pm logo

திருப்பழனிப் பதிற்றுப்பத்தந்தாதி
(திரிசிரபுரம் வேலுப்பிள்ளை &
சோமசுந்தரம் பிள்ளை எழுதியது)

tiruppazanip patiRRuppattanttAti
by tirucirapuram vElup piLLai & cOmacuntaram piLLai)
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This work has been prepared using Google OCR of the PDF source and subsequent proof-reading of the text.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2026.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

திருப்பழனிப் பதிற்றுப்பத்தந்தாதி
(திரிசிரபுரம் வேலுப்பிள்ளை, மற்றும் ௸யார் குமாரர்
சோமசுந்தரம் பிள்ளையவர்களால் இயற்றப்பட்டது)

Source:
திருப்பழனிப் பதிற்றுப்பத்தந்தாதி.
இஃது திரிசிரபுரம், வரகனேரி உபாத்தியாயர்
குழந்தை வேலுப்பிள்ளையவர்களாலும்
௸யார் குமாரர் சோமசுந்தரம் பிள்ளையவர்களாலும் இயற்றப்பட்டு
திரிசரபுரம் எஸ். பி.ஜி. காலேஜ் தமிழ்த் தலைமைப் பண்டிதரும்,
துரைத் தமிழ்ச் சங்கத்து வித்துவானுமாகிய இலக்கண உபாத்தியாயர்
ஆ. கா. பிச்சையிறாகிம் புலவர் அவர்களாற்றிருத்தப்பட்டு
௸யூர், தோல் ஷாப்பு தி. ம. பொன்னுச்சாமி பிள்ளையவர்களால்
திருச்சி, 'பாக்கிய விலாஸ் அச்சாபீசில் பதிப்பிக்கப்பட்டது
1906.
-------------

சிவமயம்,

முகவுரை.


'தவளத்தாமரைத் தாதார் கோயி
லவளைப் போற்றுதுமருந் தமிழ் குறித்தே "

சந்தனமலயப்பைந்தமிழ் முனிவராகிய அகத்தியர்க்குத் தமிழறிவுறுத்திய பாமசிரியனாகிய குமரக் கடவுளது திருவடி. மலர்க்கட்சார்த்திய திருப்பழனிப் பதிற்றுப் பத்தந்தாதியென்னும் இந்நூல் இற்றைக்கு நாற்பது வருடத்திற்குமுன் இத் திருச்சிராப்பள்ளி வரகனேரி மறையவர் வீதியில் சைவவேளாள குலத்திலகராய் வீற்றிருந்து பற்பல மாணாக்கருக்குத் தமிழறிவுறுத்திக் காலஞ்சென் ற ஸ்ரீ குழந்தை வேலுப்பிள்ளையவர்களால் அறுபத்தொரு செய்யுட்களாற் பாடப்பட்டுப் பனையோலைச் சுவடியிலெழுதப்பட்டிருந்தது. (இன்னும் இவர்களாற் செய்யப்பட்டு முடிந்த நூல்கள் பலவுள.) ௸யார் சகோதரர் குமாரரும் அடியேனுக்குத் தமிழாசிரியருமாகிய ஸ்ரீ அரங்க சுவாமி பிள்ளையவர்கள் அப்பனை யெட்டுச் சுவடியை நோக்கி ஒரு பிரதியெழுதி எஞ்சிய முப்பத்தொன்பது செய்யுட்களையும் பாடி முடிக்கக் கருதி முயன்று வருகையில், காலஞ்சென்று சிவபரம்பொருளிடைச் சேர்ந்தனர்.

அப்பால் இந்நால் முதற்பகுதியாசிரியர் குமாரரும் என்னோடு ஒரு காலைமாணாக்கரும், தமிழ்ப் போதகாசிரியருமாகிய திருச்சிராப்பள்ளி சர்க்கார் பேட்டையில் உப்பு வியாபாரம் செய்யும் ஸ்ரீ. கு. சோமசுந்தரம் பிள்ளையவர்களை யானும் சிவநேயர் சிலரும் எஞ்சிய முப்பத்தொன்பது செய்யுட்களையும் பாடி இந்நூலை முடித்தல் வேண்டுமென்று கேட்டுக்கொண்டவாறு சென்ற மூன்று வருடத்திற்கு முன் பாடி முடித்தனர். இவர் பாடிய இச் செய்யுட்கள் ''செந்நெலாலாய செழுமுளை மற்றுமச் செந்நெல்லேயாக விளைதலா வந்நெல்- வானிறையக் காய்க்கும். வளவயலூர - மகனறிவு தந்தை அறிவு'' என்ற ஆன்றோர் முதுமொழிப்படி. தந்தையார் செய்யுளைப் போலச் சொற்குணமும் பொருட்பொலிவும் சைவ சித்தாந்தக்கத்தமைதியும் உடையனவாய்க் காணப்பட்டிருந்தன. இந்நூலைச் சிவ நெயச் செல்வர்கள் கற்று, ''உலகமுவப்பவலனேர்பு திரிதரு பலர் கழ் ஞாயிறு கடற்கண்டா அங் கேரவறவிமைக்குஞ் சேண்விளங்க ரொளி ' யாகிய சுப்பிரமணியக்கடவுளின் திருவடி மலரைச் சிந்தை செய்து உய்யுமாறு செய்து வெளிப்படுத்தினன்.

இங்ஙனம்
தி.ம. பொன்னுச்சாமி பிள்ளை
-----------------

சிவ மயம்.
சிறப்புப் பாயிரம்.
இஃது எஸ்- பி ஜி - காலேஜ் - தமிழ்த் தலைமைப் பண்டிதரும்,
மதுரைத் தமிழ்ச் சங்கத்து வித்துவானுமாகிய மகா - ள - ள - ஸ்ரீ
இலக்கண உபாத்தியாயர் ஆ. கா. பிச்சையிபுறாகிம் புலவரவர்கள்
இயற்றிய நிலைமண்டிலவாசிரியப்பா

மணிநிறக்குறவ ரணில்காற்கருந்தினை
கொய்மார் செவ்வி கொடுக்கியமருங்கிற்
பூர்தன வேங்கை யொள்வீப்பொதுளிய
சினை வயினேத்தரு மஞ்ஞைநினைஇ
வான் மகதேக்கும் வள்ளிமா னென்னும்
பழனிமாமலைமிசைப் பரவியமாயி
விடவயின்வடிவே லினிதனேந்தி
வலக்கரமெடுத்து மலர்த்தாளிறைஞ்சு நர்
நாற்பொருள் பெறுவா னன் கிளிதருளுங்
குமரவேளடிக்கட் கொள்கையிற் பலபடிப்
பலப்பல பாக்க ணலத்தகச் சார்த்த
இறால்கதியடைவான் றோட் கோப்பென்னாவு
மரபு வழிப்பாக மக்கட்கெல்லா

