யறிதற்குரிய புதல்வரைப் பெறுதலை யன்றி வேறு பேறுகளை நாம் மதிப்பதில்லை.

2. மக்களைப் பெற்றார் பெறும் மறுமைப்பயன்.
(2) பிறராலே பழிக்கப்படாத நற்குணங்களையுடைய புதல்வரை யொருவன் பெறுவானாயின் வினைவசத்தாலுண்டாகிற தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் ஆகிய எழு வகைப்பட்ட பிறப்பிலுந் துன்பங்கள் அவனை யடையாவாம்.

(3) தம்முடைய புதல்வரைத் தம்முடைய பொருளென்று அறிந்தோர் சொல்லுவார். ஏனெனில் அப்புதல்வர் சம்பாதித்த பொருள்கள் தம்மைக் குறித்து அப்புதல்வர் செய்யும் நல்வினையினாலே தம்மிடத்து வரும் ஆதலாலென்க.

3- இம்மைப் பயன்.
(4) பெற்றவருக்குத் தம்முடைய மக்களது சிறிய கைகளா லளையப்பட்ட சோறானது மதுரமிக்க அமிர்தத்தைப் பார்க்கினு மினிமையுடையதாயிருக்கும்.

(5) ஒருவனுடைய உடம்புக்கு இன்பமாவது தான் பெற்ற மக்களுடைய உடம்பைத் தொடுதலாம்; இஃதன்றி, அவன் காதுக்கு இன்பமாவது அப்பிள்ளைகள் சொற்களைக் கேட்குதலாம்.

(6) தமது பிள்ளைகளுடைய குதலைச் சொற்களைக் கேளாதவரே குழலினிசை யினியது, வீணையி னிசையினியது என்று சொல்லுவர்.

4. தந்தை கடமை.
(7) தகப்பனானவன் தன் புத்திரனுக்குச் செய்யும் நன்மையாவது கற்றவரது சபையிடத்து அக்கற்றவரினு மேலாயிருக்கக் கல்வியை யுடையவ னாக்குதலாம்.

5. தந்தையைப் பார்க்கினும் அவையத்தார் மைந்தனை மகிழ்வர்.
(8) தம்மக்களறிவுடையரா யிருத்தலானது தமக்கினிய தாயிருத்தலைப் பார்க்கினும் பெரிய பூமியினிடத்து நிலைபெற்ற உயிர்களுக்கெல்லா மினிய தாயிருக்கும்.

6. தாய் மைந்தனை மகிழும் விதம்.
(9) தன் புத்திரனைக் கல்வி கேள்விகளாலே நிறைந்தோ னென்று அறிவுடையோர் சொல்லக் கேட்ட தாயானவள் பெற்ற காலத்தினும் மகிழ்ச்சி யுடையவளாவாள்.

7. மைந்தன் கடமை.
(10) தன்னைக் கல்வியுடையவனாக்கிய தகப்பனுக்குப் புத்திரன் செய்யும் எதிர் நன்றியானது தன்னறிவையும் நல்லொழுக்கத் தையுங்கண்டவர் இவனது தகப்பன் என்ன தவத்தைக் செய்தானோ வென்கிற சொல்லை யுண்டாக்குதலாம்.
--------

8-ஆம் அதிகாரம். அன்புடைமை.

அஃதாவது:- மேற்கூறிய மனைவி, புதல்வர் முதலாகிய சம்பந்த ஓடையவரிடத்து ஆசையுடையவனா யிருத்தல்.

1. அன்பின்னது உண்மை.
(1) தம்மா லன்பு வைக்கப்பட்டவருடைய துன்பத்தைக் கண்ட இடத்தில் அன்பு வைத்தவருடைய கண்ணீரே யுள்ளேயிருக்கின்ற அவ்வன்பை வெளிப்படுத்திவிடும். ஆதலா லன்புக்கும் பிறரறியாம லடைத்துவைக்கும் தாழ்க்கோல் உண்டோ ? இல்லை.

2. அன்பினது சிறப்பு
(2) அன்பில்லாதவர் எல்லாப் பொருள்களையும் தமக்கே யுடைமையாக்கிக் கொள்ளுவர். அன்புடையவர் மற்றெல்லாப் பொருள்களோடு தம்முடம்பிலுள்ள எலும்பையும் பிறருக்குக் கொடுத்து உதவி செய்வர். அன்பு செய்தற்காகவே உயிர்களுக்கு மானிட சரீரம் வந்ததாம். ஏனென்றால் சரீரமில்லாமலுயிர் தனியே நின்று அன்பு செய்ய முடியாது ஆதலாலென்க. எலும்பைப் பிறருக்குக் கொடுத்து உதவி செய்தல் புறவுக்காகத் துலையேறிய சிபிச் சக்கரவர்த்தியிடத்தும் இந்திரனுக்காக முதுகெலும்பைக் கொடுத்த ததீசி முனிவரிடத்துங் காண்க. இவ்விரண்டு சரித்திரங்களும் புற நானூறு 43- ஆம் செய்யுளினும் திருவிளையாடற்புராணம் இந்திரன் பழி தீர்த்த படலம் 36- ஆம் செய்யுளினு மிருக்கின்றன.

(3) பெறுதற்குரிய மனிதருயிர்க்குச் சரீரத்தோடு தான் சேர்ந்த சம்பந்தத்தை யன்போடு பொருந்துதற்கு வந்தவழியின் பிரயோசனமாகு மென்று அறிந்தோர் சொல்லுவர். எனவே, உடம்போடு சேராவிட்டால் அன்பு செய்யக் கூடாதாகையால் அவ்வன்பு செய்தற்கே யிவ்வுடம்பின் றொடர்ச்சி யுண்டாகிய தென்பதாயிற்று.

(4) ஒருவன் தனக்குச் சம்பந்தமுடைய ஒருவனிடத்துச் செய்யப்பட்ட அன்பானது பிறரிடத்தும் ஆசையுடையவனாகி யிருத்தலைச் செய்யும். அப்படி யாசையுடையவனா-யிருத்தலானது இவனுக்கு எல்லாருஞ் சிநேகமுடையவனென்று சொல்லப்படுகிற அளவில்லாத சிறப்பைக் கொடுக்கும்.

(5) இந்நிலவுலகத்திலே இல்லறத்திலிருந்து இன்பத்தை யநுபவித்தவராகிப் பின்னர் தேவலோகத்திற் சென்று அடையப் படும் பேரின்பத்தை அன்புடையவராகி இல்வாழ்க்கையிலிருந்த முறையின் பிரயோசனமென்று அறிந்தவர் சொல்லுவர்.

(6) அன்பானது தருமத்துக்கே துணையாவதென்று தெரியாதவர் சிலர் சொல்லுவர்; அம்மட்டோர் தருமத்துக்குத் துணையாவ தல்லாமல் கோபத்தை நீக்குதற்குத் துணையாகும். எப்படியென்றால் ஒருவனிடத்துப் பகையுண்டாகியபோது தன்னுள்ளத்திலே யுண்டாகிய கோபமானது அவனை நட்பாக நினைத்து அன்பு செய்தால் நீங்கிவிடு தலாலென்க; இஃதன்றி, மற்றொரு பொருளுங் கூறலாம். அஃதாவது: மனைவி மக்கள் குற்றஞ் செய்தபோது அவரை நல்வழிப் படுத்தும் பொருட்டு அவரிடத்துச் செய்யப்படுங் கோபத்துக்கும் அன்பு துணையாமென்பது.

3. அன்பில்லாத வழி யுண்டாகுங் குற்றம்.
(7) வெயிலுக்கு முன்னே எலும்பில்லாத புழு முதலிய செந்துக்கள் சென்று கெடுதல் போலத் தருமக் கடவுளுக்கு முன்னே யன்பில்லாத உயிர்கள் சென்று கெடுதலடையும்.

(8) மனத்தி லன்பில்லாத வுயிரானது இல்லறத்தோடு கூடி வாழ்தல் கடின நிலத்திலே பட்டமரமானது தளிர்க்க மாட்டாதது போலப் பயன்பட மாட்டாது.

(9) இல்லறத்துக்கு அங்கமாய்ச் சரீரத்தினுள்ளேயிருக்கும் அன்பில்லாதவருக்கு வெளியேயிருக்கும் அங்கமாகிய இடம் பொருளேவல் முதலியவையிருந்தாலும் அவைகளால் யாதொரு பயனுமில்லை,

(10) அன்பு முதலாயிருக்க அதைப்பற்றி நின்ற உடம்பே யுயிரிருக்கின்ற உடம்பாகும். அன்பைப்பற்றி நில்லாத வுடம்புகள் எலும்பைத் தோலால் மூடப்பட்ட வுயிரற்ற வுடம்புகளாம்; எனவே அன்பில்லாத வுடம்பு பிணமென்றதாயிற்று.
-------

9 - ஆம் அதிகாரம். விருந்தோம்பல்.

அஃதாவது:- மேலே சொல்லப்பட்ட அன்புடைய கணவனும் மனையாளுங்கூடி விருந்தினரை யுபசரித்தல்.

1. விருந்தினரைப் பாதுகாத்தலின் சிறப்பு.
(1) மனைவியுடன் காட்டினிடத்துச் செல்லாமல் வீட்டினிடத்தேயிருந்து பொருள்களைக் காப்பாற்றி வாழுஞ் செய்கை முழுவதும் விருந்தினரை யுபசரித்து உபகாரஞ் செய்தற் பொருட்டே யாம்.

(2) உண்ணப்படும் உணவுகள் அமிர்தமா யிருந்தாலும் தன்னிடத்தைத் தேடிவந்த விருந்தினர் தன் வீட்டின் புறத்திலிருக்கத் தானுண்ணுதல் கூடாத செய்கையாம்.

2. விருந்தினரைக் காப்பவர் இம்மைக்கண் எய்தும்பயன்.
(3) தன்னை நோக்கி வந்த விருந்தினரைத் தினந்தோறும் உபசரித்து வருபவனுடைய இல்வாழ்க்கையானது தரித்திரத்தால் வருந்திக் கெடுதலடைய மாட்டாது.

(4) நன்மையுடைய விருந்தினரைக் காப்பவனது வீட்டினிடத்தே மனமகிழ்ந்து இலக்குமி யானவள் வாழ்ந்து கொண்டிருப்பாள். நன்மையாவது : ஞானத் தினாலும் ஆசாரத்தினாலும் உயர்தல்.

(5) முன்னே விருந்தினரை உண்ணச் செய்து அவருண்டபின் பாத்திரத்திலே மிகுந்திருந்த உணவுகளை யுண்பவனுடைய விளைநிலம், உரஞ் செய்தல் முதலிய முயற்சியின்றித் தானே விளையும்.

3. விருந்தினரைக் காப்பவர் மறுமைக்க ணெய்தும் பயன்.
(6) தன்னிடத்திலே வந்த விருந்தினரை யுபசரித்து உண்ணச் செய்து, அதன்பின் வரும் விருந்தினரை யெதிர் பார்த்து அவரோடு உண்பதற்குக் காத்திருப்பவன் மறு பிறப்பிலே தேவனாய்ப் பிறந்து அத்தேவருக்கு நல்ல விருந்தாளியாவான்.

4. இம்மைப் பயனும் மறுமைப்பயனுந் தருதற்குக் காரணம்.
(7) விருந்தினரை யுண்ணச்செய்தலாகிய யாகத்தின் பிரயோசனம் இவ்வளவென்று சொல்லும் ஒரு அளவினையுடைய தன்று. விருந்தினரது தகுதியளவே அந்தப் பிரயோசனத்தின் அளவாம். ஆதலால் சற்பாத்திரங்களாகிய பெரியவருக்குக் கொடுக்கு முணவு சிறிதாயினும் அதன் பயன் பெரிதென்பது பெறப் பட்டது.

5. விருந்தினரைக் காவாதவழி யுண்டாகுங் குற்றம்.
(8) விருந்தினரை நிலையில்லாத பொருளைக்கொண்டு உபசரித்தலாகிய யாகத்தின் பயனையடையும் அறிவு இல்லாதவர் மேற் கூறிய பொருளை வருந்திக்காத்துப் பின்பு அதனை யிழந்து யாதொரு ஆதாரமுமில்லாமற் போயினோ மென்பார். ஆதலால் விருந்தினரை யுபசரித்தவர் தம் பொருளை யொரு நாளுமிழக்க மாட்டா ரென்பதாம்

(9) பொருளுடையரா யிருக்குங் காலத்துத் தரித்திரமாவது, விருந்தினரை யுபசரியாமலிகழும் அறியாமையே. அவ்வறியாமை அறிந்தோரிடத்திருக்க மாட்டாது. அறிவில்லாரிடத்தே யுண்டு.

6. விருந்தினரைக் காப்பவருக்கு முதலாவது இனிய முகம் வேண்டும்.
(10) அனிச்சப் பூவானது மோந்து பார்த்தவிடத்து வாடிவிடும். விருந்தினரோ தம்மைக் கண்டவுடன் முகமலர்ச்சி காட்டாமல் வேறுபட்டுப் பார்த்தவுடன் வாடுதலடைவர். இதனாலே தூரத்திலே விருந்தினரைக் கண்டவுடன் முகமலர்ச்சி காட்டுதல் அவசியமாம். சமீபத்திலே வந்தவுடன் இன்சொற் சொல்லுதல் வேண்டும். அது கேட்டுச் சம்மதித்தால் உபசரித்தல் வேண்டும். (உபசரித்தல்: உணவாதிய கொடுத்தல்.)
---------

10-ஆம் அதிகாரம். இனியவை கூறல்.

அஃதாவது:- மனத்திலுள்ள மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிற இனிய சொற்களைச் சொல்லுதல்.

1. இனிய சொல்லுக் கிலக்கணம்.
(1) இனிய சொற்களாவன : அன்போடு கலந்து வஞ்சக மில்லாதனவாயிருக்கின்ற தருமத்தினை யறிந்தவர்களுடைய வாய்ச் சொற்களாம். (அன்போடு கலத்தலாவது: அன்புடைமையை வெளிப்படுத்தல்.)

2. இனிய முகத்தோடு கூடிய இன்சொல் முன்னரே விருந்தினதை வசப்படுத்துதலின் விருந்து [$]புரப்பதன்கட் சிறந்தது.
(2) ஒருவரைக் கண்டவுடனே முகமலர்ச்சியுற்று அம்முக மலர்ச்சியுடன் இனிய சொல்லையு முடையவனாவானெனில் அச்சொல்லானது மனமகிழ்ந்து வேண்டிய பொருளைக் கொடுப்பதைப் பார்க்கினும் நல்லதாகும்.

(3) தருமமானது ஒருவரைக் கண்டபோதே முகத்தால் விரும்பி இனிதாகப்பார்த்துப் பின் அவர் தம்மைச் சேர்ந்த போது மனத்துடனிருக்கிற இனிய சொற்களைச் சொல்லுதலி னிடத்தே யுள்ளதாம். ஆதலால் இனிய சொல்லில்லாமல் எவ்வளவு கொடுத்தாலும் புண்ணியமில்லை யென்பதாயிற்று.
---
[$] புரப்பது- காப்பது
----

3. இனியவை கூறுவார்க்கு இம்மைப் பயனெய்தும்.
(4) எல்லாரிடத்திலும் இன்பத்தை யதிகப்படுத்தும் இனிய சொற்களை யுடையவருக்குத் துன்பத்தை யதிகப்படுத்தும் தரித்திரங்கிடையாது.

(5) ஒருவனுக்கு ஆபரணமாவது பெரியோரிடத்தே வணக்கமுடையவனாகி யெல்லாரிடத்திலு மினிய சொல்லை யுடையவனா யிருத்தலாம். இவ்விரண்டு மல்லாமல் உடம்பிலே யணிந் திருக்கும் ஆபரணங்கள் ஆபரணங்களாகாவாம்.

4. இனியவை கூறுவார்க்கு மறுமைப்பய னெய்தும்.
(6) பொருளினாலே பிறருக்கு நன்மையைத் தருஞ் சொற்களை யாராய்ந்து இனிமையுள்ளனவாக ஒருவன் சொல்லுவானாயின் அவனுக்குப் பாவங்கள் கெடத் தருமம் வளரும். இதனாலே கடினமான சொற்களைப் பேசலாகாதென்பதும், பேசினாற் பாவமுண்டா மென்பதும் பெறப்பட்டன.

5. இருமைப்பயனு மொன்றாகப் பெறுதல்.
(7) பொருளினாலே பிறருக்கு நன்மையைக் கொடுத்து இனிமைக் குணத்தினின்றும் நீங்காத சொற்களானவை யொருவனுக்கு இம்மையிலே நீதியையுமுண்டாக்கி மறுமையிலே புண்ணியத்தையுங் கொடுக்கும்.

(8) பொருளினாலே பிறருக்கு வருத்தஞ் செய்யாத இனிய சொற்களானவை யொருவனுக்கு வருபிறப்பிலும் இப்பிறப்பிலும் மின்பத்தைக் கொடுக்கும். (இப்பிறப்பிலின்பமாவது: இன்சொல்லாலுலகம் தன் வசப்படுதலால் நல்லன வெய்திச் சுக மடைதல்)

6. தீயசொற் கூறுதலா லுண்டாகுங் குற்றம்.
(9) பிறருடைய இனிய சொற்களானவை தனக்கு இன்பம் தருதலை யநுபவித்தறிபவன் பிறரிடத்துத் தான் பேசும்போது கடினமான சொற்களைப் பேசுவது என்ன பிரயோசனத்தைக் கருதியோ?

(10) தருமமுண்டாகும் இனிய சொற்கள் தன்னிடத்திலிருக்க அச்சொல்லைச் சொல்லாமற் பாவமுண்டாகுங் கொடிய சொற்களை யொருவன் பேசுதல் இனிய கனிகள் தன்னிடத்திலிருக்க அவற்றைத் தின்னாமற் காய்களைத் தின்பதற்குச் சமமாகும்.
---------

11- ஆம் அதிகாரம். செய்ந்நன்றியறிதல்.

அஃதாவது:- தனக்குப் பிறர் செய்த நன்மையை மறவாதிருத்தல்.

1. காரணமில்லாமற் செய்ததுங் காலத்தினாற் செய்ததும் பிரயோசனங் கருதாது செய்ததுமாகிய உதவியின் பெருமை அளக்க முடியாது.
(1) தனக்கு முன்னொரு உதவியுஞ் செய்யாதிருந்த அன்னியனொருவனுக்குச் செய்த வுபகாரத்துக்கு மண்ணுலகத்தையும், விண்ணுலகத்தையுங் கொடுத்தாலுஞ் சமானமாக மாட்டாது.

(2) ஒருவனுக்கு ஆபத்து வந்தவளவிலே ஒருவன் செய்த உபகாரப் பொருளானது சிறிதாயிருந்தாலும் சமய நோக்கி இப்பூமியைப்பார்க்கிலும் பெரிதே யாகும்.

(3) தாம் செய்யுமுதவியைப் பெறுவோராலே தமக்குப் பின்வரும் பிரயோசனத்தைக் கருதாது அவருக்குத் தாம் செய்யும் முயகாரத்தின் நன்மையானது கடலினும் பெரியதாகும்.

2. மேற்கூறிய முன்றுதவியும் அறிவுடையோர்க்குச் செய்த வழிப் பெரிதாம்.
(4) தமக்குத் தினையளவாகிய வுதவியை யொருவன் செய்தாலும் அவ்வுதவியைச் சிறியதென்று நினையாமல் பனை யளவு பெரிய தென்று நினைப்பார் அப்படி நினைத்தலாலாகிய பிரயோசனத்தைத் தெரிந்த பெரியோர்.

(5) மேலே கூறிய செய்யாமற் செய்த வுதவியும் ஆபத்து வந்த காலத்துச்செய்த வுதவியும் தாம் செய்த கவியைப் பெற்றாராலே தமக்குப் பின்வரும் பயனை நினையாமற் செய்த வுதவியுமல்லாத வேறுவகையாற் செய்த வுதவிக்கு அளவு கூறினால் அவ்வுதவிக்குத் தக்கபடி சிறிது பெரிதென்று சொல்லக் கூடாது. அவ்வுதவியை யேற்றுக் கொண்டவரது குணமெவ்வளவோ அவ்வளவே யதற்களவுடையதாகும்.

3. நன்றி செய்தாரது நட்பை விடலாகாது.
(6) தனக்குத் துக்கம் வந்த காலத்திலே யுதவி செய்தவரது சிநேகத்தை யொருவன விடாதிருக்க வேண்டும். அதுபோலவே யறிவொழுக்கங்களிற குற்றமில்லாத பெரியோர்களுடைய சிநேகத்தையும் மறவாதிருக்கவேண்டும். ஏனென்றால் அது மறுமைக்குப் பயன் தருமாதலாலென்க.

(7) நல்லவர்கள் தமக்கு வந்த துன்பத்தைக் கெடுத்தவருடைய சிநேகத்தை வினைப்பயன் விடாது பற்றப்படும் தம்முடைய எழுவகைப் பிறப்பிலும் மறக்கமாட்டார்கள்.

4. மறவாத்தும் மறப்பதும் இன்னது, இன்னதென்பது.
(8) ஒருவன் தனக்கு முன் செய்த நன்மையை மறந்து விடுவது தருமமல்ல. அவன் செய்த தீமையைச் செய்த அப்பொழுதே, மறந்து விடுவது தருமமாகும்.

5. ஒருவன் செய்த நன்றல்லதை மறக்கும் உபாயம்.
(9) தமக்கு முன்னொரு நன்மையைச் செய்தவர். பின் கொலை செய்தாற்போலுங் கேடுகளைச் செய்தாரானாலும் அவர் முன் செய்த ஒரு நன்றியை நினைக்க அக்கேடுகளெல்லா மிலலையாகும்,

6. செய்ந்நன்றி மறத்தலின் கொடுமை..
(10) எந்தத் தருமங்களைக் கெடுத்தவர்களுக்கும் பாவத்தினின்று நீங்கும் வழியுண்டு. ஒருவன் செய்த வுபகாரத்தைக் கெடுத்த மனிதனுக்குப் பாவத்தினின்று நீங்கும் வழி கிடையாது.
-------

12- ஆம் அதிகாரம். நடுவு நிலைமை.

அஃதாவது:- பகைவர், அயலோர், சிநேகர் ஆகிய இம்மூவகையோ நடத்தும் தருமத்தினின்றுந் தவறாமல் ஒப்ப நிற்கும் நிலைமை.

1. நடுவு நிலைமையின் சிறப்பு.
(1) பகைவர், அயலோர், நட்பினரென்னும் மூன்று பிரிவின ரிடத்துந் தன்னுடைய நீதியை விடாமல் நடப்பானாயின் ஒருவனுக்கு அவ்விதம் நடப்பதாகிய நடுவு நிலைமையென்று சொல்லப் படுமொரு தருமமுமே நல்லதாகும்.

2. நடுவுநிலைமையால் வந்த செல்வம் நன்மையைத் தரும், மற்றைச் செல்வந் தீமைமையைத் தரும்.
(2) நடுவுநிலைமை யுடையவனது செல்வமானது பிறருடைய செல்வம் போல் அழியாமல் அவன் புத்திரருக்கும் இன்பந்தருமுறுதி யுடையதாயிருக்கும்.

(3) தீங்கைத் தருதலல்லாமல் நன்மையைக் கொடுத்தாலும் நடுவு நிலைமை நீங்கலால் வந்த செல்வத்தை அப்பொழுதே யொருவன் விட்டு விட வேண்டும். (நடுவுநிலை நீங்கலால் வந்த செல்வமாவது: பொய், களவு முதலியவற்றாற் கிடைத்த பொருளாம்.)

3. தக்கவரையுந் தகாதவரையும் அறியும் வழி.
(4) இவர் நடுவுநிலைமை யுடையவர், இவர் நடுவுநிலைமை யில்லாதவரென்னும் விசேடம் அவரவருடைய நல்ல புத்திரர் இருப் பினாலும் இல்லாமையினாலும் அறியக்கூடும்.

4. கேடுவராமை காரணமாகவும் செல்வம் வருங்காரணமாகவும் நடுவு நிலைமை தவறலாகாதென்பதும், தவறுதல் கேடு வருவது ற்குக் காரணமென்பதும், தவறாதவன் தாழ்வு செல்வமென்பதும்.

(5) தீவினையினாலே கேடும் நல்வினையினாலே ஆக்கமும். எல்லாருக்கு முன்னமே யமைந்திருக்கின்றன; அதை யறிந்து கேடு வராமற் றடுத்தற் பொருட்டும் ஆக்கம் வருதற் பொருட்டும் மன த்திலே சாய்தலில்லாம லிருத்தலே யறிவாலுயர்ந்தோர்க்கு அழ காம். சாய்தலாவது: ஒரு கார்பாக நியாயந்தவறி நிற்றல்.

(6) ஒருவன் தன்னுடைய மனமானது நியாயந்தவறிப் பட்சபாதங்களைச் செய்ய நினைக்குமானால் அந்நினைப்பு தான் கெட்டுப் போவேனே ன்னும் அடையாளமாக அறியவேண்டும்.

(7) இஃதறிந்து நடுவு நிலைமை தவறாமல் தருமத்தின் வழி நடந்தவனது வறுமையை வறுமையாக உயர்ந்தோர் நினைக்க மாட்டார். எனவே, அவ்வறுமை நன்மையையே தருமென்றறிக.

5. ஒரு பட்சம் சாராத மனத்தோடு தரும் மிருந்தபடி சொல் லுதல் நடுவுநிலைமை என்பதும், ஒரு பட்சஞ் சார்ந்த மனத்தோடு தரும் மிருந்தபடி சொல்லுதல் நடுவுநிலைமை யன்றென்பதும்.

(8) முன்னே தன்னைச் சமமாகச் செய்து கொண்டு அதன் பின்னே தன்னிடத்து வைக்கப்பட்ட பொருள்களை நிறுப்பதாகிய துலாக்கோல் போலத் தம்மை நேர்வழியிலே நிறுத்திக்கொண்டு தம்மிடத்திலே வந்து சொல்லும் வாதி பிரதிவாதிகள் வழக்கை ஒரு பக்கத்திலே கூட்டிக் குறைத்துப் பேசாமல் இருவருக்கும் பொதுவாகப் பேசித் தீர்ப்புச் சொல்லுதல் அறிவாலுயாந்தோர்க்கு அழகாகும்.

(9) நடுவு நிலைமையாவது: உயர்ந்தோர் தாம் சொல்லுஞ் சொல்லினிடத்தே கோணுத லில்லாமையாம். அதுவும் தம் மனத்தில் னிடத்தே கோணுத லில்லாமையையுறுதியாகப் பெற்றால், எனவே, மனத்திலொன்று வாக்கிலொன்று சொல்லுவார் சொல் நடு நிலைமை யாகா தென்பது பெறப்பட்டது.

6. நடுவு நிலைமை யாகும் விதம்.
(10) பிறர் பொருளையுந் தம்பொருளைப் போலச் சீர்தூக்கிக் காத்து வியாபாரஞ் செய்தால் அங்ஙனஞ் செய்வார்க்கு அச்செய்கை யானது நல்ல வியாபாரமாகும். (சீர்தூக்கிக் காத்தலாவது: வாங்குவது அதிகமுங் கொடுப்பது குறைவுமாகாமல் ஒப்ப நாடிச் செய்தல், இதுவும் நடுவுநிலைமையாம்.)
---------

13 - ஆம் அதிகாரம். அடக்க முடைமை.

அஃதாவது:- காயமும் வாக்கும் மனமும் தீயவழியிலே செல்லா மல் அடங்குதலுடையனா யிருத்தல்.

1. பொது வகையால் அடங்குஞ் சிறப்பு.
(1) அடக்கமாகிய தருமமானது ஒருவனைத் தேவருலகத் திலே கொண்டு போய்விடும். அடக்க மில்லாமையாகிய பாவமானது தாங்குதற் கரிய நரகத்திலே செலுத்திவிடும்.

(2) இத்தகைய அடக்கத்தை யொருவன் உறுதிப்பொருளாகக் காக்கவேண்டும். இதைப் பார்க்கினு மேலான செல்வம் மனிதருயிர்க்கு வேறில்லை.

(3) ஆதலாலே அடங்கி நடத்தலே நமக்கறிவாவதென்றறிந்து கல் வழியிலொருவன் அடங்கப்பெற்றால் அவ்வடக்கமாவது பெரியோ ராலறியப் பட்டு அவனுக்கு மேன்மையைக் கொடுக்கும். (இல்வாழ்வானுக்கு அடக்கமாவது: காயமும் வாக்கும் மனமு மவன் வசப் படுத்தலாம்.)

(4) இல்வாழ்க்கையாகிய தன் வழியிலே வேறுபடாது நின்று அடங்கினவனுடைய உயர்ச்சியானது மலையினும் மிகப்பெரி யதாகும். (வேறுபடாது நின்றடங்குதலாவது: ஐம்புலன்களையும் மநுசரித்துக் கொண்டிருந்தே யடங்குதல்.)

(5) பெருமையில்லாம லடங்குதல் யாவருக்குஞ் சமமாக நன்றாகும். ஆனாலும் அங்கனம் அடங்குவாரெல்லாருள்ளுஞ் செல்வவான்களுக்கே யவ்வடக்க மானது வேறொரு செல்வமாகத் தோன்றுந் தகுதியுடையதாம். எப் படியென்றால் செல்வமில்லாதவர் அடங்கி நடந்தால் அதையெடுத்துப் பேசமாட்டார். செல்வமுடையவர் அடங்கி நடந்தால் இவ்வ ளவு பெருஞ் செல்வமுடையார் எவ்வளவு பணிவாக நடக்கின்றாரே ன்று எல்லாருமெடுத்துப் பேசி நன்கு மதிப்பர். அப்பொழுது அச் செல்வவான்களுக்குச் செல்வத்தாலுண்டாகு மகிழ்ச்சியைப் பார்க்கிலும் பெருமகிழ்ச்சி யுண்டாகும். ஆதலால் வேறொரு செல்வமாக அடக்கமுடைமை தோன்று மென்றறிக.

2. [$] மெய் யடக்கம்.
(6) ஒரு பிறப்பினிடத்தே கால் நான்கு தலை ஒன்றுமா கிய ஐந்து அவயவங்களையும் தன்னுள்ளே யடக்கும் ஆமையைப் போல மெய், வாய், கண், மூக்கு, செவி யென்னும் ஐம்பொறிகளை யொருவன் தன்னுள்ளடக்க வல்லவனானால் அவனுக்கு அவ்வல்ல மையானது ஏழு பிறப்பினிடத்தும் உறுதியாகிய காவலாயிருக்கும்.
--
[$] மெய் - உடம்பு.

3. [#] வாக்கின் அடக்கம்.
(7) ஒருவர் காக்க வேண்டு மெல்லாவற்றையுங் காக்கமாட் டாராயினும் நாவொன்றையேனுந் தவறாமற் காக்கவேண்டும். அதைக் காவாது விட்டாரானால் சொற்குற்றத்திலே யகப்பட்டுத் துன்பத் தையடைவர். (காத்தலாவது : சொற்குற்றம் வரப் பேசாதிருத்த லாம்.)

(8) தாம் பேசுந் தீய சொற்களது பொருள்களாலே பிற ருக்கு வரும் பிரயோசனந் தம்மிடத்திலே யொன்றாயினும் உண்டா குமானால் பிறதருமங்களாலாகிய நன்மை தமக்குத் தீமையாகிவிடும். (தீய சொல் : பொய், கொடுஞ்சொல் முதலியவையாம்.)

(9) ஒருவனை யொருவன் நெருப்பினாலே சுட்ட புண்ணானது சரீரத்திலிருந்தா லும் மனத்தினிடத்தே யப்பொழுதே மாறிவிடும். நாவினாலே தீய சொற்களாலே சுட்ட தழும்பானது அம்மனத்திலே எப்பொழுதும் ஆறமாட்டாது.
----
[#] வாக்கு – சொல்.

4. மன அடக்கம்.
(10) கோபத்தை மனத்திலே வரவொட்டாமற் காத்துக் கல்வியுடையவனாகி யடங்குதலில் வல்லவனாயிருப்பவனது சமயத் தைத்தருமதேவதை யவனைச் சேரும் வழியிலே நுழைந்து பார்த்துக் கொண்டிருக்கும்.
----------

14- ஆம் அதிகாரம். ஒழுக்கமுடைமை.

அஃதாவது:- தங்கள் தங்கள் வருணாச்சிரமங்களுக்குச் சொல்லப் பட்ட ஆசாரத்தை யுடையவராகி யிருத்தல்.

1. ஒழுக்கத்தின் சிறப்பு.
(1) எல்லாருக்கும் ஆசாரமானது சிறப்பைத் தருதலால் அவ்வாசாரத்தைத் தம்முயிரைப் பார்க்கினுங் காப்பாற்றவேண்டும்.

(2) பலதருமங்கரையு மாராய்ந்து, இவற்றுள், இம்மை மறுமை இரண்டுக்குத் துணையாவது எதுவென்று மனத்தை யடக்கியறிந்தாலும் துணையாய் நிற்பது அவ்வாசாரமே யாதலால், அதனை ஒருவிதத் தாலுங் கெடாமற் பேணி, வருத்தப் பட்டாயினுங் காக்கவேண்டும்.

2. ஒழுக்கமுள்ள இடத்து உண்டாகுங் குணமும்,
அஃதில்லாத இடத்து உண்டாகுங் குற்றமும்.
(3) எல்லார்க்கும் தங்கள் தங்களுடைய குலத்துக்கள் ஆசாரமுடைமையானது குலமுடைமையாகும்; அவ்வாசாரத்தினி னறுந் தவறுதலானது தாழ்ந்த குலமாகிவிடும். வானவே, ஆசாதக தவறாமை உயர்ந்த பிறப்பாய் விடுமென்ப தாயிற்று.

(4) பார்ப்பான் தான் கற்ற வேதத்தை மறந்துவிட்டானானாலுங் குலங்கெடா மையினாலே பின்னும் ஓதிக்கொள்ளலாகும். அவனது ஆசாரங் குறைந்து போனால் அவன் குலம் கெட்டு விடும். அவனுக்கே அப்படியானால் மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டுமோ? ஆதலால் எல்லாச் சாதியாரும் ஒழுக்கத்தைக் குறையவிடலாகாது.

(5 ) பொறாமை யுடையவனிடத்திலே செல்வமானது இல்லாமற் போதல் போல் ஆசாரமில்லாதவனிடத்தே உயர்குலமில்லாமற் போய் விடும்.

(6) ஒழுக்கந் தவறுதலா லுண்டாகும் இழிகுலம் ஆதலாகிய குற்றமுண்டா தலைத் தெரிந்து மன வலிமையுடையவர் அவ்வொழுக்கத்தினின்றும் குறைவுபடமாட்டார்.
(7) ஒழுக்கத்தினாலே எல்லாரு மேன்மை யடைவர்; அவ்வொழுக்கத்தினின்றுந் தவறினவர் தாம் அடைதற் குரிய தல்லாத நிந்தையை யடைவர். (அஃதாவது: பகையினாலே ஒருவர் பொய்யாகத் தம்மேற் சுமத்திய பழிச்சொல்.)

3. ஒழுக்க மில்லாமையாற் பின்வரும் குற்றம்.
(8) ஒருவனுக்கு நல்ல ஆசாரமானது தருமத்துக்குக் கார ணமாகும். தீய ஆசாரமானது இம்மை மறுமை இரண்டிலுந் துன் பத்தைக் கொடுக்கும்.

4. சொல்லாலுஞ் செயலாலும் வரும் ஒழுக்கங்கள்.
9) நல்லொழுக்கமுள்ளவர்க்கு மறந்துந் தீய சொற்களைச் சொல்ல முடியாவாம். நிய சொற்களாவன: பிறர்க்குத் தீங்கைத் தரும் பொய் முதலான சொற்கள்; இச்சொற்கள் பேசுதலும் ஒழுக்க விரோதமாம்.

(10) உயர்ந்தாரோடு பொருந்த நடத்தலைக் கல்லா தவர், பல நூலைக் கற்றாரானாலும் விவேக மில்லாதவராவார். (உயர் ந்தாரோடு பொருந்த நடத்தலாவது: அவரெப்படி நடந்தாரோ அப்படி நடத்தலாம்.)
----------

15 - ஆம் அதிகாரம். பிறனில் விழையாமை.

அஃதாவது:- காம மயக்கத்தினாலே அன்னியனுடைய மனைவியை விரும்பாதிருத்தல்.

1. பிறன்மனையாளை விரும்புவானிடத்து உண்டாகுங் குற்றம்.
(1) அன்னியனுக்குச் சொந்தமாகிய மனைவியை இச்சித்து நடக்கின்ற அறியாமையானது பூமியினிடத்துத் தரும் நூலையும் பொருள் நூலையும் ஆராய்ந்தறிந்த பெரியோரிடத்தில் கிடையாது, இதனால், தருமமும் பொருளும் பிறன் மனைவியிடத்து விவசாரஞ் செய்தவனிடத்து இல்லாமற் போமென்பதாயிற்று.

(2) பாவத் திலே நின்றவரெல்லாருள்ளும் விவசாரங் காரணமாகப் பிறனுடைய தலைவாயிலிலே அவன் மனையாளை இச்சித்து நின்றவர்போல மூடரி ல்லையாம்.

(3) சந்தேகமில்லாமல் தம்மை நல்லவரென்று அறிந்தவருடைய மனிவியினிடத்தே விவசாரமாகிய பாவஞ் செய்தலை விரும்பி நடப்பவர் உயிருடையவராயிருந்தாலுஞ் செத்தவரே யாவர்.

(4) எவ்வளவு பெருமையுடையவரா யிருந்தாலும் தமக்கு வருங் குற்றத்தைச் சிறிதாயினும் உணராமல் பிறனுடைய மனையாளிடத்தே : ஆசை கொண்டு செல்லுதல் அவருக்குப் பாவ
மாய் முடியும்.
(5) இவளைச் சேர்தல் இலே சென்று நினைத்துப் பிறன் மனைவியிடத்தே செல்லுவோன் அழியாமல் எக்காலமும் நிலை நிற்பதாகிய குடிப்பழியை யடைவான். (6) இம்மட்டோர் அவ னிடத்துப் பகையும், பாவமும், பயமும், மேற்கூறிய குடிப்பழியு மாகிய நான்கும் எப்போதும் நீங்காவாம்.

2. பிறன்மனையாளை விரும்பாதவனிடத்து உண்டாகும் குணம்.
(7) அன்னியனுடைய ஆளுகைக்குள் அவனுக்குரிமை பூண்டு நிற்பவளாகிய மனையாளது இன்பத்தை விரும்பாதவன் தருமமாகிய இயல்போடு கூடி இல்வாழ்வானென்று சொல்லப்படு பவ னாவான்.

(8) அன்னியனுடைய மனைவியை மனத்தினும் நினை யாத பெரிய ஆண் தன்மையானது அறிவாலுயர்ந்தோர்க்குத் தரு மமாகும்; அம்மட்டோ ? நிறைந்த நல்லொழுக்கமுமாகும். பெரிய ஆண் தன்மை என்றதனால் இது எல்லாராலுஞ் செய்யமுடியா தென்பதாயிற்று. (ஆண் தன்மை - வீரம்.)

(9) பயத்தைத் தரும் கடலால் சூழப்பட்ட உலகத்தினிடத்தே சகல நன்மைகளையும் பெறுதற்குரியவர் யாரென்றால், அன்னியனுக்குரிய மனையாளது தோளைத் தழுவாதவரேயாம்.

(10) ஒருவன் தனக்குத் தருமத்தை உரிமையுடையதென்று அங்கீகரியாதவனாகிப் பாவங்களைச் செய்வானா னாலும் பிறனுக்குச் சொந்தமானவளுடைய காம இன்பத்தை விரும்பாதிருந்தா னானால் அது நன்மையைக் கொடுக்கு மென்பதாம்.
------

16- ஆம் அதிகாரம். பொறையுடைமை.

அஃதாவது:- காரணம் பற்றியாவது, அறியாமையினாலாவது ஒருவன் தம்மிடத்துத் தீங்கு செய்த இடத்துத் தாழம் அத் தீங்கை அவனுக்குத் செய்யாமற் பொறுத்தலுடையரா யிருத்தல்.

1. பொறையுடைமையின் சிறப்பு.
(1) தன்னை வெட்டுவோரைக் கீழே விழாமற் சுமப்பதா கிய பூமியைப் போலத் தம்மை இகழ்ந்து பேசுவாரைப் பொறுத்துக் கொள்ளுதல் முதன்மையான புண்ணியமாம்.

(2) ஒருவன் செய்த குற்றத்தைத் தன்னாலேயவனைத் தண்டிக்கக்கூடிய காலத்திலும் பொறுத்துக் கொள்ள வேண்டும். அப்படிப் பொறுப்பதைப் பார்க்கிலும் அக்குற்றததை அவன் செய்த அப்பொழுதே மறந்து. விடுதல் மிக நல்லது. ஏனென்றால் பொறுத்தல் காரணமாக்க கடவுள் அவனை த தண்டிக்கக் கூடும். அத்தண்டனைக் கிடமில்லாமற், செய்த புண்ணிய மெய்து தலாலென்க.

(3) ஒருவனுக்கு வறுமையுள் வறுமையாவது, விருந்தினரை யேற்றுக் கொள்ளாமல் நீக்குமலாம். அதுபோலவே வல்லமையுள் வல்லமையாவது அறியாமை யினாலே தீமை செய்தவரைப் பொறுத்துக் கொள்ளுதலாம்

(4) எல்லாவற்றாலும் நிறையுடையவனாயிருத்தல் தன்னை விட்டு நீங்காயை யை விரும்புவா னானால் அவன் பொறுமையுடையவனாயிருக்கையை அழியாமல் காப்பாற்றி வர வேண்டும்.

2. பிறர் செய்யும் தீமையைப் பொறுத்தல்.
(5) பிறர் தமக்குத் தீங்கு செய்த இடத்து, அத்தீங்கைப் பொறுத்துக்கொள்ளாமல் அவரை வருத்தப் படுத்தினவரை அறிவுடையோர் ஒரு பொருளாக நினைக்கமாட்டார். அத்தீங்கைப் பொறுத்துக் கொண்டவரைப் பொன்னைப்போல இடைவிடாமல் மனத்தில் வைத்துக்கொள்ளுவர்.

