சிந்து பிரபந்தங்கள் மூன்று:
"1. உடன்கட்டையேறிய உத்தமிச்சிந்து,
2. கண்ணாட்டிச்சிந்து" & 3. திருப்போரூர் முருகர் சிந்து
"uTankaTTaiyERiya uttamic cintu", "kaNNATTic cintu"
& "tiruppOrUr murukar cintu"
In Tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading
of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2026.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
சிந்து பிரபந்தங்கள் மூன்று : "1. உடன்கட்டையேறிய உத்தமிச்சிந்து,
2. கண்ணாட்டிச்சிந்து" & திருப்போரூர் முருகர் சிந்து
Source:
1. உடன்கட்டையேறிய உத்தமிச்சிந்து.
இஃது, சிறுமணவூர் முனிசாமி முதலியாரவர்களால் இயற்றப்பட்டு,
தமது சென்னை சூளை, சிவகாமிவிலாச அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது.
1905.
2. கண்ணாட்டிச்சிந்து
சென்னை : சங்கநிதிவிளக்க அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது
1923
3. திருப்போரூர் முருகர் சிந்து.
சென்னை சூளை பெரியநாயகியம்மன் அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது
1923
----------------
1. சிறுமணவூர் முனிசாமி முதலியார் இயற்றிய
உடன்கட்டையேறிய உத்தமிச்சிந்து.
சிவராமஜெயம்/ கடவுள் துணை.
விருத்தம்.
சீராறு மிவ்வுலகின் நூல்களெல்லாம்
சிறந்தவரே தெரிந்தவரே செய்கையோர
பேராறும் பெரியவரே புகழ்பெற்றோரே
பெண்டுபிள்ளை யுள்ளவரே பணத்தினோரே
காராறுங் குணத்தோரே கதித்தபேரே
கற்றவரே மற்றவரே சுற்றத்தோரே
தாறானுங் கலியுகத்தி லெட்டாச்சேதி
தாட்டுதற்கு செவிகொஞ்சங் காட்டுவீரே.
இ-ம்-நாதநாமக்கிரியை-தாளம்-ஆதி
பல்லவி.
விந்தையைப் பாரிர் உடன் கட்டையேறின
விபரத்தைக் கேளீர்
அநுபல்லவி.
திரமதியென்றும் இந்திரன்ட ரன்பதியென்றும்
திரனிதியென்றும் எந்தயுகத்தில் கண்டோம் (விந்)
சரணங்கள்.
ஆதியுதித்தனக றறியோமறிந்திட்டாலும்
அப்புறம்சிப்பாயென் றொப்பத்தெரிந்திட்டாலும்.
ஜாதியறிந்தபேர்கள் சகலரிருந்திட்டாலும்
சதிகார காரனான்முகன் விதிபோட்டிருந்தாலும்
சங்கதிகேளீர்-உடன்கட்டையேறின
மங்கையைப் பாரீர்
கலியுகமதிலிந்த காட்சிகண்டதேயில்லை
கதைகள்புராணங்கள் கேட்டிருப்போர்தொல்லை
வலிமைக்கணவனோடு வழிபட்டமா தில்லை
வஞ்சியிவளுக் நக்கோ பிறவியினிமேலில்லை (விந்)
சிப்பாயலுவல்ரீதி செய்துவருகுங்காலை
சிறப்புமிவருடைய பொருப்புமறிந்தகாலை
யொப்பிநாய்க்கனென்று ஒயரக்கொடுத்தார் வேலை
வோகோயிதென்னவென்று பார்த்தானொருவன் மேலே
பர்ம்மாவிற்சென்று வெற்றிபெற்றுவந்த
மர்மமுந்தெரிந்து
அவுல்தாரென்கிறடூட்டி அன்பாய்க்கர்னல்காட்டி
அப்பாலஜிட்டனென்று செப்புந்தொழிலைநீட்டி
பவருமதற்குத்தக்கப் படியும் சம்பளங்கூட்டி
