ஒளவையார் செய்தருளிய குறள் (ஞானக்குறள்)
மூலமும் வடிவேலு முதலியார் எழுதிய விசேஷ விருத்தியுரையும்
njAnakkuRaLof auvaiyAr
with commentary/notes of vaTivElu mutaliyAr
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This etext has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2020.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
ஒளவையார் செய்தருளிய குறள் (ஞானக்குறள்)
மூலமும் விசேஷ விருத்தியுரையும்
Source:
ஒளவையார் செய்தருளிய குறள் - மூலமும்
விசேஷ விருத்தியுரையும்
சென்னை தொண்டமண்டலம் கல்விச்சாலை
பிரதம தமிழ்ப்பண்டிதர் வித்வான் சூ . அப்பன் செட்டியாரவர்கள்
மாணாக்கர் ம-க - ள - ள - ஸ்ரீ மா. வடிவேலு முதலியார் எழுதிய
விசேஷ விருத்தியுரையும்.
2-ம் பதிப்பு: காபி 1000
பூ. சு. குப்புசாமி முதலியார் அண்டு சன்ஸ்
அவர்களது ஸ்ரீசுந்தரவிலாச அச்சுக்கூடத்திற் பதிப்பித்தது
1915, Registered Copy Right.
விலை அணா 8.
--------------
புஸ்தக அறிவிப்பு.
இதனால் சகலமான நண்பர்களுக்கும் தெரிவித்துக் கொள்வது யாதெனில் :
இந்த ஒளவைக்குறள் என்னும் புஸ்தகத்துக்கு ஸ்ரீ மான். மா. வடிவேலு முதலியார் அவர்களைக்கொண்டு, ஒவ்வொரு பதத்திற்கும், தனித்தனி அர்த்தம் பிரித்து விசேஷ விருத்தியுரை எழுதுவித்து உயர்ந்த கிளேஸ் கடிதத்தில் சுமார் 20- வருஷங்களாக நானே அச்சிட்டு, விற்பனை செய்து கொண்டு வருகிறேன். இது எல்லா நண்பர்களுக்கும் புஸ்தக வியாபாரிகளுக்கும் தெரிந்தவிஷயம். இவ்வருடம், ஒளவைக்குறள் மூலமும், ஞான தீபார்த்த உரையும், என்ற பெயர் புதிதாக அமைத்து பெயர்மட்டும் உரை என்று கொடுத்து அதற்குத் தக்கபடி, தனித் தனி பதங்களாகப் பிரித்து உதை கறிச்சிட்டு விர்ப்பனை செய்து கொண்டு வருகிறார்கள். ஆகையினால், நண்பர்கள் மோசம் போகாமல், ஸ்ரீமான் மா. வடிவேலு முதலியார் அவர்களால் எழுதிய விசேஷ விருத்தியுரையா யென்பதையும், பூ. சு. குப்புசாமி முதலியார் அண்டு சன்ஸ் ஸ்ரீ சுந்தர விலாச அச்சுக்கூடத்தில் அச்சிட்ட புஸ்தகமா யென்பதையும் பார்த்து வாங்கும்படி கோருகிறேன்.
--------------
வேல் முருகன் துணை.
ஒளவையார் செய்தருளிய குறள் (ஞானக்குறள்)
மூலமும் வடிவேலு முதலியார் எழுதிய விசேஷ விருத்தியுரையும்
1. வீட்டு நெறிப்பால் -- பிறப்பின் நிலமை
1. ஆதியாய் நின்ற வறிவு முதலெழுத்
தோதிய நூலின் பயன்.
(பதவுரை) ஆதியாய் - (இந்தச் சரீரத்திற்கு) முதன்மையாய், நின்ற = இருந்த, அறுவு = அறிவானது, (எனக்கு இதைச் சொல்ல இடங்கொடுத்தது) முதல் எழுத்து = ஆதியட்சரமாகிய (பிரணவத்தை) ஓதிய (முதலிலே) உச்சரிக்கின்ற, நூலின் வேதத்தின் பயன் = பிரயோசனமாகும். (எ-று.)
(கருத்துரை.) நான்கு வேதங்களை முதலாகக்கொண்டு இந்நூலை சொல்லுகின்றேன் என்பது கருத்து.
(விசேஷஉரை.) இந்தச் சரீரத்துக்கு அறிவு ஆதியாயுள்ள தென்பது அறிவென்று சொல்லப்படும் ஆன்மா தன்னுடைய வினையினளவுக்குத் தகவேறோர் சரீர-மெடுப்பதற்குக் காரணமாகப் பெறப்படுதலின், 'ஆதியாய் நின்றவறிவு' எனவும், வேதம் ஆரம்பத்தில் உச்சரிப்பது பிரணவமே என்றும், அந்த வேதத்தையே ஆதாரமாகக் கொண்டு சொல்லப்பட்டது இந்நூலென்றுஞ் சொல்லுவார், 'முதலெழுத்தோதிய நூலின் பயன்' எனவுங் கூறினார்.
அறிவே ஆன்மாவென்றதை ;
''ஓசையைச் செவியாலோர்ந்து முருவினைக் கண்ணாலுற்று
நாசியாற் கந்தங்கொண்டு நாவினா லிரதந் துய்த்தும்
பூசியதோலினாலே புலப்படப் பரிசமுற்றும்
ஆசறவுடலிநிற்கு மறிவுகாணான் மாத்தானே "
என்பதினாலறிக.
------
2. பரமாய சத்தியுட் பஞ்சமாபூதந்
தரமாறிற் றோன்றும் பிறப்பு.
(பதவுரை) பரம் = பரம்பொருளிடத்தில், ஆய = உண்டான, சத்தியுள் = பராசத்தி-யிலடங்கிய, பஞ்சமாபூதம் = ஐந்து பெரிய பூதங்களும், தரம்மாறில் = தங்களில் ஒன்றுடனொன்று மாறினால், பிறப்பு ஜென்மமானது, தோன்றும் = உண்டாகும். (எ-று.)
(கருத்துரை) பஞ்சபூதங்களின் பரிணாமமே தேகம் என்பது கருத்து.
பரமாயசத்தியுள் என்றதற்கு பரத்திலிருக்கும் மாயாசத்தியுள் என்று கொள்ளலுமாம்.
பஞ்சபூத பரிணாமமேதேக மென்பார், 'பஞ்சமாபூதந்தர மாறிற்றோன்றும் பிறப்பு' எனவும், அது பராசத்தியினிகழ்வ தென்பார், 'பரமாயசத்தியுள்' எனவுங்கூறினார்.
--------
3. ஓசை பரிச முருவஞ் சுவை நாற்ற
மாசை படுத்து மளறு.
(பதவுரை) ஓசை = சத்தமும், பரிசம் = பரிசமும், உருவம் = ரூபமும், சுவை = ரசமும், நாற்றம் = கந்தமும், (ஆகிய பஞ்சதன் மாத்திரைகளும்) ஆசைப்படுத்தும் = ஆசையை உண்டாக்குகின்ற, அளறு - சேறாகும். (எ-று.)
(கருத்துரை.) தன்மாத்திரைகள் ஐந்தும் ஆசையை உண்டாக்கி ஆன்மாவைக் கெடுப்பவைகளாகும் என்பது கருத்து.
(விசேஷவுரை.) பௌதாதிகாகங்காரத்தில் தோன்றுவதுடன் தமோ குணத்தினையு முடையவைகளாகையால் பஞ்ச தன்மாத்திரைகளை 'ஆசைப்படுத்து மளறு' என்று கூறினார். (3)
-------
4. தருமம் பொருள்காமம் வீடெனு நான்கு
முருவத்தா லாய பயன்.
(பதவுரை) தருமம் = தருமம், பொருள் - பொருள், காமம் = ஆசை, வீடு - மோட்சம், என்னும் - என்று சொல்லப்படும், நான்கும் - புருஷார்த்தங்கள் நான்கும், உருவத்தால் = சரீரத்தால், ஆய = உண்டான, பயன் = பிரயோஜனமாம். (எ-று.)
(கருத்துரை.) புருஷார்த்தங்கள் நான்கும் சரீரத்தின் பிரயோசனம் என்பது கருத்து.
(விசேஷவுரை.) புருஷார்த்தங்கள் மானிடர் பிறவிக்கே முக்கியமாகச் சொல்லப்-பட்டிருத்தலின், அவை நான்கும் உருவத்தாலாய பயன், எனக்கூறினார்.
தருமம் என்பது, முப்பத்திரண்டு தருமங்களை அன்றி, பிரமசாரி, வானப்பிரஸ்தன், சந்நியாசி இவர்கள் மூவர்க்கும் இல்லறத்தி லிருப்போன் செய்யவேண்டிய தருமம் எனினுமாம்.
இதனை,
''இல்வாழ்வா னென்பா னியல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றி னின்ற துணை.''
என்பதினாலறிக.
பொருள் என்றது - செல்வப்பொருளினை. அது இல்லை யாயின் தருமம் நிகழாதாகலின், அதுவும் நல்வழியில் தேடியதாயிருத்தல் வேண்டும். இதனை,
''பொருளிலார்க் கிவ்வுலகமில்லை.'' என்பதினாலறிக.
காமம் என்பது=ஆசை. வீடு என்பது = இம்மூன்று தருமங்களையும் விட்டு விடுதல் இதனை;
''ஈதலறந் தீவினைவிட் டீட்டல் பொரு ளெஞ்ஞான்றுங்
காதலிருவர் கருத்தொருமித் - தாதரவு
பட்டதே யின்பம் பரனை நினைந் திம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு."
என்பதினாலறிக.
---------------
5. நிலமைந்து நீர்நான்கு நீடங்கி மூன்றே
யுலவையிரண் டொன்று விண்.
(பதவுரை) நிலம் - பிருதிவியானது, ஐந்து = ஐந்தாவதாகவும், நீர் = அப்பூதமானது, நான்கு = நாலாவதாகவும், நீடு - நீண்ட, அங்கி தேயுபூதமானது, மூன்று = மூன்றாவதாகவும், உலவை = வாய பூதமானது, இரண்டு = இரண்டாவதாகவும், விண் = ஆகாயபூதமானது, ஒன்று - முதலாகவும் ஆகும். (எ-று)
(கருத்துரை) பஞ்சபூதங்களும் எண்ணலளவையால் இக் கணக்குகளை யமையும் என்பது கருத்து.
(விசேஷவுரை.) பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம், என்னும் பஞ்சபூதங்களும் வரிசைக்கிரமங்களால் மேற்சொன்ன எண்களையுடையனவென்பார் இங்ஙனங் கூறினார்.
-----------
6. மாயன் பிரம னுருத்திரன் மகேசனோ
டாயுஞ் சிவமூர்த்தி யைந்து.
(பதவுரை.) மாயன் - விஷ்ணுவும், பிரமன் - பிரமனும், உருத்திரன் = ருத்திரனும், மகேசன் = மகேசனும், ஆயும் - வேதத்திலாராயும், சிவமூர்த்தி = சதாசிவனுமாக, ஐந்து = பஞ்சமூர்த்தங்களாம். (எ-று.)
(கருத்துரை.) மூர்த்திகள் ஐவர் ஆவார்கள் என்பது கருத்து
--------
7. மாலய னங்கி யிரவி மதியுமையோ
டேலுந் திகழ்சத்தி யாறு.
(பதவுரை.) எலும் = பொருந்திய, திகழ் - விளங்குகின்ற, சத்தி = சத்திகள், மால் - விஷ்ணு, அயன் = பிரமன், அங்கி = அக்கினியும், இரவி = சூரியனும், மதி= சந்திரனும், உமை = உமாதேவியும், (ஆக) ஆறு = அறுவாரம். (எ-று.)
(கருத்துரை) சத்திகள் அறுவர்களாம் என்பது கருத்து. (7)
---------
8. தொக்குதிரத் தோடூன் மூளை நிணமென்பு
சுக்கிலந் தாதுக ளேழு.
(பதவுரை.) தொக்கு = சரீரம், உதிரம் -இரத்தம், ஊண் = மாமிசம், மூளை = மூளை, நிணம் = நிணம், என்பு = எலும்பு, சுக்கிலம் = சுக்கிலம் (ஆக) தாதுகள் ஏழு ஏழுதா துகளாகும்.
(கருத்துரை.) எழுதாதுகளாகும் என்பது கருத்து. (8)
----------
9. மண்ணொடு நீரங்கி மதியொடு காற்றிரவி
விண்ணெச்ச மூர்த்தியோ டெட்டு.
(பதவுரை) மண் = பிருதிவி, நீர் = அப்பு, அங்கி = தேயு, மதி = சந்திரன், காற்று - வாயு, இரவி = சூரியன், விண் = ஆகாயம், எச்சமூர்த்தி - யாகதேவதை, (ஆக) எட்டு = எட்டு மூர்த்தங்களாவார்.
(கருத்துரை) எண்வகையான மூர்த்தங்களாவார்கள் என்பது கருத்து.
அஷ்டமூர்த்தங்களாவன;
"நிலநீர்நெருப்புயிர்நீள் விசும்புநிலாப்பகலோன்
புலனாயமைந்தனோ டெண்வகையாய்ப் புணர்ந்துநின்றான்
உலகேழெனத்திசைபத் தெனத்தானொருவனுமே
பலவாகிநின்றவாதோ ணோக்கமாடாமோ''
என்று ஸ்ரீமந் மாணிக்கவாசகர் கூறியதினாலறிக.
------------
10. இவையெல்லாங்கூடி யுடம்பாயவொன்றி
னவையெல்லா மானது விந்து.
(பதவுரை.) இவையெல்லாம் = மேலே சொல்லப்பட்டவை களெல்லாம், கூடி = சேர்ந்து, உடம்பு ஆய = சரீரமான, ஒன்றின் = ஒரு வஸ்துவில், நவை = குற்றங்கள், எல்லாம் - யாவும், ஆனது = உண்டானது, விந்து - சுக்கிலத்தாலாகும். (எ-று.)
(கருத்துரை.) பஞ்சபூதங்கள், பஞ்சதன் மாத்திரைகள் நான்கு புருஷார்த்தங்கள் ; பஞ்சமூர்த்திகள், ஆறுசத்திகள், எழுதாதுக்கள் அஷ்டமூர்த்தங்கள் ஆகிய இவைகளெல்லாங் கூடி விந்துவின் காரணத்தால் சரீரமுண்டானது என்பது கருத்து. (10)
--------------
2. உடம்பின் பயன்.
11. உடம்பினைப் பெற்ற பயனாவ தெல்லா
முடம்பினி லுத்தமனைக் காண்.
(பதவுரை) உடம்பினை = சரீரத்தை, பெற்ற = அடைந்த, பயன் ஆவது எல்லாம் = பிரயோசனமாவது, உடம்பினில் = சரீரத்திலுள்ள, உத்தமனை = கடவுளை, காண் - தரிசிப்பதற்காகும். (எ-று.)
(கருத்துரை.) சரீரத்தின் பயன் ஈஸ்வரனைக்காணுதல் என்பது கருத்து.
(விசேஷவுரை.) சர்வேஸ்வரன் ஜீவான்மாக்களிடத்தில் வியாபித்திருக்க வேண்டியது அவனுடைய கடமையாகையால் 'உடம்பினி லுத்தமனைக் காண்' என்றார்.
--------
12. உணர்வாவ வெல்லா முடம்பின் பயனே
யுணர்க வுணர்வுடை யார்.
(பதவுரை) உணர்வாவ = உணர்ச்சியாவன, எல்லாம் - யாவும், உடம்பின் = தேகத்தின், பயன் = பிரயோசனமாகும், (அதை) உணர்வு உடையார் = நல்லுணர்ச்சி யுள்ளவர்கள், உணர்க - அறிந்துகொள்ளக்கடவர். (எ-று.)
(கருத்துரை) ஆன்மாக்களுக் குண்டாயிருக்கின்ற உணர்ச்சி சரீரங்களின் பிரயோசன-மேயாம் என்பது கருத்து.
சரீரங்களின் பிரகிருதிகளுக்குத் தகுந்த உணர்ச்சியையே ஆன்மாக்கள் அடைகின்றன-வென்பார், 'உணர்வாவவெல்லா முடம்பின் பயனே' எனவும், இவ்விஷயத்தை உணர்ச்சி யுடை யவர்களே அறிந்துகொள்ளக் கடவர்களென்பார். 'உணர்கவுணர் வுடையார்' எனவுங் கூறினார்.
சரீரத்தின் உணர்ச்சியே ஆன்மா அடையுமென்றதை;
"மாதாவுத்தரத்தில் மலமிகில் மந்தனாம்"
என்பதினாலறிக. (2)
------------
13. ஒருபயனாவ துடம்பின் பயனே
தருபயனாஞ் சங்கரனைச் சார்.
(பதவுரை.) ஒரு = ஒப்பற்ற, பயனாவது = பிரயோசனமாவது, உடம்பின் = சரீரத்தினது, பயனே = பிரயோசனமாகும், (அதாவது) தரு - கொடுக்கின்ற, பயனாம் = பிரயோசனமாகிய, சங்கரனை = சிவபெருமானை, சார் = அடைதலாம். (எ-று.)
(கருத்துரை.) சரீரத்தின் பயனாவது சிவபெருமானைச் சேர்தலாகும் என்பது கருத்து.
(விசேஷவுரை.) ஒருபயன் என்றது வீட்டையடைதல். இதையடையச் சங்கரனைச் சேரவேண்டுமென்பார், 'தருபயனாஞ் சங்கரனைச்சார்' என்றார். (3)
----------
14. பிறப்பினாற் பெற்ற பயனாவ வெல்லாந்
துறப்பதாந் தூநெறிக்கட் சென்று.
(பதவுரை) பிறப்பினால் - சன்மத்தினால், பெற்ற - அடைந்த, பயனாவ எல்லாம் - பிரயோசனங்களெல்லாம், தூநெறிக் கண் சென்று - உயர்ந்த மார்க்கத்திற் போய், துறப்பது ஆம் = சர்வ இன்பங்களையும் விட்டொழிவதாகும். (எ-று.)
(கருத்துரை.) இந்தப்பிறவினாலாகும் பயனாவது சர்வ இன்பங்களையுந் துறப்பதாகும் என்பது கருத்து.
(விசேஷவுரை.) பிறவிகளில் மானிடப்பிறவி விசேடித்த தாகலின், இப்பிறவிலேயே ஈஸ்வரனை யடைய வேண்டு மென்பார். 'துறப்பதாந்த நெறிக்கட்சென்று' என்று கூறினார். (4)
------------
15. உடம்பினா லன்றி யுணர்வுதா னில்லை
யுடம்பினா லுன்னியதே யாம்.
(பதவுரை.) உடம்பினால் = சரீரத்தினால், அன்றி - அல்லாமல், உணர்வுதான் = உணர்ச்சியானது, இல்லை = உண்டாவதில்லை, (ஆகையால் அவ்வுணர்ச்சி) உடம்பினால் - சரீரத்தினால், உன்னியதே ஆம் - நினைக்கப்பட்டதே யாகும். (எ-று.)
(கருத்துரை.) உடம்பினால் உணர்ச்சியுண்டாவதே யன்றி வேறெதினாலு மன்று என்பது கருத்து.
(விசேஷவுரை) உணர்ச்சியானது உடம்பினாலுன்னப்பட்டதேயென்பார். 'உடம்பினாலுன்னியதேயாம்' எனக்கூறினார்.
------------
16. மாசற்ற கொள்கை மனத்தி லடைந்தக்கால்
ஈசனைக் காட்டு முடம்பு.
(பதவுரை) மாசு அற்ற = குற்றம் நீங்கிய, கொள்கை = குணமானது, மனத்தில் - மனத்தில், அடைந்தக்கால் = உண்டானால், உடம்பு - சரீரமானது, ஈசனை - சர்வேஸ்வரனை, காட்டும் = உணர்விக்கும். (எ-று.)
(கருத்துரை) உடம்பானது மனத்திலுள்ள மாசற்றவுடன் கடவுளை உணர்விக்கும் என்பது கருத்து.
(விசேஷவுரை.) சரீரம் மாயா சம்பந்தப்பட்டிருப்பதாகையால் அதினுள்ளடங்கிய மனமானது சீக்கிரத்தில் சுத்தமடையா தென்பதை நோக்கி 'மாசற்ற கொள்கை மனத்திலடைந்தக் கால்' எனவும், அங்ஙனஞ் சுத்தமடைந்தால் அந்தச் சரீரத்தால் சர்வேஸ்வரனைக் காணலாகு மென்பார், 'ஈசனைக் காட்டும் உடம்பு ' எனவுங் கூறினார்.
-------
17. ஓசை யுணர்வுக ளெல்லாந் தருவிக்கு
நேசத்தா லாய வுடம்பு.
(பதவுரை.) ஓசை = சத்தம் முதலிய, உணர்வுகள் எல்லாம் - உணர்ச்சிகளை யெல்லாம், நேசத்தால் - ஸ்ரீபுருடர்களது விருப்பத்தால், ஆய = உண்டான, உடம்பு = சரீரமானது, தருவிக்கும் உண்டாக்கும். (எ-று.)
(கருத்துரை) பஞ்சதன் மாத்திரைகளையும் சரீரமானது கொடுக்கும் என்பது கருத்து.
(விசேஷவுரை.) ஓசை என்று ஒன்றைச் சொல்லி யிருந்தாலும் இனம்பற்றி மற்றைய பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்னும் நான்கையுங் கொள்க. உடம்பின் தத்துவ அளவுப்படியே அறிவுகள் உண்டான தென்பார், இங்ஙனங் கூறினார். (7)
------------
18. உயிர்க்குறுதி யெல்லா முடம்பின் பயனே
அயிர்பின்றி யாதியை நாடு.
(பதவுரை) உயிர்க்கு = ஆன்மாவுக்கு, உறுதி எல்லாம் = உறுதியைத் தருவது, உடம்பின் = சரீரத்தின், பயன் ஏ = பிரயோசனமே யாகும், (ஆகையால்) அயிர்ப்பு இன்றி = சந்தேக மில்லாமல் ஆதியை -முதல்வனை, நாடு = விரும்பு . (எ-று.)
(கருத்துரை) சரீரமானது உயிர்க்குறுதியைத் தருவதால் அதை ஆதாரமாகக்கொண்டு சர்வேஸ்வரனை விரும்பு என்பது கருத்து.
(விசேஷவுரை) உடம்பில்லையானால் உயிர்க்குறுதிதேட இயலாதென்பர், 'உயிர்க் குறுதியெல்லாம் உடம்பின் பயனே' எனவும் அதைக்கொண்டு இறைவனை நாடவேண்டுமென்பார், 'அயிர்ப்பின்றி யாதியை நாடு' எனவுங் கூறினார்.
---------
19. உடம்பினாற் பெற்ற பயனாவ வெல்லாம்
திடம்பட வீசனைத் தேடு.
(பதவுரை) உடம்பினை = சரீரத்தை பெற்ற = அடைந்த, பயனாவ எல்லாம் = எல்லாப் பிரயோசனங்களும், திடம்பட = உறுதியாக, ஈசனை = சர்வேஸ்வரனை, தேடு = ஆராய்வதாகும். (எ-று.)
(கருத்துரை.) சரீரங் கிடைத்தபோது சர்வேஸ்வரனை ஆராய்ந்தறியவேண்டும் என்பது கருத்து.
(விசேஷவுரை.) எல்லாப் பிறவிகளிலும் அரியதாகிய மானிடப்பிறவியை எடுத்துள்ளவர்கள் சர்வேஸ்வரனை யடைய வேண்டியது கடமையென்பார் இங்ஙனங் கூறினார். (9)
---------
20. அன்னத்தா லாய வுடம்பின் பயனெல்லா
முன்னோனைக் காட்டி விடும்.
(பதவுரை) அன்னத்தால் போஜனத்தால், ஆய = உண்டான, உடம்பின் = சரீரத்தின், பயன் எல்லாம் = சர்வபிரயோ ஜனமாவது, முன்னோனை = சர்வேஸ்வரனை. காட்டி விடும் - உணர்த்துவிக்கும். (எ-று.)
(கருத்துரை.) சரீரத்தின் பயனாவது சர்வேஸ்வரனை உணர்த்துவதாம் என்பது கருத்து.
(விசேஷவுரை.) சரீரத்திற்கு அன்னமே ஆதாரமாயுள்ள தென்பார், 'அன்னத்தாலாயவுடம்பின்' எனவும், ஆன்மாவுக்குச் சரீரமில்லாவழி சிவபெருமானைக் காண வொண்ணாதென்பார், 'பயனெல்லா முன்னோனைக் காட்டிவிடும்' எனவுங் கூறினார். (10)
---------------
3. உள்ளுடம்பின் நிலமை.
21. கற்கலாங் கேட்கலாங் கண்ணாரக் காணலா
முற்றுடம்பா லாய வுணர்வு.
(பதவுரை.) உற்ற பொருந்திய, உடம்பால்-உள்ளுடம்பினால், ஆய - உண்டான, உணர்வு - அறிவானது, கற்கலாம் - கற்பதற்குமாகும், கேட்கலாம். = கேட்பதற்குமாகும், கண்ணார = கண்கள் நிரம்ப, காணலாம் = காண்பதற்குமாகும். (எ-று.)
(கருத்துரை.) உள்ளுடம்பி லுண்டான வுணர்ச்சியானது சகல காரியங்களுக்கும் அநுகூலமாகும் என்பது கருத்து.
(விசேஷவுரை.) சூக்கும தேகமாகிய தத்துவதேகமானது ஆன்மாவுக்கில்லையாயின் எந்தக் காரியமும் நடவாதென்பார், கற்கலாங் கேட்கலாங் கண்ணாரக்காணலா முற்றுடம்பாலாய வுணர்வு, எனக் கூறினார். (1)
---------
22. வெள்ளி பொன் மேனிய தொக்கும் வினை யுடைய
வுள்ளுடம்பி னாய வொளி.
(பதவுரை) வினையுடைய = வினையினாலுண்டான, உள் உடம்பின் = சூட்சுமதேகத்தின், ஆய = உண்டான, ஒளி = தேஜஸானது வெள்ளி - வெள்ளி, பொன் = பொன், (இவைகளுடைய) மேனியது - சொரூபத்தை, ஒக்கும் = ஒப்பாகும். (ஏ-று.)
(கருத்துரை) சூக்கும தேகத்தின் தேஜசானது வெள்ளியையும், பொன்னையும் போல விளங்குவதாம் என்பது கருத்து.
(விசேஷவுரை.) உள்ளுடம்பின் ஒளி தேஜோமயமுடைய தென்பார், 'வெள்ளி பொன் மேனியதொக்கும் வினையுடைய - உள்ளுடம்பினாய வொளி ' எனக்குறினார். (2)
-----------
23. சென்றுண்டு வந்து திரிதரு முள்ளுடம்பு
மென்றுங் கெடாத திது.
(பதவுரை.) இது உள்ளுடம்பு = இந்த உள்ளுடம்பானது, சென்று - வெளிப்பட்டு, உண்டு - புசித்து, வந்து = திரும்பிவந்து, திரிதரும் = திரியும், (ஆகையால்) என்றும் = எப்பொழுதும் கெடாதது = அழியாததாகும். (எ - று.)
(கருத்துரை) சூக்கும சரீரமானது சர்வகாரியங்களும் செய்து திரிந்து வருவதால் என்றுங் கெடாததாயிருக்கும் என்பது கருத்து.
(விசேஷவுரை) சூக்கும சரீரம் என்பது தத்துவக் கூட்ட மாகையால் அது தூலசரீர முள்ள வரைக்கும் இருந்தே யாக வேண்டு மென்பார், 'உள்ளுடம்பென்றுங் கெடாததிது' எனக் கூறினார். (3)
---------------
24. வருபய னுண்டு மகிழ்ந்துட னாநிற்கு
மொருபயனைக் காட்டு முடம்பு.
(பதவுரை.) வரு - உண்டாகின்ற, பயன் = பிரயோசனத்தை, உண்டு = அநுபவித்து, மகிழ்ந்து = சந்தோஷித்து, உடனாக = ஸ்தூல சரீரத்துடன் நிற்கும் = கலந்திருக்கின்ற உடம்பு - சரீரமானது, ஒருபயனை = ஒப்பற்ற பிரயோசனத்தை, காட்டும் - உணர்த்து விக்கும். (எ-று.)
(கருத்துரை.) சூக்கும சரீரமானது ஸ்தூலசரீரத்துடன் கலந்திருந்து சர்வ பிரயோசனங்களையும் ஆன்மாவுக்குக் காட்டும் என்பது கருத்து.