(6) இவ்விதம் பொறுத்துக் கொள்வார்க்கு உலகமழியுமட்டுங் கீர்த்தியிருக்கும். பொறுத்தலில்லாமல் தாமுமவ ருக்குத் தீங்கு செய்வாரானால் செய்த ஒரு நாளைக்கு மட்டு மின்ப மாம்; இவற்றுள், எது பெரிகென்று கவனிக்கவேண்டும்.

(7) தன்னிடத்துச் செய்யத் தகாத தீமைகளை அயலார் செய்தாலும் இத் தீமை செய்தவர் மறு பிறப்பிலே துன்பத்தை யடைவாரேயென்று வருந்தித் தானுமவருக்குத் தருமமாகாத கொடிய செய்கையைக் செய்யாதிருத்தலே நல்லதாம்.

(8) பலவிதமான கெருவத்தால் தம்மிடத்துத் தீயவைகளைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமையினாலே அவரை வென்று விடவேண்டும்; இதனாலே தீமை செய்தவனுக்குத் தீமை செய்வார் ஒருகால் தோற்றாலுந் தோற்பர். பொறுத்துக்கொண்டால் அவனை வென்றே விடுவா ரென்பதாயிற்று.

3. பிறர் சொல்லிய குற்றங்களைப் பொறுத்தல்.
(9) தீயவரது வாயிலுண்டாகும் தீய சொற்களைப் பொறுத்துக்கொள்பவர் இல்வாழ்க்கை யிலிருந்தாலுந் துறவிகளைப்போலப் பரிகாதை குணமுடையவராவார்.

(10) விரதங்களினாலே உணவை கோகித தாணயடைந்த பசி முதலிய நோயைப் பொறுப்பவர் எல்லோரிலும் பெரியவராவார்; அவரும் தம்மை அயலார் நிந்தித்துப் பேசுந் துன்பந் தருஞ் சொற்களைப் பொறுத்துக் கொள்பவருக்குச் கமானமாக மாட்டார்.
--------

17- ஆம் அதிகாரம். அழுக்காறாமை.

அஃதாவது:- பிறருடைய செல்வம் முதலானவை கண்டவிடத்துப் பொறாமைப் படாதிருத்தல்.

1. பொறாமை யில்லாமையினது குணம்
(1) ஒரு வன் தன் மனத்தினிடத்தே பொறாமையாகிய குற்றம் இல்லாத அறிவோடு கூடிய தன்மையைத் தனக்கு முன் னே சொல்லப்பட்ட ஒழுக்கத்தின் வழியாகக் கொள்ளவேண்டும்.

(2) யாரிடத்தும் பொறாமை வையாதிருத்தலை ஒருவன் பெறுவானானால் அதைப்போல அவனடையும் பெரிய பேறுகளுக்குள்ளே வேறொன்றுமில்லையாம்.

2. பொறாமை யுடைமையினது குற்றம்.
(3) மறுமைக்குத் தருமத்தையும் இம்மைக்குச் செல்வத்தையும் தனக்கு வேண்டாதவ னென்று சொல்லப்படுவா னெவனேன்றால் அன்னியனுடைய செல்வத்தைக் கண்டவுடனே சந்தோஷப் படாமல் பொறாமைப் படுபவனேயாம்.

(4) பொறாமைப்படுந் தீய வழியினாலே தமக்கு இம்மை மறுமையிலும் துன்பமுண்டா வதை யறிந்து அறிவுடையோர் பொறாமையினாலே தருமமல்லாத வைகளைச் செய்யமாட்டார். தரும மல்லாதவை : செல்வம், கல்வியுமடையவருக்குத் தீங்கு நினைத்தாலும், சொல்லலும், செய்தலுமென றுணர்க.

(5) பொறாமையானது பகைவரில்லாதிருந்தாலும் கேட் டைத்தருவது. ஆதலால் அப்பொறாமை யுடையவருக்குக் கேட்டைத் தருவதற்கு வேறு பகைவர் வேண்டாம், அப்பொறாமையே போது மானதா யிருக்கிறது.

(6) ஒருவனாற் பிறருக்குக் கொடுக்கப்படும் பொருளைக் குறித்துப் பொறாமைப் படுவாரது சுற்றத்தார் உடுக்கப் படுவதாகிய ஆடையும் உண்ணப் படுவதாகிய உணவுப் பொருளும் கிடையாமற் கெட்டுப் போவார். பொறாமை யுடையவர் சுற்றத்தாரே கெடுவாரென்றால் அவ கெடுவாரென்பது சொல்லவும் வேண்டுமோ?

(7) பொறாமையுடையவனை இலக்குமியானவள் தானும் பொறாமைப்பட்டு அவனைத் தன்னுடைய தமக்கையாகிய மூதேவி க்குக் கொடுத்துத் தான் அவனை விட்டு நீங்கி விடுவாள்.

(8) பொறாமை யென்று சொல்லப்பட்ட ஒப்பற்ற பாவியானவன் தன்னை வைத்திருக்கப் பட்டவனை இம்மையிலே அவனுடைய செல்வத்தைக் கெடுத்து மறுமையிலே நரகத்திலே தள்ளிவிடுவான்.

3. பொறாமை யுடைமையினது குற்றமும் குணமும்.
(9) பொறாமையுள்ள மனத்தையுடையவனது செல்வ மும், பொறாமையில்லாத மனத்தை யுடையவனது தரித்திரமுங் கண்டால், அறிவுடையாரால் அவையிரண்டும் ஆராய்ந்து பார்க்கப்படும். ஆராய்ந்து பார்த்தலாவது : பொறாமையுடையோர்க்கு ஆக்கமும், பொறாமை யில்லாதவர்க்குத் தரித்திரமும் வருவதற்கு நியாய மில்லை. ஆதலால் இவ்விதம் மாறி வந்ததற்குக் காரணம் பழவினை யென்றறிதலாம்.

(10) பொறாமைப்பட்டு விருத்தியாயினவரும் பொறாமைப் படாமலிருந்து விருத்தியிலிருந்து நீங்கினவரு மில்லை. ஆதலால் ஒருவிதத்தினும் பொறாமையொருவனுக்குக் கூடாதென் பதாயிற்று.
--------

18- ஆம் அதிகாரம். வெஃகாமை.

அஃதாவது:- பிறர் பொருளைக் கிரகிப்பதற்கு நினையா திருத்தல்,

1. பிறர் பொருளை விரும்புதலின் குற்றம்.
(1) பிறருக் குரிய பொருளை எடுத்துக் கொள்ளுதல் நமக்குத் தரும் மல்லவென்னும் நியாயமில்லாமல் அவருடைய நல்ல பொருளை அபகரித்தற்கு விரும்பினால் அவ்விருப்பமானது அபகரித்தவனுடைய குடியைக் கெடுத்துப் பல குற்றங்களையும் அப்போதே அவனுக்குக் கொடுத்து விடும். (நல்ல பொருளாவது: தரும் வழியால் வந்த பொருள்.)

(2) ஒருவன் பொருளுக்கு மற்றவனுரியவனல்ல னென்னும் நீதியில்லாமையாகிய பாவத்துக்குப் பயப்படுவோர், பிறர் பொருளை அபகரித்தலினாலே தமக்கு வரும் பிரயோசனத்தை விரும்பிப் பழியினிடத்தே பொருந்துந் தீச்செயல்களைச் செய்ய மாட்டார்.

(3) நிலையுடையதாகிய பேரின்பத்தை இச்சிப்பவர் பிறரிடத்தே அபகரிக்கப்பட்ட பொருளினாலே தாமடைவதாகிய நிலையில்லாத சிற்றின்பத்தை விரும்பித் தரும் மல்லாத செயல்களைச் செய்யார்.

(4) ஐம்புலன்களையுஞ் செயித்த குற்றமில்லாத அறிவுடையோர் தாம் வறுமையுடையோ மென்று நினைத்து அதை நீக்குதற்காகப் பிறர் பொருளை விரும்புதல் செய்யார்.

(5) பொருளை விரு ம்பி எல்லாரிடத்தும் அறிவோடு பொருந்தாத செயல்களை யறிவுடையோர் செய்வாரானால் நுட்பமான தாகி எல்லா நூல்களிலும் பழகிய அவர் அறிவானது என்ன பிரயோசனத்தை யுடையதாம்.?

(6) துறவறத்தை விரும்பி இல்லறமாகிய வழியிலே நின்றவன் பிறர் பொருளை விரும்பி அப்பொருளை வருவிக்கும் உபாயங்களாகிய குற்ற வழிகளை நினைத்தலால் கெட்டுப் போவான். நினைத்தலாலே கெடுவானென்றால் செய்தலாலே கெடுவானெனபது சொல்ல வேண் டுவதில்லை. நினைத்தலும் செய்தலோ டொக்கு மென்பதே அறி வுடையோர் துணிவு.

(7) பிறர் பொருளை விரும்பிக் கொண்டு அப் பொருளாலுண்டாகும் பெருக்கத்தை வேண்டாமலிருக்க வேண்டும். ஏனென்றால், பின்னர் அப்பொருளை அநுபவிக்கும் போது அப்பெருக்கத்தின் பயன் நன்றாக மாட்டாது. ஆதலாலென்க.

2. பிறர் பொருளை விரும்பாமையின் குணம்.
(8) குறைந்து போகுந் தன்மையுடைய செல்வத்துக்குக் குறையாதிருக்குக் காரணம் எதுவென்றொருவன் ஆராய்ந்து பார்த் தால், பிறன் விரும்புகின்ற அவனுடைய சொந்தப் பொருளைத் தான் ஆசைப்படா திருத்தலேயாம்.

(9) இது தருமமென்றறிந்து பிறர் பொருளை இச்சியாத அறிவுடையவரை இலக்குமியானவள் அவரைச் சேருதற்கு உபாயத்தை யறிந்து அவ்வுபாயத்தினாலே வந்து சேருவள்.

3. பிறர் பொருளை விரும்புகமையின் குற்றமுங் குணமும். '
(10) ஒருவன் தனக்குப்பின் விளையும் கேட்டை நினையா மல் பிறன் பொருளை அபகரிக்க நினைப்பானானால் அந்நினைப்பானது அவனுக்கு நாசத்தை யுண்டுபண்ணும். அப்பொருளை அபகரிக்க நினையாதிருத்தலாகிய கெருவமானது வெற்றியைக் கொடுத்துக் கொண்டிருக்கும்.
----------

19-ம் அதிகாரம். புறங்கூறாமை.

அஃதாவது:- காணாத இடத்தே பிறரை இகழ்ந்து பேசாதிருத்தல்.

1. புறங்கூறாதிருத்தலின் நன்மை.
(1) ஒருவன் தரும் மென்று வாயினாற் சொல்வது மில்லாமற் பாவங்களைச் செய்தாலும் அன்னியரைக் காணாத இடத்தே அவரை இகழ்ந்து பேசமாட்டானென்று சொல்லும்படி நடந்து கொள்ளுதல் நல்லதாம்.

2. புறங்கூறுதலின் கொடுமை.
(2) தருமமென்ப தொன்றில்லை யென்று அழித்துப் பேசிப் பாவங்களைச் செய்தலைப் பார்க்கினும் ஒருவனைக் காணாத இடத்தில் இகழ்ந்து பேசிக் கண்ட இடத்தில் அவனோடு பொய்யாக மகிழ்ச்சி யடைதல் தீமையுடையதேயாம்.

(3) இவ்விதம் பொய் வேடம் பூண்டு ஒருவனுயிர் வைத்துக் கொண்டிருப்பதை விட அவ்வுயிரை விட்டுவிடுதலானது அவனுக்குத் தரும் நூலிலே சொல்லப்பட்ட பயனைக் கொடுக்கும்.

(4) ஒருவனை அவனெதிரே நின்று தாட் சணியமில்லாமற் பேசினாலும் அவனைக் காணாமற் பின் வருங் குற்றத்தை நோக்காத சொல்லைப் பேசாதிருத்தல் வேண்டும்.

3. புறங்கூறுவார்க்கு உண்டாகுங் குற்றம்.
(5) பிறரைக் காணாத இடத்துக் குறைத்துப் பேசுகின்ற ஒருவன் தருமம் நன்றென்று வாயினாலே சொன்னாலும் மனத் தோடு பொருந்தச் சொல்லுகின்றானில்லை யென்பது காணாத இடத் துப் பிறரை நிந்தித்துக் கூறுதற் கேதுவாகிய அவன் மன வஞ்சகத் தினாலே யறிவுடையாரா லறியக் கூடும்; எனவே மனநல மில்லாதவன் தருமமென்று சொல்லுஞ் சொல் பயனற்ற தென்பதாயிற்று.

(6) அன்னியருடைய நிநதையை அவரைக் காணாத இடத்துச் சொல்லுவோன் தனது பல நிந்தைகளுள்ளும் தன்னை வருத்தப் படுத்தும் விதமுடைய இழிவான செய்கைகளை யறிந்து தன்னெதிரே அவராலே சொல்லப் படுவான்.

(7) தம்முடன் கூடி மகிழும்படி இனிய சொற்களைச் சொல்லிச் சிநேகஞ் செய்தலைத் தம் ககு உறுதி யென்றறியாதவர் தம்மைவிட்டு நீங்கும்படி புறங்கூறித் தமது சுற்றத்தாரையும் பிரியச் செய்வர். இதனாலே புறங்கூறு வார்க்கு எல்லாரும் விரோதிகளாவரென்பதாயிற்று.

(8) தம்மோடு நெருங்கிய சிநேகிதருடைய குற்றத்தையும் அவரைக் காணாத இடத்துத் தூற்றும் இயற்கையுடையவர் அயலாரிடத்துச் செய்வது யாதோ தெரியாது?

(9) பிறர் நீங்கின சமயம் பார்த்து அவருடைய பழிப்புச் சொல்லைச் சொல்லுவோனது உடற்பாரத்தைப் பூமியானது, இப்பாரத்தைச் சுமப்பதே எனக்குத் தருமமாவ தென்று நினைத்துச் சுமக்கின்றது போலும். எல்லாப் பாரங்களையுந் தாங்குதல் பூமிக்குச் சுபாவமானாலும் புறங்கூறுவானது உடற் பாரத்தைத் தாங்குதல் தகாத காரியமாதலால் தருமமாவதென்று நினைத்துத் தாங்குகின்ற தென்று சொல்லப்பட்டது.
4. புறங்கூறுதலை விடுதற்கு உபாயம்.

(10) புறங்கூறுவோர் அயலோரது குற்றத்தைப் போலப் புறங் கூறுதலாகிய தம்முடைய குற்றத்தைக் காண்பாராயின் அவரது நிலைபெற்ற உயிருக்கு ஒரு துன்பமுண்டாகுமோ? உண்டாக மாட்டாது.
------

20-ஆம் அதிகாரம். பயனில சொல்லாமை.

அஃதாவது:- தமக்கும் பிறர்க்கும் அறம், பொருள், இன்பங்களுள் ஒன்றையுந் தராத சொற்களைச் சொல்லாதிருத்தல்.

1. பயனில்லாத சொற்களைச் சொல்லுதலின் குற்றம்.
(1) அறிவுடையார் பலருங்கேட்டு வெறுக்கப் பிரயோசனம் இல்லாத சொற்களைச் சொல்பவன் எல்லாராலும் இகழப்படுவான். எனவே, தன்னிலுந் தாழ்ந்தவருந் தனனை மதியாரென்பதாயிற்று.

(2) அறிவுடையார் பலர் முன்னே பயனில்லாத சொற்களைப் பேசுதலானது தன் சிநேகரிடாதே விருப்பமில்லாத செய்கைகளைச் செய்வதைப் பார்க்கிலுங் குற்றமாகும்.

(3) பயனில்லாத சொற்களை ஒருவன் பேசுதலானது இவன் நீதியில்லாதவனென்பதை அறியவிக்கும்.

(4) பயனோடு பொருந்தாத குணமில்லாத சொற்களைப் பலரிடத்தே ஒருவன் சொல்வானானால் அச்சொற்கள் நீதியோடு பொருந்தாதவையாகி நற்குணங்களிலிருந்து, அவனை நீக்கிவிடும்.

(5) பயனில்லாத சொற்களைக் குணத்தன்மையுடையவர்கள் சொல்வாரானால் அவருடைய மேன்மையானது அதனால் வருஞ் சிறப்புடனே அவரை விட்டு நீங்கிவிடும். (மேன்மை நீங்குதல்: மதிப்புக் குறைதலாம்.)

(6) பயனில்லாத சொற்களைப் பலதரமுஞ் சொல் லுவோனை மனிதனென்று சொல்லாதே. மனிதருக்குள்ளே பத ரென்று சொல்லுக. நெல்லினுள் அரிசி போல மனிதருள்ளிருக்கும் அறிவில்லாமையாற் பதரென்று சொல்லப்பட்டது.

2. பயனில்லாத சொற்களைச் சொல்லாமையின் குணம்.
(7) அறிவுடையோர் நீதியோடு பொருந்தாத சொற்களைச் சொன்னாலும் பிரயோசனமில்லாத சொற்களைச் சொல்லாதிருத்தல் நல்லதாம். சொன்னாலுமெனவே, அதுவுஞ் சொல்லலாகா தென்பதுதான் கருத்து.

(8) அறிதற்கரிய பிரயோசனங்களை ஆராயவல்ல அறிவுடையார் மிகுந்த பிரயோசனமில்லாத சொற்களைச் சொல்லார். எனவே, நன்றாக ஆராய்ந்து பேச வேண்டு மென்பதாயிற்று.

(9) மயக்கத்தி னீங்கிய பரிசுத்தமாகிய அறிவையுடையார் பயனில்லாத சொற்களை மறந்தாயினுஞ் சொல்லமாட்டார்.

2. சொல்லத் தகுவனவும் தகாதனவும்.
(10) சொற்களுக்குள்ளே பிரயோசன முடைய சொற்களையே சொல்லவேண்டும். அஃதில்லாத சொற்களைச் சிறிதுஞ் சொல்லாதிருக்க வேண்டும்.
-------

21- ஆம் அதிகாரம். தீவினையச்சம்.

அஃதாவது:-- பாவங்களா யுள்ளவைகளைச் செய்தற்குப் பயப்படுதல்

1. தீவினைக்குப் பயப்பட வேண்டும்.
(1) தீவினையென்று சொல்லப்படும் மயக்கத்துக்கு முற்பிறப் பிற்செய்த தீவினையுடையோர் பயப்பட மாட்டார். அவ்விதஞ் செய்யாத மேலோர் பயப்படுவர். (தீவினையாவது: பாவம்.)

(2) இன்பத்தின் பொருட்டுச் செய்யும் பாவச் செய்கைகள் பின்னே துன்பத்தைத் தருதலால் அப்படிப்பட்ட பாவச்செய்கைகள் தீயைப் பார்க்கினும் அதிகமாகச் சுடுமென்று பயப்பட வேண்டும். (தீயைப் பார்க்கினும் அதிகமாகச் சுடுதலாவது : தீயானது தொட்ட போது மட்டுஞ் சுடும். பாவச் செய்கைகள், இனிமேலெடுக்கும் பிறவிதோறுந் தன்னை விடாது, பின் பற்றிச் சுடுவதேயாம்.)

(3) தம்மை வருத்தப்படுத்துவோருக்குங் கொடிய துன்பங்களைச் செய்யாதிருப்பதையே தமக்கு உறுதியாகிய அறிவுகளெல்லாவற்றிலும் மேலான அறிவென்று நல்லோர் சொல்லுவர்.

2. பிறருக்குத் தீவினை செய்தவர் தாம் கெடுவர்.
(4) ஒருவன் பிறனுக்கு மறந்தாயினுங் கேட்டைத் தருஞ் செய்கையை, எண்ணாதிருக்க வேண்டும். எண்ணுவானானால் எண் ணினவனுக்குக் கேட்டைத் தருஞ் செய்கையை அறக்கடவு ளெண்ணுவான்.

(5) வறுமையுடையே னென்று நினைத்து அவ் வறுமை நீங்கும் பொருட்டுக் கெட்ட காரியங்களை ஒருவன் பிறருக்குச் செய்யாதிருக்க வேண்டும். செய்தால் முன்னைப்பார்க்கினும் பின்னும் அதிக வறுமையுடையவ னாவான்.

(6) துன்பஞ் செய்யும் பகுப்புடைய பாவங்கள் பிற்காலத்துத் தன்னை வந்து வருத்தஞ் செய்வதை விரும்பாதவன், தான் பிறரிடத்தே தியவாகிய பல தொழில்களைச் செய்யாதிருக்க வேண்டும்.

(7) எவ்வளவு பெரிய பகையுடைய வரும் அப்பகையை ஒரு வழியினாலே தப்பித்துப் பிழைக்கலாம். தாஞ் செய்த கொடிய செய்கையாகிய பாவத்தைத் தப்பித்துப் பிழைக்க முடியாது. அப்பாவம் ஒரு நாளுங் கெடாமல் தாம் போன இடமெல்லாம் கூடவே வந்து தம்மைக் கெடுத்துவிடும். ஆதலால் ஒவ்வொருவரும் ஒரு சிறிதுந் தீவினை செய்யலாகாது.

(8) தீங் காகிய பாவங்களைப் பிறருக்குச் செய்தால் அப்பாவமானம் செய்தவனைக் கெடுப்பதற்கு நெடுந் தூரம் போனாலும் அவனை விடாது கூடவே வந்திருக்கும். எப்படி யென்றால், ஒருவனுடைய நிழலானது அவன் சென்ற இடமெல்லாம் போய் அவனுடைய காலிலே ஒடுங்கி யிருப்பது போலு மெனக.

(9) ஒருவன் தன்னைக் காத்துக்கொள்ளும் ஆசையுடையவனாயிருந்தால் தீவினை சம்பந்தப்பட்டவற்றுள் மிகச்சிறியது ஒன்றாகிய செய்கையையும் பிறரிடத்தே செய்யா திருக்கவேண்டும்.

3. தீவினை செய்யாதவன் கேடில்லாதவன் ஆவான்.
(10) ஒருவன் ஒழுங்கான வழியைவிட்டுக் கொடிய வழியில் லே போய்ப் பிறருக்குத் தீச்செயல்களைச் செய்யாதிருப்பானாகில் அவன் யாதொரு கேடும் இல்லாதவனென்றறிந்து கொள்க.
---------------

22-ஆம் அதிகாரம். ஒப்புரவு அறிதல்.

அஃதாவது:- உலக நடையை யறிந்து செயதல்.

1. உலக நடையை யறிந்து செய்தலின் சிறப்பு.
(1) உயிர்களானவை தமக்கு நீருதவும் மேகங்களிடத்து ஒரு பிரதியுபகாரமுஞ் செய்தலில்லை. ஆதலால் அம்மேகங்கள் போல் வார்செய்யும் உபகாரத்தை யடைந்தவரும் அவ்வுபகாரத்தைச் செய்தவருக்கு ஒரு பிரதியுபகாரமுஞ் செய்தலில்லையாம். எனவே, மேகங்கள் போலக் கொடையாளிகளும் பிரதியுபகாரத்தை யிச்சியா ரென்பதாயிற்று.

(2) முயற்சி செய்து சம்பாதிக்கப்பட்ட பொருளெல்லாம் தகுதியுடையவருக்கானால் உபகாரத்தைச் செய்யும் பிரயோச னமுடையனவாகும். எனவே, தகுதியில்லாதவர் சம்பாதிக்கப்பட்ட பொருள்கள் அவரநுபவித்தற்கும், காப்பாற்றி வைத்திருந்து இழ ந்து விடுதற்குமா மென்பதாயிற்று. (இழந்துவிடுதல்: திருடர் முதலியவரால் அபகரித்தல். தகுதியுடையவர்: உயர்ந்த குணமுடையவர்.)

(3) தேவருலகத்திலும் இவ்வுலகத்திலும் பிறருக்கு உபகாரஞ் செய்தலைப் போல நல்லவையாகிய வேறு செயல்கள் கிடைப்பன இல்லை.

2. வேதநடை தவறுதல் பிராயச்சித்தத்தால் நீங்குதல் போல உலக நடை தவறுதல் பிராயச்சித்தத்தால் நீங்காது.
(4) உலக நடையை அறிந்து செய்பவன் உயிரோடு கூடி வாழ்பவனாவான்; அதனை யறிந்து செய்யாதவன் உயிருடனிருந்த எவனானாலும் இறந்தவருள் ஒருவனாக நினைக்கப்படுவான். ஏனென்றால், உயிருக்குரிய அறிவும், செயலும் அவனிடத்தே காணப்படா மையாலென்க.

3. உலகநடை தவறாதவனுடைய பொருள் பயன்படும்.
(5) உலக நடையை விரும்பிச் செய்யும் பெரிய அறிவினையும் டையவனாவான் செல்வத்தினாலே நிறைதலானது ஊரில் வாழ்வார் உண்ணுங் குளமானது நீரினாலே நிறைந்தாற்போலும்; எனவோ ஊருணி நீர்போலத் தடையின்றி யெல்லாருக்கும் அறிவுடையான் செல்வமானது பயன்படு மென்பதாயிற்று.

(6) இதுவன்றியும், ஊருக்கு நடுவேயிருக்கிற மரத்தினிடத்தே பழுத்த மதுரமான பழம் போலவும் எல்லாருக்கும் பிரயோசனப்படும்.

(7) உபகாரம் செய்யும் பெரிய தகுதியுடையவனிடத்துச் செல்வமுண்டானால் அச்செல்வமானது: தனக்கு அங்கமாகிய இலை, பூ, பிஞ்சு, காய், கனி முதலிய எல்லாவற்றால் மருந்தாயிருந்து, தவறாமல் பிறருடைய நோய்களைத் தீர்க்கும் மரத்தைப் போல, எல்லாருடைய வறுமைத் துன்பங்களையும் தனக்கு அங்கமாகிய அன்னம், ஆடை, ஆபரணம், பொன் முதலியவற்றால் நீக்கிவிடும்.

4. தரித்திரத்தால் உலக நடை தவறலாகாது.
(8) தாம் செய்யத் தக்க காரியங்களை அறிந்த இயற்கை யறிவுடையவர் செல்வஞ் சுருங்கிய காலத்தும் உபகாரஞ் செய்தற் குத் தளர்ச்சியடைய மாட்டார்.

(9) உபகாரஞ் செய்தவன் வறுமைப் பட்டவனாகுதல் எதுவென்றால், நீங்காமற் செய்யுங் குணத்தை யுடைய அவ்வுபகாரங்களைச் செய்ய முடியாமல் வருந்துகின்றதாம். எனவே, தான் அநுபவிக்கும் பொருள் கிடையாமை வறுமை யன்றென்பதாயிற்று.

5. உலகநடை தவறாமற் செய்தலால் வருங் கேடு கேடாகாது.
(10) உபகாரஞ் செய்தலினாலே ஒருவனுக்குப் பொருட் கேடு வருமென்று சொன்னாலும், அக்கேடானது தன்னை விற்றா யினும் ஒருவன் வாங்கும் தகுதியுடையதாகும். ஏனென்றால், இக் கேடு புகழை யுண்டாக்கலாலென்க.
--------

23- ஆம் அதிகாரம். ஈகை.

அஃதாவது:- தரித்திரராய் வந்து யாசித்தவருக்கு இல்லை யென்று சொல்லாமல் இயன்ற மட்டுங் கொடுத்தல்.

1 . ஈகையின் இலக்கணம்.
(1) தம்மிடத்திலே ஒரு பொருளுமில்லாதவருக்கு அவர் வேண்டிய ஒரு பொருளைக் கொடுப்பதே கொடையாம்; அதைத் தவிர வேறெல்லாக் கொடையும், கொடுப்பவர் தாம் நினைக்கப்பட்ட பிரதியுபகாரத்தைப் பெறுங்குணத்தை யுடையதேயாகும் ஆதலால் தரித்திர ரல்லாதவருக்குக் கொடுத்தல் கொடையாகா தென்க.

2. ஈகையின் சிறப்பு.
(2) யாசித்தலானது மேலுலகத்துக்கு நல்ல வழி யென்று சொன்னாலுந் தீயதேயாம். கொடுப்பவருக்கு அவ்வுலகமாகிய மோக்ஷத்தை யடைதலில்லை யென்று சொன்னாலும் கொடுத்தலே நல்லதாகும். சொன்னாலுமெனவே, இவ்விரண்டுஞ் சொல்லுவார் எக்காலத்தும் இல்லை யென்பதாயிற்று

(3) நான் வறியவனென்று யாசிப்பவன் சொல்லும் இழிவான வார்த்தையைப் பிறரிடத்தே சொல்லாதிருத்தலும், அந்த வார்த்தையைத் தன்னிடத்திலே சொல்லிய யாசகனுக்குக் கொடுத்தலுமாகிய இரண்டு குணங்களும் நல்ல குடியிற் பிறந்தவனிடத்தே யுள்ளனவாம்.

(4) யாசித்தலைப்போல் யாசகனுக்குக் கொடுப்பார் கொடுப்பேனென்றிருத்தலும், தாம் கொடுக்கும் கொடையால் அக்கொடைப் பொருளைக் கொண்ட யாச கருடைய இனிய முகத்தைப்பார்க்கும் வரையும் இன்பஞ் செய்வ தில்லையாம். ஏனென்றால், யாசிப்பவர் கேட்ட பொருள்களுள் ஒன்று கொடுக்க முடியாமற் போய்விடுமோ? என்னும் பயமுடைமையாலென்க; இதனாற் கேட்ட பொருளெல்லாம் இல்லையென்னா மற கொடுக்கவேண்டும் என்பதாயிற்று.

(5) தவத்தால் வல்லவ ராவோருக்கு வல்லமையாவது தம்மையடைந்த பசியைப் பொறுத்துக் கொண்டிருத்தலாம். அதுவும் அப்படிப் பொறுத்தற்கரிய பசியைக் கொடையினாலே நீக்குவோரது வல்லமைக்கு ஒப்பாகாது. ஏனெனில், தம் பசியையும் பிறர் பசியையும் நீக்கமாட்டாதவர் வல்லமை அவ்விரண்டையும் விலக்குவார் வல்லமைக்கு எப்படிச் சமான மாகுமென்க.

(6) வறியவரது எல்லா நன்மைகளையுங் கெடுக்க வரும் பசியைப் போக்குதலாகிய தருமமானது பொருள் படைத்த வனாகிய ஒருவன் அப்பொருளைத் தனக்குப் பின்னுதவுமாறு வைக்கப்படும் இடமாகும்.

(7) தனக்குள்ள பொருளை எந்நாளும் கொடுக்க வேண்டியவர்களுக்குப் பகுந்து கொடுத்து உண்ணுதல் பழகியவனைப் பசி யென்னுங் கொடிய வியாதி யடையமாட்டாது. கொடுக்க வேண்டியவர்களாவார்: 5- ஆம். அதி. இல்வாழ்க்கையிற் கூறப்பட்ட இயல்புடைய மூவரும், துறந்தார் முதலிய மூவரும், தென்புலத்தார் முதலிய ஐவரில் தான் நீங்கிய நால்வருமாம்.

3. ஈயாமையின் குற்றம்.
(8) தம்முடைய பொருளை ஒருவருக்குங் கொடாமற் காத்துவைத்திருந்து பின்னே யிழந்து விடுங் கொடியவர் வறியவர் க்கு வேண்டிய பொருளைக் கொடுத்து, அவ்வறியவர் மகிழ்தலினால் அருளுடையாரடையு மகிழ்ச்சியைக் கண்டறிய மாட்டாரோ? கண்டிருந்தால் வறியவர்க்குக் கொடுப்பர்.

(9) பொருளை அதிகப்படுத் தும் பொருட்டு யாசகருக்குக் கொடாமல் தனித்தவராகியிருந்து உணவுப் பொருளைப் புசித்தலானது ஒருவருக்கு நிச்சயமாகப் பிறரிடத்திலே போய் யாசிப்பதினும் பெரிய துன்பஞ் செய்வதாம். எப்படியென்றால், யாசித்தலுக்கு இழிவு அப்போது மட்டுமே பின் வறுமையில்லை. தனித்துண்ணுதலுக்கு அவ்விழிவும், வறுமையும் உண்டாகும். ஆதலாலென்க.

(10) மரணமடைதல் போலத் துன்பஞ் செய்வதொன்றில்லை. அப்படி மரணமடைதலும் யாசகருக்குக் கொடுக்க முடியாத இடத்து இன்பஞ் செய்வதாம். எனவே, யாசகருக்குக் கொடுக்க முடியாமலுயிர் வைத்துக் கொண்டிருப்பதைப் பார்க்கினும் மரணமடைவது நல்லதென்பதாயிற்று. ஏனெனில், கொடாத மாபாவியென்னும் பழி அடையாமை-யாலென்க.
-------

24-ஆம் அதிகாரம். புகழ்.

அஃதாவது:- இல்வாழ்க்கை முதல் ஈகை யிறுதியாகச் சொல்லப் பட்ட இல்லறத்தில் வழுவாதவருக்கு இம்மைப் பயனாகி இவ்வுலகத்திலே செய்தபடியே நிற்றலாகிய கீர்த்தியாம்.

1. புகழின் சிறப்பு.
(1) வறியவர்க்குக் கொடுத்தலினாலே புகழுண்டாகும்படி வாழவேண்டும். அப்புகழல்லாமல் மனிதருயிர்களுக்கு வேறு பயனில்லையாம். புகழுண்டாவதற்குக் கல்வி, வீரம் முதலானவைக ளிருந்தாலும் கொடையே மிகச்சிறந்தது. ஆதலின் அது இங்கே சொல்லப்பட்டது.

(2) உலகத்திலே ஒன்றைச் சொல்வார் சொல் லப்படும் அவைகளெல்லாம் தரித்திரத்தால் யாசிப்பவருக்கு அவர் வேண்டிய தொன்றைக் கொடுப்பவரிடத்தே நிற்குங் கீர்த்திகளே யாம். ஆயினும், இனம் பற்றிப் பாடுவார் பாடப்படும் அவையெல் லாம் அக்கீர்த்திகளே யென்றுஞ் சொல்லலாம்.

(3) தனக்கு ஒப் பில்லையாக உயர்ந்த கீர்த்தியல்லாமல் உலகத்திலே அழியாமல் நிலை பெறுவது வேறொன்றில்லையாம். (ஒப்பில்லாமலுயர்ந்த கீர்த்தியாவது: கொடுத்தற்கரிய உயிரையும், அவயவத்தையும், பொருளையும் கொடுத்தலால் வருங்கீர்த்தியென்க.)

2. புகழுடையவர் அடையும் மேன்மை.
(4) பூமியின் எல்லையில் ஒருவன் அழியாது நிலை பெறுங் கீர்த்தியைச் செய்வானானால் தெய்வ லோகமானது அவனையல்லாமல் தன்னையடைந்திருக்கிற தேவர்களைப் பேண மாட்டாது. ஏனென்றால், புகழ் வடிவால் இவ்வுலகத்தை அத்தேவர்களடையாமையாலென்க. எனவே, தேவவடிவால் அத்தேவலோகத்தைப் புகழ்படைத்தவன் அடைவானென்பதுங் கொள்க.

(5) திறமையுடையவருக்கன்றி அத்திறமையில்லாருக்குப் புகழுடம்பு வளர்ச்சியடையப் பூதவுடம்பு தேய்தலும், புகழுடம்பு நிலை நிற்கப் பூதவுடம்பு இறத்தலுமில்லை யாம் [#]. எனவே, திறமையுடையார் பூகவுடம்பை வருத்தப் படுத்தியும் புகழுடம்பை வளர்ப்பா-ரென்பதும், அவ்வுடம்பு நிலை சக பெற்றிருப்பதற்குப் பூதவுடம்புக்கு மரணம் வந்தால் அதையுஞ் செய்வாரென்பதும் ஆயின. இவ்விரண்டுக்கு முறையே சக்கரவர்த்தியாகிய அரிச்சந்திரன் முதலாயினோரும் தவசிரேட்டராகிய ததீசி முனிவர் முதலாயினோரும் சாட்சியாயிருத்தல் காண்க. (திறமை யுடையார்: அறிவுடையோர்.)

[#} செய்தபடியே நிற்றல் - குறைவில்லாதிருத்தல்.

3. புகழில்லாதவரது தாழ்வு.
(6) மனிதராய்ப் பிறந்தால் புகழுக்குக் காரணமாகிய குணத்தோடு பிறக்க வேண்டும்; அக்குணமில்லாதவர் மனிதராய்ப் பிறப்பதைப் பார்க்கினும் மிருகங்களாய்ப் பிறப்பது நல்லதாம். ஏனென்றால், புகழுக்குரிய குணமில்லை பென்று இகழப்படாமையா லென்க.

(7) தமக்குப் புகழுண்டாக வாழமாட்டாதவர் அது பற்றித் தம்மைப் பிறரிகழ்ந்த இடத்தே இந்த இகழ்ச்சியானது நாம் புகழைச் செய்யாமலிருந்ததனா லன்றோ வந்ததென்று தம்மை நொந்து கொள்ளாமல் தம்மை நிந்திப்பவரை நொந்து கொள்வது என்ன காரணமோ தெரியவில்லை.

(8) புகழென்னும் பிள்ளையைப் பெறவேண்டியதிருக்க அப்பிள்ளையைப் பெறாமலிருப்பாரானால் உலகத்திலுள்ளாருக் கெல்லாம் வசையாகுமென்று பெரியோர் சொல்லுவார்; இதனால் இகழ்ச்சி சொல்லுவதற்கு வேறு குற்றம் வேண்டா மென்பதாயிற்று.

(9) புகழில்லாத உடம்பைத் தாங்கிய பூமியில் பழிப்பில்லாத வளத்தையுடைய விளைவு குறையும். எனவே, புண்ணிய சரீரமுள்ளார் வசிக்கும் பூமியில் சகல வளமுந் தழைத்தோங்கு மென்பதாயிற்று; இதற்குச் சாட்சியாகப் பாண்டவர்களெங்கே யிருப்பாரென்று தேடும்போது ''அறன் காளையுறை நாடுகார், மின்னொற்று மழையுண்டு விளைவுண்டு'' என்று அடையாளங் கூறியிருப்பதை, வில்லிபாரதம் நிரைமீட்சிச் சருக்கம் 5 - ஆம். செய்யுளிற் காண்க.

4. இறவாதவரும் இறந்தவரும்.
(10) தம்மிடத்துப் புகழுண்டாக வாழ்வாரே உயிரோடு வாழ்வாராவர். வசையுண்டாக வாழ்பவரே உயிரோடிருந்தாலுஞ் செத்தவராவர்; இதனால், இல்லறத்துக்கு இம்மைப்பயன் புகழென்பது காண்க. மறுமைப் பயனாவது: தேவருலகத்திலே போகம நுபவித்தல். இதை, 5 - ஆம். அதிகாரம். இல்வாழ்க்கை 10 - ஆம் குறள் வாக்கியத்திற் சொல்லியிருத்தலாலறிக. இதுவரையும் தரும சாத்திரங்களிலே சொல்லப்பட்ட இல்லறங்க ளெல்லாந் தொகுத்துக் கூறப்பட்டன. எத்தனை பிரிவுகளாக யார் யார் இல் லற தருமங்களை வகுத்துச் சொன்னாலும், அவையெல்லாம் திருவள்ளுவ நாயனார் தொகுத்துக் கூறிய இவற்றுளடங்குதல் அறிவுடையோர் கண்டுகொள்க.

முதலாவது, இல்லற இயல் முற்றுப் பெற்றது.
-----------

இரண்டாவது, துறவற இயல்.

துறவறமாவது: முன்சொல்லப்பட்ட இல்லறத்தின் வழுவாது நடந்து, அறிவுடையராகிப் பிறவித் துன்பத்துக்குப் பயந்து மோக்ஷம் பெறும் பொருட்டுத் துறந்தவர்க்குரிய தருமமாம்; அது. விரகமும், ஞானமுமென இருவகைப்படும்; அவற்றுள் விரதமாவது: தீவினை யொழிந்து அந்தக்கரணங்கள் பரிசுத்தமாதற் பொருட்டு இன்ன தருமங்களைச் செய்வேனென்றும் இன்ன பாவங்களை விட்டு விடுவேனென்றும் தமது வல்லமைக்குத் தக்கபடி வரையறை செய்து கொண்டு துறந்தோராலே காப்பாற்றப்படுவது; அவ்விரதங்கள் அளவில்லாதவை களாயிருக்கினும் அவை பலவற்றையுந் தம்முள்ளே அடக்கி நிற்குஞ் சிறப்புடைய சிலவற்றை இங்கே சொல்லத் தொடங்கி முதலிலே அருளுடைமையை அருளிச் செய்கின்றார்.

25-ஆம் அதிகாரம். அருளுடைமை.

அஃதாவது:- யாதொரு சம்பந்தமுமில்லாமல் இயல்பாக எல்லா உயிர்களிடத்துஞ் செல்வதாகிய கருணையுடையராதல். இல்லறத்துக்கு அன்புடைமை சிறந்தது போலத் துறவறத்துக்கு அருளுடைமை சிறந்த தாம்.

1. அருளின் சிறப்பு.
(1) பொருளால் வருஞ் செல்வங்கள் தாழ்ந்தவரிடத்திலு. மிருக்கின்றன. ஆதலால் செல்வங்கள் பலவற்றுள்ளும் ஆராய்ந் தெடுக்கப்பட்ட செல்வமாவது, அருளால் வருஞ் செல்வம்; அஃதாவது: உயிர்களைக் காப்பாற்றி அத்தருமத்தால் மேன்மை யடைதலாம். உயிர்களைக் காப்பாற்றுதல் இழிந்தோரிடத்திலில்லாமையால் அவர் மேன்மையடைத லில்லை. இனி, பொருளால் வருஞ் செல்வங்களாவன : பெண்டு பிள்ளை பண்ட பதார்த்தங்கள் முதலியவைகளாம்.

(2) நல்வழியிலே நின்று அளவைகளாலும், யுத்திகளாலும். நமக்குத் துணையாகுந் தருமம் யாதென்று ஆராய்ந்து அருளுடை யவராக வேண்டும். ஒன்றுக்கொன்று விரோதிக்கின்ற பல சமய வழிகளால், ஆராய்ந்தாலும் துணையாவது அவ்வருளேயன்றி வே றொன்றில்லை. அளவைகளாவன: கண் முதலியவற்றாலே காணும் காட்சியும், அடையாளங்களால் அறியும் அநுமானமும், கடவுள் வரககியமாகிய ஆகமமுமென்க. மற்றெல்லா அளவைகளும் இம் மூன்று அளவைகளுள் அடங்கும். சமயங்கள் ஒன்றுக்கொன்று விரோதித்தலாவது : அளவைகளும் பொருள்களுமாறு பட்டிருத்தலாம்; அவ்விதம் மாறு பட்டிருந்தாலும் அருள் துணையென்பது எல்லார்க்கும் ஒத்திருக்கும். இம்மையிலும் மறுமையிலும் உயிரை விட்டு நீங்காமலிருந்து உதவி செய்தலால் அருளானது துணை யென்று சொல்லப்பட்டது.