பார்த்துவருகுங்காலை கார்த்திருந்தான் தோஷி
கொண்டையன் தன்னுடன் கூடயிருந்த ஆளே
குடிக்குசகுனிசொந்த கொல்லைப்பல்லியைப்போலே
அண்டைக்கொடுத்தவேலை அவர்க்குவராதாலே
ஆத்திரம்பொருக்காத க்ஷத்திரவெறுப்பாலே
கர்னலைக்கண்டு -சுபேதார்சாயபு
அண்டையிற்சென்று
கொண்டையனிடமென்ன குணத்தைக்கண்டீரையா
குடிப்பதுடனேபங்கி யடிப்பதென்னபொய்யா
விண்டது பழுதோ விசாரித்துபாருமையா
வீணாயும்மாலேயே ஆணவமிகக்கொண்டான்
யென்றுசொன்னானாம்-கர்னலிடந்தனியாய்
நின்றுசொன்னானாம்
யென்னிடமச்சானும் யிருக்கிறான் அவுல்தாராய்
இந்தஅஜிட்டின் வேலை கொடுக்கத்தடையேன்கூறாய்
பின்னும் வெகுநாளாய் பார்க்கிறான்சார்வேசாய்
பரபரென்றிவனுக்கு உயர்த்திவிட்டீர்வீணாய்
அனியாயந்தானே--உமக்குவீண்பேர்வந்தால்
அவமானந்தானே
யென்றிந்தசாயபு நின்று மடக்கிச்சொல்ல
யெல்லாம்விசாரிப்பேன் யென்று கர்னல்சொல்ல
அன்று கழித்துச்சிலநாள் ஆனபிறகுமெள்ள
யெல்லாங்கபாத்துபோய் வரும்போதுநல்ல
வழிதனில் தாளி—கொண்டையனைக்கானல்
வணக்கமாய்மேலி
இத்தனைநாளுன்மேல் மெத்தப்பிரியமுற்றேன்
இப்போதுன்னடை செப்பக்கவலையுற்றேன்
சுத்தக்குடியனென்று சொல்லக்கேள்வியுற்றேன்
சூரத்தொழிலுனக்கு வேண்டாமென்றுபட்டேன்
யென்றதுகேட்டான்-கொண்டையன் மனமெல்லாம்
செந்தணலானான் அப்போ
பிழைக்குமென்டூட்டியில் பிரகிருந்தால்கேளு
பின்னாலிப்படிவந்து சொன்னவன்யெந்தாளு
கொகொழவெனவேண்டாம் கூசாதுரைத்துப்போடு
குறிப்பு சொல்லாவிட்டால் நருக்குவேனிதே மீதாபாரு
கத்தியையெடுத்தான்- வெட்டி மடிவேனென்று
சத்தியம்வைத்தான் அப்போ
சிறித்துக்கொண்டேகர்னல் வருத்தமனதில்வைத்து
சாயப்பேயுன் சேதி மாயமுரைத்தானென்று
உரைத்தவுடனேகத்தி யுரையிலவனேபோட்டு
உருகுமெழுகதுபோல் மனமுமிகவே நொந்து
வீடுபோய்ச்சேர்ந்தான் - உரைத்தவிபரமெல்லாம்
முடிவாகச்சொன்னான் பெண்ணே
இப்படியென்மீதில் தப்பிதமுரைத்தோனை
எட்டுநாளைக்குள்ளே சட்டாக்குவேனென்று
ஒப்பவுரைத்துப்போட்டு ஓடிதுரையைக்கண்டு
ஒருவாரமிரண்டுநாள் வேணும்ரஜாவென்று.
துரையைக்கேட்டானாம்-தந்தவுடன் திரும்பி
விரைவாய்வந்தானாம் அப்போ
கள்ளங்கபடுலேனு பெள்ளானும்நீக்கனி
கனுக்கோலகமாட்டா செப்புத்தாநீக்கனி
னெல்லுகானாபைனா அப்தம்செப்பேவானி
னரிகிசம்பேஸ்தானு றேப்புபொத்துகானி
சத்தியம்சூடு- சம்பேதிநிட்சயம்
தப்பேதிகாது ஐயா
இட்ளுகாசெப்பேதி மஞ்சிதிகாதையா
யிங்ககொஞ்சமீவு தினமுலுசூடையா
பட்டுகொண்டேனிண்ட பாதலுவொச்சையா
பனிகிறானிமாட்டா லாடனுஒத்தையா
மனசுலோஅன் -தர்மநாஜு ங்கதா
சதுவிகேசெல்சு
இம்சவொச்சினிகானி யிட்லாசெப்பினவானி
யெட்டன்னாசம்பேதி நிட்சயமனு கொனி
புடமிலேனேனுண்டி பதிகினடு
பாபஞ்சுட்டுனனி செப்புதாவதியேமி
கொட்டேதிநிஜமே -னேனேமிவுண்டேதி
கூடசஸ்தானே
