திருமயிலைப் பிரபந்தங்கள் -பாகம் 2
அம்பலவாணக் கவிராயர் இயற்றிய
திருமயிலைக் கோவை
tirumayilaip pirapantangkaL - part 2
tirumayilaikkOvai by ampalavAnak kavirAyar
In Tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
We thank Tamil Virtual Academy, Chennai for providing a scanned PDF version of this work
We thank Dr. Meenakshi Balaganesh, Bangalore, India for her assistance in the preparation of this work.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2026.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
திருமயிலைப் பிரபந்தங்கள் - பாகம் 2
திருமயிலைக் கோவை
தி. சந்திரசேகரன் தொகுப்பு
Source :
திருமயிலைப் பிரபந்தங்கள்
TIRUMAYILAI PRABANDHAŃKAL
EDITED BY T. CHANDRASEKHARAN, M.A., L.T.
Curator, Government Oriental Manuscripts Library, Madras
and the Staff of the Library
(Under the orders of the Government of Madras)
PRINTED BY THE SUPERINTENDENT, GOVERNMENT PRESS
MADRAS, 1953
MADRAS GOVERNMENT ORIENTAL MANUSCRIPTS SERIES-27.
----------
திருமயிலைக் கோவை. - பொருளட்டவணை.
1. விநாயகர் வணக்கம்
2. அவையடக்கம்
1. களவியல்.
3. கைக்கிளை (1-5)
4. தலைவிப் புணர்ச்சி (6-22)
5. வன்புறை (23-31)
6. தெளிதல்
7. பிரிந்துழி மகிழ்தல்
8. பிரிந்துழிக் கலங்கல் (36-40)
9. இடந்தலைப்பாடு (41-45)
10. பாங்கற் கூட்டம் (46-70)
11. மதியுடம்பாடு (71-92)
12. பாங்கிக்கூட்டம் (93 - )
--------- verses missing ----------
13. பகற்குறி
14. பகற்குறி யிடையீடு
15. இரவுக்குறி
16. இரவுக்குறி இடையீடு
------------
17. வரைதல் வேட்கை (224-242)
18. வரைவு கடாதல் (243-262)
19. ஒருவழித் தணத்தல் (263 - 274)
20. வரைவு இடைவைத்துப் பொருள்வயிற் பிரிதல்(275 -295)
2. வரைவியல்.
21. வரைவு மலிதல் (296 - 302)
22. அறத்தொடு நிலை (303 -319)
23. உடன் போக்கு (320 -338)
24. கற்பொடு புணர்ந்த கௌவை (339-363)
25. மீட்சி (364- 369)
26. தன்மனை வரைதல் (370 - 374)
27. உடன்போக்கிடையீடு (375-380)
3. கற்பியல்
28. இல்வாழ்க்கை (381-393)
29.பரத்தையிற் பிரிவு (394-416)
30. இளையகலாம். (394-407)
31. முதியகலாம்.(408 -416
------------
32.. பிற்சேர்க்கை 2 (417-463)
-------------------------------------------
திருமயிலைக் கோவை
(திருமயிலைச் சிங்காரவேலர் கோவை)
(அம்பலவாணக் கவிராயரால் இயற்றப்பெற்றது.)
உ : வேலு மயிலுந் துணை.
விநாயகர் வணக்கம்
பெருகா ரணம்புகழ் சிங்கார வேலர் பெருமைசொல்ல
வருகாதல் சேரும் பலன்மேவி வண்டு மலர்ப்பசுந்தேன்
பருகாவி சூழு மயிலைநற் கோவை படர்வதற்கு
முருகா ரொருகொம்பிற் கூத்தாடும் பேரத்தி முன்னிற்குமே. (1)
அவையடக்கம்
வியலா ரொளிர்மணிக் கோவையுங் கானின் மிகப்படருஞ்
செயலாருங் கோவையுங் கோவையென் றேபுவி செப்புதல்போல்
மயலான தின்றிப் பலநூலுங் கற்றவர் வாய்மொழியால்
இயல்கோவை தானுமென் கோவையுங் கோவை யெனத்தகுமே. (2)
நூல்
1. களவியல்.
கைக்கிளை
காட்சி
நீர்கொண்ட கொண்டல் செழுந்தா மரைகுமிழ் நீலமலர்
ஏர்கொண்ட கோங்குசெவ் வாம்பல்பைங் காந்த ளிவைமலர்ந்து
சீர்கொண்ட சுந்தர சிங்கார வேலர் திருமயிலைக்
கார்கொண்ட காவி லொருகாம வல்லியென் கண்ணுற்றதே. (1)
ஐயம்
கானிட மாமயிற் சிங்கார வேலன் கவின்மயிலைத்
தேனிட மாமல ரோபுன லோபணி சேரிடமோ
வானிட மோமலர் மாலிகை யோமன் மதனிடமோ
மானிட மோவல்லி யோவென்ன நின்றவிம் மானிடமே. (2)
துணிவு
வாரணி கொங்கை மதவா ரணங்குற வள்ளிபங்கன்
பூரணி மாமகன் சிங்கார வேலன் புகழ்மயிலை
ஏரணி பூவடி செங்காவி மைக்கண் ணியம்புதல்போல்
தாரணி மானெனுங் காரணி வார்குழற் றாரணியே. (3)
குறிப்பறிதல்
அனையும் பிதாவு மனையான் மயிலை யருட்குமரன்
புனையும் கடம்பணி சிங்கார வேலன் பொலன்கிரிவாய்
எனையும் பராகச் சிவனாக வையுற வின்றிப்பலகால்
நினையும் படிசெயு மம்மாதர் நீல நிகர்விழியே. (4)
இதுவும் அது
வார்க்கட னாக முகத்தான் கிரவுஞ்ச வஞ்சனஞ்சப்
போர்க்கட னாடும் படையான் மயிலைப் புனிதனருட்
சீர்க்கட லாகிய சிங்கார வேலன் சிலம்பின்மின்னாள்
கார்க்கட லானகண் பாற்கட லாம்வகை காட்டியதே. (5)
கைக்கிளை முற்றிற்று.
-----------
தலைவிப் புணர்ச்சி.
இரந்து பின்னிற்றற்கு எண்ணல்
நீர்தந்த சேற்றினை, நீரே கழுவுமந் நீர்மையைப்போல்
நீர்தந்த காமக் கனலைத் தவிர்ப்பவர் நீரெனவே
வார்தந்த பூண்முலைக் கோதநெஞ் சேசெல்வ மாமயிலைத்
தார்தந்த மார்பினர் சிங்கார வேலர் தடங்கிரிக்கே. (6)
இரந்து பின்னிற்றல்
கான்மயி லாகி யுமைபூசை செய்த கவின்மயிலைத்
தேன்முகை விண்டவர் சிங்கார வேலன் சிலம்பினெளி
யேன்மிசை யம்பிரண் டேவ யிரங்கு மியன்மறந்தைம்
பான்முடி சாய்த்துப் பதம்பார்த்து நிற்பதென் பைந்தொடியே. (7)
முன்னிலை யாக்கல்
பாரும்விண் ணும்புகழ் சிங்கார வேலன் பயின்மயிலை
சூருமின் பாவை யுறுபண்ணை நீமறந் தாசுமின்றிச்
சேரும் வித்தார மதுரமும் பேசிலைச் சித்திரமே
நேருமென் னாநின்ற சித்திர மேதும் நிகழ்த்துகவே. (8)
வண்டோச்சி மருங்கணைதல்
மருவார் குவளையன் சிங்கார வேலன் மயிலையன்னான்
நெடுவார் குழலுறை வண்டீர்கண் டீரீடை நேர்மையெண்ணீர்
படுகுழை யாகிய வண்டர்கள் சாலப் பழகிடினும்
நடுவே பொல்லாங்கு செயுந்திறங் கண்டனென் நானிலத்தே. (9)
மெய்தொட்டுப் பயிறல்
மெய்த்தே வரும்பணி சிங்கார வேலன் விரவுசெந்நெல்
செய்த்தேன் பெருகுமயிலையி னான்முனஞ் செய்தவத்தால்
நெய்த்தேன் குழலு மிடுபணி யாரமும் நேர்திருத்தி
வைத்தே மனவிர தம்நிறை வேற்றினன் வாணுதலே. (10)
பொய் பாராட்டல்
மணிவாய்த்த திண்புயன் சிங்கார வேலன் மயிலைமின்னே
அணிவாய்த்த நின்முகச் செவ்விகண் டேங்கி யகம்வருந்திய
பணிவாய்க் கிடந்து தவமுயன் மாமதி பாரறியத்
தணிவாய்ச் சுழன்றிர வெய்திமெய் தேய்ந்து தளர்கின்றதே. (11)
இடம்பெற்றுத் தழால்
முதியா ரறிவி லுறைஞான வாரிதி மூவிரண்டு
மதியாகு மானனன் சிங்கார வேலன் மயிலைவெற்பில்
விதியாக முற்றிய தானமும் வாய்த்து மேவுமின்னாள்
கதியாகு நல்லமு தந்தரு சொர்க்கநங் கைவசமே. (12)
வழிபாடு மறுத்தல்
துடியேற்ற செங்கைக் கபாலீசர் மைந்தன் சுரனரவிண்ணில்
குடியேற்றி வைத்தவன் சிங்கார வேலன் குறத்தியெனும்
வடியேற்ற கண்ணி மணாளன் மயிலை மயிலைமணிக்
கொடியேற்ற மாகுந் திருநாண் மருவக் குறித்தருளே. (13)
இடையூறு கிளத்தல்
அப்புற்ற வாவி புடைசூழ் மயிலை யன்பவளம்
ஒப்புற்ற மேனியன் சிங்கார வேல னுயர்வரையில்
செப்புத் தனத்தைப் புதையாய்ப் புதைத்தனை சேலைமுற்றும்
இப்பெற்றி செய்குவ தென்னாகு மங்கைக் கியம்புகவே. (14)
நீடு நினைந்து இரங்கல்
மருமொய்த்த வெட்சியன் சிங்கார வேலன் மயிலைவெற்பில்
உருவத் தொடுமத்திரநா ணெனக்காலு முறுவ திந்தப்
பருவத் தருவிற் படர்காம வல்லியின் பாங்கெய்தலான்
நிருமித்த வண்ணத்தி னில்லாம லேக நெகிழ்ந்ததுவே. (15)
மறுத்தெதிர் கோடல்
சாலி சொரிந்த தாள் நிலாவு தடமயிலை
மோலி புனைந்தருள் சிங்கார வேலனை முன்னலர்போல்.
வேலி பிரிந்த பயிர்போ லுயிரு மெலிந்திடவென்
பாலி னிருந்த பெருநா ணுருகிப் படர்கின்றதே. (16)
வறிது நகை தோற்றல்
சித்தம் பலவழி செல்லாம் லாகமச் செம்பொருளை
நித்தம் பகர்ந்தருள் சிங்கார வேலவர் நீண்மயிலைச்
சத்தம் பயிலளி சூழ்தோகை யார்முகந் தாமரைவாய்
முத்தம் பவளமென் றெண்ணவெண் மூரல் முளைத்ததுவே. (17)
முறுவற் குறிப்பு உணர்த்தல்
பொய்ச்சங்கந் தீர்த்தருள் சிங்கார வேலன் புனைமயிலோன்
செய்ச்சங்கம் பான்மதி போல வுலாவுந் திருமயிலைக்
கைச்சங்க மின்னிடை மானாள் வதன கமலமிசை
மெய்ச்சங்க மிங்குற முத்த நிலாவிது மேவியதே. (18)
முயங்குதல் உறுத்தல்
கொங்கார் மலர்த்தண் டலைசூழ் மயிலைக் குழகனொளிர்
சிங்கார வேலன் மகவான் பணிபவன் சேரிமையக்
கங்கா நதியைப் பயோததி வந்து கலந்ததொக்கும்
செங்காவி யங்கண் மடமானை நானின்று சேர்ந்ததுவே. (19)
புணர்ச்சியின் மகிழ்தல்
தாய்க்கே யிணைநல்ல தம்பிக்குத் தம்பி தருமநிதி
ஆய்த்தேர் குமர குருநாத பூபதி யன்புபுரி
சேய்த்தே மயிலையிற் சிங்கார வேலன் சிலம்புமின்னாள்
வாய்த்தேனை யுண்டுளம் வாய்த்தேனை யாரொப்பர் மாநிலத்தே. (20)
புகழ்தல்
வேரித் திருமலர்ச் சிங்கார வேலர் வியன்மயிலை
மாரித் தடமுகில் சூழ்நந்தி மால்வரை மான்முலைபோல்
பாரித் திறுகிப் புளகித் திளகிப் பணைத்தெழுந்து
பூரித் தலுமுனக் குண்டோ வமுதப் புதுக்குடமே. (21)
ஏற்புற வணிதல்
மேடையுஞ் சோலையுஞ் சூழ்மா மயிலையன் மெய்யமுதும்
மாடையு மன்னவன் சிங்கார வேலன் வரையணங்கே
ஓடையும் பூவுங்கல் லாரமுத் தோடு மொலிசெய்வண்டும்.
ஆடையு மெய்யணி யாவு முன்போல வணிந்தனமே. (22)
தலைவிப் புணர்ச்சி முற்றிற்று.
-------------------
வன்புறை
அணிந்துழி நாணியது அறிந்து தெளிவித்தல்
மாலன்ன வாகனன் போற்றும் மயிலையன் வள்ளியம்மை
சேலன்ன கண்மகிழ் சிங்கார வேலன் சிலம்பினிலைம்
பாலன்ன மேயிட்ட பொற்கலங் காணிலுன் பாங்கமைந்த
மேலன் னவரு மிசைவா ருளமஞ்சி வெள்கலையே. (23)
இதுவும் அது
சேந்தன் மயிலையிற் சிங்கார வேலன் செழுங்கிரியில்
காந்தளின் வண்டுமிடைப் பாலதெய் யாடையுங் கார்ப்புயன்மேல்
ஏந்திய தாரையுஞ் செப்பார் பணியுமியைந்த வண்ணம்
போந்துகண் டாரைய மெய்தார்வெள் கேலுளம் பொற்கொடியே. (24)
பெருநயப்பு உரைத்தல்
மாகத்தர் போற்றிய சிங்கார வேலன் மயிலுகந்தோன்
ஆகத் துயிருக் கிறையோன் மயிலையின் னாள்முகம்போல்
பூகத்து மீதம் புயம்பூத் தமுதம் பொருந்தி யன்பால்
தாகத்தைத் தீர்ப்பதும் வண்டேயுண் டேகண்ட தன்மைசொல்லே. (25)
தெய்வத்திறம் பேசல்
பொய்த்தெய்வ மாகிய வானோர்க் கடிமை புகாமலருள்
வைத்தென்னை யாண்டவன் சிங்கார வேலன் மயிலைவெற்பில்
மெய்த்தெய்வந் தந்த புணர்ப்பினை யாவர் விலக்குகிற்பார்
எய்த்துள்ளம் வாடி வருந்தலென் னேமல ரேந்திழையே. (26)
பிரியேன் என்றல்
வள்ளிக் கொடிபடர்ந் தோங்கிய தாரு மயிலையுள்ளோர்
கொள்ளச் சிறப்பருள் சிங்கார வேலன் குலவரைமேல்
அள்ளற் கமைந்த வழகணங் கேயென் னருந்துணையே
உள்ளத் தயர்வு கொள்ளேல் பிரியேனுனை யுண்மையிதே. (27)
இதுவும் அது
பசிக்கா ரமுத முயிர்க்குச்சஞ் சீவினி பாரமயில்
நிசிக்கா தவம்வறு மைக்கோர் நிதியெனு நின்னையென்றும்
சசிக்கோ முகத்தி வருந்தேல் பிரிகிலன் றண்மயிலைச்
சுசிக்கா தவனருள் சிங்கார வேலன் சுடர்வரைக்கே. (28)
பிரிந்து வருகென்றல்
வானினுஞ் சீரருள் சிங்கார வேலன் மயிலைவெற்பில்
தேனினும் பாலினும் யாகினும் வாய்மொழித் தேமளித்த
மானினு நீள்விழி யாய்விளை யாடுதி வல்விரைந்தே
நானினி யம்மலைச் சாரல்சென் றிங்ஙன் நண்ணுவனே. (29)
இடம் அணித்து என்றல்
என்னே மயங்கி மனந்தளர் வெய்த லிரவியன்ன
பொன்னேமி யான்பணி சிங்கார வேலர் புகழ்மயிலை
மின்னே நுஞ்சார லராமணிச் சோதி விரவியெம்மூர்
மன்னேர் படிக மணிமாட மாமணி மாடங்களே. (30)
இதுவும் அது
கருங்காவி யங்கண் கலங்கினை யேலுள்ளங் காண்மயிலைத்
தருங்காத னல்கிய சிங்கார வேலர் சயிலநும்மூர்
மருங்கார் கொடிக்கறி மேவிப் படர்தர வாய்த்ததெம்மூர்
பெருங்காய மஞ்சள் பழம்புளி மாவினம் பெண்ணமுதே. (31)
வன்புறை முற்றிற்று.
------------
தெளிதல்
சோதி மயிலையிற் சிங்கார வேலன் சுனைவரைமேல்
மாதித யங்கலங் கேலென்று தேற்றிய வாசகத்தை
நீதி யுடன் தெளிந் தேனைப் பிரிகிலர் நேரிழைக்காய்ப்
பாதி பசந்தவர் போலன்பர் யாரென்ற பார்த்திபரே. (32)
இதுவும் அது
பொன்மயி லாபுரிச் சிங்கார வேலர் பொலன்கிரிமேல்
என்மனந் தன்னை மிகத்தேற்றி யாற்றி யெனக்குறுதி
நன்மையிங் கோதி யகன்றிடு மெய்யன்பர் நான்வருந்த
வன்மைகொண் டங்குறை யார்வரு வார்சொன்ன வாய்மை கொண்டே. (33)
--------------
பிரிந்துழி மகிழ்தல்.
செல்லுங் கிழத்தி செலவுகண் டுளத்தொடு சொல்லல்
போராகும் பூஞ்சிலைச் சிங்கார வேலர் புகழ்மயிலை
வாராருந் தாமரை சேதாம்ப லும்பல் வள்ளைமலர்
ஓராவி போலுமென் னீராவி மாத ருருமருவிச்
சீராகச் செல்லுத னோக்குனெஞ் சேகண் சிறந்திடவே. (34)
பாகனொடு சொல்லல்
மற்புயன் சிங்கார வேலன் மயிலையின் மன்னியயாம்
முற்புறஞ் செய்த தவத்திடை யீடு முதியதவம்
பிற்புறஞ் செய்ததுந் தோன்ற நடந்துதன் பிற்புறம்பார்த்
துற்பல நோக்கி செலல்காண் வலவ வுவந்து நின்றே. (35)
பிரிந்துழி மகிழ்தல் முற்றிற்று.
--------------------
பிரிந்துழிக் கலங்கல்
ஆயவெள்ளம் வழிபடக் கண்டு அது மாயமோ என்றல்
சிந்தித்த தெய்வம் விழியெதிர் தோன்றத்தன் சீரடியார்
வந்தித்தல் போலெண்ணில் மாதரித் தோகையை வந்தித்தலால்
சந்தித்தல் பொய்மை யதோமெய்மை யோவளஞ் சார்மயிலைப்
புந்தித் தயாநிதி சிங்கார வேலர் பொருப்பிடத்தே. (36)
வாயில் பெற்றுய்தல்
கருமைப் புயலன்ன வெஞ்சூர னஞ்சக் கறுவிவென்ற
பெருமைப் புயாசலன் சிங்கார வேலன் பெருங்கிரிவாய்
இருசொற் கொருபொருள் போலே தனக்கு மிவட்குமுயிர்
ஒருமைத் தெனச்சொலு மிம்மாதர் பார்வை யுறவுதந்தே. (37)
பண்பு பாராட்டல்
மோகந் தவிர்த்தருள் சிங்கார வேலர் முதிர்ந்தசிவ
போகந் தழைமயி லாபுரி மாதிவ ளொண்ணிறம்போல்
சோகந் தவிரத் தராது சோகஞ் சுடர்முகம்போல்
தாகந் தவிர வுதியாது பூரண சந்திரனே. (38)
பயந்தோர் பழிச்சல்
அன்பா லெனக்கருள் சிங்கார வேல ரணிமயிலை
இன்பா ரமுதை மடவா ராசியை யீன்றெடுத்தோர்
மன்பார் புரந்து வளர்செல்வ மும்பெரு வாழ்வுமெய்தி
நன்பா லுகம்பல மன்னுக பூவி னலம்பெறவே. (39)
கண்படை பெறாது கங்குல் நோதல்
சீற்றார் பிறைநுதல் கூடிப் பிரிந்தவச் சேண்மை கண்டோர்
நோற்றார் மயிலையிற் சிங்கார வேலனை நோக்கி நின்று
போற்றார்க ளின்ப மெனவே யனந்தலும் போனதந்த
மாற்றார்க ளின்ன லெனநீண் டிருண்டது வான்கங்குலே. (40)
பிரிந்துழிக் கலங்கல் முற்றிற்று.
