pm logo

சிறுமணவூர் முனிசாமி முதலியார் இயற்றிய
"நாகூர் சபாபதிபத்தன் கொலை அலங்காரம்"

nAkUr capApatipattan kolai alangkAram
by cirumaNavUr municAmi mutaliyAr
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
The e-text has been generated via Google OCR of the PDF file and subsequent proof-reading of the OCR output.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2026.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.


சிறுமணவூர் முனிசாமி முதலியார் இயற்றிய
"நாகூர் சபாபதிபத்தன் கொலை அலங்காரம்"

Source:
நாகூர் சபாபதிபத்தன் கொலை அலங்காரம்.
இஃது, சிறுமணவூர், முனிசாமிமுதலியாரவர்களால் இயற்றப்பட்டு,
தமது சென்னை சூளை, சிவகாமிவிலாச அச்சுக்கூடத்திற்
பதிப்பிக்கப்பட்டது.
1905.
**********

நாகூர் சபாபதிபத்தன் கொலை அலங்காரம்.

சிவராமஜெயம் - கடவுள் துணை.

விநாயகர் துதி.

சத்திவிநாயகனே சபாபதிபத்தன்கதை
முற்றிலுநானுரைக்க முன்னிருந்துகாருமையா

அலங்காரம் - சத்திமைந்தன் பாதம்போற்றி
சண்டை செய்த கதையைச்சாற்றி
குஸ்திசெய்தோர் பட்டகீர்த்தி
கூறிடுவேன் கேளும்நேர்த்தி

ஐயா - மஸ்துமுதலில் புழங்கச்சொல்லும்
மாதாபிதாவை யடிக்கச்சொல்லும்
கத்திகைகையி லெடுக்கச்சொல்லும்
கண்டபேர்களை வதைக்கச்சொல்லும்

ஐயா - இத்தனைத்துன்பத்தை செய்யச்சொல்லும்
இன்னமும் வர்மத்தை நினைக்கச்சொல்லும் ( நன்)

தெம்மாங்கு - தேசத்திலனேககொலை செய்துவரக்கேள்வியுண்டு
வாசம்புகழ் நாகூரிலே வன்கொலையைகேளுமையா ( நன்)

அலங்காரம்-விஸ்வகுலத்தில் பிறந்தபாலன்
வீரன்சபாபதி யென்னும்பேரன்
கஸ்பாமுழுதும் தெரிந்தவீரன்
கல்லைப்போன்ற மனதுக்காரன்

ஐயா - குங்குமம்போலே குளிர்ந்தமுகத்தான்
குயிலைப்போலே வார்த்தைக்காரன்
மங்கையற்கேற்ற மார்புக்காரன்
தன்னைப்போல வடிவுக்காரன்

ஐயா - தலையிலிப்படி விதித்திருக்க
தவரிடாதடி பிரமகிறுக்கு

தெம்-குத்துசண்டைகுஸ்திகளும் கோல்கத்திகோப்படாவும்
சுற்றிருக்கும்வீரமெல்லாம் காட்டவாசபாபதிமேல் ( நன்)

ஐயா - நாகூர்முழுதும் சொல்லிக்கொண்டு
நாலைந்துபேர்களாய்க் கூடிக்கொண்டு
கள்ளுசாராயத்தைக் குடித்துக்கொண்டு
காலாட்டிபயல்களை சேர்த்துக்கொண்டு

ஐயா -பள்ளுபரயரை யடித்துக்கொண்டு
பாவிகபடாய் நினைத்துக்கொண்டு
சொல்லுக்குமீறி நடந்துக்கொண்டு
துரோகிப்பயலு மிருந்துக்கொண்டு

ஐயா - தன்னைத்தானே புகழ்ந்துக்கொண்டு
தானே வீரனென் றிருக்குநாளில் ( நன்)

தெ - அடுத்தவீட்டு மங்கையரும் அன்னமதுவீதில்வைக்க
கடுகடுத்து நாய்களெல்லாங் கலகமது செய்யுதையா ( நன்)