நன்னு நு பெண்ளாட சுகமேமிகண்டிவி
தஆபாப மெவரிக்கிசேரேதி
சின்னபடுசுனேனு யேடபோய்பதிகேதி
சதிவினவாரிகி பெள்ளாமாசெப்பேதி
சரிகாதுஐயா - வாடேபதுக்கிவுன்னி
சம்பவொத்தையா
இடுவண்டி பொய்ச்செப்பி யென்னாள்ளுவுண்டேதி
ஈஸ்வரா தயவுண்டே யெவரேமிசேஸ்துடு
தடிசினவாடிகி தன்றிசம்பேவாடு
தர்மமுசேசிதே பேறுபொகடுதாறும்
இதிதோஷமையா -ஏஜென்மமெத்தினா
யிம்ஸவொச்சையா
என்று மனைவி சொல்ல புருஷன் கோபங்கொண்டு
யின்னந்திரும்பாதென்று பெண்ணிமனை விநோக
அன்றுயெழுதினவன் அழிப்பானோவிதியோ
ஆறிட்டசாபமோ நேரிட்டத்தின்றோடே (விச்)
-------
நொண்டிச்சிந்து
ஐம்பது ரூபாயெடுத்தான் மனைவிக்கு ஆனமட்டும் தேறுதலை
மிகவுரைத்தான் யின்பமாய்க் கடையடுத்தான் இவனுக்கு
யிச்சையான பொருளெல்லா மிச்சமாய்க்கொண்டான்
வாசனைத் திர வியமும் நல்ல வளமான பூவகை தினுசுகளும்
காசிபணம் பாரா மலே யிவர் கருத்துக் கிசைந்தபடி
செலவழித்து வீட்டில்மனைவி யடுத்து சீக்கிரம்
வெந்நீரும் வைத்தவளை முழுகவைத்து தோட் டாபிஸ்
தோலையெடுத்து என்மேல் தூறுசொன்ன பாவியுயிர்
வாங்குவேனென்று மீறியேசீக்கிரம்நடந்து ரோல்கால்
மெல்லென வரும்பொழுது எதிர்பார்த்து தாறுமாறாய்ப்
போகாமலே பிஸ் தோலை தாராளமாயவாங்கி நேராய்விட்டான்
பொட்டென விழுந் துமடிந்தான் மச்சானும் தட்டுகெட்டுத்
தடுமாறி எட்டிநடந்தான் சட்டெனத் திரும்பியுஞ்சுட்டான்
அவனொரு கட்டடத்திற்குள் நுழைந்து கதவடைத்தான். (தந்தின தன)
--------
விருத்தம்.
ஒருகுறிதான் விட்டவுடன் பட்டுச்செத்தான்
யின்னொருவ னுக்குவுயிர் கெட்டியாலே
வருகுறியைத் தப்பித்து மறைந்துபோட்டான்
வஞ்சனைதான் மறுபடியுஞ் சுட்டோமானால்
தருமநெறி தனையுணர்ந்து வீடுசேர்ந்து
தன்னுடைய மனைவிமுகம் பார்த்துச்சொல்வான்
பருவசிறு பெண்ணணங்கே பயப்படாதே
பசியாறுவோமென்று பகர்ந்திட்டானே.
நொண்டிச்சிந்து,
இருவர்க்கும் அன்னம்பகர்ந்தான் ஓரிலையில் யிருவருமொ
குமன தாகப்புசித்தார் சிறந்த நகைகளெடுத்தான் மனைவியை
சித்திரப்பதுமைபோ லலங்கரித்தான் அரும்பு மலர்களெடுத்தான்
உன்னிதமாய் அனங்கன் ரதியைப்போல் துலங்கவைத்தான்
பட்டுப்புடவை கொடுத்தான் நல்ல படத்தின் உருவைப்போல
தொடுத்துவிட்டான் இணங்கியிரு பேரும்படுத்தார் அவர்கள்
இச்சை போலே அனுபோகம் ஒத்துமேசெய்தார் பின்னுமிரு
பேரும்படு த்தார் மனம்போல போகவனு போகமெல்லாம்
போசுவிடுத்தார். பூட்டிய நகையுடனே யின்னம் பெட்டியில்
நூறுரூபா கொட்டி யிருந்தேன் கட்டுமுட்டு வேட்டிகளெல்லாம்
எடுத்துவுன் தாய்வீ டுபோய்ச்சேர்ந்து பிழையுமென்றான் கேட்டாள்
சிறுமாது கண்க ளில் கலகலவெனநீர் சொரியவிட்டு புருஷனைப்
பிரிந்தபின்பு என் னுயிர் போனாலும் நல்லகதி
யில்லையேயென்றாள். (தந்தின தன)
விருத்தம்.