2. அருளாகிய துணையுடையார்க்கு இம்மை மறுமை யிரண்டினுந் துன்பம் இல்லை.
(3) இருளடைந்த துன்ப உலகமாகிய நரகத்திலே போய்ப் புகுதலானது அருளைச் சேர்ந்த மனமுடையவர்க்கு இல்லையாம்.

(4) நிலைபேறுடைய பிறவுயிர்களைக் காப்பாற்றி அவ்வுயிர்களிடத்தே அருளுடையவனா யிருப்பவனுக்குத் தன்னுடைய உயிர் பயப்படுதற் கேதுவாகிய பாவங்களானவை உண்டாகமாட்டாவென்று அறிந்தோர் சொல்லுவர்.

(5) அவ்வருளுடையவர்க்கு இம்மையிலும் ஒரு துன்பமாவது உண்டாகாது; அதற்குச் சாட்சியாவார் காற்று உலாவுகின்ற வளந்தங்கிய பெரிய இப்பூமியில் வாழ்வாரேயாம். தாம் கண்டறிந்ததைக் காணாதவர்க்குச் சாட்சியாவார் சொல்லுதற் குரியவர். ஆதலால், இது வரையும் அருளுடையவரிடத்தே துன்பம் உண்டாயிருந்த தென்று ஒருவரும் சொல்வாரில்லாமையால் பூமி யில் வாழ்வாரெல்லாரும் அருளுடையவரிடத்தே துன்பமில்லை யென்பதற்குச் சாட்சி யாயினாரென்றறிக.

3. அருளாகிய துணையில்லார்க்கு வருங் குற்றம்.
(6) உயிர்களிடத்தே செய்ய வேண்டும் அருளை விட்டு, விடவேண்டுங் கொடுமைகளைச் செய்து நடப்பவரை முற்பிறப்பிலே யும் உறுதிப் பொருளைத்தேடாமல் தாம் துன்பப் படுகின்றதை மறந்தவரென்று நல்லோர் சொல்லுவர். உறுதிப் பொருளென்றது, தருமத்தை. துன்பப்படுத்த லெனறது, தன்னைப்பற்றி வரும் பிறவித் துன்பம் மூன்றும் அநுபவித்தலை. பிறவித் துன்பமூன்றாவன: இறந்தகாலம், நிகழ்காலம் வருங்காலங்களிலாகுஞ் சன்னங்களிலுண்டாகும் வருத்தங்கள்

(7) பொருளில்லாதவருக்கு இவ்வுலகத்து இன்பம் இல்லாதது போல உயிர்களின் மேல் அருளில்லாதவருக்கு அவ் வுலகத்து இன்பமில்லையாம்

(8) ஆயினும், ஊழினாலே வறுமை யடைந்தவர் அவ்வறுமை நீங்கிப் பின்னொரு காலத்திலே செல்வம் பெற்று விளங்குவர். அப்படியல்லாமல் அருளில்லாதவர் பாவம் நீங்காமையாற் கெட்டவரே யாவர். பின்னொரு காலத்தினும் அருளுடைய ராக மாட்டார்.

(9) உயிர்களிடத்தே அருள் செய்யாதவன் செய்யுந் தருமத்தை ஆராய்ந்தால் அத்தருமமானது ஞானமில்லாதவன் உண்மை நூலிற் சொல்லப்பட்ட பொருளை ஒருகாற் கண்டது போலும். எனவே, ஞானமில்லாதவன் ஒருகாற் கண்ட பொருள் அழிதலபோல், அருளில்லாதவன் செய்யுந் தருமமும். அழியுமென்பதாயிற்று. ஆகலால் தருமம் செய்பவனுக்கு உயிர்களிடத்தே வைக்கும் அருளுடைமை அவசியம் வேண்டுவதாம்.

4. அருளுண்டாவதற்கு உபாயம்.
(10) அருளில்லாதவன் தனக்கெளியவர்மேல் தான் அவரை வருத்தப் படுத்துவதற்குச் செல்லுமிடத்துத் தன்னினும் வலியவர் தன்னை வருத்தப் படுத்துதற்கு வரும்போது அவர் முன் பயந்து நிற்குந் தன்னிலையை நினைக்கவேண்டும். நினைத்தால் தன்னைப்போலத் தனக்கெளியவரும் பயப்படுவாரென்னும் எண்ணத்தோன்றும்; அது தோன்றவே, அவரிடத்துக் கருணையுண்டாகும். ஆதலால் அந்நினைப்பை மறக்கலாகாது.
---------

26-ஆம் அதிகாரம். புலால் மறுத்தல்.

அஃதாவது:- ஊனுண்ணுதலை நீக்குதலாம்.

1. ஊன் உண்டாராயினும் உயிர்களுக்கு ஒரு தீங்கு நினை யாராயின் அவரை அருளானது ஆளுமென்பாரை மறுத்து, ஆளா தென்பது.
(1) தன்னுடம்பை வளர்த்தற் பொருட்டு, தான் மற் றொன்றின் உடம்பாகிய மாமிசத்தைத் தின்பவன்' எவ்வகையால் அரு ளையாளுவான்.
(2) ஆகலால் மாமிசத்தைத் தின்பவனுக்கு அரு ளினாலே பயன் கொள்ளுதலில்லை. எதுபோல என்றால் பொரு ளினாலே பிரயோசன முறு தல் அப்பொருளைக் காப்பாற் றாதவருக்கு இயலாதது போல மென்க.

2. ஊன் தின்றார் மனம் தீங்கு நினைத்த லுண்டென்று உவ மானத்தாற் கூறி, மேலே சொல்லியதை வற்புறுத்தல்.
(3) வேறோருயிரினது உடலைச் சுவைபட உண்டார் மன மானது கொலைக்கருவியைத் தமது கையிலே கொண்டவரது மனம் போலக் கொலையை நோக்குவதல்லது கருணையை நோக்கமாட் டாது.

3. கொலைப்பாவங் கொன்றார்மேல் நிற்குமாதலின், ஊனுண் பார்க்குப் பாவமில்லை யென்பாரை மறுத்துப் பாவம் உண்டென்பது.
(4) அருளானது எதுவென்றால் கொலை செய்யாமையாம்; அவ்வருளல்லாததானது எதுவென்றால் கொலை செய்தலாம். ஆத லாற் கொல்லுதலால் வந்த அந்த ஊனைத் தின்னுதல் பாவம்
(5) பலவ கையுயிர்கள் உடம்புகளிலே நிற்றல் ஊனுண்ணாமை யென்னுந் தரு மத்தினிடத்ததாகும். ஆதலால் அவ்விதம் நிற்றலாகிய நிலையழி யும்படி ஒருவன் அவ்வுடம்புகளாகிய ஊனையுண்பானாயின் அவனை விழுங்கிய நரகமானது வெளியே கக்குதற்கு வாயைத் திறக்கமாட் டாது. எனவே, ஊனுண்டவன் எண்ணில்லாத காலம் நரகத்திலே கிடப்பா னென்பதாயிற்று. இதனால், கொலை செய்தவனுக்குத் தான் பாவம், ஊனையுண்டவனுக்குப் பாவமில்லையென்று சொல்லு தல் மறுக்கப்பட்டது,

4. மேலே கூறியதை நியாயத்தால் வற்புறுத்தியது.
(6) உண்ணுதல் காரணமாக உலகத்தார் ஊனைக் கொள்ளா ரானால் விலைப்பொருள் காரணமாக ஊனை விற்பவர் ஒருவருமில்லை யாம். இதனாலும், ஊனையுண்டவருக்குக் கொலை செய்தவருக்கு ஒப்பப் பாவமுண்டென்பது உறுதி செய்யப்பட்டது.

5. யுத்தியினாலும் ஊனுண்டல் இழிந்ததென்பது.
(7) மாமிசமானது வேறொரு உடம்பினது புண்ணாகும்; அவ்வசுத்தமாகிய தன்மையறிந்தவரை அறிந்தால் அம்மாமிசத்தை யுண்ணாதிருக்கவேண்டும்; இதனால், மாமிசத்தை அசுத்தமென்று தெரியாதவரே உண்கின்றாரென்பதாயிற்று.
சு. ஊனுண்ணாமையின் உயர்ச்சி.
(8) மயக்கமாகிய குற்றத்தினின்றும் நீங்கிய அறிவினை யுடையார் ஒருயிரினின்றும் நீங்கி வந்த மாமிசத்தை உண்ணமா ட்டார். மயக்கமாவது: அசுத்தத்தைச் சுத்தமென்று நினைத்திருத் தல்.
(9) ஓமகுண்டத்தினிடத்தே நெய் தேன் முதலிய பொருள் களைச் சொரிந்து ஆயிரம் யாகஞ் செய்தலைப் பார்க்கினும் ஒரு விலங் கினது உயிரைப் போக்கி அவ்வுயிர் நின்ற உடம்பாகிய மாமிசத்தை உண்ணாதிருத்தல் நல்லதாம்; இதனால் ஆயிரம் யாகத்தினால் வரும் பயன் மாமிச போசனஞ் செய்யாமையாகிய விரதம் ஒன்றினாலே கிடைக்கு மென்பதாயிற்று.
(10) ஓருயிரையுங் கொலை செய்யா தவனுமாகிப் புலாலையும் உண்ணாதவனை எல்லாவுயிர்களுங் கைகுவி த்து வணங்கும்; இதனால், இவ்விரண்டு தருமங்களையும் ஒருமிக்க உடையவருக்கன்றி ஒன்றைமாத்திரம் உடையவருக்கு அதனாற் பிரயோசனமில்லை யென்பதாயிற்று.
-------

27- ஆம் அதிகாரம். தவம்

அஃதாவது:- மனம் பொறிவழி போகாமல் நிற்றற்பொருட்டு விரத ங்களினாலே உண்டி சுருக்குதல், கோடைகாலத்தில் வெயிலிலே நிற்றல், மழைகாலத்திலும் பனிக்-காலத்திலும் நீரிலே நிற்றல் முதலான் செயல் களை மேற்கொண்டு, அவைகளால் தம்முயிர்க்கு வருந்துன்பங்களைப் பொறுத்துப் பிற உயிர்களைக் காப்பாற்றலாம்.

1. தவத்தின் இலக்கணம்.
(1) தவத்துக்கு வடிவமானது உண்டி சுருக்குதல் முதல் லானவைகளால் தம்முயிர்க்கு வருந்துன்பங்களைப் பொறுத்துக்கொள் ளுதலும், பிறவுயிர்க்குத் தாம் துன்பஞ் செய்யாமையுமாகிய அவ்வளவே யாகும். அவ்வளவே யென்றதனால் மற்றைய விரதங்க ளெல்லாம் இவ்விரண்டிலே அடங்கு மென்பதாயிற்று.

2. தவத்தின் சிறப்பு,
(2) தவத்தினாலாகும் பயனுண்டாவதல்லாமல் அத்தவம் உண்டாவதும் முன்னைத்தவம் உடையாருக்கே கிடைக்கும். ஆத லால் அத்தவத்தை முன்னைத்தவமில்லாதவர் செய்யத் தொடங்கு வது பயனற்றதாகிவிடும். ஏனென்றால் முன் செய்த பழக்கத்தால் வந்த அறிவும் வல்லமையும் இல்லாமையாலென்க. எனவே, அவ்வறி வும், வல்லமையும் உடையவருக்கே தவம் பிரயோசனப்படு மென்ப தாயிற்று.
(3) இல்லறத்தையே பற்றி நிற்பவர்கள் இருவகைப் பற்றையுந் துறந்த முனிவர்களுக்கு உணவும், மருந்தும், இருப்பிட மும் உதவி செய்யவேண்டித் தாம் தவஞ்செய்தலை மறந்தார் போலும்; இதனால் தவஞ்செய்யு முனிவர்களுக்கு வேண்டிய வுதவி களை யில்லறத்திலிருப்பவர் செய்யவேண்டு மென்பதும், தவமுடிவ தற்கு இவ்வுதவி வேண்டுமென்பதுங் காண்க.
(4) தமது துறவறத் துக்கு இடையூறு செய்த பகைவரைக் கெடச் செய்தலும், அவ்வற த்தை மகிழ்ந்து உதவி செய்தவரை உயரச் செய்தலுந் தவஞ் செய் வார் நினைப்பாரானால் அவரது தவவலிமையினாலே அவருக்கு அவ் விரண்டும் உண்டாகும்; இவ்விரண்டுக்குஞ் சாட்சியாக விசுவா மித்திர முனிவர் தமது தவத்துக்கு இடையூறு செய்த தாடகை யைக் கெடச் செய்ததையும் உதவி செய்த ஸ்ரீராமனை உயரச் செய்த தையும் அறிந்து கொள்க.
(5) முயற்சி செய்தால் பெறவேண்டிய பயன்களை வேண்டியபடியே மறுமையிலே தாம் பெறலாம். ஆத லால் செய்யத்தகுவதாகிய தவத்தை, இம்மையிலே அறிவுடையோர் முயன்று செய்ய வேண்டும்; இதனால் தவமானது எல்லாப் பயன்களையுங் கொடுக்கு மென்பதாயிற்று.

3. தவஞ் செய்வாரது உயர்ச்சி.
(6) அநித்தியமாகிய உடம்புக்கு வருத்தம் வருமென்று விட்டுவிடாமல் நித்தியமாகிய உயிர் மோக்ஷத்தை யடைதற் கேது வாகிய தவத்தைச் செய்வோரே தம்முடைய நற் செய்கையைச் செய்தவராவர். க்ஷணத்தில் அழிவதாகிய சிற்றின்பத்தையும்
உ அ-ஆம் அதி. கூடா ஒழுக்கம். சக பொருளின்பத்தையுஞ் செய்வோர் அவ்விரண்டினா லாகி ப ஆசை வலையில் அகப்பட்டுத் தமக்குக் கேடு செய்பவராவார்.
(7) புடத்தி லுள்ள தீயானது சுடுதலால் குற்றம் நீங்கிப் பிரகாசிக்கும் பொன் போல, தவஞ் செய்ய வல்லவர் அத்தவத்தால் வருகிற துன்ப மானது வருத்தப் படுத்தலால் பாவமாகிய குற்றம் நீங்க ஞான மாகிய பிரகாசத்தையடைவர்.
(8) தவமாகிய கருமஞ் செய்து தன்னுயிரைத் தனக்கு உரித்தாகப் பெற்றவனை அவ்விதம் பெறாத வையாகிய நிலை பேறுடைய உயிர்களெல்லாம் வணங்கும். எதனால் வணங்கு மென்றால், தவஞ்செய்து தமக்குரித்தாகத் தம்முயிரைப் பெற்ற முனிவரிடத்திலே சாபாநுக்கிரகம் இருத்தலாலென்க. எனவே, தவஞ் செய்யாதவனுக்குத் தன்னுயிர் தனக்கு உரித்தாகா தென்பது நன்றாக விளங்குகின்றது காண்க.
(9) தவஞ்செய்த லாகிய வல்லமையை அடைந்தவர்க்கு இயமனுடைய ஆணையைக் கடத்தலும் உண்டாகும்; இதற்கு மார்க்கண்ட முனிவரே சாட்சியா யிருக்கின்றார்.

4. தவம் செய்யாதவருக்கு இம்மை யின்பமும் இல்லையாகிய தாழ்வு.
(10) இவ்வுலகத்திலே செல்வர்கள் சிலராவதற்குக் கார ணம் தவஞ் செய்வார் சிலராயிருத்தலே. தரித்திரர் பலராவதற்க் குக் காரணம் தவஞ் செய்யாதவர் அநேகராயிருத்தலேயாம். எனவே, எவ்வளவு தவஞ் செய்வாரோ? அவ்வளவு செல்வம் பெறு வரென்பதாயிற்று. இங்கே செல்வமென்றது : ஞானத்தையும், தரித்திர மென்றது : அஞ்ஞானத்தையும் குறித்தன.
----------

28-ஆம் அதிகாரம். கூடா ஒழுக்கம்

அஃதாவது:- தாம் வெறுத்துவிட்ட காம இன்பத்தை மன உறுதி யில்லாமையினாலே பின்னும் விரும்பும் வழி தோன்ற, அவ்வழியே நின்று தவத்தோடு பொருந்தாததாகிய தீய ஒழுக்கமாம்.

1. கூடா ஒழுக்கத்தினது குற்றம்.
(1) காமமானது தன்னுள்ளே வருத்திக் கொண்டிருக்கவும் காமமில்லையென்று சொல்லிப் பக்கத்திலுள்ளவரை வஞ்சிக்கு மனத்தை யுடையவனது விவசாரஞ் செய்தலாகிய கள்ள ஒழுக்கத்தை அவனுடம்பாகி, அவனோடு கலந்து நிற்கின்ற பஞ்ச பூதங்களும் கண்டு தம்முள்ளே சிரிக்கும். எனவே, ஒரு காரியத்தை யாருக்கு மறைத்துச் செய்தாலும் தன்னுடம்பாகிய பஞ்சபூதங்களுக்கு மறைக்கலாகா தென்பதாயிற்று.
(2) தன்னுடைய மனம் தானறி ந்த கள்ள ஒழுக்கத்தில் அழுந்து மானால் வானுலகம் போல் உயர்ந்த தவவேடமானது ஒருவனுக்கு என்ன பயனைச் செய்யும்.
(3) மனத்தை அடக்கும் வல்லமை யில்லாத இயல்புடையவன் அவ்வல் லமையுடையவரது தவவேடத்தைக் கொண்டு மனம் போன வழி போகுதல் பசுவானது புலித்தோலை மூடிக்கொண்டு பயிரை மேய்ந் தாற் போலும். எப்படி யென்றால் 'புலி பசித்தாற் புல்லைத் தின் னாது'' என்ற பழமொழியால் தன்னை விரட்ட மாட்டார்க ளென்று புலித்தோலை மூடிக்கொண்டு பயிரை மேயும் பசுவைப்போல, பிறர் கண்டால் சந்நியாசி காமத்தை அநுபவிக்க மாட்டானென்று நினை த்துத் தன்னை வருத்தப் படுத்தா ரென்றெண்ணித் தவவேடம் பூண்டு விவசாரஞ் செய்யுஞ் சந்நியாசி யென்க. இதற்குச் சாட்சி, சந்நியாசி வேடங்கொண்டு வள்ளி நாயகியிடஞ் சென்ற முருகக் கடவுளை வள்ளி நாயகி பந்துக்களாகிய வேடர் கண்டு, அக்கடவுளின் கள்ளத்தை அறியாது நம்பி விட்டு விட்ட சரித்திரம் ஒன்றே போதும்.
(4) மேலே சொல்லிய வல்லமை யில்லாதவன் தவ வேடத்திலே மறைந்து பிறர்க்குரிய மகளிரைத் தன்வசமாக்க லானது, வேடன் ஆளிருந்தால் தெரியாத ஒரு செடியிலே மறைந் திருந்து பறவைகளைப் பிடித்தல் போலுமாம்.
(5) பிறர் தம்மை நன்றாக மதிக்கும் பொருட்டு எல்லாப் பற்றையும் விட்டுவிட்டே மென்பவரது கள்ள ஒழுக்கமானது அப்பொழுது இனிமைபோலத் தோனறினும் பின்னா என் செய்தோம் என் செய்தோமென்று வருந்தும்படி துன்பங்களையும் கொடுக்கும்.

2. கூடா ஒழுக்கத்தாரது குற்றமும், அவரை அறிந்து நீக்க வேண்டு மென்பதும்.
(6) மனத்தினாலே ஆசைகளை விடாதவராகி விட்டவர் போல நினைக்கும்படி, தானங் கொடுப்பவர் காண நடித்துக் காட்டி அவர் இப்பெரியவருக்குத் தானங் கொடுத்தால் மறுமையில் நற்கதியடைவோ மென்றெண்ணி, கொடுக்கும் பொருளை வாங்கிக் கொண்டு அவரைத் தாழ்ந்த கதியடையச் செய்து வாழுங் கொடிய வரைப்போலும் இரக்க மில்லாதவரில்லையாம். எனவே, நல்லொழுக் கமும், இரக்கமும் இல்லாதவருக்குத் தானங் கொடுத்தால் உயர்ந்தகதியடையாமல் தாழ்ந்த கதியடைவரென்பதாயிற்று.
(7) குன்றிமணியானது மேலே காட்டுஞ் சிவப்பு நிறத்தைப் போல வெளிவேடத்தினாலே நல்லொழுக்கம் உடையவர் போலக் காட்டி, அக்குன்றி மணியின் மூக்குக் கறுத்திருப்பது போல உள்ளே வஞ் சகத்தை வைத்துக்கொண்டிருக்கும் பொய்த்துறவிகளும் இந்தப் பூமியிலிருக்கின்றார்கள்; அவரை ஆராய்ந்தறிந்து கொள்க.
(8) இது வுமன்றி, மனத்தினிடத்தே காமம், வெகுளி, மயக்கங்கள் நீங்காம லிருக்க அவற்றை நீங்கின தவத்தாற் பெரியவர் போல நீரிலே விடியற் கால ஸ்நானஞ் செய்து பிறருக்குக் காட்டி, அந்த ஸ்நான மாகிய திரையினுள்ளே மறைந்து நடக்கும் மனிதரும் இவ்வுலகத்தில் அநேகர் உண்டு. அவரையுந் தெரிந்தறிய வேண்டும்.

3. கூடா ஒழுக்கத்தாரை அறியும் வழி.
(9) அம்பானது வடிவினாலே நேராயிருந்தாலுஞ் செய் கை பினாலே பிறரைக் கொல்லுங் கொடி தாயிருக்கின்றது. வீணை யானது வடிவினாலே வளைவா யிருந்தாலும் செய்கையினாலே பிற ரைமகிழ்விக்கும் குணமுடையதா யிருக்கின்றது, அவை போலத் தவஞ் செய்வார் பார்வையினாலே நல்லவர் போல காணப்பட்டா லும் செய்கையினாலே தீயவராயிருப்பர். பார்வையினாலே தீயவர் போலக் காணப்பட்டாலுஞ் செய்கையினாலே காம முதலிய குற்றங் கள் நீங்கிய மகான்க ளாயிருப்பர். ஆதலால், வடிவத்தைக் கண்டு. புகழ்தலும் இகழ்தலும் ஆகாவாம்.

4. கூடா ஒழுக்கத்தை விட்டுத் தவஞ் செய்வார்க்கு வேஷம். வேண்டாவாகிய அவரது சிறப்பு.
(10) தவஞ் செய்வார்க்கு உயர்ந்தோரால் பழிக்கத்தக்க தாகிய காமம் ஒன்றில்லாவிட்டால் தலை மயிரைக் களைந்து விடுக லும், அம்மயிரைச் சடையாக்கலும், அல்லது வளர்த்தலும் வேண் டுவனவல்ல. எனவே, காமத்தை நீக்காமல் இம்மூன்றினாலும் யோக்கியம் அடைய மாட்டா ரென்பதாயிற்று.
---------

29-ம் அதிகாரம். கள்ளாமை

அஃதாவது:- பிறருடைமையா யுள்ளவைகளில் யாதொரு பொருளையும் அவரை வஞ்சித்துத் திருடிக்கொள்ள நினையாதிருத்தலாம். நினை த்தலுஞ் செயதலோ டொக்குமாதலால் நினையாதிருத்த லென்று கூறினார்.

1. துறந்தார்க்குக் களவாவது இதுவென்பதும், அதை நிக்க வேண்டு மென்பதும்.
(1) முத்தியை யிகழாமல் விரும்புவோனிவனென்று தவத் தோராலே நன்கு மதிக்கப் படுவோனாக வேண்டுமானால், பிறரு டைய யாதொரு பொருளையும் வஞ்சித்துக் களவு செய்யாதிருக்கும் படி தன்னுடைய மனத்தைக் காக்க வேண்டும். (முத்தியை யிகழ் தலாவது காட்சியே பிரமாண மென்றும், நிலம், நீர், நெருப்பு, காற்று , எனப் பூதம் நான்கே யென்றும், அந்நான்குங் கூடுதலின் சிறப்பினாலே தோன்றி, அவைகள் பிரிதலினாலே அழிவதாகிய உடம்பினிடத்தே அறிவு மதுவினிடத்தே களிப்புப்போல் வெளிப் பட்டுக் கெடுமென்றும், இறந்த உயிர் மீளப்பிறவா தென்றும், இன்ப மும் பொருளும் முயற்சியால் வருவதென்றுஞ் சொல்லும் உலோகா யத முதலாகிய மயக்க நூல்களைத் தெளிந்து அவைகளுக்கு ஏற்க நடத்தல். யாதொரு பொருளையு மென்றதனால் ஞான நூற்பொரு ளைக் குருவினிடத்து வழிபாடு செய்து பெற்றுக் கொள்ளாமல் வஞ் சித்துக் கவர்ந்து கொள்ள லுங் களவாகிய பாவமாம். இதற்குச் சாட்சியாக, க்ஷத்திரியரைக் கருவறுக்க வேண்டு மென்றும், அவருக்கு ஆயுத வித்தை மந்திரோபதேசஞ் செய்யக் கூடாதென்றும் இருந்த பரசு ராமரிடத்தில் க்ஷத்திரியனாகிய கன்னன் பிராமண வேடங்கொண்டுபோய் ஆயுத வித்தை முதலியவற்றைக் கற்று வருங் காலத்தில் ஒரு நாள் அவன் தொடையினிடத்துப் பரசுராமர் தலைவைத்து நித்திரை செய்யும்போது, கண்ணபிரான் வண்டு ரூபங் கொண்டுபோய்க் கன்னனுடைய தொடையைத் துளைத்தலால், இரத் தம் பெருக்கெடுத்தோட வருந்தியும், கன்னன் குருவினுடைய நித்திரைக்குப் பங்கம் வருமென்று அவ்வருத்தத்தைச் சகித்துத் தொடையை அசையாதிருந்தனன். பரசுராமர் இரத்த வெள்ளத் தில் நனைந்து விழித்துப் பார்த்து நடந்ததை விசாரித்து இவன் உள்ளபடியே பிராமணனானால் இவ்வளவு வருத்தம் பொறுக்கமாட் டான். க்ஷத்திரியனாக இருக்க வேண்டுமென்று சந்தேகித்துக் கன்னனை நோக்கி நீ யாவன்? உள்ளதைச் சொல்லென்று கேட்க, அவன் தன்னுடைய வரலாற்றைக் கூறுதலும், பரசுராமர் நீ வஞ்சக மாக வந்து ஆயுத வித்தை மந்திரோபதேசங்களைத் திருட்டுத்தன மாகக் கிரகித்துக்கொண்டதனால் நீ என்னிடத்திற் கற்ற வித்தை கள் காலத்துக்கு உதவாமற் போவனவாக என்று சபித்த கதையைக் கண்டு கொள்க.
(2) தவத்தோர் தமது நெஞ்சினாலே பாவச் செய்கையை நினைத்தலுங் குற்றமாம். ஆதலால், அன்னியனுடைய பொருளை அவனறியாமல் வஞ்சித்து அபகரித்துக் கொள்வோம் மென்று நினையாதிருக்க வேண்டும்.

2. கள்வை நீக்குதற்குக் காரணம்.
(3) களவு செய்தலினாலுண்டாகிய பொருளானது விருத் தியாவது போலத் தோன்றிப் பாவத்தையும் பழியையும் உண்டாக்கி வைத்துவிட்டுத் தருமத்தைத் தன்னுடன் கொண்டு போயழித்து விடும்.
(4) பிறா பொருளைத் திருடும் மிகுந்த ஆசையானது அப் பொழுது இன்பமாகத் தோன்றி முடிவிலே பயனைத் தரும்போது துன்பத்தைக் கொடுத்து விடும்.

3. களவும், துறவறமும், இருளும் ஒளியும்போல ஒன்றுக் கொன்று பகையாதலால் கூடி நிற்பனவல்ல.
(5) சீவகாருணியத்தின் உயர்ச்சியை யறிந்து அதன்மே லன் புடையவ ராயிருத்தலானது பிறர் பொருளைத் திருட நினைத்து, அவருடைய சோர்வை (சமயத்தைப்பார்த்துக் கொண்டிருப்பவரி டத்தில் இல்லை பாம்
(6) களவினிடத்தே மிகுந்த ஆசையை யுடைய வர் உயிர்ப் பொருளையும், அவ்வுயிர்க்கு அநாதியாய் வருகிற குற்றமாகிய வினை விளைவுகளையும், அவற்றால் அவ்வுயிர் பிறந்திறந்து வரும் தலையும், அதனை யொழித்தற்கு உபாயமான யோக ஞானங்களையும், அவ்விரண்டினாலடையு முத்தி யினையும் அளவு செய்தலாகிய வழியிலே நின்று, அதற்கேற்க நடக்கமாட்டார்.
(7) இந்த அளவா கிய பெருமையை விரும்பினவரிடத்தே களவென்று சொல்லப்படும் இருண்ட அறிவுடைமை யில்லையாம்.

4. களவோடு நீங்காது நிற்பது வஞ்சனை.
(8) மேற்சொல்லியபடி உயிர் முதலியவற்றை அளத்தலை அறிந்தவரது மனத்திலே தருமம் நிற்பது போல, களவு தெரிந்த வரது மனத்திலே வஞ்சனையானது நிலைபெற்று நிற்கும்.

5. களவு செய்வார் கெடுவா.
(9) களவொன்றையே தெரிந்தவர் முன் சொல்லப்பட்ட அளவல்லாத தீய நினைவுகளை நினைத்து, அப்பொழுதே கெடுவர். (தீய நினைவுகளாவன: பொருளுடையாரை வஞ்சிக்கும் விதமும் அவ்வஞ்சனையால் பொருளைத் திருடும் விதமும் திருடப் பட்ட பொருளைத் தாமநுபவிக்கும் விதமும் முதலானவைகள்.)

6. களவு செய்வார்க்கும் செய்யாதார்க்கும் உண்டாகும் பய ன்கள்.
(10) களவிலே பழகுவோருக்குத் தம்மோடொற்றுமை யுடைய உடம்புந் தவறுதலடையும். களவிலே பழகாதவருக்கு அவ்வொற்றுமை யில்லாமல் நெடுந் தூரமாகிய தேவருலகமுங் கைவசமாதல் தவறமாட்டாது. தவறுதலாவது: மறுமையிலே கட வுளாலே தண்டிக்கப் படுதலல்லாமல், இம்மையிலும் அரசனாலே தண்டிக்கப்படுத்தலாம்.
----------

30-ம் அதிகாரம். வாய்மை.

அஃதாவது :- மெய்யினது தன்மை.

1. கேட்டைத் தராத நடந்ததைச் சொல்லுதலும், நன்மை யைத்தரும் நடவாததைச்சொல்லுதலும் மெய்ம்மையா மென்பதும், கேட்டைத்தரும் நடந்ததைச் சொல்லுதலும், நன்மையைத் தராத நடவாததைச் சொல்லுதலும் பொய்ம்மை யாமென்பதும்.
(1) மெய்ம்மை யென்று சொல்லப்படுவது எதுவென்றால் பிறிதொரு உயிர்க்குச் சிறிதாயினுந் தீமையைத் தராத சொற்களைச் சொல்லுதலாம்; எனவே, நடந்தைச் சொல் மெய்ம்மையல்ல வென்பதாயிற்று. ஆகவே, பிற உயி ஈக்குத் தீங்கைத் தராவிட் டால் நடந்ததைச் சொல்லுதல் மெய்ம்மையா மென்பதும், தீங்கைத் தருமானாற் பொய்ம்மையா மென்பதும் பெறப்பட்டன.
(2) பொய் ம்மைச் சொற்களுங் குற்றமில்லாத நன்மையைப் பிறருக்குக் கொடுக்கு-மானால் மெய்ம்மைச் சொற்களோடு சம்பந்தமுடையன வாகும். (குற்றமில்லாத நன்மையாவது: தருமம். நன்மையைக் கொடுத்தலாவது: மரணத்தையாவது கேட்டை-யாவது நியாயமில்லாமலடைய நின்ற உயிர் அவற்றினின்று நீங்கி இன்புறுதல்

2. பொய் மறைக்கப் படாததாயிருத்தலினால் அதைச் சொல் லலாகாது.
(3) தன்னுடைய மனத்தினாலே அறியப்படுவதொன்றைப் பிறரறிந்தில ரென்று பொய் சொல்லக்கூடாது. அப்படியல்லாமல் பொய் சொல்லுவானாகில், அப்பொய்யை அறிந்த தன் மனமே பொய் சொன்ன பாவத்துக்குச் சாட்சியாக நின்று தன்னைக் கெடு த்து விடும்.

3. இம்மைப் பயன்.
(4) தன் மனத்துக் கேற்ப ஒருவன் பொய் பேசாமால் நட ப்பானாயின், அவன் உயர்ந்தோரது மனங்களி லெல்லாமிருப்பான். எனவே, பொய்சொல்லாமலிருப்பது பெரிய தருமமென்பதாயிற்று.

4. மற்றைத் தருமங்கள் கொடுக்கப்பட்டன எல்லாம் வாய் மை தானே தர வல்லது.
(5) ஒருவன் தன் மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் உண்மையைச் சொல்லுவானாயின், அவன் தவமுந் தானமும் ஒரு மிக்கச் செய்வாரினுஞ் சிறந்தவனாவான்.
(6) புகழுண்டாதற்குக் காரணம் வேறில்லை. பொய் பேசாதவன் இல்லறத்தானானால் பொருள் சம்பாதிக்கை முதலானவைகளாலும், துறவறத்தானானால் உ.ண்ணாமை முதலானவைகளாலும் வரும் வருத்தங்களடையாமல் எல்லாத் தருமங்களையும் பெறுவான்.
(7) இஃகன்றிப், பலவகைப் பட்டதருமங்களை ய, ஞ்செய்யப்புகுந்தால் ஏதாவதொன்று தவறினாற் குற்றமுண்டாகுமல்லவா? அக்குற்றம் வராமல் எல்லாத்தருமங்களும்
ஒருங்கு பெறுவதற்கு மேற்கூறிய வாறு பொய் சொல்லாதிரு த்தலொன்றையே செய்ய வல்லவனாயின், அது மிக நல்லதாம்.

5. மெய்மையாகிய தருமத்தின் முதன்மை.
(8) ஒருவனுக்கு நீரினாலே உடம்பு பரிசுத்தமடையும்; அதுபோலவே, மனம் மெய்ம்மையினாலே பரிசுத்தமடையும்.
(9) துறவினாலே உயர்ந்தோருக்குப் புறத்திருளை நீக்குகின்ற விளக்குக் ளெல்லாம் விளக்குகளாவனவல்ல. அகத்திருளை நீக்குகின்ற பொய் சொல்லாமையாகிய விளக்கே விளக்காம்.
(10) எம்மாலே மெய்ந் நூல்களாகக் காணப்பட்டவற்றுள் யாதொரு விதத்தினாலும் மெய் ம்மையைப் பார்க்கினும் உயர்ந்த தருமங்களில்லை. (மெய்ந்நூல்களா வன: கடவுளாலும் அவனருள் வழிப்பட்டோராலுஞ் செய்த வேதா கமங்கள்.)
---------

31- ஆம் அதிகாரம். வெகுளாமை

அஃதாவது:- கோபஞ் செய்தற்குக் காரணமாகிய குற்றம் ஒருவனி டத்தே யுண்டாகிய இடத்துங் கோபஞ்செய்யாதிருத்தல்.

1. கோபஞ்செய்யாமல் இருக்கும் இடம்.
(1) தனக்குக் கீழ்ப்பட்ட எளியவனிடத்துக் கோபஞ்செல் லாமல் தடுப்பவனே தடுப்பவனாவான். தனக்கு மேற்பட்ட வலிய வனிடத்துக் கோபஞ் செல்லாமல் தடுத்தாலுந் தடுக்காமற் செலுத் தினாலும் ஒரு பிரயோசனமும் இல்லை. ஆயினுஞ் செலுத்தாதிருந் தால் தனக்குவருங் கேடில்லை யென்பதாம்.

2. கோபத்தினது தீங்கு.
(2) கோபமானது தனக்கு மேற்பட்ட வலியவர்மேலே உண்டானால் தனக்கே அக்கோபம் தீங்கைத்தருவதாகும். தனக் குக் கீழ்ப்பட்ட எளியவர் மேலுண்டானால் அதைப் போலுந் தீமை யுடையவை வேறேயில்லை.
(3) ஆதலால் யாரிடத்திலுங் கோப் செய்வதை மறந்து விடவேண்டும். ஏனென்றால் தீமையுடையவை யெல்லாம் அக்கோபத்தினால் உண்டாகும் என்க.
(4) துறந்தோருக் குக் கருணையினாலுண்டாகிய முகமலர்ச்சியையும் மனத்தினிடத்து உண்டாகிய மகிழ்ச்சியையுங் கெடுத்தெழுகின்ற கோபத்தைப் பார்க் கினும் வேறாகிய பகைகளும் உண்டோ ? இல்லை.

3. கோபஞ்செய்தவருக்கு வருந்தீங்கு.
(5) ஒருவன் தன்னைத் தான் துன்பமடையாமற் காக்க நினைத்தானாகில் தன் மனத்திலே கோபம் வராமல் தடுக்கவேண்டும். தடுக்காவிட்டால் அக்கோபமானது தன்னைக் கெடுக்கும் கொடிய துன் பங்களை யுண்டாக்கும்.
(6) கோபமென்று சொல்லப்படுந் தீயா னது தன்னைச் சுடுதலன்றித் தனக்கினமாய், தன்னைப் பிறவிக் கடலில் வீழாதெடுப்பவராகிய இதோபதேசஞ் செய்யும் மரக்கலம் போன்ற சற்குருவையுஞ் சுடும். (சுடுதல்: துன்பஞ் செய்தல்.)
(7) இத்தகைய கோபத்தைத் தனது வல்லமையைக் காட்டுகிற ஒரு குணமென்று தன்னிடத்தே கொண்டவனுக்குப் பூமியிலே அறைந் தவனது கையானது அப்பூமியிலே படுதல் தப்பாத விதம் போல அவ்வல்லமையை இழந்து விடுதல் தவறமாட்டாது.

4. கோபஞ்செய்யாதிருப்பதின் நன்மை.
(8) கொழுந்து விட்டெரியுந் தீயானது தன்னை வந்து பற் றினாற் போலுந் துன்பந்தரும் பல செய்கைகளை ஒருவன் செய்தா
னாயினும், அவன் மேலே கோபஞ் செய்யாதிருத்தல் நல்லதாம்.

5. கோபஞ்செய்யாதவருக்கு வரும் நன்மை.
(9) அருளுடைய மனத்தால் கோபத்தை நினையானாயின் அவன் தான் நினைக்கப்பட்ட இம்மை, மறுமை, மோக்ஷமாகிய இவையெல்லாம் ஒருமிக்க அடைவான்.

6. கோபஞ்செய்தவர் செய்யாதவராகிய இருவர் பயன்.
(10) மேற்கூறியதறியாமல் கோபத்திலே மிகுந்தவர் உயி ருடையவரா யிருந்தாலும் முன் சொன்ன பயனடையாமையாற் செத்தவரோடொப்பள ராவார். அக்கோபத்தை நீக்கினவர் சாகுந் தன்மையுடையவராயிருந்தாலும் பயன் அடைதற்கு உரியராதலால் முத்தி பெற்றாரோடொப்பாவார்.
-------

32 - ஆம் அதிகாரம். இன்னா செய்யாமை.

அஃதாவது:- ஒருபயனைக் குறித்தாவது, வைரம் பற்றியாவது, சோர் வினாலாவது ஒரு உயிர்க்குத் துன்பந்தருஞ்செய்கைகளைச் செய்யாதிரு த்தல்.

1. தமக்கொருபயனைக் குறித்துப் பிறருக்குத்துன்பஞ் செய் தலை விலக்கல்.
(1) யோகமாகிய சிறப்பினாலே தரப்படுவனவாகிய அட்ட மாசித்தி முதலாகிய செல்வங்களைப் பெறலாமாயினும், அயலாருக்கு துன்பந்தருஞ் செய்கைகளைச் செய்யாதிருத்தல் வேதாகம வழி யிலே நின்ற குற்றமற்றோர் யாவருக்கும் கொள்கையாம்.

2. வைரங்கொண்டு பிறர்க்குத் துன்பஞ்செய்தலை விலக்கல்.
(2) தம்மேலே கோபங்கொண்டு துன்பந்தருஞ் செய்கை. களை ஒருவன் செய்த இடத்தும் தாமுந் திரும்ப அத் துன்பந்தருஞ் செய்கைகளை அவன் மேற் செய்யாதிருத்தலும் மேலே சொல் லப்பட்ட குற்றமற்றவரது துணிவாகும்.
(3) அஃதன்றி, தாம் முன்பு துன்பந்தருவதொன்றைச் செய்யாதிருக்க, தம்மேல் துன் பஞ் செய்தவர்க்கும் துறந்தவர் பொறுமையின்றித் துன்பத்தைச் செய்தாரானால் பின்பு அச் செய்கையானது கடக்கமுடியாத துன பத்தை அவருக்குக் கொடுக்கும். (துன்பமாவது: தவமிழந்து பழியும் பாவமும் எய்தல்.)
(4) தமக்குத் துன்பந்தருஞ் செய்கைகளைச் செய்தவரைத் துறந்தோர் தண்டித்தலாவது, அவர் தாமே நாணும் படி அவருக்கு இனிமையான மகிழ்ச்சிகளைச் செய்து அவர் செய்த தீச்செய்கையை மறந்து விடுத்தலாம். மறவாவிட்டால், மற்றொரு காலம் அவர் மேற் கோபம் உண்டாகி அவருக்குத் தீங்கு செய்ய நேரும். ஆதலால், மறந்துவிட வேண்டியது அவசியமாம்.

