pm logo

"திருவையாற்றுப்‌ புராணம்‌
(பஞ்சநத மான்மியம்‌) - பாகம் 2"

tiruvaiyaRRup purANam - part 2
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
We thank Dr. Meenakshi Balaganesh, Bangalore, India for her assistance in the preparation of this work for publication.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2026.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

"திருவையாற்றுப்‌ புராணம்‌
(பஞ்சநத மான்மியம்‌) - பாகம் 2"

பொருளடக்கம்
1. கடவுள்‌ வணக்கம்‌ (17) 11. சதானந்தனத்தியாயம்‌ (102)
2. அவையடக்கம்‌ (4)12. சிவசருமனத்தியாயம்‌ (43)
3. புராண வாழ்த்து (4)13. சிவதாசனத்தியாயம்‌ (56)
4. ஆச்சிரமச்‌ சிறப்பு (38)14. சுசிகரனத்தியாயம்‌ (52)
5. பிரியவிரதன்‌ காதை (82)15. சுசரிதனத்தியாயம்‌ /
பிரணதார்த்திகர்‌ சருக்கம்‌ (97)
6. ததீசி அத்தியாயம்‌ / நால்விலங்கு
கதிபெற்ற‌ சருக்கம்‌ (48)
16. சருவ விசையனத்தியாயம்‌ (154)
7. சுரதனத்தியாயம்‌ (76)17. தேவனத்தியாயம்‌ (27)
8. இந்திரரத்தியாயம்‌ (26)18. அனித்தியரத்தியாயம்‌ (61)
9. திருமகளத்தியாயம்‌ (20)19. கிரிச்சிரரத்தியாயம்‌ (70)
10. கவதமனத்தியாயம்‌ (41)20. பிரதக்கணயோகம்‌ (19)
---------

13. சிவதாசன்‌ அத்தியாயம்‌

பூதிசாதன மேனியின்‌ திகழும்‌
சாதியா லவன்பேர்‌ சிவதாசனா
மாதினாயக னம்பிகை பங்கனை
ஆதியான மனத்துள்‌ யோகியே. 1
[1. பூதி- திருநீறு, சாதியால்‌ - தவறாமல்‌ செய்து வரும்‌ நியமத்தினால்‌,
ஆதி நாயகன்‌ - முழுமுதற்‌ கடவுளாகிய சிவன்‌, அம்பிகை - உமாதேவி
ஆதியான - முதலாவதான, மனத்துள்‌ யோகியே: மனத்துள்‌ வைத்து
வணங்கும்‌ யோகியாவான்‌.]

நேமி சூழ்ந்து நெடும்புனல்‌ முற்றிய
பூமி சூழ்ந்து வணங்கிய புக்கனன்‌
காமி யங்கள்‌ கருத்திலன்‌ மற்றவன்‌
தோமில்‌ பஞ்ச நதம்தொழ வேகினான்‌. 2
[2. நேமி சூழ்ந்து - சக்கரவாளகிரியால்‌ சூழப்பட்ட, நெடும்புனல்‌ -
அளப்பரிய கடல்‌, புக்கனன்‌ - புகலிடமாகக்‌ கொண்டவன்‌. காமியங்கள்‌ - பயன்கருதிச்‌ செய்யும்‌ செயல்கள்; தோமில்‌ - குற்றமற்ற,]

பொன்னியாடிப்‌ பவுத்திரம்‌ பூண்டு மேற்‌
றன்னியாய்‌ முடித்த கேள்விப்‌ போதனன்‌
கன்னி பாகர்க்குக்‌ காஞ்சன சோதிக்குச்‌
சென்னி யாற்றகு சென்னி வணங்கினான்‌. 3
[3. பொன்னியாடி - காவிரி நதியில்‌ நீராடி, பவுத்திரம்‌ - நியதிப்பூண்‌,
தன்னியாய்‌ - தன்னியல்பாக, கேள்வி - மந்திரங்கள்‌ காஞ்சனசோதி –
பொற்சோதி, சென்னியால்‌ - தலைமையானதால்‌.]

முன்னை யாசைத்‌ தொடக்கமுற முன்பணிந்து
என்னை யாள்கெனு மின்பமோ டன்பினே
ரன்னை மாருட னமராதி விநாயகன்‌
தன்னை யாதரித்‌ தாயிடைத்‌ தாழ்ந்தனன்‌. 4
[4. முன்னை - முற்படத்தோன்றிய, அன்னைமார் - உமாதேவி,
கொற்றவை ஆகியோர்‌, ஆதிவிநாயகன்‌ - முதற்கடவுளாகும்‌ விநாயகன்‌,
ஆதரித்து - அன்புசெய்து.]

ஈசனஞ்‌ செழுத்தெண்ணி யெழுந்து போய்த்‌
தேசமுண்‌ டகமங்கை தனைத்‌ தெண்டனிட்‌
டாசின மாதவர்‌ சூழிலி லங்ஙனம்‌
வாச மெய்தி மகிழ்ந்தன னன்றரோ! 5
[5. ஐஞ்செழுத்து - பஞ்சாட்சரம்‌, தேச - அழகான, முண்டகமங்கை –
செந்‌தாமரை மலரில்‌ வீற்றிக்கும்‌ திருமகளை, ஆசின - வாழ்த்துகின்ற,
இலங்கணம்‌ - உபவாசமிருத்தல்; அரோ - வியப்பிடை.]

வரைகடைந்‌ தறியா மதி தோன்றலும்‌
உரை கடந்த வுவப்புடைப்‌ பேரானந்த
திரை கடந்த திருகடல்‌ பொங்கிமேல்‌
கரை கடந்த தெனப்பொழி கண்ணினார்‌. 6
[6. வரைகடைந்து - தேவா சூரர்கள்‌ மந்தரமலையை மத்தாகக்‌ கொண்டு பாற்கடலைக்‌ கடைந்தபோது, மதி - சந்திரன்‌, திரு - இலக்குமி.]

அன்று கண்டவர்க்‌ கன்பினா னொத்தவ
ரென்று நின்ற புலன்கட்‌ கிடங்கொடா
ரொன்ற னாருயிர்க்‌ குள்ளங்‌ குழைந்தூளார்‌
குன்றின்‌ வன்றிரள்‌ கொண்ட குணத்தினார்‌. 7
[7. வன்திரள்‌ - வலிய சேர்க்கை, குழைந்துளார்‌ - இளகியமனமுடையார்‌.]

விண்‌ விளக்கும்‌ பருதிமுன்‌ மீனினங்‌
கண்‌ விளக்கினிற்‌ கண்டிதி லாரமெனத்‌
திண்‌ விளக்கெனுஞ்‌ செம்பொனின்‌ சோதியா
லெண்‌ விளக்குற யாவையுங்‌ காண்கிலார்‌. 8
[8. விண்‌ விளக்கும்‌ - வானவெளியை ஒளிமயமாகச்‌ செய்யும்‌, பருதி –
சூரியன்‌, மீனினம்‌ - நட்சத்திரங்கள்‌, திண்‌ விளக்கெனும்‌- திண்மையான
விளக்கெனும்‌, எண்விளக்குற - எண்ணத்‌ தகுமளவிலுள்ள சிறுவிளக்குகளாம்‌
தெய்வங்கள்‌ இருக்க.]

சுழிபெரும்‌ புனலாற்‌ சுடு தீயினா
லுழிதரும்‌ பல்லுயிர்‌ கட்‌ கிறங்குவா
ரழிதரும்‌ பொழுதாங்‌ கெழு போழ்துமோர்‌
கழிதருங்‌ கணமாகக்‌ கண்ட காட்சியார்‌. 9
[9. சுழிபெரும் - சுழித்தலோடு கூடிய பெரிய, புனலால்‌ - நீரினால்‌,
உழிதரும் - அலைவுதரும்‌ - கழிதரும்‌ - பற்றுக்கோல்‌ தரும்‌.]

சிவத்தில்‌ நினைவா சிந்தையிற்‌ கண்டவர்‌
தவத்தி னிச்சை தருபவ ராதலால்‌
அவற்‌ கிழங்கு மடிமையி னத்தலத்‌
திவற்‌ கிருக்க வியந்தது நெஞ்சமே. 10
[10. சிந்தை - மனம்‌, இச்சை - ஆசை, வியந்தது - வியப்படைந்தது.]

(வேறு)
மொழியா திருவாசன முதற்‌ பெரியோர்‌ முன்னின்று
      வழுத்திய முன்னவனைத்‌
தழியன்புள நெஞ்சொடு சந்ததமும்‌ தவிர்கின்ற தவிர்ந்து
      தவம்‌ புரிவா
னழிவின்றிய வெம்பவ மற்க வெழுத்தஞ்சும்‌
      பதியி னாயிரமாக வலஞ்‌
சுழிகின்றது நூறுடனெட்‌ டெனவே சுற்றாலய முற்றின்ன
      மாறொரு நாள்‌. 11
[11. திருவாசனம்‌ - மேலான இருக்கை, சந்ததலும்‌ - எக்காலத்தும்‌,
அற்க - நீங்க.]

வருடங்கள்‌ ஒரைந்து மடங்கியபின்‌ வாரண சிகரசிக
      மளித்தவருக்‌
கருள்தங்கிய முத்தி யளிக்கு வதென்‌ றுறைகின்ற
      கருத்துடை யாசையினால்‌
இருள்தங்கிய நெஞ்சின னத்திறமே இதிலுண்டென
      வெண்ணில னெண்ணியதாம்‌
பொருள்தங்கிய பஞ்சநதம்‌ புரியாப்‌ புறனே பலநாடு
      புகுந்தனனால்‌. 12
[12. மடங்கிய - கழிந்து சென்ற, இருள்‌ தங்கிய - மாயை பொருந்திய,
பொருள்‌ தங்கிய - மெய்ப்‌ பொருள்‌ இருக்கின்ற, புறனே - வெளியிலான.]

முறுகுங்கதிர்‌ நின்று தெறும்‌ பலர்போய்‌ முகிலின்‌
      புனலுண்ண வறத்திடலா
லுறுதண்‌ பெயலின்றி யழன்று புரண்டு ரகங்களின்‌ வாயுமிழ்‌
      நெஞ்சினை நீ
நிறுகுந்‌ துளியென்‌ றெலியாதி சேநாயெதிர்‌ நக்குவகக்‌
      குவ்விக்‌ குலவாய்‌
மறுகும்படி வெந்து புகைந்‌ தெரியாய்‌ மரமுங்‌ கரிகின்றது
      மரல்வழியே. 13
[13. முறுகுங்கதிர்‌ - வெப்பம்‌ மிகுந்த கதிர்கள்‌, தெறும்‌ - அழிவு செய்யும்‌,
வறத்திடல்‌ - வற்றிப்‌ போதல்‌, பெயல்‌ - பெய்யும்‌ மேகம்‌, நீரிறுகும்‌ - நீர்‌ வற்றிப்போகும்‌,
சேநாய்‌ - செந்நாய்‌, மரல்‌ - மருள்பூண்டு.]

முரிபட்டனவோமை முளிந்தகுரா முளிபட்டலங்‌ கனலி
      வுழிஞ்சில்‌ முடிந்த மாமரம்‌
பொரிபட்டன பாலை பொடிந்‌ தனவாய்‌ பொறிபட்ட
      விருப்பைப்‌ புகைந்தனவே
கரிபட்டசுரங்‌ கமர்பட்ட நிலங்கனல்‌ பட்டனகால்‌
      சுழல்‌ பட்டன கண்‌
டிருபட்‌ டனவோ நிழல்பட்ட பருந்தெரி பட்டன யாவையு மே. 14
[14. முரிபட்டன - சிதைந்துபோயின, ஓமை - ஓமை மரங்கள்‌, குரா- குரா
மரங்கள்‌, உழிஞ்சில்‌ - உழிஞ்சில்‌ மரம்‌, இருப்பை - இருப்பை மரம்‌, கமர்‌ -
நிலப்பிளவு].

வரங்குவாலுளைய வாளரி செலும்‌ வழியெலாம்‌
துரங்கலமா மத்தகச்‌ சொரியுந்‌ தரளமும்‌
தரங்குமால்‌ வண்டுடன்றுரு செல்‌ சாரெலா
மோங்குசார்ந்‌ துடனராவு மூழ்பணா மணிகளே. 16
[16. வரங்கு - இளைத்து, வாலுளைய வால்‌ நலிவடைய. மா- யானை.
அரா - அரவம்‌ (நாகம்‌) பணா - படம்‌, மணி - நாகரத்தினம்‌.]

பொறிப்புறச்‌ செங்கண்‌ வெம்புலிச்‌ செலும்‌ புடையெலா
மறிப்புறக்காரி மாமயிற்‌ றொகுங்‌ கற்றையே
தெரிப்பு முறப்பாய்‌ கலைத்திரிதகவட்‌ டிரலையுங்‌
குறப்புறத்‌ தகுவதக்‌ குன்றகச்‌ சாரலே. 17
[17. காரி - கருங்குருவி, குறப்புற - குரலை வெளிப்படுத்த, கற்றை –
தொகுப்பு, சாரல்‌ - மலைச்சாரல்‌.]

அளறு பட்டிறுகு செம்பொனி லத்தகழ்‌ வாய்க்‌
கிளறி யன்னிற முறுங்‌ கேழலின்‌ கோடெலா
மொளிறு பொன்‌ முழை விழைந்துடல்‌ குடாவடியின்‌ மேல்‌
வெளிறுடைப்‌ புறமெலா மிளிர்வ மின்னெனவே. 18
[18. அளறுபட்டிகு - அளறாகிய சேற்றில்‌ இணக்கமுற்று கரைந்து நிற்கும்‌,
கேழல்‌ - காட்டுப்பன்றி, குடாவடி - கரடி.]

துண்டம்‌ விட்டாயிரங்‌ களிறும்‌ விண்சூழ்‌ சிறைச்‌
சண்ட மிட்டாயிரங்‌ களிறு வன்றா ளுகிர்க்‌
கண்ட மிட்டாயிரங்‌ களிறு மோர்காலை வரயுண்டிடக்‌
கொண்டிடுங்‌ கரவாற்றலால்‌ கண்ட பேரண்டமே. 19
[19. துண்டம்‌ - மரங்களைத்‌ துண்டாக்கும்‌, களிறு - யானைகள்‌, உகிர் –
நகம்‌, பேரண்டம்‌ - பேரண்டமாகிய வலிய பறவை.]

சூருமஞ்சு வருமித்‌ தகையவச்‌ சூழல்வாய்ச்‌
சேரு மந்தணனும்‌ வந்தணுகுதலுஞ்‌ சேர்ந்ததால்‌ விண்‌
காரு மஞ்சுவர்‌ மைக்‌ கடலுமஞ்சுவர்‌ மேல்‌
யாரு மஞ்சுவாரோ ரிரு தலைப்‌ புள்ளால்‌. 20 20
[20. சூர்‌ - கொடிய தெய்வம்‌, கார்‌ - மேகம்‌, இருதலைப்புள்‌ - அண்ட
பேரண்டமெனும்‌ பெரும்‌ பறவை.]

கண்டவர்‌ கண்டபே ரண்டமூன்‌ கண்டவன்‌
கொண்டனன்‌ பண்டைநீர்‌ மண்டலங்‌ கொண்டதென்‌
றுண்டிடுங்‌ சண்டனென்‌ றெண்டகுந்‌ தஞ்சடுமின்‌
றுண்டிரத்‌ தன்றிதென்‌ றென்றுவே றெண்ணினான்‌. 21
[21. ஊன்‌ - ஊன்‌ உணவு, சண்டன்‌ - இயமன்‌, எண்தகும்‌ - எண்ணத்தகும்‌.]

ஒருதலைச்‌ சந்தையோ டொருநொடிப்‌ போதுற
பொருதலைத்‌ தடுகளிற்‌ றுயிர்ப்புலப்‌ பகைமையா
மிருதலைப்‌ புள்ளெடுத்‌ திடுதலுஞ்‌ சடுதியால்‌
வெருதலைப்‌ படுமவன்‌ விமலனைப்‌ பரவுவான்‌. 22
[22. ஒருதலை - ஒருநோக்கம்‌ உறுதி, பொருது - போரிட்டு, அலைத்து -
அலைக்கழித்து, அடு - கொல்லப்படும்‌, இருதலைப்புள்‌ - பேரண்டப்‌ பறவை.]

சம்பு சங்கர பராபர தயாபர வார்‌
நம்ப வம்பிகை பெறும்‌ பங்க நம்புவது நின்பைம்பொ
னம்புய பதம்‌ பற்றுவேறில்லை யெனக்‌
கிம்பர்வந்‌ தெய்தி யென்னிடர்‌ கெடுத்தருள்‌ செய்யாய்‌. 23
[23. அம்புயபதம்‌ - தாமரை போன்ற பாதங்கள்‌, பற்று - எனக்குப்‌ பற்றுக்‌
கோடாவது, இம்பர்‌ - இவ்வுலகத்தே.]

படையெடுத்‌ திடுமுனே பாலனைக்‌ காலனார்‌
விடையடுத்‌ தடுமென விரைவு நாடினால்‌
நடையெடுத்‌ தருள்செய்வாய்‌ நள்ளுறப்‌ புள்ளினவர்‌
இடையடுத்‌ திடுமெனக்‌ கினியடுத்தருள்‌ செய்யாய்‌. 24
[24. பாலன்‌ - மார்க்கண்டேயன்‌, காலன்‌ - இயமன்‌, விடை - இடபம்‌;
நடை - காலால்‌ நடந்து.]

வில்லில்‌ யெய்யுமுன்‌ விபுதருக்‌ கவுணராற்‌
செல்ல லுற்றிடுமெனச்‌ செய்யவாய்‌ முறுவலாற்‌
புல்லா முப்புரமெரித்‌ தடல்செய்வாய்‌ புள்ளின்வா
யல்லலுற்‌ றிடுமெனக்‌ கினியெடுத்‌ தருள்செய்யாய்‌. 25
[25. விபுதர்‌ - தேவர்‌, அவுணர்‌ - அசுரர்‌, புல்லா - பணியாத, முப்புரம்‌ -
மூன்று அசுரர்களால்‌ இயக்கப்பட்ட மூன்று பறக்கும்‌ கோட்டைகள்‌.
புள்ளின்‌ வாய்‌ - பேரண்டப்‌ பறவையினிடத்து.]

மந்திரத்‌ தடுமுனம்மால்‌ முதற்‌ றேவர்மெய்‌
வெந்திடத்‌ தகுமே னரவிடமெடுத்‌ தங்கையாற்‌
கந்தரத்திருள்‌ செய்வாய்‌ கானிடைப்‌ புள்ளினவா
யந்தரப்‌ படுமெனக்‌ கினியடுத்‌ தருள்செய்யாய்‌. 26
[26. மந்திரத்து அடு முனம் - மந்திரமலையால்‌ அமுதத்தினை கடைந்தெடுக்கு
முன்னம்‌, அரவுவிடம்‌ - வாசுகி என்னும்‌ வடக்கயிறாகிய பாம்பு வெளியிட்ட விடம்‌.]

அடியவற்‌ கின்னவா றின்னல்‌ வந்தடரிளி
கடியமற்‌ றவருழை கடுமையிற்‌ சொற்போல்‌
படியிடத்‌ திருதலைப்‌ புள்ளினாற்‌ பரவியென்‌
முடிவுறப்‌ படுமுன்‌ முன்னர்வந்‌ தருள்செய்வாய்‌. 27
[27. இன்னல்‌ - மிகுதுன்பம்‌, அடர்‌இளி - தாக்கும்‌ தாழ்வு, படியிடத்து -
உலகத்தினிடத்து.]

உன்னை யல்லாது வேறொருவரைத்‌ தெய்வமென்‌
றென்னுளத்‌ துன்னலே னென்பதே யுண்மையோ
னின்னதா னற்பகற்‌ போதுதூய்‌ நினைவினாற்‌
சொன்னவா றுண்மையே துண்ணெனத்‌ தோற்றுவாய்‌. 28
[28. உன்னலேன்‌ - நினைக்கவில்லை, துண்ணென - உடனாக,
தோற்றுவராய்‌ - தோன்றுவாய்‌.]

அண்டர்‌ வேதங்கள்‌ நின்றறைகிலுந்‌ தொடர்கிலான்‌
தொண்டர்‌ வாயொரு மொழித்துதியினுக்‌ குறுமெனப்‌
பண்டைநல்‌ லோர்கதை பகர்தலே மென்மையேற்‌
கண்டு பொருந்துழி குணமதுங்‌ காத்திடாய்‌. 29
[29. அண்டர்‌ - தேவர்‌, பகர்தலேம்‌ - சொன்னோமில்லை. பொருந்துழி -
சரணடைந்த போது.]

சிவனுயிர்க்‌ குயிரெனுந்‌ தெய்வமே திண்ணமேற்‌
சிவனெனக்‌ கிறையெனும்‌ சித்தமே யுண்மையேற்‌
சிவனெனக்‌ கென்றும்‌ வந்தருள்‌ செய்தகுவனேற்‌
சிவனினிக்‌ கவன்முற்‌ றருள்கெனத்‌ தேம்பினான்‌. 30
[30. இறை - முழுமுதற்கடவுள்‌, தேம்பினான்‌ - வருந்தியழுதான்‌.]

பாம்பின்வாய்த்‌ தேரைபோற்‌ பறவைவாய்ப்‌ பட்டவன்‌ பரிவுகூறத்‌
தேம்பும்வாய்‌ மொழியுடன்‌ சித்தமுஞ்‌ சோர்வுறச்‌ சிறிதுபோழ்திற்‌
காம்பினீள்‌ குந்தமுங்‌ கையுமா யங்ஙனங்‌ கவனமா
லோம்புவான்‌ வந்தனன்‌. மன்னர்போ லுரிவினா னொருவன்‌ மன்னோ. 31
[31. தேம்பும்‌ - அழுகையோடு தடுமாறும்‌, காம்பிர்னீள்‌ - கைப்பிடிக்
காம்பு நீண்ட, குந்தம்‌ - குந்தப்படை.]

அஞ்சல்‌ நீயந்தணனா வஞ்சல்‌ நீயென்று கையொன்றழைத்தான்‌
அஞ்சும்‌ போகின்றதே கண்ட பேரண்டமே யென்றூற்றாச்‌
செஞ்சரோசக்‌ கரக்குந்தவேல்‌ விட்டனன்‌ தீய வேலும்‌
நெஞ்சுபொளப்‌ பட்டிறுகப்‌ பட்டதால்‌ விட்டதால்‌ நீடுபுள்ளும்‌. 32
[32. செஞ்சரோசம்‌ - செம்மையாகக் குறிதவறாது செல்லும்‌ ஆயுதம்‌.
பொள - இருபிளப்பாக, விட்டதால்‌ - உயிர்விட்டது. நீடுபுள்‌ - மிகப்‌
பெரிய அண்ட பேரண்டப்‌ பறவை.]

மாவின்‌ மேலரசு போந்ததால்‌ வேலத்திக்காய்‌ வாகையம்புட்‌
கோவின்மேல்‌ விட்டவர்‌ கூறுறா வதைக்‌ கூறுசெய்தான்‌
நாவின்வேல்‌ கடுகிப்போய்‌ வீழ்த்தப்‌ புள்ளுமப்பூசல்றானு மங்கண்‌
பூவின்மேல்‌ வீழ்ந்தனன்‌ பொன்றினா ரென்றுயிர்‌ பொறிஃலங்கி. 33
[33. மாவின்‌ மேல்‌ - யானையின்‌ மீது, பூவின்‌ மேல்‌ - பூமியின்‌ மீது,
பொன்றினார்‌ - போரிட்டார்‌.]

வீழ்ந்தவன்‌ தன்னையக்‌ காவலன்‌ கையினால்‌ மெய்குளிப்பத்‌
தாழ்த்தனன்‌ சென்னிதொட்‌ டடியொடந் தடவினான்‌ றடவலோடும்‌
சூழ்ந்த துத்திப்‌ பொறிப்பைத்தலைப்‌ பரப்புடைச்சோக வேகம்‌
போழ்ந்தகற்ற வத்தோடப்‌ போனவாறானவர்‌ புன்மையாவும்‌. 34
[34. மெய்குளிப்பு - உடல்‌ முழுவதுமாக, சோகவேகம்‌ - பயத்தின்கடுமை,
புன்மை - பாபங்கள்‌.]

புன்மை தீர்ப்புலன்‌ காண்ப வந்தெய்தலும்‌ புந்தியாலித்‌
தன்பையால்‌ வந்தவன்‌ யார்கொல்‌ லன்றைய்யூறாத்‌ - தரணி காக்கும்‌
நன்மையா மன்னனா லென்றுணர்ந்‌ தாசியால்‌ நானிந்தத்‌
திண்மையா காதலா லிங்குவந்‌ துதவி னாயிறைவ கேளாய்‌. 35
[35. புன்மை - துன்பம்‌, புந்தியால்‌ - அறிவு நுட்பத்தால்‌, ஆசியால்‌ -
விருப்பத்தால்‌, திண்மை - உளத்திட்பம்‌.]

நீயுமுன்‌ சுற்றமுங்‌ கோடிநாள்‌ வாழ்க நியதிகள்‌ சேரநற்‌
செயமுண்டாக மேன்மேலு நின்பேரூர்‌ செப்புகென்றா
னாயு மன்னன்‌ கொலோ வென்றிந்த துதியினாலரசனே போற்‌
பாயுமாவேறி நம்மீனோ வருமெனப்‌ பார்த்து நின்றான்‌. 36
[36. நியதிகள்‌ - இயல்பான செயல்கள்‌, பாயுமா - பாய்ந்து செல்லும்‌
குதிரை.]

கூர்த்தவன்‌ பார்த்தலோடுங்‌ குந்தமூ விலைவேலாகத்‌
தார்த்துகைச்‌ சிகழிகங்கை சடைமுடி யோகநெற்றி
சேர்த்ததோர்‌ திலகந்‌ தானே தீவிழி யாகக்காதில்‌
ஏர்த்தபொற்‌ குழைகள்சங்கத்‌ திடுமணி குழைகளாக. 37
[37. கூர்த்தவன்‌ - அறிவு நுட்பத்தோடு கூடிய அவன்‌, குந்தம்‌ - குந்த
ஆயுதம்‌, வேல்‌ ஆகத்து ஆர்த்து - வேலாயுதம்‌ மார்போடு பொருந்த.]

குங்கும மார்பிற்‌ பூண்ட குளிர்கதிர்‌ ஆரமெல்லாம்‌
பொங்குவெண்‌ ணீற்றினால்மைப்‌ புறனுடையெனக்‌ கொம்மைச்‌
செங்கையோ ரிரண்டு நான்காத்‌ திருவுருச்‌ செக்கராக
வங்கதங்‌ கடகமாதி பணிகள்‌ பூணரவமாக. 38
[38. குங்கும மார்பு - சிவந்த மார்பு, கொம்மை - அழகு நிரம்பிய,
மிகுந்து நிற்க, லங்கதம்‌ - தோளணி, பூண்‌ - அணிகள்‌, அரவமாக –
பாம்புகளாக.]

பூங்கச்சுச்‌ சிங்கத்தோலாய்‌ புறவுடை நறியப்பட்டு
வேங்கைத்தோ லாகப்போர்த்து விசித்தவுத்‌ தரீயத்தூடே
தூங்கற்றோ லாகப்பாங்கற்‌ சூழரை வடங்களொல்லா
மாங்கக்கு வடமேயாக வவன்சிவ னாகத்தோன்ற. 39
[39. பூங்கச்சு - மென்மையான இடைக்கச்சு, வேங்கை - புலி, உத்தரீயம் - மேலாடை,
ஆங்கு அக்கு வடமேயாக - அவ்விடத்து பவழ மணி
மாலைகளாக,]

வாம்பரி விடையாய்நிற்ப மறையவன்‌ மகிழ்ந்துநோக்கி
காம்புமென்‌ றோளிபாகர்‌ காவல்வேந்தாகி நின்றாய்‌
ஓம்படைக்‌ கிளவிக்கிவ்வாற்று வைகொல்‌ உண்மையா
      னுணரேனென்னத்‌
தேம்புநற்‌ கருணைநோக்கிச்‌ சிவன்றனைத்‌ துதி செய்கின்றான்‌. 40
[40. வாம்பரி - தாவிச்‌ செல்லும்‌ குதிரை, விடையாய்‌ - இடபவாகனமாய்‌,
தேம்பு நற்கருணை - வருந்துபவர்கட்குக்‌ கருணைகாட்டி.]

கங்கையா போற்றிநீல கண்டனே யாருங்காணாச்‌
சங்கையாய்ப்‌ போற்றிகாம தகனமுக்‌ கண்ணாபாக
மங்கையாய்ப்‌ போற்றிசூல மான்‌மழுப்‌ பினாகமேந்து
செங்கையாய்ப்‌ போற்றியாண்ட ஐயனே போற்றி, போற்றி. 41
[41. கங்கையா - கங்கையைச்‌ சடையிலுடையவனே; சங்கையாய்‌ -
உண்மையுமாய்‌ இன்மையுமாய்‌ இருப்பவனே, பாகமங்கை - உமாதேவி.]

பிறையவா போற்றிபஞ்சப்‌ பிரமமாம்‌ பெயரோய்போற்றி
மறையவா போற்றிதக்கன்‌ மகவினா சனனேபோற்றி
பொறையவா போற்றியாக்கி புரந்தழித்‌ துலகங்காக்கு
மிறையவா போற்றிஎல்லாம்‌ ஆண்டவா அரசேபோற்றி! 42
[42. பிறையவா - சடா மகுடத்தில்‌ பிறையை அணித்தவனே, மகா
வினாசனன் - யாகத்தை அழித்தவன்‌, பொறையவா - அடியார்களைப்‌
பாதுகாக்கும்‌ பொறுப்‌புள்ளவனே.]

யாவர்க்கும்‌ மூத்தோய்போற்றி யாவுமாய்‌ நின்றாய்போற்றி
தேவர்க்கு முதல்வாபோற்றி திக்கெலாந்‌ துகிலாய்‌ போற்றி
மூவர்க்கு ளொருவாபோற்றி முன்னிய முடிப்பாய்‌ போற்றி
காவற்கு ளென்னையாண்ட கருணையாய்‌ போற்றி போற்றி. 43
[43. யாவர்க்கும்‌ மூத்தோய் - எல்லா தெய்வங்கட்கும்‌ பழமையானவன்‌,
துகிலாய் - ஆடையாகக்‌ கொண்டவனே, முன்னிய - நினைத்த,]

இன்னணஞ்‌ சிவதாசப்பேர்‌ மறையவனேத்தா நிற்பக்‌
கொன்ன வணங்குறு வேற்கோவிற்‌ குறியகோவும்‌ புள்ளால்‌
மன்னணங்‌ குறுவோர்‌ யெம்மை மதித்தலால்‌ வயமானேறி
யுன்னணங்‌ குறையாந்‌ தீர்ப்பா றுகைந்தனன்‌ கடிதி னென்றான்‌. 44
[44. இன்னணம்‌ - இவ்வாறாக, ஏத்தா நிற்ப - போற்றி செய்து நிற்க,
கொன்ன - பெருமையாக, வயமான்‌ - வலிமையுடைய குதிரை, உன்‌
அணங்கு குறையாம்‌ தீர்ப்பான்‌ - உன்னுடைய துன்பத்தினாலாகிய
குறையினை நாம்‌ தீர்ப்பதற்காக.]

அடைபவ ரின்னலாவ தறுப்பவ னென்னுநாம
முடையவ னென்பர்நம்மை யாதலால்‌ உறவோய்நீயும்‌
இடையுமோ ரிருதலைப்புள்‌ விழுங்கு மரவத்திற்கூவத்‌
தடையினான்‌ விரைந்து வந்தேன்‌ தணிகநின்‌ பிணி யென்றான்‌. 45
[45. அடைபவர்‌ - என்னை அடைபவர்‌, இன்னல்‌ - துன்பம்‌, அறுப்பவன்‌ -
நீக்குபவன்‌, அரவத்திறகூவ - ஆரவார ஒலியைக்‌ கேட்டுக்‌ கூவுதல்‌
செய்ய, தணிக - நீங்குக.]

எங்கிருந்‌ தெங்ஙண்யாதா லேத்தியென்றுஞ்‌ சொற்றா
னிங்கிருந்‌ திங்ஙணதா லேகுதன்‌ றெண்ணஞ்‌ சொன்னான்‌
சிங்கமுங்‌ கண்டபேருண்‌ டாதியுஞ்‌ சேரச்சேர
அங்ஙனுண்‌ டனேகஞ்சேறற்‌ கரியதென்‌ றைய லுற்றான்‌. 46
[46. எங்ஙண்‌ - எவ்வாறாயினும்‌, இங்ஙணதா - இவ்விடத்ததாக,
எண்ணம் - கருத்து, அரியது - இன்றியமையாதது.]

அதிசயமன்னோ வன்னோ வதிகமாந்‌ திருவையாறு
கதிதருந்‌ தலங்கட்கெல்லாம்‌ காவிரிவடாது கண்டாற்‌
துதிசெய்தால்‌ நினைத்தால்வாழ்ந்தால்‌ நோற்றினால்‌ இறந்தால்முத்தி
விதிமுறை பெறலாமென்றால்‌ வேதிய னினைந்தவாறே. 47
[47. வடாது - வடக்குக்‌ கரையில்‌, நோற்றினால்‌ - வாழ்ந்தகாலத்தில்‌
துதித்தால்‌, விதிமுறை - பலாபலன்‌.]

திருப்பஞ்ச நதியில்மாளுஞ்‌ செவ்வியிற்‌ செவிவலப்பா
லுருப்பஞ்‌ செய்ப்‌ பிறவிவேடைக்‌ கூட்டுமா ரமுதமென்ன
விருப்பஞ்சே யெழுத்தோரஞ்சும்‌ விளம்புதும்‌ யாமே யென்றாற்
கருப்பஞ்‌ செய்துயர்‌ நீப்பாய்‌ காசியாற்‌ பயன்‌ வேறியாதோ. 48
[48. பஞ்சநதி - திருறையாற்றில்‌ செல்லும்‌ காவிரியில்‌, மாளும்‌ - இறக்கும்‌
செவ்வி - நேர்ந்த காலத்தில்‌, உருப்பஞ்செய்ப்‌ பிறவி வேடை - தீமை
செய்‌கின்ற பிறவியாகிய தொடர்ச்சி, கருப்பஞ்செய்துயர்‌ - பிறவியைத்‌
தருகின்ற துயர்‌.]

வெள்ளங்கை பரக்கும்பொன்னி வியன்கரைத் திருவையாற்றை
யெள்ளஞ்செய்‌ நினைவிற்காசி யெய்துதற்‌ கெண்ணுமெண்ண
முள்ளங்கைத்‌ திரளைப்‌ பாற்சோறோச்சியே புறங்கைநக்குங்‌
கள்ளங்கை வந்தோரொக்குங்‌ கருத்தினி யொழிகவென்றான்‌. 49
[49. வெள்ளங்கைப்‌ பரக்கும்‌ பொன்னி - வெள்ளமாகிய நீர்‌ பரந்து
செல்லும்‌ காவிரி, ஓச்சி – வீசியெறிந்து. 47, 49 பாடல்கள்‌
திருவையாற்றுத் தலமகிமை கூறியதாம்‌.]

மீண்டுபோய்த்‌ திருவையாற்றில்‌ விரைந்துநீ வாணாள்வாழி
யாண்டும்‌ நின்றனக்கு மவ்வாறளித்து மேலுலகமென்றான்‌
மாண்டனன்‌ பறவையாலென்‌ றெவ்வாறடைவே னென்றான்‌
நீண்ட செஞ்சடையா னங்கை நீட்டினான்‌ எழுந்தான்‌ தூயோன்‌. 50
[50. வாணாள்‌ - வாழும்‌ நாள்‌ முழுவதும்‌, யாண்டும்‌ - எக்காலத்தும்‌,
அங்கை - அகங்கை.]

அருட்கடலணையான்‌ கைதொட்‌ டெடுத்தலு மந்தணாளன்‌
இருட்கடல்‌ ரேறினான்‌ கோவிறைவனா லியக்கப்பட்டான்‌
மருட்கடல்‌ தறியு நாதன்‌ மனத்தெழு கருணையாகு
தெருட்கடல்‌ இரியுமாயை செயல்கொலோர்‌ வாவிசெய்தான்‌. 51
[51. அருட்கடலணையான்‌ - சிவபெருமான்‌, அந்தணாளன்‌ - வேதியன்‌,
மருட்கடல்‌ - மயக்கமைந்த பிறவிக்கடல்‌ தரியும்‌ - நீக்கும்‌, தெருட்கடல்‌ -
ஞானக்கடல்; இரியும்‌ - நீங்கும்‌, மாயை - பிறவி மயக்கம்‌, வாவி - திருக்குளம்‌.]

வள்ளலு மறையோயிந்த மடிப்படிந்தெழுக வென்றான்‌
முள்ளறை முளரிவாவி மூழ்கினா னெழும்போது
கள்ளலர்‌ போதும்‌ வரையாறடுத்தவர்‌ விரித்தரங்கத்‌
தெள்ளற லெழுந்தா னண்ணல்‌ செய்கையார்‌ தெரித்தற்பாலார்‌. 52
[52. மடிப்படிந்து - ஆசார சீலமுடன்‌ நீரில்‌ மூழ்கி, முளரி – தாமரை; வாவி -
பொய்கை, குளம்‌, கள்ளலர்‌ - தேன்‌ பொருந்தியதாக அலர்ந்த, போது - மலர்‌, வரையாறு - கங்கை, தெரித்தல்‌ - திட்டமுறச்‌ சொல்லுதல்‌.]

முழுகிய வாவிப்பாங்கர்‌ மூரிவெள்‌ ளேற்றிநின்றான்‌
செழுந்தி யெழுந்த பாங்காச்‌ சினகரத்‌ தென்பானின்றான்‌
கழுமுள்‌ மூவிளை வேலோடுங்‌ கண்டுள மகிழ்ந்து போற்றித்‌
தழுதழுத்‌ துரைக்குஞ்‌ சொல்லா னின்றனன்‌ தவத்தின்‌ மேலோன்‌. 53
[53. மூரிவெள்ளேறு - வலிமை மிகுந்த வெண்மைநிற ஏற்றின்மீது,
சினகரம் - சிறிய கோயில்‌, கழு முள்‌ - கூர்மையானமுள்‌ போன்ற,
தவத்தின்‌ மேலோன்‌ - சிவதாச வேதியன்‌.]

மாசிலா மறையோய்‌ கேட்டிமரண முத்தியினை நல்குந்‌
தேசினா னீங்கா வாழ்விற்‌ சிறந்ததித்‌ திருவையாறு
காசியாங்‌ கங்கையா மிக்காவிரி யென்று நின்று
பேசினான்‌ மறைந்து நின்றான்‌ பின்னலார்‌ முன்னலர்தான்‌. 54
[54. மாசிலா - குற்றமில்லாத, மறையோய்‌ - வேதியனே, தேசு - ஒளி.]

ஒருசிவதாசன்‌ தானுமுண்மையித்‌ தலத்தை நீங்கின்‌
வருமிடையீ டிவ்வாறென்‌ றெண்ணிய மனத்தனாகி
பொருமிடர்‌ கடியநாதன்‌ புரவலன்‌ வடிவாயாண்ட
கருணையே நினைந்து வாழ்ந்து காலத்தை கழித்தான்‌ மன்னோ. 55
[55. பொருமிடர்‌ - வந்து துன்பந்தரும்‌ இடர்ப்பாடுகள்‌. கடிய - நீக்க,
புரவலன்‌ - மன்னன்‌.]

மரண மால்தீர்த்தீசன்‌ வைத்தனன்‌ அளியினாலே
சரணநீங்காத முத்தித்தன்மையை மறையோன்‌ பெற்றான்‌
பிரணதா ளடைந்தோரார்த்தி பெருந்துயரான வறுப்பான்‌
கரணமா மிவற்றாறேவுங்‌ காரணப்பேரும்‌ பெற்றான்‌. 56
[56. மரணமால்‌ - மரண அச்சம்‌, அளி - கருணை, அறுப்பான்‌ - அறவே
நீக்குவான்‌. காரணப்பேர்‌ - பிரண தார்த்தீகரர்‌.]

சிவதாசனத்தியாயம்‌ முற்றும்‌.
--------------

14. சுசிகரணனத்தியாயம்‌.

வலியவாம்‌ பகையால்‌ நோயால்‌ மாற்றினாற்‌ பயந்தடைந்தோர்‌
மெலிவுதீர்ந்து யர்ந்தவாறு விளம்பினாய்‌ மேலோய்‌ கீழ்மை
கலியினாற்‌ பயந்தோருயர்ந்த கதையுண்டே லுரைத்தி யென்றா
யொலிமலர்ப்பசுங்‌ கொம்பொப்பாய்‌ கேளென வுரைக்க லுற்றான்‌. 1
[1. வலியவாம்‌ - வலிமையுடையதாகிய, மற்றினால் - மன்றைய தீமைகளால்‌, கலியினால்‌ - நிலை மாறியதினால்‌, ஒலி - வளமை, பசுங்கொம்பொப்பாய் -
பசிய பூங்கொம்பைப்‌ போன்றுள்ளாய்‌.]

துவாபர முடிவுபரவுந்‌ துற்றிய கலியின்‌ பண்பா
லுவர்மதி யரவுண்டாங்கு மாசுற வண்ணக்‌ கண்ணன்‌
துவரை வண்தருமர்‌ தோற்றித்‌ தரைபாரந்‌ தீர்த்து வாழ்நாள்‌
வரவுயர்‌ யதுகுலத்தி லளவிலார்ப்‌ பெற்றுகந்தார்‌. 2
[2. துவாபரம்‌ - துவாபரயுகம்‌, துற்றிய - பற்றித்‌ தொடர்ந்த; கலி –
பஞ்ச காலம்‌, வண்ணக்‌ கண்ணன்‌ - காயாம்பு நிற மேனியனாகிய
கண்ணன்; துவரை - துவாரகை, யதுகுலம் - யாதவர்குலம்‌.]

யாதவர்‌ குலத்துப்‌ பெற்ற மகாரெலாம்‌ ஈனமான
பாதக யுகத்தின்‌ சேர்வாற்பாங்கலர்‌ வினைமேற்‌ கொண்டு
மாதவர்‌ மேன்மை யெண்ணார்‌ மறையவன்‌ உருவாதற்கு
போதமில்லவர்க்குக்‌ காட்டும்‌ புதுமைபோற்‌ பொய்மை செய்தார்‌. 3
[3. மகார் - மக்கள்‌, ஈனமான - இழிவுச்செயலால்‌ தாழ்ந்த, போதமில்லவர் - அறிவில்லாதவர்‌]

தங்களி லொருவ னுக்குத்‌ தையலின்‌ உருவ னல்கித்‌
திங்களின்‌ முகம்‌ விளக்குஞ்‌ சிறந்த சூலுருவிற்‌ காட்டி
வெங்களி மதர்கட்‌ பூவை மென்மொழி மயிலின்‌ சாயல்‌
எங்களின்‌ அமுத மொப்பா ளென்மகப்‌ பெறுவா ளென்றார்‌. 4
[4. தையல்‌ - பெண்‌, நல்கி - கொடுத்து, என்மகப்‌ பெறுவாள்‌ - என்ன
மகவைப்‌ பெற்றெடுப்பாள்‌.]

சாபவாய்‌ முனிவன்‌ கேட்டு சாதனும்‌ குலத்தை மாய்க்கும்‌
கோவமா முசல மொன்று பெறுமெனக்‌ கூறி விஞ்டா
னாவதே பிறந்த தாக வறிந்தழிந்‌ தறியாத தால்‌
தாவர நுனிக்கி முன்னீர்‌ இட்டனனவண்‌ சார்ந்‌ தன்றே. 5
[5. சாபவாய்‌ - தீயோரை ஒறுத்தற்குச்‌ சாபமிடும்‌ வாயுரை. கோவமா –
கொடுமை மிகுந்த விலங்கு, முசலம்‌ - கருங்குரங்கு. முன்னீர்‌ - கடல்‌ நீர்‌
(உப்பு நீர்‌) இட்டனன்‌ அவண்‌ - அங்கு இட்டனன்‌.]

