pm logo

வைத்தியநாத தேசிகர் இயற்றிய
கமலாலய அம்மன் பிள்ளைத்தமிழ்

kamalAlaya amman piLLaittamiz
by vaithiyanAta tEcikar
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
We thank Dr. Meenakshi Balaganesh, Bangalore, India for her assistance in the preparation of this work for publication.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2026.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

வைத்தியநாத தேசிகர் இயற்றிய
கமலாலய அம்மன் பிள்ளைத்தமிழ்

Source:
கமலாலய அம்மன் பிள்ளைத்தமிழ்
தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர்
பதிப்பாசிரியர்: புலவர் வீ. சொக்கலிங்கம்,
தமிழ்த்துறை (ஓய்வு), சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர்.
தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர்.
2006 ] [விலை : ரூ. 35-00
தஞ்சாவூர் சரசுவதி மகால் வெளியீட்டு எண். 492
---------------
நூற்பதிப்பு விளக்கக் குறிப்பு
நூற்பெயர் : கமலாலய அம்மன் பிள்ளைத்தமிழ்
பதிப்பாசிரியர் : புலவர் வீ. சொக்கலிங்கம்,
வெளியிடுபவர் : இயக்குநர், சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர்.
வெளியீட்டு எண். : 492
மொழி : தமிழ்
பதிப்பு : முதற்பதிப்பு
வெளியீட்டு நாள் : 2006
தாள் : TNPL 18.6 கி.கி
நூல் அளவு :24x 14 செ.மீ.
பக்கங்கள் : 88
படிகள் : 250
எழுத்து :12 புள்ளி
அச்சிட்டோர் :ஒளி அச்சு, சரசுவதி மகால் நூலகம்.
புத்தகக்கட்டு : லேமினேசன் அட்டை
பொருள் :இலக்கியம்
விலை : ரூ.35-00
-------------
வெளியீட்டாளர் முகவுரை

கமலாலய அம்மன் பிள்ளைத்தமிழ் பற்றிய இச்சுவடி, எமது மகால் எம். 455/டி.310 எனும் எண்ணுடையது. ஒப்புநோக்குதற்கு வேறு சுவடிகள் கிடைத்தில. இச்சுவடி சிதைந்தும், முறிந்தும், அழிந்தும், பூச்சியரித்தும் காணப்படுவதால் செய்யுட்களை உருவாக்குவது மிகவும் கடினமாயிற்று. இலக்கணப் பிழைகளும், சந்தக்குறைவுகளும் மலிந்து கிடந்தன. இருப்பினும் இதன் பதிப்பாசிரியர் மிக முயன்று இந்நூலைச் சிறப்புற பதிப்பித்துள்ளார்.

பிள்ளைத்தமிழ் என்பது தமிழ் மொழியில் அமைந்த தொண்ணூற்றாறு சிறு பிரபந்த வகைகளுள் ஒன்றாகும். இதுபோன்ற அமைப்பு தொல்காப்பியர் காலத்தேயே இருந்திருக்கிறது என்பதை “குழவி மருங்கிலும் கிழவதாகும்” என்னும் தொல்காப்பிய நூற்பாவுக்கு நச்சினார்க்கினியர் போன்ற உரையாசிரியர்கள் கூறும் உரைகளால் நன்கு உணரலாம். குழவிப் பருவத்துக் குழந்தையைக் காக்க என்று கூறுதலையும், அக்குழவியைப் பாராட்டுமுகத்தால் செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் எனப் பெயரிட்டு வழங்குதலையும் நச்சினார்க்கினியர் எடுத்துக் காட்டி விளக்குகிறார். முற்கால இலக்கியங்களில் அங்கங்குப் பிள்ளைத்தமிழுக்குரிய பத்துப் பருவங்களில் காணப்படும் தலைப்பு பற்றிய பாடல்கள் ஒன்றிரண்டு தனித்து வந்துள்ளனவே தவிர, பிள்ளைத்தமிழ் போன்று முறையாக நிரல்படுத்த யாண்டும் காணப்பெறவில்லை. பெரியாழ்வார் பாடல்களே தமிழுக்கு முன்னோடியாய் அமைந்தன எனக்கருதலாம்.

இந்நூல் வைத்தியநாத தேசிகர் என்பவர் சிவபக்தி மேலீட்டாலும், தாயன்பு வேட்கையாலும், திருவாரூரில் கமலாலயத்தில் கோயில்கொண்டு எழுந்தருளியுள்ள கமலாம்பிகை மீது பாடிய “கமலாலய அம்மன் பிள்ளைத்தமிழ்" ஆகும். இதுவே இவர் இயற்றியருளிய முதல் நூலாகும். இசை நயமும், சொல்லழகும், பொருளழகும் மிக்கது இந்நூல்.

இச்சுவடியின் பதிப்பாசிரியர் புலவர் வீ. சொக்கலிங்கம் முன் தமிழ்த்துறை முறைபோகிய வித்தகர். இந்நூலகத்தில் சற்றேறக்குறைய 35 ஆண்டுகள் தமிழ்ப்பண்டிதராகப் பணியாற்றி, நாற்பதிற்கும் மேற்பட்ட தமிழ்ச்சுவடிகளை பதிப்பித்தளித்த பெருமைக்குரியவர். இந்நூலில் அரிதின் முயன்று பிள்ளைத்தமிழ் எனும் பெயரால் எழுந்த 227 நூல்களை அகர வரிசைப்படுத்தி பட்டியல் ஒன்றைத் தந்துள்ளார். மேலும் இந்நூலில் இடம்பெறும் தேவார முதலிகள் மூவரில் சுந்தரர் பற்றிய வரலாற்றுச் செய்தினைச் சுவைபடத் தொகுத்துத் தந்துள்ளார். இந்நூல் இவரால் மிகச் சிறப்பாக பதிப்பிக்கப்பட்டுள்ளது. அன்னாருக்கும் என் இனிய பாராட்டுகள்.
இந்நூல் வெளிவர நிதி உதவி நல்கிய நடுவண் அரசுக்கும், நிருவாக அலுவலர் மற்றும் வெளியீட்டு மேலாளர் (பொறுப்பு) திரு. சாமி. சிவஞானம் அவர்களுக்கும், இந்நூல் அச்சில் வெளிவர, கணினி பிரிவில் பணிபுரிந்துவரும் அனைவருக்கும் எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தஞ்சாவூர்.
26-9-2006       சா. விஜயராஜ் குமார், இ.ஆ. ப.,
      மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும்
      இயக்குநர், சரசுவதி மகால் நூலகம்.
------------------------------------------------
நூன்முகம்

உ : தமிழ் வாழ்க.
பூங்கமலத் தயனொடுமால் அறியாத நெறியானே
கோங்கலர்சேர் குவிமுலையாள் கூறாவெண் ணீறாடி
ஓங்கெயில்சூழ் திருவாரூர் உடையானே அடியேனின்
பூங்கழல்க ளவையல்லா தெவையாதும் புகழேனே.

நற்றமிழ்வல்ல புலவர்கள் பலர் தாமேயன்றி, மன்பதைகளுய்வான் வேண்டிப் பாமாலைகளைப் பாடித் தாம் பெற்ற பேற்றை இவ்வையத்துக்களித்தனர். சைவ சமயப் புலவர்கள் பலர் பாடித்தந்த பாமாலைகள் பலப்பல. அவ்வாறு பாடிப் பெரும்பத மெய்திய சைவப்புலவர்களுள் திருவாரூரில் கோயில்கொண்டு எழுந்தருளுயுள்ள தியாகேசப் பெருமான் அருகிருக்கும் கமலாம்பிகை மீது பிள்ளைத்தமிழ் பாடிய புலவரும் ஒருவராவர். இவர் பெயர் வைத்தியநாத தேசிகர்.

"பிறக்க முக்தி தருவது திருவாரூர்" எனும் சிறப்பினைக் கொண்டது திருவாரூர். இதனை "அறந்தான் மிகவும் புரிந்தார் பெறும் பயனத்தனையும் பிறந்தார் பெறுந் திருவாரூர்” என்று சைவ எல்லப்பநயினார் தாம் இயற்றிய திருவாரூர்க்கோவை 216-ம் செய்யுளில் கூறுகின்றார். தேவாரம் பெற்ற சோழநாட்டுத் தலங்களுள் திருவாரூர் ஒன்று. மாணிக்கவாசகரின் திருவாக்கால் புகழ்ந்து பாடப்பட்ட சிறப்பினைக் கொண்டதும் இதுவேயாகும். 'கமலாலயம்' என்பது இத்தலத்திற்கு மற்றொரு பெயர். இதனை "ஐயானனத்தார் கமலாலயத்தி லணங்கனையாய்" என்னும் ஆரூர்க்கோவை 147-ம் பாட்டால் அறியலாம். 'பூங்கோயில்' என்பது தியாகராசர் வீற்றிருக்கும் கருவறையின் பெயர்.

திருவாரூரின் தேவதீர்த்தம் எனப்படும் குளத்திற்கும் கமலாலயம் என்பது பெயர். தியாகேசரின் கோயில், குளம், செங்கழுநீரோடை, மதில் இவைகள் ஒவ்வொன்றும் ஐந்தைந்து வேலி நிலப்பரப்பினையுடையன. இதனை,

"குளம் வாவி மதில் ஐவேலியாந் திருவாரூர்''
(திருவாரூர்க்கோவை: 209) என்பதால் அறியலாம்.

இவ்வூரின் மற்றைத் திருநாமங்கள்: கமலை, சமற்காரபுரம், பூங்கோயில், தேவயாகபுரம், கந்தபுரி, வானகரம், தேவாசிரயம், மூலாதார நகர், கலிபுகா நகரம், தென்னாரம், தக்கேசுரம், பரையூர், ஆடகவூர், முசுகுந்தபுரம், வன்மீகபுரம் என்பன. இவற்றை இந்நூலின் 52-ம் பாட்டால் அறியலாம். மற்றும் இத்தலச் சிறப்பினைத் திருவாரூர்ப் புராணம், தேரூர்ந்த சோழபுரணம், கமலாலயச்சிறப்பு, தியாகராசலீலை, திருவாரூர் நான்மணிமாலை, தியாகராசர் குறவஞ்சி, தியாகராசர்பள்ளு, திருவாரூர்ப் பன்மணிமாலை, திருவாரூர் மாலை, கமலாம்பிகை மாலை, திருவாரூருலா, திருவாரூர் மருந்து வெண்பாமாலை, தியாகேசர் தாலாட்டு, கமலாம்பிகை பிள்ளைத்தமிழ் முதலான தமிழ்நூல்களாலும், அஜபா ரகஸ்யம், ஆடகேஸ்வர மகாத்மியம், கமலாலய மகாத்மியம், தியாகராசலீலை, ஸ்கந்தபுர மகாத்மியம் முதலான வடமொழி நூல்களாலும் அறியலாம். தஞ்சாவூரூக்கு “மகுடாகமம்" போல இத்தலத்திற்கு ஆகமம் "காமிகம்".

கைலையில் ஆலால சுந்தரராக இருந்து அநிந்திதை, கமலினி ஆகியோரைக் காதலித்ததால், மண்ணுலகடைந்து இன்பம் பெற்றுவர இறைவன் சாபமிட்டகாலை, ஆலாலசுந்தரர் தன்னைத் தக்க சமயத்தில் தடுத்தாட்கொள்ள வேண்டுமென்று இறைவனை வேண்டிக்கொண்டார். அவ்வாறே சுந்தரராய்ப் பிறந்து திருமணக்கோலம் கொண்டிருந்தபோது "வழக்கோலை கொண்டு கிழக்கோலமாக” இறைவன் வந்து தடுத்தாட்கொண்டதை இதன் 35-ம் பாடலில் அழகாக எடுத்துரைக்கிறார் ஆசிரியர்.

உலகத்தார் கண்களுக்குப் புலப்படாத எம்பெருமானுடைய திருவடிகள், வன்றொண்டர் என்னும் இச்சுந்தரமூர்த்தி நாயனாருக்காகப் பரவை நாச்சியாருடைய ஊடலைத் தீர்க்கும்பொருட்டு இத்திருவாரூரில் உள்ள அவளது மனையளவும் போய்வந்ததை

... ... ... சகத்தோர்
தனையளவு காணாத தாளாற் பரவை
மனையளவு போய்வந்தான் வந்தான்
      -என்கின்றது திருவாருருலா.

அத்தகு சிறப்புடைய பரவை நாச்சியார் பங்குனி உத்தர விழாவிற்குச் சுந்தரரரிடம் பொன் கேட்க, அவர் "திருமுதுகுன்றம்” எனும் விருத்தாசலம் சென்று, இறைவனைப் பாடிப் பொன்பெற்றார். அதனை ஆங்கிருந்து ஆரூருக்குக் கொண்டுவரும் வழியில் கள்வர் பயம் மிகுதியால் முதுகுன்றில் உள்ள மணிமுத்தாற்றில் இட்டுத் திருவாரூரை யடைந்தார். பரவையாருடன் கமலாலயக் குளக்கரையடைந்து முதுகுன்றத்திறைவனை "பொன்செய்த மேனியனீர்... .' என்றெடுத்து,எட்டுப்பாடல்கள் பாடியும் பொன் கிடைக்காமை கண்டு பரவை நாச்சியார் "ஆற்றிலிட்டுக் குளத்தில் தேடுவீர்!' எனப்பரிகசிக்க, வருந்திய நம்பியாரூரர் “ஏத்தாதிருந்தறியேன்...” எனத் தொடங்கும் ஒன்பதாம் பாடலைப்பாடவே முதுகுன்றையரருளால் முதுகுன்றிலுள்ள விநாயகர், மணிமுத்தா நதியில் மூழ்கி, அங்கிருந்து பொன்னோடு இக்கமலாலயக் குளத்துள்ளிருந்து எழுந்து மாற்றுரைத்துக் கொடுத்த வரலாற்றினை, இந்நூலின் 91- ம் பாடலாலறியலாம்.

இங்குள்ள இறைவியின் பெயரே இப்பாட்டுடைத் தலைவி கமலாம்பிகை. மற்றொரு (இறைவியின்) பெயர் அல்லியங்கோதை.

இங்குள்ள தெய்வங்களைப் பூசித்துப் பேறுபெற்றோர் தண்டியடிகள் நாயனார், நமிநந்தியடிகள், திருமால், முசுகுந்தசக்கரவர்த்தி, தசரதன், மனுநீதிச்சோழன், மன்மதன் முதலானோர். இவற்றை இந்நூலின் 89-ம் பாடலால் அறியலாம்.

தியாகேசப்பெருமானைத் தேவலோகத்தினின்றும் முசுகுந்தச் சக்கரவர்த்தி கொண்டுவந்து திருவாரூரில் அமைத்ததாக வரலாறு.

'நேச முசுகுந்த மன்னன் - அம்மே
நிதம்பணியும் வாசலிது - அம்மே
நிதம்பணியும் வாசலிது"
      -என்பது தியாகேசர் குறவஞ்சி.

திருவாரூர் கமலாம்பிகையோடு தொடர்புடைய பல வரலாற்றுச் செய்திகளை இந்நூலாசிரியர், இந்நூலின் பலவிடங்களில் அழகாக எடுத்துரைக்கின்றார்.

இனி, பிள்ளைத்தமிழ் என்பது, ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாரகவி ஆகிய நான்கில் வித்தாரகவியின் முதலாவதாகும். இது தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்களுள் ஒன்றாகும். இதற்குப் “பிள்ளைக்கவி” எனவும், "பிள்ளைப்பாட்டு" எனவும் வேறு பெயர்கள் உண்டு. இது தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே இருந்து வந்ததென்பதனை.

"குழவி மருங்கிலும் கிழவதாகும்” என்பதாலறியலாம். இதற்கு உச்சிமேற்புலவர் கொள் நச்சினார்க்கினியரும்,
"குழவிப் பருவத்தும் காமப்பகுதி உரியதாகும்" என உரைகண்டார்.
`சாற்றரிய காப்புத்தால் செங்கீரை சப்பாணி
மாற்றரிய முத்தமே வாரானை - போற்றரிய
அம்புலியே ஆய்ந்த சிறுபறையே சிற்றிலே
பம்புசிறு தேரொடும் பத்து.'

என்பது குணவீர பண்டிதர் இயற்றிய வச்சணந்தி மாலை எனும் வெண்பாப்பாட்டியல்.
ஆனால் பன்னிரு பாட்டியலில்
'காப்பொடு செங்கீரைத் தால்சப் பாணி
யாப்புறு முத்தம் வருகவென்றல்முதல்
அம்புலி சிற்றில் சிறுபறை சிறுதேர்.'

என்று கூறப்பட்டுள்ளது. இவற்றில் தாலமும் சிறுபறையும் பருவம் மாறுபட்டுள்ளன. ஆயினும்
"தூறுகொலை நீக்கித் தெய்வக்காப்பாய்ச் சுற்றம்
      தொகையளவு வகுப்பகவல் விருத்தம் தன்னால்
முறைகாப்புச் செங்கீரைத் தால்சப் பாணி
      முத்தம்வா ரானையம் புலியி னோடு
சிறுபறைசிற் றில்சிறுதேர் இவையின் மூன்றும்
      தெரிவையர்க்குப் பெருங்கழங்கம் மானை யூசல்
பெறுமூன்று முதலிருபத் தொன்று ளொற்றைப்
      பெறுதிங்கள் தனில்பிள்ளைக் கவியைக் கொள்ளே!”
என்று பரஞ்சோதி முனிவர் தாம் இயற்றிய சிதம்பரப் பாட்டியலில் தெளிவுபடக் கூறியிருக்கிறார்.

பிள்ளைத்தமிழ் ஆசிரியச் சந்தவிருத்தத்தாற் பாடற் பெறும். ஆண்பாற் பிள்ளைத்தமிழ் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம்,வாரானை, அம்புலி, சிறுபறை, சிற்றில், சிறுதேர் எனப் பத்துப் பருவங்களையுடையது. பெண்பாற் பிள்ளைத்தமிழ் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி, கழங்கு, அம்மானை, ஊசல் எனப்பத்துப் பருவங்களையுடையது.

பெண்பாற் பிள்ளைத்தமிழுக்குரிய நீராடற் பருவத்திற்குப் பதிலாக சிவயோகநாயகி பிள்ளைத்தமிழ் முதலான நூல்களிற் கழங்காடற் பருவம் பாடப்பெறுகின்றது. ஆண்டாள் பிள்ளைத்தமிழில் மன்மத நோன்புப் பருவம் கூறப்படுகின்றது.

இனிப் பிள்ளைத்தமிழ், குழந்தையின் 3,5,7,9,11,13,15,17,19,24 ஆகிய மாதங்களில் பாடப்பெறும். ஆண்பாற் பிள்ளைத்தமிழே பழமையானதாகிலும், பண்டை இலக்கியங்களில் பெண்பாற் பிள்ளைத்தமிழுக்குரிய அம்மானை, ஊசல் முதலான பருவங்கள் விரவி வருகின்றன. சான்றாகச் சிலப்பதிகாரத்து அம்மானைவரி, ஊசற்பாட்டு, வான்கலந்த மாணிக்கவாசகரின் தேன்கலந்த திருவாசகத்துத் திருவம்மானை, திருப்பொன்னூசல், திருஞானசம்பந்தரின் திருக்கழுமலத்தேவாரம் முதலானவற்றால் அறியலாம். ஆண்பாற் பிள்ளைத்தமிழின் பருவங்கள் சிலவற்றையும் பண்டை இலக்கியங்களில் காணலாம். பட்டினப்பாலையில் சிறுதேர்ப் பருவத்தினையும், கலித்தொகையின் குறிஞ்சிக் கலியில் சிற்றில் சிதைத்தலையும் காணலாம். பொதுவாக அதிரா அடிகள் இயற்றியருளிய “[1]மூத்த பிள்ளையார் மும்மணிக்கோவை”யில் செங்கீரைப் பருவத்தினையும், சப்பாணிப்பருவத்தினையும்; பெரியாழ்வார் திருவாய் மலர்ந்தருளிய திருமொழியில் செங்கீரைப்பருவம், தாலப்பருவம், சப்பாணிப்பருவம், முத்தப்பருவம், வாரானைப்பருவம், அம்புலிப்பருவம், சிற்றில் பருவம் ஆகிய பருவங்களையும் காணலாம். மேற்கூறியவைகள் பிள்ளைத்தமிழ் என்ற பெயரால் இல்லையெனினும் பிள்ளைத்தமிழ்ப் பருவங்களைக் கொண்டவைகள்.
--- [1]. ஒன்பதாந்திருமுறையில் உள்ளது.
-------------------------------
நூலாசிரியர் வைத்தியநாத தேசிகர் வரலாறு


பூங்கமலத் தயனொடுமா லறியாத நெறியானே
கோங்கலர்சேர் குவிமுலையாள் கூறாவெண் ணிறாம
ஓங்கெயில்சூழ் திருவாரூ ருடையானே யடியேன்நின்
பூங்கழல்க ளவையல்லா தெவையாதும் புகழேனே.