-------------------------
இடந்தலைப்பாடு.
தந்த தெய்வம் தருமெனச் சேறல்
ஊழிற் பெருவலி யாவுள வென்னுமுன் னோருரையைச்
சூழிற் றருந்தெய்வ நெஞ்சே வருந்தலச் சூழல்செல்வாம்
காழிக் கவுணிய ரங்கம்பெண் ணாக்குங் கவின்மயிலைக்
கோழிக் கொடியினன் சிங்கார வேலன் குலவரைக்கே. (41)
முந்துறக் காணல்
கண்ணுக் கொளியு முயிருக் கறிவுங் கவிக்கிசையும்
விண்ணுக் கிரண்டு சுடரும் பிரிந்துபின் மேவுதல் போல்
எண்ணிற் பெரும்புகழ் சிங்கார வேல ரெயின்மயிலைப்
பெண்ணுக் கரசி பிரிந்துமுன் போல்வரப் பெற்றனமே. (42)
முயங்கல்
பந்தக் கரும மலமாயை தீர்த்துப் பரிமயின்மேல்
வந்தக் கதியருள் சிங்கார வேலர் மயிலைவெற்பில்
சந்தக் களப முலைமலை மாதரார் தந்தநலம்
சிந்தைக்கு ணின்று தெவிட்டாமனித்தியந் தித்திக்குமே. (43)
புகழ்தல்
தருசொற் குயில்பயில் செந்தளிர் மாம்பொழிற் றண்மயிலைக்
குருசொற் பிரணவச் சிங்கார வேலன் குலகிரிமேல்
வருசொற் சசிமுகம் வேர்ப்ப வரம்பை வணங்கவிவள்
இருசொற்கம் போல வொருசொற்கம் பேரின்ப மீவதின்றே. (44)
உடன்புணர் ஆயத்து உய்த்தல்
கலைமுறை கற்ற பெரிய பராசரன் காதலர்க்கு
நிலையுப தேசஞ்செய் சிங்கார வேலர் நிதிமயிலை
தலைமுத லங்க முறுமுடற் கோருயிர் சார்வதுபோல்
முலைமட மங்கைய ராயத்து நீசென்று மன்னுகவே. (45)
இடந்தலைப்பாடு முற்றிற்று.
-------------------
பாங்கற் கூட்டம்.
தலைவன் பாங்கனைச் சார்தல்
சீரானை வேந்தனைச் சிங்கார வேலனைச் சேர்மயிலை
ஊரானை மாமயி லூர்வானை வாழ்த்துமென் னுள்ள மயல்
பாரானை நண்புறு பார்ப்பானைச் சார்ந்திப் பரிசுரைத்தால்
வாரானை வந்தவன் சேனைத் தலைவியை மன்னுவனே. (46)
பாங்கன் தலைவனை உற்று வினாதல்
தேராது நண்புகொண் டோர்செயுஞ் செய்கை திறம்பினையோ
சோரா தடைக்கலஞ் சேர்மன்னர் நாடுறச் சூழ்ந்தனையோ
சீரார் மயிலையிற் சிங்கார வேலர் சிலம்பண்ணலே
போராரு நின்புய வாட்டமென் காட்டப் புகுந்ததுவே. (47)
இதுவும் அது
மன்பார் புரக்குஞ் செயற்கிடை யூறிங்ஙன் வந்ததுண்டோ
என்பா னினது குறிப்பின்றி நிற்ற லிசைந்ததுண்டோ
இன்பாகு மேனியன் சிங்கார வேல னெழின் மயிலை
அன்பான வண்ணனின் றோள்வண்ண மிவ்வண்ண மான தென்னே. (48)
தலைவன் உற்றது உரைத்தல்
ஆவிக் கருள்புரி சிங்கார வேல னருகிருக்கும்
தேவிக் கினியவன் பொன்னார் மயிலைச் சிலம்பினண்பா
வாவிக் கயலை வலைவளைந் தாங்கென் மனத்தை மின்னாள்
காவிக் கருங்கண்ணி சூழ்ந்தே கவரக் கலங்கினனே. (49)
பாங்கன் கழறல்
போதைச் சொரியும் பொழில்சூழ் மயிலைப் புனிதன்மலர்க்
கோதைப் புயாசலன் சிங்கார வேலன் குலகிரிமேல்
காதைப் பொருதும் விதிமாது நோக்கிற் கலங்கினையால்
பேதைப் பொருட்டிழப் பாரோ வறிவு பெரியரே. (50)
தலைவன் கழற்றெதிர் மறுத்தல்
அருந்தமி ழாகரர் சிங்கார வேல ரணிமயிலைப்
பொருந்துநண் பாவெனைத் தேற்றவென் னாகும் புயன்சிறக்க
வருந்திருக் காஞ்சி நடுவெளி மேலுற வைத்தகுடப்
பெருந்தனங் கண்டவர் யார்மயங் காரிப் பெருநிலத்தே. (51)
பாங்கன் தலைவனைப் பழித்தல்
மல்லிக்கு வேள்பணி சிங்கார வேலர் மயிலை நண்பா
வில்லுக்கு நேர்நுத லாள்பொருட் டாக மெலிவதுதான்
கல்லுக்கு வாய்மடங் காத பெரிய கணிச்சிபசும்
புல்லுக்கு நேரிய தன்வாய் மடங்குதல் போன்றதுவே. (52)
தலைவன் வேட்கை தாங்கற் கருமை சாற்றல்
மேழி வளர்கொடிக் காராளர் வாழும் வியன்மயிலை
வாழி திருவருட் சிங்கார வேலர் வரையினண்பா
ஊழி பெயரினும் பேராவென் சார்பெனு மோங்குகரை
வீழி யிதழி மயல்வெள்ள மோத மெலிந்ததுவே. (53)
பாங்கன் தன்மனத் தழுங்கல்
விரியா யிரங்கதிர் வெய்யோற்கு மின்மினி மிக்கவொளி
பிரியா தளிப்பது போலவந் தோநங்கள் பார்த்திபர்க்கு
திரியா வறிவினை யானோ திருத்துவன் சீர்மயிலைப்
புரியாறு மாமுகன் சிங்கார வேலன் பொலங்கிரிக்கே. (54)
பாங்கன் தலைவனோ டழுங்கல்
சேவைப் பணக்கொடி தேவாதி தேவன் திருமகன்பூம்
பாவைச் சினகர சிங்கார வேலன் பயின்மயிலை
மாவைப் புணரு மணிமார்ப நீதி மணம்பொருந்தாப்
பூவைக்கு மாலை மருவுதல் யான்முன் புரிதவமே. (55)
பாங்கன் எவ்விடத் தெவ்வியற்று என்றல்
தண்ணேர் கடம்பணி சிங்கார வேலன் தடமலர்த்தேன்
பண்ணோர் மயிலையன் மேருவெற் பாமுன் படியளந்தோன்
கண்ணோ நெடுங்கண் வளரிட மோவவன் கைக்குடையோ
விண்ணோ பயிலிட மேதிய லேதந்த மெல்லியற்கே. (56)
பாங்கன் இவ்விடத் திவ்வியற்று என்றல்
சோதிகண் மேவிய சிங்கார வேலன் சுராதிபன்சீர்
வீதியின் மும்முர சார்க்கு மயிலை விசாகன்வெற்பில்
ஓதிய வங்க மெவையு முவமைக் குவமையதா
மாதியன் மேவு மிடமணம் வீசு மலர்ப்பொழிலே. (57)
பாங்கன் தலைவனைத் தேற்றல்
கானுறை வள்ளி கனிவாய்ச்செந் தேன்சுவை கண்டுமகிழ்
வானுயர் கீர்த்தியன் சிங்கார வேலன் மயிலைநண்பா
தேனுகர் வண்டுக் கலர்மேவு தென்றற் றெரிப்பதுபோல்
நானுன தாவி யனையா ணிலைகண்டு நண்ணுவனே, (58)
பாங்கன் குறிவழிச் சேறல்
பயிலும் பெருவிறற் சிங்கார வேலன் பதிமயிலை
மயிலும் பிணையு மெகினமுஞ் சக்கர வாகமுமாம்
குயிலும் கிளியு மினமென்று மேவநங் கொற்றவனார்
அயிலும் சுவையமு தன்னாள் மருவுங்கொ லாய்பொழிற்கே. (59)
பாங்கன் இறைவியைக் காண்டல்
மண்ணாடர் போற்றிய சிங்கார வேலன் மயிலைநண்பன்
உண்ணாடு மன்புறு மின்னா ளியலை யுரைத்திடுங்கால்
கண்ணா லறிவரி தென்றே செவிப்புலன் கண்டவந்தப்
பெண்ணா ரமுத மெதிர்நின்ற வாறென்ன பெற்றிமையே. (60)
பாங்கன் இகழ்ந்ததற் கிரங்கல்
உடுமணி மாலையன் சிங்கார வேல னுயர்மயிலை
நெடுநக ரன்னவிந் நேரிழை யாளெதிர் நின்றுமைக்கண்
கடுவுறழ் வேல்பொரக் காமவெந் தீச்சுடக் கண்டபுண்மேல்
அடுபுதுக் கார மெனவிகழ்ந் தோதி னேனண்ணலே. (61)
தலைவனை வியத்தல்
நிறைவா ருதியெழிற் சிங்கார வேலர் நெடுந்திரைசூழ்
பொறைவாணர் போற்று மயிலைத் தடத்தம் புயமலர்மேல்
உறைவாள் வருத்த மெலிகாய மின்றி யுத்தின்வந்த
மறைவாணர் வேந்தன் பெருமையை யார்சொல்ல வல்லவரே. (62)
தலைவியை வியத்தல்
மந்தா கினிமைந்தன் சிங்கார வேலன் மயிலையன்னாள்
கொந்தாரும் வெட்சித் தொடையுடை யான்வரைக் கொற்றவர்க்குச்
சந்தாபந் தீர்க்குந் தருணசந்தி ரோதையந் தண்ணளியால்
அந்தாகந் தீர்க்கு மமுதாவி நலகு மணங்கிவளே. (63)
தலைவன் தனக்குத் தலைவிநிலை கூறல்
வைச்சமெய்க் கீர்த்தியன் சிங்கார வேலன் மயிலையன்னாள்
அச்சமு நாணும் பயிர்ப்பு மடமையு மன்புறுகண்
மச்சமுஞ் சோலைக் கெழில்செய் யுருவு மருவியிரு
பச்சிளநீர் கொண்டுநின் னருள்கண்டே னெங்கள் பார்த்திபனே. (64)
தலைவன் சேறல்
கரும்புங் கமுகமும் வாழையு மேவிய காமயிலைப்
பெரும்புண்ணி யப்பொருள் சிங்கார வேலன் பிறங்கலின்வாய்
அரும்புந் தளிரு மலருஞ்செந் தேனு மளியுங்கொண்டு
விரும்பும் பசுங்கற் பகக்கொம்பர் காணிலென் மெய்த்தெய்வமே. (65)
தலைவியைக் காண்டல்
மதிநுதல் வேர்ப்பப் புடைநோக்கி நோக்கம் வரவெதிர்க்
கதிர்முலை விம்ம விருப்போங்க நின்றதோர் காமவல்லி
துதிமயி லாபுரிச் சிங்கார வேலவன் சூரனுளத்
ததிபயங் கொள்ளச் சிலைவாங்கு சேந்த னணிவரைக்கே. (66)
கலவியின் மகிழ்தல்
மன்மந் திரமுரை சிங்கார வேலன் மயிலையின்சேர்
பன்மந்தி ரப்பொருள் செவ்வேள் புகழன்ன பாற்கடலில்
தன்மந் தரமை யரைவா யமுதுண்ணத் தந்ததிவள்
தன்மந் தரம்பத் தரைவா யமுதுணத் தந்ததுவே. (67)
தலைவியைப் புகழ்தல்
மெய்வா ரணத்துசன் சிங்கார வேலன் விசாகனன்பர்
பொய்வா ரணந்தவிர்த் தாள்வோன் மயிலைப் பொலங்கொடிக்கு
மொய்வா ரணமன்னு மைவா ரணமுலை மோகனமால்
கைவா ரணங்கனங் கார்மேவு வாரணங் கண்ணிணையே. (68)
தலைவியைப் பாங்கியொடு வருகெனப் பகர்தல்
கயிலைப் பொருப்பர் தருந்திருப் பாலகன் கற்றவர்வாழ்
மயிலைப் பதிவளர் சிங்கார வேலன் மணிவரைமேல்
பயிரைப் புரக்க மழைமின் னொடுவரு பான்மையினென்
உயிரைப் புரக்க வரினுயிர்ப் பாங்கியோ டுற்றருளே. (69)
தலைவியைப் பாங்கிற் கூட்டல்
தடத்துக்குத் தாமரை தாமரைக் காமலர் தண்மலர்க்கு
மடற்பெற்ற தேனந்தத் தேனுக்குத் தீஞ்சுவை வாய்த்தெனக்குக்
குடக்கொற்ற நீள்கொடிச் சிங்கார வேலன் குணமயிலை
இடத்துற்ற பூம்பொழி லாயத்துப் பாங்கியோ டெய்துகவே. (70)
பாங்கற் கூட்டம் முற்றிற்று.
----------------------
மதியுடம்பாடு.
நாற்ற முதலிய ஏழானும் ஐயமுற்று ஓர்தல்
சுருங்கிய வுண்டி தனிவைகல் தெய்வந் தொழாமைசெயல்
ஒருங்கு மறைத்தன் முலைத்தோள் பணைத்தன்மை யோ திமணம்
திருந்து நடையிவை வேறாய் வாறெவன் சீர்மயிலை
அரும்பு நகையருட் சிங்கார வேலன்வெற் பார்மகட்கே. (71)
அவ்வகை தன்னால் ஐயந் தீர்தல்
உணர்ந்தார் மயிலையிற் சிங்கார வேல னுமைபுதல்வன்
புணர்ந்தா ரிருமங்கை யர்பாகன் வெற்பிற் பொருந்தியகம்
கணந்தா திவர்மலர்க் கைசேர்மின் னாட்கொரு காவலரால்
மணந்தா துண்டென்ப துரைத்தது கோதை மலர்மணமே. (72)
தனைவியந் துரைத்தல்
மாவரந் தந்தருள் சிங்கார வேலர் மயிலைவெற்பில்
தாவர மங்கையர் போலு மடந்தைநின் கண்மலரிந்
தீவர மேற்குளம் வேர்ப்பவு மாறு திருத்தவுமெய்
மேவரச் செய்யவுந் தக்கது வோவவ் வியன்சுனையே. (73)
நடுங்க நாட்டம்
வேதங்கள் பஞ்சரத் தஞ்சுகங் கூறும் வியன்மயிலை
நீதங்கள் செப்பிய சிங்கார வேல் னெடுங்கிரிமேல்
மாதங்கஞ் சீறி மருமத்துத் தாக்கலு மாற்றியந்த
ஆதங்கந் தீர வடர்த்தான்கை வேல்கொண்டவ் வண்ணலுமே. (74)
பெட்ட வாயில் பெற்றுச் சேறல்
பணையேர் மயிலையன் சிங்கார வேலன் பருவரைவாழ்
பிணையே றனைய வுயிரா ரமுதம் பிறங்கியபந்
தணையோ விரவி தருங்காமக் கோடைத் தனிவழிக்குத்
துணையே யெனவந்த தோழிக்கெ லாஞ்சென்று சொல்லுவனே. (75)
இரவு வலியுறுத்தல்
அரவுக் கிகன்மயி லேறிய வீரிய னார்மயீலைக்
குரவுக் கிசைபுயச் சிங்கார வேலர் குலகிரிமேல்
இரவுக் கினிய திருமுகத் தாளென் றியம்பியபேர்
வரவுக் கிசைய வுரைப்பே னிணங்கியென் மாங்குயிற்கே. (76)
ஊர் வினாதல்
கார்காட்டுஞ் சோலை மயிலா புரிவளர் கந்தன்வெட்சித்
தார்காட்டு மார்பினன் சிங்கார வேலன் றடஞ்சிலம்பில்
ஊர்காட்டுந் திங்க ளதனோடு நீரு முதித்தலினும்
ஊர்காட்டுங் காட்டு முரையால் விரைமல் ரோதியரே. (77)
பேர் வினாதல்
பாரூர் விசும்பும் படர்சீர்த்தி யென்றும் பயின்மயிலைச்
சீரூர் விளங்கிய சிங்கார வேலர் சிலம்பிடைநீர்
ஆரூர் வினவிலண் ணாமலை யோசொல்ல வல்லரெனில்
ஏரூர் நுமது பெயரேது சொல்லு மெனக்கிசைந்தே. (78)
வேழம் வினாதல்
சவளச் செயக்கொடி வேளாளர் போற்றுந் தனமயிலை
குவளைத் தொடைபுனை சிங்கார வேலன் குவடனையீர்
தவளப் பிறைநிகர் முத்தான கோட்டுமுத் தானமுமிழ்
கவளக் களிரொன்று வந்ததுண் டோவிந்தக் கார்முகத்தே. (79)
மரை வினாதல்
உருமரை வாய்க்கிண் கிணியணி பாத னுயர்மயிலை
தருமரைச் செந்துகிற் சிங்கார வேலன் றடங்கிரிமேல்
திருமரை போலு முகத்தீ ரென்வாளி சினக்கவஞ்சி
வருமரை போந்தது கண்டதுண் டோநும் வனத்திடையே. (80)
பன்றி வினாதல்
உறிப்பன்றி வெண்டயி ருண்டருள் மான்மரு கோன்மயிலை
நெறிப்பன் னிருபுயச் சிங்கார வேல னெடுவரைமேல்
மறிப்பின்றி வானுரு மேறென வார்த்தையில் வாளிதைத்த
குறிப்பின்றி வந்துள தோசொல்லு மென்றன் குறிப்பறிந்தே. (81)
மானோடு மனம் வினாதல்
வாராகி தந்தவர் சிங்கார வேலர் மகிழ்மயிலைத்
தீராகி யொன்று பொருமுலை யீரித் தினைப்புனத்தென்
சாராகி கொண்டொரு மான்வந்த தோவதைத் தான்தொடர்ந்து
போரா கியமீனம் வந்ததுண் டோவிடை போலினைந்தே. (82)
வழி வினாதல்
வேயினு முன்பதி னாறா யிரம்விடை மெல்லியலார்
வாயினும் வாய்வைத்த மாலணை யல்குல் மடநடையீர்
தாயினும் நல்லவன் சிங்கார வேலன் றடமயிலை
சேயின தாமலைச் சீறூர் புகும்வழி செப்புகவே. (83)
மொழியாமை வினாதல்
கவின்முத் தருண கிரிமுலை சேருங் கமலையன்னீர்
அவிமுத்த நீர்திறந் தாவெனத் தம்பல மாகுமன்றோ
செவிமுத் திரைமொழி செப்புக வீறொன்றுஞ் சீர்மயிலை
புவிமுத்தர் போற்றிய சிங்கார வேலர் பொருப்பிடத்தே. (84)
இடை வினாதல்
அனம்படைத் தான்புகழ் நெல்வேலி சூழு மணிமயிலைச்
சனம்படைத் தாண்டருள் சிங்கார வேலனைச் சார்கிலர்போல்
தனம்படைத் தார்க்கு நடுவிலை யேலத் தனநிற்குமோ
சினம்படைத் தாலும் விழியீர் நடுவெது செப்புமினே. (85)
யாரே இவர் மனத்தெண்ணம் யாது? எனத் தேர்தல்
சீலத்தர் போற்றிய சிங்கார வேலர் திருமயிலை
ஞாலத் துயர்ந்த மலைமீதுவேட்ட நயந்தவர்போல்
ஆலத்தி னாடியஞ் சாமரை தேடின ரப்புறுமாக்
கோலத்தை நேடினர் யாரோவென் னோவிவர் கொள்கையதே. (86)
எண்ணந் தெளிதல்
பாதங்கள் பத்தர்க் கருளு மயிலையன் பங்கயச்செம்
போதங்க மாயவன் சிங்கார வேலனைப் போற்றலர்போல்
சேதங்கள் கூறி யிவர்வேட்டை யாடிய சேவகர்போல்
மாதங்க நாடி வருவாரென் மாதங்க வாஞ்சையரே. (87)
இருவரும் உள்வழி ஒருமையிற் போதல்
பொருவன்மை மிக்க செயவீர வாகுவென் புண்ணியன்முன்
வருவள்ளி நாயகன் சிங்கார வேலன் மயிலையன்னார்
உருவுந்தன் னீழலு மேவுதல் போலிவ ணுற்றனரிப்
பருவந் தனிசென்று நங்காத லோதும் பருவமதே. (88)
கையுறை யேந்தி நின்று அவ்வகை வினாதல்
அன்னந் தருநடை பாலுஞ்செந் தேனு மருளுமொழி
முன்னந் தருஞ்செவ் விளநீர் முலையாம் முறைபடைத்தும்
மன்னன் பெருந்திருச் சிங்கார வேலன் மலையன்னீர்
என்னுந் துடியிடை தானிளைப் பாக விருக்கின்றதே. (89)
பாங்கி எதிர் ஏதின்மொழி கொடுத்தல்
துதிமான் மகள்விண் ணவர்பெரு மான்மக டூயதன
நிதிமான் மயிலையிற் சிங்கார வேல னெடுங்கிரியில்
கதிமான் பலபல நீரெய்த தாமெனிற் காயமுறு
மதிமானு நீரெய்தன் மானு மினிமதி மானெவரே. (90)
இறைவனை நகுதல்
காவினில் வாழைக் கனிதேன் சொரியுங் கவின்மயிலை
மேவிய வாகையன் சிங்கார வேலவன் வெற்பிவர்தாம்
ஏவினில் மான்மரை யானையெய் தோமென் றியம்புவர்கை
மாவிலை யேந்திலர் சேவகஞ் செய்தது மாவிலையே. (91)
மதியினில் அவரவர் மனக்கருத் துணர்தல்
துள்ளுங் கயல்வயல் சூழு பயிலையன் சோதிமணி
கொள்ளுங் குழைச்செவி சிங்கார வேலன் குவட்டிவர்கள்
உள்ளங் கலந்த வுறவும் பகரு முரைமுழுதும்
கள்ளங் கலந்ததுங் காட்டிடு மீட்டுங் கண்ணினையே. (92)
பாங்கி மதியுடம்பாடு முற்றிற்று.