மிருசுடர்வானி ணியங்குஞான்றுந்
தோற்றமுமறிவு மேற்றமுந் தரூஉ
மொரு பேரெச்சமாத் அருபேறெனவுங்
கடைப்பிடித்திருந்த நடைத் திறப் பெரியோன்
செந்தமிழ்த்திற மெலாஞ் சிந்தையுட் கொண்டோன்
மீக்கூற்றொன்றைப் போக்கற நிறுவிய
குழந்தைவேற்குறிசிரன் கொள்கையிற்கொளீஇப்
பழனிப்பதிற்றுப் பத்தந்தாதியென்
றொருபாமாலை யருமையிற்றொடுத்த
லறுபதிற்றொருபா வரும் பொருள் பலவமைத்
திருந்தமிழாய்ச்சி யெவர்க்குங்காட்டுப்
தற்றப்பயனைத் தமிழ் நிலங்காணக்
கந்தழியடையக் கரந்தனனன்றே
செந்நாப்போதார் செழுமறைப் பொருட்கண்
மகனெனப் புகன்றருள் குறுவெண்பாட்டிற்
கொருகாட்டென்ன விருநிலத்தொளிர்வோன்
செந்தமிழ்ச் சலதியி னுந்து முழுமதியென
வின்னிசை நிலாக்கதிர் மன்னுறனறைவோ
னன்பினையல்பினர்க் களித்து வரன்பினை
பின்புறப் பெஹாஉ மியல்பினிற் பெரியோன்
தமிழினை வளர்த்திய சைவக்கரும்பினை
யுண்டுசுவையறிந்திடுந் தண்டமிழாசான்
பாட்டினுந்தொகையினு மீட்டு கீழ்க்கணக்கினு
மின்னபிறவெவற்றினு நன்னருணரறிஞன்
திருச்சிராப்பள்ளித் தேமென விளங்கிய
நந்தகை சோம சுந்தரப்புலவன்
உறந்தைதன் பணிக்குறை முந்துறவாய்ந்து
சொற்சுவை பொருட்சுவை தொடர்ந்திவணிலவு
முப்பதிற்றொன்பான் முடி பொருட் செய்யுட்
பாமாலையதனொடு படுத்து முடித் திங்
கியற்றிதற்றமிழர்க் கினிப்பவருளினனே.

சிறப்புப்பாயிரம் முடிந்தது.
------------

சாத்துகவிகள்

இஃது திரிசிரபுரம், வாகனேரி, தோல் ஷாப்பு
தி.ம. பொன்னுச்சாமி பிள்ளையவர்கள் இயற்றியது.

எழுசீர்க்கழிநெடிலடி.யாசிரியவிருத்தம்.

உலகினிற் பலநன் னதிகளிற் சிறப்புற் றோங்கிய பொன்னி சூழ் நாட்டிற்,
பல்கலை பயின்று பகவன் வேள்பானற் பலகவி பாடிய பண்பன்,
றிலகமதாகுங் கங்கையங்குலத்துத் தினகரன் மீந்தமிழு ணர்த்தெங்,
குலகுரு குழந்தை வெலெனுங் குறிசில் கூரயிற் குமர வெண்மீதே .

வேறு
திருப்பழனிப் பதிற்றுப்பத்தந்தாதி யெனுநூலிற் றிருத்தமாக
விருப்பமுட ன யானென் றேபுகன்றாவ் வமருலகு மேவினான்றன்
கருப்பமுறு குமரனாஞ் சோமசுந்தரக்கவிஞன் கருத்திலுன்னிக்
குருப்பயண முப்பானென்பதுமியற்றி பூர்த்தி செய்தான் குணக்குன்றம்மா. 2

வேறு
இந்நூலை யோதிகனா ரிக பரசா தனமுறுவ
ரெந்நாலு மிந்நாலுக் கிணையாமோ சொலற்கரிய
பன்னூலின் பயனடைவர் பகை தவிர்வர் பிணியடையார்
கன்னாடே யுடைக்குகன்றான் கழல் பெறுவர் கருதுமினே.

இஃது திரிசிரபுரங் கோட்டை முனீஸ்வரஸ்வாமி கோவில்
பாடசாலையு பாத்தியாயரும், இந் நான் முதற்பகுதியாசிரியர்
மாணாக்கருளொருவருமாகிய நாராயணபிள்ளையவர்கள் இயற்றியது.

நேரிசை வெண்பா .

காசினியெலாந் துதிசெய் கந்தன் பழனி
மாசில்லா நீலமயில் வாகனன்மேற்--- பேசு பெற
நங்குரு குழந்தை வேலையன விலந்தாதிச்
சிங்கார மென்சொல்வேன் சீர்.

கம்பநாடன்கவியுங் காளமேகன் கவியுஞ்
சம்ப்ரமஞ்சேர் சங்கத் தமிழ்க்கவியுங் - கும்பமுனி
கொண்டாடு மென்றன் குருமொழியந் தாதிதனைக்
கண்டரற் பயமடையுங் காண்

கட்டளைக் கலித்துறை.
கங்கை மகன்கடம் பான்கார்த்திகேயன் கவிப்புலவன்
றிங்க ளுலவும் பழனி மலைக்குகன் சேவடிக்கே
புங்க மிகுங் குழந்தை வேலெ னையன் புனைந்ததொரு
சங்கத் தமிழ்த் தொங்க லந்தாதி யென்றுந் தழைத்திடவே.
-----------

இஃது இந் நாற் பிற்பகுதியாசிரியர் மாணாக்கருளொருவராகிய.
திரிசிரபுரம், வீமநகர் T.C. இராஜண்ண நாயக்கரவர்கள் இயற்றியது.

எண்சீர்க் கழிநெடிலடியாசிரியவிருத்தம்.
ஒதுமொரு சாதனை கணான்குஞ் செய்தே யொளிர் தலைவனைக் கண்டு தாண்டி மேலாம்,
போதமதை விட்ட பொறிபுலனும் விட்ட புண்ணியர் பானின்றிலங்கு புனிதமேய,
வாதவனாயா ருயிராயன் பாய்ச்சுத்த வறிவறியாப் பூரணமாயகண்டவாழ்வாய்ச்,
சீதமதி தவழ்மாடஞ் சிறந்த மேவுந் திருப்பழனி வாழ்குமரன்றிருத்தாண் மீதே !       1

வேறு
நித்திலத்தன்னண்டமென வடைகாக்கு மனப்பேடு நிறையுஞ்சுத்த,
சித்தமுள்ளோர் சூழ்ந்துறையும் வரகனகர் மிகச்சிறக்கத் திகழ்ந்த சீர்சான்,
முத்தமிழின் றுறை தேர்ந்த குழந்தைவே லெனு நாம முதி யோனீர்கு,
ழித்தரை யினாவலர்க ணாவடக்க வொரு நூலை யியற்ற வெண்ணி.       2

எத்தகைய நலுமிதற் கிணையிலையே யென்றெவரு மேத்தி வேத
புத்தகமோ வலது திரு வாசகமோ வென மகிழ்ந்து புகலஞான
வித்தகமா ரந்தாதி பதிற்றுப்பத் தாத்தொடுத்து விளம்பினான்
லத்தகைய தனி நூலை முடிக்குமுன்ன ரவனடைந்தா னருமைச்சோதி       3

