சிறுமணவூர் முனிசாமி முதலியாரவர் இயற்றிய
"வள்ளியம்மை அலங்காரம்"
vaLLiammai alangkAram
ciRumaNavUr municAmi mutaliyar
In Tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Roja Muthiah Research Library (RMRL), Chennai for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2026.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
சிறுமணவூர் முனிசாமி முதலியாரவர் இயற்றிய
"வள்ளியம்மை அலங்காரம்"
Source:
வள்ளியம்மை அலங்காரம்.
இஃது, 'சிறுமணவூர், முனிசாமி முதலியாரவர்களால் இயற்றப்பட்டு,
தமது சென்னை சூளை, சிவகாமிவிலாச அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது.
1905.
------------
சிவராமஜெயம்.
கடவுள் துணை.
வள்ளியம்மை அலங்காரம்.
விநாயகர் துதி
நேரிசைவெண்பா.
கொடியிடையாள்வள்ளி கொடியதவமிருந்து
வடிவேலன்றனை மணர்ந்த வற்புதத்தைப் -படிமிசையான்
அலங்காரமாய்ப்பாட யானைமுகாயென்னாவில்
விலகாமற் குடியிருக்கவெண்.
தெம்மாங்கு.
ஒன்பதுரத்தினமும் உருக்கிவிட்டபதுமையைப்போல்
அன்னநடைவள்ளியம்மை யருந்தபசுபுரிந்திட்டாளே. (நன்னா)
அலங்காரம் - ஐயா.
ஆடைநீக்கிஅளகுநீக்கி அணிந்தபணிகள்முளுதும்நீக்கி
வாடை நீக்கிவரிசைநீக்கி வனத்தைனோக்கிமனதுதாக்கி
ஐயா -ஊசிமுனையில்காலைநீட்டி வாசிமுனையில்மனகைப்பூட்டி
சுழியின் முனையில் விழியையோட்டி சுருதிமொழியை மழையாய் வாட்டி.
ஐயா வருகவருகவடிவேல் வருக
வருகமுருக னருகில் வருக
தெம்மாங்கு.
இப்படியாய்வள்ளியம்மை யிருக்குந்தவக்கொடுமை
முப்புறமும்மூவர்களும் முழித்தல்லவாமிரண்டுவிட்டார் (நன்னா)
அலங்காரம் ஐயா,
இந்திரனுலகம் செந்தணல்பரக்க இமையோராதிகள்சமயந்துரக்க
சந்திரசடையன் சிந்தையுந் துடிக்க சதுரமுகனும்மனதுகலங்க
ஐயா.
வாட்டமுற்றதைக்கேட்டுமுருகர் ஒட்டமாக காட்டின்வளியே
தாட்டி மயிலைனாட்டமாகவே கூட்டுந்தவத்தின்பேட்டியடுத்து
அடியே-கொஞ்சம்வயது கொடியதவத்தில்
கெஞ்சிவருந்த விபறமேது - (நன்னா)
தெம்மாங்கு -
இன்னமணம் புரியலியோ யிளவயதாய்க்காணுதடி
யென்னகுறைநேர்ந்ததென்று இப்பேர்ப்பட்டதவமிருக்குறாய் (நன்னா)
அலங்காரம் அடியே
சின்னவயதுசித்தரவடிவு கொஞ்சம்வயதுகுழந்தைபார்வை
இந்தவயதிலென்னவருத்தம் யிப்பேர்ப்பட்ட தவத்தில்பொருத்தம்
அடியே
வாயைத்திறந்துவருத்தம்கூறு வரத்தைவாங்கியிடத்திற்சேரு
சேயையீன்றுசுகமாய்வாழு சாரத்தொல்லையை கடந்துதேறு
அடியே-யெடுவுன்கரத்தே பிடிவேரத்தே
விடுவன் தவத்தே நடவுன்னிடத்தே
தெம்மாங்கு.
ஒன்றுக்குறைவுமில்லை வொருவரமும் வேண்டயில்லை
யென்னை மணம்புரிவீரென்றே யித்தனைநாள் தவமிருந்தேன் (நன்னா)
அலங்காரம் ஐயா.
ஊரும்வேண்டாம்பதியும் வேண்டாம் ஒருவருறவும்பகையும்வேண்டா
பொன்னும்வேண்டாம்பொருளும்வேண்டாம் புகழும்வேண்டாம்.
யிகழும் வேண்டாம்
ஐயா
எனக்குமாலை சூட்டவேண்டும் இன்பசுகத்தைக் காட்டவேண்டும்
உனக்கு மனைவியாகவேண்டும் உலகம்புகழவாழவேண்டும்.