--------------------------
பாங்கியிற் கூட்டம்.
தலைவன் உட்கோள் சாற்றல்
கிளியோப்பு கோமலர் கொய்கோபெய் கோவளை கேசமொய்க்கும்
அளியோப்பு கோபத நீவிநிற் கோவிரு ளாணவந்தீர்த்
தொளிகாட்டு பார்வையன் சிங்கார வேல னுயர்மயிலை
வெளிகாட்டு சிற்றிடை யீரேவு மேவல் விரைந்தெனக்கே. (93)
இதுவும் அது
செந்தேன் மலர்கொய்து தான்றரு கோவரைத் தேன்றருகோ
அந்தேன் சுவைபடு பாற்கடன் மீன்வலை யாற்றருக்கோ
பிந்தே னுமது பணியிற் பணிசெயப் பெய்வளையீர்
வந்தேன் மயிலையிற் சிங்கார வேலன் வரையிடத்தே. (94)
பாங்கி குலமுறை கிளத்தல்
நனைக்கற் பகக்கொடி வாணிதன் கேள்வனை நான்முகப்போ
தனைக்கைக் கொடுகுட்டுஞ் சிங்கார வேலன் றடமயிலை
பனைக்கைக் களிற்றுச் சேகரர்ச் சேகர பார்த்திபனீ
தினைக்கைக் குறவர் குடிவரு மானெங்கள் சேயிழையே. (95)
தலைவன் தலைவி தன்னை உயர்த்தல்
சொல்லிற் பிறந்த பொருள்போன் மயிலையிற் சோதிசெங்கண்
எல்லிற் பிறந்தருள் சிங்கார வேலர்வெற் பேந்திழையே
கல்லிற் பிறந்த கதிர்மணி போன்மறக் கானவர்தம்
இல்லிற் பிறந்த திருவையிவ் வாறே னியம்புவதே. (96)
பாங்கி அறியாள் போன்று வினாதல்
நித்தன் மயிலையிற் சிங்கார வேல னெடுங்கிரிமேல்
முத்தங் கொழித்து மணிவண்ட லாடி முருகுயிர்த்துச்
சித்தங் களிக்கு மடவார் பலருளுன் சிந்தனையை
வைத்தங் கிருக்கு மடவா ளெவள்சொல்லு மன்னவனே. (97)
இறையோன் இறைவி தன்மை இயம்பல்
சாந்தணி மார்பினன் சிங்கார வேலவன் சணமுகவன்
பூந்தரு வாரு மயிலைப் பொழில்வளர் பொற்கொடிக்கு
மாந்தளிர் மேனி மதிமுக மான்விழி மாலளகம்
காந்தளஞ் செங்கை யிலவிதழ் கோங்கங் கனதனமே. (98)
பாங்கி தலைவி அருமை சாற்றல்
கருத்தை நயனந் திருத்தவற் றோபுவி காவலவுன்
அருத்தி விரகந் தவிர்க்கெனப் பூமக ளன்னவளைத்
திருத்தி மொழிபவ ளியானோசொ லாய்விண்ணிற் றேவர்குடி
இருக்கு மயிலையிற் சிங்கார வேல னிருங்கிரியே. (99)
தலைவன் இன்றியமையாமை இயம்பல்
தேவின்முன் னானவன் சிங்கார வேலன் றிருமயிலை
நாவின்மின் னாளன்றி யின்றாம் படைப்பந்த நான்முகற்குப்
பூவின்மின் னாளன்றி யின்றாம் புரத்தலப் பூவைவண்ணர்க்
கோவிலும் மாரரு ளின்றேலின் றாமென் னுடலுயிரே. (100)
நின்குறை நீயே சென்றுரை யென்றல்
கூந்தற் பிடிக்கு மதயானை வேழங் கொடுத்தருவிப்
பூந்தட் புனன்முகந் தூட்டும் பொருப்ப புகழ்மயிலைக்
காந்தட் சிகையினன் சிங்கார வேலன் கனங்கிரியில்
சாந்தத் தனத்திக்கு நீயேசென் றுன்குறை சாற்றுகவே. (101)
பாங்கியைத் தலைவன் பழித்தல்
தீதைத் தவிர்த்தருள் சிங்கார வேலன் றிருமயிலைச்
சூதைப் பொருமுலை யாட்கென் குறைசொலுஞ் சூழ்ச்சிமிக்க
மேதைப் பெரியனென் றெண்ணியிந் நாளுன்னை வேண்டுதலால்
பேதைப் பெயரின் றெனக்குமுண் டாயது பெய்வளையே. (102)
பாங்கி பேதைமை ஊட்டல்
யானைப் பருமருப் பால்வேலி கோலி யலங்குதினைக்
கானைப் புரக்குங் குறமானின் னோயைக் களைந்துசுகத்
தேனைத் தரவல் லவளோ மயிலையிற் சேந்தனம்பொன்
வானைப் பணிகொள்ளுஞ் சிங்கார வேலன் வரையண்ணலே. (103)
காதலன் மூதறிவுடைமை மொழிதல்
வாடும் பயிர்க்கு மழைபோ லன்னாண் வருத்தமெல்லாம்
வீடும் படிக்கரு ணோக்களித் தாண்முன்னர் மெல்லியலாள்
தேடும் பொருள்புகழ் பூசனை வாய்த்த திருமயிலை
கூடும் பெருகருட் சிங்கார வேலர் குலவரைக்கே. (104)
முன்னுறு புணர்ச்சி முறையுறக் கூறல்
வாருதி மீது வருந்தி சேருமம் மாநதியைச்
சேருதி யென்றுபின் செப்பவா வேண்டுங்கொ றண்சிலம்பா
பாருதி செல்வியை முன்போ லணைந்தருள் பான்மயிலைத்
தாருதி யாகஞ்செய் சிங்கார வேலர் தடங்கிரிக்கே. (105)
தன்னிலை தலைவன் சாற்றல்
அளிப்பெடை பண்பயில் சோலை மயிலை யவர்க்கு நிதிக்
களிப்பருள் வாஞ்சையன் சிங்கார வேலன் கருணைமின்னே
குளிப்ப ப்பினு மோடி யொளிப்பினுங் காயுங் கொழுங்கனலாம்
வெளிப்படுங் காமத்துக் குன்னரு ணீரன்றி வேறில்லையே. (106)
பாங்கி உலகியல் உரைத்தல்
பாட்டா லுயர்தமிழ் நக்கீர ராற்றுப் படைக்குவந்து
தாட்டா மரைதரு சிங்கார வேலவர் தண்மயிலை
நாட்டா ரறியநன் னாள்பெற வீன்றவர் நல்கமின்னை
வேட்டா லணைத லிருவோர் குடிக்கும் விழுமியதே. (107)
தலைமகன் மறுத்தல்
இடுகுண் டலகன்னன் சிங்கார வேல னெழின்மயிலைத்
தொடுகுங் குமமுலை மானாளைச் சேர்வனின் சொற்படியே
கடுகும் பசியொடு வந்தார்க்குச் சோறு கழனிகொண்டு
முடுகும் படிசமைத் துண்மினென் றோசொலல் மொய்குழலே. (108)
பாங்கி அஞ்சி அச்சுறுத்தல்
கல்லார மார்பினன் சிங்கார வேலன் கவின்மயிலை
வில்லாரு மையுறா வெய்யசொல் லாவரும் வேளையிதால்
எல்லாரு மேற்றிசை சென்றனர் யாமு மிவணகல்வோம்
ஒல்லாது நிற்பது மன்னாசெல் கங்கு லுறுமுனமே. (109)
தலைவன் கையுறை புகழ்தல்
இதமுற்று நல்கிய சிங்கார வேல ரெழின்மயிலை
பதமுற்ற வந்த முறுமணி மூவொன் பதின்மர்மின்னார்
முதல்வர்க்கு முன்னருட் சத்திக்குத் தாண்டு முன்னும்விந்துப்
மதமற்ற வேவல் செயத்தக்க தாகு மகிமைமின்னே. (110)
பாங்கி மறுத்தல்
ஒண்சங்க நித்திலந் தாரகை போல வொளிர்மயிலை
வண்சங்கம் போற்றிய சிங்கார வேலர் வரையண்ணலே
வெண்சங்க முத்தணி நீதரின் மான்முலை மேலணிந்தால்
பெண்சங்க மாண்சங்க நல்குமுத் தோவெனப் பேசுவரே. (111)
ஆற்றா நெஞ்சினோடு அவன் புலத்தல்
செய்யுறை சங்க மதிபோ னிலாவு திருமயிலை
வையுறை நீளிலைச் சிங்கார வேலவர் மால்வரைமேல்
கையுறை யேற்றிவள் வாயுறை யின்சொலுங் காட்டிலணம்
மெய்யுறை வேதனை தீர்வெதெவ் வாறென் வெளிநெஞ்சமே. (112)
பாங்கி ஆற்றுவித்து அகறல்
பேரிகை முன்றி றொறுமார்க்கும் வீதிப் பெருமயிலை
ஆரியை பாலகன் சிங்கார வேல னணிவரைமேல்
காரிகை பாலுன் கலித்துறை யோதிக் கருத்தறிந்தால்
சீரியல் பாமணி மாலைகொள் வேன்வந்து தேர்மன்னனே. (113)
தலைவன் மடலே பொருளென மதித்தல்
இந்திர செல்வம் புவிமீ தருள்பவ னேர்மயிலைத்
தந்திர வேதியன் சிங்கார வேலன் றாணினையாப்
புந்தியின் மேவிய காமவெம் பேயினைப் போக்குதற்கு
மந்திர வாதி தருமே டல்லாது மருந்தில்லையே. (114)
பாங்கிக்கு உலகின்மேல் வைத்து உரைத்தல்
வழிபடர் மாந்த ரிளைப்பாறத் தேன்கனி வாய்த்திடுமாம்
பொழின்மயி லாபுரி சிங்கார வேலர் பொருப்புமின்னே
ஒழிவறு காமமுற் றோர்நீ றெருக்கு முடலணிந்து
கிழிபெற வோலையை வாசித் தவரெனக் கிட்டுவரே. (115)
அதனைத் தன்மேல் வைத்துச் சாற்றல்
தடமாரு நீலத்து வண்டோ லிடுந்தண் டலைமயிலை
இடமாரு மெய்யெழிற் சிங்கார வேலர்வெற் பேந்திழையே
படமார நின்றிரு மானா ளுருவம் பரிந்தெழுதி
மடமாலி னேறிநுஞ் சீறூரி னாளை வருகுவனே. (116)
---------------------------------------------------------------
பாடல்கள் 117 -223 கிடைக்கப்படவில்லை / verses 117-223 missing !!
-------------------------------------------------------------
வரைதல் வேட்கை
தலைவியைப் பாங்கி பருவரல் வினவல்
வெற்றி தருமயி லாபுரி வாழும் விமலையன்பால்
பெற்ற திருமகன் சிங்கார வேலன் பிறங்கன்மின்னே
முற்ற வுடம்பு நுணுகக்கண் முத்த முலைக்கணிய
இற்றை வரையுனக் கெய்தா வருத்தமெ னெய்தியதே. (224)
தலைவி அருமறை செவிலி அறிந்தமை கூறல்
கற்றலை வந்தருள் சிங்கார வேலர் கவின்மயிலை
நற்றலை வன்பிரி வெண்ணி யுளமாழ்கி நளிர்வரைவாய்
நிற்றலை யாய்கண்டிங் கென்னே கவல்வது நீயெனயான்
உற்றலை சிற்றிலை முத்தா லழித்ததென் றோதினனே. (225)
தலைவி, தலைவன் வருந்தொழிற்கு அருமை சாற்றல்
ஊரு முறங்கில் தாயு முறங்கில ளூர்ப்புறங்காப்
பாரு முறங்கிலர் நாய்கூகை சேவல்கண் பாடிலவிண்
ஆரு மதியுறங் காதன்பர் மேவு மமைய முண்டோ
சாரு மயிலையிற் சிங்கார வேலர் சயிலமின்னே. (226)
தலைவி, தலைமகன் ஊர்க்குச்செல ஒருப்படுதல்
சொல்லரருஞ் சூர்முத லோர்தோற்றம் பொன்னவன் சொல்லமகிழ்
நல்லார் மயிலையிற் சிங்கார வேலரை நண்ணிலர் போல்
இல்லாரைக் கைவிட்டுக் கூடிய செல்வ ரிருக்குமவ்வூர்
எல்லாருங் காணச் செல்வோமோ வினவி யிலங்கிழையே. (227)
பாங்கி தலைவனைப் பழித்தல்
சீரா னமைவந் தணைந்தனர் முன்னஞ் செறிந்த பின்னர்
ஓரா திருக்கவும் வல்ல ரென் றாற்புவி யுள்ளமட்டும்
சோரா திருக்கும் பழிநா ணிலரன்பர் சொன்மயிலை
ஊரான் மயில்வருஞ் சிங்கார வேல னுயர்வரைக்கே. (228)
தலைவி இயற்பட மொழிதல்
காவிற் கடிமலரென்றாற் றடையின்றிக் காரளிதேன்
தாவிப் புசிக்கு மலர்பேழை யுள்ளுறிற் சார்வதெங்ஙன்
மேவிப் பிரிந்தவ ரன்பில் ரோமனை மேவிடினாம்
வாவிச் சரவணன் சிங்கார வேலன் மயிலைமின்னே. (229)
கனவு நலிவுரைத்தல்
வீட்டிற் பெரும்பொருள் சிங்கார வேலர் வியன்மயிலை
நாட்டிற் றலைவரைப் பூங்காவில் வந்தென் னலநுகரக்
காட்டிக் கலப்பித்த கண்ணே விழித்துக் கனவுதனை
ஓட்டிக் கெடுத்ததென் றானோவ தாரை யுளமெலிந்தே. (230)
கவின் அழிபு உரைத்தல்
பூங்கிளி பாக னுதலிற் பிறந்த பொறியுருவம்
தாங்கிய மேன்மையன் சிங்கார வேலன் றண்மயிலை
ஓங்கிய மெய்யி லரிசனப் பூச்சென வுற்று நெஞ்சம்
ஏங்கிடச் செய்யும் பயலைக்கென் னோசெய்த தென்னழகே. (231)
தன்துயர் தலைவர்க்கு உரைத்தல் வேண்டல்
தரைக்கா மயிலையிற் சிங்கார வேலனைச் சார்கிலர்போல்
விரைக்கான பூசனி வாடிடப் பீர்க்கலர் மெய்யுறமா
சுரைக்கா வருந்தின ளென்றேநங் கோவைமுந் துற்றணங்கே
உரைப்பா யவரைக் கொடியெனின் னாட்பெறி லுத்தமமே. (232)
நின் குற்றம் நீயே சென்றுரை என்றல்
பசிப்பா ரமுதங் கொடுப்பார் மருங்குறிற் பாங்கறிந்து
புசிப்பா னவை தரு வாருன தாசைப் புதுமையெல்லாம்
சுசிப்பார்த் திபர்முனம் யானோதி லாவதென் றொன்மயிலை
வசிப்பா னருட்குகன் சிங்கார வேலன் வரையணங்கே. (233)
அலர்பார்த் துற்ற அச்சக் கிளவி
அருக்கனைப் போல விளங்கு மயிலைய னன்பருக்குச்
சருக்கரை யானவன் சிங்கார வேலன் சயிலமன்னா
திருக்கட வூர்செம்பொன் பள்ளிய தாகத் திருப்புகலூர்
தருக்கிய வம்பல் கடந்தல ரானதுன் றண்ணளியே. (234)
ஆறுபார்த் துற்ற அச்சக் கிளவி
தொழுதும்பர் போற்று மயிலா புரிவளர் சுந்தரனை
முழுதும் புகழ்குரு சிங்கார வேலனை முன்புதொழாக்
கழுதும் புலியு மராவு முலாவுமிக் கங் குல்வரில்
பழுதும் பெரிதென் றெமதுள மேங்கிடும் பார்த்திபனே. (235)
காம மிக்க கழிபடர் கிளவி
எழிலார் மயிலையிற் சிங்கார வேல ரிருங்கடல்வாய்
நிழலார் தொழனித் திரையே யகன்றன னித்திரையே
முழுநீரின் முத்தின மேற்றதெ னுண்டி முத்தினமே
வழுவா மனவன்பர் வன்பாதங் காதல் வரிசைகொண்டே. (236)
தன்னுள் கையாறு எய்திடு கிளவி
ஒருநா ளெனினுந் துணைபிரி யாம லுயர்விசும்பில்
வருநாண் முழுமதி யேமண வாளர் வருவதுண்டோ
பெருநாண் பெறவெனக் கோர்வார்த்தை நீமொழி பேரலங்கல்
திருநாண் மயிலையிற் சிங்கார வேலர் சிலம்பிடத்தே. (237)
தலைவி நெறி விலக்குவித்தல்
மால்விழி சாத்த மகிழு மயிலை வரதனெற்றி
மேல்விழி வந்தருள் சிங்கார வேலர் வியன்சிலம்பா
கால்வழி யாக வரைவழி நாடிக் கனையிருள்வாய்
சேல்விழி யிங்கு வருவ தடாதெனச் செப்புகவே. (238)
தலைவி குறிவிலக்குவித்தல்
தோய்த்த தயிருண்ட மாலோன் மருமகன் றொன்மயிலை
வாய்த்த குருபரன் சிங்கார வேலன் வரையிலன்னை
காய்த்த தினைப்புனஞ் சேய்த்தாக வொன்றெமைக் காமினென்றாள்
ஆய்த்தா லிவணினி வாரேலென் றோதவர்க் காரணங்கே. (239)
வெறி விலக்குவித்தல்
பொன்னாட் டமரர் முன்மக வென்று பொரவவர்பால்
அன்னாட்ட னாண்மைசெய் சிங்கார வேல ரணிமயிலைப்
பன்னாட் டலைவ ரருளா துவந்த படர்தணிக்கத்
தன்னாட்டைத் தானலைத் தென்பய னென்றுரை தாய் தனக்கே. (240)
பிறர் விலக்குவித்தல்
வாழ்வான் மயிலையிற் சிங்கார வேலன் வரனருளால்
ஏழ்வான் பிறப்பினு மெய்தியின் பார்பவ ரில்பிறப்பில்
ஊழ்வா னணைந்தரு ளின்பத்து ளென்னை யுரிமைகொள்ளச்
சூழ்வான் பிறர்விடு தூதுகள் காணுற்ற தூதுகளே. (241)
குரவரை வரவு எதிர்கொள்ளுவித்தல்
ஓவிய மாமதில் சூழ்மயி லாபுரி யுத்தமர்சீர்ப்
பாவினில் வாஞ்சையன் சிங்கார வேலர்ப் பணிகுரவர்க்
காவியில் வீழ்ந்தநம் மாவியை நல்கு மவர்வரவை
மேவிமின் னேயெதிர் கொள்வா னெவ்வாறு விளம்புவதே. (242)
(வரைதல் வேட்கை முற்றிற்று.)