(விசேஷவுரை) சூக்கும சரீரமானது ஆன்மாவுக்கு சகல போகங்களையும் உண்டாக்கும் என்பார் இங்ஙனம் கூறினார். (4)
25. அல்லற் பிறப்பை யகற்றுவிக்கு மாய்ந்தாய
தொல்லை யுடம்பின் றொடர்பு.
(பதவுரை) ஆய்ந்து = ஆராய்ந்து, ஆய = உண்டான, தொல்லை = பழமையாகிய, உடம்பின் = சரீரத்தினது, தொடர்பு = தொடர்ச்சியானது, அல்லல் = துன்பத்தை விளைவிக்கின்ற, பிறப்பை - ஜெந்மத்தை, அகற்றுவிக்கும் =நீக்கும். (எ-று.)
(கருத்துரை.) சூக்கும சரீரமானது பிறவியை ஒழிக்கும். என்பது கருத்து.
(விசேஷவுரை) சூக்கும சரீரமானது பிறவியை யொழிக்கு மென்பார், 'அல்லற்பிறப்பை யகற்றுவிக்கு மாய்ந்தாய தொல்லை யுடம்பின் தொடர்பு ' எனக் கூறினார்.
-------
26. நல்வினையுந் தீவினையு முண்டு திரிதருஞ்
செய்வினைக்கும் வித்தா முடம்பு.
(பதவுரை) உடம்பு = சூக்குமசரீரமானது, நல்வினையும் = நல்வினைகளையும், தீவினையும் = தீவினைகளையும், உண்டு = அனுபவித்து, திரிதரும் = திரியும், (அன்றி) செய் = உயிர்களால் செய்யப்படுகின்ற, வினைக்கும் = இருவினைகளுக்கும், வித்து ஆம் = காரணமாகும். (எ-று)
(கருத்துரை) சூக்கும சரீரமானது வினைகளை யநுபவிக்க வும் செய்யவுங் காரணமாயமையும் என்பது கருத்து.
(விசேஷவுரை.) ஸ்தூலதேகத்தால் பயனின்றென்பார், 'நல் வினையுந் தீவினையு முண்டு திரிதருஞ் செய்வினைக்கும் வித்தாமுடம்பு ' எனக்கூறினார். (6)
---------
27. உள்ளுடம்பின் வாழ்வன வொன்பது மேழைக்
கள்ளவுடம் பாகி விடும்.
(பதவுரை.) உள் உடம்பின் = சூக்குமதேகத்தில், வாழ்வன = வாழ்பவைகளாகிய, ஒன்பதும் = நவத்துவாரங்களும், ஏழை - உயிர்களுக்கு, கள்ளவுடம்பு = திருட்டு உடம்பாக, ஆகி விடும் = ஆகும். (எ-று.)
(கருத்துரை.) சூக்குமசரீரமானது நவத்துவாரங்களோடு கூடி வாழ்வதாகும் என்பது கருத்து.
(விசேஷவுரை.) ஸ்தூலசரீரத்தின் உட்கிடையாய் நவத்துவாரங்களோடு கூடியதேயா-மென்பார், இங்ஙனங் கூறினார். (7)
-------------
28. பொய்க்கெல்லாம்பாசனமா யுள்ளதற்கோர் வித்தாகு
மெய்க்குள்ளா மாயவுடம்பு.
(பதவுரை) மெய்க்கு = சரீரத்திற்கு, உள் ஆம் = உள்ளே யிருக்கின்ற, மாயஉடம்பு - சூக்கும சரீரமானது, பொய்க்கு எல்லாம் = சர்வ பொய்களுக்கும், பாசனம் ஆய் = ஆதாரமாக, உள்ளதற்கு = இருக்கின்ற சரீரத்திற்கு, ஓர்வித்து ஆகும் = ஒரு ஆதாரமாகும். (எ - று.)
(கருத்துரை.) பொய்யாகிய ஸ்தூலசரீரத்திற்கு சூக்கும் சரிரமானது ஆதாரமாகும் என்பது கருத்து.
(விசேஷவுரை.) சரீரமானது நிலையில்லாத மண்பாண்ட மாகு மென்பார், 'பொய்க்கெல்லாம் பாசனமாயுள்ளது' எனவும், ஸ்தூல சரீரமானது சூக்கும சரீரமில்லா வழிநிலையா தென்பார், வித்தாகு மெய்க்குள்ளாக மாயவுடம்பு ' எனவுங்கூறினார்.
சரீரம் மண்பாண்ட மென்றதை;
''காகமோடு கழுகலகை நாய்நரிகள் சுற்று
சோறிடு துருத்தியை
காலிரண்டுநவவாசல் பெற்று வளர்
காமவேணடன சாலையை
மோகவாசை முறியிட்ட பெட்டியை
முமலமிகுத்தொழுகு கேணியை
மொய்த்து வெங் கிருமிதத்து கும்பியை
முடங்கலார் கிடைசரக்கினை
மாகவிந்திரதநு மின்னையொத்திலக
வேதமோதிய குலாலனார்
வனையவெய்யதடி காரனானயமன்
வந்தடிக்கு மொரு மட்கலத்
தேகமான பொயை மெய்யனக்கருதி
யையவைய மிசைவாடவோ
தெரிவதற்கரிய பிரமமேயமல
சிற்சுகோதய விலாசமே.''
என்பதினாலறிக. (8)
--------------
29. வாயுவினா லாய வுடம்பின் பயனே
யாயுவி னெல்லை யது.
(பதவுரை) வாயுவினால் - பிராணவாயுவினால், ஆய = உண்டான, உடம்பின் = சரீரத்தினது, பயன் = பிரயோசனமாவது, ஆயுவின் = ஆயுசின், எல்லையது = அளவினை யுடையதாகும். (எ-று.)
(கருத்துரை) பிராணவாயுவானது விந்துவிற்கலந்து பாய்ந்த அளவே ஆயுசின் அளவாகும் என்பது கருத்து.
(விசேஷவுரை.) ஒவ்வொரு தேகங்களுக்கும் ஆயுளானது விந்துவின் கலந்து செல்லும் பிராணவாயுவின் அளவினைக் கொண்டதே யாகுமென்பார், இங்ஙனம் கூறினார்.
-------------
30. ஒன்பது வாசலு மொக்க வடைத்தக்கா
லன்பதி லொன்றா மரன்.
(பதவுரை) ஒன்பது வாசலும் - நவத்துவாரங்களையும், ஒக்க = ஒருப்பட, அடைத்தக்கால் மூடினால், அன்பு அதில் = அன்பில், அரசன் = சிவபெருமானானவன், ஒன்று ஆம் = சேர்தலாகும். (எ-று.)
(கருத்துரை) நவத்துவாரங்களையும் மூடியோகஞ் செய்வோர்களுடைய அன்பில் சிவபெருமான் கலந்திருப்பவனாவான் என்பது கருத்து.
(விசேஷவுரை.) யோகஞ் செய்வோர் நவத்துவாரங்களையும் அடைத்தே செய்யவேண்டிய தென்பார், 'ஒன்பது வாசலு மொக்க வடைத்தக்கால்' எனவும், அவர்களுடைய ஆசையில் சர்வேஸ்வரன் கலந்திருப்பானென்பார் 'அன்பதிலொன்றா மரன்' எனவுங்கூறினார்.
யோகஞ்செய்வோர் நவத்துவாரங்களையும் அடைக்கவே ண்டு மென்றதை ;
"கண்மூடியொரு கண மிருக்கவென்றாற்பாழ்த்த
கர்மங்கள் போராடுதே''
என்று ஸ்ரீதாயுமானவர் சொல்லி யிருப்பதினாலறிக.
அன்பில் சிவம்கலக்கும் அவசரமானது அன்பும் சிவமும் ஒன்றேயாகும் என்றதை;
''அன்பும் சிவமிரண் டென்பரறிவிலார்
அன்பேசிவமாவ தியாருமறிகிலார்
அன்பேசிவமாவ தியாருமறிந்தபின்
அன்பேசிவமாவ யமர்ந்திருப்பாரே''
என்பதினாலறிக.
-------------
4. நாடி தாரணை.
31. எழுபத்தீ ராயிர நாடி யவற்றுள்
முழுபத்து நாடி முதல்.
(பதவுரை.) எழுபத்தீராயிரம் = எழுபத்திரண்டாயிரம் என்னுந் தொகையினையுடைய, நாடி அவற்றுள் = நாடிகளில், முதல் = முதன்மையாகிய, நாடி = நாடிகளாவன, முழுபத்து = பத்தாகும்.
(கருத்துரை) சரீரத்திலுள்ள எழுபத்திரண்டாயிர நரம்புகளில் முதன்மையாயுள்ளவை பத்து நாடிகளாகும் என்பது
(விசேஷவுரை.) சரீரமானது எழுபத்தீராயிரம் என்னுந் தொகையினையுடைய நரம்புகளால் கட்டப்பட்டதென்பார், எழுபத்தீராயிரநாடி எனவும், இவைகளில் பத்து நாடிகளே சரீரத்தைப் போஷிக்கக் கூடியனவென்பார், அவற்றுள் முழுபத்து நாடிமுதல்' எனவுங் கூறினார்.
தசநாடிகளாவன = அத்தி, அலம்புடை, இடை, காந்தாரி, குரு, சங்கினி, சிகுவை, சுழிமுனை, பிங்கலை, புருடன் என்பவைகளாம். (எ - று.)
------------
32. நரம்பெனு நாடி யிவையினுக் கெல்லா
முரம்பெறு நாடியொன் றுண்டு.
(பதவுரை.) நரம்பெனும் = நரம்பென்று சொல்லப்படுகின் ற, நாடி இவையினுக்கு எல்லாம் = எல்லா நாடிகளுக்கும், உரம் பெறும் = பலம் பொருந்திய, நாடி = நாடியாவது, ஒன்று உண்டு = ஒன்று இருக்கின்றது. (எ-று.)
(கருத்துரை.) சர்வநாடிகளும் சேர்வதற்கு ஆதாரமான நாடி ஒன்றிருக்கிறது என்பது கருத்து.
(விசேஷவுரை.) நாடிகளுக்கெல்லாம் ஆதாரநாடி ஒன்று இருக்கவேண்டுமென்பார், 'நரம்பெனுநாடி யிவையினுக்கெல்லா - முரம் பெறுநாடி யொன் றுண்டு' எனக்கூறினார்.
-------------
33. உந்தி முதலா யுறுமுடிகீழ் மேலாய்ப்
பந்தித்து நிற்கும் பரிந்து.
(பதவுரை.) உந்திமுதலா == வயிறுமுதலாக, உறுமுடி = பொருந்திய சிரசுவரைக்கும், கீழ்மேலாய் கீழுமேலுமாக, பரிந்து = விரும்பி, பந்தித்துநிற்கும் = கட்டப்பட்டுநிற்கும். (எ-று.)
(கருத்துரை) சகல நாடிகளுக்கும் ஆதாரஸ்தானம் உந்தி யேயாகும் என்பது கருத்து.
ஒவ்வொரு மனிதர்களுக்கும் உண்டாயிருக்கின்ற (எழுபத் தீராயிர நரம்புகளும் சரீரங்களுக்கு ஆதாரமா யமைவனவாகையால் அங்ஙனம் அமையும் போது சரீரத்தைக் காப்பாற்றுதற்கு முக்கியஸ்தானமாகிய உந்தினின்றே உண்டாக வேண்டு மென்பார், உந்திமுதலா' எனவும், அங்ஙனமுண்டான அதுசிரமளவும் இடம் வலமாகப் பின்னி நிற்குமென்பார். 'உறுமுடி கீழ்மேலாய்ப் பந்தித்து நிற்கும் பரிந்து' எனவுங்கூறினார். (3)
--------
34. காலொடு கையி னடுவிடத் தாமரை
நூல்போலு நாடி நுழைந்து
(பதவுரை.) (அங்ஙனமுண்டான) நாடி = நரம்பானது, காலொடு = கால்களிடத்திலும், கையில் = கைகளிடத்தும், நடு இடை = நடுவிடங்களிலும், தாமரை நூல்போலும் = தாமரையிலிருந்து எடுக்கின்ற நூலைப்போல, நுழைந்து = (சென்று) கலந்து . (எ-று)
(கருத்துரை) நாடியானது கால்கை முதலிய அவயவங்க ளின் தாமரை நூல் போல் கலந்திருக்கும் என்பது கருத்து.
(விசேஷவுரை.) நாடிகளானவை சரீரத்தில் பலவிடத்தி லுங் கலந்திருக்குமென்பார், 'காலோடுகையி னடுவிடைத்தா மரை நூல்போலுநாடி நுழைந்து' எனக்கூறினார். (4)
35. ஆதித்தன் றன்கதிர் போலவந் நாடிகள்
பேதித்துத் தாம்பரந்த வாறு.
(பதவுரை) ஆதித்தன்தன் - சூரியனுடைய, கதிர்போல கிரணங்களைப்போல, அநாடிகள் = அந்த நரம்புகள், போதித்து பிறழ்ந்து, தாம் = அவைகள், பரந்தவாறு = கலந்தவிதமாகும். (எ-று.)
(கருத்துரை) சரீரத்தின்கண் எழுபத்தீராயிர நாடிகளும் சூரியனுடைய கிரணங்களைப்-போல் எங்கும் மாறிமாறிக் கலந்திருக்கும் என்பது கருத்து.
(விசேஷவுரை.) நாடிகள் கத்திரிக்கோல்போல் வலமிடமாக மாறியிருப்பதே சுபாவமாமென்பார், 'நாடிகள் போதித்து தாம்பரந்தவாறு' எனக்கூறினார்.
-------
36. மெய்யெல்லா மாகி நரம்போ டெலும்பிசைந்து
பொய்யில்லை நாடிப் புணர்வு.
(பதவுரை) நாடி = நரம்பினது, புணர்வு - சேர்க்கையானது, மெய் எல்லாம் ஆகி = சரீரம் முழுமைக்குமாய், நரம்போடு எலு ம்பு = நரம்புடன் எலும்புகளும், இசைந்து = சேர்ந்து நிற்பதாகும், (ஆகையால் இது) பொய் இல்லை=உண்மையாகும். எ-று.)
(கருத்துரை) நாடிகள் நரம்புகளிலும், எலும்புகளிலுங் கலந்து சரீரம் முழுமைக்குமிருக்கும் என்பது கருத்து.
(விசேஷவுரை) நாடிகளில்லாத போது சரீரம் நில்லா தென்பார், 'மெய்யெல்லாமாகி நரம்போடெலும் பிசைந்து பொ ய்யில்லை நாடிப்புணர்வு' எனக்கூறினார். (6)
-----------
37. உந்திமுதலாகி யோங்காரத் துட்பொருளா
நின்றது நாடி நிலை.
(பதவுரை) உந்திமுதலாகி - கொப்பூழ் முதலாய், ஓங்காரத்து = பிரணவத்திற்கு, உட்பொருளாய் = அந்தர்முகப் பொருளாய், நாடி நிலை = நரம்புகளின் நிலையானது, நின்றது = இருந்தது. (எ-று.)
(கருத்துரை) நாடிகளின் நிலையானது உந்தி முதல் சரீரத்தில் பின்னப்பட்டு நின்றது என்பது கருத்து.
(விசேஷவுரை.) நாடிகள் சரீரத்தின் நிலைப்பதற்கு ஆதார மாயுள்ள உந்தியின் கண்ணேதோன்றி நிற்பனவாகலான் 'உந்தி முதலாகி யோங்காரத்துட்பொருளாய் நின்றது நாடிநிலை' எனக் கூறினார்.
---------
38 நாடிகளூடுபோய்ப் புக்க நலஞ்சுடர்தான்
வீடு தருமாம் விரைந்து.
(பதவுரை) நாடிகள் - நரம்புகளின், ஊடுபோய் = ஊடுரு விச்சென்று, புக்க = புகுந்த, நலஞ்சுடர்தான் = நன்மை மிகுந்த தேஜோமயப் பொருளானது, விரைந்து சீக்கிரம், வீடுதரும் ஆம் = மோட்சத்தைக் கொடுக்கும். (எ-று.)
(கருத்துரை.) நாடிகளில் சூட்சரூபமாய்க் கலந்திருக்குங் கடவுளை உணர்ந்தால் அவர் வீடுதருவர் என்பது கருத்து.
(விசேஷவுரை.) கடவுள் பரிபாகமில்லார்க்கு உணரப் படானாகையாலும் அவன் ஒவ்வொரு ஆன்மாக்களிலுங் கலந்திருக்க வேண்டியவனாகையாலும் அங்ஙனங் கலக்கும் வழி சூட்சமரூபமாய்க் கலப்பானென்பார், 'நாடிகளூடுபோய்ப் புக்க நலஞ்சுடர்தான்' எனவும், அவரை உள்ளபடியே உணர்ந்தவர்க்கு மோட்சம் வருமென்பார், வீடுதருமாம் விரைந்து' எனவுங் கூறினார்.
--------
39. நாடி வழக்க மறிந்து செறிந்தடங்கி
நீடொளிகாண்ப தறிவு.
(பதவுரை.) நாடி = நரம்புகளின், வழக்கம் = வழக்கங்களை, அறிந்து = உணர்ந்து, செறிந்து = நெருங்கி, அடங்கி ஒடுங்கி, நீடு = மிகுந்த, ஒளி = தேஜஸை, காண்பது = தெரிசிப்பது, அறிவு = அறிவாகும். (எ - று.)
(கருத்துரை.) நாடியின் வழக்கத்தை யறிந்து அடங்கிச் சிவபெருமானைக் காண்பது அறிவாகும் என்பது கருத்து.
(விசேஷவுரை) அறிவானது சர்வேஸ்வரனை அறிவதற்கு உரியதாகு மென்பார், 'நீடொளிகாண்பதறிவு' எனக்கூறினார்.
---------
40 அறிந்தடங்கி நிற்குமந் நாடிகடோறுஞ்
செறிந்தடங்கி நிற்குஞ் சிவம்.
(பதவுரை) அறிந்து = உணர்ந்து, அடங்கி ஒடுங்கி, நிற்கும் = இருக்கின்ற, அநாடிகள் தோறும் = அந்த நாடிகளிலெல்லாம், சிவம் - சிவமானது, செறிந்து = நிறைந்து, அடங்கிநிற்கும் = மறைந்திருக்கும். (எ-று.)
(கருத்துரை) சிவபெருமான் நாடிகளெல்லாம் தினமுங் கலந்திருப்பார் என்பது கருத்து.
(விசேஷவுரை) சிவபெருமானானவன் நாடிகளி லெல்லாங் கலந்து நிற்குமென்பார், அறிந்தடங்கி நிற்குமந் நாடிகடோறுஞ் செறிந்தடங்கி நிற்குஞ் சிவம்' எனக்கூறினார். (10)
-------------
5. வாயுதாரணை.
41. மூலத்திற்றோன்றி முடிவிலிரு நான்காகிக்
கால்வெளியிற் பன்னிரண்டாங் காண்.
(பதவுரை.) மூலத்தில் - மூலாதாரத்தில், தோன்றி - உண்டாய், முடிவில் = முடிவின்கண், இருநான்கு ஆகி = எட்டாகி, கால் = வாயுவானது, வெளியில் = வெளியினிடத்தில், பன்னிரண்டு ஆம் பன்னிரண்டாகும், காண் =பார்ப்பாயாக. (எ-று).
(கருத்துரை) வாயுவானது மூலாதாரத்திலுண்டாய் முடிவில் எட்டாகப்பரந்து வெளிப்படும்போது பன்னிரண்டாக நிற்கும் என்பது கருத்து.
------
42. இடைபிங்கலைகளி ரேசகமாற்றி
லடையு மரனா ரருள்.
(பதவுரை.) இடை= இடைகலையிலும், (இடது நாசியிலும்) பிங்களைகளில் = பிங்களைகளிலும், (வலது நாசியிலும்) இரேசகம் ஆற்றில் - இரேசகஞ் செய்தால், அரனார் அருள் - சிவபெருமானுடைய திருவருளானது, அடையும் = உண்டாகும். (எ-று.)
(கருத்துரை) நாசித்துவாரங்களினால் இரேசகம், பூரக, கும்பகங்களைச் செய்தால் சிவபெருமானுடைய திருவருள் கை கூடும் என்பது கருத்து. (2)
---------
43. அங்குலியான்மூடி முறையா லிரேசிக்கிற்
பொங்குமாம் பூரகத்தினுள்.
(பதவுரை) அங்குலியால் = விரல்களினால், மூடி = மூடி, முறையால் = கிரமத்தோடு, இரேசிக்கில் - இரேசகஞ் செய்தால், பூரகத்தினுள் = பூரகத்திலே, பொங்குமாம் = விளங்கும். (எ-று.)
(கருத்துரை) விரல்களினால் நாசியை மூடவேண்டிய கிரமப்படி மூடி இரேசித்து அதைப் பூரித்தால் சிவபெருமானுடைய திருவருள் விளங்கும் என்பது கருத்து. (3)
44. எண்ணிலியூழி யுடம்பா யிரேசிக்கி
லுண்ணிலிமை பெற்ற துணர்வு
(பதவுரை) எண்ணிலியூழி - அநேக்காலங்கள், உடம்பு = சரீரத்தில், ஆய் = ஆய்ந்து, இரேசிக்கில் - இரேசகஞ் செய்தால், உணர்வு = உணர்ச்சியானது, உள்நிலைமை பெற்றது = அக நிலைமையை யடைந்ததாகும். (எ-று.)
(கருத்துரை) அநேக் காலங்கள் வரைக்கும் பிராணாயாமஞ் செய்தால் அகமானது உறுதிப்பாட்டையடையும் என்பது கருத்து.
------
45. மயிர்க்கால் வழியெல்லா மாய்கின்றவாயு
வுயிர்ப்பின்றி யுள்ளே பதி.
(பதவுரை) மயிர்க்கால் வழியெல்லாம் - மயிர்க்கால் வழிகளிலெல்லாம், மாய்கின் = செலவாகின்ற, வாயு = வாயுவை, உயிர்ப்பின்றி = பெருமூச்சு விடாமல், உள்ளே = அந்தர் முகத்தில், பதி = அடக்கஞ்செய். (எ - று)
(கருத்துரை) மயிர்க்கால்கள் வழியெல்லாம் வீணாகமாய்ந்து விடுகின்ற வாயுவை உள்ளே அடக்கஞ்செய்யவேண்டும் என்பது கருத்து.
(விசேஷவுரை.) மயிர்க்கால்களில் வாயுசெல்லுவது சுபா வந்தானே யென்பார், 'மயிர்க்கால் வழியெல்லா மாய்கின்ற வாயு' எனவும், மூச்சை உள்ளேயடக்க வேண்டுமென்பார், 'உயிர்ப்பின்றி யுள்ளேபதி' எனவும் கூறினார். (5)
46. இரேசிப்பது போலப் பூரித்து நிற்கிற்
றராசுமுனை நாக் கதுவேயாம்.
(பதவுரை) இரேசிப்பதுபோல் = இரேசகஞ் செய்வதுபோல், பூரித்து நிற்கில் - பூரகஞ் செய்திருந்தால், நாக்கது - நாவானது, தராசுமுனையாம் - தராசுமுனை போல் நிற்கும். (எ-று.)
(கருத்துரை) இரேசகத்தின் அளவைப்போலவே பூரகமுஞ் செய்தால் நாவானது தராசின் முனையைப்போல் நடுவுநிலைமையாய் நிற்கும் என்பது கருத்து.
(விசேஷவுரை) யோக நூலார் இரேசகத்தையும் பூரகத்தையும் தாங்கள் பழகிய நூற்களிற் சொல்லியவண்ணம் முறையுடன் செய்து அண்ணாக்கு பெரிய நாக்கு இவைகளை உண்ணாக்குக்கு மத்தியமாக அசையாமல் நிறுத்த வேண்டுமென்பார், 'இரேசிப்பது போலப் பூரித்துநிற்கிற் றராசுமுனை நாக்கதுவேயாம் என்று கூறினார்.
47. கும்பகத்தினுள்ளே குறித்தரனைத் தானோக்
றும்பிபோ நிற்குந் தொடர்ந்து.
(பதவுரை) கும்பகத்தின் உள்ளே = கும்பகத்தில், அரனை = சிவபெருமானை, குறித்து பார்த்து, தான் = தான், நோக்கில் தரிசித்தால், தொடர்ந்து = வாயுவானது தொடர்ந்து,
தும்பிபோல் நிற்கும் = தும்பியைப் போலிருக்கும். (எ-று.)
(கருத்துரை) வாசியை எந்தப் பக்கத்திலும் செல்லவொட்டாமல் நிறுத்துவதாகிய கும்பகத்தில் வாயுவானது தும்பியைப் போல் தொடர்ந்து நிற்கும் என்பது கருத்து.
(விசேஷவுரை) கும்பகஞ் செய்யுங்கால் வாசியானது தும்பியின் சலனம் போல் அசையாது நிற்குமென்பார், 'தும்பிபோல் நிற்குந்தொடர்ந்து ' எனக்கூறினார்.
48. இரேசகபூரக கும்பக மாற்றிற்
றராசுபோ னிற்குந் தலை.
(பதவுரை) தலை = தலையானது, இரேசகம் = ரேசகத்தையும், பூரகம் = பூரகத்தையும், கும்பகம் - கும்பகத்தையும், ஆற்றின் = கிரமப்படி செய்தால், தராசுமுனை போல் = துலையின் முனையைப் போல், நிற்கும் = இருக்கும். (எ-று.)
(கருத்துரை.) இரேசக, பூரக, கும்பகங்களை முறையே செய்தால் அவர்களுக்கு தலையானது தராசுமுனையைப்போல் நிற்கும் என்பது கருத்து.
49. வாயுவழக்க மறிந்து செறிந்தடங்கி
லாயுட் பெருக்க முண்டாம்.
(பதவுரை.) வாயு = கலைகளின், வழக்கம் = மாறும் வழக்கத்தை, அறிந்து = நன்றாயுணர்ந்து, செறிந்து அடங்கில் ஒரு மித்து ஒடுங்கினால், ஆயுள் பெருக்கம் = ஆயசு விர்த்தியானது, உண்டு ஆம் = உண்டாகும். (எ-று.)
(கருத்துரை.) வாயுகூடியே உண்டாவது சரீரமாகையால் அவ்வாயுக்களின் தன்மைகளை நன்றாயுணர்ந்து அவைகளை அ க்கினால் ஆயுசு விர்த்தியையடையும் என்பது கருத்து. (9)
50. போகின்ற வாயு பொருந்திற் சிவமொக்குந்
தாழ்கின்ற வாயு வடக்கு
(பதவுரை) போகின்ற = வெளிப்பட்டுப்போகின்ற, வாயு = வாயுவானது, பொருந்தல் = சரீரத்திற்குள் அடங்கினால், சிவம் ஒக்கும் = சிவத்திற்கொப்பாகும், (ஆகையால்) தாழ்கின்ற = அங்ஙனங் கழிந்துபோகின்ற, வாயு = வாயுவுனிலை, அடக்கு == சரீரத்தின் கண்ணே நிறுத்துக. (எ-று.)
(கருத்துரை.) வெளியே வீனாகப்போகின்ற, வாயுவை உள் ளேயே யடக்கினால் சிவபெருமானாக ஆகக்கூடும் என்பது கருத்து. (10)
-------------
6. அங்கிதாரணை
51. அந்தத்திலங்கி யழல் போலத் தானோக்கிற்
பந்தப் பிறப்பறுக்க லாம்.
(பதவுரை) அந்தத்தில் = கடைசியில், அங்கி = மூலாக்கினியை, அழல்போல = தேஜஸைப்போல், தான் யோகியான வன், நோக்கில் = தரிசித்தால், பந்தம் பற்று மிடல்புடைய, பிறப்பு = ஜெந்மத்தை, அறுக்கலாம் = நீக்கலாம். (எ-று.)
(கருத்துரை.) யோகிகள் மூலாக்கினியைச் சுழிமுனையில் தரிசித்தால் ஜென்மத்தை யறவே ஒழித்தவர்களாவார்கள் என் பது கருத்து.
---------
52. உள்ளும் புறம்பு மொருங்கக் கொழுவூறிற்
கள்ளமல மறுக்கலாம்.
(பதவுரை) உள்ளும் = அகத்திலும், புறம்பும் = வெளியி லும், ஒருங்க = ஏகமாக, கொழு = கொழுமையானது, ஊறில் = ஊறுமானால், கள்ளம் = வஞ்சனையையுடைய, மலம் = மாய்கையை, அறுக்கலாம் = நீக்கலாம். (எ - று.)
(கருத்துரை.) உள்ளும் வெளியும் ஒன்றாகப் பார்ப்போர் மாய்கையை ஒழிப்பவர்களாவார்கள் என்பது கருத்து. (2)
---------
53. எரியுங்கழல்போல வுள்ளுற நோக்கிற்
கரியுங்கனலுருவ மாம்.
