pm logo

சிந்து பிரபந்தங்கள் மூன்று:
காலேஜிபத்தியச்சிந்து, தென்னிந்தியா
ரெயில்வே சிந்து & களியாட்ட மகத்துவச்சிந்து"


1. kAllegipattiyac cintu; 2. tennitiya railway cintu &
3. kaLiyATTa makattuvac cintu
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil virtual Academy & Roja Muthiah Research Library RMRL, Chennai for providing a scanned PDF of these works.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2025.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

சிந்து பிரபந்தங்கள் மூன்று: காலேஜிபத்தியச்சிந்து,
தென்னிந்தியா ரெயில்வே சிந்து & களியாட்ட மகத்துவச்சிந்து"

Source:
1. சென்னை பீபில்ஸ்பார்க் காலேஜி பத்யசிந்து.
இவை - சிறுமணவூர் முனிசாமிமுதலியாரா லியற்றப்பட்டு
ஆதிபுரி இரத்தினவேலு முதலியாரது
வாணீவிலாசஅச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது.
1903.
2. தென்னிந்தியாறெயில்வே என்னும் "கர்னாடகப் புகைவண்டியின் சிந்து"
சுத்தமான பதிப்பு.
நாகப்பட்டணம், சுப்பராய முதலியார் குமாரர், தங்கவேலு முதலியார் அவர்களது
தனியாம்பாள் அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது.
1905
3. நாட்டரசங்கோட்டையென்னும் பனசை நகரின்கண் வீற்றிருந் தருளும்
ஸ்ரீ கண்ணுடை யம்மன்பேரில் களியாட்ட மகத்துவச் சிந்து.
இஃது சிவகங்கை சமஸ்தான வித்துவான் வில்லியப்பிள்ளை யவர்கள் குமாரர்
V. காசிவிஸ்வநாத பிள்ளையவர்க ளாலியற்றப்பெற்று
சிவகங்கை ஜவுனி வியாபாரம் வெ. முத்துச்சாமி சேர்வைகார ரவர்களால்
மதுரை வடக்குமாசி வீதி ஸ்ரீ ராமச்சந்திர விலாச அச்சியந்திரசாலையிற்
பதிப்பிக்கப்பெற்றது.
1908.
இதன் விலை அணா 1.
-----------------

1. சிறுமணவூர் முனிசாமி முதலியார் எழுதிய
சென்னை பீபில்ஸ் பார்க் பான்ரவுண்டு காலேஜி பத்யசிந்து

நேரிசை வெண்பா,

விக்டோரிதோட்டத்தின் வேடிக்கைப்பார்க்கப் போய்
அக்கினியால்மாண்ட வதிசயத்தைப் பக்குவமாய்
பாடுதற்குமுன்கடவுள் பாமசிவனாரளித்தக்
கோடானை மாமுகனைக் கோர்.

தங்கச்சிந்து.

சீர்மருவுஞ்சென்னைநகர் செங்காங்கடைக்கடுத்த முல்லா சாயபுவீதி
மொய்குழலே வீற்றிருக்கும் காரிழையே நாமிருவர் கைகோர்த்து யிப்பொழுது
காலேஜிவேடிக்கை கனமாகப் பார்க்கலாம் குத்தினிசேலையும் குணமான
பஞ்சவர்னப் பட்டுரவிக்கையும் பத்தரைமாற்றுத்தங்கம் பசும்பொன்னால்
பூஷணமும் போட்டுவலங்கரித்து,

புறப்பட்டுவருவாயடி மயில் தங்கமே
பொழுதுமிக வாகுதிப்பேசு..

புஷ்பச்சிந்து.

சம்பங்கியெண்ணைகொண்டு தலைதனைத்தான்வாரி சீவிசிணுக் கறுத்து
சிமிள்போலேகொண்டையிட்டு கொண்டைக்கு யேத்ததொரு குணமுள்ள
பூவுகளாம் மல்லிகை முல்லை மன்மதபாணமும் மருவமருக்கொழுந்து
மனோரஞ்சிதங்களும் கோங்கு மந்தாரைகளும் குணமுள்ள சண்பகமும்
அவ்வலரி செவ்வலரி அழகான செந்தாழை பட்டுரோஜா மலரும்' பாதிரி
கொன்றை யுடன் நந்தியாவட்டையும் நலமுள்ளசாமந்தி குருவேர் தவனமும்
குணமுள்ள இருவாட்சி சம்பங்கி பூவுகளும் சாந்ததொரு பவழமல்லி
மயில்கொண்ணை சரக்கொண்ணை மட்டுமி தங்களி ல்லா
இப்படிக்கொத்தபுஷ்பம் இயல்பாகத்தானெடுத்து

அன்புடன் முடித்துக்கொண்டு மயில் தங்கமே
ஆபரணம் பூட்டலுற்றாள்.

நகைகளின்சிந்து.

ஜடைபில்லை ஜடைகுப்பி சடைகுச்சிசாமானும் சந்திரபிறை சூரியபிறை
தாழ்ந்திருக்கும் முகஜம்பல் செற்றிக்குச் சுட்டிகளும் நேரானகாதுக்கு
சும்மல் ஜிமிக்கைகளும் கத்திரிபாவல்களும் அன்னகொப்பு முருவுகளும்
அழகானமயிர்மாட்டி கழுத்திலே கண்டசரம் கனத்ததோர் ரத்னகெண்டி
முத்துகெண்டி மார்பதக்கம் மோராமாலை தன்னுடனும் கல்லிழைத்த
ரெட்ட குண்டு கைப்பிடியமுந்நூலும் பதக்கங்கள் டீகாவும் பாரைவிலைமதிக்கும்
இரண்டு நல்வகைகளுக்கு இசைந்திருக்கும் வங்கியும் காப்புகொலுசுகளும்
கைவிரல்மோதிரம் இடுப்பினில் ஒட்டியாணம் என்னவிலைபெருமோ மதிப்பு
சொல்லக்கூடாதும் மங்கையின் கால்களுக்கு பாடகந்தண்டையும் பணைத்த
சுருள் கொலுசும் பாதத்தின் விரல்களுக்கு பதித்திருக்கும் காலாழிக லகலென்று
சப்திக்கும் கனமானமெட்டுகளும் மேலுக்கு உத்திரசஞ்சம் மினுக்காகத்
தாழிபோட்டு இன்னமென்ன பூஷணங்க ளிசைவாகத் தான்தரித்து கீல்காப்பு
பாவாடை கீர்த்திபெறும் பொக்மலும் சல்லாவுந்தானுடுத்தி சன்னல்பின்னல்
ரவிக்கைபோட்டு,
வாசனைதிரவியத்தை மயில்தங்கம்
வகையுடன் பூசலுற்றாள்.

அத்தர்கள் சிந்து.

