pm logo

சிதம்பர சுவாமிகள் இயற்றிய
திருப்போரூர் சந்நிதிமுறைத் திரட்டு -பாகம் 2.


tiruppOrUr cannitit tiraTTu - part 2
by citampara cuvAmikaL,
in Tamil Script, Unicode/UTF-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Digital Library of India and Tamil Virtual Academy for providing.
a scanned PDF version of this work for ebook preparation.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2026.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of
Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

சிதம்பரசுவாமிகள் இயற்றிய
திருப்போரூர் சந்நிதிமுறைத் திரட்டு -பாகம் 2.

திருப்போரூர் சந்நிதிமுறைத் திரட்டு பிரபந்தங்கள்
உள்ளடக்கம்

1. சிதம்பரசுவாமிகள் சரித்திரம் 22.விருத்தக் கலித்துறை
2. பிள்ளைத்தமிழ். 23. அட்டகம்
3. அலங்காரம். 24. பெருங்கழி நெடில் விருத்தம்
4. மாலை. 25. குறுங்கழி நெடில் விருத்தம் 1
5. தாலாட்டு 26. குறுங்கழி நெடில் விருத்தம் 2
6. திருப்பள்ளியெழுச்சி 27. குறுங்கழி நெடில் விருத்தம் 3
7. பெரியகட்டியம் 1 28. குறுங்கழி நெடில் விருத்தம் 4
8. சின்னகட்டியம் - 1 29. குறுங்கழி நெடில் விருத்தம் 5
9. பெரியகட்டியம் - 2 30. குறுங்கழி நெடில் விருத்தம் 6
10. சின்னகட்டியம் - 2 31. குறுங்கழி நெடில் விருத்தம் 7
11. எச்சரிக்கை 32. குறுங்கழி நெடில் விருத்தம் 8
12. வண்ணத்தாழிசை 33. குறுங்கழி நெடில் விருத்தம் 9
13. மட்டுவிருத்தம் 34. குறுங்கழி நெடில் விருத்தம் 10
14. கலிவிருத்தம் 35. சந்தக்கழி நெடில் விருத்தம்
15. பெருங்கழிநெடில் விருத்தம் 36. கட்டளைக்கலித்துறை
16. குயிற்பத்து 37. கட்டளைக்கலித்துறை
17. கிளிப்பத்து 38. நேரிசை வெண்பா
18. வண்டுவிடுதூது 39. அடைக்கலப்பத்து
19. கட்டளைக்கலிப்பா 40. விருத்தக்கலித்துறை
20. கொச்சகக்கலிப்பா 41. விடுபாட்டுகள்
21. ஊசல்

5. திருப்போரூர்ச் சந்நிதிமுறை - தாலாட்டு

கனகவரையிருபாற்கங்கை வழிந்தாங்குக்
கனகருணையே மதமாக்காட்டுங் - கனகவரைக்
கோதண்டனீன்றதிருக்குஞ்சரத்தைக்கைதொழுவார்
தீ தண்டார்சேர்வார்திரு.

பூமாது நாமாதுபோதசுகமாமாது
தாமேவுபோரூர்ச்சரவணநாயகனோ.     (1)

மாணிக்கமால்வரை மேன் மன்னு செக்கர்வானமென
வேணிப்பிரான்றோளின் மேவுஞ்சிறுகுருந்தோ.     (2).

உலகீன்றமாதாவுதவியபால்கஞ்ச
மலர்வாய்களாறுமணக்கின்றவான்குருந்தோ.     (3).

பெண்ணாய்ந்தகற்புப்பிடியும்பிணைமானுங்
கண்ணாரக்கண்டுகளிக்கவருகற்பகமோ.     (4)

நீலமயில்வாகனனோ நெட்டிலைவேலாயுதனோ
கோலநிறைகோழிக்கொடிபடைத்த சேவகனோ.     (5)

ஆறிரண்டுதோளானோவாறுமுகத்தானோ
தேறுமறை கொஞ்சுஞ்சிறுசதங்கைத்தாளானோ.     (6)

மகுடங்களா றுமணிக்குழைகளீராறுக்
திகழ்கடகமீராறுஞ்சிலம்புந் தரித்தானோ.     (7)

சடைமேற்பிறையைமுந்நூறன்னாற்பிணித்தணிந்து
விடையான் மடிமேல் விளையாடுமாரமுதோ.     (8)

செஞ்சதங்கைகொஞ்சச்சிறுகிங்கிணியாடக்
கஞ்சமலர்த்தாளுமையாள் கண்களிக்கவந்தானோ.     (9)

ஆய்மாரறுவர்களுமம்பிகையுங்கங்கைமின்னுஞ்
சேயேயென்றேந்திச்சிரமோந்துகொள்குருந்தோ.     (10)

கானந்திரிவேடர்கன்னிகைக்காகப்பரண்மேன்
ஞானங்கமழ்பாதநண்ணவைத்தநாயகமோ.     (11)

புராரிசிறுவாவென்னப்பூவுலகங்காக்கு
முராரிமருகாவென்ன முன்வந்து நின்றா     (12)

அமராபதியிலமரரெல்லாஞ்சூழ்ந்து
தமராகிவாழ்த்தவெள்ளைத்தந்திமேல்வந்தானோ.     (13)

அண்டமனந்தமருளுருவினின்றிலகக்
கண்டமரர்போற்றக்கனகவரைநின்றானோ.     (14)

தவமுனிவர்தேவர்சயசயவென்றேத்த
நவவீரராமணிக்குநடுவிருந்தநாயகமோ.     (15)

பொதியமுனியகத்துப்பொங்குமிருணீங்க
விதியுமறியாவிளக்கேற்றுந்தேசிகனோ.     (16)

அருணகிரிநாதனருந்தமிழ் நூற்கீரன்
கருணைபெறவோதுங்கவிமாலைத்தோளானோ.     (17)

பிரமனறியாப்பிரணவத்தினத்த
மரனார் செவிகுளிரவன்றுரைத்தசற்குருவோ.     (18)

அரிவைமுருகாவென்றழைக்குமுன்னேவந்து
கரமுதவிநின்றகருணைப்பெருந்தேவோ.     (19)

வேலைக்கலைபயின்றமேதகு பொய்யாமொழிக்குப்
பாலைக்கடையிதென்றுபகர்ந்தபெரும்பாவலனோ.     (20)

தார்மார்பகனோசமரபுரிநாயகனோ
சூர்மார்புருவத்தொளைத்தவடிவேலவனோ.     (21)

குன்றமுங்கொக்குங்குரைகடலுஞ்சூர்மார்புங்
குன்றவடிவேலெறிந்தகொற்றவனே நற்றவனோ.     (22)

சமரபுரித்தேவோதணிகை மலைத்தேனோ

வமரும்பழனிமலைக்கான மணிவிளக்கோ.     (23)

சீரலைவாய் முத்தோதிருப்பரங்குன்றத்தரசோ
வேரகத்திலென்றுமிருந்தபெருவாழ்வோ.     (24)

பழமுதிர்சோலைப்பரனோ குறிஞ்சிக்
கிழவனென நல்லோர்கிளக்கும்பெருமாளோ.     (25_

சங்கப்பலகைத்தமிழைப்புலவோர்க்குப்
பங்கப்படாமற்பகர்ந்தபெரும்பாவலனோ.     (26)

நாயினேன் செய்பிழைகணாடாதெனதுளமே
கோயிலாக் கொண்டுகுடியிருந்தமெய்ப்பொருளோ     (27)

வானவர்சூழ்போரூரை வந்தடைந்தபேர்க்கெல்லா
மோன சுகங்காட்டிமுத்திதருந்தேசிகனோ.     (28)

உள்ளத்திமிரமொழித்துச்சிவானந்த
வெள்ளத்துளன்பர்விளையாடவைத்தானோ.     (29)

அரனோடு வந்தம்மையளித்தவள்ளப்பாலைப் புரை
தீரவுண்டவரைப்போதமுறக்கண்டானோ.     (30)

பொற்றாளம் பொற்சின்னம்பொற்பார்சிவிகையொடு
நற்றரளப்பந்தரையுநம்பர்கையிற்பெற்றானோ.     (31)

மதுரைச் சமணமதகரிகளெல்லாஞ்
சிதறத்துரந்தசிவசமயகோளரியோ.     (32)

மயிலைநகர்தன்னில்வன்னியடுமென்பைக்
குயிலைநிகருமொழிக்கோதையாய்ச்செய்தானோ.     (33)

ஆச்சாபுரத்திலனந்தமுயிரையெல்லாம்
பேச்சோடுளங்கடந்தபேரின் பம்வைத்தானோ     (34)

வந்தோர்பிணிதீர்க்குமாமருந்தோவன்பருக்குச்
சந்தோடநல்குஞ்சமரபுரிமாநிதியோ.     (35)

தாயோதமரோவென்றாதையோசற்குருவோ
தேயாக்கருணை பொழிதென் போரிவேலவ     (36)

முத்தோகுலிசமோமூதொளிமாணிக்கமோ
சித்தோடுதென்போரூர்ச்சிவானந்தவாரிதியோ.     (37)

பாலோ செந்தேனோ பழமோபழமறையோ
மேலோர்புகழ்போரூர்வீற்றிருந்தபார்த்திபனோ.     (38)

அன்னமோபைங்கிளியோவம் பிகைகண்ணுக்கினிய
சொன்ன மோபோரூர்ச்சுகபூரணவொளியோ     (39)

ஞானக்கரும்போமெய்ஞ்ஞானாந்தக்கடலோ
தானற்றார்போற்றுஞ்சமரபுரித்தண்ணளியோ.     (40)

என்றென்றேதாலாட்டியெல்லோருமின்பமுற
நன்றருளே செய்யுமெங்கணாதன்போரூரிறையே.     (41)
------------------

6. திருப்போரூர்ச்சந்நிதிமுறை - திருப்பள்ளியெழுச்சி

திருமலி குணதிசையருணனல்லுதயஞ்
        செய்தனனிருவினைச்சமமலபாகப்
பருவமதுடையவர் தமதுளமெனவே
        பாரகம் விளங்கினவவர்குணக்கிரிமே
லரு ளொளிவீசிநின்றிலகுமுன்பதம்போ
        லருக்கனுங்குணதிசைப்பொருப்பெழுகின்றா
னிருளறு குறுமுனிபரவியபோரூ
        ரிறையவனே பள்ளியெழுந்தருளாயே.     (1)

ஆடுறமணிமயில்சிறைவிரித்ததன்மே
        லருளொளிதிகழ்நீயெழுந் தருண்முறைபோற்
பீடுறுமரகதக்குரக தம்பூண்ட
        பெருந்தடந்தேர்மிசையெழுந்தனன்கதிரோன்
வாடுறுதாமரை நினதருளடைந்த
        மாதவர்முகமெனமலர்ந்தனவெங்கு
மேடவிழ்மலர்ப்பொழில்பொ துளியபோரூ
        ரிறையவனே பள்ளியெழுந்தருளாயே.     (2)

பகரருசுடர்விடுமுன தயில் கண்ட
        பதகர்தமனமெனச்சுரர்மனமெனவே
புகருடுமழுங்கினவிகசிதமாகிப்
        பொலிந்தனமுளரிகடடந்தொறுமுனது
திகழ்பதமடைந்தவருயிர்ச்சிறுபோதந்
        தேய்ந்தெனமதியொளி தேய்ந்தது குணபா
லிகலறுகதிரெழுகின்றதுபோரூ
        ரிறையவனே பள்ளியெழுந்தருளாயே.     (3)

என்றனைக்கைப்பிடித்தாளுறுமிறைவ
        னெழிபெறுமலர்விழிமலர்ந்தெழுசமய
முன்றன துளவிருள்போக்குவனோக்கா
        லொல்லையில்வருகெனவெல்லினைக்கூவி
நின்றனதிருங்கொடியழைத்துறுமுறைபோது
        னீடுறுமனைதொறுங்கூவினமிகவு
மின்றெனையாண்டுகொண்டருளியபோரூ
        ரிறையவனேபள்ளியெழுந்தருளாயே.     (4)

மன்மதன் விருதுகளூதின பொழில்வாய்
        மாயவன் கரப்படைதொனித்ததுனெதிரே
தென்மலிமலரவனூர்திக்கடடத்துச்
        சிலம்பினநின் கொடிபதவெச்சரிக்கை
பன்முறை பண்ணுவபோன் மனைதோறும்
        பாழியங்குரலொலிகாட்டினவருளா
லென்மலவிருடெருமாரியபோரூ
        ரிறையவனே பள்ளியெழுந்தருளாயே.     (5)

கின்னரர்கிம்புருடர்களோடுகெருடர்
        கெந்தருவர்கள்சித்தர் வித்தியாதரரு
மன்னியமுரசதிர்சிகரியின் வாய்தல்
        வந்தனரைந்தெழில்வாத்தியந் தொனித்தார்
பொன்னிலமடவாரிந்நிலமடைவார்
        புரிந்தனர்நாடகமிருந்தகை மயில் போ
லின்னருள் பொழிமுகிலே திருப்போரூ
        ரிறையவனே பள்ளியெழுந்தருளாயே.     (6)

வானவர்புகழ்நவவீரர்களொருபான்
        மால்வரையனகணநாதர்களொருபாற்
றீன னமிலெண்டிசைப்பாலகரொருபாற்
        றேவர்கண்முனிவர்கள்பாதலரொருபாற்
றானமது தவியகரங்கொடுபாரி
        சாதநன்மலர்மழை பொழிந்தனர்பணிந்தே
யேனலம்புனமலிசாரலம்போரூ
        ரிறையவனே பள்ளியெழுந்தருளாயே.     (7)

மறைமுடியுணர்ந்தவர்மறையவரடியார்
        வருபரிகாலகரரசர்கள் வணிகர்
குறைவருவளவர்கண்மற்றுளரெவருங்
        குழுமியேவடமொழிதென்பொழிப்பாவா
னிறை தயவுடனினைப்புகழ்ந்து நின்றேத்தி
        நீளுறு தண்டெனப்பணிந்தெழுகின்றா
ரெறிமணியருவிகள்சொரிகிரிப்போரூ
        ரிறையவனே பள்ளியெழுந்தருளாயே.     (8)

விலையறுநவமணிமாலைகள் கொணர்ந்தார்
        வெயில்விடுகுலிசகேயூரங்கள்கொணர்ந்தா
ரலகறுமணி செறிமகுடங்கள் கொணர்ந்தா
        ராழிமதாணிகணூபுரங்கொணர்ந்தார்
நிலையெறுகவரிதழ்நேத்திரங்கொணர்ந்தார்
        நிறைந்துளம் வேண்டியபெறவுறப்பணிந்தா
ரெலையறுபெருவரமருள்செயப்போரூ
        ரிறையவனே பள்ளியெழுந்தருளாயே.     (9)

ஐங்கரங்கொடுதழுவுறநினையொருகொம்
        பானையுண்மகிழ்ந்தது முக்கணம்பொருப்புன்
பங்கயமுகவணிகண்டுகண்களிப்பப்
        செங்கயல்விழிப்பசும்பிடி நினை மடிமேரி
பரிவொடுநினைந்ததுபனிவரையுயிர்த்த
        சேர்த்தருட்பாறரத்திருவுளத்துனுமீண்
டெங்களையாண்டுகொண்டருளியபோரூ
        ரிறையவனே பள்ளியெழுந்தருளாயே.     (10)
-------------

7. திருப்போரூர்ச்சந்நிதிமுறை - பெரியகட்டியம் 1.

பவளமலையு பயதிசையருவியொரிமுறைகரட
        பரமவிபமகிழிளையகோவே
தவளநிறமுள்கவள கரியின் மிசைசுரருலகு
        தழையவலம்வருமதிகதேவே
துவிதமயலறுமுனிவரெனுமளிகள் படியமிகு
        சுகநறவு பொழியுமொருபூவே
குவடிலகுகுறவர்தருகொடியினொடுசமரபுரி
        குலவியருள்வரமுதவுகாவே.     (1)

பரவைமுகடெழுமுதயகிரண பரிதியினடன
        பரதமயின் முதுகில்வருதீரா
விரவுபரிமளகுரவுகமழுபயசரணகலை
        விதரணிகபுரண கெம்பீரா
சுரரரசுச்சியினொடுதருநிழலினுறையமதி
        சுமடவசுரர்களையடுவீரா
கரவுநெறியறுமடியர்கதியமுது பெறவுதவு
        கனசமரபுரிநிலவுதாரா.     (2)

மறைகள் பலகலைகள்பலலிபிகண்முதலியவுதவு
        வளர்சொருபநிசப்ரணவவொளியே
முறைமை தருசரவசரவுயிர்கள் செயிரறுபுவன
        முழுதுநிறைபரமசுகவெளியே
கறைகண்முழுவதுமுடுகிமிகவுநினைபவரிதய
        கமலமலர்குடிபுகுதுமளியே
பிறையறுக்கு:தியரவுசடிலமுடியணிபர்
        பிரியமுறவொருசொன்மொழிகிளியே.     (3)

இமயகிரியு தவுபிடிகுடமுலையினிடைபெருகி
        யெழுமமுதத்திசெறிவாயா
சமரவிரணியவசுரனுடலமடுமுதிர்கொளரி
        தகுமருகனெனநிலவு தூயா
வமரர்முனிவரருரகர்நரர்ககனமதியிவர்க
        ளடிபணியவரமுதவுநேயா
திமிரதினகரனெனவுவிருளிரியவொளிர்சரண
        திரசமரபுரிவருமுபாயா.     (4)

வடவை விழிபிறையெயிறு குடவயிறு தடியுதடு
        மலியலகைபசியையடுவேலா
வடியு நெடுமுடியுமரியயனுமறிவரியசிவ
        னகமகிழமழலையொழிபாலா
நடனமிடுமயுரமிசையடியர் நினைதொறுமவர்மு
        னகைமுகமொடெதிர்கொள் குணசீலா
தடவரைகள் கிடுகிடெனவுலகைவலநொடியில்வரு
        சமரபுரிதழையவுறைலீலா.     (5)

ககனமுகடள விவருகனகரதநவவிளையர்
        கருதுபுடைவரமகிழுநாதா
சகமுழுதுமடுமசுரர்குலமுழுதுமுடுகியடு
        சமரகணமுடிகடொடுபாதா
செக்கணகசெக்கணகதிகுக்குகுதிகுக்குகு
        திமிதியெனநடன் மயினீதா
தகுகடவுளிபமயல்கொளொருபதிருபுயமருவு
        சமரபுரிதனிலுறு சவ்வாதா.     (6)

உததிசுவறிடவிடர்செய்குவடுபொடிபடவசுர
        ருடல்கள் கிழிபடவயில் கொள்கரனே
குதிகொள்கருணையினிலகுவதன முடனடியரெதிர்
        குலவிவருமினியகுணதரனே
யதிகம்ருகமதபடிர்களபபரிமளதொடைக்
        ளணிகளிவைதிகழ்புனிதவுரனே
பிதியபரிபுரவொலிகள்கலகலெனவருசரண
        புகழ்சமரபுரிமருவுபரனே.     (7)

மலயநிலவியமுனிவனிடருத்தியகலவவன்
        மனநினைவு கொடுதழுவுகலனே
கலைகடெரிபலகையுறைபுலவனுறுசிறையை விடு
        கதிர்கொளயிலுடையதெய்வகுலனே
நிலைமைநெறியுளதெரிவைமுருகவெனவுரைதருமு
        னிலவியவள்கரமுதவவலனே
தலைமைசெறிபிரமசுகமநுதினமும்விளையுமொரு
        சமரபுரிமருவுகதிநிலனே.     (8)

கனலிலகுமகளையொருபதிகமதில்வரவருள்செய்
        கவுணியர்கள் குலதிலகநிதியே
பனகவணையனுமயனுமகிழமரகதவொளிசெய்
        பருமயிலின்மிசையுதையமதியே
தினகரனைநிகருமொருசிவசமயநெறியொழுகு
        திகழடியர்பரவியடைகதியே
தன்பதிதளகையெனவளமைசெசமரபுரி
        தனிலுறையுமமராதிபதியே.     (9)

பசிதமரனயன மணியிகழுமதிமடமைசெறி
        பலசமணதிமிரமடுசூரியா
நிசிசரர்களெனுமுத்தியளறுபடவொருநெடியி
        னிகழ்கரிய புருவநெறி வீரியா
வுசித்தமிழ்முழுதுமொருமதுரைநகரவர்புகழ
        வுரைசெய்தளவிடுமதிக்கூரியா
சசிதரனுமுமையுமுளமகிழவெதிருறநிலவு
        சமரபுரியதனிலுறைசீரியா.     (10)
-----------------

8. திருப்போரூர்ச்சந்நிதிமுறை -- சின்னகட்டியம் -1

சுரர்முனிவ ருலகர்பணி பாதா-சுகசொரூபநிசகலைவிநோதா
பரவறிவை யறியவருள் போதா-பரவதிக சமரபுரி நாதா. (1)

குறவர்மகடழுவுமணிமார்பா - குலவு பரிபூரணசொரூபா
நறவு பரிமள நிறையு,போ - நயசமரபுரிமருவுரூபா. (2)

நெட்டூரசூரசங்காரா - நித்தமிடுபச்சைமாயூரா
விட்டொளிரும்வசரகேயூரா - வித்தகர் துதித்தபோரூரா. (3)

குஞ்சர முகற்கிளையகோவே - கொஞ்சியுமைமுத்தமிடுபூவே
தஞ்சென நினைக்குமவர்தேவே -தண்சமரநற்பதியில்வாழ்வே (4)

ஆறுமதிசூடியருள்பாலா - வாறவருளாறுமுகவேலா
தேறுகலைபேசுகுணசீலா-சீர்சமரமாநகரிலீலா. (5)

தேவர்கண்மநோபயங் கரனே-சேவலங் கொடியாடுகரனே
மேவுகுங் குமவாச வுரனே - வீறுசெம்போரிவாழ்பரனே. (6)

தெய்வசிந் துரமருவு தோளா-திவ்யமங்கள நிலவுதாளா
பொய்வருந்தேவர்மணவாளா-புண்ணியபோரூர்வருகணாளா (7)

பலகலைப் பரவையந்துறவா-பரமனுக்குபதேச விறைவா
தலைமையிற்குறையாதநிறைவா-சமரநற்பதிமேவுபொறைவா (8)

அசுரர்குலகாலவேனேயா- வமரர்சேனாபதித் தூயா
வுசித்தமிழறி தருமுபாயா-வுயர்சமரபுரிவருசகாயா. (9)

