திரிசிராமலைத் தாயுமானேஸ்வரர் பதிற்றுப்பத்தந்தாதி.
(நாகமுத்துப் புலவர் எழுதியது)
tirucirAmalait tAyumAnavar patiRRuppattantAti
by nAkamuttup pulavar
In Tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This work has been prepared using Google OCR of the PDF source and subsequent
proof-reading of the text.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2026.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
திரிசிராமலைத் தாயுமானேஸ்வரர் பதிற்றுப்பத்தந்தாதி
( நாகமுத்துப் புலவர் எழுதியது)
Source:
திரிசிராமலைத் தாயுமானேஸ்வரர் பதிற்றுப்பத்தந்தாதி.
இஃது தென்பேறுபுதுப்பாளயம் வேங்கடாசல முதலியாரவர்களால் பரிசோதிக்கப்பட்டு
திரிசிரபுரம் -உப்புகார சிதம்பரபிள்ளையவர்கள் கேட்டுக்கொண்டபடி
திரு அப்பாவுமுதலியார்குமாரர் வேங்கடாசல முதலியாரவர்களால்
தேசாபிமானி அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது.
பராபவ ௵ மார்கழி ௴
இதன்விலை அணா-8
-------------------
உ
சிவமயம்
சாத்துகவிகள்.
திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை பாடியது.
துரிசிராதடியர்களையெடுத்தாண்டு
பவமாற்றிச்சுகமே நல்குந்
திரிசிராமலையாற்குப்பதிற்றுப்பத்
தந்தாதி சிறப்பாச்செய்தான்
பரிசிலாப்புகழ்ந்தோருக்கமு தூற்றிச்
செழுங்கந்தம் பரந்துவீசுங்
கரிசிலாவியலொடிலக்கியமுணர்ந்த
நாகமுத்துக்கவிஞன்றானே.
தென்னூர்- இருளாண்டியுபாத்தியாயர் பாடியது
வாகமுத்துவள வில்கணையிருந்தொளிரு
மதிமுகத்து மடந்தைபாகன்
ஆலமுத்துக்களிலன்பர்பரவுசிரா
மலைநாதனடிமென்போதி
னாகமுத்துப்புலவனுரைபதிற்றுப்பத்
தந்தாதிநயந்துகேட்போர்
பாகமுத்துறையைக்கடந்து மேலாய
துறையதணைப்பற்றுவாரே.
திரிசிரபுரம் சோமசுந்திரமுதலியார் பாடியது்:
சிரகிரியாந்தென்கயிலை மலைத்தலையின்
முளைத்தெழுந்ததேவதேவன்
பரவுமிசைக்கடன் முழுதுமந்தாதிப்
பிரபந்தப் பாண்டத்துய்த்தான்
றிரமருவி புகழிந்துதேசவிரா
ஜத்தானிதிகழ்நூற்சங்கப்
புரவலருமிரவலரும்பரவிமகிழ்
நாகமுத்துப்புலவன்றானே.
பாலக்கரை வீரராகவசெட்டியார் பாடியது.
விண்ணவருந்தவளமலர் வாணிகேள்
வனுமாலும் விரும்புமேன்மை
நண்ணவருந்தவர் சூழுஞ்சிரகிரியந்
தாதிதனை நறுஞ்சொற்செந்தே
னுண்ணவருந்தவலமுறாதக்கலையு
நவையறக்கற்றுணர்ந்தோர்யாரு
மெண்ணவருந்த வலருஞ்சீர் நாகமுத்துக்
கவிவாணனியம்பினானே.
திரிசிரபுரம் நீலகண்டம்பிள்ண பாடியது.
சேணுலவு பொன்னஞ் சிகரச் சிராமலைவாழ்
தாணுவினுக் கந்தாதி சாற்றினான் -மாணுலவு
பாகமுற்ற செஞ்சொற் பனுவற் பொருளுணர்ந்த
நாகமுத்துப் பாவாண னன்கு.
திரிசிரபுரம் அஷ்டாவதானம் சுப்பராயசெட்டியார் பாடியது.
கறங்கு திரைக்கடலுலகநாடுபொருட்
செல்வமொடு கல்விச்செல்வம்
பிறங்குதிருநதிகுலத்தானாகமூத்துப்
பெரும்புலவனருவியோங்கி
யிறங்கு திரிசிரகிரிவாழிமையமலை
மகட்பாகனரிகளெல்லாந்
திறங்குலவு ப்ரியாகப்புரிந்தோருக்
கந்தாதி செப்பினனே.
திரிசிரபுரம் சரவணவுபாத்தியாயர் பாடியது
பொன்னாரு நவமணிசேர் பரிபுரத்தா
ளிணைமலரைப்புந்திதன்னின்
மன்னாரும் பதம்பெறவே கருவணதரும்
பரையிடமாய்வளருமேரின்
மின்னாருஞ்சிரகிரிச்செவ்வந்தீசர்
பொற்பதத்தில்விளங்கவேதான்
றுன்னாரும் புகழ் நாகமுத்துவள்ள
றமிழ்மாலைசூட்டினானே.
திரிசிரபுரம் ஒப்பிலாமணிஉபாத்தியாயர் பாடியது.
இத்தரையிற் புலவர்களுக்கரசனென
வேவிளங்குமினிமையான
முத்தமிழ்தேர் நாகமுத்துக்கவிராஜ
னல்லன்புமுதிர்ந்தவாக்கா
லத்தியுரிபோர்த்த சிரகிரிவாழும்
பெருமானுக்கருமையாய்ச் செய்
வித்தகஞ்சேர் பதிற்றுப்பத்தந்தாதி
வியப்பதனைவிளம்பொணாதே.
கற்குடி மதுரைமுத்துப்பிள்ளை பாடியது.
இந்தப்பாடரவணிந்தோன் முத்தலைவெற்
பினிலமர்ந்தோனிறைவனார்
விந்தப்பா தங்களின் மேனாகமுத்துக்
கவிராஜன் மிலைந்தவாதி
யந்தப்பாவொரு நூ றுமாறாம
லனுதினமுமறையினன்மோட்
சந்தப்பாமற் கிடைக்குமகரால்
யம்புடைசூழ்தரணியோரே.