தந்தை சொன்ன வொரு நூலைத் தான் முடித்துத் தருவனெனக் தலைமை பூண்ட,
விந்தவிதமகன்றந்தைக் காற்றுமெனுங் குறட்காட்டிற் சிவனைக் கண்டாம்,
விந்தையெனப் பலர் சொல்வச் குறைமுடித்து விளக்கினான் வீரன் சோம,
சுந்தர மென்னாசிரியன் சத்தநூல் பிறவு ணர்ந்த தூய்மையோனே.       4

நயமிருக்குங் குணமிருக்குத் திருமனத்தான் கலையிருக்கு நாவி னான்வேற்,
சயமிருக்குந் திண்டோளிற் புகயிருக்க வாழ்ந்திருக்கும் தன்மைபூத்த,
மயமிருக்கு மலர்முகத்தான் சோமசுந்தரமென்னு மகிபன் சொற்ற,
சுயமிருக்கு மொழிபோல யாவரே யிவ் வுலகி சொல்வல் லாரே.       5

சாத்து கவிகள் முடிந்தன
-------------

சிவமயம்.

திருப்பழனிப் பதிற்றுப்பத்தந்தாதி.

------
காப்பு
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்.

ஆதிப் பழனிப் பதிற்றுப்பத்தந்தாதி யெனும்பா வலங்கலை யான்
சோதி லிதுவைச் சடைக்கணியுந் தூயோனருள் வேடுணைமலர்த்தான்
மீதிலணிதப் பிறவியெனும் வேனல் கெடநல்லடியார் பாற்
கோதிலருளாமழை பொழியுங் குணக் குஞ்சரத்தின் பாதம் தொழுவாம்.

நூல்.
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.
திருவார் கருணை மதிமுகமுந் தேனார் கமலாலாப்பதமு
மருவார் கடப்பா மலர்ப்பமும் வயங்க வுளத்திற்குடி வருவாய்
கருவார் குழியிற் சனித்துழலுங் கடையேற் குன்னையல துளவோ
தருவா ரிறைவன் மருகாவென் றதர் பழனிமலைக்கா சே.       1

மலையுங் கடலு மெதிருறுகுர் (மாவும் பதற வேல் விடுத்த தோ
யலையுஞ் சன்னப் பிணிதொலைப் த ரிதோ வந்தோ வந்தோ நன்
னிலையு முணர்வோ ருற வுமிலா கெஞ்சினேனா னென் செய்கேன்
சிலையங் களையும் பயில் குற்றமின் றுணைவா பழனிச் சிவகுருவே       2

குருவே கருணைச் சிவஞானக் கொழுந்தே யமரர் குழாந்திக்கு
மருவே மலரே பசியொளியே மதியே கதியே வனப்புறு பல்
ஒருவே யருவே நலந்திகழ் மெய்யுணர்வேயுணர்வினும் பொருளே
தருவே பழுத்த கனிரசமே தடுத்தாள் பழனிச் சயிலத்னே.       3

சயிலப் புனச் செல்வேனலைப்பைங் கிளிகள் சோ த சனக் குறமின்
கயிலன் றுறுபொற் கண்டனிற்செம் மணிகொண் டோச்சக் கண்டிருந்தோ
வெயிலஞ் சிடுஞ் செஞ்சோதிவடி வேலோய்வேட னுருவானாய்
தயிலங் கமழும் பழனிமலைத் தியாகா சரணந்தருவாயே.       4

தருக்காவலனுந் திருமாலுஞ் சதுர்மா முகனுங் காணரிய
விருக்காதியநான் மறைமுடி திருக்கும் துணைத்தாளனுக்கருள்வோ
யுருக்கா நெஞ்சப் பெரும்பாவிக் குனையேயன்றிக் சதியுளதோ
சுருக்கா நினதன் பருள் புரியம் பழனிமலை வாழ் தூயோனே.       5

தூயா வடியா ருளங்களிக்கும் துரியா துரியாதீதபத
நேயா வமுதா சனர்க்குலகை நிலையாயளித்த நெடியோனே
மாயா மலமென் றறுமோவென் மனமாஞ் சலைமேற் பதவன்
மொயா தென்று மலர்ந்திடுமோ புகலேர் மலைவா ழுயர் பொருளே      (6)

பொருளே புலன்வென் றவர்களுரை புாதே பாமா னந்த வெள்ளத்
தெருளே லிசும்பார் பழனிமலைத் தேவே மடவார் எருமயலா
மருளே கொண்டிங் கலந்த சில்வான் மற்றோர் நெறியுந் திருந்து கிலே
அருளே வருமோ துன்புறுமோ வறியேன் கருணைப் பெருங்கடலே       7

கடமார் புவியுந் திரணிதியுங் கருத்து முறவினர்கள் குழுவு
மடமாதர்களுங் குழறியசொல் வாய்ச்சேயருமோ துணைமனமே
வடமா ரிலையிற் றுபின் முகுந்தன் மருகா முருகாவென வருகி
யிட மார் பழனிக் கிரியானைப் பணிவாய் விளையாட மிடற்றவே       8

அறமா நெறியிற் புகவரியே அடியார்க் கடிமைப் படவறியே
னிறமார் பழனி மலையாயென் றுன்னை யுளத்தே நினைக்கறியேன்
குறமா மகள் பொற் குயஞ்சேருங் குமரா வமரா பதிக்கரசே
மறமா ரியமன் வரும்போதென் செய்வேனருள் மலர்ப்பத்மே.       9

பதமாம் பதும் மலரருட் டேன் பருகியெனதுடனஞ் சுரும்பா
விதமா மெனவங்கிருந்து பிறப்பென்னும் பிணியைத் தொலைத்தினை
மதமா தங்கந் தனை காக்க வந்தோன் மருகா மலைக்குமரா
சதமாவில் வாழ்வினையோம்புங் கொடியேற் கருள் செய் தருணமி       10

வேறு.
தருணம் வா ழில்லந் துறந்துபைங் காய்கனி சருகொடு ன று ண்டே,
யருணம் வெம்புலி கொலைக்கரி யெண்குறை யடவிசூழ் வி ரை நாடி,
வருணம் போய் மழை வெயில் பனிக் காற்றினால் வாடு மெய்த் தவர் கேண்மி,
னிருணம் பாலணு காதுயர் பழனிவா ழெந் தையைப் பணிவீரே.       11

பணிந்தும் பூசனை செய்து நெக்குருகிப் பாடியு இலை யென் றே,
துணிந்து சந்நிதி முன்புரை செய்தவத்தோர்க்கரு நீயோய்,
அணிந்து நின்னடிக் கன்பிலே சொன்ன மெய்யறைந்து மென் பவகோ ய்க,
பணிந்து போன லுக் கென்றடை பழனிவாழ் சாமி நீ புதல்       12

