pm logo

அரசப்பன் எழுதிய
"அரசப்பன் அலங்காரம்"


aracappan alangkAram
by K.R. Aracappan
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy, Chennai for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2026.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

அரசப்பன் எழுதிய
"அரசப்பன் அலங்காரம்"

Source:
அரசப்பன் அலங்காரம்
முத்தமிழ்க்கவி வித்வான் K. R. அரசப்பன்
தலைமைத் தமிழ்ப் பண்டிதர்
நகராண்மை உயர்நிலைப்பள்ளி, சீனிவாசபுரம், கோவை.
உரிமை ஆசிரியருக்கே.
1952, விலை அணா 9
---------------------

உயர் திரு. Dr. M. இராசமாணிக்கம், M.A. L.T., MOL.T
தமிழ் விரிவுரையாளர்,
விவேகானந்தா கல்லூரி, மதறாஸ்.
Member, Board of Studies & Academic Council, University of Madras.

முத்தமிழ்க்கவி வித்வான் கே. ஆர். அரசப்பன் அவர்கள் பாடி வெளியிட்ட இரு சொல் அலங்காரச் செய்யுட்களைப் படித்துப் பார்த்தேன். அவை சொல்லழகும், பொருட்சிறப்பும் பெற்றுள்ளன. பள்ளிப் பாட புத்தகங்களில் செய்யுட் பகுதிகளில், இரு சொல் அலங்காரச் செய்யுட்களும் சேர்ப்பதுண்டு. ஆனால் அரிதில் காணப்படுகின்றன. ஆசிரியர்கள் இந்நூலின் கண் உள்ள செய்யுட்களில் தகுதியானவற்றைச் சில தேர்ந்து செய்யுட் பகுதியில் சேர்ப்பின் மாணவரும் பயன் பெறலாம். இந்நூலாசிரியர் சமூக முன்னேற்றத்திற்குரிய பல்வேறு செய்யுட்களைப் படிப் புகழ் பெறுமாறு திருவருளை வேண்டுகின்றேன். ஆசிரியருக்கு எல்லா நலன்களும் உண்டாக இறைவனை இறைஞ்சுகின்றேன்.

அரசப்பன் தனிப்பாடல் ஓராண்டில் வெளிவரும். அனாசிக நிரோட்டகம், வெண்பாச் சிலேடைகள், தனிப்பாடல்கள், பந்தனக்காவியங்கள், சித்திரக்கவிகள், கீர்த்தனங்கள், விடுகவிகள் நிறைந்தது. எதிர்பாருங்கள்.
--------

அரசப்பனார் அருமை மலர்
(வசந்தம் ஆசிரியர்) உயர்திரு. ஆர். திருஞானம்.

தமிழ் இலக்கியம் இன்று மறு மலர்ச்சி பெற் றுத் திகழ்கிறது. காவியம், ஓவியம் ஆகிய துறைகளில் புத்தொளியும், புத்துணர்வும் சுடர்விட்டுப் பிரகாசிக்கின்றது. தமிழ் அறிஞர்களின் சிந்தை புதுக் கோணங்களில் ஆராய்ச்சியைச் செலுத்தி வரும் இந்நாளில் அறிஞர் அரசப்பனார் அவர்களும் தமிழ்த் தாய்க்கு ஒரு அழகிய பாமாலை சாற்றி இருக்கின்றார்.

அரசப்பனாரின் அருங் கவிதா உள்ளம் செய்யுள் கோவையிலே வட்டமிட்டு அற்புதமான மணங்கமழும் ஒரு இனிய உலகில் நம்மைப் பரவசம் அடையத் தூண்டி இருக்கின்றது.

இந்நூலில் ஆழ்ந்த பொருட் செறிவும், நுண் ணிய கருத்துக்களும், கற்றோர் உள்ளம் களிப்படையும் வண்ணம் மண்டிக் கிடக்கின்றன. ஒவ்வொரு செய்யுளும் இதயத்தை தமிழ்ப் பண்பிலும், இலக்கிய நயத்திலும், சரித்திர நிகழ்ச்சிகளிலும், பண்டைய தமிழ் மரபிலும் நிறுத்தி மகிழ்ச் கடல் ஆடச் செய்கிறது. ஆடவர் பெண்டிர் னைவரும் படித்து உணருமாறு இனிய, எளிய நடையில் செந்தமிழ் மணம் கமழும் வகையில் அரசப்பனர் இந்நூலை ஆக்கி இருக்கின்றார்.

வாழ்க புது முயற்சி. வாழ்க அரசப்பனார்!
---------
முகவுரை

திருமுருகன் திருவருளாலும் பரமேட்டியின் பரந்த கருணையாலும் பாடிய இந்நூல் பற்றிக் கூறுமுன், என் கவி வளர்ச்சியைப் பற்றி இரண்டொரு சொல் சுருக்கமாகச் சொல்ல விரும்புகிறேன்.

முதற்றகு நிலையில் வாசிக்கு முன்னரே, என் அரிய பெற்றோர் அவனி நீங்கினர். எனவே, குடும்ப பாரம் என் மேல் வீழ்ந்தது. நானே குடும்பத் தலைவனாக இருந்து கொண்டு மேலும் கற்க முயன்றேன். நான் நான்காவது ஐந்தாவது வகுப்புக்களில் வாசிக்கும் போதே கவிகள் பாடுவேன். ஆனால், அவை எந்த அழகின என்று எனக்கே தெரியாது! இரண்டாந் தகுநிலை வாசித்து, முழு ஆண்டுப் பரீட்சை எழுதினேன். விடைத் தாளின்மேல் திருத்தித் தேர்ச்சி எண் குறித்த ஆசிரியர், ''நீ தமிழை நன்றாகப் படித்தால், சிறந்த ஒரு தமிழ்ப் ஆசியன் ஆனாழை நல்ல கசகப் படம் இல்லை என்று எழுதி வகுப்பில் வாசித்துக் காட்டினார். அவர் உயர். திரு மாதவ ராவ் எனபவர். இன்றும் கோவையில் தான் வசித்து வருகிறார்.

மூன்றாந் தகுநிலை கற்கும் போது, ஒரு நாடக நூல் எழுதி னேன். தமிழாசிரியர் அதைப் பார்வையிட்டு, “பாடல்கள் சொல்லும் பொருளும் சுவை குறையாமல், இலக்கண அமைதியுடன் இயற்கையில் அமைந்துள்ளன” என்று கூறினார். அந்நூல் அச்சேற்றிப் பிரசுரிக்கப்பட்டது. நான்காந் தகுநிலையில் இரண்டு துப்பறியும் நாவல்கள் எழுதினேன். அண்மையில், அக்கதைகளை பத்திரிக்கைகள் பிரசுரம் செய்தன. ஐந்தாம் தகு நிலையில் தேர்ச்சியுறாமையின், மனச்சோர்வடைந்து பள்ளிப் படிப்பை நிறுத்தி விட்டேன்.
2
மூன்று நான்கு தகு நிலைகளில் கற்கும் போது, கீர்த்தனங்கள், தனிப்பாடல்கள், வெண்பாச் சிலேடைகள், பந்தனக் கவிகள், அனாசிக நீரோட்டகம் முதலிய எல்லா விதமான பாடல்களும் பாடியுள்ளேன். கண்ணுற்ற புலவர்கள், 'உன் பாடல்கள் இலக்கண அமைதியுடன் அமைந்துள்ளன. ஆனால் நீ இலக்கணம் படித்தவன் அல்லவே என்று புகழ்ந்து பேசுவதுண்டு.

பள்ளிப் படிப்பு முடித்தபின், மனச்சோர்வுடன் பொருளா தாரமும் சீர் குலைந்தது. ஓராண்டு முடிவதற்குள், சினிமாக் கம்பெனி, பேங்கு, நகராண்மைக் கழகம், ஆகிய மூன்று இடங்களிலும் குமஸ்தா வேலையில், குறுகிய வட்டமிட்டேன். இரண்டு ஆண்டுகள், பத்திரிக்கையில் பணி ஆற்றினேன். இரண்டு ஆண்டுகளில், போதனா முறை முடித்து ஐயர் கிரேடு ஆசிரியர் ஆனேன்.

மாணவத்தன்மையிலும், பின்னரும், தமிழ்நூல்களைப் படித் துக்கொண்டுதானிருந்தேன். ஆசிரியனானபின், நன்றாகக் கற்க ஆரம்பித்து வித்வான் பரீக்ஷைகளில் ஒவ்வொன்றாகத் தேர்ச்சி பெற்றேன். இதற்கிடையே, சோதிடமும் சிறிது பயின் றேன். தமிழோ, மற்றக் கலைகளோ, எந்த ஆசிரியரிடமும் பாடங்கேட்டுப் படிக்கவில்லை. நானாக வெகு சிரமத்துடன் முயன்றுதான் படித்தேன். குடும்பம் இடும்பையுற்ற தாலும் பள்ளிப் படிப்பைத் தள்ளி விட்டமையாலும், நான் என் உயிரையும் வெறுத்ததுண்டு. ஆனால் தமிழைக்கற்க வேண்டும் என் னும் ஒரு ஆசையே, என்னை உயிர் வாழச் செய்தது. எத்தனையோ முட்டுக்கட்டைகள்! அத்தனை யிடர்ப்பாட்டிடையே நான் தமிழ் படித்த வரலாற்றை, ஒரு கற்பதுமையிடம் கூறி னாலும், அது கரைந்தமும் என்றால் புதுமையானதுதான்! தமிழைக் கற்பதிலும், ஆண்டவனை வழிபடுவதிலும், நான் கண்ட இன்பம் வேறு எதிலும் கண்டதில்லை.

பழம்புலவர்களின் பாடல்களைப் படித்த நான், சொந்தக் கவிகள் சொல்வதில் வெறுப்புற்றேன். அருமையான பழம் பாடல்கள் ஏராளமாக இருக்க, வெறுமையான பாடல்கள் ஏன் பாட வேண்டுமென்பதே. ஏதாவது நல்ல கருத்துக் களைக் கொண்டன்றிப் பாடுவதில்லை என்று முடிவு செய்தேன்.

தமிழரின் பண்பாடு, நாகரீகம், மாறிவந்தது. தமிழரசர் ஆட்சி யமிழ்ந்து, ஆங்கில வாட்சி > ஆட்டமுற்று,சுயாட்சி நிலைசூழ்ந்தது. பழங்கால நாகரீகம்,விஞ்ஞான முறையில் வேறு பட்டது. இக்காரணங்களே, என்னை இக்கவிகள் பாடத் தூண்டின. 1948-ல், இரண்டே மாதங்களில், முருகன் திருவருளால் இம் முன்னூறு பாடல்களும் பாடினேன். இரு சொல் அலங்கரப் பாடல், ஒருவகையான சுவையுடையது. அப்பாடலால் பாட விரும்பி, ஏதோ எனது எளிய அறிவால் பாடியுள்ளேன். முற்காலத்தற்காலத் தமிழரின் பண்பாடு, இந்தியாவின் இயற்கையழகு, செயற்கைவளம், சரித்திரக் குறிப்பு, சான் றோர் வரலாறு, முதலியன சித்தரிக்கும். எனவே, அறிஞர் வாசித்துணர்ந்து, எனக்கு நல்லாசி கூறி வாழ்த்தி, என்னை ஊக்குவிப்பாராக.

