சுந்தரி அம்மானை
(பதிப்பாசிரியர் : புலவர் ச. திலகம்)
cuntari ammAnai
(editor: ca. tilakam)
In Tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
The e-text has been generated via Google OCR of the PDF file and subsequent proof-reading of the
OCR output.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2026.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
சுந்தரி அம்மானை
(ஓலைச்சுவடியிலிருந்து வெளியிடப் படும் நூல்)
(பதிப்பாசிரியர் : புலவர் ச. திலகம்)
Source:
சரசுவதி மகால் வெளியீட்டு எண். 366
சுந்தரி அம்மானை
பதிப்பாசிரியர் : புலவர் ச.திலகம், பி.லிட்.
தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின்
சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர்.
1995
விலை ரூ.12-00
--------------
நூற்பதிப்பு விளக்கக் குறிப்பு
நூற்பெயர் : சுந்தரி அம்மானை
பதிப்பாசிரியர் : புலவர் ச.திலகம், பி.லிட்.
வெளியிடுபவர் : இயக்குநர், சரசுவதி மகால் நூலகம்.
வெளியீட்டு எண் : 366
மொழி : தமிழ்
பதிப்பு : முதல் பதிப்பு
வெளியீட்டு நாள் : நவம்பர், 1995
பொருள் இலக்கியம்
விலை ரூ. 12-00
----------------
வெளியீட்டாளர் முகவுரை
பலமொழி இலக்கிய, இலக்கண, சோதிட, மருத்துவ நூல்களை ஓலைச்சுவடிகளிலிருந்தும் காகிதச்
சுவடிகளிலிருந்தும் பாங்குறப் பதிப்பித்து வெளியிட்டு வரும் சரசுவதி மகால் நூலகம். இப்பொழுது
'சுந்தரி அம்மானை' என்னும் இந்நூலைப் பதிப்பித்து வெளியிடுகின்றது.
சரசுவதி மகால் நூலகத் தமிழ்த்துறையில் இடம்பெற்றுள்ள 1825ஆம் எண்ணிட்ட ஓலைச்சுவடியை
அடிப்படையாகக்கொண்டு இந் நூல் பதிப்பித்து வெளியிடப்படுகின்றது.
மகாபாரதக் கிளைக்கதைகளுள் ஒன்றான 'சுந்தரி - அபிமன்யு'வின் திருமணத்தை மையமிட்ட இக்கதை
அம்மானைக் கதைப்பாடலாக வெளிப்பட்டுள்ளது.
இந்நூலை நன்முறையில் பதிப்பித்துள்ள இந்நூலகத் தமிழ்ப்பண்டிதர் திருமதி ச. திலகம்
அவர்களுக்கு என் பாராட்டுகள்.
இந்நூலுக்கு அடிப்படையாக அமைந்த ஒலைச்சுவடியினைச் சரசுவதி மகால் நூலகத்திற்கு அன்பளிப்பாக
வழங்கியுள்ள தாளியாப் பட்டி திரு வை. பாலார் கவுண்டர் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்
கொள்கின்றேன்.
இந்நூலினை வெளியிடத் தேவையான நிதியுதவியை நல்கியுள்ள நடுவண் அரசுக்கு எனது நன்றியை
உரித்தாக்குகின்றேன்.
இந்நூல் நன்முறையில் வெளிவர ஆவன் செய்த நூலக நிருவாக அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) திரு. இரா. கோபால் அவர்களுக்கும் நூலகப் பதிப்பு மேலாளர் மற்றும் நூலகர் திரு. அ. பஞ்சநாதன் அவர்களுக்கும் எனதுபாராட்டுகள். இந்நூல் நன்முறையில் வெளிவரத் துணைநின்ற ஏனையோருக்கும் எனது பாராட்டுகள்.
தமிழ் இலக்கிய அன்பர்கள் இந்நூலைப் பெரிதும் வரலேற்பர் என நம்புகின்றேன்.
தஞ்சாவூர். தேவி. ஜோதி ஜெகராஜின், இ.ஆ.ப.
21-11-1995 மாவட்ட ஆட்சியர் மற்றும் நூலக இயக்குநர்,
சரசுவதி மகால் நூலகம்.
------------
முன்னுரை
சுந்தரி அம்மானை' என்னும் இந்நூல் சுந்தரி - அபிமன்யு'வின் திருமணத்தை மையமிட்ட கதையினைக்
கூறுவதாகும். இந்நூல் பிற்கால அம்மானைக் கதைப் பாடல் வடிவ அமைப்பில் இயற்றப்பெற்றுள்ள
நூலாகும்.
மூலச்சுவடி
இப்பதிப்புக்கு அடிப்படையாக அமைந்த சுவடி சரசுவதி மகால் நூலகத் தமிழ்த் துறையில் இடம்பெற்றுள்ள
1825-ஆம் எண்ணுள்ள ஓலைச்சுவடியாகும். 1826-ஆம் எண் கொண்ட மற்றொரு சுந்தரி அம்மானைச் சுவடி
ஒப்பு நோக்கப் பயன்படுத்தப்பட்டது.
இச்சுவடிகளைச் சரசுவதி மகால் நூலகத்திற்கு அன்புள்ளங்கொண்டு வழங்கியுதவியவர் திரு வை. பாலார்
கவுண்டர் (தாளியாப்பட்டி. வெள்ளியணை அஞ்சல், கரூர் வட்டம்) அவர்களாவார்.
நூலமைப்பு
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்தெட்டு (1978) அடிகளால் ஆன நூலாகும் இச்சுந்தரி அம்மானை.
விநாயகரை நூற்காப்பாகப் போற்றிப் பராவும் பாடலுடன் இந்நூல் தொடங்குகின்றது. பல அம்மானை
நூல்களின் தொடக்க அடிகளை ஒத்து இந்நூலின் தொடக்க அடிகளும்,
"முந்திருந்தி விநாயகனே முருகுழலாள் சரஸ்வதியே
கந்தனுக்கு முன்பிறந்த கணபதியே முன் நடவாய்!"
என அமைந்துள்ளன.
மகாபாரதக் கதைப்பகுதியை விரித்து அம்மானையாகத் தான் பாடுவதை இந்நூலை இயற்றிய புலவர்,
"அய்வருட பாரதத்தை அடவாக நான்பாட
வந்த வினையும் வல்வினையும் போயிடுமாம்! " (அடி எண்.6)
என நூலின் தொடக்கப் பகுதியில் எடுத்துரைத்துள்ளார்.
"மாயன்மகள் சுந்தரியை மாலையிட: நான் பாட (அடி எண். 6)
எனும் அடி இந்நூலின் கதைப்பொருளை எடுத்துரைப்பதாக உள்ளது.
அம்மானை இலக்கியங்களில் பொதுவாக, அம்மானை எனும் சீரைக்கொண்டு முடியும் அடிகள் பல
இடம் பெற்றிருக்கும். 'இச்சுந்தரி அம்மானை' நூலில் மூன்று இடங்களில் மட்டுமே 'அம்மானை எனும்
சீரைக்கொண்டு முடியும் அடிகள் காணப்படுகின்றன.
அவை,
'மழையம்பு தான் போய் வகையாகச் சுத்திவந்து
அக்கினி அம்பை அவிச்சுதுகாண் அம்மானை! (அடி எண். 1296,1297)
விட்டுவிடும் என்று விடைகொடுத்தார் அம்மானை!' (அடி எண். 1594)
'வெட்டித் துரத்தி வெத்திகொண்டார் அம்மானை' (அடி எண்.1729)
நூலின் காப்புச் செய்புளில் சுந்தரி அம்மானை' எனச் சுட்டப்படும் இந்நூல் நூற்பயன் கூறும் நூலினிறுதிப்
'பகுதியில்' சுந்தரி மாலை எனக் குறிக்கப்படல் சுட்டத் தக்கது.
நூலின் இறுதியில் நூற்பயன் உரைக்கும் பகுதி இடம்பெற்றுள்ளது. அப்பகுதி வருமாறு:
'சுந்தரி மரலை சுகமாய்ப் படித்தோர்கள் இன்னஞ் சொல்லுமென்று இன்பமுடன் கேட்டோரும் காசு
குடுத்துக் காதாரக் கேட்டோரும் படியும் படியுமென்று பாக்கிலைகள் தந்தோரும் என்றும் பதினாறாய்
இளையபதம் உண்டாவார். ஆல்போல் தழைத்து அறுகதுபோல் வேரூண மூங்கில்போல் சுத்தம் முசியாமல்
வாழ்ந்திருப்பார். அடி எண். 1969–1975)
இந்நூலின் காலம், நூலை இயற்றிய புலவர் குறித்த விவரங்களை அறிதற்கான சான்றுகள் நூலிலோ
சுவடியிலோ காணப்பெறவில்லை. சுவடியில் ஆங்காங்கு நூலின் சில அடிகள் விடுபட்டிருக்கக்கூடும் எனும்
ஐயம் கதைக்கோவை தடைபடுவதால் எழுகின்றமை சுட்டுதற்கு உரியது.
கதைச்சுருக்கம்
பாண்டவர்களோடு பகைமை பாராட்டும் துரியோதனாதியர், பாண்டவர்களுக்குத் துணையாகவுள்ள கண்ணனையும், பலராமனையும் தங்கள் பக்கம் கொணர எண்ணினர். அதற்காகச் சகுனியின் திட்டப்படி பலராமனின் மகள் வத்சலையைத் துரியோதனின் மகன் லட்சணனுக்கு மணமுடிக்க முயன்று பலராமனின் இசைவைப் பெற்றனர்.
இத்திருமணத்தை விரும்பாத கண்ணன், சுபத்திரை யின் மகன் அபிமன்யுவிற்கும் வத்சலைக்கும் திருமணம் நடத்த, கடோற்கயனைக் கொண்டு ஏற்பாடுகள் செய்தான்.
கடோற்கயன் தன் மாயாபலத்தால் வத்சலையைக் கண்ணன் இருக்குமிடத்திற்குக் தூக்கிக் கொணர, அபிமன்யு - வத்சலை திருமணம் கண்ணனால் செய்து வைக்கப்-பட்டது.
லட்சணன் - வத்சலை திருமணம் நடப்பதாக இருந்த இடத்தில் வத்சலையாகக் கடோற்கயன் மாய உருவெடுத்து இருந்து. அத்திருமணம் நடைபெறாமல் செய்து விட்டான்."
என மகாபாரதக் கிளைக்கதைகளுள் ஒன்றாக இடம் பெற்றுள்ள இக்கதையே இந்நூலின் கதையாக உருப்பெற்றுள்ளது. இந்நூலுள் லட்சணன் - லக்கணகுமாரன் என்றும், வத்சலை - சுந்தரி என்றும், அபிமன்யு - அபிமன்னன் என்றும் குறிப்பிடப்படுகின்றனர்.
இலக்கிய அழகு மிகுந்த பகுதிகள்
இந்நூலை இலக்கிய அழகு மிகுந்த பகுதிகள் பல அணி செய்கின்றன.
எடுத்துக்காட்டுக்கு ஒரு பகுதியைக் காணலாம்.
"ஈனாத வாழை இளவாழைக் கண்ணதுபோல்
காயாத வாழை கருவாழைக் கண்ணதுபோல்
கய்யிரண்டும் காலுரெண்டும் வாளுருவிவிட்டாப்போல்
பல்லுத் திருவழகு பார்வதிக்கு ஒப்பிடலாம்
நெத்தித் திருவழகு நிலாப்பிறைக்கு ஒப்பிடலாம்
மார்புத் திருவழகு வண்ணம் பதிச்சாப்போல்
மூக்குத் திருவழகு முத்துப் பதிச்சாப்போல்
கையழகும் காலழகும் ராச்சியத்தில் கண்டதில்லை
முன்னழகும் பின்னழகும் முத்து பதிச்சதுபோல்.' (அடி எண்.393-401)
உவமைகளும் பழமொழிகளும்
அழகிய உவமைகள், பழமொழிகள் ஆகியன சூழலுக் குப் பொருத்தமுற ஆங்காங்கு அமைந்து இவ்விலக்கியத்தை எழிலுடையதாக ஆக்குகின்றன.
"பழமே நழுவிப் பாலில் விழுந்தாப்போல்' 197)
"கத்தாழை மேலே கல்லுவண்டி வந்தாலே
கல்லு வண்டிக்குச் சேதமோ? கத்தாழைக்குச் சேதமே?
கல்லுவண்டிக் கொக்கும் எங்களத்தை மகன் மச்சினரும்
கத்தாழை யோடொக்கும் காந்தாரி பெத்தபிள்ளை
கொக்குத் திரளில் இராசாளி பாய்ந்தாப்போல்
ராசாளி யோடொக்கும் எங்களத்தை மகன் தானும்" (307-312)
"செப்பூசி கொண்டு செவியில் இடித்தாப்போல்" (344)
"வெந்நீர் கொதித்து வீடுதான் வேகாது" (690)
முதலான அழகிய உவமைகளும், பழமொழிகளும் இந் நூலை அணிசெய்கின்றன.
பேச்சு வழக்குச் சொற்கள் மிகுதியாக இடம்பெறல்
இந்நூலில் பேச்சு வழக்குச் சொற்கள் அவ்வவ்வடிவங் களிலேயே மிகுதியாக இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கது. எடுத்துக்காட்டுக்குச் சில
'அந்தப்படிக்கு' 'சம்மதிச்சு' 'அவதாரம்' ‘சிலவு’ 'குடுத்து' (கொடுத்து)' 'போறியளோ'
'யிருசா யெழுந் திருடா' 'அசல்நாட்டான்' (அயல்நாட்டான்) 'பயகளா’ ‘அதுக்கு’ 'போளை’
'புனலாத்தில் 'துளுத்து' 'விரை' (விதை) 'குடு' (கொடு) 'சோதினை' ‘நெத்தி'
நூலுள் மீண்டும் மீண்டும் இடம்பெறும் அடிகள்
நாட்டுப்புற இலக்கியங்களின் பண்புகளில் ஒன்று குறிப்பிட்ட சில அடிகளில் மீண்டும் மீண்டும் இடம் பெறுதலாகும். இந்நூலிலும் சில குறிப்பிட்ட அடிகள் அவ்வாறு மீண்டும் மீண்டும் இடம்பெற்று இந்நூலினை எழிலுறச் செய்கின்றன.
"ஆரண்ட வனங்கடந்து அயிரா பதங்கடந்து
ஊசி வனங்கடந்து உத்திராச்சப் பூமிவிட்டுச்
சில்லென்ற காடும் செடியும் புரைந்திரமும்
மூங்கி வனங்கடந்து மும்நூத்திக் காதவழி' (65-68)
என்னும் அடிகளும் நூலுள் 530. 534. 535, 634, 676, 677, 774, 775,
850, 851, 872, 936, 937, 1265, 1266, 1354. 1355 1406, 1409, 1447, 1467. 1796 ஆகிய
எண்ணுள்ள அடிகளும் ஒரே அதாடர்கள் மீண்டும் மீண்டும் பயில்கின்றனவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும்
"நீலவிழிக் கண்கள் ரெண்டும் நெருப்புத் தணலானதுவே
தின்னுமந்தத் தம்பலங்கள் தீக்கலந்து வேகுதிப்போ"
என்னும் அடிகளும் (அடி எண்.160.181) 1072, 1097, 1185 முதலான அடிகளும் ஒரே தொடர்கள் மீண்டும் மீண்டும் பயின்கின்றனவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுந்தரி – அபிமன்யுவின் திருமணக் கதைகூறும் இலக்கியச் சுவடிகள்
சுந்தரி - அபிமன்யுவின் திருமணக் கதைகூறும் இலக்கியச் சுவடிகள் சரசுவதி மகால் நூலகத்திலும் (சுவடி எண்கள் 1815, 1826) தமிழ்ப் பல்கலைக்கழகச் சுவடித் துறையிலும் (தொடர் எண்கள்: 1325. 1338, 1470, 1530) திருவனந்தபுரம் நேரளப் பல்கலைக் கழகத்திலும் (4275, 8413, 8422, 8431. 8641, 9075) இடம் பெற்றுள்ளன.
இவற்றுள் கேரளப் பல்கலைக் கழகத்தில் இடம் பெற்றுள்ள சுந்தரி கல்யாணம் அம்மானை (எண்: 8413) என்னும் சுவடி நூலின் ஆசிரியர் சுப்பிரமணியத் தேவர் எனுங் குறிப்பு கிடைக்கின்றது. எதிர்காலத்தில் இச் சுவடிகளைப் பயன்படுத்தி ஆய்வுப் பதிப்பை உருவாக்க வாய்ப்புகள் உள்ளன.
சுந்தரி - அபிமன்யுவின் திருமணக்கதை கூறுவனவாக முன்னர் வெளிவந்த சில அச்சு நூல்கள்
சுந்தரி - அபிமன்யுவின் திருமணக் கதையைக் கூறுகின்றனவாக அம்மானை இலக்கியங்கள் சில இபற்றப் பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை 'புகழேந்திப் புலவரால் இயற்றப்பட்டது' எனும் குறிப்பைத் தாங்கி யுள்ளன. இவற்றுள் ஒன்றுக்கொன்று வேறுபாடுடையவன வாகவும் உள்ளன.
சுந்தரி அபிமன்யுவின் திருமணக்கதைகூறும் அம்மானை நூல்களின் சில பதிப்பு விவரங்கள்:
அபிமன்னன் சுந்தரிமாலை கருணானந்த சுவாமிகள் (ப.ஆ.)
பிரபாகர அச்சுக்கூடம், சிந்தாதிரிப்பேட்டை நவம்பர் 1870.
அபிமன்னன் சுந்தரிமாலை, முருகேச பண்டிதர் (ப.ஆ.)
ஸுக விரஞ்சரி முத்திராக்ஷர சாலை,ஏப்ரல் 1875.
அபிமன்னன் சுந்தரிமாலை, சுப்பிரமணிய சுவாமிகள் (ப.ஆ.)
மாதவனிவாச அச்சுக்கூடம், 1880)
அபிமன்னன் சுந்தரிமாலை, அப்பாவு பிள்ளை (ப.ஆ.)
ஸ்ரீமட்டுவார் குழலம்பாள் அச்சுக்கூடம், 1884.
அபிமன்னன் சுந்தரிமாலை, பொன்னுசாமி முதலியார் (ப.ஆ.)
வித்தியா வினோத அச்சுக்கூடம், 1887.
அபிமன்னன் சுந்தரிமாலை, ஆர்.ஜி.பதி கம்பெனி சென்னை.
சுந்தரிமாலை, மூன்றாம் பதிப்பு, சி. நாராயணசாமி முதலியார் (ப.ஆ.)
சிந்தாதிரிப்பேட்டை பிரஸ், சென்னை மார்ச் 1873.
சுந்தரிமாலை, ஏழாம் பதிப்பு, ஏப்ரல் 1874.
(ஆதாரம்: தமிழ்நூல் விவர அட்டவணைத் தொகுதிகள்.
(ப. ஆ. பதிப்பாசிரியர்)
நன்றியுரை
இந்நூலை நான் பதிப்பிக்க அனுமதி வழங்கிய நூல்க முன்னாள் இயக்குநர் உயர்திரு மு. சதாசிவம் அவர்களையும் நூல் இப்போது வெளிவர ஆவன செய்து உதவிய மாவட்ட ஆட்சியர் மற்றும் நூலக இயக்குநர் உயர்திரு தேவ. ஜோதி ஜெகராஜன், இ. ஆ. ப., அவர்களையும் நூல நிருவாக அலுவலர்திரு எஸ். சீனிவாஸராகவன் அவர்களையும், பதிப்பு மேலாளர் மற்றும் நூலகர் திரு அ. பஞ்சநாதன் அவர்களையும் நூல் வெளிவரும் இவ்வேளையில் நன்றியுடன் நினைவு கூறுகின்றேன்.
நிறைவுரை
'சுந்தரி அம்மானை' எனும் இந்நூல் சுவடிப் பதிப்பு நூலால் இங்கு உருப்பெற்றுள்ளது. இப்பதிப்பின் குறைகளைப் பொறுத்தாற்றி நிறைபோற்றுமாறு அறிஞருலதை வேண்டி அமைகின்றேன். நன்றி!
ச. திலகம்,
தமிழ்ப் பண்டிதர், சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர்.
---------------
சுந்தரி அம்மானை
அம்புளியில் சுந்தரி அம்மானை பாடுகுறேன்
இன்பமாய் என்நாவில் இருந்தருளும்
பைம்பொன் மணிசேரும பாதத்தை ஊன்றினான்
சண்முகனார்க்கு முன்பிறந்த தற்பரனே கணபதி காம்புத் தானே.
முந்திமுந்தி வினாயகனே முருகுழலாள் சரஸ்வதியே
கந்தனுக்கு முன்பிறந்த கணபதயே முன்னடவாய்!