அத்தர்புனுகுகளும் அழகானபந்நீரு சம்பங்கி அத்தராம் சா திமல்லி
அத்தராம் மணமுள்ள அத்தராம் சந்தன அத்தராம். சாம்பிராணி அத்தரரம்
கதம்பநல்ல அத்தராம் கஸ்தூரி பொட்டு மிட்டு இன்னமுள்ள அத்தர்களை
எடுத்து மிகப்பூசி உல்லாசமாகவே சல்லாவும் மேல்போட்டு அன்ன நடைபோலே
அசைக் துவழிநடந்து என்னுடன் கூடவா என்னதவம் பண்ணினே னோ என்று
மனதிலெண்ணி எந்திழையாள் தங்கத்துடன்,
சேர்ந்துவழிநடந்தான் மயில் தங்கமே
சென்னைகாலேஜி பார்க்க.

கடுகநடந்துவாராய் கட்டழகிமுல்லா சாகிபுவீதியிது சட்ட முடன்பாராய்
பத்திஎரித்து பரமபதத்திற்கு நாலாறு பேர்களை நலமுடன் சேர்த்த இரங்கநாதர்
சந்நிதி நாயகியேம்களாய் அருணாசலேசுரர் ஆலயத்தைப்பாராய்
தர்மராசர் கோவிலது தண்ணிதொட்டிபாராய் யானைசெவுனியிது அடுத்தாப்போல்
தோட்டம் விக்டோரியாதோட்டத்தின் விச்சித்திரங்கேளாய் அந்த மானகிராதி
அழகான கேட்டுபாறா யிருக்கிறார் பாரடி பெண்ம யிலே மண்ணாலேமேடிட்டு
மாத்தாலே பாளங்கட்டி பேரால் பெருத்த புழலேரி தண்ணீரை வாட்டர்பைப்ஸ்வைத்து
வழங்குறார்பாய் வலியப்பெண்கள் வரிசைவரிசையாக தண்ணீரைமொண்டு
தலையிலே தானெடுத்து இசைய வழிநடந்து போகிறார்வாராய் ஆண்கரடி
பெண்கரடி அதற்கொரு கொட்டாயும் பெறும்புலிசிறுத்தை பேர்போனசிங்கம்
கல்யானையொ ன்று கனமுடன் வாழுதற்கு சுற்றிலுந்தகட்டால் சொகுசாய்
மறைத்துவிட்டு

ஒவ்வொருவருக்குமே அரையளுவாங்குகின்ற இனிஸ்பெக்ட்டரிவர்தான் யெதிரிலேபாராய்
பலகைவாறாவ தீபாங்கானமேடு சுற்றிலுந்தண்ணீர் சொகுசானபோட்டு விட்டு
காலணாவாங்குவார் கட்டழகிகேளாய் மலையிலேவாழும் மலை நாகம்பாறாய்
பார்த்தால் பயங்கொடுக்கும் பட்சியிதுகேளாய் பிணந்தின்னும் பட்சியென்று
பேசுகிறார் கேளாய் பிள்ளைகன் விளையாட பெருமையான உஞ்சலிது நெருப்புத்
தின்னும் பட்சியி ன் நேர்மையைப்பாறாய் நீமக்காமதினாவில் மாறுபேறுண்டிதற்கு
தீக்குருவிஎன்று தீர்ப்பு செய்திருக்கிறார் இதற்கேற்ற கொ ட்டாயு மிருக்கு பாறாய்
பட்டுகளிருக்கிறதை பாறாய் நீபெண் மயிலே கடல்காக்கை கள்ளிகாக்கை
கண்சிவந்த நாரைகளும் வக்காவும் கொக்காவும் நீர்கோழி காட்டுக்கோழி
நிகரான கானாங்கோழி காடைகவுதாரிகள் கல்பொறுக்கி கிளுவைகளும்
மாடப்புறாக்களுடன் மணிப்புறா தவிட்டுபுறா தூரத்தில் கூண்டுகட்டும் தூக்கணாங்
குருவிகளும் மூக்கு நீண்டிருக்கும் மீன்குத்தி பட்சிகளும் கொண்டலாத்திடைசர்
குணமான அடைக்கலான் லாட்சிட்டு லங்கர்சிட்டு நலமானதேன்சிட்டு
புல்புல்குருகியுடன் நாறாயணபட்சிகளும் மயில்களுங் குயில்களும் மருவி
விளை யாடுது சப்ஜாகயரா கலிங்காபடங்கா சீனி கருணை சாதாவிடை நடன
ஆட்டப்புறாக்கள் அணி யணியாய் நிற்குது பச்சைக்கிளிகளுடன் ரங்கோன்கிளிகளும்
என்னென்ன பட்சிஎன்று எடுத்துரைப்பேன் கேளாய்,
சூட்சமாய் சொன்னேனடி மயில்தங்கமே
சொல்லமுடியாதே பார்.

இன்னம் வினோதங்களை எடுத்துரைப்பேன்கேளாய் கழுதைக்குரத்தியுடன்
காட்டுபெருச்சாளி ஆந்தையுங் கோட்டானும் அழகான வல்லூரும் குள்ளநரிகளுடன்
குழாரி தேவாங்கு யா மையும் பச்சைஒணான் அழகானமுள்ளபன்றி சிவிங்கி
முசலுடன் சீமையணிப்பிள்ளை பைரி அடப்பானும் பாங்கானகாட்டு பூனை
புனுகு கல்லபூளையுடன புகழான கீறிப்பிள்ளை காட்டுப்ப சுக்களுடன்
கடம்டையுமேயுறுபார் புள்ளிமான்களுடன் புக ழானகிள்ளைமான்கள் வெள்ளைமான்களிது
விளையாடி மேயுது பார் குரங்குகளெல்லாம் கூட்டமா யிருந்துதானால் சண்டைகள்
செய்யுதென்று சங்கிலிதான்பூட்டி ஒவ்வொரு கூண்டுகளில் விட்டுயிருக்குதுபார்
மந்தியென்ற சொல்லும் மலையாளக் குரங்குகளும் கல்லாலடிக்கின்ற மங்கோன்
குரங்குகளும் கொண்டைமுசல்களுடன் வண்டன்குரங்குகளும் காட்டுமனிதருடன்
கருங்குரங்குகளும் கடலைகொடுத்தால் கையால் சலாஞ்செய்யும்நாட்டுக் குரங்கை
நலமுடன் பாராய் பாரிய துரைகளுக்குபான் மேடைபாதாய் வருஷத்திற்கொருதாம்
வாய்ந்த ஜனவரிலே
தேவேந்திரன் கொலுவென்னலாம் மயில் தங்கமே
தெய்வலோக மொப்பிடலாம்.
-------------

காலேஜிபத்திய சிந்து.

விநாயகர்தூதி வெண்பா:

ஓங்குபுகழ்சென்னைமுத லுற்றபலதேசத்தார்
பாங்குடனேவேடிக்கை பார்க்கவந்து -தீங்கதனால்
மாண்டகதையானுரைக்க மனமேகேளானைமுகத்
தாண்டவனைக்கொண்டா டருள்.

இராகம் - நாதநாமக்கிரியை-ஆதிதாளம்,

பல்லவி,
கொடுமையைக்கேளீர் காலேஜியில்மாண்ட
கொள்ளையைப்பாரீர்,

அனுபல்லவி,
படியினிலாயிரத் தெண்ணூத்தெண்பத்தாறில்
பகரும் டிசம்பர்மாதம் முப்பத்தோறாந்தேதி- கொ

சரணங்கள்.