(பதவுரை.) எரியும் = எரிகின்ற, கழல்போல - அக்கினியைப்போல, உள்ளுற = அந்தர் முகத்தில், நோக்கில் = தரிசித்தால், கரியும் அடுப்புக்கரியும், கனல் உருவமாம் = அக்கினியின் ரூபத்தை யடைவதாகும். (எ-று.)
(கருத்துரை.) அந்தர் முகத்தில் அக்கினி தரிசனஞ் செய்ய வேண்டும் என்பது கருத்து.
---------
54. உள்ளங்கி தன்னை ஒருங்கக் கொழுவூறில்
வெள்ளங்கி தானாம் விரைந்து.
(பதவுரை .) உள்ளங்கி தன்னை - மூலாக்கினியை, ஒருங்க = ஏகமாக, கொழி ஊறில் = கொழுமையானது மாறினால், விரைந்து சீக்கிரமாக வெள்ளங்கிதானாம் = அது வெள்ளங்கியாகும். (எ-று)
---------
55. உந்தியுனுள்ளே யொருங்கச் சுடர்பாய்ச்சி
லந்தியழ லுருவமாம்.
(பதவுரை.) உந்தியின் உள்ளே = மூலாதாரத்தின் கண். ஒருங்க = ஏகமாக, சுடர் = அக்கினியை, பாய்ச்சில் பாய்ச்சினால், அந்தி = மாலையில், உருவம் அழல் ஆம் = சரீரம் அக்கினி மயத்தை யடையும்.
(கருத்துரை) மூலாதாரத்தில் மூலக்கனலை வளரச்செய் தால் சரீரம் அக்கினிமயத்தையடையும் என்பது கருத்து. (5)
---------
56. ஐயைந்துமாய வகத்துளெறி நோக்கிற்
பொய்யைந்தும் போகும் புறம்.
(பதவுரை.) ஐயைந்தும் = இருபத்தைந்து தத்துவங்களும், மாய = ஒழிய, அகத்துள் = உள்ளே, எரிநோக்கில் = மூலாக்கினி யைத் தரிசித்தால், பொய்த்தும் = ஐந்து பொய்களும், புறம் போகும் = வெளிப்பட்டுப்போகும். (எ-று.) (6)
---------
57. ஐம்பதுமொன்று மழல் போலத் தானோக்கி
லும்பரொளியாய் விடும்.
(பதவுரை.) ஐம்பதும் ஒன்றும் = ஜம்பத்தோ ரட்சரங்களை யும், அழல்போல = அக்கினி சொரூபமாக, தான் = தான், நோக்கில் பார்த்தால், உம்பர் = மேலே விளங்குகின்ற, ஒளியாய்விடும் = தேஜோரூபங் கைகூடும். (எ - று.)
(கருத்துரை.) ஐம்பத்தோ ரட்சரங்களையும் தேஜோ சொரூபமாகத் தரிசித்தால் சரீரமும் தேஜோமயத்தை யடையும் என்பது கருத்து.
---------
58. தூண்டுஞ்சுடரைந்துளங்காமற்றானோக்கில்
வேண்டுங் குறைமுடிக்கலாம்.
(பதவுரை.) தூண்டும் - தவசிரேஷ்டர்களால் தூண்டப்படுகின்ற, சுடரை = தேஜோமயப் பொருளை, துளங்காமல் = அசையாமல், தான் = தான், நோக்கில் பார்த்தால், வேண்டும் - அவர்களால் விரும்பப்படுகின்ற, குறை = குறைவினை, முடிக்கலாம் = நிறைவேற்றலாம், (எ - று)
(கருத்துரை) எக்காலத்திலும் அழியாத்தன்மையை யுடைய இறைவனை உள்ளபடியே உணர்வார்கள் சர்வ குறைகளி னின்றும் நீங்குவார்கள் என்பது கருத்து. (8)
---------
59. உள்ளத்தாலங்கி யொருங்கக் கொழுவூறில்
மெள்ளத்தான் வீடாம் விரைந்து.
(பதவுரை.) உள்ளத்தால் - மனத்தினால், அங்கி = அக்கினியானது, ஒருங்க - முழுமையுங், கொழுவூறில் கொழுவானது விசேஷிக்குமானால், வீடு = மோஷ வீடானது, மெள்ளத்தான் விரைந்து = பொறுமையோடு விரைந்து, ஆம் = உண்டாகும்.
(கருத்துரை.) மனத்தினால் அக்கினியை வசப்படுத்தவேண்டும் என்பது கருத்து.
-----
60. ஒள்ளிதாயுள்ள சுடரை யுறநோக்கில்
வெள்ளியா மாலை விளக்கு.
(பதவுரை.) ஒள்ளி தாயுள்ள சுடரை = விளக்க முற்றிருக்கின்ற தேஜோமயப்பொருளை, உற = மிகுதியும், நோக்கில் = பார்த்தால், மாலை விளக்கு = மாலையிலுண்டாகும் விளக்கானது, வெள்ளியாம் = வெள்ளி போல் விளங்கும். (எ-று.)
(கருத்துரை.) சர்வேஸ்வரனை முழுமையும் உற்றுப்பார்த் தால் தேஜோமயத்தை யடையலாம் என்பது கருத்து. (10)
-------
7. அமுததாரணை.
61. அண்ணாக்குத்தன்னை யடைத்தங் கமிர்துண்ணில்
விண்ணோர்க்கு வேந்தனுமாம்.
(பதவுரை.) அண்ணாக்கு தன்னை அடைத்து = அண்ணாக்கு என்னும் மேல் நாக்கை மேல்வழிக்கு அடைத்து, அங்கு = அவ்விடத்திலுண்டாகின்ற, அமிர்து = அமிர்தத்தை, உண்ணில் = பானஞ் செய்தால், விண்ணோர்க்கு வேந்தனுமாம் = தேவர்களுக்குத் தலைவனான இந்திரனுமாகலாம். (எ-று.)
(கருத்துரை.) மேல் நாக்கை அவ்விடத்திலுள்ள வழிக்குத் தடையாக வைத்துப் பார்த்தாலுண்டாகின்ற அமிர்தத்தைப் பானமாகப் பருகுகின்ற யோகிகள் தேவேந்திர பதவியையும் அடைவார்கள் என்பது கருத்து.
---------
62. ஈரெண்கலையி னிறைந்தவமிர் துண்ணில்
பூரண மாகும் பொலிந்து.
(பதவுரை.) ஈரெண்கலையில் பதினாலுகலைகளிலும், நிறை ந்த = பூரணமாயிருக்கின்ற, அமிர்து = அமிர்தத்தை, உண்ணில் = பானஞ் செய்தால், பொலிந்து = விளங்கி, பூரணமாகும் - பரிபூர ணத்தை யடையலாம். (எ-று)
(கருத்துரை) பன்னிரண்டு கலைகளிலும் கலந்திருக்கின்ற அமிர்தத்தைப் பானஞ் செய்தால் பரிபூரணதசையை அடைவதற் குத் தடையில்லை என்பது கருத்து. (2)
---------
63. ஓங்காரமான கலசத்தமிர் துண்ணில்
போங்கால மில்லை புரிந்து.
(பதவுரை.) ஓங்காரம் ஆன கலசத்து = பிரணவாகாரமா யிருக்கின்ற கலசத்திலுள்ள, அமிர்து உண்ணில் = அமிர்தத்தை பருகினால், புரிந்து = செய்து, யோங்காலமில்லை - இறக்குங்கா லம் வருதலில்லையாகும். (எ-று)
(கருத்துரை.) பிரணவாகாரமா யிருகின்ற கலசத்தினிட மாகவிருக்கின்ற அமிர்தத்தையுண்டால் அவர்கள் சிரஞ்சீவியாக வாழ்வார்கள் என்பது கருத்து. (3)
---------
64. ஆனகலசத் தமிர்தை யறிந்துண்ணில்
போனகம் வேண்டாமற் போம்.
(பதவுரை) ஆன = பொருந்தின, கலசத்து அமிர்தத்தை - பொற்கலசத்திலிருக்கின்ற அமிர்தத்தை உண்ணில் = பருகினால் போனகம் - சாப்பாடு, வேண்டாமற் போம் - வேண்டியதில்லாமற் போய்விடும். (எ-று.)
(கருத்துரை) அமிர்தகலசத்தில் நிறைந்திருக்கின்ற அமிர் தத்தை உள்ளன்போடு உண்போர்கள் என்றைக்கும் ஆகாரம் வேண்டாத மகாயோகிகளாவார்கள் என்பது கருத்து. (4)
---------
65. ஊறுமமிர்தத்தை யுண்டியுறப் பார்க்கில்
கூறும் பிறப்பறுக்கலாம்.
(பதவுரை.) ஊறுமமிர்தத்தை - சுரக்கின்ற அமிர்தத்தை, உண்டியுற = உண்டியாக, பார்க்கில் பார்த்தால், கூறும் = சொல்லப்படுகின்ற, பிறப்பு - ஜென்மவேரை, அறுக்கலாம் - ஒழிக்கலாம்.
(கருத்துரை.) யோக மேலீட்டால் எவனொருவன் அங்கு விளைகின்ற அமிர்தபானஞ் செய்கிறானோ, அவன் இனிவருஞ் ஜென்மங்களை வெகுலேசாக அறுப்பவனாவான் என்பது கருத்து. (5)
---------
66 ஞான வொளிவிளக்கா னல்லவமிர் துண்
ஆன சிவயோகியாம்.
(ணில் (பதவுரை.) ஞான ஒளி = ஞானதேஜஸையுடைய, விளக் கால் - விளக்கினால், நல்ல - உயர்வாகிய, அமிர்து = அமிர்த த்தை, உண்ணில் = பருகினால், ஆன = பொருந்தின, சிவயோகி யாம் = சிவயோகியாகக்கூடும். (எ-று.)
(கருத்துரை) ஞானத்தையே உள்ள படி யநுபவித்து அதி னால் விளையக்கூடிய அமிர்தத்தைப் பருகினால் உண்மையான சிவயோகியாவதற்குத் தடையில்லை என்பது கருத்து. (6)
---------
67 மேலையமிர்தை விலங்காமற்றா னுண்ணில்
காலனை வஞ்சிக்கலாம்.
(பதவுரை .) மேலை அமிர்தை = மேல் நிலத்தில் விளைந்துவரு கின்ற அமிர்தத்தை, விலங்காமல் ஒழியாமல், தான் உண் ணில் தான் பருகுவானானால், காலனை = எமனை, வஞ்சிக்க லாம் = வஞ்சனை செய்யக்கூடும். (எ-று)
(கருத்துரை.) சுழிஸ்தானத்திற்கு மேற்பட்ட ஸ்தானத்தில் உண்டாகின்ற அமிர்தத்தைப் பானஞ் செய்தால் எமன் வருத வில்லை என்பது கருத்து.
---------
68. காலன லூக்கக் கலந்தவமிர் துண்ணில்
ஞான மதுவா நயந்து. (பதவுரை.) கால் அனல் தாக்க - காற்றினாலுண்டாகின்ற அனலானது ஊக்க, கலந்த == அதினால் அவ்விடத்தில் சேர்ந்தி ருக்கின்ற, அமிர்து உண்ணில் = அமிர்தத்தை பருகினால், நயந்து விரும்பி ; ஞானமதுவாம் =ஞானமானது கைகூடும். (எ-று.)
(கருத்துரை.) சரசம்பந்தமா யிருக்கின்ற அமிர்தத்தை யுண் டால் ஞானங்கை கூடும் என்பது கருத்து.
---------
69. எல்லையிலின்னமிர்த முண்டாங்கினி திருக்கில்
தொல்லை முதலொளியேயாம்.
(பதவுரை) எல்லையில் இன்னமிர்தம் உண்டு - அளவு சொல் லப்படாத இனிமையாகிய அமிர்தத்தைப் புசித்து, ஆங்கு - அவ் விடத்தில், இனிது இருக்கின் - செவ்வையாக விருந்தால், தொல்லை = பழைமையான, முதல் ஒளியே ஆம் = முதல்வனு டைய தேஜோமயமே உண்டாவதாகும். (எ-று)
(கருத்துரை.) அளவு சொல்லப்படாத பேரின்பாமிர்தத்தை உண்டிருந்தால் இறைவனுடைய சொரூபமே கை கூடும் என்பது கருத்து (9)
---------
70. நிலா மண்டபத்தினிறைந்த வமிர் துண்ணில்
உலாவலா மந்திரத்தின் மேல்.
(பதவுரை) நிலாமண்டபத்தில் - சந்திரனானவன் எழுந் தருளி யிருக்கின்ற மண்டபத்தின்கண், நிறைந்த அமிர்து உண்ணில் நிறைந்திருக்கின்ற பேரின்பாமிர்தத்தை உண்டால், அந் தரத்தின் மேல் = மேலாகாயத்தில், உலாவலாம் = வாசஞ்செய்ய லாம். (எ - று.)
(கருத்துரை) சந்திரமண்டலத்தி லிருக்கின்ற அமிர்தத் தைப் பானஞ் செய்யவல்லவர்க்கு மேலுலகத்தில் உலாவுகின்ற சக்தியுண்டாகும் என்பது கருத்து. (10)
-------------
8. அர்ச்சனை
71. மண்டலங்கண் மூன்று மருவவுடனிருத்தி
அண்டரனையர்ச்சிக்கு மாறு.
(பதவுரை) மண்டலங்கள் மூன்று = சோம சூரியாக்கினி என்னும் மூன்று மண்டலங்களையும், மருவ = சேர, உடன் இருத்தி = உடனேயிருக்கப் பண்ணி, அண்டு - பொருந்தின, அரனை = சிவபெருமானை, அர்ச்சிக்கும் ஆறு = அருச்சனை செய் யும் விதமாகும். (எ-று.)
(கருத்துரை.) மும்மண்டலங்களையுஞ் சகாயமாகக் கொண் டே இறைவனை அர்ச்சிக்க வேண்டும் என்பது கருத்து. (1)
---------
72. ஆசனத்தைக் கட்டி யான்றன்னை யர்ச்சித்
பூசனை செய் துள்ளே புணர்.
(பதவுரை) ஆசனத்தை கட்டி = ஆசனங்களை ஏற்படுத்திக் கொண்டு, அரன் தன்னை - சிவபெருமானை, அர்ச்சித்து - அர்ச் சனை செய்து, பூசனை செய்து - பூசித்து, உள்ளே - மனத்தின் கண், புணர் - கலப்பாயாக. (எ - று.)
(கருத்துரை) ஆசனங்களோடு இறைவனை . யோக சாதனத் தால் கலக்க வேண்டும் என்பது கருத்து.
---------
73. உள்ளமே பீட முணர்வே சிவலிங்கந்
தெள்ளிய ரர்ச்சிக்குமாறு.
(பதவுரை) உள்ளமே பீடம் = மனமே பீடமாகவும், உணர் வே சிவலிங்கம் - உணர்ச்சியே சிவலிங்கமாகவும், தெள்ளி = ஆராய்ந்து, அர்ச்சிக்கும் ஆறு - அர்ச்சனை செய்யும் விதமாகும். (எ-று)
(விசேஷவுரை) பரமேஸ்வரனை உள்ளபடியே ஆஸ்ரயிக்க வேண்டியவர்கள் அவனை இருதயகமலத்திலிருந்தே வணங்க வேண்டு மென்பார், 'உள்ளமே பீடமுணர்வேசிவலிங்கம், என வும் இவ்வண்ணஞ் செய்பவர்கள் ஞானிகளென்பார், தெள்ளி யரர்ச்சிக்குமாறு' எனவுங் கூறினார்.
---------
74. ஆதாரத்துள்ளே யறிந்து சிவனுருவைப்
பேதமற வர்ச்சிக்கு மாறு.
(பதவுரை) சிவனுருவை = பரமேஸ்வரனுடைய ரூபத்தை, ஆதாரத்துள்ளே =ஆறாதாரங்களுக்குள். அறிந்து உணர்ந்து, பேதமற-யாதொரு வித்தியாசமு முண்டாகாமல், அர்ச்சிக்கு மாறு = அருச்சினை செய்யும் விதமாகும். (எ-று)
(கருத்துரை.) ஆறாதாரங்களிலும் சிவபெருமானுடைய சொரூபத்தைக்கண்டே பெரியோர்கள் அர்ச்சனை செய்வார்கள் என்பது கருத்து.
(விசேஷவுரை.) மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூர கம், அநாகதம், விசுத்தி, ஆஞ்சை என்னும் ஆறாதாரங்களினுமே இறைவனை உள்ளபடி உணரவேண்டு மென்பார், 'ஆதாரத்து ள்ளேயறிந்து சிவனுருவை, எனவும், அங்ஙனமறியப்பட்ட இறை வனை அவ்விடங்களிலேயே அர்ச்சனை செய்ய வேண்டு மென் பார், 'பேதமற வர்ச்சிக்குமாறு' எனவுங்கூறினார்.
---------
75. பூரித்திருந்து புணர்ந்து சிவனுருவைப்
பாரித்தங் கர்ச்சிக்குமாறு.
(பதவுரை) பூரித்திருந்து = பூரகஞ்செய்து, புணர்ந்து - கலந்து, சிவனுருவை = சிவபெருமானுடைய சொரூபத்தை, அங்கு = அவ்விடத்தில், அர்ச்சிக்குமாறு = அர்ச்சனை செய்யும் விதமாகும், (எ-று.)
(கருத்துரை.) சிவபெருமானைப் பூரகத்தால் அர்ச்சனை செய் யவேண்டும் என்பது கருத்து.
(விசேஷவுரை) சிவயோகஞ் செய்வோர் இரேசக, பூரக, கும்பங்களையே அவ்யோகத்திற்கு முதற்காரணமாகக் கொண்டு அதில் பூரகத்தினாலே இறைவனை அர்ச்சிக்க வேண்டு மென்பார் பூரித்திருந்து புணர்ந்து சிவனுருவைப் பாரித்தங்கர்ச்சிக்கு மாறு' எனக்கூறினார்.
---------
76 விளக்குறு சிந்தையான் மெய்ப்பொருளைக்கண்டு
துளக்கற வர்ச்சிக்குமாறு.
(பதவுரை.) விளக்குறு = தெளிவிக்கப்பட்ட, சிந்தையால் - மனத்தினால், மெய்ப்பொருளை = உண்மைவஸ்துவை, கண்டு - பார்த்து ; துடக்கற் - குற்றமில்லாமல், அர்ச்சிக்குமாறு = அர்ச்ச னை செய்யும் விதமாகும். (எ-று.)
(கருத்துரை) தெளிந்த சிந்தையுடையவர்களே சர்வேஸ் வரனை அடைய வேண்டும் என்பது கருத்து.
(விசேஷவுரை.) யோகிகள் கல்விகேள்விகளில் விளங்கிய சிந்தையுடையவர்களென்பார், 'விளக்கு று சிந்தையான்' எனவும் இறைவனைக் காணவேண்டியது அத்தியாவசியமென்பார், 'மெய் பொருளைக் கண்டு துளக்கறவர்ச்சிக்குமாறு, எனவுங்கூறினார்.
---------
77 பிண்டத்தினுள்ளே பேராதிறைவனைக்
கண்டுதானர்ச்சிக்குமாறு
(பதவுரை) பிண்டத்தினுள்ளே - உள்ளிடத்திலே, பேரா து = நீங்காமல், இறைவனை = கடவுளை, கண்டு - பார்த்து, அர்ச் சிக்குமாறு = அர்ச்சனை செய்யும் விதமாகும், (எ - று.)
(கருத்துரை) அந்தர் முகத்தில் இடைவிடாது இறைவனை அர்ச்சிக்கவேண்டும் என்பது கருத்து.
(விசேஷவுரை.) சர்வ மனிதர்களும் கடவுளை அந்தர்முக மாக அர்ச்சனை செய்ய வேண்டு மென்பார், 'பிண்டத்தினுள்ளே பேராதிறைவனைக் கண்டுதானர்ச்சிக்குமாறு, எனக்கூறினார்.
---------
78 மந்திரங்களெல்லா மயங்காமலுண்ணினைந்து
முந்தரனை யர்ச்சிக்குமாறு
(பதவுரை.) மந்திரங்கள் எல்லாம் = சர்வமந்திரங்களிலும், மயங்காமல் = மயக்கத்தை யடையாமல், உள்நினைந்து = அகத் தில் நினைந்து, முந்து = முன்னதாக, அரனை = சிவபெருமானை,
அர்ச்சிக்குமாறு = அர்ச்சனை செய்யும் விதமாகும். (எ - று.)
(கருத்துரை.) சர்வமந்திரங்களை யெல்லாம் மயங்காமல் சர் வேஸ்வரனை உள்ளிடத்தில் நமஸ்காரஞ் செய்யவேண்டும் என் பது கருத்து.
(விசேஷவுரை.) ஐம்பத்தோரெழுத்தையும் அந்தந்த ஆதா ரங்களில் விரோதிக்காமல் நிறுத்தவேண்டுமென்பார், 'மந்திரங் களெல்லாமயங்காமல்' எனவும், அந்தர் முகத்தில் நினைக்க வேண் டுமென்பார், 'உண்ணினைந்து' எனவும், சர்வேஸ்வரனை வணங்க வேண்டு மென்பார், 'முந்தரனையர்ச்சிக்குமாறு' எனவுங் கூறினார்.
---------
79 பேராக்கருத்தினாற் பிண்டத்தினுண்ணி
தாராதனை செய்யுமாறு.
(னைந் (பதவுரை) பிண்டத்தினுள் = அந்தர்முகத்திலிருந்து, பேராக்கருத்தினால் = ஒழியாத எண்ணத்தினால், நினைந்து = எண்ணி, ஆராதனை செய்யுமாறு = அர்ச்சனை செய்யவேண்டிய விதமாகும். (எ-று.)
(கருத்துரை.) இறைவனை அந்தர்முகத்தில் அருச்சனை செய் யவேண்டும் என்பதாம்.
(விசேஷவுரை.) இறைவன் அந்தர் முகத்தில் எழுந்தருளி யிருப்பவனென்பார், 'உண்ணினைந்து' எனவும், 'அவனை இடை விடாமல் சிந்திக்க வேண்டுமென்பார், பேராக்கருத்தினால்' என வும் விதிப்படி அருச்சனை செய்யவேண்டுமென்பார், ஆராதனை செய்யுமாறு, எனவுங்கூறினார்.
---------
80 உள்ளத்தினுள்ளே யுறப்பார்த்தங்கொண்சுடரை
மெள்ளத்தா னர்ச்சிக்குமாறு .
(பதவுரை) ஒள் சுடரை - ஒள்ளிய தேஜேமயப் பொருளை, உள்ளத்தினுள்ளே = மனத்தின்கண், உற= மிகுதியாக, பார்த்து = கண்டு, அங்கு = அவ்விடத்தில், மெள்ளத்தான் = மெதுவாக, அர்ச்சிக்குமாறு = அர்ச்சனை செய்யும் விதமாகும். (எ-று.)
(கருத்துரை.) சர்வேஸ்வரனாகிய இறைவனை நாம் நமஸ்கா ரஞ்செய்யவேண்டியது அந்தர்முகத்திலென்பது கருத்து. (10)
------------
9. உள்ளுணர்தல்.
81. எண்ணிலியூழி தவஞ்செய்திங்கீசனை
உண்ணிலைமை பெற்ற துணர்வு.
(பதவுரை) எண்ணிலியூழி = அநேக காலங்களாக, தவஞ் செய்து தவத்தைச் செய்து, இங்கு = இவ்விடத்தில், ஈசனை= சர்வேஸ்வரனை, உண்ணிலைமை பெற்றது = மனோவுறுதியால் அடையப்பெற்றது, உணர்வு = நல்லுணர்ச்சியாகும். (எ-று.)
(கருத்துரை.) நல்லுணர்ச்சியானது அநேக்காலம் வரைக் கும் இடைவிடாமல் தவஞ்செய்து ஈஸ்வரனைப் பெற்றதாகும் என்பது கருத்து.
---------
82. பல்லூழிகாலம் பயின்றரனை யர்ச்சித்து
நல்லுணர்வு பெற்ற நலம்.
(பதவுரை) பல்லூழிக்காலம் பயின்று - நெடுங்காலம் வரைக் கும்பழகி, அரனை அர்ச்சித்து - சர்வேஸ்வரனை அர்ச்சனை செய்து நல்லுணர்வு - உயர்வாகிய உணர்ச்சியை, பெற்ற நலம் - அடை ந்த நன்மையாகும். (எ-று.)
(கருத்துரை) அனேக்காலம் வரைக்கும் தவஞ்செய்து நல் லுணர்ச்சியைப் பெற்ற விதமாகும் என்பது கருத்து. (2)
---------
83 எண்ணற்கரிய வருந்தவத்தா லன்
நண்ணப் படுமுணர்வு தான்.
(பதவுரை) எண்ணற்கு அரிய - நினைப்பதற்கு அருமை யான, அருந்தவத்தால் = அருமையாகிய தவத்தினால், உணர்வு தான் = உணர்ச்சியானது, நண்ணப்படும் - அடையப்படும்.
(கருத்துரை) அநேக்காலம் வரைக்கும் இடைவிடாமற் செய்த தவப்பயிற்சியினாலே நல்லுணர்ச்சியை யடைய வேண்டும் என்பது கருத்து.
---------
84 முன்னைப் பிறப்பின் முயன்ற தவத்தினால்
பின்னைப் பெறுமுணர்வு தான்.
(பதவுரை) முன்னைப்பிறப்பின் = பூர்வஜென்மத்தில், முய ன்ற = முயற்சி செய்த, தவத்தினால் = தவத்தினால், பின்னைப்பெ றும் - பிறகே அடையக் கூடுமானது, உணர்வுதான் = நல்லுணர் வேயாகும். (எ-று.)
ஒளவைக் குறள்.
(கருத்துரை) பூர்வஜென்மத்தில் செய்த தவசிரேஷ்டத் தால் நல்லுணர்வை யடைவதாகும் என்பது கருத்து.
---------
85. காயக்கிலேச முணர்ந்த பயனன்றே
ஓயா வுணர்வு பெறல்.
(பதவுரை) காயக்கிலேசம் - சரீரத்தினுடைய சிலேசத் தை, யுணர்ந்து = தெரிந்து கொண்ட, பயன் அன்றே = பயன் அல் லவா, ஓயா உணர்வு பெறல் = ஒழிதலில்லாத உணர்ச்சியால் பெறுவதாகும் (எ - று.)
(கருத்துரை) சரீரத்தினுடைய உண்மையைத் தெரிந்து தவஞ் செய்தாலே நல்லுணர்ச்சியைப் பெறக்கூடும் என்பது கருத்து.
---------
86 பண்டைப்பிறவிப் பயனாந் தவத்தினால்
கண்டங் குணர்வு பெறல்.
(பதவுரை.) பண்டைப் பிறவிப்பயனாம் = பூர்வஜென்மத் தின் பயனாகிய, தவத்தினால் = தவத்தினால், கண்டங்குணர்வு பெறல் = பார்த்து நல்லுணர்வைப் பெறுதலாகும் (எ-று.)
(கருத்துரை.) பூர்வஜென்மப்பயனே நல்லுணர்வு உண்டா வது என்பது கருத்து.
---------
87 பேராத் தவத்தின் பயனாம்பிறப்பின்மை
ஆராய்ந் துணர்வு பெறின்.
(பதவுரை) பேராதவத்தின் பயனாம் = ஒழியாத தவத்தின் பயனாகிய, பிறப்பின்மை - ஜென்மமில்லாமையே, ஆராய்ந்து - உணர்ந்து, உணர்வு பெறல் = நல்லுணர்வு பெறுவதாகும். எ-று.
(கருத்துரை.) தவத்தின் பயனே நல்லுணர்ச்சியை யடைவ தாகும் என்பது கருத்து. (7)
---------
88 ஞானத்தா லாய உடம்பின் பயனன்றே
மோனத்தாலாய வுணர்வு.
(பதவுரை) ஞானத்தால் ஆய - ஞானத்தினாலுண்டான, உடம்பின் = சரீரத்தினுடைய, பயனன்றே = பிரயோஜனமல் லவா, மோனத்தாலாய = மௌன ஞானத்தாலுண்டான, உண ர்வு = உணர்ச்சியாகும். (எ-று.) (8)
---------
89. ஆதியோ டொன்று மறிவைப் பெறுவது
நீதியார் செய்த தவம்.
(தான் (பதவுரை.) ஆதியோடு என்றும் = முதற்பொருளுடன் கலக்கின்ற, அறிவைப் பெறுவதுதான் = நல்லுணர்ச்சியை யடை வதுவே, நீதியாற்செய்த தவம் = நியாயத்துடன் செய்த தவ மாகும். (எ-று.)