3. சோர்வினாலே துன்பஞ்செய்தலை விலக்கல்.
(5) வேறோருயிருக்கு வந்த துன்பந்தருஞ் செய்கைகளைத் தமக்கு வந்த துன்பந்தருஞ் செய்கைகள் போல நினைத்து, அவ்வுயி ரைக் காப்பாற்றாத இடத்துத் துறந்தோர்க்கு, உயிர் முதலானவை களை உள்ளவாறுணர்ந்த அறிவினாலேயாகும் ஒரு பயனில்லையாம். (காப்பாற்றலாவது நடத்தல், இருத்தல், நிற்றல், உண்டல் முதலா' கிய தமது தொழில்களாலும் பிறவற்றாலும் வருந்துன்பங்களை முன்னேயறிந்து விலக்கல்)

4. பொதுவகையால் துன்பஞ்செய்தலை விலக்கல்.
(6) இவை மனிதருக்குத் துன்பந் தருவன வென்று அனு மானப் பிரமாணத்தினாலறியப்பட்டவைகளைப் பிறரிடத்தே செய் யாதிருக்குஞ் செய்கை துறந்தோருக்கு நிச்சயமாகவேண்டும். (அனு மானப்பிரமாணமாவது : இன்னது செய்தா லின்னது வருமென்றறி தல்)
(7) மனத்தினாலறிந்த துன்பந்தருமவைகளை எவ்வளவு சிறிதானாலும் எந்தக்காலத்திலும் யாரொருவருக்குஞ் செய்யா திருத்தல் முதன்மையான தருமமாம். (8) பிறர் செய்யுந் தன் பந்தருஞ் செயல்கள் தன்னுயிர்க்குத் துன்பந் தருவனவாந் தன் மையை யனுபவித்தறிபவன் நிலையுள்ள பிறவுயிர்களுக்கு அத்துன் பந்தருஞ் செயல்களைத் தான் செய்தல் என்ன காரணத்தாலோ? தெரியவில்லை.

5. போதுவகையால் துன்பஞ்செய்தவருக்கு வருந்தீங்கு.
(9) துறந்த பெரியவர் பிறருக்குத் துன்பந்தருமவை களை ஒரு முகூர்த்த காலத்தின் முற்பாகத்திலே செய்தால் அம் முகூர்த்த காலத்தின் பிற்பாகத்திலே தமக்குத் துன்பந் தருமவை. கள் தம்மாற் செய்யப்பட்ட அவர் செய்யாதிருக்கத் தாமே வந்து சேரும். (முகூர்த்த மென்பது : மூன்றே முக்கால் நாழிகை; இரண்டு நாழிகை யென்பாரும் உண்டு.)
(10) துன்பமெல்லாம் பிறவு, யிர்க்குத் துன்பஞ் செய்தவரை அடையுமாதலால் தம்முயிர்க்குத் துன்பமில்லாதிருத்தலை விரும்புவோர் பிறவுயிர்க்குத் துன்பஞ் செய்யமாட்டா ரென்பதாம்.
-----------

33 -ஆம் அதிகாரம். கொல்லாமை

அஃதாவது:- [§]ஐயறிவுடையவை முதல் ஒரறிவுடையவை யீறாகிய உயிர் களைச் சோர்வினாலுங் கொலை செய்யாதிருத்தல்.
[§] ஐயறிவுடைய உயிர்களாவன : மனிதருயிர்கள்; இவற்றை ஆறறி வுடையன என் பார் சிலர்.

1. கொல்லாமையின் சிறப்பு.
(1) தருமங்களெல்லாமாகிய செய்கை யெதுவென்றால், ஒரு உயிரையுங் கொல்லாமையாம். உயிர்களைக் கொல்லுதல் பாவச் செய்கைக ளெல்லாவற்றையுங் கொடுக்கும்.
(2) ஆதலால் உண் ணப்பட்ட உணவுகளைப் பசித்த உயிர்களுக்குப் பங்கிட்டுக்கொடுத்து மேற்கூறிய ஐவகை உயிர்களையுங் காப்பாற்றல் துறந்தவர்க்குத் திர ட்டிவைக்கப் பட்ட தருமங்களெல்லாவற்றினும் முதன்மையான தருமமாம்.
(3) அத்தருமங்களுள் தனக்குத் தானே சமமாக இருப்பதாக நல்லது கொல்லாமையாகிய தருமம்; அது நீங்கினால் பொய் சொல்லாமையாகிய தருமம் அக்கொலை செய்யாமையின் பின்னே நிற்க நல்லதாம். எனவே, இவ்விரண்டினும் முன்னே தலை மையாய் நிற்குந் தருமம் கொலை செய்யாமை யென்பது பெறப்பட் டது.

2. கொல்லாமையையுடயதே நன்மார்க்கமtrk்.
(4) மேற் பதவியும், மோக்ஷமும் பெறுவதற்கு நல்ல வழி யென்று சொல்லப்படுவது எதுவென்றால், யாதொரு உயிரையுங் கொல்லாமையாகிய தருமத்தை நினைக்கும் மார்க்கமாம். (உயிரைக் கொல்லுதலாவது : அவ்வுயிரை உடம்பை விட்டுப் பிரித்து விடுதல்.)

3. கொல்லாமையை மறவாதவனது உயர்ச்சி.
(5) சரமும் அசரமுமாகிய இருவகைப் பிறப்புக்களிலும் இன்பமில்லாமல் உள்ளவை யெல்லாந் துன்பமே யாகிய நிலையைக் கண்டு பயந்து அத்துன்பம் நீங்குதற்குப் பிறவாதிருக்கும் பொருட்டு மனைவாழ்க்கையைத் துறந்தவரெல்லாருள்ளும் கொலைப்பாவத்துக்கு, ப்பயந்து, கொல்லாமையாகிய தருமத்தை மறவாதவன் உயர்ந்தோ னாவான்.

4. கொல்லா விரதத்தோர்க்கு வரும் நன்மை.
(6) உயிரைக் கொண்டு போகும் இயமனானவன் கொலை செய்யாமை யாகிய விரதத்தை மேலாகக் கொண்டு நடப்பவனது ஆயுளின் மேலே பிரவேசிக்கமாட்டான். எனவே, கொலை செய்யாத வன் நீண்டகாலமிருந்து மோக்ஷத்தை அடைவான் என்பது கருத்து.

5. கொலை செய்தலின் குற்றம்.
(7) தான் வேறொன்றினது இனிய உயிரை அதன் உடம் பினின்று நீக்குதலாகிய கொலையைச் செய்யாத இடத்து, தன்னு யிர் தன்னுடம்பை விட்டு நீங்கிப் போமாயினும் ஒருவன் அக்கொலை யைச் செய்யாதிருக்கவேண்டும்; இதன் கருத்து, தன்னை ஒன்று கொன்றாலுந் தான் அதனைக் கொல்லலாகா தென்பதுவேயாம்.
(8) யாகத்திலே ஒரு உயிரைக் கொன்றால் சுவர்க்கததை யடையும் இன்பமிகுவதாகிய செல்வமானது பெரிதென்று சொல்லப்பட்ட டாலும், துறவாலுயர்ந்தோர்க்கு ஒரு உயிரைக் கொன்று அதனாலா குஞ் செல்வமானது தாழ்ந்ததாம். எதனாலென்றால், சுவர்க்கத்துக்கு மேற்பட்ட மோக்ஷம் கொலை செய்யாமையாற் கிடைத்தலாலென்க.

6. கொலை செய்வோர்க்கு வருந் தீங்கு.
(9) கொலைத் தொழிலையுடையவராகிய மனிதர் அத்தொ ழிலின் இழிவை அறியாத மனமுடையவராயிருந்தாலும், அத்தொ துலின் இழிவை அறிவோரது நெஞ்சிலே புலைத்தொழிலராய்க் காண ப்படுவர். எனவே, கொலை செய்வோர் எவராயினும் புலையராவரெ ன்பதாயிற்று.
(10) பார்க்கக் கூடாத நோயுடம்புடனே தரித்தி ரத்தோடு கூடிய வாழ்க்கையுடையவரை இவர் முற்பிறப்பிலே உயிர் களை அவை நின்ற உடம்புகளிலிருந்து நீக்குதலாகிய கொலை செய்த வரென்று வினைப்பயன்களை அறிந்தோர் சொல்லுவர். எனவே, இப்பிறப்பிற் கொலை செய்தால் மறுபிறப்பிலே வியாதியும், தரித்தி ரமும் நீங்காமல நுபவிக்க வருமென்று பயந்து ஒவ்வொருவருங் கொலை செய்யாதிருக்க வேண்டு மென்பதாயிற்று. அருளுடை மை முதல் கொல்லாமை இறுதியாகச் சொல்லப்பட்ட இவற்றுள்ளே சொல்லப்படாத விரதங்களும் அடங்கும்; அஃதறிந்து அடக்கிக் கொள்க.
--------------
ஞானம்.
அஃதாவது:- மேற்கூறிய விரதங்களினாலே அந்தக்கரணங்கள் பரிசுத்தமான இடத்து உண்டாவதும், மோக்ஷத்தைத் தருவதுமாகிய அறிவு; அது: நிலை பாமை முதல் அவாவறுத்தலிறுதியாகிய நான்கதிகாரத்தினுள்ளடக்கிச் சொல்லப்படுகின்றது.
--------------

34. ஆம் அதிகாரம். நிலையாமை.

அஃதாவது:- காணப்பட்டவைகளெல்லாம் அழியப்பட்டனவாதல்.

1. நிலையாதவைகளை நிலையுடையவை யென்று கருதுதல் பிறவித் துன்பத்துக்குக் காரணம் ஆதலால் அது: மோக்ஷமடைவார்க்கு இழுக்கு.
(1) நிலையில்லாதவைகளை நிலையுடையவை யென்று நினைக் கிற அற்பப் புத்தியுடையவரா யிருத்தலானது துறந்தோர்க்கு இழிவாகும். (நிலையில்லாத-வைகளாவன: காணப்பட்ட எல்லாப் பொருள்களுமாம்.)

2. செல்வம் நிலையாமை யென்பதும், செல்வம் உள்ள பொழுதே அறஞ் செய்யவேண்டுமென்பதும்.
(2) கூத்தாடுகின்ற சபையினிடத்தே கூத்துக் காரணமாகக் காண்போர் கூட்டம் வருதல் போல், ஒருவனிடத்தே நல்வினை காரண மாகப் பெருஞ்செல்வமானது வந்து சேரும். கூத்து முடிந்த வுடனே அக்கூட்டம் போதல் போல் அச்செல்வம் அந்நல்வினை முடிந்த இடத்தே போய் விடும்.
(3) ஆதலால், செல்வத்தை ஒரு வன் பெற்றால் அது நிலையாத இயல்பினையுடைய தென்றறிந்து அச்செல்வத்தாலே செய்யப்படுந் தருமங்களைக் காலந்தாழாமல் உட னே செய்ய வேண்டும். (தருமங்களாவன: பிரயோசனங் கருதாது செய்யும் கடவுட் பூசையும், தானமும் முதலாயின.)

3. உடம்புகளுக்கு அளவு செய்யப்பட்ட நாள் கழியும் விதம்.
(4) நாளென்று அளவு செய்யப்படுவதாகிய ஒரு கால அளவுபோலத் தன்னைக் காண்பித்துச் சிறிது சிறிதாக அறுத்துக் செல்லும் வாளாயுதத்தின் வாயினிடத்து உடம்பானது இருக்கின் றது. அதையறிவாறில்லை. அறிந்தால் சரீர நிலையாமை தெளிவா கத் தோன்றும்.

4. மேற்கூறிய நாள் கழிந்தால் நிலையாமையுண்டாம். அது வருமுன் அவசரமாக அறஞ்செய்க.
(5) பேசாதிருக்கும்படி நாவையடக்குகிற விக்கலானது மேலெழுவதற்கு முன்னே மோக்ஷத்துக்கு ஏதுவாகிய தருமங்களை விரைந்து செய்யவேண்டும்.

5. உடம்புகள் ஒரே இடத்தில் பிறந்த அளவிலே இறத்தல்.
(6) நேற்றிருந்தவனொருவன் இன்று இறந்து போனானே ன்னும் பெருமையை யுடையதாய் இந்த உலகமிருக்கின்றது.

6. உடம்புகள் ஒரு கணமாயினுமிருக்குமென்று நம்பலாகாது.
(7) அறிவில்லாதவர் ஒரு கணப்பொழுதுந் தம்முடம்பும் உயிருங்கூடி வாழ்ந்திருத்தலை யறியமாட்டார். அத்தன்மையுடை யராகியும் கோடிக்கு மேற்பட்ட பலவாகிய நினைவுகளை நினைக்கின் றனர். (பலவாகிய நினைவுகளாவன: தாமநுபவிக்கும் இன்பங்களுக்கு உரியவைகளாகும் விதமும், அதற்குப் பொருள் வேண்டும் விதமும், அது தம் முயற்சிகளால் வரும் விதமும், அம்முயற்சிகளைத் தாம் செய்யும் விதமும், பொருள் வந்தபோது வரும் இடையூறுகளை நீக் கும் விதமும், அப்பொருளைக் காப்பாற்றும் விதமும் முதலான வைகள்.)

7. உடம்புகள் உயிர் நீங்கிய இடத்துக் கிடக்கும் விதம்.
(8) சரீரத்தோடு உயிர்க்கு உண்டாகிய சிநேகமானது முட்டையோடிருந்த பறவை பருவம் வந்தபோது அம்முட்டை தனித்துக் கிடக்க, அதை விட்டுப் பறந்து போகுந் தன்மையுடைய தாகும். ஆதலால் எப்பொழுதும் சரீரமும், உயிரும் இருந்தபடியே யிருக்கு மென்று நம்பவேண்டாம்.

8. உடம்புகளுக்கு இறப்பும் பிறப்பும் மாறி மாறி வரும் விதம்.
(9) ஒருவனுக்கு மரணம் வருதல் தூக்கம் வருதல் போலும். அதன் பின்னே பிறப்பு வருதல் தூங்கிவிழித்தல் போலுமாம். இவ் விதம் சீக்கிரம் மாறிமாறி வருதலை அறியவேண்டும்.

10. உடம்புகள் உயிருக்கு உரியவை அல்ல.
(10) வாத பித்த சிலேற்பனங்களது வீடுகளாகிய உடம்பு களுள் ஒதுக்குக் குடியிருந்துவந்த உயிருக்கு என்றைக்கும் இருப்ப தாகிய ஒரு வீடானது இது வரையில் அமைந்ததில்லை போலும். (ஒதுக்குக்குடியாவது: தனியே இல்லாமல் ஒருவரிருக்குங் குடியில் இரவலாக இருக்குங் குடியாம்.)
--------

35- ஆம் அதிகாரம். துறவு.

அஃதாவது:- புறமாகிய செல்வத்திலும், அகமாகிய உடம்பிலும் உண்டாகிய ஆசையை அவைகளது நிலையாமையைப் பார்த்து விடுதல்.

1. எனதென்னும் புறப் [$]பற்று விடுதல்.
[$] பற்று - ஆசை.
(1) ஒருவன் எந்தெந்தப்பொருளில் ஆசையை நீக்கினானோ அந்தந்தப் பொருளினாலே துன்பத்தை யடையமாட்டான். எனவே, ஆசை வைக்கப்பட்ட பொருள்களினாலே துன்பத்தை யடைவா னென்பதும், எல்லாப் பொருள்களிலும் ஒருமிக்க ஆசையை விட்டு விட்டால் ஒரு துன்பமும் அடையமாட்டானென்பதுங் காண்க.
(2) எல்லாப் பொருள்களையுந் துறந்த பின் ஒருவனுக்கு இப்பிறப்பிலே உண்டாகு முறைமையுடைய இன்பங்கள் பலவாம்; அவ்வின்பங் களை விரும்பினால் இளமைப் பருவத்தே எல்லாப் பொருள்களையுந் துறக்கக் கடவன். (இன்பங்களாவன: மேற்கூறிய பொருளுக்காக மனமும், வாக்கும், காயமும், வருந்தாது நிற்றலாலும் அவற்றை நல்வழியிலே செலுத்தலாலும் வருவனவாகிய பயன்களாம்.)
(3) முத்தியை யடைவோருக்கு மெய், வாய், கண், மூக்கு, செவியாகிய ஐம்பொறிகளுக்குரிய பரிசம், ரசம், ரூபம், கந்தம், சத்தங்களாகிய புலன்களைக் கெடுத்தல் வேண்டும். கெடுக்கும் போது அப்புலன் களை அநுபவிக்கும் பொருட்டுத் தாம் படைத்த பொருள்களை யெல் லாம் ஒருமிக்க விட்டுவிட வேண்டும்.
(4) மேற்கூறிய முத்தியை அடையத் தவஞ் செய்வோருக்கு ஆசைப்படுவ தொரு பொருளும் இல்லாதிருத்தலே நல்லதாகும். யாதாயினுமொரு பொருளிருந்தால் அத்தவத்தைப் போக்குதலால் அது திரும்பவும் மயக்கத்துக்கு ஏதுவாகும்.

2.இருவகைப்பற்றையும் விட்டவருக்கே மோக்ஷம் உண்டு.
(5) பிறப்பை நீக்கும் முயற்சியைக் கொண்டவருக்கு அம் முயற்சிக்கு உதவியாகிய சரீரமும் அதிகமென்றால் அதற்கு மேலும் யாதொரு சம்பந்தமுமில்லாத சில பொருளை விரும்பிச் சேர்ப்பதா, லென்ன பிரயோசனம்
(6) தானல்லாத உடம்பை யானென்றும் தன்னோடு சம்பந்தமில்லாத பொருளை எனதென்றும் நினைத்து அவைகளிலே ஆசைவைத்தற்கு ஏதுவாகிய அறியாமையைக் குரு உபதேசத்தாலும் யோகாப்பியாசத்தாலுங் கெடுப்பவன் தேவர்கள் ளுக்குஞ் சேருதற்கரிய மோக்ஷவுலகத்திலே போய்ச் சேர்ந்திருப் பான்.

3. இருவகைப்பற்றுக்களை விடாதவருக்கு மோக்ஷம் இல்லை.
(7) அகப்பற்று, புறப்பற்று என்னும் இருவகை ஆசைகளை யும் இறுகப்பற்றி விடாதவரைத் துன்பங்களும் இறுகப்பற்றிவிட்டு நீங்காவாம்; இதனால், 'ஆசையற்றவரே அல்லலற்றவ'' ரென்றறிக.

4. பற்றறுதலாற் பிறவியறுதலும் அறாத பொழுது பிறவி அறா மையுங் காணப்படும்.
(8) எல்லாப் பற்றையும் விட்டவரே முத்தியை அடைந்தவ ராவர். அப்படி விடாதவர் மயக்கமுற்றுப் பிறப்பாகிய வலையில் அகப்பட்டவராவர்.
(9) இவ்விதம் ஒருவன் இருவகை ஆசைகளை யும் விட்டபோதே, அவ்விடுதலானது அவனது பிறவியைக் கெடுக் கும். விடாதபோது அவ்விருவகை ஆசையால் பிறப்பதும் இறப்பது மாகிய நிலையாமை வந்து கொண்டேயிருக்கும்.

5. பற்று விடுதற்கு உபாயம்.
(10) அகத்திலும் புறத்திலும் விடாது வந்த ஆசையா னது விடுதற்கு எல்லாப் பொருள்களையும் பற்றி நின்றே அவைகள் ளோடு பற்றில்லாத கடவுளாலே அருளிச் செய்யப்பட்ட முத்தி வழியை இதுவே நல்ல வழி யென்று மனத்திற் கொள்ளவேண் டும். அவ்விதம் கொண்டு, அம்முத்தியினிடத்தே தியான நிட்டை களை அம்மனத்தாற் செய்யவேண்டும்.
----------

36- ஆம் அதிகாரம். மெய்யுணர்தல்.

அஃதாவது:- பிறப்பு வீடுகளையும் அவற்றின் காரணங்களையும் விபரீத சந்தேகங்கள் இல்லாமல் உண்மையாலறிதல்; இதை வடநூலார் தத்துவஞான மென்பர்.
[#] விபரீதம் - ஒன்றையொன்றாகக் காணுதல்.

1. பிறப்பு, துன்பமென்பதும் அதற்கு முதற்காரணம் விபரீத ஞானமென்பதும்.
(1) பொய்ப் பொருள்களை மெய்ப் பொருள்களென்றறி கின்ற விபரீத ஞானத்தினாலே இன்பமில்லாத சனன முண்டாகும். பொய்ப் பொருளாவது : அ நித்திய மாகிய பிரபஞ்சமாம்; இதனாலே பிறவி, துன்பமென்பதும் அப்பிறவி விபரீத ஞானத்தால் வருமென் பதுங் காண்க.

2. உயர்வு ஒப்பில்லாத இன்பம் மோக்ஷமென்பதும், அதற்கு நிமித்த காரணம் தனிப்பொருளாகிய பிரம் மென்பதும்.
(2) மேற் சொல்லிய விபரீத ஞானத்தினின்றும் நீங்கிக் குற்றமற்ற மெய்யறிவினை உடையவருக்கு அவ்வறிவானது பிற வியை நீங்கச் செய்து முத்தியைக் கொடுக்கும்.

3. மெய்யையுணர்ந்தவர்க்கே முத்தியுண்டென்பதால் அம் மெய்யின் சிறப்பு.
(3) மறுபிறப்பும் இருவினைப் பயன்களும் உண்டோ இல்லையோ?வென்று ஒன்றிலே துணிவு பிறவாமல் நிற்குஞ் சந்தேக த்திலிருந்து அவையுண்டென்று மெய்யுணர்ந்தவருக்குத் தாம் அடைந்து நின்ற இந்நில வுலகத்தினும் இனி யடைவதாகிய மோக்ஷ உலகம் சமீபமாதலை யுடையதாம்.
(4) மேற்கூறிய மெய்ம்மையறி யாதவருக்குச் சத்த, பரிச, ரூப, ரச, கந்தங்களாகிய ஐந்தனிடத் திலுஞ் செல்லும் ஐந்து உணர்வை யுடைய மனம் அவைகளிற் செல்லாமல் வசப்பட்டாலும் பிரயோசனமில்லை.

4. மெய்யுணர்வினது இலக்கணம்.
(5) எப்பொருள் எந்த இயல்புடைய தாய்த் தோன்றினும் அத்தோன்றிய விதத்தைக் கண்டதோடு விடாமல் அப்பொருளினிட் களத்திருந்தும் உண்மை யாகிய பொருளைக் காண்பது மெய்யறிவாம். அதெப்படி யென்றால், அரசன் சேரமான் என்றொருவனைச் சொன்னால் அரசனென்பதோர் சாதியும் சேரமானென்பதோர் குடி யும் பொய்யாதலால் அப்பொய்யை நீக்கி அவனைப் பிருதிவி முதல் உயிரீறாகிய தத்துவங்களின் கூட்ட மென்றறிந்து, அந்தத் துவங் களை நிலம் முதலாகிய காரணங்களுள் ஒடுக்கிக் கொண்டு போய் முடிவிலே காரண காரியம் இரண்டுமில்லாமல் நிற்பதனை அறிதலாம்.

5. மோக்ஷத்துக்கு முதற்காரணமாகிய முதற் பொருளை அறி தற்கு உபாயம் மூன்று. அவற்றுள், கேட்டல்.
(6) இம்மையிலே இப்பிறப்பினிடத்து ஞானாசாரியரிடத் தில் உபதேசஞானத்தைக் கேட்டு, அதனாலுண்மைப் பொருளை உணர்ந்தவர் திரும்பி இப்பிறப்பில் வாரா நெறியாகிய மோக்ஷ நெறியை யடைவர். இது, கேள்வி ஞானமாம்.

6. மேலே கேட்டதைச் சிந்தித்தல்.
(7) அவ்விதம் கேட்கப் பட்ட உபதேசப் பொருளை மன மானது நிச்சயப்படப் பிரமாணங்களாலும், புத்தியினாலும் ஆராய் ந்து அதனால் முதற் பொருளை அறிவானானால் அவனுக்குப் பிறப்பு திரும்ப உள்ளதாக நினைக்க வேண்டுவதில்லை. எ. மேற்சிந்தித்ததைத் தெளிதல்.
(8) பிறவிக்கு முதற் காரணம் எனப்படுகிற அஞ்ஞானங் கெட மோக்ஷத்துக்கு நிமித்தகாரணமெனப்படுகிற பிரம மென்னப் பட்ட முதற் கடவுளை அறிவதே ஒருவனுக்கு மெய் புணர்வாகும்.

7. ஞான யோக முதிர்ச்சி யுடைய உயிரைப் பின் வரும் துன்பங்கள் சேரமாட்டாமையாற் கெட்டு விடும்.
(9) எல்லாப் பொருளுக்குஞ் சார்பாகிய பிரமப் பொருளை யுணர்ந்து, இருவகைப் பற்றுக்களுங் கெட நடக்க வல்லவ னபின், முன் அவனைச் சேர்தற்குரியவையாய் நின்ற துன்பங்கள் பின் அவ்வுணர்வையும் நடக்கையையும் அழித்து, அவனைச் சோமாட் டாவாம். (நடக்கைபாவது: போக வழி நடத்தல் }

8. காரணமாகிய குற்றங்களைக் கெடுத்தோர் காரியமாகிய இரு வினைகளைச் செய்யாமையால் அவருக்கு வருதற்குரிய துன்பங்களும் இல்லை.
(10) ஞான யோகங்களின் முதிர்ச்சி யுடையவருக்கு விருப்பு, வெறுப்பு, அநாதியாகிய அஞ்ஞானம் எனப்படுகிற மூன்று குற்றங்களின் பெயருங் கெடுதலால் அக் குற்றங்களின் காரியமாகிய வினைப்பயன்கள் உண்டாகுதல் இல்லையாம்.
----------

37-ஆம் அதிகாரம். அவா அறுத்தல்.

அஃதாவது:- 36-ஆம் அதிகாரம் 6, 10 வசனங்களிற் கூறியபடி முன்னும் பின்னும் வினைத் தொடர்பறுத்தார்க்கு , நடு நின்ற உடம்பும் அது கொண்ட வினைப்பயன்களும் நின்றமையால் வேதனைபற்றி ஒவ்வோரிடத். துத் துறக்கப்பட்ட புலன்களின் மேலே பழைய பழக்க வசத்தினாலே நினைவு செல்லு மல்லவா? அந் நினைவும் பிறவிக்கு வித்தாமாகலால் அதினையிடைவிடாத மெய்யுணர்வால் அறுத்தல். (அவா -ஆதை )

1. பிறவிக்கு ஆசை வித்து.
(1) சகல உயிர்களுக்கும் எக்காலத்தினுங் கெடாது வரு. கிற பிறவியை விளைப்பதாகிய விதை ஆசையாகுமென்று நூலோர் சொல்லுவர்.

2. பிறவாமைக்கு வழியென்பதும் மேலாகிய செலவமென்ப தும் வேண்டாமை யாதலால் அதன் சிறப்பு.
(2) பிறவி, துன்பமாயிருத்தலை அறிந்தவன் ஒன்றை விரும்பி னால் பிறவாதிருத்தலை விரும்பவேண்டும். அப்பிறவாமையானது எதனால் வருமென்றால் தானொரு பொருளையும் இச்சியாதிருத்தலை விரும்பினால் அதனால் வருமென்கா
(3) ஆதலால் ஒரு பொருளை யும் இச்சியாதிருத்தல் போலும் மேலாகிய செல்வமானது காணப் படுகிற இவ்வுலகத்தில் இல்லை. இம்மட்டோ கேட்கப்படுகிற அவ் வுலகத்திலும் இல்லையாம்.

3. ஆசையைக் கெடுத்தல் முத்திக்கு நேரே காரணமென்பதும் அது வரும் வழியும்.
(4) ஒருவருக்கு முத்தி யென்று சொல்லப்படுவது ஆசை யில்லாமையாம். அவ்வாசை யில்லாமை யானது மெய்ம்மையை யிச்சிப்பாராகில் அவருக்குத் தானே யுண்டாகும்.

4. ஆசையற்றவரது சிறப்பு
(5) பிறவி அற்றவ ரென்று சொல்லப்படுவோர் அதற்கு, நேரே காரணமாகிய ஆசை அற்றவரே. மற்றைக் காரணங்கள் அற்று ஆசை யொன்றும் அறாதவர் அக்காரணங்களாலே சில துன் பங்கள் அற்றவரல்லாமல், ஆசை யற்றவர் போலப் பிறவியற மாட் டாராம்.

5. ஆகையின் குற்றமும், அதனை வரவொட்டாமல் தடுப்பதே அறமென்பதும்.
(6) முற்றத் துறந்து மெய்யுணர்தலாகிய காரணம் பெற்று அதனால் முத்தியை அடைதற்குரியவனாகிய ஒருத்தனை , மறவி வழி யினாலே நுழைந்து பின்னும் பிறவி வழியிலே தள்ளிக்கொடுக்க வல் லது ஆசையாம். ஆதலால், பயந்து அவ்வாசையை வரவொட்டா மல் தடுப்பதே துறவறமாம்.

6. ஆசையைக் கெடுத்தலின் சிறப்பு.
(7) ஒருவன் ஆசையை முழுவதும் கெடுத்தால் அவனுக் குப் பிறவித் துன்பங்களால் அழியாமைக்கு ஏதுவாகிய துறவறங் கள் மெய் வருந்தாத வழியினாலே யுண்டாகும், இதனால் வருந்தித் தவஞ் செய்ய வேண்டுவதில்லை யென்பதாயிற்று.

7. ஆசையே துன்பத்திற்குக் காரணம்.
(8) ஆசையில்லாதவருக்கு யாதொரு துன்பமுமில்லையா கும். முத்தியை யடைதற்கு விரோதமாகிய பிற காரணங்களெல் லாம் இல்லாதிருந்தும் ஆசை ஒன்று மாத்திரம் உண்டானால் அத. னால் தன்னாலும் பிறராலும் தெய்வத்தாலும் வரும் எல்லாத் துன் பங்சளும் அளவில்லாமல் மேலும் மேலும் வந்து சேரும்.

8. ஆசையற்றவர் முத்தி யின்பத்தை உடலோடு நின்றே அடைவர்.
(9 ஆசை யென்று சொல்லப்படுகிற பெரிய துன்பமானது ஒருவனுக்குக் கெட்டால் அவன மோக்ஷமடைந்த இடத்துமாத்திர மல்ல, உடம்போடு கூடி நின்ற இவ்வுலகத்தும் ஆனந்தம் அவனை விட்டு நீங்காது.

9. மோக்ஷமாவது இதுவென்பதும், அஃது ஆசையைக் கெடுத்தவருக்கு அப்போதே உண்டாமென்பதும்.
(10) ஒரு காலத்தும் பூர்த்தியாகாத இ பல்பினை யுடைய ஆசையை ஒருவன் விடுவானாயின், அவனுக்கு களிப்பு, கவலை, பிறப்பு, பிணி, மூப்பு, இறப்புக்களில்லாமல் எப்போதும் ஒரு நிலை மையனாந் தன்மையை அவ்வாசையை விடுதலானது கொடுக்கும். இந்த நிலைமை உடையவனே சீவன் முத்தனென்று பெரியோர் சொல்லுவா.
---------

38-ஆம் அதிகாரம். ழ

அஃதாவது;- நல்வினைப் பயனாகிய இன்பழம், தீவினைப் பயனாகிய துன்பமும் அவ்வினைகளைச் செயதவனையே சென்றடைதற்கு ஏதுவாகிய நியதியாம். ஊழ், பால், முறை, உண்மை , தெயவம், நியதி, விதி என்பவை ஒரு பொருட் சொற்கள்.

1. பொருள்களுக்குக் காரணமாகிய ஊழின் வலிமை.
(1) ஒருவனுக்குக் கையிலிருக்கும் பொருள் விருத்தியா தற்குக் காரணமாகிய ஊழினாலே முயற்சியானது உண்டாகும். அப்பொருள் கெடுதற்குக் காரணமாகிய ஊழினாலே சோம்பலானது உண்டாகும்.
(2) எல்லா அறிவும் உண்டாயிருந்தாலுங் கைப் பொருளை யிழத்தற்குரிய ஊழ் பொருந்திய இடத்து அவ்வூழ் அவ்வறிவை அறியாமையாகச் செய்யும். அறிவு சுருங்கியிருந்தா லும் அப்பொருளை விருத்தி செய்தற்குக் காரணமாகிய ஊழுற்ற. இடத்து அவ்வூழ் அவ்வறிவை விரியும்படி செய்யும்.
(3) அறிவை அறியாமையாகச் செய்யும் ஊழுடைய ஒருவன் நுட்பமான பொரு ள்களையுடைய பல நூல்களையுங் கற்றானாயினும் பின்னுந் தனது ஊ மினாலாகிய அறிவே மேற்படும்.
(4) உலகத்தில் ஊழினது இயற்கையானது இரண்டு கூறாயிருக்கின்றது. ஆதலால், செல்வ முடையராதலும் வேறு. அறிவுடையராதலும் வேறு. எனவே, செல்வத்தை யுண்டுபண்ணும் ஊழ் அறிவை யுண்டுபண்ணாது. அறிவை உண்டுபண்ணும் ஊழ் செல்வத்தை உண்டுபண்ணாது. செல்வமும் அறிவும் ஒருவரிடத்திலிருப்பதற்கு இரண்டு ஊழும் வேண்டுமென்பதாயிற்று.
(5) அழிக்கும் ஊழ் வந்தபோது செல் வத்தை ஆக்குதற்குக் காரணங்களாகிய காலம், இடம், கருவி, தொ ழிலாகிய நல்லவை யெல்லாந் தீயவையாகி அச் செல்வத்தை யழிந் துவிடும். ஆக்கும் ஊழ் வந்தபோது மேற்கூறிய கால முதலிய நான் குந் தீயவை பா யிருந்தாலும் நல்லவையாகி விருத்தியடையச் செய் யும். (6) ஊழினாலே தம்முடையவை ஆகாத பொருள்கள் வருந்திக் காப்பாற்றினாலும் தம்மிடத்து நில்லாமற் போய்விடும். அவ்வூழி னாலே தம்முடையவை யாகிய பொருள்கள் புறத்தே கொண்டு போய்ப் போட்டாலுந் தம்மைவிட்டுப் போகாமல் திரும்பவும் வந்து சேரும். இதுவரையுஞ் சொல்லியதனால் பொருள் விருத்தியாதற் குங் கெடுதற்கும் ஊழே காரணமென் றறிக.

2. இன்ப துன்பங்களுக்குக் காரணமாகிய ஊழின் வலிமை.
(7) தாம் அநுபவிக்கப்படும் பொருள்கள் கோடியை வரு ந்திச் சேர்த்து வைத்தவருக்கும் ஊழால் வகுக்கப்பட்ட விதம் அல்லாமல் அநுபவித்தல் கூடாதாம்.
(8) அடையும் பகுப்புடைய துன்பங்களை ஊழ்கள் அடைவிக்காமல் நீங்குமானால் வறுமையினால் ஒன்றையும் அநுபவித்தலில்லாதவர் இல்வாழ்க்கையைத் துறக்குங் கருத்துடையராவர். எனவே, வறுமை துறவுக்கு ஏதுவாயினும் ஊழ் துன்பங்களை யடைவித்து நீங்காவிடத்து ஆகாதென்பதாயிற்று.
(9) நல்வினை, இன்பங்களைக் கொடுக்கும்போது அவ்வின்பங்களை நீக்கும் விதந்தேடாமல் இவை நல்லவையென்று இசைந்து அநுப விப்பவர் தீவினை, துன்பங்களைக் கொடுக்கும்போது அத்துன்பங்களை யும் இன்பங்களைப்போல அநுபவியாமல் அவற்றை நீக்கும் விதம் தேடித் துன்பப்படுவது யாது காரணம்? இதனால், இவ்விருவினையுந் தாம் செய்ததனாலே அவற்றின் பயன்களை ஊழ் கூட்டுங்கால் அது பவித்தே தீரவேண்டு மென்பது காண்க.

3. மேலே சொல்லிய இருவகையூழின் வல்லமையும் பொது வாகக் கூறுதல்.
(10) ஊழானது தன்னை யொருவன் விலக்குதற் பொருட் டுத் தனக்குப் பகையாகிய ஒரு உபாயத்தை ஆராய்ந்தாலும், தான் அவ்வுபாயத்தையாவது மற்றொன்றையாவது வழியாகக் கொண்டு வந்து, முன்னின்று அவ்வாராய்ச்சியைத் தடுத்து விடும். ஆதலால் அவ்வூழ்போல் மிகுந்த வலியுடையவை யெவையிருக்கின்றன?

முதலாவது அறத்துப்பால் முற்றிற்று.
-------------
இனி, இல்லறத்தின் வழிப்படுவனவாகிய பொருளின் பங்களுள், இம்மை மறுமை இரண்டையும் தருவதாகிய பொருளைச் சொல்லும்படி எடுத்துக் கொண்டார்.

இரண்டாவது பொருட்பால்

பொருளாவது: தரும் வழியினாலே சேர்க்கப்பட்ட பொன் மணி முதலானவையாம். அது, தனக்குத் துணைக்கரசணமாகிய அரச நீதி சொல்லவே அடங்கும். அவ்வரச நீதியாவது : கானா நடத்து முறையாம்; அதனை அரசியல், அங்க இயல், ஒழியின லென மூன்றியல்களாலருளிச் செய்தார்.

முதலாவது : அரசியல்.
அரசியலாவது: உலகத்துக்கு உயிரெனச் சிறந்த அரசனது தன்மையாம். அவ்வரசியலை இருபத்தைந்து அதிகாரங்களினாலே சொல்லத்தொடங்கி முதலிலே இறைமாட்சி சொல்லுகின்றார்.
-------------

39-ஆம் அதிகாரம். இறைமாட்சி.

அஃதாவது:- அரசனது நற்குண நற்செய்கைகளாம்.

1. அரசனுக்கு அங்கமாவன இவை யென்பதும், இவை முழுதும் உடைமையே அவன் வெற்றிக்குக் காரணமென்பதும்.
(1) சேனையும், நாடும், பொருளும், அமைச்சும், நட்பும், அரணு மென்று சொல்லப்படுகிற ஆறங்கங்களும் உடையவன் மன்னருள்ளே ஆண் சிங்கம் போல்வானாவான்.

2. அரசனது நற்குண நற்செய்கையாகிய மாட்சிமை.
(2) அரசருக்கு இயற்கையாவது : வலிமையுங் கொடை யும் விவேகமும் மனவெழுச்சியுமாகிய இந்த நான்கு குணங்களும் குறையாமல் நிற்கையாம்.
(3) பூமியை ஆளுந் திருவினையுடைய அரசனுக்கு அவ்வாட்சிக் காரியங்களிலே விரைவுடைமையும், அவை களை அறிதற்கேற்ற, கல்வியுடைமையும் ஆண்மை யுடைமையும் ஆகிய இம்மூன்று குணங்களும் ஒருபோதும் நீங்காவாம்.
(4) தனக் குச் சொல்லப்பட்ட தருமத்திலிருந்து தவறாது நடந்து தரும மல்லாதவைகளைத் தனது நாட்டிடத்தும் உண்டாகாமற் போக்கி வீரத் திலிருந்து தவறாத மானத்தையுடையவன் அரசனாவான்.
(5) தனக்குப் பொருள்கள் வரும் நல்வழிகளை மேலு மேலும் உண்டாக்க லும், அப்படி நல்வழியிலே வந்த பொருள்களை ஓரிடத்திலே சேர்த துவைத்தலும், அவைகளைப் பிறர் கவர்ந்து கொள்ளாமற்காத்தலும், காக்கப்பட்ட அப்பொருள்களை அறம் பொருளின் பங்களின் பொரு ட்டுச் செலவு செய்தலும் வல்லவன் அரசனாவான்.

3. மேற்கூறிய மாட்சிமையும், பயனும்.
(6) அவ்வரசன் வழக்கறிவிப்பவர்க்கும், தங்கள் குறை யைச் சொல்லி யாசிப்பவருக்கும் எளியவனாகி யாவரிடத்துங் கடு மையான சொல்லைச் சொல்லாதவனுமா யிருந்தால் அவனது பூமி யை உலகம் எல்லாப்பூமியினும் உயர்த்திச் சொல்லும். எனவே, யாவ ரும் தன்னை இலேசாகக் காணும்படி சமயங்கொடுத்தலும், யாவரிட த்தும் இன்சொற் சொல்லுதலும் அரசனுக்கு உயர்ச்சியைத் தரு மென்பதாயிற்று.
(7) அவ்விதம் இனிய சொல்லுடனே வேண் டுவார்க்கு வேண்டுவன கொடுத்துத் தன்னாலும், தன் [§] பரிசனத்தாலும், பகைவராலுந் துன்பப்படாமல் உயிர்களைக் காப்பாற்றவல்ல அரசனுக்கு இந்த உலகம் தன் புகழுடன் பொருந்தித் தான் கருதிய பொருளெல்லாவற்றையுங் கொடுக்கும்.
---
[§] பரிசனம-வேலைக்காரர்.

(8) இவ் வாறு நீதி யைச் செய்து காக்கும் அரசனானவன் பிறப்பினாலே மனிதனானா லும் செயலினாலே கடவுளென்று வேறு வைக்கப்படுவானாவன்.
(9) கண்டித்துப் புத்தி சொல்லுந் துணையாயுள்ளவரது சொற்களைத் தன் காது பொறாத்தானாலும் அச்சொற்களின் பயனைக் கருதிப் பொறுத்துக் கொள்ளுங் குணமுடைய அரசனது குடை நிழலின் கீழே இவ்வுலகம் தங்கி இருக்கும்.
(10) மேற்கூறிய கொடை யும், இன்சொல்லும், நீதியும், தளர்ந்த குடியைப் பேணுதலுமா கிய இந்நான்கு செயல்களையும் உடையவனே அரசருக்கெல்லாந்தீபம் போலப்பிரகாசிப்பவன். (குடியைப் பேணுதலாவது: வறுமை வந்த விடத்து, ஆறிலொன்று வாங்கும் இறைப்பொருளையும் வாங்காத தோடு பிற உதவியுஞ் செய்தல். இறை - வரி )
-----

40-ஆம் அதிகாரம். கல்வி.

அஃதாவது:- அவ்வரசன் கற்றற்குரிய நூல்களைக் கற்றல், அந் நூல்களாவன: தருமசாத்திரமும், நீதிநூலும், தேர், யானை, குதிரை, ஆயு தம் என்னப்பட்ட இவற்றின் நூல்களுமுதலானவையாம். அரசன் அறிவு டையவனாயிருந்தால் தன்னுயிர்க்கேயன்றி மன்னுயிர்க்கும் பயன் படுதல் குறித்து இக்கல்வி அரசியலுள் வைக்கப்பட்டதாயினும் யாவருக்கும் உறு: தியைத் தருகின்ற சிறப்புடைமையினாலே எல்லாருக்கும் அவசியம் வேண்டி டு மெனப் பொதுப்படச் சொல்லுகின்றார்.