--------------------
வரைவு கடாதல்.
வினவிய செவிலிக்கு மறைத்தமை விளம்பல்
மொழிக்கண் மயிலையிற் சிங்கார வேலவர் முன்னர்முன்னீர்க்
கழிக்க ணிருந்து வருந்துவ தேதென்ற காதலன்னைக்
கெழிற்க ணெனத்தகு மாயத்தர் நீங்கமுன் பென்னவிந்தப்
பொழிற்க ணவரை யுறாவிட ரென்று புகன்றனனே. (243)
அலர் அறிவுறுத்தல்
உடலா யிரங்கண் வமையி லாய்வர வூர்ந்தவருட்
கடலான மயிலையிற் சிங்கார வேலன் கனகவெற்பா
படரா தயலின் வளமனை மேவுமென் பைங்கொடிக்குத்
தொடரா வலர்பல பூத்தன நீமணஞ் சூழ்ந்துகொள்ளே. (244)
தாய் அறிவுறுத்தல்
தேனிக் குயர்வயல் சூழ்மயி லாபுரிச் செல்வர்கடற்
பாணிக் கருள்குரு சிங்கார வேலர் பரங்கிரிமேல்
மேனிப் பசப்பும் விழியார் மதர்ப்பும் விரகநெஞ்சும்
மானுக் கிசைந்தது கண்டுயிர்த் தாளன்னை மன்னவனே. (245)
வெறி அச்சுறுத்தல்
வள்ளை மணிக்குழை யம்பிகை பாகன் மகிழ்ந்தளித்த
பிள்ளை மயிலையிற் சிங்கார வேலன் பிறங்கன் மன்னா
தள்ளைமின் னோய்க்குன் னருள்மருந் தாமென்று தானுணராள்
வெள்ளை கறுக்க வெறியாடல் செய்ய விரும்பினளே. (246)
பிறர் வரைவு உணர்த்தல்
வன்னக் குருபரன் சிங்கார வேலன் மயிலையன்ன
பொன்னுக்குப் பொன்னிடப் பூவேந்தர் பற்பலர் போந்துபல்கால்
மின்னுக்குத் தாழை மலர்வது போன்மண வேட்கை கொண்டார்
கன்னற் சிலைமன்ன தாழாது செய்கநின் காரியமே. (247)
வரைவு எதிர்வு உரைத்தல்
வலனுயர் வார்சிலை சிங்கார வேலர் மயிலைவெற்பில்
குலமெழில் செல்வ மதியிவை மிக்குயர் கொற்றவனே
நலமிய னின்வரை வேலார்கள் யாவர் நயந்துகொள்வார்
அலரணி கூந்த லெனத்தாயுங் கேளிரு மையருமே. (248)
வரையுநாள் உணர்த்தல்
எளியன் பிழைபொறுத் தேழேழ் பிறவி யெடாதளித்த
ஒளியன் மயிலையிற் சிங்கார வேல னுயர்வரைமேல்
வெளியம் புலிபரி வேட மிசைந்தது வீட்டயலே
அளியந் துணரெனு மாமண வேங்கையி னாகியதே. (249)
தலைமகள் அறிவு அறிவுறுத்தல்
நயனார் மயிலையின் சிங்கார வேல னளிர்வரைமான்
வியனா சரிவையென் சொல்வேனம் மாதுமெய் வேற்றுமைகண்
டயலார் வினாவுக் குரைமறைத் தோதுவ தன்றிநண்பா
தயலார் பசலைக்கும் வேறொன்று கூறுந் தகுதியனே. (250)
குறி பெயர்த்திடுதல்
ஏவிட வார்சிலை கொண்டோன் மயிலைய னென்னிதயப்
பூவிடங் கொண்டவன் சிங்கார வேலன் பொருப்பிலிந்தக்
காவிட மோவிட மாயது மேலினிக் காணமுதம்
மேவிட மாகவோர் வேறிடந் தேர்ந்துகொள் வேலண்ணலே. (251)
பகல் வருவானை இரவு வருகென்றல்
செந்திற் பதியுவந் தோன்மயிலாபுரிச் செல்வன்மத்த
தந்திக் கிளையவன் சிங்கார வேலன் சயிலமன்னா
பந்திக் கதிர்விரி நண்பகல் நீவரல் பான்மையன்றால்
அந்திக்கு நீவரிற் சந்திக்குஞ் சிந்திக்கு மாரணங்கே. (252)
இரவு வருவானைப் பகல் வருகென்றல்
கொழிக்கு நிதித்தொண்டை நாட்டுவெண் பாலிக் குளிர்புனலால்
செழிக்கு மயிலையிற் சிங்கார வேலவர் திண்சிலம்பா
விழிக்கு நயனம் புதைத்தன்ன காரிருள் வேலைவரேல்
வழிக்கணெல் லாரும் வருங்கால் வரின்வரு மாதுறவே. (253)
பகலினும் இரவினும் பயின்று வருகென்றல்
மஞ்சூ டுலாவு கொடிநெடு மாட மயிலையன்பா
தஞ்சூழ் சதங்கையன் சிங்கார வேலன் றடங்கிரிமேல்
செஞ்சூரி யர்க்கின்றிச் சோமற்குந் தாமரை சேரநண்பை
அஞ்சூ ரவர்புகழ் வேன்மன்ன வாதிரு வார்தரவே. (254)
பகலினும் இரவினும் அகல் இவண் என்றல்
அன்பால் நீள்பவன் சிங்கார வேல னணிமயிலை
நின்பா லிலகிலை வேற்குங் கலைக ணிறைமதிக்கும்
இன்பா முளமஞ்சி வானோ டிருகதி ரிக்களவை
வன்பாய் வெளிப்படுக் கும்மிரு போதும் வரேல்மன்னனே. (255)
காவோன் நாடும் ஊரும் குலனும் மரபும் புகழும்
வாய்மையும் கூறல்
துதிகா வலர்புகழ் பாதாம் புயன்வளஞ் சூழ்மயிலை
விதிநா யகன்மிக்க சிங்கார வேலவன் வெற்பண்ணலே
நிதிநாடு மெய்க்குல மூர்புகழ் தொன்மைக்கு நேர்வதல்லால்
பதினா லுலகு முலைவிலைக் கேற்கும் பரிசலவே. (256)
ஆறு பார்த்துற்ற அச்சக் கிளவி
காரா ரெழிலி யெழுத்தாலும் வாழ்த்தக் கனற்கணைநோய்
சேரா தருள்புரி சிங்கார வேலர் திருமயிலை
ஊரா களிற்றினை வெம்புலி கோபிக்கு மோங்கல்வழி
நீரார் கலுழி கடந்தே வரற்கஞ்சு நேரிழையே, (257)
ஆற்றாத் தன்மை ஆற்றக் கூறல்
மருந்தெனு மாரருட் சிங்கார வேலர் மயிலைவெற்பில்
இருந்தது காப்பிங் கெழுந்தது பேரல ரெங்குமெய்யில்
பொருந்திட வந்தது வேள்கணை நல்லெழில் போனதென்றே
வருந்துமென் மான்பிணைக் கென்னாமன் னாவுன் மனத்தருளே. (258)
காவல் மிக வுரைத்தல்
மாலைத் திருப்புயன் சிங்கார வேலன் மயிலைவெற்பின்
வேலைத் தருங்கையர் துஞ்சாத காவலர் வீக்குபறை
காலைப் பொழுது வருங்காறு மார்க்குங் கடுங்குரலால்
பாலைத் தருஞ்சொல்லி நோக்கங்க ணீரைப் படைத்தனவே. (259)
காமம் மிக வுரைத்தல்
பொற்றூணின் வந்த திருமா லுதவிய பூவை நல்லார்
சொற்றூய தேனுகர் சிங்கார வேலர் துதிமயிலை
முற்றாக் கனதன மானுக்குக் காம முதிர்ச்சிநண்பா
சிற்றூரிற் பாரப் பெருங்கூத்துப் போல்வந்து சேர்ந்ததுவே. (260)
கனவு நலிவுரைத்தல்
ஏணார் மயிலையிற் சிங்கார வேலனை யேற்றுவதற்குப்
பூணா கதிவந் தணையுங் கனவு புலரநொந்து
வாணாடு கண்ணிணை மூடினள் பின்னரும் வாய்க்குமெனக்
காணா விழித்தனள் கண்டாள் கண்வெள்ளக் கலுழியையே. (261)
கவின் அழிபு உரைத்தல்
குசலர்க் கதிபதி சிங்கார வேலன் குணமயிலை
அசலப் புயத்தண்ண னின்மார் புறாவைக லன்னமன்னாள்
சுசலக் கொடியிடை மீதா முயலெழிற் றோற்றமெல்லாம்
பசலைக் கழியப் படைத்தான்முட் டாட்பள்ளிப் பங்கயனே. (262)
வரைவு கடாதல் முற்றிற்று.
-----------------
ஒருவழித் தணத்தல்.
தன்பதிக்கு அகற்சி தலைவன் சாற்றல்
வாளைப் பயில்கரன் சிங்கார வேலன் மயிலையன்னாள்
தோளைத் தொடியைத் துணைமா முலையைச் சுழித்தயர்ந்த
வேளைக் குறித்து மெலியா துரையேம் வியனகர்போய்
நாளைக்கு நான்வரு வேன்வெரு வேனெஞ்ச நன்னுதலே. (263)
பாங்கி விலக்கல்
மாயா புரிதிற லாசுரம் வீர மயேந்திரஞ்சீர்
வாயா தடர்த்தவன் சிங்கார வேலன் மயிலைநண்பா
வீயா துடல முதுமக்கட் சாடி விதித்தமன்னன்
நீயாகி னின்பதிக் கேகுதி கூறுவ நேரிழைக்கே. (264)
தலைவன் நீங்கல் வேண்டல்
வானேர் மயிலையன் சிங்கார வேலன் மணிவரைமேல்
தேனே ரமுதெனச் செல்விதன் சிந்தையென் சிந்தையுடன்
தானே கலந்தத னாற்பிரி வில்லை தாழ்ந்துநில்லேன்
மானே யருள்சே யிருசொ லொருசொ லவ ……….. (265)
தலைமகனைப் பாங்கி விடுத்தல்
புடைநின்ற தேம்பொழின் மாங்கனி தேன்சொரி பூமயிலைத்
தொடைநின்ற மாலையன் சிங்கார வேலன் சுனைவரைமேல்
படைநின்ற கண்ணி தனக்கு முனக்கும் பரிவுபுரிந்
திடைநின்ற யான்பழி யெய்தாம னாளைவந் தெய்துகவே. (266)
பாங்கி தலைவிக்குத் தலைவன் செலவு உணர்த்தல்
புனைமயில் வாகனன் சிங்கார வேலன் புகழ்மயிலை
உனைமனத் தேவைத் தெனைத்தன் பிரிவினை யோதுகென
அனையவண் மேலங் ககன்றனர் போலுநம் மன்பர்நையேல்
துனைபரி வெய்யவன் போய்மீளும் போதுடன் றோன்றுவரே. (267)
தலைவி நெஞ்சொடு புலத்தல்
பரிவா ருலவை தன் றேர்ப்பாக னாகப் படைத்தமர்மேல்
திரிவான் மயிலையிற் சிங்கார வேலன் சிலம்பர்நெஞ்சே
பிரிவா ரலரென்று நீமிகத் தேறப் பெருவிருப்புப்
புரிவார் பிரியிற் செயலே தலரைப் புணர்வதுவே. (268)
காமம் மிக்க கழிபடர் கிளவி
கைவளை யிட்டுக் கணையாழி யிட்டுக் கடகமிட்டு
மெய்வள மென்னி னுறுங்கட லேபொன் வியன்மயிலை
சைவ சிகாமணிச் சிங்கார வேலனைச் சாருமன்பர்
உய்வகை சொல்லி யகன்றன ரோசொல் லுறவெனக்கே. (269)
தலைவியைப் பாங்கி ஆற்றுவித்தல்
வானந் தினம்பணி சிங்கார வேலர் மயிலைமின்னே
நானங் கமழ்குழல் சோரநும் மேவன்பர் நண்ணுவரால்
தானங்கை யேற்றிடும் வேதிய ரார்ப்புந் தவளசங்கக்
கானங் கிளர்வதுங் கேட்கின்ற வாதங் கடிநகர்க்கே, (270)
பாங்கி தலைவிக்கு இறையோன் வந்தமை யுணர்த்தல்
சேற்றாய் வருக்கைக் கனிகீறி மாங்கனி சிந்தவந்தேன்
ஊற்றார் மயிலையிற் சிங்கார வேலவ ரோங்கன்மின்னே
தோற்றான் மதனினித் தோற்றான் முன்புள்ள துயரமெல்லாம்
மாற்றா வுளத்தினைத் தேற்றாய்நங் காதலர் வந்தனரே. (271)
வந்தோன் தன்னொடு நொந்து வினாதல்
சொரிந்தாடல் வாளி வெகுகொடி தான்வரத் தும்பைமுடி
அரிந்தாண்மை கொண்டவர் சிங்கார வேல ரணிமயிலை
புரிந்தார் குழலி சொரிந்தாள் விழிமழை பொன்னுருவம்
கரிந்தா ளியல்பு திரிந்தாளென் னேயுன்னைக் காணுமுன்னே. (272)
தலைவன் பாங்கியொடு நொந்து வினாதல்
தஞ்ச மயிற்பரிச் சிங்கார வேலர் தடமயிலை
பிஞ்சு மதிக்கும் பெருக மதிக்கும் பிறரலர்க்கும்
அஞ்சு மலர்க்கு மயர்ந்தயர்ந் தாவிபெற் றாற்றினிரோ
கொஞ்சு மணிக்கிளி யன்னீரென் போலன்பு கொண்டுநெஞ்சே. (273)
பாங்கி தலைவியை ஆற்றுவித்திருந்த அருமை கூறல்
தண்ணீர்மை யாரருட் சிங்கார வேலவர் தார்மயிலை
உண்ணீர் விரும்பினர்க் கந்நீர் வரும்வழி யோதினர்போல்
அண்ணீர்மை வேண்டு மிவட்கைய நீவர லாறுசொல்லிக்
கண்ணீரு நெஞ்சக் கவலையுந் தீர்த்துயிர் காத்தனனே. (274) .
ஒருவழித் தணத்தல் முற்றிற்று
----------------
வரைவு இடைவைத்துப் பொருள்வயிற் பிரிதல்.
என்பொருட் பிரிவுணர்த் தேந்திழைக் கென்றல்
கிருதன... ……………….. …………… ………….. ………..
கருதனந் தன்னுருச் சிங்கார வேலர் கருணையொப்பாய்
விருதனங் கன்படை யாமற் புரந்தருள் மெல்லியலாள்
இருதனங் கொள்ள வருதனங் கோடிகொண் டெய்துவனே. (275)
நின்பொருட் பிரிவுரை நீ அவட்கென்றல்
விழித்த விழியிமை மூடித் திறந்தகண் மேவிடுநாள்
கழித்த பலபல நாளெனுங் கன்னிக்குன் கௌவைசொல்லிச்
சுழித்த புனல்மலைக் கான்கடந் தேகுவை தொன்மயிலைச்
செழித்த திருவருட் சிங்கார வேலர் சிலம்பண்ணலே, (276)
நீடேன் என்று அவன் நீங்கல்
கவளக் களிற்று நிரைநிதி யேற்றிக் கமலைநிகர்
அவளைத் திருமணஞ் செய்வான் விரைவி னணைகுவன்யான்
பவளக் கொடியனை யாய்நுமர் வாழ்த்தப் பதிமயிலைக்
குவளைத் தொடையணி சிங்கார வேலன் குலவரைக்கே. (277)
பாங்கி
ஓடரிக் கண்ணிக்கு அவன்செலவு உணர்த்தல்
பெற்றோருஞ் சுற்றமும் பெண்ணே தொருநிதி பேசுரோ
மற்றோ ருரைத்த நிதிதரு வானெண்ணி மன்னவரும்
கற்றோர் கதியினன் சிங்கார வேலன் கவின்மயிலை
உற்றோ ரவர்செல் கடுங்கானம் போய்வர வுன்னினரே. (278)
தலைமகள் இரங்கல்
நாடு மயிலையன் சிங்கார வேலவ னன்மலைமேல்
தோடுங் கழன்று துணைவளை சோர்ந்து துகினெகிழ்ந்து
வீடும் படிசெயக் கண்டேன் பிரிவினை மேவி யன்பால்
நேடும் புணர்வினிச் செய்வதென் னோவுட னின்றிடலே. (279)
பாங்கி கொடுஞ்சொற் சொல்லல்
மெய்யர்க் கருள்பவன் சிங்கார வேலன் வியன்மயிலைச்
செய்யத் திருமண மாநிதிக் கேகினர் செல்வரன்பால்
மையற் பொருந்தி மலர்விழி நீர்கொண்டு மாழ்கிநின்றால்
தொய்யற் றனத்திமின் னார்வா யலரைத் தொடுப்பர்களே. (280)
தலைவி கொடுஞ்சொற் சொல்லல்
பூரி மணிக்கொடி யோங்கிய கோபுரப் பொன்மயிலைப்
பாரி மலைவள்ளிச் சிங்கார வேலன் பனிவரைமேல்
ஏரி மலாம்வி யூரனசொல் வாய்மை யிரும்பொழில்வாய்
வேரி மலரணை யார்வாட்டந் தீர்க்கும் விருப்பிலதே. (281)
வருகுவர் மீண்டெனப் பாங்கி வலித்தல்
கேளுற நல்விருந் தாற்றுமில் வாழ்க்கை கிளர்மயிலைத்
தாளுறை நூபுரன் சிங்கார வேலன் தடவரைமேல்
வாளுமைக் கண்ணி வருந்தே லகன்றநம் மன்னவனார்
மீளுவர் நாளையன் றிப்போது காண விழித்துணையே. (282)
பருவங் கண்டு பெருமகள் புலம்பல்.