என்று மாணிக்கவாசக சுவாமிகளால் புகழ்ந்து பாடப் பெற்ற பெருமையினையுடைய திருவாரூரின் கண்ணே வழிவழிச் சைவாசாரியார் மரபிலே, சிவபக்தி, குருபக்தி அடியார்கள் பக்தி சிறந்தோங்கிய வன்மீகாத தேசிகர் என்பார் ஒருவர் தோன்றினார். அவரது தவப்புதல்வராக இந்நூலாசிரியராகிய வைத்தியநாத தேசிகர் தோன்றினார். இளமையிலேயே தாயிழந்த இவர் சிற்றன்னைக் கொடுமையினால் சிலகாலம் துன்புற்றார். அதுபோது, திருவாரூரில் சிவநெறிச் செல்வரும் பெருந்தனக்காரருமான அகோரமுனிவர் என்பார் மேற்கூறிய வன்மீகநாத தேசிகரிடம் கல்வி பயின்றவர். ஆகவே அகோரமுனிவர் தனது ஆசான் மகனின் தோற்றப் பொலிவையும், அறிவுக்கூர்மையையும், அவலநிலையையும் கண்டு வன்மீகநாதரின் ஒப்புதலின் பேரில் வைத்தியநாத தேசிகரை அழைத்து வந்து தமதில்லத்திருத்தி, உணவு, உடை முதலானவைகளைக் குறைவின்றி அளித்துக் கல்வி போதித்தார். அகோரமுனிவரிடம் வைத்தியநாத தேசிகர் தென்தமிழும், வடமொழியும் ஐயந்திரிபறக் கற்றுத்தெளிந்து தமது ஆசிரியருடன் கங்கையாடக் காசிப்பயணத்தினை மேற்கொண்டார். செல்லுங்கால் திருவண்ணாமலையில் இருவரும் தங்க நேர்ந்தது. ஆங்கொரு சிறப்பு நிகழ்ச்சி அகோரமுனிவரின் மனத்தினை உருக்கியது.

வைத்தியநாதர் வழக்கம்போல் யோகக்கச்சினைக் கட்டியவண்ணம் நூலுங் கையுமாக மெய்மறந்து அமர்ந்திருந்த நிலையினைக் கண்ட அகோரமுனிவர் வியப்புற்று, தன்னையும் அறியாத நிலையில், மெய்சிலிர்க்க வைத்தியநாதரை வலம்வந்து, தமது ஆசான் வன்மீகநாதர் எனவே எண்ணி, இவரும் அவரது குலமுறைப்படி குருவுக்குச் செய்யவேண்டிய சிறப்பனைத்தும் செய்தார். “எனது உடன்பயின்ற நண்பர் ஒருவர் திருநெல்வேலியில் இருக்கின்றார். அவரிடம் தாங்கள் செல்லவேண்டும்" என்று வேண்டிக்கொண்டு அவருக்கு ஒரு முடங்கலும் எழுதிக் கொடுத்துத் தேசிகரை நெல்லைக்குச் செல்லவிடுத்துத் தாம் காசியடைந்தார்.

திருவண்ணாமலையினின்றும் புறப்பட்ட நம் தேசிகர் திருவாரூரையடைந்தார். சிவபக்தி மேலீட்டாலும், தாயன்பு வேட்கையாலும் கமலாலயத்தில் கோயில்கொண்டு எழுந்தருளியுள்ள கமலாம்பிகை மீது கமலாலய அம்மன் பிள்ளைத்தமிழ் பாடினார். இதுவே இவர் இயற்றியருளிய முதல் நூலாகும். சொல்லழகும், பொருளழகும் மிக்க இந்நூல் நினைந்து நினைந்து பாடி மகிழத்தக்கது. எல்லாப் பாடல்களும் ஓசை நயமுடையன. இசையில்லாது, மழலையோடு பாடினாலும் மிகமிக இன்பந்தரும் இச்செய்யுட்களைச் சுவைமிக்க இசையோடு பாடினால் "சர்க்கரைப்பந்தலில் தேன்மாரி பொழிந்தன்ன" இருக்கும். இசையூட்டம் பெறாத யானே இப்பாடல்களைப் பாடிப்பாடி மகிழ்வதுண்டு.

பெரிய கதையினைச் சுருக்கி ஒருவரியில் தரும் வல்லமை இவ்வாசிரியருக்கு உண்டென்பதைப் பலவிடங்களில் காணலாம். "வழக்கோலையிட்டொரு கிழக்கோலமிட்டன்று வன்றொண்டர் தொழும்புமீட்டார்', "வீரபத்திரன் வந்து பாலகன் முதலினோரைப் பண்ணிடுந் தண்டத்தின் நீபட்ட பாடறிவை" முதலானவரிகள் சான்றாம். மேலும் "குடமிட்ட வெள்ளெலும் பெழின் மங்கையானசீர்...." எனத்தொடங்கும் 93-ம் பாடல் முதலானவையும் சுருங்கச்சொல்லி விளங்கவைக்கும் இயல்புடையன. வருணனையில் மிக்கது "காளிவெண் குடையெடுத் தங்கையினேந்தவே" எனத்தொடங்கும் 48-ம் பாடல், மற்றும் பல பாடல்கள் வருணனையிற் சிறந்தவை. இத்துணைச் சிறப்புடைய இந்நூலை, அல்லியங்கோதை எனப்படும் கமலாலய அம்மன் மீது பிள்ளைத்தமிழினாலே பாடி மகிழ்ந்த தேசிகர் ஐயனையும் விடாது துதிக்க, 'திருவாரூர்ப் பன்மணிமாலை" எனப்படும் சீரியதொரு நூலை இயற்றினார்.

தமது குருவாணையின்படித் திருவாரூரினின்றும் நமது வைத்தியநாதர் நெல்லைக்குப் புறப்பட்டுச் செல்லுங்கால் வழியில் கயத்தாறு என்னும் ஊரடைந்தார். ஆங்கிருந்த, மதுரை திருமலைநாயக்கரது அரசியற் கருமவினைஞராகிய திருவேங்கடநாத ஐயரைச் சந்தித்தார். அவர் இவரது திறமையினைக் கண்டு தமது மக்களுக்குக் கல்வி கற்பிக்க இவரை அமர்த்தினார். அதுபோது அம்மாணவர்களுக்கு இலக்கணத்தினை விளக்கமாகப் போதித்தார். அதுவே நாளடைவில் 'இலக்கண விளக்கம்" என்ற நூல் எழுதக் காரணமாயிற்று. பின் சேரநாடு சென்றார். சேர மன்னனது அவைக்களத்திலிருந்து அம்மன்னர்மீது பல பிரபந்தங்களைப் பாடினார். அவைப்புலவர்கள் இவரைப் பாராட்டவே மன்னர் மகிழ்ந்து, பலவிதமான சிறப்புச்செய்து, முற்றூட்டாகச் சில ஊர்களையும் நல்கினார். அங்கிருந்தும் புறப்பட்டு வடக்கு நோக்கிச்சென்று மயிலம் அடைந்தார். அங்கு சிவஞான பாலைய சுவாமிகள் எழுந்தருளியிருந்தார். அவரால் சிறப்புச் செய்யப்பெற்று அவர் மடத்தில் தங்கியிருந்தகாலை மயிலமலை முருகன்மீது பிள்ளைத்தமிழ் பாடினார். அது தற்போதும் "மயிலம் பிள்ளைத்தமிழ்" என வழங்குகின்றது. பின்னர் சிவஞான பாலைய சுவாமிகள் மீது பாசவதைப்பரணி பாடினார். இவ்விரண்டின் அரங்கேற்றத்தின்போது, அவற்றில் திளைத்த சுவாமிகள் இவ்விரு நூல்கள் இயற்றியமைக்குப் பரிசாகத் தமக்குச் சொந்தமாயிருந்த பத்துக்காணி நிலம், சூனாம்பேட்டிலுள்ளதையும், ஒரு உப்பளத்தினையும் கொடுத்தார். பின்னர், கருவூர் வாழ் பன்னிரண்டாஞ் செட்டிகளெனும் வணிக மரபினரின் வேண்டுகோட்கிணங்க "திருவாட்போக்கிப்புராணம்" பாடினார். பின், அமர்நீதி அடிகள் அருஞ்செயல் புரிந்த நல்லூர்ப்பதியின் பெருமையினை விளக்கும் “நல்லூர்ப் புராணம்" இயற்றியருளினார்.

இவரது காலம் பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதி எனலாம். முன்பு மதுரையை ஆண்ட திருமலைநாயக்கரது கருமவினைஞர் திருவேங்கடநாதய்யரைச் சந்தித்தமையின், இவரது காலம் திருமலைநாயக்கர் காலமான 17-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி எனலாம்.

தேசிகர் தங்கம் என்கின்ற மங்கை நல்லாளை மணம் புரிந்து இல்லறம் நடத்திவருங்கால், மாணாக்கர் பலர் இவரிடம் பாடம் கேட்டுவந்தனர். அவர்களுள், மிகச் சிறந்தவர்கள் படிக்காசுப்புலவர், சொக்கப்புலவர் முதலியோராவர். இவர்கட்குப் பாடஞ்சொல்லும்போது தன்னை மறந்து வாய் ஓயாது பாடஞ்சொல்லுதல் வழக்கம். அவ்வாறு பாடஞ் சொல்லுவதனால் இவருக்குத் தாள்வலி ஏற்படும். அதனைப் போக்குதற்கு தவிடு வறுத்து ஒற்றடம் கொடுப்பது வழக்கம். இக்காரியத்தினை மனைவியிடம் சொல்லும்போதுகூட நயம்படக் கூறும் தன்மையுள்ளவர்.

“தகதகதங்கம்! தாளை வலிக்குது
தவிடு வறுத்துத் தா "
என்று இனிமையாகக் கூறுவார். மிகவும் சிறப்புற இல்லறத்தினை தங்கத்தோடு நடத்தி வருங்கால், ஐவர் மக்கள் பிறந்தனர். நாளடைவில் தமிழ்ப் புலவர்களாகவே திகழ்ந்த இவர்கள் சதாசிவம், தியாகராசன், சிதம்பரநாதன், வடுகநாதன், வன்மீகநாதன் எனும் பெயர் தாங்கியவர்கள். இவர்களில் வன்மீகநாதருக்கு பழனி என்ற மற்றொரு பெயரும் உண்டு.

இவரது மாணாக்கராகிய முன்கூறிய சொக்கப்புலவர், தொண்டைநாட்டு அரசூரைச் சார்ந்தவர். இவர் தாமியற்றிய குடந்தைப்புராணம் எனும் கும்பகோணப்புராணத்தில் தமது ஆசிரியரை
“தவமெனக் கமலையி லிருந்த தேசிகன்
தவவணை வயித்திய நாதன் தாள்களே! "
என்றும், தமது காலத்துத் தஞ்சையை ஆண்ட சகசி மன்னரை
“மண்டலம் புரக்குஞ் செங்கோன் மனுநிகர் சகசிவாழ்நாள்
தொண்டை நாட்டரைசு சொக்க னரசவை சொற்றதன்றே! "
என்றும் கூறியிருப்பதால், தஞ்சையை 1684-1714 வரை அரசாண்ட சகசி மன்னர் காலத்திலேயே நமது தேசிகர் வாழ்ந்திருத்தல் வேண்டும். அல்லது சில ஆண்டுகள் முன் வாழ்ந்திருத்தல் வேண்டும். எனவே இவரது காலம் 17-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி என்று முன்னர் கூறினோமாயினும், சகசி மன்னரின் காலமாகிய 17-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி எனினும் அமையும். எவ்வாறேனும் நமது நூலாசிரியர் 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்பது துணிபு.

முன்கூறிய அரசூர் சொக்கப்புலவர் இயற்றிய குடந்தைப் புராணம் M. 283/D.489 எனும் எண் தாங்கி எமது சரசுவதி மகாலில் உள்ளது. அதுவேயன்றி, குடந்தைப் புராணம் எனும் பெயரால் M.284/D.490 எனும் எண் கொண்ட சுவடியும் இருக்கின்றது. இதனை இயற்றியவர் "அகோரமாதவர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது முன்னையதின் வேறுபட்டது. இந்நூலாசிரியர் அகோர மாதவர் எனின் நமது வைத்தியநாத தேசிகரின் ஆசிரியராகவே இருத்தல்வேண்டும். அகோமுனிவரும், அகோரமாதவரும் ஒருவராகவே இருக்கலாம். அகோரமுனிவர் தமது மாணாக்க (தேசிக) ரின் மாணாக்கர் சொக்கப்புலவர் இயற்றியபின், தாம் குடந்தைப்புராணம் பாடியிருக்கலாம். எப்படியேனும் அகோரமுனிவர், வைத்தியநாத தேசிகர், சொக்கப்புலவர் இம்மூவரும் ஒரே காலத்தவர் என்பது விளங்குகின்றது.

வைத்தியநாத தேசிகர் இயற்றியருளிய நூல்கள்:-
1. கமலாலய அம்மன் பிள்ளைத்தமிழ்
2. இலக்கணவிளக்கம்
3. மயிலம் பிள்ளைத்தமிழ்
4. திருவாரூர்ப் பன்மணிமாலை
5.நல்லூர்ப்புராணம்
6.பாசவதைப்பரணி
7.திருவாட்போக்கிப் புராணம்
8. மெய்ஞ்ஞான விளக்கம்

இக்கமலாலய அம்மன் பிள்ளைத்தமிழ்ச் சுவடி, எமது மகால் M.455/D.310 எனும் எண்ணுடையது. ஒப்பு நோக்குதற்கு வேறு சுவடிகள் கிடைத்தில. இச்சுவடி சிதைந்தும், முறிந்தும், அழிந்தும், பூச்சியரித்தும் காணப்படுவதால் செய்யுட்களை உருவாக்குவது மிகவும் கடினமாயிற்று. இலக்கணப் பிழைகளும் சந்தக்குறைவுகளும் மலிந்து கிடந்தன. அவை ஏடுபெயர்த்தெழுதுவோரின் குறைபாடெனக் கருத இடமிருக்கின்றது. இனிய சந்தப்பாடல்களை கொண்ட இந்நூல், கூடியமட்டில் நிறைவு செய்து தரப்பட்டிருக்கின்றது. குற்றங்குறைகளிருப்பின் மன்னித்தருள வேண்டுகின்றேன். இதனை வெளியிட அனுமதி தந்த எமது மகால் கௌரவக்காரியதரிசி திரு. நீ. கந்தசாமிப்பிள்ளை அவர்கட்கு நன்றி செலுத்தக் கடைமைப்பட்டுள்ளேன்.

இந்நூல் போன்ற அரிய பெரிய நூல்களைத் தன்னகத்தே கொண்டுள்ள எமது சரசுவதி மகாலுக்குத் தங்கள் தங்களிடமுள்ள சுவடிகளைத் தந்துதவினால் நாடும் நாமும் பயனடைவோம். உலகம் உய்ய இந்நூலுடைக் கமலாம்பிகையாம் அன்னை அருள்புரிவாளாக.

தஞ்சாவூர், இங்ஙனம்,
10-02-69. புலவர். வீ. சொக்கலிங்கம்,
தமிழ்த்துறை சரசுவதி மகால் நூலகம்,
---------------------------------------------

கமலாலய அம்மன் பிள்ளைத்தமிழ்
காப்பு

பொன்பூத்த கோட்டுப் பொருப்பிற் சுவைபெருகு
        புத்தமுதம் வைத்த தென்னப்
பொழிநிலவு புரையும் புகழ்பெருகி யேர்கொ(ண்)டு
        புக்குநின் றிலங்க லென்னத்
தென்பூத்த நெடுமருப் பொருபா ரதந்தீட்டித்
        திணிசயிலம் நட்ட தென்னச்
செம்பவள வொளிததும் படுக்கலிற் கலைமாது
        சேர்ந்தொளி படைத்த தென்ன
நன்பூத்த வெண்ணிலவு தவழுஞ் சடாமகுடம்
        நளினகர மைந்து நால்வாய்
நதியொழுகு மும்மத(மு)மிருசெவிகொள் ளொருவேழ
        நளினவடி வஞ்ச லிப்பாம்
மின்பூத்த சிற்றிடைக் [1]கருணாகரம் பெருகு
        விழிமயிற் பேடு வெற்பின்
விளங்கிவளர் கமலையுமை யிசைபாடு கொழிதமிழ்
        விரிநிலத் தழைய வென்றே! (1)
--- [1]. கருணீகரம் எனல் சிறப்பு.)