புகலும் வேதத்தின் முடிவுறு நின் சர என் பூவடி யதன் மீதே
பகலு மல்லு மாந் தவர்கடம் மன:ெனும் பாரமே யிடத் தாங்கு
மகளாயென்றன் மனத்தவி சின்கண்வர் : மர்வதற் கென்பார்
மிக லுஞ் சூரரைச் செற்றவா பழனியி லிலகயின் முருகோனே,       13

முருகந் தாமரை யனநடை பயில்வன மொய் குழ லார் வாயா
லொருகந் தாவெனப்பணிதலைப் பைஞ்சு முணர்ந்து சா ரிலையோடு
மிருகந் தாமுருகா குழ காகுகா வென்றுரை மலைநாடா
வருகத் தாழ்வுறக் கண்ட நீ யென்வினை யறநலஞ் சொல்வாயே.      14

சொல்லு மாலு ழல் பிறப்பறக் கண்ணீர் சொரிந்திட கலாம் போற்,
செல்லுலாமுயர் பழனியங் கிரிவளர் தேவனே யெம்மானே,
கல்லு ளாமுயிர்க் கிரங்கிய கடைக்கண் கொண்டு பாராயேல்,
வெல்லுந் தீவினைக் கென்செய்கே னென்செய்கேன் விபரமொன் றறி யேனே.       15

அறிய கைபோற் கலிக டென் குலைகளை யலைத்துதிர் காய் மோதிச்
செறிவருக்கைமா வரம்பையின் முக்கனித் தேனொடு களைச்சாறு
நெறிவரும் புன் லென்னவே பாய்ந்து செந் நெல்விளை மலைநாடா
பொறிவ ரூகவின் னருள் புரி சுவர்க்கமிப் புவி புகழ் புலவோனே.       16

புலரிப் போது நின் றண்ணதி யாடி வெண் ணீறுமெய்யம் மேற்பசி
மலரினாலுயரருச்சனை செய்துநின் மந்திரந் தனையோதி
யலரி கோடிசெய் சோதிமெய்ப் பாம்பனந் தன்புறு மடி. யாராம்
பலரினாயடி யேனையுஞ் சேர்த்தருள் பழனியம் மலையானே.      17

மலைக்குஞ் ஞார்க்கும் புணரிக்கும் வேல்விட்ட வல்லனே யெனை நாடி,
யலைக்கும் தீவினைக் கென்செய்கேன் சொல்லும் வேதாகம மெ மெலாங்,
கலைக்கு மாலிற்கும் விதிக்கு மெட்டா தன்பர் கா றுநற சுயஞ்சோதி,
நிலைக்கும் பாதசரோருக மருள் பழ னிமலைவாழ் நே யோனே.       18

நேய மாக்கனி பரித்திடு மரிகளை நீள்கொடிச் சியரோச் சுத்
தூய மாக்கதிர் மணிவிண்மீன் வீழ்பெருஞ் சோதிசெய் மலைநாடார்
மாய மாக்கவு மிமைக்கு முனீக்கவும் வல்லன யலையோநான்
நீய மாக்கள் போ லலை தலையின்றுமென் றேவனே மறந்தாயோ.       19

மறத் திறந்தவர்க் குயிர் வருமோவென வையகஞ் சொல்க்கே ட்டு,
மிறந் திறந்து வந்தடைந்ததுன்பஞ் சொல வெண்ணிலையொன் தேர்ந்தும்,
அறந் திருந்த பனி மலைவள பையனை மறை மேவாச்,
சிறந்திருந்தரு டானனைப் பணிந்திலை செய்வதென் னே மனம்.      20

வேறு.
மனமிருந்து நாடா லுன்னையென்றும் வாயிருந்தும்
      பாடாமன் தி வல்லோர்க, ளினகிருந்துங் கூடாது.
வெறிநாய் டோலே யின்ற லைந்தேனென்
      செய்க எனக்கோ வந்தோ,
சனமிருந்து முற்றவரே ண் கோடி கோடி தா மிஞர்து மியான்வரிற்
      ச ப னஞ் செய்தோர்,
தினமிருந்து வருகவென்றால் விடுவதுண்டோ (தேவனே
      பரிமலைக் திறல் வேலோனே .       21

வேலாட மயிலாடச் சில:பினோசை
      மேலாட ரவிக்ரடி மே அந்தண்டை,
காலாட நீயாடி வருதலென்றோ கன்ம மெதேன்
      விட் டோடுங்கால் மென்றோ,
மாலாடக்குறமாது தோள் சேரின்ப வங் கணனே யம்
      பரனே மறையோர் நான்கின்,
மேலாடச் சிவகுருவே சித்தர் கோடி மேவு
      பழனிக்கிரிவாழ் வேடர் கோவே.       22

கோவோ யறியாத தொன்றுமில்லை குற்றநான்
      செய்யாதிங் கொன்றுமில்லை,
பூவேனுமில்லையேனும் பறித்து பாத பூசை செய்யக்
      கனவினிலும் பொருந்தாதற்குர்,
தாயேது நிலையேது சுகமங் கேதுன்
      றண்ணளியே பல்லாவா தாரமங்கேது,
தேவேதேவரசன்ம இழ் மருகாவானூர் சீர்பழனி
      மால்வரை வாழ் திறல்வல்லோனே.       23

வல்லாரு மூலைமடவார் மருட்பார்வைக்கு
      மாமதியா முகத்திற்கு நகைக்கு மேலா,
மல்லாரு நெறிகுழலின் கந்தத்திற்கு முன்னநடைக்கும்
      மயிலின் சாயலிற்குஞ் ,
சொல்லாருங் கனியிரசந் தனக்குமா சை சுற்றி
      நிறை சேற்றுமதித் போலேயானே.
னெல்லாரும் பழனி மலைக் கரசே சித்த
      மெப்படியோ வறியாத வேழை நானே.       24

நானென்ற வாணவத்தை நாசமாக்கி நாடிய
      மூலாதாரக் கன லட்டித்,
தானென்ற மதியமிர்த முண்டு கோடி தரணி யொளர்
      வட்டநடுக் கோட்டைக்குள்ளே ,
வூ னென்ற பொய்யைமறர் துன் னைக்கண்டங்
      கொன்றுபட்டு நிற்றலெனக் குண்டோ வந்தோ,
ரானென்ற நோக்கவள்ளி மாதைச் சேரும் வங்கணனே
      தென்பழனி மலைவாழ் வோனே .       25

மலையோவித் தேகமது தானானாலும் வாரிதியேழ்
      சூழுலகும் வா காடு,
நிலையோவல் லது கிழமாம் பருவமென்ற நீடியநா ளுண்டே
      னிற்சண்டனுக்கே இவ்வூர்,
தொலையோநம் பாழ்மனனே யிது வோமேதை சொல்வரிய
      சென்னி வரை மத்தியறிக் ,
கலை யோடா மற்பிடித்தங் கதிலே கட்டிக் கனல்
      கொளுத்தப் பழனியனைக் காது ம்யாரே.       26

