pm logo

சிறுமணவூர் முனிசாமி முதலியார் இயற்றிய
"மதுரை சொக்கர் அலங்காரம்"

maturai cokkar alangkAram
by cirumaNavUr municAmi mutaliyAr
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
The e-text has been generated via Google OCR of the PDF file and subsequent proof-reading of the OCR output.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2026.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.


சிறுமணவூர் முனிசாமி முதலியார் இயற்றிய
"மதுரை சொக்கர் அலங்காரம்"

Source:
மதுரை சொக்கர் அலங்காரம்
இஃது, சிறுமணவூர், முனிசாமி முதலியாரவர்களால் இயற்றப்பட்டு,
தமது சென்னை சூளை
சிவகாமிவிலாச அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது.
1905
--------------
மதுரை சொக்கர் அலங்காரம்.
கடவுள் துணை.

நேரிசைவெண்பா.

விண்டுவொடு செந்திருவும் வேதன் கலைமாதும்
அண்டரொடு ரவிமதியோ ரானவரும் - தொண்டர்முதல்
யார்க்கும் பொதுமதுரை அப்பனதுதிருவடியைப்
பார்க்கமன மேசமயம் பார்.
--------

புருஷன்சொல் தெம்மாங்கு.

மாதவங்கள் செய்தல்லவா மானிடராய்ப் பிரந்தமிப்போ
வேதம்போற்றுந் தென்மதுரை வாமயிலே போய்வருவோம். ( நன்)

அவர் தோடும்விடையும்       துலங்குவடிவும்
      பிறையின்முடியும்       புனலிலொளியும்
        கறியினுறியும்        புலியினிடையும்
அறியுமயனும் பரவுமடியும்

அடியே- எத்தளைக்கோடி       உத்தமர்தேடி.
      வருவார்நாடி புகழைப்பாடி
அவர்களடியின்       பொடிகள்மேலே
அணுவினாலே       விளைகள்போமே

அடியே சீக்கிரம்வாயே       சேதியைகேளே
வாக்கியந்தாயே       வழியை பாரே. (நன்னா)
-------------

தெம்மாங்கு.
புரசைநகரைவிட்டுப் புரப்பட்டோம்       பெண்ணணங்கே
வரிசையாகத்தடத்தின்       சேதி வகையைக்கேளுவிபரமாக. (நன்)

அலங்காரம்.
சூளைக்கடையின்       கால்கெதியே
பாருமெதிரே       பார்க்கின்சதியே
ஆனைகெவுனி       அடுத்தவிதியே
சேனைப்பரவும்       டேஷ நிதுவே

அடியே மானேஒத்தை       வாடைபாறு
மதிராஜ் ரயில்லே       ஸ்டேஷன்னேறு
திருட ஜெயிலுங்       கடந்தம்பாறு

அடியே - காத்தைப்பிடியே       கடுகநடவே
பரத்தைபோலே       பார்வையுனக்கே. ( நன்னா)
-----------

தெம்மாங்கு
தெற்குகடல்காட்டும்       தென்மாற்கடேஷனிது
நிற்கபிடங்கிட்டாமலே       னெருக்குதடிஜெனப்பெருக்கம். ( நன்)

அடியே கூட்டம்நடுவே       நெருங்கவேண்டாம்
குமிங்கிவேர்வை       சொரியவேண்டாம்
காசுபணத்தை       மதிக்கவேண்டாம்
காலையெடுத்து       நடக்கவேண்டாம்.

அடியே -பஸ்டுகினாசி       பாசையா று
பாவையென்னுடன்       சொருசாயேறு
இஷ்டமான       பொருளைக்கேளு
யிதுவே பயணம்       மதுரை நேறு

அடியே- மணியடித்தார்       பிகில்கொடுத்தார்
மார்ச்சுபாகம்       பிடித்துவிட்டார்
ரயிட்டுகொடியும்       காட்டிவிட்டார்
லய நின்மேலே       முடிக்கிவிட்டார்.

அடியே- குப்புகுப்பென       புகைகிளம்புது
கொடிகள் செடிகள்       கூடவருது
மப்புமாசியும்       ஒன்றாய் விளங்குது
மலைகளெல்லாங்       கிடுகிடென்னது

அடியே - ஓட்டம்பாறு       ஓசைகேளு
வாட்டம்பாறு       வறுகும்நேறு ( நன்)
---------------
தெம்மாங்கு.