ஊர்வந்த திங்க ணிகர்கஞ்ச வோதிம வொண்மயிலைச்
சீர்வந்த தோகையன் சிங்கார வேலன் செழுங்கிரிமேல்
கார்வந்த ததுசென்ற காதலர் வந்திலர் கண்கலுழ
நீர்வந்த முல்லை நகைத்தது தோழிநந் நீர்மைகண்டே. (283)
இகுளை வம்பிது வென்றல்
மீனே றுயரிய காமர்க்கு மைத்துனன் வேண்டினர்க்குத்
தேனே யனையவன் சிங்கார வேலன் றிருமயிலை
மானேநின் கற்பியல் காரா தலின்முன் வளர்த்தகற்புத்
தானே செழிக்க வெழுந்தது காலத் தகுதியன்றே. (284)
இறைமகன் மறுத்தல்
கொம்ப ரினவண்டு குலமுல்லை கூறுங் குளிர்மயிலை
அம்பரை நாமகன் சிங்கார வேலன் சைலமின்னே
வம்பெனின் மேகம் பலவைகல் மாரி வழங்கிடுமோ
வெம்புறு முட்டைகொண் டேறுங்கொல் லோதெற்றி மேலெறும்பே. (285)
அவர் தூதாகி வந்தடைந்தது இப்பொழுதெனத் தோழி சாற்றல்
வசைபார்த் திடாவிசைச் சிங்கார வேலர் மயிலைதன்பால்
திசைபார்த் தவர்சென்ற தேர்வழி பார்த்துத் திகைக்குமுன்பால்
நசைபார்க்கு நன்பொருள் கொண்டிங்ஙன் மீளு நலம்புகல
மிசைபார்த் தமைமுகில் தூதாய்முன் வந்தது மெல்லியலே. (286)
தலைவி ஆற்றல்
மாரி மொழிகரன் சிங்கார வேலன் மயிலையன்பர்
வாரி சுருங்கி மலையசைந் தாலுஞ்சொல் வாய்மைகுன்றார்
தேரினி யூர்ந்துசெல் வார்புரி யேற்றஞ் சிறக்கநம்பால்
பாரிய கார்செயப் பருவநெஞ் சேவந்து பாரித்ததே. (287)
அவன் அவண் புலம்பல்
மல்கார்வ நல்கிய சிங்கார வேலன் மயிலையன்னாள்
பல்காற் கடைத்தலை வந்தேங்கி யுட்சென்று பாவிமுனம்
சொல்கால னோக்கிச் செவிவழி யோட்டுந் துணைவிழிநீர்
அல்கா தணையி னுருவெளி யானென் றகன்றிடுமே. (288)
பாகனொடு சொல்லல்
ஆர்வந் தழைத்தருள் சிங்கார வேல னணிமயிலைக்
கூர்வந்த வேற்கண் மடமான் மருண்டு குறித்துரைத்த
கார்வந்த திங்கென் றுரைமுடி யாமுன் கணவர்திருத்
தேர்வந்த தென்ன வலவாவித் தேரைச் செலுத்துகவே. (289)
மேகத்தொடு சொல்லல்
வருதவ ராசன் மயிலையன் றானவர் வானமுறப்
பொருதசங் கிராமமெய்ச் சிங்கார வேலன் பொலன்கிரிமேல்
ஒருதனு வேந்திப் பலவம்பு வீசி யுருத்தெழுந்து
நிருதனைப் போற்றனி மான்வாடச் செல்வதெ னீண்முகிலே. (290)
பாங்கி
வலம்புரி கேட்டு அவன் வரவு அறிவுறுத்தல்
கலம்புரி பல்பொரு ணல்கும் பரவைக் கவின்மயிலைத்
தலம்புகழ் மேன்மையன் சிங்கார வேலன் சயிலமின்னே
நலம்புரி சோகந் தவிர்கேள்வர் தேரிவ ணண்ணியதால்
வலம்புரி கூடு மிடம்புரி யார்க்கும் வலம்புரியே. (291)
வலம்புரிக் கிழத்தி வாழ்த்தல்
செங்கயன் மேதி மடிமோதிப் பாலொடுஞ் சென்று துஞ்சும்
பங்கயம் பால்பழஞ் சேர்வள்ளம் போலும் பணைமயிலை
சங்கரன் பாலகன் சிங்கார வேலன் சயில நண்பர்
மங்கல வாழ்த்தொடு வாழ்கபொற் றேரின் வலம்புரியே. (292)
தலைவனைப் பாங்கி நினைந்தமை வினாதல்
மயில்பொலி வாகனன் சிங்கார வேலன் மயிலையன்ன
குயில்மொழி யானைப் பொருளீட்ட நீசெல் குளிர்புனனாட்
டயில்பொழு தேனுந் துயில்பொழு தேனு மலர்பொழில்வாய்
பயில்பொழு தேனு நினைத்ததுண் டோசொல்லு பார்த்திபனே. (293)
தலைவன் நினைத்தமை செப்பல்
கூவிய குக்குடச் சிங்கார வேலன் குகன்மயிலை
ஒவியப் பூந்துகில் போலநின் பாவை யுருவமதாய்
மேவிய தென்னுள மாதலி னார்பொருள் வேண்டிச்சென்ற
காவிய னாட்டு நினையாத போதிலைக் காரிகையே. (294)
பாங்கி தலைவியை ஆற்றுவித்திருந்தமை கூறல்
வீறுஞ் சுவைனடிப் புடைப் போர்வைகல் மெலியினவர்
தேறும் படிமுனம் வாழ்வுரைத் தாங்குனைச் சேர்ந்தசுகப்
பேறுமுன் காதலும் யான்கூறி யாற்றினன் பெய்வளையைக்
கூறு மயிலையிற் சிங்கார வேலன் குலவரைக்கே. (295)
வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிதல் முற்றிற்று.
--------------
2. வரைவியல்.
வரைவு மலிதல்.
காதலன் முலைவிலை விடுத்தமை பாங்கி காதலிக்கு உரைத்தல்
கரமதி மண்டலங் கண்டுகை தண்டலைக் காமலியும்
திரமயி லாபுரிச் சிங்கார வேலவர் திண்கிரிமேல்
வரமலர் மாதுன் மணம்பொருட் டாகநம் வாய்தலின்முன்
சுரர்குரு கோடிகொண் டுய்த்தான்பொற் றாரணி தேரண்ணலே. (296)
காதலி நற்றாய் உள்ள மகிழ்ச்சி உள்ளல்
கூட்டிய மும்முர சார்க்கு மயிலையான் கொற்றமுடி
சூட்டிய சென்னியன் சிங்கார வேலன் சுனைவரைமேல்
ஈட்டிய செல்வ ரியம்பல வார்ப்ப வெனைத்திருநாண்
பூட்டிய மாமணந் தாய்பார்த்து நாளை பூரிக்குமே. (297)
பாங்கி
தமர் வரைவெதிர்ந்தமை காதலிக்கு உரைத்தல்
குருவேள் குமர குருநாதன் ஞானங் கொடுக்கும்வள்ளல்
மருவேர் மயிலையன் சிங்கார வேலன் மணிவரைவாழ்
திருவே யுனக்குயர் மாலையிட் டார்மணந் தேர்ந்து கொண்டார்
ஒருவே ளனைய தனையருந் தாய்தந்தை யொக்கலுமே. (298)
தலைமகள் உவகை உளத்தொடு கிளத்தல்
பரவத் தகுந்தவ நெஞ்சே முனஞ்செய்த பான்மையினால்
விரவத் தலைவந்த தோகைநங் கேள்வர் வியன்மணஞ்செய்
முரசப் பெருமுழக் கார்த்தது கீர்த்தி முருககனங்கோன்
வரசித்து மேனியன் சிங்கார வேலன் மயிலையிலே. (299)
தலைவனைப் பாங்கி வாழ்த்தல்
தருமா துலன்புகழ் சிங்கார வேலர் தடமயிலை
வருமா னனைய மலர்த்திரு மாதை மணம்புணர்ந்து
திருமா லெனவிருந் தாயினி நானுந் தியாகரெனப்
பெருமான் புகழொடு நீநீடு வாழ்க பெருநிலத்தே. (300)
தலைவி மணம் பொருட்டாக
அணங்கைப் பராநிலை காட்டல்.
தாலாட்டு தன்னையர் கையுஞ் செவியுந் தழைவுபெறக்
காலாட்டு நூபுரன் சிங்கார வேலன் கதிர்மயிலை
வேலாட்டு செங்கை விறன்மன்ன நின்மண வேட்கையினால்
நூலாட்டு நுண்ணிடை தெய்வதம் போற்றுத னோக்குகவே. (301)
பராநிலை கண்ட தலைவன் மகிழ்தல்
மிண்டார் வன்பூதப் படையிரண் டாயிர வெள்ளவணி
கொண்டான் மயிலையிற் சிங்கார வேலன் குலகிரிமேல்
வண்டார் குழலி மணம்பொருட் டாய்த்தெய்வம் வாழ்த்துவது
கண்டாய் தனிநெஞ்ச மேயினி வேறென்ன காண்பதுவே. (302)
வரைவு மலிதல் முற்றிற்று.
---------
அறத்தொடு நிலை.
தோழி கண்ணீர் துடைத்தல்
தண்ணெடுஞ் சோலை மலையொக்குஞ் செந்தில் சாரலெங்கும்
நண்ணிடு மோகையன் சிங்கார வேல னயமயிலை
எண்ணிடு மெண்ணமென் மானே யயலல ரின்றுசொல்லக்
கண்ணிடு மைமுலை மேல்வண்ட லாடக் கலுழ்ந்தனையே. (303)
தலைவி கலுழ்தற் காரணங் கூறல்
அலந்து பணிந்த வடியார்க் கருளு மமலன்முன்னீர்
சுலந்துதிக் கும்புகழ் சிங்கார வேலர் நெடுமயிலைக்
கலந்து பிரிந்தேன் விழியெதிர் மேவிய காதலரைப்
புலந்து படுமை கழுவக்கண் ணீர்முன் புறப்பட்டதே. (304)
தலைவி தெய்வங் காட்டித் தெளிப்பத் தெளிந்தமை
எய்தக் கூறல்
நெய்தற் படுவிற் சுருக்கொடு நாட்டி நினைந்துதொழும்
தெய்வத் திருமுன் னினைப்பிரி யேனென்று தேற்றியசூள்
மெய்வைத்த சொல்லை மறந்தன ரோவன்பர் வேள்மயிலை
உய்தற் கருள்புரி சிங்கார வேலன்வெற் போதிமமே. (305)
தலைவன் இகந்தமை எய்தக் கூறல்.
இவரென் றவரென் றெவரென்று நாடு மியல்கடந்த
தவர் நின்று போற்றிய சிங்கார வேலன் றன்மயிலை
அவர்நெஞ்சு மென்னெஞ்சு மன்பாய் மணந்த தயலறியா
துவர்சொன்ன வாய்மைபொய்த் தாரெனிற் செய்வதெ னொண்ணுதலே. (306)
பாங்கி இயற்பழித்து உரைத்தல்
பண்ணினும் பாலினும் பாகினும் வாழைப் பழத்திலுஞ்சேர்
தண்ணிய வின்சுவைச் சிங்கார வேலவன் சார்மயிலை
நண்ணிய நாந்துய ரெய்தச்சொல் வாய்மை நடுவிகந்தால்
பெண்ணெனிற் பேயு மிரங்குமென் பெற்றியும் பெற்றிலரே. (307)
-----------------
தலைவி இயற்பட மொழிதல்
வயங்கு மயிலையன் சிங்கார வேலன் வரையரசர்
முயங்கும் பொழுதவர் மார்பூ டுறாது முதுகுகிடந்
துயங்குந் துயர்கண் டிரங்கிக் கையாற வுவந்தணைத்தார்
கயங்கும் படியின்று செய்யாரன் பேசெய்வர் காரிகையே. (308)
தெய்வம் பொறைகொளச் செல்குவ மென்றல்
வாடா மலர்முகச் சிங்கார வேலன் மயிலைவெற்பர்
நாடா திகந்து நவைபுரிந் தாரவர் நன்றுசெய்வார்
வீடாத மெய்த்தெய்வ நீவெகு ளேலென்று வேண்டிநின்று
தோடார் குழலிசெல் வாம்பலி தூவி தொழுவதற்கே. (309)
இவ்வயிற் செறித்தமை கூறல்
பாதைக் கடற்சேர் பவளக் கொழுந்து படர்மயிலைக்
கோதைப் புயாசலன் சிங்கார வேலன் குவட்டணங்கே
ஓதைப் பெருஞ்சந்தை போலலர் பூப்ப வுயிர்த்துமெய்த்தாய்
பேதைப் பருவ முலைபோலுள் ளேயுறப் பேசினளே. (310)
செவிலி கனையிருள் அவன்வரக் கண்டமை கூறல்
குமரன் செவ்வேள் மயிலாபுரி நாயகன் கோலவிச
பமரஞ்செய் மாலையன் சிங்கார வேலன் பனிவரைமேல்
தமரஞ்செய் வாயன்னை நம்மனைப் பாலன்பர் சார்தரக்கண்
டெமரஞ்ச யாரிங்கு நின்றா ரிரவிலென் றெண்ணினளே. (311)
செவிலி எறிவளை வேற்றுமைக்கு ஏது வினாதல்
வாளா வழுகையும் வாட்டமுந் தோட்டமும் வாஞ்சை நம்மேல்
மூளாத நெஞ்சுமெய் மூடும் பசலையு மொய்குழற்கிந்
நாளால் விளைந்ததென் னேமக ளேயுரை நன்மயிலைத்
தோளா மணியினன் சிங்கார வேலன் சுனைவரைக்கே. (312)
வெறிவிலக்கல்
ஏட்டுத் தொடையணி மாமயி லாபுரி யீசர்மைந்தர்
கோட்டுப் பரங்கிரிச் சிங்கார வேலநின் கோயின்முன்னே
ஆட்டுக் குலந்தலை யந்தரள மாமுலை யாளிசையும்
பாட்டுக்குத் தக்கதன் றென்வீணை நீகொண்ட பான்மையதே. (313)
வெறி விலக்கியவழிச் செவிலி வினாதல்
ஏறு மறிய னிரங்கு மறியை யிசைந்தனனென்
றூறு மொழிபல பேசநன் றோவுயர்ந் தோர்தெளிந்து
தேறு மொழியனைச் சிங்கார வேலனைச் சீர்மயிலை
ஆறு முகவனைத் தேவாதி தேவனை யாயிழையே. (314)
பூத்தரு புணர்ச்சியால் அறத்தொடு நிற்றல்
வண்டணி செங்கையில் பைந்தேன் வெண்முத்த மருவுகஞ்சம்
ஒண்டொடி நின்முக மொக்குமென் றீந்தன னோர்விடலை
எண்டிசை சேர்புகழ்ச் சிங்கார வேல் ரெழின்மயிலைக்
கண்டன சொல்லி விளையாடு காவிலுன் காரிகைக்கே. (315)
புனல்தரு புணர்ச்சியால் அறத்தொடு நிற்றல்
ஆயிழை கொங்கை யெழிலிந்த கும்ப மகத்தியனைச்
சேயெனப் பெற்ற தவன்றன் கணவற் சிறுமைசெய்ய
ஏய பகைகொண் டெடுத்தோடும் யாற்றி லெதிர்ந்தெடுத்தான்
மேய மயிலையிற் சிங்கார வேலவன் வெற்பண்ணலே. (316)
களிறுதரு புணர்ச்சி
மற்பயில் வன்புயச் சிங்கார வேலன் மயிலைவெற்பில்
அற்படி வத்தந்தி மங்கையைச் சீற வடர்த்தவண்ணல்
கற்பக மொத்தன னொத்தாணின் மாமகள் காமவல்லி
பொற்புடை வேலங்கி யாற்கரி யானதப் போர்க்கரியே. (317)
தலைமகள் மெய்வேற்றுமை கண்டு
நற்றாய் செவிலியை வினாதல்
இடுகின்ற வன்ன மெடுத்துண விரகி லிளம்பருவத்
தொடுநின்ற தையறன் மையலு மேனி யுறும்பசப்பும்
விடுகின்ற துஞ்சலும் பார்த்திலை யோநங்கை மெய்மயிலை
நடுநின்ற கச்சினன் சிங்கார வேல னளிர்வரைக்கே. (318)
செவிலி நற்றாய்க்கு முன்னிலையான்
அறத்தொடு நிற்றல்
இரும்புக்கு நேர்மனம் வெண்ணெயைப் போல விளகவருள்
தரும்பரி பாகமெய்ச் சிங்கார வேலவன் சார்மயிலை
அரும்பிற் கலர்மண மானது போல வணியவிளம்
கரும்பிற்கு வெல்ல மதன்கட் சிவந்தது காரிகையே. (319)
அறத்தொடு நிலை முற்றிற்று.
---------------
உடன் போக்கு.
பாங்கி தலைவர்க்கு உடன்போக்கு உணர்த்தல்
கள்ளஞ்செய் யாவிடிற் காரிய மில்லையிக் கானவர்க்கு
வள்ளஞ்செய் தாமரைக் கண்ணர் செயன்பர் வாழ்மயிலை
உள்ளஞ்செய் மேனியள் சிங்கார வேலன்வெற் பொத்தசெம்பொன்
வெள்ளஞ்செய் தாலுங்கொள் ளாரெமர் கொண்டுசெல் மின்னினையே. (320)
தலைவன் மறுத்தல்
போதார் மயிலையன் சிங்கார வேலன் பொலன்கிரி
ஏதாய் மொழிந்தனை மானே தளிரிய லின்றளவும்
மாதா மனையன்றி மற்றறி யாளவள் வல்லவளோ
வேதாஞ் சுரநடப் பார்க்கு நிழலவர் மெய்ந்நிழலே. (321)
பாங்கி உடன்படுத்தல்
வெளிகாண் பரிய பொழில்சூழ் மயிலையன் வேதமெல்லாம்
தெளிகாண் பரம்பொருள் சிங்கார வேலன் சிலம்பிலங்கும்
அளிகாண் மலர்க்குழல் நின்னுட னேகி லவட்கண்ணலே
குளிர்காவுந் தென்றலு மாவியு மாகுங் கொடுஞ்சுரமே. (322)
தலைவன் போக்கு உடன்படுதல்
வல்லன் புரிமைசெய் சிங்கார வேலன் மயிலைமின்னே
கல்லுஞ் சுரமும்வெங் கோடையு நீரெனக் காதல்வைத்தால்
செல்லுந் திறமன்றி மற்றுள தோசெந் திருமகளை
இல்லும் பதியு மெனச்சுரங் கொண்டுசென் றேகுவனே. (323)
பாங்கி தலைவிக்கு உடன்போக்கு உணர்த்தல்
நெய்தன்மெய்த் தாய்க்கு மருதநின் னாணுக்கு நேருமுல்லை
எய்து மெமக்குங் கடும்பாலை நீவி ரிருவருக்கும்
செய்து குறிஞ்சி யுறவெண்ணி னாரன்பர் தேவர்புகழ்
மெய்யன் மயிலையிற் சிங்கார வேலவன் வெற்பணங்கே. (324)
தலைவி நாணழிபு இரங்கல்
கருநாண் கதியருள் சிங்கார வேலர் கதிர்மயிலைத்
திருநாள் புனைந்தெனைக் காதலர் தம்மனைச் சேரவையா
தொருநாண் மலரென வாடிச் சுரஞ்சென் றுயிரின்மிக்க
பெருநாள் மெலியவென் றோவரை வேற்றிலர் பெற்றவரே. (325)
பாங்கி கற்புமேம்பாடு புகறல்
வாவென் றழைத்து வனத்தே நிறுத்திப்பின் மாவசிட்டன்
மேவென்ற போதுசென் றாளே யருந்ததி மெல்லியளே
மாவென்ற வாகையன் சிங்கார வேலன் மயிலைவெற்பில்
பூவென்ற கற்புக்கு நாணன்பர் சொல்வழிப் போவதுவே. (326)
தலைவி ஒருப்பட்டெழுதல்
மன்பா வலர்புகழ் சிங்கார வேலன் மயிலைவெற்பில்
அன்பான் மணந்ததும் வன்பா னடக்க வமைந்த தன்றி
முன்பாக வினையெனை நானேகச் செய்தது மொய்முலையா
இன்பாலு மன்னமு முண்டுடல் பூரித் திருப்பதற்கே. (327)
பாங்கி சுரத்தியல்பு உணர்த்தல்
எதிர்பொரும் போர்வென்ற சிங்கார வேலனை யேர்மயிலைக்
கதிர்முரு கேசனை யேத்தார்கள் போல்வரு கங்கமெல்லாம்
உதிர்சரு காகி விழுந்தெரி பாலையி னோர்பொரிவான்
அதிரிடி யானது தென்றல்தன் வெம்மையெங் காற்றுவதே. (328)
சுரத்தியல்பு உரைத்துழிச் சொல்லல்
பூச்சினை மாம்பொழில் சூழும் மயிலைப் புரியெனுமோர்
பேச்சினு மலர்ந்தருள் சிங்கார வேலர் பிறங்கன்மின்னார்
ஏச்சினு மன்னை யிறநோக்கு நோக்கினு மேங்குபெரு
மூச்சினுஞ் சாலக் கொடிதோ கடுஞ்சுர மொய்குழலே. (329)
பாங்கி கையடை கொடுத்தல்
தானென்ன வென்னைத் தகுதிசெய் வோன்புகழ் சார்மயிலைக்
கோனென்றும் வாழ்பவன் சிங்கார வேலன் குவட்டண்ணலே
நானென்ன சொல்லுவ தானாலு மோர்மொழி நன்னுதல்பால்
மானெய் துவந்தவந் நாள்போலெந் நாளுஞ்செய் வாஞ்சையதே. (330)
வைகிருள் விடுத்தல்
விடையார் திருமகன் சிங்கார வேலன் வியன்மயிலை
அடையார் நகையு மரும்பு மலரு மகலவிங்ஙன்
கொடையார் பலனெமர் மேவவந் தெய்துவை கொண்டுநுண்ணூல்
இடையாளை நெஞ்சிடை யாதிடை யாமத் தெழுந்தருளே. (331)
அவன் சுரத்து உய்த்தல்
செஞ்சூட்டு வாரணன் பொன்னார் மயிலையன் றேனலர்வா
சஞ்சூட் டியபுயன் சிங்கார வேலன் சமர்க்குடைந்தோர்
வெஞ்சூட் டியல்சுரஞ் செல்வது போலன்று மெல்லியசெம்
பஞ்சூட் டியபத நோவாது மெல்லச்செல் பைந்தொடியே. (332)
அசைவு அறிந்து இருத்தல்
பாலைக் குடியென்று பார்மகள் வாய்விட்டுன் பங்கயபூங்
காலைப் பிடித்தன ணீர்முத் திடுமுனங் காரெதிர்ந்த
சோலைக்குள் வைகி யிளைப்பாறு வாம்வெட்சித் தூயமலர்
மாலைக்கு வந்தவன் சிங்கார வேலன் மயிலைமின்னே. (333)
உவந்தலர் சூட்டி உண்மகிழ்ந் துரைத்தல்
அலங்கார மேனியன் சிங்கார வேல னணிமயிலைத்
தலங்காதல் செய்யு மிவளடி போற்றித் தருமலர்ப்பூம்
குலங்கார்க் குழன்மிசை சூட்டவும் பார்க்கவுங் கூடியதால்
நலங்கா ணவயவம் யாவினுங் கைக ணயந்தனவே. (334)
கண்டோர் இரத்தல்
வான்போந்தும் வன்மனக் கைகேசி வஞ்ச மறந்திலளோ
கான்போந் திவர்வர வேன்பிரி யாத கனிட்டனிலன்
தேன்போன் மொழியருள் சிங்கார வேலர் திருமயிலை
மான்போல் பவளுமிவ் வண்ணலும் யார்கொன் மதிப்பரிதே. (335)
காவின் விலக்கல்
பாவுங் கடலுக் கொருபா றெனவிப் படர்வழியின்
மேவும் பதியிது வந்தியும் வந்தது மேவுமிங்ஙன்
பூவுங் குளிர்பதச் சிங்கார வேலன் புகழ்மயிலை
கூவுங் குயிலனை யாளொடு நாளைசெல் கொற்றவனே. (336)
தன்பதி அணிமை சாற்றல்
காக்குங் கருணையன் சிங்கார வேலன் கனமயிலை
நோக்குங் கிரியிதற் கப்புறஞ் சென்றிடி னான்மறையோர்
வாக்கும் பலபல வேள்வியி னார்ப்பும் மணமுரசம்
மேக்குந் துழனியு மல்குநின் னூரெதிர் மேவிடுமே. (337)
தலைவன் தன்பதி அடைந்தமை சாற்றல்
தோரண வாய்தலுந் தோகைய ராடலுந் தூரியங்கள்
வாரண வார்ப்புட னார்ப்பது மேவுமிம் மாநகரம்
காரண காரியன் சிங்கார வேலவன் காண்மயிலைப்
பூரணக் கும்ப முலையன்ன மேயெம் புகழ்பதியே. (338)
உடன் போக்கு முற்றிற்று.