கோரையாய்க்‌ குழி முளைக்க குமரரும்‌ விளையாட்டேற்றி
நீரைவாய்‌ வாளிற்‌ பட்டாங்‌ கியாவரு மாய்ந்தார்விஞ்சி,
வீரைவாய்‌ மீனமுண்டே யெஃகொரு விடலை யம்பிற்‌
போரைவாய்‌ வில்லிற்‌ பூட்டி புலம்புமா வாலிலெய்தான்‌. 6
[6. குமரர்‌ - இளைஞர்‌, நீரைவாய - நீர்மையில்லாத்‌ தன்மையினால்‌,
சீதரன்‌ - திருமால்‌, புறாவடி - புறாவின்‌ கால்கள்‌,]

சிறாரிறந்‌ துயிர்த்‌ துறங்குங்‌ சீதரன்‌ திருத்தாட்‌ செம்மை
புறாவடி சிவப்பி ணெண்ணிப்‌ போக்கினேன்‌ கொல்லோ புங்க
முறுவரை வைகுந்தஞ்‌ சேர்ந்துற்றனன்‌ என்ன வற்றுக்‌
கறாவொருத்‌ துயிர்‌ வருத்துங்‌ கலியுகம்‌ பிறந்த தன்றே. 7
[7. சிறார்‌ - சிறுவர்‌; புங்கம்‌ - உயர்வு, கறா - பாற்பசு, கலியுகம்‌ -
மாயை நிறைந்த பெருங்காலம்‌,]

இருங்கலி யரச னாளு மெல்லை வந்திருக்கு முன்ன
மொருங்கய லுகத்து மாயன்‌ மக்களுக்‌ குயக்கச்‌ செய்தார்‌
செருங்களி றன்ன தானை செலுத்து நாட்டுரியன செய்யான்‌
கருங்கலி நிறத்தோன்‌ செய்யுங்‌ காரியஞ்‌ சிறிது கேண்மோ. 8
[8. இருங்கலி - கொடிய கலியுகம்‌, மாயன்‌ - திருமால்‌ உயக்கம்‌ -
மயக்கமாம், வருத்தம்‌. கருங்கலி - கொடுமை நிறைந்த கலிகாலத்தின்‌]

நல்லறத்‌ தொழில்‌ வேர்கீழு நரந்தக மேந்தலாலே
இல்லறந்‌ துறவத்தின்‌ இயல்பின ருலகம்‌ இன்றிச்‌
சில்லறஞ்‌ செய்தாரேனுஞ்‌ சிந்தையோ டியற்று வாரி
லொல்லறத்‌ தவருமோரா யிரத்துளு மொருவ ருண்டால்‌. 9
[9. நரந்தகம்‌ - புல்லுருவி, உலகமின்றி – வாழுமிடமின்றி;
ஒல்லறத்தவரும்‌ - இயன்ற அறத்தினைச்‌ செய்தவரும்‌.]

துய்ப்படித்‌ தருமஞ்செய்வார்க்‌ கழுக்கறு தொழிலார்‌ செய்யின்‌
மெய்ப்படி புரிந்தி டாமல்‌ விலக்கு வாரவரும்‌
செய்ப்படி செலுத்துஞ்‌ செங்கோற்‌ கலியொரு தருமமல்லால்‌
பொய்ப்படி புரியிலாக்கம்‌ போலவே புதுக்கு மன்னோ. 10
[10. துய்ப்படி - தாமனுபவித்தபடி, அழுக்கறு - குற்றம்‌ நீங்கிய,
மெய்ப்படி - உள்ளவாறு, செய்ப்படி - செய்யும்‌ முறைமைபடியே.]

அந்தணர்‌ வேதங்‌ கல்லார்கல்வி யிறைக்கதை சொல்லார்‌
தந்தை தாய்‌ தவஞ்செய்யார்‌ தாதைதாய்‌ குரவனில்லாள்‌
மைந்தர்‌ தாம்பூசல்நீங்கா ரொருவருக்‌ கொருவர்‌ வாய்மை
நிந்தனை புரிவர்வேதத்‌ தெய்வமு நினைக்க கில்லார்‌. 11
[11. இறைக்கதை - கடவுளைப்பற்றிய கதை, பூசல்‌ - சண்டை,
வாய்மை - வாயால்‌ பேசுகின்ற குற்றம்‌ (வாய்+மை)

சூதகர்‌ நீச ராதி சூத்திரர்‌ யுத மாதர்‌
பாதகர்‌ தீண்டின்‌ மூழ்கார்‌ பழமறை வழியை விட்டு
சாதகர்‌ சங்குச்‌ சக்க ராதியாற்‌ றபிக்கப்‌ பட்டு
பேதக ரவர்‌ பேதப்‌ பிறருட னுறவு மாவர்‌. 12
[12. சூதகர்‌ - பாணர்‌, நீசர்‌ - தாழ்ந்தோர்‌, சூத்திரர்‌ - ஆண்மையாளர்‌,
சாதகர்‌ - யோகசாதகர்‌, சங்கு - சக்கரர்‌ - வைணவர்‌, பேதகர்‌ - நிலையில்‌
மாறியவர்‌.]

வைதிக சைவ மார்க்க மறையவர்‌ தம்மைத்‌ தள்ளி
பொய்‌ திகழொழுக்கம்‌ பூண்ட பூசுரப்‌ பதத்‌ தோரை
மெய்திகழ்‌ சிரார்த்தந்‌ துய்க்க வரிப்பா நல்விரதம்‌ பேணார்‌
கைதவ வொழுக்கஞ்‌ செய்வார்‌ நீசர்கைப்‌ பொருளும்‌ ஏற்பார்‌. 13
[13. வைதிகம்‌ - வேதாகம நெறி, சைவமார்க்கம்‌ - சிவ நெறியிலார்ந்தவ நெறி, மறையவர்‌ - வேதியர்‌, பூசுரப்‌ பதத்தோரை - வேதாகம நெறியில்‌ வழுவாத தகுதியுடைய அந்தணரை, வரிப்பா – முறைமைப்பாடுடையதாக; பேணார்‌ - விரும்பார்‌, கைதவவொழுக்கம்‌ - நெறிதவறிய முறைமை.]

பரசிவ லிங்க பூசை பண்ணலார்‌ பண்ணுவாரைப்‌
புரையென நகைப்பர்‌ மேலாம்பூசுரர்‌ இழிந்து நிற்பார்‌.
சருக்கர்‌ சரதர்‌ முகரும்‌ பொருணிலங்‌ கண்கொள்பவர்‌
பரசுமந்தணருக்‌ கின்னல்‌ பயிற்றுவர்‌ பழிமேற்‌ கொள்வர்‌. 14
[14. கிழிந்து - நிலையில்‌ தாழ்ந்து, சருக்கர்‌ - நிலையில்‌ வழுவினவர்‌,
சரதர் - நேர்மையான வாழ்வியலுடையவர்‌, பரசும்‌ - போற்றி வணங்கும்‌.]

குடிப்பிறந்‌ தொழுக்கம்‌ பூண்ட கோமுடி பொறுப்பதன்றி
வடுப்படுங்‌ குலத்தோரேனும்‌ வலியினால்‌ படையால்‌ மற்றார்
படிப்புற மன்னராகப்‌ பற்றுவர்‌, வணிகர்‌ தாமும்‌
கொடுப்பது கொள்வதெல்லாங்‌ கோடுவர்‌ நெறியில் நில்லார். 15
[15. வடுப்படும்‌ - குறையுடையதாகும்‌, படிப்புற - கீழ்ப்படிதலுற,
கோடுவர்‌ - சூது செய்வர்‌, நெறியில்‌ - அறநெறியில்‌.]

சுருதிசேர்‌ மிருதியாதி சூத்திர ரெல்லை நீங்கி
சாதியோர்‌ நான்கும்‌ வேறா சாத்திர மறையோர்க்கீவர்‌
வாத்திரத்து அபேதமாகு தயா மாயாலர்‌
சேத்திடுபொருளை வாங்கச்‌ சிந்தனைச்‌ செவ்வா மன்னோ. 16
[16. சுருதிசேர் - வேதத்தினைச்‌ சார்ந்த, மிருதி - ஸ்மிருதி, ஈவர் - கொடுப்பர்‌.
அபேதம்‌ - வேறுபடாமல்‌.]

மாணிழை மகளிலெல்லாம்‌ மனையறக்‌ கற்பு தீர்ந்து
பூணியே நடையொழுக்கம்‌ பொன்விலை மகளிர்‌ போலக்‌
காணிய புனைவர்‌ ராக்கள்‌ கற்குமவ்வளவும்‌ போற்றி
பேணுவர்‌ பயன்மறுப்பிற்‌ பிணிக்கு நல்மருந்தும்‌ பெய்யார்‌. 17
[17. மாணிழை - விலை மதிப்புடைய ஆபரணங்கள்‌, மனையறம்‌ -
இல்லறம்‌, பொன்விலை மகளிர்‌ - பரத்தையர்‌, ராக்கள்‌ - இரவு காலங்கள்‌.]

காமமோர்‌ காதி யாறார்‌ கற்பனைக்‌ கடந்‌ தழிந்து
தூமமா ரழலிற்‌ சீறி யிறந்து சோகாப்பர்க்‌ கொரு
நாமிகப்‌ பொய்யே கொள்வர்‌ நண்பராய்க்‌ கருமங்‌ கொண்டு
தாமுறு பகையின்‌ நீங்கார்‌ பிறர்மனைச்‌ சார்ந்து நிற்பர்‌. 18
[18. காமம்‌ ஒர்காகு - காமத்தின்‌ எல்லையை அறியாமல்‌, தூமம்‌ ஆர்‌
அழல்‌ - புகையோடு கூடிய நெருப்பு, கருமம்‌ - தேவையான செயல்‌,
பிறர்மனை - பிறருடைய மனைவி.]

மாரிய முகிலும்‌ பொய்க்கும்‌ வயல்விளைவஃகும்‌ வாணாட்‌
பாரிய வுயிருங்‌ குன்றும்‌ பசிமிகும்தெய்வ மெண்ணார்‌
சேரிய கவியினந்தஞ்‌ சிவனெனும்‌ பேருஞ்‌ சொல்லார்‌
பூரியரன்ன வானார்‌, பூசுரர்‌ தானும்‌ அந்தோ. 19
[19. மாரிய முகிலும்‌ - மழையைத்தரும்‌ மேகமும்‌, அஃகும்‌ - குறைந்து
போகும்‌. வாழ்நாள்‌ - உயிர்கள்‌ வாழும்‌ நாள்‌, கவியினம்‌ - கவிபாடும்‌
புலவரினம்‌, பூரியர்‌ - அற்பர்‌, பூசுரர்‌ - பிராமணர்‌.]

நினைவினும்‌ செயலினுஞ்‌ சொல்லு நீரினும்‌ நவினுங்‌
கனவினுங்‌ தீமைசேர்‌ கருத்தினை யெண்ணலால்‌
இணையவெங்‌ காலம்வந்த இயைபினால்‌ இருந்தோ ரன்னர்‌
மனைவினை யாதியெல்லாம்‌ மயங்கிய உரைய வென்ப. 20
[20. சொல்லு நீரினும்‌ - சொல்லுகின்ற முறையினும்‌, நவினும்‌ - நினைவு
கொள்ளுகின்ற, வெங்காலம்‌ - கொடிமகாலம்‌, இயைபினால்‌ - பொருத்தத்‌
தினால்‌, மனைவினை - குடும்பச்‌ செயல்கள்‌.]

பசிகர வழுக்கறை யாகவே பார்த்து மண்ணெலாம்‌
வசிகர மானது வயங்கிட வலியவெங்கலி யார்ந்து
நிசிகர னாணையின்‌ நெறியே நின்றிடா னொருவேத
சுசிகர னென்பவனைச்‌ சுருதி நெறியாற்றினான்‌. 21
[21. பசிகரம்‌ - பசியால்‌ வருகின்ற நிலைமை, வசிகரம்‌ - கவர்ச்சி,
வெங்கலி - கொடிய கலிகாலம்‌, நிசிகரன்‌ - ஈசன்‌,]

ஓரிடத்‌ தொருபக லிருக்கி லோயெனச்‌ சார்த்திச்‌
சேரிட மதற்கெனத்‌ திகழு தீர்த்த யாத்திரையும்‌
பேரொடு பெயர்ந்தனன்‌ பெரும்‌ பயன்‌ பெறுவான்‌
நீரிடை மூழ்கினான்‌ ஒதத்துவறித்‌ துறையொடு நீர்மையான்‌. 22
[22. தீர்த்தம்‌ - புண்ணிய தீர்த்தங்கள்‌, பேரொடு - தீர்த்தங்களின்‌
தெய்வப்பெயர்‌ பயனறிந்து, பெயர்ந்தனன்‌ - நீங்கிச்‌ சென்றனன்‌,
உவரித்துறை - கடலிலமைந்த திருமுழுக்குத்‌ துறை,]

தவசநீறு கண்டிகை யாணஞ்‌ சாலிகை
கவச முத்தூளன நிறுக்‌ காப்பென
வவச வுட்பதைந்‌ தெழுத்தஞ்‌ செனப்புறஞ்‌
சிவவெனு மந்திரம்‌ செபித்தகை யுள்ளான்‌. 23
[23. தவசநீறு - மந்திரமான திருநீறு, கண்டிகை - உருத்திராக்கமாலை,
ஆணஞ்சாலிகை - கலத்தில்‌ விளைந்த சாலிகை, அவசவுட்பதை - பரவச
மூட்டும்‌ மனத்தில்‌ பதிந்திருந்த.]

மங்கலமுந்‌ தெளிந்த வேதியன்‌ மயக்குறு செயலெலாம்‌ மல்கிய
வெங்கலி செயுந்‌ தொடர்‌ வெருண்டு அதனை நீக்கிடற்‌
கஞ்சியே பூதலந்‌ தன்னிற்‌ றனித்துத்‌ திரிகின்ற போதொரு
வெங்கொடு வரக்கனும்‌ விரைந்து தோன்றினான்‌ கருப்பு நெஞ்சினான்‌. 24
[24. மங்கலமும்‌ - நலந்தரும்‌ செயல்களும்‌, மயக்குறு – தீமையை நன்மை
போல்‌ ஆக்கும்‌, பூதலம்‌ - உலகம்‌.]

காழகக்‌ கசரினன்‌ கரிய மேனியன்‌ கடுஞ்சினத்‌
தாழகத்‌ தீயொடு அழலென சுழன்ற கண்ணினன்கீழ்‌
வீழ்தடக்‌ கையினன்‌ வில்லொடு கிளந்தகூர்‌ அம்பினன்‌
மாயிருள்‌ பருகியே மின்னுறு நீள்பெரு கொடிய வாளினான்‌. 25
[25. காழ்‌ அகம்‌ - வலிய மனம்‌, ஆழ்‌ அகத்‌ தீ - படிந்த மனத்தீயாம்‌
கொடுமை, கிளந்த - பொருந்திய, மாயிருள்‌ - கடிய இருள்‌, நீள்பெரு -
நீண்ட பெரிய.]

உறுக்கிய சினத்தி னுரற்றுஞ்சொல்‌ உவப்பறு கடுநகை மேல்‌
முறுக்கொடு நெடிதாக்கி முயக்கொடு முனிவுகொள் கடுவன்போன்று
நறுக்கிய மயிர்முகத்தி னிறுக்கிய பல்லி னிதழதுக்கினான்‌
குறுக்கிய செலவொடு குறிப்புடன்‌ குவிந்துக்குறுகும்‌ எல்லையின்‌. 26
[26. உறுக்கிய - வலிந்து அதட்டிய, உரற்றும்‌ - ஆரவாரம்‌ செய்யும்‌,
உவப்பறு - விரும்பத்தகாத, கடுவன் - ஆண்‌ காட்டுப்பூனை,]

அஞ்சினன்‌ கண்டவன்‌ அஞ்சு எழுத்தையு
நெஞ்சினிற்‌ பயின்முறை நினைத்து நோக்கினான்‌
மஞ்செனக்‌ கிட்டினோன்‌ வாயி னாதிய
பஞ்செனப்‌ பின்னுறப்‌ பைய நீங்கினான்‌. 27
[27. மஞ்சென - கருமேகம்‌ போன்று, பஞ்சென – மென்மையாக.]

பின்னுமக்‌ களிமகன்‌ பிறழ்ந்து வேதியன்‌
முன்னர்‌ வந்தெய்தினான்‌ முன்னஞ்‌ சொன்னதே
பன்னவ னுரைத்தனன்‌ அவனு நீங்கினான்‌
இன்னவ னடிக்கடி யியக்க வேகினான்‌. 28
[28. களிமகன்‌ - மதுமயக்கத்தோடு வந்த கொடிய மகன்‌, முன்னம்‌
சொன்னதே - முன்பு சொன்ன ஐந்தெழுத்தினையே, பைய - மெதுவாக.]

கலியுக வேதனைப்‌ பயந்து காசினி
மலிபுனல்‌ யாத்திரை வருகின்‌ றேமுடன்‌
நலிவொடு களிமகன்‌ நடுக்கஞ்‌ செய்யுமென்‌
றொலிதழை மானினழ லுயிர்த்‌ தொதுங்கினரோ. 29
[29. மலிபுனல்‌ - பெருகிய நீர்‌, களிமகன்‌ - கள்ளுடை கொடியன்‌.]

கேண்மதி சுசிகர்‌ கோடுங்‌ கொடுங்கலி
யாண்மையை யிற்றை நாளடர்ந்து வென்றனை
வாண்மலி கையெனா வந்த மீளியும்‌
பூண்மலி கலியுகப்‌ புருடனாகு மால்‌. 30
[30. சுசிகர்‌ - சந்திரன்‌, வாண்மலிகை - வாளைப்பிடித்தகை, பூண்மலி
கருங்காலம்‌ - பூண்டுச்‌ சிறந்த.]

நின்னை நோக்கி நடந்தவ நின்னையற்‌
றன்னை நோக்கிச்‌ சரித்தபின்‌ னல்லது
பின்னை நோக்கின்‌ வேறுபெயர்ந்து நீ
யென்னை நீக்கினு மெய்தி வளைக்கு மால்‌. 31
[31. நின்னை - நின்னைய, எய்தி - நெருங்கிவந்து, வளைக்கும்‌ - சூழ்ந்து
கொள்ளும்.]

இடைவிடா தெழுத்தஞ்சையு மெண்ணலாத்‌
றடைவிடாவிடப்‌ பாந்தளிற்‌ றங்கினா
னடைவிட மடைந்த வசத்தினின்‌
புடைவிடாமல்‌ வருத்துவன்‌ போலுமே. 32
[32. எண்ணலால்‌ - செபித்தலால்‌, வருத்துவன்‌ - வருத்தமடைகுவன்‌.
பாந்தள்‌ - மலைப்‌ பாம்பு,]

அன்றியும்‌ கலிக்கஞ்சின ரல்லது
வென்றிருந்தவர்‌ மேதினிக்‌ கில்லையா
லென்றும்‌ வேற்றகுவு பாயமில்லைவே
றொன்றிருந்‌ துனக்கஃ தோதலாம்‌. 33
[33. மேதினி - உலகம்‌, ஏற்றகு - ஏற்பதற்குத்‌ தகுதியான, உபாயம்‌ -
பிழைக்கும்‌ வழி, அஃது - அதனை.]

காலமாங் கலிகால வெந்தீயினாற்
சீலம்‌ வெவ்விடாயொடு சேர்ந்தவர்க்‌
கோல மோதியதெள்ளமு தோடையால்‌
ஞால மேலொரு பஞ்சநதித்‌ தலமாம்‌. 34
[34. சீலம்‌ - ஒழுக்கம்‌, ஓலம்‌ - அடைக்கலம்‌, ஞாலம்‌ - உலகம்‌,
பஞ்ச நதித்தலம்‌ - திருவையாறு.]

எனை மூன்றுகத்தோ ரெந்த வாற்றினும்‌
ஞான மேவிய நல்வழி நிற்பார்‌
ஈன பாவ வுகத்தினுக்‌ கித்தலத்து
ஆன திலை யிங்கிது சத்தியம்‌. 35
[35. மூன்றுகத்தோர்‌ - சென்ற மூன்றுயுகத்து மக்கள்‌, ஆனது இல்லை -
ஆகக்கூடியது இல்லை, சத்தியம்‌ - உறுதியாகும்‌]

ஒழுக்கஞ்‌ சாயினுமோதுத லாதியா
றிழுக்கினா லுஞ்செயாத்‌ தியற்றினும்‌
பழுக்கு மாதவபஞ்ச நதித்துறை
முழுக்கினா லவைமுற்றி முயன்றதாம்‌. 36
[36. ஒழுக்கம்‌ சாயினும்‌ - மக்களின்‌ நன்னடத்தைகள்‌ தாழ்ச்சிபெறினும்‌,
பழுக்கு மாதவ - அனுபவத்தால்‌ முதிர்ந்த மிக்கதவமுடையாய்‌, பஞ்சநதித்‌
துறை - திருவையாற்றுக்‌ காவிரித்துறை, முற்றி - பயன்‌ நிறைந்தது.]

மாடு மாதர்‌ மணவாழ்‌ மனைத்‌ தேடினார்‌
கூடு மாறெளிதா மினிக்‌ கூடரி
நாடுமாறு வல்லானையை யாற்றிற்‌ போய்‌
பாடி யாடிப்‌ பணித்திடும்‌ பத்தியே. 37
[37. மாடு - செல்வம்‌, மாதர்‌ - பெண்கள்‌, மனை - மனைவாழ்க்கை,
அரி நாடு மாறு - திருமால்‌ நாடிச்செல்லுமாறு.]

அஞ்செழுத்‌ தொரு பஞ்சரமாக நீ
நெஞ்சழுத்தி நிகழ்ந்‌ தவணெய்தினால்‌
வஞ்சமைக்‌ கலியாமாறு மன்னனுக்‌
கிஞ்சி மொய்த்த முளவாடி யிருந்தலம்‌. 38
[38. பஞ்சரமாக - பாதுகாப்பான கூடாக அமைய. நெஞ்சழுத்தி –
மனத்தில்‌ இருத்தி, அவண்‌ - அவ்விடத்து- இஞ்சி - வளைத்தமதிள்‌]

புண்ணியம்‌ புரிந்தொய்திற்‌ புக்கபின்‌
கண்கொள்‌ வாவியுளத்‌ தமுங்குதி
கொண்டிட வாதாவால்‌ மாகம்பெறு
வாணிமகிழ்ந்‌ துரவோன்‌ மிதிக்குதலம்‌. 39
[39. புண்ணியம்‌ புரிந்து - தான தருமம்‌ செய்து. ஒய்தில்‌ - விரைவாக,
அமுங்குதி - தீர்த்தமாடுவாய்‌, மாகம்‌ - தூய வடிவு, வாணி - கலைமகள்‌,
உரவோன்‌ - பிரமன்‌,]

எல்லை மிதித்தலுமே சோகம்‌ பரிந்து
ஒல்லையில்‌ நீங்கக்‌ கலிப்போயகல துணிந்தங்கு
வெல்லையில்‌ விழுந்து எழுவான்‌ பூகங்கமழ்பாளை
எல்லையில்‌ மணங்கமழும்‌ பஞ்சநதித்துறை யடைந்தான்‌. 40
[40. எல்லை - தலத்தினெல்லை, ஒல்லை - விரைவாக, பூகம்‌ - பாக்குமரம்‌.]

(வேறு)
கண்டான்‌ சிவனாயலங்‌ கண்ணிணையிற்‌ காநாள்கலி
காலனைக்‌ காக்குமெனக்‌
கொண்டான்‌ நமக்கித்‌ தலமல்லதிலைக்‌ குறையோ
வொழுக்கப்‌ பயிர்வேலியெனத்‌
தண்டாமரைப்‌ பூந்தடங்‌ காவிரிநீர்த்‌ தாழ்ந்தானுமை
பாகனைச்‌ சன்னிதியிற்‌
பண்டாழ்‌ மறைபாடினனாடி பின்னாற்‌ பலகாற்‌
றொழுதாடிய பாவகனே. 41
[41. காநாள்‌ - காக்கும்‌ நாளில்‌, பண்டாழ்மறை - பழமையில்‌ மிகுந்த
வேதம்‌ (சாமவேதம்) பின்னால்‌ - தொடர்ந்து மேலும்‌, பாவகன்‌ -
தியானத்தில்‌ சிறந்தவன்‌.]

சாவித்திரி மந்திர மாயிரமுஞ்‌ சத்தருத்திரமும்‌ மந்திரமுஞ்‌
சேவியாச்‌
சேவித்திரவும்‌ பகலும்‌ சிவனைச்‌ சீராம அயிடேகமுறும்‌
பொழுதிற்‌
பாவித்துரை செய்தருள்‌ பஞ்சநதிப்‌ பதியைப்‌ பலகால்‌
வலம்வந்‌
தாவித்துத்‌ துணையே யமுதின்சுவையே யணியே மணியே
யெனவே. 42
[42. சாவித்திரி மந்திரம்‌ - சத்திமத்திரம்‌, ருத்திர மந்திரம்‌ - சாதனை
நல்கும்‌ மந்திரம்‌.]

அன்புக்கு உருகும்‌ பெருமாளொரு நாளவனுக்‌
கெதிராகத்தோன்றி நிந்தியகே
ணின்பக்குவ நல்விணை யாலிவணே நீவந்தனை
யுன்மாதவந்‌ தனையால்‌
இன்பச்செயல்‌ பெற்றனமுற்ற மேலென வேண்டினை
நம்முன்‌ வேண்டுகெனப்‌
பின்பச்சுகியோன்‌ கலியின்‌ துயரம்‌ பெயர்வித்‌ தருள்வாய்‌
பெரியோயெனவே. 43
[43. பெருமாள்‌ - திருமால்‌, பக்குவ நல்வினை - தகுதி வாய்ந்த நற்செயல்‌,
உற்ற - நேர்ந்த, பெயர்வித்து - நீக்குவித்து:]

கருங்கைக்‌ கயவன்‌ கவிநிற்‌ கலியைக்‌ கண்டாயபய
நெஞ்சுண்டா யெமதாய்‌
பெருங்‌ கற்புடை யஞ்செழுத்தும்‌ வருத்தப்‌ பெயர்ந்தாய்‌
மறையோய்‌ பெயர்பேசுனருக்‌
கருங்‌ காரினற்‌ பசுவே யனையே மதனா னிழல்வா
யருவாயவணே
தருங்‌ கற்பகம்‌ இத்தலம்‌ நீநினைக்கத்‌ தந்தேமிகவுந்‌
தலஞ்‌ சார்ந்தனையால்‌. 44
[44. கருங்கைக்‌ கயவன்‌ - கலிகாலன்‌, கவிநில்‌ - கவிழ்ந்து நிற்கும்‌,
பெருங்கற்பு - பெரிய திண்மை.]

மலை மேலிருந்தார்கள்‌ மறப்‌ புலியால்‌ மருள்வோ
ரிலை யித்தலம்‌ வந்த வுனக்கிலை மேல்வருவன்‌
அலை வேதனையா லெவரேனு நினைந்திப்‌
பஞ்சநதிப்பதிசெப்புவரே
லுலைவெது மறுத்தவர்‌ முத்திக்‌ குறுசெய லுண்மையதால்‌. 45
[45. மறப்புலி - வவிமை மிகுந்த புலி, அலை வேதனை - அலைக்கும்‌
வேதனை, செப்புவரேல்‌ - சொல்வார்களாயின்‌.]

எப்பேரினுமித்தல மேன்மையினா லெய்தும்பெயர்‌
மூன்றுள்‌ மற்றவைதாஞ்‌
செப்பேசுர நாயக னென்றொருபேர்‌ திருப்பஞ்சந
தேசுவரனாம்‌
மற்றொரு பேரெப்போதுமிலாப்‌ பிரணதார்த்திக ரப்பேரிவை
மந்திரவுண்மை
முப்போதுமெண்ணி மொழிந்திடுவோர்‌ முடியாமுதல்‌
முத்தியின்‌ முன்னுவரால்‌. 46
[46. பெயர்‌ மூன்றுள்‌ - செப்பேசுவரன்‌, பஞ்சநதேசுவரன்‌, பிரணதார்த்திகரன்‌ ஆகிய பெயர்‌ மூன்றுள்‌, முன்னுவர்‌ - அடையப்‌ பெறுவர்‌.]

வஞ்சக்கலி வெந்தொழிலாற்றுவன்‌ மாபாதகமாதி
யறுப்பன்‌ கண்‌
டஞ்சப்படு பூதபகாச்சுரர்க்‌ காகிடு மஞ்சன மாவன்‌ மா
நெஞ்சிற்பயம்‌ நீப்பன்‌ கம்பிமுத்திரையங்‌ களினின்று
மொடுப்பவை
னஞ்சுக்கொரு காருடனீர்மையென்‌ நாமமின்புறு மூவகை
நாமமுமே. 47
[47. மாபாதகம்‌ - மிகப்பெரிய பாபச்செயல்‌, காருடன்‌ - கருடன்‌,
நீர்மை - நற்செயல்‌, நாமம்‌ - திருப்பெயர்‌.]

காலற்கனு காணுவரமாகுவன்‌ கல்விக்‌ கடலெல்லைக்‌ கடத்துவன்‌
ஞாலப்பதிநற்‌ சிவ தீர்த்தமெலாம்‌ நன்றாடிய புண்ணியம்‌ நல்குவன்‌
சாலப்பரிமேத முதற்பெரிதாஞ்‌ சதுர்வேள்வி முடித்தன தன்மையென
மூலச்சது ரவேதமெலா நெடுநாள்மொழியும்‌ பயனவன்‌ பெயர்மூன்றினுமே. 48
[48. காலற்கணு காவரமாகுவன்‌ - இயமனுக்கு உயிர்களை அணுகவியலாத
அளவில்‌ அன்பருக்கு வரமருளுவன்‌, சால - மிகவும்‌, பரிமேதம்‌ -
அசுவமேதயாகம்‌.]

மூன்றான நாமம்‌ மொழிந்தவாறா முடியாதனவில்லை முதற்கருமந்‌
தோன்றாமல்‌ மாயை துடைத்துலவாச்‌ சுகவாருதியிற்
புகவுய்ப்பவன்‌வே
றொன்றாய பலசொல்லிய நாவோடறைவோர்‌ படர்திக்கினும்‌
வந்தடார
தென்னார்‌ கலியுன்னை யடுத்திடுமோ வினியின்னமும்‌
வேண்‌டியகேளெனவே. 49
[49. மூன்றான நாமம்‌ - 46 ஆம்‌ பாடலில்‌ காண்க, மயை துடைத்து -
மாயையை நீக்கி, உலவா - அழியாத, என்னார்‌ - என்று கூறார்‌.]

சேர்ந்தாரிடர்‌ தீர்ப்பவன்‌ சிவனே செப்பேசுர நாயகனே
யுமையாள்பாகா
இமையோர்‌ கண்டஞ்சு கறைசேர்கண்டா மதிசேர்முடியா
முனிவர்‌ வேந்தர்‌
பரமாவிமலா விரகாவினை தீர்ப்பபனே வேதா ஆனந்தா
அன்பருள்ளத்‌
தறிவுக்கறிவே பிறியா தைய்யா றுடையா யடிகேள்‌ சரணம்‌. 50
[50. இடர்‌ மிகு துன்பம்‌, விரகா - தேவர்களின்‌ துன்பந்தீர்க்கும்‌
உபாயமுடையவனே, அறிவுக்கு அறிவு - ஞானம்‌.]

கலிக்குப்‌ பயந்தே னல்லேன்‌ காலத்தியல்பிற்‌ பாவத்‌ தொழிலாம்‌.
புலிக்குப்‌ பயந்தோன்‌ முதலாபுகுமிடமிப்‌ புவியிற்புரியித்தல மல்லதில்லை
சொலிக்கப்‌ படுநின்‌ செம்பொற்சுடராங்‌ குறியைச்‌ சுற்றித்‌ திரியும்‌
பலிக்கத்‌ தருநலவா நல்கெனப்‌ பணிந்தானது பணிந்தா னவனும்‌. 51
[51. பயந்தேனல்லேன்‌ - பயப்படவில்லை, புகுமிடம்‌ - அடைக்கலமாகப்‌
புகுமிடம்‌, குறியை - இலிங்கத்திருமேனியை, பலிக்கத்தரு - வேண்டியது
பலிதமாக வரம்‌ தருவாய்]

காலக்கலி நானாளாதிப்‌ பொழுதாய்‌ கருமந்‌ தருமந்தரவே கருதிச்‌
சீலத்தவனுக்‌ கருளிச்‌ சிவனும்‌ செம்பொற்‌ குறியாயுறையச்‌ சுசியோன்‌
மேலற்புத முற்று மெய்ப்பினுடன்‌ விரும்பிப்‌ பிரியாதரும்‌ பொற்பதிவால்‌
கோலத்துடனற்‌ பொழுதுங்‌ கழியக்‌ குலவுஞ்‌ சிவன்வாழுல கெய்தினனே. 52
[52. சீலத்தவன்‌ - வைதிக ஆசாரமுடைய சுசிகரணன்‌, மெய்ப்பு -
அனுபவவுண்மை.]
(சுசிகரணனத்தியாயம்‌ முற்றும்‌)
---------------

15. சுசரிதனத்தியாயம்‌.
(பிரணதார்த்திகர்‌ சருக்கம்‌)

கனைமிகு கவுத மிக்கரை நன்னாட்டிடை
வினையறு சுகபனென்‌ றொருவன்‌ வேதியன்‌
மனைவியுஞ்‌ சுதிவல வென்றுரைப்பர்‌ மற்றவன்‌
தனையனுஞ்‌ சுசரித னென்னுந்‌ தன்மையான்‌. 1
[1. கனை - ஒலி, வினையறு - வினையினின்று நீங்கிய, வேதியன்‌ -
வேதாகமம்‌ வல்ல பிராமணன்‌, தனையன்‌ - மகன்‌.]

அன்புடை யில்லறம்‌ பலித்த தாதலின்‌
முன்புள சுதவன சுதபன்‌ மற்றவன்‌
தன்பதி விரதமேற்‌ கொண்ட தன்மையாற்‌
றுன்பறு சுசிலையே சுசிலை யென்பவே. 2
[2. சுதபன்‌ - எல்லா நலமும்‌ வாய்க்கப்‌ பெற்றவன்‌, சுசிலை –
அன்பு நிறைந்தவள்‌.]

மொழியினு மெண்ணினு மியாக்கை முற்றிய
தொழிலினுஞ்‌ சுசரிதன்‌ சுயரிதன்‌ மினார்‌
பிழிமது நவமலப்‌ பெய்த கூந்தலி
னெழிலுறு போதும்பர்‌ நாட்டிருக்கு நாளரோ. 3
[3. யாக்கை - உடல்‌, சரீரம்‌, மினார்‌ - மின்போன்ற அழகுடைய மனைவி,
எழிலுறு - அழகு பொருந்திய.]

ஆண்டு பன்னிரண்டு கார்ப்‌ பருவ
மாண்டறக்‌ கொண்டர்‌ கோளிரு கடவுட்‌ கூற்ற
வேண்டரு மறுதொழில்‌ விடுத்த வைதிகம்‌
பூண்டது பெருங்கலிப்‌ பொய்மை மிக்கவே. 4
[4. ஆண்டு - வருடம்‌, கார்ப்பருவம்‌ - மழைகாலப்பருவம்‌, மாண்டு –
முற்றிலும்‌ மாற்றமடைந்து, கொண்டர்‌ கோள்‌ இரு கடவுள்‌ - மழைக்குரிய
இரு கடவுளராகிய இந்திரன்‌, வருணன்‌, பெருங்கலி மிகப்‌ பெரிய கலிகாலம்‌.]

ஒருதவத்தவர்‌ நினைந்‌ தொன்றி நின்றனர்‌
பொருதனர்‌ தந்தைதாய்‌ புதல்வ ரில்லொடுங்‌
கருதினர்‌ பிறநறலங்‌ கற்பில்‌ மங்கையர்‌
மருதமும்‌ பாலையாய்‌ வறந்த தென்னவே. 5
[5. ஒருதவம்‌ - ஒப்பற்ற தவம்‌, பொருதனர்‌ - வீண்வழக்கிட்டனர்‌, மருதம்‌ - மருதநிலமாகிய வயலும்‌ வயல்‌ சார்ந்த வளமமன நிலம்‌, பாலையாய –
மழையில்லாது வறண்ட பயிர்பச்சை இல்லாத பாலை நிலமாக,
வறந்தது - வற்றிப்‌ போற்று.]

சசியுறா வயின்‌ குழிதூற்‌ சிலாமையாற்‌
பிசித முண்டென்பினும்‌ பிறந்து முளைதீர
பொசிவற வுயிருணப்‌ புகைந்து மேலெழும்‌
பசியெனுந்‌ தீக்கறம்‌ பருசு பட்டதே. 6
[6. சுசி - முதுவேனிலாகிய வெய்யல்‌ கொடுமைக்காலம்‌, பிசிதம்‌ - பற்று,
ஈரப்பற்று, பொசிவற - சிறிதளவும்‌ இல்லாமல்‌, பருசு - குற்றப்படல்‌,
சசி - மழை.]

மை புறைக்‌ கறுந்தலை மையிட வூர்தியின்‌
கையிடை.க்‌ கடலிடைக்‌ கனவினா விடைப்‌
பையுடைப்‌ பகிறலைப்‌ பாம்பின்‌ பல்லிடை
யுய்யிடைப்‌ பசியின்‌ வாயுயப்‌ பாய்ந்ததே. 7
[7. மையுறை - கருமை பொருந்திய, பையுடை - விடப்பையையுடைய,
பகிறலை - பிளந்தவாயையுடைய தலை.]

வாகடந்‌ திறந்தவ ரன்றிவர்‌ வாழுநற்‌
சோகடந்‌ தருள்கில்‌ தீங்கு மிகன்‌
நற்கடங்‌ கூடில்‌ என்று நாடு போய்க்‌
கற்கடங்‌ கடந்தனர்‌ கடலெண்‌ டிக்கினும்‌. 8
[8. வாகடம்‌ - மருத்துவம்‌, சோகடம்‌ - வருத்தமான நிலைமை, நற்கடம்‌
கூடில்‌ - நல்லகாலம்‌ அமையின்‌, கற்கடம்‌ - கற்கள்‌ பரவிய பாலை நிலம்‌.]
வித விரதத்தினா லிவணத்த மெய்யுடைச்‌
சுதபனுந்‌ துணைவியும்‌ சுதனும்‌ பின்வரப்‌
பதவுண வஃகிய பசியின்‌ வாடுநாள்‌
உதவுன ரின்மையி னொருவ னான ரோ. 9
[9. விதவிரதத்தினால்‌ - பலவகையான விரதங்களினாலும்‌, இவணத்தம்‌ -
பாலை நில வழியிடையே; பதவுணவு அஃகிய - பக்குவம்‌ செய்யப்பட்ட
உணவு குறைந்து போக, ஒருவனானரோ - தனித்‌தவனாயினன்‌.]

தேயமேற்‌ றறிந்த நாள்வரிற்‌ செய்யவன்‌
போயரும்‌ பஞ்சந தேசம்‌ புக்குமேற்‌
காயும்‌ வெங்காலனைக்‌ கடந்துற்‌ றானத்‌
தூயவர்‌ தொழுதன பற்றிச்‌ சொல்லுவான். 10
[10. நேயம்‌ ஏற்று - பிறநாடு செல்லுதலை சுதபன்‌ ஏற்று, பஞ்சநதேசம்‌ -
திருவையாறு. புக்கு - புகுந்து, சென்று, காயும்‌ வெங்காலனை - துன்பந்தரும்‌ கொடிய காலமாகிய எமனை, தூயவர்‌ - மனத்தூய்மையுடையவர்]

யாண்டு செலப்பிரிந்தனன்‌ புகுந்த தெப்படி
சேண்டரும்‌ போதும்பர்சூழ்‌ திருவை யாற்றிடைக்‌
காண்டருமம்‌ காலனைக்‌ கடந்த தேயத்தவர்‌
மாண்தவம்‌ விரித்தெனக்‌ கருள்‌ என்றனன்‌. 11
[11. செல - செல்ல, சேண்தரும்போது - தொலை தூரத்திருக்கும்‌ போது காண்தருமம்‌ - காணத்தகும்‌ தருமம்‌, மாண்தவம்‌ - மாண்புள்ள தவவொழுக்கம்‌ விரித்தென - விரிவாகச்‌ சொல்லுவாயாக என்று]

கற்பும்‌ ஞானமும்‌ சுரந்த கற்பப்
பொற்‌ பசு கடியெனும்‌ பூரணம்‌ கேண்மதி
உற்பதங்‌ காதையீது நன்காதை தாய்ச்‌
சொற்பணி சுசரிதன்‌ செய்து சூழுநாள்‌. 12
[12. கேண்மதி - கேட்பாயாக, உற்பதம்‌ - தோன்றும்‌ நற்செயல்‌.]

மாண்டனன்‌ வினைப்பயன்‌ மறப்பத்‌ தந்தைதாய்‌
யாண்டுட னிறந்த நாளாங்கு நீங்கினான்‌
வேண்டிய நிலம்புல மறிந்து மெச்சியோர்‌
காண்தகச்‌ செய்கட னாற்றினன்‌ மைந்தனே. 13
[13. வேண்டிய நிலம்‌ - தான்‌ விரும்பிய இடம்‌, புலம்‌ - நிலத்தகவான
தலம்‌, காண்தக – காணத்தகுந்த]

வளங்கெழு பெருமதி மற்றந்‌ தண்ணடைக்‌
களங்கெழி யுழலுமக்‌ காவிரிக்‌ கரைத்‌
தலங்கெழு சங்கரானலயங்‌ கண்டாழ்ந் தெழுந்
துன்பங்கெழ திருப்பழ னத்தை யுற்றனன்‌. 14
[14. வளம்கெழு - வளமை பொருந்திய, நண்ணடை - குளிர்ந்த செலவுடைய, துன்பங்கெழ - துன்பம்‌ பொருந்திய நிலையில்‌]

சுழிதரு பிறவிதன்‌ னோய்‌ மாந்தரிற்‌
கழிவாதல்‌ பிறவி தன்னோய்‌ மாந்தரிற்‌
பழிவினை வருத்தமோர்‌ பசியின்‌ வெவ்வேளையில்‌,
வழிவரு வருத்தமே மறப்ப மூழ்கினன். 15
[15. பழிவினை - பழி தரும்‌ செயல்‌, வெவ்வேளையில்‌ - கொடிய நேரத்தில்‌, மூழ்கினன்‌ - காவிரியில்‌ மூழ்கி எழுந்தனன்‌.]

நித்திய நியம முடித்தந்தணன்‌ மனையத்‌
திருநக ருளாற்‌ கடிசில காலமா
யொத்தத னிலைக்‌ குறியவிடம்‌ புக்க
வுண்டுத்‌ தன்னொரு நிழற்‌ றுஞ்சினானரோ. 16
[16. நித்திய நியமம்‌ - நாளும்‌ காலத்தொடு செய்யும்‌ நியதிகள்‌,
கடிசில்‌ - உணவு]

ஊழிதருமயர்‌ வுயிர்த்‌ தொடங்கி னான்றனக்‌
கழிவாலொரு கனா வச்சஞ்‌ செய்தலால்‌
மொழிகுளறிட வெழுந்துடல்‌ முக்கித்திட
விழிவழி புனலெழ விம்மி யேங்கினான்‌. 17
[17. ஊழிதருமயர்வு - என்றும்‌ இல்லாத மிகுந்த களைப்பு, கழிவால்‌ -
சிந்தனை எச்சத்தால்‌, முக்கி - திணறல்‌.]

கலங்கி யுண்டுக்‌ கொடுகாவிரித்‌ துறைப்‌
பொலங்கரை நடந்தனன்‌ பொதும்பார்‌ நீழல்போய்‌
நலங்கிளர்‌ பஞ்சநதேசம்‌ நண்ணி யாங்கு
இலங்கு தென்வாய்தனிற்‌ செல்லு மெல்லையின்‌. 18
[18. கலங்கி - உள்ளம்‌ கலக்கமடைந்து, பஞ்சநதேசம்‌ - ஐயாறு, நண்ணி - அடைந்து, இலங்கு - விளங்குகின்ற, எல்லையில்‌ - அச்சமயத்தில்‌,]

பொன்னி தோய்தலிற்‌ தோய்ந்தன
வென்னமின்னி வார்சடையானை யெவ்வுலகமும்‌ விளங்குந்‌
தன்னி னோங்கிய புகழொளி தன்னைமொய்ப்பதென
மன்னியோங்கு வெண்ணீற்றால்‌ வயங்கொளியானை. 19
[19. பொன்னி - காவிரியாறு, தோய்தலின்‌ - நீராடியதின்‌, மன்னி - நிலை பெற்றதாக, வெண்ணீறு - திருநீறு, வயங்கு – விளங்குகின்ற]

அறிவு காண்டலும்‌ புகைமேலரும்பிய போலுளச்‌
செறிவுதாங்கு தண்டிகைத்‌ தொடையானை வெஞ்சினத்தைப்‌
பொறிகளோடு கீழ்ப்படுத்திய போற்பொறி வீரராய்‌
பிறிவிரைப்‌ புவியதனின்‌ மேலிடைப்புளக மேலரும்பியபோல்‌. 20
[20. காண்டலும்‌ - காணும்‌ போது, பொறி - ஐம்பொறி, பிரிவுவிரை –
பிரிவு என்னும்‌ மாற்றம்‌ விரைந்து நடக்கின்ற.]