பாரேழு பிறவியினுஞ் சிக்கிவாடிப்பசிபிணியாலே
      யலைந்தேன் மேல்கீழாக,
வீரேழு பதினாலா முலகும் போற்று மெத்தையே நின்
      ணடிக்கா ளென்றாவேனோ ,
காரேழுஞ் சூழபழனி மலை மேல் வாழுங் காரணனே
      யடியர்மனக் கண்ணினோடிங்,
கோரேழு பதியிறையே யுன்னையன்றி யோருதவியுங்காணே
      னொப்பிலானே.       27

ஒப்பில்லா நின் புகழைப் பாடிப்பாடி யூற்றெடுத்தா
      னந்தவெள்ளம் பருகாதென்றும்,
துப்பில்லாக் கயவர் தமைத் தேனுவென்றுஞ் சோமனென்றுங்
      காமனென்றுஞ் சொல்லிக்கஞ்சிக் ,
குப்பில்லா மற் பிரிந்த தொன்றேயல்லா திண்மையொன்றுங்
      கண்டறியே னொருகா லர்துத்,
தப்பில்லா மெய்யடியார் பாடியாடுந் தண்டலைசூழ்
      பழனி மலைத் தணிவேலோனே .       28

நனியிருந்து பாய்மாவையுள்ளேகட்டித் தள்ளாது
      கோபுரவா யிலிலே தூங்கு,
மினியமணி நாவதனை மேலே யேற்றி யிட்டபூர
      காமதியி னுள்ளே சென்று,
புனிதமிகு முக்கோண வீட்டினுள்ளே பொக்கியவா
      னந்தமயப் பாலையுண்டு,
தொனி விளங்க வொளியில் ங்க தின்னைக் கண்டு
      தொழுவதென்றோ பழனிமலைச் சோதியானே.       29

சோதிமய மேஞான நிலையே வேதச் சுருதி முடி
      வேயருள் கொ ணலமே தூய,
நீதிநெறியே யுணர்வுக் குணர்வே யன்பர்.
      நெஞ் சிடமார் பேரின்பக் கடலேயென்று,
மாதிமுத லேயசர சரமே சொ அலு மண்டபகி ரண்டமே
      யென்னையாளக் ,
கொதில்பழ னிக் ஓரி வாழ் தேவே நெஞ்சுட். கும்பிட்டே
      னின்னடிக்கே யன்பிட்டே       30

வேறு.
அன்பின் வழி கசிந்து கண்ணீ றருவியதி லேயாடி
முன்பின்றி யாது சொன்ன மொழிகுழறி மெய்விதிர்த்தே
யென்பிளகியின்ப வெள்ளத் தென்றெனையுங் கூட்டுவையோ
தென்பழனி மால்வரை வாழ் சித்திரமயிற் சேவகனே.       31

சேவகம் வேறின்றியுன்னைச் சிந்தை செய்து கைகுவித்து
காவகத்தும் பாவகத்து நாடியவா றக்கரத்தும்
பாவகன்ம நிங்கமிகு பத்தி செய்வதெந்நாளோ
பூவகத்தான் வந்து பணி பொற்பழனி நாட்டானே.       32

நாட்டமற்றங் கப்பால் நின்றவுன்னை யானலிலக்
காட்ட மனக்கண்ணடக்கக் கொள்ளாதாமென்றுணர்ந்தும்
பாட்டகத்துக்கூறலொரு பக்கமுமன் றானாலுங்
கேட்டதரு டென்பழனி மால்வரைவாழ் கேகயனே.       33

கயல்படும் பொற் கண் மடவார் காவடியிட் பாடவஞ்சி
யயல்படும்பைப் பன்ன கங்கண் மஞ்ஞையெனக் கண்டடங்கும்
புயல்படுந் தண் சோலைமலைப் பொற்பழஸ் வேலோயென்
செயல்படும்பா டென் சொல்கே னீயினிது செய்வாயே       34

செந்துவர் வாய்க் கொடிச்சியர் கைத் தேமாவைத் தேவர் கண்டு
வந்தமிர்த மீய்ந்தளந்து வாங்குமலை நாட்டரசே
சந்தமயி லேறியிரு தையலர்கள் வீற்றிருக்க
வெந்த முள் மீது குடியின்றிருக்கலாகாதோ       35

இருக்காதி நான்மறை நால் கானாரி தா மென்றாலும்
தருக்கா வலன் மருகா வன்பரிடஞ் சார்ந்தனை நீ
யுருக்காத வென்னெஞ் சிலொன்றுபட்டு வாழ்தலென்றோ
மருக்கரசூழ் தென்பழனி மால்வரை வாழ் வல்லானே       36

வல்லாரி ஓன்னையன்றிப் பேசிடவும் வாய்மையில்லை
யில்லாரி லென்றனைப் போன் மற்றொருவரெங்கு இல்லை
கல்லாரி லோபியரிற் காமுகரிற் சேராது
நல்லாரிற் சேர்த்தருள் செய் தென்பழனி நாயகனே.       37

நாயகனே யைந்தொழி நீ வகுத்து நாட்டியதா
லாயமு நீ யள்ளுத்னீ மற்றிவணார் பெற்ற சிறு
சேயனந்தங் கோடி. பிழை செய்தாலுான்கு செய்ய
றாயர்கட னாமல்லவோ தென் பழனிச் சண்முகனே.       38

முகநேயங் கொண்டாடி முற்றுநிறை வஞ்சகஞ் செய்
யகநேயமில்லாத பாவியர்பாற் சென்றலுதேன்
சகநேயமில்லார்க்குப் பேரின்ப சாகாமாஞ்
சுகநேயமுண்டாமோதென்பழனிச் சுந்தரனே       39

சுந்தரஞ்சேர் மாதர்த்தி சொல்லிவரச் சாரலிடம்
கந்தரஞ்சேர் சோலையரி மஞ்ஞை குயில் கண்டாங்கு
மந்தரமாரம் பழனி மால்வரை வாழற்புதனே
யெந்தா நீ கண்டருள்செ யேழை நல்ல வேளையிதே.       40

வேறு.
நல்வேளை யீ தெனவந் தமரர் சொல்லு
      முரை கேட்டு நாடிவந்து
வில்வேனச் சினந்தெரித்த பெருமானுக் குண்ற
      மைதனை விளங்கச் செய்தோ,
யல்வேனைக் கிரவியென வென்னுளத்திற்
      குடிவருதற் காகா தென்னோ,
மல்வேழ முகத்தானைச் செற்ற கரிமுகன்
      பினவா மலைவா ழ்வோனே .       41

மலைவாரச் சுனை வெள்ளப் பெருவாளே
      ராவிமக வான்றன்னாட்டி
னிலையாரைந் தருவை முறித் துயர்மினச் சினஸ்
      செய் பழனியில் வாழ்வோனே ,
தொலையாவெம் பிறவி விடாய்க்குன்னருட்பிரவாக
      வெள்ளத் தோன்றலென்றோ,
கலையாயும் புலவர் பணி மெய்ப்புலவனே
      யெளிதிற் காணத்தானே.       42