-----------------
கற்பொடு புணர்ந்த கௌவை.
செவிலி பாங்கியை வினாதல்
மாணே ருமைசெஞ் சிலம்பின் மணிமங்கை மார்புதல்வர்
தாணேர் தொழவருள் சிங்கார வேலர் தடமயிலை
பூணேர் நெருங்கி புணர்முலை யாய் நம் பொலன்கொடியைக்
காணே னெவனுவ ணுற்றது வேதுசொல் காரணமே. (339)
பாங்கி செவிலிக்கு உணர்த்தல்
உடலைப் பயிலுயிர் சிங்கார வேல னுயர்மயிலை
விடலைப் பருவத் தொருவ னொருமலர் மெல்லியற்குத்
தொடலைத் தலைத்துமுன் னீந்ததை நோக்கித் துணைமலர்க்கண்
மடலைச் சிறிது மிமைத்திலள் யான்கண்ட வாறிதுவே. (340)
செவிலி தேற்றுவார்க்கு எதிரழிந்து மொழிதல்
வானப் பிறையை மனைமீது வைத்து வளர்ப்பதுபோல்
தானக் களிற்றினன் சிங்கார வேலன் றடமயிலை
நானக் குழலியை நான்வளர்த் தேன்வள நற்சுனைவாய்
ஈனத்தின் வீழ வெடுத்தார்க் கினிமைசெய் தேகினனே. (341)
செவிலி தன் அறிவின்மை தன்னை நொந்து உரைத்தல்
வழித்துணை யாகிய சிங்கார வேலன் மயிலைவெற்பில்
குழப்பயி ரோங்கி வளர்ந்தா லதுவயல் கூடிநின்ற
கழிப்படர் கின்ற தியல்பாகு மென்றுநங் கன்னிசொன்ன
மொழுக்குறிப் போர்ந்தறி யாமன் மயங்கினன் முன்னறிவே. (342)
செவிலி தெய்வம் வாழ்த்தல்
வயலார் மயிலையிற் சிங்கார வேலர் மலையிடத்தே
இயலா யெமக்கொரு பெண்ணளித் தாயவ ளெம்மைமறைத்
தயலா னொடுசுரம் போகவைத் தாயெம் மகன்மனைக்கண்
செயலால் வரவழைப் பாய்தெய்வ மேயுன் றிருவுளமே. (343)
செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நிற்றல்
ஊரலர் பூப்ப மணம்பிற ரேற்ப வுரைத்தமொழி
வாரணி கொங்கை யறிந்தன்று சீறிய மாவடர்த்த
போரணல் பின்னடந் தாள்போலும் வேறு புகலறியேன்
மாரணந் தீர்த்தருள் சிங்கார வேலர் மயிலைமின்னே. (344)
நற்றாய் பாங்கி தன்னொடு புலம்பல்
மக்கட் பொருளருள் சிங்கார வேலர் மயிலைநங்காய்
செக்கர்க் கனியிதழ் வாய்ப்பூவை மாமணஞ் சேர்ப்பதின்றிப்
பக்கப் பழிப்புறப் பாழ்ஞ்சுரம் போக்கிப் பரிவுளர்போல்
ஒக்கப் புலம்பி யுருகிக் கலுழ்வதெ னூதியமே. (345)
நற்றாய் பாங்கியர் தம்மொடு புலம்பல்
மோகாழி தீர்த்தருள் சிங்கார வேலன் முகுந்தனயன்
நாகாதி பர்தொழு மாமயி லாபுரி நண்ணினர்கள்
ஏகாவெங் கானிடைக் கானடை யாகவோ ரேதிலன்பின்
பாகா யுருகவு நீரவள் போனதென் பாங்கியரே. (346)
நற்றாய் அயலார் தம்மொடு புலம்பல்
வண்ணப்பொற் றாரணி சிங்கார வேலர் மயிலைவெற்பில்
பெண்ணைப் பெற்றாலும் புதல்வற்பெற் றாலும் பெருகுபுகழ்
நண்ணப்பெற் றாலது வேறேதுவன்றி நாடுபழி
எண்ணப்பெற் றால்விடுத் தென்போ லிரங்கி யிருப்பதுவே. (347)
நற்றாய் பயிலிடம் தன்னொடு புலம்பல்
சகமேழ் துதிசெய்யுஞ் சிங்கார வேலவர் தம்மயிலை
அகமே தடஞ்சுனை யேமயிலே குயி லார்பொழிலே
சுகமே யிருஞ்சுக மேவரு வேனென்று சொல்லிநல்ல
முகமே புரிந்தகன் றாளோ சொலுமந்த மொய்குழலே. (348)
நிமித்தம் போற்றல்
செங்கையம் போருகன் சிங்கார வேலன் றிருமயிலை
மங்கல மேற்பை யகன்றே சுரஞ்செலு மாயனுடன்
தங்கை வந்தெய்தத் தமக்கை தருங்கொடி சார்ந்தழைத்தால்
நங்க ளுணவினு நன்காம் பலியிங்ங னல்குவதே. (349)
நற்றாய் சுரந்தணிவித்தல்
கதுமென் றெழுமசு ரேசரை வென்றவன் காண்மயிலைப்
புதுமன்றல் மார்பினன் சிங்கார வேலவன் பொற்பதம்போல்
பதுமந் தனக்கும் பகலோ னுனக்கும் பரிவுளதால்
மதுமுந் தியமலர் மான்போம் வழித்தண்மை வைத்தருளே (350)
நற்றாய் தன்மகள் மென்மைத் தன்மைக்கு இரங்கல்
நெடும்பான் மயிலையிற் சிங்கார வேலர் நெடுவரைமேல்
விடும்பான் மையன்றி தெனவேண்டி யூட்டினு மெல்லியளாள்
அரும்பாலை வாய்நுக ராள்சுடும் பாலை யழல்விழிபோம்
கடும்பாவ மென்கொ லிதுவோ தவஞ்செய்து கண்டதுவே. (351)
இளமைத் தன்மைக்கு உளமெலிந்து இரங்கல்
வள்ளற் குருபரன் சிங்கார வேலன் மயிலையன்னாள்
எள்ளத் தனைபசி தாங்கா தியற்கை யிகந்திரங்கித்
துள்ளத் துடித்து விழுமிந்தப் பிள்ளை சுரத்திடையோர்
கள்ளக் கணவனோ டேகவுங் கூடுங்கொல் கால்களுக்கே. (352)
அச்சத் தன்மைக்கு அச்சமுற்று இரங்கல்
கண்பா ரெனப்பணி வார்க்கருள் காட்சியன் காமயிலை
நண்பா கியதுங்கன் சிங்கார வேல் ஒளிர்வரைமேல்
உண்பா யெனுஞ்சொல் லுரப்பாய்ச் சொலினு முளம்வெருவும்
பெண்பால் பொறுத்திடு மோவனத் தானைப் பெருங்குரலே. (353)
ஆயமும் தாயமும் அழுங்கக் கண்டு காதலின்
இரங்கும் கண்டோர் இரங்கல்
தூய மயிலையிற் சிங்கார வேலவர் தோகையன்ன
தாய் ரிரங்கத்தம் மாக்க ளிரங்கத் தணிக்கறியா
ஆய மிரங்கா வடிநா ளிவர்குலத் தாகி வந்த
ஞாய மிரங்க நடத்தனன் றோசுர நன்னுதலே. (354)
செவிலி ஆற்றாத் தாயைத் தேற்றல்
மாற்றகல் பொன்னிகர் சிங்கார வேலர் மலையிலுள்ளார்
தூற்றலு முண்கண் டுளியு மொழியச் சுழலிருங்கால்
ஏற்றிய வெல்லையெல் லாஞ்சென்று தேடிநம் மேந்திழையைப்
போற்றவும் யான்கொணர் வேன்வருந் தேலன்னை புந்திநொந்தே. (355)
செவிலி முக்கோற் பகவரை வினாதல்
கூனிக் குழைந்து வெயிற்குடை தாங்கிமுக் கோல்பிடித்துக்
கானிச் சுரத்து வருமந்த ணீரெதிர் கண்டதுண்டோ
மேனிப் புழுகணி சிங்கார வேலர் மிளிர்மயிலை
மானிக் கனதண் மொழியா டுணையோடும் வந்ததுவே. (356)
மிக்கோர் ஏதுக் காட்டல்
சிலையிற் சிறந்தவர் சிங்கார வேலர் திருமயிலை
மலையிற் பிறந்த வருவிமண் மீது வழங்கல்கண்டு
நிலையிற் பிரிந்தம் மலைவந்த தோவன்னை நேசனிட்ட
வலையிற் புணர்ந்துபின் மானேகி லென்னைபின் வந்ததுவே. (357)
எயிற்றியொடு புலம்பல்
மங்கலந் தந்தருள் சிங்கார வேலர் மயிலைவெற்பில்
எங்களை வாட்டங்கண் டெம்மான் சுரத்தி லேதிலன்பின்
கொங்கையின் முத்தெனப் பூம்பாதங் கொப்புளங் கொள்ளநடந்
திங்குவந் தாள்கண்ட துண்டோ வெயின ரிளங்கொடியே. (358)
குரவொடு புலம்பல்
வரவோ திமர்பணி சிங்கார வேலர் மயிலைவெற்பில்
கரவோர் சிலர்மண் மாதவன் செல்லுங் கதிவழக்குக்
குரவோர் துணையென மாமந் திரத்தைக் குறித்துரையா
துரவோதி விட்டனை யோபாவை யீன்று முளம்வலிந்தே. (359)
சுவடு கண்டு இரங்கல்
நம்பாகும் பூவடிச் சிங்கார வேலவர் நயமயிலை
எம்பாவை சீறடி யீத்து காளை யிடுமடியாம்
அம்பாவை சீறடி பின்னயன் முன்னெங்கு மாயினதால்
வெம்பாகு போல வுருகியுள் ளஞ்சி மெலிந்ததுவே. (360)
கலந்துடன் வருவோர்க் கண்டு கேட்டல்
கிளரும் பெரும்புகழ்ச் சிங்கார வேலர் கிளைமயிலை
வளருங் கொடியுங் கொழுகொம்பும் போலவிம் மன்னனையும்
தளருங் கொடியிடை நின்னையும் போலத் தமர்புலம்ப
உளருஞ் சுரத்தெதிர் வந்தன ரோவிரு வோர்கலந்தே. (361)
அவர் புலம்பல் தேற்றல்
போக விடுத்துப் புறஞ்சொல்லி யன்னை புலம்பல்செல்வாய்
மேக நிகர்குழ லாளுந் துணையும் விடாயகன்று
யோகன் குருபரன் சிங்கார வேல னுயர்ந்தபதி
ஆக விளங்கு மயிலா புரியை யணுகுவரே. (362)
புதல்வியைக் காணாது கவலை கூர்தல்
சேணாடு வாழ்வித்த சிங்கார வேலர் திரு மயிலை
வாணாடு கண்ணியை யான்றேடி வாடி வழிமுழுதும்
காணாது மீண்டவென் கால்கண்முன் செல்லவுங் கண்கள்பின்பார்த்
தேணாக நின்றவக் கண்ணோடு சிந்தையு மேய்ந்ததுவே. (363)
கற்பொடு புணர்ந்த கௌவை முற்றிற்று.
---------------------
மீட்சி.
சேண் அகன்றமை செவிலி தாய்க்கு உரைத்தல்.
முருகா மயிலையிற் சிங்கார வேலரை முன்னலர்போல்
இருகாலுங் காலென வோடியு நேடியு மென்னெதிரே
தருகான் வழியிடைக் காணே னொருமன்னன் றன்னகர்க்கு
வருகாதல் செய்துகொண் டேகின னன்னைநம் மானினையே (364)
தலைவன் மீண்டு தம்பதி அடைந்தமை சாற்றல்
வாம்புலி வென்ற விடமது சேடை மறையவர்தந்
தோம்படை சாற்றிட மீதிளைப் பாறி யுறைந்தநிழல்
பூம்பொழி லீது மலர்புனை காவிது பொன்மயிலை
ஆம்பதி யீதெழிற் சிங்கார வேல ரசலமின்னே. (365)
தலைவி முன்செல்வோர் தம்மொடு தம்வரல்
பாங்கியர்க்கு உணர்த்தி விடுத்தல்
நிதிமயி லாபுரிச் சிங்கார வேலர் நெடுங்கிரிமேல்
மதிகதி ரோடு செலத்தா ரகையின் மாழ்குதல்போல்
அதிபதி யாமென் றுனையோடி யான்செல வல்லலொடு
வதிதரு பாங்கியர்க் கியாம்வர லோது மறையவரே. (366)
முன்செல்வோர் பாங்கியர்க்கு உணர்த்தல்
நீளலர் வாவி மயிலை யமலை நிமலன்மகன்
தாளணி தண்டையன் சிங்கார வேலன் றடங்கிரிமேல்
ஆளரி யண்ண லுடன்மாது மீண்டன ளஞ்சனந்தோய்
வாளரி நோக்கு மடவீரிப் போது வருகுவரே. (367)
பாங்கியர் கேட்டு நற்றாய்க்கு உணர்த்தல்
மும்மையும் வாழ்வருள் சிங்கார வேலர் மொழிமயிலை
அம்மனை கேளொரு சோபன நீபெறு மன்னமன்ன
நம்முறு புண்ணியம் யாவருங் காண நடந்துசுரம்
செம்மலோ டிந்நகர் வந்ததென் றந்தணர் செப்பினரே. (368)
நற்றாய் உளங்கொள வேலனை வினாதல்
பாட்டார் மயிலையிற் சிங்கார வேலனைப் பன்னும்வெறி
ஆட்டாள னேசுரம் போய்மீண்ட மன்னவ னாரணங்கைச்
சேட்டாரு நம்மனைப் பாலுய்க்கு மோநிதி சேந்தனது
வீட்டார வுய்த்திடு மோதெளி வாக விளம்பெனக்கே. (369)
மீட்சி முற்றிற்று.
-----
தன்மனை வரைதல்
நற்றாய் மணன் அயர் வேட்கையில் செவிலியை வினாதல்
விதுமைப் பொழில்வளர் மாமயி லாபுரி வேந்தரென்றும்
புதுமைப் புகழெழிற் சிங்கார வேலர் பொருப்பரசர்
பதுமத் திருவனை யாண்மண நம்மனைப் பாங்குசெய்யும்
மதுமைக் கயல்விழி சொல்லுது மோவவ ரன்னையர்க்கே. (370)
செவிலிக்கு இகுளை வரைந்தமை உணர்த்தல்
திரிசங்க முத்தமிழ்ச் சிங்கார வேலவர் சேர்மயிலைப்
புரசந் ததிபெறு தாயேநல் வாழ்த்தொலி போற்றவெங்கும்
முரசங் கலிக்க முளரிநம் மாதை முறைமைபெற
வரசங் கணிமணஞ் செய்தது தூதர்சொன் னார்மகிழ்ந்தே. (371)
வரைந்தமை செவிலி நற்றாய்க்கு உணர்த்தல்
கம்மூர் சடிலர் கபாலீசர் மைந்தன் கவின்மயிலை
அம்மூர்தி மஞ்ஞையன் சிங்கார வேல னணிவரைநேர்
தம்மூர் மகிழ வவர்மணஞ் செய்ததைத் தாழ்குழலாட்
கிம்மூ துரையன்னை தூதர்முன் னேவந் திசைத்தனரே. (372)
திருமயிலைக் - கோவை.
பிற்சேர்க்கை 1.
பாங்கிக்கு யான் வரைந்தமை நுமர்க்கியம்பு சென்று என்றல்.
வலிபகை வென்றருள் சிங்கார வேலர் மயிலைவெற்பில்
பலியன லூட்டி மறையவர் மேதையர் பாங்குரைப்ப
மலிமல் ரோதியை யானெம் தூரின் மணந்ததனைச்
சொலிமகிழ் கூர்தரச் செய்வாய் நுமர்க்குச் சுடர்த்தொடியே. (373)
தானது முன்னே சாற்றினே னென்றல்.
வம்மி னெனவருள் சிங்கார வேலர் மணிமயிலை
இம்மின் மலரடி மன்னவ நின்கை யிணைபிடிக்க
அம்மி மிதித்தங் கருந்ததி பார்த்துநெய் யாகுதிவேட்
டும்மின் மணந்ததை யன்னைக்கு நான்முன் னுரைத்தனனே. (374)
தன்மனை வரைதல் முற்றும்.
==========
உடன்போக்கிடையீடு
நீங்குங் கிழத்தி பாங்கியர் தமக்குத் தன்செல வுணர்த்தல்.
திலகந் திகழ்நுதற் சிங்கார வேலர் திருமயிலை
உலகம் புகச்செலு முத்தம ரேயென் னுயிர்க்குயிரே
மலகம் பயில்விழி யாருக் குரைப்பிரிந் தண்ணல்பின்னே
கலகம் பயில்சுரம் யான்செல்லு மாறு கருத்துறவே. (375)
தலைவி, தன்செல வீன்றாட் குணர்த்தி விடுத்தல்.
வளமை மயிலைப் பரன்பூசை செய்து மணிநெடுவேல்
இளமையின் வாங்கிய சிங்கார வேல னெழில்வரைக்கோ
வளமை விழியன்னை பாலோதும் பாலை வழிச்செலவைக்
களமைக் கமைந்த சிவனாக மங்கவர் கண்டவரே. (376)
ஈன்றாட் கந்தணர் மொழிதல்.