ஐயா-கருத்தையுரைத்தேன் வருத்தம்விடுத்தேன்
பொருத்தம்பிடித்தேன் மாலைமுடித்தேன்
தவமிருந்துயெனையழைத்து தாளிகட்டச்சொல்லுகிறாய்
மகளுறவாய்நேர்ந்துபோச்சே மாலையிடவுங்கூடுமோடி.
அலங்காரம் அடியே
இந்திரன்மகளென்மனைவியாச்சே யுந்தன் குலமோகுறவராச்சே
யெந்தவிதத்தில்பறியும்பேச்சு உலகஞ்சிறிக்குமித்தபேச்சு
அடியே
ஏனோ மனதில் வருத்தமுற்றாய் இன்னோர்பிரவி யெடுக்கப்போறாய்
மானின் வயற்றிற்பிறக்கப்போறாய் மனதின்கலலை முடிகசுபோறாய்
அடியே-கொஞ்சனாளே குரையைத்தாளே
வஞ்சிக்கொடியே வருத்தம்சகியேன் - (நன்)
தெம்மாங்கு
இப்பிரப்பில்மணம்புரிய யேலாதென்றுசொல்லிவிட்டு
அற்புதமயில்மேலேறி யாண்டவனுந்தணிகைசேர்ந்தார். (நன்)
அப்போ.
கந்தனுரைத்தமொழியையறிந்து கன்னிவிசனக்கடலில்விழுந்து
யிந்தஜெனனமெடுத்தும்பழுது யிருந்ததவமுமொழிந்ததென்று
அப்போ
புரண்டு அழுதாள் புத்தியைமறந்தாள் உருண்டு அழுதாள்ஒங்கிவிழுந்தாள்
இருந்து அழுதாள்யேங்கிவிழுந்தாள் என்னுடஉயிரும்வேண்டாமென்றாள்
அப்போ-மோதியடித்தாள் முகத்தையிடித்தாள்
ஆவிவிடுத்தாள் அண்டம்அடுத்தாள்
தெம்மாங்கு.
இங்கோடர்ததெல்லாம் எம்பெருமாள் தானறிந்து
மங்கையுடனிருவருமாய் மானுருவமெடுத்திட்டாரே - (நன்)
அலங்காரம் ஐயா
கன்னிவருத்தமுடிக்கவேண்டி கந்தன் மனதைந்திருத்தவேண்டு
தன்னுடவைகுந்தமதனைத்தாண்டி தைரியலட்சுமிமனதை தூண்டி
ஐயாமானைப்போலவடிவமெடுத்து மாறாவனத்தைஊறாயடுத்து
மதனும் ரதியுமதியும்போலதொடுத்துனிதமுமதனகலவியெடுத்து
ஐயா உள்ளமகிழ்ந்தார் உறவாயிருந்தார்
வள்ளிக்கொடியில் மகளையீன்றார் (நன்)
தெம்மாங்கு.
வேட்டைத்தொழிலுடைய வேடுவர்களப்பொழுது
காட்டுவழிவருகையிலே கண்டாரே குழந்தைதன்னை. (நன்)
அலங்காரம் ஐயா
வாரியெடுத்து வாயோடணைத்தார் உச்சியைமுகந்து உடம்போடணைத்தார்
கனியைப்போலே கடித்துபார்த்தார் கன்னியைப்பொன்னிடஒளியோயென்றார்
'ஐயோ '
வேட்டையாட மரந்துபோட்டார் வீட்டைத்தேடி திரும்பிபோட்டார்
கோட்டைபுகுந்து மனைவியழைத்தார் குழந்தை யெடுத்துக்கையிலேகொடுத்தார்.
பார்த்து
தங்கமென்றார் தரளமென்றார்
சிங்கமென்றார் சித்திரமென்றார் (நன்)
தெம்மாங்கு
பிரவியெடுத்தமுதல் பெருமலடி வேடுவச்சி
திருவுருவை வாங்கினதே திரண்டுதையா மார்பிரண்டும் (நன்)
அலங்காரம் ஐயா
அன்னமென்றார்அமூர்தமென்றார் அமருலகம்ரதியேயென்றார்
பொன்னேயென்றார்பொருளேயென்றார் போதாதிந்தபேர்களென்றார்
ஐயா
தெள்ளுவனத்தில்திருவைப்போல தேசமயங்கும்கிளியைப்போல
வள்ளிக்கொடியிலிருந்ததாலே வள்ளியென்றுஅழைக்கமேலே
ஐயா-யணிகளளித்தார் பாதுகாத்தார்.