தானேதா னாயிருந்தைம் பூரம்வகுத்ததிலகர சரமுண்டாக்கி,
யூனேயும் பல்வடிவினுள்ளுயிராயதற்குணவாயுணர்வாய் நின்றோய்,
நானே து மில்லாத வெனைப்பிரித்து வெளிவிடுத னன்றோ வென்றும்
வானேயும் பழனிமலைக் குமரகுரு பரமுருக வடிவெலோனே.       43

வடிவாருங் குறமாது மலர்க்கரத்தின் பிண்டிதனை வாங்கியுண்டு
மடிவாடி யெனவழைத்தீ ரன்னமிடக் கன்னமிட லாமோ வேத
முடிவாருஞ் சிவகுருவே தென்பழனி மால்வரைவாழ் முன்னோய் து ன்பம்,
விடிவாரு நாளுளவோ வில்லையோ நாட்செலுமோ வேடர் கோவே,       44

வேடர்மா பினில் வளரும் பூங்கொடியைத்
      தண்ணமுதை விரு ம்பியே வெங்,
காடதனி னடந்தமலர்த் துணைச்சரணெ னுளம்
      வர தீத காதோ துத்தி,
யாடாவப் பணியாறா ராசையெனுங்
      கொடிப் டரைந் தருவேயுன் சீர்,
பாட மனங் குவிந்து சிரம் பணியவரு
      டென் பழனிப்பதிவேலோனே,       45

பதியாவென் மனதுனையே பத்தி செய்ய வாய்பாடப் பகலுமல்லுந்
துதியாகச் செவி கேட்கக் கரங்குவியச் சிரம்பணியத் தோகையேறி
மதியாரு நுதல்வள்ளி குஞ்சரி, கொடும் விழிகள் மகிழ்ந்து காண்கத்
ததியாகுமின்றருள் செய் தென்பழனி யூர்வளர்தண் சயிலத்தானே       46

தண்ணறாமலர்க்கொன்றை முடிப்பெருமான் சிலையெறிந்தோன் றனக்கு மேலாம்,
விண்ணரா லுலகறியப் பிரம்புகளைக் கொண்ட டித்தவர்க்கும் வீடுதந் தான்,
பண்ணறா ரளிபாடும் பூம்பொழில்சூழ் தென்பழனிப் பதிவாழ் வொயென் ,
வெண்ணறா வினையற நீ யாரு ளாதென் வண்ணமயி லேறுந்தேவே.       47

தேடுமட்டுந் தேடி நலஞ் செய்யாத லோபியர் பாற்றினமுஞ்செ ன்று,
பாடுமட்டும் பாடி வெளிப் படலடைத்தே கென்றபழங் கதை க்குளானேன்,
கோடுதொட்டு முரித்து கை மேருவினி லெழுதியகு ஞ் சான் பின் வந்தாய்,
வாடுமிட்ட பயிர்க்கியமானீர்சொரித லுண் நிகண்டாய் மலைவாழ்வோனே .       48

மலமீரிக் கசிந்தொழுகும் பீறலையுண் ணி ணத்தை துரு வாசக் கூட ட்டைச்,
சல மூத்திரக்கேணினிதனையிரத்தன் சி நிறைந்த சண்டாளத் தைப்,
பல பூத்த புழுக்குழியைத் தசைகரம் பென் பாற் பொதிந்த பா ண்டந்தன் ளை,
நலம் விற்ற தென நம்பி கழல்வேனோ தென்பழனி நாடுள்ளானே.       49

நாடிய கானயங்காங்கு புகைத்திரள் விண் ணெறித்த சிலை நமன் செய்வேட்டை ,
யாடியதிற் றோன்று முரு அற்புதமின் மினிக்கன் த்தடர்ந்து தோன்றி,
யோடிய சென் மின்னார் பம்பரங்காற் றடை கருத்திக் சொப்பாந்தேசு,
நீடிய தென் றோம்பியுழல் சின்றேற்கின் அருள்பழனி நேயத்தானே.       50

வேறு.
தேயம்போ னகைத்து மதிமுகங்காட்டி நிமிர்குயத் சினைவி லக்கிச்,
சாயன் ( மா மயில்போ லனமென கடந்துன் றண்ணருடொ வைக்குமார் தரையே,
தூய பாலமுரஞ் சன்முக் கனியாஞ் சொல்லின் ரெனச்சொலி அலைந்தேன்,
மாயன் மாமருகா வருள் புரிபழoளி மா மலைவளர் சுடர்க் கொழுந்தே.       51

சுடர் விரி தாளக் கோவைகளிலங்குந் துணைமுலை யார்துகிற சோர்வை,
யடலெனக் கருதிப் பார்வை செய்துழலு மசடனைக் காப்பா துங்கடனா,
மடல் செறிகமலப் பொதுறைநநவ மாந்திய வண்டிசை பாடம், படம் விரிந்தரல்
மாடல் செய்பழனிப் பதியில் வாழ்கருணை யம் பரனே       52

அம்பரந்தனிற்கால் கொண்ட படம். யஞ்சிறையிழந்த புள்ள ளினமாய்,
வம்பவிழ்கலனையமலைமடவார் மாமயால் கொண்டு ழன்றலை தேற்,
கும்பர்கள் கோவே யெம்பெருமானே வுன்னரு கிடைக்குமா றுளவோ,
நம்பரனேமா வங்கணர்க்கருள்செய் நா தனே பழனி நாயகனே.       53

நானெனவரும ணவமொடு மூன்று நாசஞ்செய் துன்னருணி நம்பிர்,
தானெனவான பெருஞ்சுவையருந்தும் தன்னடியாரொடு கூடிக்,
கோனெனவரிய வானெனப்பாடிக் கொள்ளுநா ளுள்ளதோ விலதோ,
பானெனவொளிசெ யயிற்கரத்தோனே பழனியம்ப திவளர்வோனே      54

வளர்ந்த தீவினையோ விலக்கிலையிவணான் வந்து செய் ததுமிலக் ஓலையா,
முளந்தனினாடிக் கசிந்துனைப்பாடு முள்ள மெவ்வளவெனு நிலையா,
நளந்தனினிறைந்த சூரரைக் கடிந்து தாஹவேவானவர் வி ருந்தே,
வளந்தருமுயர்ந்த பழனியம்பதி வாழ் வள்ளலே கருணைய பரனே.      55

கருணையின் வடிவே யினிய தெள்ளமுதே கனிந்த முக் கனியுகு நறவே,
சரணமென்றடைந்தோ ரிதைய செங்கமலந் தன்னிலூறிய பசுங்க, தனே,
யருண்னெண்கோடி யொளிசெயும் வடிவேலாயுதனே சரவணனே,
தருணமின் றெனையாள் பழனியம்பதிவாழ் சண்முகா சிவதவப் பொருளே .       56

தவத்தினர் திருவே முனிக்கருள் குருவே சதுர்மறை புகலரும் பொருளே,
நவத்தினிலுயர்வே கருணையங்கட்லே நலந்திகழ் புதிய தெள்ளமுதே,
கவத்தினிலிபோன் மனந்தடுமாறிக் கதறியையும் பொ றிகளுஞ் சிதறிப்,
பவத்தினில்லையத் தக்கதோகடைக்கண் பார்பழ னித்திருந்தேவே.       57