ஐயா-நாய்களெல்லாம் சண்டைகொடுக்க
நாடியிரைச்ச லதிகமெடுக்க
ஓய்ந்துசிலது ஓட்டமெடுக்க
ஓரங்கியிரங்கசாமி விழிக்க

ஐயா - வித்தசிரிக்கிகள் நாய்கள்குலைக்க
வேசிசிரிக்கி சாதம்வைக்க
கத்துமிரைச்சல் காதடைக்க
காமாட்டி சிரிக்கி நாய்கள்குலைக்க

ஐயா - சண்டிசிரிக்கிகள் போலேதொண்டைகள்
சவங்கிசிரிக்கிகள் யாகவாய்கள் ( நன்)

தெ - புண்ணியந்தேடியல்லோ போசனங்கள்வைத்தோமம்மா
பண்ணபுண்ணியம்கைமேலேதான் பலித்ததடிமீனாட்சியே ( நன்)

ஐயா - சின்னகாமாட்சி நீசேதியைகேட்டையா
சிறிக்கிபயலின் கொழுப்பைப் பார்த்தையா
ஒருகாயிக்கிநான் சாதம்போட
ஒன்பதுநாய்கள் சண்டையாட

ஐயா-நாய்களிரைச்சல் காதில்கேட்கவே
பேய்பயல்களை விழிக்கச்சொன்னமே
பின்னுங்கம்மாள ஜாதிகெருவமா
வையிதவாயிலே புழுவுந்தள்ளாதா
பையவேகாளி கொண்டுபோகாதா ( நன்)

தெ - மங்கையருமிவ்விதமாய் மனதுதொந்துவார்த்தைசொல்ல
அங்கமீதுமாரியம்மன் அடுத்தபோதுஅடித்திட்டானே

ஐயா - தன்னையடித்து தங்கயையிடித்து
தமயன்மார்களை யெட்டியுதைத்து
அன்னையடித்து தந்தையடித்து
அத்தைமதனி மாமியடித்து ( நன்)

ஐயா - வீடுமுழுதும் யிரைச்சலெடுக்க
வீதினாலும் கூட்டம்நெருங்க
வாடிமனது சோபங்கோர்த்து
வன்னை தந்தை மூர்ச்சையடுத்து ( நன்)

ஐயா- புரண்டு அழுதார் புத்தியை கலைத்தார்
உருண்டுஅழுகார் ஓசைவிடுத்தார்

தெ - இத்தனை அடியும்பட்டு இணைபிரியா தருகிருந்து
மற்றொருவர் காணாமலே மன்னவனும்டேஷன் சேர்ந்தான்

ஐயா- போலீஸ்டேஷன் போயிசேர்ந்து
புண்ணியஜவானை கூப்பிட்டுபார்த்து
சீக்கிலே நானிருக்கும்போது
திருட்டுப்பயல்கள் வீட்டில்வந்து ( நன்)

ஐயா-கம்பி தடிகளை கொண்டுவந்தார்.
கண்டபடியெல்லா மடித்துப்போட்டார்
தங்கையழுவதை யெட்டிப்பார்த்தார்
தைரியமாக கன்னத்திலடித்தார் ( நன்)

ஐயா - அடித்துவிட்டு சென்றாரையா
ஆத்திரத்தால் வந்தேனையா

தெ- நல்லவன்போலேநீயும் நாயங்களை சொல்லவந்தாய்
நின்றிறுமுன்மனக்கவலை நிவர்த்திசெய்கிறோ மென்றுரைத்தார்.