(கருத்துரை.) உண்மைத் தவமாவது நல்லுணர்ச்சியை யடைவதாகும் என்பது கருத்து.
---------
90. காடுமலையுங் கருதித்தவஞ் செய்தால்
கூடு முணர்வின் பயன்.
(பதவுரை) காடும் மலையுங்கருதி = காட்டிலிருந்தும் மலை யிலிருந்தும் கிளைத்து, தவஞ் செய்தால் = தவத்தைச் செய்தால், உணர்வின் பயன்கூடும் = நல்லுணர்ச்சியின் பிரயோசனமானது
கை கூடும். (எ-று.)
(கருத்துரை) காடு மலைகளில் தவஞ் செய்தாலே நல்லுணர் ச்சி கிட்டுவதாகும் என்பது கருத்து.
--------------
10, பத்தியுடைமை.
91. பத்தியாலுள்ளே பரிந்தரனைத் தானோக்கில்
முத்திக்கு மூலமது.
(பதவுரை) பத்தியால் - அன்பினால், உள்ளே - மனத்தின் கண்ணே, பரிந்து = விரும்பி, அரனை = சிவபெருமானை, தான் நோக்கின் = தான்பார்த்தால், அது = அப்பார்வையானது, முத் திக்கு மூலம் - மோட்சத்திற்கு காரணமாகும். (எ-று.)
(கருத்துரை) இறைவனைப் பக்தியோடு வணங்குவதே மோட்சத்திற்குக் காரணமாகும் என்பது கருத்து. (1)
---------
92 பாடியு மாடியும் பல்காலும் நேசித்துத்
தேடுஞ் சிவசிந்தை யால்.
(பதவுரை) பாடியுமாடியும் = பாடியும் ஆடியும், பல்கா லும் = நெடுநாள் வரைக்கும், நேசித்தும் = பழகியும், சிவசிந்தை யால் = சிவனை நினைக்கும் மனத்துடனே, தேடும் - தேடவேண் டும். (எ-று.)
(கருத்துரை.) பக்தியை நெடுநாளாகச் சிவசிந்தனையுடன் தேடவேண்டும் என்பது கருத்து.
---------
93 அன்பா லழுது மலறியு மாள்வானை
யென்புருகி யுள்ளே நினை.
(பதவுரை.) ஆள்வானை = நம்மையாண்டருள் செய்கின்ற இறைவனை, அன்பால் = பக்தியின் மேலீட்டால், அழுதும் அல றியும் = அழுதும் அலறியும், என்புருகி = எலும்புகள் உருகும்படி உள்ளே = மனத்தின்கண்ணே, நினை = சிந்தனை செய். (எ-று.)
(கருத்துரை.) இறைவனை நல்ல அன்பினுடன் நினைக்க வேண்டும் என்பது கருத்து.
---------
94 பூசனை செய்து புகழ்ந்து மனங்கூர்ந்து
நேசத்தா லீசனைத்தேடு.
(பதவுரை) பூசனை செய்து = பூசித்து, புகழ்ந்து - கொண் டாடி, மனங்கூர்ந்து = மனம் ஒருமித்து, நேசத்தால் = உள்ளன் பினால், ஈசனைத்தேடு = பரமசிவனை ஆராய வேண்டும். (எ-று.)
(கருத்துரை) சர்வேஸ்வரனை உள்ளபடியே பூசித்து உணர வேண்டும் என்பது கருத்து.
---------
95 கண்ணா லுறப்பார்த்துக் காதலாற்றானோக்கில்
உண்ணுமே யீசனொளி.
(பதவுரை.) கண்ணால் உறப்பார்த்து = கண்களால் மிகவும் பார்த்து, காதலால் = விருப்பத்துடன், தான்நோக்கில் தான் பார்த்தால், ஈசன் ஒளி - பரமேஸ்வரனுடைய ஒளிமயமானது, உண்ணுமே = விழுங்கக்கூடியதாக விகசிக்கும். (எ-று.)
(கருத்துரை.) சர்வேஸ்வரனை உள்ள படியே உணர்ந்து அக மார்க்கமாகத் தரிசிப்பவர்களுக்கு அவ்வெம்பெருமானுடைய தேஜோமயமானது அடியார்களை தன்னுள் அடக்கி மேம்பட்டு நிற்கும் என்பது கருத்து.
---------
96 நல்லானைப் பூசித்து நாதனென வுருகில்
நில்லாதோ வீச னிலை.
(பதவுரை) நல்லானைப் பூசித்து = நல்லவனாகிய பரமேஸ் வரனைப் பூசை செய்து, நாதனெனவுருகில் -தலைவனேயென்று மனமிளகிநின்றால், ஈசன்நிலை = சர்வேஸ்வரனுடைய உண்மை நிலையானது, நில்லாதோ = குடிகொண்டிருக்க மாட்டாதோ.
ஒளவைக் குறள்
(கருத்துரை.) பரமேஸ்வரனைப் பூசை செய்து யாரொருவர் மனமிளகுகின்றார்களோ அவர்களிடத்தில் சர்வேஸ்வரனுடைய சிருபாநோக்கமானது நிலைபெற்று நிற்கும் என்பது கருத்து.
---------
97 அடியார்க் கடியரா யன்புருகித் தம்முள்
படியொன்றிப் பார்த்துக் கொளல்.
(பதவுரை.) அடியார்க்கடியராய் = அடியார்களுக்கு அடியார் களாக, அன்பு உருகி = பக்தியினாலுருகி, தம்முள் தம்முடைய மனத்திற்குள்ளே, படியொன்றி = உள்ளுலகங்களிற் கலந்து, பார்த்துக் கொளல் = தரிசித்து அடைதல் வேண்டும். (ஏ-று.)
(கருத்துரை) அன்பர்களில் அன்பினால் இளகித் துதிசெய் கின்றவர்களுக்கே இறைவனுடைய திருவருள் கைகூடும் என் பது கருத்து.
---------
98. ஈசனெனக்கருதி யெல்லா வுயிர்களையும்
நேசத்தால் நீ நினைந்து கொள்.
(பதவுரை) எல்லாவுயிர்களையும் = சர்வப்பிராணிகளையும், ஈசனெனக்கருதி --சர்வேஸ்வரனுடைய திருவுருவமென்று நினை ந்து, நேசத்தால் - பிரியத்தினால், நினைந்து கொள் = நீ பக்தி செய்து கொள்ளக்கடவாய். (எ-று.)
(கருத்துரை.) சர்வபிராணிகளையும் ஈஸ்வரனுடைய சொரூ பமாகவே கொள்ள வேண்டும் என்பது கருத்து.
---------
99. மெய்ம்மயிர்கூர விதிப்புற்று வேர்த்தெழுந்து
பொய்மையி லீசனைப் போற்று.
(பதவுரை) மெய்ம்மயிர்கூர = சரீரத்தில் மயிர்க்குச் செறிய விதிர்ப்புற்று - புளகாங்கிதமாய், வேர்த்து எழுந்து - வேர்வை
மூலமும் உரையும்.
புடன் எழுந்து, பொய்ம்மையில் உண்மையாயிருக்கின்ற, ஈச னைப்போற்று = பரமேஸ்வரனைத் துதிசெய். (எ-று)
(கருத்துரை.) சரீரம் புளகாங்கிதங்கொள்ள உண்மையான கடவுளை வணங்கவேண்டும் என்பது கருத்து.
---------
100. செறிந்தறிந்து நாடிச் செவ்விதா யுள்ளே
அறிந்தரனை யாய்ந்து கொளல்.
(பதவுரை.) செறிந்தறிந்து = சேர்ந்துணர்ந்து, நாடி = விரும்பி, செவ்விதாய் = நன்றாய், உள்ளே = மனத்தின்கண்ணே. அறிந்து - உணர்ந்து, அரனை ஆய்ந்து கொளல் - பரமேஸ்வரனை ஆராய்ந்துணரவேண்டும். (எ-று.)
(கருத்துரை) இறைவனை அந்தர்முகத்தில் தரிசிக்க வேண் டும் என்பது கருத்து. (10)
----------
திருவருட்பால்.
1. அருள் பெறுதல்.
101. அருளினா லன்றி யகத்தறி வில்லை
அருளின் மலமறுக்கலாம்.
(பதவுரை) அருளினாலன்றி = திருவருளினாலல்லாமல், அகத்து - மனத்தின்கண் அறிவில்லை = உணர்ச்சியில்லை, அரு ளின் மலம் அறுக்கலாம் = திருவருளினால் மாயாமலத்தை யறுத் தொழிக்கக் கூடும். (எ-று.)
(கருத்துரை.) திருவருளினால் சகலவிதமான மாய்கையை யும் அறுத்தொழிக்கலாம் என்பது கருத்து. (2)
---------
102. இருளைக் கடித்தின் றிறைவனருளால்
தெருளுஞ் சிவசிந்தையாம்.
(பதவுரை. இன்று இருளைக்கடிந்து = இன்றைக்கு இரு ளாகிய அஞ்ஞானத்தைக் கடிந்து, இறைவன் அருளால் சிவ பெருமானுடைய கிருபையால், தெருளுஞ்சிவ சிந்தையாம் - தெளிவையடையக்கூடிய சிவசிந்தனையுண்டாகும். (எ-று)
கருத்துரை. சிவபெருமானுடைய திருவருளால் அஞ்ஞா னத்தைப் போக்கடிக்கலாம் என்பது கருத்து.
---------
103. வாய்மையாற் பொய்யா மனத்தினால் மாசற்ற
தூய்மையா மீச னருள்.
(பதவுரை.) வாய்மையால் - உண்மையினாலும், பொய்யா மனத்தினால் = பொய்க்காத மனத்தினாலும், மாசற்ற தூய்மை யால் = குற்றமற்ற பரிசுத்தத்தினாலும், ஈசன் அருள் - சர்வேஸ் வரனுடைய திருவருள் உண்டாகும். (எ - று.)
(கருத்துரை.) உண்மையினால் சர்வகாரியங்களிலும் வல்ல இறைவனை அடையலாம் என்பது கருத்து. (3)
----------
104. ஒவ்வகத்துணின்ற சிவனருள் பெற்றக்கால்
அவ்வகத்து ளானந்த மாம்.
(பதவுரை.) ஒவ்வகத்துள் நின்ற = ஒத்ததாகிய மனத்தின் கண் எழுந்தருளியிருந்த, சிவனருள் பெற்றக்கால் சிவபெருமா னுடைய திருவருளையடைந்தால், அவ்வகத்துள் ஆநந்தமாம் - ஆனந்தமனத்திற்கு ஆனந்தமுண்டாகும். (எ-று.)
(கருத்துரை) நல்லமனத்திலிருக்கின்ற சிவபெருமானு டைய திருவருளையடைந்தால் ஆனந்தமுதயமாகும் என்பது கருத்து.
---------
105. உன்னுங்கரும முடிக்கலா மொள்ளிதாய்
மன்னு மருள் பெற்றக் கால்.
(பதவுரை.) ஒள்ளிதாய்மன்னும் = தேஜோமயத்தையுடை யதாய் நிலைபெற்றிருக்கின்ற, அருள்பெற்றக்கால் = திருவருளை யடைவோமானால், உன்னுங்கருமம் முடிக்கலாம் நினைக்கப் பட்ட கருமங்களையெல்லாம் நிறைவேற்றலாம். (எ-று.)
(கருத்துரை.) திருவருளேயடைந்தால் எண்ணிய கருமங் களை ஈடேற்றலாம் என்பது கருத்து. (5)
---------
10 6. எல்லாப் பொருளு முடிக்கலா மீசன்றன்
தொல் லயருள் பெற்றக்கால்
(பதவுரை-) ஈசன்றன் தொல்லையருள் பெற்றக்கால் = பர மேஸ்வரனுடைய பழமையாகிய திருவருளைப்பெற்றால், எல் லாப்பொருளும் முடிக்கலாம் - சர்வபொருள்களையும் முடிக்க லாம். (எ-று.)
(கருத்துரை) சர்வேஸ்வரனுடைய திருவருளைப் பெற் றுள்ளவர்கள் சர்வகாரியங்களையுஞ் செய்ய வல்லவராவார்கள் என்பது கருத்து.
---------
107. சிந்தையுணின்ற சிவனருள் பெற்றக்கால்
பந்தமாம் பாச மறும்.
(பதவுரை) சிந்தையுள் நின்ற = மனத்தின் கண்ணிருந்த. சிவன் அருள் பெற்றக்கால் = சிவபெருமானுடைய திருவருளை அடைந்தால், பந்தமாம்பாசம் = பந்தப்பட்ட மாய்கையானது, அறும் தன்னை விட்டகலும். (எ-று.)
(கருத்துரை) யாவருடைய மனத்தின்கண்ணு மிருக்கின்ற பரமேஸ்வரனுடைய திருவருளைப் பெற்றால் சர்வமாயைகளையும் அறுத்தொழிக்கலாம் என்பது கருத்து. (7)
---------
108. மாசற்ற கொள்கை மதிபோலத் தான்றோன்றும்
ஈசனருள் பெற்றக் கால்.
(பதவுரை.) ஈசன் அருள்பெற்றக்கால் சர்வேஸ்வரனு டைய திருவருளையடைந்தால், மாசற்ற கொள்கை = குற்றமற்ற தன்மையானது, மதிபோலத்தான் தோன்றும் - சந்திரனொளி யைப்போல் காணப்படும். (எ - று.)
(கருத்துரை) பரமேஸ்வரனுடைய திருவருளையடைந்தவர் களுக்கு உள்ளுணர்ச்சி துல்லியமாயிருக்கும் என்பது கருத்து. ---------
109. ஆவாவென்றோதியருள் பெற்றார்க்கல்லாது
தாவாதோ ஞான வொளி .
(பதவுரை) ஆவாவென்று ஓதி = ஆ ! ஆஆ!! என்று சொல்லி, அருள் பெற்றார்க்கல்லாது = திருவருளைப்பெற்றவர்களுக்கல்லா மல், தாவாதோஞானவொளி = ஞானதேஜஸானது கைகூடா தோ (எ - று.)
(கருத்துரை) திருவருளைப் பெற்றவர்களுக்கு ஞானதேஜ ஸானது கைகூடும் என்பது கருத்து.
---------
110. ஓவாச் சிவனருள் பெற்றா லுரையின்றித்
தாவாத வின்பந் தரும்.
(பதவுரை.) ஓவா சிவன் அருள்பெற்றால் - ஒழியாத சிவ பெருமானுடை திருவருளைப்பெற்றால், உரையின்றி - சொல் லில்லாமல், தாவாதவின் பந்தரும் = ஒழியாத சுகத்தைக் கொடுக் கும். (எ - று.)
(கருத்துரை.) ஒழியாமல் சர்வேஸ்வரனுடைய திருவருளைப் பெற்றால் மௌனஞானங் கைகூடும் என்பது கருத்து. (10)
---------
2. நினைப்புறுதல்.
111. கருத்துறப்பார்த்துக் கலங்காமலுள்ளத்
திருத்திச் சிவனை நினை.
(பதவுரை.) கருத்துறப்பார்த்து மனத்திற் பொருந்தப் பார்த்து, கலங்காமல் தளராமல், சிவனை உள்ளத்து இருத்தி பரமேஸ்வரனை மனத்தில் வைத்து, நினை =நினைப்பாயாக (எ-று.)
(கருத்துரை.) மனத்தை உறுதியாக நிறுத்திச் சிவபெரு மானை நினைக்க வேண்டும் என்பது கருத்து.
---------
112. குண்டலியினுள்ளே குறித்தானைச்சிந்தித்து
மண்டலங்கள் மேலாகப் பார்.
(பதவுரை.) குண்டலியின் உள்ளே குறித்து குண்டலிசத் தியினுள்ளே நினைத்து, அரனை சிந்தித்து -சிவபெருமானை நினைத்து, மண்டலங்கள் மேலாகப்பார் = மும்மண்டலங்களையும் மேலாகத்தரிசிப்பாயாக. (எ-று)
(கருத்துரை.) மூல நிலத்தில் குண்டலிசத்தியை நினைத்து மும்மண்டலங்களையும் நினைக்கவேண்டும் என்பது கருத்து. (2)
---------
113. ஓர்மின்கள் சிந்தையி லொன்றச் சிவன்றன்னைப்
பார்மின் பழம்பொருளே யாம்.
(பதவுரை) சிவன் தன்னை = சிவபெருமானை, சிந்தையி லொன்ற ஓர்மின் மனத்திற்பொருந்த நினையுங்கள் (அன்றி) பார்மின்கள் - தரிசனஞ் செய்யுங்கள், பழம்பொருளேயாம் (இங்ஙனஞ் செய்தால்) பழம்பொருளாகிய இறைவனாகக்கூடும். (எ - று)
(கருத்துரை) சிவபெருமானை உள்ளத்தின்கண் நினைத்து தரிசித்தால் இறைவனாகக்கூடும் என்பது கருத்து. (3) ---------
114. சிக்கெனத் தேர்ந்துகொள் சிந்தையி லீச னை
மிக்க மலத்தை விடு
(பதவுரை.) ஈசனை - பரமேஸ்வரனை, சிந்தையில் = மனத் தில், சிக்கெனத்தேர்ந்து கொள் = வலிவாகத் தெளிந்து கொள், (அப்படி செய்வையானால்) மிக்க மலத்தைவிடு = மிகுந்த மாயா மலத்தை விடுவாயாக. (எ-று.)
(கருத்துரை.) தெளிந்தமனத்தினால் சர்வேஸ்வரனைத் துதி செய்தால் மாயாமலத்தை யறுக்கக்கூடும் என்பது கருத்து (4)
---------
115. அறிமின்கள் சிந்தையி லாதாரத்தைச்சே
துறுமின்களும் முளே யோர்ந்து . ர்ந்
(பதவுரை) ஆதாரத்தைச் சேர்ந்து - ஆறாதாரங்களையுஞ் சேர்ந்து, சிந்தையில் - மனத்தினுள்ளே, அறியின்கள் - இறை வனை உணருங்கள், உம்முளே ஓர்ந்து = உமக்குள்ளேயாராய்ந்து, உறுமின்கள் = இறைவனை அடையுங்கள். (எ - று.)
(கருத்துரை.) மனத்தினுள்ளே இறைவனை ஆராய்ந்தறிய வேண்டும் என்பது கருத்து.
(5)
---------
116. நித்தம் நினைந்திரங்கி நின்மலனை யொன்
முற்றுமவ னொளியேயாம். (றுவிக்கில்
(பதவுரை.) நித்தம் = அநுதினமும், நின்மலனை = பரிசுத்த னாகிய கடவுளை, நினைந்து இரங்கி = மனமிரங்கிச்சிந்தித்து, ஒன்று விக்கில் = பொருத்துவித்தால், அவன்ஒளியே = அவனுடையதே ஜோமயமே, முற்றுமாம் - முடிவாகக் கிடைக்குமாம். (எ - று.)
(கருத்துரை) தினந்தோறும் நிர்மலனாகிய இறைவனைத் துதி செய்தால் அவனுடைய தேஜோமயத்திலேயே கலப்பதற் காகுமாம் என்பது கருத்து.
(6)
---------
117. ஓசை யுணர்ந்தங்கே யுணர்வைப் பெறும்
ஈசன் கருத்தா யிரு.
(பரிசால் (பதவுரை.) ஓசை உணர்ந்து = சத்தத்தைத் தெரிந்து, அங்கே = அந்தர் முகத்திலே, உணர்வைப்பெறும் = உணர்ச்சி யையடைந்த, பரிசால் = தன்மையினால், ஈசன்கருத்தாய் இரு சர்வேஸ்வரனுடைய எண்ணமாகவே யிருப்பாயாக. (எ - று.)
(கருத்துரை) சத்தத்தையுணர்ந்து சதாகாலமும் ஈஸ்வர சிந்தனையாகவே யிருக்க வேண்டும் என்பது கருத்து. (7) ---------
118. இராப்பகலன்றி யிருசுடர்ச் சிந்திக்கில்
பராபரத்தோ டொன்றலு மாம்.
(பதவுரை) இராப்பக லன்றி = அகோராத்திரமும், இருசு டர் = சந்திரகுரியாக்கினிகளாகிய சுடர்களை, சிந்திக்கில் நினைத்தால், பராபரத்தோ டொன்றலுமாம் = பராபரப் பொரு ளினிடத்தில் கலக்கவுங்கூடும். (எ-று.)
(கருத்துரை) அகோராத்திரம் இறைவனைச் சிந்தித்தால் இறைவனுடன் கலந்திருக்கக்கூடும் என்பது கருத்து. (8)
---------
119. மிக்கமனத்தால் மிக நினைந்து சிந்திக்கில்
ஒக்கச் சிவனுருவமாம்.
(பதவுரை) மிக்க மனத்தால் = நல்ல மனத்தினால், மிக நினைந்து - மிகுதியும் எண்ணி, சிந்திக்கில் தியானித்தால், ஒக் கச் சிவனுருவமாம் = ஒப்பாகச் சிவசொரூபத்தை யடையக் கூடும். (எ - று.)
(கருத்துரை.) உயர்வாகிய மனத்தைக்கொண்டு உள்ள படியே தியானஞ் செய்தால் சிவசாரூப்பியத்தை யடையலாம் என்பது கருத்து.
---------
120. வேண்டுவார் வேண்டும் வகைதான் விரிந் தெங்கும்
காண்டற்கரிதாஞ் சிவம்.
(பதவுரை) வேண்டுவார் வேண்டும் வகைதான் விரிந்து = வேண்டுபவர்கள் விரும்புகின்ற விதமாகப் பரவி, எங்கும் = எவ் விடத்திலும், சிவம் - சிவமானது, காண்டற்கு அரிது ஆம் = பார்ப் பதற்கு அருமையான பொருளாகும். (எ-று.)
(கருத்துரை.) சர்வேஸ்வரன் யார் எப்படி விரும்புகின்றார் களோ அப்படியெல்லாம் உருத்தாங்கியும் யாவராலும் பார்ப்ப தற் கருமையானவனாக முடிகிறான் என்பது கருத்து. (10)
---------
3. தெரிந்து தெளிதல்.
121. தேறித்தெளிமின் சிவமென்றே யுள்ளுணர்வில்
கூறியபல்குணமு மாம்.
(பதவுரை.) உள்ளுணர்வில் - மனோவுணர்ச்சியில், சிவம் = சிவமென்னும் பொருளானது, கூறிய - சொல்லப்பட்ட பல் குணமாமென்றே = பலகுணங்களிலும் கலந்துள்ளதாமென்று, தேறி தெளிமின் = ஆராய்ந்துணருங்கள். (எ - று.)
(கருத்துரை) சகலகுணங்களிலுங் கலந்திருக்கிற பொருள் சிவமென்றே தெளிவாயாக என்பது கருத்து.
---------
122. உண்டில்லையென்று முணர்வை யறிந்தக்கால்
கண்டில்லை யாகுஞ்சிவம்.
(
(பதவுரை) உண்டில்லை என்னும் = உண்டென்றும், இல்லை யென்றும் சொல்லும்படியாக விருக்கின்ற, உணர்வை = உணர்ச்சியை, அறிந்தக்கால் = உணர்ந்தால், சிவம் சிவமென் னும் பொருளானது, கண்டில்லையாகும் = கண்டதும், காணாத துமான பொருளாகும். (எ-று.)
(கருத்துரை.) அணுரூபமாயிருக்கின்ற உணர்வை யறிந் தால் சிவமும் அவ்வாறே வெளிப்படும் என்பது கருத்து. (2)
---------
123. ஒருவர்க்கொருவனே யாகுமுயிர்க்கெல்லாம்
ஒருவனே பல்குணமு மாம்.
(பதவுரை.) ஒருவர்க்கு ஒருவனேயாகும் = ஒருவருக்கும் ஒருவனேயாய் எழுந்தருளியிருக்கின்ற, உயிர்க்கெல்லாம் = சர்வ பிராணிகளுக்கெல்லாம், ஒருவனே இறைவன் ஒருவனே, பல் குணமுமாம் = பலகுணங்களிலும் கலந்த பொருளாகும். (எ-று.)
(கருத்துரை.) சர்வேஸ்வரன் ஒருவனே பலகுணங்களையு டைய உயிர்களுக்கும் ஆதாரமாயுள்ளவன் என்பது கருத்து. (3)
---------
124. எல்லார்க்கு மொன்றே சிவமாவ தென்றுணர்ந்த
பல்லோர்க்கு முண்டோ பவம்.
(பதவுரை.) எல்லார்க்கும் = சர்வபிராணிகளுக்கும், சிவம் ஒன்றேயாவது = சிவமாவது ஒன்றேபொதுவாக விருப்பது, என் று உணர்ந்த பல்லோர்க்கும் என்று அறிந்தசகலருக்கும், பவம் உண்டோ - பிறவி உண்டாகுமோ, உண்டாகாது. (எ-று.)
(கருத்துரை) எல்லார்க்கும் பொதுவாகவுள்ளவன் ஈஸ் வரன் ஒருவனேயென்று - உணரவல்லார்க்கு இனிப்பிறக்கும் ஜன்மமில்லை என்பது கருத்து.
---------
125. ஆயுமிரவியு மொன்றே யனைத்துயிர்க்கும்
ஆயுங்கா லொன்றே சிவம்.
(பதவுரை.) ஆயும் = ஆராய்கின்ற, இரவியும் = சூரியனும், அனைத்துயிர்க்கும் = சர்வபிராணிகளுக்கும், ஒன்றே = சுருபொ ருளே யாகும், (அது போல) ஆயுங்கால் - ஆராய்ந்து பார்த்தால், சிவம் ஒன்றே - சிவமென்னும் பொருளும் யாவர்க்கும் ஒன்றே யாகும். (எ-று.)
(கருத்துரை) எல்லார்க்குஞ்சூரியன் ஒருவனே யாயது போல சிவமும் ஒன்றேயாகும் என்பது கருத்து . (5)
---------
126. ஓவாததொன்றே பலவாமுயிர்க்கெல்லாந்
தேவானதென்றே தெளி. (பதவுரை) ஓவாதது ஒன்றே = என்றும் ஒழியா திருக் கின்ற பொருளொன்றே, பலவாம் உயிர்க்கு எல்லாம் = பலவ கைப்பட்ட உயிர்களுக்கெல்லாம், தேவானது - தெய்வமாயி ருப்பது, என்று தெளி = என்று தெளிந்து கொள்வாயாக. (எ-று.)
(கருத்துரை) எக்காலத்தும் அழியாமலிருக்கின்றதே வொன்றே பலவகையான உயிர்களுக்கெல்லாம் பிரதானமா னது என்பது கருத்து.(6)
---------
127. தம்மையறியாதார் தாமறிவோமென்பதென்
செம்மையா லீசன் றிறம். (பதவுரை) தம்மை அறியாதார் = தம்மைத்தாமே யறி யாத அறிவீனர்கள், ஈசன் திறம் = சர்வேஸ்வரனுடைய வல்ல மையை, செம்மையில் = உண்மையாக, தாம் அறிவோம் என்பது என் - தாம் தெரிந்துகொள்வோம் என்று சொல்வது ஏன்? (எ-று.)
(கருத்துரை) தம்மைத்தாம் அறியாத அஞ்ஞானிகள் இறை வன் குணத்தை யறியமாட்டார்கள் என்பது கருத்து. (7)
---------
128. எல்லாவுலகத் திருந்தாலு மேத்துவர்கள்
நல்லுலக நாத னடி.
(பதவுரை) எல்லாவுலகத்து இருந்தாலும் - எல்லா லோ கங்களிலிருந்தாலும், நல் உலக நாதனடி = உயர்ந்த உலக நாதனு டைய திருவடிகளை, ஏத்துவார்கள் - துதி செய்வார்கள். (எ-று.)
(கருத்துரை.) எந்தவுலகத்தில் இருந்தாலும் இறைவனு டைய திருவடிகளை யாவரும் வணங்குவார்கள் என்பது கருத்து.
---------
129. உலகத்திற்பட்ட உயிர்க்கெல்லா மீசன்
நிலவுபோ னிற்கும் நிறைந்து.
(பதவுரை) உலகத்தில் பட்ட= இவ்வுலகங்களி லிருக் கின்ற, உயிர்க்கெல்லாம் சர்வபிராணிகளுக்கும், ஈசன் - சர் வேஸ்வரனானவன், நிறைந்து = வியாபகமாகி, நிலவு போல் நிற் கும் - பூரண சந்திரனைப்போலவிருக்கும். (எ-று.)
(கருத்துரை) இவ்வுலக ஆன்மாக்களில் எல்லாம் இறை வன் கலந்திருக்கின்றான் என்பது கருத்து.
---------
130. உலகத்தில் மன்னு முயிர்க்கெல்லா மீசன்
அலகிருந்த வாதியே யாம்.