தேவர்கடேவே குறமகள் கோவே சிந்தையிலேனையர் தமை யே,
பாவனைபுரியே னாவிலேத்தெடுக்கன் பணிந்திடத் துணிந்து சம்மதியே,
நாவல் செய்துனக்கே திரிவிக்ரண மடிமையுற் றிடவே னக் கொண்டேன்,
காவலன் மருகா பழனியங்கிரிவாழ் கந்தனே யெந்தயாபரனே.       58

எந்தையுநீயே யன்பனை நீயே யின்னருட்குரவனுக்யே
பந்தமு நீயே மோக்க முரயே பகர்மறையுட் பொருணியே
யந்தமுற்யே நல்லிடைநீயே யாதியுமானது நீயே
மந்தர புயனே பழனியங்கிரிவாழ் வள்ளலே சிலாமணியே.       59

மாசிலாமணியை யருட்பெருங்கடலை வானவர் சிறைதவிர் திற லைப்,
பேசிடா பொருளை மன்னுள்ளெ வளிம் நொந் தனிமுழுமுதலை,
யாசிலாவள்ளிக் செ' {படர்தருகை! யடி நடிமுடி விலாததுவை,
நேசியா தலைந் யென் வாய்ப்பளிக்கலான துதிசெய்நன் மனனே.       60

வேறு

துதிசெய் நல்லடி யாரடிப் பொடிசிரஞ் சூடிக்
கதிசெ யம்பழனாபுரி யான்கழல் கருதி
விதிசெ யும் பிறப் பிறப்பெனு மிரண்டையும் விலக்கு
தகசெய் நன்மன னேகதி வேறில்லைத் தானே       61

தானை நால்வகைப் புரவல் ரெனினுமித் தரையின்
மேனை மின்றரு முமையருள் பழனிவேல வனாங்
கோனை யேத்தில் ரிரவல ரேயெனக் கூறி
வேனை யோர்பய னெங்கன மடைகுவ ரியம்பே.       62

இயம்பிடாத நின் பெருமையை மடவரற் கிரங்கிக்
குயம்பந்தேர் விழி கயல்மொழி பாசெனக்கூறிப்
பயம் படாதுழல் பாவியேற்கருள்வதுன் பார
மியம் பல்லாயிர முழங்குநற் பழனிவாழிறையே.       63

இறைவனே மலர்மகளிறை யயனோடிரிரண்டு
மறைவானார்களும் பணியு மெய்ஞ்ஞான வாரிதியே
நறைவழிந்து பாய்பண்ணை சூழ்பழனி நாதாவென்
நிறைவதேயலாற் பிற மொழி பகர்ந்தறியேனே.       64

ஏனமாயவிர் சிறையனமாயிரு நிலம்வான்
போன மாலபனத நாச்சில் தம் பொருளுக்
கீனலே ரகம் பழனி மாமாலை வாள் ரெந்தாய்
ஞானம் நிலைதளை யடைந்தொளிர்வதெந்நாளே.       65

நாததீமையார் செயல்புரிந்திடுக்க ணானலிந்த
னீதவா றிழிந்தழல் மனநினை நினைத்திடநின்
பாததாமரை யென்னகத்திலங்கிடப் பணிப்பாய்
சூத மாங்கனிகொண்ட நற்பழனி வாழ்சுடரே.       66

சுடரோர் மூன்றினுக் குயர்வுடை நின்னருட்சோதிக்
கடருமாநிலத் தெப்பொருணிக ரரைகுவனால்
படருமெய்ப்புகழப் பழனிமாமலைவளர் பரனே
தொடரும் வெவ்வினை தொலைத்தருணின்பதத்துகளே.       67

துரிதமாக நின்புகழ் சொலத் தோன்றிடுங் காலை
விரியுமெய்யறி வொளிர்ந்திடா தழுத்தும் வெம்மாயை
யிரியுமா செயல் நினக்கொரு பாரமோ லிணிங்கிக்
கரியுமாளியு முலவுநற் பழனி வாழ் கந்தா.       68

கந்தநாதவென்றொரு முறை பகர்ந்திடிற்காலன்
சிந்தையானது கலங்லயே குவனெனத் தேர்ந்தும்
பந்தமாயையினிங்கிலே னின்னருட்பார்வை
வந்து மேவிடிலுய்குவேன் பழனியின் வாழ்வே.       69

வாருலாமுரசதிர்ப்ப வானவர் புடைசூழத்
தேருலாவநின்ற சரவாக் காய்ந்த நீ சிறிதஞ்
சீருறாய்வந் தொலைப்பது பாரமோ திகழுங்
காருலாவுநற் பழனிவாழ் கடம்பணிமார்பா.       70

வேறு.
மாரனென்ன வயங்குமெழிலுளார்
தீரமேவு வையாபுரி சென்று நின்
பேரெலாம் புகன்றாடும் பெருமையெவ்
வூரிதுண்டு பழனிக்குதயனே.       71

உதயங்கண்ட மலரென வென்னுள
நிதமகிழ்ந்திட நின்னருளீகுவாய்
மதமிகுந்த வெம் மாயையொழிந்துவ
ரிதயமேவும் பழனியிலீசனே,       72

ஈசனே பழனாபுரியிற் பிர
காசணே யடியார் கண்களித்திடு
நேசனே யென நின்புகழை நிதம்
பேசவாக்கருள் யிஞ்ஞகன் பிள்ளையே.       73

பிள்ளையின்றி வருந்திற் பிறர் புரி
சள்ளை பொன்றிக் தவிக்கிற் சலனம்வே
றுள்ளமொன்றி யுழலிற் பழனிவாழ்
வள்ளற் போற்றுவர் வையகமாக்களே.       74

மாகளிக்கும் வளர்ந்த பழனியி
னீகளித்து விளங்கரினை யெண்ணார்
தேசமுற்றும் பயனென் சிறந்தொளிர்
நாகமுற்றவர் போற்று மெய்ஞ்ஞானமே.       75

ஞானமின்றி நலமிழந்தார் மனம்
போனவா றுவிடயம் புகுவரே
மானமில் பழனிப்பெருமான் பதக்
கானுலாமலர் காண்பதெக்காலமே.       76

காலமென்செயுங் காலனு மென்செயுங்
கோலமாகவக் கோள்களுமென் செயு
மாலமார் மிடற்றண்ணலளித்தருள்
சீலனார் பழனிப்பெயர் செப்பினே.       77

செப்புநேர்முலைத்தே மொழியார்மன்
மொப்பக்கூடு மமையத்து முன்புகழ்
செப்பிக்ககூடுவரென் னிற்றினந்தினஞ்
செப்பிலாதவரார் மலைத்தேத்தனே.       78

தேக்குமன்பந்தினந்தொழுங்கம்மலை
தாக்குந்தண்டிரை யார்ப்பைத் தகர்க்குமால்
காக்கக் கங்கணங் கட்டிய கந்தன் வர
ழாக்கமார் பழனிப்பதியண்டியே.       79