ஐயா - கேட்டுமனது சலித்தானையா
கிருகிருவென்றிவன் வந்தானையா
ஓட்டமாக வோடினானையா
ஒருநொடியிலே சேர்ந்தானையா. ( நன்)

ஐயா - சின்னமரக்காரை கண்டானையா
சேதிவிபரத்தை விண்டானையா
என்னிடவார்த்தையை கேளடாநீ
யிப்பவேசம்மன் செய்யடா நீ ( நன்)

ஐயா - சர்க்கார்கூப்பிட்டால் வாரேன்போடா
சாட்சிலிண்டால் சொல்லுரேண்டா

தெ - கடைவீதியுள்ளவரே கணக்கெழுதும்வர்த்தகரே
மடையனான்சாட்சிபோடுறேன் மனதுவச்சிசொல்லவேணும்

ஐயா - காணாதசேதி சொல்லவேண்டாம்
கண்ணில்கண்டதை கூறவேண்டும்
வீணாய்பாவந் கேடவேண்டாம்.
விருதாவிலே கெடுக்கவேண்டாம்.

ஐயா - என்னைப்போல பிறப்புயிருக்கும்
யேழைமீதில் கிருபைதொடுக்கும்
பன்னிபன்னினான் சொல்லக்கடுக்கும்
பாலன் மீதிலே வருமம்விடுக்கும்

ஐயா - இதுதான்சேதி சொல்லவந்தேன்
இனிமேலொன்றும் விள்ள மாட்டேன் ( நன்)

தெ - சாந்தகுணமுடையாபாபதியே சொல்லுகிறோம்.
அடுத்தாப்போலிருந்தவரை அழைத்துவைத்துகேளுமையா

ஐயா - கண்ணாலொன்றுங் கண்டதில்லை
காணாதவார்த்தை விண்டதில்லை

தெ - நீதியநீதிகளைநித்த மவர்தானருந்து
வாதிகளையோட்டிவைக்கும் வண்மைகச்சேரிதான் புகுந்து

ஐயா- கச்சேரி தனிலே புகுந்துக்கொண்டு
கலகந்தனையே சொல்லிக்கொண்டு
அச்சமில்லாசம்மன் வாங்கிக்கொண்டு
அவர்விரோதிக்கு நீட்டிக்கொண்டு

ஐயா - கோட்டாரவர்கள் குறித்ததேதியிலே
கும்பலாயவர் போகும்போதிலே
பார்த்துதுரைகள் கூப்பிடும்போதிலே
பலபலவாய்சொல்லும்போதிலே

ஐயா- சாட்சியில்லாமல் தள்ளிபோட்டான்
சலித்துமனது ஓய்ந்துவிட்டான் (நன்)
-----------

நொண்டிச்சிந்து.

பதினைந்து ரூபாயெடுத்தான் தங்கை தனை பக்கத்திலே
குந்த வைத்து நீதியுரைத்தான் மதியுடன் கடையெடுத்தான்
இவனுக்கு மனம்போன சரக்கெல்லாம் வாங்கிக்கொண்டான்
விசையுடன்வீடடுத்தான் இவர்களை விரைவிநிலெல்லவரை
யுரங்கசொன்னான் கோல்போட்ட கத்தியெடுத்தான்
யென்னையுன்னை தூக்கிப்போட்டு அடித்திட்ட பாவியுயிரை
மீறியயிரவுக்குள்ளே பிணங்களை மேடாக யெல்லவரை
சேர்க்குரேன்பார் யென்றுசொல்லி தங்கையிடத்தில்
வுடனேயெழுந்து வெளியில்வந்து மணிபார்த்தான்
யெட்டுமணியென்று. மதித்து சபாபதி யேங்கியிருக்கும்போது
ஆயர் பாடியில் கண்ணன் வந்துதித்தார்போல் கோவிந்தனும்
கருத்தை நிலைநிறுத்தி ஆசானைக்கண்டு இன்னமென்ன
தாமதமென்றான் இருவரும் யெழுந்துநடந்து
மவர் சிரித்துக்கொண்டு புகுந்தார் கடைவீதியில்
யிந்தபூமியோடு அண்டாண்டம் வெடித்ததுபோல்
பளபளபளவென்று தலைகளை பரக்கடித்தான்
வுயிர்மரக்கடித்தான் கரகரகரவென்று நாராயணன்
கரத்தின் சக்கரம்போல் அறுத்தெ ரிந்தான் படபடபடவென்று
வீமன்பிடித்த சுதையில் பட்ட ரணக்களம்போல் சடசடசடவென்று
ராவணன் சண்டையிலே மூலபலம் வுருண்டதுபோல்
குத்திகுத்தி குளித்துவிட்டான் வூரெங்கும் இரத்தவெள்ளங்
கண்டல்லவோ சிரித்துக்கொண்டான் எமனிட பதிசேர்த்தான்
சிலரையேங்கியிருக்கும்படி செய்துவிட்டான் வாங்கினான்
ஒட்டத்திலே இவன் வந்தவழி போனவழிதெரியவில்லை.