சென்னையிற்பொதுவான சிங்காரத்தோட்டத்தில்
ஜனவரி ஆருநாள் செய்திடும் வேடிக்கை
இன்னதென்றுரைத்திட என்னளவாகுமோ
யீன்றமட்டுஞ்சொல்லவே னெல்லோருங்கேளுங்கள்
காலேஜிக்குள்ளே செய்திடும் வேடிக்கை கண்டதைசொல்வேன்
ஒன்றிரண்டுமூன்று நாலுநாள்வரையிலும்
ஓட்டத்தில் துடியான உயர்ந்தஜண்டில்மேன்கள்
தட்டிகுதிரைப்பந்தியம் தகுந்தரேக்லாபந்தியம்
தண்ணிகுடத்தைகையில் தாக்கியோடுபந்தயம்

கால்கட்டுபந்தயம் சிலபேரை ஐதையாக
கயர்தாண்டுபந்தயம் இன்னம்

குஸ்தியின் பந்தியம் குத்துசண்டைபந்தயம்
கூட்டமாய்சிலபேரை குளத்தில் நீஞ்சல்பந்தியம்
இப்படிபந்தயம் யின்னமனேகம் விட்டு
யினையாமல் கெலித்தோற்கு எண்ணிபரிசுதந்து
இரவினிற்கேளீர்இன்னமனேகவித யேற்பாட்டைபாரீர்
இந்திரலோகம்போல் இருக்கும் ரவுண்டுக்குள்ளே
எத்தனை கோடியென் றெண்ணுவோம்ஜெனங்களை
பந்திபந்தியாய்ஷாப்பு பதிந்தவலங்காரம்
பார்த்துயிருக்கும்போது கோர்த்துதேநெருப்புதான்
ஐயையோ சாமிதுயிதுவென்ன அணியாயம்பூமிரவுண்டு.
பத்தியெரியுதென்று பான்மேடைஜெனமெல்லாம்
படபடபடவென்று யிடிந்து வீழ்ந்தாப்போல்
வாயிலடித்துக்கொண்டு வழியென்றுந்தெரியாமல்
பந்தவழியே சென்று வெந்தரர்கள்சில்பேர்கள்
ஓடினார்சிலபேர் கேட்டில்வழியில்லாமல்
ஒழிந்தார்கள் சிலபேர் ரவுண்டில்

மாட்டியிருந்தலஸ்தர் லாந்தர்சிமிளியெல்லாம்
மடமடமடவென்று படபடபடவென்று
யீட்டி அடித்தார்போல எரிந்தஅம்புகள்போலே
யிளைத்தமனிதர்மேலே துளைத்திடவொருக்காலே

வாயினிலடிப்பார் சிலர் வீட்டைநினைத்துகொண்டு
வயற்றிலறைவார் ஒருநிமிஷத்தில்

புகைதாங்கிவயர் வீங்கி போனபிணங்கள்பாதி
பொரிப்பட்டுகுரிகெட்டு தலைகட்ட பிணம்பாதி
வகைகெட்டுவழியிட்டு மெரிபட்ட பிணம்பாதி
வானரக்கம்பிகள் வீழ்ந்து சாய்ந்தபினம்பாதி

வெரும் பிணம்பாதிதுல்களுரிந்துபோண வெண்பிணம்பாதி
ஓலையெரிந்துவிழ்ந்து வுடல் தீஞ்சபிணம்பாதி
ஒருவர்க்கொருவர்கட்டி உருண்ட பிணங்கள்பாதி
தானைத்திறந்துகொண்டு தவித்தபிணங்கள்பாதி
தையலர்பிணம்பாதி கைவெந்தபிணம்பாதி

இப்படியிறந்தசேதியறிந்துகெவர்னர் நிமிஷத்திலெழூந்து
கடவுளைப்போல் கவர்னர் கர்னல்கமிஷனர்
காட்டுடன்பட்டாளம் க்ஷணத்தில் வரவழைத்து
திடமற்றஜெனங்களை துரத்தி வெளியில் தள்ளி
தண்ணிபம்புகளைவைத்து புண்ணியஞ்செய்ததால்
வெகுபேர்கள் பிழைத்தார் கெவர்னருதவியாலே வீடுகள்
சேர்ந்தார், வெள்ளிக்கிழமைதினம் விடியனேரமட்டும்
துரைமாருங்கெவர்னரும் தூண்டுகோல்போடவே
பிணங்களை வாரியே போறாய்குவிக்கும்போது
பிடிபட்டார் திருடர் அடிபட்டார்வெகுபேர்கள் - கொ

பெண் - தெம்மாங்கு,

மாண்டகதையெந்தமனுக்கு மனதுவந்து சொன்னதினால்
ஆண்டவனைசாட்சிவைத்தேன் அத்தனையுங்கூறிடுவாயே

கண்ணிகள்

அகரமுதலெழுத்தாம் பெண்ணரசே-நம்ம
ஆண்டவன் தன்னருளால் பெண்ணாரே
இகமதில்நாமிருவர் பெண்ணரசே -அடி
யின்னம் வெகுநாளிருப்போம் பெண்ணரசே
வாய்விட்டுசொல்லவென்றால் பெண்ணரசே-எந்தன்
வயறுமெரியுதடி பெண்ணரசே
தாயற்றசேய்களைப்போல் பெண்ணரசே - இந்த
தாளே புலம்புதடி பெண்ணரசே

கும்மிப்பாடல்,

வெள்ளிக்கிழமையி லாறுமணியந்த
வேளையிலேஜெனம் மாளையிலே

கொள்ளை கொள்ளையென்று பட்டணமெல்லாம்
கூச்சலிடுவதையென்னசொல்வேன்       1

பட்டணமெல்லாம்திரண்டுவந்து அந்த
      பார்க்கெனுங் காலேஜிக்குள்நுழைந்து
கட்டைபோல்வெந்ததும் வேகாப்பிணங்களும்
      காலுந்தலையுமாய்த் தூக்கிக்கொண்டு       2

எரிந்தமுண்டமினந் தெரியாமலே
      என்னிடவேன்னிதுயென்று சொல்லி
கரிந்தெரிந்த பிணத்தடியில்சிலர்
      கனத்தாகைகள் கண்டெடுத்தார்.       3

கும்பிட்டுநின்றார் சிலபேர்களங்கே
      கூத்தாடிச்செத்தார் சிலபேர்கள்
தம்பியுமண்ணன் தகப்பனுத்தாயாரும்
      தாவியேமாண்டார்சிலபேர்கள்       4

பத்தியெரியும் ரவுண்டுக்குள்ளே - அந்த
      பாதைபொறுக்கமுடியாமல்
சுத்தும்புடவைகிழித்தெரிவார்சிலர்
      தாலிசாட்டையறுத்தெரிவார்       5

புகையால் மாண்டார்சிலபேர்கள் பூண்ட
      நகையால்மரண்டார்சிலபேர்கள்
திகைத்து மாண்டார்சிலபேர்கள் வழி
      தெரியாமல்செத்தார்சிலபேர்கள்       6