இங்ஙனம்,
K.R. அரசப்பன்.
----------
நன்றியறிவிப்பு :
இந் நூல் அச்சியற்றுதற்கு நன்கொடை யுதவிய, எல்லா நன்கொடையாளர்களுக்கும், நன்கொடை வசூலித்துதவிய கோவை. ஜில்லா போர்டு மெம்பரும், பூலுவபட்டி புஞ்சாயத்து போர்டு தலைவருமான, நண்பர்.திரு. வெ. எல்லமநாயுடு அவர்கள்; திரு. வீரபண்டாரம் அவர்கள் திரு.காரமடையாச்சாரியார் அவர்கள்; ஆசிரியர். திரு.ஏ. இராம சுவாழி அவர்கள்; (என் தமிழ் மாணவர்) ஆசிய யாவர்க்கும் என் மனமார்ந்த நன்றி. நன் கொடையாளரின் பெயர் விவரங்கள், அடுத்துப் பிரசுரிக்கும் தனிப்பாடல் என்ற நூலின்கண் விவரமாக விளம்புவேன்.

K.R.அரசப்பன்.
---------------
கடவுள் வாழ்த்து.

ஆனைமுக னறுமுக னங்கயற்க ணம்பலவன்
மோனைமுகன் மும்மதத்தன் முத்தமிழான் வாழ்த்துதுமே.

மதுரைத் தமிழ்ச்சங்கப் புலவர்,
கோவை அரசாங்கக் கல்லூரி முன்னாள் தலைமைத் தமிழாசிரியர், பண்டித.
உயர்.திரு. அ. கந்தசாமிபிள்ளை அவர்களால் பாடிய சாத்து கவி

திருமலி செஞ் சொற்கவிஞர் பல்கேள்விவலசான்றோர்
        சீர்சால்மேலோர்
மருமன் செந்தாம ரைமின் வளத்திதிக்கோ னெனுந் செல்வ
        வளத்தின்மிக்கோர்
தருமலிவண் கொடைக்கரத்தோர் உலகறிந்த பெரும்புகழ்
        கொள் தக்கார் மிக்கார்
வருமலிதன் னகர்க்கோவை மாநகரில்வாழ்வு பெறும்
        மாண்பினானே.

முத்தமிழ்தேர் கலைக்குரிசில் நல்லொழுக்கின் நயவுரைகள்
        மொழியும் நாவன்
புத்தமிழ்தமனைய தமிழ்க்கவிபலவும் சுவைததும்பப்
        புகலும் வாக்கி
உத்தமர் நற்சுற்றமென வவர்நட்பே மிகப்பேணி
        யுவக்கும் நண்பன்
மெய்த்ததிரு அரசப்பனெனும்பெயர்கொள் சாந்தகுண
மேதக்கோனே.


இருசொல்முத லலங்காரம் சொல்லணியாய்ச்சிலேடை நயம்
        ஒன்றித்தோன்ற
வருசொலருந் தமிழ்ப்பனுவல் அறிவர்செவி விருந்தாக
        வழங்கினானால்
தருசொலிது போற்பணுவல் அறமுதனாற்பொருள் எளிதில்
        ருவதுண்டோ
ஒருசொலிது புவிக்களித்தோன் நீடூழி வாழியவிவ்
        வுலகின்மாதோ.
----------

அரசப்பன் அலங்காரம்

சீரானை முகன்வாழ்த்திச் சீரசை நூல் பாடுவதேன்
வேரா அனுய் பூளைப்பூமா வேப்பிலைதை நாடுவதேன்
        காப்புக்காக காப்புக்காக. 1

ஓங்காரத் தொளிர்செல்வ னுலகருள் வமர்ந்ததேன்
பாங்கறியா வன்கொலையர் பதுங்கியாங் கொளிந்ததேன்
        அரசுகண்டு அரசுகண்டு. 2

வாரன கட்செவியாம் வரியரவம் பிழைப்பதேன்
சீரான மாணவர்தாந் தேர்கலையிற் றழைப்பதேன்
        புத்தகத்தால் புத்தகத்தால். 3.

ஆவணியாந் திங்கள்வர வண் டியதோர் வண்ணமேன்
பாவையரைப் பேய்பிடித்த பண்பறியும் திண்ணமேன்
        ஆடிநிற்க ஆடிநிற்க 4.

மெல்லியலார் வாலிபரை மேன்மயங்கச் செய்வதேன்
நல்லியல்சேர் மாடுபல நாஅழிபால் பெய்வதேன்
        கண்ணும்போட்டு கண்ணுப்போட்டு. 5

நெறியற்றிச் செல்லாம னெளிந்தார்தா ணாவதேன்
வெறிபற்றி யண்டமன்னர் வெகுண்டோட லாவதேன்
        காந்திமுளைக்கூ காந்திமுளைக்க. 6

ஒருகுளம்பு விரைந்தோடு முயர்புரவி விலக்குவதேன்
வருநதியிற் றண்புனலும் வளைந்தெதிர்ந்து கலக்குவதேன்
        சுழியினாலே சுழியினாலே. 7,

முடியரசைக் காந்திமகான் முனைந்தோடச் செய்ததேன்
குடியுறச்செய் தேனீயார் குழாமோடி மொய்ததேன்
        இராட்டைபற்றி இராட்டைபற்றி. 8.

பொன்னாளுந் தான்புரண்டு பூங்கைய ற்றிக் கெஞ்சியதேன்
மின்னாளு மனுமானே வேண்டி நின்று மஞ்சியதேன்
        விசுவற் விசுவற்கு. 9

ஆறுகுள மேரிகரை யலையயரத் தேங்குவதேன்
கூறுமுட லவயவங்கள் கொடும்புண்கள் வீங்குவதேன்
        மேகநீரான் மேகதீரான், 10.

குழல்சேர்ந்த முடியேறிக் கொடுவிடத்தான் மடிவதேன்
நிழல்சேர்ந்த பேர்சுளெலாம் நெடிதுறங்கப் படுவதேன்
        பாம்புபோட பாம்புபோட, 11.

நாலடியார் நூற்பாட னானிலத்தார் பற்றுவதேன்
கோலடியார் வலைப்பட்டுக் கொழுமீன்கள் சுற்றுவதேன்
        நீரெதிரேற நீரெதிரேற, 12.

களவுபட்ட காதலர்நற் கணிவேங்கை சேருவதேன்
பிளவுபட்ட வாயரவம் பெருமடலி லூருவதேன்
        மணத்துக்கு மணத்துக்கு, 13.

தீண்டாத வாயிரமாண் டொருநாகம் பிழைத்ததுமேன்
வேண்டாத மன்னரெசைஞ சேன்றாள் வழுத்திய?தன்
        கள்லையிட்டு கல்லையிட்டு. 14.

அலைகடலுன் முத்தெடுக்கும் பரதவர்கீ ழாழ்வதேன்
நிலைகொடியிற் பொடமிக நீளமுடன் றழ்வதேன்
        கற்கூட்ட கற்கட்ட. 15

தண் புனற்சூழ் வாழைமுடி தாழ்குலைகாய்ப் பழுத்ததேன்
வண்டமிழோ னணை போட வைகையினி லுழைத்த
        பிட்டுத்தின்ன பிட்டுத்தின்ன 16.

தெரிவரியாத் தன்முகனே தெளிவொடெதிர் திரும்பியதேன்
ஒருபொருளை யொருமனித னுடனடைய விரும்பியதேன்
        கண்ணாடியதால் கண்ணாடியதால். 17

சிறியாரைப் பெரியரெனச் சென்றுவுப சரிப்பதேன்
நெறியேகு மொருவரவம் நெளிந்துடலை யுரிப்பதேன்
        சட்டையினால் சட்டையினால். 18.

துரிதமுடன் சக்கரங்க டோற்குழாயா லோடுவதேன்
பரிவுடனுண் பொருளிழியாப் பான்மையினான் வாடுவதேன்
        வாயுவினால் வாயுவினால். 19.

பருவ முறாஅப் புனலிளமைப் பருவமுற்ற பாங்ககவேன்
தெருவழகு சேர்மதுரை சிறந்துதமி ழோங்கிய தேன்
        தென்னையினால் தென்னையினால், 20.

தேம்புனலுந் தாள்பற்றித் தெங்கின்காய் தங்குவதேன்
வீம்புகளுங் குரங்குதிரம் மேன்முதிய ருண்குவதேன்
        இளைமைபெற இளைமைபெற. 21.

தேன்பாயு மலர்க்கொடிகள் சேர்ந்து தரு வப்பியதேன்
கான்யானை யெதிர்ந்துவரக் காண்டொருவன் றப்பியதேன்
        வளைந்தோடி வளைந்தோடி. 22

நஞ்சுடைய நன்னாகம் நஞ் சாழிந்து தாழ்ந்ததேன்
பஞ்சவர்முன் கன்னனுடற் பதறியிரதம் வீழ்ந்ததேன்
        அம்புதோய்ந்து அம்புதோய்ந்து 23.

தேவர்குறள் கண்டிருந்துந் தேர்குலப்போர் விளைப்பதேன்
மேவருங்கார் வான்பெய்ய மிக்கீசன் முளைப்பதேன்
        உலகியலான் உலகியலான். 24.

வியன்பறவை யானினங்கள் வீடடைய வோடியதேன்
சுயாவாத்தே நளனிருந்துத் தோண்மன்னர் நாடியதேன்
        மாலையுற மாலையுற 25.

இருகுளம்பு காலேறு மிணைந்து முன்பி னேடுவதேன்
வருமுளஞ்சோர்ந் தூசலென்ன வழிநிலாது வாடுவதேள்
        கவலையினால் கவலையினால். 26.

வேலைவிட்ட மாட்டெருமை விரும்பியுள்ளஞ் சென்றதேன்
மாலைபட்ட கடவுளர்முன் மாணி யார் நின் நீதன்
        தாழுவமென்று தொழுவமென்று. 27.


இழிபின்றி வருந்துபவ னிழிந்துமலங் கழித்தேன்
குழிகண்ணார் குநொந்து கூனீமிர்ந்து விழித்தேன்
        இஞ்சிதின்று இஞ்சிதின் று. 28.

பெரியாருஞ் சிறியார்செய் பிழைகண்டுங் கேளாதேன்
வரியாரும் பசிவேங்கை யுணனிருந்தும் வாளாவேன்
        புல்லரென்று புல்லரென்று. 29.

ஒளிமாரும் பகலவனு மொனிந்து நின்று சிறப்பதேன்
கவியாருங் கன்னியர்தங் கண்ணுவமைக் குரைப்பதேன்
        தாமரையால் தாமரையால். 30.

அலைதத்து நிறைகுளத்தி லமிழ்ந்து நீ ராடாதேன்
கலையத்து ளிடு சோ ற்றைக் கடும்பசியி னாடாதேன்
        பாசியதால் பாசியதால். 31.

தலைமகனுந் தலைமகளுக் தனீமையுற்றுத் தளருவதே
தலையுயர்த்தித் தவழ்குழவி தாய்களிக்கக் குளறுவதேன்
        செவ்வாயால் செவ்வாயால். 32.