மலயத்தின் முனிவனாரியனே-மலமட்டஞான சூரியனே
தலமெச்சமேவு சீரியனே-சமரப்புராதிவீரியனே. (10)
--------------

9. திருப்போரூர்ச்சந்நிதிமுறை -- பெரியகட்டியம் - 2

மழையினிலகியகருணை பொழியுமழகளிறதிக
        மடியின்மிசைலலவு குலமணியே
யுழையுமடலுறுமழுவுமிருகரனுமருவுசிவ
        னுவகை கொடுதழுவுதெய்வவணியே
கழைகள் குழுமியவரையிலெயினர்தருமுழைமனது
        களிபெருகநிழலுதவுகணியே
தழையுமிருநிதியுதவுசமரபுரியதனில்வரு
        தகைமைசெறியடியர்குண குணியே. (1)

அரியமறை முடியிலுறை பரமசிவையகமகிழ
        வருகில் வருதருணவளவுருவே
யிரவுபகலனுதின முமுயர் தயவினினையுமவ
        ரிதயமலரதனிலுருமருவே
யுருவெனவுமருவெனவுமொளியெனவும்வெளியெனவு
        முனலரியபொருளுகவு குருவே
தரணியெனவிருளகலவறிவுதருசமரபுரி
        தனிலுறையுமமரர்பணிதருவே. (2)

அதிமதுர நறவு பரிமளமழகுநிறையுமறு
        பதமுரலுமினிய தொடைநீபா
பொதியமலையுறையுமொருகுறுமுனிவனிதயகுகை
        புதையுமிருளறவொளி செய்தீபா
துதையும்ருகமதபடிர்களப்புளகித வருண
        துதிசெயழகொழுகுமணிமார்பா
ததிதிதிமிதிமிதியென நடனமயின் முதுகில்வரு
        சமரபுரிதழையவுறைபூபா. (3)

பரிதிமரகதமலையின் மிசையுதையமென நடன
        பரதமயில் கடவுமிருதாளா
கருதரியதவளகரமலையுதவுமொருவனிதை
        கனமகிழ்வுமருவுமணவாளா
செருவினசுரரைமுடுகியடுகனகவடவரைக்
        டிகழ்வதெனநிகழ்பனிருதோளா
பெருகுவளமைகளுதவிசமரபுரிபணியுமவர்
        பிரமரசமுணவுதவுகோளா. (4)

திடகரடமலைபிளிறநொடியிலடுகரகமல
        திரிநயனவரியுதவுமுருவே
வடகலைகண்முழுதுமள விடுமதிகபிரமனறி
        வரியபிரணவமுரைசெய்குருவே
யிடருதவுபவவுத்திசுவறநினைதருமடிய
        ரிதயமெழுமினியசுகமருவே
படிக்கனருரகர்முனிவரர்பரவுசமரபுரி
        பணியுமவரெணியதரு தருவே. (5)

கவலை பிணிமிடியிடர்களறவடியர் நிலைமைபெறு
        கதியினிகழ்வுறவருள் செய்கோனே
யுவரியெனவொலிமலியுமசுரரெனுமதகரிக
        ளுருளவயிலெறியுமரிமானே
நவமருவுமுனிவர்சுரருரகரெனுமினியபயிர்
        நலன்மருவவருள் பொழிமெய்வானே
குவலயமெணுறுசமரபுரியிலுறைதவமுனிவர்
        குளிரிதயகமலமுறுதேனே. (6)

மலையருவி தருமரவின் மணியையன லெனவெருவு
        வனசரர்கடருமரிவைமோகா
தலைமைமகப்தியமரர்பரவவிரணியவுலகு
        தழையவிபமிசைவருவைபோகா
விலையினவமணிகள்க திரொளியின் வெயில் விடுகடக
        மிளிருமொருபனிருதிருவாகா
கலைமுழுதுமறிபெரியவறிஞர்வளமையினர்செறி
        கனசமரபுரிநாகரீகா (7)

அகமுநடுமுடிவுமுறுதிசையுமெழுபுவியுநிறை
        யறிவிலெழுபரமசுகநறையே
தகுதிக்குதகுதிகுதகுதிதரிகிடதிமிதி
        தகுதியென நடன மயிலிறையே
பகர்கலைகண்முழுதுமளவிடவரியமிகநுணிய
        படிறுளமுநுழைவரியமறையே
துகளகளுமறைமுனிவர நுதினமுநெறியொழுகு
        துதிசமரநகரறிவின்முறையே. (8)

சுருதிகுருவநுபவமெய்யொருமையினிலெனை மருவு
        துகளரியவருளொளிசெய்கண்ணே
கருவிமுழுதையுநியதிகளையுமவர்பரவியடை
        கனபுரணஅறிவுதிகழ்விண்ணே
யிரவிசசியனனயன விறைவர் செவிகுளிரவரு
        மிசைதனிலுமிகுமொழி செய்பண்ணே
தருணவளமுருகசரவணகுமரவெனுமொழிக
        டழைசமரபுரியிலுறை தண்ணே. (9)

சுடரினொளிருடுசிகைகொள் பறவை விருதுடையகுக
        துரகமயிலிறைவதெய்வராயா
குடமுழவுமுரசதிரவலகைபசிகெடவசுரர்
        குலமுழுதுமடுமயில் கொணேயா
படியிலுன்தினியபுகழ்பரவுமவர்சுகவுததி
        படியவினிதருடருமுபாயா
தடமலரினொழுகு பிழிதவளவளைபருகியுறு
        சமரபுரியதனிலுறைதூயா. (10)
----------------

10. திருப்போரூர்ச்சந்நிதிமுறை -- சின்னகட்டியம் - 2

ஐங்கரற்கிளையமகமேரே - யம்பு விக்கினிமை தருசீரே
சங்கரக்கடவுளனைதாரே -தண்டமிழ்ப்போரிவருகாரே. (1)

இமயமக ளுதவுகுண மலையே-யிதயவநு பலமுரைசெ ய்கலையே,
சமரமுழு வதுநிகழு நிலையே - சனனகடலரை வாரும் வளையே. (2)

கன்னியர்க் குரியநா யகனே -கண்ணனுக் கினியமரு மகனே,
பொன்னகர்ச் சுரர்கணே யவனே - புண்ணியப் போரிவாழ் பவனே. (3)

நவவீரர் பணிபாத தேவே - நனிபூத கணநாதர் கோ வே,
தவமேவு பெரியோர்கள் வாழ்வே-தடமேவு போரி வாழ் காவே. (4).

நீலக்கலாபமயில்வீரா - நீபத்துமாமலர்கொடாரா
கோலத்தியாககெம்பீரா - கோதற்ற நாதபோ ரூரா. (5)

வெடியத தொனித்தசே வலனே -மிகுகொக்கை யட் டவே லவனே,
படிமெத்த மெய்ச்சுபா வலனே - பரமற்கு ரைத்தநா வலனே. (6)

பொன்மாரி பொழிகின்ற புயலே-பொய்யாத வறி ஞோர்கள் செயலே,
தென்மாறன் மகிழ்பலகை யியலே செஞ்ஞான சுகம் விளையும் வயலே. (7)

கருணைதருமாறுமுகமதியே - கன தேவர்சேனாதிபதியே
தருணவளமாறாதநிதியே - சமரபுரிவாழ்சுகோததியே. (8)

வாரவேள் வெநிடவரு சுந்தரா - மாகர்கோ னுதவுதெ ய்வ சிந்துரா,
கோபசூர்ப் பகையையடு தந்திரா - கோதிலா வாறுலிபி மந்திரா. (9).

கவலைவெயி லறவீசு கனமே - கருதடியர் நசையானத னமே,
சிவன்மரும வணைதுயிலுமனமே-திகழ்போரி யடை வோர்க ளினமே. (10),
--------------

11. திருப்போரூர்ச்சந்நிதிமுறை -- எச்சரிக்கை

சீரார்குறமானாளணிசெப்பார்தனமேவுந்
தாரார்புயசமராபுரிச்சண்முகாவெச்சரிக்கை (1)

பிறைசூடியசடையான ருள்பிள்ளைப்பெருமாளே
மறையோர்நிறைபோரூர்வருமன்னாவெச்சரிக்கை. (2)

பனிமாமலைமிசைபூத்தருள்பச்சைக்கொடிதந்த
கனியேதிருப்போரூர்வருகந்தாவெச்சரிக்கை. (3)

அருமாமறை முதலோதியவானைக்கொருதுணையே
பரிபூரணசுகமே போரிப்பதியேயெச்சரிக்கை. (4)

ஆனாவமுதனையாயயில் வேலாயுயர்வானோர்
சேனாபதிசமராபுரித்தேவாவெச்சரிக்கை (5)

தெய்வகுஞ்சரிகணவாபச்சைத்திருமாறிருமருகா
சைவநன்னெறிவளர்போரூர்ச்சண்முகாவெச்சரிக்கை. (6)

வேலாகுணசீலாகனலீலாவிடைப்பாகன்
பாலாதிருப்போரூர்வளம்பதியாவெச்சரிக்கை. (7)

நவவீரர்கள் பணி நூபுரநளினத்திருவடியாய்
தவர் சூழ்தருசமராபுரிச்சண்முகாவெச்சரிக்கை (8)

ஈராறுயர்தோளாதண்டைக்கிசைந்தபத்மத்தாளா
சீரார்திருப்போரூர் மயில் வீராவெச்சரிக்கை. (9)

கோழியங்கொடி படைத்தாய்நல்லகுணத்தாயென்னை யளித்தாய்,
வாழியம்மலர்ப் பதத்தாய்போரி வரதா வெச்சரிக்கை. (10)

பூவேபரிமளமேபறைப்பொருளேமயிலேறும்
கோவேசுரர்தேவே போரிவாழ்வேயெச்சரிக்கை. (11)

பிரசமேபிரமரசமேதவர் பேசுங்கதிநலமே
சொரூபமே போரிநகர்வாழ்சுப்ரமணியாவெச்சரிக்கை (12)

மதுராகுக்கிடவிருதாசிற்சுகவடிவாசுப்பிரமணியா
சதுராதிருப்போரூர் வருசண்முகா வெச்சரிக்கை. (13)
---------------

12. திருப்போரூர்ச்சந்நிதிமுறை - வண்ணத்தாழிசை

இந்திரப்பெயருடையான் முதலெவருஞ்செறிவளனுக்
      கிடையூறுகள்வாராவகையெணிமுற்பணிகளிறென்
சிந்தைப்ரியவென்கண்சிறுபிள்ளாய்வருகென்றே
      திருமார்பிறுகப்புல்கிய தெய்வச்சிரமணியே
யந்திப்பிறைமுடியானருளின் பக்கனிநினைவந்
      தண்டிப்பணிதொண்டர்க்கினியருளும்படிநினையாய்
சந்தப்பொழிலிடைவெற்பன தந்திக்களிறுலவுந்
      தண்சாரன்மணஞ்சூழ் தருசமராபுரியானே. (1)

வேயென்றுறுதோண்மாதுமைவெற்பன்ன தனத்தின்
      மிசையூறருவிப்பாலினை மிகவுண்டுகளித்த
வாய்குங்குமவாசந்தருவள்ளாலெனை விள்ளா
      வகையாளுநினக்கோதுகைமாறுஞ்சிறிதுளதோ
நாயொன்றுவளர்த்தோன் விடநாடானதுபோலு
      நல்லோர்களலடந்தோர்களையெள்ளாரதுபோலுந்
தாயொன்றிய சேயைப்புடைதள்ளாளதுபோலுந் தமியேனை
      விடேலண்டினன்சமராபுரியானே. (2)

ஒதுங்கலையாவும்மனமோடாது நிறுத்தி
      யுன்பாதநிழற்கீழுறலுயர்நன்கெனவோத
வாதஞ்சொலியே தஞ்சொலிமனமோடுசுழன்ற
      மதியின்றிய சிறியேனுனை வந்தண்டுவதென்றோ
தீதின்றிய குறநாயகிசேருந்திருமார்பா
      சிவனார் தருகுமராவுமைசிறுவாவரிமருகா
தாதொன்றியவனசத்தடமீதொன்றியவெகினந்
      தண்மாலையில்வண்காவடைசமராபுரியானே. (3)

எலும்மனமோடிப்பொருள்யாதொன்றினை நாடி
      யிசையும் பொழுதேனும்மதையெண்ணாதுவிடுத்துன்
வேலுஞ்சிறைமயிலுங்கனதோளுஞ்சிறுதாளும்
      வீறாறருண்முகமும்முனவேண்டுஞ்சிறியேனே
கோலும்மறைநாலின் முடிமேலொன்றியதேவே
      குணகுஞ்சரிகோவேசுரர் கொண்டாடியவாழ்வே
தாலம்புகழணியேயென துயிர்நின்றொளிர்மணியே
      தவமானுறை கணியேநல சமராபுரியானே. (4)

உருவுந்தருபுகழும்பலகலையும்முயரறிவு
மோருந்திகழ்குணமும்பலமாருந் தவநெறியுந்
திருவும் மதிமதியும்பதிக தியுந்நினையொருநாட்
சேவித்தவர்தமைவந்தெதிர் தெரிசிப்பினும்
வருமே மருவுஞ்சிரபுரமாநகர்வந்தெண்ணிலிபேரை
மாறாவளவீடேறிடவைக்கும் மறைமுதல்வா
தருவும்மிகுநிதியுஞ்சுரபியு மன்னகரத்தார்
தன்மேகமெனப்பொன்மொழிசமராபுரியானே. (5)

அத்தம்மனமுதயஞ்சிறி தறியாரவிபோலுன்
      னருளாகியரவியென்னுளமகலாது நிறைந்தே
சித்தம்மல விருளும்பலதத்வம்மெனுமுடுவுஞ்
      சிறுபோதவெண் மதியும்மகல்சீரென்றினிவருமே
நித்தன்மகிழ்தரவோர்மொழியத்தம்புகல் குரவா
      நீலக்களபத்தோகைகண்மாலைப்புயல்கண்டு
தத்தாதிமிதித்தாதிகுதெய்த்தெய்யெனவாடத்
      தண்காவளிபண் பாடியசமராபுரியானே. (6)

மறையா தியகலையோ தியவனசப்பெருமானு
      மண்ணுண்டுவடத்தேதுயில் பண்ணும்பெருமானு
நறையாரிதழித்தார்புனைசடையெம்பெருமானு
      நாடிக்களிகூரத்தகரேறித்திகழ்வோனே
யிறையாகியவளவாயினுமறவாதுனைநாடி
      யின்பத்துயில்கொள்ளும்படியென்புத்தியினிறைவாய்
தறையா தியிலுறைவோர்பணிசரணாபரிபுரணா
      தண்ணாரளியண்ணுமகிழ்சமராபுரியானே. (7)

எளியேனையொரடியானெனவின்பத்திருவுள்ளத்
      தெணச்சிறுநாயேனுளநண்ணச்சுகவாரிக்
களியேயுலகெங்கும் மிஃதல்லாதிலையென்றே
      காட்டிப்பின்மறைத்தாயென்கண்மாயம்மிஃதென்றே
வளியேயருள் வெளியேயுயிரொளியே மறை முடிவி
      னஞ்சொற்புகழ்பஞ்சப்பிரணவமோதியகிளியே
தளிரேயனகையார்மயிலென வேநடமாடுஞ்
      சசிவெண்சுதைமாடஞ்செறிசமராபுரியானே. (8)

அவனோடவளதுயானெனுமலர்கானலை நாடி
      யான்செய்தனன்பிறர் செய்தனரென்றின்பொடு துன்பு
நவமாய்வருதோறும்மிகுவிழைவும் வெகுளியுமே
      நணிநீயுயிருண்ணின்றுநடத்துஞ்செயனாடேன்
பவவேலைகடத்தும்முனபாதத்துணை வங்கம்
      பற்றத்திருவுளம்வைத்தருள்பாலித்திடுகண்டாய்
தவராசர்கள்கவிராசர்கள்புவிராசர்கண்ஞானோ
      தயராசர்கள்புடைசூழ் தருசமராபுரியானே. (9)

எண்ணுஞ்செயலாயும் மெழிலிடலுன்செயலாயும்
      யாதாயினுநாவார விசைக்குஞ்செயலாயும்
நண்ணுஞ்செயல் வருதோறுநின்னருளின் செயலாக
      நாடுஞ்செயலென்றேவருநாயேன் செயல்போயே
விண்ணும்புகழ்வேலும் விரிகதிரோனையழைக்கும்
      மிளிர் செஞ்சிறைவிருதுந்தருகரமீதுபிடித்தோய்
தண்ணந் துறைவாவிக்கயல்பாயக்கமலத்தேன்
      சாயக்குடவளைமேய் தருசமராபுரியானே. (10)
-------------

13. திருப்போரூர்ச்சந்நிதிமுறை - மட்டுவிருத்தம்

ஆதரவாயடியவருக் கருள்சுரக்கு மைங்கரத்தோனன்பு கூர்ந்து,
மாதவமே யெனவழைத்துப் புயத்தணைக்கத் திரு வுளத்து மகிழுங்கோவே,
யேதமுறாதடியேனைக் காத்தளி ப்ப துன் கடனா யசைப்பதென்னே,
போதமலர் கற்பகமே போரூர்வாழாறுமுகப் புனிதவேளே. (1)

சிறுகுழவி யெனைக்காவென் றாய்க்குரையா துறக்காக் குஞ் செய்தி போலு,
மறிவிலியேன் காத்திடெனா திருக்கவு ங்காத் தளிப்பதுன தருட்கே யுண்டா,
முறியிலிடுநவதே முண்டவன்றன் மருகாவே லுரவா பச்சைப், பொறி மயிலே
றியமுருகா போரூர்வா ழாறுமுகப் புனிதவேளே. (2)

தருமவயித் தியனொருத்தன் பிணிதீர்த்தல் கடனாகித் தணித்தல் போலச்,
சுருதிகுரு சுவாநுபவ மாயடியேன் மல ந்தவிர்த்துஞ் சுழலாநின்றேன்,
மருவளரு முனதுபயவாரீச பதநிழற்கீழ் வைக்க வேண்டும்,
பொருவிலருள் பொழிமுகி லே பொரூர்வா ழாறுமுகப் புனித வேளே. (3)

என்னையொரு பொருளாகத் திருவுளத்தி லடைத்தாய் க்கிங் கெதுகைம்மாறு,
மின்னனைய சடாமகுடம்பெருமான் கண் களிக்கவரும் விறல்வே லோயே,
யுன்னை மறவாதுன் னாதுறுவேனை யுன்னடியானென்ன வைத்தாய்,
பொன்ன னைய திருத்தாளா போரூர்வா ழாறுமுகப் புனிதவேளே. (4)

உவமையரு பவசலதி கடத்தியிம்மானிடப்பிறப்பிலுதி க்கச் செய்து,
நவமருவு முனதுபத நாடவைத்தா யதைமறந் தே னாயினேனே,
கவலையெலா மற்றுனது திருவடிக்கீழிரு க்கவினிக் கருணை செய்யாய்,
புவனைகர தலமணியேபோரூ ர்வா ழாறுமுகப் புனிதவேளே. (5)

மயக்கமிடர் காணாநின் மலர்ப்பாதப் ேபரொளியில் வயங்கா நின்ற,
வியக்கமறி மானந்தக் கடல்படிவ தெந்நா ளோ வேழை யேனே,
நயக்குமணப் பைம்பூவே நாகர்பர வியகோவே நறவே காவே,
புயற்கருணை பொழிதேவே போரூர்வா ழாறுமுகப் புனிதவேளே. (6)

மங்கியுமுற் பவித்துமுழல் வல்லிடரிற் புகுதாமன் மதியிலேனை,
யிங்குனது பதநிழற்கீழ வைத்தியே லுய்கேன் மற்றேழையேனே,
கொங்கலரும் பைங்கூந்தற் குறமாதின் கணவாவெண் குணவா சூழ்ந்த,
பொங்கரளி பண்பாடும் போரூர்வா ழாறுமுகப் புனிதவேளே. (7)

இல்லாதான் வள்ளலா யுள்ளானை
      யிரவாமு னீதல் போலு,
நல்லானே யுனதுபதம் விரும்பாதே
      னாயிடினுநல்க வேண்டுங்,
கல்லாத புல்லியர்போற் றேகபோ
      கம்விரும்பிக் கலங்கா நின்ற,
பொல்லாதேன் பிழைபொறுக்கும் போரூர்
      வா ழாறுகப் புனிதவேளே. (8)

ஊமர்கண்ட கனவினைப்போ லுரைப்பரிய
      சிவாநுபவ முணரா நின்ற,
காமருஞானிகள்பரவு முனதுசே வடிநா
      யேன் காண்ப தென்றோ,
தேமருவு மலர்க்கூந்தற் றெய்வ விளம்
      பிடிநோக்கஞ் சேருந் தோளாய்,
பூமகளுக் கணிகாட் டும் போரூர்
      வா ழாறுமுகப் புனிதவேளே. (9)

மடமை செறி புலைநாயேன் மனந்திருத்தித்
      திருவடிக்கீழ் வைக்க வென்றுங்,
கடனுனக்கே யாயிருக்க வடிக்கடியிங்
      குரைப்பதென்னே கடைய னேனே,
சுடரனைய செழுஞ்சூ ட்டுப் பல்பொறிச்
      செஞ்சிறைச்சேவற் றுவசத்தோனே,
புட வியிடர் தவிர்த்தாளும் போரூர்
      வாழாறுமுகப் புனிதவேளே. (10)
---------------

14. திருப்போரூர்ச்சந்நிதிமுறை - கலிவிருத்தம்

அருளைங்கரனிளையோய் திகழாறான்னநாதா
விருளின்றியிருந்துன்பதமென்றெய்துவலடியேன்
மருவொன்றியபேத்தொடைமார்பாவடிவேலா
திருவொன்றியபோரூருறை தேவாகுகவேளே. (1)

ஈசன்றருக்குமராவிமகிரியாமகள்புதல்வா
நேசந்திகழிருபாவையர் நினைவொன்றியவடிவா
மாசின்றுனதருணின்றிடுவழிதந்தெனையாளாய்
தேசொன்றியபோரூருறை தேவாகுகவேளே. (2)

யுவனஞ்சரவசரஞ்செறிபுறனுள்ளொடுகீழ்மே
னவமொன்றிய சுகபூரணநாதாசிவபோதா
தவமும்பதியறிவுந்கனிதந் தின்றெனையாளாய்
சிவனின்சுதபோரூருறை தேவாகுகவேளே. (3)