1. சிறப்புடையவன் கற்கவேண்டுமென்பதும், கற்கத்த கும் நூல்களும், அவைகளைக்கற்கும் விதமும், கற்றதனாற் பயனும்.
(1) ஒருவன் கற்கப்படும் நூல்களைக் குற்றமறக்கற்கவே ண்டும். அப்படிக்கற்றபின் அக்கல்விக்குப் பொருத்தமாக அந் நூல் களிலே சொல்லப்பட்டவழியிலே நடக்கவேண்டும். (கற்கப்படும் நூல்களாவன : அறம் பொருள் இன்பம் வீடு என்ற உறுதிப்போ ருள்களை உணர்த்தும் நூல்களாம். குற்றமறக்கற்றலாவது: ஒன் றை ஒன்றாக அறியும் விபரீதமும் இதுவோ அதுவோம் என்று. சந்தேகப்படுதலும் இல்லாமல் உண்மைப்பொருள்களை, அவைகளைத் தெரிந்த பெரியோர் பலருடனும் பழகியறிதலாம். நூல் வழி நட த்தலாவது : இல்வாழ்க்கையுடையார் சற்கருமங்களைச் செய்து தானங்கொடுத்துத் தாம் அநுபவித்தலும், துறவறமுடையார் மெய்யு ணர்ந்து அவாவறுத்தலுமாம்.)

2. கற்கப்படும் நூல்களுக்குக் கருவியாவனவும், அவை, கள் அவசியம் வேண்டுமென்பதும்.
(2) அறியாதவராலே எண்ணென்று சொல்லப்படுங் கணி த நூல்களும், எழுத்தென்று சொல்லப்படும் இலக்கண நூல்களுமா கிய இரண்டையும் வாழ்தற்குரிய மனிதருக்குக் கண்களாகுமென்று அறிந்தோர் சொல்லுவர்.

3. பொருள் நூல்களையுங் கருவிநூல்களையுங் கற்றோரது உயர் வும், அவைகளைக் கல்லாதவரது இழிவும்.
(3) மேற்கூறிய அவ்விரண்டு நூல்களையும் படித்தவரே கண்களுடையவரென்று உயர்த்திக்கொல்லப்படுவார். அந்த பால்களைப்படி யாதவர் முகத்தினிடத்துள்ள இரண்டு கண்களையும் இரண்டு புண்களென்று சொல்லப்படுபவராவர். எனவே, படித்தவர் முகத்திலுள்ள கண்களே கண்களென்பது காண்க.

4. கற்றாரது உயர்வு.
(4) கற்றறிந்தவர் தொழிலானது எல்லாருமகிழும்படி அவரைச் சேர்ந்து நல்ல காரியங்களைப் பேசித் தாம் அவரை விட்டு நீங்கும் போது அவரெல்லாரும் இனி, இவரை நாமெப்போது காண் போமென்று நினைக்கத் தாம் பிரிந்து செல்லுதலாகிய அத்தன்மையு டையதாம்.

5. கற்றாரது உயர்வும், கல்லாதவரது ' இழிவும்.
(5) செல்வவான்களுக்கு முன்னே தரித்திரர் பெருமை யிழந்து நிற்பது போல நூல் கற்பிக்கும் குருவின் முன்னே மானமிழ ந்து வணக்கமாக நின்றும் கல்வியைப் படித்தவர் உயர்ந்தவராவர். அவ்விதம் வணக்கமாக நின்று படிப்பதற்கு நாணமுற்றுக் கல்லா தவர் எந்த நாளும் இழிந்தவரே யாவர். எனவே, மெய்ப்பொரு ளாகிய கல்வியை விரும்புவோர் பொய்ப்பொருளாகிய மானத் தைக் கருதமாட்டாரென்பதாயிற்று.

6. கல்வியது சிறப்பு.
(6) மணலினிடத்தே நீரானது தோண்டிய அளவினதாக ஊறும். அதுபோலவே, மனிதருக்கு அறிவானது கற்ற அளவின தாக வளரும். ஆதலால் பேரறிவை விரும்புவோர் பெரியநூல் பல வற்றையும் படிக்கவேண்டும்.
(7) படித்தவனுக்குத் தன்னாடும் தன்னூரும் அல்லாமல் வேறெந்த நாடும் எந்த ஊரும் பொருள் கொடுத்து உபசரித்தல் செய்வனவாம். அப்படியிருக்க ஒருவன் இறந்து போகும் வரையும் படியாதிருக்கும் விதம் என்ன நினைத் தோ? தெரியவில்லை.
(8) ஒரு பிறப்பினிடத்துக் கற்றவித்தை யானது ஒருவனுக்கு வினைகள் போல அவனுயிரிடத்தே தங்கி ஏழு பிரபுக்களிலும் அவ்வுயிர் சென்ற இடத்தே கூடச் சென்று நல்வழி யிலே சேர்த்தலையுடையதாகும்.
(9) கற்கும்போது தாம் சொற் பொருளின் சுவையை யநுபவித்தலும் புகழும் பொருளும் மரியா தையும் பிறவுமாகிய இன்பத்தை அடைதற்கேதுவாகிய கல்விக்கு உலகத்தார் இன்பமடைவர், அதனைக்கண்டு, கற்றவர் மேலுமேலுங் கல்வியே கற்க ஆசைப்படுவர்; இதனாலோருவர் கற்றவரிருந்தால் உலகத்தாரெல்லாருக்கு மகிழ்ச்சியைச் செய்வரென்பதாயிற்று.
(10) ஒருவனுக்குப் பங்காளிகள், திருடர், வலியவர், அரசராகிய வர்கள் அபகரிக்கப்படுகிறது. தம்மை வேண்டுவோருக்குக் கொடுத் த இடத்தே குறைவதுமாகிய கேடில்லாத சிறந்த செல்வமானது கல்வியாம். அது, நீங்கலாகிய மணி, பொன், நெல் முதலான செல் வம் மேற்கூறிய கேடுக்கடையப்படுவதா தலாற் சிறந்த செல்வமர காதாம்.
---------

41- ஆம் அதிகாரம். கல்லாமை.

அஃதாவது:- கற்றலைச் செய்யாமையின் இழிவு.

1. கல்லாதவர் சபையிலே பேசுதற்குரியர் ஆகார்.
(1) அறியவேண்டுமவைகளை யெல்லாம் அறிவதற்கு ஏது வாகிய நூல்களைக் கல்லாதவனொருவன் சபையி னிடத்தே பேசுதல் சூதுக்குரிய காய்களைக் கணக்கின்படி யெடுத்து வைக்கும் வீடில் லாமல் சூதாடுகருவியையுருட்டி விளையாடுதல் போலும்.
(2) அது வன்றி, இரண்டு தனங்களுஞ் சிறிதும் இல்லாதவளொருத்தி பெண் தன்மையை விரும்புதல் போலுமாம். இவ்விதம் ஆடுதலும் விரும் புதலும் பயன்படாமை போலக் கல்லாதவன் சபையினிடத்துப் பே சுதல் பயன்படமாட்டாது.
(3) படியாதவரும் தம்முடைய மூடத் தனத்தைத் தாமேயறிந்து கொண்டு கற்றோர் சபையினிடத்து யா. தொன்றையும் பேசாதிருக்கப் பெறுவாரானால் மிகவும் நல்லவராவர். எனவே, பேசினாற் சொற் சோர்வினாலே அவமான மடைவரென்ப தாயிற்று.

2. கல்லாதவரது இயற்கையறிவின் குற்றம்.
(4) கல்லாதவனது அறிவுடைமையானது ஒவ்வோரிட த்து நன்றாயிருப்பினும், அது நீர் மேலெழுத்துப்போல் அழியுமாத லால் நிலை பெற்ற நூலறிவினையுடையோர் அதனை அறிவுடைமையாக மதிக்கமாட்டார்.
(5) இஃதன்றியும், கல்லாத ஒருவன் கற்ற வனைப்போலத், தன்னை மதிக்கும் மதிப்பானது கற்றவன் கண்டு போ சும்போது அழிந்துபோகும்.

3. கல்லாதவர் பயன் படாமை.
(6) கல்லாதவர் கற்றவரைப் போலக் கண் காண நடந்து திரிதலால் உயிரோடிருப்பவரென்று சொல்லப்படும் அளவினையு டையராத லன்றி, தமக்கும் பிறர்க்கும் பயன் படாமையால் விளையாத உவர் நிலத்துக்குச் சமானமாவர்.

4. கல்லாதவர் வடிவழகினாலே பயனில்லாமை.
(7) கூர்மையாகிய பொருள்களை எளிதிலே அறியுங் குணப் பட்டு, பல நூல்களிலுஞ் சென்ற அறிவு இல்லாதவனுடைய பெரு க்கமும், அழகும் சுண்ணாம்பினாலே அழகாக அலங்கரிக்கப்பட்ட பாவையினது பெருக்கமும், அழகும் போலப் பயன்படாவாம்.

5. கல்லாதவரது செல்வத்தின் குற்றம்.
(8) கல்லாதவரிடத்து உண்டாகிய செல்வமானது கற்றவரிடந்து உண்டாகிய தரித்திரத்தைப் பார்க்கினும், அதிக துன்பத்தைச் செய்வதாம். எவ்விதமெனில், கற்றவரிடத்திருக்குஞ் செல் வம் நல்வழியிலே செலுத்தப்பட்டு நன்மையைத் தருதல் போலக் கல்லாதவரிடத்திருக்குஞ் செல்வம் நன்மையைத் தராமல் தீயவழி யிலே செலுத்தப்பட்டுத் தீமையைத் தருதலாலென்க. கற்றவரி டத்திருக்குந் தரித்திரம் இவ்வாறொன்றுஞ் செய்யாதென்பதுங் காண்க.

6. கல்லாதவர் சாதியுயர்ச்சியினாற் பயனில்லாமை.
(9) தாழ்ந்த சாதியிலே பிறந்திருந்தாலும் அவர் படித்திருப் பாரானால் அவரது பெருமை அளவினதாகிய பெருமையை உயர்ந்த சாதியிலே பிறந்திருந்தாலும், படியாதவர் இல்லாதவராவர்; இத னால் உடம்போடழியுஞ் சாதியுயர்ச்சி கல்வி யறிவில்லாத இடத்துப் பயனில்லை யென்பது காண்க.

7. கல்லாதவர் மனிதப் பிறப்பினாலே பயன் படாமை.
(10) மிருகங்களைப் பார்க்கினும் மனிதர் எவ்வளவு உயர்ச்சி யுடையவரோ? அது போலக் கல்லாதவரைப் பார்க்கினும் அறம், பொருள், இன்பம், வீட்டை உணர்த்தி விளங்கிய நூலைக்கற்றவர் அவ்வளவு உயர்ச்சியை யுடையராம். எனவே, மிருகங்களுங் கல் லா தவருஞ் சமமாதல் காண்க.
----------

42 - ஆம் அதிகாரம். கேள்வி.

அஃதவாது:- கேட்கத் தகுநூலின் பொருளைக் கற்றறிந்தவர் சொல் லக் கேட்குதல்.

1. கேள்வியின் சிறப்பு.
(1) ஒருவனுக்கு, சிறப்புடைய செல்வமாவது கா தாற் கேட்கப் படுஞ் செல்வமாம்; அந்தச் செல்வம் பொருளால் வரும் எல் லாச் செல்வங்களினும் முதன்மையுடையதாம். பொருளால் வரும் செல்வங்கள் நிலை பெறாமற் போதலாலும், துன்பந் தருதலாலும் கேள்வியால் வருஞ் செல்வம் முதன்மை யுடையதாயிற்று. (செல் வமென்பது: ஆளப்படும் எல்லாப் பதார்த்தங்களுக்கும் பொதுப் பெயர்.)
(2) காதுக்கு உணவாகிய கேள்வி யில்லாத காலத்தே வயிற்றுக்குஞ் சிறிது உணவு கொடுக்கப்படும். இதனால், காதாற் கேட்கிறபோது மிகுந்த சுவையையும் பின்னே பயனையுந் தருவதா கிய கேள்வி யுள்ள பொழுது வயிற்றுணவு வேண்டிப் பசியானது வருத்தப்படுத்தா தென்பதாயிற்று.

2. கேள்வியுடையவரது சிறப்பு.
(3) செவியுணவாகிய கேள்வியை உடையவர் பூமியிலிருக்கினும் துன்பத்தை அறிதல் இல்லாமையால், அமுதம் உண்பாராகிய தேவருக்குச் சமானமாவர்.

3. கேள்வியினாலே திடப்பட்டவருக்கு வரும் நன்மை.
(4) உண்மை நூல்களைக் கல்லாதவனானாலும் அந்நூல்கள் ளின் பொருள்களைக் கற்றார் சொல்லக் கேட்கவேண்டும். அக்கேள்வியானது ஒருவனுக்கு வறுமையாலாவது, அறிவில்லாமையாலா வது தளர்ச்சி வந்த இடத்து, அத்தளர்ச்சியை நீக்கும் ஆதாரமாகிய துணையாகும்.
(5) ஆபத்து வந்த இடத்து நல்லொழுக்கம் உடை யார் வாயிற் பிறக்கின்ற சொல்லானது வழுக்குதலுடைய சேற்று நிலத்திலே ஊன்று கோல்போல உதவி செய்வதாகும்.
(6) உறு திப்பொருள்களிலே எவ்வளவு சிறியதாயினும் கேட்கவேண்டும்; அக்கேள்வி அவ்வளவு சிறியதானாலும் நிறைந்த பெருமையைக் கொடுக்கும்.
(7) பொருள்களை நுட்பமாக ஆராய்ந்தறிந்து நிறைந்த கேள்வியை யுடையவர் தமோகுணத்தால் மயங்கினாராயினும், தமக் குப்பேதைமையை உண்டாக்குஞ் சொற்களைச் சொல்லமாட்டார். எனவே, கேள்வி ஞானத்தினாலே திடப்பட்டவர் ஒருகால் மயங்கினா லுந் தவறமாட்டா ரென்பதாயிற்று.

4. கேள்வி யில்லாத இடத்து உண்டாகும் குற்றம்.
(8) கேள்வியினாலே தொலைக்கப்படாத காதுகள் தமக்கு ரிய ஓசையைக் கேட்குமானாலும் செவிடாந் தன்மையினவேயாம். எனவே, நற்பொருள்களைக் கேட்குங் காதுகளே பயனுடையன வாமாறு காண்க.
(9) நுட்பமாகிய கேள்வியை யுடைய வரல்லா தவர் வணக்கத்தைக் காட்டுகிற சொல்லையுடையவராக மாட்டார். எனவே, கேள்வியறிவில்லாதவர் தம்மைத் தாமே புகழ்ந்து பேசுவ ரென்பதாயிற்று.
(10) காதுகளா லறியப்படுஞ் சொற்சுவை பொருட் சுவைகளை அறியாதவராகிய வாயினாலுண்ணப்படும் அறு சுவை அறியும் மனிதர்கள் இறந்தாலும் இருந்தாலும் உலகத்துக்கு யாதொரு பயனுமில்லை,
-----------

43-ஆம் அதிகாரம். அறிவுடைமை.

அஃதாவது:- கல்வி கேள்விகளினாலாகிய அறிவோடு உண்மையறிவுடையனாதல்.

1 அறிவினது சிறப்பு.
(1) அரசருக்கு அறிவாவது, கேடுவராமற் காக்கின்ற படையாகும்; அதுவுமல்லாமல் பகைவராலும் அழிக்கக்கூடாத உட் காவலிடமுமாகும்.

2. அறிவுடைமையின், இலக்கணம்.
(2) மனததைப் போன விஷயத்திலே போகவிடாமல் அவ் விஷயங்களின் நன்மை தீமைகளை ஆராய்து தியதிலிருந்து நீக்கி நல்ல தினிடத்துச் செல்ல விடுவது அறிவு
(3) இதுவன்றி, முக்குணங்களும் மாறி மாறி வருவதால் உயர்ந்த பொருளை இழிந் தார்வாயிலும் இழிந்த பொருளை உயர்ந்தார்வாயிலும் உறுதிப் பொரு ளைப் பகைவர்வாயிலும் கெடு பொருளைச் சிநேகர்வாயிலும் ஒவ்வொரு சமயத்திற் கேட்டாலும் அவரவர்களை நோக்காது, அவர் கூறிய மெய்யாகிய அப்பொருளின் பிரயோசனத்தைக் காணவல்லதும் அறிவாம்.
(4) இம்மட்டோ ? தன்னாலே சொல்லப்படுஞ் சொற் கள் அரிய பொருளினவாயிருந்தாலும் கேட்பவர்க்கு எளிய பொரு ளினவாம்படி மனங்கொள்ள கொள்ளச் சொல்லித் தான் பிறர்வா யிற் கேட்கப்படுஞ் சொற்களிற் காணுதற்கரிய நுட்பப் பொருளையும் காணவல்லதும் அவ்வறிவேயாம்,
(5) அவ்வறிவு ஒருவனுக்கு உடைமையாயிருந்தால் உயர்ந்தோரை நட்பாக்குவதாகும். ஆதலால், அவ்வுயர்ந்தோரிடத்தில் முன்னே மகிழ்ச்சியடைதலும் அத ன்பின் வெறுப்படைதலும் இல்லாமல் ஒரே நிலைமையாகப் பழகு வதே அறிவினலக்கணமாகும்.
(6) உலகமா எது எவ்விதத்தால் நடப்பதாயிருக்கின்றதோ? அவ்விதத்தால் உலகத்துடன் பொருந் தித் தானும் நடப்பதே அரசனுக்கு அறிவாகும். அவ்விதம் நடவாமல் உலகம் என்னாலே நியமிக்கப்பட்டது என்னை நியமிப்பாரில்லை யெ ன்று நினைத்து, அரசன் தானினைத்தபடி நடந்தால் பழியும், பாவ மும் உண்டாகும். ஆதலால் அப்படி நடத்தல் அறிவல்லவென்ப தாயிற்று.

3. அறிவுடையவரது இலக்கணம்.
(7) பின்னே வரத்தக்கவைகளை முன்னே யெண்ணி அறி யவல்லவர் அறிவுடையவராவர். அப்படி அறியமாட்டாதவர் அறிவில்லாதவராவர்.
(8) பயப்படவேண்டியதற்குப் பயப்படாதிரு த்தல் அறிவில்லாமையாகும். பயப்படுதல் அறிவுடையாரது செய் கையாகும்.
அட் திருக்குறள் வசனம்.

4. அறிவுடையவருக்குத் துன்பம் இல்லை.
(9) பின்னே வரத்தக்க தீமையை முன்னே அறிந்து, அத னை வரவொட்டாமல் தடுக்கவல்ல விவேகமுள்ளவருக்கு நடுங்கும் படிவருவதாகிய ஒரு துன்பமும் இல்லை.

5. அறிவுடையவரது உடைமையும், மற்றவரது இன்மையும்.
(10) அறிவுடையவர் வேறொன்றும் இல்லாதிருந்தாலும் எல்லாச் செல்வமும் உடையவராவர். எப்படியென்றால், அறிவுடை யார் எல்லாஞ் சம்பாதித்துக் கொள்வாரென்றபடி. எல்லாச் செல் வமும் உடையவராயிருந்தாலும் அறிவில்லாதவரது அச்செல்வங் கள் காக்கப்படாமையால் அழிதலும், அழிந்த இடத்துச் சேர்க்கப் படுதல் கூடாமையும் ஆதலால் ஒன்றும் இல்லாதவராவர்.
-----------

44 -ஆம் அதிகாரம். குற்றங்கடிதல்.

அஃதாவது:- காமம், குரோதம், உலோபம், மானம், உவகை, மதம் என்னப்பட்ட ஆறு குற்றங்களையும் அரசன் தன்னிடத்தே தோன்றாமல் நீக் குதல்.

1. குற்றங்களாவன.
(1) கருவமும். கோபமும், காமமும் ஆகிய குற்றங்கள் இல்லாத அரசரது செல்வமானது நல்வழிப்படுதலும், நிலை நிற்பதும் ஆதலால் மதிக்கப்படுங் குணமுடையதாகும்.
(2) கொடுக்கவே ண்டுமிடத்துப் பொருள் கொடாதிருத்தலும் அந்தணர் உயர்ந் தோர், அருந்தவர், தன் முன்னோர், தந்தை தாய் முதலியோரை வணங்கும் நன்மையினின்று நீங்கியமானமும், அளவிறந்த மகிழ்ச் சியும் அரசனுக்குக் குற்றங்களாகும். (அளவிறந்த மகிழ்ச்சியாவது : பிறரிடத்து வரம்பு கடந்து செய்யுந் தாட்சணியம்.)

2. பொதுவகையினாலே குற்றத்தை நீக்குதல்.
(3) பழிக்குப் பயப்படுவோர் தினையளவு குற்றம் தம்மி டத்து வந்தாலும் பனையளவு பெரிதாகக் கருதுவர். அப்படிக் கருதினால் பின்னுங் குற்றஞ் செய்வதற்கு உடன்படாரென்பதாம்.
(4) கேட்டைத்தரும் பகை, மேற்கூறிய குற்றங்களேயாதலால் அக் குற்றங்கள் தன்னிடத்து வராதிருத்தலைப் பொருளாகக் கொண்டு, வருதலைத் தடுக்க வேண்டும்.
(5) குற்றம் வருவதன் முன்னே அதனை வராமல் தடுக்காத அரசனது வாழ்வானது தீயின் முன்னே நின்ற வைக்கோலின் கூட்டம் போல அழிந்துவிடும்; இவ்வுபமானத் தினாலே சிறிய குற்றமும் பெரிய செல்வத்தைக் கெடுத்துவிடுமென் பதாயிற்று.
(6) தன்னுடைய குற்றத்தை முன்னே கண்டுபிடித்து நீக்கிப் பிறருடைய குற்றத்தைப் பின்னே காணவல்லவனானால் அரச னுக்கு வரக்கடவதாகிய குற்றம் எது? இருக்கிறது ஒன்றுமில்லை.

3, உலோபத்தின் தீமை.
(7) செய்யப்படுவனவாகிய அறம் பொருள் இன்பங்களைப் பொருளைச் செலவிட்டு விருத்தி செய்து கொள்ளாமல் அப்பொருளி னிடத்து உலோபஞ் செய்தவனது செல்வமானது பின்னே நீடித் திருக்கும் பகுப்பில்லாமல் வீணாகக்கெட்டுவிடும்.
(8) பொருளைச் செலவிடும் இடத்துச் செலவிடாது பற்றுகின்ற மனமாகிய உலோ பத்தன்மையானது எல்லாக் குற்றத் தன்மைகளுள்ளுஞ் சேர்த்து நினைக்கப் படுவதொன்றல்ல. ஏனென்றால், உலோபம் போல வேறு. குற்றங்கள் குணங்களைக் கீழ்ப்படுத்த மாட்டாயையாலென்க.

4. மதமானங்களின் தீமை. (மதம் - கர்வம்.)
(9) தான் மிகவுமுயர்ந்த காலத்திலும் தன்னைக்கருவத்தினாலே நன்கு மதியாதிருக்க வேண்டும். அதுவன்றி, நன்மையைத் தனக் குத் தராத தொழில்களை மனத்தால் விரும்பாதிருக்கவும் வேண்டும்.

5. முழுதும் விடலாகாத காமத்தை யநுபவிக்கும் விதம்.
(10) தன்னாலே விரும்பப்பட்ட காமப்பொருள்களையும், அந்தப்பொருள்களின் விருப்பத்தையும் பகைவர் அறியாமல் அது பவிக்க வல்லவனானால், அப்பகைவர் தன்னை வருத்தப்படுத்த நினைப் பதற்குக் காரணமில்லை. எனவே, பொருட்செருக்கால் காமம், பகை. வரறிய அநுபவிப்பானாகில் அதுவே, காரணமாகத் தன்னைத் துன்பு றுத்துவ ரென்பதும், முழுவதும் விடக்கூ டியதன்றாகலால் சிறுபான் மை அநுபவிக்குங்கால் பிறரறியாதிருக்கவேண்டு மென்பதும் தெரிகது கொள்க.
--------

45- ஆம் அதிகாரம். பெரியாரைத் துவணக்கோடல்.

அஃதாவது:- மேற்கூறிய அறுவகைக் குற்றங்களையும் நீக்கிய அரசன் தன்னைத் தீயவழியிலே செல்லாமல் விலக்கி நல்ல வழியிலே செலுத்தும் பேரறிவுடையவரைத் தனக்குத் துணையாகக் கொள்ளுதல்.

1. பெரியோரது இலக்கணமும், அவரைத் துணையாகக்கொ ள்ளவேண்டுமென்பதும், கொள்ளும் விதமும்.
(1) தருமத்தின் நன்மையறிந்து ஞானத்தாலும் ஒழுக்கத் தாலும் வயதாலும் தன்னிலுயர்ந்த அறிவுடையோரது சிநேகத் தை அதனருமையைத் தெரிந்து கொள்ளும் திறத்தை யுணர்ந்து, -அரசன் கொள்ளவேண்டும். இங்கே அறிவுடையோ ரென்றது, நீதியையும் உலகியலையும் அறிதலுடையவரை.
(2) இதுவன்றி, தெய்வத்தாலாவது மனிதராலாவது தனக்கு வரும் துன்பங்களை நீக் கும் விதமுணர்ந்து நீக்கிப் பின்னும் அப்படிப்பட்ட துன்பங்கள் வராமல் முன்னே அறிந்து தடுக்கவல்ல தன்மையுடையவரை அவர் மகிழத்தக்கவைகளைச் செய்து துணையாகவுங் கொள்ள வேண்டும். (தெய்வத்தால் வருந்துன்பங்களாவன: மழையில்லாமையாலும், அதிக மழையாலும், காற்று, தீ, நோய்களாலும் வரும் துன்பங் கள்; அவை, கடவுளையும் தக்கோரையும் நோக்கிச் செய்யப்படுஞ் சார் திகளால் நீக்கப்படும். மனிதரால் வருந்துன்பங்களாவன: பனகவர், திருடர், சுற்றத்தார் முதலியவரால் வருந்தீமைகள்; அவை, சாம் பேத தான தண்டமாகிய நால்வகை உபாயங்களில் ஏற்றதொன்றால் நீக்கப்படும். முன்னறிந்து தடுத்தலாவது : தெய்வத்தால் வரும்வை களை மழை வருவதை முன்னே அறிவிக்கும் மின்னல் போலக் காட் டும் உற்பாதங்களாலும் மனிதரால் வருமவைகளை அவருடைய குணம், தொழில் முதலியவற்றாலும் அறிந்து மேற்கூறிய சாந்தி யாலும் உபாயத்தாலும் தடுத்தலாம். உற்பாதமாவது: பின்வருவ தைமுன்னே காட்டும் அடையாளம்.)

2. பெரியாரைத் துணைக் கொள்ளுதலின் சிறப்பு.
(3) பேரறிவுடையவர்களை அவரை நன்கு மதித்தல் முத விய மகிழ்ச்சியைச் செய்து தமக்குச் சிறந்தவராகக் கைக்கொள்ளுதல் அரசருக்கு அரிய பயன்கள் பலவினும் அரியது.
(4) பொருள் சேனை முதலியவற்றால் நீக்கக்கூடாத தெய்வத்தால் வருந்துன்பம் முதலானவைகளையும் நீக்குதற்குரியவ ராதலால் அறிவு முதலான வைகளாலே தம்மினும் பெரியவர் தமக்குச் சிறந்தவராகத் தாம் அவர் சொல் வழியிலே நின்று காரியங்களைச் செய்தல் வலியுடைமை பலவினும் முதன்மையாகும்.
(5) ஆராய்ச்சியுடைய மந்திரிகளைக் கண்ணாகக்கொண்டு இராச்சியபாரம் நடத்தலால் அப்படிப்பட்ட மந்திரிகளை ஆராய்ந்து அரசர் தமக்குத் துணையாகக் கொள்ளல் வேண்டும். ஏனென்றால், அரசர் ஆராய வல்லவரானாலும், அத னோடு அளவில்லாத தொழில்களும் இருத்தலால் ஆராய்தல் ஒன் றையே உடைய மந்திரிகளைக் கொண்டே அரசாளவேண்டு மென் பதாம்.

3. பெரியாரைத் துணைக்கொள்ளுதலின் பயன்
(6) அறிவொழுக்கங்களினாலே தகுதியுடையவர் கூட்டத் தினையுடையவனாகி, தானும் தரும் நிதிகளின் வழிதவறாமல் நட க்கவல்ல அரசனைப் பகைவர் எவ்வகை வலிமையாலுஞ் செய்யக் கிடந்த ஒரு துன்பமும் இல்லையாம்.
(7) நீதியல்லாத செய்கை களைக் கண்டால் கண்டித்துப் புத்தி சொல்லும் கணையார் தன்மை யுடையவரை இவர் நமக்குச் சிறந்தவரென்று கைக்கொள்ளும் அர சரை, கெடுக்கும் பெருமையுடைய பகைவர் உலகத்தில் எவரிருக்கின்றார்? ஒருவரு மில்லை.

4. பெரியாரைத் துணைக்கொள்ளாத இடத்து உண்டாகும் குற்றம்.
(8) மேற்கூறிய வாறு கண்டித்துப் புத்தி கூறும் மந்திரி களைத் தனக்குத் துணையாகக் கொள்ளாத காவலற்ற அரசனான வன் பகையாகிக் கெடுப்பவரில்லாதிருந்தாலும் தானே கெடுவன். (தானே கெடுதலாவது: பாகனில்லாத யானைபோலத் தான் போன வழியிலே போய்க் கெடுத்தலாம்.)
(9) முதற் பொருளில்லாத வியா பாரிகளுக்கு அம்முதலால் வரும் இலாபமில்லை; அதுபோலத் தம் மைத் தாங்குவதாகிய துணையில்லாத அரசருக்கு அத்துணையால்
திருக்குறள் வசனம். வரும் நிலைமை யில்லையாம்.
(10) பெரியவரோடு சிநேகங்கொள் ளாமல் அவரை விட்டுவிடுதல் பலரோடு விரோதங்கொள்ளுதலைப் பார்க்கினும் பத்துப்பங்கதிகமாக அடுத்த தீமையுடையதே யாகும். ஏனென்றால், பல பேர் செய்யுந் தீமைகளுக்குத் தப்பிப் பிழைத்தல் கூடினுங் கூடும். பெரியோர் சிநேகத்தைக் கைவிட் டால் ஒருவிதத்திலும் பிழைத்தல் கூடாமையாலென்க.
----------

46 - ஆம் அதிகாரம். சிற்றினம் சேராமை.

அஃதாவது:- சிறிய இனத்தைப் பொருந்தாமை. சிறிய இனமாவது, நல்லதிலே நன்மையுந் தீயதிலே தீமையும் இல்லை யென்போரும், விடரும் தூர்த்தரும், நடரும் முதலாயின கூட்டம். (விடர் - மிக்க காமமுடையவர்.)

1. சிற்றினம் பெரியோர்க்கு ஆகாது.
(1) பெரியாரியல்பானது சிறிய இனத்தினியல்பைக் கண்டால் அறிவு வேறுபடும் விதமும், அதனால் வருங்கேடும் நோக்கலால் பயப்படும். சிறியோரியலயானது அவவியல்புடையா ரைக் கண்ட பொழுதே அவ்வியல்போடு ஒற்றுமைப் பட்டு நிற்ற லால் அதனைத் தனக்கு உறவாகத் துணிந்து செல்லும்.

2. சிற்றினம் பெரியோர்க்கு ஆகாதென்பதற்குக் காரணம்.
(2) ஆகாயத்திலே தன் தன்மை யாயிருந்த நீரானது தான் சேர்ந்த நிலத்தின் றன்மையினாலே தன் தன்மை வேறுபட்டு, அந் நிலத்தினது நிறம், சுவை முதலிய குணங்களையுடையதாகும்; அது போலத் தனித்திருக்கையிலே யிருந்த அறிவானது தாம் சேர்ந்த இனத்து இயல்பினாலே தன் தன்மை வேறுபட்டு, அவ்வினத்தினது காட்சி, தொழில் முதலிய தன்மை யுடையதாகும்.

3. இயற்கையாகிய பொது அறிவு மனத்தால் ஆமென்பதும், செயற்கையாகிய சிறப்பறிவுபற்றி, இவன் இன்னானென்றறிதல் இன த்தால் ஆமென்பதும்.
(3) மனிதர்க்குப் பொது அறிவானது தம் மனத்தினாலே யுண்டாகும். இவன் இன்னானென்று உலகத்தாராலே சொல்லப் படுகிற சொல்லானது தாம் சேர்ந்த இனத்தினாலே உண்டாகும். எனவே, நல்லவனைச் சேர்ந்தால் நல்லவனென்ற சொல்லும் தீயவ. னைச் சேர்ந்தால் தீயவனென்ற சொல்லும் உண்டா மென்பதாயிற்று (பொது அறிவாவது - ஐம்புல அறிவு.)

4. விசேட அறிவு உண்டாவதற்குக் காரணம் தான் சேர்ந்த இனம்.
(4) மேற்கூறிய சிறப்பறிவானது ஒருவனுக்கு மனத்தி னிடத்து உள்ளதாவது போலத் தன்னைப் புலப்படுத்தி, அவன் சேர்ந்த இனத்தி னிடத்தே யுள்ளதாம். இதனால், ஒருவனுக்கு விசேட அறிவு விளங்குதற்கு மூலம் அவன் சேர்ந்த இனமென்பது கண்டு கொள்க' (புலப்படுத்தல் - விளங்கச் செய்தல்.)

5. தான் சேர்ந்த இனத்தினாலே மனமும் செயலும் தூயனாவன்.
(5) அச் சிறப்பறிவு வெளிப்படுதற்கிடமாகிய மனம் பரி சுத்த மாதற்றன்மையும், செய்தொழில் பரிசுத்தமாதற் றன்மையுமா கிய இரண்டும் தான் சேர்ந்த பரிசுத்தமுடைா இனம் பற்றுக் கோடாக ஒருவனுக்கு உண்டாகும். (மனம் பரிசுத்த மாதல்: சிறப் பறிவு வெளிப்படும்படி இயற்கையாகிய அறியாமை நீங்குதல். செய்தொழில் பரிசுத்தமாதல்: மனம் வாக்குக் காயங்கள் நல்ல தொ ழிலைச் செய்தல். பற்றுக்கோடு - ஆதாரம்.)

6. மனநலம் முன்னை நல்வினையினாலே இயல்பாகவுடை யார்க்கும் இன நலம் வேண்டும். மனநலம் - விசேட அறிவு.
(6) மனம் பரிசுத்தமுடையவருக்கு மக்கட்பேறு காரணத் தின் குணம் காரியத்திலும் இருப்பது போல நன்றாக விளங்கும். பரிசுத்தமான இனத்தையுடையவர்க்கு நன்றாகாத செயல் ஒன்று மில்லை. எனவே, எல்லாச் செயலும் நல்லதாகு மென்பதாயிற்று. (7) இவ்விதம் பரிசுத்தமான மனத்தினது நன்மையானது நிலை பெற்ற உயிர்களுக்குச் செல்வத்தைக் கொடுக்கும். இனத்தினது நன்மை யானது அச்செல்வத்தோடு எல்லாப் புகழையுங் கொடுக்கும்.

7. மன நன்மை உடையவரானாலும் அரசருக்கு இன கன்மை உறுதியுடையது.
(8) அம்மனத்தினது நன்மையை முன்னை நல்வினையினாலே தாமேயுடையவராயிருந்தாலும் உயர்ந்தோர்க்கு இன நன்மையா னது அம்மன நன்மைக்கு வலியாதலை யுடைய தாம். ஏனெனில், அந் நல்வினையுள்ள இடத்தும் மனநலத்தை வளர்த்து வருதலா லென்க. (வலியாதல் - வலிமையடையப் பண்ணுதல்.)

8. சிலவேளைகளில் தமோ குணத்தினாலே மனநலம் வேறு பட்டாலும் நல்லினம் அவ்வேறுபாட்டைத் திருத்தி மறுமை இன் பத்தை உண்டாக்கும்.
(9) ஒருவனுக்கு மனநலத்தினது நன்மையால் வரும் பிறப்பி னது இன்பம் உண்டாகும். அந்தச் சிறப்புத்தானும் இன நன்மையா லுறுதி யடைதலை யுடையது. சிற்றினஞ் சேராமையாகிய சிறப்பு நல்லினஞ்சேர்தலாகிய எதிர்மறை முகத்தால் ஐந்து முதல் ஒன்பது திருக்குறள் வசனத்தாற் சொல்லப்பட்டது கண்டு கொள்க.

10. நல்லினத்தி னுடன்பாட்டினால் நன்மையும், தீயினத் தினுடன் பாட்டினால் தீமையும் உண்டாகும்.
(10) ஒருவனுக்கு நல்லினத்தைப் பார்க்கினும் உயர்ந்த துணையும் தீயினத்தைப் பார்க்கினும் உயர்ந்த துன்பந்தரும் பகையும் இல்லையாம். நல்லினம் அறியாமையை நீக்கிக் காத்தலால் துணையும், தீயினம் அறிவை நீக்கிக் கெடுத்தலாற் பகையும் ஆதல் காண்க.
---------

47-ஆம் அதிகாரம். தெரிந்து செயல்வகை.

அஃதாவது:- அரசன் தான் செய்யும் தொழில்களை ஆராய்ந்து செய்யும் திறம்.

1. செய்யத்தகுந் தொழிலும், அத்தொழில் செய்யும் விதமும்.
(1) தொழில் செய்யுமிடத்து, அப்போது அதனாலழிவதை யும் அழிந்தால் பின்னே ஆவதையும் விருத்தியாய் நின்று பிற்காலத்துத் தரும் இலாபத்தையும் ஆராய்ந்து, பொருந்துமானால் அத்தொழிலைச் செய்யவேண்டும். (பொருந்துதலாவது: தொழில் செய்யுமிடத்து, அழியுமளவில் ஆகுமளவு மிகுந்து பிற்காலத்தும் வளர்ந்துவருதல்.) எனவே, பிற்காலத்து, வளர்ந்துவரும் இலா பம் கிடைக்குமானால், தொழில் செய்யும்போது ஆவதும் அழிவ தும் சமமாயிருந்தாலும் அத்தொழிலை விடலாகாதென்பதாயிற்று.
(2) தம்மாலே தெரிந்துகொள்ளப்பட்ட இனத்துடனே செய்யத் தகுந் தொழில்களை ஆராய்ந்து பின்னே தாமாகவும் எண்ணிச் செய்து முடிக்கவல்ல அரசருக்குக் கிடைத்தற்கரிய பொருள் யாதொன்றும் இல்லையாம். (தொழிலாவது: போர்க்குச் செல்லுதல் முதல் வெல்லும் தல் வரையுள்ளதென்க.)

2. விடத்தகுந் தொழிலும், விடாத இடத்து உண்டாகுங் குற்றமும்.
(3) பின் பெறக்கடவதாகிய இலாபத்தை யுத்தேசித்து முன்பெற்றுள்ள முதலையும் இழத்தற்கேதுவாகிய தொழிலை விவேக முள்ளவர் மேற்கொள்ளமாட்டார். (இலாபமேயன்றி, முதலிழத் தலாவது: வலியும் காலமும் இடமும் அறியாமல் பிறர்தேசத் தைப்பிடிக்கப்போய்க் தன் தேசத்தையும் இழந்தல்.)
(4) அறிவும் மானமும் இல்லா தவ ரென்று தம்மை உலகத்தாரிகழ்ந்து பேசும் இகழ்ச்சியென்னுங் குற்றம் உண்டாதலுக்குப் பயப்படுவோர், இன த்தோடும் தனித்தும் ஆராய்ந்து துணியப்படாத தொழிலைச் செய் யத் தொடங்கார். எனவே, துணிந்து தெளிவுள்ள இடத்துத் தொட ங்குக என்பதாயிற்று.
(5) மேலே நடக்கும் விதங்களை யெல்லாம் முழுவதும் ஆலோசியாமல் அரசன் பகைவர் மேலே செல்லுதலா னது அப்பகைவரை வளருநிலத்திலே விருத்தியாகச் செய்வதொரு வழியாகும்.

3. செய்யத்தகுந் தொழில்களைச் செய்து, விடத்தகுந் தொழி ல்களை விட்டு விடல்.
(6) அரசன் தனது தொழில்களிலே செய்யத்தகாதவைக ளாகிய தகுதிக்கு மிஞ்சிப் பெருமுயற்சியை யுடையவையும், செய்தாற் பயனில்லாதவையும், முயற்சிக்குத் தக்கபடியின்றிப் பயன் சிறிதானவையும், ஐயமானவையும், பின்னே துயரம் விளைப்ப வையும் செய்தால் கெடுவான். அதனாலே மாத்திரம் அல்லாமல் செய்யத்-தக்கவைகளைச் செய்யாமையாலுங் கெடுவான். செய்யத் தக்கவைகளாவன : முன் சொல்லப்பட்ட செய்யத்தகாதவைகளுக்கு எதிரானவைகள்.

4. செய்யத்தகுந் தொழில்களுக்கு உபாயமும் அதன் உரிமையும்.
7. செய்யத்தக்க தொழிலை முடிக்கும் உபாயத்தை எண் ணித் தொடங்கவேண்டும். தொடங்கியபின் ஆலோசிப்போமென் பது குற்றமாம். (உபாயமாவது சாம பேத தான தண்டம்.)
(8) முடி யும் உபாயத்தால் தொழிலை ஆரம்பியாத முயற்சியானது துணைவர் பலர் நின்று குற்றப்படாமல் காத்தாலுங் குற்றப்படும். (முடியும் உபாயமாவன: பொருளாசைக் காரனுக்குப் பொருள் கொடுத்தலும், நடுநிலையாளன், சோம்பலாளன், பிறரோடு போர் செய்து நொந்த வன் ஆகிய இவரிடத்தே இன்சொற் சொல்லுதலும், துணைப்படை யாளன், தன்பகுதியோடு பொருந்தாதவன் ஆகிய இவரிடத்தே வேறுபடுத்தலும், இவைகளின் வழிவராத இடத்து இவரிடத்தும், நம்பக்கூடாத கீழ்மக்களிடத்தும் தண்டம் செய்து தன் வசப்படுத் தலுமாம்.)
(9) அவரவர் குணங்களை ஆராய்ந்தறிந்து, அக்குணங் களுக்கிசையச் செய்யாத இடத்து, வேற்றரசரிடத்து நல்ல உபாயத்தைச் செய்த வள்ளுங் குற்றமுண்டாம். குணங்களுக் கிசையச் செய்யாமையாவன. பொருளாசையுடைய வனுக்குத் தண்டஞ் செய்தலும், தண்டஞ் செய்யப்படுபவனுக்குப் பொரு ளைக்கொடுத்தலும் போல்வன. (நல்ல வுபாயமாவன. கொடுத்தலும், இன்சொற் சொல்லுதலுமே.) இவை, உபாயமல்ல வென்பதாம். (குற்றமுண்டாதல்: காரியமுடியாமை.)
(10) தமது நிலைமை யோடு பொருந்தாத உபாயங்களை அரசர் தொழில் முடித்தற் பொருட்டுச் செய்வாரானால் உலகத்தார் அங்கீகரிக்கமாட்டார். ஆதலால் அவ்வுலகத்தாரால் இகழப்படாத உபாயங்களை ஆராய் ந்து செய்யவேண்டும். (பொருந்தாத உபாயங்களாவன : தாம் வலி யராயிருந்து கொண்டு மெலியார் செய்தற்கு உரிய சாம பேத தான ங்களைச் செய்தலும், மெலியராயிருந்து கொண்டு வலியார் செய்த ற்கு உரிய தண்டஞ் செய்தலுமாம்.
----------

48-ஆம் அதிகாரம். வலியறிதன்.