சீர்பூத்த நாதாந்த வேதப் பொருளுதவு
        திகழ்பரா சத்தி விந்துச்
சிறந்தொளிரு மாசத்தி யிமையவெற் புறைசத்தி
        திருத்தியென் சிந்தை யுள்ளே
யேர்பூத்த பாட்டளிகள் துதையாத கமலத்
        திருந்தருள்செய் கவுரி மாதை
யிருசரண பங்கயஞ் சென்னிசூட் டம்மையை
        யினிதுவந் திசைந்து காக்க
நீர்பூத்த பணிலந் தருமுழக் கிடியாகி
        நேரலர்க ளாவி யுண்டே
நிமிர்ந்தழகு பெறுவடிவு காட்டுந் தனிநேமி
        நெடியமின் னாகி நிற்பக்
கார்பூத்த வனமாலை நீள்கங்குல் நெட்டுடற்
        கட்செவிச் சுடிகை மன்னுங்
கதிர்மணிப் பானுவொடு பக்கமே காட்டக்
        கருணை சொரிபெருங் கொண்டலே! (2)

(வேறு)
அருள்பெறு மடியவ ரறிவுடன் மலரணி தாட்டுணை
        அகமிசைச் சிரமிசை யவிர்தர நிறுவிய தீர்த்தனை
அடையலர் திரிபுர மழலுற வரைசிலை கோட்டிய
        அமலனை நதியொடு மறுகணி சடைமுடி மூர்த்தியை
மருவள ரிதழியு மண்விரி குவளையு மேற்றிய
        வரைநிக ரிருபுய மணிமுடி யரவணி நீற்றனை
மதிதவழ் நிலவொடு மணிவெயில் பொதுளிய கோட்டனை
        வலமுயர் மழுமறி யுறுகர முடையனை யேத்துதும்
விரிவுறு சுருதியின் வியனுரை யுதவிய வாக்கியை
        விரிகதி ரிதழொடு மிளிர்நகை யெதிர்பொரு வாக்கியை
விதியரி படையளி விமலனு மதியெனும் வாக்கியை
        விரிபுவி தமியனை விழைமக வெனவுரை வாக்கியை
யெரிவிழி வருகுக ரிழைமக ளளியெனும் வாக்கியை
        யிடுமது மறையவ னினிதுற வருளிய வாக்கியை
யிடர்படு மலகையை யிமையவ ளெனமொழி வாக்கியை
        யெழில்வளர் கமலையி னிறைவியை மகிழ்வொடு காக்கவே! (3)
(வேறு)
செஞ்சுடர் பரப்பு மாதபக் கடவுள்
        திசையெலாம் விளங்கிட விரியுஞ்
செழுங்கிளை வடவை வெண்ணிலாப் பொழிந்து
        திக்கெலாங் கோடையை மாற்றி
மஞ்சுறழ்க் கருமை கொண்டவெண் டிங்கள்
        வச்சிரப் படையரிந் திடவே
மறிதிரை புகுந்த கருவரை பணிந்தோர்
        வறுமையை மாற்றிய செல்வி
யஞ்சுவை நறவு ததும்பிய கனியாய்
        அறிவுளத் தெண்ணியே துளைக்கை
யம்பரநீட்டி யுலாவிய வேழ
        அடிமலர் பரவியஞ் சலிப்பாம்
நஞ்சணி கண்டன் சடைமிசை விளங்கி
        நாடொறு மிருந்துசீர் படைத்த
நளிர்மதி வடிவைச் சீறிய பொற்றாள்
        நளினியைக் காக்கவிங் கென்றே! (4)

(வேறு)
செத்துப் பிறக்குங் கடவுளரைச்
        சிதையா முத்தி தருவரெனச்
சிந்தை யெண்ணி யுழலாது
        தீரா விருளை மாற்றவரு
புத்தி வழங்கி வாடாத
        பூந்தா ளிதையப் பூமிசையே
புணர்த்தி யளித்த வாறுமுகப்
        புத்தேள் சரண மலர்தொழுவாம்
பத்தி பழுத்த வினத்தொழும்பர்
        படரும் பொறியை யுள்ளடக்கிப்
பதிந்து புரியுந் தியானத்தின்
        படியே பலன்க ளெய்துமெனுஞ்
சித்தி காட்டி நிற்பதெனச்
        சீமந் தனிக்கே பலமளித்த
செல்வி யாரூர் மகிழ்பரையை
        சிறந்தே யினிது புரக்கவே! (5)

(வேறு)
புன்சமைய நெட்டுடலைச் சுருட்டு பாந்தள்
        புழைவாயி னகம்புக்கு நெறிகா ணாது
மன்சரிதை விட்டிழிந்த மடம்பெற் றேனை
        மகிழ்ந்தெடுத்த கமலைவளர் பரையைக் காக்க
முன்சமையந் தனதாக விழைந்த மூர்த்தி
        முப்புரமும் வெண்ணகைத்தீ யுண்ணநல்கி
யன்புடையோர்க் கெரிகுளிர வைத்தோ னேவ
        யணிமகத்தை யழித்தானை யேத்து வோமே! (6)

(வேறு)
கருந்துழாய்ப் படலையின் கார்வடிவு தந்தவிருள்
        கண்ணாறு கமல மாதின்
காரளகம் விட்டவிருள் தணந்திடப் பூமாது
        களித்தநகை நிலாவ ரும்பக்
குருந்துமே லிருந்துவரு வனிதையர் குழாத்தொடு
        கூடிவளை கவர்ந்து நின்ற
கொண்டலளி பங்கயப் பொகுட்டுவாய்க் குழவியைக்
        குறுகிநின் றஞ்ச லிப்பாம்
திருந்தியுயர் மேருவளை வில்லியைப் பகடூர்
        செருக்கோடு களித்த கூற்றைத்
திணிநிலம் புகுதவொரு கஞ்சமலர் நீட்டிய
        சேவகத் தலைமை வேந்தை
முருந்துறழு முறுவலா லிடங்கொண்ட வல்லியை
        முண்டகத் தவிசின் மீதே
முடிவளைந் தோதிமங் கண்டுயிலு மாரூர்
        முதல்வியைப் புரக்க வென்றே! (7)

(வேறு)
வேதப் புரவி சதமகமும்
        விழைந்து தெவ்வ ருரம்பிளந்து
விளைத்துச் செல்வப் பொன்னுலகின்
      வேந்தாய் விளங்கிக் கற்பகத்தார்
காதங் கமழ வணித்தகுழற்
        காமர் வல்லி முலைக்கோடு
களித்துப் பொருத சுவட்டுடனே
      கதிர்முத் தலங்கற் புரளமணி
யாத னத்தின் மிசையிவர்ந்தே
        யமரர் பணியப் பெருவாழ்வை
யளிக்கு மண்ண லிருசரண
      வம்போ ருகத்தை யஞ்சலிப்பாம்
போதந் தந்தே யெனையாண்ட
        புத்தேள் பாகம் வீற்றிருந்து
புவன மளிக்கக் கமலைநகர்
      புகுந்த பரையைக் காக்கவே! (8)

அந்தி வண்ணன் சுருதிமுடி
        யாடு மனாதி பசுபதியென்
றறிந்தே யுணர்ந்து மயக்கடுப்ப
      வல்லா மொழியைப் பிதற்றுவாய்
நந்தக் கரமுந் துணிந்திட்ட
        நம்பன் பதத்தை யுளத்திருத்தும்
நாத னறிவுக் கொருபானு
      நந்தி சரண மஞ்சலிப்பாம்
புந்தி தேர்ந்த தொண்டரகம்
        புகுந்து காமக் காடறுத்துப்
பொறிமா தங்கஞ் சூழ்காணப்
      புரவி நிறுத்துப் பூநகர
மைந்து செய்து மனுச்சேனை
        வளைய ஞானத் தவிசிருக்கும்
வாழ்வைக் கமலைப் பராசக்தி
      மாதை யினிது காக்கவே! (9)

பொன்னங் குடுமிச் சிலைவணக்கிப்
        புரந்தீ யூட்டி மூவருக்குப்
பொற்றாள் காட்டிக் கதியளித்த
      புராரி மகிழ்ந்த பூங்கோயிற்
றன்னூ ரென்ன வீற்றிருக்குந்
        தையல் கவுரி பராசக்தி
தமியேன் றனது குழவியெனச்
      சாற்று மன்னை தனைக்காக்க
வன்ன மீதி னிவர்சத்தி
        யார்க்குங் கலுழ னூர்சத்தி
யருள்சேர் விடையை மகிழ்சத்தி
      யஞ்சா மஞ்ஞை வருசத்தி
மன்னும் பகட்டின் செல்சத்தி
        மதவா ரணத்தி னுயர்சத்தி
மாறாக் கூளி பெறுசத்தி
      மலர்த்தாள் வணங்கிப் பரவுதுமே (10)

(வேறு)
பரமகல்லி யாணியை யதிரூப வல்லியைப்       பரசினர் பிறவி மாற்றும்
பங்கயக் கண்ணியைக் கமலையிற் செல்வியைப்
      பராசத்தி யம்மை மாதைத்
திருவளரு மாதவன் பணியுருக் கொள்ளவோர்
        திருமொழியை விண்ட மானைச்
செகமெலா மறம்வளர்த் தளித்திடுங் கவுரியைச்
      சீற்றமோ டெழுந்து வந்து
தரையெலாம் பொடிபடப் போர்புரியு மசுரனைச்
        சாடிய கொற்ற மாதைத்
தற்பர னிடம்பகுந் தகமெனக் கொண்டுவளர்
      தண்ணளிக் கடலை மேலாம்
வரமிகும் நாதாந்த வல்லியை யினிதுடன்
        மருத்துவர் வசுக்கள் வெய்யோர்
மான்மழுச் செங்கையர் மண்டலந் துதிக்கின்ற
      வானவர் தனிபு ரக்க! (11)

காப்பு முற்றும்.
----------------------------------------------

செங்கீரைப்பருவம்

தூற்றுந் திரைக்கங்கை பாயுஞ் சடைக்கண்க
      டூயமதிக் கிரணம் வீசச்
சுடருமிழு மரவுமணி தருவிளக் கேற்றிடச்
      சோதிசெய் தொடிகள் மின்னப்
போற்றுஞ் சிகைத்தழற் செங்கையின் மேவியே
      பொங்கிருட் பருதி நிற்பப்
புணர்சுவைக் குஞ்செந்தமிழ்க் கொண்டிடு மகிழ்ச்சிமுன்
      பருதியை யிழுத்து நிற்ப
வூற்றுந் தெளிநறவு தோற்குமொழி மின்னிடை
      யோவிப் பாவை யாரு
ருறையுமிற் றூதுபோய் மொழிந்தவன் பாகமே
      யுறைபரா சத்தி மாதே
தேற்றுந் தெளிமதித் தொண்டருக் கருளம்மை
      செங்கீரை யாடி யருளே!
திருகுமென் மதிகண்டுங் கூம்பா மலர்ச்சரணி
      செங்கீரை யாடி யருளே! (12)

நறவொழுக வறுபதந் துதைந்தாடு பூங்கோதை
      நகைநிலா வுமிழ முத்தம்
நகுநிலா வுடன்பொருது நிற்கு முகமாதர்
      நறியசந் திழைத்து வாசங்
குறைவிலாக் கத்தூரி குங்குமந் திமிர்ந்திளங்
      கொங்கைக் குவட்டு மீதே
கொழுமணித் தரளமா லிகையணிந் தைம்பால்
      கோதியே முடித்து மட்டு
நிறையவிடு மவ்வலொடு மல்லிகைத் தாமும்
      நின்றணித் தடிகள் பூட்டும்
நெடுங்குனிப் பாடகப் பாடகப் பரிபுரம்
      நிலைபெற வணிந்து மற்றைச்
சிறியகுற் றேவல்செய வீடுதவு கமலையுமை
      செங்கீரை யாடி யருளே!
திருகுமென் மதிகண்டுங் கூம்பா மலர்ச்சரணி
      செங்கீரை யாடி யருளே! (13)

அஞ்சிவரு மமரருக் காவியெனு மேருவை
      யங்கையி னேந்து பூத
ரட்டதிக் கெட்டியடி வைத்துடன் சுற்றிநின்
      றார்த்திடும் பூத சேனை
மஞ்சுடைத் தெரிவான் பருதியொடு மண்டலம்
      வளைக்குமா கணம னந்தம்
வரிவிழிகள் பிறையெயிறு வொளிகக்க நின்றாடு
      வன்படைப் பூதர் கோடி
நஞ்சுபடு கடலேழு மோர்வேலை யாகவே
      நகத்தினாற் கீறு பூதர்
நளினிவா ழாரூரின் வாகுவீ ராயிரம்
      நண்ணினர் வாழ்த்தெ டுத்துச்
செஞ்சந்து மலர்பொழிய வருள்புரியு மம்மையே
      செங்கீரை யாடி யருளே!
திருகுமென் மதிகண்டுங் கூம்பா மலர்ச்சரணி
      செங்கீரை யாடி யருளே! (14)

தவராச யோகியர் திருவாணி பூமாது
      சானுவி யமுனை பொன்னி
சயிலமன விஞ்ஞையர் மருத்துவர் நவகோள்கள்
      சாத்தனொடு துர்க்கை காளி
நவகோடி மாசத்தி யெண்டிசைக் காவலர்
      நான்முகன் வசுக்க ளெண்மர்
நாரணன் வாசவன் னெண்ணிலாப் [1]புக(ழ)வர்
      நற்கணம் பூத சேனை
பவராசி கெடவருள் சைவாக மத்தலைவர்
      பழமறை முனிக்கு ழாங்கள்
பகராறு சமயத்தர் சதகோடி சாரூபர்
      படிமிசை நெருங்கி யேத்துஞ்
சிவராச தானியெங் கமலாபு ரித்தலைவி
      செங்கீரை யாடி யருளே!
திருகுமென் மதிகண்டுங் கூம்பா மலர்ச்சரணி
      செங்கீரை யாடி யருளே! (15)
([1]புகுவர் என்றுளது.)

கயிலைநா கீச்சரம் வெண்காடு தில்லைநகர்
      கந்தபுரி காஞ்சி காழி
காறாயி லையாறு வேதிகுடி வலிவலங்
      கற்குடி நாகை தெங்கூர்
மயிலையேழ் மாகாளம் முதுகுன்று நெல்வேலி
      வாஞ்சியங் குடந்தை வாய்மூர்
மதுரைவீ ரட்டமெட் டம்பர்மா யூரநகர்
      வண்டுறை சேது நல்லூர்
இயமனூர் சாய்க்காடு கஞ்சனூர் நள்ளா
      றிருக்கைநகர் துருத்தி வீழி
இடைமருது நாரையூர் விரிஞ்சனூர் தஞ்சைநகர்
      ஏடக மறைசை காசி
செயமாதி னூர்கமலை யுறைபரா சத்தியே
      செங்கீரை யாடி யருளே!
திருகுமென் மதிகண்டுங் கூம்பா மலர்ச்சரணி
      செங்கீரை யாடி யருளே! (16)

(வேறு)
கொண்டை யணிந்திடு வண்டுப டுந்தார்
      கூடவ சைந்தாடக்
கோலது கற்கணி முத்தவிர் சுட்டி
      குழைந்துப ணிந்தாடத்
தண்டர ளத்தனி மாலிகை தோள்வளை
      தாவியு டன்றாடத்
தண்ணளி தங்கிய கண்மலர் காதணி
      தள்ளிம றிந்தாட
மண்டி யெழுந்திணை கொண்ட தனத்தணி
      வாரின்ம றிந்தாட
வளர்மணி நூபுர மாட விளங்கிளி
      மாமயில் நீடியகா
வண்டர் மகிழ்ந்துறை தென்கம லைப்பரை
      யாடுக செங்கீரை!
ஆதிப் பரையுமை கோடிக் கதிர்மணி
      யாடுக செங்கீரை! (17)

துண்டப் பிறையணி சோதி யிடந்திகழ்
      தூய துகிர்க்கொடியே!
சுற்று மடியவர் பச்சிலை கொண்டிடு
      சூழு மருட்கடலே!
கண்டந் தருவிட மண்டி யெழாவகை
      (கை)மலி பற்றமுதே!
காயும் பவவிருள் மாயும் படிவிடு
      காந்தத் தணிமணியே!
கொண்டல் படிந்திடு மாளிகை மேலுறை
      கோல நுதற்றிருவார்
கூருகிர் தைவரும் யாழிசை மென்மொழி
      கூறும் மடியறியா
வண்டர் மகிழ்ந்துறை யாரூ ரம்மயி
      லாடுக செங்கீரை!
ஆதிப் பரையுமை கோடிக் கதிர்மணி
      யாடுக செங்கீரை! (18)

பாயும் விடையிவர் சோதிச் சுடர்மணி
      பற்றுங் கரவமுதே!
பண்டூர் பழகிய நெஞ்சூர் மாறாப்
      பச்சை நிறக்கிளியே!
ஆயும் மறைக்காட் டோயா தவிரு
      மன்னப் பேட்டரசே!
அற்றார் தமக்கு முற்றார் தமக்கு
      மருளும் பொற்பாவாய்!
நாயிற் கடையேன் நின்னை யுணர்
      நல்குந் தனிமதியே!
நம்ப ரியங்கி யுறையும் படிக்கே
      நல்குந் திருவழகே!
ஆயும் மறைதே ராரூர் நின்றா
      யாடுக செங்கீரை!
ஆதிப் பரையுமை கோடிச் சுடர்மணி
      யாடுக செங்கீரை! (19)

நளினக் குழவி துளவக் கிழவன்
      நாடிக் கண்டறியா
நாதர்க் குலவா வாழ்வை யளித்த
      நாதப் பெருஞ்சுடரே!
உளையைத் தணந்த வாளிக் குளையா
      யுயர்வான் நன்னுதலார்
உற்றே வாழ்த்தக் களிக்கும் மானே
      யோவாக் கற்பகமே!
அளியிற் பெரியா ருள்ளே விளையு
      மமுதே குருமணியே!
அடியார்க் கெளியா யல்லார்க் கிருளா
      யமையுந் தனிமுதலே!
தெளியத் தெளிந்த மறையின் சீர்த்தாய்
      செங்கோ செங்கீரை!
தெய்வத் திருவா ரூருறை வாழ்வே
      செங்கோ செங்கீரை! (20)

மூலத் தொளியின் சூலா யிருந்து
      மொழியும் நாதத்தின்
முளைத்தே விந்துச் சேயாய்த் தவழ்ந்து
      முறையிற் பிறழாதே
சீலப் புவனம் பலவின் நடந்து
      செப்புந் தொழிலெல்லாம்
செய்து முடித்தே சிந்தை புகுந்த
      திருவே பெருகொளியே!
ஞாலத் திருந்தோ ரங்கங் குய்ய
      நானா நகரிடமே!
நல்ல வடிவு பலவுங் கொண்டே
      நந்தாப் பெருவீடே!
சீலத் தளித்த கருணைக் கடலே
      செங்கோ செங்கீரை!
தெய்வத் திருவா ரூருறை வாழ்வே
      செங்கோ செங்கீரை! (21)

செங்கீரைப்பருவம் முற்றும்.
-----------------------------

தாலப் பருவம்

அனந்தம் படைக்க ரந்தாங்கி
      யனந்த சக்தி கடைகாப்ப
வம்போ ருகத்தி னுறையணங்கே
      யருளுங் கடைக்கண் குற்றேவல்
மனத்தின் களித்தே நின்றியற்ற
      மழலை வண்டு பண்பாடும்
வசை வீட்டின் கலைமாது
      மறையா கமங்கள் பலதுதிப்பப்
புனத்தின் மதுக்கால் துழாய்மருமப்
      புத்தே ளெட்டுத் திசைகாப்போர்
பூமேல் விளங்கும் நான்முகத்தோன்
      போற்றி வணங்க விறலரியா
தனத்தி னரசு வீற்றிருக்குந்
      தாயே தாலோ தாலேலோ!
தண்ணார் பூங்காக் கமலைவளர்
      தாயே தாலோ தாலேலோ! (22)

சென்னெற் கறித்து வாய்குதட்டிச்
      செந்தா டுகைத்துக் கதிர்முடித்துச்
சிறகார் பறவைத் திரளோட்டிச்
      செழுநீர் பொய்கை யிடத்திரங்கி
மன்னும் வனசம் செவ்வாம்பல்
      மலரின் வகையை மிகவொடித்து
மருவு மன்னக் குழாமெழுப்பி
      வண்டின் கூட்ட மிரைந்தோடத்
துன்னும் வாளைத் திரள்பாயச்
      சுற்றிக் கலக்கிக் கனைத்தேறிச்
சூழின் கதலித் திரள்சாடிச்
      சூழ்ந்து செருக்கின் மேதியினந்
தன்னின் மருவுங் கமலைநகர்த்
      தாயே தாலோ தாலேலோ!
நண்ணார் பூங்காக் கமலைவளர்
      தாயே தாலோ தாலேலோ! (23)

வேதம் விளம்புந் தத்துவத்தின்
      விளைந்த வண்ட மிசைக்குமிசை
விளக்க மளவும் நலம்பொலிதல்
      மிக்கு மிக்கு வளர்ந்தோங்கு
நாத மளவு பலவுயிர்க்கும்
      நண்ணும் போக மளவறிந்து
நாளு முப்பா னிரண்டறமு
      நடாத்திப் பொன்றா வானந்தப்
பாதம் வைத்தே பேரின்பப்
      பதியை யளிக்கும் பராசக்தி
பவளா சலத்தி னிடம்பொருந்தும்
      பச்சைக் கொடியே யாரூரின்
சாத மானார்க் கருள்வழங்குந்
      தாயே தாலோ தாலேலோ!
தண்ணார் பூங்காக் கமலைவளர்
      தாயே தாலோ தாலேலோ! (24)

முகத்துக் குடைந்து பொழிநிலவு
      முழுவெண் மதியு நாணியனு
மூரற் கிளைத்து வெண்டரளம்
      மூரித் திரைவாய் கடல்புகுந்த
வகத்தின் விளங்குஞ் செஞ்சரண
      வம்போ ருகத்துக் கிணையாகா
வாழித் தடங்கை நெடியவன்கண்
      ணம்மா கஞ்ச மடைந்தனவே
இகத்தின் குவளை விழிக்குநிக
      ரெய்தா தனங்கள் கரமடைந்த
யினிய மொழிக்கு யாழொவ்வா
      தெடுத்த சட்டை கரந்ததுவே
சகத்தி னெவர்க்கு மெழில்மிக்காந்
      தாயே தாலோ தாலேலோ!
தண்ணார் பூங்காக் கமலைவளர்
      தாயே தாலோ தாலேலோ! (25)

