pm logo

செஞ்சி ஏகாம்பர முதலியார் இயற்றிய
மதுரைவீர அலங்காரம்

maturai vIra alangkAram
by cenjci EkAmpara mutaliyAr
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
The e-text has been generated via Google OCR of the PDF file and subsequent proof-reading of the OCR output.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2026.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.


செஞ்சி ஏகாம்பர முதலியார் இயற்றிய
"மதுரைவீர அலங்காரம்"

Source:
1. மதுரைவீர அலங்காரம்
இவை - செஞ்சி ஏகாம்பர முதலியாராலியற்றப்பட்டு
ஆ. இரத்தினவேலு முதலியாரது
வாணிவிலாஸ அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது.
1898
---
2. மதுரைவீர அலங்காரம்
இவை சிறுமணவூர் முனிசாமி முதலியாராலியற்றப்பட்டு
ஆதிபுரி இரத்தினவேலு முதலியாரது வாணீவிலாச அச்சுக்கூடத்திற்
பதிப்பிக்கப்பட்டது, 1903
சென்னை - நாராயண முதலி வீதி, நெ. 32
---

மதுரைவீர அலங்காரம்



காப்பு - விருத்தம் .
உன்னிதமாங்காசிநகர் தன்னையாளும்
      உத்தமனாந்துளசிமகா ராஜன்பெற்ற
மன்னவனாம் மதுரையெனும் வீரன்மீது
      மகிழ்ந்துமே அலங்காரந் தன்னைவோத
தென்னவனை விழவுதைத்தோன் மகனாய் வந்த
      திருமாலின்மருமகனாய் விளங்குகின்ற
முன்னவனாங் கணபதியை முடிமேற்சாற்றி
      முற்றமிழோரடி வணங்கி முறையிட்டேனே.
---------------

(தெம்மாங்கு)
பிள்ளையில்லாததினால் பிரியமுடன் தவமிருந்து
வள்ளலுடகிருபையாலே வரம்பெற்றானே காசிராஜன் (நன்)

சூரியன்போலே குழந்தை பிறந்தான் சோதிடர்களை அழையுமென்றான்
பேரிட்டழைக்க மனதில் நினைத்தான் பிறந்தநாளை பாருமென்றான்
ஆயிரஞ்சோதிடர் கணிதமெடுத்தார் அணுவுந்தப்பாமல் சரியாபார்த்தார்
கூவியுரைக்க மனநொந்தார் குரிகிதலையைகுனிந்துகொண்டார்
அரசன்பார்த்து அதட்டியழைத்தானிருக்குஞ் சேதியெடுங்களென்றா

(சோதிடர்-தெம்) மாலைசுத்தி பிறந்ததினால் மாமனுக்கு ஆகாதையா
கொடியுடனே பிறந்ததினால் கோத்திரங்களழியுமையா
ஐயா பிள்ளை கவலை தள்ளுமையா பெற்றோமென் று நினைக்காதையா
கொல்லவந்தயே மனையர் கொண்டுபோய் காட்டில் விடுங்களையா

ஐயா ஆசைகொண்டு அலையாதையா அரண்மனையிலே வைக்காதையா
காசியழிந்து போகுதையா கணித நூலை யுரைத்தோமையா
ஐயா சீக்கிரம் எடுங்க செல்லவிடுங்க பிள்ளையைமறங்க பொருத்துயிருங்க

(தெம்மாங்கு) பொருங்களென்று சொன்னவுடன் புரண்டழுதுகாசிராஜன்
வருத்தமொடு தூதுவரை வனத்தில் விட்டுவாங்களென்றான் (நன்)

ஐயா தங்கச்சிவிகையலங்கரித்தார் தாம்பாளத்திலே பிள்ளையை வைத்தார்.
எங்குமரிய பறையடித்தார் எடுத்துத்தூதர் நடக்கலுற்றார்
ஆயிரஞ்சோதிடர் நடந்துஅழுக ஆணும்பெண்ணுமாய் குடிகளழுக
ஐயா - ஊரைத்தாண்டி வழியும்விட்டார் உடனே தூதர் கடந்துவிட்டார்
கரியவனத்தில் வளத்தி விட்டார். மடியசேதியுரைக்க வந்தார்.
ஐயா பெற்றமகனை மறந்துபோட்டார் செத்தாப்போலே அழுதுவிட்டார்