வில்பொருளாந்தெருவினிலே விலைமலியக்கொள்ளுவதேன்
நல்பொருளாந்தின் பொருடா னறுமணமே யள்ளுவதேன்
        ஏலத்தாலே ஏலத்தாலே. 33.

சிற்றெரும்பு தொடர்ந்தூர்ந்து சிறியபண்டஞ் சேர்ப்பதேன்
நற்றெழிலா ருழவர்புன்செய் நாஅடியுழப் பார்ப்பதேன்
        கார்நோக்கி கார்நோக்கி 34.

ஈக்கன் குழா மிராட்டைாற்றி யெச்சிலாந்தே விடுவானேன்
பார்க்கண்புக ழிராஜாஜி பனைக்குவிதி விடுவானேன்
        மதுதொலைத்தலுக்கு மதுதொலைத்தலுக்கு. 35.

பிழையறிந்த மாணவர்நற் வீடுகளை கற்பதேன்
மழைய றிந்த வானில்வரு வானொலிசொன் னிற்பதேன்
        இடித்தலுக்கு இடித்தலுக்கு. 36.

விண்படர்பூங் கொம்பருடை விரிவேங்கை முறிந்ததேன்
பண்டையநாட் பாவையகைப் படுமுலக்கை சிறந்ததேன்
        யானைக்கொம்பால் யானைக்கொம்பால். 37.

தண்கடற்குழ் பாரிலுயிர் ககவா ழ்வுற் றுய்வதேன்
மண்டனிற்சேர் மாசகல மக்கள் வாழச் செய்வதேன்
        காக்கையினால் காக்கையினால், 38

பனிவான்விழ்ந் திடிவெயிலே படமல்சிருச் பிடுங்குவே
முனியொடுங்குவ வான்கீழ்த் தீதுசெய முதியோர்வா
        கேளானென்று கேளானென்று. 39

அகல்கடனீ ரளவையுயர்ந் தலை சீறி யுயருவதேன்
புகல் நடஞ்சே ராஙகிலமன் புகழ்வியான முயருவதேன்
        நிறைகதியால் நிறைமதியால் 40.

வெளிநீல வானமெலாம் வெண்ணிறமாய் மாறியதேன்
துளிபோல வெண்வடுக்கட் டுயவுட லேறியதேன்
        வெண்மேகத்தால் வெண்டுமகத்தால். 41.

பார்மாது மழைவெயிலாற் படக்கேளான் புடைப்பதேன்
பார்மீது மழைவெ வயிலாற் படுமக்கட் டுடிப்பதேன்
        குடை க்கா குடைக்காக. 42.

பொன்னாகம் பன்னாழி புணர்ச்சியின்பங் கூட்டுவதேன்
மின்னார்தங் கைத்திறத்தான் மீத்துபொரு ளீட்டுவதேன்
        பின்னலினால் பின்னலினால். 43.

பகலொழியப் புகுமிரவிற் பாரிலொளி செருவதேன்
தகவடைக்குங் கதவிணைந்து தான்றிறக்க நேருவதேன்
        நிலவுநிலவ நிலவு நிலவ. 44.

அலையாடு நிலை நீரி லடை மாசு மகலுவதேன்
கலையாடுங் கணியாளர் கழிவைகற் புகலுவதேன்
        மீனினாலே மீனினாலே. 45.

மலையாழ்ந்த கடனீரு மானிலத்தே யுயருவதேன்
கலைளைவாய்ந்த குறைமதியங் ககைலையா யுயருவதேன்
        வளர்பிறையால் வளர்பிறையால் 46.

கணியறியாய்ச் செஞ்சேவற் கையுதறிக் கூவுவதேன்
அணிமடங்கள் செல்வர்களா எருநகரில் மேவுவதேன்
        வைகலுக்கு வைகலுக்கு. 47.

குவலயத்தார் செழிப்பரென்று குயிலினத்தார் கூவுவதேன்
குவளைமலர்க் கொடுங்கண்ணே கோடுகண்டு நீவுவதேன்
        பசுமையினால் பசுமையினால். 48

தெங்குதலைத் தொங்கிளநீர் தெருள்கூகை யமருவதேன்
தங்குபயிர் பொங்குபுனற் றான்சூழ்ந்து குமுறுவதேன்
        அழுகவைக்க அழுகவைக்க. 49.

சங்கறுக்குந் தமிழ்க்கீர னாற்றுப்படை சாற்றியதேன்
பொங்குமது தாதவிழ்த்துப் பொன்வண்டார் தூற்றியதேன்
        பூதத்தினால் பூதத்தினால். 50.

தரையிடத்தே மக்களுடற் றான்குளிரப் பண்ணுவதன்
நரைமுடித்தே முதியவன்றா னடக்கைக்கு நண்ணுவதேன்
        கம்புகொள்ள, கம்பு கொள்வ. 51.

கல்லோடு கல்சேர்த்துக் கடுகியாங்குக் கொட்டுவதேன்
புல்லோடு மீயார்தம் பொருள்கொடாத செட்டது?வன்
        தீயார்பற்ற. தீயார்பற்ற. 52.

கருவான கருங்குயில் ற் காக்கைக் கூடடைவதேன்
தருவேறிக் கனியிலந்தை தான்பறிக்கத் தடையதேன்
        முட்டைக்காக. முட்டைக்காக. 53.

பாலோடு நீர்கலந்தும் பால்வேறு பிரிந்ததேன்
தோலோடு செறிந்தகுடர் சூழ்பசியி னிறைந்ததேன்
        அன்னத்தாலே. அன்னத்தாலே. 54

பெயலோடு பெயலணைந்து பேர்வானி லுரைத்ததேன்
மயலோடு புலவரெலாம் மங்கையிடை யுரைத்ததேன்
        மின்னலுக்கு. மின்னலுக்கு. 55

புயலோடு புயற்கற்கள் போயணைந் துராய்வதேன்
கயலோடு நிகர்கண்ணார் கல்லணீக ளாய்வதேன்
        மின்னற்கு. மின்னற்கு. 56.

புயற்கொல்க லொன்றொடொன்று போயெதிரே மோதலேன்
பயிற்சி றாஅர்தாங் கேட்டகல்வி பதியுமாஅ றோதலேன்
        இடித்தலுக்கு. இடித்தலுக்கு. 57.

காளையொன்று தாய்ப்பசுவைக் காமுற்றுப் புணறுவதேன்
நாளையென்று நம்பொணா நங்கைவாழ்விற் றிணருவதேன்
        பகுத்தறிவின்றி. பகுத்தறிவின்றி. 58.

எறிதிரையி லொளிர்தரைக ளெழிலாக விளங்குவதேன்
அறிவனெனு மிறைவனுறையருங்கோயின் முழங்குவதேன்
        சங்கங்களால். சங்கங்களால். 59.

கொடுங்கோலுஞ் செங்கோலைக் கொன்றுமே மாய்ப்ப
விடுங்கோலில் மணிக்கடலை விடாஅமன்வேர் காய்ப்பதேன்
        அழிவுக்காக. அழிவுக்காக. 60.

மலையிலுள பருமரமூர் வண்டிகளிற் சேருவதேன்
தொலைவிலுள செவியிலிவண் சொல்வபோய்க் கூறுவதேன்
        தந்தியினால் தந்தியினால். 61

முட்செறிந்து மாதுளம்போன் முதிரிலையிற் காய்த்ததேன்
உட்சரிந்து குடர்வறிய ருண்ணவந்து வாய்த்ததேன்
        கள்ளியினால். கள்ளியினால். 62.

மஞ்சன நீர் வாய்மொண்டு வான்திண்ண னோடியதேன்
அஞ்சின நற் குஞ்செலிக ளதன்வளையிற் கூடியதேன்
        பூசைக்காக பூசைக்காக. 63.

முருங்கையெனுந் தருநிறைய மாய் தூரப் பெற்றதேன்
சுருங்கைபெறும் பெங்களூர்க்குச் சூழ்ந்தசிறப் புற்றதேன்
        கம்பளியால், கம்பளியால் 64

அணியாக வளர்வேலி யடியோடே யழிந்ததேன்
மணிமேக லாமாதை வான்புகாரா நிழிந்ததேன்.
        ஆடுதலையிட்டு. ஆடுதலையிட்டு. 65.

பாவைதனிற் படுமீயார் பறந்தோடிப் போவதேன்
கோவைதனிற் றென்குன்றம் கூறுபுக ழீவதேன்
        சிமிட்டியதால். சிமிட்டியதால். 66.

கோவைவட மலைநீர்மின் கொல்லொளியார் வியந்ததேன்
கோவையருள் நடத்தரசின் குரைகழற்காற் பயந்ததேன்
        பைகாராவால். பைகாராவால் 67.

கேவைநகர் மேல்குன்றங் குழாய் நன்னீர் கொடுத்ததேன்
பாவை புகல் நாவலர்நாப் பண்பெனுமாண் படுத்ததேன்
        சீர்வாணியால். சீர்வாணியால். 68

தஞ்சைநிலன் மருதவளந் தானுயர்த்தி யறைவதேன்
அஞ்சுதலில் வீரரஞ்சு மரவமஞ்சி யுறைவதேன்
        நஞ்சையிட்டு. நஞ்சையீட்டு. 69.

வெள்ளிமலை சார்ந்தநிலம் மிகுவளத்தைப் பெற்றதேன்
தள்ளருங்கா னிராமன்செலத் தாதையுயி ரற்றதேன்
        நொய்யலினால். நொய்யலினால்.70.

தரைமரம்வா ழுயிர்பதறத் தான்வானம் பெய்வதேன்
சிறையிலைநற் பயிர்கதிரைச் சேர்புட்க ளெய்வதேன்
        உணவுக்காக. உணவுக்காக. 71.

பல்கோடி வீரர்மாய்த்துப் பார்ஜெயிக்கப் படுவதேன்
பல்கோடிச் சிறுமீன் போய்ப் பருமீன்கட் படுவதேன்
        தாமாள.தாமாள. 72

எச்செயலு மவன்செயலே யென்பதிலோ ரையமேன்
இச்சகமு மழிந்தழிந்ந் திடர்ப்பட்டு நைவதேன்
        ஊழியினால். ஊழினால். 73.

கண்ணுமையின் றாள்மலரே கவினுலகம் வாழ்த்துவதேன்
தண்புணலி னொருநாரை தகுமீனாய் வீழ்த்துவதேன்
        காத்தலினால்.காத்தலினால். 74.

படைத்தளித்துக் காக்குமிறை பலவுலகும் போற்றுவதேன்
படைப்பமுது கூரையிட்டுப் பனிமலரைத் தூற்றுவதேன்
        காக்கைக்காக. காக்கைக்காக 75.

விடுதலைப்போர் தனிற்ஜவலூர் மிகவிடுக்கட் பட்டதேன்
படுதொலைவான் கடுகியுறப் பறவைபறத் திட்டதேன்
        சிறையினாலே சிறையினாலே 76

தண்புனலின் மீனினமே தாவியே துள்ளுவதேன்
கண்கணிறை காமமெனுங் கடலலையைக் கொள்ளுவதேன்
        எதிர்வுநோக்கி. எதிர்வு நோக்கி. 77.