புத்தியரியாதகன்னியரும் ஒரு
      பிள்ளைபெறாத மடந்தையரும்
பத்துமாதஞ் சென்றமாதர்களும்சிலர்
      பண்பாய்வீழ்ந்துமடிந்தார்கள்       7

மஞ்சளிழந்தார்சிலமடவார்பெற்ற
      மக்களிழந்தார்சிலமடவார்
தஞ்சமென்றுங்களை நத்தினதுயெங்கள்
      தாலியறுக்கவோ வென்றழிதார்       8

கதவைச்சாத்தி அடைத்து விட்டு - அந்த
      காலேஜிபார்க்கவே வந்திடத்தில்
விதிவசத்தால் மாண்டதினாலந்த
      வீட்டைத்திறக்கவுமில்லையடி       9

சந்தோஷமாகவே சமயல்செய்துவிட்டு
      சத்தரியாய்க் கூடிவந்திடத்தில்
வெந்துகிடக்கும் அகோரத்தைக்கண்டுநான்
      எப்படிசொல்லுவேன் வாயாலே       10

திரும்பிபொருவரும் போனதில்லை - அந்த
      பூட்டையுங் கூடத்திரக்கவில்லை.
திட்டமாய் செய்தசமயல்கூட-அவர்
      தின்னவேயில்லையே சென்னைப்பெண்ணே       11

சென்னைப்பட்டணமுதல் தஞ்சைகோயம்புத்தூர்
      சேலம்பவாணியிரோடுமுதல்
இன்னம்சோழதேசக் கூட்டமெல்லாமிக்க
      தோட்டத்தில்வந்து மடிந்தனராம்       12

நாகூர்மதுரை புதுக்கோட்டையத்த
      நாகப்பட்டணமுதல் தூத்துக்குடி
சாகுறோமென்று தெரியாமல்வந்து
      சங்கடப்பட்டாரே சென்னைப் பெண்ணே       13

எத்தனையோதேச கூட்டமெல்லாமிந்த
      தோட்டத்தில்வந்து மடிந்ததினால்
செத்தமைத்தாநாளும் நாதனில்லாமலே
      சீரற்றிருந்துதே சென்னைப்பெண்ணே       14

கர்னல் கமிஷனர்வெல்டன்துறையுடன்
      கவர்னர்செக்டேரியும் சிம்ஸன்துரை
தர்மதுரை மார்சு எங்கிருந்து அப்போ
      தாவியெடுத்தார் வெகுஜெனத்தை       15

நம்மதென்றுவந்த கேட்டபிணங்களை
      நம்பிக்கை வாங்கியெடுத்துவிட்டு
வெம்பிகிடக்கும்சபத்தையெல்லாமவர்
      வண்டியிலேற்றி புதைக்கவிட்டார்       16

நாதனில்லாத சவத்தையெல்லாமவர்
      நம்மதென்றெண்ணி சுடலைக்கொண்டு
போதக்குழியினில் போட்டகதைச்சொல்ல
      பொழுதுவிடியுமே சென்னைப்பெண்ணே       17

ஒன்றிரண்டானால் தெரிந்திடலாம் - இரு
      நூறுமுந்நூறானா லறிந்திடலாம்
குன்றுபோலேசெனம்மாளையிலே - அந்த
      கூட்டத்தையெப்படிகணக்கிடலாம்       18

முந்தூரென்று சிலருரைத்தாரதை
      நாநூசென்று சிலருரைத்தாரதை
ஐந்நூரென்று சிலருரைத்தார்
      ஆயிரங்காணுமாம் சென்னைப்பெண்ணே       19

அருமையாய்வேடிக்கை பார்த்துமவர்க்
      கங்கேயெமன்வந்து கார்த்ததுவும்
சிறுமணவூர்முனி சாமிசொன்னாரிதை
      சீறாய்கேளடி சென்னைப்பெண்ணே       20

காலேஜிபத்தியச்சிந்து - முற்றிற்று.
-------------------

2. கர்னாடகப் புகைவண்டியின் சிந்து

கடவுள் துணை.

தென்னிந்தியா ரெயில்வே என்னும்,
கர்னாடகப்புகைவண்டியின்சிந்து.

தென்னிந்தியா றெயில்பாரடி - பெண்ணேயிது
தெற்கேபோகும்நேரடி

மன்னர்கள் தான் துதிக்கும் மதிறாஸ்கருகாக
உன்னிதமாகவே யுகமையாயேர்ப்பட்ட (தெ)

மண்டலத்தோர் புகழும் மதிறாஸ் எழும்பூரினில்
கண்டவர்வியப்படைக் கருதிநியமித்த (தெ)

சட்டமுடன் ஸ்டேஷன் பட்டணத்தோர்போற்ற
திட்டமதாகவே கட்டியிருக்கிற (தெ)

கண்ணாடிகதவுகள் கனத்த ஆபீசுகள்
விண்ணாடரும்மெச்ச விதமாகயேர்ப்பட்ட (தெ)

கைக்காட்டிமரங்களும் கனத்த ஆளுகளும்
பைகாண்சினே கர்முதல் பலருமிருக்கிற (தெ)

இஞ்சின்வண்டி முதல் இணையில்லா வண்டிகள்
அஞ்சுதலில்லாமல் தங்கியிருக்கிற

டிக்கட்டுகள் வாங்கி இக்கட்டில்லாமலே
பக்குவமாகவே தக்கபடிபோவோம் (தெ)

சைதாபேட்டை ஸ்டேஷன் சார்ந்தபரங்கிமலை
பயிலாகிறெயில்வண்டி பரர்மீதிலேபோகும் (தெ)

பல்லாவரம்பாரு பக்கத்தில்வண்டலூரு
எல்லார் தங்குங்கூடு வாஞ்சேரியிது பாரு (தெ)

அங்கமதுயீடேற ஆண்டவனைப்போற்றும்
சிங்கபெருமாள்கோயில் ஸ்டேஷனிதுபாரு (தெ)

தங்கயிளப்பாரி தாகவிடாய்தீர
செங்கற்பட்டுஸ்டேஷன் சிறப்பதாய் நாம்வந்தோம் (தெ)

கோர்ட்டுமுதலான தூக்குமரங்களும்
மேட்டிமையாய்ச்செயில் தாட்டியாய்த்தோற்றது (தெ)

பொன்விளைந்தகளத்தூரு புகலரியமதுறாந்தம்
தன்மையுள்ள தாசில்தார் நடத்துங்கச்சேரி (தெ)

அச்சரவாக்கமிது அடர்ந்துவரும்றெயில்வண்டி
இச்சையுடன் மாற்றும் இணையில்லாஸ்டேஷனிது (தெ)

ஒலக்கூருதாண்டி நாம்ஒயிலான திண்டிவனம்
கலக்கமிலாத்தாலுக்கா கட்டழகிவந்தோம்பார் (தெ)

புதுமையுள்ளசத்திரத்தில் போஜனம்நாம்செய்து
இதமுடன்றெயிலேறி இக்ஷணம்போகலாம் (தெ)

மானிலந்தான்புகழும் மயிலமெனுந் தலத்தில்
கானமயில் மீதேறும் கர்த்தனிருக்கிறார் (தெ)