யினியதளித்தார் யேந்திவளர்த்தாள் (நன்)
தெம்மாங்கு -வள்ளி
நித்தமொருநிறமாய் நேரிழையாள்தான் வளர்ந்து
புத்தியறிந்தவுடன்புனங்கார்க்க வந்திட்டாளே (நன்)
ஐயா
உத்தமதாதியர் அருகிலிருக்க உயர்ந்தபரணைமீதிற்சிறக்க
சித்திரகவுண்டு கையிலேயிருக்க சிங்காரவள்ளியும் வாயைத்திறக்க
ஐயா
ஆலோ ஆலோ அன்னக்கிளியே அருகவாங்க வர்ணக்கிளியே
காலப்பயிரே கெடுக்காதீங்கோ கானகமிருக்குபோய்பிளைங்க
ஐயா-காட்டுப்பறவை யோட்டநினைப்பாள்
தீட்டிகவுண்டை மாட்டியடிப்பாள் (நன்)
விருத்தம்.
தன்னிடஉயிர்போங்காக்குந் தாதிமாருடனேவள்ளி
உன்னி தப்பாணைமீது வுயர்வாயிருக்கும்போது
தென்பொதிமலையைத் தாண்டி திருட்டுனாரதனுமங்கே
கன்னியின் வுருவைப்போலே கைப்படமெழுதலுற்றான்.
தெம்மாங்கு.
பொதிகைமலைகடந்த பின்புறணினாரதனும்
விதிதுலைத்துபோகாமலே வந்துநின்றான் புனத்தருகே. (நன்னா)
அலங்காரம் ஐயா
அர்ப்புதக்கிளியோ அணங்கன் ரதியோ அமரர்பதியோகுமரர்மதியோ
அளகிலிவளைப்போலவுலகில் அறியேன றியேனையோசிவனே
ஐயா
சமரபுரியில் வேலன்வடிவும் சரியேசரியேயிவளின் வடிவு
பிரமனெப்படியமைத்திட்டானோபடத்திலெப்படியெழுதுவேனோ
வள்ளியை -உத்துப்பார்த்தான் உருதிபிடித்தான்
படத்தையெடுத்தான் பதியத்தொடுத்தான் (நன்)
தெம்மாங்கு.
மேகம்போல் கூந்தலிட்டு மின்னலைப்போல் சுட்டியிட்டு
சோகவர்ணக்கிளிகளைப்போல் சுந்திரமாய்பின்னல்போட்டான்
அலங்காரம் ஐயா
சந்திரன் போலவதனமெளுதி சகலவசியதிலர்தமெளுதி
மந்திரம் போலே செவிகளெளுதி மயிலைப்போலே விழிகளெழுதி
ஐயா
(நன்னா)
குமிழிபோலனாசிகளெழுதி கூவிளம்போலத்திலதமெளுதி
குமிழிபோலஸ் தனத்தையெழுதி சித்தசன்காமரசத்தையெளுதி
ஐயா- ரவிக்கைபிருக்க ஸ்தனங்கள் நெருங்க
கரும்புக்கணையில் அரும்புசொரிய (நன்னா)
தெம்மாங்கு.
ஆலிபோல்வயறெளுதி அரவமெனப்படமெழுதி
சேலையதிற்சேர்த்தெழுதி சித்திரம்போல்சரிகைகோர்த்தான் (நன்னா)
அலங்காரம் ஐயா
கரும்பைப்போலக்கரங்களெழுதி கரத்தில்வளயல்பொருந்தயெழு
விரல்கதோறுமோதிரமெழுதி வெண்டயம்போலக்கண்களெழுதி
ஐயா
வாழைப்போல துடைகளெழுதி வச்சிரம்போலகணைக்காளெழுதி
புத்தகம்போலபாதமெழுதி பூவைப்போலே விரல்களெழுதி (நன்னா)
ஐயா - தண்டையெழுதி கொலுசையெழுதி
கொண்டைனிரைய மலரையெழுதி (நன்னா)
தெம்மாங்கு.
பொன்னாபரணமெல்லாம் பூட்டியெழுதிவிட்டு
மன்மதனும்பின்னிடவே மதனத்தேமல்கலந்துபாட்டான். (நன்)
அலங்காரம் ஐயா
வள்ளிபடத்தையெழுதிப்பிடித்தான் வானவர்பெண்களைநினைத்து சிரித்தான்
பார்த்துபார்த்துமனதுதுடிப்பான் படத்தையெடுத்து ஓடிவருவான்
ஐயா
காடுகடத்துசெடிகள்கடந்து கானகவிலங்குமலைகள் கடந்து
வேர்த்துவேர்த்துஓடிவந்தான் விடியுமுன்னமேதணிகைசேர்ந்தா
ஐயா-படத்தைகொடுத்தான் பாதத்தில்விழுந்தான்
காட்டிகாட்டி காலைப்பிடித்தான் (நன்னா)
தெம்மாங்கு.