தரங்கம்பாடி குருவப்பநாயகர் பாடியது
கராமலைப்பத்திகிரிதொடுங்கரனை நிகர்
நாகமுத்துக்கவிவல்லோனள்
ளிராமப்பக்கதிர்வாளாற்றுமிக்குமிலங்
கொளியிரவிமயங்கத்தேங்கொள்
குராமலைப்பச்சையந்தாதிற்குடைந்தளிதென்
னிடுங்கமழ்பூஞ்சாந்துமோங்குஞ்
சிராமலைப்பண்ணவனுவப்பத்தெருடருமந்
தாதியொன்று செப்பினானே.
திரிசிரபுரம் முத்தையவுபாத்தியாயர் பாடியது.
அக்காலத்தொருவிடையாய்த்தாங்கினமா
தவனனந்தம் விடையதாகித்
திக்காரும்பொன்மதின்மீ திருந்து தவம்
புரியுமுயர்சிர வெற்பீசர்
மிக்காரும் பதமலரினா சுமுத்துப்
பாவலன் மேளமேலுமன்பா
யெக்காலத்தினுமழியாத்தமிழ்மாலை
சூட்டியவாறென் சொல்வேனே.
சிந்தாத்திரிப்பேட்டைமுத்துசாமி நாயகர் பாடியது.
உள்ளத்தெளிவுவுறுதித்தெளிவுகனிந்தொழுகுமின்ப
வெள்ளத்தெளிவுவேதத்தெளிவுமெய்விதேயமுத்தி
கொள்ளத்தெளிவுகவி நாகமுத்து நற்குணேசன் செய்த
வள்ளற்சிராமலையந்தாதியைச்சொல்வாய்த்திடுமே.
சாத்துக்கவிகள் முற்றற்று.
-------------------
திரிசிராமலைத் தாயுமானேஸ்வரர் பதிற்றுப்பத்தந்தாதி.
விநாயகர்ஸ்துதி.
பண்ணவர்போற்றுஞ் சிராமலைப்பதிற்றுப்
பத்தந்தாதிக்கவியலங்க
னண்ணலர்புரங்கடீயெழநகைத்த
நாதனாந்தாயுமானவனற்
றண்ணலர்சரணாம்புயமிசைச்சாத்தத்
தானமாறெனப்பொழிபுழைக்கை
யண்ணலோர்கோட்டுமழவிளங்களிற்றி
னடிமலர்முடிமிசைப்புணவாம்.
தாயுமானேஸ்வரர்ஸ்துதி.
நறுங்களபத்தனமடவார்திரு நடஞ்செய்
சிரகிரிவாழ்நம்பனென்று
முறுங்கயிலைப் பெருமான்றாயானவன்வெள்
விடையானெம்முடையான்யாரும்
பெறும்பொருட்டின்னருள் சுரக்கும்
பெம்மான் சிற்பரனாதன் பெருமையாவை
குறுங்குறுமர்முனி துதிக்குமாதேவ
னடிமுடிமேற்கொண்டுவாழ்வாம்.
மட்டுவார்குழலியம்மை ஸ்துதி.
வேலையுறழ்விழியாளைக்குழையிலகுஞ்
செவியாளை வெண்ணீற்ருளைச்
சோலையின்மாங் குயில்பாடுஞ் சிரகிரிவா ழுமை
யாளைச்சுரும்பார்கொன்றை
மாலைணிந் தோனிடத்தில் மர்ந்தாளையு
வாமதிபோல் வதனத்தாளைப்
பாலைநிகர்மொமீயாளைமட்டுவார்
குழலாளைப் பணிதல் செய்வாம்.
செவ்வந்திவிநாயகர்ஸ்துதி
ஐந்தரு நீழல்வாயமருமிந்திரன்
வந்தவன் செயுஞ்சிராமலையின்மேவுசெவ்
வந்தியானையினிருமாமலர்ப்பதஞ்
சிந்தையாற்றொழு மேற்சென்னிசேர்த்துவாம்.
சுப்பிரமணியர்ஸ்துதி.
சூர்தடிந்திமையவர்சுவர்க்கம் பெற்றிடத்
தார்புனைவேல்விதிர்சண்முகன்குகன்
பார்புகழ்சிராமலைப்பதியிற்கந்தனற்
சீர்பெறுமடிமலர்ச்சிரத்திற்சேர்த்துவாம்
சைவசமயாசாரிகள் ஸ்துதி
அங்கம்வனப்புறுமங்கையாக்கியருள்கவுணியன்றன்
றுங்கமலர்ப்பதம்பரவித்து திநாவுக்கரசனற்றாள்
பங்கமறவணங்கியாருர ணிணைக்கழல்பணிந்து
புங்கமுறுவாதவூர்ப்புனிதனடிபோற்றுவாம்
அவையடக்கம்.
அருமருந்தன்னபிள்ளையென்றுரைப்ப
தருமந்தபிள்ளையே யென்ன -
வருமரூஉ மொழியிற்பொருட்சிதைவின்றாய்வயங்
குதல்பற்றிக்கொள் சான்றோர்
தெருமருமனத்தேன் சிராமலைப்பிராற்குச்செப்பு
பாடலிலுரைச்சிதைவு
பெருசிகினுமந் தப்பொருட்சிதைவிலாதப்பெற்றியார்
கொள்வதுவழக்கே
நூல்.