அய்வருட பாரதத்தை அடவாக நான்பாட
வந்த வினையும் வல்வினையும் போயிடுமாம்;
கேட்டவர்கள் எல்லோரும் கிளைகோத்திரமாய் வாழ்ந்திருப்பார் ; 5
மாயன்மகள் சுந்தரியை மாலையிட நான்பாடத்
தாரார் புகழுடைய தர்மருட சீமையெல்லாம்
தர்மா புரமும் தரணிபுரம் உள்ளதெல்லாம்
அருச்சுனா புரமும் ஆனைகுந்தி உள்ளதெல்லாம்
குருச்சேத்திரபூமி கூடவே ஆண்டிருந்தான் 10
·
பரிவான சந்திரகுலம் பாண்டுபுத்திரர் ஐவரையும்
திரியோதனன் திஷ்ட்டோதரன் திறமான தம்பியரும்
கன்னனுங் காங்கையனும் கனத்ததொரு சல்லியனும்
விதுரனுட வில்லியனும் வேந்தர் புரோகிதரும்
இப்படி வாழ்ந்து இவர்கள் இருக்கையிலே 15
திரியோ தனன்பாவி தீங்கு தனைநினைந்து
அய்வரையுந் தான் துரத்தி அரசாள வேணுமென்று
அந்தப்படி சம்மதிச்சு அடவாகத் தான்நினைந்து
சூது பொருதித் தோற்கடிக்க வேணுமென்று
அந்தப் படிக்கி அய்வரையுந் தோற்கடித்து 20
அய்வர் வனவாசம் அடவாகப் போனபின்பு
திரியோ தனன்பாவி தேசத்தை ஆண்டிருந்தான் ;
அந்தநல்ல வேளையிலே ஆனதொரு லக்கணர்க்கு
மாயன்மகள் சுந்தரியை மாலையிட வேணுமென்று
துரோண குருக்களையுந் துருசாகத் தானழைத்து 25
அந்த மொழிகேட்டு ஆசாரி ஓடிவந்து
ஆசாரி யைப்பார்த்து ஆனதுரி யோதனனும்
லக்கண குமாரனுக்கு நாள்குறிக்க வேணுமய்யா
மாயன் அரமனைக்கி வகையாக ஆளனுப்பித்
தாரார் புகழுடைய தர்மருட தன்னுருமை 30
என்னுருமை விட்டாலும் அவனுருமை விடுவதில்லை
கலியாணம் பண்ணக் கடுகவே போகவேணும்
என்றுசொல்லிப்பேசி இருக்கிற வேளையிலே
திரியோ தன்னுடனே துரோணாசாரி ஏதுசொல்வார்
என்ன கலியாணம் எண்ணிக்கொண்டாய் இப்போது 35
தர்மருட தன்னுரிமை தக்காது சொல்லுகிறேன்
மாயன் சதிகாரன் மன்னவனே நம்பாதே
தீங்கில்லா அரமனைக்கித் தீங்கு வருகுதிப்போ
அச்சமில்லா ராச்சியத்தில் அச்சமே வந்துதிப்போ
வாறதொரு காரியத்தை வகையாக நானுரைத்தேன் 40
அந்த மொழிகேட்டு ஆனதிரி யோதனனும்
துரோணா சாரி நீர்தான் தோற்றாமல் சொன்னீரே
வேறையொரு வரிசொன்னால் வேறையுண்டுங் காரியங்கள்
நீ, அறியாமல் சொன்னதுக்கு அவுதாரம் வாங்கிடுவேன்
அந்த மொழிகேட்டு ஆசாரி தானெழுந்து 45
தன்னுட அரவனைக்கித் தானேதான் போகலுற்றான்
திரியோ தன்னுடைய சேனைமன்னர் அத்தினையும்
கர்ணனுங் காங்கையனும் கனத்ததொரு சல்லியனும்
விஷ்ட்டுமா சாரியனும் மெய்யான மன்னவனும்
மாயன் சகுனி மற்றுமுள்ள மன்னவரும் 50
கொன்றைமாலைத் தேத்தரசன் கோடிமன்னர் அத்தினையும்
படைத்தலைவர் மன்னவர்கள் பாங்காகக் கூட்டமிட்டுச்
சங்குதுவா ரகாபுரிக்கித் தான்பயணம் போகவென்று
அதுவே பயணமென்றான் ஆனதொரு மன்னவனும்
கர்ணன் சகுனி காங்கையரும் பயணமென்றான் 55
பயணச் சிலவுக்குப் பத்துலட்சம் பொன்குடுத்து
மயனுட தேவிக்கி வர்ணக்கம்பிப் பட்டுமொன்று
மாயன்மகள் சுந்தரிக்கி வர்ணத்துகில் ஆடையொன்று
இத்தினையுந் தான் வாங்கி எல்லோரும் பயணமென்று
ஆனைபடை சேனை அரசர் மக்கள் படையெடுத்துக் 60
குதிரை படைசேனை கோடிமன்னர் படையெடுத்து
அஸ்த்தீனா புரங்கடந்து ஆனைகுந்தி தான்கடந்தார்
தர்மா புரங்கடந்து தர்மருட தேசம்விட்டுக்
குருச்சேத் திரபூமி கூடவே தான்கடந்து
ஆரண்ட வனங்கடந்து அயிரா பதங்கடந்து 65
ஊசி வனங்கடந்து உத்திராச்சப் பூமிவிட்டுச்
சிளளென்ற ற காடும் செடியும் புனாந்திரமும்
மூங்கி வனங்கடந்து முந்நூத்திக் காதவழி
சங்குதுவா ரகாபுரியில் தானேதான் வந்திறங்கி
மாயன் அரமனைக்கி வகையாகத் தூதுவிட்டுத் 70
தூதுவனும் வந்து துவாரகா புரிபுகுந்து
மாயனைக் கண்டு வகையாகத் தெண்டனிட்டு,
தெண்டனிட்ட தூதுவனே சேதியென்ன சொல்லூமடா
கர்ணன் சகுனி காங்கையனும் வந்திறங்கி
அரமனைக்கி வாறோமென்று அடியேனை அனுப்பிவைத்தார் 75
அப்போது மாயவரும் அடவாகச் சேதிசொன்னார்
வந்தவர்கள் அத்தினையும் வரச்சொன்னார் அப்போது
தூதுவரும் வந்து தோற்றமுள்ள கண்ணர்முன்னே
வரச்சொல்லிச் சொன்னாரே மாயன் பெருமாளும்
கர்ணருங் காங்கையரும் கனத்தபுகழ்ச் சல்லியனும் 80
மூவருங் கூடி மூர்க்கமுடன் தான்நடந்தார்
மாயன் அரமனைக்கி வகையாக வந்துகண்டார்
வந்த உறமுறையை வாருமென்று தான்கேட்டு
முந்தின தாகத்துக்கு மோருதண்ணீர் தான்கொடுத்து
வந்ததொரு காரியங்கள் வகையறியச் சொல்லுமென்றார் 85
உத்துருமைப் பெண்கேட்க உகந்துவந்தோம் மாயவனே
லக்கண குமாரனுக்கு நாளிட வந்தமய்யா
கலியாண சோபனங்கள் கடுகவே பண்ணவேணும்
நல்லதென்று சொல்லி நடந்தாராம் மாயவரும்
நீதானுங் கொண்டாலென்ன அவன்தானுங் கொண்டாலென்ன 90
எப்பவென்று நானிருந்தேன் இனிக்கேளும் என்வார்த்தை
ரியோ தனன்உறவு தேடக் கிடையாது
உருமைக்கி யானால் ஒன்பதுலட்சம் பொன்னுமுண்டு
அசலுக்கு ஆனால் அன்பதுலட்சம் பொன்னுமுண்டு
நீங்கள் கொடுத்து நிறவேத்தப் போறியளோ 95
நம்மிட கோப்பாளப் பொட்டியிலே ஒருபொட்டி தந்தியென்றால்
ஒருபொட்டிப் பணமானால் ஒலகத்துக் கேறாது
நாலுபொட்டிப் பணமானால் நாங்கள் குடுக்குறோம்
வீண்பேச்சுப் பேசாதே வீரியங்கள் சொல்லாதே
ஒருபொட்டிப் பணந்தாரோமென்று உள்ளபடி சம்மதீயும் 100
அந்தப் படிக்கி அடவாகச் சம்மதியும்
கர்ணன் சகுனி காங்கையனுந் தான் நடந்தான்
துவரகா புரிவிட்டுத் துனு சாகத் தான்நடந்து
அருச்சுனா புரங்கடந்து ஆனைகுந்தி உள்புகுந்து
குருச்சேத்திர பூமியிலே கூடாரம் வந்திறங்கித் 105
திரியோ தனப்பெருமாள் தேவேந் திரன்கொலுப்போல்
இருந்த சபையிலே இவர்களும் வந்தார்கள்
காயோ பழமோ கர்ணாநீ சொல்லும் என்றான்
காய்க்கிமிகப் போனவர்கள் கனிந்தபழங் கொண்டுவந்தோம்
அனுமந்தன் என்றுசொல்லி அன்பது களஞ்சியமாம் 110
ஆயிரங் களஞ்சியத்தை அடவாகத் தான்திறந்து
ஓட்டையிலே ஆயிரமாம் ஒருகோடிப் பணமெடுத்து
ஆலாத்திப் பாறையிலே அவர்கள் திசைநோக்கிப்
போற தடத்திலே புதுச்சுங்கம் உண்டுபண்ணி
ஆயமுந் தீர்ந்து ஆலாத்திப் பாறையிலே 115
கொண்டுவந்து தான்குமீச்சார் கொல்லி மலைபோலே
காத்தீலே தூத்திக் கடைப்பாளை தானொதுக்கி
முன்னாகப் பாதிதள்ளிப் பின்னாகப் பாதிதள்ளி
நடுராசி யாக நலமாகத் தான் அளந்தார்
அப்பவே, ஆயனுட பொட்டி அரைப்பொட்டி யானதுவே 120
மறுபடி வந்து வர்ணக் களஞ்சியத்தைத்
திரும்பி எடுத்தார்கள் சேனைமன்னர் உள்ளதெல்லாம்
கொண்டுவந்து போட்டார்கள் கோபாலன் பொட்டியிலே
அப்பவு, மாயனுட பொட்டி முக்கால்பொட்டி யானதுவே
தேடுந் திரவியங்கள் திறமாக இல்லையென்று 125
திரியோ தனன்தேவி திருக்கழுத்தில் தாலிதனை
வாங்கிவரு வோமென்று வகையுடனே போனார்கள்
அப்பவே,ஆயனுட பொட்டி அடவாக ரொம்பியதே
பொட்டி யெடுத்துப் போகையிலே சொன்னாராம்
இன்னம் ஒருசேதி சொல்ல மறந்தேன்காண் 130
இனிமேல் கலியாணந் தாமிசங்கள் பண்ணாதே
கலியாண வாசலிலே கலக்கம் வந்துதென்று சொல்லாதே
சேராத சத்திராதி சேனைபடை வந்தாலும்
தேவேந் திரமகனார் சித்திரசேனன் வந்தாலும்
தேவர்கள் தானும் தீறமாக வந்தாலும் 135
ஆராரு வந்தாலும் அஞ்சேன்காண் மன்னவனே
தாரார் புகழுடைய தர்மருட கூட்டம்வந்தால்
அதுக்குப் பயப்படுவேன் அடவாகச் சொல்லிவிட்டேன்
அந்தப்படிச் சொன்னதுக்கு ஆன திரி யோதனனும்
தர்மருட கூட்டஞ் சண்டைக்கி வந்தாலும் 140
எங்கள் கயிலானால் எங்கள்பெண் சுந்தரியாள்
அவர்கள் கயிலானால் அவன்பெண் சுந்தரியாள்
அதுக்குவே றெண்ணாதே ஆனதொரு மாயவரே
பொட்டி யெடுத்துப் பொக்கிஷத்தைத் தான்திறந்து
ராகுவ னென்றுசொல்லி நானூறு களஞ்சியமாம் 145
அனுமந்த னென்றுசொல்லி ஆயிரங் களஞ்சியமாம்
ஆயிரங் களஞ்சியத்தை அடவாக ரொப்பிவிட்டார்.
ஆயிரம் விளக்கு அவியாமல் தானெரிய
இந்தப் படியாக இருக்குமந்த வேளையிலே
அய்வர் வனவாசம் அடவாகப் போகையிலே 150
மாயன்மகள் சுந்தரிக்கி மஞ்சள் குடுத்துவந்தார்.
அப்படி யிருக்கையிலே ஆன மணவாளன், வேறாச்சு
அதுகண்டு ஓடிவந்தார் ஆனதொரு தாதியரும்
மாயன்மகள் சுந்தரியை வகையாகக் கண்டுவந்து
கேளாத வார்த்தை கேட்டுவந்தோம் என்தாயே 155
பணத்துக்கு ஆசைப்பட்டு மாயன் பதையாமல் சம்மதிச்சு
லக்கண குமாரனுக்கு நாள்குறித்துச் சம்மதிச்சு
மணவாளன் வேறாச்சு மங்கையரே உந்தனுக்கு
அதுகண்டு ஓடிவந்தேன் ஆத்தாளே தாயாரே
நீலவிழிக் கண்கள்ரெண்டும் நெருப்புத்தண லானதுவே 160
தின்னுமிந்தத் தம்பலங்கள் தீக்கலந்து வேகு திப்போ
கோவித் தெழுந்திருந்து கொம்பனையா ளேதுசொல்வாள்
தாதியரைத் தானழைத்துத் தயவாக அப்பொழுது
பல்லாக்குத் தானெடுத்துப் பரிவுடனே வாருமென்றாள்
தாதியரு மோடித் தயவாக அந்நேரம் 165
பல்லாக்கு அலங்கரித்துப் பாங்குடனே கொண்டுவந்தார்
துஞ்சு மடமாது தோகைநல்லாள் சுந்தரியும்
தோகைமயில் சாய்கை நல்லாள் சுந்தரியுந் தானெழுந்து
சிங்கமுகப் பல்லாக்குச் சேரவே ஏறிக்கொண்டு
மாயன்மகள் சுந்தரியான் மனதில் பொறிபறக்க 170
மாயன் அரண்மனைக்கி வாறாளே சுந்தரியாள்
அய்யமறக் கண்டாரே ஆயன்மகள் சுந்தரியாள்
மாயன் பெருமாள் மனதி லறிந்துகொண்டு
நீட்டினார் காலை நெடுகவிட்டார் முக்காட்டை
கண்டாளே சுந்தரியாள் கண்கள் பொறிபறக்க 175
ஆயன் பெருமாளே எங்களையாவே நித்திரைரேய
மாயன் பெருமாளே மன்னவனே நித்திரையோ
ஆயன் பெருமாளே எங்களையாவே நித்திரையோ
மலைங்காடு தன்னில் மாடுமேய்த்த புத்தியோதான்
ஆலாங் காடுதன்னில் ஆடுமேச்ச புத்தியோதான் 180
வெண்ணெய் திருடியுண்ட வெக்கங்கெட்ட புத்தீயோ தாள்
கண்டுண்ட புத்தியோதான் கண்ணுறக்க மானதுவோ
விருசா யெழுந்திருடா விடவிடவே ஏசுவண்டா!
அந்தமொழி கேட்டு ஆயன் எழுந்திருந்து
ஆயனைக கண்டு அடிவணங்கித் தெண்டனிட்டுத் 185
தெண்டனிட்ட சுந்தரியைத் திக்கென்று தானெடுத்துப்
பொன்னான மேனியிலே புழுதிபட ஞாயமென்ன
தங்கப்பொன் மேனி தரையில்விழக் காரியமென
வந்ததொரு காரியத்தை வகையாகச் சொல்லுமம்மா
கேளாத வார்த்தைகேட்டு வந்தேன் எங்களையா 190
வந்ததே போதுமம்மா மாணிக்கக் கண்மணியே
தேனீண்ட கண்ணே தெகுட்டாத தெள்ளமுதே
மானீண்ட கண்ணே வரிசைபெற்ற மாணிக்கமே
உன்னைக் குடுக்குமீடம் பாத்துக் குடையைப் பதிச்சன ம்மா
சேருமிடம் பாத்து சென்னல் பதிச்சனம்மா 195
வாழுமிடம் பாத்து வாழை பதிச்சனம்மா
பழமே நழுவிப் பாலில் விழுந்தாப்போல்
உங்க நல்ல சோறுமுண்டு உடுத்தத் துகிலுமுண்டு
திங்கநல்ல பாக்குமுண்டு சிலவழிக்க ரொக்கமுண்டு
வனம்போன பாண்டவர்கள் வாறதில்லை விட்டுவீடு 200
அப்படியே சொல்ல அதிகோபம் உண்டாகி
என்ன மதியாலே எண்ணிக்கொண்டீர் கலியாணம்
ஆடுமேய்ச்ச புத்தியாலே அறிவுகெட்டுப் போனாயோ
மாடுமேய்ச்ச புத்தியாலே மதிகெட்டுப் போனாயோ
குட்டிமேச்ச புத்தியாலே கூறுகெட்டுப் போனாயோ 205
பணமே படைத்தவர்க்குப் பாங்காகப் பெண் குடுப்பாயோ
பத்தாப் பறையன் பணமோ படைக்கிலையோ
சக்கிலியன் தானுந் தனத்தைப் படைக்கிலையோ
பறையன் பணங்கொடுத்தால் பாங்காகப் பெண் கொடுப்பாய்
பணமே படைத்தால் பாழ்ங்கிணத்தில் போட்டிடுவான் 210
திரவியம் படைத்தால் தெருக்கடையே போட்டானோ
என்னைக் கொள்ளவந்தவன் இளந்தலை பிளந்தெரிய
திரவியம் வேணுமென்றால் ஒன்தேவியரைத் தள்ளிவிடும்
அத்தை மகனிருக்க அசல்நாட்டான் வாறதென்ன
மாயி மகனிருக்க மறுநாட்டான் வாறதென்ன 215
ஒருத்தன் பெண்ணுக்கொருத்தன் ஆசைப்பட்ட கதைகேளும்
ஒரு பட்டணத்து ராசா பள்ளிக்கூடம் போட்டுவச்சு
ராச குமாரத்தி ரெண்டுபிள்ளை தனையுமப்போ
சுப்பிரமணிய வாத்தியைத் துருசாகக் கூட்டிவந்து
பள்ளிக்கூடம் போட்டுப் படிக்கிற நாளையிலே 220
படியாத வித்தையெல்லாம் படிச்சுதுகாண் பிள்ளைரெண்டும்
இனிமேல் பள்ளிக்கூடம் போகவே வேண்டாமம்மா
படிப்புவைத்த வாத்தியார்க்குப் பத்துப்பொன் கொண்டுவந்து
பத்துப்பொன் கொண்டுவந்து பாதத்தில் வைத்தல்லவோ
போறோமென்று சொல்லிப் பிள்ளைரெண்டு போனதுவே 225
வாத்தியார் தானும் வகையுடனே தான்பாத்துப்
பள்ளிப் பயகளா நீ ரி) பருமணலு கொண்டாங்கள்
ராச குமாரத்தி மூத்தபிள்ளை தனையழைத்து
மணலுக்குத் தானும் போகவேண்டாம் நீதானும்
பிள்ளைகள் போனபின்பு பேய்கொண்ட வாத்தியவன் 230
மூத்த பிள்ளையுடனே வாத்தியு மேதுசொல்வான்
பெண்ணே நீ யெந்தனுக்குப் பொங்கியிட வேணுமென்றான்
பூந்தோட்டம் தன்னில் பொங்கியிட வேணுமென்றா ன்
அய்யாவே இப்போது அதுவசனஞ் சொல்லாதே
ஒறிவைத்த வாத்தியார் ஒருக்காலும் என்தகப்பன் 235
படிப்பிவைத்த வாத்தியார் பத்துத்திரம் என்தகப்பன்
ஆதி குருவே அய்யாநீ தீண்டாதே
கைச்சரசம் பண்ணாதே கர்த்தாவே என்தகப்பா
என்றுசொல்லித் தானும் இருக்குமந்த வேளையிலே
பள்ளிப் பயல்களும் பருமணல் கொண்டுவந்தார்கள் 240
வந்ததைக் கண்டு வாத்தி யடங்கிவிட்டான்
வந்தனனு ராத்திரியே மூத்தபிள்ளை ருதுவாச்சு
பாங்காகப் புரோகிதரைப் பாங்குடனே கூட்டிவந்து
சொன்னாரே ராசாவும் துருசாக ஆளுவிட்டு
ஒட்டமா யோடி ஒருநொடியில் கூட்டிவந்தார் 245
வந்ததொரு பிராமணனை ராசாவுந் தான்பார்த்து
அம்மா ருதுவான நாள்பாரு மென்றுசொன்னார்
பஞ்சாங்கப் புரோகிதரும் பாங்குடனே யேதுசொல்வான்
ஓதிவைத்த வாத்தியை ஒருநொடியில் கூட்டிவந்தால்
கண்டறிந்து சொல்லுகுறேன் காரியங்கள் உள்ளதெல்லாம் 250
அந்தப் படிக்கி ஆளிருவ ரோடிவந்து
வாத்தியாரைக் கூட்டிவந்து வகையுட னே கேட்டார்கள்
ராசரைவக் கண்டு நலமாகத் தெண்டனிட்டு
வாத்தியார் தனையழைத்து வகையாகப் பாருமென்றார்
ருதுவான வேளைபச்சம் நன்றா யிருக்கவில்லை 255
ஆண்டவனே ராசாவே அடியேன்சொல் விண்ணப்பங்கள்
அம்மாள் இருந்தக்கால் நம்மிட அரமனைக்கி ஆகாது
அதுக்குநல்ல விபரமும் அடவாகச் சொல்லுகுறேன்.
பொன்போளை கொண்டுவந்து போளையிலே பெண்ணைவைத்து
ஓடுகிற புனலாத்தில் உள்ளையே தள்ளுமய்யா 260
அந்தப் படியே போளையிலே பெண்ணைவைத்து
அத்தை மகனிருக்க மகளே ஆத்தோடே போறாயே
அழுது புலம்பி ஆத்துடனே விட்டார்கள்
வாத்தியார் தானும் வகையுடனே அப்போது
புனலியாத் தாங்கரைக்கி வாத்தியா ரோடிவந்து 265
ஆத்தை மிகப்பார்த்து வாத்தியார் தானிருந்தான்
அந்தநல்ல வேளையிலே அவளத்தை மகன் வேட்டைபோய்
வேட்டையும் சிக்காமல் வேங்கை பிடித்துவந்தான்
புனலியாத்தாங் கரையோரம் வந்தே யிருந்தார்கள்
அந்தநல்ல வேளையிலே போளை ஆத்தோட வந்ததுகாண் 270
வாறத்தைக் கண்டுராசா வகையாக ஏதுசொல்வான்
போளையோ உங்களுது போளைக்குள் இருக்குறது என்னுதடா
நல்லதென்று தான்போயி நாலுபேர் பிடித்துவந்தார்
போழையைக் கொண்டுவந்து ராசாமுன்னாக வயித்தார்கள்
போழையைத் தானவிழ்த்துப் பார்த்தார்கள் அப்போது 275
போழையிலே தானுமொரு பொண்ணும் இருந்ததுவே
ராசாவுக் கேத்த நல்லதொரு பொண்ணச்சு
நம்மளுக்கு ஆனால் நல்லதொரு தாயாச்சு
அப்போது மந்தராசக் குமாரத்தி ஏதுசொல்வாள்
நான் பொலாலத நாளையிலே ருதுவானவள் என்றுசொல்லி 280
ஓடுகிற தண்ணியிலே உள்ளாகத் தள்ளிவிட்டார்
அப்போது ராசா போளையைப் பிடித்துவந்த பேர்தனக்கு
போழைநின்ன நிறைக்குப் பொன்னுமே தான்கொடுத்து
வெறும்பே ராகுதென்று ஒருவேங்கை தனையடைத்து
ஓடுகிற தண்ணியில உள்ளையே தள்ளிவிட்டார் 285
வருகிற போளையை வாத்தியார் தானுங்கண்டு
ஓடிப் பிடித்து எடுத்தானே வாத்தியவன்
எடுத்துவந்த போளைதனை எறக்கியே வீட்டில் வைத்துப்
பள்ளிப் பயல்களைப் பாங்காகத் தானழைத்துச்
சிவன்கலி யாணம் வந்து ராசா முடியவேணும் 290
தலைவாசல் தன்னைச் சாத்தியே நீங்களுந்தான்
ராமசெயம் ராமசெயம் ராமசெய மென்னுங்கள்
என்றுசொல்லிப் போட்டு வாத்தியார் வீட்டிலே போய்ப்புகுந்து
போளை கிட்டவந்து அடிபெண்கொடி நீர்தானும்
பூங்கா வனத்திலே பொங்கியிடச் சொன்னேனே 295
அப்போது மாட்டோமென்றாய் அகப்பட்டுக் கொண்டாயே
கலியாண சோபனங் கடுகவே பண்ண வேணும்
கட்டை யவிழ்த்தபின்பு கண்டானே வேங்கைதனை
பெண்ணென்று நானிருந்தேன் பெருவேங்கை யானதுவே
பெண்ணென்று நானிருந்தேன் பெருவேங்கை கொல்லுதடா 300
கன்னியென்று நானிருந்தேன் கடுவேங்கை கொல்லுதடா
இட்டுதடா வேங்கை வாத்தியார் இருதுண்ட மாய்விழுந்தான்
போட்டுதடா வேங்கை பொங்கியே கோபங்கொண்டு
வேங்கைதான் அப்போ வெளிப்பட்டுப் போனதுவே
வாத்தியோ டொக்கும் என்னைக்கொள்ளவந்த லெக்கணனும் 305
மாயன் பெருமாளே மன்னவனே கேளுமின்னம்
கத்தாழை மேலே கல்லுவண்டி வந்தாலே
கல்லு வண்டிக்குச் சேதமோ ? கத்தாழைக்குச் சேதமோ ?