கும்மிப்பாட்டு

கும்மியடி பெண்கள் கும்மியடி
மனக்குறைகள் நீங்கவே கும்மியடி
நம்மையாளுநாகூர் ஆண்டவர்பாதத்தை
நாடியே சொல்லி யடியுங்கடி. 1

சொல்லிகணேசரடிபோற்றி யெழில்
சூதணிக்கொங்கை சூடத்தணங்கே
பொல்லாதபாவி சபாபதிகதைக்கி
போரூர் முருகனுங் காப்பாமே. 2

ஆறுமுகவனு முன்னிருக்கக்கல்லை
அம்பிகைவாணியென்னா விலிருக்க
தூதருக்கஞ்சாத சபாதிகதையை
கோதையே நீங்களும் சொல்லுங்கடி, 3

சொல்லவளந்திகழ் தஞ்சாவூர் ஜில்லா
சூழும்நாகப்பட்டணந்தா தூக்கா
பலரும்புகழ் நாகூர் தன்னிலே
பாவிசெய்தகுலைகேளுங்கடி. 4

கேழ்க்கவேசொல்வேன் மன்மதளு
வைகாசியாம் பதினா லிலேதான்
சூழுங்கருக்கல் இரவில் புகுந்தவன்
செய்த பெருங் கொலை கழறுகிறேன். 5

கம்மாளஜாதியென்றே யுறைப்பாரலன்
காரணநாமுமறியே ண்டிமிக்க
உலகத்தில் சபாபதியென்றுமே
மெத்தவுங்கேள் வியாம்பெண்ணரசே 6

பெண்ணரசே யிந்தப் பாவிக்கதையின்
பெருமைசற்று விளங்கிவிட்டு
பண்ண விபரீதகோல முறைத்திடப்
பத்தினியேசெவி சாற்றிடுவாய். 7

சாற்றிடக்கேளும் சபாபதிபத்தனில்
தன்பிறவி மூன்றுபேர்களிலே
தூதுக்குடையவிப் பாளியிவனுடன்
தோகையொருத்தி ஓர் தங்கையுண்டாம்; 8

கங்கையைத்தள்ளி யடித்தாரென்று
இந்தத் தறுதலைப்பாவி சபாபதியும்
மங்கையைக்கொல்லா குறையைக்கொண்டுமறு
மன் னறைக் குத்தத்துணிந்தாண்டி. 9

துணிந்தவிரோதி வருங்குரியது
தோதாய்சமய மதைப்பார்த்து
கனிந்தமாங்கனி விழும்போலே தலை
கத்தியால் குத்தினான் நாகைப்பெண்ணே. 10

கத்தியால்குத்தி தள்ளுாதும்பாவி
கம்புனால் மாரியடிக்கிறதும்
தத்தித்தடுமாறி விழுகிறதும் வுயிர்தானே
எமலோகம் போகிறது 11

போகிறஉயிர் விளிக்கிறதுமது பூமியைப்பார்த்து
மழுகிற தர்வாகுடன் காலையுதைக்கிறதும்
பார்த்துவையகம் சொல்லுகிறார் நங்கையர்கள். 12