(பதவுரை) உலகத்தில் மன்னும் - உலகத்தினிடத்தில் நிலைபெற்றிருக்கின்ற, உயிர்க்கெல்லாம் = சர்வபிராணிகளுக் கும், ஈசன் = சர்வேஸ்வரனானவன், அலகிறந்த ஆதியேயாம் - அளவு சொல்லப்படாத தற்பொருளே யாவான். (எ-று.)
(கருத்துரை.) சர்வபிராணிகளுக்கும் இறைவன் முதற்பொ ருளாயுள்ளவன் என்பது கருத்து.
(10)
---------
4. கலை ஞானம்.
131. சத்தியாஞ் சந்திரனைச் செங்கதிரோனூடுரு
முத்திக்கு மூல மது.
(வில் (பதவுரை) சத்தியாஞ் சந்திரனை = பெண்ரூபமாகிய சந் திரனை, செங்கதிரோன் = சூரியனானவன், ஊடுருவின் = ஊடுரு விக்கலந்தால், அது = அந்தர்மார்க்கமானது, முத்திக்கு மூலம் = மோட்சத்திற்குக் காரணமாகும். (எ-று.)
(கருத்துரை) சந்திரகலையையும் சூரியகலையையும் சேர்த்த அன்றே மோட்சமடைய வழியேற்படும் என்பது கருத்து. (1)
---------
132. அயனங்கொள் சந்திரனாலாதித்த னொன்றி
நயனமா முத்திக்கு வீடு.
(பதவுரை) அயனங்கொள் - தட்சிணாயனமென்றும் உத் திராயணமென்றும் இரண்டு பிரிவைக் கொண்டிருக்கின்ற, சந்தி ரனால் - சந்திரனிடத்தில், ஆதித்தன் = சூரியனானவன், ஒன் றில் - பொருந்தினால், நயனமாம் = கண்ணைப்போன்று விளங்கு வதாகிய, முத்திக்கு வீடு - மோட்சத்துக்கு வீடு கிடைப்பதாகும். (எ-று.)
(கருத்துரை) சந்திரகலையுடன் சூரியகலையானது பொருந் தச் செய்யும் கலைஞானமானது மோட்சவீட்டை யடையக் காரணமாகும் என்பது கருத்து. (2)
---------
133. அஞ்சாலு மாயா தறம்பொருளின்பமுந்
துஞ்சாதவர் துறக்கு மாறு.
(பதவுரை) அஞ்சாலும் மாயா = பஞ்சாவஸ்தைகளாலும் ஒழியாத, அறம் - தருமமும், பொருள் = பொருளும், இன்பமாய மும் = சுகமும், துஞ்சாதவர் = என்றும் இறக்காதவர், துறக்கு மாறு = விட்டுவிடும் வழிகளாகும். (எ-று.)
(கருத்துரை) அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றும் பிறவி யொழிந்தவர்கள் விடக்கூடியவைகளாகும் என்பது கருத்து.
---------
134. ஈசனோடொன்றி லிசையாப் பொருளில்லை
தேசவிளக் கொளியே யாம்.
(பதவுரை.) ஈசனோடு ஒன்றில்==சர்வேஸ்வரனோடு கலந்து விட்டால், இசையாப்பொருள் இல்லை - கைகூடாத பொருள் இல்லையாம், (ஏனெனில்) தேசவிளக்கொளியாம் = அப்பொரு வானது தேசவிளக்குகளுக்கு ஒளி கொடுப்பதாகும். (எ - று.)
(கருத்துரை.) சர்வேஸ்வரனானவன் தேசங்களுக் கெல் லாம் ஒளியாயிருக்கிறதினால் அவனோடு கலப்பவர்களுக்கு சகல பொருள்களுங் கை கூடுவனவாகும் என்பது கருத்து. (4)
---------
135. தாஞ்செய் வினையெல்லாந் தம்மையற வுணரில்
காஞ்சனமேயாகுங் கருத்து.
(பதவுரை) தம்மையறவுணரில் - தம்மைத்தாமே முழுமை யும் பற்றறவுணர்ந்து கொண்டால், தாஞ்செய்வினையெல்லாம் = தம்மால் செய்யப்பட்ட வினைகளெல்லாமொழிந்து, கருத்து - மனமானது, காஞ்சனமேயாகும் - பொன்னேயாகும். (எ - று.)
(கருத்துரை) யார் எப்படிப்பட்ட வினைகளைச் செய்தாலும் அவர்கள் தம்மைத்தாம் உணர்ந்தவர்களாயிருந்தால் அவையா வும் ஒழிந்து பொன் போன்ற மனத்தை யுடையவர்களாவார்கள் என்பது கருத்து.
---------
136. கூடகமான குறியெழுத்தைத் தானறியில்
வீடகமாகும் விரைந்து.
(பதவுரை) கூடகமான = சரீர மெடுத்தற்குக் காரண மான, குறியெழுத்தை - அறிகுறியாயிருக்கின்ற எழுத்தை, தான் அறியில் = தான் உணர்ந்தால், விரைந்து சீக்கிரமாக, வீடகமா கும் - மோட்சங்கை கூடும். (எ - று.)
(கருத்துரை.) சரீரமுண்டானதற்குக் காரணமாயிருக்கின்ற அடையாள மான எழுத்தை உண்மையாக உண்பவர்கள் மோட்ச வீட்டை யடைவார்கள் என்பது கருத்து. (6)
---------
137. வீடகமாக விழைந்தொல்லைவேண்டுமேல்
கூடகத்திற் சோதியோ டொன்று,
(பதவுரை) வீடகமாக = மோட்சத்தையடைய, விழைந் து=ஆசைப்பட்டு, ஒல்லை---சீக்கிரமாக, வேண்டுமேல் = விரும் புவார்களானால், கூடகத்தில் சோதியோடு ஒன்று - கூடப்பிர மத்தினுடன் கலந்து வருவாயாக. (எ-று.)
(கருத்துரை.) மோட்ச வீட்டை யடையவிரும்புவோர்கள் கூடகப் பிரமத்தை விரும்பி அதனுடன் கலக்க வேண்டும் என் பது கருத்து.
---------
138. பூரித்து நின்ற சிவனைப் புணரவே
பாரித்ததாகுங் கருத்து.
(பதவுரை.) பூரித்து நின்ற = எங்குங்கலந் திருந்த . சிவனைப் புணரவே =சிவபெருமானோடுகூடினால, கருத்து --மனமானது, பாரித்ததாகும் - பெருமையை யுடையதாகும். (எ-று.)
(கருத்துரை.) சர்வபிராணிகளிடத்தில் வியாபித் திருக் கின்ற சாவேஸ்வரனைக் கலந்தால் எண்ணமானது சுத்தமுடைய தாகும் என்பது கருத்து.
---------
139. இரேசகமாற்றி யிடையறாதே நிற்கில்
பூரிப்ப துள்ளே சிவம்.
(பதவுரை) இரேசகம் ஆற்றி = இரேசகத்தைச் செய்து, இடையறாதேநிற்கில் = மத்தியில் விடாமலிருந்தால், சிவம் = சர்வேஸ்வரனானவன், உள்ளே பூரிப்பது = உள்ளே நிறைந்திருப் பவனாவான். (எ - று.)
(கருத்துரை) இரேசகம் யென்னும் வழியைக் கிரமத்து டன் இடைவிடாமற் செய்தால் சிவபெருமானானவன் உள்ளே மலிந்திருப்பவனாவான் என்பது கருத்து. (9)
---------
140. சிந்தையில் நின்ற நிலைவிசும்பிற் சாக்கிரமாம்
சந்திரனிற் றோன்று முணர்வு . [
(பதவுரை) சிந்தையில் நின்றநிலை = மனத்திலுண்டான உண்மையினால், விசும்பில் = ஆகாயத்தில், சாக்கிரமாம் = சாக்கி ராவஸ்தையாகும் (ஆகையால்) உணர்வு = உணர்ச்சியானது, சந் திரனில் தோன்றும் - சந்திரகலையில் வெளிப்படும். (எ - று)
(கருத்துரை.) மனோநிலையானது சந்திரனில் சாக்கிராவஸ் தையில் உணர்ச்சி ரூபமாக வெளிப்படும் என்பது கருத்து. (10)
---------
5. உருவொன்றி நிற்றல்.
141. எள்ளகத் தெண்ணெயிருந்ததனை யொக்கு
உள்ளகத்தீச னொளி.
[மே (பதவுரை) உள்ளகத்தீசன் ஒளி - மனத்திலே யிருக்கின்ற ஜெகதீஸ்வரனுடைய தேஜோமயமானது, எள்ளகத்து எண் ணெய் இருந்தனை ஒக்கும் - எள்ளினிடத்து எண்ணெய் வியாபித் திருந்ததை யொப்பாகும். (எ-று.)
ஜெகம் இருந்தனை இருக்கும். (எ-று.)
(கருத்துரை) - சர்வேஸ்வரன் ஒவ்வொரு ஆன்மாக்களு டைய மனத்திலும் கலந்திருப்பது எள்ளிடத்து எண்ணெய்கலந் திருப்பது போலாகும் என்பது கருத்து. (1)
---------
142. பாலின்க ணெய்போற் பரந்தெங்கு நிற்குமே
நூலின்கணீச னுழைந்து.
(பதவுரை.) நூலின்கண் ஈசன் நுழைந்து - சர்வேஸ்வர னானவன் நூலின்கண்ணேகலந்து, பாலின் கண்நெய்போல் - பாலிற் கலந்திருக்கிற நெய்யைப்போல, பரந்து எங்கும் நிற்கும் = எவ்விடத்திலும் கலந்திருக்கும். (எ-று.)
(கருத்துரை.) பாலில் நெய்கலந் திருப்பதுபோல சர்வேஸ் வரன் சகல ஆன்மாக்களிலுங் கலந்திருப்பான் என்பது கருத்து.
---------
143. கரும்பினிற் கட்டியுங் காய்பாலி னெய்யும்
இரும்புண்ட நீரு மியல்பு.
(பதவுரை) கரும்பினிற்கட்டியும் = கரும்பினிடத்து வெல் லமும், காய்பாலில் நெய்யும் = காய்கின்றபாலினிடத்து நெய்யும், இரும்புண்டநீரும் - இரும்பினால் உண்ணப்பட்டஜலமும், இயல் பு = சர்வேஸ்வரனுடைய இலட்சணங்களாம். (எ - று.)
(கருத்துரை.) சர்வேஸ்வரனுடைய லட்சணங்கள் மேலே சொன்ன பொருள்களின் குணங்கள் போன்றவை என்பது கருத்து.(3)
---------
144. பழத்தினிரதம்போற் பரந்தெங்கு நிற்கும்
வழுத்தினா லீச னிலை.
(பதவுரை) வழுத்தினால் - துதி செய்தால், ஈசன்நிலை = சர்வேஸ்வரனுடைய உண்மைநிலையானது, பழத்தின் இரதம் போல் பழங்களினுடைய இரசத்தைப்போல, பரந்து எங்கும் நிற்கும் = எவ்விடத்தும் வியாபித்து நிற்கும். (எ-று.)
(கருத்துரை) சர்வேஸ்வரனுடைய வியாபகமானது பழத் தின்கண் இரதம் போன்றதாகும் என்பது கருத்து. (4)
---------
145. தனுவொடுதோன்றுமே தானெல்லாமாகி
யணுவதுவாய் நிற்குமது.
(பதவுரை) தான் எல்லாம் ஆகி = தானே எல்லாப் பொ ருள்களாகியும், அணுவதுவாய் நிற்கும் அது = அணுரூபமாயும் அப்பொருளானது, ததுவொடுதோன்றும் = இந்தச் சரீரத்துட னேயே உண்டாகும். (எ-று.)
(கருத்துரை.) எல்லாமாகியும் அணுவாகியு மிருக்கின்ற பொருளானது சரீரத்துடனேயுண்டாகும் என்பது கருத்து. (5)
---------
146. வித்து முளைபோல் விரிந்தெங்கு நிற்குமே
ஒத்துளே நிற்கு முணர்வு.
(பதவுரை) உள்ளே ஒத்துநிற்கும் உணர்வு = மனத்தில் ஒத் திருக்கின்ற உணர்ச்சியானது, வித்தும் முளைபோல் = விதையை யும் முளையையும் போல, விரிந்து எங்கும் நிற்கும் - எவ்விடத்துங் கலந்து நிற்கும். (எ-று.)
(கருத்துரை) வித்தின் முளையைப்போல இறைவன் சகல உயிர்களிலுங் கலந்திருப்பான் என்பது கருத்து (6)
---------
147. அச்ச மாங்கார மகத்தடக்கி னாற்பின்னை
நிச்சயமா மீச னிலை.
(பதவுரை.) அச்சம் ஆங்காரம் - பயத்தையும் அகங்காரத் தையும், அகத்து அடக்கினால் - மனத்திலடக்கினால், பின்னை - பிறகு, ஈசன்நிலை = சர்வேஸ்வரனுடைய உண்மை நிலையானது, நிச்சயமாம் - உண்மையாக விளங்கும். (எ-று.)
(கருத்துரை.) அச்சத்தையும் அகங்காரத்தையும் அடக்கு கின்றவர்களுக்கே இறைவனுடைய குணம் வெளிப்படும் என் பது கருத்து.
---------
148. மோட்டினீர் நாற்ற முளைமுட்டைபோலு
வீட்டுளே நிற்கு மியல்பு .
மே (பதவுரை) வீட்டுளே நிற்கும் இயல்பு =நாம் சரீரத்திற்குள் ளிருக்கின்ற இயல்பானது, மோட்டிநீர் நாற்றம் = மோட்டிலே யுள்ள நீர்நாற்றத்தையுடைய, முளை முட்டைபோலும் = முளையா னது முளைக்கின்ற எருமுட்டைபோலும். (எ-று)
---------
149. நினைப்பவர்க்கு நெஞ்சத்துள் நின்மலனாய் நிற்கும்
அனைத்துயிர்க்குந் தானாமவன்
(பதவுரை.) அனைத்துயிர்க்குந்தானாம் அவன் = எல்லாவு யிர்களுக்கும் ஒருவனாயிருக்கின்ற அவன், நினைப்பவர்க்கு = தன்னை உண்மையாக நினைப்பவர்களுடைய, நெஞ்சத்துள் = மனத்தினுள்ளே, நின்மலனாய்நிற்கும் - பரிசுத்தனாயிருப்பான்.
(கருத்துரை.) இறைவன் தன்னை உள்ள படியே நினைப்பவர் களுடைய மனத்தினால் பரிசுத்தனாக எழுந்தருளியிருப்பான்
என்பது கருத்து. (9)
---------
150. ஓசையினுள்ளே யுதிக்கின்றதொன்றுண்டு
வாசமலர் நாற்றம் போல் வந்து.
(பதவுரை) வாசமலர் நாற்றம் போல் வந்து = வாசனை பொ ருந்திய மலரினுடைய சுகந்தத்தைப் போல வந்து, ஓசையி னுள்ளே உதிக்கின்றது, ஒன்று உண்டு = சத்தத்தினுள் தோன் றுவது ஒரு பொருளிருக்கின்றது. (எ-று.)
(கருத்துரை) சத்த தன் மாத்திரையினிடமாக பூவின் மணம் போல வரும்பொருள் ஒன்றிருக்கிறது என்பது கருத்து.
---------
6. முத்திகாண்டல்.
151. மனத்தோடுறுபத்தி யாங் காரஞ்சித்தம்
அனைத்தினு மில்லையது.
(பதவுரை.) அது - முத்தியானது, மனத்தோடுறுபுத்தி யாங்காரம் சித்தம் = மனம் புத்தி ஆங்காரம் சித்தம் என்றும், அனைத்தினும் இல்லை - எல்லாவற்றிலுமில்லை. (எ-று.)
(கருத்துரை) மனம், புத்தி, ஆங்காரம், சித்தம் என்னும் நான்கினுள்ளும் மோட்சமில்லை என்பது கருத்து.
---------
152. வாக்குங்கருத்து மயங்குஞ் சமயங்கள்
ஆக்கிய நூலினு மில்.
(பதவுரை.) வாக்குங் கருத்தும் = வசனமும் எண்ண மும், மயங்குஞ் சமயங்கள் = மயங்குகின்ற சமயங்களானவை ஆக் கிய = உண்டாக்கின, தூலினுகில் - சாஸ்திரங்களிலுமில்லை.
(கருத்துரை.) எந்தச் சாஸ்திரங்களிலும் மனோவாக்குகள் மயங்குகின்ற காலம் சொல்லப்படவில்லை என்பது கருத்து. (2)
---------
153. உருவமொன்றில்லை யுணர்வில்லையோதும்
அறுவமுந் தானதுவே யாம்.
(பதவுரை) உருவம் ஒன்று இல்லை - ஒருரூபமுமில்லை, உணர்வு இல்லை = உணர்ச்சியுமில்லை, ஓதும் = சொல்லப்படுகின்ற அருவமும் தான் அதுவேயாம் - அருவப்பொருளும் அதுவேயா கும். (எ - று.)
(கருத்துரை) உருவம் உணர்வு இவைகளில்லாத பொருள் அருவமேயாகும் ஆகையால் அதை நாடினால் முத்திகாண்டலா கும் என்பது கருத்து.
---------
154. தனக்கோ ருருவில்லை தானெங்குமாகி
மனத்தகமாய் நிற்கு மது.
(பதவுரை) அது தனக்கு ஒரு உருவில்லை = அப்பொரு ளுக்கு ஒரு ரூபமுமில்லை, (ஆகையால்) தான் எங்குமாகி = தான் சர்வ இடங்களிலும் வியாபித்ததாகி, மனத்தகமாய் நிற்கும் - மனத்திலிடத்திலுங் கலந்திருக்கும். (எ-று.)
(கருத்துரை.) சர்வேஸ்வரன் என்னும் பொருளானது எவ் விடத்திலும் வியாபித்து நிற்பதொன்றாகையால் அன்பர்களு டைய மனத்தின்கண்ணுமிருக்கும் என்பது கருத்து. (4)
---------
155. பெண்ணா ணலியென்னும் பேரொன் றில
விண்ணாகி நிற்கும் வியப்பு. (தாகி
(பதவுரை) வியப்பு = அப்பொருளினுடைய வியப்பானது பெண் ஆண் அலியென்னும் பேர் - பெண் என்றும் ஆண் என் றும் அலியென்றும் வழங்குகின்றபேர், ஒன்று இலதாகி = ஒன்றா யினும் இல்லாததாய், விண்ணாகிநிற்கும் = அகாயமாயிருக்கும்.
(குருத்துரை) சர்வேஸ்வரன் ஆண், பெண், அலியென்று சொல்லாதபடி ஆகாயமாயிருக்கும் என்பது கருத்து. (5)
---------
156. அனைத்துருவ மாய வறிவையகலில்
தினைத் துணையு மில்லை சிவம்.
(பதவுரை) அனைத்து உருவமாய் = எல்லா ரூபங்களையு மடைகின்ற, அறிவை அகலில் = அறிவை விட்டால், சிவம் - சிவ மானது, தினைத்துணையும் இல்லை = தினையளவுமில்லையாகும்.
(கருத்துரை.) சர்வரூபமாயு மிருக்கின்ற அறிவைவிட்டால் சிவமில்லை என்பது கருத்து. (6)
---------
157. துணிமுகத்துக்காதியாத் துன்னறிவின்றி
அணிதாரிரண்டு விரல்.
(பதவுரை.) துணிமுகத்துக்கு ஆதியாக = வருந்துகின்ற முகத்துக்கு முதன்மையாக, துன் அறிவின்றி=நெருங்கிய அறி வில்லாமல், அணிதார் இரண்டு விரல் = அணிதாராயிருப்பது இரண்டு விரலாகும். (எ-று.) (7)
---------
158. மயிர்முனையிற்பாதி மனத்தறிவுண்டேல்
அயிர்ப்புண்டங் காதி நிலை.
(பதவுரை) மயிர்முனையிற்பாதி - ஒருமயிரினுடைய முனை யிற் பாதியினளவு, மனத்து அறிவு உண்டேல் - மனத்தினிடத் தில் அறிவு இருக்குமானால், அங்கு ஆதிநிலை = அவ்விடத்தில் முதற்பொருளினுடைய உண்மைநிலையானது, அயிர்ப்பு உண்டு = அயிர்ப்பு உண்டாகும். (எ-று.)
(கருத்துரை) சர்வேஸ்வரனுடைய உண்மை நிலையானது மயிர் முனையிற்பாதியினளவு கை கூடுமானால் முத்தி காணுதலா கும் என்பது கருத்து. (8)
---------
159. தற்பரமான சதாசிவத்தோ டொன்றில்
உற்றறி வில்லை யுயிர்க்கு.
(பதவுரை .) தற்பரமான = ஞான பரமாகிய, சதாசிவத் தோடு ஒன்றில் - சதாசிவத்தினுடன் கலந்தால், உயிர்க்கு - ஆன் மாவுக்கு, உற்றறிவில்லை = உற்றறியு மறிவு இல்லையாம். (எ-று.)
(கருத்துரை) சதாசிவத்தோடு கலந்துவிட்டால் அறிவுக் குச் சொந்தவுணர்ச்சி யுண்டாவதில்லை என்பது கருத்து. (9)
---------
160. உறக்க முணர்வு பசிகெடப் பட்டால்
பிறக்கவும் வேண்டா பிறப்பு.
(பதவுரை); உறக்கம் = தூக்கமும், உணர்வு - உணர்ச்சி யும், பசி = பசியும், கெடப்பட்டால் - கெட்டால், பிறப்பு - ஜென் மங்களில், பிறக்கவும் வேண்டா = பிறக்க வேண்டியதில்லை. (எ-று)
(கருத்துரை.) உறக்க முதலியவை யொழிந்தால் பிறவி யில்லை என்பது கருத்து. (10)
---------
7. உருபா தீதம்.
161. கருவின்றி வீடாங் கருத்துற வேண்டில்
உருவின்றி நிற்கு முணர்வு.
(பதவுரை.) கருவின்றி == கருவில்லாமல், வீடாய் = மோட் சமாக, கருத்து உறவேண்டி = மனஞ்சம்மதிக்குமானால், உணர் வு - உணர்ச்சியானது, உருவின்றிநிற்கும் = அரூபமாகவிருக்கும். (எ-று.)
(கருத்துரை.) ஜென்மத்தை விரும்பாமல் மோட்சத்தைய டைய விரும்பினால் உணர்ச்சியானது ரூபத்தை விரும்பாது என் பது கருத்து.
---------
162. பிறத்தலொன் றின்றிப் பிறவாமை வேண்
அறுத்துறுவ மாற்றி யிரு. டில்
பதவுரை) பிறத்தல் ஒன்று இன்றி - பிறப்ப தொன்றில் லாமல், பிறவாமை வேண்டில் = பிறவாநெறியை விரும்பினால், உருவம் அறுத்து = ரூபத்தையறுத்து, மாற்றியிரு = வேறுபடுத்
தியிருக்கக்கடவாய். (எ-று.)
(கருத்துரை) ஜென்மவேரை யொழிக்க வேண்டுமானால் ரூபத்தை மாற்றி யிருக்க வேண்டும் என்பது கருத்து.(2)
---------
163. உருவங்க ளெல்லா மறுத்தற மாற்றில்
கருவேது மில்லை தனக்கு.
(பதவுரை) உருவங்களெல்லாம் = ரூபங்களெல்லாம், அறுத்து = நீக்கி, அறமாற்றில் = முழுமையும் மாற்றினால், தனக் கு = ஆன்மாவுக்கு, கருஏதுமில்லை = எந்தச்சென்மமுமில்லை. (எ-று.)
(கருத்துரை.) சர்வரூபங்களையும் ஒழித்தால் பிறகு ஜென்ம மில்லை என்பது கருத்து. (3)
---------
164. கறுப்பு வெளுப்பு சிவப்புறுபொன்பச்சை
யறுத்துறுவ மாற்றி யிரு.
(பதவுரை) கறுப்பு = கறுப்பும், வெளுப்பு = வெளுப்பும், சிவப்பு = சிவப்பும், பொன் = மஞ்சளும், பச்சை = பச்சையும் ஆகிய, உருவம் = ரூபங்களை, அறுத்து = நீக்கி, மாற்றியிரு = வேறு சிவரூபத்தையடைந்திரு . (எ-று.)
(கருத்துரை) சகலநிறங்களையும் வெறுத்து சொரூபத்தை யடையவேண்டும் என்பது கருத்து. (4)
---------
165. அனைத் துருவமெல்லா மறக்கெடுத்து நின்றால்
பினைப்பிறப் பில்லையாம் வீடு.
(பதவுரை) அனைத்து உருவம் எல்லாம் = சகல ரூபங்களை யும், அறக்கெடுத்து நின்றால் = முழுமையுங் கெடுத்திருந்தால், பினை = பிறகு, பிறப்பில்லை = ஜென்மம் உண்டாவதில்லை, வீடு ஆம் = மோட்சமுண்டாகும். (எ-று.)
(கருத்துரை.) சகலரூபங்களையும் ஒழித்தால் மோட்சமென் பது கை கூடும் என்பது கருத்து. (5)
---------
166. நினைப்புமறப்பற்று நிராகரித்து நின்றால்
தனக்கொன்று மில்லை பிறப்பு.
(பதவுரை) நினைப்பும் மறப்பும் அற்று - நினைவும் மறப்பு மற்று, நிராகரித்து நின்றால் = விட்டிருந்தால், தனக்கு பிறப்பு ஒன்றுமில்லை = ஒருவனுக்கு ஒரு பிறப்பு மில்லையாம். (எ-று.)
(கருத்துரை.) நினைப்பு மறப்பற்றவர்களுக்கு ஜென்ம மில்லை என்பது கருத்து.
---------
167. குறித்துருவ மெல்லாங் குறைவின்றி மாற்றில்
மறித்துப் பிறப்பில்லை வீடு.
(பதவுரை.) குறித்து உருவமெல்லாம் = சொல்லப்பட்ட ரூபங்களெல்லாம், குறைவின்றி = யாதொரு குறைவுமில்லாமல், மாற்றின் - மாற்றினால், மறித்துப்பிறப்பில்லை = மறுஜன்மம் உண்டாவதில்லை, வீடு - மோட்சமுண்டாகும். (எ-று.)
(கருத்துரை) சர்வரூபங்களையும் மாற்றினால் வேறு பிறப் பில்லை மோட்சமுண்டாகும் என்பது கருத்து.
(7)
---------
168. பிதற்று முணர்வை யறுத்துப் பிரபஞ்ச
விகற்ப முணர்வதே வீடு.
(பதவுரை.) பிதற்று முணர்வையறுத்து - பிதற்றுகின்ற உணர்ச்சியை நீக்கி, பிரபஞ்சவிகற்பம் - உலகபேதத்தை, உணர் வதேவீடு = உணர்ந்து கொள்வதே மோட்சமாகும். (எ - று.)
(கருத்துரை.) சிலவிகற்பமான உணர்ச்சியை நீக்கி உலக விகற்பத்தை உணர்ந்து கொள்வதே மோட்சமாகும் என்பது கருத்து.
(8)
---------
169. பிறப்பறுக்க வீடாம் பேருவமை யின்றி
அறுத்துருவ மாற்றி யிரு.
(பதவுரை) பேர் உவமையின்றி - பெரிய ஒப்புவமை யில் லாமல், உருவம் அறுத்து = சர்வரூபங்களையும் நீக்கி, மாற்றி யிரு = மாறுதல் செய்திருந்தால், பிறப்பறுக்க வீடாம் = துறவி
யையொழிக்கும்படியான மோட்சமுண்டாகும். (எ - று.) (9)
---------
170. ஓசையுணர்வோடுயிர்ப்பின்மையற்றக்கால்
பேசவும் வேண்டா பிறப்பு.
(பதவுரை.) ஓசை = ஓசையையும், உணர்வோடு = உணர்ச் சியையும், உயிர்ப்பின்மை - பெருமூச்சில்லாமையையும், அற்றக் கால் நீங்கினால், பிறப்பு - ஜென்மம் உண்டென்று, பேசவும் வேண்டா = பேசவேண்டியதேயில்லை. (எ-று.)
(கருத்துரை.) ஓசை முதலியவைகளை ஒழித்தால் ஜென்ம மில்லை என்பது கருத்து.
(10)
---------
8. பிறப்பறுதல்
171. தன்னை யறிவு மறிவுதனைப் பெறில்
பின்னைப் பிறப்பில்லை வீடு .
(பதவுரை.) தன்னை அறியும் அறிவுதனைப்பெறில் = தன் னைத் தானே உணர்கின்ற உணர்ச்சியைப் பெற்றால், பின்னை பிறப்பில்லை = பிறகு ஜென்மமென்பது உண்டாவதில்லை. (ஆனால்) வீடு - மோட்சமுண்டாகும். (எ - று.)