பொற்பூண் புயத்தினன் சிங்கார வேலன் புகழ்மயிலை
விற்பூ னுதலியின் மெல்லியல் வில்லியல் வேந்தனொடு
நற்பூ வெனச்சுரஞ் சென்றா ளிரங்கி நலிவதென்னே
கற்போ கணவன் தருங்கனி வோசென்ற காரணமே. (377)
தமர்பின் சென்ற (வலத்) தலைவிகண் டுரைத்தது.
கலைமா மறைய ரிச்சித்த மயிலையன் கார்த்திகைப்பால்
முலைமாரி யுண்டருள் சிங்கார வேலவர் மொய்வரைமேல்
தலைமா மததந்தி யைத்துடர் வாரிற் றலைவனைநீள்
சிலைமாரி வீசித் தொடர்ந்தா ரெமரமர் செய்வதற்கே. (378)
தலைவன் தலைவினாய் விடுத்தல்.
தடாத்தமர் சூரோடு நாளாறு தாக்கிவிண் சாரமரர்
கெடாதினிக் காண்டருள் சிங்கார வேலர் கிளர்மயிலை
விடாதுனை மங்கையெ திர்ந்துசங் கிராமம் விளைந்தன்னேர்
கொடார்புறம் விவர்நும ரஞ்சி னேன்செலக் கோநகர்க்கே. (379)
தமருடன் செல்பவள் அவன்புறம் நோக்கிக் கவன்றாற்றல்.
மறுவோ தரிய முழுமதி யானனன் மாமயிலை
பெறுவோர் தமக்கருள் சிங்கார வேலர் பிறங்கலின்வாழ்
கறுவோதை வெஞ்சொ லெமர்நோவு மென்னைக் காத்திகலா
துறுவோர் மனத்தினுஞ் செல்கவன் கால்வைய மும்விரைந்தே. (380)
உடன்போக்கிடையீடு முற்றும்.
களவியல் முற்றும்.
------------------------
3. கற்பியல்.
இல்வாழ்க்கை.
தலைவன் அந்தணர் சான்றோர் முன்னிட் டருங்கலந்
தந்து மணம் பேசல்.
பொன்னணி மாமணிப் பூண்கள்முத் தாரம் புலன்கலைக்
ணின்னன வந்தணர் சான்றோரை முன்னிட் டினிதுதந்து
மன்னவர் போற்றிய சிங்கார வேலர் மயிலைநண்பன்
மின்னனை யாடமர் பான்மணம் பேச விடுத்தனனே. (381)
தலைவன் வரைதல்.
மல்லிகை மாலையன் சிங்கார வேலன் மயிலையெங்கும்
நல்லிய மார்ப்ப மனைதொறு மங்கல நண்ணவண்ணச்
சொல்லிய லந்தணர் வாழ்த்தமெய்த் தானத் துறைமலிய
வல்லியை மங்கல நாண்டேடி வேட்டனர் மன்னவரே. (382)
தலைவன் வரைந்துழிக் கண்டோர் மகிழ்ச்சி.
வாணிய யன்மகிழ் சிங்கார வேலர் மயிலைவெற்பில்
ஆணி லழகனைப் பெண்ணி லழகியை யாய்ந்தெழுதிக்
காணி லெவரு மிவரே மணமுமக் காட்சியதே
பேணி யுரைத்திடு நாமேகண் காட்சியைப் பெற்றவரே. (383)
தலைவன் தலைவிமுன் பாங்கியைப் புகழ்தல்.
தனக்கிணை தானுற்ற சிங்கார வேலர் தடமயிலை
மனத்துணை யாகி மறைபிறர் காணா வகைசெயலாற்
கனக்கருங் கூந்தலை யான்மணஞ் செய்திந்தக் காசினிமேல்
எனக்கிணை யாரென் றிருந்தேனில் வாழக்கையி னேந்திழையே. (384)
இல்வாழ்க்கை.
தலைவனைப் பாங்கி வாழ்த்தல்.
ஏதுரை யான்மொழிந் தாலு மிதமென் றிசைந்துபன்னாள்
போதுத லானலம் பெற்றேனெக் காலும் புகழ்மயிலைத்
தூதுறை மாலையன் சிங்கார வேலன் சரணெனவே
மாதுடன் பூமிசை வாழியெந் நாளு மகிபதியே (385)
பாங்கி தலைவியைத் தலைவன் வரையுநாள் அளவும்
வருந்தாதிருந்தமை உரையாய் என்றல்
பானுவின் சீருருச் சிங்கார வேலர் பயின்மயிலைத்
தேனுமின் பாகுஞ் சுவையுமொப் பாயன்பர் சேர்ந்துமனை
தானுமின் பாமெனு மன்பவ ருன்னைத் தணந்தவந்நாள்
வானுமன் பாங்கற் பிலங்கிழை யேயெங்ஙன் மன்னியதே. (386)
தலைவி வருந்தாதிருந்ததற்குக் காரணங்கூறல்
மன்னாகர் போற்றிய சிங்கார வேலர் மயிலைவெற்பில்
அன்னா ளளித்த மலர்பொழி லாயமு மன்பர்சொன்ன
நன்னா வசனமும் பேராற் றிடையுற்ற நன்புணைபோல்
உன்னா தரவுங்கொண் டியான்வருந் தாம லுறைந்தனனே. (387)
பாங்கி தலைவனை வரையுநாள் அளவும் நிலைபெற
ஆற்றிய நிலைமை வினாதல்
செவ்வா யமுது முலையிள நீருஞ்சொற் றேனுமிவள்
இவ்வா றுதவ நுகர்தரு நீயிடை யீடுறு நாள்
அவ்வாறு மாமுகன் சிங்கார வேல னருண்மயிலை
எவ்வாறு காம விடாயாற்றி யண்ண லிருந்ததுவே. (388)
மன்றல் மனைவரு செவிலிக்கு இகுளை அன்புற உரைத்தல்
திருத்தத் திருத்தத் திருந்தா வறிவுந் திருத்தவந்துள்
இருத்தற் குரியவன் சிங்கார வேல னெழிமையிலை
அருத்திக் குரிய விருவோர் செயலு மறிந்தபின்னர்க்
கருத்துப் பொருளெனும் மன்பினைக் காட்சியிற் கண்டனனே. (389)
பாங்கி செவிலிக்கு நன்மனை வாழ்க்கைத் தன்மை உரைத்தல்
நற்குண நற்செய றன்னை விரும்பு நலனுடையாள்
அற்புட னாக்கு மடிசிலுண் டன்ப ரகமகிழப்
பொற்புறு மேனியன் சிங்கார வேலன் புகழ்மயிலைக்
கற்புறு நின்மக ளில்வாழ்க்கை முற்றவுங் கற்றனளே. (390)
செவிலி, பொற்றொடி கற்பியல் நற்றாய்க்கு உணர்த்தல்
கொண்டானைத் தெய்வ மெனப்போற்றுதலுங் குலமுறையும்
கண்டார் வியப்பு மொழுக்கமு மாண்புமக் காதலனால்
உண்டான செய்தலும் பெற்றா ளணங்கன்னை யொண்மயிலை
வண்டார் குவளையன் சிங்கார வேலன் வரையிடத்தே. (391)
செவிலி தன்மனை வாழ்க்கைத் தன்மை உரைத்தல்
வடிவ னிளமையன் சிங்கார வேலன் மயிலைவெற்பில்
குடிகொள் பெரியநங் காதலி வாழுங் குலமனைப்பால்
அடிசின் முழக்கு மருந்தும் வருந்தின ரார்ப்புமன்பால்
மடிவி லிரவலர்க் கீகையு மோகையும் வாய்த்தனவே. (392)
செவிலி நற்றாய்க்கு இருவர் காதலும் அறிவித்தல்
முப்பாலின் முன்னிரு பாலியல் யாவு முடிவுகண்டார்
அப்பாலின் மேலுறு மின்பமெப் பாலு மளவுபடா
இப்பா லமைந்தனர் நம்மிரு வோரு மெழின்மயிலை
வைப்பாம் பெருநிதிச் சிங்கார வேலன் வரையன்னையே. (393)
இல்வாழ்க்கை முற்றிற்று,
--------------
பரத்தையிற் பிரிவு.
1. இளைய கலாம்.
காதலன் பிரிவுழிக் கண்டோர் புலவிக்கு ஏதுவாம்
இவை இறைவிக்கு என்றல்
வலாரிவந் தனைபுரி சிங்கார வேலர் மயிலைவெற்பன்
உலாவும் பலசந்த மாலையிற் கோவைவைத் தொண்டொடியார்
எலாருஞ்சொல் பாடலு மாடலு மூட லிசைத்திடுமால்
கலாபந் தருசிற் றிடைநீல வார்குழற் காரிகைக்கே. (394)
தனித்துழி இறைவி துனித்தழு திரங்கல்
களவிற் புணர்வு பிரிந்துபன் னாளிடை கண்டதன்றி
விளவிற் புணர்வும் பிரிவுடைத் தேயெனில் வல்வினையின்
அளவிற் பொருந்துமென் போன்மாதர் யாவ ரணிமயிலை
இளமைக் குருபரன் சிங்கார வேல னெழில்வரைக்கே. (395)
ஈங்கிது என்னெனப் பாங்கி வினாதல்
எண்ணு மயிலையிற் சிங்கார வேல ரிமையவெற்பில்
கண்ணு மனமுங் கவின்பெறு மேனியும் காதலர்நீ
நண்ணும் வகைதந்து நீங்காம லின்பரு ணாளையினும்
ஒண்ணு முறையல்ல வேயணங் கேயிந்த வுண்மெலிவே. (396)
இறைமகன் புறத்தொழுக்கு இறைவி பாங்கிக்கு உணர்த்தல்
அன்னம் பருகுஞ் செழும்பாலைப் பன்றிக் கருத்துதல்போல்
பொன்னந் துணர்மணன் மீதிடும் புன்னையம் பூந்துறைவன்
தன்னம் புயத்துணை வேற்றயல் மாதர் தமக்களித்தான்
வன்னந் தரும்பதச் சிங்கார வேலன் மயிலைமின்னே. (397)
தலைவியைப் பாங்கி கழறல்
பார்ப்பார் நகைக்கும் பரிசுசெய் தாலும் பரிவதன்றி
வேர்ப்பா ரலர்கற்பு மின்னார் தலைவர் விரகமயல்
சேர்ப்பாரைச் சேர்ந்தன ரென்றிடர் கூர்வதென் சீர்மயிலை
ஊர்ப்பா லினிதுறை சிங்கார வேலன்வெற் பொண்ணுதலே. (398)
செவ்வணி அணிந்து சேடியை விடுத்தல்
கூடிக் குலாவிய சிங்கார வேலர் குலமயிலைச்
சேடிக் கணிந்துசெஞ் சந்தனஞ் செந்நிறச் சேலைதற்றுச்
சூடிச்செந் தாமரை மார்பிற் பவளத் தொடர்புனைந்து
பாடிப் பரத்தைமுன் செல்வான் விடுத்தனள் பான்மொழியே. (399)
அவ்வணி உழையர் கண்டு அழுங்கிக் கூறல்
குணப்பா லருளிய சிங்கார வேலன் குலமயிலை
மணப்பா ரிசாத மலர்பூத்த தாயின் வருமளியார்
உணப்பால ரல்ல ரெனிலிந்தச் சேடி யுருவமெல்லாம்
புணர்ப்பான சேதுப் பெருங்காசி நித்தம் புகழ்பெறுமே. (400)
பரத்தையர் கண்டு பழித்தல்.
காவள மோங்கு மயிலை யதிபதி கைநெடுந்தந்
தாவள மூர்ந்தவன் சிங்கார வேலன் றடங்கிரிவாழ்
ஏவண நோக்கி யிணங்கிமெய் யெங்கு மிடையலர்ந்த
பூவண மீட்டன ளப்பூஞ் சினையும் பொறித்திலளே. (401)
தலைவன் வரவு கண்டுவந்து வாயில்கள் மொழிதல்
சேரிப் பரத்தை மனையகன் றன்பர்நஞ் சேடிசென்ற
பாரிப் பறிந்த வுடனேயுன் மாளிகைப் பாங்குவந்தார்
பூரிப் பதுமெய் புளகிப்ப துந்தகும் பூண்டபுகழ்
வாரிக் குருபரன் சிங்கார வேலன் மயிலைமின்னே. (402)
தலைவன் வரவு பாங்கி தலைவிக்கு உணர்த்தல்
உறுப்பா லுறுபய னின்பணி யென்றுறு வோர்பிழையைப்
பொறுப்பா னருள்புரி சிங்கார வேலன் புகழ்மயிலைச்
சிறுப்பான் மதிநுத லன்பர்வந் தாரெதிர் சென்றுகொண்டு
கறுப்பாறு நெஞ்சுசெவ் வாய்வெளுப்பாமுறுங் கண்சிவப்பே. (403)
தலைவி எதிர்கொண்டு பணிதல்
ஊடற் கபாடம்வெங் காமக் கணிச்சிச் குடைந்ததென்றால்
கூடற் பொருள்வெளி காணுங் கணவர் குறைபொறுத்துச்
சூடப் பதமலர் வேண்டுவ தாநங்கை சூழ்மயிலை
நாடச் சிறந்தவன் சிங்கார வேல னளிர்வரைக்கே, (404)
தலைவன் வாயில் வேண்டல்
சுகப்பொறை தாங்கிய தண்கா மயிலையன் றொல்கடல்சூழ்
சகப்பொறை யோர்புகழ் சிங்கார வேலன் றனதுவெற்பில்
மகப்பொறை கூர்ந்த வயிற்றா ளெனது வழுநினைந்து
அகப்பொறை கூர்த லரிதோசென் றாற்றுதி யாரணங்கே. (405)
தலைவி நெய்யாடியது இகுளை சாற்றல்
உண்ணேயங் கொண்ட புதல்வனைப் பெற்றுநொந் துற்றமெய்யில்
எண்ணேய மாடி யிருந்தனண் மன்னவிங் கெய்து நின்பால்
விண்ணே ரமுதனை யாடுனி தீரவும் வேண்டுமிசைப்
பண்ணேர் மயிலையன் சிங்கார வேலன் பனிவரைக்கே. (406)
புணர்ச்சியின் மகிழ்தல்
ஆந்தொடை நாட்டுக் கிவரே யுரிய வகமுடையார்
ஏந்து புகழுயர் வேளாளர் வாழு மியன்மயிலைக்
காந்தண் மலர்புனை சிங்கார வேலன் கருணையன்னப்
பூந்தண் குழலி பாலின்ப மார்ந்து பொலிந்தனளே. (407)
2. முதிய கலாம்.
வெள்ளணி அணிந்து விடுத்தல்
எங்கட் கருள்புரி சிங்கார வேலவ னின்மயிலை
சிங்கக் குழையுமுத் தாரமுந் தாருத் தளவலரும்
திங்கட் கலையும் புனைந்துசென் றாளொரு சேடிமின்னாள்
அங்கட் புதல்வனைப் பெற்றது கூற வரசனுக்கே. (408)
தலைவன் தன்மனத்து உவகை கூர்தல்
குஞ்சர வாகனன் சிங்கார வேலன் குலமயிலை
மஞ்சளு நெய்யு மளாவிய மெய்யு மடித்தலமேல்
அஞ்சலெ னும்வேள்வி செயமஞ்ச னும்பர்கொ ளணிமுலையும்
வஞ்சிய வோகையுங் காண்பான்செய் மாதவ மிக்குடைத்தே. (409)
தலைவிக்கு அவன்வரல் பாங்கி சாற்றல்
தடைக்கலி தீர்த்தருள் சிங்கார வேலர் தடமயிலை
இடைக்கிடை யாக வவர்கைவித் தார மிசையவிம்மும்
புடைப்பெருங் கொங்கையில் பாலுணு மைந்தன் பொலிவலிய
கடைத்தலை வத்துநின் றாரன்பர் தேரொடுங் காரிகையே. (410)
தலைவி உணர்ந்து தலைவனொடு புலத்தல்
மாலன் பொடுபணி சிங்கார வேலர் மயிலையிலென்
பாலன் பிறக்கும் பருவத் திலாது பரத்தையர்தங்
கோலங் களித்தவர் மானேப் போது குழைந்துவந்து
சாலம் புரிகுவ தென்னேசெல் வாரவ டன்மனைக்கே. (411)
பாணன் முதலாப் பாகன் ஈறாப் பேணிய வாயில்கள்
பெரியோன் விடுத்துழித் தலைமகள் மறுத்தல்
ஒலியார் மயிலையிற் சிங்கார வேலரை யுன்னலர்போல்
மலியார வாரப் பாத்தையர் சேரிசெல் மன்னவர்க்காய்
நலியாத யாழ்பயில் பாணலிங் கென்முன் னவிலுகின்ற
கலியாணி தான்சங்க ராபர ணக்குணங் காட்டியதே. (412)
வாயில் மறுக்கப்பட்ட பாணன் கூறல்
திசையார் புகழ்த்தெய்வ யானையுங் கானவர் சீர்மயிலும்
நசையார் மயிலைமன் சிங்கார வேல் ஒளிர்வரைமேல்
வசையாரை நோதல் வழக்கா முலகின் மகிழ்ச்சிதரும்
இசையாரை நோத லிசையோ விசையு மியலணங்கே. (413)
விறலி வாயில் மறுத்தல்
ஏலுஞ் சிறப்பருள் சிங்கார வேல ரெழின்மயிலை
பாலும் பதக்குக் கடைபட்ட மோரும் பதக்கெனுஞ்சொல்
சாலும் படிசெய் தவர்சேர் பரத்தைமுன் சார்மதங்கி
கோலுந்தன் னுடலுக் கொக்குநின் பாடலுங் கோலமுமே. (414)
கூத்தர் வாயில் மறுத்தல்
தொடிக்காலன் செங்கையன் சிங்கார வேலன் சுகமயிலைக்
குடிக்காவ லர்செல் வழிநோக்கி நோக்கிமெய்க் கூத்தர்மன்னா
கடிக்காவி யங்கொளி மாழ்கின னென்முன்பு காட்டிலென்னாம்
படிக்கான நட்டத்தைப் பார்த்தா லிலாபம் பரத்தையர்க்கே. (415)
பாங்கி மறை
அணிவாழ் மயிலையிற் சிங்கார வேல ரருவிவெற்பில்
மணிவாய் மதலை பிறந்தான் வளர வளரரைக்கிண்
கிணிவாய் மிழற்ற நடைசெயும் போதன்பர் கேண்மனைப்பால்
பணிவாய் மணியுன்றன் பாங்கிவந் தாரென்ன பாங்கிதுவே. (416)
பரத்தையிற் பிரிவு முற்றிற்று.
திருமயிலைக் கோவை முற்றும்.
--------------------
பிற்சேர்க்கை 2.
விருந்தொடு வந்துழிப் பொறுத்தல் கண்டு தலைமகன் மகிழ்தல்.
கதிரா லருளிய சிங்கார வேலர் கவின்மயிலை
மதிமா னிவள்வெகு ளாமையும் போற்று மனைவளர் சந்
ததிபா லுணவரு நேயமும் பாடிய தாலுமென
தெதிர்காண் வகைவிருந் தாகிவந் தெய்திய தென்றெய்வமே. (417)
தலைவன் புதல்வனைக் காண்டல்.
நலம்பகர் தேசிகன் சிங்கார வேல னயமயிலை
நிலம்பல தானப் பொருளா நிறையவு நீர்மறையோர்.
குலம்பயில் கைமல ரேறவும் வன்னிக் கொழுஞ்சுடர்நெய்ப்
பலம்பலி யுண்ணவும் வந்தெடுத் தானண்ணல் பாலனையே. (418)
பாங்கி தலைவி மகப்பொறை கூர்ந்தவண்ண முரைத்தல்.
மறுத்தவர் சோதிமெய்ச் சிங்கார வேலர் மயிலைவெற்பா
கறுத்ததோ ரங்கம் பெருத்தது மைந்தன் றிருவயிற்றில்
……………………………………………………………..
உறத்தக வந்தவ னதென்றுமுன் னாசை யொரு தன்மையே. (419)
பள்ளியினழுங்கல்.
சேலணை தண்பணை சூழ்மயி லாபுரித் தேவைமயில்
மேலனை வீரனைச் சிங்கார வேலனை வேண்டிலர்போல்
மாலனை யீந்து மலரணை சேர மலரணையின்
பாலணை மெய்யர் மாலா னவன்பெறல் பாங்கல்லவே. (420)
சீறேலென்றவள் சீறடி தொழுதல்.