பணங்காசு நகைகொடுத்து பிழையுமென்றாய்
பாவிகா னப்படியே நடந்துவிட்டால்
யினமெல்லாம் சிலநாளே புகழ்ந்துகொள்வார்
யிதுவெல்லா மொழிந்திட்டால் தூறுசொல்வார்
மணவாளன் தனைவெறுத்த ப பாவிக்கெல்லாம்
மண்ணடைந்து போனாலும் மோட்சமில்லை
உனக்கென்று தலைகுனிந்த நாள் துடங்கி
உன்னுயிரு மென்னுயிரு மொன்றுதானே.
--------
கும்மி.
உன்னுடன் தானே மடிவேனென்று இந்த
உத்தமிசொன்ன மொழிகேட்டு,
சின்னவயதுநீ சாகாகேபெண்ணே சீச்சீயுன்தாய்
வீடு போடியென்றான். 1
போவதுயென்னுயிர் உன்னடிக்கேயின்னம்
போக்கிடவே றில்லை மன்னவரே,
ஆவது ஆகட்டும் என்னைமுன்னேசுட்டு அப் புறம்
உன்னுயிர் மாளுமென்றாள். 2
வார்த்தையொன்றுக்காக நீயிறந்துயென்னை
வையகமீதினில் விட்டுவிட்டால்,
பார்த்தவரென்னைப் பழித்திடுவாரப்போ பத்தி
னியென்றபேர் கிட்டாதையா. 3
சந்திரனில்லாப் புவிபோலும்நல்ல
தாமரையில்லாக் குளம் போலும்,
தந்தியில்லாத் தலம்போலேநான்
தாரிலிருந்தென்ன லாபமையா. 4
தீபமில்லாத மலைபோலும்ஒரு
தெய்வமில்லாத தலம்போ லும்,
கூபமில்லாத தலம்போலும்இந்த
குமரியிருந்தென்ன லாப பையா. 5
மங்கையுரைத்த மொழிகேட்டு அந்த
மன்னவன் புத்தி நிலை றுத்தி,
சிங்கமேயுன்னைப்போல் புத்திசாலியிந்த சீமையில்கிட்டு
மோ வென்றணைத்தான். 6
எத்தனையாக வுரைத்தாஅமிந்த
உத்தமிகூடத் துணிந்திடவே
சித்தந்திரும்பியே சீட்டெழுதிக்கர்னல்
சீமானுக்கப்போ வனுப் பிளிட்டு. 7
கடிதமெழுதியே கீழேவைத்துஅப்பா
கட்டினமாது முகம் பார்த்து,
முடிவானசேதி யுரைத்திடுவாய்பெண்ணே
மோடியினி மேலிருந்தாக்கால். 8
உரைப்பதிலொன்றுமே யில்லையையாநான்
உன்னுடன்கூட மடிவேனையா,
புருஷனிறந்தப் பிறகிருந்தாலெனக்குப் பொல்லா
தபேரு கிடைக்குமையா. 9
என்னென்றுசீட்டு யெழுதுவானாமிந்த
மன்னவன்கர்னல் து ரைபார்க்க,
என்னிடமாது யெனக்குமுடன்கட்டை யேறப்பெ
ரும்படை வேணுமென்றான். 10
இட்டநகையைக் கழட்டவேண்டாமையா
யென்னிடடிரசும் பிரிக்கவேண்டாம்,
சுட்டுயெரித்துநீ ராக்கவேண்டாமையா
சீரா ய்ச்சமாதியில் வையுமையா. 11
என்னமாய்புத்தி யுரைத்தாலுமந்த
சுன்னியுயிரை மதிக்கவி ல்லை,
பின்னும்பயப்பட சோதிக்கலாமென்று பெண்ணின்
புஜத்தி லே சுட்டானாம். 12
ஏதுக்கையாயென்னை சோதனை செய்கிறீர்
யிப்படிப்பாதைப் படுத்துகிறீர்,
வாதனைசெய்யாமல் சுட்டுவிட்டாலிந்தப் பாவியும்
மோட்ச மடைவேனென்றாள். 13
ஒப்பிமனைவி யுரைத்திடவே அவர்
உண்மைதானென்று மன ந்துணிந்து,
கைப்பிடியாயுதந் தானெடுத்துஅவர் கண்ணானமாதை
முன் சுட்டுவிட்டான். 14
முன்னாகப்பெண்டீரைச் சுட்டுவிட்டுயிவர்
தன்னுயிர்போகத் துணிவுகொண்டு,
அன்னைபோல்மாமி தனையழைத்துயென்னை
ஆதரவாகப் பிடியுமென்றான். 15
பட்டுவிழுந்து சுருண்டிருந்தாலப்போ
பார்க்குந் துரைகளுக் கொப்பரது,
தொட்டுப்பிடித்து நிறுத்திவிட்டப்புறம் தூரப்போ
வென்றிவர் கேட்டுக்கொண்டார். 16