பன்னிரண்டுகையாலும் படமேந்திவேல்முருகர்
தன்னை மறந்தல்லவா தறையுடனேமூர்ச்சையானார் (நன்னா)
ஐயா
மோகம்பெருகிமூர்ச்சையானார் முழித்து விழித்துபடத்தைப்பார்
அழைத்துஅழைத்துசலித்துநிற்பார் ஐயோயென்னடிகோபமென்பார்
அடியே
வாயைதிறந்துவார்த்தைகூறடி வருத்தமிருந்தாலதுவும் சொல்லடி
கோபம்பொருத்துமுகத்தைப்பாரடி கோடி சரணம்தயவுசெய்யடி
அடியே-பிடையூரென்னடி யெடுத்துப்போட்டி
தடையிதென்னடி தகுதியல்லடி.. (நன்னா)
தெய்வானைசொல் தெம்மாங்கு.
திருட்டுமுனிகாரதனே தேசத்துக்குண்டிணியே
ஒருகம்பத்திலிரண்டானையை ஒட்டவைக்கவந்தாயோடா
அலங்காரம் அடடா
இல்லாதவார்த்தைகள் முடியாய்ப்போடுகிறாய்
எங்கையோயிருந்து படத்தைக்கொணர்ந்தாய் (நன்னா)
தெம்மாங்கு.
கோபம்பெமுகிவள்ளி கூப்பிட்டாளண்ணர்களை
ஆபத்துஏதோயென்று ஆவலுடனேஓடிவாறார் (நன்னா)
அலங்காரம்-ஐயா.
வேடர்வருகும்வேகம்பார்த்தார் வருகுமுன்னமேவிசிபோட்டார்
ஓடியெழுந்து வேங்கைமரமாய் ஓங்கிவளந்து தழைத்துநின்றார்.
ஐயா
எழுபேருந் தடர்ந்துவந்தார் எங்களையே துக் கழைத்தாயென்றார்
வேங்கைமரத்தின் சொகுசைக்கண்டார் வாளையுருவியேந்திக்கொண்டார்.
அப்போ
அண்ணா அண்ணாமொழியைகேளுமே அருகிலிருந்தால்நிழலைத்தரு
வெட்டவேண்டாம்பொருங்களண்ணா வேரேஒருவர்காணமண்ணா
எவனோ ஒருவன்வளயல்வித்தான் ஏடாகோடமாய்பேசிபோட்டா
வுங்களையவனும் பார்த்துபோட்டான் ஒடியெங்கையோமறைந்துபோட்டான்
அண்ணா.
காட்டேநடங்க காரியம்பாருங்க
அருகிலிருங்க அழைத்தாவாங்க (நன்னா)
தெம்மாங்கு
தங்கைக்குறிதி சொல்லி தனிவழியேவேடரெல்லாம்
சிங்கம்போலே ஏழுபேரும் சென்றுவிட்டார் கானகத்தில். (நன்னா)
அலங்காரம்-ஐயா,
வேங்கைமரமாய் யிருந்தவேலர் வேரேவுருவம் யெடுக்கநினைத்து
தாடிசடையும் தளந்தவடிவும் தாங்கிநடக்க கையிலேகோலும் கேழ்ப்பார்
ஐயா
விழுந்துவிழுந்து யெழுந்துநடப்பார்வேடரையழைத்து வழியைக்
பழுத்தபழுமாய் வுருவுகாட்டுவார் பாதைதெரியலையென்று அழுவார்
ஐயா-வேடர்பார்த்தார் விசனப்பட்டார்
கூடஅழைத்து கூட்டிவந்தார் (நன்னா)
தெம்மாங்கு.
களர்ந்தவயதுடைய தம்பிறானைக்கண்டவுடன்
யிளம்வயது வள்ளியற்கு ஏற்றதுணையாகுமென்றார்
அலங்காரம் ஐயா
ஐயாஐயாபெரியவரே ஆறுசனை களதிகமுன்டே
விப்பேர்ப்பட்டகானகத்தில் பெங்கேபோரீர்கனியா நீரே
ஐயா
வார்த்தையிவர்க்குகொடுத்துக்கொண்டே வழியில்மெள்ளநடத்திக்கொண்டே
வள்ளியிருக்கும்புனத்தை கண்டே வைத்தார்காவல்பரணையண்டே
ஐயா
எழுபேர்க்குந் தங்கையையா ஏற்றதுணைகளில்லையையா
உன்னிட உயிர்போல்காறுமையா ஒருகுறைவுமே செய்யாளையா
ஐயா-போயிவாரம் பொழுதுநேரம்
யேதுவேளை வருவம்நாளை (நன்னா)
தெம்மாங்கு.