நாகூர்மனிதரேகேளும் பிள்ளாயிந்த
நரபெலிசெய்ததை பாரும்பிள்ளாய்
சாகுறாரென்று தெரியாமலிவன்
ஜாடினான் கத்தியால் ஆனவரை, 13

ஆதியில் தேசிங்கு யுத்தத்தில்பெண்ணே
அன்பனா மோவுத் துக்காரனுமே
பாதிகதையில் உயிர் கொடுத்தானென்று
பாவலர் சொல்லியிருக்கிறார்கள். 14

சொல்லியிருப்பதை கேட்டிருப்போமையா
சுருதிமொழியிலும் பார்த்திருப்போம்
அல்லலில்லாத சபாபதிக்குத்துணை
ஆனந்த கோவிந்தன் சேர்ந்தாண்டி. 15

கோவிந்தனென்றுமே பேரைவைத்துக்கொண்டு
கொலைகளைச் செய்யவே யெத்தனித்து
பாவிப்பயல் யிருவருங்கட்டியே படுகொலை
செய்தாரே நாகைப்பெண்ணே. 16

சேதிவிபரத்தை கேளுங்கடியதன்
சித்தவுருதியை பாருங்கடி நீதிய
நீதிவிளங்கவுலகத்தில் நினைவாய்
நீங்களுங்கேளுங்கடி. 17

வேறு மெட்டு.

ஆண் - குத்துபட்டிறந்தவர்கள் கேளடி பெண்ணே
கூறுகிறேன் யானுமிதைப்பாரடி கண்ணே
பத்துரூபாசுருட்டுவிற்கும்கோவிந்தன் பெண்ணே
பரமபதிசேர்ந்தானடி நாகையில் கண்ணே

பெண் - யென்னமாய் குத்தினானோயெந்தன் கணவா
யெடுத்துறைக்கவேணுமையா யெந்தன் கணவா
முன்னமவனை செய்தகுற்றமென்ன கணவா
முடிந்ததிங்கேவினையாவந்துசொல்லுங் கணவா

ஆண் - தங்கையையடித்தானென்றுகேளடி பெண்ணே
தன்னைவந் துவுதைத்தானென்றுபாரடி கண்ணே
மங்கையினால் குலைசெய்யகேளடி பெண்ணே
மனந்துணிந்துறாதாசெட்டியைமடித்தானே. கண்ணே

பெண் - தந்தைக்கிதலைமகனாம் யெந்தன் கணவா
தருமத்திற் சிறந்தலனாம்யெந்தன் கணவா
சந்தைகொள்ளைக்காரனைப்போல் யெந்தன் கணவா
சாய்த்தானே நடேசனையும் யெந்தன் கணவா

ஆண்- அறியாத சிறுவன் கேளடி பெண்ணே
அழகில்மிகுந்தவணடி பாரடி கண்ணே
வரிசையாக கடைய யடுத்துகேளடி பெண்ணே
வருகுமுன்னே சீரங்கத்தை வதைத்தானே கண்ணே

பெண்-ஆண்டவனை வேண்டிக்கொண்டுயெந்தன் கணவா
அபினிவிற்கும் சுப்ரமணியன்யெந்தன் கணவா
தீண்டாமலேவருகும்போதுயெந்தன் கணவா
திரும்புமுன்னேகுத்தினானேயெந்தன் கணவா

ஆண் - பதினாறுமாசமாச்சு கேளடி பெண்ணே
பர்வனிரங்கசாமியடிப்பாரடி கண்ணே
விதியிறுந்துகலியாணம் செய்தாரே பெண்ணே
சதியாகயேமனிடம்சேர்ந்தாரே கண்ணே
-------------

கும்மி

ஆறுபேருக்கும் வயிர்நீங்கியவர்
மூச்சுமில்லாமல் தரையோ ங்கி
நாவுமெழாமலிருக்கையிலே
பார்நங்கையே போலீசார் கண் டனராம் 18