அன்னைவயிற் றிற்பிறந்த வருங்குழவி யலறுவதேன்
மின்னவகு மின்விளக்கம் மேதினியி லொளிருவதேன்
        எதிர்வினாலே எதிர்வினாலே. 78

கழிவிரதக் காந்தியஞ்சிக் காவலரும் விழித்ததேன்
எழில்பரத ருயிர்வாழ விடும்பைகுடர் களித்ததேன்
        ஆழிசுழல ஆழிசுழல 79.

ஆங்கில த்தார் வரமக்க ளருங்கிராப்பைக் கொண்டதேன்
காங்கிரஸார் வரவேற்றுக் காவல்மகிழ் வுண்டதேன்
        முடிதொலைக்க முடிதொலைக்க. 80

தையலார் தாசியரைத் தானணைய வோடுவதேன்
தையலார் தங்கடையைத் தானறிய நாடுவதேன்
கிழித்துத்தைக்க கிழித்துத்தைக்க. 81.

பமைக்கட் டொழிலின்றிப் பரதவித்து வாடுவதேன்
நிலமக்கட் டமைப்பிடித்த நிணந்தின்பே யோடுவதேன்
        இயந்திரத்தால் இயந்திரத்தால் 82.

பாபியராம் லோபியர்பொன் பரிந்தெடுத்துக் கொடுப்பதேன்
கோபியராங் கொடுங்கள்வர் குண்டோட்ட மெடுப்பதேன்
        குக்கலினால் குக்கலினால். 83.

பாம்பொன்று பசித்திருக்கப் பாஅல்வார்த் தெடுத்ததேன்
வீம்பொன்று வரமிரண்டு விழைந்தாட்குக் கொடுத்ததேன்
        சாவதற்கு சாவதற்கு 84.

உண்கலத்தி லூணமுத முடற்கெடுமென் றொதுக்குவதேன்
மண்டலத்தினடுகன் முதல் வள்ளலென்று செதுக்குவதேன்
        ஈயாரிருக்க ஈயாரிருக்க. 85.

ஆங்கிலமன் விமானங்க ளருங்கலையா லாக்கியதேன்
தேங்குவளைப் பெண்டீர்தஞ் சீர்நெறியைப் போக்கியதேன்
        வானில்போக வானில்போக. 86.

தூயகுணப் பெண்மார்பந் துணைவர்தமக் காவதேன்
தீயகுணப் பெண்மார்பஞ் சேர்கணவர்க் கீவதேன்
        உறைவிடமாய் உறைவிடமாய். 87.

மனைவாழு மணிமாதர் மாண்குணங்ங் கெடுவதேன்
தினையேனுந் திருந்தாத திருடன்கண் படுவதேன்
        நடமாடியதால் நடமாடியதால். 88.

புல்லர்பலர் நல்லர்போலப் பொன்னார்கண் வாழ்வதேன்
பல்லரவப் பாயணையான் பக்தர்போலத் தாழ்வதேன்
        நாமம்போட்டு தாமம்போட்டு 89.

திருக்கோயிற் கடவுளரைத் தெரிசிப்பார்க் கவதியேன்
ரிக்கோல வேல்விழியார் மகிழ்ச்சிபெறு மமைதியேன்
        இரவினாலே இரவினாலே.90.

கற்பவர்தங் கசடொழியக் கற்குமாறு கடிவதேன்
பற்பலகாய்ப் பைஞ்செடிகள் பந்தரிட்டு நடுவதேன்
        நிற்பதற்கு நிற்பதற்கு. 91.

ஒருமகனைக் கசடனென்றே யுலகத்தார் தூறுவதேன்
அறவணியைப் பித்தனென்றே யடியரெலாங் கூறுவதேன்
        குறைமதியால் குறைமதியால். 92.

மல்லாந்த வாமையொன்று மல்லாந்தே கிடப்பதேன்
பொல்லாத கசடர்மனம் போனபடி நடப்பதேன்
        திருப்பமுடியாமல் திருப்பமுடியாமல். 93

உலகமெலா மளந்தவுய ரொருகணித மஞ்சுவதேன்
மலவுதிரக் கழிவெனுநோய் மருண்டோடக் கெஞ்சுவதேன்
        மாதுளத்தால் மாதுளத்தால். 94

மழையறுந்துந் தரைவரண்டும் மட்டிலாக்கனி பெற்றதேன்
இழைவகிர்ந்து விடையினாளி னிழைபேழை வெற்றதேன்
        கள்ளியினால் கள்ளியினால். 95.

செங்கரும்பின் களிறு கொம்பின் சீர்முத்தந் தொலைந்ததேன்
தங்கிவாழு மக்களோடித் தாரணிக்கு ளலைந்ததேன்
        கலிகாலத்தினால் கலிகாலத்தினால். 96.

பெற்றதாய் தந்தையரைப் பேணிமக்க ணடப்பதேன்
உற்றகுறை தனக்கொருவரொண் பொருளைக்கொடுப்பதேன்
        கடனுக்காக கடனுக்காக. 97.

பெற்றதாய் தந்தையரைப் பேணுதற்கு முந்துவதேன்
உற்றகுறை தனக்கொருவ ருதவுதற்குப் பிந்துவதேன்
        கடனறிந்து கடனறிந்து. 98.

அன்னையல்கு லீன்றவித மறியத்தொட் டாய்வதேன்
தன்னையருட் கடவுளரின் சக்திகாணப் பாய்வதேன்
        அடியோடழிய அடியோடழிய. 99.

தொழுதகைய நாயகனைத் தூற்றிவருங் கொழுப்பதேன்
கழுதையொன்றின் வால்பற்றிக் கடுகவலித் திழுப்பதேன்
        உதையைத்தின்ன உதையைத் தின்ன. 100.

பால்குடித்தோ மெனத்தாயின் பருமுலையைப்பற்றுவதேன்
வால்படைத்த பசுமாடு வாழ்கொட்டி லுற்றதுமேன்
        தட்டுத்தின்ன தட்டுத்தின்ன. 101.

அறிவுமிக்க புலவர்தமை யவமதித்து நடத்துவதேன்
எருது தக்க பரியேற்றி யிறை நீரைக் கடத்துவதேன்
        தொலைவினாலே தொலைவினாலே.102.

செல்வந்தர் துட்டருக்குச் செம்பொருளைக் கொடுப்பதேன்
வல்வேந்த ரயனாட்டில் வலியப்போர் தொடுப்பதேன்
        நச்சலினால் நச்சலினால். 103.

அருட்புலமை யவ்வைசுடு மருங்கனியைப் பார்த்ததேன்
கருத்தோடு தொழிற்செய்யக் கருத்தைவிடா தீர்த்ததேன்
        நாவலாலே நாவலாலே. 104

மண்டலத்து மக்கள்மாய மாணரகுற் றழிவதேன்
பெண்களம்மி யேகொண்டும் பெயர்த்தரையாதொழிவதேன்
        குழவியின்றி குழவியின்றி. 105.

புதியமனை புகவிருப்பார் புகாது நாட் டள்ளுவதேன்
சிதையவினை செயும்புல்லர் தீநட்பை யெள்ளுவதேன்
        ஆனியென்று ஆனியொன்று. 106.

கனிகண்டும் பசிமிகுந்துங் காசினியோர் கொய்யாதேன்
நனிபுல்லர் நல்லோரை நையவி செய்யாதேன்
        எட்டிநிற்க. எட்டிநிற்க 107.

புவனத்தே முற்புதத்துட் பொன்மதுரை சேர்வதேன்
கவனத்தார் கட்குடிக்கக் கடைத்தெருவிற் போரதேன்
        மாலினாலே மாலினாலே. 108.

தஞ்சைநிலன் மருதவளந் தானுயர்த்தி யறைவதேன்
அஞ்சுதலில் வீரரஞ்சு மரவமஞ்சி யுறைவதேன்
        நஞ்சைமுன்னிட்டு நஞ்சைமுன்னிட்டு. 109

மனுச்சோழ னாக்கண்டு மனம் நடுங்கி யஞ்சியதேன்
அனைத்துலகு மாளரசு மணிபுலவர்க் கஞ்சியதேன்
        நாவசைக்கு நாவசைக்கு. 110.

ஈயா மொய் யுணவுண்ணு மெழின்மாந்தர் நோவதேன்
வீயக்செய் பயிரில்மணி மிகாதுவற்றிப் போவதேன்
        புல்லர்சூழ புல்லர்சூழ. 111.

இந்தவரு ளுயர்வு காழ் விலையெனுஞ்சொற் பொழிவதன்
தந்திரமாய் மொழிவருடன் டூமுண்ணாஅ தொழிவதேன்
        சாதியிலையென்று சாதியிலையென்று 112.

பொன்னாடு மீன்கோழி புலான்மறுப்பார் சீ றுவதேன்
கன்னியாக்குக் கருவளித்து மருத்துவர்முன் கூறுவதேன்
        சீவன்வதையென்று சீவன்வதை யென் று. 113.

குன்றுறையுங்கொலையரென்பார்கொடுங்குடர் நிறைவதேன்
நன்முறைவார் நல்லரென்பார் நாடுஜெயம் பெறுவதேன்
        சீவர்மடித்து சீவர்மடித்து. 114.

வளிமுதலா வுணல்மறுத்தார் வானிட்டை வண்ணமேன்
அளியுடையா ருண்டுடுப்பா ரைந்தடக்கார் திண்ணமேன்
        கொல்லாமைக்கு கொல்லாமைக்கு. 115.

அறநெறியன் பல்கோடிச் சிப்பிகொன்று பார்ப்பதேன்
மறநெறியன் மீன்கொண்ட படகுகரை சேர்ப்பதேன்
        மாலைதொட மாலைதொட 116

மண்பிறந்த மாண்குழவீ மலர்வாய்விட் டழுவதேன்
எண்ணிறந்தார் சுயாட்சிபெற வெதிரநோய் விழுவதேன்
        சிறைப்பட்டதால் சிறைப்பட்டதால். 117.

பெயலினாற் பொலியுலகம் பிணிமாசில் காணுவதேன்
மயலனான் வேண்முருகன் மாணடியைப் பேணுவதேன்
        காக்கையினால் காக்கையினால். 118.

பேராத்தா ரலறவுயிர் பிரிந்தபிணம் நகைத்ததேன்
பாரமத்துள் காங்கிரஸார் பலரிடரிற் றிகைத்ததேன்
        விடுதலைக்கு விடுதலைக்கு. 119.

பலபணிசெய் நிலவுலகம் பசியாற்றிப் பிழைப்பதேன்
தலமுறுசீர் மக்கடம்மு ணற்காமந் தழைப்பதேன்
        வேளாண்மையால் வேளாண்மையால். 120.

ஒருநகரம் வரியதிக மோங்கிக்கொண் டிருப்பதேன்
மொருவன் வழிப்போக்கை வழிமறித்து வைவதே
        குடியேறி குடியேறி. 121.

புகைவண்டி யுள்ளமர்ந்தார் போர்பருத்து மசையாதேன்
நகை பூண்ட மாதர்செல நள்ளிரவி லிசையாதேன்
        நகரில் மோசமென்று நகரில் மோசமென்று. 122.