பற்பலவேதநூல்‌ மார்வின மேற்படிவித்த தென்னப்‌
பொற்பில்‌ முப்புரி நாலுடையான்தனைப்‌ புவனஞ்‌
சிற்பரன்றளைப்‌ போலுளந்‌ திகழ்தலிற்‌ செயலு
மற்பின முற்றையு மெடுத்தழித்தாக்க வல்லவன்‌. 21
[21. அற்பின - அற்பமானதாகக்‌ கொண்ட, முற்றையுப்‌ - எல்லாவுலகங்‌
களைவும்‌, எடுத்து - உண்டாக்கி, ஆக்க - மீண்டும்‌ தோற்றுவிக்க]

உடனிமிர்ந்து கண்முதன்‌ மூக்கிடை நுனியுறவுச்சி
மிடறு மேலெழத்‌ தொள்கரி கரிந்துகை விடாமாற்
நிடமுறும்‌ பதுமத்தின்‌ மேற்சிந்தையின்‌ முக்கட்‌
கடவுளைத்‌ தியானம்‌ பெறுமளளில்‌. 22
[22. உடல்‌ நிமிர்ந்து - உடலை பத்மாசனத்திருத்தி நிமிர்ந்து, தொள்கரி - மும்மலச்சேறு ஆகிய அழுக்கு, பதுமம்‌ - உள்ளத்தாமரை, முக்கண்‌ கடவுள்‌ - சிவபெருமான்‌.]

கண்டு தாள்களில்‌ வீழ்ந்து தனக்கவ்வுவகை விடாது
மண்டு கண்டுழி மானில நனைப்பவாய்‌ வொருவி
விண்டு விம்மி விம்மிப்‌ பயந்தழுதலு மாதென
கொண்ட தச்சமே யென்றுதன்‌ கொடுங்கையி லெடுத்தான்‌. 23
[29. கண்டு - சிவனைக்‌ கண்டு, அவ்வுவகை சிவபெருமானைக்‌ கண்ட
மகிழ்ச்சி, மண்டு - செறிந்து நிறைந்து, மாலென கொண்டது - மயக்கமான தொன்று என்று மனத்தில்‌ கொண்டது.]

அஞ்சலஞ்ச னினச்சமே னெங்ஙன மடுத்தாய்‌
மஞ்ச வெத்திசை நாட்டுளா யுன்மனப்‌ பயந்தீரத்‌
துஞ்சு போம்வகை காத்து மற்றெனக்கருளுண்டாம்‌
பஞ்ச மாநதிக்‌ கருணையாங்‌ கடலெனப்‌ பணித்தான்‌. 24
[24. அஞ்சல்‌ - அஞ்சாதே, அடுத்தாய்‌ - நம்பிப் பின்பற்றினாய்‌, மஞ்ச –
உயர்வான, துஞ்சுபோம்‌ வகை - அறவே நீங்கிப்‌ போகும்‌ வகையில்‌.]

அருந்ததிக்‌ கிறையாற்றலும்‌ அவற்றின்‌ கேளாய்‌
திருந்துமைந்தனு மொருபடி தெளிந்து மாதவனைப்‌
பொருந்து கவுதமிக்கரையுளேன்‌ போய்க்‌ கலிமிகலால்‌
வருந்துதாதை தாயுடன்‌ புறநாட்டிடை வந்தேன். 25
[25. ஒருபடி தெளிந்து - ஓரளவு தெளிந்து, மாதவனை - திருமாலை,
கவுதமி - கவுதமிநதி, தாதை - தந்தை.]

தந்தை‌ தன்பெயர்‌ சுதபனே தாய்பெயர்‌ சுசீலை
யெந்தை யோடவன்‌ முடிதலஞ்‌ சுசரித னெனப்போ
மிந்த நாடெலாந்‌ திரிந்து வந்திந்த கீழ்பால்‌
வந்தனே னொரு மானிழற்‌ றுஞ்சலு மன்னோ. 26
[26. எந்தை - எனது தந்தை, கீழ்பால்‌ - கிழக்கு திசையில்‌, மா நிழல்‌ -
மாமரத்தின்‌ நிழலில்‌, துஞ்சலும்‌ - அயர்ந்து தூங்கிடவும்‌.]

முரணிவோர்‌ மகனகினா விடையடைந்த தளறுமுதலா
யரணி லரவஞ்சு நாட்டுளே நமனுனை யழைக்கு
மரணமாதி யென்றுரைத்திடக்‌ கண்டு மாழாந்தெனச்‌
சரண மென்றுனைக்‌ கண்டின்றறிந்தேன்‌ தக்கோய்‌. 27
[27. முரணி - மாறு பட்ட வடிவில்‌, அகினா - பிளந்த நாக்கையுடைய
பாம்பு, அளறு - சேற்றைப்பூசிக்‌ கொண்டு, மாழாந்து - மயக்க மடைந்து]

செய்தவக்குறை யென்கொலோ தீவியுளதோ
எய்து மெய்ப்பவன்‌ பேற்றிலே னிடையுயராண்டு
கைதவக்‌ கொடுங்‌ கூற்றுவன்‌ கைபடக்‌ கடவென
வைதிகச்‌ சிகரமணியினக்‌ காகென வசிட்டன்‌. 28
[28. தீவி- தீவியமாகிய நன்மை, கைதவம்‌ - இழிவான செயல்‌,
வைதிகம்‌ - வேதாகம நெறிமுறை.]

பொருமிக்‌ கண்சிவந்தழலெனப்‌ புதல்வனை நோக்கித்‌
தருமத்தின்‌ பரிபாகத்தை யோகத்திற்‌ கண்டு
நிருமித்தங்ஙன்‌ சுசரித ளினது முற்பிறப்பில்‌
வருமத்தன்மை யிச்சேட மென்றவர்க்கது வகுப்பான்‌. 29
[29. பொருமி - விம்முதல்‌ செய்து, பரிபாகம்‌ - செயல்‌ முறை, சேடம்‌ -
முற்பிறப்பின்‌ தொடர்ச்சியாக வரும்‌ வினை விளைவு.]

பலயிறப்பி லோர்பிறப்ப நீபற்பல தொந்தங்‌
கிலகவ்வியா லகந்தை யினாலரிய நூலை
உலகமெண்ணு மாசான்‌ முகத்துணர்கி லுணர்ந்தாய்‌
குலவி வுரங்கும்பி பாகங்களிற்‌ குளித்தாய்‌. 30
[30. அகந்தை - தானென்ற ஆணவம்‌, கும்பிபாகம்‌ - கருவினாலாய
பிறப்பி, குளித்தாய்‌ - அனுபவித்தாய்‌.]

ஆங்கு மானுடமோர்‌ நூறு நூறாக
வெங்கு துக்கமாதி புடத்தினமிழ்ந்தினை யெழுந்தாய்‌
பாங்கு துய்த்தவர்க ளேடத்தினாற்‌ பார்மேற்‌
நீங்குசேர்‌ கழுதை பிறப்பொருபது செறிந்தாய்‌. 31
[31. வெங்கு - செயலால்‌ வரும்‌ நலிவு, ஏடம்‌ - காமவிருப்பம்‌,
ஒருபது - பத்து.]

கள்ளமார்‌ நரியோரிக ளொருபது கண்டாய்‌
எள்ள நாய்க்கருப்பங்கள்‌ பஃதுற்றனை பின்‌
பிள்ளையாய்‌ பிணப்பெருங் கழுகாகியப்‌ பெற்றித்‌
தள்ளாப்‌ பிறப்புற்றனை யிற்றெலாம்‌ தவிர்‌. 32
[32. கள்ளமார்‌ - வஞ்சனை பொருந்திய, நரி - குறுநரி, ஓரி - பெருநரி,
எள்ள - யாவரும்‌ இகழ, நாய்க்கருப்பங்கள்‌ - நாய்ப்பிறப்பு, இற்றெலாம்‌ - இவையெலாம்‌.]

தரையினின்‌ சண்டாள னாயச்‌ சங்கரசாதிப்‌
புரையில்‌ சூத்திரன்‌ வாணிகன்‌ புரல்லனடைவோ
வரையி லொவ்வொரு பவங்கடந்தந்தண வருணக்‌
கரையிலேறினை நல்வினை முகிழ்த்தலாற்‌ பெற்றனை. 33
[33. சண்டாளன்‌ - கொடும்பாதகன்‌, சங்கரசாதி - கலப்பு சாதி, யுரையில்‌
சூத்திரன்‌ - குற்றமற்ற வேளாளன்‌, வருணக்கரை - சாதியாகியகரை,
முகிழ்த்தலால்‌ - தோன்றியதால்‌.]

வாழுநாட்‌ குறையானது மற்ற வெவ்வினையே
யூழிலின்னமும்‌ பூசுரப்‌ பிறப்புரை யொருபாண்‌
றாழில்‌ பிறப்புத்தெனுந்‌ தந்‌தைதாயிழந்து காழில்‌
வாழு நாளிடை முறிந்தெய்துவை கண்டாய்‌. 34
(வேறு)
[34. வெவ்வினை - கொடிய வினை, ஊழில்‌ - முடிவில்‌, பூசுரப்பிறப்பு - அந்தணப்பிறப்பு, காழில்‌ - வலிந்தவாழ்‌ வில்‌,]

முருகு வாய்விரி தாமரைப்‌ பொகுட்டினான்‌ முகத்தோன்‌
தருகுமாரனீ துரைத்தலுஞ்‌ சுசரிதன்‌ நற்கோவே
திருகு தீவினைப்‌ பாக்கியம்‌ எப்படித்தீரும்‌
அருகுபாயம்‌ தற்தருளென வருமுனி யறைவான்‌. 35
[35. முருகு - அழகு, பொகுட்டு - மொக்கு, நான்‌ முகத்தோன்‌ தரு
குமாரன்‌ பிரமபுத்திரன்‌ வசிட்டன்‌ அருகும்‌ உபயம்‌ - குறைந்தழிதற்குரிய
நல்வழி.]

பெரிய காலனை வெல்வது கேளினிப்‌ பின்னரைதல்‌
அரிய காவிரி முப்பொழுதும்‌ படிந்தாடிக்‌ காணற்‌
கரிய மாலயன்‌ சூழ்திருக்‌ கோயிலிற்‌ காதல்‌
புரிதி நாதனைப்‌ பாங்கமைப்‌ பஞ்சநதேசனைப்‌ போற்றி. 36
(வேறு )
[36. பெரிய காலன்‌ - பெரியதாகிய எமன்‌, அரிய காவிரி - சொல்லுதற்கரிய சிறப்பினையுடைய காவிரியாறு, படிந்து - நீராடி, மால்‌ அயன்‌ - திருமாலும்‌ பிரமனும்‌, காதல்‌ - நிலையான பற்றுதல்‌, புரிதி - செய்வாயாக.]
சூழ்வலஞ்செய்து குத்திர மந்திரஞ்‌ சொல்லித்‌
தாழ்விலஞ்‌ செழுத்‌தோதி யிராப்பகற்‌ றப்பாது
ஆழ்விலாம்‌ மோனமோடிப்படி நாள்களோர்‌ நாள்‌
வாழியின்று முதற்செயல்‌ வெல்வது வாய்மை. 37
[37. குத்திர மந்திரம்‌ - குறிக்கோள்‌ நிறைவேறுதற்குரிய மந்திரம்‌,
மோடிப்‌ படி - பயன்வரும்‌ செயற்படியே, ஆழ்வில்‌ ஆம்‌ - உறுதிப்பாட்டில்‌ உண்டாகும்‌.]

அய்யமில்லை யமன்வர வஞ்சுவ ஞைஞ்சான்‌
மைய்யடர்ந்த வெம்மேதி லெங்ஙனம்‌ வந்தால்‌
மெய்யடர்ந்‌ தடும்‌ பஞ்சனதேசன்‌ விடுக்குமங்‌
கையடங்கும்‌ கழுக்கடை வெம்பகை கண்டாங்‌ 38
[38. ஐய்யமில்லை - சந்தேகமில்லை, மெய்யடர்ந்து அடும்‌
உடலைச்சார்ந்து அழிக்கும்‌.]

என்னைக்‌ காத்தற்‌ கிருந்தனன்‌ பஞ்சனதீசன்‌
உன்னைக்‌ காத்தற்‌ கிருந்தனன்‌ யானெனவோதி
அன்றே சாலைய வாச்சிரமத்திற்‌ படர்ந்தான்‌
முன்னற்‌ காற்றிய நீதியிற்‌ செயல்முயன்றான்‌. 39
[39. சாலைய - வேதாகமசாலையாகிய, படர்ந்தான்‌ -
சென்றடைந்தான்‌ வசிட்டன்‌. ]

ஏத்தியானன்‌ மஞ்சுடை யான்றனை யெண்ணு
நாத்தியான்‌ நெஞ்சோடஞ்சு நாட்செலு நாளால்‌
ஆத்தியான்‌ தண்காவிரி மூழ்கினா னாங்கு
மாத்தியான்‌ முடிந்து திரும்பி வருங்கால்‌, 40
[40. ஆனன்‌ - இடபவாகனமுடையான்‌, மஞ்சுடையான்‌ - சடையில்‌
நால்வகை மேகங்களை அணிந்தவன்‌ (சிவன்‌) ஆத்தியான்‌ -
ஆத்திமாலையையுடைய சோழனது, மாத்தியான்‌ - தன்னை தூய்மையாக
மாற்‌றிக்‌ கொண்டவனாகாமல்‌,]

பாலனாய்‌ இவை நொந்தனன்‌ மாதவன்‌ பார்த்து
காலத்தூதுவர்‌ தீண்டுதற்‌ கஞ்சுவ கண்டு
நீலமேரு விலோர்கரி ஞாயிறு நேர்ந்தாற்‌
போல மேதியிலந்தக னேறினன்‌ போந்தான்‌. 41
[41. மாதவன்‌ - வசிட்டன்‌, காலத்தூதுவர்‌ - எமதூதர்கள்‌, மேதி –
எமனுடைய எருமை வாகனம்‌.]

சுரங்காதி வியாதிநெடும்படை சூழ்ந்தாங்கு காலன்‌
மிருத்து முதற்றலை யோர்க்குட்‌ கரங்கொள்
பரசமுத்‌ தண்டமுங்‌ கொண்டெதிர்‌ கண்டொ
ருரங்கள்‌ மாயவருமாய ரூப மாடுற்றான்‌. 42
[42. சுரம்‌ ஆதி - சுரம்முதலான, மிருத்து - இறுதிநிலை, பரசம்‌ - மழுவாயுதம்‌, தண்டம்‌ - தண்டாயுதம்‌, உரங்கள்‌ - பாம்புகள்‌.]

பிடித்து வெட்டடி குத்தடிகண்டு மளந்து
குடித்திரத்த மிறைச்சிகொள் கொப்பிளி கொல்லு
துடித்திடக்‌ கடியென்று பயப்படச்‌ சொல்வாய்‌
மடித்துரப்பி வரும்படை சூழ்தர வந்தான்‌. 43
[43. பிடித்து - சுசரிதனைப்‌ பிடித்து, சொல்வாய்‌ - சொல்லுகின்றவாய்‌,
உரப்பி - உருமுதல்‌ செய்து.]

இந்த காலனுங்‌ காவிரித்‌ தென்கரை யெய்த
முந்தை பாலனு நின்றன னந்தர முற்றி
அந்தா நளனும்‌ கண்டன னேங்கின னாங்கு
வந்ததால்‌ வருகென்‌ றவன்‌ பக்கல்‌ மிதித்தான்‌. 44
[44. எய்த- அடைய, முந்தை - முற்பட்ட, அத்தணாளன்‌ - சுரதனாகிய
பிராமணன்‌.]

ஓவ்வோல வசிட்டதபோதன வோலம்‌ காலன்‌
மேயினன்‌ காவிரித்‌ தென்கரைக்‌ கண்டேனல்‌
வெவ்வெனம்‌ புரப்பாயெனை வோடக்‌ கொல்‌
காலமென்‌ விலகுமென்று விரைந்து குதித்தான்‌. 45
[45. ஓலம்‌ - அடைக்கலம்‌, வெவ்வென - எனக்குப்பற்றுக்கோடாக
விரைந்து, புரப்பாய்‌ - பாதுகாப்பாய்‌.]

அந்த வந்தகன்‌ வந்தனன்‌ வந்தன னந்தோ
யெந்தாய்‌ மைந்தன்‌ பயந்தனன்‌ வந்தன னென்று
பந்த சிந்தனை சங்கை தெளிந்த வசிட்டன்‌.
புந்தி முந்தி விரைந்தெதிர்‌ வந்து புகுந்தான்‌. 46
[46. அந்தகன்‌ - எமன்‌, பந்த சிந்தனை - பற்றோடமைந்த நினைவு,
புந்தி மூந்தி - எண்ணுவதற்கு முன்னதாக, சங்கை - சந்தேகம்‌.]

மற்றை யாச்சிரமத்தினுள்‌ சென்ற வன்மங்கா
யிற்றை யாச்சுத்துச்சு மென்னோடினை யென்றான்‌
கற்ற மாதவப்‌ பொன்னியதன்‌ தென்கரைக்‌ கண்டான்‌
சொற்ற கூற்றுவன்‌ வந்தனனென்று துளங்க. 47
[47. ஆச்சிரமத்தினுள்‌ - வசிட்டனுடைய ஆசிரமத்தினுள்‌, துச்சும்‌ - வருத்தும்‌, துளங்கவந்தனன்‌ - யாவரும்‌ காணுமாறு வந்தனன்‌.]

கையினா லனைத்‌ தஞ்சலைக்‌ காப்போம்‌
வைய்யமாளி வரங்‌ காலனுக்கென்ற வணின்‌
நய்ய வாவெனக்‌ கோயிற்றென்‌ வாயிலெடுத்த
செய்யகாவிரி யுத்தர தீரத்திற்‌ சென்றான்‌. 48
[48. அஞ்சலை - அஞ்சாதே, வைய்யமாளி - உலகங்களை ஆளுகின்ற
சிவன்‌, செய்யகாவிரி - தூய்மையான காவிரியாறு. உத்தரதீரம்‌ - வடக்குக்‌ கரையிலமைந்த தலம்‌.]

வாயினஞ்‌ செழுத்துச்சரித்தி நின்‌ற வன்மையும்‌
நீயுமஞ்செழுத்‌ துச்சரிக்‌ கென்ற வணின்றான்‌
காயு வெஞ்சமன்‌ சேனையுந்‌ தானுங்கடந்‌
தாங்கேயு மெல்லையிற்‌ கண்டனன்‌ முண்டகனென்பான்‌. 49
[49. ஐந்தெழுத்து - சிவனுடைய மூலமந்திரமாகிய பஞ்சாச்சரம்‌,
காயுவெஞ்சமன்‌ - துன்பந்தரும்கொடிய எமன்‌, முண்டகன்‌ - எமதூதருள்‌
ஒருவன்‌.]

தவமதிப்பி லஞ்செமுத்‌ துளஞ்செனத்தாழா
னவமதித்தன னிச்சுதன்‌ றனையடர்ப்பானவ
மதித்தனன்‌ போன்மெனப்‌ பஞ்சநதீசன்‌
சிவன்மதிக்கமுறுந்‌ துதியே துதிசெய்தான்‌. 50
[50. தாழா - பணியாமல்‌, சிவன்‌ மதிக்கமுறும்‌ - சிவபெருமான்‌ மதிக்கத்‌
தக்கதாக.]

காமன்‌ மாய்ந்திட நால்வரைக்‌ காத்தனை கடியுமுப்புரமான
வேமவெஞ்சிலையான கையா லெரித்திமையவர்‌ தமைக்‌காத்தாய்‌
நாம பஞ்சனயஞ்சன தேசுர ஞான சுத்தானந்த
சோமகாரண காலனாற்‌ பயந்தவிச்‌ சுசரிதன்றனைக்‌ காப்பாய். 51
[51. நால்வர்‌ - சனகாதி முனிவர்‌, இமையவர்‌ - தேவர்கள்‌, சோமகாரண - சோமயாகாதிகளின்‌ காரணமானவனே.]

(வேறு)
ஆலமுண்டு மூவுலகெலாங்‌ காத்தனை மந்தகாசுரன்‌ செற்ற
சூலபாணியாயினை பிறையணிந்‌ துயிர்தொலை பணிதனைக்‌ காத்தாய்
பாலலோசன பிரணதார்த்திகா மெய்பரம பிரமச்சோதி காலகால
காலனாற்‌ பயந்தவிச்‌ சுசரிதன்‌ றனைக்‌காப்பாய். 52
[52. ஆலம்‌ - விடம்‌, செற்ற - அழித்த, பாலலோசன - காத்தலே கடமையாகக்‌ கொண்டவா.]

பெரும்‌ பிறப்‌ பிறப்பெனும்‌ பிணிதவிர்த்தி வானவ ரோங்கசுதித்‌
தரும்‌ பத்துணை மருந்துளா யுலகெலாமளித்‌ தவையவை காத்தாய்‌
விரும்பு ருத்திர முடிமறை மெய்ப்பொருட்‌ கிலக்கேவெங்‌
கருப்புறப்‌ பகடூர்தியாவற்‌ பயந்த விச்சரிதன்றனைக்‌ காப்பாய்‌. 53
[53. பத்துணை - பற்றாக வரும்‌ துணை, மெய்ப்‌ பொருட்கிலக்கே –
உலகில்‌ உண்மைப்பொருள்‌ நீயென்பதற்கு இலக்கானவனே.]

போற்றி போற்றி நின்னடிக்‌ கடைக்கலம்‌ புகுந்தனனிவன்‌
போற்றி போற்றி போற்றிநற்‌ பிரணதார்த்திகனே யடைக்கலமிவன்‌
போற்றி போற்றி முக்காலு மிக்காலனும்‌ புகுந்தனன்‌
போற்றிபோற்றி போற்றியென்‌ றுரைத்த வசிட்டனும்‌ பூரணனது
கேட்டான்‌. 54
[54. அடைக்கலம்‌ - உன்னை அடைக்கலமாக அடைந்தான்‌, பூரணன்‌ - நிறைவானவன்‌.]

அரியாதி தேவர்‌ மறைகூவினாலு மனுகாம லேழையடியார்‌
மரியாதி கூறிலெளி தோடியோடி வருவனேணாமை யுளனோ
பரிவார்‌ வீரகணநாத நந்திபடா தென்றுரைத்‌ தவனுந்‌
தரியான்‌ விரைந்து மரியா னுகைந்த சரணாரவிந்தமருவி. 55
[55. அரியாதி - திருமால்‌ முதலான தேவர்கள்‌, அணுகாமல்‌ - செல்லரமல்‌,
மசியாதி - பணிவான அன்பு, பரிவான அன்பு, பரிவார்‌ - அன்பு நிறைந்த
அடியார்‌, தரியான்‌ - தங்கிவிடமாட்டான்‌.]

இருந்தாள்‌ பணிந்து துகிலோடொதுங்கி யெழில்வாய்‌ புதைத்தேனிறைவா
திருவாய்‌ மலர்ந்த செயலேதேனுஞ்‌ சேர்வ தெளியாமுன்‌ பன்மொழிவா
மருகாலு தெச மொஞ்யார்‌ வசிட்டனுயிரான சிட்டனவன்மேல்‌
வருவான்‌ மனங்கோலவலனாவி கொன்‌றவழகனைப்‌ புரித்தியெனலும்‌. 56
[56. இருத்தாழ்‌ - தீவினைகளை வலிந்து நீக்கும்‌ திருப்பாதங்கள்‌, சிட்டன்‌ -
மாணவன்‌, மனங்கோலவலன்‌ - மனத்தால்‌ மாறுபட்டவன்‌, புரித்தி - புரித்துகொள்.]

அடி தொட்டு வைத்த முனி நந்தி ……. …….. ….
………………………………..
நொடியிற்‌ கிடைத்து முனிவர்க்‌ கெதிர்க்க நுனி முத்தலைக்குள்‌
படையைப்‌ படிநட்டுவைத்து நடுவிட்ட செங்கை பரமிட்டு நிற்க யமனுங்‌
கடிதெட்டி யெட்டி யருகொட்டி நிற்றல்‌ சலியாது கிட்டி முயல்வான்‌. 57
[57. முத்தலைப்படை - திரிசூலமாகிய சிவனுடைய ஆயுதம்‌, கடிது - விரைந்து,
சலியாது - தளர்ச்சியடையாமல்‌.]

திருநந்தி தன்னை முனியோடெணாது திரணத்தி னெண்ணிமகிழ
வெரிநின்‌ நிறங்க ளிலனாய்‌ விசைந்து மிகுசேனைசூழ்விரவி
யிருனெஞ்சினன்‌ சுசரிதன்‌ கழுத்தி லிறுகப்‌ பிணித்த கயிறோ
டொருதிண்கைக்‌ கொண்ட தண்டாயுதத்தி னொருகா
லடித்து விசையால்‌. 58
[58. எணாது - எண்ணாது, மதிக்காமல்‌, திரணத்தில்‌ - ஒரு கணப்பொழுதில்‌.]

அய்வா யடங்கி தவசிங்கமொன்று மருகுறை சிங்க மதுவுங்‌
கைவாய்‌ கடங்கொல்‌ படைகொண்ட தென்று கருதாமல்‌ நின்ற நடுவே
மெய்வாய் நடுங்கு பசுவின்‌ புனிற்று மென்கன்றை மென்றுநுகர்வான்‌
பொய்வாய்‌ பிளந்து பின்போய்‌ விழுந்து புலிபாய்வ தென்னநலிய. 59
[59. தவசிங்கம்‌ - வசிட்டன்‌, அருகு உறை சிங்கம்‌ - வசிட்டனுக்கு அருகே
இருந்த சிங்கம்‌ போன்ற சுசரிதன்‌.]

ஆகாது கால பஞ்சாபகேச னருளாணை மைந்த விவனென்‌
மாகாவனென்று தடைகூறியிங்கு விடுகென்றுரைப்ப மதியான்‌
சேகாய மிகுந்து வலிகொண்டுவாங்கு செயல்‌ கொண்டுநந்து
நகையாவோ காலவங்கியிவனென்ன வெம்பியுங்‌
கார்நெஞ்சோ டொளியா. 60
[60. மாகாவன்‌ - மிக்க காவலுக்குட்பட்டவன்‌, நந்து - பொருந்திய, ஓ கால –
ஓ காலனே! கார்‌ நெஞ்சோடு - கருத்துக்கொடுமை நிறைந்த மனத்தோடு. ]

சூலாயுதத்தை நமன்‌ மார்‌ வினாவி சுழலத்‌ திரித்து விடலும்‌
மாலால மென்ன அழலோவிதென்ன வவன்வஞ்ச முண்டதுட
மாலாய மேகம்‌ நிலமோதி வீழும்வகைபோல்‌ விழுந்தல்லோ
மேலான பேரை மதியாத பாவி விழுகின்ற வண்ணமிதுவே. 61
[61. வினாவி - குறித்துப்பேசி, மாலாலம்‌ - மயக்கம்‌ தருவிடம்‌, மாலாய மேகம்‌ - மயங்கித்திரிந்த கருமேகம்‌.]

மேலவன்‌ சொல்‌ வெகுண்டதுஞ்‌
சூலமெய்துஞ்‌ சோலை போல்‌
காலன்‌ வீழ்ந்தது கண்டபின்‌
பாலன்‌ நின்று பகர்ந்‌ திடும்‌. 62
[62. மேலவன்‌ சொல்‌ - வசிட்டனது சொல்‌, பாலன்‌ - சுசரிதன்‌,
காலன்‌ - எமன்‌, பகர்ந்திடும்‌ - விளக்கிக்கூறும்‌.]

அரனென்று அயன்‌ மால்‌ தொழும்‌
பிரணதார்த்திகன்‌ தனைச்‌
சரண மென்றடைந்‌ தார்‌ சமன்‌
திரண மென்பது திண்ணமே. 63
[63. அரன்‌ - சிவன்‌, அயன்‌ - நான்முகன்‌, மால்‌ - திருமால்‌, பிரணதார்த்திகன்‌ - அடியார்களின்‌ உயிரினைப்‌ பாதுகாக்கும்‌ தலைவன்‌, சமன்‌ - சிவத்தன்மையினை ஒப்பப்பெற்றவர்‌. திரணம்‌ - உறுதி.]

பாட வல்லவை பாணியோ
டாட வல்ல பிரான்தனை
கோட வல்ல வரசுற்ற னின்‌
வீட வல்லவா மெய்மையே. 64
[64. பாணி - தாளத்தோடு கூடிய பாட்டு, ஆடவல்லபிரான்‌ - அம்பலத்தில்‌ ஆனந்தத்தாண்டவம்‌ புரியும்‌ சிவபெருமான்‌.]

பாச பஞ்சகர்‌ காணொணா
தேச பஞ்ச நதேசனே
வாசயஞ்சகா நீண்மனப்‌
பாசப்‌ பஞ்சனற்‌ பான்மேயே. 65
[65. பாச பஞ்சகர்‌ - ஆசைக்கு இலக்காகும்‌ ஐம்புலன்கள்‌, வாசயஞ்சகா -
பூவில்‌ கலந்த மணம்‌ போன்றவா.]

செப்பியத்‌ திருமாலவர்க்‌
கொப்பிலாப்‌ பெருமான்‌தனைக்‌
கைப்படுத்தவர்‌ காலனைத்‌
தப்பி நிற்பது உண்மையே. 66
[66. செப்பிய - கூறிய, ஒப்பிலா - வைத்து ஒப்பு சொல்லப்‌ பெறாத
அளவில்‌ உயர்ந்த. கைப்படுத்தவர்‌ - உள்ளத்தில்‌ நிறைவாகக்‌ கொண்டவர்‌.]

உம்பர்க்‌ காதிப னோதருஞ்‌
சொம்பொற்சோதி செப்பேசனை
நம்பிச்‌ சேர்ந்தவர்‌ தம்மைக்காலன்‌
வெம்பிச்‌ சீறுதல்‌ இல்லையே. 67
[67. உம்பர்க்காதிபன்‌ - தேவர்கட்கெல்லாம்‌ தலைவன்‌, செப்பேசன்‌ -
ஐயாறுடைய நாதன்‌, வெம்பி - கொடுமை கொண்டு.]

தஞ்ச மென்றிமை யோர்தமை
அஞ்ச லென்ற பிரான்தமை
தஞ்ச மெனவந்தார்‌ அஞ்சிடும்‌
வெஞ்சு நமன்‌ கையில்‌ மீள்வரே. 68
[68. அஞ்சிடும்‌ - அடியார்களும்‌ அஞ்சும்‌ படியான, வெஞ்சு நமன்‌ -
மிகக்‌ கொடுமையுடைய எமன்‌]

புறம்‌ வளர்த்த குழற்‌ பொறை
அறம்‌ வளர்த்த மேலன்பினைத்‌
திறம்‌ வளர்த்தவர்‌ தீரும்‌மன
மறம்‌ வளர்த்தலும்‌ மறப்பரேோ. 69
[69. புறம்‌ வளர்ந்த குழல்‌ - மங்கையர்‌, பொறை - பொறுமை, மறம்‌ -
தீமைகள்‌, தீரும்‌ - போக்கும்‌.]

ஆல கண்டனை யாறனை
மேல கண்டனை மேயினார்‌
நீல கண்டனால்‌ நிட்டூரக்‌
கால கண்டங்‌ கடப்பரே. 70
[70. ஆல கண்டன்‌ - விடத்தை கழுத்தில்‌ நிறுத்திய சிவன்‌, மேல்‌ அகண்டன்‌ - எல்லாத்தெய்வங்கட்கும்‌ மேலாக உலகெலாம்‌ பரவி நிற்பவனை.]

எட்டுத்‌ தோத்திரப்‌ படி
மட்டுக்‌ கூறி வழுத்தலுஞ்‌
சிட்டறக்‌ காய்த்‌ திருவாய்தலின்‌
வட்டக்‌ கோயிலுள்ள னவர்‌. 71
[71. மட்டுக்கூறி - தோத்திரங்கூறி, வழுத்‌தல்‌ - வணங்குதல்‌: வட்டக்‌
கோயில்‌ - திருச்சுற்றோடு பொருந்திய கோயில்‌.]

பாலன்‌ வீழ்ந்து பணிந்தனன்‌
ஆலங்‌ காலமியற்‌ றயனுஞ்‌
சூலங்‌ காத்த சுதன்‌ றனைச்‌
சீலங்‌ கேளெனச்‌ செப்புவான்‌. 72
[72. சுதன்‌ - மகன்‌, சீலம்‌ - மேன்மை]

நீ விடாக்‌ குருவாய்‌ நினை
மா வியாத்‌ தவ சிட்டனை
ஆவி காத்தன னாதலால்‌
தாவி லாசுதத்‌ தாதையே. 73
[73. தவசிட்டன்‌ - தவமுனிவன்‌, ஆவி - உயிர்‌, தரவிலா - குறைவில்லாத.]

களங்‌ கறுத்தவர்‌ நண்ணினாற்‌
தீங்‌ கறுப்பவர்‌ தேசிகர்த்‌
தாங்‌ கறுந்தவர்‌ தங்களின்‌
தீங்‌ கறுப்பர்‌ எமக்‌ கில்லையே. 74
[74. தேசிகர்‌ - ஆசார்யனாகிய முதல்வன்‌, தீங்கறுப்ப - தீங்கினை நீக்குவர்‌.]

எண்ணு மவ்வினை யோனுக்கு
பின்னு நின்றுயிரான மொழி மன்னன்‌
முன்னும்‌ வசிட்ட னாயிரத்‌
துன்னி யொன்றை யுரைத்தனன்‌. 75
[75. உயிரான மொழி - உயிர்‌ காப்பான சொல்‌, உன்னி - தீரஆலோசித்து.]

சுத்த நற்குலச்‌ சுத்தமோ
டொத்த பக்குவத்‌ துத்தமத்‌
துத்தமக்‌ குணத்தோர்‌ திருச்‌
சித்த மொக்க மணஞ்‌ செய்க. 76
[76. குலச்சுத்தம்‌ - கோத்திர சூத்திரத்‌ தூய்மை, சித்தம்‌ ஒக்க - மனம்‌
பொருந்த.]

முன்‌ புலக்கு முனிக்‌ கணந்‌
தென்‌ புலத்தவர்‌ தேவர்தாம்‌
மன்‌ புலப்பில தாயிரீஇ
யின்‌ புலப்பில்‌ பெற்றியால்‌. 77
[77. புலக்கும்‌ - வருந்தும்‌, தென்புலத்தவர்‌ - பிதுர்க்கள்‌, பெற்றி -
மேன்மை, பெருமை]

ஊழ னைத்தினு மும்பராய்‌
வாழு முத்தியில்‌ வைத்துமென்‌
றாழ்‌ கடைக்‌ கருணைக்‌ கணால்‌
வீழ்‌ சமர்க்கு விழித்‌ தனன்‌. 78
[78. ஊழ்‌ - விதி, உம்பராய்‌ - தேவராய்‌, கணால்‌ - கண்ணினால்‌,
சமர்க்கு - பகையான போருக்கு.]

பார்த்த பார்வை யமன்‌
மூர்த்த மாங்கு முளைத்தெழு
மார்த்தி தீர்த்துட னாண்டவற்
மோந்திரங்‌ கடு தீக்குமே. 79
[79. பார்வை - நோக்கு, ஆர்த்தி - ஆருதலுடன்‌ செயலாற்றி, கடு –
கடுமையான தீமைகள்; மூர்த்தம்‌ - வடிவுடைய பெருமான்‌, முளைத்தெழு - தோன்றி எழும்‌.]

அனித்திய விசித்திரம்‌ சூசிவிதந்‌ துயரி னாகர மாகு முலகஞ்‌
சனித்திடு முபாதான பூதமாதியின்‌ வாழ்வு
தருமனவசனியமதாய்‌
குனிக்கு மொரு மாயையைப்‌ பூரணவரங்கிடைக்‌
கூத்தாட்டுவிக்குந்‌
தனியுனைத்‌ தெளியவல்லார்‌ சிலரல்லர்‌ மாயவ
நின்னாணைக்‌ கடவாய்‌. 80
[80. சூசிவிதம்‌ - குறிப்பான வகை, ஆகரம்‌ - இருப்பிடம்‌.]

அரிமுதற்‌ றேவர்க்‌ கடங்காத மலயன்‌ வாத்தாங்காது
மிக்குமிசை போய்த்‌
திரியுமுப்பிரி யொடுவ்‌ கொடிய கோடா கோடி
தீயவசுரேசரையெலாம்‌
கரியுறப்‌ புன்முறுவல்‌ கொண்டு மூவரையதிர்‌ காத்த
வெற்றிப்‌ புகழுளாய்‌
எரிசினத்‌ தொழில்‌ விடும்பெரியார்‌ சிலரல்லாமல்யாவர்‌
நின்னானைக்‌ கடவார்‌. 81
[81. மலயன்‌ - இமயமலையை உடையவன்‌, கரியுற - அழிந்து போக,
புன்முறுவல்‌ - புன்‌ சிரிப்பு.]

சுரர்குழு வெடுத்திடு மத்துமந்தா ரச்சுழவிற்‌ கரங்கு கடல்‌ வாய்ப்பிரளயத்‌
தெரியிற்‌ பிறந்தொழுங் கெழுகடுப்‌ பிறவிப்‌ பறந்துட லெலா
மரிமுதற்‌ சூடுண்டவற்‌ கஞ்ச லென்றங்கை நெல்லியளவாக்கி யுண்டாண்‌
டிருள்படுமிடற்‌ றொளியை மறவாத சிலரன்றியாவர்‌ நின்னானைக்கடவார்‌. 82
[82. சுரர்குரு - தேவகுரு பிரகஸ்பதி, மந்தா - மந்திரகிரி, கெழுகடு - மிக்க கொடியவிடம்‌, அரிமுதல்‌ - திருமால்‌ முதலான, அங்கை – உள்ளங்கை.]

கருகுண்டு புல்லுண்டு கனலுண்டு காலுண்டு சருகுண்ட நீறுராசி
யுருகுண்ட நெஞ்சொடுந்‌ திரிகின்ற காதியுள்‌ வெளிய முனிவோரையுந்‌
துருகுண்டு துயர்செய்யுஞ் சிந்தசன்‌ கோமளச்‌ செவ்வியழகேறி
நீறுபட்டிருக்‌ கின்றவகை கண்ட கண்கண்ட பேரின்றி யாவர்‌ நின்னாணைக்கடவார்‌. 83
[83. கருகுண்டு - கரிந்துபோய்‌, துருகுண்டு - குற்றங்கொண்டு,
கோமளச்‌ செவ்வி - அழகு நிறைந்த தோற்றம்‌.]

அதி கண்டகப்‌ பன்னிரண்டு கண்டா மணியலங்கார வெங்குகடல்‌ போல்‌
விதிர்கண்டக கண்டம்‌ இடக்கான மிருத்து துதியோடு சேர்‌
கதி கண்டரும்‌ பயங்கொண்ட மார்க்கண்டன்‌ கலக்கந்‌ தவிர்தாளோ
யிது கண்டு தெண்டனிட்‌ டோர்கள்‌ சிலரல்லாமலியாவர்‌ நின்னாணைக்கடவார்‌. 84
[84. அதிகண்டகம்‌ - மிகுந்த மணிக்குள்‌ கழுத்தில்‌, கானமிருந்து -
இசை நிகழ்த்தி.]

மகமுதற்‌ சிரவு தந்தோன்‌ புலத்தொழில்‌
முதற்கதிபதியை
மதியாமையாற்‌ றகாமதத்தக்கன்‌ சிரங்கேட்‌
பிருகுவின்றாடிப்‌
புதியச்‌ செகுக்கும்‌ பகலவான்பற்‌ கேட்பார்‌
திருகங்‌ கெடப்பண்ணியிப்‌
பெற்றி பலரோடிகலு மிச்சையரனை மறவாத
சிலரன்றி யாவர்‌ நின்னாணைக்கடவார்‌. 85
[85. மகம்‌ - யாகம்‌, புலத்தொழில்‌ - நாடாட்சித்தொழில்‌, தகா மதத்‌
தக்கன்‌ - தகுதியல்லாத அகங்காரம்‌ படைத்த தக்கன்‌, சிரம்‌ - தலை,
திருகம்‌ - மாறுபாடு.]

செய செய வயன்றலை யறிந்தவர்‌ அரிவிழித்திருமல ரணிந்த தாளர்‌
செய செய பகன்‌ கண்டகத்தவர்‌ அந்தகன்‌ஆக மத்தோள்‌ பாதமே
செய செய உமாதேவி திருமுலைக்குங்குமச்‌ சிறுகுறி யிட்ட மார்ப
செய செய பினாகி நாகாபரண செப்பேச செய பஞ்சநதிவாணனே. 86
[86. அயன் தலை - பிரமன்‌ தலை, அரிவிழி - திருமாலின்கண்‌.
பினாகி - பினாகம்‌ என்னும்‌ வில்‌.]

சூலத்த செய செய புலித்தோ லுடுத்தவர்‌ சிலரன்றி யாவர்‌
செய செய கரித்தோலினால்‌ மேலுத்தரிய செய செய பிரமர்‌
தலைமாலை விசைய கோடாகோடி யாலாலுற்ற சீரலங்கார
செய விசய பூதிசந்த செய செய வறிவருஞ்‌ சிலத்த
செய செயப்‌ பிரணதார்த்திகா செய செய பஞ்சநதிவாணனே. 87
[87. சூலத்த - திரிசூலத்தை உடையவனே, கரித்தோல்‌ - கசமுகா
சூரனை உரித்த தோல்‌, உத்தரியம்‌ - மேலாடை.]

அறியாம லடியேன்‌ பிழைத்த குற்றம்‌
பொறுத்தருளி யெனையருள்க வஞ்சங்‌
குறியாத கருணையங்‌ கடலல்லையோ தந்தை தாய்‌
பின்னைக் குறைகொள்வாரோ
தெரியாத வுலகுக்கு நீ தந்த யுமையன்னை
நின்றயான்‌ மகனல்லனோ‌
சிறியார்க ளறிவரோ பெருமையென்‌ குறை தணிக
செய செயவெனப்‌ பரவினான்‌. 88
[88. சிறியார்கள்‌ - அறிவிற்சிறியோர்கள்‌, பரவினான்‌ - வேண்டினான்‌.]

அருளெனுங்‌ கடலாய்‌ திண்மை யென்றவைய்யாறன்‌ காலன்‌
வெருளெனுங்‌ கடலி னாழ்ந்து விளம்பியதுதிமீதி லன்பாய்‌
மருளிய மனத்‌ தெம்மானை மறுத்தவரி யாவரேனு
மிருளிய துன்பத்‌ தாழ்வ ருண்மை யென்றின்னன கூறும்‌. 89.
[89. தின்மை - நிலையானது, வொருளெனும்‌ கடல்‌ - அஞ்சத்தக்க
பிறவிக்‌ கடல்‌, விளம்பிய - எடுத்துக்கூறிய, துதி - போற்றுதல்‌,
இருளிய - நிலை கேடுற்ற.]

பூமியிற்‌ சிவத்தலங்கள்‌ பொருந்தினா ரென்ன வாறு
தோமிகப்‌ புரிந்தாரேனுந்‌ துடைப்பதுன்‌ வயத்திலாகா
நாமிவன்‌ மகிழும்‌ பஞ்சநதிப்‌ பதியடைந்‌ தோரென்‌றால்‌
நீமிக வலிமை செய்த நீதிபோமுபாதி யில்லாய்‌. 90
[90. தோம்‌ - குற்றங்கள்‌, நீதிபோமுபாதி - நேர்மையற்ற பிழைகளால்‌
வரும்‌ இடையூறுகள்]

நின்குறை பொறுத்தே மிப்பால்‌ முமலமாந்‌ திருவையாற்றி
லென்குறை யுடைய ரேனு மியமனினுலக மெய்தார்‌
நன்குறை சிவலோகத்தே நாம்மகிழ்‌ தக்கோர்‌, தம்பால்‌
உன்குறை சொல்வ தல்லா லாணையா லொறுப்பா யல்லை. 91
[91. நிமலமாம்‌ - தூயதாம்‌, இயமனின்‌ உலகம்‌ - எமலோகம்‌,
என்‌ குறை - எத்தகைய குற்றம்‌.]