சீர்வளர் பூங்காவனம்புடையோங்குஞ்
சிரசிரிமட்டுவார்குழலி
வார்வர்குவிமாமுலையுமைப்பாகா
வரதனே தாயுமானவனே
பேர்வளர்மெய்ஞ்ஞானப்பெருவெள்ளம்
யெருக்கியென்னு த்திடைக்குடிகொண்
டேர்வளர்நின்றமரைப்பதங்காட் டியிறைஞ்சிடக்
கருணை செய்குவையே. 1
செய்தவன நால்வர்க்கன்றுபதேசஞ்
சேணுயர்லட நிழலிருந்து
பொய்தனை நவின்றுபொறிவழிமனத்தைப்
போக்கிநின்றுழல்கொடியேற்கின்
றுய்வழி கூடவுணர்வளித்தருள் பொன்னொளிர்
சிராமலைப்பெருமானே
நெய்வழியயில்வேற்குமரவன்யீன்ற
நிமலவென்றனக்கினாரமுதே. 2
ஆரமுத்ததில்பொன்னலைக்தரத்தெறியு
மாழிநேர்பொன்னி நாட்டீசன்
பாரமுத்தலைவேலங்கையிற்றாங்கும்
பரமனாந் தாயுமானவை
யீரமுற்றணுகார் புலையரேயெவர்களாயி
னுமிருண்மலவலியால்
வீரமுற்றினுநாரணன் பெறாக்கழற்
பதன்மேவினரென்னையாள்பவரே. 3
என்னையாள் பவரைமழவிடையவரை
யேகமானவரை முண்ட கம்வாழ்
பின்னைகேள் வரும் வெண்சலசமா துவக்கும்
பிரமருமமரர்மாதவரு
முன்னைநாட்டொடக்கையகற்
றுவானேத் துமுதல்வரை மட்டுவார் சூழவி -
யன்னையாளுடன் கண்டனன கம
கிழவஞ்சிராமலையினின் மாதோ 4
மலைமகளொருபான் மணந்துலகளித்த
மகேச்சுரன் றிரிபுர கனன்
கலைபுகழ்மதிச்செஞ்சடைமுடிப்பரமன்
கனகமார்சிரகிரிப்பெருமா
னலையசையோதமுதித்தகரர்விடமுண்டம
ரரைக்காத்தளித்தவனென்
றலைமிசைதனது மலர்ப்பதஞ் சூட்டித்தமிழ்ச்
சொல்வரமளித்தானே. 5
அளியினமுரலுங் குழலியர்மயலா
ல்லமாலுநெஞ்சவன யாள் -
நளிமலர்த் தடஞ்சூழ்சிரகிரிவாழு நாதனே
கங்கைவே ணியனே
களிமயினடத்துங் கந்தனையீன்ற கறையிடத்தி
றைவனேயயன்மா -
லளியுடன்போற்றுமையலே சிவனேய
ணியுறுமமரர்கோமானே. 6
மான்மழுச்சூலமுடுக்கணிகரமும்வாளராக்
குண்டலச் செவியுந்
தேன்வழிந்தொழுகுங் கடுக்கையங்கண்ணித்
திங்கடீங்கங்கை யார்சடையும் -
வான்விழிமூன் றுங்கழற் பதத்திணையும் வளர்
சிராமலையனின்னகையுங் -
கான்வழிவதனாம்புயமுமென்றனக்கோர்
களிப்பித்தருமுயிராமே. 7
உயிர்க்குறு சுமையா முடலையோர்பொருளா
யோம்பிதா டொறுமுனைமறந்து
செயிர்க்குடன்படுமென் னகத்தை யேதிருத்தித்
திருவடிப்பேறெனக்கிவாய்த்
தயிர்க்குட மவா வுமரவணைத்திருமாறாழ்ந்
திடுஞ் சிரசிகிரிக்கரசே
பயிர்க்குமி ன்மொழியாள் சுகந்தகுந்தள
நாயகியுடன மருமுக்கணனே. 8
முக்கணனெடியமான் முதலானோர்
முறையினின் றடிதொழு திடும்வெள்
ளக்கணங்கரவும் புவனசிரகிரியா
னயில்விழிமட் ந்தையர்மாலாற்
றெக்கணத்தகு பமுதல்வனீளத்தஞ்சிக்கிடா
தெணையடியரிற்கொண்
டிக்கணம்பிறவா நெறியினைக்காட்டி
யெய்திடாவின்ப நல்கினனே. 9
நல்லெழிலமரர் மாதர்தஞ்சுகமு நறைமலர்க்கற்பகநிழலு
மல்லெழினரை மாதங்க முங்காமதேனுவும் வளர்நிதிக்குவையுஞ்
சொல்லெழிலென வெள்ளளவு நெஞ்சினில்யான் றுதித்திடேனின் கழலன்றி
வில்லெழிலுயர் பொற்சிரகிரிமேவும் வித்தகவிளங்குமாமணியே. 10
[வேறு]
மணியே மணியினொளியேயென் மதியேமதியுட்சுடர்விளக்கே
திணிசேரும்பலுரிபோர்த்த தேனேசிரவெற்பமர்வோனே
தணியாக் காமக்கொடுந்துயர்க் கேதளரா வண்ணமெளியேனின்
பணியேபுரிய வரமளித்துன்பதமார முதமருள்வாயே. 11
ஏயங்கிளையுமீன்றாருமினியமனையும் பெருவாழ்வுஞ்
சேயுநிலையென்றெணுங் கொடியதீயேன் பரிக்கும் பெருஞ்சுமையாஞ்
சீயுநரம்புஞ்செறிதசையார் தீண்டா நாற்றமிகுமுடலைப்
பேயுநாயுமுணாமுனம் வந்தெனையாள் செவந்திப்பெருமானே. 12
பெருமான் சுகந்தகுந்தள மாதேவிக்கினிய பெம்மானம்
மருமாமறையோதிடுமிறைவனால காலமயின்றபிரான்
விருமாதுறைமார் பனுமயனுந் தினம்வந்தேத் துஞ்சிரகிரியா
னிருமாமலர்ச் சேவடி தொழுவாரென்றும் பிறவா நிலையினரே. 13
நிலையாவுடலச்சுமை பரித்து நின்றேபுலம்பும் வஞ்சகனை
யுலையா வண்ணமெடுத்தாள் வாயுமையாள் பங்கிலுறைவோனே
யலையாரறுக்கு மதியிதழியணி வேணியனே சுவைக்கரும்பே
சிலையாமலையைவளைத்தசிராத் திரிவாழ்முக்கட் செழுங்கனியே. 14
கனியுங்காயுங்கிழங்குண்டுங் கானிலுறைந்துங்கதி நாடிப்
பனியும் வெயிலும் படவுடம் பதைக்க நுனியூசியினின்று
நனியுமருமாதவம் புரியுமுனிகாள் பொதுவினடித்தபிரா
னினியசிரவெற்பினிலடைந் தேயேத்திவணங்கப் பெறுவீரே. 15
வீரம்விளையுமெய்ஞ்ஞான விளக்கமிகும் பொல்லாவுடலாம்
பாரந்தொலைபும்யர்னெனதென்னும் பற்றறுநற் பலன்பெருகுங்
கோரமுலையுமடமாதர் கொடியவாசைப் பெருக்கொழியு
மாரமலையுஞ் சிரகிரியானடி மாமலர்க்கன் புடையார்க்கே. 16
உடையார் மறைதேடுதற் கரியவுமையாட்சினிமையுயரிள வெள்
ளிடையார்பொதிய முனிக்கருளும் விமலரிதழிநதியணிசெஞ்
சடையார் சிரவெற்பமர் தேவர்சகசங்காட்டி நிலைகூட்டி
நடையார் பரமானந்தவின்ப நல்கியெணை யாண்டருள்வாரே. 17
அருளேயெவர்க்குமரும் பொருளேயடியாரகமாமலரமருந்து
தெருளேவளருஞ் சிவக்கொழுந்தே தேனேமுக்கட் செழுங்கனியே
யிருளேயகற்றுஞ் சிரகிரியாயெந்தா யென்னுணிறையொளியே
மருளேயனையா ருறவகலவந்தே கொடுத்தாள் வரமேனக்கே. 18
எனக்கித்தீய பிறப்பிறப்பாமிடர் தீர்ந்தொழியச் சுரர்வணங்கு
முனக்கன்பொடு நான் பணிவிடைகளொருங்கே நாளுஞ்செயவருள்வாய்
வனக்குஞ்சரமாமுகற்குவந்து மருமாங்கனியன் றளித்தவனே
கனக்கும்பசனாதியர் தொழுமுக்கணனே சிரவெற்பமர்சிவனே. 19
சிவனே வணிகர்மரபில் வருஞ்சீரார் மடவாட்குத்தாயா
னவனே சென்னிவரையானே நம்பா செவந்தி நாயகனே
பவமேயியற்றியுடல் போற்றும் பாவகாரி நினைவணங்கா
தவமே திரியத்தகுமோ தானாளாயுன்றாண் மலர்தந்தே. 20
வேறு.