கண்டுபணிந்தால்கர்மவினைகள்போகும்
வண்டு நிகர்விழியாளே மாங்குயில்மொழியாளே (தெ)

விக்கிரவாண்டி விழுப்புரத்தாண்டி
பக்கத்திலே பண்றொட்டி பண்புள்ளஸ்டேஷனிது (தெ)

நெல்லிக்குப்பமெனும் நேரானவூரிது
அல்லலகற்றுந்திருப்பாதிரிப்புலியூரிது (தெ)

பேடைமயிற்கண்ணாளோ பிரியாதேசெந்தேனே
கூடலூர்ஸ்டேஷனைக்குறிப்பாக ரீபாரு (தெ)

ஆலப்பாக்கமிது அடுத்தபரங்கிபேட்டை
கோலமுள்ள காயலார் குடிகலிருக்கிறார் (தெ)

பார்தனிலுள்ளோர்கள் பத்தியாய்தான்துதிக்கும்
சீருள்ளசிதம்பரத் தெரிசனஞ்செய்யடி (தெ)

நடராஜர் வீற்றிருக்கும் நலமான சிற்சபையை
மடமயிலேநீயும் மனதினிற்போற்றடி (தெ)

தொல்லைவினைகளைத் துரத்திக்கருவறுக்கும்
தில்லைமாகாளியின் தெரிசனஞ்செய்யடி (தெ)

கனிவர்க்கங்களுண்டு காசாலட்டுமுண்டு
இனிமைப்பிரசாதங்களிருக்குமிடமுண்டு (தெ)

வல்வினையைத் தீர்க்கும்வயித்தீஸ்வரன்கோயில்
எல்லையைவிட்டுமகா வேகமாய்த்தான் போகும் (தெ)

மாயவரங்குத்தாலங் வயங்குநரசிங்கபேட்டை
தூயஸ்டேஷன்கள் தாண்டி துரிதமாகப்போகும் (தெ)

திருவிடைமருதூர் தேன்பொழியுங்கும்பகோணம்
பருவுஞ்செந்தலைப்பேரு வந்தோமிப்போதடி (தெ)

பாவவிநாசனம் பகரும்ஐயம்பேட்டை
சோபமதைநீக்குஞ் சொகுசுள்ளதஞ்சாவூர் (தெ)

முப்பத்திரண்டும் முதன்மையாய்ச் செய்வித்த
தப்பில்லாபோஜராஜன் தங்கியதஞ்சாவூர் (தெ)

சாலியமங்கலம் சார்ந்த அம்மாம்பேட்டை
நீடாமங்கலமிது நேர்ந்தகொரடச்சேரி (தெ)

குளிக்கரைஸ்டேஷனிது குணமுள்ளதிருவாலுர்
களிக்கவேதியாகரைக் கண்டுதெரிசிப்போம் (தெ)

இத்தலந்தன்னிலே யினையில்லாதேருகள்
மெத்தவுசித்தமாக மேன்மையாய்த்தோற்றுது (தெ)

அப்புரமிருக்கும் அடைவானஸ்டேஷன்களை
தப்பிதமில்லாமல் தண்மையுடன் சொல்வேன் (தெ)

கீவளூர்தானிது கிளர்சிக்கில் தானிது
மேவிநாகப்பட்டணம்மேன்மையுடன் வந்தோம் (தெ)

திடமுள்ள திருச்சினாப்பள்ளி ஸ்டேஷனிது
வடமேற்குறெயில்பாதை வந்துகலக்கும்பாரு (தெ)

பிட்டுக்குமண்சுமந்து பிரம்பாலடிப்பட்ட
திட்டமுள்ள சொக்கநாதர் திருமதுரைதலமிது (தெ)

அங்கயற்கண்மீனாட்சி யம்மனிருக்கிற
சங்கைகளில்லாத சன்னிதியிற்கோறு (தெ)

திருப்பரங்குன்றம் திருமாநகரம்
விருப்பமுள்ள கள்ளுக்குடி விருதுபட்டிஸ்டேஷன் (தெ)

துலுக்கப்ட்டிசாத்தூர் கோவில்பட்டிகுரிபுர
துடர்ந்து வரும்ஸ்டேஷன் துருசாய்போகும் இஞ்சின் (தெ)

கண்டவர் வியப்படையுங்கடம்பூருஸ்சேஷனிது
அண்டையிலிருக்குமணியாச்சிசத்திரமிது (தெ)

செந்தைகுண்டா தாண்டி சிறப்பானறெயில்வண்டி
விந்தைமிகும் திருநெல் வேலியிதோவந்தோம் (தெ)

ஏத்தும் திட்டப்பாறை நேத்தியாய் நாம்வந்து
தூத்துக்குடிதுலை தூரமேநாம்வந்தோம் (தெ)

தேசமெங்கும்புகழ் திருவண்ணாமலையில்வாழ்
பாசமுடன்வீர பத்திரனியம்பிய (தென்னிந்தியா)

தென்னிந்தியா ரெயில்வே சிந்து முற்றிற்று.
-----------------

சிவகங்கை காசிவிஸ்வநாத பிள்ளை இயற்றிய
கண்ணுடையம்மன் பேரிற் களியாட்ட மகத்துவச் சிந்து

சிவமயம்.
தேவிசகாயம்.

வெண்பா காப்பு.

ஏரார் பனசையின்கண் ணேவாழுந் தேவிதன்மேற்
சீரார் களியாட்டச் சிந்துரைக்க - நீராரும்
வேணியன்முன் றந்தருளும் வேதியன்பா சாங்குசமார்
பாணியனைப் போற்றுவனன் பாய்.

திருவுற்றிலகுகங்க வரையில் என்றசிந்தின் வர்ணமெட்டு.

அருள்பெற்றுறுபனசை நகரிற்பலவுமிசை
      யமையத் தினமும்வளர் தேவியே நல
      சமையத்துதவு வாய்நீ மேவியே பல

வாகமப்பொரு ளாகவேவரு மேகநாயகி யானகண்ணுடை
      யம்மையே நினைப்புகழ்ந்து சாற்றவே யுன்றன்
      செம்மலாங் கணேசனையே போற்றுவேன் (1)

திருமாதுடனேவெண்டா மரைமாது புவிமாது
      திகழ்விண்ணி லுறைமாதர் கூடியே கழல்
      புகழ்வா ருனதுதிறல் பாடியே கெடு
தீதினோடு வன்மேதியாய் வருபாதகன் சிரமேதியே பணி
      தேவர்கட் கிடுக்கண்தீர்த்த நாயகி அந்த
      மூவருக்கு முதன்மையாந் தாயகி (2)

மண்டலமதனிலே கைகண்ட தெய்வ நீ யல்லாது
      மகுத்துவங்கொண்டதினி யாரம்மா அதைப்
      பகுத்துரைக்கக்களி கூரம்மா பல
வானவாரிதியாறு நீள்குளமேனை கூவல்கால்மேவு நீரொரு
      வண்ணவடிவுற்றிருந்த போதிலும் சில
      புண்ணியம்பெற்றிருக்கும்பூ மீதிலும் (3)