(தெம்மாங்கு) அரியவனக்குடியிருக்கும் ஐந்து தலைநாகமது
பிரியமோடு பாலகனை பெற்றவள் போற்கார்க்குதையா

படத்தை விரித்து குடையாய்பிடிக்கும் பதரியழுதாலமூர்தங்கொடுக்கும்.
கட்டிபிடித்து அணைத்து படுக்கும் கண்டுகளிக்க நடனம்புரியும்
ஐயா மதனைபோல அழகு தலங்க மந்திரவாளுங் கையில் பிடிக்க
ரதிகள்போல சிறைகளெடுக்க ராஜமன்னரை வெட்டிஜெயிக்க
என்று வரத்தை கொடுத்து வளர்த்துவருது சுதிர்படாமல் குடைபிடிக்குது

(தெம்மாங்கு) பிள்ளையில்லாமலடி பட்டைவெட்டுமாதிகச்சி
துள்ளியழுங்குரல்கேட்டு துடித்தல்லவா ஓடிவந்தாள்

ஐயா - தங்கதட்டிலே பிள்ளையைகண்டான் தாவிஎடுத்து முத்தமிட்டா
கொங்கைமலர்ந்து அமுர்தங்கொடுத்து குழந்தைஎடுத்து ஓடிவருவாள்
ஆருடபிள்ளையோவென்றுநினைப்பாளா ஆதிசிவனை மனதிலெண்ணுலாள் ஐயா-
காடுகடந்தாள் கடுகநடந்தாள் ஓடிவந்தாள்ஊரை சேர்ந்தாள் ( நன்)

(தெம்) பட்டை வெட்டப்போனதொரு பத்தினியைக்காணமென்று
வாட்டமாக தடியெடுத்து காட்டுவழியேதேடிவாரான்

ஐயா வருகமளைவியெதிரில்கண்டான் வந்தின்னேரமேண்டியென்றான்
அடிக்கடி தடியைநோக்கிபிடித்தான் அவள்பயந்து மகனைகொடுத்தாள்
கண்டுமகிழ்ந்து கருத்துங்குளிர்ந்து தொண்டுபுரிந்து தூக்கியணைத்து
அண்டர்சேய்போல் தோற்றுமென்றான் அரியவிபரங் கூறுமென்றான்
கட்டைவெட்டிடும் படர்ந்தகாட்டில் தட்டில்கண்டதை கட்டிவந்தேன்.

(தெம்மாங்கு) தங்கச்சருவையிலே தானிருந்தபிள்ளையர்க்கு
சிங்காரமாய்த்தொட்டிலிட்டு சித்திரம்போல்வளர்த்துவாறார்

ஐயா ஆசை மீறி வளர்த்துவருவான் அழகுமதுரை வீரனென்பான்
காசிஜெனங்கள் பார்த்துபார்த்து கதிரவன்போல் விளங்குதென்பார்
சிலர் மன்னர்போலயிருக்குதென்பார் மாதிகநெப்படி வளர்ப்பானென்
மின்னம்பலவாய் குடிகள் சொல்வார் எல்லாமா தீகன்காதில்கொள்வார்
ஐயா- கேட்டுபயந்து நடிங்கிவிட்டான் காசியைதாண்டி ஓட்டமிட்டான்

(தெம்) பொம்மணன் கோட்டையிலே போய்புகுந்துமாதிகனும்
உம்மிடத்தில்சேகுவனாய் ஊழியங்கள் தாருமென்றான்

உடனே - சேவகமமர்ந்தான் செழிப்பாயிருந்தான் (தெம்மாங்கு)

(தெம்மாங்கு) சிந்தையுங்களித்து சின்னான் செழிப்பாயிருக்கையிலே
விந்தையாக வீரனுக்கு வேடிக்கையாயலங்கரித்தான்
அவர்காதில்சுடுக்கசோதிமின்ன கையில்காப்புகண்ணைபறிக்க
முருக்கு மீசையும்முகத்தின் காந்தியும் முடித்தசுங்கிலே மோககந்நியும்
வலதுசுங்கிலே வாமுமாலும் இடதுசுங்கிலேயே மனெழுத்தும்
அடுக்காய்பூட்டினர் ஆசைநீட்டினர் கடுக்கன்பூட்டினர் கலியைஒட்டினர்

