pm logo

நாகூர் ஆண்டவர் தெரிசனக்கும்மி &
நாகூர் க்ஷேத்திர அலங்காரம்"

nAkUr ANTavar tericanak kummi &
nAkUr kshEitira alangkAram
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
The e-text has been generated via Google OCR of the PDF file and subsequent proof-reading of the OCR output.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2026.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.


நாகூர் ஆண்டவர் தெரிசனக்கும்மி &
நாகூர் க்ஷேத்திர அலங்காரம்

Source:
நாகூர் ஆண்டவர் தெரிசனக்கும்மி & நாகூர் க்ஷேத்திர அலங்காரம் /ஆநந்தக்களிப்பு.
இரண்டும் அடங்கியிருக்கின்றன.
இஃது, சிறுமணவூர் முனிசாமி முதலியார் அவர்களால் இயற்றப்பட்டு,
தமது சென்னை சூளை சிவகாமிவிலாச அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது.
1906.
-------------
பிஸ்மில்லா கிற்றகுமா னிற்றகீம்.

1. நாகூர் ஆண்டவர் தெரிசனக்கும்மி.

இரசூலுல்லா வணக்கம்.

கூறும் நாகூர் குரிக்கும் ஆண்டவன்
பேறுமாந்தர் பிரியமுடன் கும்மி
மீறும்பத்தி விளங்கி வியற்றிட
கோறுமோபி நாயகம் போற்றுவாம்.

கும்மி.

கும்மியடிப்பெண்கள் கும்மியடி குரு
நபிகள்பாதங் குணப்படுத்தி
நம்மையாளும்சாகூர் ஆண்டவன்பாதத்தை
நாடிக்கும்மியடியுங்கடி அவரை தேடிகும்மியடியுங்கடி. 1

அஷ்டதிசைபுகழ் மேவுத்தலங்களில்
அற்புதமாம் நாகூர்பதியில்
இஷ்டமாய்தாழ்ந்திடும் மீராசாகியை
இணங்கிக்கொம்மி யடியுங்கடி. 2

கோடியுகந்தவஞ் செய்தாலுமந்த
கோரியைப்பார்க்க முடியாது
காரிழையோர ஜென்மங்கடைத்தேற்
கண்ணினால் பார்க்கலாம் வாருங்கடி. 3

அண்டத்தளாவிய கோரி சிங்காரமும்
அற்புதவெள்ளியின் வாசற்காலும்
சண்டப்பிரசண்ட நகபத்துமுழக்கும்
சாற்றுமலங்காரம் பாருங்கடி. 4

பேரிகை தஞ்சாவூர் வாத்தியமும்நல்ல
பெரியடமாவின் முழக்கமுடன்
சாரிவருமீறா சாகிப்பின்பாதத்தை
சார்ந்துகும்மி யடியுங்கடி. 5

எட்டுத்திசையும் பரிமளசந்தனம்
எழிலாம்பத்தியும் சக்கரையும்
மட்டுப்படாமலே ஆண்டவன் கோரியில்
மலைபோல்வாரதைப் பாருங்கடி. 6

கப்பமெல்லாமே யிவர்சுடமை கரை
தட்டினால்கார்ப்ப திவர்கடமை
ஒப்பியே பிரார்த்தனைக் காரர்வருகிற
ஓயாநடைகளைப் பாருங்கடி. 7

பக்கிரிசேனை வெகுகோடி வரும்
சன்னியாசி கூட்டம் பலகோடி
சக்கரைபாத்தியா செய்யுஞ்ஜெனங்கள்
சந்தடிகூட்டத்தைப் பாருங்கடி. 8

வெள்ளிவிளக்கிலுந் தங்கவிளக்கிலும்
வேணசரவிளக் காதியிலும்
உள்ளமகிழவே செய்யாலெரிகிற
உண்மையதிசயம் பாருங்கடி. 9

தங்க விளக்கு இருபுரமாந்தனி
வெள்ளிவிளக்கு பலபுறமாம்
யெங்குமதிசபம் தண்ணிவிளக்கு
யெரிகிறசத்தியம் பாருங்கடி. 10

ஏழுமலையுள்ள மாடங்களா மதில்
யெண்ணவணங்கா புறாக்கூட்டம்
வாழுமதிசயம் ஆண்டவன் மகிமை
வாழ்த்தமுடியுமோ கேளுங்கடி. 11

சொல்லுமலங்கார வாசற்பெருமையும்
தோற்றும்நபிமார்கள் வாழிடமும்
பல்லுயிர்யாரும் போற்றுமகிமையை
பார்க்கமுடியுமோ பாருங்கடி. 12

கூரென்று நினைத்தாலும் நர
ஜென்மங்கடைத்தேறும் சென்றாலும்
வாகாய்சன்னதி கண்டா லுஞ் சொர்க்கம்
வாய்க்குமென்றே யடியுங்கடி. 13

யெத்தனை சென்மத் தவப்பலனோ இந்த
நாகூரைக்காணக் கிடைத்ததடி
இத்தரையோர்தொழும் ஆண்டலன்பாதத்தை
யிணங்கிக்கொம்மி யடியுங்கடி. 14