பார்த்தவிடம் நென்மணிகள் பலசிந்தத் தேறியதேன்
கோர்த்திடவோ சேர்த்திடவோ வெனதுரியன் கூறியதன்
        சரசமாக சரசமாக. 123.

கம்பர்மகன் கள்வனென்று காண்கரியாய்ப் பெற்றதேன்
உம்பர்தரும் பஞ்சவர்மிக் கோங்குபுக ழுற்றதேன்
        சாந்தத்தாலே சாந்தத்தாலே. 124.

களவுபட்ட காதலர்க்குக் கடிமண நாட் டள்ளுவதேன்
உழவுபட்ட வல்லேறு முண்ணடுங்கித் துள்ளுவதேன்
        வேங்கைகண்டு வேங்கைகண்டு 125

திருநீல கண்டரிடஞ் சிவபெருமான் சீறியதேன்
பெருநகர சட்டசபை பேசுமிடந் தேறியதேன்
        ஓட்டினாலே ஓட்டினாலே. 126.

கொற்கையான் மாறன்றன் கோற்கையை வெட்டியதேன்
கற்கையான் புகழ்க்கம்பன் காற்றேவைத் திட்டியதேன்
        கதவைத்தட்ட கதவைத்தட்ட, 127.

ஓரங்க மறுத்து சிபி யுயர்தட்டி னிறுத்ததேன்
சாரங்கன் சிற்றன்னை சரஸமொழி குறித்ததேன்
        புருவையிட்டு புருவையிட்டு. 128.

பரதன்றா யிரண்டுலாம் பரிவுடனே கேட்டது மேன்
இரதங்கொண் டொருமகன்மே லெதிரேற வோட்டியதேன்
        கோவைக்கொல்ல கோவைக்கொல்ல. 129.

சானகியை இராமனுந்தன் றையலாகப் பெற்றா
கானகத்தி லகளிகையோர் கல்லுருவாய் நிற்றதேன்
        சாபத்தாலே சாபத்தாலே. 130.

பழமீய்ந்த சீதையுந்தன் பார்த்திபன்சொல் வழுவியதேன்
களவேய்ந்த காதலர்போர்க் காரேற்றைத் தழுவியதேன்
        கோட்டைக்கொண்டு கோட்டைக்கொண்டு. 131.

குடித்தனத்தா ரளவிதென்று குவியன்நெற் காட்டியதேன்
மிடித்தனத்தா லாண்டபலி மிதித்துலகு மீட்டியதேன்
        படியளந்து படியளந்து. 132.

தாந்தனியாய்க் கோவலனுந் தாசியுட னேகியதேன்
காந்திமகான் பாலுணவைக் கைப்பிடிக்க வாகியதேன்
        ஆட்டினாலே ஆட்டினாலே. 133.

மன்னறத்தின் புண்ணியத்தை மன்கன்ன னீந்ததேன்
பொன்னொளிசேர் பட்சியினம் புயல்வானிற் போந்ததேன்
        இறக்கையினால் இறக்கையினால். 134.

ஆணவரு மானைமுக னடிதாழ்ந்து நிற்பதேன்
மாணவருங் கலைகளிலே மாசகலக் கற்பதேன்
        குட்டுப்பட்டு குட்டுப்பட்டு, 135.

குறுமுனியார் வாதாபி குடரிழித்த வண்ணமேன்
வருமடியார் பூசனைப்பொன் வான்கோயி னண்ணலேன்
        உண்டியினால் உண்டியினால். 136.

கணமுதலாக் காலத்தைக் காசினியோர் கண்டதேள்
மணவினையில் மணமகடன் மணமகனைக் கொண்டதேன்
        கடியாரத்தால் கடியாரத்தால் 137.

வேனிலினாள் மக்களுடல் வெம்மையறப் பெற்றதேன்
மாநிலமோர் கோவலன்சீர் வான்புகழை யுற்றதேன்
        நன்னாரியால் நன்னாரியால். 138.

எறிபத்தர் தவமலர்க ளெழிற்றெருவிற் சிதறியதேன்
நெறிதப்பா மனுக்கோயி னெடுமணியும் பதறியதேன்
        ஆனையினால் ஆனையினால் 139.

புடைச்சங்கஞ் சூழ்கடலிற் பொற்கலணை நிமிர்ந்ததேன்
கடைச்சங்க மாள்கீரன் கண்ணுதலை யெதிர்ந்ததேன்
        கவியினாலே கவியினாலே. 140

முப்பாலின் னாற்பயனை முகந்துதமிழ் முழங்கியதேன்
ஒப்பாரி லாழ்கடனீ ரொருகுடா லடங்கியதேன்
        குறளாரால் குறளாரால். 141.

இலங்கைக்கோன் சீதைமடி யிருத்திவானிற் பறந்ததேன்
கலங்கிப்போய்த் தந்தைமடி கன்னியொப்பி யிருந்ததேன்
        மகடானென்று மகடானென்று. 142

பாடல்வலன் சீதையொடு படுகாமம் பேசியதேன்
கேடில்சீதை தனதுடலைக் கிளர்தீக்கண் வீசியதேன்
        கற்பைநாட்ட கற்பைநாட்ட. 143.

பொய்மானுஞ் சீராமன் புறக்கணிக்க வறியாதேன்
மெய்மானும் பொய்மானை வேடமென்று தெரியாதேன்
        விதியிருளால் வீதியிருளால். 145.

கிட்கிந்தை யிறைத்தம்பி கெஞ்சிநின்று விழைந்ததேன்
விற்கைவேல் வாலியிடம் வெகுண்டிராம னொளிந்ததேன்
        துணைவேண்டுமென்று துணைவேண்டுமென்று. 146

புலமைமிகு அவ்வைமுனே புனைகம்பன் றோற்றதேன்
நிலைமைக்கு பெரியரென நேர்ந்தபேர்ப்பின் சேர்த்ததேன்
        ஆரையிட்டு ஆரையிட்டு. 146.

பாவினங்கள் மாதர்கண்ணைப் பார்த்துவமைபன்னுவதேன்
ஆவினங்கள் பசிபொறாஅ தாசையின்றித் தின்னுவதேன்
        குவளைகண்டு குவளைகண்டு. 147.

பிரணவத்தான்பிறைச்சடையைச்சுற்றிவந்தபெற்றியதேன்
சரவணத்தான் மயிலூர்ந்து தண்ணுலகஞ் சுற்றியதேன்
        மாம்பழத்தால் மாம்பழத்தால். 148

திருக்கயிலை வளர்செல்வன் றென்பழனி யுற்றதேன்
கருப்புயல்சேர் மலைப்பழனி கவிவாழ்த்துப் பெற்றதேன்
        மாம்பழத்தால் மாம்பழத்தால். 149.

கடம்பமர்ந்தான் பழனிவைகிக் கயிலை நீங்கி யிருந்ததேன்
இடந்தொடர்ந்து கவியிரைந்து மெதிரணைந்து வந்ததேன்
        பழம்பெறாஅதால் பழம்பெறாஅதால். 150

மெல்லியற்சே ரிலக்குமிப்பொன் வீயிருக்கைப் பெற்றதேன்
நல்லியற்சேர் வள்ளியெனும் நங்கைதனை யுற்றதேன்
        தாமரையால் தாமரையாள், 151

குமரிமுத லிமயம்வரைக் கோவேந்தர் குலைந்ததேள்
தமையந்தி சுயம்வரத்தே தனதுநளற் கலைந்ததேன்
        சேரனாலே சேரனாலே 152.

சிலப்பதிகா ரக்காதை சீராகத் தோன்றியதேன்
தலைப்புறமே நரைமுடித்துத்தகுமுறை சொல்லூன்றியதேன்
        இளங்கோவால் இளங்கோவால். 153.

பகலொளித்த பாவையின்மன் றலைக்கூடை யிருந்ததுமேன்
அகலதிர்த்த வான்குரல வத்திரி நீ ரருந்துவதேன்
        குட்டந்தீர குட்டந்தீர. 154,

அருந்தேவர் மன்னனுட லாயிரங்கண் ணிமைத்ததேன்
இருந்தோம்பி யணிசெய்ய வெழிலாடை யமைத்ததேன்
        தையலினால் தையலினால். 155.

பண்டொருநாள் நளமன்னன் படர்கானஞ் சுற்றியதேன்
அண்டிகுடி வைகுவாரை யலைச்சல்பல பற்றுவதேன்
        கிரகத்தாலே கிரகத்தாலே. 156,

ஏறேறன் முதற்செல்வ னிருங்கோயிற் காத்ததேன்
பேரேறும் வணிகர்காசைப் பெருவிரன்மேற் சேர்த்ததேன்
        சுண்டலுக்கு சுண்டலுக்கு. 157.

இலங்கைக்கோ னிமயத்தை யிருந்தோளாற் றாவியதேன்
இலங்கைக்கோனிருந்தோளை யெடுக்கொணாதுகூவியதேன்
        வலியினாலே வலியினாலே. 158

பஞ்சத்தே வாழ்மக்கள் பாழ்வயிற்றிற் றப்பியதேன்
வஞ்சித்தே கேகையர்பொன் வரம்வாங்க வொப்பியதேன்
        கள்ளியினால் கள்ளியினால். 159.

படிதங்கும் பனையோலை பறித்தெழுதன் மறைந்ததேன்
வடிகாற்கொள் வரப்புடைய வயனென்மணி குறைந்ததேன் தாள்
        மிக்கேறி தாள் மிக்கேறி. 160.

போராய்ந்த வீரஹிட்லர் புகழ்மாள வழிந்ததேன்
வேரிய்ந்த வேங்கையின்பால் வேற்கண்ணார்விழைந்ததேன்
        கொடுமையினால் கொடுமையினால். 161.

ஆங்கிலத்தார் காதைபல வருந்திரையி லோட்டியதேன்
பாங்குற நெய் தொருபிடியிற் பதின்முளமே காட்டியதேன்
        நூலறிவால் நூலறிவால். 162.

ஆங்கிலத்தார் படப்பேச்சி னருந்தொழிலை யீட்டியதேன்
வாங்குவளை யிராமனையே வன்கானு ளோட்டியதேன்
        கலையறிவால் கலையறிவால், 163.

ஈங்கணிம்மா நானிலத்தே யெழிற்றமிழ்ச்சீர் கண்டதேன்
பாங்குறக்கான் வள்ளிசேயும் பாதுகாவற் கொண்டதேன்
        கலையினாலே கலையினாலே. 164.

பார்புகழும் நளவரசும் படர்கானிற் போனதேன்
பேர்திகழும் நற்குமணன் பெருவறிய னானதேன்
        தாயத்தாலே தாயத்தாலே. 165.

எடுத்த செயல் கரம்காந்தி யினிதாக வென்றதேன்
கொடுத்திருமற் புகைந்துவந்து தொலையாம னின்றதேன்
        உண்ணாத்தன்மையால் உண்ணத்தன்மையால். 166.

களைவிடத்தே செந்நெற்குக் கம்பர்சுவர் கட்டியதேன்
விளைவிடத்தே பயிரழிந்து விடாதுகதிர் கிட்டியதேன்
        வேலியினால் வேலியினால். 167.