அண்டர் நாயகன் போற்றுமறுமுன்
றொண்டர் நாயகன் சொல்லற்கரும்புகழ்
கொண்ட யானை குறத்திக்கு நாயகன்
விண்டு போற்றும் பழனியின் வேலனே.       80

வேறு,
வேலையின் மாவுரு வெடுத்து சூருட
லாலையிற் கரும்பென வீர்த்த வண்ணலே
பாலையை கர்பவம் பறித்துக் காத்தருண்
மாலையாக்கடம்பணி பழனி மன்னவா.       81

மன்னவொண் பொழிலிடை வசதியும் வண்டின
நின்னரும் புகழிசை நிறுவிப் பாடிடத்
துன்னிநின்றாடுமந் தோகையேறிவந்
தின்னலைத் தவிர்த்தருள் பழனியேந்தலே.       82

ஏற்றுறு பரமனீ யொழில் கொள் விண்டு நீ
சாற்று மந்தணனு நீ தரணியம்பழல்
காற்றுவானீயிவண் கலக்குமாவி நீ
போற்றுமெய்ப் புகழுடைய பழனாப் புண்ணியா.       83

புண்ணியம்மனைந்தெனப் பொருந்திடா நர
ரெண்ணிய விடமலைத் திளைப்பரெய்ந்தவர்
பண்ணியல செழிக்கு நற் பழனியங்கிரி
கண்ணியன் பொடுதுதி நவின்று வாழ்வரே.       84

வாழ்ந்திடுதாலை நின்வணக்கமின்றியே
தாழ்ந் திடு காலையிற் சாற்றுவோர் குழூஉச்
சூழ்ந்திடாதுன்புகழ் தினமுஞ் சொல்பவர்ச்
சூழ்ந்திடப்பணித்தருள் பழனித் தோன்றலே.       85

தோத்திரம் புரியு நின்றொண்டர் மாட்டுறுங்
காத்திரக் கவலையுங் கடியுமெய்த்தொழி
லேத்துநின்பாலுளதாக வென்குறை
தீர்த்தருளாததென் பழனித் தெய்வமே.       86

தெய்வமாமூழ்வலி சிதைக்குஞ்சேவடி
செய்வருங் கரும்பனை யடக்குஞ்சீரயில்
சைவமாம் பழனியை நினைக்கிற சந்தத
முய்வரென்றுரைத்தனர் பெரியருண்மையே.       87

உண்மைநின்னடியவர் வீட்டினோங்குதல்
தண் மலர் விரித்திழி மது பொன்றா தினாற்
றிண்மையதாம் பொது பழனிசேரிரு
கண்மணி நிகர்த்திடு கார்த்திகேயனே.       88

கேகய முதலிய தேயங்கிட்டி னுஞ்
சோக மார் மிடிநினைத்தொடர்ந்து சுற்றினுந்
தோசையில் வருமொரு பழனிச் சோதியை
வாகையம் மார்பனை வாழ்த்து நெஞ்சமே.       89

நெஞ்சுற் பழனிவாழ் நிமலற்போற்றுவார்
கொஞ்சு நன்மகவொடு கொழிக்குஞ் செல்வமு
மெஞ்சலிலாயுளு மிணையில் கீர்த்தியு
மஞ்சுறா வலிமையு மடைவரென்பவே.       90

வேறு.

என்பொடக்கர வம்புனை யீரவெண்பிறை யோனுள்
மின்புமுற்றிட மேல்விழுந் திச்சைபோல்விளை யாடுநீ
யன்பனன்மக வடைவதற் கருடராததென் ஞாயமோ
மின்புரைத் திருவடிவினார் மேவுபழனியின் வேந்தனே,       91

வேயையொத்த புயத்தினார் வீரவேல் விழி கண்டளி
தூயநீல மெனச்சுழல் தோற்றமல்லி யறிந்தெதிர்
வாயினாற்சொலி யேசல்போல் வண்டிசைக்க மலர்ந்தொளிர்
மேயவாவி மிகச்செறி பழனி வாழும் விளக்கமே.       92

விண்ணகத் தவர்மீண்டு இவ்வேலை சூழ் புவியெய்துவர்
மண்ணகத்திலுயர்ந்ததோர் பழனியானை மனத்திடை
யெண்ணன் முற்றிய மானிட ரெய்திடார் கருவானதி
லண்ணல் பொற்றிருவடி தனிவாற்றலோடுறைவாரரோ.       93

வாதபித்தமோடையமே வந்த மோதிடுமாகமா
மீதணித்தியமென்றெணா தின்னுமே நசை கொண்டவெ
னேதமுற்ற மனந்தெளி வெய்துமாறு பணித்தருண்
மாதவத்தர் நெருங்கிவாழ் பழனியந்தலவாசனே.       94

வாசவன்றிருமருகனே வள்ளியானைமணாளனே
யீசனீன்ற குமாரனே யென்று நின்று துதித்திடுந்
தாசர்மேவிடு நல்லவை சார்ந்து நின்புகழ் யானுமே
பேசநீயருள் புரிகுவாய் பழனிவாழ் பிரதாபனே.       95

பன்னகக்கொருபாரமாம் பாரினுற்றவரென்றனை
நின்னடிக்குயர்துதிசொலு நேயரோ டுறவானவ
னென்ன நித்த முரைத்திடற்கென்று நின்னருளெய்துமோ
பன்னகத்தினமேலதாம் பழனிமேவிய பாதனே.       96

பாதுகாப்பது நின்றொழில் பாடியாடுவதென்றொழி
றீதுபோக்குவதுடன் சேவை செய்குவதென்கட
னீது சத்தியமாதலா லெய்து நின்னருளென்னிடத்
தாதுகுக்கு மலர்ப்பொழிற் பழனிமேவு தயாபரா.       97

ததியரிந்து களித்தருடந்து காப்பவனீயலான்
மதியெழுத்திட வொலிகடன் மாநிலந்தரிலாளார்
கதியறிந்திசை பாடு பொற்றொடிரோங்கிய பழனிவாழ்
நதியணிந்திடு செஞ்சடை நாதரீந்தருளெந்தையே.       98

எந்தை போற்றிய யிற்கரத்திறைவ போற்றி யெனக்கரு
டந்தபண்ணவ போற்றி வேதாகமத் தலைநின்றிடு
சுந்தரத்திருவடிவமார் சுகுணபோற்றி துதிக்குமென்
சிந்தைமேவிய பழனிவாழ் தேவநின்னடி போற்றியே.       99

போற்றுவார் சிலருவகையே பொங்கியக் கரமாறையஞ்
சாற்றுவார் சிலர் பல்வகைத்தார் தொடுத்து வியப்புற
நாற்றுவார் சிலர் வெம்பவரைந்ததென்று மனந்தனைத்
தேற்றுவார் சிலர் பழனிவாழ் தேவதேவநின்றிருமுனே.       100

திருப்பழனிப் பதிற்றுப்பத்தந்தாதி முற்றுப்பெற்றது
-----------

This file was last updated on 07 October 2026.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)