சிந்து பிரபந்தங்கள் மூன்று:
1. கண்டனூர் ஸ்ரீமீனாட்சி சுந்தரேசுவரர் கப்பற் சிந்து.
2. "நந்தனவருட சிந்து" & 3. "அகடவிகட கலியாணச் சிந்து"
1. kaNTanUr sri mInATAci cuntarEsvarar kappaR cintu, 2. nantana varuTac cintu
& 3. akaTavikaTa kaliyANac cintu
In Tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Roja Muthiah Research Library (RMRL), Chennai for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2025.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
சிந்து பிரபந்தங்கள் மூன்று: 1. கண்டனூர் ஸ்ரீமீனாட்சி சுந்தரேசுவரர் கப்பற் சிந்து.
2. "நந்தனவருட சிந்து" & 3. "அகடவிகட கலியாணச் சிந்து"
Source:
1. கண்டனூர் ஸ்ரீமீனாட்சி சுந்தரேசுவரர் கப்பற் சிந்து.
இது பெரி. கண. பழ. விலாசத்தார் விருப்பத்தின்படி
கண்டனூர், நா. பெ.நா. மு. முத்துராமையா அவர்களாலியற்றப்பெற்றது.
தேவகோட்டை ”எஸ்டேட் பிரஸில்" பதிப்பிக்கப் பெற்றது.
இரண்டாம் பதிப்பு.
1920.
2. நந்தனவருட சிந்து.
இஃது, சிறுமணவூர்,முனிசாமி முதலியாரவர்களால் இயற்றப்பட்டு,
தமதுசென்னை சூளை, சிவகாமிவிலாச அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது.
1905.
3. செல்வப்பிள்ளை அகடவிகட கலியாணச் சிந்து.
சிறுமணவூர் முனிசாமி முதலியாரவர்களால் இயற்றப்பட்டு
சென்னை-இட்டா பார்த்தசாரதி நாயுடு அவர்களாற்றமது
ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது.
1907.
-------------
கண்டனூர் முத்துராமையா இயற்றிய
கண்டனூர் ஸ்ரீமீனாட்சி சுந்தரேசுவரர் கப்பற் சிந்து.
சிவமயம்.
சாற்றுக்கவி.
வேம்பத்தூர் சங்க வித்துவான்களிலொருவராகிய
சா. ஆ. சௌந்தரபாரதியார் இயற்றியது .
சீரிலு யர்லாங் கண்டனூர்
சிறக்க வம ந் சுந் தரமீனாள்
பேரிற்கப் பற்பாட்டுச் செய்தான்
பெருமை பெற்றத னவணிகத்
தாரிலுயர் பிரமவித் தியாபர
சாரண மாளுசபையை யமைத்த
தேர்தலுள் ளமுத்திராமைய
சீமானே யெங்கடவ பூமானே.
------------
கண்டனூர் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுரர் கப்பற் சிந்து.
ஏலேலோ தத்தய்யா கப்பல் ஏலேலோ
சீர்வளருந்தனவணிகர் - திகழுஞ்
சிறந்த கண்டனூரதனில்
ஏர்வளர்மீனாட்சி சுந்த - ரேசற்
கிசைந்த கப்பற்றமிழுரைத்த
(முடுகு)
அளவிலாச்சுந்தானம்பிகையுகந்தோ,
னன்பருக்கருள் புரியுமானந்தவடிவோன்,
புளகமாங்கா வாரணத்துமுகயோகன்,
பொன்னுலகோர்முதற் போற்றும் வைபோகன்,
வளமானவல்லபையை யிடம் வைத்த மோகன்,
வாசாமகோசாமாகின்ற சொரூபன்,
உளதானகிரிகைக்கு முன்னுற வணங்கு
முத்தமர்க்கருள் புரியுமைங்கான் றுணையே. (ஏலேலோ) (1)
தேசமெல்லாம் புகழுங்கண்ட - னூரித்
செல்வசுந்தரேசர் மீனாள்
வாசமுள்ள கப்பலுமே - மிக்க
மகமேரு போல் விளங்கும்.
(முடுகு)
வேதமெனுங்கடலிலே செல்லுகின்றதான,
விஸ்தாரமாங்கப்பலாகமங்களாகும்,
போதமாம் புராணங்களேராவுமாகும்,
பொற்புமிகு சாஸ்திரக தட்டுக்களாகும்,
ஏதமில்லாமிருதி பாய்மராமதாகு
மெழிலான கீதையுஞ்சுக்கானிதாகு,
நாதனாஞ்சற் குருமாலியவானாய்,
நன்மையாம் லாதனைப்பாய்க் கட்டியோட்ட. (ஏலேலோ கப்பல்) (2)
சோலைமிகச்சூழுங்கண்ட - னூரிற்
சந்தாமீனாம்பிகையாள்
சாலமிகுங்கப்பலுக்குத் -- தக்க
சாதுக்களேயெசமானாம்.