கல்லுவண்டிக் கொக்கும் எங்களத்தை மகன் மச்சினரும்
கத்தாழை யோடொக்கும் காந்தாரி மெத்தபிள்ளை 310
கொக்குத் திரளில் இராசானி பாய்ந்தாப்போல்
ராசாளி யோடொக்கும் எங்களத்தை மகன்தானும்
அவருட பிலமும் அறிந்து மிக்கிருந்து
நாளைக் கல்யாணம் காண்பயடா எங்களையா
என்றுசொல்லிச் சுந்தரியாள் ஏறினாள் பல்லாக்கு 315
தாயார் அரமனையைத் தங்கைநல்லாள் தேடிவந்தாள்
மகள்வாறா ளென்றுசொல்லி வர்ணக் கதவடைத்தாள்
மாயன்மகள் சுந்தரியாள் வகையாகத் தன்பார்த்துத்
தாயே உன் மங்கிலியம் குங்குலிய மாகுமம்மா
என்றுசொல்லிச் சுந்தரியாள் தன்னரமனைக்கி வந்துவிட்டாள் 320
அரமனைக்கு வந்து ஆன்மகள் சுந்தரியாள்
தலையை விரித்தழுதாள் தங்கையரும் அப்போது
முத்தான கண்ணீரை முதுமார்பில் சோரவிட்டாள்
பவளம்போல் கண்ணீரைப் பக்கமே சோரவிட்டாள்
தங்கம்போல் கண்ணீரைத் தன்மார்பில் சோரவிட்டாள் 325
நான்பெண்ணாய்ப் பிறந்ததே மண்ணாப் பிறந்தனில்லை
மண்ணாய்ப் பிறந்தாலும் மரமா முளைத்தனில்லை
மரமாப் பிறந்து வகையாக வாழ்ந்தாலும்
நல்ல மரமென்று நலாபேரும் தான்பாத்து.
அடிமரமும் அச்சாகும், மேல்மரமும் பொம்மையாகும் 330
சித்திரைத் தேருக்குச் செல்வத்தே ராகுமையா
வையாசித் தேருக்கு வசந்தத்தே ராகுமையா
ரதத்துமேல் சுவாமி நலமாக வந்தாலும்
நாட்டிலே உள்ள நல்லோர் பெரியோர்கள்
எல்லோரும் மங்கைமுகம் இருப்பார்கள் வையகத்தில் 335
அந்தப்படி புண்ணியம் அடவாகச் செய்தனில்லை
பெண்ணய்ப் பிறந்துநான் பேய்க்கோலம் ஆனேனே
பத்தினியாள் புலம்புறது பஞ்சவர்க்குங் கேளாதோ
அருந்துதியாள் புலம்புறது அய்வருக்குங் கேளாதோ
உத்தமியாள் புலம்புறது ஒருவருக்குங் கேளாதோ. 340
அத்தைமகன் மச்சினர்க்கு ஆளுமிகக் காணேனே
இப்படி அழுது இருக்குமந்த வேளையிலே
வைகைக் கரையோரம் வாதுராசா தானிருந்தான்
செப்பூசி கொண்டு செவியில் இடித்தாப்போல்
ஆரடா புலம்புறவன் அப்போதே ஓடிவந்தான் 345
பாப்பான் வடிவெடுத்துப் பஞ்சாங்கம் கைப்பிடித்துப்
பத்தினியாள் அரமனைக்குப் பக்கமெதி ராகவந்தான்
கண்டாளே தாதிமார்கள் பாப்பான் வருகுறதை
எந்தவூ ரய்யா எங்கைவந்தாய் இப்போது
மாயன்மகள் சுந்தரிக்கு வரிசைக்கலி யாணமென்று 350
கலியாணம் என்றுவந்தேன் கட்டழகி சுந்தரிக்கு
அந்தமிகச் சத்தம் சுந்தரிக்கி அப்போதே கேட்டதுவே
நிண்ணால் குத்தும் விழுந்தால் உதையுமென்றாள்
அப்படி யாக அடிச்சிழுத்துப் போகையிலே
பேத்தியென்று விளையாடி னேனம்மா பின்குடுமி விட்டுவிடும் 355
அந்தமிகச் சேதி அடவாகச் சொன்னார்கள்
கொம்பனையாள் சுந்தரியாள் கூட்டிவரச் சொன்னாளே
கூட்டிவந்து விட்டார்கள் கொம்பனைக்கி முன்னாக
நான்தாண்டி வாதுராசா நல்லதொரு பெண்மயிலே
நீ, அழுகுற சத்தம் அரமனைக்குக் கேட்டதினால் 360
அதுகண்டு வந்தேன் ஆனதொரு சுந்தரியே
வாதுராசா நீயானால் வடிவெனக்குக் காட்டுமென்றாள்
அப்போது வாதுராசா ஆகாச மாய்வளந்தான்
வாதுராசா வைக்கண்டு வகையாகத் தெண்டனிட்டுப்
பாட்டா நீ இப்பப் பயணமே போகவேணும் 365
அத்தை மகனுக்கு ஓலைகொண்டு போகவேணும்
கட்டுச்சோறு கட்டுகுறேன் கடும்பயணம் போகவேணும்
நல்லதென்று சொல்லி நானூத்திக் கலஅரிசிச்
சோறுமிகக் கட்டத் துயில்வேணும் என்றார்கள்
அப்போது வாதுராசா அடவாய் எழுந்திருந்து 370
பெண்கொள்ள வாறமென்று பெரியகூடாரம் போட்டார்கள்
திரியோதனன் கூடாரம் திக்கெங்குந் தான்பாத்துச்
சேரவே சுண்டிவிட்டாள் தெய்வலோகஞ் சேர்ந்ததுவே
கட்டுச்சோறு கட்டினார்கள் கருமலைக்கி ஒப்பாக
ஓலை எழுதுமம்மா ஒருநொடியில் போகவேணும் 375
நல்லதென்று சுந்தரியாள் நாலோலை தானெடுத்து
வாரி எடுத்தாளே வடிவான சுந்தரியாள்
அஞ்சேடு தானெடுத்து ஆண்டவனைத் தான் நினைந்து
மாசமும் தேதியும் வரிசையாக எழுதுகுறாள்
அத்தைமகன் மச்சினர்க்கு அடவாகத் தெண்டனிட்டேன் 380
தெண்டனிட்ட சுந்தரிக்கிச் சேதமிக வாராமல்
திரியோ தனன்பாவி தீங்கு தனைநினைந்து
வனம்போன பாண்டவர்கள் வாறதில்லை என்று சொல்லி
மாயன் பெருமாளும் வகையாகச் சம்மதிச்சு
உன் கூத்திமகன் லெக்கணர்க்குப் பெண்குடுக்கச் சம்மதிச்சுங் 385
பங்குனி மாசம் பதினஞ்சாந் தேதியிலே
வெள்ளிக் கிழமை விசைய திசமியிலே
கலியாண முடிக்கக் கடுகவே வாறார்கள்
ஒலைக்கண்ட நாழிகைக்கு ஒருநொடியில் நில்லாதே
ஆளுவந்து சொன்னால் அரைநொடியில் நில்லாதே. 390
ரெண்டேடு தானெடுத்து நலமாகத் தானினைந்து
எப்போதும் போலே இருக்கிற பெண்ணல்லகாண்
ஈனாத வாழை இளவாழைக் கண்ணதபோல்
காயாத வாழை கருவாழை: கண்ணதுபோல்
கய்யிரண்டுங் காலுரெண்டும் வளுருவி விட்டாப்போல் 395
பல்லுத் திருவழகு பார்வதிக்கு ஒப்பிடலாம்
நெத்தித் திருவழகு நிலாப்பிறைக்கி ஒப்பிடலாம்
மார்புத் திருவழகு வண்ணம் பதிச்சாப்போல்
மூக்குத் திருவழகு முத்துப் பதிச்சாப்போல்
கையழகும் காலழகும் ராச்சியத்தில் கண்டதில்லை 400
முன்னழகும் பின்னழகும் முத்துப் பதிச்சாப்போல்
ஓலை கண்ட நாழிகைக்கு ஒருநொடியில் வரவேணும்
மூணானேடு தானெடுத்து மூர்க்கமுடன் தானெழுதி
என்னவென்று சொல்லி எழுதினாள் சுந்தரியாள்
உங்களுட தாயாரும் எங்களுட தாயாரும் 405
முக்காலும் பிள்ளையில்லை மூணுதிரம் பிள்ளையில்லை
பிள்ளையில்லை என்று பெருமாளும் ஓடிவந்து
சித்திர புத்தீரரைத் தீக்கென்று 'கேள்க்கவந்தார்
முக்காலும் பிள் ளையில்லை மூணுதிரம் பிள்ளையில்லை
என்றுதான் சொன்னதுக்கு இயல்பான மாயவனும் 410
பரமேஷ் பரன்கிட்டப் பக்கமே ஓடிவந்து
அப்போது ஈஸ்பரரும் அடவாக ஏதுசொல்வார்
மாயன் பெருமாளே வந்தவகை சொல்லுமென்றார்
பிள்ளையு மில்லாத பெருந்தவசு கேள்க்கவந்தேன்
மைந்தனு மில்லாத மனக்கவலை கேள்க்கவந்தேன் 415
பிள்ளைவரங் கேளாத பேசாதே போங்கணும்
துவே தெனைக்கேட்டார் ஆயன் பெருமாளும்
அப்போது ஈஷ்பரரும் அடவாகச் சொல்வாராம்
உன், தங்கையரும் தேவியரும் தனிச்சுவழி போகையிலே
புனலாத்தாங் கரையோரம் நந்தவனம் போட்டிருக்கும் 420
பண்டாரத் தையழைத்து நந்தவனம் பாழாகிப் போனதென்ன
குடுப்பாருமில்லாமல் நந்தவனம் பாழாகிப் போச்சுதம்மா
அப்போ திருவருமே அடவாகத் தான்பாத்து
அஞ்சுபொன் தான் கொடுத்து அடவாக அடையுமென்றார்
அந்தப் படிக்கி அடைச்சானே பண்டாரம் 425
சிங்காரப் பூந்தோட்டம் சிறப்பாக வாழ்ந்துதப்போ
அந்தநல்ல தோட்டத்தை ஆயன்பசுவு அழித்து துக்காண்
தோட்டம் மிகப்பார்க்கச் சுபத்திரியும் லெட்சுமியும்
வந்துமிகப் பார்த்து வகையாக ஏதுசொல்வார்
தோட்டங்க ளெல்லாம் சுத்தி யழிந்ததென்ன 430
ஆத்தாளே தாயே அதுகேட்டா யில்லையென்றான்
மாயன் பசுவாலே நந்தவனம் பாழாகிப் போச்சு தம்மா
அந்தப்பசு தோட்டத்தில் ஆகாசமாய்த் தான்விழுந்து
பசுவுவா ராதபடிக்கிப் பணிக்குமிகச் சொல்லுகிறோம்
செப்புவசி யுருக்குவசி சேர்ந்ததொரு யிருப்புவசி 435
மற்றுபசி யும்பசுவு குதிக்கு முன்பாக
அவர்கள் சொன்ன படிக்கித் துருசாக நட்டாராம்
அந்தவசி யிலேபசுவந்து அலறி விழுந்திடுமாம்
அந்தப் படிபாவஞ் செய்தவர்க்குப் பிள்ளையில்லை
சங்கு சக்கரமும் அடகுமே தான்கொடுத்து 440
வரம்வாங்கிக் கொண்டு வந்துவிட்டார் அப்போது
மூணா நாள் குளிகுளித்து இருபேரும் போகையிலே
அந்தநல்ல வேலையிலே ஆனதொரு மாயவரும்
காத்து மழைபோலே வந்தாரே மாயவரும்
மழைக்காத்துக் குள்ளே ஒரு மரத்தடியில் வந்தார்கள் 445
மரத்தடியில் வந்து வகையாக நிற்கையிலே
துளுத்து மரமுந் துளிர்வாங்கிப் பூவாங்கிப் பிஞ்சாலே
காயும் பழமாகிக் கனிந்துபழம் வீழ்ந்ததுவே
விழுந்த பழத்தை விருசாகத் தானெடுத்துக்
காவேரிக் கரைதனிலே கனியைமிகக் கொண்டுவந்து 450
கொட்டை யொருத்திதின்றால் தோலை ஒருத்திதின்றாள்
நங்கையரும் நாத்தியரும் நலமாகத் தான்பேசி
உன்வயற்றில் ஆண்பிறந்தால் என்வயற்றில் பெண்பிறந்தால்
ஒண்ணுக்கு ஒண்ணு உத்துருமை தாறமென்று
கோதா புரியில் கெங்கையைச் சாட்சிவைத்து 455
ஆலா மரஞ்சாட்சி ஆட்டிடையன் தான்சாட்சி
பத்துமாசம் சுமந்திருந்து பாலகனைப் பெத்தெடுத்தார்
விரைதின்ற படியினாலே வாளபிமன் தான்பிறந்தான்
தோல்தின்ற படியினாலே சுந்தரியும் தான்பிறந்தாள்
அப்போது சுபத்திரியாள் ஆனதொரு சங்குப்பாசி 460
கொண்டுவந்து ஒங்கள்தாயார் கொடுத்தாளே அப்போது
சங்கடியும் தேவியென்று சகலருமே தானிந்தப் பெண்ணல்லவோ
இந்தப்படி அபிமன்னன் தேவியென்று அனைவருமே தானறிய
நாலேடு தானெடுத்து நன்றாகக் கைப்பிடித்து
அத்தைமகன் மச்சினரே அடவாகச் சொல்லுகிறேன் 465
பள்ளிக்கூடத்தில் இருபேரும் பாங்காய்ப் படிக்கையிலே
பள்ளிக்கூடம் விட்டுப் பழையசோத்துக்கு வருகையிலே
சாதமுஞ்சாப் பிட்டுத் தனிச்சு வருகையிலே
அக்கிரார வீதியிலே அருந்துதியாள் வருகையிலே
ஓரக்கிணத்தை யெட்டிப் பார்த்தானே அப்போது 470
பொன்னா லெழுத்தாணி பிடி நழுகி வீழ்ந்ததுவே
அந்தநல்ல வேளையிலே அடவாகத் தானுமப்போ
முத்தான கண்ணீரை முதுமார்பில் சோரவிட்டேன்
பவளம் போல் கண்ணீரைப் பக்கமே சோரவிட்டேன்
நான் அழுது புலம்பி அக்கிரார வீதீயிலே 475
நிற்கிற வேளையிலே நீர்தானும் அப்போது
வளகிடாய் மேலேரி வந்தீரே அப்போது
அழகுற சேதியென்ன அடவாகச் சொல்லுமென்றீர்
பொன்னால் எழுத்தாணி பூமியிலே சோரவிட்டேன்
எந்தன் எழுத் தாணி இந்தக் கிணத்திலே வீழ்ந்ததுவே 480
எழுத்தாணி போனால் இனிக் கிடையாதோ பூமியிலே
எழுத்தா ணிக்கிபதில் இப்பவே நான்தாறேன்
அதுக்குவே றெண்ணாதே ஆனதொரு பெண்ணே நீ
எத்தினைதான் சொல்லி இதமாய் உரைத்தாலும்
எந்தன்னெழுத் தாணி எடுத்தாக்கால் போயிவிடும் 485
நீயே புருசன் நானுனக்குப் பெண்சாதி
அந்தமொழி கேட்டு ஆனதொரு வாளபிமன்
சிவனேயென்று விலவாங்கிச் சீக்கிரமாய்ப் போட்டீரே
விட்டகணை போயிவெகு வேகமாய்த் தான்பிடித்துக்
கொண்டுவந்து தானும் கொடுத்தீரே அப்போது 490
அப்படி அடையாளம் ஆனகணையாழி மோதிரமும்
உண்கைக் கணையாழி என் ைகயிலே இருக்குதுகாண்
என்கைக் கணையாழி உன்கையிலே இருக்குதுகாண்
இதுவுமொரு அடையாளம் எழுதனால் சுந்தரியான்
அஞ்சேடு தானெடுத்து அடவாகக் கைப்பிடித்து 495
என்னமென்று சொல்லி எழுதினாள் சுந்தரியாள்
திரியோ தனன்பாவி திரவியத்தைக் கொண்டுவந்து
கொள்ளத்துணிந்தான் மாயன் குடுக்கவே சமமதித்தார்
கலியாண சோபனங்கள் கடுகவே ஆகுதிப்போ
அரைக்கீரைச் சிறுபாத்தி அறுக்கவே பக்குவங்காண் 500
சிறுகீரை காய்ய வாறானே லெக்கணனும்
சிறுகீரை சிக்காது தீயில் குதித்திடுவேன்
நல்ல பழத்துக்கு நரிவந்து துலாவுதுகாண்
நல்லகனி சிக்காது நல்லகனி ஈந்திடுவேன்
காவல் அழியுதுகாண் கண்ணாளா தேசமெல்லாம் 505
காவல் அழியாமல் கண்ணாளா வந்ததுவும்
அத்தைமக னானால் அரைச்சினத்தில் வந்துவிடும்
மாமிமக னானால் மாயமாய் வந்துவிடும்
உன்கைக் கணையாழி என்கையிலே தானிருக்க
என்கைக் கணையாழி உன்கையிலே தானிருக்கக் 510
கணையாழி மோதிரமே கணவனென்று நானிருந்தேன்
அக்கினியை வளத்து அதிலே குதித்திடுவேன்
ஓலைக்கண்ட நாழிகையில் ஒருநொடியில் வரவேணும்
ஓலைப்பிள்ளை போலே தீயில் குதித்திடுவேன்
கொண்டபெண்ணை விட்டாலும் குறித்தபெண்ணை விடுவதில்லை 515
கடைசுட்டு ஓலை கடுகவே தானெழுதி
அஞ்சேடு தானெடுத்து அடவாகத் தானுருட்டி
அஞ்சேட்டு மேலே அரக்குமுத்திரி தான்போட்டுக்
காண்டுவந்து சுந்தரியாள் கொடுத்தாளே ஓலைதனை
வாதுராசா வாங்கி வகையாகக் கைப்பிடித்துக் 520
கட்டுச்சாதம் வாங்கிக் கடும்பயணம் போகையிலே
மாயன் பெருமாள் வழிமறிக்க வேணுமென்று
பயணத்துக்கு முன்பாகப் பாங்காக வந்துநின்று
திரும்பியே வாதுராசா திக்கென்று ஓடிவந்து
மாயன்மகள் சுந்தரிக்கு மறுவார்த்தை தான்சொல்லி 525
அந்த மொழிகேட்டு ஆனதொரு சுந்தரியாள்
மாயன்வித்தை காணும் மயக்கமடா ராசாவே
அதுக்குவே ரெண்ணாதே ஆனதொரு பாட்டாநீ
நல்லதென்று சொல்லி வாதுராசா தான் நடந்தான்
ஊரு கடந்து உத்திராட்சப் பூமிவிட்டு 530
நாடு கடந்து நடுவழியே போகையிலே
வங்கு நரிபோலே வந்தாரே மாயவனும்
அந்த வனங்கடந்து அப்பாலே போகையிலே
ஊசி வனங்கடந்து உத்திராட்சப் பூமிவீட்டுச்
சிள்ளென்ன காடும் செடியும் புனாந்திரமும் 535
போறவழி தனிலேஒரு புதுக்குளமி ருந்ததுவே
அந்தக் குளத்தில் ஆமையிலே ஆயிரமாம்
முதலையிலே ஆயிரமாம் மீனும் ஒருகோடி
அப்படியே தானிருக்கும் ஆன குளமுமது
அந்தக் குளத்தை அடவாகத் தான்கலக்கி 540
ஏரியைத் தானுடைத்து எதுக்கவைத்தான் வாயுதனை
சாதமுந் தின்று தகையாறிப் போனபின்பு
அந்த வனங்கடந்து அப்பாலே போகையிலே
வாளால் அபிமன்னன் மணல்குமித்து விளையாடுகிறான்
வெள்ளை நவல்பழமும் மெத்தவே கொண்டுவந்து 545
தூரார் புகழுடைய தர்மம் பெரியப்பனுக்கு
ஊரார் புகழுடைய உற்றபுகழ் பீமனுக்கு
ளா லழகன் அருச்சுனனார் என்தகப்பன்
நகுலன் சகாதேவன் நல்ல துரோபதைக்கும்
அஞ்சு நல்ல பேர்க்கு அஞ்சிலையும் தான்போட்டுப் 550
பாஞ்சாலி துரோபதைக்கிப் பக்க மிலைபோட்டு
அஞ்சு படையல்சுத்தி யாடி வருகையிலே
சுளிகாத்துப் போலே சுழத்திவிட்டான் வாதுராசா
வந்த பசங்களெல்லாங் காத்து வாரிக்கொண்டு
போனதுவே வாளால் அபிமன்னன் வாளெடுத்துக் கச்சைகட்டி 555
வாது ராசாவை வகையாகத் தான்பாத்துக்
காலடியில் ஓலையைத்தான் கடுகவே போட்டுவிட்டான்
ஓலையைக் கண்டார் உற்றபுகழ் வாள்வீமன்
ஓலையைக் கைப்பிடித்து ஊருக்கு வாறானாம்
மாயனும் வந்து வள்ளுவன்போல் வடிவானார் 560
அப்போது வாளபிமன் அடவாகத் தான்பார்த்து
எங்கை யிருந்து எவடத்துக்குப் போறியடா
தூரம் வடக்கே துவாரகாபுரியி லிருந்துவந்தேன்
கண்டதொரு காரியங்கள் கணக்காகச் சொல்லுவேன் நான்
அப்போது வாளபிமன் அடவாகத் தான்பார்த்து 565
நீ ஓலைகொண்டு போறதை ஒருவிடத்தில் காட்டாதே
தங்களுட தாயார்கிட்ட தப்பாமல் கொண்டுசென்று
குடுவென்று சொல்லி வள்ளுவனும் போனானாம்
நல்லதென்று சொல்லி நடந்தானாம் வாளபிமன்
தாயாரைக் கண்டு தப்பாதே தெண்டனிட்டுக் 570
கொண்டுவந்து ஓலையைக் குடுத்தானாம் வாளபிமன்
போசனமும் பண்ணுமப்பா புத்தியுள்ள கண்மணியே
அந்தநல்ல ஓலையை அடவாகப் பாத்தாளாம்
மாயன் மகள் கையெழுத்து மகனுக்குக் கேடாச்சு
பாவிமகள் கையெழுத்து பாருலகில் கண்டதில்லை 575
இந்தெழுத்துக் கண்டால் இருப்பானோ பூமியிலே
கொண்டுவந்து ஓலையைக் குறுக்கே கிழிச்செறிந்தாள்
என்தாயே மாதாவே ஓலைச் சேதிதனைச் சொல்லுமம்மா
உங்கள் தகப்பமார் ஐவரும் வனவாசம் போகையிலே
விசையாபுரி அம்மனுக்கு அஞ்சு விளக்குவைத்தார் 580
அவர்கள் ஆயுதமும் தீப்பு அடைக்கலமாய் வைத்தார்கள்
அந்த அம்மனுட கோவிலுக்குப் போய் அறிந்து வாஎன்மகனே
நல்லதென்று சொல்லி நடந்தானே வாளபிமன்
வாளெடுத்துக் கச்சைகட்டி வந்தானே வாளபிமன்
பத்திர காளியுட கோவில்சுத்திப் பதினாயிரஞ் சடாமுனியும் 585
ஒத்தைச் சடாமுனியும் ஒருபல்லு ராச்சதனும்
மேட்டிலே போட்டிருக்கும் வீர முனிதனையும்
அந்தமேட்டுத் தடமாக வாறானே வாளபிமன்
கண்டுது அந்தமுனி கண்கள் பொரிபறக்க
ஆரடா வாறவன் அடிக்கிறேன் தப்பாமல் 590
வாளால் அபிமன்னன் வகையாகக் கிட்டவந்து
எட்டிச் சடைபிடித்து எறக்க அறுத்துவிட்டான்
இருந்த முனிகளெல்லாம் ஏகமாய் ஓடியதே