பண்ணைப்பற் பசுவினம்நற் பாற்கறக்க வோர்ந்ததேன்
கண்ணப்பன் கடவுளர்மேற் காலூன்ற நோந்ததேன்
        கண்ணுக்காக கண்ணுக்காக. 168.

விரதம்நாட் சனிநலனாய் விழைந்தடியார் வகுத்தே
பரதன்றா யிராமன்றொழப் படாகானம் புகுத்ததேன்
        புரட்டாசியால் புரட்டாசியால், 169.

மண்ணுறைவார் மகிழ்வெய்த மாண்பொங்க லுற்றதேன்
கண்ணனாற்சீர் குசேலமுனி களைப்பொழியப் பெற்றதேன்
        தைவரலால் தைவரலால். 170.

தரையிடைநன் மாசியிரா தான்விழித்து வருவதேன்
பிறைசடையன் பிச்சாடனப் பேர்புகழப் பெறுவதேன்
        சிவனிரவால் சிவனிரவால். 171.

கல்லுருவ வகலிகையுங் காரிகையாய் மாறியதேன்
சொல்லருந்தாய்ப் பலன்சொல்லச் சோதிடர்க டேறியதேன்
இராமனாலே இராமனாலே. 172.

பொய்மானை மெய்யெனப்பின் போயிராம னோடியதேன்
பொய்யான் செய் குறட்காணப் புகழ்சாத்த னாடியதேன்
        சீயிழக்க சீயிழக்க 173,

ஆங்கிலத்தா ராட்சியெதி ரடுகாந்தி தோற்றியதேன்
வேங்கடக்கன் னகத்தியர்முன் மேனிமிர்ந்து சா சுற்றியதேன்
        முடிதொலைக்க முடிதொலைக்க. 174.

புகைவண்டி வான்கப்பற் புகழ்நம்நா டுற்றதேன்
கைசிவன்றாள் மிகையன்பாய்த் தான்காப்புப் பெற்றதேன்
        மேனாட்டாரால் மேனாட்டாரால். 175

நமகளார்தம் மேனிதனி வடிவழகு செறித்ததேன்
தகவார்செஞ் சடைசிவனார் தான்புரமூன் றெரித்ததேன்
        நகையினாலே நகையினாலே. 176

தென்மதுரைக் கபாடபுரத் தென்விரியா ரழிந்ததேன்
மன்னர்ச்சு னன்றீயின் மாய்ந்தழியா தொழிந்ததேன்
        ஆழியினால் ஆழியினால். 177.

பாண்டியர்த மாட்சியின் கீழ்ப்பைந்தமிழ் நூல்செழித்ததேன்
ஈண் டியநற் புகழேந்தி யெழிற்பாவொன் றிழித் 3 த ன்
        சங்கத்தாலே சங்கத்தாலே 178.

மகன்பரசு ராமனனை மயிர்த்தலையை வெட்டியதேன்
அகன்பரதம் புகழ்பரத மாட்டமாட வொட்டியதேன்
        தாதைசொல்லால் தாதைசொல்லால். 179.

அட்டசுர மமைவுடனே யரும்பாடற் புணர்ந்ததேன்
இட்டமுட னவளியதை யின்பமாஅர்ந் துணர்ந்ததேன்
        தியாகராசரால் தியாகராசரால். 180.

சிலப்பதிகா ரக்காதை தெள்ளுரையை யள்ளியதேன்
அலைப்புறு நற் றேவரெலா மகங்களித்துத் துள்ளியதேன்
        சண்முகனாரால் சண்முகனாரால். 181.

மக்களெலாம் மண்ணுலகின் மகிழ்வாழ்க்கை பெற்றதேன்
புக்கவுமை யுடற்சிவனார் பொன்னணியை யுற்றதேன
        பணத்தினாலே பணத்தினாலே. 182.

வீடுகளிற் சாணத்தான் விளக்கமாக மெழுகுவதேன்
காடுகளில் மோனத்தான் கருத்தடக்கி யொழுகுவேன்
        அகந்தூய்மையாக அகந்தூய்மையாக. 183.

மூடுகொசு குடிவைகி மொய்த்துயிர்த்து வாழ்ந்ததேன்
வீடுநம்பி வீடுவிட்டார் வியன்றுறவிற் றாழ்ந்ததேன்
        பட்டினத்தாரால் பட்டினத்தாரால். 184.

போதிடஞ்சூழ் வயற்களத்தே போருழவர் வணக்கமேன்
சோதிடன் கோட் கண்டுபலன் சொல்லுமொரு கணக்குமேன்
        இராசியிட்டு இராசியிட்டு 185

தங்குமுடற் றேய்த்திடவே தானழுக்கு மற்றதேன்
தெங்குதலைத் தங்கிள நீர் தேங்காய்ப்பேர் பெற்றதேன்
        சீவக்காயிட்டதால் சீவக்காயிட்டதால் 186

ஒருபலத்தே யிரண்டேகா லுளதுலாமென் றானதேன்
வருநிலத்தே வாயுசென வழிநடந்து போனதேன்
        காற்பலத்தால் காற்பலத்தால். 187.

பண்டிகளுந் தானோடப் பண்ணையாளர் பூட்டுவதேன்
அண்டிவந்த பெரியாரை யருகமரக் காட்டுவதேன்
        நாற்காலியிட்டு நாற்காலியிட்டு. 188.

இரவலன்சோர்ந் துணவு பெற வில்முன்கை நீட்டுவதேன்
விரவியநோய் கடுங்குட்டம்விரைந்தொழியக்காட்டுவதேன்
        சட்டிபிடித்ததால் சட்டிபிடித்ததால். 189.

குறுமெலிகள் சூழ்மனையிற் குறைகாய்க டேங்குவதேன்
சிறுகணவர்க் கெதிர்மாதர் சினந்தவர்கை யோங்குவ3தன்
        கரண்டியதால் கரண்டியதால். 190

தக்கபுகழ் மிக்கநளன் றன்னுருவம் மாறியதேன்
மக்களெண்ணெய் தேய்த்துடலம் மகிழ்ந்து நீ ராடியதேன்
        சனிதோன்ற சனிதோன்ற 191.

மணமாருங் கவியுவமை மாதர்கண்ணாய்ச் செப்பியதேன்
மணமாதர் மிதித்தம்மி மாண் பூசைக் கொப்பியதேன்
        மீனோக்கி மீனோக்கி. 192

நிணம்நாறும் பரதவர்தம் நெடுங்குடும்ப முண்டதேன்
கணங்காதம் பலவோடுங் கப்பற்றிசை கண்டதேன்
        மீனினாலே மீனினாலே. 193.

வான்கடனீர்த் தரைப்பெய்ய வல்லுப்பாய் மாறுவதேன்
தேன்மழலைச் சிறாஅராடுந் தெறிகழற்கா யூருவதேன்
        சண்டலினால் சுண்டலினால். 194.

குடியிருந்து வாழ்மனைமேற் கொடுங்கூகை கூவுவதேன்
துடியிருந்து வாதபித்தந் துவைத்துசிலேத்மந் தாவுவதேன்
        சாவைக்குறிக்க சாவைக்குறிக்க. 195.

காற்கடவு ளாவணியிற் கடுவிசையிற் குறைவதேன்
மாற்கடவுட் டீப்பந்தம் மாசியதி னிறைவதேன்
        ஆடியாடி ஆடியாடி. 196.

பாரிலுயர் மானிடர்சொற் பண்புபொரு ளறிவதேன்
ஊரிலுயிர் நீத்தபிண மொளிர்சுடுகா டுறுவதேன்
        பாடையினால் பாடையினால், 197

அம்மெனத்தண் விளைநிலத்து ளரியகறிகாய் மிலைந்ததேன்
உம்மெனத்தன் குரலெழுப்பி யுறுமும்பன்றி யலைந்ததேன்
        மலத்தெருவால் மலத்தெருவால். 198

காவலர்தம் பகைவென்ற காட்சிகாண நேர்வதேன்
பாவையரை யுவமிக்கப் பாவலர்சொற் றேர்வதேன்
        கொடியினாலே கொடியினாலே. 199

பார்தங்கும் போர்வீரர் பகைக்களத்து வீழ்வதேன்
கார்தங்கி யேர் பொங்குங் காசினியோர் வாழ்வதேன்
        துப்பாக்கியதால் துப்பாக்கியதால். 200.

வடிகுண்டும் விடப்புகையும் விமானங்கள் போட்டதேன்
தடையண்டுந் தாட்டட்டு நற்களத்தெ யீட்டலேன்
        போர் செய்ய போர்செய்ய. 201.

நிறைகூவ மிறை நீரும் நேர்வாய்க்காற் சேர்வதேன்
அறைகூவு மணவீர ரடுகளத்தே யூர்வதேன்
        பரியேறி பரியேறி. 202.

சேவல்பற்றிக் கட்டிவிடச் செய்போரில் வீழ்ந்ததேன்
காவலற்ற சீவனெலாங் காவற்பட வாழ்ந்ததேன்
        காயத்தாலே காயத்தாலே. 203.

தோலடிதே யிரவலர்போய்ச் சோறுவாங்கிக் கொள்வதேன்
மாலடியார் பிறசனிநாண் மாண்பிலதாய்த் தள்வதேன்
        பாத்திரத்தால் பாத்திரத்தால். 204.

காலடிதே யிரவலர்க்குக் கனிவுடன்சோ றிடுவதேன்
மாலடியைச் சனி நா ளில் மாண்பெனக்கும் பிடுவதேன்
        பாத்திரங்கண்டு பாத்திரங்கண்டு. 205.

வான்புறாமுன் சேதியோலை மக்கள்கையிற் சேர்த்ததேன்
ஊன்பெறாஅநன் னீருறிஞ்சி யுடலவெப்பந் தீர்த்ததேன்
        கற்பனையால் கற்பனையால். 206.

மருகனுக்குப் பண்டிகைநாண் மணவமுதஞ் சிறந்ததேன்
கருமம்வரத் தோரணங்கள் ஈவின்மனையி னிறைந்ததே
மாவிலையிட்டு மாவிலையிட்டு. 207

மனை வாயிற் பிள்ளையிட்டு மாதர்மலர் போடுவதேன்
பனிவாயில் மாலடியார் பக்திபண்ணிப் பாடுவதேன்
        மார்களியால் மார்களியால். 208

வருடமொரு முறைமாதர் மங்கலநாண் கோர்ப்பதேன்
திருடவருங் கள்வரெலாந் திரும்பியோட வார்ப்பதேன்
        நாயகமிருக்சு நாயகமிருக்க. 209.

வீடுவய லவனதென்று விரைந்துகாண வுறுவதேன்
நாடியரு ளிறைவனடி நாட்பூசை பெறுவதேன்
        பத்திரத்தால் பத்திரத்தால் 210

அரவாட்டுங் குழற்பிடார னரவுபற்றச் சீறுவதேன்
வரிகாட்டுஞ் சோதிடன்றான் வருபலனைக் கூறுவதேன்
        சாதகத்தால் சாதகத்தால். 211.