சூர்சேனையையடுவீரர்கடொழுபங்கயபாத
மேர்கூரவெந்நாளும்மெனதுளமன்னுறநினையாய்
தார்மார்பககூர்வேலவதடமாமயில்வீரா
சீர்மேவியபோரூருறைதேவாகுகவேளே. (4)

தகரப்பரிமிசையேறியதாளாவணிதோளா
சுகநற்கதிபெறவற்குளதுகளற்றிடநினையாய்
நிகழ்குக்கிடவிருதாசுரர்நிருபாவரி மருகா
திகழ்வுற்றிடுபோரூருறை தேவாகுகவேளே. (5)

நல்வந்தனையடியாருளநாடும்படி தருவோ
யல் வஞ்சனையறவென்னுளமருள் செய்ததினிறைவா
யெல்வந்துறுவேலாமயிலேறுந்தெய்வராயா
செல்வந்திகழ் போரூருறை தேவாகுகவேளே. (6)

கனகும்பனலுளமாவிழிகாணுந் திருவடியாய்
நினைவும் மலவிருளும்மறுநிலைதந்தெனையாளாய்
வனசந்திகழ்திருமாதருள்வளருஞ்சனர்குழுமித்
தினமும்புகழ்போரூருறை தேவாகுகவேளே. (7)

அயனாரறிவருமோர்மொழியரனார்க்கருளியவா
மயறீர்பரிபுரணத்திடைவைத்தின்றெனையாளா
யுயர்மாமறைமுடிமீதினிலுறுகாரணசுகமே
செய்வேலவபோரூருறை தேவாகுகவேளே. (8)

வானோர்தொழுபதியே சடைமன்னன்றருமதியே
ஞானோதயமகலாதெனை நண்ணும்படியருளாய்
கோனேயருளோனே குணவானே மயிலோனே
தேனார்பொழிற்போரூருறை தேவாகுகவேளே. (9)

இசையொன்றியவியனாடகமெணியோதிய புலவா
சைவின்றியிருந்தென்றுன தடிசேர்குவலடியேன்
விசைசென்றிடுமயில்வாகன மிசையேறிய கோவே
திசையெண்ணுறுபோரூருறை தேவாகுகவேளே. (10)
---------------
15. திருப்போரூர்ச்சந்நிதிமுறை - பெருங்கழிநெடில் விருத்தம்

சோமகிரணப்பெருங்கருணை
      சுரந் தமுகங்களோராறுஞ்
      சுருதிவழுத்தும்பன்னிரண்டு
      தோளுநீபத்தொடைமார்புங்,
காமர்நிறச்செம்பட்டாடைக்
      காட்சிமருங்குஞ்சிறுசதங்கை
      கலித்தவுபயத்திருத்தாளுங்
      கடையேன்று திக்கப்பணிப்பாயே,
சேமநிதியேசுரர்பதியே
      தெய்வத்தருவேமலர்மருவே
      செறிபூரணமேயாரணமே
      சிறியேனுயிருக்கோருயிரே,
பூமனறியாப்பிரணவத்தின்
      பொருளைப்பகரும்யூங்கிளியே
      போற்றுமடியார்க்கோரருளே
      போரூர்முருகப்பெருமாளே. (1)

மறையாகமத்தினெறிப்படியே
      வணங்குமவரினொருவனல்லேன்
மனுபேரன்புதழைத்துநினை
      வந்திப்பாரினொருவனல்லே,
நிறைவாநினதுபுரணசுக
      நேசித்தவரினொருவனல்லே
      னீசனேநின்றிருப்பாத
      நிழற்குமரித்தேனாவேனோ,
சிறையார் தோகைமிசைத்தோன்றும்
      தேவேயமரர்பணிகோவே
      சிவனார்வுயத்திலணைத்தேந்துந்
      தெய்வக்குதலைமொழிக்குருந்தே,
பொரையாலுயர்ந்தபெரியோர்கள்
      புந்திச்சுவையாஞ்செந்தேனே
      புனிதநிறைந்த செவ்வேளே
      போரூர்முருகப்பெருமாளே. (2)

எண்ணிலாத நெடுங்கால
      மெண்ணிலாத பல பிறவி
      எடுத்தேயிளைத்திங்கவை நீங்கி
      இம்மானிடத்தில்வந்துதித்து,
மண்ணின்வாழ்க்கை மெய்யாக
      மயங்கியுழன்றாலடியேனுன்
      மாறாப்பெருமை தரும்பாத
      வனசத்துணையென் றடைவேனே,
கண்ணின் மணியேயுயிர்க்களியே
      கருணைப்புயலேசுகக்கடலே
      கச்சித்தாயுச்சியை மோந்து
      ணாடணைக்குந் திருத்தாளா,
புண்ணியோரெண்ணியகரும்பே
      பொழிமும்மதவாரணமுகத்தோன்
      பொற்பார்துணையேயற்புதனே
      போரூர்முருகப்பெருமாளே. (3)

கள்ளஞ்செறிந்தவஞ்ச நெஞ்சக்
      கயவனேனைப்புலயனெனைக்
      கருதாசாரவீனமுடைக்
      கசடனேனமயல்செறிந்த,
வுள்ளமுடைப்பொய்வனேனை
      யுன்பேரருளாலுறநோக்கி
      யுயர்பேரின்பத்திடையிருத்தா
      துறினாயடியேனுய்வேனோ,
வெள்ளஞ்செறிந்தசடாமகுட
      விமலன் புதல்வாரிமருகா
      வேடர்குலமாமகள்கணவா
      விறன்மாமுனிவர்தொழுந்தலைவா,
புள்ளுஞிமிறுங்கலந்தார்க்கும்
      புனிதநீபத்தொடைமார்பா
      புரைதீர்தகரப்பரியேறும்
      போரூர்முருகப்பெருமாளே. (4)

சீலமிகுந்தபத்திநெறி
      தினமுமாறாநடையினராய்ச்
      செலுத்தாநெறியிற்பொறிவழியிற்
      செல்லாதிருந்தவுளத்தினராய்க்,
கோளஞ்சிறந்தபடியேநற்
      குணமுஞ்சிறந்தோராகியுனைக்
      கூடுமடியார் போலெனையுங்
      குறித்தாட்கொண்டாய்நீயன்றோ,
நாலுவேதந்தொழுதேத்து
      நாதமுடியிற்பேரொளியே
      நம்புமடியார்க்கின்பமெல்லா
      நல்குந்தேவேகயவர்தமைப்,
போலுந் திரிந்தேனுளம்புகுந்த
      போதானந்தப்பெருங்கடலே
      புவியீடேறமயிலேறும்
      போரூர் முருகப்பெருமாளே. (5)

தனுவோடிலகுகரணமுடன்
      சாரும்போகபுவனமிவை
      தமையானெனதென்றுணர்ந்து மய
      றழைத்துத்தருக்கோடுழல்கின்றே,
னுனதாமவைகண்மாயைவிட
      யுதிக்கசெய்தாயேதனா
      லுள்ளவாறிம்முறைமைதனை
      யுணராச்சிறியேனுய்வேனோ,
பனகாபரணர்க்குபதேசம்
      பாலித்தருளும்பரகுரவா
      பைந்தார்கூந்தற்றெய்வானை
      பரிந்துமகிழவருகணவா,
புனைபாமாலைதரித்தேத்தும்
      பொருவிலருணகிரிநாதன்
      புகழ்வீட்டின்பம்பெறவுதவும்
      போரூர்முருகப்பெருமாளே. (6)

மன்னராவாருறுசுகமும்
      வானோர்மகிழ்ந்துபெறுசுகமு
      மணிப்பைந்நாகத்தவர்சுகமு
      மற்றையோர்களடைசுகமும்,
பன்னுமிடத்திற்சிவத்தெழுந்த
      பரமானந்தலேசமெனப்
      பகர்ந்தாய்குருவாயெழுந்தருளிப்
      படிறேன் மறந்திங்குழல்கின்றேன்,
கன்னலெழுந்ததெளிசாறே
      கட்டுமாவின் றீங்கனியே
      கதலிக்கனியே நற்பலவின்
      கனகச்சுளையேக திமுளையே,
பொன்னம்பொருப்பேயென் விருப்பே
      போதச்சுகமேகிஞ்சுகமே
      புரணவெளியேயுள்ளொளியே
      போரூர்முருகப்பெருமாளே. (7)

ஓகை புரிந்துநன்னூலா
      லுணரத்தகுவவெலாமுணர்த்தி
      யுறுபேரருளாரியனாகி
      யுபதேசங்கள் பலமொழிந் தீண்,
டாகமருவுமுயிர்க்குயிரா
      யறியாதனயாவையுமுணர்த்தி
      யடியேன்றனையிங்காண்டுகொண்ட
      வருளுக்கோர்கைம்மாறுளதோ,
வாகைபுனை வேலிறையோனே
      வழுத்துநாலுமறையோனே
வானோர்க்குறுசேனாபதியே
      மலயமுனிவன் குருபதியே
பூகமலிந்த செங்குலைக்காய்ப்
      புடையிற்சிகரக்கயல்பாயும்
      பொருவின் மதச்சூழல்செறி
      போரூர்முருகப்பெருமாளே (8)

வேதமுடியினுறுபொருளை
      விரிபூமிசைச்சேவடிபொருந்த
      விகிர்தகுருவாயெழுந்தருளி
      விளம்புமவித்தையிருளிரிய,
வோதுமணியேயடியேனுன்
      னுபயசரணமறந்தாலு
      முறுபேரருளான்மனந்திருத்தி
      யுயரச்சரணத்திருத்தாயே,
நாதமளிக்குங்குரற்புலியி
      னகம்போற்றுண்டச்செஞ்சூட்டு
      நலத்தபொறிச்செஞ்சிறைச்சேவ
      னளினக்கரத்திற்பிடித்தோனே,
பூதகணங்கள் கொண்டாடப்
      பொருசூர்குலவேர்களைந்தவைவேல்
      புனிதப்புயத்தின் மிசையேந்தும்
      போரூர் முருகப்பெருமாளே. (9)

அலையிலாதசாகரம்போ
      லனிலஞ்சேராவிளக்கதுபோ
      லருகங்லிரும்பொன்சமமாகி
      யானதராசினுனியதுபோ
னிலையொன்றிய நற்சமாதியுற்று
      நின்றாட்கமலத்தெழும்பிரச
      நிறைவாரிதியிற்புகுந்ததனி
      னேசித்தடியேனிருப்பேனோ.
விலையின் மகுடத்திருமுடியாய்
      மிளிர்குண்டலங்கள் செறிகாதா
      வியன் கேயூரத்திருத்தோளா
      விஞ்சுஞ்சதங்கைசூழ்தாளா
புலையுங்கொலையுங்களவுமில்லாப்
      புனிதத்தவத்தோர்தொழுதேத்தும்
      புராரிகுமராவுமை சிறுவா
      போரூர்முருகப்பெருமாளே. (10)
----------------------

16. திருப்போரூர்ச்சந்நிதிமுறை - குயிற்பத்து

நன்றருளுதவைங் கரவன் றுணைவனை நனிபனிமலை
      மகண்மகனைக்குகனை,
மன்றினுளாடிய கொன்றைச்சடைமுடி
      மன்னனுவப்புறு பொன்னங் குழவியைக்,
கன்றுகுருந்தடி யாவிளவெறிதருகண்ணன்
      மருகனை யென்னுந்துணையைக்,
குன்றுதொறாடிய போரூரிறையைக்
      கூவாய்வரநீ கூவாய் குயிலே. (1)

மறைமுடி குலவிய பிரமரசத்தினை
      மருவடியவருள மலர் வாசத்தினை,
நிறைசரவசர வுயிர்ப்புரணத்தினை
      நிலகதிக்கொரு வித்தினைமுத்தைச்,
சிறைமயிலுதய சடான்ன ரவியைத்
      தேவர்கடொழ வருதேவைக்காவைக்,
குறைவறுவள நிறை போரூரிறையைக்
      கூவாய்வரநீ கூவாய்குயிலே. (2)

அரிவையரென வரு காகத்திரள்களை
      யணுகேன் மய லெனுமனகானலியு
மிரு நிதிசுதரெனு மேகமெழுந்திக்கெ ய்தேல்
      கவலைத் திவலைகள்வீசும்,
பொருவருசமயக் காடணு கேறற்
      போதமுரத்தெழு வாதமலைக்குங்,
குருபரனாம் போரூரிறையைக்
      கூவாய்வர நீ கூவாய்குயிலே. (3)

கயவர்களெனும்வல் லூறுகளிக்குங்
      காடணுகேறீ துகி ருடறைக்கு,
மயன்மிகுமுலகவர் வாழ்வெனு
      மொட்டினை மதியேலதுமதி வன்சிறைபற்று,
முயுநெறியினராங் கிள்ளை களுடனே
      யுயர்நூற்கற்பக தருவிலிருந்து,
குயின்மணி மாடப்போரீறையைக்
      கூவாய்வரநீ கூவாய்குயிலே. (4)

பற்பலவிதப்பூச் சோலைபுகாதே
      பரிபூரணமாமேகச் சோலையி,
லெற்பெறநீயெந் நாளுமகிழ்ந்தங்
      கிதுவதுவென் றொன்றையுநாடாமே,
செப்பமதாய் நின்னையு நாடாமேசீர
      ருளே வடி வாகியிருந்து,
குப்புகழ்போரூ ரப்பனைநாடிக்
      கூவாய்வர நீ கூவாய்குயிலே. (5)

விடயக்கண்ணியி னிற்புகுதாதே
      மிகுபொறி யென் பது பொறியதைமேவே,
லுடலப்பஞ்சர மியானெனமகிழே
      லோதுந் திசைமே விப்பறவாதே,
மிடையிற்சித்திர நற்புள் ளது போன்
      மிளிர்பூரணமா மீதிலிருந்து,
கொடைமிக்குத வியபோரூரிறையைக்
      கூவாய்வரநீ கூவாய்குயிலே. (6)

இன்றைக்கெனவுந் நாளைக்கெனவும்
      மெண்ணேன் மயிலிறை யின்னமுதூட்டும்,
பொன்றப்படுசுக துன்புகளுன் னிப்
      பூரிப்பொடுவாட் டங்களுறாதே,
யொன்றைக்கருதி யிதென்னதெனதே
      யுயர்கதியின்பைக் கருத்திக்கருத்திக்
குன்றைப்பொருதடு போரூரிறையைக்
      கூவாய்வரநீ கூவாய் குயிலே. (7)

நிராசையுடனரு ளேவடிவாயந்
      நின்மலனிருசே வடி நிழறங்கிப்,
புராதனமாய்நிக ழூறுமானந்தப்
      பொங்குர சச் செங்ககனிநனிதுய்ப்பப்,
பராபரனேகுக னேமயிலோனே
      பண்ணவனேவிண் ணவனே யென்று,
குராவணிவோனைப் போரூரிறையைக்
      கூவாய்வரநீ கூவாய் குயிலே. (8)

சேவற்கொடியுடை யானேயென்றுந்
      திகழொளிதரு சாம்பூனததங்கப்,
பாவைக்கிணையொப்பாரிருவோர்
      தம்பண் புறுமின்பக் கணாவென்றும்,
யாவர்க்குந்தலை மையனே யென்று
      மெழின்மறை புகழ்தரு பொருளேயென்றுங்,
கோவைப்போரூர் வாழ்வைக்கருதிக்
      கூவாய்வரநீகூவாய்குயிலே. (9)

சூரனுரங்கிர வுஞ்சபொருப்புத் துணிபட
      வடிவேல் விடுவோயென்றுந்,
தாரணிபன்னிரு புயனேயென்றுஞ்சர
      வணனே சண் முகனே யென்றுந்,
தேர்நவவீரர்க துணைவா வென்றுந்
      தேவர்கள்சேனா பதியேயென்றுங்,
கூரறிவினர் புகழ் போரூரிறையைக்
      கூவாய்வரநீ கூவாய்குயிலே. (10)
--------------------

17. திருப்போரூர்ச்சந்நிதிமுறை - கிளிப்பத்து

பவளநிறச்செந் திருமேனிப் பஞ்சக்கர வானைக் கிளை யோன்,
றவளநிறப்பொடி பூசுமரன் றந்தருணீபத் தாரழ கன்,
கவுரிகொடுக்கு முலையமுதங் கமலத்திருவாய் வழிசிறு வன்,
புவனமதிக்கும் போரூரன் புகழ்பேசிக்களி கிளிநீயே. (1)

கன்னியரிருவோர் நாயகனைக் கமலக்கண்ணன் மரும கனை,
மின்னியவடிவே லுடையவனை வீரனையாரினுந் தூய வனை,
யன்னியமில்லா தெங்குநிறை யாரணனைப்பரி பூரணனைப்,
பொன்னியன்மாடப் போரூர்வாழ் புண்ணிய னைக்கிளிபன்னுதியே. (2)

மரகதமுடிமே லாறுமுடி மானிக்கக்கிரி வருவது போல்
விரைசெலு மயின்மேல் வருவோனை வெற்றிகொள் குக்கிட விருதோனைப்,
பரைதருபிள்ளைப் பெருமாளைப் பண்பழகெழுதருஞ் செவ்வேளைத்,
தரைபுகழ்போரூரிறை யவனைத் தண்கிளிபேசா யன்புறவே. (3)

உலகினை நொடிவலம் வந்தானை யும்பர்கணகர்வலம் வந்தானைப்,
பலகலைமுழுது மறிந்தானைப்பரகதியடை நெறி தந்தானைச்,
சிலுகிடு மசுரரை வென்றானைத் தேவர்கள் பரவிட நின்றானை,
யிலகியபோரி யிருந்தானை யிசையாய் கிளியே நசையாயே, (4)

எனையொருபொருளா யுளமதனி
      லெணியருள் பொழியுஞ் சுகமுகிலைக்,
கனைகடலமுதைச் செந்தேனைக்
      கன்னலை ரசதா ளிக்கனியை,
நினைவழிபலவின் பொற்சுளையை
      நசை தருகட்டு மாங்கனியைப்,
புனைமதில்சூழ்போ ரூரிறையைப்
      பூங்கிளிசொல்லுதி தீங்கறவே. (5)

வாளைகள் பூகச் செங்குலையின் மன்னிய
      பொன்னுலகுறு தென்னம்,
பாளையின் மோதச் சிதறிவயற்
      பவளந்தரளமென த்திகழக்,
காளையமள்ளர்கண் மடைதோறுங்கால்வாய்
      தோறு மணை கோலு,
நீளணிபோரூர் நாயகளை
      நிமலக்கிளியே புகல் வாயே. (6)

சாரலி னாரப்பரிமளமுந் தண்டலையுறுசம் பகமணமுந்
தீரமுறுங்கே தகைமணமுஞ் சீர்நந்தனமல் லிகைமணமு
நாரியர்குழறூட் டகின்மணமும் நாகர்வியப்புற வேவீசும்
பேருறுபோரூர் நாயகனைப் பேசாய்கிளியே மாசறவே. (7)

ஆறுசரோருக முகனென்று மணிதிகழ்பன்னிருபுய னென்றும்,
பேறுதவும்பத யுகனென்றும் பெயர் வேலொ ளிருங் கரனென்றுந்,
தேறுமுளத்தினர் வாழ்வென்றுந் தேவர்தமக்கொரு கோவென்றும்,
வீறுயர்போருர் நாய கனை விளம்பாய் கிளியே கலங்காயே. (8)

முருகாகுமரா சரணென்று முதிராவயதாய் சரணென்று,
நிருபாதிகனே சரணென்று நிமலாகுகனே சரணென்று,
மருகாவொளியே சரணென்று மருளேபொருளே சரணென்று,
மருவார்பொழில்சூழ் போரூர்வாழ் மயிலோனைக் கிளி புகல்வாயே. (9)

இன்பக்கடலே சரணென்று மென்குண மலையே சர ணென்று,
மன்பர்க்கமுதே சரணென்று மாருயிர் முதலே சரணென்று,
மன்புக்கறிவே சரணென்றும் வளர்ப்பிரணவ மே சரணென்றுங்,
கொன்பெற்றுறுபோ ரூரிறையைக் கோலக்கிளியே யோ துவையே. (10)
-----------------

18. திருப்போரூர்ச்சந்நிதிமுறை - வண்டுவிடுதூது

மூக்கா லுழுதுண்ணும் வண்டுகாண்
      மூத்தோனிளவலை க்கண்டுதான்,
றேக்காரமுதரன் மைந்தனே
      சீர்ப்பார்பதி தருகந்தனே,
நோக்காயுனைநினைந் தன்பினா
      னோற்பாடனை யினமென்றுநீர்,
மாக்காவளமலி போரிவாய்
      மாத்தாளிணை தொழுதேத்துமே. (1)

தாமரைப்பூமணத் தேனெலாந் தண்டுறை
      யுண்டுறை வண்டுகாள்,
கோமளப்பாவையர் கேள்வனைக் கொண்டை
      மயூரச் சண்டனைப்,
பாமணப்போரியிற் கண்டித்தோர் பாவை
      பணிந்தன ளென்றுதா,
னீர்மனத்தன்பொடு பேசு வீர் நீள்சுகப்
      பொய்கையின் மூழ்கவே. (2)

தாதினைத்தேனொடுங் கூட்டியே
      சந்தனம்பூசிய வண்டு கா,
ளாதரித்தென்னைமு னாண்டவ
      னாறுமுகப்பெரு ளுடன்,
பேதைமைப் பான்மைய ளாயினும் பிச்சியை
      யொத்தவளேனுமியான்,
மூதருட்பேரமு தாழிவாய் மூழ்கி
      டப்பேசுமி னீவிரே. (3)

சோலைவிருந்திட வுண்டுதான் சோபனம்பாடிய வண்டு காள்,
காலமெலாமுனை யேநினை காரிகைகைதொழு தாளே ன்றே,
யாலையின் வாயென மேதிவா யம்புயத் தேன்சொரி போரிவாழ்,
வேலவனூபுரக் கஞ்சமேல் வீழ்ந்தெழுந்தாடி விளம்புமே. (4)

கோங்கலர்மாழைம தரணிமேற் குயின்ற மணியன்ன வண்டுகாண்,
மாங்கனிவாழையின் றீங்கனி மன்னுபலாக்க னிச் சாறெலாந்,
தேங்குறும்போரியி லுண்டுநீர் செவ்வேள் பதம்பணிந் தேத்தியே,
யோங்கொளியூடுற நாயினே னோது மினென்றுணை நீவிரே. (5)