அம்மனுமே கண்டு அடைத்தாளே தன்கதவை
அம்மனுட சன்னதிக்கு அடவாக வந்துநின்று 595
தாயே உமையவளே சிவசங்கரியே மாதாவே
என்றுசொல்லி வாளபிமன் இதமாக நிற்கையிலே
ஆரடா முனியை அடிச்சு மிரட்டினவன்
தாரார் புகழுடைய தர்மருக்கு நேரிளையோன்
அருச்சுனன் குமாரன் அபிமன்னன் நானல்லவோ 600
அப்போது பத்திரகாளி அடவாக ஓடிவந்து
வாரி எடுத்து வர்ணப் பசுங்கிளியே
தேத்தி யெடுத்து திரவியமே எங்கைவந்தாய்
வந்ததொரு காரியத்தை வகையாகச் சொல்லுகிறேன்
உனக்கு எதிராய் முனியை அனுப்பிவைத்தேன் 605
அப்பா மகனே அறிவுள்ள கண்மணியே வந்ததொரு
காரியத்தை வகையாகச் சொல்லிவிடும்
அய்வர் வனவாசம் அடவாகப் போகையிலே
அய்வருட ஆயிதமும் அடைக்கலமாய் வைத்தாராப
அந்தநல்ல சேதி அடவாகக் கேட்டுவந்தேன் 610
அப்போது கீழுலகில் அடவாகக் கூட்டிப்போய்த்
தலைவாசல் தானதிறந்து காண்பிச்சாள் அம்மனுமே
அஞ்சு விளக்கு அவியாமல் எரியுதப்பே
அபிமன்னா ஒருவார்த்தை சொல்லநீ கேளாய்
அய்வர் வனவாசம் அடவாகப் போகையிலே 615
என்கோவிலுக்கு வந்து கும்பிட்டுத் தெண்டனிட்டு
அஞ்சுபேர் ஆயுதமும் அடைக்கலமாய் வைத்தார்கள்
பனிரெண்டு வருஷம் பாரவனம் போறமம்மா
அஞ்சுபேரில் ஒருவருக்கு அவகேடு வந்தாக்கால்
அதுக்கு விபரமென்ன ஆ னதொரு தாயாரே 620
அஞ்சு விளக்கிலயும் ஞ்சுபொ ஷ்பந் தான்போட்டுத்
தாரார் புகழுடைய தருமா விளக்கிதுகாண்
வெற்றி மதயானை வீமனுட தன்விளக்கு
ஊரார் புகழுடைய அருச்சுனனார் தன்விளக்கு
நாலுதிக்கும் ஓடிவெட்டும் நகுலனுட தல விளக்கு 625
சாஸ்திரக் கொடிவேந்தன் சகாதேவன் தன்விளக்கு
பாஞ்சாலி துரோபதையாள் பத்தினியான தனவிளக்கு
அந்தநல்ல பொஷ்பம் அடவாக வாடாமல்
அய்வருக்குச் சேதமில்லை அழிவொடுநாள் வாறதில்லை
அஞ்சாதே போடா அதுக்குவே றெண்ணந்தே 630
உனக்குமொரு ஆபத்தானால் உடனே நினையுமடா
ஆபத்துக்கு ஆயுதமும் அடவாய்க் குடுப்பேண்டா
அஞ்சாலே போடா நீ ஆனதொரு வாளபீமா
நல்லதென்று சொல்லி ந ந்தானே வாளப்
ஊசி வனங்கடந்து உத்திராச்சத் தேசம்விட்டு 635
ஆனை சுந்தி உள்புகுந்து அப்போது வாள்வீமன்
சுபத்திரா தேவியைச் சுந்திவந்து தெண்டனிட்டுத்
தண்டனிட்ட மகனைத் இக்கென்று தானெடுத்துப்
போனதொருகாரியத்தைப்புண்ணியனே சொல்லுமய்யா
தாயே நீ சொன்ன சோதினைகள் மெய்யாச்சு 640
ஓலைச் சேதானும் உள்ளபடி சொல்லுமம்மா
அப்பா மகனே அறிவுள்ள புத்திரனே
ஓலைச் சேகிதானும் ஒளியாமல் சொல்லுகுறேன்
அப்பவே வாளபீமன் அடவாகக் கேட்டுநின் றான்
ப்போ சுபத்திரியான் அடவாகச் சொல்லுகிறாள் 645
ஓலையிலே தானும் ஒன்றுமில்லை யென்றுசொன்னாள்
ஓலை குடுக்காட்டி உயிர்ச்சேதம் வந்துவிடும்
அந்த மொழிகேட்டு ஆன சுபத்திரியாள்
வனம்போன பாண்டவர்கள் வாறார்கள் என்றுசொல்லி
நாடாள வாறமென்று நல்லோலை வந்துதய்யா 650
ஊரோடே வாறமென்று உத்தோலை வந்துதய்யா
அய்வரு ஓ லையை ஆத்தாளே தந்துவிடும்
அய்வரைக் -ணாட்டி அந்த ஓலையைக் காணவேணு
தாதியரைத் தானழைத்துத் தருமென்றாள் ஓலைதனை
ஓலையைக் க ணாமல் ஒரு கீழித்தோலை கண்டனப்பா 655
கிழிச்சோலை தன்னைக் கொண்டுவந்து கைக்குடுத்தான்
ஓலையைக் குமித்து ஒருநொடியில் தெண்டனிட்டுப்
பத்தினியாள் ஓலையானால் ஒன்றாய்ப் பொருந்தவேணும்
உத்தமியாள் ஓலையானால் ஒன்றாய்ப் பொருந்தவேணும் 660
அய்வர் தனை நினைந்து அப்போது வாளபிமன்
ஆக்கரித்துப் பல்கடித்து அமட்டி எழுந்திரிந்து
வாளை யெடுத்து மகாமேரு நோக்கிவிட்டான்
வாளு வாகையிலே மாயன் விலக்கிவிட்டார்
ஓலைச் சுருளும் ஒன்றாய்ப் பொருந்தியதே
அஞ்சுகட்டுக் கட்டி அரக்குமுத்தீரி தான்போட்டுச் 665
சுருள வீழ்த்துத் தானும் தோற்றமுள்ள வாளபிமன்
வாசித்துப் பார்த்து வாளபிமன் ஏதுசொல்வான்
காசிக்குப் போனாலுங் கருமந் துலையாதே
நிக்கத் தரிக்காது நிலத்தில்கால் பாவுதில்லை
வாளெடுத்துக் கச்சைகட்டி மான் துளிர்போல் சல்லடமிட்டு 670
அப்பா மகனே அடவாகச் சொல்லுகுறேன்
உங்கள், மாமனுட சேதி வகையறிந்து நான்வாறேன்
சிங்கமுகப் பல்லாக்குச் சீக்கிரமாய்த் தானேறித்
தாதியரும் பாங்கியரும் தனக்கேத்த தோழியரும்
ஆனைகுந்தி விட்டு அப்பாலே போகையிலே 675
முங்கி வனங்கடந்து முந்நூத்திக் காதவழி
ல்லென்ன காடும் செடியும் புனாந்திரமும்
சங்கல் வ ராபுரியில் தானாக லந்திறங்கி
அண்ணன் அரமனைக்கி அதிகதலி வாறாளே
மாயனைக் கண்டு வகையாகத் தெண்டனிட்டுத் 650
தெண்டனிட்ட தங்கையரைத் திக்கென்று தானெடுத்து
வந்ததொரு காரியத்தை வகையாகச் சொல்லுமம்மா
திரியே தனன்பாவி சேரத் துரத்திவிட்டான்
அப்படிப்போல் என்னை அகலத் துரத்தீனியோ
தன்மகள் சுந்தரியாள் ஓலை யெழுதிவிட்டாள் 655
அதுகண்டு ஓடிவந்தேன் அண்ணரே புத்திசொல்லும்
நல்லது தங்கையரே நான்சொல்லக் கேளுமம்மா
கலியாண மென்று சொன்னதீனால் சேதமில்லை
பெண்ணிருக்கும் வீடு பெரியதாசி மனையல்லவோ
வெந்நீர் கொதித்து வீடுதான் வேகாது 690
ஆருதான் சொன்னாலும் அஞ்சாதே தங்கையரே
நங்கையுண்டு நாத்தியுண்டு நமக்குத் தெரியாது
அண்ணனுட தேவிகிட்ட அடவாக வந்தாளாம்
வந்ததொரு நங்கையரே வாய்க்கருசிக் கில்லையோ தான்
கட்டின தாலிக்கிக் கடமணிக்கி மில்லைபோதான் 695
வெய்யிலிலே எங்கைவந்தாய் வெக்கங்கெட்ட நங்கையரே
எப்படித்தான் சொன்னாலும் என்னுருமை போகாது
உருமையென்று சொன்னதுக்கு உனக்கேத்த புத்திசொல்வேன்
பெண்குடுக்கச் சம்மதித்த பிறசாட்சி யுண்டோதான்
சாச்சியென்று சொன்னாயே திட்டவட்டஞ் சொல்லாட்டி 700
சாச்சியு மானால் தருவேண்டி பெண்ணுக்கு
இருவரெண்டு பேரும் வழக்குக்குப் போனார்கள்
கோதாபுரி கெங்கைகிட்டப் போனார்கள் அப்போது
வத்தின கெங்கை மகாமேரு போல்வளந்தால்
அப்போது நானும் அடவாகப் பெண்கொடுப்பேன் 705.
கெங்கா புரியம்மா கீர்த்தியுள்ள என்தாயே
அண்ணாசொன்ன வார்த்தை அபத்தமே யானாக்கால்
ஒக்குற தண்ணீர் இடைவத்திப் போகவேணும்
சான்னசேதி மெய்யானால் சோதினையாய்ப் பெருகவேணும்
அந்தப் படிக்கி ஆண்டவனைத் தெண்டனிட்டு 710
வடக்கே கரிக்கி மகாமேரு பொங்கியப்போ
காவேரி யம்மன் கைநீட்டிச் சொன்னாளாம்
சாட்சியும் உண்டு தங்கச்சி பெண்ணைக் குடுத்துவிடும்.
அப்படிச் சொல்லி அடவாய் மறைந்ததுவே
ஆமடி மருந்துக் கள்ளி அறிவேண்டி உன்சேதி
இரண்டாவது சாட்சி நன்றாக வந்தார்கள்
ஆலாமரமு அமந்த வினாயகனும்
அவர்கிட்ட வந்து அடவாகத் தெண்டனிட்டு
எனக்குச் சாட்சி இதமாகச் சொல்லவேணும்
என்று சொல்லிச் சுபத்திரியாள் இதமாகச் சொன்னாளாம் 715
அப்பவே லெட்சுமியாள் அடவாகச் சொன்னாளாம்
தழைஞ்சமரம் இலையுதிர்ந்து தரைநீண்டி யேகுடுத்தால்
அப்படியே தானும் அடவாகப் பெண்குடுப்பேன்
நல்லதென்று சுபத்திரியாள் வினாயகனைத் தான்தொழுது
இடசாரி சுத்தி வலசாரி தெண்டனிட்டு 725
அண்ண சொன்ன வார்த்தை அபத்தமே யானாக்கால்
பெண்ணுமிக வேண்டாம் பேசாமல் போறேன்நான்
ண்டவனைத் தான் நினைந்து அடிதொழுது தெண்டனிட்டு
அப்போது ஆலாமர முந் அடவாகத் தான்பாத்து
அப்போ தழையுதிர்ந்து தரைதீண்டிக் கொடுத்திடுமாம் 720
அப்போது லெட்சுமியாள் அடவாகச் சொல்வாளாம்
மருந்துக்கள்ளி என்றறியேன் வந்தேனே உன்பிறகே
என்றுசொல்லிப் போட்டு நடந்தாளே லெட்சுமியாள்
அப்போது ஓடிவந்து அடவாகச் சொல்வாளாம்
இன்னமொரு சாச்சி யுண்டேதான் நங்கையரே 735
அப்போது தங்கையர்க்கு அவகேடு வருகுதென்று
மாயன் பெருமாளும் வந்தாரே இடையனைப்போல்
ஆரடா அண்ணாவி அங்கைமிகப் போறவன்தான்
கிட்டமிக வந்து கேட்டாயோ அண்ணாவி
அண்ணக்கிப் போகையிலே ஒன்னோடே ஒருசாச்சி சொன்னதுண்டு 740
உன் டுஇல்லை யென்று ஒளியாமல் சொல்லிவிடும்
அப்போது ஆட்டிடையன் அடவாகக் கீட்டவந்து
இருவரெண்டு பேரும் இதுதடமாய்ப் போகையிலே
உன்வயத்தில் ஆண்பிறந்தால் எண்வயத்தில் பெண்பிறந்தால்
உத்துருமை தாறமென்று கைபோட்டுச் சொன்னதுண்டு 745
அதுக்குஎன்னைச் சாட்சிவைத்த அடையாளம் உண்டுமம்மா
என்றுதான் சொன்னதுக்கு இயல்பான லெட்சுமியும்
நரைத்தலையை நாயிசிக்க நன்றாகச் சொன்னியடா
உங்களுட யிடக்குலங்கள் உனக்கேதான் சொல்லுமடி
என்றுசொல்லிப் போட்டு இயல்பாகப் போகையிலே 750
பெண்குடுக்கச் சொல்லிப் பிறகேதான் போயிழுத்தாள்
ஒருவர்மயிர் ஒருவர்கையில் ஓயாமல் சண்டையிட்டார்
அந்தநல்ல வேளையிலே ஆனதொரு சுந்தரியாள்
அத்தைதான் வந்ததை அடவாகத் தான்கேட்டுச்
சிங்கமுகப் பல்லாக்குச் சேரவே யேறிக்கொண்டு 755
ஓட்டமாய் ஓடிவந்து ஒருநொடியில் தான்புகுந்து
மாமியைத் தூக்கிவிட்டு மாதாவைத் தான்பிடித்து
அப்போது தாயாரை அடவாகத் தான் பிடித்து
நிண்ணாலே குத்தும் விழுந்தால் உதைகளுமாய்
ஆத்தாளைத் தள்ளி அத்தையரைக் கூட்டிவந்து 760
சிங்கமுகப் பல்லாக்குச் சேரவேயே றிக்கொண்டு
அரமனைக்கி வந்து அடவாய் எளப்பாறி
ஏலமும் போட்டு இளநீர் தனைக்குடித்து
சம்பங்கி எண்ணெய்கொண்டு தலைகோதிச் சிணுக்கெடுத்துச்
சாப்பிட்டு மேநல்ல தயவாய் எளப்பாறிப் 765
போறேண்டி சுந்தரியே புத்தியுள்ள கண்மணியே
கலியாணச் சேது கலக்கமில்லை விட்டுவிடும்
அத்தையரே நீயும் அடவாகக் கேளுமின்னம்
ஆரியகுல வங்கிஷத்தில் அழிவுவர லாகாது
கொண்டபெண்ணை விட்டாலுங் குறிச்சபெண்ணை விடுவதில்லை 770
அந்த மொழிகேட்டு ஆனதொரு சுபத்திரியாள்
ஏதுக்கும் அஞ்சாதே என்தாயே சுந்தரியே
என்றுசொல்லிப் போட்டு பல்பலாக்கு ஏறினாள் சுபத்திரியாள்
ஊரு கடந்து உத்திராட்சப் பூமிவிட்டு
ஆரண்ட வனங்கடந்து அயிரா பதம்புகுந்து 775
அந்த வனங்கடந்து ஆனைந்தி உள்புகுந்து
வாளாள் அபிமன்னன் வகையுடனே அப்போது
வந்ததொரு தாயாரை வகையாகத் தெண்டனிட்டுப்
போய்வந்த சேதி புதுமைதனைச் சொல்லுமம்மா
போனதொரு சேதி பெண்கேட்டு வந்தனப்பா 780
மாயன்மகள் சுந்தரியாள் வார்த்தைகள் மெத்தவுண்டு
துடையுங் கழுத்துந் தூணுப் பருத்தாப்போல்
காலுந் தலையும் கரடி மயிரதுபோல்
என்னோ டுடன்பிறந்த இன்னமொரு அண்ணனுண்டு
அவன்வயத்துப் பிள்ளையானால் அழகுமெத்தத் தம்பியரே 785
அன்னக் கிளிபோல் அவளிருப்பாள் தம்பியரே
அத்தப் பெண்ணைநானும் அடவாகக் கேட்டுவாறேன்
எடப்பெண் கிடையாதோ என்மகனே வாளபிமா
நீயும் இடச்சியல்லோ உன்மகனும் டையனல்லோ
மாயன் மகள் வார்த்தை மாதாவைச் சொல்லாட்டிச் 800
சங்குதுவார காபுரிக்கித் தாயாரே போய்வாறேன்
அப்பா மகனே அன்பாகச் சொல்லுகுறேன்
அண்ணாரைக் கண்டு அடவாகப் பேசிவந்தேன்
தேவியரைக் கண்டு சேதியெல்லாஞ் சொல்லிவந்தேன்
வேறையொரு வாரியங்கள் வினைவாற தில்லையப்பா 805
என்று சொல்லி போட்டு இருந்தார்கள் அப்போது.
அந்த நல்ல வேளையிலே ஆனதிரி யோதினனும்
லக்கண குமாரனுக்கும் நல்லதொரு சுந்தரிக்கும்
கலியாண ஓலை கடுசாய் எழுதிவிட்டான
மன்னர் படைசூழ மந்திரிமார் தான்சூழ 810
நாளை வெள்ளிக் கிழமை விசைய தசமியிலே
பங்குனி மாசம் பதினஞ்சந் தேதியிலே
கலியாண மென்று கனக முரசறைந்தார்
குருச்சேத்திர பூமியிலே கூடாரம் போட்டார்கண்
அத்திபுரந் தன்னில் அடவாக வந்திறங்கி 815
முத்துக் குடைமன்ன? முப்பதுநூ றாயிரமா
பவளக் குடைமன்னர் பத்துநூ றாயிரமாம்
பேச்சுமூச் சறியாத பேய்வடுக ரொருகோடி
கீச்சுமூச் சறியாத கிங்கிலிய ராயிரமாம்
மலுக்கர் துலுக்கர் மகாசேனை யொருகோடி 820
திரியோ தனன்தேருந் தென்னவர்கள் தன்தேரும்
கன்னனுட தேரும் காங்கையனார் தன்தேரும்
சசூனி யுடதேரும் சல்லியனததரும்
துரோண ருடதேருந் துஷ்டா தரன்தேரும்
விஷ்ணுமா சாரியார் விதமாகத் தேரேறி 825
அசுவத் தாமாவும் ஆன வெள்ளித் தேரேறிக்
கொன்றைமாலை தேத்தரன் கோடிமன்னர் தான்கூடித்
தேவேந் திரன் தேரும் தேவர்கள் தன்தேரும்
மன்னர் படைசூழ மகுட வரத்தினாசூழ்
எக்கோடி சேனைபடை எல்லோரும் கூட்டமிட்டுக் 880
கருப்பு மிகுடாலுங் கணக்கிடக் கூடாது
வெள்ளி மிகுடாலும் விலைமதிக்கக் கூடாது
அனுமந்த டாலும் அளவறுக்கக் கூடாது
எழுத்துமிக டாலும் எண்ணத் துலையாது
ஆனையொரு கோடி அடவாய்ப் படையெடுத்து 835
ஒட்டையி லொருகோடி ஓக்கப் படையெடுத்து
வெள்ளிரதம் ஆயிரமாம் வெங்கலத்தேர் ஆயிரமாம்
பதினக்கு ரோணிசேனை பாங்காய்ப் படையெடுத்து
பீரங்கி ஆயிரமாம் பெரியகுழல் ஆயிரமாம்
பாண ங்கள் ஆயிரமாம் பாரிவண்டி ஆயிரமாம் 840
சங்குதுவரகா புரிநோக்கித் தானே படையெடுத்து
மானத்துமீன் பூத்தாப்போல் மன்னர் படையெடுத்துக்
குருச்ாேத் திரப்பூமி கூடவே தான்கட ந்து
ஆரண்ட வனங்க ந்து அயிரா பதங்கடந்து
செந்தூள் பறக்கிறதுந் தெய்வலோகஞ் சேருதுகாண் 845
கருந்தூள் பறக்கிறதுங் கருமலைகள் தெரியவில்லை
எதிர்பட்ட மலைகளெல்லாம் இலவம்பஞ் சானதுவே
கால்ப ட மலைகளெல்லாம் கடுகுபொடி யாகுதுகாண்
சூரியனுந் தெரியவிலலை சந்திரனுந் தெரியவில்லை
மூங்கி வனங்கடந்து முன்னூத்துக் காதவழி 850
சில்லென்ன கடுஞ் செடியும் புனாந்திரமும்
அந்த வனங்கடந்து அப்பாலே போகையிலே
கனகமலை சுத்துவைத்துக் கரடிமலை கால்நீட்டி
அம்புதனைத் தீட்டிக்கொண்டு இருந்தானே ராவானும்
காலையுங் கண்டார்கள் கனத்தபடை மன்னவர்கள் 855
துரோணா சாரிதானுந் துருசாக ஓடிவந்து
காலையும் வாங்குமடா கனத்ததொரு ராவானே
கால்வாங்கச் சொன்னதுக்குக் கண்டதுண்ட மாக்கிடுவேன்
விஷ்ணுமா சாரி விருசாக ஓடி வந்து
பெண்கொள்ள வேணுமென்றால் பேசாமல் போகவேணும் 860
அந்தப் படிக்கி அவன் காலின்கீழ் நடந்தார்கள்
சங்குதுவார காபுரியில் தளமெல்லாம் வந்திறங்க க
மாய னதுகண்டு மன்னரெல்லாம் வாருமென்றார்.
வந்த உறமுறைக்கி வகையாய் விடுதிவிட்டு
நம்முடைய கோட்டைக்கு நாலுதலை வாசலுண்டு 865
நாலுதலை வாசலுக்கு நலமாகக் காவல்வைத்துக்
கோட்டைசுத்திப் பாளையமுங் குறையாமல் போட்டுவைத்துக்
கலியாண காரியங்கள் கடுகியே கோப்பியுங்கள்
கலியாணச் சொண்டு ந ளைக்குக் காணவே கூடாது
மாயன் பெருமாளும் மாயமாய்ப் போனதுவே 870
கெருடனென்று ஒருபிறவி கேசரி மார்க்கமதாய்
அந்த வனங்கடந்து அயிரா பதங்கடந்து
ஆனைக்குந்திப் பட்டணத்தில் அடவாக வந்திறங்கிப்
பாப்பான் வடிவெடுத்துப் பஞ்சாங்கங் கைப்பிடித்து
முணுமுழ வேஷ்ட்டி முப்பது பீத்தலது 875
நாலுமுழ வேஷ்ட்டி நாற்பது பீத்தலது
பழுத்தபழம் போலே பல்லுமே இல்லாமல்
வாளபிமன் றன்மனைக்கு வந்தானே பாப்பானும்
பாப்பானைக் கண்டு பக்கமே ஓடிவந்து
எந்தவூர் ஐயா எங்கைவந்தாய் இப்போது 880
தூரம் வடக்கே துவரகாபுரிச் சீமையம்மா
சங்குதுவரகா புரியிலிருந்து எங்கள் தங்கச்சி சொல்லிவிட்டாள்
மாயன் மகள் சுந்தரிக்கு வருசைகலி யாணமென்று
நாளைகலி யாணமென்று நல்லோலை வந்துதம்மா
அதுகண்டு போனால் அஞ்சுபொன் தான்வருமே 885
வீண்பேச்சுப் பேசாதே வெளியிலே போடா நீ
போசனமும் வேணுமம்மா புத்தியுள்ள சுபத்திரியே
அப்போ(து) அரிசிபடி அடவாகத் தான்குடுத்து
வேஷ்டியிலே தான்முடிந்து வெளியிலே போடாநீ
தண்ணீர் தவிக்குது தாகந்தீர வேணுமென்றான் 890
நீர்மோர் குடுத்து நில்லாமல் போடாநீ
அந்தநல்ல வேளையிலே வாளபிமன் வந்தானாம்
பாப்பாணைக் கண்டு வாளபிம் னேதுசொல்வான்
எந்தவூர் ஐயா எங்கைவந்தாய் இப்போது
அடவாகச் சொல்லுகிறேன் ஆனதொடு வாளபிமா 895
கலியாண வாசலுக்குக் கடுகவே போறேனென்றான்.