(கருத்துரை.) தன்னைத்தானறியும் உணர்ச்சி ஒருவனுக்கு உண்டானால் மோட்சவீடுகை கூடும் என்பது கருத்து.
---------
172. அறம்பாவ மாயு மறிவுதனைக் கண்டால்
பிறந்துழல வேண்டா பெயர்ந்து.
(பதவுரை.) அறம்பாவம் ஆயும் - தருமத்தையும் பாவத்தை யும் ஆராய்கின்ற, அளவுதனைக் கண்டால் - உணர்ச்சியையுணர்ந் தால், பெயர்ந்து = பலதடவைகளில், பிறந்துழல் வேண்டா - ஜென்மித்து வருந்த வேண்டியதில்லை. (எ-று)
(கருத்துரை.) அறம்பாவங்களை யுணர்ந்தவர்கள் வேறு ஜென்மம் எடுப்பதில்லை என்பது கருத்து.
(2)
---------
173 சிவனுருவந் தானாய்ச் செறிந்தடங்கி நிற்கில்
பவநாச மாகும் பரிந்து.
[ (பதவுரை) சிவன் உருவம் தானாய் சிவசொருபமே தன் னுடைய ரூபமாக, செறிந்து அடங்கி நிற்கில் கலந்து பொறு மையாயிருந்தால், பரிந்து = விரும்பி, பாவநாசமாகும் = சென் மமாறும். (எ-று.)
(கருத்துரை.) தாம் சிவமாக உண்மையாகக் கொள்பவர்கள் ளுக்கு ஜென்மமில்லையாகும் என்பது கருத்து.
---------
174. உறக்கமுணர்வோ டுயிர்ப்பின்மை யற்றால்
பிறப்பின்றி வீடாம் பரம்
(பதவுரை) உறக்கம் = நித்திரையும், உணர்வு - நல்லறி வும், உயிர்ப்பின்மை = உயிர்ப்பில்லா திருத்தலுமாகிய இவை கள், அற்றால் - நீங்கினால், பிறப்பின்றி = ஜென்மமில்லாமல், பரம்வீடாம் - மேலாகிய மோட்சமுண்டாகும். (எ - று.)
(கருத்துரை.) ஊண் உறக்கமுதலியவைகளை யறவே யொழித்தவர்களுக்குப் பிறவியில்லை என்பது கருத்து. (4)
---------
175. நினைப்பு மறப்பு நெடும்பசியு மற்றால்
அனைத்துலகும் வீடா மது. (பதவுரை.) நினைப்பும் மறப்பும் நெடும்பசியும் அற்றால் = எண்ணுதலும் மறத்தலும் மிக்க பசியும் ஒழிந்தால், அனைத்துலகும் வீடாம் அது = எல்லாவுலகங்களும் அந்த மோட்ச வீடாகும். (எ-று.)
(கருத்துரை) நினைப்பு முதலியவைகளை ஒழியப் பெற்றவர் களுக்கு எல்லாவுலகங்களும் மோட்சவுலகமாகவே தோன்றும் என்பது கருத்து.
---------
176. உடம்பிரண்டுங் கெட்டா லுறுபயனொன்று(ண்டு
திடம்படு மீசன் றிறம்.
(பதவுரை) உடம்பிரண்டுங்கெட்டால் = ஸ்தூலதேகம் சூட்சும தேகங்களாகிய இரண்டுங்கெட்டால், உறுபயன் ஒன்று உண்டு = வரக்கூடிய பிரயோசனம் ஒன்றிருக்கிறது, (அதாவது) ஈசன் திறம் திடப்படும் சர்வேஸ்வரனுடைய சக்தி திடப்படு தலாகும். (எ - று.)
(கருத்துரை) இரண்டு உடம்பையும் நசிப்பித்தாலே சிவன ருள் கை கூடும் என்பது கருத்து.
(6)
---------
177. தன்னை யறிந்து செறிந்தடங்கித் தானற்றா
பின்னைப் பிறப்பில்லை வீடு.
(பதவுரை) தன்னையறிந்து - தன்னைத்தானுணர்ந்து, செறிந்து அடங்கி தான் அற்றால் = நின்றடங்கி தானென்னும் அகங்காரம் அழிந்தால், பின்னைம் பிறப்பில்லை வீடு = பிறகு ஜென் மம் வராமல் மோட்சமுண்டாகும். (எ-று.)
(கருத்துரை.) தன்னைத்தான் அறிபவனுக்கு மோட்சமே கை கூடும் என்பது கருத்து.
(7)
---------
178. மருளன்றி மாசறுக்கின் மாதூவெளியாய்
இருளின்றி நிற்கு மிடம்.
(பதவுரை) மருளன்றி - மயக்கமில்லாமல், மாசறுக்கின் = குற்றங்களை யறுத்தால், மாது வெளியாய் - மகத்தான பரிசுத்த மாகிய தேஜோமயமாய், இருளின்றி நிற்கும் இடம் = அஞ்ஞான மில்லாமல் நிற்கின்ற இடங்கிடைக்கும். (எ-று.)
(கருத்துரை) மாய்கையை யொழித்தவர்கட்கு மோட்சங் கை கூடும் என்பது கருத்து.
---------
179. விகாரங் கெடமாற்றி மெய்யுணர்வு கண்டால்
அகாரமாங் கண்டீ ரறிவு.
(பதவுரை) விகாரங்கெடமாற்றி - மனோவிகாரமானது கெடும் வண்ணம் மாற்றி, மெய்யுணர்வு கண்டால் - உண்மையான உணர்ச்சியைக் கண்டால், அறிவு - அறிவானது, அகாரமாம் -
அகாரமாகும். (எ-று)
(கருத்துரை.) மனோவிகார மற்றவர்களுடைய அறிவு ஞான மயமாகும் என்பது கருத்து.
---------
180. சிந்தை யாங்காரஞ் செறிபுல னற்றக்கால்
முந்தியே யாகுமாம் வீடு.
(பதவுரை.) சிந்தை = சிந்தித்தலும், ஆங்காரமும் = அகங் காரமும், செறிபுலன் = நெருங்கிய ஐம்புலன்களும், அற்றக் கால் = ஒழிந்தால், வீடு - மோட்சமானது, முந்தியே யாகுமாம் = முன்னதாகவே கைகூடுமாம். (எ-று.)
(கருத்துரை.) அந்தக்கரணங்களின் சேஷ்டைகள் ஒழியப் பெற்றார்க்கு வீடு சீக்கிரத்தில் கை கூடும் என்பது கருத்து. (10)
(9)
---------
9. தூயவொளி காண்டல்.
181. தோன்றியதெல்லாந்தொடக்கறுத்துத் தூய் வெளியாய்த்
தோன்றியக்காற் றாயவொளி.
(பதவுரை.) தோன்றிய எல்லாம் = காணப்பட்ட யாவற் றையும், தொடக்கறுத்து = நீக்கி, தூய்வெளியாய் தோன்றியக் கால் = பரிசுத்தமான வெளியாகக்காணப்பட்டால், தூய வொளி = ஞானோதயமுண்டாகும். (எ-று.)
(கருத்துரை.) பரிசுத்தவொளியாகக் காணப்பட்டால் ஞானோதயமுண்டாகும் என்பது கருத்து.
---------
182. தெளிவாயதேசவிளக்கொளியைக்காணில்
வெளியாய வீடதுவே யாம்.
(பதவுசை.) தெளிவாய - தெளிந்த, தேசவிளக்கொளி யைக் காணில் = உள்நாட்டு விளக்கொளியைத்தெரிசித்தால், வெளியாய = யாவராலும் வெளிப்படையாக அங்கீகரிக்கக்கூடி ய, வீடதுவேயாம் =மோட்சமானது அதுவேயாகும். (எ-று.)
(கருத்துரை.) அந்தர்முகத்தில் காணப்படுந் தேஜோம யமே மோட்சமாகும் என்பது கருத்து.
(2)
---------
183. மின்போலுருவ விளக்கொளிபோல் மேற்காணில்
முன்போல மூலம் புகும். (
(பதவுரை) மின்போலுருவ = மின்னலைப்போல் சொரூ பத்தையும், விளக்கொளிபோல் விளக்கொளிபோல் தேஜோ மயத்தையும், மேற்காணின் = வெளிப்படையாகத் தரிசித்தால், முன்போல மூலம் புகும் = முன் போல மூலத்திற்புகுவதாகும். (எ - று.)
(கருத்துரை) தேஜோமயத்தையுடைய பொருளைத் தரி சித்தால் மோட்சமடையலாம் என்பது கருத்து.
(3)
---------
184. பளிங்கு வலம்புரி பானிகர்த்த தாகில்
துளங்கொளியாந் தூய தெறி.
(பதவுரை.) பளிங்கு = பளிங்கையும், வலம்புரி = வலம்புரி யையும், பால் பாலையும், நிகர்த்ததாயின் = ஒப்பானதானால், துளங்கொளியாந் தூயநெறி = பரிசுத்தம் பொருந்திய சன்மார்க் கமானது மிக்கதேஜோமயத்தை யுடையதாகும். (எ-று) (4)
---------
185. சங்கு நிறம்போற் றவள வொளிகாணில்
அங்கையி னெல்லியே யாம். (பதவுரை) சங்குநிறம் போல் - சங்கினுடைய நிறத்தைப் போல், தவளவொளிகாணில் = வெண்மை நிறத்தைத் தெரிசித் தால், அங்கையின் நெல்லியேயாம் - தேஜோமயமானது உள் ளங்கையி லுள்ள நெல்லிக்கனி போலாகும். (எ-று) (5)
---------
186. துளங்கிய தூண்டா விளக்கொளிகாணில்
விளங்கிய வீடாம் விரைந்து. (பதவுரை) துளங்கிய - விளங்கின, தூண்டா விளக்கொ ளிகாணில் = தூண்டாத தேஜோமயத்தைத் தரிசித்தால், விரைந்து = சீக்கிரம், விளங்கியவீடாம் - விளங்குகின்ற மோட்ச
முண்டாகும் (எ-று.)
(கருத்துரை) தேஜோமயப்பொருளைத் தரிசித்தால் மோட் சங் கை கூடும் என்பது கருத்து.
---------
187. மின்மினிபோன்ற விளக்காகத் தான்றோன்றில்
அன்னப் பறவையே யாம்.
(பதவுரை.) மின்மினி போன்ற = மின்னாம் பூச்சைப் போன்ற, விளக்காக தான்தோன்றில் விளக்காகக் காணப் பட்டால், அன்னப்பறவையேயாம் - அன்னப்பட்சி போல் உண் மையை உணரக்கூடுமாம். (எ-று)
(கருத்துரை) தேஜோ மயதரிசனத்தால் உண்மைப் பொ ருளையடையக் கூடும் என்பது கருத்து.
(7)
---------
188. உள்ளொளி தோன்றி லுணரி லருளொளி
அவ்வொளி யாதி யொளி
(பதவுரை) உள்ளொளிதோன்றில் - அந்தர்முக ஒளியா னது காணப்பட்டால், அருளொளி = திருவருள் விளக்கமா னது, அவ்வொளி = அந்தவொளியேயாகும். ஆதிஒளி = (ஆகை யால்) அதுபிரதானமான ஒளியாகும். (எ-று.)
---------
189. பரந்த விசும்பிற் பரந்தவொளிகாணில்
பரம்பரமே யாய வொளி.
(பதவுரை) பரந்த விசும்பில் = எங்கும் வியாபித் திருக் கின்ற ஆகாயத்தில், பரந்தவொளிகாணில் - பரவியிருக்கின்ற தேஜஸைக்கண்டால், பரம்பரமேயாயவொளி = அந்த ஒளியே இறைவனாகும். (எ-று.)
(கருத்துரை) தேஜோமயமே இறைவனுடைய சொரூபம் என்பது கருத்து .
---------
190. ஆதியொளியாகி யாள்வானுந் தானாகி
ஆதி யவனுருவு மாம். (பதவுரை) ஆதி = இறைவனானவன், ஒளியாகி = தேஜோ ரூபமுடையவனாகியும், ஆள்வானுந்தானாய் = ஆண்டருள் செய்ய வனுந்தானேயாகியும், ஆதியவனுருவுமாம் = ஆவது ஆதியிலி
ருந்து அவனுடைய சொரூபமேயாகும். (எ-று.)
(கருத்துரை.) சர்வம் சிவசொரூபம் என்பது கருத்து. (10)
----------
10. சதாசிவம்.
191. பத்துத் திசையும் பரந்த கடலுலகும்
ஒத்தெங்கும் நிற்குஞ் சிவம்.
(பதவுரை) பத்து திசையும் = பத்துத்திசைகளிலும், பரந்த = பரவியிருக்கின்ற . கடல் = சமுத்திரமும், உலகம் = உல கங்களிலும், ஒத்து =ஒரே தன்மையாய், சிவம் = சிவமென்னும் பொருளானது, எங்கும் நிற்கும் = எவ்விடத்திலுமிருக்கும். (எ-று.)
(கருத்துரை.) சிவபெருமான் எங்குங் கலந்திருப்பான் என்பது கருத்து. (1)
---------
192. விண்ணிறைந்து நின்று விளங்குஞ் சுடரொளிபோல்
உண்ணிறைந்து நிற்குஞ் சிவம்.
(பதவுரை) விண்ணறைந்து நின்று = ஆகாயத்தில் பரவி யிருந்து விளங்கும் = விளங்குகின்ற சடரொளி போல் - தேஜோ மயப் பொருளைப்போல, சிவம் - சிவமானது, உண்ணிறைந்து நிற்கும் = இருதயத்தில் கலந்திருக்கும். (எ-று)
(கருத்துரை.) சர்வேஸ்வரனானவன் சகல ஆன்மகோடிக ளுள்ளும் கலந்திருப்பான் என்பது கருத்து. (2)
---------
193. ஆகமுஞ் சீவனு மாசையுந் தானாகி
ஏகமாய் நிற்குஞ் சிவம்.
(பதவுரை) ஆகமும் = சரீரமும், சீவனும் - உயிரும், ஆசை யம் - ஆசையும், தானாகி = தானேயாய், சிவம் = சிவமானது, ஏகமாய் நிற்கும் = ஒன்றாக விருக்கும். (எ-று.)
(கருத்துரை.) சதாசிவமானது எல்லாப் பொருளாகவும் இருக்கும் என்பது கருத்து. (3)
---------
194. வாயுவாய்மன்னுயிராய்மற்றவற்றி னுட்பொருளாய்
ஆயுமிடந் தானே சிவம். (
(பதவுரை.) வாயுவாய் - காற்றாகியும், மன் உயிராய் = நிலை பெற்ற உயிராகியும், மற்று = இன்னும், அவற்றினுட்பொரு ளாய் = அவைகளினுட பொருளாகியும், ஆயும் இடத்தானே சிவம் - ஆராய்கின்ற இடமேசிவமாகும். (எ-று.)
(கருத்துரை.) சர்வபொருள்களிலும் ஆராயுமிடமே சிவ பெருமானாவான் என்பது கருத்து.
---------
195. எண்ணிறந்த யோனி பலவாய்ப் பரந்தெங்கும்
உண்ணிறைந்து நிற்குஞ் சிவம். (
(பதவுரை) எண்ணிறந்த = அளவு சொல்லப்படாத, யோனி = யோனிகளில், பலவாய்ப்பரந்து = பலவகையாகப் பரவி, எங்கும் = எவ்விடத்திலும், சிவம் = சிவபெருமானானவன், உண்ணிறைந்து நிற்கும் = உள் வியாபமாக விருக்கும். (எ - று.)
(கருத்துரை) பலயோனிகளிலும் பலவகையாக வியாபித் திருக்கும் என்பது கருத்து. (5)
---------
196. ஒன்றேதா னூழி முதலாகிப் பல்லுயிர்க்கும்
ஒன்றாகி நிற்குஞ் சிவம். (பதவுரை) ஒன்றேதான் = ஒருபொருளே, ஊழிமுத லாகி = ஊழிக்காலமுதலாகி, பல்லுயிர்க்கும் = சகல ஆன்மாக்க ளுக்குங், ஒன்றாகிநிற்கும் சிவம் - சிவபெருமான் கலந்திருப் பான். (எ - று.)
(கருத்துரை.) சிவபெருமான் ஒருவனே சகலவுயிர்களிலுங் கலந்திருக்கிறவனாவான் என்பது கருத்து. (6)
---------
197. மூலமொன்முகி முடிவொன்றா யெவ்வுயிர்க்
காலமாய் நிற்குஞ் சிவம். (பதவுரை.) மூலமொன்றாகி = காரணமாகிய ஒருபொரு ளாகியும், முடிவு ஒன்றாய் =முடிவுப்பொருள் ஒன்றாகியும், எவ்வு யிர்க்கும் = எல்லாவுயிரகளுக்கும், காலமாய் நிற்கும் சிவம் சிவ மானது காலமாய் நிற்கும். (எ-று.)
(கருத்துரை.) மூலமும் முடிவுமாக விருப்பவன் சதாசி வனே என்பது கருத்து. (7)
---------
198. மண்ணிற்பிறந்த வுயிர்க்கெல்லாந் தானாகி
விண்ணகமே யாகுஞ் சிவம்.
(பதவுரை) மண்ணிற் பிறந்த = உலகத்திலுண்டான, உயிர்க்கெல்லாந்தானாகி = சகலவுயிர்களுக்குந் தானே முதலாகி, விண்ணகமேயாகும் சிவம் - சிவபெருமானானவன் ஆகாயசஞ் சாரியே யாவான். (எ-று.)
(கருத்துரை) சிவபெருமானானவன் உலகத்திலுண்டான ஆன்மகோடிகளுடைய சுழிமுனை ஸ்தானத்தில் சஞ்சரிப்பவனா வான் என்பது கருத்து. (8)
---------
199. தோற்றமது வீடாகித் தொல்லை முதலொன் றாகி
ஏத்தவரு மீச னுளன்.
(பதவுரை.) தோற்றமது வீடாகி = உற்பத்தியே வீடாகி யும், தொல்லை முத லொன்றாகி = பூர்வீகமுதல் ஒரேபொருளா கியும், ஏத்தவரும் ஈசன் உளன் = யாவராலும் துதிசெய்யப்பட்டு வருகின்ற சர்வேஸ்வரன் இருக்கின்றான். (எ-று.)
(கருத்துரை) பிறவி முதல் எல்லாவிடங்களிலும் இருக் கின்ற இறைவனையே உண்மையாக யாவருமுணரவேண்டும் என்பது கருத்து. (9)
---------
200. நிற்கும் பொருளும் நடப்பனவுந் தானாகி
உற்றெங்கும் நிற்குஞ் சிவம்.
(பதவுரை.) நிற்கும் பொருளும் = நிற்கின்ற வஸ்துவும், நடப் பனவுந்தானாகி - நடக்கின்ற பொருளாகியும், உற்று எங்கும் நிற் குஞ் சிவம் - சர்வவிடங்களிலும் சிவம் கலந்திருக்கும். (எ - று.)
கருத்துரை) சகலபொருள்களிலும் இறைவன் கலந்திருப் பான் என்பது கருத்து. (10)
-------------
3. தன்பால்.
1. குருவழி.
201. தன்பா லறியுந் தவமுடையார் நெஞ்சகத் துள்
அன்பா யிருக்கு மரன்.
(பதவுரை) தன்பால் அறியும் = தன்னுடைய பாலை அறி கின்ற, தவமுடையார் - தவத்தையுடையவர்களது, நெஞ்சகத் துள் = மனத்தில், அரன் - சர்வேஸ்வரனானவன், அன்பாயிருக் கும் - அன்புடனேயிருப்பான். (எ - று.)
(கருத்துரை) தன்னைத்தான் அறியவல்லவர் மனத்தின் கண் இறைவன் எழுந்தருளியிருப்பவனாவான் என்பது கருத்து.
---------
202. சிந்தை சிவமாகக் காண்பவர் சிந்தையில்
சிந்தித் திருக்குஞ் சிவம்
(பதவுரை) சிந்தை = தங்களுடைய மனங்களை, சிவமாகக் காண்பவர் = சிவமாகவே பார்ப்பவர்களுடைய, சிந்தையில் - மனத்தின்கண், சிவம் -சிவப்பொருளானது, சிந்தித்து இருக் கும் = எண்ணியிருக்கும். (எ-று.)
(கருத்துரை.) மனத்தைச் சிவமென்றே கொள்வோர்க்கு சிவபெருமான் எழுந்தருளுவான் என்பது கருத்து. (2)
---------
203. குருவி னடிபணிந்து கூடுவதெல்லார்க்
கருவமாய் நிற்குஞ் சிவம்.
(பதவுரை.) குருவின் அடி பணிந்து - ஞானாசிரியனுடைய திருவடிகளை வணங்கி, கூடுவது அல்லார்க்கு = சேராதவர்க ளுக்கு, சிவம் - சிவமானது, அருவமாய்நிற்கும் - ரூபமற்றிருக்கும். (எ-று.)
(கருத்துரை) ஞானாசிரியனுடைய திருவடிகளை உள்ள படியே வணங்கி அவைகளிற்கூடவல்லார்க்கு அவனுடைய திரு வருள் கை கூடுவதாகும் என்பது கருத்து. (3)
---------
204. தலைப்பட்ட சற்குருவின் சன்னதியிலல்லால்
வலைப்பட்ட மான துவே யாம்.
(பதவுரை.) தலைப்பட்ட = உயர்ந்த, சற்குருவின் = ஞானா சிரியனுடைய, சந்நிதியிலல்லாமல் = திருச்சந்நிதானத்தின் முன் னேயல்லாமல், வலைப்பட்டமானதுவேயாம் = வலையிற்சிக்கிய மானதுவேயாகும். (எ-று.)
(கருத்துரை) சர்வஜெந்துக்களும் ஞானாசிரியனுடைய சந்நி தானத்தில் அடங்கியிருக்கவேண்டும் என்பது கருத்து. (4)
---------
205. நெறிப்பட்ட சற்குரு நேர்வழி காட்டில்
பிறிவற் றிருக்குஞ் சிவம்.
(பதவுரை.) நெறிப்பட்ட = ஞானவழியிற் சேர்ந்த, சற் குரு = ஞானாசிரியரானவர், நேர்வழி காட்டில் - உண்மையான வழியை உபதேசித்தால், பிரிவற்றிருக்குஞ் சிவம் = சிவபெருமா னானவன் யாதொரு பிரிவுமின்றிக் கலந்திருப்பான். (எ-று.)
(கருத்துரை.) ஞானாசிரியனுடைய உண்மையான உப தேசத்தால் இறைவன் திருவருள் செய்து கலந்திருப்பான் என் பது கருத்து.
---------
206. நல்லன நூல்பல கற்பினுங் காண்பரிதே
எல்லை யில்லாத சிவம்.
(பதவுரை) நல்லன = நன்மையான, நூல்பல = நூல்கள் பலவற்றை, கற்பினும் - கற்றாலும், எல்லையில்லாத சிவம் = அளவு சொல்லப்படாத வியாபகம் பொருந்திய சிவபெருமானை, காண்பதரிது = தரிசிப்பது மிகவும் அருமையாகும். (எ-று.)
(கருத்துரை) ஞானாசிரியருடைய கிருபை யில்லாமல் அநேக சாஸ்திரங்களைப் படித்திருந்தாலும் சர்வ வியாபகப் பொருளான சிவபெருமானைத் தரிசிப்பது அருமையான காரி யமேயாகும் என்பது கருத்து. (6)
---------
207. நினைப்பு மறப்பு மில்லாதவர் நெஞ்சந்
தனைப் பிரியாது சிவம்.
(பதவுரை) நினைப்பும் மறப்பும் இல்லாதவர் = நினைப்பும் மறப்பும் இல்லாதவர்களுடைய, நெஞ்சந்தனை = மனத்தை, சிவம் - சிவபெருமானானவன், பிரியாது = கலந்திருப்பான்.
(கருத்துரை) சர்வகாலமும் ஒரே சிந்தனையாக இருப்ப வர்களுடைய மனத்தைவிட்டு இறையவன் க்ஷணநேரமும் பிரிந் திருக்கமாட்டான் என்பது கருத்து. (7)
---------
208. ஒன்றிலொன்றில்லாத மனமுடையாருடல்
என்று மொன்றாது சிவம்.
(பதவுரை.) ஒன்றில் = ஒரே பொருளினிடத்தில், ஒன் றாத = கலவாத, மனமுடையாருடல் = மனத்தை யுடையவர்க ளுடைய சரீரத்தில், சிவம் = பரம்பொருளானது, என்றும் ஒன் றாது = எந்தக்காலத்திலுங் கலவாது. (எ - று.)
(கருத்துரை.) ஒரே பொருளைப் பற்றாதவர்களை இறைவ னும் பற்றமாட்டான் என்பது கருத்து.
---------
209. நாட்டமில்லாவிடம் நாட்டமறிந்தபின்
மீட்டு விடாது சிவம்.
(பதவுரை) நாட்டமில்லாத இடம் = எவராலும் நாட் டத்தை யடையப்படாத இடத்தினை, நாட்டம் அறிந்தபின் = உண்மைப் பார்வையால உணர்ந்தபின், சிவன் மீட்டு விடாது = சிவமானது மறுபடியும் திருப்பவிடாது. (எ - று)
(கருத்துரை.) இறைவன் எழுந்தருளியிருக்கும் இடத்தை யுணர்ந்தபின்னர் இறைவன் அவர்களை விடமாட்டான் என்பது கருத்து.
---------
210. பஞ்சமாசத்த மறுப்பவர்க் கல்லா அல்
அஞ்ச லென்னாது சிவம்.
(பதவுரை) பஞ்சமாசத்தம் = பஞ்சமாபாதகம் என்கிற சத் தத்தை, அறுப்பவர்க்கல்லால் = அறுத்தொழிப்பவர்களுக் கல் லாமல், சிவம் == பரம்பொருளானது, அஞ்சல், என்னாது -பயப் படவேண்டாம் என்று சொல்லாது. (எ - று.)
(கருத்துரை.) யாரொருவர் பஞ்சமாபாதகங்களை விட்டு விலகுகின்றார்களோ அவர்களை உண்மையாய்க் காப்பது சிவமே யாகும் என்பது கருத்து. (10)
----------
2. அங்கியிற்பஞ்சு
211. அங்கியிற்பஞ்சுபோலாகாயத்தே நினையில்
சங்கிக்க வேண்டா சிவம்
(பதவுரை.) அங்கியிற் பஞ்சுபோல் - நெருப்பிற்பட்ட பஞ் சைப்போல, ஆகாயத்தே நினையில் = ஆகாயத்தினிடத்தில் நினைப்போமானால், சிவம் = சிவத்தை, சங்கிக்க வேண்டாம் = சந்தேகங் கொள்ள வேண்டாம். (எ-று.)
(கருத்துரை.) நெருப்பிற் பட்ட பஞ்சைப்போல ஒன்று மின்றி எண்ணுபவர்களுக்கு சர்வேஸ்வரனுடைய கிருபையுண் டாகும் என்பது கருத்து.
---------
212. மெய்ப்பா லறியாத மூடர்தநெஞ்சத்தின்
அப்பால தாகுஞ் சிவம்.
(பதவுரை .) மெய்ப்பாலறியாத = உண்மை விஷயத்தை யுணராத, மூடர்தம் நெஞ்சத்தில் = மூடர்களுடைய மனத்தில், சிவம் அப்பாலதாகும் - சிவபெருமான் கடந்திருப்பான். (எ - று.)
(கருத்துரை) மூடர்களுக்கு இறையவன் தூரத்தே யிருப் பான் என்பது கருத்து. (2)
---------
213. நெஞ்சகத்துணோக்கி நினைப்பவர்க்கல்லா அல்
அஞ்சலென்னாது சிவம்.
(பதவுரை.) நெஞ்சகத்துள் நோக்கி - மனத்தைக்கொண்டு பார்த்து, நினைப்பவர்க்கல்லால் - சிந்திப்பவர்களுக்கல்லாமல், சிவம் = சிவபொருளானது, அஞ்சல் என்னாது = பயப்படாதீர் என்று சொல்லாது. (எ-று.)
(கருத்துரை.) இறைவனை உள்ளபடியே தங்களுடைய மனத்தைக் கொண்டு சிந்திப்பவர்களுக்கே கிருபாகடாட்சம் செய்வான் என்பது கருத்து.
---------
214. பற்றிலாதொன்றினைப் பற்றினா லல்லது
கற்றதனா லென்ன பயன்.