தந்தியுரிபோர்த்ததாயானவனே செவ்
வந்திமலர்க் கொண்டுன்னடிப் போதந்நாட்டுதித்த
வந்தமுறுசாரற்கரும்பேறளித்த முக்க
ணெந்தையே பந்தவிணை யென்றெனக்குத் தீர்ப்பாயே. 21
தீராப்பிறவித்திரைக்கடனின்றேறுதற்குச்
சீரார்புணையா நின்சேவடியைக் கைக்கொண்டேன்
நாராயணனயனு நாடும்பெருமானே
வாரார் சிராமலைவாழ் மாசிலாமாமணியே. 22
மாசுற்றநெஞ்சனை வாழ்த்திமிகப்போற்றாமற்
காசுற்றமங்கையர் தங்கண்வலயிலேயகப்பட
டாசுற்றயர் நாயடியேற்கிரங்கியருள்
தேசுற்ற சோதிச் சிரமாமலைக்கொழுந்தே. 23
மலைவு செயுமும் மலநோயினான் மலிவா
யுலைவுபடுநெஞ்சனுனையடைவடுதக்கால
நிலைவளருஞ் சிந்தாமணியே நிராமயனே...
கலைவளருஞ் சென்னிவரைக் கண்ணுரமுமுன்னோனே. 24
முன்னார் சுரிதிமுடிமீதுறைசுடரே
பின்னாரமுதே யெழின்மாநிதிக்குவையே
என்னா பகமே யெனையாளிலஞ்சியமே
பொன்னார் சிரகிரியின் போந்துயிர்த் தாயானவனே. 25
ஆனசிராமலை வாழையனேயங்கணனே
வானவரைக் காத்தாண்டு மாபாதகராகுந்
தானவரைக் கொன்ற தயாபரனே நாயேனை
மீனவிழியார் வலைக்குள் வீழாதெடுத்தருளே. 26
அருண்மேவு நின்றனடி மாமலர்பற்றுந்
தெருணமேவு மின்பஞ்சிறியேற் களித்தருள்வாய்.
பொருண்மேவுமாடம் பொலியுஞ் சிராமலைவா
ழிரும்மேவிய கண்டனென்னுந் தாயானவனே. 27
நாயான செல்வத்தகை மணியேவம்பாருங்
நாயாமலர்வண்ணன் காணாப்பெருமானே
தீயார் நரகிற்சிறியேன் புகாதவண
மாயாப்பேரின்ப வாழ்வெனக்கு நல்காயே. 28
ஆய்நோயகலுமழல் போலெழுங்கொடிய
காய்வெம்பசி கூர் கழியும் விடாய் தணியும்
வேய்நேருந்தோளார் விழைவொழியு மெஞ்ஞான்றும்
போய் நீள் சிரகிரியான் பொற்றாள் வணங்கினர்க்கே. 29
கனமாயும் வெள்ளெகின மாயும்மிருவர்
போன நாளாதியினம் பொருந்தாக்கழலமுதை
பீனனாந்தீயேற் கிரங்கியருள்வாய் முக்கண்
வானவனே தெம்மட்டுவார் குழலி நாயகனே. 30
[வேறு.]
நாயகன் றிரிபுரமெரிபடச் சிறுநகைபுரிந்திடுநம்பன்
றூயகங்கை வெண்மதியிதழியந் தொடைசூடு செஞ்சடையண்ணன்
மீயகந்தரு சிரகிரிச் சிவனிருவிரை மலர்ப்பதம் போற்றித்
தீயகம்புகாவண மருளடைந்திடச் சிந்திப்பாயுள நீயே. 31
உளஞ்செந்தீயிடு மெழுகென்வுருகநின் றுன்மலரடி நச்சா
திளம்பிடிச்சிறு மடநலார்க்குருகு மென்னிருள் வினைத்துயர் போக்காய்
களங்கொளுங்கண்டனே சிவலோதனே கங்கைவாழ்சடையானே
வளம்பெருக்கு நீடண்டவலைசூழ் சிராமவலை வளர்தருங்கோவே. 32
கோதமன்னகத்தியன் முதலியர் தொழுங்குருமணிச்சிரநாக.
னாதநூபுரமணிபதத்தியர்தின நடமிடுந்திருக்கோயி..
னாதனஞ்சுமிழ்பணியணி நிமலன்றாணலமுடனருச்சித்தோர்
வேதனாரணனிந்திரற்கரிய நல்வீடுறப்பெறுவாரே ...... (33)
வீடுமக்கள் பெண்டீர் நிலையெனவெணியிருப்புறு மடநெஞ்சே
கூடுவிட்டுயிர்போன பின்னிவர்களைக்கூடிடப்பெறுவாயோ
நீடுநித்தியவாழ்விணையுடைய நீ நித்தமன் பொடுபோற்றிக்
கூடுநற் சிரகிரிச்சிவனடியருள் கூர்ந்தூதந்தருள்வானே (34)
தந்தமாமுகத்தானை வேன் முருகனைத்தந்த வெள்விடையா
டையானே கந்தமாமலர்விரிபொழிற் சிரகிரிக்கடவுளே நிணையன்றிப்*
பந்தமாவிணமிக நெருக்குறவுறப்படுந்துயர்க்காளாயே*ரூ.