(தெம்) பொம்மண ணநாய்க்கன்மகள் புத்திரியாள்பொம்மியரும்
நன்மையான சேதிதன்னை நாய்க்கனு மறித்திட்டானே

ஐயா- ஊருக்கடுத்தஒருகல் தூரம் மேற்குதிசையில் மேலானயிடத்தில்
பச்சைபந்தல் பாங்காயமைத்து பத்திநிபொம்மிஏவைத்து மேவிடுத்தா காவல்-
மாதிககின்னானை மன்னநழைத்து மங்கைக்குகாவல் தங்கநேமித்து
காவல் தன்னிலேகபடுவாராமல் கார்க்கபத்திரம் கட்டளையிட்டா
ஐயா- பத்திரங்காவல் பார்த்துவாருங்கள் நித்தமுங்காவல் நின்றுயிருங்கள்

(தெ) சின்னானம் பொம்மிகாவல் சீருடனே கார்த்திருக்க
உன்னிதமாய்க் காத்துமழை ஒங்கியே யடிக்குதையா

காவல் தப்புதே கருக்கலாச்சுதே இடியிடிக்குதே யிருண்டுபோச்சுதே
ஆக்கினை வருமென்றலறலாச்சுதே ஆதிசிவனை நினைக்கலாச்சுதே
அடி ஆரைபதிலுக்கனுப்புவேண்டி அரசனறிந்தால் பழுதுவருண்டி
ஜீவனங்கள் அழியுமோடி சிரசை வாங்கனேமிப்பாண்டி
அடி பிள்ளையிருந்தும் உதவவில்லையே பெரியதுணையும் வேறேயில்லைஏ

(தெம்மாங்கு) பிள்ளையிருக்க பெற்றவர்க்குயேன் விசனம்
கள்ளமில்லா பொம்மிகாவல் காளைமுத்து போறேனையா

ஐயா- பாசுபந்துடன்பதக்கங்கட்டி பட்டுவஸ்திரம் அங்கிபூட்டி
கத்தியுங்கேடயங் கையில்பிடித்து வெத்திலைபாக்கு வேண்தெடுத்து
மதுரை அண்டம் நடுங்கஒடிவந்தா னழகுபொம்மிகாவல் சேர்ந்தான்

(தெம்மாங்கு) பச்சையென்றபந்தலிலே பாங்குடனே வீரமுத்து
கச்சையோடுநிற்கையிலே கண்டிட்டாளே பொம்மி தானும் (நன்)
அடடா-காவல்கார்க்கவந்ததாறு ஊரும்பேரும் உடனேகூறு (நன்)

(தெம்மாங்கு) மாதிகன்பெற்றெடுத்த மதுரைமுத்துவீரனடி
சோயாதியுன் காவலுக்கு பாதுகாக்கவந்தனடி (நன்)
அடியே காவல்காரண்டி கனத்தவீரண்டி ( நன்னா)

(தெம்மாங்கு) பத்திரங்காவலென்று பைங்கிளியாள்படல் சாத்தி
உத்தமியுங்கட்டில்மீது உரங்கிநித்திரைசெய்திட்டாளே (நன்)
அப்போ-அத்தனை நினைந்தாள் நித்திரை புரிந்தாள் ( நன்னா)

(தெம்மாங்கு) கருக்கலிடி மின்னலிலே காத்து மழைவீசையிலே
ஒருத்தியுமாய் படுக்கவேண்டாம் உனக்கு துணையாய் வாரனோடி (நன்)
அடி அன்னக்கிளிஏ அழகுபொம்மிஏ ஆகைக்கேத்த அமுர் தக்கிளியே
என்னைத்தனியே விட்டுமெத்தைமேல் ஏகிப்படுக்க ஞாயமாகுமோ
அடிக்குமழையில் பொருக்கனோடி அண்டையில் கொஞ்சமிடமுந் தாடி
குடிசைக்குள்ள வாரனோடி கொஞ்சினாமு மிருக்கலாண்டி
அடியே குற்றமில்லடி கூடவாரண்டி சித்தமையடி சேரவாரண்டி ( ந)

(தெம்மாங்கு) ஆரடாமாதிகானீ அகடாக பேசுகிறாய்
குரியாகயிப்போது குடிசைவிட்டு ஓடிப்போடா ( நன்னா )