காலையில்நாழிகை பத்துக்குள்ளே துரை
கர்னலும்மற்றப்பெ ரியவரும்,
சாலத்துயர்கொண்டு பார்த்தழுதுமெத்த சத்தியவா
னென்றே தழுவிக்கொண்டார். 17
சீட்டிலெழுதி யிருந்தபடிதானே
செய்யுமென்றேகர்னல் தா னுரைக்க,
நாட்டில்திரண்ட ஜெனத்திரளையப்போ னானென்ன
சொல்லுவேன் நேசர்களே. 18
குங்குமம்வாறி யிறைப்பவருமதைக்
கூவிமுகத்தி வணிபவரும்,
மங்கையிவளைப்போல் உத்தமியாரென்று
மகாஜெனம்சொ ல்லிப் புலம்பிடுமாம். 19
மன்னனும்மங்கை வருகையிலேசுத்தி
மகாஜெனக்கூட்டம் நெருங்கையிலே,
பொன்னுலகிந்திர னெண்ணிடலாமிந்தப்
போ தக்குபேரனைப் பின்னிடலாம். 20
அரும்பைவாறி யிறைத்திடுவார்சிலர்
ஐயையோவென்று ப தைத்திடுவார்,
யென்னவதிசயங் கலியுகத்திலே யிப்பேற்பட்டவ
னுண்டோவென்பார். 21
முன்னால் சென்று மகிழ்ந்திடுவார்சிலர்
பின்னால் துடர்ந்து பு கழ்ந்திடுவார்,
யென்னவதிசயங் கலியுகத்திலே யிப்பேற்பட்டவ
ளுண்டோயென்பார். 22
எத்தனைகால மிவர்கதைசொன்னாலும்
யின்னமுங்கேட்ச கடகலா மென்றிருக்கும்,
பத்தினிதன்களை தை நேர்த்தியாயாவரும் பார்த்து
மகிழுங்கள் புவியோரே. 23
உடன் கட்டையேறிய உத்தமிச்சிந்து, முற்றிற்று.
------------------
"2. கண்ணாட்டிச்சிந்து"
வெண்பா.
விண்ணாடரேத்தரிய வேலவன்மேல்வையமிசை
கண்ணாட்டிச்சிந்தாகக் கழறுதற்குத் — தண்ணாருஞ்
சோலைதிகழுந்தணிகை சுந்தரவிநாயகன்பொற்
றாளைவணங்கிச் சாற்றுவாம்
இந்துவழ்சுந்தரனார் தந்தவொய்யாரன்
கண்ணாட்டிதந்த வொய்யாரன்
செந்தணிகைவாழ்செங்கல்வ ராயகெம்பீரன்
கண்ணாட்டி ராயகெம்பீரன் — 1
பச்சைமயிலேறிவரு முச்சிதவேலன்
கண்ணாட்டி உச்சிதவேலன்
இச்சையுடன்போற்றுபவர்க் கீந்திடுஞ்சீலன்
கண்ணாட்டி யீந்திடுஞ்சீலன் — 2
கானக்குறவள்ளிமகிழ் கடம்பணிதோளன்
கண்ணாட்டி கடம்பணிதோளன்
வானவரிடர்தவிர்த்தே வயங்குந்தயாளன்
கண்ணாட்டி வயங்குந்தயாளன் — 3
தெய்வகுஞ்சரிமகிழுஞ் செங்கதிர்வேலன்
கண்ணாட்டி செங்கதிரவேலன்
சைவமறையோனெனவுஞ் சாற்றுஞ்சுசீலன்
கண்ணாட்டி சாற்றுஞ்சுசீலன் — 4
ஒன்னலர்வுரமெரித்தோ னுதவியபாலன்
கண்ணாட்டி உதவியபாலன்
தன்னிகரில்லாதகொடுந் தானவர்காலன்
கணனுட்டி தானவர்சாலன் — 5
ஆணிப்பொன்னேரத்தினமே லாசைக்கிளியே
கண்ணாட்டி ஆசைக்கிளியே
மாணிக்கமேமாங்குயிலே வார்த்தையைக்கேளடி
கண்ணாட்டி வார்த்தையைக்கேளடி — 6
சித்தர்முத்தர்பத்தர்பணி சேவற்கொடியோன்
கண்ணாட்டி சேவற்கொடியோன்
வெற்றிமயிலேறியேநம் வினைகள்தீர்ப்பவன்
கண்ணாட்டி வினைகள் தீர்ப்பவன் — 7
சஞ்சிதஞ்சேரஞ்சுகமே நங்கையேமானே
கண்ணாட்டி நங்கையேமானே
கொஞ்சுங்கிளியாளேநாமுங் கூடியேபோவோம்
கண்ணாட்டி கூடியேபோவோம் — 8
ரத்தினபுலாக்குகம்மல் முகத்தில்மின்னுதே
கண்ணாட்டி முகத்தில்மின்னுதே
முத்துமாலைமோகனமுங் கழுத்திற்றுன்னுதே
கண்ணாட்டி கழுத்திற்றுன்னுதே — 9
தங்கத்தினில்கல்லிழைத்த வங்கிதோடாவாம்