நாந்தமாதறுகணன்றொழு தூயவொரு நுவறெய்வங்காணே. (35)
காணக்கண்ணிலந்துதிசெயநாவிலங்கருதிடமனமில்லம்.
வாணற்பங்கயமணைய நின்றாளன்றிமறந்துமாறுள்ளாரை
மாணப்பம்மதியறுகணிசடையவெண்மணிசொரிவளைமேயுஞ்
சேணப்பின்றடப்பங்கய வாவிசூழ்சிரகிரிப்பெருமானே (36)
மானவேல்விழிமடந்தையரியற்றிடுமையல்வாரிதிமூழ்கித்
தானதன்மமுஞ்செபதவவோமழுந்தவறுறத்தினந்தோறும்
போனபாதகன் மனச்சிலையுருக்கி நின் பொற்பதந்தொழச்செ ய்வாய் -
வானமார்கநம்விழி துயிலுயர்சிராமலைவளர்பெருமானே. (37)
மான்றரித்த செங்கையனே மெய்யனே வளர்சி ராமலைத்தேவே
கான்றரித்தபூங்கொன்றை மாலிகையனேகடுவமர்மிட்திறேனே
வான்றரித்தமின்னிடையவள் பாகனேவயங்கருளருள்வாயா
தூன்றரித்தமெய்ச்சுமை பரித்தணங்கனாருழலமயற்கழியாதே. (38)
அழிந்திடும்முடைக்காயம் வாராதுதல் லருணினாற்பெறுவேனே
கழிந்திடுங்கருமேதிமேல் வருபவன் கயிறுறப்படும்வாதை[ந்
யொழிந்திடும்மதுசமயபேதங்களுமுடன் பெயர்ந்தெனைவிட்டே
பொழிந்திடும்மணிக்காவிரிப்புடை வளர்பொற்சிறாமலையே. (39)
மலவவனத்தவில்லாளனே திரிசிராமலையமர்சிவனேவார்.
சிலைவளைத்தனேர்புருவமாதர்க்குணான்சிக்கிடா தெடுத்தே நன்.
னிலைவளைத்த நின்பாததாமரைந்று நீழல்வைத்தெனையாள்வா
யவணைத்தவிப்புவியினீயன் றியெற்கார் துவணயாவாரே (40)
(வேறு.)
வார்முலைக்கண்ணியர் மயலாற்சுகஞ்.
சேர்நிலமைச்சிறி துமுறாமனின்....
றார்புவணகழற்றாளடைந்தேனையாள்
சீர்புனைபொற்சிரகிரிச்செல்வனே... (41)
செல்வரென் றுஞ்சிறந்தவரென்றுமம்
மல்வலும் பதிமன்னவரென்றுமிச்
சொல்லுளோர் நின்றொழும்பர்க்கீடாவரோ.
செல்வணன்றொழுஞ்செவ்வந்திநாதனே (42)
நாதநூபுரக்காவியர் நட்பினாற்
போதவாடிப்புலம்புங்கொடியவிப்...
பாதகனுய்யப்பார்த்தருளாய் முக்கண்
ணாதனேசிரநாகம் வாழையனே (43)
ஐயனேசிவனேயருளேசனே
மெய்யனேசிரவெற்பமர்தேவனே
துய்யமாமதிசூடிய நாதவென்
வெய்ய தீவிண வீழ்த்திடவேண்டுமே.. (44)
வேண்டுநித்தியமெய்ப்பொருணாயினேற்.
காண்டுகொண்டருளாய்ப்பரஞ்சோதியே
நீண்டுவான்றொடு நெற்பயிர்மாமதித்..
தீண்டுசோஸச்செறிசிரநாகனே........ (45)
நாகமாமன நாடிப்பொறிவழிப்
போகவிட்டுப்புலம்புகின்றேணையாண்
மாகமார்மணிமாளிகை சூழ்சிரா
நாகனே கயிலைப்பூதி நம்பனே (46)
நம்பிடேனுனை நாளுந்து தித்திடேன்.....
கும்பிடேனுயர்கோயி லுஞ்சுற்றிடேன்
வெம்பிடேன் வினையே னெவ்வாறுய்குவேன்
றம்பிரானேசிரகிரித்தா (47)
தாணுவே சிவசங்கரனேயுரு.
வாணும் பெண்ணுமலியுமலாவுவனத்....
காணுமாறெவன் காட்சியருள் சிராத்
தாணுவாழுஞ்சதாசிவதாளற்கே... (48)
தாதவிழ்மலர்த்தண்டணயுந்திரு
மாதுவாழ் பங்கயப் பெருவாவியு...
மோதுவேதவொவியுஞ்செறிசிரா.
மாதிரப்பெருமானெணையாள்வையே.... (49)
என்னைவீடொழிந்தேகுதல்செய்குவாய்ப்......
பொன்வணமண்வணப்பெண்டீர்கணப்போற்றவா
மன்னுமாலயன் வாழ்த்துஞ்சீராம்ஸத்..
தன்ணையாளுந்தயாபாமூர்த்திபே....... (50)
வேறு
மூர்த்தியயனமகவாற்கரியசோ
முனிவரர்கடவயோகர்க்கருளும்யோகி
பார்த்திவரிலுயர்வனவர்மரபுளோன்வன்.
பராந்தகச்சோழனைச்சாரமுனிவற்காகக்
கீர்த்திவிரியுறந்தையினிக்கிரகஞ்செய்த..
கிளரொவிவெண்ணீறணியுமெண்டோனாதி
திர்த்திவளர் சிரகிரிவாழ நாதியின்பூஞ்
சேவடி வாழ்த்தினரென்றும்பிறவார் நெஞ்சே..... (51 )
நெஞ்சமுருக்கோசிக்ஷையோகருந்தாதோகொன்
னீ தியரமறிவொழுக்கம் பொறையுமின்றி
நஞ்சமுறுமரவென்னச்சீறியோடி..