எண்சானுடம்பினுக்குச் சிரசேபிரதானமென்
      றெவருஞ்சொல்வார்வெகு வாகவே நானும்
      றவராதேற்பேனவர்க் காகவே அதில்
ஏந்துபேரெழில் வாய்ந்திருந்து மங்கார்ந்தநன் விழிதீர்ந்து போமெனில்
      எட்டுணையுமுண்டோவதில் யோக்கியமே யங்கன்
      கெட்டகன்தெரிவதுன்சி லாக்கியமே, (4)

கண்ணுடையநாயகியென் றெண்ணிலாப்புகழ்படைத்த
      காரணியே நாரணன்ச கோதரி யெந்தத்
      தாரணியும்போற்றுவாயென் கோதரி திறற்
கந்தனோடொருகந்தனுந்திரு மைந்தராகவுகந்தசிந்தைகொள்
      கட்டழகிசிவகாம வல்லியே யுனை
      இஷ்டமோடுபாடுவேன்போர் சொல்லியே. (5)

வேறு - ஆறுமுகவடி வேலவனே யென்றமெட்டு

மாயவன் சோதரியான கண்ணம்மையை
      வாழ்த்திப் பணிவோமே பொல்லா
மாயப்படுகுழி வீழ்ந்துதவித்திடா
      வாழ்வு துணிவோமே
தூயவள்சத்தி கௌமாரிவராகியச்
      சூலப்படையுடையாள் பதஞ்
சூழுமடியவர் தன் கதிசேரவே
      மீளப்புவிபடையாள். (1)

நாட்டிலுயர்கலை வேள்விமிகுமந்த
      நாடுநகருடையாள் தினம்
நாடும்வணிகர்கள் மென்மேலும்வாது
      கூடுநகருடையான்
ஒட்டிற்பலிகொளுந் தில்லைக்கோனோடு
      முன்னூடிநடமாடி பினும்
ஒண்மைசேர்தில்லைவாழ் காளியெனவங்கு
      வுற்றிடுவாள் நாடி. (2)

மண்ணினிலேயிவன் போலவொருதெய்வம்
      வாய்த்தலரி தாமே விந்த
மாநகர்முன் செய்த புண்ணியமேதோ
      வழுத்தப் பெரித்ரமே.
கண்ணிழந்தோர்செவி டூமையர்கைகா
      னுடம்பல பெற்றோரும்
காணப்பெறிலவர் புன்மைதவிர்ந்துமெய்க்
      கஷ்டங்க ளற்றாராம். (3)

வெள்ளிசெவ்வாய்களி லாலயஞ்சுற்றி
      விரைந்து பணிவோர்கள் வரம்
      வேண்டுவபெற்றுநல் லாயுளும்பெற்றுமேல்
      மோட்சமணி வார்கள்
தெள்ளமுதன்னநங் கண்ணுடையம்மையைச்
      சிந்தையிலேநினைந்து
செய்யவிபூதி யணிவோரிறைவராய்ச்
      சேர்வர் முடிபுனைந்து. (4)

காணிக்கையாய்வந்த ரூபாயும்பொன்னுநற்
      கண்மலர்பட்டமுமே தினங்
காணுமலைமலையாகக் குவிந்திடு
      மெண்ணுதல் கஷ்டமதே இதை
ஆணிப்பொன்னாந்திருக் கண்ணம்மைக்குற்ற
      வேறாஸ் திக்கிணையாமோ யிவ்
வவனியோர்பெற்றிடு செல்வமெலாமெனக்
      கவளே துணையாமே. (5)

தேடுவர்க்கேவெளி வந்தருள்செய்திடுந்
      தெய்வப்பிராமணத்தி மறை
தேடியுங்காணாத சீருடையான்சுரர்
      செப்பிடுநற்குணத்தி
ஆடுமயிலின் மீதேறு முருகனையைங்கரனைப்
      பெற்றவள் மிகு
மாபத்துவேளையிற் றன்னைநினைத்தோர்
      தம்மண்டையிலேயுற்றவள். (6)

பேடையனமெனவொண்ணடை
பெற்றுப்பிறங்குபிடாரியிலள் தன்னைப்
பேசாதவஞ்சகர் நெஞ்சை
பிளக்கும்பெலத்த குடோரி யிவள்
மேடையிலேறித் தவழ்ந்துவிளையாடும்
வெற்பிறைபெற்றமயில் நல
மேதகுகேள்விசேர்நான்மறை
யோரெனுஞ்சோலையிலே வாழ்குயில் (7)

விலைமதியாத மரசுதமேயிவன்
வித்தகப்பொற்கொடியே சற்றும்
விள்ளுதற்கில்லா மணிவிளக்கேயென
வேண்டிடு மிப்படியே
அலைகடல் சூழுமிம் மேதினிக்கேயொரு
வன்னையிலனென்றே தொல்
லாரணங்கூறிடுங் காரணந்தேருமின்
னன்புடையீரின்றே (8)

(வேறு) என்னடிகான்பெற்ற மங்கை யென்றமெட்டு.

நாட்டரசங்கோட்டை வாழும் நலஞ்சூழும் படியேழும் புகழ்
நாயகியேயுனைத் தாழும் அந்த
நலமேதுமி லவமேபல தினமேசெல மகிழ்வேனையுன்
      னாட்டந்தந்தேயினிக் காப்பாய் பக்தர்
      கூட்டத்திலேயெனைச் சேர்ப்பாய் (1)

சிட்டர்பணிகண்ணுத் தாயே நானுன்சேயே மகிழ்வாயே துதி
      சீர்பாதமேதரு வாயே திழி

சிரமீதினி லொருமாமதி தருவோனோடு சமராடியே
      திக்குவிஜயஞ்செய் தேவி யுன்றன்
      பக்கம்வந்தேனுனை மேவி (2)

தானவன்றீமையால் வாடித் தேவர்கூடி யுனைநாடி வந்துன்
      தாமரைப்பாதங்கொண் டாடி விந்தத்
தருணத்தினி லருள்வைத்தூறு சிரமத்தினை யறுவித்திடு
      தாயேயெனப்படை சூழ பகை
      யாயவன் றன்னுயிர் மாள (3)

வீரமுள்ளசிம்ம மேறி சினமீறி கணைதூறிச் செயும்
வெஞ்சமரிலுரு மாறி யடன்
மிகுமேதியாய் மகிடாசுரன் வரவேயொரு திறவாளினால்
      வெய்யோனுயிர் தொலைத் தானே பூசை
      செய்வேன் தருவாய்பொற் றாளே (4)

கோரரூபங்கொளும் வீரி யடற்சூரி முத்துமாரி யுனைக்
கும்பிட்டோர்க்கேசுகு மாரி நல
குணமேவுவ ரிடமேமலர் மணமாயுறை பவளேயினிக்
      கோயிற்பெருமையைச் சொல்வேன் உன்றன்
      நேயம்வைத்தேபகை வெல்வேன் (5)

கோபுரத்தின் தங்கஸ் தூபிமிகத்தாவிக்கரு மேவி வளர்
      கொண்டலிற்சென்றதை நீவி அப்பாற்
கொண்டேயுளதென்றாலதை விண்டேபகர்கின்றாரெவர்
      கோலமிகுந்தாற் பணியே செய்தான்
      தாலம்புகழ்விஸ்வ மணியே. (6)