கண்ணை யிடந்தே யணிந்ததற்கோ
      காரி விதியை யீன்றதற்கோ
கவுரி யுடனே பிறந்ததற்கோ
      கண்ண னெரியம் பானதற்கோ
மண்ணின் பிறப்புத் தொறும்பூசை
      வனைந்து வாமத் திருந்ததற்கோ
வலிய விடையாய் வந்ததற்கோ
      மாறாக் கருணை யுளத்தெண்ணி
நண்ணும் விடத்தின் முடியாமல்
      நந்த விந்துத் துண்டத்தை
நாத னளித்த பெரும்புகழே
      நடக்கு மாரூ ரென்றவர்க்குந்
தண்ணென் மலர்த்தாள் தந்தளிக்குந்
      தாயே தாலோ தாலேலோ!
தண்ணார் பூங்காக் கமலைவளர்
      தாயே தாலோ தாலேலோ! (26)

(வேறு)
விரிந்த சடையோர் மறையோர் சைவர் விரதியரே
      வெண்ணீ றணிந்தே விளங்கும் வடிவா மிடைந்துறைவா
ரிருந்த யோக மசையா திருத்தே யீறில்லா
      யினிய பொருளை யுளத்திற் கண்டே யேமாப்போர்
பரிந்த சித்தர் பலகண நாதர் பசுவேறும்
      பரமா யென்றே யுருகித் திரிவார் பலகோடி
தெரிந்து போற்றுஞ் செல்வி தாலோ தாலேலோ!
      திருவா ழாரூர்ச் செல்வி தாலோ தாலேலோ! (27)

கல்லைக் குழைத்தா ருள்ளங் குழைத்த காரணியே
      கார்த்தி கேயன் செந்தா டுவைக்குங் கழைத்தோளின்
புல்லும் வெண்மை நீறு தோய்தல பூமாதும்
      போற்றும் வாணி குழுமி யிருக்கும் பொற்பெனவு
மெல்லை மதியுங் கூடி யுறைந்த வெழில்போலு
      மிறைவர் கண்டேமகிழும் பரையே யிமவானின்
செல்லும் பச்சைக் கொடியே தாலோ தாலேலோ!
      திருவா ழாரூர்ச் செல்வி தாலோ தாலேலோ! (28)

வேளையெதிர்த்தார் பாகங் கொண்ட மெல்லிழையே !
வேண்டின நின்கண் கோடி வேளை விளைத்திடுமே!
தாளிற் கண்ணை யணிந்தார் தனுவும் நின்வடிவே!
சாற்றும் வேத முணர்ந்தார் தெளியுந் தற்பரையே!
ஆளுந் தொண்டர் நீங்கா திருந்த வருட்கடலே!
யண்டம் பலவும் நின்றுந் தேர்வா ரகத்தேநின்
றாளைத் தந்த பரையே தாலோ தாலேலோ!
தடம்பூங் கோயில் வாழ்வே தாலோ தாலேலோ! (29)

[1]இடப்பால் முப்பா னிரண்டே யறமும் யினிதாற்ற
      யிருந்த விறைவனா ரய்ய மேற்ற தி(ரளன்பே)
சடத்தே நாளு நில்லார் தெளியத் தரணிக்கே
      தனுவொன் றைய மேற்க வெடுத்தார் சடைமீதே
படப்பாம் பணிந்தார் பாதம் போற்றிப் (படர்மாதே)
      (சிக்கு மய) னம் பெற்ற வாழ்வும் நின்றாளே
தடக்கோ டிலங்குஞ் செல்வி தாலோ தாலேலோ!
      தடப்பூங் கோயில் வாழ்வே தாலோ தாலேலோ! (30)
([1]. இப்பாடலின் அடைப்புக்குறிகளில் சுவடியில் உள்ளவாறே
எழுதப்பட்டுள்ளன. இவ்வேடு அழிந்துள்ளது.)

[2]உள்ளக் கமலத் தொளியே தாலோ தாலேலோ!
      உயர்ந்த மறைவா ழுமையே தாலோ தாலேலோ!
கள்ளம் பொருவ ரழித்தாய் தாலோ தாலேலோ!
      கனிந்த சுவையிற் கரும்பே தாலோ தாலேலோ!
தள்ளிப் பலத்தைக் களைந்தாய் தாலோ தாலேலோ!
      தடப்பூங் கோயில் வாழ்வே தாலோ தாலேலோ! (31)

(2. இப்பாடலில் மூன்று அடிகளே உள்ளன.)

தாலப்பருவம் முற்றும்.
------------------------------------------------------

சப்பாணிப் பருவம்

நெற்றியணி பட்டமும் மீமிசைச் சுட்டியும்
      நின்றொளிகள் வீசி யாட
நீலமணி மாலையும் வச்சிரத் தொங்கலும்
      நீடொளித் தொடியு மாட
சுற்றிவரு வண்டோடு தேனொழுகு தாமமும்
      தோளிடந் தாவி யாடச்
சுழலுமுழை விழியோடு காதிடத் தொளிகக்கு
      சூழ்மணிக் குழையு மாட
வற்றியணி நுண்ணிடைக் கலையோடு புருவமும்
      மன்னிநின் றாடி யாட
மணியணிந் தொளியோடு நூபுரக் கிண்கிணிகள்
      மாறிலா வொலியி னாட
சற்பமணிச் சேவடித் தியாகேசர் மகிழவே
      சப்பாணி கொட்டியருளே!
தழைபுகழ்க் கமலைவள ரிழைமணிக் கொடியுமை
      சப்பாணி கொட்டி யருளே! (32)

புண்ணியந் தருபுவனி கண்ணுவர் முதல்யோகி
      பொருந்திமால் வேள்வி யாற்ற
போர்புரியு மூரிவில் லெழுந்துகை மேவவமர்
      புந்தியின் முகுந்த னாடிப்
பண்ணவரை நனிமுனிந் தேகிவந் துறைதலின்
      படியிடத் தமரர் சூழ்ந்து
படுசிதலை யாகிநா ணுண்டிடத் தனுச்செவ்வை
      பற்றுமா றுஞ்சி வீழ
கண்ணகல் ஞாலமேல் வேலைகொள் வானவர்
      காதலித் தேத்த லாலே
கண்ணுதலு மங்கெய்தி மாலுய்ய வருளினன்
      கருதுவன் மீக னென்ன
தண்ணளியின் மேவினள் கமலைப் பராசக்தி
      சப்பாணி கொட்டி யருளே!
தழைபுகழ்க் கமலைவள ரிழைமணிக் கொடியுமை
      சப்பாணி கொட்டி யருளே! (33)

அளைக்குட் சுருட்டுடற் சீற்றமோ டெரிவிழி
      யயிற்றந்த வாலங் கொண்டே
அரவின முற்றுரைந் திருந்ததின் பொறிபடு
      மருங்கிழங் கெழுந்து பரவி
வளைக்கும் வினைக்கொழிந் தேறிட மண்டிடு
      மாசைகள் மலர்ந்து நிற்ப
வறகுணங் காயத்திறு பக்குவக் கனிகொள்ள
      வாளெயிறிலங்க முன்னே
முளைக்கும் பகட்டுழி முத்தலைச் சூலமும்
      முகவழல் விழியு முற்றே
மூதண்ட மிடிபடுங் குரலோடும் வந்தவன்
      மொய்ம்புட னிழிவு செய்யுந்
தளைக்குப் படர்தருங் கமலைப் பராசத்தி
      சப்பாணி கொட்டி யருளே!
தழைபுகழ்க் கமலைவள ரிழைமணிக் கொடியுமை
      சப்பாணி கொட்டி யருளே! (34)

வழக்கோலை யிட்டொரு கிழக்கோல மிட்டன்று
      வன்றொண்டர் தொழும்பு மீட்டார்
மாறிட்டு நாளிட்டு மார்தட்டி வேறொட்டு
      வட்டமிடு வயிர நெஞ்சன்
முழக்கோல மிட்டிடக் கிழக்கோல மிட்டுவரு
      மூரிசேர் நேமி தொட்டார்
மூதண்ட மேலிட்ட நாதங்க டந்தவிறை
      முன்னிட்ட கோல மாகி
வழக்கோடு பேசிட விழிப்பூவை யிட்டொரு
      மணக்கோல மிட்டு வைத்த
வாழப் புரந்தருட் கமலாலை யம்மையே
      மறையிட்ட பாத மிட்டே
சழக்கோடு மென்மனம் பற்றிட்டு நின்றபரை
      சப்பாணி கொட்டி யருளே!
தழைபுகழ்க் கமலைவள ரிழைமணிக் கொடியுமை
      சப்பாணி கொட்டி யருளே! (35)

வரையகம் பிறந்துமுன் சாரலிற் ரவழ்ந்துநீள்
      மலைகளிற் றாவி யேறி
மணமலர்ச் சந்தனக் காட்டிடம் புகுந்துவான்
      வரிவளைச் சங்க மேந்திக்
கரையிடம் பொருதுபாய் திரைக்கர மெடுத்துவிண்
      காரின்மே லார மேற்றிக்
கண்ணுதலி னாலையம் பழமறைசொ லந்தணர்
      கருதிடுந் தலங்கள் மேவி
யுரைமனுவோ டாரணம் யாகமோ டறச்சாலை
      யோரிரண் டுழையின் மேவி
யுவந்துவந் தாடினர் கனிவிலா தாடினர்க்
      குயர்கதி வழங்கு பொன்னி
தரைவழி நடந்துசூழ் கமலைப் பராசத்தி
      சப்பாணி கொட்டி யருளே!
தழைபுகழ்க் கமலைவள ரிழைமணிக் கொடியுமை
      சப்பாணி கொட்டியருளே! (36)

(வேறு)
மழுவா ளயிலொடு பூதகணங்களும்
      வாடித் துடியாமே
மண்டிவி ழுந்தழு தாவிக லங்கிட
      வானோர் முடியாமே
செழுமா வொடுகலை வாணிக ளத்தணி
      சிந்திம யங்காமே
தேடிப் பணிபுரி யடியார் நின்றெதிர்
      சித்தைக லங்காமே
மழைமால் வளர்வரை யிமவான் மனைவியும்
      வாடித் துடியாமே
மன்னுந் தினகர னிந்து முதற்கோள்
      மாறித் திரியாமே
குழைவா யயிரைகள் வாலந் தடவுமை
      கொட்டுக சப்பாணி
குலமறை பரவுங் கமலைப் பரையுமை
      கொட்டுக சப்பாணி! (37)

அழியா வீடே தருபவள் நீயெனு
      மன்பே நிலையாமே
ஆசைக் கடலின் மூழ்கிக் கிடக்கு
      மவரோ டிணங்காமே
பழிபா வம்புரி விழியா ரிளமுலை
      பற்றிக் கிடவாமே
படிமால் கொண்டும் நிதிமால் கொண்டும்
      பாழுக் குழையாமே
விழைவாய் வீணுரை மீண்டுங் கூறி
      வீணாள் கழியாமே
வீடே நிலையாய் நினைவார் நேசம்
      மேவப் புரியுமையே
குழைவா யின்னுங் கதியரு டாயே
      கொட்டுக சப்பாணி!
குலமறை பரவுங் கமலைப் பரையுமை
      கொட்டுக சப்பாணி! (38)

அண்டம் பதமணி நாதந் திருமொழி
      யாரணம் நிறைபுகழே
அவிருஞ் சுடர்விழி யோண அடுக்கட
      லம்மா தாரினமே
யெண்டிக் கணிகலை தத்துவ மேதனு
      மெழிலார் கொங்கைகளே
ஈறு படர்துயர் மேருப சுங்கிரி
      யெட்டாப் பாதலமே
கண்ட நெடுந்தாள் நின்ற வுனைக்கலை
      காட்டும் வாலையெனக்
காணத் தமியேற் கெவ்வகை கூடுங்
      கண்ணே கண்மணியே
கொண்ட பிழைக்கருள் வைத்த பராபரை
      கொட்டுக சப்பாணி!
குலமறை பரவுங் கமலைப் பரையுமை
      கொட்டுக சப்பாணி! (39)

கயிலைக் கிரியுயர் மேரு வரைத்திரள் கதிர்சூ ழிமவானின்
      கமலத் துணையடி சென்றுந டந்தே கழியாச் செப்பேறப்
பயிலுங் குணமே கண்டன ரன்றோ பாவிக் குரிநெஞ்சே
      பற்றா திருந்தாய் காமக் காடே பரிவுள தென்றோதான்
புயலிற்றனுவென நின்றாள் போற்றிப் பொன்றாக் கதிகொண்டான்
      போகுங் குணமே நின்விடை யூர்தொழில் போற்றா நின்றாயே
குயிலைப் பழிதரு கோமள மென்மொழி கொட்டுக சப்பாணி!
      குலமறை பரவுங் கமலைப் பரையுமை கொட்டுக சப்பாணி! (40)

அரவக்கிண்கிணி யாடுந் திருநா ளன்பின் றொழுதாரே
      அம்போ ருகவிழி விண்டது ளித்திர ளம்புவி மீதோட
புரகர வென்றே நின்றம னுத்திரன் போற்றுந் தனியோசை
      பொன்னுல கும்பர் செவிப்புலன் நின்றே புந்தி கரைத்திடவே
விரைபுகழ் பூமழை பெய்துப ணித்தே விமல வென்றோதும்
      வீறொலி பூவி னவர்நட மாடும் விமலன் பாகத்தாய்
குருமணி யிழைசேர் செங்கை சிவப்பக் கொட்டுக சப்பாணி!
      குலமறை பரவுங் கமலைப் பரையுமை கொட்டுக சப்பாணி! (41)

சப்பாணிப்பருவம் முற்றும்.
-------------------------------------

முத்தப் பருவம்

மயக்கு மாயைச் சிற்றிலுழை
      வளரு மண்ட பாண்டங்கள்
வகையிற் பரப்பிப் பொறியழலின்
      மதமுன் னாறு விறகடுக்கிப்
பயக்கும் வினையின் சுவையன்னம்
      பதத்திற் சமைத்தே யுயிருண்ணும்
படியி னூட்டிச் சாய்காலம்
      பரமா னந்த வீட்டிடத்தின்
புயக்குங் குமத்தின் சேறணிந்து
      பொங்குங் கதிர்முத் தணிந்துநலம்
பூத்த கொங்கைக் கேவலப்பெண்
      புணர்ந்து தூங்க வாரூரின்
முயற்சி விளையாட் டிற்றுமுமை
      முத்தந் தருக முத்தமே!
மூவா மறையின் முடியிருந்த
      முதல்வி முத்தந் தருகவே! (42)

நெடிய புழைக்கைத் திணிமருப்பு
      நெடுந்தாள் வேழக் குழாத்தோடு
நீடு முளைக்கோட் டவளவுகிர்
      நீட்டிச் சுருக்கு மரிதுஞ்ச
விடியின் முழக்கும் வரிப்புலியு
      மிருகோட் டரவ முடன்கிடப்ப
விழைந்த காற்றுண் (டொளிரும) ணி
      யேந்தி யாடும் படப்பாந்தள்
வடிவி னிருவே றெழில்காட்டும்
      வலிய கலுழ னுடன்மருவ
வயங்கு மணிகள் பலகிடப்ப
      வளரு மிமையா சலத்(தோ)டு
முடியின் கமலை விளங்குமுமை
      முத்தந் தருக முத்தமே!
மூவா மறையின் முடியிருந்த
      முதல்வி முத்தந் தருகவே! (43)

ஆளி யுடன்று சி(னமட)ங்கி
      யடுப்ப வஞ்சா மனமுடைத்தாய்
யடுங்கோ பத்தீ விழிகக்க
      வாழி யுழக்கிப் படிமுழுதுங்
தூளி படவே நடந்தெதிர்த்துத்
      துளைக்கை மருப்பு மிளையாது
சுற்றிப் பிளிறிப் போர்புரியுந்
      துத்தி முகத்துக் குஞ்சரத்தைத்
தாளி னடக்கி நெடுங்கரங்க
      டழைய நீட்டி யுரித்திட்ட
சது(ர) னாரூ ரிறைக்குரித்தோ
      டழுவிக் குழைத்தென் நெஞ்சன்பு
மூளப் பார்க்குங் கமலையுமை
      முத்தந் தருக முத்தமே!
மூவா மறையின் முடியிருந்த
      முதல்வி முத்தந் தருகவே! (44)

மேரு மணிக்கோட் டுழிமுகுந்தன்
      விமலை யிருந்து விளங்குதல்போல்
விண்மேற் பொருத சிகரத்தின்
      மின்னோ டெழிலி கிடந்ததெனப்
பாரை யளித்த மறைவிரிஞ்சன்
      பச்சைக் கிரிமே லிருந்ததெனப்
படருங் கோட்டுப் பொங்கரிடம்
      பருதி யிருந்தே யிலங்கலென
வோரும் ஒன்பான் மணி(யி)ழைத்தே
      யொளிசெய் சிங்கா தனமிசையி
னுமைசெய் யிறைவன் வீற்றிருந்தே
      யோவாச் செல்வம் பரவினர்க்கே
மூளி யளிக்குங் கமலைவல்லி
      முத்தந் தருக முத்தமே!
மூவா மறையின் முடியிருந்த
      முதல்வி முத்தந் தருகவே! (45)

நடக்குஞ் சரண மெழுவாயாய்
      நண்ணு மேனி யில்லாத
நாதன் மணந்து பலகோடி
      நந்தாப் புவனம் படைத்திருந்தா
யடக்கிப் பொறியின் வழிசொல்லா
      தாறு குறும்புந் தளைந்திட்டே
யறிவை யறிந்த வாசானை
      யடைந்து பணிந்து பக்குவத்தின்
கிடைக்கும் ஞானம் கவுணியர்க்குக்
      கிளரு முலைப்பால் வழியளித்தாய்
கேண்மை யுற்ற தொழும்பருளங்
      கிளைத்து மொழிந்த பொருளெல்லாம்
முடிக்குங் கருணைக் கமலையுமை
      முத்தந் தருக முத்தமே!
மூவா மறையின் முடியிருந்த
      முதல்வி முத்தந் தருகவே! (46)

(வேறு)
போதங் கனவினு முணராத புல்லியன்
      புரிநன்றி புரவா மூடன்
புண்ணியந் திவலையின் விண்பொரும் பொருப்பெனப்
      புணர்ந்திடுங் கங்கை வெள்ளம்
காதம் பரவுறுங் காற்றினா லதிபவங்
      கொன்றிடும் மேன்மை பெற்ற
காசிநக ரெய்தியுந் தீராது நின்றவன்
      கனவினில் மொழிய வேந்தன்
சீதந் தருபுனற் பொன்னிசூழ் நாட்டினிற்
      சிறந்திடுங் கமலை மேவி
தீர்த்தரா சனனெனத் திகழுபால் வாவியிற்
      சேர்ந்துநின் றாடி வந்த
பாதகமு மாற்றிடு மாரூர்ப் பராசக்தி
      பவளவாய் முத்த மருளே!
பழமறைகள் யாவைக்கு மொளிபெருகி நின்றபரை
      பவளவாய் முத்த மருளே! (47)