நன்னெறியுள்ளோர் தம்மை நடுங்கப்பாய்வேன்
பஞ்சமலமறுப்பதெவனிலங்கைக்கோணப்
படர்வரைக்கீழழுத்தியலெம் பெருமானேவின்
ணஞ்சவுயர்சிரகிரிமீதமருமுக்கண்.
ணாதியேவற்புதமேயமரர்கோவே .... (52)
அமரர்முதலணவரையுமணியுதித்த.
வாலமயின்றன்பொடுகாத்தளித்த வெந்தாய்.....
சமர்பொருதாருகன்மானச் செற்றகோலம்...
சண்முகயணிபீன்ற தனிச்சட்சரமோங்கித ம்..
நிமிரு பனிமலையுதவு கொடிளுவோர்
னிரந்தரம்வைத்தருள் பரனே நாளுநாயேன்
குமரியர் கூர்விழியயிலாற் கொலையுறாதுன்.
கோகநகப்பதமலருற்றிருப்பதென்றோ (53)
என்றுமியானெனதெனும் பொல்லாப்பற்றகு
மிருவகைப்பேயெனைப்பிடித்துப்பிடுங்கிவாட்டித் *
தின்றுமலக்குழி வீழ்த்தப்பட்டுச்சோரும்.........
தீவிணையேற்கருடரவெள்விடைமேல்வாரா...
யன்று சனகாதிபருக்குபதேசித்த................
வமிர்தமேயினியசுவைக்கடலே செம்பொற்
குன்றை நிகரெனவுயருந்திரிசிராந
கோயிலெழுந்தருடதும்பிப்பொழியுந்தேனே ... (54)
தேனொழுகுமலர்க்காவிற்பொறிவண்டீட்டந்...
தென்னிடத்தண் பணையிலெழுஞ்சேல் கண்மீப்போய்
வானொழுகுங்கமுகின றுங்குலைகள்சிந்த
வலிதினறைதருமருதவேலிசூழ்ந்த
மானொழுகுஞ்சிரகிரிமெய்ச்சுடரே முக்கண்.
மாமணியேசிவஞானப்பொருளேசெவ்வாய்க்
கானொழுகுங்குழவியர்கண் வலைக்குட்
கலங்கியுள் நடுங்குமெணக்காத்தாள்வாயே... (55)
ஆளுனக்கேயாகும் வண்ணங் கொடும்பாவிக்கோ
ரருணிறைந்தமெய்ஞ்ஞானப்பொருளைக்காட்டு.
நாள்வரக்கூடிடமகிழ்வாயெந்தாய் முக்கண்
தனே வெள்ளிமன் றுணடித்ததேவே
வேள்வயங்கொண்டிடநின்வணமலராலெய்ய.
விழிக்கனலாலவவணயெரித்திட்டநம்பா.
நீள்சடையிற்கங்கைமதிதரித்தெஞ்ஞான்று
நிலையாகச்சிரசிரிவாழையவின்றே. (56)
ஐயமறப்பிருதிவிமுன்னான பூத
மறியவெளிப்படுத்தி நெடுஞ்சிநேர் நெஞ்சை
நையநறுக்கிடச்செய்துகாமமாதி..
நாசமுறவாணக்காடுவலையப்போக்கி
துய்யமலர்ப்பதமெனதுசென்னிமீது
சூட்டியருடருமழிவெள்விடையானேவெம்
பையரவின்மேற்றுயிலுமாலுஞ் செய்ய.
பங்கயனும் வணங்குசிரகிரியெம்மானே.......... (57)
சிராத்திரிவாழ்சிவபெருமான சுரர்மேவுந்...
திரிபுராந்தகன்றிருத்தாளிவணயையெல்லு..........
மிராத்திரியுமருமலராற்பூசித்தோர்க
ளிமையவர் வாழ்த்திடவிந்திரபோகந்துய்த்துக்
கராத்திரிவல்விலங் குயவவ்விடங்கரைச்சக்
கரத்தாற்கொன்றவற்கரியபதஞ்சேர்வாரென்..
றராத்திரியச்சடையவன் சொல்லாகமங்க.........
ளறைதருமானிடர்காளவ்வணஞ் செய்வீரே....... (58 )
செய்யகமேய்வளையுயிர்த்தவாரமுஞ்செந்.......
திருமலர்தண்டரளமும் வெண்ணிலவுவீச
வெய்யவனாற்குவிகுமுதமலர்மென்பால்சூழ்
விண்டொடுபொற்சிரகிரிச்செவ்வந்திநாதா
வையகப்பேயெவனப்பிடித்துவிடயமாந்தீ
வனத்திலேகொடுபோயைம் பொறியாமாவின்
கையாகத் தீந்திடப்பெற்று நலிவுற்றேனான்.
கடத்தேறும் வகையெவனோவறிகிலேனே. (59)
அறிஞர்சுரர்வணங்கிடமாலயனுஞ்செவ்வி ..............
யாலவட்டமெடுத்தெதிரே வீசச்சோதி
யெறிமணிப்பொற்சிரகிரிவாழரனே முக்கண்
ணிறையவனே மட்டுவார்குழலிபாகா
தறிசிதைக்குங்குஞ்சரமாவுரியைப்போர்த்த
தயாபரனேசச்சிதானந்தனே சொல்...*
வறிஞர்கடம் நிதியேயென்கலியு நோயு
மாற்றிவளர்சிவபோகநல்கிடாயே.. (60)
(வேறு)
நல்லவர் சொல்லற நன்றி மறந்தே
னில்லவள் சேய்நிலை யென்று துணிந்தேன்
வல்லினை யேன்செல் வழியருள் வாயஞ்
செல்வது ரும்முயர் சிரகிரி யானே. (61)
சிரகிரி வாழ்ர னேசிவ னேபை..
யரவுடன் வெள்ளறு. கம்புவி யக்குச்
சிரமணி தற்பர னேசிறி யேற்குன்
வரமுறு,நல்லடி வாழ்வருள் வாயே ...... (62)
ஏடலர் தாமரை யில்வளர் வோனு.... என்
மாடர வின்மிசை யறியில் வேரனுஞ்
சேடுற விழைவுகொள் சிரகிரி யானே....
வீடென நின்னடி மேவுத றானே. (63)
தாரணி யோர் துதி சங்கர னேபொன்.
வாரணி மாமுலை மங்கைய ராடுஞ்
ஓரணி மறுகொளிர் சிரகிரி யாயுன்..