அடடா ஆணுவத்தாலழிந்தப்பலே ஆசைகொண்டு நீபேசும்பயலே
ஜாதியில்யீன சக்கிலிப்பயலே அடடா-காவல்கார்க்கவந்தபயலே
பிச்சைகேழ்க்க வந்தபயலே சரசமாட நினைத்தபயலே
கற்பையழிக்க நினைத்தபயலே பெண்டுக்கழைத்த கதையைப்போலே
அடே பிழைத்து ஓடடா பிடரிகாரடா தப்பி ஒட்டா தலையைகாரடா ( ந)

(தெம்மாங்கு) பையலென்றபோதே பதைக்கு தடியென்மனது
தையலேயுன் விரகம் தாளமுடிபோகலியே ( நன்)

அடி தலையை வெட்டி தரித்திட்டாலும் தக்கவாக்கினை புரிந்திட்டாலும்
உயிர்க்கழுவிலே ஏத்திட்டாலும் உலகம்பெரண்டு எதிர்த்திட்டாலும்
நான் விட்டுப்போகண்டி விரகம் தீரடிகட்டியென்னுடன் கலந்துபேசடி
காமன் கணையை துரத்திவோட்டடி காளைமுத்துக் கவலை தீரடி
அடி தொட்டியன்மகளே துலங்கும்ரதின கட்டிக் கரும்பே காமகிதியே

(தெம்) பொம்மணன்சீமையிது பிழைமோசம் நேருமோடா
உம்முடையமனையிற்சென்று உரவிருந்தால்கூடுபோடர (நன்)

அடடா-சக்கட்டங்கள் படிக்கவேண்டா சரசமாட நினைக்கவேண்டாம்.
வம்புதும்புகள் வுளர வேண்டாம் வாய்மதத்தினால் அழியவேண்டாம்
ஆசைகொண்டு நீபேசவேண்டாம் ஆக்கினை வந்தபின் அலரவேண்டாம்
பேசாமல்போய் வீடுசேரும் பெண்டுபிள்ளையின் முகத்தைப்பாரும் ( ந)

(பொது - விருத்தம்) இருவருந்தர்க்கமாடி யிருந்திடும்போ துமப்போ
அரிவையாம்பொம்மியாரும் அழுதுமேபுலம்பும்போது
மதுரையாம்வீரனென்னும் மன்னன் அருகிலோடி
சதுருடன் மங்கை தன்னைச் சரசமாய் துடைத்திட்டானே.

(தெம்மாங்கு) தலையிலெழுதினது தப்பாதுயென்று சொல்லும்
பழமொழிபோல் யிந்த விதி பலித்துதையா எந்தனுக்கு (நன்)
ஐயா- யிட்டவிதியோ ஈசன்செயலோ (நன்)

(தெம்)விதி உனக்குயென்ன பெண்ணே வீரமுத்து நானிருக்க
மதிமுகத்து பொம்மியரே மனவருத்தம் வையாதடி (நன்னா)

மங்கையை தழுவிமாறோடணைத்தான் மண்டிபோட்டுமடிமேல்
குந்தினான் ஏங்கியழுகும் கண்ணை துடைத்தான்
யிசைந்தவாயில் முத்தங்கொடுத்தான்,
அடியே-காசிராஜன்பெற்ற வீரண்டி காளைமகிமை கண்டுகொள்ளடி,
மாதிகனென்று மயங்கிடாதடி மண்டலமாள் பிறந்தபிள்ளடி
வீரன் மங்கையைபிடித்தான் மாறோடணைத்தான்
என்று செங்கையைத்தொடுத்தான் சேர்த்துபிடித்தான்

(தெம்) மங்கையருங்கண்விழித்து மதுரைமுகம்பார்த்தவுடன்
எங்குமில்லாவானந்தங்கொண் டிருபுஜமும்பூரித்தாளே (நன்)
இவர் - ஆதிசிவனே அழகும தனோ (நன்)

(தெம்) காளைமுத்துவீரனுக்கு கரமமது கண்ணிருண்டு
கோலமுடன் பொம்மியரை கூசாமல்பேசினானே (நன்)

மங்கையை தழுவி மாரோடணைத்தான் மலரும்பஞ்சணை மீதில்படுத்தா
மதனும்ரதிபோல் மனமுங்களித்தார் மருவிக்காமம் வீரகந்தீர்ந்தான்
கந்தர்வள்ளிபோல் கலந்துசுகித்தார் காமன்கணையை துரத்தியடித்தான்
வீரன் - முத்தங்கொடுத்தான் முகத்தோடணைத்தான்
சித்தங்களித்தான் சேர்ந்துயிருந்தான்(நன்)

(தெ) பொழுதுவிடிந்தவுடன் போய்தகப்பன் அண்டையிலே
பழுதுவொன்றும் நேறாமl பத்திரமாய்க் கார்த்தேனையா (நன்)
ஐயா-நித்தமுங்காவல் நானே போகிறேன்.