கண்டமடி சைதாபேட்டை       காணுதுபார் பரங்கிமலை
விண்டவாயை மூடுமுன்னே       வந்தமடி பல்லாவரம்

அடியே- வண்டலூரும்       கடத்தங்கூடு
வாஞ்சேரியும்       மிதுவேபாரு
சிங்கப்பெருமாள்       கோவில்பாரு
செங்கல்பட்டி       லதிகசீறு

அடியே- சிவில்கோட்டு       தெறியுதுபார்
திருடர்மொரடர்       வெறியறிவற்கு
பொவுலைபோக்கும்       ஜெயிலுமதுவே
போலீண்டேஷன்       ஊர்க்குபொதுவே

அடியே--வடகளத்தூர்       பின்னால்போச்சி
வருகும்வேகம்       பட்டாளமாச்சி
மதுறாந்தகமும்       நெறிங்கிபோச்சி
மானே அச்சர       வாக்கமாச்சி

அடியே-பெரும்பயாதே       பதிங்கிபோச்சி
பார்த்தால்ஒலகூர்       ஒதிங்கிபோச்சி
திண்டிவனத்தில்       மீட்டிங்காச்சி
தேனேமணியும்       பனிரெண்டாச்சி (நன்னா)

அடியே - பகடாவெட்டி       பசியை தீரடி
சொகுசாய்குந்தடி       சோம்பல்விடடி (நன்னா)
---------------

தெம்மாங்கு.
தீராவினை தீர்க்கும் தென்மயிலம்       தெரியுதுபார்
ஆறுமுன்பொன்னடியே ஆரணங்கே       தோத்திரஞ்செய் ( ந)

அடியே-இதவேவிக்கிர       வாண்டிபெண்ணே
விழுப்புரமது       தாண்டிக்கண்ணே
பண்ணுரொட்டியும்       கடந்தம்பெண்ணே
பாறாய்நெல்லி       குப்பம்பெண்ணே

அடியே-திருப்பாப்புலியூர்       தேவஸ்தளமும்
தெரியுதுபார்       கூடலூரும்
விருப்பமான       ஆலம்பாக்கம்
விடிந்தஜாமம்       பரங்கிப்பேட்டை (நன்னா)

அடியே- தொல்லைவினைக       ளெல்லாம்வாட்டும்
தில்லை கோபுரம்       தெரிசனம்பார் (நன்னா)
--------------------

தெம்மாங்கு.
கிள்ளை மொழியாரணங்கே கதிர்வடி வேல்      துணையிருப்பார்
கொள்ளிடத்தில் வண்டிவருது       குலிங்கினாலும் பயப்படாதே (நன்)

அடியே- பாளக்கரையுங்       கடந்துபோட்டோம்.
பாறாய்சீரு       காழியடந்தோம்
அருந்தநாத       புரமுந்துடந்தோம்
அப்புரந்தானே       மாயவரமும்

அடியே-குத்தாலமதோ       குரிகிப்போச்சி
கூடவே நர       சிங்கப்பேட்டை
வித்தகமருள்       திருவிடமருதூற்
விவரமாய்யார்       கும்பகோணம்

அடியே- கும்பலிங்கரை       கருத்தில்வையடி
ஒன்பதுகோண       மூரைப்பாரடி (என்)
---------

தெம்மாங்கு,

சுந்தாப்பெருமான்கோவில் சொல்லுபாவனாசமிது
அந்தமான அய்யம்பேட்டை அடுத்தமடி தஞ்சாவூரை ( நன்)

அடியே - அரசனுடைய       அரண்மனைப்பார்
ஆனைசேனை       பரிவாரம்பார்
காமாட்சியுட       சன்னதிபார்.
காவல்கோட்டை       அகழியைப்பார்

அடியே - வருகும்போது       விவரஞ்சொல்லுவேன்
வாடிபூத       லூரும்காட்டுரேன்
திருவரம்பூர்       தெரியபுல்லுவேன்
திருச்சினாப்பள்ளி       யெரங்கச்சொல்லுவேன்

அடியே,-தானாவளந்த       தாயுமானவர்
தாரிலெவர்க்கும்       தந்தையானவர்
தேனாளணங்கே       கிரியைப்பாரே
தெரிசித்திடுவோம்       யேரிவாயே