(முடுகு)
தூலசூக்குமமான காரணதேகஞ்,
சொந்த மாயபிமானம் வைத்து மேவிடயஞ்
சாலவே சென்றுமிகுராகத்துவேஷஞ்,
சலியாத காமமொடு குரோத லோபங்கள்.
ஏலமுளமோகம தமச்சரம் சூசை,
பரிசைடம்பமுடனதற்பமாங்காரம்,
கோல முளதப்புவஞ்சனை சோரமிடும்பை,
கொலைமுதற்பாவிகளை யேற்றாமல் விட்டு, (எலேலோ) (3)
மங்கள மாய்மகிழுங்கண்ட - னூரில்
வள்ளல் சுந்தரேசர்மீனாள்
துங்கமதாங்கப்பலுக்கு - ரிஷயத்
துடுக்கான கொடிகட்டி.
(முடுகு)
தாரமர் விவேகனொடுநிருபகன் பொறுமை,
சந்தோட னொடு சமன்றமன்விராகன்றான்,
ஆர் மருவுமியமாதியெண்மர் சாத்துவனும்,
அமுத சீலன் சாந்தி விசாரசந்தோடன்,
ஏர்மருமயித்திரி முதிதையொடுயேட்சை ,
யியல்பான கருணையுள் முத்தர்களையேற்றி,
ஓர்மறுவிலாதபரி பூரணவூருக் குடனே
சென்றிரங்கி மிகவானந்த முற்றார். (எலேலோ) (4)
தனவணிகர் சூழுங்கண் -- னூரில்
சம்புசுந்தரேசாமீனாள்
வனமுள கல்யாணமது -- நடத்த
மாணிக்கக்கப்பலுமே.
(முடுகு)
வங்காளம் வெம்பாயிபட்டண மிலங்கை
மாக்கா போய்வர மாதமூன்றாகும்,
கங்கை போற் செலமதைப் பீப்பாயடைத்துக்,
கணக்குடனாசி முதற்சாமான் சமைத்துச் ,
சிங்காரமானதோ பாய்தலையெடுத்துத்,
திடமான கயிறுகளைச் செம் மையாயிறுக்கி,
எங்குமீனக்கொடியிலங்கவேகட்டி
பிதமானமார்க்கத்திற் சுக்கானைத் திருப்பி,
அங்க முளமானகப்பித்தான்களைய தட்டி,
யன்புடன் மீனா ட்சியையகத்தினிற்கொண்டாடித்,
தங்காமலோங் கிவருமலைகளைப்பார்த்து,
தண்ணீரைரெட்டைக் குழல்வேம் பாயாற்றட்டிப்,
பொங்கியேகடலூங் கொள்வதைப் பார்த்துப்,
பொலிவான விடமதில் நங்கூரத்தைப் போட்டுத்,
துங்கமுள சவுக்காவைப் பார்த்துமேயோட்டுச்,
சூழவேதோணிசுருப்போ டுடன் கூட்டு,
மங்காத சனிக்கண்ணாடியைப்பார் த்து,
மட்டிலாப்பீரங்கி வேட்டுகளைத் தீர்த்துச்
சங்கமாய்ப் பாறைமலையாதியைச் சார்ந்து,
தட்டா மல் மகாமீன்முட்டாமலோட்டு,
இங்கொருமூலை யிற்றோனுதொருகப்பல் ,
எக்காமலதை நோக்கிச் சுக்கானைத் திருப்பு,
பிங்கலந்திசைதனிற்பிசகாமற் பார்த்துப்,
பெருக்கான தண்ணீரிற் சுருக்காக விட்டு,
வாங்காளம் துறைமுகம் வந்திடப்பாரு
வழியாயிரங்கிமிகச்சாமான்களை வாங்கு (ஏலேலோ) (5)
கழனிமிகச்சூழுங்கண்ட - னூரில்