அஃதாவது:- அவ்வுபாயங்களுள் தண்டஞ் செய்பக் குறித்த அரசன னவன் நால்வகை வலிமைகளையும் அளந்தறிதலாம். (நால்வகையாவன: வினை வலிழதலியன.)

1. வலிமையின் பகுப்பும், அதனையறிந்து பகைமேற் செல் வோர் பெறும் பயனும்.
(1) தான் செய்யக்கருதிய தொழிலினது வலி மைனபயும் அதனைச் செய்து முடிக்கும் தன் வலிமையையும் அதனை விலக்கும் பகைவனது வலிமையையும் இருவருக்குத் துணை ஆவேர்ரது லி' மைகளையும் ஆராய்ந்து, தனது வலிமை மிகுமானால் அத்தொழிலை - அரசன் செய்தல் வேண்டும். எனவே, தன் வலி குறைந்த இடத் தும் சமானமான இடத்தும் செய்யக்கூடாதென்பதாம்.
(2) தம் வலிமை மிகுந்த இடத்துத் தமக்குச் செய்யக்கூடுந் தொழிலை யும், அதற்கறியவேண்டிய துணை வலியையும் தெரிந்து அதனிட த்து மனம் வாக்குக்களை எப்போதும் வைத்துப் பகையின் மேலே செல்லும் அரசர்க்கு முடியாத பொருள் இல்லையாம்.

2. தன் வலிமை அறியாத இடத்து உண்டாகுங் குற்றம்.
(3) தலைவ ராதலையுடைய தமது வலிமையினது அளவை அறிந்து கொள்ளாதவராகி மனவூக்கத்தால் தம்மின் வலியவ ரோடு யுத்தஞ் செய்யத் தொடங்கி, அவ்லியவர் வருத்கப்படும் த்தலால் யுத்தஞ் செய்து முடிக்கமாட்டாமல் நடுவிலே கெட்ட அரசர் உலகத்தில் அநேகருண்டு. ஆகலால், தமது பலத்தை அறிந் தே போர் செய்யத் தொடங்க வேண்டுமென்பதாம்.
(4) அயலரச ரிடத்துப் பொருந்திச் சிநேகமுற்று நடவாதவனாகியும், தன் வலி மையின் அளவையறியாதவனாகியும் தன்னை மெச்சிக்கொண்டு அவ்வரசரோடு பகைத்த அரசன் சீக்கிரத்திலே கெடுவான்,

3. பகைவன் வலிமையும் அவனது துணைவலிமையும் அறி" யாத இடத்து உண்டாகுங் குற்றம்.
(5) இலேசாகிய மயிலிறகை அதிகமாக ஏற்றப் பெற்றும் பலமுள்ள வண்டியும் அக்சொ டிந்துவிடும். அதுபோல் எளியவரும். அதிகமாக ஒன்று சேர்ந்தாராகில் அவரோடு பகைத்த வலிமை யுடைய அரசன் வலிமையிழந்து கெடுவான். இதனால், பகைவரை இலேசாகநினைக்க லாகாதென்பதாயிற்று.

4. தொழில்வலிமை அறியாத இடத்து உண்டாகுங் குற்றம்.
(6) ஒரு மரக்கொம்பினது நுனியிலே ஏறி நின்றவர் அம் மட்டினில்லாது அதைக்கடந்து மேலும் ஏற மன எழுச்சிகொள் ண்டால் அவ்வெழுச்சி அவருக்கு நாசமாய் முடியும்; அதுபோ லப் பகைவர்மேற் போர் செய்யத் தொடங்கினால் தம்மாலே கூடி யமட்டுஞ் சென்று நின்றவர் அவ்வளவிலே நில்லாமல் மன ஊக் கத்தாலே மேலுஞ் செல்லுவாரானால் அவ்வூக்கமானது போர் செய்தற்கு ஏதுவாகாமல் அவருயிர் கெடுதற்கு ஏதுவாகு மென் பது உணர்க.

5. அறிவும், ஆண்மையும், பெருமையும் ஆகிய மூவகை வலியுள் பெருமையின் பகுப்பாகிய பொருள்வலியறிதல்.
(7) கொடுக்கும் வழியினாலே தனக்குள்ள பொருளின் அள வை யறிந்து காற்பாகத்தை மேலே வரும் ஆபத்தை விலக்கு தற்கா கவும், அரைப்பாகத்தைத் தன் குடும்பச் செலவுக்காகவும் வைத்துவிட்டு, காற்பாகத்தைக் கொடுக்கவேண்டும். அப்படிக் கொடுத்தலானது பொருளைக் காப்பாற்றி நடக்கும் வழியாகும். கொடுத்தல் மூவகைப்படும். (அவையாவன : தருமத்தின் பொருட்டு, கடவுளர் அந்தணர் வறியோரென்கிற இவருக்கும் புகழுக்கும், பொ ருளின் பொருட்டு, யானை குதிரை படை நாடு என்ற இவைகளுக்கும், பகையோடு கூடும்போது பிரிக்கப்படுவோர்க்கும், தன்னை விட்டுப் 'பிரியும்போது கூட்டப்படுவோர்க்கும், இன்பத்தின் பொருட்டு, மண்டபம் வாவி செய்குன்று இளமரச்சோலை முதலானவைகளைச் செய்தற்கும், ஐம்பொறிகள் அநுபவிக்கப்படுமவைகளுக்கும் கொடுத் தல்கள் என்பவைகளாம்.)
(8) அரசனுக்குப்பொருள் வருகின்ற வழி சிறிய தாயிருந்தாலுஞ் செலவாகின்ற வழி பெரியதாகாமலிருப்ப தானால் அவ்வரவு சிறியதாயிருப்பதினாலே ஒரு கேடுமில்லை. எனவே, வரவுஞ்செல்வம் ஒத்திருந்தாலுங் கேடில்லை யென்பதுமாம்.
(9) இவ் விதம் தனக்குள்ள பொருளின் அளவைத் தெரிந்து அதற்கேற்க வாழமாட்டாமல் அதிகச் செலவு செய்பவன் வாழ்க்கையானவை, உள்ளவைபோலத் தோன்றிப் பின்பு அத்தோற்றமும் இல்லாமல் அழிந்துவிடும்.
(10) ஒருவன் தனக்குள்ள பொருளினளவை ஆராயா மல் வரவுக்கு மிஞ்சிய உதவி செய்தலினாலே அவன் செல்வத்தினளவு சீக்கிரத்திலே கெடும். இதனால், உதவியைச் சுருக்கவேண்டுமென்று கொள்ளாமல் உதவிக்குத் தக்கவாறு பொருளைப் பெருக்கவேண்டும் மென்பது கொள்க.
----------

49-ஆம் அதிகாரம். காலம் அறிதல்.

அஃதாவது:- வலிமையினாலே மிகுதியுடையவனாய்ப் பகைவன்மேற் போர்க்குச் செல்லும் அரசன் செல்லுதலுக் கேற்ற காலத்தினையறிதல்,

1. காலத்தினது சிறப்பு.
(1) காக்கையானது தன்னின் வலிதாகிய கோட்டானைப் பகற்பொழுதிலே வெல்லும்; அது போல, பகைவரை வெல்லக்கருது கின்ற அரசருக்கு அதற்கேற்ற காலம் வேண்டும். (ஏற்றகாலமாவது : வெப்பமும், குளிர்ச்சியும் சமமாய் நோய்செய்யாமல் நீரும், உண வுங் கிடைத்தற்கு உரிய காலம்.)

2. காலம் அறிதலின் பயன்.
(2) இத்தகைய காலத்தோடு பொருந்த அரசன் தொழில் செய்து நடத்தலானது ஒருவரிடத்தும் நில்லாது நீங்குஞ் செல்வத் தைத் தன்னிடத்து நீங்காமற் கட்டுவதாகிய கயிறாகும்.
(3) இவ்விதம் செய்தற்காகுங் காலம் அறிந்து வேண்டுங் காரியங்களைச் செய்தால் அரசராற் செய்யக்கூடாத தொழில் ஒன்றுமில்லையாம். (4) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்தச் செய்யுந்தொழி லைச் செய்வானானால் பூமி முழுதையுந் தானே ஆள நினைத்தாலும் தனக்கு அது கைவசப்படும்.

3. காலம் அறியாத இடத்தே செய்யவேண்டுவது.
(5) பூமி முழுவதும் தப்பாது கைக்கொள்ள நினைக்கும் அரசர் தமது வலி மிகுந்திருந்தாலும் அதனை யெண்ணாமல் கைக்கொள்ளுதற் கேற்ற காலத்தையே நினைத்து அது வருமளவும் பகைவர் மேற் செல்லாமற் காத்திருப்பர்.

4. காலம் வரும் அளவும் ஒடுங்குதலின் சிறப்பு.
(6) மிகுந்த வலிமையுடைய அரசன் பகைவர்மேற் செல் லுங்காலம் பார்த்திருக்கின்ற இருப்பானது போர் செய்கின்ற ஆட்டு க்கடா தன் பகை கெடப் பாய்தற் பொருட்டுப் பின்னே கால்வாங்கும் தன்மையை யொப்பாகும்

5. காலம் பார்த்திருக்கும் இடத்துப் பகைமை தோன்றாம் லிருக்கவேண்டும்.
(7) அறிவுடைய அரசர், பகைவர் தீங்கு செய்த அப்போ முதே அவரறிய விரைவாகப் புறத்திலே கோபஞ்செய்யமாட்டார். தாம் அவரை வெல்லுதற்கேற்ற காலத்தையறிந்து, அது வருமாள் வும் உள்ளே கோபஞ் செய்து கொண்டிருப்பர். எனவே, காலம் வரும் முன் புறத்திலே கோபஞ்செய்தால் பகைவர் அதனைத் தடுத்து விடு வரென்பதாம்.
(8) வெல்லக்கருதிய அரசர் பகைவரைக் கண்டால் அவருக்கு முடிவுகாலம் வருமளவும் அவரைப்பணிந்து நடக்கவேண் டும். அப்படி நடந்து, அக்காலம் வந்து முடியுமிடத்து அப்பகைவர் மேற்செல்வாரானால் அவர் தலையற்றுக் கீழே விழ வெற்றியை யடைவர்

6. காலம் வந்த இடத்து விரைந்து செய்யவேண்டும்.
(9) பகையை இவ்விதம் வெல்ல நினைக்கின்ற அரசர் தம் மாலே பெறுதற்கரிய காலம் வந்து கூடினால் அது நிற்கும் அளவிலே அதன் முன்னே செய்தற்கரியவைகளா யிருந்த தொழில்களைச் செய்யவேண்டும்.

7. காலம் பார்த்து இருத்தலுக்கும், தொழில் செய்தலுக்கும் இலக்கணம்.
(10) அரசன் தொழிலின் மேலே செல்லாதிருக்க வேண்டுங் காலத்திலே மீன் வராதபோது கொக்கு ஒடுங்கி யிருத்தல் போல அடங்கியிருத்தல் வேண்டும். தொழிலின் மேலே செல்லுங்காலம் வந்த இடத்து மீன் வந்த காலத்தில் அதைத்தப்பாமற் பிடிக்கின்ற அக் கொக்குப்போல, தொழிலைத் கப்பாது செய்யவேண்டும்.
----------

50- ஆம் அதிகாரம். இடனறிதல்.

அஃதாவது:- வலியும் காலமும் அறிந்து பகைவர் மேற்செல்லும் அர சன் தான் செல்லுதற்கேற்ற நிலத்தினையறிதல்.

1. பகைவரது கோட்டையின் புறத்து இறங்குதற்கு ஆகும் இடத்தை அறிதல்.
(1) பகைவரை வளைத்துக் கொள்ளுதற்காகும் ஓரிடத் தைப்பெறுதற்கு, முன்னே யாதொரு தொழிலையும் அவரிடத்துத் தொடங்காதிருக்கவேண்டும். அதுவுமல்லாமல் அவரைச் சிறியவ ரென்று இகழாதிருக்கவும் வேண்டும். (ஓரிடமாவது : வாயில்கள் ளாலும் கீழறைகளாலும் அப்பகைவர் வருதலும் போகுதலும் இல்லா விதம் அரணிளைச் சூழ்ந்து ஒன்றற்கொன்று துணையா ய்த் தமக்குள்ளே வருத்தமில்லாது பல படைகளிருப்பிற்கும், மதிலும் அகாழு முகலாகிய அரண் செய்யப்பட்ட 1 அரசிருப்பிற் கும், ஏற்ற நிலம் இருத்தலும் நீரும் உடையது.) அவ்விடத்தைப் பெற்றால் போர் தொடங்கலும், பகைவரையிகழ்தலுஞ் செய்க.
(2) மாறுபாட்டைச் சோந்த வலிமையுடையவருக்கும் அரணைச் சேர்ந்து ஆகின்ற பெருக்கமானது பல பயன்களையும் கொடுக் கும். (மாறுபாடாவது : பூமி பல அரசர் ஆளுதற்குப் பொது வாயுள்ளதென்பது மறந்து தனக்கே யுரித்தாகக் கொள்ள வேண்டு மென்னும் நினைப்பு.) பெருக்கமென்றது: கோட்டையை வளைத்தலை. பல பயன்களாவன:பகைவராலே தனக்கு வருத்தமில்லாமையும் தாம் அவருக்கு வருத்தஞ்செய்தல் முதலானவைகள்.)
(3) இவ்விதம் பகைவரை வெல்லுதற்கேற்ற இடத்தைத் தெரிந்து, தம்மைக்காத் துக் கொண்டு, தொழிலைச் செய்வாரானால் வலிமை யில்லாதவரும் வலிமையுடையவராய் வெல்வாரென்பதாம்.
(4) தாம் தொழில் செய்தற்கு ஏற்ற இடத்தையறிந்து சென்ற அரசர் காவலைப் பொரு ந்தி நின்று அத்தொழிலைச் செய்வாரானால் முன்பு அவரை வெல்ல எண்ணியிருந்த பகைவர் அவ்வெண்ணத்தை இழந்துவிடுவர்.

2. போர் செய்தற்கு ஆகும் இடம் அறிதல்.
(5) முதலையானது ஆழமுள்ள நீரிலானால் பிறவுயிர்களை யெல்லாம் வென்று விடும். அந்நீரினின்று நீங்கினால் அம்முதலையைப்
--------
* அரண் - காவல். t அரசிருப்பு - பாசறை; படைவீடு.
--------

பிறவுயிர்கள் வென்று விடும்; இவை போல , பகைவர் மேற்செல் லும் அரசன் அப்பகைவர் நிற்கமாட்டாத இடமறிந்து சென்றால் அவர் அவனுக்குத் தோல்வியடைவர். தான் நிற்கமாட்டாத இடத் திலே சென்றால் அப்பகைவருக்கு அரசன் தோல்வி யடைவானாம்.
(6) நிலத்திலோடுகின்ற வலிமை பொருந்திய உருளைகளையுடைய பெரிய தேர்களானவைகள் கடலில் ஓடமாட்டாவாம். கடலில் ஓடு கின்ற மரக்கலங்களும் (கப்பல்களும்) நிலத்தில் ஓட மாட்டாவாம்; அது போலப் போர்க்குச் செல்பவன் தான் செல்லுதற்குரிய இட னறிந்து செல்லா விட்டால் போர் முடிய மாட்டாதென்பதறிக.
(7) இவ்விதம் அரசன் பகைவரிடத்துத் தொழில் செய்யும் இடங்களை யெல்லாம் குறையாம லெண்ணி, இடத்தோடு தொழில் செய்வானானால் அச்செயலுக்கு, தைரியத்தை அன்றி வேறொரு துணை வேண்டுவதில்லை.

3. பகைவரைச் சார்தலாகாத இடமும் சார்ந்த இடத்து உண் டாகுங் குற்றமும்.
(8) பெருஞ்சேனையையுடைய அரசன் சிறு சேனையுடைய வனிருக்கும் இடத்தை அவனை அழிக்க நினைத்துச் சேர்வானாயின் அவனால் தன் பெருமை யழிந்துவிடும்.
(9) அழிதற்குரிய கோட்டை முதலாகிய காவலினருமையும் பெருமையாகிய வலி மையு முடையர் அல்லராயினும் போர்த் தொழில் செய்தற்குரிய மனிதரை அவர் இருப்பிடத்திற் சென்று தாக்குதல் அரிதாகும். ஏனென்றால், ஆண்மை யுடையவரைச் சிறுமை நோக்கி, அவரிருப் பிடத்திலே சென்று தாக்கினால் அவர் அவ்விடத்தை விட்டுப் போத ற்குத் துணியாமல் சாவதற்குத் துணிவு கொண்டவராய்ப் போர் செய் வாராதலால் அவருக்குப் பெரிய சேனையும் தோற்றோடிப் போமென் பதாம்.
(10) பாகர்க்கு அடங்காதவையும் வேலாயுதத்தையும் டைய ஆள்களைக் குத்திக் கோத்த கொம்பை யுடையவையுமாகிய யானைகளைக் கால் புதைகின்ற சேற்று நிலத்தில் அகப்பட்ட இட த்தே நரிகளானவை கொன்று விடும். இதனாலே எவ்வளவு வலிமை யுள்ளவரும் செல்லத் தகாத இடத்திலே சென்றால் மிகவும் எளி யராலே கொல்லப்படுவ ரென்பது தோன்றுதல் காண்க.
---------

51. ஆம் அதிகாரம். தெரிந்து தெளிதல்.

அஃதாவது:-மந்திரி முதலானவர்களை அவர்களது பிறப்பு, குணம், அறிவு எனப்படுகின்றவைகளையும் செய்கையையும் காட்சி, கருத்து,
ஆகமம் எனப்படுகிற பிரமாணங்களினாலே ஆராய்ந்து தெளிதல்.

1. குணமும், குற்றமும் தெரிந்து குணமுடையவரைத் தெளிதல் வேண்டும்.
(1) அரசனாலே ஒருவனைத் தெளியவேண்டுமானால் தரும் மும், பொருளும், இன்பமும், உயிர்ப் பொருட்டு வரும் பயமும் என்கிற நான்கினது சோதனைத் திறத்தால் மனத்தினியல்பை ஆரா ய்ந்து, அதன் பின்னே தெளியவேண்டும். (தருமத்தினாலே தெளி தலாவது: தனக்கன்புடையார் ஒருவரால் இவ்வரசன் தருமம் இல்லாதவனா யிருக்கின்றான். ஆதலால் இவனை நீக்கி, வேறொரு அரசனை நியமிக்க எண்ணுகின்றோம். உன் சம்மதமென்னவென்று சொல்லச் செய்து தெரிதல். பொருளாலே தெளிதலாவது: இவ்வ ரசன் உலோபனாய் ஒருவருக்கும் கொடாமலிருக்கின்றான். ஆக லால் இவனை நீக்கி, ஈகையுடைய ஒருவனை நியமிக்க எண்ணுகின் றோம். உன் அபிப்பிராயம் என்னவென்று சொல்லச் செய்து தெரிதல். இன்பத்தாலே தெளிதலாவது: தொன்று தொட்டுப் பழ கிய தவத்தால் வயது முதிர்ந்தவளை அனுப்பி, யெளவனமுள்ள ஒரு பெண் பெயரைச் சொல்லி, இவள் உன்னைச் சேர விரும்புகின்றாள். சேர்வாயாகில் இன்பம் அனுபவிப்பதோடு இவளாற் பெரும் பொரு ளும் அநுபவிப்பா யென்று உறுதிபடச் சொல்லும்படி செய்து, அவன் அபிப்பிராயந் தெரிதல். அச்சத்தாலே தெளிதலாவது : யாதாவதொரு காரணத்தால் ஒருவனை முன்னிட்டு, இவ்வரசன் நம் மைக் கொல்ல எண்ணுகின்றான். அவன் கொல்லுமுன்னமே நாம் அவனைக் கொன்று வேறொரு அரசனை வைத்துக்கொள்வோம். உன் கருத்து என்னவென்று ஒரு மந்திரியாற் சொல்லும்படி செய்து, தெரிதல்.) இந்நான்கினும் மனம் வேறுபடாதவனாயிருந்தால் பிற்கா லத்தினும் வேறுபடமாட்டானென்று கொள்ள வேண்டும்; இவ்வி தந் தெரிந்து கொள்ளும் அளவை கருதலளவையாம்.
(2) அரசன் தெளிவு வைக்க வேண்டுவது உயர்ந்த குடியிலே பிறந்து, குற்றம் கடிதல் அதிகாரத்திற் சொல்லப்பட்ட அறுவகைக் குற்றங்களுடன் சோம்பல், மறவி முதலிய குற்றத்தினின்று நீங்கி நமக்குக் குற்றம் வருமோவென்று பயந்து நிற்கும் நாணமுடையவரிடததேயாம். (நாணமாவது : இழிதொழிலிலே மனஞ் செல்லாதிருத்தல்.) இவ்வி தந் தெளிதல் ஆகமப் பிரமாணத் தெளிவாம்.
(3) கற்றற்கு அரு மையான நூல்களைக் கற்று, முன் சொல்லப் பட்ட குற்றங்கள் இல் லாதவரிடத்தும் நுட்பமாக ஆராயுமிடத்து, அறியாமையானது ஏகதேசமிருக்கும். காட்சிப் பிரமாணத்திலே தெரிந்தால் இவ்வள வும் இல்லாதிருப்பவரைத் தெளியவேண்டும்.

2. குணமிகுந்தவரைக் கொள்ளவேண்டும் என்பதும், குற்ற மிகுந்தவரைத் தள்ளவேண்டுமென்பதும்.
(4) குணம் குற்றங்களுள் ஒன்றேயுடையார் உலகத்திலி ல்லாமையால் குணங்களையும், குற்றங்களையும் ஆராய்ந்து பின்னர் அவ்விரண்டினுள்ளும் மிகுந்தவைகளைத் தெரிந்து மிகுந்தவைகளால் அவரைக்கொள்ளவேண்டும். எனவே, குணமிகுந்தால் யோக்கிய ரென்று கொள்ளவேண்டு மென்பதும், குற்றமிகுந்தால் அயோக் கியரென்று தள்ளவேண்டு மென்பதும் ஆயின.

3. குணங் குற்றங்களை அறியுங் கருவி.
(5) குடிப்பிறப்பு, குணம், அறிவு என்பவைகளால் மனி தரடையும் பெருமையாகிய பொன்னின் மாற்று அறிதற்கும், மற் றைச் சிறுமையாகிய பொன்னின் மாற்று அறிதற்கும் உரை கல் லாவது தங்கள் தங்களுடைய செயல்களேயாம்.

4. தெளியப்படாதவர் இவரென்பதும், தெளியப்படாதவரைத் தெளிந்தால் உண்டாகுங் குற்றமும், தெளிவுக்கு அளவும்.
(6) உலகத்தாற் பழிக்கப்படுவனவற்றை விட்டுவிடுதற் கும், புகழப்படுவனவற்றைச் செய்தற்குக் காரணமாகிய உலக நடையினியல்பு சுற்றமில்லாதவருக்கு இல்லாமையால் சுற்றத்தா ரில்லாதவரைத் தெளியாதிருக்க வேண்டும். ஏனென்றால் அவர் உல கத்தோடு சம்பந்தம் இல்லாராதலால் பழிக்குப் பயப்பட மாட்டா ரென்க. (தெளிதல்: நல்லவரென்று நம்புதல்.)
(7) அன்பு செலுத்துதல் காரணமாக தமக்கு அறியவேண்டும் அவைகளை அறியா தவரைத் தெளிந்து கைக்கொள்ளுதலானது, அரசனுக்கு அறிவில்லாமை யெல்லாவற்றையுங் கொடுத்துவிடும். (அறிவில்லாமையாவன: தொழில் செய்ய வல்லவரை அறியாமையும், மேல்வருவன வற்றை அறியாமையு முதலியனவாம்.)
(8) தன்னோடு சம்பந் தமில்லாதவனைப் பிறப்பு முதலிய வற்றாலும் செய்கையாலும் ஆரா யாதவனாகித் தெளிந்துவைத்துக் கொண்ட அரசனுக்கு அவ்விதம் வைத்துக்கொள்ளுதல் அவன் சந்ததி முறையினும் நீங்காத துன் பத்தைக் கொடுக்கும். (சம்பந்தமாவது: குடியோடு தொடர்ந்த பழமையுடைய தாம்.)
(9) யாரையும் ஆராயாமற் கை கொள் ளக் கூடாது. அவரவர் வல்லமைக்கேற்ற தொழில்களைத் தெரிந்து கைக்கொண்ட பின் அவரிடத்துச் சந்தேகம் வையாதிருத்தல் வே ண்டும்.
(10) அரசன் ஒருவனை ஆராயாமற் கொள்ளுதலும் ஆரா ய்ந்து நல்லவனென்று கொள்ளப்பட்ட பின் அவனிடத்தே சந்தே கம் வைத்தலும் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.
--------

52 - ஆம் அதிகாரம். தெரிந்து விவன யாடல்.

அஃதாவது:- மேற்கூறியவாறு தெளியப்பட்டவரை அவர் செய்ய வல்ல தொழில்களை அறிந்து அவைகளினாலே ஆளுந்திறம்.

1. ஆளுதற்கு உரியவனது இலக்கணம்.
(1) அரசன் முதலிலே ஒரு வேலையைக் கொடுத்தால் அவ் வேலையில் ஆமவைகளையும் ஆகாதவைகளையும் ஆராய்ந்து, ஆமவை களையே விரும்பிய இயல்புடையவன் பின்னே அவ்வரசனாலேயுயர் ந்த வேலையிலே வைத்து, ஆளப்படுவான்.
(2) பொருள்கள் வரும் வழிகளை அதிகப்படுத்தி, அப்பொருள்களாலே செல்வங்களை வள ரச்செய்து பொருள்கள் வரும் வழிகளுக்கும் பொருள்களுக்கும் செல்வங்களுக்கும் வந்த இடையூறுகளைத் தினந்தோறும் ஆராய் ந்து நீக்க வல்லவன் அரசனுக்கு வேலை செய்யக்கடவன். (செல்வங் களாவன: பலவகையான பதார்த்தங்களும், இன்பமுமாம். இடையூறு. சுற்றத்தார், பகைவர், திருடரால் வருந்துன்பம்.)
(3) அரச னிடத்தே அன்பும் அவனுக்கு ஆங்காரியங்களை அறியும் அறிவும் அக்காரியங்களைச் செய்யுமிடத்துக் கலங்காமையும் அக்காரியங்களா லே பொருள் கிடைத்தபோது, அவைகளிலே ஆசையில்லாமையுமா கிய இந்நான்கு குணங்களை பும் நன்றாகவுடையவனிடத்தே அதிகார ங்கொடுக்கும் தெளிவு அரசனுக்கு உண்டாகும். எனவே, மேற்கூறிய நான்கு குணங்களும் அரசன் அதிகாரங் கொடுத்தற்குக் காரண மாதலறிக.

2. ஒருவகையால் ஒழிக்கப் படுவார்.
(4) எல்லாவகைகளாலும் ஆராய்ந்து தெளிந்து, அதிகார த்தில் வைத்த பின்னும் அவ்வதிகாரத்தினியல்பால் அரசன் பதவி யை விரும்பி மாறுபடுகிற மனிதர் உலகத்திற் பலருள்ளார். சீவக னென்னும் அரசன் கட்டியங்காரனை மந்திரித்தனத்தில் வைக்க, அவன் அவ்வரசன் பதவியை விரும்பிச்செய்த மோசமே இதற்குச் சாட்சியாதலறிக; இச்சரிதம் சீவக சிந்தாமணியில் விரிவாகக் காண லாம். இத்தன்மையுடையவரே ஒழிக்கப்படுவார். (ஒழித்தல் - நீக்கல்.)

3. வினையினது இயல்பு, அறிவு, வலிமை உடையவனை விட லாகாது.
(5) அரசன் தொழில் செய்யும் உபாயங்களையறிந்து, செய் கையாலும் இடையூறுகளாலும் வருந் துன்பங்களைப் பொறுத்துக் காரியத்தை முடிவு செய்ய வல்லவனை விட்டுவிட்டு, அன்புடையவர் னென்று முடிக்குந் திறமில்லாத மற்றொருவனை ஒரு தொழில் முடிக்க ஏவக்கூடாது. ஏவினால் காரியங் கெட்டுவிடும். ஆதலால், அறிவு வலிமையுடையவனை விடலாகாதென்பது காண்க.

4. ஆளுதற்கு உரியவனை ஆளுந் திறம்.
(6) செய்பவனிலக்கணத்தை முன்னே ஆராய்ந்து, செய்யப் படுந்தொழிலி னியல்பைப் பின்னே ஆராய்ந்து, அதன்பின்பு அவ னையும் அத்தொழிலினியல்பையும் காலத்தோடு சேர்த்து, ஒற்று மைப்பட அறிந்து, அவனை அத்தொழிலிலே செலுத்தி ஆளுதல் வேண்டும். (காலத்தோடு சேர்த்து ஒற்றுமைப்பட அறிதலாவது :
இந்தக்காலத்தில் இவ்விலக்கணமுடையவன் செய்தால் இத்தொ ழில் முடியுமென்றறிதல்.)
(7) இத்தொழிலை இச்சாதனத்தால் இவன் முடிக்கவல்லவனென்று பிரிவுபடுத்தி, ஆராய்ந்து, இம்மூன் றும் விரோதமில்லாமல் ஒத்திருந்தால் அத்தொழிலை அவனிடத்து விட்டு முடிக்கவேண்டும். (சாதனமாவன: துணையும், பொருளும்.)
(8) ஒருவனை அரசன் தனது தொழில் செய்தற்குரியவனாயிருக்கும் தன்மையை அறிந்து, துணிந்தபின்பு அவனை, அத்தொழில் செய்தற் குரியவனாக உயரச் செய்யவேண்டும். அவ்விதஞ் செய்யாவிடில் அத னாலும் கேடு உண்டாகும். (உயரச் செய்தலாவது: தொழிலைத் தானே செய்து முடிக்கும் வலிமையுடையவனாக்குதல்.)
(9) தனது தொழிலினிடத்தே எப்போதும் முயற்சியை யுடையவன் அவ்வரி மையால் தனக்குச் சிநேகமாய் நடக்கிற தன்மையை, அது பொறா மல் கோட்சொல்பவர் சொல்லைக் கேட்டு மாறாக நினைக்கும் அரசனை விட்டு இலக்குமி நீங்குவள்.

5. ஒருவனை ஆண்ட இடத்துச் செய்யத் தக்கது.
(10) அதிகாரஞ் செய்பவன் கோணாதிருக்க உலகமானது. கோணாது. ஆதலால், தினந்தோறும் அவ்வதிகாரஞ்செய்பவன் செய்கையை ஆராய்ந்து வரல்வேண்டும். (அதிகாரஞ் செய்பவன் மந் திரி.) அதிகாரஞ்செய்யு மந்திரியின் செய்கை ஒன்றினை ஆராயவே, அதன் வழிப்பட்ட உலகமெங்கும் ஆராய்ந்தவனாவனெனபது கருத்து.
------------

53 - ஆம் அதிகாரம். சுற்றந் தழால்.

அஃதாவது:- அரசன் தனது சுற்றத்தாரைத் தன்னைவிட்டு நீங்காதிரு க்கும்படி தழுவுதல்.

1. சுற்றத்தினது சிறப்பு.
(1) ஒருவன் செல்வங்கெட்டு வறுமைப்பட்ட இடத்தும் தம்மோடு அவனிடத்து உண்டாகிய பழைய நன்றியை யெடுத்துக் கொண்டாடும் இயல்புகள் உறவினரிடத்தேயுள்ளனவாம். (பழைய நன்றியாவது: செல்வத் தோடிருக்குங் காலத்திலே தமக்குச் செய்த உபகாரம் )

2. சுற்றத்தைத் தழுவுதல் செல்வத்துக்கு ஏதுவும், அரணும், பயனும் ஆம்.
(2) அன்பு நீங்காத சுற்றத்தார் ஒருவனுக்குக் கிடைக்கு மானால், அக்கிடைத்தலானது விருத்தியா பசல் நீங்காத பல செல்வ ங்களையும் அவனுக்குக் கொடுக்கும். (பலசெல்வமாவன: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆகிய ஆறுமாம்.)
(3) அச்சுற்றத் தாரோடு ஒற்றுமையில்லாதவனது செல்வங்கள் குளப்பரப்பானது கரையில்லாமல் நீர் நிறைந்தாற் போலும். எனவே, கரையில்லாத நீர் குளத்திலே தங்காமல் புறத்திலே போதல் போலச் சுற்றத்தார் சூழ்ந்து காவாத செல்வம் தன்னிடத்தில்லாமற் கெட்டுப்போ மென்பதாயிற்று.
(4) செல்வத்தைப் பெற்ற ஒருவன் அச்செல் வத்தாற் பெற்ற பயனாவது: தன்னுறவினராலே சூழப்படும் வகை அவ்வுறவினரைத் தழுவி நடத்தலாம்; இந்நடக்கை பகையில்லாமல் அரசாளுதற்கு ஏதுவாகலால் இதனைச் செல்வத்திற்குப் பயனென்று சொல்லினார்.

3. சுற்றம் தழுவுதற்கு உபாயம்.
(5) சுற்றத்தாருக்கு வேண்டுமவைகளைக் கொடுத்தலையும் இன்சொற் சொல்லுதலையும் ஒருவன் செய்ய வல்லவனானால் ஒன் றையொன்று தொடர்ந்து பற்றிய சுற்றத்தாராலே சூழப்படுவான். இவ்விதஞ் சூழ்தல் ஒரு பெரிய கோட்டை சூழ்தல் போலாகும். (6) ஒருவன் பெருங்கொடை யுடையவனும் அளவுக்கு மிஞ்சிய கோபத்தை விரும்பாதவனுமானால் அவன் போலச் சுற்றமுடைய வர் இப்பெரிய உலகத்திலில்லை. (பெருங்கொடையாவது: ஒன்றினா லும் வறுமையடையாதிருக்கக் கொடுத்தல்.)
(7) காக்கைகள் தமக்கு இரையைக் கண்ட இடத்து மறைக்காமல் தம்மினத்தை அழைத்து, அதனோடு கூடியுண்ணும். அப்படிப்பட்ட குணமுடை யவருக்கே சுற்றத்தினாலாகிய பெருக்கங்களும் உளவாகும்.
(8) அரசனானவன் எல்லாரையும் ஒரு தன்மையராக நோக்காமல் அவரவர் தகுதிக்கேற்க நோக்குவானாயின் அச்சிறப்பு நோக்கி, அவனை விடாது வாழுஞ் சுற்றத்தார் அநேகராவார். இவ்விதம் சிற ப்புநோக்கில்லாத இடத்து உயர்ந்தோர் தன்னை நீங்குவ ரென்பதாம்.

4. தீமை செய்யப்போய் அதைவிட வருவானும் அது செய் யாமற்போய் பின்பு நன்மை செய்ய வருவானுமாகிய சுற்றத்தாரைத் தழுவுதல்: வேண்டும்.
(9) சுற்றத்தாராயிருந்து தன்னோடு பொருந்தாமல் யா தாயினும் ஒரு காரணத்தினாலே பிரிந்து போனவர் பொருந்தாமை க்குக் காரணம் தன்னிடததிலே யில்லை பாக மீண்டுஞ் சுற்றத்தாராக வருதல் தானே யுண்டாகும். எனவே, தன்னிடத்திற் குற்றமில்லாத போது பிரிந்து போன சுற்றத்தார் வலியவருவரென்பதாயிற்று. ஆதலால் சுற்றத்தார் பிரியும் வண்ணம் குற்றமுண்டாக நடக்கலா காது.
(10) தன்னிடத்தினின்றுங் காரணமில்லாமற் பிரிந்துபோ ய்ப் பின்பு ஒரு காரணத்தினாலே தன்னிடத்திலே வந்த சுற்றத் தானை அக்காரணத்தை அரசனானவன் செய்துவைத்து (முடித் துவிட்டு) ஆராய்ந்து தழுவிக்கொள்ள வேண்டும். காரணமில்லாம ற் பிரிந்து போய் மற்றொரு காரணத்தால் வந்தவனாதலால் ஆராய் ந்து தழுவவேண்டு மென்று சொல்லல் ஆயிற்று.
------------

54. ஆம் அதிகாரம். பொச்சாவாமை.

அஃதாவது:- அழகு, செல்வம், ஆற்றல் முதலானவைகளால் மகிழ் ந் து தன்னைக் காத்துக் கொள்ளுதலினும், பகையழித்தல் முதலாகிய காரி யங்களிலும் மறதி செய்யாமை. (ஆற்றல் - வல்லமை.)

1. மறவியின் குற்றம்.
(1) மிகுந்த மகிழ்ச்சிக் களிப்பால் வரும் மறதியானது அரசனுக்கு அளவு கடந்த கோபத்தினுந் தீய தாகும். (மிகுந்த மகிழ்ச்சியாவது: பெருஞ்செல்வம், பேரின்பம், பெருமிதம் என்ற இவைகளால் வருவது. அளவாவது; பகைவரைக் கொல்லுதற்கும், கொடியோரைத் தண்டித்தற்கும் வேண்டுவது.) மறதி - காக்கவே ண்டிய இடத்தில் காவாமல் தன்னையே கொல்லுதலால் கோபத்தி னுந் தியதென்னப்பட்டது.
(2) ஒருவனுக்கு நித்தியத்தரித்திர மானது அறிவினைக் கெடுக்கும் விதம்போல மறதியானது புகழுடை யவனிடத்து உண்டானால் அப்புகழைக் கெடுத்துவிடும். (நித்தியத் தரித்திரமாவது: தினந்தோறும் யாசகத்தால் வருந்தி வயிறு வளர்த்த ல் )

2. மறவியுடையவருக்கு வருந்துன்பம்.
(3) புகழுடையராயிருக்கையானது மறவியுடையாருக்கில் லையாம். இது உலகத்தில் எவ் வகைப்பட்ட நூலுடையாருக்கும் ஒப்ப முடிந்தது. எனவே, இது மறுக்கமுடியாதென்பதாயிற்று.
(4) மனத்தினிடத்துப்பயம் உடையவருக்குக் காடுமலை முதலாகிய காவ லுக்குள்ளிருந்தாலும் அவைகளாலே பயனில்லை. அதுபோல மற தியுடையவர் எல்லாச் செல்வங்களும் உடையராயிருந்தாலும் அவ ருக்கு அவைகளாலே பயனில்லையாம்.
(5) வராமல் தடுக்கப்படுந் துன்பங்களை அவை வருதற்கு முன்னாக அறிந்து, தடுக்காமல் மறந் திருந்தவன் பின்பு இடையூறுவந்த காலத்துத் தடுக்கக்கூடாமை யால் தன்னுடைய அம்மறதிக் குற்றத்தை நினைத்து வருத்தப் படுவன்.

3. மறவாமையின் சிறப்பு.
(6) அரசர்க்கு மறவாமையானது தொழில் செய்வோர் சுற் றத்தாராகிய எவரிடத்தும் எந்தக்காலத்திலும் தவறாமல் கிட்டுமா னால் அதையொக்கும் நன்மையானது இல்லையாம், தன் பெருக்கக் காலத்தினும் மறவாமை வேண்டும் என்பதற்காக எந்தக்காலத்தினு மென்று சொல்லப்பட்டது.
(7) மறவா நமனத்தினாலே எண்ணி ச் செய்தால் இவை அரியவையென்று சொல்லப்பட்டு, ஒருவனுக்கு முடியாத காரியங்களில்லை. இதனால் இடைவிடாத நினைவும், ஆரா ய்ச்சியும் உடையார்க்கு எல்லாம் எளிதிலே முடியுமென்பதாம். (எண்ணுதல் - ஆராய்தல்.)

4. மறவாது செய்யவேண்டியவைகள்.
(8) நீதி நாலுடையரால் இவை அரசர்க்கு உரியவை யெ ன்று உயர்த்திச் சொல்லப்பட்ட செயல்களைப் பாதுகாத்துச் செய்யக் கடவர்; அப்படிச் செய்யாமல் மறந்தவர்க்கு எழுபிறப்பிலும் வரும் நன்மையில்லையாம். (செயல்களாவன : மூவகையாற்றல்,
ருரு - ஆம் அதி. செங்கோன்மை. காடு நால்வகையுபாயம், ஐவகைத்தொழில், அறுவகைக்குணம் முதலான செயல்கள். இவற்றுள், மூவகையாற்றல் : அறிவு, ஆண்மை , பெருமை களாம். நால்வகை யுபாயம்: சாம பேத தான தண்டங்களாம். ஐவகைத் தொழில் : * மேற்சேறல், அரண்முற்றல், கோடல், பொருதல், வேறல்களாம். அறுவகைக்குணங்கள்: நட்பாக்கம், பகையாக்கல், மேற்சேறல், இருத்தல். பிரித்தல், கூட்டல்களாம். சாதி தருமமாகிய இவைகளில் தவறிய அரசர்களுக்கும் நரகத் துன்பமேயுள்ளது. ஆதலால், எழுபிறப்பிலும் நன்மையில்லையென்று கூறினார்.