எண்ணினா னின்னாளை செய்ததன்‌ சிவன்‌ மறைந்தா னிப்பால்‌
நண்ணிய விடையில்‌ தோன்றி நமன்றன்‌ கொடிய தூரில்‌
மண்ணிய சிறுவ நீயுமிங்கே வருந்ததி வாழ்கொள்‌ என்றான்‌
மண்ணியல்‌ மணஞ்‌ செய்திம்மை வாழ்க்கையின்‌ வாழ்ந்தான்‌ மன்னோ! 92
[92. இந்நாள்‌ - சிவனருளால்‌ பிழைத்த நாள்‌, தூரில்‌ - பாசத்தில்‌
மண்ணிய - சிக்கிய, வாழ்கொள்‌ - மணவாழ்க்கை ஏற்று வாழ்க்கை
நிகழ்த்தும்‌, மண்ணியல்‌ - உலகியல்‌, இம்மை - இப்பிறப்பில்‌.]

வாழுநாள்‌ வசிட்டனே பின்‌ வளத்தொடு தன்னூர்‌ போகி
வேள்விகள்‌ முயற்றி நல்ல மதலையை விழையாள்‌ பெற்றாள்‌
ஊழிபல்‌ லறங்கள்‌ போற்ற வொருவனை யிருத்தி முன்ன
மாழ்வினைத்‌ தொட.ர்ச்சிநீக்கு மண்ண லையாறு சார்ந்தான்‌. 93
[93. முயற்றி - முறையாகச்‌ செய்து, மதலை - பிள்ளைகள்‌, விளையாள்‌ -
வசிட்டன்‌ விழைந்த மனையாள்‌. ஆழ்வினை - ஆழ்ந்து தொடர்ந்த
பழவினை.]

தேசிக னருளால்‌ வைகிச்‌ சிவனருள்‌ பெற்று முற்றும்‌
பேசிய மெய்யின்‌ பத்தில்‌ பிறர்க்கரு பேறு பெற்றான்‌
ஆசறு இன்பும்‌ வேண்டும்‌ ஆசையோ ராதலாலே
ஈசன்தன்‌ திருவையாற்றி லெய்துக துணிவி னென்றான்‌. 94
[94. தேசிகன்‌ - வசிட்டனாகிய ஆசாரியன்‌, பிறர்க்கரு - மற்றவர்க்கு
அருமையான, பேறு - நற்பதி, ஆசறு - குற்றமற்ற, எய்துக - அடைவீராக.]

திருமுனி துதித்த வாய்மை துதித்தெலாம்‌ மதித்த வேந்தர்‌
பொருள்களும்‌ எளிதி லுண்டாம்‌ புதல்வன்‌ வாய்மொழிக ளேத்ததில்‌
வெருவரு பயங்கள்‌ நீங்கும்‌ விளக்குங்கால்‌, விளம்பிள்‌
வரும்பிழை பொறுக்கும்‌ நாதன்‌ கதையினால்‌ முத்தி வாய்க்கும்‌. 95.
[95. வாய்மை - மெய்மையான நெறி, வெருவரு - அஞ்சும்படியாக வரும்‌,
விளங்குங்கால்‌ - வாழ்கின்ற காலத்தில்‌, முத்தி மோட்சம்‌.]

இவையிவை பிரணதார்த்தி கரத்திற மென்றா னிப்பாற்‌
றவமுறு விசையன்‌ மேவு சமரசுரர்‌ முறையா லீசர்‌
அவயமென்‌ றளித்தல்‌ காரிய சுரர்‌ கோன்றனை யழித்தல்‌
நவமிகு மிவ்வா றஞ்ச லென்றது நவில லுற்றாம்‌. 96
[96. தவமுறு விசையன்‌ - தவத்திற்கு பொருந்திய மன்னன்‌, சமர்‌ அசுரரர்‌ -
போரிடும்‌ அசுரர்‌, முறையாடு - அவர்களோடு முறையாகத்‌ தண்டனை
முறையினைச்‌ செய்யும்‌, அவயம்‌ - காத்தல்‌ தன்மை.]

சிற்றிடைப்‌ பெருமுலைச்‌ செஞ்சொல்‌ வெண்ணகைப்‌
பொற்றொடித்‌ தெரிவைக்கேள்‌ புனித னஞ்சலே துணை
யற்றவர்க்‌ கருளிய பாங்க தளவின்‌ நன்மை கேட்டு
உற்றவர்க்‌ குதவுவ தென்ப, துகளற உரைக்குமால்‌. 97
[97. பொற்றொடி - அன்மொழித்தொகை, பெண்‌, துகளற – குற்றமில்
லாமல்‌]

[பிரணதார்த்திகர்‌ சருக்கம்‌ முற்றும்‌ ]
--------------

16. சருவ விசையன்‌ தவப்பேறு.

(முறைப்‌ பாடு)
முரணியல்‌ வருண முதன்மை யேறனான்‌
இரணிய கயவனென்‌ றியம்பும்‌ பேரினான்‌
தரணியி லவன்பெறு சங்கிலா தானுக்
கரணிய மதலையோர்‌ கல மோம்பினான்‌. 1
[1. முரணியல்‌ - மாறுபாடில்லாத, வருணமுதன்மை - சாதியின்‌ முதன்மை,
அரணிய மதலை - சூரியனின்‌ மைந்தன்‌.]

அன்னவன்‌ பிறந்த ஞான்றசுரர்‌ கூடியே
இன்னவன்‌ சருவ மா விசையனே யெனப்‌
பின்னவன்‌ புரிதொழிற்‌ கேற்ப பேரிட
மன்னவன்‌ நீரணியப்‌ புரத்து வைகினான்‌. 2
[2. ஞான்று - அந்தநாளில்‌, இன்னவன்‌ - இப்புதல்வன்‌, பின்‌ அவன்‌ -
அரசனுக்குப்‌ பின்னர்‌ அரசு பெறுமவன்‌.]

கொலைகட்‌ கெனுந்‌ தொழிற்‌ குலத்து விஞ்சையுங்‌
கலைமுத லரும்படைக்‌ கலத்தின்‌ கல்வியுஞ்‌
சிலைநுதன்‌ மதிமுகச்‌ செறிகுழற்‌ புணர்‌
முலை யவர்‌ விழியெனக்‌ கற்று முற்றினான்‌. 3
[3. படைக்‌ கலத்தின்‌ கல்வி - போர்ப்‌ பயிற்சிக்‌ கல்வி, காமக்கலை
யினையும் கற்றுத்‌ தேர்ந்தனன்‌.]

இமையவர்‌ தங்குடிப்‌ பகைமை யென்பது
மமைவரத்‌ தெளிந்தவ னருந்த வதாலா
னமை விறலுறா வென வெண்ணினா மினிக்‌
கவையுறு பெருந்தவந்‌ துடங்கல்‌ கற்பேன்‌. 4
[4. இமையவர்‌ - தேவர்கள்‌, அமைவர்‌ - குறையில்லாமல்‌, துடங்கல்‌ -
தொடங்கல்‌.]

மால்‌ வரை மதியோர்வமுத மவ்வழிக்‌ கால்‌
வாலி போல்‌ நேரமுதங்‌ கக்கிய...............
பால்‌ வரை யிமையமேற்‌ பைம்பொற்றாமரை
மேல்‌ வரு கடவுளை விரும்பி நோற்றனன்‌. 5
[5. பால்வரை - பால்போன்ற வெண்மையான மலை, தாமரை மேல்வரு
கடவுள்‌ - பிரமன்‌, நோற்றனன்‌ - தவமிருந்தனன்‌.]

பேருண வன்றியும்‌ பிறவங்கா வீவ
நீருணவன லுணவ னீவனீ ணிலா
வாருணவா தபமுண்டு மாதவ
மோருண வின்றநியு முஞற்றினானரோ. 6
[6. பேருணவு - சிறப்பான உணவு, முஞற்றினான் - செய்யத்‌
தொடக்கினான்‌.]
இன்னவாறு மாதவங்க ளெண்ணில்கோடி நாளெலாஞ்‌
சொன்ன தானவர்க்கு ளேறு சூதினோடு செய்தலால்‌
அன்னரான சிங்க மேலடைக்கு ஞாயிரொன்று போல்‌
அன்னவர்க்‌ கணத்தினாதி யண்ணல்‌ வந்து தோன்றினான்‌. 7
[7. மாதவங்கள்‌ - மிகப்பெரிய தவங்கள்‌, தானவர்‌ - அசுரர்‌.]

பூத தாத வேத கீத புண்டரீக வந்தணா
வாதி கேச வேசனாபி யாசை மைந்த யாவையுந்‌
தாதையான வாறு தந்தானு வாணிகேள்வனின்‌
சீத பாத பங்கயங்கள்‌ சென்னி கொண்டு பன்னுகேன்‌. 8
[8. புண்டரீகம்‌ - தாமரை, நாபி - உப்திக்குமிழ்‌, வாணி - கலைமகள்‌,
சீதபாத - அருள்‌ நிறைந்து குளிர்ந்த பாதங்களை உடையவனே,
சென்னி – தலை.]

எண்ணிலாத தோத்திரங்க ளிந்தவாறு கூற
வெண்‌ கண்ணினா னுகர்ந்து நீ கருத்தில்‌ வைத்த
எண்ணேன்‌ என்ன, நீயெனது எண்ணமே யளித்தலா
லுண்மை யெண்ணி யானுண்ணிலாவு வேட்கை
(கூறலென்று பின்னு மோதினான்‌) 9
[9. எண்ணிலாத - அளவிடவியலாத, உண்ணிலாவு உள்ளத்தில்‌
பொருந்திய, வேட்கை - விருப்பம்‌.]

(வேறு)
சித்தன்‌ நெஞ்சுருக்கு மாறு செஞ்சொல்‌ வல்லா
ரொத்து நின்றிசைக்கவா சுரேச னுக்குவப்பினால்‌
இத்திறத்தினோர்‌ நீள்வதேது யீது முண்மையே
சந்தியத்தி னாணையென்று தன்‌ வலக்கை நீட்டினான்‌. 10
[10. வாசுரேசன்‌ - பிரமன்‌, உவப்பு - மகிழச்சி.]

இத்திராதி தேவரா லியக்கரா லரக்கரால்‌
கந்திரேசற்‌ நாகலோகரால்‌ காருடேசர்‌ பூதரால்‌
அத்திரப்‌ பிரயோகத்தால்‌ மண்ணிலானை யாளியால்‌
மைந்தராலும்‌ வெல்லொணா வரந்தந்தருள வேண்டுமால்‌. 11
[11. கந்திரேசர்‌ - கந்தன்‌ முதலாயின தேவர்‌, அத்திரம் - ஏவும்‌ ஆயுதங்கள்‌.
ஆனை - யானை, ஆளி - சிங்கம்‌.]

வென்ற காரணத்த தால்‌ விருப்பின்‌ இட்ட பேரெனக்‌
கின்று நீ புதுக்க வேண்டு மென்று நின்று வேண்டினான்‌
நின்ற தேவனன்றிதென்று வாழி நீடி யெங்கும்‌ விசையனா
கென்று நல்வாங்கள்‌ அன்றே கொடுத்து வானி னேகினான்‌. 12.
[12. விருப்பின்‌ - விரும்பினவாறு, புதுக்க - புதிதாகத்‌ தருதல்‌, வாழி
நீடி - நீண்ட நாள்‌ வாழ்வாயாக, விசையனாகென்று - வெற்றி
கொள்பவனாக ஆவாயென்று.]

வரந்தருந்‌ தருக்கி னோடு மரபுவாழு மிரணியந்‌ தனிற் புகுந்த நாட
புரந்தராதிபற்‌ கெலாங்‌ கரந்தனிற்‌ படைக்கலங்‌ கவிழ்ந்த மாதரா வலந்
துரந்தாங்‌ கடங்கடந்தகன்று இடித்தலங்‌ கண்ட சோர்வு போல்‌
இருந்தவன்‌ மனவிளைவினால்‌ இசைந்தனன்‌ மிகுசெயலெலாம்‌. 13
[13. வரந்தரும்‌ - வரம்தரும்‌ பயன்களால்‌, தருக்கி - கர்வமடைந்து,
இடித்தலம்‌ - இடிவிழுந்த நிலம்‌ சிதறியது போன்று. மனவிளைவினால்‌ -
மனத்தில்‌ தோன்றிய எண்ணங்களால்‌.]

தானவாதிய ரறியக்‌ காத்தவே சாதனை வந்து தழுவிடக்‌
கானவாரண முருக்குடன்‌ சினவாளரிகொள்‌ தவிசின்‌ மேல்‌
பானிலாவிரி கதிர்‌ கவரி பக்க மோடிரட்ட விருகைச்‌
சோனை மாரியி னிருந்தனன்‌ மகிழ்ந்தரசு துட்டவாசுரன்‌. 14
[14. தானவாதியார்‌ - தேவர்கள்‌ முதலாயினோர்‌, கானவாரணம்‌ -
காட்டு யானை, சினவாளரிகொள்‌ தலிக - சிங்கம்‌ சுமந்த சிம்மாசனம்‌,
இரட்ட - இருபுறமும்‌ மகளிர்‌ வீச, சோனைமாரி - விடாது பெய்யும்‌
குளிர்மழை, துட்ட – துஷ்டனாகிய.]

மந்திரக்‌ கிழவனுக்‌ கய னழித்தவர்‌ மற்று மொழிசெய்‌
திந்திரக்‌ கண்‌ களைந்‌ தலது செய்வதிலை யாது மினியந்த
தந்திரத்தை வருவிக்க வென நின்ற தகுவார்க்கு மொழியச்‌
சிந்தை வைத்தவர்க்‌ குணர்த்தினர்‌ கணால்‌ வகை சேனை முழுவதும்‌. 15
[15. மந்திரக்கிழவன்‌ - முதல்‌ மந்திரி, உணர்த்தினர்கண்‌ - கண்ணால்‌
சைகை செய்து உணர்த்தினர்‌.]

கோடி கொண்ட பதினாயிர விலக்கமுள்‌ கும்ப மதமா மிகுசேனையாய்‌
கோடி கொண்ட பதினாயிர விலக்கமுள்ள நடை கோடகம்‌
கோடி கொண்ட பதினாயிர விலக்கமுள்‌ கொய்யுளையதோ
கோடி கொண்ட படைஞரி னிலக்கமது கூற வெளியதோ? 16
[16. கும்பமதமா - போர்‌ யானைகள்‌, கோடகம்‌ - குதிரை, படைஞர் -
வீரர்‌ படை.]

ஒருபரிக்குள்‌ பதாதிக ளைஞ்ஞூாறு பரியரியோ டிரதமும்‌
பெருகு தற்ருள்‌ விலக்கமிது போலவை பெருக்கிலுளவாம்‌ பொருபடைப்‌
பெருமிதம்‌ புடையடுத்தன வுடல்‌ புளகியா புயம்‌ புடைத்தெழா
முருக்குடன்‌ தொடை முடித்தலை துலக்கினான்‌ முயங்கு மகிழ்வினால்‌. 17
[17. ஒருகரிக்குள்‌ - ஒரு போர்‌ யானையின்‌ தலைமையில்‌, பதாதிகள்‌ -
காலாட்‌ படைவீரர்கள்‌, புளகியா - மெய்த்திளைப்பு துலக்கினன்‌ -
அசைத்தான்.]

முந்தியோடி யமரர்‌ பதியிலெய்தி முழுவதுங்‌ கவர்ந்து கொள்ளினுந்
தந்தி தாரு மணி தேனு வரமாதர்‌ தனியேக வரனும்‌
எந்த நாளுமெமக்‌ குறும்படி பெருக வென்றெழு கனச்‌
சிந்தை யாதவ னுரைத்தன்றோ விதத்து செருக்கடை படையதே. 18.
[18. அமரர்‌ - தேவர்‌, பதி - தேவலோகம்‌, தந்தி - இந்திரன்‌ யானை
ஐராவதம்‌, தார்‌ - இரத்தின மாலை, மணி - இரத்தின மணி, தேனு -
காமதேனு, வரமாதர்‌ - ஊர்வசி அரம்பையோர்‌ செருக்கடை –
கருவங்‌ கொண்டது.]

கடையுகக்‌ கடலொலித்‌ தென வொலித்தெழுங்‌ கைவயவர்க்‌
கிடைமுகிற்குல மொலித்தென ஒலித்‌ தனிவிளக்‌ களிறுமேல்‌
வடவைதீச்‌ சுடரொலித்தென ஒலித்தன மணிக்‌ கொடியதன்‌
பொடை யொலிக்கின்ற வொலித்தன வொலித்தன பொரும்‌ புரவியே. 19
[19. கடையுகம்‌ - ஊழிக்காலம்‌, வயவர்‌ - திண்மையான வீரர்‌,
வடவைதீ - வடவை தீக்கொழுந்து, பொரும்‌ - போரிடும்‌. புரவியே -
குதிரைப்படைகளே.]

எழுச்சியிற்‌ படை யொலிக்கு மொலி வானுலக கெழுந்‌ திமையோர்‌
முழுச்செவிப்பட மயங்கினர்‌ முயங்கினர்‌ முதற்புலவியோர்‌
குழிச்‌ செறிப்பினர்‌ விழந்தனர்‌ அழுங்கின குலப்புலியினம்‌
தெழிகலற்றுழைப்‌ பதைப்புற வயர்த்தனர்‌ சிலர்‌ தேவரே. 20
[20. முழுச்செவிப்பட - யாவருடைய செவிகளிலும்‌ கேட்க, முயங்கினர்‌ -
சேர்ந்திருந்தனர்‌. செறிப்பினர்‌ - இணைந்திருந்தனர்‌. தெழிகல்‌ - என்ன
வென்பது தெளிவில்லாமல்‌.]

உங்கள்‌ செந்திரு வையர்முன்‌ வெழுந்தன வுமக்கினி யுற்றநா
மங்குவென்‌ புழுதி யென்றமரர்‌ வாயடை மடுப்பதென்னவே
பொங்கு கின்ற துகள்‌ மேலெழ வெழும்‌ படைபுறப்படவவண்‌
எங்குமில்ல விசைவல்லதொரு தேரினிடையே நின்னரோ. 21
[21. செந்திரு - மேலான செல்வம்‌, அவண்‌ - அவ்விடத்தே, துகள்‌ -
புழுதிப்படலம்‌, விசைவல்ல - வேகத்தில்‌ மிகுந்த.]

கறை படைத்த குலிசத்தில்‌ எமை வென்ற கடனினிச்‌
சிறை படைத்தன முனைப்பொருது வருமிது திண்ணமெனவே
பொறை படைத்தால்‌ யெட்டினோடு பற்பல பொருப் பெழுதல்‌ போல்‌
முறைபடைத்த கொடியிற்‌ புடைத்தெழுவ மூரியிரதங்கள்‌. 22
[22. குலிசம்‌ - இந்திரனது படை, பொருதும்‌ - போரிடுவேன்‌, பொறை -
பொறுமை, எட்டினோடு - எட்டு மலைகளோடு, பொருப்பு - மலைகள்‌,
மூரி - வலிமை.]

கீழுமோருல கென்றது கிடைக்கவது மேல்‌ வாழு
மோருலகு நாகருலகானது மறித்ததிது மென்றாழ்‌
ஏழ்கடலுடுத்த புவிநாகம்‌ அவை யாவும்‌ எழல்‌ போல்‌
சூழிமாமுக மதக்‌ காரடை யானைக்‌ கடர்ந்தன னரோ. 23
[23. புவி - நிலவுலகம்‌, எழல்‌ - எழுந்து வந்தது. சூழி மாமுகம்‌ - முகபடாத்
தினையுடைய முகம்‌ - யானை]

முதிரும்‌ வேனலின்‌ வறுந்து சுருள்‌ கானிடை முழங்கு படர்தீ
வெதிர்‌ பட்ட சட சடன்றெ வருவ தென்னவர்‌ விண்ணுல கெலாம்‌
அதிர்‌ முற்றியேகினான்‌ நச்சி வினைவித்தனர்க ளசூரரெனப்‌
பிதிர்‌ படப்‌ புடைபெயர்ந்தனர்‌ பயந்தமரர்‌ பெற்றி புகல்வான்‌. 24
[24. முதிரும்வேனல்‌ - முதுவேனில்‌ காலத்தில்‌, வறந்து - வறண்டுபோய்‌,
அதிர்முற்றி - ஆரவாரம்‌ மிகுந்து, வித்தனர்‌ - செய்தனர்‌, பிதிர்பட -
கலைந்து நிலை குலைந்து.]

மெய்ப்புத்‌ திசை காவல்‌ வீரரொடு மேவி முப்பத்து முக்கோடி தேவர்புடை
மொய்ப்புற்‌ றமைச்சரோடு சேரவுமவை யூடேயிப்‌ பெற்றியான்‌
நைப்புற்‌ றோடிய அமரரும்‌ நாடியினிதென்‌ செய்வதென்‌
றுய்ப்புற்‌ றமரர்‌ இறைவர்க்‌ கின்னவாறென்றே விசைத்தார். 25
[25. மெய்ப்பு - உண்மையான, மொய்ப்புற்று - ஒன்றாகச்‌ சேர்ந்து,
நைப்புற்று - தப்பிக்கலாகுமென்ற நம்பிக்கை பெற்று, உய்ப்புற்று –
புத்துயிர்‌ பெற்று. அமரர்‌ இறைவன்‌ - இந்திரன்‌.]

(வேறு)
வசை பெற்றுக்‌ கொள்ளா மனங்கொண்டு மருட
மசையுந்‌ தோறுங்‌ கண்ணழற்சிந்த வங்கண்‌
விசையின்‌ படைத்தூசினை செய்ய நாமிங்‌
கிசைகின்ற தென்னென்றி சைந்தா னெழுந்தான்‌. 26.
[26. வசை - பழிச்சொல்‌, மகுட மசையுந்தோறும்‌ - தலையை அசைக்கும்‌
பொழுதெலாம்‌, அழல்‌ - நெருப்பு, தூசினை - குற்றமான அழிவினை,
எழுந்தான்‌ - இந்திரன்‌ கோபத்தோடு எழுந்தான்‌.]

அயிரா பதத்தி னவனேர அமரராதி
மயிடாதியிற்‌ றொடர்ந்து வானவர்‌ முந்திச்‌
செயிராசுரர்க்கு வெதிர்‌ சென்றனர்‌ சினத்தால்‌
புயலார்கடல்‌ பொருவ தொத்தமர்‌ புரிந்தார்‌. 27
[27. அயிராபதம்‌ - இந்திரனது பட்டத்துயானை, செயிர்‌ - வருத்துகின்ற;
புயலார்‌ கடல்‌ - புயலால்‌ எழுச்சி பெற்ற கடல்]

பாலாழியைப்‌ புடைவளைந்து புடை சூழுங்‌
கோலாகலக்‌ குறைகடற்கப்‌ பொருவதே போல்‌
மேலா மிசைப்‌ பிலிமையோர்‌ படைகள்‌ மேல்போய்‌
ஏலாவசுரப்‌ படையையென்று புகலுற்றார்‌. 28
[28. பாலாழி - பாற்கடல்‌, கோலாகலம்‌ - நிலையற்ற ஆரவாரம்‌,
பிலிமையோர்‌ - தேவர்கள்‌, ஏலா - வெற்றிபெறா.]

பொற்கால்‌ மணிக்கொடிய தேரின்‌ விசை
புக்கான்‌ முற்கால வங்கயின்‌ முருக்குகின்ற
மொய்ப்பான்‌ றனக்கா செக்காவிரியுந்தி பொருமா போற்‌
செய்க்கார்‌ நிறத்த அவுணருஞ்‌ சினவலுற்றார்‌. 29
[29. பொற்கால்‌ - பொன்னலாகிய தேர்க்கால்‌, மொய்ப்பான்‌ - ஒன்று
கூடியவளவில்‌, பொருமாபோல்‌ - போரிடுவது போல்‌, செய்க்கார்‌ -
செய்யப்பட்ட கருமேகம்‌. அவுணரும்‌ - அரக்கரும்‌.]

சேனாபதிக்‌ கனவி செற்றது தெரிந்தான்‌
வானாருட னிக்குளிவனால்‌ மாமலைப்பான்‌
யானா மொதிர்ப்பதென்‌ றொரு கணத்தின்‌
நானாவிதப்படை யொழித்தெதிர்‌ நடந்தான்‌. 30
[30. கனவி - கோபங்கொண்டு, வானாடர்‌ - தேவர்கள்‌, நானாவிதப்‌படை
- தேர்‌, யானை, குதிரை, வீரர்‌ ஆகிய நான்கு வகைப்படை.]

சென்றா னெதிர்ந்துன்னி தீக்கடவுள்‌ நெற்றி
தன்னொளி செற்றது தெரிந்தான்‌ வானாடருக்கு
நின்றாழ்‌ தடக்கை கொடு முட்டிதேர்‌ தொக்க
பொன்றாதுயி ரத்துவீழ்ந்து புறக்கிட்டான்‌. 31
[31. தீக்கடவுள்‌ - அக்கினி தேவன்‌, தேர்தொக்க - தேர்கள்‌ ஒன்றோ
டொன்று சிக்கிக்கொள்ள, பொன்றாது - போகாது அத்து வீழ்ந்து -
தேரிலிருந்து வீழ்ந்து]

வாயுப்‌ பதைபதைத்தானென மறலிக்‌ கடவுளுங்‌
காயுக்கவா தெண்டாயுதங்‌ கைக்கொடு செங்கண்‌
தீயுக்கிடா மயிடத்திடை சென்றானினி வென்றான்‌
நீயுயர்த்திடு படையாதென நிமிர்தேரிடை யடைந்தான்‌. 32
[32. வாயுப்‌ பதைபதைத்தானென - வாயுதேவன்‌ போரிட்டுப்பதை
பதைத்ததைப்‌ போன்று, தீயுக்கிடா - தீயை உமிழும்‌ எருமைக்கடா. ]

நக்கான்‌ ஒரு முசலங்‌ கொடு நாகஞ்செலுமாபோற்‌
புக்கா னரனைப்‌ பரவி புடைத்தான்‌ புடைத்தலுமே
மைக்காரிடி யெனவீழ்ந்தான்‌ மரித்தானோ
ருக்கையொடு வோடுகாலையில்‌ வருணன்‌ எதிர்‌ நின்றான்‌.
வருணன்‌ அசுரனை எதிர்த்தான்‌. 33.
[33. முசலம்‌ - குந்தப்படை, நக்கான்‌ - சிரித்தான்‌, புடைத்தான்‌ - ஓங்கி
அடித்தான்‌, மைக்காரிடியென வீழ்ந்தான்‌ - கருத்த மேகம்‌ இடியால்‌ வீழ்ந்ததென
இமயன்‌ கீழே வீழ்ந்தான்‌.]

(வேறு)
நின்ற தானவர்‌ சேனையங்கண்‌ தெளிவு கண்டது அகன்றன்‌
சென்ற தானையை நின்மி னென்றி வையஞ்‌ செலுத்தி மேல்‌
குன்றமாதி பொழிந்திடும்‌ புயல்குரைகடற்கிறை யவர்களை
தன்றனாயுத தண்டமிட்டொடு சாடினா னவரோடினார்‌. 34
[34. தானவர்‌ - அசுரர்‌, வையம்‌ - தேர்‌, கடற்கிறை - வருணன்‌, சாடினான்‌ -
கடுமையாக அடித்தான்‌.]

வருணராசனும்‌ வெஞ்சினம்‌ கொடு மஞ்சின்மே லுகைந்து போய்‌
சுரனவன்‌ தந்தன வமைந்ததோ வென்று பாச மெடுத்தனன்‌
கரணமாள வெறுத்‌ திறுக்கிய கரசினான்‌ மிக வீசினான்‌
அரணமேதுள னென்று நின்றனன்‌ அஞ்சினானென விஞ்சினான்‌. 35
[35. மஞ்சு - மேகவாகனம், கரணம்‌ ஆள - போர்ச்செயல் வல்லதாக,
அரணமேதுள - பாதுகாப்பு என்னவுளது.]

பாசம்‌வீசி யிறுக்கி நின்று வரித்திழுத்தலு மவ்வழிப்‌
பூசலின்றி முயன்று வந்து பொற்பெருந்தகை மார்பினைக்‌
கூசலின்‌றி யெடு தண்டது கொண்டு மிண்டி யடித்தனன்‌
பேசலின்‌றி விழுந்தனன்‌ சுரன்‌ பேது கொண்டு பெயர்ந்தனன்‌. 36
[36. பாசம்‌ - வலியகயிறு, பூசலின்றி - போரிடுதலில்லாமல்‌, பேசலின்றி -
பேச்சில்லாமல்‌, சரன்‌ - அசுரன்‌, பேது - தடுமாற்றம்‌.]

பண்ணவப்‌ படை மாருதம்‌ படு பஞ்சு பட்டிட வாயிரங்‌
கண்ணவற்‌ குள நெஞ்சழற்பட நின்றமாகளி யானையோ
டெண்ணகப்‌ படு மெட்டுமிட்டவன்‌ மார்பு குத்தி யெடுக்கெனப்‌
புண்ணகப்‌ படவெண்மருப்பை யழுத்த வந்த பொருப்பெலாம்‌. 37
[37. பண்ணவப்‌ படை - வருணனது படை, எட்டு - திக்குளமலைகள்‌
எட்டும்‌, மருப்பை - தந்தத்தினை, பொருப்பெலாம்‌ - யானைகளெல்லாம்‌.]

காரடிப்பின்‌ முழங்கு கின்ற களிற்றினங்கள்‌ பிளிற்றினால்‌
வீரிடக்கதை இரண்டடித்தனன்‌ வெற்றினா மெனுமற்றெலா
மோரடிக்கு மருப்‌ பொசித்தன மத்தகங்க ளுடைத்தன
சோரிடத்தலம்‌ வந்தன சிற்சில செங்களத்தன சிறகில. 38
[38. காரடிப்பின்‌ - மழைமேகங்கள்‌ பெய்யும்‌, ஒசித்தன - உடைந்தன,
சோரிட - சோர்விட, சோர்வு கொள்ள.]

இச்செயற்‌ படை யாவும்‌ எழுந்ததிர்ந்‌ தழிந்தன
உச்சையிச்சிரவா வெனும்பரி யூடிருந்து பறந்தன
முச்சகத்து மிவற்பொருந்திறம்‌ மாயமோ வென வும்பரில்‌
வச்சிரப்படை தொட்டெடுத்தவன்‌ மார்புநேரெழ மடுத்தனன்‌. 39
[39. உச்சை - உச்சித்தலையாட்டம்‌, ஊடிருந்து - படையுள்ளிருந்து,
முச்சகம்‌ - மூன்றுவுலகம்‌, நேரெழ - நேராக நிற்க.]

வந்து பட்டது வச்சிராயுதம்‌ மார்பி ளெண்ண மயங்கியே
வெந்திறற்‌ பெயரோனிறந்தன னென்ன வீழ்ந்தனன்‌ வீழ்ந்திடத்‌
தந்திரத்‌ தரசுப்‌ பெரும்படை தானொளித்தன வானமே
லிந்திரப்படை மேலெழுந்து களித்தொளித்த தத்தினமே. 40
[40. வெந்திறல்‌ - கொடுமையான வலிமை, தானொளித்தன - படைதான்‌
அஞ்சி ஓடி ஒளிந்தன.]

இத்தகைக்‌ கொலைக்கார னிருந்தவகை யிப்பால்‌
அத்தகு கயித்தியரோடவ்‌ வசுரர்‌ கோமான்‌
வைத்த விசையத்தின்‌ மிகுவாகை முடிசூடிச்‌
சித்த மகிழ்ச்சுரர்‌ வெற்றி கெழு பத்திரர்‌ நல்வரந்தான்‌. 41
[41. விசையம்‌ - திக்குவிஜயம்‌, வாகை - வெற்றி, பத்திரர்‌ - பிரமன்‌.]

இரதனியமனாதி யோரை யெரிக்‌ குதவி யேகி
இரணிய புரிக்குனிர வின்புற விருந்து
தாரணிய கருப்பன்‌ வரமெய்திய செருக்கா
லிரணிய முதற்‌ பெயர னென்னு விசையத்தோன்‌. 42

[தேவாசுர யுத்தம்‌ முற்றும்‌ ]

இங்கிவன்‌ இயற்கை யிஃதிந்திரன்‌ விழுங்காற்‌
செங்களம்‌ மறைந்ததொரு சேமவிரதங்கொண்
டங்கணுற்று சாரதி யணைந்தவனை யேற்றிய
யைங்கண்‌ மேருவிடைப்போய்‌ பரிகரித்தான்‌. 43
[43. சேமவிரதம்‌ - பாதுகாப்பிற்குரிய தவவலிமை. பைங்கண்மேரு - பசிய
சோலைகள்‌ சூழ்ந்த தடங்களையுடைய மேருமலையில்‌.]

மேரு முழையிற்‌ சிலர்‌ விளங்கிலர்‌ மாந்தர்‌
வாருதி நடுச்சிலர்‌ மறைந்தன ருறைந்தார்‌
காருறை இருட்பிலனிடைச்சிலர்‌ கரத்தார்‌
பாருலகு புக்கனர்‌ பயந்து சில தேவர். 44
[44. மேரு முழையில்‌ - மேருவிலுள்ள குகையில்‌. மாந்தர்‌ வாருதி - மக்களாகிய
கடலில்‌, இருட்பிலம்‌ - பாதாள வுலகம்‌, கரந்தார்‌ - சென்று மறைந்தார்‌.]

சம்பரொருபாலு மாமாதரொரு பாலும்‌
நம்ப வருடாயர்‌ இலங்கிய மகார்‌ போற்‌
றம்பய மிகுந்து நெடு நாட்டனி திருந்தார்‌
அம்பொன்வரை மேலிறையரமர்ந்தமை யறிந்தார்‌. 45
[45. சம்பர்‌ - சிவனடியார்‌ (சம்பு - சிவன்‌) மாமாதர்‌ - தேவ மாதர்கள்‌,
அம்பொன்வரை - கைலாய மலை]

ஒவ்வொருவராக வொளிவிற்‌ கனக வெற்பிற்‌
றெவ்வொருவ ராலலைவ வெல்வதென வெண்ணா
இவ்வொருவனா யிவணிருத்தி லரிதேயென்‌
றவ்வொரு புறந்தாடோ டெண்ணின ருளைந்தார்‌. 46
[46. கனகவெற்பு - பொன்மயமானமலை (கைலைமலை) ஒருவரால்‌ -
அசுரரால்‌, எண்ணா - எண்ணி, உளைந்தார்‌ - மனம்‌ வருந்தினர்‌.]

மற்றவ ரிருந்து தெரி மந்திர மனைத்தும்‌
ஒற்றர் சிலர்‌ கண்டன ருணர்ச்சியிவை பன்னச்‌
சொற்றவர்‌ சயப்பெயர்‌ சுமந்தவனோ டெங்ஙன்‌
மெற்றென வெழுந்தவ ரிருந்த திசை செற்றான்‌. 47
[47. சொற்றவர்‌ - எடுத்துக்‌ கூறியவர்‌, சயப்பெயர்‌ - வெற்றியால்‌ பெற்ற
பெயர்‌, மெற்றென – அமைதியாக]

ஆய்ந்து செலு மொற்றருரை யாலாம்போ
ரேய்ந்து தமை யிவன்னமிகலா லெனக்‌ கொண்டு
ஆய்ந்த சுரரோடும்‌ கவனுமுயர்‌ வேதா
வாய்ந்ததொரு லோகமிசை வந்தனர்‌ விரைந்தே. 48
[48. ஆம்போர்‌ - உண்டாகும்‌ போர்‌, ஏய்ந்து - பொருந்தியதால்‌,
கவனுமுயர்‌ - வானில்‌ உயர்ந்த, வேதா - பிரமன்‌, வந்தனர்‌ - வருணனோடும்‌
தேவர்கள்‌ வந்தனர்‌.]

சத்திய புரிக்குள்‌ அயன்‌ வாழ்நகர்‌ தன்னிற்‌
பொய்த் தகைமையை வாயிலவருக்‌ கினிதிசைத்து
மெத்திசை முதற்கடவுள்‌ வேளையொடு சேர்ந்தாரு
யத்திரென வத்திற முரைக்க வருத்த லுற்றார்‌. 49
[49. சத்தியபுரி - பிரமனின்‌ சத்தியலோகம்‌, பொய்த்‌ தகைமை -
பொய்யான உரை.]

நெஞ்சு செல்வழி தெடுங்கண்‌ நெடு
நஞ்சு செல்வழி தடப்ப மலர்க்கை
பஞ்சு மெல்லடி பயந்து பெயர்க்கும்‌
வஞ்சி யன்னவர்‌ நடஞ்சுவை வாய்ப்ப. 50
[50. நஞ்சு - விடம்‌, பெயர்க்கும்‌ - அடியெடுத்து வைக்கும்‌, வஞ்சி - வஞ்சிக்‌
கொடிபோன்ற மகளிர்‌, நடம்‌ - நடனம்‌.]

பாடலின்‌ குரல்நரம்பு பணிப்ப
நாடருஞ்‌ சுருதி நாரதராதி
மாடகங்‌ கெழு மணித்திய வியாழ்கொண்
டூடகங்க ளுருகும்‌ படி யோத. 51
[51. குரல்‌ நரம்பு - இசை நரம்பு, மாடகம்கெழு - மாடகம்‌ என்ற பகுதியோடு
கூடிய யாழ்‌, ஓத - இசைபாட.]

நலத்தியான முனிவோர்‌ குழு நண்ணப்‌
புலத்தியாதி விதியோர்‌ புடைமொய்ப்ப
நிலத்தினாரண நடத்தொடு சாகைப்‌
பலத்தினோ ருருவு பற்றினர்‌ சுற்ற. 52
[52. நண்ண - நெருங்க, புடை மொய்ப்ப - பக்கங்களில்‌ சூழ, ஆரண
நடத்தொடு - வேதங்களின்‌ ஒலி நடையோடு.]

அங்க மாறு மளவில்கலை நாலுஞ்‌
சங்கமார்‌ கடலின்று தழங்கத்‌
துங்கமா மணி துவன்றிய செம்பொற்‌
சிங்கவரசன்‌ நிறைந்து சிறப்ப. 53
[53. அங்கம்‌ ஆறு - நான்கு வேதங்களின்‌ உட்பொருளாகிய ஆறு அங்கம்‌,
சிங்கவரசன்‌ - சிங்கங்களின்‌ அரசசிங்கங்கள்‌ தாங்கிய ஆசனம்.]

கையும்‌ வாரடியும்‌ கடைக்‌ கண்ணுஞ்‌
செய்யளா யளகழுஞ்‌ சிலை போலும்‌
தொய்யி நீள்புருவமும்‌ முலைக்‌ கண்ணும்‌
மையளா யொரு மடப்பிடி போல்வாள்‌. 54
[54. வாரடி - நீண்ட பாதங்கள்‌, செய்யளாய்‌ - தூய்மை உடையவளாய்;
மையளாய்‌ - மைபூசப்பட்டவளாய்‌, மடப்பிடி இமையான பெண்‌ யானை
போன்றுள்ளவள்‌.]

சொல்லும்‌ வெண்ணகையு மேனியுந்தூய
நல்ல தன்மையவே நாவினமர்ந்த
அள்ளலில்‌ வெண்கமல வண்ணமோடன்பாற்‌
புல்லி யங்கரியினைப்‌ பொழிவுற்றான்‌. 55
[55. வெண்நகை - தூய புன்னகை, அள்ளல்‌ இல்‌ - சேறு இல்லாத,
வண்ணம்‌ - நிறம்‌, புல்லியங்கரி - பொருந்தியுள்ள அழகிய கலைமகள்‌.]

பைம்பொன்‌ மாமணிய வல்லி படர்ந்தோர்‌
செம்பொன்‌ மால்வரை திகழ்ந்த சிறப்பின்‌
வெம்புமாமணி யணிப்பணி வேய்ந்தாங்கு
அன்புயர்த்‌ தன்ன மாந்தனன்‌ மாதோ. 56
[56. வல்லி - வல்லிக்கொடி - வல்லிக்கொடி போன்ற, மால்வரை –
கயிலை மலை, பணி - பாம்பாபரணம்‌, அம்புயர்த்த - அழகே உயர்ந்து
எழுந்ததைப்‌ போன்று.]

சிகர நான்‌ முடிகள்‌ செங்கதிர்‌ நல்‌.
மகர வார்‌ குழைகள்‌ வானவில்‌
நிகரில்‌ மார்புபுரி நூல்‌ மின்னிறைக்கப்‌
புகரில்‌ சோதி விரிப்‌ பொன்னிற மன்ன. 57
[57. சிகர நான்‌ முடிகள்‌ - சிகரம்‌ போன்ற நான்கு திருமுடிகள்‌;
மின்னிறைக்க - மின்னலைப்‌ போன்று ஒளி நிறைக்க, புகரில்‌ -
குற்றம்‌ இல்லாத]

கோயிலூடினிற்‌ குலவிய வெல்லை
வாயிலோரிசைவின்‌ வானவ ரோடும்‌
போயினான்வரு புரந்தர னென்ப
தாயிலா மகவுபோல்‌ தளர்நெஞ்சான்‌. 58
[58. கோயில்‌ - இருப்பிடம்‌, குலவிய - நெருங்கிய, மகவு - இளமையுடைய
பிள்ளை.]

புண்டரீக னிரு தாட்புணை போதிற்‌
றொண்டினோடு மலர்‌ தூயத்தொழு தன்பால்‌
பண்டைவேத மொழியாற்‌ பலகாலுங்‌
கொண்டலூர்தி குழைவாற்றுதி செய்தான்‌. 59
[59. புண்டரீகன்‌ - தாமரை மலரில்‌ வீற்றிருக்கும்‌ பிரமன்‌, பண்டை
வேத மொழி - பழமையான வேதங்களால்‌ மொழிந்து, கொண்டல்‌ ஊர்தி -
மேகத்தை வாகனமாகக்‌ கொண்ட வருணன்‌.]

அன்னமூர்‌ புனித வன்னமு யிர்த்தோய்‌
முன்ன மூவரின்‌ முதற்றொழில்‌ வல்லோய்‌
பன்னகர்‌ பானன்புடைத்த நாயக
நின்ன தாளினை நினைந்துரை செய்கோம்‌. 60
[60. அன்னம்‌ ஊர்‌ புனித - அன்னவாகனத்தில்‌ ஏறிவரும்‌ புனிதனே,
முதற்தொழில்‌ - படைக்கும்‌ தொழில்‌, செய்கோம்‌ - விண்ணப்பம்‌
செய்கின்றோம்‌.]

தாதை தாதை யுலகந்‌ தருந்‌ தூய
நீ தயாவொடு நினைத்தருள்‌ செய்யும்‌
ஏதமேதுமில மெங்குறை நின்பால்‌
ஓது கோமுனை யல்லாற்‌ புகலுண்டோ. 61
[61. தாதை தாதை - பிரமன்‌, ஓதுகோம்‌ - விண்ணப்பம்‌ செய்கின்றோம்‌.
புகலுண்டோ - பாதுகாப்பிடம்‌ உண்டோ.]

அய்ய கேளினி கொடிய வசுரனென்போ
னுய்யு மாதவ முஞற்றியதவ வழித்தாய்‌
செய்ய வாழ்வு கயமாதலிற்‌ றீயோன்‌
வெய்ய வாளமர்‌ எமக்கு விளைத்தான்‌. 62
[62. உஞற்றிய - வலிந்து செய்த, கயமாதலின்‌ - கயமையானதினாலே,
வெய்ய - கொடிய, வாளமர்‌ - வாள்போர்‌.]