தாடுசடைநிறைத்த தள்ளாக்கிழவனுக்கு
வேடிக்கையை காட்டிகாட்டி வேளைதோறும்பசியைத் தீர்ப்பாள்
அலங்காரம் ஐயா
வலையை வீசிகிளிகள்பிடிப்பாள் வந்துகிழவன்முன்னே விடுவாள்
கடியையிழுப்பாள்தாடிபிடிப்பாள் தழுவியணைத்து முத்தமிடுவாள்
ஐயா
புலிகள் வருதுபாருமென்பாள் போய்பிடிப்போவாருமென்பாள்
தடியைப்பிடுங்கியோடிப்போவாள் தறையில் விழுந்தாலெடுத்துவிடுவாள்
ஐயா
மேலேவிழுவாள் மெள்ளெனக்கடிப்பாள்
கோலம்புமறிவாள் குறிகிப்படுவாள் (நன்னா)
தெம்மாங்கு.
உண்மைக்கிழவனென்று உ உயிர்போலக் காக்கையிலே
தண்ணீர்வேணுமென்றுசொல்லி தவிக்குறானே ஆண்டிக்கிழவன்
அலங்காரம் ஐயா
மாவுகொடுத்தாதீங்கமாட்டான் மறையடைக்குதென் அவிழுவான்
வாயை குளறி தண்ணீரென்பான் வள்ளியேடயிருபோ குதென்பான்
அடியே
பாவியேண்டி கொல்லுறாயென்பான் பறணைமீது சாகுறேனென்பா
கூவியழைத்து கண்ணீரென்றான் குருகிபடுத்துமூர்ச்சையானான்
ஐயா- பேச்சியற்றான் பிசகலற்றான்
மூச்சியற்றான் மோடிசெய்தான் (நன்னா)
தெம்மாங்கு.
பாவிகிழவனாலே பழிகள்வந்துநேருதென்று
தாவியேபுனங்களெல்லாம் தண்ணீர்தேடியலைந்திட்டாரே (நன்)
அலங்காரம் ஐயா,
வனங்கள்முழுதும் அலைந்தேனையா வஞ்சிக்காலும் சோர்ந்தேனையா
புனங்களெல்லாம்திரிந்தேனையா பொட்டுஜெலமும் கிட்டாகையா
ஐயா
சுனையிலேஜெலங்கிடைக்குமையா சொல்லும் வார்த்தைகேளுமையா
பத்திரமாகவாருமையா பழியில்லாமல்கார்ப்பேனையா
என்று-எந்தியணைத்தாள் யிருகப்பிடித்தாள்
சாய்ந்துநடந்தாள் சுனையையடுத்தாள் (நன்னா)
தெம்மாங்கு
வள்ளிஜெலத்தைக்கண்டு வாருமையா சுனையிலென்றாள்
அடிதள்ளிவிடநினைக்குறாயோ தந்திரங்களரிவன்போடி (நன்னா)
அலங்காரம் ஐயா
வள்ளியைக்கரையில் நிருத்திபோட்டான் வரட்டுக்கிளவன் சுனையில்நுழைந்தான்.
கள்ளங்கபடும் மனதில்நினைத்தான் கணபதிதன்னை வேண்டிக்கொண்டான்
அடடா
அண்ணா அண்ணா கணபதியே அடியேனுக்கொரு வுதவிசெய்யே
வெள்ளையானைபோல் துரத்திவாயேவள்ளியையென்னுட னருகில் சேரே
அடடா உனக்கு
வயறு நிறைய கடலைசுண்டல் வாளைகுலையுந் தேங்காயிளநீர்
பயருவுருண்டை தயிருமோரு பாலும்பளமும் அவலுங்கடலை
ஐயா உளக்கு,
பாங்காய்த்தருவேன் பசியைத்தீர்ப்பேன்
தாங்கவரியே ஓங்கித்தூத்தே (நன்னா)
தெம்மாங்கு.
தம்பிநினைத்தவுடன் தாமிசங்கள்செய்யாமலே
கும்பமதயானைபோல கூக்சலிட்டு ஒடிவாரான் (நன்னா)
ஐயா
கண்டு அலறி கூச்சலிட்டாள் கையைவிரித்துவோடிவந்தாள்
பண்டாரமெந்தனைபாருமென்றன் பறந்துமேல்விழுந்துபிடித்தாள்
அட்டா
ஐயாஐயர்.அபயமையா அடியாளெந்தனை காருமையா
கையுங்காலும் துடிக்குதையா காட்டானைமிரட்டுதையா
ஐயா
வெள்ளையானை துரத்துதையா விட்டுவிட்டு போகாதையா
பெண்ணின்முகத்தைபாருமையா பழிகளுனக்கு நேருமையா
யென்று-கட்டிப்பிடித்தாள் கண்ணீர்விட்டாள்
கிட்டிபிடித்தாள் கிலேசப்பட்டாள் (நன்னா)
தெம்மாங்கு.