(தெம்மா) பத்திரமாய்கார்த்தேனென்று பாலனுரைத்திடவே
சித்தமது களித்தல்லவா சீக்கிரம்போடாவென்றான்
அடடா-பொழுதுபோனால் பழுதுவருமே (நன்)

(தெம்மா) அன்றுபொழுதுசென்று அந்திநேரமானவுடன்
வந்துநின்றானப்பொழுது வாழும்பொம்மி காவலுக்கு
அப்போபார்த்தவர் மயங்க பதுமைச்சிலைபோல்

(தெம்) கண்டவுடன்பொம்மியருங் காதல்கொண்டு வீரயன்மேல்
தெண்டனிட்டுகுடிசைக்குள்ளே தானழைத்தாளப்போது.
அடடா-ஆசைதுரையே அழகுமதனே

(தெம்மா) அழைத்தவுடன வீரையனு மரிவையர்க்குமேதுரைப்பான்
செழித்துமிகவாழ்ந்திருக்க கழுத்தில் தாலிகட்டுரண்டி
அடியே-தாலிகட்டினால் தழைத்துவாழலாம்.

(தெம்மா) மங்கையர்க்குதாலிகட்ட மன்மதரேவந்தீரையா
எங்களம்மான்யிதையறிந்தால் இருதுண்டமாய்வெட்டுவாரே
ஐயா - தகப்பனரிந்தால் தலையே போய்விடும்

(தெம்மா)ஏதுக்குமஞ்சாதே விளங்கொடியே பெண்மயிலே
வாதுவந்தால் வீரமுத்து வாட்டுரண்டிவாளாலே

அடியே -ஆதிசிவனும் அயனுமரிய அகிலமளந்த அரியுமரிய
சத்தியரிய சாமியரிய சண்முகனோடு கணேசனரிய
மின்னஞ்சந்திரசூரியர்சகலாறிய சாற்றுமுக்சோடிமும்மூர்த்திகளறிய
சித்தரறியசேடனறிய சத்தகன்னிகள்பக்தரறிய
மஞ்சள் நூலில்தாலியைக்கோர்த்து மகிழ்ந்து கற்பூர தீபங்கொடுத்து
செங்கையினால் தேவரைவேண்டி மங்கை கழுத்தில் தாலியைத்தரித்தா
அப்போ அந்திரதேவர்வந்துமே வாழ்த்த ஆனந்த புஷ்பமாரிகள்பொழிய

(தெம்மா) முப்பதுநாளும் முடிந்துதையா நாளையோடு
எப்படிநான் உன்னைவிட்டு எகுவேன ரண்மனைக்கு
அய்யா பொழுதுவிடிந்தால் பொம்மணர் வருவார். (நன்)

(தெம்மாங்கு)ஆசைக்கிளியே யெந்தன் அழகுாதி பொம்மியரே
நேசமா மருதேசம் நடக்கலாண்டிஇருவருமாய்
அடி-வஞ்சிக்கொடியே வாழும்பதியே

(விருத்தம் ) செப்பியபடியேதிங்கள் சென்றபின் பொம்மிமாதை
கொப்பென தீர்த்தமாடி கோலமாய்பணிகள் பூட்டி
வர்ப்புதவரிசையோடு வாத்தியம்மிகவேகொட்டி
காப்புடன் வீட்டுக்குள்ளே களிப்புடனழைத்திட்டாரே.