கண்ணாட்டி வங்கித்தோடாவாம்
சங்கையில்லாமல்கரத்தில் தகதகென்னுவே
கண்ணாட்டி தகதகென்னுதே — 10
பத்தரைமாற்றுதங்கத்தால் கைவளையலாம்
கண்ணாட்டி கைவளையலாம்
சித்திரவிசித்திரமொளிர் செம்பொன்மோதிரம்
கண்ணாட்டி செம்பொன்மோதிரம் — 11
கல்லிழைத்தஒட்டியாணம் இடையில்மின்னுதே/line>
கண்ணாட்டி இடையில்மின்னுதே
பல்லொளிகள் முகத்தைப்போலே பளபளென்குதே
கண்ணாட்டி பளபளென்குதே — 12
பாதமிரண்டில்சதங்கை கீதம்பாடுதே
கண்ணாட்டி கீதம்பாடுதே
சீதமதிமுகத்தைக்கண்டென் சித்தம்வாடுதே
கண்ணாட்டி பித்தம்வாடுதே — 13
சந்திரகாந்திசரிகைசேலை தளதளென்குதே
கண்ணாட்டி தளதளென்குதே
சுந்திரவடிவழகி சிந்தைசோருதே
கண்ணாட்டி சிந்தைசோருதே — 14
நெத்தியில்திலர்தபொட்டு நிகங்நிகென்னுதே
கண்ணாட்டி நிகங்நிகென்னுதே
குத்தினிரவிக்கையது மெத்தஜொலிக்குதே
கண்ணாட்டி மெத்தஜொலிக்குதே — 15
மல்லிகைமுல்லைமுடிக்கு மாங்குயிலாளே
கண்ணாட்டி மாங்குயிலாளே
வல்லிலேநம்வல்வினைகள் தீர்ந்திடும்பாராய்
கண்ணாட்டி தீர்ந்திடும்பாராய் — 16
சதுர்மறைபுகலுமிந்த சரவணப்பொய்கை
கண்ணாட்டி சரவணப்பொய்கை
விதியின்படியேயதனில் மூழ்குவோம்வாராய்
கண்ணாட்டி மூழ்குவோம்வாறாய் — 17
வேலவனைச்சேவைசெய்ய வினைகள்தீருமே
கண்ணாட்டி வினைகள்தீருமே
பாலசுப்ரமணியதேவன் பதங்கள்வாய்க்குமே
கண்ணாட்டிபதங்கள் வாய்க்குமே — 18
அணியணியாயிருக்குமன்ன சத்திரம்பாறாப்
கண்ணாட்டி சத்திரம்பாறாய்
பணிமணிகள்விற்குமிந்த பக்குவம்பாறாப்
கண்ணாட்டி பக்குவம்பாராய் — 19
வேதியர்கள்வேள்விசெய்புஞ் சாலைகள்பாராய்
கண்ணாட்டி சாலைகள்பாராய்
சீதமதர்பூத்தொளிருஞ் சோலைகள்பாராய்
கண்ணாட்டி சோலைகள்பாராய் — 20
ஆறுமுகம்பவனிவரும் அற்புதம்பாராய்
கண்ணாட்டி அற்புதம்பாறாய்
வீறுசேர்முரசதிரும் விந்தையைத்தேறாய்
கண்ணாட்டி விந்தையைத்தேறாய் —21
அடியவர்கண்கூட்டமதை அன்னமேபாறாப்
கண்ணாட்டி அன்னமேபாறாய்
வடிவழகிகடைகளிதோ வயங்குதுசீராய்
கண்ணாட்டி வயங்குதுசீறாய் — 22
மனதின்படிவேணகெல்லாம் வாங்குவோம்வாறாய்
கண்ணாட்டி வாங்குவோம்வாறாய்
கனமுலவுங்கருங்குயிலே கவலையேன்கூறாய்
கண்ணாட்டி கவலையேன்கூறாய் — 23
கார்த்திகையின்பெருமையதை கருதப்போகுமோ
கண்ணாட்டி கருதப்போகுமோ
நாற்றிசையோர்போற்றிசெய்யும் நன்கதைப்பாறாய்
கண்ணாட்டி நன்கதைப்பாறாய — 24
அன்பர்கள்துதித்திரங்கும் ஆனந்தம்பாறாய்
கண்ணாட்டி ஆனந்தம்பாறாய்
இன்மயிலேமனைக்கு ஏகுவோம்வாறாய்
கண்ணாட்டி ஏகுவோம்வாறாய் — 25
பக்தியுடன்கங்காதரன் பாடுந்தமிழுக்கு
கண்ணாட்டி பாடுந்தமிழுக்கு
சித்தமகிழ்ந்தேயருளுஞ் செங்கல்வராயன்
கண்ணாட்டி செங்கல்வராயன் — 26
மாமலர்ப்பதங்கள்வாழி மணமறைவாழி
கண்ணாட்டி மணமரை[றை]வாழ்
பூமியிலிதைப்பகரும் புண்ணியர்வாழி
கண்ணாட்டி புண்ணியர்வாழி 27
கண்ணாட்டிச்சிந்து முற்றிற்று.