டில்லிமலையாளம் பொம்பாய்மணிபுரம்
சொல்லுமன்பத்தாறு மன்னர்களும்
யெல்லையடங்கலும் சேனை தளத்துடன்
யெங்கும் நிறைந்ததைப் பாருங்கடி. 15

யெட்டுத்திசையும் பதினாறுமூலையும்
யெங்குமுள்ளஜென மத்தனையும்
கட்டியகப்பணத் தூக்கிக்கொண்டுயிதோ
காலால் நடப்பதைப் பாருங்கடி. 16

ஆணிப்பொன்னால்செய்த கப்பங்களும் நல்ல
அலங்காரபுஷ்ப மரக்கலமும்
காணிக்கையாகவே வே ராகூரில்செலுத்தி
கையால் தொழுவதைப் பாருங்கடி. 17

வெள்ளியினால் செய்த கப்பல்களும்நல்ல
விச்சித்திரமான விளக்குகளும்
பள்ளிவாசல்வழி கொண்டுசெலுத்தியே
பாதந்தொழுகிறார் பாருங்கடி. 18

வெள்ளிக்கிழமை பதினைந்துகாழிக்கு
வேணமகமது கூட்டமெல்லாம்
பள்ளிவாசல்வந்து பாத்தியாவோதி
பணியும் வேடிக்கை பாருங்கடி. 19

மூலஸ்தானத்து சமாதிபடியிலே
முன்னும்பின்னும் ஜெனக்கூட்டம்
காலக்கடமையாய் பாத்தியாசெய்து
கடந்துபோவதைப் பாருங்கடி. 20

கப்பல்நடக்க வரைநாழிமுன்னமே
கர்த்தராம் நாகூறு ஆண்டவர்க்கு
கப்பணதட்சணை பாமரந்தன்னிலே
கட்டியனுப்புவார் கேளுங்கடி. 21

கப்பல்துரைவழி போகையிலே அந்த
கபோதமாம்பட்சி புறாக்களுக்கு
மொப்பமுடன்நவ தானியகப்பணம்
முன்னேயனுப்புவார் பாருங்கடி. 22

பீரங்கிசத்தங்கள் கேட்டவுடன்மாலீயும்
பெருத்தபாய்மரந் தான் தூக்கி
தீரமுடன்தாகூர் திக்குதிருப்பியே
செய்யும்சவான்களைப் பாருங்கடி. 23

கூறுமலங்கார வாசற்படிமுன்னம்
குறுக்குமானிடர் கூட்டங்களும்
தீரமாய்பாத்தியா செய்யுமலங்காரம்
தீரமாய் நீங்களும் பாருங்கடி. 24

சொல்லுமலங்கார வாசற்படிமுன்னம்
தோற்றும்ரதகஜ துரகதமும்
வெல்லுங்கவிவாணர் வேதகோஷ்டங்களும்
விளங்கும்சிங்காரம் பாருங்கடி. 25

யெல்லாவினைகளும் தீர்க்கத்துடங்கிய
யெழிலாம்நாகூர் மாதலத்தில்
அல்லாவருளாலே தேங்காய்க்கிருகொம்பு
அன்பாய்வளர்ந்ததை பாருங்கடி. 26

சிப்பிகள்கட்டிய தெப்பக்குளத்துமுன்
சிறந்தகம்பம் விளக்குகளும்
ஒப்பமுடன் நான்கு பக்கம்படித்துறை
யோங்குமலங்காரம் பாருங்கடி. 27

நாகூறுமீரா சாகிப்பாலடா
நவிலமுடியா தொருநாளும்
வாகுடனேராக கப்பல்வழிகண்டு
வருகுமடையாளம் பாருங்கடி. 28

திங்கட்கிழமையும் வெள்ளிக்கிழமையும்
தேசத்துமானிடர் யாவர்களும்
அங்கமுடனே காணிக்கை கொண்டல்லோ
அன்பாய்சயனிப்பார் பாருங்கடி. 29

குத்துவிளக்கு குடவிளக்கு நல்ல
கோர்த்தமாலை சரவிளக்கு
எத்திசையினும் நட்சத்திரம்போலே
யெறியுமலங்காரம் பாருங்கடி. 30

அவரவர்பற்பல யெண்ணங்கொண்டு நாகூர்
ஆண்டவன் மீதிலே பாரம்வைத்து
சோர்ந்துநித்திரை செய்கையி லவர்க்கு
சொற்பனம் சாதிப்பார் பாருங்கடி. 31

அத்தர் புனுகு பனிநீரும் நல்ல
அழகானசிகிச்சா பரிமளமும்
நித்தமும்சாம்ப்ராணி வத்தியுடன் புகை
நேராயளிப்பதைப் பாருங்கடி. 32

நாலுபுறமு ம மதிலோரமதில்
நடுவிலெங்கினும் சத்திரமாம்
கால்பதினாயிரம் மண்டபம்போலவே
கட்டியிருக்குது பாருங்கடி. 33