சந்தனச்சாரலி னெய்தலிற் றண்டலைநந்தனச் சூழ லில்,
வந்தொரு நால்வகைப் பூநறை வாசந்துளைந்தாடும் வண்டுகாள்,
கந்தனைப்போரிவி சாகனைக் கண்டென்கவலைக் கருத்துறச்,
சிந்தை மகிழ்ந்தெனை யாளவே செப்புமினேற் குற வானிரே. (6)

மல்லிகைத்தாதரித் துண்டலர் வாரிசத் தேன் கொடு வாய்கழீஇ,
மெல்லிதழ்ப்பூவணை மீதிலே மென்றுயில் கொ ண்டுறை வண்டுகா,
வல்லியநெஞ்சின ளன்பிலாளான நெறி புரி யாதவள்,
புல்லியளென்று விடாதெனைப் போரிமுருக னுக் கோதுமே. (7)

தண்டலையூர்விண்டு நெய்தலுர்த் தாவடிபோய்ப்பனைக் கள்ளெலா,
மொண்டுமிகக்கொள்ளை கொண்டுதான் மொய்த்துவருஞ்சிறை வண்டுகாள்,
பண்டெனையாண்டரு ணேச னைப்பண்புறுபோரியில் வாசனைக்,
கண்டினமாண்டுகொளெ ன்றுநீர் காணவுரைத்திடுவீர்களே. (8)

மாமலைச்சேணிலத் தேதுஞ்சி
      வாரமனைபுகுந் துண்டு பின்,
கோமலர்க்காமுக சாலையிற்
      கூடுமரசிள வண்டுகா,
டேமலர்த்தார்புனை மார்பனைச்
      செஞ்சிறையஞ்சேவ லாள னைக்,
காமணக்குந்திருப் போரிவாய்க் கண்டெனை
      யாண்டி டச் சொன்மினே. (9)

நீலநிறப்பொறி வண்டுகா ணித்தலுங்கைதொழு வே னுமை,
யேலவுரைத்த மொழிகளை யெல்லாமயர்த்து விடா துநீர்,
சாலநிகழ்த்திடும் போரிவாழ் சண்முகவேலனுக் குங் களைப்,
போலுமெனக்குற வுண்டுகொல் பெர்ங்கள் நுங்க ளுக் கீவலே. (10)
---------------

19. திருப்போரூர்ச்சந்நிதிமுறை - கட்டளைக்கலிப்பா

அருளிருந்தநின்பாதமடைந்தவ
      ரனபிருந்தநெஞ்சாலுணைவாழ்த்தியு
மருவிருந்தமலர் தூய் வணங்கியு
      மன்னுகாலங்கழித்தனர் நாயினே
னுருவிருந்தயர்கின்ற பொய்வாழ்க்கையை
      யுன்னியுன்னிழன்றேமயங்கினேன்
றருவிருந்தபொழில்வளமன்னிய
      சமரமாபுரிச்சண்முகவேலனே. (1)

கானனீரினை மெய்யென்றவாவியே
      கனவிடாய் கெடவுண்ணக்கருதி
னான நீருவர்நீரென நாடுவ
      தன்னமாமயலென் றினியாறுவேன்
வானநாடருமாமுனிவோர்களு
      மதித்தவாரணமுந் துதிததேதொழுந்
தானமாமழையானைக்கிளையவா
      சமரமாபுரிச்சண்முகவேலனே. (2)

கனவிலே கண்டகாட்சிகள்யாவுமக்
      கனவிற்பொய்யெனக்கண்டுகனைக்கண்டோன்
பினையுமந்தக்கனாவினை மெய்யெனப்
      பேணுமாறுமயங்கினேன் பேதையே
னனையுந்தாதையுமாரியனும்மெனை
      யாண்ட தெய்வமுநீயென நம்பினேன்
றனைவிடேலுன்றன் சித்தமென்பாக்கியஞ்
      சமரமாபுரிச்சண்முகவேலனே. (3)

பழுதையாம்பலவென்றொளியாற்கண்டும்
      பாம்புவாதனை தீராதவனென
வெழுமுன்சிற்சுகநின்னருளாற்கண்டு
      மிந்நிலப்பொய்ம்மைவாதனைநீங்கிலேன்
முழுதுணர் தன்முதலாயவெண்குண
      மொய்த்தபஞ்சரமேமறையுச்சியே
தழுவுவெண்சுதைமாளிகை நீடிய
      சமரமாபுரிச்சண்முகவேலவனே. (4)

பிரணவத்தைவிடவகராதிய
      பிறங்குறாத பரிசெனப்பேதமா
முரணவித்தசொரூபம் விட்டிவ்வுயிர்
      முதலவின்றெனவென்றனக்கோதினோ
யரணெரித்தவன்மைந்தநின்றாட்டுணை
      யண்டினேற்குமவித்தையுணடாகுமோ
தரணியைக்கண்டபேர்க்குமிருளுண்டோ
      சமரமாபுரிச்சணமுகவேலனே. (5)

இந்த்ரஜாலம் பொய்யென்றதன்மூலத்தை
      யியம்பிக்காட்டக்கண்டோன் மயக்கெய்தல்போற்
பந்தஞாலம் பொய்யென்றி தன்மூலநீ
      பகரக்கண்டும்படிறேன் மயங்கினேன்
கொந்துலாவிய கொன்றைச்சடாடவிக்
      குழகனுக்கழகான குமாரனே
சந்தனாடவிச்சாரல்விரைதருஞ்
      சமரமாபுரிச்சண்முகவேலனே. (6)

பளிக்குமண்டபத்தேயுறுநாயதன்
      பன்னிழற்குளுமெய்யெனநாடல்போ
லொளிக்குமாயை பினின்றெனையெண்ணிலா
      வுருவமாக்கண்டுழன்றனனையனே
வெளிக்குளே விளையுஞ்சுகவாரியே
      வித்திலாதெழுசுத்தசொரூபமே
தளிர்க்கையார்கணடிக்கின்றமடமார்
      சமரமாபுரிச்சண்முகவேலனே. (7)

மைந்தனே துபிழை புரிந்தாலுமே
      மன்னுதாதை பொறுத்தருள்செய்தல்போ
லெந்தையென் பிழைபொறுத்தாள்வதுன்
      னினியபேரருளுக்கியல்பாகுமே
யந்தணாரியனாகிவந்தேழையேற்
      கருளமுதமளித்தகண்ணாளனே
சந்திரகாந்தத்தகடொளிர்மாளிகைச்
      சமரமாபுரிச்சண்முகவேலனே. (8)

விண்ணிலேயெழுமிந்திரசாபத்தை
      மேகமின்னலையொத்தெழுகாயங்க
ளெண்ணிலாதவெடுத்துளைத்தேனையென்
      றின்பவாரியில்வைத்திளைப்பாற்றுவாய்
கண்ணிலேகண்டசித்தொளிக்காட்சியே
      கருத்திலேகண்டலின் பசந்தோடமே
தண்ணிலாமுடிவேணியர் செல்வமே
      சமரமாபுரிச்சண்முகவேலனே. (9)

காலன்செங்கட்கடாவினிதேறியே
      கயிறு வீசிப்பிடியாமுனமெனை
வேலுஞ்செங்கையிலேந்திமயின்மிசை
      விரைவில்வந்துவந்தஞ்சலென்றாளுவா
யாலமுண்டகளத்தரிடத்துறை
      யரிவை கொஞ்சுறக்கொஞ்சுபைங்கிள்ளையே
தாலம்பாளைமதுக்குடமேந்திய
      சமரமாபுரிச்சண்முகவேலனே. (10)
-----------

20. திருப்போரூர்ச்சந்நிதிமுறை - கொச்சகக்கலிப்பா

மாணிக்கமாரிசொரிவனம்போனாயேனைப்
பேணிக்கருணை பொழிபேரிழிபமாப்புயலே
வீணிற்காலங்கழிக்கும் வெவ்வினையேனெஞ்சகத்துன்
றாணிற்கவைப்பாய்சமரபுரிநாயகமே. (1)

பெரும்பேதமையேன் பிழை குறியா துள்புகுந் த
வரும்பேரருளாலென்னாகங்குளிர்ந்தேனே
கரும்பேயென்னாருயிரின் கண்ணிருந்தகண்ணே
தரும்போதகமேசமரபுரிநாயகமே. (2)

பேராதசுத்தவெளிப்பேரின் பசாகரத்தே
யேராதநாயேனிருப்பதினியெந்நாளோ
வாராருங்கொங்கையுமைமடிமேலுந்தோண்மேலுஞ்
சாராவளருஞ்சமரபுரிநாயகமே. (3)

காட்டுவதுங்காண்பதுவுங்காட்சியும்போய்நின் றவின்ப
வீட்டினிடைத்துயின்றேவேசறிக்கை தீர்வேனோ
மாட்டின் மிசையேறுமகதேவர்சேயேநின்
றாட்டுணையே தஞ்சஞ்சமரபுரிநாயகமே. (4)

ஏரகமன்பாகியெழிலுறு பாவீந்தோர்க்குன்
சீரகமீந்தின் புதவஞ்செல்வமலிதேசிகனே
நாரகமொன்றில்லாதநாயேனையாளெவைக்குந்
தாரகமேசேயே சமரபுரிநாயகமே. (5)

பாலுக்குள் வெண்ணெயெழுபான்மைபோலென்னுளத்தின்
சீலத்தையெல்லாந்தெளிவிப்பதெந்நாளோ
வேலுக்கரசேவிறன்மாமயிற்கரசே
தாலத்தரசேசமரபுரிநாயகமே. (6)

வெள்ளைச்சோமன் றரித்த வேணியனாரானை முகப்
பிள்ளைக்கிளையத்திருப்பிள்ளைப்பெருமாளே
கள்ளத்தேனுக்குன்கருணையின் பங்காட்டியதைத்
தள்ளத்தகுமோசமாபுரிநாயகமே. (7)

சோரிவேற்கண்ணியர்மேற்றொல் புவிமேற்பொன்னதன் மேல்
வாரியலை போல் வருமாசை தீர்வேனோ
நாரியிடப்பாகருக்குநான்மறையினுட்பொருளைத்
தாரிபெறவோ துஞ்சமரபுரி நாயகமே. (8)

காமர்குறப்பெண்மானுங்காமுறுதெய்வப்பிடியுங்
கோமள வீராறுபுயக்குன்றிலுறச்சேர்ப்போனே
யோமெனும்வித்துள்ளேயுதித்ததருவேயெனையுந்
தாமரைத்தாட்சேராய்சமரபுரிநாயகமே. (9)

கும்பமுனிக்கின்பமெல்லாங் கொள்ளைகொள்ளத்தந்தருணீ
வம்பனே ற்கின்பம்வழங்குவதுமுண்டாமோ
செம்பதுமக்காடலர்ந்ததேசுதருபேரகா
சம்பு தவுமைந் தாசமரபுரிநாயகமே. (10)
---------------

21. திருப்போரூர்ச்சந்நிதிமுறை - ஊசல்

சுந்தரமாகந் தொடுமண்டபத்தினூடே
      சுரர்தருக்கணாற்றிசையுநிறுத்திநாப்பண்
முந்திய சாம்பூன தச்சங்கிலிகள் பூண்ட
      முதிர்கதிர்வீசுங்குலிசப்பலகை மீது
சிந்தை மகிழந்தினிதிருந்தேரரம்பைமாதர்
      செங்கரங்கள் கொண்டுசிறப்பொடு நின்றாட்டத்
தந்திமுகற்கிளையவரேயாடீரூசல்
      சமரபுரிநாயகரேயாடீரூசல். (1)

வடவரையோர்பன்னிரண்டின்முடியின் மீதே
      மார்த்தாண்டர்பன்னிருவருலாவல்போலுஞ்
சுடர்மணி வீசுங்குழைகள் புயங்கண்மீதே
      தோய்ந்தாடமார்பிலகுமதாணியாக்
கடகநிறையசைந்தாடமகுடமின்னக்
      கமலபதச்சிலம்பொடுகிங்கிணிகளாடத்
தடவரைகள்கிடுகிடென மயினடாத்துஞ்
      சமரபுரிநாயகரேயாடீரூசல். (2)

கங்கை முடித்தாதையுளத்துவகை பூப்பக்
      கணபதியாகியதமையன்களித்துநோக்கப்
புங்கநவவீரரெனுளடவலானோர்
      புடையினின்றுபணிகேட்பவிடைவிடாமே
செங்கண்மாலெனுமாமன் வியந்துபோற்றச்
      செழுமறைமைத்துனன்றரிசித்தங்கைகூப்பத்
தங்கமணிச்சிலம்படியென் சென்னிசூட்டுஞ்
      சமரபுரிநாயகரேயாடீரூசல். (3)

இந்திரன்வேத்திரங்கொடுகட்டியங்கள்கூற
      விரவிசசியிருபாலுங்கவரிவீசச்
சுந்தரமாமதனுருத்கொண்டடைப்பையேந்தத்
      துணையுடனேழ்திசைய வரூழியங்கள் செய்யக்
கந்திருவர் தும்புருநார தருமியாழின்
      கனவிசையுமிடற்றிசையுங்கலந்துபாடச்
சந்தமுறுபுழுகுமணமெங்கும்வீசச்
      சமரபுரிநாயகரேயாடீரூசல். (4)

நவமேவு பூதகணநாதராட
      நாடரியதேவர்கள் பூமாரி வீசச்
சிவமேவுமுனிவரர்பல்லாண்டுகூறத்
      திகழுரகர்மாணிக்கமாரிதூவப்
பவவேலைமூழ்காதவடியர்நாடிப்
      பரிந்துபரமானந்தக்கடலின் மூழ்கத்
தவமேவுமந்தணர்கள்வேதமோ தச்
      சமரபுரிநாயகரேயாடீரூசல். (5)

இமயமலைதனிற்பிறந்தநற்றாய் வாழ்த்த
      வெழிற்சடையிற்குடியிருந்தபெருந்தாய் வாழ்த்
கமலமலர்மாமியுளங்களித்துவாழ்த்தக்
      கலைவாணித்தங்கை புயம்புகழ்ந்துவாழ்த்தக்
வமரர்புகழ்ச்சிமுதலாமரம்பைமாத
      ராலாத்தியெடுத்தேத்தவருகினின்று
சமைவுறுநற்றேவிமாரிருவர்போற்றச்
      சமரபுரிநாயகரேயாடீரூசல். (6)

அருணகிரிநாதன்மகிழ்ந்தோதுபாட
      லருந்தமிழ்நூறெளிந்திடுநக்கீரன்பாட
லிருணையமெய்யன்பர்குழாமிசைந்து பாட
      வின்னியங்களைவகையின் சும்மையார்ப்பக்
கருணைபெறுமரசர்வணிகேசர்மேலாங்
      காராளர்முதலெவருஞ்சேவைசெய்யத்
தருணவளமாறாதபெருமைமேவுஞ்
      சமரபுரிநாயகரேயாடீரூசல். (7)

மகளிரின் மயிலினம்போனடனமாட
      வண்டினங்களவர்குழன்மாலையினின்றாடப்
புகரறுமெய்யன்பரின்பநடனமாடப்
      பொன்னுலகோர்மண்ணுலகோர்புகழ்கொண்டாட
விகலுறுபொய்யவுணருளநனிதிண்டாட
      விலைவேலின் வலியலகை பாடியாடத்
தகைமைசெறியளகை நிகர்வளமைமேவுஞ்
      சமரபுரிநாயகரேயாடீரூசல் (8)

கோழியெழுதிய விருதும் வேலுந்தோகைக்
      குரகதமுமுடையவரேயா டீரூச்
லூழியன ற்சினச்சூரன்சேனையெல்லா
      மொருங்கறுத்தசேலகரேயாரூச
லாழியலைத் துயரமெல்லாமகற்றியென்னை
      யாண்டுகொண்டதேசிகரேயாடீரூச
றாழியளைகளவு கொண்டோன்மருகனாரே
      சமரபுரிநாயகரேயாடீரூசல். (9)

பொதியமுனி குருபரரேயாடிடீரூசல்
      புவிவாழவருள்பவரேயாடீரூசல்
முதியதமிழுரைத்தவரேயாடீரூசல்
      முத்தியெனக்களித்தவரேயாடீரூச
லதிகவடிவழகினரேயாடிரூச
      லகிலமழைநிகர்ப்பவரேயாடீரூசல்
றதையுமலர்த்தாரினரேயாடீரூசல்
      சமரபுரிநாயகரேயாடீரூசல். (10)
--------------

22. திருப்போரூர்ச்சந்நிதிமுறை - விருத்தக் கலித்துறை

வடமலைவில்லானுதவியவொற்றைமருப்பாளன்
றிடமுறு துணையேயென துயிர்நிறையுஞ்செவ்வேளே
யிடமுறுநின்பூரண சுகமடைகுவதென்றடியேன்
றடமயிலேறுஞ்சேவகசமரப்பதியானே. (1)

உமையமைதனமாரமுதக்கடலுண்டுயர்சோதிக்
கமைவுறு பதிகப்பெருமழைபொழியுமருள்வானே
யிமையளவும்மறவாதுனை நாடுவதென்றடியேன்
சமரமயூரப்பரியாய்சமரப்பதியானே. (2)

அண்டர்மணிக்குழுநின்றொளிர் கடகத்தணி
பூண்ட திண்டிறல்வாகுவிராறுளமோனச்செவ்வேளே
மண்டிடுமன்பினர்போலடியேனைமதித்தாளாய்
தண்டைகொள்பாதசரோருகசமரப்பதியானே. (3)


அறிவொளியேயறிவோரமுதேபு வியாதியெலாம்
பிறிவருபூரணமேசுரரோதுபெரும்பொருளே
பொறிவழிசெலுமென் பிழை குறியாதுபொறுத்தாளாய்
தறையுயிர்வாழ்தரநிலவியசமரப்பதியானே. (4)

வேடர்குலச்சிறுமானணைவுற்ற விறற்புயனே
யாடரவப்பணியத்தனளித்தருளற்புதனே
மூடனெனத்தமியேனை விடுத்திடன் முத்திதருந்
தாடலைவைத்தெனையாளுதிசமரப்பதியானே, (5)

நல்லாரல்லார்செய்தொழில்செய்யுநாயடியே
னெல்லாம்வல்லார்பணிநின்பதமலரென்றடைவேன்
றொல்லாரணமுதலெல்லாமோதுசுகாதீதா
சல்லாபவிநோதத்தாய்சமரப்பதியானே. (6)

இலகிய கற்புக்கடவுட்பிடிசேரெழின்மார்பா
விலகொளிமொய்த்துனதருளெனகத்துவெளிப்படுமே
நிலவியகுக்கிடவிருதுபடைத்தநெடும்புகழோய்
சலசமலர்ப்பதமுருகாசமரப்பதியானே. (7)

உனலருமன்பினர்நினையும்படி வமதுடையோனே
நினைவு கடந்தவரறிவெழுசுகமாய்நிறைவோனே
யெனையுமொரன்பினனெனவுந்திருவுளமெண்ணுதியோ
தனபதியளகையினிலவியசமரப்பதியானே. (8)

வானவர்முனிவரர்பாதலருலகர்வணங்கிய சாம்
பூனத நூபுரவோசை முழங்குறுபொற்பாதா
ஞானபராவமுதண்குவதென்றினிநாயடியேன்
றானவர் நூறிடவேல்விடுசமரப்பதியானே. (9)

உலகுயர்பரமுயந்சிவமிவையாவையுமொன்றாக
நிலவியசொருபமதலதிலையென் றுநிகழ்த்தியவா
விலகியவதனிடையசைவறவுறைகுவதென்றடியேன்
றலமகிழ்தருபுகழ் பெருகியசமரப்பதியானே. (10)
--------------

23. திருப்போரூர்ச்சந்நிதிமுறை - அட்டகம்

திருவும்வெளைமுள ரியினிலுறைதருதனுமாதவ ஞா னமு,
மருவவிழிவழி கருணை பொழிதரு மாகர்சேவித மேக மே,
யுருவுமருவமு மொளியுமிருளுமி லொன்றதாம்பொரு ளென்றுநீ,
தருதியெனதுள நிறையவளமுள சமரமாநகர் வேலனே. (1)

மதியுமரவமு நதியுமிதழியும் வைத்தசெஞ்சடை யத்த னா,
ரதிகதயவுட னொருசொன்மொழியென வருள்செய் பர குரு தேசிகா,
விதியுமறிவரு பரமசுகமதை மேவவினியெ னையாளுவாய்,
ததிதிதிமியென நடனமயில்வரு சமரமாநகர் வேலனே. (2)

அகிலமுறுசர வசரமொடுபுற மகமுநடுமுடி வாதியுந்,
திகழுமொருசுக சொருபமாகிய தேவனேயரு ணாதனே,
ககன்பதிதொழுமுன து பதமலர்கடையனென்முடிசூட்டுவாய்,
தகைமைசெறிமறையவர்கள்புகழ்தருசமரமாநகர்வேலனே. (3)

அறிவொடறிபவ னறியவருபொரு ளடைய வொரு பொருளாகியே,
பிறிவுசிறிதுமின் மவுனமாகிய பேசருஞ் சுக மானவா,
நெறிகொளுன தரு ளுகதிபெறவெனை நினைதி திருவுள மதனிலே,
தறுகணபவணி பரமனுதவிய சமரமா நகர் வேலனே. (4)

கனகவடவரை யருவிசொரிமுறை கரடகுஞ்சர முக னார்,
மனமும்விழிகளு மலரவழகொளிர் வாகனே தோகை பாகனே,
யினனைநி + ருறு முனதுதிருவடி யெனது முடியு றநினைகுவாய்,
சனகன்ம சள்பதி மருகனாகிய சமரமாநகர் வேலனே. (5)

இமயகிரிதவ வுதயமயின்முலை யின்னருட்சுதை வாரி யுண்,
டமைவு தருதிரி நயன வரைமிசை யணிசெய் கவிபொ பொழிமேகமே,
சிமயவரைதொறு மாடுநின்பத சேவைதந் தெனை யாளுவாய்,
சமரமயின் மிசை யுதயசூரிய சமரமாநகர் வேலனே. (6)

குறவர்மடமகள் களப்புளகித குடமுலைச்சுவ டணுகிய
நறவுகமழ்தரு தெரியன்மார்பக நாயகாகரு ணாலயா
வுறவுமெனதுய ரறிவும்வளமையு முனது பரிபுர பாதமே
தறையினுயிர்வகை தழையநிலவிய சமரமாநகர் வேலனே. (7)