---------------------
திருப்போரூர் முருகர் சிந்து
சுந்திரமுருகர் சிந்தெனும்பாட்டை
விந்தையதாயுரைக்க — விநாயகா
உன்னடியுந்துணையே — 1
திருத்தனி[ணி]முருகா திருமகன்மருகா
வருத்தஞ்செய்யாமலிப்போ — முருகையா
வந்தெனையாளுமையா — 2
தணிகாசலவாசா தெய்வானைநேசா
பணியுமடியேனிடர் — முருகையா
போக்கியெனையாளுமையா — 3
எட்டிகுடிவேலா உமையவல்லிபாலா
சிட்டர்தொழுஞ்சீலா — முருகையா
சிறியேனை வந்தாளுமையா — 4
செந்திற்பதியானே சேவற்கொடியானே
இந்திரர்போற்றும்வேல் — முருகையா
எளியேனைக்காருமையா — 5
௫
சிங்காரவேலா சூரர்கள்காலா
கங்காதரன்பாலா — முருகையா
கருணை புரிந்தாளுமையா — 6
பழனிமலையாண்டி பாதமதைவேண்டி
தொண்டனடியோனிடர் — முருகையா
தொல்வினையைத் தீருமையா — 7
திருப்போரூரானே திருச்செந்திலூரானே
வருத்தப்படுவோனை — முருகையா
வந்தாண்டுகொள்ளுமையா — 8
சண்முகதேவா சாஹித்யபாவா
உன்மனமுமிறங்கி — முருகையா
உகந்தெனையாளுமையா — 9
கந்தாகுகனே கதிர்வேல்முருகா
எந்தாயிதுவேதருணம் — முருகையா
இணையடி தந்தாளுமையா — 10
ஆறுமுகநாதா அடியேன்மேல்வாதா
வேறு முகம்பாராமல் — முருகையா
வந்தெனையாளுமையா — 11
உன்பதந்தானே உருதியாய்நானே
எண்ணித்துதிப்பதற்கு — முருகையா
எண்ணிமனந்தாளுமையா — 12
எந்தன்மீதே னித்தனைவாது
சந்தஞ்செய்யாது — முருகையா
சற்றுமுகம்பாருமையா —13
உனையன்றிவேறே தெய்வமுண்டோகூறு
எனைவந்தாளுகற்கே — முருகையா
இதுசமயம்பாருமையா — 14
உந்தனைத்தேடி உருகினேன்வாடி
வந்தனையேநாடி — முருகையா
வரமருள்கோடியையா — 15
கல்விப்பொருளால் கருத்தில்துதிக்கில்
செல்வப்பொருளளித்து — முருகையா
செல்வனையாளுமையா — 16
பாவியிலும்பாவி பாரிலுனைத்தாவி
கூவிக்கதறுமுந்தன் — முருகையா
குழவியெனையாளுமையா — 17
பவளச்செவ்வாயா பார்புகழ்தூயா
மூவர்கள்சகாயா — முருகையா
மூத்திதந்தாளுமையா — 18
மாமலர்ப்பாதா மறையவர்போதா
தாமதஞ்செய்யாமல் — முருகையா
தமியேனைக்காருமையா — 19
புள்ளிமயிலேறும் வள்ளிமணவாளா
வள்ளமுகவழகா — முருகையா
வடியேனைக்காருமையா — 20
சுரர்துதிநாதா நிரைததுபோதா
மருமலர்பாதாவுந்தன் — முருகையா
மனமகிழ்ந்தெனையாளையா — 21
அல்லும்பகலும் அறுபதுநாழிகை
அல்லல்படுமெனையும் — முருகையா
ஆதரித்தாளுமையா — 22
விளங்கியவேதம் விண்ணோர்கணிதம்
களங்கமறபோற்றிப்பதம் — முருகையா
காணநான்வாருமையா —23
மதனவிநோதா மயமலைநாதா
நிதமலர்கொண்டுபணி — முருகையா
நேயனையாளுமையா — 24
நித்தமுனைத்தேடி யேத்திபதம்பாடி