பண்டுசிறாஅர் புகைக்கூடு பறக்கவானி லோட்டுவதேன்
கொண்டுகுழ லிசைப்பிடாரன் கொடுநாக மாட்டுவதேன்
        விளையாட்டுக்கு விளையாட்டுக்கு 212

பண்டுசிறா அர் கயிறு சுற்றிப் பம்பரங்க ளாட்டுவதேன்
கண்டறிவார் கான்வண்டி கயிற்றிரும்பான் மாட்டுவதேன்
        சுற்றியோட சுற்றியோட. 213

வண்டியினைக் காளைகளும் வலித்திழுக்கப் பிணைத்ததேன்
தண்டுவளர் கான்வேடன் றானியமிட் டணைத்ததேன்
        கண்ணியினால் கண்ணியினால். 214.

ஏரினி றகு நல்லதென்ன வெழின்மாதர் செப்புவதேன்
வெறியிலைநற் பாக்குண்பார் விரும்பியொன்று சப்புவதேன்
        புகையிலையால் புகையிலையால். 215.

நதிவணங்கப் பதினெட்டாம் நாள்வர வடுத்ததேன்
துதியணங்கு மாரிவிழாத் தூ உயெரியோ டெடுத்ததேன்
        ஆடிவர ஆடிவர. 216.

நாளவிட்டம் முப்புரிஞாண் ணானிலத்தார் சூட்டுவதேன்
கோளகற்றும் பொங்கலன்று கோயிலேக வோட்டுவதேன்
        ஆவணியிட்டு ஆவணியிட்டு. 217.

பண்டிகைநா ளைப்பசியிற் பாரதர்க்கு வாய்ப்பதேன்
ண்டுயர்சீர் வானொலியாற் கொள்பாடற் கேட்பதேன்
தீபாவளி வரலால் தீபாவளிவரலால். 218

கோயின்மனை தீபநிரல் குவலயத்தார் பெற்றே
பாயிருமண் வாழுழவர் மனம்வருத்த முற்றதேன்
        கார்த்திகையால் கார்த்திகையால். 219

செலுமடியார் திருப்பேரூர் செஞ்சீர்நாக் கூறுவதேன்
பொலிவுடைசீர்க் காங்கிரஸார் பூவேந்தைச் சீறுவதேன்
        நடராஜாவென்று நடராஜா வன்று. 240,

பெரியபுராணப்பாடற் பேருரையைப் பெற்றதேன்
அரியபசுந் தோகைமயி லணி நடன முற்றதேன்
        சுப்பிரமணியரால். சுப்பிரமணியரால், 221.

மடக்கேரார் களத்திடைதெல் வண்டிகளிற் றள்வதேன்
கடைச்சேர்வார் பலபண்டங் காண்விலைக்குக் கொள்வதேன்
        பையினாலே பையினாலே. 222.

போராரும் வேந்தர்புகழ் புண்மார்பந் திகழ்வதேன்
பாரூர்ந்த சக்கரங்கள் படுவிசையாய்ச் சுழல்வதேன்
        தாராலே தாராலே. 223

வழிப்போவார் வேற்றூரார் வாங்கியுண்டு போவதேன்
வழிப்போகும் வண்டியீர்த்த வான்புரவி நோவதேன்
        ஓட்டலினால் ஓட்டலினால். 224.

தென்குமரி வடவிமயந் தேர்பரதஞ் செப்பியதேன்
மின்முதலா மதிவரைதம் மீயொளியென் றொப்பியதேன்
        எல்லையிட்டு எல்லையிட்டு. 225.

மெய்யழிய வடுக்களுற்று மேதினியில் மாள்வதேன்
வையகத்துள் வாழ்மக்கள் வாழ்வாங்கு வாழ்வதேன்
        மாரியினால் மாரியினால். 226.

கார்த்திகையிற் காசினீயோர் கடிமனைக ணிரம்பியதேன்
பூர்த்திபெறு மணிகளெலாம் பொன்னொளி யரும்பியதேன்
        விளக்கினால் விளக்கினால். 227.

தனித்தமிழைக் காத்திடவே தான்சிறையுங் கொண்டதேன்
நினைத்தசெய லனைத்துலகம் நிறீஇப்புகழுங் கண்டதேன்
        பெரியாராலே. பெரியாராலே. 228.

பெண்டீர்கைக் கல்நெல்லைப் பிரித்தலினாற் சலித்ததேன்
தண்டார்சூழ் பாண்டவர்க்குத் தாணியிற்போர்வலித்ததேன்
        பங்கீட்டாலே. பங்கீட்டாலே. 229.

வடிவேய்ந்த மாதர்குழல் வண்ணமலர் சூடுவதேன்
படிவாய்ந்த சுயம்வர நாட் பார்மன்னர் கூடுவதேன்
        மணத்துக்காக மணத்துக்காக. 230.

பாரதத்தின் வீரமெலாம் பாவுருவம் பெற்றதேன்
பாரதத்துள் தமிட்புலவர் பாடுமெழி லுற்றதேன்
        பாரதியால் பாரதியால். 231,

புலவர்களும் வலவர்களாம் புகழ்புலமைக் காக்கியதேன்
பொலனுறுதங் குழவிகட்குப்பொற்றொட்டிற்றூக்கியதேன்
        கலையினாலே கலையினாலே. 232.

புசித்திடவெற் றிலை நரம்பைப் போக்க மேலோர்புகன்றதேன்
வசித்திடவோர் தூயவில்லம் வசதியின்றா யகன்றதேன்
        பூச்சிவிடத்தான் பூச்சிவிடத்தான். 233

பழனியிறைப் பண்டிதனும் பாவலராற் சிறந்ததேன்
கழனி நிறைப் பழனிசூழ்வார் காவலராயிரைந்ததேன்
        கவிகளினால் கவிகளினால் 234.

அனைத்துலகுங் காக்குமிறையறிவனென்றுவணங்குவதேன்
மனைத்தனியள் காமுற்றுமனeவெதும்பிப் பிணங்குவதேன்
        நிறைமதியால் நிறைமதியால் 235.

கடியிலருங் கமுகுமொரு கவினுறுஞ்சீர் வளர்ச்சியேன்
படியில்முசுக் கொட்டைதின்னப்படுபுழுக்கட்டளர்ச்சியேன்
        பட்டையிட்டு பட்டையிட்டு. 236.

பெற்றமகன் றாயொன்றாய்ப் பிணைந்திருந்தும் பிரிந்ததேன்
நற்றவமி விரவலன்ற னலிந்தகுடர் நிறைந்ததேன்
        கத்தியதால் கத்தியதால். 237.

குலைப்பட்ட சடைச்செந்நெற் கொய்கதிரிற் பெயராதேன்
விலைப்பட்ட காற்செருப்பு மேனிகெட் டயராதேன்
        மிதிப்பாரற்று மிதிப்பார்ற்று. 238.

வள்ளிப்பொன் காசு நின்று வியனுலகிற் சூழ்ந்ததேன்
துள்ளிச்செல் மாட்டெருமை தொல்லுலகில் வாழ்ந்ததேன்
        தட்டுத்தின்று தட்டுத்தின்று. 239,

வெள்ளிப்பொற் காசெல்லாம்விரைந்தோடியொளித்ததேன்
வள்ளிப்பொற் காசுகட்கு வெறுந்தாட்க ளளித்ததேன்
        தட்டுப்பட்டு தட்டுப்பட்டு. 240

செல்வந்த ராடூசன் செயவாய்ந்த வண்ணமேன்
சொல்வம்பர் பொருட்பெண்டீர் சுகம்பெற்ற திண்ணமேன்
        பலகையினால் பலகையினால். 241.

கடுவெயிலிற் கால்நடையர் களை நீங்க லுற்றதேன்
இடுநெல்லைக் குற்றுவதற் கெழிலுலக்கை பெற்றதேன்
        மரத்தடியிருக்க மரத்தடியிருக்க. 242.

மண்டலத்தே கங்கையினீர் மாசில்வேனில் மிகுவதேன்
விண்டலத்தே செல்விமான மேற்றடுக்கப் பெறுவதேன்
        இமயத்தாலே இமயத்தாலே. 243.

கொடுங்கானி லிடும்வலைகள் குறுமுயல்மா னீர்த்ததேன்
விடுங்கதிர்நன் மணியுதிர்க்க வியன்களத்தே சேர்த்ததேன்
        தாளைக்கட்டி தாளைக்கட்டி. 244.

அரையாடைச் செம்படவ னருந்தூண்டி லெடுப்பதேன்
தரையார்வான் பார்த்துமனந் தான்கலக்கம் பிடிப்பதேன்
        மீன் வீழ மீன் வீழ். 245

அஞ்சுதிக ழிலக்கணஞ்சீ ரருந்தமிழும் பெற்றதேன்
மிஞ்சுபுகழ் வேளாண்மை மேதினியி லுற்றதேன்
        அகத்தியத்தால் அகத்தியத்தால். 246.

பேர்தொல்காப் பிய நூலும் பீடுபெறத் தோன்றியதேன்
யார்நில்லா வெற்றிலையின் படர்கொடியை யூன்றியதேன்
        அகத்தியத்தால் அகத்தியத்தால். 247.

மனைவிமக்கள் வாழுமிடம் மாணாம்பேர் சுட்டியதேன்
தனையொடுக்கு மிரவலன்கைத் தருவார்முன் கட்டியதேன்
        இல்லமென்று ல்லமென்று. 248.

விளைவுதருங் காடெல்லாம் வேலிசூழப் பெற்றதேன்
களைவுபெருங் கான்சிறாஅர்க்குக் கடும்பசிநோ யற்றதேன்
        கள்ளியினால் கள்ளியினால். 249.

நன்னகைசேல் விழிமடவார் பொற்காது மினுக்குவதேன்
புன்னயஞ்சேர் குரலினியார் நவிறோறு முனுக்குவதேன்
        கம்மலினால் கம்மலினால். 250

இழிவில்லான் மலச்சிக்க லிளமெலங் கழித்ததேன்
கழிவுள்ளான் மலக்கழிநோய் கடுகியாங்கொளித்ததேன்
        சுக்குத்தின்ன சுக்குத்தின்ன. 251.

உழைத்துவரு முடலங்க ளுற்றகளை நீக்கியதேன்
தழைத்த நறும் பொன்னிறையைத் தானறியவாக்கியதேன்
        தூக்கத்தினால் தூக்கத்தினால். 252.

எழுத்தெலாந் தொடர்ந்தொன்றி யிருநிலனிலெழுந்ததேன்
வழுத்தல்செய் யிறைக்குவமைவள்ளுவனார் மொழிந்ததேன்
        அகரத்தாலே அகரத்தாலே. 253.

பொலிவுற்ற வுயிரெல்லாம் பொருந்தநின்று வொலிப்பதேன்
ஒலியற்ற மெய்யெல்லா முயிர்பெற்றுக் கலிப்பதேன்
        அகரங்கொண்டு அகரங்கொண்டு. 254.

குமாரியது மினிலலிதா கூறுபுக ழுற்றதேன்
அமரமுனி யஞ்சுமா ரரிச்சந்த்ர னுற்றதேன்
        நாட்டியத்தால் நாட்டியத்தால். 255.