தெய்வசிந்துர நயனவிணைகுடி சேருமேருறை செம்பு யா,
மெய்வழங்குகண் ணாளனே நவ வீரர்சேவித தாளனே,
நெய்வழங்கயின் மன்னவென்னுள நின்றுநன்றருள் பாலி யாய்,
சைவநெறியின ருய்யமனமகிழ் சமரமாநகர்வேலனே. (8)
---------------

24. திருப்போரூர்ச்சந்நிதிமுறை - பெருங்கழி நெடில் விருத்தம்

சுருதியின் முடிவுதெளிதருபரம
      சுகமுறக்கலசமாமுனிக்குத்
துகளறுமரியபொருள் பகர்குரவ
      துதிபெறுமுவமையிலழக
கருதருமடியர்பவவலை துணிசெய்
      காரணபூரணவெனவுன்
      கழலிணையடியேன்மன தினினினைந்து
      கசிந்து நெக்குருகுநாளுளதோ
செருவயினசுரர்குலமணியனைய
      திறலுடையொருமகசூரன்
      றிகழுரமுருவவலையயில்விடுத்த
      சேவகபாவகதீத
தருமணியிகலியருள்கரகமல
      தனிநெடுமயூரவாகனனே
      சத்தளகமலமருவியவயல்சூழ்
      சமரமாநகருறைகுகனே. (1)

முரணுறு கொடியபவமெனுமுத்தி
      முழுகலுமெழுதலுமாகி
      முதிர்கரையறியாதிடைதடுமாறி
      முடலை கொள்விடயமென்றுரை செ
யுரமருமகரமிடையிடையடர
      வுய்வகையொறுதிசையின்றி
      யுழலுமென்றனக்குன் கழலிணையம்பி
      யுவந்தளித்தாளுநாளுளதோ
விரவியகளபம்ருகமதபடிர
      விரைகமழ்புயாசலவீர
      விரிகதிரிலகுமரகதமயிலின்
      மிசைவருமொருபெருங்குமர
சரவணவிசாககுக்கிடத்துவச
      சண்முகசச்சிதானந்த
      சத்தளகமலமருவியவயல்சூழ்
      சமரமாநகருறைகுகனே. (2)

விலகிய கலகவிழிமடவார்த
      மென்முலைக்குவட்டிடையிழிந்து
மிகுமயலாசைவெம்புலிபாய
      மெய்மறந்துன தருணினையாப்
புலமிலியிவனென்றெனையிகழாதுன்
      புனித செஞ்சரோருகமிணைந்த
      பொற்பினிற்றிகழுமற்புதபாதம்
      பொருந்திடத்திருந்தருள்புரியாய்
பலகலைமுழுதுமறிதருபுலவ
      பரகதிநெறிதருகுரவ
      பதகரைமுடுகியடுமொருவீர
      பணிசுரரெணியடைநிருப
தலமதிலிர விவரவொருதொனிசெய்
      தழைசிறைச்சேவலம்விருத
      சத்தளகமலமருவியவயல்சூழ்
      சமரமாநகருறைகுகனே. (3)

அழலுறுமெழுகினரிவையர் மயலி
      னனுதினமகநெகவழியு
      மசடனை மதியில்கசடனையறிவி
      லாதனை மாதவமிலனை
விழலனையதிகவிரகனை மதுர
      ழிலதொருவசனனை முனிவின்
      விறலனையுன துகழலிணைகுறுகும்
      விதமளித்தாளுநாளுளதோ
புழைபெறுபனையிற்கரமலைப்பிடரிற்
      பொங்குசெங்கதிரொருகோடி
      பொற்பினிற்றிகழ்வதொப்பெனச்சிறந்து
      பொன்னுலகுலவியபுனித
தழுவரைபெரியகற்பகாடவியின்
      றண்மலர்மாலிகாபரண
      சத்தளகமலமருவியவயல்சூழ்
      சமரமாநகருறைகுகனே. (4)

உததிகொள்குமிழியுடுநிரையுயிர்கள்
      ளொலிகெழுதிரைமலிபுளினத்
      துறுமணலளவையள விடுமொருவ
      னுளனெனிலெனதுறுபிறவி
விதவகையறியுமவைகளிலடியேன்
      மெலிவுறுமெலிவைநீயறிவாய்
      விகசிதநின துமலரடியுதவி
      வெந்துயரகற்றிடநினையாய்
நதிபெறுசடிலமணிமுடியொருவ
      னகைபெறவிருசெவிகுளிர
      நற்பொருளுரைத்தவற்புதக்குரவ
      நாதபூதங்களின் றலைவ
சதியுடனடனமிடுமயிலுரவ
      சதுரமென்மதுரவாசகனே
      சத்தளகமலமருவியவயல்சூழ்
      சமரமாநகருறைகுகனே. (5)

சிகரியினு தயபரிதியின் மணிக
      டிகழுறுமகுடமோராறுந்
      திரளுபெதியின் முகங்களோராறுந்
      திருவிழிமலர்களீராறுங்
ககனமூடுருவுகனகமால்வரையிற்
      கதித்தெழுபுயங்களீராறுங்
      கடிகமழுபயபதங்களுமெனது
      கருத்திலுற்றிருக்குநாளுளதோ
நிகரறுமுரகன்முடிநெறநெறென
      நிகழ்வடவரைடுகிடென
      நிலவியவுலகையொருநொடியதனி
      னிலைபெறவுலவுசீரடியாய்
தகைபெறுகுரவர்மடவரலியானை
      தந்தருண்மடவரல்கணவ
      சத்தளகமலமருவியவயல்சூழ்
      சமரமாநகருறைகுக னே. (6)

கசடறுக்கனமகபதியுலகிற்
      கடிதருமருமலர்க்கூந்தற்
      கடவுளர்மகளிரிப்புடைகவரி
      காலசைத்திரட்டமாமுனிவர்
திசைதொறுமமரர்மறைமொழியாசி
      செப்பிடவொப்பிலாதுலவுஞ்
      சேவகநினதுபதாம்புயத்தெனது
      சிந்தையைச்செலுத்து நாளுளதோ
தெசமுகனுடலமிருதுணிபடுத்த
      கேழயிற்படைவலனேந்துங்
      கேசரிதெய்வக்கம்மியனிற்றுங்
      கிங்கிணிச்சரணவானந்த
தசமுகன்மடியவொருகணைதொடுத்த
      சதுரனன் மருகனே முருகா
      சத்தளகமலமருவியவயல்சூழ்
      சமரமாநகருறைகுகனே. (7)

அவகதிபுகுது நினைவுடனியங்கி
      யடர்வுறுவிடயமென்கடுவை
      யயின் றயின் றநந்தநாளெலாங்கழித்த
      வறிவிலுன்மத்தனேன்றன்னைச்
சிவகதிக்குரியனெனத்தெளிவித்துத்
      திரிமலமயக்கவேர்களைந்து
      திகழுறுமழல்சேரிரும்புநீரென்னத்
      திருவடிச்சேர்த்துநாளுளதோ
கவனவாம்புரவியேழுறப்பூண்ட
      கடிரதக்கடவுளுக்குடைய
      கதிரெனத்தோன்றுமயிலுடைக்குமர
      கந்தநந்தாமணிவிளக்கே
தவநதிபெருகுஞ்சடிலவானந்தத்
      தண்கடலுதித்தவாரமுதே
      சதளகமலமருவியவயல்சூழ்
      சமரமாநகருறைகுகனே. (8)

துகளறுமுலகமலிநிசிபருகுந்
      துரிசறுபரிதிகோடிகளிற்
      சுடர்விடுநினது திருவுருவழகுந்
      துலங்கியமுகங்களோராறும்
பகரருமணிகள் சுடர்விடுகடகப்
      பருப்பதப்புயங்களீராறும்
      பரிபுரகமலபாதமுஞ்சிறியேன்
      பரிவொடுங்காணுநாளுளதோ
செக்கணசெகணசெக்கணசெகண
      செஞ்சின திகுதகுதிகெனச்
      செறிமுரசுடுக்கைமத்தளமலகை
      திசையொலிசென்றிடமுழக்கச்
சகதலத்தசுரர்மணிமுடியுருளத்
      தடக்கைவேல்விடுத்தசேவகனே
      சத்தளகமலமருவியவயல்சூழ்
      சமரமாநகருறைகுகனே. (9)

திடமுறுக்கனமகபதியமரர்
      சித்தர் விஞ்சையரரிபிரமர்
      செய்செய்வெனவேகற்பகாடவியிற்
      செழுமலர்பொழிந்து நின்றிறைஞ்ச
நடமிடுகுழகன கமகிழ்ந்துதவு
      நாதவென்றிடைவிடாதுன்னு
      நன்மனமளித்துப்புன்மனம்போக்கி
      நாயினேன்றன்னையாண்டருளாய்
கடதடவிகடகுஞ்சராநநத்துக்
      கடவுளுக்கிளையநற்களிறே
      கதிதருதருவேநதி தருமணியே
      காமனிற்கட்டழகினனே
தடமலைநிகர்த்தவரிமுகத்தசுரன்
      றனதுரமுருறவேல்விடுத்தோய்
      சத்தளகமலமருவியவயல்சூழ்
      சமரமாங் கருறைகுகனே. (10)
-------------

25. திருப்போரூர்ச்சந்நிதிமுறை - குறுங்கழி நெடில் விருத்தம் <

அறிவுக் களிறோ ருதவித்துணையா
      யகமெய்ச் சியமுருகா
மறிமிக் கொளிசூழ் சுசிகைக் கொளுவோன்
      மகிழத் தவழ் புதல்வா
வெறிபற்றியதா ரவவெற் கருள்சேர்
      விமலப் பதமருளாய்
தறியட் டெழுமா தவளக் களிறாய்
      சமரப் பதியானே. (1)

இமயப் பிடிபா லுதவக் கனிவா
      யிடைவைத் துமிழ்சிறுவா
திமிரத் திரளா மசுரக் கொடியார்
      சிதையத் தொடுமயிலாய்
நிமலச் சுகபா ரணமெற் கினி
      நிகழ்வுற் றினிதருளாய்
சமரச் சிறைமா மயுரப் பரியாய்
      சமரப்பதியானே. (2)

கடவுட் பிடிகானவர்நற் கொடிசூழ்
      கனகக் கிரியனவா
மடமைச் சிறியே னிடரைக் களைவான்
      வனசப் பரிபுரதா
ளிடைவைத் தினியா ணடனச் சிறைமா
      மயிலுக் கெழினிருபா
தடவெற் பழகா தணிகைப் பதியாய்
      சமரப்பதியானே. (3)

நிகழ்குக் கிடநீள் விருதுப் பரமா
      நிமலக் குலமுருகா
புகல்பற் றிடநீ யலதெற் குளதோ
      புகழ்மிக் குளகுகவேள்
ககனச் சுரர்மா முனிவர்க் குழுமா
      நிலர்கைக் கணிசரணா
தகரப் பரியா வயில்வேற் படையாய்
      சமரப் பதியானே. (4)

மனதிற் கினிதா நினைவிற் படிநான்
      மயலுற் றிடருறவோ
வுனதற் புத்தாள் பணியப் பெறவே
      யுரைசிற் பரைகுமரா
கனகப் பெருமால் வரைவிற் பரனார்
      கருதச் செவிபுகல்வோய்
சனரைச் சுகவீடுறவைத் தருள்வோய்
      சமரப் பதியானே. (5)

முமலக் குழுவோ டியைபொய்க் கடமே
      முடுகித் தொடர்வுறவே
சுமைமிக் குறுவோ னிடருற் றனன்மா
      சுகம்வைத் தெனையினிதாள்
கமலப் பதனே கனகப்புயனே
      கருணைத் திருமுகனே
சமரக் கணநா கர்களுக் கிறைவா
      சமரப் பதியானே. (6)

களவிற் களவா னவன்மெய்ச் சுறநீள்
      கவியைப் பொழிமுகிலே
குளகுத் தகர்மேல் வருசிற் சொருபா
      குமரப் பெயருடையா
யிளகத் தயவோர் சிறிதுற் றறியா
      வெனையுட் கருதுதியோ
தளவக் குழலார் நடைகற் றனமார்
      சமரப் பதியானே. (7)

நிலவுச் சடையா னுதவுத் தமனே
      நிமலிக் கெழின்மகனே
யுலகுக் கரசே யமரர்க் கரசே
      யுயிருக் குயிரெனவே
பலசொற் புனைபா வதனிற் புகழே
      பகர்தற் கினிதருளாய்
சலசத் திருமா னிலகிக் களிகூர்
      சமரப் பதியானே. (8)

குவளைக் கணினார் குயநச் சியமா
      கொடுமைச் சிறியவனே
னவலக் கடையே னுன தற்
      புத்தா ளடையக் கருது தியோ
நவசித் திரகே ழொளிசுற் றியமே
      னடனக் களிமயிலோய்
தவளக் கரியாய் பழனிக் கிரியாய்
      சமரப் பதியானே. (9)

பொருநைக் குலநீள் வரையிற் றவமே
      புரிமெய்க் குறுமுனிபா
லிருளுக் கொருசூ ரியனிற் குருவா
      யெதிருற் றருள்புரிவோய்
மருளுற் பவவா ரிதியிற் புகுதா
      வகையெற் குரைபுகலாய்
தருணிச் சிறுவா வருணக்குமரா
      சமரப் பதியானே. (10)
---------------

26. திருப்போரூர்ச்சந்நிதிமுறை - குறுங்கழி நெடில் விருத்தம் 2

பான்மதிவேணியர் மாறொழுநாயகர்
      பரிவுடனருள்யானை
தான்வாவாவென வங்கைவிரித்தழை
      சகலகலைப்பிள்ளாய்
தேன்மலிசுவையென வெங்குநிறைந்துள
      சிற்சுகவாரியிலே
யான்முழுகுறுமொரு காலமுமுளதுகொ
      லருள்போரூரானே. (1)

மூபுரமெரிகொள் வோர்நகை புரிதரு
      முக்கணன் மடிமீதே
நூபுரமொலிதர வாடியதுணையடி
      நோன்மைதருஞ்சிறுவா
மாபுரம்மூவகை மேலெழுமொளியிடை
      மன்னுவதென்றடியே
னார்புரிநூலொளிர் மார்பகவேலவ
      வருள்போரூரானே. (2)

நூலவகிரனவிடை மாதுமைமகிழ்வுற
      நுவலருமழலைமொழிப்
பால்வழிநாநனி பேசிய மூவிரு
      பவளத்திருவாயா
மால்வழிவிலகிநன் னூல்வழிசெலுமுள
      மருவுவலோசிறியே
னால்வயினிலை துயில் வோன்மகிழ்மருமக
      வருள்போரூரானே. (3)

தெய்வப்பிடியுந் திருவுறைமானுக்
      தினமுங்களிகூர
மெய்வைத்திடுபே ரருணிழன்மொய்த்தொளிர்
      மேதகுகற்பகமே
யுய்வுற்றிடுகதி பெற்றுனடிக்க
      ணுவப்புறலென் றடியே
னைவர்க்குஞ்சற் காரணன்மருகா
      வருள்போரூரானே. (4)

வேலுஞ்சேவலும் விரிசிறைமயிலும்
      வெற்றிசெய்தகரேறு
நாலும்மறைபுக ழக்கைக்கொண்டரு
      ணாயக தூயவனே
யேலுங்காமக் கடலின்கரைகண்
      டேறுவதென்றடியே
னாலுங்கோலுந் துயில்வோன்மருகா
      வருள்போரூரானே. (5)

மலையமுனிக்கக மதனின் மறைப்பொருள்
      வழுவறவைத்தபிரான்
கலைகடமக்குள பொருள்கள்விரித்துரை
      கசடறுமெய்ப்புலவா
நிலையில்பவக்கடல் சுவறவெனக்கொரு
      நிலமையளித்திகொலோ
வலையில் சுதைக்கட லென நிறைசிற்பர
      வருள்போரூரானே. (6)

பாவருதொடையணி வோருளநாடிய
      பாரிடை நீடுறவே
வோவறவுதவுறு மாறிருகரமுள
      வுத்தமசிற்சொருபா
நாவுடன்மனமிவை யாலுனைவந்தனை
      நாயடியேன் செயவே
யாவருவோன்மக னாகியவேலவ
      வருள்போரூரானே. (7)

மூதொளிநீடிய கேயூரப்பணி
      முந்நான்குறுதோளா
சீதளவான்மதி போலுறுமாறு
      சிறந்தமுகத்தினனே
பாதகனென்மன னின்னடிமன்னுறு
      பான்மையினண்ணுறுமோ
வாதரவேயென தாருயிர்நாயக
      வருள்போரூரானே. (8)

பணிபவருளமுறு மிருளறவொளிதரு
      பரவறிவுளாவியே
தணிமலை முதலிய மலைதொறுநிலவிய
      சசிபதிபணிபதனே
கணிதமிழ்பிழைசெய்த கொடியனைநிலைபெறு
      கதிபெறநினைத்திகொலோ
வணிதிகழ்திருவுர வயிலமையிலவ
      வருள்போரூரானே. (9)

மின்றிகழம்புய லேமறைமீது
      விளங்குறு செம்பொருளே
யென்றுணையேயடியாரக்கஞ்ச
      மிருந்தபெருந்தேனே
நன்குறுபேரறி வேயருளேசுக
      மேயென நாயடியே
னன்பொடுநின்பத தாமரைநாடுற
      வருள்போரூரானே. (10)
--------------

27. திருப்போரூர்ச்சந்நிதிமுறை - குறுங்கழி நெடில் விருத்தம் 3

பகலுடனிரவு மிடையினுமுனது
      பாதப்பே ரொளியிடைப்புகுந்து
சகலகேவலத்தின் றாக்கறவடியேன்
      றகுசுகத் திருக்குநாளுளதோ
ககனர்தமரசே கதிதருதருவே
      காரணக் கருணைவாரிதியே
மிகுகுணக்குன்றே யதிவளப்போரூர்
      வீறிவா ழாறுமாமுகனே. (1)

உனது தாயுலக சராசரமெவையு
      மொருங்குடன் பூத்தவளுந்தை
கனபரிபுரண சுகத்தனின்றமையன்
      காரிய முதல்வனின் மாமன்
வனசனாதியர்கள் பணிபதனிவர்கள்
      வளனெலா முனக்குரித்திதனால்
வினவு செல்வத்துட் செல்வனீபோரூர்
      வீறிவா ழாறுமாமுகனே. (2).

அறுவகைத்தாயர் குடமுலைசுரப்ப
      வம்பிகை திருவுளங்களிப்ப
மறுவறுகங்கைத் தாய்நனிவாழ்த்தி
      வடிவெலாங் குளிர்ந்துபூரிப்ப
நறைகமழ்வனச மாமிகண்களிப்ப
      நடந்தவ ரெதிர்வருகுருந்தே
விறலுறுநினைவந் தடைந்தனன்போருர்
      வீறிவா ழாறுமாமுகனே. (3)

மண்ணவர்பணிய விம்மையிலின்பும்
      வானவர் பணிந்திடமறுமை
நண்ணுறுமின்பு முனிவரரடியர்
      நனிதொழப் பரகதியின்பும்
பண்ணுறுமுனது பாதமீ தருமிப்
      பதந்தொழு வாரிடர் கடந்தோர்
விண்ணகர்வளம்போ னண்ணுறும்போரூர்
      வீறிவா ழாறுமாமுகனே. (4)

உரையுணர்விறந்த கரையறுமின்ப
      மோரரைக் கடிகைமிக்குயர்ந்த
வருளொடுங்காட்டி மறைத்தனை
      நாயேற் கச்சுக மென்றளித்தருள்வாய்
சுரர்களுக்கிடர்செய் சூர்ப்பகைகடிந்து
      சுடர்விடு சோதிவேற்கரசே
விரகனே குகனே மெய்யனேபோரூர்
      றிவா ழாறுமாமுகனே. (5)

ஓதியுமுணர்ந்தும் பிறர்தமக்குரைத்து
      முளமுதற் றானடங்காத
பேதையிற்பேதை யாரிலரென்ற
      பெரியவர் சொற்கிலக்கானேன்
கோதறுமாறு கொடுமுடிப்பவளக்
      குன்றமொத் திலகுகட்டழகா
வேதகோடங்கண் முழங்கியபோரூர்
      வீறிவா ழாறுமாமுகனே. (6)

அரணியைக்கடைவோன் கனலெழுசமயத்
      தங்கையே மாறிவிட்டாக்குப்
புரணபேரின்ப மெழுதருவாயிற
      பொருந்துநின் பதமறந்திளைத்தேன்
மரணவுற்பவத்தின் மறுகுறாதெனைநின்
      மலர்ப்பதஞ் சேர்ததிடநினையாய்
விரிகதிரெறிக்கும் வேலனே போரூர்
      வீறிவா ழாறுமாமுகனே. (7)

கடைபடு முலகப் பொய்யினை மெய்யாக்
      கருதினேன் கானனீரென்று
மடமையாற்கருது மவனெனவினியுன்
      மலர்ப்பதச் சுகத்தையென்றடைவேன்
றடவரைக்குறவர் குலத்தெழுவல்லி
      சாதகக் கொடி படர்தருவே
மிடலெழுதோகைப் பாகனே போரூர்
      வீறிவா ழாறுமாமுகனே. (8)

எங்குமென்சொரூப சச்சிதானந்த
      விலகொளி யிருந்திடுமதனுட்
டங்குபல்பொருள்கள் கானலிற்சலம்போற்
      றாமுறும் வேலையென்றே
பொங்கருட்குருவாய் வந்துநீயளித்தும்
      புலையனேன் மயங்குறுகின்றேன்
வெங்கதிர்விலக்குந் தண்டலைப்போரூர்
      வீறிவா ழாறுமாமுகனே. (9)

மலவிருடுரக்கு ஞானசூரியனாய்
      வந்தநின் மகிமையையறியாப்
புலையரிற்கடையே னெனினுமென் பிழையைப்
      பொறுப்பதுன் பொன்னருட்கியல்பாங்
கலைமுகம்புகழுங் களிற்றுறு துணைவா
      கடவுள்யா னைக்கு நற்கணவா
விலகிவில்லுமிழும் வேலவாபோரூர்
      வீறிவா ழாறுமாமுகனே. (10)
--------------