முத்திதருந்தேவ ஆலயத்தை
முன்னேபெரியவர் சொன்னமுறைப்படி
நன்னயமாக அமைத்தபாயினுள்
நடக்குமகிமை பாருங்கடி. 34

அல்லாவுதாலா வாசாரமாளியில்
அழகுசெம்பொன் மாளியினில்
பல்லாண்டாயுசும் பலித்திருக்கவே
பரமதீட்சம் பாருங்கடி. 35

பத்தர்கள்வாழி பதிவாழி நல்ல
பளிங்குகோரிக் கொடிவாழி
சித்தர் துதித்திடும் தஞ்சாவூர்மன்னவன்
செய்துவைத்தகோரி தான்வாழி. 36

பூரான்கொடியு மிகவாழி தினம்
போற்றும்பகீர்கள் சுகம்வாழி
ஆறுந்துதித்திடும் நாகூரம்பதி
ஆயிரங்கோடி யுகம்வாழி 37

நாகூர் மீனாசாகிப் தெரிசனக்கும்மி முற்றுப்பெற்றது.
----------------
பிஸ்மில்லா கிற்றகுமா னிற்றகீம்.

நாகூர்க்ஷேத்திர அலங்காரம் / ஆனந்தக்களிப்பு.

பல்லவி.

நாகூரைப்பார் மனக்கண்ணே-நர
ஜென்மங்கடைத்தேறவே துதிபண்ணே நாகூ

சரணங்கள்.

ஆகமம்போற்றிடுமூரு நல்ல
அறிவாளசெங்குங் குடிகொண்டவூரு
ஏகப்பரவெளியூரு இது
யென்றுமழிவில்லா பொன்னிறவூரு நாகூ

பந்தமறுத்திடுமூரு பரி
பக்குவமாக்கிப் பத்த்தருமூரு
நிந்தையகற்றிடுமூரு நல்ல
நெறியைக்கொடுத்து நிலையருளுமுரு நாகூ

நஞ்சைய றுத்திடுமூரு ஐயா
நல்லறிவீந்து நலந்தருமூரு
நெஞ்சைத்திருத்திடுமூரு நல்ல
நேசங்கொண்டார்களை போஷிக்குமூரு நாகூ

வாசங்கள் வீசியவூரு நல்ல
வற்புதக்காட்சி விளைத்திடுமூரு
தேசமெல்லாம்புகமூரு ஈல்ல
சின்மயமான சுகந்தருமூரு நாகூ

சொற்பனம் பேசிடுமூரு வாயால்
சொல்லாமற்சொல்லி சுகந்தருமூரு
கற்பகத்தைப்போன்றவூரு தினம்
கண்ணுக்குக்கண்ணருள் காட்டியவூரு நாகூ

எத்திசைப்புகழுமூரு எங்கும்
யார்க்குந் திருஷ்டாந்திர மெய்திடுமூரு
துஷ்டரைச் சிஷ்டைசெய்யூரு நல்ல
துய்யமனத்தோர் இணையாகுமூரு நாகூ

சித்தியளித்திடுமூரு இந்த
ஜென்மநோய்தீர சீராக்குமூரு
முத்தியளித்திடுமூரு நல்ல
முத்தருறவு முயற்றிடுமூரு நாகூ

ஆதரவாகியவூரு கெட்ட
அஞ்ஞானம்போக்கி யருள்தருமூரு
போதமளித்திடுமூரு நல்ல
புத்திகொடுத்துப் பொதுவாக்குமூரு நாகூ

மன்னர் மகிழ்ந்திடுமூரு இகம்
மண்ணுலகெங்குந் துரத்திடுமூரு
தன்னிகரில்லாதவூரு திருத்
தாளைக்கொடுத்துத் தலைகாக்குமுரு நாகூ

கோரி விளங்கிடுமூரு சர்வ குற்றமற்ற
குருவரு பேரோ அதற்குராகூரு என்றும்
பேரோ அதற்கு நாகூரு என்றும்
பொய்யாதபேர்க்கருள் செய்திடுமூரு நாகூ

அண்டமெலாந்தொழுமூரு இந்த
அவனியெட்டுத்திசை கவனிக்குமூரு
பண்டேவெகுநாளையூரு இந்த
பாருங்கடலும் பரவியவூரு நாகூ

சூடப்புகைகமிழூரு நல்ல
சுத்தமெய்ஞானந் துலங்கியவூரு
வாடைகஸ் தூரியினூரு யெங்கும்
வண்டினமொய்க்க வறம்பெற்றவூரு நாகூ

பூரான்கொடித்திகழுமூரு இந்த
பூமண்டலமெங்கும் போற்றியவூரு
ஆதாரமேதருமூரு அரு
ளானந்தமீறிய அரசாளவூரு நாகூ

பார்புகழ்சிறுமணவூரு இந்த
பாடலைச்செய்தேன் முனிசாமியேறு
ஆர்க்குந் துணைசெய்யக்கூறு வளர்
ஆண்டவன் தாளை யசு யகத்தினில்சேரு நாகூ

நாகூர்க்ஷேத்திர அலங்காரம் முற்றுப்பெற்றது.
---------------