காளிவெண் குடையெடுத் தங்கையி னேந்தவே
      கமலைவெண் கவரி வீசக்
காசினிப் பேரணங் காலவட் டங்கொளக்
      கன்னிய ரெழுவர் வாழ்த்த
நாளலாக் கலைமகள் மங்கலத் திசைபாட
      நந்திகைப் பிரம்பு தூண்ட
நளினவிழி யிந்திரை யடப்பைகை யேந்தவே
      நந்தினி யாடி தாங்க
(வாளொளிக் கும்)பிழைக் கொற்றவை வெற்றிசெய்
      வாளெடுத் துலாவி நிற்ப
வசைவிதி துளவமா லிந்திரன் போற்றவே
      மகிழ்ந்துறைந் தளிக்கும் வாழ்வே
பாளைநிகர் பூங்குழற் கமலைப் பராசக்தி
      பவளவாய் முத்த மருளே!
பழமறைகள் யாவைக்கு மொளிபெருகி நின்றபரை
      பவளவாய் முத்த மருளே! (48)

பொன்னணங் குறையக மயோத்திவாழ் மன்னவன்
      புகல்மொழி தணந்த வாக்குப்
பொருந்தினள் வேட்டைமேல் வந்துகா டகம்புகும்
      புலிமுதற் சாடி நிற்ப
மன்னுமுன் நல்வினைக் காலம்வந் தழைப்பவே
      வந்துகண் டஞ்சொல் வாணி
வாமுறுங் குளமூழ்கி வாக்குடன் பெற்றுநின்
      மலரடி வணங்கி வாழ்த்தி
நன்னுதற் சயமகள் புயமேவு மன்னவர்
      நவின்றநல் வரங்க டந்தோம்
நாமநீர் வேலிசூ ழுலகெலா மளியென்று
      நல்வர மளித்த வாழ்வே
பன்னிடுஞ் சுருதிசூழ் கமலைப் பராசக்தி
      பவளவாய் முத்த மருளே!
பழமறைகள் யாவைக்கு மொளிபெருகி நின்றபரை
      பவளவாய் முத்த மருளே! (49)

மோகமால் விடுத்தவான் மந்திரமு ரைப்பவர்
      முப்பொரு ளுணர்ந்த தூயோர்
முன்னவன்பு ராணநூ லிடந்தொறும் படிப்பவர்
      முக்கணன் பூசை செய்வோர்
யோகுசெய் திருப்பவ ராரண மோதுவா
      ருயர்காலை யுணர்ந்து சொல்வா
ரும்பரம பசுபதி விமலனே சாதமென்
      றுரைத்தனர் வியாத னென்பார்
யாகநல் வினைபல விழைவுட னிழைப்ப
      வான்புகழ் நாம மெல்லா
மந்தணர் சொற்றிட கீர்த்தனந் தாளமோ
      டறைபவர் செல்லு மாவின்
பாகரைச் சூழ்பவர் சூழுமா ரூர்பரை
      பவளவாய் முத்த மருளே!
பழமறைகள் யாவைக்கு மொளிபெருகி நின்றபரை
      பவளவாய் முத்த மருளே! (50)

சாமளைசொலம்பிகை வாரேறு வனமுலை
      சாம்பவி நீல கண்டி
சருவாணி சிவகாமி நான்முகி வயிணவி
      தத்துவங் கடந்த சத்தி
கோமளைகொள் பிரமாணி யிடபவா கனத்தம்மை
      குடிலைவாழ் சாந்தி கன்னி
கொற்றவை மாலினி மாதேவி யீசுவரி
      கொம்பன்ன மருங்குல் வாமை
யாமளைநல் லயிராணி மனோண்மணி [1]முக்கண்ணி
      யரனிடத் துறைந்த சக்தி
யாரியை பூரணி வேதவதி பான்மொழி
      யல்லியங் கோதை யான்சொற்
பாமலர் தரித்தவ ளாரூர்ப் பராசத்தி
      பவளவாய் முத்த மருளே!
பழமறைகள் யாவைக்கு மொளிபெருகி நின்றபரை
      பவளவாய் முத்த மருளே! (51)
([1]. யைமுககண்ணி என்று மூலத்தில் உள்ளது.)
முத்தப்பருவம் முற்றும்.
----------------------------

வாரானைப் பருவம்

பொன்னார் கமலைச் சமற்காரப்
      புரம்பூ விதையப் பூங்கோயில்
புகழ்சேர் யாக புரந்திகழும்
      போர்வேற் கந்த புரிமுளரி
முன்னே நிறுத்த வானகரம்
      வளஞ்சேர் தேவா சரியமொழி
வளரு மூலா தாரநகர்
      மருவாக் கலியே புகாநகரந்
தென்னா ரந்தக் கேசுரஞ்சீர்
      சேரும் பரையூ ராடகவூர்
திணிதோள் முசுகுந் தபுரம்வான்
      றேவர் சிதலை வடிவெடுத்த
மகிழ்ந்த பரையே வருகவே!
      வன்மீ கபுர மென்னாரூர்
மழுவாட் படையார்க் கானந்தம்
      வழங்கு முமையே வருகவே! (52)

சென்னா விளங்கி மறைவிரிக்குந்
      திருவுஞ் செழுந்தா மரைப்பொகுட்டுச்
சிறந்து களித்து வளரணங்குந்
      பன்னாள் வழுத்து மயிராணி
திகழ வணிந்த குழைக்காதும்
      பதத்திற் பூட்டும் பாடகமும்
பங்கே ருகக்கண் நெடுமாயன்
      பரிவி னணிந்த மணித்தொடியும்
தென்னா வெனவே வரிவண்டு
சிறந்து பாடச் [1]சேடிவர்கள்
      தெரியல் சூடுஞ் சூழிகையுந்
      திசைக டோறுங் கதிருமிழ்ந்து
மன்னா நிற்க வசைந்தசைந்து
      கமலை வாழ்வே வருகவே!
மழுவாட் படையார்க் கானந்தம்
வழங்கு முமையே வருகவே! (53)
([1]. செடியா எனவுளது.)

முளைக்குங் குடுமி நெடுங்கயிலை
      முன்னே யமர்ந்து துளைக்கரத்தை
மூரித் திரைசூழ் வளையுவரி
      முகத்தி னீட்டிக் கவர்ந்திரைப்ப
வளைக்கும் வங்க மொளிமுத்து
      வளையாப் பொருப்பு மணியினங்கள்
மண்டியுழலுஞ் சலஞ்சலங்கள்
      வானோர் மகிழுஞ்சுவையமுதங்
கிளைக்குங் கொண்டற் றிசைவீழக்
      கிளருந் தேவ ருடனாடிக்
கேண்மை யுற்றே யாரூரின்
      கீழ்பால் விட்ட வாசலிலே !
வளைக்குங் கணத்தோ டுறைகளிற்றை
      மகிழ்ந்த பரையே வருகவே!
மழுவாட் படையார்க் கானந்தம்
      வழங்கு முமையே வருகவே! (54)

இருட்டிற் கறுத்துப் புடைவெளிறி
      யிடையின் செம்மை வரிகாட்டி
யிடத்தின் வேலைக் குருநிகரா
      யிடர்செய் யால மகம்பொதிந்து
தருக்கின் விளங்கிக் குழைமீதிற்
      றாவித் தாவி நனிபொருது
தனுவேள் படைக்கு முன்படையாய்
      தண்ணார் குவளைத் திரள்சீறி
நரித்து மானுங் காடெய்த
      நாளு மெழிலை மிகப்படைத்து
நாடு மயக்கின் மூழ்கினர்க்கு
      நல்ல துணைபோற் காட்டிமிக
மருட்டும் விழியார் மால்களைந்த
      கமலை வாழ்வே வருகவே!
மழுவாட் படையார்க் கானந்தம்
      வழங்கு முமையே வருகவே! (55)

ஒளிரு நீல கண்டரிடத்
      துழையைப் பிடித்துச் சடிலமிசை
யுகுந்து கிடந்த வருகரிசி
      யுலவா விதழி நறைநிரவி
யலையாக் கங்கை நீர்வாரி
      யளியி னுண்ண மிகவழங்கி
யடுத்துப் பருகத் தனியளித்தே
      யங்கை யுடலின் மிசைநீவி
மிளிருங் கண்ட நித்திலத்தை
      வீக்கி வேலன் விளையாட
விளங்கும் வள்ளி தனைக்குறித்து
      விளைத்த தெனவே சேடிமார்
[1]களைய நின்றே யுரைப்பமகிழ்
      கமலை வாழ்வே வருகவே!
மழுவாட் படையார்க் கானந்தம்
      வழங்கு முமையே வருகவே! (56)
([1]. வளைய என்றுளது. மோனை நோக்கி களைய எனப்பட்டது.)

(வேறு)
கன்னியு மாடவர் கோலமுங் கொண்டிருவர்
      காதலி னிருந்த போது
கருணையுட் கொண்டமின் மங்கலப் பார்வையிற்
      கன்னியாய் விளைந்த காலைப்
பன்னியும் வேதத் தலைவனும் வெகுண்டுமன்
      பாலணைந் துரைக்க வேந்தன்
பகரரிய மாதவம் புரியநீ முன்னின்று
      படிமிசை நாம்வ ழங்கும்
நன்மையை மாற்றினும் நமதுரு நினைத்ததும்
      நற்றவத் தொண்டர் நின்று
ஞாலமீ திழைத்தநற் கருமங்கள் மாற்றுதல்
      நம்வழி யில்லை யென்றே
மன்னவர்த மக்கே மருத்துமொழி கருணையாய்
      வளர்புகழ்க் கமலை வருகவே!
மணிமிடற் றெந்தைக்கு விழியாகி நின்றபரை
      மகிழ்வுடன் வருக வருகவே! (57)

கஞ்சாச னத்துவளர் பொன்னணங் கிருக்குறைக்
      கலைமாது செங்கை நீட்ட
கனகமீ தயிராணி மனமுருகி முன்னின்று
      கத்தூரி யணிந்த ழைப்புத்
துஞ்சாத பைந்துழாய் நாரணக் கடவுளுஞ்
      சூளியைக் கண்ணி யிட்டுத்
தூயமழ லையினமுத மொழுகுசொற் சொல்லென்று
      துணைமலர்க் கரங்கள் கொட்டப்
பிஞ்சேறு வெண்மதித் திருநுதற் சேடிமார்
      பேரின்ப முதவு மாதர்ப்
பின்னழகு முன்னழகு காணவரு ளென்றுமுன்
      பெரிதுவந் தணைந்து கொள்ள
மஞ்சேறு பூங்கோதை நகையளித் துறைந்தவள்
      கமலை நாயகி வருகவே!
மணிமிடற் றெந்தைக்கு விழியாகி நின்றபரை
      மகிழ்வுடன் வருக வருகவே! (58)

கண்ணொளிக் கெட்டாத நுண்நுசுப் பையமுங்
      கருத்துணர்ந் தணங்கு மாதர்
காதலிற் சுட்டியுஞ் சூழியைத் தாமமுங்
      கண்டசர முத்து மிட்டார்
விண்ணுறைந் தொருமூன்று காலமுங் கண்டவர்
      விழைவினான் மயங்கு வாரோ
மிக்கதொரு பற்றுளம் மேம்பட்டு வருதலின்
      வினவியுந் தெரிய மாட்டார்
புண்ணியம் பழுத்தகொடி நூபுரம் புலம்பவே
      பூமிசை மெல்ல மெல்லப்
போதுக நன்கோது மாமறை துதிக்கவே
      பொறைவடிவு கொண்டு மேவும்
மண்மகள் கண்ணாடி யானவா ரூருமை
      மகிழ்வுடன் வருக வருகவே!
மணிமிடற் றெந்தைக்கு விழியாகி நின்றபரை
      மகிழ்வுடன் வருக வருகவே! (59)

இருள்பருகு செஞ்சுடர்க் கடவுள்சூழ் மேருமே
      லிமையவர் குழாங்க ளீண்டி
யீறிலா தனாதியாங் கடவுளா ரென்னவே
      யிவ்வுலகு தந்த வள்ளல்
கரியமணி வண்ணனு மூடியே நானென்று
      காதலி னியம்பு காலைக்
கடவுளர்க ளனைவரும் வேதமுரை செய்ததே
      கழிவிலாச் சாத மென்னச்
சுருதியொரு நாலுமே மதிமுடித் தவிர்சடைத்
      தோன்றலே யனாதி யெங்குந்
தோய்விலா னீறிலா னைந்தொழி லியற்றுவோன்
      றூயவ னென்று கூறும்
மருமலர்க் கொன்றையா னாரூரின் வாழ்வருள்
      மணிவல்லி வருக வருகவே!
மணிமிடற் றெந்தைக்கு விழியாகி நின்றபரை
      மகிழ்வுடன் வருக வருகவே! (60)

துன்னிவரு தண்டோடு தண்டிநின் றேகுவார்
      துடிமருங் கிடைய ராடச்
சுத்தவிசை மத்தளந் தாளவகை பல்லியந்
      துவைப்பநின் றிசைப டிப்பார்
பன்னுமறை யோதுவார் வீதியிற் சேறாடி
      பந்தமுங் கொண்டு செல்வார்
பலகொடிகள் கொடியுடன் நெருங்கவே போகுவார்
      பங்குனித் திருவி ழாவின்
என்னைமு னனுப்புவீ ரென்னைமு னனுப்புவீ
      ரென்றரன் சந்நி திக்கே
யேறிமுன் மடியிலிடு பொன்னேறு முத்தமும்
      மேற்றுநின் றோடு வார்கள்
மன்னுதன் நாயமார் பரிகலத் தொலிபெருகி
      வளர்கமலை யம்மை வருகவே!
மணிமிடற் றெந்தைக்கு விழியாகி நின்றபரை
      மகிழ்வுடன் வருக வருகவே! (61)
வாரானை முற்றும்.
---------------------------------

அம்புலிப் பருவம்

கலவியெழு திரைமோது மேல்முகட் டேறுமணி
      சூழ்கடற் பிறந்து வந்தாய்
சுடர்மணித் 1தொகுதியான் பிணியெலா மடுமருந்
      தடவிசூ ழடுக்கல் வந்தாள்
நலமலியு வானவர் குழுவெலாங் களித்துண்ண
      நாளுமே யமுத மீந்தாய்
ஞானவா னந்தமே தருங்கரு ணாகரம்
      நண்ணினார்க் களித்து நின்றாள்
உலகுழிப் பைங்கூழ் பலமலிந் தோங்கவே
      யொண்ணிலா வுமிழ்ந்து நின்றா
யுலகெலா மன்பதைக் குழுமிகுந் தோங்கவே
      யுயரறம் வளர்த்து நின்றாள்
அலகிலாப் புகழ்பெருகு கமலைக்2க ணுமையுட
      னம்புலீ யாட வாவே!
அருங்கலைகள் வளரவே கருணைசெய் தழைத்தன
      ளம்புலீ யாட வாவே! (62)
(1. தொகுதி கொண்டு பிணியடு மருந் என்றுளது.
2.கருமையுட என்றுளது.)

நிரையமு மிகவஞ்சு முயர்பாவி யந்தண
      னின்றுகீர்த் தனங்கள் கெட்டே
நேசித்த மாதவ ருள்ளச் சரோருக
      நீங்கிலாள் பாத முற்றான்
பருதிசூழ் விகம்பூடு பகல்வரவு நாணியே
      பண்டிருட் டிரிய லுற்றாய்!
படுமலைக ளேழ்கடற் றினந்தொறும் சூழாது
      பண்டுபோல் விளங்க லாகும்
முரித்திரைத் தேவநற் றீர்த்தத்தி லாடினால்
      மூடிய கயமு மாறும்
மூவேழு சுற்றமுங் கதிசேரு மத்துளிகள்
      முடிமிசை தோய்ந்த போதே
யருமறைகள் சூழ்கமலை யோகமா தாவுட
      னம்புலீ யாட வாவே!
அருங்கலைகள் வளரவே கருணைசெய் தழைத்தன
      ளம்புலீ யாட வாவே! (63)

உலகெலாம் பாயுமிரு ளுழிநா ளுண்டவ
      னோதுமறை வேள்வி யாற்ற
வுறுபொருள்கள் யாவையு முண்டுண்டு தேக்கிடா
      தொளிபெருகு மேனி யுற்றோன்
நலமலிந் தேவரும் பொருளெலாம் நண்ணவே
      நல்குநிதி பெற்ற வள்ளல்
நாடுபடு மேலாகு விண்ணுலகு யாவையு
      நாளுமே யளித்த வேந்த
னிலகுமறை யெல்லைகண் டொருவடிவை யுற்றவ
      னீறிலா யுயிர்ப டைத்தோ
னிவ்வுலகு மேலுலகு மிருசரண மூடின
      னேத்தியே வாழ்வு பெற்றா
ரலகிலா நலமுறுவை கமலைமகி ழம்மையோ
      டம்புலீ யாட வாவே!
அருங்கலைகள் வளரவே கருணைசெய் தழைத்தன
      ளம்புலீ யாட வாவே! (64)

நெட்டுடற் பொறியழற் செவ்விழித் திரள்வரி
      நெடுமைகொள் கரிய நாக்கு
நெடுந்துயி னஞ்சுகா லெயிற்றொடு மண்டலம்
நிமிர்ந்தெடுத் தாடு பாந்தள்
கிட்டிவந் தணையவே பட்டதுயர் நீயறிவை
      கேடிலா திருக்க வேண்டின்
கிளருமொழி வீசிடுந் தொடியாயி ரங்கொண்ட
      கிரிநெடும் புயத்தின் மீதே
பட்டதிக் குரையரவ மணிவதுடன் மாபூதர்
      பற்றுவர் துயரு மாறும்
பன்னெடுங் காலமுந் துன்பமற் றுலவலாம்
      பங்கயச் செல்வி நாளு
மட்டதிக் குறையமரர் பணிகமலை யம்மையுட
      னம்புலீ யாட வாவே!
அருங்கலைகள் வளரவே கருணைசெய் தழைத்தன
      ளம்புலீ யாட வாவே! (65)

கோடிசூ ரியவொளிக் கதிகமா மொருபொருட்
      கொண்டாடி காண வொட்டாக்
குழுவிருட் டாணவச் செருக்கோட ஞானமே
      கூடுமா முத்தி நல்கும்
பீடுபெற் றுறைவைநீ வடிவுகொண் டிடுமாசு
      போவது மொல்லை யாமே
பெருகுமொளி மேனியை யுள்ளிடங் கொண்டுமின்
      பெரியவா ளணங்கு செய்தாள்
நாடுமடி யாரிட்ட பச்சிலைக் கிச்சித்து
      நல்வீடு தந்த சத்தி
நம்பனு மிவளேவல் கொண்டுலகு தந்ததும்
      நாடிநீ யறிவை யன்றோ!
வாடுகொடி மருகுசூழ் கமலையம் பிகையுட
      னம்புலீ யாட வாவே!
அருங்கலைகள் வளரவே கருணைசெய் தழைத்தன
      ளம்புலீ யாட வாவே! (66)

மதுரம் பழுத்தொழுகு நறவுண்டு தேக்கிட்டு
      வண்டினம் முரண்டு பாடும்
வனமாலி கைவனத் திருளறக் கவுத்துவ
      மணிவிளக் கிட்ட கொண்டல்
பதியுமுய ரண்டமேல் முகடுதொட் டுரிஞ்சபொரு
      படிவமாய் வளர்ந்து நின்றே
படியிடந் தன்னடித் தூளெனக் கண்டவன்
      பரையடியை நாடி யன்று
முதிரும் பெரும்புகழ் துதியாது (கா)ன்முளை
      முடிந்தது மறிவை நீயே
முண்டகச் சரணவினை கண்டுநீ யாடினே
      முன்னுருக் கலைகள் பெற்றே
யதிகமாய் விளங்கலாங் கமலையம் பிகையுட
      னம்புலீ யாட வாவே!
அருங்கலைகள் வளரவே கருணைசெய் தழைத்தன
      ளம்புலீ யாட வாவே! (67)