முன்மண்டபம்வெகு ஜோரே யதின்னேரே யுற்றுப்பாரே பல
      மூதறிவாளர் தன் சீரே வேலை

முடிவித்தவர்திறலும் பொருள்செலவிட்டவர் மனமும்வழி
      மூண்டதொன்றாயம்மை நோக்கமே விதை
      தீண்டிடினும்வரு மோக்கமே. (7)

ஆலயத்தைச் சுற்றிச் சோலையறச்சாலைர வேலை போலு
      மங்கொருதீர்த்தமுன் னாலே யதில்
ஆடியேவழிபாடுசெய்பவர் தேடுபோகமும்வீடுமேவுமென்
      றாரணஞ்சொன்னது சத்யமே அந்தத்
      தாரணர் தான்கோடி நித்யமே. (8)
-------------
நொண்டிச்சிந்து

அணிசேர்பனசைநகர் கண்ணுடைய
      அம்மனுக்குக்களியாட்டஞ் செம்மையுடனே
பணிசெய்வோமெனவே வணிகரம்
      பலமும்வளர்குடிகள் பலவுமெண்ணி

நன்னயமாய்க்களியாட்டம் நடத்துதற்கு
      நாட்குறித்ததற்குரிய யேற்கையாகவே
சொன்னமணிக்களியாட்ட வீடுகட்டச்
      சொந்தமுள்ளநாட்டவரில் முந்துகிளையில்

மதுக்குடமெடுத்துவருங் கன்னியர்தம்
      மனைதனிலும்கணக்கர் மனை தனிலும்
புதுக்கியேமாளிகைகள் கட்டுவித்து
      பூவாலலங்கரித்துக் கோலாகலமாய்

அம்மனைப்போலுருவ மெழுதிவைத்து
      ஆவணமுழுவது ஈற்காவண்மிட்டு
செம்மையுடன்றோரணங்கள் வீதியெலாஞ்
      சிறக்கும்படியாகவே நிரைத்துவைத்து

நன்மைமிகுங்கீலகலாம் எருடம்
      நாடிவருமுதல் மதிமேடமதிலே
மன்னிரண்டாந்தெய்திவருஞ் செவ்வாயில்
      வாய்த்திருக்கோவிலுக்கும் வேற்லுளதற்கும்

சகலசிறப்புங்கொடுத்துப் பெண்களுக்குத்
      தயிலந்தலைக்குமீய்ந்தொயில்பெறவே
மிகுமுடை பூஷணங்கள் அணிவித்து
      மேலான நளபாகம்போலாகலே.

அமுதுநற்கறிவகைகள் வளமாக
      அருத்தியவருக்கெலாந்திருத்திசெய்து
கழுகொடுவெற்றிலை குங்குமம்
      கஸ்தூரி சந்தனமும் விஸ்தாரமாய்.

அள்ளியள்ளிப்பூசிடவே யாவருக்கு
      மன்பாய்க்கொடுத்துவெகு வின்பமாகலே
தெள்ளியசம்பாவிரையில் தொண்ணூறு
      தேருகின்ற கோட்டைவிரை சீராயளந்து.

கொட்டுமுழக்குடன்குரவை யிட்டுவாக்
      கோயில்முன்னேடுகொண்டுவந்து சேயமாகவே
சட்டமுள்ள தளவிசையின் மேல்விரித்து
      சன்னிதியில்நீறு சாந்தமுன்னி தாய்வாக்கி

களியாட்டவீடுசென்று கோதையர்கள்
      காதலுடனம்மை புகழ்ஓதியோதியே
தெளிவாய்முளைக்கொட்டித் தினந்தினமும்
      சேர்ந்துகணித்திடுவார் நேர்ந்தவரே

காடியந்தச்செவ்வாய்க்கு நாலானான்
      நலமானவெள்ளிதனில் பலபேரும்
கூடியொருமனதுடனே விரைகளைக்
      கோட்டைகட்டிக் குளத்தினிற்றாஷ்டிகமாக

நனைந்திடவைத்திரண்டாஞ் செவ்வாயில்
      நாச்சியார்மண்டபத்திற் காட்சியாகவே
புனைந்த புங்கந் தழைமேல் கன்னியர்கள்
      பூரிப்புடன் விரைகளை வாரித்தெளித்தார்

மங்கையர்கள்தெளித்தவிரை நாயகியை
      வழுத்துமவர்கிளைபோற் செழித்ததுவே.
இங்கிதஞ்சேர்மூன்றாகுஞ் செவ்வாயி
      விலங்குமுளையைமறு தலந்தனிலே

விரித்தந்தச்செவ்வாய்க்கு நாலானாள்
      வெள்ளிதனிற்பெண்களெல்லா மள்ளிமகிழ்ந்து
பெருத்ததோர்களியாட்ட வாசலுக்கு
      பிரபலமுடன் வெகு விமரிசையாய்

கொண்டுவந்துமாவெடுத்து பொன்னான்
      குடத்தினிலிளநீரை விடுத்ததிலே
மொண்டுமொண்டுதேன்சொரிந்து திரைவளைத்து
      மும்முரமாய்ப்பாளைவைத்து வம்மையைப்போற்றி

பானைக்குமூன்றுசிறாய் வைத்திடவே
      பங்கமில்லாத்தேவிமதுப் பொங்கிவழியும்
மானைப்பொருவும்விழியார் ஒருசோட்டு
      மங்கையர்களெல்லோருஞ் சங்கையாகவே

நாலாஞ்செவ்வாய் தனிலே நீராடி
      நல்லபணிபூண்டு வெகு வுல்லாசமாக
மேலானபட்டுடுத்தி பொட்டுமிட்டு
      மெதுவாய் நடந்துவந்து புதுவீடு

முன்புவந்துபூவிலுளோர் அதிசயிக்க
      முழுதுநிறைந்திருக்கு மதுக்குடத்தில்
நன்மையாய்நடுவிருக்கும் ஒருகுடத்தை
      நாச்சியார்குடமென வாட்சியாய்வைத்து

தெண்டனிட்டுமுதல்மதுவைத் தானெடுத்துச்
      செறியும்பலகுடமும் நிறைநிறையாக்
கொண்டுவொருகோடியென மதுக்குடங்கள்
      கூட்டங்கூட்டமாய்த்தூக்கி நாட்டமாகவே

பேரிகைடங்காவும் மத்தளமும்
      பெரியதவிலு நாகசுரமுடனே
வாரிபோல்முழங்கிவர கீத
      வாத்தியம் நாடகப் பாத்தியஞ்சேர்

கன்னியர்பலராடி நலமிகு
      கவரியுமாலவட்டம் சுருட்டி குஞ்சம்
துன்னியே வீசிவர நகரினிற்
      துலக்கும்வணிகர்களும் பலங்காணும்

நாட்டினிலுயர்ந்தவரும் வேளான
      நன்மரபில்வந்தவரு மின்பமுடனே
தாட்டிகக்களியாட்டம் பார்க்கவந்த
      ஜனங்களுங்கூடியந்தத் தினங்களிப்பாய்