லக்கண குமாரனுக்கும் நல்லதொரு சுந்தரிக்கும்
நாளைவெள் ளிக்கிழமை விசைய தசமியிலே
என்னோ டுடன்பிறந்தவள் உத்தாள் அனுப்பிவிச்சாள்
கலியாண வாசலிலெ னக்கு காணிக்கை மெத்தவுண்டு 900
அதுகண்டு நான்போறேன் ஆனதொரு வாளபிமா
அப்போது பாப்பான் அடவாகப் போறமென்று
தன்னாடி எழுந்திருந்து தலைவாசல் முன்னாக
வாசல் படிதடுக்கி வகையாக வீழ்ந்தானாம்
சுபத்தீரியாள் தேவிகண்டு தோசம்வந்து சேருமென்று 905
வாடா மகனே வாளபிமா நீதானும்
அய்யன் பிறகே அடவாகப் போய்வாடா
அப்போது வாளபிமன் அய்யன் சுமையெடுத்து
நந்தவனத் துக்குள்ளே நலமாகக் கூட்டிவந்து
தம்பியடா வாளபிமா என்பேச்சுத் தட்டாதே 910
சொல்லுமய்யா என்றுதுரை அபிமன்னன் கேட்டானாம்
அப்போது அய்யன் அடவாகச் சொன்னதுவே
எனக்குயௌப்பு வசமல்ல இனிக்கேளும் என்வார்த்தை
தவலை எடுத்துப்போய்த் தண்ணீது கொண்டாநீ
எங்களுட ராச்சியத்தில் எல்லாஞ் சருத்தாண்டா 915
அதுக்கு நீ யோசினைகள் எண்ணாதே வாள்பி
நல்லதென்று சொல்லி நடந்தானாம் வாளபிமன்
அரிசியும் போட்டு அசனமும் வெந்ததுவே
சாத மிறக்கிச் சாப்பிட வாருமென்றான்
அப்பவே வாளபிமன் அடவாகச் சொன்னதுவே 920
அய்யா நீ யிப்பவும் அசனமும் பண்ணுமென்றான்
உன்னைவிட்டு நானும் உண்பதில்லை சாதமென்றான்
வாளபிம னையழைத்து வகையாய் இலைபோட்டு
அய்யன் தனக்கிலையும் அடவாகத் தான் போட்டு
இருவ ரெண்டு பேரும் இலைக்கிநீர் தான்தெளித்துச் 925
சாதம் பரிமாறித் தயவாக உண்டார்கள்
போசனமும் பண்ணிப்பூந் தோட்டத்தில் இருவகையிலே
அய்யனும் அப்போ அடவாகச் சொன்னதுவே
கலியாண காரியம் கடுக முடியுதிப்போ
நானுமே போகவேணும் நல்லதொரு வாளபிமா 930
அந்தச்சேதி வாளபிமன் அடவாகக் கேட்டபின்பு
அப்போது அய்யன் அடவாகச் சொன்னாராம்
என்பிறகே போகச் சொன்னகளே உன் தாயார்
அதுவே பயணமென்று அடவாக வாருமென்ன
நல்லதென்று சொல்லி நடந்தார் இருவருமே 935
அந்த வனங்கடந்து அப்பாலே போகையிலே
மூங்கி வனங்கடந்து முன்னூத்திக் காதவழி
இரவரெண்டு பேரும் இதமகாப் போகையிலே
மருமகன் சவுரியத்தை வகையாகக் காண்பமென்று
வாளபிமன் வல்லரக்க னைவெட் டினசன்டை 940
அப்போது பாப்பான் அடவாகத் தான்மறைந்தான்
அப்போது வாளபிமன் அடவாகத் தான்பாத்துப்
பொய்யை மிகச்சொல்லிப் போய்மறைந்தார் மாயவரும்
இப்பவே நான்கண்டால் இருதுண்டம் ஆக்கிடுவேன்
இத்தினை தூரம்வந்து இனிப்போறது ஞாயமல்ல 945
வாளபிறன் வாறான் வனத்தில் திசைநோக்கி
மாயனது கண்டு வகையாக முன்னைவந்து
வாளபிமன் முன்னாகப் பொன்னாறும் வந்ததுவே
வாளிமன் வந்திறங்கி வகையாகத் தெண்டனிட்டு
மாரளவு தண்ணியிலே வாறாணாம் வாளபிமன் 950
நடக்க நடக்க நன்றாக வாயளவாய்
ஆகாச மாக ஆறுகொண்டு போகுதிப்போ
வாளபிமன் தானும் வாகாக நீஞ்சியதே
கையசந்து மெய்யசந்து காலசந்து போகையிலே
பாத்தாரே மாயவரும் பழிவந்து நேருதிப்போ 955
என்றுசொல்லி மாயன் எதிராக ஓடிவந்து
தெர்ப்பை புல்லாகத் திரணையாய் வந்துநின்று
நாலுதிக்கும் பாத்து நல்லதொரு வாளபிமன்
வாளை எடுத்து மகாமேரு நோக்கிவிட்டான்
வாளு வருகையிலே வலதுகையி லேபிடித்து 960
வெட்டினான் வாளபிமன் விருசாக ஆறுதனை
இறுபிறமும் ஆறு இருதுண்டமாய் விலகியதே
தண்ணி நின்ற இடமெல்லாம் தனிமேடு ஆனதுவே
ஆத்தைவிட்டு மேடேறி அப்பால் வருகையிலே
மாயன் பெருமாளும் வகையாக முன்னைவந்து 965
வல்லரக்கன் வனத்தில் வகையாய்முன் னோடிவந்து
கரடிபுலி சிங்கம் காணாமல் போனதுவே
வல்லரக்கன் கண்ணாலே காணாமல் போனதுவே
என்றுசொல்லி அப்போ இருந்தாரே மாயவரும்
வல்லரக்கன் வனத்திலே வந்தானே வாளபிமன் 970
வாளபிமன் அப்போது வகையாய் இளப்பாறி
வல்லரக்கன் படுக்கும் வட்டநல்ல பாறைதனில்
பாறையின் மேலே படுத்தானாம் வாளபிமன்
மலைகள் செடிகளெல்லாம் வகையாகச் சுத்திவந்து
வயத்துக்கிரை சிக்காமல் வாறானாம் வல்லரக்கன் 975
நீலமுழிக் கண்கள்ரெண்டும் நெருப்புத் தனலாக
தின்னுமிந்தத் தம்பலங்கள் தீக்கலந்து வேகுதப்போ
பாறைதனை நோக்கி வாறானாம் வல்லரக்கன்
என்னவென்று சொப்பனங்கள் காணுகுறான் வாளபிமன்
திரியோ தனன்படையைச் சேரவே தான்துரத்தி 980
மாயன்மகள் சுந்தரியை மாலையிடப் போனாப்போல்
அம்மிவல மாக அரசாணி முன்னாகச்
சாலுங் கரகமுந் சந்திரரு முன்னாகச்
சுத்திவந்து வாளபிமன் சுண்டுவிரல் பிடிக்கையிலே
அந்தநல்ல வேளையிலே ஆனதொரு வல்லரக்கன் 985
பாறைதனில் வந்துகண்டான் பாங்கானபாலனைத்தான்
ஆரடா பயலே அசந்துமிகத் தூங்குறவன்
எழுப்பிவிட வல்லரக்கன் எதுராக வந்துநின்று
வல்லரக்க னைக்கண்டு வகையாக நிற்கையிலே
எந்தவூ ரடாபயலே எனக்குஇரை ஆச்சுதடா 990
இன்று பிழைத்தேன் ஈடேரிப் போனேன்நான்
வல்லரக்கன் வனத்திலே வந்தேனே இப்போது
என்னை நீ திங்க எத்தினைபாக்கியா பெத்தேனோ
நான், தூங்கி எழுந்திருந்து தோசமுண்டு கண்டீரே
இஸ்த்தானம் பண்ணித்தின்றால் தர்மமுண்டு உந்தனுக்கு 995
பூசைபண்ணித் தின்றால் புண்ணியமு மெத்தவுண்டு
ஆத்திலே ஸ்த்தானம்பண்ணி அரைநொடியில் நான்வாறேன்
அப்போ மனமிரங்கி ஆனதொரு வல்லரக்கன்
போமென்று சொன்னான் பொல்லாத வல்லரக்கன்
தண்ணி யிலேபோய் ஸ்த்தானம்பண்ணி வாளபிமன் 1000
பத்திரகாளி கோவிலுக்குப் பளீரென்று ஓடிவந்து
அம்மனைக் கண்டு அடிவணங்கித் தெண்டனிட்டுச்
சாஷ்டாங்கஞ் செய்துசிவ சங்கரியே மாதாவே
என்று தொழுது இருக்குமந்த வேளையிலே
ஏண்டா மகனே சங்கைவந்தாய் இப்போது 1005
அப்போது வாளபிமன் அடவாகச் சொன்னதுவே
மாயன்மகள் சுந்தரிக்கி மாலையிட நான்போறேன்.
வல்லரக்கன் வனத்தில் வந்துநான் சிக்கிவிட்டேன்
வல்லரக்கன் கண்டு வகையாகக் கைப்பிடித்து
எனக்குப் பசிக்குது உன்னை விடுகிறது இல்லையென்றான் 1010
தப்பிப் பிழைச்சுவந்தேன் தாயே வரந்தாடி
வல்லரக்க னைக்கொல்ல வால்கொடுக்க வேனுமம்மா
அப்போது பத்திரகாளி ஆயுதமுங் கைக்கொடுத்து
வல்லரக்கன் தன்னுயிரை வகையாகக் கொல்லுமென்றான்
வாழ்த்தி விடைகொடுத்து மந்திரவாள் கைக்கொடுத்தாள் 1015
ஆத்தாளே தாயேஎனக்கு ஆனதுணை நீயல்லலவோ
மாதாவே எனக்கு ஆபத்து வாராமல் காக்கவேணும்
போறோமென்று தானும் புகழபிமன் தெண்டனிட்டு
ஆயுதமும் வாங்கி அடவாகத் தான் நடந்தான்
அந்த வனங்கடந்து ஆத்தாங் கரையில்வந்தான் 1020
பயலையும் காணாமல் பரத்தானே ராச்சானும்
காணாமல் தேடிக் கரையோரம் வருகையிலே
கண்டான் பயலைக் கடுங்கோப முண்டயகியதே
வாளைச் சொருகி வாள்மேலே பூசைபண்ணயிலே
வல்லரக்கன் பாத்து வண்டப் பயலேநீ 1025
இந்நேரம் போனதுக்கு உனக்கேத்தபுத்தி சொல்லுவண்டா
வண்டப் பயலே நீ வாடா நீ கிட்டனவே
என்னை மறிச்சதுக்கு இரணகளம் பண்ணுவண்டா
திங்குறேன் என்றதுக்குஉன் சீவனை வாங்கிடுவேன்
அதட்டி எழுந்திருந்தான் ஆனதொரு வல்லரக்கன் 1050
அப்போது வல்லரக்கன் அடவாகத் தான்பார்த்து
மோசமே வந்து முழுமோசம் வந்துதென்று
பயலென்று நானிருந்தேன் பழிகாரன் ஆனதுவே
கடக்கப்போய்த் தானும் கல்லை உருட்டிவிட்டான்
போத மலைபி டுங்கிப் போட்டானே வல்லரக்கன் 1035
வாளை எடுத்துவட பத்தீரகாளியைத் தான் நினைந்து
போதமலை யத்தினையும் பொடிப்பொடியாய்ப் பேனதுவே
கொல்லி மலைபிடுங்கிக் கோவித்துப் போட்டானாம்
எதுப்பட்ட மலைகளெல்லாம் இலவம்பஞ் சானதுவே
அவன், க. ஸ்பட்ட மலைகளெல்லாம் கடுகுபொடி யானதுவே 1040
வல்லரக்கன் பாத்து மாளவே நாளாச்சு
மலையிலே உள்ள மரங்களெல்லாந் தான்பிடுங்கிச்
சேத்தி யடிச்சானாம் தேக்கமரம் அத்தினையும்
வாற மரமெல்லாம் வாளாலே தட்டிவிட்டான்
வாளபிமன் அப்போ வாளெடுத்துக் கச்சைக்கட்டி 1045
அய்வர் தனை நினைந்து ஆயுதமுங்கைபிடித்துப்
பத்திரகாளி அம்மனையும் பாங்காகத் தான் நினைந்து
வாளை உருவி வல்லரக்கன் மேல்போட்டான்
வல்லரக்கன் தன்தலையும் மலைபோல விழுந்ததுவே
பட்டானே வல்லரக்கன் கேட்டாள் கமலக்கன்னி 1050
கமலக்கன்னிக் கபையமென்று கானகத்தி லேவிழுந்து
பையமென்ற சத்தம் கமலக்கன்னி கேட்டதுவே
கமலக்கன்னி அப்போ கடோற்கயனே வாடா நீ
கடோற்கயனும் வந்து கண்டானே தாயாரை
அப்பா மகனே ஒரு அதிசெயம் கண்டனப்பா 1055
கமலக்கன்னி யென்றசத்தம் என்காதில் விழுந்துதுவே
வனம்போன பஞ்சவர்க்கு வஞ்சினைகள் வந்ததுண்டோ
வனத்தில் குடியிருக்கும் வல்லரக்கன் மாமனுக்கோ
ஆரென்று சொல்லி அறிவறிந்து வாடா நீ
கட்டுச் சோறுகட்டிக் கடுகவே தாருமென்றான் 1060
சாதமுங் கட்டித் தப்பாமல் தான்கொடுத்தாள்
கொல்லிமலை போலே கொடுத்தாளே அப்பேது
கட்டுச் சாதமுங்குடுத்துக் கடுகவே போகவென்றார்
வாளெடுத்துக் கச்சைகட்டி வாணாத் தடியெடுத்து
அந்த வனங்கடந்து அப்பாலே போகையிலே 1065
வல்லரக்கன் வனத்தில் வந்தே கடோற்கயனும்
வல்லரக்க னைக்கண்டு வாய்விட்டுத் தான்புலம்பி
அழுது புலம்பி ஆர்க்கரித்துப் பல்கடித்து
அம்மானை வெட்ட ஆம்பிளையு முண்டோதான்
மாமனை வெட்ட வலுக்காரன் உண்டோதான் 1070
எங்களுக்குப் பிலவான் ராச்சியத்தில் இல்லையேதான்
நீலவிழிக் கண்கள்ரெண்டும் நெருப்புத் தனலதுபோல்
தின்னுமிந்தத் தம்பலங்கள் தீக்கடந்து வேகுதிப்போ
தாரை எடுத்துத் திசைநோக்கி வாறானாம்
வாற தடத்திலே வாளபிமன் தானிருந்தான் 1075
அண்ணாந்து பாத்தான் ஆன கடோற்கயனும்
நாவமர மேலிருக்கும் நல்ல சிறுபயலே
எங்கள், மாமனை வெட்டினவன் வந்த னே இப்படியே
அப்போது தான்பயலும் அடவாகச் சொன்னானாம்
திக்குவிசை யம்போலே தெக்கேதான் பேறேண்டா 1080
அடுயின் பிறகே அனேகந்தூரம் தான்தடந்தான்
காணாமல் தானும் கடோற்கயனும் ஓடிவந்து
பொய்யைமிகச் சொன்னாயே புத்தகெட்ட தன்பயலே
நீ, தெற்கேதான் போகையிலே வடக்கேதான் போறாண்டா
வடக்கே திசைநோக்கி வகையாகச் சுத்திவந்து 1685
வடக்கேதான் போகையிலே மேற்கேதான் போறாண்டா
மேற்கே திசைநோக்கி விழுந்தோடி வருகையிலே
கண்ணிலையும் காணகமல் கடோற்கயனும் வாறானாம்
அப்போது வாளபிமன் அடவாகத் தான்பாத்துக்
கிழக்கையும் போறாண்டா கிட்டவே நான் கண்டேண்டா 1080
கிழக்கையும் பாத்துக் கிட்டவே ஓடிவந்து
தொண்டப் பயலே நீ சொன்னதெல்லாம் பொய்தாண்டா
பயலென்று சொன்னதுக்குப் பல்லைப் பிடுங்குவண்டா
உன்,மாமனைக் கொன்ற மதயானை நான்தாண்டா
பயலென்று நானிருந்தேன் பழிகார னானையடா 1095
கடோற்கயன் தானும் கண்கள் பொறிபறக்க
நீல விழிகள் ரெண்டும் நெருப்புத் தணலதுபோல்
நலமரத் சைப்பாத்து நன்றாய்க் கடே ஏற்கயனும்
போட்டானே அப்போ பொடியாய்ப் பறந்திடவே
மரமும் அடியோடே வகையாய் விழுந்ததுவே 1100
இருவரெண்டு பேரும் எதுத்தார்கள் அப்போது
பாணங்கள் போட்டார்கள் மலைகள் கிடுகிடெனக்
கல்லுகள் தனெடுத்துக் கடோற்கயனும் போட்டானாம்
வாளால் அபிமன்னன் வாளெடுத்துத் தான் போட்டான்
எதுப்பட்ட மலைகளெல்லாம் இலவம்பஞ் சானதுவே 1105
கால்பட்ட மலைகளெல்லாம் கடுகுபொடி யாய்ச்சுதுகாண்
மலைகள் செடிகளெல்லாம் மாயமாய்ப் போனதுவே
இருவரெண்டு பேரும் இரணகளம் ஆகுதப்போ
இவன் போடுகுற பாணம் அவன்காலில் பொஷ்பமாய் விழுந்ததுவே
விழுகுறது கண்டு மெத்த மனமுருகிச் 1110
சக்கரமும் ஓடிவந்து தானே பணிந்ததுவாம்
எமதண்டா யுதத்தை இரணகளம் ஆக்கிவிட்டான்
எமதண்டா யுதமும் இடம்பிரி வலம்பிரியாய்ச்
சுத்திவந்து தெண்டனிட்டுத் துருசாக வந்ததுவே
அந்தரத்துத் தேவரெல்லாம் அதிசெயமாய்ப் பாத்துநிற்கச் 1115
சுத்திவந்து தெண்டனிட்டுத் துருசாக வந்திடுமாம்
வீமனுட போரோ விசையனுட தன்போரோ
ராமபத்திர சுவாமியுட நல்லதொரு தன்போரோ
ஆருடைய போரோ அளவரும்போம் பூமியிலே
மாயனுட போரோ மகாதேவன் தன்போரோ 1120
தேவர்கள் பாத்திருக்கத் திறமாய்ப் பொருதார்கள்
மண்டிப் பொருதார்கள் வாளோடு வாளுரையத்
தண்டிப் பொருதார்கள் சணங்களெலாம் மெச்சிடவே
சட்டிப் பிரண்டு கடோற்கயனும் தான்விழுந்தான்
கடோற்கயன் எழுந்திருந்து கடக்கவே போயிருந்து 1125
வாடா நீ தம்பி உங்கள் வங்கிஷத்தைச் சொல்லுமடா
மலையிலையும் உண்டோடா மக்களுட தன்னுறவு
சண்டையிலே உண்டோடா தன்னுறவு செப்பியது
பின்னுக்குப் போடா பிரட்டுவண்டா உன்னுயிரை
வேண்டாம்டா தம்பிவெகு வீரியத்தைச் சொல்லாதே 1130
நீதானும் சொல்லாட்டி நான்தானும் சொல்லுகுறேன்
என்னோடே சொல்லாதே இந்தமலையோட சொல்லுமடா
மலையை மிகப்பத்து வங்கிஷத்தைச் சொன்னானாம்
மலையே மலையேயென் வங்கிஷத்தைக் கேளுமினி
ஆரியகுல வங்கிஷமாம் சூரியகுல வங்கிஷமாம் 1135
பரிவான சத்திரகுலம் பாண்டுபுத்திரன் கூட்டபடா
வெத்தி மதயானை வீமனுட புத்திரண்டா
அந்தமொழி கேட்டு அடவாக ஓடிவந்த
கடோற்கயனை வந்து கட்டினான் கையாலே
கட்டி அழுதார்கள் கண்கள் சிலையோட 1140
ஒக்கப் பிறக்கஒரு கோடிநாள் சென்றிடுமே
கூடப் பிறக்கக் கோடி நான் சென்றிடுமே
தேடக் கிடையாதே தேடியநாள் கிட்டாதே
வகுந்தக் கிடையாதே வருந்தியநாள் கிட்டாதே
தம்பியடா வாளபிமா தனிச்சுவழி வந்ததென்ன 1145
தம்பியடா வாளபிமன் தன்னுடைய கண்துடைத்து
அண்ணனைப் பார்த்து அடிதொழுது தெண்டனிட்டு
வாளா லபிமன் வகையுடனே சொல்லுகுறான்
திரியோ தனன்பாவி திக்கத்த பொட்டிமகன்
மாயன்மகள் சுந்தரியை மாலையிடப் போறமென்று 1150
பதினெக் குரோணி படைமன்னர் போறாராம்
அதுகண்டு நானும் அடவாக ஓடிவந்தேன்
வல்லரக்கன் வாழும் வனம்புகுந்தேன் அண்ணாவி
என்னைக், கண்டு மறிச்சுக் கண்கள் பொறிபறக்கத்
தியங்குறதே யல்லாமல் திரும்பிவிடப் போறதில்லை 1155
என்றுசொல்லி வல்லரக்கன் இப்படியே சொன்ன தற்பின்
ஆயுதத்தைக் தானெடுத்து அய்வரையுந் தான் நினைந்து
வெட்டினேன் அண்ணாவி விழுந்தானே வல்லரக்கன்
அந்தமொழி கேட்டு ஆன கடோற்கயனும்
தம்பியரே வளமா தாடாளா கேளுமிப்போ 1160
அம்மானுஞ் செத்தால் அதுவொன்றுஞ் சேதமில்லை
ருவரெண்டு பேருக்கும் இனிப்பீடை போச்சுதையா
காண்டு சேதமில்லை அன்பான தம்பியரே
வாடா நீ தம்பியென்று வல்லரக்கன் கிட்டவந்து
வெட்டின முண்டத்தை விதமாகக் கூட்டிவைத்துக் 1165
கடோற்கயன் கொண்டுவந்த கட்டுச் சோத்தினையும்
வாய்க்கரிசி யென்று வைத்தார்கள் அப்போது
கொள்ளியும் வைத்துக் குடமும் உடைத்தார்கள்
கட்டையும் போட்டுக் கானகத்தில் வெந்ததுவே
நல்லடக்கம் பண்ணி நடந்தார் இருவருமாய் 1170
அந்த வனங்கடந்து அப்பாலே போகையிலே
ஆரண்ய வனங்கடந்து அயிரா பதங்கடந்து
பொன்னாறு தான்கடந்து பூந்தோட்டம் உள்புகுந்து
பூந்தோட்டத் துக்குள்ளே புகழபிமன் தன்னை வைத்துக்
கமலக்கன்னி அரமனைக்கிக் கடோற்கயனும் வாறானே 1175
ஆத்தாளைக் கண்டு அடிவணங்கித் தெண்டனிட்டு
வாடா மகனையென்று வடையாகத் தானெடுத்துப்
போனதொரு காரியத்தைப் புத்திரனே சொல்லுமென்றாள்
அம்மானே அல்லாமல் அய்வருக்குச் சேதமில்லை
வல்லரக்கன் வாயினால் மாண்டானே இப்போது 1180
அம்மானை வெட்டுகுற ஆம்பிளையும் உண்டோதான்
என் அண்ணனை வெட்டுகுற மதயானை உண்டோதான்
அதட்டி எழுந்திரிந்து ஆர்க்கரித்துப் பல்கடித்துக்
கே பித் தெழுந்திரிந்தாள் கொடுஞ்சூரி கமலக்கன்னி
நீலவிழிக் கண்கள் ரெண்டும் நெருப்புத் தணலாக 1185
அண்ணனைக் கொண்ண அவனுயிரை விடுவதில்லை
என்றுசொல்லித் தானே இருக்கின்ற வேளையிலே
மாதாவே தயே மனஞ்சலிக்க வேண்டாமே
கோபத்தை யுள்ளடக்கும் கொண்ணவனும் நான்தாண்டி
அடிச்சவரை அடியாதே ஆனதொரு தாயாரே 119)0
அய்வர்வன வாசம் அடவாகப் போனபின்பு
திரியோ தனனும் தென்னவர்கள் உள்ளதெல்லாம்
மாயன் மகள் சுந்தரியை மாலையிடப் போறார்கள்
அந்தநல்ல சேதிதம்பி அபிமன்னன் தான்கேட்டு
வல்லரக்கன் வனத்தில் வந்தானாம் வாளபிமன் 1195
அந்தநல்ல வேளையிலே எனை வழிமறித்துத்
திங்குறதே அல்லாமல் திரும்பி விடுவதில்லை
என்றுதான் சொன்னானாம் ஏற்றமுள்ள வல்லரக்கன்
பரிவான சந்திரகுலம் பாண்டுபுத்திரன் கூட்டமடா
அருச்சுனன் புத்திரண்டா ஆனதொரு வல்லரக்கன் 1200
தடந்தப்பி வந்துவிட்டேன் தர்மதுரை விட்டுவீடும்
என்னையும் பாராட்டி எங்கள ய்வரையும் பாருமென்றான்
அய்வரையும் பாத்தால் ஆனபசி தீருமோ தான்
என்றுதான் சொல்லி எதங்கெட்ட வல்லரக்கன்
வாளபிமன் மேலே மரத்தை பிடிங்கிவிட்டான் 1205
அப்போது வாளபிமன் அதட்டி எழுந்திரிந்து
எண்ணாது எண்ணி எதுத்தானாம் வாளபியன்
அப்போது வல்லரக்கன் அடிச்சான் மரம்பிடிங்கி
வந்த மரமெல்லாம் வாளபிமன் தட்டிவிட்டான்
வாளபிமன் கொக்கர்த்து வாளாலே தட்டிவிட்டான் 1210
வீச்சு மிகப்பட்டு விழுந்தானே வல்லரக்கன்
தம்பிதப்பி வந்தது தர்மமடி என்தாயே
அப்பா மகனை அமைத்திரு மேனியனை
பூந்தோட்டந் தனில்வைத்துப் புறப்பட்டேன் என்தாயே
அப்போது கமலக்கன்னி அலறியே ஓடிவந்து 1215
பூந்தோட்டம் வந்து புத்திரனைத் தானெடுத்து
வாரி யெடுத்து வர்ண முகமதுடைத்துச்
சேத்தி யெடுத்துத் திருமார்பில் முத்தமிட்டு
உச்சி முகந்து உள்ளங்கால் முத்தமிட்டுத்
தேடக்கிடையாது மகனே தேடியநாள் கிட்டாதே 1220
வருந்தக் கிடையாது வருந்தியநாள் கிட்டாதே
நல்லநாள் கேட்டு நாளு முகிர்த்தமிட்டுக்
கடோற்கயனைத் தானழைத்துக் கமலக்கன்னி யேதுசொல்வாள்
அப்பா மகனே அறிவுள்ள அபிமன்னா
மாயன்மகள் சுந்தரியை மாலையிட்டு வாடாநீ 1225
பாலுக் குடிச்சதுண்டு படைமுகமுங் கண்டதில்லை
தயிரு குடிச்சதண்டு தனிச்சபடை கண்டதில்லை
மோரு குடிச்சதுண்டு மூண்டபடை கண்டதில்லை
இப்படி முகமறியான் எதுத்தபடை வெல்லறியான்
சந்திரனைக் கண்டதுண்டு சண்டைமுகங் கண்டதில்லை 1230
சூரீயனைக் கண்டதுண்டு சூழ்ந்தபடை கண்டதில்லை
திரியோ தனன்படையைச் சேரவே தான்துரத்திக்
கலியாண சோபனத்தைக் கட்டா முடியுமடச்
போற்றி விடைகொடுத்துப் போய்வா மகனையென்றாள்
மக்களிரு பேரும் வகையாகத் தெண்டனிட்டுத் 1235
தெண்டனிட்ட புத்திரனைச் சீமானய்ப் போய்வாடா
வடபத்திர காளியம்மாள் வருவாள் துணையாக!