கட்டிப்பிடித்தவுடன் கணபதிக்கிசைகைபண்ணி
சித்திரமயில்மேலேறி சிங்காரமாய்த்தோன்றினாரே (நன்னா)
அலங்காரம் ஐயா
ஆறுமுகமும் பன்னிருகரமும் அழுகுவேலும் அணிந்தநீரும்
பாரமபிலும்பருத்தவடிவும் பாகசிலம்பின் ஒசையொளியும்
உன்னிடகுலத்து தொழிலேகாட்டுறாய்
ஒருவர் குடியை ரெண்டாய்பிரிக்குறாய்
அடடா-குண்டுணியுனக்கு யிதுவேதொழிலா
கூட்டிகொடுக்க வெழ்க்கமில்லையா
தாடியுஞ்சடையும் உனக்குயேதடா
தாடையில்போடுவேன் வெளியேநட்டா
அடடா-வுனக்கு நறைத்தும்போச்சே நாளுமாச்சே
திருட்டுப்பேச்சே குடியாய்ப்போச்சே. (நன்னா)
நாரதன்சொல் தெம்மாங்கு
ஒன்றுமறியேனம்மா வொருகுடியுங்கெடுக்கவில்லை
சென்றுவந்தவழிகளிலே கண்டதைநான்சொன்னேனம்மா. (நன்)
அம்மா.
பொதிகைமுதலாய் மலைகளெல்லாம்பார்த்துபார்த்துதவத்திலிருக்க
பதினாலுலகந் தேடித்தேடி பாதைவழியாய் வந்தேனம்மா
அங்கே.
சித்திரச்சாலையும் சந்தனச்சோலையும் பத்தரைமாத்து படிகத்துறையும்
அன்னக்கிளிகள் அமர்ந்தபுனமும் ஆருமறியா பூங்காவனமும்
ஐயா வழியில் பார்த்தே வந்துவுரைத்தே
பழியைத்தீர்த்தே பாதம்யுடித்தே. (நன்னா)
தெம்மாங்கு,
வேடனைப்போல் வடிவெடுத்து வேல்முருகரேதுசெய்தார்
ஜாடை சொல்லிநாரதனை தந்திரமாயழைத்துகொண்டார். (நன்னா )
அலங்காரம்-ஐயா.
குண்டுணிநாரதன் முன்னால்நடக்க குமாவேடன் பின்னால் நடக்க
கண்டவனத்தை திரும்பிபார்க்க கந்தர்மனது வள்ளியை நோக்ககொண்டு
ஐயா.
வள்ளிவள்ளியென்றழைத்துகொண்டு வழிகள்தோறும் பார்த்துக்
நளினவனத்தை தேடிக்கொண்டு நடக்கமனமும்சகித்துக்கொண்டு
ஐயா
புனத்தைக்கண்டார் பெண்ணேயென்றார்
வனத்தைக்கண்டார் வள்ளியென் றார். (நன்னா)
சுப்பிரமணியர்சொல் தெம்மாங்கு,
வஞ்சியிளங்கொடியே வளரும்மூன்றாம்பிறையே
கொஞ்சும்பிளங்கிளியே கொல்லுதடிகாமபாணம். (நன்னா)
அடியே.
காமரதியே கனகக்கொடியே காய்க்கும்வடிவே பூர்க்கும் வயதே
தேமலொளியே திருவினுருவே தெய்வலோகவருணக்கிளியே.
அடியேவுன்னை.
வனத்தில்விட்டபாளிகளாறு வஞ்சனை செய்ததெய்வமுங்கூறு
யிந்தவயதில் ஒண்டியாயிருக்க எப்படியுனக்கு மனமும்வந்தது.
அடியே
காமமீருதே கவலையாகுதேகாமன்கணைகள்மாறில்தைக்குதே
தேமல் முலைகளென்னை பார்க்குதேதிருவுமுன்னிட முகத்தில்நிற்குதே
அடியே.
அஞ்சன விழியே அமுர்தமொழியேகொஞ்சுங்கிளியேகோர்த்தமல்லியே
சஞ்சலமொழிய சைகசொல்லடி சலுதிபரணை யேறிவாரேண்டி
அடியே-தாமதமென்னடி தயவுசெய்யடி
காமனைவெல்லடி கட்டிச்சோடி. (நன்னா)
ஆறுடைய கற்பழிய அனியாயம் செய்தேனையோ
தாறுமாறாயென்னையிப்போ தனிவழியில்யேசுறானே. (நன்னா)
அலங்காரம்-ஐயா.