(மதுரைபொம்மணன்காவலைமாற்றி பொம்மியை சிறையெடுத்தல்)

(தெம்) தட்டிவரிந்துகட்டி தளுக்காக அலங்கரித்து
தொட்டியனார்மாளிதேடி துரைமதுரை வந்துநின்றான் ( நன்)

அப்புகெந்துடன்குப்பு செந்துமாய் அனுமார்லகுவை அழகாயெடுத்து
பத்துகட்டையும் தாண்டிகுதித்து படுக்கும் பொம்மிவாசல் மிதித்தான்
உருவிகத்தியை தலையில்வைத்து உத்தமன் பொம்மணன் நித்ரைசெய்ய
கண்டு மதுரை காளியை நினைத்து கடுகயியைப்போல் வுருவமெடுத்தான்
பரந்துயிரப்பில் பாய்ந்துபுகுந்து பத்தினிபொம்மியை தட்டியெழுப்ப
ஆசைக்கிளியும் அலரியெழுந்தா ளன்புடன்மதுரை முகம்பார்த்தாள்
கையைப்பிடித்து கடுகவழைத்தாள் மெய்யை தடவி முத்தங் கொடுத்தாள்

மதுரைவீரன் பொம்மியை சிறையெடுத்த நொண்டிச்சிந்து

வீரையன் பரிமீதில், பொம்மியெலும்மெல்லியரைத் தூக்கிவைத்து
வல்லபமதாய்க் காரியப்புரவியின்மேல், தானுமந்த கன்னியற்குபின் னிருந்து
உன்னிதமுடன் பஞ்சகல்யாணிபறியை, நடவென்றுபாவை யையிட துகையால்
மேவிபிடித்து - அஞ்சாமதுரைவீரன், கோட்டை அறிகிலேவந்து
குரடாவையெடுத்து தந்திரத்துடனடித்தான், கோட்டை மதில் தாண்டியேகுதித்து
தாந்தலைப்புரவி தெற்குமுகம் நாடிப்ப றந்து,
பொம்மணன்சீமையும் பாளையப்பட்டு தேசங்கடந்து திக்குவளச் சோலையும் விட்டு,
கொல்லிமலை-கூடியே களுங்கால்வழி நாடிநடந்து- கண்டோர்கள் நடுங்கிடவே,
தொட்டியமுங் கடந்து முசிரிவழிகங்கு லிருளில் - ஆமூர்வழியாக,
காவேரியாற்றில் வந்திறங்கி கூடாரமடித் து-தாமிருபேருமிருந்து,
பலகாரம் சாப்பிட்டிளைப்பாறி முத்துசாமி விரையன் - யிளமயில் பொம்மியுடனே,
கலவியிலயே காந்தமாகவே யிருக்கையிலே அலைகதிறோலுதித்தான்,
அப்போ- அலண்டுபொம்மணன் விழித்தெழுந்தனனே.

(தந்தின தன தனனம்)
(வ-ம்) இப்படி அலண்டெழுந்துதேடிவீரன்கொண்டுபோனானென்ற றிந்து
ஆமூர் ஆற்றங்கரையில்வந்து தண்டுடன் யுத்தஞ்செய்தல்.

(தெம்) அணி தலைவீரரெல்லாம் ஆணிமுத்துவிரையன்மேல்
சோனை மாரிபோல்தொடுத்து சுத்தவீரர்எதிர்த்திட்டாரே (நன்)
அப்போ-கத்தியைபிடித்தார் காவலர்யெதிர்த்தார்.

(தெம்மா) பட்டாவைகைபிடித்து பஞ்சகல்யாணியேறி
தொட்டியர்கள் சேனையெல்லாந் துள்ள துள்ளவெட்டுறானே
பதைத்தபேரைமிதித்துவெட்டுவான் பதிங்கினோரை ஒதிக்கி தள்ளுவான்
தூக்கிபோட்டுபட்டாபிடிப்பான் துரத்தி துரத்தி தரித்துவெட்டுவான்
மூலபலங்களொழிந்தாப்போல மூச்சிவிடுமுன்சாச்சிபோட்டான்
பொம்மணன்சிரசைபிடித்துவெட்டி போர்களத்தைவேறோடத்து
எதிரிலிருந்தால் வாங்களென்றான் எட்டுதிசையும் திரும்பிபார்த்தான்
கத்திஎடுத்துகழுவிபிடித்து பத்தினிபொம்மியின் பக்கமடுத்தான்