அடியே,- திரும்புகாலை       நன்றாய்ப்பார்ப்போம்
ஸ்ரீரங்கமு       மிங்கேதோற்றும்
ஏழுமதிலும்       கோபுரங்களும்
யிமையோராதிகள்       தொழுதஸ்தளமாம்

அடியே, - விபூஷணாழ்வார்       தொழுதாப்தா
வைகுண்டத்தலே       வாழும்.நாதா
புவியிலெங்கள்       மீதில்வாதா
போற்றிசெய்வோம்       அருளை தாதா

அடியே,- யென்றுதுதியே       யேக்கம் நீக்கே
நின்று துதியே       நிமிஷம் நினையே. ( நின்)
-----------------

தெம்மாங்கு.

தென்குளத்தூர் மணம்பாரை       தெரியுது பார்வையம்பாடி
அன்னமொழி மாதரசே       அய்யலூரை அடுத்தமோடி. ( நன்னா)

அடியே - வடமருதையை       கடந்துதோடி
வந்தோம்அம்பாத்       துறையுன் நேரடி
சோளவந்தான்       கோவில்பாரடி
சமயநல்லூர்       சிரியஊரடி

அடியே,- தென்மருதை       கண்டமோடி.
தேகமெங்கும்       குளிர்ந்தமோடி
அம்மன்சன்னதி       கோபுரம்பாரடி
அழகுமருதை       வீதிபாரடி

அடியே.- திருமால் நாய்க்கன்       மாலி நழகும்
தீர்ப்புகோர்ட்டு       கச்சேரிகளும்
சருவதேசமுங்       கடிதங்கொடுத்து
சஞ்சலமொழிக்கும்       போஸ்டாபீகம்

அடியே,— செப்பினசேதி       சீறாய்ப்பாரே
செப்பகுளமும்       தெருவைபாரே.
----------------

தெம்மாங்கு,
வீதிபலகடந்து வந்தோம்       புதுமண்டபத்தில்
ஒதும்சரஸ்பதியாள்       ஓங்கியிதோ குடியிருக்கிறாள். ( நன்னா)

அடியே,- புதுமண்டபத்தின்       சொகுசைப்பாரு
புத்தகக்கடையின்       அழகைப்பாரு
வெல்கலக்கடைபின்       விலரம்பாரு
வேனுமான       பொருளைக்கேளு

அடியே -பொஸ்தாமசையில்       தீர்த்தமாடு
பொசிக்கமிட்டாய்       கடையைக்கூடு

வீரனுடைய       அடக்கம்பாரு
வேதியர்கூட்டமும்       சன்னதிபாரு
அடியே-பஞ்சவர்ண       கிளிகள்பாரு
பாஷை பலதும்.       போங்கேளு
அஞ்சாமருதை       காவல்பாரு

அன்னமேயென்டை       மொழியைகேளு
அடியே-தாகம்தீக்கு       ஜெனங்கள்போக்கு(நன்)
துடந்துகோக்கு       திரவுன்வாக்கு(என்)
-----
தெம்மாங்கு.

வாக்குதிரயுமென்று வண்மையுடன்       சொன்னவரே
காக்கும்சதாசிவமென்       கருத்தினிலேயிருக்கலியோ ( நன்)
அடடா

யீசன்னமதுஉளத்திலில்லையோயேனோயிப்படி       நடக்கத்தொல்லையா
காசையழித்தி வரவும்சள்ளையா       கருத்திலரியாமூடர்சொல்லையா"
அடடா - நம்பித்துடந்தேன்       யேனோ நடந்தேன்
வழியுங்கடந்தேன்       ஊரும்அடைந்தேன். ( நன்னா)

தெம்மாங்கு,
மெத்தவருத்தமுற்று       மேனியெல்லாம் வாடுகிறாய்
அத்தனதுதிருவருளை       யாரறியக்கூடுமடி, ( நன்னா)

அடியே
அகிலபுவனும்யெவையுமவனே       ஆணுவும்மேறுமானதவனே
சகலஜீலஉயிருமவனே       சாமியவனே னாமும்அவனே
அடியே, சாரசோரதீரக்கரையி       லூருமனதைதேப்பாரு
சேறும்பிரவி தூரும்நேறு       பாலுனக்குகூரக்கேளு
அடியே - வேதசெரியே       ஒதும்பெரியோர்
பாதம்பிடியே       சூதையறியே ( நன்னா)