ஐயோஐயோ ஆதிசிவமே அட்டபுவணம் உண்டபொருளே
கைகளீரா ருடையமுருகா காலகாலனீன்றபாலா
ஐயா,
மருதைவீரா மாடன்முனியா விரதமிருக்கும் வீட்டுக்காளி
தொட்டியசின்னா துறையகருப்பா துஷ்டனெவனோ துள்ளிவிழுறான்
ஐயா
இந்தவிதியும் நேந்துபோச்சா யென்னுடவிரத மழிந்துபோச்சா
கற்பு அழிய காலமாச்சா காற்குத்தெய்வம் விலகிப்போச்சா
ஐயா.
கன்னிதவத்தி லென்னகுறைவு
என்னை பழிக்கப் பார்த்திருக்குரீர் (நன்னா)
தெம்மாங்கு,
மாதுவருத்தமுற்று மார்புருளத்தானழவே
வேதனைகள் நேர்ந்துதென்று வேறேயொருவடிவெடுத்தார். (நன்)
ஐயா.
வளையல் சுமையைத்தோளிலிட்டார் வள்ளிபரணுக்கருகில் வந்தார்
வளையல் விற்கிறசெட்டியைபோல வளையல்வளையல் வளையலென்
ஐயா.
வளையலென்றமொழியைக்கேட்டாள் வள்ளியும்பரணையிரங்கிபோட்டார்
அருகிலழைக்க தாதியைவிட்டாள் அடுத்தவுடனே விலையைகேட்டா
ஐயா-தேனுந்தினையும் தருவுமென்றாள்
சாணும் வளயிலிடுவுமென்றாள் (நன்னா)
தெம்மாங்கு.
தேனுந்தினைமாவும் திண்ணபாகியில்லையடி
மானேயென்போகந்தீர மருவிருந்தாபோதுமோடி (நன்னா)
அலங்காரம்-அடியே.
ஒன்பதூத்தின மிழைத்தவளையல் உந்தனுக்கேத்த சந்திரவளையல்
முத்துவளையல் மோகனவளையல் மூன்றுலோகமும்மதிக்கும்வளையல்
அடியே.
இந்திரவளையல்மந்திரவளையல் இமையோராதிகள் மயங்கும் வளையல்
செந்தியில்முருகன் செய்தவளையல் சிவகாமி மருமகளின்வளையல்
அடியே-விலையைக்குறித்து விசனம்வேண்டாம்
வளையல்குறித்து வருத்தம்வேண்டாம் (நன்னா)
தெம்மாங்கு.
பிச்சைக்கிவந்தபையல் பெண்டாள அழைத்ததுபோல்
கொச்சைமொழிபுரைக்கவந்தாய் கொடுத்திடுவாய்யெமனுக்குயிர்ப்பார்
அலங்காரம்-ஐயா.
அறிகிலண்ணமார் காவலிருக்குறார் ஐயோஉன்னிட வுயிரைப்பரி
பெண்டுபிள்ளைகளிருந்துதானால் போயிபார்த்துபிழைத்துபோடா
ஐயோ-இந்தவயதி லிறக்கநாளா எனோதனியே மாண்டுபோறாய்
வந்தவழியே நடந்துகூடு வனத்தைவிட்டுநீ அப்புரம் ஓடு
அடடா-பிரந்தமனையை போயிசேரு
பிரவியிருந்தா போயிபாரு (நன்னா)
வேலரைக்
முருகரழகை பார்த்துபார்த்து மோகக்கடலில் வள்ளிவேர்த்து
ஆறுமுகமே அமர்ந்தபொருளே அடியாளெந்தனை சோதித்தாயே
ஐயா யென்றுமயங்கி ஏக்கமிட்டாள்
நின்று மயங்கி நிலையை மறந்தாள் (நன்னா)
தெம்மாங்கு.
இதுதான் சமயமென்று யெடுத்தணைத்து வேல்முருகர்
ஆவலெல்லாந்தீர்த்துக்கொண்டு அன்னமேநான் போரேனென்றார்
அலங்காரம்.
ஆறுமுகத்தின் வடிவைக்கண்டாள் ஆனந்தமா யேங்கிநின்றாள்
வேரேநினவு மரந்துபோட்டாள் விரகமூர்ச்சை யாகிநின்றாள்.
ஐயா
எனக்காயித்தனை வடிவுகொண்டீர் ஏழைமனதை சோதித்தீர்கள்.