(பதவுரை.) பற்றிலாதொன்றினை = யாதொன்றிலும் பற் றில்லாத ஒரு பொருளை, பற்றினால் அல்லது = பற்றிப்பிடித்தா லல்லாமல், கற்றதனால் என்ன பயன் = சர்வ சாஸ்திரங்களையும் படித்ததனால் என்ன பிரயோசனம். (எ-று.)
(கருத்துரை.) யாதொன்றிலும் பற்றில்லாத இறைவனை வணங்கினாலே சர்வ நூல்களையும் கற்ற பயனை யடையலாம் என் பது கருத்து.
---------
215. தம்மை யறிவாரைத் தாமறிந்து கொண்டபின்
தம்மை யறிவாரோ தான்.
(பதவுரை) தம்மை யறிவாரை = தங்களைத் தாமேயுணர் வாரை, தாம் அறிந்து கொண்டபின் = தாம் உணர்ந்து கொண்ட பின்னர், தம்மை யறிவாரோ தான் = தம்மைத் தாமறியு மறிவு உண்டாமோ. (எ-று.)
(கருத்துரை.) தம்மைத் தாமறிந்து தலைவனை யுணர்ந்தபின் மீண்டும் இறங்கார் என்பது கருத்து. (5)
---------
216. அசபை யறிந்துள்ளே யழலெழ நோக்கில்
இசையாது மண்ணிற் பிறப்பு.
(பதவுரை .) அசபையறிந்து = அசபா மந்திரத்தை யுணர்ந் து, உள்ளே =மனத்தின் கண்ணே, அழல் எழல் நோக்கில் அக்கினி கிளம்புவதைப் பார்த்தால், மண்ணில் பிறப்பு இசை யாது - இவ்வுலகத்தில் ஜென்ம முண்டாக மாட்டாது. (எ-று.)
மூலமும் உரையும்
(கருத்துரை.) யாரொருவர் அசபா மந்திரத்தை யுணர்ந்து யோகஞ் செய்கின்றார்களோ அவர்கள் மறுஜென்ம மெடுப்ப தில்லை என்பது கருத்து.
(6)
---------
217. இமையாத நாட்டத் திருந்துணர் வாருக்
கமையாத வானந்தமாம்.
(பதவுரை.) இமையாத நாட்டத்திருந்து = இமைக்காத பார்வையிலிருந்து, உணர்வாருக்கு = உணர்கின்றவர்களுக்கு, அமையாத ஆநந்தமாம் = பொருந்தாத வாநந்தமுண்டாகும்.
(கருத்துரை) ஓயாமல் தரிசிப்பவர்களுக்கு என்று மழியாத ஆநந்தமுண்டாகும் என்பது கருத்து.
---------
218. துரியங்கடந்த சுடரொளியைக் கண்டால்
மரணம் பிறப்பில்லை வீடு.
(பதவுரை) துரியங்கடந்த = துரியஸ்தானத்தைத் தாண்டி யிருக்கின்ற, சுடரொளியை = தேஜோமயப்பொருளை, கண் டால் = தரிசித்தால், மரணம் பிறப்பில்லை - சாதலும் பிறத்தலு மில்லையாம், வீடு மோட்சமுண்டாகும். (எ-று.)
(கருத்துரை) தேஜோமயமான பொருளை உள்ள படி தரி சிப்பவர்களுக்கு இனி பிறவாநெறி கைகூடும் என்பது கருத்து.
219. மதிபோ லுடம்பினை மாசறநோக்கில்
விதிபோயகல விடும்.
(பதவுரை.) மதிபோல் = சந்திரனைப்போல், உடம்பினை = சரீரத்தை, மாசற= குற்றம் நீங்க, நோக்கில் பார்த்தால், விதி போயகலவிடும் = விதியற்றுப்போம். (எ-று.) (9)
---------
220. சீவன் சிவலிங்க மாகத் தெளிந்தவர்தம்
பாவ நசிக்கும் பரிந்து.
(பதவுரை) சீவன் = சீவனை, சிவலிங்கமாகச் = சிவலிங்க மாகவே, தெளிந்தவர்தம் = தெளிந்தவர்களுடைய, பாவம் பரிந்து நசிக்கும் = ஜென்மமானது வேரோடற்றுவிடும். (எ-று.)
(கருத்துரை.) சீவனும் சிவனும் ஒன்றேயென்று உணர் பவர்களுக்கு பிறவாமையுண்டா மென்பது கருத்து. (10)
--------
3. மெய்யகம்.
221. மெய்யகத்தி னுள்ளே விளங்குஞ் சுடர்
கையகத்தி னெல்லிக் கனி. (நோக்கில் (பதவுரை) மெய்யகத்தினுள்ளே = ஸ்தூல சூக்கும சரீரங் களுக்குள்ளே, விளங்குஞ்சுடர் = விளங்குகின்ற தேஜோமயப் பொருளை, நோக்கில் = தரிசித்தால், (அப்பொருளானது) கை யகத்தின் நெல்லிக்கனி = உள்ளங்கையில் நெல்லிக்கனி போல் வெளிப்படையாய்க் கிடைக்கக் கூடியதாகும். (எ-று.)
(கருத்துரை) இறைவன் ஒவ்வொரு ஆன்மாக்களிலும் கலந்திருப்பவனும் அவ்வான்மாக்கள் ஒவ்வொரு சரீரங்களிலும் இருப்பனவுமாகையால் அப்படிப்பட்ட இறைவனைத் தரிசித்தால் அவன் எப்பொழுதும் வெளிப்படுவனாவான் என்பது கருத்து.
---------
222. கரையற்ற செல்வத்தை காணுங் காலத்தில்
உரையற் றிருப்ப துணர்வு.
(பதவுரை) உணர்வு = உணர்ச்சியானது, கரையற்ற செல் வத்தை காணுங் காலத்தில் = அளவு கடந்த செல்வமாகிய சர் வேஸ்வானை தரிசிக்குங் காலத்தில், உரையற்று இருப்பது = யாதொரு சொல்லுமில்லாம லிருப்பதாகும். (எ-று.)
(கருத்துரை) அளவு கடந்த செல்வமாகிய இறைவனை உள்ளபடியே தெரிசித்தால் வாய் பேசாமல் மௌனமடையக் கூடும் என்பது கருத்து. (2)
---------
223. உண்டு பசி தீர்ந்தார் போலுடம் பெல்லா அங்
கண்டுகொள் காதல் மிகும்.
(பதவுரை) உண்டு = புசித்து, பசி தீர்ந்தார் போல் = பசி யை நீக்கிக் கொண்டவர்களைப்போல, உடம்பெல்லாங் கண்டு கொள் - சரீரமுழுமைக்குங் கண்டுகொள், காதல் மிகும் - ஆசை யானது அதிகரிக்கும். (எ-று.)
(கருத்துரை.) பசி தீர்ந்தவர்களைப்போலவே இறையவனு டைய வியாபகம் சரீர முழுமைக்கு மிருப்பதை உணர்ந்து கொள்ள வேண்டியதென்பது கருத்து.
---------
224. உரைசெயு மோசை யுரைசெய்பவர்க்கு
நரைதிரை யில்லை நமன்.
(பதவுரை) உரைசெயும் ஓசை - சொல்லப்படுகின்ற நாத தத்துவத்தை, உரைசெய்பவர்க்கு = சொல்லுபவருக்கு, நரை திரை = நரைதிரையும், நமன் = எமனும், இல்லை = உண்டாவ தில்லை . (எ-று.)
(கருத்துரை.) நாததத்துவத்தை உண்மையாகக் கண்ட றிந்து சொல்லுபவர்களுக்கு நரைதிரைகளும் எமனும் உண் டாவதில்லையாம் என்பது கருத்து. (4)
---------
225. தோன்றாத தூயவொளி தோன்றியக்காலு ன்னைத்
தோன்றாமற் காப்ப தறிவு.
(பதவுரை.) தோன்றாத யாவருக்குங் காணப்படாத, தூய வொளி = பரிசுத்தமாகிய தேஜஸானது, தோன்றியக்கால் = காணப்பட்டால், உன்னை - உன்னை, தோன்றாமல் காப்பது = வெளிப்படுத்தாமல் காப்பது, அறிவு = அறிவாகும். (எ-று.)
(கருத்துரை) எவராலும் உணரப்படாத தேஜோமய மானது யாவருக்குங் காணப்படுகின்றதோ அவர்கள் அறிவு முகாந்தரமாக நற்பேற்றை யடைவார்கள் என்பது கருத்து. (5)
---------
226. வாக்கு மனமு மிறந்த பொருள்காணில்
ஆக்கைக் கழிவில்லை யாம்.
(பதவுரை.) வாக்கும் = வசனமும், மனமும் = மனசும், இறந்த பொருள் =ஆகிய இவைகளைக் கடந்திருக்கின்ற பொரு ளைக்கண்டால், ஆக்கைக்கு = சரீரத்திற்கு, அழிவில்லையாம் - யாதொரு கெடுதியும் உண்டாவதில்லையாம். (எ-று.)
(கருத்துரை.) வாக்கையும் மனத்தையும் இறந்திருக்கின்ற கடவுளை உள்ளபடியே தரிசித்தால் சரீரம் அறிந்து படுவதில்லை யாம் என்பது கருத்து. (6)
---------
227. கண்ணகத்தே நின்று களிதருமே காணுங்கால்
உன்னகத்தே நின்ற வொளி.
(பதவுரை.) உன் அகத்தே நின்ற ஒளி = உன்னுடைய மனத் தின்கண் எழுந்தருளியிருக்கின்ற தேஜோமயப் பொருளானது, காணுங்கால் = பார்க்குமிடத்தில், கண்ணகத்தே நின்று
ஞானக்கண்ணினிடத்திலிருந்து, களிதரும் = ஆநந்தத்தையுண் டாக்கும். (எ-று.)
(கருத்துரை) ஒவ்வொருவருடைய ஆன்மாக்களிலும் இருக் கின்ற தேஜோமயப்பொருள் தரிசிப்பவர்க்கு கண்காட்சியைக் கொடுக்கும் என்பது கருத்து. (7)
---------
228. ஆனந்த மான வருளை யறிந்தபின்
தானந்த மாகு மவர்க்கு.
(பதவுரை) ஆநந்தமான = ஆசையான, அருளை = திரு வருளை, அறிந்தபின் - உணர்ந்தபிறகு, அவர்க்கு = அவ்வருளை யறிந்தார்க்கு, தானந்தமாகும் = தானே அந்தமாக முடிவான். (எ-று.)
(கருத்துரை.) திருவருளாகிய ஆநந்தத்தை யுணர்ந்த பிறகே அவர்களெல்லாம் ஆநந்த ரூபத்தை யடைவார்கள் என்பது கருத்து. (8)
---------
229. மறவாமற் காணும் வகையுணர் வாருக்
கிறவா திருக்கலு மாம்.
(பதவுரை) மறவாமல் = மறந்து விடாமல், காணும் = தரி சிக்கின்ற, வகையுணர்வார்க்கு - விதத்தையுணர்பவருக்கு, இற வாதிருத்தலுமாம் = இறவாதிருக்கும் வல்லமையுங் கைகூடும். (எ-று.)
(கருத்துரை) எவ்விடத்திலுஞ் சர்வேஸ்வரனை மறவா திருக்கும் குணமுடையவர்கள் ஜன்மமெடுக்கமாட்டார்கள் என் பது கருத்து. (9)
---------
230. விண்ணிறைந்து நின்ற பொருளே யுடம்ப தன்
உண்ணிறைந்து நின்ற வொளி.
(பதவுரை.) விண்ணிறைந்து நின்ற = ஆகாயம் வரைக்கும் வியாபித்திருந்த, பொருளே = பொருளே, உடம்பு = சரீர மாகும், அதனுள் = அந்தச் சரீரத்திற்குள், நிறைந்துநின்ற ஒளி = வியாபித்திருக்கிறது தேஜோமயப்பொருள். (எ-று.)
(கருத்துரை) ஆகாயமே சரீரமாகவும் அதற்குள்ளடங்கி யிருக்கும் சர்வ பொருள்களிலும் கலந்திருப்பவன் தேஜோரூப முடையவனாவான் என்பது கருத்து.
(10)
--------------
4. கண்ணாடி
231. கண்ணாடி தன்னி லொளிபோ லுடம்பதனுள்
உண்ணாடி நின்ற வொளி.
(பதவுரை.) கண்ணாடி தன்னில் = கண்ணாடியில் காணப்படு கின்ற, ஒளிபோல் - ஒளியைப் போல் உடம்பதனுள் = சரீரத்திற் குள், நாடிநின்ற ஒளி = சேர்ந்திருந்தும் தேஜோமயப் பொரு ளாகும். (எ-று) |
(கருத்துரை) கண்ணாடிக் கொளியிருப்பது போல் உடம்பி னுள் இறைவனாகிய ஒளியிருக்கின்றது என்பது கருத்து. (1)
---------
232. அஞ்சு புலனின் வழியறிந்தாற் பின்னைத்
துஞ்சுவ தில்லை யுடம்பு.
(பதவுரை) அஞ்சு புலனின்வழி = பஞ்சேந்திரியங்களின் கிராமங்களை, அறிந்தால் = உணர்ந்தால், பின்னை = பிறகு, உடம்பு சரீரமானது, துஞ்சுவதில்லை = இறப்பதில்லை. (எ-று.)
(கருத்துரை.) பஞ்சபுலன்களின் குணாகுணங்களை யுணர்ந்த பெரியோர் உலகத்திலிறக்கமாட்டார்கள் என்பது கருத்து. (2)
---------
233. நாபியகத்தே நலனுற நோக்கிடில்
சாவது மில்லை யுடம்பு.
(பதவுரை) நாபியகத்தே = உந்திக்கமல ஸ்தானத்தில், நலனுற = நன்மையை யடைய, நோக்கிடில் = தரிசித்தால், உடம்பு சரீரமானது, சாவதுமில்லை = சாகிறதில்லை. (எ-று.)
(கருத்துரை.) நாபிஸ்தானத்தின் குணாகுணங்களை உள்ள படியே உணர்ந்தவர் இனியிறக்கமாட்டார்கள் என்பது கருத்து. (3)
---------
234. கண்டத் தளவிற் கடிய வொளிகாணில்
அண்டத்த ராகு முடம்பு.
பதவுரை.) கண்டத்தளவில் = விசுத்தி ஸ்தானத்தி லிருந்து, கடிய ஒளிகாணில் நல்ல தேஜோமயத்தைத் தரிசித் தால், உடம்பு = அவர்களுடைய சரீரமானது, அண்டத்தராகும் = தேவசரீரமாகும். எ-று.
(கருத்துரை.) விசுத்திஸ்தானத்தின் மூர்த்த விசேஷத்தை யுணரவல்லவர்களது சரீரமானது தேவர்களுடைய சரீரமாகும் என்பது கருத்து.
---------
235. சந்திர னுள்ளே தழலுற நோக்கினால்
அந்தர மாகு முடம்பு.
(பதவுரை) சந்திரனுள்ளே - சந்திரமண்டலத்திற்குள்ளே, தழலுற அக்கினிகிளம்ப, நோக்கினால் = தரிசித்தால், உடம்பு = சரீரமானது, அந்தரமாகும் = சூட்சும சொரூபத்தை யடையும்.
(கருத்துரை) சந்திர மண்டலத்திலுள்ளே சென்று அங்கு அமிர் துண்டால் சரீரம் சூட்சும சொரூபத்தை யடையும் என்பது கருத்து. (5)
---------
236. ஆர்க்குந் தெரியா வுருவந் தனை நோக்கில்
பார்க்கும் பரமா மவன்.
(பதவுரை.) ஆர்க்குந் தெரியா வுருவந்தனை = யாவராலு முணரப்படாத சொரூபத்தை, நோக்கில் = தரிசித்தால், பார்க் கும் = கடாட்சிக்கின்ற, பரமாமவன் = பரம்பொருளென்று சொல்லும்படியாவான். (எ-று.)
(கருத்துரை) யாவராலு முணரப்படாத இறைவனுடைய சொரூபத்தைத் தரிசனை செய்தால் பரமேஸ்வரனுடைய சொரூ பத்தை யடைவான் என்பது கருத்து.
---------
237. வண்ண மில்லாத வடிவை யறிந்தபின்
விண்ணவ ராகு முடம்பு.
(பதவுரை.) வண்ணமில்லாதவடிவை - அழகு முதலியவை கள் சொல்லப்படாத சொரூபத்தை, அறிந்தபின் = உணர்ந்த பின்னர், உடம்பு = சரீரமானது, விண்ணவராகும் - தேவசரீர மாகும்) (எ-று.)
(கருத்துரை) அழகு முதலியவை சொல்லப்படாத இறை வனை உள்ளன்போடு உண்பவர்களுடைய சரீரமானது தேவர் களுடைய சரீரமாகும் என்பது கருத்து.
---------
238. நெற்றிக்குநேரே நிறைந்த வொளிகாணில்
முற்று மழியா துடம்பு.
(பதவுரை) நெற்றிக்கு நேரே = கழிமுனைக்கு நேரே, நிறைந்த = வியாபித்திருக்கின்ற, ஒளி = தேஜோமயப்பொருளை, காணின் = தரிசித்தால், உடம்பு முற்றும் அழியாது = சரீரமெல்லாம் அழிவடையாது. (எ - று.)
(கருத்துரை.) சுழினாஸ்தானத்தில் யெழுந்தருளி யிருக் கின்ற இறைவனை யாரொருவர் உள்ள படியே தரிசிக்கின்றார் களோ அவர்கள் சரீரமானது என்றைக்கும் அழிவதில்லை என் பது கருத்து.
---------
239. மாதூவெளியின் மனமொன்றவைத்தபின்
போதக மாகு முடம்பு.
(பதவுரை) மா தூவெளியில் = மகத்தாகிய பரிசுத்தமாகிய வெளியின்கண், மனம் ஒன்றவைத்தபின் = மனத்தைப் பொருந்த வைத்தபின்னர், உடம்பு = சரீரமானது, போதகமாகும் = ஞான மயத்தையடையும். (எ-று.)
(கருத்துரை) பரிசுத்தமான வெளியினிடத்தில் மனத்தை உள்ளபடியே வைத்திருக்கின்ற ஒவ்வொருவருடைய சரீரமும் ஞானநிலைமையையடையும் என்பது கருத்து.
---------
240. சுத்தமோ டொன்றி மனமு மிறந்தக்கால்
முற்று மழிய, துடம்பு.
(பதவுரை) சுத்த மோடொன்றி = சுத்த தத்துவத்திற் கலந்து, மனமும் = மனமும், இறந்தக்கால் = யாவற்றையு மிறந் திருந்தால், உடம்பு முற்றும் அழியாது = எல்லாச் சரீரங்களும் அழியாநிலையை யடையும் என்பது கருத்து. (எ-று.) (10)
---------
5. சூனியகாலமறிதல்.
241. நிரவியழலுருவாய் நீண்டவெளிகாணில்
அரவணையா நகு முடம்பு.
(பதவுரை) நிரவி = எவ்விடத்திலும் நிறைந்து, அழலுரு வாய் நீண்ட = அக்கினி சொரூபமாய் நீண்டிருக்கின்ற, வெளி காணில் = ஆகாயத்தைத் தரிசித்தால், உடம்பு = அவர்களுடைய சரீரமானது, அரவணையான் ஆகும் = விஷ்ணு சொரூபத்தை யடையும். (எ-று.)
(கருத்துரை.) சர்வ வியாபகனான கடவுளை சிற்றம்பலத் தின்கண் தெரிசித்தவர்கள் சரீரமானது விஷ்ணு சொரூபத்தை யடையும் என்பது கருத்து. (1)
---------
242. உருவந் தழலாக வுள்ளத்தே சென்று
புருவத் திடையிருந்து பார்.
(பதவுரை) உருவம் = சரீரமானது, தழலாக = அக்கினிமய மாக, உள்ளத்தே சென்று = மனத்திற்சென்று, புருவத்திடை யிருந்து = புருவமத்தியிலிருந்து, பார் = தெரிசிப்பாயாக (எ-று.)
(கருத்துரை.) தன்னை அக்கினி சொரூபமாக்கி சுழினாஸ்தா னத்திலிருந்து சர்வேஸ்வரனைத் தரிசிக்கவேண்டும் என்பது கருத்து . (2)
---------
243. புருவத் திடையிருந்து புண்ணியனைக் கா ணில்
உருவற்று நிற்கு முடம்பு.
(பதவுரை) புருவத்திடை = புருவமத்தியில், இருந்து - நின்று, புண்ணியனைக்காணில் = சர்வேஸ்வரனைத் தெரிசித்தால், உடம்பு = சரீரமானது, உருவற்று நிற்கும் = சூக்குமமாக நிற்கும். (எ - று.)
(கருத்துரை.) சுழினாஸ்தானத்தி லிருந்து இறைவனைத் தெரிசிக்க வேண்டும் என்பது கருத்து.
---------
244. அகம்புறம் பேராப் பொருளை யறியில்
உகம்பல காட்டு முடம்பு.
(பதவுரை) அகம்புறம் = உள்ளும் வெளியிலும், பேரா பொருளை = மாறாத பரம்பொருளை, அறியில் = உணர்ந்தால், உடம்பு = சரீரமானது, உகம்பல காட்டும் - அநேககாலம் நிலைத் திருக்கும். (எ-று.)
(கருத்துரை) உள்ளிடத்திலும் வெளியிடத்திலும் கலந் திருக்கின்ற இறைவனை ஆராய்கின்றவர்களுடைய சரீரமானது நெடுநாள் இறக்காமலிருக்கும் என்பது கருத்து.
(4)
---------
245. ஆவிபாழ் போகா தடக்கி யிருந்தபின்
ஓவிய மாகு முடம்பு.
(பதவுரை.) ஆவி = ஆவியை, பாழ் போகாது = பாழாய் விடாமல், அடக்கியிருந்தபின் = அடக்கிக் கருத்துக் கொண் டிருந்தால், உடம்பு = சரீரமானது, ஓவியமாகும் - சித்திரம் போல் அசைவற்றிருக்கும். (எ - று.)
(கருத்துரை.) சரங்களை வெளிவிடாமல் அடக்குகின்றவர் கள் மோனஞானத்தை யடைவர் என்பது கருத்து.
---------
246. அஞ்சு மடக்கி யறிவோடிருந்தபின்
துஞ்சுவ தில்லை யுடம்பு.
(பதவுரை.) அஞ்சும் அடக்கி ஐம்புலன்களையும் அடக்கி, அறிவோடு = ஞானத்துடனே, இருந்தபின் = இருந்த பிறகு, உடம்பு = சரீரமானது, துஞ்சுவதில்லை = இறந்துபடுவதில்லை. ()
(கருத்துரை) ஐம்புலன்களையும் ஒடுக்கினவர்களுடைய சரீர மானது இறப்பதில்லை என்பது கருத்து. (6)
---------
247. தீயாக வுள்ளே தெளிவுற நோக்கினால்
மாயாது பின்னை யுடம்பு.
(பதவுரை.) தீயாக = அக்கினி சொரூபமாக, உள்ளே = மனத்தின்கண், தெளிவுற நோக்கினால் = ஞானத்தை யடையத் தரிசித்தால், உடம்பு = சரீரமானது, பின்னை மாயாது = பிறகு இறக்காது. (எ-று.)
(கருத்துரை) அந்தர் முகத்தில் அக்கினி சொரூபமாக இறை வனைத் தெரிசித்தால் சரீரம் கீழேவிழாது என்பது கருத்து. (7)
---------
248. தானந்த மின்றித் தழலுற நோக்கிடில்
ஆனந்த மாகு முடம்பு.
(பதவுதைப்பறக்க, நேபேரின்பது
(பதவுரை) தான் - தான், அந்தமின்றி முடிவில்லாமல், தழலுற பொறிபறக்க, நோக்கிடில் = தரிசித்தால், உடம்பு = சரீரமானது, ஆநந்தமாகும் - பேரின்பத்தையடையும். (எ - று.)
(கருத்துரை.) எதிலும் கடத்தலில்லாமல் எவன் தரிசிக் கின்றானோ அவன் சரீரம் பேரின்பமயத்தை யடையும் என்பது கருத்து. (8)
---------
249 ஒழிவின்றி நின்ற பொருளை யுணரில்
அழிவின்றி நிற்கு முடம்பு.
(பதவுரை) ஒழிவு இன்றி = யாதொரு ஒழிவுமில்லாமல், நின்ற - இருந்த, பொருளை = சர்வேஸ்வரனை, உணரில் உள்ள படியே உணர்ந்தால், உடம்பு = சரீரமானது, அழிவின்றிநிற் கும் - யாதொரு கெடுதியையு மடையாமலிருக்கும். (எ - று)
(கருத்துரை.) எவ்விடத்திலும் வியாபித்திருந்த கடவுளை உண்மையாக உணர்ந்தால் அவர்களுடைய சரீரம் அழிவில்லாமலிருக்கும் என்பது கருத்து. (9)
---------
250. பற்றற்று நின்ற பழம்பொருளைச் சிந்திக்கில்
முற்று மழியா துடம்பு .
(பதவுரை) பற்றற்று நின்ற = யாதொரு சம்பந்தமுமில் லாமலிருந்த, பழம்பொருளை = சர்வேஸ்வரனை, சிந்திக்கின் = நினைத்தால், உடம்பு = சரீரமானது, முற்றும் அழியாது = முழு மையும் கெடாது. (எ - று.)
(கருத்துரை) இறைவனைச் சிந்திப்பவர்கள் சரீரம் அழி யாது என்பது கருத்து. (10)
------------
6. சிவயோகநிலை.
251. அடிமிசை வாயு வடுத்தடுத்தேகி
முடிமிசை யோடி முயல்.
(பதவுரை) அடிமிசை = மூலாதாரத்தின்மேல், வாயு = சர மானது, அடுத்தடுத்தேகி = பொருத்துப் பொருத்துப்போய், முடிமிசை = சுழினாஸ்தானத்தின்கண், முயல் = பிரயத்தனப் படு. (எ-று.)
(கருத்துரை.) வாயுவோடு கூடச் சம்பந்தப்பட்டே சுழினாஸ் தானத்தில் செல்லவேண்டும் என்பது கருத்து.
---------
252. உண்ணாடிவாயு வதனையுடனிரப்பி
விண்ணோடு மெள்ள விடு.
(பதவுரை.) உள் நாடி = அந்தர்முகத்தின் நாடியிலுள்ள, வாயு அதனை = சரத்தை, உடல் நிரப்பி = சரீரத்திற்குள் பூரித்து, விண்ணோடு = கும்பகத்தில், மெள்ள விடு = மெதுவாக வெளியே விடுவாய். (எ-று.)
(கருத்துரை.) வாயுவை பூரிக்க வேண்டிய கிரமப்படி பூரித் துபின் கும்பிக்க வேண்டும் என்பது கருத்து. (2)
---------
253. மெள்ளவிரேசித்து மெய்விம்மிப் பூரித்துக்
கொள்ளுமின் கும்பங் குறித்து.
(பதவுரை) மெள்ள = மெதுவாக, இரேசித்து = இரேச கஞ்செய்து, மெய்விம்மி = சரீரம் விம்முதலையடைந்து, பூரித்து = பூரகஞ் செய்து, கும்பகங்குறித்து = கும்பத்தினுள்ளே குறித்து, கொள்ளுமின் = கொள்ளுங்கள். (எ-று.)
(கருத்துரை.) மெதுவாகச் சரத்தை வாங்கி இரேசித்துப் பின் பூரகஞ்செய்து அதன்பிறகு கும்பகஞ் செய்யவேண்டும் என்பது கருத்து.
---------
254. இரேசகமுப்பத் திரண்டதுமாத்திரை
பூரகம் பத்தாறு புகும்.
(பதவுரை.) இரேசகம் = இரேசகத்தினுடைய, மாத் திரை = அளவாவது, முப்பத்திரண்டு =முப்பத்திரண்டு மாத்தி ரையும், பூரகம் = பூரகமானது, பத்தாறு = பதினாறு, புகும் = புகும். (எ-று.)
(கருத்துரை.) இரேசகத்தினுடைய மாத்திரை முப்பத் திரண்டும் பூரகத்தினுடைய மாத்திரை பதினாறுமாகும் என்பது கருத்து.
---------
255. கும்பக நாலோ டறுபது மாத்திரை
தம்பித் திடுவது தான்.
(பதவுரை) கும்பகம் - கும்பகமானது, நாலோடறுபது மாத்திரை = அறுபத்து நான்குமாத்திரையாகவும், தம்பித்திடு வதுதான் = ஸ்தம்பிக்கவேண்டும். (எ-று.)
(கருத்துரை.) கும்பகம் அறுபத்து நான்கு மாத்திரையளவு ஸ்தம்பிக்க வேண்டும் என்பது கருத்து.