ரணி யடியரி லன்பிலன் யானே... (64)
அன்புற் றமரர்க ஏஞ்சலி செயயும்
பொன்செற் றொளிரிசிரபுரம்வர் பெம்மா...
னன்பொற் கழனிவண் நசையொடு நெஞ்சே
யுன்பற் ற்றவினை யோடிடு மின்றே (65)
ஓடிடு நோய்க்வி யுன்னருள் சேரக்.... ...
கூடிடும் வுள்ளுரு குங்குண மில்லேன்.....
வாடிட நின்றனன் மாளிகை மன்னுஞ்
சேடுற வேவளர் சிரகிரி யானே. (66)
ஆன்றவர் போற்றிடு மம்பிகை பாகா....
வான்றட வும்மொளி வளர்சிர நாகா....
மீன்றிகழ் கண்ணியர் மேன்மய லரகர.......
நான்றிரி யாவரு ணல்கியா ளாயே (67)
ஆயுமை பங்கி லமர்ந்தகு டேவே
வாயிரு சுடர்வலம் வருசிர கிரியாய்
மாய்வுறு மிப்புவி வாழ்விணை யோம்பித்யர்
தேய்வுற னீதியோ தீவிணை யேனே........... (68)
விய தஷ்புவண சிரகிரி யானே .....
மேவி யடியர் வினையொழிப் புரனே
யாவியு டல்விடு மன்றடி யேனுன்
மாவிரூ பொற்கழல் வந்தவண வேனோ (69)
வந்தண செய்திடு மாமறை யோன் அன்
பந்தண் மாற்றிய பார்ப்பதி நேயா
செந்திகு மேவுஞ் சிராமலை
சிந்தனு யன் செய்கீடு வாயே. (70)
(வேறு)
செய்வாயனங்கள் பயில் வேலிசூழ்நற்சிரநாக நம்பர்விடமா
ரைவாயராவில்விழி துஞ்சுமாலுமயனும்பரரவிநெடு நாண்[ல்
மெய்வாடி நின்றுதேடுஞ் சிறந்த விடையாளர் முக்கணவர்சொ
சைவாகமத்தின்வழி சென்றந்நாதர்சரணடுவாயென்மனமே. (71)
மனமாரழற்கண்மெழுகாக நின்றன்மருமாமலர்ச் சேவடி
தினமாறுகாலம் வழுவாமனின்றுநிகழப்பராவுமடியார்
வனமாரடிக்கு வழிபாடிழைக்கவரமென்றனக்குமுளதோ
கனமாடுயர்ந்தசிரநாகவந்தகணமோதுமுத்திமுதலே (72)
முதலேயராவெண்மதிவேணி நம் பர்முக்கண்ணர் நித்தர்
நிமலர் சதமான சென்னிவரை நர் தர்விண்ணில் சசிகாதல் கூருமகவாடர்
னிதமாகவந்துதொழு நீல கண்டரிளவெள்விடைக்கணுடையா
பதமாமலர்க்கு வழிபாடுளோர்கள் பவநோ யொழித்துய்வரே. (73)
பவவேலையூடுமிகவேவிழுந்துபடும் வாதையுன்றனருள்கூர்
நவமேவுமம் பொவடிவந்து கூடினணுமோமறுத்து மெஷன
யே-நுவனேமியாளர்கதையாளரின்பநுகர்வானிறைஞ்சுமுத லே -
சிவபோதநந்திகணநாதநம்பசிரநாகவென்கண்மணியே. (74)
மணியாரமம்பொனவலவீசுபொன்னிவளர்தென்கரைக்கண வழுத் ளிசேர்
பணியாமனந்தன் முடிமீதுவைத்தபடியோர் தவுயர்மா -
வணியார்பவங்களற நின்றுமுத்தியருளுஞ்சிரத்தி ரியில்வாழ் -
மணியார்மிடற்றரடியாரெவர்க்குமலநோ யொ ழிப்பர்மிகவே. (75)
மிகவேதகீதவொலி மன்னுவீதிமேவுஞ்சிரத்தீரியுளான்
முகமாறுகொண்டபெருமாணையீன்றமுன்னோனவர்க்கும் ரியான் -
சகநாதன் வெள்ளிமஸநாதன்முத்திதருமட்டுவாக்கு ழவி பாற்-
றிசுழாதிதேவன் விடைமீதெழுந்து தெளியச்செய்தாள்வனெனையே. (76)
எவணமோ தும்வெய்யமிடி நோய்கடிாவி தமானவின்பமருள்வோர்-
நிணையன்றியில்லையருளேசிராத்திரி நிலையாகவாழு முதலே -
யுணையன்றுநன்கு பூசித்த நால்வருரை பைந்தமிழ் கவிதையே -
புனைநாதனேவெள்விடையாளனே தண்புரிகங்கைவேணியரனே. (77)
அரவின்றன்வாயி லுறுதேரையொப்ப வழியாமலென்றுனிலையப்
பரவின்பகல்குமுன்காம்புயத்தின்பதமென்றின்கத ருளுவாய் -
வரநாதனேவெள் விடையாளனே பொன்வளர் மார்பனஞ்சலிசெயுஞ்
சிரநாகனே வெண்மதிவேணி நம்பசிவ னேமெய்ஞ்ஞானமுதலே. (78)
மெய்யாவவாரியயனாதியோரும் வெகுவாய்ப்பராவியுணரா
வையா செவ்வந்திநாதா விடைக்கணமர்கின்றவேணியரனே
பொய்யா முலோகவாழ்வுக்குளான புலைநெஞ்சனேழையடி மை -
செய்யாமல் வாடினேனென் யாண்டுசிறுமைத்தவிர் த்தருள்வையே.. (79)
சிறுமைக்குளாகுமடமாதர்மீது செயுமாசையிம்மையுட னே
மறுமைக்கு நன்மையாகாது பாவிமயநீரும் வண்ணமருள்வாய்
குறுமாமுனிக்குவரமேயளித்தகோவேயெவர்க்குமரசே
நறுமா மலர்க்குள் வளர்தேவன் வாழ்த்து நாதாசிராத்திரியரனே. (80)
(வேறு)
அரவணியிலகுவேணியமலனே கமலயோனி
பரவிடச்சிர நாகம் வாழ்பரமனேவிமலநீயென்
கரமுடியேற்றியுன் வணக்கருதியான் வாழ்த்திப்போற்ற
வரநனியருளிச்செய்தாய்மயக்கறவடியேற்கின்றே. (81)
இன்றுயிர்க்சிடும்பையாற்றுமிருண்மலமவனத்துமாறிச்
சென்றிடவோட்டி நன்மைசெறிந்தபேரின்பநல்காய்க்.......