போமென்று சொல்லிப் புத்திரரைத் தானனுப்
ஊரை விட்டுக் காதவழி ஒருநொடியில் வந்தார்கள்
அந்த வனங்கடந்து அப்பறமே போனார்கள் 1240
மாயனது கண்டு வகையாக முன்னைவந்து
பாப்பான் வடிவெடுத்துப் பஞ்சாங்கங் கைப்பிடித்து
ஒருமலையில் சுத்துவைத்து ஒருமலையில் காலுதைத்து
அஞ்சம்பு தானெடுத்து அகலம்பு தீட்டுகுறான்
அந்தநல்ல வேளையிலே அய்யனுங் கிட்டவந்து 1245
காலையும் வாங்குமடா கண்ணாளா தம்பியரே
கால்வாங்கச் சொன்னதுக்குக் கண்டதுண்டம் பண்ணுவண்டா
மாயனது கண்டு வண்டத்தனம் ஆச்சுதென்று
தம்பியடா ராவானே சண்டைக்கோ தீட்டுகிறாய்
நீ தீட்டுகிற அம்பு செயிக்குமே! செயிக்காதோ 1250
சோதீனை பார்க்கவேணும் துருசாகப் போடுமென்றார்.
அப்பவே ராவானும் அடவாகக் கால்வாங்கி
எனநான் போட எனக்கறியச் சொல்லுமென்றான்
ஆலமரத் திலையைஒரு அம்பாலே எய்யுமென்றார்
அப்பவே ர வானும் ஆண்டவனைத் தான் நினைந்து 1255
சறவனை அம்பைத்தான் தயவாக உச்சரித்து
இலைக்கிஒரு அம்பு இயல்பாகப் போனதுவே
மாயனது கண்டு வகையாகச் சொன்னதுவே
ஏதடா தபிஒரு எலையை விட்டதுதான்
அய்யனே இப்போது கேட்டாயோ இல்லையென்றான் 1260
எங்களுட மாமன் ஆலிலைமேல் பள்ளிகொண்டார்
அதுகண்டு ஒரு இலையை அடவாக விட்டுவிட்டேன்
என்றுமிகச் சொன்னான் ஏற்றமுள்ள ராவானும்
வாளபிமன் கடோற்கயனும வந்தான்வனந்தனிலே
ஊசி வனங்கடந்து உத்திராட்சப் பூமிவிட்டுச் 1265
சிள்ளெனை காடுஞ் செடியும் புனாந்திரமும்
நாகமலை தோகமலை நடுவேஒரு கரடிமலை
கண்ணாடிமலை மேலிருந்து கரடிமலை சுத்துவைத்துப்
பதினெட்டு நாளைப் படைப்போர் வருகுதென்று
அஞ்சம்பு தானெடுத்து அகலம்பு தீட்டுகிறேன் 1270
அந்த வழியே கடோற்கயனும் தம்பியரும்
இருவரெண்டு பேரும் இத மாக வந்தார்கள்
ஆரடா மலைமேலே அப்புகனைத் தீட்டுறவன்
காலையும் வ ங்குமென்று கடோற்கயனும் சொன்னானாம்
திரியோ தனன்சேனை தென்னவர்கள் உள்ளதெல்லாம் 1275
மூணுநாள் தானும் மூர்க்கமுள்ள சேவுகரும்
என் காலின்கீழ் போனார்கள் கனத்தபடை மன்னவரும்
கால்வாங்கச் சொன்னதுக்குக் கண்டதுண்டம் ஆக்குவண்டா
பேசாமல் போடா பேய்கொண்ட டேய்ப்பயலே
பயலென்று சொன்னதுக்குஒ ங் பல்லைப் பிடுங்குவண்டா 1280
அதட்டி எழுந்திரிந்தன் ஆன கடோற்கயனும்
கரடி மலையைக் காலாலே தானுதைத்தான்
மலையிடிந்து விழந்தது மகமேரு போலையப்போ
கண்டேதான் ராவானுங் கடு+வே தன்குறித்தான்
அலைக்கொட்டி எதுத்தானாம் அயிரா பதமடுத்து 1285
அஞ்சு மலையெடுத்து அடவாகத் தான்போட்டான்
எதுப்பட்ட மலைகளெல்லாம் இலவம்பஞ் சானதுவே
கால்பட்ட மலைகளெல்லாம் கடுகுபொடி யாகுதுகாண்
அப்போது ராவான் அம்பு தனையெடுத்து
அக்கினி பான.ம அடவாய்உச் சரித்துவிட்டான் 1290
மானத்துக்கும் பூமிக்கும் உருகுதே பாணமது
கண்டான் கடோற்கயனும் கனமோசம் வந்துதென்று
வாதுராசா வைநினைந்து வகையாக உச்சரித்தான்
அப்பவே அம்பு அடவாக வந்ததுவே
அக்கினி அம்பு அடவாக வந்ததுவே 1295
மழையம்பு தான்போய் வகையாகச் சுத்திவந்து
அக்கினி அம்பை அவிச்சுதுகாண் அம்மானை
பணக் எழும்பிச்சு மகாமேகு தான்போலே
இருவரெண்டு பேரும் இரணகள் ஆனதுவே
நாகபா ணந்தொடுத்தான் நலமுடைய ராவானும் 1300
கெருடனைக் கண்டு கீழ்விழந்து போனதுவே
அப்போது ராவானும் அடவாகத் தான்பாத்துச்
சரவனை அம்பைத் தானேதான் உச்சரித்துப்
போட்டானே அம்பு ராமபாணம் பூமியெல்லாந் தான்நடுங்க
மண்ணதிர விண்ணதிர மாத்தான் முடியதிரப் 1305
பாணம் வருகுறது மலைகள்பத்தி வேகுதிப்போ
டோற்கயன் அப்போ கண்ணாரக் கண்டானாம்
அய்வரையும் தான் நினைந்து அயிரா பதமெடுத்து
எதிராகப் போட்டானாம் வாளு ரெண்டுதுண்டம் ஆனதுவே
வன் போடுகுற அம்பு அவன் காலில் விழுந்ததுவே 1310
அவன் போடுகுற பாண இவன்காலில் விழுந்ததுவே
வாறதொரு பாணமெல்லாம் மலராய் விழுந்ததுவே
அந்திரத்துத் தேவரெல்லாம் அதிசெயமாய்ப் பார்த்துநிற்க
இந்த உலகில் இயல்போடு கண்டதில்லை
வாலியுட போரோ மாயனுட தன்போரோ 1315
வீமனுடபோரோ விசையனுட தம்போரோ
இதுஆறு போரென்று அடவாகப் பாத்தார்கள்
தேவர்கள் பாத்திருக்கத் திரமாய்ப் பொருதார்கள்
அப்போது ராவான் அடவாகக் கிட்டவந்து
ஆரடா தம்பி உங்கள் வங்கிஷத்தைச் சொல்லுமடா 1320
சொல்லாதே போனாக்கால் என்சீவனை மாய்த்திடுவேன்
மலையிலே உ டோ மக்களுட தன்உறவு
சண்டையிலே உண்டோடா ஒப்பாரி பிடிக்குறது
ஏண்டா நீ இப்போ இழப்புப் பறையாதே
அப்போது ராவான் அடவாகச் சொன்னதுவே 1325
நீ சொல்லாதே போனாலும் நான்தானும் சொல்லுகுறேன்
என்னோடே சொல்லாதே இந்த மலையோடே சொல்லுமடா
அப்போது ராவானும் அடவாகச் சொன்னது வே
மலையேநீ கேளும் வங்கிஷத்தைச் சொல்லுகிறேன்
ஆரியகுல வங்கிஷமாம் சூரியகுல வங்கிஷமாம் 1330
பரிவான சந்திரகுலம் பாண்டுபுத்திரன் கூட்டமடா
தாரார் புகழுடையான் தர்மருக்கு நேரிளையான்
ஊரார் புகழுடைய உற்றபுகழ் அருச்சுனனாம்
அருச்சுனன் குமாரன் ஆனதொரு ராவண்டா
அப்போ கடோற்கயனும் அடவாக ஓடிவந்து 1385
கட்டி அழுதார்கள் கண்கள் சிலையோடக்
டோற்கயனும் ராவானும் கண்ணான வாளபிமனுமாய்
மூவரும் கூடி அழுதார்கள் கானகத்தில்
கூடப் பிறக்கத்தம்பி கோடி நாள் சென்றிடுமே
சேரப்பிறக்கத் தம்பியரே சேனைநாள் சென்றிடுமே1340
தேடக் கிடை யாதுதம்பி தேடியநாள் கிட்டாது
வருந்தக் கிடையாது தம்பி வருந்தியநாள் கிட்டாது
அழுது புலம்பி அய்வர்பெற்ற டத்திரரும்
தம்பியரே கண்துடைத்துத் தாடாளா எங்கை வந்தாய்
அப்போ கடோற்கயனும் அடவாகச் சொன்னதுவே 1345
மாயன் மகள் சுந்தரியைத் தம்பீயர்க்கு மாலையிட வந்தோமே
அந்தமொழி கேட்டு ஆனகதாரு ராவானும்
திரியோ தனன்படையும் தென்னவர்கள் உள்ளதெல்லாம்
என், காலின்கீழே போனார்கள் கனத்தபடை மன்னரெல்லாம்
சேநீயறிந் தால் அவர்கள் சீவனை வாங்கிடுவேன் 1350
ஆகட்டும் தம்பியரே இனியாரு தப்பப் போறார்கள்
என்றுசொல்லித் தானு ஏற்றமுள்ள ராவானும்
நாகா கன்னி அரமனைக்கி நடந்தார்கள் மூவருமாய்
அந்த வனங்கடந்து அயிர பதங்கடந்து
மூங்கி வனங்கடந்து முந்நூற்றிக் காதவழி 1355
நாகக்கன்னி அரமனைக்கு நன்றாய் நடந்தார்கள்
அப்போது நாகக்கன்னி அடவாய்க் கொலுவிருந்தாள்
மூவரும் வந்து மலர்தூவித் தெண்டனிட்டுத்
தெண்டனிட்ட புத்திரரைத் திக்கென்று தானெடுத்து
அப்பாமகனே இவர்கள் ஆரென்று கேட்டாளாம் 1360
என் தாயே நாகக்கன்னி ஏற்றமுள்ள தாயாரைக்
கடோற்கயன் வாள்வீமன் உனக்குத்தான் புத்திரண்டி
அலறி எழுந்திருந்து ஆனதொரு நாகக்கன்னி
வாரி யெடுத்து வரிசையுள்ள புத்தரரைத்
தேத்தி யெடுத்துத் தென்னவர்கள் மெய்த்திடவே 1365
கட்டிக் கருப்பைக் கண்ணார முத்தமிட்டு
என்கவலை தீர்க்கவந்த எனக்கேந்த புத்திரரைத்
தம்பியரே நீங்கள் தனிச்சுவழி வந்த தென்ன
அந்தமொழி கேட்டு ஆனதொரு ராவானும்
மாயன்மகள் சுந்தரியை மாலையீட வந்தார்கள் 1870
நல்லதென்று சொல்லி நாகக்கன்னி அப்போது
சம்பங்கி எண்ணெய்கொண்டு தலைகோதிச் சினுக்கெடுத்துப்
போசனமும் பண்ணிப் புழுகுசவ் வாதணிந்து
நல்லநாள் கேட்டு நலுங்கிட்டாள் மாப்பிள்ளைக்குக்
கங்கணமுங் கட்டிக் கடுகவே பயணம்பண்ணி 1875
ராவானைத் தானழைத்து நல்லதொரு நாகக்கன்னி
தம்பி இருவரும் தனிச்சுவழி போன தில்லை
இப்படி முகமறியான் எதுத்தபடை வெல்லறியான்
சுத்தி பிடிச்சதுண்டு கனத்தபடை கண்டதில்லை
சங்குதுவா ரகாபுரிக்கித் தாடாளா நீபோய்த்தான் 1380
கலியாண வாசலுக்குக் கருத்தாகப் போயிருந்து
ஆராரு வந்தாலும் அஞ்சாதே என்மகனே
சேனைபடை வந்தாலும் சேரவே தான் துரத்திக்
கலியாண காரியத்தைக் கைநழுவப் பாராதே
வாழ்த்தி விடைகொடுத்து மந்திரவாள் கைக்கொடுத்துப் 1385
போற்றி விடைகொடுத்துப் போய்வா மகனையென்றாள்
பக்கத் துணையாகப் பத்திரகாளி தன வருவான்
கூடத் துணையுமுண்டு குளுந்தவே லாயுதரும்
அய்வர் துணையுமுண்டு அஞ்சாதே போடா நீ
என்றுதான் சொன்னாள் ஏற்றமுள்ள நாகக்கன்னி 1390
அந்த மொழிகேட்டு ஆனதொரு ராவானும்
கடோற்கயன் வாள்வீமன் ஆனதொரு ராவானும்
மூவரும் எழுந்திரிந்து மூணு கரஞ் சுத்திவந்து
காணுகுறோம் தாயே கனகமுடி பொற்பாதம்
தெண்டனிட்ட புத்திரரைத் திக்கென்று தானெடுத்து 1395
இன்னம்பதம்பெறுவீர் ஈசர்பதம் உண்டாவீர்
தாலியும் கூறையும் தப்பாதே தான்கொடுத்து
வரிசை யுடமை வகையாகத் தான்குடுத்துத்
தம்பி கலியாணம் சடுதியில் முடியுமிப்போ
நாகக்கன்னி மகனை நன்றாய்ப் பயணம்பண்ணிப் 1400
போடா மகனையென்று போற்றி விடைகொடுத்தாள்
மற்று மொருகால் மாதாவைத் தெண்டனிட்டுத்
தெண்டனிட்ட புத்தீரரைத் திக்கென்று தானெடுத்து
அப்பா மகனே அறிவுள்ள புத்திரனே
தம்பியரும் நீயும் தாடளா போய்த்திரும்பு 1405
விடைவாங்கிக் கொண்டு வெளிப்பட்டுப் போனார்கள்
ஊரு கடந்து உத்திராட்சப் பூமிவிட்டு
நாடு கடந்து நாகமலை தான் கடந்து
மூங்கி வனங்கடந்து முந்நூற்றிக் காதவழி
நாகமலை தோகமலை நடுவேயொரு செம்பொன் மலை 1410
நாலுமலைக் குள்ளே நடுச்சந்து தடமுங்கண்டு
சாஸ்திரக் கொடிவேந்தன் சகாதேவன் புத்திரனும்
தொந்திசெட்டி தானும் வெள்ளிக் கோல்தனிலே
நிறுத்து விடுகுறவன் நேசமுள்ள தொந்திசெட்டி தொந்திசெட்டி சண்டை:
மூவரும் போயி முன்னாக நின்றார்கள் 1415
சகாதேவன் புத்திரனும் தப்பாமல் தான்பார்த்து
எங்கையடா போறாய் எனக்கறியச் சொல்லுமடா
தூரம் வடதேசம் துலைதூரம் போறமடா
தடத்தையும் விட்டுத் தாடாளா நீவிலகாய்
ஏதடா நீயும் எண்ணாமல் சொன்னதுதான் 1420
திரியோ தனன்படையும் தென்னவ'கள் உள்ளதெல்லாம்
நிறுத்துப் பலம்காட்டி நேராக விட்டேன் நான்
அவனிலும் நீங்கள் ஆண்மையுள்ள சேவுகரோ
நிறுத்திடு வேனென்று சொன்னானாம் தொந்நிசெட்டி
அப்போது ராவான் அபிமன்னன் கடோற்கயனும்1425
நிறுத்து டுவனென்று சொன்னியடா நீபயலே
பயலென்று சொன்னதுக்குப் பாரடா எசமர்த்து
ஒண்ணுக்கு ஒண்ணு ஒரசுவந்து நேந்துதிப்போ
வெள்ளிக்கோல் தடியாலே வீசினான் தொந்திசெட்டி
மூன்றுபே ருங்காத்தில் முக்காதம் போனதுவே 1430
திரும்பியே ஓடிவந்து தீயாய் எரித்தார்கள்
அப்போது தொந்திசெட்டி அடவாக ஏதுசொல்வான்
திரியே தன்னசேனை சேந்தபரி வாரமெல்லாம்
நிறுத்து டுகுறவன் நில்லடா மூவருந்தான்
அப்பேச கடோற்கயனும் அமட்டியே ஏதுசொல்வான் 1435
எடங்கேடு பேசதே எனக்கறியச் சொல்லுமடா
ஆரடா கேக்கிறவன அஞ்சாமல் நீயுமிப்போ
ஆாடா தம்பியுங்க வங்கிஷத்தைச் சொல்லுமடா
எங்களுட வங்கிஷத்தை இப்போது சொல்லுகிறேன்
பரிவான சந்திரகுலம் பாண்டுபுத்திரன் கூட்டமடா 1440
தாரார் புகழுடைய தருமருக்கு நேரிளையான்
சாத்திரக்கொடி வேந்தன் சகாதேவன் புத்திரண்டா
அப்போது ராவானும் அடவாகக் கிட்டவந்து
கட்டி அழுதார்கள் கண்கள் சிலையோட
தாலுபேருங் கூடி நடந்தார்கள் அப்போது 1445
தில்லை வனங்கடந்து திருவேலாங் காடுவிட்டுச்
சிள்ளெனை காடுஞ் செடியும் புனாந்திரமும்
காடு கடந்து கானகங்கள் தான்கடந்து
வீரதங்காள் அரமனைக்கு விடுதிக்கி வந்தார்கள்
நாலுபேரும் வந்து நலமாகத் தெண்டனிட்டுத் 1450
தெண்டனிட்ட புத்திரரைத் திக்கென்று தான்எடுத்து
ஆரடா தம்பி அறிய உரையுமடா
என்தாயே ம தாவே இனிக்கேளும் என்வார்த்தை
அர்ச்சுனன் புத்திரன் ஆனதொரு வாள்வீமன்
அப்போது வீரதங்கள் அலறி எழுந்திருந்து 1455
வாரி யெடுத்து வர்ணமுக முத்தமிட்டுத்
தேடும் திரவியமே செழுமணியே எங்கைவந்தாய்
வந்ததொரு காரியத்தை வகையாகச் சொல்லுமையா
நல்லமுடி ராவானும் நலமாகச் சொல்லலுற்றான்
ஆத்தாளே வீரதங்காள் அபிசேகப் பத்தனியே 1460
மாயன்மகள் சுந்தரியை மாலையிடப் போறம்மா
அந்தசமாழி கேட்டு ஆனதொரு வீரதங்காள்
போங்களென்று சொல்லிப் போற்றி விடைகொடுத்தாள்
தன்னுட மகனைத் தனியாய்ப் பயணம்பண்ணிப்
போடா மகனேயென்று பிரியமுடன் சொன்னதுவே 1465
சொல்லி யனுப்பிக்கொண்டு துருசாகப் போறார்கள்
ஊரு கடந்து உத்திராட்சப் பூமிவிட்டுக்
காடு கட ந்து சுரடிமலை தான் கடந்து
நாடு கடந்து நல்லபுனந் தான்கடந்து
சங்குதுவ ரகாபுரிக்கித் தானாக வந்ததுவே 1470
பூந்தோட்டந் தன்னில் போட்டார்கள் கூடாரம்
மாயனது கண்டு வகையாகத் தான்பார்த்து
மருமகன் வந்த வகையறிந்து அப்போது
தன்னுட மனது தானேதான் பூரித்து
இப்படித் தானும் இருக்குமந்த வேளையிலே 1475
திரியோ தனன்கூட்டம் தென்னவர்கள் கண்டார்கள்
ஏதடா கூடாரம் எதுரளி வத்தானே
என்று பயந்து இருக்குமந்த வேளையிலே
மாயன் பெருமாளும் வகையாகக் கிட்டவந்து
திரியோ தனன்படை கயத தக்கென்று நான்பார்த்து 1480
ஏதுக்கும் அஞ்சாதே இனிக்கேளும் என்வார்த்தை
நாகராசாக் கூடாரம் நமக்கென்ன வந்தாக்கால்
என், கலியாண வ'சலுக்குக் காரியமாய் வந்தார்கள்
அதுகொண்டு* எங்களுக்கு அலுவலில்லை விட்டு விடு**
கலியாண காரியத்தைக் சடுகவே நேமியுங்கள் 1485
----
* அதுகண்டு (1826) ** விட்டுவிடும் (1826)
காவலிமிகப் பத்திரமாய்க் கட்டாக நீயிருங்கள்
என்றுசொல்லிப் போட்டு ஏற்றமுள்ள மாயவனு
மருமக்கள் தனக்கு வகையாக அப்போது
போசனமும் பொரிகறியும் போலவே தானெடுத்து
ஆயிரம் போளையிலே அடவாக வேயனுப்பி 1490
வரிசைகொண்டு போறமென்று வந்தார்கள் அப்போது
போளைவந்த போதே பெண்ணுமிக வந்துதடா
என்றுசொல்லித் தானும் இருக்குமந்த வேளையிலே
வாளா அபிமன் வகையாக ஓடிவந்து
ஆண்டிச்சி வீட்டில் அடவாக வந்தானாம் 1495
மாயன்மகள் சுந்தரிக்கி மாலைமிகக் கட்டயிலே
அந்த நல்ல மாலையை அடவாகத் தான்வாங்கித்
தன், கணையாழி மோதிரத்தை வைத்துக்கட்டினான்
அப்போது பூவிலே மோதிரத்தை வைத்துக்கட்டினான்
அப்போது மாயன் பெருமாள் வகையாய் எழுந்திரிந்து 1500