கன்னிமீனாட்சி சொக்கர்
வழியான கப்பலுக்குத் தெளிவாய்
வாங்குகின்றரத்னவகை
(முடுகு)
இந்திரன்றன்னால் வலா சூரன் முன்னா
ளிறந் இடவவனுடலெலும் பெலாம் பண்டு,
தந்திரவாத் தினாலரத்தினமுமாகிச்,
சமைந்ததாவோடேலத் திலுண்டான,
சுந்தரமாய்த்தோத்யமிவையெலாம் பார்க்கச் ,
சுடரொளிவிட்டிலங்குதநத்தமேயாக,
சந்திரன் போல் விளங்குமுத்துத்தானிதுவோ,
தகைமையாந் தூத்துக்குடிச் சமுத்திரத்திலுண்டாம்,
அந்தமதாமிந்தவயிரமோமிகள்,
மதிகமாஞ்சிங்கப் பூர்பினாங்கிலமரிக்கா,
சொந்தமுள மாணிக்கமாகு மிதுமெத்த,
துலங்கிடும் ரெங்கோன் அவாவுசீனத்தில்,
தந்திரமாய்க்கிடைத்ததாமிந்தக் கோமே,
தகமது மகப்படாத்தரணியிற் சுருக்காய்,
வந்ததிந் தப்பாவளமது தானுமேயெங்கும்,
வாங்கவுமகப் படாவங்காளமன்றி,
நந்தமதாகும் வைடூரியமெங் கும்,
நாளுக்குநாள் விலை கூடவேயாகும்,
புந்தியி லுணர்ந்திடப் போகுமோவிந்தப்,
புட்பராகந்தா னுங்கிடைத்தது மாத்திரஞ் ,
சிந்தையில் நினையாது வந்ததிந்த நிலம்,
தேவலோகத்தி லுண்டானது போற் சொல்வர்,
பந்தமாமாகதப் பச்சையிதன் பெருமை,
பார்வதற்குச் சேடனும் போதாதுபார்த் தால்,
எந்தவுலகத்தினுங்கிடையாதி தெல்லா,
மிப் போது கிடைத்தது மீனாட்சி கிருபை. (ஏலே) (6)
கண்டனூருவந்திருக்கு - மெங்கள்
கன்னிமீனாட்சி சுந்தரர்
தொண்டர் புகழ்கப்பலிலே - வருஞ்
சுயமான சரக்குவகை.
(முடுகு)
சுக்குதிப்பிலி மிளகு வெங்காயம் பூண்டு,
சுயமான வெந்தயங் கடுகுகற்பூரம்,
துவரான கடுக்காய் சதகுப்பையோமம்,
சொல்லொணாப் பெருங்காயம் அபினியொடுகஞ்சா,
மிக்கநல்மிளகாய் கல்லும் புடன்மிளகு,
வெட்பாலையரிசி சிறுநாகப்பூ ஏலம்,
மேலான சாதிக்காய் சாதிப்பத்திரியும்,
வேகமுளகிராம்புடன் வாய்விளங்கமதுவுந்,
தக்கஅக்ரகாரம் அதிவிடையமஞ்சள்,
சடாமஞ்சிலவங்கமொடு தாளிசபத்திரியும்,
தக்கோலம்வலம்புரிக் காய்கொத்தமல்லி,
தன்மையுள் சீரகமரத்தையொடு கூகை,
பாகமுளகோதுமை கொத்தமலியரிசி ,
பகரொணாச் சவ்வரிசிபச்சரிசி மஞ்சள்,
பண்பானபேரீச்சம்பழ மோடு முந்திரிப்,
பழமெலாம் வந்துமே பரிவுட னிறங்க. (ஏலேலோ) (7)
மன்னுலகோர்போற்றுங்கண்ட -னூரில்
மகிழுஞ்சுந்தரேசர்மீனாள்
தன்னய மாங்கப்பலிலே - வந்த
நயமான பட்டுகளாம்.