பாடி மயிலையிற் சிங்கார வேலர்ப் பணிகிலர்போல்
நாடிமெய்ப் போர்த்த கலைநீக்கி நோக்கி நகைத்தணைத்தும்
ஊடி யகல வடிமுடி யூடுவைத் தூரன்மனம்
வாடி வணங்க நெடிதுயிர்த் தாள்விழி மாரிபெய்தே. (421)
இஃது எங்கையர் காணின் நன்றன்றென்றல்.
தோடக மாலையன் சிங்கார வேலன் துதிமயிலை
நாடக வாழ்க்கையி லெங்கேனுந் தம்மனை நாயகிதன்
பாடக மெல்லடி யாடவர் போற்றிப் பணிவதுண்டோ
சூடக வங்கைய ரெங்கையர் காணிற் றுரிசுடைத்தே. (422)
நின்னல தங்கவர் யாரையு மறியே னென்றல்.
தேமல் நீயதி லூறிய தேனுகர் தோளியே
நாமிது வன்றி யிலையிலை தும்பி யருந்திடுமோ
யேமுறு நானடி தாழ்ந்து மிரங்கிலை யீதழகோ
மாமல ராள்புகழ் சிங்கார வேலர் மயிலைமின்னே. (423)
காமக் கிழத்தியைக் கண்டமை பகர்தல்.
காணிக்கை யிட்டு மகுடா திபர்பணி கம்பமதில்
மாணிக்க வாலயன் சிங்கார வேலன் மயிலைநண்பா
நாணிக் கவிழ்ந்து நிலங்கிளை யாவொரு நங்கைமகற்
பேணிக் கடைத்தலை நின்றா ளுரிமைகள் பேசினனே. (424)
தலைவியைப் பாங்கி பு(த)லவி தணித்தல்.
மள்ளர்க் கடல்புரி சிங்கார வேலர் மயிலையொப்பாய்
உள்ளத் தறிவு புலன்வழி யோடிப்பி னுள்ளமுற்றால்
தள்ளக் கருதுவ துண்டோ வுளமந்தத் தன்மையைப்போற்
கொள்ளக் கடவது கற்பாற் கணவர் குறைபொறுத்தே. (425)
தணியாளாகத் தலைமக னூடல்.
தாழ்ந்தா லிரவி புவிநீளு நீழற் றலையில் வந்தால்
வாழ்ந்தே யடியு ளடங்குமந் நீழலொப் பாகுமன்பா
சூழ்ந்தேசெய் செய்கையு மானார் வெகுளியுஞ் சொல்லிலென்னுள்
வாழ்ந்தான் மயிலையிற் சிங்கார வேலர் வரையிடத்தே. (426)
அன்பிலை கொடியையென் றிணர்த்தார் மார்பனை இகழ்தல்.
வாடலின் றாமலர் சிங்கார வேலர் மயிலைநண்பா
ஆடலும் பாடலுஞ் செய்வார் வெகுளி னவரடியை
சூடலுங் கூடுந் துதித்தலுங் கூடுந் துணையுயிராந்
தேடருந் தேன்மொழி பால்வெகுண் டேல் சிறப்புனக்கே. (427)
காமக்கிழத்தி வாயில் வேண்டல்.
மாமற்கு வாழ்வருள் சிங்கார வேலர் மயிலைவெற்பிற்
காமக் கமைந்தவென் போல்வார்க் கிதுதகுங் கற்பமைந்த
வாமக் குலக்கொடி காய்கனி யாஞ்சொலும் வாறதென்னே
தாமப் புயத்தன்பர் செய்யா தனவில்லை தாழ்ந்துநின்றே. (428)
பாங்கி வாயினேர்வித்தல்.
நீரோட நோக்க நிறம்பசப் பூர நிமிர்ந்தகொங்கை
பீரோட வீன்ற புதல்வனும் வாடப் பெரும்புலவி
வேரோட வூடல் முறையோ விரங்குக வெஞ்சமஞ்செய்
வாரோட வென்றவன் சிங்கார வேலன் மயிலைமின்னே. (429)
ஆயிழை மைந்தனு மாற்றாமையும் வாயிலாக
வரவெதிர் கொள்ளல்.
சூளைப் பிரிக்கக் கரும்பாறை விட்டுறத் தோன்றல்வல்லே
காளை வரச்செய் தனனிளைப் பாரக் கருதிவேரூர்
நாளை யடுப்பைப் பிரியாம லாக்கினை நல்லன்னமே
வேளை மயிலையிற் சிங்கார வேலனை வேண்டிநின்றே. (430)
தலைவி புதல்வனைப் புகழ்தல்.
பெருமைக் குருபுத் திரனிரு ராமர்முன் பெற்றவருக்
கொருமைப் புதல்வர்க ளாகியுந் துன்ப முதவினரால்
அருமைப் புதல்வ னிவனெமக் கென்றுமின் பாதல்செய்தான்
வருமைப் புறத்திவர் சிங்கார வேலர் மயிலையுள்ளே. (431)
தலைவி தலைவனைப் புகழ்தல்.
கூறுங் கொடுமை பலவும் பொறுத்துக் குணமெனக்கு
தேறும் படியெந்த நாளும் புரிந்து சிறப்பருளி
ஊறுங் கனிவருள் சிங்கார வேல ருவர்மயிலைப்
பேறுங் கொடுத்தனர் நங்கா தலரன்பு பேசரிதே. (432)
பாங்கி தலைவியைப் புகழ்தல்.
களவிற் குறியிடை யீடும் பிரிவொடு கௌவையும்போ
மளவிற் பெருகிய வாட்டமுங் கற்பி லயலொழுக்கும்
வளவிற் கரத்தினன் சிங்கார வேலன் மயிலைவெற்பில்
உளவிற் பனமின் பொறுத்தன பாங்கி லுயர்ந்தனனே. (433)
------------------------
கல்விப் பிரிவு.
தலைவன் பாங்கிக் கறிவுறுத்தல்.
காரா மணியுந் துவரையுங் கொள்ளுங் கடலையடுத்
தோரா மயிலையிற் சிங்கார வேல னியம்புமெய்நூற்
சீரார் பயோத்திப் பான்மதி மந்தரஞ் சேர்த்துமதித்
தாரா வமுதுகர் ணுண்டார்கண் டாரின்ப மாரணங்கே. (434)
தலைவனைப் பாங்கி விலக்கல்.
தேருங் கலைசென்று தேர்வே னெனுஞ்சொல் செவியுறுமுன்
நாருஞ் சொல்வல்ல வேதங் கரைகண் டனனளியேன்
சேருங் கருணையன் சிங்கார வேலன் றிருமயிலை
ஊரும் புரவறி வாகாசென் றெங்ங னோதுவதே. (435)
தலைவன் பாங்கியை உடன்படுத்தல்.
இற்கா தலியியற் சொற்கா தலியென் றிருவர்மின்னா
நற்கா தலர்க்குளர் செந்தேன் மனைவியை நம்புமுன்னால்
அற்காத கல்விமின் னாள்சேர் வுஞ்செய் யணிமயிலைப்
பொற்காண் மலர்த்துணைச் சிங்கார வேலர் பொருப்பணங்கே. (436)
பாங்கியுடன்படுதல்.
ஒருபிறப் போதிய கல்வி யெழுமையு முற்றுதவுந்
தருபிறப் பூதிய மென்றாலென் செய்வது தக்கமறை
இருபிறப் பாளர் பயில்பெரு வேள்வி யியன்மயிலை
வருபிறப் பார்க்கருள் சிங்கார வேலர் வரையண்ணலே. (437)
பாங்கி தலைவிக் கறிவுறுத்தல்.
மல்லற் சரவணச் சிங்கார வேலர் மயிலையன்பன்
சொல்லச் சிறந்தமெய்ப் பூம்பாவை வேலப்பன் சொற்புதல்வன்
செல்வக் குமர குருநாத பூபதி தேர்வதுபோல்
கல்விப் பொருள்முற்றுந் தேர்ந்துசெல் வார்நண்பர் காதலியே. (438)
கார்ப் பருவங் கண்டு தலைவி மருங்கல்.
அம்புஞ் சிலையும் பிடித்துமின் வாள்விதிர்த் தார்த்துமுகில்
பம்பும் பொழுது காயம் படாதளிப் பாரெவர்காண்
நம்புங் கருணையர் சிங்கார வேலர்புன் னாகமலர்க்
கொம்புந் தரளந் தருமயிலாபுரிக் கோகிலமே. (439)
பாங்கி யாற்றுவித்தல்.
செய்யாடன் மால்பணி சிங்கார வேலர் திருமயிலைப்
பையாடு நாகம் பிடித்தாட மஞ்ஞை படர்விசும்பின்
மையாடன் நோக்கி வருவார் மையாடன் மகிழ்ந்துசென்றார்
பொய்யா டலர்முகின் மின்னுக்குத் தீங்கு புரிவதின்றே. (440)
--------------------------
காவற் பிரிவு.
தலைவன் பாங்கிக் கறிவுறுத்தல்.
பூவலை யத்துப் புறப்பகை யுட்பகை போக்கியருட்
காவலைச் செய்வதற் கேகுவன் வென்றிசெய் காற்படையாம்
சேவலைக் கொண்டவன் சிங்கார வேலன் திருமயிலைக்
கூவலைக் கொண்ட குயில்போலுந் தேமொழிக் கோமளமே. (441)
பாங்கி தலைவிக் கறிவுறுத்தல்.
முறைவேண்டி னாருங் குறைவேண்டி னாரு முகம்பெறமெய்த்
துறைவேண்டு நல்லற மோங்கிட வாருயிர் துன்பக
நிறைவேண்டு நாடு புரப்பான்சென் றாரன்பர் நீண்மயிலைப்
பொறைவேண்டு சிந்தையன் சிங்கார வேலன் பொருப்பணங்கே. (442)
தலைவி கூதிர்ப் பருவங் கண்டு மயங்கல்.
வாடை துருத்தி யுடலுலை காமம் வளருமனல்
மாடை யுயிரென நின்றே யுருகி மயங்குகின்ற
சோடை யறிந்திலர் பேடையுஞ் சேவலுந் தோய்வதுநீர்
ஓடை மயிலையிற் சிங்கார வேலவ னூரன்பரே. (443)
பாங்கி யாற்றுவித்தல்.
நாடெங்கும் வாழ விடரெட்டு நீக்கி நலனளித்துத்
தோடொன்று மாலை மலிமார்பர் வந்தனர் சூழ்வரைமேல்
ஏடென்றும் வாழ்த்தும் மயிலா புரிவள்ளல் வேள்விவந்த
வாடென்று மேறிய சிங்கார வேலர்வெற் பாரணங்கே. (444)
-----------------------------
தூதிற் பிரிவு.
தலைவன் பாங்கிக் கறிவுறுத்தல்.
கையானை மாவினம் பண்விடத் தோனிலை காணவைவேல்
நொய்யார வாய்தற் கதவந் திறந்திட நேருமன்னர்
மொய்யார யான்செல்வன் சிங்கார வேலர் மொழிமயிலை
மையாடு கண்ணியை யாற்றுதி தேற்றுதி மாணிழையே. (445)
பாங்கி தலைவிக் கறிவுறுத்தல்.
முருந்தமர் மூர லணங்கே யிருமன்னர் முண்டுபன்னாள்
வருந்தமர் தீர்த்து வரவேகி னாரன்பர் வாடினையேல்
திருந்தம ரேசுரன் சிங்கார வேலவன் சீரடியார்க்
கருந்தமர் தாய்தந்தை யானோன் மயிலை யணிவரைக்கே. (446)
முன்பனிப் பருவங்கண்டு தலைவி மயங்கல்.
தனித்தவம் பூண்ட முனிவோருந் தம்முழந் தாளணைத்துக்
குனித்துடல் வாடிக் கிடக்கும் பனியினிற் கூடலின்றி
இனித்தினம் போக்குவ தெவ்வாறு காவல் செய்திலரால்
மனித்தரன் பாற்பணி சிங்கார வேலர் மயிலைமின்னே. (447)
பாங்கி யாற்றுவித்தல்.
அந்தணர் ரானின் மூத்தோர் மடந்தையர்க் கச்சமின்றி
வந்தனர் தங்கள் பதிதோறு மாதலின் மாமயிலைக்
கந்தனைச் சேந்தனைச் சிங்கார வேலனைக் கார்த்திகையார்
மைந்தனைப் போற்றன்ப ரெய்தினர் தூது வகுத்துரைத்தே. (448)
-----------------------
துணைவயிற் பிரிவு.
துணைவயிற் பிரிவு தலைவன் பாங்கிக் கறிவுறுத்தல்.
சிலைவஞ்ச நெஞ்ச வசுரேசர் யாருஞ் சிதையவென்றோன்
மலைவஞ்சி கொஞ்சிய சிங்கார வேலன் மயிலை நங்காய்
தொலைவஞ்சி நொச்சி மதிண்மன்னர் சூடத் துணைவருக்காய்த்
தலைவஞ்சி சூடின னீயிடை வஞ்சிக்குச் சாற்றுகவே (449)
பாங்கி தலைவிக் கறிவுறுத்தல்,
மருமலை யாண்மகன் சிங்கார வேலன் மயிலைவெற்பிற்
பொருமலை யானனம் போலிடை வார்குழற் பூங்கொடியே
தருமலை யார்பட நான்குடன் சூழத் தலைவர்சென்றார்
செருமலை யாநின்ற வேந்தர்தம் போர்த்துணை செப்புதற்கே. (450)
பின்பனிப் பருவங்கண்டு தலைவி மயங்கல்,
முடுகிய மஞ்ஞையை யூர்ந்தரு ளாறு முகன்மயிலைத்
தொடுகுழை நீள்செவிச் சிங்கார வேலர்த் தொழாரெனவே
கடுகிய பின்பனிக் காலமென் னார்பனிக் காலமென்றல்
இடுகுறி யேனும் பிரிந்தாருக் கின்ன லிடுகுறியே. (451)
பாங்கி யாற்றுவித்தல்.
தளபங் கயந்திரு மாமனை யாகுந் தடமயிலை
யுளபன் னிருபுயன் சிங்கார வேலவ னோங்கன்மின்னே
களபம் புனைபுனை மெய்யணி மையணி கார்விழிக்கு
வளபன் மலைமன்னர் வந்தார் துணைமன்னர் வாழ்த்துடனே. (452)
பொருள்வயிற் பிரிவு.
தலைவன் பாங்கிக் கறிவுறுத்தல்.
என்னத்த னானவன் சிங்கார வேல னெழின்மயிலை
வன்னத் தனத்துணை மார்புறச் சேர்ந்து மரலணைமேற்
சொன்னத்தை யான்மற வேனெனப் பொன்னிறந் தோன்றி வெம்பும்
அன்னத்தை யாற்றுதி யானாசை கொண்டிங் கணைகுவனே. (453)
பொருள்வயிற் பிரிவு பாங்கி மறுத்தல்.
கட்டிட்ட செச்சையன் சிங்கார வேலன் கவின்மயிலைப்
பொட்டிட்ட வாணுத லாளைப் பிரிந்து போர்க்ககல்வாய்
முட்டிட்ட குண்டரை வென்றருள் சம்பந்த மூர்த்திசொன்ன
மட்டிட்ட புன்னைத் தமிழ்போற் றமிழ்சொல் வரம்பெற்றிலே. (454)
பாங்கியைத் தலைவனுடன்படுத்தல்.
வில்லாந் தடம்புயன் சிங்கார வேலன் வியன்மயிலை
யெல்லாந் தரும்பொருள் மேன்மேலு மீட்ட லிறைவர்தொழில்
வல்லாந் துணைமுலை யாய்மேடப் பானு மயிலையுறச்
சொல்லாம் பெருநிதி கொண்டேயது வென்சொலச் சொல்லுகவே. (455)
பாங்கி யுடன்படல்.
சிற்பர னவருள் சிங்கார வேலன் திருமயிலைக்
கற்பியன் மாதர் கணவர்சொற் காத்தல் கடனேன்னி
சொற்பிரி வாய்கல்வி தூதொடு காவல் துணைபொருளால்
கற்பிரி வாயெண்ணில் யானேது சொல்வ திறையவனே. (456)
பொருள்வயிற் பிரிவு பாங்கி தலைவிக் குணர்த்தல்.
நிரைதொடி கேளம்மை பான்மடி மேவி நிமலரொடு
முரைப்பில் காதலன் சிங்கார வேலவ னுயர்மயிலைத்
திரை கடலோடியுந் தேடு திரவியஞ் செவ்விதென்ற
புரைதவி ரவ்வைசொல் லாய்ந்தேகி னார்நம் புரவலரே. (457)
பொருள்வயிற் பிரிவுழித் தலைவனழுங்கல்.
வலந்தரும் வச்சிரன் சிங்கார வேலன் மயிலைவெற்பிற்
கலந்திரை யாரு மயிலென்று நான்சொலக் காற்கடன்மேற்
புலந்தரப் போதல்சொன் னாரென்று சோர்ந்தயர் பூவைமெய்யே
நலந்தரு மீழத்திற் சென்றாலெவ் வாறுய்யு நானிலத்தே. (458)
இளவேனிற் பருவங்கண்டு தலைவி வருந்தல்.
செக்கர்ச் சிவந்தவன் சிங்கார வேலன் றிருமயிலை
இக்கிற் கனிந்த சொல்லா மிளவேனி லிசைதலுமே
கொக்குக் குயிற்குர னன்காடை சோரக் குருகுவிழ
மிக்குற்ற தெங்ங னகழ்மா மதிலன்னம் வேண்டுவதே. (459)
வருந்திய தலைவியைப் பாங்கி யாற்றுவித்தல்.
ஆனிடந் தாவி யமர்ந்தருள் வானமக னன்புவள்ளி
மானிடந் தான்மகிழ் சிங்கார வேலன் மயிலைமின்னே
தேனிடந் தாதலர் பூந்தளிர் தேம்பொழில் சேர்தரத்தேன்
கானடந் தீங்கு வரலால் வருவர்நங் காதலரே. (460)
தலைவன் வந்தமை பாங்கி தலைவிக் குணர்த்தல்.
வாரையம் பன்மணி சிங்கார வேலர் மயிலைவெற்பர்
ஆரையுந் தன்வச மாக்கு நிதிபல வாக்கிவந்தார்.
தாரையுஞ் சங்குந் தருமோசை காதுளச் சார்ந்தனநின்
தாரையுஞ் சங்கு மினியோகை கூருந் தளிரியலே. (461)
தலைவன் வந்துழி மகிழ்ச்சி.
உள்ளங் குளிர்ப்ப நயனங் களிப்ப வுடலம்விம்ம
வள்ளம் பொருமுலை பூரிப்ப வின்ப மருவியதால்
தெள்ளும் பெரும்புகழ்ச் சிங்கார வேலர் திருமயிலை
வெள்ளந் தருநிதி வேன்மன்ன நீவர மெல்லியற்கே. (462)
இதுவுமது.
கோகன கந்தர மஞ்சன நித்திலக் கோவைகொள்ள
கோகன கம்பொரு மாமுலை யாளின்பங் கூர்ந்தனளால்
கோகன கம்புனை சிங்கார வேலர் குலமயிலைக்
கோகன கந்திகழ் வேலார் சயங்கொண்ட கொற்றவனே. (463)
திருச்சிற்றம்பலம்.
திருமயிலைக் கோவை முற்றும்.
விக்ருதி வருஷம் பங்குனி மாதம் 17உ சோமவார நாள் அத்த நட்சத்திரமும் பிரதமை,
சுபயோகம், சுபகரணம் பெற்ற தினத்தில் குரு க்ஷேத்திர பூமியாகிய தருமபுரத்திலிருக்குங்
குரு சுவாமியருளில், சிவஞான தேசிகன் சந்நதி தானத்திலிருக்கும் அம்பலவாண கவிராய
சிகாமணியார் பாடின திருமயிலாப்பூர்க் கோவை எழுதி நிறைவேறினது.
கற்பகந்துணை. இந்த ஏடு நீடூழி வாழ்க. பூம்பாவை யீசுவரன் துணை.
சிங்கார வேலர் துணை. வயித்தியநாத சுவாமி துணை. குழந்தை வடிவேலன் துணை.
குருபாதந் துணை.
===========================
This file was last updated on 15 May 2026.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)