சாடினா னெதிர்‌ தருக்கொடு நில்லாது
ஓடினோ முறையும்‌ ஊரொடும்‌ தோற்றோம்‌
வாடினோ மிகவும்‌ மற்றவன்‌ தன்னாலே
வீடினோம்‌ அலமந்து மேவினோம்‌ நலிந்தோம்‌. 63
[63. சாடினான்‌ - ஆயுதங்களால்‌ அடித்தான்‌ - தருக்கொடு - வீரத்துடன்‌
எதிர்த்து நிற்க ஆற்றாது, உறையும்‌ ஊரொடும்‌ - வாழும்‌ ஊரெங்கும்‌,
வீடினோம்‌ - வீழ்ச்சியடைந்தோம்‌, நலிந்தோம்‌ - செயலிழந்தோம்‌.]

பொற்‌ புடைக்‌ கொடி புலம்பியழுங்கக்‌
கற்பகத்தினை யகழ்ந்து கவர்ந்தான்‌
நற்பசுக்களை நடுங்க வலங்கொண்டான்‌
இற்புறத்திடை யிறங்க மிக வசைத்தான்‌. 64
[64. பொற்புடைக்கொடி - இந்திராணி, வலங்கொண்டான்‌ - வெற்றி
யாகப்‌ பற்றிக்‌ கொண்டான்‌, இறங்க - நாங்கள்‌ தாழ்வுபெற, வசைந்தான்‌ -
தாழ்மையுடைய வசை மொழிகள்‌ கூறினான்‌.]

கொண்ட மங்கையர்‌ கொழுங்குவளைக்‌ கண்‌
விண்டு நுண்டுளி விடாதவ னில்லிற்‌
றொண்டி னேவல்‌ செய்து சோர்ந்தனரின்று
மண்டுகம்‌ பணிகள்வாய்‌ பாடுறுமா போன்று. 65
65. கொண்ட மங்கையர்‌ - அசுரன்‌ கவர்ந்து கொண்ட தேவமகளிர்‌,
ஏவல்‌ - ஏவிய பணிகள்‌. மண்டுகம்‌ - தேரை, பணிகள்‌ வாய்‌ - பாம்புகளின்‌
வாய்களில்‌ - பாடுறுமா - அகப்பட்டுத்‌ துன்பப்‌ படுதல்‌ போன்று.]

குன்று பொடி பட்டுடைய வென்ற குலிசம்போ
யன்று அவனுரத்திடை யுதைத்து விழுமன்னா
யின்று வரையவனி ருந்ததினி யென்னால்‌
என்று வயிர்ப்புடையேனும்‌ பெயர்ப்‌ படைப்பேனான்‌. 66
[66. குலிசம்‌ - குலிசப்படை, உரத்திடை - மார்பின்‌ நடுவே, என்னால்‌ -
என்ன காரணத்தினால்‌.]

மான மிழந்து வலியிழந்து நீங்கா
தான மிழந்து தனித்தனியே நெஞ்சழிந்தோம்‌
போனக மிழந்து புவியுமிழந்து போவதெங்காம்‌
ஈனமெண்ணி யிளைத்தோ மினியென்‌ படுவோம்‌. 67
[67. வலியிழந்து - எங்கள்‌ வலிமையினை இழந்து, தானம்‌ - இருப்பிடம்‌,
போனகம்‌ - அவிவுணவு, புவி - வாழுமுலகம்‌, ஈனம்‌ - உண்டான தாழ்வு.]

ஆலம்போல்‌ முப்புரம்‌ போந்தகல்வ போலசுரர்‌
சாலம்‌போல்‌ மாளச்‌ சிவனுமருளச்‌ செய்திலனால்‌
ஆலம்‌போதித்‌ துயிலும்‌ பண்ணவனுந்‌ திண்மதமா
வோலம்‌ போலெங்கும்‌ எமக்கொன்று மருள்‌ செய்திலனால்‌. 68
[68. ஆலம்‌ போல் -: கொடியவிடம்‌ போல்‌, சாலம்‌ போல்‌ - மாயா சாலம்‌
போன்று, ஆலம்‌ போதி - ஆதிசேடனாகிய மலரணையில்‌, பண்ணவன்‌ -
திருமால்‌, மதமா ஓலம்‌ - கஜேந்திரன்‌ என்னும்‌ யானையின்‌
அடைக்கலக்குரல்;‌ செய்திலன்‌ - செய்யவில்லை.]

நீயே கொடுத்தவரம்‌ நீயழிப்பதில்லை யெனிற்‌
றாயே யெம்புன்கண்‌ தவிர்க்கும்‌ வாயாருரைப்பார்‌
சேயே யனையோலஷ்‌ சிறுமையுறு மூழ்வினையும்‌
போயகல வாழ்வருளி எங்கள்குறையே தீர்த்தருள்வாய்‌. 69
[69. தாயே - தாய்போன்றவனே, புண்கண்‌ - மிக துன்பம்‌, வாய்‌ -
ஆதரவுச்‌ சொல்‌, சேயேயனையோம்: தங்கள்‌ மக்களைப்‌ போன்ற
நாங்கள்‌.]

[தேவர்கள்‌ முறைப்பாடு முற்றும்‌]

பிரமன்‌ அஞ்சேலென்றல்‌
இவ்வாறிரைஞ்சி யழுதேத்து மிமையோருக்
கவ்வாறிசைத்‌ தன்ன வபயகர மளித்துச்‌
செவ்வார்‌ சடையோனை சித்தத்‌ தியானத்தா
லொவ்வு முளங்கொண்டொரு முகுத்த மங்கிருந்தான்‌. 70
[70. இறைஞ்சி: பலவாறு குறையிரந்து, அவ்வாறிசைத்தன்ன - அசுரனுக்கு
அன்று ஆதரவு சொன்னதைப்போன்று, முகுத்தம்‌ - முகூர்த்தம்‌ - 3 3/4 நாழிகை.]

(வேறு)
உருவ மாதியிற்‌ கவிழ்த்திடும்‌ புலன்க ளுள்ளொடுங்க
கரும விந்திரியப்‌ பிணிப்புறக்‌ கரணமும்‌ நனிதொன்ற,
அருவமா யுருவாயுரு மாயப்‌ பலவாகியுற்‌
றொருவராலு முணரான்தனை வுளங்கொண்டு மகிழ்ந்தான்‌. 71
[71. புலன்கள்‌ - மெய்‌ வாய்‌ கண்‌ மூக்கு செவி ஆகிய ஐம்பொறிகளால்‌ ஆகும்‌
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்‌ என்பன, அருவமாய்‌ - உரு இல்லாததாய்‌]

உள்ளத்‌ தாமரை மணமெனத்‌ தோற்றின னொருவன்‌
வள்ளற்‌ கருந்திறஞ்‌ செய்தனன்‌ பூசனைகள்‌ மற்றுங்‌
கள்ளத்‌ தானவன்‌ செய்‌ காரியங்‌ கருத்தினால்‌ வினாவத்‌
தெள்ளத்‌ தற்பர னருனினன்‌ செய்வகை முறை சிறப்பால்‌. 72
[72 தோற்றினான்‌ - தோன்றினான்‌, வள்ளல்‌ - சிவபெருமான்‌, தானவன்‌ -
அசூரன்‌.]

புந்தியிற்‌ சிவனுணர்த்திய வாறெலாம்‌, புலம்பு
மிந்திரர்க்கு முன்னிமையவர்‌ யாவர்க்கு மிசைப்பான்‌
கந்தரக்கறை புனிதனின்‌ கருணையங் கடலில்
விந்தமொப்ப நின்று மிழற்றிய கருத்தினை மீட்டான்‌. 73
[73. புந்தி - மனத்தில்‌, இசைப்பான்‌ - பிரமன்‌ எடுத்துக்‌ கூறினான்‌,
கந்தரக்கறை –கழுத்தில்‌ விடத்தால்‌ கறைகாணும்‌ சிவன்‌, விந்தம்‌ -
விந்தியமலை]

பாரிற்‌ பார்த்த தானபதியிற்‌ பைந்தமிழ்‌ சுண்டத்‌
தேரிற்‌ காவிரி நாட்டளவில்‌ அமைபதிகளுக்‌ குள்ளும்‌
பேரில்‌ பஞ்சநதித்‌ தலமென்பது பேசின்‌
சேரிற்‌ சேரும்‌ நலம்‌ பயங்கள்‌ தவிர்த்திடும்‌ தேவீர்‌! 74
[74. பாரில்‌ - உலகத்தில்‌, தானபதி - சிவனுறையும்‌ நல்லிடம்‌, ஓரின்‌ -
ஆராய்ந்தறிந்தால்‌, பஞ்சநதித்‌ தலம்‌ - திருவையாற்றுத்தலம்‌, பேசின்‌ -
கூறினால்‌, சேரின்‌ சேரும்‌ - அடைந்தால்‌ ஆதரவு சேரும்‌.]

பிரண தார்த்திகர்த்‌ தலமென்றொரு பேர்கொண்
டரண தாயுயிர்‌ யாவுமளிக்கு மையாறு
மரண வேதினை வெம்பிறவித்துயர்‌ மாற்றும்‌
கரணமாய்‌ வரும்பிணி தீர்ப்பது கண்டீர்‌! 75
[75. அரணம்‌ - பாதுகாவல்‌, வேதினை - துன்பத்தினை, கரணம்‌ -
வினைப்பயனாய்‌.]

விலங்கினாற்‌ பகையால்‌ வருமச்சம்‌ விலக்கும்‌
கலக்குமால்‌ மிடியால்‌ வருந்தாவகை காக்கும்‌
அலங்கு பாதகமாழ்‌ நரகத்தொடு மாய்க்கும்‌
இலிங்க மேலிது போலான வேறிலை யென்றான்‌. 76
[76. கலங்குமால்‌ - மனத்தைக்‌ கலக்கும்‌ மயக்கம்‌, அலங்கு - வருத்தும்‌, மேலிது - மேலானது இது.]

ஆதலா லுமைக்‌ காப்ப தற்கோ ரடையாளங்‌
காதலால்‌ வருமின்பம்‌ அவ்வூரயல்‌ கண்‌
டாதலாலிலை வேற்றரண்‌ யாமினி யெண்ணிற்‌
போதலே கடனென்றய னன்று புகன்றான்‌. 77
[77. இலை - இல்லை, வேற்றரண்‌ - வேறு பாதுகாப்பிடம்‌, அயன்‌ - பிரமன்‌
போதலே கடன்‌ - ஐயாற்றுத்தலத்திற்குப்‌ போய்ச்‌ சேர்வதே கடமையாகும்.]

வேதவித்தகனால்‌ விடை பெற்றவர்‌ மெய்யாற்‌
பூதலத்தி லுளத்தொடு வந்து புகுந்தார்‌
தாதுக்‌ கயல்பாய்‌ முறுக்கவிழ்‌ தண்பூக்‌
காதமுப்பது மொய்ப்ப மணங்கமழ்‌ காவு. 78
[78. வேதவித்தகன்‌ - பிரமன்‌, விடை பெற்றவர்‌ - தேவர்கள்‌, கயல்பாய்‌ -
கெண்டைமீன்‌ பாயும்‌, காவு – பூஞ்சோலை.]

தேனளாவிய வண்டுகள்‌ சந்தனச்‌ சேறாய்‌
பானிலாமடற்‌ பாளைகள்‌ சாய மரைப்பாங்காய்த்‌
தூனமாமயி லாலவட்டத்‌ தொழில்‌ தானாய்‌
தூனிலா விருந்தெதிர்‌ கொண்டது சோலை. 79
[79. தேன்‌ அளாவிய - மலரில்‌ தேனினைத்‌ துளாவிய - வண்டு, மரை - தாமரை,
தூஅன - தூயனவாகிய, ஆலவட்டம்‌ - அசை விசிறி, தூதிலா - தூய்மையான நிறைமதி]

கற்பகாடவி பூமரக் காடெனக்‌ கண்டார்‌
பொற்பவானதி காவிரி யாறெனப்‌ புக்கார்‌
சொற்கமாதவர்‌ பூசுரர்‌ மேனச்‌ சூழ்ந்தார்‌
நற்பதங்கொள் சிலம்பொலி மாதரென் றாய்ந்தார்‌. 80
[80. கற்பக அடவி - கற்பகக்காடு, வான்நதி - வானகங்கை, புக்கார்‌ -
நீராடினர்‌, சொர்க்க மாதவர்‌ - தேவவுலகத்து மிக்க தவமுனிவர்‌,
பூசுரர்‌ - அந்தணர்‌.]

தொன்னகச்‌ சிறப்பி னோக்கி துறக்கத்தை மறந்து நின்றார்‌
அன்னகர்ச்‌ சீவனைச்‌ சேவித்தா ரமுதிகழ்ந்து நின்றார்‌
பன்னகப்‌ பணியாய்‌ போற்றி பரமனே போற்றி யென்று
பொன்னகர்‌ திருத்தா ளேத்திப்‌ புகழ்ந்தனர்‌ புகுந்தோ ரெல்லாம்‌. 81
[81. துறக்கம்‌ - மோட்சம்‌, பன்னகம்‌ - பலமலைகள்‌, பரமன்‌ - சிவபெருமான்]

எத்திறத்‌ தினர்க்குந்‌ துன்பம்‌ யாவையும்‌ தீர்ப்போ னும்பர்‌
அத்திற மீங்கு காப்பத்‌ திசையம்‌ போல்வ தன்றே
மத்தமத்‌ தடுக்கம்‌ போல மதனதிக்‌ களிற்றை மாய்க்கும்‌
முற்றமர்‌ சிங்கம்‌ மற்றோர்‌ துடியடி யுடற்றா தன்றே. 82
[82. தடுக்கம்‌ - தடுத்துக்காத்தல்‌, முற்றமர்‌ - வலிய போர்‌, துடியடி -
கரடிகள்‌, உடற்றா - துன்பஞ்‌ செய்யா.]

மலையெலாம்‌ பிளந்து நிற்கும்‌ வயிரவாண்‌ விசையஞ்‌ சிந்துஞ்‌
சிலையிலோர்‌ திரளைக்‌ கல்லின்‌ திண்ணிய இடையுடை யளன்றோ
தொலைவிலாப்‌ பாதகத்தின்‌ துயர்‌ தவிர்த்திடும்‌ ஐயாறு
கொலையிலோர்‌ அசுரன்‌ செய்யுங்‌ கொடுமைகள்‌ வாரா தன்றோ? 83
[83. சிலை - மலை, திரளைக்‌ கல்லின்‌ - திரண்ட கல்லில்‌, துயர்‌ - துயரம்]

பரிந்தருள்‌ சூழ்‌ மகத்தீப்‌ பசியறிந்‌ தருத்து நன்றாய்‌
வருந்தி நின்றழுத போழ்தின்‌ மணிமுலை சுரக்குந்‌ தீம்பா
லருந்து மாறன்பினூடே யருளி ஐயாற்றின்‌ கோயில்‌
இருந்தவன்‌ சுரர்க்‌ கிரங்கா னல்லனோ என்ன சொன்னார்‌. 84
[அஞ்ச லென்றல்‌ முற்றும்‌]

மாரியாம்‌ புலம்‌ படைத்த வான்‌ பயிரமுத வெள்ளம்‌
பூரியா நிறைந்ததே போற்‌ புனிதன்‌ வாய்‌ பையச்‌ சொல்லி
நேரிவாய்‌ நீறிற்‌ றேரி வந்தன ரிமையோரிப்பால்‌
வேரியார்‌ கமலத்தோனும்‌ விருப்பினோர்‌ கருமஞ்‌ செய்தான்‌. 85
[85. புலம்‌ - 9நெல்வயல்‌, வான்பயிர்‌ - உயர்ந்த நெற்பயிர்‌, பைய –
மெதுவாக, வேரியார்‌ - தாமரையிலமர்ந்தவன்‌.]

அடைந்தவர்க்‌ கின்னல்‌ தீர்க்கும்‌ ஐயனை ஐயாற்றிற்‌ றேனர்‌
மிடைந்தனர்‌ விசையன்‌ வாணாள்‌ வீழ்ந்தது வித்தகத்தோ
யுடைந்தன ரவனா லவ்வா றவன்பட வுஞற்று கென்று
கடைந்தயாழ்‌ வல்ல காதல்‌ முனிவர்க்குக்‌ கழறினார்கள்‌. 86
[86. இன்னல்‌ - மிகுதுன்பம்‌, விசையன்‌ - அசூரன்‌, உஞற்று - செயல்‌
புரிவாயாக, முனிவர்‌ - நாரதர்‌.]

வானின்றிழிந்து வானதிபோல விண்ணமுதமா வருவதெனத்‌
தானங்‌ கிழிந்து நாரதனுந்தடங்‌ காவிரியிற்‌ சேர்த்தமிழ்ந்தி
(வூனின்றகலா வுயிரு முயிருண வாகி யுணர்வரிய)
ஞானமா திரண்ட பஞ்சநதியை வானமுத யாழில்‌ பாடினான்‌
மோனமதாகச்‌ சிந்தித்த தேவர்‌ முக்கண்ணினானை மனம்‌ வைத்தார்‌. 87
[87. தானம்‌ - வான இடம்‌, இழிந்து - இறங்கி, விண்‌ - மேலுலகம்‌,
யாழில்‌ - யாழ்பாடலில், முக்கண்ணினான்‌ - ஐயாறுடைய சிவன்‌.]

அளைவா ழலவன்‌ கண்கண்டமைந்த வாணிமாண்‌ பத்தர்த்‌
துளைவாய்‌ மறுப்புத்‌ தேன்வார்ந்த சுகிர்வாய்ந்த நரம்பின்‌ யாழின்‌
விளைவா லொலித்தல்‌ முதற்புறமாக விளையாட்டி னகத்‌ தொழிலின்‌
களைவார்‌ போக்கி மிடற்றிசையோடு பாணியகானம் தொடங்கினான்‌. 88
[88. அலவன்‌ - நண்டு, பத்தர்‌ - யாழின்‌ குடப்பகுதி, சுகிர்‌ வாய்ந்த –
முறுக்கமைந்த, மிடற்றிசை - கண்டப்பாட்டு, பாணிய - தாளத்தோடு கூடிய.]

எப்பேச்சும்‌ போல்‌ இடையிடையே யொவ்‌ வொருக்காற்‌
செப்பேச்சுரப்‌ போதின்‌ புகல மாட்டார்‌ தினம்‌
புகல மாட்டார்‌ சிவமாயிரண்டற்‌ றின்‌ (புற்றே)
புகலு மின்ப மியைத்‌ துணவு (கொள்ள) மாட்டாரே. 89
[89. எப்பேச்சும்‌ - எத்தகைய உரையாடலும்‌, புகலுதல்‌ - தன்குறை
கூறுதல்‌, இரண்டற்று - தான்வேறு ஐயாறப்பன்‌ வேறு என்றில்லாமல்‌
ஒன்றாய்க்‌ கலந்து.]

பாடுந்‌ தேவ கீதத்தாற்‌ பரம னுருகி வெளிநின்று
நீடுந்‌ தவத்தோ யுன்விருப்பம்‌ நினைவே தென்றானின்‌ திருத்தாள்‌
வீடும்‌ பொருளொன்றுடையோம்‌ வேண்டும்‌ பிறவேண்டேன்‌ விண்ணோரைச்‌
சாடுஞ்‌ சருவ விசையனவ னிழற்றற்‌ காவென்றுதாள்‌ பணிந்தார்‌. 90
[90. கீதம்‌ - இசைப்‌ பாடல்; வீடும்‌ - அழியும்‌, சாடும்‌ - போரிட்டழிக்கும்‌,
சருவவிசையன்‌ - அசூரன்‌, நிழற்ற - செய்தால்‌, கா - காப்பாற்றுவாயாக.]

அருளிற்‌ கால வயிரவனை யழைத்துத்‌ தேவர்‌ அவுணரால்‌
வெருளிப் புகுந்தாரிவ ணெய்தில்‌ விலக்கிப்‌ பாதுகாத்தியெனத்‌
தெருளிய தவத்தோன்‌ விடைகொண்டு தேடி யசுரர்க்‌ குணர்த்கிடுவான்‌
மருளிற்‌ பவந்‌ தீர்ந்திடத்‌ தலங்கள்‌ வணங்கு வோரின்‌ வழிபட்டான்‌. 91
[ 91. கால பைரவன்‌ - கால பைரவதேவர்‌, வெருளி - அஞ்சி, மருளில்‌ -
குற்றமில்லாமல்‌.]

வாளைக்களிறு மதர்த்துகள்‌ மணிவான்‌ பணிலஞ்‌ சூலுளைந்து
தாளைத்‌ தழுவிச்‌ செழுஞ்சாலி தலைப்பூங்‌ கரும்பிற்‌ றவழ்ந்தேறி
காளைப்பகட்டின்‌ வய நீங்கிக்‌ கதலிக்காடு கடந்து போய்ப்‌
பாளைக்‌ கமுகின்‌ வழியிறங்கும்‌ பழனஞ்‌ சேர்ந்து வணங்கினான்‌. 92
[92. வாளைக்களிறு - ஆண்வாளைமீன்‌, மதர்த்து - திமிர்த்து எழுதலால்‌
எழும்‌ நீர்‌, பணிலம்‌ - வானகங்கையில்‌ வளரும்‌ சங்குகள்‌, சூலுளைந்து -
கருப்பெற்று, செழுஞ்சாலி - செழுமையான நெற்பயிர்‌, பகடு - காளைமாடு,
கதலிக்காடு - வாழைத்தோட்டக்காடு, கமுகு - பாக்கு மரம்‌, பழனம்‌ - திருப்பழனத்தலம்]

வணங்கி வருங்காலமாக வானோரெவரும்‌ வந்திறைஞ்சி
இணங்கு மெமக்குப்‌ பஞ்சநதம்‌ யிருக்கைக்‌ கினிதே யென்றாலும்‌,
அணங்கு புரியுஞ்‌ சகவிசையற்‌ கழிவு வருநா ளென்னாளென்‌
றுணங்கு நமக்குக்‌ கூறுகென வும்பர்க்‌ குரைத்தான்‌ உரவோனே. 93
[93. இணங்கும்‌ - வந்து பணியும்‌, அணங்கு - துன்பம்‌ செய்யும்‌, உணங்கு -
நலிந்துவருந்தும்‌, உரவோன்‌ - திருப்பழனத்துச்‌ சிவபெருமான்‌.]

ஆற்றலவுணன்‌ வாழுநாள்‌ அண்ணி தாயிற்‌ றவ்வளவு
நோற்ற லுடனிப்‌ பஞ்சநதத்‌ தணவா திருத்திரெனும்‌ பொருட்டுப்‌
போற்றலிலையேற்‌ புகலடைந்தோர்க்‌ கிடும்பை தீர்க்கும்‌ புகட்பெரும்பேர்‌
சாற்றல்‌ பதிக்கு மிப்பதிக்கு மென்னாமென்று தானகன்றான்‌. 94
[94. அண்ணிதாயிற்று - மிகநெருங்கிவிட்டது, தணவா - நீங்காமல்‌,
பதி - தலம்‌, சாற்றல்‌ - எடுத்துக்‌ கூறுதல்‌,]

செழுஞ்சாலி யரிவிளையும்‌ திருச்சோற்றுத்துறை சேவித்‌
தெழுஞ்சாமம்‌ வண்டிசைக்கும்‌ வேதிக்குடி யிறைஞ்சிப்போய்‌
உழுஞ்சாலில்‌ வளர்நீல மலர்‌ துவளுங்‌ கண்டியூர்‌
தொழுங்‌ சால்பிற்‌ பொன்னிமலர்‌ தொகுக்கும்‌ பூந்துருத்தியுட ன்‌. 95
[95. செழுஞ்சாலி - வளமையான வயல்‌, அரி - செந்நெல்‌, எழுஞ்சாமம்‌ -
வைகறைப்பொழுது, வேதிக்குடி. – திருவேதிக்குடி]

நெய்மணக்கும்‌ புகை வேள்வி நெய்த்தானஞ்‌ சேவித்து
மைமணக்க மயிலாலும்‌ பெரும்புலியூர்‌ நடம்‌ வாழ்த்திப்‌
பொய்கை மணக்கும்‌ பிணிதீர்க்கும்‌ பாடியாடி போந்‌ தேத்தி
மெய்மணக்குஞ்‌ சிவஞான மிகுமானைக்‌ காப்பணிந்தான்‌. 96
[96. வேள்வி - யாகம்‌, மைமணக்க - மேகத்தைக்‌ கண்டு விரும்ப,
பொய்கை - நீரோடை. பாடி - மழபாடி.]

செவ்வந்தி மணம்‌ நீங்கா திருச்சிராய்‌ மலை போற்றி
அவ்வந்தி நிறத்தோனை யப்பாலும்‌ சிவபதிகள்‌
மெய்‌ வந்திப்புடன்‌ போற்றி மீண்டு கழைவளர்‌ சாலிக்‌
கைவந்தியில்‌ காட்டுப்‌ பள்ளியுங்‌ கடந்தான்‌. 97
[97. செவ்வந்தி - செவ்வந்தி மலர்‌, கழை - கரும்பு, காட்டுப்பள்ளி -
திருக்காட்டுப்பள்ளி,

பாலாவின்‌ பயனாடும்‌ பசுவதீச்சுரம்‌ நண்ணி
சூலாருமுகில்‌ சோலைத் துஞ்சிய பாலைத்துறையும்‌
சேலாரும்‌ நறுங்கழனி திருதல்லூருடன்‌ தொழுது
மாலாசைச்‌ சுழிநீக்கும்‌ வலஞ்சுழியும்‌ வலம்‌வந்தான்‌. 98
[98. பாலா - பால்‌ ஆ, பாற்பசு, பயன்‌ - பஞ்சகவ்யம்‌, நண்ணி –
அடைந்து; சூலாரும்‌ - மழைக்கருகொண்ட, மாலாசை - மயக்கந்தரும்‌
ஆசைகள்‌.]

வடநீழற்‌ றிருமருந்தை புறம்புயத்தில்‌ வாய்த்தெய்திக்‌
குடமூக்கிலாரமுதைக்‌ குழைந்தின்பமுடன்‌ பருகிப்‌
படநீழற்‌ சிரமணியை பட்டீச்சரந்தனிற்‌ பலித்துத்‌
திடநீடத்‌ தித்திக்கும்‌ தேனை மருந்திடைத்‌ தெரிந்தான்‌. 99
[99. வடநீழல்‌ - வட ஆலமரத்தின்‌ நிழல்‌, குடமூக்கு - குடந்தை.
சிரமணி – சிகாமணி; மருத்திடை - திருவிடைமருதூரிடை, புறம்பயம்‌,
குடந்தை, பட்டீச்சரம்‌, இடைமருதூர்‌ - சிவத்தலங்கள்‌,]

நச்சுவார்க்‌ கினியானை நாகயீச்சுரத்‌ தெண்ணி
மெச்சுவார்க்‌ கெளியானை ஆவடுதண்டுறைவணங்கி
கச்சுவா ரரவானை வாஞ்சியத்துக்‌ கண்டிறைஞ்சி
விச்சுவாதீதனைப்‌ போய்‌ வீழிமிழலைப்‌ பணிந்தான்‌. 100
[100. நச்சுவார்‌ - தன்னைப்பழித்தவர்‌, மெச்சுவார்‌ - தன்னைப்புகழ்வார்‌.
அரவானை - பாம்பாபரணணை (சிவனை) விச்சு ஆதிதனை - எல்லாவுல கங்கட்கும்‌
மேலான முதற்கடவுளை, நாகயீச்சுவரம்‌, (நாகேச்சுரம்‌)
ஆவடுதுறை, திருவாஞ்சியம்‌, திருவீழிமிழலை.

வள்ளலைச்‌ சிந்தனை செய்து மயிலாடுதுறை நீங்கிப்‌
புள்ளிருக்கும்‌ வேளூரில்‌ பண்டிதத்தைப்‌ புகழ்ந்தேத்திப்‌
வெள்ளமிக்க திருத்தோணி வித்தகத்தைக்‌ கண்டகன்று
கள்ளலைக்கும்‌ புனம்பழனத்‌ தில்லை வனங்கண்டடைந்தான்‌. 101
[101. புள்ளிருக்கு வேளூர்‌ - திருவைத்திய ஈசுவரன்கோவில்‌. பண்டிதன்‌ - முருகப்பெருமான்‌, திருத்தோணிபுரம்‌ - சீர்காழி, தில்லைவனம்‌ -சிதம்பரம்‌.]

ஆனத்தத்‌ திருக்கூத்துக்‌ கன்புருகி விசைபாடி
பானந்தம்‌ முரன்றலைக்குங்‌ கழிப்பாலைப்‌ பணிந்துபோய்‌
வானந்தத்‌ தருமுல்லை வாயிலகமகிழ்ந்‌ திறைஞ்சி
யூனந்த மறலியைக்‌ காய்ந்தொறுத்தக்‌ கடவூர்‌ வந்தான்‌. 102
[102. பானந்தம்‌ - வண்டுகள்‌, கழிப்பாலை -திருக்கழிப்பாலைத்தலம்‌,
ஊனந்த மறலி - அந்தகனாகிய எமன்‌. காய்ந்தொறுத்த - சினந்து
அடங்கிய; கடவூர்‌ - திருக்கடவூர்‌]

செக்கர்ப்‌ பவளச்‌ சிவக்கொழுந்தைதிருவெண்காட்டிற்‌ கும்பிட்டு
முக்கட்கனியைச்‌ செங்காட்டில்‌ முடிதாழ்த்‌ தெழுந்து நள்ளாற்றுச்‌
சொக்கப்‌ பெருமான்தனைப்‌ போற்றிப்‌ புகலூர்‌ புலவர்பசி நீக்கும்‌
நக்கர்க்‌ கிசைநூல்‌ வழிபாடித்‌ திருவாரூரில்‌ நண்ணினான்‌. 103
[103. செக்கர்‌ - சிவந்த, சொக்கப்பெருமான்‌ பொன்மேனிப்‌ பெருமான்‌,
நக்கர்‌ - சிவபெருமான்‌.]

ஆடுமாவடிக்‌ சிண்கிணிக்கால்‌ ஆவிகுளிரச்‌ சேவித்துக்‌
கோடி மூழ்கி மறைக்காட்டிற்‌ கோமானடிக்குக்‌ கைகூப்பிக்‌
காடு பவளம்‌ படப்படருங்‌ காயாரோணங்‌ கைகூப்பிச்‌
சேடுபடு தென்கரைப்‌ போய்‌ திருவிராமீச்சரம்‌ புகுந்தான்‌. 104
[104. கோடி - திருக்கோடிக்காவல்‌, மறைகாடு - வேதாரண்யம்‌,
காடு - பவளக்காடு, புகுந்தான்‌ - சென்றடைந்தான்‌.]

வானவரிடந்‌ துருவி வந்தவிசையத்‌ தோன்‌
தானவர்‌ செகுத்த செயல்‌ கண்டு தெரியனாய்க்‌
கானவரி வேங்கையெதிர்‌ கண்கடலு மாக்கட்‌
கூனமுற வெட்கியென வடங்கியுள நொந்தான்‌. 105.
[105. வானவர்‌ இடம்‌ - தேவர்கள்‌ உள்ள இடத்தை, துருவி - நன்றாக
ஆராய்ந்து, விசையத்தோன்‌ - அசுரன்‌.]

தெட்டின ரெனத்தலை துளக்கு நகை செய்யுந்‌
தட்டுமிரு கைத்தல முயிர்த்‌ தழனாசிச்‌
சுட்டுவிரல்‌ நொடித்திடு மினிச்‌ ஈரரெனும்‌ பேர்‌
கெட்டதென உள்தெளிவு கெட்டவென நிற்கும்‌. 106
[106. தெட்டினர்‌ - தெளிவடைந்தனர்‌, துளங்கும்‌ - அசைக்கும்‌,
நாசி - மூக்கில்‌, உள்தெளிவு - உள்ளத்தில்‌ கொண்ட தெளிவு]

திக்கொடு நகைக்கும்‌ அவனுக்கெதிர்‌ சினக்கும்‌
பக்க மலையைக்‌ கறுவும்‌ மைக்கடல்‌ பனிக்கும்‌
அக்க திருக்கிடு முடுக்களை வியர்க்கும்‌
நக்கது செயற்கையி தெனத்தனை வெறுக்கும்‌. 107
[107. வான்கதிர்‌ - சூரியனைப்பார்த்து, சினக்கும்‌ - கோபங்கொள்ளும்‌.
அக்கம்‌ - சார்ந்த இடங்களில்‌ உள்ள, உடுக்களை - விண்‌மீன்களை
(நட்சத்திரங்களை)]

எண்டிசை புகைந்தன விருண்ட துலகெல்லாம்‌
மண்டல நடுங்கியது வானிரவி யச்சங்‌
கொண்டது மயங்கியது கொண்டல்‌ முதனாலும்‌
விண்டுவிசை யன்றனி வெகுண்ட பொழுதம்மா! 108
[108. எண்டிசை - எட்டுதிசையும்‌, வானிரவி - வானிலுள்ள சூரியன்‌,
கொண்டல்‌ - கார்மேகம்‌, வெகுண்ட - கோபங்கொண்டு எழுந்த.]

ஏழுகட லேழுபுவி யேழுமுகி லெட்டிக்‌
கீழுலகு மூழுமிசை யேழினொடு கிட்டிச்‌
சூழும்‌ வன்கொடுமை அன்றுவரைச்‌ சூழ்வான்‌
வாழியவனார்‌ வருந்திசையில்‌ வந்தான்‌. 109
[109. புவி- உலகங்கள்‌, குழ்வான்‌ - திட்டமிட்டுச்‌ செயலாற்றுபவன்‌,
கிட்டி - நெருங்கிச்சென்று. ]

வந்தவனை யாசியில்‌ வழங்கி இசை யோதிச்‌
சிந்தனை தளர்ந்த செயலென்னை யென வன்னான்‌
இந்திரனிருந்த விடமின்னதென வெண்ணேன்‌
அந்திலத னாலலது நெஞ்சினயர்‌ வில்லேன்‌. 110
[110. ஆசியில்‌ - ஆசிகூறுதல்‌ வழி. என்னை – என்ன காரணம்‌,
அன்னான்‌ - வந்த அசுரன்‌, அத்தில்‌ - அத்தகைய குறை.]

எங்கு மெவர்பாலு மபெளிதின்பமுற வன்பாற்‌
றங்கிய னினக்கலது சார்பு தெரியாதாற்‌
றுங்க புகலென்றிட வுவக்குமது சொல்லா
னிங்கிவ னிசைந்தன னெனத்‌ தவனிசைப்பான்‌. 111
[111. எவர்பாலும்‌ - எத்தகைய தேவர்களிடத்தும்‌, சார்பு – சென்றுள்ள
இடம்; துங்க புகல்‌ - தூயவனே சொல்‌, இசைந்தனன்‌ - தங்கியுள்ளான்‌.]

கயிரவ்விதக்‌ கரிய மெய்‌ வாய்‌ கால்‌
வயிரவ னொருத்த னவன்‌ மாடு திரிகின்றான்‌
செயிர்வனுனைப்‌ பொருவனன்‌ றொருசெருக்கா
லுயிர்வரப்‌ படைத்தனர்‌ களிப்பினுரைகின்றார்‌. 112
[112. கயிர்‌ - கரிக்குருவி, வயிரவன்‌ - வயிரவமூர்த்தி, மாடு - பக்கமாகவே
செயிர்வன்‌ - அழிப்பன்‌, களிப்பினுறைகின்றார்‌ - தேவர்கள்‌ மகிழ்ச்சியோடு இருக்கின்றார்கள்‌.]

பெருபுவி படைத்தருள்‌ பிதாமகன்‌ வரத்தால்‌
சருவ விசையப்பெயர்‌ தரித்திடு முனக்குக்‌
கருவலவனைப்‌ பொரக்‌ கருத லிடமோ
ரிலக்கோ வறுதியினி யத்தலனுனக்கு மாமென்றான்‌. 113
[113. பெருபுவி - மிகப்பெரிய உலகம்‌, பிதாமகன்‌ - பிரமன்‌.]

உன்வரவு கேட்கி லவரோடவும்‌ நினைப்பார்‌
மின்வரவிற்குமுன்‌ விரைந்திடுக வென்னத்‌
தன்வரவு ரைத்தபடி தாபதனு முன்னீர்‌
தென்வரைய மாதனவரைத்‌ திசைப்ப டர்ந்தான்‌. 114
[114. தன்வரவு உரைத்தபடி - தன்வரவினைச்‌ சொன்னவாறு,
மாதனவரை - கந்தமாதனமலை, திசை - பக்கம்‌, படர்ந்தான்‌ -
நோக்கிச்சென்றான்‌.]

வஞ்சமில்‌ மனத்தால்‌ வணங்கி வருகென்றென்‌
கஞ்சமலர்‌ வாவிசெறி காவிரியி னோர்பாற்‌
பஞ்சநதி யென்றொரு பதிக்குள்‌ மகவானுந்‌
தஞ்சமென வானவர்கள்‌ தம்முடனிருந்தான். 115
[115. கஞ்சமலர்‌ - தாமரை மலர்‌, வாவி - தடாகம்‌, மகதான்‌ - இந்திரன்‌.]

தனுக்கோடி முதல்கோடி தீர்த்தமெலா மகிழ்ந்தாடித்‌ தசரதன்‌ சேய்‌
மனுக்கோடி யருச்சித்த சிவலிங்கம்‌ மருங்கோடி வணங்கியேத்து
மினுக்கோடிய விரகனூர்‌ ரதனும்‌ விரைந்தடைந்தான்‌
      விண்ணோர்க்கின்னல்‌
அனுக்கோடி யிழைக்க வல்ல தானவனுந்‌ திருவையாறணையு
      முன்னம்‌. 116
[116. மனுக்கோடி - உலகமக்களெல்லாம்‌, சிவலிங்கம்‌ - இராமநாதனின்‌
அருவுருவாகிய சிவலிங்கம்‌, இன்னல்‌ - துன்பம்‌, தானவன்‌ - அசூரன்‌.]

வந்தமுனி யிமையோர்க்கும்‌ மகவார்க்கும்‌
      முனிவருக்கும்‌ மறையோர்‌ யார்க்கும்‌
இந்தவகை யுரைத்தினிர்‌ பிரணதார்த்திகனைச்‌
      சென்றேத்தியுங்கட்‌
கந்தமில்‌ தானவன்‌ கெடுமாறளிக்கும்‌ வரங்‌
      கேட்டீரெனவழைத்துள்‌ புக்கான்‌
சந்தமிகு செழுஞ்‌ சுருதிப்‌ பதப்பொரு ளாற்றுதி
      செய்தார்‌ தக்காரெல்லாம்‌. 117
[117. இமையோர்‌ - தேவர்கள்‌, மகவான்‌ - நூறுயாகம்‌ செய்த இந்திரன்‌,
அந்தமில்‌ - முடிவில்லாத, சுருதி - வேதம்‌.]

புரந்தராதி யெத்தேவரும்‌ புவியிடைத்‌ திரிந்தால்‌
இரந்த நல்வினை யியற்றி யோர்‌ நிலப்பயனுகர்வான்‌
அரந்தையில்‌ பதந்‌ துறக்க மென்றமைத்தது மன்றாய்‌
கரந்து தானவ ருலகமாய்க்‌ கிடப்பது தொடர்‌ கடனோ. 118
[118. புரந்தான்‌ - இந்திரன்‌, அரந்தையில்‌ - துன்பமில்லாத, கரந்து -
மறைந்து துன்புறுத்தும்‌, தானவர்‌ - அசூரர்].

அண்டருக்கிடர்‌ விளைத்தவ னவனியி லின்னம்‌
தண்டுடைப்‌ படையிற்சின மிகுந்தன்னோ ரடியினிற்‌ படவான்‌
கண்டிறக்கு முனிமெய்வாக்காக அவர்கட்காம்‌ கடன்‌
முண்டகத்த தின்ன வரத்தோடு முடித்திட முடிப்பாய்‌. 119
[119. அண்டர்‌ - தேவர்‌, மெய்வாக்க - உண்மை வாக்காக,
முண்டகம்‌ - தாமரை]
(வேறு)
காவி பட்ட கண்ணரம்பையர்கள்‌ படக்கண்ட
பாவி பட்ட பிலனது பாழ்படஅசுரர்‌ பதியும்‌
பூவி பட்டிட வாழ்வுறாதென முனி புகல
நாவி பட்ட பூண்முலை யுமைபாகனு நவில்வான்‌. 120
[120. காவிபட்ட - நீலோற்பல மலர்போன்று பொருந்திய, பாவி - அசூரன்‌,
பூவிபட்டிட - புழுதியடைந்திட, நாவி – புனுகு]

கலகனாரதற்‌ கொருகுறு நகைத்தொழில்‌ காட்டிப்‌
புலவர்மேல்வரு மசூரரை பொடிபடுத்துக வென்‌
றகிலதேச னுரைத்தனன்‌ வயிரவர்க்‌ கமைவு,
விலக வங்ஙமை மதிற்‌புறஞ்‌ சுற்றினன்‌ விசையன்‌. 121
[121. கலக நரரதர்‌ - கலகஞ்செய்யும்‌ நாரதமுனி, புலவர்‌ - தேவர்‌,
கமைவு - பொருந்திய ஆணை, விசையன்‌ - அசூரன்‌. ]

வளைத்த தானவ ரொலித்தலும்‌ வயங்கிய வானோர்‌
களைத்துயிர்த்தனர்‌ பகைஞரைக்‌ கடுஞ்சினக்கவும்‌
விளைத்த நெஞ்சின்‌ படைக்கலம்‌ விடுத்திடில்‌ வீயவ
ரிளைத்‌ துயங்குவ ரெனக்‌ கொதித்தெறிந்தனர்‌ யாவும்‌. 122
[122. வளைத்த தானவர்‌ - தேவரை வளைத்துக்கொண்ட அசுரர்கள்‌,
உயங்குவர்‌ - வருந்துவர்‌.]

வாழு மூவிலைச்‌ சூலமும்‌ வயிரமு மழுவும்‌
மூளு மாரழற்‌ கப்பணந்‌ தோரம்‌ முசலம்‌
நீளு மீட்டியும்‌ குந்தமும்‌ விட்டனர்‌ நிறைந்தார்‌
ஆளு மேகமிச்‌ சோனையு மெனப்‌ பொருமவுணர்‌. 123
[123. மழு - மழுவாயுதம்‌, குந்தம்‌ - முள்முனை ஆயுதம்‌, நிறைந்தார்‌ -
மிகுதியாகப்‌ பயன்படுத்தினர்‌, மேகம்‌ - கருமேகம்‌, சோனை - பனிப்படலம்‌.]

வட்ட மாமதிலுட்படும்‌ வானவர்‌, தவத்தோ
ரிட்டமார்பு நூல்‌ மறையவர்‌ யாவரு மேங்க
விட்டவன்‌ படை யாயிர மாயிரம்‌ ஏவப்‌
பட்டதொவ் வொருபெயர்க்‌ கென்பதைத் தயர்ந்தார்‌. 124
[124. வன்படை - வலிமை மிகுந்தபடை, மறையவர்‌ - பிராமணர்‌,
தைத்தயர்ந்தார்‌ - பட்டு அயர்ந்தார்கள்‌, தளர்ச்சியடைந்தார்கள்‌.]

அலமந்‌ தோடி அடைக்கல மடைக்கலம்‌ நீக்கென
கலம்‌ வந்தோடிய காக மொத்தயர்ந்தன மென்றார்‌
வலம்‌ வந்தோடி யவ்வயிரவர்‌ கண்டு தாள்வணங்கிட
தலம்‌ வந்தோது முன்னடந்தனன்‌ தனிப்படைவீரன்‌. 125
[125. அலமந்து - தடுமாற்றமடைந்து, கலம்‌ - மரக்கலம்‌, தலம்‌ -
தன்னிடம்‌, வீரன்‌ - பைரவதேவர்‌.]

கால வங்கியி னுருத்திர னெழுச்சி கதுவக்‌
காலதிர்ந்து நடைக்கின்ற தென்றமைக்‌ கழலொலிக்‌
காலருந்தி னவையில்‌ வைத்தொரு கருப்புயலெனக்‌
காலமுந்து வடுகக்கடவுன்‌ காத வருவான்‌. 126
[126. உருத்திரன்‌ - உருத்திர மூர்த்தியாகிய பைரவர்‌, கதுவ –
எதிர்த்துப்‌ போரிட, காத - அசுரனை அழிக்க.]