---------
256. முன்னமிரேசி முயலுபின் பூரகம்
பின்னது கும்பம் பிடி.
(பதவுரை) முன்னம் - முன்னதாக, இரேசி - இரேசகஞ் செய், பின்பூரகமுயலு = பிறகுபூரகஞ்செய், கும்பம் பின்னது பிடி = அதன் பிறகு கும்பத்தை செய். (எ-று.)
(கருத்துரை.) முன்னர் இரேசகத்தையும் அதன்பிறகு பூரகத்தையும் அதன் பிறகு கும்பகத்தையுஞ் செய்ய வேண்டும் என் பது கருத்து. (6)
---------
257. ஈரைந்தெழுபத்தீ ராயிர நாடியுஞ்
சேருமின் வாயுச் செயல்.
(பதவுரை) ஈரைந்து = பத்தும், எழுபத்தீராயிர நாடி யும் = எழுபத்தீராயிரநாடிகளையும், வாயுசெயல் = வாயுவின் செய் கையில், சேருமின் = சேருங்கள். (எ-று.)
(கருத்துரை.) எழுபத்தீராயிர நாடிகளையும், தசநாடிகளை யும் வாயுவில் சேர்க்கவேண்டும் என்பது கருத்து.
---------
258. வாசலீரைந்து மயங்கியவாயுவை
யீசன்றன் வாசலி லேற்று.
(பதவுரை) வாசல் ஈரைந்தும் = பத்து வாசல்களிலும், மயங்கிய = மயக்கப்பட்டிருக்கின்ற, வாயுவை = தசவாயுக்களை யும், ஈசன் தன்வாசலில் ஏற்று = சர்வேஸ்வரன் எழுந்தருளியிருக் கின்ற வாயலில் செலுத்து. (எ-று.)
(கருத்துரை.) பலவாசல்களின் வழியாகச் சஞ்சரிக்கின்ற வாயுவை சுழினாஸ்தானத்தில் செலுத்தவேண்டும் என்பது கருத்து.
---------
259. தயாவினில் வாயு வலத்திலியங்கில்
தியான சமாதிகள் செய்.
(பதவுரை.) தயாவினில் = தயவுடனே, வாயு = வாயுவா னது, வலத்தில் இயங்கில் - வலது பக்கத்தில் சஞ்சரிக்குமானால், தியான சமாதிகள் செய் = தியானம் சமாதிமுதலியவைகளைச் செய். (எ - று.)
(கருத்துரை.) வாயுவானது வலது பக்கத்தில் சஞ்சரிக் கின்ற காலத்திலேயே தியான முதலியவைகளைச் செய்யவேண் டும் என்பது கருத்து. (9)
---------
260. ஆதியாமூல மறிந்தஞ்செழுத்தினைப்
பேதியா தோது பினை.
(பதவுரை.) பினை = பிறகு, ஆதியாம் - முதன்மையதாகிய, மூலம் அறிந்து = காரணத்தையுணர்ந்து, அஞ்சு எழுத்தினை = பஞ்சாட்சரத்தை, போதியாது ஓது = யாவருமுணராதபடி துதி செய். (எ-று.)
(கருத்துரை.) இவைகளையெல்லாஞ் செய்தபிறகு பஞ்சாட் சர தியானம் செய்யவேண்டும் என்பது கருத்து. (10)
----------------
7. ஞான நிலை.
261. தற்புருடமாமுகந் தன்னிற்றனியிருந்
துற்பன மஞ்சை யுரை.
(பதவுரை.) தற்புருடமாமுகந் தன்னில் = தற்புருடமான மகத்தான முகத்தில், தனியிருந்து = தனியேயிருந்து, உற் பனம் = மேலானதாகிய, அஞ்சையுரை = பஞ்சாட்சரங்களைத் தியானஞ்செய். (எ-று.)
(கருத்துரை) தற்புருடமுகத்திலிருந்து பஞ்சாட்சர தியா னஞ் செய்யவேண்டும் என்பது கருத்து.
---------
262. தற்புருடமாமுகமேற் றாரகைதன் மேலே
நிற்பது பேரொளி நில்.
(பதவுரை) தற்புருடமாமுகமேல் = தற்புருடமென்னும் மகத்தாகிய முகத்தின் மேலிருக்கும், தாரகை தன் மேலே = நட் சத்திரத்தின் மேலே, நிற்பது பேரொளி = இருப்பது பேரொளி யாகும் (ஆகையால்) நில் = அவ்விடத்தில் நில். (எ-று.)
(கருத்துரை.) தற்புருடமுகத்திற்கு மேலிருக்கும் நட்சத்தி ரத்திற்குமேல் நிற்க வேண்டும் என்பது கருத்து.
---------
263. ஓதியதற்புருடத்தடி யொவ்வவே
பேதியா தோது பினை.
(பதவுரை.) ஓதிய = சொல்லப்பட்ட, தற்புருடத்தடி = தற் புருடமுகத்தினடியில், ஒவ்வவே - ஒப்பாகவே, பினை - பிறகு, பேதியாது = மனவித்தியாசமில்லாமல், ஓது = துதிசெய். (எ-று.) (3)
---------
264. கொழுந்துறுவன்னிகொழுவுற வொவ்வில்
எழுந்தா ரகையா மிது.
(பதவுரை) கொழுந்துறு வன்னி - கொழுந்துவிட்ட அக் கினியானது, கொழுவுற = செம்மையாக, ஒவ்வில் = சம்பந்தப் பட்டால், இது = இது, எழுந்தாரகையாம் = எழுகின்ற நட்சத்தி ரமாகும். (எ-று.)
---------
265. மறித்துக்கொளுவிடு வன்னி நடுவே
குறித்துக் கொளுஞ்சீயைக் கூட்டு
(பதவுரை) மறித்து = தடுத்து, கொளுவிடு - கொளுத்து கின்ற, வன்னி நடுவே = அக்கினி பீசத்தின் நடுவே, - குறித்துக் கொளும் = யாவற்றையுங் குறித்துக் கொள்ளுகின்ற, சீயை கூட்டு - சிகாரத்தைச் சேர். (எ-று.)
---------
266. காலுந்தலையு மறிந்துகலந்திடில்
சாலவும் நல்லது தான்.
(பதவுரை) காலுந்தலையும் அறிந்து = காலையுந்தலையையு முணர்ந்து, கலந்திடில் = சேர்ந்தால், சாலவும் = மிகவும், நல் லதுதான் = நல்லதாகும். (எ-று.) (6)
---------
267. பொன்னொடு வெள்ளியிரண்டும் பொருந்திடில்
அன்னவன் றாளதுவே யாம்.
(பதவுரை) பொன்னொடு வெள்ளியிரண்டும் - சோமசூரி யர்களிருவரும், பொருந்திடில் = சேர்ந்தால், அன்னவன் - இறை வனுடைய, தாளது வேயாம் - திருவடிகளே கை கூடும். (எ - று)
---------
268. நின்றவெழுத்துட னில்லாவெழுத்தினை
யொன்றுவிக்கி லொன்றேயுள் .
(பதவுரை) நின்ற எழுத்துடன் = இருந்த எழுத்துடனே நில்லா எழுத்தினை = நில்லாத எழுத்தை, ஒன்றுவிக்கில் = சேர்த்தால், ஒன்றேயுள் = ஒருபொருளே யுள்ளதாகும். (எ-று.)
---------
269. பேசாவெழுத்துடன் பேசுமெழுத்துறில்
ஆசான் பரனந்தியாம்.
(பதவுரை) பேசா எழுத்துடன் = மௌன அட்சரத்து டனே, பேசும் எழுத்துறில் - பேசுகின்ற எழுத்துஞ் சேர்ந்தால், ஆசான் = குருவானவன், பரனந்தியாம் = பரமேஸ்வரனாவான். (எ-று.)
---------
270. அழியாவுயிரை யவனுடன் வைக்கில்
பழியான தொன்றில்லை பார்.
-------------
8. ஞானம் பிரியாமை.
271. பிறந்திடமாலிடம் பேறாதிருப்பின்
இறந்திடம் வன்னி யிடம்.
(பதவுரை.) பிறந்திடம்மாலிடம் = பிறந்த இடமானது மாலிடமாகும், பேராது இருப்பின் = நீங்காதிருக்குமானால், இறந்திடம் - இறந்த இடமானது, வன்னியிடம் = அக்கினியிட மாகும். (எ-று.)
---------
272. சாகாதிருந்த தலமே மவுனமது
ஏகாந்த மாக விரு.
(பதவுரை.) சாகாதிருந்ததலமே = சாகாதிருந்த இடமே, மவுனம் = மவுனமாகும், அது = அதுவே, ஏகாந்தமாக இரு = ஒரே இடமாக இருப்பாயாக. (எ-று.) (2)
---------
273. வெளியில் விளைந்த விளைவின்கனிதான்
ஒளியி லொளியா யுறும்.
(பதவுரை.) வெளியில் விளைந்த = ஆகாயத்திலுண்டான, விளைவின்கனிதான் = விளைவின்கனியே, ஒளியில் ஒளியாயு றும் = தேஜோமயத்தின் உட்கிடையான தேஜோமயமாகவிருக் கும். (எ-று.) (3)
---------
274. மறவா நினையா மவுனத்திருக்கில்
பிறவா ரிறவார் பினை.
(பதவுரை) மறவா = மறக்காமலும், நினையா - நினைக்காம லும், மவுனத்து இருக்கில் = மௌன ஞானத்திலிருந்தால், பினை = பிறகு, பிறவார் இறவார் = பிறக்கவுமாட்டார் இறக்கவு மாட்டார். (எ-று.)
---------
275. குருவாம்பரனந்தி கூடல் குறித்தாங்
கிருபோது நீங்கா திரு.
(பதவுரை.) குருவாம் பரநந்தி - குருவாகிய பரமேஸ்வர னுடைய, கூடல் சேர்க்கையை, குறித்து நினைத்து, ஆங்கு= அவ்விடத்தில், இருபோதும் - இரண்டு வேளையும், நீங்கா திரு= பிரியாமலிருக்க வேண்டும். (எ-று.)
---------
276. சுந்தரச் சோதி துலங்குமிடமது
மந்திரச் சக்கரமுமாம்.
(பதவுரை.) சுந்தரச்சோதி = அழகுபொருந்திய சோதியா னது, துலங்கும் இடமது = விளங்குகின்ற இடமே, மந்திரசக்கர முமாம் = மந்திரமான சக்கரமுமாகும். (எ-று.)
---------
277. தூராதி தூரஞ் சொல்லத்தொலையாது
பாராப் பராபரம் பார்.
(பதவுரை.) பாராப்பராபரம் - பார்க்க முடியாத பராபரப் பொருளானது, தூராதி தூரம் = தூராதி தூரத்திலிருக்கும், சொல்லத்தொலையாது = இதைச் சொல்லமுடியாது, பார் = நீ பார். (எ-று.) (7)
---------
278. ஈரோளியீதென் றிறைவலுறைத்தனன்
நீரொளி மீது நிலை.
(பதவுரை) ஈரொளியீதென்று = இது ஒரு ஒளியென்று, இறைவன் உரைத்தனன் = பரமேஸ்வரன் சொன்னான், ஈரொ ளிமீது நிலை= ஆனால் அவ்விரண்டொளியின் மீதே உயர்ந்த நிலை யாகும். (எ-று.) (8)
---------
279. அந்தமுமாதியு மில்லாவரும் பொருள்
சுந்தர ஞானச் சுடர்
(பதவுரை.) அந்தமும் ஆதியும் இல்லா = ஆதியந்த மில் லாத, அரும்பொருள் = அருமையாகிய பொருளானது, சுந்தர ஞானச்சுடர் = அழகிய ஞானவொளியாகும். (எ-று.) (9)
---------
280. இதுமுத்தி சாதனமென் றேட்டில் வரைந்து
பதியவைத் தனன் குரு பார்.
(பதவுரை) இது = இதுவே, முத்திசாதனம் என்று = மோட்ச வழியென்று, எட்டில் வரைந்து = ஏட்டிலெழுதி, பதி வைத்தனன் குரு = ஞானாசிரியனானவன் பதியவைத்தனன், பார் = நீபார். (எ-று.)
(கருத்துரை.) இவ்வகையான உபதேசத்தை ஞானாசிரியன் ஞானசாஸ்திரத்தில் எழுதிவைத்திருக்கிறான் என்பது கருத்து.
--------------
9.மெய்ந்நெறி.
281. செல்லல் நிகழல் வருகாலமூன்றினையுஞ்
சொல்லு மவுனத் தொழில்.
(பதவுரை .) மௌனத்தொழில் - மௌனஞானத்தினது, தொழில் - செல்லல், நிகழல் வருகால மூன்றினையும் சொல்லும் - இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலங்களாகிய மூன்றினையுஞ் சொல்லுதலாம். (எ-று.) (1)
---------
282. பஞ்சிற்படுபொறி போலப்பரந்திருந்து
துஞ்சாது ஞானச் சுடர்.
(பதவுரை) பஞ்சிற்படு - பஞ்சில் பட்ட, பொறிபோல் = நெருப்பு பொறியைப் போல, பரந்திருந்து = வியாபித்திருந்து, ஞானச்சுடர் = ஞான ஒளியானது, துஞ்சாது = உறங்காது. (எ-று.)
---------
283. இமைப்பிற்பரந்தங் கொடுங்குமின் போல்
நமக்குட் சிவன் செயல் நாடு.
(பதவுரை.) இமைப்பிற்பரந்து = இமைநேரத்தில் எவ்வி டத்திலும் பரவி, அங்கு = அப்பொழுதே, ஒடுங்கும் = மறைந்து விடுகின்ற, மின் போல் = மின்னலைப் போல, நமக்குள் = நமக் குள்ளே, சிவன் செயல்=சிவனுடைய செயலை, நாடு = விரும்பு. (எ-று.)
---------
284. குவித்து மனத்தைக் குவித்துள்ளே யோங்கில்
செவித்துப் பெறுவ தெவன்.
(பதவுரை.) மனத்தை குவித்து = மனத்தை ஒருங்கச்செய் து, குவித்துள்ளே ஓங்கில் உள்ளே குவித்து உயர்ந்தால், செவித் துப்பெறுவது எவன் = செபித்துப்பெறுவது என்ன? (எ - று.) (4)
---------
285. காலுந்தலையு மொன்றாகக்கலந்திடம்
நாலா நிலையென நாடு. (பதவுரை) காலும் தலையும் - காலென்பதும் தலையென்ம தும், ஒன்றாகக் கலந்திடம் ஒன்றாகக்கலந்த இடம், நாலாநிலை யென நாடு = அதுவே துரியநிலையென்று ஆஸ்ரயிப்பாய். (எ-று.)
---------
286. மூல நிலமிசை மூன்றா நிலத்தினில்
ஆல மருந்துஞ் சிவம்.
(பதவுரை) மூலநிலமிசை = மூலாதாரத்தில், மூன்றாம் நிலத்தினில் = மூன்றாவதாகிய இடத்தில், ஆலம் அருந்தும் சிவம் - சிவபெருமானானவர் எழுந்தருளியிருப்பார். (எ-று.) (6)
---------
287. எழுஞ்சுடருச்சியின் மேன்மனம்வைக்கத்
தொழிலொன் றிலாத சுடர்.
(பதவுரை.) எழும் = எழுகின்ற, சுடர் = சுடரையுள்ள, உச் சியின்மேல்=உச்சிக்குமேலே, மனம்வைக்க=மனத்தைவைக்க, தொழிலொன்றிலாத சுடர் = யாதொரு தொழிலுமில்லாத சுட் ராம். (எ-று.) (7)
---------
288. அடைத்திட்டவாசலின் மேன்மனம்வைத்துப்
படைத்தவன் தன்னையே பார்.
(பதவுரை.) அடைத்திட்ட வாசலின் மேல் = கதவை யடைத்திருக்கின்ற வாசலின் மேல், மனம்வைக்க = மனத்தை வைத்து, படைத்தவன் தன்னையே பார் - சிருஷ்டித்த கடவுளைப் பார் (எ-று.)
(கருத்துரை.) கதவடைத்திருக்கின்ற வாசலின்கண் மனத் தைவைத்து யாவரையும் சிருஷ்டித்தகடவுளைத்தெரிசிக்கவேண் டும் என்பது கருத்து. (8)
---------
289. அறுபதொடாறு வருடமிதனை
உறுதியதாக வுணர்.
(பதவுரை.) அறுபதொடாறுவருடம் அறுபத்தாறு வரு ஷம் வரைக்கும், இதனை = இதை, உறுதியதாகவுணர் =உறுதி யாக ஆராய்வாய். (எ - று.)
(கருத்துரை.) இவ்விஷயங்களை யெல்லாம் அறுபத்தாறு வருஷம் வரைக்கும் ஆராய வேண்டும் என்பது கருத்து. (9)
---------
290 அட்டமாசித்தியடையுமோ ராண்டினில்
இட்ட மிதனைத் தெளி.
(பதவுரை.) அட்டமாசித்தி = அஷ்டமாசித்திகளும், அடை யும் = உண்டாகும், (ஆகையால்) ஓராண்டினில் ஒருவருஷத் தில், இட்டம் = இஷ்டமாக, இதனைத்தெளி = இதை ஆராய்வா யாக. (எ-று.)
(கருத்துரை) இதனால் அஷ்டமா சித்திகளையு மடைய லாம். ஆகையால் இதனை ஓராண்டு வரைக்கும் ஆராயவேண்டும் என்பது கருத்து. (10)
------
10. துரியதரிசனம்.
291. வன்னியதெட்டு மதியம்பதினாறு
முன்னிய பன்னிரண்டு முள்.
(பதவுரை) வன்னியது எட்டு - சூரியன் எட்டும், மதியம்' பதினாறு - சந்திரன்பதினாறும், முன்னிய = நினைத்த, பன்னி ரண்டுமுள் = பன்னிரண்டு முள் ளடக்க வேண்டும். (எ-று.) (1)
---------
292. சூரியன்வன்னியொன் றாகிடிற்சோமனாம்
பாரு மினீது பயன்.
(பதவுரை.) சூரியன் - சூரியனும், வன்னி - அக்கினியும், ஒன்றாகிடில் ஒன்றானால், சோமனாம் = சந்திரனாம், ஈது பயன் = இந்தப்பயனை, பாருமின் = நீங்கள் பாருங்கள். (எ-று.) (2)
293. மதியொடு வன்னியொன் றாகவே வந்தால்
கதிரவ னாமென்று காண்.
(பதவுரை) மதியோடு - சந்திரனுடன், வன்னி - அக்கினி யும், ஒன்றாகவே வந்தால் = கலந்து வந்தால், கதிரவனாம் = சூரிய னாவான், என்று = என்று, காண் = காண்பாயாக. (எ - று.) (3)
---------
294. மதிக்குட்கதிரவன் வந்தங்கொடுங்கில்
உதிக்குமாம் பூரணைச் சொல்.
(பதவுரை) மதிக்குட் கதிரவன் வந்து - சந்திரனுக்குள்ளே சூரியனும் வந்து, அங்கு ஒடுங்கில் = அவ்விடத்தில் ஒடுங்கினால், பூரணைச்சொல் - பெளர்ணமி என்னுஞ் சொல்லானது, உதிக்கு மாம் = உண்டாகுமாம். (எ-று.)
(கருத்துரை) சந்திரனுக்குள்ளே சூரியன் வந்து ஒடுங்கினால் பௌர்ணமியென்று சொல்லுவார்கள் என்பது கருத்து. (4)
---------
295. தோற்றுங்கதிரவ னுண்மதிபுக்கிடில்
சாற்று மமாவாசை தான்
(பதவுரை) தோற்றும் = காணப்படுகின்ற, கதிரவனுள் = சூரியனுக்குள், மதிபுக்கிடில் = சந்திரன் ஒடுங்கினால், சாற்றும் = சொல்லப்படுகின்ற, அமாவாசைதான் = அமாவாசையாகும். (எ-று.)
(கருத்துரை.) சூரியனுக்குள் சந்திரன் ஒடுங்கினால் அமாவா சையாகும் என்பது கருத்து.
---------
296. வன்னிகதிரவன் கூடிடிலத்தகை
பின்னிவையாகு மெலாம்.
(பதவுரை) அத்தகை வன்னி - அப்படிப்பட்ட அக்கினி யும், கதிரவன் - சூரியனும், கூடிடில் = சேர்ந்தால், பின் = பிற கு, இவையாகும் எலாம் - இவைகளெல்லாமாகும். (எ-று.) (6)
---------
297. அமாவாசை பூரணை யாகுமவர்க்குச்
சமனா முயிருடம்பு தான்.
(பதவுரை) அமாவாசை = அமாவாசையே, பூரணையாகும் அவர்க்கு = பௌரணையாக கொள்ளுபவருக்கு, உயிர் உடம்பு தான் = உயிரும் உடம்பும், சமனாம் = சமானமாகும். (எ-று.) (7)
---------
298. அண்டத்திலுமிந்த வாறென் றறிந்திடு
பிண்டத்திலு மதுவே பேசு.
(பதவுரை) அண்டத்திலும் = வெளியண்டத்திலும், இந்த வாறென்று - இவ்விதமென்று, அறிந்திடு = உணர்ந்திடு, அப் பிண்டத்திலும் = உள்ளண்டத்திலும், அதுவே பேசு = அப்படி யேயாகுமென்று பேசு . (எ - று.)
(கருத்துரை) அண்டத்திலும் பிண்டத்திலும் ஒன்றென்றே யுணரவேண்டும் என்பது கருத்து.
---------
299. ஏறுமதிய மிறங்கிடி லுறங்கிலும்
கூறுமப் பூரணை கொள்
(பதவுரை) ஏறும் மதியம் = ஏறுகின்ற சந்திரனானவன், இறங்கிடில் = இறங்குமானால், உறங்கிடும் = உறங்கும், கூறும் = அப்பொழுது சொல்லப்படுகின்ற, அப்பூரணை = அந்தப்பெளர் ணமியை, கொள் = கொள்ளக்கடவாய். (எ-று.)
---------
300. உதிக்கு மதியமுங் கண்டங் குறங்கில்
மதிக்கு மமாவாசை யாம்.
(பதவுரை) உதிக்கும் மதியமும் = உதயமாகின்ற சந்திரனை யும், கண்டு = தெரிசித்து, அங்கு = அவ்விடத்தில், உறங்கின் = தூங்கினால், மதிக்கும் நினைக்கப்படுகின்ற, அமாவாசையாம் அமாவாசையாகும். (எ-று.) (10)
-----------
11. உயர்ஞான தரிசனம்
301. கொண்டிடு மண்டல மூன்றங்கி தன்னையிப்
பிண்ட மு மூழி பிரியா.
(பதவுரை.) கொண்டிடு = யாவராலுங் கொள்ளப் படு கின்ற, மண்டலம் மூன்று = மும்மண்டலங்களுள், அங்கி தன்னை = அக்கினி மண்டலத்தை, இப்பிண்டமும் - இந்தப்பின் டத்திலும், ஊழி பிரியா = ஊழியிலும் பிரியமாட்டா . (எ-று.)
(கருத்துரை.) மும்மண்டலங்களுள் அக்கினி மண்டலத்தை எந்தக்காலத்திலும் பிரியமாட்டா என்பது கருத்து. (1)
---------
302. வெள்ளி புதனொடு திங்களிடமெனத்
தள்ளுமின் கால சரம்.
(பதவுரை) காலசரம் = காலத்தில் நடக்குஞ் சரத்தை, வெள்ளி புதனொடு திங்கள் - வெள்ளி புதன் திங்கள் இம்மூன்று நாட்களிலும், இடமெனத்தள்ளுமின் = இடது பக்கத்தில் தள்ளுங்கள். (எ-று.)
(கருத்துரை) திங்கள், புதன், வெள்ளி, இக்கிழமைகளில் சந்திரநாடியில் காலசரத்தைச் செலுத்த வேண்டும் என்பது கருத்து.
---------
303. செவ்வாய் சனிநா யிறுவல மாகவே
கொள்ளிலிவ் வாறிடறு மில்
(பதவுரை.) செவ்வாய் சனிஞாயிறு = செவ்வாய் சனி ஞாயிறு என்னுங்கிழமைகளில், வலமாக கொள்ளின் - வலதுபக் கமாகத் தள்ளினால், இவ்வாறிடருமில் இப்படிப்பட்ட துன்பம் ஒன்றுமில்லை . (எ-று.)
(கருத்துரை) செவ்வாய், சனி, ஞாயிறு என்னும் சூரிய நாள்களில், சூரிய நாடியில் சரத்தைத் தள்ளவேண்டும் என்பது கருத்து. (3)
---------
304. வளர்பொன் னிடம்பிறைத் தேய்வுவலமா
வளர்பிறை யென்றே மதி
(பதவுரை .) வளர் = வளர்கின்ற, பொன் - வியாழக்கிழமை களில், பிறைத்தேய்வு - தேய்பிறைகளில், இடம் = இடது பக்க மாகவும், வளர்பிறை - வளர்பிறையில் வலமாம் = வலது பக்க மாகவும், செல்லும் என்றேமதி = செல்லும் என்றே எண்ணு வாய். (எ - று.)
(கருத்துரை) வியாழக்கிழமைகளில் தேய்பிறையில் இடது பக்கமாகவும் வளர்பிறையில் வலது பக்கமாகவும் சரஞ் செல்லும் என்பது கருத்து.
---------
305. வலத்திற் சனிக்கே யிராப்பகல் வாயு
செலுத்து பேராது செயல்.
(பதவுரை) சநிக்கே = சநிக்கிழமைகளில், இராப்பகல் = இராத்திரியும் பகலும், வாயு = வாயுவை, வலத்தில் = வலது பக் கத்திலே, பேராது = ஒழியாது, செலுத்து = செலுத்துவாய், செயல் = இதுவே அதன் செய்கைகளாம். (எ-று.)
---------
306. இயங்கும் பகல்வல மிராவிடம் வாயு
தயங்குறல் நாடிக்குட் டான்.
(பதவுரை.) வாயு = வாயுவானது, தயங்குற = விளங்க, நாடிக்குட்டான் = நாடிக்குள், பகல்வலம் =பகலில் வலமாகவும், இராஇடம் = இரவில் இடமாகவும், இயங்கும் நடக்கும். (எ - று)
---------
307. அரசறியாம லவன்பே ருறைந்துத்
தரைதனை யாண்ட சமன்.
(பதவுரை) அரசறியாமல் = அரசனை அறியாமல், அவன் பேர் = அவனுடைய பேரை, உரைத்து = சொல்லி, தரைதனை யாண்டசமன் =பூமியையாண்ட சமனாகும். (எ-று.) (7)
---------
308. கல்லாத மூடர் திருவுருக் கொண்டிடச்
சொல்லாத தென்ன செயல்.
(பதவுரை.) கல்லாத மூடர் = கற்காதமூடர்கள், திருவுருக் கொண்டிட = திருவுருவத்தையடைய, என்னசெயல் செல்லா தது = என்ன காரியம் நடவாதது. (எ - று .)
(கருத்துரை.) யாவராயினும் திருவுருக்கொண்டால் எல் லாக்காரியங்களும் கை கூடும் என்பது கருத்து. (8)
---------
309. திருவருட் பாலைத் தெரிந்து தெளியில்
குருவிருப் பாமென்று கொள்
(பதவுரை) திருவருட்பாலை - திருவருளென்னும் அமிர் தத்தை, தெரிந்து = உணர்ந்து, தெளியில் = ஒளிவடைந்தால், குருவிருப்பாமென்று கொள் = ஞானாசிரியனுடைய இருப்பிட மாமென்று கொள்ளுவாய், (எ - று.)
(கருத்துரை) திருவருட்பாலை உணர்ந்தவர்கள் குருவின் பிடமாவார்கள் என்பது கருத்து.
---------
310. கற்கிலுங் கேட்கிலும் ஞானக் கருத்துற
நிற்கிற் பரமவை வீடு.
(பதவுரை.) கற்கிலும் = எல்லாச் சாஸ்திரங்களைக் கற்றா லும், கேட்கிலும் = கேட்டாலும், ஞானக்கருத்துறை = ஞான மாகிய வானவழியில், நிற்கில் இருந்தால், பரமவைவீடு = பரம் பொருள் எழுந்தருளியிருக்கின்ற வீடுகை கூடும். (எ-று.)
(கருத்துரை.) சகலசாஸ்திரங்களையும் உள்ளங்கை நெல் லிக்கனி போல் கற்றாலும் கேட்டாலும் மோட்சவீடு கை கூடும் என்பது கருத்து. (10)
ஒளவைக்குறள் - மூலமும் விசேஷ விருத்தி உரையும் முற்றுப்பெற்றது.
----------------
This file was last updated on 18 August 2020.
Feel free to send the corrections to the Webmaster.