(தெம்) பாவிமகள்பெண்ணாலே படுகளத்தில்மாண்டீரோ
தாவியேபொம்மியரும் தானமுதுவடிவாமாள் (நன்)
வந்துபார்த்தாள் தந்தைமுகத்தை வாரியெடுத்துமாறோடணைத்தாள்.
ஏந்தனாலேஉந்தனுயிரும் ஏரக்கப்பிரமன் அளித்தவிதியோஎன்று
ஏங்கியழுதாள்இருகண்சிவந்தாள் யிடித்துமோதிஅடித்துவிழுந்தாள்
பாரைமோதீ பதறியழுதாள் பத்தினி பொம்மியும் கோபமாகினாள்
அலறியழுகுப்பொம்மியைசேற்றி அன்பாய்மதுரை. அட்சணம் ஓடி
பொங்கமாய்சந்தனகட்டையினாலே பொம்மணநாய்க்கனை தகனஞ் செய்தான்.
வைகையாற்றிலேள் தானமுஞ்செய்தார் வந்துஅன்னமும் உண்டுகளித்தார்

(மதுரை விஜயாங்கனிடம் சேவகமமர்தல் - விருத்தம்)
ஆமுரைவீட்டுவீரன் அன்புடன்பயணமாகி
சேமாய்விஜயரங்கன் சீமையில் வந்துதானும்
மேவியராசன்கேழ்க்க மெல்லெனவுரைத்துவீரன்
சேவகமமர்ந்துமப்போ செழிப்புடன்வாழாதிட்டானே

(மதுரை திருமலை நாயக்கனைக்காணுதல் தெம்மாங்கு )
திருமலைநாயகரை தெண்டகிட்டுவீரையனும்
கருவறுக்ககள்ளர்குலம் சாளைமுத்துவர்றவென்றான் (நன்)

(தெம்மாங்கு) நல்லதென்று திருமலை நாயகளுமப்பொழுது
வுல்லாசமாயன்னமிட்டு விட்டாரே விடுதியொன்று.
ஐயா-விஜயரங்கர் விட்டசேவசன் (நன்)

(விருத்தம்) மன்னவனுரைத்தவாரே மதுவாநல் வீரன்தானும்
வுன்ளிதசொக்கர்கோயில் வுத்தமன்றி தமூம்போற்றி
தன்மையாயிருக்கும்போது தாட்டிகமானகள்ளர்
வுன்னி தமாககொள்ளை ஒட்டுறார்வூரிற்றானே.

நொண்டிச்சிந்து

கள்ளர்மிகப்பிரண்டு, வருவதை-கண்டுவிட்டான்வீரன் செண்ட துபோல்-
அண்டத்தளாவும்பதவி, தன்னை-அதட்டிப்பிரத்துயேறி டத்திக்கொண்டே-
புகுந்தான் கள்ளர்படையில், இந்த-பூமியொடு அண்டரண்டம் வெடித்ததுபோல்-
பள பள பளவென்று, தலைகளை -பறக்கடி த்தான் உயிர்மறக்கடித்தான்-
கரகரகரவென்று நாராயணன்- கரத்தின் சக்கரம்போல் அறுத்தெறிந்தான் -
படபடபடவென்று, ராமன்- சண்டையிலே மூலபலம்உருண்டதுபோல்
வெட்டிவெட்டி குவித்து விட்டான்,
ஊரெங்கும்த்தவெள்ளங்கண்டல்லவா சிரித்துவிட்டான்
(தெம்மாங்கு)கள்ளர்குலமறுத்து காளைமுந்துவீரையனும்
வெள்ளையம்மாள்விடுதியண்டைவந்துநின்றநடுராவில்
மதுரை-மதிலையேற மன்னன்குதித்தான்
(தெம்) அங்கயற்கண்ணம்மனுக்கு அடிபணியும் வெள்ளையம்பாள்
தூங்குமஞ்சக்கட்டிளிலே துவங்கநித்திரைசெய்திட்டாளே ( நன்)
அப்போ-பத்திளிவெள்ளை சித்திரைசெய்கிறாள் : (நன்)
(தெம்) தட்டியெழுப்பினக்கால் தையலர்க்குகோபமென்று
துப்பட்டியைபோட்டல்லவா தூக்கிவைத்தான்வெள்ளையரை
தூங்கும் வெள்ளையை தூக்கிம துரை துப்பட்டி மீது துலங்கவளர்த்தி
ஆசையாகவேயெடுத்துக்கட்டியே அலங்கமதிலை தாண்டிகுதித்தான்
அங்கே கண்டுகாவலர்மடக்கிகேழ்க்க காளைவீரன்கலங்கிநிற்க
ஓடிராசன் முன்சேதியுரைக்க உடனே கட்டிவருக உரைக்க
மடக்கிராசன்முன் விடுக்கவீரனை மன்னவன்மூட்டையவிழ்த்து
பார்க்க அழகு வெள்ளையையதிலேகண்டு ஆக்கினை திருமலைநாய்க்
கனளித்தார் வீரனை கொண்டுபோய்விடுகசொன்னார்
மாறுகைகாலையறுக்கசொன்னா