5. மறவாமைக்கு உபாயம்.
(9) அரசர் தமது மகிழ்ச்சியினிடத்துத் தாம் செருக்குறு ம் போது முற்காலத்திலே அதனாலாகிய மறதியினாலே கெட்டவர் களை நினைக்கக்கடவர். கெட்டவரை நினைக்கவே, நாமும் அப்படியே கெடுவோமென்று, அம்மகிழ்ச்சியினிடத்தே செருக்குற மாட்டார். ஆதலால், கெட்டவர்களை நினைக்கவேண்டு மென்று விதித்தனர்.
(10) முன்போலப் பின்னுந் தானினைத்த பொருளையே மறவாமல் நினைக்கக் கூடுமானால் அரசனுக்கு, அப்பொருளை நினைத்தபடியே அடைதல் எளிதாகும். இதனால், நினைத்த பொருள் அடைதற்கு மறவாமல் முயற்சி செய்ய வேண்டுமென்ப-தாயிற்று. அடையா மைக்குக் காரணம் மறதியேயாம்.
-------
* மேற்சேறல் - பகைவர்மேற் செல்லுதல். t அரண் முற்றல் - பகைவர் கோட்டையை வளைத்தல். கோடல் - வளைந்த இடத்தைக் கைப்பற்றுதல். 8 பொருதல் - யுத்தஞ் செய்தல். | வேறல் - வெல்லுதல். 1 இருத்தல். சமயம் வாய்க்கும் வரை யுத்தத்துக்குச் செல்லாமல் அடங்கியிருத்தல்.
-----------

55 - ஆம் அதிகாரம். செங்கோன்மை.

அஃதாவது:- அரசனாலே செய்யப்படும் முறையினது தன்மை; அந்த முறையானது ஒருபக்கத்திலே சாயாமல் (செவ்வையாகிய கோல் போலு தலால் செங்கோலெனப்பட்டது.

1. செங்கோலினது இலக்கணம்.
(1) தன் கீழ் வாழ்வோராலே செய்யப்பட்ட குற்றத்தை யுணர்ந்து, எல்லாரிடத்தும் தாட்சணியமில்லாமல் நடுவுநிலைமையைப் பொருந்தி, அக்குற்றத்துக்குச் சொல்லப்பட்ட தண்டனையை நூல் வல்லவரோடும் ஆராய்ந்து, குற்றத்துக்குத் தக்கபடி தண்டனை செய்தலே நீதியாம்.

2. செங்கோலின் சிறப்பு.
(2) உயிர்களெல்லாம் மழையை நோக்கி வாழுமென்றாலும் குடிகளானவை அரசனது நீதியாகிய செங்கோலை நோக்கி வாழும். ஏனென்றால், மழையாலாகும் உணவுப்பொருளிருந்தாலும் அரசன் நீதியில்லாத இடத்துப் பயனில்லை. ஆதலாலென்க.
(3) அரசன் செங்கோலானது, அந்தணர்க்கு உரித்தாகிய வேதத்திற்கும் அந்த வேதஞ் சொல்லப்பட்ட தருமத்திற்குக் காரணமாகி நின்றதாம். வேதமும், தருமமும் அநாதியாயினும், அரசன் செங்கோல் இல் லாத இடத்து நடக்கமாட்டாவாம். ஆதலால் செங்கோலை அவ்விர ண்டிற்கும் காரணமென்றார்.

3. செங்கோல் செலுத்தியவன் அடையும் பயன்.
(4) தன் குடிகளை அணைத்துச் செங்கோல் செலுத்தும் பெரு நிலத்தையுடைய அரசனது அடியைப் பொருந்தி, உலகத் தார் நிற்பார். (அணைத்தலாவன: இன்சொற் சொல்லுதல், தளர்ந்த இடத்து வேண்டும் பொருள்களைக் கொடுத்தல் முதலியவை.)
(5) பருவமழையும் குறையாத விளைவும் ஒன்று சேர்ந்து, நூல்களாலே சொல்லப்பட்ட இயல்பாற் செங்கோலைச் செலுத்தும் அரசனது நாட்டினிடத்து உள்ளனவாம். (பருவ மழை பெய்ய வேண்டிய காலத்துப் பெய்யும் மழை.)
(6) அரசனுக்குப் போரில் வெற்றி யைத் தருவது, அவனெறியப்பட்ட வேற்படையல்ல. அவனது செங்கோல் கோணாதிருக்குமானால், அச்செங்கோலேயாம். (கோணாதி ருத்தலாவது: நீதி தவறாதிருத்தல்.)
(7) அரசன் முட்டுப் பாடு வந்த இடத்தும் செங்கோலை நீதிதவறாமல் செலுத்துவானாகில் உலக முழுவதையுங் காப்பாற்றுவானாவான். அச்செங்கோலானது, அவ்வரசனைக் காப்பாற்றுவதாகும். இவ்விதம் செங்கோல் செலுத் தியதற்கு, உதாரணமாக மகனைத் தேர்க்காலில் வைத்துத் தேர் நடத்திய மனு நீதிகண்ட சோழனை அறிக; இச்சரிதம் பெரிய புரா ணத்தில் மனு நீதிகண்ட புராணத்திலுண்டு. (முட்டுப்பாடு : தன் னுயிர் போல்வார் உயிரை யிழத்தல் முதலானவையாம்.)

4. செங்கோல் செலுத்தாதவனது கேடு.
(8) வழக்கறிவிப்பவருக்கு எளிதான சமயத்தையுடைய வனாகி, அவ்வழக்கறிவிப்பவரால் அறிவிக்கப்பட்டவைகளை நூல் கற்றவர் பலரோடு ஆராய்ந்து, தோன்றிய உண்மைக்கு ஒப்பாக நீதி செலுத்தாத ரரசன் தாழ்ந்த பதத்திலே நின்று தானே கெடு வான். (தாழ்ந்த பதம்: பாவமும் பழியும் எய்தி நிற்கும் நிலை.)

5. செங்கோல் செலுத்தும் அரசனுக்குத் தீயவரிடத்து மூவ கைத்தண்டமுஞ் செய்யவேண்டும்
(9) குடிகளைப் பிறர் வருத்தஞ் செய்யாமற் காத்து, தானும் அளவுக்கு மிஞ்சிய வரிக ளேற்படுத்தாமல் ஆதரித்து, அவரிடத் திலே குற்றமுண்டானால் அதனைத் தீர்க்கும்படி, அவரைத் தண் டித்தல் அரசனது தொழிலாம். ஆதலால், அது பழியாகாது. ஏனென்றால், அவரைக் குற்றத்தினின்று நீக்கிப் பரிசுத்த ராக்குது. லாலென்க; இதனை மறக்கருணை யென்பர். இதனை ''தண்டமுங் கருணை யென்றறிவாயே'' எனக் கைவல்லியம் சந்தேகந் தெளிதற். படலத்தில் 60- ஆம் செய்யுளிற் கூறியதனாலு முணர்கள் தண்டம் மூவகையாம்; அவையாவன: பொருளைக் கொள்ளுதல், துன் பஞ் செய்தல், கொல்லுதல்களாம். இவற்றில் குற்றத்துக்குத் தக்க ஒன்றைச் செய்யவேண்டுவதறிந்து செய்க.
(10) அரசனான வன் கொலையினாலே கொடியவரைத் தண்டித்து நல்லோரைக் காப் பாற்றலானது உழவனானவன் பயிருக்குக் களையெடுத்தலை யொப்பா கும். (கொடியவராவார் - தீககொளுவுவோர், நஞ்சிடுவோர், திருடர், பிறர் மனையை விரும்புவோர் முதலானவர்கள். இப்படிப் பட்ட வரை அரசன் கொல்லாத இடத்துப் புல்லுக் களைக்கு, அஞ்சுகின்ற பயிர் போலப் பல வருத்தங்களை அடைந்து உலகத்தார் துன்பம் படுவர்.
-------

56 - ஆம் அதிகாரம். கொடுங்கோன்மை.

அஃதாவது:- நீதியினது கோணுதற் றன்மை.

1. கொடுங்கோன்மையினது குற்றம்,
(1) பொருளை விரும்பிக் குடிகளை வருத்தப்படுத்துக் தொழிலைத் தன்னிடத்துக் கொண்டு நீதியல்லாதவைகளைச் செய்து நடக்கும் அரசனானவன், பகைமை பற்றிக் கொல்லுதற்றொழிலைத் தம்மிடத்தே கொண்டு நடப்பவரினுங் கொடியனாவன். ஏனென் றால், கொலை செய்வார் செய்யுந் துன்பம் அன்றோடு போகும். கொடு ங்கோலரசர் செய்யுந் துன்பம் எந்நாளும் ஒழியாது. ஆதலாலென்க.
(2) தண்டித்தற்றொழிலோடு நின்ற அரசன் குடிகளிடத்தில் வரியல்லாதவழிப் பொருள் கேட்டு வாங்குதல் வழிப்பறிபறித்து வேலாயுதத்தோடு தனியே நின்ற திருடன் வழிப்போக்கனை நோக் கி, உன் கைப் பொருளைத் தாவென்று வாங்குதல் போலும். தாராக் கால் தண்டிப்பேனென்னுங் குறிப்புடையவனாதலால் அரசன் யாசி
த்து வேண்டுதலுங் கொடுங்கோலாம்.

2. கொடுங்கோலுடைய அரசன் அடையுங் குற்றம்.
(3) தினந்தோறும் தன்னாட்டிலே தோன்றுந் தீமைகளை ஆராய்ந்து, அவற்றை விலக்கும் நீதியைச் செலுத்தாத அரசன் தினந்தோறும் சிறிது சிறிதாக அந்நாட்டை இழந்து விடுவான். (நாட் டை இழத்தலாவது: நாட்டிலுள்ளாரால் பயனடையாமையாம்.)
(4) பின்னே வருவனவற்றை எண்ணாமல் முறை தவறச் செய் யும் அரசனானவன் அச்செயலால் முன்னே சம்பாதிக்கப் பட்ட பொருளையும் பின் அப்பொருள் சம்பாதித்தற்கு ஏதுவாகிய குடிக்க ளையும் ஒருமிக்க இழந்து விடுவான்.
(5) அரசன் செல்வமாகிய மரத்தைக் குறைக்கும் வாளாயுதமானது அவன் நீதி செலுத்தா மையினாலே குடிகள் துன்பப் பட்டு, அதனைப் பொறுக்க மாட்டா மல் அழுத கண்ணீரல்லவோ? ஆதலால் அக்கண்ணீர் உண்டாகாமல் விலக்குவது அரசனுடைய நீதியாம்.
(6) அரசர்க்குப் புகழ்கள் நிலை பெறுதல் செங்கோன்மையினாலாகும். அச்செங்கோன்மை யில்லை யானால் அவ்வரசருக்கு, அப்புகழ்கள் உண்டாக மாட்டாவாம் (புகழ்களாவன: வெற்றி, கொடை முதலியவற்றாலுண்டாகிய நன் மைச் சொற்கள்.)

3. கொடுங்கோலுடைய அரசரது நாட்டில் வாழ்வார்க்கு வருங் குற்றம்.
(7) மழை இல்லாமையானது பூமியில் வாழும் உயிர்களுக்கு எவ்வகைத் துன்பந் தருமோ? அவ்வகைத் துன்பத்தை அரசனது அருளில்லாமையானது குடிகளுக்குக் கொடுக்கும்.
(8) நீதியைச் செய்யாத அரசனது கொடுங்கோலின் கீழ் வாழ்ந்தால் எல்லாருக் கும் பொருளுடைமையானது இல்லாமையைப் பார்க்கினும் அதிகத் துக்கத்தைச் செய்யும். எவ்வித மெனில் உள்ளது போது மென்றாட ங்காமல் பேராசைப் படுவோனது நாட்டிலே அடி, குத்து, வெட் டுப் பொருளுடையார்க்கே யாதலாலென்க.

4. கொடுங்கோலுடைய அரசனது நாட்டில் உண்டாகுங் குற்றம்.
(9) மேற் கூறியவாறு அரசன் முறை தவறும் விதம் பொருள் சம்பாதிப்பானானால் அவனது நாட்டிலே பருவ காலத்து மழையில்லாமற் போக மேகம் பொழிதலைப் பொருந்தாது.
(10) காப்பாற்றற்குரிய அரசன் உயிர்களைக் காப்பாற்றானாகில் பசுக்க ளிலே பால் குறைந்து விடும். அந்தணரும் வேதங்களை மறந்து விடு வர். இவ்விரண்டுஞ் சுருங்கி விட்டால் தேவருணவுபெற யாகம் நடவாதாம். யாகம் இல்லா விட்டால் மழையுமில்லை. இவைகளுக்கெல்லாம் காரணம் அரச நீதி தவறு தலென்றறிக.
--------------

57-ஆம் அதிகாரம். வெரு வந்த செய்யாமை.

அஃதாவது:- குடிகள் அஞ்சுவதும், மந்திரி முதலிய அங்கங்கள் அஞ்சு வதும், தான் அஞ்சுவதுமாகிய தொழில்களைச் செய்யாமை.

1. குடிகள் பயப்படுவன செய்யாமையின் இலக்கணம்.
(1) ஒருவன் மெலியவனுக்குத் தீங்கு செய்த இடத்து நடுவாக நின்று அத்தீங்கை ஆராய்ந்து, பின்னும் அப்படிப்பட்ட காரியத்திலே செல்லாதிருக்கும் பொருட்டு, அத்தீங்காகிய குற்றத்துக் குத் தக்கபடி அத் தீங்கு செய்பவனைத் தண்டிப்பவனே அரசனா வான். இதனால், நடுவாக நின்று ஆராயாமையும் வேறொரு காரணம் பற்றி அதிகமாகத் தண்டித்தலுங் குடிகள் அஞ்சுந் தொழிலென் றறிக.
(2) செல்வமானது நெடுங்காலம் நீங்காதிருத்தலை விரும் புவோர் மேலே சொன்னபடி குற்றவாளிக்குத் தகுந்த தண்டஞ் செய்யத் தொடங்கும்போது, அளவு கடந்து செய்வார்-போல் ஆர ம்பித்து, செய்யுங் கால் அளவு கடவாமற் செய்யவேண்டும்; இவவி தஞ் செய்தல் குற்றஞ் செய்வார் பயப்படுதற்கும், குற்றஞ் செய்யா தவர் பயப்படாமைக்குக் காரண மாதலறிக.

2. குடிகள் அஞ்சுந் தொழில்களைச் செய்தவன் ஆயுளையும், வலிமையையும், செல்வத்தையும், இழந்துவிடுவான்.
(3) குடிகள் அஞ்சப்பட்ட செயல்களைச் செய்து நடக்குங் கொடுங்கோலனாயிருந்தால் நிச்சயமாகவே சீக்கிரத்தில் அவ்வரசன் கெடுவானென்பதாம்.
(4) நம் அரசனானவன் பொல்லாதவனே ன்று குடிகளாலே சொல்லப்படுகிற துன்பந் தருஞ் சொல்லையுடைய அரசன் ஆயுள் குறைவதோடு, செல்வத்தையுஞ் சீக்கிரத்தில் இழந்து விடுவான்.
(5) தன்னைக் காணவேண்டுவோருக்கு அரிய சமயத்தை யும், கண்டால் இனிமை யில்லாத முகத்தையும் உடையவனது பெரு ஞ்செல்வமானது தனக்கும் பிறருக்கும் பயன்படாமையால் பேயாற் சேர்த்து வைக்கப்பட்டது போல்வதொரு குற்ற முடையதாகும். (அரிய சமயமாவது: காணவருவாரைப் பின்னே வாவென்று பல முறை அலைய வைத்துத் தனக்குச் சம்மதமானபோது காணச் செய்தல்.) இவ்வித அரிய சமயமும், இனிமை யில்லாத முகமும் குடிகள் பயப்படுதற்கு ஏதுவாயின அறிக.
(6) கடிய சொல்லு டையவனும் இரக்கமில்லாதவனுமானால் அவனது பெருஞ் செல்வமானது நெடுங்காலம் இராமல் அப்பொழுதே அழியும். பெருஞ் செல்வமென்றது கெடுஞ் சிறுமையதல்லாத செல்வமா னாலு மென்றபடி.
(7) இம்மட்டோர் மேற்கூறிய கடிய சொல் லும், குற்றத்தின் அளவு கடந்த தண்டனையும் அரசனது பகை வெல்லுதற்கு ஏற்றவலிமையாகிய இரும்பைத் தேய்க்கின்ற அரங்கம்

இதுவரையுஞ் சொல்லிய அரசனுடைய அரிய சமயம், இனிய முகம் இல்லாமை, இரக்கமில்லாமை, கடுஞ் சொற் கூறல், அதிக தண்டம் ஆகிய இவைகள் குடிகள் பயப்படுந் தொழில்க ளாதல் காண்க.

3. மந்திரிகள் அஞ்சுந் தொழிலும், அது செய்தாலடைவதும்.
(8) செய்யத்தகும் காரிய எண்ணத்தை மந்திரிகளிடம் த்தே வைத்து, அவரோடு தானும் எண்ணிச் செய்யாத அரசன் தன் காரியந் தவறிய இடத்துத் தன்னைக் கோபத்திலே செலுத்தி, அம்மந்திரிகளைக் கோபிப்பானாயின் அவனது செல்வமானது தினந் தோறுஞ் சுருங்கும். எவ்வித மென்றால், மந்திரிகளுடன் கலந்து செய்யாததால் வந்த குற்றம் தன்ன தென்று நினையாமல் அம்மா திரிமார் மேலேற்றி, அவரைக் கோபித்தலால் அதற்குப் பயந்து அம்மந்திரிமார் தன்னை விட்டு நீங்கவே, அக்குற்றம் தீரும் விதமும் இராச்சியபாரந்தாங்கும் விதமும் இல்லாதவனாதலா லென்க.

4. அரசன் அஞ்சுஞ் செயலும், அது செய்தாலடைவதும்.
(9) முன்னே தனக்கொரு கா வலிடமாகக் கோட்டை முதலியவைகள் செய்து வைத்துக் கொள்ளாத அரசன் யுத்தம் வந்த காலத்திலே காப்பு இல்லாமையால் பயந்து விரைவிலே கெடு வான் :

5. அஞ்சுவன செய்தலின் குற்றம்.
(10) கொடுங்கோலனாகிய அரசன் நீதி நூல்களைக் கல் லாதவரைத் தனக்கு மந்திரிகளாக வைத்துக் கொள்வான். அம் மந்திரிகளாகிய கூட்டமல்லாமல் பூமிக்கு மிகுதியாகிய பாரம் வேறில்லையாம். எனவே, நீதி நூல் படியாதவர் மந்திரிகளாவதற்கு அருகால்ல ரென்பதாயிற்று.
------------

58-ஆம் அதிகாரம். கண்ணோட்டம்.

அஃதாவது:- தன்னோடு பழகினவரைக் கண்டால் அவராலே சொல் லப்பட்டதனை மறக்கமாட்டாமை; இது அவர் மேலே கண்ணோட்டிய இடத்து நிகழ்வதாகலால் அப்பெயர் பெற்றது. இது, தாஷணிய மென்றும் முகங்கொடுத்தலென்றுஞ் சொல்லப்படும்.

1. தாட்சணியத்தினது சிறப்பு.
(1) தாட்சணியமென்று சொல்லப் படுகிற மிகவும் பெரிய அழகானது அரசரிடத்தே உண்டாயிருக்கையால் இவ்வுலக மானது உண்டாகின்றது. அரசர் தாட்சணியம் இல்லாதிருந்தால் குடிகள் பயப்படுதலடைந்து புலியைச் சேர்ந்த மானினம் போல் காப்பிடம் பெறாமல் வருந்துவர். தாட்சணியமுடைய அரசரால் குடிகள் பயமில்லாமல் வாழ்தலால் இவ்வுலகம் உண்டாமெனக் கூறி னார்.
(2) தாட்சணியத்தினிடத்தே உலகநடையானது நிகழ்வதா கும். ஆதலால் அத்தாட்சணியம் இல்லாதவர் உண்டாயிருத்தல் எதற்கென்றால், பூமிக்குப் பாரமாவதற்கன்றி வேறில்லை. (உலகநடை யாவது : உபகாரஞ் செய்தல், காப்பாற்றல், பிழை பொறுத்தல் முதலானவைகள்; அவை தாட்சணியம் இல்லாரிடத்து உண்டாகா மையால் அவர் தமக்கும் பிறர்க்கும் பயன்படாரென்பது பற்றி, அவரைப் பூமிக்குப் பாரமென்று கூறினார்.)

2. தாட்சணியஞ் செய்யாத கண்ணின் குற்றம்.
(3) இராகமானது பாடற் றொழிலுடன் பொருத்தமில்லை யானால் என்ன பயனுடையதாகும். அது போலக் கண்ணானது தாட்சணியம் இல்லாத இடத்து என்ன பயனுடையதாகும்.
(4) பொருந்தும் அளவால் (கூடுமான மட்டும்) தாட்சணியம் இல்லாத கண்களானவை முகத்தினிடத்து உள்ளவை போலக் கண்டோர்க் குத் தோன்று தலை அல்லாமல் வேறே என்ன பயனைச் செய் யும். பொருந்தும் அளவாலென்றதனால் அளவுக்கு மிஞ்சிய தாட்சணியத்தை விலக்கியவாறு காண்க.
(5) ஒருவனுடைய கண்ணுக்கு அணியும் ஆபரணமாவது தாட்சணியமாகும். அவ் வாபரணம் இல்லையானால், அக்கண் புண்ணென்று அறிவுடையோரா லறியப்படும்.

3. தாட்சணியஞ் செய்யாதவரது இழிவு.
(6) தாட்சணியம் செய்தற்குரிய கண்ணோடு பொருந்தி பிருந் தும் அத்தாட்சணி பம் இல்லா தவா நடந்து திரிபவராயிருந்தா லுப்பாண்ணுடன் பொருந்தி நின்ற மாத்தினை யொப்பாவர்.
(7) தாட் , ரிபா இலல தவா கண்ணி லலாதவராவர். தாட்சணியம் உள் வ வ ணணுடையராவர்; இவ்விரண்டுக்கும் நெருப்பில்லாத இ த துப் புகையில்லா யையும் புகையுள்ள இடத்து நெருப்புண்மை யும் போது ரொ ள ; அறி தோ! 4 நாளப் பிரமாணங் கூறுவர்.

4. தாட்சணியம் செய்யும் விதம்.
(8) : கி வ லு, கலரிய தமது தொழில் அழியாமல் தட்டணி, ரெப்பவலல் அரரருக்கு இந்த உலகம் உரியதாந் தன்மையுடையதா தா. எனவே, தம்மோடு பழகினவர் நீதிக்கு விபராதமாகப் பிறருக்குக துன்பஞ் செய்த இடத்து, அவரைத் த/ சாத்தினாள் தண்டிக்காமல் விடக்கூடாதென்பதாயிற று. அ , மேலே ல ய தா ! ரிபம் செய்யவேண்டியது நீதி த ! த இ ந்தி லொ ) ர.
(ரு. தம்முடன் பழகியவரை அரசர் தண்டியாமல் கண்ணோட் டஞ் செய்யவேண்டுவது பிறர்க்குக் குற்றஞ் செய்த இடத்தல்லாமல தமக்குக் குற்றஞ் செய்த இடத்தென்பது.
(9) தம் மை வருத்தப்படுத்தும் இயல்புடையவரிடத்துத் தட் ணியா ? தடையவராக, அக்குற்றத்தைப் பொறுக்கும் இபல பெ யாககுத் தலைமையான இயல்பாகும். (இயல்பு:குணம்.)
(10) 7 வராலும் விரும்பத்தக தாட்சணியத்தை வேண்டுவோர் பரனெ னா தா 11 கு ந எசிடக் கண்டும், தாட்சணிய மறுக்கமாட்டா மல அநாதரையுண்டு பின லும் அவரோடு பொருத்துவர். இதனால், இங்ஙனம் கூறியதாட Fணியம் பிறருக்குக் குற்றஞ் செய்த இடத் அக் கூடாதென்பதாக.
----------

59 - ஆம். அதிகாரம். ஒற்றாடல்.

அஃதாவது:- பகைவர், அயலோர் , நட்பினர் என்று மூன்று திறக் தாரிடத்தும் நிகழ்ந்தவை அறிதற்கு ஒற்றரையாளுதலாம். முன் சொல் லப்பட்ட இலக்கணழடைய அரசனுக்குத் தன் நாடுகாக்கும் போதும், பிறர் நாடு பிடிக்கும்போதும் வேண்டுமவைகளைச் சொல்லத் தொடங்கினா ராதலால் அவ்விரண்டு காரியங்களுக்கும் அவர் அவசியம் வேண்டப்படு வாரென்பதறிக. ஒற்றர் - மேற்கூறிய மூவகையாரிடத்தும் நிகழ்ந்தவற்றை அறிந்து வந்து சொல்லுவோர்.

1. ஒற்றன் சிறப்பு.
(1) ஒற்றனும் புகழ் நிறைந்த நீதி நூலுமாகிய இரண்டும் தன்னிரண்டு கண்களாக அரசன் தெளியவேண்டும். ஏனென்றால், ஒற்றனானவன் கண்ணுக்கெட்டாத தூரதேசத்திலே நடந்தவை களைப் போய்க் கண்டுவந்து, அறிவித்தலாலும் நூலானது தன்ன றிவுக்கு, எட்டாதவைகளை யெல்லாஞ் சொல்லி அறிவித்தலாலு மென்க. இவ்விரண்டையும் முறையே ஊனக்கண்ணும் ஞானக் கண்ணுமாகக் கொள்க.

2. ஒற்றனாலாகிய பயன்.
(2) பகைவர் அபலோர் நட்பினராகிய எல்லாரிடத்தும் உண்டாவனவாகிய கல்லவையும் தீயவையுமாகிய சொற்களையும் செயல்களையும் நாள்தோறும் ஒற்றனாலே விரைவாக அறிதல் அரசு னது தொழிலாம்.
ங. ஒற்றனில்லாத இடத்து வரும் குற்றம்.
(3) ஒற்றனைக் கொண்டு மேற்கூறிய மூவகையாரிடத்தும் நடந்தவைகளை அறிந்து வரச் செய்து, அர், நடந்தவைகளால் அறியும் பபனை ஆராய்ந்து அமிபாத அரசனானவன் அடைய இருந்ததாகிய வெற்றியானது இல்லை யாகும்.

3. ஒற்றனது இலக்கணம்.
(4) தம்முடைய காரியஞ் செய்வோர், சுற்றத்தார், பகை வர் என்று சொல்லப்பட்ட எல்லாரையும் சொல்லாலும், செபலா லும் ஆராய்பவனே ஒற்றானாவான், எனவே, இம்மூவரும் ஒவ் வொரு நிமித்தம் பற்றி விரோதஞ் செப்வா ரென்பதாயிற்று.
(5) எவருடைய செய்தியை அறிதற்குச் சென்றானோ? அவராலே சந்தேகிக்கப்படாத பார்ப்பார் வணிகர் முதலானவர் வடிவத்தோடு பொருந்திநின்று, அவர் சந்தேகித்து, அறியத்தொடங்கினால் கோபி த்துப் பார்க்கின்ற அவர் பார்வைக்குப் பயப்படாமல் நின்று, அவர் தன்னிடத்துச் சாம பேக தாள தண்டங்களைச் செய்து கேட்டா அம் தன் மனத்திலுள்ளவைகளைச் சொல்லாதிருக்க வல்லவனே ஒற்றனாவான்.
(6) மேற்கூறிய வடிவத்தோடன்றி, முற்றத்துறந்த முனிவரும் தீர்த்த யாத்திரை முதலிய செய்யும் விரதவொழுக்கத் தோருமாகிப் போகக் கூடாத இடங்களிலெல்லாம் போய் ஆராய வேண்டியவைகளை யெல்லாம் ஆராய்ந்து, அவ்விடத்திலுள்ளவர் சந்தேகித்துப் பிடித்து, என்ன துன்பம் செய்து கேட்டாலும் தன்னை இன்னானென்று வெளிப்படுத்தாகனனே ஒற்றனாவான்.
(7) இதுவன்றி, இரகசியமான செயல்களை மேற்சொல்லப்பட்ட வருக்கு உரியவர்களாலே கேட்கும் வல்லமையுடையவனாகிக் கேட் டறியப்பட்ட அச் செயல்களிலே பின் சந்தேகிக்கப்படுதல் இல்லாத வனே ஒற்றனாவான்; இதனால், கேட்டறியப்பட்டவற்றை ஒற்றன் சந்தேகித்து வந்து சொன்னால் அரசனாவன் மேலே இன்னது செய்ய வேண்டுமென்று துணியப்படாமையால் சந்தேகப்படாமல் தெளி வாக அறிந்துவரவேண்டுமென்பது கருத்து.

5. ஒற்றரை ஆளும் விதமும், அவராலே நடந்தவை அறியும் விதமும், அறிந்தால் அவருக்குச் சிறப்புச் செய்யும் விதமும்.
(8) ஒரு ஒற்றனாலே மறைவாயறிந்து வந்து, அறிவிக்கப் பாட்ட காரியத்தையும் பின்னும் ஒரு ஒற்றனாலும் அறிந்து வரச் செய்து, இருவர் சொல்லும் ஒத்திருத்தல் கண்டு கொள்ளவேண் டும். ஏனென்றால், ஒற்றன் பகைவர் முதலியவரோடு கலந்து வந்து மாறுபடக் கூறினாலும் கூறுவர். ஆதலாலென்க; இதனால், ஒருவன் சொல்லையே நம்பலாகாதென்பது கருத்து.
(9) அரசன் ஒற்றரை ஆளுமிடத்து, ஒரு ஒற்றன் மற்றொரு ஒற்றனை அறியா திருக்கும்படி ஆளவேண்டும். அப்படி ஆளப்பட்ட ஒற்றர்களுள் ஒன்றையறிதற்கு விடப்பட்ட மூவருடைய சொற்களும் பயனாலொ த் திருக்குமானால் அப்பொருள் மெய்யென்று தெளியவேண்டும்,

ஏனென்றால், தவனை ஒருவனறிந்தால் தங்களிலே கலந்து பேசி ஒப்பச் சொல்வார் ஆதலா லென்க. அப்படிச் சொல்லும்போது மெய்ம்மை வெளிப்பட மாட்டாதாம்.
(10) மறைந்தவைகளை அறி ந்து வந்து சொல்லிய ஒற்றனிடத்து அரசன் சிறப்பாகிய நன்கொ டெபைப் பிறரறியும்படி செய்யாதிருக்க வேண்டும். அறியும்படி செய்தால், தன்னுள்ளே அடக்கமாக வைத்திருக்கப்பட்ட இரகசி பங்களைத் தானே வெளியிட்டவனாவான். எப்படி யென்னில், நன் கொடை பெற்ற இவன் யாவன்? இவனுக்கு இவ்வளவு அரசன் செய்யவேண்டுவதென்னை? என்று கேட்பாரும் சொல்வாரும் யூகித்தறிதலா லென்க.
--------

60-ஆம் அதிகாரம். ஊக்கமுடைமை.

அஃதாவது:-- மனமானது தொழில் செய்தலிலே எழச்சி யுடைத் தாதல்.

1. தான் அடைந்து நின்ற பொருளினும் அதற்குக் காரண மாகிய ஊக்கஞ் சிறந்தது.
(1) ஒருவரை நெருடையவ ரென்று சொல்லுதற்குர் சிறந்தது மன எழுச்சி (வாக்கா) ஆம். அமமன எழுச்சியில்லாதவர் முன் பொருளடைந்திருந்தாலும் அப்பொருளுடையவ ராகமாட் டார். ஏனென்றால், மன ஊக்கம் இல்லார் அப்பொருளைக் காப்பாற்ற மாட்டாமல் இழந்து விடுவார்.ஆதலாலென்க.
(2) ஒருவனுக்கு மன எழுச்சி - டைமையே நிலைபெற்ற உடைமையாம். பொருளுடைமை நிலை பெயரால் நீங்கி விடும். எனவே, மன எழுச்சியானது உள்ளத் தின் குணமாதலால் நிலை பெறுதலும், பொருளானது உடம்பினும் வேறாகி, அழிவதா யிருக்கையால் நிலை பெறாமையும் நன்கு விளங்கு தல் காண்க.
(3) நிலை பெற்றதாகிய மன எழுச்சியைக் கைப்பொரு ளாக உடையவர் கைப்பொருளை யிழந்தவரானாலும், இழந்து விட் டோமென்று மனஞ் சுழலமாட்டார். (4) என்னவந்தாலும் தள சாதமன ஊக்கம் உடையவனிடத்தே பொருளானது வழி கேட்டுக் கொண்டுபோகும். தானே வந்து சேருமென்பதற்கு வழி கேட்டுக் கொண்டு போகுமென்று சொல்லினர்.

2. ஊக்கமுடையவரது உயர்ச்சி.
(5) நீர்ப்பூத் தாள்களின் நீளமானவை, நின்ற நீரினது அளவரம்; அது போலப் பொருள், படை முதலியவற்றால் மனிதர் கள் உயர்ச்சியானது அவரது மன ஊக்கத்தின் அளவாகும்.
(6) அரசரானவர் நினைப்பதெல்லாம் தமது உயர்ச்சியையே நினைக்க வேண்டும்; அவ்வுயர்ச்சியானது ஊழ்வகையினாலே கூடாமற் போ னாலும் அந்நினைப்பு அவ்வுயர்ச்சியைத் தள்ளாமைக் குணமுடைய தாம். எப்படி யென்றால், ஊழ்தள்ளினும் முயற்சியிலே அவர் தவ றுதலில்லாமல் நல்லோரால் பழிக்கப்படாமையாளென்க. இதனால், மேலே மனவூக்கத்தினளவு உயர்ச்சி யென்பது உறுதி செய்யப் பட்டது.
(7) யானையானது தன் மேனியிலே அழுந்துகின்ற பாணத்தினாலே புண்பட்ட இடத்துத் தளராமல் தன் பெருமையை நிலை நிறுத்தும்; அது போல மன எழுச்சியுடையவர் தாம் நினைத்த உயர்ச்சிக்கு அழிவு வந்த இடத்துத் தளராமல் தம் பெருமையை நிலை நிறுத்துவார். எனவே, தளராத இடத்து நினைத்த உயர்ச்சி கைகூடுமென்பதாயிற்று.

3. ஊக்கம் இல்லாதவரது இழிவு.
(8) மனவூக்கம் இல்லாத அரசர் இவ்வுலகத்தாருள் வண் மையையுடையே மென்று தம்மைத்தாமே மதிக்கும் மதிப்பைப் பெறமாட்டார். (மதிப்பாவது: முயற்சி, பொருள், கொடை முதலி யவை உளவாதல்.)
(9) யானையானது எல்லா மிருகங்களுக்கும் பெரிய உடம்புடையது. அதுவல்லாமலும், கூர்மையான கொம் புகளையு முடையது. ஆனாலும், புலியானது தனக்கு எதிர்ப்பட் டால் அதற்குப் பயப்படும்; இதனால், பகைவரைக் காட்டினும் மிகு ந்த சரீர வலிமையும் வெல்லுதற் கேற்ற ஆயுதமும் உடையவராயி னும் அரசர் ஊக்கமில்லாரானால் அவ்வூக்கம் உடையவருக்குப் பய ப்படுவ ரென்பது காண்க.
(10) ஒருவனுக்குத் திட்டமான அறி வாவது: மனவூக்க மிகுதியாம். அவ்வூக்கமில்லாதவர் மரங்களாவர். இயற்கையாகிய சாதி மரங்களுக்கும் இம்மாங்ளுக்கும் வேறுபாடு யாதெனில், பழ முதலானவையும், ஆலயம் தேர் முதலியவற்றிற்கு உறுப்பாதல் முதலியவையும் இல்லாமைக்கிடமாக மக்கள் வடிவத
தைத் தாங்கி நிற்றலாம். இதுவன்றி வேறில்லை.
--------

61. ஆம் அதிகாரம். மடியின்மை.

அஃதாவது:- நினைக்கப்பட்டவைகளைச் செய்யும் போது சோம்புத லில்லாமை.

1. சோம்பலினது தீமை.
(1) தான் பிறந்த குடியாகிய மழுங்கா விளக்கானது ஒரு வனது சோம்பலாகிய இருள் நெருங்கக் கெட்டு விடும்.
(2) தாம் பிறந்த குடியை மேன்மேலுயரும் நற்குடியாக வேண்டுவோர் சோம்பலைக் கொடியதாக நினைத்து நடக்க வேண்டும். அப்படி நடவாமற் போனால் குடி அழியுமென்பது கருத்து.
(3) மடிக்கத் தகுவதாகிய சோம்பலைத் தன்னுள்ளே கொண்டு நடக்கும் அறிவில் லாதவன் பிறந்த குடியானது, அவனைப் பார்க்கினும் விரைந்து கெடும். அஃகாவது: ஆக்கத்திலே பிற்படினும் கேட்டிலே முற்படு மென்றபடி. (4) சோம்பலிலே வீழ்தலால் திருத்தமாகிய முய ற்சி இல்லாதவராயினவர்க்குக் குடியும் அழிந்து குற்றமும் பெருகும்.

2. சோம்பலின் குற்றம்.
(5) சோம்பலும், விரைவிலே செய்ய வேண்டியவைகளை நீட்டித்துச் செய்யும் இயற்கையும், மறதியும், நித்திரையுமாகிய இந் நான்கும் இறக்கும் இயல்பினை யுடையவர் விரும்பி யேறும் மரக்க லம் (கப்பல்) ஆகும். சோம்பலோடு மற்றை மூன்றுந் தமோகுணத் திலே தோன்றி உடனிகழ்வன. ஆதலால், சோம்பலோடு சேர்த்து அம்மூன்றும் எண்ணப்பட்டன. மரக்கலமானது மரணஞ் சமீபித்த வருக்குப் பெருக்கந் தருவது போலத் தோன்றி, அவர் விரும்பி யேறிய இடத்துக் கடலில் எப்படி விழுத்துமோ அப்படியே இந்த நான்கும் துன்பஞ் சமீபித்தவருக்கு இன்பஞ் செய்வாரைப் போலத் தோன்றி, அவர் அவைகளை விரும்பிக்கொண்ட இடத்துத் துன்பத் திலே விழுத்துத லறிக.
(6) நில முழுதும் ஆண்ட அரசரது செல்வ மானது தானே வந்து சேர்ந்த இடத்தும் அதனால் மாட்சிமைப்பட்ட இன்பத்தைச் சோம்பலுடையவர் அடைந்தவில்லையாம். ஏனெனில், சோம்பலால் அச்செல்வமானது காக்கும் முயற்சி யில்லாமல் அழிவ தாலெனக.
(7) சோம்பலை விரும்புதலாற் பெருமை பொருந்திய முயற்சி யில்லாதவர் நட்பாளர் கண்டித்துப் புத்தி சொல்லும்போது கேளாமல் பின்பு இகழ்ந்து பேசுஞ் சொல்லைக் கேட்பர்; அஃதாவது: செல்வங் கெட்ட இடத்துநான் சொல்லியுங் கேட்டீரில்லையே கேளா மையால் கெட்டீரென்று வசை கூறுவதை எதிர் பேசுதற் கிடமில் லாமல் கேட்டிருத்தலாம்.
(8) சோம்பற்றன்மையானது குடிக்க ளைக் காக்குந் தன்மை யுடைய அரசனிடத்தே தங்கு மானால் அது தன் பகைவர்க்கு அடியனாந் தன்மையுள்ளே யடைத்து விடும்.

3. சோம்பலில்லாதவன் அடையும் பயன்.
(9) ஒருவன் சோம்பலை ஆளுந் தன்மையை ஒழிக்கவே அவனது குடியுள்ளும் ஆளுந் தன்மையுள்ளும் வந்த குற்றங்கள் அழியும். (சோம்பலை ஆளுந் தன்மையாவது: தமோகுணம் அதி கப்படுதல்.)
(10) சோம்பலில்லாத அரசனானவன் தன்னடியி னாலே எல்லா உலகத்தையும் அளந்த கடவுள் கடந்த விரிந்த நிலம் முழுவதையும் ஒருசேர அடைவானென்பதாம்.
---------

62 - ஆம்: அதிகாரம். ஆள் வினையுடைமை.

அஃதாவது:- இடைவிடாத மெய்ம் முயற்சியுடையனாதல்.

1. முயற்சியது சிறப்பு.
(1) தமது சிறுமையை நோக்கி நாம் இத்தொழிலை முடித் தல் அருமையுடைய தென்று நினைத்து மனத்தளர்ச்சி அடையா திருக்கவேண்டும். அத்தொழிலை முடித்தற்கு ஏற்ற பெருமையை முயற்சியானது உண்டாக்கும். எனவே, விடாது முயற்சி செய் தால் அரிய தொழில்களும் எளிதிலே முடியு மென்பதாயிற்று.
(2) ஒரு தொழிலைச் செய்து, அத்தொழிலின் குறையைச் சோம்பலாற் செய்யாது விட்டவரை உலகம் மதியாமல் விட்டது. ஆதலால், செய் யத் தகுந்த தொழிலினிடத்தே செய்த லில்லாமற் சும்மா இருத்தலை நீக்க வேண்டும்.
(3) எல்லாருக்கும் உபகாரஞ் செய்தலென்னு மேம்பாடானது முயற்சி யென்னும் உயர்ந்த குணத்தினிடத்து நிலைபெற்றதே யாகும்.


2. முயற்சியில்லாதவனது குற்றம்.
(4) முயற்சி யில்லாதவன் உபகாரியாந் தன்மையானது படையைக் கண்டாற் பயப்படும் பேடியானவன் அச்சேனையினிடத் தே கையில் வாளாயுதத்தை ஆளுதற்றன்மை போலக் கெடுவதா கும். எனவே, உபகாரஞ் செய்தற்கு வேண்டிய கருவி, முயற்சி யென்பதாயிற்று.

3. முயற்சியுடையவனது நன்மை.
(5) தனக்கு இன்பத்தை விரும்பாதவனாகித் தொழில் முடித்தலை விரும்புவோன் தன் சுற்றத்தாரும் நட்பினருமாகிய ரது பாரத்தின் துன்பத்தை ஒழித்து, அப்பாரத்தைத் தாங்கும் தூணாவன. இதனால், காரியமாகிய இன்பத்தை விரும்பாமல் கார ணமாகிய முயற்சியை விரும்பு வோனே பிறருடைய துன்பத்தை நீக்குவதற்கு உரியவ னென்பது ஆயிற்று.