தெம்மாங்கு.
மதுரைநகர்பார்க்க       மனமகிழ்ந்துவந்ததன்றி
குதிரைவித்தவன் தன்னைனாடி       கோறினாங்கேழ்க்கலியே ( நன்)

அடடா
யீசனம்மிடம்ப்பேசப்போகுதா யீன்றகடவுள் மனதிலில்லையா
ஆசையிருந்து அவை தல்லால்       ஐயோவரமுங்கொடுக்கப்போகுதா

ஐயா
யேனோசிப்படி ஆவல்கொள்ளுரீர்       என்னையிழுத்து உள்ளேபோகுரீர்
கானலைப்பார்த்து நீரென்றலையிர்       கடவுளிருக்குமிடமுமறியீர் ( நன்னா)

ஐயா-ஆணாபிறந்தும்       புத்தியில்லையா
அடியால்சொன்னதும்       தெரியவில்லையா (நன்னா)

தெம்மாங்கு.
பித்தம்பிடித்தலை       பிள்ளைகறிதின்றவனை
மெத்தமெந்தபெறுமைசொல்லி       மிரட்டுகிருயென்கணவா (நன்)

அடடா
ஒருத்திகுடலில்பாதிகொடுத்தான்       ஒருத்தியெடுத்து தலையில் வைத்தான்
பிரமன்சிரசை திரிகிப்பிடித்தான்       பிரம்பாலடியையும்பட்டுபொருத்த திருத்தஞ்செய்தான்

அடடா
மண்ணுமெடுத்தான் பெண்ணுங்கொடுத்தான்       மறுத்துவச்சிபோஸ்
கணணன்கொடுத்தயெச்சிலைத்தின்றான்       காட்டில்விரகையொடித்து வித்தான்

அடடா
யின்னமுஞ் சொல்லவா       மானமில்லையா
போனதெல்லாம்       யெடுத்துப்போடலா (நன்னா)

தெம்மாங்கு,
கறியையுரித்தவளை       கையில்மழுவெடுத்தவனை
அறியனென்றா மிரட்டுகிறாய்       அவனைச்சிவனென்றே துதித்தாய் ( நன்)

அடடா
கூட்டிக்கொடுத்தான் குலத்தைக்கெடுத்தான்       குறக்குலத்திலே மகனைத்துலைத்தான்
மூத்தபிள்ளையை தெருவில்விட்டான்       முகட்டுமாட்டையேரி திரிந்தா

வல்லாளன்றனக்கு பிள்ளையாய்பிரந்தான்       வருடந்தோருங்கருமஞ் செய்கிறான்
யெல்லாவீட்டிலும் யிரந்துதின்றான்       யிடமில்லாமல் சுடலைகிள்றன்

அடடா-
பென்னாசடலம்       யிதற்கானடலம்
யெல்லாந்தெரியும்       சொல்லவாகுறையும் ( நன்னா)

தெம்மாங்கு,
காராம்பசுவானாள்       கன்றுதனைகொன்றுவிட்டான்
தீறாவிசனம்வைத்தான் தேங்கவைத்தான்       உலகமெல்லாம் ( நன்னா)

அடடா
வஞ்சியர் தமக்கு வளையல்வித்தான்       வனத்துபெண்களைக் கற்ப்பழித்தான்
தாசிவீட்டிலே வாதஞ்செய்தான்       தன்னுடைய பிள்ளைக்கிவணங்கிரி நின்றான்

அடடா
பன்றிக்காக அபயமென்றான்       பார்த்தன்கையில்வில்லடி பட்டான்
மூத்தபிள்ளைக்கிகன்னிகழிய       முதலில்லாமல் அலையவிட்டான்

அடடா
கட்டத்துணியு       மல்லாமிடியன்
கறியினுறியை       போர்த்தவெறியன் ( நன்னா)

தெம்மாங்கு,
கெஞ்சாவெரியாவே       கேட்டவரங்கொடுத்துவிட்டு
அஞ்சிபயந்தோடியல்லோ       ஐவேலங்காய் கனிலொளித்தார் ( நன்னா)