கொண்டகருத்தை முடித்துக்கொண்டீர் கூசாமலேபோரேனென்றீர்
ஐயா ஞாயமல்லவே நடுவுமல்லவே
மாயமந்திரஞ் செய்திட்டீரே. (நன்னா)
தெம்மாங்கு
சத்தியமாய்நாளையிங்கு ஈரசமாடவருவேனென்று
சுத்திருக்குங்கானகத்தில் சென்றார்முருகர்வேடர்முன்னே. (நன்னா)
அலங்காரம்
பஞ்சாங்கத்தை கையிலெடுத்தார் பார்ப்பானைப்போல் வடிவெடுத்தார்
அஞ்சாமலேவேட்ரெதிரே ஐயர்போலே வருகிறாரே
அடடா
வனத்திலிங்கே ஆரும்பிள்ளாய் வஞ்குங்கெதியை கேளும்பிள்ளாய்
ஏழுபேர்க்கும் இளையமாது யிருப்பதுண்டா வள்ளியென்று
அடடா
கந்தனென்கிற கன்னக்காரன் கன்னிசிறையை யெடுக்கவருவான்
நாளைபொறாது பாதியிரவில் நடக்கப்போது சேதியுரைத்தேன்
அட்டா. குகையிலிடுங்க கதலைபோடுங்க
ஏழுபேருமா காத்திருங்க (நன்னா)
தெம்மாங்கு.
திருட்டுபஞ்சாகமதை தீரமுடன்சொல்லவிட்டு
சிறையெடுக்குங் கள்ளனைப்போல சுப்பிரமணியர் வடிவெடுத்தார். (நன்னா)
அலங்காரம்
ஐயருரைத்த கட்டளைபோலே அழகுவள்ளியை குகையிலிட்டார்.
எழுபேருமாய்கத்தியருவி யேமாறாமலே காத்திருந்தார்.
அப்போ
திருடனைப்போல் வடிவெடுத்தார் திருட்டுக்கந்தனும் நெருங்கிக் கொண்டார்.
திருநீரெடுத்து வோதிப்போட்டார் தேவிவள்ளியைதூக்கிகொண்டார்
அப்போ.
குகையைவிட்டுகடந்துவந்தார்கூச்சலிட்டிவர் மூர்ச்சை தெளிந்தார்
தெரிந்துவழியில் மடக்கிக்கொண்டார் திருடனென்ற வெட்டவந்தார்
அப்போ
பஞ்சாட்சரத்தை யோதிவிட்டார் படுக்கமூர்ச்சையாக்கிவிட்டார்
அஞ்சிவள்ளியுங் காலில்விழுந்தாள் அண்ணமார்களை யெழுப்புமென்றாள்
அப்போ.
மூர்ச்சைதெளிய மொழிகளுரைத்தார்
வாழ்த்தியெழுப்பிவரத்தைக்கொடுத்தார். (நன்னா)
தெம்மாங்கு.
கைகட்டிவாய்புதைத்து சுந்தருடன்யேதுசொல்வார்
மெய்யையறியாமலே வேதனைகள் நினைத்தோமையா. (நன்னா)
ஐயா.
வள்ளியைக்கேட்டா தரவுமாட்டாமா வனத்திலிப்படி வரவும்வேணுமா
எங்களை சோதிக்க னேரமாகுமா யேனோயித்தனை கோலமாகுமா
ஐயா.
ஏதுக்குறைகள் செய்தபோதும் எல்லாம்பொருத்து அறுளைதாறும்
சூதும்வாதும் அறியமாட்டார் சோதனைக்கெதி ராகமாட்டார்
ஐயா. அபயமென்றார் அஞ்சிநின்றார்
விபரமென்றார் வேண்டிக்கொண்டார் (நன்னா)
தெம்மாங்கு
வள்ளியுட அண்ணனுக்கு வாழ்த்தி வரங்கொடுத்து
புள்ளி மயிலேறி யல்லோ போயமர்ந்தார் தணிகைமலை. (நன்னா)
அலங்காரம்.
வேலும்வாழி மயிலும்வாழி வனத்துவேட்டுரத்திவாழி
இந்திரனீன்ற தெய்லானை யெந்தனாளும் சுகமாய்வாழி
ஆறுமுகத்துக்கடவுள்வாழி அண்டரண்டமேழும்வாழி
பாடிபடித்து பதமுறைத்தோர் பலத்தகுடியாய் பெருத்துவாழி
ஐயா. மண்ணும்வாழி விண்ணும்வாழி
மதியும்வாழி ரவியும்வாழி. (நன்னா)
வள்ளியம்மை அலங்காரம் முற்றிற்று
----------------------
This file was last updated on 19 March 2026.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)