பக்கத்திற்சூழ்ந்துவரத் தீவட்டி
      பதினாயிரத்தினுக்கு மதிகமாக
மிக்கொளிதந்திலங்க மத்தாப்பும்
      வீச்சாகப் பொரிவாணப் பூச்சிதற

சூதிலா வணிகர்தெரு வீதியைச் சூழ்ந்து
      மதுக்குடங்கள் போந்துமுனம்
ஓதியவூரணிக்குள் பலிபீட
      முள்ளவிடத்தினில் மெள்ளவந்ததுவே

திசைதிசை தகர்வெட்டிப் பலியிட்டுத்
      தேவிமுன்னோறுந் தூபமிட்டு
இசையவேபத்துலட்சங் குட்டிவெட்டி
      யிங்கொருதுணிரத்தங் கண்டதுண்டோ

இதுபெரும்புதுமையென விண்ணவர்
      இறைத்தார்மலரால் மண்ணைமறைத்தாரே
மதுக்குடந்தனைவைத்தே தேவியை
      வாழ்த்திப்பணிந்து பெண்கள்போற்றுவரே

மாதாவேபூசைகொள்வாய் காங்களும்
      வகையறியோமுன்றன் றகையறியோம்
தீதேதுஞ்செய்தாலும் பொறுத்தருள்
      செய்வாயென்றேபூசை செய்தோமிதோ

ஈஸ்பரியெந்தாயே யெங்களை
      யெப்போ துங்காத்திடத் தப்பாதேநீ
நேசமாய்ப்பணிகின்றோ மென்றே
      நேரிழையார்பணிந் தார்மிகவே

அம்மையைத்தொழுதெழுந்து கன்னிய
      ராலையந் தனைச்சுற்றிக் கோலமுடன்
விம்மிதமுடையவராய்த் தங்கள்
      வீடுவந்தார்சுப சோபனமே

பார்புகழ்பனசைநகர் வாழிநற்
      பாவைகண்ணுடையவள் தான்வாழி
சீர்புகழ் துரைசிங்க மன்னவன்
      செங்கோலொந்நாளுமே வாழியதே.
----------------

வேறு கும்மி.

சீர்மேவுந் திருக்கண்ணுடையாள் பேரிற்
      செந்தமிழ்க்கும்மி யுரைப்பதற்கு
ஏர்மேவுமந்திவண் ணங்கொள்ளேரம்ப
      னென்னித யத்திற்குடிபுகுமே.

கும்மியடித்திட வாருங்கடி பெண்காள்
      கும்பிட்டொருங்கிங்கே சேருங்கடி
ரம்மியமாய்க்களி கூருங்கடி தேவி
      நன்மைதருவதைப் பாருங்கடி.

நாட்டரங்கோட்டை காணிய தாக்கொண்ட
      நாயகியேயிவ ளாணியதாய்
தேட்டமிகுந்திவன் தீர்த்தத்திலாடு மச்
      சிங்காரம்பாரடி மங்கையரே,

கண்ணுடையாளைப்போற் றெய்வமுண்டோ விவன்
      காட்சியைப்போல்வெகு மாட்சியுண்டோ
நண்ணிடுவோர்க்கொரு துன்பமுண்டோ யிதை
      நாடாதவர்க்கரு ளின்பமுண்டோ.

ஆயிரநாவுள்ளசேடனாலும் சொல்ல
      லாகாச்சிறப்பைப்புன மூடனானும்
வாயினாற்சொல்லமுடியாதே கமழ்
      வார்குழலேயிப் படிமீதே

ஆனாலுஞ்சொல்லவே நாவூறுமிவள்
      அன்பைப்படிக்கலே பாவூறும்
தேனாரும்சொல்லி தன்பாதமே தினம்
      சேருவர்க்கேது சங்கேதமே

பூவினுக்கோரன்னையானவள் அழற்
      பூவிலுதித்திட்ட மீனவள்
தேவனுக்குப்பின்னையானவள் பதந்
      தேருமடியார்க்குத் தேனவள்

கண்ணுடையாள்குழைக் காதுடையாள் வருங்
      காதகரைக்கொல மோதுடையான்
விண்ணுடையாள்புகழ் பண்ணுடையாள் இந்த
      மேதினியேற்றிடு நுண்ணிடையாள்.

வேதாளமேவுங் கொடியுடையான் கல
      வீறுமிகுந்த பிடிநடையாள்
ஆதாளிகொண்டிடு முக்ரவீரி யெனக்
      காதாரமான வுபகாரி.

வேதத்தின்மீது நடித்திடுவாள் பல
      மேவுமச்செல்வங் கொடுத்திடுவாள்
பூதத்தின்மீதேறி வந்திடுவாள்-பணி
      புண்ணியர்க்கேவாந் தந்திடுவாள்.

காணிக்குவாய்த்தாங் கண்ணாத்தாள் துயர்
      காணுஞ்சுரருக்காய் விண்காத்தாள்
மாணிக்கஜோதி நிறத்தாளாம் அன்று
      வன்புரமூன்று முறுத்தானாம்.

மூவர்க்குமேமுத லாளியடி யிவுள்
      மூண்டபடையெலாங் கூளியடி.
தாவுநல்வாகனம் யாளியடி. இந்த
      தாரணிசொல்பத்திர காளியடி

வெள்ளிசெவ்வாய்களினீர்படிந்து வருள்
      மேவிடவாலையஞ் சுற்றிவந்து
அள்ளியள்ளிப்பொன்னும் வெள்ளியுமீந்திட்ட
      வம்பாரம்பாரடி செம்மையிலே.

வேண்டுவார்வேண்டும் வரங்கொடுத்தே மகிழ்
      வித்தகியைத்தின நாமடுத்தே
வீண்டும்பிறவியிற் சாராதே காப்பா
      யென்றுரைப்பாம்பவஞ் சேராதே.

அம்மனதிசய மெத்தவுண்டே யெங்கு
      மவித்தநெல்லு முளைப்பதுண்டோ
இம்மையிலேயாரும் பார்த்திடவே கெல்லு
      இங்குமுளைத்திட வாய்த்ததுவே.

நெல்லுமுளைத்த வதிசயமு மிங்கே
      நேர்ந்தமறிகள் பெலிகளிடச்
சொல்லுமொருசொட் டிரத்தமுங் காணா
      சூக்ஷமங்கண்ணாத்தாள் காக்ஷியடி.

அன்னபெருமையை யென்னாலே சொல்ல
      லாகுமோடியிள மின்னாளே
இன்னகர்செய்த தவம்போலே வேறே
      யெங்கினுமுண்டோ புவிமேலே.

அம்மைக்குளம்மையாக் காரணியே யிவ
      ளப்பனுக்கப்பனாம் பூரணியே
மும்மைக்குந் தாயகத்தோரணியே கொண்ட
      மூதாட்டிவாழ்லதித் தாரணியே.

வாழிபசை நகர்வாழி பதில்
      வாழும்வணிகர் குலம் வாழி
வாழிநன்னாடுடன் வேளாளர் குலம்
      வாழியிந்நூலுமே வாழியவே.

களியாட்ட மகத்துவச்சிந்து முற்றுப்பெற்றது.
-----------------

This file was last updated on 17 March 2026
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)