விருத்தம்-மன்னவன்வுனாத்தவாரே மதுரையைகைகால்வாங்கி
சொன்னசொற்படியே செய்து தூதர்கள் நின்றிருக்க
வுன்னிதவெள்ளையாரும் உத்தமிநித்திரைநீங்கி
மன்னவன் முகத்தைப்பார்த்து மங்கையுங்கூறுவாளே.

(தெம்) பத்தினிமேலாசைகொண்டு பாவையரைக்கன்னமிட்டாய்
வுத்தமரேயெந்தனுக்கு பத்தாவேநீருமையா
ஐயா-உயிரும்நீரே உடலும்நானே

(தெம்) வீரனென்று அறியாமலே வெட்டிவிட்டோம் கைகாலென்று
கூறியே அடிவணங்கி கோடுகோடென்றழுகுறாரே (நன்)
அடடா-முந்திகொய்தோமே மோசம்போனாமே

(தெம்மா) - அந்தமுள்ள பொம்மியரும் அன்னம்போலநடைநடந்து
வந்து வீரன்முகத்தைப்பார்த்து சிந்தையுங் கலங்கினாளே (நன்)

என்ன செய்வேன்என்கணவா ஏதுமறியேள்ளு துந்தெரியேன்
வந்தவிதியின் வயணமறியேன் வாங்குங்கைகால் மருமமறியேன்
பாவியெண்ணம் பதறாய்ப்போச்சு பற்றிவந்து நான்வீணிலாச்சு
உந்தன் வீரம் எங்கேபோச்சு உன்னை ஜெயிக்க எவராலாச்சு
என்று ஓங்கிமண்மேல்வுருண்டு அழுதா
ஏங்கிமண்மேலிருந்துயழுதாள்

(தெம்) ஆதியிலே எந்தனுக்கு அளித்தவிதி தவருமோடி
கோதையரே உந்தனுக்கு கூறுகிறேன் பெண்மயிலே (நன்)

அடியே - ஆதிசிவனும் அயனுமாலும் கூடிதலையில் குறித்த விதியும்
மேதினிதனில் விட்டுபோகுமோ மெல்லியே விம்மியழுதால் தீருமோ
சூரியகுலத்தில் பிறந்தவண்டி மாறுபடாத வம்மி சக்காரண்டி
பொம்மிஏ என்வுயிர் புவியில்வைக்கண்டி அம்மைமீனாக்ஷியடியைசேர்வண்
என்று-அட்சணம்வுரைத்தான் அம்மையை துதித்தான்
பட்சமாய்வகுத்தான் பாவையர்க்குரைத்தான்

(தெம்மாங்கு) வெள்ளையரும் நாய்க்கரிடம் வேகமுடன் ஒடிவந்து
கள்ளனென்றுவீரமுத்தைக் கைகாலும் வாங்கிவிட்டீர் (நன்)
என்று -ஒங்கியழுதாள் உறைத்துத்தொழுதாள் (நன்)

(தெம்மாங்கு) சேதியைகேட்டவுடன் திருமலைநாய்க்கருந்தான்
மோதியேவிழுந்தழுது மூர்ச்சைகொண்டு ஒடிவாரார். (நன்)
அப்போ-கண்டுநாய்க்கன் கதறியழுதான் (நன்)

விருத்தம்-வாங்கியகைகளெல்லாம் வளர்ந்ததைப் பார்த்துமாதர்
ஓங்கிய தீயிற்பாய உடன் தன்கிரிகைச்செயது
பாங்கென உயிரைமீனாள் பாதத்தில்விட்டு வீரன்
தீங்கிலாக் காவல்கார்த்து தினம்பூசை வாங்கிவாறார்.
-----------------

This file was last updated on 25 March 206.
Feel free to send your corrections to the webmaster (pmadurai AT gmail.com)