பெண்ணையெதிர்ந்து சபதங்கூரினான்       பிள்ளைகள்போல்ஆட்டமாடி
குடிமாரனுடகுணத்தையரிந்தும்       கூறைகூட பிரிக்கவைத்தான்
தரியை பரியாய் மாத்திவைத்தான்       நமனைகூட விழவுதைத்தாள்
தெரிவில்மண்ணை மறுந்தாய்தொடுத்தான்       தீராவழக்கைகோர்த்து செரித்தான்.
யெல்லாப்பிழைப்பும்பிழைத்துபோட்டான்       பின்னம்பிரணியெடுத்து மாட்டான்
னல்லவன்போலமௌனங் காட்டுவான்       னம்பினாக்கால் கெடுத்துப்போடுவான்

அடடா
காடுசெடியை       வீடாவிடுவான்
மாட்டைகாட்டி       மயக்கித்திரிவான்

தெம்மாங்கு,
பணமேதுகாசியேது       பாப்பல்லவா ஆபரணம்
பிணமிருக்கும் சுடலையிலே       குடியிருக்கும்.ஆண்டிப்பயலே ( நன்னா)

அடடா
கல்லாலடியும் வில்லாலடியும்       காட்டுலேடன் செருப்பாலடியும்
யெல்லாம்பொருத்தகஞ்சாவெரியன்       யேனோ அவளைனாநாய்பணிய

அடடா
குதுக்காரன்வாதுக்காரன்       திரிபுரத்தை யெறித்தபறையன்
மாதைச்சுமந்துதிறிந்தவெறியன்       மாளாவிடத்தை பாலாயுண்டவன்
அடடா- இதுவும்பிழைப்போ       யென்னாகொழுப்போ
முழுதுமுரைக்க       பொழுதுமிருக்கேர ( நன்னா)

புருஷன்சொல் தெம்மாங்கு.

உன்னை மலைத்தெல்லவா       உளருகிறாய்பெண்ணணங்கே
தென்னவளைவீழ்த்தனாதன்       திரமுறைக்க வயதுவேணும் (நன்னா)
அடியே
உலகமெவையும் அழியும்பொருளே       உடலும்நாளை சுடலைக்கரையே
நினைப்பதெல்லாம் நடப்பதில்லை       நேத்திருந்தவர் இன்றைக்கிலையே
அடியே
தொண்டர்க்காகயித்தனையாட்டம்       தொடுத்துசோதனைசெய்தநாட்டம்
அண்டர்முதலாம் ரிஷிகள்கூட்டம்       யாரும்புகழும் மதுரைதேட்டம்

அடியே வுளக்கு
தெரியாதாலே உறைத்தாய்சிச்சி       தெரியப்படுத்தபொருத்தேன்பேச்சி
ரவியும்மேற்கே மறைந்துபோச்சி       ரயிலுக்கேடயனுமாச்சி
அடியே- அரும்புவிழியே அமூர்மொழியே
திரும்பும்வழியே       தீரஞ்செழியே. (நன்னா)

தெம்மாங்கு,
சிறுமணவூரென்னும்பதி       சிறுவன்முனிசாமிக்கவி
அறுமையாகசொக்கர்பாதம்       அலங்காரமாய் துதிமனமே . நன்னா

ஐயா,
நன்னூல்காண்டிகை நாலடியார்       நளின்மொழியாமிலக்கணங்களும்
முன்னேர்குரளும் முதிய நிகண்டும்       மூடச்சிரியேன்தேடியறியேன்
ஐயா,
படித்துமறியேன் பகுத்துமறியேன்       பாடும்பிரறைக்கேட்டுமறியேன்
வடிவத்தாராமொழியைப்போலே       வாட்டுக்காக்கையிரையும்பாரே

ஐயா,
அளித்தமகனும் மலத்தைவிட்டால்       ஐயோ துடையை அறுப்பதுண்டா
களித்தயானு முறைத்தவாக்கை       கருத்தில்பிழையாய் பொருந்தவேண்டா

ஐயா-பெரியோறடியே       தினமுஞ்சிறியோன்
மரக்கவறியேன்       துதிக்கப்பொருவேன். (நன்னா)

சொக்கர் அலங்காரம் முற்றிற்று.
------------

This file was last updated on 25 March 2026.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)