28. திருப்போரூர்ச்சந்நிதிமுறை - குறுங்கழி நெடில் விருத்தம் -4

அருட்குழை தழைத்தங் கரமலர் மலர்ந்தோ
      ராடகப் பொருப்பிடையுரிஞ்சித்
தெருட்டரு கோட்டுக் கற்பகத் திளவ
      லாகிய மாதவத் தரசே
மருட்டிரைப் பிறவி வாரிதி மூழ்கா
      வகையெனைக் காத்தளித் தருளா
யுருட்டிக ழிரதத் தெருப்புனை போரூ
      ருத்தமா சத்திவே லவனே. (1)

நவமணி குயின்ற பருப்பத மனைய
      நகைமயிற் பரியிவர்ந் துளத்துக்
கவலைகடவிர்த்திங் கடியரைக்
      காக்குங் கடவுளே கடவுளர் கோவே
சிவமென வெவையு மருட்குரு வாகிச்
      செப்பிய வாறெனக் குளத்து
முவமையி லதனைக் காட்டுதி போரூ
      ருத்தமா சத்திவே லவனே. (2)

நல்லவ ரெனினீ புரியருட் குள்ள
      நைந்து நெக் குருகுவ ரன்பாய்ப்
புல்லியே னதனின் மகிமையை யறியாய்
      புலையனே னுய்யுநா ளுளதோ
வெல்லுமும் மதத்து வாரண முரித்து
      வீட்டிய முக்கணன் புதல்வா
வொல்லைவாந் தகரப் பரியனே போரூ
      ருத்தமா சத்திவே லவனே. (3)

காமவேள் கணையா லுளங்கலங் காதுன்
      கனைகழற் கமலத்தா ளிருந்த
சேமவா னந்த வாரிதி படிந்து
      பூமணம் வீசுங் கூந்தலங் கவுரி
சிறியனேன் வாழுநா ளுளதோ
      பொருப்பன தனத்தமு துண்டோ
யோமெனும் பதத்தி னருத்தமே போரூ
      ருத்தமா சத்திவே லவனே. (4)

நினதருட் பாத நினைதொறு மடியே
      னினைப்பொடு மாறுகொண் டெழுந்த
மனவழக் கதனால் வாடினே னதனை
      மாற்றிநின் னருள்சுரந் தளிப்பாய்
கனைகடல் குமுறக் குலவரை யதிரக்
      கனவொலி கூவுசே வலனே
யுனலருந் தவத்தோர் பரவிய போரூ
      ருத்தமா சத்திவே லவனே. 95)

வாக்கொடு மனமுங் காயமார் தொழிலு
      மன்னுறு நின்னருட் காக்குந்
தேக்குறு மன்பர் போலலாச் சிறியேன்
      செய்பிழை பொறுத்தினி தளிப்பா
யாக்கமெய்ஞ் ஞானங் குறுமுனிக் குதவு
      மருட்குர வாசிவ யோக
வூக்கமே தழைத்தோர் போற்றிய போரூ
      ருத்தமா சத்தி வேலவனே. (6)

மகவினைத் தாதை யினிமைகள் காட்டி
      மடித்தலத் திருத்துதல் போல
வகமதி லின்பு காட்டிநின் றாட்கீ
      ழடியனை யசைவற விருத்தாய்
ககனவா னோர்க ளெனும்பயிர் தழைப்பக்
      கடியசூர்க் களைகளைந் தருள்வோ
யுகலரு வளங்க டிகழ்திருப் போரூ
      ருத்தமா சத்திவே லவனே. (7)

பித்தனே னெனினும் பேயனே னெனினும்
      பிழைபுரி பாவியே னெனினு
மத்தனே யெனைநீ யளிக்குதல் கடனே
      யறனெலா மோருருக் கொண்டோய்
கொத்தலர் பேத் தொடையணி மார்பா
      குமரநா யகவெனக் குறுதா
யொத்தவா முத்தர் பற்றிய போரூ
      ருத்தமா சத்திவே லவனே. (8)

கன்னிய ரிருவரிருமருங் குறநற்
      கனகமால் வரையிருந் தனநின்
சன்னிதி கண்டோர் பவத்துயர் கடந்து
      தருசுக வாரிதி படிவார்
நின்னடி யவனென் றுலகவர் புகல
      நிகழ்த்தினை யினியெனை விடுக்கே
லுன்னத சிகரி மன்னிய போரூ
      ருத்தமா சத்திவே லவனே. (9)

பயனில மொழிந்தும் பலதொழில் புரிந்தும்
      பரவையிற் றிரையென நினைந்துங்
கயவரிற் பொழுது போக்குறா துனது
      கமலத்தா ணினையவே தருவா
யியலிசை யருண கிரிப்பெயர் நாத
      னியம்புபா மாலைசேர் புயத்தா
யுயுநெறி யடியேற் குதவிய போரூ
      ருத்தமா சத்திவே லவனே. (10)
-------------

29. திருப்போரூர்ச்சந்நிதிமுறை - குறுங்கழி நெடில் விருத்தம்- 5

கமலநான் முகவ னோதிய வேதக்
      கனமுக வுரைதினம் புகழும்
விமலமெய்ஞ் ஞானக் களிற்றினுக் கிளைய
      வீறுபன் னிருபுயத் தழகா
திமிரவஞ் ஞானக் களிற்றினைத் துணித்தென்
      சிந்தையிற் புகுந்தருள் புரியாய்
தமரநீர் ததும்பும் வயல்செறி போரூர்ச்
      சரவணா பிரணவப் பொருளே. (1)

இராவொடு பகலு மெழிலுறு சமாதி
      இயல்பொடு கூடிவிட் டிருந்து
விராவுபே ரின்ப வமுதயின் றடியேன்
      வினைத்துயர் மறக்குநா ளுளதோ
வராவணி வேணித் துகிர்க்கொடி படரு
      மருட்கடற் பிறந்தவா ரமுதே
தராதல முழுதும் புகழ்திருப் போரூர்ச்
      சரவணா பிரணவப் பொருளே. (2)

ஒருபொரு ளிடத்தும் விழைவொடு வெகுளி
      யுறாதெலாஞ் சமமதாக் கண்டுன்
றிருவடி நிழற்கீ ழசைவற விருந்து
      சிறியனே னென்றிளைப் பறுவே
னருணனி சுரக்கும் பனிமலைப் பிறந்த
      வங்கொடி தந்தசெங் கனியே
தருணமா றாத முருகனே போரூர்ச்
      சரவணா பிரணவப் பொருளே. (3)

கலைபுகழ்ந் தோதுங் கற்பெலா நிறைந்த
      கன்னிய ரிருவர்பான் மகிழ
நிலைபெறு மயூரப் பரிமிசைத் தோன்று
      நிறைபரி பூரண சுகமே
யிலையுள தென்னு மிரண்டுமத் தியத்தி
      னெழுசொரு பத்தெனை யிருத்தாய்
தலைமைகொ டவத்தோர் நிலவிய போரூர்ச்
      சரவணா பிரணவப் பொருளே. (4)

இருளைவிட் டெனைநீ யெடுத்தநாண் முதலா
      லுருளெனச் சுழன்றே னிங்கினி தமையு
வின்றுகா அறுபிறப் பிறப்பி
      முயர்பரி பூரணத் திருத்தாய்
மருமலி நீபத் தார்புனை மார்பா
      வானவர் சேவித பாதா
தருமலி கரத்தோர் நிறைதிருப் போரூர்ச்
      சரவணா பிரணவப் பொருளே. (5)

மனவழுக் கனைத்து மாறிநின் மலமா
      மனத்தனாய் நசைசின மறந்து
கனபரி பூரண சுகக்கடல் படியுங்
      காலமுஞ் சிறியனேற் குளதோ
வுனலரும் பொதியத் துறுகுறு முனிவ
      னுளமகிழ்ந் திறைஞ்சுபொற் சரணா
தன்பதி யளகை வளனுறு போரூர்ச்
      சரவணா பிரணவப் பொருளே. (6)

யாவரு மறியா வறிவெலா மறிவுக்
      கறிவதா யிருந்தறி வித்து
மேவருட் குருவாய் வந்தறி வளித்தும்
      வினையனேன் றெளிந்தில னந்தோ
சேவலந் துவசம் பிடித்தசெங்
      கரனே திகழ்தரு சடாநநக் களிறே
தாவிய தகரப் பரியனே போரூர்ச்
      சரவணா பிரணவப் பொருளே. (7)

அத்தன்மேல் வித்தை மகற்குப தேசித்
      தஃதினை வருவித்தல் போலும்
பித்தனுக் கொருவன் மருந்தினை யளித்துப்
      பிறங்குணர் வளிக்குதல் போலு
நித்தமென் மனத்தைத் திருத்தியாண் டளித்த
      நினதரு ளேதெனப் புகல்கேன்
றத்தைகள் கொஞ்சுஞ் சோலைசூழ் போரூர்ச்
      சரவணா பிரணவப் பொருளே. (8)

நெஞ்சகத் துள்ளும் புறனுமாய் நிறைந்த
      நின்பரி பூரண நினைந்து
வஞ்சகச் சகப்பொய் யனைத்தையு மறந்து
      வாழுநா ளெந்தநா ளடியேன்
செஞ்சடைக் குழக னஞ்செவிக் கமுதாத்
      திகழ்மறை முடிவினைப் புகன்றோய்
தஞ்செனப் பணிவோர்க் கருடரும் போருர்ச்
      சரவணா பிரணவப் பொருளே. (9)

கணப்பொழு தெனினு மறக்கிலா தென்றுங்
      கனபரி பூரண வறிவிற்
பிணக்குறு மனமு மவித்தையுங் கடந்து
      பேதையேன் கலக்குநா ளுளதோ
மணத்தசெங் கழுநீர் மாலைதாழ் புயத்து
      வள்ளலே யுள்ளுவோர்க் கமுதே
தணப்பருங் கருணை தருந்திருப் போரூர்ச்
      சரவணா பிரணவப் பொருளே. (10)
-------------

30. திருப்போரூர்ச்சந்நிதிமுறை - குறுங்கழி நெடில் விருத்தம் - 6

திடம்பெறு கலைக ளனைத்துநின் றேத்துஞ்
      செய்யதாள் பூமிசை பொருந்த
நடந்துவந் தருளாற் குமாரசற் குருவாய்
      நாயினே னிருடெறு சுடரே
யடர்ந்திடு பிணியா லுனதுமெய் யடியா
      னசைவுறா தளித்தருள் புரிவாய்
தடங்கரி திரியுஞ் சந்தனப் பொழில்சூழ்
      சமரமா புரியுறை குகனே. (1)

பந்தமூ டறுத்துப் பாயிருள் சீக்கும்
      பரிதியி னிலகுநின் பதமென்
சிந்தையிற் குடியா விருத்தியாண் டருளுஞ்
      சிற்சுகக் கருணைமா கடலே
முந்துறு பிணியா னோந்துன தடியான்
      முடிவுறா தினிதருள் புரியாய்
தந்திக டிரியுஞ் சந்தனப் பொழில்சூழ்
      சமரமா புரியுறை குகனே. (2)

வடங்கிடந் தொளிரும் வாரணக் கோட்டின்
      வளர்முலை வள்ளிநா யகியுன்
னிடம்பெற வயங்கு புயங்கள்பன்
      னிரண்டி னிலகவுண் மகிழ்மணிக் குன்றே
விடந்தெறு கருடப் பார்வைபோ லுனது
      மெய்யடி யவன் பிணி தவிர்ப்பாய்
தடம்புய றுயிலுஞ் சந்தனப் பொழில்சூழ்
      சமரமா புரியுறை குகனே. (3)

சூர்குலத் திமிர முழுவது மிரியச்
      சுடர்விடு சோதிவே லுயர்த்த
வீரவம் புயத்தாய் மாரவே ளழகும்
      வெற்றிகொளுத்தம வடிவா
சீர்பெறு முனது மெய்யடி யவனைத்
      தெறுபிணி யறவுளத் தடைப்பாய்
தார்செறி பொழில்வாய்க் கார்துளி சிதறுஞ்
      சமரமா புரியுறை குகனே. (4)

அரையனூன் முறையே புரியினு மரைய
      னருள்சுதன் றனதுளப் படியே
விரைவுடன் புரியு மஃதுபோ லீசன்
      வினைவழி புரியினிற் போற்றுந் திருவடி
யவரைத் தீவினை தெறாது
      தீர்க்கநிற் கேவருங் கண்டாய்
தருமலி புளினத் திளவளை தவழுஞ்
      சமரமா புரியுறை குகனே. (5)

ஆலமார் களனு நீலமே னியனு
      மைங்கர னம்பிகை யமரர்
சீலமார் முனிவ ரியாவருங் களிக்கச்
      சிகிப்பரி நடத்துசே வகனே
ஞாலமீ துனது சீரடி யவனை
      நலிதரு பிணியற நினையாய்
தாலநீள் பாளை கட்குடஞ் சுமக்குஞ்
      சமரமா புரியுறை குகனே. (6)

வடகலைக் கடலுந் தென்கலைக் கடலும்
      வருதிரைக் கடலுமுண் டிருந்த
திடமுறு முனிவ னிடர்க்கட லகற்றச்
      சிற்சுகக் கடலளித் தவனே
யடியவர் துயர முறினிளங் கன்றுக்
      கானென வருவதுன் னருளாந்
தடமலர்ப் பிரசஞ் சங்கின்வா யொழுகுஞ்
      சமரமா புரியுறை குகனே. (7)

புவனமீ ரேழும் பூத்திடு மதுரப்
      பொற்பிடி நற்றனத் தீம்பா
னவமண மாறு குமுதவாய் வீசு
      நன்குறு மொண்சிறு களிறே
திவமுறு கதிர்முன் னிருளென வுனது
      சீரடி யவன் பிணி தவிர்ப்பாய்
தவமுனி வருக்குக் கரிகனி யளிக்குஞ்
      சமரமா புரியுறை குகனே. (8)

விண்குடி யேறச் சூர்நக ரோட
      விழிசிவந் தன்பரா னவர்க்குக்
கண்குடி யிருந்த மணியென வறிவிற்
      கதியினைக் காட்டுசெம் பொருளே
யெண்பெறு மடிமை படைத்தது ராள்வ
      தியல்பதா மிசைப்பதென் னடியேன்
றண்சுதை மாடங் கயிலைபோல் விளங்குஞ்
      சமரமா புரியுறை குகனே. (9)

கொடியசூர்த் தானைக் கருங்கட லுடைத்துக்
      நெடியவே லுயர்த்த புயத்திறை யுனது
குருதிவெஞ் செங்கட லாக்கு
      நீடரு ளேதென வுரைக்கே
னடியர்மார்க் கண்டர்க் காருயி ரளித்தாங்
      களித்தனை நினதடி யனுக்கு
தடிபடு மெழிலி யகிற்புகை மணக்குஞ்
      சமரமா புரியுறை குகனே. (10)
-------------

31. திருப்போரூர்ச்சந்நிதிமுறை - குறுங்கழி நெடில் விருத்தம் - 7

பரிதிபோன் ஞானச் சுடரொளி வீசும்
      பாழியங் களிற்றினுக் கிளையோய்
சுருதியின் முடிவைச் சிறியேனேற் களித்த
      சுந்தர மறப்பனோ வடியே
னரிதுணர் பொருள்க ணினதரு ளடைந்தோர்க்
      கரிதல வென்பது மறிந்தே
கருதிய பொருள்க டருந்திருப் போரூர்க்
      காங்கெயா தேங்கொளி மணியே. (1)

மகவினுக் கிரங்கு மன்னைபோற் கன்றை
      மருவிவந் திரங்கிய பசுப்போற்
புகலடைந் தவனுக் கிரங்கொரு வனைப்போற்
      புலையனேற் கிரங்கியாண் டளித்தோ
யிகலுறு சூலப் படையனீன் றெடுத்த
      வெந்தைநின் னடைக்கல மடியேன்
ககனமூ டுருவுஞ் சிகரியம் போரூர்க்
      காங்கெயா தேங்கொளி மணியே. (2)

நதியின திருபாற் கரைகளிற் றிரிந்து
      நடைதளர்ந் துழன்றிடு பசுப்போன்
மதிமருண் டுழன்ற சிறியனை யழைத்துன்
      மலர்பதத் திருத்தியாண் டளித்தோ
யதிகநின் கருணைக் கடலினுக் குவமை
      யாதினை யெடுத்தினி துரைக்கேன்
கதிதரு மறிஞர் பரவிய போரூர்க்
      காங்கெயா தேங்கொளி மணியே. (3)

மருளனை யளிக்கத் தொடங்கினோ னவன்றன்
      மனமொழி மெய்களி னிகழுந்
தெருளறு செயலை நோக்கிடா னதுபோற்
      சிறியனை யளித்தலுன் கடனே
யிருளற வீசுஞ் சுடர்விடு வடிவேற்
      கிறையவா குறுமுனி குரவா
கருடவா கனத்தோன் மருகனே போரூர்க்
      காங்கெயா தேங்கொளி மணியே. (4)

வஞ்சனே னெஞ்சின் மாற்றுதற் கரிதா
      மலினவா தனையெலாந் தவிர்த்திங்
குஞ்சிட வடியே னஞ்சலென் றளித்த
      வுனதருண் மறப்பனோ சிறியேன்
செஞ்சிறை யடித்துக் களத்தினை நிமிர்த்துச்
      சிரம்வளைத் தொலித்தசே வலனே
கஞ்சனெஞ் சறியா தவன்மகிழ் போரூர்க்
      காங்கெயா தேங்கொளி மணியே. (5)

இரவொடு பகலு மிரவொடு பகல்க
      ளின்றிய வீட்டினி திருந்துன்
குரவணி பாத கமலமீ தெழுந்த
      குளிர்நறா வெள்ளமென் றடைவேன்
மரகத வொளியே பருமயி லேறு
      மன்னவா வென்னுயிர்த் துணைவா
கரவறு முளத்தோர் நிலவிய போரூர்க்
      காங்கெயா தேங்கொளி மணியே. (6)

மனநினை வனைத்து மொழிந்துமூ டமும் போய்
      மன்னுநின் னருளொளி புகுந்தாங்
கினனிற வயிரக் கிரியென வசைவற்
      றிருக்குநா ளெந்தநா ளடியே
னனைமலர்க் கூந்தற் கவுரிகண் டுவப்ப
      நகைமுக மலர்ந்தெதிர் வருவோய்
கனவினஞ் சுரந்து பொழிதிருப் போரூர்க
      காங்கெயா தேங்கொளி மணியே. (7)

ஆடக வரைமேற் றுருவணைப் போல
      வாணவ திமிரநீத் திருந்த
வீடகம் புகுந்தங் கசைவற விருக்க
      வினையனேற் கென்றருள் புரிவா
யேடகக் கூந்தற் கன்னிய ரிருவர்க்
      கிசைந்துள கணவனே கமலக்
காடக மலர்ந்த வாவிசூழ் போரூர்க்
      காங்கெயா தேங்கொளி மணியே. (8)

உயிர்ப்பிணி தவிர்க்கு மருத்துவ னென்கோ
      வுடற்பிணிக் கொருமருந் தென்கோ
மயக்குறு மனத்தி னினைவெனும் பனியை
      மாற்றிய கதிரவ னென்கோ
வியப்புறு புரண சொரூபநின் னருளை
      வினையனே னேதெனப் புகல்கேன்
கயத்துரி தரித்தோன் புதல்வனே போரூர்க்
      காங்கெயா தேங்கொளி மணியே. (9)

ஆரியன் சுருதி யனுபவ மெனுமூன்
      றாலுமென் னகத்தினி லிருந்த
கூரிருள் கடந்த நினதரு ளதனைக்
      குறித்திலசயந் தருமாற்
சூரன துரமுங் கிரியுமூ டுருவிச்
      சுடர்விடு சோதிவேல் பிடித்த
காரணா வெங்கும் பூரணா போரூர்க்
      காங்கெயா தேங்கொளி மணியே. (10)
--------------------

32. திருப்போரூர்ச்சந்நிதிமுறை - குறுங்கழி நெடில் விருத்தம் - 8

மணிகிடந் திமைக்கும் பஃறலை யுரகன்
      வளைபடந் திசைதொறுந் தடவ
வணியல கெடுத்துச் சிறைபுடை யடித்திங்
      காடிடுந் தோகைவா கனனே
கணிதமி லுயிர்கள் வாடிடா தருளாற்
      கனமழை கொடுத்தியற் புதமே
குணில்படு முரச முழங்கிய போரூர்க்
      குமரனே யமரர்நா யகனே. (1)

கனைகடன் முகடு புழுங்கிட வெழுந்து
      கணவுடு கரந்தொளிர் கதிர்போ
னினைதரு கருவிக் குழுவெலாங் கரந்தெ
      னெஞ்சகத் தெழுந்தபே ரொளியே
யனையில் மினிய கருணையா லுலகுக்
      கம்புயன் மழைக்கொடுத் தாய்க்குக்
கொனையுறு கைம்மா றேதுரை போரூர்க்
      குமரனேயமரர்நா யகனே. (2)

விரிதலைப் புவனம் வெயிலினில் வெதும்பி
      வீதரு வாயினின் மிகுத்த
கருணையான் மாரி தந்துகாத் தளித்த
      கனதையைச் சிறியனோ அறிவே
னருணை யங்கிரிநாதன்றமிழ் மணமு
      மரியகீ ரன்றமிழ் மணமுங்
குரவினன் மணமுங் கமழ்தரு போரூர்க்
      குமரனே யமரர்நா யகனே. (3)

வேதநான் முகனும் விண்ணவர் கோனும்
      விரிசடை முனிவரு முனது
பாதபங் கயத்துக் கவர்கள்சீ ரணிகைப்
      பங்கயங் குவிக்கநன் களித்தோய்
காதுறு பசியா லுயிர்தவி யாமற்
      கணமழை தந்துகாத் தளித்தாய்
கோதறு கருணைத் தெய்வநீ போரூர்க்
      குமரனே யமரர் நாயகனே. (4)

வேடுவர் குலத்தை விளக்கிய மவிலும்
      விண்ணர சளித்தகோ மயிலும்
பீடுறு புடையில் வாழ்வுற நிவந்த
      பெரியநற் பவளமால் வரையே
வாடுறு முயிக்க டழைத்திட மாரி
      வளத்தை நீ கொடுத்ததற் புதமே
கோடுறு சந்தச் சாரலம் போரூர்க்
      குமரனே யமரர்நா யகனே. (5)