குன்றுவில்லாகக்கொண்ட கொலமழுவாளியே பொன்....
மன்றுளாடியவஞ் சென்னிவரையமர்ந்திடுமெம்மானே (82)
மான்மழுச்சூலமேந்தும் வள்ளலே சிர நாகம்வாழ்
தேன்வழிந்தொழுகுங்கொன்றைத்திகழ்சடையானே பாவந்
கானெணத்தொடராவண்ணந்தஞ்சமென் றுவனயடைந்தே
னான்கடத்தேறுதற்கோர் நல்லருள் சுரந்தாள்வாயே. (83)
சுரர்முதலவணவர்கட்குந்துதித்திடற் கரிதென்றாலு
நார்களிலொருவனான நானுணைப்போற்றிக்கண்டே
இரவினிலாரூரற்கேயின்புறத்தூது சென்ற
பரவிடுகிரதாகம்வாழ் பரமனே கயிலையானே... (84)
கைதவமுடையோர் தம்பாற்கனவிலுமுறவுகொள்ளாச்...*
செய்தவுமெனக்கீந்தாளச்சிறந்த வெள்விடைமேல்வாராய்
மைதவழ்சிர நாகம்வாழ்மர் சிலாமணியேசெங்கை
நெய்தவழ்வேலனாங்கந்தணையகுணிமல நீயே (85)
நீயெணயடிமை கொண்டானின் பணிவிடையான் கொண்டே
வாயிலுன்றிருநாமங்கண் மறப்பிலா துரைத்து நாளுந்
தூய்மலர்க்கொண்டு பூசை துணிவுடனியற்றேனோ நற்.
றயினிலினிமை நல்குந்தனிச்சிராமஸயெம்மானே .... (86)
தனிச்சிராமஸயில்வாழுர்தாணுவேயமரர்கோவே...
யினிப்புறுகனயேதேனேயெய்திடாவமுதேயார்க்குங்
குனிப்புறுவெள்ளி மன்றுட் கொன்றை வேணியனே நாயேன்
நுனிப்புறுசெயலை நீக்குந்தொன்னெறியடைந்திலேனே. (87)
தொன்னெறிப் படி சென்றுன்னைத் தொழுதிடர் திருந்தநா
பன்னெறிவிட்டு நின்றன் பதம்பணிந்திடச்செய்தாண்ட(யேன்
வின்னெறிவியப்பாமியார்க்குமிறைவனே பரமனே சொல்
நன்னெறியாளரேத்தநணுஞ்சிரகிரிவாழ் தேவே ........(88)
தேவராதியரும்போற்றித்தெரிசிக்கச்சிராமஸைக்கண்.......
ணாவலா முமையாடன்னோடமர்பெருமானேயிந்த............*
* நாவலமுதலாந்தீவார் நம்பி வாழ்த்திடுமுன்னோனே........
நாவலர்க்கரசே நின்னை நானினிமறந்திடேனே...... (89)
மறத்தொழிலியற்றும்போ துமங்கையாரிடத்தின் மோக..
முறத்தொழிடைத்தும்போதுமுண்டுலகுலவும் போது....*
முறக்கமேவிடுமப்போதுமுனதிடத்து றுமென்சிந்தை
சிறக்கவிண்ணாடர்போற்றுஞ்சிராமவலவாழெம்மானே (90)
(வேறு)
மான்வி ழிப்பரத் தையர்கண் மையலா...
ன்மி கத்தின நலிவுறா தெடுத்
தான்சி ராத்திரித் தற்பரன் பெரு...
மான்வி டைக்கண்வந் தருளு மையனே. (91)
ஐயனே தின மடியர் நெஞ்சில் வாழ்
மெய்யனே சிரா மலையில் வேதனே.
வெய்ய கூற்றுவன் வீசு பாசமென்
செய்யு நின்னருட் டிற னிருக்கவே. (92)
இருபத நின தென்றலைக் கணி
மருமல ரதா மன்சி ராமஸை
மருவு மட்டுவார் குழலி மாண்பனே
யருமறை நவி லந்தி வண்ணனே (93)
வண்ண மார்சிரா மலையின் மேவிய
வண்ணீ றாண்மல் ரஞ்ச வித்திடார்
மண்ணி னிற்பெரு மாயை
தண்ண ருந்துய ரெய்தி மாய்வரே...... (94)
மாய்வி லாதவோர் வரமெ னக்கரு.
டேய்வி லாதொளிர் திரிசி ராப்பளி
யாய்வில் குன்றெடுத் தைய மெய்யனே....
வோய்வி லாதசீ ருடைய நம்பனே. (95)
நம்பு நின்னிடத் தன்றி யென்மன
தம்பு நேர்விழி யார்கள் பாற்செலா
நம்பு யத்தனோ டரிதொ ழும்மொளி
பம்பு மாஞ்சிராப் பள்ளி வாசனே (96)
வாசமா மலர்க் கேச மங்கையர்
பாச மென்றணப் பற்றி டாதரு
வீசனே திக ழெழிலுறும் பரை...
நேசனே. சிரா மலை நிமலனே. (97)
நிமலனே மறைப் பொருளி னின்றிடு...
மமலனே சிரா மலையினையனே
குமரனைத்தருங் கொன்றை சூடிய
விழல வெற்குறும் வினையை நீக்கிடே (98)
நீதி யானநன் னெறியு ளோர்தொழு
மாதி தேவனே யஞ்சி ராமலைச்
சோதியே வினைத் தொடரெ னக்கறப்
பூதி தந்தருட் புடவி வாழ்த்தவே (99)
வாழ்த்தி யுள்குபு வணங்கி வானவர்
சூழ்த்தி முஞ்சிரா மலையிற் றூயனே
பாழ்த்த நாயினேன் பாடுமா றரு
டாம்க்க மும்மலந் தபுநின் சீர்களே. (100)
பதிற்றுப்பத்தந்தாதி முற்றிற்று
முற்றும்
-----------------
This file was last updated on 07 Oct. 2026.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)