சுந்தரியாள் அரமனைக்கித் துருசாக ஓடிவந்து
என்தாயே சுந்தரியே என்வார்த்தை நீகேளும்
கலியாணம் என்று கடுகவே ஓடிவந்தேன்
செல்லக் கலியாணம் சிறப்புடனே பண்ணுகுறேன்
அருமைக் கலியாணம் அருசாகப் பண்ணுகிறேன் 1505
சாத்தினாள் பொற்கதவைத் தாள்பூட்டி மண்ணறைந்தாள்
முத்தான கண்ணீரை முதுமார்பில் சோரவிட்டாள்
பவளம்போல் கண்ணீரைப் பக்கமே சோரவிட்டாள்
அத்தை மகனிருக்க அவசிவந்து நேந்துதென்று
மாமன் மகனிருக்க வந்துதே அவகேடு 1510
நாயேனு மடிமேலே நாயகமோ யேறறவள்
பேயனின் மடிமேலே பெண்கொடியோ யேறறவள்
தன்னுட அரமனையில் அக்கினியைத் தான்கொளுத்தி
அக்கினியில் விழுவமென்று ஆர்க்கரித்துக் கொக்கரித்து
வீரசடை போட்டு வெளிப்பட்டு நிற்கையிலே 1715
ஆண்டியுட மாலை அடவாகக் கொண்டுவந்து
சுந்தரியாள் அரமனைக்கித் துருசாகக் கொண்டுவந்தார்
ஆத்தாளே சுந்தரியே அபிசேகப் பத்தினியே
பூமாலை வந்துதம்மா பொற்கொடியே மாதாவே
அப்போது சுந்தரியாள் அடவாகத் தான்பார்த்துப் 1520
பூவை முடிக்கப் புண்ணியமும் பெற்றேனோ
அக்கினியில் விழுந்து அனலாகப் போறேன் நான்
ஆத்தாளே சுந்தரியே அடவாகச் சொல்லுகிறேன்
பூமாலை வந்தால் புருசன்வந்தான் என்பார்கள்
புருசனோ டொக்கும் பூமாலை வாங்குமம்மா 1525
அப்போது சுந்தரியாள் அடவாகச் சொன்னாளாம்
தாதியரைத் தானழைத்துத் தானாகச் சொன்னதுவே
பூவைமிக வாங்குமடி பேரான பாங்கியரே
வாங்கிவந்து பூவை வகையாகக் கைக்கொடுத்தாள்
பூவையும் வாங்கிப் பொற்கொடியாள் கண்ணிலொற்றியே பாத்தாள் 1530
அப்போ கணையாழி மோதிரமும் அழுந்திச்சே சுந்தரிக்கும்
கணையாழி கண்டவுடன் கார்குழலாள் சுந்தரியும்
தலைவாசல் திறந்து தகப்பனுக்கு ஆளுவிட்டாள்
மாயன் எழுந்திருந்து வகையாக ஓடிவந்து
ய்யரைக் கண்டு அடிவணங்கித் தெண்டனிட்டு 1535
மாயன் பெருமாளே மனதின் படி யாச்சுதய்யா
மணவறையுஞ் சோடித்து மாப்பிளையும் வையுமிப்போ
அந்தமொழி கேட்டு அடவாக ஓடிவந்து
சுந்தரியும் அப்போது துருசாக வந்தாளே
திரியோ தனபபெருமாள் தென்னவர்கள் உள்ளதெல்லாம் 1540
கலியாண வாசலிலே கடுகவே வந்தார்கள்
பவளக்கால் தூணில் பக்கவளை தான்போட்டுத்
தென்ன மரம்பிளந்து சிங்காரந் தானெழுதி
வன்னி மரம்பிளந்து வகையாகப் பந்தலிட்டுச்
சித்திர மெழுதிச் சிறப்பாய் அலங்கரித்து 1545
அன்ன மெழுகி அதீன்மேல் கிளியெழுதி
வர்ணமுடன் குயிலு மகிழ்ந்துவிளை யாடல்செய்து
அ மிவல மாக அரசாணி முன்னாகப்
பிரம்பு வலமாகப் பேய்க்கரும்பு முன்னாகச்
சாலுங் கரகமும் தண்ணீரும் முன்னாகப் 1550
பட்டாலே மேல்கட்டுப் பாங்காய் அலங்கரித்து
முத்துச் சரங்கள் முன்னாகத் தொங்கல்விட்டுப்
பவளச் சரங்கள் பத்துலட்சந் தொங்கல்விட்டு
மணவறைப் பந்தலிலே மாணிக்கத் தான்பரப்பிக்
காலுககுக் காலு கண்ணாடி கட்டிவைத்து 1555
லக்கண குமாரனுக்கும் நல்லதொரு சுந்தர்க்கும்
பங்குனி மாசம் பதினஞ்சாந் தேதியிலே
வெள்ளிக் கிழமை விசைய திசமியிலே
கலியாண மென்று கனகமுர சறையுமென்றார்
கலியாணங் கலியாணங் காரிழையாள் கலியாணம் 1560
கோத்தமுத்தைச் சரந்தூக்கிக் கோராதாத்தை மணல்பரப்பிப்
பூமாலை பொன்மாலை பேரத அலங்கரித்துத்
தங்கத் தகட்டாலே லக்கணர்க்குச் சரீரம் தெரியாமல்
மணவறை சோடிச்சார் மண்டலங்கள் மெச்சிடவே
இந்த படி பண்ணி இருக்கின்ற வேலையிலே 1565
முரசோசை கேட்டு மோசமாய்க் காணுதிப்போ
என்றுசொல்லி ராவான் எழுந்திருந்தான் அப்போது
தம்பி யரையழைத்துத் தலைவ சல் பாத்திரென்று
இடையனென்று வேசம் இதமாகத் தானெடுத்து
நாமத்தைக் குழைத்து நன்றாக அப்போது 1570
மாயன் துணையெனவே மனதில் மிகநினைந்து
நத்திக்கு மூணுபட்டை நெடுகவே தான்போட்டுத்
தோளுக்கு மூணுபட்டை துநசாகப் போட்டானாம்
முழங்காலுக்கு நாலுபட்டை நாமமும் போட்டானாம்
ண்ணுகள் ரெண்டுங் கறுங்காடு போலேயப்போ 1575
உதடுகள் ரெண்டும் குளக்கரையின் ஏரியைப்போல்
பாச்சனப்பால் எருக்கில 'பால் பத்துமிடர்தான் பிடித்துக்
கள்ளிப்பால் கூடக் காவடியில் கட்டிக்கொண்டு
அம்பது கலப்பால்ஒரு காவடியில் கட்டிக்கொண்டு
கிழக்குத் தலைவாசலிலே கடோற்கயனைக் காவல்வைத்துக் 1580
தெற்குத்தலை வாசலிலே வாளபிமனைக் காவல்வைத்து
மேற்குத்தலை வாசலிலே தொந்திசெட்டியைக் காவல்வைத்து
வடக்குத்தலை வாசலிலே வந்தானாம் ராவானும்
தலைவாசல் காரர்கண்டு தடுத்தார்கள் அப்போது
மாயன் பெருமாள் மனைப்பொங்கலுக்குப் ஈலுமே போகுதடா 1585
அப்பணையில் லாமல் அரமனைக்கு விடுவதில்லை
திரியோ தனனைக் தெண்டனிட்டுச் சொன்னானாம்
டையனைப்போல் தலைவாசலில் ஏகமாய் நின்றுகொண்டு
மனைப்பொங்கலுக்குப் பாலு உரிசைகொண்டு போறானாம்
அதுகண்டு ஓடிவந்தேன் அப்பணையோ ஆண்டவனே 1590
தலைவாசலுக்கு அப்புறத்தே தள்ளிவிடச் சொன்னானாம்
அப்போது துரோணாசாரி அடவாக யேதுசொல்வான்
ஒருத்தன்வந்து பூந்தாலே உலகம் அழியுமே தான்
விட்டுவிடும் என்று விடைகொடுத்தார் அம்மானை
விடைவாங்கிக் கொண்டு வீதி வருகையிலே 1595
இருப்புத்தலை வாசலிலே இடித்து விழுக்காட்டிக்
கொண்டுவந்த பாலைக் கோபமாய் இறைத்துவிட்டான்
காவடியைத் தானுடைத்துக் கடுகவே வாறானாம்
கண்டாளே சுந்தரியாள் கண்ணார ராவானை
மச்சாண்டார் வா றாரென்று மறபில் ஒதுங்கிநின்றள் 1600
அப்போது ராவானும் ஆனதொரு சுந்தரியை
இனிமேலும் சிந்தினையை எண்ணாமல் வீட்டுவிடு
என்றுசொல்லிச் சுண்ணாம்; எடுத்தான் மலைபோலே
மலைபோலே தானெடுத்து வாயிலே போட்டானாம்
வாயிலே போட்டு வகையாகத் துப்பிவிட்டான் 1605
பதினாயிரம் பேர்கண்ணில் பாங்காய் விழுந்ததுவே
அய்யோவென்ற சத்தம் அரவங்கள் ஆனதுவே
கோவெளிற சத்தம் கோட்டையெல்லாம் ஆனதுவே
அப்போது, ராவானும் அடித்தானாங் கோபங்கொண்டு
கண்டு மிரண்டார்கள் கனத்தபடை மன்னரெல்லாம் 1610
கிழக்குத் தலைவாசலுக்கு ஓடியே வந்தார்கள்
கடோற்கயன் அடிக்கிறது கண்ணுவிண்ணுந் தெரியாது
வடக்குத்தலை வாசலிலே வாளபிமன் நகலுகற ன்
தெற்குத்தலை வாசலிலே தொந்திசெட்டி அடிக்குறான்
வாளெடுத்துக் கச்சை கட்டி வாளபிமன் வெட்டுகுறான் 1615
ஆனைத் தோலாலே அடித்தான் கடோற்யனும்
வெள்ளிக்கோல் தடியாலே வீசினான் தொந்திசெட்டி
நல்லமுடி ராவானும் நாலுதிக்கும் வீசுகுறான்
கலியாணம் என்றுவந்தோம் கல்லெடுப்பு ஆனதுவே
திக்கென்று ஓடித் திசைமாறிப் போனார்கள் 1620
காயம்பட்டுப் போனார்கள் கணக்கு வழக்குமில்லை
கொள்ளை குடுத்தவர்கள் கோடிமன்னர் தானாக
இப்படி யாக இரணகலம் ஆச்சுதங்கே
கடோற்கையன தானும் கடுகவே ஓடிவந்து
கண்டு வழியிலே காங்கையனைக் கட்டாய்த் தால் பிடித்துப் 1625
பின் கட்டாய்க் கட்டித் தம்பிகையில் தான்கொடுத்து
அளிஞ்சிப் புதையை அடவாகத் தான்பாத்து
ஊனாம் புதையை ஒருநொடியில் போய்வளைந்து
நொச்சிப் புதையை நொடிக்குமுன்னே போய்வளைந்து
செடிகள் மலைகளெல்லாஞ் சேரவே தான்ஓரத்தி 1630
வளைந்து பிடித்தார்கள் வந்ததொரு மன்னரெல்லாம்
திரியோ தனனும் அவதம்பிமாரி அத்தினையும்
ஊனாங் கொடிபிடிங்கி ஒன்பது தாப்புகட்டி
அரசர்மக்கள் அத்தினையும் அன்பது தாம்புகட்டிப்
படைத்தலைவர் மன்னவரைப் பதினஞ்சு தாம்புகட்டி 1635
வீசினான் துடையோடே விருசாய் நடந்தார்கள்
சங்கும்வ ராபுரிக்குத் தள்ளியே வந்தார்கண்
மணவ றைப் பந்தலுக்கு வகையாகக் கூட்டிவந்து
காலுக் கொருவனைக கட்டினார் அப்போது
தொண்ணூக தொன்பதுபேரைத் தூணிலே கட்டிவைத்தார் 1640
படைத்தலைவர் மன்னவரைப் பாங்காய் வருஞ்சுகட்டி
அவன் தகப்பமார் பார்த்திருக்கத் தானாகக் கூட்டிவந்து
நல்லதம்பி நாவிதனை நலமாகக் கூட்டிவந்து
லக்கணன் தலையிலே நலமாக அப்போது
சிறுநீரை விட்டுச் சிரைத்தார்கள் அப்போது 1845
அஞ்சு கவறாய்ச் சிரைத்தார்கள் அப்போது
வண்ணான் சிறுகுதிரை வகையாகக் கொண்டுவந்து
ஆட்டுத்தோல் கல்லணையாய் அடவாகத் தான்போட்டு
ஊனங் கொடியை அங்கவடி தான்சேர்த்துப்
பீத்தமுறர் ஆலவட்டம் பிடிக்கவே சொன்னார்கள் 1650
எருக்கலம்பூ மாலை எடுக்கவே சொன்னார்கள்
வெஞ்சாமரம் என்று விளக்கமார் வீசிவரப்
பட்டணமுஞ் சுத்திப் பாங்குடனே வந்தபின்பு
நாய்ப்பீயைத் தான்கரைத்து நலமாகத் தாதியர்கள் கொண்டுவந்தார்
ஆலாத்தி சுத்தி அடவாக லக்கணர்க்கு 1655
அரசாணிக் கிட்ட அடவாகக் கொண்டுவந்தார்
அத்திமுளை கொண்டு அஞ்சுமுளை தான் பிடித்துக்
காலுக்கு ரெண்டுமுளை கைக்குரெண்டு முளையறைந்து
பின்னுமொரு முளையூணிப் பேசாமல் வரிஞ்சுகட்டி
அவன்தலையில் சாணி அடவாய் உருட்டிவைத்து 1660
ஆயிரம் பெருந்தாளி அவன்தலையில் வைத்தார்கள்
கைக்குரெண்டு தீவட்டி கடுகக் கொடுத்தார்கள்
அப்போது தம்பியரே அருமைக் கலியாணம்
பருப்பில்லாக் கலியாணம் பாத்தவர்க்கும் ஏறாது
எண்ணெயில்லாத் தீவட்டி எரியுமோ வையகத்தில் 1665
மாயனில்லாக் கலியாணம் மண்டலத்துக் கேறாது
மாயனைப் பாத்து வகையாக கொண்டுவாறேன்
தம்பி கடோற்கயனே தாடாளா எச்சரிக்கை
என்று சொல்லி ராவான் எதமாக வாறானாம்
மலைகள் செடிகளெல்லாம் வகையாகத்தான் பார்த்துச் 1670
சுத்தாத ராட்சியத்தைச் சுத்தி மிகப்பார்த்து
வனங்கள் அதிர வகையாகத் தான்பாத்து
மாயனைக் காணாமல் மதிமயங்கி ராவானும்
ஏரிக்கரை மேலே எதுக்க வருகையிலே
ஏரிக்குங் கீழே இளஞ்சுள்ளி யாய்முளைத்தார் 1675
நாராயணன் சுள்ளியேன்று நலமாகத் தான்வளர்ந்தர்
கள்ளிச் செடியைச் சுத்தீயே ஓடிவந்து
மாயன் பெருமாளே மண்ணில் ஒளிவதுண்டோ
சுள்ளிச் செடியைச் சுத்திவந்து தெண்டனிட்டுக்
கண்டாரே மாயவரும் கனகமுடி ரசவானை 1680
தவளையென்று வடிவெடுத்துத் தண்ண யிலே போய்விழுந்தார்
முதலையென்று வடிவெடுத்து முக்காலு போய்விழுந்தார்
ஆமையென்று வடிவெடுத்து அடவாகப் போனதுவே
குரவனென்று வடிவெடுத்துக் குத்துனாள் கோலாலே
அப்பவே மாயன் ஆகாச மாய் பறந்தார் 1685
ராசாளி யென்று நலமாக வேதுடந்தான்
எலியென்று வேசங்கொண்டு இறங்கினார் பூமியிலே
பூனையென்று தான்போய்ப் பிடித்தான் பிடனியிலே
மெச்சினேன் மருமகனே விட்டுவிடு சொல்லுகுறேன்
உங்களுட பெண்ணை ஒருவருக்குங் கொடுப்பேனோ 1690
நீங்களும் வல்லையென்று வழிபாத்து நானிருந்தேன்
ராவானே நீயும் நான்சொல்லக் கேளுமினி
திரியோதனன் பாத்திருக்கத் தென்னவர்கள் முன்னாகக்
கட்டிக்கொண்டு போடாநீ கனத்ததொரு ராவானே
கம்பிளிக் கயறாலே கட்டினான் மாயவரை 1695
ராவானும் தம்பியர்க்கு நலமாகச் சொன்னதுவே
இப்பவல்லோ பாண்டவர்கள் இந்த அருமைதனைப் பார்க்கவேணும்
அருமைக் கலியாணம் ஆர்பார்க்கப் போறார்கள்
அய்உரையுந் தான்நினைந்து அடவாக நின்றார்கள்
வனம்போன பாண்டவர்கள் வைகைக் கரையோரம் 1760
அல்லிக் கிழங்குவெட்டி அடவாகக் கொண்டுவந்து
வேகவைத்துத் தின்று வெளிப்பட்டு நின்றார்கள்
வண்ணான் துறையும் வகையான கோம்பைக்குள்ளே
அயிவரளிச் செடியிலே அய்வரும் போய்ப்படுத்தார்
வலதுதோள் துடித்திடுமாம் வகையான பஞ்சவர்க்கு 1705
அப்போது தர்மர் அடவாய் எழுந்திருந்து
அயிவரளிச் செடியிலே பல்லி அலைகொட்டிச் சொன்னதுவே
சொன்ன வசனத்தைத் தோற்றமுள்ள பஞ்சவர்கள்
அந்த வசனத்தைத் தம்பி அடவாகச் சொல்லுமென்றார்
நல்லதென்று சொல்லி நலமாகச் சுத்திவந்து 1710
அப்பனையோ சாமியென்று அடிவணங்கித் தெண்டனிட்டு
நல்லதடா சகாதேவா நலமாகப் பாருமடா
அப்போது சகாதேவன் ஆண்டு மிகப்பாத்து
ஆண்டவனே அண்ணாவி அடியேனுஞ் சொல்லுகிறேன்
சவனத்தைப் பாத்துத் தப்பாமல் சொல்லுகிறேன் 1715
திரியோ தனன்பாவி திரவியத்தைத் தான்கொடுத்து
மாயன் பணம்வாங்கி வகையாக வந்தல்லவோ
லக்கண குமாரனுக்கு நாள்குறித்து வந்தாப்போல்
அடியின் பிறகே ஆனபடை உள்ளதெல்லாம்
கன்னனும் காங்கையனும் கதித்ததொரு சல்லியனும் 1720
திரியோ தனன் படையும் தென்னவர்கள் தன்படையும்
சேனைபடை உள்ளதெல்லாம் சேரவே கூட்டமிட்டுத்
இவரகா புரியிலே சோபனங்கள் காணுமய்யா
அந்த நல்ல சேதி அடவாகக் கேட்டாப்போல்
தொந்திசெட்டி தானுங் கூடவே வந்தல்லவோ 1725
நால்பேருங் கூடி நலமாய் வளைந்துகொண்டு
ஆனைபடை சேனையெல்லாம் அடவாகத் தான்துரத்திக்
குதிரைபடை சேனையெல்லாம் கொக்கரித்துத் தான்துரத்தி
வெட்டித் துரத்தி வெத்திகொண்டார் அம்மானை
கண்டு பயந்து காட்டிலே ஓடிவந்தார் 1780
அடியின் பிறகே அடவாய்த் துடந்துவந்து
அளிஞ்சீப் புதையிலே அடவாகத் தான்பாத்து
நொச்சிப் புதையிலே நூறுபேர் தனைப்பிடித்துக்
கூடாரம் போட்டாப்போல் கோடிடால் நட்டாப்போல்
குளத்தாங் கரையோரம் கோடிடால் நட்டாப்போல் 1735
கையொடிஞ்சு காலொடிஞ்சு கனத்த படை முரிஞ்சு
கலியாணம் என்றுவந்தோம் கல்லெடுப்பு ஆனதுவே
ஊணாம் புதையில் ஒளிஞ்சசனம் அத்தினையும்
ஒளிஞ்சசனம் அத்தினையும் ஒருநொடியில் தான்பிடித்துத்
திரியோ தன்னையும் அவன் தம்பிமார் அத்தினையும் 1740
ஊணாங் கொடிபிடிங்கி ஒன்பது தாம்புகட்டி
படைத்தலைவர் அத்தினையும் பதினஞ்சு தாம்புகட்டி
முன்னாகத் தள்ளி வீசிவிட்டான் ராவானும்
துவரகா புரிக்கித் துருசாகக் கூட்டிவந்து
கலியாணப் பந்தலிலே காலோடே கட்டிவைத்து 1745
லக்கணனைக் கூட்டிவந்து நடுச்சபையிலேநிறுத்தி
நல்லதம்பி நாவிதனை நலமாகக் கூட்டிவந்து
சிறுநீர் தலையில்விட்டுச் சிறப்பாக மோளையிட்டு
அஞ்சு குடுமைவீட்டு அடவாக மோளையிட்டு,
அத்தி முளைகொண்டு அஞ்சு முளையறைத்து 1750
சாணி உருட்டித் தலைமேல் விளக்குவைத்துத்
தோளுக்கு ரெண்டுவிளக்குச் சுடராக வைத்தல்லவோ
கைக்குரெண்டு தீவட்டி கடுகக் குடுத்தார்கள்
வண்ணான் சிறுகுதிரை வகையாகக் கொண்டுவந்து
ஆட்டுத்தோல் கல்லனையாய் அடவாக மேல்போட்டு 1755
பழமுறமும் ஆலவட்டம் பாங்காகத் தான்பிடித்து