கன்றொரு குணிலா விளவெறிந் தவற்குக்
      காதன்மீக் கொளவரு மருக்
வென்றுநன் மாரி தந்துநீ யெம்மை
      யெழிலுடன் காப்பதுன் கடனே
நன்றுதீ தென்ற பொருளெலாங் கடந்த
      குன்றுதோ றாட லுவந்தவா போரூர்க்
ஞானவீ டுதவுசற் குரவா
      குமரனே யமரர்நா யகனே. (6)

முக்கணாயகனு மவன்புடை மயிலு
      முறைமுறை யெடுத்துமுத் தாடுந்
தக்கநற் குருந்தா யிருந்தநீ யவரிற்
      றண்ணளி யாற்பெரி யவனே
மிக்கவா ருயிர்வா டுறுந்தரு வாயில்
      விண்மழை தந்துகாத் தளித்தாய்
கொக்கடு சத்திச் சுவலனே போரூர்க்
      குமரனே யமரர்நா யகனே. (7)

தங்கல ரெனுமச் சூர்க்குலம் வீட்டித்
      தமனியத் தருவுறை சசிக்கு
மங்கல நான்முன் கொடுத்துவா னவரை
      மகிழ்வொடுங் காத்தளித் ததுபோ
லெங்களை யின்றும் வான்மழை பொழிவித்
      தெழிலுடன் காத்தளித் தனைகாண்
கொங்கலர் சோலைச் சாரலம் போரூர்க்
      குமரனே யமரர்நா யகனே. (8)

பாகடு வெள்ளைக் குஞ்சரப் பிடரிற்
      பால்புரை வெள்ளியங் கிரிமேற்
சேகுறு பவள மால்வரை யிருந்த
      செய்திபோற் சுரர்தொழ விருந்தோய்
வேகவெம் பசியால் வருந்திடா தெம்மை
      விண்மழை தந்துகாத் தளித்தாய்
கோகன கப்பூந் தடஞ்செறி போரூர்க்
      குமரனே யமரர்நா யகனே. (9)

மாண்செறி யடியார் வேண்டிய வரங்கண்
      மாறிடா தளித்திடு முனைப்போற்
காண்கிலே னொருதே மூன்றுல கிடத்துங்
      காட்சியாற் கேள்வியாற் றமியேன்
சேண்படு முகிலான் மழைவரு வித்துச்
      சிற்றுயிர் காத்தினி தளித்தாய்
கோண்படு சங்க முழங்குறு போரூர்க்
      குமரனே யமரர்நா யகனே. (10)
---------------

33. திருப்போரூர்ச்சந்நிதிமுறை - குறுங்கழி நெடில் விருத்தம் -9

அருட்கட றதும்பிக் கவுட்செவிச் சார
      லருவிபாய்ந் தெழிறரு மசலம்
விருப்புற மருப்பிற் கடகமொன் நெடுத்து
      வீறுகிம் புரியெனத் தரிப்போய்
சுருப்பினந் தொடருங் கதுப்பினார் மயக்கிற்
      றுளைந்துறா தெனையினி யளிப்பாய்
பொருப்பன புயத்தோய் மயிற்பரி யுகைத்தோய்
      போரிவா ழாறுமா முகனே. (1)

அறிவுதன் நினைவிற் கலந்துறு போதி
      லரும்பர முபிர்சக முளவாம் பிறிவிலவ்
வறிவந் நினைவினை யகன்றாற் பேதாபே
      தங்களொன் றின்றி
நெறியுறத் தானே தன்னிடத் திருக்கு
      நிச்சய மென்றெனக் கிசைத்தான்
பொறிமறு மார்பன் மருகவே ளெனையாள்
      போரிவா ழாறுமா முகனே. (2)

நினைவறி வெனவிவ் விரண்டினை விரித்து
      நிகழ்த்துறுஞ் சுருதியீண் டிவற்றி
னினைவிரண் டாகும் பரனினை வெனவு
      நிலவுறு முயிர்நினை வெனவும்
புனைபர நினைவு சகமுயிர் நினைவு
      புரிந்ததைப் பிடிக்குமென் றிசைத்தான்
புனையரும் பாரஞ் சொரிதரு நெய்தற்
      போரிவா ழாறுமா முகனே. (3)

பரனது முகத்திற் குலகுபொய் சீவன்
      படிற்றுளக் கினுக்கது மெய்ம்மை
திரமுறு சாட்சி தானெனச் சீவன்
      றெரிந்திடிற் பரன்மன மிவற்காம்
விளங்குறு மென்றெனக் கிசைத்தான்
      விரவிய சகமப் போதுபொய் யாகி
புரமெரி செய்தோ னுவந்துபெற் றெடுத்த
      போரிவா ழாறுமா முகனே. (4)

அறிவினை நோக்கி லுயிர்வய மாகு
      மகமனஞ் சகத்தையல் வுயிர்தான்
பிறிபட நோக்கின் மனத்தினின் வயமாம்
      புறப்புமீ திதன்வயப்படாது
நெறியுறு மறிவின் மிகப்பரி சிக்கி
      னினைப்பருங் கதியுமீ தென்றான்
பொறிமயி லேறுஞ் சேவக னெனையாள்
      போரிவா ழாறுமா முகனே. (5)

ஏதொரு நினைவிங் கெழுமது மனமீ
      தனதென வருமிதன் மூலந்
தீதறு மூல வகங்கர மீதியா
      னென்றெழுஞ் செப்புமிங் கிவைக்கு
மூதிரு ளவித்தை மூலம் தகன்றான்
      மொய்யறி வெனவெனக் கிசைத்தான்
போதக மார்க்கும் புகன்றமெய்க் குரவன்
      போரிவா ழாறுமா முகனே. (6)

சச்சிதா னந்த மெனும்பெயர் மூன்றிற்
      றழுவுமா வரணமூன் றிவைதா
நிச்சய வறிவாற் சமாதிஞானத்தா
      நிகழ்வுறு சகசஞா னத்தா
லச்சமின் றகலு மிவற்றினை யறியென்
      றருட்கட னிறைத்தெனை யளித்தான்
பொய்ச்சழக் ககன்ற மனத்தினார் நினைக்கும்
      போரிவா ழாறுமா முகனே. (7)

சுருதியின் றுணிவா னினைவுகொண் டுலகந்
      துச்சமென் றுணர்தனிச் சயமாங்
கருதுறு நினைவை யடக்கியில் வுலகங்
      கானலென் றுணர்ந்திடல் சமாதி
யிருவகை யாய்முன் னுரைத்தவை யின்றி
      யிலங்கறி வுருவமா யிருத்தல்
பொறுவரு சகச ஞானமென் றிசைத்தான்
      போரிவா ழாறுமா முகனே. (8)

நிச்சய ஞானஞ் சமாதிஞா னங்க
      ணிராசையார் மனத்தினிற் கலங்கா
தெச்சமென் றிருக்கு மாசையார் மனத்தி
      லிரண்டுஞா னங்களுங் கலங்கு
நச்சுதல் வெகுளி யின்றிய சகச
      ஞானிக ணசையுளர் போலப்
பொய்ச்சகத் துறினுங் கழங்குறா ரென்றான்
      போரிவா ழாறுமா முகனே. (9)

சித்தொரு நான்கிற் பிரமங்கூ டத்தன்
      செப்புமா யாரகி தங்கண்
மத்தமி லீச னுயிர்கடா மாயா
      சகிதங்கள் வழுத்துமிவ் வீசன்
சத்தெனுந் தன்னை மறப்பிலா மையினாற்
      றகுகதி தேடிலன் சீவன்
பொய்த்தலில் வீடு தேடுமென் றிசைத்தான்
      போரிவா ழாறுமா முகனே. (10)

ஓதுரு நாம மியானென தசுத்த
      முயர்ந்துள சுத்தவா தனைக்
ளாதிய திரோத மனுக்கிர கித்தா
      லாக்கைவாக் கியக்கவா தனைக
ளேதமில் காட்சி காண்பவ னென்ற
      விவற்றுளோர் வகுப்பினான் மனத்தின்
போதமி னினைவைப் பகுத்தடக் கென்றான்
      போரிவா ழாறுமா முகனே. (11)

கயிலைவா ழரசு தந்தகற் பகமக்
      கனவர சுறைகொடிக் கனிநூ
லியற்புறு கற்புக் கன்னிமா ரிருவ
      ரிருமருங் குறைவட மேரு
வயிலுடன் மயிலுங் கோழியு மாடு
      மழகுடன் படைத்தமெய்க் கடவுள்
புயலினஞ் சுரந்து பொழிதரு நீதிப்
      போரிவா ழாறுமா முகனே. (12)

தடவரைப் பிறந்த நதியராச் சென்று
      தண்கடற் படமுடி மீது
சுடர்விரி யுதய கதிர்மணி விளக்குஞ்
      சுந்தரப் போரிவே லிறையே
மடமையின் றடியே னுனதரு ளமிர்த
      வாரியின் மூழ்கிட நினையாய்
குடமுனி சிவந்த சடைமுடி யிவர்ந்த
      குரவணி சரணவா ரிசனே. (13)
--------------

34. திருப்போரூர்ச்சந்நிதிமுறை - குறுங்கழி நெடில் விருத்தம் - 10

நல்லின முனது திருவடி விடய
      நாடுறு பொறியுடல் கரணம்
புல்லிய வினமென் றறிந்தஃ தடைந்து
      பொருந்துமற் றிவைவிட வறியேன்
கல்லென விழியுஞ் சாரல்பா யருவி
      காழகிற் றிரண்மலை காட்ட
மல்லலைக் கடல்சங் கினமலை காட்டி
      மலிசம ராபுரிக் குகனே. (1)

ஏழ்கட லனைய வருள்கொடு புவிநீ
      யிலங்குசற் குருவதாய் வந்த
போழ்தெலா மாறு புரிந்த வெங் கொடிய
      புலையனை யாண்டவா றறியேன்
வேழமா மலையிற் றாழ்மத வருவி
      வௌந்துளைந் திளம்பொழின் மூச
மாழைவண் டினங்கள் பூமணங் கமழு
      மலிசம ராபுரிக் குகனே. (2)

பாதகம் புரியு மெனதுள நினைக்கும்
      பரிசினி லொருசிறி தெனினுங்
கோதறு முனது திருவடிக் கன்பு
      கொண்டுநின் றுருகிடக் காணே
னாதுறு குரவம் பூச்சிறு குழவிக்
      கூன்கழி ஞொளை விடு பிழியை
மாதவி மனையிற் சூர்மக வூட்டி
      மலிசம ராபுரிக் குகனே. (3)

கொங்கையங் குவடு மார்பிலூ டுருவக்
      வெங்கனன் மெழுகா யுருகிடு முளத்து
கொடியிடை மகளிரைத் தழுவி
      வினையனே னுய்யுநா ளுளதோ
திங்களங் குழவிச் சடையவன் புயத்துன்
      றிருவடிக் கமலமு மவன்பான்
மங்கைதன் றனத்துன் குமுதவாய் மலரு
      மலிசம ராபுரிக் குகனே. (4)

பிறப்பறு வீட்டுற் பவமெனக் கருளிப்
      பிறங்குசிற் சுகவமிர் தருத்தி
யொறுக்குமென் போத மனைத்தையு மறுத்திங்
      குலகிய லுணர்வெலா மறைத்து
விறற்றகு முனது திருவடி விளக்கி
      மேன்மையைந் தொழிலிவண் புரிவாய்
மறைக்குரி யவனா லினிப்பிறப் பறியார்
      மலிசம ராபுரிக் குகனே. (5)

உருமென வெயிறு கடித்திதழ் மடக்கி
      யுழல்விழி பொறிபட விழித்து
வெருவரு தோற்றக் கூற்றுவந் தடரும்
      வேலையுன் பாலெனை யழையாய்
பிரசவன் கடம்பு செறியுமுன் புயத்துப்
      பிறங்குறு குறமகள் விழியு
மருமலர்க் கூந்த லிளம்பிடி விழியு
      மலர்சம ராபுரிக் குகனே. (6)

கண்ணிவா யிரையை யருந்திடப் புகுந்து
      கடுஞ்சிறைப் பறவைசிக் குறல்போற்
பெண்ணுறு மின்பங் கருதியான் மாயப்
      பிறப்பிடை யகப்படு கின்றே
னண்ணுகண் மணியே தண்கட லமிர்தே
      நற்கதிச் சுவைதரு கரும்பே
மண்ணுறு மணியே வடித்தவே லரசே
      மலிசம ராபுரிக் குகனே. (7)

பிணியுடல் வெறுக்கேன் பெண்சுக மறுக்கேன்
      பேணுமூ ணொறுக்கிலே னின்றாட்
கணியநல் லடியார்க் கன்புசெய் திடிலே
      னாதனே னேத்மென் றறுமே
கணிபடு நறும்பூஞ் சிறுகுவை யதனைக்
      கான்புலிக் குருளையென் றஞ்சி
மணிபடு மான்கன் றிரிதரு சாரன்
      மலிசம ராபுரிக் குகனே. (8)

பொறிவழி விடய மறிநன வதனிற்
      பொருந்திய வாதனை மிகவுஞ்
செறிதரு கரண நான்குறுங் கனவிற்
      றியங்கிமற் றிவையெலா மிறந்த
நெறியறு மவித்தை யிருளுறுஞ் சுழுத்தி
      நிலையினி லறிவறத் துயின்று
மறுகுறு கின்றே னென்றுனை யடைவேன்
      மலிசம ராபுரிக் குகனே. (9)

குறுமைசேர் வடிவு நெடுமைமா தவமுங்
      கொண்டுதென் மலையுறை முனிக்கு
மறைமுடி விருந்த விளக்ககத் தேற்றி
      மருளிரு டுமித்தசற் குருவே
சிறுமையே புரியுங் கொடியனை யாளத்
      திருவுளத் தடைத்திடு கண்டாய்
வறுமைதீ தறியார் களிப்புறு மாட
      மலிசம ராபுரிக் குகனே. (10)
------------

35. திருப்போரூர்ச்சந்நிதிமுறை - சந்தக்கழி நெடில் விருத்தம்

கருணைப் பெருநற விருபுற னொழுகிய
      காரண மலைமகி ழுந்துணைவா
முரணுற் றிறிமல விருளற வொளிதரு
      முளரிநி கர்த்ததி ருத்தாளாய்
தெருளுற் றிடுபே ரின்பக் கடலிடை
      சிறியேனுறவைத் தினிதாளாய்
தரு ணச் சுந்தர மாறா திலகிய
      சரவண சமரப் பதியானே. (1)

சிவன்மெய்ச் சுறவவன் மடிமிசை நிலவிய
      செந்துகி ராடச் சிறுமதலாய்
புவனத் தொடுசர வசரம ளித்தருள்
      பூரணி தருமொரு காரணனே
யவலச் சிறியவ னேனையளித்தாய்க்
      கையா கைம்மா றுளதுகொலோ
தவளக் கலைமயில் புகழப் பெறுபுய
      சரவண சமரப் பதியானே. (2)

களவிற் கனியன களமுள விறைதரு
      கனகிங் கிணிநரல் சிறுதாளா
விளவிற் கனிவிழ வொருகன் றெறிதரு
      விமலனு வப்புறு குலமருகா
சுளகுச் செவிமத மலையென வெழுதரு
      துகளற வெதுள மறநினையாய்
தளவக் கொந்தள வனமயின் மகிழ்வுறு
      சரவண சமரப் பதியானே. (3)

பொதியக் குறுமுனி மதியிற் றழுவிய
      பூரண னேபுகழ் காரணனே
விதிபுத் தியிலறி வருமெய்ப் பொருளினை
      விமலற் குதவிய நாயகனே
கதியெற் குன திரு பதமுற் றெனைவிட
      ககனத் தவரமு றுறைகீரோ
ததியிற் றுயில்பவன் மருகச் சிறுபிளை
      சரவண சமரப் பதியானே. (4)

உதவிக் கொருதுணை யனையென வெனைவந்
      துறுதுய ரடையா தருடருவோய்
மதனப் பயல்விடு கணைகளி லடியேன்
      வாடா துனதிரு தாடாரா
யிதழீச் சடைநட ராயன ளித்தரு
      ளெண்ணிய தருபுண் ணியராயா
சதநற் றளமுள முளரியி னிறமுள
      சரவண சமரப் பதியானே. (5)

புனநற் குறமகள் விழியிணை களிபெறு
      புனைமலர் நீபத் தார்மார்பா
மனநற் கமலம் திடைதிரு வடியிணை
      மருவத் திருவுளம் வைத்தெனையாள்
கனகுக் கிடவிரு துடையவ விடைவரு
      கடவுள்பு யத்தினை மிசைவளர்வோய்
தனதத் தனவென நடமயின் மிசைவரு
      சரவண சமரப் பதியானே. (6)

மதியொத் துளமுக மடவா ரிருபுடை
      மகிழ்வுற நிகழ்வுறும் வடிவழகா
வதிகப் பெறுவள மடியவர் பெறவரு
      ளம்புய மலரன செங்கரனே
துதிபெற் றுளசுக சலதிக் கிடையதி
      சமடனை வைத்திட நினைதிகொலோ
ததிதித் திமியென நடமயின் மிசைவரு
      சரவண சமரப் பதியானே. (7)

கலகப் பிணைவிழி யரிவையர் கிறிசெறி
      கலவியை நலனென நனிநாடிப்
பலகற் பனைநினை மனமறை நினதருள்
      பாலித் தடியெனை யாளுதியே
யுலகிற் பெரியவர் பணிதரு பரிதியி
      னும்பர்கள் கும்பிடு நெடுவேலாய்
தலைமைப் புகழ்பெறு மாறிரு கரமுள
      சரவண சமரப் பதியானே. (8)

கடகத் தணிமணி மகுடச் சிரமணி
      கதிரொளி வீசத் திசைதோறு
நடனச் சிறைமையின் மிசையுற் றடியர்மு
      னளினத் திருமுக மலர்வோனே
மடமைச் சிறியனு னருளைப் பெறநினை
      வனசத் திருமயின் மருகோனே
தடவெற் பெனவளர் தவளக் களிறிவர்
      சரவண சமரப் பதியானே. (9)

அறமிக் குளவுள முடையவர் மகிழ்வுற
      வ்வரெதிருறவரு மொருநீதான்
மறமிக் குளசிறி யவனே னெதிருற
      வருநா ளொருநா ளுளதுகொலோ
திறமிக் குளசூர் மார்பூ டுருவச்
      செஞ்சுடர் நெடிவேல் விடுவோயே
தறுகட் புலியத ளுடையவ னுதவிய
      சரவண சமரப் பதியானே. (10)
---------------

36. திருப்போரூர்ச்சந்நிதிமுறை - கட்டளைக்கலித்துறை

அருளேமதமெனக்காட்டியடியரகத்திருந்த
மருளே துடைத்தமதமாமுகத்தன்மகிழ் துணைவா
தெருளேயடியெனக்கீகுதல்வேண்டுஞ்செழுமறையின்
பொருளே மயிலவனே சமராபுரிப்புண்ணியனே. (1)

வந்திக்குமன்பர்க்கு வாழ்வுங்கதியு மகிழ்ந்தளிக்குங்
கந்திக்களத்துமை மோந்துகொளாறு கமலத்தனே
சிந்திக்குமென்னெஞ்சை நின்பாதகஞ்சத்திற் சேரவைத்தேன்
புந்திக்குளே நிறைவாய் சமராபுரிப் புண்ணியனே. (2)

நதியுமதியுங்குடிகொண்டவார்சடைநம்பனுக்கோர்
நிதியுந்தருவுமெனவந்தவாநினதன்பருக்குக்
கதியுந் திருவுந் தரு வள்ளலேகடையேனையுமாள்
பொதியுமலர்ப்பொழியசூழ்சமராபுரிப்புண்ணியனே. (3)

பாதகமெண்ணிலி செய்தேனைவாவென்றுன் பாதகஞ்சப்
போதகமாவலர்மீதுவைத்தோய்நின்புகலடியேன்
காதகங்கொள்ளச்சிவனுக்குநான்முகன் காணவொணாப்
போதகஞ்செய்தவனேசமராபுரிப்புண்ணியனே. (4)

கன்னியராமிருவோருமிருபுடைகாதலுற
மன்னியநாப்பணிருந்தனைவோருக்கும்வாழ்வுதரு
நின்னியல்பேதெனவோதுகிற்பேனெடுமான்மருகா
பொன்னியன்மேனியனே சமராபுரிப்புண்ணியனே. (5)

இகலடைந்தேவருஞ்சூர்குலமாயவிருளினுக்கோர்
பகலடைந்தாலெனவேல்விட்டதீரபவனனிலா
தகலடைந் தார்சுடர்போனின் றுனைப்பணியன் பரைப்போற்
புகலடைந்தேனையுமாள்சமராபுரிப்புண்ணியனே. (6)

கவனமதிக்குமென்னெஞ்சைத்திருத்திக்கடவுளரு
மெவனமதிக்கு நின்றாளுனவைத்திங்கெனையளிப்பாய்
சிவனமதிக்குஞ்சிறுமதலாய்புகழ செப்பிமுப்பாற்
புவனமதிக்குஞ்சமராபுரிவருபுண்ணியனே. (7)

மறைகொண்டபல்கலையாய்ந்தபொதியமலைமுனிக்கு
நிறைகொண்டபோதமுரை செய்ததேசிகநின்னடியேன்
கறைகொண்டபவ்வத்தின் மூழ்காதுகாக்கக்கடனுனக்கே
பொறைகொண்டமாதவர்சூழ்சமராபுரிப்புண்ணியனே. (8)

நாகப்படமணிகுத்தியெடுத்து நடம்புரியுந்
தோகைப்பரிமிசை தோன்றியவாதுகளின்றடியே
னேகத்தியானத்திருந்திளைப்பாறவினிதளிப்பாய்
போகத்து நாகர்புகழ்சமராபுரிப்புண்ணியனே. (9)

மறுமைக்குறித்த பயத்தாற்பணிபவர்மத்திமரே
சிறுமைக்குறித்துப்பணிவாரதமர்கள் செப்புமிந்த
வுறுமைகுறித்தில தன் பாய்ப்பணிபவருத்தமரே
பொறுமை குறித்தவர் சூழ்சமராபுரிப்புண்ணியனே. (10)