செக்கர்‌ வாயிரு பேறைக்‌ கதிர்‌ செவிக்குழையார்‌
நக்க நாவிரி புதைத்தசைய நஞ்சு மிடறூ
டொக்க நீலமணி தாளிருகை கொளுமரைக்‌
கக்க மாலையுடனாடரவு சுற்றி யமைய. 127
[127. செக்கர்‌ - சிவந்த, பேறை - கோரைப்பற்கள்‌, அரைக்கு - இடையணி
யாக, அக்கமாலை - உருத்திராக்க மாலை, ஆடரவு - படமெடுத்தாடும்‌
பாம்பு.]

படிப்படைக்‌ கக்கமாலைப்பிறழ மார்பொடுபத்த
தடிபடிக்கர மெடுத்த தலையச்ச மருள்‌மேவ
வொடி படைத்திடு பிறப்பொருவ துற்றவுடல்‌
முடிபடைத்த கழுமுட்டலைக்‌ கனன்று முனிய. 128
[128. இப்பாடல்‌, வயிரவ மூர்த்தியின்‌ அங்க ஒப்பனைத்த தோற்றம்‌
கூறியதாம்‌.]

அஞ்ச லஞ்சலென வானவ ரிடத்தபைய
முஞ்ச லஞ்சலங்‌ கசடருக்குறு கெனுந்தொகை
செஞ்சிலம்பு புரியுந்‌ தோறு மிகுஞ்சின மிகா
மஞ்சிலம்‌ புரிசைப்புறன்‌ விரைந்து மருவி. 129
[129. அஞ்சல்‌ - அஞ்சாதீர்கள்‌, கசடர்‌ - தீயோராகிய அசூரர்; மஞ்சு
சிலம்பு புரிசை - மேகங்கள்‌ தழுவி ஒலிக்கின்ற மதிள்‌, மருவி - சென்றடைந்து,]

துட்டவா ளவுணனிட்ட தொழில்‌கண்டு துடியா
முட்டனா மிவண்‌ முடித்து மெனிலின்று முடியா
தொட்டு பொருவோரில்‌ இலக்கமுள கோடியுளதாற்
சுட்டநீறு படவட்டிடுது மென்று துணியா. 130
[130. துட்ட - கொடுமை நிறைந்த, துடியா - மனத்துடிப்படைந்து,
முட்டனாம்‌ - போரிட்டுத்தாக்கும்‌ நாம்‌, இவண்‌ - இவ்விடத்து, இலக்கமுள -
பகைவர்‌ எண்ணளவிற்படாதவராக உள்ளனர்‌, நீறு - திருநீறு, வட்டிடுதும்‌ -
மந்திர மோதி சுழற்றி வீசி எறிகின்றேன்‌.]

மூல வென்றியுள்‌ பாதபதமுன்னி மொழியச்‌
சீலர்‌ பஞ்சநதி பாதக மறுத்தல்‌ செயல்‌
போலதிர்ந்த படைகேட்டிட விரைந்தடுகெனச்‌
சூலவெம்படைச்‌ சுழற்றினன்‌ விடுத்தனனரோ. 131
[131. மூலவென்றியுள்‌ - திட்டமான வெற்றியில்‌, பாதபதம்‌ உன்னி -
சிவபெருமானின்‌ பாதங்களை நினைந்து, அடுகென - போரிடுங்கள்‌ என்று,]

சூலமொன்று சுழற்றி நின்றது கண்டபோது ஒல்லை நீர்‌
ஞாலமெங்கு முடிக்குவெங்‌ கனன்று மென்று நடுங்கினார்‌
மேலவன்கால்‌ நின்றமர்க்குள்‌ விழுந்த போது விழுந்தனர்‌
பாலழன்ற விளக்கின்‌ முன்பு பதங்கராகி படிந்த போல்‌. 132
[132. ஒல்லைநீர்‌ - பெருங்கடல்‌ நீர்‌, ஞாலமெங்கும்‌ - உலகமெங்கும்‌,
கனன்று - எரிந்து, பதங்கராகி – சூரியராகி]

அரிகரந்‌ திரிச்‌ சக்கரங்க ளனந்த கோடியெனச்‌ சுழன்‌
றெரிகரந்தனி நின்று நம்ப னெறிந்த வட்டமெனக்‌ குலாய்க்‌
குரிசிலிந்திரன்‌ வச்சிராயுதக்‌ கொடி கோடியெனப்‌ படும்‌
பரிகரந்‌ துளைப்‌ பட்டயானை பட்டது பதை பதைக்கவே. 133
[133. அரி - திருமால்‌, சக்கரம்‌ - சக்கராயுதம்‌, பட்டயானை - அரச
பட்டத்து யானை, பட்டது - இறந்தது.]

மலையிடிக்கு மிடிக்குழாமென மார்பிடிக்கு மிடர்‌சமன்‌
தலை புடைத்த கதைக்‌ குழாமென மிக்குமஞ்‌ சிதகாக்கு நீ
ருலை வடித்த மழுகற்‌ குடிப்ப தெனத்துவற்ற வறுக்கும்‌ வெஞ்‌
சிலை விடுத்த குழுக்கணைக்கிணைச்‌ செந்தழற்‌ சிதறித்‌தெழும். 134
[134. மார்பிடிக்கும்‌ - வீரர்‌ மார்புடன்‌ மார்பு இடிக்கும்‌, மழு - மழுவாயுதம்‌,
சிலை - வில்‌, கணை - தொடுத்த அம்பு.]

செந்தழற்‌ புரித்தக்கன்‌ வேள்வி சிதைத்ததெனப்‌ பொருமோர்புறம்‌
அந்தகற்‌ பெயரோனின்‌ மாள வழுத்தி நிற்குமதோர்‌ புறம்‌
வெந்தழற்‌ புலயோனின்‌ மாய விதந்தடுத்திடு மோர்புறம்‌
முந்து முப்புர மட்ட செந்தழல்‌ போல்‌ மூள்வதோர்‌ புறம்‌. 135
[135. தக்கன்‌ வேள்வி - தக்கன்‌ செய்த யாகம்‌, புலயோன்‌ - அற்பத்‌
தொழிலுடைய அசுரன்‌, அட்ட - எரித்த, மூள்வது - பற்றிச்‌ சூழ்வது.]

வயிரவக்‌ கடவுளென்னு வனமிகுத்‌ தெழுந்த சீற்றச்‌
செயிரு முத்தலை வேறாகத்‌ தீச்சுவைக்‌ கவை நானீட்டிற்‌
பசியின்‌ மிக்கிரை கண்டாங்கு பைத்தனர்‌ பாய்ந்து சுற்று
மசுர ராமமுத வெள்ளம்‌ தரைப்பட நக்கிற்‌ றம்மா! 136
[136. முத்தலை - மூன்று தலைப்போடு கூடிய சூலப்படை,
கண்டாங்கு - கண்டதைப்‌ போன்று, அசுரராம்‌ - அசுரராகிய,]

இரண்டு நாழிகையில்‌ சேனையாவு நீறாக்கி நின்ற
திரண்டரு சூலமென்றியா மதிசயம்‌ நினைக்கி லென்னாந்‌
திரண்ட பேரண்ட மெல்லாஞ்‌ செருத்தொரு நொடிப்போதில்‌
புரண்டிடப்‌ பூழியாக்கிப்‌ புனைந்தவன்‌ கைய தென்றால்‌. 137
[137. நீராக்கி - பொடியாக்கி அழித்து, திரண்தரு - திரண்டிருந்த
பூழியாக்கி - புழுதிபோன்றதாக்கி, புனைந்தவன்‌ - வெல்லுமாறு
அனுப்பிய வயிரவன்‌.]

அடியவர்க்‌ சுடியார்‌ செய்யு மருந்தொழிற்‌ கம்பொற்சோதி
வடவினி லொருவன்‌ கால வயிரவ னிலக்கக்‌ கோடி
படியுறு சேனையெல்லாம்‌ பாசுபதாத்‌ திறத்தால்‌
முடிவுறப்‌ புரிந்தா னென்று மொழிவது புகட்சி யென்றான்‌. 138
[138. வடவினில்‌ - வடப்பக்கத்தில்‌, படியுறு - வந்து சேர்ந்த அசுரர்‌
சேனைகளெல்லாம்‌, முடிவுற - அடியோடு அழிவுறுமாறு;
புகட்சி - புகழாக்கும்‌ செயல்‌.]

கூறிய சூலம்‌ அயன்‌ கூறிய கரும முற்றி
சீறிய சத்தி செய்கை திரண்டென செங்கை சேரக்‌
காரிய வுலகும்‌ அண்டும்‌ காரண மாயை நின்றார்க்‌
காரியன்‌ வரத்தினாலே அவுணர்கோன்‌ நின்றானம்மா. 139
[139. காரிய உலகு - காரியமாகிய உலகம்‌, காரியன்‌ - மூலச்செயலான
பிரமன்‌, அவுணர்‌ கோன்‌ - அசுரர்‌ மன்னன்‌.]

நின்றவர்‌ கண்டநாத நெருப்பெழச்‌ சினமீக்‌ கொண்டு
தன்திருத்‌ தாள்பெயர்த்துச்‌ சகமெலாம்‌ நடுங்க ஆர்த்துச்‌
சென்றவன்‌ மார்பினூடு செங்கையா லோங்கிக்‌ குத்த
வன்றவ னாயுள்‌ மாண்ட தாகமும்‌ துகளாயிற்றல்‌. 140
[140. சகமெலாம்‌ - உலகம்‌ யாவையும்‌, ஆர்த்து - ஆர்ப்பரித்து,
சென்றவன்‌ மார்பினூடு - அசுரனிடத்துச்‌ சென்று அவனது மார்பின்‌
நடுவே, ஆயுள்‌ மாண்டது – அசுரனின் ஆயுட்காலம்‌ அழிந்துபோயிற்று,
ஆகம்‌ - அவனுடைய உடல்‌, துகளாயிற்று - தூள்தூளாகப்‌ பொடிந்து
போயிற்று]

முரணுடை யவுணன்‌ மார்பின்‌ முனிந்தவன்‌ தாக்குங்‌ குத்தால்‌
இரணிய புரத்தோராதி யிமையவர்‌ பகைமை யெல்லாம்‌
தரணியிற்‌ றழங்கு மாயத்‌ தன்கணை மாண்டதேபோல்‌
அரணிட மின்றி மாய்ந்தார்‌ அமரர்‌ கண்டணைந்து ஆர்த்தார்‌. 141
[141. முரணுடைய - மாறுபாடுடைய அசுரன்‌, இரணியபுரம்‌ - தேவவுலகம்
பொன்னுலகம்‌; அரணிடமின்றி - பாதுகாத்துக்கொள்ளும்‌ இடமில்லாமல்‌]

அரும்பொறை யிறைக்கி யென்ன அருந்திறல்‌ பயிரவர்க்‌ காம்‌
இரும்பெருங்‌ கலக்கம்‌ நீங்கிப்‌ புனலெல்லாம்‌ தெளிந்து செல்லக்‌
கரும்புமாங்‌ கழீயப்‌ பொன்போல்‌ கனவலம்‌ சுழிப்பக்‌ காலும்‌
வரும்புதுத்‌ தென்றலாக வானெலாங்‌ களங்கம்‌ நீங்க. 142
[142 அரும்பொறை - தேவர்கட்குண்டாகிய அரிய பெரிய பாரத்தை,
அருந்திறல்‌ - சிறந்த வலிமை, காலும்‌ - காற்றும்]

அந்தணர்‌ வேள்வி மல்க வானுடன்‌ஆன்‌ சுரப்ப
தந்தநற்‌ குடிக ளோங்க நாடெலாம்‌ தழைப்ப தேவர்‌
சிந்தனை களித்து நிற்ப திசைமுகன்‌ நெடுமால்‌ போற்ற
வந்தன னய்யன்‌ ஐய்யா றுடையவன்‌ மகிழ்ந்தான்‌ மாதோ. 143.
[143. வேள்வி - யாகங்கள்‌, ஆன்‌ - பசுவினம்‌, தந்த - அருளிய,
திசைமுகன்‌ - நான்முகனாகிய பிரமன்‌, நெடுமால்‌ - திருமால்‌,
வந்தனன்‌ ஐயன்‌ - பைரவமூர்த்தி வந்தார்‌.]

இருமருங்‌ கிரு மாணிக்கச்‌ சுடரெனக்‌ குமரர்‌ எய்த
ஒருபுற னறை பழுத்த சோலையாயுமையாள்‌ மேவத்‌
திருவளர்‌ பவளக்‌ குன்றம்‌ திரந்து வெள்விடையில்‌ வந்தான்‌
கருவளர்‌ நந்தி கேசன்‌ துதிக்க வந்‌ தருளினனே. 144.
[144. குமரர்‌ - விதாயகர்‌, முருகன்‌ இருபுதல்வர்‌, நறை - தேன்‌,
வெள்விடை - வென்மையான இடபம்]

தற்பர சயசய முக்கண சயசய தத்துவ சயசய முத்தி தருஞ்‌
சிற்பர சயசய நித்திய சயசய தக்கண சயசய சித்தி தருஞ்‌
சுற்பர சயசய கனகசபை யாடும்‌ சுத்திய சயசய வென்‌
றற்புத னிணையடி பற்பல துதியுட னத்திற னமரர்‌ துதித்தனரால்‌. 145
[145. நித்திய - என்றும்‌ உள்ளவனே, சுத்திய - தூய உள்ளத்தில்‌
இருப்பவனே, துதியுடன்‌ - போற்றுதலாகிய துதியுடன்‌,]

சரணம்‌ பசுபதி சரணம்‌ சரணம்‌ சத்தளவிழியாளமர்‌
சரணம்‌ புனைதரு சரணம்‌ புயவியன்‌ சரணஞ்‌ சரவணபவ
சரணம்‌ பாசுபத சரணஞ்‌ சிவசிவ சரணம்‌ சரண்‌ என்றே
சரணங்களில்‌ மறையந்தணர்‌ பலசார்‌ முறையார்‌ சரணென்றார்‌. 146
[146. புனைதரு - கற்பகதரு, சரவணபவ - முருகனது தந்தையே,
பாசுபத - பாசுபதமெனும்‌ வலிய ஆயுதத்தை உடையவனே,
பலசரர்‌ முறையார்‌ - வேத நெறிக்குறிய பல வழிமுறையினர்‌. ]

விசை னூழ்‌ வினையை வேதாவரத்தினை வியக்கோ வென்றீங்கு
இசைவினை வியக்கோ வென வியந்தன னின்றாள்‌ காறும்‌
வசையநின் றவனவத்தைக்‌ கால வயிரவன்‌ தனை நின்னன்பாம்‌
இசைவினை வியக்கோ வென்றென்‌ றிரந்தான்‌ வியந்து நின்றான்‌. 147
[147. விசையன்‌ - சருவ விசையன்‌, ஊழ்‌ - முற்பிறப்பால்‌ வரும்‌ வினை,
வேதா - பிரமன்‌, வியக்கோ - நினைந்து ஆச்சரியம்‌ பெறுவதா?
இசைவினை – உத்தரவினை]

அரும்பெறற்‌ புதல்வர்‌ செய்த வறனல்‌ லானிற்‌ பெற்றோர்‌
திரும்பு இன்னறத்தி னிற்பச்‌ செலுத்துதல்‌ முறையே யன்றோ
விரும்பரிவினா லிமையோர்‌ துன்ப நீ விடுத்தா யென்று
பெரும்பெயர்‌ பிரமன்‌ மாயன்‌ இருவரும்‌ பேசி நின்றார்‌. 148
[148. அரும்‌ பெறல்‌ - அருமையாகப்‌ பெற்ற, அறனல்லானில்‌ - நற்செயல்‌
இல்லாத பிள்ளையிடத்து, விரும்பரிவினால்‌ - விரும்பத்தக்க அன்பினால்‌,
பெரும்‌ பெயர்‌ - அளவிடற்கரியபெயர்கள்‌, பிரமன்‌ மாயன்‌ - பிரமனும்‌
திருமாலும்‌.]

பவம்‌பகை கலிவிலங்கு பறவை நோய்‌பயந் தடைந்தோ
ரவம்புகா தளிக்கு மையாறென வடைந்திடு மென்பதீரார்க்‌
கவம்பிற ழமையங்‌ கானங்‌ கள்ளாதி முதற்‌ பயந்தார்‌
சிவம்பெற நினையார்‌ தம்பொருள்‌ நயப்பில்‌ சேரா. 149
[149. கலி - வறுமை, கள்ளாதி - களவு செய்வார்‌ முதலான,
நயப்பில்‌ - அனுபவிப்பதில்‌.]

பெருந்திரு வையாறுற்றோர்‌ பிரணதார்த்‌ திகர னென்னும்‌
அருந்‌திருப்‌ பேரில்‌நம்மை யழைத்தவர்‌ சிந்தை செய்தோர்‌
வருந்திய பயங்கள்‌ நீங்கி மாறிலா வின்பந்‌ துய்ப்பார்‌
இருந்தவர்‌ பாக்கியத்தை யாவரே வகுக்க வல்லார்‌. 150
[150. சிந்தை செய்தோர்‌ - மனத்தால்‌ நினைத்தார்‌, மாறிலா - மாற்றமில்லாத,
பாக்கியத்தை - செல்வ வளத்தை]

மாறிலாப்‌ பிறப்புள்‌ மக்கள்‌ பிறவியின்‌ மகத்தாதல்‌
ஈறிலா துலர்த்திலாத லெந்தனா ளெனுமோர்நாள்‌
தேறிலாக்‌ காவிரிக்குள்‌ திருவையா றணைந்து மூழ்கும்‌
பேரிலார்க்‌ கில்லை கண்டீர்‌ பிறவிநோ யறுக்குமாறே. 151
[151. மாறிலா - மாற்லமில்லாத, மகத்தால்‌ - சிறப்பினாலாவது, ஈறிலா -
முடிவில்லாத, உலர்த்திலாதல்‌ - வறிதாக வாழ்தலினாவது, அனைந்து - சென்றடைந்து.]

சோந்தவ ரின்னல்‌ தீர்க்குந்‌ திருவையா றீங்குசேர்ந்து
போந்தனீர்‌, பகையா லெய்தும்‌ பெரும்‌ பயம்‌ விசையன்‌ றானு
மாய்ந்தன னாதலாலே யுமது வாழ்‌ பதியிலின்றே
போந்தனி ராகச்‌ செல்வம்‌ போற்றியே புரத்தி ரென்றான்‌. 152
[152. சோந்தவர்‌ - வாழ்வில்‌ சோர்வடைந்தவர்‌, இன்னல்‌ - துன்பம்‌,
போந்தனிர்‌ - திருவையாற்றுப்‌ பதியில்‌ வந்தடைவிராயின்‌, புரத்தி -
காப்பாற்றியவராவீர்‌.]

தானவர்‌ முதலோர்‌ செய்யுந்‌ தறுகணாரழல்‌ விடத்து
கானகர்‌ உடமை யாதென்‌ றென்னுதிர்‌ அயர்த்திடாதீர்‌
வானவர்‌ போதீ ரென்றும்‌ மறைந்தவ னுறையும்பூதத்‌
தானைய னென்‌ றாத வூரில்‌ எய்தினர்‌ மகிழ்ச்சியோடும்‌. 153
[153. தானவர்‌ - அசுரர்‌, அயர்ந்திடாதீர்‌ - தளர்ச்சியடையாதீர்கள்‌,
வானவர்‌ - தேவர்கள்‌]

போற்றரும்‌ பொருள்க ளீட்டிப்‌ புரந்தரன்‌ திருவையாற்றில்‌
ஆற்றலில்‌ வாழ்ந்தா னென்றால்‌ அஞ்சலென்‌ றளித்த திவ்வாறு,
ஏற்றதே வலளளித்தங்‌ கிருச்சிர மீசர்‌ சூழ்தல்
சாற்றுமிச்‌ சிவயோகத்தின்‌ தன்மையைப்‌ புகலுகிற்பாம்‌. 154
[154. போற்றரும்‌ - போற்றுதற்கு அரியதாகிய, ஈட்டி - சேர்த்து,
புரந்தரன்‌ - இந்திரன்‌, ஆற்றலில்‌ - வலிமையுடன்‌, புகலுகிற்பாம்‌ -
மேல்‌ சொல்லுதற்காகும்‌.]
[சருவ விசைய னத்தியாயம்‌ முற்றும்‌.]
---------------

17. தேவலனத்தியாயம்‌.

காவல்‌ விரிகுழல்‌ கனியல்‌ மொழியுடை நீ கேள்‌
ஏவல்‌ விழியினையுடை யியல்லுள்மயிலாய்‌ கேள்‌
தேவலென வொருதிரு முனிவனெண்‌ நொடியிற்‌
பூவலம்‌ வரவலன்செய்‌ வியல்பது புகல்வாம்‌. 1
[1. காவல்விரி - சோலை போன்று செறிந்து விரிந்த, குழல்‌ -
கூந்தலையுடை யவளே! ஏவல்‌ விழி - விழியசைவாலேயே பிறரை
ஏவல்‌ கொள்ளும்‌, தேவல் - தேவரைப்‌ போன்று வல்லமை பெற்ற,
பூவலம்‌ - பூமியை வலமாக. ]

அதிதிகள்‌ பூசனை அனுதினமுடையான்‌
கதிதரு வேள்விக்‌ கடனென முயல்வான்‌
மதியணி வேணியன்‌ மலரடி மறவான்‌
நிதிதிரு நீறென நினைவொடு வருவான்‌. 2
[2. அதிதிகள்‌ - புதிய விருந்தினர்கள்‌, பூசனை - வழிபடும்‌ செயல்‌,
வேணியன் - சடையினையுடைய சிவன்‌, நிதி - தனது பெருஞ்செல்வம்‌,
நீறு - திருநீறு.]

நயநீல மறையவ னண்புறு மனையிற்‌
சயகீட வியனெனுந்‌ தவசிவ யோகிய
நீடிய முனியின்‌ பொடு நினைவொடு வரலும்‌
நாடிய பயனீதென வந்தடியிணை பணியா. 3
[3. நயநீல அந்தணனது மனையிடத்து - சயகீவிய முனிவன்‌ வந்தருளினா
னென்பதாம்‌.]

ஆதன முய வருமன்பொடு மகிழப்‌
பாதனம்‌ விளக்கி யருச்சனைப்‌ பண்ணா
நீதமியற்‌ குளமுவப்ப நேய முளாயேல்‌
ஓதன மற்றிவை யுண்டகல்க வென்றான்‌. 4
[4. ஆதனம்‌ - ஆசனம்‌, பாததனம்‌ - பாதங்களாகிய செல்வம்‌, தமியற்கு –
தமியற்கு; உளம்‌ ஒப்ப - அடியேனுக்கு உள்ளம்‌ மகிழ.]

நன்றென வன்னம்‌ பாலுண்ணப்‌ பரிந்து
பின்றைய நாளுமவன்‌ பெரியோ ரிடத்து
நன்றின்று நமதில்லி னருந்திடி லெம்பேர்‌
ஒன்றுக வென்றலு மொள்ளிய தென்றான்‌. 5
[5. பரிந்து - பற்றுடன்‌ விரும்பி, பின்றைய நாளும்‌ - மறுநாளும்‌,
ஒள்ளியது - மேன்மையுடையது.]

மற்றைய பகல்‌ மாதவ னுண்கென்‌
றுற்றவ னில்லிடை யுண்ணலு முன்னான்‌
நிற்றலும்‌ நெஞ்சி நிறைந்துணவு நீங்காப்‌
பிற்றைய நாளுமவ்வாறு பெயர்ந்தான்‌. 6
[6. முன்னால்‌ நிற்றலிம்‌ - முன்வந்து நிற்றலும்‌. பிற்றைய - அடுத்துத்‌
தொடர்ந்த.]

உச்சிய நாடொரு முவந்துமே னிற்பமே
யச்சிவயோகியு மேவிமுன்‌ னின்றான்‌.
கச்ச தினித்ததெனா ஸனுரைக்‌ காட்டான்‌
விச்சை கொலென்றனன்‌ வேதிய னோர்நாள்‌. 7
[7. உச்சிய - உச்சிக்காலத்தில்‌, உவந்து மேல்‌ - மகிழ்ந்து உயர்ந்து,
இனித்தது கச்சது எனான்‌ - இனிமையான உணவு திகட்டி விட்டது
என்று சொல்லான்‌, விச்சை - வித்தை.]

நினைத்திடில்‌ வந்துமுனிற்பவ னென்றால்‌
அனைத்தும்‌ படுப்பனென அங்கிருத்து போய்க்‌
கனைத்திரைவார்‌ கடலில்‌ கரைநண்ணி மனத்தில்‌
நினைத்தலும்‌ வந்து முன்‌ நின்றான்‌. 8
[8. படுப்பன்‌ - பெறச்‌ செய்வேன்‌, கனைத்திரை - ஒலிக்கும்‌ அலைகள்‌,
கரை நண்ணி – கரையிடத்தையடைந்து].

வாருதியின்‌ கரை நின்று மறைந்தாங்‌
கூருற வெய்துமுன்‌ யோகிப்பு முற்றான்‌
மேருவி னுற்றனனங்கு முன்‌ மேவப்‌
பாருலகிற்‌ றிசை மீது படர்ந்தான்‌. 9
[9. வாருதி - பெருங்கடல்‌, யோகிப்பு - யோக நிலை, திசை மீது - எல்லா திசைகளிலும்‌.]

போக வெடுத்‌ தெதிர்‌ பொள்ளென
வேகம்‌ பதத்துற மேவினன்‌ மேலோன்‌
மாகதிர்‌ வெய்யவன்‌ மலர வந்தான்‌
யோகமுனித்‌ தவனுற்றன னாங்கும்‌. 10
[10. பொள்ளென - விரைவாக, வெய்யவன்‌ - சூரியன்‌, யோக முனி -
யோகத்திற்‌ சிறந்த முனிவன்‌.]

சந்திர னாதியா தாரகை யூர்வாய்‌
வந்திட வந்தனள்‌ கற்பின்‌ வாழ்விற்‌
சிந்தையி னெய்தியதெனு வடத்தோ
டிந்திர னூர்புக வெய்தினன்‌ முன்னோன்‌. 11
[11. தாரகை - தாரகை என்பாள்‌, ஊர்புக - ஊரினுள்‌ புகுந்து, எய்தினன்‌ -
அடைந்தான்‌.]

சித்தர்‌ கிம்புருடர்‌ தேவர்‌ செய்யெனச்‌ சிறந்து நின்ற
மெத்தவசயதீடன்‌ சூழ்‌ வித்தகந்‌ தெரிந்து வேறா
யெத்தகு கருமஞ்‌ செய்தோமென முனிநிற்ப மீதா
யுத்தமன்‌ படரக்‌ கண்டானுருவு மிணங்கக்‌ காணான்‌. 12
[12. கிம்புருடர்‌ - தேவகான முனிவர்‌, வித்தகம்‌ - திறச்செயல்‌, படர -
தொடர்ந்து செல்ல.]

வழுத்தியங்கறிவன்‌ பின்போய்‌ வயப்படா திறங்கி நின்ற
முழுத்தவச்‌ சித்தர்‌ தம்பாற்‌ தேவர்‌ முனிவனேய
குழுத்‌ தொழப்‌ போகும்‌ போதி குறுகியெவ்வளவில்‌ மூளும்‌
பழுத்திடும்‌ யோக மேற்றாற்‌ பலித்தது பகரும்‌ என்றான்‌. 13
[13. வயப்படா - அவர்கள்‌ விருப்பத்திற்குட்படாமல்‌, பழுத்திடும்‌ -
நிறைவு பெற்ற திண்மை பெறும்‌, பகரும்‌ - கூறும்‌.]

அயனரி சிவலோகத்‌ தளவாய்‌ மீள்வ னின்னோன்‌
செயலுரு கருமயோகச்‌ சிறப்பினாற்‌ றுறக்கம்‌ மட்டு
முயலவை நாவுண்‌ மருப்பின்‌ முடிவுறாச்‌ சிவயோகத்தைப்‌
பயன்‌உயர்‌ திருவையாற்றி லியற்றலால்‌ பலித்ததம்மா. 14
[14. அயன்‌ அரி - பிரமன்‌ திருமால்‌, சிவலோகம்‌ - திருக்கயிலாயம்‌,
கரும யோகம்‌ - முத்தி நெறிக்கமைந்த யோகம்‌, இயற்றலால்‌ - செய்தலால்‌.]

சத்தி மன்றினுள்‌ திருவையாற்றி லுஞற்றிய யோக தேக
நித்தனே யாகியெங்கு நிகழ்வனத்‌ தலத்தி னீர்மை
யெத்தகு யோக மெனும்‌ ஞான யோகத்தி னோர்க்கு
மெத்தவர்‌ சிவ யோகத்தை இழந்திடில்‌ விளம்புகிறேன்‌. 15
[15. சத்தி - உமாதேவி, உஞற்றிய - செய்தருளிய, மெத்தவர்‌ -
மேலோர்‌ சிவயோகம்‌ - சிவபதம்‌ பெறுதற்கான யோகம்‌.]

அப்பதி யோகம்‌ வாய்க்கில்‌ அகிலமும்‌ வாகைக்‌ குள்ளாம்‌.
முப்பெருந்‌ தேவ ரேவல்‌ முயலுவர்‌ முனிவரெல்லாஞ்‌
செப்புவா ருஞற்றுந்‌ தீயுஞ்‌ சிறுபொறி திரைகளேழும்‌
அப்புறு குளப்படிப்‌ போலாகும்‌ நஞ்சமு தினாகுமுண்மை. 16
[16. அப்புறு - நீர்‌ நிறைந்த, உஞற்றும் - செயலாற்றும்‌, நஞ்சு
அமுதினாகும் - விடம்‌ அமுதாகும்‌.]

வேண்டிற்‌ புவனமெல்லாம்‌ விண்டிடு மிட்டு முன்போல்‌
ஆண்டிட வைப்ப ரன்னோ ரறிவினை யளக்‌ கொணாது
கொண்டரு நினைவிற்‌ பின்போய்க்‌ கூடவு மரிது நீயே
காண்டியிங்‌ கிவனா லென்னக்‌ கருத்ததிசயித்து மீண்டான்‌. 17
[17. புவனம்‌ - உலகங்கள்‌, விண்டிடும்‌ - விளக்கிக்கூறும்‌, அளக்கொணாது -
அளக்கமுடியாது, காண்டி - காண்பாய்‌.]

மண்ணுலகில்‌ தன்‌ மனையில்‌ வந்து புகு முன்னம்‌
விண்ணுலகத்‌ தேறு முனி மேவியுள்‌ ளிருந்தான்‌
கண்ணிணையிற்‌ கண்டு மெய்நடுங்கி யிருகையாற்‌
புண்ணிய னடித்துணைகள்‌ புல்லினன்‌ விழுந்தான்‌. 18
[18. விண்ணுலகத்தேறுமுனி - தேவருலகத்திற்குச்‌ செல்லும்‌ முனி,
கண்ணினை - இருகண்கள்‌, புல்லினன்‌ - தொட்டு வணங்கினன்‌.]

நின்‌ பெருமை சற்று நினையா திது நினைத்தேன்‌
என்பிழை பொறுத்தருள்க வென்னணையா தெய்திய
தன்போடு பொறுப்பர்‌ துணையன்னவர்க ளன்றோ
இன்ப சிவயோகமென வின்னன வியம்பும்‌. 19
[19. அணையா - வந்தடைந்தது, இன்னன - இவ்வாறாக, வியம்பும்‌ -
எடுத்துக்‌ கூறும்‌.]

குடும்பமென நின்றுட லொன்று குணமிக்கோய்‌
அடும்புலவலைத்‌ தொழிலி லாசையரு நீர்மை
இடும்பை யொரு மூவகை யெனுஞ்‌ சுறவம்தின்ப
னெடும்‌ புனலாவது சினச்சுழி நெறித்தால்‌. 20
[20. அடும்‌ - போரிடும்‌, நெடும்புனல்‌ - கடல்‌, சினச்சுழி - கோபமாகிய
நீர்ச்சுழி]

மோகமொடு சோக மலைத்தி லழுந்திப்‌
பாகமுறவோ புனையிலாது படியெனுக்‌
கேகசிவ சித்தின்‌ நல்லிடத்தோடு மியம்பிப்‌
போக பரயோக வெனு நற்கரை புகுந்தாய்‌. 21
[21. மோகம்‌ - பற்றாசை, சோகம்‌ - வருத்தம்‌, புனை - கரையேறும்‌
வகை.]

வேள்வி யினியற்றுவ விண்ணுலக மல்லால்‌
ஆழ்வதிலை யெவ்வுலகு மாதலினாலே
கேள்வியின்‌ விளங்கு நெறி கிட்டியது மேனாள்‌
ஆழ்வலியன்‌ றவமெனத்‌ தவனிசைத்தான்‌. 22
[22. வேள்வி - யாகம்‌, கேள்வி - கல்வி கேள்வி, உபதேசம்‌]

தானென்ற காதலுடலைச்‌ சடமெனாதா
யானெனு மகத்திலுறு பற்றிலேன்‌
தேனறங்காண்‌ புறனுற்றதொரு பற்று வருமற்றால்‌
ஈனமுதலற்றல தெனா தென்றா னாதலால்‌. 23
[23. தானென்ற காதல்‌ - தான்‌ என்ற அகங்காரமுடைய ஆசையால்‌,
மகம் - யாகம்‌, ஈனம்‌ - தாழ்வு]

என்றதெனும்‌ வழக்கால்‌ இருவல்‌ வினையும்‌
ஏறுங்‌ கணைக்கடலெனப்‌ பிறவிகாணு மதனாலே
மனமழிய விச்சையெனு மாசுபடர்‌ கால
முனையொளி யொளிக்குமது வுயிர்க்கே. 24
[24. வல்வினை - பற்றித்‌ தொடர்ந்த வலிய வினை, கணைக்கடல்‌ -
ஒலிக்கும்‌ கடல்‌, மாசு - குற்றம்‌.]

நெஞ்சலிழி நீலமிகு காசமது நீங்கா
கஞ்சன மருந்து சிவஞான மதனுக்குப்‌
பஞ்சநதி வாசமது பற்றிய சலாகை
தஞ்சமது கைக்குள்‌ வருமாறரிது தக்கோய்‌. 25
[25. கஞ்சன மருந்து - தங்கபற்ப மருந்தாகும்‌. வாசம்‌ - வாழ்வது,
சலாகை - இரும்புக்‌ கவசம்‌.]

பாகமிக வரம்‌ பரமர்தம்‌ காதல்‌ பார்வைக்‌
காசமிகலிற்‌ பெரிதும்‌ நீலமிரு கண்டர்க்‌
காசில்‌ கனுக்கள விலஞ்சன மிதாக
வாசன சலாகையில்‌ மருந்தலது காணோம்‌. 26
[26. பாகமிக – பக்குவபாகம் மிக, காசில்‌ - குற்றமற்ற, கணுக்களம்‌ -
நெக்கு வினோடமைந்த கழுத்து. இலஞ்சனம்‌ - பூசும்‌ மருந்துக்‌ குழம்பு.]

ஞான வொளியத்தமன மென்னு நயனத்துக்‌
கீனமிது நன்மையிது வெண்றுணர்‌ வொண்ணா
தான்‌ செயலிற்‌ பிறவியந்தக ரெனப்பா
மானவா நித்திய மென்னார்‌ வருவதெண்ணார்‌. 27
[தேவலனத்தியாயம்‌ முற்றும்‌ ]
[27. ஞானவொளி - ஞானத்தான்‌ அறியப்பெறும்‌ பேருண்மை, நயனம்‌
- கண்கள்‌, கீனம்‌ - குறைவானது, அந்தகன்‌ - குருடன்‌, நித்தியம்‌ -
அழிவில்லாதது, என்னார்‌ - என்று கூறார்‌, எண்ணார்‌ - சிந்தனை செய்யார்‌.]
----------

18. அனித்திய ரத்தியாயம்‌.

ஓருட லிருகாற்‌ பெயத்தேர்‌ முப்பகை யுறையுந்துச்சில்‌
தேரு நாயகன்‌ அடைத்த சிறுகுடிலைங்‌ கயிற்றி
லூர்‌ பொறியருவகைத்‌ தீயுகு மாமெழு முழைக்குட்‌
சோர்‌ புகை யெண்சாண்‌ கூடென்றறி கிலார்‌ சுமந்து செல்வார்‌. 1
[1. இருகால்‌ - இருவகை மூச்சின்‌ காற்று, சந்திரகலை சூரியகலை,
முப்பகை - ஆணவம்‌, கன்மம்‌, மாயை, துச்சில்‌ - ஒட்டுயிர்‌ சிற்றில்‌,
பொறி - மெய்‌ - வாய்‌ கண்‌ மூக்கு செவி, முழை - உள்புழை, இப்பாடல்‌
மானுட சரீரவுண்மை அறிவித்ததாம்‌.]

ஒன்பது துவாரந்‌ தோறு மொழுகிமல நீரானார்‌
துன்பமென்றுணரார்‌ வீழுஞ்சுமையெனார்‌ தமது
பொன்போலின்ப முற்றிடுவர்‌ தாமாயெண்ணுவ ரெழிற்‌
பூணவேயவரன்பு கொண்டயிற்‌ சரீரத்தானு முறவந்தோ. 2
[2. பொன்போலின்பம்‌ - மிகமேலான இன்பம்‌, பூணவே - பெற்றணிதற்கு,
சரீரம்‌ - மானுடவுடல்‌,]

அய்யுழக்‌ காழாக்குப்புத்தன்‌ பாதிவீரியத்தா
னெய்யுறு மச்சை மேதி தசையிறைச்சி வெண்ணீரிரத்த
கையுறா வொன்றுக்‌ கொன்று நான்மடங்கென்பு பாதி
மெய்யினுட்‌ சுமையை வாளா சுவைப்பரே வெறுக்கிலாரே. 3
[3. மச்சை - தோல்‌, மேதி - நிணம்‌, தசை - சதை, மெய்‌ - உடல்‌,
சுமையை - உடல்பாரத்தை.]

பல்லிரண்‌ டடுத்த முப்பான்‌ மிக்கிருபஃதொன்மேல்‌
வல்லிய காண்ப காணா மயிர்கள்‌ மூன்றரையிதைச்‌
சொல்லிய கொடி நாடி தோகையுமாந்‌ தொன்னூற்றாறாய்‌
புல்லிய வீரனவுமெண்ணி முன்ன ...... ...... ……. …… 4
[4. மானுடவுடற்‌ கூறின்‌ உள்ளிணக்கத்தத்துவத்தை இப்பாடல்
வுணர்த்துகின்றது.]

மருப்பொழிற்‌ றிருவையாற்றின்‌ வந்ததற்‌ கிடையீடெண்ணார்‌
விருப்புறக்‌ களிப்பான்‌ மாந்தர்‌ துணிவையென்‌ விளம்புகேனோ
……. …….. …………… ……………… ………………………..
………….. ……………….. ……………….. ………….. ………….. 5
(இப்பாடலின்‌ மற்றைய இரண்டு அடிகள்‌ ஏட்டில்‌ சிதைந்து விட்டன)

பாம்பொடு பழகிலென்னைப்‌ பகைஞரோ யேர்விலென்னைத்‌
தேம்படு கிளவி யார்தஞ்‌ சிந்தையைத்துணிந்தா லென்னைத்‌
தாம்படு நிலவை மின்னின்‌ றன்மைய திதற்குள்‌ வாழ்கை
மேம்படு பொருளின்‌ மாந்தர்‌ வேந்தர்பின்‌ திரிவரம்மா. 6
[6. தேம்படு - தேன்பொருந்திய, கிளவி - சொல்‌, கிளவியார்‌ - இனிய
சொல்லையுடைய மகளிர்‌, மேம்படு - மேன்மை பெறும்‌,]

மணிய முத்து மாவயிற்றகம்‌ பதிந்து வாய்த்திறுகித்‌
தணிவினாடோறுங்‌ கனத்துறப்‌ பனைத்துமாய்த்‌ தாயின்‌
பிணி பசித்தழல்‌ வாதநீர்‌ பெருக்குதல்‌ முதலாக
வணியுறப்‌ புவிவிழப்படுந்‌ துன்பம்‌ முற்றி னாரரோ. 7
[7. மணிய - இரத்தினங்களும்‌, அகம்‌ - உள்ளீடாக, கனத்துற - பெருமிதமாக,
பனைத்து - கிளைத்துப்பெருகி, அணியுற - அழகு பொருந்த.]

புழுமழப்‌ பருவத்தொன்று மறிவிலாத்‌ துன்பம்‌ பின்பு
விழுபொருட்‌ டெரிகிலாதும்‌ வெட்டவை விளம்ப மாட்டா
பொழுது போது உண்பவெண்பற்‌ புதுமணற்‌ கிணறு நாணற்‌
கெழுமுளை யெழுந்தாபோலக்‌ கீறுநாட்டின்ப மன்னோ. 8
[8. மழப்பருவம்‌ - இளமைப்‌ பருவம்‌, விழுபொருள்‌ - மேலான பொருள்‌,
விளம்ப – சொல்ல]

முனைந்தனள்‌ விழுந்து மீள முளைக்கவுந்‌ துன்பமங்கு
மளைத்திடு மவுட்டியாதி சேயுரு கிரக மனேகம்‌
விளைத்திடு மாதினோவால்‌ மேகத்திடுந்‌ துன்பதாகங்‌
களைத்திடும்‌ பசியினாலும்‌ மருந்தினுங்‌ கலங்குந்துன்பம்‌. 9
[9. அளைத்திடும்‌ - நிலைகுலையச்செய்யும்‌, ஆதிநோயால்‌ -
பிறவியிலிருந்து வரும்‌ நோயினால்‌, சேய்‌ - குழந்தை.]

அன்னை வந்தாற்றுமுன்ன மலஞ்சலமரு வந்தறுப்ப
பின்னர்‌ மென்காது வாரப்‌ பெருக்கு நாட்‌ பெரிது துன்பம்‌
தன்னெழுத்‌ தறிய வைக்க தான்படு துன்பமாக
பன்னரும்‌ பிறப்‌ பிறப்பால்‌ பருவமா துன்ப மாதோ. 10
[10. அன்னை - பெற்றதாய்‌, பெருக்கு - மிகுகின்ற]

இளங்குழக்‌ கன்று பாலிக்கு மெல்லையுங்‌
குளம்புறக்‌ குதித்துடற்கு ஆற்றா லென்ன
வளங்கெழு குமரராய்‌ மறுகி நல்லறந்‌
துளங்குறச்‌ செய்துபின்‌ துன்ப முண்பரோ. 11
[11. இளங்குழக்‌ கன்று - மிக்க இளமையான சிறு பசுக்கன்று,
வளங்கெழு - வளமெனும்‌ செல்வம்‌ மிகுந்த]

அவ்வனக்‌ கள்ளினாற்‌ காமமென்ப தோர்‌
செய்வனைச்‌ செயகலா மயக்கம்‌ சேர்ந்திடு
முய்வன தெளிகிலாது ஒருவன்‌ மாதரார்‌
மெய்வனப்‌ பழுக்கறா மேவுந்‌ துன்பமே. 12
[12. கள்‌ - மயக்கந்தரும்‌ செயல்கள்‌, மாதர்‌ - மனைவியர்‌, மெய்வனப்பு -
இயற்கையான மேனி அழகு, மேவும்‌ - உண்டாகும்‌.]

செல்லுமுன்‌ காமனாற்‌ றுன்பஞ்‌ சென்றுடன்‌
புல்லினும்‌ பயிற்றினாற்‌ றுன்பம்‌ புல்லிடை
வல்லவன்‌ கண்டிடல்‌ மாயுந்‌ துன்பமே.
சொல்லிய பிறர்மனை இன்பந்‌ துன்பமே. 13
[13. காமனால்‌ - காமன்‌ தரும்‌ மோகத்தால்‌, புல்லினும்‌ - மங்கையரைக்‌
கூடின்‌, பயிற்றுதல்‌ - அவர்களோடு செயல்படுதல்‌, பிறர்மனை -
பிறனுடைய மனைவி]

ஊரவரிகழ்த லாதபழி யுறுத்‌ தலாற்‌
பேர்‌ சரிந்துயரப்‌ பேது செய்தலால்‌
சீருறத்‌ தேடிய செல்வம்‌ மாய்தலாற்‌
சோர்வுறு புணர்ச்சி மாதுன்பம்‌ துன்பமே. 14
[14. இகழ்தல்‌ - தாழ்ச்சியுறப்‌ பேசுதல்‌, - பேர்சாந்து - பெயர்கெட்டு,
பேது - நிலைதடுமாற்றம்‌, மாய்தல்‌ - அழிந்துபோதல்‌, புணர்ச்சி -
மகளிரோடு கூடுதல்‌.]