வெஞ்சா மரமென்று விளக்கமார் வீசிவர
நாய்ப்பிய்யால் ஆலாத்தி நரைக்கிழவி சுத்திவிட்டான்
எருக்கலம் பூமாலை ஏகமாய்ப் போட்டார்கள்
மாயன் மறைந்து மாயமாய்ப் போனதுவே 1760
மாயனைத் தேடி ராவான் மலைகள் செடிகளெல்லாம்
கணாமல் தேடிக் கரையோரம் வருகையிலே
மாயன் பெருமாள் மண்ணில் மறைந்ததுவே
நாராயணன் சுள்ளியென்று நலமாய் முளைத்தாரே
அந்தச், சுள்ளிச் செடியைச் சுத்திவந்து தெண்டனிட்டு 1765
மச்சனென்று வந்து வகையாகத் த ன்விழுந்தார்
ராவான் முதலைபோல் நலமாகத் தான்துடந்தான்
ஆமையாய் வடிவெடுத்து ஆனதொரு மாய்வரும்
குறவனென்று வடிவெடுத்துக் குத்தினான் குத்துக்கோலாலே
நாரையென்று வடிவெடுத்து நன்றாய்ப் பறந்துவிட்டார் 1770
ராசாளி யாக நலமாய்த் துடந்துவிட்டான்
எலியென்ற வேசங்கொண்டு இறங்கினார் பூமியிலே
ராவான் பூனையாய் வடிவெடுத்துப் பிடித்தான் பிடனியிலே
மெச்சினேன் மருமகனே விட்டுவிடு சொல்லுக்குறேன்
அப்போது ராவானும் அடிவணங்கித் தெண்டனிட்டுத் 1775
தெண்டனிட்ட ராவானைத் திக்கென்று தானெடுத்துக்
கம்பளிக் கயறெடுத்துக் கட்டினான் ராவானும்
சங்குதுவ ரகாபுரிக்குத் தள்ளியே வந்தானாம்
கலியாண வாசலுக்குக் கருத்தாவே காணேனே
இந்தருமை பார்க்க எங்களையரேக் காணேனே 1780
ராவான் கடோற்கயனும் நல்லதொரு வாளபிமனும்
நினைத்து புலம்பி நிசமாக நிண்ணதுண்டு
அதுகண்டு பல்லி அடவாகச் சொல்லுதையா
தமபிசொன்ன சாத்திரமும் தப்பா தொருநாளும்
அருச்சுனன் துரோபதையை அடவாய்ப் பயனம்பண்ணித் 1785
தம்பியரைத் தானழைத்துத் தர்மரும் அங்கேதுசெல்வார்
கலியான வாசலிலே கலக்கம் வராதபடி
திரியோ தனன்படையும் தென்னவர்கள் உள்ளதெல்லாம்
ஒருதாழ்வு வராதபடி தாட்டிவீட்டு வாடா நீ
தப்பி கலியாணம் தாழ்வு வராதபடி 1790
கலீயாண வாசலுக்குக் கடுகவே போடாநீ
கலியாண வாசலிலே கலக்கம் வராதபடி
திரியோ தனன்படையும் தென்னவர்கள் உள்ளதெல்லாம்
தம்பி அருச்சுனரே தாடாளா போய்த்திரும்பு
விடைவாங்கிக் கொண்டு வெளிப்பட்டுப் போனதுவே 1795
அந்த வனங்கடந்து அயிரா பதங்கடந்து
அருச்சுனனும் அப்போ ஆனசன்னாசி வேசங்கொண்டு
பாஞ்சாலி துரோபதையும் பக்கமே ஆண்டிச்சியாய்ப்
பொன்னாலே பாதகுறடும் பொன்பிரம்பு கைபிடித்துச்
டையும் முடியும் தன்காதில் குண்டலமும் 1800
பாலப்பழம் போலே பழுத்த கிழவனைப்போல்
கலியாணப் பந்தலிலே கடுகவே வந்தார்கள்
மாயனைக் கண்டு வகையாகத் தெண்டனிட்டு
நயினமுள்ள பாசையிலே நலமாகச் சொன்னதுவே
திரிபோதனன் திரவியத்தைத் தீரமாகக் கொள்ளையிட்டு 1805
ஆனபடை சேனையெல்லாம் அரவாசி சேதங்கண்டு
பண்ணுக்கு வந்து பிரியமுடன் சிக்கிவிட்டார்
பதினெட்டு நாளைப் படைப்போர்க் கிரைவேனும்
எந்தவித மாகிலுஞ் சன்னாசி இதமாகத் தட்டவேனும்
கலியாண வாசலுக்கு நீர் வந்ததே போதுமிப்போ 1810
நயினமுள்ள பாசையிலே நலமாகச் சொன்னதுவே
பொன்னாலே நாக்காலி பிரியமுடன் தாண்போட்டு
ராவான் கடோற்கயனும் நல்லதொரு வாள் வீமன்
மூவரும் வந்து முக்காலுந் தெண்டனிட்டுத்
தெண்டனிட்ட பாலகரைத் திக்கென்று தானெடுத்து 1815
இன்னம் பதம்பெறுவாய் இளையபதம் உண்டாகும்
பின்னைப் பதம்பெறுவாய் பெருமாள் துணையுமுண்டு
ழ்த்தி விடைகொடுத்தார் வாலசன் னாசியரும்
மாயன் பெருமாளும் வாலசன் னாசியரும்
சன்னாசி பேச்சைத் தட்டாமல் கேளுமிப்போ 1820
தாரார் புகழுடைய தர்மருட ராச்சியத்தில்
உங்கள் தகப்பமார் ஐவரும் சன்னாசி பேச்சைத்தட்டார்
அப்படிப் போலே நீயும் அடவாகக் கேளுமிப்போ
நல்லதென்று சொல்லி நடந்தானாம் ராவானும்
கலியாணப் பந்தலிலே கடுகவே வந்துநின்று 1825
மணவறைப் பந்தலிலே மாணிக்கந் தானழுத்தி
முத்துச் சரங்கள் முன்னாசத் தொங்கவிட்டுப்
பலளக் சரங்கள் பக்கமே தொங்கவிட்டுத்
தென்ன மரமெழுதிச் சிக காரந் தனெழுதி
வாழை எழுதி வான்கரும்பு தானெழுதிச் 1830
சோலை எழுகீத் துய்யமணி தனெழுதி
அன்ன மெழுதி அதுமேல் கிளீயெழுதி
வர்ண மெழுதி மாலைகள் தொங்கவிட்டு
வெள்ளித் தகட்டாலே வேல்கட்டுக கட்டிவைத்து
முத்துநவ ரெற்றின முழுநீலக் காலழுத்தி 1835
பணவரைப் பந்தலிலே மணலும் பரப்பிவைத்து
அம்மி வலமாக அரசாணி முன்னாகப்
பிரம்பு வலமாகப் பேய்க்கரும்பு முன்னாகப்
பூமாலை பொன்மாலை போத அலங்கரித்து
மயன்மகள் சுந்தரியும் வாள்வீமன் தானகூடப் 1840
பொன்னுரதம் வெள்ளிரதம் போத அலங்கரித்து
ஆனைமேல் பேரணி அதிர முழங்கிவரக்
குதிரைமேல் பேரணி கோடிலெட்சப் முழங்கிவரக்
ஒட்டகைமேல் பேரணி ஒக்க முழங்கிகூரப்
பேரிகை மத்தளம் பின்னே முழங்கிவரத் 1845
தப்பு முழங்கத் தவில்முரசு தான்முழங்க
நாகசரங் கொம்பு நன்றாக ஊதிவரத்
தித்திமி மத்தளம் சேரவே தான்முழங்க
வயிரவி வீணை வலம்புரிச் சங்கூத
ஆலவட்டஞ் சூழ்ந்துவர அதிவீரர் முன்னடக்கச் 1850
சாம்பிராணி வீசக் சனமெல்லாஞ் சூழ்ந்துவர
முத்துக் குடைகள் முன்னாகச் சூழ்ந்துவரப்
பவளக் டைகள் பக்கமே சூழ்ந்துவரச்
சந்திரகாவி டாலும் தனித்தனியே தான்பிடிக்க
அனுமந்த டாலும் ஆனதொரு கைத்தளமும் 1855
ஆகாச பாணம் ஆனதொரு பூவாணம்
பத்துமுகத் தீவட்டி பக்கமே சூழ்ந்துவர
நிலவிருசு பாணம் நிலப்பொட்டி தான்முழங்கப்
பூவாணம் பொரீவாணம் பூமியெல்லாந் தான சீரச்
சங்கீத பாணம் சரமண் டலமுழங்கப் 1860
பூச்சக்கிரக் குடைபிடிக்கப் பூலோகஞ் சோதிமின்ன
வாளால் அபிமனுக்கும் மாயன்மகள் சுந்தரிக்கும்
இருவரெண்டு பேரும் இணைசோடாய் வருகையிலே
முத்துனால் ஆலாத்தி முன்னாகச் சுத்திநிற்பார்
பவளத்தால் ஆலாத்தி பாங்காகச் சுத்திவரும் 1865
ஆலாத்தி சுத்தி அலங்கரித்து நிற்பாரும்
தன்னந் தெருக்கடந்து தெருவிதி தான்கடந்து
தேரைவிட்டுத் தானிறங்கித் தேன்மொழியாள் சுந்தயும்
மாப்பிளையும் பெண்ணும் மணவறையில் தானிருந்து
பாப்பார் புரோகிதரும் பக்கமே சூழ்ந்து நிற்க 1870
மாயன் பெருமாள் வகையாகக் கிட்டவந்து
ஆண்டிச்சி சன்னாசி அடவாகப் பாத்திருக்கக்
கலியாணப் பந்தலிலே கடோற்கயனும் ஓடி ந்து
திரியோ தனனையும் அவன்தம்பிமா ரத்தினையும்
கலியாணப் பந்தலிலே களப்பெலி குடுக்குறண்டா 1875
அப்போது சன்னாசி அடவாக ஓடிவந்து
கடோற்கயனைக் கைப்பிடித்துக் கண்ணாளா தம்பியரே
கலியாண வாசலிலே கலக்கம்வர லாகாது
கலியாண வாசலிலே கட்டவும் ஆகாது
கட்டை யவிழ்த்துவிடு கண்ணான தம்பியரே 1880
அப்போ கடோற்கயனும் அட வாகச் சொன்னதுவே
எங்கள் தாயார் துரோபதையைத் தள்ளித் துயலுரிந்தான்
ஒருவர் மயிர்பிடிக்க ஒன்டதுபேர் துயிலுரிய
இவனைக், கலியாண வாசலிலே கடுகவே வெட்ட வேணும்
வேண்டாமடா தம்பி! இது வேளையல்ல சொல்லுகுறேன் 1895
ராவான் எழுந்திருந்து நலமாக ஓடிவந்து
அப்பவே சன்னாசி அடவாகத் தான்பிடித்து
வேண்டா மடாதம்பி! வெட்டுறதும் ஆகாது
ஆருதப்பிப் போறார்கள் ஆனதொரு தம்பியரே
சொன்னபடி கேளாய் துரைமகனே ராசாவே 1890
கோபத்தை நீயடக்கிக் குளுமையாய்ப் பாருமய்யா
அப்போது ராவான் அடவாகக் கிட்டவந்து
ச*னாசி அய்யன் தகப்பன்போல் சொன்னீரே
கலியாணப் பந்தலிலே கட்டை அவிழ்த்துவிட்டார்
கட்ட வீழ்த்து விட்டாப்போல் சன்னாசி காலில் விழுந்தார்கள் 1895
ஆண்டுமை பெண்ணடுமை அத்தனையுந் தானடுமை
பெத்தபிள்ளை யெல்லாம் பேரிட்டுத் தாறமய்யா
உள்ளநாள் உள்ளம் ட்டும் உம்மை மறப்பதில்லை
என்றுசொல்லித் தானும் எல்லோரும் போனார்கள்
திரியோ தனனும் திரும்பியே ஓடிவந்து 1900
லக்கணனை விடச்சொல்லி நலமாகக் கேட்டானாம்
நாகவல்லி முடியமட்டும் நானும் விடுவதில்லை
கலியாணங் கலியாணங் காரிழைக்கிக் கலியாணம்
அரசாணிப் பந்தலிலே எல்லோருஞ் சூழ்ந்துநிற்க
வாளால் அபிமனுக்கும் மாயன்மகன் சுந்தரிக்கும் 1905
கலியாண முகிர்த்தம் கடுகவே முடியுதிப்போ
சோபன கலியாணஞ் சுந்தரிக்கி முடியுதிப்போ
அம்மி வலமாக அரசாணி முன்னாக
அரசாணிக் காலிலே லக்கணனைக் கட்டிவைத்து
எடதுகால் சுந்தரியாள் எடுத்து மிகஉதைத்தாள் 1910
வலதுகால் தன்னால் வாளபிமன் தானுதைத்தான்
மங்கிலியந் தான்தரித்தான் வாளபிமன் அப்போது
அரிசி பருப்பு அடவாகத் தானெடுத்துப்
புரோகிதர்க்கும் பணங்காசு போதவே தான்கொடுத்து
கலியாணம் தம்பிக்கிக் கடுக முடிந்துதுகாண் 1915.
ஆகாசம் பூமி அறிய முடிந்துதுகாண்
பள்ளியறை மாளிகையில் பாங்காகப் போயிருந்து
பூமாலை பொன்மாலை பே தவே வாங்கிவைத்து
மாயன் பெருமாள்காலில் வகையாகத் தெண்டனிட்டுச்
சன்னாசி காலில் தயவாகத் தெண்டனிட்டு 1920
எல்லாருட காலில் இயல்பாகத் தெண்டனிட்டு
இன்னம் பதம்பெறுவீர் இளையபதம் உண்டாகும்
பின்னைப் பதம்பெறுவீர் பெருமாள் துணையுமுண்டு
மாப்பிளையும் பெண்ணும் வகையாகக் கூட்டிவந்து
சாலுங் கரகமும் தப்பாமல் சுத்திவந்து 1925
முத்தும் பவளமும் மூன்றுதிரந் தானெடுத்தார்
வெள்ளியும் பொன்னும் வேந்தர்முன்னே தானெடுத்தார்
இருவரும் தண்ணீர் இதமாகக் கொண்டுவந்
மஞ்சன் நீராடி வரிசையெல்லாந் தான்கொடுத்து
வரிசைகள் எல்லாம் மாயவரும் தான் கொடுத்து 1930
நாகவல்லி சாத்திரங்கள் நலமாய் முகிந்தபின்பு
போசனமும் பொர்கறியும் பிரியமுடன் சாப்பிட்டு
வெள்ளிக் கிழமை விசைய தசமியிலே
பங்குனி மாசம் பதினஞ்சாந் தேதியிலே
தேவர்கள் தானறியத் திரமாய் முகிந்ததுவே 1935
சந்திரரும் சூரியரும் தானவரும் தானறிய
மாயன்மகள் சுந்தரிக்கும் வாளால் அபிமனுக்கும்
கலியாண சோபனங்கள் கடுசாய் முடிந்ததுவே
லக்கணனைக் கட்டவிழ்த்து நலமாக விட்டார்கள்
ராவான் கடோற்கயனும் நல்லதொரு தம்பியரும் 1940
சன்னாசி கர்லில்வந்து தப்பாமல் தெண்டனிட்டு
போசனமும் போட்டுப் பிரியமுடன் கூட்டிவந்து
காணிக்கை தான் கொடுத்துக் கர்த்தாவெப் போகவிட்டு
மாப்பிளையைத் தானழைத்துச் சன்னாசி போகையிலே
ராவான் கடோற்கயனை நலமாகத் தானழைத்து 1945
அண்ணனும் தம்பியும் அடவாக வாழ்ந்திருங்கள்
வடபத்திர காளியம்மன் வருவான் துணையாக
போறண்டா மகனே புத்தியுள்ள பரலகனே
ஆண்டிச்சி சன்னாசி அடவாகப் போன துவே
ஊரு கடந்து உசந்தவனந் தான்கடந்து 1950
காடு கடந்து கரடிவனப உன்புகுந்து
அயிரவளிக் கிட்டப்போய் அருச்சுனனுர் ஆண்டிச்சியும்
தர்மர்கிட்ட வந்து தயவாகத் தெண்டனிட்டுப்
போய்வந்த சேதி பிரியமுடன் தானுரைத்து
கலியாண காரியம் கடுகவே முடிந்துதையா 1955
வாளால் அபிமனுக்கும் ம யன்கள் சுந்தரிக்கும்
திரியோ தனனும் தென்னவர்கள் உள்ள தெல்லாம்
கர்ணன் சகுனி காங்கையனும் உள்ளகெல்லாம்
தப்பிப் பிழைத்துத் தன்னூரே போய்ச்சேர்ந்தார்
ராவான் கடோற்கயனும் நல்லதொருவளபிமனும் 1960
மாயன்மகன் சுந்தரியை வரிசையாய்க் கூட்டிவந்து
சுபத்திரியாள் சூரமனைக்குச் சுகமுடனே போனார்கள்
முத்தாலே ஆலாத்தி முந்நூறு சுத்திவந்தார்
பவளத்தான் ஆலாத்தி பதினாயிரஞ் சுத்திவந்தார்
அரமனையில் கூட்டிப்போய் அடவாக வைத்தார்கள் 1965
கடோற்கயனும் ராவானும் கடுகவே அனுப்பிக்கொண்டு
தொந்திசெட்டி தானும் துருசாய் அனுப்பிக்கொண்டு
அவரவர் ஊருக்கு அவரவர்போய்ச் சேர்ந்தார்கள்
சுந்தரி மாலை சுகமாய்ப் படித்தோர்கள்
இன்னஞ் சொல்லுமென்று இன்பமுடன் கேட்டோரும் 1970
காசு குடுத்துக் காதாரக் கேட்டோரும்
படியும் படியுமென்று பாக்கிலைகள் தந்தோரும்
எண்ணும் பதினாறாய் இளையபதம் உண்டாவார்.
ஆல்போல் தழைத்து அறுகதுபோல் வேரூணி
மூங்கிபோல் சுத்தம் முசியாமல் வாழ்ந்திருப்பார் 1975
முப்பத்தி மூக்கோடி தேவர்களு மேவாழி
சந்திரரும் சூரியரும் தானவரு மேவாழி
ஆகாச வானி பூமாதேவி தான்வாழி
------------
ருத்துரோகாரி வருடம் மார்கழி மாதம் 3-ஆம் தேதி மாபாளையத்திலே ...... க்கன் மகன் ரங்கம
நாயக்கனுட ஸ்ரீ புண்ணியகுமாரன் சுந்தரி அம்மானை எழுதி முகிந்தது. சம்பூர்ணம். வெங்கிட்ட ரமண
சுவாமி துணை உண்டாகவும். பெருமாள் துணை உண்டாகவும் தேவர் துணை. கன்னிமார் துணை
உண்டாகவும். வயிரப் பெருமான் துணை ஸ்ரீ ரெங்க நாயகர் துணை உண்டாகவும். சுப்பிரமணியர்
துணை உண்டாகவும். பசுபதி ஈஷ்பரர் துணை உண்டாகவும். மாதா பிதா குரு தெய்வம்.
----
1826-ஆம் எண்ணுள்ள சுவடியின் இறுதிக் குறிப்பு :
விளம்பி ஆண்டு ஆவணி மாதம் 15-ஆம் தேதி திங்கட்கிழமையும் தி தீரயோதசியும் உத்திராட நச்சேத்திரமும்
விருச்சிக லக்கணமும் கூடிய சுபயோக சுபதினத்தில் தாளியாபட்டியிலே இருக்கும் கோ. முத்துக் கருப்பக்
கோனானுக்கு ஸ்ரீ புண்ணிய குமாரனாகிய கோவிந்தன் சுந்தரி மாலை எழுதிமுடிந்தது.
சம்பூர்ணம் குரு பாதமே துணை உண்டாகவும்.
-----------
வேண்டுகோள்
கருணையுள்ளங்கொண்ட நம் முன்னோர்கள். அரிய பெரிய இலக்கியங்களையும், பிறவற்றையும்
பனையோலைகளில் எழுதிச் சுவடிகளாக நமக்குத் தந்தனர். அவை, பல்வேறு இடங்களில் முடங்கி உள்ளன.
சுவடிகள் பழுதடைவதற்குமுன் சரசுவதி மகாலுக்கு அன்பளிப்பாகக் கொடுத்துதவினால், அவை மக்களுக்குப்
பயன்படும்.
மகாலுக்குக் கொடுப்பதன் மூலம், சுவடி தந்தவர் களும், சுவடி எழுதியோரும் அழியாப் புகழை
பெருமைசால் சரசுவதி மகால் உள்ளளவும் பெறுவர். அவை பதிப்பாகி வருமாயின் சுவடி தந்தார்
பெயர் இடம் பெறுவதோடு, அப்பதிப்பில் ஐந்து பிரதிகளும் பெறுவர்.
எனவே, 'நாம் பெற்ற பேறு பெறுக இவ் வையகம் என்ற எண்ணமுடைய நற்பண்பாளர்கள் தம்மிடமுள்ள
சுவடிகளைச் சரசுவதி மகாலுக்குத் தந்துதவ வேண்டுகிறேன்.
தஞ்சாவூர்,
தேவ.ஜோதி ஜெகராசன், இ.ஆ.ப.
மாவட்ட ஆட்சியர் மற்றும் இயக்குநர்.
சரசுவதி மகால் நூலகம்.
----------------
This file was last updated on 11 Jan 2026.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)