காயுஞ் சிறுவிதித் தீபுரியும் வேள்வியின்
      கண்ணுத லேவல் கொண்டே
கனன்றுளம் வெதும்பிவிழி பொறியெழுஞ் செஞ்சிகைக்
      கனல்வீச வீசு செங்கை
தோயும் நெடுங்கதை மூதண்ட வுச்சியிற்
      சுவடுபட மோதி யப்பாற்
சுற்றிடு மேழுவரி யொருவேலை யாயுடைத்
      தொல்லடிப் பூதர் சூழ
பாயுஞ் சாபமென வீரபத் திரன்வந்து
      பாவகன் முதலி னோரை
பண்ணிடுந் தண்டத்தின் நீபட்ட பாடறிவை
      பரன்முனிவு தள்ள லாங்கா
ணாயுமதி வல்லைக் கமலையம் பிகையுட
      னம்புலீ யாட வாவே!
அருங்கலைகள் வளரவே கருணைசெய் தழைத்தன
      ளம்புலீ யாட வாவே! (68)

பண்டுபடு மூதண்ட வேதண்ட நட்டுவாய்ப்
      படுமுறை வியாழம் வீக்கிப்
பங்கயத் தவிசயன் பைந்துழாய் மாதவன்
பண்ணவர் குழாங்க ளீண்டி
கொண்டலின் முழக்கேறு பாலாழி கடையவே
      கோகனகை யுடன்பி றந்தாய்
கோகனக மாதுகண் ணாகியே நின்றனள்
குளிர்நிலா வழக்கி னாலே
கண்டுபடு மொழியம்மை யாடலின் வருவதே
      கருமமா மிந்த மேன்மை
ககனமீ தெவ்வுலகு தேடினும் வாயாது
கடவுள ரெவர்க்கு மெட்டா
வண்டருந் தொண்டருஞ் சூழ்கமலை வல்லியோ
      டம்புலீ யாட வாவே!
அருங்கலைகள் வளரவே கருணைசெய் தழைத்தன
      ளம்புலீ யாட வாவே! (69)

மருத்துழாய் முகுந்தனும் நான்முகக் கடவுளும்
      வானவ ரரம்பை மாதர்
வரிவளைக் கடலாழி பட்டெழும் வல்விடம்
      மண்டிவந் தடுதல் செய்யப்
பெருத்தமால் கொண்டுநின் றனைவரு மலறவே
      பிஞ்ஞகன் கருணை செய்து
பெருங்களத் தடக்கலு மிவள்கரம் நீவவே
      பிரிந்தது வலுமை யெல்லாம்
தரித்தமெய்க் கறுப்பெலாங் காட்சியின் நீங்குமே
      தண்ணளி பெற்று நின்றாற்
றனுக்குறை நீக்கலாம் பேரின்ப மெய்தலாஞ்
      சாதமா யெண்ணி நாத
னருத்தமெய் பெற்றவள் மகிழ்வுற விரைவுட
      னம்புலீ யாட வாவே!
அருங்கலைகள் வளரவே கருணைசெய் தழைத்தன
      ளம்புலீ யாட வாவே! (70)

கொண்டநிலை யண்டமுக டிட்டவடி கொண்டலிடு
      கோகனக மேவி நின்றே
குண்டகழி யேழுபடு வட்டபுவி யிட்டமொடு
      கொற்றமுற வைத்த தறிவாய்
பண்டுவரு பத்திவிட நெட்டுடற் கட்செவிப்
      படிவமுற வைத்த தறிவாய்
பாரிடத் தடிபரவி னெப்பதம் வேண்டுமோ
      வப்பத மளித்தல் கண்டாய்
துண்டுபட் டலையாது வட்டமுறு மேனியாய்ச்
      சுகோதையம் பெற்று வாழ்வை
கடுமுனிவு கொண்டிடி னெவர்தள்ள வல்லவர்
      சொன்னவை மகிழ்ந்து செய்வா
யண்டினர்க் களிவாழ்வு கமலைப் பரையுட
      னம்புலீ யாட வாவே!
அருங்கலைகள் வளரவே கருணைசெய் தழைத்தன
      ளம்புலீ யாட வாவே! (71)

அம்புலிமுற்றும்.
-------------------------

அம்மானைப் பருவம்

தேனாறு நெட்டிதழ்ச் செங்கமல வல்லியுஞ்
      செழுமணித் திரளை வெள்ளிச்
செழுந்தகட் டிழைத்ததின் பாட்டளிது தைந்திடு
      சீதளத் தவள வெண்மை
கானாறு பங்கயச் செல்வியு மொன்னலார்
      கதிர்முடிக ளிடறு செங்கைக்
கடும்படைக் குலிசனுயி ரயிராணி [1]மாதுமீர்
      கனமருப் பெருமை சென்னி
தானேறி நின்றனள் மூவிழிகொள் சக்கரத்
      தையலுஞ் சூழ்ந்து நின்று
தனிமணி யிழைத்திட்ட வம்மானை யாடவே
      தளருமிடை துவள மெல்ல
வானேறு கொழுநரு மகிழவே யிமையமா
      தம்மானை யாடி யருளே!
அறம்வளரு மாரூர் மகிழ்பரா சக்தியே
      அம்மானை யாடி யருளே! (72)
([1].''மாதுமிரு" எனல் சிறப்பு.)

பொருப்பினாற் படைத்திட்ட வாரணந் தீஞ்சுவைப்
      பூங்கரும் புண்ட கீர்த்தி
பூதலத் துறையாது விண்ணேகு மாபுரம்
      பொடிபட நகைத்த கீர்த்தி
விருப்பிலா வொறுத்தலைத் தக்கனுக் கிடுகீர்த்தி
      மேருவின் மேரு வாகி
விழிப்புலன் கதுவாத வணுவினுக் கணுவுமாய்
      மேவிடும் பெரிய கீர்த்தி
செருக்கினால் வருபாண னேகவே யிசைபடு
      செய்யநா ஒருக்கொள் கீர்த்தி
செந்தமிழ் கொண்டுமா லிடங்கருண் பிள்ளையைச்
      [1]சிறுவரை யளித்த கீர்த்தி
[2]யரிக்கிராச் சிரமுட லளிகீர்த்தி பாடிமின்
      னம்மானை யாடி யருளே!
அறம்வளரு மாரூர் மகிழ்பரா சத்தியே
      அம்மானை யாடி யருளே! (73)
(1. சிறுவனாயளித்த எனல் சிறப்பு. 2. ?)

பூங்குழற் றாமமொடு புத்தமுத மேவிடும்
      புதுநிலாக் குழவி யாட
புயங்களிற் றரிக்கின்ற காலொளிசெய் மணிமேவு
      பூந்தொடித் திரள்க ளாட
வீங்கிளங் கொங்குறழ்க் குருக்கணிற் றவளவொளி
      விண்டுமுத் தார மாட
மெய்யெனும் பொய்யெனு மிருமொழி படைத்திட்ட
      மின்னிடைத் துகில்க ளாட
தேங்கிடு மரிக்குரற் சதங்கையொடு நூபுரஞ்
      சேவடித் துணையி னாடச்
சிற்பரந் தணவாது முக்கால மும்முறைச்
      சீகரக் கருணை வெள்ள
மாங்கமரு விழிமணிக் குழையாட வம்மையே!
      யம்மானை யாடியருளே!
அறம்வளரு மாரூர் மகிழ்பரா சத்தியே
      அம்மானை யாடி யருளே! (74)

தேனூறு மழலையஞ் சொற்கிளவி காதலின்
      சீதான கருத்தி லுன்னிச்
சிவனிறைவி வேலவன் வடிவாகி வந்துமால்
      செய்பூசை கொண்டு மேவக்
கானேறு கண்ணியணி வாசவன் கேட்பவே
      கரியமால் நல்க மேவிக்
கனிந்துசெய் பூசைகொண் டுறைதலின் முசுமுகக்
      காவலன் பத்தி செய்து
வானேறு வச்சிரன் நல்கவெண் கண்ணனே
      மாதலம் நிறுத்து ரைப்ப
வயங்கொளிசெய் மணியரிகொள் ளாசனத் திருத்தியே
      மாபூசை விழாந டாத்த
வானேறி யருளினள் கமலைப்ப ராசத்தி
      யம்மானை யாடி யருளே!
அறம்வளரு மாரூர் மகிழ்பரா சத்தியே
      யம்மானை யாடி யருளே! (75)

வெம்பித் திசைபிழைத் திருனேற விழிகளின்
      விண்ணவ ரோடி வந்தே
விமலநின் பதமலா லடைக்கலம் வேறில்லை
      மெய்யென்று நின்று கூற
கம்பக் கடாசலக் கிம்புரிக் கோட்டொடு
      கதறிவீழ்ந் திடமு னிந்து
கமலமென் சரணமுயர் சிரமூன்றி நெட்டுளைக்
      கைத்தலந் துடிது டிப்பக்
கும்பத் தடம்படுஞ் சொரியா (டு மூ) கமிசை
      கொண்டிடுங் கறைய டிக்கால்
குலுங்கநின் றிட்டவுரி கம்பலஞ் செய்தழகு
      கொண்டவன் நட்ட மாடி
வம்புயக் கண்கொண்டு பார்த்தருள் செய்யமின்
      னம்மானை யாடியருளே!
அறம்வளரு மாரூர் மகிழ்பரா சத்தியே
      யம்மானை யாடி யருளே! (76)

(வேறு)
கோலத் துளைக்கை வருங்கால் வேழங்
      குழைத்துவி ரைந்தூதக்
குறுங்காற் கரும்பு வுயர வேகிக்
குறித்துப் படிவதுபோற்
சீலக் கங்கைத் திரைவான்றுள்ளிச்
      சிந்திப் படிவதுபோற்
சீராளன்வான் விரைவிற் 1போகித்
திரும்புந் திறமதுபோற்
சாலக் குணத்தார் பிரிய மாட்டாச்
      சாருங் குணமதுபோற்
றவள வன்னம் விண்போய்த் தேடித்
தாழ்ந்து வருவதுபோல்
ஆலித் தெவரும் மொழிய வம்மை
      யாடுக வம்மனையே!
ஆரூர்ப் பரைகரு ணாகரி யம்மை
யாடுக வம்மனையே! (77)
(பொகியெ" என்றுளது.)

சாரும் நவக்கோ ளுடனே பழகித்
      தணவா திருந்ததுவோ
தண்ணார் நின்றாட் கமலம் பழகார்
சார்ந்தே யிருந்ததுவோ
வூரும் ராசித் திரளிற் பழகி
      யுடனே யிருந்ததுவோ
வொளிரும் பக்க மிரண்டின் கூடி
யுலவா திருந்ததுவோ
நாரைத் தணவா நின்கை நேசம்
      நாளும் பழகியதோ
நாடி யுயர வேறி மீளும்
நசையைத் தேறுமென
வாரு மிம்மொழி கூறத் தற்பரை
      யாடுக வம்மனையே!
ஆரூர்ப் பரைகரு ணாகரி யம்மை
யாடுக வம்மனையே! (78)

சங்குத வழ்ந்தொலி கைம்மிசை பொங்கித்
      தாழா வானேறத்
தங்கும ணித்திரள் மாலிகை யாகந்
தளர்ந்துகு ழைந்தாட
மங்கு லெனப்படு கோதைமு டித்திடு
      மல்லல சைந்தாட
வாளொளி கக்கும ணிக்குழை யார்விழி
வந்தும றிந்தாட
கொங்கைகு லுங்க 1வணிநெடு வாகுங்
      கூடப் பொருதேறக்
கொம்பர்நு சுப்பொடு பண்டிய சைந்தே
குழைய திளைப்பேற
வங்கணர் கண்டும் கிழ்ந்திட வெம்மனை
      யாடுக வம்மனையே!
ஆரூ ருமைகரு ணாகரி யம்மை
யாடுக வம்மனையே! (79)
(1."வணிந்திடு" எனில் ஓசை சிறக்கும்.)

(வேறு)
சீரூர் விமலன் றிருநட மிடவே
      செஞ்சடை வெண்பிறை யாடுத லென்னப்
பாரூர் தாங்கப் பகீரதி மீதே
      படர்ந்தே யேறிப் பணித்த லென்ன
நாரூர் கவுணியர் நற்றமி ழிசையே
      நயப்போ டிவர்ந்தே யிறங்குத லென்ன
வாரூர் முடியுமை யாடுக வம்மனையே!
      யாரூர்ப்பரையமு தாடுக வம்மனையே! (80)

செம்பது மப்பது மம்புவி மிசையே
      செப்ப வுலவாத் திருநட மிறையே
கம்பித் தாடுதல் நின்னா டலையே
      கண்டே யுள்ளங் களித்தது வன்றோ
பம்புங் கதிர்வளை பலவிளை யாட்டப்
      படுமொலி யிடவிண் பரந்தே தூர்ப்ப
வம்புவி தழைமின் னாடுக வம்மனையே !
      யாரூர்ப் பரையமு தாடுக வம்மனையே ! (81)

அம்மானை முற்றும்.
-------------------------

நீராடற் பருவம்

ஞானந் திரண்டெழுந் தொப்பிலா தொளிதரும்
      நற்றவக் கயிலை யென்றே
நாமம் பகர்ந்தவர்க் கீறிலா வீட்டிடம்
      நல்குமொரு வெள்ளி வெற்பின்
பானற் றடங்கண்ணி யாடலிற் செஞ்சடைப்
      பரமன்விழி செங்கை முளரி
பற்றவொரு கங்கையோர் பத்தாகி யொழுகிடப்
      பகீரதன் கொணர்ந்து வந்து
கானற் றடங்காப் பாதலம் புகுகங்கைக்
      கண்ணுத லருளி னாலே
கமலா லயத்துவந் துறைந்தறம் புரிகின்ற
      காதையுந் தொண்ட ரார்ப்பும்
பூனற் றடத்துவளர் பொலிவொடும் வளர்கின்ற
      புனிதநீ ராடி யருளே!
புகழ்பரவு மாரூர்ப் பராசத்தி யென்னம்மை
      புனிதநீ ராடி யருளே! (82)

குடங்கையிற் சாகர மடங்கவைத் துயர்வரைக்
      குப்புகச் செருக்கு மாற்றுங்
கும்பமுனி குண்டிகை கங்கைநீர்க் கிம்புரிக்
      கோடுகொண் டுழக்கி வெற்றிக்
கடந்தந்த நால்வாய்க் கருணைபுரி குஞ்சரங்
      கவிழ்ப்பவரு பொன்னி வெள்ளங்
கரையிரு புறத்தினுஞ் சிவாலையச் சங்கொலி
      கார்முழக் கடக்கி யோங்க
தடந்தந்த வரைமேவு சந்தனத் திரளொடு
      தண்மலர் சுமந்து செய்யத்
தனிராசி மணிகளும் நித்திலக் குப்பையுஞ்
      சங்கமும் வரன்றி நன்னீர்ப்
பொடிதந்து மாறாத புண்ணியம் பழுத்துவரு
      புனிதநீ ராடி யருளே!
புகழ்பரவு மாரூர்ப் பராசத்தி யென்னம்மை
      புனிதநீ ராடி யருளே ! (83)

நீதிவளர மணிபிணித் தம்பொன்னி நாடெலாம்
      நெறிவழா தளிக்கு மன்னர்
நேசமுற் றுறைகுழவி வீதிவரு தேர்க்கால்
      நெரிந்துகன் றாவி போக
மாதுயர மெய்துபசு நீதிமணி யாட்டவே
      வளவனும் பதைப தைத்து
மனுவோது பரிகார முளவென்று சொன்னவர்
      மாற்றமுந் தள்ளி யந்த
வீதிவரு தேருருளை குழவியிட விடைமீதின்
      விமலவிறை யொல்லை வந்தே
விட்டவுயி ரனைவரு மேவவருள் செய்தவன்
      விரிபொழிற் கமலை நாதன்
போதமுறு மானந்த வேலையா டம்பிகை
      புனிதநீ ராடி யருளே!
புகழ்பரவு மாரூர்ப் பராசத்தி யென்னம்மை
      புனிதநீ ராடி யருளே! (84)

பழமறைக் கிழவன்னார் செப்பவொரு வீட்டிடம்
      பற்றிவெண் ணிலவு பூத்த
பதுமபீ டிகையிடம் விழைந்துறையு மங்கலப்
      பாரதிசொல் வேத ராசி
கிழமைகொ ளெண்ணெண் கலைகளு மாகமக்
      கிளைகளுஞ் சூழும் வாணி
கேண்மையுற் றிலகுமொரு பூம்பொய்கை நாடி
      கிட்டினர்க் களிக்கும் வள்ளல்
தழையுநகர்ப் பூமகட் கொருதாம மென்னவே
      தயங்கிடு மயோத்தி வேந்தன்
சார்ந்துநின் னருளினாற் படியவர்க் களித்திடுந்
      தண்ணறற் பொய்கை கஞ்சம்
பொழியுமது வுண்டுவண் டோலமிடு வாவியிற்
      புனிதநீ ராடி யருளே!
புகழ்பரவு மாரூர்ப் பராசத்தி யென்னம்மை
      புனிதநீ ராடி யருளே! (85)

ஒள்ளொளிக் கரங்களோ ராயிரமு நீட்டியே
      யுலகெலாம் விழுங்கி நின்றே
யொளிருமணி விழிகளுந் தன்வசத் தடக்கியே
      யும்பரி னேறி மூடிக்
கொள்ளியுங் காணாது மிடையுமிருள் வாரியே
      கொண்டுபோ முதைய பானு
குழைந்துநின் நுனதருட் கொழுங்கடல் பெற்றநாட்
      குடைந்தெடு பொய்கை யாங்கே
யுள்ளமீ துவந்துநின் றாடினர்க் குனதரு
      ளுதவிடுந் தூவி ராசி
யோதிமம் பெடையுடன் கண்டுயிலு முளரியி
      னுழையிட மறுப தஞ்சேர்
புள்ளினம் பண்ணினாற் றாலாட்டு வாவியிற்
      புனிதநீ ராடி யருளே!
புகழ்பரவு மாரூர்ப் பராசத்தி யென்னம்மை
      புனிதநீ ராடி யருளே! (86)

(வேறு)
தவளப் பொருப்பு வீற்றிருந்த
      தண்ணார் கடுக்கைச் சடைமவுலி
தழைக்குங் கருணைக் கடல்கிடந்து
தவிரா தெங்கும் விழியுதித்துப்
பவளக் கொடிபோ லிடை நுடங்கும்
      பரைநின் காந்தட் கரவிரலின்
படிந்தே வந்தோ மெனுங்கேண்மை
பரிவு கூர்ந்து நின்கோயி
லுவமை யில்லா மேல்பாலி
      னுறைந்து விரிந்த கங்கைநீ
ருள்ளம் பழுத்த வினத்தொண்ட
ரும்பா ரேழு கடலுடுத்த
புவன முய்ய மிகவிளங்கும்
      புதுநீ ராடி யருள்புரியே!
போற்றுங் கமலைப் பராசத்தி
புதுநீ ராடி யருள்புரியே! (87)

அவிரும் விழிகள் கடலாட
      வலங்க லளகம் மழைகாட்ட
வணியார் புருவஞ் சிலைகாட்ட
      யகல்வாள் மதியம் முகங்காட்டப்
பவளவினத்தை யிதழ் காட்டப்
      படுவெண் டரளம் நகைகாட்டப்
பணில வுருவங் களங்காட்டப்
      பணிப்பூண் கொங்கை வரைகாட்டத்
தவள வளைகளொலிகாட்டத்
      தளரும் நுசுப்பு மின்காட்டத்
தயங்கு மணித்தார் திரைக்காட்டச்
      சார்ந்தே யன்பா ரரம்பையர்கள்
புவனி வழுத்த வருள்புரிந்தாய்
      புதுநீ ராடி யருள்புரியே!
போற்றுங் கமலைப் பராசத்தி
      புதுநீ ராடி யருள்புரியே! (88)