நத்துகின்றவடியேனை — முருகையா
நீதியுடனாளுமையா — 25
ஒதுபவர்தங்கள் உள்ளத்திருக்கும்
வேதப்பொருளேயெந்தன் — முருகையா
வினைதீரப்பாருமையா — 26
அல்லிடுநீரா ஆறுமுகத்தீரா
துள்ளிமயிலேறிவந்தே — முருகையா
தொண்டனைக்காருமையா — 27
அஞ்ஞானந்தன்னை அகலும்படிக்குன்னை
மெஞ்ஞானத்தாயற்றுக்கும் — முருகையா
மைந்தனையாளுமையா — 28
வேதவிநோதா வேந்தர்கணீதா
நாதாவுன்பாதமதை — முருகையா
நம்பினதினாலெனையாளுமையா —29
கன்னியரைக்கண்டு காமன்கணைக்கொண்டு
உன்னிடபாதம்மறந்து — முருகையா
உன்னருள்தாருமையா — 30
மங்கையரைப்பாராமல் மயங்கித்திரியாமல்
தங்கத்திருவடிகள் — முருகையா
தந்தாண்டுகொள்ளுமையா — 31
ஐம்புலனாலே அன்பாயுன்மேலே
தென்பாகயான்பாட — முருகையா
துன்பமதைத் தீருமையா — 32
ஆனந்தமாக அடியேனுக்காக
தானந்தமாகவந்து — முருகையா
தமியேனைக்காருமையா — 33
பாலன்படுந்துயரம் பாரெல்லாம்புகழும்
கோலப்பதந்தந்து — முருகையா
குறைவின்றியாளுமையா — 34
எலிந்துமெலியாமல் நாடோறும்வாடாமல்
கலியனும்வாராமல் — முருகையா
கார்ப்பதுன்பாரமையா — 35
சிறியவன்யானும் செய்தபிழைதானும்
கருணையுடன்பொருத்து — முருகையா
கனிவோடுரட்சியுமையா — 36
வஞ்சகந்தீர வடியேன்கடைத்தேற
கொஞ்சங்கடைக்கண்வைத்து — முருகையா
கிருபைபுரிந்தாளுமையா — 37
சம்சாரந்தன்னில் சார்ந்துலகில்
இம்சைப்படுமெனையும் — முருகையா
ஈடேறப்பாருமையா — 38
அன்னைதந்தைநீ ஆதரிப்பாயே
உன்னையன்றிவேறுதுணை — முருகையா
ஒருவருமில்லையையா — 39
ப[யம்]த்தியாயுன்னை போற்றவுமென்னை
சத்தியமாகவுந்தன் — முருகையா
சித்தம்வைத்தாளுமையா — 40
பொன்னுலகத்தில் புரந்தானைக்காத்ததுபோல்
என்னையுமேகாத்துன் — முருகையா
இன்பம்வைத்தாளுமையா — 41
நிலமையாயுன்னை நினைத்தோர்கடம்மை
உலகிலலையாமல் — முருகையா
உறுதியுடனாளுமையா — 42
கோடிகொடிபிடிக்க குன்றுபோல்வந்துநீ
ஆபத்தைதீர்த்திடுவாய் — முருகையா
அடியேனைக்காருமையா — 43
சத்திவடிவேலெடுத்து சங்கரனார்தன்மகனே
பக்தியுடன்றொழுதேன் — முருகையா
பட்சம்வைத்துக்காருமையா — 44
வள்ளிமணவாளா வான்[வார்]மயில்வீரா
புள்ளிமயிலேறிவரும் — முருகையா
என்னைஅன்புடன்காருமையா — 45
பாசமுடனாடும் பக்தர்பவமோடும்
தலம்துதிகந்தப்பன்பாடும் — முருகையா
தமிழ்நீயருள்தாருமையா — 46
முருகர்சிந்து முற்றிற்று.
-------------------
This file was last updated on 25 Feb. 2026
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)