படியிடத்தே சம்பந்தன் பாடற்பண் செப்புவதேன்
கடியிடத்தே யறுத்துதிரங் கடிதுறிஞ்சித் துப்புவதேன்
        விடமோட விடமோட. 258.

கரையற்ற திரைமுந்நீர் காசினியிற் குறைவதேன்
வரையற்ற முழுமதியம் வான்கலைகள் கரைவதேன்
        தேய்பிறையால் தேய்பிறையால். 257.

கல்லோடு கற்றட்டுங் காலமெல்லாம் போனதேன்
வெள்ளாடை தான்றேய்க்கும் விதங்களெல்லா மானதேன்
        தீப்பெட்டியால் தீப்பெட்டியால். 258

நடனமெனுங் கலையமுதம் நற்சிறப்புப் பெற்றதேன்
அடலேறு திருமலைப்பே ரவனி நினை வுற்றதேன்
        மாலாவாலே மாலாவாலே. 259.

பட்டினத்துக் கன்னியெல்லாம் பாரில் மாய்ந்து காய்ந்ததேன்
மட்டில்லாத வெலிசுழன்று மனையில்வீழ்ந்து மாய்ந்ததேன்
        விடப்பூச்சியால் விடப்பூச்சியால். 260.

வெடிகுண்டு துப்பாக்கி விரைந்துலகி னிறைந்ததேன் கடிகொண்
மதியளவைக் கணித்துரைக்கச் சிறந்ததேன்
        கலைத்தொழிலால் கலைத்தொழிலால். 261.

கடும்பனிபெய் திடும்நாளிற் காண்பனிபெய் யாததேன்
விடும்மிரணம் நெடும்நாண்மெய்விட்டகன் றொழியாததேன்
        மேகத்தாலே மேகத்தாலே. 262.

அறனறிவான் பொருளின்ப மடைவீடு மோர்வதேண்
திறனறிநாண் மடனச்சந் தேர்பயிர்ப்பும் நேர்வதேன்
        கற்பினாலே கற்பினாலே. 63

சிறு கேளா நெலிவிதையைச் செம்பால் சேர்த்தூற்றுவதேன்
ஒருகாளை மாட்டின்கா லுதறிடுநோ யாற்றுவதேன்
        சூட்டினாலே சூட்டினாலே. 264.

அளபுயருந் தமிழர்கணி யருமுறையாய்ப் பட்டதேன்
அளபுயருங் க ஞ்சுரநோ யணுவணுவாய் விட்டதேன்
        பாற்பத்தினால் பாற்பத்தினால். 265

இருகண்ணா னலந்தீமை யெய் து மென் று ே தருவதேன்
பொருகண்ணா ளிடைக்குவமை புலவர்மொழி கூறுவதேன்
        துடியினால துடியினாலே 266

இந்தியர்கள் குடியரசி லேங்கிவெயி னின்றதேன்
யந்தனை செய்ப் பணிமாதர் பைநறுநெய் யென்றதேன்
        ஆடையினால் ஆடையினால். 267

புகைவண்டி மிகைவேகம் புரவியின்றிப் போவதேண்
தகைமண்டி யுயர்வானந் தனில்மேக மாவதேன்
        நீராவியால் நீராவியால். 268.

பலநூறு காதத்திற் பகருவன வறிகுவாதேன்
புலனேறு விடமுடைய பொன்னாகங் குறுகுவதேன்
        வானொலியால் வானொலியால். 269.

மனிதவுடற் கரடிகண்டு மகிழ்ந்துணா தள்ளியதேன்
குனிதலுடைக் குறுநரியர் குதித்தோடித் துள்ளியதேன்
        பிணமேயென்று பிணமேயென்று. 270.

தாமரையின் கண்மணியாய்ச் சார்கதிரோ னிருப்பதுமேன்
நாமமுடைக்கண்ணிமையார் நல்லொளியைப்பரப்புவதேன்
        குவிதலினால் குவிதலினால். 271.

சின்னஞ்சிறு பொன்னந்தழை சிணுங்கிவாடியுருளுவதேன்
மின்னுந்தழை மப்பூட்டுமுன் மேனிபிய்த்துப்புரளுவதேன்
        தாடுதலினால் தொடுதலினால். 272

அணிபெற்றுப் பசுமைமிகு மரியபயிர் தழைந்ததேன்
மணிபற்றுங் கதிர்முற்றும் மணிகளெலாந் தொலைந்ததேன்
        மழையினாலே மழையினாலே. 273.

வறண்டபயிர் களிப்படைய வறத்தவளை கத்துவதேன்
ரண்டுபெயர்முட்டைபற்றிச்சிற்றெரும்புதொத்துவதேன்
        வானம்பெய்ய வானம்பெய்ய. 274

நீலமயி லணித்தோகை நெடிதுவிரித் தாடுவதேன்
கோலவயற் சூழ்காய குயிலடங்கி வாடுவதேன்
        புயல்வரவால் புயல்வரவால். 275.

மேலது நீர் கீழதுவாய் விளைந்துமது வானதேன்
சாலவுநேர் மாடிமனை சரிந்துவிழப் போனதேன்
        மரவேர்பாய்ந்து மரவேர்பாய்ந்து. 276.

சைக்கருவி யெனத்தவளை யிரைந்துகுளம் நிறைந்ததேன்
விசைக்கருவிப் புனற்கயங்கான் விழுந்தோடி யிரைந்ததேன்
        மழையினாலே மழையிஞலே. 277.

வரிவேங்கைப் புலி நரியை வகிர்ந்தறைந்து பாய்ந்ததேன்
நரியாங்குப் புரண்டுருண்டு நடுங்கவனம் கூஉய்ந்ததேன்
        வலியினாலே வலியினாலே. 278.

நீரில்வாழ் முதலைநில நெறியினினாய் மிஞ்சுவதேன்
சீரில்வாழ் கூகைபகல் சிறுகாக்கைக் கஞ்சுவதேன்
        நிலைமைகெட நிலைமைகெட. 279.

புல்வேயில் வேயுராயப் பொலன்கான லெரிந்ததேன்
நல்வாயிற் றோட்டியென நாட்காகங் கரைந்ததேன்
        தீத்துகளால் தீத்துகளால். 280.

கல்லொன்றி லிரும்பொன்று கடிதுபடத் தட்டுவதேன்
வல்லெஃகிற் கல்லொன்று வகைகண்டு கொட்டுவதேன்
        தீப்பற்ற. தீப்பற்ற 281.

குஞ்சுகுயில் காக்கைகண்டு குடர்நடுங்கி யொளித்ததேன்
மிஞ்சுகளை யஞ்சுபயிர் மேனிமிர்ந்து தழைத்ததேன்
        கொத்துப்பட்டு. கொத்துப்பட்டு. 282.

குன்றன்ன சக்கரங்கள் கொடுங்கால்போல் சுற்றுவதேன் மின் ற
மின்றன்னின் கொல்லொளிசேர் மேவிரசந்தெற்றுவதேன்
        நீர்வீழ்ச்சியால். தீர்வீழ்ச்சியால். 283.

அம்புதோய் கன்னனைமால் அரியனென்று தழுவியதேன்
வம்புதோய் குமணனையே வள்ளலென்று மொழிவதேன்
        தலைக்கொடையால் தலைக்கொடையால். 284.

விசையழுத்தி மேதினியில் விளக்கொளியைக்காட்டுவதேன்
மிசையழுத்தி யந்திரங்கள் மிகவிரைவா யோட்டுவதேன்
        மின்சாரத்தால். மின்சாரத்தால். 285.

நீலமயி லாணொழிய நெடும்புணர்ச்சி பெற்றதேன்
கோலமுடை புள்சிட்டுக் குறும்புணர்ச்சி யுற்றதேன்
        ஆடியாடி ஆடியாடி. 286.

வேப்பம்பூ பாகுபழம் விநாயகர்க்குப் படைப்பதே ன்
காப்பில்பா ரூழிபட்டுக் காசினிப்பேர் கிடைப்பதேன்
        யுகாதியாலே. யுகாதியாலே. 287

எலிகள்பல கூண்டதனி லேமாந்து வீழ்வதேன்
மலிவடைய விளைநிலத்தெ வளைபட்டி சூழ் வதேன்
        கருவாட்டால். கருவாட்டால்.288

சொல்லுஞ்சொற் றன்னையே சொல்லுமுணர் வூட்டியதேன்
மல்லல்சேர் கடவுட்பா மாண்டருமி காட்டியதேன்
        பொற்கிளியால். பொற்கிளியால். 289

யுகழேந்தி பாப்பிழையாய்ப் புகழ்கூத்த னெதிர்ந்ததேன்
திகழ்தமிட்பெண் டீர்சிலர்கைத் தேர்வளையா யதிர்ந்ததேன்
வெண்சங்கான். வெண்சங்கான். 290.

வண்டினஞ்சேர் தாதவிழ்க்கு மலர்மணமே யள்ளுவதேன்
பெண்டினஞ்சேர் பெண்டென்றுபேசிடவேகொள்ளுவதேன்
        பூப்பினாலே.பூப்பினாலே. 291

கான்மயிலும் மீனினமுங் கருவுயிர்ப்பிற் பெருமையேன்
வானரவுங் கான்றருவும் வையகத்தோ ரருமையேன்
புணர்ச்சியினால். புணர்ச்சியினால். 292

எதிரொருவர் செயக்கண்ட திரைந்து செய வருவதேன்
ரொருவர் சொன்னாலு மிருந்தசொல்லே தருவதேன்
        விகடகவியால், விகடகவியால். 293.

பெருங்காமக் காளையர்தாம் பேண்மகட்கு நொய்வதேன்
ஒறுங்கார வுயர்நிற்கு மொண்டாலங் கொய்வதேன்
        மடன்மேலேறி மடன்மேலேறி. 294

கடுவேம்பைத் தருவரசிற் கலந்துலகோர் வளர்ப்பதேன்
எடுபுனற் பூங் கலவையையிட் டெழின்மாதர் குளிப்பதேன்
        மணத்தைச்செய்ய மணத்தைச்செய்ய. 295

மண்வினைஞ ரடுகற்கள் வான்சுண்ண மாவ? தேன்
விண்கனைபோர் முரசரசர் விற்கையொடு போவதேன்
        களவாயிடத்து களவாயிடத்து. 296.

பிறைசடையன் றிருநடனப் பெருமையிவண்கொண்டதேன்
கரைபுரளு மலையின்முதற் கப்பலோடக் கண்டதேன்
        சிதம்பரத்தால். சிதம்பரத்தால். 297

தையலாரிற் பொங்கலிடத் தான்றிருத்த நேர்வதேன்
தையலர்முன் புத்தாடை தான்கொண்டு சேர்வதேன்
        தைஇக்காக தைஇக்காக. 298.

மேனாட்டான் ஜேம்ஸ் என்பான் மிக்கபுகழ் பெற்றதேன்
தானாட்டா வுடலங்க டானாட லுற்றதேன்
        நீராவியால். நீராவியால்.299.

அரசப்பன் அலங்காரம் அச்சியற்றப் பெற்றதேன்
வரிசைப்பன் மூன்றாய வள்ளற்பே ருற்றதேன்
        நன்கொடையால். நன்கொடையால். 300
--------------

This file was last updated on 17 March 2026.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)