குண்டர் சவுதங் கூறினபேர்
      குருட ராகில் புரம்நீங்கக்
குழைந்து பணிந்து மிகவழுத்துந்
குருடு தீர்ந்து சிவனருளால்
தண்டி யடியார் தொட்டபெருந்
      தடத்து நீரைத் திருவாக்காற்
சார்ந்த துணிவு நமிநந்தி
தகழி சொரிந்து விளக்கிடவே
கண்ட மாந்த ரதிசயித்துக்
      கருணைக் கடலென் றோதுமொலி
ககன மேறி யெண்டிசையுங்
கலந்து போர்ப்பப் புகழ்கிடந்த
புண்ட ரீகத் திருவாவிப்
      புதுநீ ராடி யருள்புரியே!
போற்றுங் கமலைப் பராசத்தி
புதுநீ ராடி யருள்புரியே! (89)

கடமூன் றூறக் கரைத்திருந்து
      கருதார் புரங்கள் துளைக்கரத்துக்
காற்றாக் ககன மீதேறிக்
      கலங்கிச் சுற்றி யிழிவுறவே
படிமீதி ததிர நடந்துயிரைப்
      பறிக்கும் நெடுங்கால் வெள்ளானைப்
பாகன் நீங்காப் பண்ணவரும்
      பண்டு போலப் படைத்திட்ட
தடமூ விழியா னவிர்சடையிற்
      றாவி யிழிய மாட்டாது
தங்கி யிருக்கும் வானதியைத்
      தணவா திருந்தும் பற்றுடனே
பொடிநீ றணித்தா ருறைவாவிப்
      புதுநீ ராடி யருள்புரியே!
போற்றுங் கமலைப் பராசத்தி
      புதுநீ ராடி யருள்புரியே! (90)

இருளிற் செறிந்த குழற்பரவை
      யினிய பசும்பொன் வழங்கெனவு
மிசையும் பொருளு நனிவிளங்க
விழைத்த தமிழ்ப்பா வன்றொண்டர்
பெரிய முதுகுன் றிடத்தொழுகும்
      பெருநீர் மணிமுத் தாற்றுள்ளே
பெய்தோ மிங்கு வருமெனவும்
பெரிது முனிய வருள்நினைந்தே
யரிய தமிழ்ப்பா வோதுதலு
      மமல னருளா லானைமுக
னாற்றில் தாழ்ந்து விரைந்தேகி
யன்று தந்த மாற்றுரைத்துப்
பொருளை யளித்த புகழ்வாவிப்
      புதுநீ ராடி யருள்புரியே!
போற்றுங் கமலைப் பராசத்தி
புதுநீ ராடி யருள்புரியே! (91)

நீராடல் முற்றும்.
-------------------------

ஊசற்பருவம்

கதிர்தருஞ் செந்துகிர்க் கால்மீதி னொலிபெருகு
      கனவயிர விட்ட மேற்றிக்
கழையினற் றண்கதிர் கொழிக்குந் தரளமிடு
      கவின்வடம் பூட்டி வீக்கிப்
புதுநிலவு பொழிமணிக் கனகபீ டிகைமிசைப்
      பொங்கொளி பரப்ப வேறிப்
புணரிசூல் கொண்டிடுங் களிப்பினால் நித்திலம்
      பொன்னொடுங் கரைக்கி ரைத்து
நதியுணப் பெருகுமொரு வயிறுளைந் தீன்றபொன்
      னறவுகான் றளிக்கு நல்கும்
நளினவீட் டுறைகின்ற வெண்ணெண் கலைகளும்
      நாளுமே சூழ்ந்து போற்றும்
புதுமதித் திருநுதலி கைபிடித் தாட்டமின்
      பொன்னூச லாடி யருளே!
புகழ்வளரு மாரூர் மகிழ்பரா சத்தியே
      பொன்னூச லாடி யருளே! (92)

குடமிட்ட வெள்ளெலும் பெழின்மங்கை யானசீர்
      கூடலிற் பூத மொன்று
கோடுபடு மேருவின் சோறுண்டு பற்றாது
      குளிர்நதி மடுத்த கீர்த்தி
வடமிட்ட வப்பகல் வேலையின் மிகுந்தசீர்
      வருநரி புரவி யாக
வைத்தசீர் [1]கவுணிய ரடைந்தநா ளெண்ணிலா
      மாந்தர்கதி பெற்ற கீர்த்தி
தொடவிட்ட நீறுபோன் செங்கல்பொன் னானசீர்
      சுடர்கட லிட்ட கீர்த்தி
சூழ்கயற் கொடிவழுதி வாழவே யுலவாது
      தோன்று பொன்னளித்த கீர்த்தி
பொடியிட்ட மேனியன் முன்பாடி யென்னம்மை
      பொன்னூச லாடி யருளே!
புகழ்வளரு மாரூர் மகிழ்பரா சத்தியே
      பொன்னூச லாடி யருளே! (93)

[1]. ('கவுணியாநடைந்த நாளளெண்ணிலா" என்றுளது.)
---------------
சூழியைத் தாமமும் நெற்றியிற் பட்டமும்
      சுட்டியு மொளித தும்பச்
சுடர்பொழியும் வெண்டரள மாலையும் பாட்டயர்
      சுரும்பொடு மலங்க லாட
வாழியென் றேத்தினர்க் குதவியுங் குறையாது
      வளர்கருணை விழித தும்ப
வரிவளைக் கணங்களும் நவமணிக ளொளிவீசு
      வண்டொடித் திரளு மாட
வாழிபடு சென்னசா கரத்துன்ப மாற்றுமீ
      ரம்புயப் பாத மீதே
யரிக்குரற் கிண்கிணிகள் நூபுரத் தொடுமாட
      வம்பரத் துலாவி வந்த
போழிளம் பிறைசூடி யுளமகிழ வென்னம்மை
      பொன்னூச லாடி யருளே!
புகழ்வளரு மாரூர் மகிழ்பரா சத்தியே!
      பொன்னூச லாடி யருளே! (94)

நந்தினியை சண்டியைப் பெருமாயை பலபூத
      நாதர்பா ரிடங்கள் காப்ப
நாளலர்கள் சாந்தணிகள் [1]கமலினி யனிந்திதை
நற்கரந் தாங்கி நிற்பப்
பைந்தளிர்க் காளிகை வெண்கவிகை தாங்கவே
      பதுமைவெண் கவரி வீசப்
படிமாது சூழ்விசிறி சுற்றிடத் துர்க்கைவாள்
      பணிச்சிகை யடப்பை தாங்கச்
சுந்தரத் துருப்பசியை முதலினோர் விரைமலர்
      தூவிடக் கருடர் கீதந்
துதிப்பவே மாலயன் புரந்தரன் முனிவரர்
      [2]தூயமறை யமரர் மாதர்
புந்தியின் மகிழ்ந்தோத வரசிருந் தருளம்மை
      பொன்னூச லாடி யருளே!
புகழ்வளரு மாரூர் மகிழ்பரா சத்தியே!
     பொன்னூச லாடி யருளே! (95)

[1]. கமலினிகை என்றுளது. [2]. தூயமறை சொல்லமரா என்றுளது.)
------------
ஆயிரஞ் சென்னிய ரம்புலியின் மேனிய
      ராதபன் வடிவு பெற்றோ
ராளிமா முகத்தினர் மண்டலமு விண்டலமு
      மங்கையி னேந்தி நிற்போர்
சேயிழைக் கன்னியர் நவகோடி வரியுடற்
      செம்பொறிச் சுடிகை மீதே
செம்மணித் தீபமிடு வாளரா வடிவெலாஞ்
      செறிந்திடு மணிய ணிந்தோர்
பாயிருட் பருகிவளர் பாவக னென்னவே
      படர்சடை முடிமு டித்தோர்
பலவகைப் பூதரு நின்புகழ் பாடவே
      பரமனார் விழிக ளிப்பப்
போய்வரவு நீங்குறா மணிவெயி லெறிக்கின்ற
      பொன்னூச லாடியருளே!
புகழ்வளரு மாரூர் மகிழ்பரா சத்தியே
      பொன்னூச லாடி யருளே! (96)

நீயாடல் சங்கரன் கண்கண்டு செவ்வணி
        நெடுமுடி துளக்க வெள்ளை
    நிலவுமிழு மிந்துவு மணிகொழித் தெறிந்திடு
        நீள்கங்கை நீத்த மாடத்
தேயாத நறவுண்டு பண்பாடு வண்டினத்
        திரள்களு மாடி நிற்ப
    செழுங்கழு நீர்க்கண்ணி பலவாட மணிமுடிச்
        சீறரா வோங்கி யாடப்
பாயாத வுழையாட விறையாட்டு வித்திடின்
        பனித்திடா ரில்லை யென்னும்
    பழமொழிகள் மெய்யென்ன வேவருங் கூறமெய்ப்
        பத்திசெய்யடிய ருள்ளம்
போயேழு பிறவிகளை யாரூர்ப் பராசத்தி
        பொன்னூச லாடி யருளே!
    புகழ்வளரு மாரூர் மகிழ்பரா சத்தியே!
        பொன்னூச லாடி யருளே! (97)

வீசுந்த ரைக்கற்றை மேவுஞ்ச டைக்கற்றை
        வெண்ணிலாத் துண்ட மீதே
    விரிந்தசெந் தாமரைகள் குன்றிட விளங்கிநின்
        மென்பதந் தொட்ட காலைத்
தேசுவைக் கண்டளவின் மதுவிராட் டென்னவே
        தேனினம் வந்து மொய்ப்பச்
    செந்தழற் றுண்டமென் றவிர்மணிப் பாந்தளுஞ்
        சீறியே யுழையி னோட
நாசமில் வெண்ணிலவு போகாத நமதுருவின்
        நண்ணிடுஞ் செம்மை கண்டே
    நல்லமதி யதிசயங் கொள்ளநீ மகிழ்வினால்
        நகைசெய்த வமைதி கண்டே
பூசைசெய் சேடியர்கள் வாழ்த்து (று)ங் கமலையாய்ப்
        பொன்னூச லாடி யருளே!
    புகழ்வளரு மாரூர் மகிழ்பரா சத்தியே
        பொன்னூச லாடி யருளே! (98)

தத்துவ மாறாறின் மேல்விளங் கவிர்சோதி
        தனுமனம் வாக்கு மில்லா
    தற்பர னொருவடிவு கொண்டது மாடலிற்
        றழைவிருப் புற்ற தன்றோ
பத்தருள வம்புயம் நின்பதப் பொன்முளரி
        பற்றினர்க் கதிக பாவாப்
    படலவிரு ணீக்கிப் பிரியாத முத்தியைப்
        பாலிக்கு மிமைய வல்லி
சித்திபெறு புந்திய ரல்லாத புந்தியர்
        தெரிசனம் பெற்ற மாந்தர்
    சித்தமீ தெண்ணிடுந் தூரதேசத்தினர்
        திசைதொழு மன்பருய்யப்
புத்தியின் மகிழ்ந்தருள் யோகப்ப ராசத்தி
        பொன்னூச லாடி யருளே!
    புகழ்வளரு மாரூர் மகிழ்பரா சத்தியே
        பொன்னூச லாடி யருளே! (99)

செந்தழற் செம்புவாய்ப் பருகிமெய் யானசீர்
        திருவரை யெடுத்த தோளன்
    சென்னியும் தெரியவொரு விரலூன்று கீர்த்தியுஞ்
        செம்மணிக் கணங்கள் நாக
மந்தமெய்க் கலுழனா யரசனைக் காய்ந்தசீ
        ரம்பலத் துலாவி வந்த
    வாற்றைநுண் டுளியாக வைத்தசீர் புல்லெலி
        யரசராய் மூன்று லோகஞ்
சந்ததமு மாண்டபின் படைத்திடுங் கடவுளாய்த்
        தரித்திட வைத்த கீர்த்தி
    தனுவிலா தைந்தொழி லாற்றிடும் வல்லமை
        சார்ந்திடும் பெரிய கீர்த்தி
புந்தியின் மகிழ்ந்தரன் முன்பாடி யென்னம்மை
        பொன்னூச லாடி யருளே!
    புகழ்வளரு மாரூர் மகிழ்பரா சத்தியே
        பொன்னூச லாடி யருளே! (100)

முத்துப் பொழிநிலவு மேலேறி வெண்மதி முத்துட னளாவி நிற்ப
        மூரிவெண் ணொளியெலாம்     வடிவுகொண் டுறைதலின்
        மொய்த்தொளிர் வளையொ லிப்ப
நத்துத் தரிக்கின்ற மாயவன் றரிமணிக         ணாயகம் மகில மீதே
    நடுங்காத வெற்பருவி மனிதவழ்ந் திடுவதி
        னன்குற வழகு காட்டப்
பத்திவளர் சேடிமார் சுற்றிநின்றருகுசெய்         பணிகளின் மகிழ்ந்து காப்பப்
    பாதபங் கயமலரி னேசம்வைத் தடியவர்
        பணிவதற் குளம மகிழ்ந்தே
புத்தியு முத்தியுந் தருங்கருணை யாழியே         பொன்னூச லாடி யருளே!
    புகழ்வளரு மாரூர் மகிழ்பரா சத்தியே         பொன்னூச லாடி யருளே! (101)

பொன்னூசல் முற்றும்.
கமலாலய அம்மன் பிள்ளைத்தமிழ் முற்றும்.
---------

பிள்ளைத்தமிழ் நூல்களின் அகரவரிசைப்பட்டியல்

"பிள்ளைத்தமிழ்'' என்ற பெயரால் எழுந்த நூல்கள் எண்ணிறந்தன. அவைகள் எல்லாவற்றையும் நாம் அறிய இயலவில்லை. பல நாட்களாக முயன்று தேடித் தொகுத்து, அகரவரிசைப்படுத்திய பட்டியல் ஒன்று, கீழே தந்துள்ளேன். அவைகளில் சிலவற்றிற்கு ஆசிரியர் பெயர் தெரியவில்லை. அவற்றில் திருத்தவேண்டியவை இருப்பின் தமிழுலகம் மன்னித்தருள வேண்டுகின்றேன். அத்துடன் அதன் உண்மையினையும், வேறுபல பிள்ளைத்தமிழ் நூல்கள், அவற்றின் ஆசிரியர்கள் ஆகியவற்றின் பெயர்களை அனுப்பித்தரவேண்டுமென்று பணிவன்புடன் கேட்டுக் கொள்ளுகிறேன்.