4. முயற்சியின்மைக்கும், உடைமைக்குக் காரணங்கள்.
(6) அரசரிடத்தே உண்டாகிய முயற்சியானது அவரு டைய செல்வத்தை வளர்க்கும். அம்முயற்சி யில்லாமையானது தரித்திரத்தைக் சேரச் செய்து விடும். தரித்திரம் வந்த இடத்துப் பகைவரால் அழிவரென்பதாம். இங்கே செல்வமென்றது மந்திரி முதலிய ஆறு அங்கங்களை.
(7) ஒருவனுடைய சோம்பலினிட் த்தே கரிய மூதேவியானவளிருப்பாள். சோம்பலில்லாதவன் முய ற்சியினிடத்தே சீதேவியானவ ளிருப்பாள் என்று அறிந்தோர் சொல்லுவர்.

5. ஊழினாலே துன்பம் வந்தாலும் முயற்சி விடத்தக்கதன்று.
(8) பயனைத் தருவதாகிய ஊழில்லாமை யாவருக்கும் பழியாகாது. அறியவேண்டு-மவைகளை அறிந்து தொழில் செய்யா மையே பழியாகும். எனவே, விடாது முயற்சி செய்யவேண்டு மென்றதாயிற்று.
(9) முயற்சி செய்த தெ ரில் ஊழ்வினை வல. K யால் நினைக்கப் பட்ட பயனைத் தராதாயினும் முயற்சியானது தல.. கிடமாகிய உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியளவு பயனைத் தரும். இதனால், ஊழாலான இடத்தும் ஆகாத இடத்தும் பாழ்படா
மையால் ஊழை நோக்கிச் சும்மா இராமல் முயற்சி செய்யவேண்டும் மென்பது பெறப்பட்டது.
(10) ஊழ் பயனை விலக்குவதற்கு இளை யாது, ஆலோசனையிலும் செயலிலும் குற்றமற மேலு மேலு முயற்சி செய்வோர், பயனை விலக்குவதாகிய அவ்வூழையும் புறங்கொடுத் தோடச் செய்வர். எனவே, ஒருகால் இருகால் தவறினும் பல காலு முயற்சி செய்தால் பயனடைவா ரென்பதாம் இதற்குச் சாட்சி யாக, ராபர்ட் புரூஸ் என்னும் ஆங்கில அரசனொருவன் ஆறு தரம் யுத்தத்துக்குச் சென்று தோல்வியடைந்து மனந்தளர்ந்து ஒருவீட் டில் வந்திருக்கும்போது, அந்த வீட்டினது முகட்டில் வலைநெய்ய எண்ணிய சிலம்பிப் பூச்சியொன்று தனதுவாயினின்றும் இழைக்கப் பட்ட நூலினது ஒருமுனையை ஒரு உத்திரத்திற் கட்டி மற்றொரு முனையை மற்றொரு உத்திரத்தில் தொடுக்க அந்நூலில் ஊஞ்சலாடி ஆறுமுறை முயன்றுங் காரிய சித்தி பெறாமல் ஏழாவது முறை அதிவேகத்துடன் ஊஞ்சலாடி அந்நூலை உத்திரத்திற் சேர்த்ததைக் கண்ணிமையாமற் பார்த்துக் கொண்டிருந்து, ஆறுதரம் அவசயப் பட்ட தனது நிலைமையும் அவ்வண்ணமே ஆகுமென்று தீர்மானித்து ஏழாவது முறை சண்டைக்குச் சென்று வெற்றியடைந்து ஸ்காட் லண்டின் என்னுந் தேச சுவாதீனத்தைப் பெற்றானென்னும் சரிதம் வெள்ளிடை மலைபோல வெளிப்பட்டுக் கிடப்பதைக் காண்க. இச் சரிதம் ஆங்கிலம் படித்த ஒவ்வொரு சிறுவர்களுக்குக் கூட நன்றாகத் தெரியும். (வெள்ளிடை - வெளியிடம்)
---------

63 - ஆம் அதிகாரம். இடுக்கணழியாமை.

அஃதாவது:- தொழிலிலேழயல்பவன் ஊழினாலாவது பொருளில் லாமையினாலாவது மெய்வருத்தத்தாலாவது தனக்குத் துன்பம் வந்த இடத்து மனங்கலங்கா திருத்தல்.

1 - ஊழினாலாகிய துன்பத்துக்கு வருந்தாமைக்கு உபாயம்.
(1) ஒருவர் தனக்குத் துன்பமானது தன்னுடைய வினை - னாலே வருமிடத்து அதற்காக மனம் வருந்தாமல் மகிழக்கடவன்.
-------
* இடுக்கண் - துன்பம்.

அத்துன்பத்தை மேலு மேலும் நெருக்கி ஓட்டவல்லது அம்மன் ழ்ச்சிபேயாம். அது போல வேறொன்றுமில்லை.

(2) வெள்ளம் போல் அளவில்லாத துன்பமெல்லாம் புத்தியுள்ளவன் மனத்தினாலே யின்ம மாக நினைத்த அளவிலே அழிந்துவிடும்; இதனால், மனத்தினினைப்பே துன்பமாதற்கும், அது நீங்குதற்குக் காரணமென்றறிக.

2. ஊழினாலாகிய துன்பத்துக்கு வருந்தாமை.
(3.) ஒரு தொழிலைச் செய்யும்போது அதற்கிடையிலே வந்த துன்பத்துக்கு இளைத்து அத்தொழிலை விட்டுவிட நினையாத வர் அத்துன்பத்துக்குத் துன்பத்தை உண்டாக்குவர்.
(4) இடை விடாத முயற்சி செய்த காலத்துந் தடைபட்ட இடங்களிலெல்லாம் வண்டியை இழுத்துச் செல்லுங் கடா மாடுபோலே தொழிலை மேற் கொண்டு செலுத்த வல்லவனை அடைந்த துன்பமானது துன்பப்படும் தலை உடையதாகும். கடா மாட்டை உவமானமாகச் சொன்னது எதனாலென்றால், சேற்று நிலத்தில் வண்டி தடைபட்ட போது, பக்கத் திலே ஒதுங்கியும் மூச்சடக்கியும் கால் மடக்கியும் இழுத்துச் செல்லு தல் போல ஊழால் தொழில் தடைப்பட்டபோது பல உபாயத்தா லும் முயன்று காரியத்தை மேலே நடத்த வேண்டுமென்பது பற்றி யென்க.
(5) மேலு மேலும் துன்பம் வந்தன ஆனாலும், தன்னு டைய முயற்சி விடாதவனை உற்ற அத்துன்பமானது துன்பத்தை யடையும், இவ்விதம் துன்பமானது துன்பத்தை அடையுமென்று பல முறை சொன்னது, நிச்சயமாக அத்துன்பங் கெடுமென்பது விளக்குதற் பொருட்டென்க.

3. பொருளில்லாமையால் வந்த துன்பத்திற்கு வருந்தாமை யும், அதற்கு உபாயமும்.
(6) செல்வம் பெற்ற காலத்திலே இச் செல்வத்தைப் பெற் றோமென்று, உலோபஞ்செய்தலை அறியாதவர் (கொடுத்து உதவி னோர்) செல்வம் இழந்தோமென்று மனத்தினாலே துன்பப்படுவா ரோ? இல்லை. ஏனென்றால், செல்வம் பெற்ற காலத்துக் கொடுத்து உதவியஉதவியை நினைந்து வறுமைக்காலத்து மந்திரி முதலானவர்கள் விட்டு நீங்காதிருத்தலாலென்க. எனவே, ஒருவன் செல்வம் பெறு தல் பிறருக்குக் கொடுத்து உதவிசெய்தற்கு என்பது கருத்து.

4. மெய்வருத்தத்தாலாகிய துன்பத்திற்கு வருந்தாமையும் அதற்கு உபாயமும்.
(7) அறிவுடையார், தேகமானது துன்பமாகிய வாளாயுத த்துக்குக் குறியிடமென்று தெளிந்து, தம்மேல் வந்த துன்பத்தைத் துன்பமாகக் கொள்ளமாட்டார். (தேகமானது துன்பத்துக்குக் குறியீட்மென்று தெளிதலாவது: வினைவசத்தால் வருந்துன்பத்தை அனுபவிக்கவேண்டு மென்று அறிந்தடங்கலாம்.)
(8) தன்னுடம் பிற்கு இன்பமானவைகளை விரும்பாதவனாகி மேற்கூறியவாறு வினை யால் துன்பமடைதல் இயல்பென்று தெளிந்திருப்பவன் தன் முயற் சியினாலே துன்பமடையமாட்டான். இதனால், இன்பத்தை விரும்பி னாலும் துன்பத்தை வினை வசத்தால் வருவது இயல்பென்னாது நீக்கக் கருதினாலும் துன்பமாமென்பது காண்க.
(9) இவ்விதம் வினையி னாலேயின்பம் வந்த இடத்து, அவ்வின்பத்தை அநுபவித்துக் கொ ண்டே மனத்தால் விரும்பாதவன துன்பம் வந்த இடத்தும் அத் துன்பத்தை அனுபவித்துக்கொண்டே மனத்தாலடைய மாட்டான்.
(10) ஒருவன் தொழில் செய்யுமிடத்து முயற்சியால் வருந் துன் யத்தையே தனக்கு இன்பமாக நினைத்துக் கொள்வானாயின் அதனால், தன் பகைவர் நன்குமதித்தற்கு ஏதுவாகிய உயர்ச்சியானது உண்டாகும்.

அரசியல் முற்றிற்று.
இனி, முறையாவே அரசியலை நடத்துதலிலே ஒன்றற்கொன்று துணையாகிய அங்கங்கள் இயல்பை முப்பத்திரண்டதிகாரத்தாலே சொல்லத்தொடங்கி, அவ் அங்கங்கள் ஆறனுள்ளும் ஆக்கினாசக்கரத். தைச் செலுத்துதவிலே அவ்வரசனுக்குச் சமமாகிய அமைச்சனது. இயல்பு, பத்ததிகாரத்தினாலே சொல்லத் தொடங்கி, முதலிலே அமைச்சு சொல்லுகின்றார். (அமைச்சு - மந்திரியின் தன்மை),
----------

64 -ஆம் அதிகாரம். அமைச்சு.

அஃதாவது:- மந்திரியினது தன்மை. தன்மையாவன : அவன் குணங் களுஞ் செயல்களும்.

1. மந்திரிகளது குணத் தன்மை.
(1) தொழில் செய்யும்போது அதற்கு வேண்டுஞ் சாதனங் களாகிய சேனையும், பொருளும், அத்தொழிலைத் தொடங்குங்காலமும், அத்தொழில் தொடங்கும் உபாயமும், அவ்வுபாயத்திலே செய்யப் படும் அரிய தொழில்களும் பொருந்த எண்ணவல்லவனே மந்திரி யாவான்.
(2) தொழில் செய்தலிலே சோர்வில்லாமையும், குடிகளைக் காத்தலும், நீதி நூல்களைக் கற்று, விதிவிலக்குகளை அறிதலும், முயற் சியும் முன் சொல்லப்பட்ட அங்கங்கள் ஐந்துடனே திருந்த உடைய வனே மந்திரியாவான்.
(3) யுத்தம் வந்த இடத்துப் பகைவர்க்குத் துணையாயினவரைப் பிரிக்க வேண்டுமானால் பிரித்து விடுதலும், தம் மிடத்துள்ளோரைப் பிரிந்து போகாமல் கொடையினாலும் இன் சொல்லாலுங் காத்துக்கொள்ளுதலும், தம்மையும் தம்மைச் சேர்ந்த வரையும் பிரிந்து போனவரை மறுபடி பொருத்த வேண்டுமானால் பொருத்தலும் வல்லவனே மந்திரியாவான்.
(4) ஒருகாரியச் செய் கை பலவாறாகத் தோன்றினால், அவற்றுள்ளே ஆகுஞ்செய்கையை அறிதலும், அச்செய்கை செய்யும் போது முடியுந்திறத்தை நாடிச் செய்தலும், சிலரைப் பிரித்தல் கூட்டல் செய்யுமிடத்து அவர்க்கு இதுவே செய்யத் தக்கதென்று துணிவு பிறக்கும் விதம் சொல்லு தலும் வல்லவனே மந்திரி யாவான், (5) அரசனாலே செய்யப்படும் தருமங்களைத் தெரிந்து தனக்கேற்ற கல்வியாலே நிறைந்தமைந்த சொல்லையுடையவனாகி எந்த நாளிலுந் தொழில் செய்யுந் திறங்களை அறிந்தவன் அரசனுடைய ஆலோசனைக்குத் துணையாவான். எந்த நாளுமென்றது தன்னரசன் வளஞ்சுருங்கிய காலமும், பெருகிய காலமும், இவ்விரண்டு காலமும் என்றபடி.

2. மந்திரிகளது சிறப்பு.
(6) இயற்கை யாகிய புத்தி நுட்பத்தைச் செயற்கையாகிய நூலறிவோடு உடைய மந்திரிகளுக்கு அதிக நுட்பத்தையுடைய ஆலோசனைகளாய் முன்னிற்பவை யெவை யுள்ளன. ஒன்று மில்லை.

3. மந்திரிகளது செயல்.
(7) நூல் வழியினாலே தொழில் செய்யுந் திறத்தை அறிந்த இடத்தும் உலகத்திலே அப்போதப்போது நடக்கின்ற இயற்கை யைத் தெரிந்து, அதனோடு பொருந்தச் செய்யவேண்டும். எனவே, நூல்வழியே செய்வது உலகவழியோடு பொருந்தாதாகில் அவ்வுல கம் பழிக்குமென்பதாயிற்று.
(8) அரசன் அறிந்து சொல்லினவ ரது அறிவையுங் கேளாமல் தானும் அறியானேயாயினும் அக் குற் றம் நோக்கிக் கைவிடாமல் அவ்வரசனுக்கு உறுதியானவைகளைச் சொல்லுதல் மந்திரியினது கடமையாகும்.

4. மந்திரிகளுள் விடப்படுவாரது குற்றம்.
(9) பக்கத்திலிருந்து தீங்கு செய்ய எண்ணும் மந்திரி ஒரு வன் அரசனுக்கு எழுபது கோடி பகைவரிலுங் கொடியவனாவான். ஏனென்றால், புறப்பகையா யிருக்கின்ற அவ்வெழுபது கோடி பகைவருக்குத் தப்பினாலுந் தப்பலாம். உட்பகையாயிருக்கின்ற இவ் வொரு மந்திரிக்குத் தப்பலாகாது ஆதலாலென்க.
(10) செய்யப் படுந் தொழில்களிலே முடித்தற்கேற்ற கூறுபாடு இல்லாதவர் அவை களை முன்னே முறையாக ஆலோசித்து வைத்திருந்தாலும் செய்யும் போது அவைகள் முடிவில்லனவாகவே செய்யாநிற்பர். (கூறு பாடாவன: வந்த வந்த இடையூறுக்குத் தக்க தக்க பரிகாரம் - அறிந்து செய்தலும், தாம் திடமுடையவராதலுமாம்.) இதனால், ஆலோசனை யிருந்தாலும் முடிக்கவல்லமையில்லாதவரும் உண்டென் பதறிக.
--------

65-ஆம் அதிகாரம். சொல்வன்மை.

அஃதாவது:- தானினைத்த தொழில் முடியும் வழியால் வார்த்தை சொல்ல வல்லவனாகுதல்.

1. சொல் வல்லமை மந்திரிகளுக்கு அவசியம் வேண்டும்.
(1) மந்திரிகளுக்கு அவசியம் வேண்டிய குணமாவது, நாவாலுள தாகிய நலமென்று சிறப்பித்துச் சொல்லப்படும் நலத்தினை யுடையராதல். அந்த நலமானது வேறுள்ள நலங்களுள் ஒன்றாக அடங்குவதன்று. எல்லா நலங்களுக்கும் மேலானதாகும். ஆதலால், ஏனையோருக்கும் இது அவசியம் வேண்டுவதாம். (நாவாலுளதாகிய நலமாவது : இனிய சொற்களைச் சொல்லி உலகத்தை வசமாக்குதல்.)
(2) தம்மரசனுக்கும் அங்கங்களுக்கும் பெருக்கமும் அழிவும் சொல்லால் வருதலால் மந்திரிகள் அச்சொல்லினிடத்துச் சோர்வு உண்டாகாமல் காத்து வரல் வேண்டும். எனவே, நல்ல சொல்லால் பெருக்கமும், தீய சொல்லால் அழிவும் உண்டாமென்ய-தாயிற்று.

2. சொல்லினது இலக்கணம்.
(3) நட்பாயேற்றுக் கொண்டவரைப் பின்னர் வேறு படாமல் வசப்படுத்துங் குணங்களை விரும்பி, பகையாயேற்றுக் கொள்ளாதாரும் பின்னர் அப்பகைமை நீங்கி, நட்பினையிச்சிக்கும் வண்ணம் சொல்லப்படுவதே மந்திரிகளுக்குச் சொல்லாம். (குணங்க ளாவன : குற்றமில்லாமை, சொற்சுருங்கல், பொருள் விளங்கல், இனி மையுடையதாதல், பெரும் பயன்தருதல் ஆம்.)

3. சொல்லைச் சொல்லும் விதம்.
(4) மந்திரிகள் அப்படிப் பட்ட சொல்லைத் தம்முடையவும் கேட்பாருடையவுமாகிய குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், செல்வம், உருவம், பருவம் என்பவைகளால் வரும் தகுதி வேறுபாடுகளால் தமக்கும் அவர்க்கும் உள்ள உயர்வு தாழ்வுகளை அறிந்து, அவரவருக் குத் தகுந்த முறைப்படி சொல்லவேண்டும். அப்படிச் சொல்லுதற்கு மேற்பட்ட தருமமும், பொருளுமில்லை.
(5) தாம் சொல்லக்கருதிய சொல்லை வெல்ல வல்ல சொல்லாகிய பகைவரது சொல் இல்லாமை யை அறிந்து சொல்லவேண்டும். (வெல்லுதலாவது: குணங்கள் மேற்படுதல்.)
(6) பிறர் மேலுமேலும் கேட்க விரும்பும்படி தாங்கள் சொல்லி, பிறர் தமக்குச் சொல்லுஞ் சொல்லினது பயனைக் கொள்ளுதல் மந்திரியிலக்கணத்திலே குற்றமற்றவரது கொள்கை யாகும்.

4. சொல்லுதல் வல்லாரது சிறப்பு.
(7) தான் எண்ணிய காரியங்கள் பிறர்க்குப் பொருந்தா தனவேனும், அவற்றை அவர் நம்பும்படி சொல்ல வல்லவனாகி, ஒன் நிலுஞ் சோர்வில்லாதவனாய்ச் சபைக்குப் பயப்படாதவன் எவனோ? அவளை மாறுபாட்டால் வெல்லுதல் எவருக்குங்கூடாது. (சோர்வா வது: சொல்ல வேண்டுவதை மறந்திருத்தல்.)
(8) சொல்லப்படுங் காரியங்களை ஒழுங்குபடுத்தி இனிதாகச் சொல்லுதல் வல்லவரைப் பெற்றால் அக்காரியங்களை உலகம் விரைவாக ஏற்றுக் கொள்ளும். (ஒழுங்குபடுத்தலாவது முன்னே சொல்ல வேண்டுவதையும், பின்னே சொல்ல வேண்டுவதையும் தெரிந்து வைத்துக் கொள்ளுதல்.) இவ் விதஞ் சொல்ல வல்லவர் நூறாயிரம் பேரி லொருவராம், இவ்வாறு வார்த்தைக்கு நூறாயிரத் தொருவரென்று வடநூலாருங் கூறுவர்.

5. சொல்லமாட்டாரது இழிவு.
(9) குற்றமற்றவையாய்ச் சிலவாகிய சொற்களை மேற்சொல் லியபடி சொல்லத் தெரியாதவர் பலவாகிய வார்த்தைகளைப் பேசுவர். (குற்றம்: முன் சொல்லப் பட்ட குணங்களுக்கு எதிரானவை.) இவ்வி தம் பலவாகப் பேசுவாரையும் சொல்வன்மையுடையாரென்று சிலர் கொள்வர்.
(10) தாம் கற்ற நூல்களைப் பிறர் அறியும் விதமாக விரித்துச் சொல்லமாட்டாதவர் பூங்கொத்தினிடத்தே மலர்ந்திருந்து மணக்காத பூவையொப்பாவர். ஆதலால் மணமில்லாத பூவை ஒரு வருஞ் சூடமாட்டாரல்லவா? அதுபோல், படித்திருந்தும் பிறரு க்குச் சொல்லத்தெரியாதவர் நன்கு மதிக்கப் படாரென்பதாம்.
----------

66-ஆம் அதிகாரம். வினைத் தூய்மை.

அஃதாவது:- செய்யப்படுந் தொழில்கள் பொருளை மாத்திரமல்லா மல் தருமமும் புகழந்தந்து நல்லவையாதல்.

1. காணப்படுந் துணை நன்மையினுங் கருதப்படுந் தொழில் நன்மை சிறந்தது. (தொழில் நன்மை : வினைத்தூய்மை.)
(1) துணையினது நன்மையானது செல்வம் ஒன்றையே கொடுக்கும். தொழிலினது நன்மையானது இம்மையில் அறம் பொருள் இன்ப முதலானவைகளையும் மறுமையில் தான் விரும்பிய பதவிகளையுங் கொடுக்கும்.

2. பாவமும் பழியுந் தரும் தொழிலைச் செய்யலாகாது.
(2) தம்மரசனுக்கு இம்மைக்குப் புகழையும் மறுமைக்குத் தருமத்தையும் தராத தொழில்களை எக்காலத்தினும் மந்திரிகள் விட்டுவிட வேண்டும்.
(3) தாம் மேலாக வேண்டுமென்று நினைப் பவர் தம்மை நன்கு மதிக்கப்படும் மதிப்பானது கெடுதற்குக் காரணம் மாகிய தொழிலை விட்டுவிடக் கடவர்.
(4) அசைவற்ற தெளிவுடைய வர் தாம் துன்பப்பட்டாலும் அத்துன்பந் தீர்தற்பொருட்டு, முன்னே தமக்குச் செய்தவர்க்கு, தாமும் இழிவான துன்பத்தைச் செய்ய மாட்டார். ஏனென்றால், நமக்கு வருவது வந்தே தீருமாதலால் நாமும் பிறர்க்குத் தீங்கு செய்ய லாகாதென்னும் பொறுமையுடை மையினாலென்க.
(5) நான் செய்தது எப்படிப்பட்ட தீயதென்று பின் தானே வருத்தமடையும் தொழில்களை ஒருபோதுஞ் செய்யா திருக்கவேண்டும். ஒருகால் முன்யோசனை யில்லாமல் மயங்கிச் செய்வானாயின், பின் அதற்காக அவ்வருத்தங்களை யடையாதிருத் தல் நல்லது. ஏனென்றால், தீமையை நீக்க வழி அறியானென்றும் தைரியமில்லாதவ னென்றும், பயனில்லாதவைகளைச் செய்கின்றா னென்றும், தன் பழியைத் தானே தூற்றுகின்றானென்றும் எல்லா ரும் இகழுவராதலாலென்க.
(6) ஒருவன் தன்னைப்பெற்ற தாயி னது பசியைக் கண்டிருக்குந் தன்மையன் ஆயினானென்றாலும், அப் பசியை அவளுக்கு நீக்கும் பொருட்டு, அறிவாலுயர்ந்தோர் நிந்திக் கும் தொழில்களைச் செய்யாதிருக்க வேண்டும். வயது முதிர்ந்த தாய் தந்தையரும் கற்புடை மனைவியும் பசியால் வருந்துங் காலத் தில் தீயவை பலவுஞ் செய்தாயினும், அவர்களைக் காப்பாற்றவேண்டும் மென்று, அற நூலிற் சொல்லப்பட்ட பொது விதியானது பொருள் நூலின் வழி நடத்தலும், அரசர் தொழிற்கு உரியராதலும், நன்கு மதிக்கப்படுதலும் உடைய மந்திரிகளுக்கு ஆகாமைபற்றி, இங்கே மறுக்கப்பட்டது.

3. பாவமும் பழியுந்தருந்தொழிலைச் செய்தல் ஆகாதென்றதற் குக் காரணம்.
(7) உயர்ந்தோ ரல்லாதவர் தீய தொழில்களைச் செய்து, அதனாற் பழியைத் தம்மிடத்திற்கொண்டு, பெற்ற செல்வத்தைக் காட்டிலும் அப்பழியை மேற்கொள்ளாக உயர்ந்தோர் அநுபவிக்கும் மிகுந்த வறுமையே மேலானதாகும்.
(8) நூலறிவுடையோர் தீயவை யென்று தள்ளப்பட்ட தொழில்களைத் தாமுந் தள்ளிவிடாதவராகிப் பொருளைக் குறித்துச் செய்க மந்திரிகளுக்கு அத்தொழில்கள் தூயவை அல்லாமையால், முடியாவாம். ஒருவேளை முடிந்தாலும், பின் துன்பத்தைக் கொடுக்கும்.
(9) ஒருவன் தீயதொழில்களைச் செய்து பிறர் கண்ணீர்விட அவரிடம் பறித்த பொருளெல்லாம் இம்மையிலே தான் கண்ணீர்விடத் தன்னிடம் வேறு சிலர் பறித்துக் கொள்வர். மற்ற நல்ல தொழில்களால் வந்த பொருள்கள் முன்னே இழந்தானாயினும் பின்னே வந்து பயன் கொடுக்கும்.
(10) மந்திரி யானவன் தீயதொழில்களாற் பொருள் சம்பாதித்து, அதனால ரச னுக்குக் காவல் செய்தலானது, பசிய மண் பாத்திரங் தள் நீர் வார்த்து, அதற்குக் காவல் செய்ததனோடொப்பாகும். எனவே, மண் பாத்திர மும் தண்ணீருங் கெடுதல் போல் அரசனும் பொருளுங் கெடுமெனப தாயிற்று.
----------

67-ஆம் அதிகாரம். வினைத்திட்பம்*.

அஃதாவது:- அப் பரிசுத்தமாகிய தொழிலை முடிப்பவனுக்கு வேண்டு வதாகிய மன வலிமையாம்.

* திட்பம் - வலிமை.

1. வினைத்திட்பமாவது இன்ன தென்பது.
(1) தொழில் செய்யுமிடத்து வலிமை யென்று சொல்லப் படுவது, அதனை முடித்தற்குரிய ஒருவனது மனத்தினது வலிமை வாம். அது நீங்கலான சேனை, அரண் முதலிய வலிமைகளெல்லாம் அம்மன் வலிமைக்கு நிகராகிய வலிமைகளாகாவாம்.

2. வினைத்திட்பத்தின் பகுப்பு.
(2) முன்பு நீதி நூல்களை ஆராய்ந்த மந்திரிகளது துணிவாவது குற்றமுண்டாகும் தொழிலைச் செய்யாமையும், செய்யுந்தொழில் ஊழினாலே குற்றப் பட்ட இடத்து அதற்கு மனந்தளராமையுமாகிய இவ்விரண்டினது வழியாகுமென்று நூலறிந்தவர் சொல்லுவார்.
(3) செய்யப்படும் தொழிலை முடிவிலே வெளிப்படும் படியாக அதற்கு முன்னெல்லாம் தன் ஐந்து அங்கங்களும் எண்ணிய விதத் கைப் பிறரறியாதிருக்கவும், தான்றிக்ககையும் தன் இங்கிதம், வடிவு, செயல், சொற்களால பிறர் ஆலோசித்தறியா திருக்கவும் மறைத்துச் செய்வதே வலிமையாகும். நடுவிலே வெளிப்படுமானால், அவ்வெளிப்படுதலானது வெளிப்படச் செய்தவனுக்கு நீக்கப்படாத துன்பத்தைக் கொடுத்துவிடும். (அங்கம் ஐந்தாவன: மந்திரி, புரோ கிதன், துதன், ஒற்றன், சேனாதிபதியாம்.)

3. வினைத்திட்பத்தின் அருமை.
(4) இத்தொழிலை இவ்விதத்தாலே செய்வோமென்று ஒழுங்குபடச் சொல்லுதல் எவர்க்கும் எளியவையாகும், அத்தொ ழிலைச் சொல்லப்பட்ட விதத்தால் செய்தல் அரியவையாகும். இதனால், தன்னாலே செய்யக்கூடாத காரியத்தை வாயினாலொருவன் சொல்லுதல் பயனற்றதா மென்றறிக. (சொல்லுதல், செயல் என் பன சாதிப் பெயர்கள்.)

4. வினைத்திட்பத்தின் சிறப்பு.
(5) எண்ணத்தினாலே சிறப்படைந்து மற்றை யிலக்கணங் களாலும் மாட்சிமைப்பட்ட மந்திரிகளது தொழில் வன்மையானது அரசனிடத்துப் பொருந்தி, எல்லாராலும் நன்குமதிக்கப்படும். நன்கு மதிக்கப்படுதற்குக்காரணம். தொழில் முடிந்தபின் அரசனுக்குச் செல்வமும் புகழும் உண்டாதல். மற்றையிலக்கணங்களை, காச - ஆம் அதிகாரத்திற் காண்க.

5. வினைத்திட்டம் உடையவரடையும் பயன்.
(6) எண்ணப்பட்டவர் அவ்வெண்ணப் பட்ட பொருள் களுக்கு வழியாகிய தொழிலிடத்தே வலிமையுடையவராகப் பெற்றால், தம்மா லெண்ணபபட்ட பொருள்களை யெல்லாம் விரைவிலே அடைவர்.

6. வினைத்திட்பம் உடையவரை அறியும் விதம்.
(7) உருளுகின்ற பெரிய தேருக்கு அச்சினிடத்தே உள்ள ஆணிபோல வடிவம் - சிறிதாயிருந்தாலும் தொழிலினிடத்தே வலிமையுடையவரை உலகமானது உடையது. ஆதலால், அவர் வடிவினிடத்தே சிறுமை நோக்கி அவரை இகழாதிருக்க வேண்டும்.
கா அ - ஆம் அதி. வினை செயல் வகை. கஙக இவ்விதம் வடிவிலே சிறியவராகியும் பெரிய காரியத்தை முடிப்பதில் வலியவராயுமுள்ள மந்திரிகளும் உண்டு. அவரை அவ்வலிமையா லறிந்து கொள்க.

7. வினைத்திட்பம் உடையவர் தொழில் செய்யும் விதம்.
(8) மந்திரிகளாயினார் மனந் தெளிந்து செய்வதாகத் துணிந்த தொழிலிடத்துப் பின் சோர்வில்லாமல் காலதாமதமின்றி விரைந்து செய்யக்கடவர்.
(9) முதலே மெய்ம்முயற்சியில் துன்பு பமானது நமக்கு மிகவந்தாலும், அதுகண்டு மனந்தளராமல் சுகத் தை முடிவிலே கொடுக்கிற தொழிலை வலிமையுடையவராய்ச் செய்ய வேண்டும்.

8. தொழில் வலிமை இல்லாதவரது இழிவு.
(10) தொழில் வலிமையை இது நமக்குச் சிறந்ததென்று கொள்ளாத மந்திரிகளை வேறுவலிமைகளெல்லாம் உடையவராகியம் இடத்தும் உயர்ந்தோர் நனகுமதிக்க மாட்டார். ஆதலால், மந்திரி கள் தொழில் வலிமையை எப்போதும் உறுதியாகக் கைக்கொள்ள வேண்டும்.
---------

68-ஆம் அதிகாரம். விவன செயல்வகை.

அஃதாவது:- அவ்வலிமையுடைய மந்திரியானவன் அத் தொழிலைச் செய்யுந்திறம்.

1. பொதுவகையால் தொழில் செய்யுந் திறம்.
(1) மந்திரியின் ஆலோசனைக்கு எல்லையாவது இனி, இது தப்பாதென்னும் துணிவைப் பெறுதலாம். அப்படித் துணிவு , பெற்ற தொழில் உடனே செய்யப்பெறாமல் பின் காலம் நீட்டித்தலில் தங்குமானால் குற்றமுடையதாம். ஏனென்றால், காலம் நீட்டித்தலால் பகைவர் அத்துணிவு பெற்ற தொழிலையறிந்து அழிப்பாராதலா லென்க.
(2) காலம் நீட்டித்துச் செய்யும் பகுப்புடைய தொழில், களிடத்துக் காலம் நீட்டிக்க வேண்டும். காலம் நீட்டியாமற் செய்யுந் தொழில்களிடத்துக் காலம் நீட்டியாமற் செய்யவேண்டுப; இவ்வித மன்றி மாறிச் செய்தால் பயன்படாதென்பது கருத்தாகக் கொள்க.

2. வலிமை ஒப்புமை மெலிமை என நிலை மூவகைப்படு மென்பதும், அவற்றுள் வலிமையின் சிறப்பும்.
(3) தொழில் செய்யும்போது கூடுமிடத்தெல்லாம் தண் டஞ்செய் கல் நல்லதாகும். அது கூடாத இடத்து மற்றை மூன்று உபாயங்களிலே முடிவதொரு உபாயம் நோக்கிச் செய்யவேண்டும். (கூடுமிடம்: பகைவனிலுந்தான் வலியனாகியகாலம்.) (கூடாத இடம் பகைவனுக்கு ஒத்த காலமும், இளைத்த காலமும் ஆம். மூன்று உபா யங்களாவன: சாம பேத தானம்.)

3. வலியவன் செய்யும் திறம்.
(4) செய்யத்தொடங்கிய தொழிலும் அழிக்கத் தொடங் கிய பகையும் என்று சொல்லப்பட்ட இரண்டினது குறையும் ஆரா யுமிடத்து, இக்குறை என்ன செய்யுமென்று விட்டுவிட்டால் தீயி னது குறைபோலப் பின்வளர்ந்து கெடுக்கும். எனவே, தொழில் செய்யும்போது முழுதுஞ் செய்யவேண்டுமென்பது கருத்து.

4. ஒப்பவன் செய்யுந் திறம்.
(5) தொழில் செய்யுமிடத்து, பொருளும், சேனையும், காலமும், தொழிலும், இடமும் ஆகிய ஐந்தையும் மயக்கமற எண் ணிச் செய்யவேண்டும். (எண்ணிச் செய்தலாவது: தனக்கும் பகை வர்க்குமுள்ள மேற்கூறிய ஐந்தின் பலமும் பலவீனமும் ஆராய்ந்து போர்தொடங்கல்.)
(6) தொழில் செய்யுமிடத்து அது முடித்த ற்கு உளதாகிய முயற்சியையும், அதற்கு வரும் இடையூற்றையும், அவ்விடையூற்றை நீக்கி முடித்தால் தான் அடையும் பெரும்பயனை யும் சீர்தூக்கிச் செய்யக்கடவன். (சீர்தூக்கலாவது: முயற்சி அள வுக்கும் இடையூற்றின் அளவுக்கும் பெறும் பயனளவு மிகுதியாயிருத் தலறிதல்.) அவ்விதமில்லாவிட்டால், அத்தொழிலை விட்டுவிட வேண்டும்.
(7) மேற்சொல்லிய அவ்வழியினாலே செய்யப்படுந்தொழி லைச் செய்யத் தொடங்கினவன் செய்யுமுறைமையாவது முன் செ ய்து கைவந்தவன் செய்துவந்த உபாயத்தைத் தானறிதலாம். அத னையறியவே, தானும் அவ்விதஞ்செய்து பயனெய்துவனென்பதாம்

5. மெலியவன் செய்யுந் திறம்.
(8) செய்யப்படுகிற தொழிலினாலே அப்படிப்பட்ட வேறொரு தொழிலை முடித்துக்கொள்ளக் கடவன். அது, மதத்தால் நனைந்த கன்னத்தையுடைய யானையினாலே அப்படிப்பட்ட வேறொரு 2.1 ரையைக் கட்டியது ஒப்பாகும்.
(9) தொழில் செய்பவனால் தனது நட்பினருக்கு நல்லவைகளைச் செய்தலினும், தன் பகைவரது பகைவரைத் தனக்கு நட்பாக்கிக் கொள்ளுதல் விரைந்து செய்யத் தகுவதாகும். பகைவர்க்குத் தன் மெலிவு தெரியாதிருக்கு முன் னமே மேற்கூறிய இரண்டு காரியங்களையுஞ் செய்கவெனபதுவே, விரைந்து செய்யத்தகுவதென்றதற்குப் பொருளாதலறிக.
(10) ஆளுமிடம் சிறிதாயிருக்கின்ற மந்திரிகள் தம்மின் மிகுந்த வலியவர் எதிர்ந்த இடத்தே தமது சேனைமுதலிய அங்கங்கள் நடுங்குதலுக் குப் பயந்து, அந்நிலைக்கு வேண்டுவதாகிய சமாதானம் கூடுமானால் அப்பெரியவரை வணங்கி, அதனையேற்றுக் கொள்வர்.
---------

69-ஆம் அதிகாரம். தூது.

அஃதாவது:- பொருத்தல் பிரித்தல்களுக்கு வேற்றாசரிடத்தே செல் வானது தன்மை. தா நு சொல்வோன், தான் வகுத்துச் சொல்வோன், சொல்லியதைச் சொல்வோன் என இருவகையாம்; அவருள் முற்கூறப் பட்டவன் மந்திரிக்குச் சமானமாவான். பிற்கூறப்பட்டவன் காற்பங்கு குணங்குறைந்தோ னாவான்,

1. இருவகைத் தூதர்க்கும் பொது இலக்கணம்.
(1) தன் சுற்றத்தாரிடத்து அன்புடையனாதலும், மந்திரி த்தொழில் செய்தற்கு அமைந்த குடியிலே பிறத்தலும், அரசர் சாதி விரும்புங் குணமுடையவனாதலும் தூதுவார்த்தையைச் சொல்லு வோனுக்கு அடையாளமாம். அரசர் சாதி விரும்புங் குணங்களை மன்னரைச் சேர்ந்தொழுக லென்னும் அதிகாரத்திலே காண்க.
(2) தம்மரசனிடத்து அன்புடைமையும், அவனுக்கு ஆங்காரியங்களை அறியும் அறிவுடைமையும், அவைகளைவேற்றரசரிடத்துச் சொல் லும்போது ஆராய்ந்து சொல்லுதலில் வலிமையும் எனத் தூது சொல்ல உரியவர்க்கு அவசியமாக வேண்டிய குணங்கள் மூன்றாம் அவசியமாக வேண்டிய குணங்கள் மூன்றெனவே, மந்திரிகளுக்குச் சொல்லிய வேறு குணங்களும் வேண்டுமென்பதாயிற்று.

2. தான் வகுத்துச் சொல்லுவானது இலக்கணம்.
(3) வேலினையுடைய வேற்றரசரிடத்துத் தன்னரசனுக்கு வெற்றியைத் தருகின்ற தொழிலைச் சொல்வோனாகய தாதலுக்கு இலக்கணமாவது நீதி நூலை அறிந்த மந்திரிகளிடத்துத் தான் அந்நூ லிலே வல்லவனாகுகலாம், (அஃதாவது: நூலறி கல்மட்டு (முடைய மந்திரிகளுக்கு முன்னே அறிந்தபடி செய்யும் திறமையுடையவனாகுதல்.)
(4) இயற்கையாகிய அறிவும், கண்டோர் விரும்புந் தோற் றப் பொலிவும், பலரோடும் பலகாலும் ஆராயப்பட்ட கல்வியும் என நன்கு மதித்தற்கு ஏதுவாகிய இம்மூன்றினது கூட்டத்தையுடைய வன் வேற்றரசரிடத்துத் தூதுத் தொழிற்குச் செல்லவேண்டும். மேற்கூறிய மூன்றும் ஒத்திருப்பவன் எடுத்தசாரியமுடியுமென்ப தாம்.
(5) வேற்றரசர்களுக்குப் பல காரியங்களைச் சொல்லுமிட த்துக் காரணவகையால் தொகுத்துச் சொல்லியும், இனிமையில்லாத காரியங்களைச் சொல்லுமிடத்து வெய்யசொற்களை நீக்கியும், இனிமை யான சொற்களால் மகிழச்சொல்லியும் தன்னரசனுக்கு நன்மை யைச் செய்பவனே தூதனாவான்.
(6) நீதி நூல்களைக்கற்றுப் பகைவேந்தர் மனம் ஒப்புக்கொள்ளும்படி தான் சென்ற காரியத் தைச் சொல்லி, அவவேந்தர் கோபித்துப்பார்த்தால் அதற்குப்பயப் படாதவனாகிக் காலத்தோடு பொருந்தக் காரியமுடிக்கத்தக்க உபாய த்தை அறிபவனே தூதனாவான்.
(7) வேற்றரசர் நிலையும், தன்ன ரசனிலையும், தன்னிலையும் சீர்தூக்கி, அவைகளுக்கேற்பக், காணு முறைமையும் சொல்லுமுறைமையும் தெரிந்து, தன் சொல்லை ஏற்றுக்கொள்ளுஞ் சமயம் பார்த்துச் சொல்லவேண்டிய காரியத்துக் குச் சகாயமாயினார் கூட இருக்குமிடத்தைத் தெரிந்து, சொல்லும் வகையை முன்னே விசாரித்து, அவ்வகை சொல்லுவோன் தூதரில் முதன்மையானவனாம்.

3. சொல்லியது சொல்லுவானது இலக்கணம்.
(8) தன்னரசன் வார்த்தையை அவன் சொல்லியவழியே வேற்றரசர்க்குச் சொல்லுவானது இலக்கணமாவது, பொருளாலுங் காமத்தாலும் வேறுபடச் சொல்லாத பரிசுத்தனாக கன்மையும், னக்கு அவ்வேற்றரசர்கள் மந்திரிகள் துணையாந் தன்மையும், அவ்வா சர் கோபத்துக்குப் பயப்படாத துணிவுடைமையுமாகிய இம்மூன் றோடு கூடிய மெய்ம்மையுமாம். வேற்றரசர் மந்திரிகள் துணையா வது எதறகென்றால், தன சொல்லால் அவ்வரசர்க்குக் கோபம் வந்த இடத்து இது தூதர் பெயலென்று சொல்லிக் கோபத்தைத் தணித் தற்கு எனக.

(9) தன்னரசன் சொல்லிவிட்ட வார்த்தையை வேற்றரசர்க்குச் சொல்லுதற்குரியவன் தனக்கு வருந்துன்பத்துக் குப் பயந்து, தன்னரசனுக்குக் குறைவான வார்த்தையை வாய்வழு வியுஞ் சொல்லாத வலிமையுடையவனாம்.
(10) தன்னரசன் சொ ல்லி விட்டவார்த்தை தனக்கு நாசத்தைத் தருமானாலும் பயப்படா மல் தன்னரசன் சொன்னபடியே அவனுக்குள்ள திடத்தை வேற் றரசனிடத்துச் சொல்லுவோனே தா கனாவான்.
---------


This file was last updated on 06 May 2025.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)