அளவுயி ருடலின்‌ வாழ்வளவுந்‌ துன்புற்‌
றிளகிய காதனாட்டுன்பம்‌ அங்கதில்‌
வளனறனல்லது துன்ப மற்றதின்‌
களவுறு பிறர்மனை காமர்‌ துன்பமே. 15
[15. அளவுயிர்‌ - அளவிட்டு இயங்கும்‌ உயிர்‌, காதல்‌ நாள்‌ துன்பம்‌ -
காதல்‌ செலுத்துகின்ற நாள்களிலும்‌ துன்பம்‌, களவுறு - பிறர்‌
அறியாமல்‌ நிகழ்த்தும்; பிறர்மனை - பிறனுடைய மனைவி.]

காசினார்‌ கடக்கை பொருளாற்றிடச்‌
சீசியென்னச்‌ சென்னாட்‌ செல்லுமாறுபோற்‌
றூசு மாசுரச்‌ சுற்றிய துன்பினால்‌
மாசை யாசை மனத்துற வைப்பரோ. 16
[16. காசினார்‌ - உலகத்தவர்‌, குற்றமனத்தினர்‌, செல்நாள்‌ - கழிந்த
வாழ்நாளில்‌, மாசை - பொன்னின்‌ மேல்‌]

சினக்குங்‌ காலையிற்‌ கண்கள்‌ சிவத்தல்‌
இனத்திலோர்‌ கொடு கூற்ற மிழைத்தல்போல்‌
மனத்த காதற்‌ மருவத்தின்‌ வைத்திடுந்‌
தனத்திலாசை தரும்பல துன்பமே. 17
[17. சினக்கும்‌ - கோபம்‌ கொள்ளும், மருவத்தில்‌ - நெஞ்சகத்தில்‌,
தனத்திலாசை - பெண்களின்‌ அழகின்‌ மேலாசை]

வாளெடுத்து மலைந்து மலைந்துவே
நாளொருத்தனுக்‌ கென்று யிரற்றியுந்‌
தாளுழப்பொடு சந்தையிற்‌ கொண்டு தாம்‌
மீளவிற்றும்‌ வீளக்குவ துன்பமே. 18
[18. மலைந்து - போரிட்டு, தாளுழப்பொடு - மிக்க பிரயயசையோடு,
மீளவிற்றும்‌ - மறுபடியும்‌ விற்பனை செய்வதும்]

உழுது வாழ்வுழைப்பது மென பசுப்‌
பழுதிலாது படைப்பதுங்‌ கல்வியாற்‌
றொழுதிடத்தகு சொல்லுபு வாதியா
முழுதும்‌ மாந்தர்‌ முயற்சிகள்‌ துன்பமே. 19
[19. உழுது வாழ்வுழைப்பது - உழுது பயிரிட்டு வாழ்வினை
உழைப்பாக்குவதும்‌, சொல்லுபு - சிறந்த அறிவியலை எடுத்துச்‌
சொல்லுவதும்‌.]

காற்றினால்‌ மழையால்‌ குளிர்‌ காலமாங்‌
கூற்றினாற்‌ பனியாற்‌ கடுங்கோடையால்‌
ஆற்றினால்‌ ஒழியா சுரத்தால்‌ வன்‌
தாற்றினால்‌ ஒழியா தரும்‌ துன்பமே. 20
[20. பனியால்‌ - பனிகாலத்தினால்‌, சுரத்தால்‌ - பாலை நிலத்தால்‌;
தாற்றினால்‌ - தேரும்‌ முயற்சியினால்‌.]

திளைத்து வாங்கி செலுத்திடும்‌ போதுதான்‌
கிளைத்திடாது மனஞ்சழித்திடுத்‌ துன்பம்‌
கிளைத்த ஞாதியெனக்கு வழக்கெனச்‌ சேர
அழைத்தபோது வரும்பல துன்பமே. 21
[21. திளைத்து - மனதில்‌ பெருமிதம்‌ கொண்டு, ஞாதி - தாயாதி,
கிளைந்த - தோன்றிய, வழக்கென - பாகபந்த வழக்கென,]

வறிய னவ்வளவாயினு மாழைமால்‌
உறுவ னவ்வள வுற்றிடின்‌ பின்னருஞ்‌
சிறிதெனச்‌ சிலர்‌ செல்வம்‌ மறுத்‌
தறிவி லுண்ணுமவ்‌ வாறுமங்கீட்டுமே. 22
[22. வறியன்‌ - செல்வமில்லாதவன்‌, மாழை - பேதமை, அறிவிலுண்ணும்‌ -
அறிவினால்‌ சிந்திப்பதும்‌].

வேந்தர்‌ செல்வம்‌ விரும்பு மிவ்வாறு
யேந்தலில்‌ சந்திரனிலவு சீராய்‌
பாந்த பங்கயன்‌ மால்‌ திருவாதியாய்‌
மாந்தரிச்சையி லமர்ந்து வரல்‌ துன்பமே. 23
[23. வேந்தர்‌ - மன்னர்கள்‌, ஏந்தலில்‌ - தாங்குதலினால்‌, பாந்த - தோற்றமான,
பங்கயன்‌ - பிரமன்‌, இச்சை - ஆசை.]

மாசில்‌ கனக மலையும்‌ அலை கடலும்‌
யோசனையிற்‌ றென்ன உரைக்கு மாதலினால்‌
பூசல்மடவார்‌ பொருட்டுப்‌ பொருளீட்டும்‌
ஆசை யொருவ ரளவுக்‌ கடங்காதே. 24
[24. மாசில்‌ - குற்றமற்ற, கனகமலையும்‌ - பொன்‌ மேரு மலையும்‌ -
அலை கடலும்‌ - அலையோடு கூடிய கடலும்‌, பூசல்‌ - மனப்போரில்‌ சிறந்த]

மாகாதலர்‌ காயம்‌ வைத்து நிறுத்தாலும்‌
ஆகாய மேலாயதன்‌ கீழ்‌ நிறையாகும்‌
போகாது காதலெனிற்‌ பொன்றாது துன்பமெனில்‌
வாகாயவின்ப வருவாயுந்‌ தோன்றாதே. 25
[25. மாகாதலர்‌ - மிகப்பெரிய காதலர்‌, காயம்‌ வைத்து - நிலையாக வைத்து,
ஆகாயம்‌ - படர்ந்த வானம்‌, பொன்றாது - நில்லாது, வாகாய - நன்னெறியாக.]

அரவுரி பெற்றோ ரிரைய முத்தாலு மாசை
யிரவு பகலினிளமை வளந்தேறு மூரல்வலியி
னுரக்க முடையரேனுங்‌ பெருக்கமுறு
குரவு கமழும்‌ குழலாரிற்‌ கூத்தாட்டும்‌. 26
[26. அரவுரி - மெல்லிய ஆடை, மூரல்வலி - சிரிப்பின்‌ வலிமை. குரவு –
குரவடீலர்‌, குழலார்‌ - கூந்தலழகியரான மகளிர்‌.]

ஆசையெனு மாதினடிமைப்‌ பருவமெல்லாம்‌
பேசரிய துன்பம்‌ பெறுவர்‌ பிறந்தொரு காற்‌
றாசியெனப்‌ படைக்கிற் றாதலின்ப முறுந்‌
தேசறிவிலீனர்‌ சிறிது மறியாரே. 27
[27. அடிமைப்பருவம்‌ - வாலிபப்பருவம்‌, பேசரிய - பேசுவதற்கு அருமையான,
தேசறிவு இல்‌ - தெளிந்த அறிவு இல்லாதவராகிய, ஈனர்‌ - அற்பர்‌.]

செல்வ நிலையாமைச் சிந்தியார்‌ பேராசை
யல்லலெனார்‌ இன்ப மறியார்கள்‌ வாழு
மெல்லையில்‌ வீட்டிலென்னா ரருந்துங்காற்‌
கொல்லு மிகினுங்‌ குறைந்தாலு மாரமுதே. 28
[28. நிலையாமை - நிலைத்து இல்லாத இயல்பு, அல்லலெனார்‌ - துன்பமென்று
நினையார்‌, வாழுமெல்லையில்‌ - வாழும்‌ நாட்களில்‌, வீடு - மோட்சம்‌,
கொல்லு - நச்சு.]

விடியல்‌ மலநீர்‌ விடுமாறு துன்பம்‌
கடிய பசித்தீக்‌ கடும்பகலிற்‌ றுன்பம்‌
மடிவி லிருள்‌ மாலை மதனத்தாற்‌ றுன்பம்‌
ஒடிவி லரைநாளுரக்கமுந்‌ துன்பாகுமே. 29
[29. விடியல்‌ - காலைப்பொழுதில்‌, மதனத்தால்‌ - காமவிச்சையால்‌,
ஒடிவில்‌ - குறைவில்லாத,]

மனையிறந்‌ திருந்த வைத்த மனத்தினால்‌ மாலை சூட்டிப்‌
புனைமணம்‌ புரிந்தமங்கை புந்திவேறாதல்‌ துன்பம்‌
நினைவொரு மிக்கென மக்களின்மை யினிறந்த துன்பம்‌
வினைவழி யியல்பின்‌ மற்றோர்‌ மெல்லியல்‌ மணத்தல்‌ துன்பம்‌. 30
[30. மனையிறந்திருந்த - இல்லத்தினின்றும்‌ நீங்கியிருந்த, புந்தி - புத்தி,
நினைவு வொரு மிக்கென - சிந்தனை ஒன்றுபட்டதாக, மக்களின்மை -
பிள்ளைகள்‌ பெறாதிருத்‌தல்‌, மெல்லியல்‌ - பெண்ணை]

அன்னவர்க்‌ காயும்‌ வெம்போர்க்‌ கிடைப்பட வரிய துன்பம்‌
பின்னவர்‌ கருப்பந்‌ தாங்கிற்‌ கண்டலார்‌ பெரிது துன்பம்‌
மின்னவா னிலத்தி லீனுங்‌ காலை கண்டிறங்குந்‌ துன்பம்‌
சொன்னவர்‌ நோவிற்‌ சாவிற்‌ றுடைக்கருந்‌ துன்ப மாதோ. 31
[31. அன்னவர்‌ - இருமனைவியர்‌, காயும்‌ - சினங்கொண்டு தொடங்கும்‌,
இடைப்பட - கணவன்‌ இடைப்பட்டு நிற்க, கண்டலார்‌ - மூத்தமனைவி.]

வளர்த்த சேய்‌ தன்சொற்கேளா மறத்தினாற்‌ றுன்பந்‌ தாமும்‌
தளர்ந்து மண்‌மனை பொன்மாடு தாங்குவாரின்மை - துன்பம்‌
கிளர்ந்த பல்வளமொவ்‌ வொன்றாக கேட்டருங்‌ கூத்துப்‌ போந்த
களந்தக மிடிவந்தெய்தக்‌ கண்களிந்‌ திரத்தல்‌ துன்பம்‌. 32
[32. சேய்‌ - குழந்தை, மறத்தினால்‌ - மாற்றத்திண்மையால்‌, கூத்துக்களம்‌ -
கூத்தரங்கும்‌, மிடி - வறுமைத்‌ துன்பம்‌]

இரத்தலு நிரந்தோர்க்‌ கில்லையென்பது துன்பம்‌ மக்கள்‌
இரத்தலிற்‌ குடும்பந்‌ தாங்கி நிற்றலுந்‌ துன்பம்மாண்பே
ரறத்தொடு புணர்த்தல்‌ துன்பஞ்‌ சாதல்‌ கண்டால்‌ துன்பம்‌
வரத்தகுமுயிர்‌ போமட்டும்‌ துன்பமே மாந்தர்க்‌ கெல்லாம்‌. 33
[33. இரத்தல்‌ - பிச்சை யெடுத்தல்‌, மாண்பு: உயர்‌ சிறப்பு, அறத்தொடு -
அறநெறியோடு, புணர்த்தல்‌ - இவற்றிற்கு மாறுபட்டவைகளோடு
ஒப்பிட்டுக்‌ கூறுதல்‌.]

இத்திறத்‌ துன்பம்‌ யாக்கை மிருக்கு நாட்‌ சிறிதேயஃது
மெய்த்துயிர்‌ பாதிபோக விஞ்சிய கால மற்பந்‌
துய்த்திடல்‌ மோக சோகம்‌ பிணியொடு தொலைந்து போதும்‌
புத்திளம்‌ பருவமூப்பிற்‌ போனது முன்னும்‌ பின்னும்‌. 34
[34. யாக்கை - மனிதவுடல்‌, அற்பம்‌ - சிறிது காலமேயாகும்‌, சோகம்‌ -
வருத்தம்‌, மூப்பு - வயோதிகம்‌.]

விளக்கு நெய்யற லற்றாங்கு இணைய வாழுநாளச்சந்‌
துளக்கது நிலைமையென்று துணியினுங்‌ கதியொன்றில்லை
கொளத்தகா நிலைமைத்தென்று கூறினுங்‌ குற்றந்‌ தீரு
மளக்கரும்‌ பிறப்பினில்‌ அழிந்தினோர்‌ அறியாரந்தோ! 35
[35. நெய்யற - நெய்வற்றிப்‌ போக, துளக்கது - தெளிவானது,
அளக்கரும்‌ - அளவிடற்கு இயலாத,]

சோபமே யறக்கே டல்லற்‌ குடும்பநோய்‌ கொடுக்குங்‌ காமம்‌
பாபமேற்‌ பிறப்புப்‌ பயிற்றும்‌ மெய்யுறச்சீர்‌ கல்வி
ஆலமே லழுக்காறென்றா யருமிடி நாக துன்ப
மீலதே யென்றி மூன்றும்‌ விடுதலே யார்க்கு மின்பம்‌. 36
[36. சோபமே - வருத்தமே, பயிற்றும்‌ - உண்டுபண்ணும்‌, ஆலமேல்‌ -
விடமானால்‌, மிடி - மிகுதுன்பம்‌,]

பிறவியி னாலல்லா தவைத்‌ துன்பமே பெறுவ தாக்குந்‌
துறவியின்‌ ஞானத்‌ துன்பந்‌ துய்த்திடும்‌ தாக்கு மேது
மறலியி னாமனாமே யன்றல்‌ வழிசெலுமனத்தை மீண்டு
நறலிரி பொழிலையாற்றிற்‌ செலுத்திடார்‌ ஞானமில்லார்‌. 37
[37. நாமம்‌ - பெயர்‌, நறல்‌இரி - இடர்பாடுகள்‌ நீங்கும்‌,
செலுத்திடார்‌ - திட்டமான அறிவினைப்‌ பயன்படுத்தார்‌.]

அந்தணர்‌ குலத்தொழுக்கத்‌ துயர்த்தலார்‌ மீறுந்தம்‌
புந்தியைத்‌ திருவையாற்றிற்‌ செலுத்திட்டார்‌ புலையார்க்கு
நிந்தனை புலையரேனும்‌ பஞ்சனதேசஞ்‌ சேரும்‌ - சிந்தைவைத்‌
தடைந்தாரன்றோ யாந்தொழுந்தேவ ராவார்‌. 38
[38. புலையார்க்கு - தாழ்ந்த வாழ்வினர்க்கு, பஞ்சநதேசம்‌ -
திருவையாறு, சிந்தை - மனம்‌,]

தேவருந்‌ திருவை யாற்றிற்‌ சேர்தலால்‌ தாமு மொப்பான்‌
தேவரே யுரைப்ப ரெண்ணா துரைத்தனன்‌ யானுந்‌
தேவரோ அரும்‌ விழியால்‌ மண்ணிலுதித்த லெண்ணிரையம்புக்கு
மேவரு மின்பந்‌ துன்பா லிழைச்ச ராதலாலே. 39
[39. எண்ணாது - நினையாது, இழைச்சர்‌ - செய்தவர்‌, மேவரும்‌ -
சிறப்பாகப்‌ பொருந்தும்‌.]

தென்றிருவை யாறெய்திச்‌ சேவியாதவரைக்‌ கண்டால்‌
பன்னி நாயக சேரிக்கு நீசர்பதி தாலெந்தேற
லுண்போ ரென்றவர்முக நோக்கற்‌ கிகழ்ந்தவருடன்‌ பெயர்க
நன்றென வவரை நட்டோ ரல்லரோ நரகராவார்‌. 40
[40. தாலந்தேறல்‌ - பனைக்கள்‌, நட்டோர்‌ - நட்பினர்‌, நரகராவர்‌ -
நரகமடைபவராவர்‌,]

பயத்தினா லடுத்த நட்பாற்‌ பண்பினால்‌ மாதராசை
நயப்பினால்‌ நவிலாதெல்லாற்றி னானண்ணி னாலும்‌
புயத்தினா னுணர்வோன்‌ பஞ்ச நதிப்புகுந்தி றைஞ்சினாற்‌ காணில்‌
வயத்தினால்‌ வலம்வந்தெய்திற்‌ சிவகதி வாய்க்கு மன்னோ. 41
[41. நண்ணினாலும்‌ - சேர்ந்து அனுபவித்தாலும்‌, வயத்தினால்‌ - நற்பயனாய்‌.]

உடலின்‌ மிக்கதொன்றிலை, வாய்மையின்‌ மிக்க
இடமறிந்த தலம்‌ வேறிலை, முத்தியின்‌ மிக்க
கெடலருந்‌ திருவில்லை, நற்கேள்வியின்‌ மிக்க
நடலையற்றதோர்‌ நன்னிதிச்‌ செல்வமில்லை. 42
[42. திரு - அழியாத செல்வம்‌, நடலை - வருந்துன்பம்‌, நன்னிதி - சிறந்த
செல்வம்‌, வாய்மை - உண்மை, தலம்‌ - திருவையாறாகியதலம்‌.]

ஒழுக்கின்‌ மிக்க நல்லறனிலையும்‌ நல்வழிக்கா
மழுக்கறுத் திடலால்‌ தீதின்றி நற்றுணையின்‌
இழுக்கும்‌ இன்றிலனே லரியினாவினா லூற்றா
னழுக்கு வந்திடலென்றியல்லா லிலையிவைபோல். 43
[43. ஒழுக்கின்‌ - வாழ்வியல்‌ ஒழுகலாற்றின்‌, இழுக்கு - தாழ்ச்சி,
அழுக்கு - மனத்தினிடத்தாம்‌ பொய்மை.]

தலங்கொள்‌ பஞ்சநதித்‌ தலத்து
இலங்கொப்புமிக்குள பிரணதார்த்திகரனை
மலர்‌ தவிர்த்திடு கடவுளு மில்லை
தலத்துறை யோர்கள்போற்‌ புனிதருமில்லையால்‌. 44
[44. இலங்கு ஒப்பு - விளங்குகின்ற ஒப்புமை, மிக்குள - மற்றைய
மூர்த்தங்களினும்‌ மிகுதியாக உள்ளன, மலர்தவிர்த்திடு - மலர்‌ தூவிவழிபடு்‌
தலினின்றும்‌ தவிர்த்திடுதற்கு, புனிதர்‌ - தூயமனத்தினர்‌.]

திருவற்றுடல்‌ கிடக்க வுயிர்‌ சென்று
செரியா நாநெருப்புந்திலந்து விழுமி
னொரு பத்தியோடு நாதனுரை பஞ்சநதியா
லருதற்‌ கொருமியாத மனமென்ன மனமே. 45
[45. செரியா - பக்குவமடையாத, கொருமியாத - ஒருமனப்படாத,
நாதன்‌ - தலைவன்‌.]

தாயார்‌ நற்சேய்‌ தாங்கச்‌ சமன்றூ
தேயாயெனச்‌ சொல்லெழா லிருக்குமுன்‌
நேயரா மைய்யாற னென்றெ லாம்‌
வாயார வாழ்த்தாதார்க்‌ கென்ன வர்க்கே. 46
[46. நற்சேய்‌ - நல்லபிள்ளை, சமன்‌ - சமனான மனம்‌ நேயராம்‌ -
நட்பினராம்‌]

நெருக்காலை யுடலாவி நெரிகின்ற கழையென்ற
தருக்கால னாலிடு தூதரொலியேறு முன்ன
மருக்காலி மதி வீசுவயற்‌ பஞ்ச நதியின்‌
திருக்காதை கேளாத செவியென்ன செவியே. 47
[47. நெருக்காலை - கரும்பை நெறித்துச்‌ சாறெடுக்கும்‌ யந்திர சாலை,
மருக்காலில்‌ - மணம்பொருந்திய கரற்றில்‌, திருக்காதை - மேலான வரலாறு]

ஞாலமெலாம்‌ பங்கிடலாகு ஞாதியர்‌ கொண்டால்‌
மேவுலரென்ற லைந்து வருந்திச்‌ சலியாதே
சீலமெல்லாம்‌ பஞ்சநதி சேர்துமென்னக்‌
காலமோடுயிர்க்‌ காலென்னக்‌ காலே. 48
[48. ஞாலமெல்லாம்‌ - உலகமெல்லாம்‌, ஞாதியர்‌ - பங்காளிகள்‌,
சீலமெல்லாம்‌ - சிறப்பியல்புகளெல்லாம்‌].

வரு காகந்தி நதியினிரை நாளுமறவாதீர்‌
பொரு காவிரி பஞ்சநதிவந்து புகுந்தால்‌
ஒருக்காலு நயவாதவுட லென்ன வுடலே
வருபஞ்ச நதி நாதனை வணங்காத்‌ தலையென்ன தலையே. 49
[49. நயவாத - பற்றுடன்‌ பொருந்தாத, வருபஞ்சநதிநாதன்‌ - வளத்தர
வரும்‌ ஐயாற்று நாதன்‌.]

இருள்‌ நிறக்குஞ்‌ சடம்‌ வெளிதாயிரங்குங்கா
லரண்தனக்கென பஞ்சடைந்திடா முன்னம்‌
பிரணதார்த்தி பஞ்சநதி யெங்கள்‌ பெருமான்‌
கருணையைக்‌ காணாத கண்ணென்ன கண்ணே. 50
[50. இருள்‌ நிறக்கும்‌ - வாழ்வில்‌ செயலற்ற நிலை தொடரும்‌, அரண்‌ -
பாதுகாப்பிடம்‌, கருணையை - அற்பர்க்கருளும்‌ மெய்த்‌ திறனை.]

மின்னென விறக்கு முடல்‌ மெய்யென மெய்யின்‌
நன்னுறவிலிருக்கும்‌ நமனென்று பெரிதெண்ணி
நன்னினைவெடுத்து பஞ்சநதி நாதன்கோயில்‌
சன்னிதி வணங்காத தலையென்ன தலையே. 51
[51. மின்னென - மின்னலைப்போன்று, நன்னுறவிலிருக்கும்‌ - சென்றுத்‌
தொடரும்‌ செயலில்‌ இருக்கும்‌, நமன்‌ - எமன்‌, நன்னினைவு எடுத்து -
நல்ல நினைவு உண்டாகி]

சேல்‌ கொண்ட கண்ணார்‌ செய்‌ செறிந்தோர்‌
மால்‌ கொண்ட கூத்தூரி லுள்ளார்க ளென்றே
பால்‌ கண்டெனக்‌ கண்டு பஞ்சநதி நாதன்‌
கால்‌ கண்டு கூப்பாத கையென்ன கையே. 52
[52. சேல்கொண்ட - சேல்‌ மீனைப்போன்று வடிவு கொண்ட, செய்‌ -
சேற்றுப்புலத்தில்‌, மால்கொண்ட - மயக்கத்தால்‌ தெளிவு பெறாத,
கூத்தூர்‌ - காமக்கூத்து வாழ்வில்‌,]

கரந்தனிற்‌ பொருள்துஞ்சு காலையிற்‌ கழன்றாங்‌
குரந்தனிற்குவை வெறுத்த பேர்க்கு முன்னம்‌
பரந்து நித்தமும்‌ அண்ணல்‌ பஞ்சநத மென்னும்‌
புரந்தனில்‌ கழிக்காத பொழுதென்ன பொழுதே. 53
[53. கரந்தனில்‌ - கையில்‌, பொருள்துஞ்சு - செல்வம்‌ தங்கிய காலத்தில்‌,
உரந்தனிற்குவை - வன்மை நீங்குவதானமை]

நீயுமினி யத்தில்‌ நெருங்கி நின்ற பொன்னிப்‌
பாய்‌ புனல்‌ படிந்து பரமாவெழுந்து போற்றி
காசின்‌ மயக்கமொடு காதலலை மேவி
தூய செயலோடொருவர்‌ சூழவரு மிடத்தாய்‌. 54
[54. அத்தில்‌ - அத்தலத்தில்‌, பொன்னி - காவிரியாறு, பரமாவெழுந்து -
வேறு சிந்தனையில்லாமல்‌ தூய்மையான மனத்துடன்‌ எழுந்து.]

முழைவழி தோறும்‌ வழியும்‌ புனல்கள்‌ போல
பொழையுட லிற்பெறு வழிப்பெறும்‌ புலத்தில்‌
ஆழ்வது தடுக்கும்‌ வகையோர்‌ தமியனாகிக்‌
கேழ்கிளர்‌ சுவத்திக மிருந்து கிளையாதாய்‌. 55
[55. முழைவழி - தொளையின்‌ வழியே, புனல்கள்‌ - நெகிழவிடும்‌
நீரணைவன, ஆழ்வது - அழுந்திக்கிடப்பது, சுவத்திகம்‌ - மங்கலமான
இருப்பு நிலை, (ஆசனம்‌) ]

வானவர்‌ வலியுளது வஞ்ச மனமவ்வா
றான தொருமிக்கும்‌ வகையம்புவி முனைந்துந்‌
தான மருமாத்திரைக்‌ கண்வாயி லொடுக்கித்த
மான முதல்‌ முத்தேவையு மாயையுட னென்றே. 56
[56. வானவர்‌ - தேவர்‌, வலியுளது - வலிமை உள்ளது, அம்புவி - அழகிய
தோற்றமுள்ள உலகம்‌,

ஒவ்வொரு பொருட்பெருமை யுண்மையி னடும்போர்‌
தவ்விய மறுத்தோர்‌ அருமையாகு மையத்திற்‌
செவ்விய மனக்கமலனுளாய்‌ திருவையாற்றுத்‌
தெய்வமில்‌ பராபரனை யெண்ணியிரு காண்பாய்‌. 57
[57. அடும்போர்‌ - தத்தமது வெற்றிக்காகும்‌ போர்; செவ்விய - தகுதி
பெற்ற, மனக்கமலன்‌ - மனமாகிய தாமரைமலரில்‌, பராபரன்‌ தெய்வங்கட்‌ கெல்லாம்‌ மேலான பரம்‌ பொருள்‌,]

எம்‌ பிரணதார்த்திகரனைத்‌ தனியிருந்தே
அம்பையுட னெண்ணில்‌ திருவையாறடிபடியார்‌
தம்‌ பவனாகும்‌ நினைவாதி தவறாததாய்‌
பம்பினிறைவா யொருவனானபடி யானவன்‌. 58
58. அம்பையுடன்‌ - உமாதேவியுடன்‌, தம்பவனாகும்‌ - தமது பாபச்‌
செயலாகும்‌, பம்பின்‌ - உரத்த குரலில்‌,]

ஞான பரிபூரணனை நாடியவானா னென்
றான தொழு தன்னிய மனைத்து மிலையாகு
மீனமிகு தாகமிலை யானென தெனும்‌ பேர்‌
போன கருமறினோடு பொன்று முறிதன்னால்‌. 59
[59. அன்னியம்‌ - தன்னைப்‌ பற்றிய தீவினைகள்‌. இலையாகும்‌ -
இல்லை யென்றாகும்‌, ஈனமிகு - தாழ்ச்சி மிகுந்த,]

இன்ன சிவயோக மலயோக மல வீனம்‌
பன்னரிது மற்றிது பலக்கில்‌ மறையாகி
சொன்ன வொழுக்க மானானை யதுசூழ்வான்‌
முன்னது விடார்விரதம துணர்வினோரே. 60
[60. பன்னரிது - செய்தற்கரியது, பலக்கில்‌ - விருத்தியாக்கில்‌,
சொன்னன - சொல்லியவை,]

கரிச்சித வொழுக்கங்‌ கணக்கேகு மச்செயல்‌
தரிச்சனை மனத்தினி லாரிடி லைய்யாறனுக்குச்‌
சுருவறுத்த விதையாகும்‌ வகை காணும்‌
திருச்‌ சிவமளிக்கு மீதுசெய்க வெனவோதும்‌. 61
61. கரிச்சிதம்‌ - பொறுப்பான உயர்வு, சுறுவறுத்த - யாகத்தின்‌
அவிர்பாகப்‌ பலனை யொத்த, சிவமளிக்கும்‌ - சிவபதமளிக்கும்‌,
எனவோதும்‌ - என்று சொல்லுவாரானார்‌.]

[அனித்தியர்‌ அத்தியாயம்‌ முற்றும்‌ ]
-----------

19. கிரிச்சிர ரத்தியாயம்‌.

யோக வொழுங்கு புகன்றாய்‌ வொன்று கிருச்சிர மென்றால்‌
யாக வெனத்தவை யெல்லாமைய வெனக்‌ கருளென்ன
மோக மறுத்த வன்னனான்‌ முன்னமொழிந்தன நின்னாட்‌
கேகய மன்னமடந்தாய்‌ கேளென வோதின்ன மாதோ. 1
[1. யோகவொழுங்கு - யோகழுறைமை, மோகமறுத்தவன்‌ - மோகப்‌ பற்றறுத்தவன்‌, அன்னான்‌ - அத்தகையவன்‌, கேகயம்‌ - மயில்‌ அன்ன –
போன்ற, மடந்தாய்‌ - பெண்ணே,]

நித்திய நற்புனல்‌ மூழ்கா நேயமிகுத்‌ தேவருக்கும்‌
பொய்த்தய வின்றி விழைச்சினம்‌ போகுமாடென்‌
எண்ணெய்‌ தொடாம லுழுந்தோடென விலகும்‌
மண்ணிய சீர்பெறின்‌ மருவுமையாற்று மருவுமினே. 2

[2. நித்திய - அழிவில்லாத, விழைச்சினம்‌ - விரும்பிய கோபம்‌,
உழுந்தோடு - உழுந்தின்‌ தோல்‌, மருவுமினே - சென்றடையுங்கள்‌.]

தேனூற்‌ றண்ணியன்ன மூரளிற்‌ றள்ளிய
பற்றொடு தள்ளிப்‌ பண்ணிய பாதகர்‌ கீழோர்‌
பண்பு கொளா துரைப்படாத செயலழுந்தி
தொண்ணிற வங்கியிலீசற்குப்‌ பலியாக வருந்துவரே. 3
[3. மூரல்‌ - காமச்சிரிப்பு. உரைப்படாத - சொல்லவியலாத,
தொள்நிறவங்கு - பழமையாக வரும்‌ தீங்கு.]

எல்லினி னூணொரு நான்மூன்‌ றெல்லியுணாவொரு நான்‌மூ
றொல்லும்‌ யாசகன்‌ நான்மூன்‌ றூணில்‌ நாளொரு மூன்றாய்‌
பல்லவர்‌ சொல்லல்‌ பிராசாயத்‌ தியனோன்பு பலித்தாற்‌
சொல்லிய பாதக மெல்லாந்‌ தூளெழுமாறு துடைக்கும்‌. 4
[4. எல்லினில்‌ - இரவுக்காலத்தில்‌, பல்லவர்‌ - பல்வேறுபட்ட
பெரியோர்கள்‌, பாதகம்‌ - கீழான பாபச்‌ செயல்கள்‌.]

புன்பிணி போரா வலியில்லோர்‌ பூவையர்‌ பாலா லிருந்த
இன்பமோடி வருநாளா லெட்டின முடிக்க விதற்கு
மன்பினரிட்டடுப்‌ பயிர்த்தா மத்த கிரிச்சிர
மென்றது காண வல்லவர்செய்தார்‌ சொல்விரதப்‌ பயனில்லை. 5
[5. புன்பிணி - கொடுமையான பிணிப்பு, பூவையர்‌ - மகளிர்‌.]

அன்ன மருந்திடிலற்‌ போதா திருகைப்பிடி யுண்பார்‌
பன்னரு நன்‌ புகலுண்டாற்‌ பற்றுட னைந்து பிடித்தா
முன்னெவ ராயினு மிட்டால்‌ மட்டா மென்பார்‌ விரும்பியதே
சொன்னப டிக்களவிட்டார்‌ சொல்வதற்குக்‌ குடவண்டம்‌. 6
[6. இருகைப்பிடி - இரண்டு கைப்பிடியளவு அன்னம்‌, பன்னரு –
பல்லாற்றானு மருமையான, மட்டாம்‌ - போதுமானதாம்‌. ]

அத்திறமுஞ்‌ செய நோலா ரந்தணர்‌ கைப்பசு வொன்றீந்து
உத்தமனைத்‌ திருவையாற்றி லுள்ளவனைத்‌ தொழ வல்லார்‌
பத்தினீரிரட்டி கொணா லரம்பை போல்‌ நல்குவ தாங்குஞ்‌
சத்தமிலாப்‌ பனிரண்டா றீகவலாதவர்‌ தாமே. 7
[7. நோலா - நோன்பு செய்தாது, சத்தமிலா – ஓசையில்லாத]

ஒவ்வொரு கைப்பிய வன்னம்‌ உண்பது நாளொரு மூன்றா
யவ்வொரு மென்பிடி தானும்‌ யாசக நாளொரு மூன்றா
யெவ்வுண வின்றிநாள்‌ மூன்‌ றிப்படி மூவிரவுண்டாற்‌
செவ்வதிகச்‌ சிரநோன்பாம்‌ சிற்சில நாவியல்‌ கேண்மோ. 8
[8. நோன்புக்குரிய நாட்களில்‌ அன்னம்‌ உண்ணும்‌ அளவு
முறைமைகளை இப்‌பாடல்‌ குறிக்கின்றது.]

அன்று கொம்பில்‌ விளைத்த மென்பழத்தின்‌ நற்சுவையாகி
நின்று பன்னிரண்டு நாளிருப்பது செப்பும்‌ பெயர்‌ வன்பிலா
ரொன்றும்‌ பன்னிரு நாளுமோர்‌ பதினைவ ரந்தணருக்குணவு
நன்றிடிற்‌ பலனாகும்‌ நற்புன லெங்கும்‌ நிறைந்த பான்மையாம்‌. 9
[9. அன்று - நோன்பு கொண்ட அன்று, பன்னிருநாள் - பன்னிரண்டு
நாளும்‌, பதினைவர்‌ - பதினைந்து பேர்‌ பிராமணர்க்கு, உணவு –
சிறப்புணவு, நன்றிடில்‌ - நல்லமுறையில்‌ செய்தால்]

நற்பசுப்‌ பொழி பாலை மூவெழு நாளருந்தி யிருந்திடிற்‌
சொற்படைத்த கிருச்சிராதி கிருச்சிரஞ்‌ சிலர்‌ சொல்லு நூல்‌
முற்பகுத்திடு நாள்கள்‌ நீருண வென்று நான்கொரு மூன்று நாள்‌
அற்பகற்‌ பெறு மூணிலாதமர்‌ கென்று மோதுவரல்லதும்‌. 10
[10. கிருச்சிரம்‌ - சாந்திநோன்‌பிற்குரிய ஆசாரம்‌, அற்பகல்‌ - இரவு பகல்‌,
உண்‌ இலாதமர்கென்று - உணவு இல்லாமல்‌ இருப்பதென்பது.]

பன்னிரண்‌ டிருபத்திரண்டு படைத்த நாளும்‌ நல்லுணவே
என்னவும்‌ புகுவாரிதற்‌ கியலாத பேரிருபத்தோடொன்‌
றன்ன நாளொரு முப்பது அந்தணருக்‌ குணாவிடலாகுமே
லின்ன பஞ்சநதி தலத்தேவை செய்யினுங்‌ குறையில்லையால். 11
[11. 12.22 - 94 நாட்கள்‌, இயலாதபேர்‌ - செயலாற்ற இயலாதவர்கள்‌,
நாளொருமுப்பது - நாள்‌ தோறும்‌ ஒரு முப்பது, உணா - சிறப்புணவு,
தேவை - செயத்தக்க செயல்‌]

கொதிக்கு நீர்‌ சுடுபாலெறிந்த நெய்கொண்டு நாளொரு மூன்றுமே
மதிக்க வொன்று மிலாமல்‌ மற்றொரு நாளிருக்க வகுத்தமோ
விதித்த மெங்கொடு வேணல்வா யொரு கலமெந்‌
திதிக்குள்‌ மூழ்குக மூன்றுகால்‌ நயந்து மூழ்கி நடுக்குளான்‌. 12
[12. எறிந்த நெய்‌ - காய்ச்சிக்‌ கடைந்தெடுத்து உருக்கிய நெய்‌,
மூன்றுகால்‌ - மூன்று காலம்‌.]

சிதநீர்‌ துளிர்‌ பால்குளிர்ந்த நெய்கொண்டிருந்திடு
செய்தியாதல்‌
சீதகிரிச்சிரஞ் செயவல்லாலவ்வவ ரிருபதோடோது
மொன்றுள நாள்நாற்பது
வேதியற்‌ குணவிட்டிடிற்‌ சிரபேதநல்விரதப்பயன்‌
வருபுண்ணியந் தருமத்தலம்‌. 13
[13. சீதநீர்‌ - குளிர்ந்த நீர்‌, வேதியர்‌ - வேதபிராமணர்‌, தரும்‌ அத்தலம்‌ -
அம்புண்ணியத்தினை திருவையாற்றுத்தலம்‌ தரும்]

அறுபல நீரிற்‌ கொள்க விருபலமான பாலேற்க
நறுநெய்யும்‌ பலமொன்றாக நயக்கவிக்‌ கிருச்சிரத்தை
யுறும்வகை திருவையாற்றிற்‌ செய்திடிலோரனந்தங்‌
குறையினினிற்ற வரமென்று கூறினன்‌ பின்னு மாதோ. 14
[14. பால்‌ ஏற்க - பாலினைப்‌ பருகுக அனந்தம்‌ - அனேகம்‌ குறையினில்‌
இற்ற - குறையினில்‌ தனித்தான்‌, வரம்‌ - நல்வரம்‌.]

குசப்புனளலானைத்‌ தோடு கூட்டியுண்டொரு நாட்போக்கி
வசத்துண வின்றியோர்‌ நாள்‌ வைகல்‌ சாந்த மன்னோன்‌பர
மிசைத்திடு மொவ்வொன்றோர்‌ நாளாக நாளேழுமெனு
மிசைத்தவக்‌ கிருதச்‌ சிரப்பேர்‌ விளம்புவர்‌ விளங்கி யோரோ. 15
[15. குசப்புனலானை - தருப்பைப்‌ புல்லோடு பொருந்திய தீர்த்தமுடை
யவனை, பரம்‌ - மேலுலகம்‌, கிருதம்‌ - நெய்யினால்‌ அமையும்‌,
விளம்புவர் – சொல்லுவர்]

சலமயம்‌ பல வொவ்வொன்றுந்‌ தயிர்ப்பயிலிரண்டு
பலமும்‌ நெய்க்கு ஒத்ததின்‌ பலன்களாய வொன்றுமாக
நிலமுற்றவரவர்க்கு நவின்றுமந்திரத்தாற்‌ கூட்டித்‌
தலனதின்‌ விதியிற்‌ கொண்டாற்‌ சணத்திலேதுவுன்‌ பாபம்‌. 16
[16. சலமயம்‌ - பஞ்சகவியம்‌, நிலமுற்று - ஒன்றாகத்திரட்டி, தலனதின்‌ -
பிராயசித்தத்திற் கமைந்ததில்‌, சணத்தில்‌ - ஓரு நொடியில்‌.]

ஒவ்வொன்று நாள்‌ மூன்றா லுண்பது மாசாந்தபன
மவ்வொன்றை நாளிரண்டால்‌ அருந்தி லதிசாந்தபன
மிவ்வைந்து மோர்‌நா ளுண்டிருப்பது நாள்‌ நற்கபிலைத்‌
துவ்வந்தப்‌ பாலுணவுஞ்‌ சொல்லுமதன்‌ பேதமே. 17
[17. பாபங்களுக்குரிய பிராயசித்தமாக வேதாகம ஸ்மிருதிகளால்‌
கூறப்படும்‌ பக்குவ மார்க்கம்‌ இப்பாடலும்‌ புகலுகின்றது.]

பத்தொன்று நான்‌ மறையோர்மூ வேண்டாதாள்கடொழு தன்னமிடர்‌
சாந்த பன்மூவகையிற்‌ கோளுருவுறு பேருண்டாகுங்‌
கூறுதிருவையாற்றில்‌ வேள்வி மறையோதும்‌
தேறு தவவியாதமுனி தெய்வநெறி கிரச்சிரம்‌ புரிந்தான்‌. 18
[18. திருவையாற்றில்‌, வியாதமுனிவன்‌ பிராயசித்த நெறியினைச்‌
செய்தார்‌ என்பது பாடற்கருத்து.]

வேதமுனி யிவ்விரதம்‌ அனுட்டித்தற்‌
கேதுவெவனன்‌ றிசைத்தி ரென்றிந்து குலத்‌
தாது கமழ்தார்வேற்‌ சந்தனுவினவ மைந்தரிரு
காதலரவர்க்குக்‌ கற்புடையா ரோரிருவர்‌. 19
[19. வேதமுனி - வியாதமுனிவன்‌. அனுட்டித்தற்கு - தவறாமல்‌
அனுபவப்‌ படுத்தற்கு, கற்புடையார்‌ - மனைவியர்‌.]

அம்பையுடன்‌ பாலிகை யென்னு மின்னார்க்கு
நம்பு கணவர்துறத்தலுமே நற்குலத்துத்‌
தம்பமகவிலையாய தம்மாமி யோசனைக்கும்‌
வம்பவிழுமேனிமடவா ளிது நினைந்தாள்‌. 20
[20. அம்பையுடன்‌ - அம்பாதேவியுடன்‌, பாலிகை – பாலிகை
யென்னும்தேவி.]

ஆனைந்தொடு கூட்டி யுண்டொரு நாள்‌ போக்கி
பானைந்‌ துணவின்றியோர்‌ நாள்‌ இருந்து நலமெய்தி
நீநினைக்கிலாங்கு அப்பொழுது வந்தெண்ணம்‌ நன்றென
நான்‌ நினைந்தறிவ லென்றுநின்று தாணினைந்து நீங்கான்‌. 21
[21. ஆனைந்து - பசுவினிடத்திலிருந்து பெறும்‌ பஞ்சகவ்யம்‌,
நீ நினைக்‌கிலாங்கு - நீ நினைத்த பொழுது].

அத்தவ வியாத னென்னும்‌ குமரன்‌ வந்தடியிற்‌ றாழ
வுத்தமன்‌ புகழ்ந்து மைந்த உனக்கிரு தம்பி மார்கள்‌
மெய்த்திறச்‌ சித்திராங்கன்‌ விசித்திர வீரியத்தோ
ரித்திறத்த ரிறந்தாரவற்‌ கிலை மகப்‌ பேறென்றான்‌. 22
[22. தாழ்‌ - தாழ்ந்து வணங்க, உத்தமன்‌ - உத்தமனாகியவன்‌,
மகப்‌பேறு - பிள்ளைப்பேறு,]

கரையிலா வேரியேரிக்‌ கட்டிலா கழனி யந்தப்‌
புரையிலாக்க மினியில்லா நகரி போனகரிலாநா
உரையிலா நாடிலாத பேரரசு வந்து காக்கும்‌
மாசிலா வுயிர்களெல்லா மணிநிலத்தழியு மன்னோ. 23.
[23. ஏரிக்கட்டு - கலிங்கு, கழனி - நெல்வயல்‌, நகரிலா நா –
பண்பாடிலாது பேசும்‌ நாக்கு.]