அகரவரிசைப்பட்டியல்

இதுவரை தெரியவந்துள்ள பிள்ளைத்தமிழ் நூல்களின் அகரவரிசைப் பட்டியல் வருமாறு:-

நூற்பெயர் ஆசிரியர் பெயர்
1. அகிலாண்டநாயகி பிள்ளைத்தமிழ் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
2. அங்கயற்கண்ணம்மை பிள்ளைத்தமிழ் அ.நரசிம்மபாரதி
3. அபயாம்பிகை பிள்ளைத்தமிழ் ?
4. அப்பர் பிள்ளைத்தமிழ் காரைக்குடி சொக்கலிங்கஞ் செட்டியார்
5. அப்பர் பிள்ளைத்தமிழ் மு. கோ. இராமன்
6. அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் சிவஞான முனிவர்
7. அம்மை பிள்ளைத்தமிழ் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
8. அரியக்குடி அலர்மேலு மங்கை பிள்ளைத்தமிழ் கிருஷ்ணமாச்சாரியார்
9. அருணாசல ஞானதேசிகர் பிள்ளைத்தமிழ் சுப்பராய அடிகள்
10. அரும்பரத்தை வேதவிநாயகர் பிள்ளைத்தமிழ் ?
11. அவிநாசிக் கருணாம்பிகை பிள்ளைத்தமிழ் வாசுதேவமுதலியார்
12. அழகர் பிள்ளைத்தமிழ் கவிகுஞ்சரம் ஐயர்
13. அழகர் பிள்ளைத்தமிழ் சங்கத்தார்
14. அழகர் பிள்ளைத்தமிழ் சாமி கவிகாளருத்திரர்
15.அழகாபுரி உமையம்மை ஆனந்தப்பிள்ளைத்தமிழ் சிவசுப்பிரமணிய தேசிகர்
16. அழகிய மாமுலையம்மை பிள்ளைத்தமிழ்காழிஞானதேசிகர்
17. அளகாபுரி உமையம்மை பிள்ளைத்தமிழ் தியாகராசச் செட்டியார்
18. அளகை உமையம்மை பிள்ளைத்தமிழ் அ. சண்முகஞ்செட்டியார்
19. அறம் வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் தொட்டிக்கலை சுப்பிரமணியமுனிவர்
20. அனுமார் பிள்ளைத்தமிழ் அருணாசலக்கவிராயர்
21. ஆண்டவர் பிள்ளைத்தமிழ் சவ்வாதுப்புலவர்
22. ஆண்டாள் பிள்ளைத்தமிழ் சவ்வாதுப்புலவர்
23. ஆண்டியப்பபிள்ளை பிள்ளைத்தமிழ் முகவூர் மீனாட்சி சுந்தரக்கவிராயர்
24. ஆதிபுரி வடிவுடையம்மை பிள்ளைத்தமிழ் கனகசபைத் தம்பிரான்
25. ஆயலூர் முருகர் பிள்ளைத்தமிழ் தொட்டிக்கலை சுப்பிரமணியமுனிவர்
26. ஆய்க்குடி முருகர் பிள்ளைத்தமிழ் சிவராமலிங்கம்பிள்ளை
27. ஆறுமுகநயினார் பிள்ளைத்தமிழ் ச. சண்முகதாசபிள்ளை
28. இராகவர் பிள்ளைத்தமிழ் குற்றாலக்குழந்தை முதலியார்
29. இராமலிங்க அடிகள் பிள்ளைத்தமிழ் பொ. சுந்தரம்பிள்ளை
30. இராமானந்தர் பிள்ளைத்தமிழ் கந்தசாமியடிகள்
31. இலஞ்சிவேலவன் பிள்ளைத்தமிழ் கவிராசபண்டாரம்
32. இளமுலையம்மை பிள்ளைத்தமிழ் பானுகவியடிகள்
33. உமையம்பிகை பிள்ளைத்தமிழ் தியாகராச செட்டியார்
34. உறையூர் நாச்சியார் பிள்ளைத்தமிழ் கோவிந்தபிள்ளை
35. ஏசுநாதர் பிள்ளைத்தமிழ் கி. சாமிநாதபிள்ளை
36. கடம்பர்கோயில் பிள்ளைத்தமிழ் வீரசைவக் கனகசபைக்கவிராயர்
37. கண்டனூர் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் சதாவதானம் பாலசுப்பிரமணி ஐயர்
38. கதிரைமலைக்கந்தன் பிள்ளைத்தமிழ் க. சிதம்பரநாதன்
39. கமலாலய அம்மன் பிள்ளைத்தமிழ் வைத்தியநாத தேசிகர்
40.கம்பன் பிள்ளைத்தமிழ் பண்டித அசலாம்பிகை
41. கம்பாளசாமியார் பிள்ளைத்தமிழ் ?
42. கம்பைப் பிள்ளைத்தமிழ் சோணாசல பாரதியார்
43. கலைசைச் செங்கழுநீர் வினாயகர் பிள்ளைத்தமிழ் சிவஞான முனிவர்
44. கழனிவாசல் திருவருணாசல தேசிக ரெத்தினப்பிள்ளைத்தமிழ் சிவசுப்பிரமணிய தேசிகர்
45. கழுகுமலைப் பிள்ளைத்தமிழ் காளிச்சுவாமிகள்
46. கன்னியாகுமரிப் பகவதியம்மன் பிள்ளைத்தமிழ் நீ. கணபதி ஆசாரியார்
47.காங்கேயன் பிள்ளைத்தமிழ் கொடிக்கொண்டான் பெரியன் அதிச்சதேவன்
48. காஞ்சி காமாட்சியம்மை பிள்ளைத்தமிழ்காஞ்சிபுரம் சிதம்பரமுனிவர்
49. காந்தியடிகள் பிள்ளைத்தமிழ் நாமக்கல் கவிஞர்
50. கிறித்துநாதர் பிள்ளைத்தமிழ் பிரான்சிசு பிள்ளை
51. குகையூர் பெரியநாயகி அம்மன் பிள்ளைத்தமிழ் ஆனையம்பட்டி மகாவித்துவான் அப்பாவையர்
52. குமரமலைப் பிள்ளைத்தமிழ் மு. வீரபத்திரக்கவிராயர்
53. குருந்தமலை முருகர் பிள்ளைத்தமிழ் கந்தசாமி அடிகள்
54. குலசை அறம்வளர்த்த நாயகி அம்மன் பிள்ளைத்தமிழ் தெய்வசிகாமணிக் கவிராயர்
55. குலோத்துங்கசோழன் பிள்ளைத்தமிழ் ஒட்டக்கூத்தர்
56. குன்றக்குடிப் பிள்ளைத்தமிழ் சின்னய்யன்
57. குன்றை முருகன் பிள்ளைத்தமிழ் மழவராயனேந்தல் சுப்பிரமணிய பாரதியார்
58. கோட்டாற்றுப் பிள்ளைத்தமிழ் செய்குத்தம்பிப் பாவலர்
59. கோட்டிமாதவன் பிள்ளைத்தமிழ் பீமகவிப்புலவர்
60. கோமதியம்மன் பிள்ளைத்தமிழ் புளியங்குடிப்பிள்ளை
61. கோமதியம்மை பிள்ளைத்தமிழ் முத்துவீரக்கவிராயர்
62. கோயிலூர்ப் பிள்ளைத்தமிழ் சுப்பிரமணிய ஐயர்
63. சங்கர குமாரர் பிள்ளைத்தமிழ் பொன்னாயிரங்கவிராய மூர்த்திகள்
64. சச்சிதானந்த விநாயகர் பிள்ளைத்தமிழ் சங்கரகுமாரமுனிவர்
65. சத்தியஞான பண்டாரம் பிள்ளைத்தமிழ் ?
66. சாமிநாதன் பிள்ளைத்தமிழ் சாமிநாதப்பிள்ளை
67. சிரவை முருகர் பிள்ளைத்தமிழ் கந்தசாமியடிகள்
68. சிவகாமிபிள்ளைத்தமிழ் சொக்கலிங்கஞ்செட்டியார்
69. சிவகிரிக் குமரக்கடவுள் பிள்ளைத்தமிழ் ஆ. கருத்தமுத்துப்பிள்ளை
70. சிவஞான பாலைய சுவாமிகள் பிள்ளைத்தமிழ் சிவப்பிரகாசசுவாமிகள்
71. சிவந்தெழுந்த பல்லவராயன் பிள்ளைத்தமிழ் படிக்காசுப்புலவர்
72. சிவபுரம் மீனாம்பிகை பிள்ளைத்தமிழ் பீமகவிப்புலவர்
73. சிவயோகநாயகி பிள்ளைத்தமிழ் ?
74. சிவானந்தன் பிள்ளைத்தமிழ் ?
75. சீரங்கநாதர் பிள்ளைத்தமிழ் கோவிந்தப்பிள்ளை
76. சுந்தரமூர்த்தி சுவாமிகள் பிள்ளைத்தமிழ் வேலுத்தேசிகர்
77. சுந்தரர் பிள்ளைத்தமிழ் காரைக்குடிசொக்கலிங்கஐயர்
78. சுப்பிரமணியக்கடவுள் க்ஷேத்திரக் கோவைப் பிள்ளைத்தமிழ் காஞ்சிபுரம் சிதம்பர முனிவர்
79. சுயம்பிரகாச தேசிகர் பிள்ளைத்தமிழ் தாண்டவராய முனிவர்
80.செங்குந்தர் பிள்ளைத்தமிழ் ஞானப்பிரகாசர்
81. செந்நற்குடிச் சண்முகநாதன் பிள்ளைத்தமிழ் பீமகவிப்புலவர்
82. செப்பறைப் பிள்ளைத்தமிழ் சுப்பிரமணியக்கவிராயர்
83. செயங்கொண்ட சோழீசர் பிள்ளைத்தமிழ் முத்தப்பச்செட்டியார்
84. செய்குதாவூது அலியுல்லா பிள்ளைத்தமிழ் சொர்ணகவி
85. செழியதரையன் பிள்ளைத்தமிழ் அந்தகக்கவி வீரராகவ முதலியார்
86. சென்னிமலைப் பிள்ளைத்தமிழ் குந்தாணி சாமிநாதப்புலவர்
87. சென்னை கந்தசாமி பிள்ளைத்தமிழ் தண்டபாணி சுவாமிகள்
88. சென்னை விநாயகர் பிள்ளைத்தமிழ் கச்சியப்ப முனிவர்
89. சேக்கிழார் பிள்ளைத்தமிழ் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
90. சேதுபர்வதவர்த்தனியம்மை பிள்ளைத்தமிழ் அருணாசலக்கவிராயர்
91. சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ் அந்தகக்கவி வீரராகவ முதலியார்
92. சேறைத்தவம் பெற்றநாயகி பிள்ளைத்தமிழ் மு.ரா. அருணாசலக்கவிராயர்
93. சொரூபானந்தர் பிள்ளைத்தமிழ் தத்துவராயர்
94. சௌந்தரியநாயகி பிள்ளைத்தமிழ் வீரசுப்பைய சுவாமிகள்
95. சௌமிய நாராயணமூர்த்தி பிள்ளைத்தமிழ் சே. சுப்பராய ஐயர்
96. ஞானசித்தர் பிள்ளைத்தமிழ் முத்துசாமிப்பாரதி
97. தணிகைப்பிள்ளைத்தமிழ் கந்தப்பையர்
98. தணிகைப்பிள்ளைத்தமிழ் தண்டபாணி சுவாமிகள்
99. திரிபுரசுந்தரி பிள்ளைத்தமிழ் முத்துக்குமரன்
100. திருஉறந்தை காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை
101. திருக்குளந்தை வடிவேலன் பிள்ளைத்தமிழ் மதுரைச் சபாபதி முதலியார்
102. திருக்குற்றாலப் பிள்ளைத்தமிழ் திரிகூடராசப்பக்கவிராயர்
103. திருச்சுழியல் துணைமாலையம்மை பிள்ளைத்தமிழ் வ.சு.செங்கல்வராயபிள்ளை
104. திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ் பகழிக்கூத்தர்
105. திருஞானசம்பந்தர் பிள்ளைத்தமிழ் காரைக்குடி சொக்கலிங்கஐயர்
106. திருஞானசம்பந்தர் பிள்ளைத்தமிழ் தணிகைமணி செங்கல்வராயபிள்ளை
107. திருஞானசம்பந்தர் பிள்ளைத்தமிழ் மாசிலாமணி தேசிகர்
108. திருத்தணிகைச் சிங்காரவேலர் பிள்ளைத்தமிழ் தணிகைமணி செங்கல்வராயப் பிள்ளை
109. திருத்தணிகைப் பிள்ளைத்தமிழ் திரு. கந்தப்பையர்


110. திருத்துவத்துறைப் பெருந்திருப் பிராட்டியார் பிள்ளைத்தமிழ் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை
111. திருத்துருவமலை முருகர் பிள்ளைத்தமிழ் சாணாங்குப்பம் இராமநாதபிள்ளை
112. திருநாவுக்கரசர் பிள்ளைத்தமிழ் சு. அப்பாவையர்
113. திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் அழகியசொக்கநாதப்பிள்ளை
114. திருப்பரங்கிரிப் பிள்ளைத்தமிழ் அருணாசலக்கவிராயர்
115. திருப்பெருமணநல்லூர் திருவெண்ணீற்றுமை பிள்ளைத்தமிழ் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
116. திருப்பெறும்பேற்று முருகர் பிள்ளைத்தமிழ் ப. சிங்காரவேலு முதலியார்
117. திருப்பேரூர் முருகர் பிள்ளைத்தமிழ் பேரூர் சிதம்பரசுவாமிகள்
118. திருமயிலைச் சிங்காரவேலர் பிள்ளைத்தமிழ் தாண்டவராய முனிவர்
119. திருமலை முருகன் பிள்ளைத்தமிழ் கவிராச பண்டாரம்
120. திருமாலிருஞ்சோலைப் பிள்ளைத்தமிழ் நெற்குப்பை வைரவய்யர்
121. திருவதிகை வீரட்டானப் பெரியநாயகி பிள்ளைத்தமிழ் சுப்பிரமணியசெட்டியார்
122. திருவருணாசல தேசிகர் பிள்ளைத்தமிழ் சிவசுப்பிரமணியசெட்டியார்
123. திருவருணை உண்ணாமுலையம்மை பிள்ளைத்தமிழ் சோணாசலபாரதி
124. திருவனந்தை சுப்பிரமணியர் பிள்ளைத்தமிழ் வன்னியப்பபாவலர்
125. திருவாவடுதுறை அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை
126. திருவிடைக்கழி முருகன் பிள்ளைத்தமிழ் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
127. திருவிலஞ்சி முருகன் பிள்ளைத்தமிழ் கவிராசபண்டாரம்
128. திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ் மார்க்கசகாயர்
129. திருவீரை மரகதவல்லியம்மை பிள்ளைத்தமிழ் பழனிக் குமாரபண்டாரம்
130. திருவெண்காட்டுப் பெரியநாயகியம்மை பிள்ளைத்தமிழ்
131. தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ் கிருட்டின ஐயர்
132. துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் பிள்ளைத்தமிழ் மணி அப்பாவு அய்யர்
133.தேசியவிநாயர் பிள்ளைத்தமிழ் கணபதி ஆச்சாரி
134. தேவைப்பிள்ளைத்தமிழ் அட்டாவதானம் சுப்பிரமணியஐயர்
135. நத்ஹரொலி ஆண்டவர் பிள்ளைத்தமிழ் பிச்சை இப்ராகீம் புலவர்
136. நபி சல்லல்லாகு அலைகி வசல்லம் பிள்ளைத்தமிழ் செய்யது அனபிய்யா சாகிபு புலவர்
137. நபிகள் நாயகம் பிள்ளைத்தமிழ் செய்குமீரான் புலவர்
138. நபிநாயகம் பிள்ளைத்தமிழ் செய்யது அனபியா சாகிப்
139. நபிநாயகம் பிள்ளைத்தமிழ் பீர்முகம்மதுப் புலவர்
140. நம்மாழ்வார் பிள்ளைத்தமிழ் (1932) ?
141. நல்லூர் சுப்பிரமணியர் பிள்ளைத்தமிழ் அப்புக்குட்டி ஐயர்
142. நல்லூர் சுப்பிரமணியர் பிள்ளைத்தமிழ் பாலசுப்ரமணிய ஐயர்
143. நாகூர் ஆண்டவர் பிள்ளைத்தமிழ் சேகுமதாறு சாகிப் புலவர்
144. நாகூர் பிள்ளைத்தமிழ் ஆரிபுநாவலர்
145. நாகூர் பிள்ளைத்தமிழ் பிச்சை இபுராகீம் புலவர்
146.நாகூர் பிள்ளைத்தமிழ் சாகூல் அமீதுப் புலவர்
147. நாகைப்பட்டினம் நீலாயதாட்சியம்மைபிள்ளைத்தமிழ் கிருட்டினசாமி உபாத்தியாயர்
148. நெல்லியோடையம்மன் பிள்ளைத்தமிழ் வைத்தியநாதச் செட்டியார்
149. பச்சைநாயகியம்மன் பிள்ளைத்தமிழ் வைத்தியநாதச்செட்டியார்
150. பத்திராசலம் இராமர் பிள்ளைத்தமிழ் கந்தசாமி அடிகள்
151. பத்மநாபர் பிள்ளைத்தமிழ் சங்கரசுப்பிரமணியக் கவிராயர்
152. பரசமய கோளரியார் பிள்ளைத்தமிழ் அங்கப்ப நாவலர்
153. பரவை நாச்சியார் பிள்ளைத்தமிழ் குருசாமியடிகள்
154. பருவதவர்த்தனியம்மை பிள்ளைத்தமிழ் மு.ரா. அருணாசலக்கவிராயர்
155. பவானி வேதநாயகியம்மை பிள்ளைத்தமிழ் மு.ரா. கந்தசாமிக் கவிராயர்
156. பழனிப்பிள்ளைத்தமிழ் சின்னப்பநாயக்கர்
157. பழனிப்பிள்ளைத்தமிழ் தண்டபாணி சுவாமிகள்
158. பாகம்பிரியா அம்மை பிள்ளைத்தமிழ் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
159. பாத்திமாநாயகி பிள்ளைத்தமிழ் செய்குமீரான் புலவர்
160. பிரமவித்தியாநாயகி பிள்ளைத்தமிழ் மீனாட்சிசுந்தரம்பிள்ளை
161. பிள்ளைத்திருநாமம் தத்துவராய சுவாமிகள்
162. புதுச்சந்நிதிக் கந்தர் பிள்ளைத்தமிழ் ?
163. புதுவை அருணாசலம் பிள்ளைத்தமிழ் ?
164. புதுவை திரிபுரசுந்தரி பிள்ளைத்தமிழ் ?
165. புதுவை முருகன் பிள்ளைத்தமிழ் தண்டபாணி சுவாமிகள்
166. பூவைமாநகர்க் குமரன் பிள்ளைத்தமிழ் சிவசுப்பிரமணியச் செட்டியார்
167. பெரியநாயகி பிள்ளைத்தமிழ் த.சு.சுப்பராய செட்டியார்
168. பெரியநாயகிம்மை பிள்ளைத்தமிழ் சொக்கலிங்க சிவப்பிரகாச சுவாமிகள்
169. பெரியாழ்வார் பிள்ளைத்தமிழ் தனபால பதுமாவதி அம்மையார்
170. பேரூர் சாந்தலிங்கர் பிள்ளைத்தமிழ் கந்தசாமியடிகள்
171. பேரூர் பச்சைநாயகி பிள்ளைத்தமிழ் கந்தசாமியடிகள்
172. மகரநெடுங்குழைக்காதர் பிள்ளைத்தமிழ் திருமேனிக்கவிராயரின் சீடர்
173. மங்களநாயகியம்மை பிள்ளைத்தமிழ் மு.சிவராமபிள்ளை
174. மங்களாம்பிகை பிள்ளைத்தமிழ் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
175. மங்களேசுவரி பிள்ளைத்தமிழ் ?
176. மங்கையர்க்கரசியார் பிள்ளைத்தமிழ் நடேசக்கவுண்டர்
177. மணத்தட்டை பிள்ளையார் பிள்ளைத்தமிழ் வீரசைவக் கனகசபைக் கவிராயர்
178. மணவை திருவேங்கட முடையான் பிள்ளைத்தமிழ் ?
179. மந்திரமூர்த்தி விநாயகர் பிள்ளைத்தமிழ் ஆ. சக்திவேற்பிள்ளை
180. மயிலம்மை பிள்ளைத்தமிழ் வைத்தியநாத தேசிகர்
181. மயின்மலைப் பிள்ளைத்தமிழ் வீர.லெ.சின்னய்யச்செட்டியார்
182.மருதாசலப் பிள்ளைத்தமிழ் வீ.நா.மருதாசலக்கவுண்டர்
183. மருதாசல முருகர் பிள்ளைத்தமிழ் வ.மு. அருணாசலக்கவிராயர்
184. மறைமலையடிகளார் பிள்ளைத்தமிழ் புதுமைக்கவிஞர் அரங்கசாமி
185. மாணிக்கவாசகர் பிள்ளைத்தமிழ் காரைக்குடி சொக்கலிங்கஐயர்
186.மாதவச்சிவஞான சுவாமிகள் பிள்ளைத்தமிழ் ?
187. மாருதி பிள்ளைத்தமிழ் ?
188. மாறன் பிள்ளைத்தமிழ் இரத்தினக்கவிராயர்
189. மீனாட்சி பிள்ளைத்தமிழ் ?
190. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் குமரகுருபரசுவாமிகள்
191. முகய்யதீன் ஆண்டவர் காரணப் பிள்ளைத்தமிழ் அப்துல்காதிறுப் புலவர்
192. முகய்யதீன் ஆண்டவர் பிள்ளைத்தமிழ் சவ்வாதுப்புலவர்
193. முகய்யதீன் பிள்ளைத்தமிழ் செய்யிது முகய்யதீன் கவிராசர்
194. முத்திருளப்பபிள்ளை பிள்ளைத்தமிழ் நமச்சிவாயப் புலவர்
195. முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் குமரகுருபர அடிகள்
196. முருகன் பிள்ளைத்தமிழ் மார்க்கசகாய தேவர்
197. மூத்த நயினார் பிள்ளைத்தமிழ் ?
198. மூத்தபிள்ளையார் பிள்ளைத்தமிழ் அதிராவடிகள்
199. மெஞ்ஞானப் பிள்ளைத்தமிழ் சுவாமியடியான் உபாத்தியாயர்
200. மேலைக்கொழுந்து மாமலைக்குமரன் பிள்ளைத்தமிழ் கா. நா. நெல்லையப்பர்
201. மைலம் பிள்ளைத்தமிழ் வைத்தியநாத தேசிகர்
202. யோகநாயகியம்மன் பிள்ளைத்தமிழ் ?
203. யௌவனாம்பிகை பிள்ளைத்தமிழ் பலராமய்யா
204. வடகரைப் பெரியசாமித்துரை பிள்ளைத்தமிழ் கைலாசநாதக்கவிராயர்
205. வடதிருமுல்லைவாயில் கொடியிடை யம்மன் பிள்ளைத்தமிழ் தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர்
206. வடதிருமுல்லைவாயில் கொடியிடையம்மை பிள்ளைத்தமிழ் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
207. வடிவுடையம்மை பிள்ளைத்தமிழ் கனகசபைத்தம்பிரான்
208. வடிவுடையம்மை பிள்ளைத்தமிழ் நடராசக்கவிராயர்
209. வடிவுடையம்மை பிள்ளைத்தமிழ் வைரக்கண் வேலாயுதப்புலவர்
210. வயிரவசுவாமி பிள்ளைத்தமிழ் நரசிங்கப்பிள்ளை
211.வள்ளிநாயகி பிள்ளைத்தமிழ் தண்டபாணி சுவாமிகள்
212. வள்ளுவர் பிள்ளைத்தமிழ் அமுதபானியார்
213. விட்டினர்அம்மையப்பன் பிள்ளைத்தமிழ் அந்தகக்கவி வீரராகவ முதலியார்
214. வீரவேலாயுதசுவாமி பிள்ளைத்தமிழ் ?
215. வீரை நவநீதகிருட்டினன் பிள்ளைத்தமிழ் அண்ணாமலை ரெட்டியார்
216. வெற்றிவேற்கடவுள் பிள்ளைத்தமிழ் ?
217. வேங்கடேசரெட்டர் பிள்ளைத்தமிழ் தெய்வநாயகர்
218. வைகுந்தநாதன் பிள்ளைத்தமிழ் கள்ளப்பிரான் கவிராசர்
219. வைகுந்தநாதன் பிள்ளைத்தமிழ் வரதராசப்பிள்ளை
220. வைத்தியப்பிள்ளைத்தமிழ் ?
221. றசூல் நாயகம் பிள்ளைத்தமிழ் மீரான் சாகிப்புலவர்
222. ஷெய்கு தாவூது வீலியுல்லா பிள்ளைத்தமிழ் சொர்ணகவி நயினா முகமது பாவா புலவர்
------------
பிற்சேர்க்கை
223. திருவெண்ணெய் நல்லூர் வைகுந்தநாதர் பிள்ளைத்தமிழ் திருமேனிக்கவிராயர்
224. முத்துவீரப்ப சுவாமிகள் பிள்ளைத்தமிழ் ?
225. முருகப்பதேவர் பிள்ளைத்தமிழ் ?
226. யோகி சாத்தையர் பிள்ளைத்தமிழ் ?
227. வேங்கடேசுவரன் பிள்ளைத்தமிழ் ?
228. பரங்கிரிப் பிள்ளைத்தமிழ் மு. அருணாசலக் கவிராயர்
229. வள்ளுவர் பிள்ளைத்தமிழ் கே.எம். பாலசுப்ரமணியம்
------------------

This file was last updated on 04 June 2026.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)