கங்குலிலிந்தப்படி நடக்கமறுகாலை
பதினைந்தாந்தேதியிலேச கையற்றபகல்பத்து
மணிக்கெல்லாம் சர்க்கார்கண்டுபிடித்தனராம் 19

கொண்டு நடந்துடன் ஆஸ்பத்திரிதன்னில்
கூட்டமாகபெரு ங்காட்சியுடன் கண்டுவெகு
டாக்டர்மார்களிலே சிலர்
கார்த்துப் பிரயாசைப்பட்டனராம். 20

கண்டுமவனைப்பிடிக்கும்படி வெகு கானிஸ்டேபில்
யேட்டு ஆனவரை கொண்டுவிடுத்து
பிடித்துக்கொண்டபின்னே கோரத்
தைக்கேளடி பெண்மயிலே. 21

கட்டிப்பிடித்துடன் நெட்டிக்கொண்டவனை
கானிஸ்டேபில் யிகிஸ்பெக்டருடன்
நெட்டிஜெயிலி லடைத்துப்பின்னால்
விண்டநீ தியை கேளடிபெண்ணரசே. 22

பெண்ணரசேயிவன் வாக்குமூலங்களை
பார்க்கவுங்கேட்கவுங் டலையாம்
எண்ணவொண்ணாத ஜனத்திரளை நாம்
யெத்தனையெ ன்று வுரைப்பேண்டி.
கூட
23
வாக்குமூலத்துடன்சேதி கேட்கயங்கே
வந்தபெருஞ்சனக்கூட் டமெல்லாம்
நோக்கவும் நெஞ்சுநடுங்கியவர்
நிற்கபயந்துநடந்தனரே 24

நடக்கும்விபரீத கூட்டத்திலே சற்றும்
நாணமில்லாமல் படு பாவிகொடுக்கும் வாக்குமூலம்
கேட்டமட்டாகிலும் கோதையே சொல்லமன நடுங்கும். 25

தான்செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட
அந்த தரியமுள்ள சபாபதியை
வீணாம்பலபலயோசனை செய்யாமல்
வைத்தார் செய லிலே காவலுடன். 26

வாக்குமூலங்களை கேட்டுக்கொண்டவுடன்
வரிசையாய் கா ட்சி ருசுப்படுத்தி
தீர்ப்புகள்செய்திட சட்டமெழுதியே
செஷன் கட்குயேசு செய்துவிட்டார். 27

நாகப்பட்டணத்தின் பாதையிலே
யந்ததேதியிலே கொண்டு
போகையிலே சாகப்போரவன்
முகம்பார்த்துசெனம் சரியாயிறங்
கோடி நாகைப்பெண்ணே. 28

பிரமனெழுத்து வலுவாலே
இரங்கசாமிக்கி சாட்சிசொல்லா தாலே
தர்மமாய் ஜட்ஜியும் பார்த்துப் பிசகென்று
தள்ளினார்பாரடி நாகைப்பெண்ணே. 29

ஆயிரத்திதொண்ணூத்தியைந்தினில்
ஆனதோர் நவம்பர்மா தத்திலே
நேயமாய் பதினெட்டாந்தேதியி
லுயிர்வாங்கினார் பாரடி நாகைப்பெண்ணே. 30

நங்கையே பெண்ணேயிந்த
மன்மதவருடன் நலமான கார் திகை
மாதத்திலே பங்கமுடன் நாலாந்தேதியிலே
திங்கள்பகலில் வாங்கினாரிருவருபிரை ரையும். 31

ஆவுக்கு புல்லைக்கொடுத்தாலுமது
அற்புதபாலைக்கொடுக்கும் படி
மேவியபாம்புக்கு பாலைக்கொடுத்தாலும்
மெள்ளவிஷக்கரும் நாகைப்பெண்ணே. 32

கொலை அலங்காரம் முற்றிற்று.
--------------------

This file was last updated on 25 March 2026.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)