நடிக்குமெய்யன்பரினென்போலிகணிற்கநம்பினற்கே
பிடிக்குளடங்கிடையார்கட்செலாதுளம்பேணி நின் பொன்
னடிக்குளுருகுங்கண்ணீர்வார்ந்துரைதழுத்தங்கமெல்லாம்
பொடிக்குமுரோமஞ் சமராபுரிவரு புண்ணியனே. (11)

கோழிக்கொடியைநின் வேலைமயிலைக்குறித்தவரை
யூழிக்கனலுமணுகாதெனினுனையேயடைந்தேற்
காழிப்பவமுமுளதோவரிவையரப்புசந்தம்
பூழிக்குளுமணக்குஞ்சமராபுரிப்புண்ணியனே. (12)

முருகாவெனவுனையோ துந்தவத்தினர் மூதுலகி
லருகாத செல்வமடைவார்வியாதிபடைந் துரையா
ரொருகாலமுந்துன்பமெய்தார்பரகதியுற்றிடுவார்
பொருகாலனாடுபுகார்சமராபுரிப்புண்ணியனே. (13)
---------------

37. திருப்போரூர்ச்சந்நிதிமுறை - கட்டளைக்கலித்துறை

நாரணனாரணனெந்நாளும்போற்றுநளினபத
காரனான் பாகம்பிரியாதகன்னிகளிக்கவருஞ்
சீரணவுன்பதச்செந்தாமரையென்சிர சில்வைப்பாய்
வாரணவெல்கொடியாய்சமராபுரிவானவனே. (1)

வாதமுடன் பித்தமையென்னு மூன்றின் வரும்பிணி தீர்த்,
தேதன்பிழைபொறுத்தேன்று கொள்ளா யெழிலார் குறப்பெண்,
காதல் புரிந்தணை பன்னிருசெம்புயக்காங்கெய னே,
மாதமும்மாரிசொரி சமராபுரி வானவனே. (2)

அந்திப்பிறையணி வேணியினார் தந்தவானை மதஞ்
சிந்திப்பொழிந்துவரவேதியானித்தசேவலனே
யுந்திப்பவக்கடல் விழாதெனையுன்னுபயசரண்
வந்திக்கவே தருவாய் சமராபுரிவானவனே. (3)

கரும்போதவளக் கடலமிர்தோ கனமாமழையோ
வரும்போதெழுகறவோ வரவோவைய நீக்கியின் பந்
தரும்போதமோநின்னருளினையேதென்றுதானுரைப்பேன்
வரும்போதகக்களிறேசமராபுரிவானவனே. (4)

நோயேன்றனக்கொருசஞ்சீவியஞ்சநுவன்றெழுந்த
பேயாந்தனக்கொருமந்திரமாமெனைப்பேணுதற்கோர்
தாயாமினியதமராமெனக்குறுதஞ்சமுயா
மாயாக்கருணைதருஞ்சமராபுரிவானவனே. (5)

தோகைமயிற்பரியேறிவந்தென்னெதிர்தோன்றியரு
ளோகைமிகவும்புரிந்தெனையாள்வதுமுண்டுகொலோ
பாகை மறுத்தமொழித்தெய்வயானை பரிகணவா
வாகைபுனைவடிவேற்சமராபுரிவானவனே. (6)

ஆறங்கநான்மறையோ துங்குறுமுனிக்கானமறைப்
பேறங்குதவும்பெருமானமிர்தம்பிறங்கியெழு
பாறங்குவாரிதுயின்றோன் மருகனின் பாதமுனு
மாறிங்கெனக்கருளாய்சமராபுரிவானவனே. (7)

ஏழைத்தொண் டேனுனை யண்டிநின் றேனெனை யே ன்று கொள்ளாய்,
மாழைப்பொ ருப்புவில் லாளன் மைந்தா நினை வந்திக்கிலாக்,
காழைப் பொருவு மனத்தினனாயினுங் காப்பை கண்டாய்,
வாழைப் பெருங்குலஞ் சூழ்சமரா புரி வானவனே. (8)

பேயன் பிழையையும் பித்தன் பிழையையும் பேசரிய
சேயின் பிழையையுந் தேரார் பெரியர் சிறிய புன்மை
நாயன் பிழைதனை நீ பொறுத் தாளுதி நாயகமே
மாயன் றிருமருகா சமராபுரி வானவனே. (9)

அருண்மேக மென்னகத் தூடெழு மானந்தவாரியுண்மைப்
பொருண்மா தவருளம் புக்குறை பூரணம் போத நல்குந்
தெருள்வாச வன்முதற் றேவரும்போற்றிய தெய்வநெஞ் சின்,
மருண்மாசு தீர்க்குஞ் சமரா புரிவரு வானவனே. (10)
---------------

38. திருப்போரூர்ச்சந்நிதிமுறை - கட்டளைக்கலித்துறை

கண்ணிற்சிறந்த கருமணியே கடையேனிதயத்
துண்ணிற்குமோ ரொளியே வெளியேயுயர் தேவரெல்லாம்
விண்ணிற்றருமலர் கொண்டேயிறைஞ்சு முன்மென்மலர்த்
டண்ணிற் சிறந்ததன்றோ சமராபுரிச் சண்முகனே. (1)

விண்டலைகொண்டநின்சேவடிக்கன்பு செய்வித்தகரே
மண்டலைவாரிப்பவங்கடப்பார்மற்றையோர்களெல்லாங்
கண்டலைமென்மொழியார்கருவாழிகடக்கறியார்
தண்டலை மண்டுசமராபுரிவருசண்முகனே. (2)

தீதேபுரியுங்கொடியேனகத்துன் செறிகழற்றாட்
போதேயிருக்கவரந்தருவாய்புனக்குன்றவர்த
மாதேபுணருமணிப்புயத்தாய்வண்டுகிண்டி மொய்க்கத்
தாதே சொரிபொழில்சூழ்சமராபுரிச்சண்முகனே. (3)

ஆலஞ்செறிந்த கறைமிடற்றாற்குமகத்தியற்குங்
கோலஞ்செறிந்த மறைமொழி கூறுங்குருபரனே
சீலஞ்சிறிதுமறியேனையாண்டதிறனென்கொலோ
தாலம்புகழுஞ்சமராபுரிவருசண்முகனே. (4)

வஞ்சகநெஞ்சினனாயினுமாதர்வலையிற்கொட்டும்
பஞ்சன நெஞ்சினனாயினுமுன்றன் பணிபுரியா
தஞ்சுறு தீ வினை செய்தேனெனினுமடியனுக்குன்
றஞ்சமலா துளதோசமராபுரிச்சண்முகனே. (5)

அரையிருணோக்கும் விழிபோன்மல விருளாழு மென்னைப்
புரையறுமுன்மலர்த்தாட்பிரகாசம்புகுதவைப்பாய்
வரையுறுதோள் வள்ளிநாயகி கொங்கைமணந்தவனே
தரையுறுமன்பர்புகழ்சமராபுரிச்சண்முகனே. (6)

தீதொன்றுநெஞ்சினனென்றுகொலுன்றன்றிருவடியாம்
போதொன்றிரதநறைபெறுவேன்பொருசெலிணைபோற்
காதொன்றுகண்ணினள்கானக்குறத்திதன்கா தலனே
தாதொன்றுபூம்பொழில்சூழ்சமராபுரிச்சண்முகனே. (7)

விடையுடையானுங்கருடத்துவசனும்வெங்குலிசப்
படையுடையானுமனக்கொடியானும்பணி பெரியோய்
கடையுடைநாயிற்றிரியுமென்னாசைகளைத்திமிரத்
தடைவிடுநெஞ்சினர்சூழ்சமராபுரிச்சண்முகனே. (8)

காரார்பிறவிக்கடலைக்கடத்துமென்கன்மனத்தை
நீராயுருக்குமெனீடுயிர் மூடிநிறைந்திருண்ட
தீராமலப்பிணிதீர்த்திடுமுன்றன்றிருவடியே
தாரார்பொழில்புடைசூழ்சமராபுரிச்சண்முகனே. (9)

நாயேனுன் சேவடிவேண்டு கொளாதுநலிபிணியான்
மாயாமலுன்னடியேன்றனைக்காத்தனைமற்றி தற்கோர்
பேயேன்பின் செய்யுங்கைம்மாறுளதோபெரியாய்சிறியேன்
றாயேயெனதுறவேசமராபுரிச்சண்முகனே. (10)
--------------

39. திருப்போரூர்ச்சந்நிதிமுறை - நேரிசை வெண்பா

கலைமுகங்கள் போற்றுங்களிற்றுக்கிளையா
னிலைமுகங்கொள் வேலுக்கிறையா - னிலைமுகங்க
ளாறுடையானாறிரண்டு தோளுடையானம்போரூர்
வீறுடையானென்றுளயேவேண்டு. (1)

வேதாந்தச் சென்னிமிசையிருக்குந்தெய்வமே
போதானந்தச்சுடரேபுண்ணியனே - நாதாந்த
வின்பத்தைக்காட்டி யெனையளிப்பாய்போரூரா
துன்பத்தையெல்லாந் துடைத்து. (2)

சும்மாவிருவென நீசொல்லப்பொருளொன்று
மம்மாவறிந்திலமென்றன்றுரைத்த - வெம்மா
னருணகிரிநாதனநுபவநாயேற்குக்
கருணைபொழி போரூராகாட்டு. (3)

மன்னுபிரமத்தில் வாழபினாசத்தியிடத்
துன்னும்பினாசத்தியுண்டதனிற் - றுன்னு
முலகுண்டதனையுளம்பிடிக்குமென்றா
னிலகும்போரூர்வாழிறை. (4)

அறிவைவிடத்தோன்றிடாதம்புவியு நெஞ்சுஞ்
செறியறிவாய்நில்லென்று செப்பிப் - பிறிவறவென்
னெஞ்சைத்திருத்திநிறையவைத்தபோரூரன்
கஞ்சத்திருத்தண்டைக்கால். (5)

இளம்பிடியுமானுமிசைகற்பகமொன்
றுளங்குடியாக்கொண்டெனைவிட்டோவா-களங்கனிபோற்
கண்டத்தானீன்றதனுகாரணமெய்ப்பூரணத்தா
ரண்டத்தான்செய்போரூராங்கு. (6)

தஞ்சமெனவந்துன்சரணடைந்தநாயினேன்
நீக்கித்திருப்போரூர்நின்மலாநின்னடிமை
வஞ்சமனநினைவால்வாடினேன் வஞ்சமன
யாக்கியெனையாளுவாய். (7)

உன்னடிமைக்கேவிரதமுற்ற சிறியேன் மனமுன்
பொன்னடிமைக்காகாத பூணுமோ - நின்னடிமை
யாக்குதற்கும் போரூரணிநகராய்நாயேனைக்
காக்குதற்குமுன்றன்கடன். (8)

தீனமனம்போக்கிச்சிறியேனுக்குன்றாளுக்
கானமனந்தந்தெனையாளுவாய்-ஞானபர
முத்தாநம்போரூர்முருகாவென்னாருயிருக்
கத்தாகருணாலயா. (9)

ஆனந்தத்தேனிருக்குமா றுமுகக்கற்பகமே
யீனந்தீர் போதவிரவியே - தேனுந்து
நீயத்தொடையாய் நிகழ்போரூரையாவென்
றாபத்திரயந்தவிர். (10)
---------

40. திருப்போரூர்ச்சந்நிதிமுறை - அடைக்கலப்பத்து

மணியேயனவைங் கரற்கிளைய
      மன்னே பொன்னே வானமிர்தே
யெணியேயிருவர் பணிந்தேத்து
      மீசனுவந்த சிறுமதலாய்
நனியேயெனைவந் தாண்டுகொண்ட
      நாதாவினி நாயேனை விடே
லணியேசிறந்த போரூரா
      வடியேனுன்ற னடைக்கலமே. (1)

வேயேயனதோ ளுமையுதவு
      மிளிர்பொற்கலசப் பாலுண்ட
தூயோயிருகன் னியர்கணவா
      சோதிவேலா மயில்வீரா
நாயேனிழைத்த பிழைபொறுத்து
      னளினபாதந் தரல்வேண்டு
மாயேயனைய போரூரா
      வடியேனுன்ற னடைக்கலமே. (2)

மாண்டுபிறவா நெறியருளு
      மன்னாவானோர் முதலெவரும்
வேண்டும்பொருளே பொய்யவனேன்
      மெய்யாந்துணையே நாயடியே
னீண்டிங்கிழைத்த குற்றங்க
      ளெல்லாம்பொறுத்தே யெளியேனை
யாண்டுகொளல் வேண்டும்போரூ
      ரையாவுன்ற னடைக்கலமே. (3)

வினையேனிழைத்த பெரும்பிழைகள்
      பொறுத்தாட்கொண்ட மெய்த்தேவே
நினையேன் வேறோர் புகலிடமு
      மறியேன்சிறியே னின் மலனே
கனைமாப்பிறவிக் கடல்கடப்பக்
      கழற்றாட்கலனைத் தரல்வேண்டு
மனையேயனைய போரூரா
      வடியேனுன்ற னடைக்கலமே. (4)

பொன்னேயனைய வருடந்தாய்
      பொற்பார்திருத்தா டொழத்தந்தாய்
மன்னேயதனை மறந்திகழ்ந்த
      மதியிலேனென் றினியுங்கேன்
மின்னேயனைய பொய்வாழ்வை
      விழைந்தகடையே னாயிடினு
ன்னேயனைய போரூரா
      வடியேனுன்ற னடைக்கலமே. (5)

காரின்கருணை பொழிந்திந்நாட்
      காததுக்கடையேன் றனையளித்தோய்
கூருங்கொடிய னெனவினித்தான்
      குறித்துவிடுத்தல் கண்க்கோதான்
வீரஞ்செறிந்த வரைத்தோளா
      விண்ணோர்பணிந்த திருத்தாளா
வாரஞ்சிறந்த போரூரா
      வடியேனுன்ற னடைக்கலமே. (6)

கலங்குநெறியிற் செலுத்தாமற்
      கதிசேர் நெறிக்கட் செலுத்தியெனை
யிலங்கவைத்த பெருமானே
      யினிமேல்விடுத்தா லென்செய்கேன்
றுலங்குபொறிச்செஞ் சேவலனே
      துதித்துப்பணிவோர் காவலனே
யலங்கன் மார்பா போரூரா
      வடியே னுன்ற னடைக்கலமே. (7)

ஏதுசெயினுங் கொடியேனுக்
      கிரங்கியாண்ட பெருந்தாதாய்
தீதனிவனென் றெனையிகழ்ந்தாற்
      சிறியேற்குயுமோர் நெறியுளதோ
வோதுமதிபோ லருளமிர்த
      முதவுமாறு முகப்பெருமா
னாதிபுதல்வா போரூரா
      வடியேனுன்ற னடைக்கலமே. (8)

எளியேன்றனையோ ரன்பனென
      வேன்றுகொண்டாண் டருள்செய்தோய்
களியாலுனது புகழிகழ்ந்த
      கடையேனெனினும் விடேல்கண்டாய்
வெளியேயொளியே வியனறிவே
      வேதநாலின் முடிமணியே
யளியாரமிர்தே போரூரா
      வடியேனுன்ற னடைக்கலமே. (9)

கண்ணின் மணியே யுயிர்க்குபிரே
      கரும்பின்சுவையே பெருந்தேனே
நண்ணுங்கதியே சுரர்பதியே
      நாதாவதிக சிவபோதா
வெண்ணுமடியார் பெருவாழ்வே
      யென்னாயகனா கியதேவே
யண்ணுங்கனியே போரூரா
      வடியேனுன்ற னடைக்கலமே. (10)
------------------

41. திருப்போரூர்ச்சந்நிதிமுறை - விருத்தக்கலித்துறை

பேறுதருந்தொல்லியானைமுகன் றன்ப்ரியவீர
னீறிலகுஞ்செம்மேனியான் றந்தருணீதன்
றேறிலகுந்தெண்ணீரெனவுள்ளந்தெளிவீர்கா
ளாறுமுகன்றன்போரியை வந்திங்கடைவீரே. (1)

மூதுணர்வொன்றும் வீடுறநண்ணுமுனிவோர்காள்
பேதமையுந்து நூல்களினின் றும்பிறழாதீர்
மா துமைமைந் தன்மான்மருகன்றன்வளனீயு
மாதரவணடும்போரியைவந் திங்கடைவீரே. (2)

ஊனையிகழ்ந் துமூனை மறந்து முழல்வீர்காண்
மோனசுகஞ்சும்மாவருமின்றென்மொழிநாடிக்
கானில்விளங்குமாமயிலன்பன் கதிர்வேல்
னானவர் துன்றும் போரியைவந்திங்கடைவீரே. (3)

பாலுநறுஞ்செந்தேனுங்விரும்பும்பழமோடே
யேலுறுமின்பம்போலறிவின்பமெளிமேவுங்
கோலநரந்தனீபசுகந்தன் குயின் மாமே
லாலுறுநந்தம்போரியைவந்திங்கடைவீரே. (4)

மாரனைவெல்லுஞ்சீலமுணர்ந்தமதியோர்காள்
காரினியங்குமேதியன்வஞ்சங்கடவீர்காள்
சூரடுதுங்கனாரியிடன்றன் சுதனாக
மாரமரும்பும்போரியை வந்திங் கடைவீரே. (5)

பாசவிலங்கினாணிவிடும்பண் பிணராகித்
தேசமதெங்குமோடியுழன் றுந்திரிவீர்காண்
மாசறுகந்தன்வேலவனம் பொன்மயில்வீர
னாசினிதுளிறும்போரியை வந்திங்கடைவீரே. (6)

நோய்பிணிபம்புஞ்சூனியம்வஞ்சநுவல் பூதங்
காய்பசிவெம்புஞ்சோகபுயங்கஙகடிவீர்கா
ணேயமுறுந் தண்மாதர்கணன்பனெடுவேல்
னாய்கிளிகொஞ்சும்போரியைவந்திங்கடைவீரே. (7)

பீடுறுமைந்தன் மாதெழில்புங்கம்பெயர்மாட
மாடணிதங்கநீடுறவெண்ணுமதியோர்காள்
வேடர்தரும் பெண்மானுறுகொண்கன் விறல்வேல
னாடகமண்டும்போரியைவந்திங்கடைவீரே. (8)

வேக துரங்கஞ்சேனைகலிங்கமிளிர் பூண்மா
நாகபடங்கொண்மாநிலநெஞ்சினசையீர்கா
ளேகமெனுஞ்சொல்லோர்பொருடந்தங்கெனையாள்வோ
னாகமம்விஞ்சும் போரியை வந்திங்கடைவீரே. (9)

நாவலர் நெஞ்சந்தாவுறுமின்பநலனீபா
வோவறவென்றுமோதுறவெண்ணமுடையீர்கா
டீவயினங்கம்பரவையினங்கஞ்செயுநீத
னாவிறைமைந்தன் போரியை வந்திங்கடைவீரே. (10)
------------------

42. திருப்போரூர்ச்சந்நிதிமுறை - விடுபாட்டுகள்

விடுபாட்டுகள் - கட்டளைக்கலித்துறை,

அகிலாவியுண்டெனக்காதலினீசடமாமென வே
முகிலோடிகலிப்புழுகறலாடிமொய்வாசங்கொண்டு
நகிலே சுமந்துவருந்திடைசாயநணுங்குழலார்
தகிலேயெனாதுளமே போரிவேலனைத்தாழ்ந்திறைஞ்சே.

விடுபாட்டுகள் - நேரிசை வெண்பா.

அன்னமளிக்குமூரண்டினரைக்காக்குமூர்
சொன்னமழைபோற்சொரியுமூ - ருன்னினர்க்குத்
தீதுபிணிதீர்க்குமூர்செவ்வேளிருக்குமூ
ரோதுதிருப்போரூரெம்மூர். (1)

கண்டேன் கவலைநோய் காண்கிலேன் மும்மலமும்
விண்டேன் சுகவீடு மேவினேன் - றொண்டெனங்
காரூரும் பூஞ்சோலைக் காலருவித் தேன்பாயும்
போரூரன் வாழும் பொருப்பு. (2)

தேன்பாடும்பூஞ்சோலைத்தென்போரிவேலவனைத்
தான்பாடுமேலோரித்தாரணிக்கே - யான்பாலுஞ்
சோறும் பெறுவார்கள் சொல்லவொண்ணாப்பேரின்பப்
பேறும்பெறுவார்கள்பின். (3)

மாதர்யமனாமவர்தமைவிழியேவன்பாசம்
பீதிதருமல்குல்பெருநரக மோதிலதில்
வீழ்ந்தோர்க்குமேறவிரகில்லைபோரூரைத்
தாழ்ந்தோர்க்குமில்லைதவறு. (4)

ஈரிரண்டு தோண்முக்கணீசனருளாறுமுக
னோரிரண்டுதாளையுறமேவி - னோரிரண்டு
வாழைக்கிடையிருந்தவாளரவின் வாய்ப்படார்
பீழைக்கிடைவருந்தார் பின். (5)

திருதடிக்கீழ்நாயேனைச்சேர்த்தியேயென்றுங்
கருவடிக்கீழ்ப்போகாமற்காக்கு - மருவடிக்கோ
ணீபத்தானூபுரத்தானேயர்க்கிருள்போக்குந்
தீபத்தான் போரூரிற்சேய். (6)

கேட்டவர்க்குநோய்போங்கிலேசம் போம்பாவம்போ
நாட்டு திருப்பேரின்பநண்ணுமே - வேட்டதங்கை
நன்னிதியம்போற்கருணை நல்குதிருப்போரூரன்
சன்னிதியிலூதுதிருச்சங்கு. (7)

ஈராற்றுநாப்பணிருந்தானுங்காண்பரிய
வோராற்றுச்செஞ்சடையானொண்சுதனை - யீராற்றுக்
கையற்கிளையானைக்கண்டுளமேபோரூரி
லுய்யக்கிளையா துறு. (8)

ஈண்டுலகிலுன்னையினங்கறிய நாயேனை
யாண்டருள்போரூர்வேலரசனே - மாண்டு
பிறவாமலுன்றன்பதப்பூப்பெருந்தே
நிறைவாவெனக்கருணீயின்று. (9)

தீர்த்தஞ்சிவானந்தஞ்செய்யதலமோமாகு
மூர்த்திபரப்பிரமமுத்திதருஞ் - சீர்த்த
திருப்போரூருண்மையிதைத்தேர்ந்த பெரியோர்
மருப்போதன்கைப்படார்வந்து. (10)

திருப்போரூர்ச் சந்நிதிமுறை முற்றிற்று.
----------------------

This file was last updated on 9 April 2026.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)