செழுங்கலை யிழந்து நின்ற திங்களிற்‌ றிங்கட்‌ புத்தேள்‌
கொழுங்குல மகவின்றாகி கேட்டது கண்டு நன்றாய்‌
அழுங்குத னோக்கிக்‌ கைலாயம்‌ பாலித்தம்பால்‌
விழுங்களியினை விழைச்சின மேயினான்‌ வேதங்கண்டான்‌. 24
[24. திங்கள்‌ புத்தேள்‌ - சந்திரனாகிய தேவர்‌, பாலித்து - குறிப்பிட்டு,
விழைச்சினம்‌ - விரும்பும்‌ கோபம்‌,]

கண்புதைத்‌ தொருத்தி நிற்ப கலந்தனன்‌ காய மெல்லாம்‌
வெண்புதுத்‌ துகிலால்‌ மூடிப்‌ புணர்ந்தன னொரு மின்னாளை
மண்புர ந்தளிக்குமாறு மாதவக்‌ கருப்ப மன்றே
வொண்புகழ்‌ விளைக்கு மைந்தர்‌ தோன்றினா ருணர்ந்து கண்டான்‌. 25
[25. கலந்தனன்‌ - வியாதமுனி கூடினான்‌, துகில்‌ - ஆடை, மாதவக்‌
கருப்பம்‌ - முனிவன்‌ தந்த கருப்பம்]

மனுவழி புரிந்தோ மெனும்‌ வலிதினாம்‌ புணர்த லாலே
நினைவறு கற்பழிந்தோமென்று கெதி யற்ற தென்ற
வினைவழி யின்றிவந்தால்‌ ஒருவன்‌ மற்றொருவனெலாத்‌
தனுவிளர்ப்புற்றா னென்று தாபதன்‌ மிகவு நொந்தான்‌. 26
[26. மனுவழி - மனுதர்மவழி, வினைவழி - முன்செய்த
செயல்படியே, தாபதன் - முனிவன்.]

பூப்பிலார்‌ பூப்பொழிந்தார்‌ பூத்தவர்‌ கருப்பப்‌ பூவார்‌
காப்பிலார்‌ விரத முண்பார்‌ பிணியிலார்க்‌ கருத்திலாதார்‌
நீப்பிலார்‌ தாமே விழந்த நேரத்துந்‌ தடுத்து நின்று
பாப்பிலார்‌ தாமே பின்னர்‌ பழங்கணுற்றழுங்கு வாறே. 27
[27. பூப்பிலார்‌ - பூப்படையாதவர்‌ பூத்தவர்‌ - பருவமலர்ச்சியடைந்தவர்‌,
பாப்பிலார்‌ - தன்னைப்‌ பார்த்துக்‌ காப்பவரிலார்‌, பழங்கணுற்று - மிக்க
துன்பமுற்று, பழைய வினைப்பயன்‌.]

அருளொடு செய்த பாவ மறமெனு மாறு நெஞ்ச
மிருளுறு காமப்‌ பாவ மன்றியென்றுள்ளத்‌ தெண்ணி
மருளது தீர்க்க நாடி வண்டிருவை யாற்றெய்தி
தெருளுமிக்‌ கிருச்சிரத்தைச்‌ செய்து தீர்ந்துய்தானன்றே. 28
[28. இருளுறு - மனத்தெளிவு போன நிலையில்‌, மருளது - குற்றமது,
தெருளும்‌ - முனிவர்‌ தெளிவாகவுரைத்த, கிருச்சிரத்தை –
பிராயசித்தத்தை, உய - உய்ய; பிழைப்பது,]

குளச்‌ சென்னலரிக்‌ கஞ்சி செம்பஞ்சுக்‌ குழம்பு தயிர்‌
வளர்க்கின்ற கறிச்சரக நெய்‌ பால்‌ மற்றிவை யொன்‌
றளக்கின்ற மூன்று நாழி ரரகரா மூன்று நாள்‌
தளைக்கிரை விரைத்ததைத்‌ தேவ கிருச்சிரமென்னும்‌. 29
[29. அரி - அரிசி, சரகம்‌ - தேன்‌, தேவகிருச்சிரம்‌ - தேவர்கட்குரிய
சாந்தியமைந்த பிராயசித்தமாகும்‌.]

இக்கடவுட்‌ கிருகச்‌ சிரத்தை ஐயாற்றி லியற்றினாற்‌
றுக்கம்‌ நப பாதகங்‌ கடுகளாக்கு மாட்டாதார்‌
மிக்க விருபத்‌ தோரு நாள்‌ வேதியர்‌ மூவெண்‌ மருடன்‌
தக்க விருவருக்‌ குணாவு தந்திடினும்‌ பேறு தரும்‌. 30
[30. நவபாதகம்‌ - ஒன்பது வகையான பாதகம்‌, கடுகளாக்கும்‌ -
குறையச்‌ செய்யும்‌, மூவெண்மர்‌ - இருபத்து நான்குபேர்‌.]

குயப்‌ புல்லுந்‌ தாமரையின்‌ பாசினையும்‌ வில்வத்தின்‌
      கொத்து மத்திப்‌
பயத்தினையும்‌ தனித்தனியே துவைத்திறுத்த
      சாரருந்திற மென்னும்‌
பெயர்த்த திருச்சிரமிவற்றைப்‌ புனல்விட்டுக்‌ கனவ
      காயத்திற்‌ பின்புறுத்த
நயத்த கழாயம்‌ பருகுந்தன்மையும்‌ சத்தர்க்கு நவிலக்‌
      கேண்மோ. 31
[31. குயப்புல்‌ - தருப்பைப்புல்‌, துவைத்து - நசுக்கி, புனல்‌ -
தூயநீர்‌, கனவ - கணவர்‌ என்பதாம்‌, பருகுந்தன்மை - குடிக்கும்‌ தன்மை.]

இருபத்‌ தாறந்த ணருக்‌ கிருபத்தோர்‌ நாளிட வித்தலத்தில்‌
கருவத்தா மலவகமே வன்னத்தி னுடன்‌ கலந்த கஞ்சிமோர்மா
முரிவுற்ற கணமிவற்றை மும்மூன்று நாளை யிம்‌ மூன்று
மொருவுற்ற வுணவின்னா விருக்கிலது சளமியக்க
      வுரைக்கலாகும்‌. 32
[32. ஆமலகம்‌ - கருநெல்லிக்காய்‌, கணம்‌ - அப்பொழுதே,
ஒருவுற்ற – ஒன்றாகச்சேர்ந்த.]

கணமொரு நாள்‌ புண்ணாக்கு மூன்று நாளைந்து
      நாட்‌ கமழு நீர்‌ மோர்‌
வணமுறு மாவேழு நாள்‌ மற்னைய நாளுபவாசம்‌ வசிக்கிலிது
குணமருவு துலாபுருட கிருச்சிரமாக கணத்தினோடு
      கோதில்‌ பிண்ணாக்‌
குணல்‌ வறிதே நீரிதன்றியிவை மும்மூன்று நாளு
      முரைக்கலாகும்‌. 33
[33. துலாபுருட கிருச்சிரம்‌ - குருபகவானுக்குரிய பிராயச்சித்த
முறைமையினை இப்பாடல்‌ விளக்குகின்றது.]

நாளிருபா மூவர்க்‌ குணவளிக்க விவ்வா றையாற்றுத்‌
தலந்தன்னிற்‌ செயற்காற்‌ பாதகமென்றுட காழ்‌ ரெகண்டு
செல்லா வனமா காட்டிற்‌ படுதீயாம்‌ வருந்திச்‌
சில்நீர்‌ மாநதி வலார்‌ நாளிருபத்தொன்‌ நிருக்கிலது
      வருணகிருச்சிரமாமாதோ. 34
[34. வருணகிருச்சிரம்‌ - இப்பாடல்‌ வருணகிருச்சிரத்தின்‌
முறைமை கூறுகின்றது.]

பாற்பிர நெய்க்கு சோதிக மூன்றிரண்டொன்‌
      றொன்றாயப்‌ பலமயந்‌ தானெறுபெறு
வீரற்‌ பாதி கொண்டளவு கவ்விய தகையினத்‌
      தருப்பை யூறுடைய
சுருக்கு வினாலுரிய சீமந்திரத்தா லோமம்‌ பண்ணி
வெருசிலர்‌ விஞ்சியத்தைப்‌ பலராவர்‌ சிலையினடு
      விலையால்‌ விரும்பிக்கொண்டே. 35
[35. கிருச்சிர பிராயசித்தத்தினொரு முறையினை இப்பாடல்‌
விளக்குகின்றது.]

தாமரையினிலை செப்புப்‌ பாத்திர மங்கையர்‌ தாங்கிக்‌
      கொண்டு
பாமரு வீராசனத்து வெண்கலப்‌ பாத்திரத்தான்‌
      பால்பருகி யல்லாற்‌
றேமருதீ தயிர்‌ மோர்‌ நீர்‌ குளச்‌ சென்னலரிக்‌ கஞ்சி
      தெளிவே யாதல்‌
சாமரு நீர்‌ முப்பொழுதும்‌ படிந்து நாட்காலம்‌ போக்கில்‌. 36
[36. இப்பாடல்‌ கிருச்சிரவிரத அனுட்டிப்பு முறையினைக்‌
கூறுகின்றது.]

யாகத்தின்‌ பலன்‌ தீர்த்த யாத்திரையின்‌ பேறெல்லா
      மெளிதி நீங்குங்‌
கோகத்தி தாய்‌ தந்தை கொலைபாவந் தீர்க்குமது
      கொள்ளுந்தோறும்‌
பாகத்‌ தெள்ளுடன்‌ சமனுக்‌ கங்கைநீர்‌ கொடுத்தாலிப்‌
      பாரின்‌ மீ
சோகத்து தான்‌ பிறந்த நாட்டொடுத்‌ தன்றளவு
      செயத்‌ துரிசு நீங்கும்‌. 37
[37. கோகத்தி - பசுவதையால்‌ வரும்‌ பெரும்‌ பாவம்‌, மீசோகம்‌ -
மிக்க வருத்தம்‌, துரிசு - குற்றம்‌, பாவம்‌,]

வச்சிரப்‌ போக்கிருச்சிர மிதை மும்மூன்று நாள்நோற்க
      மாட்டாதராகில்‌
மெச்சுமூவர்‌ இரண்டினொருநாள்‌ பஞ்சநதித்‌ தலத்திவ்‌
      விதியே செய்யின்‌
நிச்சயமா பாதகங்கள்‌ போயகலு மாதலி லிப்பதிசார
      நினையா ரந்தோ
நச்சுமமுதினை மறந்து பசிதீரு மவரொப்ப நவிலிங்‌ காலே. 38
[38. வச்சிரப்‌ போக்கு - வலிந்து பாபம்‌ தீர்க்கும்‌ வழி, பாதகங்கள்‌ -
கொடிய பாவச்‌ செயலால்‌ வரும்‌ தீமைகள்‌, நச்சும்‌ - விரும்பும்‌.]

அறும்படிப்‌ புகன்ற நோன்பா லற்றிடப்‌ பாவமெல்லாம்‌
செறும்படித்‌ தோன்று சாந்திராயணஞ்‌ செப்பலுற்றால்‌
எறும்பிடை நெல்லிடை போன்று கோயிலிற்செப்பேசென்று
உறும்பிற்‌ பின்னுமதிற்‌ பின்னுமோர்‌ சாரமற்றெலா
      முரைக்கக்கேண்மோ. 39
[39. அறும்படி - தீவினை அறும்படி, உறும்‌ - பொருந்தும்‌, சாரம்‌ -
அதன்பலன்‌.]

சந்திரன்‌ தேய்ந்து வெய்யோன்‌ சாருநாளமுதம்‌ நாடான்‌
வெந்திடு முணவின்‌ றாக்கித்‌ தலைமயிர்‌ வீழ்த்துப்‌ பின்னாள்‌
வந்தொரு பிடியுமற்ற நாளிரு பிடியுமாக
விந்தவா றியற்றிற்‌ றேயு பிறைமுடி விற்கியிட்டால்‌. 40
[40. சந்திரன்‌ தேய்ந்து - சந்திரன்‌ குறைந்து காணும்‌ நாட்களில்‌, பிறை
முடிவிற்கு இட்டால்‌ - பிறை முடிவிறும்‌ நாளில்‌ செய்தால்‌.]

இருதலை குவிந்த நெற்போற்‌ சாந்திராயண மென்றோதூங்‌
கருது பூரணையைத்‌ தொட்டுக்‌ கணையிருருள்‌ ளிருக்கத்‌
திருவளர்‌ பிறை பினெற்றின்‌ சிறுத்திருபால்‌ மிக்க
ஒருதலை யெறும்பின்‌ போத்தாய்‌ நோன்பென வுரைக்கலாமே. 41
[41. பூரணை - நிறைமதி, பிறை - வளர்பிறை, சிறுத்திருபால்‌ -
தேய்பிறையாகி இருபக்கமாய்‌.]

சந்ததம்‌ பிடியோ ரெட்டாத்‌ தானொரு மாத முண்டால்‌
வந்தநேரெங்கு மொப்பா மானதெண்டப்போது தோன்பா
னந்தமோ தனத்திலைய்ய மேற்று வுண்டானேல்மேன்மை
அந்தவூணுனு மாவாகில்‌ அதிகமா யறையலாமே. 42
[42. பிடியோரெட்டா - பிடியளவு உணவு எட்டாக, அந்தமோ –
அதன்‌ நிறைவோ, ஊணினும்‌ - உணவினும்‌,]

மாவினுந்‌ தவிடு செம்பதிகமா மானபால்‌ சள்ளை
யோவி நெய்கிழங்கு தீந்தேங்‌ கனியுணவொன்றுக்கொன்று
மேவிய மேன்மையாகும்‌ விரும்பலிவ்‌ விரத மொன்று
பாவியா நோற்கிற்‌ செய்த பாதகம்‌ பாரு மாதோ. 43
[49. மா- மாவுணவு, சள்ளை - சுருக்குதல்‌, பாதகம்‌ - மிகுபாவம்‌.]

நற்பசு விளங்கன்‌ றூட்டி நாண்முலை பொழி பாலெந்நாட்‌
பொற்பின்‌ மும்முலை பொழிந்தா லெழு போதிரண்டு
கற்புள முலைப்பாலெழ நாளொரு முலைப்பாலெழ நாளாய்‌
சொற்பெறு மொருசராசரந்‌ திராயண மென்று சொல்லும்‌. 44
[44. நற்பசு - கன்றையுடைய பசு, பொற்பின்‌ - மேன்மையாக,
இப்பாடல்‌ சராசரத்திராயண விரதம்‌ குறித்ததாம்‌.]

மற்றொரு விரத மொக்க தோற்றிடில்‌ வானந்‌ தன்னில்‌
சுற்ற மூவகையுந்‌ துன்ப நாதத்திற்‌ சுழலாவணம்‌
முற்றிட வைக்கு மோராண்‌ டுயற்றிடி லமுதுதரும்‌
பற்றிய மதிபதத்திற்‌ பண்ணவர்க்‌ கிறைவராவார்‌. 45
[45. கிரிச்சிரவிரதவகையின்‌ பிறிதொருவகை கூறியதாம்‌.]

செழுந்‌ திருவைய்யாறெய்தி செய்யவிவ்‌ விரதந்‌ தன்னைக்‌
கெழுந்திரு நினைத்த தெல்லாம்‌ எளிதினிற்‌ கிடைக்கும்‌
      பன்னும்‌
அழுந்திய பாவம்‌ நீங்கியருள்‌ சிவலோகம்‌ சேர்வார்‌
தொழுந்தவ ரனேகஞ்செய்ய சுத்தராய்‌ முத்தரானார்‌. 46
[46. செய்ய - தூய்மையான, கெழுந்திரு - பொருந்திய நன்மை,
பன்னும்‌ - பற்றிய, அழுந்திய - வலிதாகிய.]

உருத்திரா பதினோர்‌ தேவ ருதையர்‌ பன்னிருவ ரோடு
மருத்துவர்‌ வசுக்களேனோர்‌ வரதவித்‌ தலத்தி னொற்று
திருக்க வுடையா ரானார்‌ ஆதலாற்‌ றிருவையாற்றிற்‌
கிருக்சிர விரதமொன்று கோடியாக கிளக்கு மன்றே. 47
[47. மருத்துவர்‌ - தேவமருத்துவர்‌, வசுக்கள்‌ - அஷ்ட வசுக்கள்‌,
கோடியாக - மிகுந்த பலனளிப்பதாக.]

நோற்றிட வல்லார்‌ நல்ல நோன்புடையோன்‌ மூவைவர்க்‌
காற்றுக பசிதினந்‌ நோற்றிரு மறையவர்க்கேனு
மாற்றரு மப்பான்‌ முப்பா னிரண்டதிற்‌ பாதியல்லாற்‌
சாற்றிய வதனிற்‌ பாதி தரிற்றரும்‌ பயனையாறே. 48
[48. நோற்றிட வல்லார்‌ - விரதம்‌ செய்தற்கு வல்லவர்‌, தரில்‌ தரும் –
கொடுத்தால்‌ பயன்‌ கொடுக்கும்‌.]

பஞ்ச நதேசம்‌ பாடா நாவினருமா பாடி
நஞ்சுனக்‌ கோடு நில்லார்‌ செவிடர்‌ காணார்‌ கண்ணில்லார்‌
கஞ்சனாய்க்‌ கெரிக்கு நீசர்‌ நினைத்திடாசன மனத்தால்‌
தஞ்சமென்‌ றடையாரன்றோ பஞ்ச பாதகம்‌ தாமாவார்‌. 49
[49. பஞ்சநதேசம்‌ - திருவையாறு, பாடா - துதி செய்யாத,
கெரிக்கும்‌ நீசர்‌ - மனம்‌ சுருங்கிவாழும்‌ அற்பர்‌.]

பழவினைப்‌ பாவ மிக்கார்‌ பஞ்சநதேச மெண்ணார்‌
தொழவினைப்‌ புரிந்தாய்‌ நீயே யாதலாற்றுரிசு நீங்க
விழவினை யறாத விதி பெருந்தலமதற்கு வாழ்த்த
கிழவனை நோக்கி மைந்த கிருச்சிரம்‌ புரிதி யென்றான்‌. 50
[50. பழவினை - முற்பிறவி தொட்டு வரும்‌ தீவினை, துரிசு - பாபம்‌,
கிருச்சிரம்‌ - பிராயசித்தமான விரதம்‌].

இருஞ்சிய சீடனெபான்‌ தேவலன்‌ தனைக்‌ கொண்டெய்தி
அருஞ்செயற்‌ கிரிச்சிரங்க ளனைத்தையு மனுட்டிப்‌ பித்தான்‌
பொருஞ்‌ செயற்‌ பிறவித்‌ துன்பப்‌ புணரியின்‌ கரையா யின்பந்‌
தருஞ்‌ சிறப்புடைய பஞ்சநதித்தலந்‌ தன்னுலன்றே. 51
[51. இருஞ்சிய - உடனிருந்த, அனுட்டிப்பித்து - செய்யுமாறு நல்கி,
புணரி - பிறவிக்கடல்‌.]

தேசிகனவனே யென்று தேவலன்‌ றெளிந்து கொண்டு
மாசறு பொன்னி மூழ்கி மாண்பொரு மடத்தி னாங்ஙண்‌
ஆசன சமாதி யோங்கு மறிவுடனனேகங்‌ காலம்‌
ஏசிலா நோற்கும்‌ போழ்தி லிறைவன்‌ வந்தெதிர்‌ நின்றானே. 52
[52. தேசிகன்‌ - குரு, மாசறு - குற்றமற்ற, பொன்னி - காவிரி,
ஏசிலா – பழித்தலில்லாத]

திளைத்தவ ரிடும்பை தீர்க்குந்‌ திருவையாற்‌ றுடையா னெய்தி
கிளைத்த பன்மிருதி கிருச்சிரனோன்‌ பாலாகம்‌
இளைத்தனை யாது வேண்டிற்‌ றொழுகெனத்‌ திருக்கரத்தால்‌
இளைத்தவ னங்கந்‌ தொட்டு மகிழ்ச்சியுற்றிட வந்தானே. 53
[53. திளைத்தவர்‌ - அனுபோகத்தல்‌ செழித்தவர்கள்‌, மிருதி –
ஸ்மிருதி, ஆகம்‌ - உடம்பு, அங்கம்‌ - சரீர உறுப்புக்கள்‌]

செம்பொற்‌ சோதி தொட்ட பொருளியாவுஞ்சம
      பொனாகுமால்‌
அம்பொற்‌ கிரியிலன்று கண்டோ மையாற்றின்று
      கண்டோமென்‌
றும்பர்க்‌ கடவுளோர்‌ துதிக்க வுடலமெல்லா மொளிவீசும்‌
பைம்பொற்‌ பருதிபோ லிமைப்பனவ னெழுந்து பரவினான்‌. 54
[54. செம்பொற்சோதி - திருவையாறுடைய சிவன்‌, அம்பொற்கிரி –
கயிலை மலை, உம்பர்‌ - தேவலோகத்தவர்‌, பருதி - சூரியன்‌.]

மெய்யா றுடையா நிடையே விழிமுன்‌ வருவாயுருவாய்ப்‌ போ
யய்யாறுடையாய்‌ கடையேன்‌ புகுதாய தகுதாய்‌ அனையாய்‌
நைய்யாறுடையாய்‌ தூயா நீயென்‌ நானுரியேனானே னென்‌
றையா றுடையா றுடையா யடிகளே சரணஞ்‌ சரணம்‌. 55
[55. விழிமுன்‌ - காணுதற்கு முன்னாக வருவை, நைய்யாறு - வான
நதியாகிய கங்கையை உடையவனே, தூயா - தூயவடிவினனே.]

கண்ணாக கையா லுதிராற்‌ காலாலிருகைப்‌ படையா
வெண்ணாரிசை வென்றிடுவர்‌ யெந்தாய்‌ பரமானந்தா
நண்ணால்‌ வினையால்‌ வருதீ தென நானுரியேனானே
னண்ணா திருவையாறா வடிகேள்‌ சரணம்‌ சரணம்‌. 56
[56. நண்ணால்‌ - நானே அடைந்ததினால்‌, அண்ணா - தலைவனே,
திருவையாறா - திருவையாற்றுத்தலத்தில்‌ எழுந்தருளியுள்ள சிவனே.]

போற்றி னேன்திருத்தாள்‌ வீழ்ந்து புல்லினாள்‌ கிடப்பக்‌ கிட்டி
யேற்றினான்று தீயினாலு மகிழ்ந்தன னெடுத்துக்‌ கையா
னொற்றிடக்‌ கிரிச்சிரத்தால்‌ எந்தனை விரும்பே தென்ன
சாற்றினா னருளா லென்ன தாடொழு துரைக்க லுற்றான்‌. 57
[57. புல்லினாள்‌ - தழுவியமர்ந்த உமாதேவியார்‌, 'கிரிச்சிரத்தால்‌ - கிரிச்சிரவிரதத்தால்‌,
தாள்தொழுது - தாளை வணங்கி]

பிறவியங்‌ கடலில்‌ வீழ்ந்தேன்‌ பேதையர்‌ கரமென்னுஞ்‌
சுறவியங்‌ குதலி நேர்ந்தே நின்பதத்‌ துணைத்‌ திறத்து
மறவியங்‌ கொழியச்‌ சேர்த்து வரந்தரிற்‌ தாழ்கிடப்போர்‌
துறவியங்‌ கெய்தும்‌ பேரே தருகென்றே தொழுது
      சொன்னான்‌. 58
[58. பேதையர்‌ - மகளிர்‌, சுறவி - சுறாமீன்‌, குதலி - கடித்துக்‌
குதறுதலினால்‌, மறவி - மறத்தலாகிய தன்மை, தாழ்கிடப்போர்‌ -
வாழ்வில்‌ தளர்ந்து இருப்போர்‌.]

பிழைபல புரிந்தா ரேனும்‌ பின்னரடி யிணையில்‌ வீழ்ந்து
குழைவொடு காத்த நல்லோர்‌ குணமது வாதலாலே
தழையன சயகீடத்தோன்‌ சார்பிலென்‌ குறை எண்ணாதே
உழையறி வுணர்த்தி வந்திவ்‌ வுடனிருந்‌ தனனென்‌ றோத. 59
[59. குழைவொடு - தாழ்மையோடு, உழையறி - அருகார்ந்த
அறிவினைப்‌ புகட்டி]

உத்தம னவனும்‌ வந்த யோகம்‌ வேண்டி
அத்த நின்றிருவை யாற்றி லமர்கென வமர்ந்தா னின்னாட்‌
சித்தனால்‌ வர மகிழ்ந்தத்‌ தேவலர்க்‌ கருளி யருள்‌ கோன்‌
ஒத்தவ னுரைப்பவிவ்‌ வாறாக வென்றுரைத்‌ தானயன்‌. 60
[60. அத்த - அத்தனே! இன்னாள்‌ - இவ்வாறமைந்த நாளில்‌,
அருள்கோன்‌ - அருளுமரசனான சிவன்‌, அயன்‌ - பிரமன்‌.]

தேசிகனெனக்குச்‌ செப்பிய சிவபோகந்‌ தான்‌
மாசற வனுபவத்தின்‌ வெளிப்பட வந்து நீயும்‌
ஏசற வுலக மெங்கு மியங்குக விவனை நெஞ்சிற்‌
பூசனை புரிக சற்றும்‌ புறநினைவற்க வென்றான்‌. 61
[61. தேசிகன்‌ - ஞானகுரு, ஏசற - பிறர்‌ குறை கூறுதல்‌ ஒழிய,
புறநிலை – புறமாய் கைச்சூழல்கள்‌.]

எமக்கொரு குறை செய்தக்கா லெம்மை நெஞ்சுடையார்‌
      சார்வாந்‌
தமக்கொரு குறைசெய்‌ தார்க்கு சார்பு நாமல்லோ
      மென்றார்‌
சுமக்கும்‌ வெம்பாவம்‌ நீக்கத்‌ தொடங்கியோர்‌ நம்மை
      வேண்டின்‌
நமக்குள வன்பர்க்‌ கணியாய்‌ நாடோறுந்‌ தொழுவ
      ரென்றான்‌. 62
[62. சார்பு - மற்றுக்கோடு, உதவி, அணியாய்‌ - அடியார்கள்‌ வரிசையில்‌
அழகு பெற்றவராய்‌.]

இன்ன தாபதர்க்‌ குள்ளகத்‌ திருந்தளி யிட்ட
வன்ன மானொளி புழுவெனத்‌ தோற்றலு மந்த
தொன்னபாவ மென்றெண்ணினன்‌ மவுனியாயிருந்தான்‌
தன்னமாதவன்‌ மேன்மையாற்‌ புனிதமாய்ச்‌ சமைந்தான்‌. 63
[63. தாபதர்‌ - தபோதனர்‌, உள்அகம்‌ - உள்ளத்தமைந்தமனம்‌, மவுனி -
பேசாத நிலை பெற்ற தவயோகி, புனிதமாய்‌ - தூயபக்குவ நிலையாய்‌].

நேசன்‌ பஞ்சந தேசன்‌ மேல்‌ வைத்து நீவந்து
வாசஞ்‌ செய்து பல்‌ கிரிச்சிரமுடித்தலில்‌ மறையோர்‌
நாசஞ்‌ செய்ததே நின்ற பாவமு மறிவேறு நயனக்‌
காசந்‌ தீர்ந்தது முந்தியுங்‌ கண்டனை கண்டாய்‌. 64
[64. வாசம்செய்து – தங்கி வசித்து, கிரிச்சிரம்‌ - பாபவிமோசன விரதம்‌,
நயனக்காசம்‌ - கண்மாசு நோய்‌, முத்தி - மோட்சம்‌.]

துவர்‌ யாவையுந்‌ தீர்ந்து நல்வீடு வருந்துணிவாற்‌
கவரு கின்றனை யுன்னினை வப்படிக்‌ கருவாம்‌
தேவரே ஆச்சிரமத்தினரெனு மித்தலத்திற்‌ றங்கிய
எவரு மெய்ப்பயன்‌ தருமே யக்கதி தருதும்‌ நாமென்றான்‌. 65
[65. துவர்‌ - வெறுப்பான துன்பம்‌, நல்வீடு - மோட்சம்‌, ஆச்சிரமத்தினர்‌ -
ஆச்சிரமத்தில்‌ வசிக்கும்‌ முனிவர்‌, அக்கதி - அவ்வாறான நற்கதி,]

நாலொழுக்க நாற்‌ குலத்தினார்‌ நாயக கெரித்திடுவோர்‌
மேலொழுக்க மீனீசரும்‌ மித்தலத்து மேவிடிற்‌
சாவமுத்தியோர்‌ வகையலாற்‌ றனித்தனி யில்லையால்‌
சீலமுற்ற வில்லறத்தி நீ நிற்கெனச்‌ செப்பினான்‌. 66
[66. நாற்குலம்‌ - அந்தணர்‌, அரசர்‌, வணிகர்‌, வேளாளர்‌, ஆகிய
நான்கு சாதிகள்‌, சீலம்‌ - மேன்மை.]

இல்லறத்தி லிக்காயத்தி லிச்சை நாளெல்லை
யல்லலுற்‌ றுலகெங்குமாய்ச்‌ சஞ்சரித்‌ தமர்ந்தா
லெல்லையற்ற நல்லின்பவீ டெய்த வேண்டினையேல்‌
வல்ல யாக்கை விட்டடைக வென்றமலனு மறைந்தான்‌. 67
[67. இக்காயம்‌ - இவ்வுடல்‌, சஞ்சரித்து - திரிந்தலைந்து,
அமர்ந்தால்‌ - திருவையாற்றில்‌ தங்கினால்‌,]

பெற்ற பயனென்றே வரன்‌ பணியேற்கும்‌ பணிபேணிச்‌
சொற்ற வாக்கி லையாற்‌ றிடைவிடாது தொல்யோகங்‌
கற்றவர்‌ கெடச்‌ சஞ்சரித்‌ துலகெலாங்‌ காய
முற்ற வீழ்த்தி மேலுல கெய்தினான்‌ முத்தியினுலகம்‌. 68
[68. சொற்ற வாக்கில்‌ - சொன்ன வாக்கின்படி, தொல்யோகம்‌ -
பழமையான வேதநெறிப்பட்ட யோகம்‌, காய - பற்றுவிட,
முத்தி - முத்திப்பேறு.]

ஓதருஞ்‌ சயகீடனு முலகெலாஞ்‌ சஞ்சரித்து
காதரந்‌ தருமுடல்மே காந்தமா மின்பத்துப்‌
போதரும்‌ படியாயின்‌ புண்ணிய நதி சூழா
ஆதரம்‌ பெறத்‌ திருவையா றறந்தருள்‌ பயத்தால்‌. 69
[69. காதரம்‌ - பற்றுக்கோடாகும்‌, போதரும்‌ - செயலாற்றும்‌,
ஆதரம்‌ - பயனுள்ள ஆதரவு,]

திருந்து தேவலன்‌ காதைமீ துரைத்தனர்‌ செவியின்பத்‌
தருந்தி னோர்க்கருங்‌ கிருச்சிர முழுது மடைவிற்‌
பொருந்தி னோர்‌ சிவயோகம்‌ புரியடைதல்‌ புரிந்தோ
ரிருந்தவப்‌ பயனெய்துவரென இன்பமுடன்‌ முனியிசைத்தான்‌. 70
[70. திருந்து - வாழ்வில்‌ திருந்திய, காதை - கதை, புரி - செய்து,
அடைதல்‌ - தற்பயனடைதல்‌, இருந்தவப்பயன்‌ - உறுதியான
தவத்தான்‌ வரும்‌ பயன்‌.]
[கிரிச்சிர ரத்தியாயம்‌ முற்றும்‌ ]
------------

20. பிரதக்கணம்‌

கிருச்சிர விரத மெல்லாங்‌ கிளைத்திடி லெவரும்‌ நேரலா
ரருச்சனை தியான ஞானங்‌ கலியுகத்‌ தரிதே யென்று
முருச்சிறு மக்கட்‌ கெல்லா மும்பார முத்தியாகுந்‌
திருச்செறி வெய்தி நின்ற சேயிழைக்‌ கவனுஞ்‌ சொல்லும்‌. 1
[1. கிளைத்திடில்‌ - வளர்ந்து வருமாயின்‌, உருச்சிறு - வாழ்க்கையில்‌
எளிமையான, செறிவெய்தி நின்ற - திண்மையாக நின்ற, சேயிழைக்கு -
சிறந்த அணிகலன்களணிந்த மங்கைக்கு.]

முன்னொரு காலத்‌ தய்யா ரெய்திய முனிவ ரேவளள்‌
மின்னவரவரைப்‌ போற்றி இசைத்தலு மிறைவன்‌ தோன்றி
பன்னிய மறைத்‌ தலத்திற்‌ பாரின விலிங்கந்‌ தன்னை
பொன்னியல்‌ கோவில்‌ சூழும்‌ புண்ணியன்‌ மேன்மை யென்றான்‌. 2
[2. ஏவளள்‌ - பணிப்பெண்‌, இசைத்தலும்‌ - சொன்னவுடன்‌, பாரின
விலிங்கம்‌ - அருள்‌ பெருக்கும்‌ சிவலிங்கம்‌.]

வலம்‌ வரும்‌ பொருட்டுக்‌ கோயில்‌ வைத்திடும்‌ அடியொன்றுக்குப்‌
பலமொரு புரவி வேள்வி சூழ்வரிற்‌ பரம முத்தி
நலனுற வடிப்படுத்த நீர்மையா மாதலாலே
புலனுறத்‌ தெரியிலீது போலொரு தவமு முண்டோ. 3
[3. புரவிவேள்வி - அசுவ மேதயாகம்‌, புலனுற - அறிவிற்குப்‌
பொருந்த, ஈது - இப்பிரதக்கணப்பலன்‌.]

வலத்தினால்‌ சுழலுத லன்றி வலமுட னிடமுஞ்‌ சூழ்தல்‌
சொலத்தகு மிடத்தாற்‌ சூழ்தல்‌ சோம சூத்திரத்தாற்‌ சூழல்‌
தலத்துடல்‌ புரண்டு சூழ்தல்‌ தண்டெனப்‌ பணிந்து சூழ்தல்‌
பலந்தவை அறுவகைத்தா னமை வலம்‌ வருதல்‌ மாதோ. 4
[4. கோயில்‌ வலம்‌ வருதற்‌ கமைந்த ஆறுவகை முறைகளை
உணர்த்திற்று இப்பாடல்‌.]

நிறைத்த முன்னான்கு நான்கு நிலமையோர்‌ கடவே யீற்றின்‌
உரைத்திடு மிரண்டும்‌ யார்க்கும்‌ உரியவாம்‌ பிரமசாரி
தரைத்தரு வலமூவர்க்குந்‌ தவநிலை இல்லறந்‌ தான்‌
புரைத்தவ மிருவர்‌ பின்னோர்‌ புரியலாம்‌ புகலுங்‌ காலே. 5
[5. நிறைத்த - நிறைவாகக்‌ கூறிய, பிரமசாரி - பிரமசரிய விரதம்‌
பூண்டவர்‌, புரைத்தவம்‌ - ஒத்த தவவொழுக்கம்‌.]

வனத்திடை நோற்கின்‌ றோர்க்கு வகுத்தது துறவிக்‌ காகும்‌
கனத்திடு துறவின்‌ யோகி கானகந்‌ தன்னி னோர்க்கும்‌
எனத்தவர்‌ விதியுஞ்‌ செய்க இலங்குதல்‌ துலங்கும்தங்கள்‌
மனத்துள ஞானி சோம சூத்திரம்‌ பெருக வென்றான்‌. 6
[6. வனத்திடை - காட்டின்‌ நடுவே, இல்ங்குதல்‌ - விளக்கமாகுதல்‌.]

கலங்கழி மகளிர்‌ தாமே துறவினர்‌ கதியே செய்க
நலங்கல மின்னார்‌ தங்கள்‌ நாயகர்‌ உய்தல்‌ செய்க
துலங்கு பன்‌ மூன்றாம்மந்திர சோமசூத்திரத்தானம்மை
வலங்கலந் தெய்தல்‌ யார்க்கும்‌ உரித்தென வழங்கினானே. 7
[7. கலங்கழிமகளிர்‌ - மங்கலம்‌ கழிந்த பெண்கள்‌, கதியே - முறைமை
யினையே, நலங்கலமின்னார்‌ - மங்கலப்‌ பெண்கள்‌, நாயகர்‌ - கணவன்‌.]

அவரவர்க்‌ குரிய வாற்றிற்‌ செய்யி லொன்றாகிச்‌ சேர்ந்து
வரமதிச்‌ சூத்திரத்திற்‌ செய்யிலொன்றிரண்‌ டிலக்கத்‌
தவர்‌ மகிழ்‌ தண்டச்‌ சூழவே கோடி தனங்கச்‌ சூழ்வு
நவமுட னொன்றுள்‌ பெற்ற நொடியர்‌ நவிலுங்‌ காலே. 8
[8. தண்டச்‌ சூழல்‌ - தண்டனிட்டு வலம்‌ வருதல்‌, தன்‌ அங்கச்‌ சூழ்வு -
தன்னுடைய அங்கப்‌ பிரதச்சினம்‌.]

அங்கத்திற்‌ புரளுஞ்‌ சூழ்வை வலத்துட னிடமு மாகிற்‌
அங்கத்தி லொன்றனந்தஞ்‌ சனிப்பிரதோட மாகிப்‌
புங்கத்திற்‌ றெரிசித்‌ தேற்றிச்‌ சூழ்ந்திடிற்‌ புலவராதி
தங்கட்கு மகிழ்ச்சி செய்து கடனெலாந்‌ தனக்கு மாதோ. 9
[9. இப்பாடல்‌ அங்க பிரதக்கணம்‌ செய்யும்‌ முறைமையும்‌
பலனும்‌ கூறியதாம்‌.]

ஏற்றின்‌ பின்னின்றி டத்தாற்‌ றண்டிபாலேகி மீள
வேற்றின பின்‌ வலப்பாற்‌ சோமசூத்திரத்தளவு மீண்டாங்‌
கேத்தினைச்‌ சண்டனைச்‌ சூத்திரத்தினைச்‌ சண்டனொடு
மேற்றினைப்‌ பின்னுங்‌ காணிற்‌ சோம சூத்திர மென்றோதும்‌. 10
[10. ஏற்றின்‌ - இடபதேவரின்‌, தண்டிபால்‌ - தண்டீசர்‌இடத்து.]

சோம சூத்திரப்‌ பாலமிதுண்டு சூழ்தலால்‌ தனுக்கந்த
நாமமா மதன தெல்லை நாமிவண்‌ வகுத்த லுற்றார்‌
கோமுகை கொடுத்து நம்பர்க்‌ காட்டிய கொதிதீர்த்தம்‌
போமிட மடியிரொன்பா னளவுண்டு புனித மாதோ. 11
[11. சோம சூத்திர விரதத்தின்‌ அனுசரிப்பு கூறியதுடன்‌ அதனால்‌
ஆகும்‌ பலனும்‌ கூறப்பெற்றது.]

யாதொரு வலம்‌ வந்தாலு மிப்பெருஞ்‌ சூத்திரத்தாற்‌
போதுறா தப்பாற்‌ சூழினொன்று மூன்றவை யிதம்‌ போற்றார்‌
மீது போய்‌ மிதிக்கி லொன்றாகவே மேவு மிப்பாற்‌
காதலாற்றலை கை கூப்பி கண்கணீர்‌ பொழியு மப்பால்‌. 12
[12. யாதொருவலம்‌ - ஆறுவகை வலங்களிலொன்று, போதுறா -
இதுவல்லாமல்‌ பலன்‌ வராது.]

பயமிகுப்பயன்‌ நடந்து ஒன்றுபற்று தலாத நாத
நயத்துதி யறாது சொல்லி வேறொன்று நாவிற்‌ கூறா
தயற்‌ பெயருடன்‌ கூடாது நிழல்களி னடியிடாது
பெயர்ச்சி கொண்‌ டெய்தலிதே பேறெனப்‌ பின்னுஞ்‌ சொல்லும்‌. 13
[13. பயமிகுப்பயன்‌ - பயனினும்‌ மேலான நற்பயன்‌, துதி –
போற்றி செய்தல்‌, பெயர்ச்சி கொண்டு - மேல்‌ அடி பெயர்த்துவைத்து.]

அறந்தயங்கு மையாற்றி லெவ்வாற்றி லாயினு மோர்‌
திறஞ்‌ சுழன்றன ராமினும்‌ விதிப்படி சிறிது மாறி
மறந்தியங்கின ராயினு மறக்கரு முத்தியின்றிப்‌
பிறந்திடும்‌ பிறப்பொன்றிலே யெய்துவர்‌ பெரிதும்‌ காணீர்‌. 14
[14. அறம்‌ தயங்கும்‌ - அறச்செயல்கள்‌ நிலைக்கும்‌, மறந்து இயங்கின
ராயினும்‌ - மறந்தும்‌ செயற்பட்டாராயினும்‌,]

செம்பொற்‌ சோதியர்‌ தமை வலஞ்‌ செய்திடில்‌ வேறா
யிம்பர்க்குள வலமாயிரங்‌ கோயி னிலக்கம்‌ காணின்‌
பம்பிச்சேர்‌ பயன்‌ பெறுவர்‌ நாமவரெனப்‌ பயில்வோ
ரும்பர்‌ சூழ்பயன்‌ யாவையு மெளிதினில்‌ பெறுதல்‌ லுண்டாம்‌. 15
[15. இம்பர்‌ - இவ்வுலக மக்கள்‌, பம்பிச்‌ சேர்‌ - ஒன்றாகக்‌ கூடிச்‌ சேர்ந்த,
பயில்‌வோர்‌ - வீரதம்‌ அனுட்டிப்‌ போர்‌]

பரிச்சித்‌ தர்ச்சனை செய்து முன்பணிந்‌ திசைத்துப்‌ போற்றித்‌
தெரிசித்தோர்‌ வலஞ்‌ செய்யினு மிவற்றினோர்க்‌ கேவலாற்‌
குரிசிற்‌ கனபுரப்‌ புரியினுங் கோடி முற்‌ பிறப்புப்‌ பெற்றே
புகிரிபுன்ற தென்றெழுவத்‌ திடுந்‌ தொழிலதால்‌ என்றான்‌. 16
[16. பரிச்சித்து - ஸ்பரிசம்‌ செய்து, குரிசில்‌ - மேலானவன்‌,]

அந்திநெய்‌ விளக்கிட்டொரு வலம்வரி வில்லில்‌
இந்தனத்‌ திடை கனலேர்‌ யிட்டவர்‌ னோக்குஞ்‌
சிந்தை முத்தியி லுண்டெனிற்‌ திருவை யாறெனு
மெந்திருத்‌ தலத்‌ தெமை வலம்புரிக வென்றிசைத்‌ தான்‌. 17
[17. அந்தி - அந்திப்‌ பொழுதில்‌, இந்தனம்‌ - தீக்குண்டம்‌, சிந்தை -
அறிவு, முத்தியிலுண்டெனில்‌ - முத்தியிலுண்டானால்‌.]

நாடி மாத மோர்‌ நாள்வந்து நமது நலந்தரு பொன்னி
யாடி செப்பேசன்‌ கோயிலோர்‌ வலம்வரிலனேக முற்பிறப்பு
கோடி கோடியிற்‌ கட்டிய பாதகக்‌ குழுவைச்‌
சாடி யப்பரு வெற்பலையாம்‌ கடற்றகாதது போக்கிக் காக்கும். 18
[18. பொன்னி - காவிரிநதி, கட்டிய - தீவினையாற்‌ சேர்த்த, பாதகக்‌
குழுவை - பாபச்செயல்களாகும்‌ பொதியை, சாடி - தாக்கி, போக்கி -
முழுவதும்‌ போக்கி, காக்கும்‌ - பாது காக்கும்‌]

இன்னவன்‌ புகன்றனனென முனிவர்‌ உரைத்தார்‌
இன்னவாறு நீயோது ஈது வேதப்பிரியன்‌ சிர
மன்னன்‌ வெற்றி வெண்குடையினோன்‌ மாண்பதாய்‌ வகுத்துச்‌
சொன்ன ஆரண முத்தியின்‌ சுரித மேற்‌ றொகுப்பாம்‌. 19
[19. நீயோதுஈது - நீபிறருக்கு எடுத்துரைப்பாயாக, இந்நெறி,
மாண்பதாய்‌ - மேலானதாய்‌, சொன்ன ஆரணமழுத்தி - வியாசர்‌
முதலியோரால்‌ சொல்லப்பட்ட வேதங்களின்‌ தத்துவார்த்தம்‌, சுரிதம்‌ - வேதங்களின்‌
கருத்தாகும்‌ ஸ்மிருதிகள்‌, தொகுப்பாம்‌ - வேதாகம
ஸ்மிருதிகளின்‌ கருத்துத்‌ தொகுப்பாகவே இப்புராணம்‌ பயன்‌ தருவதாகும்‌.]

பிரதக்கணம்‌ / யோகச்சருக்கம்‌ முற்றும்‌.
திருவையாற்றுப்புராணம் முற்றும்‌.

------------------------------------------------------

This file was last updated on 18 Feb. 2026.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)