முந்து
அணியான மேகலை காஞ்சி கும்பகோணம்,
அழுத்தமுள நாகமடிப் பட்டுடன் மதுரைத்,
திணியான பொற்சரிகைச் சேலையொடுவர்னச்,
சேலைகளுஞ் செல்வமீனாட்சிக்குக் கொடுக்கத்
துணிவான சகமிரட்டி வேலுதார்ப்பட்டுத்,
தூய்தானசம்பந்திக்காகுமிதுகட்டு,
பணியாகப் பாடுமிந்தப் பெண்களுக்குயர்ந்த,
பஞ்சவர்னச் சேலைபார்த்து மேயுவப்பக்,
கணிதமுளநாத்திமார்க்காகுமிந்தருத்ர,
கண்டிச்சேலையையெடுத்துக் கட்டுடன் பத்திரம்,
மணியான மாமிமார்க்காகுமிந்தச் சிந்தா,
மணிச்சேலைவாங்கியே வகையுடன் சேர்க்கத்
தணிவிலாக்கோலமிடுஞ் சாந்தி மாரணியத்,
தக்கதிதுசவுக்காளிகடலைப்பட்டாணி,
குணியானபாங்கியர்க்கு வங்கார் கண்டி,
குணமானசேடியர்க்குச் சொர்னமுகிச் சேலை,
பிணியானதை நீக்கு விழிமிரட்டிச் சேலை,
பேதைவெள்ளாட்டிக்குக் கொடுக்கலாம் பேணு,
இணையிலாச் சிட்டர்களுக்காகுமிந்த சால்வை,
யெங்குமேயகப்படா வங்காளமன்றி,
மணவரைக்காகுமிந்தக்குண்டஞ்சிச் சேலை,
வாங்கிவைத்தபோது கொடுக்கலாநேர்த்தி
பிணையாகாவையொடுதாம்பரங்கள்,
பெரியோகட்காகுமிது பேணியே கொடுக்கத்,
துணையான மன்னர்க்குக் கொடுக்கத்தரனுயர்ந்த,
துப்பட்டா கெண்டைச்சீர் தப்பாமலிருக்க,
மணியானபட்டணஞ்சேல நாமக்கல்,
வங்காளங் கும்பகோணத்திலுள தான,
கனிசமுள புடவை யிது சுந்தரர் மீனாட்சி,
கல்யாணமுன்னிட்டு வாங்கி வந்ததுவே. (ஏலேலோ ) (8)
மேலானோர் போற்றுங்கண்ட- னூரில்
விமலர்சுந்தரேசர்மீனாள்
மாலானகப்பலிலே -- யொழுங்காய்
மன்னர் வரும் வரிசைகளாம்.
(முத்து)
அன்புமிகு அங்கமருணம்முடனவந்தி,
ஆந்திரமிலாடமிகுயவன மொட்டியமுங்,
கன்னடங் கன்னாடம் காசங்காஷ்மீரங்,
காந்தாரங்காம்போ சங்கருசமுடன் கலிங்கங்,
கொன்னுதவுகோசலங் குருகுருடகஞ்சேர் ,
குந்தளங்குருவிந்தங்கூர்ச் சாங்கொல்லந்,
தென்னவன்கிராடமொடுசால்வஞ் சவ்வீரஞ்,
சிங்களஞ்சகஞ்சிந்து சீன கொங்கணமும்
சொன்னதயமாஞ்சோழ சோனகந் துளுவஞ்.
சூரசேனந் திராவிடம் தெங்கணமும்,
நின்மலமதானதோர் நிடதகேகயமும்,
நேர்பாளபாஞ்சாலபப்பர பல்லவமும்,
மன்னு போடம் புலிந்தமகதமொடுமச்சம்,
மாளவமராடமொடுமலையாளம் வங்கம்,
நன்னயமதாயுகந்தவங்காளம் விதர்ப்பம்,
நாட்டரசான் பத்தாறார் பேரும் வந்தனரே. (ஏலேலோ) (9)
சுந்தரமாய் விளங்குங்கண்ட - னூரில்
சுத்தானாம்பிகையாள்
அந்தமுளகப்பலிலே - வந்த
அபிஷேகச்சாமானாம்.
(முருகு)
சந்தனங்குங்குமங்காபகஸ்தூரி,
தகைமையாம் பச்சக்கற்பூரஞ்சவ்வாது ,
அந்தமுளகோரேசனை கொச்சிமஞ்சள் ,
அருமையுளசெந்தூரம்வங்காளம்பச்சை,
சிந்துதேசாம்ப்ராணித்தயிலஞ்சம்பங்கி,
சிறப்பான வெப்பாயிப் பன்னீரும் புழுகும்,
கந்தமுள வெட்டிவேர்விலாமிச்சை வேருங்
கணக்கிலமையாதலிணக்கமாய்வைக்க, (எலேலோ ) (10)
கல்விமிகவிளங்குங்கண்ட - னூரில்
கவுரிமீனாட்சி சுந்தரர்
செல்வமது வளர்ந்தேறக் - கருணை
சிறக்குங்கப்பற் பாட்டிதுவே.
(முடுகு)
வேதப்பிராமணர்கள் மிகவோங்கவாழி
வெண்குடையரசர்தஞ்செங்கோலும் வாழி
சீதமுளவணிகருஞ்சூத்திரரும்வாழி
நிலையான அறம்பொருளின்பமும்வாழி
சாதகமனதான மீனாட்சிசுந்தரேர்
தகைமையுள்கல்யாணமிக நடக்கவாழி
நாத முன் வேதாந்தசாஸ்திரமும் வழி
நாகலிங்க தேசிகனால் தோலும் வாழி (ஏலேலோ)
கப்பற் சிந்து முத்தித்து
This file was last updated on 11 October 2025.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)